ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -81-90–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ்வஸிப்பிக்க வேணும் என்று பரிவரானவர்கள்
தங்கள் பிரிவின் கனத்தாலே முகாந்தரங்களாலே இவர் ஆர்த்தியை
சமிப்பிக்க வேணும் என்று உத்யோகித்து
இவர் பிரகிருதி அறிந்தவர் இவ்வார்த்தி சமிக்கும் ப்ரகாரங்களிலே இழியாதே
ப்ரகாராந்தரங்களிலே இழிந்து என்ன கார்யம் செய்கிறார் என்று
தம்மிலே வெறுத்து உரைத்த பாசுரத்தை

தலைவி தளர்த்தி கண்டு தாயார் முதலானார் வெறி யாடலுற
தலைவி நினைவு அறிந்த பாங்கி வெறி விலக்க லுற்ற
அவர்கள் கேட்கும்படி தன்னில் உரைத்த பாசுரத்தாலே (முன்னிலை படர்க்கை )
அருளிச் செய்கிறார் –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81

பாசுரம் -81–உறுகின்ற கன்மங்கள் மேலன-
துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –
வீடுமின் முற்றவும் -1-2-

பதவுரை

ஓர்ப்பு இலர் ஆண்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
கூறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப் பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹத் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகறிவளவாகா நின்றது.

வியாக்யானம்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
இவள் நோயின் தன்மை ஆராயாதே உற்று நடத்துகிற வெறியாட்டு
முதலான கருமங்கள் மேன் மேலுண்டாகா நின்றன

இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெறுகிற அளவிலே தாயாருடம்பு நொந்து பெற்றவராகக் கூடும்
வருந்திப் பெற்றார்கள் ஆகில் இவள் பிழைக்கும் வழியிலே முயலுவர் இறே
பிழைக்கும் வழி இல்லை இறே

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
திருத் துழாயைக் குழல் இடத்திலே நிரம்பச் சூட்டு கிறிலர்

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
பழையதான பெரிய திருமலையிலே கொண்டு போகைக்கும்
விரகு பண்ணு கிறிலர்

ஆட்டுதல் –
அங்கே நடையாடப் பண்ணுதல்

சூழ்தல் –
விரகு செய்தல்
அன்றியே –
திரளுதல் ஆகவுமாம்

இறுகின்ற தாலிவாளகம்
இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –

மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –

மெய் நொந்து பெறார் கோல்
என்று அந்வயம்

இத்தால்
பிரிவின் கனத்தாலே நிரூபியாமல் பிரகாராந்தரத்தாலே இவள் ஆர்த்தியைப்
பரிஹரிக்கத் தேடா நின்றார்கள்
பகவத் ப்ரஸாதமும்
தேச வாஸமுமே பரிஹாரமாய் இருக்க
அது செய்யாமையாலே சத்தையும் குலையும்படி சைதில்யமே விஞ்சா நின்றது –
இவர் அருமை அறிந்து வருந்திக் கிட்டினவர்கள் அல்லரோ இவர்கள் என்று
ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரமாய் இருக்கிறது

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இருள் போய் முடுகி
இவளும் மோஹித்துக் கிடக்க
இவள் அவஸாதத்தைக் காணா நிற்கச் செய்தேயும்
பந்து வர்க்கத்தில் உள்ளார்
க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் என்று ஆறி இருக்க
அத்தைக் கண்டு
இவளுடைய அவஸாதம் இருந்தபடி இது
ஸ்லாக்யதை இருந்தபடி இது
இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு இவளை
நேர் கொடு நேரே பெற்றவர்கள் அன்றோ என்று
இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம் –

உறுகின்ற-இத்யாதி
இவர்கள் நிரூபிக்கட் கடவதொரு கார்யம் இல்லையோ
என்கிறாள்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
மேல் வரக் கடவதானவை வர்த்தமானம் போலே இருக்க
வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஒரக் கடவர்கள் அன்றிக்கே

இவளைப் பெறுகின்ற தாயர்
இவளை பெற்ற தாயார்களுக்கு எப்போதும் ஓக்க வயிறு எரிந்த படியேயாய்
இருக்க வேண்டாவோ
ஒரு லாப அலாபங்கள் வேணுமோ
இவள் தானாகவே அமையாதோ

மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது
வளர்த்துக் கொண்டது அத்தனையோ

என் தான்
இப்படிச் சொல்லுகைக்கு இவர்கள் செய்யாதது என் என்ன

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்னும் அளவு போயிற்று
கடக்க நின்று வீசும் அளவு போராதே
அது தன்னையே கொடு வந்து குழலிலே நிரம்பத் துற்க வேண்டும்படி யாயிற்று தசை முறுகின படி

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர் இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே –
இக்குடிக்குப் பழையதாகச் செய்து போரும் பரிகாரத்தையும் செய்கிறிளர்கள்

வேங்கட மாட்டவும்
கல்லும் காடுமாய் இருக்கிறதடைய ஒரு தடாகம் போலே யாயிற்று
இவளுக்குத் தோற்றுகிறது

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி -மோக்ஷ தர்மம் –4-50-

————

அவதாரிகை

இப்படி அனுபவ அலாபத்தாலே சிதிலரானவர்
தம்மை பிரதம அங்கீ காரம் பண்ணின ஈஸ்வர கடாக்ஷம் தான்
நமக்குத் பரிதாப ஹேதுவான ப்ரகாரத்தை நாயகனான ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண்களைக் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே
அவை தானே பரிதபிப்பிக்கிற பிரகாரத்தை
நாயகி தோழியர்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82-

பாசுரம் -82–எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-
துறையடைவு–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —
உருகுமால் நெஞ்சு -9–6-

பதவுரை

எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதயமலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறக்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னும்) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம்போன்றவர்களுக்கும்-
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
முன்னம் தோன்றா நின்றன -உருவ வெளிப்பாடு
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.

எம்போலியர்க்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த
சிவப்பாலும்
ஒவ்ஷ்ண் யத்தாலும் அக்னி ஸ்வபாவத்தைக் கொள்ளுவதாய்
உதய தசையில் ராகத்தை யுடைத்தான ஆதித்யனுடைய இரண்டு வடிவு
ஏக காலத்திலே ஸஹ சரிதமாய்
உதயகிரி இடத்திலே பரம்புகிறது என்னலாம் படியான ரூபத்தை யுடையன ஆயின

எம்பெருமான் கண்கள்
அடியிலே என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்வாமியினுடைய திருக்கண்கள்

மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே
அந்த ஆதித்ய ரூபங்களுக்குள்ளே காயத்ரீ பூதமான அர்க்ய ஸக்தியாலே
ஜ்வலித்துக் கொண்டு தோற்றின சிவந்த அக்னியில் ஆதித்யனுக்கு பாதகராய் வந்து
நாங்களே மீண்டு விழும்படியான மந்தே ஹாதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளைப் போலே
(மந்தேஹர் ராக்ஷசர் -அசூரத் தன்மை உள்ளவர் )

எம்போலியர்க்கும் விரிவ
ஆனுகூல்யம் யுடையவராய்
அபலைகளான நம் போல்வாருக்கும்
தாஹகங்களாய்க் கொண்டு பரம்பா நின்றன

சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி –7-1-9-என்கிறபடியே
இந்தக் கண்ணோ லோகத்தை எல்லாம் வெளிச் செறிப்பித்து ரஷித்தது
இப்படி பாதகங்களான இவற்றுக்கு அந்த ரக்ஷகத்வம் உண்டான படி என் -சொல்லீர் என்று
தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைத்தாள் யாயிற்று –

இத்தால்

ஜிதம் தே புண்டரீகாக்ஷ -என்கிறபடியே
பிரதமத்திலே சேஷித்வத்தைப் பிறப்பித்த ஸ்வாமி கடாஷமானது
அனுபவத்தைக் கொடாமையாலே
பிரதிகூல விஷயத்தில் பரிதாப ஹேதுவாமோபாதி
அனுகூலரான நமக்கும் ஆர்த்தி ஜனகமாகா நின்றன
இது லோகத்துக்கு ரக்ஷகமான படி எங்கனே என்று
ஸூஹ்ருத்துக்களுக்கு (பாகவத உத்தமர்களுக்கு ) நொந்து உரைத்தார் ஆயிற்று

விளரி என்று
வெளுப்பாய்
வெளிச் செறிப்பிக்கிற முகத்தாலே
ரக்ஷணத்தைச் சொல்லிற்று ஆயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
ஆதித்ய உதய விரோதி மந்தேஹர் மேல் பிரயோகித்த படியால்
அத்தால் உத்பூத சக்திக ஆதித்யனால் உத்பூத ப்ரஜ்வவநாத்ய குணாக்னியில் விழுந்து
நசிக்கிற அசூரரைப் போலே என்னைப் பார்ப்பது
என்னைப் போன்ற வரீலுமாய்

இதுவோ வையமுற்றும் விளரியதே –விரிவ சொல்லீர்
இந்தத் த்ருஷ்ட்டி பூமி எங்கும் பரவா நின்றது
இதுக்கு என்ன உபாயம் சொல்லீர் என்று தன் தோழிமார்களைக் கேட்க்கிறாள்

மீண்டவற்றுன் என்றது
கச்ச அநு ஜாநாமி ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த–யுத்த -59-144-என்று
பெருமாள் அருளிச் செய்தும்
மூல பலத்தோடு வந்த ராவணாதி விஷயம் ஆகவுமாம் –

————–

அவதாரிகை

இப்படி இவருடைய சைத்திலயத்தைக் கண்ட பரிவர்
ஆஸந்நமான பாதக சந்நிதி இருந்தபடியால் இவர் தரித்து இருக்க அரிதாய் இருந்தது
என்று வெறுத்து உரைத்த பாசுரத்தை
நாயகன் பிரிவாற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
இனி இவளுக்கு இருக்கை அரிது என்று இரங்கி உரைத்த
தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –

பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-
துறையடைவு-அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –
உண்ணிலாய ஐவரால் -7–1-

பதவுரை

விளரி–விளரியென்னும் இசையையுடைய-உச்ச ஸ்வர கண்ட த்வநி
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு
மெல் ஆவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ் வன்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காள மேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தி யெடுத்தெடுத்துக் கூறி வாய் பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.

முன்றில் பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்
முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு

வியாக்யானம்

விளரிக் குரலன்றில்
விளரியாகிற ஸ்வரத்தை யுடைத்தாய் இருக்கிற குரலை யுடைய அன்றிலானது

குரல்
துத்தம்
கைக்கிளை
உழை
இனி
விளரி
தாரம் -என்று
ஷட்ஜ
ருஷப
காந்தார
மத்யம
பஞ்சம
தைவத
நிஷாதங்கள்
ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே
ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது

விளரி என்று
ஒரு பண் என்றும் சொல்வர்

மென் பெடை மேகின்ற
புணர்ச்சியிலே துவண்டு மெல்லிதான பேடையோடே மேவிப் போருகிற

முன்றிற் பெண்ணை
முற்றத்திலே பனையிலே

முளரிக் குரம்பை யிதுயிதுவாக
முள்ளை அரிந்து செய்யப்பட்ட இந்தக் கூடு இவ் வன்றிலுக்கு இருப்பிடமாக-

முளரிக் குரம்பை என்று
தாமரையாலே செய்த கூடு என்னிலுமாம்

முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும்
இதினுடைய ஆர்த்தி ஸ்வரத்தாலே ஸ்மரித்து
ஸ்யாமளமாய்
ஸ்ரம ஹரமாய் இருக்கிற காள மேகம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய
ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை
பல ஹானியாலே வருந்தி
எடுத்து எடுத்து
அக்ரமாகச் சொல்லும்படியான

மெல்லாவியும்
மெலிந்து
சென்று அற்ற பிராணனும்

நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்

எல்லாம் தளரிற் கொலோ
ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ

அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே
இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்

அறிகிறிலேன் -என்கையாலே
முடியவுமாம்
அவனைப் பெற்று ஆஸ்வஸிக்கவுமாம் என்று கருத்து

இத்தால்
தாம் இருக்கிற தேசத்திலே ஆசன்னமாக போக ப்ரஸக்தரானாரைக் கண்டு
தம்முடைய போக அலாபத்தாலே அது ஸ்மாரகமாக
ஆர்த்தி விஞ்சி பிரலாபிக்கிற பிரகாரத்தைக் கண்டவர்கள்
இவருக்கு போக சித்தி இல்லாத அளவிலே இவர் முடிந்து பிழைக்கும் அத்தனையோ
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அசிவதாரிகை

உரு வெளிப்பட்டாலே நோவு படா நிர்க்கச் செய்தே
அதுக்கும் மேலே வாசலிலே ஒரு பனையாய்
அப்பனையிலே தங்கிற்று ஓர் அன்றிலாய்
அது தான் வாய் அலகைக் பேடையோடே கோத்துக் கொண்டு இருக்கிறவித்தை
நெகிழ்த்தவாறே கூப்பிடக் கடவதாய்
அதனுடைய த்வனியிலே மோஹித்துக் கிடக்க
அத்தைக் கண்டு
இத்தினுடைய த்வனி இருக்கிற படி இது
இவளுடைய ஆற்றாமை இருக்கிற படி இது
இவளுடைய மார்த்வம் இருக்கிற படி இது
இவளுடைய ஸைதில்யம் இருக்கிற படி இது
இது எல்லாம் இருந்த படியாலே இவள் அபிமானதாம் கை புகுந்து ப்ரீதையாய் இருக்கக்
காண மாட்டோம் ஆகாதே என்று இங்கனே
திருத்தாயார் வார்த்தையாய் இருக்கிறது

பட்டர் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க
நஞ்சீயர் ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்குப் போலியாக அருளிச் செய்யலாம்
இடம் உண்டோ என்று கேட்க
இளைய பெருமாள் பிராட்டியைக் கொண்டு போய் விட்டுப் போந்த அநந்தரம்
அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட வால்மீகி பகவானுக்கு இத்திருத்தாயார் படி யுண்டு
என்று அருளிச் செய்தார் –

வியாக்யானம் –

விளரிக் குரலன்றில்
விளரி என்று
உச்சமான த்வனிக்குப் பேர்
உயர்ந்த த்வனியை யுடைத்தாம் படி காரியப்பாடு அறக் கூப்பிடுகிற அன்றிலினுடைய

மென்பெடை
கலக்கும் போது பூத் தொடுமா போலே தொட வேண்டும்படி யாயிற்று மார்தவம்
இம்மார்த்வத்திலே விரஹமும் ஆனால் பாடாற்றப் போகாது இறே

மேகின்ற
மேவா நிற்கிற
நித்ய ஸம்ஸ்லேஷமாய்ச் செல்லா நிற்கும் இறே
அந பாயினிக்கு ஸ்மாரகமாய் இருந்தபடி

முன்றிற் பெண்ணை
முற்றில் என்று முற்றத்துக்குப் பெயர்
வாசலுக்கும் பேர்

முற்றில் பனை நடலாமோ என்று இவ்விடத்தை நிர்வஹியா நிற்க
வங்கி புரத்து நம்பியைச் சிலர் கேட்க
அதுவோ -இவள் கார்யம் தளிரும் முறியுமாய்ச் செல்லுகிறது என்று பணித்தார்

மூன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற அன்றிலின்
கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ -பெரிய திருமொழி –11-2-1-

அவரை வரப் பண்ணுவார் ஆரோ -என்றபடி –
அல்லது பிரிப்பன பிரித்துக் கூட்டுவது கூட்டித் திரிகின்றாள் அன்றே இவள்

முளரிக் குரம்பை
இத்தினுடைய ஸுகுமார்யத்துக்கு ஈடாகத் தாமரை இதழ்களையும் பூக்களையும் கொண்டு
வந்து கூடாகப் பண்ணி வைக்கும் இறே
அந்நிலத்தில் உள்ளவையாய் இருக்கும் இறே

அன்றிக்கே
முளரி என்று முள்ளாய்
முள்ளாலே செய்த கூடு என்னவுமாம்
முளரி என்று நெருப்புக்கு துடைப்பத்துக்கும் பேராகையாலே
இன்னெருப்பான கூடு இதுவாக
திருத்தாயார் பாசுரமாகையாலே சேரும் இறே

முளரிக் குரம்பை என்று

யிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே

—————–

அவதாரிகை

இப்படி பரிவரும் வெறுக்கும் படி ஆர்த்தரான இவர்
போக்ய பூதனான ஸர்வேஸ்வரனைக் காண ஆசைப்பட்டுத்
தம்மிலே அவனை நோக்கி ப்ரலாபித்த ப்ரகாரத்தை
நாயகியானவள் நாயகனான ஸர்வேஸ்வரனைப் புறம்பே திரளிடை யாகிலும்
காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-

பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-
துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்–
மையார் கருங்கண்ணி -9–4-

பதவுரை

மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல
நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்ல புருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்-உத்ஸவங்களிலும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.

காண்பானவாவுவன் நான்-காண்பான் அவாவுவன் நான்

வியாக்யானம்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
விலக்ஷணை களான நாரீ ஸமூஹங்களானவை திரண்ட திரட்சி யுள்ளும்

குழாங்கள் குழிய குழு-என்கையாலே
அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்

அங்கங்கெல்லாம்
அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
போக்யத்வ
ரக்ஷகத்வங்களுக்கு
ஸூசகமாய்
கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய்
ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும்
அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும்
கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்

வந்து காண்கைக்குக் கால்நடை தாராத நான்

(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இவருக்கு
காரார் காணும் அளவு போய் -ஆடல்மா குதிரையில் கானால் விடேன் என்றவர் திருமங்கை ஆழ்வார்)

மைய வண்ணா
ஆசை யற்று இருக்க ஒட்டாத வடிவழகை யுடையவன்

மணியே
துர்லபன் என்று மீள ஒண்ணாத படி முடிந்து ஆளவானவனே

முத்தமே
நீர்மை இல்லை என்று தவிர வேண்டாதபடி முழு நீர்மை யுடைய ஸூத்த ஸ்வ பாவனே

என் தன் மாணிக்கமே
பிரகாஸ குண அதிசயத்தாலே என்னை உன் அநு ராகத்திலே
அகப்படுத்திக் கொண்டவனே -என்று
அவன் ஸ்வ பாவங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆயிற்று

இந்தக் கிளவி
மள்ளர் குளீஇய விழவினானும் மகளிர் தலீஇய நுணங்கை யானும் யாண்டும்
காணேன் மாண் தக்கோனை -என்று அகத் தமிழிலும் சொல்லப் பட்டது-(குறுந்தொகை பாடல் )

இத்தால்
நமக்கு போக்ய பூதனான கிருஷ்ணனை
கோபீ ஜன மத்யத்திலும்
வித்வ ஜ்ஜன மயத்தை யுடைத்தான யாகாதி மஹா உத்ஸவத்திலும்
அசாதாரண சிஹ்னங்களோடே அனுபவிக்க ஆசைப்பட்டமை சொன்னார் ஆயிற்று

அன்றிக்கே
பாரதந்தர்ய காஷ்டா நிஷ்டரான பிரபத்தி நிஷ்டர் ஸமூஹத்திலும்
கர்ம கலாபாதி ப்ரவ்ருத்தி சீலரான கைங்கர்ய நிஷ்டர் ஸமூஹத்திலும் காண ஆசைப்பட்டார் ஆகவுமாம்

(கர்மமும் கைங்கர்யத்தில் புகும்)

அன்றியே
இரண்டும் ப்ராப்ய தசையிலேயாய்
வைகுண்டே து பர லோகே –பக்தைர் பாகவதை ஸஹ -லிங்க புராணம் என்றும்
அமரரும் முனிவரும் -திருவாய் -10-9-9-என்றும்
சொல்லுகிறபடியே
குண பரதந்த்ரரும் கைங்கர்ய வ்ருத்தி சீலருமான ஸூரி சங்கங்களைச்
சொல்லிற்று ஆகவுமாம்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

மோஹத்துக்கு அநந்தரம் அரதியாய்
ஓர் இடத்திலே தரியாதே பகவத் அலாபத்தாலே அங்கேயிங்கே தடுமாறிக்
கூப்பிட்டுக் கொண்டு திரிகிற படியைச் சொல்லுகிறது

க்வசித் உத் பிரமதே வேகாத் க்வசித் விப்ரமதே பலாத் க்வசின்மாந்த இவாபாதி
காந்தான் வேஷண தத் பர -ஆரண்ய –50-36-

வியாக்யானம்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
தையல் நல்லோர்கள் உண்டு ஸ்த்ரீ ரத்னங்கள்

குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
திரளாகத் திரண்ட திரள்களிலும்
பெண்கள் திரளைக் கண்டவாறே
திருக்குரவை என்று இருப்பார் ஆயிற்று இவர்

ஐய நல்லார்கள்
அறிவோர் அரும் தவத்தோர் ஐயர் என்று பண்டித வாசகங்கள்
ஐய நல்லோர்கள் உண்டு -பண்டிதராய் நல்லவராய் இருக்குமவர்கள்
அவர்களுடைய

குழிய விழவினும்
தீர்க ஸத்ரங்கள்
மற்றை யவற்றுக்காகத் திரள இருக்கிற படி இறே
அவற்றிலும் ஸ்ரீ தாண்ட காரண்யத்தில் ரிஷிகள் திரள் போலே இருக்கிற வற்றிலும்

ஸமாஜேஜூ மஹத் ஸூ ச -அயோத்யா –57-13 என்னுமா போலே

அங்கங்கெல்லாம்
அவற்றோடு போலியான இடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும்காண்பானவாவுவன் நான்
திருவாழி இன்றிக்கே மனிச்சேயான அவதாரத்தோடு
அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசியற
திவ்ய ஆயுதங்களோடே காண ஆசைப்பட்டு ஆயிற்று இவர் இருப்பது

ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு அன்றோ மறைப்பது
எனக்குக் காண தட்டென் என்று இருப்பார் ஆயிற்று

ஜா நாதும் அவதாரம் தே காம் சோயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13
ஸத் ப்ரக்ருதியானவன்
தேனைவ ரூபேண சதுர் புஜேந -ஸ்ரீ கீதை -11-45- என்றான் இறே

அவாவுவன் நான்
ஆசைக்காக கண் உண்டோ
காண வேணும் என்று ஆசைப்படும் இத்தனை போக்கிக் காண அரிது என்று அறிய மாட்டேன்
காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டார் யாரோ என்ன

மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே
விஷய தோஷம் இறே இதுக்கடி என்கிறார்
நற் சரக்கை இழந்தார் ஆறி இருப்பார்களோ

மைய வண்ணா
கண்டார் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே குளிர்ந்து இருக்கிற படி

மணியே
அப்படியே இருக்கச் செய்தே முடிந்து ஆளலாய் இருக்கிறது

முத்தமே
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி யாய் இருக்கை

என் தன் மாணிக்கமே
பெரு விலையனாய் இருக்கை –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் தன் கணவனைக் காணாமல் பொறுக்க மாட்டாத நாயகியாய்
கோப ஸ்த்ரீ சங்க ஸேவ்யனான கண்ணனாயும் –
அத்வர்ய் வாதிகளோடு மஹா சாவாத்யரோத் சாயாதிக்ருதனான சக்ரவர்த்தி திருமகனாயும்
திவ்ய அப்சரஸ் சங்க திவ்ய ஸூரி சங்க பரிசரண விஷய பரமபத நிலயனாயும்
மற்றும் அங்கங்காக தத் தத் சங்க சேவ்யனாயும்
காண அவாவைப் பெற்று
அவனில் தன் ப்ரீத்யபி வ்யஞ்ஜகமான திரு நாமங்களை உரக்கச் சொல்லி
விமுக்த லஜ்ஜையாய்க் கூப்பிடுகிறார் இதில்

வியாக்யானம் –

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
நல் ஸ்த்ரீகள் கூட்டமாய்க் கூடின கூட்டத்திலும்

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
ஸத் புருஷர்களாய்க் கூடிச் செய்யும் உத்ஸவங்களிலும்

அங்கங்கெல்லாம்
இப்படியாக அங்கங்காக உள்ள சங்கங்களில் எல்லாம்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
திருக்கைத் தலங்களுக்கு அழகு பெறுத்தும் அழகுள்ள திருவாழி ஆழ்வானோடும்
திருச்சங்கு ஆழ்வானோடும் காண வேணும் என்று மிக்க அவனைப் பெற்ற நான்

மைய வண்ணா
கரு வளர் மேனியாய்க் கண்ணுக்கு இட்டுக் கொள்ளவான மை போன்றவனே

மணியே
ஸ்வாதீன நீல ரத்னம் போன்றவனே

முத்தமே
கருணை யாகிற தெளி நீரால் அதிசயித்து எங்களை வெள்ளுயிராக்க வல்லவனே

என் தன் மாணிக்கமே
எனக்கு ஸர்வதோமுக நிரதிசய அதிசய நாயகனே
என்று ஸ்வயமேவ புலம்புகிறார் —

—————-

அவதாரிகை

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க
அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே
ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை
மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –
துறையடைவு-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –
எம்மா வீடு -2-9-

பதவுரை

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம் போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணி பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன் போன்ற ஒளியையுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமான உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம்
அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே
அன்றியே
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்

குரங்குதலாவது வளைதலாய்
உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி

உலகு அளந்த மாணிக்கமே
உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி
உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே

என் மரகதமே
அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –

அடியேன் அடி யாவி
சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது

யடைக்கலமே
உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ
ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று

இத்தால்
மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது

(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)

விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு
நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு பிராட்டி வார்த்தை யாதல்
அன்றிக்கே
அவள் தசையை அனுசந்தித்த திருத்தாயார் வார்த்தை யாதல் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து
குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே
பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே

அன்றிக்கே
குரங்கு என்று
விலங்குதலாய்
அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்
அப்போது
எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்

இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
இருளோடே வந்து சந்தித்து
மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –
என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று
எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது
குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –
ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி

இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படி

உலகு அளந்த மாணிக்கமே

ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று
தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே
காடும் மலையான இந்த பூமியை அளந்தது
ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்

மாணிக்கமே
பெறு விலையன் என்கை
தன்னைப் பாராதே அழிய மாறின படி

என் மரகதமே
உடம்பிலே அணைத்தால்
ஸ்ரம ஹரமாய் இருக்கை

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
முதலிலே ஸ்லாக்யமாய்
உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே

அடியேன்
போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்

அடி யாவி
தலைமகள் வார்த்தை யானபோது
உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும்
வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும்
சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை

திருத்தாயார் வார்த்தையான போது
அடியேன் அடி
நாய்க்குட்டி என்னுமா போலே

யடைக்கலமே-
இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே
இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி

பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது
ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம்
என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி
தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது

அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-

உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே

ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே
பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே
அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று
ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே
உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று
அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால்
அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு
மாணிக்கத்தைக் கைக்கொண்டு

குரங்கு எறிவு ஒத்து
குரங்கு எறிந்தால் போலே

இருளோடு முட்டி
முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்

ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே
இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்

மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்

உலகு அளந்த மாணிக்கமே
அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே

என் மரகதமே
நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய்
மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே

அடி யாவி
உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்

அடியேன்
யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்

அதுக்கும் மேலே
உன் யடைக்கலமே
த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு பாடவோ –

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர்
ஆபத் சகன் அல்லாமையும்
ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும்
உதவாது ஒழிகிறானோ
இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று
நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-

பாசுரம் -86-அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர் –
துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –
வள வேழ்வுலகு -1-5-

பதவுரை

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக் கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந் நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை

(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)

இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது

அரனுக்கு நீக்கிவை -என்கையாலே
ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும்
விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை

படைக்கலம் -ஆயுதம்

(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-காலன் -ஆபரணம் என்றுமாம்)

நீக்கி ஏந்தி என்று சொல்லாய்
இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று
பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத்
தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை

எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –
இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ
அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ
எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று

இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எத்தனையேனும் இருள் வந்து மேலிட்டு பாதகமானாலும் அத்தலையில் ஒரு குறை சொல்ல
ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும் படி –

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு
சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது
நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற
படியைப் பற்றச் சொன்னது அத்தனை

கமலத்தல ரயன்
அவ்வளவு அன்றிக்கே
ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
லோக குருவுமாய்
பிதாவுமானவன்
தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன்
இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்

அயன் சென்னி என்னும் முடைக்கலம்
ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று

பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி
கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது

முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்
கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும்
ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன்
அவனுடைய

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள
பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு
ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்மஹத்தியைப் போக்கினவனை

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை
திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே
பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே
ஒளி விகஸநத்தை யுள்ளவனை

எம்மானை
இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை

என் சொல்லிப் புலம்புவனே –
எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

———

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்த ஸ்வரத்தைக் கேட்ட
ஸூஹ்ருத்துக்கள் இவருடைய ஆர்த்தியின் மேலே லௌகிக வியாபாரங்கள்
ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை நலிகிற படியைக் கண்டு
இப்படி லோக உபக்ரோசம் பிறக்கும் படி ஸ்மாரகங்கள் நலிவதே என்ற
ஈஸ்வரனை நோக்கி யுட் கொண்டு
வெறுத்து உரைத்த பாசுரத்தை
அன்றிலுக்கும் ஆழிக்கும் ஆற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
தோழி கிளர்ந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலம்பும் கனகுரல் போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-

பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பதவுரை

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையை யுடைய கருடப் பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக் கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி –
இத் திருவினை–திருமகள் போன்ற இப் பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
தன்னில் தான் புகுந்து வாய் அலகைக் கொடுத்து
அது உறக்கத்திலே நெகிழ்ந்தவாறே
விஸ்லேஷ ஆர்த்தி பிறந்து புலம்பும்படியான பிளந்த வாயையும்
கனத்த குரலையும் யுடைய அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்கு உள்ளே புகுரப் பாய்ந்து அலைகிற கம்பீர த்வநியை யுடைத்தாய்
ஆலிங்கநம் பண்ணுவாரைப் போலே சூழ்ந்த திரைக்கையை யுடைத்தான ஸமுத்ரமும்

ஆங்கவை
அந்த அவைகள்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உன்னுடைய பிரபலமான பெரிய திருவடியினுடைய ஆஸ்ரித ஸம் ரக்ஷணத்தில்
உதவியாகிற நலத்தைப் பாடின இதுவே குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் கூப்பிடும்படி யாக இவ்வன்றிலும் ஆழியும் செய்யக் கடவதோ

திருமால்
திருமாலே என்று தன்னிலே முன்னிலையாகச் சொல்லுகிறாள்
நீயும் ஒருத்திக்கு நல்லையாய் அன்றோ இருக்கிறாய்
அவள் என் நினைக்கும் என்று கருத்து

இத் திருவினையே
அத் திருவுக்கு நிழல் என்றாகிலும்
இவளைப் பார்க்க வேண்டாவோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று —

இத்தால்

சிறியாரோடு பெரியாரோடு (அன்றிலும் கடலும் )வாசியற போக அர்த்தமான
பரஸ்பர ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே சோக ஹர்ஷங்கள் யுண்டாய்க் கொண்டு
நடக்கிற படியைக் கண்டு
தமக்கு ஈஸ்வரனோடு போகம் சித்திக்கைக்கு ஈடான பரிகரம் (பெரிய திருவடி )அவனுக்கு உண்டாய் இருக்க
நமக்கு இழக்க வேண்டுவது இல்லை இறே என்கிற
ஸந்தோஷமே குற்றமாக
இந்த ஸ்மாரகங்கள் இவரை நலியும் படியாவதே என்று ஸூஹ்ருத பூதர்
ஈஸ்வரனைக் குறித்துத் தம்மிலே வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அனுகூல பதார்த்தங்களும் பிரதிகூலமாய் இவள் நோவு பட அத்தாலே
இவளையும் உம்மையும் நாட்டார் பழி சொல்லும்படியான செயல்களை
நீர் பண்ணுவதே என்று திருத்தாயார் சொல்லுகிறாள் –

வியாக்யானம் —

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் செறிந்த த்வனியை யுடைத்தாய்
பிரிந்து தனி இருப்பாரே இரு துண்டமாக விடுகிற வாயையுடைய அன்றில்களும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழியிலே வரப் பாயா நிற்பதாய்
ஊமைக் கூறான த்வனியை யுடைத்தாய் பரந்த திரைகளை யுடைய கடலும்

ஆங்கவை
பிரிந்து இருப்பார்க்கு மேடும் பாதகங்களும்
சேக்கழுத்தில் மணி ஓசை என்ன
தென்றல் என்ன
சந்த்ர உதயம் என்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்று ஆதல்
கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லி ற்று ஆதல்
இவை பாதகம் ஆகா நின்றன

என்ன குற்றம் செய்தாள் என்று
இவை பாதகம் ஆகிறது

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கு அசாதாரணமாய்
பலத்தை யுடைத்தாய்
கருடோ வாருணம் ச்சத்ரம் ததைவ மணி பர்வதம் ஸா பர்யாஞ்ச ஹ்ருஷீ கேசம்
லீலையைவ வஹந்யயவ் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-30-1 )என்கிறபடியே
தாரண சாமர்த்தியத்தை யுடையனான பெரிய திருவடியின் நலம் உண்டு
த்வத் அங்கரி ஸம் மர்த்த கிணாங்க ஸோபிநா -ஸ்தோத்ர ரத்னம் –41- என்கிறபடியே
அவன் அடிமை செய்து தழும்பு சுமந்தால் போலே ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத்
தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு அவனைப் பாடின
இது குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாகக்
கை எடுத்துப் பழி சொல்லும்படி பண்ணுவதே

திருமால்
நீர் ப்ரணயிகள் இல்லீராய்த் தான் இப்படிச் செய்கிறீரோ

இத்திருவினையே
உம்மை ஆசைப்பட்ட அளவில் குறைந்தாளோ அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்ட இவள்
ராவணாதிகள் பெருமாளை பழி சொல்ல ராக்ஷஸிகள் தன்னை நெருக்க
இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ இவள்
அன்றில்
கடலோசை
தொடக்கமானவை நலிய அத்தால் நோவு படா நின்றாள் என்று
நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு இருப்பதே
உம்முடைய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை அன்றோ என்றபடி –

ஸ்வாபதேசம்

இத்தால்
அத்தலையாலே வரக்கண்டு ஆறி இருக்குமது அன்றிக்கே இவள் க்ரம பிராப்தி பற்றாமை பதறி மேல் விழ
நீர் தாழ்த்தீராய் இருக்கும் இது உமக்கு குறை அன்றோ என்று
இவர் தசையை அனுசந்தித்தவர்கள் பாசுரமாய் இருக்கிறது

ந மே பக்த பிரணஸ்யதி -ஸ்ரீ கீதை -9-31-
மறந்தீரோ என்கிறாள்

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி உன் பிரிவு பொறாமல் உன்னைப் புலம்பும் இத்திருவினை
அன்றிலும் ஆழியும் பாதிப்பதும்
உன்னைப் பாடுமது குற்றமாக வையம் எல்லாம் இவளைப் பழி சொல்லுமத்தும்
செய்வதே திருமால் என்று சொல்லும்
தாயாராய் அருளிச் செய்கிறார் இதில் —

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
உன்னைப்பிரிந்து தனி இருப்பாரே இரு பிளவாக்கும் சஞ்சுவையும்
அத்தால் சிலம்புவதும் கணைப்பதும் உள்ள அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்குள் புகுரப் பாய்ந்து அதில் உள்ள பதார்த்தங்களை அலப்பும் போது
கனைத்துக் கொண்டும்
பெரும் குரல் செய்து கொண்டும் ஒன்றுக்கு ஓன்று ஆஸ்லேஷித்துக் கொண்டு
வருகிற திரைகளை யுள்ள கடலும்

ஆங்கவை
ஏவம் பூதமாயுள்ள
புலம்புறு மணி
தென்றல்
முல்லை
மல்லிகை –(திருவாய் –9-9-1–9-9-2)முதலானவையும்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கே சேஷமும்
பலவத்தரமுமான
பசி ராஜனுக்குள்ள நன்மையைப் பாடின இதுவே ஒரு தப்பாக்கி

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் இவளை பழி சொல்லும்படி செய்வைத்து உனக்குத் தகுமோ

திருமால்
நீர் தெருவில் மால் செய்யுமதுக்கும்
இவளை பிரிந்து இங்கனே பாதிப்பத்துக்கும் என்ன சேர்த்தி யுண்டு

இத்திருவினையே
அத்திருவுக்கு இவள் அன்றோ ஸ்தந பாஹ் வாதிகளாய் விளங்கினவள்
உம்முடைய ரசிகதைக்கு இது கொத்தை காண் என்கிறாள் –

—————

இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர்
பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க
அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை
நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-

பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –
துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –
புகழும் நல் ஒருவன் -3-4-

பதவுரை

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அ மேருவில் செம் சடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்

பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே
ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி

அம் மேருவில் செஞ்சுடரோன்
அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்

மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை

அன்ன கண்டும்

அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே
அக்ரமமாகச் சொல்லும்படியான

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு
அத்விதீயமாய்
சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு

எங்கே வரும் தீ வினையே –
விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று

ஏவம் ஹவா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று
அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது

ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே
பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று

கிளவியிலும்
நாயகன் ஈஸ்வரனாகையாலே
நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான
தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே
இத்தைப் பழி சொல்லும்படியாகப் பெற்ற நமக்கு குறை யுண்டோ என்கிறார்
இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
ஸர்வதா ஸத்ருசமாய் இருபத்தொரு வஸ்து இல்லாத படி இருக்கிற ஸர்வேஸ்வரன்
திரு மேனிக்குச் சேர்ந்து இருபதொரு உபமானத்தைக் கண்டால்
உபமான ரஹிதமான வஸ்துவுக்குக் கதிர் பொறுக்கி யாகிலும் இங்கனே
ஒரு உபமானம் உண்டாகப் பெற்றோம் என்று இது
ஆஸ்வாஸ ஹேது யன்றியே –
அவ்வுபமேயம் தன்னையே பெற வேணும் என்ற விடாய் பிறந்த நமக்கு
இனி ஒரு குறை யுண்டோ என்றது ஆதல்

அன்றிக்கே
அவனுடைய ஜெகதாகாரதையை அநு சந்தித்தால் அவ்வளவில் பர்யவசியாதே
அவனுடைய அசாதாரண விக்ரஹத்தைக் காண வேணும் என்னும் அபேக்ஷை
பிறக்கும் படியான எனக்கு ஒரு குறை யுண்டோ என்னுதல்

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
ஸ்ரீ யபதியினுடைய வடிவோடு ஒத்து இரா நின்றது மேருவானது
வளர்த்தியாலும்
புகாராலும்

அம்மேருவில் செஞ்சுடரோன்
அம் மேருவில் ஸஞ்சரியா நிற்கிற ஆதித்யன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
வடிவார் சோதி வளைத்து உறையும் சுடர் ஆழியும் -( திருப்பல்லாண்டு -2-)என்றபடியே
அவர் திருக்கையில் திருவாழியைப் போலே இருக்கும்

அன்ன கண்டும்
இப்படி அவனுக்குப் போலியானவற்றைக் கண்டு வைத்தும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ யபதியுடைய அந்த மேரு ஒக்கும் திருமேனியையும்
வலக்கை யாழி இடக்கைச் சங்கம் –(திருவாய் -6-4-9 ) என்கிறபடியே
அவ்வாசாதாரண சிஹ்னத்தையும் காணவென்று ஆசைப்பட்டுப் பிதற்றா

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே –

————–

அவதாரிகை

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும்
பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய்
ஸூலபனான இவனை
என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்

இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

பாசுரம் –89–தீ வினைக்கு அரு நஞ்சை –
துறையடைவு-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —
அங்கும் இங்கும் -8-3-

பதவுரை

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
கொடிதாய்
துக்கத்தை விளைப்பதான
துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை

ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல

அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்

நல் வினைக்கின்ன முதத்தினை
ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு
நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை

பூவினை மேவிய தேவி மணாளனை
அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்
நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை

(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபனம் பட்டர்)

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே
சிறுமை என்று இகழாதே பசுக்களை மேக்கப் கடவனாய்
அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை

அன்றுலகீரடியால் தாவின வேற்றை
இப்படி இனியனானாலும்
தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில்
தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை

எம்மானை
கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை

எஞ்ஜான்று தலைப் பெய்வனே –
இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை
அது எக்காலம் என்றதாயிற்று –

———————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளில் காட்டில் வ்யவ்ருத்தராகப் பெற்றோம்
இனி அவனைப் பெற்று அனுபவிக்கிறவர்களோடே ஸஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார்

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமான துஷ் கர்மங்களுக்கு
ஆற்ற ஒண்ணாத நஞ்சாய் யுள்ளவனை

நல் வினைக்கு
பலாபி சந்தி ரஹிதமான
இன்ன முதத்தினை

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக
நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான
விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்
நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று
பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று
ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க

இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்

இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்

தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப் பெய்த வாக்கைக்கு நோற்ற விம் மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-

பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –
துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –
குரவை ஆய்ச்சியர் -6–4–

பதவுரை

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப் பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக்குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்
காண்தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

வியாக்யானம்

தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று
சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி
திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு
உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்

(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்
தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய்
ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்
கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று
நடத்தித் தாராதே நிற்கிற படியையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின
திருவாழியை யுடைய
என் ஸ்வாமி யானவனே

தொல்லை யூழி சுருங்கலதே –
விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும்
பரிகரம் தேட வேண்டாமையாலும்
பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால்
முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு
வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப் பெய்வன் -என்று இறே கீழ் நின்றது
என்றாகில் என்
பகவத் விஷயத்தில் ஸ்பர்சம் பலத்தோடு சம்பந்திப்பித்து விடும் என்று
விஸ்வஸித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன
அப்படி செய்யலாயிற்று இறே ஸம்ஸாரிகளைப் போலே நிரபேஷனானேனாகில் –
எனக்கு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண அரிதாகா நின்றது என்கிறார்

இப் பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
உன் திருவடிகளை ஸமாஸ்ரயிக்கைக்கு ஈடாய் இருபத்தொரு

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம் —

இதில் இங்கனே அந்வயம்
உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த
யான்
தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
தொல்லை யூழி சுருங்கலதே –என்று

உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது

இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்

பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று
தொடங்கி அருளிச் செய்தபடி
ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ
பர
ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்

உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய்
உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி

இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று
உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது
ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத
நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்

இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்
ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி
பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி

இம்மூன்றையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே
என்னை ஆண்டு கொண்டவனே

தொல்லை யூழி சுருங்கலதே
உன்னையே அனுபவித்தும்
உனக்கே அடிமை செய்தும்
கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே
ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று
இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

One Response to “ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -81-90–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –”

  1. ram050161 Says:

    I thought the word Eedu is applicable only for Nampillai Eedu= Bhagavath vishayam = 36 aayirappadi vyakyanam for Thiruvaimozhi.
    Is it ok to say Eedu for all Nampillai vyakyanams.
    Pardon me if I am wrong.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading