பேசிற்றே பேசும் ஏக கண்டர் ..
நல் தமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்று இமையோர் –முதல் ஆழ்வார்கள் ..
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து அன்று எரித்த திரு விளக்கு -பூதத் ஆழ்வார்—
இறைவனை காணும் இதயத்து இருள் கெடஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திரு அடி –
ஞானம் தமிழ் புரிந்த நான்-என்றார் இவர்
1- ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே —
வடி கோல வாழ் நெடும் கண் மா மலராள் செவ்வி
படி கோலம் கண்டு அகலாள் பன்னாள் –
இத்தை ஒற்றியே நம்மாழ்வாரும் –
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றார் – -..
திருப் பொலிந்த ஆகத்தான் -40 என்றும் —
செய்ய நெடு மலராள் மார்பன் -52 -என்றும் – –
திரு மங்கை நின்று அருளும் தெய்வம்-57 -என்றுமாக அருளி இருக்கிறார் – ..
காண கழி காதல் கைமிக்கு காட்டினால்
நாண படும் என்றால் நாணுமே -பேணி
கரு மாலை பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நங்கள் திரு -என்று
புருஷகாரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாக அருளி இருக்கிறார் – ..
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -என்று மாறனும்- –
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே-என்று
மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த மங்கையர் கோனும்
அருளிச் செய்வார்கள் இத்தை அடி ஒற்றியே .
—————-
2-பாகவத சேஷத்வம் ..
தோள் இரண்டு எட்டு எழும் மூன்று முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் – தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு –
சரம் துரந்தான்- ராமபிரான் –
அவன் தாழ் இரண்டும் தொழுவார் – -பரதாழ்வான்
அவன் -பாதம் அவை தொழுவார்-சத்ருக்ந ஆழ்வார் — ..
தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல ..
அடியவர் களுக்கு ஆட் படுதலும்
அடியவர் அல்லாத வர்களை நெஞ்சாலும் நினையாமல் ஆனவனும் –
வியதிரேகத்திலும் அருளி இருக்கிறார் ..
சிறந்தார்க்கு எழு துணையாம் செம் கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -44.-
இத்தை ஒற்றியே -.
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -என்கிறார் ..
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் .
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் –
பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார் ..
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்துக் கொண்டு இருப்பவர் அருளுகிறார் ..
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய்
பாகவத சேஷத்வத்தைக் காட்டி கொண்டு எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –
———-
3-ஆழ்வார்கள் அவதரித்த திவ்ய தேசத்தில் –திரு கடல் மல்லை -மட்டும் –
வேறே ஒரு ஆழ்வாரால் -10-பாசுரங்கள் மேல் மங்களா சாசனம் பண்ணப் பட்டு உள்ளதே
திருவாலி திரு நகரியை கலியன் மட்டுமே -30-பாசுரங்கள் அருளி இருக்கிறார் –
திருக் குருகூரை மாறன் மட்டும் -10-பாசுரங்கள் மங்களா சாசனம் பண்ணி இருக்கிறார்
———————
4-..யானே இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றார் பூதத்தாழ்வார் –
கலியனும்-தம்மை –
இரும் தமிழ் நூல் புலவன் என்று சொல்லி கொள்கிறார் ..
—————
.5-.பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இரு கண இள மூங்கில் வாங்கி -அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை -என்கிறார் –
இந்த காட்சியையே கலியனும் திருப் பிரிதி பதிகத்தில்
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரசவாரி தன் இளம்பிடிக்கு அருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே
த்வயம் அர்த்தம் எம்பெருமானார் திருவேங்கடத்தில் -அருள –
அனந்தாழ்வான் –பெருகு மத வேழம்–எம்பெருமானார் -நமக்கு -பிடிகள் ஸ்தானத்தில் ..
இரு கண இள மூங்கில்-த்வய மந்த்ரார்த்தை ..
அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்–எனக்கு தேன் -பால் அமுது நமோ நாராயணமே –
திரு மந்த்ரம் — கீதா அம்ருதம் -இரண்டையும் கலந்து – –
வான் கலந்த வண்ணன் வரை -திருவேங்கட மாலை ஆகும் -என்று காஞ்சி ஸ்வாமி அருளிச் செய்வார் –
பேத ஸ்ருதிகளையும்
அபேத ஸ்ருதிகளையும்
கடக சுருதி உடன் கலந்து அருளி என்றுமாம்
—————
6-..உபாய சூன்யதை –
ஸ்வ பிரவர்த்தி நிவ்ருத்தி பகவத் பிரவர்த்தி சாதனம் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தன்னால் முடியாத நிலையில் –
ஆதி மூலமே என்றதும்
அரை குலைய தலை குலைய ஓடி வந்தானே –
அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரை பெற்றால் – கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்று முடித்து அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து -22..
அவனை பெற ருசி இருக்க வேண்டுமே -சேதனராக இருப்பதால் –
அந்த ருசியும் அவனை அடைய சாதனம் இல்லையே -அதிகாரி ஸ்வரூபமே -.
தனக்கு அடிமை பட்டது தான் அறியேன் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை- வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று —
மழை பொழிய ஏரி கட்டுவது சாதனம் இல்லையே –
அவன் அருள் பொழியும் பொழுது தேங்கி வைக்க -பங்காக இருக்க தான் ருசி என்றவாறு – –
—————
7-இளம் கோயில் .-
திரு உள்ளம் வந்து சேர தான்
திருப் பாற் கடலிலும் திரு வேங்கடம் முதலான திவ்ய தேசங்களிலும் எழுந்து அருளி இருக்கிறான் –..
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல் என்று ஒழிந்தன கொலே பாவம் – வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து
நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் ..என்கிறார் நம்மாழ்வார் –
இதையே பூதத் ஆழ்வார்-
வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன்
வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று
பால் ஆலயம் போலே – –
இளம் கோயில்–கை விட வேண்டாம் என்கிறார் –
—————
8-.ஞானப் பிரான் –
ஸ்ரீ வராஹ மூர்த்தி தான் ஞான பிரதானம் பண்ணி அருளுகிறார் – –
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்று திரு விருத்தம் தொடக்கத்திலே அருளிச் செய்கிறார் –.
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார்-
ஞானப் பிரானை அல்லால் இல்லை -என்கிறார் – –.
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -திருவாய்மொழி-
தலைக் கட்டும் போதும் அருளிச் செய்கிறார் – ..
பன்றியாய் அன்று பார் அகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -கலியன் – ..
எயிற்று இடை மண் கொண்ட எந்தை இரா பகல் ஓதுவித்து எம்மை
பயிற்றி பணி செய்ய கொண்டான் –பெரியாழ்வாரும் -..
பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கண்டு- வராக
தனி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து –
அவன் திருவடிகளை பணிபவர்களே திரு மேனியையும் சேவிக்கும் பாக்யம் பெறுவார் என்கிறார் —
திருக் கடல் மல்லை பதிகத்தில் கலியன் – –-
ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானதிலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லை தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே –
என்று அருளி செய்கிறார் – .
—————
9-.மூவர் அனுபவம் ..
பயின்றது அரங்கம்-என்றும்
பயின்றதுவும் வேம்கடம் -என்றும் ஒரே பாசுரத்தில் அருளுகிறார் -..
என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
என் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான் .என்றும் –
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத் தீ
மறையாவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான் -என்றும்
இரண்டு பாசுரங்களால் மங்களா சாசனம் செய்து இருக்கிறார் – .
இமையோர் தலைவா -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
வரம் தரும் மா மணி வண்ணன் -என்றும்
பேர் அருள் ஆளன்-என்றும் அருளுவார்கள்–
இவர் தாம் ஸ்பஷ்டமாக – –அத்தியூரான்-என்கிறார் ..
கருட சேவை என்றும் பிரசித்தமாய் இருப்பது
இவர்-புள்ளை ஊர்வான்-அருளியதால் தானோ !..
நம்மாழ்வாரும் , திருமங்கை ஆழ்வாரும் இவரைப் போலே –
கோயில் திருமலை பெருமாள் கோயில் -மூன்றையும் மங்களா சாசனம் செய்து உள்ளார்கள் –
பூதத்தாழ்வார் -மூலவர் -..-
என் நெஞ்சமேயான்–தம் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருப்பது போலே
நம்மாழ்வாரும் –அயர்வறும் அமரர்கள் அதிபதி துயர் அரு சுடர் அடி தொழுது எழு என் மனனே –
நெஞ்சில் கை வைத்து கொண்டு இருக்கிறார் ..
அது போல அவதார ஸ்தலத்திலும் –
சிந்தை இடு திரியா ஏற்றினேன் என்பதற்கு ஏற்ப
நெஞ்சில் கை வைத்து கொண்டு இருக்கிறார் ..
——————–
10-பெரும்தமிழ்–
இரும் தமிழ்–
ஞான தமிழ் -என்று தாம் கூறிக் கொண்டது போலே –
இவர் திவ்ய பிரபந்தம் ஸ்ரேஷ்டம் என்றவாறு -.
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ . வே . M A V ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply