(தாய் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும் சொல்லலாம்
செங்கோல் ராஜ்ஜை -சங்கல்பம் -அது கூட பொய்யானதே என் மகள் விஷயத்தில் -அல்லது இவள் விஷயத்தில் –
அருளாத நீர் -பிரதான அர்த்தம் அல்ல
ரூப ரஹித ஸ்பர்ச வான் காற்று குளிர்ந்து இருக்க வேண்டும் -நெருப்பை வீசுகிறதே
பனிப்பு இயற்கையாக உடைய தண் குளிர்ந்த -தொழில் குணம் மாறி நெருப்பை சொரிகிறதே
இவளுக்கு மட்டும் அல்ல -ஊருக்கே -இவள் தசையைப் பார்த்து )
அவதாரகை –
விபூதி ஆகாரத்தாலே -இங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாகரமாய் நலிகிற படி –
ஜ்ஞான சங்கோசம் அற்று –
ந ச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே போனால் ஸ்மாகரமாவை-
இங்கே ஸ்மாகரகமாம் படி எங்கனே என்னில்
ஸ்வ எத்ன சாத்தியமான ஜ்ஞானம் அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே
பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே
இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி
இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –
(அதிகரணம் -2-அவி பாகேந த்ருஷ்டவாதிகரணம் –
முக்தி தசையில் எல்லா பந்தங்களில் நின்றும் விடுபட்ட ஜீவன் தன்னை
பரமாத்மாவை விட வேறுபட்டவனாக அனுபவிக்கிறானா
அல்லது அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்றா -என்று சம்சயம் இதுவே சங்கதி –
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது
4-4-4-அபி பாகேந த்ருஷ்டத்வாத் –
வேறுபடாமல் உள்ளதாகவே காணப் படுகிறது –
அவனுக்கு பிரகாரமாக உள்ளதால் தன்னைத் தனிப்படாமல் உள்ளதாகவே அனுபவிக்கிறான்
தைத்ரியம் -ஸோ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
முக்தன் சர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் இருந்து அனைத்து குணங்களையும் அனுபவிக்கிறான் –)
(இங்கு ஸ்வரூப ஐக்யம் பொருள் அல்ல-ஸாம்யத்தையே சொல்கிறது
பிரகார பூதனாய் இருந்தே ஸகல கல்யாண குண விசிஷ்டனாய் அனுபவிக்கிறான்
என்று அர்த்தத்தைச் சொல்கிறது – –
இங்கு கர்மம் திரோதானம் நமக்கு -சரீர ஆத்ம பாவம் தெளிவாக அங்கு வருமே –
ததீயத்வ ஆகாரம் பார்க்கும் ஞானம் இங்கேயே ஆழ்வாருக்கு
அப்ருதக் சித்த விசேஷணம் -இங்கேயே ஞான விளக்கம் -நிர்ஹேதுக விஷயீ காரத்தால் –
அதனால் தான் துன்பப்படுகிறார் )
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே —-5-
பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த
தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் -மாயா வாமனனே -7-8-
பதவுரை
பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இக்காலம்–இப்போது மாத்திரம்
இவ் ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையை யுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களை யுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்
—
அப்பிள்ளை உரை
இப்படி வாடையால் இவள் நலிவு படும் தசையை அநுஸந்திக்கும்
திருத்தாயார் பாசுரம்
காற்றுக்கு குளிரக் கடவதாக ஈஸ்வரன் நியமித்ததும் அந்நியதாய் ஆகிறதே
ரக்ஷணத்துக்கு பிராட்டி மாற்றிய இடம் திருவடிக்கு அக்னி சுடக் கூடாதே -ஸீதா பவ -என்றாள் -அன்றோ
இங்கு மூவரும் இருக்க -அவன் இவளை சிஷிப்பதா –
தடாவியதே -கூடுமோ மாறி விட்டதா வருத்தம் கலந்த வெறுப்பு சங்கை கவலை தோற்ற ஸ்வரம் -கேள்வி அல்ல
இது என் பெண் பிள்ளை நிமித்தமாக தாயார் இன்னாதாகிறாள்
அவனால் ஆதாரத்துடன் அணைப்பவன் -இவளைப் படுத்துவதா மட்டும் அல்ல
அவன் ஸத்ய ஸங்கல்பம் பொய்யாகலாமோ
கூரத்தாழ்வானை விட்டுப் பிரிய திரு உள்ளம் இல்லாத எம்பெருமானார்
ஈஸ்வரன் ஆணையைப் பேணி பாது காத்தால் போல் அன்றோ இதுவும்
பிரிவும் -12 ஆண்டுகள் மேல் கோட்டைக்குச் சென்றதும் -திரு நாட்டுக்கு எழுந்து அருளியதும் உண்டே
ஈஸ்வரன் ஆணையை உடையவர் நிமித்தமாக இல்லை யாக்கினான் என்று இருக்கக் கூடாதே
அதுக்காக திருத் தாயார் ஏங்குகிறாள்
இது தோழி வார்த்தையாகவுமாம்
குளிர்த்தியை இயல்பாக உடைத்த மந்த மாருதம் இக்காலத்தில் இவ்வூர் ஒன்றிலும்
ஆழ்வாருக்கு மட்டும் அல்ல குளிரும் ஸ்வ பாவம் தவிர்ந்து நெருப்பை வீசா நின்றது
அழகிய திருத் துழாயின் குளிர்த்தியிலே -அதன் பொருட்டு
இவள் ஸ்வபாவம் இழந்து -ஆறி இருக்காமல் -அழகிய கண்களை உடைய இவள் -தன்மையும் மாறும்படி
வர்ஷுக வலாஹம் போல் -முகில் வண்ணன் -வடிவை உடைய செங்கோல் இவ்வாறு செய்வதே
ஒரு நாள் இவ்வாறு விளைந்ததே
சார்ங்கம் சங்கல்பம் விடாதவன்
சோரா நின்ற தடம் கண்ணி
ஸ்வ பாதேசம்
சம்சாரத்தில் பாஹ்ய விஷயங்களே எல்லாருக்கும் அனுகூலமாய் செல்லா நிற்க
தமக்கு எம்பெருமானோட்டை அல்லது செல்லாமல்
பாஹ்ய விஷயம் நலியும்படி சொல்கிறது –
—-
வியாக்யானம் –
பனிப்பியல்வாக உடைய தண் வாடை –
குளிர்த்தியை ஸ்வ பாவகமாக உடைத்தான மந்த மாருதமும்
இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் –
இக் காலத்திலே
இத் தேசத்திலே
இதுக்கு ஸ்வபாவ பேதம் பண்ணுகின்றவன் ஆகையாலே
அவனுக்காக நின்றபடி
பதார்த்தங்கள்
ஸ்வ பாவ பேதமும்
ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும்
இவளை அழிக்க நினைத்த படி-
அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால்
அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோ
(தத்துவமும் தகவும் இல்லை -கிருபையும் ரக்ஷகத்வமும் இல்லையே அவனுக்கு )
(பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்வாச இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர –கிஷ்கிந்தா -1-71-
பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ -தாமரைப் பூவின் தாதுக்களோடு கலந்ததாய்
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத -மரங்களின் நடுவே இருந்து வெளி வருவதாய்
நிச்வாச இவ -மூச்சுக் காற்று போலே
ஸீதாயா-ஸீதா தேவி யினுடைய
வாதி -வீசுகிறது
வாயுர் -காற்று
மநோ ஹர -மனசை அபஹரிப்பதாய்-)
(பத்ம சௌகந்தி கவஹம் சிவம் சோக விநாசநம்
தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115-
பத்ம சௌகந்தி கவஹம் -தாமரை ஆம்பல் ஆகிய புஷ்பங்களின் மணத்தை தரித்து நிற்பதும்
சிவம் -பரிசுத்தம் ஆனதும்
சோக விநாசநம் -துன்பத்தை துடிப்பதையும்
தன்யா -பாக்யவான்களே
லஷ்மண-லஷ்மணா
சேவந்தே -அனுபவிக்கிறார்கள்
பாம்போ பவன மாருதம் -பம்பா சரஸ்சின் கரையில் உள்ள தோட்டத்தில் இருந்து வீசுகிற காற்றை-)
இந்த ஸ்லோக வியாக்யானம் நம்பிள்ளை ஈட்டில் விரிவாக அருளிச் செய்துள்ளார்)
அம் தண் அம் துழாய்-பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
சர்வேஸ்வரன் உடைய குளிர்ந்து அழகிதான திருத் துழாயை
ஆசைப் பட்டு கண்ண நீர் சோரா நின்றாள் –
(தண் குளிர்ந்து உள்ள திருத்துழாய்
பனிப் புயல் -கண்ணீர் குளிர்ந்து இருக்காதே விஸ்லேஷத்தில்
இங்கு ஆனந்த அஸ்ரூ பொருந்தாதே
பனி -தர்ச நீயம் -என்ற அர்த்தம் இங்கு
இத்தை நம்பிள்ளை ஈட்டில் காட்டி அருளுகிறார் )
இக் குற்றம் செய்தாருக்கு பட வேண்டுவது இவ்வளவேயோ
இப் பரப்பு மாற ஏகார்ணவம் பெற்றாலும் போராது –
(இது வாயிற்று இவள் செய்த குற்றம் –
பிரகலாதன் எங்கும் உளன் கண்ணன் சொன்னது போல் திருத்துழாயை ஆசைப்பட்டதே இவள் குற்றம்
ஆகாசத்தில் இருந்து வாயோர் அக்னி தண்ணீர் பிருத்வி
பூநிலாய ஐந்தும் -தாய் குணம் பிள்ளைக்கும் வருமே
அக்னியிடம் வாயு குணம் இருக்கலாம்
இங்கு குழந்தை போல் தாயுக்கு -அக்னி குணம் வாயுவுக்கு )
மாமைத் திறத்துக்கு எலாம் –
இந் நிறத்தை அழிக்கைக்கு கிடீர் -இப்பாடு பட்டது
பனிப் புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே –
தாபத் த்ரயங்களும் போம்படி இருந்த படி –
பனிப் புயல் வண்ணன் –
நிர்ஹேதுக ஸ்வ பாவன்
(குளிர்ந்த மேக வண்ணன் -என்றும்
மேக ஸ்வ பாவம் என்றுமாம் -கிருபா ஸ்வ பாவம் )
(நம்பிள்ளை ஈட்டில் இவ்விடம்
மூன்று விஷயங்கள் தன்மை மாறி
1-தத்வம் ஸ்வரூபம் ஸ்வ பாவம்
2-பெண்ணின் அழகு
3-ஸத்ய சங்கல்பம்
முதல் இரண்டும் த்ருஷ்டாந்தம்
நான்காவது
4-பிராட்டி சங்கல்பம் -பெருமாளாளாலும் கைவிடப் பட்டவனை ரஷிப்பேன் என்ற
தண்ணீரும் சுடுவது போல் -அவள் சங்கல்பம் மாறினதே –
பெருமாள் திரு உள்ளம் மாறாமல் இருக்க வேண்டி இருந்தாளோ –
விபீஷணனுக்கு-செய்தது போல் ராவணனையும் கை யாலாகாத தன்மைக்கு நிறுத்தி யதும் இவள் கார்யம்
சரணாகதிக்கு கையில் ஒன்றும் இல்லாமல் இருக்க –
செய்தாலும் மேலே கார்யகரம் ஆகாதது ராமன் திரு உள்ளம் மாறக்கூடாதே
இவன் சரணம் சொல்ல வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் இவள் செய்தாள்
அதே போல் இங்கும் நாயகிக்கு ஞான விபாக கார்யம் –
ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு பெருமாள் செய்யும் கார்யம் ஆகையால் அத்தை மீறக் கூடாதே )
(இந்த பாசுரத்தைத் திரு உள்ளம் கொண்டே அமைக்கப்பட்ட ஸ்லோகம்
பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள் ஆழ்வார்கள் மட்டும் அல்லவே ஆச்சார்யர்களும் கூடவே தானே
தந்யைஸ் ஸ்ருதம் ததிஹ தாவக ராஸ காலே
கீதேந யேநஹி சிலாஸ் சவிலாம் பபூவஸ்
பஞ்சாபி கிஞ் ச பரிவ்ருத்த குணாநி பூதாநி
உர்வீ க்ருசாநு மருத் அம்பர சம்பராணி–ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்46-
இஹ -இந்த லோகத்தில்
தாவக ராஸ காலே –நீ குரவைக் கூத்து ஆடின போது
கீதேந யேந–யாதொரு வேணு கானத்தாலே
சிலாஸ்–கற்கள்
சவிலாம் பபூவஸ்-நீர்ப் பண்டமாயினவோ
கிஞ் ச-இன்னமும்
உர்வீ க்ருசாநு மருத் அம்பர சம்பராணி– பூமி அக்னி வாயு ஆகாசம் ஜலம்–என்கிற
பஞ்சாபி பூதாநி -பஞ்ச பூதங்களும்
பரிவ்ருத்த குணாநி -மாறுபட்ட குணங்களை யுடையவனாக
பபூவ –ஆயினவோ
தத் கீதம் தந்யைஸ் ஸ்ருதம் –அப்படிப்பட்ட கானமானது பாக்யாதிகர்களாலே செவி சாத்தப்பட்டது
ராஸ க்ரீடை -திருக் குரவை
அங்கநாம் அங்கநாம் அந்தரே மதவோ மாதவம் மாதவம் ச அந்தரேணர் அங்கநா
அந்த சமயம் திருக் குழல் ஓசையால் கடின பதார்த்தங்களும் நீர்ப்பண்டமாய் உருகிப் போயினவே
பஞ்ச பூதங்களும் ஸ்வ ஸ்வ குணங்கள் தன்மைகள் மாறாடப் பெற்றனவே
பாக்ய சாலிகளாலே அந்த திவ்ய கானம் செவி சாத்தப் பட்டதே
கருவிலே திருவிலாத அடியேன் போல்வாருக்கு அந்த பிராப்தி கிட்டாதே)
செங்கோல்-
நாம் பட்ட படி படுகிறோம்
அத் தலையில் ஆஞ்ஞைக்கு ஒரு ஹானி வாராது ஒழிய வேணும்
ஒரு நான்று
இன்று தொடங்கி
தடாவியது –
விலங்கிற்று-
இது தாயார் வார்த்தை –
காமம் சாரா வெறியதினிளமை காட்சி மகிழ தனலம் பாராட்டு -துறை –
(விருப்பப்பட்டது நடக்காத போது -பித்து பிடித்து
அவனது இனிமை இளமை போல்வன நலம் பாராட்டும் துறை )
அதாவது
சம்ஸ்லேஷ்சம் ஆகிற காமம் ஆனது
சாரா -கிட்டாமையால் உண்டான
வெறி உண்டு -பிச்சு
அதனுடைய இளமையாவது
காட்சி திருஷ்டி பந்தத்தை சொல்லுகையும்
மகிழ்தல் அநந்தரம் உண்டான ஹர்ஷ வசனமான மந்த ஸ்மிதத்தை நினைக்கையும்
நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை
கிளவித் துறை –
—
தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்
இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் –
அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –
சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக
பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க
அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை
ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை
தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
அருகே உள்ளார் இப்பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத்துழாயில் ஆசைப்பட்டு –
பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல்
தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க
ரக்ஷகனான சர்வேஸ்வரன்
தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே
தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி –
தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று
வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட
இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –
—————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .