Archive for the ‘முதல் திரு அந்தாதி’ Category

முதல் திருவந்தாதி–பாசுரங்கள் –81-90– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடலைக் கடைந்து அம்ருதம் கொடுத்து அவர்களை சாவாமல்
காத்தவனுடைய பேர் அன்றோ அநாதியான நரகத்தின் நின்றும் கைப்பிடித்து ஏற விடும் பரிகரம்-என்கிறார் –

(திரு நாம சங்கீர்த்தனம் நேராக உபாயம் ஆகாதே –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -பகவானே உபாயம் என்கிற திருட அத்யாவசிய இல்லாதவனுக்கு இது உபாயம்
ப்ரபன்னனுக்கு கைங்கர்ய ரூபம் ஆகும்)

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
திரு நாமமே கிடி கோள் சம்சாரத்தை கடக்கைக்கு உபாயம் -என்கிறார் –

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக் கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.(அல்லேன் என்றாலும் விடாதே தானே பற்றி  கடத்தும் படை)

ஆளமர் வென்றி யடுகளத்துள் –ஆள் நிறைந்து வென்றியை யுடைத்தாய் முடிப்பதான யுத்த ஸ்தலத்திலே
வாளமர் வேண்டி-மதிப்புடைத்தான பூசலை வேண்டி –
வரை நட்டு-மந்திரத்தை நட்டு –
அஞ்ஞான்று-அஸூரர்கள் தேவர்களை முறித்து வாயில் இட்டுச் செல்லுகிற அன்று
வாளமர்-தேவர்களுக்கு மதிப்பும் ஆயுஸ்ஸூம் யுண்டாகும் படி
நீள் அரவைச்-சேதனத்தை
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்-பற்றிக் கடத்தும் படை-அள்ளி எடுத்துக் கொடு போய்
பரம பதத்தில் வைக்கும் -பற்றி -அல்லேன் என்றாலும் விடாது –

(மஹா விஸ்வாசம் மற்றவர்களுக்கும் திருநாம ஸங்கீர்த்தனமே பல பிரதமாகும்
வாஸ்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம்
அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டே நின்று உதவும்
திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது திருநாமம் இறே)

—————————-

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
திரு நாமமே கிடி கோள் சம்சாரத்தை கடக்கைக்கு உபாயம் -என்கிறார் –

ஆளோடு ஆள் மிடைந்து கிடப்பதாய்-வென்றியை யுடைத்தாய் -எதிரிகளை முடித்து விழ விடுகிற யுத்த பூமியிலே
அஸூரர்கள் தேவர்களை மேலிட்டு நலிகிற அன்று அனுகூலரான தேவர்களுக்கு ஜெயம் யுண்டாகும் படி
ஒளியை யுடைத்தாய் இருபத்தொரு யுத்தம் வேணும் என்று அபேக்ஷித்து -நீரைக் கண்டால் ஆழக் கடவ
கடைந்து அருளினவனுடைய திரு நாமம் அன்றோ பழையதாய் வருகிற சம்சாரம் ஆகிற
நரகத்தை அள்ளி எடுத்துக் கொடு போய்க் கடத்தி விடும் சாதனம் –

—————————————————————–

இப் பாட்டாலே சர்வ ஸமாஸ்ரயணீயத்துவமும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் சொல்லுகிறது –

தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி கடலிலே கிடந்த அளவன்றிக்கே பெண் பிறந்தாரும் ஆஸ்ரயிக்கலாம் படி
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனார் என்கிறார் –

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வாள்-வேலாயுதம் போன்று ஒளி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசி யன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவே தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

படையாரும் வாள் கண்ணார் -வாள் போன்று ஒளி பொருந்திய கண்களை யுடையார்
பாரசி நாள்-துவாதசி அன்று –

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் –வாள் போன்ற ஒளியை யுடைத்தான கண்களை யுடையரான ஸ்த்ரீகள் -துவாதசி நாள்
பைம்பூம்-தொடையலோ டேந்திய தூபம்-அழகியதாய் தொடுத்த மாலையோடு கூடின தூபம்
இடையிடையில்-மீன் மாய மாசூணும் -பூக்களோடு கூடின புகையானது ஆகாசத்தில் கலக்கத் தோற்றின
நக்ஷத்ரங்களை மாசூணாப் பண்ணா நின்றது –

வேங்கடமே லோருநாள்-மானமாய வெய்தான் வரை –பண்டு ஒரு நாள் ராக்ஷஸன் மாயா மிருகமாய் வர
இத்தைப் பிடித்துத் தர வேணும் என்று பிராட்டி அருளிச் செய்தது மறுக்க மாட்டாமே அத்தை முடித்தவனுடைய மலை

இப் பாட்டாலே சர்வ ஸமாஸ்ரயணீயத்துவமும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் சொல்லுகிறது –
வாள் கண்ணார் -தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்கும் அவர்கள் –
மீன் மாய -ஆகாசம் தோற்றாத படி பூக்களும் புகையுமாகத் தோற்றுகை
மான் இத்யாதி -பிராட்டிக்கு நியாம்யன் ஆனால் போலே
நியாமியனாய்ப் புக்கு -தன் அனர்த்தம் என்று மீளாது கார்யம் செய்யுமவன் —

(பிராட்டிக்கு வசப்பட்டவனாய் தன் அநர்த்தத்தையும் காணாமல் அவள் கார்யம் செய்ய முற்பட்டால் போலே
அடியார்க்கும் வசப்பட்டு அவர்கள் கார்யம் செய்ய முற்படுவான் என்று கருத்து-)

———————————————————-

தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி கடலிலே கிடந்த அளவன்றிக்கே பெண் பிறந்தாரும் ஆஸ்ரயிக்கலாம் படி
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனார் என்கிறார் –

வேலாகிற ஆயுதத்தோடு ஒத்து இருப்பதாய் ஒளியை யுடைத்தான கண்களை யுடைய பெண்களானவர்கள்
துவாதசி நாளிலே அழகிய பூக்களால் தொடுத்த மாலைகளோடு கூட தரித்த தூபமானது நடு நடுவே
ஒரோ நக்ஷத்ரங்களை யுடைத்தான ஆகாசமானது மறையும் படி அத்தைச் சென்று மாசு ஏறும்படி பண்ணா நிற்கும் திரு மலையே-
முன்பு ஒரு நாளிலே பிராட்டி வசன பரதந்த்ரனாகக் கொண்டு மாயா ம்ருகம் முடியும் படி அம்பு எய்து
விழ விட்ட சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திரு மலை —

——————————————————-

ஒரு செயலேயோ –

நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன
மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு மலையை எடுப்பது
ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –

(பிராட்டியோ ஆ நிரையோ கோப கோபீ ஜனங்களோ வாசி இல்லாமல் -ஆஸ்ரித ரக்ஷணம் செய்யும் ஸ்வ பாவன் என்பதைக் காட்டவே இப்பாசுரம்)

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக் கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும் அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத் தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கள் ஏழையும்
செற்றவாறேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து –மலை குடையாகவும் தோள் காம்பாகவும் பசுக்களைக் காக்க
ஆயர் நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே –நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான ஏழு வ்ருஷபத்தையும் முடித்தபடி எங்கனே —
உரவுடைய-நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் -உரவு–என்று மிடுக்குக்குப் பெயர் -சர்ப்பம் என்றுமாம் –
திருப் பாற் கடலிலே கிடந்து-எதிரான மது கைடபர் மேலே திரு வாழியை (வீசிய )வாங்கின உபகாரகன் –

இத்தால் ஆஸ்ரிதற்கு விரோதம் வந்த போது தன் உடம்பு நோவக் கார்யம் செய்யும் என்றபடி –
ஒரு செயலேயோ – வந்ததுக்குத் தக்கது கொண்டு கார்யம் செய்வதே -(கல் மழைக்கு கல் எடுத்தான் -கல் எடுத்து கல் மாரி காத்தான் என்றும் )

உரவுடைய நீர் -முது நீர்
பேராழி இத்யாதி -இந்திரன் நோவாதபடி உன் தோள் நோவ ரஷிப்பதே –

——————————————————————–

நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன
மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு
மலையை எடுப்பது
ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –

மிடுக்கு யுடைத்தான நீரை யுடைய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து எதிரிட்ட ராக்ஷஸ பிரக்ருதிகளான
மதுகைடபர்கள் மேலே அவர்கள் பொடி படும்படி மிடுக்கால் பெரிய திரு வாழியை எடுத்துக் கொண்ட உபகாரகனே-
இப்படிக் கருதும் இடம் பொருது கை நிற்க வல்ல சக்ரம் யுண்டாய் இருக்க -அத்தை விட்டு –
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத மலை குடையாகவும் திருத் தோள் அதற்குக் காம்பாகவும் பசுத் திரள்களை ரக்ஷித்து-
நப்பின்னை பிராட்டையோட்டை சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகமாக இடையர் முன்னிட்ட திரண்ட ரிஷபங்கள் ஏழையும் முடித்த பிரகாரம் எங்கனே –

இத்தால் ஆஸ்ரித விரோதி உண்டானாலும் உன் சங்கல்பத்தால் அன்றிக்கே உடம்பு நோவக் கார்யம் செய்யும் ஸ்வபாவன் அன்றோ நீ என்றபடி –

——————————————————————————————————–

உபகாரகனான உன்னுடைய பெருமையை வேறு சிலரால் அறியப் போமோ —

உன்னுடைய ரஷ்யத்து அளவு அல்லாத ரக்ஷகத்வ பாரிப்பு ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்கிறார் –

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி -84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது-படிக்கு அளவாக நிமிர்த்த திருவடி –
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?-பெரும் கேழலார் மஹா வராஹ -ஸ்புட பத்ர லோசந –
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்-உரா யுலகளந்த நான்று–உராய் என்று பட்டர்-அநாயாசேன அளந்த அன்று -என்று
அருளிச் செய்தார் -உலாவி -என்றுமாம் (கிடைப்பாரா என்று தடிவிப் பார்த்தானாம் )-பூமியிலே பொருந்த விட்டு என்னலுமாம் –
எந்தை-அடிக்களவு போந்த படி —– வராகத்-தெயிற்று அளவு போதாவா றென்கொலோ –ஒரு நாள் திருவடிக்குள்
அடங்கியது திரு எயிற்றுக்குப் போந்ததில்லை -என்கிறது –ரஷ்யத்தின் அளவன்று ரக்ஷகன் பாரிப்பு
நான் ஒருவனுமே உன் குணங்களில் குமிழ் நீர் உண்ணா நின்றேன்

—————–

உன்னுடைய ரஷ்யத்து அளவு அல்லாத ரக்ஷகத்வ பாரிப்பு ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்கிறார் –

உபகாரகனே -எங்கும் ஓக்க சஞ்சரித்துக் கொண்டு நீ லோகத்தை அளந்து கொண்ட அன்று என் ஸ்வாமியான
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது வராஹ ரூபியான உன்னுடைய திரு எயிற்றில் ஏக தேசத்து அளவும்
போதாதாய் இருக்கிற பிரகாரம் எங்கனேயோ -ஆன பின்பு ஏவம் விதனான உன்னுடைய பெருமையை
சர்வஞ்ஞனான நீ அறிவுதியோ அறியாயோ என்று ஸந்தேஹிக்கும் அத்தனை போக்கி வேறு சிலர் யார் தான் அறிவார்

உராய் உலகளந்த -உலாவிக் கொண்டு உலகு அளந்த -என்றபடி -ரலயோ ரபேத –என்னக் கடவது இறே –
அன்றிக்கே உரோஸிக் கொண்டு உலகு அளந்த -என்றாக்கி எல்லோரோடும் தீண்டிக் கொண்டு -என்றுமாம் –

(குர மத்ய கதோ யஸ்ய மேரு கண கணாயதே
புள்ளி நிலனும் -பரிபாடல் -2-84–ஸ்ரீ வராஹத் திரு உருவில் புள்ளி போல் பூமி
ஸ்வரூபத்துக்கே ஆபத்து வந்த பூமியை ரஷித்த அவதாரம் -ரஷ்யத்தின் அளவில்லா பாரிப்பு -உண்டே
ரக்ஷண பாரிப்பின் அதிசயத்தை உன்னைத் தவிர வேறே அறிவார்
ஸோ அங்க வேத யதி வா ந வேத -அந்தப்பிரம புருஷன் தனது பெருமையைத் தானே அறிவானோ மாட்டானோ -)

——————————————————————————————————————–

பிறர் யார் அறிவார் -என்பாரைத் தம்முடைய திரு உள்ளம் நான் அறிந்து இருக்கிறேன் என்ன –
நீயும் இந்திரிய ஜெயம் பண்ணி ஆஸ்ரயணத்தில் இழிந்தாய் அல்லது சாஷாத்கரித்தாயோ -என்கிறார் –

இந்திரிய ஜெயம் பண்ணி அவனை ஆஸ்ரயிக்கிற நீ தான் அவன் படிகளில் ஒன்றைக் கண்டு
அனுபவிக்கப் பெற்றாயோ -பெற்றாய் ஆகில் -நெஞ்சே சொல்லிக் காண் -என்கிறார் –

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேய வொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து-வடிவு இல்லாத இந்த்ரியங்களுக்கு என்றுமாம் -வடிவு ஸ்வபாவம் -என்று ஒருபடிப்பட்டவை அல்லவே
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் -திருமேனி கண்டு அறுதியோ -அவனுடைய படுக்கை கண்டு அறுதியோ —
புட் கொடி கண்டு அறிதியே-த்வஜம் கண்டு அறுதியோ
கூறாய் -சொல்லாய் –
வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-சரீரத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் அடக்கி –வடிவில்லாத இந்திரியங்களை
அடக்கி என்றுமாம் -கண்டவா திரிந்த தொண்டனேன்(பெரிய திருமொழி 1-6-)-என்னுமா போலே என்னவுமாம் –
போதொடு நீரேந்தி-நெறி நின்ற நெஞ்சமே நீ -புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயணத்திலே இழிந்தாய் இத்தனை இறே —
நாம் அறியாது இருக்கப் பெற்ற படி என் என்ன -திரு உள்ளத்தைக் குறித்து -வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-
வடிவிலே -உடம்பிலே அடக்கி -வடிவு இல்லாத படி என்றுமாம்-ஒரு படிப் பட்டு இராது -என்றுமாம் —

———————————————————————

இந்திரிய ஜெயம் பண்ணி அவனை ஆஸ்ரயிக்கிற நீ தான் அவன் படிகளில் ஒன்றைக் கண்டு
அனுபவிக்கப் பெற்றாயோ -பெற்றாய் ஆகில் -நெஞ்சே சொல்லிக் காண் -என்கிறார் –

நெஞ்சே யந்த்ர கல்பமான இந்திரியங்கள் ஐந்தையும் பாஹ்ய விஷயங்களில் போகாத படி சரீரத்துக்கு உள்ளே
நியமித்த ஆஸ்ரயண உபகரணங்களான புஷ்ப்பங்களோடே கூட ஜலத்தைத் தரித்துக் கொண்டு ஸமாஸ்ரயண
மார்க்கத்தில் நிலை நின்று ஆஸ்ரயித்தாயாய் இருக்கிற நீ –
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனான சர்வேஸ்வரனுடைய தூரத்திலே ஆஸ்ரிதர் கண்டு வாழும் படி
எடுத்துக் கொண்டு வருகிற பெரிய திருவடி யாகிற த்வஜத்தைக் கண்டு அனுபவித்து அறிவுதியோ-
அவன் திரு மேனியைக் கண்டு அறிவுதியோ -அவன் திரு வனந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுக்கும் படி –
தான் கண்டு அறிவுதியோ -இவற்றிலே இன்னது கண்டேன் என்று ஒன்றைச் சொல்லிக் காணாய்-
வடிவு இல்லாத பொறி ஐந்தும் என்றுமாம் -ஒரு வழிப் பட்டு இருக்கை அன்றிக்கே பல அபிசந்திகளை உடைத்தாய் இருக்கும் என்கை –
வடிவு இல்லாமை யாவது தெரியாத படி இருக்கை என்றுமாம் -கண்டு அனுபவிப்பதற்கு முன்னே
ஞான லாப மாத்திரம் கொண்டு திருப்தி பிறந்து இருக்க ஒண்ணாது காண் -என்றபடி -(ஞான தசை மேலே தர்சன தசையாகவும் பிராப்தி தசைகளாகவும் முற்ற வேண்டுமே )

வடிவில் பொறி ஐந்தும் -வடிவு இல்லாத அதீந்த்ரியங்கள் என்றும் -வடிவு என்று ஸ்வ பாவத்தைச் சொன்னதாகவும் –
ஒரு வழிப் பட்டு இருக்கை அன்றிக்கே பல அபி சந்திகளை யுடைத்தாய் அன்றோ இருக்கும் இவை –
சஞ்சலம் ஹி மனஸா
நின்றவா நில்லா நெஞ்சு –பெரிய திருவந்தாதி -1-
கண்டவா திரிந்த தொண்டனேன் -பெரிய திருமொழி -1-6-3-

———————————————————————————————————–

இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -சாஷாத் கரித்திலை இறே -என்னத் தரியான் இறே -அவன் –

(உயிரான பாசுரம் -புலவர் நெருக்கு உகந்து இன்றும் நமக்காக சேவை சாதிக்கிறான்-நின்றாயால்-அன்று கோப கோபி ஆநிரை நெருக்கி நின்றாயால் -பின்பு மூவருக்கு நடுவில் நின்றாயால் -இனி இன்றும் நமக்காக நின்றாயால் -மூன்றுக்கும் அந்வயம் )

இப்படி இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-(மறைத்த பாட பேதம் )

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திருவாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பெரிய பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

நீயும் திருமகளும் நின்றாயால் -தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -என்ற நீயும்
உன்னுடைய பரிகரம்- திருவடி – நலியப் புக -நகச்சின் நாபராத்யதி -என்ற அவளுமாய் நின்றாயால் -(இருவரின் பாரிப்பு அதிசயத்துக்கு பிரமாணங்கள் காட்டி அருளி வியாக்யானம் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -தோஷம் இல்லாதவன் யார் தான் என்ற யுக்திகள் )
குன்றேடுத்துப்-பாயும் பனி மறுத்த பண்பாளா–உடம்பில் விழப் புக்க மழையை மலை எடுத்துப் பரிஹரித்து நீர்மை போலே இருந்தது
இப்போது நெருக்கு அபேக்ஷிதமாக நெருங்கின படி -(கல் எடுத்து கல் மாரி காத்த பண்பு நீர்மை -நெருக்கு உகக்கும் ஸ்வ பாவம் )
வாசல்-கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி —இடை கழிக்கு உள்ளும் புறமும்
காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -)
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )
இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே –
சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே

நீயும் இத்யாதி -ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று
உனக்கு முற்படும் பிராட்டியும் – (பகவத் த்ராயா நம -ரிஷிகள் ரக்ஷண த்வரையால் தண்டகாரண்யத்துக்கு முற்பாடாக சென்ற தாயார் -)பண்பாளா -அன்று அங்கனம் உதவினாய -(நீயும் -திரு மகளும் -இரண்டு இடத்திலும் சகாரம்- உம்மை -ஆச்ரித ரக்ஷண ப்ராதான்யத்தைக் காட்டும் )
கடை கழியா யுள் புகா–அங்கு அவர்கள் ஆபத்து தீர்த்தான் -இங்கு தன் ஆபத்து தீர்த்த படி -புறம்பு காட்டுத் தீயோடு ஒக்கும் –

(தர்மம் தர்மி விட்டுப் பிரியாதது போல் பிராட்டியும் அவனும் )

(தேஹலீசன் -இடை கழிப் பெருமாள் -என்றே ப்ரஸித்த திரு நாமம்
நீயும் திருமகளும் -பகவதஸ் த்வராயா நம
கிமேதந் நிர்த்தோஷா க இஹ ஜகதி – ஸ்ரீ குண ரத்ன கோஸம்
ந கச்சின் ந அபராத்யதி
அக்ரதஸ் தே கமிஷ்யாமி
ந ஜீவேயம் க்ஷணம் அபி
அகலகில்லேன் இறையும்
அஹம் அர்த்தம் விநா அஹந்தா நிரா தாரா ந ஸித்த்யதி
அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாத்யோ ந ஸித்த்யதி
அவளுக்கு ஆதாரமான நீயும் உனக்கு ஸ்வரூப நிரூபக பூதையான அவளும்
எங்கள் அடிச்சுவட்டை மோந்து காண்டு இனி வரும் காலம் எல்லாம் நித்ய வாஸம் செய்து அருளப் போகிறாய் அன்றோ -என்கிறார்)

————————————————————————-

இப்படி இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –

கண்டதொரு மலையைப் பிடுங்கி எடுத்து மேலே வந்து சொரிகிற மழையைப் பரிஹரித்த நீர்மையை யுடையவனே-
திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்
திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட
திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி
இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –

(குத்து விளக்கு எரிய -இருவரும் ரக்ஷணம் பாரித்த -பாசுரம் -மலர் மார்பா வாய் திறவாய் -மைத்தடம் கண்ணினாய் -தத்துவம் அன்று தகவும் அன்று)

—————————————————————————————————————————–

இப்படி சர்வேஸ்வரன் வந்து சந்நிஹிதனான பின்பு நரகத்துக்கு ஆள் கிடையாது –
அவ்வவ் விடங்களுக்குக் கடவார் வாசல்களை அடைத்து ஓடிப் போக அமையும் என்கிறார் –

(திரு நாம பலத்தால் நரகம் இல்லை தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இங்கு திவ்ய தேச பார்ஸ்வ வர்த்தியால்

உவந்த உள்ளத்தனாய் நீள் முடியைச் சொல்லி திருக்கமல பாதம் -இங்கு தோள்களைச் சொல்லி திருவடி )

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேஸ்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனிமேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யம கிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்க முடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்-

அம் நாவல் சூழ் நாடு -அழகியதாய் ஜம்பூத்வீபம் என்ற பெயர் பெற்ற பரந்த நாட்டில் உள்ள பிராணிகள் –

இனியார் புகுவார் எழு நரக வாசல்–எழு நரக வாசல்-என்கிறது கிளர்த்தியை யுடைத்தான -நரகம் என்னவுமாம் –
ஏழு வகை நரகம் என்னவுமாம் –
முனியாது மூரித்தாள் கோமின்-இனிப் புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்
கனி சாயக்-கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு–கனை கழல் -என்றது இலக்கைக் குறித்து
நடக்கிற போது திருவடிகளின் ஆபரணத் த்வனியை
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —ஐம்பூத வீபமானது நன்றாக அறிந்தது –
நன்றாக அறிகை -சம்சாரத்தினின்றும் -போகோம் என்று இருக்கை –
உகந்து அருளின தேசம் இங்கு உண்டாயிற்றே என்று அஸூயை பண்ணாதே பொறுத்து இருக்கை –

இனி இத்யாதி -எங்கள் பதத்துக்கு அழிவு சொல்வதே என்று பொடியாதே — கனை கழல் -ஆபரண த்வனி –
நா வலம் -ஐம்பூத வீபம் -ஏகம் தரணி மாஸ் நிதவ்–(வால்மிகி )ஒரு படுக்கையில் இருப்பார்க்கு பயம் உண்டோ

———————————————————

இப்படி சர்வேஸ்வரன் வந்து சந்நிஹிதனான பின்பு நரகத்துக்கு ஆள் கிடையாது –
அவ்வவ் விடங்களுக்குக் கடவார் வாசல்களை அடைத்து ஓடிப் போக அமையும் என்கிறார் –

கன்றாயும் விளவாயும் இரண்டு அஸூரர் தன்னை நலிகைக்கு இடம் பார்த்து நிற்க -அத்தை அறிந்து
முள்ளிட்டு முள்ளைக் களைவாரைப் போலே அஸூரா விஷ்டமான விளவின் பழங்கள் உதிர்ந்து விழும்படியாக
அஸூரா விஷ்டமான கன்றை எறி தடியாக எடுத்து எறிந்து இரண்டையும் முடித்துப் பொகட்ட திருத் தோள்களை
யுடையனான சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை உடைத்தான திருவடிகளைக் கண்டு அனுபவிக்கைக்கு சாதனம்
நாவலோடே கூடிப் பரந்து நிற்கிற நாட்டில் உள்ள பிராணிகள் ஆனவை அவன் உகந்து வர்த்திக்கிற
திருக் கோவலூருக்குத் தோள் தீண்டியான ஸ்தலத்திலே வாசமே என்று நன்கு அறிந்தன-இப்படியான பின்பு
சப்த விதமான நரக த்வாரங்களிலே இனிப் போய்ப் பிரவேசிக்கக் கடவார் யார் -எங்கள் பதத்துக்கு அழிவாம் படி
இப்படி வார்த்தை சொல்லுவதே என்று பொடியாதே இனி ஒரு நாளும் திறக்க ஒண்ணாத படி பெரிய தாளை பூட்டுங்கோள்-

ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடும் இடமே நாடு -அல்லாத இடம் காடு என்று கருத்து

எழு நரகம் -எழுகிற சம்சாரிகள் அடங்கலும் சென்று புகு கிற நரகத்வாரம்-என்றுமாம் -கிளர்த்தியை யுடைத்தான நரகம் என்றுமாம் –

(இவ் வாழ்வாருடைய பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2- இருக்கிற படி இப்பாசுரம்)

——————————————————————————————————————–

இப்படி திருக் கோவலூரோடு தோள் தீண்டியான நாட்டைப் பற்றி இருந்து இவ் விஷயத்தை வீட்டுப் புறம்பே அந்நிய பரராய்த்
திரியக் கண்ட படியால் வழி பறிக்கும் நிலத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் உகக்குமா போலே
என்னுடைய கரண த்ரயத்தையும் கொண்டு நான் முன்னே அங்கே பிரவணனாகப் பெற்றேன்
என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியராகிறார் –

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

நாடிலும் நின்னடியே நாடுவன்-நினைக்கிலும் உன் திருவடியையே நினைப்பான்
நாடோறும்-எப்போதும் -பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்-பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு-
ஒன்றைச் சூடிலும் திரு வாழி ஏந்தின உன்னுடைய வி லக்ஷணமான திருவடிகளை சூடா நின்ற எனக்கு
என்னாகில் என்னே எனக்கு —பரம பதத்தில் போனாலும் வாக் மனஸ் காயங்கள் அங்கே ப்ரவணமாகையாகவே செய்வது-
அது இங்கேயே பெற்றேனாகில் எனக்கு இங்கே இருக்கையை நல்லது -என்கிறார் -அவன் படிக்கு சம்சாரிகள் படியைப் பார்த்தால்
யமனுக்கு என்றும் -யதி வா -என்றும் -சொல்லத் தலை அறுப்புண்டிலனோ-(தேன மைத்ரி பவ -சீதா உபதேசம் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -முன்பே பெருமாள் வார்த்தை )
பொன்னடியே -இதுவே ( பொன்னடியே)பிரயோஜனமாக வாக் காயங்களை ஒழிய நினைக்கிலும்
என்னாகில் என்னே எனக்கு -நாட்டார் நரகம் புகில் என் -தவிரில் என் -ஆர் தான் அழ–

(சிந்தையாலும் -வாயினால் பாடி -முக்கரணங்கள் பாசுரங்கள் உண்டே –
நினைப்பது பிரதானம் என்று தோற்றினாலும் -சூடுவது காயிகம் தானே –
ஆகவே -ஒவ் ஒன்றும் முக்கரணங்களால் என்றே கொள்ள வேண்டும்)

——————————————————————–

இப்படி திருக் கோவலூரோடு தோள் தீண்டியான நாட்டைப் பற்றி இருந்து இவ் விஷயத்தை வீட்டுப் புறம்பே அந்நிய பரராய்த்
திரியக் கண்ட படியால் வழி பறிக்கும் நிலத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் உகக்குமா போலே
என்னுடைய கரண த்ரயத்தையும் கொண்டு நான் முன்னே அங்கே பிரவணனாகப் பெற்றேன்
என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியராகிறார் –

நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும் -தேவரீருடைய திருவடிகளையே தேடா நிற்பன் -சர்வ காலத்திலும்
ப்ரீதி பரவசனாய் ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும் -தேவரீருடைய கல்யாண குணங்களையே வாய் விட்டுப் பாடா நிற்பன்
நான் என் தலையால் சாதரமாக தரிக்கும் இடத்திலும் ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை அழகு பெற தரித்த
சர்வாதிகனான உன்னுடைய அழகிய திருவடிகளையே ஸீரோ பூஷணமாக தரிக்கக் கடவனாய் இப்படி கரண த்ரயத்தாலும்
உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்ற எனக்கு ஏதானாலும் நல்லது -நாட்டார் அறிந்து இந்த லாபத்தை பெறில் என்-
இழக்கில் என் -எனக்கு ஏதாகில் நல்லது என்றபடி-
அன்றிக்கே இங்கே இருக்கில் என் அங்கே போகில் என் -ஏதானால் எனக்கு நல்லது என்றுமாம் –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —பெரிய திருவந்தாதி –25-போல் ஸம்ஸாரிகளை வெறுத்து ஸ்வ லாபத்தைப் பேசி மகிழ்கிறார் –

——————————————————————————————————————

கீழ்ப் பிறந்த லாபம் திரியட்டும் பின்னாட்டுகிற படியைச் சொல்லுகிறார் –

(பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த உத்கர்ஷம் -உபா தேய அபிமானம் )

(எம்பார் -எம்பெருமானார் திருவடி சம்பந்தத்தால் வந்த பெருமையால் புகழ ஏற்றுக் கொண்டது போல் இங்கும் –
எனக்கு நிகர் யார் அகல் ஞாலத்திலே -என்பர்களே)

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——-89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேஸ்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம் பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்(பூவைப்பூ வண்ணா )
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை-மா வரம் -பர்யாய சப்தங்கள் -மீமிசை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

எனக்காவார் ஆரோருவரே –என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை இறே என்னவுமாம் —
எனக்கு ஆவார் எவர் என்னவுமாம்
என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை என்று நீர் சொல்லுவான் என் -பரம சேதனன் உண்டே என்னில்
எம்பெருமான்-தனக்காவான் தானே–என்னோடு ஓத்தார் இல்லை என்றேன் அத்தனை அல்லது எம்பெருமானுடைய
உயர்த்தி இல்லை என்றேனோ –நீர் என்னோடே ஒப்பார் இல்லை என்று சொல்லிற்று எத்தாலே என்னில் –
மற்றல்லால் புனக்காயாம்-பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ-மா மேனி காட்டும் வரம் —–
அவனோடு சத்ருசமான பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன் -ஓர் அடி அன்றோ குறைய நின்றது(ஸத்ருச சம்பந்த பதார்த்தங்கள் நினைவுக்கு வருமே -அடுத்த தசை அவனே நேராகப் பார்ப்பது -அதுவே ஓர் அடி குறை )
அவன் என்று சாஷாத் கரிக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது –
புனக்காயாம்-பூ மேனி-புனத்திலே நிற்கிற காயம் பூ மேனியை – காணப் பொதியவிழும் பூவைப் பூ–காணக் காண அலரா நின்ற பூவைப் பூ
இவை இரண்டும் அவனுடைய வரமான மா மேனியைக் காட்டா நின்றது –நாட்டாருக்கு நினைக்கையில் உள்ள வருத்தம் போரும்
எனக்கு மறக்க -நானும் ஒருவனே –வரமாக -தன்னிலும் விசதமாக -என்றுமாம் -(இவை தங்களை விட கண்ணனை காட்டும் என்றபடி )

(வரம் -மா -பர்யாயம் -மிகச் சிறந்த என்றும் -வ்ரியதே இதி வர -வ்யுத்பத்தியால் வரிக்கப்படும் சிறந்த மேனி என்றுமாம்)

(இதர சேஷத்வமே வடிவான ஸம்ஸாரிகள் -பகவத் விஷயத்திலே பழக்கமே இல்லாதவர்களாய் –
பகவத் சேஷத்வமே வடிவான எனக்கு ஒப்புவார் அல்லரே
வருத்தப்பட்டு பகவத் அனுபவத்தைப் பெற்ற வ்யாஸாதி மகரிஷிகளும் – வரவாறு ஓன்று இல்லையால் -என்றால் போலே
என்னிடம் ஒரு கைம்முதல் இல்லாமல் இருக்க நிர்ஹேதுக கிருபையால் அவனை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒப்பு அல்லரே
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் நித்ய முக்தர்களும் ஒப்பு அல்லர்
எம்பெருமானும் தான் தோன்றியான சேஷித்வ ரஸத்தை யுடையவனாய் சேஷத்வ ரஸத்துக்கு இட்டுப் பிறவாததால் அவனும் எனக்கு ஒப்பு அல்லனே)

(இவற்றைக் காணும் போது இவற்றைக் காட்டிலும் எம்பெரு திரு மேனியே எனக்குத் தெளிவாகத் தெரிகிறது -அப்படிப்பட்ட எனக்கு ஒப்பாவார் யார் -என்கிறார்-காட்டும் — பகவானை ஞானத்திலே அனுபவித்து கண்ணாலே காணப் பெறாத குறை தீரக் கண்ணுக்குக் காட்டும் )

காயாம்பூ மேனி -என்ற இடத்தில் உள்ள மேனி -காணப் பொதி அவிழும் பூவைப்பூ -மேனி என்றும் கூட்டிக் கொண்டு

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –பெரிய திருவந்தாதி -49-என்றும்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –நாச்சியார் திருமொழி -9-3-என்றும்

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —நாச்சியார் திருமொழி 9-4-என்றும்

உள்ள ஸ்தலங்களில் சொல்லப்பட்ட கார் உருவங்களுக்கு உப லக்ஷணம்

———————————————————————–

கீழ்ப் பிறந்த லாபம் திரியட்டும் பின்னாட்டுகிற படியைச் சொல்லுகிறார் –

நிர்ஹேதுகமாக இப் பேற்றைப் பெற்று சேஷத்வமே வடிவாய் இருக்கிற எனக்கு ஒப்பாக வல்லார் வேறு ஒருவர் உண்டோ
நாட்டில் ஓர் ஒப்பில்லாத அளவன்றிக்கே தான் தோன்றியான பேற்றை யுடையனாய் –
சேஷத்வ ரசத்துக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரன் தானே தனக்கு ஒப்பாம் இத்தனை ஒழிய எனக்கு ஒப்பாக வல்லனோ-
இந்த ஞான லாபம் மாத்திரமே யாய் -சாஷாத் கரிக்கப் பெறாத குறை கிடக்கிறதே என்று சங்கிக்க இடம் அறும் படி
தன்னிலத்திலே நின்று செவ்வி பெற்ற காயாம்பூவின் உடைய நிறமும் -காணாக் காணாக் கட்டு நெகிழ்ந்து வருகிற
பூவைப் பூவினுடைய நிறமும் அவனுடைய ஸ்லாக்யமான வடிவை அழகிதாகக் காட்டா நின்றது –
அன்றிக்கே வ்ரீ யத இத வர –என்றாய் -என்னால் பிரார்த்திக்கப் படுகிற வடிவை அழகிதாகக் காட்டா நிற்கும் என்னுதல் –

———————————————————————————————————

நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் –

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தில் ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித்
தன்னைக் காட்டித் தரிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய -அரி-சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய-பரியனாக வந்தவன் அன்றோ –
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)-வரத்தினால் ஸ்ரத்தை வைத்த -இத்யாதி –
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

வரத்தால் வலி நினைந்து –வரத்தால் தனக்கு மிடுக்கு உண்டாக நினைத்தான் அல்லது
வரம் கொடுத்தவர்கள் சக்தி பகவத் அதீனம் என்று அறிந்திலேன் –
மாதவ– வரம் கொடுத்தவர்களாலும் வணங்கப் படுமவன்

(விராமன் -ஒய்வு -வரங்களும் -வரங்களை பெற்றவனும் கொடுத்தவனும் ஒய்வு கொடுக்கும் பெருமாள்- ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் வந்தாலும் பயன் இல்லை -திருவடி ராவணன் இடம் உபதேசம்)

நின் பாதம்- சிரத்தால் வணங்கானாம் என்றே –அவன் இழவுக்கு வெறுக்கிறார்
உரத்தினால்– ஈரியாய்–மிடுக்காலே ஈரப்படும் அரியானவன்–சத்ருவானவன் –பெரிய சத்ரு என்றுமாம் —
நேர் வலியோனாய இரணியனை-நேரே வலியனான ஹிரண்யனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –நாட்டிலே நடையாடும் ஸிம்ஹம் அன்று -தன்னுடைய இச்சையால் பிறந்த ஸிம்ஹம் என்றுமாம்
ஓரப்படும் அரியாய் –எல்லாரும் த்யானம் பண்ணும்-ஓரப்படும்- ஸிம்ஹம் -என்றுமாம் –

வரத்தால் -தேவர்கள் வரத்தை மிடுக்காக நினைத்தான் -வணங்கு வித்துக் கொள்ளும் விஷயம் இருக்கும் படி –
வணங்கானாம் என்றே -1-பிள்ளை பக்கல் பரிவு -2-தப்பச் செய்தோம் -என்னாம் -என்றுமாம்
3-உன் வஸ்து அழியாமைக்கு என்றுமாம் -(இம் மூன்றுமே ஈர்ந்ததுக்குக் காரணம் – வணங்காமைக்காக அல்லவே )

ஈரரி–பெரிய சத்ரு –

ஓரரி-சிம்ஹங்களில் ஒப்பு பிடிக்க ஒண்ணாது –

————————————————————————–

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தில் ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித்
தன்னைக் காட்டித் தரிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

சர்வர்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற ஸ்ரீயபதியானவனே–இரண்டு கூறாகக் கிழித்துப் பொகடப் படும் சத்ருவாய்-
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய ஹிரண்யனை -நாட்டில் கண்டு அறியாத அத்விதீயமான நரசிம்ஹமாய்க் கொண்டு
அவன் மிடுக்கும் கீழ்ப் படும் படியான மிடுக்காலே -மாம்சளமான பெரிய சரீரத்தை ஆஸ்ரித வத்சலனான நீ
இடந்து பொகட்டது ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தால் வந்த தன் மிடுக்கைக் கனத்த நினைத்து சர்வாதிகனான
உன்னுடைய திருவடிகளைத் தலையால் வணங்கி ஆஸ்ரயியாதே இருந்தான் என்றோ -அன்று இறே
சிறுக்கனைப் பல கறுவி நலிந்தான் என்னும் இது கொண்டு இறே -என்றபடி –

இரணியன் தன் சீற்றத்தினால் வணங்கியதால் உனக்கு ஒரு பெருமையோ மகிழ்ச்சியோ வந்து விடப் போவதில்லையே -எதனாலே என்னில்

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு –நான்முகன் திருவந்தாதி–75-

இப் பாசுரத்தை ஒட்டியே -கடும் சீற்றத்துக்குக் காரணத்தை கூரத்தாழ்வான் வரதராஜ சத்வம் -68-இல்-
யத் அபராத சஹஸ்ரம் அஜஸ்ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்
வரத தேந சிரம் த்வம் அவிக்ரிய விக்ருதிம் அர்ப்பக நிர்ப்பஜ் நாத் அகா-68–

ஆஸ்ரித விஷயத்தில் பஷ பாதம் பிரசித்தம் அன்றோ –
த்வயி கிஞ்சித் சமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –என்பவன் அன்றோ-

ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

நரஸிம்மம் -பக்த ப்ரஹ்லாதனுக்காக
ராகவ ஸிம்ஹம் -கோபஸ்ய வசம்
யாதவ ஸிம்ஹம் -அர்ஜுனன் -பீஷ்மர்
ரெங்கேந்திர ஸிம்ஹம் -திருப்பாணாழ்வார் -லோக சாரங்க முனிவர் -தனது கதவை அடைத்து -அவரையும் திருத்திப் பணி கொள்ளும் அர்ச்சை ஏற்றம்

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி பாசுரங்கள் –71-80– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

ஐஸ்வர்ய கைவல்யங்களிலே புகாதே-அவன் தன்னையே ஆசைப்படப் பார் என்கிறார் –

ஒரு நாயகமாய் -ஐஸ்வர்யா கைவாக்யங்கள் த்யாஜ்யங்கள் -போல் இங்கு-பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்றவாறு )

நாட்டாரைக் கொண்டு கார்யம் என் -நெஞ்சே நீ இவ் விஷயத்தைக் கை விடாதே கிடாய் -என்கிறார் –

நன்று பிணி மூப்புக் கை யகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பதவுரை

ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்)  கடல் போல் ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]ஜரா மரண மோஷாயா -கைவல்யம் -இஷ்ட ப்ராப்தியில் ஆசை இல்லாமல் நினிஷ்டம் தொலைய மாத்திரம் -போக்கடிப்பதே பிரதானம் -அடைந்து அனுபவிப்பது இல்லையே -ஆகவே கையகற்றி -பத பிரத்யோகம்
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]-நான்கு ஊழி -உப லக்ஷணம் எண்ணிறந்த -அநந்தம் -என்றும் கொள்ளலாம்
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.

நன்று பிணி மூப்புக் கையகற்றி –இத்தால் கைவல்யத்தைச் சொல்கிறது(ஜரா மரண மோஷாயா -ஸ்ரீ கீதை -7-29-)
நான் கூழி-நின்று நிலமுழுது மாண்டாலும் –ப்ரஹ்மாவினுடைய ஐஸ்வர்யத்தைப் பெற்றாலும்
என்றும்-ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்–அளவுடைய நெஞ்சே –நீயே முற்பட்டு இருக்கிற உன்னை இரக்கிறேன் இறே(குறுகா –அளவில் இன்பம்–திருவாய் 6-9-10-)
அடலாழி கொண்டான் மாட்டன்பு  விடல் –விடாதே கொள் -(விடாமல் பக்தி செய்வாய் )வேண்டினேன் கண்டாய் –பால் குடிக்க இரக்கிறேன் இறே-

ஐஸ்வர்யம் நிலை நில்லாது -கைவல்யம் பகவத் கைங்கர்யத்தைப் பார்க்க அல்பம் என்கை –
அன்றியே இரண்டையும் சேர்த்துத் தரிலும் -விடல் -இவை நன்றான அன்றும் -அவன் அல்லாமையையும்
பற்றுகைக்கு அவனாக அமையும் -வேண்டினேன் -இவ்வர்த்தம் -அடலாழி இத்யாதி -எனக்கு கைக் கூலி தந்து பற்றும் விஷயம் -(அடல் ஆழியும் கையுமாக அழகைக் காட்டி லஞ்சம் கொடுத்து என்னைத் திருத்திக் கைக்கொண்டான் -)

(ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -பெரிய திருவந்தாதி -25
நான்கு ஊழி -அநந்த காலம் என்றபடி)

———————————————————————–

நாட்டாரைக் கொண்டு கார்யம் என் -நெஞ்சே நீ இவ் விஷயத்தைக் கை விடாதே கிடாய் -என்கிறார் –

கேவல ஆத்ம அனுபவத்துக்கு விலக்கான -வியாதி ஜரை தொடக்கமானவற்றை நன்றாகக் கை கழல விட்டு
இப்படி பிரகிருதி விநிர்முகனான ஆத்மாவை அனுபவிக்கை யாகிற கைவல்ய புருஷார்த்தத்தோடே
கால தத்வம் உள்ள தனையும் நெடுகி நின்று பூமி தொடக்கமாக ப்ரஹ்ம லோகம் பர்யந்தமாக உண்டான
இவ்வண்ட ஐஸ்வர்யம் எல்லாவற்றையும் ஸ்வ அதீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும் -அளவுடைய நெஞ்சே
யுத்த உன்முகமான திரு வாழியை திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன் விஷயத்தில் உண்டான
ஸ்நேஹத்தை சர்வ காலத்திலும் விடாதே கொள்-
இவ் வேப்பங்குடி நீரைப் பருகைக்கு உன் காலைப் பிடித்து வேண்டிக் கொள்கிறேன் கிடாய் -என்கிறார் –

——————————————————————————-

சிஷ்யர்கள் ஆச்சார்யர்கள் ஆனார்கள் -(நெஞ்சும் புலன்களுமான சிஷ்யர்கள் ஞானமுடைய ஆத்மாவுக்கு உபதேசம் )

இவர் கரணங்கள் இவருக்கு முன்னே அங்கே பிரவணமாய் -குரு சிஷ்ய க்ரமம் மாறாடி எதிரே நின்று –
ஆழ்வீர்-நீர் இவ்விஷயத்தை விடாதே கிடீர் என்று அவை தான் தமக்கு முன்னே உபதேசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

அன்பாழி  யானை   யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

பதவுரை

அன்பு—பகவத் பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது(அன்பு இருக்கும் இடம் என்று சொல்ல வேண்டாத படி -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல் அன்பு என்றே சொல்லலாம் படியான நெஞ்சு நெஞ்சு
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பே போல் )
ஆழியானை–ஸர்வேஸ்வரனை
அணுகு என்னும்–கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா–வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்–அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத் தோள்களைப் பேசித் துதி என்று உபதேசிக்கின்றது;(பண் ஆழி -அழகும் மிடுக்கும் என்றுமாம் )
கண்–கண்களானவை;
முன்பு ஊழி காணானை காண் என்னும்–நாம் தன்னை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள
விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானை ஸேவி என்று உபதேசிக்கின்றன;(ஊழி காணான் திரு நாமம் சாதிக்கிறார் -பழைய காலத்தையே பார்க்காமல் -பழைய காலங்களில் செய்த பாபங்களைக் கணிசியான் )
செவி–காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்–‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற
அப் பெருமானுயைய திருக் குணங்களைக் கேள்’ என்று தூண்டுகின்றன.

அன்பாழி யானை   யணுகு என்னும் –அன்பு -என்று நெஞ்சை சொல்லிற்று (விஞ்ஞாதா என்னாதே விஞ்ஞானம் என்று சொல்லுமா போல் )அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு விடாதே -என்று
திரு உள்ளத்தை இரக்க -அதுவும் நீர் ஆழியானை விடாதே கொள் என்கிறது
நா வவன் தன்-பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் –நாவானது அவனுடைய ஸுந்தர்ய ஸாகரமான தோள்களை
அக்ரமமாக ஏத்து என்னா நின்றது -முடியும் படி யாதொன்று அறியாது காணும் –
முன்பூழி-காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்-பூணாரம் பூண்டான் புகழ் —-
சாபராதராய் இருந்துள்ள நம்மால் அவனைக் கிட்டப் போமோ என்னில்
ஓர் அடி வர நின்றால் குற்றமே அன்றியே குற்றம் கிடக்கும் நாளும் காண வரியான் என்கிறது
முன்பூழி-காணானை-அவனைக் காணும் என்னா நின்றது கண்

செவி இத்யாதி -குற்றம் பார்த்து போகிறான் ஆகிலும்
விடாய் போகாத ஆபரண சோபையை உடையவனுடைய புகழைக் கேள் என்னா நின்றது செவி –

ஆழியானை -ராஜ புத்திரர்கள் இடைச் சேரிக்குள் அகப்படுமா போலே —

பண்பு ஆழித் தோள் -ஸுந்தர்ய ஸாகரமான(பண் பாழி -அழகும் மிடுக்கும் என்றுமாம் )
பரவி ஏத்து -நீ ஏத்தும் க்ரமம் தப்பாமே
முன்பு இத்யாதி -நாம் பண்ணி வைத்த பாபங்களை நினைத்துச் சீறிலோ என்னில் பாபமும் கீழ்க் கிடந்த காலமும் மறக்கும்
கண் கண்டவாறே தெரியும் இ றே -சீறி நோக்கும் நோக்கும் -வாத்சல்யத்தாலே நோக்கும் நோக்கும் -(கோபத்தால் சிவந்தது என்னைக் காண்பதற்கு முன்பு -வாத்சல்யத்தாலே சிவந்தது -என்னைக் கண்ட பின்பு )
செவி கேள் என்னும் -செவிக்கு விக்ருதி சொல்ல அவசரம் இல்லை – பூண் ஆரம்–ஆபரணமாக உடம்புக்கு ஆபரணம் –
சர்வ பூஷண பூஷார்ஹா  பூஷணார்ஹம்–மற்றைய ஆபரண்களுக்கு ஆபரணம் என்றும் -பூண்டான் -பூண வல்ல அழகு – புகழ் ப்ரஹ்ம பூஷணம் -(ஆபரணங்களை அழகூட்டும் பெருமாள் )

(அன்பே வடிவானதால் மனஸை அன்பு என்கிறார்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -அறிவை யுடைய ஆத்மாவையே அறிவு என்று உபநிஷத் சொல்வது போல்
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-29-)

———————————————————–

இவர் கரணங்கள் இவருக்கு முன்னே அங்கே பிரவணமாய் -குரு சிஷ்ய க்ரமம் மாறாடி எதிரே நின்று –
ஆழ்வீர்-நீர் இவ் விஷயத்தை விடாதே கிடீர் என்று அவை தான் தமக்கு முன்னே உபதேசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

அன்பு என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தெரியாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
நெஞ்சானது திருவாழி யுடையவனானவனைக் கிட்டி அனுபவி என்று உபதேசியா நிற்கும் –
வாக் இந்த்ரியமானது நீர்மையையும் மிடுக்கையையும் யுடைத்தான அவனுடைய தோளை அடைவு கெடப் பேசிக் கொண்டு
ஸ்தோத்ரம் பண்ணு என்னா நிற்கும் -கண்களானவை -நம் அபராதம் காணாத அளவன்றிக்கே
அபராதம் பண்ணின முன்புள்ள காலத்தையும் காணாதவனைக் கண்டு அனுபவி என்னும்
செவிகள் ஆனவை ஆபரணமாக திரு மேனிக்கு ஆபரணமாகப் பூணப்படும் ஹாரம் முதலான
திவ்ய ஆபரணங்களை அழகு பெறப் பூண்டு இருக்குமவனுடைய கல்யாண குணங்களைக் கேளாய் என்று
தூண்டா நிற்கும் —

பண் பாழித் தோள் -என்று (பண்பு ஆழி )ஸுந்தர்ய ஸாகரமான திருத் தோள் -என்னவுமாம் –

———————————————————————————————————–

கீழ் தம்முடைய இந்திரியங்கள் ப்ரவணமான படி சொல்லிற்று -அவ்விஷயம் தான்
இனி அறிய ப்ராப்தமாய் இருந்தது -நீ அத்தைப் பற்றிலும் பற்று -விடிலும் விடு என்கிறது –

(உடலும் உயிரும் ஏற்றான் ——சேதன அசேதனங்கள் சரீரம் பிரகாரம்-சிறு மயிர்க்காலால் சமஸ்த வற்றையும் தரிக்கிறேன் -கீதை )

அந்தக் கரணங்கள் தானும் கீழ்ப்படும் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படியை அருளிச் செய்கிறார் –

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

பதவுரை

நெஞ்சே–(நல்லது கெட்டதுகளை ஆராயக் கூடிய ) மனமே!
நீ–நீ
பூந்துழாயானை–அழகிய திருத் துழாய் மாலை யணிந்த பெருமானை
புகழ்வாய்–ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
(அன்றியே)
பழிப்பாய்–நிந்திப்பதானாலும் நிந்தி;
(அன்றியே)
இகழ்வாய்–அநாதரித்தாலும் அநாதரி;
(அன்றியே).
கருதுவாய்–ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும்–விளங்குகின்ற ஜல பூர்த்தியை யுடைய ஸமுத்ரமும்,
மலையும்–பர்வதங்களும்
இரு விசும்பும்–பரம்பிய ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
உடலும்–(தேவாதி) சரீரங்களும்
உயிரும்–(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான்–தரித்துக் கொண்டிருப்பவன் அவ் வெம்பெருமானே காண்.

புகழ்வாய் பழிப்பாய்–புகழிலும் புகழ் -பழிக்கிலும் பழி
நீ பூந்துழா  யானை-பழித்தல் இகழ்தல் செய்யப் போமோ -என்கிறது –
இகழ்வாய் கருதுவாய்–இகழிலும் இகழ்-கருதிலும் கருது —
என் நெஞ்சே -நாட்டுக்குச் சொல்கிறேனோ -உனக்கு அன்றோ –
திகழ் நீர்க்-கடலும் மலையும் -இரண்டாலுமாகக் கார்யத்தைச் சொல்லுகிறது –
இரு விசும்பும் காற்றும்-காரண பூதங்களுக்கும் உப லக்ஷணம்
உடலும் உயிரும் -காரணமான சித் அசித்துக்களை சொல்கிறது
உடலும் உயிரும் ஏற்றான் ——-இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்ய தயா சேஷம் -அவன் சேஷி என்கிறது
அவை மத்தியஸ்தம் என்னும் படி தம்முடைய ப்ராவண்யம் –

புகழ் இத்யாதி -வாசகத்துக்கு -இகழ்வாய் கருதுவாய் -மனஸ்ஸூ -என் நெஞ்சே -புகழ்ந்து பழகின நெஞ்சே
பூந்துழாயானை புகழ்ந்து அல்லது நிற்க ஒட்டாது —
ஏற்றான் -ஆதாரத்தைப் பற்றிலும் பற்று -ஆதேயத்தைப் பற்றிலும் பற்று -இது இருந்த படி –

(உடலும் -உயிரும் -உடல் என்று தர்ம சாதனமான இந்திரியங்களுக்கு உப லக்ஷணம்
தர்ம சாதகமாய் இருக்கும் பெருமையால் தனித்து எடுத்து அருளுகிறார்
உயிர் என்றது தர்ம பூத ஞானம் -நித்ய விபூதி முதலான அஜடப் பொருள்களுக்கு உப லக்ஷணம் )

——————————————————————–

அந்தக் கரணங்கள் தானும் கீழ்ப்படும் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படியை அருளிச் செய்கிறார் –

நல்லது இன்னது என்று வகை இட்டு அறிய வல்ல நெஞ்சே -இப்படி நல்லது காண வல்ல நீ புகழ்ந்து அல்லது நிற்க
ஒண்ணாத படி அழகிய திருத் துழாயாலே அலங்க்ருதனானவனை வாய் விட்டுப் புகழ்வாய் -அன்றிக்கே பழிப்பாய்–செய்தபடி செய்
இப் பொகடு சரக்கான விஷயத்தை அநாதரிப்பாய் -(பொகடு சரக்கான விஷயம் -விடத் தக்க விஷயத்தை தானே அநாதரிக்க வேண்டும் )அன்றிக்கே ஆதரிப்பாய் -செய்த படி செய்
விளங்கா நின்றுள்ள ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடலும் பர்வதமும் பரப்பை யுடைத்தான
ஆகாசமும் -வாயுவும் -தேவாதி சரீரங்களும் -தத் தத் சரீரஸ்தங்களான ஆத்ம வர்க்கமும் ஆகிற இவ் வஸ்துக்கள் எல்லாம்
தான் என்ற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும் படி (அப்ருதக் ஸித்த விசேஷணம் விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருப்பதே பிரகாரம் )சர்வ பிரகாரியாய் இருப்பான் ஒருத்தன் –
இப்படி சர்வ பிரகாரியாய் நிற்கிறவனைப் பற்றிலும் பற்று -அன்றிக்கே பிரகாரத்தில் ஒன்றைப் பற்றிலும் பற்று என்றபடி
அன்றிக்கே உடலும் உயிருமான இப் பதார்த்தங்களை ஏற்றான் -தரித்தான் -என்றுமாம் –

(கடல் மலை-ப்ரஹ்மாதி தேவர்கள் — பிரகாரங்கள் இவற்றை முன்னிட்டுப் பற்று- பற்று -பற்றா விட்டாலும் பகவத் ஸ்திதி இதுவே)

———————————————————————————————————

இது இவனுக்கு ஏற்றமாகச் சொல்லுவான் என் -அல்லாத ருத்ரனும் இப்படி சேஷியாய் அன்றோ இருப்பது என்னில்
அவனுடைய பிரகாரங்களை பார்த்தால் ரஷ்யமாகத் தோற்றும் -இவனைப் பார்த்தால் ரக்ஷகனாக இருக்கும் என்கிறது

(ஆகாசாத் பதிதம் தோயம் -கேசவன் கச்சதி கச்சதி-நம் கண்ணன் அல்லது கண் அல்லையே -ந ஹி பாலந சாமர்த்தியம் -பலவற்றையும் பட்டியல் இடுகிறார்

ஏற்றான் -எயில்எரித்தான்-நீற்றான்-கூற்றொரு பால் மங்கையான்-வார் சடையான்-கங்கையான்

புள்ளூர்ந்தான்-மார்விடந்தான்-நிழல் மணி வண்ணத்தான்-பூ மகளான்-நீண் முடியான்-நீள் கழலான்

ஒவ்வொன்றும் இவனே ரக்ஷகன் என்பதை பறை சாற்றுமே )

அவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் -ருத்ரனை ஆஸ்ரயணீயனாகக் கொண்டாலோ என்ன
அவனும் அவனுக்கு சரீர பூதனாகையாலே அவனே ரக்ஷகன் என்கிறார் –

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

பதவுரை

ஏற்றான்–ரிஷபத்தை வாஹனமாக வுடையவனும்
எயில் எரித்தான்–த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான்–சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான்–தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துக் கொண்டிருப்பவனும்
வார் சடையான்–நீண்ட ஜடையைத் தரித்துள்ளவனும்.
கங்கையான்–(அச்சடை முடியில்) கங்கையைத் தாங்கிக் கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான்–கருடனை வாஹநமாக வுடையவனும்
மார்வு இடந்தான்–இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான்–நீல ரத்நம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
பூ மகளான்–பெரிய பிராட்டியைத் திவ்ய மஹிஷியாக வுடையவனும்
நீள் முடியான்–நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான்–நீண்ட திருவடிகளை யுடையவனுமான சர்வேஸ்வரனுடைய
காப்பு–ரக்ஷணத்தில் அடங்கினவன்.

ஏற்றான் புள்ளூர்ந்தான்-வேதாத்மாவான திருவடியைத் தனக்கு வாஹனமாக யுடையனாய் இருக்குமாகில்
அவன் அப்ரஸித்தமாய் இருபத்தொரு எருத்தை வாஹனமாக உடையனாய் இருக்கும் –
எயில் எரித்தான் -ஆஸ்ரிதரை ஒரு வியாஜ்யத்தில் அழிக்குமவன்
மார்விடந்தான்-ஆஸ்ரிதற்காக தன்னை அழிய மாறும் இவன்
நீற்றான்–பஸ்மச்சந்த -என்று பிராயச்சித்தம் பண்ணும் அவன் –
நிழல் மணி வண்ணத்தான் -கண்டால் ஸ்ரமஹரமான வடிவு இவனது –
கூற்றொரு பால்-மங்கையான்–ஒரு ஸ்திரீயை தனக்கே வைத்துக் கொண்டு இருக்குமவன்
பூ மகளான்–அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத் நீ -என்னுமவளைத் தனக்காக யுடையவன் இவன்
வார் சடையான்–சாதக வேஷன் அவன் –
நீண் முடியான்-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு முடியை யுடையவன் இவன் –
கங்கையான்-பாவ நார்த்தமாக கங்கையைத் தரித்து கொண்டு இருக்கும் அவன் -(சிவ பூத் ஆனான் )
நீள் கழலான்   —அந்த தீர்த்த பூதையான கங்கைக்கு உத்பாதகமான திருவடியை யுடையவன் இவன் –

ஏற்றான் –எயில் எரித்தான் –நீற்றான் –கூற்றொரு பால்
மங்கையான் – வார் சடையான் -கங்கையான் ஆன அவன் –
புள்ளூர்ந்தான் –மார்விடந்தான்–நிழல் மணி வண்ணத்தான் -பூ மகளான்–நீண் முடியான்-நீள் கழலான்-இவன்
காப்பு-அவனுடைய ரக்ஷை இவன் –

உடலும் உயிரும் என்றத்தோடு இவனோடு வாசி இல்லை -அவனுக்கு சேஷமாம் இடத்தில் –

(விஷ்ணுர் ஆத்மா பகவத பவஸ்யாமி த தேஜஸ தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம் சர்க்கம் ச விஷேஹே மஹேஸ்வரம் –பாரதம்

மத்யம் பீத்வா குரு தாராம்ஸ் ச கத்வா ஸ்தேயம் க்ருத்வா ப்ரஹ்மஹத்யாஸ் ச க்ருத்வா
பஸ்மச் சன்னோ பஸ்ம ஸய்யா சயா நோ ருத்ரத் யாயீ முச்யதே ஸர்வ பாபை –சாதாதப ஸ்ம்ருதி –பிராகிருத சரீரத்தை யுடையவன்

நீல தோயதா மத்யஸ்தா
புருஷம் கிருஷ்ண பிங்களம்
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி

பாவ நார்த்தம் ஜடா மத்யே ததார சிரஸா ஹர

யச்சவ் ச நிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோ தநேந மூர்த் நி வித்ருதேந சிவ சிவோ அபூத்)

—————————————————————-

அவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் -ருத்ரனை ஆஸ்ரயணீயனாகக் கொண்டாலோ என்ன
அவனும் அவனுக்கு சரீர பூதனாகையாலே அவனே ரக்ஷகன் என்கிறார் –

தமஸ் பிரக்ருதியான தனக்குச் சேரும் படி அஞ்ஞமான ருஷபத்தை வாஹனமாக யுடையனாய்
தன்னை ஆஸ்ரயித்தவர்கள் குடியிருப்பான த்ரி புரத்தை மஞ்சாட்டமாக சுட்டுக் பொகட்டவனாய் -ப்ராயச்சித்தி என்று
தோற்றும்படி பஸ்மோத் தூளிக சர்வாங்கனாய் சரீரத்தில் ஒரு பார்ஸ்வ பிரதேசத்தில் பார்வதியைத் தரிக்குமவனாய்
சாதகத்வ ஸூ சகமான தாழ்ந்த ஜடையை யுடையவனாய் -பாவ நார்த்தமாக ஜடா மத்யத்திலே தரிக்கப் பட்ட கங்கையை யுடையனான ருத்ரன் –

த்ரயீ மயனான பெரிய திருவடியை வாஹனமாக யுடையவனாய் -ஆஸ்ரித விரோதியான ஹிரண்யன் மார்வைப் பிளந்து பொகட்டவனாய்
ஸ்ரமஹரமான நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனாய் புஷ்ப நிவாஸினியான பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷியாக யுடையவனாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை யுடையவனாய் கங்கோத் பத்தி ஸ்தானமான நீண்ட
திருவடிகளை யுடையனான சர்வேஸ்வரனுடைய ரக்ஷையாய் இருக்கும் –

(சதுர் முகன் கையில் சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில்

துலாயாம் ஸ்ரவணே ஜாதம் -பாஞ்ச ஜன்ய அம்சம் -ஓங்கார விளக்கம் அருளிச் செய்யவே முதல் திருவந்தாதி
அநந்யார்ஹ சேஷ பூதன் -அவனே ப்ராப்யம் ப்ராபகம் –
ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்தும் ப்ரகார தயா சேஷம் -)

—————————————————————————————————————-

சேஷியாய் இருந்துள்ள உன்னை உணர பிரதிபந்தகம் எல்லாம் போம் என்கிறது –

இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

பதவுரை

திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு-உன்னிப்பதுக்கு மேல் த்யானம்
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.

அநிஷ்டம் தொலையப் பெற்று இஷ்ட பிராப்தியும் பெறுவார்கள்

காப்புன்னைக்  யுன்னக் கழியும் –உன்னை உணர -காப்பு -காவல் -தேவதைகள் -கழியும் -( ஆதித்ய சந்திரன் பகல் இரவு அபிமான தெய்வங்கள் தர்மம் –14 தேவதைகள் )
காப்பு என்கிறது -ஈஸ்வரனுக்குப் புரவர் போலே இவ் வாத்மாக்கள் செய்த கர்மங்களை ஆராயக் கடவரான
சந்த்ராதித்யர்கள் தொடக்கமான பதினாலு பேருடைய சிறைகள் -கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி -(பெருமானுக்கு வஸ்யமானால் -யம தர்மராஜன் மது ஸூதன ப்ரப்ருதிகளை ப்ரபு என்றே கொள்வான் -இது உப லக்ஷணம் மற்ற தெய்வங்களுக்கு )
அரு வினைகள்-ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் –அக் காப்புக்கு அடியான அவித்யாதிகளால் யுண்டான பந்தம் உன்னை நினைக்க நெகிழும் –
மூப்புன்னைச்-சிந்திப்பார்க்கு இல்லை –காப்பும் அருவினைகளும் போன அதிகாரிகளுக்கு –மூப்பாவது -கைவல்யம் –
அன்றியே -ஷட்பாவ விகாரங்களுக்கும் உப லக்ஷணம் ஆகவுமாம்
திரு மாலே –ஈஸ்வரன் ஸ்வ தந்தர்யத்தாலே ஆராயப் புக்காலும் பிராயச்சித்த சாத்தியம் அல்லாத பாபம்
நாம் பொறுக்கும் அத்தனை அன்றோ என்று உணர்த்துவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது
தாசீ நாம் ராவண ஸ்யாஹம் மர்ஷய மீஹ துர்பலா —-ராஜ சம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞ்ஞயா –என்கிறபடியே
நின்னடியை-வந்திப்பார் காண்பர் வழி  ——–உன் திருவடிகளிலே விழுவார்கள் நல்ல வழி காண்பர் –
வழி -என்று அர்ச்சிராதி கதி என்றுமாம் -பரமபதம் போலே பரமபதத்துக்கு போம் வழி –நரகம் போலே பொல்லாதாய் இருக்கும் நரகத்துக்கு போம் வழி —
பிரபு –அந்யந்ருணாம் நவைஷ்ணவாணாம் தே வர்ஷி –இத்யாதி –(நாராயணனுக்கு அடிமைப் பட்டவன் தேவ ரிஷி பித்ரு கடன்களில் இருந்து மீட்கப்படுகிறான் )
அருவினை -அவித்யாதிகளால் பிறக்கும் புண்ய பாபங்கள் -சாரீரமான மூப்பு –
திருமாலே -யுவா குமாரா -யுவ திஸ்ஸ குமாரிணீ-(ருக் வேதம் )என்கிற உங்களை ஆஸ்ரயித்ததால் உங்களைப் போலே
பரமம் சாம்யம் உபைதி இறே -(திரு மாலைப் போலவே யுவா குமாரராயே இருப்பார் அன்றோ )–வந்தியாதார்க்கு முள்ளும் முடுக்குமான வழி —

(ஆதித்ய சந்த்ர அவநிலோ அநலஸ் ச த்யவ்ர் பூமிர் ஆபோ ஹ்ருதயம் யமஸ் ச
அஹஸ் ச ராத்ரிஸ் ச உபே ச ஸந்த்யே தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம் –14 தேவதைகளும் சாக்ஷி-

ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-

கமல நயன வாஸூ தேவ விஷ்ணோ தரணி தர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரண மிதீர யந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான் –3-7-33-

தேவர் ரிஷி பூதாப்த்த ந்ரூணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மநா யஸ் சரணம் சரண்யம்
நாராயணம் லோக குரும் ப்ரபந்ந -பாகவதம் –11-5-41-)

மூப்பு -ஷட் விகாரங்களுக்கும் உப லக்ஷணம்
அஸ்தி -உளனாவது -ஜாயதே -பிறக்கிறான் -பரிணமதே-மாறுதல் அடைகிறான் -விவர்த்ததே -வளர்ச்சி அடைகிறான் -அபஷீயதே -கிழவன் ஆகிறான் -விநஸ்யதி -மரணம் அடைகிறான்

யுவா குமாரா –யுவதிஸ் ச குமாரிணீ -தங்களை ஓக்க அருள் செய்யும் மிதுனம் –
வழி காண்பர் -இவ்வுலகில் நல் வழி நடத்தை செய்வார் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் சென்று
பரம புருஷார்த்த ரூபமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் பெறுவர்

—————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –

சர்வாதிகனான உன்னை அனுசந்திக்க பாபங்களுக்கு சாக்ஷியாகக் காத்துக் கொண்டு இருக்கும் படி நீ
கற்பித்து வைத்த -யம தர்மாதிகளான பதினாலு வஸ்துக்களும் -சூரியன் சந்திரன் -காற்று அக்னி ஆகாயம் பூமி ஜலம்
மனஸ் யமன் பகல் இரவு ப்ராத ஸந்த்யை சாயம் சாந்த்யை தர்மம் -ஆகிய 14 – நமக்கு இவ்விடம் அடைவில்லை என்று விட்டு நீங்கும்
அந்த காப்புக்கு அடியாய் அவித்யா சஞ்சிதமான கர்ம பந்தங்கள் உன்னை அனுசந்திக்கக் கழன்று போம் –
ஆஸ்ரிதர் குற்றத்தை நற்றமாகக் கொண்டு ஏற்றும் பிராட்டி பக்கல் பெரும் பிச்சனானவனே –உன்னை அனுசந்திப்பார்க்கு
ஜராதிகளான ஷட்பாவ விகாரங்களும் முதலிலே இல்லை -தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் போம் வழி என்னும் படி
நிரதிசய போக்யமான அர்ச்சிராதி மார்க்கத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள் -நல்ல வழியே போகப் பெறுவார்கள் என்றுமாம்

மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை -என்றது காப்பும் அருவினைகளும் கழிந்த அதிகாரிகளுக்கு வரும் மூப்பாவது
கைவல்யமாய் -அது முதலிலே உன்னை அனுசந்திப்பார்க்கு இல்லை -என்றபடி –

———————————————————————————————————————

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தித்த
தேசமே எல்லா நன்மையையும் கொடுப்பதாக இருக்க -என்கிறது -(தேசோஹம் சர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )

(பல கரணம்-பக்தியாகிற வழி – உபாசனம் பல பிரதா பகவான் –உபாசகனுக்கு பிரபன்னனுக்கு இரண்டுமே பகவான்)

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தமுடைய திருமலை ஆழ்வார்
தம்மைப் பற்றினார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -76-

பதவுரை

வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆஸ்ரயிக்கு மவர்கள்
வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆஸ்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.

(ப்ரபன்னனுக்கு அத்யாவசியம் -மஹா விசுவாசம் வேண்டுமே -அது தொலையாத குறை வாராமல் -திருமலை அசேதனம் கொடுக்குமா என்கிற சங்கை இல்லாத குறை வாராமல் -)

வழி நின்று நின்னைத் தொழுவார்–
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய –(ப்ரஹதாரண்யம்-6-5-6–கேட்கத் தக்கதும் நினைக்காத தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்கத்தக்கது )என்றும்
தமேவ தீரோ  விஞ்ஞாய பிரஞ்ஞாம் குர்வீத ப்ராஹ்மண -(ப்ரஹதாரண்யம்-6-4-21-ஞானமுடையவர்களுள் சிறந்தவனாக ப்ராஹ்மணன் அந்தப் பரமாத்மாவையே ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம் செய்யக் கடவன் ) என்றும்
உபாசனம் த்ருவா ஸ்ம்ருதி தர்சன சாமாநகாரதா ப்ரத்யக்ஷதா பத்தி -(பர்யாய சப்தங்கள் )–என்றும்
விஷதே தத் அநந்தரம் -(ஸ்ரீ கீதை -18-55-) என்றும் சொல்லும் அளவும் சொல்லுகிறது –

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் நான் எத்தகையவனோ -குணத்தாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவனோ
அத்தகைய என்னை முன் கூறிய பரபக்தியாலே உள்ளபடி அறிகிறான் –
என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பிறகு பரம பக்தியால் என்னைப் பரிபூர்ணமாக அடைகிறான் –
மேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும்
பர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க
பரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும்
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
யஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-இரண்டையும் அறிகிறான் பர பக்தி
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் –
ஞான பல -இத்யாதி இணையான் -அறிந்து கொண்டு என்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்
ஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை –
மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –

(வழி நின்று -கிடைக்கும் பலனுக்கு இவர்கள் பக்தியையே உபாயமாக நினைக்கையாலே இத்தனை ஸ்ரமம் பட வேண்டும் என்று அவன் சங்கல்பித்து இருக்கிறான்
அவனையே உபாயமாக பற்றும் பிரபன்னனுக்கு ஒரு முயற்சியும் இல்லாமல் தானே பலனை அளிக்கிறான்
ஆகையால் பல பிரதனனும் பல உபகரணமும் அவனே
முயற்சியின் பெருமை உபாசகனுக்கு
மஹா விஸ்வாஸ பெருமை பிரபன்னனுக்கு
உபாசகர் வழி நின்று எம்பெருமானைத் தொழ
ப்ரபன்னன் எம்பிரானையே வழியாகவே நினைத்துத் தொழுகிறார்கள் -)

வழுவா-மொழி நின்ற மூர்த்தியரே யாவர் –யதாபூதவாதியான வேதத்தில் சொன்ன வடிவை யுடையவராவார்
பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே–என்கிற படியே –

(ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய
பரஞ்சோதி ரூப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -சாந்தோக்யம் -8-12-2-
ஸ்வரூப ஆவிர்பாவமே பரம புருஷார்த்தம்)

(மூர்த்தியரே யாவார் –
மூர்த்தி என்று ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ப்ரக்ருதி சம்பந்தத்தால் மறைந்து கிடந்த ஸ்வரூப ஆவிர்பாவம் பெறுவதை உணர்த்துகிறார்)

பழுதொன்றும்-வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த-சீரான் திருவேங்கடம் –
ப்ராப்ய ப்ராபகங்கள் ஒன்றும் குறையாத படி பரம பதத்தைக் கொடுக்கும் திரு உலகு அளந்த நீர்மையை யுடையவனுடைய திருமலை

(பழுதொன்றும் வாராத வண்ணமே-ருசியும் நம்பிக்கையும் குறையாத படி
ப்ராப்யம் பகவான்
ப்ராபகம் -திருமலை)

மண்ணளந்த-சீரான்-என்று சம் புத்தியாகவுமாம்

வழுவா மொழி –ஒருவருக்கு ஒருவர் ஓதுவித்துப் போருகை -மூர்த்தியரே யாவர்-அதுக்கு ஈடான ஸ்வரூபத்தை யுடையவர் ஆவார் –
மண்ணளந்த-சீரான்-அந்த ஸ்வபாவம் உண்டு திருமலைக்கு –

(திருவேங்கட மலையே பரம பதத்தைக் கொடுக்கும் என்கிறார்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
தேசோயம் ஸர்வ காம துத் -)

எம்பார் ஓவாதே அநுஸந்திக்கும் பாட்டு –

———————————————————————-

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தமுடைய திருமலை ஆழ்வார்
தம்மைப் பற்றினார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –

ஸ்ருதி ஸ்ம்ருதி ஸித்தமாய்-ஸ்ரவண மனன த்யான உபாஸன தர்சனாதி அவஸ்த்யா யுக்தமான பக்தி மார்க்கத்தில்
சலியாமல் உறைக்க நின்று சர்வாதிகனான உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள் -யதாபூதவாதி யாகையாலே
ஒரு நழுவுதல் அற்று இருக்கிற உபநிஷத் பாகங்களிலே-ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே–என்று
ப்ராப்யதயா ப்ரதிபாதிக்கப் படா நின்றுள்ள ஸ்வரூப ஆவிர்பாவத்தை யுடையராய்ப் பெறுவார்கள்-
பூமியை அளந்து கொண்ட சீல ஸுலப்யாதி கல்யாண குணங்களை யுடையவன் எழுந்து அருளி நிற்கிற திருமலை –
தன்னை ஆச்ரயித்தார்க்கு ப்ராப்ய ப்ராபகங்களில் ருசி விசுவாசங்களுக்கு ஒரு குறையும் வாராத
படியாகப் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்தைக் கொடா நிற்கும் –

——————————————————————————————————

உகந்து அருளின தேசங்கள் பூமியிலே உண்டாய் இருக்க -சம்சாரம் உண்டோ -என்கிறது –
தம்முடைய இடரானவை திருமலையை ஆஸ்ரயிக்கப் போமோ என்னில்-
அநாதி காலம் நம்மைப் பெறுகைக்கு அவன் படுகிற பாட்டை அநுஸந்தியாய் –

(எதிர் சூழல் புக்கு திரிந்து -ருசி அனுகுணமாக நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் -சாதிக்கிறான் –
நின்று கிடந்தது இருந்து நடந்து செய்த வினைகள் அனைத்துமே போக்கி அருளுகிறார்

திரு விண்ணகர் இருந்த திருக் கோலம் இல்லையே -ஆகவே இங்கு ஸ்ரீ வைகுந்த்தைச் சொன்னவாறு )

திருமலை ஒன்றுமே அல்ல கிடீர் -உகந்து அருளின தேசங்கள் அடங்க இப்படியே கிடி கோள்–என்கிறார் –

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ———77-

பதவுரை

வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் – அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும்–பூ மாறாதே இருந்துள்ள அகழை யுடைத்தான திருக் கோவலூரும்
விண்ணகரம் -என்று பரம பதத்தைச் சொல்லுகிறது
நான்கிடத்தும்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே-
நான்கு இடத்தும் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்த படியையும் சொல்ல
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாப பலம் போம் என்கிறது -(சும்மெனாதே கைவிட்டோடி-இத்யாதி -வானோ மறி கடலோ -இத்யாதி )
என்றால் கெடுமா மிடர் ——–தாய் பேர் சொல்ல கிலேசம் போமா போலே -(குழந்தை -ஸ்வயம் ப்ரயோஜனமாகச் சொல்லுமா போல் -உபாய பாவத்தால் இல்லையே )

இவர்களுக்கு உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி (இங்குள்ள இருந்த திவ்ய தேசமாகச் சொல்லாமல் -ஸ்ரீ வைகுண்டமும் இவையும் ஒரே போகி )
பொன்னகர் –தானே வந்து நோக்கின இடம் –

(என்றால் கெடும் -இந்த திவ்ய தேச வாசம் கூட வேண்டா -அவன் நம்மை அடையவே இங்கு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கோர மா தவம் செய்கிறான்
என்று அனுசந்தித்தாலே போதும்
இடர் என்பது எல்லாமே கெடும் என்கிறார்
நாமே சூழ்த்துக் கொண்ட ஸம்ஸாரிக துக்கங்கள் போன வழி தெரியாதபடி தாமே விட்டு ஓடிப் போகும் என்கிறார் -)

(இத்தை உபாய புத்தியுடன் செய்ய வேண்டாம் -ஸ்வயமன் ப்ரயோஜனமாகவே அனுசந்திக்க அமையும் –
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே –பெரியாழ்வார் -5-4-2-
வானோ மறி கடலோ -பெரிய திருவந்தாதி -54-
அநிஷ்ட நிவ்ருத்தி சொன்னது பகவத் பிராப்தி முதலாகிய இஷ்ட ப்ராப்திக்கும் உப லக்ஷணம்)

————————————————————————-

திருமலை ஒன்றுமே அல்ல கிடீர் -உகந்து அருளின தேசங்கள் அடங்க இப்படியே கிடி கோள்–என்கிறார் –

திருமலையிலே நின்று அருளினான் –வைகுண்ட மா நகரிலே எழுந்து அருளினான் -திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளினான்
ஒன்றோடு ஓன்று விச்சேதியாதே செறிந்து அழகியதாய் (அகழியை யுடைத்தாய் )போக்யதை அளவிறந்துள்ள திருக் கோவலூர் ஆகிற
ஸ்ப்ருஹணீயமான திவ்ய நகரத்திலே நடந்து அருளினான் -என்று இந்த நாலு திருப்பதிகளிலும் ஆஸ்ரித அர்த்தமாக
அவன் நிற்பது இருப்பது கிடப்பது நடப்பதாக வியாபாரங்களை அனுசந்தித்தால் –
தாங்களே சூழ்த்துக் கொண்ட சாம்சாரிக துக்கங்கள் போன வழி தெரியாத படி (தம் தாமே )விட்டு ஓடிப் போம் –

——————————————————————————————————————-

நீ துக்கப் படுகைக்கு சங்கை யுண்டோ என்னில் -போராய் நெஞ்சே –
இனி நம் பக்கல் இடர் வந்ததாகில் முதலை பட்டது படும் அத்தனை -(மாஸூ ச -என்பதும் விதியே )

அவன் நமக்காகச் செய்த செயல்களை அனுசந்தித்தால் -அவன் திருவடிகளில்
அடிமையிலே அன்வயித்து அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் -என்கிறார் –

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-

பதவுரை

நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்-தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த–
ஆனையைத் தொடருவதான கொடிய முதலையை முடித்த –
சூழ்ச்சி என்று வஞ்சித்தலாய் -முடித்த என்றபடி –
படமுடைய-பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்–இத்தால் அநாஸ்ரிதர் வந்தாலும் ஆஸ்ரிதர் வந்தாலும்  அவன் இருக்கும் படி சொல்கிறது

(ரக்ஷணம் -அஸ்தானே பய சங்கை -பொங்கும் பரிவு -ஸ்பரிசத்தால் வந்த பூரிப்பு)

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு —–கொய்யப் பட்டுச் செவ்வியை யுடைய நாகப் பூவைக் கொண்டு
பைந்நாகப் பள்ளியான் -பாதமே கை தொழுதும்-இடரார் படுவார் -எழு நெஞ்சே-என்று அந்வயம் –
நாகப் பூ என்கையாலே -அப்ராக்ருத புஷபம் தேடிப் போக வேண்டா -காட்டில் ஒரு பூ அமையும் -என்கிறது
இவர்கள் (முதல் ஆழ்வார்கள் மூவரும் )என்றும் காட்டிலே இறே பழகிற்று–

(அங்கு ஆராவாரமது கேட்டு அழல் உமிழ்க்கும் -நான்முகன் -10-
கொய் நாகப்பூ -காட்டிலே இருக்கும் ஒரு பூவே அமையும்
நாகப் பள்ளியானுக்கு சத்ருசமாக அன்றோ நாகப்பூ
இப்படி தொழுதால் இடர் பட வேண்டாமே
அவை முதலை பட்டது படுமே)

———————————————————————-

அவன் நமக்காகச் செய்த செயல்களை அனுசந்தித்தால் -அவன் திருவடிகளில்
அடிமையிலே அன்வயித்து அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் -என்கிறார் –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை வடிம்பிட்டு நலியக் கடவதாய் –அதி பிரபலமாய் -நெஞ்சு இரக்கம் இல்லாத படி
அதி குரூரமான முதலையைத் தப்பாத படி சூழ்ந்து அழித்துப் பொகட்டவனாய் -ஸ்வ ஸ்பர்ஸத்தாலே விகசித பணனாய்
இடம் வலம் கொண்டு பரிமாறுகைக்கு தக்க பரப்பை யுடையனான திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை -கொய்து கொள்ள வேண்டும் படி சம்ருத்தமாய் போக்யமான
நாக புஷ்ப்பங்களைக் கொண்டு ஆஸ்ரயிப்போம் –
அவனுக்கு அடிமை செய்யாமல் கிடந்து துக்கப் பட வல்லார் யார் -நெஞ்சே -சடக்கென எழுந்து இரு –

———————————————————————————————————

ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறிக் கார்யம் செய்ய எங்கே கண்டோம் –என்னில்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ -என்கிறார்

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  -79-

பதவுரை

மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை-பெறாப் பேறு பெற்றதாக அவன் திரு உள்ளம் -ஆகவே ஒண் தாரை
அம் கை–(தனது) அழகிய திருக் கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறி வந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)

(ஸ்வர்க்காதி லோகத்தில் தோள் -கீழே தாள் -மேலே ஸத்ய லோகத்திலும் தாள்)

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்-குணமே குற்றமாம் –குற்றம் குணமாம் கிடீர் சம்சாரம்
ராவணனோ பாதி வத்யனாய் இருக்க உதார குணம் இவன் பக்கலிலே கிடக்கையாலே தன்னதான பூமியை
அவனுக்காக மேல் எழுத்து இட்டு அவன் கொடுத்தானாக இவன் கொண்டத்தை –தன் கையில் நீர் வார்த்தவனைப்
பாதாளத்திலே தள்ளினான் என்று பழி சொல்லா நிற்பார்கள் -தன்னதல்லாத பூமியை தன்னது என்று கொடுத்தவனை இறே
நெல் வாலிலே வைத்து தெறிக்க வேண்டுவது -அவனைப் பழி சொல்வார் இல்லை -(தனக்கு இத்யாதி -கம்பர் )
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்–ஆரத்தை இரக்கிறானோ இவன்

ஒண்டாரை-நீரங்கை தோய நிமிர்ந்திலையே–அலாப்ய லாபம் பெற்றாரைப் போலே —
வர்ஷேண பீஜம் ப்ரதிஸஞ்ச ஹர்ஷ –(ஸூ ந்தர காண்டம் )என்னுமா போலே அழகிய கையிலே நீர் விழும் காட்டில் வளர்ந்ததில்லையோ –
நீள் விசும்பில்-ஆரங்கை தோய வடுத்து –பரந்த விசும்பில் ஆரமும் கையும் அடுத்து தோயும் படிக்கு ஈடாக -அன்றிக்கே
நீள் விசும்பில் உள்ளார் அழகிய தோளில் அணைய என்றுமாம் -நாம் ஆஸ்ரயிக்க வேணுமோ —
தானே அர்த்தியாம்-நான் அர்த்தியோ என்ன -நிமிர்ந்திலையே –

கொண்டானை அல்லால் -தனக்கு என்று கொடுக்கப் புகுமாகில் நமக்கு இதில் பிராப்தி இல்லை என்று இருந்தால் ஆகாதோ
என்று இருக்க -அது குணமாகை தவிர்ந்து நிற்கைக்கு உடலாவதே -பையலை நெல்லிலே வைத்து தெறிக்க வேணும்
என்பாரும் உண்டாயாயிற்றோ -ஆர் அறியப் பட்டான் –

மண் தா என -தன்னதிலே ஏக தேசத்தை -மா வலியை-அஸூரனைக் கிடீர் – நீர் தோய நிமிர்ந்திலையே
மறு மனஸ் ஸூபடும் என்று அப்போதே -நீள் விசும்பிலார்
அங்கை தோய -அடுத்து ஆஸ்ரயிக்க நிமிர்ந்திலையே -என்றுமாம் –

(குணசாலியிடம் யாசித்துப் பெறா விடிலும் தாழ்வாகாது -மேலானவன் இடம் சிறியதைக் கேட்டு கிடைக்கா விட்டாலும் உயர்ந்ததே
தாழ்ந்தவன் இடம் உயர்ந்ததைக் கேட்டுப் பெற்றாலும் தாழ்ந்ததே)

தனக்கு இயலா வகை தாழ்வது தாழ்வில் கனக்க அரியானது கைத்தலம் என்னில் எனக்கு இதன் மேல் நலம் யாது கொல் -கம்பர்
அஃலம் புரிந்த நெடும் தடக்கை -திருநெடும் தாண்டகம் -6-
வாதா தபக்லான் தமிவ ப்ரணஷ்டம் வர்ஷேண பீஜம் ப்ரதி சஞ்சு ஹர்ஷ -ஸூந்தர -29-6-
வாடி நசித்துப் போன விதை மழையினால் சந்தோஷிப்பது போல் பிராட்டி மகிழ்ந்தாள்
நீர் விழுந்ததும் வாடிய விதை வளருமா [போலே வாமனன் ஓங்கி த்ரிவிக்ரமனானான் –

——————————————————————————-

ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறிக் கார்யம் செய்ய எங்கே கண்டோம் –என்னில்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ -என்கிறார்

உன் விபூதியில் ஏக தேசமான பூமியை எனக்குத் தர வேணும் -என்று மஹா பலியைச் சென்று அர்த்தித்து-
அவன் மறுக்க மாட்டாமல் உனக்குத் தந்தேன் என்று தாரை சாய்க்க -அழகிய அந்த உதக தாரையின் நீரானது
கொடுத்து வளர்ந்த அழகிய திருக் கையிலே வந்து விழும் காட்டில் -அவன் மறு மனஸ்ஸூ படில் செய்வது என்
என்று நினைத்துப் பரப்பை யுடைத்தான அந்தரிஷாதி லோகங்களில் வர்த்திக்கிற ப்ரஹ்மாதிகளுடைய அழகிய கையானது
ஸ்பர்சித்துத் திருவடிகளை விளக்கும் படிக்கு ஈடாகக் கடுகச் சென்று கிட்டி -உதக ஜலமும் திருவடி விளக்கின ஜலமும்
ஏக உதகமாம் படி வளர்ந்திலையோ —

தன்னை அழிய மாறி உதார குணம் பற்றாசாக தன் விபூதியை என்னது என்று
அபிமானித்து இருந்த அவன் குற்றம் பாராதே தானே சென்று இரந்து நீர் ஏற்று வாங்கிக் கொண்ட குணாதிகனானவனை
வஞ்சகன் -சர்வ ஸ்வாபஹாரி -தனக்கு அபேக்ஷிதம் செய்தவனைப் பாதாளத்தில் தள்ளினவன் -என்றால் போலே
பழி சொல்லும் இத்தனை ஒழிய –
கொடுத்த மஹா பலியை-பகவத் விபூதி அபஹாரி -அஹங்கார க்ரஸ்தன்
ஆஸூர ப்ரக்ருதி என்றால் போலே யுண்டான அவன் குற்றங்களை ஆர் தான் சொல்லுவார் –

சம்சாரிகள் ஸ்வ பாவம் குணத்தைக் குற்றம் ஆக்கியும் குற்றத்தைக் குணம் ஆக்கியும் -செய்யும் படி அன்றோ இருப்பது -என்று வெறுக்கிறார்

நீள் விசும்பில் ஆரமும் கையும் சென்று ஸ்பர்சிக்கும் படி கிட்டி என்னுதல்
அன்றிக்கே நீள் விசும்பிலார் அடையக் கை எடுத்து ஆஸ்ரயிக்கும் படியாக என்னவுமாம் —

——————————————————————————————————————-

பரிஹாரம் இல்லாத ஆஸ்ரித விரோதம் பிறக்கிலும்-அவர்களைப் பொறுப்பித்து-
புருஷகாரமாக அவர்களைக் கைக் கொண்டு ரஷிக்கும் -என்கிறது –

அபயம் என்று புகுந்த ஸ்ரீ விபீஷணப் பெருமாளை புகுர ஓட்டோம் என்றவரை பொறுப்பித்து
ஆ நயைநம் ஹரி ஸ்ரேஷ்ட-என்று அவரைக் கொண்டு அழைப்பித்தால் போலே-

பாதாளத்தில் ஸூ முகன் என்ற
ஒரு சர்ப்பத்தை பெரிய திருவடி அமுது செய்ய நினைக்க -அத்தை அறிந்து ஸ்வர்க்கத்திலே உபேந்த்ர மூர்த்தியாய்
எழுந்து அருளி இருக்கிற இடத்திலே திருப் பள்ளிக்கு கட்டிலைக் கட்டிக் கொண்டு கிடக்க -திருவடி பாதாளத்தில் சென்று
தேடிக் காணாமல் திருவடிகளிலே வந்து இவன் கிடக்கிற படியைக் கண்டு சிவிகையார் சொல்லும் வார்த்தையை விண்ணப்பம் செய்ய
திரு வாழியை இவன் கையிலே கொடுத்து பலத்தை ஷயிப்பிக்க-பின்பு திருவடி ஸ்தோத்ரம் பண்ண
கிருபை பண்ணி திருவடி கையிலே அடைக்கலமாகக் காட்டிக் கொடுத்து ரக்ஷித்தான் என்கிற உபாக்யானத்தை அனுசந்தித்து அருளிச் செய்கிறார் –
ந ஷமாமி என்னும் தப்புக்கு போக்கடி காண வல்லன் என்கிறார் –

மஹா பலி பக்கலில் நின்றும் பூமியை மீட்டு நோக்கின அளவன்றிக்கே -அசாதாரண பரிகாரத்தோடே விரோதித்து வந்து
ஒருவன் சரணம் புக்கால் -ந ஷமாமி -என்றத்துக்கும் -நத்யஜேயம் -என்றத்துக்கும் விரோதம் வாராத படி
அவன் கையிலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே நோக்குவான் ஒருவன் என்கிறார் –

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -80-

அடுத்த கடும்பகைஞற்கு

நெருங்கிய கொடிய சத்துருவான கருடனுக்கு-பையுடை நாகப் படைக் கொடியான்
ஆற்றேன் என்று

(நேரே நின்று பிழைத்திருக்கத்தக்க) வல்லமை யுடையேனல்லேன்’ என்று சொல்லிக் கொண்டு
ஓடி

விரைந்து ஓடிப் போய்,
படுத்த பெரு பாழி

(எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு) விரித்த பெருமை பெற்ற படுக்கையாகிய சேஷனை
சூழ்ந்த

சுற்றிக் கொண்ட
விடத்து அரவை

விஷத்தை யுடைய ஸுமுகனென்கிற ஸர்ப்பத்தை
வல்லாளன் கை கொடுத்த

வலிமை யுடைய கருடனது கையிலே (அடைக்கலப் பொருளாகத்) தந்து ரக்ஷித்த
மா மேனி மாயவனுக்கு அல்லாதும்

சிறந்த திரு மேனியை யுடைய-ஆச்சார்ய பூதனான -எம்பெருமானுக்குத் தவிர
(மற்ற தேவதாந்தரங்கட்கு)
ஆள் ஆவரோ

அடிமை யாவர்களோ.

அடுத்த –சஹஜ சத்ரு -கடும் பகைஞன்–திருவடியோடே விரோதம் கொண்டால் பிழைக்கப் போகாது -என்கை –
ஆற்றேன் என்றோடி படுத்த பெரும் பாழி–பாழி-என்று படுக்கைக்கு பெயர் –
சூழ்ந்த –சுற்றின -விடத் தரவை–சரண்யனுக்கு க்ருபா விஷயம் என்கிறது –
வல்லாளன் கை கொடுத்த –பிரசன்னனான போது அவனைப் பொறுக்க மாட்டேன் என்னாதே ரக்ஷிக்க வல்லவனானவன் கையிலே காட்டிக் கொடுத்த
மா மேனி -காட்டிக் கொடுத்த பின்பு வடிவில் பிறந்த புஷ்கல்யம்–
மாயவனுக்கு–அல்லாது மாவரோ ஆள் —–எல்லா அவஸ்தையிலும் விட்டுக் கொடாத ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆளாவாரோ –

ந ஷமாமி என்னும் தப்புக்கு போக்கடி காண வல்லன் என்கிறார் -(பாகவத அபசாரத்துக்கும் பரிஹாரம் தேடி ரக்ஷித்து அருளினான் அன்றோ )

நலிய நினைக்கில் அத்தை வெல்ல வல்லாரும் இல்லை -ரக்ஷிக்க நினைக்கில் அத்தை தடுக்க வல்லாரும் இல்லை –
ஆஸ்ரித விரோதி என்று கை விட வேண்டிய விஷயத்தையும் பொருத்தி விட வல்லவனை ஒழிய -கடித்த வாயாலே தீர்க்கை
வத்யதாம்-என்றவரையே -அஸ்மாபிஸ் துல்யோ பவது-என்னப் பண்ணுகை -(அன்று ஈன்ற கன்றின் மேல் வாத்சல்யம் பெருகி இருக்குமே )

அடுத்த – சஹஜ சத்ருவினுடைய சத்தை யுண்டாகில் பகையாயே இருக்கும்
கடும் பகை —பேர் சொல்ல முடியும் படி கொடிதாகையும் –
பெரும் பாழி –இந்த்ர அனுஜன் படுக்கை –திருப் பாற் கடல் ஆகவுமாம் –

(ந ஷமாமி -நத்யஜேயம் -இரண்டுக்கும் விரோதம் வராமல் அவனிடமே ஒப்படைத்து அவனைக் கொண்டே ரக்ஷித்து அருளிய அதி சமர்த்தன்
கடித்த வாயாலே முத்தம் இடச் செய்து அருளினான்
வத்யதாம் -என்ற வானர முதலிகளளையே -அஸ்மாத் அபி துல்யோ பவது என்று கூற வைத்து அருளினால் போலே)

——————————————————

மஹா பலி பக்கலில் நின்றும் பூமியை மீட்டு நோக்கின அளவன்றிக்கே -அசாதாரண பரிகாரத்தோடே விரோதித்து வந்து
ஒருவன் சரணம் புக்கால் -ந ஷமாமி -(கிருத யுக ஸ்ரீ வராஹப் பெருமாள் வார்த்தை)
என்றத்துக்கும் -நத்யஜேயம் -(த்வாபர யுக பெருமாள் சுக்ரீவன் இடம் வார்த்தை )என்றத்துக்கும் விரோதம் வாராத படி
அவன் கையிலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே நோக்குவான் ஒருவன் என்கிறார் –

பிறப்பே பிடித்து உண்டானது ஒன்றாகையாலே -ப்ரத்யாசன்னமாய் -பேர் சொல்லவே முடியும் படி கொடிதான
ஸாத்ரத்வத்தை உடையனான பெரிய திருவடிக்கு நேர் நின்று பொறுக்க மாட்டேன் என்று பெரிய வேகத்தோடு ஓடிச் சென்று
அங்குத்தைக்கு அனுரூபமாம் படி விரித்த திவ்ய சிம்ஹாசனத்தை (பள்ளிக்கட்டு -கோப்புடைய சீரிய சிங்காசனம் )சுற்றிக் கொண்டு கிடந்த பயத்தாலே உமிழுகிற விஷத்தை யுடைய ஸூமுகனாகிற சர்ப்பத்தை
ந ஷமாமி -என்றத்தையும் -நத்யஜேயம் என்றத்தையும் ஓக்க நோக்குகைக்காக
சரணாகத பரித்ராணத்துக்கு அனுகுணமான மிடுக்கை யுடைய பெரிய திருவடி கையில் கடித்த வாயாலே தீரும் படி
காட்டிக் கொடுத்து ரஷித்தவனாய் -ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷம் அடங்கலும்
நிழல் இட்டுத் தோற்றுகிற ஸ்லாக்யமான திரு மேனியை யுடையனாய் -ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு எல்லை
காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுக்கு ஒழியவும் ஸ்வ பர சம் ரக்ஷண ஷமர் அல்லாத வேறு ஷூத்ர தேவதைக்கு அடிமை ஆவர்களோ

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் –61-70- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

ஹிதத்தில் அறியாததுக்கு-தம் தாமுடைய உத்பத்தியில் வைத்து அறிவுணர்த்துகிறார் -(உத்பாதாகனே-பெற்றவனே காக்க வேண்டுமே )

அவனை ஒழிய இவை தம் தாமுக்கு ஹிதம் அறியாது என்றீர் –
அவன் தான் இவை தன்னை நோக்க வேணும் என்கிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

பதவுரை

உலகும்–பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும்–இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு–அழகிய நிறத்தோடு அலை யெறிகிற
கரு கடலும்–கரு நிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும்–மலைகளும்.
உலகினில் செம் தீயும்–இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும்-காற்றும்
வானும்–ஆகாயமும்
(ஆகிய இவையாவும்-ஐந்த்தைச் சொல்லி அஹங்காராதிகளுக்கும் உப லக்ஷணம்-)
திருமால் தன்–லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய(திருமால் -திருவுக்கு ப்ரேரகத்வம் தூண்டும் -ஸ்ருஷ்டிக்கு அவனே )
புந்தியில்–ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய–படைக்கப்பட்ட
புணர்ப்பு–படைப்புக்களாம்.

புந்தியிலாய புணர்ப்பு –சங்கல்பத்தினால் உண்டாக்கிய ஸ்ருஷ்ட்டி –

உலகும் உலகிறந்த ஊழியும்-லோகம் அடங்க தானே சேஷித்த காலமும் -(சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் –)
ஒண் கேழ்-விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்–அழகிய நிறத்தை யுடைய அலை எறியா நின்ற கடலும்
லோகத்துக்கு ஆதாரமான மலையும் –
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்-புந்தியிலாய புணர்ப்பு ——-இவ் வோக்கமான கடலிலே லோகம் அலைந்து
நோவு படப் புக்கவாறே -ஐயோ நோவு படா நின்றதே -என்று அதுக்குத் துக்கித்த பிராட்டிக்கு பிரியமாக தன் சங்கல்ப ஞானத்தால் ஸ்ருஷ்டித்து(பஹுஸ்யாம் ப்ரஜாயேய )
தெளிந்து அழகியதாய் சலிக்கின்ற கடலும் –பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கும் வெற்பும் –
திருமால் இத்யாதி -தாய்க்கு பிரியமாக பிரஜைகளை நோக்கும் அத்தனை இறே (தத் இங்கித இத்யாதி )-

இத் தலை அறிந்தோ ஸ்ருஷ்டித்தது -விலக்காமையே உள்ளது –

————————————————————–

அவனை ஒழிய இவை தம் தாமுக்கு ஹிதம் அறியாது என்றீர் –
அவன் தான் இவை தன்னை நோக்க வேணும் என்கிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –

பூமியாதிகளான லோகங்களும் -லோகங்கள் எல்லாம் கால சேஷமாம் படி அமிழ்ந்து கிடக்கிற சம்ஹார காலமும்
அழகிய நிறத்தை யுடைத்தாய் அலை எறியா நின்றுள்ள ஸ்ரமஹரமான கடலும் -பூமிக்கு ஆணி அடித்தால் போலே
இருக்கிற குல பர்வதங்களும் -பின்னையும் லோகத்தில் யுண்டான சிவந்த நிறத்தை யுடைய தேஜஸ் பதார்த்தங்களும்
வாயுவும் ஆகாசமும் -இவை எல்லாம் பிராட்டிக்கு உகப்பாக ஜகத் ஸ்ருஷ்டியில் ஒருப்பட்ட
ஸ்ரீ யபதி யுடைய சங்கல்பிதமான வகுப்பை யுடையன —

(சாம்யா பத்தி இருந்தாலும் -ஜகத் வியாபார வர்ஜம் -)

(அவளுக்கும் இது -ஆனால் அவளது உகப்புக்காகவே செய்கிறான் -தோகை விரிக்கும் ஆண் மயில் போல்)

(தத் இங்கித பராதீனன்-ப்ரூ பங்கா பிரமாணம் -உல்லாச -இத்யாதி )

(“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“-ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்)

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

(அவளது ஆனந்தத்துக்காகவே ஸ்ருஷ்ட்டி
தூண்டி விடுகிறாள்
இவளது கண் புருவ நெரிப்பே பிரமாணம்)

(திருமால் தன் புந்தியிலாய புணர்ப்பு -ஜகத் ஸ்ருஷ்டியில் பிராட்டிக்கு அந்வயம் உண்டு என்கிறது
திரு -பிராட்டி விசேஷணம் -அப்ராதான்யம்
மால் -விசேஷ்யம் -ப்ரதாநம்
அவனுக்கே பஹுஸ்யாம் -சங்கல்பமும் நிமித்த உபாதாந ஸஹ காரி -த்ரிவித காரணத்வமும் அவனுக்கே
ஸ்ருஷ்டி லீலா ரஸத்தில் அவனைத் -தூண்டுவதும் -லீலா ரஸத்தில் பங்கு பெறுவதும் அவளது)

“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

ஸ்வஸ்தி ஸ்ரீர் தி சதா அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆம வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு நாந்ய தாஸ்ய ரஸதா ஸ்யாதைக ரஸ்யாத் தயா –ஸ்ரீ ஸ் தவம் -1-

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆம வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

இவர் அபேக்ஷிக்கும் நன்மையாவது பிராட்டியை நன்றாக ஸ்துதிக்க அனுகூலமான
வாக் ஸம்ருத்தி -பக்தி ஸம்ருத்தி இத்யாதிகள் என்பது மேல் ஸ்லோகத்திலே விசதமாம் —

யத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திரசர ரசநா தார தம்ய முராரே -பட்டர்

நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூ விப்ரம பேதத
ஈசேஸிதவ்ய வைஷம்ய நிம்நோந்நத மிதம் ஜகத் -பட்டர்

ஸ்ரீ யை ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸநம் ஹரே
அங்கீ காரிபிரா லோகைஸ் சார்த்த யந்த்யை க்ருத அஞ்சலி -பட்டர்

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீ ரெங்க ஹர்ம்ய தல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம –பட்டர்

ஜகத் காரணத்தில் இவளுக்கு அந்வயம் உண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான்
இவ்வர்த்தத்தில் ஸந்தேஹம் யுண்டோ –
ஆவாப்யாம் கர்மாணி கார்த்தவ்யாநி பிரஜாஸ் ச உத்பாத யி தவ்யா-என்று
நம் இருவராலும் கர்மங்கள் செய்யப்பட வேண்டும் – குழந்தைகளும் பிறப்பிக்கப் பட வேண்டும் – என்று பிரமாணம் சொல்லுகையாலே
ஸஹ தர்ம சரியான இவளுக்கு அந்வயம் உண்டு என்று அருளிச் செய்தார் – என்கிற ஐதிக்யம் இங்கு அனுசந்திக்கத் தக்கது –

——————————————————————————————————-

உத்பன்னமான பின்பு இவரதோ தம் காரியத்துக்கு கடவராய் இருக்கிறது -என்கிறது -களை பிடுங்கும்படி –

இவற்றை உண்டாக்கித் தான் கடக்க இருக்கை அன்றிக்கே இவற்றைக் களை பிடுங்கி நோக்குவானும் அவனே என்கிறார் –

(ஸ்ருஷ்டித்து -ததேவா அநு பிரவேசித்து கூடவே இருந்து உடன் இருந்து உடனுக்கு உடன் ரஷித்த இடங்களில் சிலவற்றைக் காட்டுகிறார்
தோள்கள் வியாபாரங்கள் – -ஸூந்த்தர தோளுடையான் )

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவை யென்றால்]
சூழ் அரவம் பொங்கு அணையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாக வுடையனான ஸர்வேச்வரனது திருத் தோள்களேயாம்.

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து-ஓன்று என்னலாம் படி நிர் விவரமாய் இருந்த மருதினிடை போய்
தர்ச நீயமான குருந்தத்தைச் சாய்த்தும்
மண மருவ மால் விடை யேழ்   செற்று–நப்பின்னை பிராட்டி யுடைய பாணி க்ரஹண மங்களமானது தலைக் கட்டும் படிக்கு
ஈடாக பெரிய எருதுகள் ஏழையும் செற்று
கணம் வெருவ–சங்கைஸ் ஸூராணாம்–என்கிறபடியே அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி யற இது என்னாகப் புகுகிறதோ
-என்று வெருவும் படிக்கு ஈடாக
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
—–ஏழு உலகையும் அநாயாசேன கடந்தனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனாவும் –
சூழரவப் பொன்கணையான் தோள் -பரந்து மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைத்தாய் (மெத்தென்ன பஞ்ச சயனம் )இருந்துள்ள திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவன் –

ஆஸ்ரித விரோதி நிரசன களை பிடுங்கிய படி

பூங்குருந்தும் -பூவைக் காட்டி அந்நிய பரதை பண்ணி வஞ்சிக்கப் பார்க்கை – மணம் இத்யாதி -தனக்கு வந்த கர்மத்தைத் தீர்த்த படி(நமது கர்மங்கள் போல் ஏழு ரிஷபங்கள் )
ஏழு உலகு இத்யாதி -பிராட்டிக்கு செய்யும் செயலை இந்த்ரனுக்குச் செய்கை – எண்டிசையும் போயின -திக்குகளை வெளியடக்கை(த்ரிவித பரிச்சேத ரஹிதன் -ரூபத்தாலேயும் -ஸ்வரூபத்தாலும் மட்டும் அன்றிக்கே )
சூழ் அரவு இத்யாதி -இப்படி படுக்கையிலே கண் வளரப் பெறாதே-அலமந்து திரிவதே
பாண்டரஸ் யாத பத் ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா–சிம்ஹாசனத்தில் இருக்க அவசரம் பெற்றிலன்-
-இக் காலத்தில் இறே நிழலிலே முத்துக் குடை இடுவது(கிழவனே ஓடு -அப்பனுக்குத் தப்பாத பிள்ளை -உட்கார நேரம் இல்லாமல் ஓடி -ரக்ஷணம் செய்தார்களே -)

மொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்று வித்து -பெரியாழ்வார் 3-1-3- அஸூர ஆவேசமும் உண்டே

சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ் தைஸ்
ததா மனுஷ்யைர் ககநே ச கேசரை
ஸ்துத க்ரமான் ய ப்ரஸகார ஸர்வதா
மமாம்ஸ் து மங்கள்ய விருத்தயே ஹரி –ஸ்ரீ விஷ்ணு தர்மம்

————————————————————-

இவற்றை உண்டாக்கித் தான் கடக்க இருக்கை அன்றிக்கே இவற்றைக் களை பிடுங்கி நோக்குவானும் அவனே என்கிறார் –

இடைவெளி யறப் பொருந்தி நின்ற யாமளார்ஜூநங்கள் நடுவே ஊடறுத்துக் கொண்டு தவழ்ந்து போய் –இலையும் கொம்பும்
தெரியாத படி பூத்துக் கிடந்த குருந்தத்தை தள்ளிப் பொகட்டு –பிராட்டியைக் கைப் பிடிக்கை யாகிற கல்யாணம்
தலைக் கட்டுகைக்காகப் பெரிய வடிவை யுடைய ருஷபங்கள் ஏழையும் முடித்து -சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அனுகூல பிரதிகூல விபாகம் அற சர்வ பிராணி கணமும் என்னாகத் தேடுகிறதோ என்று நடுங்கும் படி சப்த லோகங்களையும்
வருத்தம் அற அளந்து கொண்டனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனவும் -விஸ்திருதனாய்-
மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் ஆகிற ஓங்கிய திருப் படுக்கையிலே கண் வளர்ந்து
அருளின சர்வேஸ்வரனுடைய திருத் தோள்கள் கிடீர் -அந்த படுக்கையும் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களை செய்தான் -அப் படுக்கையில் கண் வளர பெறாமல் இப்படி அலமந்து திரிவதே என்று வயிறு பிடிக்கிறார் –

—————————————————————————————————————-

இப்படி அவன் ஸூலபன் என்று அறிந்து அனுசந்தித்த பின்பு என்னுடைய இந்திரியங்கள் அவனை அல்லது அறிகிறது இல்லை –

இப்படி இருக்கிற அவன் பக்கலிலே என்னுடைய சர்வ இந்திரியங்களும் ப்ரவணம் ஆய்த்து-
நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என் செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன் மொழியே–இனிய பேச்சுக்களையே(அவனைப் பற்றிய அருளிச் செயல்களும் -அவனது இனிய சொற்களும் -என்றபடி )
கேட்டு இருக்கும்–கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;(கேட்டபடியாலே சத்தை )
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள்தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக் கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சம்சாரிகள் விரும்பும் சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்பு வாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

தோளவனை யல்லால் தொழா –நான் வேறு ஒன்றைத் தொழச் சொன்னாலும் என் தோளானது அவனை அல்லது தொழுகிறது இல்லை –
என் செவி யிரண்டும்-கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் –என் செவிகள் உறவானவனுடைய இனிய மொழியைக் கேட்டிரா நின்றது
நா நாளும்-என்னுடைய நாக்கானது எப்போதும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே–கோள்-என்று ஒளிக்கும்-மிடுக்குக்கும் பேர்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைக தாமநி-என்னும் படியே அனந்த சாயியான சர்வேஸ்வரனையே கூறும் அத்தனை
நாணாமை நள்ளேன் நயம்  —–(லௌகீகர்கள் )ஆசைப்படுவதான-சப் தாதிகளை லஜ்ஜியாதே கிட்டேன் –
ஹாஸ்யமான விஷயம் என்றுமாம் –

அவன் ரக்ஷகனாகவுமாம் தவிரவுமாம் –
அவன் தான் தனக்குப் பகை என்னலாம் படி இருந்தாலும் என் செவி தானும் கேட்பது (புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருப்பேனே )-ஆசைப்படும் விஷயங்கள் –
நாணாமை நள்ளேன்-ஆண் பிள்ளை சோற்றான்வியை ஆசைப் பட்டவனைப் போலே உணர்ந்தவனுக்கு லஜ்ஜிக்க வேணும்
கோள் -பிராட்டிக்கும் தனக்கும் கிடைக்கைக்கு யுண்டாகை-

(கேள் அவனது –மாதா பிதா பிராதா நாராயண–ஸூபால உபநிஷத் -கேள் உறவினர் -இன்ன உறவு என்று விசேஷியாமையாலே ஸர்வ வித பந்துவும் அவனே –

இன் மொழியே -ஸம் ஸ்ரவே மதுரம் வாக்யம்

கோள் நாகணை –கோள் -பலம் -அமிதவ் ஜா பர்யங்க-கௌஷீதகி –
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைக தாமநி -ஸ்தோத்ர ரத்னம்

நயம் நாணாமை நள்ளேன் -நயம் -பிறரால் விரும்பப்படும் விஷயாந்தரங்கள் -இவற்றை லஜ்ஜை இல்லாமல் அணுக மாட்டேன்
ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு வெட்கத்தோடே மீள வேண்டும்படி அன்றோ பிராக்ருத விஷயங்களின் தீமை -)

———————————————————————-

இப்படி இருக்கிற அவன் பக்கலிலே என்னுடைய சர்வ இந்திரியங்களும் ப்ரவணம் ஆய்த்து-
நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்

என்னுடைய தோள்களானவை நான் வேறு சிலரைத் தொழு என்னிலும் அந்த சர்வேஸ்வரனை அல்லது தொழுகிறனவில்லை —
என்னுடைய செவிகள் இரண்டையும் நிருபாதிக பந்துவான அவனுடைய ஸம்ஸரவே மதுரம் -ஆன பேச்சைக் கேட்டு
அத்தாலே தரித்து இருக்கும் –நாவானது -சர்வ காலமும் மிடுக்கை யுடைய திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய
சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை யுடைத்தான -திருவடிகளையே சொல்லா நிற்கும் –
நாட்டார் விரும்பி மேல் விழுகிற விஷயங்களை அவர்களில் வியாவ்ருத்தனான நான் நிர்லஜ்ஜனாய்க் கொண்டு செறியேன்-
ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும் படி காணும் விஷய ப்ராவண்யத்தின் பொல்லாங்கு இருப்பது –

(எம்பெருமானே இந்திர வேஷம் போட்டு வந்தாலும் அம்பரீஷன் பார்க்க மாட்டானே)

———————————————————————————————————

பிராப்தத்தைச் செய்து அபிராப்தத்தைச் செய்யேன் என்று இருக்கிற என் பக்கல் பாபத்துக்கு வரப் போமோ -என்கிறார் –

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி
ப்ராவண்யம் உரைத்தாலும் துர் வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன –
நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

பதவுரை

பிறர் பொருளை–பரம புருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன்–(என்னுடையதென்று) விரும்ப மாட்டேன்;
கீழாரோடு–ஆத்மா அபஹாரம் பண்ணும் ஸம்ஸாரிகளோடு
நள்ளேன்–ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால்–சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உயவேன்–கால க்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது–ஸ்ரீ யபதியான எம்பெருமானை யன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன்–தெய்வமாகக் கொண்டு துதிக்க மாட்டேன்;
வியவேன்-(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
(இப்படியான அறிமாட்டார்கள். பின்பு)
என் மேல்–எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என் மேலே
வினை–அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என்–வரும் விதம் ஏது? [வரமாட்டாது]

நயவேன் பிறர் பொருளை -பிறர் பொருளை ஆசைப்படேன் –த்ரவ்யத்துக்கு உத்கர்ஷமாவது-த்ரவ்யம் தன்னுடைய
நன்மையாலும் -உடையவனுடைய நன்மையாலும் —
த்ரவ்யம் பரிணாமியான அசித் அன்றிக்கே ஆத்ம த்ரவ்யமாய் இருந்தது -யஸ் யாத்மா சரீரம் –பதிம் விஸ்வஸ்ய
ஆத்மேஸ்வரீம் –என்று ஓதப்படுகிறவன் உடையவன் —
உத்க்ருஷ்டமான ஆத்மாவை -என்னது -என்று இரேன் -(அந்யதா பிரதிபத்யே –சோரேண -பாரதம் )

நள்ளேன் கீழரோடு–ஆத்மாவை என்னது என்று இருக்குமவர்களோடு -இவர்களே கீழார் ஆகிறார் -அவர்களோடு கிட்டேன்
-தங்கள் படி ஆக்கிக் கொள்வர் என்று

உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் -உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்

வியவேன்-திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்–ஸ்ரீ யபதி யைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் -(வியத்தல் விஸ்மயத்தல் )
அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஸ்துதியேன் – வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்
(பரன் திறம் அன்றி மற்று வேறே தெய்வம் இல்லையே -பிரகாரமாக நாட்டினான் தெய்வம் எங்கும் )

வருமாறு என் என் மேல் வினை  —-அவசியம் அநு போக்தவ்யம்– என்கிற வசனத்தைக் கொண்டு என் பக்கலிலே வரப் போமோ பாபத்துக்கு -என்கிறார் –

(கீழ் விஷய அனுபவம் வாராது
ஆகவே இங்கு பாபம் என்று தத் கார்யமான விஷய அனுபவங்கள்)

க்ருதக்ருத்யன் என்கிறார் –எம்பெருமான் விரும்பும் ஆத்மாவை அபஹரியேன் -ராவணன் செயலைச் செய்யேன்
கீழார் அவனுக்கு கூட்டுப்படும் மாரீச பிரப்ரு த்திகள்- உயர்ந்தவர் விஸ்வாமித்திராதிகள் -மஹா தமாநஸ் து –
பெரியோர் -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய-ப்ரஹ்மாதிகளைக் கண்டால் அடுப்படைக் கல்லாக நினைத்து இருக்கும் அத்தனை –
திரு மாலை யல்லது வியவேன் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  –அவசியம் அநு போக்தவ்யம்–என்கிறவை என்னை நலியவோ –

(யோ அந்யதா சந்த மாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –ராவணனை ஒத்ததொரு திருட்டு அன்றோ இது –

உத்தம புருஷஸ் த்வ அந்நிய -என்பதால் பரமபுருஷனை பிறர் என்னலாமே –
ஸ்ரீ கௌஸ்துபம் போல் இனிய வஸ்து அன்றோ -)

————————————————————————-

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி
ப்ராவண்யம் உரைத்தாலும் துர்வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன –
நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

உத்தம புருஷஸ் த்வந்ய–(கீதை -15)என்கிறபடியே சர்வ விசஜாதியனான சர்வேஸ்வரனுடைய ஆத்ம த்ரவ்யத்தை என்னது என்று விரும்பேன் –

(புருஷோத்தமன் -வியாபித்து -தாங்கி -ஸ்வாமித்வம் -மூன்றாலும் –மற்றவை சொத்துக்கள் -ஆளப் படுபவை- தாங்கப்படுபவை இந்த ஸ்லோகம் அடியாகவே ஆளவந்தார்)
பிறரதான ஆத்மாவை என்னது என்று இருக்கும் தாழ்ந்த சம்சாரிகளோடு செறியேன் -உத்துங்கமான ஆத்ம வஸ்து
சர்வ உத்தமனான சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –
சர்வாதிகனான ஸ்ரீ யபதியை ஒழிய புறம்பே சிலரை ஆஸ்ரயணீய தேவதைகள் என்று புத்தி பண்ணி வாய் விட்டுப் புகழேன்
இவ்வாகாரங்கள் நமக்கு உண்டாயத்தே என்று ஆச்சர்யப் பட்டேன் -இப்படியான பின்பு பகவத் அனுக்ரஹ பாத்ரரான நம்முடைய
மேல் தன் நிக்ரஹ ரூபமான பாபம் வந்து மேலிடும் படி எங்கனே –(அனுக்ரஹம் புண்யம் -நிக்ரஹம் தானே பாபம் )திருமாலை அல்லது வியவேன்–
அவனை அல்லது தைவம் அன்று ஏத்தேன்–என்னவுமாம் –

—————————————————————————————————————

இது எனக்கு ஒருவனுக்குமே அன்று -அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் ஒக்கும் என்கிறார் –

வினையால் அடர்ப்படார் வெந் நரகில் சேரார்
தினையேனும் தீக் கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்-பேர் ஆயிரம் கொண்ட பீடுடையான் -நாமம் ஸஹஸ்ரவான் –
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால் (ஆல் -துர்லபம் )
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

(தென் புலத்தார்க்கும் என்றும் கடவுடையேன் அல்லேன் -அமுதனார்)

வினையால் அடர்ப்படார் -பாபத்தால் அடர்க்கப் படார்
வெந்நரகில் சேரார்-பாப பலமான நரகில் சேரார்
தினையேனும் தீக் கதிக் கண் செல்லார் -தர்ம புத்ரன் நன்றாக தர்சனம் பண்ணினவோ பாதியும் கூடாது இவர்களுக்கு
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே அறியப் போகாதவனை
சேயானை -அதுக்கு அடி தூரஸ்தனாகை(விஷய விலக்ஷணம் )
ஆயிரம் பேர்ச் செங்கட்-கரியானைக் கை தொழுதக்கால்   ——தான் கொடுத்த அறிவை யுடையார்களுக்கு
ஏத்துகைக்கு ஆயிரம் திரு நாமத்தையும் -கண்டு அனுபவிக்கைக்கு ஸ்ரமஹரமான வடிவையும் யுடையவனை அஞ்சலி பண்ணினால்
வினையால் அடர்ப்படார்-என்னைப் போல் விதேய கரணம் இன்றியே பாவனம் என்று ஆஸ்ரயித்ததற்கு பாபம் போம்(கைங்கர்யம் என்று ஆஸ்ரயிக்கும் கோடியில் இவர் )
வினை -இங்கு அனுபவிக்கும் பாப பலம் அனுபவியார் -வெந்நரகு போய் அனுபவிக்கும் பாப பலம்
தினை -அஸத்யாபவத்தாலே(தர்மபுத்ரன் நன்றாக தர்சனம் செய்ய வேண்டிற்றே )
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே நினைப்பதற்கு அரியானை -சேயானை -இவன் குற்றம் அன்று -வஸ்து ஸ்வ பாவம்

ஆயிரம் இத்யாதி -தானே காட்டுவார்க்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகை
கை தொழுதக்கால் -பாலைக் குடிக்க நோய் போம் -வகுத்தது செய்ய அமையும் –

(யாரும் ஒர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் -1-3-4-)

——————————————————————–

இது எனக்கு ஒருவனுக்குமே அன்று -அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் ஒக்கும் என்கிறார் –

ஸ்வ யத்னத்தாலே அளவிட்டு நினைக்கைக்கு மிகவும் அரியனாய் மநோ ரத பதத்துக்கு மிகவும் எட்டாத படி அதி தூரஸ்த-தன்னாய்
தன் அருளாலே அறிந்து அனுபவிக்க இழிந்தார்க்கு இழிந்த இடம் எங்கும் துறையும் படி குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை யுடையனாய் வாத்சல்ய ஸூ சகமாய்ச் சிவந்த திருக் கண்களையும் –
அதுக்குப் பகைத் தொடையான கறுத்த வடிவையும் யுடையனான சர்வேஸ்வரனை அஞ்சலி பிரணாமாதி அனுவர்த்தனங்களைப் பண்ணி
ஆஸ்ரயித்தால் புண்ய பாப ரூப கர்மங்களாலே நெருக்குப் படார் -அதுக்கு பலமாக வரக் கடவதாய் அதி குரூரமான
சம்சாரம் ஆகிற நரகத்திலே சென்று கிட்டார் –ஏக தேசமும் துர்மார்க்கங்களிலே போகார்-

———————————————————————————————————————————

அறிவுடையார்களாய் இருப்பார்கள் ஆகில் பஜனீயன் அவனே கிடீர் என்கிறார்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

பதவுரை

உலகம்–உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்-உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
காலை எழுந்து–(ஸத்வ குணம் வளரக் கூடிய ) விடியற் காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும்–அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர்–படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்-கற்க வேண்டிய முறை அறிந்து -ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணி –
வேட்பனவும்–ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
(எவை யென்றால்)
வேலைக் கண் ஓர் ஆழியான்–திருப் பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே–திருவடிகளேயாம்;
ஓதுவதும்–மஹான்களால் ஸ்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும்–மநநம் பண்ணப் பெறுவனவும்
(எவை யென்றால்)
பேர் ஆழி கொண்டான்–பெரிய கடல் போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர்–திருநாமங்களேயாம்.

உலகம் -உயர்ந்தோரான முமுஷுக்கள் –

காலை எழுந்து உலகம் கற்பனவும் –ஸத்வ உத்தரமான காலையில் எழுந்து இருந்து -மோக்ஷ இச்சை யுடையவர்கள் –கற்பனவும் –
கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்
வேலைக் கண்–ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்–இவற்றினுடைய ரக்ஷணத்துக்காக திருப் பாற் கடலிலே
கையும் திருவாழியுமாய்க் கிடக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளையே –
பேராழி கொண்டான் பெயர் —-சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களையே இவர்களுடைய ஸ்ரவணத்துக்கும் ஆனந்தத்துக்கும் விஷயமாவது –

காலை -சர்வ உத்தரமான காலம் -வேலைக் கண் ஓர் ஆழியான் அடியே – கரையை யுடைத்தாய் –ஒப்பில்லாத கடல் –
பேர் ஆழி கொண்டான் -இவர்களை ரஷிக்கைக்காக உருவின பத்திரமும் தானுமாய் இருக்கை –கை கழலா நேமியான்-

(காலை எழுந்து உலகம் கற்பனவும் -உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
காலை -ஆயுளுக்கு ஆரம்ப நிலை யான இளமை
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் –திருவாய் -2-10-1-

வேலைக்கண் ஓர் ஆழியான் அடியே -வேலை -கரை -கண் -இடம்
திருப்பாற் கடலிலே ஒப்பற்ற திரு வாழியை ஏந்தி நிற்பவன் இணை அடிகள்
ஓர் ஆழி -சக்ரதாரி என்று கொண்டு -பேராழி கொண்டான் -பெரிய கடல் போலே கண்டார் களைப்பை ஆற்றும் வடிவை எடுத்துக் கொண்டு இருக்கிறவன் என்று பொருள் கொள்வது -)

——————————————————————–

அறிவுடையார்களாய் இருப்பார்கள் ஆகில் பஜனீயன் அவனே கிடீர் என்கிறார்

கிளர் ஒளி இளமை (2-10-1 )-என்கிறபடியே பஜன அனுரூபமான கரண பாடவமுள்ள பால்ய அவஸ்தையில் ஆஸ்ரயண
உன்முகராய்க் கொண்டு கிளர்ந்து லோகம் அடங்க அப்யசிக்குமவையும்-ஞாதவ்யர்த்தங்களை(அர்த்த பஞ்சக )ஓர் ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு
அவற்றை அலகலகாக அறிந்து இருப்பார்களாய் -அத்தாலே வந்த மிக்க உயர்த்தியை யுடையரான பரம வைதிகர் அடங்கலும்
அறிவின் பலமாக சாஷாத் கரிக்க ஆசைப் படுவனவும் -கரையோடே கூடி இடமுடைத்தாய் -அத்விதீயமான கடலிலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளே –

அதுக்கு சாதனமாக ஸ்ரவணம் பண்ணுவதும் மனனம் பண்ணுவதும்
ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான திரு நாமங்கள்

பேர் ஆழி கொண்டான் -பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எடுத்துக் கொண்டு இருக்கிறவன் என்னவுமாம் –
அப்போது ஓர் ஆழியான் என்றது அத்விதீயமான திரு வாழியை யுடையவன் என்று கொள்வது –

(ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாஸனம் -தர்சனம் -நான்கையும் இங்கு தமிழ் படுத்தி அருளிச் செய்கிறார் -)

—————————————————————————————————————

மோக்ஷ இச்சை யுடையவர்களுக்கும் அறிவு தலை நின்றவர்களுக்கும் அவனுடைய திருவடிகளை ஏத்துவது-
அவனுடைய திரு நாமங்களையே ஏத்துவது என்று (கீழே )சொல்லிற்று -ஞானத்துக்கு அவனே விஷயம் ஆகையால் என்கிறது (இப் பாட்டில்)-

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பதவுரை

ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–அலை எறிகிற  பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–(அவைஷ்ணவர்களுடைய)பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு –ஆறானது பூர்ணமாய் சலியா நின்ற கடலையே நோக்கா நின்றது
ஆறு கடலை நிறைக்கைக்கு அன்று புகுகிறது -புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமை
ஒண் பூ -உயரும் கதிரவன் நோக்கும்–தாமரைப் பூவானது தூரஸ்தன் ஆகிலும் ஆதித்யனுக்கு அலரும் அத்தனை -அக்னி யாதிகளுக்கு அலராது
உயிரும் -தருமனையே நோக்கும் –யமனைக் கிட்டி யல்லது வேறு ஓர் இடத்திலே புக ஒண்ணாது
ஒண் தாமரையாள் கேள்வன் -ஒருவனையே நோக்கும் உணர்வு –ஞானம் ஆகில் ஸ்ரீ யப்பதியை அறியும் அத்தனை
மற்று ஒன்றை அறியாது –தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்னும் படியே

(செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி -5-6-
ஞானம் -அறிவு திரு வில்லாத தேவரை நோக்காதே –

ஸம் ஞாயதே யேந தத ஸ்த தோஷம்
ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
சந்த்ருஸ்யதே வா அப்யதி கம்யதே வா
தத் ஞானம் அஞ்ஞானம் அதன்யதுக்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-

(நிர்மலமாய் தோஷம் இல்லாததாய் -உயர்ந்த- ஏக ரூபமாய் -அறிவதுக்கும் காண்பதுக்கும் அடைவதற்கும் -ஞான தரிசன பிராப்தி -பர ப்ரஹ்மம் )

தத் கர்ம யன்ன பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே
ஆயாஸா யாபரம் கர்ம வித்யா அந்யா ஸில்ப நை புணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-41-)

————————————————————————-

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

காற்று வளத்திலே கொந்தளித்துக் கிளரக் கடவதாய் -பரப்பை யுடைத்தான கடலை ஆறானது நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது உச்ச ஸ்தல வர்த்தியான ஆதித்யனையே நோக்கா நிற்கும்
பகவத் பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் சரீர விஸ்லேஷ அனந்தரத்திலே தர்ம ராஜாவான யமனையே சென்று கிட்டா நிற்கும்
இவை இவை நியதமானால் போலே ஞானமானது அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய
பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான சர்வேஸ்வரன் ஒருவனையேயுமே சென்று பற்றா நிற்கும்
ஞானம் ஆகில் ஸ்ரீ யபதியைப் பற்றி அல்லது நில்லாது என்கை -பகவத் வியதிரிக்த விஷயங்களை பற்றி பிறக்கும் ஞானம்
எல்லாம் அஸத் கல்பம் -தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னக் கடவது இறே-

—————————————————————————————————————–

கீழ் ஞானத்துக்கு விஷயம் அவன் என்றது -உணர அரிது -என்கிறது இப் பாட்டில் –

இப்படி அறிவுக்கு பர்யவசான பூமி -அவன் அல்லது இல்லையாய் இருக்க -அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்கிறார்

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

பதவுரை

விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–பரத்வமும் ஸுலப்யமும் பொருந்தி நின்ற திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர்–அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]

உணர்வாரார் உன் பெருமை -ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்யமீஸம்-என்கிறபடியே குணங்களோடு கூடி இருக்கிற
உன்னை உணர்வார் யார் என்கிறது -(ஜூஷ்டம்-அபரிமிதமான குணங்கள் சேஷ்டிதங்கள் விபவங்கள் திவ்ய மங்கள விக்ரஹங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் )
ஊழி தோறு ஊழி-உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்–காலத்தை எல்லாம் ஒரு போகியாக்கி -உன்னுடைய
ஸ்வரூப ரூப குணங்களை உணரப் புக்கால் உணர அரிது என்கிறது
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் –ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த நீ அவதார ரூபேண பூமியிலே வந்து அவதரித்து
அத்தாலே ஸுலப்யத்தை யுடையவனே -கடல் கிட்டிற்று என்னா பரிச்சேதிக்கப் போகாது இறே –
வேங்கடத்தாய் –சம்சாரிகளுடைய சகல துரிதங்களும் போம்படி திருமலையிலே வந்து நிற்கிறவனே(அவதார ஸுலப்யமே பரத்வம் என்னலாம் படி எளியவனாய் )
நால்  வேதப்-பண்ணகத்தாய் –ஸ்வரத்துக்கு உள்ளீடாய் நின்று ப்ரதிபாதிக்கிற வேதங்களுக்கு பிரவர்த்தகன் ஆனவனே
நீ கிடந்த பால் ——நீ கிடந்த பால் உணர்வார் யார் -(வேதம் அறிந்தேன் அஹம் -வேத புருஷனான நான் -மஹாந்தம் -அறிவுக்கு அப்பால் பட்டவன் என்று அறிந்தேன் )
உன்னாலும் அறிய ஒண்ணாது உன் ஐஸ்வர்யம் – காலம் எல்லாம் கூடினாலும் ஸுலப்யம் அறிய ஒண்ணாது –
விண்ணகம் அவதாரம் இவை என்கை —

விண்ணகத்தானாய் பாற் கடலானனாய் மண்ணகத்தானாய் வேங்கடத்தானாய் நின்றான்
நால் வேதப் பண்ணாகம் –ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கிறது கண்ணுக்கு விஷயம் இறே –
மற்றையது இங்கு சொல்லிற்று அனுவாதம் காண்கையாலே–தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம்–அவனுடைய பிறப்பு –
உயர்வற உயர் நலம் உடையவன் பிறப்பு இறே –தீரா –தீ மதாம் அக்ரேஸரா –மயர்வற மதி நலம் பெற்றார்
பரிஜாநந்தி –க்ஷணம் தோறும் எத்திறம் என்பர் –

(தஸ்ய தீரா பரிஜாநந்தி -நன்கு அறிகிறார்கள் -அறிய முடியாது என்று –
பத்துடை அடியவர்களுக்கு எளியவன் பிறருக்கு அறிய வித்தகன் -எத்திறம் என்று மோகிக்கும் படி -என்பதையே பாரிஜாநந்தி என்று உபநிஷத்

(யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தி –ஏத்த ஏத்த என் செய்தோம் -ஆழ்வார்)

யோ அஸ்யாத் யஷ பரமே வ்யோமன் -ஸோ அங்க வேத யதி வா ந வேத -தனக்கும் தன் தன்மை அறிய அரியவன் அன்றோ
தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -க்ஷணம் தோறும் எத்திறம் என்னும்படி அன்றோ –
யஸ்யா மதம் தஸ்ய மதம்
உனது ஸ்வரூப குணங்களை உணர்வது ஒருபுறம் இருக்கட்டும் -உனது விபூதிக் கடலிலே ஒரு துளியாய் வருந்தினார் கூப்பீடு கேட்க கண் வளரும் இடமான திருப்பாற் கடல் ஒன்றையேனும் அளவிட்டு அறிவார் உண்டோ)

——————————————————————-

இப்படி அறிவுக்கு பர்யவசான பூமி -அவன் அல்லது இல்லையாய் இருக்க -அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்கிறார்

பரம பதத்திலே மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்குமவனாய் -பூமி உபலஷிதையான லீலா விபூதியில் நீர்மை தோற்ற வந்து
அவதரிக்கும் ஸ்வபாவனாய் -இரண்டு இடத்துக்கும் பொதுவாய்க் கொண்டு மேன்மை நீர்மைகள் இரண்டும் கரை புரளும் படி
திருமலையிலே வந்து நின்று அருளினவனாய் -ஸ்வர பிரதானமான நாலு வேதத்தாலும் யுக்த வைபவ யுக்தனாய்(சாம வேதத்துக்கு கானம் பிரதானம் -ஸ்வரம் அனைத்துக்கும் உண்டு )
ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனானவனே -இப்படி இருக்கிற உன்னுடைய குண வைஷண்யத்தாலே வந்த பெருமையை
கால தத்வம் எல்லாம் கூடினாலும் அறிய வல்லார் யார் –

அந்த குணங்களுக்கு ஆஸ்ரயமாய் இருக்கிற உன்னுடைய
திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை தான் அறிய வல்லார் யார்

நீ ஆர்த்த ரக்ஷணத்துக்காக பள்ளி கொண்டு அருளுகிற திருப் பாற் கடலை அறிய வல்லார் யார் –

—————————————————————————————————————

எல்லாம் (ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் )ஒழிய ஒரோ ஒன்றை அரிய போமோ -என்கிறது(தனக்கும் தன் தன்மை அறியாததும் உதாரணம் )

வேறு ஒருவரால் அறிய ஒண்ணாமை கிடக்க கிடீர்– ஸ்வதஸ் சர்வஞ்ஞனான உன்னாலே தான் உன்னை அறியப் போமோ –என்கிறார் —

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உரு ஆய்–நீ சிறு குழந்தை வடிவு கொண்டு-பாலன் -ரக்ஷிக்க வேண்டிய பருவம்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்-உப லக்ஷணத்தால் அனைத்தையும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தளிரின் மேல்
அன்று–பிரளய காலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(ஆப்த தமரான வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக் காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக் கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

பாலன்  றனதுருவாய் –ரக்ஷக அபேக்ஷமான வடிவை யுடையையாய்
யேழுலகுண்டு -வியாதிரிக்த சகல பதார்த்தங்களையும் ரக்ஷித்து
ஆலிலையின் மேல் -சர்வர்க்கும் ஆதாரமான சர்வ ரக்ஷகனுக்கு கண் வளரப் போகாத ஆலின் இலை மேலே
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் -அன்று வளர்ந்தத்தை ஆப்த தமரானவர்கள் மெய் என்பர்கள்-
வேத மரியாதை இல்லையாகில் ஸூன்யமாதல்–உண்டாகில் சத்யமாதலே யுள்ளது
ஆலன்று- வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —-ஏழு வயசிலே மலையைக் கீழ் மேலாக எடுத்த நீ அவற்றைச் சொல்ல வேணும் –
அன்று -திக்கு எல்லாம் அழிந்த அன்று –

வேலை இத்யாதி –
நீ கண் வளர்ந்த பாற் கடலில் உள்ளதோ –நிராலம்பமான ஆகாசத்தத்ததோ -கரைந்து போன பூமியிலதோ -சொல்ல வேணும்
பின்பு மழை எடுத்த ஆச்சர்யம் இதுக்கு சத்ருசமோ –இத்தால் அவன் தன் படியை அவன் தானே சொல்லுகையும் அரிது -என்றபடி –

பாலனுடைய ரூபத்தை யுடையையாய் -அப்ராக்ருதமான மஹத்தரமான திரு மேனியைச் சிறுக்கி சஜாதீயம் ஆக்குகை மெய் என்பர் ரிஷிகள்
எத்திறம் -என்ன -பொய் என்ன ஒண்ணாதே -மெய் -நீயே சர்வத்துக்கும் தாரகன் ஆனமையும் மெய் -இருந்த படி என்
சோலை இத்யாதி -ஏழு பிராயத்தில் பெரிய மலையை எடுத்த ஆச்சர்யமும் சொல்ல வேணும் –
இது ஆழ்வார் வந்தால் கேட்க இருந்தோமோ என்றானே எம்பெருமான் -இது அத்யந்தம் விஸ்மயம் -என்கிறார் –

(மெய் என்பர்
அப்ராக்ருதமான மகத்தான பெரிய திருமேனியை மிகச் சிறிய குழந்தையின் வடிவாக்குவது
அதற்க்கு உள்ளே எல்லா உலகங்களையும் அடக்குவது
அவ்வடிவைக் கொண்டு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்வது
அனைத்துமே உண்மை -என்று ஈடுபட்டு எத்திறம் என்பர்களே
மெய் -உனது திருமேனி அப்ராக்ருதம் என்பதும் மெய்
அத்தைப் பிராகிருத சஜாதீயம் ஆக்கினாய் என்பதும் மெய்
அது மிக மஹத்தானது என்பதும் மெய் -அத்தைச் சிறியது ஆக்கினாய் என்பதும் மெய்
அது ஸர்வ ஆதாரம் என்பதும் மெய் -அதற்கு ஒரு ஆலந்தளிரை ஆதாரம் ஆக்கினாய் என்பதும் மெய்
இது போன்ற அகடிகடநா ஸாமர்த்யங்கள் இருந்தபடி என்
சொல்லு -ஒவ்வொரு செயலும் உன்னால் சொல்ல முடியாதது அன்றோ)

———————————————————————-

வேறு ஒருவரால் அறிய ஒண்ணாமை கிடக்க கிடீர்– ஸ்வதஸ் சர்வஞ்ஞனான உன்னாலே தான் உன்னை அறியப் போமோ –என்கிறார் –(தனக்கும் தன் தன்மை அறியான் )

ஒரு குறட்டைத் (கன்னத்தை)தெறித்தால் ஒரு குறட்டிலே பால் பெருகும் படி முக்த சிசுவான விக்கிரஹத்தை யுடைய வனாய்
சப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே அந்த பிரளய சமயத்திலே
சர்வ சக்தியான நீ கண் வளர்ந்து அருளின இத்தை பரமார்த்தம் என்று கொண்டு பரம ஆப்தரான ரிஷிகள் அடங்கலும் சொல்லா நின்றார்கள்
அந்த ஆலானது சர்வமும் அழிந்த அன்று வெள்ளம் கோத்துக் கிடக்கிற சமுத்திர ஜலத்தில் உள்ளதோ
அன்றிக்கே -நிராலம்பமான ஆகாசத்தில் உள்ளதோ –இல்லையாகில் பிரளய ஜலத்தில் கரைந்து போன பூமியிலே உள்ளதோ
ஏழு திரு நக்ஷத்திரலே ஏழு நாள் ஒருபடிப் பட சோலைகளாலே சூழப் பட்ட கோவர்த்தன பர்வதத்தை எடுத்துத்
தரித்துக் கொண்டு நின்றவனே -இத்தை அருளிச் செய்ய வேணும் -உன்னாலும் உன் படி சொல்ல முடியாது என்று கருத்து –

——————————————————————————————————————

இப்படி அபரிச்சின்ன சக்தியான பின்பு அவனை எல்லோரும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

இப்படியான பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

சொல்லும் தனையும் தொழுமின் –நாக்கு சொல்லப் பாங்கான போது எல்லாம் சொல்லி ஆஸ்ரயிங்கோள்
விழுமுடம்பு செல்லும் தனையும் -உடம்பு பாங்கான போது எல்லாம் ஆஸ்ரயிங்கோள்
திருமாலை– பாங்கான போது ஆஸ்ரயிக்க -யாவதாத்மபாவி ஆஸ்ரயித்தானாகக் கொள்ளும் பித்தனைச் சொல்லுகிறது –
நல்லிதழ்த்-தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்–நல்ல செவ்விப் பூவை யுடைய மாலையால் –
செவ்வி மாலை கிடையாதாகில் கர்தவ்யமான கர்மத்தால் —

(மாலை கிடைக்கா விடில் யஜ்ஞம் -அது அவ்வளவு உசந்தது பெரியாழ்வார் -ஆண்டாள் -துளஸீ ப்ருத்யர் -மாலா காரர் -சிந்து பூ மகிழும் திருவேங்கடம் )

அது கிடையாதாகில் அதுக்கு அடியான தந்திரத்தால் –
அது அடையப் போகாதாகில் மந்த்ரத்தைக் கொண்டு செய்வது –
க்ரியா ரூபமான தந்திரம் அரிதாளில் வாக் வ்ருத்தியான மந்திரத்தால் செய்வது –

(தந்திரம் மந்த்ரத்திலும் ஸ்ரேஷிடம் -நம்பூதிரிகள் கேரளா)

மந்திரத்துக்கு தேச கால நியதியும் அதிகாரி நியதியும் வேணும் என்று இருந்திகோள் ஆகில்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–திரு நாமத்தால் ஏத்துவது -தாய் பேர் சொல்ல குளித்து வர வேண்டா இறே –
திருமாலே -நியதி உண்டு என்னில் அம்மே என்னுமோபாதி சொல்ல அமையும் –

(பட்டர் நஞ்சீயர் ஸம்வாதம் -மனு பகவான் கங்கை நீராடக் போகிறவன் குளித்துப் போக வேண்டுமோ)

———————————————————————

இப்படியான பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புருஷகார பூதையான பிராட்டியோடே நித்ய சம்யுக்தையான சர்வேஸ்வரனை –இப்போது விழும் இப்போது விழும் என்னும் படி
அஸ்திரமான சரீரமானது விழும் அளவும் அழகிய பூக்களால் யுண்டான திருமாலையாலும்
யாகாதி ஸத் கர்மங்களாலும்-மந்த்ர விதுரமான(மந்த்ரம் இல்லாத )கேவல கிரியைகளாலும் -க்ரியா விதுரமான மந்த்ரங்களாலும் ஆஸ்ரயிங்கோள் –
இதுக்கும் சக்தம் இன்றிக்கே இருக்கில் உங்கள் வாக்கு யுக்தி சாமர்த்தியத்தை உடைத்தாய் கொண்டு சொல்லும் அளவும்
குணாதிகளுக்கு வாசகமான (ஆதி -ரூபம் ஸ்வரூபம் சேஷ்டிதங்கள் )திரு நாமங்களாலே ஸ்ரீ யபதியைப் புகழ்வுதிகோள் ஆகில் அது மிகவும் நல்லது –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி—பாசுரங்கள் -51-60– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

தம்முடைய திரு உள்ளத்தை (என்னுள்ளம்-என்னுள்ளமே )சம்போதித்து -நீர் விஷய காலுஷ்யத்தைத் தவிர்-அவன் ப்ரஸன்னனாம் -என்கிறார் –

(திருநாமம் எண் -கல்யாண குணங்களை அநுஸந்தி -திரு நாமங்களை எண்ணுவது -இரண்டும்)

இனிதாக திரு நாமத்தை வாயாலே சொல்லவே ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னை தந்து அருளும் என்கிறார் –

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

பதவுரை

என் உள்ளம்-எனது நெஞ்சே!(நீ)
தெளிய–கலக்கம் தீர்ந்து தெளிவு பெற்றால்
(அந்த எம்பெருமானும்)
செவ்வே தெளிந்தொழியும்–மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
(ஆகையினால்)
களியில்–அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை–அடி பணியாதிருந்த ஹிரண்யாசுரனோடு
பொரல் உற்று–போர் செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான்–நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம்–திரு நாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு–(அவனுடைய) உபய பாதங்களையும் சுலபமாகக் காணும் பொருட்டு
எண்–சிந்திப்பாயாக.

களியில்–கர்வத்தினால்-

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்-எளிது இன்றிக்கே இருந்துள்ள இரண்டு திருவடிகளையும் காண்பதற்கு –
எளிதாக என்னவுமாம் –

என் நெஞ்சே -என்று சம்போதிக்கிறார் –

தெளிய–விஷய காலுஷ்யத்தை தவிர – செவ்வே தெளிந்து ஒழியும் –அவன் நேரே ப்ரஸன்னனாம்(தெள்ளிய சிங்கப் பெருமாள் அன்றோ )
களியில் பொருந்தாவனைப் பொரலுற்று -செருக்காலே பொருந்தேன் என்று இருந்த ஹிரண்யனை —
அரியா-யிருந்தான்    திருநாமம் எண்–சிறு பிள்ளைக்காக உதவி ஹிரண்யனை முடித்தவனுடைய திரு நாமத்தை எண்ணு –

உள்ளமே நீ தெளியில் அவன் செவ்வே நம் திறத்து தெளிந்து ஒழியும் -பிரமாணம் என் -பிரஹலாதன் தெளிய
அவன் விஷயத்துத் தெளிந்து நின்று கார்யம் பார்த்த படி கண்டிலையோ–

பொரலுற்று யிருந்தான் –
பொருது சீற்றத்துக்கு இறை பொறாமல் சோம்பி இருந்தான் -வாக்காலே எண்ண ஒட்டாதவன் -பட்டபாடு அறிவுதி இறே-

(திரு நாமம் சொல்லு
திரு நாமம் சொல்லும் குணங்களை நினை
சொல்லாதவன் பட்ட பாடு அறியாயோ -மூன்று அர்த்தங்கள்)

—————————————————————–

(இனிதாக திரு நாமத்தை வாயாலே சொல்லவே ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னை தந்து அருளும் என்கிறார் -)

எனக்கு விதேயமான நெஞ்சே -காண வேணும் என்னும் அபி சந்தியை யுடையார்க்கு அதி ஸூலபமான
திரு வடிகள் இரண்டையும் கண்டு அனுபவிக்கைக்கு நீ
அழகிதாக விஷய காலுஷ்யம் அற்று நிர்மலமாக -அவன் -மேல் எழ அன்றிக்கே -திரு உள்ளத்தோடு செவ்விதாக நான்
முன்பு பண்ணின ப்ராதிகூல்ய பரம்பரைகளிலே அதி ப்ரசன்னனாய் விடும் –

(அவன் ஆழமாக நினைக்கிறார் என்றும் -நாமும் அறிந்தே செய்த பிழைகள் என்றுமாம்
திரு உள்ளம் என்பதால் அவனதே-வாத்சல்யம் -குற்றங்களையே குணமாகக் கொள்ளும் ஸ்வ பாவம் அன்றோ –
நாம் முன்பு செய்த பிழைகளை சந்தோஷித்து -குழந்தை பண்ணிய செயல்களைத் தாய் கண்டு மகிழுமா போல் செவ்விதாக அதி ப்ரசன்னனாகும்)

ந நமேயம் -என்று தன்னைக் கிட்டோம் என்று
இருந்த ஹிரண்யனை பொருது முடிக்கையில் ஒருப்பட்டு-அவன் வரத்துக்கு உள்ளடங்காத நரசிம்ஹ வேஷத்தை
யுடையனாய்க் கொண்டு பிரஹ்லாத விரோதியைக் கை தொட்டு அழித்த ஆஹ்லாதத்தாலே ஸூ பிரதிஷ்டனாய் இருந்த
சர்வேஸ்வரனுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ரஸ்யத்தை யாலே
நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி அநுஸந்தி —

பின்னை நம் கையிலும் பிறர் கையிலும் விட்டுக் கொடான்-என்று கருத்து –

எளிதில் -எளிதில்லாத -ஸூ லபம் இல்லாத இரண்டு திருவடிகள் என்னுதல் –

என்னுள்ளம் -உள்ளமே என்று சம்புத்தி —

—————————————————————————————————————-

கீழ் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினவனுடைய திரு நாமத்தை எண்ணு
அவன் ப்ரசன்னனாம் என்றது -மற்றும் துர்மானிகளான தேவாதிகளும் அவனை
ஆஸ்ரயிக்கத் தக்க கரணங்களும் அதிகாரம் பெற்றது -என்கிறார் –

நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள்
அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது
நமக்குப் பின்னை சொல்ல வேணுமோ -என்கிறார் –

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

பதவுரை

எண்மர்–அஷ்ட வஸுக்களும்
பதினொருவர்–ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர்–த்வாதச ஆதித்யர்களும்
ஓர் இருவர்–இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்-முப்பத்து முக் கோடி தேவர்களுக்கு பிரதி நிதிகள் )
வைகலும்–நாள் தோறும்
வண்ணம் மலர் ஏந்தி–நாநா வர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு
நண்ணி–(எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால்–ஒப்பற்ற புருஷ ஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது–இடைவிடாமல்
எப்போதும்–எல்லா வேளைகளிலும்
பரவி–ஸ்துதி செய்து
திருமாலை சென்று–திருமகள் கொழுநனைக் கிட்டி
கை தொழுவர்–வணங்குவர்கள்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்–அஷ்ட வஸூக்கள்–ஏகாதச ருத்ரர்கள் –துவாதச ஆதித்யர்கள் – அஸ்வினிகள் —
வண்ண மலரேந்தி -நாநா வர்ணமான புஷ்பங்களைக் கொண்டு
வைகலும் நண்ணி-ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்–புருஷ ஸூ க்தத்தால்–விச்சேதம் இன்றிக்கே
திரு மாலைக் கை தொழுவர் சென்று–ஸ்ரீ யபதியைச் சென்று ஆஸ்ரயிப்பார்கள் –
தத் உபரியபி பாதராயணஸ் சம்பவாத் -(ப்ரஹ்ம ஸூத்ரம் )-தேவர்களுக்கும் பவிஷ்யத்தில் பெற இருந்துள்ள அதிகார அர்த்தமாக
ஆதித்ய அந்தர்யாமியாய் இருந்துள்ள பரமாத்ம உபாசனம் விதியா நின்றது இறே –

(சம்பவாத்-அர்த்தித்வ சாமர்த்தியம் நம்மைப் போல் அவர்களுக்கும் உண்டே -நித்யருக்கு இல்லையே -அர்த்திக்கை வேண்டாமே அவர்களுக்கு -தேவதை ஆவதற்கு முன்பு -மோக்ஷம் அடைய பவிஷ்ய )
வியாபார யோக்யரான பிரயோஜனாந்தர பரர் ஒரு மாலையால் பரவி ஓவுகை அன்றிக்கே
எல்லாக் காலமும் -எப்போதும் என்றுமாம் –

திருமால் –வேண்டுவது எல்லாம் பெறுகைக்கு அடி —

(முப்பத்து மூன்று தேவர்களை சொன்னது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் உப லக்ஷணம்
ருத்ரேபி வஸூபி ஆதித்யை அஸ்விநோபா -ரிக்வேதம் 10 மண்டலம் 125 ஸூக்தம்
வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம்
ஹ்ரீஷ் சதே லஷ்மீஸ் ச பத்ன்யவ் -புருஷ ஸூக்த மந்த்ரம் சொல்லி
ஈஸ்வரோஹம் என்ற துரபிமானத்தை விட்டு ஸ்ரீயப்பதியை சரண் புகுவார்கள்
தத் உபர்யபி பாதாரயண சம்பவாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-25-
மோக்ஷத்தில் செய்ய யோக்கியதையும் – விருப்பமும்- அர்த்தித்வமும் -மோக்ஷ சாதன அனுஷ்டான சாமர்த்தியமும் இவர்களுக்கும் உண்டே -)

————————————————————–

(நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள்
அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது
நமக்குத் பின்னை சொல்ல வேணுமோ -என்கிறார் -)

அஷ்ட வஸூக்களும் ஏகாதச ருத்ரர்களும் துவாதச ஆதித்யர்களும் அத்விதீயரான அஸ்வினிகள் இருவரும் –
நாநா வர்ணமான புஷ்பங்களை தரித்துக் கொண்டு -சர்வ காலங்களிலும் வந்து கிட்டி அத்விதீயமான
ஸ்ரீ புருஷ ஸூக்தாதி சந்தர்ப்பங்களைக் கொண்டு அடைவு கெடப் புகழ்ந்து எல்லாக் காலத்திலும் உச்சி வீடு விடாதே
அபிமதங்களைக் கடிப்பிக்கும் கடகையான பெரிய பிராட்டியாரோடே கூடி இருக்கிற
சர்வேஸ்வரனை துர்மானத்தை துறந்து சென்று கிட்டி ஆஸ்ரயிப்பார்கள் –

—————————————————————————————————————————–

(நித்யம் மந்த்ர புஷ்ப்பம் சமர்ப்பிக்கும் பொழுது அனுசந்திக்கிறோம்-யுகம் தோறும் –
சேஷி உகப்புக்கு கைங்கர்யம்
மிதுன சேஷி -உபாயத்துக்கும் கைங்கர்யத்துக்கும்
பவாம்ஸூ ஸஹ வைதேஹ்யா –அஹம் சர்வம் கரிஷ்யாமி-அநந்தம் பிரதமம் ரூபம் –கலவ் ராமானுஜர் -)

கீழே எல்லா நேர்த்தியும் நேர்ந்து -தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று-
இதில் தங்களை எல்லாம் அழிய அங்குத்தைக்கு உறுப்பாமவர்களைச் சொல்லுகிறது –

(ஆதி சேஷன் அனைவருக்கும் உப லக்ஷணம் -தாச ஸஹ ஆசனம் வேதாதாத்மா விஹஹேஸ்வரர் உண்டே )

ஸ்வ பிரயோஜனத்துக்கு மடி ஏற்கும் துர்மானிகள் ஆஸ்ரயிக்கும் படியை அனுசந்தித்த உள் வெதுப்பு அடங்கும் படி-
அநந்ய பிரயோஜனராய் -அபிமான கந்த ரஹிதராய் -தத் தத் அவஸ்த்தை உசிதமான வடிவு எடுத்துக் கொண்டு –
அடிமை செய்யக் கடவ நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான திருவனந்த ஆழ்வான் அங்குத்தைக்கு அடிமை செய்யும் படியை அனுசந்திக்கிறார் –

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

பதவுரை

திரு மாற்கு–பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு–திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம்–(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால்–எழுந்தருளியிருந்தால்
(அப்போது)-
சிங்காசனம் ஆம்–ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால்–நின்று கொண்டிருந்தால்
(அப்போது)
மரவடி ஆம்–பாதுகையாவன்;
நீள் கடலுள்–பாம்பிணை யுடலிலே
(சயனிக்கும் போது)
என்றும்–எப்போதும்
புணை ஆம்–திருப் பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம்–மங்கள தீபமாவன்;
பூம்பட்டு ஆம்–அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம்–தழுவிக் கொள்வதற்கு உரிய அணையுமாவன்.

சென்றால் குடையாம்–கைங்கர்யம் ஸ்வ புத்த்ய அதீனம் அன்று என்கிறது –நான் குடையாய் நின்றேன்
நீ இங்கே வா -என்கை யன்றிக்கே-அவன் உலாவப் புக்கால் குடை அபேக்ஷிதம் ஆன போது குடையாகை –(அருளப்பாடு இட்டு கைங்கர்யம் இதனாலேயே )
யிருந்தால் சிங்காசனமாம்–இருக்கை திரு உள்ளமான போது திவ்ய சிம்ஹாசனமாம்
நின்றால் மரவடியாம் –நிற்கை திரு உள்ளமான போது மரவடியாம்
நீள் கடலுள் என்றும் புணையாம்-கண் வளர அபேக்ஷிதமான போது -கடலிலே எல்லா காலத்திலும் படுக்கையும் –
மணி விளக்காம் -ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்ற போது மங்கள தீபமாய் இருக்கும் -(அவனுக்கு கண்ணே வேண்டாமே -ஞான ரூபமான சங்கல்பத்தாலே காண்பார் -ஆகவே இப்படி வியாக்யானம் )
பூம் பட்டாம் -திருப் பரிவட்டம் அபேக்ஷிதமான போது அழகிய பட்டாம்(பவ்வ நீர் ஆடை கடல் ஆடை எப்போதும் உண்டே )
புல்கு-மணையாம் –தழுவு அணை அபேக்ஷிதமான போது தழு வணையாம் –
திருமாற் கரவு  —–ஸ்ரீ யபதிக்கு-கட்டிப் பொன் போலே எல்லா வடிவையும் ஆக்கிக் கொள்ளலாம் படி இருக்கிற படி -(ஆம் -ஆவார் என்றபடி-ஆபாஸ -ஸுபரி -50 வடிவு கொண்டால் போல் கைங்கர்யத்துக்கு )

சென்றால் -குடையானேன் செல் -என்று சேஷியை நியமியாதே- இருந்தால் -அபேக்ஷை உள்ள போது –
நின்றால் -நின்ற பின்பு – புணை–தெப்பம் – மணி விளக்கு -மங்கள தீபம் -பூம் பட்டு -பும்ஸத்வா வஹமான பரிவட்டம் –
புல்கும் அணை –பிராட்டிமார் ஊடினால் விசனம் மறப்பிக்க வற்றாகை–ஊடலுக்கு ஹேது ஆகவுமாம்( அணைய புல்க அதுவே ஊடலுக்கு ஹேதுவாகலாமே )–
திருமாற்கு –இளைய பெருமாளுக்கு அந்தரங்க சேவை (பாவம்ஸூ ஸஹ வைதேஹ்யாம் )-

அரவு –தான் ஒரு சேதனன் என்று கூச வேண்டாத படி
தன்னை அமைத்த படி -ராஜ நிவேசனங்களிலே கூனர் குறளரைப் போலே —

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 39 –

ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப் பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஶ்லோகம் 40 –

கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

——————————————————————-

(ஸ்வ பிரயோஜனத்துக்கு மடி ஏற்கும் துர்மானிகள் ஆஸ்ரயிக்கும் படியை அனுசந்தித்த உள் வெதுப்பு அடங்கும் படி-
அநந்ய பிரயோஜனராய் -அபிமான கந்த ரஹிதராய் -தத் தத் அவஸ்த்தை உசிதமான வடிவு எடுத்துக் கொண்டு –
அடிமை செய்யக் கடவ நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான திருவனந்த ஆழ்வான் அங்குத்தைக்கு அடிமை செய்யும் படியை அனுசந்திக்கிறார் – )

பெரிய பிராட்டியாரோடே நித்ய சம்யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு -அவனும் அவளும் கூடக் கண்
அற்றுத் துகைத்துப் பரிமாறுகைக்கு யோக்யமான வடிவையுடைய திருவனந்த ஆழ்வான் –
உகப்புக்கு போக்குவீடாக அவன் உலாவி அருளப் புக்கால் மழை வெய்யில் படாத படி குடையாம்-
தன் இச்சையால் எழுந்து அருளி இருந்தால் திவ்ய சிம்ஹாசனமாம் -ஸ்வ இச்சையால் எழுந்து அருளி நின்றால் திருவடி நிலைகளாம்-
பரப்பை யுடைத்தான கடலிலே கண் வளர்ந்து அருளும் போதைக்கு -சர்வ காலத்திலும் திருப் பள்ளி மெத்தையாம்-
ஏதேனும் ஒன்றை விளக்கு இட்டுக் காண அபேக்ஷிதமான போது மங்கள தீபமாம் –
சாத்தி அருளத் திருப் பரியட்டம் அபேக்ஷிதமான சமயத்திலே பும்ஸத்வா வஹமான அழகிய திரு திருப் பரியட்டமாம் –
சாய்ந்து அருளின போதைக்குப் பிராட்டிமார் -சீறு பாறு -என்னும் படி தழுவணை யாம் —

—————————————————————————————————————-

(பத்து சேஷ்டிதங்கள் -முதலில் உள்ள பெயர் சொற்களுக்கு -பின்னால் வரும் வினைச் சொற்கள் சேர்த்து

நாக பர்யங்கம் கீழே
ஆகதோ மதுராம் புரிம்
எழுந்து போனால் செய்யும் சேஷ்டிதங்கள் இதில்
1-அரவம் -விட்டு
2-அடல் வேழம் -இறுத்து
3-ஆன் -மேய்த்து
4-குருந்தம்  -ஒசித்து
5-புள் வாய்-கீண்டு
6-குரவை கோத்து
7-குட -ஆடி
8-முலை -உண்டு
9-மற்  -அட்டு
10-குன்றம் -எடுத்த-ஸ்ரீ மத் பாகவத தசம கந்த விஷயங்களை எல்லாம் சுருக்கி நமக்காகவே அருளிச் செய்கிறார் )

ஆஸ்ரிதற்கு சில விரோதம் வந்து போக்க வேண்டில் -படுக்கையும் பொருந்தாமல் வந்து நிற்கும் என்கிறது -இப்பாட்டு நிரல் நிரை –

இப்படி தன் நினைவுக்கு ஈடாக அடிமை செய்யும் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை விட்டு
இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் –

அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம்  புள் வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

பதவுரை

செம் கண் அவன்–செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி–மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம்–காளிய நாகத்தை
விட்டு–விட்டடித்தும்
அடல் வேழம்–பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து–(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன்–பசுக்களை
மேய்த்து–(வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம்–அஸுரா வேகமுடைய குருந்த மரத்தை
ஒசித்து–ஒடித்துப் பொகட்டும்
புள் வாய்–பகாசுரனுடைய வாயை
கீண்டு–கிழித்தும்
குரவை–ராஸ க்ரீடையை
கோத்து–(இடைப் பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம்–குடங்களைக் கொண்டு
ஆடி–கூத்தாடியும்
முலை–பூதனையின் முலையை
உண்டு–(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல்–(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு–கொன்றும்
குன்றம்–கோவர்த்தன மலையை
எடுத்த–(குடையாக) எடுத்துப் பிடித்த இச் செயல்கள்
(என்ன ஆச்சரியம்!..)

காளியனை விட்டு -குவலயா பீடத்தின் கொம்பை முறித்து -ஆனை மேய்த்து -குருந்தம் ஓசித்து–புள் வாய் கீண்டு –
பகாஸூரனைக் கொன்று -குரவை கோத்து–குடமாடி –பேய் முலை யுண்டு –மல்லரை அட்டு –குன்று எடுத்த சர்வேஸ்வரன் –

எடுத்த இச் செயல்கள் எம்பெருமான் சேஷ விஷயத்தில் குறைந்து பரிமாறும் படி அவன் ஸ்வரூபம் —

( ஆதி சேஷன் நித்யர் இடம் பரிமாறும் அவன் சேஷ-நம் விஷயத்தில் -தன்னைக் குறைத்து -கைங்கர்யம் கொள்கிறான் என்றபடி )

செங்கண் அவன் ——-விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு-அட்டு எடுத்தவை-

அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம்  புள்வாய்- குரவை குட முலை மற்  குன்றம்-கரவின்றி-என்று அந்வயம் –

(இங்கு உள்ளார் திரு அனந்தாழ்வானைப் போல் அடிமை செய்வதற்காகவே அவன் கண்ணனாய் திரு அவதரித்து
தாழ நின்று பரிமாறினால் என்கிறார்)

——————————————————————————–

(இப்படி தன் நினைவுக்கு ஈடாக அடிமை செய்யும் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை விட்டு
இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் -)

(தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் அவனை )புண்டரீகாக்ஷனான அந்த சர்வேஸ்வரன் மறைக்கை இன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாம் படி

காளியன் ஆகிற சர்ப்பத்தை விட்டடித்து
யுத்துன்முகமான குவலயா பீடத்தை முறித்து விழ விட்டு -பசுக்களை குறைவற மேய்த்து – குருந்தத்தை இணுங்கிப் பொகட்டு
பகாஸூரனுடைய வாயைக் கிழித்து –இடைப் பெண்களோடு திருக் குரவை கோத்து –ஐஸ்வர்ய செருக்குக்குப் போக்கு விட்டுக் குடமெடுத்தாடி
நலிய வந்த பூதனை முலையை பிராண ஸஹிதமாக உண்டு –கம்சனை ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை முடித்து –
வர்ஷாபத்தை பரிஹரிக்கைக்காக கோவர்த்தன பர்வதத்தை எடுத்தது

முதலான இச் செயல்களானவை-இருந்த படி என் என்று வித்தராய் அனுபவிக்கிறார் –

இது நிரல் நிரை என்று தமிழர் சொல்லும் லக்ஷணம் –

——————————————————————————————————————

இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வரூபனான பின்பு அவனுடைய தமரை யம படன் ஆராய்வது எங்கனே என்கிறார் –

(அஜாமிள உபாக்யானம் உண்டே -பரிகரம் மது ஸூதன ப்ரபந்நாம் -அடியார்கள் எனக்கு பிரபுக்கள் -ஸ்ரீ விஷ்ணு புராணம்

ஆட் பட வேண்டாம் -அவர்கள் பெயரைத் தரித்தாலே போதும் )

அவன் இப்படி ஆஸ்ரிதரை கண்ணிலே வெண்ணெய் இட்டு நோக்கி தத் விரோதிகளையும் போக்கும்
ஸ்வபாவனாய் இருக்க ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்க்க வல்லார் -என்கிறார் –

அவன் தமர் எவ் வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட் பட்டார் பேர் ——-55-

பதவுரை

அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு–இடைத் தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர்–அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால்–யம படர்களாலே
“அவன் தமர் எவ் வினையர் ஆகிலும்–“ அந்த சர்வேஸ்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலை யுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”–எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று–என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால்–(தாங்கள்) விலகிப் போவது தவிர,
ஆராயப் பட்டு அறியார்–ஆராயப் பட்டு இருக்க அறிய மாட்டார்கள்

அவன் தமர் எவ் வினையராகிலும் -அவனுக்கு அனுகூலமான வர்கள் எது தொழிலார் ஆகில் என் -விஹிதத்தை செய்யில் என்
-நிஷித்தத்தை செய்யில் என்
எங்கோன்-அவன் தமரே என்று ஒழிவது அல்லால்–ப்ரபவதி சம்ய மனே மமாபி விஷ்ணு -என்னும் படியே —
நமன் தமரால்-ஆராயப் பட்டு அறியார் கண்டீர்–நமன் தமரால் ஆராயப் படாது ஒழிகிறார்

(1-ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் -கர்ண மூலே காதிலே சொல்லி -ராஜாபத்னி மேல் ஆசை சொல்லித் தடுக்க அந்தரங்கமாகச் சொல்வது போல்
2- என்னை ஆட்சி செய்து நியமிக்கும் விஷ்ணு -தெற்கே யமதர்மராஜன் என்று -ஹரிக்கு வசப்பட்டவன் நான் -என்னை அடக்கி ஆள சமர்த்தன் விஷ்ணுவே

நமன் தமர் ஆராயாமல் இருக்க நாம் பார்க்கலாமா )

அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-இவர்கள் தாங்களோ என்னில் -அன்று -(அதுக்கும் மேலே உள்ள நிலை )

ஒரு பாகவதனுடைய பேரை ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

பேர் ஆராயில் குவலயா பீடம் தொடக்கமானவை பட்டது படும் -மது ஸூதன ப்ரபந்நான்-
எங்கோன்-அவன் தமரே–என் நாயகனாவான் அடியார் -எவ்வினையராகில் என் -என்று ஒழிவது அல்லால்-
அவர் புண்யம் பண்ணில் என் -பாபம் பண்ணில் என் -அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடுமது ஒழிய
த்யஜ பட தூர தரேண தாந் அபா பான் -(ஸ்ரீ விஷ்ணு ஸ்லோகம் இதுவும் )- அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் —
படுக்கை பாராட்டில் இறே ஆராய்வது -நன்று செய்தார் என்பர் போலும் -என்று பிராட்டிக்கும் அகப்படாத நிலம்
அல்லாத இடத்தே யமனோ ஆராயப் புகுகிறான் -அவனுடைய ஒரு பேரான சம்சாரி (யமனும் இவன் ஆள் தானே )பேரும் தீட்டி வாட்டான் –

(ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவாநாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-

அஹம் அமர வரார்ச்சிதேந தாத்ரா சம இதி லோக ஹிதாஹிதே நியுக்த
ஹரி குரு வசகோ அஸ்மி ந ஸ்வ தந்த்ர ப்ரபவதி ஸம்ய மநே மாமாபி விஷ்ணு –3-7-15-

ஹிதம் அளிக்கவும் அஹிதம் போக்கவும் நியமிக்கப்பட்டுள்ளேன் -நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்

கமல நயன வாஸூ தேவ விஷ்ணு தரணிதர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரணம் இதீர யந்தி யே வை த்யஜ பட தூதரேண தான பாபாத் –3-7-33-

(ஒரு பாகவனுடைய பேரை அபாகவதன் தரித்தாலும் அவனுடைய பெயரையும் யமன் சபையில் வாசிக்க மாட்டான் -என்கிறார்)

—————————————————————

(அவன் இப்படி ஆஸ்ரிதரை கண்ணிலே வெண்ணெய் இட்டு நோக்கி தத் விரோதிகளையும் போக்கும்
ஸ்வபாவனாய் இருக்க –ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்க்க வல்லார் -என்கிறார் -)

அந்த சர்வேஸ்வரனுக்கு அனுகூலராய்ப் போரும் ஆஸ்ரிதர் ஆனவர்கள் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண ரூபமான
எந்த தொழிலை யுடையார் ஆனார்கள் ஆகிலும் -எங்களுக்கு ஸ்வாமியான அந்த சர்வேஸ்வரனை
ஆஸ்ரயித்த மஹா புருஷர்கள் இறே என்று அவர்களைக் கொண்டாடி தங்களைக் கொண்டு கடக்கப் போம் அத்தனை ஒழிய
திரு அரவு அணையில் வர்த்திக்கக் கடவனாய் -இடைத் தனத்தில் தனக்கு ஓத்தார் இல்லை என்னும் படி
அதில் பிரதானனான கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

———————————

பேராயர்க்கு ஆட் படுகையாவது-அவன் விஷயீ கரிக்கப் புக்கால் தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது
இவன் அவனைப் (சம்சாரி சேதனன் பரம சேதனனை )பரிச்சேதித்து அறிகை யாவது என் -என்கிறது –

(அயன் -நா ஜாயதே -கர்ப்பத்தில் பிறவாதவன் என்றும்
அஜ -அகாரத்தில் இருந்து பிறந்தவன் என்றும்)

(பரிஹாஸம் -எதுக்காகவாது திரு நாமம் அடைவு கெடச் சொன்னாலும் தோஷங்களைப் போக்கும்)

அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லி போம் அத்தனை அல்லது சர்வேஸ்வரன்
பிரபாவம் யார்க்கும் பரிச்சேதிக்க அரிது -என்கிறார் –

பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

பதவுரை

[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]
பேரே–எம் பெம்மானது திரு நாமமாகவே
வர–வரும் படியாக
பிதற்றல் அல்லால்–பிதற்றுவதைத் தவிர
எம் பெம்மானை–[அந்த] எம்பெருமானை
ஆரே–ஆர் தான்
அறிவார்–(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க–அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன்–பிரமனானவன் .
கடி–பரிமளம் மிகுந்த
கமலத்துள்–(அவ்வெம் பெருமானது, நாபி கமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும்–(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக் கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை–அந்த ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
காண்கிலான்–ஸேவிக்கப் பெற்றானில்லை.

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை-பேராலே அவன் வரும் படி -திரு நாமத்தை சொல்லலாம் -என்னவுமாம்
அன்றிக்கே ஏதெனும் சொல்லப் புக்காலும் திரு நாமம் வாயிலே வரும் படி பிதற்றல் அல்லால் -இதுக்கு ஈடாக சொல்லுகை -என்றுமாம் –
ஆரே யறிவார் அது நிற்க –எம் பெம்மானை-என்னுடைய ஸ்வாமியை யாரே அறிவார் -அவ்விடையாட்டம் நிற்க —
நேரே-கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலம் தன்னை யயன் —–
அறிவார் கிடக்கிடீர் -அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ -சர்வேஸ்வரனுடைய பரிமளத்தை யுடைத்தான
திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநேந பிறந்து அவன் தன்னாலே ஓதுவிக்கப் பட்டு அங்கே இருக்கிற
ப்ரஹ்மா சர்வேஸ்வரனைக் காண்கிறிலன்-அறிகிறிலன்-(கண்ணன் -கண் இடம் முடையவன் சர்வ வியாபி -சர்வேஸ்வரன் )

நம்மால் அறிய ஒண்ணுமோ என்னில் -பேரே வரப் பிதற்றல் -கன்று நின்ற இடத்தே தாய் வருமா போலே வாசிதமாக என்றுமாம் –
எம் பெம்மானை -தமக்கு நேரே காட்டின படி -உள்ளிருந்தும் காண்கிலான்-கடல் கரையிலே குடில் கட்டி கொண்டு
இருக்கும் காட்டில் கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ -அபரிச்சேதயம் என்று அறியில் அறியலாம் –பெரிய கிழாயார் –ப்ரஹ்ம விதாம் வர –(பிரம்மா வித்துக்களில் சிறந்த நான்முகன் பெருமாளைக் கொண்டாடிய இராமாயண ஸ்லோகம் )

(பேரே வர
சாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநம் ஏவ வா
வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷ அநக ஹரம் விது —
பிதற்றல் அல்லால்
அத்யந்த பக்தி யுக் தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை

அஜன் -அகார வாசயனிடம் யுண்டானவன் -ஆத் ஜாயதே இதி அஜ
ந ஜாயதே இத்யஜ -உலோகோரைப் போல் ஸ்த்ரீ புருஷ யோகத்தால் பிறவாதவன்
ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3- ப்ரஹ்ம ஞானிகளில் தலை சிறந்தவன்

கண் -இடம் கன்னம் -இடமுடையவன் -ஸர்வ வ்யாபீ -ஸர்வ நிர்வாஹகன்)

—————————————————————-

(அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லி போம் அத்தனை அல்லது சர்வேஸ்வரன்
பிரபாவம் யார்க்கும் பரிச்சேதிக்க அரிது -என்கிறார் -)

ஏதேனும் ஒன்றைச் சொல்லினும் திரு நாமம் வாயிலே வரும் படி அக்ரமமாகச் சொல்லிக் கூப்பிடும் அத்தனை அல்லது
தன் படிகளை எனக்குத் தானே காட்டித் தந்த என் நாயகனானவனை யார் தான் அறிய வல்லார் –

அவ்விடை யாட்டம் கிடக் கிடீர் –பரிமள பிரசுரமான திரு நாபீ கமலத்தில் அவ்யவதானே பிறந்து
அங்கே நிரந்தர வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் அவன் பக்கலிலே ஓதி இவ்வருகு உள்ளார்க்கும் அறிவு கொடுக்கும் படி
அறிவில் தலை நின்ற சதுர்முகனானவன் -சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரன் திருவடித் தாமரைகளை இவ்வளவு என்று
தர்சிக்கைக்கு சக்தன் அல்லன் –

பேரே வரப் பிதற்றுகை யாவது – அவன் தானே வரும் படி
திரு நாமங்களை அக்ரமாகச் சொல்லும் அத்தனை போக்கி என்றுமாம் –

———————————————————————————————————————-

(அஷ்டாக்ஷரம் விளக்க வந்த முதல் திருவந்தாதி சொல்லி அடைந்த பலன்
யத்ர –வியாதி பஞ்சம் திருட்டு இருக்காதே
முதல் ஆழ்வார் -இவர் தொடங்கி வைக்க
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் கடைசி ஆழ்வார் நிகமித்தார் )

நீர் பகவத் விஷயத்தில் செய்வது என் என்னில் -சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் –
உஜ்ஜீவிப்பார் அவனைப் பற்றி என்னும் இடமும் அறிந்தேன் -என்கிறார் –

ப்ரஹ்மாவுக்கு அறிய ஒண்ணாத விஷயத்தை நீர் அறிந்தபடி எங்கனே -என்ன –திரு நாமம் ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் –

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது ——57-

பதவுரை

அயல் நின்ற–(என்) அருகிலேயே இருந்து கொண்டு (என்னை) இடை விடாமல் ஹிம்ஸித்துக் கொண்டே யிருக்கிற
வல் வினையை–மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன்–பயப்பட்டேன்;
அஞ்சி–(இப்படி) பயப்பட்டு
உய–(இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின்–உன்னுடைய
திரு அடியே–திருவடிகளில் தானே
சேர்வான்–வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற–இன்பம் பொருந்திய(சாஸ்த்ர ரூபமான திரு அஷ்டாக்ஷரம் )
நல் மாலை கொண்டு–சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது–(உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை–திருமந்திரத்தின் பொருளை
கற்றேன்–அப்யஸித்தேன்.

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன்–நான் இட்ட அடியிலே இட்டு வாரா நின்ற மஹா பாபங்களை -அஞ்சினேன் -(பெருமாள் -இளையபெருமாள் -குகன் -குகன் தமர் -ஒரு நாள் முகத்தில் விழித்தார் படும் பாடு-இதுக்கு எதிர்மறையான சம்சார வர்த்தகம் )
அஞ்சி-உய -அவற்றை அஞ்சி உஜ்ஜீவிக்கைக்காக –
நின் திருவடியே சேர்வான் நய நின்ற-நன்மாலை கொண்டு –நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு
நமோ நாரணா வென்னும்-சொன் மாலை கற்றேன் தொழுது —-சொல் தொடை கற்றேன் -(திரு அஷ்டாக்ஷர அர்த்தம் சொல்ல வந்த என்றும் அன்பும் மகிழ்ச்சியும் சேர்த்துத் தொடுத்த முதல் திருவந்தாதி என்றும்)

தொழுது -வணங்கி –சொல் மாலை கற்றேன் -ஆற்றாமையால் நான் ஆகைக்குப் பேசினேன் -(நான் நானாகைக்காக -ஸ்வரூப சித்திக்காக )
அயல் நின்ற -(தள்ளி நின்றால் வியசனம் -)விஸ்லேஷத்தால் வரும் வியசனத்துக்கு அஞ்சி -திருநாமம் சொல்லும் தனையும் கடக்க -சாபலத்தாலே நின்ற –

(மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –பெரிய திருவந்தாதி –59-

நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்
ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்

நமோ நாரணா எனும் சொல் மாலைக் கற்றேன்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை சங்கோச விஸ்தாரம் அறத் தெரிவிக்கும் திருமந்த்ரமான சொல் மாலையைக் கற்றேன் –

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் -திருமந்திரம் சொல்லாமல் பகவானை விட்டு கடக்க நின்ற மஹா நினைத்து அஞ்சினேன் என்றுமாம் )

——————————————————————-

(ப்ரஹ்மாவுக்கு அறிய ஒண்ணாத விஷயத்தை நீர் அறிந்தபடி எங்கனே -என்ன –திரு நாமம் ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் -)

அருகு விட்டுப் பேராதே இடைவிடாமல் நலிந்த படியே நிற்கிற அதி பிரபலமான பாபத்தைக் குறித்து முன்பு போலே
இன்னமும் வந்து மேலிடில் செய்வது என் என்று பயப்பட்டேன் -இப்படிப் பயப்பட்டு -இந்த பாப சம்பந்தம் அற்று
உஜ்ஜீவிக்கைக்கு நிர்பய ஸ்தானமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுக்கைக்காக -நயப்புடைத்தாய் -அதி விலக்ஷணமான
சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய்
திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடையை அப்யசித்தேன் –

அன்றிக்கே -திரு மந்த்ரார்த்தை நயிப்பிக்கையாலே
தத் பரமாய்க் கொண்டு நின்ற விலக்ஷண சந்தர்ப்ப ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு என்னவுமாம் —

அயல் நின்ற என்றது ஞானம் பிறந்த பின் பாபங்கள் தம்மை விட்டுக் கடக்க நின்ற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

அயல் நின்ற வல் வினை யென்று திரு நாமம் சொல்லாத போது தமக்கு உள்ள வியசனம் ஆகவுமாம் —

(மந்த்ரத்தை -அவனை மந்திரத்தால் மறவாது வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே –
ஆத்ம குணம் -ஆச்சார்யன் -மந்த்ரம் -நாரணம் -வைகுந்தம் மற்ற அதுவும் கை யதுவே)

———————————————————————————————————-

ஆன பின்பு நெஞ்சே –இவ் விஷயத்தை விட்டு நமக்கு ஒரு க்ஷணம் ஆறி இருக்க விரகு இல்லை -அவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மலர் கொண்டு–புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம்–தூபத்தை
கை ஏந்தி–கையிலே ஏந்திக் கொண்டும்.இவை மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம்
தொழுது–(எம்பெருமானை ) வணங்கி
எழுதும்–உஜ்ஜீவிப்போம்;
எழு–நீ புறப்படு;
வாழி–(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:சொன்னபடி செய்ததால் அதுக்கு மங்களா ஸாஸனம்
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்]
மந்திரங்கள்–பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும்–முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் –ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
ஆன பின்பு]
அந்தரம் ஒன்று இல்லை–(நாம் ஆறி யிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை–(அப் பெருமானை) விரைவில் சென்று கிட்டு.

பழுதின்றி–இடைவீடின்றி – அந்தரம் ஒன்றில்லை யடை-கால தாமதம் செய்ய ஹேது எதுவும் இல்லை -அவனை –அணுகு-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி–கையாலே தொழுது –புஷ்பாதி (தூபம் தீபங்கள் )உபகரணங்களைக் கொண்டு தொழுது –
எழுதும் எழு வாழி நெஞ்சே —போவோம் -போகு -நெஞ்சே -உனக்கு நன்மை உண்டாக –
பழுதின்றி–எழுவோம் -மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்–விச்சேதம் இன்றிக்கே எல்லா திரு மந்த்ரங்கள்
கற்கிறதும் கை தொழுகை -ஆன பின்பு -(ஆச்சார்யர் முகேன -கைங்கர்யம் செய்து திரு உள்ளம் உகப்பித்துக் கற்று )

(ச கண்ட-நமஸ் பிரிந்தால் எனக்கு உரியன் அல்லேன் அகண்ட நமஸ் -கை தொழுது -நமோ நம -அகண்ட சகண்ட சேர்த்து)

அந்தரம் ஒன்றில்லை யடை—–ஒரு க்ஷணம் மாத்திரம் போகாதே அவன் திருவடிகளில் அடை –

எழுவோம் –உஜ்ஜீவிப்போம் -எழு –ஒருப்படு- வாழி -ஒருப்பட்ட படிக்கு மங்களா சாசனம் -இது உனக்கு நித்தியமாக உண்டாக –

பழுதின்றி -குருகுல வாசம் பண்ணிப் பழுத்து விழக் காண்கை-முதலிலே சொல் என்னில் உத் பத்தி தோஷமாம் இறே-
கற்பனவும் – கிடந்தானை கண்டு ஏறாதே சந்தையிட்டுக் கற்கை-

(தூபம் கை -ஏந்தி தீபாதிகளுக்கும் உப லக்ஷணம்
தென் ஆனாய் வட வானாய் -ஆச்சார்யன் மூலம் சரண் அடையா விடில் கைக்கொள்ள மாட்டாத யானை
ஆச்சார்ய சிஸூருஷை செய்து ரஹஸ்ய த்ரய ஞானம் பெற வேண்டுமே)

—————————————————————————–

ஆன பின்பு நெஞ்சே –இவ் விஷயத்தை விட்டு நமக்கு ஒரு க்ஷணம் ஆறி இருக்க விரகு இல்லை -அவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –

நெஞ்சே -செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு தூபத்தைக் கையிலே தரித்து -ஸ்வரூப அனுரூபமாக
அவனைத் தொழுது உஜ்ஜீவிப்போம் -கடுக எழுந்து இரு -உனக்கு இந்த ஸம்ருத்தி நித்யமாகச் செல்ல
கிடந்தானை கண்டு ஏறாதே ஆச்சார்யானைப் பழுக்க சேவித்து -திரு அஷ்டாக்ஷரம் முதலான மந்த்ரங்களை
பழுதற நாம் அப்யசிக்கிறவையும் -சர்வேஸ்வரன் திருவடிகளில் இடைவிடாமல் அஞ்சலி பந்தம் முதலான
வ்ருத்தி விசேஷங்களைப் பண்ணுகைக்காக -(சாதனமாக இல்லை கைங்கர்யம் பண்ணவே என்றபடி )

ஆன பின்பு நமக்கு ஆறி இருக்கைக்கு அவகாசம் ஏக தேசமும் இல்லை -கடுகச் சென்று கிட்டு —

——————————————————————————————————————

கால ஷேபம் பண்ணும் படி சொல்கிறது

(இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -அழகிய கையில் வில்லை எடுத்தாலே போதும் அவன் அழிந்து போக)

(ஆத்மாவுக்கு கர்மா வந்தேறி -தெரியவே உஜ்ஜீவிப்போம்)

(இமே தேஹே அந்தவந்த -தேகம் நஸ்வரம் ஆத்மா நித்யம் இங்கு கருத்து இல்லை –
கர்மங்கள் போக தேகமும் அழியும் என்று நிம்மதியாக இருக்கவே இந்த ஸ்லோகம் இங்கு சொல்கிறான்
இத்தையே-வந்தேறி என்பதைக் காட்டவே – அடைந்த -என்ற சொல்லால் ஆரம்பிக்கும் பாசுரம்)

(ஆதி -நோய் -இரண்டாகச் சொல்வது -ஆதி என்று மநோ வியாதியும் -நோய் என்று உடல் வியாதியும்)

போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்கிறோம்
இதுக்கு இடைச் சுவரான விரோதிக்கு வேணுமாகில்
தரசாரதாத் மஜனை சரணம் புக்கு என்கிறார் –

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

பதவுரை

அடைந்த–அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற
அரு–போக்குவதற்கு அருமையான
வினையோடு–பழவினைகளும்
அல்லல்–(அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத் துன்பங்களும்
நோய்–சரீர வியாதிகளும்
பாவம்–இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை–[இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில்–வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன்–முன்பொருகால்,
நுடங்கு இடையை–துவளா நின்ற -மெல்லிய இடையை யுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான்–லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய–மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள்–ஸ்ரீராமனாய்ப் பிறந்தவொரு காலத்து
தன் வில்–தன்னுடைய வில்லை
அம்கை–அழகிய திருக் கையிலே
வைத்தான்–எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண்–உபாயமாவான்.

(வில்லிலே கை வைத்தான் என்றும் வில்லைக் கையிலே வைத்தான் -என்றும் சக்கரவர்த்தி திருமகன் சரணே சரண் -என்கிறார் -)

அடைந்த வருவினையோடு –(ஞான ஆனந்த சேஷத்வ பாரதந்த்ரங்களே ஸ்வரூபமான )ஆத்ம ஸ்வரூபத்தில் இன்றியே அசித் பிரத்யாசத்தியால் ( ( தேஹத்தின் அருகாமையாலே )வந்தேறியான அஞ்ஞானாதிகள்
அல்லல் –மானஸ வியாதி
நோய் –சரீர வியாதி -ஆதி -வியாதிகள் என்றபடி –
பாவம்-பரிக்ரஹித்த சரீரத்தாலே பண்ணின நிஷித்த அனுஷ்டானம்(புண்யாபுண்ய ஈஸ்வர ப்ரீதி கோப )
மிடந்தவை-சரீர ஆரம்ப ஹேதுவான பாபங்களுமாக நெருங்கினவை
மீண்டு ஒழிய வேண்டில் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னும் படி ஒரு (யாதவ ராஜ- ராகவ ராஜ )ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில்

நுடங்கிடையை-பிரியத் தகாதவளை -(ஆத்ம குணங்களை பார்த்தாலே பிரிய ஒண்ணாதே -அதுக்கும் மேல் இதுவும் )

முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——பண்டு இலங்கையில்
வைத்தவனுடைய மிடுக்கை ஒழிய –தன்னுடைய திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்தவன் உபாயம் –

இத்தால் –

1-சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் –

2-இவ் வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் –

3-அவளோடு கூடினவன் உபாயம் என்கையாலே பற்றுமவர்கள்-அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது(ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி )

(மனம் இந்திரியங்கள் இராவணன் இத்யாதி-முதலியாண்டான் வார்த்தை -தேசிகர் ஸ்லோகம் )

(கீழே பல பாசுரங்களில் )திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் –

இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை –

இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே (நடுநாயகமாக ரத்னம் போல் இந்த பாசுரம் -சரம ஸ்லோகம் போல் )-உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –

அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே -அனஸ்னன்(சிறைச் சாலைக்குள் அரையனும் சிறையனும் உண்டே )

(தேகத்துக்குள் இருந்தாலே கர்மங்கள் இயற்கை என்று சொல்வாய் ஆனால் அது அல்ல என்று காட்டவே இங்கு
ஒரு மரம் -இரண்டு பறவைகள் -ஓன்று உண்டு ஒளி குறைய -மற்ற ஓன்று உண்ணாமல் ஒளி விஞ்சி
மரம் -சரீரம் -பழம் -கர்மாக்கள் -பரமாத்மாவுக்கு கர்மம் தீண்டாதே)

அல்லல் நோய் -ஆதி வியாதி -பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
மிடந்தவை–சமிதை இடாத மாணி -ப்ரஹ்மசாரி போலே –பரணிக் கூடு வரித்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே

சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -(நித்ய அநபாயினி நிரவத்யாம் )ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-

தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை -(சொல்லினால் சுடுவேன் –மாசு என்று அஞ்சினேன் )
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது -(வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து -காட்கரை அப்பன் )

அல்லல் நோய் –அல்லல் என்று பாப காரணமாய் வரும் மனத்துன்பங்கள் -நோய் -சரீரத் துன்பங்கள்
இவற்றையே ஆதி -வியாதி என்று வடமொழியில் சொல்வர்
மிடைந்தவை -வெளியேற முடியாதபடி சூழ்த்துக் கொண்டவை

(சும்மெனாதே கை -விட்டோடி பெரியாழ்வார் -5-4-3-
மாமேகம் சரணம் வ்ரஜ ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி

இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல்
ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்
மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே
சிந்தித்து இரு -41-
வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47
மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49-
அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50-
திரு நாமம் எண் –51-
தொழுது எழுதும் எழு –58-என்று சொன்னது எல்லாம்
உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே
மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –
இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம்
இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே -)

———————————————————————-

(போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்கிறோம்
இதுக்கு இடைச் சுவரான விரோதிக்கு வேணுமாகில்
தரசாரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் -)

ஞான ஆனந்தகளோபாதி ஆத்மாவுக்கு நிரூபகம் -என்றபடி -அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற போக்க அரிதான
ப்ராசிநபாவம் -அது அடியாக வருகிற மானஸ மான துக்கங்கள் -சாரீரமான வியாதி -வர்த்தமான சரீரம் கொண்டு
பண்ணுகிற நிஷித்தாசாரம் என்றால் போலே பஹு விதமாய்க் கொண்டு பரணிக் கூடு வரிந்தால் போலே
ஆத்மாவைத் தெரியாத படி மூடிக் கிடக்கிற இவை வாசனையோடு விட்டுப் போக வேண்டில்

க்ஷண காலமும் விஸ்லேஷிக்கத் தகாத படி நேரிய இடை அழகை யுடைய பிராட்டியை முன்பு ஒரு காலத்தில் லங்கையில் கொண்டு
போய்ச் சிறை வைத்த ராவணனுடைய மிடுக்கு அழியும் படிக்கு ஈடாக பண்டு ஒரு நாளிலே தன்னுடைய
ஸ்ரீ சாரங்கத் திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்த தசாரதாத்மஜனே உபாயம் –

இத்தால்

1-பிராட்டி விஷயத்தில் போலே ஆஸ்ரித விஷயத்தில் ஈஸ்வரன் உகந்து கார்யம் செய்யும் என்னும் இடமும்

2-அவன் ஸ்வ ரக்ஷணத்திலே இரங்கும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம் உள்ளது என்னும் இடமும் -(ஆறி இருக்க வேண்டியதே க்ருத்யாம்சம் )

3-அவன் அபேக்ஷிதம் செய்யும் இடத்தில் இவள் புருஷகாரம் என்னும் இடமும்

4-அவன் வஸ்துவை எனக்கு என்பார் ராவணாதிகள் பட்டது படுவர் என்னும் இடமும் சொல்லிற்று யாய்த்து –

இந்திரிய ஜயத்தைப் பண்ணு -அவனைத் தொழு –
அவன் திரு நாமத்தைச் சொல்லு -அவனை நினை என்றால் போலே (உபாயாந்தரங்களைப் போலே )கீழே படி படியாகச் சொல்லிற்று எல்லாம்
ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே -உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை -என்கை-

————————————————————————————————————

கீழ் அவனையே உபாயம் என்றது -பேறு இவர்களதே யான பின்பு இவ் வாத்மாக்கள் உபாயம் ஆனால் ஆகாதோ என்னில்
(ஜீவர்கள்)கீழ் போக்கு அறியான் -இப்போது தங்கள் படுகிறது இன்னதாலே என்று அறியார்கள் -வரக் கடவது அறியார்கள்
ஈஸ்வரன் இவை எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஞான சக்தியாதிகளை யுடையவன் –
பழகி யான் தானே  (பணிமின் -நான்முகன் )–என்னுமா போலே -ஆகையால் அவனே உபாயமாம் அத்தனை -இத்தை லோகம் அறியாது என்கிறது –

இவன் பல போக்தாவாய் இருக்க அவன் சாதனமாக வேண்டுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாய் சர்வ சக்தனாய் இருப்பான் ஒருவன் உபாயமாம் இத்தனை போக்கி
அஞ்ஞனாய் அசக்தனாய் இவனால் செய்யலாவது உண்டோ -என்கிறார் –

(தனக்குத் தான் ரக்ஷகன் ஸ்தனந்த்ய பிரஜையை தாய் நின்றும் வாங்கி காதுகன் இடம் கொடுத்தால் போல் –

தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப் பால்)

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

பதவுரை

சரண் ஆம் மறை–(எல்லார்க்கும் -நான்கு வித புருஷார்த்தங்களைப் பெற ) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த–(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின(பர ப்ரஹ்மம் நான்முகனுக்கு மறை பயந்த என்றுமாம் )
தாமரை யானோடு–பிரமனோடு கூட
மரண் ஆய–மரணமடையுந் தன்மை யுடைய
மன் உயிர்கட்கு எல்லாம்–நித்யமான ஸ்வரூபத்தை யுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
அரண் ஆய–ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி–பெரிய திருவாழி யாழ்வானைக் கையிற் கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
மற்று–அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு–கடல் சூழ்ந்த இவ் வுலகத்திலுள்ளார்.(லக்ஷணை )
அறியாது–அறிய மாட்டார்கள்.

சரணா மறை பயந்த தாமரை யானோடு–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –
சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம்–கல்பாதியிலே யுண்டாய் -கல்பாந்தத்தில் இல்லை யாகிற ப்ரஹ்மாவோடே கூட
ந ஜாயதே ம்ரியதே வா –ஜாயஸ்ய ம்ரியஸ்ய –(விபஸ்ச்சித் உபநிஷத் கதாசித் கீதை )என்று ஜனன மரண தர்மாக்களான உயிர்களுக்கு எல்லாம்
அரணாய-ரக்ஷகமான –
பேராழி கொண்ட பிரான் அன்றி-கீழே பெருமாள் ப்ரஸ்த்ததுர் ஆகையால் -கடலை வெதுப்பித்து
தமக்கு வசமாக்கிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன் -என்றுமாம்(பேராழி கொண்ட -கடலை தனது வசமாகாக கொண்ட பெருமாள் )
கையிலே திரு வாழியை யுடையனாய் உபகாரகனான சர்வேஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவர் —
மற்று அறியாது-ஓராழி சூழ்ந்த வுலகு ———-மற்றாய் இருந்துள்ள கடல் சூழ்ந்த லோகமானது உபாயமாக அறியாது

சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்
ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )
மரணாய -சாவது பிறப்பது ஆகிற சரீர தர்மம் -மன்னுயிர் -ஆத்ம தர்மம் -மரண தர்மங்களுடைய அஞ்ஞனாய் அசக்தனாய் –
அரணானவை –இவற்றை விநாசகன் அறியும் அத்தனை -முடோயம் நாபி ஜாநாதி – வேதாஹம்-

ஆப்பன் நஞ்சீயருக்கு -ஜீயரே இவ் வுலகு எம்பெருமானை அல்லாது (வேறே ஒன்றை அறியாமல் )இருந்ததோ –என்ன -அதுக்குப் பொருள் என்ன
உயர்ந்தோர் எம்பெருமானை அல்லது அறியார் என்ன -இத்தை பட்டரைக் கேட்க -அதுக்கு ஒரு குற்றம் உண்டு
ஓர் ஆழி சூழ்ந்த -என்று விசேஷிக்க ஒண்ணாது -என்ன -இதுக்கு பொருளோ என்ன
ஜீயரே நான் சொல்லும் பொருள் என் என்ன உலகு அறியாது என்ன -அதுவே பொருள் என்றார்
இத்தை பிள்ளையும் ஜீயருக்கு உரைக்க-திருக் கலிகன்றி தாசர் மறந்தத்தை உணர்த்தினார் -என்று அருளிச் செய்தார் –

(மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய பிரான் -என்று அன்வயித்து -உலகு -உயர்ந்தோர் மாட்டே நிகண்டு -சாமான்யர் அறியார் -மற்றவை அறிவார்கள் -)

(இதுக்கு ஒரு குற்றம் உண்டே -ஆழி சூழ்ந்த -என்றாலே எல்லாரையும் காட்டுமே என்னில் –
யாருக்கும் தெரியாது -என்பதே பட்டர் திரு உள்ளம் என்று நஞ்சீயர் காட்டி அருள –
மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய பிரான் என்று கொள்ளாமல்
அரணாய-அரணாக உள்ள பொருள்களை- உபாயத்தை அறியார்கள் -என்றவாறு
பின்பு நம்பிள்ளை இவ்வாறு என்று நஞ்சீயருக்கே காட்டி அருளினாராம்)

(ஆக இப் பாசுரத்தால் -சிறியாரோடு பெரியாரோடு வாசி யற இவ்வுலகில் எவரும் தங்களுக்கு நன்மை ஏது என்று அறியாதாராய் இருக்க
ஸர்வேஸ்வரேஸ்வரன் ஒருவனே இவர்கள் அனைவருக்கும் நன்மையை அறிய வல்லவன் என்கிறார் -)

—————————————————————-

(இவன் பல போக்தாவாய் இருக்க அவன் சாதனமாக வேண்டுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாய் சர்வ சக்தனாய் இருப்பான் ஒருவன் உபாயமாம் இத்தனை போக்கி
அஞ்ஞனாய் அசக்தனாய் இவனால் செய்யலாவது உண்டோ -என்கிறார் -)

அபிமத சித்திக்கு அனுரூபமான உபாயங்களை அறிகைக்கு(ம் அடைவதற்கும் )சாதனமான வேதத்தை நாட்டுக்கு உபதேச முகேன
உண்டாக்கின ஞான மஹாத்ம்யத்தை யுடையோம் என்று அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மா வோடே கூட
மரண தர்மாக்கள் ஆகையால் அறிவு கேடராய் நித்தியமான ஸ்வரூபத்தை யுடையரான ஆத்மாக்களுக்கு எல்லாம்
ரக்ஷை யான வற்றை (அரணாய வற்றை -ரக்ஷகனான பெருமாளை என்று சொல்லாமல் )ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான உபகாரகனை அல்லது வேறு
அத்விதீயமான கடலாலே சூழப் பட்ட பூ லோகத்தில் உள்ள பிராணி அறியாது –

இத்தால் சிறியாரோடு பெரியாரோடு வாசியற தம் தாமுடைய ரக்ஷணம் தங்கள் அறிய மாட்டார்கள் –

இவனே சர்வர்க்கும் ரக்ஷண பிரகாரம் அறியுமாவான் என்றதாய்த்து –

————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -41-50– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

அவன் (நம்முடைய)குற்றம் பொறுக்கைக்காக திருமலையிலே வந்து நின்றான் -ஆபிமுக்யத்தைப் பண்ணினாலும்
தோஷாம்சத்தைப் பாராதே குணாம்சத்தைக் கொள்ளும் -அவன் உள்ள அன்றே இவ் வாத்மா யுண்டு என்கிறார் –

இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாகிலும் -தோஷமே வேஷமான நமக்கு அவனைச் சென்று
அணுகப் போமோ -என்று திரு உள்ளம் பயப்பட –
உனக்கு ஆபிமுக்யம் மாத்திரமே யுண்டாக
அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும் அஞ்ச வேண்டா -என்கிறார் –

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு –41-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
என்றும்–எப்போதும்
புறன் உரையே ஆயினும்–(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தை யாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே–சக்ர பாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு–அநுஸந்தித்துக் கொண்டிரு;(மித்ர பாவேந -அவன் திறன் உரையே சிந்தித்து இரு என்றுமாம் )

(எம்பெருமானைப் பற்றிய என்றும் அவனுடைய பேச்சு என்றும் -புறன் உரை பொய்யான பேச்சு திறன் உரை -அவனதான சரம ஸ்லோகம்)
(அப்படி யிருந்தால்)
இன்று முதலாக–இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும்–மலை போல் (பெருப் பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்–(அவற்றை யெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்

(செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே

குணத்தை குணமாக பார்க்கும் நல்லோர்
குணத்தையே குற்றமாகக் கொள்ளும் ஸம்ஸாரிகள்
குற்றங்களையே குணமாகக் கொள்வதே அவன் ஸ்வ பாவம் )

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்–அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும்
அஞ்ச வேண்டா -என்கிறார் –

இத்தனை நாளும் இத்தை செய்யாது ஒழிவான் என்னில் –

இன்று  முதலாக -இவனுக்கு ஸ்வ பாவம் என்று அறிந்த இன்று தொடக்கமாக
வென்னெஞ்சே -என்றும்-எனக்கு ஹிதம் பார்க்கும் நெஞ்சே -ச ஹ்ருதயமாக அவன் குணங்களை பேசப் போமோ என்னில் –
புறனுரையே யாயினும் -அ ஹ்ருதயமான பேச்சே யாகிலும் -பிரயோஜனம் இன்றிக்கே அனர்த்தம் ஆயிற்றே ஆகிலும் என்றுமாம் –

பொன்னாழிக் கையான்-திறனுரையே சிந்தித் திரு –சர்வேஸ்வரன் திறத்தில் சப்தங்களையே அறிந்து -க்ருதார்த்தமாய் இரு –
அவனோடே சம்பந்தம் யுண்டாகிலும் முன்பு அங்கனம் செய்து அருளாது விடுவான் என் என்ன
குற்றம் குணம் (ஆகக் கொள்ளும் ஸ்வ பாவன் அவன் என்று நீ )என்று நினையாமை-பொன்னாழி –தானே ச ஹ்ருதயமாக்கும்

(மேகமே உப்பு நீரை நல்ல மழையாக ஆக்குவது போல்
கையார் சக்கரத்து பாசுரம் -அங்கும் இதே போல் உண்டே)

———–

இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாகிலும் -தோஷமே வேஷமான நமக்கு அவனைச் சென்று
அணுகப் போமோ -என்று திரு உள்ளம் பயப்பட –
உனக்கு ஆபிமுக்யம் மாத்திரமே யுண்டாக
அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும் அஞ்ச வேண்டா -என்கிறார் –

என் வழியே ஒழுகும் படி எனக்கு பாங்கான நெஞ்சே -சர்வ காலத்திலும் ச ஹ்ருதயமாக அன்றிக்கே –
கேவலம் வாங்மாத்ர சித்தமான புறப் பேச்சே யாகிலும் -அஹ்ருத யுக்தியை ச ஹ்ருதயாம் படி பண்ண வற்றான
அழகிய திருவாழியும் கையுமான சேர்த்தி அழகை யுடைய சர்வேஸ்வரன் இடையாட்டமாய் (விஷயமாக )-
மித்ர பாவம் அடியாக -நத்யஜேயம் -என்னும் படியான சொல்லையே அனுசந்தித்திக் கொண்டு ஸ்திதோ அஸ்மி -என்னும்படி
நிர்ப்பரனாய் கொண்டு இரு –

இவ் வானுகூல்ய லேசம் யுண்டான இன்று முதலாக -மலை போலே ஸ்வ யத்னத்தாலே
சலிக்க ஒண்ணாத படி பெருத்து உறைத்து இருக்கிற குற்றங்களை பத்தும் பத்துமாகச் செய்தாலும்
அதி மாத்ர வத்சலனானவன் -செய்தாரேல் நன்றே செய்தார் -என்னும் படி குணமாகக் கொள்ளும் –

———————————————————————

பாராதே பொறுக்கைக்கு அடி பிராட்டிமார் அருகே இருக்கை -என்கிறார்

இப்படி குற்றத்தை ஸ்வ தந்த்ரனானவன் -குணமாகக் கொள்ளக் கூடுமோ -என்னில்
ந கச்சின் நாபராத்யதி -என்னும் பிராட்டிமார் மூவரும் அங்கே கூடி இருக்கையாலே கூடும் -என்கிறார் –

திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

பதவுரை

பால் ஓதம் சிந்த–திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்து ஸுகப்படுத்த,
படம் நாக அணை கிடந்த–படமெடுத்த பாம்பினணையிற் பள்ளி கொண்ட
மால் ஓதம் வண்ணர்–பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம்–பெரிய பிராட்டியார் மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது
திருமகட்கே தீர்ந்த ஆறு என் கொல்–பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத் தீர்ந்திருக்கிற விதம் என்னோ?

திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்-திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல் –
அனந்தாழ்வான் -திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல் -மண் மகட்கே தீர்ந்தவாறு என் கொல் –
ஆய் மகட்கே தீர்ந்தவாறு என் கொல் -என்று பணிக்கும் -(ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம் -சவ்பரி போல் ஒவ்வொருவருக்கும் பூர்ண அனுபவம் )

பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த–திருப் பாற் கடலின் திவலை திரு முகத்தில் படும் படிக்கு ஈடாக
திரு வனந்த ஆழ்வான் மேல் கிடந்த
மாலோத வண்ணர் மனம் —-மாலோத வண்ணருடைய—திருமகள் மேல் வைத்த திரு உள்ளம்
திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்–திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்று -அருளிச் செய்வார் பட்டர்-

பிராட்டியோடு கலந்த போது -புஷபாங்க ராகைஸ் சமம்-(ஸ்ரீ குண ரத்ன கோசம் -26-)என்கிறபடியே அல்லாத பிராட்டிமார் உபகரண கோடியிலே நிற்பார்கள்
அல்லாத பிராட்டிமாரோடு பரிமாறும் போது –இவள் தன் இடையிலும் முலையிலும் கலந்தால் போலே இருக்கும் போகம் தான்
உன்மஸ்தகம் ஆனால் வ்ருத்த கீர்த்த நாதிகளுக்கு கூட்டாய் நிற்பார்கள் -(அவயவங்கள் போலும் -சாயா இவ -நிழல் போல்வன )

(போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோஸம்–26

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.)

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இதர விஷயங்கள் இருவருக்கும் போரா மையாலே சீறு பாறு என்கைக்கு உடலாம் –

இங்கு போக்யதா அதிசயத்தாலே
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரண்டு அவகாஹிக்க வேண்டும் என்றதாயிற்று —

————-

இப்படி குற்றத்தை ஸ்வ தந்த்ரனானவன் -குணமாகக் கொள்ளக் கூடுமோ -என்னில்
ந கச்சின் நாபராத்யதி -என்னும் பிராட்டிமார் மூவரும் அங்கே கூடி இருக்கையாலே (பாராதே இருக்கக் )கூடும் -என்கிறார் –

திருப் பாற் கடலில் சிறு திவலைகளானவை ஸ்ரமஹரமாம் படி துடை குத்துவாரைப் போலே நாலு பாடும் சிதறி விழ
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே பள்ளி கொண்டு
அருளுகிற பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடைய சர்வேஸ்வரனுடைய பெரிய பிராட்டியார் மேலே
அத்யபி நிஷ்டமாய்ச் செல்லுகிற திரு உள்ளமானது –

குற்றத்தை பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும்
பொறை விளையும் தரையான ஸ்ரீ பூமி பிராட்டியாரும் -குற்றம் கிளராத படி திரு உள்ளத்தை திரை கொள்ளும்
கோப குல அவதீரணையான நப்பின்னை பிராட்டியாரும் சதாரமாக சம்ஸ்லேஷித்தால்

புஷபாங்க ராகாதிகளோ பாதி
போக உபகரண கோடியில் நின்று பிராட்டியோடே கலக்கும் இடத்தில் சாபத்ந்ய கந்தம் அற அல்லாத பிராட்டிமார் எடுத்து
கை நீட்டுகையாலும் -அவர்களோடு கலக்கும் இடத்தில் தன் முலையிலும் இடையிலும் கலந்தால் போலே
பிராட்டி நினைத்து இருக்கையாலும் -பெரிய பிராட்டியார்க்கே அற்றுத் தீர்ந்ததாய் இருக்கிற படி எங்கனே தான்

இத்தால் மூவர்க்கும் உண்டான ஐக ரஸ்யம் சொன்னபடி –

————————————————————————————

(கைங்கர்யம் பண்ணப் பண்ண
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
சுமந்து –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
பெரும் பலன்களைப் பட்டியல் இடுகிறார்
மனம் மாசு அஞ்ஞானம் -காம க்ரிதாதிகள் போகும்
தீரா வினைகள் கிட்டாவே
பக்திச் செல்வம் தானாகவே வந்து சேரும்
கைங்கர்ய ரூபம் -சாதனமாக அல்ல )

பிராட்டிமார் அடியாக அவனைப் பற்றினார்க்கு போகத்தில் பிரதிபந்தகங்கள் போக வேணும் என்றும்
பக்த்யாதிகள் உண்டாக வேணும் என்றும் இவர்களுக்கு கரைய வேண்டா -என்கிறது –

திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –
பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

மனமாசு  தீரும் –மனஸ்ஸூ க்கு மாசாகிறது -ருசி வாசனைகள் -(வாசனை விட ருசி பிரபலம் )
அரு வினையும் சாரா–அவித்யாதி கர்மங்கள் (பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் )அணையா
தனமாய தானே கை கூடும் -இப்படியான அதிகாரிக்கு தனமான கைங்கர்ய பூர்வ பாவியான பக்த்யாதிகள் தானே யுண்டாம்

(குலம் தரும் செல்வம் தந்திடும் -கைங்கர்யம் பண்ண ருசி பக்தி வேண்டுமே -அது தானே உண்டாகும்)
புனமேய-பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி-
தாம் தொழா நிற்பார் தமர் —தமரானவர்கள் சர்வேஸ்வரன் திருவடிகளிலே தாங்களே தொழா நிற்பர்கள் –
இவர்களுக்கு அவனுடைய திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு தொழுவது அவனை அனுபவிக்கையிலே அந்வயம் –

(இவை சாதனம் அல்லவே
சூட்டு நன் மாலைகள் -அங்கு போல் இங்கும்
சாதனம் ஆக்குவது உபாயாந்தர பரர்கள் )

திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் -அவித்யாதிகள் போனார்க்கு வரும் தனம்-(பரபக்த்யாதிகள் -போஜனத்துக்கு சுத்தி போல் இவை )
அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –பூந்துழாயான் அடிக்கே–குடிக்கிற வேப்பங்குடி நீர் -போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் –இவன் வகுத்தது செய்ய அவன் வகுத்தது செய்யாது ஒழியுமோ –

(செல்வச் சிறுமீர்காள் -அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –நாகவர ஸ்ரீ மான் -ஈஸ்வரனே ரக்ஷகன் என்ற நினைவே -லஷ்மணோ லஷ்மீ சம்பந்தம்)

(நீ செய்ய வேண்டியத்தைச் செய்தால் -ஸ்வ தந்த்ரனாக நினைத்த்தால் சாதனம் ஆகுமே
நீ -அத்யந்த பரதந்த்ரனாக அறிந்து -ப்ராப்யத்தில் அன்வயித்து கைங்கர்யம்
ஸ்வாமி தனது கார்யம் உடைமைக்குச் செய்ய சொல்ல வேண்டுமோ)

(சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திரு விருத்தம் -20-
அதை இங்கேயே இவ்வு டம்புடனே இக்காலத்திலேயே
செய்யுமவர்கள் -விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -70-
ஸ்வரூப அனுரூபமான தனமாவது பரபக்தி பரஞானம் பரமபக்திகள் –
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் யுத்த -16-17-
ச து நாக வர ஸ்ரீ மான்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால-18-20-)

———————-

திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –
பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –

திரு மேனியின் ஸ்பர்சத்தாலே தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று பூத்த திருத் துழாயாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனுடைய திருவடிகளுக்கே அடிமைக்குக் கை தொடுமானமான சூட்டு நன் மாலைகளோடே நீராட்டுகைக்கு
உப கரணமான நன்னீரையும் சாதரமாக தரித்துக் கொண்டு நின்று தங்கள் அபி நிவேசம் அனுரூபமாக
ஆஸ்ரிதரான தாங்கள் அடிமை செய்யா நிற்பர்கள் –

இவர்கள் இப்படி வகுத்த அடிமை செய்யவே அனுசந்தான
பரிகரமான மனசைப் பற்றிக் கிடக்கிற அஞ்ஞானம் விஷய ராகம் முதலான தோஷங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழலும்-

அவற்றுக்கு அடியாக ஸ்வ யத்னத்தாலே போக்க அரியதாய் துஷ் கர்மங்களும் கிட்ட வாராது –

கைங்கர்ய உபகரணமாய்-
ஸ்வரூப அனுரூபமான தனமாய் இருக்கிற பர பக்த்யாதிகளும் தனக்குத் தானே வந்து கை புகுரும்-

———————————————————————————————————-

(சட்ட நூல் ஸ்ரீ கீதை -கண்ணனின் உபதேசமும்
பெருமாள் அனுஷ்டானமும் நமக்கு அனைத்துமே காட்டி அருளும்
யார் எப்படி சேவிக்க ஆசைப்படுகிறானோ அவனுக்கு அப்டியே சேவை சாதிக்கிறேன் -கீதை
அவன் இவன் –அவனாகும் நீள் கடல் வண்ணன்

அவன் விரும்பிய ஒன்றையே நீ விரும்ப வேண்டும்
ஆழியான் -ஸாஸ்த்ர கம்யமாக இருக்க வேண்டுமே )

தமர் என்று சிலவரும் -அவர்களுக்கு பிரதி பந்தகம் போக்க வேண்டா -(போக்க வேண்டிய தேவை இல்லாமலேயே )-போகத்திலே அந்வயம் சொல்லுகிற படி -எங்கனே என்னில்
அவனுடைய ஸ்வரூபம் ஆஸ்ரித பரதந்த்ரம் ஆகையால் சொல்லுகிறது -(அவன் தானே தன்னை சேவை சாதிக்க -இவை அனைத்தும் தன்னடையே போகுமே )

ஆஸ்ரிதர் இப்படி அடிமை செய்யும் அளவில் இவர்கள் உகந்த ரூப நாமாதிகளை உடையனாய்க் கொண்டு
தன்னை யமைத்து -அர்ச்சாவதார ரூபேண இங்கேயே அடிமை கொள்ளும் என்கிறார் –

தமருகந்த   தெவ் வுருவம் அவ் வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப் பேர் தமருகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம் -44–

பதவுரை

ஆழியான்–திருவாழி யாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாக வுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ் வுருவம்–ஆஸ்ரிதர்களால் உகக்கப் பட்ட உருவம் எதுவோ,
அவ் வுருவம் தானே ஆம்–அவ் வுருவமாகத் தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்த்து எப்பேர்–ஆஸ்ரிதர்களால் உகக்கப் பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம்–அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன்;
தமர்–ஆஸ்ரிதர்கள்
உகந்து–உகப்புடனே
எவ் வண்ணம் சிந்தித்து–குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர்–ஓயாமல் பாவநை -த்யானம்-பண்ணிக் கொண்டிருப்பார்களோ
அவ் வண்ணம் ஆம்–அவ் வண்ணமே யாவன்

எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே–எவ்விதமாக நினைத்து இடைவிடாமல் தியானம் செய்து கொண்டு இருப்பாரோ –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே–யே யதா மாம் பிரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம் யஹம்(என்று -யார் எப்படி என்னை சேவிக்க ஆசைப்படுகிறானோ )
நமக்கு நல்லவர்கள் இன்னார் என்றும் இல்லை -இன்னபடி பஜிப்பார் ஒன்றும் இல்லை –அவர்கள் நின்ற நிலையிலே
அவர்கள் பஜித்த படியே அவர்களை பற்றுவேன் என்கிறது —

தமரானவர்கள் பிராகிருத த்ரவ்யங்களிலே ஒன்றை
உனக்குத் திரு மேனியாகக் கொள்ள வேணும் -என்றால் அத்தைத் திருமேனியாகக் கொள்ளும் –
ஸூவர்ண ரஜாதாதிபி –(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )

(அழகிய உருவம் -ஸ்வர்ணம் வெள்ளி செப்பு பஞ்ச லோகத்தால் -செய்து வணங்கி ஆராதித்து தியானிக்க
தோஷங்கள் நீங்கப் பெற்று பர வாஸூ தேவனையே அடைகிறான்
மாத்ரு யோனி பரீஷை யோடே ஒக்கும்
வீட்டு இன்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் –இன்ப மாரியில் ஆராய்ச்சி -நாயனார் -ஆச்சார்ய ஹ்ருதயம் -75-)

எம்பெருமானார் மாது கரத்துக்கு எழுந்து அருளா நிற்க -சில பிள்ளைகள் காலாலே கீறி
உம்முடைய எம்பெருமான் திரு மேனி -என்று காட்ட -பாத்திரத்தை வைத்து தண்டனை இட்டு அருளினார்

இவ் வர்த்தத்திலே -கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திரு வீதியில் இருந்து
பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திரு மண்டபமும் கற்பித்து பெரும் திருப்பாவாடையும் அமுது செய்வித்து
எம்பெருமானார் பிரசாதப்படும் -என்று மணலைக் கையிலே முகந்து எடுக்க
தத் காலத்திலே மாது கரத்துக்கு எழுந்து அருளுகிற உடையவர் -அவ்விடத்திலே அது கேட்டருளி தண்டனிட்டு
அவர்கள் எடுத்த பிரசாதத்தைப் பாத்ரத்திலே ஏற்றார் -என்று ஜீயர் அருளிச் செய்தார்

தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் -நல்லவர் -சதங்கை அழகியார் -என்று திரு நாமம் சாத்தினார் ஆகில்
நாராயணாதி நாமங்களைக் காட்டிலும் அத்தை விரும்பும் –(விஷ்ணு சித்தர் எங்கள் ஆழ்வான் -விஷ்ணு புராணம் வியாக்யானம் அருளியவர் -அவரது ஸ்வப்னத்தில் நாகப்பழம் கேட்டு உணர்த்தினார் -மதுரையார் மன்னன் இதே போல் ஐதிக்யம் உண்டே )

தமருகந்து-எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே-அவ் வண்ணம் ஆழியானாம் —நல்லவர் உகந்து -யே யதா -என்னும் படி யாதொரு பிரகாரத்தில் உகந்து
சாவதாநராய் இருப்பார்கள் -அந்த பிரகாரத்தாலே அத்தை யுடையனாம் –

ஆழியானாம்-அப்ராக்ருதமாய் இருந்துள்ள சகல பரிகரத்துக்கும் உப லக்ஷணம் -அவை எல்லாம் கிடக்க
இவர்கள் நினைத்த படியாகத் தன்னை அமைத்துக் கொடுக்கும் –

தமர் இத்யாதி -இவன் கண்டு தொழ வேண்டாவோ -எங்கே காண்பது என்னில் -அவ் வுருவத்தானே
ஆத்மாநாம் மானுஷம் மன்யே–யே யதா –எப்பேர் மற்றப் பேர் –எங்கள் ஆழ்வார் ( விஷ்ணு சித்தர் இவரே ) பாடே
ஆயர் தேவு சென்று நாவல் பழம் வேண்ட நீ யார் -என்று அவர் கேட்க -ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக் குடி இருக்க ஓட்டுகிறீலன்-என்றார்

ஆழியானாம்–சிரேஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன் -ஸ்ருஜ்யனுமாய் ந்யாம்யனுமாம் –

(ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸன்ன வதந ஈஷாணாம்
க்ருத்வா ஆத்மன ப்ரீதி கரம் ஸ்வர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சியேத் தாம் பிரணமேத் தாம் யஜேத் தாம் விசிந்தயேத்
விஸத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணாம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் –102-18-

யே யதா மாம் பிரபத் யந்தே தாம்ஸ் ததைவ பஜாம் யஹம் மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த்த ஸர்வஸ—-ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை எவ் வண்ணம் நினைத்துப் பற்றுகின்றார்களோ அவ் வண்ணமாகவே என்னை ஆக்கிக் கொண்டு அவர்களை அடைகிறேன் –
பார்த்தனே -என் தன்மைகளை -அவர்கள் தாம் விரும்பும் எல்லாப் படியாலும் அனுபவித்து வாழ்கின்றனர்

நெஞ்சினால் நினைப்பான் அவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -திருவாய்)

————–

ஆஸ்ரிதர் இப்படி அடிமை செய்யும் அளவில் இவர்கள் உகந்த ரூப நாமாதிகளை உடையனாய்க் கொண்டு
தன்னை யமைத்து -அர்ச்சாவதார ரூபேண இங்கேயே அடிமை கொள்ளும் என்கிறார் –

தன் கருத்து அறிந்து எடுத்துக் கை நீட்டும் திருவாழி முதலான திவ்ய பரிகரங்களை யுடையனான சர்வேஸ்வரன்
அவர்களைக் கால் கடைக் கொண்டு இன்று சம்சாரத்திலே தன்னைப் பற்றி இருக்கும் ஆஸ்ரிதரானவர்கள்
ஸூவர்ண ரஜாதாதி களான த்ரவ்யங்களாலே உகந்து ஏறி அருள பண்ணினது யாதொரு விக்ரஹம்
அந்த விக்ரஹத்தை அசாதாரண விக்ரஹத்தோ பாதி தானே ஆதரித்து பரிக்ரஹியா நிற்கும்

(அவன் இவன் என்று கூழேல் மின் -அர்ச்சைக்கு ஏற்றம் அவனைப் போல் பூர்வர்கள் –

எம்பெருமானார் இவன் அவன் என்று கூழேல் மின் -இதன் பெருமை அங்கும் இல்லையே)

இப்படி அவர்கள் உகந்த திரு மேனியை விரும்புகிற அளவன்றிக்கே ஆஸ்ரிதர் உகந்து சாத்தின திரு நாமம் யாதொன்று
அந்தத் திரு நாமத்தை நாராயணாதி நாமங்களோபாதி தனக்கு நாமமாக விரும்பா நிற்கும்

ஆஸ்ரிதரானார்கள் உகந்து கொண்டு குண சேஷ்டிதாதிகளான யாதொரு பிரகாரத்தை அனுசந்தித்து
அனவ்ரத பாவனை பண்ணி இருப்பார்கள் -அந்த பிரகாரத்தை உடையனாகா நிற்கும் –

இப்படி தன் பெருமை பாராதே ஆஸ்ரிதர் உகந்த ரூப நாம குண சேஷ்டிதாதிகளை தான் உடையானாய்க் கொண்டு
ஆஸ்ரிதரை அடிமை கொள்ளும் அர்ச்சாவதாரத்தின் நீர்மையின் ஏற்றத்தை அனுசந்தித்து வித்தார் ஆகிறார் –

—————————————————————————————————————–

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ருத்ரனுடைய லஜ்ஜைக் கேடு சொல்கிறது –

ப்ரஹ்மாவால் ஒரு ருத்ரன் அலைந்து கொடு கிடக்க அது தீர்த்தார் ஆர் —

ப்ரஹ்மாவுக்கு வந்த அநர்த்தத்தைப் பரிஹரித்து ரஷித்த அளவன்றிக்கே
லோக குருவுமாய் பிதாவுமான அந்த ப்ரஹ்மாவின் தலையை அறுத்து சாப உபஹதனாய் கையும் கபாலமுமாய் இரந்து உண்டு திரிந்த ருத்ரன் அனர்த்தத்தை
பரிஹரித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

பண் புரிந்த நான் மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் —46-

பதவுரை

பண் புரிந்த நான்மறை யோன்–ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களை (ஓதுவிக்கப்பட்ட  )நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி–தலையில்
[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக் கொண்ட கபாலத்தில்]
பலி ஏற்ற–பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன்–வெளுத்த யஜ்ஞோபவீ தத்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய(வெளுத்த -பிராயச்சித்தம் செய்தவன் -சாதனாந்தர பரன் )
வினை–ப்ரஹ்ம ஹத்தி பாபமானது
தீர–நீங்கும்படியாக
[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]
புண் புரிந்த ஆகத்தான்–தன்னுடைய திரு மார்பைப் புண் படித்திக் கொண்டவனுடை எம்பெருமானுடைய(திரு உள்ளத்தில் புண் பேரன் -திரு மேனியில் புண் நக கீறலால் )
தாள்–திருவடிகளை
பணிவார்–ஆச்ரயிக்குமவர்கள்
அமரர் தம் போகத்தால்–நித்ய ஸூரிகளின் போகமாகிய பரமபதாநுபவத்தோடு
பூமி–இந்த லீலா விபூதியை
ஆள்வார்–ஆட்சி புரிவர்கள்.

பண்புரிந்த நான்மறையோன் –ஸ்வர யுக்தமாய் சர்வேஸ்வரனால் ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவின்
சென்னிப் பலியேற்ற–வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸீரோ மாயா -என்கிறபடியே (தத்ர ஸ்ரீ மான் இந்த ஸ்லோகத்தில் -திருவாளன் கலியன் )ப்ரஹ்மாவின் தலையை அறுக்க
அவன் கபாலி ஆவாய் -என்று சபிக்க -அவனுடைய தலை ஒட்டிலே பிக்ஷை ஏற்ற

வெண் புரி நூல் மார்பன் வினை தீர –விநீத வேஷனாய் -பிராயச்சித்தியான படி -இவனோடு சம்பந்தித்தார்க்கு எல்லாம் இதுவே இறே பணி
அகமுடையவளும் (பார்வதி தக்ஷ பிரஜாபதி )தகப்பனாரைக் கொன்றாள்–இவனை ஆஸ்ரயித்தவனும் தகப்பனைக் கொன்றான்(இவன் மகனே இவனுக்கு உபதேசித்தான் )

வினை தீர -என்கிற இத்தால் -இவனுடைய கர்ம வச்யத்வமும்-தான் பண்ணின கர்மம் தன்னால் பரிஹரிக்க போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை என்றபடி –

புண் புரிந்த-ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்——ஈஸ்வர அபிமானியாய் ஒருத்தனாயத் திரிந்தவன் வாசல் தோறும்
இடறித் திரிவதே-என்று திரு உள்ளத்திலே புண்பட்ட சர்வேஸ்வரனுடைய தாள் பணிவார் கிடீர் -(வியர்வை கொடுத்தான் என்றும் ரக்தம் கொடுத்தான் என்றும் உண்டே )
அமரர் தம்-போகத்தால் பூமி யாள்வார் -பூமியும் ஆண்டு பரம பதத்தில் போகமும் அனுபவிப்பார்கள் –
அன்றியும் போக பூமியிலே இருக்கச் செய்தே பரமபதத்தில் போகம் எல்லாம் அனுபவிப்பார்கள் என்றுமாம் –

ப்ரஹ்மாவால் ஒரு ருத்ரன் அலைந்து கொடு கிடக்க அது தீர்த்தார் ஆர் –

பண்-இத்யாதி -ஒத்துச் சொல்லா நிற்க தலை அறுத்த படி -மூலை படியே திரிந்தார் பாதகி யானவாறே முழுகித் திரியும் படி —
அமரர் தம்-போகத்தால் பூமி யாள்வார் -விண்ணுளாரிலும் சீரியர் என்றுமாம் –

(யே வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -எவன் பிரமனுக்கு வேதம் ஓதுவிக்கிறானோ –

தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாமங்குஷ்ட்ட நகாக் க்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாத நபராத்ஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாபம் ஆவிஷ்ட கபாலித்தவம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாத குலிதோ பூத்வா சரம் தீர்த்தாநி பூதலே
ததோஹம் கதவான் தேவீ ஹிமவந்தம் சிலோச்சயம்
தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் ப்ராயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகா க்ரேண விதாரிதம்
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா
விஷ்ணு ப்ரஸாதாத் ஸூஸ் ரோணி கபாலம் தத ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –மத்ஸ்ய புராணம் -182-

அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் -திருச்சந்த -113-)

——————————————————————–

ப்ரஹ்மாவுக்கு வந்த அநர்த்தத்தைப் பரிஹரித்து ரஷித்த அளவன்றிக்கே
லோக குருவுமாய் பிதாவுமான அந்த ப்ரஹ்மாவின் தலையை அறுத்து சாப உபஹதனாய் கையும் கபாலமுமாய் இரந்து உண்டு திரிந்த ருத்ரன் அனர்த்தத்தை(உலகு ஏழும் சென்று திரியும் பெரியன் -பிஷாண்டார் கோயில் )
பரிஹரித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

ஸ்வரத்திலே நோக்காய் ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருக்கிற வேதத்தை தரித்து இருந்துள்ள ப்ரஹ்மாவினுடைய
தலையை -வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸீரோ மாயா -என்கிறபடியே -அறுக்க -அவன் கபாலீ தவம் பவிஷ்யஸி -என்று
அநந்தரம் சபிக்க -தத் சாப உபஹதனாய்க் கொண்டு அவன் தலை ஒட்டாலே நெடும் காலம் இரந்து திரிந்தவனாய் –

ப்ராயச்சித்தி என்னும் இடம் தோற்ற வெளுத்த பூணூலையும் மார்விலே இட்டு விநீத வேஷனுமாய் இருக்கிற ருத்ரனுடைய
ப்ரஹ்மஹத்தி ரூபமான பாபம் விட்டு நீங்கும் படியாக -நகாக்ரேண விதாரிதம் -என்கிறபடியே திரு யுகிராலே கீறி
மாம்சளமான ரக்த ஜலத்தை அபகரித்த திருமேனியை யுடைய சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நித்ய ஸூரி போகமான பரம பத ஐஸ்வர்யத்தோடே கூட பூமி உப லஷித்தமான லீலா விபூதியையும் ஸ்வ அதீனமாக நிர்வஹிக்குமவர்கள்–

———————————————————————————-

(இந்திரிய ஜெயம் -ஜீவ பர ஆத்ம ஞானம் -இரண்டும் துர்லபம் -இவையும் கிட்டும் )

இந்த்ரியங்களினுடைய போகத்தைச் செறுத்து–விஷயத்தினுடைய சந்நிதியில் நில்லாது பரிஹரித்து
மெய்யான பக்தியை யுடையவர்கள் அவனைக் காண்பர் என்கிறார் –
விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தே ஹிந–ரஸ வர்ஜம் ரஸோப் யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -ஸ்ரீ கீதை -2-59-

(விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷-நான்கு சம்ஹிதைகள் சொல்லிய பின்பு அருளிச் செய்த ஸ்லோகம்

நிராஹாரஸ்ய -நிர் ஆஹாரஸ்ய -விஷயங்களில் நின்றும்
தேஹிந–இந்திரியங்களை இழுத்த -தேஹம் உடைய -ஜீவனுக்கு
விஷயா -விஷயங்கள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் -நிறம் ரசம் சுவை கந்தம் மணம் –
ரஸவர்ஜம் -அவற்றில் ஆசை தவிர –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்
விநிவர்தந்தே -நீங்கு கின்றன-ஆசை மாத்ரம் நீங்குகிறது இல்லை
அஸ்ய -இந்த ஞான யோக நிஷ்டனுக்கு
ரஸ அபி -இவ் வாசையும்
பரம் -விஷயங்களைக் காட்டிலும் ஸூகமாய் இருக்கையாலே மேலான ஆத்ம ஸ்வரூபத்தை
த்ருஷ்ட்வா நிவர்ததே–கண்டவுடனே நீங்குகிறது)

இந்திரியங்களை ஜெயித்து சம்யக் ஞானத்தை யுடையவர்களாய் -அவனை ஆஸ்ரயிக்கப் பார்க்கல்
அல்லது அவன் திருவடிகளைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ் ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந் நாகம் காத்தான் கழல் —–47–

பதவுரை

மதம் களிறு ஐந்தைனையும்–மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி–ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப் பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ–கண்ட விடங்களிலும் திரிய வொட்டாமல் செவ்வையாக நிலை நிறுத்தி
கூரிய–மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால்–உண்மையான பக்தி ரூபா பந்ந ஜ்ஞானத்தாலே
உணர்வார்–(அவனை) உள்ள படி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள்–முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான்–தும்பிக்கை யுடன் கூடிய கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்-மதித்த யானைகளை தண்ணீரிலே செறுக்குமா போலே இந்த்ரியங்களினுடைய போகத்தை குறுக்கி
சேரி திரியாமல் -தெருவில் திரியில் கொள்ளும் இறே யானை -அப்படி விஷயத்தின் யுடைய சந்நிதியில் திரியாமல் –
செந்நிறீஇ –செவ்விதாக நிறுத்தி -பதார்த்தங்களில் போகாமல் ப்ரத்யக் (ஆத்ம)வஸ்து விஷயம் ஆக்கி –
கூரிய-மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே–விஹித கர்மங்களைப் பாலாபி சந்தி ரஹிதமாக அனுஷ்ட்டித்து-
ஷீண பாபராய் -ஆத்ம யாதாம்ய ஞானம் யுண்டாய் -ஈஸ்வர பாரதந்தர்யம் என்னும் இடம்
உபாசனம் த்ருவா ஸ்ம்ருதி-தரிசன சாமானாகாரதா ப்ரத்யக்ஷதா பத்தி –விஸதே தத் அநந்தரம்-18-55- –என்று சொல்லுகிற பக்தியால் காண்பர்கள்-

(1-வர்ணாஸ்ரம கர்மங்களை பழத்தில் விருப்பம் இல்லாமல் அனுஷ்ட்டிக்க
2-பாபங்கள் போய் -தொலைந்து
3-மனத் தெளிவு ஏற்பட்டு இது இங்கே இல்லை –
4-பக்தி ஏற்பட்டு
5-ஆத்ம யாதாத்ம்ய ஞானம் -தேஹ விலக்ஷணன் அறிந்து
6-அத்யந்த பரதந்த்ர ஞானம்
அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆக வேண்டுமே
ஆறு படிகள் )

(பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் நான் எத்தகையவனோ -குணத்தாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவனோ
அத்தகைய என்னை முன் கூறிய பரபக்தியாலே உள்ளபடி அறிகிறான் –
என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பிறகு பரம பக்தியால் என்னைப் பரிபூர்ணமாக அடைகிறான் –
மேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும்
பர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க
பரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும்
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
யஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-இரண்டையும் அறிகிறான் பர பக்தி
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் –
ஞான பல -இத்யாதி இணையான் -அறிந்து கொண்டு
என்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்
ஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை –
மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –)

மேலொரு நாள்-கைந்நாகம் காத்தான் கழல் —–பண்டு ஒரு நாள் ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பண்ணினவனுடைய திருவடிகளை
இத்தால் விரோதியான முதலையைப் போக்கி தன்னைக் காட்டிக் கொடுத்தால் போலே இவர்களுடைய
பிரதிபந்தகங்களைப் போக்கிக் காட்டிக் கொடுக்கும் என்கிறது –

சேரி திரியாமல் -ஆள் நடையாடாத இடத்தே கொண்டு போய் —

கூரிய இத்யாதி –ஸூ பாஸ்ராயமாகவும் -நாதனாகவும்-உபாயமாகவும் –உபேயமாகவும் அனுசந்திக்கை –

கைந் நாகம்–பரமா பதம் ஆபன்ன(பெரிய ஆபத்தில் ஹரியை நினைத்தது )

(விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தேஹி ந
ரஸ வர்ஜம் ரஸோ அப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -ஸ்ரீ கீதை -2-59-

பக்த்யா மாம் அபி ஜா நாதி யாவான் யஸ் சா அஸ்மி தத்த்வத
ததோ மாம் தத்த்வதோ ஞாத்வா விஸதே தத் அனந்தரம் -ஸ்ரீ கீதை -18-55-

பரமாபதம் ஆபன்னோ மனஸா சிந்தயத் ஹரிம்
ச து நாக வர ஸ்ரீ மான் நாராயண பாராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –69-47-)

———————————————————————

இந்திரியங்களை ஜெயித்து சம்யக் ஞானத்தை யுடையவர்களாய் -அவனை ஆஸ்ரயிக்கப் பார்க்கல்
அல்லது அவன் திருவடிகளைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

போக்யங்களான சப் தாதிகளான ஜலத்தைக் கண்டு கடுக மாற்றுதல் -நெடுக விடுதல் செய்யாதே நடுத்தரமான க்ரமத்திலே
சங்கோசிப்பித்து -களித்து கண்ட கண்ட விஷயங்களில் காடு பாய்ந்து திரிகிற ஸ்ரோத்ராதிகளான மத்த கஜங்கள் ஐந்தையும்
விஷயங்கள் ஆகிற குடி இருப்புகளில் பண்டு போலே கயிறு உருவி விட்டு சஞ்சரியாத படியாக ப்ரதக் விஷய ப்ரவணமாம் படி
செவ்வே நிறுத்தி அநபி சம்ஹித பலமாக அனுஷ்டித்த சத் கர்மத்தால் தெளிந்த மனஸ் ஸூ தளமாக முளைத்து
ஸ்வரூப யாதாம்யாத்தை யதாவாக தரிசிக்கும் படி அதி ஸூஷ்மமாக த்யேய விஷயத்தை ப்ரத்யக்ஷமாக(தர்சன சாமானாதி காரம் -பக்தி ரூபா பன்ன ஞானத்தால் )
க்ரஹிக்கையாலே பரமார்த்தமாய் இருக்கிற பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அவனை உள்ளபடி உணர
ஷமரானவர்கள் பண்டு ஒரு நாளிலே அடிமை செய்ய வேண்டும் -என்னும் அபி நிவேசத்தாலே புஷ்பாசயார்த்தமாக
ஒரு பொய்கை யிலே புக்குத் துதிக்கை முழுத்தும் படி முதலையாலே இடர் பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை
விரோதியைப் போக்கி அடிமை கொண்டு ரஷித்த சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கண்ட அனுபவிக்கப் பெறுவார்கள் –

(யானைக்கும் இந்திரியங்களுக்கும் ஒப்பிட்டு வியாக்யானம்)

————————————————————————————————————

இப்படி இந்திரிய ஜெயம் பண்ணி நாம் பெறுகை யாவது என் -என்று தம்முடைய திரு உள்ளம் பயப்பட
எளிதாகப் பற்றலாம் -நீ பயப்பட வேண்டாம் -என்கிறார் -( மகிழ்ந்து மருவு -உகந்து  அனுபவிப்பாய் -சாதனம் அவதனதே -அவனே திருவடியை தலையிலே வைக்க வர தட்டி விடாமல் அனுபவிக்க வேண்டும் – -அக்கார அடிசிலை அனுபவிப்பதே நம் கர்தவ்யம் )

நமக்கு இவ் வரும் தொழில்களிலே இழிய வேண்டா -தானே வந்து தன்னைத் தரும் ஸ்வபாவன் அன்றோ என்று
அவன் படியை அனுசந்தித்து -நெஞ்சே நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார்–என்கிறார் —

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–

பதவுரை

ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]
ஒரு கழல்–ஒரு திருவடியை
எடுத்து–மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை–ஒரு திருக் கையாலே
சுற்றி–[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றி யெறிந்து(நமுசி யுடைய ஒரு காலை கையால் எடுத்து சுழற்றி என்றுமாம் )
ஓர் கை மேல்–மற்றொரு திருக்கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்–இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற
[அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்]
அழலை யுமிழ்கிற யுத்த சாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல–திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு–பொருந்துவாயாக;
மகிழ்–இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்.

கழலொன்று-நமுசியினுடைய காலை –

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றி–நமுசியுடைய ஒரு காலை எடுத்து கையாலே சுற்றி என்னவுமாம் –
அன்றியே பூமி அளக்க என்று தன்னுடைய ஒரு திருவடி மலரை எடுத்த அவசரத்திலே (வேகமாக அர்த்தம் இல்லை -சந்தர்ப்பத்திலே என்றவாறு )நமுசியை ஒரு கையாலே சுற்றி என்னவுமாம்

யோர் கை மேல்-சுழலும் -சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான்–ஒரு திருக் கை மலரில் அனுகூல பிரதிகூலரோடு வாசியற அழலா நின்ற செரு உடைத்தான
திரு வாழியை ஏந்தினவனுடைய சேவடிக்கே செல்ல-ஆழி நெஞ்சே மகிழ்ந்து —மருவு —-உகந்து உகந்து அனுபவி -(வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -ஐஸ்வர்யம் -கைவல்யம் -பகவத் பிராப்தி மூன்றையும் சொல்லுவது போல் இங்கும் )

கழல் இத்யாதி -அளந்தபடி

ஆழி நெஞ்சே -உனக்கு உபதேசிக்க வேண்டா விறே-
சேவடி தானே இருந்த இடத்தில் வந்தால் -இறாவாமையே வேண்டுவது –(திருக் கமல பாதம் வந்து -வந்த பின்பு தடுக்காமல் இருப்பதே வேண்டுவது )

(என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–-பெரியாழ்வார் திருமொழி —1-8-8-

அத்வேஷமே -விலக்காமையே -சேவடிக்குச் செல்லுகை யாகும் -அவனே நம்மை தீண்டி வரும் பொழுது உகந்து உகந்து அனுபவிப்பாயாக)

————————————————————————-

நமக்கு (இந்திரிய ஜய )இவ் வரும் தொழில்களிலே இழிய வேண்டா -தானே வந்து தன்னைத் தரும் ஸ்வபாவன் அன்றோ என்று
அவன் படியை அனுசந்தித்து -நெஞ்சே நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார்–என்கிறார் —

ஒரு திருவடியை ஊர்த்வ லோகங்களில் செல்ல வளர்த்து -ஒரு திருக் கையாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகளைச் சுற்றி எறிந்து
மற்று ஒரு திருக் கையின் மேலே -வயிறு மறுகிப் பரி பிரமிக்கிற அனுகூலரான தேவர்களும் பிரதிகூலரான அஸூரர்களும்
நடுங்கும் படிக்கு ஈடாக பிரதி பக்ஷத்தின் மேலே அழலையும் உமிழ்கிற யுத்த சாதனமான திருவாழியைத் தரித்த
சர்வேஸ்வரனுடைய ஆஸ்ரிதர் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகளிலே கிட்டும் படி அளவு–
அளவுடைய நெஞ்சே -அது தேவை யாகாத படி -(அது உபாய கோஷ்ட்டியில் சேர்க்காமல் ப்ராப்ய கோஷ்டியாக செய்ய வேண்டுமே )மகிழ்வதும் செய் –

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ –உலகம் கொண்டவாறே -முன்னாலே பரிகரங்கள் மேலே வந்தனவே -ஆகவே இங்கும் ஆழி )

ப்ரீதி பூர்வகமாக வாசனை பண்ணு -என்றபடி -(பஜதாம் புத்தி பூர்வகம் -அனுபவிக்க ருசி -போஜனத்துக்கு ஷூத்து பசி போல் )

சேவடி -சிவந்த அடி -என்றுமாம் –

—————————————————————————————————–

(யஸ்ய அனுக்ரஹம் இச்சாமி -அவன் சொத்தைப் பிடுங்கி -வைராக்யம் வர வர தானே அவனை அனுபவிக்கலாம்

கருட கதி-தை மாத உத்சவம் காலையிலே -வலிமையான சிறகு -ஒய் சாவதான -மஸ்தக கதி இவை இரண்டும்
மற்ற ஐந்து -சர்ப்ப -ரிஷப ஸிம்ஹ இத்யாதி கதிகள் -நம்பெருமாள் நடை அழகிலே காணலாமே )

(ஆத்மா எடுத்த சரீரத்துக்குத் தக்க தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர யோனிகள்-இது அறிந்தால் தானே வைராக்யம் வரும் )

இப்படி இராதார்க்கு அவனைக் கிடையாது என்றும் பின்னையும் அதனுடைய (அவனை அடைவதிலும் வைராக்யம் வருவதிலும் )அருமை சொல்லுகிறது –

பிரகிருதி ப்ராக்ருதங்களிலே அருசியும் -எம்பெருமானைக் காண்கையிலே ருசியும் யுடையார்க்கு
எளிதாகக் காணலாம் என்கிறது -பொய்ந்நின்ற –இத்யாதி —

எல்லாம் செய்தாலும் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே விரக்தி பிறந்து அவனை
ஆஸ்ரயிக்கப் பார்க்க அல்லது அவனைக் காண முடியாது -என்கிறார்

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–

பதவுரை

மகிழ் அலகு ஒன்றே போல்–(கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே
காணி ஸ்தாநத்திலும் கோடி ஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பது போல
மாறும் பல் யாக்கை–மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ–தன்னடையே விட்டு நீங்கும் படியாக
முயலகிற்பார்க்கு அல்லால்–முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும்–மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பு–விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல்
தோன்றுகிற தேஜஸ்ஸை யுடைய அழகிய பெரிய திரு வபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது–கூடாத காரியம்.

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை-நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் –அலகானது(-விதையானது )-
கோடி ஸ்தானத்திலும் நின்று காணி ஸ்தானத்திலும் நிற்குமா போலே இவ் வாத்மாவானது
தேவ சரீரத்தில் புகுவது திர்யக் சரீரத்தில் புகுவதாய் மாறி மாறி வருகிற பல யாக்கையை நெகிழ்ந்து போம் படியாகப் பண்ணுவார்க்கு அல்லால்
முகிழ் விரிந்த-சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்-ஆதி காண்பார்க்கும் அரிது —
விகசிதமாய் இருந்த தேஜஸைப் போலே தோன்றுமதாய் -ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேகத்தை யுடையனாய் –
(கிரீட சூட ரத்ன –ஆதி ராஜ்ய ஜல்பிதா -ரெங்கராஜ ஸ்தவம் )எனக்கு காரணமாய் இருக்கிறவனை காணுமவர்களுக்கு அரிது –

பிரகிருதி ப்ராக்ருதங்களிலே அருசியும் -எம்பெருமானைக் காண்கையிலே ருசியும் யுடையார்க்கு எளிதாகக் காணலாம் என்கிறது -பொய்ந்நின்ற –இத்யாதி –(இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்பதே வைராக்யம் )

மகிழ் இத்யாதி -கர்ம அனுகுணமாக சரீரங்கள் தோறும் நுழைகை -யாதானும் ஓர் ஆக்கை –(திரு விருத்தம் -95)
முகிழ் விரிந்த சோதி -செவ்விப் படிக் கோலம் (இரண்டாம் திருவந்தாதி )-

எம்மாதி –(காரணமாக இருப்பதாலே ரக்ஷகன் )ப்ராபகனை – காண்பார்க்கும் -கேட்ப்பார்க்கும் அரிது(கேட்கவும் புத்தி போகாதே வைராக்யம் இல்லாமல் இருந்தால் )
இப்படி ஆஸ்ரயிப் பார்க்கில் அல்லது ப்ரக்ருதியை உகப்பார்க்கு முகம் கொடுக்கும் இதர புருஷன் அல்லன் -(புல்கு பற்று அற்றே -பற்று அற்றே புல்க வேண்டும் -பரித்யஜ்ய -விட்டே -வ்ரஜ பற்ற வேண்டும் )

ஸ்ரீமத்பகவத்கீதா ஸாரம்:கீதாஸாரம்:ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-1)

ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான-

(படு நா ஏக வராடிகா இவ க்ல்ப்தா ஸ்தலயோ கா கணி கா ஸூ வர்ண கோட்யோ
பவ மோக்ஷ ணயோ த்வயா ஏவ ஐந்து க்ரியதே ரெங்க நிதே த்வம் ஏவ பாஹி –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–88-

எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகில் சர்வ முக்தி பிரசங்கமாய் லீலா விபூதி விச்சேதம் வாராதோ என்கிற
சங்கையில் நிராங்குச ஸ்வா தந்தர்யத்தாலே வாராது என்று பரிஹாரம் என்று திரு உள்ளம் பற்றி
சமர்த்தனாய் ஸ்வ தந்திரனாய் இருக்கும் ஒரு ராஜா தன் ராஜ்யத்தில் ஒரு பலகறையை ஸ்வல்ப பரிமாணமான
ஸூவர்ண ஸ்தானத்தில் யாக்கி அத்தாலே சில நாள் கிரய விக்ரய ரூப கார்யம் செல்லா நிற்க –
பின்பு ஒரு காலத்திலேயே அத்தையே ஸூவர்ண கோடி ஸ்தானத்தில் ஆக்கிச் செலுத்துமா போலே
ஒரு சேதனனை தேவரும் ஸ்வ தந்தரராய் சில நாள் சம்ஸ்பரிப்பித்து-
பின்பு ஒரு கால் கர்ம ஞான பக்தி பிரபத்தி இத்யாதி வியாஜங்களை உண்டாக்கி முக்தனாம் படி பண்ணுகிறது

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி ––ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –25-

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –)

—————————————————————-

எல்லாம் செய்தாலும் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே விரக்தி பிறந்து அவனை
ஆஸ்ரயிக்கப் பார்க்க அல்லது அவனைக் காண முடியாது -என்கிறார்

கணிதத்தில் நிபுணனாலே வைக்கப் பட்டதொரு மகிழ் அலகு காணி ஸ்தானத்திலும் கோடி ஸ்தானத்திலும்
மாறி மாறி நிற்குமா போலே -பகவத் சங்கல்பத்தாலே -கர்ம அனுகுணமாக உச்சாவச ரூபேண (உயர்ந்த தாழ்ந்த சரீரங்கள் )மாறி மாறி
வரக் கடவ ப்ரஹ்மாதி பீபிலி காந்தமாக பலவகைப் பட்ட சரீரங்கள் தன்னடையே விட்டு நீங்கும் படியாக
ஞான பக்தி வைராக்ய சம்பாதன முகேன யத்னம் பண்ணுமவர்களுக்கு அல்லது விகசித ஸ்வரூபமான
தேஜஸைப் போலே தோற்றுகிற தேஜஸை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான
திரு அபிஷேகத்தை யுடையனாய் -எல்லார்க்கும் என்னுடையவன் என்று முறை சொல்லிப் பற்றலாம் படி
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் -கேவலம் காண வேணும் என்று இருப்பார்க்கும் அரியனாய் இருக்கும் –

———————————————————————–

(உலகு எல்லாம் ஆசை வளர்க்க -தப்பாக -எண்ணுகிறோம் இவை வைராக்யம் வளர்க்கவே அல்பமாகவும் அஸ்திரமாகவும் உள்ளன
இவற்றுக்கு மாற்று பகவத் அனுபவம் -ஸ்திர அநந்தம் அன்றோ

வாமன த்ரிவிக்ரமன் -அபேஷா நிரபேஷமாக அளந்தானே
ஆசா லேசம் இருந்தாலே கிட்டலாம்
தோஷம் இருந்தாலும் விலக்காமை -அத்வேஷம் இருந்தால் ரக்ஷிப்பான்
மஹா பலியே பெற்றானே -கைமுதிக நியாயம் )

இந்திரியங்களை விஷயங்களில் போகாமல் காத்து அவன் பக்கலிலே ஸ்நேஹிக்கில் காண எளிது -என்கிறார் –

இதர விஷய சங்கம் அற்று ஸ்நேஹ புரஸ் சரமாக ஆஸ்ரயிக்குமவர்களுக்கு அவனைக் காணச் சால எளிது -என்கிறார் –

அரிய புலன் ஐந்தடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது -50-

பதவுரை

அரிய–அடக்க முடியாத
புலன் ஐந்து–பஞ்சேந்திரயங்களையும்
அடக்கி–கட்டுப் படுத்தி,
ஆய்–ஆராயந்தெடுக்கப்பட்ட(ஆய்ந்து ஆராய்ந்து -காய் கறிகளை ஆய்வது ஆராய்ந்தே பண்ண வேண்டும் )
மலர்–புஷ்பங்களை
கொண்டு–கையில் ஏந்திக் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால்–அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில்–கிட்டப் பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்–‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தை யுடையனாய்
தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலி யிடத்தில்
வண் கை–உதாரமான தனது திருக் கையாலே
நீர் ஏற்றானை–உதக தாநம் வாங்கின பெருமானை
காண்பது–ஸேவிப்பது
எளிது–ஸுலபமாகும்.

அரிய புலன் ஐந்தடக்கி –ஒரு செய்யிலே பாயும் நீர் இரண்டு செய்யிலே பாய்ந்தால் இரண்டு செய்க்கும் போராது ஒழியும் இறே –
சர்வேஸ்வரனை இச்சிக்கக் கடவவான இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி -அரிய-என்றது-
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் –பிராதி கூல்யமான வாயுவை நியமிக்க அரிது ஆனால்
போலே மனசை நியமிக்க அரிது என்று அர்ஜுனன் சொன்னபடியே இருக்கை –

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் –
வலிமை உடையதாகவும் -அதனாலே கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் -அர்ஜுனன்-நினைக்கிறேன்

ஆய்மலர் கொண்டு –செவ்விப் பூக்களைக் கொண்டு
ஆர்வம்-புரிய பரிசினால் –ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே
புல்கில் -அணையில் –
பெரியனாய்-மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்-ஏற்றானைக் காண்பது எளிது —
உதாரமான கையைக் கொண்டு நீர் ஏற்றவனைக் காண்கை எளிது –புல்கப் பெறில்-பெரியனாய் -ஐஸ்வர்யமும் உதார குணமும் –
வண கை -கொடுத்து வளர்ந்த கை – நீர் ஏற்றானைக் காண்பது எளிது -அப்ரதி ஷேதம் யுடையார்க்கு அர்த்தியாய் வரும் என்றவாறு –

(சஞ்சலம் ஹி மனஸ் க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யார்ஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ் கரம் –ஸ்ரீ கீதை -6-34-
விலக்காமையே பற்றாசாகக் கொண்டு மஹாபலியிடம் யாசகனாய் வந்தவன்
அரிய புலன் ஐந்து அடக்கி
ஆய் மலர் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால் புல்கில் எளியனாவான் என்பதைச் சொல்லவும் வேணுமோ -)

————————————————————————

இதர விஷய சங்கம் அற்று ஸ்நேஹ புரஸ் சரமாக ஆஸ்ரயிக்குமவர்களுக்கு அவனைக் காணச் சால எளிது -என்கிறார் –

நியமிக்க அரிதான ஸ்ரோத்ராதி ஞான இந்திரியாதிகள் ஐந்தையும் இதர விஷயங்களில் போகாத படி நியமித்து
அங்குத்தைக்கு யோக்யமாம் படி மயிர் புழு அறச் சோதித்த செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு
ஸ்நேஹ உத்தரமான பிரகாரத்தாலே -அபிமத விஷயத்தை அணைக்குமா போலே போக ரூபமாக ஆஸ்ரயிக்கில்-
(ஈஸ்வரோஹம் )ஈஸ்வரனிலும் காட்டில் தன்னைப் பெருக்க நினைத்து இருக்குமவனாய் அர்த்திகளுக்கு கொடுக்கும்
கொடையில் ஒன்றும் மாறாமல் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவன் -என்று தன் வேறுபாடு தோற்ற வீற்று இருந்த
மஹா பலி பக்கல் கொடுக்கக் கொடுக்க பூரிக்கிற அழகிய திருக் கையாலே தான் அர்த்தியாய் சென்று
நீரை ஏற்று மண் கொண்டவனைக் கண்டு அனுபவிக்கை சால எளிதாய் இருக்கும்

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -31-40– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அனுசந்தித்தால் -வேறே ஒன்றை ஒரு சற்றுப் போது அனுசந்திக்கலாமோ -என்கிறார் –
இவ்விஷயத்தை ஒரு க்ஷண காலமும் விட்டு இருக்கை சாஹாசிகம்-என்கிறார் –

ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு உண்டான பாரதந்தர்ய வாத்சல்யங்களை அனுசந்தித்தால்
வேறே ஒரு விஷயத்தை க்ஷண காலமும் நினைக்கப் போமோ -என்கிறார் –

புரி யொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரி யுருவும் ஆளுறுவுமாகி எரி யுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை –31-

பதவுரை

ஒரு கை புரி பற்றி–ஒரு திருக் கையிலே வலம்புரிச் சங்கத்தை ஏந்தி(பற்று -பாஞ்ச ஜன்யம் தானே போகப்போக இழுத்துப் பிடித்து பற்ற வேண்டுமே )
(மற்றொரு திருக் கையிலே)
ஓர் பொன் ஆழி ஏந்தி–ஒப்பற்ற அழகிய திருவாழியை ஏந்தி(ஆயுதம் இல்லையே இது -ஆகவே அழகிய விசேஷணம் )
ஆள் உருவம் அரி உருவம்–நரமும் சிங்கமும் கலந்த வடிவை யுடையனாய்க் கொண்டு
எரி உருவம் வண்ணத்தான்—அக்நியின் வடிவம்போலே [கண்ணெடுத்துக் காண முடியாத] வடிவத்தை யுடையனான இரணியனுடைய
மார்பு–மார்பை
இடந்த–நகத்தால் குத்திப் பிளந்து போட்ட
மால்–திருமாலினுடைய(ஆஸ்ரித பக்ஷபாதியினுடைய -அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் இதுக்காகவே )
அடியை அல்லால்–திருவடிகளைத் தவிர
மற்று–வேறொரு விஷயத்தை
இமை–க்ஷண காலமேனும்
எண்ணத்தான் ஆமோ–நினைப்பதற்கேனும் முடியுமோ? [முடியாது.]

இமைக்கும் பொழுதும் – நொடிப் பொழுதும் வேறே ஒரு விஷயத்தை நினைக்கவும் முடியுமோ -முடியாதே என்றபடி-இமை -நினைக்கை என்றும்

புரி யொரு கை பற்றியோர் பொன்னாழி ஏந்தி–வலம் புரியில் -வலம் -என்கிற இடத்தைக் குறைத்துக் கிடக்கிறது(ரெங்க நாத முனி -நாத முனி போல் குறைந்தது போலவும் -சத்யா பாமா -பாமா போல் குறைந்தது போலவும் )

அரியுருவும் ஆளுறுவுமாகி–ஆயுதங்களை ஒழியவும் இரண்டு வடிவாலும் சாகேன் என்று வேண்டிக் கொண்ட படியால்
நரத்வ சிம்ஹத்வங்களை ஒரு வடிவாகக் கொண்டவன்(அகடிகடநா ஸாமர்த்யம் )

எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த–அநபிபவ நீயனான ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்த

மாலடியை யல்லால் மற்று-எண்ணத்தான் ஆமோ இமை ——-இமை கொட்டி விழிக்கும் போது வேறு ஒன்றை எண்ணல் ஆமோ
அன்றிக்கே -நெஞ்சை -அத்யாஹரித்து-வேறு ஒன்றை எண்ணப் போமோ –இமை -பார் என்றுமாம் –

புரி இத்யாதி -ஹிரண்யன் மேலே விழுகிறவனை விலக்கினால் போலே –
பொன்னாழி ஏந்தி –ஹிரண்யன் திரு உகிருக்கு இரையாய்ப் போனான் –திரு வாழி அழகுக்கு பிடித்த அத்தனை –
அரி-இத்யாதி -விசாரியா நிற்கப் பற்றாமே இரண்டு வடிவையும் கொண்டு தோற்றின படி –
எரி யுருவ வண்ணத்தான் -அணுக ஒண்ணாத படி அநபிபவ நீயனாய் இருந்த படி –
மால் -கார்யப் பாட்டால் அன்றியே பிள்ளை பக்கல் வியாமோஹத்தால் கீண்டான் —

இமை -பார் என்னவுமாம் –

மால் -பேர் அன்பு-வ்யாமோஹம் -அடியார் துயர் தீர்த்த ஆனந்தம் -யரும் செயல் செய்த சர்வாதிகன் -மூன்றும்-

(மால் அடியை அல்லால் மற்று எண்ணத்தான் ஆமோ இமை -ஆள் இட்டு அந்தி தொழாதே -அடியார் ஆபத்தைத் தானே தவிர்த்த பெருமானுடைய திருவடியை அல்லால் வேறொரு விஷயத்தைக் கணப் பொழுதும் எண்ண முடியுமோ –
இமை -கண் இமைக்கும் நேரம்
அன்றிக்கே -நெஞ்சே இப்படி அடியார் திறத்து பாரதந்தர்ய வாத்சல்யங்களை யுடையவனை அனுசந்தித்தால்
வேறே ஒன்றை எண்ணப் போமோ இத்தை எண்ணிப் பார் என்றுமாம் -இமை பார் -என்றவாறு -)

————–

ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு உண்டான பாரதந்தர்ய வாத்சல்யங்களை அனுசந்தித்தால்
வேறே ஒரு விஷயத்தை க்ஷண காலமும் நினைக்கப் போமோ -என்கிறார் –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஒரு திருக் கையாலே தரித்து மற்றைத் திருக் கையாலே அத்விதீயமாய் ஸ்ப்ருஹணீயமான
திரு வாழியைப் பரிந்து (ஏந்தி) -இவற்றுக்கு விஷயம் இல்லாத படி -நரத்வ ஸிம்ஹத்வங்கள் இரண்டுக்கும் ஆஸ்ரயமான
வடிவை யுடையனாய்க் கொண்டு –

அக்னியினுடைய வடிவு போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத
வடிவை யுடையனான ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்து பொகட்ட ஆஹ்லாதத்தாலே ப்ரஹ்லாதன் பக்கல்
வியாமுக்தன் ஆனவனுடைய திருவடிகளையே ஒழிய ஒரு க்ஷண காலமும் வேறு விஷயத்தை நினைக்கத் தான் போமோ

அன்றிக்கே -நெஞ்சை அத்யாஹரித்து வேறு ஒன்றை எண்ணப் போமோ -இத்தை அனுசந்தித்துப் பார் –

கத்யத்தில் -மதீய ஏவ -தயை ஏவ-என்னுடையதே யான காருண்யத்தாலேயே போல் -திருவடிகளையே -ஒழிய வேறே ஒன்றை எண்ணப் போமோ

———–

(சாதனந்தரம் செய்ய சக்தியும் பிராப்தியும் இல்லை
சேஷ சேஷி பாவ சம்பந்தம்  போதும் -ஞானம் என்னும் உட் கண்ணால் பார்த்து அறிந்தால் போதும் -அவனே அவனைக் காட்டி அனுபவிப்பான்

நமையாமல் -புலன்களைக் காவலில் வைக்க முடியாமல் இருந்தாலும் -நெஞ்சால் நினைக்கவே -தடுக்காமல் இருந்தாலே போதும்

நாகத் தணையான் நகர்- திரு நாமம் சாத்துகிறார் -ஸ்ரீ வைகுண்டத்துக்கு -வானவர் நாடு தானே

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -)

அவன் மேல் விழ விலக்காதார்க்கு-இந்திரிய ஜெயம் பண்ண சக்தர் அன்று ஆகிலும் கிட்டலாம் -என்கிறார் —
சர்வேஸ்வரனுடைய பரம பதம் -ஆஸ்ரயியா தார்க்குக் கிடைக்குமோ -ஆஸ்ரயித்தார் பேர விரகுண்டோ-
ருசி மாத்திரம் உடையார் அவனால் பெரும் அத்தனை என்றும் -அவன் அல்லது (உபாயம்)இல்லை என்றும் -அருளிச் செய்கிறார் -(நாகத்தணை எம் பிரான் சரணே சரண் )

சாஸ்திரங்களில் சொல்லுகிற சாதன அனுஷ்டானங்களில் அந்வயம் இல்லையே யாகிலும்-
சேஷ சேஷித்வ ரூபமான உறவை அறிந்தவர்களுக்கும்-பரம பதத்தை ப்ராப்பிக்கலாகும் கிடீர் -என்கிறார் –

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர்-32–

பதவுரை

இமையாத கண்ணால்–[ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்] உட்கண்ணாலே
இருள் அகல–[அஜ்ஞாநமாகிய] அந்தகாரம் நீங்கும்படியாக
நோக்கி–(தன் ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளபடி) கண்டு
அமையா–த்ருப்தி பெற்று அடங்கி யிராத
பொறி புலன்கள் ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும் (அவற்றிற்கு உரிய சப்தாதி) பஞ்ச விஷயங்களையும்
நமையாமல்–அடக்காமலே(காவல் இல் புலன் இத்தையே தொண்டர் அடிப்பொடி )
ஆகத்து அணைப்பார்–(மாதர்களின்) தேஹத்தை அணைத்துக் கொண்டு கண்டபடி திரிபவர்கள்
ஆயிரம் வாய் நாகத்து அணையான்–ஆயிரம் வாய்களைக் கொண்ட ஆதி சேஷனைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
நகர்–நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை
அணைவரே–கிட்டப்பெறுவர்களோ?.

இமையாத கண்ணால்–ஞான சங்கோசம் அற்ற உட் கண்ணாகிய நெஞ்சால்
அமையா -அடக்க ஒண்ணாத –நகர் -நகரம் ஆகிய ஸ்ரீ வைகுண்டத்தை –

இமையாத கண்ணால்–கண் என்றும் -உட் கண் என்றும் -சொல்லக் கடவது –
அதில் உட் கண்ணாலே -மனஸா து விஸூத்தேன-என்னும் படி –
இருள் அகல நோக்கி–அஞ்ஞான அந்தகாரம் போம் படியாக நோக்கி –

அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -அமைக்கப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் –
நமையாமல்-ஐயயியாது இருக்கச் செய்தே(அநல -போதும் என்றே சொல்லாத அக்னி போல் மனஸ்ஸூ விஷயாந்தரங்களைத் தேடித் போகுமே )

(இயப்பின்னை இமையை நீக்கி –விளக்கினை விதியிலே காண்பார் -அஷ்ட மஹா சித்தியை விளக்கி- கிட்ட முடியாது என்றாரே கலியனும்)

ஆகத் தணைப்பார் -அவன் மேல் விழ -விலக்காதவர்கள் அனைவரும்
அணைவரே ஆயிர வாய்-நாகத் தணையான் நகர் ——என்கிற இத்தால்

1-ஒருவனே எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்என்கிற இடமும் –

2-ஒரு தேச விசேஷம் உண்டு என்னும் இடமும் –

3-அத் தேசமே ப்ராப்யம் என்னும் இடமும் சொல்லுகிறது

இமையாத கண் -நெஞ்சு என்னும் உட் கண் -திரு வாசலை நீக்கி அவனையும் தன்னையும் உள்ளபடி அறிகை –
அமையா -திரிய விடுவிக்க ஒண்ணாத பொறி ஐந்தும் புலன் ஐந்தும் -நமையாமல் -நியமியாமல்
ஆகத்து அணைப்பார் -மூலையடி என்னுதல் -அவன் மேல் விழா நின்றால் இறாயாமல் என்னுதல் –

(அணைவரே –
பெண்ணை அணைப்பார் என்றும்
அவன் மேல் விழா நிற்க விலக்காமல் இருக்கை)

நாகத் தணை-பர்யங்க வித்யை –

(ந சஷுஷா க்ருஹ்யதே -முண்ட -3-1-8-புறக் கண்ணால் காணப்படாதவன் பரமாத்மா
மனஸா து விஸூத்தோ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -275-2-
என்றேனும் கட் கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28-
அமையாய் பொறி -என்றது
ந ஜாது காம காமாநா முப போகே ந ஸாம்யதி
ஹவிஸா க்ருஷ்ண வர்த்தமேவ பூய ஏவாபி வர்த்ததே என்று
காமுகர்களின் காமம் விஷய அனுபவத்தால் அடங்காமல் மேலேம் மேலும் விருத்தி அடையும்
ஆஹுதியினால் நெருப்பு மேன் மேலும் கொழுந்து விட்டு எரியுமா போல் –
அமையாப் பொறி -அமையாப் புலன் -என்று அடக்க முடியாத விஷயங்களும் புலன்களும் –
காவல் இல் புலனை வைத்து –
ஆயிரவாய் நாகத்தணையான் நகர்-
மோக்ஷம் என்பது ஒரு தேச விசேஷத்திலே அடையப்படுவதே என்றும்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்றும் உணர்த்தப்படுகிறது –
இந்திரியங்களை ஜெயிக்காமல் மூலையடியே திரியுமவர்கள் பரமபதத்தை அடைய மாட்டார்களே -)

———–

சாஸ்திரங்களில் சொல்லுகிற சாதன அனுஷ்டானங்களில் அந்வயம் இல்லையே யாகிலும்-
சேஷ சேஷித்வ ரூபமான உறவை அறிந்தவர்களுக்கும்-பரம பதத்தை ப்ராப்பிக்கலாகும் கிடீர் -என்கிறார் –

ஞான சங்கோச ரஹிதமான நெஞ்சு என்னும் உட் கண்ணாலே அஞ்ஞானம் ஆகிற வல்லிருள் விட்டு நீங்கும் படியாக
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உள்ளபடி தரிசித்து பெற்ற விஷயங்களால் பர்யாப்தி பிறக்கக் கடவது அன்றிக்கே
இருக்கற யந்த்ர கல்பமான ஸ்ரோத்ராதிகள் ஐந்தையும் -தத் விஷயமான சப்தாதிகள் ஐந்தையும் நியமியாமல்
சம்பந்த ஞான மாத்ர யுக்தராய்க் கொண்டு ஹ்ருதயத்தில் அவனை வைத்து அநுஸந்திக்கும் அவர்கள்
அவனைப் புகழுகைக்கு ஆயிரம் வாயை யுடைய திரு வனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய
சர்வேஸ்வரனுடைய கலங்காப் பெரு நகரைச் சென்று கிட்டப் பெறுவர் –

அந்த சாதன அனுஷ்டானம் பண்ணாதார்க்கு பரம பதத்தை பிராபிக்கப் போமோ -என்றுமாம் –

அமையாய் பொறி புலன்கள் என்று நியமிக்க அரிதான விஷய இந்திரியங்கள் என்றுமாம் –

—————————————————————————————————

சர்வேஸ்வரனை நெஞ்சால் (எண்ணாமல்)ஆதரியாதே பண்ணுகிற கர்த்தவ்ய தந்த்ரத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறார் -(பயன் அல்ல என்பது மட்டும் அல்ல -அவன் இடம் இருந்து விலக்கவும் செய்யும் )

எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாதே பண்ணும் சந்த்யா வந்தநாதி கர்மாநுஷ்டானம் நிஷ் பிரயோஜனம் -என்கிறார் –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் –33–

பதவுரை

பூ மேல்–திருநாபிக் கமலத்திலே
நான்முகற்கு–பிரமனுக்கு
நகரம் அருள் புரிந்து–இருப்பிடத்தை ஏற்படுத்தி யருளியும்
பகர–(யோக்யர்களெல்லாரும்) ஓதும் படியாக
மறை–வேதத்தை
பயந்த–உபகரித்தும் வைத்த
பண்பன்–குண சாலியான எம் பெருமானுடைய
பெயரினை–திருநாமங்களை
பிந்தியால்–மனத்தினால்
சிந்தியாது–எண்ணாமல்
ஓதி உரு எண்ணும்–ஜபம் செய்வதும் உருச் சொல்வதுமான ஸந்த்யா வந்தனம் முதலிய கர்மாநுஷ்டாநங்களால்
அங்கு ஆம் பயன் என்–உண்டாகப் போகிற பிரயோஜனம் என்ன?(ஒன்றுமில்லை.)

(விதி யாரை விட்டது -விதி நான்முகன் -ஸ்ருஷ்டித்து -இடம் கொடுக்க -நாபி ஆகிய மஹா நகரம் -எங்கு உள்ளேன் என்று தேடி -கண்டு பிடிக்க முடியாமல்
தபஸ்ஸூ இருந்து ப்ரஹ்மம் மூலம் அறிந்து கொண்டாரே )

நகர மருள் புரிந்து—வாசஸ் ஸ்தானத்தை கொடுத்து அருளி
பகர -பிறருக்கு ஓதுவிக்கும் படி
அந்தியால் -சந்தியா வந்தனத்தால் –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்-பகர மறை பயந்த பண்பன்–பிறருக்கு ஓதுவிக்கும் படி ப்ரஹ்மாவை ஓதுவித்த
நீர்மையை யுடையவனுடைய -செல்வப் பிள்ளையைத் தேவைக்கு ஓதுவிக்குமா போலே –
பெயரினையே-புந்தியால் சிந்தியாது –அவனுடைய திரு நாமங்களையே நெஞ்சால் நினையாது
தோதி யுரு வெண்ணும்-அந்தியா லாம் பயன் அங்கு என் —-அல்லாதவற்றை ஓதிச் சென்று அவ்வுருவை எண்ணும்
சத்யாவந்த நாதிகளால் என்ன பிரயோஜனம் உண்டு -எம்பெருமானுக்கு உடல் அல்லாத கேவல ஸந்த்யை வ்யர்த்தம் –

நகரம் -இத்யாதி -திரு நாபீ கமலத்தை நகரமாக பிரசாதித்தான் -ப்ரஹ்மாவுக்கு ஜென்ம தேசத்தையே கொடுத்தான்
அந்தரங்கர்க்கு கிட்ட மாளிகை சமைக்குமா போலே
பகர இத்யாதி –அந்த வேண்டப்பாட்டுக்கு மேலே நாட்டாரை ஓதுவிக்கைக்கு வேதத்தை கொடுத்தான் –
பண்பன் -அந் நீர்மை மறக்க ஒண்ணாமை

பெயர் இத்யாதி -ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே
ஆம் பயன் எங்கென்–எம்பெருமானை அகலுகையே பலித்து விடுவது —
பெயரினையே -அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமம்
ஓதி இத்யாதி – அஹ்ருதயமாகப் பண்ணும் ஆயாச ரூபமான கர்மத்தைப் பற்றுவதே –

———————-

எம்பெருமானை உள்ளீடாகக் கொள்ளாதே பண்ணும் சந்த்யா வந்தநாதி கர்மாநுஷ்டானம் நிஷ் பிரயோஜனம் -என்கிறார் –

அந்தரங்கர்க்கு கிட்ட மாளிகை கட்டுமா போலே ஜென்ம பூமியான திரு நாபீ கமலத்தில் சதுர்முகனுக்கு இருப்பிடத்தை
கிருபா புரஸ்சரமாக பண்ணிக் கொடுத்து இவ்வருகு உள்ளார்க்கும் ஓதுவிக்கத் தக்கதாக தத்வ ஞாபனமான
வேதத்தை உபகரித்த ஸுசீல்யாதி குணங்களை உடையவனானவனுடைய அந்த குணங்களுக்கு வாசகமான
திரு நாமங்களை மனசால் அனுசந்தித்து வாங்மாத்திரத்தாலே ஜபித்து -இடக் கை பற்றிக் கொண்டு அனுஷ்டிக்கிற
சந்த்யா வந்தநாதி கர்ம அனுஷ்டானங்களால் அவ் விடத்தில் யுண்டான பிரயோஜனம் ஏது-

————–

(ஈஸ்வரனுக்கு அச்சம் கூடுமோ என்னில் -சமர்த்தனான -அகடி கடநா சாமர்த்தியம் உள்ளவனுக்கு ஸ்நேஹத்தால் பால் கொடுத்த யசோதை ஸ்நேஹம் மெய்யே என்பர்)

பிரளயத்தில் லோகத்தை எல்லாம் தன் திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலிலையிலே தனியே
கண் வளரா நின்ற ஈஸ்வரனுக்கு அஞ்சுகிற யசோதை பிராட்டி யுடைய ஸ்நேஹம் ஓர் ஸ்நேஹமே -என்கிறார் –
சோபாதிகமாக அன்றியே ஸ்வ பாவத ஏவ ஸ்நேஹிக்கும் அவளை நினைக்கிறார் –

இவ் விஷயத்தில் தலையான பக்தியை யுடையாளாய்க் கொண்டு அவனை
அனுசந்திக்கப் பெற்றவள் யசோதைப் பிராட்டி ஒருத்தியுமே யன்றோ என்கிறாள் –

என்னொருவர் மெய் யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த் தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க் கண்
ஆய்த் தாய் முலை தந்தவாறே –34–

பதவுரை

முன்–முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு–ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில்–ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய–துணையற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில்வண்ணா–காளமேகத் திருவுருவனான பெருமானே!
நின் உருகி–உன்விஷயத்தில் உருக்கம் கொண்டவள் போல மேலுக்குக் காட்டி
முலை தந்தாள்–முலை கொடுத்தவளான
பேய் தாய்–பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள்–அவ் விடத்தில் றின்றும் பேர மாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண்–பெரிய அந்த யுத்த பூமியில்(இரண்டு கண்களும் ஒன்றுக்கு ஓன்று அமர் செய்யும் )
ஆய் தாய்–இடைத் தாயாகிய யசோதை யானவள்
முலை தந்த ஆறு–முலை கொடுத்த விதத்தை
ஒருவர்–ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸ பராஸராதி ரிஷிகள்
மெய் என்பர்–மெய்யென்று சொல்லா நிற்பர்கள்;
என்–இது என்ன ஆச்சரியம்?

1-என்னொருவர் மெய்யென்பர் -இத்தை ஒருவர் மெய் என்னும் படி எங்கனே என்னவுமாம் -(இவள் பரிந்தது மெய்யே )

2-என் என்று -எத்திறம் என்னும்படியே சொல்லவுமாம் —

ஒருவர் மெய்யென்பர்- அறிந்த ருஷிகளிலே சிலர் அர்த்த வாத சங்கை இல்லை இது மெய் -என்பர் –

ஏழு உலகு உண்டு ஆலிலையில்–எழு உலகத்தையும் திரு வயிற்றிலே வைத்து ஆலிலையிலே
முன்னோருவனாய முகில் வண்ணா–முன்பு தனியேயாய் ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே –

பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் –பேயான தாய் முலையைத் தந்து திருமேனியினின்றும் பேராதே கிடைக்கச் செய்தே
நின்னுருகிப் பேரமர்க்கண்-ஆய்த்தாய் முலை தந்தவாறே —-உனக்கு நல்லவளாய் -யசோதை பிராட்டி
விஷத்துக்கு அம்ருதமாக முலை தந்தவாறு இது என்ன ஆச்சர்யம் –

என் -எத்திறம் – ஒருவர் மெய் என்பர் -விலக்ஷணர் மெய் என்பர் –இத்தை ஒருவர் மெய் என்பதே
என் என்ற போதே ஜகத்தில் நடையாடுவதொரு ஸ்நேஹம் ஆகில் அன்றோ மெய் என்னாலாவது –

ஏழு-இத்யாதி -நீ செய்யும் செயலுக்கு அடைவு யுண்டாகில் இறே உன்னை ஆஸ்ரயித்தார் செயலுக்கு அடைவு யுண்டாவது –
ஒருவனாய் -பரிஹரிக்கத் தாயும் தமப்பனும் ஒருவரும் இல்லை – முகில் வண்ணா -பரிவர் வேண்டி இருக்கிறபடி
நின்னுருகி -உன் குணங்களுக்கு உருகி –

பேர்த்து இலளால் –அப் பிணம் கிடைக்கச் செய்தே–
அப் பேயின் கையிலே அகப்பட்ட தடையப் படுத்திக் கால் நடை தந்து -நஞ்சுக்கு பரிஹாரமாக அம்ருதமான முலையைக் கொடுத்த படி –

(ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே ஸாந
படியாதுமில் குழவிப்படி எந்தை -திருவாய் -3-7-10-
அகடிதகடநா சமர்த்தனானவனுக்கு அஞ்சுகிற யசோதை பிராட்டியுடைய ஸ்நேஹமும் ஒரு ஸ்நேஹமே என்று வித்தாராகிறார் – )

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ  -சலமே தான்
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து —-மூன்றாம் திருவந்தாதி —-74-

————–

இவ் விஷயத்தில் தலையான பக்தியை யுடையாளாய்க் கொண்டு அவனை
அனுசந்திக்கப் பெற்றவள் யசோதைப் பிராட்டி ஒருத்தியுமே யன்றோ என்கிறாள் –

பிரளயத்தில் அழியாதபடி சப்த லோகங்களையும் அமுது செய்து முகிழ் விரியாததோர் ஆலந்தளிரிலே
ஒரு பரிவரும் இல்லாத பிரளய சமயத்திலே அஸஹாயனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளின
காள மேக நிபாஸ்யமான வடிவை யுடையவனே –

அற்றை இழவு தீர உனக்கு ஸ்நேஹித்து பரிவுடனே
முலை தந்து உகப்பித்தாளாய் இருந்து பேய்த் தாயான பூதனையானவள் அவ்விடத்தின் நின்றும்
பேர மாட்டாமல் பிணமாய் விழுந்தாள்-அத்தை பெரிய சமர பூமியிலே (கண்ணனும் பூதனையும் யுத்தம் செய்த இடத்திலே )இடைத்தாயான யசோதை பிராட்டி
அஞ்சாமல் அந்த விஷத்துக்கு அம்ருதமான முலை தந்த பிரகாரத்தை –

அறிவுக்கு அத்விதீயரான வியாச பராசராதிகள் ஆன ரிஷிகள் பரமார்த்தம் என்று சொல்லா நிற்பார்கள் -எங்கனே

நாட்டில் கண்டு அறிவதொரு ஸ்நேஹம் ஆகில் அன்றோ மெய் என்னாலாவது -அகடி தகடிநா சமர்த்தனானவனுக்கு அஞ்சுகிற
யசோதை பிராட்டி ஸ்நேஹமும் ஒரு ஸ்நேஹமே -என்று வித்தாராகிறார் –

————————————————————————————-

யசோதை பிராட்டியோபாதி ஸ்நேஹம் இன்றிக்கே -அவளுடைய ஸ்நேஹத்தை யுடைத்தாக
பாவிக்கிறவர்களுடைய குற்றத்தைப் பொறுத்து அருள வேணும் -என்கிறார் -(பொய்யே கைம்மை சொல்லி –மெய்யே பெற்று ஒழிந்தேன் )

இவளுடைய ஸ்நேஹத்தைக் கண்டவாறே அல்லாத தம் போல்வார் ஸ்நேஹம் பிராதி கூல்ய சமமாய் தோற்றி
அத்தைப் பொறுத்து அருள வேணும் என்று அவனை க்ஷமை கொள்கிறார் –

ஆறிய வன்பில் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி யடைதற் கன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண் -35–

ஆறிய அன்பு இல்–யசோதை போல் பொங்கித் ததும்பிய நிரம்பின பக்தி யில்லாதவர்களாய்
அடியார்–சேஷத்வ ஜ்ஞாந மாத்திரத்தை யுடையராயிருப்பவர்கள்
தம் ஆர்வத்தால்–தங்களுடைய ஸ்நேஹத்தாலே
கூறிய–சொல்லும் வார்த்தைகளை
குற்றம் ஆ–குற்றமாக
நீ கொள்ளல்–நீ கொள்ளாதே;
(அது ஏனெனில்)
ஈர் ஐந்து முடியான்–பத்துத் தலைகளை யுடையனான ராவணன்.
படைத்த–புத்தி பூர்வகமாகப் பண்ணின
முரண்–தப்புக் காரியமானது
நெடியோய்—ஆஸ்ரித வாத்சல்யம் கொண்ட -பெருமை பொருந்திய உன்னுடைய
அடி–திருவடிகளை
தேறி அடைதற்கு அன்றே–தெளிந்து வந்து (கால க்ரமத்திலே சிசுபாலனாகிக் ) கிட்டுகைக்குக் காரணமாகி விட்டதன்றோ?

ஆறிய வன்பில் அடியார் –ஏறி மறிந்த பக்தி இல்லாதவர்கள் -(பேர் மாத்திரத்தில் அடியார் )
தம் ஆர்வத்தால்-கூறிய –தங்களுடைய ஸ்நேஹத்தால் சொன்னவற்றை
குற்றமாகக் கொள்ளல் நீ –நீ குற்றமாகக் கொண்டு அருளாது ஒழிய வேணும் –

நீர் குற்றத்தைச் செய்து வைத்து-குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்னப் போமோ என்னில் –

ஈரைந்து-முடியான்—படைத்த முரண் –தேறி—— நெடியோய் அடி யடைதற் கன்றே –
ராவணன் பண்ணின பிராதி கூல்யம் க்ரமத்தில் சிசுபாலனுக்கு உன்னை அடைகைக்கு உடல் ஆயிற்று இல்லையோ(ஜய விஜயர்கள் மூன்று பிறவி )
பிராதி கூல்யம் –ஆனுகூல்யமாகப் பலித்தால் -ஆனுகூல்ய ஆபாசம் ஆனுகூல்யமாகத் தட்டுண்டோ

தேறி -என்றது செய்த குற்றத்தை குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -என்றுமாம் –
அன்றிக்கே -தேறி என்றது சிசுபாலன் கையும் திரு வாழியுமாய் இருந்தபடி என் என்று நினைத்துக் கிடக்க
அதுவே (அந்த) அந்திம ஸ்ம்ருதி ஆனால் போலே யாகவுமாம் –

ஆறிய வன்பு–ஏறி மருந்து தன்னைப் பேணாதே அத் தலைக்குப் பரிகை -யசோதை பிராட்டி பரிவு தம்முடைய
பிராதி கூல்யத்தோடு ஒக்கும் என்கை -அவனுடைய பிராதி கூல்யம் தேறி அடைகைக்கு உடல் ஆயிற்று இல்லையோ
செய்த குற்றம் நற்றமாகவே கொள்–பொறுக்கவே அடைய நன்றாம் என்று இருக்கிறார் –

நெடியோய் -ஆனுகூல்ய லேசமுடையார் திறத்து நீ இருக்கும் இருப்பு எல்லை காணப் போமோ –(அன்பு வாத்சல்யம் ஸுசீல்யம் )

———————

இவளுடைய ஸ்நேஹத்தைக் கண்டவாறே அல்லாத தம் போல்வார் ஸ்நேஹம் பிராதி கூல்ய சமமாய் தோற்றி
அத்தைப் பொறுத்து அருள வேணும் என்று அவனை க்ஷமை கொள்கிறார் –

உனக்கு என் புகுகிறதோ -என்று பாரித்து வயிறு எரியும் படி -ஏறி மறிந்த பக்தி இன்றிக்கே -சேஷத்வ ஞான ஏக மாத்ர யுக்தராய்
இருக்குமவர்கள் தம் தம்முடைய ஸ்நேஹத்தாலே அனுபவிக்க வேணும் -அடிமை செய்ய வேணும் -என்றால் போலே
ஸ்வ பிரயோஜன கர்ப்பகமாக சொன்ன வார்த்தைகளை -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் (நெடுமாலான )அதி மாத்ர வத்சலனான நீ
குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் –

இது எங்கனம் கூடும் படி -என்று திரு உள்ளம் ஆகில்

பிராதி கூல்யனான ராவணன் புத்தி பூர்வகமாக பண்ணின திருவினைப் பிரித்த (கனிவாய் திருவினைப் பிரித்த – பெரிய திருமொழி -5-7-)மிகைச் செயலானது -ஆனுகூல்ய லேச யுக்தர் திறத்தில்
ஸ்நேஹ பஷ பாதங்களுக்கு எல்லை காண ஒண்ணாத பெருமையுடைய உன் திருவடிகளை
கால க்ரமத்திலே தெளிந்து சிசுபாலனாய்க் கிட்டுக்கைக்கு உடலாய் விட்டதில்லையோ –

அன்றிக்கே –
நீ தேறி ப்ரசன்னனாய் செய்த குற்றத்தை குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் -என்னவுமாம்
பிராதி கூல்யம் ஆனுகூல்யமாகப் பலித்தால் ஆனுகூல்ய ஆபாசம் ஆனுகூல்யமாகத் தட்டுண்டோ -என்றபடி –

———————————————————————————————

யசோதைப் பிராட்டி (போல் நமக்கு )ஸ்நேஹம் இன்றியிலே இருக்கச் செய்தே-அவளுடைய ஸ்நேஹம் யுண்டாக பாவித்துச் சொன்னவற்றைக்
குற்றமாகக் கொள்ளாது ஒழிய வேணும் என்று நீர் இரக்க வேணுமோ -தன்னுடைமையை வேறு ஒருத்தனதாக்கி வந்து இரக்குமவனுக்கு–

இப்படி கூறிய குற்றமாகக் கொள்ளல் என்று பொறை கொள்ள வேண்டாத படி -நீ தானே உன்னை அழிய மாறி
வந்து காரியம் செய்தது -ஸம்ஸாரிகளின் கோணையைப் போக்கி உனக்கு ஆக்கிக் கொள்ளலாம் என்று பார்த்தே -என்கிறார் –

(கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-)

(போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-)

(ஹிரண்யன் -அகங்கார உருவம்
மஹா பலி -மமகார உருவம்
இரண்டுமே அடியேன் தான்
ஸ்ரீ நரஸிம்ஹ -ஸ்ரீ வாமன த்ரிவிக்ரம -திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்கவே நாம் இவற்றைக் கொண்டுள்ளோம்

அதே திருக்கையால் இரண்டு சேஷ்டிதங்கள் -அளந்திட்ட தூணை அவன் தட்ட -அளந்திட்ட கையால் கொட்டாய் சப்பாணி -பெரியாழ்வார் )

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

பதவுரை

முன்னம்–முற் காலத்தில்(வாமன த்ரிவிக்ரம முன் அவதாரம் நரஸிம்ஹ அவதாரம் )
தரணி தனது ஆக தானே–பூமி யெல்லாம் தன்னுடைய தென்று அஹங்காரங் கொண்டிருந்த
இரணியனை–ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த–புண் படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர்–கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால்–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையினால்
நீ–நீ
மண் இரந்து கொண்ட வகை–(மாவலி யிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே–(ஸம்ஸாரிகளின்) முரட்டுத் தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலாமென்றல்லவோ?.

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்-தரணி தனதாகத் தானே இரணியனைப்-புண்ணிரந்த வள்ளுகிரால்
பொன்னாழிக் கையால் –முன்பே பூமி அடைய தன்னதாக அபிமானித்து இருந்த ஹிரண்யனைப் புண் படுத்தி பிளந்த வுகிரை
யுடைத்தாய் இருந்துள்ள பொன்னாழிக் கையால் –
நீ–பிரகாரம் -முரணை வலி தொலைதற்காம் என்றே—சர்வேஸ்வரனாய் இருந்துள்ள தம்முடைய அர்த்தித்தவம் தோற்ற நின்ற
ஸுலப்யத்தைக் காண -நாட்டாருடைய அஹங்கார மமகாரத்தாலே பிறந்த தண்மை நெகிழும் என்றே நீ இப்படிச் செய்தது –

முன்னம்-தரணி தனதாகத் தானே –முன்னே பூமி அடங்கலும் தன்னதாக அபிமானித்த மஹா பலி பக்கலிலே என்றுமாம்

முரணை -இத்யாதி -யசோதை பிராட்டியைப் போலே எங்களை உருக்கலாம் என்றே –
முன்னம் இத்யாதி -தன்னதாக உகக்குமாகில் நாம் இன்று பெற்றோமாக அமையாதோ -என்று இரந்து கொண்ட வலை –

———————-

இப்படி கூறிய குற்றமாகக் கொள்ளல் என்று பொறை கொள்ள வேண்டாத படி -நீ தானே உன்னை அழிய மாறி
வந்து காரியம் செய்தது -ஸம்ஸாரிகளின் கோணையைப் போக்கி உனக்கு ஆக்கிக் கொள்ளலாம் என்று பார்த்தே -என்கிறார் –

முன்பே உன்னதமான பூமியைத் தன்னதாகத் தானே அபிமானித்திருந்த ஹிரண்யனைப் புண் படுத்திப் பிளந்த
கூரிய திரு வுகிரோடு கூடி இருப்பதாய் ஸ்ப்ருஹணீயமான திரு வாழி யை யுடைத்தான திருக் கையாலே
ஸ்ரீ யபதியான நீ பூமியை ஆர்த்தித்து அளந்து கொண்ட பிரகாரம் -ந நமேயம் -என்கிறபடியே
தலை வணக்கற்றுத் திரியும் சம்சாரிகள் கோணை மிறுக்கு அறுக்கலாம் என்றே -இரப்புத் தோற்ற நின்ற
ஸுலப்யத்தையும் வடிவு அழகையும் காட்டி நான் எனக்கு என்று இருக்கும் மிறுகுதலை மீட்டு
உனக்கே ஆளாம் படி சேர்த்துக் கொள்ளுகைக்காக வன்றோ என்றபடி-

——–

(சிவன் -அடியேன் இடம் வரம் கேட்க வேணும் என்ற வரம் கேட்டுப் பெற்றால் போல்
கள்வா எம்மையும் ஏழு உலகையும் படைத்து இத்யாதி
அதே போல் நீ என்னிடம் வந்து உன்னையே கொடு என்று இரக்க வேண்டும் என்று நம்மிடம் இரக்கிறான்

இப்படி நம்மிடமும் பிச்சை எடுக்கவே இந்த திவ்ய தேச வாஸம்
குபேரன் -பிச்சை -வியாஜ்யம் -அது அப்போது அவனுக்காக
இது ஸர்வருக்கும் ஸர்வ காலத்துக்கும் அன்றோ )

நாம் அந்த அவதாரத்துக்கு பிற்பட்டோம் இறே -அது தீர்த்தம் பிரசாதித்துப் போயிற்றே -என்ன –
அவன் தானே சம்சாரத்திலே திருமலையை உகந்து வந்து நிற்கவும் அதுக்கு வெறுக்க வேணுமோ -என்கிறது –

அங்கனம் தன் அர்த்தித்தவம் தோற்ற வந்து என்னளவு அன்றிக்கே என்றும் தன்னை அர்த்தி யாக்கிக் கொண்டு
சர்வர்க்கும் சர்வ காலத்திலும் ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து நித்ய சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் –37—

பதவுரை

வகை அறு–அற்ப பலன்களையும் பரம புருஷார்த்தத்தையும் உட் புகுந்து இன்ன வகை இன்ன வகை என்று அறுதி யிடுவதற்குறுப்பான
நுண் கேள்வி வாய்வார்கள்–ஸூக்ஷ்மார்த்த ஸ்ரவண முடையவர்களான
வேதியர்கள்–வைதிகர்கள்
நாளும்–நித்தியமும்
புகை விளக்கும்–தூப தீபங்களையும்
பூ புனலும்–புஷ்பங்களையும் தீர்த்தத்தையும்
ஏந்தி–தரித்துக் கொண்டு
திசை திசையின்–பல திக்குக்களில் நின்றும்
சென்று–வந்து சேர்ந்து
இறைஞ்சும்–வணங்குமிடமான
வேங்கடம்–திருவேங்கடமலையானது,
வெண் சங்கம் ஊதிய வாய் மால்–வெளுத்த சங்கைத் திருப் பவளத்திலே வைத்து ஊதின எம்பெருமான்
உகந்த–திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருக்கப் பெற்ற
ஊர்–திவ்ய தேசமாம்.

(வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குரு நந்தந—
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோவ்யவஸாயிநாம்—৷৷2.41৷৷

வ்யவஸாயாத்மிகா = உறுதியான-ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்தை முன்னிட்ட
பு³த்³தி = புத்தி
ஏக = ஒன்று
இஹ = இங்கே
குரு நந்த³ந = குரு குல தோன்றலே
ப³ஹு ஸா²கா² = பல கிளைகளை
ஹி = அதனால்
அயநந்த = அநேக-கணக்கற்ற பலன்களை பற்றியவை யாகையால் கணக்கற்றவை
சா = மேலும்
பு³த்³த⁴யோ = புத்தி
அவ்யவஸாயிநாம் = ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்தை -மன உறுதி இல்லாதவர்கள்)

வகையறு –பஹு சாகாஹ யநன்தாஸ் ச  புத்தி-ஸ்ரீ கீதை -2-41-என்னும் படி பிரயோஜனாந்த பரமான
தேவதாந்த்ர ஸ்பர்சியான வகை யறுகை
நுண் கேள்வி வாய்வார்கள் -ஸ்தூலமாக வன்றிக்கே ஸ்ரவண வேளையிலே ஸூஷ்மமான கேள்வி வாய்த்தவர்களான
நாளும்-புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே–வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் புஷ்பாதி உபகாரணங்களைக் கொண்டு
சர்வோ திக்கமாக வந்து தொழப் படும் திருமலை –

வெண் சங்கம்-ஊதிய வாய் மால் உகந்த ஊர் -பாரத சமரத்திலே அர்ஜுனன் தொடுத்து விட்ட அம்புகளுக்கு எதிரிகள் எட்டும் அளவன்றியே ஒழிந்தால் ஒருவராலும் இறாய்க்கப் போகாத படி நின்ற நிலையிலே முழுக் காயாக அவியும்படிக்கு ஈடாக ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
வாயிலே வைத்து ஊதின கிருஷ்ணன் ஊதின வூர்

வகை யறும்–முழுகுவாரைக் கண்டவாறே முழுகி -ஜெபிப்பாராய்க் கண்டவாறே ஜபியா –
நுண் கேள்வி –ஸூஷ்மார்த்தம் கேட்டுக் கை புகுந்தார் –சஞ்சலம் ஹி மன கிருஷ்ண —
திசை திசையில் -சர்வதோ திக்கமாக – வேதியர்கள் -வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் –
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–ஆஸ்ரித பக்ஷபாதி வர்த்திக்கிற வூர் —

(நுண் கேள்வி வாய்வார்கள்
ஸூஷ்ம புத்தி யுடையவர்களே தேவதாந்த்ர -அநாயாந்தர -ப்ரயோஜனாந்தர -அல் வழக்குகளை வகையறுத்து தள்ள முடியும்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே -திருவாய் -1-3-6-
ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந இதமேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயா நாராயண ஸதா –பாரதம் )

—————–

அங்கனம் தன் அர்த்தித்தவம் தோற்ற வந்து என்னளவு அன்றிக்கே என்றும் தன்னை அர்த்தி யாக்கிக் கொண்டு
சர்வர்க்கும் சர்வ காலத்திலும் ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து நித்ய சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

ஆயுஸ் புத்ர க்ருஹ க்ஷேத்ர வித்த பசவன்னா ஸ்வர்க்காதி ரூபேண பலவகைப் பட்டு இருக்கிற ஷூத்ர புருஷார்த்தங்களையும்
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தையும் அலகு அலகாக வகை அறுக்கைக்கு உறுப்பாக
ஸூஷ்மார்த்த விஷயமான ஸ்ரவணம் வாய்த்து இருக்கும் வேத தாத்பர்ய வித்துக்கள் அடங்கலும்
சர்வ காலமும் ஆராதன உபகரணமான தூப தீபங்களையும் பூவோடு கூடின ஜலத்தையும் தரித்துக் கொண்டு
பெரிய திரு நாளுக்குப் போமா போலே சர்வோ திக்கமாக எடுத்து விட்டுச் சென்று ஆஸ்ரயிக்கும் திருமலையே
பாரத சமரத்திலே பிரதி பக்ஷம் நசிக்கும் படியே வெளுத்த நிறத்தை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை மடுத்தூதிய திருப்பவளத்தையும் யுடையவனாய்
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்தமான தேசம் என்று உகப்புடனே வர்த்திக்கிற வூர் –

————————————————————————————————————-

(மேலசுரர்) பரம பதத்தில் உள்ளார் அடைய உத்தேஸ்யரானவோபாதி திருமலையில் வர்த்திக்கும்
சர்ப்பம் – குறவர் – பட்டி தின்னும் யானை அடைய
இவர்க்கு உத்தேஸ்யமாய் இருக்கிறபடி -எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –
அங்கே புக்காலோ என்னில் -உள்ளுப் புக ஒட்டா நின்றதோ-

இப்படி அவன் திருமலையிலே உகந்து நித்ய வாசம் பண்ணுகையாலே -இவரும் தத் சம்பந்தத்தால் -அங்குண்டான
சர்ப்பம்- குறவர்- ஆனை-அத்தை எறிகைக்கு கருவியான மணி -புற்று -முதலான பதார்த்தங்களை எல்லாம்
அவனோபாதி பிராப்யமாக நினைத்து மண்டி அனுபவிக்கிறார் –

ஊரும் வரியரவ மொண்  குறவர் மால் யானை
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் -38-

பதவுரை

ஊரும்–திரிகின்ற
வரி அரவம்–(உடம்பில்) கோடுகளை யுடைய ஸர்ப்பமானது,
ஒண் குறவர்–அழகிய மேலான குறவர்கள்
மால் யானை பேர–(பட்டி மேய்கின்ற ) பெரிய யானைகள் (தங்களுடைய புனத்தில் நின்றும் ) அப்பால் போவதற்காக
எறிந்த–(அவ் யானைகளின் மேல்) வீசி யெறிந்த
பெரு மணியை–பெரியதொரு மாணிக்கத்தை (கண்டு)
கார் உடைய மின் என்று–மேகத்தினிடையே தோன்றுகிற மின்னலென்று பிரமித்து (இடிக்கு அஞ்சி)
புற்று அடையும் வேங்கடம்–புற்றினுள்ளே நுழையுமிடமான திருமலை,
மேல சுரர்–மேற்பட்டவர்களான நித்ய ஸூரிகள்
எம் என்னும் மாலது–‘எங்களுடையவன்’ என்று அபிமாநிக்கும் படியாக வுள்ள எம்பெருமானது
இடம்–திவ்ய தேசமாம்.

ஊரும் வரியரவம்-ஒரு காரியப்பாடு அறத் திருமலையிலே ஊர்ந்து திரிகையே உத்தேசியமாய் இருந்தபடி-(ஸ்வயம் பிரயோஜனம் -போவான் போவாரைப் போலே )
பாம்பினுடைய உடம்பில் வரி திருவேங்கடமுடையானுடைய திருமேனியில் ஒரு அவயவத்தோபாதி உத்தேசியமாய் இருக்கிற படி –

ஓண்  குறவர் –திரு வேடுவர்க்கு ஓண்மை யாவது -இவர்கள் பாட்டன் பாட்டனில் ஒருத்தன் பூமியிலே இறங்கினான் என்னும் பழி இன்றிக்கே இருக்கை –

மால் யானை-  –மலை போல் இருந்துள்ள யானை தன்னை -ஒரு மலை சலித்தால் போலே இருக்கப் போம் படிக்கு ஈடாக
பேர வெறிந்த   பெரு மணியை காருடைய-மின்னென்று புற்றடையும் வேங்கடமே –மஹார்க்கமான மணியை
ஆனை மேகம் போலே இருக்கையாலும் -அதிலே பட்ட மணி மின் போலே இருக்கையாலும்
பாம்பானது இடிக்கு அஞ்சுகையாலே மின்னின அநந்தரம் இடி உண்டாகும் என்று கொண்டு அதுக்கு முன்னே புற்று அடையா நிற்கும் திருமலை –

மேலசுரர்–எம்மென்னு மால திடம் ——ஆக்கரான தேவர்கள் அன்றியே -மேலான சுரர் -நித்ய ஸூரிகள் -அஹமஹமிகயா விரும்பும் இடம் -(அங்குப் புக்காலோ என்னில் உள்ளுப் புக ஒட்டாமல் இவற்றின் அழகு இருக்குமே )
ஊரும்–ப்ராதரி கச்சதி போலே -வரி –அதுவும் ஸ்ப்ருஹணீயம் –

மால் யானை -மலை நடந்தால் போலே
பேர -ஆமிஷ் யர்த்தமாக (இறை தேடுவதற்காக )வந்து மலை பேர்ந்தால் போலே பேர – பெரு மணியை -மலை போலே இருக்கை
ஊரும் வரி அரவம் –இவை ஸ்வ சஞ்சாரத்தால் ஸுபாக்யம் கொண்டாடப் புறப்பட்டு புற்று அடையும் -இடிக்கு முன்னாக மின்னாகையாலே –

(ஊரும் வரி அரவம் -புத்ர ப்ரதாரி கச்சதி ப்ரமாதம் மாகார் ஷீ -அயோத்யா -40-5- பெருமாள் நடை அழகிலே ஈடுபட்டு அவரை ரக்ஷிப்பதில் கவனம் இல்லாமல் இருந்து விடாதே
ஒரு பலனையும் எதிர்பாராமல் திருமலையில் ஊர்வதுதே ஒரு திர்யக்குக்குப் பயனாவதே என்று ஈடுபடுகிறார் –
அவனது திவ்ய அவயவங்களை போலவே இவற்றின் உடம்பில் வரியும் இவருக்கு உத்தேச்யம் –
எனஎன்ற மாலதிடம் –
நித்ய ஸூ ரிகள் -எங்கள் இடம் எங்கள் இடம் என்று அபிமானித்து இருக்கும் திருமலை -மால் -அன்பு -அபிமானம்
நித்ய ஸூ ரிகள் மண்டி இருப்பதை மற்றைய ஆழ்வார்களும்
பொன் மலையில் ஏதேனும் ஆவேனே
வானவர்கள் சாந்தி செய்ய நின்றார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்று அருளிச் செய்கிறார்கள் அன்றோ –
எம் என்னும் மாலதிடம் -பாட பேதமும் உண்டு -)

————-

இப்படி அவன் திருமலையிலே உகந்து நித்ய வாசம் பண்ணுகையாலே -இவரும் தத் சம்பந்தத்தால்
அங்குண்டான சர்ப்பம்- குறவர்- ஆனை-அத்தை எறிகைக்கு கருவியான மணி -புற்று -முதலான பதார்த்தங்களை எல்லாம்
அவனோபாதி பிராப்யமாக நினைத்து மண்டி அனுபவிக்கிறார் –

ஒரு காரியப்பாடு அற ஸ்வைர சஞ்சாரம் பண்ணா நிற்பதாய் -தர்ச நீயமான வரியை யுடைத்தான சர்ப்பமானது
திருமலையில் நின்றும் கீழ் இழியுமது குடிப் பழியாக நினைத்து இருக்கும் வி லக்ஷணரான குறவர் புனத்தில்
வந்து பட்டி மேய்கிற பர்வத உபமான ஆனையானது-மணிகளின் ஓளியைக் கண்டு சலித்து மலை பேர்ந்தால் போலே
பேர்ந்து போம்படியாக எறிந்த -ஒரு மலையிலே ஒரு மலை தாக்கினால் போலே இருக்கும் பெருமையை யுடைய மாணிக்கத்தை
யானையின் கறுப்பும் மணியின் புகரும் தன்னில் வாசி தோற்றுகையாலே மேகத்தோடே கூடினதொரு மின்னாகக் கருதி
தத் அனந்தர பாவியான இடிக்கு பயப்பட்டு நிர்ப்பய ஸ்தானமான புற்றிலே சென்று பிரவேசிக்கும் சிறப்பை யுடைய திருமலையே
ஆக்கரான தேவர்கள் அன்றியே -சர்வ உத்க்ருஷ்டரான நித்ய ஸூரிகள் எங்களது என்று மேல் விழுந்து அத்யபி நிவிஷ்டராய் அனுபவிக்கும் தேசம் —

என்னென்ற மாலதிடம் -என்று எங்களது எங்களது -என்று அபி நிவேசிக்கைக்கு விஷயமான ஸ்தானம் -என்றபடி –
என் -என்கிற இத்தை மாலோடே கூட்டி -எங்களுக்கு ப்ராப்யம் என்னப் பட்ட சர்வேஸ்வரதான இடம் -என்றுமாம்
முற்பட்ட யோஜனைக்கு மால் என்று அபி நிவேசத்தைச் சொல்லுகிறது –

——————————————————————————————————-

ஆபத்தில் பூமியை ரஷிப்பது-அவதாரங்கள் சாது பரித்ராணார்த்தம் -துஷ்க்ருத விநாஸார்த்தம் ஆவது
எப்போதும் உகந்து திருமலையிலே நிற்பது என்கிறார் -(தீர்த்தம் ப்ரசாதிக்காமல் எப்போதுமே இங்கே ஸேவை உண்டே )

(ஸ்ரீ வைகுண்ட விரக்தி யுடன் துரந்து உகந்து அருளின திவ்ய தேசம் அன்றோ)

மற்றுள்ள திவ்ய தேசங்களில் காட்டிலும் திருமலைக்கு இத்தனை ஏற்றம் என் என்ன –
அவை எல்லாம் ஒரு தட்டு -இது ஒரு தட்டு என்னும் படி அவன் விரும்பின தேசம் அன்றோ திருமலை என்கிறார் –

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது –39–

பதவுரை

பேர் ஓதம் வண்ணர்–பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்
முன்–முற் காலத்தில்(பின்னானார் வணங்கும் சோதி இது என்பதால் முன் பத பிரயோகம் )
இடந்தது–(மஹா வராஹமாகிக்) கோட்டால் குத்தி யெடுத்தது
பூமி–பூமியாம்;
எடுத்தது–குடையாக வெடுத்துப் பிடித்தது
குன்றம்–கோவர்த்தன மலையாம்
அஞ்ச கடந்தது–அஞ்சி முடிந்து போம்படி செய்தது
கஞ்சனை–கம்ஸனையாம்;
கிடந்ததுவும்–திருக் கண் வளர்ந்தருளினது
ஓதம் நீர் மா கடல்–பெரு வெள்ளமுடைய திருப் பாற் கடலிலாம்
பெரிது நின்றதும்–பெருமை யெல்லாம் தோற்ற -எப்போதும்- நின்றது(நீண்ட காலத்தையே பெரிது என்கிறார் )
வேங்கடம்–திருமலையிலாம்.

(எப்போதே யாருக்கோ மற்றவை -எப்போதும் அனைவருக்குமாக இங்கே)

பெரிது நின்றதுவும் -எப்போதும் நின்று அருளி நித்ய வாசம் செய்து அருளியதும் –

இடந்தது பூமி –பிரளய ஆபத்தில் பூமியை எடுத்த அழகு காணலாவது –
எடுத்தது குன்றம்-கோவர்த்தன உத்தரணத்தில் அவ் வழகு காணலாவது –
கடநதது கஞ்சனை முன்னஞ்ச -கம்சன் அஞ்சும் படி அவனை அழித்த அன்று வெற்றி அழகு காணலாவது –
கிடந்ததுவும்-நீரோத மா கடலே-கண் வளர்ந்த அழகு காணலாவது ஆழ்ந்த கடலிலே சாய்ந்த போது

(எல்லா அழகையும் காணலாம் முன்பு வியாக்யானம்
கீழே-ஒரு காரணத்துக்காக அவதாரங்கள் –
இங்கேயோ ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று நின்று அருளுகிறான் இங்கே தானே)

பேரோத வண்ணர் பெரிது —நின்றதுவும் வேங்கடமே—கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன்
எப்போதும் உகந்து நிற்பது திரு மலையிலே –

இடந்தது -பிரளயத்தில் வந்த நலிவு தீர -எடுத்தது -இந்திரனால் வந்த நலிவு தீர – கடந்தது -கம்சனால் வந்த நலிவு தீர –
கிடந்ததுவும் -அவதாரத்துக்கு ஏகாந்தமாம் –

நாம் பெருமாளை உகந்தோம் என்று சோற்றை உகப்புதோம்-சோற்றை உகந்தோம் என்று நாலும் பத்தும் பட்டினி விடுதோம்-
ஸ்திரீகளை உகந்தோம் என்று சதுரங்கம் பொருதல் உறங்குதல் செய்வுதோம்-ஒன்றிலும் ஸ்நேஹம் இல்லை –( அவனுக்கோ எடுத்ததிலும் முடித்ததிலும் கிடந்ததிலும் -அனைத்திலுமே ஸ்நேஹம் )

———–

மற்றுள்ள திவ்ய தேசங்களில் காட்டிலும் திருமலைக்கு இத்தனை ஏற்றம் என் என்ன –
அவை எல்லாம் ஒரு தட்டு -இது ஒரு தட்டு என்னும் படி அவன் விரும்பின தேசம் அன்றோ திருமலை என்கிறார் –

பெரிய திரைக் கிளர்த்தியை யுடைய கடல் போன்ற வடிவை யுடையவர் -வராஹ வேஷம் கொண்டு பிரளயத்தில்
மூழ்கி இடந்து எடுத்துக் கொண்டு ஏறினது பூமி –
கிருஷ்ண வேஷம் கொண்டு வர்ஷாபத்தை பரிஹரிக்கைக்காக எடுத்து தரித்துக் கொண்டு நின்றது கோவர்த்தன பர்வதம் –
உறவில் அழைத்து நலிய நினைத்த முற்காலத்திலே கண்ட காட்சியிலே நடுங்கும் படியாக கம்சனை ஆக்ரமித்து முடித்து விட்டது –

இவ் வவதாரங்களுக்கு அடியாக மிக்க நீரை யுடைத்தாய் அலை எரிகிற பெரிய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்று

இங்கு அப்படி அன்று -ஸமஸ்த அவதாரங்களில் உள்ள தன்  குண அழகு சேஷ்டிதங்கள் அடங்கலும் பிரகாசிக்கும் படி உகப்புடனே
என்றும் ஓக்க மிகவும் நின்று அருளிற்று திருமலையிலே கிடீர் –

——————————————————————————————————————

(மீண்டும் இயற்கை அழகு அனுபவம்
ஆஸ்ரித விரோதி நிரஸன சீலத்வம் காட்டி நின்று அருளுகிறான்-திருமலையை மீண்டும் உகந்து அருளிச் செய்கிறார்)

திருமலையை உகக்கிறார் –

ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணி உகக்கும் அதுவே கிடீர் அவன் இங்குத்தை
நித்ய வாசத்துக்கு பிரயோஜனமாக நினைத்து இருப்பது என்கிறார் –

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று-40—

பதவுரை

பெரு வில்–பெரிய வில்லையும்
பகழி–அம்புகளை முடையரான
குறவர்–குறவர்களினுடைய
கை–கையிற்பிடித்திருந்த
செம் தீ–சிவந்த நெருப்புக்கு
வெருவி–பயப்பட்டு
புனம் துறந்த–கொல்லையை விட்டு நீங்கின(38 பாசுரத்தில் பார்த்தோமே )
வேழம்–யானையானது,
இரு விசிம்பில்–பரந்த ஆகாசத்தில் நின்றும்
மீன் வீழ–நக்ஷத்திரம் விழ
கண்டு–அதனைப் பார்த்து (நாம் அப்பால் போக முடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)
அஞ்சும்–பயப்படுமிடமான
வேங்கடம்–திருவேங்கடமானது
மேல்–முன்பொருகால்
அசுரர் கோன் வீழ கண்டு–இரணியாசுரனை முடித்து
உகந்தான்–ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய
குன்று–திருமலையாம்

பகழி-அம்பு –  இரு விசும்பில்-பரந்த ஆகாசத்தில் – மீன் வீழ-நக்ஷத்ரம் விழ –

பெருவில் பகழிக் –அவஷடப்ய மஹத் தனு-என்கிறபடியே சக்கரவர்த்தி திருமகன் கையும் வில்லும் போலே –
பெரிய வில்லையையும்-நெரிந்த பகழி யையும் -யுடையரான திரு வேடுவர் –
குறவர் கைச் செந்தீ-வெருவிப் புனந்துறந்த  வேழம் இரு விசும்பில்-மீன் வீழக் கண்டஞ்சும் –குனிலே கொளுத்தி
கையிலே கொடு போகிற நெருப்பு ஒளியிலே வில்லின் பெருமையையும் கண்டு நெருப்பு தனக்கு ஆனை அஞ்சும் படியாகவும்
பட்டி மேய்ந்த ஆனை இப் புனம் கொய்தாலும் இங்கு வாரேன் என்று சந்யசித்துப் போனது –

இரு விசும்பு -இத்யாதி -வெளியையும் பரப்பையும் யுடைத்தான ஆகாசத்தில் நின்றும் மின் விழக் கண்டு இனி
ஓர் இடத்திலும் போக்கு இல்லை என்று நின்ற நிலையிலே நின்று அஞ்சுகிற திருவேங்கடம்-

வேங்கடமே மேலசுரர்-கோன்  வீழக்  கண்டுகந்தான் குன்று —மேல்–பண்டு சிறுக்கனுடைய விரோதி போயிற்று என்று
உகந்து இன்னமும் ஆஸ்ரித விரோதி -ஏதேனும் வரிலும் பரிஹரிக்க வேணும் என்று அவன் பற்றி நிற்கும் திருமலை

பெரு வில் இத்யாதி -இதில் உத்தரார்த்தம் மீன் விழக் கண்டு அஞ்சும் நிலத்திலே நெருப்பை விழ விட்டார்கள் என்று
குறவர் எறிந்த கொள்ளிக்கு வெருவினதாகையாலே
வேங்கடம் –நிர்ப் பயமான தேசம் –அஸ்தானே பய சங்கை பண்ணும் அத்தனை –

(பயம் அபஹாரிணாம் ஸ்திதே -அவன் இருக்க -அவனுக்கு என் வருகிறதோ என்றும்

கொடியார் திருப்புளிங்குடி -த்வஜ ஸ்தம்பத்துக்கும் பயப்படும் அஞ்சும் குடி போல் இங்குள்ள திர்யக்குகளும்)

(ஆலி கந்த மிவாகாஸம் வஷ்டப்ய மஹத் தநு -யுத்த -100-12- ஆகாயத்தை அளாவி நிற்கும் பெரிய வில்லை அழுத்திப் பிடித்துக் கொண்டு இருக்கும் பெருமாள் –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று–நான்முகன் -46-என்கிறபடியே
திருமலைக்குப் புறம்புள்ள வேடர் யானையை வளைத்தாலும் அவர்களை எதிர்க்கவே திருமலையில் உள்ள வேடர்கள் வில்லை எடுப்பார்கள் –

பயம் பயாநாம் அபஹாரிணி ஸ்திதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-36-பயத்தைப் போக்கி அருளும் பரமன் நிற்கும் திருமலை அன்றோ –
அஸ்தானே பய சங்கை பண்ணி மங்களா ஸாஸனம் பண்ணுபவர் நிறைந்த திருமலை –
ஆஸ்ரித விரோதியான ஹிரண்யனை நிரசித்து உகந்து பின்னனானார் வணங்கும் சோதியாக
அவர்கள் விரோதிகளை நிரஸித்து அருளவே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் -என்கிறார் -)

———–

ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணி உகக்கும் அதுவே கிடீர் அவன் இங்குத்தை
நித்ய வாசத்துக்கு பிரயோஜனமாக நினைத்து இருப்பது என்கிறார் –

அவஷடப்ய மஹத் தனு-என்கிறபடியே ஒரு கையிலே எடுத்துக் பிடித்த பெரிய வில்லையும் வாய் அம்புகளையும்
உடையரான திருக் குறவர் -மற்றைக் கையிலே வழியில் வெளிச் செறிப்புக்காக பிடித்த சிவந்த நிறத்தை
யுடைத்தான  சூழ் நெருப்பின் ஒளி வழியே இவர்கள் கையும் வில்லும் பிடித்த சூலுமாயுமாகக் கொண்டு
ஆயத்தப் பட்டு வருகிற படியைக் கண்டு -நம்மை நலிய வருகிறார்கள் என்று பயப்பட்டு ஒருகாலும்
இங்கே வரக் கடவோம் அல்லோம் என்று புனத்தை சன்யசித்துப் போன ஆனையானது –

போம் இடம் தன்னிலும்
பரப்பை யுடைத்தான ஆகாசத்தில் நின்றும் நக்ஷத்திரங்கள் விழ -அத்தைக் கண்டு நமக்கு அவ்வருகு ஓர் அடி இட ஒண்ணாத படி
பூமியில் நெருப்பை விழ விட்டார்கள் என்று அவ்வருகு போக மாட்டாமல் புனத்தில் புக மாட்டாமல்
நடுவே நின்று நடுங்கும் படியான திருமலையே

முன்பு ஒரு காலத்தில் அஸூர ராஜன் என்று விருதூதி திரிந்த ஹிரண்யன் பிணமாய் விழுந்து போகக் கண்டு
சிறுக்கன் விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த சர்வேஸ்வரன் -பின்புள்ள ஆஸ்ரித விரோதிகளை
தீர்க்க வேணும் என்று நித்ய வாசம் செய்து அருளும் திரு மலை —

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -21-30– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

இரண்டு பட்டாலும் சர்வேஸ்வரன் கிடீர் ஆஸ்ரித அர்த்தமாக இப்படி எளியனானான் என்று
சொல்லிற்றாய் ஈடுபடுகிறார் –

அவன் பெருமையைப் பார்த்து பிற்காலியாதே-ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவன் -என்று அறிந்து
அவன் திருவடிகளைக் கிட்டப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-

பதவுரை

சென்று நின்று–(மஹாபலியின் யாக பூமியிற்) போய் நின்று
அம் கை–(தனது) அழகிய திருக்கையினால்
நிலம் நீரேற்று–பூமி தானம் வாங்கி
மூ அடியால்–மூன்றடிகளாலே
திசை அளந்த–எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக் கொண்ட
செம்கண்மாற்கு–செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு
என்றும்–எப்போதும்
ஆழி–சக்கரமானது
படை–ஆயுதமாயிருக்கும்;
புள்–கருடன்
ஊர்தி–வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
அறி–நான் சொல்வதை ஆராய்ந்து கொள்;
பாம்பு அணையான் பாதம் அடை–சேஷ சயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

நின்று -சர்வேஸ்வரனானவன் அர்த்தித்தவம் தோற்றும் படிக்கு ஈடாக நின்று
நிலமங்கை நீரேற்று –நிலம் அங்கை நீர் ஏற்று -கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே பூமியை நீர் ஏற்று
மூவடியால்-சென்று திசை யளந்த செங்கண் மாற்கு –திக்குகள் தோறும் சென்று அளந்து
அத்தாலே அலாப்ய லாபம் பெற்றானாய் இருக்கிறவனுக்கு –
என்றும்-படையாழி புள்ளூர்தி பாம்பணையான்–எல்லாவற்றையும் உடையவன் கிடீர் இரந்தான்
கையிலே திருவாழியை பேராதே பிடிக்க வல்லவனும் -திருவடி முதுகில் நல் தரிக்க இருக்க வல்லவனும்
திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும் சர்வேஸ்வரன் ஆகிறான் –

பாதம்-அடையாழி நெஞ்சே அறி —–மஹா பலியைப் போலே ஆகாதே அவன் திருவடிகளை அடை –
யாழி நெஞ்சே அறி -அளவுடைய நெஞ்சே அறி–ஓலக்க வார்த்தை என்று இராதே இத்தை புத்தி பண்ணி இரு
நின்ற இத்யாதி -பிராட்டியை ஸ்ரீ ஜனகராஜன் நீர் வார்க்கப் பெற்றால் போலே சென்று நின்று என்னுதல் –
சென்று -நடந்தபடி சென்று அளந்து என்னுதல்
செங்கண் மால் -தம்தாமது பெற்றாலும் இனியராக வேணுமோ -என்றும் -பரிபூர்ணன் கிடீர்
பாதம் அடை யாழி நெஞ்சே-என்னை ஓதுவிக்க வல்ல நீ என் செல்லாமை அறி –
அல்லாத வார்த்தை போல் அல்ல -இத்தை புத்தி பண்ணு
சீரால் பிறந்து -அன்று அறுபதினாறாயிரம் தபஸ் ஸூ பண்ணினவன் வயிற்றிலே –
பிதரம் ரோசயாமாச-என்று ஆசைப்பட வந்து பிறக்கை
சிறப்பால் வளராது -வெண்ணெயும் பெண்களையும் களவு கண்டு மூலை படியே வளருகை
பேர் வாமனாகாக்கால் -நாராயணன் ஆனால் ஆகாதோ – பேராளா-ஐஸ்வர்யத்தில் இளைப்பாற வேணுமோ

மார்வு இத்யாதி -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமி –

வண்கை யானவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-8-5-

மாணியாய் மண் கையால் இரந்தான் –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகனேறின வடிவைக் கொண்டு சென்று –
தன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

————-

அவன் பெருமையைப் பார்த்து பிற்காலியாதே-ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவன் -என்று அறிந்து
அவன் திருவடிகளைக் கிட்டப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

மஹாபலி யஜ்ஜ வாடத்து அளவும் நடந்து சென்று -அவன் முன்னே அபிமதம் பெற்று அன்றிப் போகேன் -என்று
மலையாளர் வளைப்பு போலே அர்த்தித்தவம் தோற்ற நின்று -எல்லாருக்கும் குறைவற கொடுத்துப் போந்த
அழகிய திருக் கையிலே பூமியை நீர் ஏற்று வாங்கிக் கொண்டு -ஓர் அடிக்கு அவனை சிறையிட்டு வைப்பதாக
மூன்று திருவடிகளாலே திக்குகளோடு கூடின சகல லோகங்களையும் அளந்து கொண்டவனாய்
அத்தாலே வந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனுமான சர்வாதிகனுக்கு
சர்வ காலத்திலும் ரக்ஷண பரிகரமான திவ்ய ஆயுதம் திரு வாழி -மேல் கொண்டு நடத்துகிற வாஹனம் பெரிய திருவடி
திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனாகை யாலே ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனுடைய
திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பார்-கம்பீர ஸ்வ பாவமான நெஞ்சே இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே
நன்றாக புத்தி பண்ணி இரு –

ஓர் அடியானைக் கையிலும்
ஒருவனைக் காலின் கீழும்
ஒருவனைப் புரியாமலும்
கொண்டு இருக்கையாலே அடியாரோடு கலப்பதையே இயல்வாக்க கொண்டவன் என்று விளங்குகிறதே-

வெறுப்புடைய சிசுபாலாதிகளும் அன்றோ உனது தாமோதரத்வத்தை அறிவார்களே
நான் மாத்திரம் அன்று -உலகம் எல்லாமே உனது அடியாரோடு கலக்கும் ஸ்வ பாவம் இயல்வு என்பதை அறியுமே-

——————————————————————————————————–

ஆஸ்ரித பக்ஷ பாதம் போலே ஆஸ்ரித பவ்யத்தையும் –

நீர் நம்மை ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவன் என்று அறிந்த படி எங்கனே என்ன
நான் ஒருவனுமேயோ -லோகம் அடைய அறியாதோ -என்கிறார் –

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –22-

பதவுரை

பொறி கொள் சிறை–பல நிறங்களையுங்கொண்ட சிறகுகளை யுடைய
உவணம்–கருடாழ்வானை
ஊர்ந்தாய்–ஏறி நடத்தும் பெருமானே!
காம்பு ஏய் மென் தோளி–மூங்கிலை யொத்த மெல்லிய தோள்களை யுடைய யசோதையினாலே
கடை–கடையப்பட்டு
வெறி கமழும்–பரிமளம் வீசப்பெற்ற
வெண்ணெய்–வெண்ணெயை
உண்டாயை–(களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பே கொண்டு–(கையில் கிடைத்ததொரு) தாம்பை கொண்டு
ஆர்த்த–கட்டியதனாலுண்டான
தழும்ப–காய்ப்பை (அறிபவன்)
யானேயும் அல்லேன்–நானொருவனே யன்று;
உலகு எல்லாம் அறியும்–உலகத்திலுள்ளாரெல்லாரும் அறிவர்கள்.

அறியும் –ஆஸ்ரித அர்த்தமாக எளியனானான் என்னும் படி நீர் அறிந்த படி எங்கனே என்னில் –
உலகு எல்லாம் யானேயும் அல்லேன்–சிசுபாலன் கூட அறியானோ –
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை -பொறி கொண்டு இருந்துள்ள சிறகை யுடைத்தான திருவடியை ஊர்ந்த உன்னை
வெறி கமழும்-பிள்ளை முகம் வாட ஒண்ணாது என்று எப்போதும் ஒப்பித்த படியே இருக்கையாலே பரிமளம் கமழா நின்ற
காம்பேய் மென் தோளி–மூங்கிலோடு ஒத்த மிருதுவான தோளை யுடையவள்
கடை வெண்ணெய் யுண்டாயைத்-அவள் மார்த்த்வம் பாராதே கடைந்த வெண்ணெய் யுண்டாயை
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு  –கைக்கு எட்டிற்று தாம்பாலே கட்டின தழும்பு -கயிறை நீட்ட ஒண்ணாது
உரலைச் சிறுக்க ஒண்ணாது –இவன் உடம்பில் இடம் காணும் அத்தனை -இறே –
உலகு எல்லாம் -சிசுபாலனை இட்டுச் சொல்ல வேணுமோ
யானே -அனுக்ரஹம் யுடைய நானே ஆலன் –
பொறி இத்யாதி -நிரபேஷனாய்-அர்த்திக்கப் பிறந்த நீ –
வெறி -ஸ்வாபாவிகம் என்னுதல் / பிள்ளை முசியாமைக்கு என்னுதல்
காம்பு -பசுமையும் திரட்சியும் செவ்வையும் –
கடை வெண்ணெய் இத்யாதி -இருவருக்கு தாரகம் -அபலை கட்டிலே கட்டுண்பதே-
தாம்பே கொண்டு – குறும் கயிற்றைக் கொண்டு-

—————–

நீர் நம்மை ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவன் என்று அறிந்த படி எங்கனே என்ன
நான் ஒருவனுமேயோ -லோகம் அடைய அறியாதோ -என்கிறார் –

சித்ர படம் போலே நாநா வர்ணமான சிறகை யுடைய பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனாய்
பிள்ளை அனுங்காத படி ஸூகந்த த்ரவ்யத்தாலே அலங்கரித்துக் கொண்டு இருக்கையாலே பரிமளம் அலை எறியா நிற்பாளாய்
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலேயாய்-அதில் வியாவிருத்தமான
மார்த்வத்தை யுடைய தோளை யுடையவளுமான யசோதை பிராட்டி உடம்பு நோவக் கடைந்து திரட்டி வைத்த வெண்ணெயை
அமுது செய்து அருளின உன்னை கைக்கு எட்டிற்று ஒரு அறுதல் தாம்பையே கொண்டு உறைக்கக் கட்டுகையாலே
வந்த தழும்பு நான் ஒருவனுமே யல்லேன் -நாடு அடங்க அறியும் காண் –உவணம் என்று பருந்துக்குப் பெயர் –

————————————————————————————-

ஒரு செயலைக் கொண்டு சொல்லும்படி என் என்னில் -ஒரு செயலிலேயோ -ஒரு அவதாரத்திலேயோ
தழும்பு சுமந்து -என்கிறார் –

நாம் சிலருக்கு அஞ்சுகையாவது என் -கட்டுண்கை யாவது என் -அத்தைப் பின் நாடு அறிகை யாவது என் -என்று
அத்தை மறைக்கப் புக்கான் -ஒரு தழும்பு ஆகில் அன்றோ மறைக்கலாவது -உன் உடம்பு அடங்கலும்
ஆஸ்ரித கார்யம் செய்கையால் வந்த தழும்பு அன்றோ -என்கிறார் –

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

பதவுரை

வீங்கு ஓதம் வண்ணர்–பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவை யுடைய எம்பெருமானது
அம் கை–அழகிய திருக் கைகளில்
சார்ங்கம்–சார்ங்க வில்லினுடைய
நாண்–நாணி
தோய்ந்–உராய்ந்த்தனா லுண்டான
தழும்பு–காய்ப்பானது
இருந்த ஆம்-இருக்கின்றது காண்;
தாள்–திருவடிகளிலே
சகடம் சாடி–சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)
தழும்பு இருந்த–காய்ப்பு இருக்கின்றது;
பூங் கோதையாள்–அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி
வெருவ–(என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே
பொன் பெயரோன்–இரணியாசுரனுடைய
மார்பு இடந்த தழும்பு–மார்பைக் கிழித்தெறிந்த தனாலுண்டான காய்ப்பு
விரல்–விரல்களிலே
இருந்த–இருக்கின்றது.

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த –பிராட்டியும் கூட கூசி ஸ்பர்சிக்க வேண்டும் அழகிய கை
சார்ங்க நாண் தோய்ந்த தழும்பு இருந்தவாம் -ஜ்யாகிணத்தாலே கர்க்கஸமாய் இருக்கும் -தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த –அடல் அரியாய்ப் பெருகினானை -என்கிறபடியே
வீங்கோத வண்ணர் விரல் -கால் தழும்பு -கை தழும்பு -அவாந்தர அவயமான விரல் தழும்பு -ஒன்றேயோ தழும்பு ஆயிற்று -என்கிறார்
பூங்கோதையாள் வெருவ-ஆஸ்ரிதர் உடைய கார்யம் என்றால் உகக்கும் அவளும் பயப்படும்படி உடம்பு அடையத் தழும்பு
சாடி -அவன் மூரி நிமிர்ந்தான் -இவர்க்கு குவாலாய் இருக்கிற படி –
பூங்கோதையாள் வெருவ-பொறாது என்று இருக்குமவள் -வீர வாசி அறியுமவள்-ருஷி வேஷத்தோடே திரிய வேணும் என்னுமவள் –
வீங்கோத வண்ணர் விரல்-வளர்த்தியும் குளிர்த்தியும் –மஹா விஷ்ணும் –விக்ரஹ வியாப்தி யாயிற்று-

(அடல் அரியாய் பெருகினானை -பெரிய திருமொழி -2-5-8-
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் –ஸர்வ வ்யாபீ
ஆச்ரித பக்ஷபாதி என்பதை -கையிலும் தாளிலும் விரல்களிலும் உள்ள தழும்புகளே கோள் சொல்லிக் காட்டுமே -)

————–

நாம் சிலருக்கு அஞ்சுகையாவது என் -கட்டுண்கை யாவது என் -அத்தைப் பின் நாடு அறிகை யாவது என் -என்று
அத்தை மறைக்கப் புக்கான் -ஒரு தழும்பு ஆகில் அன்றோ மறைக்கலாவது -உன் உடம்பு அடங்கலும்
ஆஸ்ரித கார்யம் செய்கையால் வந்த தழும்பு அன்றோ -என்கிறார் –

அழகிய திருக்கையானது -ஸ்ரீ சார்ங்கத்தின் யுடைய நாண் அறைவால் வந்த தழும்பைச் சுமந்தன -அதி ஸூகுமாரமான
திருவடிகள் ஆனவை அஸூரா விசிஷ்டமான சகடத்தை முறிந்து விழும்படி உதைத்து அத்தால் எழுந்த தழும்பைச் சுமந்தன-
கிளர்ந்து அலை எறிகிற கடல் போலே இருந்துள்ள வடிவை யுடையவருடைய திரு விரல்களானவை –
அழகிய மயிர் முடியை யுடைய பிராட்டி என்னாகத் தேடுகிறதோ -என்று நடுங்கும் படியாக ஹிரண்யன்
மார்வைப் பிளந்து பொகட்டத்ததால் வந்த தழும்பை சுமந்தன
விரல் தழும்பு -கால் தழும்பு -கை தழும்பு -இவற்றை எங்கனே உன்னால் மறைக்கும் படி -என்கை-

நீ ஆஸ்ரித பக்ஷபாதி என்பதற்கு உனது திருமேனியிலே இத்தனை அடையாளங்கள் இருக்கும் போது உன்னால் அத்தை எப்படி மறைக்க முடியும் என்பது கருத்து –

————————————————————————————————-

நாம் வெண்ணெய் களவு காணப் புக்கு கட்டுண்டோம் ஆக வேணுமோ என்ன –
களவு கண்டு கட்டுண்டு இருக்கும் படி அறியாயோ -என்கிறார் –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை —24–

பதவுரை

ஓங்கு ஓதம் வண்ணா–ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே!
(நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது)
விரலோடு வாய் தோய்ந்த–உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த
வெண்ணெய்–வெண்ணெயை
ஆய்ச்சி–யசோதை யானவள்
கண்டு–பார்த்து
(உன்னைத் தண்டிக்க வேண்டி)
உரலோடு உற பிணித்த நான்று–உரலோடு சேர்த்துக் கட்டி வைத்த போது
குரல் ஓவாது–நீ கத்துகிற கத்தல் நீங்காமல்
ஏங்கி–ஏங்கிக் கொண்டு
நினைந்து–(அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக் கொண்டு
அயலார் காண–அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி
இருந்திலையே–இருந்தாயல்லவோ?
உரை–உண்மையாகச் சொல்லு.

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு–விரல் வாயிலே தோய்ந்த அளவிலே –
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு -என்றும் சொல்லா நின்றது –
விரலோடு வாய் தோய்ந்த -என்றும் சொல்லா நின்றது -இவை எங்கனே சேரும் படி
என்று பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டரைக் கேட்க –
இவனுக்கு என்றும் திருப்பணி இது வன்றோ -ஒரு நாள் அங்கனும் ஆகிறது
ஒரு நாள் இங்கனும் ஆகிறது -என்று அருளிச் செய்தார் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் -என்கிற படியே
ஆய்ச்சி-உரலோடு உறப் பிணித்த நான்று —உரலோடும் அவன் என்றும் பிரித்துக் காணப் போகாத படி கட்டின அன்று –

குரலோவா-தேங்கி –அழப் புக்க த்வனி மாறாதே –என்கின்ற ஏக்கம் கீழ் விழாதே –
நினைந்து -இப்படி அழா நிற்கச் செய்தேயும் பெரிய திருப் பணிகள் ஆயிற்று நினைப்பது –
வெண்ணெய் களவு காணும் படி நினைத்து –

அயலார் காண இருந்திலையே–ஐந்து லக்ஷம் குடியில் பெண்களில் காணாதார் யுண்டோ -இவனால் நெஞ்சு புண் பட்டார் எல்லாம்
இவன் பட்டபாடு காண வருவார்கள் இறே -அத்யுத்கடை புண்ய பாபை ரிஹைவ பலம் அஸ்னுதே–இறே –
ஒங்கோத வண்ணா வுரை —–இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலைத் தேக்கி வைத்தால் போலே காணும் –
உரை -இவ்வடிவு காண வேணும் -இவ்வடிவோடே கூடிய வார்த்தையும் கேட்க வேணும்
பொய்யாகில் உரலோடே கூடி இழுத்துக் கொண்டு புறப்படுவனோ —

விரல் இத்யாதி -வயிறு வளர்த்து அகப்படப் பெற்றோமோ -மிடற்றுக்கு கீழ் இழியப் பெற்றோமோ –
உரலோடு -உரலோடு தன்னோடு வாசி இல்லாமை –
குரல் ஓவாது -அழப் புக்கவாறே இக் கோல் உண்டு பார் என்ன -ஏங்கி நின்றான்
நினைந்து -வெண்ணெயையே நினைந்து இருக்கை –
அயலார் காண -பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் அடைய -அவர்களை பந்தித்துத் தான் அகப்படா நிற்கும் –
அவர்கள் இவன் அகப்பட வல்லனே என்று இருப்பார்கள் –
இருந்திலையே-ராம சரத்தை ராவணன் மறக்கில் மறக்கலாம்

ஓங்கோத வண்ணா -நெருக்குணகையால் வந்த பூர்த்தி
உரை -நமே மோகம் -என்னும் நீ சொல்லிக் காண் -அவாப்த ஸமஸ்த காமன் குறையாய் அழுவதே –
சர்வ சக்தி மிடுக்கு இன்றி ஒழிவதே -சர்வஞ்ஞன் புரை அறுவதே –

(வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான் மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் –பெரியாழ்வார் திருமொழி-2 9-1 – –

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –திருவாய் -1-8-5-

அன்ருதம் நோக்த பூர்வம் மே ந ச வஹ்ய கதாசன -கிஷ்கிந்தா -7-22-

த்யவ் பதேத் ப்ருத்வீ சீர்யேத் ஹிமவான் ஸகலீ பவேத்
ஸூஷ்யேத் தோய நிதி கிருஷ் ணே ந மே மோகம் வஸோ பவேத் –பாரதம் -உத் -70-48-

ஸத்ய வாக்யனான உனது சொல் அழகை காணலாம்படி ஒரு வார்த்தை சொல்லி அருளாய் -என்கிறார் -)

——————————————————

திருக் கையாலே அள்ளித் திருப் பவளத்திலே வைத்த வெண்ணெயை அமுது செய்து அருளுவதற்கு முன்பே
வாயது கையதாகக் கண்டு இடைச்சியானவள் களவுக்குப் பெரு நிலை நின்ற உரலோடே எடுத்து உறைக்கக் கட்டின வன்று-
கூப்பிடுகிற கூப்பீடு உச்சிவீடு விடாத படி -வாய் விட்டு அழ மாட்டாமல் -விம்மல் பொருமலாய் -ஏங்கிக் கொண்டு
அவ்வளவிலும் வெண்ணெய் எங்கே இருக்கிறது-அது களவு காணும்படி எங்கனே என்று இத்தையே உருவ நினைத்துக் கொண்டு
உன்னாலே புண்பட்ட இடைப் பெண்கள் எல்லாரும் -கள்ளனுக்கு இத்தனையும் வேணும் -என்று சிரித்துக் கொண்டு
வந்து காணும் படியாக க்ருதார்த்தனாய்க் கொண்டு இருந்திலையோ -கட்டுண்ணப் பெற்ற ஹர்ஷத்தாலே
ஓங்கி கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே -நீ இத்தை உண்மையாக சொல்லிக் காண்
இவர்க்கு இவன் வடிவு காண வேணும் -வார்த்தை கேட்க வேணும் -என்றும் போலே காணும் ஆசை –

——————————————————————————————————

இவனுடைய இந் நீர்மை அனுபவித்தால்-வேறு ஒன்றால் போது போக்க ஒண்ணாது என்கிறார் –
இவனுக்கு நினைவும் பேச்சும் வெண்ணெயில் ஆனால் போலே
ஆழ்வாருக்கு நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே ஆணைப்படி சொல்கிறது –

அவன் ஓவாதே அழுத படியைக் கண்டு இவரும் ஓவாதே ஏத்தத் தொடங்கினார் –

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  –25-

பதவுரை

வரை மேல்–ஒரு மலையின் மேலே
மரகதமே போல–மரகதப் பச்சை மணி படிந்தாற்போல
திரை மேல்–திருப்பாற்கடலிலே
கிடந்தானை–சயனித்திருப்பவனும்
கீண்டானை–இரணியனுடலைப் பிளந்தவனும்
கேழல் ஆய்–வராஹ மூர்த்தியாகி
பூமி இடந்தானை–பூமியை உத்தரிப்பித்தவனுமான எம்பெருமானை.

அண்ட பித்தியில் நின்று பெயர்த்து எடுத்த என்று வராஹ சேஷ்டிதமாகவுமாம்
என் உள்ளம்–எனது மனமானது
உரை மேற்கொண்டு–உரைப்பதில் ஊற்றங்கொண்டு-ஸ்தோத்ரம் செய்து உயர்ந்து என்றுமாம்
ஓவாது எப்போதும்–இடைவிடாமல் எப்போதும்
ஏத்தி–அப்பெருமானது சரிதைகளைப் (புகழ்ந்து)
எழும்–உஜ்ஜீவிக்கும்.

உரை மேல் கொண்டு -மேலான உரையைக் கொண்டு -அதாவது வாக்குக்கு விஷயமானத்தைக் கொண்டு
அன்றிக்கே -உரைக்கையிலே மேற்கொண்டு -அதாவது சொல்லிச் செல்லுகையில் கிளர்ந்து(மேல் மேலும் ஆசை யுடன் ஈடுபட்டு )
என்னுள்ளம் ஓவாது எப்போதும்-என்னுடைய ஹிருதயமானது உச்சி வீடு வீடாகக் கடவது அன்றிக்கே -ஸ்வரூபம் ஒரு காலாக அழியுமோ(இடைவிடாமல் இவன் அழுதால் போலவே )

வரை மேல் மரகதமே போலே திரை மேல்-கிடந்தானைக் –
ஒரு மலையிலே ஒரு மரகத கிரியானது பரப்பு மாறப் படிந்தால் போலே யாயிற்று திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின போது இருக்கும்படி

கீண்டானைக் கேழலாய்ப் பூமி-இடந்தானை யேத்தி எழும்  —
சர்வேஸ்வரனாய் சர்வ சக்தியானவனுடைய ஸுலப்ய சரிதங்களைச் சொல்லுகைக்கு

(கீண்டான் -ஸர்வேஸ்வரன்
கிடந்தான் -ஸர்வ சக்தித்வம்
கேழலாய் -நீர்மை -ஸுலப்யம்)

என்னுள்ளம் -இத்யாதி —
தாச வ்ருத்திகனான என்னுடைய மனசானது இடை விடாது -எப்போதும் இத்யாதி –
ஒரு பர்வத சிகரத்தில் இந்த்ர நீல மணி இருந்தால் போலே விளங்குகிற சமுத்திர சாயியானவனை
கிடந்தானை -கீண்டானை -ஆர்த்தரைக் கண்டால் படுக்கை அடிக் கொதிக்கும் படி
ஏத்தி எழும் -ஸ்துதித்து உஜ்ஜீவிக்கும் -(ஆழ்வாருக்கு ஸ்துதி விஷயம் இவன் சேஷ்டிதங்களே )

உரை மேல் கொண்டு -வாக்குக்கு விஷயமாகக் கொண்டு -வாக் விருத்தியை மேற்கொண்டு -என்னவுமாம்

என்னுள்ளம் இத்யாதி -ஒரு மலை மேல் மரகதம் கிடந்தால் போலே திரள் மேல் கண் வளர்ந்து அருளுகிறவனை –
கீண்டானை இத்யாதி -வராஹ ரூபியாய்ப் புக்கு அண்ட பித்தியில் நின்றும் ஓட்டுவிடுவித்து பூமியை இடந்தவனை
ஏத்தி எழும் -ஏத்தி உஜ்ஜீவியா நின்றது(இந்திரியங்களை சேதன சமாதி -முடியானே வில் -கரணங்கள் அவையாக -நெஞ்சு உஜ்ஜீவிக்க  )

—————————————————————-

ஒரு மலையின் மேலே ஒரு மரகத கிரி படிந்தால் போலே ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளினவனாய் –

சிறுக்கன் ஆர்த்தி தீர்க்கைக்காக நரசிம்ஹமாய் தூணிலே வந்து தோற்றி ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனாய் –

மஹா வராஹமாய் பிரளயத்தில் கரைந்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனை

(இவ் வாபதானங்களையே–வல் எயிற்று கேழலாய் வாள் எயிற்று சீயமுமாய் போல்)

என்னுடைய ஹிருதயமானது -உரைக்கையிலே தத் பரமாய்க் கொண்டு
உச்சி வீடு விடாதே சர்வ காலத்திலும் இவ் வாபதானங்களையே சொல்லிப் புகழ்ந்து உஜ்ஜீவியா நிற்கும்-

உரை மேல் கொண்டு -என்று மேலான உரையைக் கொண்டு -உத்க்ருஷ்டமான சப்தங்களைக் கொண்டு என்னவுமாம்

கேழலாய்க் கீண்டவனை பூமியிடந்தானை -என்று இரண்டையும் இங்கே யாக்கி அண்டபித்தியில் ஒட்டின இத்தை
முதலிலே கீண்டு பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

———

(வேம் கடம் -எரிந்து போகும் பாபங்கள்
திரி விக்ரம -வராஹ -நரஸிம்ஹ பிரதி நிதி திருவேங்கடம்
அதி ஸுலப்யன் -மனச் சுடரை தூண்டுவிக்கும் -ஒரு சுடரை வளர்த்து ஒரு சுடரை அழித்து
ஆனை காத்து ஆனை கொன்று போல் திருமலையும்

சதுர் வித -ஆர்த்தி அர்த்தார்த்தி -ஜிஜ்ஜாஸூ -ஞானி -ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்தி -பகவத் பிராப்தி காமன் மூன்றாகவும் கொள்ளலாம் –
பகவத் ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -அவர்களுக்குத் தடையான பாபங்களை நந்துவிக்கும்-நித்ய யுக்தா -கூடி இருப்பதையே விரும்புமவர்கள் -தான் ஞானி -சிறப்பானவன் –

எழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே

விடை கொள்வார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –நித்ய ஸூரிகளுக்கும் -வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் )

எல்லார்க்கும் நினைவும் செயலும் ஒக்கப் பரிமாறலாவது பரம பதத்தில் அன்றோ என்னில் -நித்ய ஸூரிகளும் கூட
அவனுடைய ஸுலப்யம் காண வருகிறது திருமலையில் அன்றோ -என்கிறார் –

அவதாரங்களுக்குப் பிற்பாடானார் இழவைப் பரிஹரிக்கைக்காகத் திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

பதவுரை

எழுவார்–(தாங்கள் விரும்பின ஐஸ்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கை விட்டுப் போகின்ற ஐஸ்வர்யார்த்திகளும்
விடை கொள்வார்–(தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப் பட்ட பின் எம்பெருமானைத் திரும்பிப் பாராமல்)
விடை பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்–இனிய திருத் துழாயை அணிந்தவனான திருமாலை
ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய
இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை–(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீ வினையாகிய நெருப்பை
நந்துவிக்கும்–அணைக்கின்ற
வேங்கடமே–திரு வேங்கடமலையே
வானோர்–நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை–ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும்–தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை–மலையாகும்.

எழுவார் -ஐஸ்வர்யம் வேணும் என்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் –
விடை கொள்வார் -ஆத்ம பிராப்தியே அமையும்  (சாணகச் சாறு போல் அவனை எண்ணி ) நீ  வேண்டா என்று இவன் பக்கலிலே நின்றும் அகலுமவர்கள்
ஈன் துழாயானை-வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்–இவனை பிரியாது ஒழிய வேணும் என்று நினைத்து
காலம் எல்லாம் தொழுவார்கள் –
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

பொருள் கை யுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றெழுவர் -திருவாய் -9-1-3-

வானோர்-மனச் சுடரைத் தூண்டும் மலை –நித்ய ஸூரிகளுடைய கிளர்ந்த மனசை அவனுடைய ஸுலப்யம் காணப் போரி கோள்-
என்று கிளர்ந்து –நிற்கும் திருமலை -காலாந்தரம் அன்று –சந்நிஹிதம்(ந கால அங்கு போல் )

எழுவார் -பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர்யார்த்திகள்
விடை கொள்வார் -பலம் நித்யம் ஆகையால் மீட்சி இல்லை கேவலர்க்கு
வினை -இத்யாதி -இம் மூவருக்கும் உத்தேச்ய விரோதிகளை போக்கும்
நந்துவிக்கை -அவிக்கை –
வானோர் -இத்யாதி -இங்கு உள்ளார் – ஒழிவில் காலம் என்ன -அங்குள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும்

(இங்குள்ளார் ப்ராப்யமாகப் பற்ற -அங்குள்ளார் சரணாகதி பண்ணி ஸுலப்யம் சேவிக்க -அனுபவத்துக்கு அங்கு குறை இருப்பதால் -)

(பொருள் கை யுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர் -திருவாய் -9-1-3-)

————-

அவ் வவதாரங்களுக்குப் பிற்பாடானார் இழவைப் பரிஹரிக்கைக்காகத் திருமலையிலே (பின்னானார் வணங்கும் சோதி )வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

பொருள் கை யுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றெழுவர் -திருவாய் -9-1-3- -என்கிறபடியே

எங்களுக்கு அபிமதமான த்ருஷ்ட ஐஸ்வர்யத்தை தரலாகாதோ என்று
பிரயோஜனத்துக்கு கை ஏற்றுக் கிளர்ந்து -அது கைப் பட்டவாறே -விட்டு அகன்று போம் ஐஸ்வர்யார்த்திகளும்

உன் அனுபவம் வேண்டா -எங்கள் ஆத்மாவை அனுபவித்துக் கொண்டு ஒரு நாளும் உன் முகத்திலே விழியாது இருக்கும் படி
விடை கொள்ளுகைக்கு திருக் கை சிறப்பிட்டு அருள வேணும் என்று விடை கொண்டு போகும் கைவல்யார்த்திகளும் –

நிரதிசய போக்யமான திருத் துழாயாலே அலங்க்ருதமான -பரம ப்ராப்ய பூதனானவனை- ஒரு நாளும் விட்டு நீங்காதே
கிட்டி நின்று அனுபவிக்கும் பிரகாரத்தை அனுசந்தித்து -சர்வ காலமும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்கும்-
பகவத் சரணார்த்திகளுமான -அதிகாரிகளுடைய

தத் தத் புருஷார்த்த பிரதிபந்தகமான பாபாக்னியை-உருத் தெரியாத படி நசிப்பிக்கும் திருமலையே காணும் –

அஸ்ப்ருஷ்ட (ஸம்ஸார)பாப கந்தரான நித்ய ஸூரிகளுடைய திரு உள்ளம் ஆகிற விளக்கை அவன் சீலாதி குண அனுபவத்தின் ஸ்ரத்தையை வர்த்திப்பித்துக் கொண்டு ப்ரேரியாய் (தூண்டா)நிற்கும் திருமலை –

ஐஸ்வர்யத்துக்காகப் போகும் பொழுது கூட -இவன் அழகைக் காட்டி ஆதாரம் பெறுக வைப்பான் அன்றோ-மால் -maalil எல்லாமே உண்டே

——————–

(பர வாஸூதேவனைப் பாடி
த்ரிவிக்ரமனைப் பாடி
திரு வேங்கடத்தைப் பாடி அருளுகிறார்-

பாசுரத்தில் திரு வேங்கடம் பதம் இல்லா விட்டாலும் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

நம்மாழ்வார் நாதனுக்கு அருளிச் செய்ததை பின் பற்றியே )

சேஷ்டிதங்களிலே உருகுகிறார் –ஸூகுமாரமான கையைக் கொண்டே இப் பெரிய செயல்களை செய்வதே
செய்யா நின்றால் அநாயாசேன செய்வதே –
திருவேங்கடமுடையானுடைய திருக் கையைப் பார்த்தார் போலே –

(பா மரு மூ உலகும் ஓ ஓ –அளக்க வேண்டா -திருவடிகளைக் காட்டினால் போதும்
ஓ மண் அளந்த தாளாளா வரை எடுத்த தோளாலா -போல்)

இங்கே எழுந்து அருளி இருக்கிற திருவேங்கடமுடையானடைய தோளின் துடிப்பைக் கண்ட போதே
அவதாரங்களில் விரோதி வர்க்கத்தை பொடி படுத்தின வீரப்பாடு அடங்கலும் காணலாம் -என்கிறார் –

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மரா மரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை -27-

பதவுரை

மலையால்–கோவர்த்தன கிரியைக் கொண்டு
குடை கவித்து–குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசி யென்னும் அஸுரனுடைய வாயைப் பிளந்தும்,
சிலையால்–வில்லைக் கொண்டு
மராமரம் ஏழ் செற்று–ஸப்த ஸால விருக்ஷங்களை அழித்தும்,
(இச்செயல்களோடு நிற்காமல்)
கொலை யானை–கொலை செய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு–சண்டை செய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும்–பிடுங்கினவையும்.
பூ குருந்தம்–பூ வோடு கூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும்–வேரோடே பறித்துத் தள்ளினவையும்
(எவை யென்றால்)
கார்–(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தை யொத்த
கோடு–சங்கை
பற்றியான்–ஏந்தி யிருக்கின்ற பெருமானுடைய
கை–திருக் கைகளேயாகும்.

(குளிர்த்தி சப்தம் அழகுக்கு மேகம் -வர்ணம் மேகம் கருத்து சங்கம் வெளுத்து இருக்குமே)

மலையால் குடை கவித்து -வர்ஷத்துக்கு குடை அபேக்ஷிதம் இறே -இந்த்ர அஸூர ப்ரக்ருதி அல்லாமையாலே
பசி க்ராஹத்தாலே செய்தானாகில் மலையை எடுத்து நம்மை நோக்கிக் கொள்வோம் என்று மழையைக் குடையாகக் கவித்து –

மாவாய் பிளந்து-பண்ணின ப்ராதிகூல்யத்தின் கனத்தாலே கேசியைக் கொன்று —

சிலையால் மராமரம் ஏழ் செற்று–
அவதாரத்துக்கு அடுத்த ஆயுதத்தாலே மரா மரம் ஏழையும் செற்று(இடையனுக்கு கையாலே கார்யம் -பெருமாள் ஷத்ரியன் சார்ங்க பாணி )

கொலையானைப்-போர்க்கோடு ஒசித்தனவும் –கொல்லக் கடவதாக நிறுத்தின குவலயா பீடத்தினுடைய
பொரா நின்ற கோட்டை அநாயாசேன முறித்தனவும்

பூங்குருந்தம் சாய்த்தனவும்-பூப் பறித்தனவும்(அநாயாசேன செய்த கார்யம் )

கார்க்கோடு பற்றியான் கை —–ஸ்ரமஹரமாய முழக்கத்தை உடைத்தாய் இருக்கும் -என்கை
அன்றிக்கே திருக்கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருந்த போது மேகத்தைப் பற்றி இருந்த சங்கு போலே இருந்தது என்கை

இடையவர் செய்வது எல்லாம் முன்கை உரத்தாலே-க்ஷத்ரியர் என்றும் வில்லாலே -என்னும் இடம் தோற்றுகிறது

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் பிடிக்கவும் பொறாத மிருதுவான கையைக் கொண்டு கிடீர் இது எல்லாம் செய்தது –

சேஷ்டிதங்களிலே உருகுகிறார் –ஸூகுமாரமான கையைக் கொண்டே இப் பெரிய செயல்களை செய்வதே-செய்யா நின்றால் அநாயாசேன செய்வதே –

மலை இத்யாதி -மலையாக விநியோகம் கொண்டானோ
மாவாய் பிளந்து –நாரதாதிகள் கூப்பிடும்படி வந்த கேசியை நெட்டிக்கோரை கீண்டால் போலே கீண்டு –
சிலை இத்யாதி -எய்ய ஒண்ணாத படி திரள நின்ற மரா மரங்களை –
கொலை இத்யாதி -கொலையில் உற்ற ஆனை
பூங்குருந்தம் -தழைத்துப் பூத்து நின்ற
கார்க் கோடு -குளிர்ந்து ஸ்ரமஹரமாய பெருத்து முழங்குகை –ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் தொடப் பொறாத கை கிடீர் –

————————-

இங்கே எழுந்து அருளி இருக்கிற திருவேங்கடமுடையானுடைய தோளின் துடிப்பைக் கண்ட போதே
அவதாரங்களில் விரோதி வர்க்கத்தை பொடிப் படுத்தின வீரப்பாடு அடங்கலும் காணலாம் -என்கிறார் –

இந்திரன் ப்ரவர்த்திப்பித்த கல் வர்ஷத்திலே ரஷ்ய வர்க்கம் அழியாத படி கைக்கு எட்டிற்று ஒரு மலையாலே
குடை பிடிப்பாரைப் போலே கீழது மேலதாக மறித்து -ரக்ஷித்து –

தன்னை விழுங்குவதாக வந்த கேசி யாகிற குதிரையினுடைய வாயை இரு பிளவாக கிழித்துப் பொகட்டு –

ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமாக எடுத்த திரு வில்லாலே ஓர் ஆஸ்ரிதனை விசுவசிப்பிக்கைக்காக மரா மரங்கள் ஏழையும் இழியச் செய்து

எதிர்த்தவர்களைக் கொன்று விழ விடும் குவலயா பீடத்தினுடைய பொருகைக்கு பரிகரமான கொம்பைப் பிடுங்கி பொகட்டனவும் –

கண்டார்க்கு ஆகர்ஷகமாம் படி முட்டாக்கிடப் பூத்துக் கிடக்கிற குருந்தை வேர் பறியும்படி தள்ளி விழ விட்டனவும்-

குளிர்ந்து முழங்குகிற ஸ்வ பாவத்தால் மேகத்தோடு ஒத்து இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை தரித்து அருளினவனுடைய திருக் கைகள் கிடீர் –

—————————————————————————————————

ஐஸ்வர்யம் சொல்லுகிறது என்னவுமாம் -நீர்மை சொல்லுகிறது என்னவுமாம் –

(ஏறாளும் இறையோனும் திசை முகனும் -திருமகளும் –மணிமாமை குறையிலனே போல் இப்பாசுரம்)

திருமலையிலே எழுந்து அருளி நிற்கிற திருவேங்கடமுடையான் திரு மேனியில்
அழகும் ஐஸ்வர்யமும் சீலாதி குணங்களும் நிழல் இட்டுத் தோற்றா நின்றது கிடீர் -என்கிறார் –

(அழகு -திவ்ய ஆயுதங்கள்
ஐஸ்வர்யம்-திரு மகள்
ஸுசீல்யம் -சதுர்முகனும் ஏறாளும் இறையோனும்)

கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை ——–28-

பதவுரை

கார் வண்ணத்து ஐய–மேகம் போன்ற வடிவையுடைய பெருமானே
வலம் புரியும்–வலம்புரிச் சங்கமும்
நேமியும்–சக்கரமும்
கைய–என் கையிலுள்ளன;
மலர் மகள்–பெரிய பிராட்டியார்
நின் ஆகத்தாள்–உனது திரு மார்பைப் பிரியாதிருப்பவள்;
செய்ய மறையான்–சிறந்த வேதத்தை நிரூபகமாக வுடைய பிரான்
நின் உந்தியான்–உனது உந்திக் கமலத்திலுள்ளான்;
மா மதிள் மூன்று எய்த இறையான்–பெரிய மதிளையுடைய மூன்று பட்டணங்களை முடித்த சிவபெருமான்
நின் ஆகத்து இறை–உனது திருமேனியின் ஏக தேசம்

(இறை துளி லேசம் என்றும் தன்னையே இறையாக என்னும் ஈஸ்வரோஹம் -உனது திருமேனியில் இடம் பிடித்ததால் இறை ஆனவர்கள்)

கைய  வலம் புரியும் நேமியும்–கைய -கையிலே உள்ள
கார் வண்ணத்தைய–ஸ்ரமஹரமான வடிவை யுடைய ஸ்வாமி யானவனே
மலர்மகள் நின்னாகத் தாள் -கோல மலர்ப் பாவை நின் திரு மார்விலாள் –
செய்ய-மறையான் நின்னுந்தியான் -நேரே உன்னைக் காட்ட வற்றான வேதத்தை யுடைய ப்ரஹ்மா உன் திரு நாபீ கமலத்திலானான் –
மா மதிள் மூன்று எய்த-இறையான் நின்னாகத் திறை ——த்ரி புரம்-தஹநம் பண்ணி ஈஸ்வர அபிமானியாய் இருக்கிற ருத்ரன்
உன் திருமேனியைப் பற்றி இறையாயிற்று –
அன்றியே -நின்னாகத்து இறை -என்று திருமேனியில் ஏக தேசத்தில் என்னவுமாம் –

இத்தால் ஐஸ்வர்யமும் அழகும் சொல்லிற்றாயிற்று
கார் வண்ணம் -வேறே வேணுமோ -வடிவமையாதோ –

ஐய-(மேகம் போல் அனைவருக்கும் எம்பிரான்)என்னது என்னலாய் இருக்கை -அலர்மேல் மங்கை உறை மார்பன் –
மா மதிள் மூன்று எய்த-இறையான் நின்னாகத் திறை –ஊரைச் சுட்டு பேரைப் படைத்தான் —
கோட் சொல்லி பிரசித்தராமா போலே
ஆகத்திலே ஏக தேசத்தை பற்றினான் -என்னுதல் -ஆகத்தைப் பற்றி இறையானான் என்னுதல் –

(வலத்தனன் திரிபுரம் எரித்தவன்–திருவாய் -1-3-9-
ஒரு இடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ -திருவாய் -2-5-2-
வலப்புரம் ஏகாதச ருத்ரர்களைக் காண் விபூதி அத்யாயம்-பஸ்ய ஏகாதஸ மே ருத்ரான் தக்ஷிணம் பார்ஸ்வமா ஸ்ரீதான் -மோக்ஷ தர்மம் -156-58-
தபஸா தோஷி தஸ்தேந விஷ்ணு நா பிரப விஷ்ணு நா
ஸ்வ பார்ஸ்வே தஷிணே ஸம்போர் நிவாஸ பரி கல்பித –
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி யுடம்பன் -திருவாய் -4-8-1-
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து -திருவாய் -2-2-3-
நஞ்சீயர் பட்டர் ஸம்வாதம் -திருவாய் -2-2-3 -இந்த ஐதிக்யம்
-இடம் கொடுத்தது -ஆபத்து -சித்ர உத்தர வீதிக்கு காவேரி வெள்ளம் வர வருமா போல் இவர்களும் -)

(ப்ரஹ்மாதிகளும் இவனைப் பற்றியே சத்தை பெறுவார்கள் என்பதால் இவன் ஐஸ்வர்யமும்
தாள தாமரையான் உன் உந்தியான் வான் கொள் நீள் மழு வாளி யுன் ஆகத்தான் நாளும் என் புகழ்கோ உன் சீலமே -திருவாய் -9-3-10-என்கிறபடியே
சீல குண அதிசயமும் உணர்த்தப்படுகின்றது -)

———

திருமலையிலே எழுந்து அருளி நிற்கிற திருவேங்கடமுடையான் திரு மேனியில்-அழகும் ஐஸ்வர்யமும் சீலாதி குணங்களும் நிழல் இட்டுத் தோற்றா நின்றது கிடீர் -என்கிறார் –

மேகம் போலே சிரமஹரமான வடிவையுடைய நிருபாதிக பந்துவானவனே –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருவாழியும் திருக் கைகளிலே உளவாய் இரா நின்றன –

அலர்மேல் மங்கை யானவள் உன்னுடைய திரு மார்வில் அகலகில்லேன் இறையும்-என்று உறையா நின்றாள்-

உன்னை உள்ளபடி காட்டும் செவ்வையை யுடைய வேதத்தை-தனக்கு நிரூபகமாக யுடைய ப்ரஹ்மா உன்னுடைய திரு மேனியைப் பற்றி லப்த சத்தாகனாய் இரா நின்றான்(திரு மேனி பற்றியே சத்தையை அடைந்தவன் )

பெரிய மதிளை யுடைய த்ரி புரத்தை தக்தமாம் படி எய்து விழ விட்ட ஈஸ்வர அபிமானியான ருத்ரன்
உன் திருமேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபன் ஆகா நின்றான் –

———————————————————————————————————–

ஐஸ்வர்யம் கண்டு அஞ்ச வேண்டா -ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்கிறார் –
ஐஸ்வர்யம் கண்டு வெருவாதே சீலத்தை அநுஸந்தி -என்கிறார் –

நெஞ்சே உபய விபூதி நாதனாய் இருக்கிற அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் -இத்தை நன்றாகக் புத்தி பண்ணு -என்கிறார் –

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி -29-

பதவுரை

இறையும்–ஸ்ரீவைகுண்ட நாதனாயும்
நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான்–பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன
அலை யெறிகிற ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய
லீலா விபூதியை யுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்,(நீராய் நிலனாய் -ஆய்-சாமானாதி காரம் )
பிறை மருப்பின்–பிறை போன்ற தந்தத்தை யுடையதும்
பைங்கண்–பசுமை தங்கிய கண்களை யுடையதுமான-செந்தாமரை கண்ணன்
மால் யானை–பெரிய கஜேந்திரனை
படு துயரம்–(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த–ரக்ஷித்தருளின
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான பெருமான் காண்;
தெளி–[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள்.

இறையும்– பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
நிலனும் இரு விசும்பும் காற்றும்-அறை புனலும் –செந்தீயும் ஆவான்– ஜகதாகாரனாய் லீலா விபூதி உக்தனான படி சொல்கிறது –

பிறை மருப்பின்-பைங்கண் மால் யானை -பிறை போலும் கொம்பை யுடைத்தாய் -ஜாதி உசிதமான கண்ணை யுடைத்தாய்
பெருத்த யானை–ஆனைக்குப் போரும்படியான துயரைப் போக்கி ரஷித்த

செங்கண் மால் கண்டாய் தெளி —–வாத்சல்ய அம்ருதத்தை வர்ஷியா நின்ற கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்

தெளி -இவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யமே ஸ்வரூபம் என்னும் இடத்தைப் புத்தி பண்ணு –

ஐஸ்வர்யம் கண்டு வெருவாதே சீலத்தை அநுஸந்தி -என்கிறார் –

இறையும் -நியாமகனாய்க் கொண்டு பரமபதத்தில் இருக்கும் –

நிலன் இத்யாதி -இந்த விபூதியை யுடையனாய் இருக்கும் இருப்பு

மால் யானை -உடம்பில் பெருமை பாடாற்ற ஒண்ணாமை

அளித்த -புண் பட்டத்தை ஸ்பரிசித்து அருளின படி

செங்கண் -வாத்சல்யம் – மால் என்று அரை குலைய தலை குலைய வந்து தோற்றின படி -(பகவத் த்வராய நம -கஜம் -வாரணம் தொலைத்த காரணன் நாரணன் )

அவன் தம்மை மாஸூச -என்ன திரு உள்ளத்தைத் தாம் மாஸூச -என்கிறார் -வாசலைத் திறந்து வைப்பாரைப் போலே

பெறுகைக்கு அங்கும் போக வேண்டா -இசைவே வேண்டுவது -ஆர்த்தியே வேண்டுவது(அத்வேஷமே போதுமே -துடித்ததால் வரவில்லை -துடித்த பின்பே வருவான் )

அவனே வாரா விடில் சமாயதிக தரித்ரனே அவன் -மற்று அவனைப் பெற உபாயம் உண்டோ

வாசனையால் அம்மே என்பாரைப் போலே அழைத்தது அத்தனை –

(நாஹம் களேபரஸ் யாஸ்ய த்ராணார்த்தம் மது ஸூதந
கரஸ்த கமலான்யேவ பாதயோ ரர்ப்பிதும் தவ –தொழும் காதல் களிறு அன்றோ
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்வீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத் த்வராய நம –57-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-57-
கரி ப்ரவர ப்ரும்ஹிதே–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட அளவில் –
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -ஸ்ரீ சேனை முதலியார் கொடுத்த கைலாக்கை மதியாமலும்
அஸ்வீக்ருத ப்ரணீத மணி பாதுகம்–சஜ்ஜமாக்கப் பட்ட மணி பாதுகைகளை ஸ்வீ கரிக்காமலும்
கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்–இது என் இது என் என்று ஸ்ரீ திவ்ய மஹிஷிகள் திகைக்கவும் –
அவாஹந பரிஷ் க்ரியம் –வாகன பரிஷ்காரம் ஒன்றும் செய்யாமலும்
பதக ராஜம் ஆரோஹத-ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறா நின்ற
பகவத் த்வராய நம–ஸ்ரீ எம்பெருமானுடைய பதற்றத்துக்கு நமஸ்காரம்
நம்மை ரஷித்து அருளவும் இவ்வாறு த்வரித்து அருளுவான் –
நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என்று ஸ்ரீ கஜேந்திராழ்வான் கூப்பிட்ட போது வியாகுலராய் எழுந்து அருளும் பொழுது
ஸ்ரீ சேனை முதலியார் கை கொடுக்க அத்தைப் பிடித்துக் கொள்ளாமலும்-அந்தப்புரத்தில் அந்தரங்கர் மணி மயமான திருவடிகளை சமர்ப்பிக்க அத்தை அங்கீ கரியாமலும்
அந்தப்புரத்தில் உள்ளார் இது என்ன வ்யாகுலதை என்று கை நெருக்கி இருந்தபடியே வாகனத்துக்கு வேண்டிய அலங்கார சூன்யராய் இருந்துள்ள ஸ்ரீ பெரிய திருவடியில் மேலே எழுந்து அருளி த்வரித்த அந்த த்வரைக்குத் தோற்றோம் என்கிறார்

இந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அழகாக அறிவாயாக
அவனுடைய ஐஸ்வர்யத்தை நினைத்துப் பின் வாங்காதே என்கிறார் -)

————–

நெஞ்சே உபய விபூதி நாதனாய் இருக்கிற அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் -இத்தை நன்றாகக் புத்தி பண்ணு -என்கிறார் –

பரம பதத்தில் சர்வ ஸ்வாமித்வம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுமாய்
பூமியும் பரப்பை யுடைத்தான ஆகாசமும் வாயுவும் -அலை எறிகிற ஜலமும் -தேஜஸ் தத்வம் ஆகிற பஞ்ச பூத ஆரப்தமான
லீலா விபூதியை பிரகாரதயா (அப்ருதக் ஸித்த விசேஷணம் )சேஷமாக யுடையவனுமாய் இருக்கிற பெருமையை யுடையவன் –

பிறை போலே இருக்கிற கொம்பையும் ஜாதி உசிதமான பசுமையையும் யுடைய கண்ணை யுடையனுமாய்
அடிமை செய்கையில் பெரும் பிச்சனுமாய் இருக்கிற(தொழும் காதல் களிறு )

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் யுடைய -முதலையின் கையில் அகப்பட்டுப் பட்ட துக்கத்தை பரிஹரித்து -கையிலே பறித்த பூ செவ்வி அழிவதற்கு முன்பே திருவடிகளிலே பணிமாறி வித்துக் கொண்டு ரக்ஷித்து அருளின வாத்சல்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடைய வ்யாமுக்தன் கிடாய் –

இத்தை அழகிதாகப் புத்தி பண்ணு –

மால் என்று அரை குலைய தலை குலைய வந்து தோற்றின படி —

பரத்வம் பார்த்து நைச்யம் பாவித்து விலகப் பார்ப்பார்கள் ஆழ்வாராதிகள்
எளிமை -ஸுலப்யம் பார்த்து நெஞ்சுக்கு உபதேசம் இப்பாசுரம்

——————————————————————————————

சம்சாரத்தில் ஸமாச்ரயணீயர் பலர் உண்டு என்று பிரமிக்க வேண்டா -சம்பந்த ஞானம் உண்டாகவே
நெஞ்சு தானே அவனை ஆராய்ந்து பற்றும் –

வியதிரிக்தங்களிலே போகாத படி மனசை நியமித்து திருவடிகளின் உறவை அறிந்து இருப்பார்க்கு-
அம் மனஸ்ஸூ தானே -வர பிராப்தி பற்றாதபடி பற்றிக் கொண்டு அத்யபி நிவிஷ்டமாய் அவனைக் கிட்டும் என்கிறார் –

(ஸ்ரீ கீதை -2-அத்யாயம் —யஜமான ஸம்ஹிதா – வியதிரேக ஸம்ஹிதா ஏகேந்த்ர ஸம்ஹிதா வஸீ காரா ஸம்ஹிதா
மலர் மிசை -மலர்ந்த ஞானத்தால் தெளிந்து -ஸுலப்யம் அறிந்து கிட்டி -மனஸ்ஸூ தானாகவே மேல் விழுந்து நாடும் -தாயை நாடும் கன்று போல்
விஷயாந்தரங்களில் இருந்து –தேவதாந்த்ரங்களில் விலக்கவே -ஸுலப்யம் அறிந்து தெளிந்து தானாகவே அவன் இடம் ஓடும்
ஞானத்தால் -ஞானம் கனிந்த நலம் -பக்தி ரூபா பன்ன ஞானம் -பக்தி ஒன்றினால் அறிய முடியும் என்கிறார் இதில்)

(திருக்கமல பாதம் வந்து -பர கத ஸ் வீ காரத்துக்கு விரோதம் இல்லை
அது உபாய பாவத்தில்
இது அனுபவ கைங்கர்ய பாவம் -இதில் மேல் விழ வேண்டுமே
மடல் எடுப்பது ஊடல் ப்ரணய ரோஷம் போல்வன ப்ராப்யத்தில் அந்தர் கதம் தானே)

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து ——30-

பதவுரை

உள்ளத்தை–மனத்தை
தெளிது ஆக–[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி
செம் நிறீஇ–செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தை மூட்டி]
ஞானம்–பகவத் விஷய பக்தியாலே
தெளிது ஆக–‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி
நன்கு–நன்றாக
உணர்வார்–அறிபவர்களுடைய
சிந்தை–மனமானது.
எளிது ஆக–வருத்தமில்லாமல்
தாய்நாடு கன்றேபோல்–[பெரிய பசுக்கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக் கொண்டு கிட்டுகிற கன்றைப் போல,
தண் துழாயான் அடிக்கே–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த எம்பெருமானது திருவடிகளையே
புரிந்து–விரும்பி
போய் நாடிக் கொள்ளும்–தானே சென்று தேடிச் சேரும்.

செந்நிறீஇ—நன்கு நிறுத்தி

புரிந்து போய் –விரும்பி அடைந்து-

தெளிதாக உள்ளத்தைச்–உள்ளத்தை தெளிதாக -விஷய ப்ராவண்யத்தாலே காலுஷ்யமான (தோஷமான கலக்கம் )ஹிருதயத்தினுடைய காலுஷ்யம் போக
செந்நிறீஇ–செவ்விதாக நிறுத்தி

ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்–ஞானத்தால் எளிதாம் படி (பத்துடை அடியவர்க்கு எளியவன் என்கிற ஞானம் )-அவன் சேஷீ நாம் சேஷபூதர் –என்றுஅவனை உணர்வாருடைய சிந்தை

தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும் புரிந்து —-
அநேகம் பசுக்கள் நின்றால் தாயைத் தேடும் கன்றே போலே
தண் துழாயான் அடிக்கே புரிந்து போய் நாடிக் கொள்ளும்

செந்நிறீஇ-இந்திரியங்களை தாம் வெல்லப் பாராதே எம்பெருமான் பக்கலிலே மூட்டி விஷயங்களை ஜெயிக்கப் பார்க்கை –

(முதல் படிக்கட்டு-ஸ்ரீ கீதை -2 அத்தியாயத்தில் -58–யத்னம் முயலுவது முதல் நிலை
வ்யதிரேக
ஏகேந்த்ர
வசீகரா சமஞ்ஞா –
இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி -பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் –
வ்யதிரேகம் அடுத்து மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம்
வசீகரம் அனைத்தையும் அடக்குவது)

தெளிதாக -ஞானத்தால் விகசிதமான பக்தியால் – எளிதாக -விஷயங்களில் பழக்கம் போலே தானே மூளும் படியாய் இருக்கை
தாயாய் இருக்கிறபடி(இதுவே சிறந்த த்ருஷ்டாந்தம் )

அடியே-துழாயானுக்கே இல்லாமல் துழாயான் அடிக்கே – -அல்லாத ஸ்தலங்களைக் கடந்து (தேவதாந்த்ர சம்பந்தம் இல்லாமல்)அதுக்கும் மேல் மற்ற அவயவங்களை கனீசியாமல் திருப்பாத கமலத்தில் மட்டுமே

அதுக்கும் மேலே -புரிந்து -விரும்பி –

(மற்ற பசுக்களைக் காணாத கன்று போலே தேவதாந்தர பஜநம் பண்ணாதே
தாயின் முலையையே பற்றும் கன்று போலவே திருவடிகளையே பெரும் காதலோடே நாடும்
தடுத்தாலும் நில்லாது -தானே சென்று அடையும் என்னும் இது நிச்சயம் -இதில் ஐயம் இல்லையே )

—————-

வியதிரிக்தங்களிலே போகாத படி மனசை நியமித்து திருவடிகளின் உறவை அறிந்து இருப்பார்க்கு-
அம் மனஸ்ஸூ (அவன்)தானே -வர பிராப்தி பற்றாதபடி பற்றிக் கொண்டு அத்யபி நிவிஷ்டமாய் அவனைக் கிட்டும் என்கிறார் –

விஷயாந்தரங்களால் உள்ள காலுஷ்யம் (அளவில்லாச் சிற்றின்பம்-ஆசைப்படுவதே கலக்கம் )போய் தெளிவுடையதாம் படிக்கு ஈடாக -ஹ்ருதயத்தை
பகவத் பிரவணமாம் படி என்னை நிறுத்தி

தத் விஷய பக்தி ரூபா பன்ன ஞானத்தினால் -அவன் சேஷி நாம் சேஷம் -என்கிற தெளிவு
யுண்டாம்படியாக சாஷாத்கார பர்யந்தம் நன்றாக உணர்ந்து இருக்குமவர்களுடைய மனசானது வருத்தம் அற

கூட நிற்கிற பசுக்களையும் கணிசியாதே-தன் தாயைக் கிட்டிக் கொண்டு நிற்கும் கன்று போலே
ஸ்ரமஹரமான திருத் துழாயாலே அலங்க்ருதனாகையாலே வகுத்த சேஷியுமாய் -நிரதிசய போக்யனுமான
எம்பெருமானுடைய திருவடிகளையே  வியக்த்யந்தரங்களைக் கணிசியாதே அங்கே
அபி முகமாய் கொண்டு போய் தேடிக் கொள்ளா நிற்கும் -இது நிச்சயம் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

இவனுடைய ரக்ஷகத்வத்தில் த்வரையைக் கண்டு தம்முடைய இந்திரியங்கள் வியாகுலமாம் படி சொல்லுகிறது –

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான
அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்

இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான
அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் -(ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் அதனால் தான் இப்படி )

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-

பதவுரை

வாய்–எனது வாயானது
அவனை அல்லது–ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது–(மற்றொன்றைப்) புகழாது;
கை தாம்–கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா–உலகங்களைத் தாவி யளந்து கொண்ட
திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழ மாட்டா;
பேய் முலை நஞ்சு–பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக–உணவாக
உண்டான்–அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால்–திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா–கண்கள் காண மாட்டா; காதுகள் கேட்க மாட்டா.

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் முரரிபும்-சேதோ பஜ ஸ்ரீ தரம்-
பாணித்வந்தவ ! சமர்ச்ச யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய !ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம்
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-மூர்த்தன் நமா தோஷஜம்--.  -முகுந்த மாலை–16 ஸ்லோகம்

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் -வாராய் நாக்கே -கேசியைக் கொன்ற கண்ணபிரானையே ஸ்தோத்ரம் செய் -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன் -கேச பாசம் யுடையவன் –
முரரிபும்-சேதோ பஜ -வாராய் நெஞ்சே முராசூரனைக் கொன்ற கண்ணபிரானையே பற்று
ஸ்ரீ தரம்-பாணித்வந்தவ ! -சமர்ச்ச -இரண்டு கைகளே திருமாலையே ஆராதியுங்கோள்
யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !-இரண்டு காதுகள் -அடியாரைக் கை விடாத எம்பெருமான் சரித்ரங்களையே கேளுங்கோள்
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய -இரண்டு கண்களே கண்ணபிரானையே சேவியுங்கோள்
ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம் –இரண்டு கால்களே எம்பெருமானுடைய சந்நிதியையே குறித்து போங்கோள் –
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-வாராய் மூக்கே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடித் தாமரைகளில் சாத்தின திருத் துழாய் கந்தத்தையே அனுபவி
மூர்த்தன் நம அதோஷஜம்-வாராய் தலையே எம்பெருமானையே வணங்கு-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்——ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -28-பாசுரம்–

வாய் அவனை அல்லது வாழ்த்தாது –நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ –திரு உலகு அளந்து அருளினவனுடைய நீர்மையைக் கண்டால்
நான் வேண்டாம் என்னிலும் தொழுது அல்லது நில்லாது
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–பேய் நஞ்சாகக் கொடுத்தால் -இவன் தாரகமாக யுண்டான்
அவள் தன் நெஞ்சில் தண்மையால் முடிந்தாள் அத்தனை –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி ——அவன் உரு அல்லது கண்கள் காணா
அவன் பேச்சே அல்லது செவிகள் கேளா –
ஆஸ்ரித விஷயத்திலும் -சாமான்ய விஷயத்திலும் இருக்கும் இருப்பில் சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமான படி –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -தாம் புறம்பே வாழ்த்தப் பார்க்கிலும் -தாம் செய்யா
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ–தொழாதார் தலையிலும் இருந்து தொழுவித்துக் கொள்ளும் திருவடிகளை
யுடையவனை அல்லது -தாம் தொழா-அவனும் ஏற வாங்கிலும் -நானும் ஏற வாங்கிலும் –
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–கொடா விடில் பிழையேன் என்று கொடுக்க –
உண்ணா விடில் பிழையேன் என்று உண்டான் -அநந்யார்ஹம் ஆயிற்று –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி -ஹ்ருஷீ கேசன் அன்றோ —

(முடியானே -திருவாய் -3-8-போலே இவரது கரணங்களின் அன்பு விஞ்சி இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்தில் –
ஹ்ருஷீகேசன் ஆகையாலே எனது ஹ்ருஷீகங்களை இவ்வாறு நியமித்து அருளினான் என்கிறர்)

———————-

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்
இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் -(ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் அதனால் தான் இப்படி )

என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –
கைகளானவை தர தம விபாகம் பாராதே இருந்ததே குடியாக லோகத்தை அடைய அநாயாசேன அளந்து கொண்ட
சீலாதிகனாவனை ஒழிய தாம் தொழப் பாராது —
பூதனை யுடைய முலையில் விஷத்தை தாரகமாக விரும்பி
அமுது செய்தவனுடைய வடிவை ஒழிய கண் காணாது –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஒழியச் செவி கேளாது —

————

(அடைய சாதனம் -சாதன பக்தி உபாயாந்தரங்கள்-தேஹமும் வேணுமே -பக்தி பண்ண
அவனை அடைய அவனே உபாயம் -அனுபவிக்க ருசி -ஸாத்ய பக்தி வேண்டும் -இதுவே ஆழ்வாரது நிலைப்பாடு
சாதன பக்தியை இகழ்ந்து பேசுகிறார் -மூன்றாவது நிர்வாஹம் -என்பரே -இத்தையா சாதனமாக சொல்லுவார் என்றபடி -)

தம்முடைய அனுபவமான பக்தியைச் சொல்லுகிறது (ஸாத்ய பக்தியை )என்னவுமாம் –
பக்தியை விதிக்கிறது என்னவுமாம் –

கீழ் ப்ராப்ய சிஷை பண்ணினார் –
இனி ப்ராபகம் சொல்லுகிறார் –

கீழ் ஸமாச்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்-விமோகம் சாதன சப்தகங்கள் -(பக்தி வளர தயையும் தானமும் வேண்டுமே )
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு-அவனே பிரார்த்திக்காமல் இடந்து எடுத்து அருளினானே )

அவியாத ஞானம் -நாஸம் அற்ற பக்தி ரூப பன்னமான ஞானம்
செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்-பஞ்ச பூதங்களிலான தேஹமும்
வேள்வியும் -அக்னி ஹோத்த்ரம் போன்ற பக்திக்கு சாதனமான கர்மங்களும் –
நல் அறமும் -பக்திக்கு விருத்தியைச் செய்யும் விவேகம் விமோகம் முதலான ஆத்ம குணங்களும்
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —என்பரே–
நிரபேஷ ரக்ஷகனான ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு சாதனம் என்கிறார்களே -என்ன அறிவு கேடு –

வேள்வியும் -பக்தி விவ்ருத்தி யர்த்தமாகவும் -பாப ஷயத்துக்காகவும் அனுஷ்டிக்கிற கர்மங்கள் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்ச நாத் —
ஆ ப்ராயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் (ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் முதல் பாதம் )-என்றும் –
யஞநேன தாநேந தபஸா அநாசகேன ப்ராஹ்மனோ விவிதி ஷந்தி(ப்ரஹ்மதாரண்ய )-என்றும் சொல்லுகிறபடியே
நல்லறம் -விவேகாதிகள் – என்பரே ஏனமாய் நின்றார்க்கு இயல்வு –

(தல் லப்தி-விவேகம் ஆகார சுத்தி -விமோகம் -விஷயாந்தர பற்று இன்மை -அப்யாசம் -பழக்கம் – கிரியா -பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் –
கல்யாணம் -சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை அலோபம் பேராசை இல்லாமை
அநவசாதம் பெரும் துன்பம் இல்லாமை -அனுத்க்ருஷம் -பேர் ஆனந்தம் படாமை
இந்த ஏழும் நல்லறங்கள்)

ஏனமாய் நின்றாரைப் பெறுகைக்கு பண்ணும் பிரவ்ருத்தி இவை என்பர் –
ஆபத்தே அடையாளமாக தானே ரஷிக்கும் என்கையாலே –
அவன் உபாயமாகத் தன்னுடைய பக்தியைச் சொல்லுகிறது என்றுமாம் -(கர்மம் கைங்கர்யத்தில் பக்தி ருசி வளர புகும் )

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –சர்வ இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம்
செந்தீ-புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் -ஆக இருபத்து நாலுக்கும் உப லக்ஷணம் –

அவியாத்-ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே–(பக்தி ரூபா பன்ன ஞானம் பதவுரையில் பார்த்தோம் )கர்ம யோக அந்தர் கதமான ஞானம் -ப்ரக்ருதி ஹேய தயா ஜ்ஜேயை(தாழ்ந்தது என்று அறியத்தக்கது )
ஆத்ம உபாதேயதயா ஜ்ஜேயன் -ஈஸ்வரன் உபாதேய தமனாய் கொண்டு ஜ்ஜேயன் -சஞ்சலம் ஹி மனஸ்
வேள்வி -கர்ம யோகம் – நல்லறம் ஆன்ரு சம்சயாதி தர்மங்கள் என்பர் -வேத சாஸ்திரங்களில் பிரசித்தி

ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —தளர்ந்த போது எடுக்குமவன் -என்று ஷேபமான போது பிரவ்ருத்தி கொண்டு
புகுவதைக் கை வாங்கின அன்று (சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் )எடுக்க இருக்க -ஞானப் பிரானை அல்லால் இல்லை –
அறிவானாம் -என்றால் போலே -இயல்வு -உபாயம்-

(சரீரம் ஆத்யம் கலு தர்ம சாதனம் -குமார சம்பவம் -5-33- சரீரமே முதல் தர்ம சாதனமாகும் –
தைல தாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் த்யானம் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்சநாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-15-
ஆ ப்ரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-12-
தமேதம் வேதா நு வசநேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி
யஜ்ஜேந தாநேந தபஸா நாஸகேந -ப்ருஹதாரண்யம் -6-4-22-
தல்லப்திர் விவேக விமோக அப்யாஸ க்ரியா கல்யாண அநவஸாத அநுத்தர் ஷேப்ய–என்கிறபடியே
1- அன்ன ஸூத்தியால் உண்டாகும் சரீர ஸூத்தி யாகிற விவேகம்
2-விருப்பங்களில் பற்று அற்று இருக்கை யாகிற வி மோகம்
3-பகவத் விஷயத்தில் பலகால் பழகுகை யாகிற அப்யாஸம்
4-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்களை முயன்ற வரை அனுஷ்டிக்கை
6-உண்மை நேர்மை இரக்கம் கொடை கொல்லாமை பேராசை இன்மை முதலிய கல்யாண குணங்கள்
6-மன வருத்தம் இன்மை
7- அதி சந்தோஷம் இன்மை –ஆகிய சாதன சப்தகம் -ஸூத்ரகாரர் அருளிச் செய்தவை -எம்பெருமானை அடைய உபாயம்
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி
பக்த்யா த்வன் அந்யயா சக்ய -கீதை -11-54-
பக்தி க்ரீதோ ஜனார்தன
ஏனத் துருவாய் இடந்த பிரான் அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -திரு விருத்தம் -99–நம்மாழ்வார் சித்தாந்தமே இவருடையதுவும் -)

————-

கீழ் ஸமாஸ்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

ஸ்ரோத்ர ஜிஹ்வா சஷூர் க்ராண த்வக்குகள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
தேஜஸ் பிருத்வி வாயு ஜலம் ஆகாசங்கள் ஆகிற பூத பஞ்சகமும்
தத் உப லஷிதமான சரீரமும் –

இந்த கரண களேபரங்களால் சாதிக்கப் படுமதாய்-அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான பக்தி ரூபா பன்ன ஞானமும் –

பக்தி உத்பத்தி விவ்ருத்தி ஹேதுவாய் -பல சங்க கர்த்ருத்வ தியாக பூர்வகமாக பண்ணும் யாகாதி கர்மங்களும்
நாள் தோறும் பக்தியை வளர்க்கக் கடவ விவேக விமோதாதிகளும் –

ஆன்ரு சம்சய தாநாதிகளும் ஆகிற விலக்ஷண தர்மமும்
சர்வ ஸூலபனாய்-ஆபத் சகனாய் நின்ற சர்வேஸ்வரனுக்கு -சத்ருச சாதனம் என்று வேத வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள்

பக்தித–என்றும் –
பக்த்யா த்வத் அநந்யா ஸக்ய-என்றும் சொல்லக் கடவது இறே

அங்கன் இன்றிக்கே
தமக்கு போக உபகாரணமான பக்தியை -உபாசகர் உபாயமாக அநுஸந்திக்கும் கட்டளையைச் சொல்லி
பக்தியை ஷேபித்து பிரபத்தியை அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –

அப்போதைக்கு –
ஏனமாய் நின்றார்க்கு நல்லறமான இவை இயல்வு என்பரே-தானே வந்து சந்நிஹிதனாய் ரக்ஷிக்குமவனைப் பெறுகைக்கு
இவற்றை சத்ருச சாதனம் என்று சொல்லா நிற்பார்கள் -என்ன அறிவிலிகளோ -என்று ஷேபமாகக் கடவது

ஞானப் பிரானை அல்லால் இல்லை (ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே )நான் கண்ட நல்லதுவே என்று இறே தம்முடைய சித்தாந்தம் –

———————————————————————————————–

வாயவனை யல்லது வாழ்த்தாது -என்னும்படியாய் இருந்தது -உம்மது–அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது
அவதானம் வேணும் -எங்கனே கூடும்படி என்னில் –
பிரக்ருதயா இயற்கையாகவே அவனை ஆஸ்ரயித்து இருப்பர் நித்யர்கள் -அல்லாதாரும் ஆஸ்ரயிக்கும் படி தானே பிரதம பாவியாம் -என்கிறார் –

உபகரணங்களையும் கொடுத்து -ருசியையும் ஜநிப்பித்து-உபாயமுமாய் -தானே பல பிரதானம் பண்ணும் என்கிறார்

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூரிகளே —
இப்படி இருக்கச் செய்தேயும்
சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூலபனாக்கி வைக்கும் -என்கிறார் –

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் –13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
எம்பெருமானது-புருஷோத்தமானது- திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதை யுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்த வேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

(ராமானுஜர் ஆறு கட்டளைகள் -ஸ்ரீ பாஷ்யம் கற்று –தொடங்கி -திவ்ய தேச வாஸம் —
அடுத்து அடுத்து மேலே போவோமே
திருப்பாவை அனுசந்தானம் -பட்டர் -இதே போல் -அனைத்தையும் கொடுத்து கூட்டிப் போவான் அன்றோ -அனுபவத்துக்கு ருசி வளர – ஆதியாய் தானே நிற்கிறான் -)

இயல்வாக –சத்ருசமாக
யீன் துழாயான் அடிக்கே செல்ல-ஆக முதலியாகத் தோள் மாலை இட்டிருக்கிறவதுக்குப் போரும்படியாக
முயல்வார் இயல் அமரர் முன்னம்-இயற்றியை யுடையரான நித்ய ஸூரிகள் முன்னே மஹா யத்னம் பண்ணுவார்கள் –
விஷய பிரவணராய் அவனை அறியாதவர்களும்(நம் போல்வாரும் )
இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -முறையால் திரு நாமங்களை சொல்லி(காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் )
நியமங்களால் பரவ-பரவும் படிக்கு ஈடாக -சாஸ்திரங்களில் சொல்லும் நியமங்களாலே பரவசமாகும் படிக்கு ஈடாக(பரவ -வாசிக -முக்கரணங்களுக்கும் உப லக்ஷணம் )
ஆதியாய் நின்றார் அவர்–அவர் தாமே –பிரதம ஸூஹ்ருதம் ஆனார் -(உபகரணங்களையும் கொடுத்து ருசியையும் பிறப்பித்து -அனைத்துக்கும் அவனே உபாயம் )

இயல் அமரர் –இயற்றியை யுடைய அமரர் –
முன்னம் -முந்துற முன்னம்
இயல்வாக–இதுவே யாத்திரையாக
யீன் துழாயான்-(ஆர்த்தமாக )பரி பூர்ணன்
அடிக்கே செல்ல–திருவடிகளுக்குச் சேர
முயல்வார்-யத்னம் பண்ணுவார் –
இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -சாஸ்திர யுக்தமான படியே
நியமங்களால் பரவ-ஸ்ரவணாதிகளால் ஆஸ்ரயித்து (வாயினால் பாடி மனசால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது )
ஆதியாய் நின்றார் அவர் -அவர்களுக்கு உபேயத்துக்கு அடியானால் போலே (த்வயம் நித்ய அனுசந்தானம் இனிமையால் -அனுபவத்துக்கு நித்யர்களுக்கு )வேண்டினவிடத்துக்கு இவர்களுக்கு உபாயத்துக்கு அடியாக நின்றால் ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ –
அவனே இதுக்கும் வேண்டின பின்பு அவனையே பற்ற அமையாது என்றுமாம் –

(உபகரணங்களையும் தந்து அருளி -ருசியையும் உண்டாக்கி – உபாயவுமாகி பலனையும் தந்து அருளி -தன்னை அடையலாம் படி முற்படுபவனும் அவனே
ஸமஸ்த லோகங்களுக்கும் ஏக சக்ராதிபதி என்பதைக் காட்டவே தனி மாலை இட்டுள்ளான் –
மந்த்ரோ ஹீந ஸ்வர தோ வர்ண தோ வா யஜமானம் ஹிநஸ் தி -என்பதை அறிவானே
பூர்வா யோ தேவேப்யோ ஜாத –
மஹா புருஷ பூர்வஜ
ஆகையால் நமக்கும் அவனை ஆஸ்ரயிக்கக் குறையில்லை என்கிறார் -)

———–

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூரிகளே –இப்படி இருக்கச் செய்தேயும்-சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூலபனாக்கி வைக்கும் -என்கிறார் –

ஐஸ்வர்ய ஸூசகமான அழகிய திருத் துழாயை யுடையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்ட -சத்ருசமாக உத்யோகிப்பர்
முந்துற முன்னம் அதுக்கு ஈடான யோக்யதையை யுடையரான நித்ய ஸூரிகள் -அல்லாத நம் போல்வாரும்
ஸ்வர வர்ணாதிகளுக்கு நழுவுதல் வாராத படி அழகிதாகக் கொண்டு
சாஸ்திர யுக்தமான விரத நியமாதி க்ரங்களோடே அத்யயனத்தைப் பண்ணி –
அதீதமான வேதத்தின் அர்த்தத்தை ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு மனனம் பண்ணி
அர்ச்சனை பிரணாம கீர்த்த நாதிகளோடேகூட அனவரத பாவனை பண்ணுகை யாகிற நியமங்களாலே
பக்தி பரவசராய் பரவும்படிக்கு ஈடாக அப்படிப் பட்ட பெருமை யுடையவர் –

பூர்வஜ -என்கிறபடியே
ருசி உத்பாதகராய்க் கொண்டு முற்பாடராய் நின்றார் —
ஆகையால் நமக்கு எல்லாம் ஆஸ்ரயிக்க குறையில்லை என்று கருத்து –

இயலமரர் –இயற்றியை யுடையரான -யோக்யதை யுடையரான நித்ய ஸூரிகள் -என்றபடி –

————————————————————————————————————

பிரக்ருத்யா ஆஸ்ரயிக்குமவர்களையும் சொல்லி -ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுமவனையும் சொல்லிற்று
இது ஒன்றும் பெறாதாரைச் சொல்லுகிறது –
அவனை வேண்டாதார் படுகிற பாடு பாரீர் -என்கிறார் –

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு –
சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம் பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயரான தேவதைகளுக்கும்
ஆஸ்ரயணீயன் அவனே -என்கிறார் –

(அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் -கம்பர்-நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் –
சதுர்முகன் கையில் சங்கரன் தலையில் சதுர் புஜன் தாள் -பார்த்தாலே அறிவோம்)

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி
அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

(யஜந்தே ஸாத்த்விகா தேவாந் யக்ஷ ரக்ஷாம்ஸி ராஜஸா–
ப்ரேதாந் பூத கணாம் ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா–৷৷17.4৷৷

எந்த தேவதையை சேவிக்கிறான் -சாத்விகர் தேவர்களை வணங்குவார் -அவர்கள் இடம் இருப்பதை எதிர்பார்ப்பார்கள் -அதிலே ருசி
ஸ்ரீ மன் நாராயணன் -பரம சாத்வீகன் -தேவர்க்கும் தேவாவோ -மாக வைகுந்தம் அடைய எண்ணுவார்கள்
ராக்ஷஸர்கள் யஜ்ஜர்கள் ராக்ஷஸர்களை – அன்யா -வேறு பட்ட தாமஸர்கள் பூத கணங்கள் பிரேதங்களை
வணங்கி சா லோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் அடைய)

அவரவர் –ரஜஸ் பிரசுரரும் தமஸ் பிரசுரரும்
தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி-குணானுகுணமாக வெளிச் செறிந்த படி ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு விஷயமானவரை என்னுடைய ஸ்வாமி என்று
சுவர் மிசைச்-சார்த்தியும் வைத்தும் தொழுவர் ——-சர்வேஸ்வரன் பக்கல் -எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பர்
என்கிற செயலில் பித்தியிலே எழுதியும் வைத்தும் தொழுவர் –
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் —-இவர்களுடையவும் -ஆசிரயணீயங்கள் யுடையவும் தலையிலே அடியை வைத்தவனே பிரதானம் –
மூர்த்தி யுருவே முதல்–சர்வேஸ்வரனுடைய திரு மேனியே பிரதானம் –

அவரை வேண்டாதார் படும்பாடு மேல் அருளிச் செய்கிறார்

அவரவர் பின்ன ருசிகள் – தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி -சாஸ்திரத்தின் பின் செல்லார்
இவர் இவர்–சகர புத்திரர்கள் கண்டாரை -என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே -தோற்றினாரை
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் –சமாஸ்ரயிப்பார் தலையிலும் ஸமாச்ரயணீயர் தலையிலும்
ஓக்கத் திகைத்த சர்வேஸ்வரன் -உருவே முதல் -வடிவே முதல் –

(பிறப்பில் பல் பிறவிப்பெருமான் -அஜாய மானோ பஹுதா விஜாயதே -இவனதே அவதாரம்
கஹா அதிக கன்யதாம் ஏககா ஒருவனே
ஒருவன் திருவடி நீட்ட
மற்ற ஒருவன் கழுவி
மூன்றாமவன் தலையால் தாங்கி -அறிய வைத்தார்கள் -)

(ஸாத்விகஸ் ச து விஜ்ஜேய
லோகோ பின்ன ருசி
ஸத்வாத் சஞ்ஜாயதே ஞானம்
அஜாய மாநோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான்
பிறவாப் பிறப்பு இல்லை பிறப்பித்தார் இலையே
ஏக ப்ரஸீஸாத் பாதம் ஏக ப்ராசிஷளன் முதா அபரோப்யதான் மூர்த்நா கோ அதி கஸ்தேஷு கண்யதாம்
சங்கரன் தலையில் சதுர்முகன் கையில் சதுர் புஜன் தாளில் இத்யாதி )

———————

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு –
சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம் பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயரான தேவதைகளுக்கும்
ஆஸ்ரயணீயன் அவனே -என்கிறார் –

ரஜஸ் தமஸ் பிரசுரராய் பின்ன ருசிகளான அவ்வதிகாரிகள் -சாஸ்திர முகத்தால் அன்றிக்கே குணானுகுணமாக
தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே வாய் விட்டுப் புகழ்ந்து தங்கள் உகந்த குணங்களை யுடைய ஐயன் துர்க்கை
தொடக்கமாக ருத்ரன் முடிவாக உண்டான இவர்கள் நமக்கு ஆஸ்ரயணீயரான ஸ்வாமிகள் என்று ஆதரித்துக் கொண்டு
ஒவ்வொரு தேவதைகளை ஓரோர் பித்திகளிலே சித்ர ரூபேண எழுதியும் க்ருஹம் தொடக்கமான
ஓரோர் இடங்களிலே ப்ரதிமா ரூபேண ப்ரதிஷ்டித்து வைத்தும் ஆஸ்ரயியா நிற்பார்கள் –

இவர்கள் இப்படிச் செய்தாலும் ஆஸ்ரயிக்கிறவர்களோடு -ஆஸ்ரயணீயராக இவர்கள் விரும்புகிற அத் தேவதைகளோடு வாசியற
எல்லோரும் தன் கால் கீழே துகை யுண்ணும் படி ஜகத்தை அடைய அளந்து கொண்ட சர்வேஸ்வரன் திருமேனியை பிரதானம் –

———————

(ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -தானே வேண்டுவது -விலக்காமை அத்வேஷ மாத்ரமே கொண்டு அருள் பயன்பெறும்
அவன் அருள் எப்போதும் நித்யமாகவே இருந்தாலும்-கார்ய கரம் ஆவதுக்கு இதுவே வேண்டுவது-)

(சிலர் பரம சிவன் என்பர் -சிலர் பராசக்தி என்பர் -சிலர் மஹா கணபதி என்பர் -சிலர் ஸூ ப்ரஹ்மண்யன் -என்பர்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது போல் -நீயும் நானும் கூடப் பரம் பொருள் தான் என்பாரும் உண்டே

ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே –விஷ்ணுவுக்கும் பிறப்பை ஓதும் வேத வாக்யம்
ஆகவே துரீய நான்காவது ப்ரஹ்ம வாதிகள் பரமசிவன் பார்வதியே என்பர்
பரம் பொருளை இந்த்ர ஸப்தத்தாலும் ஆகாச ஸப்தத்தாலும் வாயு சப்தத்தாலும் சொல்லி இருப்பதால்
பரமேந்திரன் பரம ஆகாசம் பரம வாயு தத்வங்களைக் கற்பித்து பரம் பொருள் என்பர் சிலர் )

அவ்வோ தேவதைகளும் ஆஸ்ரயணீயராய்ச் சொல்லா நிற்கச் செய்தே –
அவர்கள் அப்ரதானர் இவன் பிரதானன் என்று சொல்லுகிறது உம்முடைய பக்ஷத்தாலே இறே என்ன –
அர்த்த தத்வம் இருந்தபடியைப் பார்க்கலாகாதோ -என்கிறார் –

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்க்கு பலம் கொடுப்பார் சிலருமாய் அன்றோ
நாட்டில் நடந்து போருகிறது-என்ன –
அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

பதவுரை

(உலகத்தில் பல பல தெய்வங்கள் வழங்கப் பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம் மூவர் உள்ளும்–அந்த த்ரி மூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப் பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–ப்ரஸித்தமான கடல் சூழ்ந்த இப் பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

(அணைவது அரவணை மேல் –இருவர் அவர் முதலும் தானே –இணைவனாம் -)

முதலாவார் மூவரே –இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் அன்று இறே -மூவர் இறே பிரதானர்

அம் மூவருள்ளும் முதலாவான் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஜீவ வ்யவதாநத்தாலே -அந்தர்யாமியாயும்
தன் பக்கலிலே ஸ்வேன ரூபேண நின்றும் காரணம் ஆவான் -(அவர்கள் கர்ம வஸ்யர் -பரமாத்மா இவன் ஒருவனே )

மூரி நீர் வண்ணன்-பொன்னுருவும் தீயுருவும் ஆனவர்கள் அன்று -பரப்பை யுடைத்தான கடல் வண்ணன் -(குளிர்வித்துக் கொள்ளும் ஆஹ்லாத வண்ணன் இவன் ஒருவனே )

முதலாய–காரணமான

நல்லான் அருள் அல்லால்-அறவனானவன் அருள் அல்லால்(தர்மம் அறிந்தவன் -கிருஷ்ணன் தர்மம் ஸனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம -)

நாம நீர் வையகத்துப்-பல்லார் அருளும் பழுது ——அவனுடைய அருள் ஒழிய அல்லாதார் எல்லாருடைய அருளும் பழுது

அதிகாரிகள் ஆகையால் அவர்களை முற்படச் சொன்ன அத்தனை -பழுதாம் இடத்தில் அவர்களோடு அல்லாதாரோடு வாசி இல்லை
அவனுக்கு வசராய்க் கொண்டு பலம் தரிலோ என்னில் இரண்டும் வியர்த்தம் -(ஆரோக்யம் பாஸ்கரன் அக்னி செல்வம் பரமசிவன் ஞானம் -அந்தர்யாமியாய் இருந்து செய்விக்கிறான் )

முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ(காரணந்து த்யேய -நல்லான் மோக்ஷ பிரதன் )

நாமம் -நாம மாத்ரரான பல்லார் என்னுதல் –பிரசித்தமான நீர் வையகம் என்னுதல் –

பல்லார் -கீழ்ச் சொன்ன ப்ரஹ்ம ருத்ராதிகள் அகப்பட
தனித் தனியவும் திரளவும் பழுது -வியர்த்தம் –

———–

காமைஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்ந்தேந்யதே₃வதா:|–
தம் தம் நியமமாஸ்தா₂யா-ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥—ஸ்ரீ கீதா 7-20-

உலகில் பலர் தமது முக் குண மய பொருள்கள் விஷயமான அநாதி வாசனையால் எப்போதும் சேர்ந்து இருக்கப் பெற்றவர்களாய்
தமது வாசனைகளுக்கு ஏற்ற அந்த அந்த முக்குண மயமான விரும்பப்படும் பொருள்களாலே கவரப் பெற்ற
என் ஸ்வரூப விஷயமான அறிவை உடையவர்களாய் –
அந்த அந்தப் பொருள்கள் கிடைப்பதற்காக என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை அந்த அந்த தேவதைகளையே
மகிழ்விப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக் கொண்டு அவர்களையே ஆஸ்ரயித்து ஆராதிக்கிறார்கள் –
ஸ்வயா ப்ரக்ருத்யா – தமது (முக்குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதி வாஸனையாலே,
நியதா: – எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்
தை தை: – (தம் வாஸநாகுணமான) அந்த அந்த
காமை: – (முக்குணமயமான) விரும்பப்படும் பொருள்களாலே
ஹ்ருதஜ்ஞாநா: – அபஹரிக்கப்பெற்ற (என் ஸ்வரூப விஷயமான) அறிவையுடையவர்களாய்
(அந்த அந்த பொருள்கள் கிடைப்பதற்காக)
அந்யதே₃வதா: – என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை
தம் தம் நியமமாஸ்தா₂யா – அந்த அந்த தேவதைகளையே உகப்பிப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக் கொண்டு)
ப்ரபத்ந்தே – அவர்களையே ஆஶ்ரயித்து ஆராதிக்கிறார்கள்.

ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் —
மந்தி பாய் –கங்கா தீரத்தில் இருந்தும் தாகத்துக்கு கிணறு வெட்டுவாரைப் போலே –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு
விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே
இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ய: ய: ப₄க்த: – எந்த எந்த தே₃வதாந்த்ர பக்தன்
யாம் யாம் தநும்- (எனது) ஶரீரமான எந்த எந்த தேவதையை
ஶ்ரத்த₄யா – விஸ்வாஸத்தோடு
அர்ச்சிதும் – ஆராதிப்பதற்கு
இச்ச₂தி – விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய – அந்த அந்த பக்தனுக்கு
தாம் ஏவ ஶ்ரத்தா₄ம் – அந்த (தேவதா விஷயமான) விஶ்வாஸத்தையே
அசலாம் – (இடையூறுகளால்) அசையாததாய்
அஹம் – நான்-

அந்தர்யாமி நான் என்ற ஞானத்துடன் ஆச்ரயிப்பவர் சீக்கிரம் விட்டு என்னையே கேட்டு வருவான் -அப்படி இல்லாதவர்க்கும் –
அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன் –
நாஸ்திகன் ஆக்க கூடாதே –கிரமத்தில் வருவார்களே – -கொண்டி மாட்டுக்கு தடி கட்டுவாரைப் போலே
நாட்டினான் தெய்வம் எங்கும் –சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றார்களே –

ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதநமீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷

அந்த அந்த தேவதாந்த்ர பக்தன் அந்த நம்பிக்கையோடு கூடியவனாய் அந்த அந்த தேவதைக்கு ஆராதனம் செய்ய முயல்கிறான்
அந்த அந்த தேவதை இடம் இருந்து என்னாலேயே கொடுக்கப்பட்ட தான் விரும்பிய அந்தப் பொருள்களை அடையவும் செய்கிறான்
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்ப மேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வ யஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-

புல்லறிவாளர்களான அவர்களுக்கு அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது
ஏன் எனில் தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களை அடைகின்றனர் –
என்னுடைய பக்தர்களும் என்னை அடைகின்றனர்

யல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு
அந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்
தே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்
மத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-
என்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்
உம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் –
மோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம் எல்லாமே கிடைத்ததாகுமே –
அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –
ஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்கி இருந்து –
அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் -பெத்த பாவிக்கு விடப் போமோ –
என்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —

(ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா தே ஸர்வே ஸம் ப்ரஸூயந்தே -அதர்வசிகை
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே -நாராயண மஹா உபநிஷத்
ஸோரோதீத் -ருத்ரன் அழுதான்
ஸோ அப்ரவீத் அநபஹத பாப்மா வாஹம்
வரம் வ்ருணை அஹமேவ பஸூநா மதி பதி ரஸாநீதி -பசுபதியாகக் கடவேன் என்று வரம் வேண்டினான்
ஸோ பிபேத் -யமனைக் கண்டு பிரமன் பயந்தான்
உஷஸி ரேதோ சிஞ்சத் -பிரமன் உஷஸீ என்னும் தனது தேவியிடம் வீர்யத்தை -ரேதஸ்ஸை விட்டான் –
ஆகவே பயமும் பிராக்ருதி சம்பந்தமும் அபூர்ணத்வமும் இவர்களுக்கு உண்டே
ச ப்ரஹ்ம ச சிவா
அவனே அவனும் அவனும் அவனும்
ப்ரஹ்மா நாராயண சிவஸ் ச நாராயண சக்ரஸ் ச நாராயண
சேந்த்ர
சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண
திஸஸ் ச நாராயண விதிஸஸ் ச நாராயண சர்வம் நாராயண
புருஷ ஏவேதம் ஸர்வம்
விஸ்வம் ஏதம் ஸர்வம்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா திவ்யோ ஏக ஏவ நாராயண
அந்தர் பஹிஸ் ச நாராயண
அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வியாப்ய  நாராயண ஸ்தித
விஸ்வ ஆத்மாநம் பாராயணம்
ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
தஜ்ஜலான்
அந்நியஸ் ச ராஜன்ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக தத்ஸ்த த்வாத் அநு பஸ்யந்தி ஹ்யேக ஏ வேதி ஸாதவ
ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -கீதை -11-40-
ஸர்வ கத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவாஹம வஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-19-35-
யதோ வா இமாநி
ஏகமேவ அத்வதீயம்
ஏக ஏவ நாராயண
ஏக ஏவாக்ர ஆஸீத்
ஈஸதே தேவ ஏக
ஏகஸ் ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ
ஏக ஸாஸ்த்தா ந த்வதீய அஸ்தி
ஏக ஏவ ஜநார்த்தன
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயநாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயநாத் ருத்ரோ ஜாயதே
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லே கேவ
காரணந்து து த்யேய

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥-ஸ்ரீ கீதை —7-21-
எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான
நம்பிக்கையையே இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதநமீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷
அந்த அந்த தேவதாந்த்ர பக்தன் அந்த நம்பிக்கையோடு கூடியவனாய் அந்த அந்த தேவதைக்கு ஆராதனம் செய்ய முயல்கிறான்
அந்த அந்த தேவதை இடம் இருந்து என்னாலேயே கொடுக்கப்பட்ட தான் விரும்பிய அந்தப் பொருள்களை அடையவும் செய்கிறான்
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்ப மேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வ யஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-

புல்லறிவாளர்களான அவர்களுக்கு அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது
ஏன் எனில் தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களை அடைகின்றனர் –
என்னுடைய பக்தர்களும் என்னை அடைகின்றனர்

மூவருக்கும் முதலாவான் முந்நீர் வண்ணன் -கடல் நீர் வையகத்தை வியாபித்து இருப்பது போலவே ப்ரஹ்ம ருத்ராதிகளை வியாபித்து இருப்பவன் என்றும்
கடல் நீரே மேகமாகவும் நதிகளாகவும் உரு எடுப்பது போலவே விஷ்ணு முதலிய அவதாரங்களை எடுத்து
லோக ரக்ஷணம் பண்ணி அருளுகிறான் என்றும் காட்டி அருளுகிறார் – )

———–

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்க்கு பலம் கொடுப்பார் சிலருமாய் அன்றோ
நாட்டில் நடந்து போருகிறது-என்ன –
அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

இவர் இவர் என்று இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் என்று பிரமியாதே ஸ்ருஷ்டியாதி கார்யங்களை
அதுக்கு அடைத்த வடிவு எடுத்து நடத்திக் கொண்டு போருகிற-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகள் ஆகிற
மூவருமே ஜகத்துக்கு ப்ரதானர் ஆவர் –
அம் மூவர் தம்மில் சமர் என்றும் –
மூவரும் கூட ஓன்று என்றும்
மூவருக்கும் அவ் வருகே ஒருவன் பிரதானன்-என்றும் பிரமியாதே –
அந்த மூவரிலும் வைத்துக் கொண்டு பிரதானனாவான்

ப்ரஹ்மாதிகளை இடுக்கி ஸ்ருஷ்டியாதிகளை நிர்வகித்துப் போருமவனாய்-
சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருக்கிற வடிவையும் யுடையவன் ஆனவன் -(நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேக பாஸ்வதா )

(நாராயாணா பிரம்மா ஜாயதே -நாராயாணா ருத்ரோ ஜாயதே
அஜயமானோ பஹுதா விஜாயதே
பிறப்பிலி -பல் பிறவிப்பெருமான் –
அந்தர் பஹிஸ்ஸ ஸர்வம் நாராயணா

சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி பூநிலாய ஐந்துமாய்
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி -நாராயணன் நான்முகனைப் படைக்க அவன் சங்கரனைப் படைக்க
ஸோரோதீத்–ரோதனம் -ருத்ரா -அழுதான் –

ஸோ அப்ரவீத் அநபஹத பாப்மா வாஹம் –பாபம் நீங்காதவன் -சிவ அபூத் –

ச பிரம்மா சேந்த்ர -சக்ரஸ்ய நாராயண -இந்திரனும் நாராயணனே -திசைஸ் ஸ நாராயண -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்

கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன் –அனைத்தும் என்கோ -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்

சஷுஸ்  ஸ த்ரஷ்டவ்யஞ்ச நாராயணா -கண்ணும் காணும் பொருளும் நாராயணனே

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா -பூமி எங்கும் வியாபித்து உள்ளான்
தஜ் ஜலான் –
அந்யஸ்ய ராஜன் ஸ பர தத் அந்ய பஞ்ச விம்சக தத்ஸ தத்வா தத் அநு பஸ்யந்தி ஹ் ஏவேதி சாதவ -பாரதம்
ஜீவனும் பரமாத்மாவும் வேவ்வேறே தத்துவமாக இருப்பினும் அந்தர்யாமியாக இருப்பதால் இருவரையும் ஒருவராகவே நல்லோர்கள் காண்கிறார்கள் –

நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே–நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ.–
அநந்த வீர்யாமித விக்ரமஸ்த்வம் -ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ—৷৷-ஸ்ரீ கீதை -11.40৷৷

மூ வகையான அளவுகளும் இல்லாதவனே -தேவர்களுக்கு ஈசனே -உலகு அனைத்தையும் வியாபித்து இருப்பவனே –
நாம ரூபங்கள் அற்றதாய்க் காரண நிலையில் உள்ள மூல ப்ரக்ருதியும் –
நாம ரூபங்கள் உடையதாய் கார்ய நிலையில் உள்ள மூல பிரக்ருதியும் –
இந்த மூல பிரக்ருதியோடு கூடிய பத்த ஜீவ ஸ்வரூபமும் –
இவை அனைத்துக்கும் மேற்பட்டதான முக்தாத்ம ஸ்வரூபமும் நீயே –
ஆகையால் நீயே ஆதி தேவனாவாய் -புராண புருஷனாய் இருப்பவன் –
இந்த உலகுக்கு மேலான ஆதாரமாய் இருப்பவனும் நீயே

ஈச தேவ ஏக நாராயணா
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயதம்

ஸர்வ கத்வாத் அனந்தஸ்ய ஸ ஏவாஹம் அவஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85-அநந்தன் எங்கும் பரவி இருக்கையாலே நானும் அவனாகவே இருக்கிறேன் –

யதோ வா இமாநி

ஏகஸ் ஸ்வ தந்தரோ ஜகதோ பபூவ -என்றும்
ஏக ஸாஸ்தா ந த்விதீயோ அஸ்தி ஸாஸ்தா -பாரதம்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்

ஸர்வ அந்தர்யாமி -விஸ்மாத்மநம் -சரீரீ சரீரம் பாவம் -பிரகாரீ பிரகாரம் )

ஜகத் காரண பூதனுமாய் சர்வ விஷயமான வாத்சல்யத்தையும் யுடையனானவனுடைய
கிருபை ஒழிய -பிரசித்தமான நீரை யுடைத்தான ஜகத்தில் உள்ள பலருடைய பிரசாதமும் வியர்த்தம்

இவனை ஒழிந்த மற்ற இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்களோடு வாசியற சர்வமும் வியர்த்தம்
அன்றிக்கே –
நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது என்னவுமாம் –

தான் பலியாத அளவன்றிக்கே
பகவத் பிரசாதத்தையும் விலக்குவதாகையாலே-பழுது -என்கிறார்-

(பாணாசூர வ்ருத்தாந்தம் போல்வன அறிவோமே

ரஜஸ் தமஸ் -பிரசுரராகையாலே ஸம்ஸாரத்திலே பூண் கட்டவும் அல்ப அஸ்திர பலன்களையே இவர்களால் தர முடியும் -)

(மூவருள்ளும்-முதலாவான் மூரி நீர் வண்ணன் -என்கையாலே கடல் நீர் வையகத்தை வியாபித்து இருப்பது போலே
ப்ரஹ்ம ருத்ராதிகளை வியாபித்து இருப்பவன் என்றும்
கடல் நீரே மேகமாகவும் நதிகளாகவும் உரு எடுப்பது
போலே
தானே விஷ்ணு யாதி அவதாரங்கள் எடுத்து உலகோரை ரக்ஷித்து அருள்பவன் என்கிறார் -)

—————————————————————————————–

நல்லான் அருள் பெற்ற -எனக்கு சோகம் உண்டாயிற்று -என்கிறார் –
பண்டு உபாயாந்தரங்களிலும் தேவதாந்தரங்களிலும் ப்ரவணனாய் இழந்தேன் என்று சொல்லுகிறார் –

இதர தேவதைகளைப் பற்றி இவ்விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரத்வ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்
அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி
இவ் விஷயத்தை அகன்று திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடைதட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந் தாமரை போன்ற திருக்கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவை யுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க் கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ் விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் —
போன காலம் அநாதி –வரும் காலம் அநந்தம் –
இத்தோடு ஒத்த காலம் இறே போயிற்று என்று அழுதேன்

இழவுக்கு அழுதார் ஆகில் அச்சம் ஆவது என் –
வருமத்தை குறித்து அன்றோ அஞ்சிற்று என்னில் -அதிகாரி நான் ஆகில்
போன காலம் போலே ஆகிறதோ வருகிற காலமும் என்கிறார் –

காலேஷ்வபி ச ஸர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத
சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தே -1-9-

வர்த்ததே மஹா பயம்-ஜிதந்தே 9 மந்த்ரம் – -ஸ்ரீ வசன பூஷணம் காட்டும் பிரமாணம்

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி –நிந்திதஸ்ச வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே-(அயோத்யா-17-14 )என்று
சொல்லுகிறது பெருமாளுடைய ஒரு நாளைக்கு இழவுக்கு இறே

யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே
ஸா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் சாப்ராந்தி சா ச விக்ரியா –என்று ரிஷிகள் ஈடுபட ஆழ்வார்கள் அழ கேட்கவும் வேணுமோ-

கடலோதம் காலலைப்பக் –
(புஷ்ப்ப ஹாஸ -மலரின் மெல்லியவன் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் )திருவடிகளை -கடலோதமானது துடை குத்துமா போலே அலைப்ப(அதனாலேயே மெய் மறந்து கண் வளருகிறான் -கண் வளர்ந்து அருளும் போதும் வாத்சல்யத்தாலே ஜகத் ரக்ஷண சிந்தையிலே ஈடுபட்டுள்ளான் -)

கண் வளரும் செங்கண்-அடலோத வண்ணரடி——அரவணை மேல் கண்டு தொழுதேன்–
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே(வெளுத்த பாற் கடல் அரவணை -மேல் கறுத்த திருமேனி பரபாகம் )

(யதார்ஹம் கேஸவே வ்ருத்திம் அவசா ப்ரதி பேதிரே -பாரதம் -தங்களையும் மீறி கேசவன் இடம் மரியாதை செய்தனர்
அப்படி எதிரிகளையும் ஈடுபடுத்தும் வடிவு அழகு என்னை ஈடுபடுத்தச் சொல்ல வேணுமோ)

பழுதே –
பழுதும் பழுது அல்லாததும் கூடப் பெற்றேனோ

பல பகல் –
இழந்த அநாதி காலம் பலவாய் -அதுக்கு அநந்தரம் அனந்த காலமான படி

போயின –
போன நீர்களைக் கோலவோ–வரும் காலமும் பழைய காலமும் ஓன்று -பழைய நானே இன்னம்
அப்படி யாகில் செய்வது என் –என்கிறார் -காலேஷ் வபி ச –

அரவணை மேல் கண்டு –
பரியங்க வித்யையில் படியே பூர்ணமாகக் கண்டேன்

கண்டு தொழுதேன் -கண்டால் செய்யும் தொழில்
கால் அலைப்ப -சிறு திவலை துடை குத்த
செங்கண் –வாத்சல்யம் தோற்றுகை
அடலோதம் -நெருங்கின ஓதம் –

(யதார்ஹம் கேசவ வ்ருத்திம் தவஸா பிரதிபேதிரே -துரியோதனாதிகள் தங்களையும் மீறி மரியாதை செய்தார்கள் அன்றோ –
காலேஷ் வபி ச ஸர்வேஷு திஷூ ஸர்வாஸூ ச அச்யுத
சரீரே க கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தே -1-9-
யஸ் ச ராமம் ந பஸ் யேத்து யஞ்ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ச வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே -அயோத்யா -17-14-
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயேத்
ஸா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் சா பிராந்தி சா ச விக்ரியா – )

(ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2))

————-

இதர தேவதைகளைப் பற்றி இவ் விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரத்வ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்

அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி-இவ் விஷயத்தை அகன்று திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

ஸுகுமார்ய அனுரூபமாக கடலின் சிறு திவலைகள் ஆனவை துடை குத்துவாரைப் போலே
அனுகூலமாகத் திருவடிகளை ஸ்பர்சிக்க –
அத்தாலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -வாத்சல்யத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனுமாய் –
அனுபவிக்கப் புக்கவர்களை அபி பவித்து எழ வீசுகிற ஸுந்தர்ய தரங்கங்களோடு கூடின வடிவை யுடையவனுமானுடைய திருவடிகளை –

(அரைச் சிவந்த ஆடை அலை வந்து திருவடியில் இருந்து கூட்டிப் போனதே
ஸுந்தர்ய அலைகள் மேல் அனுபவிக்க ஒட்டாமல் -அடலோத வண்ணர்)

வெளுத்த நிறத்தை யுடையனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே -ஞான சாஷாத்கார முகேன

(திருப்பாற் கடலிலே நேராகப் போனவர் அல்லவே -ஆகையால் ஞான சாஷாத்காரமே )கண்டு அனுபவித்து –
தத் அனந்தர பாவியான தொழுகையிலும் அந்வயிக்கப் பெற்றேன் —

இப்படி அனுபவத்தோடு அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகைக்கு-உறுப்பான கீழ்க் கழிந்த காலம் எல்லாம் ஓன்று ஒழியாத படி வ்யர்த்தமே போய் விட்டதே -என்று-கண்ண நீர் வெள்ளமிட இருந்து சோகித்தேன் –

கீழ் இழவுக்கு அடியான நம்முடைய கர்மம் இப்போதும் குறி அழியாதே கிடக்கையாலே
மேலுள்ள காலத்திலும் -இவ் வனுபவத்துக்கு குறைத்தல் வரில் செய்வது என் -என்று பயப்பட்டு அழுதேன் –

———————————————————————————————

சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கப் போமோ –
பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
இங்கே வெள்ளம் இட்ட அன்று தான் பெற்றேனோ -என்கிறார் –
பழுது என் என்னில் -இன்று கதை கேட்க இருந்தேன் என்பார் இறே

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-
அவன் தானே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து தூளி தானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-
நான் இழந்தேன் -என்கிறார் –

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி யுகிரா
லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ் சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புள் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடமும்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று ஞானிகள் சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெற வில்லையே!!)

அடியும் படி கடப்பத் -கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-6- -என்னும் (புஷ்ப ஹாஸ திருவடிகளைக் கொண்டு )திருவடிகளைக் கொண்டு காடுமோடையும் அளப்ப
தோள் திசை மேல் செல்ல–திருத் தோள்கள் திக்குகளில் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் –திரு அபிஷேகம் அண்ட பித்தி அளவும் நிமிர்ந்தது

வடியுகிரா-லீர்ந்தான் ஈராணியன தாகம்–கூரிய உகிராலே ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்தான்(ஆயுதம் தேவையாய் இருக்க வில்லையே -அதுவும் விளையாட்டாகக் கிழித்தவன் -ஈர்ந்தவன் )

இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான் உலகளந்த நான்று ——-பெரிய திருவடி முதுகில் இருக்கப் பொறாத மிருதுவான(புஷ்ப ஹாஸ )
திருவடிகளைக் கொண்டு உலகு அளந்த அன்று –

அடியும் படி கடப்ப-தோள் திசை மேல் செல்ல -முடியும் விசும்பு அளந்தது -என்கிறார்
நான் கேட்டார் வாய் கேட்டுப் போம் அத்தனை -(தாவி அளந்த தடம் தாமரை அடிகளில் தலை வைக்காமல் பாக்யம் கிட்டப் பெற்றேன் அல்லேன்-இன்று யாம் வந்தோம் இரங்கு -அன்று உலகம் அளந்த -சென்று இலங்கை செற்ற திருவடிகள்
திரிவிக்ரமன் ராமன் -நின்ற இடத்தில் இருந்து அளந்ததுக்கு மேல் சென்று இலங்கை செற்ற -நடந்தான் -பல்லாண்டு பாட வேண்டாமோ )

அடியும் படி கடப்ப-இத்யாதி –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப் படுத்திக் கொண்டது
தோள் திக்குகளை எல்லை கண்டது –முடியும் அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று-
நின்றார் நின்ற படியே வெற்றி கொள்ளுமா போலே

வடிவு -இத்யாதி
ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி -ஓர் இடத்திலே சென்று முகம் காட்டும் -அளவன்று இறே
ஜகத்துக்கு எல்லாம் ஏக காலத்திலே உதவின இது –

———

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-
அவன் தானே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து (அடிப் பொடித் தானம் செய்த போதும் அன்றோ  )தூளி தானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-நான் இழந்தேன் -என்கிறார் –

கூர்மையான திரு உகிராலே -அதுக்குத் தக்க -பரியனாக வந்த இரணியன் -தேவர்கள் வர பலம் -அநாயாசேன கிழித்துப் பொகட்டு

பெரிய திருவடியை மேற் கொண்டு ஸ்வைரமாக நடத்தி -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட மிக த்வரையுடன் ஓடி வந்து

இந்திரன் கார்யம் செய்க்கைக்காக திரு வுலகு அளந்து அருளின காலத்திலே –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-6- -என்கிறபடியே
என் தலைக்கு அலங்காரமாக நான் ஆசைப்பட்டு இருக்கும் திருவடிகள் -காடும் ஓடையுமான பூமியை அளந்து கொள்ள

பிராட்டியை (அணைக்க)பரிஷ்வ்ங்கிக் கடவ திருத் தோள்கள் ஆனவை இடமடையும் படி திக்குகளின் மேலே வளர்ந்து செல்ல
திரு அபிஷேகமும் அபரிச்சேதயமான ஆகாசத்தை முசிவற நிமிர்ந்து அளவு படுத்திக் கொண்டது -என்று
தத்வ வித்துக்களான ரிஷிகள் சொல்லா நிற்பர்கள் –
தானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்

(சஞ்சயன் கண்டு சொல்ல கேட்டான் த்ருதாஷ்ட்ரன் -இங்கு ரிஷிகள் கேட்டு சொல்ல கேட்ட வ்ருத்தாந்தம் இது)

(ஓர் இடத்திலே ஓர் அடியானுக்கு விரோதியை அழித்து உபகரித்த ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில் இழந்தது வியப்பில்லை
ஸ்ரீ கஜேந்த்ரனுக்குப் புள்ளூர்ந்து காட்சி அளித்து உபகரித்த போது இழந்ததும் வியப்பில்லை-
எல்லார் தலையிலும் திருவடியை வைத்து உபகரித்த திரிவிக்ரம அவதாரத்தில் அன்றோ இழந்தேன் என்கிறார் -)

———————————————————————————————

திரு உலகு அளந்தித்திலேயோ இழந்தது -அத்தோடு ஓக்க வரையாதே தீண்டிப் பரிமாறின
கிருஷ்ணாவதாரத்தில் இழந்திலேனோ-என்கிறார் -(உலகம் தீண்டிய திரிவிக்ரமன் -ஊராகத் தீண்டிய கிருஷ்ணன் )

கடலில் கிடையிலும் அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக் குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே –
என்று சோகிக்கிறார் –

நான்ற முலைத் தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி-தோன்ற–களவு வெளிப்படும்படி –
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப் படுத்திக் கொள்ள வல்ல(சூழ்ந்து கொல்ல -சூழ்ச்சியால் கொல்ல )
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து பொகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானே யாவன்.

(இவ்வளவு சேஷ்டிதங்கள் செய்த கண்ணனே -ஸர்வ ஸூலபனே  மண் அளந்த மால் -சர்வாதிகன் -மால் -பெருமைக்கும் ஆஸ்ரித வ்யாமோஹமும்)

நான்ற முலைத்தலை–தொங்குகிற ஸ்தநத்தில் இருக்கிற
தோன்ற வுண்டான்-திருடி எல்லாரும் அறியும் படியாக அமுது செய்தவனும் –
வென்றி சூழ் களிற்றை-வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய குவலயா பீடத்தை –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு –
இவன் தன்னுடைய வாயை முலையில் வைக்க ஸ்வரூபா பத்தியைப் பெற்றாள் அவள்(ஸ்வேந ரூபேண -ஆவிர்பாவம் -அபி நிஷ் பத்யதே –மூடிகள் விலகி -ஸ்வரூபாபத்தி -கிருஷ்ண சம்பந்தம் பெற்றுக் கொடுக்கும் -தாய் தன்மை கழிந்து பேய் தன்மை பெற்றதே இயற்கைத் தன்மை அவளுக்கு )
ஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கு ஸ்வரூபாபத்தி தப்பாது -எல்லாருக்கும் வந்தேறி போம் -(நமக்கு சம்சாரம் கர்மா வந்தேறி )
ஸ்வேன ரூபேண அபி நிஷ் பத்யதே–என்கிறபடியே –

உறி வெண்ணெய்-தோன்ற வுண்டான் –
உறியில் சேமித்து வைத்த வெண்ணையைக் கண்டு எட்டி யுண்டு -களவு தோற்றும் படி உண்டான் -(தெய்வாதீனமாக தானே வெண்ணெய் தோற்ற -பொத்த உரலைக் கவிழ்த்து -தோன்ற உபாயத்தால் -கண்டு உண்டான்-சிசுபாலாதிகளுக்கும் தோற்ற அடியேன் இழந்தேனே )

வென்றி சூழ் களிற்றை —
வென்றி மிக்க களிற்றை-வெற்றியை யுடைத்தாய் இவனைச் சூழ்க்க நினைத்த களிற்றை -என்றுமாம் –

ஊன்றிப்-ஆனைப் பூசல் என்று இராதே கிட்டி -மருப்பொசித்த பாகன் (திருச்சந்த -52)-என்னும் படியே

பொருதுடைவு கண்டானும் –
பசலைக் கலம் போலே உடையும் படி கண்டவன் –
இடைவு கண்டான் -என்றுமாம் -(ஆயுதத்தை உருவினவுடன் உறை சுருங்கிப் போவது போலே கொம்பைப் பிடுங்கிய வுடன் ஆனையும் சுருங்கியது -சிதைந்து உழுத்துப் போம் படி பண்ணினான் )

புள்ளின் வாய் கீண்டானும்-மருதிடை போய் மண்ணளந்த மால் —
திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிறது-
கிருஷ்ணாவதாரத்துக்கும் திரு உலகு அளந்து அருளின இடத்துக்கும் 1-அழகும் 2-முஃத்யமும் 3-ஆஸ்ரித பக்ஷபாதமும்
உள்ளிட்டவை இரண்டு இடத்துக்கும் ஒத்து இருக்கும் –

நான்ற -இத்யாதி –
தன் க்ருத்ரிமான பால் போன வாறே அந்த முலை பையான படி —

தோன்ற யுண்டான் -சிசுபாலாதிகளும் ஏசும் படி -(களவு வெளிப்படும்படி )

வென்றி இத்யாதி –
வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய

ஊன்றி -தரித்து நின்று –
உடைவு -கருவிப் பை போலே ஆக்கின படி -மண்ணளந்த மால் -பின்னாட்டின படி –

——————-

கடலில் கிடையிலும் -(16)அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் (17 )இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக் குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே -என்று சோகிக்கிறார்

பேய் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு வந்த பூதனை யுடைய பாலின் கனத்தாலே சரிந்து நாலுகிற
முலையில் யுண்டான நஞ்சை -அவள் பிணமாய் விழும்படி அமுது செய்து -உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெயை சிசுபாலாதிகள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாம் படி அமுது செய்து அருளினவனாய்-
வெற்றியை யுடைத்தாய் -எதிர்த்தவர்களை தப்பாமல் சூழ்த்துக் கொள்ள வல்ல குவலயா பீடத்தை
கஜ யுத்தத்துக்கு தேசிகரான வர்களை போலே உறைக்க நின்று பொருது தலை எடுக்க மாட்டாமல்
உரு அழிந்து உளுக்காம் படி பண்ணினவனும் -தன்னை விழுங்க வந்த பகாஸூரன் வாயை
கிழித்துப் பொகட்டவனும்-யமளார்ஜுனங்களின் நடுவே அவை வேர் பரிந்து விழுந்தபடி தவழ்ந்து
போய் பூமி முதலான லோகங்களை அளந்து கொண்ட சர்வாதிகன் கிடீர் –

பழைய பேய் வடிவை கொண்டு விழுந்தாள் என்றுமாம்-

———————————————————————————————–

அவதாரம் ஒழியப் பெற்றாரும் உண்டு கிடீர் -என்கிறார் –
நான் தீண்டப் பெறாதே மயங்கா நின்றேன் -நீ தீண்டப் பெற்று பரவசமாகா நின்றாய் –
பூமியைப் போலே ஒரு கால் இன்றியே
நித்ய சம்ஸ்லேஷம் பெறுவதே கடல் -என்று கொண்டாடுகிறார் –

காதா சித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திரு மேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந் தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–கடலில் சயனம் என்றும் –ஆலிலை துயின்ற போதும் திரு வாழியை யுடையவனும் என்றும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்-ஆஸ்ரித வாத்சல்யம்
கண் படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் போல்)

மாலும்-மது பான மத்தரைப் போலே பிச்சேறா நின்ற
கருங் கடலே-பெற்ற பேறு உன்னுடம்பே கோள் சொல்லுகிறது இல்லையோ -இல்லையாகில் உடம்பு வெளுத்து இராதோ–
என் நோற்றாய்-ஆசையை விட்டு நானும் நோற்கும் படி சொல்லாய் –

(நிர்ஹேதுக கடாக்ஷமே எதிர்பார்த்து உள்ளவர் அன்றோ ஆழ்வார்கள்
கோர மா தவம் செய்து பெரிய பெருமாள் -மலைக்கு மேல் -அக்னியின் நடுவில் -கோயில் திருமலை பெருமாள் கோயில்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பினால் -அன்றோ அவன் செய்யும் தவம் நம்மைப் பெற)

வையகமுண்-டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று ——–சிறு வயிற்றிலே பூமி எல்லாவற்றையும் அடக்கி -பவனான ஆலிலையில்
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருமேனியைத் தீண்டப் பெற்று

மாலும் -மதுபான மத்தரைப் போலே பிச்சேறுகிற கடலே –

கருங்கடல் -உடம்பு வெளுக்க வேண்டாவே

(நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ -கண்ணன் திருமேனி ஒளி வீச பாற்கடலும் நீலக்கடல் ஆகுமே)

ஆழியான் -ஏகார்ணவத்திலும்(பிரளய காலத்தில் )-திருப் பாற் கடலிலும் துயின்ற -என்னுதல் –

ஆஸிலே கை வைத்து பிரளயத்தை இரு துண்டமாக விடுவேன் என்று இருக்கும் -என்றுமாம் –

பிராட்டிமாரோடு ஊடின போதும் உனக்கு பிரிவு இல்லை –

கடலும் எம்பெருமானும் -ஸ்ரீ பரத ஆழ்வானும் பெருமாளையும் போலே நிறம்

ப்ரஹ்ம பிராப்தி பலமாய்- கைங்கர்யம் ஆனுஷங்கிகம்  ஆனால் போலே -திருமேனி தீண்டுகை பிராப்தம் –
கைங்கர்யம் அவகாதத்தில் ஸ்வேதம் ( நெல் குத்த வியர்வை வருமா )போலே –உபாயத்திலும் ஸ்வரூப ஞானம் பிறந்தால் வியவசாயம் ஆனுஷங்கிகம் –

——————

காதா சித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து –நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

ஜகத்தை அடைய பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே எடுத்து வைத்து ஓர் ஆலம் தளிரிலே -கண் வளர்ந்து அருளினவனாய்
பிரளயம் வரில் இரு துண்டமாக விடுகைக்கு பரிகரமான திருவாழியை யுடையனுமாய் -அழகிய கறுத்த நிறத்தை யுடைய திரு மேனியையும்
அதுக்குப் பகைத் தொடையாகும் படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களையும் யுடையனாய்-
ஆஸ்ரித வியாமுக்தனானவன் கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் -சர்வ காலத்திலும் அவன் திருமேனியை நீ அனுபவிக்கப் பெற்று-
அந்த ஸ்பர்ச ஸூகத்தாலே மயங்கா நிற்பதாய் -அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே-
இப் பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய் -அத்தைச் சொல்ல மாட்டாயோ

நானும் அனுஷ்ட்டித்துப் பார்க்கைக்கு -என்று கருத்து –

மால் -என்று பெருமையைச் சொல்லுகிறது என்றுமாம் –

கண் படையுள்
கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -அழகு முழுதும் காணலாமாம் படி
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட –நாச்சியார் -4- ஆசைப் பட்ட பேற்றை அன்றோ பெற்று இருப்பது
என்றும்
அன்புடையார் ஒரு நாள் ஒரு போது பெற ஆசைப்படும் பேற்றை அன்றோ எப்போதும் பெற்று இருப்பது
திருமேனி
பெரிய பிராட்டியார் ஆசைப்படும் பேற்றை அன்றோ பெற்று இருப்பது
தீண்டப் பெற்று
பார்ப்பது மட்டும் அல்லாமல் -எல்லாக் காலத்திலும் அவன் திருமேனியை அனுபவிப்பிக்கப் பெற்று
அந்த ஸ்பர்ச ஸூ கத்தாலே மயங்கா நிற்பதாய்
அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே
இப்பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய்
அத்தைச் சொல்ல மாட்டாயோ நானும் அனுஷ்ட்டித்துப் பெறுகைக்கு என்று கருத்து –

மால் -ஆஸ்ரித வ்யாமோஹமும் பெருமையும்-

மாலும் கரும் கடலே -திருப்பாற் கடலை கரும் கடல் என்னலாமோ என்னில்
நீலக்கடல் கடைந்தாய் -திருவாய் -10-10-7-என்றாரே -இவன் நிழலீட்டாலே ஆகுமே
பிரளய ஜலத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்-

——————————————————————————————-

பெற்றார் தளை கழல -என்கிற -இத்தால் கிருஷ்ணாவதாரத்தை சொல்லவுமாம்
வாமனாவதாரம் தன்னையே சொல்லுகிறது ஆகவுமாம் -(அதிதி கஸ்யபர் -ஸம்ஸார விலங்கு போக்கி அருளியவன் என்றுமாம் )

(புள்ளின் வாய் கீண்டான் பகாசுரன் என்று கொண்டும்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
புள்ளின் வாய் கீண்ட ஜடாயுவை முடித்த ராவணன் என்றுமாம் போல் இங்கும்)

(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன ஆகதாம் மதுராம் புரீம்-அவதார கந்தம் -பீஜம் போல் பாற்கடல் -ஆழி எழ கோஷம் உண்டே )

படுக்கையாய் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ –
தேவதாந்தரங்களுக்கு தன்னைக் கொடா நிற்க என்கிறார்

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப் படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று—20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக(தந்தை தாய் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் )
பேர்ந்து–(திருப் பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆஸ்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெற வில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

பெற்றார் தளை கழலப் -பேர்ந்து -பிறந்து -என்றுமாம் -ஆரேனுமாக ஸ்பர்சிக்கப் பெற்றார்க்கு –தளை கழல-(தந்தை கால் விலங்கற -பெரிய திருமொழி 8-5-1-)

பேர்ந்தோர் குறளுருவாய்ச்-செற்றார் படி கடந்த –செங்கண் மால்— இந்திரனுக்கு அன்று ஆகாத சத்ரு தனக்கு ஆகாதே

(வாமனனுக்கும் பொய்கை ஆழ்வாருக்கும்
பள்ளியில் ஓதி -இங்கு இல்லையே -எங்கும் உள்ள கண்ணன் என்ற மகனைக் காய்ந்த -ஆழ்வார் தமக்கு மகனாகக் கொண்டது போல்)

த்விஷத் அன்னம் நபோக்த்வயம்–யஸ்த்வாம் த்வேஷ்ட்டிச மாம் த்வேஷ்ட்டி –(மம பிராணா ஹி பாண்டவ )

(யஸ் த்வாம் த்வேஷ்ட்டி மாம் த்வேஷ்ட்டி யஸ் த்வாம் அநு ச மாமது
அபேத நாத்மநோ வேத்மி த்வாம் அஹம் பாண்டு நந்தன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -37-2-)

மஹா பலி என்னது என்று அபிமானித்த பூமியை அளந்த சர்வேஸ்வரன் –

நற்றாமரை மலர்ச் சேவடியை –செவ்வி மாறாதே இருந்துள்ள திருவடிகளை
வானவர் கை கூப்பி-நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று–திரள நின்று பூவைக் கொண்டு ஏத்துவார் -என்றுமாம்
தொடுத்த மாலை கொண்டு ஏத்துவார் என்றுமாம் –

(த்ருஷ்ட்வா கிருஷ்ணம் )

பெற்றார் -(எடுத்த பேராளன் -)நிதி எடுக்கப் பெற்றார் என்னுமா போலே -என் பிள்ளை என்று அபிமானித்தால் தளை கழலா நின்றால்
அடியோம் என்றால் தளை கழலச் சொல்ல வேணுமோ –

பேர்ந்து -ஸ்ரீ வைகுண்டத்தில் நின்று என்னவுமாம் -திருப் பாற் கடலில் நின்றும் வந்தான் ஆகவுமாம் –

ஓர் குறள்-நாட்டில் வாமனர்கள் இவன் வளர்ந்து அருளின இடத்தோடு ஒக்கும் –

செற்றார் -தன்னைச் செற்றார் -மம பிராணா ஹி பாண்டவ —

படி கடந்த -இக் காடு மோடையும் அளந்த -பிறரது பெற்றால் போலே இருப்பதே -(உவந்த உள்ளதனாய் -அனைவரும் உகக்கும் படி )

செங்கண் -ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் முடிக்க பெறுகையால் -மால் -செய்தது போராது என்று இருக்கை

நல் தாமரை –
1-செவ்விக்கும் -2-அழகுக்கும்-3- குளிர்த்திக்கும் சத்ருசமான தாமரை தேடுகிறார் -(பரிஷ்காரம் பண்ணி இல் பொருள் உவமை )

வானவர் –
எட்டாத படி பரண் இட்டுக் கொண்டு இருக்கை(அவனது ஸுலப்யம் காட்ட வந்த இந்த பூமியில் இல்லாமல் )
கை கூப்பி -அவசா பிரதிபேதிரே (மறந்து கை கூப்பினார்களே )- நிரை மலர் -ஏற்கவே தொடை ஒத்த துளபம் கொண்டு இருந்தார்களோ(துளஸீ ப்ருத்யர் _

ஏத்துவரால் -இப்படிப் பிறந்தார் பெறாது ஒழிவதே -(ஆல் -வருத்தம் வியப்பு இரண்டும்)

நின்று-கிண்ணகத்தே எதிர்த்து நின்று -(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் போல் அல்லவே வானவர்களுக்கு )

(த்விஷ தன்னம் ந போக் தவ்யம் ந விஷந்தம் நைவ போஜயத்
பாண்டவான் த்விஷஸே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ -உத்யோக -91-27-

த்ருஷ்ட்வா கிருஷ்ணம் ததா யாந்தம் ப்ரதிபந்தமி வவ்ஜஸா
யதார்ஹம் கேஸவே வ்ருத்தி மவஸா பிரதிபேதிரே)

————–

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப்படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் (விபரீத லக்ஷணம் -தேவர்களுக்கு )கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வாஸூ தேவர் தேவகியாருடைய காலிலிட்ட விலங்கு நீங்கும் படியாகப்
பரம பதத்தின் நின்றும் போந்து -இங்கே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து

அவ்வளவு இல்லாமல்
அழகுக்கு அத்விதீயமாய் – கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படியான வாமன வேஷத்தை யுடையனாய் –
ஆஸ்ரிதனான இந்திரனை நெருக்குகையாலே (துன்பம் கொடுக்கை நாட்டைப் பறித்தல் )தனக்கு சத்ருவான மஹா பலி போல்வார் என்னது என்று
அபிமானித்திருக்கிற பூமியை அநாயாசேன அளந்து கொண்டவனாய் –

அத்தாலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
ஆஸ்ரித வியாமுக்தன் ஆனவனுடைய அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை-

இந் நீர்மை ஏறிப் பாயாத ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற இந்த்ராதிகள் இச் செயலுக்குத் தோற்று அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
தொடை வாய்ந்து இருந்துள்ள செவ்விப் பூக்களை பரிமாறிக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பெறுவர்களாம்

பாவியேன் நாமே இழப்போம் (ப்ரயோஜனாந்தர பரர்கள் பெற நாம் இழப்பதே )-என்று வெறுக்கிறார் –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி- / பாசுரங்கள் -2-10 – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

கார்யாத் காரண அநு மானம் வேணுமோ –
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே(ப்ரத்யக்ஷம் அன்றோ )
இப்படி அநு மானப் பிரமாணம் கொண்டு வருத்தத்துடன் அவனுடைய பரத்வம் அறுதியிட்டு வேணுமோ
அவன் விபூதி விஷயமாக பண்ணி அருளின உமிழ்ந்த பர்யந்த திவ்ய சேஷ்டிதங்கள்
ஓர் ஒன்றே அவனுடைய பரத்வத்தை அறுதியிட்டுத் தராதோ -என்கிறார் —

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-

பதவுரை

கடல் கடைந்தது–(தேவர்களுக்காகக்) கடலைக் கடைந்தது
என்று–எந்த நாள்?
நீர் ஏற்றது–(மாவலி) தாரை வார்த்து தத்தஞ் செய்யப் பெற்றது
எ உலகம்–எந்த உலகம்?
அதனை–அவற்றை
நான் ஒன்றும் உணரேன்–நான் அடியோடு அறிகின்றிலேன்;
அது–அந்தக் கடலானது
அன்று–ஸ்ரீராமாவதார காலத்தில்
அடைத்து–மலைகளைக்கொண்டு திருவணை கட்டித் தூர்த்து
உடைத்து–(இராவணனை முடித்துத் திரும்புங்கால் அந்தத் திருவணையை) உடைத்து.
கண் படுத்த–எப்போதும் பள்ளி கொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப் பெற்ற
ஆழி–ஸமுத்ரமாம்;
இது–(நீரேற்றுப் பெற்ற) இவ் வுலகமானது
நீ–ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து–ஸ்ருஷ்டிக்கப்பட்டும்
இடந்து–(வராஹாவதார காலத்தில் அண்ட பித்தியில் நின்று) ஒட்டு விடுவித்தெடுக்கப்பட்டும்
உண்டு–(பிரளய வெள்ளம் கோத்த போது) திரு வயிற்றிலே வைத்துப் பாதுகாக்கப்பட்டும்
உமிழ்ந்த–பின்பு வெளிப்படுத்தப்பட்டதுமான
பார்–பூமியாகும்.

என்று-
இன்னமும் கடல் கடைந்த நுரையும் திரையும் மாறிற்றோ

கடைந்தது-
கடையப் புக்கு கை வாங்கினவர்களை
ஈஸ்வரனாகக் கொள்ள வேணுமோ

எவ்வுலகம்-
லோகாந்தரத்தையோ -அடிச்சுவடு தெரியாதோ -(மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்)

எவ்வுலகம் நீர் ஏற்றது–
இன்று மஹா பலியால் நோவு படா நின்றதோ –
அவன் அடிச்ச சுவடு மாறிற்றோ
வாமனன் மண் இது என்று தோற்றுகிறது இல்லையோ —
இவ் வுலகம் அன்றோ நீர் ஏற்றது -என்கிறது –

ஒன்றும் அதனை யுணரேன் -அன்று எங்கே போனேனோ(விஷயாந்தரங்களைத் தேடிப் போனேன் )
இச் சேஷ்டிதங்கள் கிடக்க கார்யாத் காரண அநு மானம் பண்ணித் திரியவோ நான்

அன்றிக்கே –
ஒன்றும் அதனை யுணரேன்-என்றது –
அதி மானுஷ சேஷ்டிதங்களைக் கண்டு எத்திறம் -என்று மோஹிக்கிறார் ஆகவுமாம் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

(அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி லங்கித சர்வ லோக சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம் –ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்-1–

அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
திவ்யமான ஸ்வ பாவம் என்ன –
சேஷ்டிதம் என்ன –
ஆக்ருதி என்ன இவற்றாலும்

அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி திவ்யமான விக்ரமங்கள் என்ன –
பிரதாபங்கள் என்ன -இவற்றாலும்

அதி லங்கித சர்வ லோக சாம்யம்
ஒருவரோடும் ஒப்புச் சொல்ல ஒண்ணாது இருக்கிற

வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம்
எம்பெருமானுடைய விபவ அவதாரத்தைப் புகழ்கின்றேன்

அதி அத்புதங்களான ஸ்வபாவத்தாலும் –
வியாபாரத்தாலும்-
அலங்காரத்தாலும் –
விக்ரமத்தாலும் –
பிரதாபத்தாலும்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனான பரம புருஷனுடைய விபவ அவதாரத்தை
புகழ்ந்து பேசாத தொடங்குகிறேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் இதில்

அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
இமவ் ஸ்ம முனி சார் தூல கிங்கரவ் சமூபஸ்திதவ்–என்றும்

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே லஷ்மணாம் ந ஹி ப்ரதிஜ்ஞாம் ஸம்ஸ்ருத்ய ப்ராஹ்மனேப்யோ
விசேஷத–என்றும் இத்யாதிகளிலே ஸ்ரீ ராமபிரானுடைய சீலமும்

கடலிலே அணை கட்டிய ஸ்ரீ ராமபிரானுடைய விருத்தமும்

கோவர்த்தன உத்தாரண முதலான ஸ்ரீ கண்ணபிரானின் வ்ருத்தமும்

பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-என்னும்படியான ஸ்ரீ ராமனின் வேஷமும்

அம்போதநீலம் அரவிந்த தளாய தாக்ஷம் பிஞ்சாவதாம்ச முக பாணிம் -என்ற ஸ்ரீ கண்ணபிரானின் வேஷமும்

அதி மானுஷ கடலிலே ஒரு திவலை எடுத்துக் காட்டின படி

அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
விக்ரமம் ஆவது என் –
பிரதாபம் ஆவது என் –
கூசாதே சத்ரு ஸைன்ய மத்யத்தில் பிரவேசிக்கைக்கு ஈடான சக்தி விசேஷம் வீர்யம்
பிறரால் அபி பவிக்க ஒண்ணாமைக்கு உறுப்பான சக்தி விசேஷம் பிரதாபம்

வரயே
வரம் என்று ஸ்லாக்யமாய்-ஸ்லாக்யமாக சொல்கின்றேன் -புகழ்கின்றேன் என்றபடி)

யுணரேன்  நான் –
அன்றைக்கே எனக்கு என்னவோ ஒரு விஷயம் தேடி அநர்த்தப் பட்டேன் –
ஒன்றையோ -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டது இல்லையோ –
யுணரேன் -என்று இழந்த நாளைக்கு சோகிக்கிறார்-

என்று கடல் கடைந்தது எவ் வுலகம்-என்றது
எல்லாச் செயல்களுக்கும் உப லக்ஷணம்

என்று -என்று ஞான வைஸத்யம் சொல்லுகிறது –
ஞானமாவது -யத்தேச கால சம்பந்தி தயா யாதோர்த்தர்தம் தோற்றிற்று
தத் தேச கால சம்பந்தி தயா அவ் வர்த்தத்தை காட்டுகை இறே-

அன்று -இத்யாதி –
நீ அணை அடைத்து திரு வில்லாலே அழித்து உண்டாக்கின கடலிலே –
கண் படுத்த -கண் வளர்ந்த ஆழி –

உடைத்து -சம்ஹரித்து -என்றுமாம் -(தனுஸ்ஸாலே உடைத்து என்றும் ஸம்ஹரித்து என்றும் )

இது -இத்யாதி –
இல்லாத அன்று ஸ்ருஷ்டித்து –
பிரளயம் கொள்ள அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து
பிரளயம் வருகிறது என்று ஏற்கவே திரு வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறப்பட விட்ட பார் –

இது -என்றது -தாம் இருந்த பூமி யாகையாலே

அது -என்றது
அத்தோடு சம்பந்தித்த கடலாகையாலும்
அஸந்நிஹிதம் ஆகையாலும்–
ஆழி அது -என்று அந்வயம்–

செய்யுடையவன் அன்றோ கிருஷி பண்ணுவான் –(பக்தி உழவன் இவனே )
அல்லாதார்க்கும் ஈஸ்வரத்வ பிரசங்கம் யுண்டாகில்
இதிலே அவர்களுக்கும் ஒரு தொழில் யுண்டாகாதோ-

(அண்ணல் செய்து அலை கடல் கடைந்து -பெரிய திருமொழி -6-1-2-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும்
மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் -திருவாய் -4-5-10-
அவனே ஸர்வேஸ்வரேஸ்வரன் என்று காட்டும் செயல்கள் அன்றோ
இது -என்றார் பூமியை தான் நிற்கும் இடமாகையாலே
அது என்றார் பூமியைச் சூழ்ந்த கடலை -தூரத்தில் இருப்பதாகையாலே
என்று -எவ்வுலகம் -என்று அவை தம் அறிவுக்கு இப்போதும் தோற்றுவதைச் சொல்லுகிறார்- )

————————————————

தன்னை அர்த்தித்த தேவர்கள் அபேக்ஷிதம் செய்கைக்காக-
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து -என்னும் படி
தன் ஸர்வேஸ்வரத்வம் தோற்ற கடல் கடைந்து அருளிற்று எத்தனை நாள் உண்டு என்றும்
ஈஸ்வர அபிமானிகளான ருத்ராதிகளும் –
திருவடி விளக்குவார் —
விளக்கினை தீர்த்தத்தை சிரஸா வஹித்து பரிசுத்தரராம் படி
இந்திரன் பிரார்த்தனை சார்த்தமாக்கும் படி அர்த்தியாய்க் கொண்டு(வேத அபஹார குரு பாதக தைத்ய பீடா இத்யாதி )
மஹா பலி பக்கல் நீர் ஏற்று அளந்து கொண்டது எந்த லோகம் என்றும்
அவ்வவோ செயல்களில் குமிழ் நீர் உண்ணக் கடவதான அந்த சேஷ்டிதத்தை
ஏக தேசமும் யான் அனுசந்திக்க மாட்டுகிறிலேன் –

ராவணன் திருவினைப் பிரித்த அன்று -(பெரிய திருமொழி 5-7-7)
சீதா முக கமல சமுல்லாச ஹே தோஸஸ சே தோ-(ஆளவந்தார் முக்த ஸ்லோகம் )என்கிறபடியே
தத் உல்லாச அர்த்தமாக தத் சஜாதீயமான லவண சமுத்திரத்தை மலைகளால் அடைத்து –

அங்கு உள்ளவர்கள் இங்கு வந்து நலியாத படி
தனுஷ்கோடியாலே உடைத்து –

எழுப்பிக் கார்யம் கொள்ளலாம் படி கண் வளர்ந்த கடலாகும் அந்தக் கடல்
ரஷ்ய வர்க்க சம் ரக்ஷணத்தில் நித்ய தீஷிதனாய் இருக்கிற நீ -அழிந்த அன்று ஸ்ருஷ்டித்து

அவாந்தர பிரளயத்தில் இடந்து எடுத்து –

மேல் பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே வைத்து வெளி நாடு காணப் புறப்பட விட்டு
இப்படி உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டுக் கிடக்கிற பூமியாகும் இந்த பூமி –

வண்கை யானவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-8-5-

மாணியாய் மண் கையால் இரந்தான் –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகனேறின வடிவைக் கொண்டு சென்று –
தன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தான் ஆயிற்று –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

கண்டவாற்றால் தனதே உலகு என்றான் (4-5-10)-என்கிறபடியே
இவ்வோ திவ்ய சேஷ்டிதங்கள் தானே அவனே சர்வாதிகன்
என்னும் இடத்தை காட்டுகிறது இல்லையோ -என்கை –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

என்று -என்கையாலே
திரையும் நுரையும் இப்போதும் மாறிற்று இல்லை -என்கை –

எவ் வுலகம் என்கையாலே
அளந்த அடிச்சுவடு இப்போதும் அப்படியே எடுக்கலாய் இருக்கை –

—————————————————————————————

அப் பூமியை அடைய அளந்தான் என்று –
இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —

எவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன
திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று
அத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் –
அதிலே கிடந்தது -அலைகிறார்

(அவரால் நாம் அளக்க -உலகு அளக்க எளிதானது
பூதனை பட்ட பாடு நாம் அளக்க முயல்வது போல்)

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

பதவுரை

ஓர் அடி–ஒரு -ஒப்பற்ற-திருவடியை
பார் அளவும் வைத்து–பூமிப் பரப்பு உள்ள வரையிலும் போரும்படி வைக்க
ஓர் அடியும்–மற்றொரு திருவடியும்
பார் உடுத்த–இந்த அண்ட கடாஹத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கிற
நீர் அளவும்–ஆவரண ஜலம் வரையில்
செல்ல–செல்லும்படி
நிமிர்ந்தது–ஓங்கிற்று;
சூர் உருவின் பேய்–தெய்வ மகளான யசோதையின் வடிவு கொண்டு வந்த பூதனையை
அளவு கண்ட பெருமான்—உயிருக்கு எல்லையைக் கண்ட -முடித்த ஸ்வாமியியே!
நீ அளவு கண்ட நெறி–நீ உலகளந்த விதத்தை
அறிகிலேன்–அளவிட்டுக் காணவல்ல அறிவுடையேனல்லேன்.

நீரளவும்–ஆவரண ஜலம் வரையில்
சூருருவின் பேய் அளவு கண்ட -தெய்வப் பெண்ணின் வடிவை யுடைய பேயான
பூதனை யுடைய உயிருக்கு எல்லையைக் கண்ட

நீயளவு கண்ட நெறி –
நீ செய்து முடித்த செயல்களை –

பாரளவும் ஓரடி வைத்து —
பூமி உள்ள அளவும் ஓர் அடி வைத்து –

ஓரடியும் –
வைத்த அடியை -சொல்லவுமாம் –
மற்றை அடியை யாகவுமாம் –

பாருடுத்த-நீரளவும் செல்ல நிமிர்ந்ததே —
பவ்வ நீரோடை ஆடையாகச் சுற்றி -என்கிறபடியே
பூமியை ஆவரித்த ஜலத்தை கடந்து -என்னவுமாம் —
(கண்ணார் கடல் உடுக்கை -சிறிய திருமடல் )
மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஜலத்து அளவும் சென்றது என்னவுமாம் –

சூருருவின்-பேயளவு கண்ட பெருமான் —
சூரும் அணங்கும் தெய்வப் பெண் -என்கிறபடியே –
விலக்ஷணமான வடிவு என்கிறது –

பேயைத் தெய்வப் பெண் என்னலாமோ என்னில் –
பிசாசோ –தேவ யோநயா -என்று
பிசாசையும் தேவ யோனியிலே கூட்டுகையாலே யாம் –

பேயளவு கண்ட-
பேயாகப் பரிச்சேதித்த —

பேயாகப் பரிச்சேதிக்கை யாவது –
முடிக்கை என்று பொருளாம் இறே

பெருமான் -பூதனையை முடித்து ஒரு சேஷியை ஜகத்துக்குத் தந்தாய் –
ஸ்தந்யம் தத் விஷ சம்மிஸ்ரம் ரஸ்யம் ஆஸீஜ் ஜகத் குரோ -(ஹரி வம்சம் )

அறிகிலேன்-நீ யளவு கண்ட நெறி —-
நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் )

அன்றியே –
மஹா பலியாலே அபஹ்ருதையான பூமியை அளந்து உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு –
பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி
என்னை விஷயீ கரித்த படி அறிகிலேன் என்னவுமாம் –

பாரளவும் -அளவிலே குசை தங்கின அருமை
உடுத்த நீர் அளவும் -ஆவரண ஜலம்
பேயளவு -எல்லை
பெருமான் -அச் செயலாலே என்னை யுண்டாக்கினவன் –

நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை –
உன்னை பரிச்சேதிப்பார் முடிந்ததே போம் இத்தனை-

தாயைப் பேயாக்கின படி –

நீ அளவிட்டு வைத்த உபாயம் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ –
உணரப் பண்ணுகிறாயோ

(லோக விக்ராந்த சரணம் -உணர வேண்டுமே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்)

(கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பாரைப் போல் -படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே -திருவாய் -9-2-2-
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -நிகண்டு
தெய்வ நங்கை யசோதை
வித்யாதராப் ஸரோ யஷஸ் ரஷோ கந்தர்வ கின்னர –பிசாஸோ அமீ தேவ யோநய -அமரகோசப்படி
பிசாசங்களும் தேவர்கள் இடம் இருந்தே உண்டானவைகள் ஆகையால் சூர் உருவின் பேய் -என்கிறது என்று பெரியவாச்சான் பிள்ளை நிர்வாஹம்
அறிகிலேன் நீ அளவு கண்டா நெறி -இன்னபடி அளந்து அருளினாய் என்று அனுசந்தித்தாலே காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
எனது விரோதிகளைப் போக்கி என்னையும் அறியாமலேயே என்னை ஆள் கொண்டு அருளியதை அறிகிறேன் அல்லேன்
எம்பெருமான் சிலரை அளவிட நினைத்தால் அவனுக்கு ஒரு அருமையும் இல்லை –
அவனை சிலர் தம் முயற்சியால் அளவிட நினைத்தால் பூதனையைப் போலவே முடிந்ததே விடும் அத்தனை -)

——————————————————–

அதி லோகமான அழகை யுடைய ஒரு திருவடியை -படிக்கு அளவாக நிமிர்த்த  நின் பாத பங்கயமே -என்கிறபடியே
பூமியுள்ள வளவே நிற்கும் படி குசை தாங்கி வைத்து
அத்தோடு துல்ய விகல்பம் பண்ணலாம் படியான மேலே எடுத்த மற்றொரு திருவடியும்
அண்ட கடாஹத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்து அளவும் செல்ல வளர்ந்தது இறே

தன் வடிவை மறைத்து தெய்வ நங்கையான யசோதை வடிவு கொண்டு வந்த பூதனையை-
அவள் நினைவு அவளோடு போம் படி அளவிட்டு முடித்த செயலாலே-
ஜகத்துக்கு சேஷியான உன்னை நோக்கித் தந்தவனே –

நீ அளந்து கொண்ட வழியை நான் இன்ன படி என்று அறிய மாட்டுகிறிலேன் –
இச் செயலை அனுசந்தித்தால்
அதிலே ஆழங்கால் படும் அது ஒழிய அளவிட்டு அனுபவிக்க மாட்டுகிறிலேன் -என்று கருத்து –

சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -என்கிறபடியே
திவ்ய ஆகாரையான பேய் என்றபடி

பேயளவு கண்ட-என்ற இத்தால்
ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –

அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது
நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –

———————————————————————————————

நீர் அறிந்திலீர் ஆகில் -ஈஸ்வரன் அறியானோ -என்ன –
எம்பெருமான் பிரசாதம் அடியாக பிறந்த அறிவுடைய நான் தடுமாறா நின்றேன் –
தபஸ் சமாதியாலே பெற்ற அறிவுடையவன் உபதேசிப்பதே -என்று ஷேபிக்கிறார்

அவன் அருள் அடியாக வந்த தெளிவால் குறைவற்ற நானும் உட்பட நீஞ்சிக் கரை ஏற மாட்டாமல் கிடந்தது அலையா நிற்க –
ஸ்வ யத்னத்தாலே வந்த ஞான சக்திகளை போரப் பொலிய நினைத்து —
ஒருவனை -ஒருவன் -அறிய ஒருப்படுவதே-என்ன மதி கேடனோ என்று ருத்ரனை ஷேபிக்கிறார்

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—

பதவுரை

அன்று–முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல்–ஆலமரத்தின் நிழலிலே
(இருந்து கொண்டு நால்வர்க்கு–அகஸ்தியர்,புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர் என்கிற நான்கு சிஷ்யர்களுக்கு
அறம் உரைத்த–தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து–விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக் கொண்டுள்ளவனுமான
அரன்–சிவன்
ஜந்து பொறி வாசல்–செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்கள் செல்லும் வழியில்
போர் கதவம் சார்த்தி–வலிய கதவுகளை யிட்டு அடைத்து [இந்திரியங்கள் பட்டி மேய வொண்ணாதபடி அவற்றை வென்று]
நெறி வாசல் தானே ஆய் நின்றானை–உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை
அறிவான் ஆம்–அறிந்து விட்டதாகச் செருக்குற்றிருக்கிறானே! (இஃது என்ன அறிவு கேடு!.)

நெறி வாசல்-உபாயமும் -ப்ராப்யமும்
நால்வர்க்கு-அகஸ்தியர் -தக்ஷர் -புலஸ்தியர் -கஸ்யபர் -என்னும் நால்வருக்கும் —
ஐந்து-பொறி வாசல்–ஐந்து ஞான இந்த்ரியங்களுடைய துவாரங்களில் யுள்ள –
போர்க் கதவம் -அடைக்க ஒண்ணாத கதவுகளை –

நெறி வாசல் தானேயாய் நின்றானை–
நெறியான வாசல் -உபாயமான வாசல் என்னவுமாம் -(நெறியான வாசல் -உபாயம் மட்டும் என்றுமாம் )

நெறி என்று உபாயமாய் —
வாசல் என்று உபேயத்தைச் சொல்லிற்றாய் –
உபாயமும் உபேயமும் தானேயாய் நின்றவனை -என்றுமாம் –

இப்போது இது சொல்கிறது -பிராப்தி அவனை ஒழிய
உண்டாகில் அன்றோ அறிவும் அவனை ஒழிய உணர்வது என்கைக்காக-

(ப்ராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

யைந்து பொறி வாசல்–
ஒன்றை அடக்கில் ஓன்று திறக்கும் -என்கை –
நீரை அடைக்கப் புக்கால் ஓர் இடம் அடைக்க
ஓர் இடம் கோழைப் படுமா போலே –சஞ்சலம் ஹி மன-(6-34)

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

போர்க் கதவம் சாத்தி –
அடைக்கப் புக்கால் –ஒண்ணாத படி பொரா நின்ற கதவம் –
சாத்தி -என்றது அடைக்கப் போகாமையாலே –
அறிவானாம்-என்று ஷேபிக்கிறார்

ஆலமர நீழல் –
தான் தபஸ்ஸூ பண்ணின ஆலமர நிழலிலே – தான் பகவத் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னே
சிஷ்ய பரிக்ரஹம் பண்ணுவாரைப் போலே —
சர்வஞ்ஞனான அஜாத சத்ருவுக்கு ப்ரஹ்ம ஞானம் இன்றியே இருக்கிற -பாலாகி -உபதேசத்தால் போலே –

அறம் -ஸமாச்ரயண பிரகாரம்
நால்வர்க்கு -அகஸ்திய புலஸ்யாதிகளுக்கு –

அன்றுரைத்த ஆலமர் கண்டத் தரன் —–
தாமஸ குணத்துக்குச் சேர்ந்தது செய்யுமது அல்லது –
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம்–ஸ்ரீ கீதை -14-17–என்கிறபடியே
கதற (உபதேசிக்க )அவன் கடவானோ -என்கிறார்
நெறி வாசல் -ஸ்வரூப அனுரூபமான உபாயம் என்றுமாம் –

ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவதோ அஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷

ஸத்த்வாத் = சத்வ குணம்
ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது
ஜ்ஞாநம் = ஞானம்
ரஜஸோ = ரஜோ குணம்
லோப = பேராசை
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ப்ரமாத = மயக்கமும்
மோஹௌ = குழப்பமும்
தமஸோ = தமோ குணத்தின்
பவதோ = ஒன்றாகிறது
அஜ்ஞாநம் = அறிவீனம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்

சத்வ குண வளர்ச்சியால் ஆத்ம சாஷாத்காரம் ஆகிற ஞானம் உண்டாகும்
ரஜோ குணம் வளர்வதனால் உலோபித்தனம் தான் உண்டாகும்
வளர்ச்சி பெற்ற தமோ குணத்தினால் கவனக்குறைவு விபரீத ஞானமும்
அறிவின்மையுமே உண்டாகின்றன –
சத்வம் -ஆத்ம சாஷாத்காரம் – பலன்களில் ஆசை மூட்டும்

யாய் நின்றானை–சித்தம்

சாத்தி-வருந்திச் சாத்தலாம் அத்தனை -தாளிட ஒண்ணாது-முகத்திலே அறையும் –
நல்ல விஷயம் காட்டா விடில் குதறு கொட்டும்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே(ஸ்ரீ கீதை )-பண்ணா விடில் உபாயம் உண்டோ -(கண்ணனைக் காட்டியே ரசம் போக்க முடியும் )

அறிவானாம்-பட பட என சிஷிஷுக் கொள்ளும் அத்தனை அல்லது அறிவுக்கு அடைவுண்டோ –

சீராமப் பிள்ளைக்கு பட்டர் –
இதுவே தாரமாக இருக்கிற சாதுவை நலியாதே என்று அருளிச் செய்தார் –

(சர்வ பூத ஸூஹ்ருத்துக்கள் அன்றோ நம் பூர்வர்கள்)

நால்வர்-தஷாதிகள்

அன்றுரைத்த-ஆலமர் கண்டத் தரன் —
எம்பெருமான் கொடுத்த வெளிச்சிறப்பு மாத்ரத்தையும்
விஷ ஹரண சக்தியையும் கொண்டு
இத் துறையிலே இழியப் போமோ –

(ப்ருஹதாரண்யாகத்தில் நாலாம் அத்யாயத்திலும்-கௌஷீதகீ மூன்றாம் அத்தியாயத்திலும்
ருத்ரன் அஜாத சத்ருவுக்கு பாழாகி உபதேசித்த வ்ருத்தாந்தம் –
பகவான் அந்தர்யாமியாய் இருப்பதை அறியாமல் தானே ஸம்ஹரிக்க வல்லவன் என்ற ஈஸ்வரோஹம் அபிமானம் கொண்ட ருத்ரன்
அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்கண்டேயருக்கு உபதேசம் பண்ணாத தொடங்கினான்
தானே ஞானம் பெரும் முன் சிஷ்யர்களை சம்பாதித்துக் கொண்டானே -)

——————————————————–

வட வ்ருஷச் சாயையிலே பகவச் ஸமாச்ரயண ரூபமான தர்மத்தை –
அகஸ்திய புலஸ்திய தக்ஷ மார்கண்டேயர்கள் ஆகிற நாலு சிஷ்யர்களுக்கு
பகவத் விஷயத்தில் உவ்வக் குழியிட இழிந்த அன்று
பகவத் விஷயத்தை மறுபாடுருவும் படி தர்சித்துச் சொல்ல வல்ல பேரளவுடையார்
பண்ணக் கடவ உபதேசத்தைப் பண்ணி ஆச்சார்ய பதம் நிர்வஹித்தோம் என்று இருக்கும் பெரிய அறிவாளனாய் –

அமிருத மதன தசையில் பிறந்த ஹாலாஹலம் என்கிற விஷத்தை நாராயணன் ஆஜ்ஜையாலே
கழுத்திலே அடக்கிக் காள கண்டன் என்று விருது பிடித்துத் திரியும் பெரு மிடுக்கனாய்
சம்ஹாரத்வ சக்தி யுக்தனாய் அபிமானித்து இருக்கிற ருத்ரன் –

ஸ்ரோத்ராதி ரூபேண ஐந்து வகைப் பட்டு இருப்பதாய் -விஷயங்கள் ஆகிற வரை நாற்றத்தை காட்டித் தன்னுடன்
சேர்ந்தாரை முடிக்கும் யந்த்ர கல்பமான இந்திரிய துவாரங்களில் –
அடைக்கப் புக்கவர்கள் முகத்தில் அறைந்து பொருகிற கதவை -வருத்தத்தோடு அடைத்து
உபாயமும் தத் ஸாத்யமுமான உபேயமும் -அநந்ய ஸாத்யனான தானேயாய்க் கொண்டு நின்ற சர்வேஸ்வரனை
ஸ்வ யத்ன ஸித்தமான தன் ஞான சக்தியாதிகளைக் கொண்டு அறிவதாக இருக்கிறானாம் –
என்ன அஞ்ஞனோ -என்று கர்ஹிக்கிறார் –

நெறி வாசல் என்று ஸ்வரூப அனுரூபமான உபாயம் -என்னவுமாம் –

—————————————————————————————————

நாட்டிலே ஈஸ்வரனாக நிச்சயித்து போருகிறவனை-அறிவானாம் -என்று நீர் சொல்லுகிற படி எங்கனே என்னில்
அவ்வீஸ்வரத்வம் போலே காணும் கோள் அறிவும் -என்கிறார் –
ஞானம் இல்லாமையால் இவன் ஐஸ்வர்யம் ஆறல் பீறல் (நிறைவானது அல்ல என்றபடி )-என்கிறார் —

நாடு அடங்க ருத்ரனே சர்வாதிகன் என்று அறுதியிட்டு -அவன் கால் கீழ்த் தலை மடுத்து –
போற்றுவது புகழ்வதாய் யன்றோ போருகிறது-
நீர் அவனை ஷேபிக்கப் கடவரோ -என்ன –
ருத்ரனுடைய அநீஸ்வரத்வமும்-எம்பெருமானுடைய ஈஸ்வரத்வமும்
தத் தத் நாம வாஹ நாதி ஸ்வரூபங்கள் கொண்டே அறுதியிடலாம் -என்கிறார் –

(ஏழு விஷயங்களில் வேறுபாடு காட்டி அருளுகிறார்)

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறை யுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று —5-

பதவுரை

நாமம்–ஒருவனுடைய பெயர்
அரன்–எல்லாவற்றையும் அழிப்பதையே தொழிலாக வுடையவனென்று காட்டுகிற ஹரனென்பது;
(மற்றொரு மூர்த்தியின் திருநாமமோ வென்னில்)
நாரணன்–(ஸர்வ வ்யாபகனென்றும் ரக்ஷகனெனெறும் காட்டுகிற) நாராயணனென்பது
ஊர்தி–ஒருவனுடைய வாஹனம்
ஆன் விடை–மூடத் தனத்துக்கு உதாரணமாகக் காட்டப்படுகிற எருதாம்;
(மற்றொரு மூர்த்தியின் வாஹனமோ வென்னில்)
புள்–(வேத மூர்த்தியான) கருடப் பறவையாகும்;
உரை–ஒருவனைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணம்
நூல்–மனிசரால் ஆக்கப்பட்ட ஆகமம்;
(மற்றொரு மூர்த்தியைப் பற்றிச் சொல்லுகிற பிரமாணமோ வென்னில்)
மறை–(ஸ்வயம் வ்யக்தமான) வேதமாகும்;
உறையும் கோவில்–ஒருவனுடைய வாஸ ஸ்தானம்
வரை–(கடினத் தன்மையுள்ள) கைலாச மலையாம்;
(மற்றொரு மூர்த்தியின் இருப்பிடமோ வென்னில்)
நீர்–(அவனுடைய நீர்மைக்குத் தகுதியான) திருப்பாற்கடலாம்;
கருமம்–ஒருவனுடைய தொழில்
அழிப்பு–(கல்நெஞ்சனென்று சொல்லும்படியான) ஸம்ஹாரத்தொழிலாம்;
(மற்றொரு மூர்த்தியின் காரியமோ வென்னில்)
அளிப்பு–(இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;
கையது–ஒருவனுடைய கையிலுள்ள ஆயுதம்.
வேல்–(கொலைத் தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;
(மற்றொரு மூர்த்தியின் ஆயுதமோ வென்னில்)
நேமி–அருளார் திருச்சக்கரம்
உருவம்–வடிவம்
எரி–(கண் கொண்டு காண வொண்ணாதபடி) காலாக்நி போன்றதாம்;
(மற்றொரு மூர்த்தியின் திருமேனியோ வென்னில்
கார்–(கண்ட போதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காள மேக வுருவாம்;
ஒன்று–சிவனாகிய ஒருவன்
மேனி–(ஸ்ரீமந் நாராயணனுக்கு) சரீர பூதன்;
[ஸ்ரீமந் நாராயண மூர்த்தியோ அந்த சிவனுமுட்பட எல்லாவற்றையும் சரீரமாக வுடையவனென்பது ஸித்தம்]

(யஸ்ய ஆத்மா சரீரம் இத்யாதி -ஜகத் சர்வம் சரீரம் தே)

அரன் நாரணன் நாமம் –
ஒருத்தனுக்கு நாமம் அரன் –(ஹரதி -அபஹரிக்கிறவர் -)
ஒருத்தனுக்கு நாமம் நாராயணன் -(அசாதாரண திரு நாமம் )

ஸ்ருஷ்டமான ஜகத்திலே தீம்பிலே கை வளர்ந்து தன்னை முடித்துக் கொள்ளப் புக்கால்
அத்தை சம்ஹரிக்கைக்காக அவன் கொண்ட வடிவுக்கு பிரகார பூதனான தான் அரனாகிறான் –
ஈஸ்வரன் கை யடைப்பாக கார்யம் செய்யும் இடத்திலும் அழியும் லீலா விபூதியில் இவனுக்கு அந்வயம் –
மாநாவிக்கு நிர்வாஹகரானார் போலே

நாராயணன் -உபய விபூதியும் தனக்கு வாசஸ் ஸ்தானமாய் –
அவற்றுக்கு ஆலம்பனமாய் இருக்கும் என்றிட்டு நாராயணன் -என்று திரு நாமம் –

ஆன் விடை புள்ளூர்தி-
கைக் கொள் ஆண்டிகளைப் போலே ஒருத்தனுக்கு ஒரு எருது வாஹனம்–
ஒருத்தனுக்கு ஒரு வேதாத்மாவாய் இருந்துள்ள பெரிய திருவடி

உரை நூல் மறை-
ஒருத்தனுக்கு உத்கர்ஷம் சொல்லுவது ஆகமம் –
ஒருத்தனுக்கு உத்கர்ஷம் சொல்லுவது அபவ்ருஷேயமான வேதம்

(வேத முதல்வன் திகிரியோன் -சங்கத் தமிழ் கோஷிக்கும்)

யுறையும் கோயில் வரை நீர்-
தன் காடின்யத்துக்குச் சேர்ந்த மலை ஒருவனுக்கு வாசஸ் ஸ்தானம்
தன்னுடைய தண்ணளிக்குச் சேர்ந்த நீர் ஒருவனுக்கு –

(தோயாத்ரி நீர் மலை -இவர் இருந்தால் மலையும் நீர்ப் பண்டமாய் உருகி இருக்குமே)

கருமம் அழிப்பு அளிப்புக்-
ஒருவனுக்கு கர்மம் அழிக்கை –
ஒருவனுக்கு கர்மம் ரக்ஷை –
அழிக்கை என்றால் அது ஒன்றிலும் நிற்கும்
அளிப்பு என்றால் அழிக்கும் அதிலும் செல்லும் –

(பரித்ராணாம் சாது ரக்ஷணத்துக்குள் துஷ்ட சம்ஹாரமும் உண்டே)

(ஜகதாதிஜா -விஷ்ணு பிரதம அவதாரம் -அலகிலா விளையாட்டுடையார்
அகில புவன ஜன்ம –ஸ்தேம பங்க ஆதி லீலே -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே)

கையது வேல் நேமி-
ஒருவனுக்கு ஆயுதம் பிணம் தின்னிகளைப் போலே வேல் -ஒருவனுக்கு ஆயுதம் –
தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா -என்கிற ஆயுதம் -(மண்டோதரி அறிந்து வார்த்தை )

நிலத்துக் குறி பகவன் பட்டரை பரம பதத்திலும் ஈஸ்வரன் சதுர் புஜனாய் இருக்கும் என்னும் இடத்துக்கு
பிரமாணம் உண்டோ என்று கேட்க
தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா-(நால் தோள் அமுது )என்று பேசா நின்றது இறே என்று அருளிச் செய்ய
அவன் கோபிக்க –
பிராமண கதி இருந்தபடி இது -ப்ரசன்னராம் அத்தனை இறே -என்று அருளிச் செய்தார் –

உருவம் எரி கார் -ஒருவனுக்கு வடிவு எரி -சம்சார தப்தனாய் சென்றவனுக்கு நெருப்பிலே விழுமா போலே –
ஒருவனுக்கு வடிவு கார் -தப்தனாய் சென்றவனுக்கு ஒரு நீர்ச் சாவியிலே வர்ஷித்தால் போலே ஸ்ரமஹரமான வடிவு

(மேக வண்ணன் முகில் வண்ணன்)

மேனி  யொன்று —-இப்படி விசத்ருசமாய் இருக்கையாலே ஓன்று சரீரம் ஒருத்தன் சரீரி
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா என்றால் -சர்வஞ்சாஸ்ய சரீரம் என்று தோற்றுமா போலே
ஒருத்தன் சரீரம் என்றால் ஒருத்தன் சரீரி என்று தோற்றும் இறே

(ஏஷ ஸர்வ பூதாத்மா-
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

அவனே அவனும் அவனும் அவனும்
நளிர் மதிச் சடையன் என்கோ
முனியே நான்முகனே முக்கண் அப்பா)

அரன் –
சிலரை நசிப்பிக்குமவன் ஒருவன் –

நாரணன் —
ததீயத்தை ஒழிய உளன் ஆகாதவன் ஒருவன் -நீ என்னை அன்று இலை -(நான்முகன் -7)

ஆன் விடை –
அநஸ் வர்ய ஸூசகம்

புள்ளூர்தி-
கெருட வாஹனம் நிற்க -இவன் ஐஸ்வர்ய ஸூசகம்

நூல்-
ஆப்தி கேட்க வேண்டில் விப்ர லம்பாதி தோஷ தூஷிதம்

மறை-
அபவ்ருஷேய நித்ய நிர் தோஷ ஸ்ருதி

வரை-
காடின்யத்துக்கு சத்ருசமான இடம்

நீர்-
தண்ணளிக்குத் தக்க இடம்

கருமம்
அழிப்பு -நசிப்பிக்கை

அளிப்புக் –
ரஷிக்கை

வேல் –
காண வயிறு அழலும்

நேமி-
விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்

எரி-
நெருப்பைத் தூவும் –

கார் –
காண ஜீவிப்பிக்கும்

மேனி  யொன்று-ஓன்று மேனி-சரீரம் என்றால் மற்று யவன் சரீரி என்று தன்னடையிலே வரும் இறே –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தை நினைக்கிறார் -(யஸ்ய பிருத்வீ சரீரம் ந வேத –யஸ்ய ஆத்மா சரீரம் ந வேத )

அரன் -தன்னை ஒழிய ஒன்றை அழியாதே நிற்கில் ஈஸ்வரத்வம் இல்லை(சம்ஹார தொழிலில் குறை வைக்கக் கூடாதே )
நாரணன் -தன்னை ஒழிந்த வற்றில் ஓன்று வழியில் ஈஸ்வரத்வம் இல்லை

ஆன் -அநீஸ்வரத்வ ஸூசகம்
புள் -ஈஸ்வரத்வ ஸூசகம்

நூல் -சொன்னவனுக்கு ஆப்தி இல்லையாகில் அப்ரமாணம்
மறை -ஆப்த வாக்யமான பிரமாணம்

அழிப்பு அளிப்பு– இவற்றை ஸூ சிப்பிக்கிறது அரன் நாரணன்- வாசக சப்தத்துக்கு வசன கிரியை போலே

வேல் -கலக்க வரிலும் -பயமாம் –
நேமி -பிரிந்தாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்

உருவம் எரி மேனி ஓன்று கார் மேனி ஓன்று -இங்கனம் சேர்ந்து இருக்க வேண்டாவோ –
ஷேபம்-அறிவுடையார்க்குச் சொல்ல வேணுமோ சேர –

(ஹரதீதி ஹர -ஸம்ஹரிக்கிறானாகையாலே ஹரனாகிறான் –
ஸூ பர்ணோ அஸீ கருத்மான்
த்ரயீ மய
நின் ஏவலுள் பணிந்தமை கூறும் அருமறைப்பொருள் -பரிபாடல்
வாய் மொழிப்புலவ
சாயல் நினது வான் நிறை எனும் அரு மறைப்பொருள்
நீ என மொழியுமால் அந்தணர் அருமறை
முது மொழி முதல்வ
வேதத்து மறை நீ
வேத முதல்வன் என்ப திகிரியோனே
ருத்ரோ வை க்ரூர
தர்ம ரக்ஷணம் பண்ணும் அறமுயலாழி -திருவாய் -5-1-6–தர்ம சக்கரம்
ருத்ர காலாக்னி ஸந்நிப
ஸர்வ பூத அந்தராத்மா நாராயண
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித
சிவஸ் ச நாராயண
விஷ்ணுர் ஆத்மா பகவத பவஸ்ய
ரூப நாம வாஹன ஸ்தானாதி பேதங்களைக் காட்டி அருளுகிறார் )

———————————————–

பிணம் சுடும் தடி போலே கண்டதடைய அழிக்கையே தொழிலாக உடையவன் என்னும் இடத்தை தெரிவிக்கிற ஹரன் -என்று ஒருவனுக்குப் பெயர் –
ஸமஸ்த வஸ்துக்களையும் உள்ளும் புறமும் ஓக்க வியாபித்து சத்தையையே நோக்கும் என்று அறிவிக்கிற நாராயணன் என்று ஒருவனுக்கு பெயர் –

அறிவு கேட்டுக்கு நிதர்சநமாகச் சொல்லப்படும் ருஷபமே ஒருவனுக்கு வாஹனம் –
த்ரயீ மய-என்று சொல்லப்படுகிற பெரிய திருவடி ஒருவனுக்கு வாஹனம் –

ஒருவனைச் சொல்லும் பிரமாணம் வேத விருத்தார்த்தைச் சொல்லும் பவ்ருஷேயமான ஆகமம்
ஒருவனைச் சொல்லும் பிரமாணம் நித்ய நிர்தோஷமாய் அபவ்ருஷேயமாய்-யதாபூத வாதியாய் -ஸ்வத பிரமணமான வேதம் –

ஒருவன் நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் கடின ப்ரக்ருதியான -தன் பிரக்ருதிக்கு சேர்ந்த கைலாசம்
ஒருவன் உகந்து வசிக்கும் ஸ்தானம் தண்ணளி பண்ணி ரஷிக்கும் தன் படிக்குச் சேர்ந்த ஷீரார்ணவம்

ஒருவன் செய்யும் தொழில் கண்டது எல்லாவற்றையும் கண்ணற்று அழிக்கை –
ஒருவன் செய்யும் தொழில் ஸமஸ்த வஸ்துக்களையும் தண்ணளி பண்ணி ரஷிக்கை

ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் கொலைக்கு பரிகரமான மூவிலை வேல் –
ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் ரக்ஷணத்துக்கு பரிகரமான அறம் முயல் ஆழி

ஒருவன் ரூபம் நெருப்பு போலே -ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத படி காலாக்கினி ஸந்நிபமாய் இருக்கும்
ஒருவன் வடிவு கண்டவர்கள் கண் குளிரும்படி காள மேகம் போலே இருக்கும் –

இப்படி பரஸ்பர விசத்ருசமான இரண்டு வஸ்துக்களில் ஓன்று சரீரமாய் இருக்கும் —
ஓன்று சரீரியாய் இருக்கும் என்னும் இடம் அர்த்த சித்தம்

சர்வாத்மா -சர்வ பூத அந்தராத்மா நாராயண -என்றால்
சர்வஞ்சாஸ்யை சரீரம் என்று ப்ரதிகோடி வருகிறாப் போலே –

அன்றிக்கே
இவர்கள் ரூபம் பார்த்தால் –
எரி மேனி ஓன்று –
கார் மேனி ஓன்று என்னவுமாம் –

————————————————————————

அவனை சரீர தயா சேஷம் என்றீராகில் நீரும் சேஷ பூதர் அன்றோ –
நீர் உபதேசிக்கிற படி எங்கனே என்னில்
எனக்கு அவன் பிரசாதம் அடியாகையாலே விஸ்ம்ருதி சங்கை இல்லை -என்கிறார் –

அவன் அறிவானாம் -என்று ருத்ரனை அறிவு கேடன் என்று ஷேபித்துச் சொன்னீர் —
நீர் தாம் அறிந்து பிறர்க்கு உபதேசிக்கும் படி எங்கனே -என்ன –
சத்வம் தலை எடுத்த போது ஸ்வ யத்னத்தாலே சிறிது அறிந்தானாய் ரஜஸ் தமஸ் ஸூக்கள்
தலை எடுத்த போது ஈஸ்வரோஹம் -என்று இருக்கும்
அவனைப் போலேயோ நான் -நிர்ஹேதுகமாக அவன் தானே காட்டக் கண்டவன் ஆகையால்
எனக்கு ஒரு விஸ்ம்ருதி பிரசங்கம் இல்லை -என்கிறார் –

ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

பதவுரை

அன்று–அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத காலத்திலே
கரு அரங்கத்துள் கிடந்து–கர்ப்பப் பையாகிற ஸ்தானத்திலே இருந்து கொண்டு,
திரு அரங்க மேயான்–ஸ்ரீரங்கத்திலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெரிய பெருமாளுடைய
திசை–ஸ்வபாவங்களை யெல்லாம்
கண்டேன்–ஸாக்ஷாத் கரித்தவனாய்
கை தொழுதேன்–அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை–வெள்ளம் பரந்த ஸமுத்ர ஜலம் போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப் பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன்-அவனது ஸ்வரூபாதிகளை க்ஷண காலமும் மறந்தறிய மாட்டேன்:
ஏழைகாள்–(விஷயாந்தரங்களை விரும்பித் திரிகிற) அறிவு கேடர்களே!
நான்–(அவனை மறக்கக் கூடிய கர்ப்ப ஸ்தானத்திருக்கச் செய்தேயும் மறவாதிருந்த) தான்.
இன்று–(மறக்க முடியாதபடி ஞான விகாஸம் பெற்ற இக் காலத்திலே)
மறப்பனே–எப்படி மறப்பேன் [மறக்கவே மாட்டேன்.]

(அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து –
கண்ணே உன்னைக் காண-காட்டவே கண்ட -திருப்பாணாழ்வார்
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் -விலக்காமையே வேணும்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே)

ஓன்று மறந்து அறியேன்–அன்று-கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்–
கர்ப்ப வாசம் பண்ணா நிற்கச் செய்தே
ஐயோ நோவு பட்டாயாகாதோ -என்று அவன் கடாக்ஷிக்க -அவனைக் கண்டேன்
தம்முடைய விலக்காமையைக் கொண்டு சாஷாத் கரித்ததாகச் சொல்லுகிறார்

திருவரங்க மேயான் திசை –ஓன்றும் மறந்து அறியேன்–
பெரிய பெருமாள் இடையாட்டத்தில்-அவனுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒன்றும் மறந்து அறியேன் –

ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ –
ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரிய பெருமாளை இன்று மறப்பேனோ
இது தான் தேஹ யாத்ரையாய் பர ப்ரதிபாதன யோக்கியமான காலத்திலே மறப்பேனோ –

ஏழைகாள்-
இவ் விஷயத்தில் புதியது உண்டு அறியாதவர்களே -என்கிறார் –

திசை என்றது –
அவன் இடையாட்டத்திலே என்றபடி –
அத் திக்கிலே என்று சொல்லக் கடவது இறே

ஒன்றும் மறந்து அறியேன் –
கண்ட அளவிலே ஒன்றும் மறந்து அறியேன் –
உம்முடைய ஸுஜன்யமோ -என்னில் அன்று
ஓத நீர் வண்ணனை -மறக்க ஒண்ணாத அழகு –

ஏழைகாள்-மறக்க ஒண்ணாத விஷயத்தை விட்டு
நினைக்க ஒண்ணாத விஷயத்தைப் பற்றி நிற்கிறவர்களே –

அன்று -அறியாக் காலத்துள்ளே–ஜாயமானம் ஹி —

கரு இத்யாதி -மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் மறந்திலேன்
நினைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் இன்று மறப்பேனோ

திருவரங்கமே யான் -இடையாட்டம் பர திசையிலேயோ-எல்லை நிலத்திலே -(அர்ச்சைக்கு எல்லையான திருவரங்கம் அன்றோ )

அன்று-கருவரங்கத் துட்கிடந்து–திருவரங்க மேயான் திசை – கை தொழுதேன் கண்டேன்-ஓன்று மறந்து அறியேன்
ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ வேழைகாள் -என்று அந்வயம்-

(அறியாக் காலத்துள்ளே –திருவாய் -2-3-4-என்கிறபடியே அறிவு வெளிப்பட தகுதி இல்லாத கர்ப்பத்திலேயே
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
ஜாய மாநம் ஹி புருஷம் யம் பஸ்யேத் மது ஸூதந
ஸாத்விகஸ் ச து விஜ்ஜேயஸ் ச வை மோஷார்த்த சிந்ததம்-பாரதம் -சாந்தி -358-73-
பரமபத நாதனையோ நான் மறவாமல் இருப்பது
எல்லை நில மான அர்ச்சாவதாரங்களில் எல்லை நில மான பெரிய பெருமாள் இடம் அன்றோ நான்
அச்சுவை பெறினும் வேண்டேன் என்று ஈடுபட்டு இருப்பது என்கிறார் -)

——————————————————————

அறிவு நடையாடுகைக்கு யோக்யதை இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்தில் கிடந்தது ஜயமான காலத்திலே
இத் தலையிலே அபிரதிஷேதமே பற்றாசாக குளிரக் கடாக்ஷித்து தன் படிகளைக் காட்டித் தருகையாலே
சம்சாரிகளை தண்ணளி பண்ணி ரஷிக்கைக்காக தாமே கோயிலிலே வந்து பள்ளி கொண்டு அருளுகிற
பெரிய பெருமாளுடைய ஸ்வரூப ரூப குணாதி ஸமஸ்த ஸ்வ பாவங்களையும் சாஷாத் கரித்து அனுபவித்தேன்

காட்சிக்கு அனந்தரமான அஞ்சலி பந்தம் முதலான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன்
மறுக்க இடம் அறும் படி தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள வற்றாய்-ஓதம் கிளர்ந்த சமுத்திர ஜலம் போலே
இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையவனை ஏக தேசமும் மறந்து அறியேன் –

உலக இதர விஷயங்களில் மண்டித் திரிகிற அறிவு கேடர்காள்-மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில்-
மறவாத நான் நினைக்குக்கு ஹேது உள்ள இன்று மறப்பேனோ –

————————————————————————-

அல்லாத தேவதைகள் -சரீர தயா சேஷ பூதர் -நிர்வாஹ்யர் -அவனே சேஷி -நிர்வாஹகன் -என்று
சொல்லும்படி எங்கனே-
அவர்களும் ஒரோ தேசங்களுக்கு ஈஸ்வரருமாய் –
அவர்களுக்குப் பிரதானமான செயல்களும் உண்டாயச் செல்லா நிற்க -என்ன
அதுக்கும் அடி அவனே -அது அவன் ஸ்வாதந்தர்யத்துக்கு வர்த்தகம் -என்கிறார்

அப்படியாகில் நாட்டடங்க எம்பெருமானை விட்டுக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே
தலை மடுத்து எடுத்து-திரிகைக்கு அடி என் என்ன
உகவாதார் தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்குகள் -என்கிறார் –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு -7–

பதவுரை

திசையும்–திக்குக்களோடு கூடிய உலகங்களும்-திக்குகளால் உபலஷிக்கப்பட்ட லோகங்கள்
திசை உறு தெய்வமும்–அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள்–அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம்–ஆகிய இவை யெல்லாம்,
அசைவு இல் சீர்–கேடில்லாத [நித்யமான] குணங்களை யுடைய
கண்ணன்–ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த
நெடு மால்–மிகப் பெருமையை யுடையவனாய்
கடல் கடைந்த–(தன் பெருமையைப் பாராது சரணாகதர்களுக்காக உடம்பு நோவக்) கடல் கடைந்தவனாய்
கார் ஓதம் வண்ணன்–மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவை யுடையவனான எம்பெருமான்
படைத்த–(தன்னிடம் வந்து பணிய மாட்டாதவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கி வைத்த
மயக்கு–அறிவை மயக்கும் பொருள்களாம்.

திசையும் –திக்கோடு கூடின பூமியும் –
திசையுறு தெய்வமும்-அத் திக்கிலே வியாப்தரான தேவர்களும்
தெய்வத்-திசையும் கருமங்கள் எல்லாம்-அவ்வவ தேவதைகளுக்கு பொருந்தின கர்மங்கள் எல்லாம் -த்ரிபுரதஹநாதி

அசைவில் சீர்க்-அல்லாதாருடைய சீருக்கு அசைவு உண்டு போலே காணும்
கண்ணன் -தன்னை இதர சஜாதீயன் ஆக்குவது -தன்னுடைய இச்சையால்
நெடுமால் -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஓதப்படும் பெரியவன்(பெரும் பிச்சன் என்றுமாம் )
கடல் கடைந்த -பெரியவன் என்று இராதே அரியன செய்து நோக்குமவன்
காரோத-வண்ணன் -நோக்காதே அழிக்கிலும் விட ஒண்ணாத வடிவு –

(கண்ணனாய் அவதரித்த போதே பிரம்மா கர்வம் அழித்து -கோவர்த்தன லீலை -பாணாசூர வதம் இத்யாதிகளால்
தனது மஹாத்ம்யம் வெளிப்படுத்தி அருளியவன் அன்றோ)

படைத்த மயக்கு —–பல சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியையும் கொடுத்து வைத்தால் தன் வழி வாராதவர்களை
அறிவு கெடுக்கும் படி –அல்லாதார் அறியா விடுவான் -தைவீ ஹ்யேஷா குண மயீ-ஸ்ரீ கீதை -7-14-
தெய்வத் திசையும் -ஸ்ருஷ்டியாதி கர்மங்கள்
அசைவில் சீர் -நித்தியமான கல்யாண குணங்கள்
கண்ணன் நெடுமால் -ஆஸ்ரிதரை விடாத பெரும் பித்தன்
கடல் கடைந்த -அபேக்ஷிப்பாரே வேண்டுவது
காரோத வண்ணன் -குண ஹீனன் ஆனாலும் விட ஒண்ணாதே

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்
இந்த முக் குண சேர்க்கை பிரகிருதி மாயா என்னாலே படைக்கப் பட்டது -மிக உயர்ந்தது -தைவ தன்மை கூடியது —
லீலைக்காக -பகவத் ஸ்வரூப திரோதானம் -இது –
மாயா -ஆச்சர்யம் என்றவாறு –மாயாவி -மயக்கும் பகவான் –தாண்டிச் செல்வது அரியது–மித்யை இல்லை –
மஹா விசுவாசத்துடன் என்னை அடைந்தவர்களுக்கு -பரம காருணிகனான -நான் -இந்த மாயையை தாண்டுவிக்கிறேன்
தே தரந்தி-அவர்கள் தாண்டுகிறார்கள் -என்னை சரண் அடைந்தவர்கள் —

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன் –அகற்றி நீ என்னை அரும் சேற்றில் அழுத்த –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேன் —
மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் -அரையர் சேவை விருத்தாந்தம்
ஸ்ரீ எம்பார் -கயிற்று வலை காட்டாமல் திருக் கண்களைக் காட்டி -கமலக் கண் என்னும் நெடும் கயிறு -ஸ்ரீ ஆண்டாள் —
கண் வலைப் படாமல் அகவலை அகப்பட வேண்டுமே –
இந்த சரணாகதி -வேறே -சரம ஸ்லோகம் சரணாகதி வேறே –
பயன் பக்தி ஆரம்ப விரோதி போக்க –தடைகளை நீக்கி -பிராயச்சித்தம் பண்ணிப் போக்க முடியாத
பாப மூட்டைகள் உண்டே -அவற்றை தொலைக்க அங்கு -இங்கு உண்மை அறிவு தெரியாமல் திரை இருக்க -அத்தை நீக்க –
மாயையை விலக்கி -ஞானம் தெளிவு பிறக்க –
நாம் சரம ஸ்லோகம் -ரஹஸ்ய த்ரயத்தில் -அங்க பிரபத்தி இல்லை -நேராக மோக்ஷம் கொடுக்கும் –
சர்வ பாபேப்யோ -சர்வ கர்மங்களும் போக்கி இங்கே –
மாம் -சர்வஞ்ஞன் -சர்வ சக்தன்- பூர்ணன்- பிராப்தன்- காருணிகன்- ஸத்ய ஸங்கல்பன் -இத்யாதி

நாட்டினான் தெய்வம் எங்கும்
மஹா க்ரம -படிக்கட்டு வைத்து அருளுகிறார்

திக்கு பலஷிதையான பூமியும் -அவ்வவ திக்குகளில் வர்த்திக்கிற தேவதைகளும் –
அத் தேவதைகளுக்குச் சேர்ந்த-ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களும் யாவும் –
அபஷயாதி (தேய்மானமான)தோஷங்கள் இன்றிக்கே-நித்தியமான கல்யாண குணங்களை யுடையனாய் -அக்குணங்கள் ப்ரேரிக்க வந்து
கிருஷ்ணனாய் வந்து பிறந்த ஸுலப்யத்தை யுடையனாய் –

ஸூலபனான இடத்திலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -தன் பெருமை பாராதே சரணம் புக்க
தேவர்களுக்காக உடம்பு நோவக் கடலைக் கடைந்து அபேக்ஷித சம்பவிதானாம் பண்ணுமவனாய் –
ரஷியாதே அழியச் செய்யிலும் விட ஒண்ணாத கறுத்த கடல் போலே இருந்து குளிர்ந்த வடிவை உடையனானவன் –
தன் பக்கல் வாராதாரை அகற்றுகைக்கு உண்டாக்கின ப்ராமக வஸ்துக்களாய் இருக்கும் —

மயக்கு -மயங்கப் பண்ணும் வஸ்துக்கள் –

(அபஷய விநாஸாப்யாம் பரிணாமர்த்தி ஜன்ம அபி வர்ஜித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-
நாராயண பரம் ப்ரஹ்ம
த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –ஶ்லோகம் 15-–

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:-உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||–ஶ்லோகம் 16 –

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.-என்று ஸ்ரீ ஆளவந்தார் இப்பாசுரத்தை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் -)

———————

இம் மயக்கு பொதுவோ என்னில் –ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும் நோக்கும் -என்கிறார் –

இப்படி அநாஸ்ரீதரை மயங்கப் பண்ணுகிற அளவன்றிக்கே- ஆஸ்ரிதர விஷயத்தில்-ஸத்ய சங்கல்பனான தன் நிலை குலைந்து பக்ஷ பதித்து ரஷிக்கும் என்கிறார் –

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது –8-

பதவுரை

திருமாலே நீ–லஷ்மீநாதனே!, ஸத்ய சங்கல்பனான நீ
முயங்கு அமருள்–(எண்ணிறந்த மன்னர்கள்) நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க் களத்திலே
மயங்க–எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி–ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச் சங்கை
வாய் வைத்து–தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிக் கையால்–போர் செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது–(பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து
வானத்து இயங்கும் எரி கதிரோனை–ஆகாயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டே யிருக்கிற ஸூர்யனை
தேர் ஆழியால்—ரதாங்கம் -சக்கராயுதத்தினால்
மறைத்தது என்–மறைத்தது எதுக்காக?

முயங்க மருள்-முயங்கு அமருள்-சைன்யம் நிறைந்த பாரத யுத்த களத்திலே-

மயங்க வலம் புரி வாய் வைத்து —
அர்ஜுனன் தன்னை நிமித்தமாக நிறுத்தி யுத்தம் பண்ணப் புக்கால் -இவன் க்ரமத்தாலே
தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் போகாத அளவிலே -தன் திரு வாயிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைக்கும் அத்தனை
அதுக்கு ஒருத்தராலும் இறாய்க்கப் போகாது -அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற எல்லாரும் மயங்கும் இத்தனை
உகவையாலே மயங்குவாரும் -பயத்தாலே மயங்குவாரும் —

யஸ்ய நாதேந தைத்யா நாம் பல ஹானி ரஜாயத
தேவா நாம் வவ்ருதே -தேஜ-பிரசாதஸ் சைவ யோகி நாம் -ஸ்ரீ விஷ்ணு புரா-5-21-29-என்கிறபடியே

ச கோஷோ தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்–ஸ்ரீ கீதை -1-19-

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்.–
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்—৷৷1.19৷৷

ஸ = அந்த
கோஷோ = கோஷம், போர் ஆராவாரம்
த்ர்தராஷ்ட்ராணாம் = திருதராஷ்டிர கூட்டத்தினரின்
ஹ்ருத³யாநி = இதயங்களை
வ்யதா³ரயத் = பிளந்தது
நபஸ்ச = விண்ணையும்
ப்ருதிவீம்ச = மண்ணையும்
சைவ = அது நிச்சயமாக
துமுலோ = பேரொலி
அவ்யநுநாத³யந் = இடி போன்ற

ஆகாசம் பூமி முழுவதும் எதிரொலிக்கச் செய்ததான ஓன்று சேர்ந்த அந்த சங்கு நாதம்
திருதராஷ்டரனின் புதல்வர்களுடைய ஹ்ருதயங்களைப் பிளந்தது
நம்முடைய சேனை இந்த சப்தத்தால் தோல்வி அடைந்ததை உணர்ந்து
மனசை உளுக்கும் படி -சஞ்சயன் முதல் பதில் -மறைத்து -மேலே மீண்டும் சொல்லுவான் –

இதே ஒலி பாண்டவர்களுக்கு கேட்டு மகிழ்ச்சி கொடுத்தது ஸூசகம்

அத்யைவ நஷ்டம் குருணாம் பலமிதி தார்த்த ராஷ்ட்ரா மே நிரே-தத் விஜயா காங்ஷிணே சஞ்சயோ-
அகதயத் ஈத்ருசீ பவதியானாம் விஷயஸ் திதி ரிதி

வானத்து –மறைக்க ஒண்ணாத நிலத்திலே
இயங்கு -ஒரு க்ஷணம் ஓர் இடத்தில் நில்லாதவனை
மெரி கதிரோன் தன்னை-குறித்துப் பார்க்க போகாதபடி கிரணங்களை விடா நின்றுள்ளவனை

முயங்க மருள்-தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே

போராழிக் கையால் பொருது ——ஸத்ய சங்கல்ப என்ற ஸ்ருதிக்குச் சேருமோ –
நமே மோகம் வஸோ பவேத் -(பாரதம்) என்று- அருளிச் செய்த வார்த்தைக்குச் சேருமோ –
ஈஸ்வரத்துவத்துக்குச் சேருமோ

திருமாலே -ஸத்ய சங்கல்பத்தை அழிக்குமவளைச் சொல்லுகிறது -(பித்தன் பனி மலர் பாவைக்கு -அல்லி மகள் போக மயக்குகள் )

போராழி இத்யாதி -ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்று சொன்ன பீஷ்மாதிகள் முன்னே ஆயுதத்தை எடுத்துப் பொருது –

மயங்க -எல்லார்க்கும் ஆஸ்ரித விஷயத்திலே அவர்கள் சங்கல்ப்பித்த படியே நடத்தும் பக்ஷ பாதி
மயங்க -ஆயுதம் எடேன் என்று வைத்து அர்ஜுனன் அம்பால் தனித் தனியே கொல்லப் பற்றாமே ஒரு கால் முழுக் காயாக அவிய
வானத்து -தூரத்து நிற்கிறவனை
இயங்கும் -சஞ்சரிக்கிறவனை –
முயங்கு அமருள் -தனி இடத்தில் அல்ல -எல்லாரும் காண -எத்திறம் அறிந்தேன் –
திருமால் -நாட்டார் பரிமாற்றம் அல்ல -அவை அந்த புரத்தில் பரிமாற்றம்
போரிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே கொன்றான் -ஆதித்யனை மறைத்தான் –ஸ்ரீ பீஷ்மரைத் தொடர்ந்தான் –
முயங்கு அமருள்-நெருங்கிய யுத்தம்
தேராழி –ரதாங்கம்-திரு வாழி –

(நிமித்த மாத்ரம் பவ -ஸ்ரீ கீதை -11-33-
யஸ்ய தாநேந தைத்யா நாம் பல ஹாநிர ஜாயத தேவாநாம் வவ்ருதே தேஜஸ் ப்ரஸாதஸ் சைவ யோகி நாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-29-
ஸ கோஷா தாரத்ர ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -ஸ்ரீ கீதை -1-19-
ஸத்ய காம -ஸத்ய ஸங்கல்ப
த்யவ் பதேத் ப்ருத்வீ ஸீர்யேத் ஹிமவான் ஸகலீ பவேத்
ஸூஷ்யத் தோய நிதி கிருஷ்ணே ந மே மோகம் வஸோ பவேத் -பாரதம் -உத் -70-48-
எது செய்தாகிலும் எப்படிப் பட்டாகிலும் அடியார்களை ரஷித்தே தீருவேன் -விசேஷ ஸங்கல்பம் கொண்டுள்ளான் அன்றோ –
இந்த விசேஷ ஸங்கல்பம் பழுதாமைக்காக ஸாமான்ய ஸங்கல்பங்களையும் மாற்றிக் கொள்பவன் அன்றோ )

——————————————

துரியோத நாதிகள் பீதி அதிசயத்தாலே அறிவு அழியும்படியாக -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்திலே மடுத்தூதி –
மறைக்க ஒண்ணாத தன்னிலமான ஆகாசத்தில் -குறிக்க ஒண்ணாத படி இதஸ்தநஸ் சஞ்சரிக்குமவனாய்
ஸ்வ தேஜஸால் சர்வரையும் அபி பவிக்கிற கிரணங்களை யுடையவனான ஆதித்யனை ஆஸ்ரித விஷயத்திலே
ஓரத்துக்கு உவாத்தான பிராட்டியார் பக்கல் பெரும் பிச்சானவனே –

சகல பிராணிகளும் யுத்த தித்ருஷயா வந்து
நெருங்கிக் கிடக்கிற சமர பூமியிலே பொருகைக்குப் பரிகரமான திரு வாழி யோடே கூடின திருக் கையாலே
பீஷ்மாதிகளைத் துரத்திப் பொருது ஸத்ய சங்கல்பனான நீ அத்தைக் குலைத்து
திரு வாழி யாலே மறைத்து அருளிற்று எதுக்காக

சர்வ சாதாரணமான உறவுக்குச் சேருமோ –
ஸத்ய சங்கல்பனாய் இருக்கும் இருப்புக்குச் சேருமோ
உன் பெருமைக்குப் போருமோ-
இவை எல்லாவற்றையும் கால் கடைக் கொண்டு இங்கனே செய்து அருளிற்று எதுக்காக
ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் ஆகாதே -என்று வித்தாராகிறார் –

தேராழி –ரதாங்கம்-

————————————————————————

ஆஸ்ரிதரை ஒழியவும் ஜகத்துக்கு சத்தா நாஸம் வரில் பரிஹரிக்கும் என்கிறார் –

இவ்வளவு அன்றிக்கே ஆபத்து முதிர்ந்த அளவில் –
ஆஸ்ரிதர் -அநாஸ்ரிதர் -என்று தரம் பாராதே-இருந்ததே குடியாகத்
தன்னை அழிய மாறி நோக்கும் ஸ்வபாவன் -என்கிறார் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் –9-

பதவுரை

விரி தோட்ட–ஒளி விரிகின்ற திருக் குண்டலங்களை அணிந்துள்ளவனே!(மலர்ந்த இதழ் கொண்ட சேவடிக்கு விசேக்ஷணம் என்றுமாம் )
சே அடியை நீட்டி–செந்தாமரை போன்ற திருவடிகளை வளரச் செய்து
திசை நடுங்க–பூதலத்திலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
விண் துளங்க–மேலுலகங்களிலுள்ளவர்கள் நடுங்கும்படியாகவும்
மா வடிவில்–(திரிவிக்கிரமனாக வளர்ந்த) பெரிய உருவத்தோடு
நீ அளந்த–நீ அளந்து திருவடி கீழ் இட்டுக் கொண்ட
மண்–பூமியானது,
பொருகோடு ஓர் ஏனம் ஆய்–நிலத்தைக் குத்தி யெடுத்துக் கொண்டு திரிகிற கோரப் பற்களை யுடைய விலக்ஷணமான வராஹ மூர்த்தியாய்(மஹா வராஹ ஸ்புட பத்ர லோஷண )
புக்கு–(பிரளய ஜலத்திலே முழுகி)
இடந்தாய்க்கு அன்று–அண்ட பித்தியில் நின்றும் இந்தப் பூமியைக் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த அக்காலத்தில்
உன்–உன்னுடைய
ஒரு கோட்டின் மேல்–ஒரு கோரப் பல்லின் ஏக தேசத்திலே
கிடந்தது அன்றே–அடங்கிக் கிடந்த தல்லவோ?

விரி தோட்ட-சேவடியை-மலர்ந்த இதழ்களை யுடைய தாமரையைப் போன்ற சிவந்த திருவடியை –
விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் – பொரா நின்ற கோட்டை யுடைத்தான-ஏனமாய்-அத்விதீயமான ஏனமாய்
ஜாதிச் செருக்காலே பூமியை உழுது கொடு திரியா நிற்கும்(மானமிலா பன்றியாய் -உபமானம் அபிமானம் இல்லா பன்றியாய் )
புக்கு இடந்தாய்க்கு அன்று உன்-ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே –பிரளயம் கொண்டு உழுகைக்கு பூமி இல்லாத அன்று
தன் திரு வயிற்றிலே வைத்து நோக்கும் –

இத்தால் சொல்லிற்று யாயிற்று உதாரனாய் இருப்பான்
ஒருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்தால் நாற்பது பேருக்கு இட்டு மிகும்படி சோறு உண்டாக்குமா போலே
ரஷ்யத்தின் அளவன்று இறே ரக்ஷகன் பாரிப்பு –

விரி தோட்ட-சேவடியை நீட்டித்-விரியா நின்ற தோடுகளை (இதழ்களை) யுடைத்தான தாமரை போலே இருந்துள்ள சேவடியை நீட்டி
விரி தோட்ட -என்று சம்புத்தி (விளிச்சொல்) யாகவுமாம் –
திரு மேனியில் ஒளி விரியும் தோட்டை யுடையவனே –
திசை நடுங்க-திக்குகள் எல்லாம் நடுங்க –
விண் துளங்க-விண்ணில் உள்ள தேவ ஜாதி எல்லாம் நடுங்கும் படியாக
மாவடிவின் நீ யளந்த மண் —-பெரிய வடிவைக் கொண்டு நீ அளந்த மண் –

ஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு (ஸ்ரீ மஹா வராஹமாய் ) புக்குச் செய்யிலும் செய்யும் –
சிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் (ஓங்கி உலகு அளந்த உத்தமனாய் )செய்யிலும் செய்யும் –

பொரு-ஆபன்னராய் விலக்காதார்க்கும் -தன்னைக் கொண்டு கார்யம் கொள்ளுவார்க்கும் செய்யும் படி –
விரி தோட்ட-விரிகிற தோட்டை உடையவை போலே இருந்துள்ள –
விண் துளங்க -அபி மானிகளான தேவர்கள் -நடுங்க
பெரிய வடிவாலே அளந்த மண் -திரு எயிற்றுக்கு ஒரு நீல ரத்னம் போலே இருப்பதே -என்ன ஆச்சர்யம் –

(ஸர்வ ரக்ஷகன் -தன்னை தாழ விட்டாகிலும் ரக்ஷிப்பவன் என்பதை உலகு அளந்த -உலகு இடந்த -வ்ருத்தாந்தங்களால் காட்டி அருளுகிறார் இதில்
தலையால் சுமந்தும் தலையிலே காலை வைத்தும்
பெரிய வடிவையோ சிறிய வடிவையோ
உயர்ந்த வடிவையோ தாழ்ந்த வடிவையோ
கொண்டு தான் ரக்ஷிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாதவன் -அன்றோ –
அவதாரங்களில் மெய்ப்பாடு தோன்ற அன்றோ அனுஷ்டித்துக் காட்டி அருளினான் அன்றோ
தந்தத்தின் நுனியில் ஒரு மறு போல் அன்றோ பூமி இருந்தது -ரஷ்யத்தின் அளவை விஞ்சி நிற்கும் ரக்ஷண பாரிப்பு –
களிறு மருப்பின் நாப்பண் புள்ளி நிலனும் -பரிபாடல் )

——————————————–

விகசிதமான இதழையுடைய தாமரை போலே சிவந்த திருவடிகளை வளர்த்து
திக்கு உப லஷிதையான பூமியில் உள்ளார் நடுங்கவும் உபரிதன லோகத்தில் உள்ளார் நடுங்கவும்
பெரிய வடிவை யுடையையாய்க் கொண்டு நீ அளந்து
கால் கீழ் இட்டுக் கொண்ட பூமியானது –

நில மகள் முலையில் குங்குமத்தோடே நிலத்தோடு வாசி அற எங்கும்
ஜாதி உசிதமான செருக்காலே பொருது கொடு வருகிற கொம்புகளை யுடைத்தாய் அழகுக்கு அத்விதீயமான
வராஹ வேஷத்தை உடையனாய்க் கொண்டு –
பிரளய ஜலத்திலே முழுகி அண்ட பித்தியினின்றும் இடந்து எடுத்துக் கொண்டு ஏறின உனக்கு அக் காலத்தில்
உன் எயிற்றின் ஏக தேசத்திலே ஒரு மறுப் போலே கிடந்தது ஓன்று அன்றோ –

ஆபத்து வந்தால் தலையால் நோக்குதல் –தலையிலே காலை வைத்து நோக்குதல் -செய்யுமவன் அன்றோ நீ
ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ -என்று உகந்து அனுபவிக்கிறார்

விரி தோட்ட என்று விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

————————————————–

சேராதன செய்தும் ஆஸ்ரிதரை நோக்குமவன் -என்கிறார்-

இப்படி பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்து நோக்கும் அளவு அன்றிக்கே –
சிறிய வடிவைக் கொண்டு
பெரிய செயலைச் செய்து நோக்கிலும் நோக்கும் -என்கிறார் –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்—10-

பதவுரை

மண்ணும்–பூமியும்
மலையும்–குல பர்வதங்களும்
மறி கடலும்–அலை யெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும்–காற்றும்
விண்ணும்–ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்
விழுங்கியது–(உனது திரு வயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி) அமுது செய்ததை
மெய் என்பர்–ஸத்யமாகச் சொல்லுவர்கள் (வைதிகர்கள்);(மார்க்கண்டேயர் தாமும் உள்ளே இருக்கக் கண்டாரே )
எண்ணில்–இதனை ஆராயுமளவில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு உன் வாய்–அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம்
எல்லை கண்டிருக்கிற [-எண்ணிறந்த] கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது
அன்று–இவற்றை யெல்லாம் விழுங்கின வக் காலத்தில்
இவ் உலகு அளவும் உண்டோ–இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்குமோ?(வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே )

மறி கடலும்-அலை எறியும் சமுத்ரங்களும்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு–
எண்ணிக்கைகளை எல்லை கண்ட -எண்ணிறந்த கல்யாண குணங்களையும்–திருச் சக்கரத்தையும் யுடைய உனக்கு –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்–ஆதாரமான மண்ணும் -அதற்கு உறுதியான மலையும் –வேலியான கடலும் –
தாரகமான காற்றும் –அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும் -விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் –

ஐந்தர ஜாலிகர் செயல் போலே பொய்யன்று இது -ஆப்தரான ஆழ்வார்கள் மெய்யென்பர்

எண்ணில்-ஆராயில்

அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு –
எண்ணிறந்த குணங்களையும் திரு வாழி யையும் யுடையனான யுனக்கு

அலகாவது -பரிச்சேதகம் (அளவிடும் கருவி )இறே –

அத்தை அளவு கண்ட சீர் -அபரிச்சேதயமான அலகை பரிச்சின்னமாக்கின சீர்

அன்றிவ்வுலகளவும் உண்டோ வுன் வாய்—-இந்த ரக்ஷணத்தில் த்வரை தான் சிறிய வடிவில் பெரிய ஜகத்தை வைத்தான் –

மண்ணும் இத்யாதி -சேராச் சேர்த்தியானவை அடைய மெய் என்பர் –
இந்திர ஜாலம் என்னப் பெற்றதோ –
ரிஷிகள் கூப்பிடா நிற்பார்கள்

எண்ணில்-அலகளவு கண்ட-எண்ணை அளவு படுத்தும் குணங்கள்-

தாதூ நாமிவ சைலேந்தரோ-குணாநாம் ஆகரோ மஹான் -கிஷ் -15-21-
பஹவோ ந்ருப கல்யாண குணா -அயோத்யா -2-26-(தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ )

ஆழியாய்க்க்கு-குணங்களும் அப்படியே சீரிய கை வுலகளவும் உண்டோ-ரக்ஷகத்வ பாரிப்புக்கு அடைவில்லாமை –

(ரக்ஷிக்கும் போது இன்ன செயலைச் செய்வோம் என்னும் நியதி இல்லாமல் சேராத செயல்களை செய்து ரக்ஷிப்பவன் அவன் என்கிறார் –
தத பஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மந -பாரதம் -ஆரண்ய –
எண்ணும் அலகு -கருவி -லக்ஷம் கோடி சங்கம் மஹா சங்கம் பத்மம் குமுதம் –
தாதூ நாமிவ சைலேந்தரோ குணா நாமா கரோ மஹான் -கிஷ்கிந்தா-15-21- -தாரா வாக்யம்
தே தமூசுர் மஹாத்மா நாம் பவ்ர ஜான பதைஸ் ஸஹ
பஹவோ ந்ரூப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே -அயோத்யா -2-26- )

————————————————–

சர்வ (சாதாரணமான )ஆதாரமான பூமியும் -அதுக்கு தாரகமான குல பர்வதங்களும் அத்தைச் சூழ்ந்து கிடந்து அலை எரிகிற சமுத்ரங்களும்
தத் அந்தர்வர்த்திகளுக்கு உஸ்வாசாதி ஹேதுவான காற்றும் -அதுக்கு அவகாச பிரதமான ஆகாசமும் –
இவற்றை அடையத் திருவயிற்றிலே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்து அருளின இத்தை –
பரமார்த்தம் என்று உன் சக்தி சாமர்த்தியத்தை
தறை காண வல்ல வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள் –

உன் படியைப் பரிச்சேதித்து அநுஸந்திக்கும் அளவில் அளவிடுகைக்கு பரிகரமான ஆயுதங்களையும் பரிச்சேதித்து எல்லை
கண்டு இருக்கிற அசங்க்யாதமான கல்யாண குணங்களையும் –
திரு வாழியையும் யுடையையான உனக்கு இவற்றை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்து அருளின அன்று
இஜ் ஜகத்தோ பாதியும் பெருமை யுடைத்தோ
உன்னுடைய திருப் பவளமானது-இந்த சிறிய திருப் பவளத்தைக் கொண்டு
பெரிய ஜகத்தை அமுது செய்து அருளின இவ் வாச்சர்யம் என்னாய் இருக்கிறதோ -என்று ஈடுபடுகிறார் –

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரம் -1- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

கோயில் திருமலை பெருமாள் கோயில்
போக மண்டபம் புஷ்ப்ப மண்டபம் தியாக மண்டபம்
போல் முதல் ஆழ்வார்கள்
ஜென்ம வைபவத்தால் முதன்மை பெற்ற –
செம் பொன் கழலடி செல்வா பலதேவா போல் பொற் கால் இட்ட ஆழ்வார்கள்
நல் தமிழால் நூல் செய் உய்வித்த பெற்றிமையோர் -இரண்டாம் பெருமை
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் -பொய்கையார் பூதத்தார் பெயர் தேசுடனே தோன்றும் சிறப்பு
திருக்கோவலூர் -த்வாபர யுக முடிவில் -திரு அவதாரம் –

மூவரும் சேர்ந்தே புறப்பாடு திருவரங்கத்தில் சதயம் அன்று –
ஸ்ரவணம் -விஷ்ணு நக்ஷத்ரம் –
ஒண் சங்கு கதை வாள் ஆழி -பொய்கையார் பூதத்தார் பேயர் திருமழிசை நால்வரும் –
பாஞ்ச ஜன்யம் கோஷிக்கும் அன்றோ –
கனைத்து இளம் கற்று எருமை-

வேத வேதாந்த -பாஹ்யர் கலங்க –
திக்கு எட்டும் பரவ

துலாயாம் ஸ்ராவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சன வாரி ஜாத்
த்வாபரே பாஞ்ச ஜன்ய அம்சம் ஸரோ யோகி நமாஸ்ரயே

துலாயாம் ஸ்ரவணே ஜாதாம்
காஞ்யாம் -முத்தி தரும் க்ஷேத்ரம்
ஐப்பசி தொடங்கியே எண்ணுவோம்
நக்ஷத்ரமும் திருவோணம் தொடங்கி
காஞ்சன வாரி -பொற்றாமைக் குளத்தில் -அயோனிஜ வாஸம் -அத்தையே பேராக சர யோகி -என்று கொண்டார்
த்வாபர யுக சந்தியில் -கலியுக பூர்வ ஸந்த்யை
சூரியனை தீபமாக ஏற்றி
ஸ்ரீ யபதி -குறித்து -காணவே விளக்கு ஏற்றினார் அவரை -வணங்குவோம்

செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே
திருக்கச்சி மா நகரம் செழிக்க வந்தோம் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே
வநச மலர்க் கருவதனில் வந்த மைந்தன் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற் பதமும் வாழியே
பொன் முடியும் திரு முகமும் பூதலத்தில் வாழியே

கலவ் -நாராயண பாராயண -ஸ்ரீ மத் பாகவதம்
தாமிரபரணி க்ருதமாலா பயஸ்வினி பாலாறு-கரையில் இவர்கள் ஆவிர்பாவம் ஸூ சிதம்
பர பக்தி பர ஞான பரம மூன்று அவஸ்தைகள்-ராஜவித்யா- ஞாதும் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஞான தர்சன பிராப்தி

முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்தில் ஊன்றி இருப்பர் -ஊற்றம் பற்றியே சொல்வர்-த்ரிவிக்ரமம் -திருவேங்கடம் மூன்றும் பாடுவார்

இவையே பரத்வத்துக்கு விபவத்திலும் அர்ச்சையிலும் பிரதிநிதி

ஸம்ஸ்லேஷத்தில் ஆனந்தம் விஸ்லேஷத்தில் துக்கம் -பர பக்தி
வழி அல்லா வழியில் அடையும் த்வரை பர ஞானம்-ஞானம் ப்ரேமம் சாஷாத்காரம் -மூன்றும் இந்த மூன்று அவஸ்தைகள்

உபய விபூதி நாதன் -ஸர்வேஸ்வரன் -நேராக நாராயணன் சொல்லாமல்
நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்
திருக்கண்டேன் -ஸ்ரீ யபதி -திரு ஆழி திரு பாஞ்ச ஜன்யம் சம்பந்தம் சொல்லியே -காட்டி
உயர்வற உயர்நலம் -உடையவன் -அயர்வறும் அமரர்கள் நாதன் -வண் புகழ் நாரணன் -நம் திருவுடை அடிகள் -மூன்று திருவாய் மொழியில்
திருவில்லா தேவரை தேறேன் மின்
நம் கண்ணன் அல்லது களை கண் மற்றிலேன்
சங்கு -பால் போன்ற வெண்மை -ஞானம்=ஓங்கார வடிவம் –
வருத்தும் –புற விருள் மாற்ற -எம் பொய்கைப் பிரான்–திருவோண திருவிளக்கு முதலில் ஏற்றி -அருளி

ஸ்ரீ யதோத்தகாரி சந்நிதியில் -பொற்றாமரை பொய்கையில்-பத்ம மலரில் —
படை போர் புக்கு முழங்கும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சம்
துலா ஐப்பசி மாச திருவோணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவவதாரம் –
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ஸஸ ப்ரஹினோதி தஸ்மை -போலே
தமிழ் மறைகளை வெளிப்படுத்தி அருள பத்மத்தில் அவதரிப்பித்தான் போலும் –
செந்தமிழ் பாடுவார் -செஞ்சொற் கவிகாள் –இன்கவி பாடும் பரம கவிகள் -திருவோணத்தான் உலகாளும் என்பார்களே –

————————————————–

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யானாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா

கலிவைரி க்ருபா பாத்ரம் காருண்யைக மஹா ததிம்
ஸ்ரீ கிருஷ்ண பிரவணம் வந்தே க்ருஷ்ண ஸூரி மஹா குரும்-

கலி வைரி தாஸர் -நம்பிள்ளை கருணைக்குப் பாத்ரபூதர்
காருண்யத்துக்கு ஒரே கடல்
ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஈடுபட்ட ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகளை வணங்குகிறேன் –

தன்மை சிங்கம் ரோகிணி நாள் தழைக்க வந்தோம் வாழியே
தாரணியில் சங்க நல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழ் உரைப்பான் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மன் புகழ் சேர் சடகோபர் வளம் உரைப்பான் வாழியே
மறை நாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைத்தான் வாழியே
அன்புடன் உலகாரியர் தம் அடி யிணையோன் வாழியே
அபய பிரத ராசர் தாள் அனவரதம் வாழியே –

————————————————————–

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு –வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து —-ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் –தாழைகள் நெருங்கிச் சேர்ந்து இருக்கிற
படி விளங்கச் செய்தான் பரிந்து –படி -பூமியிலே -அன்புடன் கூடியவராய் -பிரகாசிக்கும் படி செய்து அருளினார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் – வியாக்யானம்

க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சிதோ ஹரி –தஸ்மாத் காஞ்சீ தி விக்யாதா புரீ புண்ய விவர்த்த நீ –என்னும் படியான
புண்ய கோடி விமானம் அன்றோ -ஸ்ரீ காஞ்சீ புரத்திலே-புஷ்கரணீயிலே புஸ்கரத்திலே-விஷ்ணு நஷத்த்ரத்திலே ஆவிர்பவித்து
திவ்ய பிரபந்த தீப முகேன லோகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி வாழ்வித்த படியைச் சொல்கிறது இதில் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த-பொய்கைப் பிரான்
இத்தால் இவர் ஜென்ம வைபவம் சொல்கிறது

கைதை-கேதகை –தாழை-கைதை வேலி மங்கை —என்றும்
கண்டல் வேலி மங்கை பெரிய திருமொழி -1-3-10–(கண்டல் -தாழை )என்றும்
கொக்கலர் தடந்தாழை வேலி –திருவாய் -4-10-8—என்றும் சொல்லுமா போலே —
அது தானே நீர் நிலங்களிலே யாயிற்று நிற்பது –

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் –பெரியாழ்வார் -2-10-8–என்னும் படி -(நீர் நிலைகளில் அன்றோ தாழை செழிக்கும் )
அம் பூம் தேன் இளஞ்சோலை —திருவிருத்தம் -26–

சூழ்ந்த கச்சி வெஃகாவில் -பொய்கையிலே
எம் பெருமான் பொன் வயிற்றிலே பூவே போன்ற பொற் றாமரைப் பூவிலே ஐப்பசியில் திருவோணம் நாளாயிற்று இவர் அவதரித்தது
பத்ம ஜனான பூவனைப் போலே யாயிற்று பொய்கையரான இவர் பிறப்பும் –

வந்து உதித்த என்கையாலே
ஆதித்ய உதயம் போலே யாயிற்று இவர் உதயமும் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் -(இராமானுச நூற்றந்தாதி -8-)என்னக் கடவது இறே –
பொய்கையிலே அவதரிக்கையாலே அதுவே நிரூபகமாய் இருக்கை –
அது தான் ஸரஸ்வதீ பயஸ்விநியாய் ப்ரவஹித்த ஸ்தலம் யாயிற்று
தத்தீரமான பொய்கை என்கை –

பொய்கைப் பிரான் -மரு பூமியில் பொய்கை போலே எல்லார்க்கும் உபகாரகராய் இருக்கை
தீர்த்த கரராய்த் திரியுமவர் (இரண்டாம் திருவந்தாதி-14- )இறே(தீர்த்தங்களுக்கும் தீர்த்தமாகித் திரியுமவர் )

கவிஞர் போரேறு -ஆகையாவது
கவி ஸ்ரேஷ்டர் -என்றபடி -முதல் ஆழ்வார்களில் முதல்வரான -ஆதி கவி என்னும்படி அதிசயித்தவர்-

உலகம் படைத்தான் கவியாலும்–திருவாய் -3-9-10- -பரகால கவியாலும் –
செஞ்சொற் கவிகாள் என்றும்
செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி -2-8-2 )என்றும் கொண்டாடப் படுமவராய் -(பாலேய் தமிழர் இசைக்காரர் )
நாட்டில் கவிகளுக்கும் விலக்ஷண கவியாய் இருப்பர்
இது பொய்கையார் வாக்கினிலே கண்டு கொள்க -என்று இறே தமிழர் கூறுவது –
அந்த ஏற்றம் எல்லாம் பற்ற கவிஞர் போரேறு -என்கிறது –

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடையவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழும் படி ஸ்நேஹத்தால்
விலக்ஷண பிரமாண நிர்மாணம் பண்ணின படி சொல்கிறது –

வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி-படி விளங்கச் செய்தான் பரிந்து -என்று
வையத் தடியவர்கள் -ஆகிறார் -பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அவர்கட்கே இறே வாழ வேண்டுவது
வானத்து அணி அமரர்க்கு -இரண்டாம் திரு -2–வாழ்வு நித்தியமாய் இறே இருப்பது –

இத்தால் இவர்கள் வாழுகையாவது —
சேஷத்வ வைபவத்தை ஸ்வ அனுசந்தானத்தாலே உண்டாக்குமதான பிரபந்தம் -என்கை
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி (திருவாய்-3-2-4 )-என்னக் கடவது இறே –
இவ்வநுஸந்தானமே வாழ்வு -என்னவுமாம் –

(இராமானுச நூற்றந்தாதி எட்டு கூடி இருக்கும் ஏற்றம் கொண்டு இருக்கும்)

அரும் தமிழ் நூற்றந்தாதி-ஆவது –
அர்த்த நிர்ணயத்தில் வந்தால் -வெளிறாய் இருக்கை அன்றிக்கே அரிதாய்
தமிழான பிரகாரத்தாலே ஸூலபமாய் -அது தான் நூறு பாட்டாய் -அந்தாதியாய் இருக்கை-

அன்றிக்கே –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி–என்று
வையத்து அடியவர்வர்கள் வாழ வருமதான தமிழ் நூற்றந்தாதி என்றுமாம் –

நூற்றந்தாதி படி விளங்கச் செய்கையாவது —
வையம் தகளியாய் -என்று தொடங்கி -ஓர் அடியும் சாடுதைத்த முடிவாக அருளிச் செய்த
திவ்ய பிரபந்த தீபத்தாலே பூதலம் எங்கும் நிர்மலமாம் படி நிர்மித்தார் என்கை –

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு யாகையாலே –
படியில் -பூமியிலே பிரகாசிக்கும் படி செய்து அருளினார் என்றாகவுமாம்

அன்றிக்கே –
படி -என்று உபமானமாய் –
திராவிட வேதத்துக்கு படிச்சந்தமாய் இருக்கும் படி செய்து அருளினார் என்றுமாம் –

விளக்கம் -பிரகாசம்
படி என்று விக்ரஹமாய் -திவ்ய மங்கள விக்ரஹம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றபடி
கண்டு அறியும் படி செய்து அருளினார் என்றுமாம் –

(படி -பூமியிலே –
உபமானம் -படி என்று உரைத்து காட்டும் படித்து அன்றோ அவன் படிவம் –
திராவிட சாகரம் -திருவாய் மொழிக்கு உப மானம்
படி விக்ரஹம் -மூன்று நிர்வாஹங்கள்)

செய்தான் பரிந்து –
பரிவுடன் செய்கை யாவது –
சேர்ந்த விஷய (பாகவத விஷய -மற்ற ஆழ்வார்கள் உடன் சேர்ந்த என்றுமாம் )ஸ்நேஹத்தாலே -என்னுதல் –
பர விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல்
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்றார் இறே –
ஸ்நேஹத்தாலே (எண்ணெய்- அன்பு )இறே விளக்கு எரிவது

இத்தால்
அவர் திவ்ய பிரபந்த உபகாரகத்வத்தாலே வந்த உபகார கௌரவம் சொல்லி ஈடுபட்டதாயிற்று –

———————————————————–

அவதாரிகை –

ஆழ்வார்களில் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான அவகாஹ நத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும்
நித்ய ஸூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -திரு விருத்தம் -75
இன் கவி பாடும் பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் -என்னும் இவர்கள் அவதரித்தது -ஒரோ தேசங்களில் யாகிலும்
( கச்சி நகர் வந்துதித்த /கடல் மல்லை பூதத்தார் / தோன்றியவூர் வன்மை மிகு கச்சை மல்லை மா மயிலை )
ஞானப் பெருமையால் -( காலப் பழமையால் ) இன்ன விபூதி ( விடம் )என்று நிச்சயிக்கப் போகாது –

பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்–( பெருமாள் திருமொழி-3-8- )
பகவத் விஷயத்தில் அவகாஹியாதார் எல்லாரும் தமக்குப் பேயராய் இருப்பர்
அவர்கள் நிலையிலே தாம் நில்லாத படியால் அவர்களுக்குத் தாம் பேயராய் இருப்பர் –
இப்படியாலே பகவத் விஷயத்திலே அவகாஹியாதார் இருக்கும் இடத்தில்
ஸ்தாவரங்கள் உள்ள காடே அமையும் என்று இருப்பார்கள் –

ஆன் விடை ஏழு அன்று அடர்த்தற்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே
சர்வேஸ்வரன் திரு உள்ளம் ஊற்றம் அறுத்த அளவிலும் கிருபையைப் பண்ணும்
தம்முடைய மனசிலும் கொடுமையை வைத்தேன் என்கிறார்
இனி அவர்கள் மனுஷ்யர் அல்லர் என்று செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்ள அமையும் –

சிறந்தற்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்-(இரண்டாம் திருவந்தாதி -46)என்னும் படியே
அறிவு நடையாடாதவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்குமதில்
காட்டிலே வர்த்திக்க அமையும் என்று காடுகளில் வர்த்திப்பார்கள்-

இங்கனே செல்லுகிற காலத்திலே ஒரு மழையையும் காற்றையும் கண்டு
திருக் கோவலூரிலே ஒரு (மிருகண்டு மஹ ரிஷியின் )இடை கழியிலே ஒருத்தர் புக்குக் கிடக்க-(சயனித்து இருக்க )

இருவராவார் சென்று -ஒருவர் கிடக்கும் இடம் இருவர் இருக்கப் போரும் -என்று இருக்க(அமர)

மூவராவார் சென்று -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கப் போரும் என்று மூவரும் நிற்க –

இருவர் வந்து நெருக்க —
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி – முதல் திரு -86–என்றும்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -பெரியாழ்வார் -என்னும் நீயும்
உன் பரிகரம் -திருவடி சென்று -நலிய புக —
ந கச்சின் நாபராத்யதி -என்று ஏறிட்டுக் கொண்டு நோக்கும் திருமகளும் –

குன்று எடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -(முதல் திருவந்தாதி )
மலை எடுத்து உடம்பிலே விழுகிற மழையைக் காத்த நீர்மையை யுடையவனே-
உடம்பிலே விழுந்த மழையை மலை எடுத்துக் பரிஹரித்த போது பிறந்த ஹர்ஷம் போலே யாயிற்று
இவர்கள் நெருக்குப் பெற்ற போது இவனுக்கு இருந்த படி -(புலவர் நெருக்கு உகந்த பெருமாள் )

வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி —
காமுகரானவர்கள் உகந்த விஷயங்களில் போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு நிற்குமா போலே –
இவ் வாசலுக்கு புறம்பு போக மாட்டிற்றிலன் -உள்ளுப் புக மாட்டிற்றிலன் –

இனி-இப்போது

இப்படி இருவருமாக தங்களை நெருக்கப் புக்கவாறே-தம்மை ஒழிய வேறே சிலர் நெருக்குகிறார் உண்டு என்று
ஞானம் ஆகிற விளக்கை ஏற்றினார் -(முதல் ஆழ்வார் )
ஞான தீபேன பாஸ்வதா -(ஸ்ரீ கீதை -10-11)
விளக்கு யுண்டானாலும் ஞானம் இல்லையாகில் பதார்த்தங்களை விவேகிக்கப் போகாதே –

முதல் ஆழ்வாருக்கு ஞானம் பிறந்த படி சொல்லிற்று –
( சேமுஷீ பக்தி ரூபா )-

இருவராவாருக்கு ஞானம் முற்றி பக்தியானபடி சொல்லிற்று

மூவராவார்க்கு பக்தியை யுடையராய் அவனை ஒழிய செல்லாதவர்களுடைய சாஷாத் காரம் பிறந்த படி சொல்லிற்று

இம் மூவருக்கும் அர்த்தம் ஒன்றே –
மூன்று ரிஷிகள் கூடி ஒரு வியாகரணத்துக்கு கர்த்தாக்கள் ஆனால் போலே
கர்த்ரு பேதம் யுண்டே யாகிலும் –
அர்த்த சரீரம் ஒன்றே –
த்ரி முனி வியாகரணம் -என்னுமா போலே

——————————————————————–

அவதாரிகை –
ஸ்ரீ அப்புள்ளை ஸ்வாமி —
ஸ்ரீ யபதியாய்-அவாப்த ஸமஸ்த காமனாய்-ஸமஸ்த கல்யாண குணாதி மகனான -சர்வேஸ்வரன்
நித்ய விபூதியில் -நித்ய அசங்குசித ஞானரான நித்ய ஸூரிகளை நித்ய கைங்கர்யம் கொண்டு
நித்ய ஆனந்தியாய் இருக்கச் செய்தேயும் (ந ஏகாகி ந ரமேத )

அவர்களைப் போலே கைங்கர்ய நிரதராய்-வாழுகைக்கு இட்டுப் பிறந்து வைத்து -அதுக்கு அசலாய் –
அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி பரவஸ்யராய் பரபிரமிக்கிற சம்சாரி சேதனரைத் திருத்திப் பணி கொள்ளுகைக்காக –
இவர்கள் அழிந்து கிடக்கிற தசையில் ஸ்வ ஆஸ்ரய உபகரணமாக கரண களேபரங்களைத் தன் கருணையால் கொடுத்து அருளி
அவற்றைக் கொண்டு விபசரியாதே நல் வழி நடக்கைக்கு உடலாக ஸ்ருதியாதி சாஸ்திரங்களை ப்ரவர்த்திப்பிக்க

அவற்றைத் திரஸ்கரித்து -ஸ்வைரம் சஞ்சரிக்கிற தசையிலே ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து அவதரித்து அருளி
உபதேச அனுஷ்டானங்களாலும் ரூப உதார குண சேஷ்டிதங்களாலும் வசீ கரித்து இவர்களைத் திருத்தப் பார்த்த இடத்தில்
அவற்றுக்கும் அகப்படாத படி இதர விஷயங்களில் மண்டி இவர்கள் நஷ்ட கல்பராய் போகக் கண்ட படியால்
ஆழ்வார்களைக் கொண்டு இவர்களைச் சேர்த்துக் கொள்வானாக –
ஆ முதல்வரான (திருவாய்-7-9-3 )-முதல் ஆழ்வார்களை அனந்தரம் அவதரிப்பித்து அருளினான் –

இவர்கள் ஆகிறார் –
பகவதாகஸ்மிக கடாக்ஷ விசேஷ லப்தமான ஞான ப்ரேமங்களை குறைவற யுடையராய்
நித்ய ஸூரிகளைப் போலே பிறப்பே பிடித்து -பகவத் அனுபவத்தில் பழுத்து -சம்சார யாத்திரையில் கண்ணற்று
இன் கவி பாடும் பரம கவிகள் (திருவாய்-7-9-6 )- என்றும் –
செந் தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி -2-8-2-)-என்றும் நாவீறுடைய பெருமாளும் -நாலு கவிப் பெருமாளும்
கொண்டாடும்படியான வேண்டப்பாடு யுடையராய் –

பரத்வாதிகள் ஐந்தையும் ஒரு காலே கண்டு மண்டி அனுபவிக்கும்
சதிரை யுடையராய் இருக்கச் செய்தே-ஆறு பெருக்கு எடுத்து எங்கும் ஒத்துப் போகா நிற்கச் செய்தே
நீருக்கு நோக்கு ஓர் இடத்திலேயாய் இருக்குமா போலே
திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் –
திருமலையிலும் கால் தாழ்ந்து (ஈடுபட்டு )
அனுபவித்துப் போருமவர்களாய்-

அறிவுண்டாய் இருக்க பகவத் விஷயத்தை கால் கடைக் கொண்டு இதர விஷயங்களில்
மண்டித் திரிகிற சம்சாரிகளோட்டை ஸஹவாசம் துஸ் சஹமாய் -அவர்கள் வர்த்திக்கிற நாட்டை விட்டு
அறிவுக்கு அடைவில்லாத ஸ்தாவரங்கள் வர்த்திக்கிற காட்டை விரும்பி -அவ்விடத்தில் யத்ர சாயங்க்ருஹராய்
ஒருவரை ஒருவர் அறியாத படி மறைந்து வர்த்தித்தார் சில மஹா புருஷர்கள் ஆயிற்று –

இப்படி வர்த்திக்கிற இவர்கள் மூவரும் யாதிருச்சிகமாக ஒரு நாள் திருக் கோவலூர் பிரதேசத்தில் வந்து சங்கதராக
அவ்வளவில் பெரும் மழையும் பெரும் காற்றும் பிரவர்த்தமாக –
அத்தைக் கண்டு மழைக்கு ஒதுங்க ஓர் இடை கழியிலே
ஒருவர் புக்கு கிடக்க மற்றையவர் வந்து -திறக்க வேணும் என்ன –

ஒருவர் கிடக்க இடம் போரும் அத்தனை -என்ன

ஒருவர் கிடந்த இடம் இருவருக்கு இருக்கலாம் காணும் என்ன —
ஒருவர் மூச்சு ஒருவர் பொறாத சம்சாரத்திலே
இப்படிச் சொன்ன இவர் கேவலர் அல்லர் -என்று திறக்க –
அவரும் புகுந்து இவ்விருவருமாக இருக்கிற அளவிலே

மற்றையவரும் வந்து திறக்கச் சொல்ல -எங்கள் இருவருக்கும் இருக்க இடம் போரும் அத்தனை -என்ன –

இருவர் இருந்த இடம் மூவருக்கு நிற்கலாம்
இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே –

ஈஸ்வரன் தானும் பிராட்டியுமாக வந்து தனித்தனியே இவர்களைப் பின் பற்றி
திரிந்த நெஞ்சாறல் தீர இவர்கள் மூவருக்கும் நடுவே புக்கு நெருக்க –
நம் மூவரையும் ஒழிய வேறு புக்கு நெருக்குகிறவர்கள் யார் என்று
விளக்கு ஏற்றிப் பார்க்க வேணும் என்ன –

அவர்களில் ஒருவரான பொய்கையார் -லீலா விபூதியில்
கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை –
பர பக்தி ரூப ஞானத்தால் தரிசித்து
அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான -வையம் தகளி -அருளிச் செய்தார் –

அநந்தரம்
ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே
அந்தப் பர பக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-
அன்பே தகளி -அருளிச் செய்தார் –

அநந்தரம்
மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-
திருக் கண்டேன் அருளிச் செய்தார் –

ஞான பக்தி சாஷாத்காரங்கள் -மூன்றும் பிரபந்த த்ரயத்துக்கும் தாத்பர்யமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து
இருக்க -விருத்தமாக
இங்கனே சொல்லலாமோ என்னில்-அதுக்கு குறை இல்லை –

அங்கு ஞானம் என்கிறது -பர பக்தி ரூபா பன்ன ஞானத்தை –
பக்தி என்கிறது -பர ஞான தசா பன்னமான ப்ரேமத்தை-

சாஷாத்காரம் என்கிறது -பர ஞான விபாக ருபாயான பரம பக்தியை -கர்மா அனுஷ்டானகாந்தமாக ஞானம் உதித்து –
அது த்யான உபாஸனாத் யவஸ்தா பன்னமாய் முற்றி –
அநந்தரம் –
த்ரஷ்டவ்ய -என்னும் படி சாஷாத்கார ரூபமாய்
அநந்தரம்
விஷய வை லக்ஷண்யத்தை அவகாஹித்து பக்தி ரூபாபன்னமாய்-பின்னை பர பக்தியாதிகளாக பரிபக்வமாம்
பிராமாணிகர் படியில் இவர்களுக்கு முதலிலே அன்வயம் இல்லை இறே –

கர்ம ஞான அநு க்ருஹீதை யான பக்தியினுடைய ஸ்தானத்தில் பகவத் பிரசாதம் நின்று
அநந்தரம் விளைந்த பர பக்தி யாய்த்து இவரது என்று இறே பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கு
நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வது -(-ஈட்டில் -வீடுமின் முற்றவும் -)
அது அல்லாத ஆழ்வார்களும் ஒக்கும் இறே –
அல்லாத போது ஆழ்வார்கள் எல்லாரும் ஏக ப்ரப்ருதிகள் என்னப் போகாதே
ஆகையால் விரோதம் இல்லை –

பர பக்த்யாதிகள் மூன்றும் ஓர் ஒருவருக்கே குறைவற யுண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓர் ஒருத்தருக்கு ஒவ் ஒன்றிலே ஊற்றமாய் இருக்கும்-
பகவத் ஸ்வரூபாதிகள் எல்லாம் எல்லார்க்கும் அனுபாவ்யமாகா நிற்கச் செய்தே
ஓர் ஒன்றிலே ஒவ் ஒருத்தருக்கு ஊற்றம் சொல்லுகிறாப் போலே
அனுபவ அபி நிவேச ரூபை யான பரபக்த்யாதி அவஸ்தைகளிலும் தனித் தனியே ஊற்றம் சொல்லக் குறை இல்லை –

கர்த்ரு பேதம் யுண்டாய் இருந்ததே யாகிலும் ஒருவனுக்கே க்ரமத்திலே பிறக்கக் கடவ
பரபக்த்யாதி அவஸ்த்ய த்ரயமும்
தளமாக பிரபந்த த்ரயமும் அவதரிக்கையாலே
அர்த்த க்ரமம் பார்த்தால் ஏக பிரபந்தமாய்த் தலைக் கட்டக் கடவது –

பூர்வ உத்தர மீமாம்சைகளுக்கு கர்த்ரு பேதம் –ஜைமினி வியாசர் –உண்டாய் இருக்கச் செய்தே
வேத ஐக்கிய பிரபந்த வியாக்கியான ரூபம் ஆகையால் பிரபந்த ஐக்கியம் கொள்ளுகிறாப் போலேவும்
பாணினி வரருசி பதஞ்சலி மூவரும் கூடி
ஷூத்ர வ்ருத்தி பாஷ்யங்களும் ஒரே சாஸ்திரமாகக் கொள்ளுமா போலேயும் –
இங்கும் பிரபந்த ஐக்கியம் கொள்ளத் தட்டில்லை –

———————————————————————

விசித்திர கார்யமான ஜகத்துக்கு காரணமாம் போது —
விசித்திர ஞான சக்தி உக்தனாய் –
சங்க சக்ராதி திவ்யாயுத தரனான ஸர்வேஸ்வரனே காரணம் ஆக வேணும் என்னும் அநு மானத்தாலே-
ஜகத் காரண வஸ்துவை நிர்ணயியா நின்று கொண்டு
சர்வ சேஷியான சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாக
வாசிக கைங்கர்யம் செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

பதவுரை

வையம் தகளி ஆ–பூமி அகலாகவும்
வார் கடலே நெய் ஆக–அந்தப் பூமியைச் சுற்றி யிருக்கிற கடலே நெய்யாகவும்.
வெய்ய கதிரோன் விளக்கு ஆக–உஷ்ண கிரணனான ஸூர்யன் விளக்காகவும்,
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே–செஞ்சுடர்ச் சக்கரைக் கையனான எம்பெருமானது திருவடிகளில்.
சொல் மாலை–இப் பாமாலை யாகிற பூ மாலையை
சூட்டினேன்–சாத்தினேன்;
(ஏதுக்காக வென்னில்;)
இடர் ஆழி நீங்குக என்று–(பகவத் கைங்கரியத்திற்கு இடையூறாகவுள்ள) துன்பக் கடல் நீங்குகைக்காக.

தகளி – என்றும் –
விளக்கு -என்றும் –
நெய்-என்றும் வர்ணிக்கிற படி எங்கனே என்னில் –
ஜகத்தானது –ச அவயத்வாத்-கார்யம் என்னக் கடவது –

கார்யமாவது கர்த்ருமத்தாகக் கடவது –
அந்த கர்த்தா சங்க சக்ர கதாதரன் என்கிறது –

சாஸ்திர யோநித்வாத்-என்று
ஆநுமாநிகரை சாஸ்திர காரர் தூஷிக்கச் செய்தே –
இங்கு ஆநுமாநிகமாக கொள்ளும் படி எங்கனே -என்னில்

(ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச )வேத சாஸ்த்ரா அவிரோதி நா -யஸ் தர்க்கேண அநு சந்தேத்தே ச தர்மம் வேத நேதர -என்று
வேத சாஸ்த்ரங்களோடு விருத்தமான தர்க்கம்(அனுமானம்) நிஷேதிக்கப் படுகிறது –
அவிருத்தமானது ஸ்வீகரிக்கப் படும் என்று சொல்லுகையாலே
அது தர்க்கமாகக் கொள்ளுகிறது –
நியாயா அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ்ய அர்த்த நிஸ் சாய கத்வாத்-(ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி )என்கிறபடியே –

வையம் தகளியா —
ச அவயவுமாய் -காரியமும் ஆகையால் -வையம் தகளி-என்கிறது –

வார் கடலே நெய்யாக-
1-வார் கடல்-சூழ்ந்த கடல்-
2-பூரணமான கடல் என்னவுமாம் –

நதியினாலே ஜலம் புகுந்தது என்று பூர்ணமாகாது இருக்கையாலும் –
இல்லை என்று குறையாது இருக்கையாலும் -பூமிக்கு உயர்ந்து இருக்கச் செய்தே
பூமியை அழிக்க மாட்டாமையாலும் –
கார்யம் -என்று தோற்றுகையாலே -நெய்யாகக் கொள்ளுகிறது –

வெய்ய கதிரோன் விளக்காக –
முப்பது நாழிகையில் ஒரு நாழிகை குறையவும் ஏறவும் நிற்கப் போகாமையாலே-
பீ ஷோ தேதி ஸூர்ய -என்று
ஈஸ்வர கார்ய பூதன் என்று தோற்றுகையாலே விளக்கு -என்று சொல்லிற்று –

தன்னையும் காட்டி –
ஈஸ்வரனையும் பிரகாசிப்பிக்கையாலே –
வெய்ய கதிரோன் என்று விளக்கினுடைய ஸ்தானத்தில் சொல்லுகையாலே –
இப்படி சகலத்துக்கும் அவன் சேஷி -சகலமும் அவனுக்கு கார்யதயா சேஷம் என்று அறிந்தால்
செய்ய அங்குத்தைக்கு அசாதாரண பரிசர்யை பண்ணும் படி சொல்கிறது மேல்

செய்ய சுடர் ஆழியான் –
செய்ய சுடர் என்றது ஸ்யாமமான திருமேனிக்கு பகைத் தொடையாய் இருக்கை –

இத்தால் –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம-என்கிற பக்ஷத்தைத் தவிர்க்கிறது –
இதர ஆயுதங்களை யுடைய தேவதாந்த்ரங்களையும் தவிர்க்கிறது

அடிக்கே -என்று
விக்ரஹ வத்தையைச் சொல்லுகிறது –

அடி என்றதால்
தம்முடைய சேஷத்வம் சொல்லுகிறது

அடிக்கே சூட்டினேன் சொன் மாலை–
பரிமளம் மாறாத மாலையைச் சூட்டினேன் –
சொல் தொடை -என்னுமா போலே

இடர் ஆழி நீங்குகவே யென்று –
இடர்க் கடலானது வற்ற வேணும் என்று -தாப த்ரயத்தாலே தப்தரானவர்கள் இதைக் கற்று
தம் வழியே போந்து இடர்க் கடலை பிழைப்பார்கள் என்று –
அன்றிக்கே
அவனைப் பேசப் பெறாத தம்முடைய இடர் போக என்றுமாம் –

மற்றை ஆழ்வார்களில் இவர்கள் ஞான பிரதாநராய் –
பர தசையோடு –
உகந்து அருளின நிலங்களோடு வாசி அற கடல் கோத்தால் போலே
இவர்களுடைய பக்தி எங்கும் ஓக்க வியாபித்து இருந்ததே யாகிலும் –
கிண்ணகத்தில் ஆறு எங்கும் ஓக்க பரந்து வாரா நிற்க
நீருக்கு ஓர் இடத்திலே நோக்கமாப் போலே -திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் -திருமலையிலும் ஊன்றி இருக்கும் –

இவர்கள் பேயரே எனக்கு யாவரும் -என்னுமா போலே
சம்சாரிகளோடு பொருந்தாமையாலும் –
ஸ்தாவரங்களுக்கு விபரீத ஞானம் இல்லாமையாலும் அவற்றோடு பொருந்தி காடுகளில் வர்த்திப்பார்கள் –
யத்ர சாயங்க்ருஹராய் அஸ்தமித்த இடத்தே உறங்கி ஒருவரை ஒருவர் அறியாமல் திரியா நிற்பார்கள் –

இவர்களைக் கூட்டி இவர்கள் தன்னை அனுபவித்து
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு –வழிந்த சொல்லாலே
தானும் ஜகத்தும் வாழ வேணும் என்னா நின்றான் எம்பெருமான் (கரும்பு ரசம் -மூன்று திருவந்தாதிகள் தேசிகன் )

யாதிருச்சிகமாக ஒரு இடை கழியிலே பெரும் காற்றும் மழையும் கண்டு புக்கு ஒருவர் கிடக்க மற்று ஒருவர்
ஒருவர் கிடக்கிற இடம் இருவருக்கு இருக்கலாம் -என்றார் –

மற்றையவர் -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கலாம் -என்றார்

இவர்களை எம்பெருமானும் பிராட்டியும் புகுந்து நெருக்குகிறார்கள் –

வாசல் கடை கழியா யுட் புகா –
இவர்கள் சம்பந்தம் இல்லாத புறம்பும் உள்ளும் காட்டுத் தீயோடு ஒக்கும்
நம்மை ஒழிய நெருக்கினாரை அறிய ஒரு பிரகாசம் வேணும் என்ன உண்டாக்குகிறார் இவர்களில் ஒருவர் –

பதிம் விஸ்வஸ்ய -என்கிறபடியே ஸ்ரீ யபதியே ஜகத்துக்கு நிர்வாஹகர் என்கிறார் ஒருவர் –
விஷயத்திலே ஈடுபட்டு பக்தி ரூபமான விளக்கு ஏற்றினார் ஒருவர் —
அது உடையோருக்கு அவன் காட்டக் காணும் வடிவை சாஷாத் கரித்தார் ஒருவர்

ஞான பக்தி சாஷாத் காரங்கள் மூன்றும் அடைவே ஒருவருக்கு பிறந்தானாலோ என்னில் -ஒண்ணாது
வ்யாகரணத்துக்கு மூன்று கர்த்தாக்கள் யுண்டானால் போலே மூவரும் கூடி இவ்வர்த்தத்தை நிலையிட்டார்கள்
அநுமான முகத்தாலே இழிகை தரிசனத்துக்கு விருத்தம் அன்றோ என்னில்
வேத சாஸ்திர விருத்தமான அநு மானம் இங்கே தவிருகிறது-
ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
சாஸ்திரத்தோடே சேரும் அநு மானம் இறே இது

ச அவயத்வாத் கார்யம் -கார்யம் விசித்திரம் ஆகையால் கர்த்தாவும் ஆச்சர்ய சக்தி உக்தனாக வேணும் –

வையம் தகளியா -பூமி கடினை யாகையாலே தகளி யாக்கிற்று
வார் கடலே நெய்யாக-திரவ த்ரவ்யமாகையாலே நெய்யாகக் கொண்டது
வெய்ய கதிரோன் விளக்காக -தேஜோ பதார்த்தம் ஆகையால் விளக்காகக் கொண்டது –
இம் மூன்றும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம்

வையம் தகளியா-
பெரிய வெள்ளத்திலே ஒரு கழல் மிதக்குமா போலே பூமி ஜலத்திலே நிற்கும் போது இதுக்கு ஓர் அடி வேண்டாவோ

வார் கடலே நெய்யாக-
பூமியை அபி பவியாதே நிற்கும் போது ஓர் அடி வேண்டாவோ –

வெய்ய கதிரோன் விளக்காக —
முப்பதில் ஓன்று ஏறுதல் குறைதல் செய்யாத போதே -பீ ஷோ தேதி ஸூ ர்ய -ஆக வேண்டாவோ
யஸ் சர்வஞ்ஞ  சர்வவித்-இத்யாதிகளில் சொல்லுகிறவனாக வேண்டாவோ –
இதுக்கு ஒரு நாதன் உளன் என்று இருந்தால் அடிமை செய்ய வேண்டும் –

செய்ய-சுடர் ஆழியான் —
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஜகத்தில் ஏக தேச சம்பந்தம் உண்டே என்னில் -அத்தை வ்யாவர்த்திக்கிறது
ரூபாதிகள் இல்லை என்னும் வாதிகளை நிரஸ்தராக்குகிறது

அடிக்கே -பிராட்டி அல்லீரே -முறை தப்பாத படி வேணுமே(அடி விடாத சம்ப்ரதாயம் )

சூட்டினேன் சொன் மாலை–யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசி
பண்டு அல்லாத அழகும் உண்டாக்கினேன்

இடர் ஆழி நீங்குகவே யென்று —
என்னை உளன் ஆக்குகைக்காக சொல்லாது இருக்கை இடர் -இடரார் படுவார் -இத்யாதி வத்

குணத்தை அனுசந்திக்கிலும் பிரகாரி பர்யந்தமாய் இருக்கும் இவர்களுக்கு -(குணத்துடன் நிற்காமல் குணி அளவும் பாட வேண்டுமே )

மாறனேர் நம்பி -எம்பெருமானை மறக்க விரகு இல்லையோ -என்றாராம் –
ஜகத்தின் இடர் தீருகை அர்த்தாத் சித்தம் –

(காடின்யவான் யோ பிபர்த்தி ஜகதே தத சேஷத
ஸப் தாதி ஸம்ஸ்ரயோ வ்யாபீ தஸ்மை பூம் யாத்மநே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-28-
பூமி ஸ்வரூபமாய் இருக்கும் பரம் பொருளுக்கு நமஸ்காரம் என்றபடி
பீஷோதேதி ஸூர்ய–தைத்ரியம் – -பரமபுருஷனின் பயத்தால் ஸூர்யன் உதிக்கிறான் –
இருள் அன்ன மா மேனி எம்மிறையார் -பெரிய திரு -26–ஆழியானை இட்டே நிரூபகம் அவனுக்கு
யதோ வாஸோ நிவர்த்தக்கே என்று வேதம் திரும்பிய விஷயத்தையே பரிபூர்ணமாகப் பேசி முன்பு இல்லாத அழகையும் உண்டாக்கினேன் என்கிறார் –
வேதத்துக்கு அனுரூபமான அனுமானமும் உத்தேச்யம் தானே
ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு 12-106-
ந்யாய அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ் யார்த்த நிஸ் சாய கத்வாத் -ஸ்ரீ பாஷ்ய ஆரம்பம் –
வையம் வார் கடல் கதிரோன் -லக்ஷண முறையால் லீலா விபூதியையும்
ஆழியான் -லக்ஷண முறையால் நித்ய விபூதியையும்
அடிக்கே -லக்ஷண முறையால் திவ்ய மங்கள விக்ரஹம்
காட்டி ஸ்வ மத ஸ்தாபனம் பண்ணி அருள்கிறார்
ஸர்வம் ஸூந்யம் -புத்த மத நிரஸனம்
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம ஏவ ஸத்யம் அந்நியத் ஸர்வம் மித்யா -ஸ்ரீ பாஷ்யம் -மஹா பூர்வ பக்ஷம் -அத்வைத மத நிரஸனம்
சுடர் ஆழியான் -என்பதால் சூல தாரி யாதிகளைப் பரம் பொருளாகச் சொல்லும் சைவ மத நிரஸனமும் செய்து அருளினார் ஆயிற்று – )

————————————————————

(பூ நிலாய ஐந்துமாய் போல் )காடின்யவான் யோ பிபர்த்தி-ஜெகதே தத சேஷத -சப் தாதி ஸம்ஸரயோ வ்யாபீ தஸ்மை
பூம்யாத்மனே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-28–என்கிறபடியே(பூமி ஸ்வரூபமான ப்ரஹ்மத்தை ஆஸ்ரயிப்போம் )
பகவத் சங்கல்பாயத்தமான காடின்யத்தை யுடைத்தான பிருத்வியானது —
மேல் நெய்யும் திரியுமாக ரூபிக்கப் படுகிற வஸ்துக்களுக்கு ஆதாரமான தகளியாகவும் –

அந்த பிருத்வியை சுற்றும் சூழ்ந்து -த்ரவ்ய ஸ்வபாவமாய்
தேன ச க்ருத சீமா நோ ஜலாசயா -என்கிறபடியே
பகவத் ஆஜ்ஜையாலே கரையை அதிக்ரமியாமல் அதுக்குள்ளே அடங்கிக் கிடக்கிற
கடலின் நீரான அம்சமானது -மேல் யேற்றப் போகிற விளக்கை உத்தர உத்தர ஒளி வீட்டுக் கிளரப் பண்ணும் நெய்யாகவும் –

கிரண முகேன கிரசிக்கப் பட்ட ஜலத்தாலே அபிவ்ருத்தமாய் -பிரதாப உத்தரமான கிரணங்களை யுடையனாய் –
பீ ஷோ தேதி ஸூ ர்ய-என்கிறபடியே
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு நடுங்கி வட்டம் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாகத் திரியக் கடவ
ஆதித்யன் அர்த்த பிரகாசகமான விளக்காகவும்

இருளன்ன மா மேனிக்கு எம் இறையோர் -பெரிய திரு -26-
விளக்கு ஏற்றினால் போலே பகைத் தொடையாக சிவந்த ஒளியை யுடைய
திரு வாழி யாழ்வானை நிரூபகமாக யுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறாத
என்னுடைய துக்க சாரமானது விட்டு நீங்கும் படியாக –
தத் குண சேஷ்டிதங்களை உள்ளீடாக வைத்துத் தொடுத்த
நிரதிசய போக்யமான சப்த சந்தர்ப்பங்களை அவற்றுக்கு அலங்காரமாம் படி சாதரமாக சமர்ப்பித்தேன் –

இவ் விஷயத்தை அறியப் பெறாமல் அஸத் கல்பராய் நோவு படுகிற சம்சாரிகளுக்கு பர வஸ்து வாஸ்தவ ப்ரகாசகமான
இப் பிரபந்த அப்யாஸ முகத்தாலே-அனந்த கிலேச பாஜகமான சம்சார சாகரம் வற்ற வேணும்
என்று சொன் மாலை சூட்டினேன் -என்றுமாம் –

இப்படி விசித்திர பிரபஞ்ச நிர்மாண அநு குணமான ஞான சக்த்யாதி குண வைச்சித்ராதி யுக்தனான-சங்க சக்ர கதா திவ்யாயுத தரனான -ஸர்வேஸ்வரனே
ஜகத் காரணம் என்னும் அனுமானத்தாலே காரண வஸ்துவை நிர்ணயித்தார் யாய்த்து –

ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
வேத சாஸ்திரத்தோடே விருத்தமான தர்க்கத்தை அழித்தது-

அவிருத்தமான தர்க்கத்தை ஸ்வீகரிக்கையாலே இங்கும் அப்படி விரோத பிரசங்கம் சொல்ல இடம் இல்லை –
ந்யாயான் அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ் யார்த்த நிஸ் சாய கத்வாத் -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –

பிருதிவ்யாதி களாலே லீலா விபூதியை உப லஷிக்கிறது –
சுடர் ஆழி -என்று நித்ய விபூதிக்கு உப லக்ஷணம்
அடிக்கே என்று திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம் –

இப்படி ஸ்வ பக்ஷத்தை சிஷிக்கவே
ஸூ ந்யமே தத்வம் -என்றும் –
நிர் விசேஷ வஸ்துவே தத்வம் என்றும் –
விசேஷணாந்தர விசிஷ்டமே தத்வம் என்று சொல்லப் படுகிற பர பக்ஷங்கள் அர்த்தாத் ப்ரதிஷிப்தங்கள் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –