Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

August 26, 2018

வண்கை யானவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-8-5-

மாணியாய் மண் கையால் இரந்தான் –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகனேறின வடிவைக் கொண்டு சென்று –
தன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திவ்ய பிரபந்தங்களில் திருவடி பிரஸ்தாபங்கள் –பதிகம் பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –

July 30, 2018

பக்தாம்ருதம் –நமாம்யஹம் திராவிட வேத சாகரம் -திருவாய்மொழியைக் கடலாக –
வேதார்த்த ரத்ன நிதி -நம்மாழ்வார் என்பர் கூரத் தாழ்வான்-ஜீயாத் பராங்குச பயோதி -ஆழ்வாரைக் கடலாக –
வேதார்த்த ரத்னங்களுக்கு ஆகரம் –
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் -என்பர் மா முனிகள்

வண்டு -ராமானுஜர் ஸூ சகம் -/ விதானம் -பிரார்த்தித்து இவர் அவதாரம்

—————————-

கீதா உபநிஷத் -கோதா உபநிஷத் -அர்ஜுனன் ஒருவனுக்கு நமக்கு
வாஸூ தேவ தருச் சாயா –தாபா த்ரயம் -நீராடி போக்க
நெய்க்குடம் எறும்பு -போலே உடம்பு பிரகிருதி -அனீசன் செய்யாமல் இருக்கவும் செய்யவும் பிரயாசம்
அருவி -த்ருஷ்ட்டி அம்ருத வ்ருஷடியால் நனைக்க-
கண்ணன் இருக்க சந்திரன் நிறைந்து நித்ய வாசம் மதி நிறைந்த நன்னாள்
செங்கண்ணில் உபக்ரமம் உப சம்ஹாரம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி -கண்ணனையும் பெரியாழ்வாரையும் காட்டிக் கொடுத்தாள்
முதல் தானம் அவன் ஸ்ருஷ்ட்டி இத்யாதி -சாத்விக ராஜஸ தாமஸ தானங்கள்
தானம் சித்தி இல்லையே மஹா பாலி இடம்

நாராயணனே பரமன் உத்தமன் பத்ம நாபன்-தாமோதரன் -நாபி இடுப்பு அருகில்
பற்ப நாதம் உயர்வற உயரும் பெரும் திறலோன் -எத்தை உயர்ந்ததும் மேலே –
பத்ம நாதம் பத்ம பாதன் -பத்மத்தை நாபியில் கொண்டவன் -தாமரை போன்ற திருப் பாதம் -இரண்டு சமாசம் -அழகும் பரத்வம் பறை சாற்றும்
கொப்பூழிலில் எழு கமல பூ அழகர் -முக்காலம் -சுழி -கொப்பூழ் -கூரத் தாழ்வான் -காந்தி லஷ்மீ ஸ்தானம்
-மாயன் மன்னு வட மதுரை மைந்தன் திருமந்திரம் திரு விக்ரமன் பத சாம்யம்
மாயன் -பரதவ ஸுலப்யம் இரண்டுக்கும் -சூட்டு நன் மாலைகள் —
பேர் அரவம் –ததீய சேஷத்வம் -அரவம் -மாயன் -பேர் அரவம் மாயன் தமர் -பேர் அரவம் -அறியாத -பிள்ளாய்
பேர் அரவம் -அரவம் -/ஆற்ற அனந்தல் -அனந்தல் / நெடுமாலே -மாலே /மாயன் -மா மாயன் /பெரும் துயில் -பேர் உறக்கம் /
கீசு கீசு -பிரணயி பேச்சு-வேய் மறு தோளிணை–தொடு குழி –இத்யாதி -ஓன்று பணித்ததுண்டு -ஓராண் வழி அறிவோம்
தன்னை நைவிகின்றிலன் –கொங்குண் வண்டே கரியாக வந்தான் – நமக்கே நலம் ஆதலால் -புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
த்வயா -உன்னுடன் எப்பொழுது கூடுவேனோ -முன் நின்ற லஷ்மணன் இடமே பரதனை விட்டு பிரிந்த விரஹ
அழகிய பாற் கடல் -பயங்காசனம் -பொழுது அனுசந்தேயாம் -நெஞ்சமே நீல் நகராக இருக்க அடம் பிடிப்பவனை
கோயில் ஆழ்வாரில் எழுந்து அருளி வைக்க -கீசு கீசு -விரஹம் சகியாமல்-மஹாத்மாக்கள் விஸ்லேஷம் சஹியாத மார்த்வம் உண்டே –
நின் முற்றம் -குலசேகரன் படி -மனத்தூண்கள் -கோவலூர் இடை கழி போலே பிரசித்தம் அன்றோ
நாற்றத் துழாய் முடி நாராயணன் போற்றப் பறை தரும் புண்ணியன்-உபாயமும் -முகில் வண்ணன் பேர் பாடுவதே புருஷார்த்தம் -புண்ணியம் யாம் யுடையோம்
நாராயண -பர ப்ரஹ்மம் – பரம தத்வம் -பரஞ்சோதி -பரமாத்மா -பரம பாராயணம் –

த்வந்த சமாசம் -இரண்டுக்கும் முக்கியம் -/ ராம கிருஷ்ணவ் ஆகதவ்
அவ்யயயம் -விபக்தி வசனம் லிங்கம் இல்லாமல் –பர ப்ரஹ்மம் -முன் பாத பிராதாந்யம் -உப கங்கம் -கங்கை அருகில் உள்ள இடம் –
நாரங்களுக்கு அயனம் -இருப்பிடம் முக்கியத்துவம் தத் புருஷ சமாசம்
ராஜ சேவகன் -கூப்பிட வந்துள்ளான் சேவகன் முக்கியம் -இதுவும் தத் புருஷ சமாசம் -உத்தர பதார்த்த போதகம் -செயல் இங்கே அன்வயம்
பஹு வ்ரீஹி சமாசம் -நாரங்களை இருப்பிடமாக கொண்டவர் -இரண்டு சொல்லுக்கும் பிரதானம் இல்லை –
நாரங்களுக்கும் அயனத்வத்துக்கும் முக்கியம் இல்லை -திருமால் -நித்ய வஸ்துக்களை இருப்பிடமாக கொண்ட
பீதாம்பரம் -பீதம் அம்பரம் யஸ்ய யாருக்கோ -இரண்டுக்கும் முக்கியம் இல்லை -அந்நிய பதார்த்தம் பிரதானம் -தரிக்கும் அவனுக்கு
ரூடி -பிரசித்தம் –யவ்கிகம் -யோகம் -சேர்க்கையால் வந்த பொருள் –
போதரிக்கண்ணினாய் -பாகவத கடாக்ஷம் -கண் -ஞானம்-பங்கயக் கண்ணினாய் -பகவத் கடாக்ஷம் -நா உடையாய் -வாக் வன்மை –

——————————-

விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –
ஸ்ரீ கீதை -அருளிச் செய்யும் பொழுது -ஸ்ரீ கருடன் குதிரை கருட அம்சம் -ரூபேண -கேட்டு அனுஷ்ட்டித்தாரே —
திருவடி கொடி ரூபேண -இருந்ததால் -சபரி மோக்ஷ சாஷிபூதரே பெருமாள் -ஜடாயுவை கச்ச லோக –
இதனால் -10-ஆழ்வார்கள் நேராக பகவானையும் -2-ஆழ்வார்கள் ஆச்சார்யர் மூலம் பகவானையும் பற்ற -/
நம்மாழ்வார் ஆச்சார்யர் கோஷ்டி /
ராமானுஜ நூற்றந்தாந்தி -நாலாயிரம் சேர்த்தால் போலே-ஆச்சார்யரான ராமானுஜரும் ஆழ்வார் கோஷ்டியில் கொள்ள வேண்டும் –

—————–

திவ்ய பிரபந்தங்களில் திருவடி பிரஸ்தாபங்கள்

பொய்கையாழ்வார் –செய்ய சுடர் ஆழியான் அடிக்கே என்று உபக்ரமித்து
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் ஏன் நெஞ்சே -ஓர் அடியில் தாயவனை கேசவனை -என்று திருவடிமயமாகவே தலைக்கட்டினார் –
பூதத்தாழ்வார் -அறை கழல் சேவடியான் செங்கண் நெடியான் என்று தலைக்கட்டினார்
பேயாழ்வார் இன்றே கழல் கண்டேன் என்று உபக்ரமித்து சக்கரத்தால் தாள் முதலே நங்கட்குச் சார்வு -என்று தலைக்கட்டினார்
திருமழிசை ஆழ்வார் -உன்ன பாதமென்ன நின்ற ஒண் சுடர்கே கொழு மலர் -என்று திருச்சந்த விருத்தம் தலைக்கட்டி அருளுகிறார்
திருவிருத்தத்திலும் தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய என்று உபக்ரமித்து அடிக்கண்ணி சூடிய மாறன் என்று தலைக்கட்டுகிறார்
பெரிய திருவந்தாதியிலும் – மொய் கழலே ஏத்த முயல் என்று தலைக்கட்டுகிறார்-
திருவாய்மொழியிலும்-துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே
திருவாசிரியத்திலும் மூ வுலகு அளந்த சேவடியோயே என்றும்
பெருமாள் திருமொழியிலும் திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் என்று உபக்ரமித்து
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே -என்று தலைக்கட்டுகிறார் –
பெரியாழ்வாரும் உன் சேவடி செவ்வித் திருக்காப்பு என்று உபக்ரமித்து
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-என்று தலைக்கட்டுகிறார்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு நாமமே அடி பட்டுக் கிடக்கிறது
திருப்பாண் ஆழ்வார் -திருக் கமலபாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றவே -என்று அருளிச் செய்கிறார்
திருமங்கை ஆழ்வார் வயலாலி மணவாளன் திருவடியில் வாயை வைத்தே பிரபந்தம் தொடங்குகிறார்
தலைக்கட்டும் பொழுதும் நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –என்று அருளிச் செய்கிறார்
மதுரகவிகளும் முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே
திருப்பாவையில் உன் பொற்றாமரை படியே கேளாய் என்றும்
நாச்சியார் திருமொழியிலும் பெரும் தாளுடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே
அமுதானாரும் மாறன் அடி பணிந்து உயந்த –ராமானுஜன் அடிப் பூ மன்னவே

——————————————————-

ஒரு நாயகமாய் -4-1-திருவாய் மொழியில் –

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ -1-என்றும் –
செம்மின் முடித்திருமாளை விரைந்து அடி சேர்மினோ -2-என்றும்
கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3-என்றும்
பனைத்தாள் மத களிறு அட்டவணை பாதம் பணிமினோ -4-என்றும்
கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினா-6-என்றும்
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ -9-என்றும்
அஃதே உய்யப்புகுமாறு என்று கண்ணன் கழல்கள் மேல் -11-என்றும் உண்டே

உய்யப் புகுமாறு அஃதே என்று –
‘திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று.
உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை -அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –
கண்ணன் கழல்கள் மேல் –
‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?
அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’
என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?
திருவடியில் என்ன ப்ராவண்யம் –

————————-

பாலகனாய் -4-2-திருவாய் மொழியில்

ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் என்றே மாலுமால் –1-என்றும்
குறைவை பிணைந்தவர் நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் -2-என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் -3-என்றும்
சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரண் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் -4-
குடக்கூத்தனார் தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் என்றே நாளு நாள் நைகின்றதால் -5-என்றும்
ஆதியம் காலத்து ஆட்களிடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால் -6-என்றும்
மடந்தையை வண் கமலத்திரு மாதினை தடம் கொள் மார்பினில் வைத்தவர் தாளிணை மேல்
வடம் கொள் பூம் தண்ணம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் -7-என்றும்
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாளிணை மேல் அணி
வம்பவிழ் தண்ணம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால் -8-என்றும்
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென்முலைக்கு என்று மெலியும் -10-என்றும்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல் மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் -11-என்றும் -உண்டே –

——————————————————-

உலகமுண்டா பெருவாயா-6-10–பதினோரு பாசுரங்களில் திருவடி பிரஸ்தாபம்

திருவேங்கடத்து எம்பெருமானே குல தொல்லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே -1-என்றும்
திருவேங்கடத்தானே ஆறாவன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே -2-என்றும்
திருவேங்கடத்தானே அண்ணலே யுண்ணாடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே -3-என்றும்
திருவேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையென் பொருந்துமாறு புணராயே -4-என்றும்
திருவேங்கடத்தானே திணரார் சாரங்கத்துன பாதம் சேர்வது அடியேன் என்னாளே-5-என்றும்
திருவேங்கடத்தானே மெய் நான் எய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே -6-என்றும்
திருவேங்கடத்து எம்பெருமானே நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலாது ஆற்றேனே-7-என்றும்
திருவேங்கடத்தானே மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே -8-என்றும்
திருவேங்கடத்தானே அந்தோ வடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே -9-என்றும்
திருவேங்கடத்தானே புகல் ஒன்றில்லா வடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -10-என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை -11-என்றும் உண்டே

————————————–

பெரிய திருமொழி -3-4- பதிகம் பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –

மா வலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் –3-4-1-
நக்கநூன்முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் -3-4-2-
வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் -3-4-3-
குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் -3-4-4-
மா கீண்டு வெள்ளம் அட்டா விண்ணவர் கொண் தாள் அணைகிற்பீர் -3-4-5-
விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் -3-4-6-
வலம்புரி சிலைக்கை கமலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் -3-4-7-
மட்டவிழ் அம் குலைக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் -3-4-8-
திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் -3-4-9-
பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே -3-4-10-

——————————————————-

பெரிய திருமொழி -6-9-பாசுரங்கள் தோறும் திருவடி பிரஸ்தாபம் –

இடர் கெடுத்த திருவாளர் இணையடியே யடை நெஞ்சே–
அழலாரும் சரம் துரந்தான் அடியிணையே யடை நெஞ்சே —
அளை வெண்ணெய் யுண்டான் தன அடியிணையே யடை நெஞ்சே –
குன்றாரும் திறல் தோளன் யடை நெஞ்சே —
உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே யடை நெஞ்சே-
மெல்லியலை திரு மார்பில் மன்னித்தான் வைத்து உகந்தான் மலரடியே யடை நெஞ்சே —
தார் தழைத்த துழாய் முடியின் தளிர் அடியே யடை நெஞ்சே –
மணி மாடம் மிக மன்னி நிலையாற நின்றான் தன் நீள் கழலே யடை நெஞ்சே –
பிறையாரும் சடையானும் பிரமனும் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை படியே யடை நெஞ்சே –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நீராட்டம்–அருளிச் செயல்களில் -பிரயோகங்கள்

July 29, 2018

திருப்பாவையில் – நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்-

நாச்சியார் திரு மொழி –

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் –3–1 –

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்து ஆடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் —3-4-

அஞ்ச யுரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -3-9-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் –6–10-

செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம் புரியே – -7–6-

——————–
பெரியாழ்வார்

அஞ்சன வண்ணனோடு ஆடலாட யுறுதியேல்-மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – 1–4–2-

ஆடுக செங்கீரை ஆடுக ஆடுகவே -1–5 –

நீராட்டு பதிகம் -2-

பேடை மயில் சாயல் பிணை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் —3-3-3-

அரும் தவ முனிவர் அவபிரதம் அங்கு குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடிநகரே –4-7-6-

பொங்கு ஒலி கங்கைக் கறை மலி கண்டத்து உரை புருடோத்தமன் அடி மேல்
வெம் கலி நலியா வில்லி புத்தூர்க் கோன் விட்டு சித்தன் விருப்புற்று தங்கி அவன் பால் செய் தமிழ் மாலை
தங்கிய நாவுடையார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே –4-7-11-

—————————–

பெருமாள் திருமொழி

ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே -2-2-

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கரு மணியே -8-3-

————————————————–

பெரிய திரு மொழி –

ஆயர் மட மக்களை பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு -10-7–11-

——————————

திரு நெடும் தாண்டகம்

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் -12-

அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் பெற்றேன் வாய்ச சொல் இறையும் பேசக் கேளாள் -19-

———————————————————-

திருவாய்மொழி

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல்யாயிரத்து ஓர்தல் இவையே -1-8-11-

வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே-2-6-4 –

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒருநாள் காண வாராயே -8-5-1-

அவன் கையதே எனதாருயிர் அன்றில் பேடைகாள் எவம் சொல்லி நீர் குடைந்தாடுதிர் புடை சூழவே -9-5-3-

பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடத்தினையே -10-1-8-

—————————————————

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –மூன்றாம் திருவந்தாதி -76-

மால் தான் புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வேனோ பேதைகாள்
நீராடி தான் காண மாட்டாத தாரகல சேவடியை யான் காண வல்லேற்கிது –நான்முகன் -27-

சூட்டு நன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அந்தூபம் தாரா நிற்கவே –திருவிருத்தம் –21 —

அழைத்துப் புலம்பி முலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைகே கண்ணநீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே -52-

ஓ ஓ உலகின் இயல்வே ஈன்றோள் இருக்க மணை நீராட்டி –திருவாசிரியம் -6-

———————————————-

பெருமாள் வீர கல்யாண குணத்தில் ஆழ்ந்தார் திருவடி –பாவோ நான்யத்ர கச்சதி வீர –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -நம்மாழ்வார் -ஸுலப்ய ஸுசீல்ய குணங்களில் ஆழ்ந்தார் நம்மாழ்வார் –
குணவான் –என்றாலே சீல குணத்தை சொல்லுமே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

July 26, 2018

திருப்பல்லாண்டு –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-

————————————

பெரியாழ்வார் திருமொழி –

காறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-

ஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —
கேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

————————————————————————————–

திருப்பாவை –

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து
அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

——————————————

நாச்சியார் திருமொழி
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-

——————————————————————————————–

பெருமாள் திருமொழி –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-

திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-

நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

——————————————————————————————-

திருச் சந்த விருத்தம் –

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-

———————————————————————————–

திருமாலை
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-

—————————————————————————-

பெரிய திருமொழி –
சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

—————————————————————————————

திருவாய் மொழி –

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

கள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-

குழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-

நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-

உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி
என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று
உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ
ஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

வார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே
பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-

திருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-

மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-

நேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-

திரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-

புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர
வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-

தொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-

பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-

பணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

——————————————

முதல் திருவந்தாதி –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று
குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-

நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி
திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்
நயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த
படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

——————————————————

இரண்டாம் திருவந்தாதி –

நகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே
அறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-

பழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ
வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்
உரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்
துணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-

அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-

——————————————-

மூன்றாம் திருவந்தாதி –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி
மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
இலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்
படியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-

காண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி
பாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-

———————————————————–

நான்முகன் திருவந்தாதி –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று
என்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————————————————-

திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-

————————

பெரிய திருவந்தாதி –

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-

——————————————————

இராமானுச நூற்றந்தாதி –

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பரகால நாயகி பாசுரங்கள் —

July 24, 2018

1-திருவிடவெந்தை — திருத் தாயார் பாசுரப் பதிகம் -2-7
2-அட்ட புயகரத்தான் –திரு மகள் பாசுரப் பதிகம் -2-8-
3-திருவாலி -திரு மகள் பாசுரப் பதிகம் -3-6-
4-திருவாலி –திருத் தாயார் பாசுரப் பதிகம் -3-7-
5-பார்த்தன் பள்ளி — திருத் தாயார் பாசுரப் பதிகம் -4-8-
6-திருவரங்கம் –திருத் தாயார் பாசுரப் பதிகம் -5-5-
7-திருக் கண்ணபுரம் –திருத் தாயார் பாசுரப் பதிகம் -8-1-
8-திருக் கண்ணபுரம் -திருத் தாயார் பாசுரப் பதிகம்-8-2-
9-திருக் கண்ணபுரம் திரு மகள் பாசுரப் பதிகம்–8-3-
10-திருக் கண்ணபுரம் -திரு மகள் பாசுரப் பதிகம் –8-4-
11-திருக் கண்ணபுரம் திரு மகள் பாசுரப் பதிகம் –8-5-
12–திரு நாகை அழகியார் -திரு மகள் பாசுரப் பதிகம் -9-2-
13–திருக் குறுங்குடிப் பாசுரப் பதிகம் -9-5-
14–திருமாலிரும் சோலை பாசுரப் பதிகம் -9-9-
15–திரு யசோதா பிராட்டியார் பாவ திரு மகள் பாசுரப் பதிகம் -10-4-
16–திரு யசோதா பிராட்டியார் பாவ திரு மகள் பாசுரப் பதிகம் -10-5-
17–திரு யசோதா பிராட்டியார் பாவ திரு மகள் பாசுரப் பதிகம் -10-7-
18–பிரணய கலகம் -திரு மகள் பாசுரப் பதிகம் -10-8-
19–பழ மொழிகள் சேர்த்து அருளிய திருத் தாயார் பாசுரப் பதிகம் –10-9-
20–திரு மகள் பாசுரப் பதிகம் -10-10-
21–திரு மகள் பாசுரப் பதிகம் -11-1-
22–திரு மகள் பாசுரப் பதிகம் -11-2-
23–திரு மகள் பாசுரப் பதிகம் -11-3-
24–காணேடீ -சாழலே-பாசுரப் பதிகம் -11-5-
25–திரு நெடும் தாண்டகம் -11-20 -திருத் தாயார் பாசுரங்கள்
26—திரு நெடும் தாண்டகம் -25-28-திரு மகள் பாசுரங்கள் –
27–சிறிய திருமடல் -திரு மகள் பாசுரங்கள் –
28–பெரிய திருமடல் -திரு மகள் பாசுரங்கள் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமடல் -திவ்யார்த்த தீபிகை –

December 6, 2016

ஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரம் –இயற்ப்பாவில் பத்தாவது திவ்ய பிரபந்தம் –
சிறிய அஸ்திரம் விட்டதில் கார்யம் கை கூட வில்லை என்று பெரிய ப்ரஹ்மாஸ்திரம் விடுகிறாள் பரகால நாயகி இதில் –
இதிலும் மடலூர்வேன் என்று பகட்டின அளவே அன்றி -மெய்யே மடலூர்ந்தமை இல்லை -கீழே வாசவத்தையை எடுத்துக் காட்டினால் போலே இதில் -சீதை -வேகவதி -உலூபிகை -உஷை- பார்வதி -போன்றோர்-
பேறு பெற ஸ்வ பிரவ்ருத்தி கூடாது என்று இல்லாமல் பேற்றுக்கு த்வரித்து இருந்த இந்த பெண்ணரிசிகளை எடுத்துக் காட்டி அருளிச் செய்கிறார் –

——————————————-

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன்

பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செயும்
நன்னுதலீர் நம்பி நறையூரர் -மன்னுலகில்
என்நிலைமை கண்டும் இரங்காரே யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து –

ஆழ்வார் தியானம் முற்றி பாவனா பிரகரக்ஷத்தாலே தன்மயத்வம் -ஆழ்வார் திவ்ய பிரபந்த பாவனையில் அமைந்த தனியன் –
நன்னுதலீர் -தோழிகளை நோக்கி அருளிச் செய்தார் –
பூ மகனும் -பாட பேதம் / வந்து மன்னு மடலூர்வேன்–திருப்பதிகள் தோறும் வந்து -நித்யம் மடலூர்ந்தே கொண்டு இருப்பேன் -என்றபடி-

———————————————

மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்———-1
மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்————-2
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் -இரு சுடரை————-3
மன்னும் விளக்காக வேற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நில மங்கை———————4
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்———-5
என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8
பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்
மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள்-

மன்னிய -வாழ்ந்திடுக -மங்களாசாசனம் -நாடு வாழ்க -எம்பெருமான் வாழ்க –இத் திரு மடல் வாழ்க -என்றபடி –
பகவத் காமமே சிறந்தது என்று அருளிச் செய்ய உபக்ரமித்து -நான்கு புருஷார்த்தங்கள் –அவற்றை வெளியிட்ட வேதங்கள் –
-அவற்றையும் வெளியிட்ட நான் முகனையும் -அவன் தோன்றிய திரு நாபி கமலம் -உறங்குவான் போலே
யோகு செய்து அருளிய எம்பருமான் –அவன் கண் வளர்ந்து அருளிய திரு வனந்த ஆழ்வான் –
திருமேனி நிறைய புள்ளிகளைக் கொண்டவனும் -ஆயிரம் பைந்தலைகளைக் கொண்டும் -மஹா தேஜஸ்வியுமாகவும் இருந்து கொண்டு
அவன் படங்களில் உள்ள மாணிக்க மணிகளின் சிகைகளில் இருந்து கிளம்பிய தேஜோ ராசிகளால் முட்டாக்கு இடப்பெற்ற
அந்த சேஷ சயனத்தில் திரு மகரக் குழைகள் பள பள வென்று ஜ்வலிக்க கரிய மால்வரை போல் துயில்கின்ற பரஞ்சோதி
முத்துக்கள் என்னத்தக்க நக்ஷத்திரங்கள் நிறைந்த ஆகாச மண்டலம் மேல் கட்டியாக அமைய -நிகரின்றி ஜ்வலிக்கும்
திருவாழி திருச் சங்குகள் திரு விளக்குகள் ஆயின –
அன்று இவ் உலகம் அளந்து அருளின திருவடிகளின் விடாய் தீர பாற் கடல் அலைகள் சாமரமாக வீச பூமிப் பிராட்டி திருவடி வருடா நின்றாள் –
உறங்குவான் போல் யோகு செய்து அருளும் திரு நாபியில் திவ்ய தாமரைப் பூவைத்து தோன்றுவித்து
-உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் நான்முகனைத் தோற்றினான்-
அஃகொப்பூழ் செந்தாமரை மேல் நான்முகனைத் தோன்றுவிக்க -அவன் நான்கு வேதங்களையும் வெளியிட்டு அருளினான் –

எம்பெருமான் ஓதுவிக்க அவ்வேதங்கள் காட்டிய வழியே முன்னிருந்த வண்ணமே ஜகத் ஸ்ருஷ்ட்டி படைத்தான் என்றபடி –
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்--இத்தையே ஆளவந்தார் -பணா மணி வ்ராத மயூக மண்டல பிரகாச மநோ தர திவ்ய தாமநி
மன்னிய நாகத்தணை-எப்போதும் சித்தமாக கண் வளர்ந்து ஈடாக -என்றபடி –
நாகத்தணை மேல் ஓர் மா மலை போல் தான் கிடந்து –என்று அந்வயம்
இரு சுடரை –திருவாழி திருச் சக்கரம் / சந்த்ர சூரியர்கள் என்றுமாம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடும் காலத்து –
ஸூர்ய சந்த்ரர்களைக் கொண்டு வர்ணிப்பது எவ்வாறு பொருந்தும் -என்னில்-சத் சம்ப்ரதாயம் -இல்லாத வஸ்துவே இல்லையே –
ஸூஷ்ம ரூபமாய் இருக்குமே -அத்தையே ஆழ்வார் அருளிச் செய்கிறார்
நில மங்கை-தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்–மன்னிய சேவடியை–நோக்கி -மறி கடலும்-பன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் – உலகு அளந்த ஸ்ரமம் தீர என்றவாறு –
நக்ஷத்ரங்களை சிரம் மீது அணிந்த புஷபங்கள் -என்றும் –தாரகா -மீன் -இரண்டும் நஸ்த்ரங்களை —
அஸ்வினி முதல் 27–மற்றும் பல்லாயிரங்கள் உண்டே -நக்ஷத்ர தாரா கணங்கள் –
தென்னன் உயர் பொருப்பும் -தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ்சோலையே -மலயத்வஜன்-அகஸ்தியர் வாசம் செய்யும்
மலய மலையிலே த்வஜம் நாட்டி -அவர் முன்னிலையில் -தர்மமே நடத்தக் கட வேன்-என்று கொடு நாட்டினான்
-சிலம்பாறு – தென் நன் என்றும் பிரிக்கலாம் -உன்னிய யோகத்துறக்கம் -தூங்குபவன் போலே யோகு புணர்ந்து –
மற்றவனும்-முன்னம் படைத்தனன் நான்மறைகள்–அநாதி நித நாஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா-
-நான்முகன் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்தது என்றவாறு -நான்கு வேதங்களையும் சந்தை சொல்லி வைத்தான் என்றவாறு –

அம்மறை தான் –10
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11
பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்
இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் —-15
என்னவும் கேட்டு அறிவதில்லை-

பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்-இறுதியில் சொல்லப்பட்ட மோக்ஷம் சரீரம் தொலைந்த பின் -சாஸ்திரம் சொல்லும்
பரம பதம் அர்ச்சிராதி கதி தொன்னெறி
வேதங்கள் முழுவதும் இந்த நான்கு புருஷார்த்தங்களையே சொல்லும் -நான்கும் வேத பிரதிபாத்யம் என்று சொல்லி பின்பு
தம் அபிமதம் பகவத் காமமே சிறந்தது-என்கிறார் இதில்
-தேசாந்தரம் தேகாந்தரம் காலாந்தரம் அனுபவம் இல்லாமல் -இங்கேயே இவ்வுடலோடு இக்காலமே அர்ச்சானுபவமே –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய் செய்யும் தவம் தான் என்-ஆண்டாள் போலே –
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து தான் வாட வாட தவம் செய்ய வேண்டா —
காயோடு நீடு கனியுண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா –
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -அர்ச்சாவதாரத்தில் எளிதாக அனுபவித்து ஆனந்திக்கலாய் இருக்க இப்படி காய கிலேசங்கள் பட வேண்டாவே என்பார்கள் ஆழ்வார்கள் –
ஈங்குடலம் விட்டு எழுந்து ––துர்லபோ மானுஷோ தேஹ –இந்த அருமையான மனுஷ்ய தேஹம் கொண்டு இங்கேயே அனுபவிக்கலாய் இருக்க இழக்கிறார்கள் –

உளது என்னில்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் —16
அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்
தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —-17
அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18-

அன்னதோர் இல்லியினூடு போய் –வாய் கொண்டு சொல்ல முடியாத ஸூ ஷ்மமான ரேந்த்ரத்தின் வழியே சென்று –
சுகோ முக்த -வாம தேவ முக்த –முதலானோர் அடைந்தார்கள் என்னில்-போய் வந்தார் சொல்லக் கேட்டதில்லையே –
கற்ப்பிப்போம் யாமே-எனக்கு பிடித்த புருஷார்த்தை இனிதாக பேசுவதை விடுத்து அறிவிலிகள் உடன் வாதம் செய்யவோ –
அவர்கள் ஏதேனும் சொல்லிக் கொண்டு இருக்கட்டும் -என்று கை ஒழிகிறார்-
ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -என்ற நம்மாழ்வார் ஒரு புடை ஒப்பர் இவர் அன்றோ –

முன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்——–19
பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——–20
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்
கன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு——-21
இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் —-22
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப
அன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் ——-23
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்
மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை —————–24
இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25
மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் ———-26
மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த
மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் ——27
அன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த
இன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் ——28
மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்
மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் ——-29
மன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் ———30
துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப
அன்ன முழக்க நெரிந்துக்க வாணீலச்——31
சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் ——32
மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல் ——33
நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்
மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் ——-34
பொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு
இன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் ——-35
அன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே ——36
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37
மன்னும் வழி முறையே நிற்று நாம் –

கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த–சிங்கம் தானே சுமந்து நிற்கிறதோ என்று சங்கிக்கும் படி சிற்ப வேலைப்பாடு என்றபடி –
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-அன்னவர்-நெஞ்சில் கருத்தை ஸூ சிப்பித்துக் கொண்டே புன்னகை செய்வார்களாம்
-பூ கொய்து விளையாட அழைப்பவர்கள் போலே
கவரிப் பொதிய விழ்ந்து ——-சாமரத் திரள்கள் தம் மேல் வந்து மலரப் பெற்று /
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்-மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை –கற்பகக் காடுகள் நிறைந்த பிரதேசங்கள்
எல்லா வற்றிலும் நிலை பெற்று இருக்கிற பாரிஜாத பூக்களில் உள்ள மகரந்த பிந்துக்களில்
மழைத் தடம் கண் —–குளிர்ந்த விசாலமான கண்களை யுடைய வர்களாயும்
விசும்பூரும் மாளிகை மேல் ——ஆகாசத்தில் சஞ்சரிக்கும் விமானத்தில்
மழைக் கண்ணார்-குளிர்ந்த கண்களை யுடைய மாதர்கள்
துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப-நெருங்கிய சன்னல்களைச் சுற்றி உள்ள கதவுகள் திறந்து கொள்ள
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்-அன்ன திறத்தே–தர்ம புருஷார்த்துக்கு பலமாக பெரும் பெரு இதுவே –சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கு ஒத்ததே யாம் –

ஸ்வர்க்க லோகத்தில் கிடைக்கும் விஷய போகங்களை விரித்து அருளிச் செய்கிறார் –
மோக்ஷம் முதலிலே தள்ளி அறம் பொருள் இரண்டும் காம சித்தியே பலனாக கொண்டவை என்று அருளிச் செய்து
பகவத் காமமே தமது துறை -என்று ஆழ்வார் தமது உறுதியை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
சேம நல் வீடும் பொருளும் தர்மமும் சீரிய நல் காமமும் என்று இவை நான்கு என்பர் -நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -என்றார் இறே அமுதனாரும் –
யாதலால் காமத்தின் –மன்னும் வழி முறையே நிற்று நாம் -என்பதை —
யாதலால் காமத்தின் – வழி முறையே நாம் நிற்றும் -என்றும் – யாதலால் -காமத்தின் மன்னும் வழி முறையே நாம் நிற்றும் -என்றும்
அல்ப அஸ்திரம் இல்லாத பகவத் காமத்தில் நிற்போம் என்றவாறு

மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39
மன்னும் வட நெறியே வேண்டினோம் –

கடல் அன்ன காமத்தர் ஆயினும் மாதர் மடலூரார் மற்றையோர் மேல் —

வேண்டாதார்
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் ——–40
அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்
இன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் —–41
மன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்
பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு —–42
உன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத்
துன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் ———43
தம்முடலம் வேவத் தளராதார் காம வேள்
மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் ——-44
பொன்னேடு வீதி புகாதார்

அரசிகர்களில் கடை கெட்டவர்கள் -விரஹத்தில் சந்தனத்துக்கு உண்டான தாஹத்வம் அறியாதவர்கள்
இடையர்கள் ஜாதிக்கு இயல்பான வேய் குழல் ஓசைக்கும் உருகி சுருண்டு விழாமல் இருப்பார்கள் –
கார் மணியின் நாவாடல் தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ-என்று உணராமல்
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ -நெருப்பை வாரி எறிந்தால் போலே அன்றோ இருக்கும் –
நவ யவ்வன ஸ்த்ரீகளாய் இருந்து வைத்து நாணம் காக்க வேணும் என்று இருந்து
தெருவில் புறப்படாமல் தத்வம் பேசி இருக்கும் அரசிக சிகாமணிகள் –

தம் பூவணை மேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——-45
இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்
பொன்னனையார் பின்னும் திரு வுறுக

தம் பூவணை மேல்-சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——தங்களுடைய புஷப சயனத்தின் மீது
துகள்களை யுடைய புஷபங்கள் அணிந்த கூந்தலையும் நிதம்பத்தையும் மெல்லிய முலையையும்
இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்- பொன்னனையார் பின்னும் திரு வுறுக —இனிதாய் இளையதாய் உள்ள வாடைக் காற்று வந்து தடவ -ஆனந்தமாக தூங்கும் ஸ்த்ரீகள் மேன்மேலும் மேனி அழகு மேலிட்டு விளங்கட்டும்
விரஹமே விளை நீராக -ஒழிந்த பாவி அப்படியே ஒழிந்தே போகட்டும் என்று சுகமாக வாழ்பவர்கள் கோஷ்ட்டியில் நான் இல்லை என்றவாறு –
பொன் நெருப்பிலே இட உரு அழியாமல் அழுக்கு அற்று நிறம் பெறுமா போலே விரக அக்னியால் வாடாதவர்கள் என்பதால் பொன்னனையாள் என்கிறார்
திரு உறுக -உறுதல்-அதிகப்படுதல்-அதிகமான சோபை அடையட்டும் என்று ஷேபிக்கிறார்-

போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——–

போர் வேந்தன் -ரண ஸூரன் —பெருமாள் -/-தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து —
பொன்னகரம் பின்னே புலம்ப –அயோத்யா வாசிகள் அனைவரும் பின்னே அலுத்து கொண்டே வந்த போதிலும்
வலம் கொண்டு ——-தான் கொண்ட நிலையில் உறுதியாக கொண்டு
மாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து –திக்குகள் தோறும் மின் போன்ற கானல் பரவி இருக்கப் பெற்றதும்
வெளிப்பட்டுக் ——எல்லாம் சூன்ய ஸ்தலமாக இருக்கப் பெற்றதும் -பார்த்த இடங்கள் எல்லாம் வெளி நிலமாகவே என்றவாறு
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
கற்கள் நிறைந்தும் –புல்லுகள் தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சூழல் காற்று அடித்து இருக்கப் பெற்றதும்
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-அதற்கு மேலே ஆகாரம் இல்லாமல் மடிந்த வயிற்றையுடைய பேய்களே
திரிந்து கொண்டு இருக்கப் பெற்றதும்
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்-கொலை பற்றியே சப்தமே இருக்கும் வெவ்விய காட்டில்
—காம சித்தியே -பெருமாள் கூடி இருப்பதே சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -கூட்டிப் போகா விடில்
ஆண் உடை உடுத்திய பெண் என்று ஜனகர் நினைப்பார் என்றாளே – –

பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –

வேகவதி என்னும் தேவ கன்னிகை -தமையன் தடை செய்தாலும் உதரித் தள்ளி போர் களம் சென்று பலரும் அறிய அவன் காதலனை
கைப் பிடித்து இழுத்து தன்னூர்க்குக் கொண்டு போய் இஷ்டமான போகங்களை அனுபவித்தாள்
-இவள் கதையும் வாசவத்தை கதையும் இன்ன புராணம் என்று அறியோம் –

பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும்
கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் —-56
பன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் ———57
தன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்
பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது ——58
நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே –

அர்ஜுனன் தீர்த்த யாத்திரைக்கு சென்ற பொழுது -உலூபி என்னும் -கௌரயான் என்னும் ஐராவத குல சர்ப்ப ராஜன் பெண்
-கண்டு காம மோஹம் அடைந்து –
அப்பொழுது சம்வத்சர ப்ரஹ்மசர்ய விரதத்தில் நின்றாலும் சரண் அடைந்து விரதம் குலைக்கப் பட்டு
-இராவான் என்னும் புத்ரனை பெற்றதாக -மஹா பாரதம் ஆதி பர்வம் -234-அத்யாயம் –

சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் –

பலி சக்ரவர்த்தி வம்சத்தில் -பாணாசுரன் -மக்கள் உஷை -அநிருத்தன் -அவள் தோழி -சித்ரலேகை –
எம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் -என்னை அனுபவிக்க ஒட்டாமல் மடல் எடுக்கும் படி
பண்ணின மஹாநுபாவன் எம்பெருமான் என்றபடி
மன்னிய பேரின்பம் எய்தினாள்-உஷை அனுபவித்தது சிற்றின்பம் என்றாலும்
உஷை அத்தை பேரின்பம் என்று நினைத்து இருந்தாள் என்றவாறு –

மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-

பர்வத ராஜன் ஹிமாவான் உடைய சிறந்த பெண் -உண்மை -தக்ஷன் சாபத்தால் -பார்வதி யோகத்தால் அக்னி உண்டாக்கி முடிந்து
மீண்டும் ஹிமாவான் புத்ரியாக பிறந்து தபஸ் -காவலில் புலனை வைத்து -கூழை கூந்தல் -தபஸுக்கு சேர சடையாக்கிக் கொண்டதால் சடாபாரம்
-கோரமான தபஸ் -செய்து -மூவிலை வேல் -த்ரி சூலம் –
வரும் தவத்தினூடு போய்–அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே –என்று அந்வயம்
சூழ் கழல் கால் -கழல் சூழ்ந்த கால் -வீரத் தண்டை அணிந்த கால் -கூத்தாடி சூல பாணி பஸ்மதாரி சிவன் உடன் அனைய பெற்றாளே

பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82

திரு நறையூர் எம்பெருமான் சேவிக்கப் புகுந்த தான் பட்ட பாட்டை பேசாத தொடங்குகிறாள் பரகால நாயகி
திரு நறையூர் பொன்னியலும் மாடம் –திரு நறையூர் மணி மாடம் அன்றோ நாச்சியார் கோயில்
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -தென்னறையூர் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை –
பன்னு கருதலம் -கொண்டாடத் தக்க திருக் கைகளும் –
பங்கயத்தின்-பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல்--ஓர் மணி வரை மேல் பங்கயத்தின் காடு பூத்தது போலே என்று
திரு மேனி நீல ரத்ன பர்வதம் -திருக் கண் முதலியன தாமரைக் காடு என்று காட்டி அருளி
அகலகில்லேன் இறையும் பிராட்டி குறைவதால் திரு மார்பும் தாமரை என்ன குறை இல்லையே –
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் —-மரகத பர்வம் முற்று உவமை –
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-இதுவும் முற்று உவமை -ரூபக அதிசய யுக்தி –
நெஞ்சு போயிற்று அறிவு போயிற்று வளை கழன்றது மேகலை நெகிழ்ந்து ஒழிந்தது இப்படிப்பட்ட பரிதாப நிலையிலும் அவளும் இருந்தும் இழந்தேன்
கடல் கோஷம் நலிய -சீதோ பாவ ஹநூமதே என்றால் போலே நிலா சுடுக என்று நினைப்பிட்டானோ –

தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85

கடல் ஓசையும் நிலாவும் மட்டும் அல்ல -தென்றல் -அன்றில் போல் வனவும் நலிய -இவற்றால் நலிவு படும் பெண்ணாகப் பிறந்தேன் -என் செய்கேன்-

கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-

அதற்கு மேலே மன்மத பாணங்களால் படும் வருத்தம் வாசா மகோசரம் -அநங்கன் என்ற பேர் பெற்றவனும்
கன்னவில் தோள் காமன்-என்றும் –தன்னுடைய தோள் கழிய வாங்கி-என்றும் சொல்லும் படி திண்ணிய உடம்பு உடையவன் போல அன்றோ வதைக்கிறான் –
கருப்புச் சிலை / முல்லை அசோகம் நீலம் மா முளரி -ஐந்து புஷபங்கள்
அன்றிக்கே-மத்தம் தீரம் சந்தாபம் வசீகரணம் – மோகனம் என்றும் சொல்வர்
உன்மா தனஸ் தாப நச்ச சோஷண ஸ்தம்ப நஸ்ததா சம்மோஹ நச்ச காமஸ்ய பஞ்ச ப்ரகீர்த்திதா என்றும் சொல்வர் –

பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –

காமன் செய்யும் ஹிம்சை இருக்கட்டும் -என் உடனே இருந்து என்னை ஹிம்ஸிக்கும் முலைகள் -தண்டிப்பார் யாரும் இல்லையே
ஒருவரும் புக்க கூடாத காட்டிலே சிறந்த கொடி தன்னிலே பரிமளோத்தரமான புஷ்ப்பம் புஷ்பித்து கமலா நின்றாள் யாருக்கு என்ன பலன் –
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பேதையேன் -முடிந்து பிழைக்காமல் சாபல்யத்தால் பிராணனைப் பிடித்து கொண்டு நிற்கிறேன்
எனக்கே பொறையாகி -இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ –
முன்னிருந்து -பெண்மைக்கு அவசியம் என்றால் முதுகில் முளைத்தால் ஆகாதோ –கண் எதிரே முளைத்து வாங்கவும் வேணுமோ
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் திரிவேன் –
பெண்ணாக இருப்பதால் வருத்தம் உணர்ந்து அருளிச் செய்ய பரகால நாயகி ஏறிட்டுக் கொண்டு
முலைகள் உள்ளே அடங்கிப் போக மருந்து கொடுப்பார் உண்டோ என்கிறாள் –

-மால் விடையின் ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர்-

மன்னு மருந்து அறிவீர் இல்லையே -என்றதும் நல்ல மருந்து உண்டு -என்று சொல்லும் வார்த்தைக்கு பாரித்து இருந்த பரகால நாயகி
காதிலே ஊரா மாடுகளின் மணியோசை வந்து விழ-செவியில் சூலத்தைப் பாச்சினால் போலே
நெடுக்கச் சென்று ஹிம்சை பண்ணா நின்றதே -எக்கு -சூலம் ஈட்டி என்றவாறு –

இது விளைத்த ——–95
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை –

இக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னான் என்று அறிவாள் பரகால நாயகி
அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்பவன் என்று அபிநயித்து அனைவரையும் அகப்படுத்திக் கொண்டு மேனாணித்து இருப்பவன் –
என் வாய்க்கு இரையாகி அவன் படப் போகும் பாடுகளை பாருங்கோள் என்கிறாள் மேல் -முன்னம் மா மதி கோள்- விடுத்த -இப்போது கிடீர் அவன் ஆபன் நரானரை நோக்கத் தவிர்ந்து -என்பர் நாயனார்
மதி யுகத்த இந்நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்தாகும்-சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கி என்னை நன்றாக தப்பிக்க நிர்வஹித்தான்-
இதை விளைவித்த மன்னன் –மார்பன் -முகில் வண்ணன் -சேவகனை -வீரனை -கூத்தனை –விசேஷணங்கள்–எல்லாம் கன்னவில் தோள் காளை-என்ற இடத்தில் அந்வயிக்கும் –

ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை

கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே–தூணில் நின்றும் தோன்றி திருக் கண்களால் கொளுத்தி விடலாம் என்றாலும் –
ஆஸ்ரித ப்ரஹ்லாதன் விஷயத்தில் பல்லாயிரம் கொடுமைகள் புரிந்த பாவியை ஒரு நொடிப் பொழுதில் கொன்று முடிக்காமல்
சித்திர வதை பண்ணி விட வேண்டும் என்றும் தாள் மேல் கிடாத்தி போழ்ந்தான் யாயிற்று-அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களால் பிளந்து அருளினான்

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104

மஹா வராஹ ரூபாயாய் -புண்ணியம் தெய்வதமும் சேர் பூ லோகத்தை புல் பாய் போலே சுருட்டிக் கொண்டே பாதாளம்
நண்ணி இரண்யாட்ச்சனை பின் தொடர்ந்தே ஏகி நலமுடனே யாதி வராகத் தேவாகி-மண்ணுலகம் அனைத்தும்
இடந்து எடுத்தோர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்துத் தேவர் எண்ண உலகீர் எழும் படியப் பண்ணா
இறைவா நாராயணனே எம்பிரானே-என்பர் பின்னோரும்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பம்
வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க–முது நீர் -சகல பதார்த்தங்களும் முற்பட்டு புராதானமாய் யுள்ள நீர்
-அப ஏவ சசர்ஜாதவ்–நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி –
வைத்து எடுத்த கூத்தனை -அக்காலத்தில்  மகிழ்ச்சி தோற்ற கூத்தாடினான் -என்பதை கண்டார்கள் ஆழ்வார்கள்

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை –

மந்த்ர மலை சுழன்ற பொழுது அந்த சுழற்சியின் விசையின் மிகுதியால் சகல பதார்த்தங்களும் சுழல்வன
போலத் தோன்றினமை–மின்னு மிருசுடரும் – -தன்னினுடனே சுழல மலைத் திரித்து
அவருடைய –மன்னும் துயர் கடிந்த வள்ளலை–துர்வாச முனிவர் சாபத்தால் தேவர்களுக்கு நேர்ந்து இருந்த வறுமையைப் போக்கின-என்றவாறு –

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

அத்துனைக் கண் —அவ்வளவில் -அந்த ஷணத்திலேயே –

-தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம் மா மணியை-

கோயில் திருமலை பெருமாள் கோயில் —மன்னும் அரங்கத்து எம் மா மணியை —மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –வெஃகாவில் உன்னிய யோகத்துறக்கத்தை
மின்னை இரு சுடரை –மின்னல் போலவும் சந்த்ர ஸூரியர்கள் போலவும் பள பள வென்று விளங்குபவன் -என்பர் பெரியவாச்சான் பிள்ளை
மின் என்று மின்னல் கொடி போன்ற பெரிய பிராட்டியார் -இரு சுடர் -ஸூர்ய சந்த்ரர்களுக்கு ஒப்பான திரு வாழி திருச் சங்குகள் சொல்லிற்றாய்
–இம்மூவரின் சேர்த்தி சொல்வதாக நாயனார் திரு உள்ளம் –
அங்கு நிற்கிற படி எங்கனே என்னில் -பெரிய பிராட்டியாரோடும் இரண்டு அருகும் சேர்ந்த ஆழ்வார்கள் உடன் ஆயிற்று நிற்பது –

வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124

ஹம்சம் மத்ஸ்யம் ஹயக்ரீவர் வித்யா ப்ரத அவதாரங்கள்
பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின் மூவரு நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –
வாசல் கடை கழியா யுள் புகா காமரு பூங்கோவல் இடை கழியே பற்றி இனி –நீயும் திரு மகளும் நின்றாயால் -பொய்கையார் –
அள்ளல் வாய்–அன்னம் இரை தேரழுந்தூர் –சேறு கண்டு இறாய்க்கக் கடவ அன்னங்களும் சேற்றைக் கண்டு இறாயாதே மேல் விழுந்து
சஞ்சரிக்கும் படியான போக்யதை யுடைய திரு அழுந்தூரிலே நித்ய வாசம் பண்ணுகிற நிரவாதிக தேஜோ ரூபனை -நாயனார்
அத்திருமலைக்கு சீரார் வேங்கடாசலம் என்னும் பேர் வைத்தனர் அது ஏது என்னில் வேம் என வழங்கு எழுத்தே கொத்துறு பாவத்தைக் கூறும்
கடம் என கூறு இரண்டாம் சுத்த வக்கரம் கொளுத்தப்படும் எனச் சொல்வர் மேலோர் -என்றும்
வெம் கொடும் பவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்களம் பொருந்தும் சீர் வேங்கட மலை யானது என்றும் புராணத் செய்யுள்
வேம்-அழிவின்மை / கடம் -ஐஸ்வர்யம் / வேங்கடம் என்னும் பெயரில் தென்றலும் உண்டு –

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய யோகத் துறக்கத்தை-

ஆயிரம் பூம் பொழிலையும் யுடைய மாலிருஞ்சோலை யதுவே –வன கிரி அன்றோ –
அன்ன வுருவில் அரியை-வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை -தெற்காழ்வாரை குறித்த படி
அந்தணனை -அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்
-பரம காருண்யன் -அறவனை ஆழிப் படை அந்தணனை
வேளுக்கை –வேள் இருக்கை -உகந்து அருளினை தேசம் அன்றோ
-காமஸிகாஷ்டகம்–காமத் அதி வசன் ஜீயாத் கச்சித அத்புத கேஸரீ–காமேந ஆஸிகா-என்றபடி
பாடகம் -பாடு பெருமை -அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்டமூடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்

ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன்

என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்-முன்னவனை–தேவாதி ராஜன் இவர் மனம் கவர்ந்த ஈசன் அன்றோ -வேகவதி நிதி காட்டி அருளிய சரித்திரம் –
மூழிகே காலத்து விளக்கினை -வளக்கினை —பாட பேதம் –சம்பத் ஸ்வரூபன் என்றுமாம்
ஆ தன் ஊர் –காமதேனுவுக்கு பிரத்யக்ஷம் / ஆண்டு அளக்கும் ஐயன் –ஆண்டு -சகல காலங்களுக்கும் உப லக்ஷணம் -கால சக்ர நிர்வாஹகன் என்றபடி
ஆண்டளக்கும் ஐயனை-நென்னலை இன்றினை நாளையை-மூன்று விசேஷணங்கள் -நென்னலை-இறந்த காலங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்
இது விளைத்த காளையை –என்று தொடங்கி-கன்னவில் தோள் காளை-ஸ்வரூப ரூப குண விபூதியை அருளிச் செய்தார்
விரஹம் தின்ற உடம்பைப் பாரீர் -திரு உள்ளம் இரங்கா விடில் -ஆண்டாள் பெரியாழ்வார் வியாசர் வால்மீகி ப்ரஹ்லாதன்
குலசேகர பெருமாள் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்றோர் -கூடி இவன் மேன்மையில் பிரமித்து இருப்பார்களே –
அங்கு எல்லாம் சென்று அவனைப் போலே நிர் குணன் எங்கும் இல்லை என்று பறை அடித்து சொல்வேன்
லோகம் அடங்க திரண்ட இடங்களில் சென்று -சேஸ்வரம் ஜகத்து என்று பிரமித்து இருக்கிறவர்களை நிரீஸ்வரம் ஜகத்து
என்று இருக்கும் படி பண்ணுகிறேன் -என்றவாறு –

தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139

கீழே ப்ரதிஜ்ஜை செய்த படி சில சமாசாரங்களை எடுத்து விடத் தொடங்குகிறாள் பரகால நாயகி –
ஏசத் தொடங்குவது ப்ராணாய ரோஷத்தின் பரம காஷ்டை யாகும்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை -குண கீர்த்தனங்களிலே இதுவும் ஒரு பிரகாரமே யாகும்
மானமரும் மென்னோக்கி-இரண்டு பிராட்டிகள் பேச்சாலே ஏக காலத்திலே முன்னடிகளால் இகழ்ந்தும் பின்னடிகளால் புகழ்ந்தும் அனுபவித்தாரே –
பெற்றிமையும் -தெற்றனவும்-சென்றதுவும் –என்ற இவை எல்லாம்- மற்றிவை தான் உன்னி உலாவ– என்ற இடத்தில் அன்வயித்து முடிவு பெறும்
இவனுடைய இழி தொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை -என்ற வாறு –
தன் வயிறார –திருமங்கை ஆழ்வாரைப் போலே பரார்த்தமாக களவு காண்கிறது அன்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்-
வான் கயிறு –எதிர் மறை இலக்கணையால் குறுங்கயிறு -கண்ணி நுண் சிறுத் தாம்பாலே இ றே கட்டுண்ணப் பண்ணிக் கொண்டது –

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்

ஆயிரம் கண்ணுடை இந்திரனார்க்கு என்று ஆயர் விழ எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்த அதனை எல்லாம்
போயிருந்தது அங்கொரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி
வளைத்து உண்டு இருந்தான் போலும் -பெரிய திரு மொழி –10-7-7-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் அடங்கப் பொட்டத்துற்று-பெரியாழ்வார்
திரை போட்டு உண்டானா -பிறருக்கு கொடுத்து உண்டானா முற்றவும் தானே யன்றோ துற்றினான்-வெட்கமாவது பட்டானா -என்பேன்
தெற்றனவு-தெளிவு வெட்கம் இல்லாமை என்றவாறு

மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்

கோதை வேள் ஐவர்க்காய் மன்னிக்கலாம் கூறிடுவான் தூதவனாய் மன்னவனால் சொல்லுண்டான்-இழி தொழில் நாடு அறியச் சொல்லி நாடு எல்லாம் அவமதிக்கும் படி செய்வேன் –

மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143

செருக்குக்குப் போக்குவீடாக -குடங்கள் ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே —
ஈடறவு–சீர் கேடு –-ஈடு பெருமை -அஃது இல்லாமை -அல்பத்தனம் என்றவாறு /
வீடறவும்-என்றும் கொண்டு கூத்தின் நின்றும் மீளாமை என்றுமாம்

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –

சூர்பணாகாவை செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அறிந்தானை பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -பெரியாழ்வார்
மலை போல் உருவத் தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே
ராமஸ்ய தஷினோ பா ஹூ
பொன்னிறம் கொண்டு -அபிமதம் பெறாமையாலே விவரணமான உடம்பை யுடையவள்
புலர்ந்து எழுந்த காமத்தால் -புலர்தல் -விடுதல் -உதயமாகி வளர்ந்த காமத்தினால் என்றபடி –
மன்னிய திண் எனவும் -ஸ்த்ரீ வதம் பண்ணினால்-அனுதாபமும் இன்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தானம் செய்ததாக
நினைத்து இருந்த நிலை நின்ற திருடத்வம் -என்று வியாக்யானம்

வாய்த்த மலை போலும்—–146
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147
உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148
மன்னிய பூம் பெண்ணை மடல் –

தாடகை -ஸூ கேது -என்னும் யக்ஷன் மகள்-ஸூந்தன் என்பவனின் மனைவி -கணவன் அகஸ்தியர் சாபத்தால் நீறாய் ஒழிந்ததை அறிந்து தன்
பிள்ளைகள் ஸூ பாஹு மாரீசர்கள் உடன் எதிர்த்துச் சென்ற பொழுது சாபத்தால் ராக்ஷஸி ஆனால்
ஸ்த்ரீ ஹத்தி பண்ணுவதே இந்த மஹாநுபரின் தொழில் என்பேன்
திண் திறல்-ஒரு பெண்ணைக் கொலை செய்து விடுவது பராக்ரமோ என்று ஏசினபடி
மற்றிவை தான்—உன்னி யுலவா –-சொல்லி முடிக்கப் போகாதவை அன்றோ -உதாரணத்துக்கு சிலவற்றை சொன்னேன் என்றபடி
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–மன்னிய பூம் பெண்ணை மடல் –சிறப்பித்து பனை மடலைச் சொல்லி
இந்த ப்ரஹ்மாஸ்திரம் இருக்க இனி எனக்கு எண்ண குறை -என் கார்யம் கை புகுந்ததேயாம் -என்று
தான் பரிக்ரஹித்த சாதனத்தின் உறைப்பைக் காட்டி அருளுகிறார்

————————————————————————–

கம்பர்பாடல்

என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-பரகாலன் பாவனையில் அருளிச் செய்த பாடல் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

திரு நெடும் தாண்டகம் –ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் -2014-

November 10, 2015

திரு வேகா சேது ஸ்தோத்ரம் -திரு வெக்காவுக்கு தேசிகன் அருளி -உள்ளுவார் உள்ளத்தே -எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்
களவா -ஆஸ்ரயிப்பார்கள் உடைய பாபங்களை திருடுபவன் -மனசை அபஹரித்துக் கொள்வான் -ராம கமல பத்ராஷா ருபம் ஔதார்யம் காட்டி பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் –
கிளைக்கு கிளைக்கு தாவும் வானரத்தையும் கவர்ந்த திருக் கண்கள் அன்றோ –
ஸ்ரீ ரெங்க நாதா மம நாதா -எனக்கும் நாதன் -உள்ளுவார் உள்ளத்து -இருந்தும் -எனக்கும் இருப்பை பேராது என் நெஞ்சில் உள்ளாய்-என்கிறார் –
பெருமானே உன் திருவடியைத் தேடினேனே -என்கிறார்
திருப்பேர் நகர் -திரு வாயிரப்படி வர காரணம் -ஸூ சிப்பிக்கிறார் இத்தால்
வங்கத்தாய் –பங்கத்தாய் -சிவ பெருமானை கொண்டவனே -பாற்கடலாய் -அடுத்த பாசுரம் —பவள வண்ணா எங்குற்றாய்
மா மணி-வந்து உந்தும் -முந்நீர் -திருக் கடல் மல்லை-சுவாமி திருமேனி சம்பந்தம் பெற –
பனிவரை மேல் உச்சியாய் பவள வண்ணா -திருமலை மேல் உள்ள -கீழே நரசிம்ஹன் மேலே தேவ பெருமாள்
அர்ச்சாவதார அனுபவம் இல்லாத ஏழைத் தனம்
பவள வண்ணா எங்குற்றாய் -தசரத சக்ரவர்த்தி நிலையில் -கண் அவன் பின்னே போயிற்று -தொகு இந்த்ரியம் போயிற்றோ இல்லையோ
என்று கையாலே தடவி பாராய்
அது போலே ஆழ்வார் கதறுகிறார் -கூக்குரல் இடுகிறார் – எங்குற்றாய் ஒவ் ஒரு திவ்ய தேச பெருமாள் இடமும் சேர்த்து பட்டர் நிர்வாஹம்
10 நின்ற திருக்கோலம் -மலையாள திவ்ய தேச திருப்பதிகள் –இரண்டு கிடந்த -ஓன்று இருந்த திருக் கோலம்
இந்த பாசுரம் -ஐந்து நிலைகளையும் அனுபவிக்கிறார் -ஸ்வா பதேச பொருள் இதில் -திரு மூழிக் களம் அனுபவிக்கிறார் -உலகம் ஏத்தும் தென்னானாய் –பின்னானார் வணங்கும் சோதி -அர்ச்சை –
பொன்னானாய் -சர்வ ஏவ ஸ்வர்ணா -திருச் சார்ங்கமாக இருந்த திருமேனி அனுபவம் -பரத்வத்தையே அர்ச்சையில் கண்டு அனுபவிக்கிறார்
திரு உடம்பு வான் சுடர் -நம் ஆழ்வார் -பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் -இமையோர்க்கு முன்னானாய் -தேவாதி தேவன் -முன் சென்று கப்பம் தீர்த்தான் -ரஷனம் -அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுத்து -பீஷ்மாதிகளைக் கொண்டு -தாம் அருளிச் செய்தவற்றை மூதலித்து
இகழ்வாய -தொண்டனேன் இகழும் வாயை உடையவன் என்றுமாம்
தென்னானாய் வடவானாய் -எல்லா திக்குகளிலும் அர்ச்சா ரூபம் கொண்டு -சர்வ வ்யாப்தி என்றுமாம்
பொன்னுலகம் ஆளீரோ -பொன்னானாய் -அவன் சொத்து என்பதால் -என்னானாய் என்னானாய் -எந்த விதமாக அனுபவிப்பேன் –
என்னுடைய யானையே மீமிசை -உறுதிப் பட சொல்ல
கந்த களிறு -மத களிறு -நாமும் மீண்டும் அழுக்கு பாபம் சேர்த்து கொண்டு -மதம் பிடித்த யானை போலே உள்ளோம் –யானை தன் மேலே
அழுக்கு போட்டுக் கொள்வது போலே -தேசிகன் -தயா சதகம் —கர்மா சங்கிலியால் கட்டி வைக்கிறான் –
அவனுக்கும் யானைக்கும் பல ஒற்றுமைகள் உண்டே
என்னடியார் அது செய்யார் -பிராயச்சித்தத்தால் மன்னிக்க முடியாத பாபம் செய்யார் -அது -தேசிகன் -கைக்கு எட்டினாரை கழுத்தில் வைக்கும் மத யானை
பிரபத்தி வியாஜ்யம் சாதனம் ஆக்கி தன்னிடம் சேர்த்து கொள்கிறான் -ஆஜ்ஞ்ஞை மீறினால் சங்கல்பம் இல்லை வர்ணாஸ்ரமம் அனுஷ்டிக்கா விடில்
ஷிபாமி தள்ளுவான் –
குண பால மத யானாய் -குட்டி யானை -திருக் கண்ணபுரம் -காட்டு மன்னார் எம்பெருமானார் நிர்வாஹம்
-யௌவனம் மிக்க பெருமாள் -ஆளவந்தார் நாத முனிகளுக்கு கிருதஞ்ஞை காட்டி அருள –

தாய் பாசுரங்கள் – -அடுத்த 10 பாசுரங்கள் –எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்னும் —
-எங்கும் சுற்றி ரெங்கன் இடம் வந்து சேர்ந்த தசை –பட்டுடுக்கும் –காப்பார் யாரே
அபராத சஹத்வ திருக் கல்யாண குணம் உண்டே -அவனுக்கு
முரலும் கூந்தல் -மடமானை இது செய்தார் தன்னை -கட்டு விச்சி விழித்து -மெய்யே -சொல் என்கிறாள் -சொல் என்ன சொன்னாள்-
கடல் வண்ணன் இது செய்தார் இனி காப்பார் யார் –
இதில் ஒரு ஐதிக்யம் உண்டே –
சீரார் செந்நெல் திருக்குடந்தை -சீரார் சுளகு -ஆராவமுதனுக்கு அமுதாகும் நெல் என்பதால் சீரார் செந்நெல் –
சொல் என்ன சொன்னாள் கட்டுவிச்சி -பர தத்வ ஸ்தாபனம் துஷ்ட தேவதை கழித்து கடல் உருவம் மட்டுமே கொண்டு செந்தீ பொன்னுருவம் தள்ளி
திருக் கோஷ்டியூர் நம்பி -18 தடவை -எம்பெருமானார் -ஐதிகம் -உடையவர் போலே இந்த கட்டுவிச்சியோ கீதாசார்யன் போலே இந்த கட்டுவிச்சி –செவி தாழ்ந்தார்க்கு எல்லாம் வார்த்தை சொன்னார் எம்பெருமானார் -ருசியைப் பிறப்பித்து வார்த்தை சொன்னான் கீதாசார்யன் –
நெஞ்சு உருகி -உருகி அருளிச் செய்த பாசுரம் -என் சிறகின் கீழ் அடங்காத –
கள்வன் கொல் நாயகி —பரகால நாயகி –உண்ணும் சோறு நாயகி -பராங்குச நாயகி -மனஸ் இந்த்ரியங்கள் பிராணன் இவை இவர் ஆதீனத்தில் இல்லை –
ஆராவமுதே –நின் பால் உருகி நீராய் கரைந்து -போலே
மாதுர்யம் -குட மூக்கிலே பர்யவசிக்கும் -உண்டு அறியாள் அர்ச்சாவதார அனுபவத்துக்கு பின்பு பரகால நாயகி நிலை –
புட்கொடி ஆடுவது போலே இவளும் ஆடுகிறாளே -ஆடும் பாடும் -அணி அரங்கம் ஆடுதுமோ என்று தோழியையும் கூப்பிடுகிறாள்
ஆடும் பாடும் -தாயார் எனது தசையைப் பார்த்து தவிக்க -நீ சமாதானம் சொல்லி பாடிக் காண் என்கிறாள் -ஆட வேண்டும் பாட வேண்டும் என்கிறாள்
தேவரீர் சாதிக்க வேண்டும் என்னுமா போலே ஆடும் பாடும் -என்கிறாள்
ஆடவும் பாடவும் அணி யரங்கம் போவோம் -ஆடவும் பாடவும் -அங்கே தானே -யோக நித்தரை செய்து அருளுகிறான்
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணைப் பெற்றேன் -கை மீறி போனாள்-பிறந்தது முதலிலே இப்படியே அர்ச்சாவதார அதீனமாக இருக்கிறாள்
கல் எடுத்து -கல் மாரி காத்தாய் என்னும் — முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே
மாசி கருடசேவை காசிக்குப் போனாலும் கிடைக்காது என்பர் -கிளிக்கு பகவத் விஷயம் சொல்லி குணா கீர்த்தனம் சொல்லிக் காட்டச் சொல்லி
-வளர்த்ததனால் பயன் பெற்றேன்
இவளும் கிளி மொழியாள்-மடக் கிளியை கை கூப்பி வணங்கினாள்-இதுவும் அடுத்த பாசுரமும் –
கல் எடுத்து –ஊரகத்தாய் -குன்றம் எடுத்து –அவனே உலகம் அளந்தான் -இரண்டு நாயகிகளும் ஒரே மாதிரி அனுபவம்
பூஜித்தால் தெய்வம் கை விடாது காட்டி அருள தூக்கினான்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -சிவா தனுஸ் முறித்து சீதா பிராட்டி தோளை அணைத்தாய்
கிருஷ்ண -இந்திர பூஜை -மறுத்து -திரி விக்ரமன் -மூன்றாலும் இவனே பராத்பரன் -என்பதை காட்டி அருளி
பார்த்து வா என்றார் விஸ்வாமித்ரர் –
யத்தோத்த காரி -ஜனகன் விஸ்வாமித்ரர் சக்கரவர்த்தி மூவர் சொல்லையும் -செய்த பெருமாளே சொன்ன வண்ணம் செய்த பெருமாள் –
பிராட்டி தோளை தோய்ந்தே அங்கே சயனம் -என்றவாறு
சரஸ்வதிக்கு உபதேசம் செய்து -சேர்ந்து இருந்து காட்டி அருளுகிறார் -என்றுமாம் –
ஐதிகம் -உடையவர் கோஷ்டியை பெரிய நம்பி பிரநாமம் -மடக் கிளியை கை கூப்பி வணங்கினாள்
கல் எடுத்து கல் மாறி காத்தான் -கல் மாறி யாகையாலே கல்லை எடுத்து ரஷித்தான் நீர் மாறி யாகில் கடலை எடுத்து ரஷித்து இருப்பான்
-சத்திய சங்கல்பன் அன்றோ –
முளைக் கதிரை –வளர்த்ததனால் பயன் பெற்றேன் -வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
குறுங்குடி முகில் என்று கிளி நினைவு படுத்த
முகிலை -உள் முகிலை
வெளி மேகம் -போலே இல்லாமல் எப்போதும் சேவை சாதித்திக் கொண்டு உள் முகில் –
மூ உலகு –பக்த முக்த நித்யர் -கொங்கு பிராட்டி மூலம் -தேசிகன் அவதாரம் ஸூசகம் -திரு வேங்கடமுடையான் -திரு மணி -ராமானுஜர் -மூவரும் சேர்ந்து -மூ உலகுக்கும் அப்பால் மிக்க முதலாய் -நின்ற -அளப்பரிய -ஆராவமுது –
கண்ண புரம் கை தொழும் பிள்ளையை -பிள்ளை என்ன மாட்டாமல் பூஜ்யராக கொள்வாரே -மடக் கிளியை கை கூப்பி வணங்கினாரே -எம்பெருமானாகவே நினைத்து கை கூப்பினாள் -ஆசார்ய ஸ்தானத்தில் -தன்னால் சொல்ல முடியாததை -இந்த திவ்ய தேசங்களுக்கு சென்று சொல்வேன் என்றதே அப்புள்ளார் கிளையை பழக்கி வைக்குமா போலே -கிடாம்பி அப்புள்ளார் -தேசிகன் என்ற கிளி பாடக் கேட்டு
பெரியாழ்வார் -பரத்வம் ஸ்தாபித்த பின்பு வடபத்ர சாயி -எதிர் கொண்டு அழைத்து -வளர்த்ததனால் பயன் பெற்றேன்
மடாதிபதிகளுக்கும் ஸ்ரீ சடகோபன் திருமாலை பரிவட்டம் முதலிய எழுந்து அருளப் பண்ணி ஸ்வாகதம் இன்றும் –
நடதூர் அம்மாள் கடாஷிக்கப் பெற்ற தேசிகன் –
கிளி பாட திவ்ய தேச அனுபவத்திலே பரகால நாயகி ஆழ்ந்து வீணை மீட்டி பாடகிளியும் கூடப் பாட தாயார்
-தனது தோழி இடம் பேசுவது போலே அடுத்த பாசுரம் –
முலை மேல் தாங்கி என் பேதை -சொல் உயர்ந்த – நெடு வீணை —
பராங்குச மடம் அஹோபில மேடம் வண் சடகோபன் என்பர் பரகால மடம் –
தூ முறுவல் -மெல் விரல்கள் சிவப்பு எய்த –மென் கிளி போல் -மிழற்றும் -ஆலாபனை செய்கிறாள் –
வீற்று இருக்கும் யானை -வரதனையும் -ஸ்ரீ காஞ்சியில் -மற்ற திவ்ய தேசங்கள்
கடல் கிடந்த கனி -ஷீராப்தி நினைவு வர –அணி அழுந்தூர் -நின்று உகந்த பெருமாள் -நினைவு வர –

கடல் கனி -சயன திருக் கோலம் –பாண்டிய தூதன் வீற்று அணி அழுந்தூர் நின்ற அம்மான் மூன்றையும் ஆசைப் படுகிறாள்
நின்றவாறும் கிடந்த வாறும் இருந்த வாறும் -வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செய்வானே
தானும் பாட -கிளியுடன் பாட -வீணையும் வாசிக்க –சீரார் செந்நெல் கவரி வீசும் எல்லாம் உத்தேச்யம் -அவனைப் பற்றி இருப்பதால்

கரு நிறம் -கரியான் ஒரு காளை -கருணை மிக்கவன் -தயை தூண்ட -தயா சதகம் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-ஸுய வர்ணாஸ்ரமம் தானும் செய்து மற்றவர்களும் செய்வதால் இனிது உகப்பான் –
பின்புள்ளார் இழவாமைக்காக அன்று கன்று மேய்த்த கண்ணனே திருக் கண்ண புரம் சேவை பூர்வர்
பட்டர் -அன்று கன்று மேய்த்தவன் -இங்கே புகுந்து சேவை சாதிக்கிறான் -கற்றுக் கறவை கணங்கள் பல உண்டே -அவை இங்கே வந்தனவாம்
-எதிர் சூழல் புக்கு அவற்றை ரஷிக்க வேறு வழிகளில் இங்கே வந்தானாம் -பட்டர் நிர்வாஹம் -சோலை வாய்ப்பாலே இளைப்பாற இங்கே வந்தானாம்
-திரு வாய்ப்பாடி போலே இருந்ததாம்
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை -என்ன நேராக தலை மகள் இடமும் -தாய்மார் தோழிகள் இடம் சொல்வதாகவும் –
மேலும் ஆட பாட -அடக்கம் இல்லாமல் -கூப்பிட -நறையூரும் சேர்த்து பாடி -அர்ச்சாவதார அனுபவம் தலை மண்டி என் நெஞ்சினால் நோக்கிப் பாராய் –
ஆழ்வார் மனஸ் அலை பாய்ந்து –
அடியேன் என்னப் பண்ணும் மாதுர்யம் குடமூக்கிலே பர்யவசிக்கும் -அஹங்காரம் மமகாரம் நான் என்னது என்பாரை அடியேன் தாசன் பிரபன்னன் –
சக்ருத் தர்சனம் மாத்ரத்திலே -ஒரே தர்சனத்தில் -தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
இளம் கொங்கை மேல் பொங்கி – -பொரு கயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று
சிறு குரலுக்கு உருகி -ஆங்கே -நாயகனை நினைத்து -கீசு கீசு என்று ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் உண்டே
நங்காய் -பாடி ஆடியத்தை கேட்டு கண்டேன் -குண பூர்த்தி உள்ளவள் பூர்வர் நிர்வாகம்
-அவன் தான் மேல் விழும்படி இருக்க -முக்யமானவள் -இவளை அடைய அவன் நோன்பு நோற்க வேண்டும் நீ மேல் விழக் கடவையோ –
அவனுக்கு அடிமை என்ற ஸ்வரூபம் அறிந்து -இஷ்ட விநியோக அர்ஹமாய்-சீதா பிராட்டி போலே -என் ஸ்வரூபம் திருவடி ஸ்வரூபம் பெருமாள் ஸ்வரூபம் -நிறம் பெற -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்தது போலே -பிரபன்ன சந்தானம் நம் குடிக்கு ஆகாதே –

பரகால நாயகி பராங்குச நாயகி நிலையில் அருளிச் செய்யும் பாசுரங்கள் -இருந்த இடத்திலே அர்ச்சாவதார எம்பெருமான்
பலரும் சேவை சாதிக்க பாடி ஆடுகிறாள் –
ரூபத்தையும் குணங்களையும் வர்ணித்து -அந்த திவ்ய தேசம் கிளம்பி -இருக்கும் இடத்தில் இருக்க ஒட்டாமல் –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -மலையே மரமே -சீதையை கண்டாயா பெருமாள் நிலை போலே
ரூபம் குணம் அழகாலே மனசை கொள்ளை கொண்ட அரங்கன் எங்கே என்கிறாள்

கள்வன் கொல் -நாயகி -பரகால நாயகி -கண்ணன் கை பிடித்து கூட்டிப் போனதால் -பயம் அதிகம் தாயாருக்கு –
இருவரும் பிச்சேறி-ச்பர்சத்தால் -லங்கா த்வாரம் புகுவர் கொலோ
கார் வண்ணம் திரு மேனி –ஏர் வண்ணம் என் பேதை -எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
உண்ணும் சோறு நாயகி -பராங்குச நாயகி —திண்ணம் என் இள மான் திருக் கோளூர் புகுவர் கொலோ -உத்தேச்யம் அவன் என்பதால்
பார் வண்ண மட மங்கை பத்தர்-பந்தம் உள்ளவன் -கட்டுப் பட்டவன் -பூமி பிராட்டிக்கு –பித்தர் -பனி மலர் மேல் பாவைக்கு -பெரிய பிராட்டியாருக்கு –
பெரிய பெருமாள் விஸ்வ ரூபம் தர்சனம் எல்லா திவ்ய தேச பெருமாளையு சேவித்தால் போலே பிரமாணங்கள் சொல்லும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் -இது வன்றோ நிறை -பூர்த்தி -அழிந்தார் -நிற்கும் நிலை
சிலரை மயங்கப் பண்ணும் சிலரை நர்த்தனம் பண்ணப் பண்ணும் சிலரை உறங்கப் பண்ணும்
பெண் சொல்வதாக தாயார் சொல்கிறாளா -தாயாரே சொல்கிறாளா -இரண்டு நிர்வாஹங்கள்
பாவம் செய்த -தன்னைத் தாயார் சொல்லிக் கொள்ள –
பெண் ரூபங்கள் குணங்களில் ஈடுபட்டு சொல்ல அத்தை அனுவதித்து தாயார் பேசுவதாக –
ஏர் வண்ணம் என் பேதை –இவளுக்குத் தக்க அழகன் அவன் -பத்தர் பித்தர் பன்மையில் பேசி நீர் வண்ணன் -ஒருமையில் சொல்லி
–விரோதமாக -பெண்ணை விட்டுப் போனவன் என்பதால் -ஆண்டவன் நிர்வாஹம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி —சர்வ பல அர்த்தங்கள் உண்டே -இத்தால் -தீய கர்மாக்கள் மட்டும் சொல்வது அல்ல
-புண்யங்களும் மோஷ தடங்கல் ஆகுமே என்பதால் -கர்மா விடுவிக்க என்றபடி
அது போலே இங்கே பாபம் -புண்ய அர்த்தம்-என்ன பாக்கியம் செய்தேன் என்கிறாள் என்றுமாம் –
நீர் மலைக்கே போவேன் -அனைவரும் ஸ்ரீ ரெங்கநாதன் என்ற நினைவு -இவளுக்கு –
இப் பெண் பிள்ளை ஆற்றிலே கெடுத்து குளத்திலே தேடுகிறாள் -நம்பிள்ளை இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு
-இப்படி நிலை தான் வரும் பகவத் குண அனுபவம் உள்ளவர் –
அஸ்து மே -பிரார்த்திக்க பிராட்டியாரும் அப்படியே என்று அருள் பாலித்து அருளினார் கத்யத்திலே
பக்தி நிஷ்டருக்கு சாஷாத்காரம் பகவத் அனுபவம் இங்கேயே உண்டே விளம்பமாக கிடைத்தாலும் -பஜன ஸூ கம் -த்யானம் செய்வதே ஸூ கம் ஏகச்ய விபுலம் -பரஸ்ய -பிரபன்னனுக்கு சீக்கிரமாக கிட்டும் தேசிகன் –ஆனால் பரிமித -குறைந்த காலம் -அந்த ஆனந்தம் வேண்டும் என்று அபேஷித்தார் அஸ்து மே -த்யான ஸூ கம் கேட்டிட்டார் அஸ்து தே ததைவ சம்பத் சம்பத் திருமுக பாசுரம் -இவன் மறுக்க மாட்டாதே -இதனாலே பித்தர் பனி மலர் பாவைக்கு –
ஏற்கனவே பனி மலர் பாவைக்கு பித்தாய் உள்ள பெண்ணுக்கு உபதேசம் செய்யக் கூடாதோ என்று அந்த நங்கை தாய் இடம் கேட்க –
முற்றாத வனமுலையாள் –மொய்யகலத்துள் இருப்பான் -பாசுரம் –ஞான வைராக்யங்கள் முலை இடை —பொரு வற்றாள் -என் பெண்ணுக்கு ஒப்புமை இல்லை என்கிறாள் -இதில் -பாவம் செய்தேன் என்றவள் -அங்கும் என்ன புண்ணியம் செய்தேன் என்கிறாள் –
அந்த நங்கை -உடைய நங்கை -பெரிய விசேஷார்த்தம்
உன் மகளும் அப்படியோ என்று பரகால நாயகி தாயார் இவள் இடம் கேட்கிறாள்
யுவதிச்ய குமாரிணி -பெரிய பிராட்டியார் -இவன் யுவா குமாரா -நமக்கும் பூவின் மிசை கேள்வனுக்கும் அன்பனாய் –
தன்னுடைய ஏகாந்தத்தில் எம்பெருமானை அடக்கிக் கொள்ளும் அவயவ சோபை உள்ள -பெரிய பிராட்டியார்
அவன் திரு மார்பில் -ஏகாந்தத்தில் இவளும் அடங்கி –
அஃதும் கண்டும் அற்றாள் -நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -விடாமல் -போலே
அஹம் அண்ணாதா -அஹம் அங்கு -கொள்ளலாம் -சாத்விக அஹங்காரம் -ஆசார்யர் அடைந்த நமக்கு யார் நிகர் அகல் ஞாலத்தில்
ஜன்மா சாபலம் அடைந்தது -தேசிகன் -செய்த வேள்வியார் –அன்னம் -ப்ரஹ்மம்-அவனுக்கு பிரகாரம் ஸ்வாமி -என்கிறோம்
அறிந்து அவனுக்கு அற்று தீர்ந்து -ஜீவாத்மா ஒவ் ஒருவருக்கும் பெரிய பிராட்டியார் போலே சாம்யம் உண்டே கைங்கர்ய சாம்ராஜ்யம் உண்டே
பொற்றாமரை கயம நீராடப் போனாள்-கோமள வல்லி தாயார் – -ஹேம புஷ்கரணியில் திருவவதரித்து -பெரிய பெருமாள் அனுபவத்திலே
ஈடுபட்டாள்-என்பதே விசேஷார்த்தம் -ஹரி சரஸ் -முகுந்த மாலை
ஸ்ரீ ரெங்கம் சூகமாச்ய-ஸ்ரீ ரெங்கம் போன்ற ஷேத்ரங்கள் வியாக்யானம் கதய த்ரய பாஷ்யம் உப லஷணம்-பிரபஞ்சமே ரெங்கம் அரங்க மேடை -தானே
மொய் அகலத்து உள் இருப்பாள் –அஃதும் கண்டும் –அவளுக்கு மட்டும் தானா இடம் -கௌஸ்துபம் போலே நாம்
உள் இருப்பாள் -நம் ஹிருதயத்திலும் அவனுடன் சேர்ந்து இருப்பாள் -பெரிய பிராட்டியும் இவளுக்கு ஒப்பில்லை
உன் பெண்ணும் நிலையம் இப்படியா -என்று தாய் நங்கை இடம் கேட்கிறாள் -மொய் அகலத்துள் இருப்பாள் –
ஸ்வரூப நிரூபக தர்மம் அன்றோ அவள் -நித்ய திவ்ய மங்கள விக்ரஹம் -எங்கும் வியாபித்து இருப்பார்கள் சேர்ந்தே –
போக வேளையோடு-ஸ்வரூப வேளையோடு -மிதுனமே உத்தேச்யம்
பகவத் அனுபவம் பண்ணி ஆடும் இடமே ஸ்ரீ ரெங்கம் -மரகத மணித் தடம் -வாசத் தடம் போல் வருவானே -இவனே
-ஒப்பார் இல்லாமல் -பொறுமை யற்று பொருந்தி இல்லாமல் அலை பாய்ந்து அர்ச்சாவதாரங்கள் தோறும்
-என்னுடன் பொருந்தி இல்லாமல் பகவத் அனுபவம் சென்று
தாய் பெருமிதம் -பெரும் தவத்தள் என்று பேசலாமே –
தன்னையும் -தன பெண்ணையும் சொல்லிக் கொள்ளலாமே
சாத்விக அஹங்காரம் -தென்னிலங்கை -திருவடி மதித்த ஐஸ்வர்யம் –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பேசி மேல் -பாரிடந்து –பார் உண்டு -பார் உமிழ்ந்து -பார் அளந்து –பாரை ஆண்ட பேராளான்
ஸ்ரீ ரெங்கம் வழி எங்கே என்று கேட்ட உடனே அர்ச்சிராதி மார்க்கம் காட்டும் பித்தன் அன்றோ அவன் -எம்பெருமானது திவ்ய தேச பெயரை சொல்வதே இவளுக்கு உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வற்றிலை என்னும் நிலைமை யான பின்பு
பக்தி ஸ்ருன்ஹாரம் -கண்ணனுக்கே ஆமது காமம் –
கண்ணுக்கு இனியவன் கண்ணன் மனத்துக்கு இனியவன் ராமன் -இருவராய் வந்தார் -கிருஷ்ண பலராமன் -ராமன் கிருஷ்ணன் –
இங்கே ராம லஷ்மணர் அனுபவம் -மை வண்ண நறும் குஞ்சி -மோகினி அலங்காரம் கண் முன்னே நிற்கிறதே
திரிதண்டம் துணை –விஷ்ணு ஸ்தானம் என்பர் -விஷ்ணு ஆவாஹனம் செய்து இருப்பார் -சன்யாசிக்கு –
இவரும் எய் வண்ணம் சிலையே துணையா வந்தார் –இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
பர்த்தாவாக அனுபவித்து கொண்டே இருக்க -தோழி இடம் எனக்கு -பழைய வாசனை தொடர்ந்து வந்ததே -தெய்வமாகவே நினைக்கத் தொடங்க
-அவரை நாம் தேவர் என்று அஞ்சிநோமே–கௌசல்யா லோக பார்த்தாராம் -லோகத்துக்கு பார்த்தா அன்றோ பெருமாள்
சீதை பிராட்டிக்கும் அச்சம் உண்டா – கோபிமார்கள் கிருஷ்ணன் பரிமாற்றம் அறிவோமே -அஞ்சி அஞ்சலி பண்ணினேன் –
-புருஷோத்தமன் உத்தம புருஷன் –
இருவராய் வந்தார் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -கைங்கர்யம் செய்ய வந்த ஜீவாத்மா -உடன் பரமாத்மா -ஏகம் ஏவ அத்விதீயம் -விசிஷ்ட ப்ரஹ்மம்
மகரம் சேர் -குழை -இருபால் இலங்கி ஆட –அபி மத விஷயத்தை கண்டால் -முகத்திலே சில அசைவுகள் உண்டாக கடவதே -பட்டர் நிர்வாஹம்
-இவளை மயக்க அவனது வியாபாரம் இருந்த படி
புறப்பாட்டில் ஆட்டமும் இப்படியே
அங்கன் அன்றிக்கே முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவது எத்தனம் செய்தான் இவளுடைய ஸ்த்ரீத்வம் அளிக்க -நஞ்சீயர் அனுபவம்
அனந்யாரஹை ஆக்கி அருளினான் முன் பின் அழகைக் காட்டி என்றபடி
ராமன் தோளைப் பற்றிய பலத்தால் சிங்கம் யானை அபூர்வ வஸ்துக்களைப் போலே பார்க்க –
பரத்வம் கண்டு விலகாமல் அஞ்சாமல் சௌலப்யம் கண்டு கிட்ட வேணுமே -மாலாய் இருந்தாலும் மணி வண்ணன் அன்றோ
வில்லும் கையுமாய் இருவராய் வந்து -ஏக பத்னி வரதன் அன்றோ என்றும் அஞ்சினாள்
காணேன் கன வளையும் மேகலையும் -கண்டேன் மகர குழை இரண்டும் தோள்கள் நான்கும் -துன்னைக் காணேன் துணியைக் காணேன் என்றால் போலே
திரு முகம் திருத் தோள்கள் கண்டேன் -திருவடிக் கீழ் அணைந்தேன் -திரு மார்பை அணைந்தால் போலே -புல்கு பற்ற அற்றே -எம்பெருமானாகவும் நாயகனாகவும் அணைக்க லாமே -எம்பெருமான் கோயில் எவ்வளவு என்றேர்க்கு இது வன்றோ திரு வாலி என்று காட்டினானே
திருவடியில் அணைந்தால் தன்னைத் தானே காட்டி அருளுவான்
அரங்கன் கனவில் வந்து -கலந்தான் -எனது மனஸ் இந்த்ரியங்கள் அவன் ஆதீனம் ஆயின பின்னர் பிரிந்தான்
-இது நமக்கோர் புலவி தானே -பிரிவில் வருத்தம் தோழிக்கும் சேர்ந்து தான -சுக்ரீவன் வாலி மரித்த அநந்தரம் பெருமாளும் அழுதாரே
கனவிடத்தில் நான் காண்பன் -வர்த்தமானம் -கண்ட போது-புள்ளூரும் கள்வா -என்றேன் -அனைத்தையும் கொள்ளை கொண்டானே –
திருவரங்கம் நம்மூர் என்றான் –உனக்கும் அதே தான் தேசம் என்றான் –
தோளிணை மேலும் –தண் அம் துழாயன் -நீ போகல் என்றேன் -என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே -இருவருக்கும் சேர்ந்தே துக்கம்
-நோய் எனக்கே தந்து போனான் என்றாள்-இருந்தாலும் தோழிக்கும் துக்கம் உண்டே இவளுக்கு முன்னே –

ஆளவந்தாருக்கும் தமக்கு பின் சித்தாந்தம் ரஷகராக யார் என்னும் சிந்தை நோய் வர பெரிய பெருமாள் பிரணாவாகார விமானம்
அதுக்கு உள்ளே புண்ய கோடி விமானம் சேவை சாதித்து -அத்தை சேவித்து -ஆ முதல்வன் எம்பெருமாரை கடாஷித்து தேவ பெருமாள்
இடம் பிரார்த்தித்து -எம்பெருமானாரை உடையவர் ஆக்கி அருளினாரே

எம்பெருமானாருக்கும் அது போலே புண்ய கோடி விமானம் -அதற்கு உள்ளே பிரணாவாகார விமானம் சேவை சாதித்து -அங்கே செல்ல நினைக்க
திருக் கச்சி நம்பி மூலம் ஆறு வார்த்தை அருளப் பெற்றார் -நம் சித்தாந்தம் ஸ்வப்பனம் மித்யை அல்ல -உண்மை தான்
நம்மூர் -திருத் துழாயில் தேன் சொட்டும் என்று அவனே சொல்லும்படி -கள்ளூறும் பைம் துழாய் மாலையானை -கண்டாள்-பர வாசு தேவனோ இவன் என்று இவள் சங்கிக்க
திருவரங்கம் நம்மூர் -அவனே சொல்லி -அத்தை தோழிக்கு சொல்கிறாள்
-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் -உணர்வு என் ஒளி வளையும் மாமையும் கொண்டான் -கனவிலே
அறிவு இல்லா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் –
பாதுகா தேவி சீதா தேவியை விட உயர்ந்ததே -பெருமாள் வார்த்தை கேட்டு ஸ்ரீ பரத ஆழ்வான் பின்னே போயிற்று
அது போலே அவன் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாதபடி என்னை ஆக்கிப் போனான் -நோயைக் கொடுத்து விட்டு தான் போனானே –
-எனக்கு இல்லாத படி ஒளி வளையும் மாமையையும் அபஹரித்து போனான்
காண்பன் என்பன் -வர்த்தமானம் -நேரில் கண்டது போலே உள்ளத்தை உள்ளபடியே தோழி இடம் சொல்கிறாள்
தென்னையில் -தேன் பெருகி வெள்ளம் இட மத்ச்யங்கள் சஞ்சரிக்கும் -திருத் துழாய் –
ஸ்ரீ ரெங்கத்து அரிசி என்று பொய் சொல்லி வியாபாரம் செய்தாலும் யம தூதார்கள் அணுகார் -என்பர்
திருவாலி விட்டு இங்கேயே வா -என்கிறான் அரங்கன்
அவனைப் பற்றிய சி ந்தனை நோய் நினைவை மட்டும் விட்டு விட்டு -என்னுடைய சர்வத்தையும் கொண்டு போனான்
தாயே தந்தையே -என்னும் நோயே பட்டு ஒழிந்தேன் –
என்னை பிரிந்த நோய் அவனுக்கும் உண்டே எனக்கு தந்து ஒழிந்தான்
இது நமக்கு ஓர் -ஒப்பற்ற -நீயும் என்னுடன் சேர்ந்து அவனுக்கே அற்று தீர்ந்து உள்ளேயே என்றபடி
உனக்கு என்ன வேறு உடையை -இவள் -எனக்கே தந்தான் இந்த நோய் என்கிறாள் இவரைப் போன்ற அர்ச்சாவதார அனுபவம் யாருக்கும் இல்லையே
பெரும் தபஸ் உடையவர் –பிரபன்னர் -அரும் தபஸ் உடையவர் -உபாசகர்கள் -சூழ்ந்த அரங்கம் -அழ வைப்பான் -பொரு கயல் கண்ணீர் அரும்ப –
-புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
யாழின் இசையே -அறிவின் பயனே சங்கீதமே கூப்பிடுகிறார் ஆராவமுதனை –
போகல் என்பன் -இத்தைக் கொண்டே மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் கண்ணே –
கண்ணில் அவன் வாத்சல்யம் -என்னை விட ப்ரீதி அவனுக்கு என்பதை -நைவளம் பாடி ஸூ சிப்பித்தான் –
பெரும் தவத்தர் அரும் தவத்தர் முனிகள் சூழ -நேராக சொல்ல முடியாதே இங்கிதம் -புனல் அரங்கம் நம்மூர் என்று போயினாரே
பொரு கயல் கண்ணீர் அரும்பும் படி புலவி தந்து போயினாரே
ஆசையை கிளறி விட்டு போனாரே
நித்ய கிங்கரராக எப்போது ஆவேன் -ஆளவந்தார் -ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா யடிமை செய்ய வேண்டும் –
காவேரி நதிக்கரையில் 40 திவ்ய தேசங்கள் உண்டே -உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் -பஹூவிதா ஜாயதே –
உலகம் உண்ட பெருவாயா -திருமலை -பெரிய பெருமாள் அனைவரையும் அனுபவிக்கிறார்
கரு முகிலே ஒப்பர் -அபூத உவமை
பக்தர் பாகவதர் சக -பெரும் தவத்தர் அரும் தவத்தர் சூழ -பிரபன்னர் பக்தர் சூழ -பலத்தில் துல்யம் -ஆனந்த தாரதம்யம் உண்டே
பகவத் ப்ரீத்யர்த்தம் -சாத்விக த்யாகம்-பிரபன்னர் – த்யான சுகம்-உபாயத்தில் சேராது –த்யானமே பகவத் பரிதியே பலன் –
கூனி கூனை நிமிர்த்த பின் வஸ்த்ரம் பிடித்து இழுத்தாளாம் யுவதி யானதால் கிருஷ்ணன் இடம் கோபிகள் போலே -பாகவத்ம்
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
சைவ வைஷ்ணவ புலவர் -ஒப்புமை திக்யம் -பார்வதி சிவன் பிரிந்து -எலும்பும் சாம்பலும் உடைய தலை மகன் –
சுடர் அடி –முடிச் சோதி –அடிச் சோதி –அடிச்சோதி -சோதிமயன் அன்றோ ஆழ்வார் அனுபவம் எல்லாம்
பரகால நாயகி திரு உள்ளத்தில் ஊறி மின்னிலங்கு திரு உருவம்
திருத் துழாய் இவன் திருமேனி அடைந்து -தன்னலர்ந்த -புகர் பெறுமே -கடாஷத்தாலே மலர்ந்த துழாய் என்றபடி –
அதுபோலவே மகர குண்டலங்களும் –
என் நலனும் -அந்நலம் உடையவனை நண்ணினம் நாமே -என் வளையும் –என் சிந்தையும் -என் நிறையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு போனான் -அடிமை ஆக்கி -அனந்யார்ஹை ஆக்கி -கொண்டான்
திருவாலி தொடக்கி திருவரங்கம் வரை பொழில் நிறைந்து -பொழில் ஊடே போனான்-சோலைகள் நிறைந்து -ஒரு காள மேகம்
வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால்-கண்ட இடம் எங்கும் தளிரும் முளிரும் ஆகாதோ -பட்டர் –
சிந்தை நோய் எனக்கே தந்து -நாயகி வருத்தம் –பிரிந்து சென்றாலும் திருமேனி -மின்னிலங்கு திரு உருவம் –
பெருமையை சொல்லி -தோழிக்கு -இதுவே வைஷ்ண புலவர் -பெருமை விக்கிரம சோழன் -புகழ்ந்து பேசின ஐதிகம் –
தேவன் என்று அஞ்சி -நாயகன் எம்பெருமான் -இரண்டு எண்ணம் -வண்டி தூது விடுகிறாள் தேர் அழுந்தூர் பெருமாளுக்கு –
நாயகன் என்றே எண்ணிக் கொள் -எம்பெருமான் உணர்த்தி பெரும் தவத்தர் அரும் தவத்தர் சூழ நேராக சொல்ல முடியாமல்
ஸூசிப்பித்து சொல்லி விட்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு –கருடன் மேல் ஏறி புறப்பாட்டான் -பிரபன்னர் பக்தர் குழாம் சூழ –
-பெரிய பிராட்டியார் தேவர் குழாம் இருக்க திரு மார்பில் ஏறி அமர்ந்தாள் -இவள் பரகால நாயகி
என்னைச் சேர்ப்பிக்கும் வண்டுகளே -ஆசார்யர் ஸ்தானம் -இன்றே சென்று –
அறுகால சிருவண்டே தொழுதேன் உன்னை -குரு பரம்பரை த்வயம் -வக்தவ்யம் -பராங்குச நாயகில் போலே பரகால நாயகியும் பேசுகிறாள்
-பேடையுடன் சேர்ந்து உள்ள வண்டு
விளம்பம் ஆனால் கூட –பொறுமையாக இருந்து -ஆ மருவி அப்பன் நின்ற திருக் கோலம் –
ஒரு மாது நின் நயந்தாள் -என்று சொல் -காலை மாற்றி மாற்றி போட்டுக்கத் தான் ஆறு கால் -ஆறு கார்யம் ஆச்சார்யர்களுக்கு உண்டே
-அத்யயனம் யஞ்ஞம் தானம் செய்தும் செய்வித்தும்
பிராட்டி உடன் இருக்கும் இந்த சமயமே செல் -பேடையுடன் சந்தோஷமாக இருக்கும் நீ அந்த மிதுனம் இடம் இந்த ஜீவாத்மாவை சேர்
மருவி -பொருந்தி அணி அழிந்தூர் நின்றான் -ஆ மருவி அப்பன் -இன்றே பொய் சொல் -நீ மருவி அஞ்சாதே –
மருவி நின்று -காத்து இருந்து -சொல்-ஓர் மாது -உண்ணும் சோறு -பராங்குச நாயகி நிலை அடைந்த பரகால நாயகி அல்லையோ
செங்கால மட நாராய் –திருக் கண்ண புரம்-தூது அடுத்து – போற்றி உகப்பதும் -பிரத்யுபகாரம் குரு பிரகாசம் செய்வதே –
குண கீர்த்தனம் -செய்து கொண்டே –மந்திரம் மந்திர ரஷனம் ரஷணம்-நல்ல பாத்ரங்களுக்கு சொல்லி அனுஷ்டித்து இருத்தல்
உடையவர் -ப்ரஹ்ம ஞானம் உடையவர் -பைங்கானம் ஈதெல்லாம் உனதேயாக -கடக வத மகா பூதி யுக்மம் -உபய விபூதியையும் உடையவர்
அண்ணல் ஞானம் வந்து தோன்றிய அப் பொழுதே நன்னறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே
பொன்னுலகம் ஆளீரோ-உபய விபூதியும் இவர் ஆதீனம்
இன்றே புக்கு -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -செங்கண் மாலுக்கு -ஆஸ்ரித வ்யாமோஹம் -மாலாய் பிறந்த நம்பி –
பெரிய பிராட்டியார் திருக் கண்கள் போலே கடாஷம் ஸ்ரீ சௌரி பெருமாளுக்கு என்பர்
என் காதல் உரைத்தியாகில் -என் என் என்று மீண்டும் அருளி –இது ஒப்பது வேறு எமக்கு -நமக்கு என்றுமாம்
வேறு ஒப்பதுஇல்லை -அவனுக்கும் -வேறு ஒப்பு இல்லை
சேதன லாபம் ஈஸ்வரனுக்கு -மகா புருஷார்த்தமாக நினைப்பான் -ஆசார்யர்களுக்கும் இதுவே மகா புருஷார்த்தம் பைங்கானம்
எல்லாம் உனதேயாக பழன மீன் கவர்ந்து உண்ணும் படி தருவேன் –நீயும் உன் பேடையும் இங்கே இருந்து இனிதாக வாழலாம்
-சரணாகதி செய்த பின்பு ஆசார்யர் சிஷ்யர் பகவான் மூவருக்கும் ஆனந்தம் உண்டே –
-தேக அவாசனம் காலம வரை நிர்பயமாக ஆனந்தமாக வர்த்திக்கலாமே

பிராட்டிக்கு மோஷ ப்ரதம் கொடுக்க அதிகாரம் உண்டே ஆகிலும் பைங்கானம் -இது இவற்றுக்கு அபிமதம் ஆகையாலே –
இந்த ஆழ்வாருக்கு இந்த அர்ச்சாவதார அனுபவமே போக்யமாகுமே -எல்லா எம்பெருமாங்களும் பரகால நாயகிக்கு நாயகன்
-ஸ்ரீ பூமா நீளா தேவி மார் போலேவே ஸ்ரீ பரகால நாயகியும்
அறுகால சிறு வண்டே -பூர்வர் -சீக்கிரம் சிரமம் இல்லாமல் போகலாம்
கமன சாதனம் சிறகு தான் –பட்டர் நிர்வாஹம் -ஆசார்யர் திருவடிகள் போலே பத்னி புத்ரர் -திருவடிகளும் உத்தேச்யம்
தொழுதேன் உன்னை -என்கையாலே -தலை மேலே தொழும் பொழுது ஆறு கால்களும் பட வேண்டும் –
திருக் கண்ணபுரத்து எம்பெருமான் சம்ச்லேஷம் நினைவை நினைந்தே இருப்பேன் -பட்டர் அனந்தாழ்வான் சோமாசி ஆண்டான் நம் ஆழ்வார்
அழகிய மணவாளன் -திருவேங்கடமுடையான் -எம்பெருமானார் தொலை வில்லி மங்கலம் சொல்லுவது போலே
பரகால நாயகி திருக் கண்ணபுரம் சொல்வதும்
திருக் குடந்தை ஆராவமுதன் மேல் ஆழ்வார்கள் பன்னி பன்னி மங்களா சாசனம் செய்த பலனே
-ஸ்ரீ நாத முனிகள் மூலம் நாம் திவ்ய பிரபந்தங்கள் பெறுவதற்கு காரணம்
பிரபன்ன சம்சார கூடஸ்தர் ஸ்ரீ நாத முனிகள்
பிரணய கலஹ பாசுரம் இது -அவன் கட்டாயம் வருவான் -முகம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்கிறாள் தோழி இடம்
ஓர் தேராலே மன்னிலங்கு பாரதத்து –ஒப்பற்ற தேர் -கொண்டே வென்றான் இலங்கை வென்றான் உலகு அளந்தான் கர்வம் கொண்டான்
-அவன் வந்தால் கட்டிப் போட்டு விடுவேன் என்கிறாள் –பக்தியினால் கட்டிப் போடலாம் -சொல்லி விட்டு முகம் காட்ட மாட்டேன் என்கிறாள்
-பிரணய கலஹம் வார்த்தை -சம்ச்லேஷம் என்றால் விச்லேஷத்திலே முடியும் அன்றோ
என்னில் அங்கம் எல்லாம் –இன்பம் உற நினைந்து மகிழ்ந்து இருப்பேனே -சம்ச்லேஷ ரசம் அனுபவித்ததை -சொல்லி இந்த பாசுரம் நிகமிக்கிறார்
முனியே நான் முகனே முக்கண் அப்பா அனுபவம் போலே -சாற்றுமுறை பாசுரங்கள் -அந்தரயாமித்வம் சொல்லி –
தண் குடந்தை கிடந்த -மாலை நெடியானை – -புருஷோத்தமன் ஆராவமுதன் –
சீதளம் -தண்ணீர் போலே -தண் குடந்தை -நாலாயிரம் மறைந்து கிடைக்க அருள் புரியும் -ஈரச் சொற்கள் அன்றோ -கூடாரையும் வெல்பவன் அன்றோ –
சுக்காம் தரை போலே கமர் பிளந்து உள்ள ஹிருதயங்களையும் உருகப் பண்ணுமே
அடி நாயேன் நினைந்திட்டேனே -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போலே
வேதாந்த சாஸ்திரம் போன்ற இந்த பிரபந்தத்தை வல்லார் தொல்லை பழ வினையை முதலரிய வல்லார் தாமே

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவையும் திரு நெடும் தாண்டகமும் –ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் -2014-

November 10, 2015

ஸ்ரீ ராமாயணம் -சரணாகதி சாஸ்திரம் போலே -சரணாகதி பிரபந்தங்கள் -திருப்பாவையும் திரு நெடும் தாண்டகமும்-
60 ஆவர்த்தி உபன்யாசங்கள் அருளிச் செய்த அனுபவம்
ப்ரஹ்மம் தெரிந்து ப்ரஹ்மம் போலே ஆகிறான் -விசிஷ்டாத்வைதம்
ப்ரஹ்மமாக ஆகிறான் -அத்வைதம்
ப்ருஹத்வாது -பெரியதாக இருந்து பெரியவனாக ஆக்கும்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
பரிசுத்தமான ஆத்மாவால் மட்டுமே -அறிய முடியும்
சாருவாதமதம் -உடம்பே ஆத்மா -காதாலே கேட்கலாம் ப்ரஹ்மத்தை பற்றி -கண்ணாலே காண முடியா விடிலும் –
யோகம் செய்ய பின்னம் -தடைகள் நிறைய உண்டே
திரு நெடும் தாண்டகம் -முப்பதும் தத்வ த்ரய ஞானம் -ப்ரஹ்ம ஞானம் – அர்த்த பஞ்சக ஞானம் -கொடுப்பவை தானே
நீர் தொறும் பரந்துளன் –கரந்து எங்கும் பரந்துளன் -பக்தி யோகம் ஸ்தானத்தில் சரணாகதி செய்து –
-யோகம் செய்ய உள்ள தடைகளை தாண்டலாம் –ஞாச விதியை -சரணாகதி
அவதார ரகசியம் -தாழ்ந்து நெருங்கி சர்வ பூத ஸூஹ்ருதம் -சௌலப்யம் காட்டி அருளி
ஸ்ருதி சொல்வதையே -ஸ்ம்ருதி -நினைவு படுத்தி -ஸ்ரீ கீதையும் ஸ்ம்ருதி –
அறியாத இடைச்சிகளும் அறியும் வண்ணம் -திருப்பாவை -ஆசையே தகுதி -நீராடப் போதுவீர் போதுமினோ நேர் இழையீர்
-போங்கோ இல்லை வாங்கோ அர்த்தம் -ஆசை உடையோர் எல்லாரும் வம்மின்
பத்துடை அடியவர்க்கு எளியவன் ஆசா லேசம் -என்பதே வியாக்யானம் –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார முகேன இத்தையும் காட்டி அருளி –தன்னை நொந்துக் கொண்டு -ஆசை உடன் -வர வேண்டும் –
அவஜானந்தி மாம் மூடா -புரிந்து கொள்ள வில்லையே
பரதத்வம் நம்முடன் வந்து கலக்கிறதே -என்ற எண்ணம் இல்லாமல் –
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –எல்லா சித்தாந்தங்களும் உண்டே ஸ்ரீ கீதையில்
அவதாரம் பலன் இல்லை
கடலாழி -நீர் தோற்றி அதன் உள்ளே கண் வளரும் -சர்வ சக்தன் -அடல் ஆழி அம்மான் அன்றோ -பராக்கிரமம் உண்டவன் –
-கண்டக்கால் இது சொல்லி அருளாழி வண்டே –
ஷீராப்தி -வந்து சொத்தை பிடிக்க -சரீரம் பிரகாரம் -நாம் –
அபராத சஹத்வம் குணம் உண்டே சொன்னால் போதும் -ஸ்ருதிகள் கடக -ஸ்ருதிகள் -சேர்த்து –
பேத அபேத ஸ்ருதிகள் சமன்வயப்படுத்தி -ஸ்ரீ மதே ராமானுஜாயா நம –சொல்லி -கிரந்தி படுத்தி -அனுஷ்டாநித்துக் காட்டி
-குரு பரம்பரை மூலம் நமக்கு வரும்படி அருளையும் –
கடி சேர் நாற்றத் துள்ளாலை-
கரியும் நாற்றமும் -இரண்டும் பரிமளம்
ஆலை -மது -சர்வ ரசத்துக்கும் உப லஷணம்
நாற்றம் -சர்வ கந்ததுக்கும் உப லஷணம்
கடி சேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை ஓடியா இன்பப் பெருமையொன் -திருவாய் -8-8-2–என்று
பூவில் கந்தத்தையும் -மதுவில் ரசத்தையும் பிடித்து
அவை தன்னிலும் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும் கழித்து ஸ்திரமாக்கிச் சேர்த்துப் பார்த்தால் சிறிது ஒப்பாம் என்னுமா போலே
ஓர் உபமானத்தாலே அறியலாம் அத்தனை -தன்னையே இழிந்து அறியப் போகாது என்றபடி
உணர் முழு நலம்-
முழு உணர்வுமாய் -முழு நலமுமாய் இருக்கும்
கட்டடங்க ஜ்ஞானமுமாய் -கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
அனுகூல ஜ்ஞானமே யாகிலும் ஆனந்தமாகிறது பிரித்து வ்யவஹரிக்க கடவதாய் இருக்கும் இறே
படகு -சரணாகதி -வைத்து போந்தாரே நாமும் அங்கே செல்ல –
ஸ்ரீ பூமிப் பிராட்டி -தானே வந்து ஸ்ரீ கீதா சாஸ்திரம் அர்த்தம் அருளுவேன் -ஆண்டாள் -ஆகார த்ரயா சம்பன்னாம் –
சாஷாத் கருணையே -கோதை -விஷ்ணு சித்த கொடி வல்லி –
காலத்தைக் கொண்டாடி -அக்ரூர் -சகுனம் நல்ல -சேவை கிடைப்பது நிச்சயம் -மான்கள் பிரத்யஷமாக போகின்றன

—————————

பாவை நோன்பு என்பதே சரணாகதி -சுலபமாக வசப்படுவான் –
வையத்து வாழ்வீர்காள் -சரீரத்தில் வாழும் -சரீரமே வண்டி -ஆத்மானம் ரதிநம் வித்தி -சரீரம் ரதமேவ புத்தி -சாரதி -கடிவாளம் மனஸ் –
பரமன் அடி பாடவே இந்த்ரியங்கள் -ஜிஹ்வே கேசவ கீர்த்தனம் -பகவத் சிந்தனமே மனஸ் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -உடம்புக்குத் தானே -இவை -இதையே திரு நெடும் தாண்டகம் சொல்லும்
மை இட்டு -எழுதோம் ஞான யோகம் செய்யோம் –
-மலர் இட்டு -பக்தி யோகம் செய்யோம் –
சாத்விக தானம் செய்வோம் –
ஐயமும் பிச்சையும் -ஒன்றும் இல்லாதவர்க்கு -கொடுப்பது பிச்சை –
சத் பாத்ரம் -கொடுப்பது ஐயம் -பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுப்பது –
அபி நவனமாக தசாவாதாரம் ஆழ்வார்கள் -பகவத் அம்சம் –
ஸ்ரீ பாகவதம் ஸூசிப்பிக்கும் -நாராயண பராயணா கொசித் கொசித் –தாமரபரணி காவேரி —
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -தேசிகன் –
398 வருஷம் -கலி யுகம் பிறந்து நள வருஷம் பௌர்னமி கார்த்திகையில் கார்த்திகை திருவவதாரம் கலியன் –
சர்வார்த்த க்ரஹணம்-பண்ணினவர்
எல்லா ஆபரணங்களையும் அபஹரித்தவர் -எல்லா அர்த்தங்களையும் கொண்டவர் –
ஆறு பிரபந்தங்கள் -வேத அங்கங்கள் -போலே
40 சிறிய திருமடல் என்பர் தேசிகன்
78 பெரிய திருமடல்
86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனங்கள்
106 சம்வச்தரங்கள் இருந்து -ஸ்ரீ சார்ங்கம் அம்சம் –
எல்லே இளம் கிளியே -சார்ங்கம் உதைத்த சர மழை போலே –
பிண்டியார் –திருக் கண்டியூர் பாசுரம் -இது ஒன்றே –
திருக் குடந்தை பெருமாள் இடம் ஆரம்பித்து அதிலே முடிப்பார் —
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் —
கச்சி -திருக் கடல் மல்லை மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே
ஷேத்ரங்கள் திருநாமம் சொல்ல படிப் படியாக மேலே கூட்டிச் செல்லும்
மூன்று தத்வங்களையும் திரு நெடும் தாண்டகம் முதல் பாசுரத்தில் அருளி –
ஈச்வரனே ஸ்வ தந்த்ரர் நாம் சேஷ பூதர் கர்ம அனுகுணமாக
சரீரம் ப்ரேரிதா அவன்
ஒப்பார் மிக்கார் இல்லாதவன் இவன் ஒருவனே மோஷம் ப்ரதன்- இச்சேத் ஜனார்த்தனன் –
கர்ம சம்பந்தம் இல்லாமல் –ஒரே மரம் இரண்டு பறவை -போக்தா போக்கியம் ப்ரேரிதா –
நாக்கில் ஒட்டாத சக்கரைப் பொங்கல் -கையை அலம்ப சீயக்காய் பொடி-கதை –
வாயு அதிஷ்டன் -ஆத்மா அதிஷ்டன் -எங்கும் வியாபித்து –
காரண வாக்கியம் -ஸ்ருதி -யத்ர யத்ர பூமா –அத்ர அத்ர அக்னி -புகை -அக்னி -கார்ய காரண பாவம் –
மார்கழி திங்கள் மதி -இதுவே உண்மையான மதி-அசேதனம் சேதனம் விட்டு ப்ரஹ்மமே த்யானத்துக்கு –
இமானி பூதானி -உண்டானதோ -ரஷிக்கப் படுகிறதோ -காக்கப் படுகிறதோ -தத் ப்ரஹ்மேதி -இதுவே மின்னுருவாய் முதல் பாசுரம் பொருள் –
திரு உடம்பு வான் சுடர் -திவ்ய மேனி உண்டு ஞான பல கிரியாச -குணங்கள் உண்டு -ஞானத்தை குணமாக கொண்டவனே ப்ரஹ்மம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி பரம சாம்யம் உபைதி அவனைப் போலே ஆகிறார்கள் -அவனாகவே இல்லை
அசேதனங்களும் சேதனங்களும் அவனுக்கு சரீரம்
முன்னுருவாய் -சரீரம் அசேதனம் தானே முன்னால் தெரியும் -அதிலும் புகுந்து அந்தர்யாமியாய் இருக்கிறான் -24 தத்வங்களிலும் –
-பிரக்ருதியில் இருந்து வந்தவை –25 தத்வம் ஜீவாத்மா -26- தத்வம் பரமாத்மா –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -ச ப்ரஹ்ம -அனைவரும் அங்கங்கள் -சீக்கிரம் பலம் கொடுக்க -இவர்களை நியமித்து
-பின்பு சாஸ்வத ஸ்திரமான பலம் தேடி வருவார்கள் –
ஆதி சங்கரர் -வாசு தேவம் சர்வமிதி -சமம் ஆத்மா –நினைப்பவன் துர்லபம்-அவனே மஹாத்மா – உண்ணும் சோறு இத்யாதி
-சர்வாத்மகம் -சர்வாந்தராத்மகம் ஸ்ரீ மன் நாராயாணம்-சங்கரர் வியாக்யானம் –
கரந்த பாலுள் நெய்யே போலே –7 தோஷங்கள் அசித் வஸ்துக்கள் -அல்ப்த்வ -அஸ்திரத்வ-துக்க மிஸ்ரத்வ -துக்க மூலத்வ –
துக்க அபிவிருத்த்வ -விபரீத அபிமான மூடத்வ -விபர்ரீத ஞான ஜனனி –

—————————–

ஆழி மழைக் கண்ணா -அந்தர்யாமி அர்த்தம் –
கர்ஜித்து சிம்ஹாசானம் இருந்து ஆசார்யர் உபதேசம் -ஆழி உள் புக்கு முகந்து கொடு –
ரகஸ்யார்த்தங்கள்–ஆழி போல் மின்னி தேஜஸ் மிக்க குருக்கள்
வேதம் நான்காய் –முளைத்து எழுந்த திங்கள் தானாய் -ஞானம்
தேகாத்மாபிமானம் ஒழித்து -பிராந்தி போக -லஷணம் அறிந்து கொள்ள வேண்டுமே -ஸுவ ஸ்வதந்த்ரம் ஒழிந்து
சரீரம் ஷட்பாவம் -உண்டே –
மின்னுருவாய் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
முன்னுருவாய் -சரீரம் -முன்பு -இப்பொழுது -பின்பு வரும் மூன்றுக்கும்
அநேக ஜன்மாக்கள் -புண்ய ஜன்மானம் அந்தே -அப்புறம் தான் ஞானம் வரும் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
அசேதனத்துக்கும் நியந்தா சொன்னார் இத்தால்
வேதம் நான்காய் -அஷ்டாஷரம் -அறிந்து -சேஷத்வ ஞானம் –
தனம் மதியம் தவ பாத பங்கஜம் -ஞானமே ஆத்மா இல்லை ஞானம் உடையவன் விசேஷணம் விசேஷ்யம்
விளக்கொளியாய் -திங்கள் தானாய் -எழுந்த திங்கள் தானாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் -பிரித்து அனுபவம் –
விளக்கு -பிரகாசம் -தன்னையும் காட்டி மற்றவற்றையும் காட்டும் -வேதம் நான்காய் -ஞானம் வேதம் பரவுமே –
ஸ்ரவண ஞானம் -ஆசார்யரே ப்ரஹ்மம்
உபநிஷத் -ஸ்ரவணம் -த்ரஷ்டவ்ய -இத்யாதி
விளக்கு ஒளி -ஸ்ரவண ஞானம் -பக்தி நவவித பிரகலாதன் –
முளைத்து எழுந்த -ஸ்ரவணத்தால் -முளைத்து எழுந்த மந்தவ்ய மனனம் –
அதனால் வரும் த்யானம் -நிதித்யாசனம் வேண்டுமே –
திங்கள் -மதி -அமிர்த மயம் -ஆனந்த மயம் -மேலே சொல்வார் –
பின்னுருவாய் -பின்பு வரும் ஞானம் -முன்னுருவில் -அசேதனம்
பிணி மூப்பு இல்லா -பிறப்பிலி இறப்பதற்கே என்னாது கைவல்யம் -அபஹத பாப்மாதிகள் -உண்டே -கர்மாவால் திரோதானம் –

சங்கு பிரணவம் -அர்த்தம்
பறவைகள் சப்தம் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள் பஷிகள் ஞானம் அனுஷ்டானம்
திருமாளிகை -யில் திரு மந்த்ரார்த்தங்கள் சொல்வதையே பஷிகள் சப்தம் என்கிறாள் ஆண்டாள்
புள்ளரையன் கோயில் -அகாரார்த்தம்
பூதனை -அஜ்ஞ்ஞானம் அவித்யை
சகடாசுரன் -காமம் குரோதம் ரஜோ குணத்தால் -தகுந்த இடத்தில் ஆசை வேண்டும் -தகுந்த இடத்தில் கோபம் –
கோபஸ்ய வசம் ஆனான் -தலை அறுப்பேன் என்றார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
என் நின்ற யோனியுமாய் பிறந்தான்
அஜாயமானோ பஹூதா விஜாயதா –
இறப்பதற்கே எண்ணாது-
பகவான் நினைவு நம்மிடமே -எப்படி கூட்டிச் செல்வோம் -சஹஜ காருண்யம் சௌஹார்த்தம்
எண்ணாதே -கைவல்ய ஆசையைத் தவிர்ப்பிப்பான் பிரபன்னர்களுக்கு
கர்ம யோகம் -இந்த்ரியங்கள் வெல்ல
ஞான யோகம் -சாஷாத்காரம்
கர்ம யோகத்தாலே கூட சாஷாத்காரம்-கிட்டும் ஞானமும் அதிலே இருப்பதால்
பஞ்சாக்னி வித்யை-பரமாத்மாவை நினைத்தே செய்து -அஹம் பரமாத்மா சேஷ பூதன் -சொல்லி –
நம்மை பிரதானமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது -பிராப்தி விரோதி அதிகாரம்
தன்னை பிரதானம் ஆக்கிக் கொண்டால் சிறிது காலம் கைவல்யம் இருந்து பின்பு தான் பரமாத்மா அனுபவம் என்பர் தேசிகன் –
ஞானி -எனக்கு ஆத்மா -மே மதம் -என்னுடைய சித்தாந்தம்-பரமை காந்தி -உன் பொற்றாமாரை அடியே போற்றும் -என்று இருப்பவர் –
இறப்பதற்கே எண்ணாது –பிறப்பு இறப்பு -தேக சம்பந்தம் -கைவல்யம் இறப்பு என்கிறார் -கைவல்யத்தை விரும்பாமல் என்றவாறு –
அங்காதும் சோராமே -ஆள்கின்ற செங்கோல் -எல்லாம் அவனது –இங்கே கொஞ்சமாவது உத்சவாதிகளை சேவிக்கிறோம் –
கைவல்யம் -உள்ளவனுக்கு அது கூட அனுபவம் இல்லையே
தாத்பர்ய சந்த்ரிகை –தேசிகன் –பகவத் ப்ரீத்யர்த்தம் சங்கல்பம் செய்து செய்தாலே போதும் -ஆத்மா அவனுக்கு சேஷ பூதன் –
இங்கே செய்வது எல்லாம் கைங்கர்ய சேஷமாக அனுசந்தித்து -சம்சார கைவல்ய கொடுமை தாண்டி பரம புருஷார்த்தம் கிட்டும்
மோஷ சேஷமாக -இருக்க வேண்டும் என்பதையே இறப்பதற்கே எண்ணாது -என்கிறார்
சாந்தோக்யம் -பரஞ்சோதி உபசம்பத்ய -ஞான யோகியும் அடைகிறான் –
அஸ்வத்தாமா -நரகம் தர்சனம் பண்ண வேண்டிற்றே தர்ம புற்றுக்கு –
அது போலே தன்னை பிரதானமாக நினைத்தால் கைவல்யம்
இருந்து பின்பு போவான் -என்கிறார்
ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டை -பக்தி ஸ்தானத்தில் அவனை நிறுத்தி –நாம் –
போவான் போகின்றாரை போகாமல் காத்து -அர்ச்சிராதிகதி -வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து -பாதங்கள் கழுவினர் –
சஞ்சலம் -மனஸ் -நின்றவா நில்லா நெஞ்சு எண்ணாது எண்ணும் -அவன் நினைவே கார்ய காரம்
பொன்னுருவாய் -உள்ளவன் அன்றோ -திருமேனி பக்தாநாம் என்று இருப்பவன்
மணி உருவில் பூதம் ஐந்தும் -புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி
பலபலவே ஆபரணம் -அதுபுதம் பாலகம் -முடிச் சோதியாய் அவனது முக்ச்சோதி-சர்வ ஏவ ஸ்வர்ண –

————————————

வகுள பூஷண பாஸ்கரர் -இருள் நீக்கி -கீழ் வானம் வெள் என்று -நம் ஆழ்வார் –
பேயாழ்வார் -என்பர் ஸ்ரீ ஆண்டவன் -போகாமல் காத்து -திருமழிசை ஆழ்வாரை காத்து அருளி -என்பதால் –
எருமை சிறு வீடு -மேய்வான் -கிருஷ்ணன் போகின்றான் -அவனை சரண் அடைய -மிக்கு உள்ள பிள்ளைகளும்
-500000 பெண்கள் உண்டே -பாகவத சம்ருதியை அபேஷிக்கிறாள்
வந்து நின்றோம் -திரு நாமம் சொன்னால் போதுமே -அறிவில்லா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
நரகம் எல்லாம் புல் ஒழிந்து போகுமே –
தஹர வித்யை -கீழ் வானம் வெள் என்று
மந்த கதி எருமை –
மண்டோதரி -தாரை -பெருமாள் திருமேனி கொண்டாட -வாலியும் திருமேனியை சேவித்து -சரம அவஸ்தையில்
தளிர் புரையும் திருவடி தலை மேலே என்றார் –
திருவடி -ஆஸ்ரயித்த பின்பு
ஸ்வரூப ஸ்வ பாவம் மூவருக்கும் கண்ட பின்பு நீங்களே அறிவீர்கள்
பஞ்ச பூதங்களும் அவன் அதீனம்
பார் உருவில் -பிரம்மா சிவன் விஷ்ணு பரமாக்கி-
கடல் போன்ற நிறமும் ஸ்வ பாவமும் கொண்டவனே பரஞ்சோதி
வந்திடம் நெஞ்சம் கொண்ட வானவர் கொழுந்தே -தெளியாத மறைகளால் தெளியப் பெரும் படி -ஆழ்வார்கள் ஈரச் சொற்கள் –

————————————————-

தூ மணி மாடம் -ஆசார்யர் திரு மேனி
ஐஞ்சு பூதமாய் -பஞ்ச உபநிஷத் மயம் -அவனது ஐந்து நிலைகளிலும் –
மனுஷ்யர் போலே திருவவதரித்தும் -அவதார சத்யத்வம் -அஜக்ஸ் ச்வதஸ் பாவ –
அரி முகன் அச்சுதன் -அழகியான் தானே அரியுருவம் தானே -நாரசிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் –
அபிநயம் -மனுஷ்யர் போலே நடத்திக் காட்டுவான் –
சுற்றும் விளக்கு -வேதம் வேதாங்கங்கள் ஸ்மிருதி இதிஹாச புராண ஞானம் -அருளிச் செயல் –
தூபம் கமழ -திவ்ய பிரபந்த வாசனை -பெரிய பெருமாள் சுருதி பரிமளம் -தேசிகன்
துயில் அணை -சரணாகதி செய்த பின்பே -மார்பில் கண் வைத்து உறங்கலாம்
மணிக்கதவம் -அஷ்டாஷா மந்த்ரார்த்தம் -தாள் திறவாய்
தமோ குணம் நீங்கும் படி ஆசார்யர் உபதேசம்
பூமா வித்யை பகவத் த்யானம் செய்பவன் பேச மாட்டானே
செவிடோ -வேறு பேச்சு -ந அந்யது ச்ருணோதி —
மா மாயன் -700 சன்யாசிகள் சுவாமி இடம் கால ஷேபம்
74 சிம்ஹாசானாதிபதிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் உண்டே
மா தவன் -ஸ்ரீ உடைய ஆசார்யர் -பகவத் ஞானமே ஸ்ரீ -ஸ்ரீ பாஷ்யம் சுவாமி அருளியது ஒன்றே –
தேசிகன் -20 வயசில் 30 தடவை ஸ்ரீ பாஷ்யம் வியாக்யானம் திருமழிசை ஆழ்வாரை உணர்த்துகிறாள் இத்தால்
-பாருலகில் –உன் உருவம் -2-மூவருக்கும் திரு உருவம் -வேறு எண்ணும் பொழுது
பார் உருவில் -பல்வேறு சமயமுமாய் பறந்து நின்ற -எல்லா சித்தாந்தங்களும் -அவனால் உண்டானவையே
விசும்புமாகி -ஆகாசமும் ஆகி -பார் -பிருத்வி –
பஞ்ச பூதங்களாக ஆகி -அசேதனமும் ஆகி -சூஷ்ம ஸ்தூல இரண்டு நிலைகள் ப்ரஹ்மத்துக்கு உண்டே
புருடன் மணிவரமாக -பிரதம சதகம் தீஷ்ய வரதம் –
சமயம் -காலம் /சித்தாந்தம் –
ப்ரஹ்ம சம்பந்தம் அனைவருக்கும் உண்டே -சர்வ சப்த வாச்யம் ப்ரஹ்மமே-
நாம ரூபங்கள் கொடுக்கிறான் –

—————————————————-

அதிகரண சாராவளி -முதல் ஸ்லோகம் -அரங்கனையே நாம ரூபம் தருவதாக -வேதாந்தாசார்யர் விருது -பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யம் ஸ்லோகம் ரூபமாக செய்து அருளி அந்த விருதுக்கு ஏற்ப நடத்திக் காட்டி அருளினார்
சமயம் -விவஸ்தை என்றும் அர்த்தம் -காலம் சித்தாந்தம் –
சர்வ சப்த வாச்யன் அவனே
எல்லா விவகாரங்களும் அவன் -என்கோ–திகழம் ஆகாசம் என்கோ அனைத்தும் என்கோ
பல்வேறு சமயமுமாய் பரந்து நின்றவன் என்கிறார் நம்மாழ்வார்
ஸ்ருதி ஸ்ம்ருதி மமை ஆஞ்ஞை –
வ்யஷ்டி சிருஷ்டியில் பிரம்மாவுக்கும் ஏருருவு உண்டு அழகான ரூபம்
சர்வஜ்ஞ்ஞனாய் -ருத்ரன் -தேசிகன் -ஆசார்யர்களைப் போலே உபதேசித்தான் -ஞானம் கொடுத்தானே மோஷம் விரும்பினாய் ஆகில்
அவனை ஆஸ்ரயீ என்றானே
ஓர் உருவு ஒப்பற்ற உரு அவனுக்கும் உண்டே
மும்மூர்த்தி சொல்லாமல் மூ உருவே இமையவர் -உயர் திணை -வெவேறு ஆத்மாக்கள் மூவரும்
ஒரே ஆத்மா மூன்று சரீரம் என்கிற மதம் நிரசிக்கிறார் –
திரு உரு வேறு என்னும் போது -திரு உள்ளது விஷ்ணுவுக்கு விஷ்ணு ஸ்ரீ அனபாயினி -என்று சிந்திக்கும் பொழுது
வேறாக உள்ளதே திரு மூவருக்கும் -சரஸ்வதி பார்வதி அவர்களுக்கு
ஓர் உருவம் பொன்னுருவம்-ஓன்று செந்தீ —
பிரம்மாவுக்கு ஸ்வர்ண மயமான திரு மேனி –
அழகும் மனசை கவர்வதுமான சிருஷ்டி செய்து -கௌரவமும் கொடுத்து –ஸ்வர்ணம் ஆபரணங்களுக்கு அநு கூலமாக இருப்பது போலே
you see thro my eyes என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
செந்தீ -அக்னி ரூபம் சம்ஹாரத்துக்கு ஏற்ப -ஓன்று மா கடல் உருவம் -விஷ்ணுவுக்கு -விசேஷணங்கள்
கடல் போன்ற -நீல மேக சியாமள –
மா கடல் உருவம்
ஓன்று மா கடல் உருவம் –
ஆத்மா ரஷணம் அவன் ஒருவனாலே முடியும் -விஷ்ணு போதம் -மோஷ ப்ரதத்வம் –

———————————————-

பத்து இந்த்ரியங்கள் எழுப்புவது போலே -பத்து -பாசுரங்கள் -இவை தானே தடைகள் பகவத் பிராப்திக்கு –
ஆழ்வார் பரமாகவும் சொல்வார் –
ஆசார்யர் பரமாகவும் சொல்வார் -முக்காலமும் உணர்ந்தவர் -சுகர் -பாகவதத்தில் ஆசார்யர் கலி யுகத்தில் வருவதை பவிஷ்யந்தி -என்கிறார் –
ஸ்வர்க்கம் -பகவத் அனுபவமே -சீதா ராமன் -சேர்ந்து இருந்தால் ஸ்வர்க்கம் பிரிந்து இருந்தால் நரகம்
கடக உபநிஷத்தில் -ஸ்வர்க்கம் -அக்னி வித்யை -இதற்கு பரமபதம் என்றே வியாக்யானம் –
நசிகேசத்க்கு யம தர்ம ராஜன் உபதேசம் அங்கு

கேசவ பிரியே -துளசி -தோளிணை மேலும் –தாளிணை மேலும் புனைந்த –அம்மான் –
பெரும் துயில் -500000 பெண்களை எழுப்பி வைத்த தூக்கம் அன்றோ உன்னது –
நோற்ற ஸ்வர்க்கம் -நம்மாழ்வார் -யோகத்தால் நாத முனி பெற்றதை கொண்டு ஆண்டவன் சுவாமி நிர்வாகம் –
தேற்றமாய் வந்து திற -யோகம் தீர்ந்து உபதேசித்தார் –
குரு பரம்பரையில் நம் ஆழ்வார் மட்டுமே -அவயவி மற்ற ஆழ்வார்கள் –
அரும் கலம் இவர் தானே -அவதார கிரமத்திலே பாசுரார்த்தம் செய்வார்
முக்த துல்யர் -கிருதக்ருத்ரரர் இவர் –
பெரிய பெருமாள் -ஆசார்யர் ஆஞ்ஞை எதிர்பார்த்து உள்ளார் -பாதுகா சஹாஸ்ரம் -தேசிகன்
கடல் உருவம் -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் கச்சதி
சமுத்திர இவ ரத்னாங்கம் -ஸ்ரீ ராமாயணம் -நீர்மை -சௌசீல்யம் கடல் உருவம் –
மூ வுருவும் கண்ட போதே அறியலாமே வேறு பிரமாணங்கள் வேண்டாமே

ஆத்மா ரஷா பரம் –அவன் இடம் -அபேஷித்து-ரஷகனாய் பிரசித்தமான அவன் இடமே தானே –
ஓன்று மா கடல் உருவம் -ஊற்றம் உடையாய் பெரியாய் –
பாண்டவர்களுக்கு –ரஷணம் பண்ணி அருளி -நஹி பாலான சாமர்த்தியம் மற்றவர்களுக்கு –
சமுத்ரத்தில் இருந்து முகில் தோன்றி கறுத்து -ஓன்று மா கடல் உருவம்
பர வாசுதேவன் -ஷீராப்தி -முகில் வண்ணன் -விஷ்ணு -வியன் மூ உலகுக்கும் அமிர்தம் கொடுத்து அருளி
மூ வுருவம் ஒன்றாம் சோதி -முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் –
மா -கறுப்பு/பெருமை /
கறுப்பு தமோ குணம் அன்றோ என்னில் -‘
கடலை ஒரு கடல் ஸ்பர்சித்தால் போலே பெருமாள் -சரணாகதி -கருணையின் நிறம் கரியோ -கம்பர்
பிரம்மா ரஜோ குண பிரசுரர்
சிவன் ரஜோ குண பிரசுரர்
விஷ்ணு சத்ய குணம் பிரசுரர்
தங்கம் -ஆசையை வளர்க்கும் -சம்சார ஐ ஹிக பலன்களில் ஆசையை வளர்க்கும் -சரீரம் ரூபம் நாமம் கொடுத்தவனும் அவனே
அக்னி -நாசம் உண்டாக்கும் -வஸ்து அழிக்கும்-தமோ குணம் வளர்க்கும் இதுவும் அவன் நியமனம் அடியாக
விஷ்ணு சத்வ குணம் மது சூதன கர்ப்ப கடாஷம் மோஷார்த்த சிந்தனை சாத்விகர்
எம் அடிகள் -இவரே என் ஸ்வாமி-அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவன்
ப்ரஹ்மாதிகள் கர்ம வச்யர்
பிண்டியார் மண்டை ஏந்தி -சாற்று முறை பாசுரம் -கர்ம பலன் அனுபவிப்பார்கள் இவர்கள்
பேச நின்ற –நாயகன் அவனே கபால நல மோஷத்தில் கண்டு கொண்மின்
நீல மேக சியாமள -முகில் வண்ணன் –
வெண் கம்பளம் -paambu ஆவிஷம் -உபநிஷத் பட்டு பூச்சி இந்திர கோபம் போன்ற நிறம்
குசும்பு –வித்யுத் -ஆழி போல் மின்னி –
வேண்டிய நிறம் எடுக்க வல்லவன்
முகில் வண்ணமே அவன் ஆசை படும் வண்ணம் –

————————————————

செல்வப் பெண்டாட்டி -ஆசார்யர்கள் -இவளைப் பெற அவன் நோற்க வேண்டும் படி இருக்கும் இறே
கற்றுக் கறவை கணங்கள் பல -யுவா குமாரா -பஞ்ச விம்சதிகர்களை போலே கன்றாகவே இருந்து கறக்குமே –
ஸ்ரீ கிருஷ்ணன் கர ஸ்பர்சம் பட்டும் வேணு கானம் கேட்டும் வளர்ந்தவை அன்றோ
கன்றுகள் உடைய பசுக்கள் என்றுமாம் -ஆசார்யர்கள் -பாலகனாகவே தம்மை நினைத்துக் கொண்டு -சிஷ்யர் சம்ருத்தி நிறைந்து
எல்லே இளம் கிளியே -யுவாவாகவே
குலசேகர ஆழ்வார் -என்பர் இப்பாசுரம் மூலம் -ஆண்டவன் சுவாமி -சத்ருக்களை வென்ற அரசன் -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத
பாகவதர் ஸ்ரீ வைஷ்ணவர் இடம் குற்றம் பார்க்காதவர்
துய்ய குலசேகரன் -தேசிகன் –
ஆச்சார்யர் இடம் சேர்ந்த பின்பு -மாஸுசா -சொல்லி ஏற்றுக் கொண்டு ஆத்ம ரஷணம் செய்வான் எம் அடிகள் முகில் வண்ணன் -என்றார் கீழ்
மூன்றாம் பாசுரம் நான்காம் பாசுரம் -திருமேனியை பற்றி விவரிக்கும் -த்யானம் பண்ண சுபாஸ்ரயம் என்று காட்டி அருள –
தரமி ஐக்கியம் -அர்ச்சாவதார மூர்த்திகள் -பல நிறங்கள் பல ரூபங்கள் -கொண்டவன் –
நம்பியை -எம்பிரானை என் சொல்லி மறப்பேனே –
திருவடிவில் -பாவை மெல் விரலாள்-விரும்பும் திருமேனி கொள்பவன் –
திரு வடிவில் கரு நெடுமால் -திரு உடைய வடிவில் ஆசை கொள்பவன் -சொத்தை சேர்த்து வைக்கிறாள் –
ஆகையால் ப்ரீதி வ்யாமோஹம் கொண்டவன் அன்றோ
கரு நீல வண்ணன் -பல வண்ணங்கள் உடையவன் அன்றோ

——————————————–

கீழே பால் வெள்ளம் -நடுவில் மால் வெள்ளம் -மேலே பனி வெள்ளம் –
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்
தண்ணீருக்கும் சினம் உண்டோ
மனதுக்கு இவன் இனியான் கண்ணுக்கு அவன் இனியான்
உபநிஷத் காவ -பால் -ஞானம் ஸ்ரீ கீதை -அமிர்தம் போக்தா கோபால நந்தனன் பார்த்தோ வத்சன் -கன்றுக்குட்டி –
கனைத்து இளம் கன்றுக்கு இரங்கி -பெரியாழ்வார் -என்பர் ஆண்டவன் சுவாமி –
வேண்டிய வேதம் -சம்பந்தம் கொண்ட உபநிஷத் அர்த்தம் ஓதி -வேதங்கள் –தமிழ் மறைகளும் ஓதி -பாண்டிய தேசம் –
இங்கு வேண்டிய ஓதம் இவையே -நல செல்வன் தங்காய் –
பனித்தலை -உபநிஷத் அர்த்தங்கள் -பால் வெள்ளம் -அருளிச் செயல் அர்த்தங்கள் -உபய வேதாந்தம் -சொல்லி பரத்வம் ஸ்தாபித்தார் –
கரு நீல வண்ணன் தன்னை -தனது அமிர்தம் பெற்ற பின்பு –
கட்டுரையே -பூர்ணமாக கண்டு அனுபவித்து பேச வல்லார் யார் —
அபரிச்சேத்யமான ஆராவமுதக் கடல் -அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -சதா பஸ்யந்தி ஸூரயா -அகஸ்த்ய பாஷையாலே
அங்கும் -தேசிகன்
சாந்தோக்ய தசை -அவனை அவனே அனுபவிப்பான் –

————————————————-

புள்ளின் வாய் கீண்டானை -கள்ளம் தவிர்ந்து கலந்து -இனியது தனி அருந்தேல் -கூடியே இருந்து குளிர
-போத யந்த பரஸ்பரம் -மத சிந்த -மத கத பிராணா –
போதரிக் கண்ணினாய் -அவனே வருவான் இந்த கண் அழகை பார்க்க என்று இருப்பவ இங்கே -திவ்யம் சஷூஸ்
பொல்லா அரக்கன் -விபீஷணஸ்து தர்மாத்மா -ராவணனை -ஹிரண்யனை -கிள்ளிக் களைந்தானே -நகத்தாலே செய்ததால் –
ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராம ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் -அஹோபில சிஷ்யர் –
ராம விருத்தாந்தம் சொன்னோம் கிருஷ்ண விருத்தாந்தம் சொன்னோம் -நரசிம்ஹ விருத்தாந்தமும் சொன்னோம்
வியாழன் போய் வெள்ளி -பிருஹஸ்பதி நஷத்ரம் -சுகர -அசுர குரு-தனது சிஷ்யனை காத்தார் –
புள்ளின் வாய் கீண்டான் -பேராசை அழிக்கும் ஆசார்யன் -பொல்லா அரக்கன் -மனஸ் இந்த்ரியங்கள் –
மீண்டும் புள்ளும் சிலம்பின கால ஷேபம் எங்குமே உண்டே போதரிக் கண்ணினாய் ஆனந்த மயன் -சாரூப்யம் பெற்று போகம் அனுபவிக்க –
பொழுது போனதே தெரியாமல் -அதுவாகும் கண் பயன் ஆவதே -தேட்டறும் திறல் -குலசேகர ஆழ்வார்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பள்ளி உணர்த்துகிறாள் –
யுகம் தோறும் இருந்தவனை ஸ்தோத்ரம் பண்ணத் தானே முடியும் -கட்டுரையே யார் ஒருவர் காண்பிப்பாரே
வாக்யமே சாஷாத்கரம் உண்டு பண்ணாதே -வாக்கியம் -தத்வமஸி-வாக்ய ஜன்ம ஞானத்தாலே மோஷம் என்பர் அத்வைதி
-தத் தவம் அஸி நீ ப்ரஹ்மத்துக்கு சரீரமாக இருக்கிறாய் -நம் சம்ப்ரதாயம் -சாரீரிகன் அவன் –
கட்டுரையே -இது
பக்தி பிரபத்தி மூலமே மோஷம் -மந்தவ்ய ச்ரோதவ்ய நிதித்யாசிதவ்ய —
கட்டுரை தான் உண்டோ -என்றும் காண்பது தான் உண்டோ -முழுவதும் எழுதவும் காண்பதுவும் முடியாதே –
வேத வாக்யங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -சொல்லிற்றே
மட நெஞ்சே -உசாத் துணைக்கு வேற ஆள் இல்லாமையால் நெஞ்சு கூட்டிக் கொள்கிறார் நாலாம் பாசுரத்தில்
-திருமந்திர த்யானம் ஒன்றே -உஜ்ஜீவன ஹேது என்கிறார்
சர்வம் அஷ்டாஷர மந்த்ரம் –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் -மந்த்ரம் -ரகசியம் பகவானையே சொல்லும் –
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து வாழலாம் மட நெஞ்சமே –
நந்த கோபாலன் -ப்ரஹ்ம விசாரம் செய்து ஆனந்த மயமாய் இருக்கும் ஆசார்யர்
சாரதமம் சாஸ்திரம் ரகஸ்ய த்ரயம் -அந்தி வைத்த மந்த்ரம் –
கந்தம் கமழும் குழலி -உபநிஷத் வாசனை -சர்வ கந்தக -அவன் –
கோழி -சாரத்தை பொருக்கி எடுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்
இவ்வாத்மாவுக்கு ரகஸ்ய த்ரயமே உபாதேய தமம் -தேசிகன்
குயில்கள் -வால்மீகி கோகுலம் –ஆசார்யர்கள் -குயில் இனங்கள் கூவின -ஆசார்யர்கள் கோஷ்டி என்றவாறே
பந்தார் விரலி -நாரம் ஒரு கையிலே நாராயணன் ஒரு கையிலே -போகோ உபகரணம் ஒரு கையிலே லீலா உபகரணம் ஒரு கையிலே –
வளை-சப்தம் -மந்த்ரார்த்தங்கள்
சரணாகதி அங்கங்கள் பேசுகிறாள் ஏற்ற கலங்கள் முதல் –
வெண் பல் தவத்தவர் -வம்பற்றவர் -பரகால ஜீயர் -பரிசாரக ஜீயர் -திரு வேங்கடத்தில்
அஹோபில ஜீயர் -அர்ச்சக ஜீயர் -விக்ரஹ ஆராதனம் செய்பவர்கள் –
உங்கள் புழக்கடை திருப் பாண் ஆழ்வார்
எல்லே -திரு மங்கை ஆழ்வார் -தேசிகன் என்றும் நிர்வஹிப்பார்
செங்கழு நீர் -வாய் -மலர்ந்து ஆம்பல் -அஜ்ஞ்ஞானம் நீங்கி ஞானம் மலர -அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த -மந்த்ரத்தை -பாசுரார்த்தம்
புழக்கடை -அதர்வண வேதம் -தோட்டத்து வாவி -அதில் உபநிஷத் -அஷ்டாஷர மந்த்ரம் -நாராயண உபநிஷத்
-ஓம் இத்யேகாஷரம்-இத்யாதி -அதர்வண சிரஸ்-பிரவணம் சேஷத்வ ஞானம் பெற –பாரதந்த்ர்ய ஞானம் கிட்டும் -நம சப்தம் –
தாச பூதா ஸ்வதஸ் சர்வே -இயற்கையில் அனைவரும் அடிமைகள் –இந்திரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை
பழ மறையின் பொருளும் கொண்டவை அமலனாதி பிரான் -முனி வாகன போகம் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –நாணாதாய் நாவுடையாய்
நந்த கோபாலா எழுந்திராய் -ஆசார்ய பரம்
யசோதா அறிவுறாய் -மந்திர ஸ்தானம்
மந்திர தேவதை -அம்பரமூடி ஓங்கி உலகு அளந்த பகவத் பக்தி –அம பரமே -அழகிய பரப் ப்ரஹ்மம்-
ஓம் சொல்லாமல் அம் -ஸ்திரீ என்பதால் மூல மந்த்ராதிகாரம்
தண்ணீரே -சாத்விக த்யாகம் — -கர்த்ருத்வ த்யாகம் -மமதா -த்யாகம் -பல த்யாகம்
பாகவத பக்தி -செல்வா பல தேவா
அஜ்ஞ்ஞானத்தால் விடுவது தாமஸ த்யாகம்
ராஜச த்யாகம் -காய கிலேசத்தால் விடுவது -துக்கம் நினைத்து செய்யாமல் விடுவது உடம்புக்கு கிலேசம் என்று எண்ணி
தண்ணீரே அறம் செய்யும் –அம்பரமே அறம் செய்யும்- சோறே அறம் செய்யும் -சாத்விகமாக செய்து கிருஷ்ணார்ப்பப்ணம் விட்டு –
சரணாகதிக்கு பலம் பகவத் ப்ரிதியே என்ற எண்ணம் வேணும்
மந்த்ரத்தை -அந்தணனை இரண்டுமே பகவானையே காட்டும் –
தமிழ் ஓசை வட சொல் ஆகி -இரண்டாலும் பேசப் படுபவன் அவனே
இடையர் செல்வம் -குடக் கூத்தாடு போலே -அந்தணர் மாடு -வேதம் ஓதி ஒதுவிப்பது
மாடு அந்தி -மாட்டு முலைகள் போலே உபநிஷத் -ப்ரஹ்மம் -கர்ம பாகத்தில் ரகஸ்யம் உபநிஷத்தில் ஸ்பஷ்டமாக காட்டும்
தன்னை சொல்பவனை காப்பவன் -மந்திர -சகஸ்ர நாமாவளி -சந்த்ராம் ஸூ பாஸ்கரத் ஸ்துதி அப்புறம்
விருத்தா -சம்ருத்தி பூரணன் -குணம் ஐஸ்வர்யம் ஜீவ சமூகத்தால்
ஸ்பஷ்டாஷாரன் -ஸ்பஷ்ட வர்ணங்களை கொண்டவன் -சொற்கள் எல்லாம் அவனையே குறிக்கும் –
மந்திர -சந்த்ராம்சூ பாஸ்கரத்துதி திங்கள் ஞாயிருமாகி –
பூதம் ஐந்தாய் வட சொல்லாகி திங்கள் ஞாயிறாகி -மந்த்ரத்தை -ஆய கைங்கர்யம் கிட்டும் மந்த்ரத்தை மறவாமல் வாழ்ந்தால் –
பெரு நாடு காண இம்மையிலே பிஷை -தாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின் பரமபதம் செல்ல
ஆசார்யர் இடம் ஞான பிஷி தாம் கொள்ளலாம்
எங்கள் மேல் சாபம் நீ நோக்குதியால் போகும் –
ஒண் மிதியில் –5 பாசுரம் -ஓங்கி -இரண்டு அவதாரம் ஒரே பதத்தால் -ஆண்டாள் காட்டி –
அன்று ஞாலம் அளந்த பிரானே குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் பரன் சென்று சேர் திருவேங்கடம் ஒன்றுமே தொழ-வினை மாயுமே –
ஸ்ரீ லஷ்மி கடாஷம் வேண்டுமே ஸ்ரீ வாமன மூர்த்திக்கு யாசகம் சித்திக்க –மான் தோலை வைத்து மறைத்து கொண்டு போனான்
பாதுகை தான் அவனை ரஷித்ததாம் சூர்ய மண்டலம் தாண்டி செல்லும் பொழுது -தேசிகன் -ஆசார்யன் -தானே பெருமாளை ரஷிப்பான்
-இல்லை என்பாருக்கு உபதேசம் செய்து ஈஸ்வர தத்வம் நிலை நாட்டி
வேதம் வல்லாரைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
சுக்ராசார்யார் வந்தவன் பராத்பரன் என்றதுமே அஹங்காரம் மமகாரங்கள் விட்டானே மகா பலி –
மகா பலிக்கு கிடைத்த பாக்கியம் நமக்கு கிடைக்க வில்லையே என்று ஆழ்வார்கள் உருகி இத்தை அருளிச் செய்கிறார் -அர்ச்சாவதார ஈடுபாடு வேண்டுமே
அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -எட்டு வித புத்திகள்
-1-கிரஹணம்–2-தாரணம் –3-ஸ்மரணம் –4-பிரதிபாதனம் –பிறருக்கு சொல்லிபார்த்து திடமாக்குவது
5- ஊகித்தல் -6-அபோதனம் -வேண்டாதவற்றை தள்ளி -7-அர்த்த விஜ்ஞ்ஞானம் -விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுதல் –
-8-தத்வ ஜ்ஞானம் ஆகிய அஷ்ட புத்தி வகை
ஒண் மதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப —
தேவகி சிங்கம் -ராகவ சிங்கம் -நர சிங்கம் -இராமானுஜ சிங்கம் -மாரி மழை முழைஞ்சில்
பாதுகை சாத்தி இருப்பதால் நடை அழகு நம் பெருமாளுக்கு -தேசிகன் -நித்யர்களும் வந்து சேவிக்கும் படி
ஆசன விசேஷத்தாலே வார்த்தை பழுது போகாது இறே
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து –
வேதாந்தம் உபநிஷத் குகையில் -சாந்தோக்ய தசையில் தன்னையே அனுபவித்துக் கொண்டு இருக்க -அசித் அவிசிஷ்டாயா மகா பிரளயம்
-மெழுகிலே ஒட்டின பொன் பொடி போலே ஒட்டிக் கொண்டு இருக்குமாம் –
வலி மிக்க சீயம் -ஞானம் என்கிற பலம் கொண்ட ராமானுசன் –
அஹோபிலம் -மாலோலன் -பக்தி மார்க்கம் பிரசாரம் பண்ண அருளி –
நூபுரமும் பெரியதாகி உலகு அளந்த பொழுது -ஆழி எழ சங்கும் வில்லும் எழ –மண்ணை துழாவி –வாமனன் மண் இது என்னும் –

——————————-

உபய பிரதான திவ்ய தேசம் -திருக்குடந்தை-மூலவர் உத்சவர் இருவருக்கும் மங்களா சாசனம்
-உத்தான சாயி -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –
திருப்பாவையில் திருப்பல்லாண்டு -அன்று -போற்றி
பாஷ்யகாரர் -ஸ்ரீ பாஷ்யம் -அருள -சென்ற திருவடி போற்றி
அஹங்காரம் அழித்த ஸ்வாமி -தென் இலங்கை செற்ற திறல் போற்றி –பிரதி வாதி -சென்று அழித்த திறல் போற்றி –
சகடாசுரன் -காமம் குரோதம் ஒழித்த ஆசார்யர் திருவடி போற்றி –
லோபம் மோஹம் கன்று குணிலா எரித்தாய் கழல் போற்று -ஆஸ்ரித ரஷணம் குன்று குடையாய் -எடுத்த குணம் போற்றி
ஞானம் கொடுத்து -அபராதி சிஷ்யர்களையும் கிருபையால் அனுக்ரஹனம் செய்து அருளி
சங்கு சக்கரம் -வேல் போற்றி –நித்ய திருவாராதனம் இவற்றுக்கும் செய்வார்கள் ஆசார்யர்கள் -பறை-ஆசார்ய கைங்கர்யம் –

—————————————

திருத்தக்க செல்வமும் -திரு விரும்பிய செல்வம் -ஒன்றே வேண்டும் உன்னை அர்த்தித்து வந்தோம்
ஓர் இரவில் -ஒப்பற்ற இரவு -இதுவே உதவிற்று மாதா பிதாக்கள் உதவாத போதும்
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதி -திரு மந்த்ரத்தில் பிறந்து த்வ்யத்தில் வளர்ந்து –
என் குட்டன் வந்து புறம் புல்குவான் -அவனை நம்மை கொள்வான் -திருமேனியை பூரணமாக அனுபவிப்பிப்பான்
திருக் கோவலூரில் வந்து -காட்சி -பொய்கை வேலி-மூவரும் மங்களா சாசனம் செய்த திவ்ய தேசம் ஸூ சிப்பிக்கிறார்
தான் அநாத-நாதன் இல்லாமல் -சர்வேஸ்வர தத்வம் இரப்பாளனாக-
அலம் புரிந்த நெடும் தடக்கையன் -அமரர் வேந்தன் -அலம் -போதும் -போதும் -என்பவன் –
மகா பலி வேந்தன் -இவன் அமரர் வேந்தன் -ராஜ்ஜியம் வேண்டும் என்பாருக்கும் வேண்டாம் என்பாருக்கும் இவனே வேந்தன் –
வந்து -காலே வந்து -சிறு காலே வந்து –சிற்றம் சிறு காலே வந்து -கங்கா ஸ்நானம் பண்ண ஆசை கொண்ட
நொண்டி மேலே கங்கை கொட்டினால் போலே என்பர் தேசிகர் -ராகவம் சரணம் கத -வம்சம் வேறே காட்டினானே
-சீதையை மீட்பது அப்புறம் -அபயபிரதானம் -சாரம் –
வாரிக் கொண்டு விழுங்க -ஆழ்வாரை அனுபவிக்க திருக் குருகூர் வர பாரித்து இருக்கும் மால் –
வ்யாமோஹமே வடிவாக கொண்டவன் -ஸ்ரீ கிருஷ்ணன் –
மணி வண்ணன் -14 அம்சம் சாம்யம் உண்டே –
பகவத் அனுபவம் நம்மை நர்த்தனம் பண்ணப் பண்ணும் ஆடி ஆடி அகம் கரைந்து -நாடி நாடி நரசிம்ஹா என்று
சர்வ வ்யாப்தன் நிரூபித்து காட்டிய அவதாரம் அன்றோ
சிலரை உறங்கப் பண்ணும் மயங்கப் பண்ணும் –
நாவுடையேற்கு மாறுளதோ -சொல்லப் பண்ணும்
உடையவர் காலிலே விழுகையும் -ப்ரஹ்ம ஜ்ஞானம் உடையவர் -த்ரவ்யம் உள்ளவர் இடம் ஆஸ்ரயிப்போம்-
நாரதர் -வால்மீகி -பராசரர் மைத்ரேயர் -திருவடிகளில் விழுந்தால் போலே –
ஆசார்யர் திருமேனியில் அஷ்டாஷர அர்த்தம் கிட்டுமே –
கேட்டியேல் தொடை தட்டி எழுப்புகிறாள் ஆண்டாள் -மார்கழி நீராடுவான் -மம சாதர்ம்யம் ஆகாதா -போக மாதரம் சாம்யம் -ப்ரஹ்மம் போலே ஆகிறான்
மேலையார் செய்வனகள் -பூர்வாச்சார்யர் -பால் அன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -பிரணவார்த்தம் போல்வன –
பறை -பாரார்த்த ஞானம் -உகாரார்த்தம் -அவனுக்கே அற்று தீர்ந்து
-களவு கொண்டு ஆபரணம் பூணுவார் போலே –தானாகவே பூர்வாசார்யர்கள் சொல்லாத ஸ்ரீ சூக்திகள் சொல்வார் பயப்படுவார் தேசிகன் –
ஆசார்யர் பாதுகைகள் பிரீதி அடையட்டும் -வாழ்த்துவார் சரணாகதனை-
கோல விளக்கு -தீபம் போன்ற பாகவத கைங்கர்யம் –கொடியே -பகவத் கைங்கர்யம் விதானம்
-சாத்விக த்யாகம்–நம்மைக் கொண்டு அவனே அவனுடைய ப்ரீதிக்காக செய்து கொண்டான் -என்ற எண்ணம் வேணும் –
பூர்வாசார்யர் ஸ்ரீ சூக்திகளே உஜ்ஜீவன ஹேது
போல்வன சங்கங்கள் –பாஞ்ச ஜன்யம் -ஆ நிரைகளை கூப்பிட சங்கு -எடுத்து ஊதுவான் -ருக்மிணி பிராட்டிக்கு –
ஒலித்த சங்கமும் உண்டே -ஆக மூன்று சங்கங்கள்
துளசி வாசனையும் சங்கொலியும்-கேட்டு ஆஸ்வாசப் பட்டாள் –
கோல விளக்கே -தீபம் போன்ற ஆதி சேஷன் -கொடியே விதானமே திருவடியையும் கொடுப்பேன் -உன்னை அர்த்தித்து வந்தோம் சொன்னீர்
பாட வல்ல நாச்சியார் -ஆண்டாள் உன் தன்னைப் பாடி பறை கொண்ட
அக்கரை இக்கரை யாயிற்றே –ஷீரான்னம் -பகவான் -ஷட்குணம்–அன்னம் ப்ரஹ்மேதி பவதி -பால் சோறு -அவனே –
முக்குணம் அன்னம் நாம் உண்ணுவது -சாத்விக ரஜஸ் தமஸ் கலந்தவை

—————————-

ந தர்ம நிஷ்டோச்மி -சந்த்யா வந்தனம் நித்ய கர்மா செய்தாலும் கர்ம யோகாதிகள் இல்லை என்கிறார் ஆளவந்தார் -கறைவைகள் -ஆகிஞ்சன்யம்
திருக்குடந்தை ஆண்டவன் -16 தமிழ் பாசுரங்களால் 16 ஸ்ரீ பாஷ்ய அதிகார அர்த்தங்களைக் காட்டி அருளி இருக்கிறார்
பரத்வமும் சுலப்யமும் சேர்ந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம் தானே -அவனே பூம் கோவலூரில் உள்ளான் என்கிறார்
விஷ்ணு துர்க்கை -கண்ணனால் அனுப்பப்பட்ட மாயை -கம்சனால் அனுப்பப்பட்ட மாயை பேய்-அன்றோ -காசியில் சிவன் ராம நாமம் ஒதுவாராம் –
6/7 பாசுரங்கள் நெஞ்சை திருக் கோவலூர் கூட்டிச் செல்கிறார் -அலம் புரிந்த -ஹலம் -கலப்பை என்றுமாம்
-அவனே பூம் கோவலூரில் -உலகம் ஆண்டு -10000 வருஷம் ஆண்ட ராமன் -அவனும் இங்கே –
கற்புடைய -பாதி வரதம் ஸ்ரீ மன் நாராயணனே பர தெய்வம்
சேஷ சேஷி பாவம் கூரத் ஆழ்வானுக்கு மாறிக் கிடந்ததே
அழகர் இடம் உடையவர் திருவடி சேவை மீண்டும் பெற பிரார்த்தித்து –
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து உடையவர் திருவடி வாரத்தில் கைங்கர்யம் செய்ய வேண்டும் -பிராரத்து பெற்றார்
ஆளவந்தார் தம் சிஷ்யர் உடையவரை பெற வரத ராஜர் இடம் பிரார்த்தித்தாரே -சம்ப்ரதாயம் காத்த தேவாதி ராஜன் –
நிறைந்த கச்சி–ஊரகத்தாய் -திவ்ய தேசங்கள் பல உண்டே
நெடு வரை உச்சி மேலாய் -திருமலை –
சென்று இறைஞ்சி -ஸ்வாமி சேஷ பாவம் அறிந்தால் மட்டும் போறாது செல்ல வேண்டும்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து -புகுதல் ஆத்மா ரஷண சமர்ப்பணம் -செய்ய வேணும் -கோப்த்ருத்வ வரணம் -உபாய ஸ்தானத்தில் இருந்து ரஷிக்க வரித்து –
திருக் குருகை பிரான் பிள்ளான் -எம்பெருமானார் திருப்பேர் நகர் மங்களா சாசனம் செய்து உள்ள நேரத்தில் எழுந்து அருளி —
பிடித்தேன் -பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் -பாசுரம் -பிரபத்திக்கு முன்பு சோகித்தவனும் அப்புறம் சோகிக்காதவனும் அதிகாரி -தேசிகன்
திருப் பேர் நகரான் பாசுரம் அனுபவமோ -நீரே வியாக்யானம் செய்ய அதிகாரி நியமித்தார் —
பேராது என் நெஞ்சின் உள்ளே -மன்னு பேரகத்தாய் –
ராமானுஜர் நெஞ்சில் உள்ளத்தை அறிந்து பிள்ளான் சொல்லப் போகிறார் ஸூ சகம் –
தூப்புல் தேசிகன் -திருவவதாரம் ஸூ சகம் -கூட மேலே வரும்
எங்குற்றாய் –தேடிக் கொண்டு மங்களா சாசனம் செய்கிறார் ஆழ்வார் -நீரகத்தாய் –இத்யாதி
தசரதத சக்ரவர்த்தி போன்ற நிலை ஆழ்வாருக்கு – ரதம் நிறுத்த சொல்ல -பெருமாள் -போகச் சொல்ல –
காதில் விழ வில்லை சொல்லும் என்றானாம்
பெருமாள் –காதில் விழுந்தாலும் அதன் படி அனுஷ்டிக்க முடியவில்லையே
நீ நான் சொல்வதை கேட்காவிடில் நாசம் -கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சாபம் -கேட்ட படி நடக்க வில்லை -ஸ்ரீ கீதா பாஷ்யம்
அத்புதம் -மற்ற அவதாரங்கள் –பாகவதம் -அத்யத்புதம் -நரசிம்ஹ அவதாரம் -பெரிய பெரிய பெருமாள் நரசிம்ஹம் என்பர்
-ஆசார்யர் ஆராதனா தேவதைகள் அல்லவா
உள்ளுவார் உள்ளத்தாய்–நெடுவரையின் உச்சி மேலாய் –தேவ பெருமாளையை சொல்லலாமே உத்தமூர் ஸ்வாமி ஆண்டவன் ஸ்வாமி -சம்வாதம் –
பெரியவாச்சான் பிள்ளை -திருமலை சொல்வார் -இப்படி சொல்லாம் என்பதாலே உள்ளுவார் உள்ளத்தாய் -என்கிறார்
அத்திகிரி -நெடு வரியின் உச்சி -வாரண கிரி சிரஸ்-
கரி மலை நின்று அளித்து காக்கின்றானே -தேசிகன்
நரசிம்ஹன் மேல் தேவ பிரான் -என்றும் சொல்லலாம் -நரசிம்ஹன் ஆராதனம் செய்த ஸ்ரீ நிவாசனையும் சொல்லலாம்
-திருமங்கை ஆழ்வார் எங்கும் அலை பாயுமே
நிலாத் துங்க துண்டத்தாய் -அர்த்த சந்திர மௌலி -ஏகாம்பரர் கோயிலுக்கு உள்ளே இருக்கும் பெருமாளையும் மங்களா சாசனம்
-ராமன் உள்ள இடமே அயோதியை என்பார் போலே
ஒண் துறையில் வெக்கா-வேகவதி நதிக்கு அணையாக சயனம் -உபாய பல பாவமாக ஸ்வயம் வ்யக்தம் –
தேசிகன் அமிர்தம் ஆகிய மோஷத்துக்கு அணை -உபநிஷத் –
சேது என்றால் அடையப் படும் வஸ்து வேறாக இருக்க வேண்டுமா -பலாதிகரணம் -ஸ்ரீ பாஷ்யம் -உபாயமாகவும் பலமாகவும் இருப்பவன்
கலி பிறந்து 46வருஷம் -பெரியாழ்வார் திரு அவதாரம் – 96 -வருஷம் கழித்து ஆண்டாள் திருத் துளசி வனத்தில் ஆவிர்பவிக்க
வாரணம் ஆயிரம் -நரசிம்ஹன் வந்ததாக கனவாம் –
அரி முகன் அச்சுதன் -கை மேல் -பொறி முகம் தட்ட கனாக் கண்டேன்
நரசிம்ஹன் -ருக்மிணி காலே நரசிம்ஹ -காலத்தில் வந்த அவன் போலே வர வேணும் என்றால்
நீங்களும் சிசுபாலன் பிறந்த லக்னத்தில் பிறந்தீர்களோ -கைங்கர்யம் ஸ்வீகரித்துக் கொண்டே ஆக வேணும் -என்று ஆறி இருக்க வேண்டும் –
நாச்சியார் திரு மொழி -பிரபத்திக்கு பின்பு அர்ச்சாவதார அனுபவம் போலே –
ஆண்டாள் -ரஷிக்கிறவள் -ஆண்டவன் -சம்ப்ரதாயத்தை ரஷித்தீரே -என்று ஆண்டவன் பெயராம்
ஆண்டாள் -10 த்வய தேசம் பெரியாழ்வார் -20 திவ்ய தேசம் மங்களா சாசனம்
நான் மறையும் -வேள்வியும் வேள்விப் புகையும் -பதங்களின் பொருளும் -பர வாசு தேவன் -தானே அரங்கன் மேலே கந்தம்
தோலாத தனி வீரன் தொழுத கோயில் -சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில் செழும் மறையின் முதல் எழுத்து -இவனே

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

நம் ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார் அருளிச் செயல் அமுதம் –

June 2, 2015

மாறன் பனித்த தமிழ் மறைக்கு
ஆறங்கம் கூற அவதரித்த
வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் பதினாலும் போலே
இந்நூலுக்கும் இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்
ருக் யஜுஸ் சாம அதர்வண வேதங்களுக்கு
சீஷா வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்திரங்கள் -உப அங்கங்கள் எட்டும்
நம் ஆழ்வார் திரு உள்ளத்தை பின் பற்றியே இவர் அருளிச் செய்து உள்ளார்-
திவ்ய தேச அனுபவம் -நம் ஆழ்வார்
சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து
வாழ்ந்து அங்கு அடியார உடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி -பதிகத்தில்
ஏழாம் பாட்டில் குடந்தை எம் கோவலன் குடி குடியார்க்கே தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்
திரு நாட்டிலும் மறக்க முடியாத திருக்குடந்தை
தூவி சேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும்
சொற்பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும்
திருமொழி தொடங்கும் பொழுதே அருளிச் செய்து
சரம பிரபந்தம் திரு நெடும் தாண்டகத்தில் முடிவிலும்
தண் குடந்தை  கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேன் -என்றும் அருளிச் செய்து
தனியாகவும் திரு எழுக் கூற்று இருக்கை பிரபந்தம் அருளிச் செய்தார்

அர்ச்சாவதாரம் போலே விபவ அவதாரத்திலும்
திரு விருத்தம் -பெரும்  கேழலார்  தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ  வைத்தார் -என்றும்
ஏனத்துருவாய் இடந்த ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும் அருளிச் செய்து
இறுதியில் அவா பெற்று வீடு பெறுவதற்கு முன்பு
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
உன்னைப் பெற்று இனி போக்குவனோ -என்று
ஸ்ரீ வராஹ நாயனார் பக்கலில் நம் ஆழ்வார்  திரு உள்ளம் சேர
திருமங்கை  ஆழ்வாரும்
திருமொழி தொடக்கத்தில்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன்

இமையோர் தலைவா மெய்ந்நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவன் துயரறு  சுடரடி தொழுது எழு என் மனனே -என்று அருளியதுக்கு சேர
திருமங்கை ஆழ்வார்
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு
அமரர் பெரும் விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான்

நம் ஆழ்வார் விஸ்தரித்தத்தை
திருமங்கை ஆழ்வார் சுருக்கி
அஞ்சிறைய மட நாராய் –
வைகல் பூங்கழிவாய் –
பொன் உலகு ஆளீரோ-
எம் கானல் அகம் கழிவாய்
என்ற நான்கு பதிகம் தூது விட்டு அருளியதை
தூ விரிய மலர் உழக்கி -3-6 பதிகத்தில் நான்கு பாசுரங்களால் மட்டுமே தூது விட்டார்
மேலே 9-4 திருப் புல்லாணி பதிகத்தில்
புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனை செப்புமினே -9-4-2- என்று ஒரே பாசுரத்தாலும்
திருவிருத்தத்தில் தூது விடும் இரண்டு பாசுரங்களுக்கு சேர் திரு நெடும் தாண்டகத்தில் இரண்டு பாசுரங்களால் தூது விட்டு அருளுகிறார்

சொன்னால் விரோதம் இது -சொன்னாவில் வாழ் புலவர் சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும் -2-9-திருவாய் மொழி பதிகம் சுருக்கினை
பெரிய திருமொழி முதல் பதிகத்தில்
இப்பிறப்பு அறியீர் கற்பகம்   புலவர்களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்ற பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-என்னும் பதிகத்தில்
கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கல் உற்று திடமாக  வாய்ந்தவனாய் தான் பேசும் மாறன் -என்பதை பெரிய திரு மொழி 8-2-6-தெள்ளியீர் பதிகத்தில்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்-என்று
நம் ஆழ்வார் போலே தாய் பேச்சால் அனுகரித்து பேசி அருளுகிறார்

திருவாசிரியத்தில்
தளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெரு மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்றுடையமோயாமே-என்று சுருக்கி அருளியதை  விஸ்தரித்து
பெரிய திருமொழி -11-6-மைந்நின்ற கரும் கடல் வாயுலகின்றி பதிகத்தில்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகம பதிகம் விஸ்தரித்து அருளுகிறார் –

5-3 மாசறு சோதிப் பதிகம் குதிரியுயாய் மடலூர்துமே  -5-3-9-என்றும்
யாம் -மடலூர்ந்தும் -5-3-10-என்றும் அருளிய ப்ரஸ்தாவத்தை
சிறிய திருமடல் பெரிய திரு மடல் இரண்டு பிரபந்தன்களால் விஸ்தரித்து அருளிச் செய்கிறார்

பயிலும் சுடர் ஒளி -3-7-
நெடுமாற்கு அடிமை -8-10-
பாகவத சேஷத்வத்தை
நண்ணாத வாள் அவுணர் -2-6-
கண் சோர வெங்குருதி -7-4-
இவரும் இரண்டு திருமொழிகளில் அருளிச் செய்கிறார்

இழந்தது சங்கே இழந்தது மாமை நிறமே இழந்தது பீடே இழந்தது கட்டே -மாலுக்கு வையம் அளந்த -6-6- திருவாய் மொழியில் தாய் பேச்சாலே தெரிவிக்கப் பட்டதை
பெரிய திருமொழி -8-3-கரை எடுத்த சுரி சங்கு பதிகத்தில்
இழந்தேன் என் வரி வளையே
இழந்தேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே
இழந்தேன் என் பெய் வளையே -என்று
தாம் இழந்ததை தம் திருவாக்காலே வெளி இட்டு அருளுகிறார்

கங்குலும் பகலும் -7-2-பதிகத்தில்
இவள் திறத்து என் செய்கின்றாயே
இவள் திறத்து என் சிந்தித்தாயே
போலே
திவளும் வெண் மதி போல் -பெரிய திருமொழி -2-7- பதிகத்தில்
உன் மனத்தால் என் நினைத்து இருந்தாய்
பாசுரம் தோறும் தாய் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

தீர்ப்பாரை யாமினி திருவாய்மொழி -4-6-தேவதாந்தர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திருமடளிலும் திரு நெடும் தாண்டகத்திலும் -பாசுரம் -11-
பகவத் ப்ரவணையான கட்டுவிச்சி உடைய பேச்சு வெளி இடப் பட்டது

உண்ணும் சோறு-திருவாய்மொழி -6-1- தாமே தனியே திருக்கோளூர்  செல்வது போலே
கள்வன் கொல்-பெரிய திருமொழி -3-6- வயலாலி மணவாளன் வந்து ழ்வாரைக் கைப் பற்றிக் கொண்டு போனதை சொல்லிற்று-

————————————————————————————————————————————————————–

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானங்கள் —

June 1, 2015

திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

————–

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக்கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –
நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனை கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தை கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை -அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் கடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் கடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்
நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் -நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய் மிகவும் ஆற்றாமையாலே எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை 
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை 
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை 
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை 
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை 
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

வியாக்யானம் -1-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்  ஒரு முறையானை ஈன்றனை –

ஒரு பேர் உந்தி
வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களுக்கும்
அத்விதீய காரணமாக
பரப்புடைய திரு நாபியிலே

இரு மலர்த் தவிசில்
அப்பரப்பு அடங்கலும் கண் செறி இட்டால் போலே
பெரிய திகழ்கிற மலராகிய ஆசனத்திலே

ஒரு முறையானை ஈன்றனை
ஒரு கால் விசஜாதிய ஜன்மாவான சதுர முகனை உண்டாக்கினான்-

ஒரு கால் என்றாலும்
ப்ரவாஹ ரூபேண நித்தியமாய் இருக்கும் இறே-நா வேஷஸே-ஸ்தோத்ர ரத்னம் -10-

ஒரு பேர் உந்தி —
ஜகத்தை பிரளயம் கொண்ட காலத்திலே
நிர்ஹேதுக கிருபையாலே
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்கினவனே
பிரதான ஆதியாய் திரு நாபி

இரு மலர்த் தவிசில்-   –
பெரிய இதழ்களை உடைய தாமரையிலே

ஒரு முறையானை ஈன்றனை –
இவற்றின் உடைய சத்தாதிகளை உண்டாக்கின உனக்கே
பரம் அன்றோ எல்லாரையும் ரஷிக்கிறது

நீ உண்டாக்கின இவற்றின் பிறப்பை அறுக்க உனக்கு அரிதோ   —

————————————————————————–

வியாக்யானம் -2-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

நாம ரூப விபாஹா அனர்கமாய் இருக்கிற இத்தை
விபதமமாக்கி
சூஷ்ம ரூபேண அவஸ்தைகளைப் பிறப்பித்து
மஹானாக்கி
அஹங்காரமாக்கி-
தன்மாத்ரைகள் ஆக்கி –
பூதங்கள் ஆக்கி –
பௌதிகமான வர்ண சிருஷ்டி யளவும் வரப் பண்ணி

பின்னை அவ்வருகு உண்டான தேவாதி காயங்களை -அடங்கலும் அவன் முகத்தாலே பண்ணுவதாக
முதலிலே சதுர்முகனை யுண்டாக்கினான் ஆயிற்று

முன்பு உள்ளவை எல்லாம் தானே கை தொட்டுச் செய்து
பின்பு சதுர்முகனை அதிஷ்டித்து நின்று செய்வானாகப் பார்த்தான் –

முன்பு அசித்தைக் கொண்டு கார்யம் கொண்டதோடு பாதி
இவனைக் கொண்டு கார்யம் கொள்ளப் பார்த்ததோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவனுக்கு –

பாரதந்த்ர்யத்தில் வந்தால் இவனுக்கும் அசித் சாம்யம் உண்டு –
சேதனரான வாசியால் பெறுகிற ஏற்றம் கார்யத்துக்கு
கடவான் அவனே என்று அறுதி இட்டு இருக்கை யாயிற்று

————————————————————————–

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

வியாக்யானம் -1–
தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

ஒரு முறை -ஒரு பர்யாயம்

இரு சுடர் -சந்த்ராதித்யர்கள்

மீதினிலியங்கா -மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –

மும் மதிளிலங்கை-கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –

இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-

வாளியில் அட்டனை -ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே –
பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ச்லேஷ விரோதியைப் போக்கினால் போலே
என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-

—————————————

வியாக்யானம் -2-
பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –

ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய்
காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை
வில்லினுடைய கோடித்வயமும் வளையும் படி
அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய்
தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் –நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய
முன் ஒரு நாள் தன வில் அங்கை வைத்தான் சரண் -முதல் திரு -59-என்றபடி-

இவ்வாத்மாவுக்கு ஸ்வதஸ் சித்தம் அல்ல –
அய பிண்டத்தையும் அக்னியையும் சேர்த்து வைத்தால் போலே
அன்யோன்ய சம்யோகத்தாலே
அதினுடைய பரமாணுக்கள் ஸூஷ்ம ரூபேண அசித்தில் வந்து சங்க்ரமிக்கை யினாலே யாதல்-அன்றிக்கே –
அதனுடைய குணத்தை பஜிக்கையினாலே யாதல் –
அதினுடைய ஔஜ்வல்யத்தையும் வர்ணத்தையும் உடைத்தாய் இருக்குமா போலே
நித்தியமான ஆத்ம வஸ்து அனாதியாய் உள்ள அசித் சம்யோகத்தாலே
அந்த அசித்திலே அஹம் அபிமானத்தைப் பண்ணும்படி பலிக்கிற-அவித்யா கர்ம வாசனா ருசிகள் –
அவை யடியாக பரிக்ரஹித்த சரீரத்தைப் பற்றி வரக் கடவதான ஆதி வ்யாதி நிஷித்த அனுஷ்டானம்-

இப்படி கார்யமாயும் அடி காண ஒண்ணாதபடி கிடக்கிறவை-
புதுப் புடவையை அழுக்கு கழற்றுமா போலே-க்ரமத்தாலே போகை அன்றிக்கே
ஒரு காலே சவாசநமாகப் போக்க வேண்டில்

நுடங்கிடையை இத்யாதி –
அதுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
பிரபல பிரதிபந்தகங்களை வருத்தம் அறப் போக்க வல்லவனைப் பற்ற வடுக்கும் –

நுடங்கிடையை –
கண்டாருக்கு என்னாய் விளையக் கடவதோ -என்று
அஞ்ச வேண்டும்படியான சௌகுமார்யத்தை யுடைத்தான இடையை
யுடையவளைக் கிடீர் பிரித்து வைத்தது -என்கை-

முன்பு இலங்கையிலே கொடு புக்குச் சிறை வைத்த ராவணன் மிடுக்கு அழியும் படியாக –
மேகத்திலே மின்னினால் போலே அழகிய திருக் கையிலே ஸ்ரீ சார்ங்கத்தை வைத்தவன் –
எதிரிகளை அழியச் செய்கைக்கு ஒரு வியாபாரம் வேண்டா –
கையிலே வில்லை வைக்க அமையும் –

அழகிய திருக் கையிலே வில்லைப் பிடித்தவன் உபாயம் என்னுதல் –
அவனை உபாயமாகப் பற்றுங்கோள்-என்று விதியாதல் –

நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் -என்றதுக்கு கருத்து என் என்னில்
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கை யாவது –
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒக்கும் என்கை –
தன்னைப் பற்றினார்க்கு அவள் விரோதியைப் போக்கினாப் போலே விரோதியைப் போக்கிக் கொடுக்கும் என்கை –
அவளோடு ஒத்த பிராப்தியும் அவன் பக்கல் இவனுக்கு உண்டு என்கையும்
அவனைப் பற்றுவார் அவள் முன்னாகப் பற்றுவார் என்கையும் –

ஒரு பேருந்தி இரு மலர்த் தவிசில்ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா-மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் –

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

வாளியில் அட்டனை-
ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————————————————————————–

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

வியாக்யானம் -1-
அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –

மூவடி நானிலம் வேண்டி -நாலுவகைப் பட்ட பூமியிலே -மலை காடு நிலம் கடல் -என்கிற -மூவடியை வேண்டி –

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் –
ஒரு காளமேகத்தில் மின்னலை ஏறிட்டால் போலே-
திரு யஜ்ஞோபவீதமும் -அத்தோடு கூடின க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திரு மார்பை யுடையையாய் –

இரு பிறப் பொரு மாணாகி-த்வ்ஜனுமாய் -ஒப்பில்லாத ஸ்ரீ வாமனனுமாய்
தானே இன்னும் ஒரு கால் இவ்வடிவு கொள்ள வேணும் என்னிலும் இப்படி வாயாத வடிவுடையையாய்

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-ஒருகால் இரண்டு அடியாலே மூன்று லோகத்தையும் அளந்து கொண்டாய்-

இத்தால்-
இந்தரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தால் போலே
என்னுடைய சேஷத்வத்தையும் மீட்டுத் தந்து அருள வேணும்-என்கிறார் –

தேவர்கள் சென்று இரந்தார்கட்கு இடர் நீக்கிய -கோட்டங்கை வாமனனாய் -திருவாய்மொழி -7-5-6–என்று
உன்னை இரந்தார்கட்கு நீயும் இரந்து அவர்கள் அபேஷிதம் பார்க்கும் அவன் அல்லையோ –

இசையாதார் தலைகளிலே வைத்த திருவடிகளை இசைந்த என் தலையிலே வைக்கல் ஆகாதோ-

பிரயோஜனாந்தர பரனுடைய இழவு தீர்த்த உனக்கு அநந்ய பிரயோஜனான என்னுடைய இழவு தீர்க்கலாகாதோ

இந்த்ரன் கழஞ்சு மண் அன்றோ இழந்தது -நான் என்னையும் உன்னையும் அன்றோ இழந்தது –

————————————————————————–

வியாக்யானம் -2-
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

பிரயோஜனாந்தர பரர்களான இந்த்ராதிகளுடைய கார்யம் செய்த நீ
உன்னையே பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என் கார்யம் செய்யலாகாதோ –

மூவடி நானிலம் வேண்டி-ஈரடியாலே பூமியை அளந்து
ஓரடிக்கு அவனை சிறையிட்டு வைக்க நினைத்து மூன்றடியை இரந்தான் ஆயிற்று –

நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி என்றால் போலே சொல்லுகிற
அன்னலும் துன்னலுமான பூமியை அர்த்தித்தது –
இந்நாலிலும் ருஷீஷாம்சமாக கழித்தது பாலை நிலம் என்றும் சொல்லுவார்கள் –
இவருக்கு அபிமதம் நாலு என்னும் இடம் தோற்றி இருந்தது இறே

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மேகத்திலே-மின்னினால் போலே சாத்தின யஜ்ஞோபவீதமும்
கிருஷ்ணாஜிநமும் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையையாய்
உப நயனம் பண்ணின புதுமை தோற்றும் படி இருப்பாயுமாய் –

இந்த்ரனுடைய அர்த்தித்வம் தலைக் கட்டுகைக்காக இட்ட போதோடு இடாத போதோடு வாசி அற-
முகம் மலர்ந்து போம்படி இறபபிலே தகண் ஏறின வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து-
ஒரு கால் த்ரை லோகத்தையும் ஈரடியால் அளந்து கொண்டாய்

ஆசையில்லாதார் தலை மேலேயும் வைக்கும் திருவடிகளை ஆசையுடைய என் தலை மேலேயும் வைக்கலாகாதோ-

இந்த்ரனைப் போலே கழஞ்சு மண் பெறுதல் –
மகா பலியைப் போலே ஔதார்யம் கொண்டாடுதல் செய்ய இருக்கிறேனோ நான் –
உன்னைப் பெற வேணும் என்று அன்றோ நான் அர்த்தித்திக்கிறது-

உன்னை வைத்து வேறு ஒன்றை இரந்தார்க்கோ நீ இரப்பாளனாகக் கார்யம் செய்வது –
உன்னையே இரந்தார் கார்யம் செய்யலாகாதோ –

மதீய மூர்த்தா நமலங்கரிஷ்யதி கதா –ஸ்தோத்ர ரத்னம் -31-என்று இறே நான் இருக்கிறது-

——————————————————————–

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

வியாக்யானம் -1-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

நாற்றிசை நடுங்க-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபத்தை நினைத்து கலங்கின கலக்கத்தைக் கண்டு-
ஜகத்துக்கு என்ன மிறுக்குப் புகுகிறதோ -என்று அறியாதே நடுங்க –

அஞ்சிறைப் பறவை ஏறி –
மிக்க அழகையும் வேகத்தையும் உடைத்தான சிறகை யுடைத்தான பெரிய திருவடி மேல் ஏறி-

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
நாலா நின்ற வாயையும் மூன்று மதத்தையும் இரண்டு செவியையும் யுடைத்தாய்
வேறு துணை இன்றிக்கே தன் மிடுக்கு அற்று நின்ற ஆனையினுடைய மகா துக்கத்தை

அரந்தை -துக்கம் –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-அத்தசையிலே வேற்று நிலமாய்
பெரிய நீர் வெள்ளமான மடுவிலே தீர்த்தாய்
முதலையின் வாயில் நின்றும் ஆனையை மீட்டால் போலே
சம்சாரம் கொண்ட என்னையும் மீட்க வேண்டும் -என்கிறார்-

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே தயோர்த் வந்தவ சமம் யுத்தம்
திவ்யம் வர்ஷ சஹச்ரகம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று

ஆனைக்கு முதலை ஓன்று
எனக்கு முதலை ஐந்து

அது மிடுக்கான யானை
நான் துர்பலன் -என்கிறார்

——————————————————–

வியாக்யானம் -2-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

நாற்றிசை நடுங்க-அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கும் சங்கல்பத்ததுக்கு அவ்வருகு யுண்டு என்று அறியாமையாலே
ஜகத் உபசம்ஹாரத்துக்கும் அவ்வருகாய் இருந்ததீ-

இது ஒரு சீற்றம் இருந்த படி என் -என்று இருந்ததே குடியாக எல்லாரும் அஞ்சும்படியாக
மேருவுக்கு இனிய மேகம் போலே -அழகிய சிறகை யுடைய பெரிய திருவடி திருத் தோளிலே ஏறி-
பெரிய வேகத்தோடு

நாலா நின்றுள்ள வாயை யுடைத்தாய்
மூன்று வகைப் பட்ட மதத்தை யுடைத்தாய் -இரண்டு கன்னங்கள் குறி –
இரண்டு செவியை யுடைத்தாய்-வேறு துணை இன்றிக்கே
அத்விதீயமாய் இருக்கிற யானையுடைய துக்கத்தை

அத்தசையிலே வேற்று நிலமாய் மிக்க வெள்ளத்தை யுடைத்தான மடுவிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்து போக்கினாய்

க்ரஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடி
மடுவிலே போய்ப் புக்கு ஆனையையும் முதலையுமாக அணைத்துக் கொண்டு போந்து கரையிலே ஏறி
ஆனைக்கு நலிவு வாராத படி திரு ஆழியாலே முதலையைக் கிழித்து பொகட்டான் ஆயிற்று –

ராஜபுத்ரனோடு வினையுண்ட கைக் கூட்டனுக்கும் பால் திரளை இடக் கடவது காண்-என்று
பட்டர் அருளிச் செய்யும் படி –

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-என்றால் போலே
சொல்லுவதுக்கு கருத்து யாது என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆனபடியாலே சொல்லுகிறது –

வேழத் அரந்தையை – –
எளியராய் இருப்பார் நோவு பட்டால் போல் அன்று இறே இதனுடைய நோவுபாடு –

பரமா பதமா பன்ன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும் படி கரை கண்ட ஆபத்து ஆயிற்று –

இவ்வாபத்துக்கு அவதி என் என்னில் –
மநஸா சிந்தயத் வாயால் கூப்பிடுமதோவிற்று-வாயால் கூப்பிடவும் இயலாத படி –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-
அங்கு காலம் அளவிட்டு இருக்கும் -முதலை ஓன்று -தான் ஆனை –
இங்கோ என்றால் -காலம் அநாதி -இந்த்ரியங்கள் ஐந்து -நானோ துர்ப்பலன் –
ஆனால் வாசி பார்த்துத் தர வேண்டாவோ –

காலைக் கதுவிடுகின்ற -கயலொடு வாளை விரவி -நாச் திரு -3-5-
ஆந்தராளர் குடியிலே பிறந்து ஈஸ்வரன் மர்மஜ்ஞையாய் இருப்பாள் ஒருத்தி வார்த்தை
ஒரு நீர்ப் புழு நலியப் பொறுக்க மாட்டாதவன் –
இரண்டு கிடாய் காலைப் பற்றி நலிகிறது என்கிறாள் –

————————————————————————–

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

வியாக்யானம் -1-
உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோகவிதாம் நேதா -என்கிறபடியே –

முத்தீ –
மூன்று பிள்ளை பெறுவாரைப் போலே –
கார்ஹாபத்ய ஆஹவ நீய -தஷிண அக்னிகளையும் –

நான்மறை –
ருக் யஜூஸ் சாம அதர்வணங்களையும் யுடையராய் –

ஐவகை வேள்வி-
தேவ யஜ்ந -பித்ரு யஜ்ஞோ -பூத யஜ்ஞோ-மனுஷ்ய யஜ்ஞோ-ப்ரஹ்ம யஜ்ஞ–என்னும்
பஞ்ச மகா யஜ்ஞங்களையும்

இத்தால் கர்ம யோகம் சொல்லிற்று

அறு தொழில் -யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற
ஷட் கர்மங்களை யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணராலே ஆஸ்ரயிக்கப் படும் ஸ்வபாவத்தை யுடையையாய் –

———————————–

வியாக்யானம் -2-
வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல்வழி போகக் கடவதாய் இருக்கும் ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

முத்தீ-
மூன்று பிள்ளையைப் பெற்ற தாயைப் போலே
ஆஹவ நீய கார்ஹ பத்ய தஷிணாக்னி என்கிற அக்னி த்ரயமும்

நான்மறை –
நாலுவகைப் பட்ட வேதங்களும்

ஐவகை வேள்வி-பஞ்ச மகா யஜ்ஞமும்

அறு தொழில்-
அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால்
போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று

————————————————————————–

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

வியாக்யானம் -1-
கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி

நான்குடன் அடக்கி-
மநோ
புத்தி
சித்த
அஹங்காரங்களையும்-செறுத்து

ஆஹார
நித்ரா
பயம்
ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –

முக்குணத்து இரண்டவை அகற்றி-
குணத் த்ரயங்களில் ரஜஸ் தமஸ் ஸூக்களை த்யஜித்து

ஒன்றினில் ஒன்றி நின்று-சத்வம் ஒன்றினிலே பொருந்தி நின்று –

ஆங்கு-
அந்த யோகத்திலே

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
புண்ய பாப ரூபமான கர்மங்களாலே வரும் சம்சாரத்தை அறுக்கும்-
உபாசகராலே அறியப்படும் ஸ்வ பாவத்தை யுடையையாய்

இப்படி இருந்த யோகத்தாலே அனுபவிக்கை யாவது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானுடைய மிடுக்குள்ள தசையோடு ஒக்கும் அத்தனை
ஆன பின்பு அவனையே உபாயமாகப் பற்றிப் பிழைக்க வேணும் –

————————————————————————–

வியாக்யானம் -2-
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே போகாத படி நியமித்து-

நான்குடன் அடக்கி-
நித்ய அநித்திய வஸ்து விவேகம் –
சமதமதாதி சாதனா சம்பத்து –
இஹாமுத்ர பலபோக விராகம்
முமுஷூத்வம் -என்றால் போலே-சொல்லுகிற சாதன சதுஷ்டத்தையும் யுடையராய்

அன்றிக்கே
ஆஹாராதிகளைத் தவிர்த்து என்றுமாம் –

முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில்-ஒன்றி நின்று-
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களில் வைத்துக் கொண்டு ரஜஸ் தமஸ் ஸூக்களை கழித்து
நிஷ்க்ருஷ்ட சத்வத்தை யுடையராய்க் கொண்டு நின்று

ஆங்கு-
அந்த யோகத்தாலே –

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –
புண்ய பாப ரூப கர்மங்கள் அடியான சம்சாரிக துக்கத்தை-அறுத்துக் கொள்ள வேணும் என்று இருப்பார்
அறியும் ஸ்வ பாவத்தை யுடையனாய் இருக்கும் –

சாதநாந்தர பரிக்ரஹம் பண்ணினார் உன்னைப் பெற்றுப் போகா நிற்க –
உன்னையே சாதனமாக பரிக்ரஹித்த நான்
உன்னைப் பெறாதே போவதே –

————————————————————————–

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

வியாக்யானம் -1-
தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

முக்கண் நால் தோள் –
மூன்று கண்களையும் -நான்கு தோள்களையும் யுடையவன் ஆகையாலே -பஹூ பரிகரனாய்

ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் –
ஐந்து வாயை யுடைய பாம்பையும் கங்கையையும்
ஏக தேசத்திலே அடக்கின ஜடையை யுடையவன் ஆகையாலே-அதிக சக்தனாய் இருந்துள்ள ருத்ரனும்

அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
இப்பிடார் கொண்டு அறிய ஒண்ணாத
ஸ்வ பாவமாக இருக்கிற பெருமையை யுடையையாய் நின்றாய்

ஆகையாலே பெரிய கிழாயான ருத்ராதிகள் நிலை இதுவானால்
ஷூத்ரரான எங்களுக்கு பெற விரகு யுண்டோ-
நீயே விஷயீ கரிக்கும் அத்தனை என்று கருத்து-

————————————————————————–

வியாக்யானம் -2-
அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
லலாட நேத்ரனாய் -சர்வேஸ்வரன் நாலு தோளும் தானுமாய் இருந்தான் என்று –
தானும் நாலு தோளும் யுடையவனாய்
ஐந்து வாயை யுடைய அரவை யுடையவனாய்
கங்கையை அடக்கின ஜடையை யுடையவனான ருத்ரன்
தன் உயர்த்தி எல்லாம் கொண்டு அறியப் பார்த்தாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவம் ஆகிற-
பெருமையை யுடையையாய் நின்றாய் –

கிழாயர் படுகிறது -இதுவானால்
நான் உன்னை அறிக்கை என்று ஒரு பொருள் யுண்டோ-

————————————————————————–

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –

மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –

இத்தால்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –

———————————————————–

வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை
மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில்
ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –

சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –

————————————————————————–

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

வியாக்யானம் -1-
மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்

என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

——————————————————

வியாக்யானம் -2-
சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

————————————————————————–

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

வியாக்யானம் -1-
தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சுடர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை-
மிகவும் விளங்கா நின்றுள்ள பஞ்சாயுதங்களையும்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் இருந்துள்ள திருக் கைகளினுள்ளே
ஆபரணம் போலே அமரும்படி தரித்தாய்

சுந்தர நால் தோள்-
அழகை வகுத்தால் போலே நாலு தோள்களையும் யுடையையாய்

முந்நீர் வண்ண-
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே

——————————————————————-

வியாக்யானம் -2-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை-

மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

சுந்தர நால் தோள்-
தனக்குத் தானே அழகை விளைப்பதான நாலு திருத் தோள்களை யுடையையாய்

முந்நீர் வண்ண–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே –

————————————————————————–

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

வியாக்யானம் -1-
தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
அநந்ய போக ரசராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்-
கல்மஷம் கழற்றின பூர்ண சந்தரனைப் போலே
தாம்தாம் போகத்தை கொட சொல்லா நின்ற திரு முகத்தை யுடையவராய் –

மங்கையர்-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்றும்
யுவதிச்ச குமாரிணீம் என்றும்-தங்கள் பருவத்தாலே பிச்சேற்ற வல்ல பிராட்டிமார் இருவரும்

மலரன அங்கையின்-
புஷ்பத்தை த்ருஷ்டாந்திக்க ஒண்ணாத மென்மையை யுடையையான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட –
சர்வகாலமும் வருட

அறிதுயில்-
ஆஸ்ரீ த சம்ரஷண பிரகாரத்தை அனுசந்திக்கை

அமர்ந்தனை –
வீசு வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாது –

—————————————————————-

வியாக்யானம் -2-

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
தேவரீர் திருவடிகளிலே ஒருமைப் பட்ட நெஞ்சை யுடையவராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் –
சந்தரனைப் போலே தர்ச நீயமாய் குளிர்ந்த திரு முகத்தை யுடைத்தாய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –

மலரன அங்கையின் –
பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –
திருவடிகளை வருட –
ஜகத் ரஷண ரூபமான யோக நித்ரையிலே ஒருப்பட்டு இருந்தாய்-

எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————————————————————————–

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

வியாக்யானம் -1-
முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

நெறி முறை-
சாஸ்திர மரியாதை தப்பாத படி

நால் வகை வருணமும் ஆயினை-
சாதுர் வர்ண்யமும் நீ இட்ட வழக்கு –
ஆத்மாக்களுக்கு வர்ணங்களைக் கொடுத்ததும்
அவர்களுடைய அனுஷ்டானத்துக்கு ஆராத்யனாய் இருப்பானும் அவன் இறே

அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா-ஸ்ரீ கீதை -9-24- என்றும்
வர்ணாஸ்ரம ஆசாரவத புருஷேண பர –புமான் விஷ்ணுர் ஆராத்யே பந்தா
நான்யச் தத் தோஷகாரகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டும் -ஸ்ரீ கீதை -4-13-என்றும் -சொல்லக் கடவது இறே –

(அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே–ஸ்ரீ கீதை -9-24

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும்,
போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர்,
அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்;
என்னை மனிதர் உள்ளபடி அறியார்;
ஆதலால் நழுவி வீழ்வார்)

(சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்–ஸ்ரீ கீதை -4-13

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.)

மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
ஆத்மாக்களுடைய தேக ஆரம்பங்களான மகா பூதங்களும் நீயே

மேதகு-
மேவித்தக்கு இருக்கும்

மேவுகை யாவது
தேவ அஹம் மனுஷ்ய அஹம் என்கிறபடியே பொருந்தி இருக்கை
அதாவது
யாதேனும் ஒரு ஆக்கையிலே புக்கு –திருவிருத்தம் -95-அங்கே தக்கிருக்கை –
அதாவது
கர்மத்துக்கு அனுகூலமாய் இருக்கை

இத்தால்
சத்தாதிகள் நீ இட்ட வழக்கான பின்பு
உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ என்கை –

————————————————————–

வியாக்யானம் -2-
சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

————————————————————————–

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம்-
வண்டுகள் தேனைப் பருகி முரலா நின்றுள்ள திருக் குழலை யுடையவள் ஆகையாலே-
போக்ய பூதையான நப்பின்னை பிராட்டியின் பொருட்டு

ஏழ் விடை யடங்கச் செற்றனை –
ஏழு எருத்தையும் ஊனப் படாத படி நெரித்தாய் –

இத்தால்-
நப்பின்னை பிராட்டி யுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதிகளைப் போக்கினால் போலே-
என்னுடைய விரோதிகளையும் போக்கித் தந்து அருள வேணும் -என்று கருத்து –

————————————————————————–

வியாக்யானம் -2-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை-

ஆறு காலை யுடைத்தாய்-
மது பான அர்த்தமாக படிந்த வண்டுகள் மது பானமத்தாய்க் கொண்டு
ஆளத்தி வையா-மயிர் முடியை யுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு
பிரதி பந்தகமான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்தாய்

என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

————————————————————————–

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

வியாக்யானம் -1-
அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

————————————————————————–

வியாக்யானம் -2-
ஆறு வகைப் பட்ட பாஹ்ய சமயங்களால் அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையே இருந்தாய் –
சார்வாகர் -பௌத்தர்-சமணர் -நையாயிக வைசேஷிகர் -சாஙக்யர் பாசுபதர் –

————————————————————————–

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

வியாக்யானம் -1-
ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

——————————————————————

வியாக்யானம் -2-
அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –
சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————————————————————————–

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-

வியாக்யானம் -1-
தர்மார்த்த சகல புருஷார்த்த பிரதனுமாய் –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனாய் –
ஸூக துக்கங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகனாய்
சர்வமும் ஸ்வ பிரகாரமாக இருக்கச் செய்தே -அவற்றோடு ஓட்டற்று நின்றாய்

இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

————————————————————————–

வியாக்யானம் -2-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்

சுக துக்கங்களுக்கு நியாமகனாய்

காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்

சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

————————————————————————–

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–

வியாக்யானம் -1-
குன்றாமது மலர் -என்று மேலுக்கு
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றா மது மலர்ச் சோலை-
குன்றாத மது வெள்ளத்தை யுடைத்தான பூஞ்சோலை –
ஆராவமுத ஆழ்வாருடைய கடாஷம் ஆகிற அமுத வெள்ளத்தாலே வளருகிற
சோலை யாகையாலே நித்ய வசந்தமாகச் செல்லுகிறது –

வண் கொடிப் படப்பை-
அழகிய கொடிக்கால்களையும் நீர் நிலத்தையும் யுடைய

வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த –
பெருகி வாரா நின்ற
திருப் பொன்னி மஹார்க்கமான ரத்னங்களைக் கொழித்து ஏற வருகிற

இத்தால்
விளைகிற சென்நெல்லையும் யுடைத்தாயாகையாலே அழகிய கழனியையும் யுடைத்தாய்
விளங்கா நின்ற அழகிய வனங்களாலும் சூழப் பெற்ற

கற்போர் புரிசை –
வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி

கனக மாளிகை-
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகை

நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்-
அதில் நிமிரா நின்றுள்ள கொடிகள் சந்த்ரனைச் சென்று துவக்கும் –

செல்வம் மல்கு தென் திருக் குடந்தை-
நிரதிசயமான சம்பத்தையும் போக்யதையும் யுடைய திருக் குடந்தையிலே

அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க-
அநந்ய பிரயோஜனரான பிராமணர் ரஹச்யமான ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க

ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிக்கப் பட்ட
பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில்
ஜகத் ரஷணத்துக்காக உணர்ந்து கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே சர்வேஸ்வரன் ஆனவனே

ஆடரவு-
திரு வநந்த வாழ்வான் உடைய உஸ்வாச நிஸ்வாசங்களாலே
தூங்கு தொட்டிலைப் போலே என்னவுமாம் –

————————————————

வியாக்யானம் -2-
குன்றாத மதுவையும் மலரையும் யுடைத்தான சோலையையும் யுடைத்தாய்
அழகிய கொடிகளை யுடைத்தான தோட்டங்களையும் யுடைத்தாய்
மாறாத ஜல சம்ருத்தியையும் யுடைத்தான பொன்னி பாய்ந்து ரத்னங்களைக் கொழித்து ஏறிடா நிற்பதாய்
அழகிய சென்நெல்லையும் யுடைத்தான கழனிகளை யுடைத்தாய்
திகழா நின்றுள்ள வனத்தை சுற்றிலே யுடைத்தாய் –
தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிளையும் யுடைத்தாய்
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகைகளிலே நட்ட கொடிகளானவை ஆகாசத்தில்
சஞ்சரிக்கிற சந்த்ரனை துவக்கினாலும் சுற்றிடா நிற்பதாய்
நிரவதிக சம்பத்தையும் போக்யதையும் யுடைத்தான திருக் குடந்தையிலே
பிராமணர் வேத ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க
உன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற
படுக்கையிலே ஜகத் ரஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனே —

————————————————————————–

நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

வியாக்யானம் -1-
உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –
இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

————————————————————————–

வியாக்யானம் -2-
என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-