தம்முடைய திரு உள்ளத்தை (என்னுள்ளம்-என்னுள்ளமே )சம்போதித்து -நீர் விஷய காலுஷ்யத்தைத் தவிர்-அவன் ப்ரஸன்னனாம் -என்கிறார் –
(திருநாமம் எண் -கல்யாண குணங்களை அநுஸந்தி -திரு நாமங்களை எண்ணுவது -இரண்டும்)
இனிதாக திரு நாமத்தை வாயாலே சொல்லவே ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னை தந்து அருளும் என்கிறார் –
எளிதில் இரண்டடியும் காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான் திருநாமம் எண்——-51–
பதவுரை
என் உள்ளம்-எனது நெஞ்சே!(நீ)
தெளிய–கலக்கம் தீர்ந்து தெளிவு பெற்றால்
(அந்த எம்பெருமானும்)
செவ்வே தெளிந்தொழியும்–மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
(ஆகையினால்)
களியில்–அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை–அடி பணியாதிருந்த ஹிரண்யாசுரனோடு
பொரல் உற்று–போர் செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான்–நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம்–திரு நாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு–(அவனுடைய) உபய பாதங்களையும் சுலபமாகக் காணும் பொருட்டு
எண்–சிந்திப்பாயாக.
களியில்–கர்வத்தினால்-
எளிதில் இரண்டடியும் காண்பதற்கு என்னுள்ளம்-எளிது இன்றிக்கே இருந்துள்ள இரண்டு திருவடிகளையும் காண்பதற்கு –
எளிதாக என்னவுமாம் –
என் நெஞ்சே -என்று சம்போதிக்கிறார் –
தெளிய–விஷய காலுஷ்யத்தை தவிர – செவ்வே தெளிந்து ஒழியும் –அவன் நேரே ப்ரஸன்னனாம்(தெள்ளிய சிங்கப் பெருமாள் அன்றோ )
களியில் பொருந்தாவனைப் பொரலுற்று -செருக்காலே பொருந்தேன் என்று இருந்த ஹிரண்யனை —
அரியா-யிருந்தான் திருநாமம் எண்–சிறு பிள்ளைக்காக உதவி ஹிரண்யனை முடித்தவனுடைய திரு நாமத்தை எண்ணு –
உள்ளமே நீ தெளியில் அவன் செவ்வே நம் திறத்து தெளிந்து ஒழியும் -பிரமாணம் என் -பிரஹலாதன் தெளிய
அவன் விஷயத்துத் தெளிந்து நின்று கார்யம் பார்த்த படி கண்டிலையோ–
பொரலுற்று யிருந்தான் –
பொருது சீற்றத்துக்கு இறை பொறாமல் சோம்பி இருந்தான் -வாக்காலே எண்ண ஒட்டாதவன் -பட்டபாடு அறிவுதி இறே-
(திரு நாமம் சொல்லு
திரு நாமம் சொல்லும் குணங்களை நினை
சொல்லாதவன் பட்ட பாடு அறியாயோ -மூன்று அர்த்தங்கள்)
—————————————————————–
(இனிதாக திரு நாமத்தை வாயாலே சொல்லவே ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னை தந்து அருளும் என்கிறார் -)
எனக்கு விதேயமான நெஞ்சே -காண வேணும் என்னும் அபி சந்தியை யுடையார்க்கு அதி ஸூலபமான
திரு வடிகள் இரண்டையும் கண்டு அனுபவிக்கைக்கு நீ
அழகிதாக விஷய காலுஷ்யம் அற்று நிர்மலமாக -அவன் -மேல் எழ அன்றிக்கே -திரு உள்ளத்தோடு செவ்விதாக நான்
முன்பு பண்ணின ப்ராதிகூல்ய பரம்பரைகளிலே அதி ப்ரசன்னனாய் விடும் –
(அவன் ஆழமாக நினைக்கிறார் என்றும் -நாமும் அறிந்தே செய்த பிழைகள் என்றுமாம்
திரு உள்ளம் என்பதால் அவனதே-வாத்சல்யம் -குற்றங்களையே குணமாகக் கொள்ளும் ஸ்வ பாவம் அன்றோ –
நாம் முன்பு செய்த பிழைகளை சந்தோஷித்து -குழந்தை பண்ணிய செயல்களைத் தாய் கண்டு மகிழுமா போல் செவ்விதாக அதி ப்ரசன்னனாகும்)
ந நமேயம் -என்று தன்னைக் கிட்டோம் என்று
இருந்த ஹிரண்யனை பொருது முடிக்கையில் ஒருப்பட்டு-அவன் வரத்துக்கு உள்ளடங்காத நரசிம்ஹ வேஷத்தை
யுடையனாய்க் கொண்டு பிரஹ்லாத விரோதியைக் கை தொட்டு அழித்த ஆஹ்லாதத்தாலே ஸூ பிரதிஷ்டனாய் இருந்த
சர்வேஸ்வரனுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ரஸ்யத்தை யாலே
நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி அநுஸந்தி —
பின்னை நம் கையிலும் பிறர் கையிலும் விட்டுக் கொடான்-என்று கருத்து –
எளிதில் -எளிதில்லாத -ஸூ லபம் இல்லாத இரண்டு திருவடிகள் என்னுதல் –
என்னுள்ளம் -உள்ளமே என்று சம்புத்தி —
—————————————————————————————————————-
கீழ் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினவனுடைய திரு நாமத்தை எண்ணு
அவன் ப்ரசன்னனாம் என்றது -மற்றும் துர்மானிகளான தேவாதிகளும் அவனை
ஆஸ்ரயிக்கத் தக்க கரணங்களும் அதிகாரம் பெற்றது -என்கிறார் –
நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள்
அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது
நமக்குப் பின்னை சொல்ல வேணுமோ -என்கிறார் –
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–
பதவுரை
எண்மர்–அஷ்ட வஸுக்களும்
பதினொருவர்–ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர்–த்வாதச ஆதித்யர்களும்
ஓர் இருவர்–இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்-முப்பத்து முக் கோடி தேவர்களுக்கு பிரதி நிதிகள் )
வைகலும்–நாள் தோறும்
வண்ணம் மலர் ஏந்தி–நாநா வர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு
நண்ணி–(எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால்–ஒப்பற்ற புருஷ ஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது–இடைவிடாமல்
எப்போதும்–எல்லா வேளைகளிலும்
பரவி–ஸ்துதி செய்து
திருமாலை சென்று–திருமகள் கொழுநனைக் கிட்டி
கை தொழுவர்–வணங்குவர்கள்
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்–அஷ்ட வஸூக்கள்–ஏகாதச ருத்ரர்கள் –துவாதச ஆதித்யர்கள் – அஸ்வினிகள் —
வண்ண மலரேந்தி -நாநா வர்ணமான புஷ்பங்களைக் கொண்டு
வைகலும் நண்ணி-ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்–புருஷ ஸூ க்தத்தால்–விச்சேதம் இன்றிக்கே
திரு மாலைக் கை தொழுவர் சென்று–ஸ்ரீ யபதியைச் சென்று ஆஸ்ரயிப்பார்கள் –
தத் உபரியபி பாதராயணஸ் சம்பவாத் -(ப்ரஹ்ம ஸூத்ரம் )-தேவர்களுக்கும் பவிஷ்யத்தில் பெற இருந்துள்ள அதிகார அர்த்தமாக
ஆதித்ய அந்தர்யாமியாய் இருந்துள்ள பரமாத்ம உபாசனம் விதியா நின்றது இறே –
(சம்பவாத்-அர்த்தித்வ சாமர்த்தியம் நம்மைப் போல் அவர்களுக்கும் உண்டே -நித்யருக்கு இல்லையே -அர்த்திக்கை வேண்டாமே அவர்களுக்கு -தேவதை ஆவதற்கு முன்பு -மோக்ஷம் அடைய பவிஷ்ய )
வியாபார யோக்யரான பிரயோஜனாந்தர பரர் ஒரு மாலையால் பரவி ஓவுகை அன்றிக்கே
எல்லாக் காலமும் -எப்போதும் என்றுமாம் –
திருமால் –வேண்டுவது எல்லாம் பெறுகைக்கு அடி —
(முப்பத்து மூன்று தேவர்களை சொன்னது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் உப லக்ஷணம்
ருத்ரேபி வஸூபி ஆதித்யை அஸ்விநோபா -ரிக்வேதம் 10 மண்டலம் 125 ஸூக்தம்
வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம்
ஹ்ரீஷ் சதே லஷ்மீஸ் ச பத்ன்யவ் -புருஷ ஸூக்த மந்த்ரம் சொல்லி
ஈஸ்வரோஹம் என்ற துரபிமானத்தை விட்டு ஸ்ரீயப்பதியை சரண் புகுவார்கள்
தத் உபர்யபி பாதாரயண சம்பவாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-25-
மோக்ஷத்தில் செய்ய யோக்கியதையும் – விருப்பமும்- அர்த்தித்வமும் -மோக்ஷ சாதன அனுஷ்டான சாமர்த்தியமும் இவர்களுக்கும் உண்டே -)
————————————————————–
(நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள்
அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது
நமக்குத் பின்னை சொல்ல வேணுமோ -என்கிறார் -)
அஷ்ட வஸூக்களும் ஏகாதச ருத்ரர்களும் துவாதச ஆதித்யர்களும் அத்விதீயரான அஸ்வினிகள் இருவரும் –
நாநா வர்ணமான புஷ்பங்களை தரித்துக் கொண்டு -சர்வ காலங்களிலும் வந்து கிட்டி அத்விதீயமான
ஸ்ரீ புருஷ ஸூக்தாதி சந்தர்ப்பங்களைக் கொண்டு அடைவு கெடப் புகழ்ந்து எல்லாக் காலத்திலும் உச்சி வீடு விடாதே
அபிமதங்களைக் கடிப்பிக்கும் கடகையான பெரிய பிராட்டியாரோடே கூடி இருக்கிற
சர்வேஸ்வரனை துர்மானத்தை துறந்து சென்று கிட்டி ஆஸ்ரயிப்பார்கள் –
—————————————————————————————————————————–
(நித்யம் மந்த்ர புஷ்ப்பம் சமர்ப்பிக்கும் பொழுது அனுசந்திக்கிறோம்-யுகம் தோறும் –
சேஷி உகப்புக்கு கைங்கர்யம்
மிதுன சேஷி -உபாயத்துக்கும் கைங்கர்யத்துக்கும்
பவாம்ஸூ ஸஹ வைதேஹ்யா –அஹம் சர்வம் கரிஷ்யாமி-அநந்தம் பிரதமம் ரூபம் –கலவ் ராமானுஜர் -)
கீழே எல்லா நேர்த்தியும் நேர்ந்து -தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று-
இதில் தங்களை எல்லாம் அழிய அங்குத்தைக்கு உறுப்பாமவர்களைச் சொல்லுகிறது –
(ஆதி சேஷன் அனைவருக்கும் உப லக்ஷணம் -தாச ஸஹ ஆசனம் வேதாதாத்மா விஹஹேஸ்வரர் உண்டே )
ஸ்வ பிரயோஜனத்துக்கு மடி ஏற்கும் துர்மானிகள் ஆஸ்ரயிக்கும் படியை அனுசந்தித்த உள் வெதுப்பு அடங்கும் படி-
அநந்ய பிரயோஜனராய் -அபிமான கந்த ரஹிதராய் -தத் தத் அவஸ்த்தை உசிதமான வடிவு எடுத்துக் கொண்டு –
அடிமை செய்யக் கடவ நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான திருவனந்த ஆழ்வான் அங்குத்தைக்கு அடிமை செய்யும் படியை அனுசந்திக்கிறார் –
சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம் திருமாற் கரவு ——53-
பதவுரை
திரு மாற்கு–பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு–திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம்–(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால்–எழுந்தருளியிருந்தால்
(அப்போது)-
சிங்காசனம் ஆம்–ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால்–நின்று கொண்டிருந்தால்
(அப்போது)
மரவடி ஆம்–பாதுகையாவன்;
நீள் கடலுள்–பாம்பிணை யுடலிலே
(சயனிக்கும் போது)
என்றும்–எப்போதும்
புணை ஆம்–திருப் பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம்–மங்கள தீபமாவன்;
பூம்பட்டு ஆம்–அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம்–தழுவிக் கொள்வதற்கு உரிய அணையுமாவன்.
சென்றால் குடையாம்–கைங்கர்யம் ஸ்வ புத்த்ய அதீனம் அன்று என்கிறது –நான் குடையாய் நின்றேன்
நீ இங்கே வா -என்கை யன்றிக்கே-அவன் உலாவப் புக்கால் குடை அபேக்ஷிதம் ஆன போது குடையாகை –(அருளப்பாடு இட்டு கைங்கர்யம் இதனாலேயே )
யிருந்தால் சிங்காசனமாம்–இருக்கை திரு உள்ளமான போது திவ்ய சிம்ஹாசனமாம்
நின்றால் மரவடியாம் –நிற்கை திரு உள்ளமான போது மரவடியாம்
நீள் கடலுள் என்றும் புணையாம்-கண் வளர அபேக்ஷிதமான போது -கடலிலே எல்லா காலத்திலும் படுக்கையும் –
மணி விளக்காம் -ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்ற போது மங்கள தீபமாய் இருக்கும் -(அவனுக்கு கண்ணே வேண்டாமே -ஞான ரூபமான சங்கல்பத்தாலே காண்பார் -ஆகவே இப்படி வியாக்யானம் )
பூம் பட்டாம் -திருப் பரிவட்டம் அபேக்ஷிதமான போது அழகிய பட்டாம்(பவ்வ நீர் ஆடை கடல் ஆடை எப்போதும் உண்டே )
புல்கு-மணையாம் –தழுவு அணை அபேக்ஷிதமான போது தழு வணையாம் –
திருமாற் கரவு —–ஸ்ரீ யபதிக்கு-கட்டிப் பொன் போலே எல்லா வடிவையும் ஆக்கிக் கொள்ளலாம் படி இருக்கிற படி -(ஆம் -ஆவார் என்றபடி-ஆபாஸ -ஸுபரி -50 வடிவு கொண்டால் போல் கைங்கர்யத்துக்கு )
சென்றால் -குடையானேன் செல் -என்று சேஷியை நியமியாதே- இருந்தால் -அபேக்ஷை உள்ள போது –
நின்றால் -நின்ற பின்பு – புணை–தெப்பம் – மணி விளக்கு -மங்கள தீபம் -பூம் பட்டு -பும்ஸத்வா வஹமான பரிவட்டம் –
புல்கும் அணை –பிராட்டிமார் ஊடினால் விசனம் மறப்பிக்க வற்றாகை–ஊடலுக்கு ஹேது ஆகவுமாம்( அணைய புல்க அதுவே ஊடலுக்கு ஹேதுவாகலாமே )–
திருமாற்கு –இளைய பெருமாளுக்கு அந்தரங்க சேவை (பாவம்ஸூ ஸஹ வைதேஹ்யாம் )-
அரவு –தான் ஒரு சேதனன் என்று கூச வேண்டாத படி
தன்னை அமைத்த படி -ராஜ நிவேசனங்களிலே கூனர் குறளரைப் போலே —
தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப் பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.
ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–
நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.
நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —
——————————————————————-
(ஸ்வ பிரயோஜனத்துக்கு மடி ஏற்கும் துர்மானிகள் ஆஸ்ரயிக்கும் படியை அனுசந்தித்த உள் வெதுப்பு அடங்கும் படி-
அநந்ய பிரயோஜனராய் -அபிமான கந்த ரஹிதராய் -தத் தத் அவஸ்த்தை உசிதமான வடிவு எடுத்துக் கொண்டு –
அடிமை செய்யக் கடவ நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான திருவனந்த ஆழ்வான் அங்குத்தைக்கு அடிமை செய்யும் படியை அனுசந்திக்கிறார் – )
பெரிய பிராட்டியாரோடே நித்ய சம்யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு -அவனும் அவளும் கூடக் கண்
அற்றுத் துகைத்துப் பரிமாறுகைக்கு யோக்யமான வடிவையுடைய திருவனந்த ஆழ்வான் –
உகப்புக்கு போக்குவீடாக அவன் உலாவி அருளப் புக்கால் மழை வெய்யில் படாத படி குடையாம்-
தன் இச்சையால் எழுந்து அருளி இருந்தால் திவ்ய சிம்ஹாசனமாம் -ஸ்வ இச்சையால் எழுந்து அருளி நின்றால் திருவடி நிலைகளாம்-
பரப்பை யுடைத்தான கடலிலே கண் வளர்ந்து அருளும் போதைக்கு -சர்வ காலத்திலும் திருப் பள்ளி மெத்தையாம்-
ஏதேனும் ஒன்றை விளக்கு இட்டுக் காண அபேக்ஷிதமான போது மங்கள தீபமாம் –
சாத்தி அருளத் திருப் பரியட்டம் அபேக்ஷிதமான சமயத்திலே பும்ஸத்வா வஹமான அழகிய திரு திருப் பரியட்டமாம் –
சாய்ந்து அருளின போதைக்குப் பிராட்டிமார் -சீறு பாறு -என்னும் படி தழுவணை யாம் —
—————————————————————————————————————-
(பத்து சேஷ்டிதங்கள் -முதலில் உள்ள பெயர் சொற்களுக்கு -பின்னால் வரும் வினைச் சொற்கள் சேர்த்து
நாக பர்யங்கம் கீழே
ஆகதோ மதுராம் புரிம்
எழுந்து போனால் செய்யும் சேஷ்டிதங்கள் இதில்
1-அரவம் -விட்டு
2-அடல் வேழம் -இறுத்து
3-ஆன் -மேய்த்து
4-குருந்தம் -ஒசித்து
5-புள் வாய்-கீண்டு
6-குரவை கோத்து
7-குட -ஆடி
8-முலை -உண்டு
9-மற் -அட்டு
10-குன்றம் -எடுத்த-ஸ்ரீ மத் பாகவத தசம கந்த விஷயங்களை எல்லாம் சுருக்கி நமக்காகவே அருளிச் செய்கிறார் )
ஆஸ்ரிதற்கு சில விரோதம் வந்து போக்க வேண்டில் -படுக்கையும் பொருந்தாமல் வந்து நிற்கும் என்கிறது -இப்பாட்டு நிரல் நிரை –
இப்படி தன் நினைவுக்கு ஈடாக அடிமை செய்யும் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை விட்டு
இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் –
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய்
குரவை குட முலை மற் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–
பதவுரை
செம் கண் அவன்–செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி–மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம்–காளிய நாகத்தை
விட்டு–விட்டடித்தும்
அடல் வேழம்–பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து–(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன்–பசுக்களை
மேய்த்து–(வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம்–அஸுரா வேகமுடைய குருந்த மரத்தை
ஒசித்து–ஒடித்துப் பொகட்டும்
புள் வாய்–பகாசுரனுடைய வாயை
கீண்டு–கிழித்தும்
குரவை–ராஸ க்ரீடையை
கோத்து–(இடைப் பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம்–குடங்களைக் கொண்டு
ஆடி–கூத்தாடியும்
முலை–பூதனையின் முலையை
உண்டு–(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல்–(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு–கொன்றும்
குன்றம்–கோவர்த்தன மலையை
எடுத்த–(குடையாக) எடுத்துப் பிடித்த இச் செயல்கள்
(என்ன ஆச்சரியம்!..)
காளியனை விட்டு -குவலயா பீடத்தின் கொம்பை முறித்து -ஆனை மேய்த்து -குருந்தம் ஓசித்து–புள் வாய் கீண்டு –
பகாஸூரனைக் கொன்று -குரவை கோத்து–குடமாடி –பேய் முலை யுண்டு –மல்லரை அட்டு –குன்று எடுத்த சர்வேஸ்வரன் –
எடுத்த இச் செயல்கள் எம்பெருமான் சேஷ விஷயத்தில் குறைந்து பரிமாறும் படி அவன் ஸ்வரூபம் —
( ஆதி சேஷன் நித்யர் இடம் பரிமாறும் அவன் சேஷ-நம் விஷயத்தில் -தன்னைக் குறைத்து -கைங்கர்யம் கொள்கிறான் என்றபடி )
செங்கண் அவன் ——-விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு-அட்டு எடுத்தவை-
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய்- குரவை குட முலை மற் குன்றம்-கரவின்றி-என்று அந்வயம் –
(இங்கு உள்ளார் திரு அனந்தாழ்வானைப் போல் அடிமை செய்வதற்காகவே அவன் கண்ணனாய் திரு அவதரித்து
தாழ நின்று பரிமாறினால் என்கிறார்)
——————————————————————————–
(இப்படி தன் நினைவுக்கு ஈடாக அடிமை செய்யும் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை விட்டு
இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் -)
(தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் அவனை )புண்டரீகாக்ஷனான அந்த சர்வேஸ்வரன் மறைக்கை இன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாம் படி
காளியன் ஆகிற சர்ப்பத்தை விட்டடித்து
யுத்துன்முகமான குவலயா பீடத்தை முறித்து விழ விட்டு -பசுக்களை குறைவற மேய்த்து – குருந்தத்தை இணுங்கிப் பொகட்டு
பகாஸூரனுடைய வாயைக் கிழித்து –இடைப் பெண்களோடு திருக் குரவை கோத்து –ஐஸ்வர்ய செருக்குக்குப் போக்கு விட்டுக் குடமெடுத்தாடி
நலிய வந்த பூதனை முலையை பிராண ஸஹிதமாக உண்டு –கம்சனை ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை முடித்து –
வர்ஷாபத்தை பரிஹரிக்கைக்காக கோவர்த்தன பர்வதத்தை எடுத்தது
முதலான இச் செயல்களானவை-இருந்த படி என் என்று வித்தராய் அனுபவிக்கிறார் –
இது நிரல் நிரை என்று தமிழர் சொல்லும் லக்ஷணம் –
——————————————————————————————————————
இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வரூபனான பின்பு அவனுடைய தமரை யம படன் ஆராய்வது எங்கனே என்கிறார் –
(அஜாமிள உபாக்யானம் உண்டே -பரிகரம் மது ஸூதன ப்ரபந்நாம் -அடியார்கள் எனக்கு பிரபுக்கள் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஆட் பட வேண்டாம் -அவர்கள் பெயரைத் தரித்தாலே போதும் )
அவன் இப்படி ஆஸ்ரிதரை கண்ணிலே வெண்ணெய் இட்டு நோக்கி தத் விரோதிகளையும் போக்கும்
ஸ்வபாவனாய் இருக்க ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்க்க வல்லார் -என்கிறார் –
அவன் தமர் எவ் வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட் பட்டார் பேர் ——-55-
பதவுரை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு–இடைத் தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர்–அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால்–யம படர்களாலே
“அவன் தமர் எவ் வினையர் ஆகிலும்–“ அந்த சர்வேஸ்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலை யுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”–எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று–என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால்–(தாங்கள்) விலகிப் போவது தவிர,
ஆராயப் பட்டு அறியார்–ஆராயப் பட்டு இருக்க அறிய மாட்டார்கள்
அவன் தமர் எவ் வினையராகிலும் -அவனுக்கு அனுகூலமான வர்கள் எது தொழிலார் ஆகில் என் -விஹிதத்தை செய்யில் என்
-நிஷித்தத்தை செய்யில் என்
எங்கோன்-அவன் தமரே என்று ஒழிவது அல்லால்–ப்ரபவதி சம்ய மனே மமாபி விஷ்ணு -என்னும் படியே —
நமன் தமரால்-ஆராயப் பட்டு அறியார் கண்டீர்–நமன் தமரால் ஆராயப் படாது ஒழிகிறார்
(1-ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் -கர்ண மூலே காதிலே சொல்லி -ராஜாபத்னி மேல் ஆசை சொல்லித் தடுக்க அந்தரங்கமாகச் சொல்வது போல்
2- என்னை ஆட்சி செய்து நியமிக்கும் விஷ்ணு -தெற்கே யமதர்மராஜன் என்று -ஹரிக்கு வசப்பட்டவன் நான் -என்னை அடக்கி ஆள சமர்த்தன் விஷ்ணுவே
நமன் தமர் ஆராயாமல் இருக்க நாம் பார்க்கலாமா )
அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-இவர்கள் தாங்களோ என்னில் -அன்று -(அதுக்கும் மேலே உள்ள நிலை )
ஒரு பாகவதனுடைய பேரை ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –
பேர் ஆராயில் குவலயா பீடம் தொடக்கமானவை பட்டது படும் -மது ஸூதன ப்ரபந்நான்-
எங்கோன்-அவன் தமரே–என் நாயகனாவான் அடியார் -எவ்வினையராகில் என் -என்று ஒழிவது அல்லால்-
அவர் புண்யம் பண்ணில் என் -பாபம் பண்ணில் என் -அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடுமது ஒழிய
த்யஜ பட தூர தரேண தாந் அபா பான் -(ஸ்ரீ விஷ்ணு ஸ்லோகம் இதுவும் )- அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் —
படுக்கை பாராட்டில் இறே ஆராய்வது -நன்று செய்தார் என்பர் போலும் -என்று பிராட்டிக்கும் அகப்படாத நிலம்
அல்லாத இடத்தே யமனோ ஆராயப் புகுகிறான் -அவனுடைய ஒரு பேரான சம்சாரி (யமனும் இவன் ஆள் தானே )பேரும் தீட்டி வாட்டான் –
(ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவாநாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
அஹம் அமர வரார்ச்சிதேந தாத்ரா சம இதி லோக ஹிதாஹிதே நியுக்த
ஹரி குரு வசகோ அஸ்மி ந ஸ்வ தந்த்ர ப்ரபவதி ஸம்ய மநே மாமாபி விஷ்ணு –3-7-15-
ஹிதம் அளிக்கவும் அஹிதம் போக்கவும் நியமிக்கப்பட்டுள்ளேன் -நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்
கமல நயன வாஸூ தேவ விஷ்ணு தரணிதர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரணம் இதீர யந்தி யே வை த்யஜ பட தூதரேண தான பாபாத் –3-7-33-
(ஒரு பாகவனுடைய பேரை அபாகவதன் தரித்தாலும் அவனுடைய பெயரையும் யமன் சபையில் வாசிக்க மாட்டான் -என்கிறார்)
—————————————————————
(அவன் இப்படி ஆஸ்ரிதரை கண்ணிலே வெண்ணெய் இட்டு நோக்கி தத் விரோதிகளையும் போக்கும்
ஸ்வபாவனாய் இருக்க –ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்க்க வல்லார் -என்கிறார் -)
அந்த சர்வேஸ்வரனுக்கு அனுகூலராய்ப் போரும் ஆஸ்ரிதர் ஆனவர்கள் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண ரூபமான
எந்த தொழிலை யுடையார் ஆனார்கள் ஆகிலும் -எங்களுக்கு ஸ்வாமியான அந்த சர்வேஸ்வரனை
ஆஸ்ரயித்த மஹா புருஷர்கள் இறே என்று அவர்களைக் கொண்டாடி தங்களைக் கொண்டு கடக்கப் போம் அத்தனை ஒழிய
திரு அரவு அணையில் வர்த்திக்கக் கடவனாய் -இடைத் தனத்தில் தனக்கு ஓத்தார் இல்லை என்னும் படி
அதில் பிரதானனான கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –
———————————
பேராயர்க்கு ஆட் படுகையாவது-அவன் விஷயீ கரிக்கப் புக்கால் தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது
இவன் அவனைப் (சம்சாரி சேதனன் பரம சேதனனை )பரிச்சேதித்து அறிகை யாவது என் -என்கிறது –
(அயன் -நா ஜாயதே -கர்ப்பத்தில் பிறவாதவன் என்றும்
அஜ -அகாரத்தில் இருந்து பிறந்தவன் என்றும்)
(பரிஹாஸம் -எதுக்காகவாது திரு நாமம் அடைவு கெடச் சொன்னாலும் தோஷங்களைப் போக்கும்)
அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லி போம் அத்தனை அல்லது சர்வேஸ்வரன்
பிரபாவம் யார்க்கும் பரிச்சேதிக்க அரிது -என்கிறார் –
பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-
பதவுரை
[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]
பேரே–எம் பெம்மானது திரு நாமமாகவே
வர–வரும் படியாக
பிதற்றல் அல்லால்–பிதற்றுவதைத் தவிர
எம் பெம்மானை–[அந்த] எம்பெருமானை
ஆரே–ஆர் தான்
அறிவார்–(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க–அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன்–பிரமனானவன் .
கடி–பரிமளம் மிகுந்த
கமலத்துள்–(அவ்வெம் பெருமானது, நாபி கமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும்–(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக் கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை–அந்த ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
காண்கிலான்–ஸேவிக்கப் பெற்றானில்லை.
பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை-பேராலே அவன் வரும் படி -திரு நாமத்தை சொல்லலாம் -என்னவுமாம்
அன்றிக்கே ஏதெனும் சொல்லப் புக்காலும் திரு நாமம் வாயிலே வரும் படி பிதற்றல் அல்லால் -இதுக்கு ஈடாக சொல்லுகை -என்றுமாம் –
ஆரே யறிவார் அது நிற்க –எம் பெம்மானை-என்னுடைய ஸ்வாமியை யாரே அறிவார் -அவ்விடையாட்டம் நிற்க —
நேரே-கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலம் தன்னை யயன் —–
அறிவார் கிடக்கிடீர் -அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ -சர்வேஸ்வரனுடைய பரிமளத்தை யுடைத்தான
திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநேந பிறந்து அவன் தன்னாலே ஓதுவிக்கப் பட்டு அங்கே இருக்கிற
ப்ரஹ்மா சர்வேஸ்வரனைக் காண்கிறிலன்-அறிகிறிலன்-(கண்ணன் -கண் இடம் முடையவன் சர்வ வியாபி -சர்வேஸ்வரன் )
நம்மால் அறிய ஒண்ணுமோ என்னில் -பேரே வரப் பிதற்றல் -கன்று நின்ற இடத்தே தாய் வருமா போலே வாசிதமாக என்றுமாம் –
எம் பெம்மானை -தமக்கு நேரே காட்டின படி -உள்ளிருந்தும் காண்கிலான்-கடல் கரையிலே குடில் கட்டி கொண்டு
இருக்கும் காட்டில் கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ -அபரிச்சேதயம் என்று அறியில் அறியலாம் –பெரிய கிழாயார் –ப்ரஹ்ம விதாம் வர –(பிரம்மா வித்துக்களில் சிறந்த நான்முகன் பெருமாளைக் கொண்டாடிய இராமாயண ஸ்லோகம் )
(பேரே வர
சாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநம் ஏவ வா
வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷ அநக ஹரம் விது —
பிதற்றல் அல்லால்
அத்யந்த பக்தி யுக் தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை
அஜன் -அகார வாசயனிடம் யுண்டானவன் -ஆத் ஜாயதே இதி அஜ
ந ஜாயதே இத்யஜ -உலோகோரைப் போல் ஸ்த்ரீ புருஷ யோகத்தால் பிறவாதவன்
ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3- ப்ரஹ்ம ஞானிகளில் தலை சிறந்தவன்
கண் -இடம் கன்னம் -இடமுடையவன் -ஸர்வ வ்யாபீ -ஸர்வ நிர்வாஹகன்)
—————————————————————-
(அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லி போம் அத்தனை அல்லது சர்வேஸ்வரன்
பிரபாவம் யார்க்கும் பரிச்சேதிக்க அரிது -என்கிறார் -)
ஏதேனும் ஒன்றைச் சொல்லினும் திரு நாமம் வாயிலே வரும் படி அக்ரமமாகச் சொல்லிக் கூப்பிடும் அத்தனை அல்லது
தன் படிகளை எனக்குத் தானே காட்டித் தந்த என் நாயகனானவனை யார் தான் அறிய வல்லார் –
அவ்விடை யாட்டம் கிடக் கிடீர் –பரிமள பிரசுரமான திரு நாபீ கமலத்தில் அவ்யவதானே பிறந்து
அங்கே நிரந்தர வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் அவன் பக்கலிலே ஓதி இவ்வருகு உள்ளார்க்கும் அறிவு கொடுக்கும் படி
அறிவில் தலை நின்ற சதுர்முகனானவன் -சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரன் திருவடித் தாமரைகளை இவ்வளவு என்று
தர்சிக்கைக்கு சக்தன் அல்லன் –
பேரே வரப் பிதற்றுகை யாவது – அவன் தானே வரும் படி
திரு நாமங்களை அக்ரமாகச் சொல்லும் அத்தனை போக்கி என்றுமாம் –
———————————————————————————————————————-
(அஷ்டாக்ஷரம் விளக்க வந்த முதல் திருவந்தாதி சொல்லி அடைந்த பலன்
யத்ர –வியாதி பஞ்சம் திருட்டு இருக்காதே
முதல் ஆழ்வார் -இவர் தொடங்கி வைக்க
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் கடைசி ஆழ்வார் நிகமித்தார் )
நீர் பகவத் விஷயத்தில் செய்வது என் என்னில் -சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் –
உஜ்ஜீவிப்பார் அவனைப் பற்றி என்னும் இடமும் அறிந்தேன் -என்கிறார் –
ப்ரஹ்மாவுக்கு அறிய ஒண்ணாத விஷயத்தை நீர் அறிந்தபடி எங்கனே -என்ன –திரு நாமம் ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் –
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது ——57-
பதவுரை
அயல் நின்ற–(என்) அருகிலேயே இருந்து கொண்டு (என்னை) இடை விடாமல் ஹிம்ஸித்துக் கொண்டே யிருக்கிற
வல் வினையை–மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன்–பயப்பட்டேன்;
அஞ்சி–(இப்படி) பயப்பட்டு
உய–(இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின்–உன்னுடைய
திரு அடியே–திருவடிகளில் தானே
சேர்வான்–வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற–இன்பம் பொருந்திய(சாஸ்த்ர ரூபமான திரு அஷ்டாக்ஷரம் )
நல் மாலை கொண்டு–சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது–(உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை–திருமந்திரத்தின் பொருளை
கற்றேன்–அப்யஸித்தேன்.
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன்–நான் இட்ட அடியிலே இட்டு வாரா நின்ற மஹா பாபங்களை -அஞ்சினேன் -(பெருமாள் -இளையபெருமாள் -குகன் -குகன் தமர் -ஒரு நாள் முகத்தில் விழித்தார் படும் பாடு-இதுக்கு எதிர்மறையான சம்சார வர்த்தகம் )
அஞ்சி-உய -அவற்றை அஞ்சி உஜ்ஜீவிக்கைக்காக –
நின் திருவடியே சேர்வான் நய நின்ற-நன்மாலை கொண்டு –நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு
நமோ நாரணா வென்னும்-சொன் மாலை கற்றேன் தொழுது —-சொல் தொடை கற்றேன் -(திரு அஷ்டாக்ஷர அர்த்தம் சொல்ல வந்த என்றும் அன்பும் மகிழ்ச்சியும் சேர்த்துத் தொடுத்த முதல் திருவந்தாதி என்றும்)
தொழுது -வணங்கி –சொல் மாலை கற்றேன் -ஆற்றாமையால் நான் ஆகைக்குப் பேசினேன் -(நான் நானாகைக்காக -ஸ்வரூப சித்திக்காக )
அயல் நின்ற -(தள்ளி நின்றால் வியசனம் -)விஸ்லேஷத்தால் வரும் வியசனத்துக்கு அஞ்சி -திருநாமம் சொல்லும் தனையும் கடக்க -சாபலத்தாலே நின்ற –
(மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –பெரிய திருவந்தாதி –59-
நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்
ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்
நமோ நாரணா எனும் சொல் மாலைக் கற்றேன்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை சங்கோச விஸ்தாரம் அறத் தெரிவிக்கும் திருமந்த்ரமான சொல் மாலையைக் கற்றேன் –
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் -திருமந்திரம் சொல்லாமல் பகவானை விட்டு கடக்க நின்ற மஹா நினைத்து அஞ்சினேன் என்றுமாம் )
——————————————————————-
(ப்ரஹ்மாவுக்கு அறிய ஒண்ணாத விஷயத்தை நீர் அறிந்தபடி எங்கனே -என்ன –திரு நாமம் ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் -)
அருகு விட்டுப் பேராதே இடைவிடாமல் நலிந்த படியே நிற்கிற அதி பிரபலமான பாபத்தைக் குறித்து முன்பு போலே
இன்னமும் வந்து மேலிடில் செய்வது என் என்று பயப்பட்டேன் -இப்படிப் பயப்பட்டு -இந்த பாப சம்பந்தம் அற்று
உஜ்ஜீவிக்கைக்கு நிர்பய ஸ்தானமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுக்கைக்காக -நயப்புடைத்தாய் -அதி விலக்ஷணமான
சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய்
திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடையை அப்யசித்தேன் –
அன்றிக்கே -திரு மந்த்ரார்த்தை நயிப்பிக்கையாலே
தத் பரமாய்க் கொண்டு நின்ற விலக்ஷண சந்தர்ப்ப ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு என்னவுமாம் —
அயல் நின்ற என்றது ஞானம் பிறந்த பின் பாபங்கள் தம்மை விட்டுக் கடக்க நின்ற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
அயல் நின்ற வல் வினை யென்று திரு நாமம் சொல்லாத போது தமக்கு உள்ள வியசனம் ஆகவுமாம் —
(மந்த்ரத்தை -அவனை மந்திரத்தால் மறவாது வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே –
ஆத்ம குணம் -ஆச்சார்யன் -மந்த்ரம் -நாரணம் -வைகுந்தம் மற்ற அதுவும் கை யதுவே)
———————————————————————————————————-
ஆன பின்பு நெஞ்சே –இவ் விஷயத்தை விட்டு நமக்கு ஒரு க்ஷணம் ஆறி இருக்க விரகு இல்லை -அவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-
பதவுரை
நெஞ்சே–மனமே!
மலர் கொண்டு–புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம்–தூபத்தை
கை ஏந்தி–கையிலே ஏந்திக் கொண்டும்.இவை மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம்
தொழுது–(எம்பெருமானை ) வணங்கி
எழுதும்–உஜ்ஜீவிப்போம்;
எழு–நீ புறப்படு;
வாழி–(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:சொன்னபடி செய்ததால் அதுக்கு மங்களா ஸாஸனம்
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்]
மந்திரங்கள்–பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும்–முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் –ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
ஆன பின்பு]
அந்தரம் ஒன்று இல்லை–(நாம் ஆறி யிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை–(அப் பெருமானை) விரைவில் சென்று கிட்டு.
பழுதின்றி–இடைவீடின்றி – அந்தரம் ஒன்றில்லை யடை-கால தாமதம் செய்ய ஹேது எதுவும் இல்லை -அவனை –அணுகு-
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி–கையாலே தொழுது –புஷ்பாதி (தூபம் தீபங்கள் )உபகரணங்களைக் கொண்டு தொழுது –
எழுதும் எழு வாழி நெஞ்சே —போவோம் -போகு -நெஞ்சே -உனக்கு நன்மை உண்டாக –
பழுதின்றி–எழுவோம் -மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்–விச்சேதம் இன்றிக்கே எல்லா திரு மந்த்ரங்கள்
கற்கிறதும் கை தொழுகை -ஆன பின்பு -(ஆச்சார்யர் முகேன -கைங்கர்யம் செய்து திரு உள்ளம் உகப்பித்துக் கற்று )
(ச கண்ட-நமஸ் பிரிந்தால் எனக்கு உரியன் அல்லேன் அகண்ட நமஸ் -கை தொழுது -நமோ நம -அகண்ட சகண்ட சேர்த்து)
அந்தரம் ஒன்றில்லை யடை—–ஒரு க்ஷணம் மாத்திரம் போகாதே அவன் திருவடிகளில் அடை –
எழுவோம் –உஜ்ஜீவிப்போம் -எழு –ஒருப்படு- வாழி -ஒருப்பட்ட படிக்கு மங்களா சாசனம் -இது உனக்கு நித்தியமாக உண்டாக –
பழுதின்றி -குருகுல வாசம் பண்ணிப் பழுத்து விழக் காண்கை-முதலிலே சொல் என்னில் உத் பத்தி தோஷமாம் இறே-
கற்பனவும் – கிடந்தானை கண்டு ஏறாதே சந்தையிட்டுக் கற்கை-
(தூபம் கை -ஏந்தி தீபாதிகளுக்கும் உப லக்ஷணம்
தென் ஆனாய் வட வானாய் -ஆச்சார்யன் மூலம் சரண் அடையா விடில் கைக்கொள்ள மாட்டாத யானை
ஆச்சார்ய சிஸூருஷை செய்து ரஹஸ்ய த்ரய ஞானம் பெற வேண்டுமே)
—————————————————————————–
ஆன பின்பு நெஞ்சே –இவ் விஷயத்தை விட்டு நமக்கு ஒரு க்ஷணம் ஆறி இருக்க விரகு இல்லை -அவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –
நெஞ்சே -செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு தூபத்தைக் கையிலே தரித்து -ஸ்வரூப அனுரூபமாக
அவனைத் தொழுது உஜ்ஜீவிப்போம் -கடுக எழுந்து இரு -உனக்கு இந்த ஸம்ருத்தி நித்யமாகச் செல்ல
கிடந்தானை கண்டு ஏறாதே ஆச்சார்யானைப் பழுக்க சேவித்து -திரு அஷ்டாக்ஷரம் முதலான மந்த்ரங்களை
பழுதற நாம் அப்யசிக்கிறவையும் -சர்வேஸ்வரன் திருவடிகளில் இடைவிடாமல் அஞ்சலி பந்தம் முதலான
வ்ருத்தி விசேஷங்களைப் பண்ணுகைக்காக -(சாதனமாக இல்லை கைங்கர்யம் பண்ணவே என்றபடி )
ஆன பின்பு நமக்கு ஆறி இருக்கைக்கு அவகாசம் ஏக தேசமும் இல்லை -கடுகச் சென்று கிட்டு —
——————————————————————————————————————
கால ஷேபம் பண்ணும் படி சொல்கிறது
(இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -அழகிய கையில் வில்லை எடுத்தாலே போதும் அவன் அழிந்து போக)
(ஆத்மாவுக்கு கர்மா வந்தேறி -தெரியவே உஜ்ஜீவிப்போம்)
(இமே தேஹே அந்தவந்த -தேகம் நஸ்வரம் ஆத்மா நித்யம் இங்கு கருத்து இல்லை –
கர்மங்கள் போக தேகமும் அழியும் என்று நிம்மதியாக இருக்கவே இந்த ஸ்லோகம் இங்கு சொல்கிறான்
இத்தையே-வந்தேறி என்பதைக் காட்டவே – அடைந்த -என்ற சொல்லால் ஆரம்பிக்கும் பாசுரம்)
(ஆதி -நோய் -இரண்டாகச் சொல்வது -ஆதி என்று மநோ வியாதியும் -நோய் என்று உடல் வியாதியும்)
போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்கிறோம்
இதுக்கு இடைச் சுவரான விரோதிக்கு வேணுமாகில்
தரசாரதாத் மஜனை சரணம் புக்கு என்கிறார் –
அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-
பதவுரை
அடைந்த–அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற
அரு–போக்குவதற்கு அருமையான
வினையோடு–பழவினைகளும்
அல்லல்–(அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத் துன்பங்களும்
நோய்–சரீர வியாதிகளும்
பாவம்–இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை–[இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில்–வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன்–முன்பொருகால்,
நுடங்கு இடையை–துவளா நின்ற -மெல்லிய இடையை யுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான்–லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய–மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள்–ஸ்ரீராமனாய்ப் பிறந்தவொரு காலத்து
தன் வில்–தன்னுடைய வில்லை
அம்கை–அழகிய திருக் கையிலே
வைத்தான்–எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண்–உபாயமாவான்.
(வில்லிலே கை வைத்தான் என்றும் வில்லைக் கையிலே வைத்தான் -என்றும் சக்கரவர்த்தி திருமகன் சரணே சரண் -என்கிறார் -)
அடைந்த வருவினையோடு –(ஞான ஆனந்த சேஷத்வ பாரதந்த்ரங்களே ஸ்வரூபமான )ஆத்ம ஸ்வரூபத்தில் இன்றியே அசித் பிரத்யாசத்தியால் ( ( தேஹத்தின் அருகாமையாலே )வந்தேறியான அஞ்ஞானாதிகள்
அல்லல் –மானஸ வியாதி
நோய் –சரீர வியாதி -ஆதி -வியாதிகள் என்றபடி –
பாவம்-பரிக்ரஹித்த சரீரத்தாலே பண்ணின நிஷித்த அனுஷ்டானம்(புண்யாபுண்ய ஈஸ்வர ப்ரீதி கோப )
மிடந்தவை-சரீர ஆரம்ப ஹேதுவான பாபங்களுமாக நெருங்கினவை
மீண்டு ஒழிய வேண்டில் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னும் படி ஒரு (யாதவ ராஜ- ராகவ ராஜ )ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில்
நுடங்கிடையை-பிரியத் தகாதவளை -(ஆத்ம குணங்களை பார்த்தாலே பிரிய ஒண்ணாதே -அதுக்கும் மேல் இதுவும் )
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——பண்டு இலங்கையில்
வைத்தவனுடைய மிடுக்கை ஒழிய –தன்னுடைய திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்தவன் உபாயம் –
இத்தால் –
1-சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் –
2-இவ் வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் –
3-அவளோடு கூடினவன் உபாயம் என்கையாலே பற்றுமவர்கள்-அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது(ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி )
(மனம் இந்திரியங்கள் இராவணன் இத்யாதி-முதலியாண்டான் வார்த்தை -தேசிகர் ஸ்லோகம் )
(கீழே பல பாசுரங்களில் )திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் –
இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை –
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே (நடுநாயகமாக ரத்னம் போல் இந்த பாசுரம் -சரம ஸ்லோகம் போல் )-உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –
அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே -அனஸ்னன்(சிறைச் சாலைக்குள் அரையனும் சிறையனும் உண்டே )
(தேகத்துக்குள் இருந்தாலே கர்மங்கள் இயற்கை என்று சொல்வாய் ஆனால் அது அல்ல என்று காட்டவே இங்கு
ஒரு மரம் -இரண்டு பறவைகள் -ஓன்று உண்டு ஒளி குறைய -மற்ற ஓன்று உண்ணாமல் ஒளி விஞ்சி
மரம் -சரீரம் -பழம் -கர்மாக்கள் -பரமாத்மாவுக்கு கர்மம் தீண்டாதே)
அல்லல் நோய் -ஆதி வியாதி -பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
மிடந்தவை–சமிதை இடாத மாணி -ப்ரஹ்மசாரி போலே –பரணிக் கூடு வரித்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே
சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -(நித்ய அநபாயினி நிரவத்யாம் )ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை -(சொல்லினால் சுடுவேன் –மாசு என்று அஞ்சினேன் )
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது -(வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து -காட்கரை அப்பன் )
அல்லல் நோய் –அல்லல் என்று பாப காரணமாய் வரும் மனத்துன்பங்கள் -நோய் -சரீரத் துன்பங்கள்
இவற்றையே ஆதி -வியாதி என்று வடமொழியில் சொல்வர்
மிடைந்தவை -வெளியேற முடியாதபடி சூழ்த்துக் கொண்டவை
(சும்மெனாதே கை -விட்டோடி பெரியாழ்வார் -5-4-3-
மாமேகம் சரணம் வ்ரஜ ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல்
ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்
மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே
சிந்தித்து இரு -41-
வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47
மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49-
அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50-
திரு நாமம் எண் –51-
தொழுது எழுதும் எழு –58-என்று சொன்னது எல்லாம்
உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே
மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –
இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம்
இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே -)
———————————————————————-
(போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்கிறோம்
இதுக்கு இடைச் சுவரான விரோதிக்கு வேணுமாகில்
தரசாரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் -)
ஞான ஆனந்தகளோபாதி ஆத்மாவுக்கு நிரூபகம் -என்றபடி -அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற போக்க அரிதான
ப்ராசிநபாவம் -அது அடியாக வருகிற மானஸ மான துக்கங்கள் -சாரீரமான வியாதி -வர்த்தமான சரீரம் கொண்டு
பண்ணுகிற நிஷித்தாசாரம் என்றால் போலே பஹு விதமாய்க் கொண்டு பரணிக் கூடு வரிந்தால் போலே
ஆத்மாவைத் தெரியாத படி மூடிக் கிடக்கிற இவை வாசனையோடு விட்டுப் போக வேண்டில்
க்ஷண காலமும் விஸ்லேஷிக்கத் தகாத படி நேரிய இடை அழகை யுடைய பிராட்டியை முன்பு ஒரு காலத்தில் லங்கையில் கொண்டு
போய்ச் சிறை வைத்த ராவணனுடைய மிடுக்கு அழியும் படிக்கு ஈடாக பண்டு ஒரு நாளிலே தன்னுடைய
ஸ்ரீ சாரங்கத் திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்த தசாரதாத்மஜனே உபாயம் –
இத்தால்
1-பிராட்டி விஷயத்தில் போலே ஆஸ்ரித விஷயத்தில் ஈஸ்வரன் உகந்து கார்யம் செய்யும் என்னும் இடமும்
2-அவன் ஸ்வ ரக்ஷணத்திலே இரங்கும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம் உள்ளது என்னும் இடமும் -(ஆறி இருக்க வேண்டியதே க்ருத்யாம்சம் )
3-அவன் அபேக்ஷிதம் செய்யும் இடத்தில் இவள் புருஷகாரம் என்னும் இடமும்
4-அவன் வஸ்துவை எனக்கு என்பார் ராவணாதிகள் பட்டது படுவர் என்னும் இடமும் சொல்லிற்று யாய்த்து –
இந்திரிய ஜயத்தைப் பண்ணு -அவனைத் தொழு –
அவன் திரு நாமத்தைச் சொல்லு -அவனை நினை என்றால் போலே (உபாயாந்தரங்களைப் போலே )கீழே படி படியாகச் சொல்லிற்று எல்லாம்
ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே -உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை -என்கை-
————————————————————————————————————
கீழ் அவனையே உபாயம் என்றது -பேறு இவர்களதே யான பின்பு இவ் வாத்மாக்கள் உபாயம் ஆனால் ஆகாதோ என்னில்
(ஜீவர்கள்)கீழ் போக்கு அறியான் -இப்போது தங்கள் படுகிறது இன்னதாலே என்று அறியார்கள் -வரக் கடவது அறியார்கள்
ஈஸ்வரன் இவை எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஞான சக்தியாதிகளை யுடையவன் –
பழகி யான் தானே (பணிமின் -நான்முகன் )–என்னுமா போலே -ஆகையால் அவனே உபாயமாம் அத்தனை -இத்தை லோகம் அறியாது என்கிறது –
இவன் பல போக்தாவாய் இருக்க அவன் சாதனமாக வேண்டுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாய் சர்வ சக்தனாய் இருப்பான் ஒருவன் உபாயமாம் இத்தனை போக்கி
அஞ்ஞனாய் அசக்தனாய் இவனால் செய்யலாவது உண்டோ -என்கிறார் –
(தனக்குத் தான் ரக்ஷகன் ஸ்தனந்த்ய பிரஜையை தாய் நின்றும் வாங்கி காதுகன் இடம் கொடுத்தால் போல் –
தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப் பால்)
சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–
பதவுரை
சரண் ஆம் மறை–(எல்லார்க்கும் -நான்கு வித புருஷார்த்தங்களைப் பெற ) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த–(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின(பர ப்ரஹ்மம் நான்முகனுக்கு மறை பயந்த என்றுமாம் )
தாமரை யானோடு–பிரமனோடு கூட
மரண் ஆய–மரணமடையுந் தன்மை யுடைய
மன் உயிர்கட்கு எல்லாம்–நித்யமான ஸ்வரூபத்தை யுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
அரண் ஆய–ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி–பெரிய திருவாழி யாழ்வானைக் கையிற் கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
மற்று–அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு–கடல் சூழ்ந்த இவ் வுலகத்திலுள்ளார்.(லக்ஷணை )
அறியாது–அறிய மாட்டார்கள்.
சரணா மறை பயந்த தாமரை யானோடு–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –
சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம்–கல்பாதியிலே யுண்டாய் -கல்பாந்தத்தில் இல்லை யாகிற ப்ரஹ்மாவோடே கூட
ந ஜாயதே ம்ரியதே வா –ஜாயஸ்ய ம்ரியஸ்ய –(விபஸ்ச்சித் உபநிஷத் கதாசித் கீதை )என்று ஜனன மரண தர்மாக்களான உயிர்களுக்கு எல்லாம்
அரணாய-ரக்ஷகமான –
பேராழி கொண்ட பிரான் அன்றி-கீழே பெருமாள் ப்ரஸ்த்ததுர் ஆகையால் -கடலை வெதுப்பித்து
தமக்கு வசமாக்கிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன் -என்றுமாம்(பேராழி கொண்ட -கடலை தனது வசமாகாக கொண்ட பெருமாள் )
கையிலே திரு வாழியை யுடையனாய் உபகாரகனான சர்வேஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவர் —
மற்று அறியாது-ஓராழி சூழ்ந்த வுலகு ———-மற்றாய் இருந்துள்ள கடல் சூழ்ந்த லோகமானது உபாயமாக அறியாது
சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்
ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )
மரணாய -சாவது பிறப்பது ஆகிற சரீர தர்மம் -மன்னுயிர் -ஆத்ம தர்மம் -மரண தர்மங்களுடைய அஞ்ஞனாய் அசக்தனாய் –
அரணானவை –இவற்றை விநாசகன் அறியும் அத்தனை -முடோயம் நாபி ஜாநாதி – வேதாஹம்-
ஆப்பன் நஞ்சீயருக்கு -ஜீயரே இவ் வுலகு எம்பெருமானை அல்லாது (வேறே ஒன்றை அறியாமல் )இருந்ததோ –என்ன -அதுக்குப் பொருள் என்ன
உயர்ந்தோர் எம்பெருமானை அல்லது அறியார் என்ன -இத்தை பட்டரைக் கேட்க -அதுக்கு ஒரு குற்றம் உண்டு
ஓர் ஆழி சூழ்ந்த -என்று விசேஷிக்க ஒண்ணாது -என்ன -இதுக்கு பொருளோ என்ன
ஜீயரே நான் சொல்லும் பொருள் என் என்ன உலகு அறியாது என்ன -அதுவே பொருள் என்றார்
இத்தை பிள்ளையும் ஜீயருக்கு உரைக்க-திருக் கலிகன்றி தாசர் மறந்தத்தை உணர்த்தினார் -என்று அருளிச் செய்தார் –
(மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய பிரான் -என்று அன்வயித்து -உலகு -உயர்ந்தோர் மாட்டே நிகண்டு -சாமான்யர் அறியார் -மற்றவை அறிவார்கள் -)
(இதுக்கு ஒரு குற்றம் உண்டே -ஆழி சூழ்ந்த -என்றாலே எல்லாரையும் காட்டுமே என்னில் –
யாருக்கும் தெரியாது -என்பதே பட்டர் திரு உள்ளம் என்று நஞ்சீயர் காட்டி அருள –
மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய பிரான் என்று கொள்ளாமல்
அரணாய-அரணாக உள்ள பொருள்களை- உபாயத்தை அறியார்கள் -என்றவாறு
பின்பு நம்பிள்ளை இவ்வாறு என்று நஞ்சீயருக்கே காட்டி அருளினாராம்)
(ஆக இப் பாசுரத்தால் -சிறியாரோடு பெரியாரோடு வாசி யற இவ்வுலகில் எவரும் தங்களுக்கு நன்மை ஏது என்று அறியாதாராய் இருக்க
ஸர்வேஸ்வரேஸ்வரன் ஒருவனே இவர்கள் அனைவருக்கும் நன்மையை அறிய வல்லவன் என்கிறார் -)
—————————————————————-
(இவன் பல போக்தாவாய் இருக்க அவன் சாதனமாக வேண்டுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாய் சர்வ சக்தனாய் இருப்பான் ஒருவன் உபாயமாம் இத்தனை போக்கி
அஞ்ஞனாய் அசக்தனாய் இவனால் செய்யலாவது உண்டோ -என்கிறார் -)
அபிமத சித்திக்கு அனுரூபமான உபாயங்களை அறிகைக்கு(ம் அடைவதற்கும் )சாதனமான வேதத்தை நாட்டுக்கு உபதேச முகேன
உண்டாக்கின ஞான மஹாத்ம்யத்தை யுடையோம் என்று அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மா வோடே கூட
மரண தர்மாக்கள் ஆகையால் அறிவு கேடராய் நித்தியமான ஸ்வரூபத்தை யுடையரான ஆத்மாக்களுக்கு எல்லாம்
ரக்ஷை யான வற்றை (அரணாய வற்றை -ரக்ஷகனான பெருமாளை என்று சொல்லாமல் )ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான உபகாரகனை அல்லது வேறு
அத்விதீயமான கடலாலே சூழப் பட்ட பூ லோகத்தில் உள்ள பிராணி அறியாது –
இத்தால் சிறியாரோடு பெரியாரோடு வாசியற தம் தாமுடைய ரக்ஷணம் தங்கள் அறிய மாட்டார்கள் –
இவனே சர்வர்க்கும் ரக்ஷண பிரகாரம் அறியுமாவான் என்றதாய்த்து –
————————————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply