Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-இரண்டாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

June 15, 2019

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே –வேங்கடம் மேவி மாண் குறளான
வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-பிரவேசம் –

அடைந்தேன்-என்றும்
அடியேனை ஆட் கொண்டு அருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் -விடேன் என்றும்
கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே வந்து சரணம் புக்கு
இக்கைங்கர்யம் தான் நித்யமாக செல்ல வேண்டும் என்னும்படி-அதிலே ப்ரேமம் பிறந்ததாய் -நின்றது
நமக்கு இப்படி இந்த சமாதி தான் பிறக்கைக்கு அடி என் -என்று ஆராய்ந்து -பார்த்தார்
உபகார ஸ்ம்ருதிக்காக –அத்தை ஆராய்ந்தவாறே –
மந ஏவ -என்கிறபடியே
நாட்டார் பாஹ்யராயும் -குத்ருஷ்டிகளாயும் அனர்த்தப் பட்டு போரா நிற்க
நமக்கு கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகையும்
அது தான் அவிச்சின்னமாக செல்ல வேணும் என்னும் படியான ருசி பிறக்கையும்
இஸ் சம்ருதிக்கு அடி இந் நெஞ்சு இறே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து
உன்னாலே இஸ் சம்ருத்தி எல்லாம் உண்டாயிற்று என்று திரு உள்ளத்தோடே கூடி இனியர் ஆகிறார் –

————————-

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்—வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-பிரவேசம்-

ஆஸ்ரித விஷயத்தில் -பிராட்டி திறத்தில் பண்ணும் ஓர் ஆதரத்தைப் பண்ணும் ஸ்வ பாவனாய் –
அவர்கள் காலாலே காட்டுமத்தை -தலையாலே செய்வானாய் –அகடிதங்களை கடிப்பிக்க வல்லனுமாய் –
ப்ரஹ்மாதிகளுக்கு அவிஷயமாம் படி பெரியவனுமாய் –சர்வ பூத ஸூ க்ருத்துமாய் –சர்வ விஸஜாதீயனுமான
ஸ்ரீ சர்வேஸ்வரன்
தனக்கு ஆஸ்ரிதர் பக்கல் உண்டான இனிமையாலே
அவர்கள் சரீரம் சம்பந்தம் அற்று பரம பத்தில் போனால் செய்யும் அடிமையை –
இண்டை யாயின கொண்டு தமக்கு ஏத்தலாம் படி ஸ்ரீ திரு வெவ்வுள்ளிலே வந்து சாய்ந்து அருளின படியை
அனுசந்தித்து இனியர் ஆகிறார்-

—————————-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை–
திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-பிரவேசம்

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் – இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –
இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே
ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும் என்று இடர் பட –
அவ் விடர் தீர்க்கைக்காக-அது இடர் பட்ட மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து
அத்தை ஆற்றி-இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று சாய்ந்து அருளினான் உண்டே -என்கிறார் –

———————-

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு
உறையுமிடமாவது நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-பிரவேசம்

ஸ்ரீ பிராட்டிமாரோடே கூட வந்து-விரோதி நிரசன சீலனாய்-பிரபல விரோதியான பாபங்களை
அநாயேசேந போக்க வல்லவனாய்-சர்வ ஸ்வாமியான-ஸ்ரீ சர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்கள் எங்கும்-பண்ணும் விருப்பத்தை
ஸ்ரீ திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனானான் –
அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு அநர்த்தப் பட்டுப் போகாதே
அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய் போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-

——————–

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணை —-கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-பிரவேசம்-

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித வத்சலனாய் –ஆஸ்ரித சுலபனாய் –
ஸ்வ ப்ராப்திக்கு உபாயமும் தானேயாய் –இருக்கிற சர்வேஸ்வரனை
திருக் கடல் மல்லையிலே நான் அகப்படக் காணப் பெற்றேன் –
அவன் அரியன் என்று கை வாங்காதே
அவனை ஒழிந்தது அடங்கலும் படு குழி -அவற்றில் புக்கு
அனர்த்தப் பட்டு போகாதே
அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போக பாருங்கோள் என்கிறார்-

——————————————————

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1–பிரவேசம்-

அஹம் அச்ம்ய அபராதா நாம் -என்றும்
சாதே தேச்மின் பிரத்யுஜ்யதாம் – என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று
அது தன்னை
வானிலா முறுவலிலும்-தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –
அது தன்னை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்
தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்-அது தன்னை அனுபாஷித்தார் –
ஆனுகூலச்ய சங்கல்ப-பிரதிகூலச்ய வர்ஜனம் -என்று-அவனுக்கு சம்பாவிதமாய்
அநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –

அவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் -கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
அவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை
பரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்
இதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –
ஆகையால் இது லஷணமாய்
இது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –

பசுர் மனுஷ்ய பஷீ ரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
என்று பாகவத சமாஸ்ரயணத்தை
ஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்
பகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-

மிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே
இவை தான் பின்னை இரண்டோ –
பாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்
அவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –
பாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு
இந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –
பாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-

மாறாய -இத்யாதி –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –
இத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே
பகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் ஸ்ரீ பெரியாழ்வார் போல்வார் –

மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் போல்வார் –
இனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது
உகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –
அபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –

ஆனுகூலச்ய சங்கல்ப -என்கிறது
ஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-
பராதி கூலச்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே-ஆனுகூல்யம் பிற்பட்டது இறே –
அந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –
இது தான் உண்டாகவே அமையும் இறே –
சம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –
தானே ஏறிட்டுக் கொண்டத்தை தவிரும் இத்தனை வேண்டுவது –

————————

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-பிரவேசம்

ததீய சேஷத்வ பர்யந்தமாக பகவத் அனுபவம் பண்ணுகையாலே
தம்முடைய அனந்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்தாராய் நின்றார் கீழ் –
அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றார் இறே-
தம்முடைய சேஷத்வத்துக்கு எதிர் தலையான அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்த இடத்தில்
அது தமக்கு ரசித்து இருக்கும் படியாலே அவனை அனுசந்திபதாகப் பாரித்தார் –
அப்போதே நினைத்தபடி அனுபவிக்கப் பெற்றிலர் –
அவ் விழவாலே தாமான தன்மை போய்-பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய்-அந்நிலை தானும் போய் குலைந்தது
அதாவது தன் ஆற்றாமையை தானே வாய் விட்டு ஆற்றுகை அன்றிக்கே-பிறர் வாயாலே சொல்லுகை இறே –

ஆக நாயகனோடு நினைத்த படிகளை பரிமாறாமையாலே
நம்முடைய ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருவாய்மொழி படியாலே
ஸ்த்திதி கமன சயநாதிகளிலே ஒரு நிலை இன்றிக்கே
அர்த்தியாய் நோவு படுகிற பெண் பிள்ளை உடைய தசையை அனுசந்தித்த திருத் தாயார்
இவளுக்கு உண்டான செல்லாமையையும் –
அவன் இவ்வளவில் வந்து முகம் காட்டாதே இருக்கிற இருப்பையும் –
இவளுடைய தசைக்கு தன்னால் ஒரு பரிஹாரம் இன்றிக்கே இருக்கிற படியையும்-
அவனை இட்டே பரிஹரித்துக் கொள்ள வேண்டும் படியாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
இதுக்கு நேரே நிதான பூதரராய் இருக்கிற அவர் இருக்க வழியே போவாரோ பாதியான நமக்கு இது தெரியுமோ –
ஆனபின்பு அவர் தம்மையே இதுக்கொரு போக்கடி கேட்போம் என்று அத்யவசித்து

ஸ்ரீ திருவிட வெந்தை நாயனார் -திருவடிகளிலே இவளைக் கொடு போய் பொகட்டு
எங்களை காற்கடைக் கொண்டு
உம்முடைய சௌந்தர்ய சீலாதிகளிலே துவக்குண்ட இவள் உம்மை நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே –
மிகவும் நோவு படா நின்றாள் –
நீர் இவளுடைய திறத்து செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற திருத் தாயார் பாசுரத்தாலே
தமக்குப் பிறந்த தசையை பேசுகிறார் ஆயிற்று –

————————-

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-பிரவேசம் –

ஹ்ரீரேஷா ஹி மம துலா -என்னவும் மாட்டாதே நிற்கிற இடம் இறே இவ்விடம்
அவன் அப்படி இரானாகில் ஆஸ்ரயணீயன் ஆக மாட்டான் –
தான் யுக்த அயுக்தங்கள் அறியாதே –நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்க் கொண்டு
மோஹித்துக் கொண்டு கிடந்த தசையை அனுசந்தித்த திருத்தாயார்
அவன் படிகளை சொல்லிக் கூப்பிடக் கேட்டும் -தான் வாய் வெருவியும் அவ்வழி யாலே அல்பம் தெளிவு பிறந்தது –
அவன் குணங்களை நெஞ்சிலே ஊற்றிருந்தது அறிவு கலங்கும் ஆபத்திலே வந்து உதவும் ஸ்வபாவன் என்று
அவன் படிகளை அனுசந்தித்து ஆச்வஸ்தையாய் பின்பு
ஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை அனுசந்தித்து அவரையே பாவித்து அந்த பாவன பிரகர்ஷத்தாலே
ப்ரத்யஷ சாமானகாரமாய் உருவு வெளிப்பாடு போலேயாய்
அவனுக்கு சில வார்த்தைகள் தான் சொல்லுகிறாள் ஆகவும் –
அவர் அதுக்கு சில மறு மாற்றங்கள் சொல்லுகிறார் ஆகவும் –
சிலவற்றைச் சொல்ல இதைக் கேட்ட பந்து வர்க்கம் எல்லாம-நீ பிரமித்தாயோ -சொல்லுகிறது என் எனபது -என்ன
ஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை நான் இங்கனே சில வார்த்தைகளைக் கேட்டேன் –
அவர் எனக்கு சில மறு மாற்றங்கள் அருளிச் செய்தார் என்று
அவ் வார்த்தையை தாய்மார் தோழி மார்களுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது-

———————

சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1- –ப்ரேவேசம் –

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடி மாலை என்று தொண்டைமான் சக்கரவர்த்தி
ஸ்ரீ திரு அட்டபுயகரத்திலே அனுகூலித்த படியை அனுசந்தித்தார் –
அந்த பிரசங்கத்தாலே பல்லவன் என்பான் ஒருத்தன் ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரத்திலே அதிமாத்ரமான
ஆனு கூல்யங்களைப் பண்ணி ஒரோ ஒன்றை எடுத்தது ஆயிரமாம் படி பண்ணினான் ஆயிற்று
பின்பு சோழன் கண்டு அது தான் பொறுக்க மாட்டாமையாலே அவை தன்னை அமைத்த வித்தனை –
இனித் தான் பகவத் விஷயத்தில் ஓரடி வர நின்றார் தமக்கு உத்தேச்யராக இறே நினைத்து இருப்பது –
அத்தாலே அவன் படிகள் எல்லாம் தமக்கு இனிதாய் இருக்கையாலே அவற்றை அனுபவித்துப் பேசுகிறார் –

———————–

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1- பிரவேசம் –

யுத்தே சாப்ய பலாய நம் -என்றும்
ஈஸ்வரபாச-என்றும்-சொல்லும்படி யானவனும் கூட ஆஸ்ரயித்த படியை அனுசந்தித்தார்
ஸ்வ வர்ணத்துக்கும் ஸ்வ ஆஸ்ரமத்துக்கும் உசிதமான கர்மங்களை பாலாபி ஸந்தி ரஹீதமாக
பகவத் சமாராதன புத்யா அனுஷ்டித்து
சமதமாத்யு பேதராய் இருக்கிற ப்ரஹ்மா போல்வாருக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு
பிராட்டிமாரும் தானுமாக ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து நின்றான்-
அவை ஒன்றும் இல்லாத நான் அவனை அங்கே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

—————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-இரண்டாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

June 15, 2019

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க
ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –
அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே

————————–

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற
நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு
அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-

————————–

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –
அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே
ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –
தந லுப்தன் ஒரு காசு விழுந்த இடத்தில் கை எல்லாம் புழுதியாக தேடும் இறே

———————

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய்
இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-

————————–

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-5-

பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன
விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் –
அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே – அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய
வ்ருத்தியிலே அன்வயித்தாயோ

—————-

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –
அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-

——————-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-

ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –

———————

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொறி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு-இன வாயர் தலைவன் -என்னக் கடவது இறே
இன்று அடிமைத் தொழில் பூண்டாயே-வரையாதே ரஷகன் ஆனவனுக்கு அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-

——————

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-9-

பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் –
ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –
நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-

——————

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும்
பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-

———————-

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்
நாசமாக நம்ப வல்ல நம்பெருமான்
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று
ஏச நின்ற வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-

பையலுடைய ஊரானது -ஸ்மசாந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி
அப்படி செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான வீர ஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –
ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமையை உடையனாய் –அவர்கள் உடைய வெண்ணெயைக் களவு கண்டு
அமுது செய்து அவர்கள் அத்தைச் சொல்லி ஏசும்படி நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –
அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச –
இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-

————————-

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2-

திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –
ஸ்ரீ பட்டரோ பாதியும் போருமாயிற்று இவருக்கு அவ் வவதாரத்தில் பஷ பாதம் –
ஸ்ரீ சிறியாத்தான் -ஸ்ரீ பட்டர் -ராமாவாதாரத்தில் பஷ பதித்து இருப்பவர் என்று அருளிச் செய்யும் வார்த்தையை கேட்கைக்காக –
ஸ்ரீ பெருமாளுக்கு எல்லா ஏற்றமும் உண்டாகிலும்
ஆஸ்ரித அர்த்தமாக கழுத்திலே ஓலை கட்டித் தூது போன இவ்வேற்றம் இல்லையே -என்ன
-அவர் போகாமை அல்ல -பிறப்பில் குற்றமே -காணும் -என்று அருளிச் செய்தார் –
இஷ்வாகு வம்ச்யர் கழுத்திலே ஓலை கட்டித் தூது போக விடுவாரைக் கிடையாதே –
அவ் வவதாரத்திலே ஸ்ரீ திருவடி அங்கே போவது இங்கே வருவதாய்க் கொண்டு வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு
நாமும் இப்படி ஆஸ்ரிதர்க்காக தூது போக பெற்றிலோம் -என்று செவி சீ பாய்ந்தது – அதுக்காக விறே பின்னை வந்து அவதரித்து
ஆஸ்ரிதர்க்காக தூது போயிற்று –
ஷத்ரியன் என்று நிஸ்சயிக்கில் தூது போக விடுவார் இல்லை என்று அத்தை மறைத்து இறே -வளர்ந்தது
அபிஷித்த ஷத்ரிய வம்சத்தில் பிறக்கில் தூது போக விடுவாரைக் கிடையாதே —
அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார்-

————————

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-

ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே –
இது-புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று-
பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம்
என்று சாய்ந்தான் ஆயிற்று –

———————-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-4-

திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸ்ரீ வைகுண்டத்தில்
இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று –
சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட
வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –

——————-

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டாலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே—2-2-5-

பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று
கண் வளர்ந்து அருளுகிறான்-எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –

———————–

சோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர் தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-6-

அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –
இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும்
ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை
நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன்
இங்கே சாய்ந்தான் -என்றபடி

———————

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7-

திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி
நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-

———————

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—–2-2-8-

இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –
எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –-எவ்வுள் கிடந்தானே

———————-

பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாயமைந்த
இந்த்ரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-9-

நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –
அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி
மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-

———————-

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-

இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி
அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் –
அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —

—————————-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-

விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே
காணப் பெற்றேன் என்கிறார்-

—————

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே–2-3-2-

வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை –
ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

————————

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் –

——————-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

அந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –
அப்படியே
சந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன்..

———————-

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன்
ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –
எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-

——————–

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை –
சொல்லுகிறது-த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

—————-

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
இலக்குமனோடு மைதிலியும் -தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி-
கண்டு அனுபவித்தார்களோடு – கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—

———————-

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-

வாயில் ஓர் ஆயிர நாமம் – அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும் பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –
நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்-ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம்-ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –

—————-

மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

——————

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

—————–

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்- ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே -நடந்தான் –
இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை-

—————–

காண்டா வனமென்பதோர் காடு அமரர்க்கரையனது கண்டவன் நிற்க முனே
மூண்டாரழலுண்ண முநிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணனவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய்
நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி ––அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில்
வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான்
வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து
திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்-

——————-

அல மன்னு மடல் சுரி சங்க மெடுத்து அடலாழியி னாலணி யாருருவில்
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாளடுவாளமரில்
பல மன்னர் படச் சுடராழி யினைப் பகலோன் மறையப் பணி கொண்டணிசேர்
நிலா மன்னனுமாயுலகாண்டவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-3-

நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு-ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்
அன்றிக்கே பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-

———————–

தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-4-

தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே-
அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய
ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்-

———————

மாலுங்கடலார மலைக் குவடிட்டணை கட்டி வரம்புருவ மதி சேர்
கோல மதிளாய விலங்கை கெடப் படை தொட்டொரு கால மரி லதிர
காலமிது வென்றயன் வாளி யினால் கதிர் நீண்முடி பத்தும் அறுத்தமரும்
நீல முகில் வண்ணம் எமக்கிறைவர்க்கிடம் மா மலையாவது நீர் மலையே—-2-4-5-

ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி –
நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –

———————–

பாராருலகும் பனி மால் வரையும் கடலும் சுடருமிவை யுண்டும் எனக்
காரா தென் நின்றவன் எம்பெருமான் அலை நீருலகுக்கரசாகிய அப்
பேரானை முனிந்த முனிக் கரையன் பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்
நீரார் பேரான் நெடு மாலவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே –2-4-6-

ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய் அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது
சேஷித்வமாய் ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே
ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் –

———————–

புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகராயின பாழ்பட நாமம் எறிந்தது வன்றியும் வென்றி கொள் வாள்அவுணன்
பகராத வனாயிர நாமம் அடிப்பணி யாதவனைப் பணியால் அமரில்
நிகராய வன்னெஞ்சு இடந்தானவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –2-4-7-

நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய
வார்த்தையாலே முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் –
இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று

—————–

பிச்சச்சிறு பீலி பிடித்துலகில் பிணந்தின் மடவாரவர் போல் அங்ஙனே
அச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத் தணி மா மலர் தூய்
நச்சிந மனாரடையாமை நமக்கருள் செய்யென வுள் குழைந்தார்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கிடம் மா மலையாவது நீர் மலையே -2-4-8-

எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு
நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே

————–

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9-

திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் –
அவ்வரியத்தையும் செய்யும்-துர் வ்யாதிரி வந ஸ் யதி-என்கிறபடியே –
இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் –

—————————-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-

ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் –
அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் –
அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் சந்தரனைப் போலே இருக்கிற
வெண் கொற்றக் குடைக் கீழே இருந்து ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்

———————-

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-

சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை
கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை
இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே
நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார்

—————-

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்
பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-

எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை –காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே
நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-

———————

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-

ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-

——————

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-

ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –
எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-
தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை –
அவனை ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-

—————————

பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப்
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப
மேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று
அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-

நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-
அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை-காணப் பெற்றேன் என்கிறார் –

—————————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –
உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே
காணப் பெற்றேன் -என்கிறார் –

———————-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-

அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும்
காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் –
சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே
விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-

——————

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

சர்வேஸ்வரன் ஆகிறான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுப்பன் ஒருவன் என்று
கொண்டு அவனுடைய நீர்மையை சொல்லுகைகாக –அல்லாதார்க்கு உத்கர்ஷத்தை சொல்லா நிற்கும் பிரமாணங்கள்
அவர்கள் தாங்களும் புழுக் குறித்த எழுத்துமா போலே –சிலவற்றைத் தோற்றச் செய்யும் –
அவற்றைக் கண்டு இவர்கள் பக்கலிலேயும் குவால் உண்டு -என்று நாட்டார் பிரமிக்கைக்கு உடலாய் இருக்கும் –
ஆக பிரமாண கதி இருந்தபடியாலும்-சேதனர் மந்த மதிகளாய் இருந்தபடியாலும்
இவற்றின் தாத்பர்யம் அறியாதே-சம்சார சாகரம் -என்று சொல்லுகிற கடலிலே புக்குப் போம் இத்தனை இறே –
அவற்றை அனுசந்தித்துச் சொன்ன இவ் வாழ்வார்கள் ஈரச் சொல் இன்றாகில் – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார்-
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –
இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன்
படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று
உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –
விலஷண சரீரத்தைப் பரிக்ரகித்து-ஒரு தேச விசேஷத்தே போய் காண்கை யாகிறது
ஆரேனும் பசிக்க ஆரேனும் ஜீவித்தாப் போலே இருப்பது ஓன்று இறே
காண வேணும் என்று உறாவின கண்களோடு காணப் பெற்றேன்-

————————–

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை –
அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் –

—————–

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை
பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை தல சயனத்துத்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான்
வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10-

சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் – அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம்

———————-

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-

பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்-
கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது
அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று –
நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –
இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –
இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-
கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற
அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .

———————

பார்வண்ண மட மங்கை பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-

முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை
கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –
அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –

————————–

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –
அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –

———————-

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-

அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து
கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-

——————-

பிச்சச் சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நச்சித் தொழுவாரை நச்சென்றன்நன்னெஞ்சே–2-6-5-

குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி-என்கிறார்-

———————

புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கைம்மா களிற்றினமும்
நலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து
கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
வலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் –
நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –

——————–

பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-

அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே
தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு
என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –

———————

செழு நீர் மலர்க்கமலம் திரை யுந்து வன் பகட்டால்
உழு நீர் வயலுழ வருழப்பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல் மல்லைத் தல சயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே –2-6-8-

ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது –

—————————-

பிணங்களடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-

இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்-

———————-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-

ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-

——————

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

முதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி
பிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-
திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –
குவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –
அவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும்
போருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –
அவள் மார்வை ஆசைப்பட்டாள்
இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள்
அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –
அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –
ஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே
பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை

—————————

துளம்படு முறுவல் தோழியார்க் கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழியாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-

உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே
அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று –
இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –

———————–

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே -2-7-3-

நை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது
ஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது

——————————

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும் சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-

ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்

—————————–

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

——————–

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்-
நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ
என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-
அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும்
இவளுடைய வை வர்ண்யமும் அத்யாவச்யமும் செல்லாமையும் வடிவு அழகும் பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தை யில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-

———————

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –

————————

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ
யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில்
நீர் நினைத்து இருக்கிறது என்-

————————–

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-

தாய் கைவிடுதல் தான் கை விடுதல் செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி

————————

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார்
அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்-தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார்
கூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –

————————

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-

ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே
இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-
அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –
ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –
உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் –

——————

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-

வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது –
சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது –
இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார்
பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்-

——————-

செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-3-

யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய
கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை –
கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல
உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-

—————————–

மஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை
அஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-

அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து
அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது
முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே
அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார்-

————————–

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-

கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா
உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார்

————————–

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்
பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-

ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார்
பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம்
இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்
சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய்
நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-

————————–

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-

இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா
உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-

——————————

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-

வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-
சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் –
உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –

—————————-

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே
ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்
அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்
ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன்
அன்றோ நான் என்கிறார்-

————————

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார்-

——————

சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-

தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும்
விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை
பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –
பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது-
அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் –
ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார்-

———————

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு
இவன் சத்ரு வதம் பண்ணினதோடு
வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்-

———————

உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மா வுருவாய்க் கடலுள்
வரந்தரு மா மணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடு வாயிலுகச் செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே-2-9-3-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் –
கட மா களி யானை வல்லான் -என்றும்
ஆடல் மா வலவன் -என்றும்
மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –

———————–

அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரோடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரியச் செருவில் முனிந்து
பண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே-2-9-4-

சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி
முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்

————-

தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5-

நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-

———————

திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேற் படை முன் உயர்த்த
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-6-

ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் –
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார்-

————-

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கரு ஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-7-

மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்
முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு
அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-

—————

குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை
யடைத்தவன் எந்தை பிரானது இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென் மெலியில் வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த
படைத்திறல் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-8-

சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு
நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் –
அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்

——————

பிறை யுடை வாணுதல் பின்னை திறத்து ஒரு கால் செருவில் உருமின்
மறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சோந்து அழகாய கச்சி
கறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்
பறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9-

நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி .
நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம்
கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக
தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-

——————–

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார்
பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –
உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்

ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
அதாகிறது
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே-

———————

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-

ஆபத் சகன் -என்கிறது –

———————-

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்
சந்தணி மென்முலை மலராள் தரணி மங்கை தாமிருவர் அடி வருடும் தன்மையானை
வந்தனை செய்து இசை ஏழ் ஆறங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10–2-

அவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும்
ஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே
அவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற
அத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்-

————–

கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம்மே வரத்தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3-

கையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி –
ஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து
திருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-

—————–

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும்
சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்
ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய
கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-

—————

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எய்ற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத
சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-

ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்-
ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் –
சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து
இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று-

———————

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை
வெறியார்ந்த மலர்மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே
அவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள்
கருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே
அவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே-
விஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல்
பிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று
இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-

——————

இருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி இனவிடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும்சகடம் இற உதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை
கருங்கமுகு பசும்பாளை வெண் முத்து ஈன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

வில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை
அவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-

——————

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை
போரேறொன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-8-

இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்-
ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய்
வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-

———————

தூவடிவின்பார்மகள் பூ மங்கையோடு சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போலே நின்று கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு வுருவமானான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-9-

ஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி-
தனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று –
அதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி –
நாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று
தன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை –
அருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –

———————–

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும்
பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து
அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் -முதல் நூறு பாசுரங்கள்- -அர்த்தங்கள்-தொகுப்பு —

June 1, 2019

வாடினேன் வாடி-1-1-1–

அநாதி காலம் விஷய ப்ரவணனாய் -பகவத் விஷயத்தில் விமுகனாய் போந்த நான்
விஷயங்கள் தான் சவாதியாய் மீண்ட அளவிலே -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
கைக் கொண்டான் என்கிற அர்த்தத்தை -உய்வதோர் பொருளால் -என்கிறத்தாலே சொன்னார் முதல் பாட்டிலே –

காலம் அடங்க வ்யர்தமே புறம்பே போக்கினேன் என்றார் இரண்டாம் பாட்டிலே –

ரஷையே வேண்டி அதுக்கு வ்ருத்தமான துஷ் கருமங்களைப் பண்ணி
விஷய ப்ரவணனாய் -கால த்ரயம் அடங்க நிஷ் பிரயோஜனமாகப் போக்கின நான்
யோக்யனுமாய் பிராப்தனுமான சர்வேஸ்வரனையும் -அவனுக்கு வாசகமான
திரு நாமத்தையும் காணப் பெற்றேன் என்றார் மூன்றாம் பாட்டில் –

துர்மாநியாய் -சோகிக்க கடவ அல்லாத விஷயங்களுக்கு சோகித்து –
விஷய ப்ரவணனாய் -அநாத்ம குணங்களால் குறைவற்ற நான்
அமாநித்வாதி ஆத்ம குண பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன் என்றார் நாலாம் பாட்டில் –

ஆத்ம அபஹாரத்தைப் பண்ணி பஸ்யதோஹரனாய் -சர்வேஸ்வரன் ஒருவன் உளன்
என்று இருப்பார் உண்டாகில் உக்த்ய ஆபாசங்களாலே இல்லை செய்து போந்த நான்
ஆத்ம சமர்ப்பணம் பண்ணி என்றுமே இது யாத்ரையாய் போருவார் பெரும் பேற்றை
பெற்றேன் என்றார் ஐஞ்சாம் பாட்டில் –

இதுக்கு அர்த்தம் என் -இது இருந்தபடி என் -என்கிற அர்த்தத்தையும் சொல்லி
சம்சாரிகள் எல்லாம் இங்கனே கிலேசப்படா நிற்க -நான் இப்பேற்றைப் பெற்றேன்
என்றார் ஆறாம் பாட்டில் –

அல்லாதார் இழக்கிறார்கள் அவிசேஷஞ்ஞர் ஆகையாலே
என்னோடு சஜாதீயராய் -விசேஷஞ்ஞராய் -கவி பாடித் திரிகிற நீங்கள் இழவாதே
கொள்ளுங்கோள் என்றார் ஏழாம் பாட்டில் –

நீர் சொல்லுகிற அர்த்தத்துக்கு நாங்கள் தேசிகர் ஆக வல்லோமோ -என்ன
கெடுவிகாள் -நான் அன்றோ இவ் விஷயத்துக்கு நிலனாய் உங்களுக்கு கூட உபதேசிக்கிறேன் –
ஆன பின்பு பகவத் விஷயத்துக்கு ஆள் ஆகாதார் இல்லை -என்றார் எட்டாம் பாட்டில்

நீர் திரு நாமத்தைப் போர ஆதரியா நின்றீர் –
இது என்ன பலத்தை தரவற்று -என்ன
திரு நாம பலத்தைச் சொல்லுகிறார் இப் பாட்டில்-

————————

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2–

தம் இழவை பரிஹரித்த பிரசங்கத்தாலே மஹா ராஜர் இழவை பரிஹரித்த படியைப் பேசினார் முதல் பாட்டிலே –

மஹா ராஜர் இழவை பரிஹரித்த பின்பு இறே பெருமாள் தம் இழவை பரிஹரித்துக் -கொண்டது
அந்த க்ரமத்திலே ராவண வதம் பண்ணுகிற படியைப் -பேசுகிறார்-இரண்டாம் பாட்டிலே –

ஸ்ரீ பிராட்டிகாக இலங்கையை அழித்த படி சொல்லிற்று கீழில்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிகாக ரிஷபங்களை அடர்த படி சொல்லுகிறது-மூன்றாம் பாட்டிலே –

அப்பருவத்தில் பாலகனுக்கு உதவினபடி சொல்லுகிறது –நான்காம் பாட்டிலே

அவ் வவதாரங்களுக்கு அடியாக ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை அனுசந்திக்கிறார்-ஐந்தாம் பாட்டில்

அப்படி திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவன் இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்திக்கிறார் –ஆறாம் பாட்டில்

ஆறாம் பாட்டிலே அந்த ஷீராப்தி நாதனே ஹிமாவானில் அர்ச்சாவதாரமாக இருக்கிறான்
என்று அங்கு பிரணாமம் பண்ணினார்கள் என்று அருளிச் செய்து
ஏழாம் பாட்டில் அர்ச்ச்யன் ஆகையாலே அர்ச்சனை பண்ணுகிறார்கள் என்கிறார்-

சர்ப்பங்களோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற எல்லாருக்கும் ஆஸ்ரயணீயமான தேசம் ஆயிற்று
ஆன பின்பு நெஞ்சே நீயும் அத்தை ஆஸ்ரயிக்க பாராய் என்கிறார் –என்கிறார் எட்டாம் பாட்டில்

ஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து
பயப்படவும் வேண்டா-என்கிறார் ஒன்பதாம் பாட்டில்

இப் பாசுரங்களைச் சொன்னவர்களை அச் சொல் வழியே சர்வேஸ்வரன்
அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-என்கிறார் பத்தாம் பாட்டில்

———————

முற்ற மூத்து கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து–1-3-

அவன் தானும் இது பாங்கான போதே தன்னை ஆஸ்ரயிக்கலாம் படி இங்கே ஸ்ரீ பதரியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
ஆனபின்பு இது அநுகூலமான போதே அவனை ஆஸ்ரயித்து இத்தைக் கழிப்பித்துக் கொள்வோம் என்று பார்த்து
அதிலே ஒருப்படுகிறார்-முதல் பாட்டில்

இந்த கிலேசங்களை தவிர்க்கும் அளவு அன்றிக்கே-நிரதிசய ஆனந்தத்தைப் பெற்று களிக்கலாம் படியான
தேசம் ஆயிற்று –என்கிறார் இரண்டாம் பாட்டில் –

சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும்
சொல்லி –வணங்குவோம் -என்கிறார் மூன்றாம் பாட்டில்

அரியன செய்து நோக்குபவன் நித்ய வாசம் செய்யும் தேசம் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாட்டில்

என்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –என்கிறார் ஐந்தாம் பாட்டில்

எம்பெருமான் -அவ்வடிவு அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய –ஸ்ரீ வதரியை
ஆஸ்ரயிப்போம்-என்கிறார் ஆறாம் பாட்டில்

பரிஹரித்த அன்றே சாதனமுமாய் பின்னை பிராப்யனுமானவன் வர்த்திக்கிற –
வதரி வணங்குதுமே –என்கிறார் ஏழாம் பாட்டில்

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு கொடுத்து ஆதரிகைக்காக மாலை இட்டு இருக்கிற வனதான
ஸ்ரீ வதரியை வணங்குதுமே-என்கிறார் எட்டாம் பாட்டில்

ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே புக்கு அவர்களில் ஒருவராய் ஆஸ்ரயிப்போம் என்கிறார் ஒன்பதாம் பாட்டில்

ஆழ்வார் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே
சேதனாராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது என்கிறார் பத்தாம் பாட்டில்-

——————————

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க-
கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-

திவ்யமாய் -விலஷணமாய் -செவ்வியை உடைத்தான பூக்களைக் கொண்டு தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி
கங்கா தீரத்திலே ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் -ஆனான்-என்கிறார் முதல் பாட்டில்

திருவடிகள் ஸஹ்யம் ஆகையாலே-திருக் காவேரிக்கு ஸஹ்ய பர்வதம் உத்பத்தி ஸ்தானம் ஆனால் போலே
ஆகாசத்திலே யாய்ப் பழையதான கங்கையின் கரை மேல் நித்ய வாசம் செய்து அருளுகிறான் என்கிறார் இரண்டாம் பாட்டில் –

ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி
பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடும் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் –

நம் விரோதியைப் போக்கி நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும் பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-
நித்ய வாசம் செய்து அருளும் -என்கிறார் -நான்காம் பாசுரத்தில்

சிவந்த பொன்னாலே செய்யப்பட மேருவிலே விளங்கா நின்றுள்ள இடமுடைத்தான சிகரத்தில் நின்றும்
இழிந்த கங்கையின் கரை மேல் ஸ்ரீ வதரி யாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –

குளிர்ந்த மேகம் போலே இருந்துள்ள வடிவை உடையவனாய் அவ்வடிவைக் கொண்டு
என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவன் நித்யவாஸம் செய்து அருளும் திவ்ய தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

எனக்கு தன்னை தந்து அருளின –எனக்கு தந்தை-எனக்கு ஸ்வாமி-என்னை
அனன்யார்ஹன் ஆக்கினான்–என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

விச்வாமித்ரனை- ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே –
அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே
அத்தை சொல்லிற்று -எட்டாம் பாசுரத்தில்

எங்கும் ஒக்க பரந்து பெரு நீராய் அது அடைய தெளிந்து இருப்பதான கங்கையின் கரை மேல்
ஸ்ரீ வதரி யாச்சிரமத்துள்ளானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி பின்பு ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம் -நித்ய ஸூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

———————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்–சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5–

ஆஸ்ரித விரோதியைப் போக்கி பிற்பட்டாருக்கும் உதவுகைக்காக வந்து வர்த்திக்கிற ஸ்ரீ சாளக்ராமத்தை
ஆஸ்ரயிக்கப் பாராய் -நெஞ்சே -என்கிறார்-முதல் பாசுரத்தில்

ராவணனை நிரசித்தபடியைச் சொல்லிற்று முதல் பாட்டில்
அதுக்கு உறுப்பாக அவனுடைய முதல் நாள் படை எழுச்சி சொல்லுகிறது -இரண்டாம் பாட்டில் –

கண் வளர்ந்து அருளும் போதும் தன்னோடு பொருந்தாத ஆசூர வர்க்கத்துக்கு -அவர்க்கு என்றும் சலம் புரிந்து -என்கிறபடியே
சாத்ரவத்தையை உடையனாய் இருக்குமவன் ஏவம் விதன் ஆனவன் வந்து சந்நிதி பண்ணுகிற
ஜல சம்ருத்தியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற ஸ்ரீ சாளக்கிராமத்தை அடைந்து ஆஸ்ரயிக்கப் பாராய்-என்கிறார் மூன்றாம் பாட்டில் –

அதுக்கும் முன்னே உண்டான ஸ்ரீ ராம வ்ருத்தாந்த்தைச் சொல்லுகிறது –நான்காம் பாசுரத்தில்

அதுக்கு முன்னாக சூர்பணகை நிரசனத்தை அருளிச் செய்கிறார் –ஐந்தாம் பாசுரத்தில் –

அநுகூல ஸ்பர்சம் உடைய த்ரவ்யமும்-பிரதிகூல பிராணனும் ஒக்க தாரகமாக வளர்ந்தவன் அழகாலே வசீகரிக்கும் படியான
வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு சென்று லோகம் ஏழையும் அளந்து கொண்டு
லோகம் ஏழையும் அளந்து கொண்டு தாவினவன் நித்யவாஸம் செய்து அருளும் சாளக்கிராமம் அடை நெஞ்சே-ஆறாம் பாசுரத்தில்

சத்ருக்களான ஆசூர பிரகிருதிகள் அஞ்சும்படியாக யுத்தத்திலே நரசிம்ஹமாய் அத்விதீயன்-
சந்திர சூர்யாதி களுக்கு அந்தர்யாத்மாதயா புக்கு இவர்கள் தான் என்னலாம் படியாய்
ஆகாசமாய தேஜோ பதார்த்தமாய் வாயு தத்வமாய் கார்ய கோடியில் மலையாய் -கடல் சூழ்ந்த பூமி
அசாதாராண திவ்ய விக்ரஹ உக்தனாய் இருக்கிறவன் நித்யவாஸம் செய்து அருளும் சாளக்கிராமம் அடை நெஞ்சே-ஏழாம் பாசுரத்தில்

ஈஸ்வர அபிமாநியாய்-தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில் கையும் ஒடுமாய் திரிந்த
துர் மாநியானவனுடைய சாப மோசத்தை பண்ணினவன்-சாளக்கிராமம் அடை நெஞ்சே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –

வழு விழா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் –
நித்ய சூரிகளும் – –கேவல ப்ராஹ்மணரும் –தேவரீரே எங்களுக்கு ஆஸ்ரயணீ யனாகவே எங்களுக்கு அருள வேணும்
என்று தனித்தனியே சொல்லா நின்று கொண்டு சேருகிற ஸ்ரீ சாளக்கிராமம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில் –

நித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த – ஆயிரம் திரு நாமங்களையும்
வாயாலே சொல்லப் பாருங்கோள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –

—————-

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –
இது என்னுடைய பூர்வ வ்ருத்தம் இருந்தபடி -என்கிறார் –
விஹிதங்களை அனுஷ்டித்து சம தமாதி ஆத்ம குண பேதராய் இருப்பார் இறே -இதுக்கு அதிகாரிகள் –
அதில் நான் செய்து நின்ற நிலை இது என்கிறார் –முதல் பாசுரத்தில் –

திருவடிகளிலே புக்கு சரணம் புக்கவாறே முன்பு தாம் செய்து போந்த படிகள் அடங்கலும் தோன்றிற்று
அத்தாலே போக்கினேன் பொழுதை வாளா -என்கிறார்
பகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று செல்லக் கடவ காலத்தை வ்யர்த்தமே போக்கினேன்–என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

போக்கினே பொழுதை வாளா -என்றார்
சிலவற்றை செய்து இறே போது போக்குவது செய்தபடி தான் எங்கனே என்ன அது தன்னை சொல்கிறார்-மூன்றாம் பாசுரத்தில்

அத்தனையோ -இன்னும் ஏதேனும் செய்தது உண்டோ என்ன-இன்னம் செய்ததுக்கு சொல்கிறார் –
ஏதேனும் தோற்றிற்று செய்து திரிந்தார்க்கும் வந்து பற்றலாம்படி
சரண்யனான நீ வந்து சந்நிஹிதன் ஆகையாலே திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என்கிறார் நான்காம் பாசுரத்தில்

அத்தனையோ-இன்னும் ஏதேனும் உண்டோ -என்ன திரு உள்ளத்துக்கு பொறுக்க ஒண்ணாதவையும் எல்லாம் செய்து போந்தேன் என்கிறார் –
முன்பு எல்லாம் தோன்றின படி செய்து திரிந்து அவற்றுக்கு வரும் பலத்தைக் கேட்டு பயப்பட்டு போக்கடி தேடி
புறம்பு ஒரு புகல் காணாமையாலே தேவரீர் திருவடிகளில் சரணம் புகுந்தேன் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

நமக்கு ஒரு புகல் ஏதோ என்று ஆராய்ந்து திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –
நான் நாடிக் கிட்டினேன் ஆக நினைத்து இருந்தேன்
நீ எனக்கு முன்பே நாடி-பூர்வஜனாய் திரு நைமி சாரணி யத்திலே வந்து சந்நி ஹிதனானாய்-என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்

அடியேன் என்று அஹ்ருத்யமாய்-நான் ஒரு உக்தி மாத்ரமாய் சொல்ல-அத்தை சஹ்ருதயமாக்கிநித்ய ஸூரிகளுக்கே உன்னை
அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்க கடவ நீ என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து விடாதே இருந்தாய் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

திருக் குறுங்குடியில் ஸ்ரமஹரமான வடிவைக் கொடு வந்து நீ சந்நிஹிதன் ஆகையாலே – நல்ல சந்தஸ் ஸுக்கள் ஆர்ந்துள்ள
இனிய சொற்களாகிய பல மலர்களைக் கொண்டு அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி திருவடிகளிலே விழுந்து –
அனர்த்தங்களை விளைக்கைக்கு உறுப்பான வற்றியே சொல்லிப் போந்த என் நாவாலே –ஸ்துத்யனான நீ
என்னுடைய ஸ்துதிக்கு விஷய பூதனாய் கொண்டு திரு நைமி சாரணி யத்துள் வந்து சந்நி ஹிதன் ஆனாய் -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

தம்முடைய வ்ருத்தி இருந்த படியை கீர்த்தித்தார் இறே முன்பே –
இனி நானுடைத்தவம் என்கிறது அவன் தன்னையே –
நான் பண்ணின தபச்சாலே-அவனாலாயே-அவன் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ஆசை மிகுந்து வருகிற ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
சப்த சந்தர்பத்தை அர்த்த சஹிதமாக கற்க வல்லவர்கள் –அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும் நிர்வஹித்துப்
பின்னை நித்ய ஸூரிகள் பதத்தை பெறுவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்—பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-

ஆனையினுடைய மஸ்தகத்தை கிழித்து அதினுடைய கொம்பைப் பறித்து பகவத் பக்தியாலே திருவடிகளிலே இட்டு
ஆஸ்ரயியா நிற்கும் ஆயிற்று சிம்ஹங்கள் ஆனவை பத்திமையால் அடிக்கீழ் இட்டு இறைஞ்சும் –
இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும் பகவத் பக்தி ஒருபடிப்பட்டு செல்லும் ஆயிற்று
சீற்றம் விக்ருதியாய் பகவத் பக்தி பிரக்ருதியாய் இருக்குமாயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்

ஸ்ரீ நரசிம்ஹத்தின் உடைய சீற்றத்தோடு -அங்கு உள்ளார் உடைய சீற்றத்தோடு –
அவர்கள் வ்யாபாரத்தோடு -வாசி அற்று இருக்கிறது ஆயிற்று – இவருக்கு-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்

தன்னிலே உண்டான நெருப்பாலே தேய்ந்த வேய்களும் வண்டினம் முரலும் சோலையோபாதியாக தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –
அது இது உது என்னலாவன வல்ல -என்னக் கடவது இறே –
பிறருக்கு குற்றமாய் தோற்றுமவையும் உபாதேயமாக தோற்றுகை இறே ஒரு விஷயத்தை உகக்கை யாகிறது –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

அத்தேசத்தை சென்று ப்ராபிக்க ஆசைப்படுகிறவர் தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-என்கிறார் ஆயிற்று –
ஸ்ரீ நரசிம்ஹனுடைய அழகைக் கண்டு கண் எச்சில் படுவார் இல்லை என்னுமத்தைப் பற்ற –
அந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை பல்லாண்டு – என்னுமவர்கள் இறே
அநாஸ்ரிதர்க்கு சென்று கிட்ட ஒண்ணாது ஆயிற்று ஹிரண்யன் போல்வாருக்கு சென்று பிரவேசிக்கப் போகாது ஆயிற்று –
என்கிறார் நாலாம் பாசுரத்தில் –

இப்படி இருக்கையாலே ஒருவருக்கும் சென்று காண்கைக்கு அரிதாய் இருக்கும் ஆயிற்று
ஸ்ரீ பரம பதத்தோ பாதி இந் நிலத்துக்கும் நமக்கு பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

புலி –பெரு வழியிலே சஞ்சரியா நின்றுள்ள ஆனையினுடைய மஸ்தகத்தை பிளந்து அத்தைப் பானம் பண்ணுகைகாக
அவை போகிற பெரு வழியிலே அவற்றைச் சுவடு ஒத்தி நிற்கும் ஆயிற்று –
ஆஸூர பிரக்ருதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்கு ஸ்ரீ நரசிம்ஹம் அடிச்சுவடு ஒத்ததுமா போலே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

உகவாதார்க்கு கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டி கண் எச்சில் பட ஒண்ணாத படி இருந்த தேசம் ஆயிற்று என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

சதுர்முகனும் தேவர்களில் தலையான ருத்ரனும் முன்பு ஹிரண்யனுக்கு அஞ்சி மனுஷ்ய வேஷம் கொண்டு திரிந்தவர்கள்
அவன் பட்ட பின்பு தந்தாமுடைய தரம் குலையாதபடி முறையாலே வந்து சேஷித்வ ப்ராப்தியாலே ஸ்தோத்ரம் பண்ண —
அவர்களுக்கு ஸ்துத்யனாய்க் கொண்டு அவ்விடத்திலே இதுக்கு முன்பு அனுபவித்து அறியாத
ஸ்ரீ நரசிம்ஹமாயக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன் உடைய ஸ்தானம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –

எனக்கு பாங்கான நெஞ்சே-நீ எனக்கு பாங்காய் இறே இப் பேறு பெற்றது –நாம் தொழுது உஜ்ஜீவிப்போம்
இது இத் திருமொழியில் பாட்டுக்கு எல்லாம் கிரியா பதம் –
பிரதிகூல நிரசனத்துக்காக இவ்வடிவு கொண்டது போய்-அநு கூலர் பக்கலிலேயும் வந்து பலிக்கும் அளவாயிற்று
என்று அந்த சீற்றத்தை ஆற்றுகைக்காக ஸ்ரீ பெரிய பிராட்டியார் வந்து கட்டிக் கொள்ளும் ஆயிற்று –
இவளை அணைத்தால் இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரம் தோளும் உண்டாம் ஆயிற்று-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

சிங்க வேள் குன்றம் தனக்கு வாஸஸ்த்தாநமாக உடையவன்-சம்சாரிகளான நம் போல்வாருக்கும் சென்று ஆஸ்ரயிகலாம் படி
இருக்கிற உபகாரகனை அநு பாவ்யமாம் படி பண்ணித் தந்தவர் -ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற
தமிழ் சாஸ்திர உக்தமான படி யைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————-

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்—திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-

ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து குருந்தை முறித்தாற் போலே என் விரோதியைப் போக்கி உபகரித்தவன் –
பகாசுரனை வாயை கிழித்து இப்படி விரோதிகளை போக்குகை பழையதாக செய்து போருகிறவர்
வந்து வர்த்திக்கிற ஸ்தானம் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே–என்கிறார் முதல் பாசுரத்தில் –

கொண்ட கொண்ட வடிவம் எல்லாம் இவருக்கு உத்தேச்யமாய் இருக்கும் ஆயிற்று – அவன் கொண்ட வடிவம் ஆகையாலே –
கிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய்-கலி யுகத்தில் கறுத்த நிறத்தை உடையவனாய்
த்வாபர யுகத்தில் வந்தவாறே ஸ்யாமமான நிறத்தை உடையவனாய் இருக்கும் என்று இவ்வடிவுகளை அநு சந்தித்து
தெள்ளியார் -உண்டு -அநந்ய பிரயோஜனர் ஆனவர்கள் நாள் தோறும் வணங்குவர்கள் ஆயிற்று –
நித்ய ஸூரிகளைப் போலே நித்ய அனுபவம் பண்ணும் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில் –

ஒரு மலையை எடுத்து பரிஹரித்தவன்-ஒரு மலையிலே நின்று ரஷிக்கப் பார்த்தான்
அவனை ஆஸ்ரயிக்கப் பார் நெஞ்சே என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

குரவை கூத்தை அநு சந்தித்து–அதிலே ஈடுபட்டு யேத்துமவர்கள் உடைய ஹ்ருதயத்தை விடாதே வர்த்திக்குமவன் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்காக ஸ்ரீ திருவிடவெந்தையிலே வந்து சந்நிஹிதன் ஆனால்
போலே ஆயிற்று-யேத்துமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதபடி –என்கிறார் நான்காம் பாசுரத்தில்

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் வ்யாபாரம் ஓவும் தனையும் பார்த்து இருந்து பிற்பாடனான குறை தீரஆஸ்ரிதருக்கு முற்பாடனாக
உதவுகைக்காக வந்து இருக்கும் தேசம் ஆயிற்று –அந்த திவ்ய தேசம் அடை நெஞ்சே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

திருமந்தரம் சொன்ன சிறுக்கனுக்கு உதவினவன்-திருநாமம் சொன்னார் எல்லார் உடைய
சம்சார துரிதத்தைப் போக்குகைகாக வர்த்திக்கிற திருமலையை அடையப் பாராய்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ஜகதாகாரனாய் நின்று தான் கொடுத்த உடம்பைக் கொண்டு தன்னுடைய திரு நாமத்தை சொல்லி
ஆஸ்ரயிக்கலாம் படி நிற்கிறவன் –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

ஜகதாகாரனாய்–திவ்ய மங்கள விக்ரஹ உக்தனாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-பிராட்டியும் தானுமாய்
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –நித்யவாஸம் செய்து அருளும் திருவேம்கடம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஓர் அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவாருக்கு –
அப்படியே இடர் வந்த போது-எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு-போரக் கடவதான இனிய திருநாமமான
எட்டு எழுத்தையும் சொல்லுமவர்களுக்கு-சத்தா ஹாநி வாராமே அவர்கள் உஜ்ஜீவிக்கும்படி அங்கீகரித்து – பின்னையும் அவர்களுக்கு
விரோதியான சம்சார பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் உபகாரகன் வர்த்திக்கிற ஸ்தானம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்-

தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய் பின்பு
நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி ஆகப் பெறுவர்கள் –இதில் சங்கை வேண்டா-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

——————-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் திருவேம்கடவா–1-9-

பந்துக்கள் அல்லாதவரை பந்துக்கள் என்று நினைத்து இருந்தேன் –அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும் -என்று
சரணம் புகுந்தார் முதல் பாட்டில் –

போக்யம் அல்லாதவற்றில் போக்யதா புத்தி பண்ணிப் போந்தேன்-அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும்
என்று சரணம் புகுகிறார் இரண்டாம் பாட்டில்-

பந்துக்கள் அல்லாதாரை பந்துக்கள் என்றும் போக்யம் அல்லாதார் பக்கலிலே போக்யதா புத்தி பண்ணியும் போந்த அளவேயோ –
தேவர் திரு உள்ளத்துக்கு அசஹ்யமாம் படி பர ஹிம்சையே பண்ணிப் போந்தேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-

ஏதேனும் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ணுகிறது உண்டோ என்னில்
பலத்தோடே வ்யாப்தமாய் இருப்பதொரு சாதன அனுஷ்டானம் பண்ணப் பெற்றிலேன்-ஜன்ம பரம்பரைகளிலே அலந்து முசித்தேன் –
இனி ஒரு ஜன்மம் வரும் என்று அஞ்சி ஏங்க வேண்டாதபடியான தாஸ்யத்திலே என்னை மூட்ட வேணும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-

அரணாக போரும்படியான திண்ணிய வரைகளாலே சூழப்பட்ட திருமலையை வாஸ ஸ்தானமாக உடைய நிருபாதிக பந்துவானவனே –
அடியேனை –என்னுடைய பாப அநு கூலமாக வன்றிக்கே-உன்னோடு உண்டான நிருபாதிக பாந்தவ அநு ரூபமான
கைங்கர்யத்தில் என்னை மூட்ட வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

கீழே அப்பா என்றார்-இங்கே அண்ணா என்னா நின்றார்-தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் விட்ட
உறவு முறைக்கு எதிர்தட்டான எல்லா உறவு முறையும் எம்பெருமானே என்றாய் இற்றே இவர் இருப்பது –
அடியேனை –வெளிறு கழிந்தால் சம்பந்தம் நித்ய ஸூAரிகளோடு ஒத்து இருக்கும் இறே எனக்கும்
ஆனபின்பு அவர்களைக் கொண்டருளும் அடிமை என்னைக் கொண்டருள வேணும்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-

அரியே –என்னுடைய பிரதிபந்தகத்தை போக்குகைக்கு ஈடான-பராபி பவந சாமர்த்யத்தை உடையவனே –
பிறர்க்கே உழையாமல்-ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யத்தை கொண்டு அருள வேணும்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

எனக்கு ஆற்றாமை உண்டானால் பிறப்பே யாற்றாமை உடைய உன்னை என் ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தை
தர வேணும் என்றுபிரார்த்திக்க வேண்டுகிறது என் –நான் ஆற்றாமை உடையேனாய் -இருந்தேன்
ஆற்றாமை பிறப்பது எப்போதோ என்று பார்த்து நிற்குமவனாய் இருந்தாய் நீ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

எனக்கு புறம்பு பற்று இல்லை என்றேனே-எனக்கு பற்றான நீ ஸ்ரீ லஷ்மீ பதியாய் இருந்தாயே
ஆனபின்பு என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தை கொண்டருள வேணும் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

இவற்றை அப்யசிப்பாருக்கு ஒரு பாபங்களும் வந்து கிட்டாது-பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகங்கள் அடங்க ஓடிப் போம் –
பாவமே செய்து பாவி ஆனேன் -என்று இவரும் சொல்லி-ஈஸ்வரனும் அத்தைப் பொறுத்த பின்பு இவருக்கு பாபம் இல்லையே –
இவருடைய பரிகரமாய்-இவருடைய பிரபந்தத்தை அதிகரிக்கவே-இவர்கள் பாபங்களைப் போக்கும் ஆயிற்று –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்

———————

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா வடியேன் இடரைக் களையாயே-1-10-1-

ப்ரஹ்மாதிகள் ஆஸ்ரயிக்கும் ஸ்வ பாவனாய் ஸ்ரீ திருமலையை வாஸ ஸ்தானமாகக் கொண்டு
சந்நிதி பண்ணின நிருபாதிக பந்துவே- இங்குத்தை இருப்பு இடர் என்று என் நெஞ்சில் பட்ட பின்பு
என் கைங்கர்ய விரோதியைப் போக்கி அருள வேணும்-என்கிறார் முதல் பாசுரத்தில்–

கீழில் பாட்டிலும் இரண்டாம் பாட்டிலும் அவனுடைய விரோதி நிரசன சீலதையைச் சொல்லி
என் துக்கத்தைப் போக்கித் தர வேணும் என்கிறார்-
ரஷணத்துக்கு மாலை இட்டு முடி சூடி இருக்கிற நீ இனி என் விரோதியை போக்குகை என்று ஓன்று இல்லை
என் பக்கலில் கிருபையைப் பண்ணி அருள வேணும் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்–

சர்வ ரஷகனாய்-பூமிக்காக நிர்வாஹகனாய் இருந்தபடியைச் சொல்லுகிறது-பரம பதத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம்
மிக்குப் போலே காணும் ஸ்ரீ திருமலை -இருப்பது-ஆரா அமுதே –இவ்வம்ருதம் ஸ்வர்க்கத்தில் அல்ல போலே காணும் இருப்பது –
அடியேற்கு –இதுவே போக்யம் என்று இருக்கிற என்னை இத்தை அனுபவிப்பித்து அருள வேணும்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்

ஸ்ரீ யசோதை பிராட்டியும் இந்த்ரனும் பெற்ற பேற்றின் அளவில்லாத என்னுடைய கைங்கர்யத்தை
தந்து அருள வேணும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்

இனி இரண்டு பாட்டாலே தமக்கு உபகரிக்க ஒருப்பட்டபடி சொல்லுகிறாராய் –
அதுக்கு உறுப்பாக திருமலையிலே வந்து நின்றபடியை ஐந்தாம் பாசுரத்தில் சொல்லி
அநந்தரம் ஆறாம் பாசுரத்தில் திரு உள்ளத்தில் புகுந்த படியைச் சொல்லுகிறார் –
மிடுக்கை உடைய திரு வநந்த வாழ்வானை படுக்கையாக உடையவனே-
ப்ராப்தி ஒத்து இருந்த பின்பு அவன் பெற்ற பேறு நானும் பெறுவேனாக திரு உள்ளம் பற்ற வேணும்-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்

உம்முடைய பக்கல் விலக்காமைக்கு அவசரம் பார்த்து இருக்கிற நாம் உம்மை இரக்க விட்டு வைப்புதுமோ என்று இசைவு பெற்றவாறே
நெஞ்சிலே வந்து புகுந்தான் –என் நெஞ்சிலே வந்து புகுந்து போக மாட்டு கிறிலன்-இவ்வளவும் செய்து பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்
தன் பேறான அருளைப் பண்ணும் தலைமையை உடையவன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்

ருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியை லபித்து அவளோடு கூட அரவத்தமளியினோடும் -என்கிறபடியே
வந்து இனி ஒருகாலும் பேரான் என்று தோற்றும்படி இருந்தான் ஆயிற்று –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-

ருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியைக் கை பிடித்துக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து
புகுந்த பின்பு இனி இந்த அந்தர் ஹஸ்யத்துக்கு எடுத்துக் கை நீட்டுகை ஒழிய வேறு ஓன்று அறியேன் -என்கிறார் –
இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான்
அவனை விட்டுப் போவேனோ –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்

ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –
எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் –ஆனபின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ
இத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி-அரை ஷணம் அவனை ஒழியச் செல்லாமை உண்டாகை இறே
பரபக்தி -யாவது வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்

அங்குத்தை திரு வேடர் எப்போதும் ஏறிட்ட வில்லும் தாங்களுமாய்
உணர்ந்து நோக்குவார்கள் ஆயிற்று –
ஸ்ரீ குஹப் பெருமாள் இரவு எல்லாம் உணர்ந்து நோக்கினாப் போலே – இவற்றை அப்யசிக்க வல்லார்கள்
நித்ய ஸூரிகள் உடைய நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்-

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-முதல் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

June 1, 2019

வாடினேன் வாடி-1-1-1-பிரவேசம்-

இவ் வாழ்வார் ஆகிறார் -ஆத்மாவை வெய்யிலிலே வைத்து உடலை நிழலிலே வைத்துப் போந்தார் ஒருவர் ஆயிற்று
ஆத்மாவை வெய்யிலிலே வைக்கை யாவது -பகவத் விஷயத்தில் முதலிலே இழியாமை
உடம்பை நிழலிலே வைக்கை யாவது -அநாதி காலம் விஷய பிரவணராய் -அதுவே யாத்ரையாய் போருகை
நிழல் ஆவது பகவத் விஷயம் இறே -வாஸு தேவ தருச்சாயா -பார்த்த பார்த்த இடம் எல்லாம் நிழலாய் இருக்கை
எங்கும் ஒக்க நிழல் செய்த இந் நிழல் அல்லது புறம்பு ஒதுங்க நிழல் இன்றிக்கே இருக்கை-

நாதிசீதா நகர்மதா -நரகாங்கார சம நீ -தானே ஏறிட்டுக் கொண்ட நரகம் ஆகிற பெரு நெருப்பையும் அவிக்கவற்று –
சாகிமர்த்தம் ந சேவ்யதே -பிராப்தம் அன்று என்ன ஒண்ணாது –
துக்க நிவர்த்தகம் அன்று என்ன ஒண்ணாது
வயிறு நோவா நின்றது சவி -என்பாரைப் போலே அநிச்சை சொல்லி கை வாங்கும் இத்தனை இறே உள்ளது –
அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை -பிரபத்தியிலே மாறாட்டமே உள்ளது –
இந் நிழலிலே இருந்து வைத்து ஒதுங்கிற்றிலேன் -என்பாரைச் செய்யலாவது இல்லையே

இவர் கண்ணால் காண்கிற விஷயங்களுக்கு அவ்வருகு அறியாது இருக்கிறார் ஆகில்
நம்மையும் அவ்விஷயங்களோபாதி இவர் கண்ணுக்கு இலக்காக்கினால் விரும்பாது ஒழியார் இறே என்று பார்த்து
உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிதி பண்ணி
இவரை விஷயீ கரித்து
தன் படிகளை அடையக் காட்டிக் கொடுத்து
தன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி
இவரை அனுபவித்து
இங்கே இருந்தே பரம பதத்தில் உள்ளார் படி யாம்படி பண்ணி
அத்தேச பிராப்தியும் இவருக்கு பண்ணிக் கொடுத்தான் -என்கிறது இப் பிரபந்தங்கள் எல்லாவற்றிலும்

இவர் பக்கலில் அத்வேஷமும் விஷயங்களின் உடைய லாகவமே இவரை மீட்கைக்கு பரிகரமாகவும்
லாகவம் -அல்ப அஸ்த்ரத்வாதிகள் –
இவருடைய ரசிகத்வமே தன் வாசி அறிகைக்கு பற்றாசாகவும்
அநாதி காலம் பண்ணின பாப அம்சத்தை நம் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று பார்த்து
இவர் விஷயங்களின் வாசி அறிந்து தன்னை அறிகைக்காக
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே
தனக்கு வாசகமான திருமந்தரம் முன்னாக
தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -அடங்கக் காட்டிக் கொடுக்க
கண்டு அனுபவித்து -அயோக்யனான என்னை அது தானே ஹேதுவாக விஷயீ கரித்தான்
என்று க்ருதஞ்ஞர் ஆகையாலே ஒருகால் சொன்னதை ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார்
பகவத் விஷயத்திலே நேர் கொடு நேர் செய்யல் ஆவது ஓன்று இல்லை
செய்ய வேண்டுவதும் ஓன்று இல்லை
பண்ணின உபகாரத்துக்கு கிருதஞ்ஞராம் இத்தனையே வேண்டுவது -அசித் வ்யாவ்ருத்தி தோற்ற-

———————

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2-பிரவேசம்-

கீழில் திருமொழியிலே
குடந்தையே -தொழுது என்றும் –
தஞ்சை மா மணிக் கோயிலே -வணங்கி என்றும் –
தமக்கு திரு மந்திர லாபம் உகந்து அருளின நிலத்தில் எம்பெருமானாலே வந்ததாக
திரு மந்த்ரம் பெற்றமையை அருளிச் -செய்தவர்
இனி மேல் திரு மொழிகளிலே
அர்ச்சாவதாரமே தமக்கு அனுசந்திகைக்கு கருத்து -திரு மந்த்ரார்தமான
ஸ்வாமித்வ சௌலப்யங்களை உகந்து அருளின நிலங்களிலே கண்டு அனுபவிக்க வேணும் என்று விவஷித்து-

சம்சார ஸ்வபாவத்தையும் -தம்முடைய இதர விஷய ப்ராவண்யத்தையும் அனுசந்தித்த இவர்
அந் நோவுபாடே ஹேதுவாக -தன் நிர்ஹேதுக கிருபையாலே என்னை விஷயீ கரித்து
தன் ஸ்வாமித்வத்தையும் எனக்குக் காட்டித் தந்தான் என்றார் கீழில் திரு மொழியில் –

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி- என்று ராமாவதாரம் ப்ரஸ்துதம் ஆயிற்று –
திரு மந்த்ரமும் ப்ரஸ்துதம் ஆயிற்று –
இத் திரு மந்த்ரத்துக்கு அர்த்தம் ஆகிறது தான் ஸ்வாமித்வ சௌலப்யம் இறே –
கர்ஷகனானவன் பயிர் தலையிலே குடில் கட்டி நோக்குமா போலே
ரஷ்யம் இருந்த இடத்தே வந்து ரஷிக்கை இறே சௌலப்யம் –
உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிதி பண்ணி இத்தை நோக்குகையாலே
உடையவன் என்று ஸ்வாமித்வ ப்ரகாசகமுமாய் -இருக்கிறது-

எதிர்தலை பாராதே வந்து
அவசர ப்ரதீஷனாய்
அந்தர்யாமி ரூபத்தாலே
இருக்கிற இருப்பு ஸ்வாமித்வ கார்யம் இறே
அவ்வளவு அன்றிக்கே
கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் என்று அபேஷை பிறந்த வன்று அப்போதே
அனுபவிக்கலாம்படி கோயில்களிலே வந்து நிற்கிற இதுக்கு மேற்பட இல்லை இறே -சௌலப்யத்துக்கு-

சம்பந்த ஜ்ஞானம் பிறந்த அநந்தரம் -அநுபவ அபேஷை -பிறந்தால்
அப்போதே இவ் உடம்போடே அடிமை செய்யலாம் படி யிராது இறே பரம -பதத்தில் –
அநுபவிக்க வேணும் என்ற அபேஷை பிறந்த போதே அவ் உடம்போடே
அனுபவிக்கலாம்படி இருக்கும் இறே உகந்து அருளின நிலங்களிலே –
இப்படி சௌலப்யத்துக்கு எல்லையான உகந்து அருளின நிலங்கள் எங்கும் புக்கு அநுபவிக்க கோலி –

அதில் இப் பாஷை நடையாடும் இடத்துக்கு எல்லையாய் இருக்கும் இறே -திருமலை
அவ்வளவிலே நில்லாது- இவர்- இவருடைய -ஆசையானது
ஆகையாலே உகந்து அருளின நிலங்களுக்கு எல்லையான ஹிமா வானில் திருப்ரிதி அளவும்
சென்று அவ்விடத்தை அனுபவிப்பதாக திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

கீழில் திரு மொழியில் –
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி -என்று ராமாவதார முகத்தாலே
விரோதி நிரசனம் ப்ரஸ்துதம் இறே
அவ்வழியாலே மஹா ராஜர் தனியருமாய் வெறுவியருமாய் -( தரித்ரர் ) ஜ்யேஷ்டனாலே நெருக்குண்டு
நோவு பட்டு இருக்க -அவர் அபேஷியாது இருக்கச் செய்தேயும்
ஸ ராமோவா நரேந்த்ரஸ்ய -என்கிறபடியே தாமே அவர் இருந்த இடத்தே சென்று
அவர் விரோதியைப் போக்கி உபகரித்தாப் போலே
அவன் தானே நம்முடைய குறைகள் எல்லாம் தீர்த்து உபகரிகைக்காக இங்கே
திருப் பரிதியில் வந்து எழுந்து அருளி -இருந்தான்
நெஞ்சே அங்கே சென்று கிட்டப் பாராய் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார்-

முன்பு எல்லாம் கண்ணுக்கு இலக்கான விஷயங்களிலே ப்ரவணராய் போந்தார்
பகவத் ஜ்ஞானம் பிறந்த பின்பும் அந்த வாசனை அனுவர்த்திக்கிறது
கண்ணுக்கு விஷயமான உகந்து அருளின நிலங்களிலே புக்கு அனுபவிக்கிறார்
தான் உகந்த ஊரெல்லாம் -என்னக் கடவது இறே –

————————

முற்ற மூத்து கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து–1-3-பிரவேசம்-

கீழ் தம் உள்ளத்தை குறித்து திருப் பிரிதியை ஆஸ்ரயி என்று உபதேசித்தார் –
அது தம் த்வரைக்கு ஈடாக த்வரித்தது -இல்லை
கெடுவாய் -நாம் இருக்கிற இருப்பில் பொல்லாங்கு கண்டாயே –
கடுக ஒரு ஷணம் முற்பட்டது உடலாக ஆஸ்ரயிக்க பாராய் -என்கிறார் –

கீழே திரு மந்த்ரத்தை அநுசந்தித்தார் –
அநந்தரம் -மந்திர ப்ரதிபாத்யமான அர்த்தத்தை அநுசந்தித்தார் –
மந்திர த்ரஷ்டானவன் இருக்கிற தேசத்தை ஆஸ்ரயிப்போம் என்கிறார் –
திரு மந்த்ரம் தன்னை அநுசந்திப்பாருக்கு ப்ரதிபாத்யமான ஸ்துவோபாதி
ருஷி சந்தோஷ தேவதைகள் என்ன -பீஷ சக்திகள் என்ன -சோஷண தாஹநாதிகள் என்ன –
இவை எல்லாம் அநுசந்தேயமாகக் கடவது -அதுவேண்டுவான் என் என்னில்-

நமோ நாராயணா என்று பரமாத்மாவை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று
இம் மந்திர அநுசந்தானம் பண்ணுவார் -நித்ய சூரிகளாய் -அவர்கள் உடைய யாத்ரையாய் யாயிற்று -இது
அத்தை இறே குண த்ரயாத்மிகையான -பிரகிருதி வச்யனான -இவன் அநுசந்திக்கப் பார்க்கிறது
ஆகையாலே ஒரு பாவனையாலே அவர்களோபாதி தன்னுடைய சரீரத்தையும் பாவித்து அநுசந்திக்கைகாக
ஷோணாதிகள் -வேண்டுகிறது –

இனி ருஷி சந்தோ தேவதைகளை அநுசந்திக்கிறது இம் மந்த்ரத்தில் உண்டான ஆதராதி
அதிசயத்தாலே பீஜ சக்திகளை அநு சந்திக்கிறது –
மோஷ ப்ரதம் என்று அவ் வழியாலே இவனுக்கு அதில் விசுவாசம் பிறக்கைகாக –
கீழே பிரிதி சென்று அடை நெஞ்சே -என்றார்
க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருந்தது நெஞ்சு –
கெடுவாய் -பிரகிருதி சம்ச்ப்ருஷ்டராய் இருப்பாருக்கு அப்படி செய்கிறோம் என்று ஆறி இருக்கப் போமோ
அப்ராக்ருத சரீர பரிக்ரகாம் பண்ணினாருக்கு அன்றோ –
பின்னை செய்கிறோம் என்று ஆறி இருக்கலாவது -என்று இங்கனே
பிரகிருதி யினுடைய அஸ்த்ரத்தையும் -விஷயங்களின் உடைய தண்ணிமையும் –
பற்றப் படுகிற விஷயத்தின் உடைய வை லஷண்யத்தையும் -சொல்லி
இருந்தபடி இதுவான பின்பு
ஒரு கை கால் முறிய வாகிலும் ஒரு ஷணம் முற்ப்பட்டது உடலாக
ஆஸ்ரயிக்கப் பாராய் என்று திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் –

————————

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து—-வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-பிரவேசம்

ஸ்ரீ பதரி என்றும்ஸ்ரீ பதரி  காஸ்ரமம் என்றும் இரண்டு திருப்பதியாய்
அதில் இங்குத்தை இருப்பாகிறது பிரஜையினுடைய ரஷணத்துக்கு உறுப்பாக
தாய் குடிநீர் குடிக்குமோ பாதி இவை தன்னை வழிப்படுத்துகைக்கு உறுப்பாக
தான் தபஸ் பண்ணி ஹித காமனாய் இருக்கும் இடம் சென்று ஆஸ்ரயிக்கும் நம் குறையே குறையாக
ஆஸ்ரயணீயானவன் தன் குறை அறுத்துக் கொண்டு இருக்கிற இடமாய் இருந்தது -ஆனபின்பு நாம் அங்கே  போய்
ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –

இங்கு திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிற இடம் உண்டோ என்னில்
கீழே -வதரி வணங்குதுமே -என்றும்
அறிதியாகில் நெஞ்சம் -என்றும் – சொல்லிக் கொடு போந்து இதிலும்
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே -என்று
முடியத் திரு உள்ளத்தை குறித்து சொல்லிற்றாய் இறே இருக்கிறது –
கீழ் தாம் பெற்றதாகச் சொல்லி அர்த்த அனுசந்தானம் பண்ணிப் போந்த மந்திர பிரதனன நாராயணன் வந்து
இருக்கிற தேசமாய் இருக்கும் இறே –
கீழ்த் திரு மொழியிலே -மந்திர பிரதனான நாராயணன் வர்த்திக்கிற தேசத்தை ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்துக்கு சொல்ல –
நமக்கு சச் சிஷ்ய லஷணங்கள் அறிந்து அன்றோ ஆஸ்ரயிக்க அடுப்பது -என்று ஆறி இருக்க –
அக்குறை தீர்த்தான் எழுந்து அருளி இருக்கும் தேசமான ஸ்ரீ பத்ரி காஸ்ரமத்தை ஆஸ்ரயிப்போம் என்று
அருளிச் செய்கிறார் என்று சங்கதி-

————————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் —சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-பிரவேசம் –

சௌபரி போகத்துக்கு உறுப்பாக அநேகம் வடிவு கொண்டாற் போலே ஆஸ்ரிதரை அனுபவிகைக்கு உறுப்பாக
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புகுந்து சந்நிதி பண்ணினான் ஆயிற்று அவன் –
இனி இவர்
தாமும் தன உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி- எங்கும் புக்கு அனுபவிக்கையிலே யாயிற்று அபேஷை பண்ணி இருப்பது –
ஒரு விஷயத்தை அனுபவிக்கப் புக்கால் அவ்விஷயத்தில் அவயவங்கள் தோறும் ஸ்ப்ருஹை பண்ணுவாரைப் போலே
யாயிற்று இவர் எங்கும் புக்கு அனுபவிக்கப் பாரிக்கிறதும்
ஆக –
விரோதி நிரசன சீலனுமாய்
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வாபவனாய்
ப்ரஹ்மாதிகள் ஆபன்நராம் அன்று -அவ் வாபத்துக்களைப் போக்கி அவர்களுக்கு துக்க நிவர்தகனாய் இருக்கிறவன் –
நித்ய ஸூரிகளோடு-தம் பக்கல் ருசி உடையாரோடு-கேவலம் ப்ராஹ்மணரோடு வாசி யற -சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு
ஸ்ரீ சாளக்ராமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அங்கே போய் அவனை ஆஸ்ரயிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார்-

கோசல ஜன பதமாக- ஸ்ரீ பெருமாளாய் இருக்குமா போலே ஒரு மண்டலமாக தனக்கு விஷயமாகக் கொண்டு
சந்நிஹிதனாக குறையற வர்த்திக்கிற தேசம் ஆயிற்று –

———————-

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே—-
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-பிரவேசம்-

திரு உள்ளத்தைக் குறித்து –உகந்து அருளின நிலங்களை ஆஸ்ரயி -என்று பல காலும்
சொல்லிக் கொண்டு போந்தார் கீழ் –
மந்திர மந்த்ரார்த்தங்களை லபித்தார் ஆழ்வார் கீழ் –

அதுவும் அப்படியே செய்வதாக ஒருப்பட்டது –
அநந்தரம்-
தாம் தம்முடைய நிகர்ஷத்தை அநு சந்தித்து
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் –
விஷய ப்ராவண்யத்தையும் –
ஆர்த்த விஷயத்தில் -ஐயோ -என்னாதே போந்த படியையும்-இவற்றை அடைய முன்னிட்டு
ராவணோ நாம துர் வ்ருத்த -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஆகாசத்தில் நின்று
ஸ்வ நிகர்ஷத்தை சொல்லி சரணம் புக்காற் போலே
இவரும் தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்து
திரு நைமி சாரண்யத்தில் நிற்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புகுகிறார் –

———————-

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் — சிங்க வேள் குன்றமே–1-7- பிரவேசம்-

ஒன்பது வாசல் தானுடை குரம்பை பிரியும் போது உந்தனடி சரணமே சரணம் என்று இருந்தேன் என்றாரே –
நீர் இப்படி ஒரு தலையில் அத்யாவசாயமாக சொல்லுகிறது என் தான் –
இத்தலையில் செயலற்ற அளவிலே ஸ்ரீ ப்ரஹ்லாதனுடைய பிரதிஞ்ஞா சம காலத்திலே-
பிரதிஞ்ஞை பண்ணின இடத்திலே –வந்து சந்நிதி பண்ணி –அவனுடைய விரோதியைப் போக்கி உபகரித்திலோமோ –
அது தான் அக்காலம் ஒன்றிலுமேயாய்-பிற்பட்ட காலத்தில் உள்ளாருக்கும் இழக்க வேண்டாதபடி –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு என்கிறபடியே ஆஸ்ரயித்தார் எல்லாருக்குமாக செய்த செயல் அன்றோ –
ஆனபின்பு உம்முடைய போல்வாருக்கு இழக்க ஒண்ணாத படி ஸ்ரீ சிங்க வேழ் குன்றிலே வந்து
நீர் கிட்டு அனுபவிக்குமதுவே குறையாக நாம் வந்து இருந்தோமே –
இப்படி இருக்க ஒருதலை அத்யாவச்யமேயாகவே நீர் சொல்லுவான் என் -என்று
தான் ஸ்ரீ சிங்க வேழ் குன்றிலே வந்து சந்நிதி பண்ணின படியைக் காட்டிக் கொடுக்க –
அங்கே புருஷகார பூதையான ஸ்ரீ பிராட்டியாரோடே கூட எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்
உத்தேச்யனாய் இருக்கிறவன் வந்து இருக்கிற தேசம் ஆகையாலே
அங்கு உள்ளது அடைய உத்தேச்யமாய்-சிலரால் வந்து அணுக ஒண்ணாத படி ஸூ ரஷிதமாக எழுந்து அருளி இருக்கப் பெற்றது
என்று திரு உள்ளத்தோடு கூடிப் போய் அனுபவிக்கையிலே ஒருப்படுகிறார்-

கீழ்த் திருமொழியில் ஆழ்வார் தம்முடைய பூர்வ வ்ருத்த அனுசந்தான முகேன அந்ய உபாயத்தை முன்னிட்டு
ஒரு காலைப் போலே ஒன்பதின் காலும் திருவடி யடைந்தேன் -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
ஆஸ்ரயித்த படியை அனுசந்தித்த ஈஸ்வரன் –
கோவிந்தேதி யதாக்க்ரந்தக் கிருஷ்ணா மாம் தூரவாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயா நாப சர்ப்பத்தி –
என்னும்படி இருப்பான் ஆகையாலே-இவரது அத்யாவசத்து அளவு சஹிக்க மாட்டாதே
உபமாந சேஷாணாம் சாதூநாம் -என்கிறபடி இவருக்கு போலியான சிறுக்கனுக்கு உதவி
அவ்வடிவை எல்லாருக்கும் ஆக்கிக் கொண்டு இருந்த
ஸ்ரீ சிங்க வேழ் குன்றத்தில் இருப்பைக் காட்ட கண்டு அனுபவிக்கிறார் என்று சங்கதி –

————————

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்–திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-1-பிரவேசம் –

விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வபாவனாய் – சர்வ அந்தராத்மாவாய் – இருக்கிற ஸ்ரீ ஹரியானவன் –
வாயாலே திரு நாமம் சொன்னான் என்ற ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக உதவிற்றொரு வடிவைக் கொண்டு வந்து தோற்றி
அவனுடைய விரோதியைப் போக்கி உபகரித்தவன் அவன் ஒருவன் அளவிலும் பர்யவசிக்கை அன்றிக்கே
திருநாமம் சொன்னார் எல்லாருடைய சம்சார துரிதத்தைப் போக்குகைகாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனானான் –
நாம் அங்கே போய் அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார்
தமிழ் பாஷை நடை யாடுகிறதுக்கும் எல்லையான நிலமாய் இருக்கும் இறே-

———————————

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1—பிரவேசம் –

ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்தார் கீழ் –
அப்படியே அதுவும் பாங்காய் தாமும் அனுபவிப்பாராய் ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்தார் –
சர்வ வித ஸ்வாமியாய்- நிருபாதிக பந்துவுமானவன் இங்கே வந்து சந்நி ஹிதனாகையாலே
தம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் பெறலாம் என்று ஸ்ரீ அக்ரூரன்
மாமக்ரூரேதிவஹ்யதி -என்று மநோரதித்துக் கொண்டு வந்தாற் போலேயும் –
ஸ்ரீ புண்டரீகன் மநோ ரதம் போலேயும்-இவரும் மநோ ரதித்து கொண்டு வந்த விடத்தில்
அப்படி
எதிரே வருதல் -அணைத்தல் -ஓர் இன் சொல் சொல்லுதல் –க்ரியதாம் என்று கைங்கர்யத்தில் ஏவுதல் –
செய்து அருளக் காணாமையாலே-மிகவும் நொந்து
நித்ய சந்நிதியும் உண்டாய்
நினைத்து செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான சக்தியும் உண்டாய்
பிராப்தியும் உண்டாய் இருக்க
அபேஷிதம் செய்யாது ஒழிகிறது-செய்து அருள நினையாமைக்கு ஈடாய் இருப்பதொரு ஹேது
இத்தலையில் உண்டாகை இறே – என்று கைவாங்கினவர்
பின்னையும்
கைங்கர்யத்தில் உண்டான சாபலாதிசயத்தாலே தவிர மாட்டாமை மீண்டு என்னுடைய பாபங்களைப் பார்த்தால்
அபந்துக்களை பந்துகளாக நினைத்தும்
போக்கியம் இல்லாத இடத்தில் போகய புத்தி பண்ணியும்
பர ஹிம்சை பண்ணியும்
ஆர்த்த விஷயங்களிலே ஐயோ என்னாதேயும்
உன்னை ஒழிய புறம்பே காலத்தைப் போக்கியும் போந்தேன் –
இங்கனே போந்தேனே ஆகிலும்
இப்போது தேவரை ஒழிய செல்லாமை உண்டாய் வந்தேன் –
இத்தலை சேஷமாய் –
தேவர் சேஷியாய்
விட ஒண்ணாத சம்பந்தமும் உண்டாய் –
என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி சந்நிதியும் உண்டான பின்பு
என் அபராதங்களைப் பொறுத்து அருளி
என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியை கொண்டு அருள வேணும் -என்று
ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார்-

இது தான்
நீணிலா முறுவலிலே செய்தது அன்றோ என்னில்-ஸூகுமாரராய் இருக்குமவர்கள் விடாய்த்தால்
பலகாலும் முகத்திலே நீரை அள்ளி ஏறிட்டு கொள்ளுமா போலே
பலகாலும் பிரபத்தி பண்ணும்படி யாயிற்று இவருடைய மார்த்த்வம் இருப்பது –
ஒரு கால் பெற்றிலோம் என்று-கைவாங்கும் அளவன்றிக்கே பெற்றவளவும் பிரபத்தி பண்ணுவார் ஆயிற்று –
நிப பாத விபீஷண -என்று அவன் திருவடிகளில் விழுந்து சரணம் புக்காற் போலே யாயிற்று-

————————-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா வடியேன் இடரைக் களையாயே-1-10-1- பிரவேசம்-

தம்முடைய வெறுமையை சொல்லி கைங்கர்ய லாபத்துக்காக சரணம் புக்கார் –
ஸ்ரீ பாஷ்ய காரர் சரணம் புக்க அநந்தரம் ஸ்தூல சூஷ்ம ரூபையான பிரகிருதியை கழித்து தர வேணும் –
அஹங்கார மமகாரங்களை அழித்து தர வேணும் –விரோதியைப் போக்கித் தர வேணும் –
பர பக்த்யாதிகளைப் பிறப்பிக்க வேணும் –என்று அபேஷித்தாப் போலே –
விரோதி நிரசன சீலனாய் –சர்வ ரஷகனாய் –ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரியாதவனாய் –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய் –சர்வ சுலபனாய்-உள்ள சர்வேஸ்வரனை
என்னுடைய விரோதியைப் போக்கித் தர வேணும் –என்று அபெஷிக்க
உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்கைக்கு அன்றோ நாம் இங்கே வந்து நிற்கிறது என்று
திருமலையில் நிலையைக் காட்டி
அநந்தரம்
இவர் திரு உள்ளத்திலே வந்து-இவருக்கு பர பக்த்யாதிகளை பிறப்பித்தான் என்கிறது இத் திரு மொழியில் –
பிரபன்னனுக்கும் உண்டு பக்தி – பக்திமான் ஆகிற அதிகாரமும் உண்டு –
நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -என்று இரண்டு இடத்திலும் சொல்லா நின்றது இறே

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-முதல் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

June 1, 2019

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-

நம் ஆழ்வார் சர்வேஸ்வரனை சாஷாத்கரித்த அநந்தரம் -தாம் பெற்ற பேறு அறியாதே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கீழ் நின்ற நிலையை அனுசந்தித்தாப் போலே
இவரும் பகவத் விஷயீகாரம் பிறந்த பின்பு தாம் கீழ் நின்ற நிலையை எல்லாம் அனுசந்தித்து
வாடினேன் -என்கிறார் -உலர்ந்தேன் என்னாதே வாடினேன் என்கிறார் -வாடி வாடும் இவ்வாணுதல் -பிராட்டி போலே-

——————–

ஆவியே அமுதே என நினைந்து உருகி யவரவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே போய் ஒழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2..

அநாதி காலம் பகவத் தத்வம் என்று ஓன்று உண்டு -என்றும் அறியாதே விஷய ப்ரவணராய் போருகையாலே –
வாடினேன் -என்றும் -இளையவர் கல்வியே கருதி ஓடினேன் -என்றும் இறே கீழ் சொல்லி நின்றது –
அதில் அனுபவித்த கொங்கைகளையும் காலம் அடங்க வ்யர்தமே போயிற்று என்றும் சொல்லி –
இப்படி போன காலமும் வ்யர்த்தம் ஆகாதபடியான திரு நாமத்தைக் காணப் பெற்றேன் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும்
என்றபடியே போன காலத்தையும் நல்ல நாளாக்கும்

——————-

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்த கழிந்த அந்நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்யக் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-3-

அவை அப்ராப்த விஷயம் -இது ப்ராப்த விஷயம்-
ஆசா லேசமுடையார் நெஞ்சு விட்டு போய் இருக்க மாட்டாதவன் -கலவிருக்கையான பரமபதத்தையும் விட்டு நெஞ்சே
கலவிருக்கையாக கொள்ளும் நம்முடை அடிகள் -சர்வ ஸ்வாமி திருநாமம்
தேக குணமும் சர்வ ஸ்வாமித்வமும் சௌலப்யமும் வாத்சல்யமும் இறே இதுக்கு அர்த்தம் ஆயிற்று
நான் உய்யக் கண்டு கொண்டேன் –அசந்நேவ -என்று முடியும்படியான நான் உஜ்ஜீவிக்கும்படி கண்டு கொண்டேன்
நான் கண்டு கொண்டேன் –அநாத்ம குணோபேதனாய் போந்த நான் ஆத்மகுணோ பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன்

—————–

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-4-

அபிமானம் பண்ணக் கடவதல்ல விஷயங்களிலே அபிமானம் பண்ணியும்
சோகிக்க கடவ அல்லாததுக்கு சோகித்தும்-நரக அவஹமான விஷயங்களை அநுபவிக்க மநோரதித்தும்
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என்று இப்படி கை கழிந்த என்னை
பிரளயம் கொண்ட பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் அருளாலே
இனி இவன் தானாக மீள மாட்டான் என்று அதுவே ஹேதுவாக எடுக்க ஒருப்பட்ட சர்வேஸ்வரன் கிருபையாலே
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி என்று
போந்தவன் சுத்தனானான் என்று தெரியாதபடி -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தனாம் படி ஆனேன்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –

—————-

கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல்கதிக்கு அமைந்தென் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் —5

நித்ய சம்சாரி ஆகைக்கு உறுப்பானவற்றை செய்து போந்த நான் -இனி இவன்
சம்சாரத்துக்கு ஆள் ஆக மாட்டான் -பரமபததுக்கு ஆளாகும் அத்தனை என்னும்படி சமைந்தேன் –
விஷய அனுபவம் பண்ணிக் களித்து இருக்கும் போதோடு
விஷய அனுபவம் பண்ணுகைக்கு அர்த்த ஆர்ஜனம் பண்ணும் போதோடு வாசி யற
எனக்கு திரு நாமம் சொல்லுகையே யாத்ரையாகப் பெற்றேன்-

————————

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
செம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6-

இத்தை நீர் போர ஆதரியா நின்றீர் இது தனக்கு அர்த்தம் என் என்ன -சொல்கிறார்
இதனுடைய பாடத்தை ஜபித்து அத்தாலே பலம் பெற விருத்தல்
இத்தாலே பாபத்தைப் போக்கி கர்ம யோகத்துக்கு உடலாகுதல் செய்கை அன்றிக்கே
அர்த்த அனுசந்தானத்தாலே பேறு என்று தமக்கு பஷம் ஆகையாலே அர்த்தத்தைச் சொல்லுகிறார்
நம் ஆழ்வாரும் திரு மந்த்ரம் ஓர் இடத்திலே ப்ரஸ்துதம் ஆனால் -முன்னே யாதல் பின்னே யாதல்
அர்த்தத்தைச் சொல்லிப் போருவார் -அர்த்த ப்ராதான்யம் தோற்ற ஜ்ஞானம் மோஷமாக வேண்டுகையாலே-
மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா -என்கிறபடியே –
சர்வவித பந்துவும் அவனே என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்-

————————-

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடைந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் நாராயணா என்னும் நாமம் —-7–

அல்லாதார் தான் இழக்கிறார் அவிசேஷஞ்ஞர் ஆகையாலே –
விசேஷஞ்ஞராய் என்னோடு சஜாதீயராய் கவி பாடித் திரிகிற நீங்கள் இழக்கிறது என் என்கிறார்-

———————-

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் —8-

எங்கள் பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால் நீர் சொல்லுகிற அர்த்தத்துக்கு நாங்கள் தேசிகராக
வல்லோமோ என்ன
கெடுவிகாள் -நான் அன்றோ இவ் விஷயத்துக்கு யோக்யனாய் உங்களுக்கு உபதேசிக்கும்படி
ஆனேன் -ஆன பின்பு இவ் விஷயத்துக்கு ஆள் ஆகாதார் உண்டோ -என்கிறார் –

—————-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9–

அநாதி காலம் விஷய ப்ரவணனாய் -பகவத் விஷயத்தில் விமுகனாய் போந்த நான்
விஷயங்கள் தான் சவாதியாய் மீண்ட அளவிலே -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
கைக் கொண்டான் என்கிற அர்த்தத்தை -உய்வதோர் பொருளால் -என்கிறத்தாலே சொன்னார் முதல் பாட்டிலே –

காலம் அடங்க வ்யர்தமே புறம்பே போக்கினேன் என்றார் இரண்டாம் பாட்டிலே –

ரஷையே வேண்டி அதுக்கு வ்ருத்தமான துஷ் கருமங்களைப் பண்ணி
விஷய ப்ரவணனாய் -கால த்ரயம் அடங்க நிஷ் பிரயோஜனமாகப் போக்கின நான்
யோக்யனுமாய் பிராப்தனுமான சர்வேஸ்வரனையும் -அவனுக்கு வாசகமான
திரு நாமத்தையும் காணப் பெற்றேன் என்றார் மூன்றாம் பாட்டில் –

துர்மாநியாய் -சோகிக்க கடவ அல்லாத விஷயங்களுக்கு சோகித்து –
விஷய ப்ரவணனாய் -அநாத்ம குணங்களால் குறைவற்ற நான்
அமாநித்வாதி ஆத்ம குண பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன் என்றார் நாலாம் பாட்டில் –

ஆத்ம அபஹாரத்தைப் பண்ணி பஸ்யதோஹரனாய் -சர்வேஸ்வரன் ஒருவன் உளன்
என்று இருப்பார் உண்டாகில் உக்த்ய ஆபாசங்களாலே இல்லை செய்து போந்த நான்
ஆத்ம சமர்ப்பணம் பண்ணி என்றுமே இது யாத்ரையாய் போருவார் பெரும் பேற்றை
பெற்றேன் என்றார் ஐஞ்சாம் பாட்டில் –

இதுக்கு அர்த்தம் என் -இது இருந்தபடி என் -என்கிற அர்த்தத்தையும் சொல்லி
சம்சாரிகள் எல்லாம் இங்கனே கிலேசப்படா நிற்க -நான் இப்பேற்றைப் பெற்றேன்
என்றார் ஆறாம் பாட்டில் –

அல்லாதார் இழக்கிறார்கள் அவிசேஷஞ்ஞர் ஆகையாலே
என்னோடு சஜாதீயராய் -விசேஷஞ்ஞராய் -கவி பாடித் திரிகிற நீங்கள் இழவாதே
கொள்ளுங்கோள் என்றார் ஏழாம் பாட்டில் –

நீர் சொல்லுகிற அர்த்தத்துக்கு நாங்கள் தேசிகர் ஆக வல்லோமோ -என்ன
கெடுவிகாள் -நான் அன்றோ இவ் விஷயத்துக்கு நிலனாய் உங்களுக்கு கூட உபதேசிக்கிறேன் –
ஆன பின்பு பகவத் விஷயத்துக்கு ஆள் ஆகாதார் இல்லை -என்றார் எட்டாம் பாட்டில்

நீர் திரு நாமத்தைப் போர ஆதரியா நின்றீர் –
இது என்ன பலத்தை தரவற்று -என்ன
திரு நாம பலத்தைச் சொல்லுகிறார் இப் பாட்டில்-

——————

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணா -என்று
நமக்கு இனிய திரு நாமமே பாபத்துக்கு நஞ்சு –
அல்லாதன எல்லாம் சம்சாரத்திலே வேர் பற்றுக்கைக்கு உடலாய் இருக்கும் –
இதினுடைய அர்த்த அனுசந்தானமே சம்சாரத்தை வேர் அறுப்பது என்னும்
இவ் வர்த்தத்தை எல்லாரும் புத்தி பண்ணி -இருக்கலாகாதோ-

——————-

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற விருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர வரு வரை யகடுற முகடேறிப்
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே —-1-2-1-

சத்ரு நாசனே -என்கிறது கிடக்க -சக்ர சாப நிபே -என்கிறதை அனுபவிக்கிறார்
இந்திர தனுஸ் போலே அனுகூலருக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படி தர்சநீயமாக இருக்கும் –
க்ருஹீத்வா -வில் பிடித்த பிடியிலே பிரதிகூலர் முடிந்து போம் படியுமாய் இருக்கும் –
அநுகூலரை அழகாலே அழியச்செய்யும் —
பிரதி கூலரை அம்பாலே அழியச் செய்யும் –
சைதன்யத்தில் குறைய நின்றாரும் -அத்தேசத்தை ப்ராபித்து -ப்ரீதிக்கு போக்குவிட்டு சில வ்யாபாரங்களைப் பண்ணுகிற தேசமான -பின்பு
சைதன்யத்தில் குறை அற்று இருந்த நீ –அத்தேசத்தை சென்று ப்ராபிக்கப் பாராய் -என்கிறார் –
சைதன்யத்தில் குறைய நின்றாரோடு குறைவற்றாரோடு வாசி யற
நிலவராய் அடிமை செய்யும்படி யாயிற்று விஷய ஸ்வபாவம்
துரும்பு எழுந்து ஆடுமாயிற்று-

——————-

கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்த வடிகள் தாம் இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூரப்
பிலங்கொள் வாள் எயிற்று அரியவை திரி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே —-2

அவதாரிகை –
தம் இழவை பரிஹரித்த பிரசங்கத்தாலே மஹா ராஜர் இழவை பரிஹரித்த படியைப் பேசினார் முதல் பாட்டிலே –
மஹா ராஜர் இழவை பரிஹரித்த பின்பு இறே பெருமாள் தம் இழவை பரிஹரித்துக் -கொண்டது
அந்த க்ரமத்திலே ராவண வதம் பண்ணுகிற படியைப் -பேசுகிறார்-

——————-

துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரல் இனம் விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து
கடி கொள வேங்கையின் நறு மலர் அமளியன் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே —3-

ஸ்ரீ பிராட்டிகாக இலங்கையை அழித்த படி சொல்லிற்று கீழில்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிகாக ரிஷபங்களை அடர்த படி சொல்லுகிறது -இதில்

—————–

மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக் கிடந்து அரு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவியோடு இழி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே–4-

அப்பருவத்தில் பாலகனுக்கு உதவினபடி சொல்லுகிறது –
அப்பருவம் என்றது இளம்கொடி என்றதை நினைக்கிறது –
இளம் பருவத்திலே வந்து உதவினப் போலே தன்னைக் காணா விடில் முடியும்படியான தசையிலே
வந்து தோற்றி விரோதைப் போக்கி உதவினான்
ப்ரணயிநிக்கு உதவின க்ரமம் பற்றாதாய் ஆயிற்று ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில்-

—————

கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகளொடும் அமர்ந்த நல் இமயத்து
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை யளை மிகு தேன் தோய்த்துப்
பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே–1-2-5—

அவ் வவதாரங்களுக்கு அடியாக ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை அனுசந்திக்கிறார்-

———————–

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளிகொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்ற
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

அப்படி திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவன் இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாய் இருக்க அங்கு நின்றும் எங்கள் உடைய கூக்குரல் கேட்கைகாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின ஸ்ரீ தேவரீர் எல்லாரும் ஒக்க அனுபவிக்கலாம் படி இங்கனே எழுந்து அருளி இருப்பதே என்பார்கள் ஆயிற்று –

———————-

கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7

புஷ்பாஞ்சலி பண்ணி தேவர்கள் தொழா நிற்பர்கள்
நாலாம் பாட்டில் தேவர்கள் விபவதில் பணிந்ததை சொல்லி –
ஐந்தாம் பாட்டில் ஷீராப்தி நாதனை ஸ்துதித்தார்கள் என்றும் –
ஆறாம் பாட்டிலே அந்த ஷீராப்தி நாதனே ஹிமாவானில் அர்ச்சாவதாரமாக இருக்கிறான்
என்று அங்கு பிரணாமம் பண்ணினார்கள் என்று அருளிச் செய்து
இதில்
அர்ச்ச்யன் ஆகையாலே அர்ச்சனை பண்ணுகிறார்கள் என்கிறார்-

——————-

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசியது கூர
அரவமாவிக்கு மகம் பொழில் தழுவிய அருவரை இமயத்து
பரமனாதி யெம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும்தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-8-

அங்கு உண்டான சர்ப்பங்கள் அச் சோலையில் பரிமளத்தை காற்று வழியாலே பருகி தரியா நிற்கும் –
ப்ரஹ்மாதிகள் -சர்வ கந்த -என்கிற வஸ்துவை அனுபவித்து தரிப்பர்கள்-
சர்ப்பங்களோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற எல்லாருக்கும் ஆஸ்ரயணீயமான தேசம் ஆயிற்று
ஆன பின்பு நெஞ்சே நீயும் அத்தை ஆஸ்ரயிக்க பாராய் என்கிறார் –

—————-

ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-9-

வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உனை வாய்க் கொள்ள மாட்டேன் -என்று
அசித் சம்சர்க்கத்தை அனுசந்தித்து -நாம் அங்குத்தைக்கு யோக்யராய் பரிமாறுகை யாவது என் -என்று
தன் அயோக்யதையை அனுசந்திக்கைக்கு அவகாசம் இல்லாதபடி-ஆஸ்ரயணீயனான தான் சந்நிஹிதன் ஆகையாலே
ஆஸ்ரயிப்பாருக்கு ஒரு வருத்தமும் வாராத படி இருக்கிற மஹா ப்ரபாவன் வந்து வர்த்திக்கிற விலஷணமான ஹிமவானில்-
ஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து
பயப்படவும் வேண்டா –

——————

கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட களிறென்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே —1-2-10-

சர்பங்கள் ஆனவை மேகங்களை ஆமிஷமாக புத்தி பண்ணி மேல் விழுமா போலே
இத்தை அப்யசித்தார்கள் பக்கல் சர்வேஸ்வரன் போக்யதா புத்தி பண்ணி
அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கி-அவனாலே விஷயீ கரிக்கப் பெறுவார்கள்
இப் பாசுரங்களைச் சொன்னவர்களை அச் சொல் வழியே சர்வேஸ்வரன்
அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-

—————————-

முற்ற மூத்து கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடுயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே—-1-3-1-

அவதாரிகை –
முற்ற மூத்து-
ஹிமவானில் திருப் பிரிதியை ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தை குறித்து உபதேசித்தார் –
அது தம் த்வரைக்கு அநுரூபமாக மேல் விழுந்து திமிர்த்து இருந்தது –
மனனே மனுஷ்யாணாம் -என்று பந்த மோஷங்கள் இரண்டுக்கும் ஹேது மனஸ் இறே –
இது பகவத் விஷயத்தில் மேல் விழுகிறது இல்லை –
இனி பழையதுவே இறே மல்கு நிலை –
இனி அவன் தான் விரோதியான இவ் உடம்போடே தன்னை ஆஸ்ரயித்து பெறலாம்
படிக்கு ஈடாக இங்கே வந்து சந்நிஹிதனானான் –
இனி இந்த விரோதியான பிரகிருதி தான் -தேஹமாயும் இந்த்ரியங்களாதியாயும் -சப்தாதி
விஷயங்களையும் இறே விரோதி ஆவது –
அநுபாவ்ய விஷ்யங்களில் பிரதான போக்யங்கள் ஆவன ஸ்திரீகள் இறே –
அவர்கள் தாங்கள் ஆகிறார் தங்களைக் கொண்டு அருமைப் படுத்தி
இவனது சர்வ சொத்தையும் அபஹரிக்கும் அத்தனை போக்கி இவனுக்கு தங்கள்
உடம்பை கொடுக்கிறார்கள் -அன்றிக்கே கொடுத்தார்கள் ஆகில் -அது தன்னில்
அநுபாவ்யம் ஓன்று இல்லாதபடி -அல்பமாய் -அஸ்த்ரிமாய் -அநர்தா வஹமாய் –துராதாரமாய் இறே இருப்பது –
இனி தேஹம் ஆகிறது தான் ஏக ரூபமாய் இருப்பது ஓன்று அல்லாமையாலே
அவை தன்னுடைய அனுபவ யோக்கியம் உள்ளது சிறிது நாளாய் பின் அதுவும் கூட இல்லாதபடி இறே இருப்பது

இந்த்ரியங்கள் ஆகிற இவை –
ஆநந்த யாதி -என்கிறபடி
இவனுக்கு நிரதிசய ஆனந்தத்தைப் பண்ணிக் கொடுக்கும் பகவத் விஷயத்துக்கு
உடலாகை அன்றிக்கே -நிஹிதமான ஷூத்ர விஷயங்களிலே மூட்டி
துக்கத்தை விளைக்கக் கடவதாய் -பின்பு தான் உண்டாய் இருக்கச் செய்தேயும்
இக்கார்யம் தன்னையும் செய்ய மாட்டாதபடியாய் இறே இருப்பது –
இப்படி இருக்கையாலே இவ் வசித்து தனக்கே பாங்காய் இருக்கிற நாளிலே
அவனை ஆஸ்ரயித்து தன்னைக் கழித்துக் கொள்கைக்கு உடலாய் இருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு –
அவன் தானும் இது பாங்கான போதே தன்னை ஆஸ்ரயிக்கலாம் படி இங்கே ஸ்ரீ பதரியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
ஆனபின்பு இது அநுகூலமான போதே அவனை ஆஸ்ரயித்து இத்தைக் கழிப்பித்துக் கொள்வோம் என்று பார்த்து அதிலே ஒருப்படுகிறார்-

ஸ்ரீ பட்டரை ஒரு வியாபாரி -இது அல்பம் அஸ்தரம் என்று இத்தை த்யாஜ்யமாக நினைத்து இரா நின்றார்கள் சிலர் –
காண்கிற உடம்பு அவ்வருகு இல்லை என்று இது தன்னிலே போக்யதா புத்தி பண்ணி இரா நின்றார்கள் சிலர்
ஒன்றைப் பற்றி இவை இரண்டும் நடக்கிறபடி எங்கனே என்று கேட்டார் –
பாக்யாதிகர்க்கு இதினுடைய தோஷ தர்சனத்தைக் கொண்டு விடுகைக்கும் உடலாய் –
பாக்ய ஹீனருக்கு இதிலே போக்யதா புத்தி பண்ணி அநர்த்தப் படுகைக்கு உடலாம் படி
அவருடைய புண்ய பாபங்களை இட்டு அது அநுரூபமாகக் காணும் இத்தப் பண்ணிற்று -என்று அருளிச் செய்தார்-

பால்யே க்ரீடேந -பால்யத்தில் லீலோ உபகரணம் கொண்டு போது போக்கித் திரியும்
அல்பம் வெளி செறிப்பு பிறந்தவாறே விஷயங்கள் பிடித்துக் கொள்ளும்
பின்னையும் அது தன்னையும் அனுபவிக்க ஒண்ணாதபடி மூப்பு வரும்
ஆன பின்பு இது பாங்கான நாளிலே ஒரு ஷணம் முற்பட்டது உடலாய்
பலத்தில் ஆஸ்ரயமாம் பட விடுக்கும் -என்னா நின்றது இறே-

————————–

முதுகு பற்றி கைத்தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி
விதிர் விதிர்து கண் சுழன்று மேல் கிளைக் கொண்டு இருமி
இது என்னப்பர் மூத்த வாறு என்று இளையவர் ஏசா முன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே —1-3-2-

இந்த கிலேசங்களை தவிர்க்கும் அளவு அன்றிக்கே
நிரதிசய ஆனந்தத்தைப் பெற்று களிக்கலாம் படியான தேசம் ஆயிற்று –

—————-

உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் யாயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே—1-3-3-

ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே-நெஞ்சம் அவன் பக்கலில் அன்பை உடையையாய்
சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –வணங்குவோம் –

————–

பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே–1-3-4-

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன்னோடு சாம்யா பத்தியைக் கொடுக்குமவன்
கன்று மேய்த்து ரஷ்ய வர்க்கத்தை வரையாதே ரஷிக்குமவன்-குன்று எடுத்து அன்று நின்றான்-
அரியன செய்து நோக்குபவன் நித்ய வாசம் செய்யும் தேசம் ஆயிற்று

——————

பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே–1-3-5-

என்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –
சில நாள் அனுபவித்து பின்பு இருந்து வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா-

—————-

<எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-

ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் –ஆழ் கடலைக் கடைந்த அரியன செய்தும் அபேஷிதம் செய்து கொடுக்குமவன் –
அபேஷிதம் செய்யா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன் –
எம்பெருமான் -அவ்வடிவு அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய –ஸ்ரீ வதரியை ஆஸ்ரயிப்போம்

——————–

பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே–1-3-7-

வைப்பும் நங்கள் வாழ்வு மானான் –பரிஹரித்த அன்றே சாதனமுமாய் பின்னை பிராப்யனுமானவன் வர்த்திக்கிற –
வதரி வணங்குதுமே –ஒரு நாள் ஆதரித்து ஒரு நாள் சிரியாதவன் ஆயிற்று –அம்ருதம் சாதனம் சாத்யம் -என்னக் கடவது இறே-

———————-

ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே—-1-3-8-

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு கொடுத்து ஆதரிகைக்காக மாலை இட்டு இருக்கிற வனதான
ஸ்ரீ வதரியை வணங்குதுமே-

—————–

புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய த்ண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே –1-3-9-

அநுகூல வ்ருத்திகளை பண்ணா நின்றுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சாத்துகைக்கு ஈடான மாலைகளையும் ஏந்தி திரு நாமங்களையும் சொல்லி
பாடுவதாக ஆடுவதாக நிற்பர்கள்-
அத் திரளிலே புக்கு அவர்களில் ஒருவராய் ஆஸ்ரயிப்போம்

—————–

வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம்
அவ்வோபாதி பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –
ஆனபின்பு இவர் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே
சேதனாராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது

———————-

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-

திவ்யமாய் -விலஷணமாய் -செவ்வியை உடைத்தான பூக்களைக் கொண்டு தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி
கங்கா தீரத்திலே ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் -ஆனான்-

————————

கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே —1-4-2-

திருவடிகள் ஸஹ்யம் ஆகையாலே-திருக் காவேரிக்கு ஸஹ்ய பர்வதம் உத்பத்தி ஸ்தானம் ஆனால் போலே
ஆகாசத்திலே யாய்ப் பழையதான கங்கையின் கரை மேல் நித்ய வாசம் செய்து அருளுகிறான் –

————————–

உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் யாயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே—1-3-3-

ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி
பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடும் –

—————————–

துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே —1-4-4-

நம் விரோதியையும் போக்கி பரம பதத்தையும் நமக்குத் தரும் ஒரு கால் ஆஸ்ரயித்த மாத்ரத்திலே
நம் விரோதியைப் போக்கி நித்ய சூரிகள் இருப்பை நமக்கு பண்ணித் தரும் பரம க்ருபாளானவன் சர்வேஸ்வரன்-
நித்ய வாசம் செய்து அருளும் –

—————–

பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே —1-4-5-

சிவந்த பொன்னாலே செய்யப்பட மேருவிலே விளங்கா நின்றுள்ள இடமுடைத்தான சிகரத்தில் நின்றும்
இழிந்த கங்கையின் கரை மேல் ஸ்ரீ வதரி யாஸ்ரமத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் –

————-

தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே—–1-4-6-

ககுத்துக்களை உடைய ருஷபங்கள் ஏழையும் நசித்து அநந்தரம் விரோதியைப் போக்கப் பெற்ற ஹர்ஷத்தாலே
குளிர்ந்த மேகம் போலே இருந்துள்ள வடிவை உடையவனாய் அவ்வடிவைக் கொண்டு
என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவன் நித்யவாஸம் செய்து அருளும் திவ்ய தேசம்

————————-

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-

எனக்கு தன்னை தந்து அருளின –எனக்கு தந்தை-எனக்கு ஸ்வாமி-என்னை அனன்யார்ஹன் ஆக்கினான்–

—————–

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-8-

விச்வாமித்ரனை- அவன் ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே –
அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே அத்தை சொல்லிற்று

———————-

கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே–1-4-9-

எங்கும் ஒக்க பரந்து பெரு நீராய் அது அடைய தெளிந்து இருப்பதான கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே-

————————

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

பெரிய கடல் சூழ்ந்த பூமியை ஏகாதபத்ரமாக நடத்தி பின்பு ப்ரஹ்ம பதத்தை நிர்வஹித்து
அநந்தரம் -நித்ய ஸூரிகளோடு ஒரு கோர்வையாக பெறுவர் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவன் அபிசந்தி பண்ணின எல்லாவற்றையும் தரும் என்றபடி-ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவதரித்த பின்பு த்யாஜ்யமான
ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்துக்கு உள்ளே புக்கு போயிற்று காணும் –
ஈஸ்வரனோ ஆகவுமாம்– நித்ய ஸூரிகளோ ஆகவுமாம்– ராஜா ஆகவுமாம்
பிறந்து பாகவத சேஷத்வம் பெறலாம் ஆகலாம் ஆகில் -என்றாம் இவர் இருப்பது
என்று அருளிச் -செய்தாராம்-ஸ்ரீ பட்டர் ஸ்ரீ நஞ்சீயர் இடம்

—————————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-

ஆஸ்ரித விரோதியைப் போக்கி பிற்பட்டாருக்கும் உதவுகைக்காக வந்து வர்த்திக்கிற ஸ்ரீ சாளக்ராமத்தை
ஆஸ்ரயிக்கப் பாராய் -நெஞ்சே -என்கிறார்-

——————–

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே—1-5-2-

ராவணனை நிரசித்தபடியைச் சொல்லிற்று முதல் பாட்டில்
அதுக்கு உறுப்பாக அவனுடைய முதல் நாள் படை எழுச்சி சொல்லுகிறது -இதில்

———————

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே—1-5-3-

கண் வளர்ந்து அருளும் போதும் தன்னோடு பொருந்தாத ஆசூர வர்க்கத்துக்கு -அவர்க்கு என்றும் சலம் புரிந்து -என்கிறபடியே
சாத்ரவத்தையை உடையனாய் இருக்குமவன் ஏவம் விதன் ஆனவன் வந்து சந்நிதி பண்ணுகிற
ஜல சம்ருத்தியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற ஸ்ரீ சாளக்கிராமத்தை அடைந்து ஆஸ்ரயிக்கப் பாராய்-

————————-

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

அதுக்கும் முன்னே உண்டான ஸ்ரீ ராம வ்ருத்தாந்த்தைச் சொல்லுகிறது –
ஊர் அடங்கலும் மனுஷ்யர் குடி இருப்பு நெருங்கி இருக்குமா போலே
தாராவாகிற பஷிகளாலே நெருங்கி இருந்துள்ள வயலாலே சூழப் பட்டு இருந்துள்ள
ஸ்ரீ சாளக்கிராமம் அடை நெஞ்சே-

———————–

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

அதுக்கு முன்னாக சூர்பணகை நிரசனத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்வ ரஷணத்துக்கும் பரிகாரம் இல்லாத பசுக்களை நோக்குகைகாக தடுத்தான் ஆயிற்று
தடாகங்களாலே சூழப்பட்ட தர்ச நீயமான ஸ்ரீ சாளக்கிராமத்தை அடை நெஞ்சே –

————————–

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-6-

அநுகூல ஸ்பர்சம் உடைய த்ரவ்யமும்-பிரதிகூல பிராணனும் ஒக்க தாரகமாக வளர்ந்தவன் அழகாலே வசீகரிக்கும் படியான
வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு சென்று லோகம் ஏழையும் அளந்து கொண்டு
லோகம் ஏழையும் அளந்து கொண்டு தாவினவன் நித்யவாஸம் செய்து அருளும் சாளக்கிராமம் அடை நெஞ்சே

——————

ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-7-

சத்ருக்களான ஆசூர பிரகிருதிகள் அஞ்சும்படியாக யுத்தத்திலே நரசிம்ஹமாய் அத்விதீயன்
சந்திர சூர்யாதி களுக்கு அந்தர்யாத்மாதயா புக்கு இவர்கள் தான் என்னலாம் படியாய்
ஆகாசமாய தேஜோ பதார்த்தமாய் வாயு தத்வமாய் கார்ய கோடியில் மலையாய் -கடல் சூழ்ந்த பூமி
அசாதாராண திவ்ய விக்ரஹ உக்தனாய் இருக்கிறவன் -சாளக்கிராமம் அடை நெஞ்சே-

———————

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8-

ஈஸ்வர அபிமாநியாய்-தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில் கையும் ஒடுமாய் திரிந்த
துர் மாநியானவனுடைய சாப மோசத்தை பண்ணினவன்-சாளக்கிராமம் அடை நெஞ்சே-

———————

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9-

வழு விழா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் –
நித்ய சூரிகளும் – –கேவல ப்ராஹ்மணரும் –தேவரீரே எங்களுக்கு ஆஸ்ரயணீ யனாகவே எங்களுக்கு அருள வேணும்
என்று தனித்தனியே சொல்லா நின்று கொண்டு சேருகிற ஸ்ரீ சாளக்கிராமம்

———————

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-

நித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த – ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –

————————

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன் –
இது என்னுடைய பூர்வ வ்ருத்தம் இருந்தபடி -என்கிறார் –
விஹிதங்களை அனுஷ்டித்து சம தமாதி ஆத்ம குண பேதராய் இருப்பார் இறே -இதுக்கு அதிகாரிகள் –
அதில் நான் செய்து நின்ற நிலை இது என்கிறார் –

———————

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் -1-6-2-

திருவடிகளிலே புக்கு சரணம் புக்கவாறே முன்பு தாம் செய்து போந்த படிகள் அடங்கலும் தோன்றிற்று
அத்தாலே போக்கினேன் பொழுதை வாளா -என்கிறார் –
பகவத் விஷயத்தில் அடிக் கழஞ்சு பெற்று செல்லக் கடவ காலத்தை வ்யர்த்தமே போக்கினேன்-
பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யனாய் கொண்டு அவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கக் கடவ
நீ எனக்கு உன் திருவடிகளிலே வந்து சரணம் புகலாம் படி சந்நிஹிதன் ஆகையாலே சரணம் புகுந்தேன் –

————–

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3

போக்கினே பொழுதை வாளா -என்றார்
சிலவற்றை செய்து இறே போது போக்குவது செய்தபடி தான் எங்கனே என்ன அது தன்னை சொல்கிறார்
தொண்டன் ஆகிறான் பரதந்த்ரன்
அது அப்ராப்த விஷயங்களில் ஆன போது அபகர்ஷ ஹேதுவாக கடவது –
ப்ராப்த விஷயங்களில் ஆன போது உத்கர்ஷ ஹேதுவாக சொல்லக் கடவது –
பிரயோஜனாந்த பரர்க்காக கடலை நெருங்க கடைந்து அபேஷித சம்விதானம் பண்ணும்படி அன்றோ
இவ்வாத்மாவோடு தேவரீர் உடைய சம்பந்தம் –
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு அவர்கள் உடைய கூக்குரல் கேட்க்கைகாக அங்கே
திருப்பாற் கடலிலே சாய்ந்தாற் போலே
எனக்கு வந்து சரணம் புகலாம் படி இங்கே வந்து சந்நிதி பண்ணி அருளிற்று –

——————

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4-

அத்தனையோ -இன்னும் ஏதேனும் செய்தது உண்டோ என்ன-இன்னம் செய்ததுக்கு சொல்கிறார் –
ஏதேனும் தோற்றிற்று செய்து திரிந்தார்க்கும் வந்து பற்றலாம்படி
சரண்யனான நீ வந்து சந்நிஹிதன் ஆகையாலே திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
நைமி சாரணி யத்துள் எந்தாய் –இவன் விஷயங்களில் பிரவணன் ஆகிறது கண்ணுக்கு இலக்காமை இறே
அவ்வோபாதி நம்மையும் கண்ணுக்கு இலக்காக்கவே இவன் நம் பக்கலிலே ப்ரவணனாம் என்று
உன்னை கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு வந்து நின்றாய் –
நிஷேத விதியும் கிடக்க செய்தே-அப்ராப்தங்களிலே பிரவணன் ஆகிறது அவை கண்ணுக்கு இலக்காகை சுட்டி இறே
விதி விஷயமுமாய் -உத்தேச்யமான வஸ்து-சந்நிஹிதம் ஆனால்
இவன் விரும்பானோ என்று உன்னை கண்ணுக்கு இலக்காக்கி வைத்தாய் –என்கிறார் நான்காம் பாசுரத்தில் –

———————-

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-5-

அத்தனையோ-இன்னும் ஏதேனும் உண்டோ -என்ன திரு உள்ளத்துக்கு பொறுக்க ஒண்ணாதவையும் எல்லாம் செய்து போந்தேன் என்கிறார் –
முன்பு எல்லாம் தோன்றின படி செய்து திரிந்து அவற்றுக்கு வரும் பலத்தைக் கேட்டு பயப்பட்டு போக்கடி தேடி
புறம்பு ஒரு புகல் காணாமையாலே தேவரீர் திருவடிகளில் சரணம் புகுந்தேன் –என்கிறார் –

——————-

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-

அத்தனையோ இன்னும் செய்தது உண்டோ என்ன கை தொடனாய்க் கொன்றே போந்தேன் –
பரஹிம்சையே பண்ணி தோற்றின படி திரிந்து அதுக்கு வரும் பலத்தை கேட்டு அஞ்சி
அநந்தரம்
நமக்கு ஒரு புகல் ஏதோ என்று ஆராய்ந்து திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –
நான் நாடிக் கிட்டினேன் ஆக நினைத்து இருந்தேன்
நீ எனக்கு முன்பே நாடி-பூர்வஜனாய் திரு நைமி சாரணி யத்திலே வந்து சந்நி ஹிதனானாய்-என்கிறார்-

———————-

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்-1-6-7-

அடியேன் என்று அஹ்ருத்யமாய்-நான் ஒரு உக்தி மாத்ரமாய் சொல்ல-அத்தை சஹ்ருதயமாக்கி
நித்ய ஸூரிகளுக்கே உன்னை அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்க கடவ நீ
என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து விடாதே இருந்தாய் –
அஸூர வர்க்கத்துக்கு என்றும் ஒக்க நஞ்சான தேவரீர் உன் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –
நன்னெறி காட்டுகைக்கு அணித்தாக நீ வந்து இருந்தாய்-தொல் நெறிக்கு எதிர் தட்டாய் அத்தை ஆயிற்று நினைக்கிறது-

————————-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-8–

திருக் குறுங்குடியில் ஸ்ரமஹரமான வடிவைக் கொடு வந்து நீ சந்நிஹிதன் ஆகையாலே – நல்ல சந்தஸ் ஸுக்கள் ஆர்ந்துள்ள
இனிய சொற்களாகிய பல மலர்களைக் கொண்டு அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி திருவடிகளிலே விழுந்து –
அனர்த்தங்களை விளைக்கைக்கு உறுப்பான வற்றியே சொல்லிப் போந்த என் நாவாலே –
ஸ்துத்யனான நீ என்னுடைய ஸ்துதிக்கு விஷய பூதனாய் கொண்டு திரு நைமி சாரணி யத்துள் வந்து சந்நி ஹிதன் ஆனாய்

———————

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-9-

தம்முடைய வ்ருத்தி இருந்த படியை கீர்த்தித்தார் இறே முன்பே –
இனி நானுடைத்தவம் என்கிறது அவன் தன்னையே –
நான் பண்ணின தபச்சாலே-அவனாலாயே-அவன் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –

————————-

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

ஸ்ரீ பகவத் விஷயத்தில் ஆசை மிகுந்து வருகிற ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த
சப்த சந்தர்பத்தை அர்த்த சஹிதமாக கற்க வல்லவர்கள் –
இருந்தவனுக்கு ஒதுங்க நிழல் பண்ணிக் கொடுத்தபடி ஆயிற்று –
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாம் அது தானே சித்தம் இறே
அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தையும் நிர்வஹித்துப் பின்னை நித்ய ஸூரிகள் பதத்தை பெறுவர்-

———————

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

ஆனையினுடைய மஸ்தகத்தை கிழித்து அதினுடைய கொம்பைப் பறித்து பகவத் பக்தியாலே திருவடிகளிலே இட்டு
ஆஸ்ரயியா நிற்கும் ஆயிற்று சிம்ஹங்கள் ஆனவை பத்திமையால் அடிக்கீழ் இட்டு இறைஞ்சும் –
இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும் பகவத் பக்தி ஒருபடிப்பட்டு செல்லும் ஆயிற்று
சீற்றம் விக்ருதியாய் பகவத் பக்தி பிரக்ருதியாய் இருக்குமாயிற்று-

——————-

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே–1-7-2-

கையில் வில்லை உடையராய் இருந்துள்ள வேடருடைய ஆர்ப்பரவம் மாறாத தேசம் ஆயிற்று
அவர்கள் கையில் பயாவஹமான துடியோசையும் பறிக்கிற ஆர்ப்பரவுமேயாய் செல்லா நிற்கும் ஆயிற்று –
உகந்து அருளின நிலங்களிலே உள்ளது ஆகையாலே-அவர்கள் கையில் துடி ஓசையோடு
அவர்களைப் பறிக்கிற த்வனியோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது ஆயிற்று –
ஸ்ரீ நரசிம்ஹத்தின் உடைய சீற்றத்தோடு -அங்கு உள்ளார் உடைய சீற்றத்தோடு –
அவர்கள் வ்யாபாரத்தோடு -வாசி அற்று இருக்கிறது ஆயிற்று – இவருக்கு-

——————-

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே-1-7-3-

தன்னிலே உண்டான நெருப்பாலே தேய்ந்த வேய்களும் வண்டினம் முரலும் சோலையோபாதியாக தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –
அது இது உது என்னலாவன வல்ல -என்னக் கடவது இறே –
பிறருக்கு குற்றமாய் தோற்றுமவையும் உபாதேயமாக தோற்றுகை இறே ஒரு விஷயத்தை உகக்கை யாகிறது –

———————

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே–1-7-4-

அத்தேசத்தை சென்று ப்ராபிக்க ஆசைப்படுகிறவர்தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-என்கிறார் ஆயிற்று –
ஸ்ரீ நரசிம்ஹனுடைய அழகைக் கண்டு கண் எச்சில் படுவார் இல்லை என்னுமத்தைப் பற்ற –
அந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவனை பல்லாண்டு –என்னுமவர்கள் இறே
அநாஸ்ரிதர்க்கு சென்று கிட்ட ஒண்ணாது ஆயிற்று-ஹிரண்யன் போல்வாருக்கு சென்று பிரவேசிக்கப் போகாது ஆயிற்று –

———————

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே-1-7-5-

இப்படி இருக்கையாலே ஒருவருக்கும் சென்று
காண்கைக்கு அரிதாய் இருக்கும் ஆயிற்று
பரம பதத்தோ பாதி இந் நிலத்துக்கும்
நமக்கு பயப்பட வேண்டா என்று
ஹ்ருஷ்டர் ஆகிறார்

———————-

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே-1-7-6-

புலி பெரு வழியிலே சஞ்சரியா நின்றுள்ள ஆனையினுடைய மஸ்தகத்தை பிளந்து அத்தைப் பானம் பண்ணுகைகாக
அவை போகிற பெரு வழியிலே அவற்றைச் சுவடு ஒத்தி நிற்கும் ஆயிற்று –
ஆஸூர பிரக்ருதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்குஸ்ரீ நரசிம்ஹம் அடிச்சுவடு ஒத்ததுமா போலே-

———————

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே-1-7-7-

உகவாதார்க்கு கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டி கண் எச்சில் பட ஒண்ணாத படி இருந்த தேசம் ஆயிற்று

——————–

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

சதுர்முகனும் தேவர்களில் தலையான ருத்ரனும் முன்பு ஹிரண்யனுக்கு அஞ்சி மனுஷ்ய வேஷம் கொண்டு திரிந்தவர்கள்
அவன் பட்ட பின்பு தந்தாமுடைய தரம் குலையாதபடி முறையாலே வந்து சேஷித்வ ப்ராப்தியாலே ஸ்தோத்ரம் பண்ண —
அவர்களுக்கு ஸ்துத்யனாய்க் கொண்டு அவ்விடத்திலே இதுக்கு முன்பு அனுபவித்து அறியாத
ஸ்ரீ நரசிம்ஹமாயக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன் உடைய ஸ்தானம் –

——————

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே-1-7-9-

எனக்கு பாங்கான நெஞ்சே-நீ எனக்கு பாங்காய் இறே இப் பேறு பெற்றது –நாம் தொழுது உஜ்ஜீவிப்போம்
இது இத் திருமொழியில் பாட்டுக்கு எல்லாம் கிரியா பதம் –
பிரதிகூல நிரசனத்துக்காக இவ்வடிவு கொண்டது போய்-அநு கூலர் பக்கலிலேயும் வந்து பலிக்கும் அளவாயிற்று
என்று அந்த சீற்றத்தை ஆற்றுகைக்காக ஸ்ரீ பெரிய பிராட்டியார் வந்து கட்டிக் கொள்ளும் ஆயிற்று –
இவளை அணைத்தால் இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரம் தோளும் உண்டாம் ஆயிற்று

————————

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-

சிங்க வேள் குன்றம் தனக்கு வாஸஸ்த்தாநமாக உடையவன்-சம்சாரிகளான நம் போல்வாருக்கும் சென்று ஆஸ்ரயிகலாம் படி
இருக்கிற உபகாரகனை அநு பாவ்யமாம் படி பண்ணித் தந்தவர் -ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற
தமிழ் சாஸ்திர உக்தமான படி யைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே

———————-

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-1-

ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து குருந்தை முறித்தாற் போலே என் விரோதியைப் போக்கி உபகரித்தவன் –
அதின் நினைவின் படி கார்யம் செய்கை அன்றிக்கே என்னுடைய கார்யம் செய்த உபகாரகன் –
இவ் வதாரத்துக்கு அடியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து சந்நிதி பண்ணின படியைச் சொல்லுகிறது –
பகாசுரனை வாயை கிழித்து இப்படி விரோதிகளை போக்குகை பழையதாக செய்து போருகிறவர்
வந்து வர்த்திக்கிற ஸ்தானம் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே–

———————-

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே -1-8-2-

கொண்ட கொண்ட வடிவம் எல்லாம் இவருக்கு உத்தேச்யமாய் இருக்கும் ஆயிற்று – அவன் கொண்ட வடிவம் ஆகையாலே –
கிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய்-கலி யுகத்தில் கறுத்த நிறத்தை உடையவனாய்
த்வாபர யுகத்தில் வந்தவாறே ஸ்யாமமான நிறத்தை உடையவனாய் இருக்கும் என்று இவ்வடிவுகளை அநு சந்தித்து
தெள்ளியார் -உண்டு -அநந்ய பிரயோஜனர் ஆனவர்கள் நாள் தோறும் வணங்குவர்கள் ஆயிற்று –
நித்ய ஸூரிகளைப் போலே நித்ய அனுபவம் பண்ணும் –ஸ்ரீ திரு வேம்கடம் அடை நெஞ்சே-

———————

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -1-8-3-

ஒரு மலையை எடுத்து பரிஹரித்தவன்-ஒரு மலையிலே நின்று ரஷிக்கப் பார்த்தான்
அவனை ஆஸ்ரயிக்கப் பார் நெஞ்சே என்கிறார்-

————————-

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே-1-8-4-

குரவை கூத்தை அநு சந்தித்து–அதிலே ஈடுபட்டு யேத்துமவர்கள் உடைய ஹ்ருதயத்தை விடாதே வர்த்திக்குமவன் –
இட வெந்தை- மேவிய வெம்பிரான் –ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்காக ஸ்ரீ திருவிடவெந்தையிலே வந்து சந்நிஹிதன் ஆனால்
போலே ஆயிற்று-யேத்துமவர்கள் நெஞ்சை விட்டுப் போக மாட்டாதபடி –

—————

வண்கை யானவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் வ்யாபாரம் ஓவும் தனையும் பார்த்து இருந்து பிற்பாடனான குறை தீர
ஆஸ்ரிதருக்கு முற்பாடனாக உதவுகைக்காக வந்து இருக்கும் தேசம் ஆயிற்று –அந்த திவ்ய தேசம் அடை நெஞ்சே –

————————–

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

திருமந்தரம் சொன்ன சிறுக்கனுக்கு உதவினவன்-திருநாமம் சொன்னார் எல்லார் உடைய
சம்சார துரிதத்தைப் போக்குகைகாக வர்த்திக்கிற திருமலையை அடையப் பாராய்-

—————

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே-1-8-7-

ஜகதாகாரனாய் நின்று தான் கொடுத்த உடம்பைக் கொண்டு தன்னுடைய திரு நாமத்தை சொல்லி
ஆஸ்ரயிக்கலாம் படி நிற்கிறவன் –

————————

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே-1-8-8-

ஜகதாகாரனாய்–திவ்ய மங்கள விக்ரஹ உக்தனாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-பிராட்டியும் தானுமாய்
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –நித்யவாஸம் செய்து அருளும் திருவேம்கடம்-

——————-

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

ஓர் அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவாருக்கு –
அப்படியே இடர் வந்த போது-எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு-போரக் கடவதான இனிய திருநாமமான
எட்டு எழுத்தையும் சொல்லுமவர்களுக்கு-சத்தா ஹாநி வாராமே அவர்கள் உஜ்ஜீவிக்கும்படி அங்கீகரித்து –
பின்னையும் அவர்களுக்கு விரோதியான சம்சார பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் உபகாரகன் வர்த்திக்கிற ஸ்தானம்

—————–

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே–1-8-10-

தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய் பின்பு
நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி ஆகப் பெறுவர்கள் –இதில் சங்கை வேண்டா-

———————-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1-

பகவத் குணங்கள் உத்தேச்யம் என்று அறியும் போது-சதாச்சார்யா உபதேசமும்-சாஸ்திரமும் வேணும்
சம்சாரத்தில் த்யாஜ்யதையில்-பிரத்யஷமே அமையும் இறே-இவை தானே உபாத்யாயர்களாக வாயிற்று விட்டது-
அவனுடைய பாந்தவமும்-சாபலமும் ப்ரத்யஷிக்கலாய்யிற்று இருக்கிறது –
நீயே சர்வ வித பந்துவும் என்று நினைத்து – அஹம் சர்வம் -கரிஷ்யாமி என்று நித்ய ஸூரிகளைக் கொள்ளும் அடிமை
என்னைக் கொண்டு அருள வேணும் –

——————

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-2-

பந்துக்கள் அல்லாதவரை பந்துக்கள் என்று நினைத்து இருந்தேன் –
அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும் -என்று சரணம் புகுந்தார் முதல் -பாட்டில் –
போக்யம் அல்லாதவற்றில் போக்யதா புத்தி பண்ணிப் போந்தேன்
அக் குற்றத்தை பொறுத்து அருள வேணும் என்று சரணம் புகுகிறார் இதில்-

———————-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-3-

பந்துக்கள் அல்லாதாரை பந்துக்கள் என்றும் போக்யம் அல்லாதார் பக்கலிலே போக்யதா புத்தி பண்ணியும் போந்த அளவேயோ –
தேவர் திரு உள்ளத்துக்கு அசஹ்யமாம் படி பர ஹிம்சையே பண்ணிப் போந்தேன் -என்கிறார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால்-பர ஹிம்சையாகில் பண்ணிற்று
இப்போது ஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணி வந்தாப் போலே இருக்கச் சொல்லுகிறது என் என்ன –
அவனையே பார்த்து தம்மைப் பாராதே வார்த்தை சொல்லுகிறார் –
அவனைப் பார்த்தால் -அரி ப்ராணான் பரித்யஜ்ய -என்று இறே இருப்பது –ப்ராணா நபி -என்னா விட்டது
அவற்றைக் குவாலாக நினைத்து இராமை-காலிலே விழுந்தவனை முன்புத்தை சாத்ரவம் பாராதே
ரஷித்த இதோர் ஏற்றமோ -என்று இருக்குமவர் ஆயிற்று-

———————-

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-4-

ஏதேனும் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ணுகிறது உண்டோ என்னில்
பலத்தோடே வ்யாப்தமாய் இருப்பதொரு சாதன அனுஷ்டானம் பண்ணப் பெற்றிலேன்-
ஜன்ம பரம்பரைகளிலே அலந்து முசித்தேன் –
இனி ஒரு ஜன்மம் வரும் என்று அஞ்சி ஏங்க வேண்டாதபடியான தாஸ்யத்திலே என்னை மூட்ட வேணும்-

——————–

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-5-

அரணாக போரும்படியான திண்ணிய வரைகளாலே சூழப்பட்ட திருமலையை வாஸ ஸ்தானமாக உடைய நிருபாதிக
பந்துவானவனே –அடியேனை –என்னுடைய பாப அநு கூலமாக வன்றிக்கே உன்னோடு உண்டான நிருபாதிக பாந்தவ
அநு ரூபமான கைங்கர்யத்தில் என்னை மூட்ட வேணும் –

——————————

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

கீழே அப்பா என்றார் இங்கே அண்ணா என்னா நின்றார்-தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் விட்ட
உறவு முறைக்கு எதிர்தட்டான எல்லா உறவு முறையும் எம்பெருமானே என்றாய் இற்றே இவர் இருப்பது –
அடியேனை –வெளிறு கழிந்தால் சம்பந்தம் நித்ய ஸூரிகளோடு ஒத்து இருக்கும் இறே எனக்கும்
ஆன பின்பு அவர்களைக் கொண்டருளும் அடிமை என்னைக் கொண்டருள வேணும்

—————————

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-7-

அரியே –என்னுடைய பிரதிபந்தகத்தை போக்குகைக்கு ஈடான-பராபி பவந சாமர்த்யத்தை உடையவனே –
ஆட் கொண்டருளே –பிறர்க்கே உழையாமல் ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும்.

———————-

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-8-

எனக்கு ஆற்றாமை உண்டானால்-பிறப்பே யாற்றாமை உடைய உன்னை என் ஸ்வரூப அநு ரூபமான
கைங்கர்யத்தை தர வேணும் என்று பிரார்த்திக்க வேண்டுகிறது என் –
நான் ஆற்றாமை உடையேனாய் -இருந்தேன்-ஆற்றாமை பிறப்பது எப்போதோ என்று பார்த்து நிற்குமவனாய் இருந்தாய் நீ –

————————-

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-9-

எனக்கு புறம்பு பற்று இல்லை என்றேனே எனக்கு பற்றான நீ ஸ்ரீ லஷ்மீ பதியாய் இருந்தாயே
ஆனபின்பு என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தை கொண்டருள வேணும் –

—————-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே-1-9-10-

இவற்றை அப்யசிப்பாருக்கு ஒரு பாபங்களும் வந்து கிட்டாது-பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகங்கள் அடங்க ஓடிப் போம் –
பாவமே செய்து பாவி ஆனேன் -என்று இவரும் சொல்லி-ஈஸ்வரனும் அத்தைப் பொறுத்த பின்பு இவருக்கு பாபம் இல்லையே –
இவருடைய பரிகரமாய்-இவருடைய பிரபந்தத்தை அதிகரிக்கவே-இவர்கள் பாபங்களைப் போக்கும் ஆயிற்று –

———————-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே-1-10-1-

ப்ரஹ்மாதிகள் ஆஸ்ரயிக்கும் ஸ்வ பாவனாய் ஸ்ரீ திருமலையை வாஸ ஸ்தானமாகக் கொண்டு
சந்நிதி பண்ணின நிருபாதிக பந்துவே-இங்குத்தை இருப்பு இடர் என்று
என் நெஞ்சில் பட்ட பின்பு என் கைங்கர்ய விரோதியைப் போக்கி அருள வேணும்-

——————-

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே-1-10-2-

கீழில் பாட்டிலும் இப் பாட்டிலும் அவனுடைய விரோதி நிரசன சீலதையைச் சொல்லி
என் துக்கத்தைப் போக்கித் தர வேணும் என்கிறார்-
ரஷணத்துக்கு மாலை இட்டு முடி சூடி இருக்கிற நீ இனி என் விரோதியை போக்குகை என்று ஓன்று இல்லை
என் பக்கலில் கிருபையைப் பண்ணி அருள வேணும் –

————

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே-1-10-3-

சர்வ ரஷகனாய் பூமிக்காக நிர்வாஹகனாய் இருந்தபடியைச் சொல்லுகிறது-
பரம பதத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் மிக்குப் போலே காணும் ஸ்ரீ திருமலை -இருப்பது
ஆரா அமுதே –இவ்வம்ருதம் ஸ்வர்க்கத்தில் அல்ல போலே காணும் இருப்பது –
அடியேற்கு –இதுவே போக்யம் என்று இருக்கிற என்னை இத்தை அனுபவிப்பித்து அருள வேணும்-

——————-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண் டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-

ஸ்ரீ யசோதை பிராட்டியும் இந்த்ரனும் பெற்ற பேற்றின் அளவில்லாத என்னுடைய
கைங்கர்யத்தை தந்து அருள வேணும்-என்கிறார்

——————–

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணையாய் குறிக்கொள் எனை நீயே—1-10-5-

இனி இரண்டு பாட்டாலே தமக்கு உபகரிக்க ஒருப்பட்டபடி சொல்லுகிறாராய் –
அதுக்கு உறுப்பாக திருமலையிலே வந்து நின்றபடியை ஐந்தாம் பாசுரத்தில் சொல்லி
அநந்தரம் ஆறாம் பாசுரத்தில் திரு உள்ளத்தில் புகுந்த படியைச் சொல்லுகிறார் –
மிடுக்கை உடைய திரு வநந்த வாழ்வானை படுக்கையாக உடையவனே-
ப்ராப்தி ஒத்து இருந்த பின்பு அவன் பெற்ற பேறு நானும் பெறுவேனாக திரு உள்ளம் பற்ற வேணும்-

———————-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

உம்முடைய பக்கல் விலக்காமைக்கு அவசரம் பார்த்து இருக்கிற நாம் உம்மை இரக்க விட்டு வைப்புதுமோ
என்று இசைவு பெற்றவாறே நெஞ்சிலே வந்து புகுந்தான் –என் நெஞ்சிலே வந்து புகுந்து
போக மாட்டு கிறிலன்-இவ்வளவும் செய்து பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்
தன் பேறான அருளைப் பண்ணும் தலைமையை உடையவன் –

——————–

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே—1-10-7-

ருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியை லபித்து அவளோடு கூட அரவத்தமளியினோடும் -என்கிறபடியே
வந்து இனி ஒருகாலும் பேரான் என்று தோற்றும்படி இருந்தான் ஆயிற்று –

————————

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே—1-10-8-

ருஷபங்களை அழியச் செய்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியைக் கை பிடித்துக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்தில் வந்து
புகுந்த பின்பு இனி இந்த அந்தர் ஹஸ்யத்துக்கு எடுத்துக் கை நீட்டுகை ஒழிய வேறு ஓன்று அறியேன் -என்கிறார் –
இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர
ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –

——————–

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே—1-10-9-

ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –
எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் –ஆனபின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ
இத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி
அரை ஷணம் அவனை ஒழியச் செல்லாமை உண்டாகை இறே பரபக்தி -யாவது-வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்

——————

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லாரவர் வானவர் ஆகுவர் தாமே—-1-10-10-

அங்குத்தை திரு வேடர் எப்போதும் ஏறிட்ட வில்லும் தாங்களுமாய் உணர்ந்து நோக்குவார்கள் ஆயிற்று –
ஸ்ரீ குஹப் பெருமாள் இரவு எல்லாம் உணர்ந்து நோக்கினாப் போலே –
இவற்றை அப்யசிக்க வல்லார்கள் நித்ய ஸூரிகள் உடைய நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் -வியாக்யானங்களுடன்–

May 31, 2019

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –
பெரியாழ்வார் -4–1–6-/-4-7-8-/-4-7–9-/-4–9–4-/-5–4–10-/
நாச்சியார் -1–4-/-9-8-/-12–9-/-12–10-/
பெரிய திருமொழி -6–6–7-/-6–8–7-
நான்முகன் -71-
திருவாய் மொழி -4-6-10-/-5-3–6-/

———————-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச-
வரண்டு வளைந்து -நரம்பும் எலும்பும் -தோன்றும்படி இருக்கையாலே
பொல்லாதான வடிவை உடைய பேய்ச்சியான அவள் முடியும்படியாக –
புணர் முலை வாய் மடுக்க வல்லானை —
அந்த வடிவை மறைத்து -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி -என்கிறபடியே
யசோதை பிராட்டி யோடு ஒத்த வடிவைக் கொண்டு வருகையாலே
தன்னில் தான் சேர்ந்துள்ள முலையில் -அவள் முலை கொடா விடில்
தரியாதாளாய் கொண்டு -முலைப்பால் உண்-என்று கொடுத்தால் போல் –
தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் கொண்டு பெரிய அபிநிவேசத்தோடே
வாயை மடுத்து உண்ண வல்லவனை –
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி -என்கிறபடியே வருகிற போதே அவள் க்ர்த்ரிமம் எல்லாம்
திரு உள்ளத்திலே ஊன்ற தர்சித்து இருக்க செய்தே -அவள் தாயாகவே இருந்து
முலை கொடுத்தால் போலே -தானும் பிள்ளையாகவே இருந்து முலை உண்டு அவளை முடித்த
சாமர்த்தியத்தை சொல்லுகிறது -வல்லானை-என்று
மா மணி வண்ணனை
விடப்பால் அமுதால் அமுது செய்திட்ட -என்கிறபடியே அவளுடைய விஷப் பாலை
அம்ர்தமாக அமுது செய்து -அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக்
கொடுக்கையாலே -நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான திருமேனியை உடையவனாய் இருந்தவனை
மருவும் இடம் நாடுதிரேல்
திரு உள்ளம் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம் தேடுகிறி கோள் ஆகில்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு- பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –

—————————————————

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4 7-8 –

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து-
கடலை செறுத்து-அணை கட்டி – படை வீடு செய்தது ஆகையாலே -திரை பொரு கடலால்
சூழப் பட்டு இருப்பதாய் -திண்ணியதான மதிளை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ மத் த்வாரகைக்கு ராஜாவானவன்
வண் துவராபதி மன்னன் -இறே
தன் மைத்துனன் மார்க்காய் –
ஸ்ரீ கிருஷ்ண ஆஸ்ரய ஸ்ரீ கிருஷ்ண பலா ஸ்ரீ கிருஷ்ண நாதச்ச பாண்டவா –என்கிறபடியே
தன்னையே தங்களுக்கு ஆஸ்ரயமும் -பலமும் -நாதனும் ஆகப்
பற்றி இருக்கிற -தன் மைத்துனமாரான பாண்டவர்களுக்கு பஷ பாதியாய் நின்று
அரசனை அவிய அரசினை அருளும்-
பொய் சூதிலே அவர்களை தோற்ப்பித்து-அவர்கள் ராஜ்யத்தை தாங்கள் பறித்து கொண்டு
பத்தூர் ஓரூர் கொடுக்க சொன்ன இடத்தில் கொடோம் என்று தாங்களே அடைய
புஜிப்பதாக இருந்த துரியோததா நாதி ராஜாக்கள் விளக்கு பிணம் போலே விழுந்து போகப்
பண்ணி -ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும்
அரி புருடோத்தமன் அமர்வு –
மகத்யாபதி சம்ப்ப்ராப்தே ச்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
ஆபத் தசையிலே ஸ்மரிக்க படுபவனாக -ஸ்ரீ வசிஷ்ட பகவானாலே
திரௌபதிக்கு சொல்லப் பட்டவனாய் –
ஹரிர் ஹராதி பாபானி துஷ்ட சித்ரை ரபி ஸ்மர்த-என்கிறபடியே
ஸ்மரித்த வர்களுடைய சகல பாபங்களையும் போக்கும் அவனான புருஷோத்தமன் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம்
நிரை நிரையாக நெடியன யூபம் –
ஓரோர் ஒழுங்காய் கொண்டு -நெடிதாய் இருந்துள்ள -பசுக்கள் பந்திக்கிற யூபங்கள் ஆனவை
நிரந்தரம் ஒழுக்கு இட்டு-
இடைவிடாமல் நெடுக சென்று இருப்பதாய்
இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை-
இரண்டு கரையும் ஒத்து யாக தூமம் கந்தியா நிற்கிற கங்கையினுடைய கரை மேல்
கண்டம் என்னும் கடி நகரே –

———————————————

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –
வட திசை மதுரை

வடக்கு திக்கில் மதுரை –
தென் திசை மதுரை உண்டாகையாலே விசேஷிககிறது
சாளக் கிராமம்
புண்ய ஷேத்ரங்களில் பிரதானமாக எண்ணப்படும் ஸ்ரீ சாளக் கிராமம்
வைகுந்தம்-
அப்ராக்ருதமாய் -நித்ய வாசத்தலமான ஸ்ரீ மத் வைகுண்டம்
துவரை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய மணவாளராய் வீற்று இருந்த ஸ்ரீ மத் த்வாரகை
யயோத்தி
அயோத்தி நகர்க்கு அதிபதி -என்கிற படியே ஸ்ரீ ராம அவதார ஸ்தலமாய் அத்யந்த அபிமதமாய் இருந்துள்ள ஸ்ரீ அயோதியை
இடமுடை வதரி
-நர நாராயண ரூபியாய் கொண்டு -திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளி
உகப்புடனே எழுந்து அருளி இருக்கும் ஸ்தலமாய் -இடமுடைத்தாய் இருந்துள்ள ஸ்ரீ பதரி
இடவகயுடைய –
இவற்றை வாசச்தானமாக உடையனான
வெம் புருடோத்தமன் இருக்கை
ஆஸ்ரிதரான நமக்கு இனியனான புருஷோத்தமன் உடைய இருப்பிடம்
தடவரை அதிர தரணி விண்டிடிய –
பகீரதன் தபோ பலத்தாலே இறக்கிக் கொடு போகிறபோது
வந்து இழிகிற வேகத்தைச் சொல்லுகிறது -உயர்ந்த நிலத்தில் நின்றும்
வந்து இழிகிற வேகத்தால் மந்த்ராதிகளான பெரிய மலைகள் சலிக்கும்படி
தரணி வண்டிடிய
பர்வதத்தில் நின்றும் பூமியில் குதிக்கிற அளவிலே பூமி விண்டு இடிந்து விழ
தலை பற்றி கரை மரம் சாடி
வர்ஷங்களுடைய தலை அளவும் செல்லக் கிளம்பி
கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்து
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படி -வேகித்து கொண்டு இழியா நின்ற கங்கை உடைய கரை மேலே
கண்டம் என்னும் கடி நகரே –

———————–

ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன்
வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய-
நரகாசுரன் திரட்டி வைத்த -ராஜ கன்னிகைகளாய் -அவனை நிரசித்த அநந்தரம்
அங்கு நின்றும் கொண்டு வந்து -திருமணம் புணர்ந்து அருளின பதினாறாயிரம் தேவிமார்
ஆனவர்கள் -தங்களுடைய பிரேம அனுகுணமாகவும் -ப்ராப்ய அனுகுணமாகவும் நித்ய பரிசர்யை பண்ண
துவரை என்னும் அதில்-
ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி நிற்க செய்தே -இங்கு உள்ள எல்லாரையும் அங்கு கொடு
போய் வைக்க திரு உள்ளம் பற்றி -ஸ்வ சங்கல்ப்பத்தாலே உண்டாகினது ஆகையாலே
அத்யந்த விலஷணமாய்-ஸ்ரீ மத் த்வாரகை என்று பிரசித்தமான திருப் படை வீட்டிலே
நாயகராகி வீற்று இருந்த மணவாளர்-
அவர்களுக்குத் தனித் தனியே -என்னை ஒழிய அறியார்-என்னும்படி நாயகராய் கொண்டு
தன்னுடைய வ்யாவர்த்தி தோன்ற எழுந்து அருளி இருந்த மணவாளர் ஆனவர் –
மன்னு கோயில் –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள சூத்தரத்தை தரித்து –
தமக்கு
அனந்யார்ஹராய் -அநந்ய போகராய்-இருக்கும் அவர்களோடு கலந்து
அடிமை கொள்ளுகைகாக -அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே -நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –
புது நாள் மலர் கமலம்-
அப்போது அலர்ந்த செவ்வி தாமரைபூ வானது
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுடைய ஸ்பர்ஹநீயமான திரு வயிற்றிலே
பூவை ஒப்பான் -பூவையே போல்வதாக என்றபடி
பொது நாயகம் பாவித்து-
சர்வ நிர்வாஹகத்தை பாவித்து
அதாவது
ஜகத் காரண தயா சர்வ நிர்வாஹகமாய் இருக்கிற இருப்பை -தான் உடையதாகப் பாவித்து -என்கை-
இறுமாந்து –
இந்த நினைவாலே கர்வித்து
பொன் சாய்க்கும்-
மற்று உண்டான தாமரைகளின் உடைய அழகைத் தள்ளி விடா நிற்கும்
புனல் அரங்கமே –
இப்படி இருந்துள்ள ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருந்துள்ள திருவரங்கமே –

———————————————-

பத்தாம் பாட்டு -தட வரை -இத்யாதி -அவதாரிகை –
கீழில் பாட்டிலே உகந்து அருளின நிலங்களோடு ஒக்க தம் திரு மேனியை விரும்பினான் -என்றார் –
இப்பாட்டில் -அவற்றை விட்டு தம்மையே விரும்பின படியை அருளி செய்கிறார் –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே –
பரப்பை உடைத்தான மலையிலே பிரகாசமுமாய் –
தேஜஸ்சாலே விளங்கா நிற்பதுமாய் –
பரிசுத்தமுமான பெரிய கொடி எல்லாருக்கும் காணலாம் இருக்குமா போலே –
பெரிய பர்வத சிகரத்திலே அதி தவளமாய் மிளிருகிற பெரிய கொடி போலே –
மிளிருகை -திகழுகை
சுடர் ஒளியாய் –
நிரவதிக தேஜசாய்
நெஞ்சின் உள்ளே தோன்றும் –
ஹ்ருதய கமலத்துள்ளே தோன்றா நிற்கும்
என் சோதி நம்பீ –
தேஜஸ்சாலே பூரணன் ஆனவனே
சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரகம்
சோதி -குணங்கள்
நம்பீ -குறை வற்று இருக்கிற படி
என் -என்று இவை எல்லாம் தமக்கு பிரகாசித்த படி
தம்முடைய திரு உள்ளத்தே திவ்ய மங்கள விக்ரகத்தோடே பிரகாசித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு திரு மேனியிலே புகர் உண்டாய் -பூர்த்தியும் உண்டான படி –
சிக்கனே சிறிதோர் இடமும் -இத்யாதி
இவர் சரமத்திலே இப்படி அருளி செய்கையாலே -அனுபவித்த ஸ்ரீ கிருஷ்ண விஷயம் உள்ளே பூரித்த படி
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கிற திரு பாற் கடலும் –
சதா பச்யந்தி -படியே நித்ய சூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும் –
ப்ரனயிநிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும் –
இடவகைகள் இகழ்ந்திட்டு-
இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –
அதனில் பெரிய என் அவா -என்று நம் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில்
பிறந்த அபிநிவேசம் எல்லாம் -இப் பெரியாழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்கு பிறந்த படி -இத் திரு மொழி –
தனிக் கடலே –
ஈஸ்வரனுடைய முனியே நான்முகன் -வட தடமும் -இத்யாதி-

—————————————-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி -கிருஷ்ணனை ஸ்மரித்த வாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –
எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –புராண -பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –மகரத்வஜனை நினைக்கும்படியாய் வந்து விழுந்தது
சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –

துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-
கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –பிணா -என்று பெண் பேர் –
கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது
காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
சவிபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –
காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –
அவரைப் பிராயம் தொடங்கி -அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச -பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி
என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன் வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –
தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-
இந்த முலைகளை தொழுது வைத்தேன் -இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –
ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

————————————————————————————

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
-வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –
என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –
அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்
அவன் வார்த்தை சொல்லா நின்றன –

மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
இது மெய்யாக வற்றோ –

———————————————————————————————–

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-

இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –
கோவிந்தா கோவிந்தா –
நாராயணாதி நாமங்களும் உண்டு இ றே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இ றே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இ றே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இ றே அவள் நினைவு –
விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி
நாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) -இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது
இது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –

உங்கள் நன்மை இழந்து தலையிடாதே-
அவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே
முகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–
நெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-
பதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வைத்து அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்

———————————————————————————–

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இ றே
தன்னை உறவுமுறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

————————–

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –
பூதனை முடியும்படி
அவளுடைய வடிவுக்கு தக்க
பெரிய முலையை உண்டு

முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான்அடிக் கீழ் எய்த கிற்பீர் –
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
பசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –
மீண்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –
இடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்

மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் –
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து
பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –

சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

——————————————————-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

கட்டேறு நீள் சோலைக் –
இந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-

காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –
அர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு
விளையாடா நிற்க
அக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை கொண்டு வந்து நிற்க
நீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –

மூட்டி விட்டானை –
துஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்
தான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே
பிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –

மெய்யமர்ந்த பெருமானை –
இன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று
திரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-

மட்டேறு கற்பகத்தை –
பரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள
கல்பக விருஷத்தை –

மாதர்க்காய் –
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்
தாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –

வண்டுவரை நட்டானை –
இந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய
அவனுக்காக எடுத்து விட்டு
அவனை அழித்து
மீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே
இந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர
உங்களுக்கு இது பொராது இறே
உடம்பு வேர்க்கும் இறே
தரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே
தன்னுடைய தேவதத்வத்தையும்
இவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி
ஷேபித்துச் சூடினாள்-
அவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன
அத்தை பிடுங்கிக் கொடு போந்து
ஸ்ரீமத் த்வாரகையிலே நட்டு
பின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று
தான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு முன்பே தன்னைக் குடி இருத்தினவன்
தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று
வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –

நாடி நறையூரில் கண்டேனே –
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக
திரு நறையூரிலே வந்து நின்றவனைக்
காணப் பெற்றேன் –

—————————————————-

எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –

————————————————————————–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

————————-

இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படு மறை வாணனை வண் துவ ராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே–4-6-10-

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த–ஸ்ரீ ராமா. பால. 18 : 27 தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.
முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’-திருவிருத்தம், 60 என்று
நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ் விளமைப் பருவத்திலும் இருந்தது?
இனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க் கூட்டத்தைப் பற்றுமோ?
ஆகையாலே, இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே யன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்?
தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி.
அநந்ய தைவத்வம் – ‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம்-ஆஸ்ரய தேவதை – உண்டு, அது ரஷிக்கிறது -காப்பாற்றுகிறது,’ என்று
நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா -சுந். 28 : 12– என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கை நீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரியபெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன்.
இயம்க்ஷமாச -ராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் ராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும் –
தர்ஜன பர்த்தஸ்னங்களையும் பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன் சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌசஸய்யா – ‘இத் தரைக் கிடை கிடந்ததும்– தவாங்கே சமுபாவிசம் -தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘
அவருடைய மடியில் இருப்பு ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ்தர்மமே – ரக்ஷகத்வம் -காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது, –
ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்க தேஜஸா -ஸ்ரீ ராமா. சுந். 22 : 20– பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே!
எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால் உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று
ராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் – ஏதத் விரதம் மம -சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் – தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –ஆத்மாநம் மானுஷம் மன்யே ‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும்
உண்டே அன்றோ மனிதத் தன்மை? அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் – ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற்சுடு வேன்!அது தூயவன்
வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.’– என்ற கம்ப நாடர் திருவாக்கு

நும் இச்சை சொல்லி –
உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்
வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ?
இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?
தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ஆதலால், நீங்கள் -விக்ருதர்கள் -இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,

மன்னப்படு மறை வாணனை –
வேதைக சமைதி கம்யனை -நித்யமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே
உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே ‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.

வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.
நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே,
தேர்ப் பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் -ஆஸ்வசிக்க –
பாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.

ஏத்துமின் –
வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள்.
சீர் பரவாது, உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?’-பெரிய திருவந். 52- என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?

ஏத்துதலும் தொழுது ஆடும் –
நீங்கள் க்ருதார்த்தைகளாம் – செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;
அதசோ அபயங்கதோ பவதி ‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே,
ஏத்தின உடனேயே -ப்ரபுத்தையாய் -தெளிவை யுடையவளாய்த் தொழுது ஆடுவாள்.

தொழுது ஆடுமே
உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து –
வியாபார க்ஷமை -ஆடுதற்குத் தக்க ஆற்றலை யுடையவளும் ஆவாள்,’ என்றபடி.

—————————————————————-

கீழ் -அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள்.
இப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் வியவசிதையானபடி -அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் ஜீவியாள் கிடாய் – பிழைக்க மாட்டாள் என்ன,
அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-

அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை பரிஹரிக்க – நீக்க வேண்டுவது,
கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று-தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய்,
இவள் நாயகனுடைய ஸுந்தரியாதிகளில் -அழகு முதலானவைகளில்- ஈடுபட்டவள் ஆனாள்’ என்று
ஊரார் பழி சொல்லுவார்களே என்ன,

ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்?
குணங்களைச் சொல்லில் என்?
“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.

தோழிமீர்-
தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் –
பிரவணையாக்குகை -ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,
தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.

என்னை –
“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய்
இருக்கிற என்னை.

இனி-
உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.

உமக்கு –
இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.

ஆசை இல்லை-
இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த் தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி யாகிலும் மீட்க வேணும்’ என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன;
அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.

அகப்பட்டேன்-
இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்
இவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,
அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.
“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;
அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை
வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்
ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.
(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்
அருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)
யத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,
பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்
ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.

வண் துவராபதி மன்னன்’
என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”
என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது
என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.

மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.
காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.

வாசுதேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.
ஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,
பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.
ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”- சுந். 33 : 15, 16
சத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,
ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.

வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின
நோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும்–

April 24, 2019

பிரவேசம் –

ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி-
வேல் கணார் கல்வியே கருதி –என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று
சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –
அதுக்கடியான தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேய்ந்த மென்முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்மவிஷயம் ஆதல்-ஸ்ரீ ஈஸ்வர விஷயம் ஆதல்
ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாதபடி விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –

ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஸ்ரீ ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
ஸ்ரீ திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்
உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –

இப்படியே இவர் ஸ்ரீ திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-

இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக-ஸ்ரீ ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –
நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது
நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்
தலையாலே வணங்கியும்-
நெஞ்சாலே நினைத்தும்-
தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -ஸ்ரீ திருக் குறும் தாண்டகத்தில்-

பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே
அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்
ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கையிலே -நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று-ஆர்த்தராய் சரணம் புக்கார்

அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு
ஸ்ரீ பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
சாபமாநய சௌமித்ரே -என்று
கொண்டு வா தக்கானை -என்னுமா போலே
வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –

அதில் -ஸ்ரீ சிறிய திருமடலில்
அவன் ஐஸ்வர்யத்தையும் -தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும்
அவதாரங்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் –

அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான ஸ்ரீ கோயில்களில் உண்டான நீர்மையையும்
அழிக்கிறேன் -என்றார் ஸ்ரீ பெரிய திருமடலிலே –

இனி முகம் காட்டாது ஒழியில் ஜகத்து அநீச்வரமாம் என்று பார்த்து –
ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே இவருக்கு முகம் காட்டி
தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-

ஸ்ரீ சுகாதிகளும் ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சனகாதிகளும் ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ வால்மிகீகாதிகளும் ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ பராசர ஸ்ரீ பாராசாராதிகளும் -ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது – விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஸ்ரீ ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
ஸ்ரீ எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
அனுபவத்து -அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் -இப் பிரபந்தத்தில்-

——————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக ஸ்ரீ திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

மின்னுருவாய் முன்னுருவில் –
முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷ -பரித்ர்ஷ்டமான பதார்த்தங்களில் –
மின்னின் உடைய ஸ்வபாவத்தை பிரகாசிப்பித்தான் –
அதாவது –
பிரத்யஷ பரித்ர்ஷ்டமான -பிரகிருதி ப்ராக்ருதங்களின் அஸ்த்ரையத்தை பிரகாசிப்பித்தான் -என்கை –
இப்பிரக்ருதி சேதனனோட்டை சம்பந்தத்துக்கு ஹேது பேதம் உண்டான போது –
இதுக்கு ஸ்வபாவ பேதம் உண்டாகக் கடவது –
ஹேது பேதம் -ஆவன –
1-கர்மத்தால் பந்திக்கையும் –
2-கிருபையால் பந்திக்கையும்
3-இவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளுகையும்
4-மற்று உள்ளார்க்கு ஜாயமான கடாஷம் பண்ணுகையும் –

அதாவது –
கர்மத்தால் பந்தித்த போது -ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களுக்கு திரோதாயகமாய் இருக்கையும் –
தன் பக்கல் -அஸ்த்ர்யத்தையும் அபோக்யதையும் மறைத்து
ஸ்த்ர்யத்தையும் போக்ய புத்தியையும் பிறப்பிக்க கடவதுமாய் இருக்கும்-

ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே பந்தித்த போது
ஸ்வ விஷயத்திலும் ஸ்வ கீயங்களிலும் கிடக்கிற
அஸ்த்ரையத்தையும் அபோக்யதையையும் பிரகாசிக்கக்கடவதாய்
ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களையும் பிரகாசிப்பிக்க கடவதாய் இருக்கும் –
இப்போது
ஸ்ரீ பகவத் பிரசாதம் அடியாகையாலே-பிரகிருதி பிராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசிப்பித்தது
த்யாஜ்யதா பிரதிபத்தி உண்டாய்த்து -என்கை –
விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ர்தா -என்றும்
சரீரமாத்ரம் கலு தர்ம சாதனம் -என்றும் –
புருஷார்த்த சாதனம் என்றும்-
தர்மத்துக்கு பிரதான உபகரணமான பிரக்ருதியாதிகளை த்யாஜ்யம் என்னக் கடவதோ -என்னில் –
போஜநார்த்தமாக அங்கீ கரித்த கலமும்
போஜன அநந்தரம் அஸ்பர்சமாப் போலேயும் –
அவப்ர்த ஸ்நான அநந்தரம் யூபாதிகள் அஸ்பர்சமாப் போலேயும்
இதுவும் கார்ய அநந்தரம்-ஜ்ஞானம் பிறந்த பின்பு – த்யாஜ்யமாகக் கடவது –

மின்னுருவாய் -என்ற
சாமாநாதி கரண்யம் -உபகார்யா உபகார பாவ சம்பந்த நிபந்தனம் –
இப்படி இவை அஸ்தரம் ஆனால் அநந்தரம் ஸ்திரமான ஆத்மவஸ்துவே-ஜ்ஞாதவ்யமாகக் கடவது –
அஹம் -என்று பிரத்யஷிக்கிற ஆத்ம வஸ்துவை
தேஹம் என்பார்
இந்த்ரியம் என்பார்
மனஸ் என்பார்
பிராணன் என்பார்
புத்தி என்பார்
இப்படி பண்ணுகிற விப்ரதிபத்தி -சமித்து யதாஜ்ஞானம் பிறக்கைக்கு
சாஸ்திர அபேஷை உண்டாகையாலே
சாஸ்திர பிரதானம் பண்ணினார் -என்கிறார் மேல் –

வேத நான்காய் –
ஆத்மாவின் உடைய யாதாம்ய பிரதிபாதன பரமான வேதங்கள் நான்குமாய் –
வெறும் ஆத்மா பரமயோ வேதங்கள் என்னில் -தத்வ த்ரயத்தையும் பிரதி பாதியா நிற்க –
அல்லாத தத்வ த்யவமும் இவனுக்கு இன்னது த்யாஜ்யம்-இன்னது உபாதேயம்
என்கைக்காக பிரதிபாதிக்கப் படுகிறது இத்தனை ஒழிய ஆத்ம பரமேயாகக் கடவது –
ஆனால் த்யாஜ்ய உபாதேயங்களைச் சொல்ல அமையாதோ –
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என் என்னில் –
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் ஸ்வரூபம் ஆகையாலே
ஸ்வரூப அனுரூபமான த்யாஜ்யம் இன்னது
ஸ்வரூப அனுரூபமான உபாதேயமின்னது -என்று அறியும் போது ஸ்வரூபத்தை அறிய வேணும் இறே –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் இல்லாத போது-சரீர மாத்ரம் த்யாஜ்யமாய்
புத்திர பசு அந்நாதி மாத்ரம் உத்தேச்யம் ஆதல் –
சரீர வியதிரிக்தம் ஆத்மாவான போது
புத்திர பசு அந்நாதிகள் த்யாஜ்யமாய்-ஸ்வர்க்கம் உத்தேச்ய மாதல் செய்யும் இறே-
சாஸ்திர அபேஷை சேதனனுக்கே ஆகையாலே சேதன பரமாகக் கடவது –
ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையாலும்
அசித் தத்வம் ஜடம் ஆகையாலும் சாஸ்திர அபேஷை இல்லை –

இனி சாஸ்திர வச்யனுமாய் -ஜ்ஞாதாவுமான சேதனனைப் பற்றி -சாஸ்திரம் உதிக்கக் கடவது –
வேதம் பிரதிபாக்கிற மாத்ரம் அன்றிக்கே வேதம் உண்டாக்கினதும் இவனுக்கே –
இவ்விடத்தில் ஸ்வார்த்த பிரகாசத்வத்தைப் பற்ற -ஸ்ருதி மறை -என்னாமல் –வேதம் -என்கிறது –
பிரகாசம் உண்டோ என்னில்
மறையாய நால் வேதம் -என்கிறபடியே
தன்னை அதிலங்கித்தார்கு ஸ்வார்த்த திரோதாயகமாயும்
தன் பக்கலிலே புபுத்ஷூக்களுக்கு -ஸ்வார்த்த பிரகாசமாயும் இருக்கும் –
போத்தும் இச்சு புபுத்ஷூ -அறிய வேணும் என்கிற இச்சை உடையவன் -என்றபடி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்க்கு அரிய வித்தகன் -என்கிறபடியே
பிரமேய ஸ்வ பாவம் பிரமாணத்துக்கும் உண்டாய் இருக்கும் -என்கை –
இங்கு வேதம் நான்கு -என்கிற சாமாநாதி கரண்யம் –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய – என்று
பிரதிபாத்ய பிரதிபாதிக பாவ சம்பந்த நிபந்தனம் அன்று –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
பிரதார்த் பிரத்தேய பாவ சம்பந்த நிபந்தனம் –

அநந்தரம் இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும்
எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் –
விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே
அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவ ஸ்சேந்த்ரி யோத்பவம் – என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –

ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ஸ்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –

முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
என்று -மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷட்வய -என்கிற
மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –

முளைத்து –
பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே
தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும்
பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –

எழுந்து –
பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே
மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று

திங்கள் தானாய் –
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
தானான திங்கள் -என்று –
ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே
ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் –
பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று
நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –
நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே-
சாஷாத்காரம் சித்தித்ததாவது –
சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் –
சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே –
சதி ஆஹ்லாதே -என்கிறபடியே
ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும்
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை தருஷ்டாந்திதது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக –

பின்னுருவாய் –
பின்னான தத்வமாய் –
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி –
இருபத்தஞ்சாவது தத்வமான ஆத்மா சாஷாத்க்ர்த்யன் ஆகையாலே
சதுர்விம்சதி தத்வாத்மிகையான பிரகிருதிக்கு அவ்வருகாய் பிரிந்து தோற்றுகிறபடி –
தேகேந்த்ரிய மன பிராண தீப்யோன்ய அநந்ய சாதன
நித்யோவா பீப்ரதி ஷேத்ர மாத்மாபின்னஸ் ஸ்வதஸ் ஸூகி –என்னக் கடவது இறே –

அநந்தரம் -இப்படிப் பட்ட ஆத்ம வஸ்து
வ்யாப்தகதமான தோஷங்களால் ஸ்பர்சிக்கப் படான் -என்கிறார் –
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் –
முன்னுருவாகிறது -கீழே மின்னுரு -என்று கொண்டு சொன்ன ப்ரத்யக்ஷ பர்த்ர்ஷ்டமான பிரகிருதி பிராக்ருதங்களை –
அதில் உண்டான பிணி மூப்பு பிறவிகளோடு ஸ்பர்சம் இல்லாத ஆத்மவஸ்து –
பிணி -துக்கம் –

இத்தால் அஞ்ஞாநாதிகளை உப லஷிக்கிறது –
மூப்பு பிறப்பு -என்கையாலே ஷட் பாவ விகாரங்களை உப லஷிக்கிறது –
நிர்வாண மய ஏவாய மாத்மா ஜ்ஞான மயோமலா -என்று-துக்காதிகள் பிரகிருதி தர்மமாய்
ஆத்மாவோடு சம்பந்தம் இல்லை -என்னக் கடவது இறே –
ஸவதஸ் ஸூகியாய் இருக்கிற ஆத்மாவுக்கு துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதோவோபாதி
ஜடமான பிரக்ருதிக்கும் துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதே யாகிலும்
ஊமத் தங்காய் உடைய சம்சர்க்கத்தாலே ப்ரமம் வருகிறாப் போலே
பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஆத்மாவுக்கு துக்காதிகள் வருகையாலே துக்காதிகள் பிரகிருதி தர்மமாகவே கடவது

இறப்பதற்கே எண்ணாது –
இறக்கை யாவது -மரிக்கை
மரணத்தை எண்ணாதே
கீழ் -ஷட் பாவ விகாரங்களிலே தேக அனுபந்தியான மரணத்தைச் சொல்லிற்று
இங்கே ஸ்வரூப அனுபந்தியான மரணத்தைச் சொல்லுகிறது -அதாகிறது
கைவல்யம் –
ஸ்வதஸ் ஸூகியான ஆத்மாவினுடைய அனுபவ ஸ்வரூபமாய்-தனியே ஒரு புருஷார்தமாய்
புனராவர்த்தி இல்லாத கைவல்யத்தை மரணம் என்னக் கடவதோ -என்னில்
மரணம் ஆகிறது
ஆத்மவியோகமாக லோகத்திலே பிரத்யஷியா நின்றது இறே –
இதுவும் அப்படியே
சாஷாத் ஆத்ம பூதனான ஸ்ரீ பரமாத்மா வியோகத்தாலே மரணம் ஆகக் கடவது –
பிரத்யஷமாக ம்ர்தமான சரீரம் நஷ்டம் ஆகை போலே
இது நசியாமையாலே இத்தை மரணம் என்னலாமோ -வென்னில்
ஸ்வரூப அனுரூபமான போகம் இல்லாமையாலே
பர ஹ்ர்தயத்தால் மரணமாகக் கடவது –
ம்ர்தோ தரித்ர புருஷ -என்று
போக்தாவானவன் தரித்ரனை ம்ர்தன் என்னுமா போலே
இந்த கைவல்யம் அந் நாதனுக்கு மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது –

எண்ணாது –
இத்தை தருகைக்கு எண்ணாதே போந்தான் –
ஜரா மரண மோஷாயா மாமாச்ரித்ய தந்தியே -என்று இத்தை புருஷார்தமாகக் கொடுக்கக் கடவன் –
அவன் இப்போது இப்படி படு குழியில் விழாதபடி இத்தை எனக்கு எண்ணாதே போந்தான் –
அவனது எண்ணம் கொண்டே நமக்கு ஜீவனம் ஆகையாலே எண்ணாது -என்கிறார் –

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்
எண்ணும் பொன்னுருவாய் -என்று
திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –
எண்ணும் –
போக்யாதிசயத்தாலே
நேதி நேதி -என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி
இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று
ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க
ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை
பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –

பொன்னுருவாய் –
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –அதாகிறது-
1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –
உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணிவுருவில் –
மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோமயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் சுத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை வ்யாவர்த்திக்கிறது
அதவா
மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்
ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்
அசாதாரண மான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தொடு வாசி அற-இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –
பிரதான புருஷேச்வர -என்னக் கடவது இறே-

இப்படி விலஷணமாய் இருக்குமவன் துர்லபமாய் இருக்குமோ வென்னில் –
புனல்வுருவாய் –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற-ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாய் இருக்கும் ஜலம் போலே -என்க-

இப்படி சர்வ ஸூலபன் ஆனால் என் வருகிறதோ என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
ஆஸ்ரித சுலபனானோபாதி
பிரதிகூலர்க்கு அக்னி போலே அநபிபவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –
அனலுருவில் திகழும் –
அபிதபாவ கோப மம் -என்று
நினையாத போது அந்தரங்கருக்கும் அநபிபவனாய் இருக்கும் அவன்
உகவாதார்க்கு அநபிபவனாய் இருக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

சோதி தன்னுருவாய் –
கீழே ஸ்பர்ஹணீ யதையாலே பொன்னுருவாய் -என்று
ஸ்வரூபம் சுவயம் பிரகாசமாய் இருக்கும் என்றது –

நாட்டில் ஜ்யோதிஸ் பதார்த்தங்களுக்கு ஜ்யோதிஸூ உண்டாகிறது
தன்னோட்டை சம்பந்தத்தால் யாம்படி இருக்கை –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -என்னக் கடவது இறே —

என்னுருவில் நின்ற —
என்னுடைய ஆத்மாவில் நிற்கிலும் தனக்கு அவத்யவஹமாய் இருக்க
எனக்கு த்யாஜ்யமான வடிவில் வந்து நின்றான் என்க –

நின்ற –
இவர் மடல் எடுக்கையாலே -தன்னுடைய சாத்தா ஹாநி பிறக்கும்படியான-கலக்கம் சமித்து -தரித்து நின்றபடி –

எந்தை –
சத்தையோபாதி சேஷித்வமும் உறுதிப் படுத்திய படி –

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி –
அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –
ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –
இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்
சத்தையும்
சேஷித்வமும்
விக்ரஹமும்
பெற்றானே -இருக்கிறபடி –
ஆக
1-பிரகிருதி ப்ராக்ருதங்களில் அஸ்த்ரத்தையை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
2-ஸ்வ ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
3-கைவல்யத்தில் போகாதபடி நோக்கின அவ் அளவு போராதோ –
அதுக்கு மேலே
4-தன்னுடைய ஸ்வ ரூபத்தையும்
5-ஸ்வரூப பிரகாசமான விக்ரஹத்தையும் காட்டித் தந்தது போராதோ –
6-அதுக்குமேலே த்யாஜ்யமான என் சரீரத்தில் புகுந்து நிற்பதே –
அதுக்கு மேலே
7-தன்னுடைய திருவடிகளை என் தலை மேல் பொருந்த வைப்பதே –
என்று தமக்கு அவன் பண்ணின உபகார பரம்பரைகளை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

ஆக
இப்பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் –
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஸ்ரீ ஈஸ்வரன் தன ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

—————-

நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும் தாங்களே முதலரிய வல்லார் –என்கிறார் –

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –
மின்னி முழங்கி வில் விட்டு-தர்ச நீயமாய் – வர்ஷியாது இருப்பதொரு வர்ஷூக வலாஹகம் போலே
இருந்துள்ள வடிவை உடையவனே –
ஒரு நீர்ச்சாவியிலே ஒரு காளமேகம் வர்ஷித்தால் போலே
அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று
இவருடைய ஆர்த்த நாதத்தை கேட்டு -இவருடைய தாபம் எல்லாம் நீங்கும்படியாக
குளிர நோக்கிக் கொண்டு -காளமேக நிபஸ்யாமமான வடிவோடு வந்து முகம் காட்டின படியைச் சொல்கிறது –

கீழில் பாட்டிலே –(29)
பரோஷ நிர்த்தேசம் பண்ணி இருக்க
இங்கே அபரோஷித்துச் சொல்லுகையாலே -வந்து முகம் காட்டினமை தோற்றுகிறது –
பிரணய ரோஷம் அகிஞ்சித்கரமான தசையிலும்-ஸ்வ தோஷ ஞாபநம் கார்யகரமான படி –

ஸ்ரீ நம் ஆழ்வார் ஜகத் காரணத்வத்திலே உபக்ரமித்து –
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை -என்று ஜகத் காரணத்தோடு தலைக் கட்டினார்
இவர் வடிவிலே -மணிவுருவில் பூதம் ஐந்தாய் -என்று -உபக்ரமித்து
மின்னு மா மழை தவழும் -என்று வடிவோடு தலைக் கட்டுகிறார் –

விண்ணவர் தம் பெருமானே –
இவ் வடிவைப் படியிட ஜீவித்து இருக்குமவர்களைச் சொல்லுகிறது –
அயர்வறும் அமரர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே –
கடலிலே வர்ஷித்தால் போலே அவர்களுக்கு உன்னைக் கொடுக்குமது ஒரு ஏற்றமோ –
அவர்கள் உன்னை சதா தர்சனம் பண்ணுமா போலே
நானும் உன்னை-சரீர சம்பந்தம் அற்று-சதா தர்சனம் பண்ணும்படி கிருபை பண்ணி அருள வேண்டும்

அருளாய் என்று
பரமபக்தி பர்யந்தமான விடாய் – பிறந்த இடத்திலும் இரக்கமே சாதனம் என்று இருக்கிறார் –
ஆழியான் அருளே -என்று விஷயாந்தர நிவ்ருத்திக்கும்
இரக்கமே சாதனம் -என்கிறார் –
ஸ்ரீ பகவத் அனுபவத்துக்கும் இரக்கமே சாதனம் -என்கிறார்-

அன்னமாய் –
தமக்கு அவன் வந்து தன்னைக் கொடுத்தபடிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார் –
ப்ரஹ்மாவுக்கு பிரமாணத்தை வெளி யிட்டால் போலே யாய்த்து
தமக்கு பிரேமேய பூதனான தன்னை வெளி இட்ட படியும் –

முனிவரோடு அமரர் ஏத்த
ரிஷிகளோடே கூட ப்ரஹ்மாதிகள் வேத சஷூஸ்சை இழந்தோம் என்று தன்னை ஆஸ்ரயித்து ஏத்த –
ரிஷிகளுக்கு ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக பிரமாண அபேஷை உண்டு
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ர்ஷ்டாதி வியாபாரத்துக்கு பிரமாண அபேஷை உண்டு –

அன்னமாய் –
அபௌருஷேயத்வம் குலையாத படி ஸ்ரீ ஹம்ஸ ரூபியாய் –

அரு மறையை –
பெறுதற்கு அரிய வேதம் –
பெறுதற்கு அரியது பிரமேயம் அன்று –
பிரமாணம் ஆய்த்து –

வெளிப்படுத்த –
பிரமாணத்துக்கு உத்பத்தி விநாசம் ஆவது
பிரகாச -அப்ரகாசங்கள் -என்கை –

அம்மான் தன்னை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவர்களுக்கு வேத பிரதானம் பண்ணுகைக்கு அடி
உடையவன் ஆகையாலே -என்கை –

மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
இவர் தரித்த வாறே
ஊரும் ஸ்திரமான படி –
கல்பாவசாநத்து அளவும் அழிவு இன்றிக்கே
ஸ்லாக்கியங்களான ரத்னங்களாலே
செய்யப்பட மாடங்களை உடைத்தான ஸ்ரீ திருமங்கை –

மங்கை வேந்தன் –
பஷியின் காலில் விழுந்தவர் ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனார்

மான வேல் பரகாலன் –
கிஞ்சித் கரிக்கவும் பெற்றார் -என்கை –
அத்தலையிலே பரிவாலே எடுத்த வேல் -இறே –

மான வேல்
கா புருஷன் எடுக்கிலும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஆக்க வல்ல வேல் –
மான வேல் பரகாலன் -என்னுதல்-

பர காலன் –
கையில் வாளாலும்
பிரதிபாதனத்தாலும்
பிரதிபஷத்தை வென்று
வைதிக மரியாதையை ஸ்தாபித்தவர் –

கலியன் –
உபயத்துக்கும் அடியான மிடுக்கை சொல்கிறது
கலி -மிடுக்கு
அங்கன் இன்றியே
கலி காலத்தை கடிந்தவர் -என்னுதல் –

பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –
பன்னுதல் -பரம்புதல்
ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
விளாக்கொலை கொண்டு இருக்கை –
நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –
தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –

மாலை
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –

தொல்லை இத்யாதி
கார்ய காரண ரூபத்தாலே அநாதியாய் வருகிற -அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி
சம்பந்தங்களை தாங்களே சவாசனமாக போக்க வல்லவர்கள்

வினை
அதாகிறது -புண்ய பாப ரூபமான கர்ம த்வயம்
இது தான் பூர்வோத்தர ராக பிராரப்த ரூபமாய் இருக்கும்
இது தான் அல்லாத
ஜ்ஞான அநுதயம்
அந்யதா ஜ்ஞானம்
விபரீத ஜ்ஞானம்
ஸ்தூல சூஷ்ம ரூபமான அசித் சம்பந்தம்
வாசனா ருசிகளுமாகிற -விரோதி வர்க்கத்துக்கும் உப லஷணம் –

தொல்லைப் பழ வினை –
இவைதான் பழையதாய் இருக்கையும்
அடி காண ஒண்ணாதாய் இருக்கையும் -அதிசயத்தைப் பற்றி சொல்லுதல்
அறவும் பழையதான வினை -என்னுதல் –

தாமே –
இப் பிரதிபந்தங்களை எல்லாம் தாங்களே சவாசனமாக போக்க வல்லார் –
ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டாம் -என்கை –

அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த -என்று
அவர்களுக்கு விசேஷணம் ஆன போது –
ஸ்ரீ எம்பெருமானைக் கண்ட போதே -என் அவா அறச் சூழ்ந்தாயே –
என்ன சக்தர் அல்லாமையாலும்
கீழில் பாட்டில் போலே இப்பாட்டில் இயலின் பல
ஹானி தோற்றி இராமையாலும்
ஸ்ரீ எம்பெருமான் திரு மேனி வர்ஷூக வலாஹம் போலே இருக்கையாலும்
அயர்வறும் அமரர்களுக்குத் தன்னை புஜிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும்படியைச் சொல்லுகையாலும்
தாமே வேல் எடுக்க சக்தராகையாலும்
பிரதி பஷத்தை நிரசித்தபடியை அருளுகையாலும்
இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாவற்றாலும்
தம்முடைய பல ஹானி போய்
தம்முடைய அபேஷிதம் பெற்று
திருப்தரானார் என்னும் இடம்
இப்பாட்டிலே வ்யக்தம் –

முனிவரோடு அமரர் ஏத்த –
அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் -என்று -சொன்ன –
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று அந்வயம் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 23, 2019

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்
அவதாரிகை-

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே-தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை
திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு
தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும்-பேற்றின் கனத்தையும்-அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

ஸ்ரீ பெரிய திருமொழியில்–-ஸ்ரீ திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும்
உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –
ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும் -செல்ல
அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை அனுபவித்து
சம்சார -பரமபத -விபாகம் இன்றிக்கே இவர் ஹ்ருஷ்டராய் இருக்கிறபடியை ஸ்ரீ சர்வேஸ்வரன் கண்டு
சம்சாரத்தில் இருக்கிற படியை அறிவித்தால் த்வரித்து இருந்தார் ஆகில் கொடு போகிறோம்
இல்லையாகில் க்ரமத்தில் கொடு போகிறோம் என்று சம்சாரத்தில் இருக்கும் இருப்பை அறிவிக்க-

ஆற்றங்கரை வாழ் மரம் போல் -என்றும்
காற்றைத் திடைப்பட்ட கலவர் மனம் போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -என்றும்
வெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போல் -என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே -என்றும்
கூப்பிட்டு – பெரிய விடாயர் உடம்பிலும் முகத்திலும் நீரை இரட்டிக் கொள்ளுமா போலே பேசி அனுபவித்து
இது தான் இனிதாய் இவை எல்லாம் உகந்து அருளின நிலங்களை அனுபவிக்கையால் வந்தது-
உகந்து அருளின நிலங்களிலே மண்டினவர்கள் பாக்யாதிகர் என்று தலைக் கட்டுகிறார்

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–1-

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –
வைத்த மா நிதி -இ றே –
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-
நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –நெஞ்சிலே வைத்து ஆளலாம் –
ஓர் இடத்திலே புதைத்து வைத்து-தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்
பறித்துக் கொள்வார் இல்லை-பறிக்கத் தான் ஒண்ணாது
அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

பவளத் தூணை
சர்வத்துக்கும் தான் தாரகனாய் இருக்குமதைப் பற்ற –தூண் -என்கிறார் –
பவளம் -என்றத்தால்-ஸ்ப்ருஹணீயதயைச் சொல்லுகிறது –
தூண் ஆவது -தான் அநேகத்தைத் தரித்து –
தன் கீழே ஒதுங்குவாருக்கு நிழல் கொடுத்து நிற்பது ஓன்று இறே
அப்படியே -தான் எல்லாருக்கும் தாரகனாய்-தன்னை அடைந்தார்க்கு நிழல் கொடுக்கையாலே -தூண் -என்கிறார் –

நெறிமையால் நினைய வல்லார் கதியினை –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே-அடைவு பட நினைக்க மாட்டார்களே -இவர்கள்-
ஆகையால் -நெறிமையால் நினைய வல்லார்-என்கிறார் –
நினைக்க வல்லார்க்கும் நெற்றிக் காக்கும் -அவனுடைய ஸ்வரூபாதிகள் நினைக்க ஒண்ணாத படி தகையும் -என்றபடி –
கதியினை –
நினைப்பார்க்கு பரம கதியாம் –பிராப்யனாம் -என்றபடி –
பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –
கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று
நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன் ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

கஞ்சன் மாளக் கண்டு –
கம்சனுடைய ஆயுஸ்ஸூ மாளும்படி பார்த்து –

முன் –
அவன் நினைவை அவனுக்கு முன்னே செய்து முடிக்கை –

அண்டம் ஆளும் –
ஜகத்து ஸ நாதம் ஆய்த்து-

அண்டம் ஆளும் –
ராமோ ராஜ்யம் உபாஸித்யா – என்னுமா போலே-நாட்டை ஈரக் கையாலே தடவி
கம்சன் காலத்தில் பட்ட நோவு தீர ரஷித்து –

மதியினை-
கம்சனைக் கொண்டு நாட்டுக்கு களை பிடுங்கின பின்பும்-ஆச்சியும் ஐயரும் என் செய்தார்கள் என்று
ருணம் ப்ரவர்த்தமிவ -என்று படுகிறபடி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

மாலை –
மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வாழ்த்தி வணங்கி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தி-அவன் திருவடிகளிலே வணங்கி

என் மனத்து வந்த விதியினை-
ஈழம் கனாக் காண்பர் இல்லை இறே –கண்டது ஒழிய காணாதவற்றை ஸ்வப்னம் காணார் -என்றபடி –
எல்லா அவஸ்தையிலும் வருவான் அவன் இறே –
அதுக்கடி
விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –
விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது –பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று-மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –

கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் –இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

அவன் மால்
நான் தொண்டன்
இனி விட உபாயம் உண்டோ –
அவனுக்கு என் பக்கல் ஸ்நேஹம் இல்லை என்ன ஒண்ணாது –
நான் அதிலே ஈடு பட்டிலேன் -என்ன ஒண்ணாது –
ஆனபின்பு -எத்தைச் சொல்லி விடுவது –

——————————————————————————————————-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை –
இந்த்ரனும் ப்ரஹ்மாவும்-எப்போதும் செவ்வியையும் தேனையும் உடைத்தான
புஷ்பங்களைப் பணிமாறி ஏத்தும் அழகிய திருவடித் தாமரைகளை உடைய ஸ்ரீ புண்டரீகாஷனை –

மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே –
பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பரமோதாரமான
தமிழ் மாலை-நாலைந்து -இருபதையும்-அநந்ய பிரயோஜனராய்-கற்க வல்லார்கள் –
தெளி விசும்பான ஸ்ரீ பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஏக காலத்தில்- இரண்டு அவஸ்தைகளுடன் -அருளிச் செய்யும் – மூவர் அனுபவம்-நான்கு பதிகங்கள்–

October 15, 2018

பெரிய திருமொழி – -11-5-மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா-
இத் திருமொழி ஒரு விலஷணமான அனுபவம் -ஏக காலத்திலே இரண்டு பிராட்டிமார் யுடைய நிலையில்
ஒருத்தி ஏசி சௌலப்ய குணத்தை பேசியும்
ஒருத்தி ஏத்தி பரத்வ குணத்தை பேசியும் -பேசி அனுபவிக்கிறார்-

என்னாதன் தேவிக்கு -பெரியாழ்வார் திருமொழி-3-9- -ஒருத்தி ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும்
ஒருத்தி ஸ்ரீ ராமாவதாரத்தையும் பேசி அருளினது போலேயும்-

கதிராயிரம் தேவி -பெரியாழ்வார் -4-1–சர்வேஸ்வரனைக்  கண்ணாலே காண வேண்டும் என்பாராயும்
அவனை யுள்ளபடி கண்டார் உளர் -என்பாராயும் இரண்டு வகையாக பேசினது போலேயும்-

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியும் பட்டி மேய்ந்தோர் காரேறு திரு மொழியில் -14–இங்கே போதக் கண்டீரே -என்று கேட்பதும்
விருந்தாவனத்தே கண்டோமே -என்று விடை கூறுவதுமாக அருளிச் செய்தார் இறே

ஏக காலத்திலே இரண்டு அவஸ்தைகள் -எம்பெருமான் அருளின் மிகுதியால்  ஞானத்தில் தடை யற்றால் பொருந்தாது ஓன்று இல்லையே
நித்ய முக்தர்கள் பரமபதத்தில் ஏக காலத்திலே அவன் அருளாலே கைங்கர்யங்கள் செய்ய அனுரூபமாக பல சரீரங்களைப் பரிஹரிப்பது போலே –

———————————

இரண்டு கோபிமார் அவஸ்தையை ஏக காலத்தில் அடையக் கூடுமோ -என்னில்
பகவத் பிரசாத விசேஷத்தாலே ஞானத்தில் தடை அற்றால் எல்லாம் சொல்லலாம் இறே
மானமரு மென்னோக்கி -என்கிற திரு மொழியில் –
இரண்டு பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும் படி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க
தேச விசேஷத்தில் அநேக சரீர பரிக்ரகம் ஏக காலத்தில் கூடுகிற படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் கூடும் -என்று அருளிச் செய்தார் -என்று பிரசித்தம் இறே-

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற – 3-9 1-

என் வில் வலி கொண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9 2- –

இத்தால்-
இவ் அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்யா நிற்கச் செய்தேயும்
மீளவும் ஈஸ்வர கந்தம் அற
ஐயர் மகன் -என்றே தன்னை நினைத்து நின்று கார்யம் செய்த குணத்தை சொல்லுகிறது

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான்  வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற – 3-9 3- –

ருக்மிணி பிராட்டியை திருமணம் புணருகைக்கு உடலான தேவகி வயிற்றில் பிறப்பையும் –
பிரதி பஷ நிரசனத்தில் சிம்ஹம் போலே இருக்கும் வீரப் பாட்டையும் உடையவனைப் பாடிப் பற –

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3 9-4 –

வனவாசம் தான் சரசமாய்த்தது அவள் கூட போகையாலே -இறே
பிராட்டியும் தாமும் -ஏகாந்த ரசம் அனுபவிக்கலாம் தேசம் -என்று இறே காடு தன்னை விரும்பிற்று –

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9 5-

யசோதை பிராட்டி சீராட்டி வளர்க்கையாலே சிம்ஹக் கன்று போலே செருக்கி
இருக்கிறவனைப் பாடிப் பற என்று எதிரியை பார்த்து நியமிக்கிறாள்

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3 9-6 –

ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடாமல் -அடி சூடிப் போகையாலே திரு அயோத்தியில் உள்ளவர்களுக்கு
தானே நிர்வாஹனாய் ஆனவனைப் பாடிப் பற -என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9 7-

காளியனுக்கு பிராணனைக் கொடுத்து துரத்தி ஒட்டி விட்டு விஜ ஜலமான பொய்கையை அமர்த ஜலமாம் படி கடாஷித்து
பசுகளும் இடையரும் முன்பு போலே தண்ணீர் குடிக்கும்படி பண்ணுகையாலே -பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே திரு மேனியின்
அழகு விளங்கும்படி நின்றவனை பாடிப் பற என்று பிரதி கோடி யானவளை பார்த்து நியமிக்கிறாள்

தார்க்கு இள தம்பிக்கு அரசு தந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 9-8 –

ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடாமையாலும் திருவடி நிலை கொடுத்து போருகையாலும்
திரு அயோத்யைக்குதானே ராஜா வானவனைப்பாடிப் பற என்னும் அத்தை அவள் நியமிக்கிறாள்

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆ நிரை மேய்த்தானைப் பாடிப் பற – 3-9 9-

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்கிறபடியே பரம பதத்தில் இருப்பிலும் காட்டிலும் உகந்து பசு நிரை மேய்த்தவனை
பாடிப் பற என்று எதிரியை பார்த்து சொல்கிறாள்

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9 10-

ராவண வத அநந்தரம் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி இருந்து ஆளுகையாலே
திரு அயோத்தியில் உள்ளாருக்கு ராஜாவானவனை பாடிப் பற என்று பிரதிகோடி யானவளை நியமிக்கிறாள்-

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள்  சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9 11- –

ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான விஷயமான ஐந்தும் ஸ்ரீ ராமாவதாரமான விஷயமான ஐந்தும் -ஆன -இப்பத்தையும்
சாபிப்ராயமாக வல்லவருக்கு அல்லல் இல்லையே- சாம்சாரிக துக்கம் ஒன்றும் இல்லை

————————————————

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களோடு-அவதாராந்தரங்களோடு  – அபதானந்தரங்களோடு வாசி அற -தர்ம ஐக்யத்தாலே  
எல்லாம் ஏக ஆஸ்ரயம் ஆகையாலே  இப்படி இருக்கிற விஷயத்தை கண்ணாலே கண்டு அனுபவிக்க வேண்டும் -என்று 
தேடுகையாகிற இது -தமக்கு ஒரு புடை செல்லுகிறபடியும்
மானச அனுபவத்தின்  உடைய கரை புரட்சியாலே அவ்விஷயம் தன்னை ஸூ ஸ்பஷ்டமாக கண்டதாலே
ஒரு புடை தோற்று இருக்கும் படியையும் அனுசந்தித்து -அவை இரண்டையும் 
அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று  தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று சொல்லுகிறார் சிலருமாக கொண்டு 
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –

நாடுதிரேல்-என்றும் -கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது 
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்  உட் கண்ணால் கண்டு   அதில் ஊற்றத்தாலே
பாஹ்ய அனுபவமும்  சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும் பல உண்டு ஆகையாலே –

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளர் தரியாய்  
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1 1-

அவதார பிரயுக்தையான ஆகாரங்களை இட்டு வேறுபடக் காணாதே -ஸ்ரீ ராமாவதாரமாய் ராவண வதம் பண்ணினவனும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரமாய் ஹிரண்ய வதம் பண்ணினவனும் ஒருவனே -என்று வஸ்துவினுடைய படி அறிந்து காண்கை  
முன்பு ஹிரண்யன் ஆனவன்  தான்  இறே பின்பு ராவணனே பிறந்தவன் –
ப்ரஹ்மாதிகள் பக்கல்-ஹிரண்ய ராவணர்கள் இருவரும் கொண்ட வரங்களுக்கு விரோதம் வாராதபடி  
நிரசிக்க வேண்டுகையிலே இறே -ரூப பேதம் கொள்ள வேண்டிற்று இறே 
அதாவது –
தேவாதி சதுர்வித ஜாதியில் ஒன்றாலும் படக் கடவேன் அல்லேன் -என்று வரம் கொள்ளுகையாலே  ஸ்ரீ நரசிம்ஹமாக வேண்டிற்று அங்கு 
தேவர்கள் அசுரர்கள் ராஷசர்கள் முதலானோர் ஒருவராலும் படக் கடவேன் அல்லேன் -என்று வரம் கொள்ளுகையாலும்
மனுஷ்யரை ஒன்றாக கணியாமல் போருகையாலும் மனுஷ்யனாய் நின்று கொல்ல வேண்டிற்று -இங்கு 
ஆகையால் கார்ய அனுகுணமாக கொண்டு -ரூப பேத மாத்ரமாய் -பிரகாரி ஓன்று ஆகையாலே 
இந்த ஐக்யம் அறிந்து காண்கை ஆயிற்று -உள்ளபடி காண்கை யாவது –

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4 1-2 –

ஈஸ்வரன் என்று அறுதி இட்டால் பின்னை  ஸ்ரீ பஞ்சாயுத தரத்வம் சொல்லலாம் இறே-
இங்கு -இராமனை நாடுதிரேல் -வேள்வியில் கண்டார் உளர் என்கிறதில் வேறு பாடு 
தோன்றால் போலே இறே -இராமனை நாடுதிரேல் -உதிரம் அளைந்த கையோடு இருந்தானை  கண்டார் உளர் -என்கிறதும் –

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் 
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் 
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4 1-3 –

அதொரு வ்யக்தி இதொரு வ்யக்தி -என்று பிரித்து பிரபத்தி பண்ணாதே தர்மி ஒன்றே என்று அத்யவசித்து 

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட 
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன் 
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் 
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1 4-

வடதள சயனா பதாநத்துக்கும்  ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கும் உண்டான  தர்ம ஐக்யம் சொல்லப்பட்டது  ஆய்த்து 
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே -என்றும்  ஆலின் இலை வளர்ந்த  சிறுக்கன அவன்  இவன் -என்று 
இவ் ஐக்யம் தான் கீழும் பல இடங்களிலும் சொல்லப் பட்டது இறே –

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால் 
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல் 
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு 
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 5-

பிரம பாவனை தலை எடுத்து -தான் சேஷியும் தங்கள் சேஷ பூதருமான முறையால்-
தன்னுடைய குணங்களால் பிரசுரமான வசனங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணும்படி நின்ற  திருமாலை நாடுதிரேல் 
தத் தத் அபீஷ்ட ப்ரதனான ஸ்ரீ யப் பதியை-அவனும் அவளுமான சேர்த்தி யோடு காண வேணும் 
என்று தேடுகிறிகோள் ஆகில் -அந்த மணக் கோலத்தையும் வீரக் கோலத்தையும்  த்ர்டமாக கண்டவர்கள் உளர் 

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் 
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை  
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 – 

அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக்  கொடுக்கையாலே -நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான
திருமேனியை உடையவனாய் இருந்தவனை -திரு உள்ளம் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம் தேடுகிறி கோள் ஆகில் 
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு- பவளம் எறி துவரை  எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன் 
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் 
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று 
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே 
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவன் 
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை 
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1 8-

மண்ணும் மலையும் மறி கடல்களும்  மற்றும் யாவும் எல்லாம் 
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4 1-10 –

காண்கைக்கு தேட வேண்டாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் படி  சர்வ ஸ்மாத் பரனான
அவனுடைய திருவடிகளை சேரப் பெறுவர்கள்.

—————————

தானே நோற்றுப் பெற வேண்டும் படி இறே இவளுக்கு பிறந்த விடாய்-இப்படிப் பட்ட விடாயை உடையளாய்-இவள் தான்
பிராப்ய பிராபகங்கள் அவனே தான் என்னுமிடம் நிஷ்கர்ஷித்து
அநந்தரம் பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி யாய்த்து பிறந்த தசை –
இவ்வளவு ஆற்றாமை பிறக்கச் செய்தேயும் அவ்வருகில் பேறு சாத்மிக்கும் போது இன்னம் இதுக்கு அவ்வருகே ஒரு பாகம் பிறக்க வேணுமே –
ஆமத்தில் சோறு போலே ஆக ஒண்ணாது –பரமபக்தி பர்யந்தமாக பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று அவன் தாழ்க்க
அநந்தரம் ஆற்றாமை கரை புரண்டு -பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படியாய் நிர்பந்தித்தாகிலும் பெற வேண்டும் படியாய் –
என் அவா அறச் சூழ்ந்தாயே –என்கிற படி வந்து முகம் காட்டி விஷயீ கரிக்க
பிறந்த விடாயும் அதுக்கு அனுரூபமாக பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் இட்டு பேச ஒண்ணாத படி அளவிறந்து இருக்கையாலே
கண்டீரே -என்று கேட்கிறவர்கள் பாசுரத்தாலும் -கண்டோம் -என்று உத்தரம் சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும்
தனக்குப் பிறந்த விடாயையும் பெற்ற பேற்றையும் அன்யாபதேசத்தாலே தலைக் கட்டுகிறாள் –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இ றே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்த மான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து அபிமத விஷயங்களும்
தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

முதலிலே வேர்க்கக் கடவது இன்றிக்கே இருக்கும் பரமபதத்திலும் இன்றிக்கே-
தாய் தமப்பனுக்கு அஞ்சி வேர்க்கவும் மாட்டாதே -பிரபுவாய் மாலையிட்டு இருக்கும் -திருவாய்ப்பாடியிலும்
-ராஜ குமாரனாய் அன்றோ அங்கு இருக்கும் -அங்கே காண்கை அன்றிக்கே -ஸ்ரீ பிருந்தா வனத்திலே காணப் பெற்றோம்

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

ஊர் ஒப்பாக காணும் இடத்தில் அன்றிக்கே –நமக்கே யான இடத்திலே காணப் பெற்றோம் –

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

அத்திரளின் நடுவே சோலை பார்ப்பாரைப் போலே காண்கை அன்றிக்கே ஏகாந்தமாகக் காணப் பெற்றோம் –
பெண்களுக்கு தனி இருப்பான ஸ்ரீ பிருந்தா வனத்திலே கண்டோமே –

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

திருக் குழலைப் பேணியிருக்கும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே ஸ்ரீ பிருந்தா வனத்திலே காணப் பெற்றோம்
அங்கே யசோதைப் பிராட்டி கண்ணனுடைய திருக் குழலை வாரிப் பின்னி பூச்சூட்டி முடித்து இருப்பாளே
இங்கே தானே திருக் குழல்கள் தோள்களிலே வண்டுகள் போலே ஒளி வீசி அலையும்

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

அணைக்கைக்கு ஏகாந்தமான இடத்திலே காணப் பெற்றோம் –

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )
பரம பிராப்யமாய் -நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை -உடையவன் திருவடிகளிலே-உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று-
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே-என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்

————————————–

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்–
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார்  வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும்  உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு  அரியன் இமையோர்க்கும் சாழலே -11-5-5-

கன்றப் பறை கறங்கக் கண்டவர்  தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும்   சாழலே -11-5-6-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே -11-5-7-

பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர்  மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே–11-5-8-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு  ஏழ்   உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —11-5-9-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

ஷீராப்தி நாதனே
திரு வேங்கடத்தானே
ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாசம் செய்து அருளி பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினவன்
குணாநுபவம் செய்வதே பரம போக்கியம் என்பதால் பல சுருதி தனியாக அருளிச் செய்ய வில்லை-

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளிச் செயல்களில்-அருள் -பத பிரயோகங்கள்–

October 15, 2018

நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ –பெரியாழ்வார் -1-8-3-

பாலப்பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த கோலப்பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-5-

கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை -3-8-2-

நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு
அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற-3-9-5-

உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு
அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப்பற -3-9-6-

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள் முடி ஐந்திலும் நின்று
நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் -3-9-7-

அல்லி யம் பூ மலர்க்கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டு அருளாய் -3-10-2-

பெரும் தேவீ கேட்டு அருளாய் -3-10-4-

இருள் அகற்றும் ஏறி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆட் கொள்வான் அமருமூர் அணி யரங்கமே -4-9-3-

ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ யருள் செய்தமையால் -4-10-1-

எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே- நண்ணி நான் உன்னை
நாள் தொறும் ஏத்தும் நன்மையே யருள் செய் எம்பிரான் 5-1-8-

அக்கரை என்னும் மனத்து அகத்து கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை -5-3-7-

என்னையும் என்னுடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5-4-1-

——————————

உன் தன்னைப் பிறவி பெரும் தன்னை புண்ணியம் யாமுடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா–அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறை –திருப்பாவை -28-

உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் -29-

செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் -30-

—————————-

கமல வண்ணத்து திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்கெனக் கருள் கண்டாய் –நாச்சியார் -1-6-

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-

தோழியும் நானும் தொழுதோம் துக்கிளைப் பணித்து அருளாய் -3-1-

பட்டைப் பணித்து அருளாயே -3-3-

படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே -3-6-

பழகு நான் மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார் -4-10-

பொன் புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய் -5-4-

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து
நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் -12-6-

கார்த் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் -14-4-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானை -14-8-

பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் -14-10-

—————————————–

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனுசர் உய்ய துன்பமிகு துயர் அகல
அயர்வு ஓன்று இல்லாச் சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ அன்போடு தென்திசை நோக்கிப்
பள்ளி கொள்ளும் அணி யரங்கன் –பெருமாள் -1-10-

தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்த அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு
எப்பிறப்பிலும் காதல் செய்யும் என்நெஞ்சமே -2-6-

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா -4-9-

அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே -8-8-

—————————————-

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பவ்வநீர் படைத்து அடைத்து அதில் கிடந்தது முன் கடைந்த பெற்றியோய்–திருச்சந்த -28-

அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -46-

நன்று இருந்து யோக நீதி பண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்த மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெக்கனைக் கிடந்தது என்ன நீர்மையே -63-

நிற்பதும் ஓர் வேர்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் நல் பெரும் திரைக்கடலுள் நானில்லாத முன்னெல்லாம்
அத்புதன் அநந்த சயனம் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -65-

புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து உண்டு நும் உரு வினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ -67-

புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம்மீசனே -90-

முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து உயக்கொள் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என்னாவி தான் இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே -120-

——————————————–

சூதனாயக் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம் மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே –திருமாலை -16-

நின் கணும் பக்தனும் அல்லேன் களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே -26-

ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே -33-

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி யுள்ளார் தாமே யன்றே தந்தையும் தாயுமாவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே -37-

பழுதிலா ஒழுகல் ஆற்றுப் பல சதுப்பேதி மார்கள் இழி குலத்தவர்களேலும் எம்மடியார்களாகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஓக்க வழி பட அருளினாப் போல் மதிள் திருவரங்கத்தானே -42-

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா உன்னை என்னோ களை கணாக் கருதுமாறே -44-

————————————————

ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -2-

அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -9-

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே -10-

———————————————————

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -1-

—————————————————–

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -6-

கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே -7-

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -8-

—————————————–

நெடு விசும்பு அணவும் பன்றியாய் அன்று பாரதம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-4-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம் நிலந்தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும் அருளோடு பெரும் நிலம் அளிக்கும் -1-1-9–

நல் இமயத்து வரை செய் மாக் களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து பிரசவாரி
தன்னிளம் பிடிக்கு அருள் செய்யும் பிருதி சென்று ஆடை நெஞ்சே -1-1-5-

தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான் -1-4-4-

வேலை வாய் அமுதம் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்த்ரற்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள்
எம்பெருமான் அந்தரத்து அமரர் அடியிணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரியாச்சிரமத்து உள்ளான் -1-4-7-

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும் அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் –1-5-9-

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -1-7-1-

விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா அடியேன் இடரைக் களையாயே -1-10-1-

திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே -1-10-2-

சீரார் திருவேங்கடமாமலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே -1-10-3-

விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே -1-10-4-

திருவேங்கடமாமலை மேய கோணாகணையாய் குறிக்கோள் எனை நீயே -1-10-5-

மன்னா இம்மானிடப்பிறவியை நீக்கி தன்னாக்கித் தன் இன்னருள் செய்யும் தலைவன் -1-10–6-

வானவர் தங்கள் சிந்தை போலே என் நெஞ்சமே இனிது உவந்து மாதவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை -2-1-1-

வேங்கடமலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்து உரைத்து புனிதன் -பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் செயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு இனியன் எந்தை எம்பெருமான் -எவ்வுள் கிடந்தான் –2-2-8-

ஆயர் எந்தம்மோடு இனவா நிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன அந்தமில் வரையால்
மழை தடுத்தானைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே -2-3-4-

எம்பெருமான் அருள் என்ன சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள் செய் என உள் குழைந்து ஆர்வமொடு நிச்சம் நினைவார்க்கு
அருள் செய்யுமவற்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-8-

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை -2-7-10-

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து -2-8-5-

தூவடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்ற காவடியில்
கற்பகமே போலே நின்று கலந்தவர்கட்க்கு அருள் புரியும் கருத்தினானை -2-10-9-

மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா கூறு கொண்டு
அவன் குலமகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் -3-1-4-

அலை நீருலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா ஒலி மாலை -3-2-10-

ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் -3-3-1-

சங்கு தனக்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ -3-5-8-

தன் தாராய நறும் துளவம் பெரும் தகையேற்கு அருளானே -3-6-3-

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கருமா முகில் போல் எந்தாய் எமக்கே அருளாய்
என நின்று இமையோர் பரவும் இடம் -3-8-1-

விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் -3-8-2-

திண்மை மிகு மருதொடு நல் சகடம் இருந்து அருளும் தேவன் அவன் மகிழ்ந்து இனிது மருவி யுரை கோயில் -3-9-6-

வங்க மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே
எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் -3-9 -9–

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழத் தீ வினைகள் போய் அகல அடியவர்கட்க்கு என்றும் அருள் நடந்து
இவ்வேழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் -3-10-1-

அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குரு மணி என்னாரமுதம் குளவி யுறை கோயில் -3-10-2-

பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் -3-10-3-

இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என நின்று அருளும் இடம் -4-1-4-

பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரானை -4-3-1-

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி
அருளினைக் கொடுக்கும் தயரதன் முதலையை -4-3-5–

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நிலமடந்ததனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் கண்டீர் -4-4-8-

தூம்புடைப் பணைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி -4-5-1-

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை -4-5-9-

இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-

தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஓசித்தாய் -4-6-7-

தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக்குளத்துமானாய் அடியேனுக்கு அருள் புரியாயே -4-7-4-

திரு வெள்ளக்குளத்து உறைவானே எல்லா இடரும் கெடுமாறு அருளாயே -4-7-6-

திருவெள்ளத்துக்குள் மாலே என் வல்வினை தீர்த்து அருளாயே -4-7-7-

திருவெள்ளத்துக்குள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே -4-7-8-

திருவெள்ளக்குளத்து உறைவானே ஆவா அடியான் இவன் என்று அருளாயே -4-7-9-

இந்தளூரீரே எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா என்று இரங்கி -4-9-1-

பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி யரி என்று அவை அழைப்ப வெள்ளியார் வணங்க
விரைந்து அருள் செய்வான் திரு வெள்ளி யங்குடி யதுவே -4-10-7-

அன்னமாகி அருமறைகள் அருளிச்செய்த அமலன் இடம் -5-1-9-

திரு வெள்ளறை மங்களா சாசன திருப்பதிகம் –

இத் திருமொழியில் பாசுரங்கள் தோறும் அருள் புரியே -என்றும் –
நின் காதலை அருள் எனக்கு -என்றும் –
நின் அடிமையை அருள் எனக்கு -என்றும்
பரி பூரணமான பக்திப் பெரும் காதல் உண்டாகும்படியும் –
அத்தாணிச் சேவகம் செய்யும் படியும் அருள பிரார்த்திப்பதே இத் திரு மொழியின் பிரமேயம் –

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–பெரிய திருமொழி–5-3-1-
முன் பரி முகமாய் இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே–5-3-2-
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே–5-3-3-
திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு-5-3-4-
இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–5-3-5-
ஆதி நின்னடிமையை யருள் எனக்கு–5-3-6-
வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே–5-3-7-
அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே–5-3-8-
பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே–5-3-9-

ஒருகால் போலே ஒன்பதில் கால் அருள் புரிய பிரார்த்திக்கிறார்

துவரித்த உடையவர்க்கு தூய்மையில்லாச் சமணற்கும் அவர்கட்க்கு அங்கு அருளில்லா அருளாணை -5-6-8-

பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஓளி கெட பகலே ஆழியால் அன்று அங்கு
ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-8-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து -5-8-1-

அரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து -5-8-4-

மலரடி கண்ட மா மறையாளன் –போகம் நீ எய்தி பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் -5-8-5-

நான்மறை மா முனி பெற்ற மைந்தனை –காலனையுக முனிந்து ஒழியா பின்னை என்றும்
நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் -5-8-6-

இன்னருள் அவற்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் -5-8-8-

தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு
நாழிகை ஏழுடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்தவாறு -5-8-9-

வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை நக்க அரி யுருவமாகி
நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் -5-9-5-

ஆண்டாய் யுன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -பெரிய திருமொழி-6-1-
பகவத் விஷய பிராவண்யத்திலும்  விஷயாந்தர விரக்தியில் தமக்கு உள்ள உறுதியையும்
ஒரு காலுக்கு ஒன்பதின் காலாக உரைக்கிற படி-

நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் –திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் -6-6-9-

உடலம் நீரும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை இரப்ப மாறு ஓன்று இல்லா வாச நீர்
வரை மார்பகலத்து அளித்து உகந்தான் -6-7-9-

கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர்மலை நித்திலத் தொத்தே பதியே
பரவித் தொழும் தொண்டர் தமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உந்து ஒழிந்தேனே -7-`1-7-

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -7-1-9-

என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-

தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து
தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை -7-3-2-

ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை
வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி –7-3-4-

இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் -7-3-8-

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளி மாடு வந்து என் மனம்
புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் -7-5-6-

என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளி பொன்னம் கலைகள்
மெலிவெய்தப் போன புனிதர் ஊர் போலும் –7-5-9-

குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போரேற்றை -7-6-4-

ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை பிழைத்து குடி போந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் -7-7-8-

நெஞ்சு இடர் தீர்த்து அருளிய என் நிமலன் காண்மின் -7-8-3-

இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய எம்மீசன் காண்மின் -7-8-4-

சிறு புலியூர்ச் சலசயனத்து ஐவாய் அரவணை மேல் உறை யமலா அருளாயே -7-9-8-

கரு மா முகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அரு மா கடல் அமுதே உனது அடியே சரணாமே -7-9-9-

எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை -7-10-1-

தமியேன் தன் சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெரும் அளவு இருந்தேனை -8-5-1-

ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்-8-5-5-

பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறு ஓன்று ஓசித்தானூர் கண்ணபுரம் -8-6-6-

வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான் அலை நீர் இலங்கைத் தசக்கிரீவர்க்கு இளையோருக்கு அரசை அருளி -8-6-7-

கண்ணபுரத்து எம்மடிகளை திருமா மகளால் அருள் மாரி-8-6-10-

உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள் செய் கண்டாய் கற்றார் சேர் கண்ணபுரத்துறை யம்மானே -8-10-5-

பேர் அருளாளர் கொல் யான் அறியேன் -9-2-7-

அரி யுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்கு -9-4-4-

மருப்பு ஒசித்த பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்கு -9-4-8-

ஆதியுமானான் அருள் தந்தவா நமக்கு -9-4-9-

வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி -9-5-4-

திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை
பேசிக் கற்றவன் காமரு சீர்க் கலியன் -9-5-10-

பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளின் முன் அருளி அணி வளர் குறளாய்
அகலிடமுழுதும் அளந்த எம் அடிகள் -9-8-3-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை -9-9-8-

அடியவர் தங்கள் தம் மனைத்துப் பிரியாது அருள் புரிவான் -9-10-1-

ஆனை வாட்டி யருளும் அமரர் தம் கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே -10-1-5-

உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால் –10-6-4-

இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர் பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங்கண் பெரும் தோள் நெடுமால் -11-3-2-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஓக்க அருள் செய்வாராதலால் -11-3-5-

ஓர் சரண் இல்லை என்ன அரணாவன் என்னும் அருளால் அலை கடல் நீர் குழம்ப அகடாடவோடு அகல் வானிரிஞ்ச
முதுகில் மலைகளை மீது கொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே -11-4-1-

கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார் பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10 —

வயலாலி மணவாளா இடையன் எறிந்த மரமே ஒத்திராமே அடைய அருளாய் எனக்கு உன் தன் அருளே -11-8-6-

அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே -11-8-9-

—————————————–

மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகிலேனே –திருக் குறும் தாண்டகம் -1-

துலக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு அங்கே விளக்கினை விதியின்
காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே–18-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று அன்னமாய் முனிவரோடு
அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் -திரு நெடும் தாண்டகம் -30-

———————————————–

முதலாய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து பல்லார் அருளும் பழுது –முதல் திருவந்தாதி -15-

பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர் அனல் கங்கை ஏற்றான்
அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் — -91-

————————————-

மிகவாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு என் பாக்யத்தால் இனி –இரண்டாம் -34-

பொருளால் அமருலகம் புக்கியலலாகாது அருளால் ஆறாம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே நீ மறவேல் நெஞ்சே நினை -41-

அடலாழி கொண்ட அறிவனே இன்பக் கடலாழி நீ அருளிக் காண் -55-

வேம்பின் பொருள் நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -58-

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து -59-

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய்ம்மலர்கள் தூவ-99-

———————————————

நெடு மாலே தாவிய நின் எஞ்சா இணையடிக்கே ஏழ் பிறப்புமாளாகி அஞ்சாது இருக்க அருள் –மூன்றாம் -18-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் –மூன்றாம் -19-

————————————-

திருவரங்கா அருளாய் –திரு விருத்தம் -28-

உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம் ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள் பெற்றதே -32-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர் -33-

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால் உயலிடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி -56-

இனி யுன் திருவருளால் அன்றிக் காப்பு அரிதால்-62-

புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -69-

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே -95-

————————————————

தானோர் இருள் அன்ன மா மேனி எம்மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து –பெரிய திருவந்தாதி -23-

———————————-

மயர்வற மதிநலம் அருளினவன் யவன் அவன் -1-1-1-

இறையோன் அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே-1-3-2-

ஆவா என்று எனக்கு அருளி வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால் -1-4-1-

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே -1-4-5-

அருளாத நீர் அருளி அவராவி துவரா முன் அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று அருளாழி
அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே-1-4-6-

என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு -1-4-7-

ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார் -2 -2 -2—

எதிர் சூழ் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்
எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே -2-7-6-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரானே-
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே 2-9-3-

தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணிவிக்கும் முடித்தே –2-10-11-

முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் -3-5-1-

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று -3-5-7-

தோற்றக் கேடவை இல்லவனுடையான் அவன் ஒரு மூர்த்தியாய் சீற்றத்தோடு அருள் பெற்றவன்
அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண் மால் -3-6-6-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய் மண் கொள் ஞாலத்து உயிக்கு எல்லாம்
அருள் செய்யும் வானவர் ஈசனை -3-6-11-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -3-7-11-

வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -3-8-3-

குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-

ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று நாளமில்லாச் சிறு தகையேன்-4-7-4-

வெறித்துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே -4-9-6-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -4-10-8-

என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-

தேவார கோலத்தோடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனானே -5-1-9-

ஆனானாளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -5-1-10-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும் மலியும் சுடர் ஒழி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை -5-1-11-

சிரீவர மங்கலத்தவர் கை தொழ வுறை வான மா மலையே அடியேன் தொலை வந்து அருளே -5-7-6-

வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே –5-7-7-

நால் தோள் எந்தாய் உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-

திருவல்ல வாழ் கழலின் மலி சக்கர பெருமானது தொல்லருளே -5-9-10-

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் தோழிமீர்காள் தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற
திரு நகரம் நல்லருளாயிரவர் நலன் ஏந்தும் திருவல்ல வாழ் நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே -9-10-10-
மின்னிடை மடவார் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவான் -6-2-1-

வேயிரும் தடம் தோளினார் இத்திருவருள் பெறுவார் யவர் கொல் -6-2-1-

மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க -6-2-5-

பழகியாம் இருப்போம் பரமே இத்திருவருள்கள் -6-2-6-

திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருள் கண்டு கொண்மின்கள் கைத்தவமே -6-3-4-

ஆசறு தூவி வெள்ளைக்குருகே அருள் செய்து ஒரு நாள் மாசறு நீலச் சுடர் முடி வானவர்கோனைக் கண்டு -6-8-8-

விண்ணோர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி யுரையீர் வைகல் வந்து இருந்தே -6-8-9-

அறிவிலேனுக்கு அருளாயே -6-9-7-

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய் -6-9-8-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் படிக்கேழ் இல்லாப் பெருமான் -6-9-11-

ஓன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல் -7-1-7-

சின்னமுத்து எனது தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் முழு வேர் அறிந்து
என்னை யுன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து எத்திக் கை தொழவே யருள் எனக்கு என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குலா முதலே -7-1-8-

ஐவரை வலமுதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் -7-1-9-

கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்-7-2-3-

பை கொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் -7-2-6-

என் திருமகள் சேர் மார்வன் என்னும் என்னுடைய ஆவியே என்னும் -7-2-9-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி யுய்ந்தவன்-7-2-11-

அரக்கன் குலத்தைத் தடிந்து மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏறு -7-6-9-

ஏற்றும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி -7-6-10-

மாயா வாமனன் மதுசூதா நீ அருளாய் -7-8-1-
அங்கண் மலர்த்தண் துழாய் முடி அச்சுதன் அருளாய் -7-8-2-
சித்திரத் தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் –7-8-3-
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே எனக்கு ஓன்று அருளாய் -7-8-4-
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய் -7-8-5-
மயக்கா வாமனனே மதியாம் வண்ணம் ஓன்று அருளாய் -7-8-6-
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய் -7-8-7-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன் பேணுமாறு எல்லாம் பேணி
நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா -8-1-2-

யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல் வான் உயர் இன்பம் மன்னி
வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே -8-1 -9–

என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக்கீழ் நின்றே யாட் செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -8-3-8-

உரையா வெந்நோய் தவிர அருள் நீள் முடியானை -8-3-11-

அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கு அருளும் அம்மானை -8-4-10-

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இணையான அறியேனே -8-7-2-

அருள் தான் இணையான அறியேன் அவன் என்னுள் இருள் தான் அற வீற்று இருந்தான் -8-7-3-

தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தண் திருவருள் செய்தே-8-7-4-

திகழும் தண் திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தான் காட்டித் தந்து -8-7-5-

செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்ற அருளே -8-7-7-

அறியேன் மற்ற அருள் என்னை யாளும் பிரானார் வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்க்கு உகந்து -8-7-8-

உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே-8-8-3-

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொன் கழல் அடிக்கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபனை ஓர் ஆயிரத்துள் இப்பத்தால் அருளி அடிக்கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே -8-8-11-

திருப்புலியூர் முனைவர் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினாள் -8-9-5-

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ணபிரான் திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே -8-9-6-

குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளால் இவள் நேர்பட்டதே -8-9-10-

பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள் வடிவு என் மனத்ததாய் அங்கேய் மலர்கள் கையவாய் வழி பட்டோடே அருளிலே -8-10-4-

வழி பட்டோடே அருள் பெற்று மாயன் கோல மலரடிக்கீழ் -8-10-5-

வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி
வழி வந்தாட் செய்யும் தொண்டரோர்க்குக்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களில் நோக்காய் -9-2-1-

குடிக்கிடிந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக்கு குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே
வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -9-2-2-

தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -9-2-3-

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி -9-2 -4—

பவளம் போல் கனிவாய் சிவப்பா நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் தாவல் கதிர் முறுவல் செய்து
நின் திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் -9-2-5–

அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை -9-4-10-

இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல்லூழிக்கு தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனை -9-5-11-

வெறி கமல் சோலைத் தேன் காஅத்கரை என்னப்பன் சிறிய வென்னாருயிர் உண்ட திரு வருளே -9-6-4-

திருவருள் செய்பவன் போல் என்னுள் புகுந்து -9-6-5-

திருமேனி யவட்க்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன் திருமேனி ஓளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே -9-7-4-

நாவாய் யுறைகின்ற நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே -9-8-7-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக்கு கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -9-8-8-

யாமுடைய ஆருயிர் காக்குமாறு என் அவனுடைய அருள் பெறும் போது அரிதே-9-9-5-

அவனுடைய அருள் பெறும் போது அரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது –9-9-6-

மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசுஞ்சாந்தினில் பஞ்சமம் வைத்து அது மணம் தின்னருள்
ஆய்ச்சியர்க்கே ஊதும் இத்தீங்குழற்கே உய்யேன் நான் -9-9-8 —

நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -10-2-4-

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி -10-2-5-

நெடியோன் அருள் சூடும் படியான சடகோபன் நொடியாயிரத்திப் பத்து அடியார்க்கு அருள் பேறே -10-5-11-

அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -10-6-1-

பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே -10-6-4-

என் கொல் அம்மான் திருவருள்கள் -10-7-4-

அடி பரவ அருளை ஈந்த அம்மானே -10-7-6-

அருளை ஈய என்னம்மானே என்னும் முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே -10-7-7-

திருப்பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் -10-8-9-

————————————————-

தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே -16-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமமானுச நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே -38-

ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்று அழுந்தி மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42-

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின்னருள் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பொழுதே அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆனபின்னே –48

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்து அருளும் கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -55-

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நீரை வேங்கடப் பொற்குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற்கடலும்
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் என் தனக்கும் அது இராமானுச இவை ஈந்து அருளே -70-

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப் பாய்ந்தான் அம்மறை பல் பொருளால் இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் வண்மை இராமானுசர்க்கு என் கருத்தினையே-77-

மருள் சுரந்த வாகம வாத்தியார் கூறும் அவப்பொருளாம் இருள் சுரந்து எத்த உலகு இருள் நீங்க தண்ணீண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா வுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன் மிக்க புண்ணியனே -91-

கட்டப்பொருளை மறைப்பொருள் என்று கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே -93-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டாலே -104-

———————————————

எந்தை திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து பின்னரும் கற்க
உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து -1-

பொய்கையார் பூதத்தார் பெயர் புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் துய்ய பட்ட நாதன்
அன்பார் தாள் தூளி நற் பாணன் நன் கலியன் ஈது இவர் தோற்றத்து அடைவாம் இங்கு -4-

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற நாதமுனி முதலா
நம் தேசிகரை அல்லால் பேதை மனமே யுண்டோ பேசு -36-

ஓராண் வழியா யுபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பாருலகில் ஆசையுடையோர்க்கு
எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் -37-

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்து அருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் அந்தோ
திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்து யுரைக்க வல்ல குரு ஆர் இக்காலம் நெஞ்சே கூறு -40-

தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப்பிரான் பிள்ளான் எதிராசர் பேர் அருளால் உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்று யுரைத்தது இன்பமிகும் ஆறாயிரம் -41-

தஞ்சீரை ஞானியர் தாம் புகழும் வேதாந்தி நஞ்சீயர் பட்டர் நல்லருளால் எஞ்சாத ஆர்வமுடன்
மாறன் மறைபொருளை ஆய்ந்து யுரைத்தது ஏர் ஒன்பதினாயிரம் -42-

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் இன்பா அருபத்தி
மாறன் மறைப் பொருளை சொன்னது இருபத்து நாலாயிரம் -43–

பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும் தெரிய வியாக்கியைகள் செய்வால் அரிய அருளிச் செயல் பொருளை
ஆரியர்கட்க்கு இப்போது அருளிச் செயலாய்த்து அறிந்து -46-

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை புகழ் அல்ல விவ்வார்த்தை மெய் இப்போது -53-

பூர்வாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து -72-

இந்த உபதேச இரத்தின மாலை தன்னை சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் எந்தை எதிராசர்
இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவார் தாம் -73-

———————————–

வீடு செய்து மற்று எவையும் மிக்க புகழ் நாரணன் தாள் நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கும்
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழ பண்புடன் பாடி யருள் பத்து -2-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடன் பேசி அரியனலன் ஆராதனைக்கு என்று உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு -6-

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்க்கு ஆளாம் குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு -18-

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால் அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும்
அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய் -25-

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர் மன்னருளால் மாறும் ஜன்மம் -29-

நண்ணாது மாலடியை நானிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறும் இவ்வுயிர்கள் தண்ணிமையைக்
கண்டு இருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை ஓன்று -39-

நோற்ற நோன்பாதியிலே உன்தன்னை விட்டு ஆற்றகில்லேன் பேற்றுக்கு உபாயம் உந்தன் பேர் அருளே சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கம் அமரர்க்கு ஆராவமுது -47-

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோம் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் என்று எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் -53-

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில் மன்னும் உவப்பால் வந்த மால் -55-

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் தண்டற நீ
செய்து அருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையே உய் துணை என்று உள்ளமே ஓர் -82-

ஓரா நீர் வேண்டியவை உள்ளது எல்லாம் செய்கின்றேன் நாராயணன் அன்றோ நான் என்று பேர் உறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம் மனத்து வை -83-

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால் அன்று அவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய்
பின்னையவன் தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள் உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும் -85-

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன் சொல்லும் அளவும் பற்றாத தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன் மால் -89-

கண்ணன் அடி இணையில் காதலுருவார் செயலை திண்ணமுறவே சுருங்கச் செப்பியே மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக்கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள் -95-

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து இரு விசும்பில்
இத்துடன் கொண்டு ஏக இசைவு பார்த்தே இருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் -96-

—————


மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று, அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார் பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-