Archive for the ‘-திரு வாய் மொழி நூற்று அந்தாதி’ Category

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -ஐந்தாம் பத்து–பாசுரங்கள்- 41-50-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் சம்சாரிகளையும் திருத்தும் படியாக ஸ்ரீ சர்வேஸ்வரன் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே
வித்தராகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வ பிராப்தி சாதனங்களில் இறங்காமல் துர் விஷயங்களிலே மண்டி இவ் வனர்த்தத்தை உணரவும் அறியாதே
அத்யந்தம் உபேஷ்யனாய்-சம்சாரிகளில் அந்ய தமனான வென்னை
இவை ஒன்றுமே பாராமல் நிர்ஹேதுகமாக அங்கீகரித்து-தன் திருவடிகளிலே சேஷத்வத்தையும் அறிவித்து
கைங்கர்யத்தால் அல்லாது செல்லாதபடி பண்ணி பிறரையும் திருத்தும்படியான சதிரையும் உண்டாக்கி
என் பக்கல் வ்யாமுக்தனாய் என்னோடு வந்து கலந்தான் என்று ப்ரீதர் ஆகிற
கையார் சக்கரத்து -அர்த்தத்தை
கையாரும் சக்கரத்தோன் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் என்கை –

———————————————–

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான
பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து —–41-

———————————————–

வியாக்யானம்–

கையாரும் –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்று தொடங்கி
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்னும் அளவும்-கடாஷித்து அருளிச் செய்தபடி –

கையாரும் -சக்கரத்தோன் –
திருக்கை நிறையும்படி-திரு ஆழியை தரித்தது-அதுவே நிரூபகம் ஆனவன் –

காதல் இன்றிக்கே இருக்க –
ஸ்வ விஷய பக்தி இன்றிக்கே இருக்க –

கையாரும் -சக்கரத்தோன் -காதல் இன்றிக்கே இருக்க –பொய்யாகப் பேசும் புறனுரைக்கு –
சக்கரத்து உன்னையே அவி இன்றி ஆதரிக்கும் என் ஆவியே -என்னும்படி
தத் விஷயத்தில் ப்ரேமம் உண்டாக வேண்டி இருக்க
இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –

பொய்யாகப் பேசும் புறன் உரையாவது –
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே யாடி -என்றும்
என்று என்றே சில கூத்துச் சொல்ல -என்றும்
புறமே சில மாயம் சொல்லி -என்றும்
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -என்றும்–இப்புடைகளிலே சொன்னவை –

ஏவம் விதமான-மித்ர பாவ-மாத்ர ஜல்பிதங்களுக்கு
மெய்யான பேற்றை யுபகரித்த-
யதா ஞானம் உடையார் பேறும் சத்யமான பேற்றை உபகரித்த – அதாவது –
மெய்யே பெற்று ஒழிந்தேன் -என்றும்
என்னாகி ஒழிந்தான் -என்றும்
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்றும்
எம்பிரானும் என் மேலானே -என்றும்
மாலார் வந்து இன்னாள் அடியேன் மனத்தே மன்னினார் -என்றும்
அடியோனோடும் ஆனானே -என்றும்
ஆனான் ஆளுடையான் என்னை முற்றவும் தானான் -என்றும் -பேசும்படியான இப் பேற்றை என்றபடி –

இத்தை யுபகரிக்கை அடி என் என்னில்
பேர் அருள் -என்கிறது-அதாவது –
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்றும்
எம்மா பாவியேற்கும் விதி வாய்கின்று வாய்க்கும் -என்றும்
ஆவா வென்று அருள் செய்து -என்றும்
தானே இன்னருள் செய்து -என்றும்-அருளிச் செய்தவை-என்கை –

பேர் அருளின் தன்மைதனை -போற்றினனே மாறன் பொலிந்து-
அதாவது
இரும்பைப் பொன் ஆக்குவது போலே-நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சூரிகள் பேற்றை உபகரிக்கும்
ஸ்ரீ எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை
ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஸ்ரீ ஆழ்வார் -என்கை
க்ருபயா பர்யபாலயத் -என்னுமா போலே-

———————————————————————————–

அவதாரிகை –

ஒன்றும் தேவில் -தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணியும்
திருந்தாதவரைத் திருத்தியும் செல்லுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் ஒன்றும் தேவிலே தாம் பண்ணின ஸ்ரீ பகவத் பரத்வ உபதேசத்தைக் கேட்டு
சம்சார பரமபத விபாகம் அறும்படி-நாடாக திருந்தின பாகவத சம்ருத்தியைக் கண்டு ஹ்ருஷ்டராய்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணியும்
திருந்துகைக்கு யோக்யதை யுடையாரை உபதேசித்துத் திருத்தியும்-திருந்தாதவரை உபேஷித்தும் செல்லுகிற
பொலிக பொலிக பொலிக – வில் அர்த்தத்தை -பொலிக பொலிக -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை-

————————————————–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி -உலகில்
திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு—42-

—————————————————–

வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி –
ஜெயத்பதி பலோ ராமோ லஷ்மணஸ் ஸ மஹாபலா
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலிதா -என்னும்படி
பூ மகள் கோன் தொண்டர் மலிவு தன்னைக் கண்டு உகந்து
பொலிக பொலிக என்று வாழ்த்தி –

பூ மகள் கோன் தொண்டர் மலிவாவது –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து -என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடி -என்றும்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து -என்றும்
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் -என்றும்
இவ்வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் -என்றும்
பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான்
நேமிப்பிரான் தமர் போந்தார் ஞாலம் பரந்தார் -என்றும்
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே -என்றும்
இப்படி நித்ய சித்தர்–ஸ்வேததீப வாசிகள் முதலான ஸ்ரீ திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்-ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-

கண்டு –
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக-தம் கண்களாலே கண்டு

உகந்து –
கண்டோம் கண்டோம் கண்டோம்-கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –

வாழ்த்தி –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக -என்று மங்களா சாசனம் பண்ணி
உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு-
ஒன்றும் தேவில் உபதேசத்தாலும் திருந்தாதே-ஒதுங்கி இருந்தவர்களைக் குறித்து
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
எவ்வுலகும் தன மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –என்றும்
ஒக்கத் தொழ கிற்றீர் ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லையே -என்று
இப்படி பரத்வ உபதேசம் பண்ணி திருத்தியும்

அதிலும் திருந்தாதவர்களைக் குறித்து
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர்
உழி பேர்த்திடும் கொன்றே -என்று-தேடி தடவிப் பிடித்து
பிரத்யா புரச்சரமாய்த் திருத்தியும் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி
ஔஷதம் அடியாக மநோ மாலின்யம் நிவ்ருத்தமாம் –
ஸ்ரீ வைஷ்ணவ சஜாதீய புத்தியும்
தேவ தாந்த்ரங்கள் இடத்தில் பரத்வ புத்தியும் இறே மநோ மாலின்யம் ஆவது
மனனகம் மலமறக் கழுவி -என்று இறே அருளிச் செய்தது –

விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் -சம்சாரம் -விஷ வருஷம் -கேசவ பக்தியும் -பாகவத சமாப்தம்
அடிமை புக்காரையும் ஆட செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஸ்ரீ விபீஷணர் சொற் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து
தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை மேவிப் பரவும் அவரோடு ஒக்கத் தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கிக் கண்ணுக்கு இனியன காட்டலாம்படி யானார்
கண்ணில் நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்
என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது

————————————————

அவதாரிகை –

இதில் கீழ்-5-2- பிரஸ்துதமான வடிவு அழகை அனுபவிக்கப் பெறாமல் மடல் எடுக்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இப்படி இவர் பிறரைத் திருத்தி-4-10–அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணி-கை ஒழிந்த பின்பு-5-2-
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்று அவன் சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து
பழைய தம் இழவு -ஏறாளும் இறையோன் -4-8-தலை எடுத்து
வழி அல்லா வழியில் இழிந்து-இரண்டு தலையையும் அழித்தாகிலும் அவனோடு கலக்கக் கடவோம்
என்று ப்ராப்ய ருசி பாரவச்யத்தாலே முன்னாடி தோற்றாமல் கண் கலங்கிச் செல்லும் தம் தசா விசேஷத்தை
அவனோடு கலந்து பிரிந்து
ஆற்றாமையாலே கண்ணான் சுழலை இட்டு நாடாகப் பழி சொல்லும்படி அவனுக்கு அவத்யம் விளைவித்து
என்று மடலூருகையில் ஒருப்பட்டு சொல்லுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
மாசறு சோதி- யில் அர்த்தத்தை மாசறு சோதி கண்ணன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

—————————————————————-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்–43-

—————————————————————-

வியாக்யானம்–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து –
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்றும்
என் செய்வாய் -மாசறு சோதி -மணிக்குன்றம் -என்றும்
எம் கண்ணன் -என்றும்
சொல்லும் படி அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன் தன் ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே -அபி நிவேசம் அதிசயத்து -அதாவது –
பாசறவெய்தி -என்றும்
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பூர்ந்த -என்றும்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி யோர் சொல்லிலேன் -என்றும்
காதல் கடல் புரைய விளைத்த -என்றும்
கொடிய வன்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்றும்
மணி வண்ணன் வாசுதேவன் வலை யுள் அகப்பட்டேன் -என்றும்
தலையில் வணங்க வுமாம் கொலோ -என்றும்
எந்நாள் கொலோ யாம் உறுகின்றது -என்றும்–அருளிச் செய்தவை -என்கை –

இப்படி ஆசை அதிசயிக்கையாலே – பழிக்கு அஞ்சாமல் -ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணையுமவள் ஆகையாலே அஞ்சாதே – அப் பழிச் சொல்லே தாரகமாக-அதாவது –
சீதே தஸ்மாத் துக்க மதோவ நம் -என்று வனத்தை நிஷேதித்து அருளிச் செய்ய
அக்ரதஸ் தேக மிஷ்யாமி -என்றும்
யான சக்யா புரா த்ரஷ்டும் போதை ராகாசகை ரபி தாமத்ய சீதாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜனா -என்றும் சொல்லுகிறபடியே
ஊரவர் கவ்வை தோழி என் செய்யும் -என்றும்
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழி இனி நம்மை -என்றும் –
தீர்ந்த என் தோழி என் செய்யும் ஊரவர் கவவையே -என்றும்
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் மடுத்து -என்றும்
அன்னை என் செய்யுமே -என்றும்
அன்னை என் செய்யில் என் – என் சொல்லில் என் தோழிமீர் -என்றும்-
அவர்கள் நிஷேத வசனங்களை ஒரு சரக்கு அறச் சொன்னவை -என்கை –

பழிக்கு அஞ்சாமல் ஏசறவே –
அபவாத பீதி இன்றிக்கே ஏசும் எல்லை கடந்து
அன்றிக்கே
எல்லாரும் துக்கிக்க -என்றுமாம் –
அன்றிக்கே
ஏசவே -என்ற பாடமான போது
பழி சொல்லவும் சொல்லி ஏச என்று ஆகவுமாம்-

மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர் –
அதாவது
குதிரியாய் மடலூர்துமே -என்றும்
நாடுமிரைக்கவே –யாம் மடலூர்ந்தும் -என்றும்-ஜகத் ஷோபம் பிறக்கும்படி இஜ் ஜகத்திலே மடலூர ஸ்ரீ ஆழ்வார் ஒருப்பட்டார்
தாம் அவதரித்த இவ் ஊரில் உள்ளார் இச்சாஹாச பிரவ்ருதியைக் கண்டு ஹ்ருதயம் கம்பிக்கும்படியாக
இப்படி உத்யோகித்த இது ஏதாய் விளைகிறதோ -என்று தாமும் அவ் ஊரில் அவதரித்தவர் ஆகையாலே இவரும் தளும்புகிறார்-

—————————————————————

அவதாரிகை –

இதில்-இரவு நெடுமையாலே நோவுபடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே பேசுகிறபடியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
இது எங்கனே என்னில்-
1-ஸ்வ பர ஸ்வரூபங்களை அந்யாகரித்து -வழி அல்லா வழியிலே இழிந்தும் அவனைப் பெற வேணும் என்னும்படி
2-முடுக வடியிடுகிற பிராப்ய த்வரையும்
3-கலங்கி-அவன் தான்பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -நம் பேற்றுக்குத் த்வரிக்கக் கூடாதே
ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்களிலே மூழுகைக்கு உறுப்பான
4-தெளிவை அமுக்கி
5-கிளருகிற அஞ்ஞானம் ஆகிற வல்லிருளிலே போக்கிட மற்றுத் தெகுடாடுகிற தம் தசையை
பிரிவாற்றாளாய் மடல் எடுக்கையில் உத்யோகித்த அளவிலே
தைவ யோகத்தாலே சூர்யன் அஸ்தமித்து மத்திய ராத்ரியாய் சப்தாதிகளிலே நெஞ்சு பாலிபாயாமையாலே
விஸ்லேஷ வ்யசனம் ஒருமடை செய்ய காலமும் விடியாது ஒழிய-மடல் எடுக்கை போய் — முடிகை தேட்டமான அளவிலே
அதுவும் கிடையாமையால்
இப்படி இரவு நெடுமையால் ஈடுபட்டுப் பேசுகிற ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
ஊரெல்லாம் துஞ்சி -யில் அர்த்தத்தை–ஊர நினைந்த மடல் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் என்கை –

———————————————————

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ—-44-

———————————————————-

வியாக்யானம்–

ஊர நினைந்த மடலூரவும் –
குதிரியாய் மடலூர்த்தும் என்று ஊர நினைந்த மடல் —

ஊரவும் ஒண்ணாத படி –
ஆதித்யனும் அஸ்தமித்து பிரியம் சொல்லுவார் ஹிதம் சொல்லுவார் பழி சொல்லுவார் எல்லாரும் உறங்குகையாலும்
இருள் வந்து மூடுகையாலும் மடலூர்வதும் கூடாத படியாக –

கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல் தீது செய்ய –
அதுக்கு மேலே அத்யந்த அந்தகாரத்தோடே ராத்ரியானது கூட்டுப் படையோடு கூடி நின்று இட்ட அடி பேராமல்
தீது செய்ய -பொல்லாங்கை உண்டாக்க –
அதாவது
ராவண மாயைக்கு அஞ்சி
சீதாதா வேண்யுத் க்ரதநம் க்ருஹீத்வா –என்றும்
விஷய தாதா நஹி மேஸ்தி கச்சிச் ச சத்ரச்ய வரவேஸ் நிராஷசய -என்றும் சொல்லுகிறபடியே
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிரவாய் நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால் -என்றும்
மா விகாரமாயோர் வல்லிரவாய் நீண்டதால் -என்றும்
ஓயும் பொழுது இன்று ஊழியாய் நீண்டதால் -என்றும்
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் -என்றும்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றும்
கங்கிருளின் நுண் துளியாய் சேட்பால் அது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய் -என்றும்
ஓர் இரவேழு ஊழியாய் -என்றும்
வீங்கிருளின் உண்டுளியாய்-என்றும்
செல்கின்ற கங்குல் வாய் -என்றும் –
இப்படி தமஸ் உடன் கூடின ராத்திரி பேராமல் நின்று துக்கத்தை யுண்டாக்க -என்றபடி

இப்படி ஆகையாலே –
மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ -என்கிறார் –

மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்-ஆவது –
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே -என்றும்
ஆவி காப்பார் இனி யார் -என்றும்
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே –மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தேன் -என்றும்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் யார் என்னையே -என்றும்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே -என்றும்
இந்நின்ற நீளாவி காப்பார் யார் இவ்விடத்தே -என்றும்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ -என்றும்
எனதாவி மெலிவிக்கும் -என்றும்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே -என்றும்-அருளிச் செய்தவை ஆயிற்று –

ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம் அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது
ஆகையால் பேசி முடியாததை எங்கனே பேசுவது என்று ஈடுபடுகிறார்
எங்கனயோ -என்று வார்த்தைப் பாடு ஆதல் –

——————————————

அவதாரிகை –
இதில்-உரு வெளிப்பாட்டாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று ரஷகனுடைய குண ஞானத்தாலே மீளவும் தெளிவு குடி புகுந்து
நம்பியைத் தென்குருங்குடி நின்ற -1-10–என்று
முன்பு அனுபூதமான ஸ்ரீ நம்பி உடைய வடிவு அழகு நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு
அனுபவிக்கப் பெறாமையாலும்
ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை ஸ்ரீ நாயகனோடு கலந்து பிரிந்து
உரு வெளிப்பாட்டாலே உருவ நோவுபட்டு செல்லுகிற ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
எங்கனயோ – வில் அர்த்தத்தை-எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —
அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் –
உரு வெளிப்பாடு –முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –

————————————————–

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

—————————————————

வியாக்யானம்–

எங்கனே நீர் முனிவது என்னை –
இவ் வாற்றாமைக்கு ஊற்றுவாயான நீங்கள் இவ் வபிநிவேசம் உடைய என்னை பொடிவது எங்கனே –
எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் -என்றத்தை பின் சென்றபடி –

இனி -எங்கனே நீர் முனிவது –
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் –இனி முனியக் கூடுமோ –
அதுக்கு முன்னே அன்றோ முனிய வேண்டுவது –
அதுக்கு மேலே
சந்திர காந்தாநனம் ராமம் அதிவ்ய பிரிய தர்சனம் -என்னும்படி-ருசி ஜனக லாவண்ய விபவமானது
அசௌ புருஷ ரிஷப ராம -என்னும் படி-உருவ வெளிப்பாடாய் –

ஸ்ரீ நம்பி அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே –
குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான ஸ்ரீ நம்பி யுடைய
திவ்ய ஆயுத
திவ்ய ஆபரண
திவ்ய அவயவ சோபைகள் ஆனது
அது கண்டு உகக்கிற என் முன்னே பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –
அதாவது –
சங்கினோடும் நேமியோடும் -என்றும்
மின்னு நூலும் குண்டலமும் -என்றும்
வென்றி வில்லும் தண்டும் வாளும் -என்றும்
பூம் தண் மாலை தண் துழாய் பொன் முடியும் வடிவும் -என்றும்
தொக்க சோதித் தொண்டை வாயும் -என்றும்
கோல நீள் கொடி மூக்கும் -என்றும்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் -என்றும்
செய்ய தாமரைக் கண்ணும் -என்றும்
சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தன் -என்றும்
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்-இப்படி அடி தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரகாரத்தை
அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த –
அப்படியே-உரு வெளிப்பாடு என்கிற துறையிலே வைத்து அருளிச் செய்த –

தமிழ் மாறன் –
ஸ்ரீ திராவிட ப்ரஹ்ம தர்சியான ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ நம்பி விஷயமாக எங்கனயோ -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் -என்றபடி –

கருதும் அவர்க்கு இன்பக் கடல் –
அபிநிவேசத்துடன் அனுபவிப்பார்க்கு ஆனந்த சிந்துவாய் இருப்பார் –
சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று
ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே
அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –

—————————————————

அவதாரிகை-

இதில் அனுகாரத்தாலே தரிக்கப் பார்க்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
எங்கனயோ -வில் பிரீதி அபரீதி சமமாய் சென்ற இடத்தில்
ப்ரீத்யம்சம் தலை எடுத்து தரிக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க
பாஹ்ய ஹானியாலே அப்ரீதியம்சமே தலை எடுத்து
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-ஆற்றாமை கரை புரண்டு
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்தால் போலே இவரும் உபய விபூதி நாதனை அனுகரித்து
தரிக்கப் பார்க்கிற படியைக் கண்டு கண் கலங்கின பரிவர் சந்நிஹிதர்க்கு விலஷணராய் சொல்லிச் செல்லுகிற க்ரமத்தை
ஸ்ரீ நாயகனைப் பிரிந்த ஆற்றாமையாலே-தத் பிரகாரங்களை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற
தலைவி நிலையை வினவ வந்தவர்களுக்கு
ஸ்ரீ திருத் தாயார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆவிஷ்டன் ஆனானோ -என்று
க்லேசத்தாலே சொல்லுகிற துறையிலே வைத்து அருளிச் செய்கிற -கடல் ஞாலத்தில் அர்த்தத்தை
கடல் ஞாலத்து ஈசனை -என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

5-2- உறுதி இருந்தது -5-3/5-4/5-5–தளர்ந்து போனாரே -மீண்டும் அவனை அனுகரித்து -அதனால் பெற்ற
-கொஞ்சம் உறுதி -தானாக பேசாமல் -திருத் தாயார் பேச்சாக –

————————————————–

வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை –
கடல் சூழ்ந்த பூமியில் உள்ளோர்க்கு நியந்தாவாய்-அத்தாலே சர்வ நிர்வாஹகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை

முன் காணாமல் நொந்தே –
பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து -அதாவது –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
அறிவரிய பிரானை -என்றும்-அருளிச் செய்த மானஸ சாஷாத்கார மாத்ரம் ஒழிய
பிரத்யஷ சாஷாத்காரம் இல்லை -என்றபடி – அத்தாலே அவசன்னராய் –

உடனா வனுகரிக்கலுற்று –
அனந்தரமாக
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்த படியை ஆராய்ந்து தாமும் அனுகரித்து தரிப்பதாக
திரு உள்ளத்திலே உற்று –

திடமாக வாய்ந்து –
திருட அத்யாவச்ய யுக்தராய்-வாழ்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி-பாவ பந்தத்தோடு கிட்டி –

அவனாய்த் தான் பேசும் -அதாவது –
கடல் ஞாலம் -என்றும்
கற்கும் கல்வி என்றும்
காண்கின்ற -என்றும்
செய்கின்ற -என்றும்
திறம்பாமல் -என்றும்
இனவேய்-என்றும்
உற்றார்கள் என்றும்
உறைக்கின்ற -என்றும்
கொடிய வினை -என்றும்
கொலங்கொள் -என்றும்
கூந்தல் -என்றும்
என்கிற இவை ஆதியாக -பத்தும் பத்தாக –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள்
சகல வித்யா வேதனமும்
வித்யா ப்ரவர்தகத்வாதிகளும்
காரணமான பூத பஞ்சகங்களும்
கால த்ரயத்தால் உண்டான க்ரியா ஜாதங்களும்
ஜகத் ரஷண பிரமுகமான சேஷ்டிதங்களும்
ஸ்ரீ கோவர்த்தன உத்தரணம் முதலான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களும்
ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித நாஸ்ரித விஷயங்களில் இருக்கும் இருப்பையும்
ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதி பிரகாரித்வமும்
அகர்ம வச்யத்வ பிரமுகமானவை ஸ்வர்க்க ப்ரமுகவானவையாய்
இப்படி உக்தங்கள் ஆனவை எல்லாம் நான் இட்ட வழக்கு என்று
யானே என்னை ஆய்ந்து ஏறப் பேசி –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –என்றபடி
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-

மாறன் உரையதனை –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியானத்தை –

ஆய்ந்துரைப்பார் –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று
இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –

ஆட் செய்ய நோற்றார் –
ஸ்ரீ திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று இறே அவர் இருப்பது
அஹத்வா ராவணம் சங்க்யே ச புத்ரம் சஹ பாந்தவம்–
கொடியான் இலங்கை செற்றேனே -என்னக் கடவது இறே-

————————————————

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ வானமாமலை திருவடிகளிலே வணங்கி பிரவணராய் சரணம் புக்க படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும்
ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான
தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செகிறோம் என்று
ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான
கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய வேறு ஒரு உபாயம் இல்லை -என்று
சம்சாரி சம்ரஷண அர்த்தமாக
ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ் ரீவர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற
நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-

———————————————————

நோற்ற நோன்பாதி யிலேன்  உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47-

————————————————————

வியாக்யானம்–

நோற்ற நோன்பாதியிலேன் –
இத்தால்-மோஷ சாதனமாக-சாஸ்திர சித்தமான கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷஸோ ராஷசேஸ்வரா
தச்யாஹம் அனுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -இத்யாதிகளாலே
முன்னிட்டு சரணம் அடைந்தால் போலே
நோற்ற நோன்பிலேன் -என்கிற பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –

உன் தனை விட்டாற்ற கில்லேன் –
தாரகனுமாய்-போக்யனுமாய்-இருக்கிற உன்னை விட்டு-தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —

ஆனால் பேற்றுக்கு சாதனம் என் என்னில் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே –
மோஷ உபாயம்
அரவின் அணை ஏறி வீற்று இருந்து -என்றும் –
சீவர மங்கை வாணனாய்-என்றும்
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாடனாய்-
இப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற தேவர் அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
அதாவது –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றும்
தமியேனுக்கு அருளாய் -என்றும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட -என்றும்
அருளாய் உய்யுமாறு -எனக்கு -என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்றும் – அருளிச் செய்தவை-என்கை –

மற்றும் உண்டான பாட்டுக்கள் -அருளுக்கு அடியான அவன் படிகளையும்
அதுக்கு உடலாகத் தம் படிகளையும்-அருளிச் செய்தவையாய் இருக்கும் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே சாற்றுகின்றேன் –
ஆகையாலே அவன் நிர்ஹேதுக கிருபையே சாதனம் -என்னுமது எல்லாரும் அறியும்படி
பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

இங்கு என்னிலை என்னும் –
இவ்விடத்தில்-இவ்வர்த்த விஷயத்தில் – என்னுடைய நிஷ்டை இது என்னும்
அத்தலையில் பூர்த்தியாலே-இத்தலையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிடுகை இறே
பரதந்த்ரனான ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்னும் –

எழில் மாறன் -சொல் வல்லார்
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய
வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –

அங்கு அமரர்க்கு ஆராவமுது –
அவ்விடத்தில்-அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
ஸ்ரீ சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே -என்றத்தை அருளிச் செய்தபடி –

———————————————————

அவதாரிகை –

அகிஞ்சனராய்-ஆர்த்தியோடே பிரபத்தி பண்ணி இருக்கச் செய்தேயும் ஸ்ரீ ஆராவமுதாழ்வார்
இவர் ஸ்ரீ நம்மாழ்வார் -என்று அபிமானித்து அபேஷிதம் செய்யாமையாலே
அலமந்து ஆர்த்தராய் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விடத்திலும் அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே
ஆஸ்ரித ரஷண தீஷிதனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –
எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது என்று ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸ்ரீ ஆராவமுதாழ்வார்
திருவடிகளிலே செல்லவே நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில்
அவர் எழுந்து இருத்தல்
இருத்தல்
உலாவி அருளுதல்
இன் சொல்லுச் சொல்லுதல்
குளிர நோக்குதல்
அரவணைத்தல்–செய்து அருளக் காணாமையாலே
ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்–நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க
அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு குலையாது ஒழியப் பெற்றோமே
என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற ஸ்ரீ ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ஆராவமுதாழ்வார் -என்று தொடங்கி -என்கை –

————————————————————–

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் —48-

ஆராவமுதன் -ஆழ்வார் ஆதரித்த -என்று பிரித்தும் பொருள் உரைப்பார் உண்டு

——————————————————————

வியாக்யானம்–

ஆராவமுதாழ்வார் –
சஹபத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று ‘கூட்டித் தேடி அனுபவிக்கும் படி
நிரதிசய போக்யராய் –
ஸ்ரீ மான் ஸூக ஸூபத -என்னும்படி- ஏரார் கோலம் திகழக் கிடந்த ஸ்ரீ ஆராவமுதாழ்வார் –

ஆதரித்த பேறுகளை -தாராமையாலே-
இவர் அபேஷித்த புருஷார்த்தங்களை – அதாவது –
கிடந்தாய் கண்டேன் -என்றும்
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே -என்றும்
காண வாராயே -என்றும்-அருளிச் செய்யும் இடங்களிலே
அபேஷிதம் ஆனததை-
ஸ்ரீ குடந்தையுள் கிடந்த வாறு எழுந்து இருந்து -என்கிறபடியே
எழுந்து இருக்க வேணும் -என்றும்
ஸ்ரீ குடந்தை திரு மாலான தேவர்
தாமரை மங்கையும் நீயும் -என்னும்படி
இருவரும் கூட இருந்து அருள வேணும் -என்றும்
தாமரைக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்றும்
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வர வேணும் -என்றும்
சில பரிமாற்றங்களை அபேஷிக்க-அப்போதே அது பெறாமையாலே –

தளர்ந்து மிக –
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் -என்னும்படி
அத்யவசன்னராய்- தீராத ஆசையுடன் -அபி நிவேசம் போவது அனுபவத்தாலே ஆகையாலே
அனுபவம் பேராமல் முடியாத வபி நிவேசத்தோடே –

ஆற்றாமை பேசி யலமந்தான் –
அதாவது –
அடியேன் உடலம் நீராய் யலைந்து கரைய உருக்குகின்ற -என்றும்
என்னான் செய்கேன் -என்றும்
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் -என்றும்
தூராக்குழி தூரத்து எனை எத்தனை நாள் அகன்றிருப்பன் -என்றும்
தரியேன் இனி -என்றும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்–பேசினவை என்கை –
இத்தசையிலும்
உன்தாள் பிடித்தே செலக் காணே -என்றும்
களை கண் மற்றிலேன் -என்றும்-இவர்க்கு அடியில் இப்படி அத்யாவசியம் இருக்கும்படி இது வாயிற்று –

மாசறு சீர் மாறன் எம்மான் –
இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற
அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி-

அன்றிக்கே
ஆற்றாமை பேசி அலமந்தான் -என்று க்ரியை-

————————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறச் செல்ல-புறச் சோலையில் போக்யதையால் நலிவு பட்டுப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
பெரிய ஆற்றாமையோடு ஸ்ரீ திருக் குடந்தையிலே புக்க இடத்திலும் தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே
அங்கு நின்றும் புறப்பட்டு திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த
ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறப் போய்-முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து
ஊரில் புறச் சோலையில் கிடந்து-அங்கு உண்டான வாத்திய கோஷ-வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட
மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்-உள்ளுப்புக்கு அனுபவிக்க பெறாமையலும்
தமக்கு உண்டான ஈடுபாட்டை ஸ்ரீ நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புபுறப்பட்டுப் போய்
கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ண பெறுவது என்றோ நாம் -என்று
தன் தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை-மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-என்கை –

——————————————————–

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற—49-

———————————————–

வியாக்யானம்–

மா நலத்தால் மாறன்-
பெரிய பிரேமத்தாலே ஆழ்வார் –

திரு வல்ல வாழ் புகழ் போய் –
பிரேம ப்ரேரிதராய் பிரவேசிக்கைக்காக போய் –

தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் —
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து-உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்
ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்-அங்குத்தை போக்யதையாலும்-நகர சம்ப்ரமங்களாலும்
கால் நடை தாராமல் தளர்ந்து வீழ்ந்து –

மேல் நலங்கித்-
அதுக்கு மேலே-தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –

துன்புற்றுச் –
பகவத் அலாபத்தாலே மாறுபாடு உருவின துக்கத்தை யுடையராய் –

சொன்ன சொலவு –
அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-
அதாவது
பத்ம சௌ கந்திகவஹம் -என்றும்
பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட -என்றும் -இத்யாதிப் படியே
வைகலும் வினையேன் மெலிய வானார் வண் கமுகும்
மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் -என்றும்
பொன்றிதழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவித் தென்றல் மனம் கமழும் -என்றும்
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் -என்றும்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் -என்றும்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் -என்றும்
மாடுறு பூம் தடம் -என்றும்
மழலை வரி வண்டுகள் இசை பாடும் -என்றும்
விஸ்லேஷ தசையில் அங்குத்தையில் பரிமளம் அசஹ்யமாய்-கால் கட்டுகிறபடியையும்
மற்றும் உண்டான போக்யதைகளும் அப்படியே யாகியும்
வினையேன் மெலியப் பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க என்றும்
மாடுயர்ந்த ஓமப் புகை கமழும் என்றும்
நல்ல அந்தணர் வேள்விப் புகை மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் -என்றும்
வேத வைத்திய க்ரியா கோலாஹலங்களுக்கும்
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம் -என்றும்
நரக சம் ப்ரமங்களும்
நாயகன் வேத பிரதிபாத்யன் ஆகையாலும் வைதிக கர்ம சாமாராத்யன் ஆகையாலும்
ஸ்மாரகத்வேன பாதகம் ஆயிற்று
நகர சம்ப்ரமம் தானும் சம்ப்ரமத்துடனே புகப் பெறாமையாலே பாதகம் ஆயிற்று

அதுக்கு மேலே
என்று கொல் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும்
நிச்சலும் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும் –
பிரிய பரைகள் ஹித பரைகளாய் நிஷேதிக்கை யாலும்
தனக்கு ஓடுகிற த்வரையாலே அதுவும் சைதில்ய ஜனகம் ஆயிற்று –
கோனாரை அடியேன் கூடுவது என்று கொலோ -என்றும்
நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவது என்று கொல் -என்றும்
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே -என்றும்
நம்பிரானது நன்நலமே -என்றும் –
எந்நலம் கொல் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -என்றும்
மாண் குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
நிலம் தாவிய நீள் கழலை -நாடொறும் வீடின்றியே தொழக் கூடும் கொல் -என்றும்
யாம் கண்டு கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்கள்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் -என்றும்
இப்படி திருவடிகளை தொழுகையும்-திரு நாமத்தாலே ஸ்துதிக்கையும்
பிரார்த்யம் ஆகையாலே சைதில்யம் மிக்கு இருக்கும் இறே-
இப்படி ஆகையாலே
மேல் நலங்கி-துன்பமுற்று சொன்ன சொல் இவை யாயிற்று –
இத்தசையிலும் -அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்று இறே
இவர் அத்யாவசியம் குலையாது இருக்கும் படி –

துன்பமுற்று சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு –
இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியான
இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு –

பின் பிறக்க வேண்டா –
இதன் அப்யாச அநந்தரம்-ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா
ஜென்மத்தை முடித்தே விடும்
பிற -என்று அவ்யயம்
அன்றிக்கே
திருவடிகளுக்கு அசலான ஜன்மம் எடுக்க வேண்டா -என்றாகவுமாம் –

பின்பு கற்க வேண்டா பிற -என்ற பாடம் ஆன போது
இத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யசிக்க வேண்டா என்றபடி –

———————————————————

அவதாரிகை –

இதில்
அவதார சேஷ்டிதங்களை தரித்து நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும்
என்று பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களிலே
ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான அனுபவ விசேஷங்களை வுபகரித்து
அருளக் கடவோம் அல்லோம் -என்று அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும்
நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது-அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் –
ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த அவதாரத்தில் செல்லுவோம் -என்று
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து
அவ் வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும் அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில்
அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே சைதில்யத்தை விளைக்க
நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று
சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை
பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

—————————————————————

வியாக்யானம்–

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்த பிறவியை-பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்
மற்றும் —
கள்ள வேடத்தை கொண்டு போய்ப் புரம்புக்க வாறும் -என்றும்
சீரால் பிறந்து சிறப்பால் வளராதே அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அடியை மூன்றை இரந்த வாறும் –
அம்ருத மதன அர்த்தமாக ஆவிர்பவித்து கூடி நீரைக் கடைந்த வாறும் –
என்று இப்படி
பூ பார நிர்ஹரண அர்த்தமாகவும்-திரிபுர தஹன அர்த்தமாகவும்-த்ரைலோக்ய அபஹரண அர்த்தமாகவும்
அம்ருத மதன அர்த்தமாகவும் திருவவதரித்து ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணா வானனான ஸ்ரீ கிருஷ்ணனே

கீழே
நல்லருள் நம்பெருமான் -என்றார் இறே
அப்படியே-நிரவதிக தயாவானவன் -உன் சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து –
உனக்கு அனுரூபமான கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம் ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் –
உன்னைக் கிட்டி-அனுபவிக்கும் படியாக ஸ்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
அதாவது –
பிறந்தவாறு -என்று தொடங்கி -நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்றன -என்றும்
என்னை யுன் செய்கை நைவிக்கும் -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-என்றும்
வெள்ள நீர் சடையானும் -என்று தொடங்கி -என்னுயிரை உருக்கி உண்ணுமே -என்றும்
உண்ண வானவர் கோனுக்கு -என்று தொடங்கி –என் நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கு நின்றே -என்றும்
திஷ்டந்தம் – ஆஸி நம் – பிரதிசிஸ்யே -என்னும்படி நின்றவாறு -இத்யாதி
எங்கனம் மறந்து வாழ்கேன் என் செய்வேன் உலகத்தீரே -இத விஷயத்தில் நம்மைத் தானே கேட்க வேணும் –
நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் -என்றும்
ஒண் சுடரோடு -என்று தொடங்கி -எண் கொள் சிந்தையுள் நைக்கின்றேன் -என்றும்
திருவுருவு கிடந்த வாறும் -என்று தொடங்கி — என் நெஞ்சம் நின்று நெக்கருவி சோறும் கண்ணீர் -என்றும்
அடியை மூன்றை இரந்த வாறும் -என்று தொடங்கி –
என் நெஞ்சம் நின்றனக்கே கரைந்து உகும் -என்றும்
கூடி நீரைக் கடைந்த வாறும் -என்று தொடங்கி -ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டிடுகின்றன-என்றும்
சொல்லப் படுகிற இவை நிவ்ருத்தமாய்
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைப் பெய்வனே -என்றும்
பாவியேற்கு ஓன்று நன்கு உரையாய் -என்றும்
என் செய்கேன் அடியேனே -என்றும்
கொடிய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே-என்று
தரித்து நின்று உன்னை அனுபவிக்கப் பெறுவேன் -என்றவை என்கை –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய –

வாய்ந்த பதத்தே –
பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –

மனமே வைகு –
மனசே தங்கிப் போரு-

அவருக்கு
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே
உனக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —நாலாம் பத்து–பாசுரங்கள்- 31-40-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் ஐஸ்வர்யாதிகளின் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
சீர் பரவப் பெற்ற நான் -என்று-கீழ் ஸ்ரீ பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஹர்ஷத்தாலே இவ் விஷயத்தை ஒழிய ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து
மீளவும் இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே
இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு
பரம புருஷார்த்த பூதனான ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று
பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற -ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து
ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் –31-

மாறன் உரைப்பால் போம் –உயற்பாலவே கிரியை வரவழைத்துக் கொள்ள வேண்டும் –
அறியப்பட்டன என்றுமாம்

—————————————————-

வியாக்யானம்–

ஒரு நாயகமாய் -என்று துடங்கி யுலகுக்கு -ஒரு நாயகமாய் – யுய்க்கும் இன்பமும்
வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் – திறமாகாது -என்கிறார் –
ஒரு நாயகமாய் ஓட வுலகு உடன் ஆண்டவர் -என்றத்தை நினைக்கிறது –
சார்வ பௌமராய்-பாண்டரச்யாதா பத்ரச்ய – என்று
ஏகாத பத்திரமாக நாட்டை நடத்துகிற வத்தால் வருகிற ஸூகமும்
எனைத்தோர் யுலகங்களும் இவ் வுலகாண்டு கழிந்தவர் –என்றும்
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பார் எனபது இல்லை -என்றும் சொல்லுகையாலே அஸ்த்ரமாய் இருக்கும் –

வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது
தேவர்களுக்கு வாசஸ் ஸ்தானமாய்-ஐஹிக போக விலஷணமான ஸ்வர்க்காதி அனுபவம்-அதுவும் திறமாகாது-
புக்த்வாஸ் ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விசந்தி –
என்கிறபடியே அஸ்திரமாய் இருக்கும்
குடிமன்னு மின் ஸ்வர்க்கமும் எய்தியும் மீள்வர்கள் -என்றத்தைப் பின் சென்றபடி –

இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது-
ஸூக்ருத விசேஷத்தாலே ப்ராபித்தாலும் ஸ்திரமாகாது
இது ஆ ப்ரஹ்மபவனம் புனராவ்ருத்தி-என்பதுக்கும் உப லஷணம்-

மன்னுயிர்ப் போகம் தீது-
இறுகல் இறப்பு -என்று-சங்கோச ரூப மோஷம் ஆகையாலே அதுவும் தோஷ யுக்தமாய் இருக்கும் –

மன்னுயிர்ப் போகம்-என்கையாலே
நித்தியமான ஆத்மா அனுபவம்-கீழில் அவை போல் அஸ்தரம் போகம் ஆகை அன்றிக்கே
நித்ய போகமாய் இருந்ததே யாகிலும் ஸ்ரீ பர ப்ரஹ்ம அனுபவத்தைக் குறித்து சிற்றின்பமாய் இருக்கும்
ஆகையாலே -தீது -என்றது –

மாலடிமையே யினிதாம் -பன்னியிவை மாறன் உரைப்பால் –
பன்னியிவை மாறன் உரைப்பால் -மாலடிமையே யினிதாம்-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ என்றும்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ -என்றும்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -என்றும்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -என்றும்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ -என்றும்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ -என்றும்
பணம் கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ -என்றும்
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்றும்
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடு அக்தே -என்றும்
அக்தே உய்யப் புகும் ஆறு -என்றும்
அருளிச் செய்தவை எல்லாவற்றையும் நினைத்து மால் அடிமையே இனிதாம் -என்று அருளிச் செய்தது –

—————————————————————————

அவதாரிகை –

இதில்-தேச கால விப்ரக்ருஷ்டமான அவன் படிகளை-தம் தாம் தேச கால விசிஷ்டமாம் படி
அனுபவிக்க வேண்டும் என்று ஆதரித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
மூன்று களையும் பறித்து சங்காயுமும் வாரின பயிர் சதசாகமாகப் பணைக்குமா போலே –
வீடுமின் முற்றவும்
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் – என்ற மூன்று திருவாய் மொழிகளிலே சம்சாரிகளைக் குறித்து உபதேசித்த இடத்தில்
அவ் உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே
தமக்கு ரசாந்தரங்களாலே அபி பூதனாய்க் கிடந்த முடியானேயில் விடாய்க்கு உத்தம்பகமாய்
பக்தி சத சாகமாகப் பணைக்க-அத்தாலே தேச கால விபக்ரஷ்டமான அவன் படிகளை
இப்போதே கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் அபேஷை பிறந்து-அபேஷித்த படியே அனுபவிக்கப் பெறாமையாலே
தாம் நோவு பட்டு சொல்லுகிற படியை அந்யாப தேசத்தாலே அருளிச் செய்த
பாலனாய் ஏழு உலகின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் -பாலரைப் போலே -இத்யாதியாலே -என்கை –

———————————————

பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —32-

———————————————–

வியாக்யானம்–

பாலரைப் போல் சீழ்கிப் –
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ண அறியாத பாலர்
தேசத்தாலே விப்ரக்ருஷ்டமான அம்புலி யம்மானையும்-காலத்தாலே கை கழிந்து போன பலாதி வஸ்துக்களையும்
அப்போதே கொடு வந்து தர வேணும் -என்று
பாலச்ய ருதி தம்பலம் -என்னும்படி ரோதனத்தை முன்னிட்டு அபேஷிக்குமா போலே
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான பர அவஸ்தய தத் அனுபவங்களை அப்போதே பெற வேணும் என்று
அழுவன் தொழுவன் -என்னும்படி பாலர் செய்யுமத்தைச் செய்து
அபீ தாநீம் ச காலச்யாத் வநாத்பிரத்யா கதம்புன -என்று இறே
ஆசை யுடையார் பவிஷ்ய காலத்தை சம காலமாக அபேஷித்து இருப்பது
அப்படியே இறே இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –

பரனளவில் வேட்கையால் –
சர்வ ஸ்மாத் பரன் இடத்தில் பர பக்தியாலே –
பரன் -காலத்தால் தேசத்தால் கை கழிந்த –
பாதங்கள் மேல் அணி பைம் பொற்றுழாய் என்றே யோதுமால் எய்தினாள் -என்றத்தை நினைக்கிறது
தேச விபக்ருஷ்டமான பர வ்யூஹங்களும்
கால விபக்ருஷ்டமான விபவமும்
பர விஷய பக்தி ஏகதேசமாய்
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளினை மேல்
தண்ணம் துழாய் என்றே மாலுமால் -என்று துடங்கி
கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்-என்று
விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அவை ஆவன
குரவை பிணைந்தவர் நல்லடி -என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி -என்றும்
குடக் கூத்தனார் தாளிணை -என்றும்
அகலிடம் கீண்டவர் பாதங்கள் -என்றும்
திருமாதினைத் தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாள் -என்றும்
இலங்கை நகரம் பரி யுய்தவர் தாளிணை -என்றும்
கண்ணன் கழல் -என்றும்
இப்படி விபவத்தை அடி விடாமல் இருக்கிற படி -என்கை
ந்யக்ரோத சாயியையும் -ஆலிலை / பீயூஷ ஹாரியையும்–பீயூஷ -அமுதில் வரும் -பெண்ணமுதம்
நாயக்ரோத சாயீ பகவான் பீயூஷா ஹரணச்ததா -என்று விபவங்களோடே இறே சஹபடித்தது-
இங்கேயும்
மடந்தையை வண் கமலத் திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் -என்றும்
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுதை ஸ்வீகரித்த படி சொல்லிற்று –

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் –
இப்படி தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது
தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது -என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலர் ஆனால் –

இதுக்கடி
குருகூரில் வந்துதித்த கோ –
ஆகையாலே-ஸ்ரீ திரு அயோத்தியில் பிறப்பு ஸ்ரீ ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே
ஸ்ரீ திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே

கோ
ராஜா
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் ராஜா என்றபடி –
இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று -ஸ்ரீ ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –

———————————————

அவதாரிகை –

இதில் கால உபாதியைக் கழித்து அனுபவிப்பித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
இப்படி தேச கால விப்ரக்ருஷ்டங்களானதன் படிகளை அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்ட இவர்க்கு
கால சக்கரத்தான் ஆகையாலே கால உபாதியைக் கழித்து வர்த்தமான காலம் போலே யாக்கிக் கொடுத்து
இவர் சத்தையே தனக்கு எல்லாமாக இருக்கிற தன் பிரணயித்வ குணத்தையும்
அவன் அனுபவிப்பிக்கவே எல்லாம் பெற்றாராய் இந்த பிரணயித்வ குணத்தையும் அனுபவித்து
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அத்தையே பேசிச் செல்லுகிற கோவை வாயாளின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -கோவான ஈசன் -இத்யாதியால் -என்கை –

———————————————–

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் —33

ஸ்ரீ பட்டர் நிர்வாகம் -கால உபாதி நிரசன குணம் –

————————————————–

வியாக்யானம்–

கோவான வீசன்-
ஸ்ரீ ஆழ்வாரைத் தரிப்பிக்கவே ஜகத்து உஜ்ஜீவிக்கும் என்று சர்வ நிர்வாஹகனான
ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஸ்ரீ ஆழ்வார் அழிந்தால் அவருக்குள் தானும் உளனே -மின்னு மா மழை தவழும் -ஆறு அங்கம் கூற
அவதரித்தவர்க்கு தன்னைக் காட்டி அருளினான்

குறை எல்லாம் தீரவே –
கீழில் திருவாய் மொழியில்-தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம் நிவ்ருத்தமாம்படி கால சக்கரத்தான் ஆகையாலே –

ஓவாத காலத் துவாதிதனை —
விச்சேதியாமல் நடந்து செல்லுகிற காலத்தில் அதீதமான உபாதியை –

மேவிக் கழித்து –
அகால பலின -என்னும்படி-இவரோடு சேர்ந்து-அந்த கால உபாதியைக் கழித்து –

அடைய காட்டிக் –
கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி -என்னுதல்-
அன்றிக்கே
பூசும் சாந்து – கண்ணி எனது உயிர் -இத்யாதிகளாலே –
கரணங்களும் கரணியான இவர் சத்தையும்
இவருக்கு அங்கராக ஆபரண அம்பராதிகள் ஆனபடியையும் காட்டினபடி-கீர்த்தி -ஆதி சப்தத்தில் ஆகவுமாம் –
உன்னாகம் முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே -என்று
என் ஆவி நிர் துக்கமாயிற்று என்று அருளிச் செய்தபடி –

கலந்த குணம் –
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் என்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி ஏக தத்வம் என்னலாம்படி

கலந்த குணம் –
சம்ஸ்லேஷித பிரணயித்வ குணத்தை –

மாறன் வழுத்துதலால் –
ஸ்ரீ ஆழ்வார் சத்தை பெற்று
யானும் எம்பிரானை ஏத்தினேன் யான் உய்வானே -என்று
இப்படி கீழ் வ்யசனம் தீர்ந்து ஸ்ரீ எம்பிரானை ஸ்தோத்ரம் பண்ணுகையால் –

வாழ்ந்துது இந்த மண் –
இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம் சத்தை பெற்று வாழ்ந்தார்கள் –
வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
அன்றிக்கே
விஸ்வம் பரா புண்யவதீ-என்று ஸ்ரீ ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே
பூமி பாக்யவதியாகி வாழ்ந்தது ஆகவுமாம்-

————————————————

அவதாரிகை –

இதில் சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே பிரமித்து பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில் –
கீழ் – காதல் மையல் ஏறினேன் -என்று பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த
ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக
அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க -பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய்
ஸ்ரீ ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ பரத ஆழ்வான்-ஒரு வேடன் வாய் இட்டு
ஸ்ரீ ராம சரிதத்தைக் கேட்டு தரித்தால் போலே இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனே என்று பிச்சேறும் படி தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின
மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை-மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் -என்கை –

——————————————————–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு—-34-

——————————————————–

வியாக்யானம்–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் –
பூலோகமான இவ் விபூதியில் முன்னம்-கோவை வாயாளிலே பெறாப் பேறான சம்ஸ்லேஷத்தை யுண்டாக்கி
ஸ்ரீ சர்வேஸ்வரன் விச்லேஷிக்கையாலே –

மாறன் பெண்ணிலைமையாய்க் –
ஸ்ரீ ஆழ்வார் அபலையினுடைய அவஸ்தையை அடைந்து –

காதல் பித்தேறி –
என் கொடியே பித்தே -என்னும்படி பக்தியாலே காதல் பித்தேறி –
க்வசிதுத் பரமதே -இத்யாதிப்படியே சித்த விப்ரகம் பிறக்க –

எண்ணிடில்-
அந்த பித்தேறின பிரகாரத்தை நிரூபிக்கில் –

அன்றிக்கே –
பித்தேறி எண்ணிடில் –
பித்தேறின ஆகாரத்தோடே தாம் நிரூபிக்க புகில்

முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து –
அதாவது –
மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்த பதார்த்தங்களையும் அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

இது எத்தாலே என்னில்
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு
மையல் தனின் வீறு -மேல் விழுந்தான்-
வ்யாமோஹ அதிசயத்தாலே-அவற்றிலே அத்ய அபி நிவிஷ்டரானார்
இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று
ஸ்ரீ ஜீயருக்கும் இது கண்டு சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —

சத்ருச பதார்த்தங்களும்-சம்பந்த பதார்த்தங்களும் ஆவன –
சத்ருச பதார்த்தம் –
விண்
கடல்
நாயிறு
செந்தீ
தண் காற்று
ஒன்றிய திங்கள்
நின்ற குன்றம்
நன்று பெய்யும் மழை
கூத்தர் நீறு செவ்வே இட
திரு வுடை மன்னர்
உரு வுடை வண்ணங்கள்
கருவுடைத் தேவில்கள்
விரும்பிப் பகவர்
கரும் பெரு மேகங்கள் —

சம்பந்தி பதார்த்தங்கள் ஆவன –
நாறு துழாய்
வாமனன் மண்
கோமள வான் கன்று

சம்பந்த பதார்த்த சத்ருசங்கள் –
போம் இள நாகம்
வாய்த்த குழலோசை
ஆய்ச்சியர் வெண்ணெய்
என்று விபஜித்து ஆயிற்று ஸ்ரீ ஆச்சான் அருளிச் செய்யும் படி-

—————————————

அவதாரிகை –

இதில்
அப்ராக்ருத விபூதியில்-அசாதாராண ஆகாரத்தைக் காட்ட அனுபவித்து ஹ்ருஷ்டராகிற படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
வல்வினை தீர்க்கும் ஸ்ரீ கண்ணனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சத்ருச சம்பந்த வஸ்துக்களையும் அவனாகவே
அனுசந்திக்கும்படி பிறந்த இவருடைய பித்து சவாசனமாகத் தீரும்படி
சர்வ தேவ நமஸ்காரம் ஸ்ரீ கேசவனுக்கு செல்லுமே -மழை நீர் அருவிகள் கடலுக்கு போவது போலே -சாதாராண ஆகாரம் சர்வாத்மகம்
அசாதாராண வடிவம் -சத்வாரகமாக அன்றி நேராக கூராழி வெண் சங்கு எனது வாராய் –
விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிசரண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்ரீ பரம பதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும் ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து
ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள
அத்தைக் கண்டு-சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால் பண்ணுகிற மங்களா சாசனத்தை
இங்கேயே இருந்து அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி
க்ருத்க்ருத்யராய்-உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று
ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் -வீற்று இருக்கும் மால் விண்ணில் -இத்யாதியாலே -என்கை –

————————————————————-

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

—————————————————————–

வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் -விண்ணில்
விண்ணில்-வீற்று இருக்கும் மால்-
ஆசீன காஞ்சநே திவ்யேச ச சிம்ஹாச நே பிரபு -என்றும்
ராமம் ரத்ன மயே பீடே சஹ ஸீதம் ந்யவேசயத் -என்றும்
பரிவார்யா மஹாத்மானம் மந்த்ரினஸ் சமூபசிரே -என்றும்-சொல்லுகிறபடியே
வானக் கோனாய்-விண்ணோர் பெருமானாய் -மைய கண்ணாள் மலர் மேல் உறை மார்பனாய்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –

மிக்க மயல் தன்னை –
ஸ்ரீ ஆழ்வார் உடைய அத்யந்த வ்யாமோஹத்தை-
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே -என்று
பெற்றவர்களும் பேசிக் கை விடும்படியான மிக்க மயல் தன்னை

ஆற்றுதற்காத் –
கைபிடித்த தான் ‘இத்தை ஆற்றுதற்க்காக-

தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து –
கீழில் ப்ரமம் எல்லாம் ஆறும்படி –
பூவின் மிசை நங்கைக்கு இன்பன் –
தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான் தன்னை -என்று
ஸ்ரீ பிராட்டியாரோடும்
ஸ்ரீ நித்ய சித்தரோடும்
கூடி இருக்கிற இருப்பையும்
ஞாலத்தார் தமக்கும் வானவர்க்கும் பெருமானை -என்றும்
உபய விபூதி ஐஸ்வர்ய உக்தனாய் இருக்கிற படியையும்
வீவில் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை -என்றபடி
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான வைபவம் எல்லாம் பிரகாசிக்க இங்கே வந்து –

நன்று கலக்கப் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -என்னலாம்படி இவருடன் சம்ச்லேஷிக்க –

போற்றி நன்கு உகந்து –
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு – போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி

வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதன் மேவியே -என்று மிகவும் ஹ்ருஷ்டராய் –

அந்த ப்ரீதி உக்தியாலே
வீறு உரைத்தான் –
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

சென்ற துயர் மாறன் தீர்ந்து –
நிவ்ருத்த துக்கரான ஆழ்வார்
விஸ்லேஷ வ்யசனம் -என்னுதல்
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீயவே -என்றும்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே -என்றும் சொல்லுமவை யாதல் –

சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஸ்ரீ ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-

————————————

அவதாரிகை –

இதில் பிரணயித்வ குண விசிஷ்ட வஸ்துவை பிரத்யஷமாக அனுபவிக்கப் பெறாமல்
பிரகிருதி விக்ருதியாய் மோஹித்துக் கிடக்க –
பிரேம பரவசர் பிரதிகிரியை பண்ணத் தேட
அத்தை பிரபுத்த ஸூஹருத்துக்கள்-இது அநநுரூபம் -என்று
அறிந்து அனுரூபமான நிதானத்தையும் தத் பரிகாரத்தையும்
விதிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
கீழ் உண்டான அனுபவம் மானச அனுபவ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
தம் தசையைத் தாம் அறியாதபடி மோஹித்துக் கிடக்க
பரிசர வர்த்திகளான பரிவர்கள்-அத்தைக் கலங்கி
சர்வான் தேவான் நமஸ் -யந்தியின் படியே-பரிவின் கனத்தாலே பரிஹரிக்க ஒருப்பட
இவர் பிரகிருதி அறிந்த ஸ்ரீ மதுரகவி பிரக்ருதிகளான பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள் அத்தை விலக்கி
உசித பரிஹாரத்தை விதித்துச் சொல்லுகிறபடியை
கலந்து பிரிந்த தலைமகள் அறிவு அழிவு கண்டு கலங்கி-பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய்
பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள்
நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு
ஸ்ரீ கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய
நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும் தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும்
தேர் பாகனாரான ஸ்ரீ வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து
மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற-தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

——————————————————-

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—-36-

சாத்மிக்க சாத்மிக்க கொடுப்பவன் உடனே பிரிந்தானே –
ஒர்ப்பாதும் இன்றி-அசங்க்யேவ சங்கதி

———————————————————————————

வியாக்யானம்–

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் –
மண்ணை இருந்து துழாவில் மயல் பெரும் காதலானது தீர
வீற்று இருந்து ஏழ் உலகில் கலந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் –

ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய –
பிரிகைக்கு ஹேது நிரூபணம் அத்யல்பமும் ஆராயாமல்
பெருக்காறு வற்றி அடி சுடுமா போலேயும்
அபிஷேக மகோத்சவம் குலைந்து அரண்ய பிரவேசம் ஆனால் போலேயும் உடனே பிரிய
பேதை நின்னைப் பிரியேன் -என்னுதல்
பொருட்கோ பிரிவென்-என்னுதல்-செய்யாமல்
கலந்த கலவி கனவு என்னலாம் படி அசங்கிதமாக அகல

நேர்க்க அறிவழிந்து –
சத்ருக்நோ நந்தாச்தித-என்னும்படி ஸ்ரீ பரத ஆழ்வான் நின்றால் போலே நில்லா
மோஹித்தால் போலே மோஹித்து –

நேர்க்க அறிவு அழிகை யாவது –
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்-அறிவு கலங்கி-அங்கு
காணவும்
கேட்கவும்
பேசவும்
பின் செல்லவும்-ஷமையாய் இருந்தாள்-
இங்கு-குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து
மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது

உற்றாரும் அறக் கலங்க –
யேது ராமஸ்ய ஸூ ஹ்ருதயஸ் சர்வேதே மூட சேதச -என்னும்படி
அத்தைக் கண்ட அன்னையரும்-தோழியரும்-தொடக்க மானவரும் மிகவும் அறிவு கலங்கிக் கிடக்க
ஸ்ரீ கௌசல்யாரைப் போலே மங்களா சாசன பரையான மாதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தேய யசச்வின- என்னும்படியே எத்தை யாகிலும் செய்து
இவளை மீட்கத் தேட –
அவ்வளவில் தேவ தாந்திர பரையாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி அதுக்குப் பரிஹாரமாக சொல்லுகிற
ஆடும் கள்ளும் இறைச்சியும் கரும் சோறும் செஞ்சோறும் ஆகிய நிந்த்ய த்ரவ்யங்களாலே
இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதைகளைக் கண்டு
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் அத்தை நிஷேதித்து
தேர்ப் பாகனாற்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே -என்று

பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம் –
நோய்க்கு நிதானத்தையும் அதுக்கு பரிஹாரமாக சங்கு சக்கரம் -என்று இசைக்கும் படியையும்
மாயப் பிரான் கழல் வாழ்துதலையும் பெரும் தேவன் பேர் சொல்லும் படியையும்
களிறு அட்ட பிரான் திரு நாமத்தால் தவளப் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் -என்றும்
மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலில் -என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரை -என்றும் –
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் -என்றும்
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் -என்றும்-சொன்ன படியைக் கேட்டு
தொழுது ஆடி-தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றேன் -என்கிறது –

மாறன் சீலம் –
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று –
செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் –
செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற
ஸ்ரீ கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

————————————————————

அவதாரிகை –

இதில் திரு நாமத்தால் உணர்ந்தவர் நாமியான ஸ்ரீ நாராயணனை அனுபவிக்கப் பெறாமையாலே
அதி பிராலாபமாய் பிராலாபிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் – வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய் உணர்ந்த அநந்தரம்
பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய் அத்தாலே நோவு பட்டு
ஆபத் சகனாக-தந்நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய்
கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன்
ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற
சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
சீலம் மிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –இத்யாதியாலே -என்கை –

———————————————–

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு—-37-

———————————————–

வியாக்யானம்–
சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –
பிரணயிநிகளோடு கலந்த சீலாதிக்யத்தை யுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமத்தை
வண்டுவராதிபதி மன்னன் -என்று தோழி சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து –

மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு –
உணர்ந்த அநந்தரம் அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி அனுபவிக்கைக்கு –
அதாவது
கோல மேனி காண -என்றும்
என் கண் காண -என்றும்
பாவியேன் காண வந்து -என்றும் –
உன் தோள்கள் நான்கையும் கண்டிட -என்றும்
உன்னைக் காண்பான் -என்றும்
நான் உன்னைக் கண்டு கொண்டே -என்றும்
கண்டு கொண்டு -என்றும்
எங்குக் காண்பன் -என்றும் –
தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவனே-என்று
இப்படி பத்தும் பத்தாக அபேஷித்து

சால வருந்தி –
மிகவும் வருந்தி -அதாவது
நாராயணா -என்றும்
கூவிக் கூவி -என்றும்
வையம் கொண்ட வாமனாவோ -என்றும்
தாமோதரா -என்றும் –
ஆணி செம்பொன் மேனி எந்தாய் -என்றும்
அப்பனே அடல் ஆழி யானே -என்றும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் -என்றும்
நறும் துழாயின் கண்ணி யம்மா -என்றும்
வண்டுழாயின் கண்ணி வேந்தே -என்றும்
சக்கரத் தண்ணலே -என்றும்
இப்படி பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு –
ஹா ராமா ஹா லஷ்மணா -என்றும்
ந்சைவ தேவீ வீரராம கூஜிதாத் -என்னுமா போலே –

இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு –
காலம் தோறும் -என்றும்
நள்ளிராவும் நன்பகலும் நான் இருந்து ஓலமிட்டாள் -என்றும்
கூவிக் கூவி நெஞ்சு உருகி -என்றும்
சக்கரத் தண்ணலே என்று தாழ்ந்து -என்றும்
இப்படி திவா ராத்திரி விபாகம் அற
சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஸ்ரீ ஆழ்வார் –

இது என்னாகப் புகுகிறதோ என்று
இவர் நெஞ்சு உருகி நோவு பட்டு அருளுகிறார் –

தென் குருகூர் ஏறு –இருந்தனனே –
இனி ஸ்ரீ திரு நகரியில் ஸ்ரீ ஆழ்வார் பிரதான்யம் எங்கனே நடக்கக் கடவதோ
என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

————————————————————

அவதாரிகை –

இதில் இவ் வாற்றாமைக்கு உதவாமையாலே அவனுக்கு உறுப்பு அல்லாத
ஆத்மா ஆத்மீயங்களில் தாம் நசை அற்ற படியைப் பேசின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –கீழ் சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே
பிராப்தனாய்-சீலவானாய்-விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –
அவனுக்கு வேண்டாத என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து- திருவருள் செய்பவன் போல் —
உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் -விருப்பட்ட வரிசைக் கிரமத்தில் இவர் அருளிச் செய்கிறார்
ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை-ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————–

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு —38-

ஏறு திருவுடையை ஈசன்-தன் திரு மார்பில் ஏறப் பெற்ற
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன்

——————————————————

வியாக்யானம்–
ஏறு திருவுடையை ஈசன் –
ஸ்ரீ பிராட்டி ஏகாநை யாகையாலே-நஹிமே ஜீவிதேன– இத்யாதியாலே
அத்தலைக்கு உறுப்பு அல்லாத ஆத்மா ஆத்மீயங்களில் நசை அற்ற படியைச் சொன்னாள்
இவர் மிதுநாயனர் ஆகையாலே –
திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்றும்
மலர் மாதர் உறை மார்பன் -என்றும்
பட நாகத்தணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம் புருடன் -என்றும்
இப்படி ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு புறத்தியான மாமை முதலான
உடைமையோடு உயிரோடு வாசி அற வேண்டா -என்கிறார் –

ஏறு திரு உடைய ஈசன் -என்று
ஸ்ரீயபதித்வத்தால் வந்த ஸ்ரீ சர்வேஸ்வரத்வம் சொல்லுகிறது

ஏறு திரு –
யவௌ வஷஸ் ஸ்தலம் ஹரே –என்று ஆரூட ஸ்ரீசன் இறே

ஏவம் விதனானவன் உடைய
உகப்புக்கு -வேறுபடில் – அதாவது
சந்தன குஸூம தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹ்யமாய் இருக்கை அன்றிக்கே
ஸ்வார்த்தைக்கு உறுப்பாக இருக்குமாகில் அத்தை ஆயிற்று
தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் -என்றது –

என்னுடைமை -அதாவது
மணிமாமை
மட நெஞ்சால்
நிறைவினால்
தளிர் நிறத்தால்
அறிவினால்
கிளர் ஒளியால்
வரி வளையால்
மேகலையால்
உடம்பினால் -என்று ஆத்மாத்மீயங்களாய் உள்ளவை-

மிக்க உயிர்-
இவற்றில் விலஷணமாய் ஞானானந்த ஸ்வரூபமாய் ஸ்ரீ பகவத் சேஷமாய்
ஸ்ரீ ஸ்தனம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஸ்ரீ எம்பெருமானுக்கு அத்யந்த போக்யமாய்
இருப்பதொரு ஆத்ம ஸ்வரூபம் என்று-

தேறும் கால் –
பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை நன்றாகத் தெளியுங்கால் –
நாரணன் தன வாடா மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்றது -என்றும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -என்றும்
இப்படி தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் –

இப்படி அன்றிக்கே
வேருபட்டதாகில்
ஸ்வார்த்தைக்கு உருப்பாகில் என் தனக்கும் வேண்டா –
பரதந்த்ரனான எனக்கும் தான் வேண்டா –

எனும் மாறன் தாளை- நெஞ்சே -நமக்கு பேறாக நண்ணு –
என்று இப்படி அருளிச் செய்யும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை நெஞ்சே நமக்கு பிராப்யமாம்படி அடை
நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

——————————————————

அவதாரிகை –

இதில் சம்சாரிகள் உடைய அனர்த்தத்தைக் கண்டு வெறுத்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்-கீழே ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற இடத்திலும்
அவை போகக் காணாமையாலே விரஹ வ்யசனம் அதிசயித்து
தம் இழவுக்கு கூட்டாவார் உண்டோ -என்று சம்சாரிகளைப் பார்த்த இடத்தில்
அவர்கள் ஸ்ரீ பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு
இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களே பேறும் இழவுமாய் நோவு படுகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
ஸ்ரீ சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க இவை நோவு படுகை போருமோ –
பிரானே என்று விஷண்ணராய் இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல் செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே
உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க
அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற
நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை
நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று—39-

தாபஹர தேச வாசித்வம் -கல்யாண குணம் –

———————————————

வியாக்யானம்–

நண்ணாது மாலடியை –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாமல்-
ஆத்மாத்மீயங்களில் தாம் நசை அற்ற இடத்திலும் அவனைக் கிட்டப் பெறாமல்
சம்சாரிகளில் தம் இழவுக்கு கூட்டுவார் உண்டோ என்று பார்த்து

நாநிலத்தே வல்வினையால் -இத்யாதியாலே
வெறுத்து அருளிச் செய்கிறார் என்கிறார் –

நாநிலத்தே –
நாலு வகைப் பட்ட பூமியிலே-அதாவது
குறிஞ்சி நிலமான ஸ்ரீ திருமலைகளிலும்
முல்லை நிலமான ஸ்ரீ திருக் கோட்டியூர் ஸ்ரீ திரு மோஹூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
மருத நிலமான ஸ்ரீ கோயில் ஸ்ரீ பெருமாள் கோயில் தொடக்கமான ஸ்தலங்களிலும்
நெய்தல் நிலமான ஸ்ரீ திரு வல்லிக் கேணி ஸ்ரீ திருப் புல்லாணி ஸ்ரீ திரு வல்லவாழ்
ஸ்ரீ திரு வண் வண்டூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்-ஸூலபனாய் இறே அவன் இருப்பது
அந்த சுலப்யமே ஹேதுவாக அவன் திருவடிகளை ஆஸ்ரயியாதே

நாநிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் –
இப்படி விலஷணமான பூமியிலே ஸ்ரீ பகவத் ஆஸ்ரயணீயம் பண்ணி உஜ்ஜீவியாமல்

மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பது இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை –
என்னும்படி பிரபல கர்மங்களாலே
அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து பொறுக்கிற இவ்வாத்மாக்கள்
நந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் அஸ்தமிதே ரவௌ
ஆத்மா நோ நாவ புத்யந்தே மனுஷ்ய உஜ்ஜீவித ஷயம்-என்னும்படி

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் –
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல் – அதாவது
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
ஏமாறி கிடந்தது அலற்றும் இவை என்ன உலகு இயற்கை –
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
தமமூடும் இவை என்ன உலகு இயற்கை –
ஈங்கு இதன் மேல் வெந்நரகம் இவை என்ன உலகு இயற்கை –
அறப் பொருளை அறிந்தோர் ஆர் இவை என்ன உலகு இயற்கை –
கொடு உலகம் காட்டேல் –
இத்யாதிகளாலே இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து

கண் கலங்கும் மாறன் –
திருக் கண்களும்-திரு உள்ளமும் கலங்கிப் போகும் ஸ்ரீ ஆழ்வார் அதாவது
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேல்
வாங்கு எனை
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே —என்று கூப்பிட்ட பின்பு

ஸ்ரீ எம்பெருமானாலே கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை –
அடைந்தேன் உன் திருவடியை – என்னும்படி சமாஹிதராய்
சம்சாரிகள் நோவுக்கு நொந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று –
இப்படி ஸ்ரீ ஈஸ்வரனும் கூட கைவிட்ட சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஸ்ரீ ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள் அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா -தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

—————————————————

அவதாரிகை –

இதில் சம்சாரிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக ஸ்ரீ அர்ச்சாவதாரே பரத்வத்தை அருளிச் செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
நண்ணாதாரில் -ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -திருத்த ஒண்ணாது -என்று
கை விட்ட சம்சாரிகளைத் திருத்த ஒருப்பட்டு ப்ரமாணாந்தர விலஷணமாய்
நித்ய -நிர்தோஷமான-வேதாந்த வாக்யங்களாலும்-சந்தம்ச நியாயங்களாலும்
இதிஹாசாதி சித்திதமான-ஜகன் நிதரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும்
சம்சார பீஜமான தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியை அடி அறுத்து
ஸ்ரீ யபதியான நாராயணனே ஜகத் காரண பூதன் -என்று த்ருடதரமாக உபபாதித்து
இப்படி சர்வ ஸ்மாத் பரனான இவன் அரியன் -என்று கை வாங்க வேண்டாத படி
ஸ்ரீ திரு நகரியிலே வந்து சந்நிஹிதன் ஆன பின்பு–அவனை ஆஸ்ரயிங்கோள் என்று
பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிற-ஒன்றும் தேவில் அர்த்தத்தை
ஒன்றும் இலைத் தேவு -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை –

—————————————————-

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என வாரும் அறியவே -நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை—40-

—————————————————–

வியாக்யானம்-

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால் அன்றி என -இவ்வுலகம் படைத்த மால் அன்றி
தேவு ஒன்றும் இலை என- சர்வ ஸ்ரஷ்டாவான ஸ்ரீ சர்வேஸ்வரனை ஒழிய
கார்ய பூதரில் காரணத்வத்தால் வந்த புகரை உடையவர்கள் ஒருவரும் இல்லை என்று -அதாவது
ஒன்றும் தேவும் -என்று துடங்கி
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -என்றும்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர் புகழ் ஆதிப் பிரான் -என்றும்
அருளிச் செய்த காரணத்வ பிரயுக்தமான சந்தைகளை கடாஷித்த படி -என்கை –

யாரும் அறியவே -நன்றாக மூதலித்துப் பேசி யருள் –
அதாவது
எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாத ஸ்திரீ பாலரும் அறியும் படி
தவம் அப்ரமேயச்ச –
தம்ஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர –என்று
தாரா அங்கதாதிகளும் அறியும்படி ஆனால் போலே
பரந்த தெய்வமும் -என்று துடங்கி -கண்டு தெளியகில்லீர்-என்றும்
பேச நின்ற சிவனுக்கும் -என்று துடங்கி -கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்றும்
இலிங்கத்திட்ட புராணத்தீரும் -என்று துடங்கி -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -என்றும்
போற்றி மற்றோர் தெய்வம் -என்று துடங்கி -ஆற்றவல்லவன் மாயம் கண்டீர் -என்றும்
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து -என்று துடங்கி -பல் படி கால் வழி ஏறிக் கண்டீர் -என்றும்
புக்கடிமையினால் நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -என்றும்
விளம்பு ஆறு சமயமும் -என்று துடங்கி -உளம் கொள் ஞானத்து வைம்மின் -என்றும்
உறுவதாவது நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே -என்றும்
பேச நின்ற தேவதா ஜ்ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும்
இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டமையும் சொல்லி
ஓடி –கண்டீர் –
கண்டு –தெளிய கில்லீர் –
அறிந்து ஓடுமின்
ஆட்செய்வதே -உறுவதாவது -என்று
விரகத பூர்வகமாக-ஆஸ்ரயம் ருசிக்கும்படி அருளிச் செய்தவை -என்கை –
பரத்வ சங்கை தீர -இதுவே பரத்வத்தில் நாலாவது திருவாய்மொழி -மேலே பண்ண வேண்டாம் படி திருந்தினார்கள் –

மூதலித்து பேசி அருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை –
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளுக்கு ஆட் சேர்த்து அருளுகையாலே
பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருதமய தடாக அவகாகன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர நிரதிசய ஸூகந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –
வகுளாபிராமம் ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா-என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன
என்னுடைய ஹஸ்தங்கள் ஆனவை –

காதலிக்கை -கௌதூஹலிக்கை ஆகவுமாம்
முடியானிலே -கரணங்களின் படியே யாயிற்று –
தம் கரணங்கள் ஸ்ரீ குருகூர் நம்பி மொய் கழல்களிலே-காதலிக்கும் படியும் -என்கிறார் –
மானஸ வியாபாரத்தையும் ஸ்ரீ மா முனிகள் திருக்கரங்கள் ஆசைப்படுகின்றன –

இத்தால்
பரோபதேசம் பண்ணி உஜ்ஜீவிப்பிக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே
பற்ற அடுப்பது – என்றதாயிற்று-

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —மூன்றாம் பத்து–பாசுரங்கள்- 21-30-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திருமலையில் ஏக தேசஸ்தரான ஸ்ரீ அழகர் உடைய அழகை முழுதும்
அனுபவித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்-கீழ்
அயன் மலையோடு
புறமலையோடு
திருப்பதியோடு
உத்தேச்யமாக ஸ்ரீ திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற
மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ வட மா மலை உச்சி -என்கிற படியே
அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும்
அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற
மேலிரும் கற்பகமான ஸ்ரீ அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூகடிதத்வத்தையும்
வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும்
அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான ஆஸ்ரித வாத்சல்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
முடிச் சோதியில் அர்த்தத்தை -முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

————————————————-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்—-21-

—————————————————-

வியாக்யானம்–

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் –
விராஜதே வ்ருஷாத்ரேச்ச சிகரம் தசதா துபி பூஷிதோ பூ பதிரேவ க்ரீடே நார்க்க வர்ச்சசா -என்கிறபடியே
விண் முதல் நாயகன் நீண் முடியோடு ஒத்த -என்றும்
மதி தவழ் குடுமி தொடக்கமான கொடு முடிகளாலே மிக்கு இருப்பதாய்
ஆயிரம் பைந்தலை யநந்தன் -என்னும் படியான ஸ்ரீ திருமலை ஆழ்வாரிலே மண்டி அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப் பற்றி –
ஸ்ரீ திருமலையில் திருத் தாழ் வரையிலே
ஸ்ரீ மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையான ஸ்ரீ அழகர் திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணம் முதலாய் உள்ளவை எல்லாம் குமர் இருக்கும் படி அவர் திவ்ய விக்ரஹ சௌந்தர்யத்தை
அனுபாவ்ய விஷயமாகப் பற்றி –

அத்தை அனுபவிக்கும் இடத்தில் –
முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்-
முடிச் சோதியாய் யுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச் சோதி ஆடையோடும் பல்கலனாய் நின் பைம் பொன் கடிச் சோதி
கலந்ததுவோ திரு மாலே கட்டுரையே -என்று
அபரிச் சேத்யமாம் படி அருளிச் செய்ததை அடி ஒத்தின படி –
ரூபம் சம்ஹந நமலம் லஷ்மீம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-என்னக் கடவது இறே

முடியும் அடியும் –
க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி –

படி கலனும்
நடுவு உள்ளவையாய்-படியிலே உள்ள திரு அணிகலன்கள் -என்னுதல்
படிந்து ஸூகம் வடிவதானவை என்னுதல்
முடி கொண்டான் வெள்ளக் கால்களாய்- பின்பு பெரு வெள்ளமாய்-நட்டாறாய்ச் சுளித்து
அரையாற்றுக்கு அடியானபடி –
பெரு வெள்ளம்–நடு ஆறு -அரை யாறு- சௌந்தர்ய சாகரம் – தரங்க -அலையில் தூக்கிப் போட்ட சித்தம்

இப்படி சௌந்தர்ய சாகர தடங்க தாடன தரள சித்த விருத்தியாய்
முற்றும் அனுபவித்தான் முன் –
முழுதும் அனுபவித்தார் முற்காலத்திலே -என்னுதல்
முற்றும் -என்கிறது முடிச் சோதி -என்கிற பாட்டில் உக்தமானது எல்லாம் -என்னுதல்
மற்றும் -கட்டுரைக்கில் –சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –என்றும்
பரஞ்சோதி -என்றும்
நின் மாட்டாய மலர் புரையும் திரு வுருவம் -என்றும்
மலர் கதிரின் சுடர் உடம்பாய் -என்றும்
போது வாழ புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் -என்றும்
மாசூணாய்ச் சுடர் உடம்பாய் -என்றும்
உன் சுடர்ச் சோதி -என்றும்
முதல் பாட்டின் விவரணமாக அருளிச் செய்தவை ஆகவுமாம் –

—————————————————————————–

அவதாரிகை —

இதில் சௌந்தர்யாதிகள் முகந்து கொண்டு அனுபவிக்க ஒண்ணாமைக்கு
ஹேது -கரண சங்கோசம் -என்று கலங்க –
அந்த கலக்கத்தை அவன் தீர்த்த படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்-கீழ்- ஸ்ரீ அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில்
விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து
இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து-வாழுகைக்கு உடலாக அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான் இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட
முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

———————————————–

வியாக்யானம்–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன்
முந்துற முன்னம்-ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே அழகர் உடைய ஸ்ரீ அழகிலே யாயிற்று அகப்பட்டது –

மூழ்குகை யாவது –
சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்டு அழுந்துகை –

இப்படி சௌந்தர்ய சாகரத்திலே மகனாரான ஸ்ரீ ஆழ்வார் –
இன்ன வளவென்ன –
இவ்வளவு என்று பரிச்சேதிக்க-எனக்கு அரிதாய்த் -தென்ன –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற எனக்கு அரிதாயிற்று என்று அருளிச் செய்ய
திரு மாலே கட்டுரையே -என்று அவளோட்டைச் சேர்த்தியாலே எல்லையில் ஞானத்தனாய்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனைக் கேட்கையாலே தமக்குப் பரிச்சேதிக்க அரிது என்னும் இடம் தோற்றுகிறது-

கரணக் குறையின் கலக்கத்தை —
அவன் அனுபவ பரிகரமாகக் கொடுத்த கரண சங்கோ சத்தால் வந்த காலுஷ்யத்தை -அஜ்ஞதையை-அதாவது –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் –என்றும்
வினைகளை வேர் அறப்பாய்ந்து எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவன் -என்றும்
பன்மாயப் பல் பிறவியில் படுகின்ற யான் தொல் மா வல் வினைத் தொடர்களை
முதலரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ-என்றும்
பொல்லா வாக்கையின் புனர் வினை அறுக்கல் ஆறு சொல்லாய்-என்றும்
உன்னை சார்வதோர் சூழ்ச்சியே -என்று–இத்யாதிகளில் அருளிச் செய்தவை –
லங்கா முன் மூலிதாம் க்ருத்வா கதாத்ரஷ்ய தி மாம்பதி -இறே
இப்படி கரண சங்கோசம் அடியாக வந்த கண் கலக்கத்தை

கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து –
மாசுசா -என்று ஆஸ்ரிதர் உடைய சோக நிவர்தகனான ஸ்ரீ கிருஷ்ணன்
அந்த கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து அக் கரணங்களைக் கொண்டு
அனுபவிக்கும்படி திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப் பெற்று
என் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்றத்தை நினைத்து அருளிச் செய்தபடி –
கரண சங்கோசம் அடைய திர்யக்குகளும் பரிசர்யை பண்ணும்படி யான
ஸ்ரீ பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

———————————————————

அவதாரிகை –

இதில்-கைங்கர்யத்தில் பெரிய பாரிப்பை பேசினபடியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி பிரகிருதி சம்பந்தத்தின் உடைய கொடுமையை அனுசந்தித்து–2-3- சோகாவிஷ்டர் ஆன இவருடைய கிலேசத்தை
மாற்றுகைக்காக தான் வடக்கு ஸ்ரீ திருமலையில் நிற்கும் நிலையைக் காட்டிக் கொடுக்க
நிலை பெற்றேன் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்று அவனைக் கிட்டி தம்முடைய ஸ்வரூபம் பெற்றவாறே
ஸ்வரூப அனுரூபமாக அடிமை செய்து வாழ வேணும் -என்று சீலாதிகனான ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
வழு விலா வடிமை செய்து வாழப் பாரிக்கிற
ஒழிவில் காலத்தின் தாத்பர்யத்தை ஒழிவிலாக் காலம் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

———————————————-

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்—23-

————————————————

வியாக்யானம்–

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி –
சர்வ தேச-சர்வ கால-சர்வ அவஸ்தைகளையும் நினைக்கிறது –

வழு விலா வாட்செய்ய மாலுக்கு –
அடிமையில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே-சர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு செய்ய வேணும் என்று –

எழு சிகர வேங்கடத்துப் பாரித்த –
எழுச்சியை யுதைத்தான சிகரங்களை யுடைய ஸ்ரீ திருமலையிலே பாரித்த —
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ் சதே-என்று
ஸ்ரீ சித்ர கூடத்திலே இருவருமான சேர்த்தியிலே அனைத்து அடிமையும் செய்ய வேணும் என்று ஆசைப் பட்ட
ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே-இவரும்-
ஸ்ரீ அலர்மேல் மங்கை உறை மார்பனாய்- ஓங்கு ஸ்ரீ வேங்கடம் மேவி தான் ஓங்கி நிற்கிற
சென்னி ஓங்கு தண் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளையும் செய்ய வேணும் என்று உத்சாஹித்த –

மிக்க நலம் சேர் மாறன் –
அனுரக்தஸ்ஸ பக்தஸ்ஸ-என்று ஆராவன்பு ஸ்ரீ இளையவனைப் போலே ஆரா அன்பில் அடியேன் -என்னும்படி
நிரவதிக பக்தி உக்தரான ஸ்ரீ ஆழ்வார் –

பூங்கழலை நெஞ்சே புகழ் –
அவர்-பூவார் கழல்களிலே அடிமை செய்தாப் போலே மனசே நீயும் அபிராமமாய் புஷ்பம் போலே ம்ருதுளமாய் இருக்கிற
அவர் சரணங்களை ஸ்துத்திப் போரு-
மனசே நினை என்னாமல் ஸ்துதி – முடியானே காரணங்கள் போலே -அவர் விஷயத்திலே வாசகமான அடிமையைச் செய்யப் பார்
உத்தர வாக்யத்தில் பிரதிபாதிக்கிற கைங்கர்யம் தான் ததீய பர்யந்தமாய் யாயிற்று இருப்பது-

இத்தால் –
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிற முதல் பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்த படி
மேல் சிந்து பூ மகிழும் -என்று காயிக கைங்கர்யத்தையும்
தெண்ணிறைச் சுனை நீர் திருவேங்கடம் -என்று மானசமான அடிமையையும்
ஈசன் வானவர்க்கு என்று -வாசிகமான அடிமையையும் என்று சொல்லி
வேங்கடத்து உறைவார்க்கு நம -ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி சொல்லி
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -என்று அத்தக் கைங்கர்யத்தை ஸ்ரீ திருமலை ஆழ்வாரே தந்து அருளுவார் -என்றும்
ஸ்ரீ திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -என்று
அந்த கைங்கர்ய விரோதி நிவ்ருதியையும் ஸ்ரீ திருமலை ஆழ்வாரே பண்ணி அருளுவர் என்றும்
இப்படி முதல் பாட்டின் அர்த்தத்தை விவரித்து அருளின இவைகளும் இவர்க்கு விவஷிதம் –

———————————————————

அவதாரிகை –

கீழ் பாரித்த கைங்கர்யத்துக்கு அனுகுணமாக அவன் சர்வாத்மபாவத்தைக் காட்ட அத்தைப் பேசி அடிமை செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
கீழ்-இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக
ஒருப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும்
வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும் சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற
புகழு நல் ஒருவனில் -அர்த்தத்தை -புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————

புகழ் ஓன்றும் மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் —24-

——————————————————–

வியாக்யானம்–

புகழ் ஓன்றும் மால் –
கீழ்-எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனாய் –
புகழு நல ஒருவன் – என்று சர்வைஸ் ஸ்துதியனாமது சத்ருசமாய் சேரும்படியான ஸ்ரீ சர்வேஸ்வரன்
பொழில் ஏழும் காவல் பூண்ட படியாலே புகழும் பொருந்தி இருக்கும் இறே
அன்றிக்கே
இவரை அடிமை கொள்ளுகையால் வந்த அந்தமில் புகழ் பொருந்தின -என்றுமாம் —

எப் பொருள்களும் தானே நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க –
சமஸ்த வஸ்துக்களும் தான் என்னும்படி சர்வ சப்த வாச்யனாய் வர்த்திக்கிற
பிரகார பிரகாரி பாவத்தை பிரகாசிப்பித்துக் கொண்டு இவருக்கு ஞான சாஷாத்காரம் ஆம்படி நிற்க –
அதாவது
பொருவில் சீர் பூமி என்கோ -என்று துடங்கி அருளிச் செய்த பூதங்கள்
குன்றங்கள் அனைத்தும் என்கோ மேவு சீர் மாரி என்கோ -என்றது துடக்கமான பௌதிகங்கள்
சாதி மாணிக்கம் என்கோ -இத்யாதியில் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள்
அச்சுதன் –அச்சுவைக் கட்டி என்கோ -இத்யாதியில் ரசத்வ பதார்த்தங்கள்
நான்கு வேதப் பயன் என்கோ சமய நீதி நூல் என்கோ -நுடங்கு கேள்வி இசை என்கோ -என்று காநாதி சப்த ராசிகள் –
வானவராதி -இத்யாதியில் மோஷாதி புருஷார்த்தங்கள்
ஒளி மணி வண்ணன் -இத்யாதியில் ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகள்
இவற்றுக்கு அடைய காரணமான -யாவையும் யாவரும் தானே -என்கிற பிரகிருதி புருஷர்கள்
இவற்றை அடைய விபூதியாக யுடையனாய்-இவற்றிலே அந்தர்யாமியாக வியாபித்து
தோய்விலன் -என்று தத்கத தோஷ ரஹிதனாய் சம்ப்ருஷ்டனாய் இருக்கிறபடி –
சர்வம் சரீரம் தே ச்தைர்யன் தேவ ஸூ தாசலம் அக்னி கோப பிரசாதாஸ் தேசோமஸ் ஸ்ரீ வத்ச லஷண -என்னும் படியே
இப்படி
புகழு நல ஒருவன் என்கோ பொருவில் சீர் பூமி என்கோ என்று துடங்கி
நான்முகக் கடவுள் என்கோ -என்னும் அளவும்
சகல வஸ்துக்களும் தான் என்னும் படி பிரகாரமாக வர்த்திக்கிற பிரகாரியை காட்டிக் கொண்டு நிற்க –

மகிழ் மாறன் –
வகுள தரரான ஆழ்வார் –

எங்கும் அடிமை செய்ய இச்சித்து-
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே
அடிமை செய்ய இச்சித்து -வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்-
அப்படி ஆசைப்பட்ட அவ் விஷயத்திலே என்கோ என்கோ -என்று வாசிகமாக அடிமை செய்தார் –

மொய்ம்பால் –
ய ஆத்மதாபலதா –
வலந்தரும்-
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே – என்று அவன் தந்த ஆத்மபலத்தாலே சத்தை உண்டானால் இறே
சம்ருதியை அபேஷிப்பது-
மொய்ம்பு -மிடுக்கு
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
கண்ணா ஏழ் உலகுக்கும் உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை -என்றும்
தாய் தந்தை உயிர் ஆகின்றாய் –தொல் புகழ் உலகுக்கும் நாதனே-என்றும்
பரமா தண் வேங்கடம் மேகின்றாய் -என்றும்-
திரு வேங்கடத்தானுக்கு என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கு -என்றும்
அம்பரம் -இத்யாதியாலும்
அவனுடைய உபய விபூதி நிர்வாஹகத்வத்தையும் அந்தர் வ்யாப்தியையும்
சர்வ கால வர்த்தித்வத்தையும் அருளிச் செய்கையாலே வ்யாப்த அனுசந்தான ரூப வாச கைங்கர்யம் –
ஸ்ரீ திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமானுக்கே இறே ஏற்றி இருப்பது
அத்தைப் பற்றி இறே அங்கே அடிமை செய்தான் -என்று இவர் அருளிச் செய்தது –

—————————————

அவதாரிகை –

அடிமை செய்வாரை ஸ்துதித்தும் செய்யாதாரை நிந்தித்தும் போருகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இப்படி வாசிகமாக அடிமை செய்யப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷத்தாலே-இவ் வடிமையைக் காற்கடைக் கொண்டு
உடம்பை வளர்த்துக் கொண்டு திரியும் கழனி மிண்டரைப் பொடிந்தும்
பகவத் குண அனுபவத்தால் வந்த களிப்பிக்கு போக்கு விட்டு ஆடுவதும் பாடுவதும் ஆகிற அடிமை செய்யும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டாடியும்
ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற மொய்ம்மாம் பூம் பொழிலின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
மொய்ம்பாரும் மாலுக்கு -இத்யாதியாலே-

—————————————————————————-

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்
தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-

—————————————————————————–

வியாக்யானம்–

மொய்ம்பாரும் மாலுக்கு –
சமஸ்த ஜகதாகாரதயா சக்தியால் சம்ருத்தனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வங்களாலே இறே
பொய்கை முதலைக்கு சிறை விடுத்து கைம்மாவுக்கு அருள் செய்து அடிமை கொண்டதுவும் –
கூர் வேல் கொடும் தொழிலன் போலே எறும்புக்கு வேல் -இவனது பாரிப்பு –

முன்னடிமை செய்து உவப்பால் –
முன்-புகழும் நல் ஒருவனில் வாசிகமாக அடிமை செய்த அந்த ஹர்ஷத்தாலே –

அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் –
பக்தியாலே கைங்கர்யம் பண்ணுமவர்களை-
அதாவது –
ஓதி உணர்ந்தவர் -என்றும்
முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையினார் -என்றும்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார் -என்று ஆதரித்தும் –
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நருத்யந்தி கேசித் -என்றது இறே –

அன்பிலா மூடரை நிந்தித்தும் -மொழிந்து அருளும்-
பக்தி இல்லா பாவிகளான அஞ்ஞரை அநாதரித்து நிந்தித்தும்
அதாவது
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் -என்றும்
மண் கொள் உலகில் பிறப்பார் வல் வினை மோத அலைந்து -என்றும்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்தது உழைக்கின்ற வம்பர் -என்றும்
தம் பிறப்பால் பயன் என்ன சாது சனங்கள் இடையே -என்றும்
என் சவிப்பார் மனிசரே -என்றும்
உத்தமர்கட்கு என் செய்வார் -என்றும் இறே அருளிச் செய்தது –
மார்க்கம் பிரதர்சய -என்னும் படி இறே-அதனுள் புகாதாரை அநாதரித்த படி

மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய் –
இப்படி அஞ்ஞர் ஆனவர்களை நிந்தித்து
அவர்களை அசத் கர்மங்களின் நின்றும் நிவர்த்திக்கப் பார்த்த ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே
பெறற்கு அரியதான பக்தியை மனஸே பண்ணு-

——————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக ஸ்ரீ பர ஸ்ரீ வ்யூஹ ஸ்ரீ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று-நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள்
என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

————————————————————-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று—-26-

——————————————————-

வியாக்யானம்–

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்-ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்-இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி வற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி–நியமங்களை யுடைத்தாய் பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
ஸூலபத்தாலே ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –
நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை ஸ்ரீ பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -இணைவனாம் -அவருக்குள் இரண்டும் ஸ்ரீ பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம் இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது-சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஸ்ரீ ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

———————————————

அவதாரிகை –

இதில் ததீயரை பத்தும் பத்தாக உத்தேச்யராக அனுசந்தித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –கீழே
சௌலப்ய காஷ்டையை யுபதேசிக்க அத்தையும்-காற்கடை கொள்ளுகையான
சம்சாரிகளோட்டை சஹவாசத்தால் வந்த வெக்காயம் மாறாத படி – தனக்கு பாத ரேகை போலே பரதந்த்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
அவன் காட்டக் கண்ட அவர்கள் திருவடிகளிலே தலையை மடுத்து அவர்கள் தான் அவன் படிகளிலே பல படியாக மண்டி இருக்கிற
படியைக் கொண்டாடி அவர்கள் எல்லை நிலத்திலே சென்று இனியராகிற
பயிலும் சுடர் ஒளி யின் தாத்பர்யத்தை பயிலும் திருமால் -இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –
கச்சதா மாதுலகுலம் -இதிவத் –

——————————————————–

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே
ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா——27-

———————————————————-

வியாக்யானம்–

பயிலும் திருமால் –
ஆஸ்ரித சங்க ஸ்வபாவனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே
இத்தால் -திரு நாரணன் -என்றத்தை சொல்லுகிறது —

பயிலும் திரு என்று
ஸ்ரீ எம்பெருமானோடே சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டையான ஸ்ரீ என்னவுமாம் –

பதம் தன்னில் நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு –
என்றது -பாதம் பணிய வல்லாரை -என்றபடி –
நெஞ்சம் தயலுண்டு நிற்கையாவது –
திருவடிகளிலே போக்யதையை அனுசந்தித்து ஸ்நேஹார்த்தரதா யுக்தா சித்தராய் தன நிஷ்டராய் இருக்கை-என்றபடி
உன் இணைத் தாமரை கட்கு அன்புற்று நிற்குமது -என்னக் கடவது இறே –
அன்றிக்கே
தயல் -என்று தையலாய்
திருவடிகளிலே பந்த பாவராய் இருக்குமவர்கள் என்றாகவுமாம்
ததீயர் -என்று
தத் சம்பந்தமே நிரூபகமாய் உள்ளவர்களுக்கு -என்கிறது
பயிலும் திரு உடையார் -என்றும்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் -என்றும்
பாதம் பணிய வல்லார் -என்றும்
திரு நாரணன் தொண்டர் -என்றும்
இப்புடைகளிலே நிரூபகமாய் இருக்கை -என்கை –
பாகவதம் -பாகவத இதம் பாகவதம் போலே அவன் சம்பந்தமே நிரூபகம்

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி –
வடிவு அழகிலும்-ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்-தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே
ஸ்வரூபமாய் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் –

ஆளாகார் –
அடிமை ஆகாதார் –

சன்மம் முடியா –
சன்ம ஷயம் பிறவாது –
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினார் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வார் சம்பந்தம் உடையவர்களுக்கு இறே சம்சார சம்பந்தம் அறுவது –
இவையுமோர் பத்து சொன்னால் இறே சன்மம் செய்யாமே இலங்கு வான் யாவரும் ஏறுவது
அல்லாதாருக்கு சித்தியாது இறே –

ஆகையால் ததீய சேஷத்வத்தின் எல்லை நிலத்திலே நிற்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே
ஜன்ம சம்சார பந்த நிவ்ருத்தி பூர்வகமாக மோஷ சித்தியாம் – என்றபடி –

—————————————————

அவதாரிகை –

இதில் கரணங்களும் தாமும் பெரு விடாய் பட்டு பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரஸ்துதமான பகவத சௌந்தர்யாதிகள் விடாய்க்கு உத்தகம்பாய்
அத்தாலே விடாய் கரை புரண்டு அனுபாவ்யமான பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களை சொல்லி
தாமும் தம்முடைய கரண க்ராமமுமாய் முழு மிடறு செய்து கூப்பிடுகிற
முடியானே யின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -முடியாத ஆசை மிக -இத்யாதியால் -என்கை-

———————————————

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்—28-

——————————————

வியாக்யானம்–

முடியாத வாசை மிக-
மயர்வற மதி நலம் அருளுகையாலே அடியே தொடங்கி வருகிற ஆராத காதலானது
அனுபவ அலாபத்தாலே அதிசயிக்க –
கீழே பாகவத ஸ்வரூப நிரூபணத்துக்கு உடலாக பகவத் குணாதிகள் பிரஸ்துதம் ஆக -அத்தாலே
பக்தி அபிவிருத்தியாக –

முற்று கரணங்கள்
பாஹ்யாப்யந்தர சகல கரணங்களும்
முடியாத ஆசை மிகு முற்று கரணங்கள் என்று கரண விசேஷணம் ஆகவுமாம் –

அடியார் தம்மை விட்டு –
எம்மை ஆளும் பரமர் –
எம்மை ஆளுடை நாதர் –
எம்மை ஆளுடையார்கள் –
எம் பெரு மக்கள்-
எம்மை அளிக்கும் பிராக்கள் –
எம்மை சன்ம சன்மாந்தரம் காப்பர் –
எம்மை நாளும் உய்யக் கொள்கின்ற நம்பர்-
எம் தொழு குலம் தாங்கள் –
அடியார் எம் அடிகள் –
அடியார் தம் அடியார் அடியோங்களே –
என்று இப்படி சர்வ பிரகாரங்களாலும் சேஷிகளாக அனுசந்திக்கப் பட்ட
ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு –
அவன் பால் -படியா -படிந்து –
புருஷார்த்த காஷ்டையை கொலைக்கும் படியான அவன் இடத்திலே அவகாஹித்து
கரணங்களும் தாமும் தத் விஷயத்தில் பிரவணராய்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ச்ப்ருசேயம் சகாமாஹம் -என்னும்படியாக –

ஓன்று ஒன்றின் செயல் விரும்ப –
நெஞ்சமே நீணகராக விருந்த என் தஞ்சனே -என்றும்
வாசகமே ஏத்த யருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -என்றும்
கண்களால் காண வரும் கொல் -என்றும்
வாக் பாணி சஷூஸ் ஸ்ரோத்ரங்களான இந்த்ரியங்களை
மநோ வாக் பாணி சஷூர் வ்ருத்திகள் ஆசைப் படும் படியாக-இந்த்ரிய வ்ருத்தி நியமம் இன்றிக்கே
அவனை அனுபவிக்க வேண்டும்படியான பெரிய விடாயை யுடையவையாய் –

உள்ளது எல்லாம் தான் விரும்ப –
கீழ்ச் சொன்ன கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க ஆசைப் பட
அதாவது
உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனதாவி –என்றும்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப் பெறேன் உன்கோலம் -என்றும்
உன்னை எந்நாள் கண்டு கொள்வன் -என்றும்
உன்னை எஞ்ஞான்று பொருந்துவன் -என்றும்
உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவன் -என்றும்
இப்படியே அவருடைய பிராவண்யம் இருக்கும்படி -என்கை

துன்னியதே மாறன் தன் சொல் –
இப்படி-கரண க்ரமத்தின் யுடையவும் கரணியான ஆழ்வார் தம்முடையவும்
ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது
துன்னுதல் -நெருக்கம் –

—————————————————

அவதாரிகை –

இதில் அசேவ்ய சேவை அநர்த்தம் என்றும்-பகவத் சேவை பிராப்தம் என்றும் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று லௌகிகரை பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு
சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு அது பொறுக்க மாட்டாமல்
இப்படி வகுத்த விஷயத்தை விட்டு அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு
ஹிதம் அருளிச் செய்ய
மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க அவர்களை விட்டு ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற
சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து
சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்–29-

மாறும் சன்மம் கிட்டும் -குருகூர் மன்னன் அருளால் –

——————————————-

வியாக்யானம்–

சொன்னாவில் வாழ் புலவீர் –
ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு பரிகரமான நாக்கைக் கொண்டு அவனை ஸ்துதித்து
ஜீவிக்கிற புலவீர்காள் நீங்கள் விசேஷஞ்ஞர் அல்லீர்கோளோ-

சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்-
அசன அச்சாதநாதிகளாய் யுள்ள சூத்திர பிரயோஜனதுக்காக ஷயிஷ்ணுக்களான
சூத்திர மனுஷ்யரைக் கவி பாடி ஸ்தோத்ரம் பண்ணுகையால் என்ன பிரயோஜனம் சித்திக்கும் –
திருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் ஒன்றுமே சித்தியாது -அனர்த்தமே சித்திக்கும் -என்றபடி –
என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள் -என்று
அருளிச் செய்ததை நினைக்கிறது
கோ சஹச்ர பிரதாதாரம் -ச சர்வானர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்யச -என்னும் விஷயம் அன்றே

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் –
திருவேங்கடத்து என்னானை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே-என்றும் –
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும் –
ஓராயிரம் பேருமுடைய பிரானை யல்லால் மற்றி யான் கிலேன் -என்றும்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலன்-என்றும்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே -என்றும்
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்றும்
உலகம் படைத்தான் கவி -என்றும்
தம்முடைய அந்ய விஷய வ்ருத்தி நிவ்ருத்தியையும் ஸ்வ வ்ருத்தியான பகவத் ஸ்தோத்ர பிரவ்ருத்தியையும்
முன்னிட்டு ஸ்ரீ திருமாலவன் கவியான என்னோடு கூட –
என் ஸ்ரீ திருமாலான ஸ்ரீ யபதியை கவி சொல்ல வம்மின் என்று பரோபதேசம் பண்ணி
பரோபதேச நிரபேஷமாக திருந்தின தம் படியையும் பேசினவராய் –

குருகூர் மன்னருளால் மாறும் சன்மம் –
ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்
கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஸ்ரீ ஆழ்வாருக்கு –
இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஸ்ரீ ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை-
இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று
இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் –

————————————

அவதாரிகை –

இதில் பகவத் அர்ஹனான எனக்கு ஒரு குறைகளும் இல்லை என்ற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இதரரைக் கவி பாடுகைக்கு அனர்ஹ கரண மாத்ரமாகை அன்றிக்கே
பகவத் விஷயத்தை கவி பாடுகைக்கு அர்ஹ கரணனாகவும் ஆகப் பெற்றேன்
எனக்கு இனி வேண்டுவது உண்டோ என்று ஹ்ருஷ்டராகிற
சன்மம் பல பல-வின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -சன்மம் பல செய்து -இத்யாதியாலே -என்கை-

———————————————-

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்—-30-

———————————————

வியாக்யானம்–

சன்மம் பல பல செய்து -என்ற பாட்டு
இத் திருவாய் மொழிக்கு உயிர் பாசுரம் ஆகையாலே அத்தைக் கடாஷித்து அருளிச் செய்கிறார் –

சன்மம் பல செய்து என்று –
சன்மம் பல பல செய்து -என்றும் –
பஹூனி மேவ்யதீதானி –
பஹூதாவிஜாயதே -என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதமான அவதாரங்களைப் பண்ணி –

சன்மம் பல பல செய்து தான் –
அகரம வச்யனான தான் –
கௌசல்யா ஜனயத் ராமம்
ஜாதோஹம் யத் தவோதராத் –
என்னும்படி ஆஸ்ரித அர்த்தமாக அசங்க்யதமான அவதாரங்களைப் பண்ணி

இவ் வுலகு அளிக்கும் –
தன் வாசி அறியாத இச் சம்சாரிகளை ரஷிக்கும் ரஷணம் தான் விரோதி நிரசன பூர்வகமாக இறே இருப்பது –
குணவான் கஸ்ய வீர்யவான் -இறே
விரோதிகளைப் போக்கி ஈரக் கையாலே தடவி ரஷிக்கும் நன்மை யுள்ளது ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே இறே
நஹி பாலன சாமர்த்த்யம்ருதே சர்வேஸ்வரீம் ஹரீம் –
உலகில் வன்மை யுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் சீர் -என்றத்தை சொல்லுகிறது –

இவ் வுலகு அளிக்கும் நன்மை யுடைய மால் குணத்தை –
சீர்ப் பரவப் பெற்ற நான் -என்றத்தை
மால் குணத்தை நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன்-என்கிறது –

ஒரு தேச விசேஷத்திலே
விபன்யவே-விண்ணோர் பரவும்-2-6-3- என்று ஸ்துதித்து
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா- என்று அனுபவிக்கும் குணங்களை
இவ் விபூதியிலே ஸ்தோத்ரம் பண்ணுகையால் யுண்டான ஆனந்தத்தைப் பெற்றேன்
குறைவு முட்டுப் பரிவு இடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி
அம்ருத ஆனந்த மக்னரானவர் என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தது –

ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள் –
இப்படி அவன் கல்யாண குணங்களை ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை
லௌகிகராய் உள்ளவர்களே-நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்
அது தான் பல நாள் வேண்டா-ஒரு நாள் அமையும்
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதனன் மேவியே –
பகலிராப் பரவப் பெற்றேன் -என்கிற நிர்பந்தம் வேண்டா

நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்
சத்ருத் சேவிக்க அமையும்-சர்வதா சரசமாய் இருக்கும்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே –

—————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —இரண்டாம் பத்து–பாசுரங்கள்- 11-20-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்

(துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-)

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் (1-3-10)-என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால் -ஷட் குண சாம்யத்தாலே தாமான தன்மை குலைந்து
ஸ்ரீ பிராட்டியான தன்மையைப் பஜித்து தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-

இங்கு ஸ்ரீ நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே

(நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?)

மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய் அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே ஸ்ரீ பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டுச் செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை வாயும் திருமாலால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————-

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –11-

வாயும் -திருமால் –வாயும்-வாய்க்கும் –
அடியார் அனுபவிக்கலாம்படி அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய ஸ்ரீ யபதி யானவன் –

ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்- தம்முடைய துக்கத்தை ஆராய அறியாத வற்றை

செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை த்ருடமாக கடாஷித்து அருளுவார்-

—————————————-

வியாக்யானம்–

வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விஸ்லேஷித்து அத்ருஸ்யனாய் நிற்க –(சாத்ம்ய போகம் பொறுக்க பொறுக்க -போக சாத்ம்யம் -போகம் தரிக்க )
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே-நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன் விஸ்லேஷிக்கையாலே –

(சொல்லும் பொருளும் தொகுத்து உரைக்கிறார் ஆதலால் அங்கு உள்ள சொல்லைக் காட்டி அருளுகிறார்)

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி-மிக்க பிரலாம்பராய்

ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே தம்முடைய துக்கத்தை ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சம துக்கிகளாக அழுத ஸ்ரீ ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஸ்ரீ நாயனார் –

செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்-அந்தரங்கமாக ஆஸ்ரயிக்கும் அவர்களை த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல் ஸ்ரீ பகவத் சம்ஸ்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி கடாஷித்து அருளுவர் –

————————————————————————————

அவதாரிகை –

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே -அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்–இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்தை இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-

———————————

வியாக்யானம்-

திண்ணிதா மாறன் –
கீழே-மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் – என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் -என்னுதல் –

திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –

நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -திருமால் பரத்வத்தை அவதாரத்தே நண்ணி நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே இதிஹாச புராண பிரக்ரியையாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம்படி நன்றாக அருளிச் செய்த
அன்றிக்கே –
ஸ்ரீ திருமால் பரத்வத்தை தாம் நண்ணி அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-

நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகையாவது –இப்படி அவதாரே பரத்வத்தை ஸூஸ்பஷ்டமாம் படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி -புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர் என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா கமலா பத்ராஷஸ் சர்வ சத்வ மநோஹரா-என்றும்
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே –

அற்றார்கள் யாவர் –
அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –

அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்-அவ்விடத்திலே அப்படியே அவர்கள் விஷயத்தில்
அந்தரங்கராய் கிட்டினவர்களை மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

——————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ஸ்லேஷிக்க-தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை தலைக் கட்டின அநந்தரம்
கீழ்-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்ஸ்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும்
அனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே-துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே-போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற-ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

—————————————————-

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-

———————————————————-

வியாக்யானம்–

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை யானது –
அதாவது-நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல் சங்கோசம் அற ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -என்றும்
என தாவியுள் கலந்த பெரு நல் உதவி -என்றும்
கனிவார் வீட்டின்பமே -என்றும்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்-இப்படி சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது ச ஹிருதயமாக சம்ஸ்லேஷித்த சாரஸ்யம் ஆனது

அனுபவித்தற்காம் துணையா –
ஏவம் வித ரஸ்யதையை அனுபவிக்கைக்கு
அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று அனுகூல சஹவாஸம் அபேஷிதமாய்

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே யாடு –
வையத்து அடியவர்கள் அன்றிக்கே அனுபவத்துக்கு தேசிகராய் வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின ஸ்ரீ ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்-அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே-

—————————————————————

அவதாரிகை –

இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே மிகவும் தளர்ந்து தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஸ்ரீ எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற
பிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான ஸ்ரீ பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————–

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —-14-

—————————————————–

வியாக்யானம்-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக –
ஆடி மகிழ் வானில் –
பகவத் அனுபவத்தில் அவஹாகித்து ஹிருஷ்டர் ஆகிற -என்னுதல் –
அன்றிக்கே
ஸ்ரீ பகவத் அனுபவ பிரகர்ஷத்தாலே-ந்ருத்யந்தி கேசித் -என்னும் படியாக – அத்தாலே ஹ்ருஷ்டராக -என்னுதல் –
இப்படியான வானில் அடியார் உண்டு ஸ்ரீ வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள்
அவர்கள் சங்கத்திலே சங்கதராய் -ஆனந்தத்தை அடையாத அபூர்த்தியாலே-வாடி வாடும் -என்று மிகவும் வாடி –

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று நிரவதிக சிநேக உக்தரான
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூஹ்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிரூபித்து-தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை-தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்-தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –

மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ –
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஸ்ரீ ஆழ்வார் –
ஐயோ -மமா பிவ்யதிதம் மன -என்று
அற்ற பற்றார்க்கும் இரங்க வேண்டும் படியாய் இறே இவர் தசை இருப்பது –

அன்புற்றார் தன்னிலைமை யாய்ந்து உரைக்கை யாவது –
சாதியர் கூர்த்தவஞ்ச -இத்யாதிப் படியே
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் -என்றும்
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே -என்றும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே -என்றும்
உம்மைத் தஞ்சம் என இவள் பட்டனவே -என்றும்
நுமது இட்டம் என் கொலோ இவ் ஏழைக்கு -என்றும்
இவள் மாழை நோக்கு ஒன்றும் மாட்டேன்மினே -என்றும்–இப்புடைகளிலே அருளிச் செய்தவை-என்கை –
இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்-கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய் இருக்கும் ஆயிற்று –

—————————————————

அவதாரிகை –

இதில் ஆடியாடியில் -விடாய் தீர அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து-வாட்டமில் புகழ் ஸ்ரீ வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே-
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து-சம்ஸ்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே-அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

—————————————————–

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-

—————————————————-

வியாக்யானம்–

அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத் தேசத்திலும் அத் தேசிகர் இடத்திலும் உண்டான அதி ஸ்நேஹத்தாலே –

அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு -அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் -அவர்களோடு கூட ஸ்ரீ சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –

வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான் ஸ்ரீ பரம பதத்தின் நின்றும் பரமாபதமா பன்னரான-இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ஸ்லேஷித்த ஔதார்யத்தாலே –

சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –

சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –

சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
ஸ்ரீ வானோர் தனித் தலைவன்-அந்தாமத்து அன்பு செய்யும் படியான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே அன்பை அடியிலே இட்டு வை-

————————————————————

அவதாரிகை –

இதில்-அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ஸ்லேஷித்த இவர் அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற -ஸ்ரீ வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை-ஸ்ரீ வைகுந்தன் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் –

————————————————

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—16-

—————————————–

வியாக்யானம்–

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் –
ஸ்ரீ நித்ய விபூதி உக்தன் அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -என்னும்படி ஒரு நீராக கலந்த பின்பு –

வாழ் மாறன் –
அத்தாலே சத்தை பெற்று சம்பன்னரான ஆழ்வார் –

செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து –
இவர் -அல்லாவி -என்று அகல நினைக்கிற நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் விசாரித்து –

நைகின்ற தன்மைதனைக் கண்டு –
அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து –

உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –
இப்படி என் விஸ்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற உன்னை தான் விடேன் என்று –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
உன்னை எங்கனம் விடுகேன் -என்றும்
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -என்றும்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்றும்–ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –

வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

———————————————————

அவதாரிகை –

இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

—————————————————

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-

—————————————————–

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்-மாசரிது பெற்று – அத்தாலே -நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் – என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ஸ்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின் அனுவாதமான கேசவனால் என்கிற இப் பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு -விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது -என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
ஏற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்-அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

—————————————————————

அவதாரிகை –

இதில் மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி ஸ்ரீ ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள
ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-

——————————————-

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு—-18-

——————————————–

வியாக்யானம்–

அணைந்தவர்கள் தம்முடனே –
அணைவது அரவணை -யில்படியே- ஸ்ரீ பூமி நீளா நாயகனாய்–ஸ்ரீ அநந்த போக பர்யங்களில் எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டி அடிமை செய்கிற ஸ்ரீ அநந்த பரிமுகரான சூரி சங்கங்களோடு கூட்ட -என்னுதல்
அன்றிக்கே
கேசவன் தமர் -என்னும்படி கீழ் அந்தரங்கர் ஆனவர்கள் தங்களோடு கூட்டுதல் என்னுதல்
தம்முடனே -என்கிறது–ஸ்ரீ ஆழ்வார் தம்முடனே -என்றதாகவுமாம் –

தம்முடனே அணைந்தவர்கள் –
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள் -என்னுதல்

ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு –
எப்பொருட்கும் –இணைவனாம் -என்று – ஆஸ்ரித ஸூலபனாய் அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் உடைய கிருபைக்கு விஷயமாம் படியாக –
மேலும் -என் கண்ணனை நான் கண்டனே –என்றார் இறே –
ஏவம் விதனானவனுடைய மோஷப் பிரதத்வம் ஆகிற குணம் ஒன்றையுமே கொண்டு என்னுதல் –

அன்றிக்கே –
குணங்களையே கொண்டு -என்ற பாடம் ஆன போது
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே உபாயாந்தர நிரபேஷமாக திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு -என்னுதல்
அவ் வவதாரத்திலே இறே
இடைச்சி
இடையன்
தயிர்த் தாழி
கூனி
மாலாகாரர்
பிணவிருந்து
வேண்டி அடிசில் இட்டவருக்கு எல்லாம் மோஷம் கொடுத்தது

இணைவனாம் யெப்பொருட்க்கும் வீடு முதலாம் -என்று அவதார சாமான்யமாய் –
வேடன்
வேடுவச்சி
பஷி
குரங்குகள்
சரா சரங்களுக்கும்
மோஷம் கொடுத்தமை யுண்டாய் இருக்கவும்
ஆயனருக்கு -என்றத்தைப் பற்ற ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே ஊன்றி சொல்லிற்று –
கச்ச லோகன் அநுத்தமான் -என்று இறே
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பெரிய உடையாருக்கு பிரசாதித்தது –
இப்படி அவதாரத்திலே மோஷ பிரதத்வாதி குணங்களைக் கொண்டு திருத்தி –

உலகைக் கூட்ட -இணங்கி மிக –
நித்ய சம்சாரிகளை நித்ய சூரிகளோடு கூட்ட-மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு இணக்குப் பார்வை போல்
சஜாதீயராய் இணங்கி –

ஆயன் அருட்கு ஆளாம் குணங்களையே கொண்டு-உலகை அணைந்தவர்கள்
தம்முடனே கூட்ட மிகவும் இணங்கி -என்று அந்வயம் –

மிக இணங்கி மாசில் உபதேசம் செய் மாறன்-
க்யாதி லாப பூஜாதி தோஷ ரஹிதமாய் இருக்கும் –
ஸூத்த உபதேசத்தை மிகவும் அடுத்து அடுத்துப் பண்ணும் பரிசுத்த ஞானரான ஸ்ரீ ஆழ்வார் –
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் -என்றும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு புணைவன் -என்றும்
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்–என்றும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -என்று இறே உபதேசித்து அருளிற்று –

மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே –
ஏவம் வித உபதேஷ்டாவான ஸ்ரீ ஆழ்வார் உடைய புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –

வீசு புகழ் எம்மா வீடு –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஸ்ரீ ஆழ்வாருக்கு -செம்மா பாதம் -இறே எம்மா வீடு–பொசிந்து காட்டும் இங்கே –
இவருக்கு ஸ்ரீ மாறன் மலர் அடியே யாயிற்று-விபூதிஸ் சர்வம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-

————————————————————

அவதாரிகை –

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
ஸ்ரீ பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம் எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
ஸ்ரீ தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும் என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-

—————————————————-

வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் வி லஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு-யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –

வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது -எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –

நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டித் தான் இருப்பது –
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –

நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி -தனியேன் வாழ் முதலே -என்கிற ஈஸ்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஸ்ரீ ஆழ்வாராய் இருக்கும் –

மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே செவ்விப் பூ சூடுவாரைப்போலே பூ போன்ற அடி இணையைச் சூடி –

கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று ஸ்ரீ ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

——————————————————

அவதாரிகை –

இதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

————————————————–

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-

————————————————-

வியாக்யானம்–

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய் கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –

வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –

தளர்வு –
மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

அறவே –
அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து -சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –

இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் -கிளர் ஒளி இளமை -என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது -கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
ஸ்ரீ திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
ஸ்ரீ திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்-ஸ்வ அனுபவ கர்ப்ப பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –

அந்தர்கத குணா உபாசனத்தை மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாய பரமாக ஸ்ரீ நாயனார் அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது-ஆகையால் ஸ்ரீ திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே

நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே –

முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -தனியன் -அவதாரிகை–முதல் பத்து–பாசுரங்கள்- 1-10-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -நல்ல
மணவாள மா முனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான் –

தணவா -மிகவும் பொருந்தின

—————————————————————

மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே -சொன்ன
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை
ஒருவாது அருந்து நெஞ்சே உற்று-

திருவாய் மொழி அம் தேன் -பக்தாம்ருதத்தில் இருந்து வந்த பெண் அமுதம் போல் ஸ்ரேஷ்ட உத்தம திவ்ய பிரபந்தம் அன்றோ

——————————————————————

ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் -திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் -என்னும்படி
ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருள

இப்படி நிர்ஹேதுக கடாஷ பூதரான ஆழ்வாரும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -என்னும்படி திருவாய்மொழி முதலான திவ்ய  பிரபந்தங்களை
பண்ணார் பாடலாம் படி பாடி அருளி
அநந்தரம்
தம்முடைய நிரவதிக கிருபையாலே ஸ்ரீ மதுரகவி பிரப்ருதி ச ஜனங்களுக்கு
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்னும்படி உபதேசித்து
அவ்வளவும் அன்றிக்கே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல் ஆம்படி செயல் நன்றாகத் திருத்தி பணி கொண்டு அருளி நடத்திப் போந்த
அநந்தரம்
நெடும் காலம் சென்றவாறே
இத் திவ்ய பிரபந்தங்கள் சங்குசிதமாய் போனபடியைத் திரு உள்ளம் பற்றி
இதுக்காவார் ஆர் -என்று பார்த்து ஸ்ரீ மந் நாதமுனிகளை -அருள் பெற்ற நாதமுனி -என்னும்படி
தம்முடைய கடாஷ விசேஷத்தாலே கடாஷித்து அருளி இவருக்கு
திவ்ய ஜ்ஞானத்தையும் யுண்டாக்கி அந்த திவ்ய சஷூர் மூலமாகவே
சரணாகதி புரசரமாக தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் பிரகாசிப்பித்தது அருளினார் –

இப்படி ஆழ்வார் உடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரான ஸ்ரீ மன் நாத முனிகளும்
அழித்தலுற்றவன்றிசைகள் ஆக்கினான் -என்னும்படி
இத் தமிழ் மறைகளை இயலிசை யாக்கி நடத்தியும்
அதுக்கு மேலே ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்ரீ உய்யக் கொண்டார் துடக்கமான ஆஸ்திகரைக் குறித்து
பிரபர்த்தி யாரத சஹிதமாக இத்தை பிரகாசிக்க
அவர்களும் அப்படியே அவர் திருப் பேரனார்க்கு ஸ்ரீ மணக்கால் நம்பி முகேன் பிரசாதிப்பிக்க
பின்பு ஸ்ரீ ஆளவந்தார் அவை வளர்த்தோன் -என்னும்படி அவரும் அத்தை வர்த்திப்பிக்க
அவர் கடாஷ லஷ்ய பூதராய்
மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானாரும் -வளர்த்த இதத் தாய் -என்னும்படி வர்த்திப்பித்து கொண்டு போன பின்பு
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண் சாலிகளான
ஸ்ரீ கோவிந்த ஸ்ரீ கூராதி ஸ்ரீ பட்டார்யா ஸ்ரீ நிகமாந்த முனி பர்யந்தமாய்
உபதேச பரம்பரையா சங்குசித வ்யாக்யானமாக நடந்து சென்ற இது

திருமால் சீர்க்கடலை உள் பொதிந்து
இன்பத் திரு வெள்ளம் மூழ்கின
ஸ்ரீ நம் ஆழ்வார் அவதாரமாய் ஸ்ரீ நம்பிள்ளை என்று பேர் பெற்ற ஸ்ரீ லோகாச்சார்யாராலே
லோகம் எங்கும் வெள்ளம் இடும்படி தீர்த்தங்கள் ஆயிரமான திருவாய்மொழி
விசத வியாக்யான ரூபமாக பிரவகிக்க அது
ஆங்கு அவர் பால் -என்று துடங்கி மேலோர் அளவும் விஸ்த்ருதம் ஆயிற்று-

இப்படி தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி ஸ்ரீமந் நாத யாமுன ஸ்ரீ யதி வராதிகளால் வர்த்திப்பித்துக் கொண்டு போந்தமை பற்ற
திருவருள் மால் -என்றும்
நாதம் பங்கஜ நேத்ரம் -என்றும்
இத் தனியன்களாலே வந்த இந்த சம்ப்ரதாய க்ரமம் தேவாதிபரளவும் தர்சிக்கப் பட்டது
இப்படி பரம்பரையா நடந்து வந்த திருவாய்மொழியின் ஈட்டின் சம்ப்ரதாய க்ரமம் தான்
அதுக்கு தேசிகரான ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் அடியாக இறே
காந்தோ பயந்த்ருயமிக கருணைக சிந்தோ -என்னும் படியான ஸ்ரீ ஜீயர் இடத்திலே
ஸ்ரீ மணவாள மா முனியான வேரி தேங்கி -என்னும்படி தங்கிற்று
அத்தைப் பற்றி இறே
ஆர்யா ஸ்ரீ சைல நாதா ததிக தசட சித் ஸூ கதி பாஷயோ மஹிம் நாயோ கீந்த்ரச் யாவதாரோ சயமிதிஹிகதித்த -என்றும்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாள் சேர்ந்து அங்கு உரை கொள் தமிழ் மறைக்கும்
மறை வெள்ளத்துக்கும் ஓடமாய் ஆரியர்கள் இட்ட நூலை யுள்ளு உணர்ந்து என்றும்
தமிழ் வேதமாகிய வோத வெள்ளம் கரைகண்ட கோயில் ஸ்ரீ மணவாள மா முனி -என்றும் சொன்னார்கள் –
இப்படி முப்பத்தாறாயிரப் பெருக்கர் ஆகையாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் -என்னும்படி
தம் விஷயமான திருவாய்மொழியின் அர்த்தத்தை இவர் இடத்தில் கேட்க வேணும் என்று
ஸ்ரீ பெருமாள் தாமும் திரு உள்ளமாய் -ஸ்ருத்வாகூடம் சடரி புதிராத்தத்வம் த்வதுக்தம் -என்னும்படி
ஆழம் கால் பட்டு கேட்டு அருளினார் இறே-
அதன் பின்பு ஸ்ரீ பட்ட நாத முனி வான மகாத்ரியோகி துடக்கமான ஆச்சார்யர்கள் ஆகிற கால்களாலே புறப்பட்டுக்
காடும் கரம்பும் எங்கும் ஏறி பாய்ந்து பலித்தது

இப்படி ஈசேசிதவ்ய விபாகமற
ஸ்வ ஸூ கத்தியாலே வசீகரிக்க வல்ல வைபவமானது –
ஸ்ரீ மணவாள மா முனி தோன்றிய பின் அல்லவோ தமிழ் வேதம் துலங்கியது -என்றும்
ஸ்ரீ மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி  அல்லவோ தமிழ் ஆரணமே -என்றும்
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் சொல்லப் பட்டது –
இவர் தாமும் -எந்தை ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கம் -என்றும்
அத்தாலே ஸ்ரீ மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்றும்
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதாசனம் -என்றும்–தாமும் அருளிச் செய்தார் –

ஏவம் வித மாஹாத்ம்யம் இவர் தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாகவும்
திருவாய்மொழி யினுடைய துர்க்ரஹமான அர்த்தங்களை எல்லாம் எல்லாரும் அறியும்படி
ஸூ கரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் -சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -என்னும்படி சங்கதியாக
இப் பிரபந்தத்திலே அருளிச் செய்கிறார்
ஈட்டில் சங்கதியே யாயிற்று இவர் தாம் இப்படி சங்க்ரஹித்து அருளிச் செய்கிறது –

இப் பிரபந்தங்களுக்கு அநேக நிர்பந்தங்கள் உண்டாய் இறே இருப்பது -அது எங்கனே என்னில் –
1-வெண்பா -என்கிற சந்தஸ் -ஆகையும்
2-இப்படியான இப் பாட்டில் முற்பகுதியில் ஓரோர் திருவாய்மொழியின் தாத்பரியமும் தத் சங்கதிகள் அடைகையும்
3-பாட்டுக்கள் தோறும் ஆழ்வார் திருநாமங்கள் வருகையும்
4-அதில் தாத்பர்யங்களை தத் பர்யந்தமாக பேசுகையும்
5-அந்தாதியாய் நடக்குகையும் ஆகிற
இவ் வைந்து நிர்பந்தம் உண்டாய் இருக்குமாயிற்று-

இது தான் பாலோடு அமுதம் அன்ன ஆயிரமான திருவாய் மொழியின் சாரம் ஆகையாலே
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை -என்னும்படி
சரசமான நிரூபகமாய்
ஆயிரத்தின் சங்க்ரஹம் ஆகையாலே ஓரோர் திருவாய் மொழியின் அர்த்தத்தை
ஓரோர் பாட்டாலே அருளிச் செய்கையாலே நூறு பாட்டாய்
அல்லும் பகலும் அனுபவிப்பார்க்கு நிரதிசய போக்யமாய்
அவ்வளவும் அன்றிக்கே
ஸ்ரீ உடையவர் நூற்றந்தாதியோபாதி ஸ்ரீ ஆழ்வார் நூற்றந்தாதியும் உத்தேச்யம் ஆகையாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே பிரேமம் யுடையார்க்கு அனவரத அனுசந்தேயமுமாய் இருப்பதும் ஆயிற்று –
இதில் சரம பர்வமான ஆழ்வார் திருவடிகளை இறே பிராப்ய பிராபகங்களாக நிஷ்கரிஷிக்கிறது –
அது தான் பராங்குச பாத பக்தராய் –
சடகோபர் தே மலர் தாட்கேய்ந்து இனிய பாதுகமாம் எந்தை ராமானுசன் அளவும் வந்து இருக்கும் இறே
ஸ்ரீ ஆழ்வார் தாம்
ஸ்ரீ திவ்ய மகிஷிகள் யுடையவும்
ஸ்ரீ திவ்ய ஸூரிகள் யுடையவும்
ஸ்ரீ முக்தருடையவும்
ஸ்ரீ முமுஷூக்கள் யுடையவும்–படிகளை யுடையவராய் இருக்கையாலே
ஸ்ரீ உடையவரும் இவர் விஷயத்திலே யாயிற்று ஈடு பட்டு இருப்பது-

——————————————————

அவதாரிகை –

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

—————————————————–

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1

——————————————————-

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது

ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது

உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –

உயர்வே -என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைப் போலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இறே
அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிறவிக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்-
ஆனந்த மய
ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்

பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
நேஹானா நாஸ்தி கிஞ்சன –
ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும்
சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்
நாமவன் –
அவரிவர் –
என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்

தேன வினாத்ருணா க்ரமபி நசலதி –
யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா –
என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்
திட விசும்பு -என்ற பாட்டாலே காட்டியும்

(அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –
இப்பாட்டில் ஸ்ரீ யபதித்தவம் ஸ்பஷ்டமாக இல்லா விடிலும்
அவ ரஷணே தாது -ரக்ஷிக்கும் பொழுது அவள் ஸந்நிதி வேண்டுகையாலே என்னுமா போல்)

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் –
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து
திர மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை
பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது

அத்தை பற்றி இறே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இ றே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மயர்வேதும் வாராமல்
அவன் ஆழ்வாருக்கு மயர்வற மதி நலம் அருளினான்
இவரும் நமக்கும் மயர்வு -ஞான அனுதயம் – அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -அனைத்தும் அறும் படி அருளிச் செய்து

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூக்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து திருவடிக்கீழ் வாழ்வதே வாழ்ச்சி)

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி யடியாகவே
பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
திவ்ய ஸூக்தி மூலமாக இறே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி

அன்றிக்கே
ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இறே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –

(குருகூர் நம்பி பா -அவரைப் பற்றிய பா -கண்ணி நுண் சிறுத்தாம்பு போல்
இங்கும் -தத் விஷயமான உக்தி-திருவாய் மொழி நூற்று அந்தாதி சொல்லவே வீடு பேறு கிட்டுமே)

—————————————————————————-

அவதாரிகை –

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே-அனுபவத்துக்குத் துணையாய்
திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழ் ஸ்ரீ எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்-அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து-
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும்
பகவத் குண வை லஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு-பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை-வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

——————————————–

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——2-

——————————————————

வியாக்யானம்-

வீடு செய்து மற்றெவையும் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -என்னும்படி பரிக்ரஹங்கள் அடைய பரித்யஜித்து –

வீடு செய்து –
விடுகையைச் செய்து –

மற்றெவையும்
பகவத் வ்யதிரிக்தமாய் இருந்துள்ளவை எல்லாவற்றையும் நினைக்கிறது
பஜன விரோதிகளாய்-அஹங்கார ஹேதுக்களாய்-உள்ளது அடங்கலும் முமுஷூவுக்கு த்யாஜ்யம் இறே
வீடுமின் முற்றவும் வீடு செய்து -என்றத்தைப் பின் சென்ற படி –
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்தை இறை யுன்னுமின் நீரே -என்றும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்றும்
அது செற்று -என்றும்
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்றும்
இப்படி சதோஷமாய் இருக்குமது எல்லாம் த்யாஜ்யமாய்-அத்தால்
சகுணமாய் இருக்குமது உபாதேயமாய் இறே இருப்பது-அத்தைச் சொல்லுகிறது –

மிக்க புகழ் நாரணன் தாள் –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றத்தைப் பின் சென்றபடி
சம்ருத்தமான கல்யாண குண சஹிதனாய்-சர்வ ஸ்மாத் பரனான
ஸ்ரீ நாராயணன் யுடைய சரணங்களை –

நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் —
வீடு செய்மின்-இறை யுன்னுமின் நீரே-என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இறே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு -நலத்தால் அடைய -என்கிறது

நலத்தால் அடைகை ஆவது
எல்லையில் அந்நலம் புக்கு -என்றும்
அவன் முற்றில் அடங்கே -என்றும்
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே -என்றும்
இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
ஒடுங்க அவன் கண் -என்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே அபி நிவேசத்தாலே ஆஸ்ரயிக்கும் படியை விதித்த படி -என்கை –
இப்படி லோகத்தில் உண்டான ஜனங்கள் பக்தியாலே பஜிக்கும் படி நன்றாக உபதேசித்து அருளும் –

உபதேசத்துக்கு நன்மையாவது –
நிர் ஹேதுகமாகவும்
உபதேச்ய அர்த்தங்களில் சங்கோசம் இன்றிக்கே உபதேசிக்கையும்-என்றபடி –

திருவாய் மொழி தோறும் திரு நாமப் பாட்டு உண்டாகையாலே
அத்தையும் தத் பலத்தோடே தலைக் கட்டாக அருளிச் செய்கிறார் –
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் –
அதாவது
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்-பரோபதேசம் பண்ணுகையாலே
நித்யமுமாய்-நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்-தர்ச நீயமான-உதாரமான
ஸ்ரீ திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் -என்னுதல்
அன்றிக்கே
வண்மை-வண் தென் குருகூர் வண் சடகோபன் -என்னும்படி -ஸ்ரீ ஆழ்வாருக்கு விசேஷணம் ஆதல்
இப்படியான தம் ஔதார்யத்தினாலே இந்த மகா பிருத்வியில் உண்டானவர்கள் எல்லாரும்
ஸ்ரீ பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழும் படி –

பண்புடனே பாடி யருள் பத்து-
பண்பு -ஸ்வபாவம்
தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்
பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று

சேரத் தடத் தென் குருகூர் சடகோபன் சொல் சீர்த்தொடை ஆயிரத்தோர்த்த இப்பத்து -என்றத்தை பின் சென்றது
பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே-பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்
அந்த நிதானப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கும் மற்றப் பாட்டு அடங்கலும்
இது இந்த திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்துக்கு எல்லாம் உள்ளது ஓன்று இறே

வீடுமின் -என்று
த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தார் –
இத்தை பக்தி பரமாக யோஜித்து
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளின பின்பு பத்தி பரமாகவே யோஜித்து க்ரமத்தைப் பற்ற வாயிற்று
ஆச்சார்யர்கள் எல்லாரும் அப்படியே யோஜிததார்கள்

இவரும் அப்படியே அருளிச் செய்தார்-

——————————————————

அவதாரிகை –

இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு பஜிக்கத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை-பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –

—————————————————–

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-

———————————————————

வியாக்யானம் –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால் –

பத்துடையோர்க்கு -பக்திமான்களுக்கு
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
பத்துடை அடியவர் -என்றார் இறே –
ஏவம் வித பக்தி உக்தருக்கு

என்றும் –
சர்வ காலத்திலும் –

பரன் –
யாவையும் யாவரும் தானாம் அமையுடை நாரணன் –
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்- என்றும் சொல்லப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன்

எளியனாம் –
வாயு ஸூநோ (யுத்த காண்டம் )-என்றும்(ராவணனால் தூக்க முடியாத இளைய பெருமாளை கரு முகை மாலை போல் எழுந்து அருளப் பண்ணினார் )
இமௌஸ்ம -இத்யாதிப் படியே -எளியனாம்(அஹம் வேத்மி மஹாத்மாநம் விசுவாமித்திரர் சொல்ல உமக்கு நாங்கள் கிங்கரர்கள் என்றானே பெருமாள் )
பத்துடை அடியவர்க்கு எளியவன் மத்துறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
என்னும்படி கட்டவும் அடிக்கவும் படி எளியனாம் -ஸூலபனாம் –

அது எத்தாலே என்னில் –
பிறப்பால் –
அவதாரத்தாலே
பல பிறப்பாய் ஒளி வரும் என்றத்தை நினைக்கிறது –

முத்தி தரும் –
அவதரித்த இடத்தே-பஷிக்கும்-ரஷஸ் ஸூக்கும் மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

மா நிலத்தீர் –
அவன் அவதரிக்கைக்கு ஈடான இந்த மகா பிருதிவியில் உள்ளவர்களே –

மூண்டவன் பால் -பத்தி செய்யும்-
விதி ப்ரேரிதராய் அன்றிக்கே அத்யந்த அபி நிவேச யுக்தராய்
பரத்வ சௌலப்யத்வாதி குண விசிஷ்டனானவன் திருவடிகளிலே பக்தியைப் பண்ணுங்கோள்-

என்று உரைத்த-
என்று அருளிச் செய்த –
இத்தால் -நன்று என நலம் செய்து அவனிடை -என்றத்தை அனுபாஷித்த படி –

பத்தி செய்யும்-என்று உரைத்த-மாறன் தன் இன் சொல்லால் போம் –
அவதார சௌலப்யத்தை முன்னிட்டு ஆஸ்ரயிங்கோள் -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ராவ்யமாக அருளிச் செய்த
இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே நிவ்ருத்தமாம் –

நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம் பண்ணின படி –
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இறே-

—————————————————

அவதாரிகை –

இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று
தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து
அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே
பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான
அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை
கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று
தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே
சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-————–4-

—————————————————————————————————-

வியாக்யானம்–

அஞ்சிறைய புட்கள் தமை-
விலஷணமான பஷங்களை உடைய பஷிகளை
அஞ்சிறைய மட நாராய் -என்று இ றே அருளிச் செய்தது –

புட்கள் -என்றது –
இனக் குயில்காள் –
மென்னடைய அன்னங்காள் –
நன்னீலமக அன்றில்காள் –
வண் சிறு குறுகே-
ஆழி வரி வண்டே –
இளங்கிளியே
சிறு பூவாய் –
என்று இப்படி அருளிச் செய்தவற்றை —

யாழியானுக்கு நீர் –
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இ றே –

நீர் –
வ்யூஹத்தையும் பேதித்துக் காண வல்ல நீங்கள் –

என் செயலைச் சொல்லும் என விரந்து-
என் செயலை தர்சிப்பியுங்கோள் என்று அர்த்தித்து –

என் செயலாவது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -என்றும்
என்நீர்மை -என்றும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது -என்றும்
மல்கு நீர் கண்ணேர்க்கு -என்றும்
அவராவி துவரா முன் -என்றும் –
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும்
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்தமை –
என் பிழையே நினைத்து அருளி
அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
என்று ஒரு வாய்ச் சொல் -என்று
அவன் அபராத சஹத்வத்தை ஆவிஷ்கரித்ததும் இதில் ஸூசிதம் –
இப்படி ஆற்றாமையை ஆவிஷ்கரித்து –
விஞ்ச நலங்கியதும் –
மிகவும் நலம் குலைந்ததும்

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –
ஆழ்வார் இங்கே
இவ்விடத்திலே
கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே
அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்
பக்தி அதிசயம் –
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

வளம் -பெருமையும் சம்பத்தும்
நலங்குதல் -நலம் கேடு
மலங்குதல் -திண்டாட்டம் –

——————————————————

அவதாரிகை –

இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்
அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-
உம்முடைய பொல்லாமையைப் பாராதே
நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று ஸ்ரீ த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி-தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை-வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————————

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-

ஊடுருவ  ஓர்ந்து -தீர்க்கமாக ஆராய்ந்து

——————————————-

வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமை -மன்னுயிரின் தண்மை –
அதாவது –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரி நிர்வாகத்தால் வந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய பெருமையையும்
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹ்யமாய் அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவின் உடைய
தண்மையையும்-என்கை
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –

உளமுற்று –
ஸ்ரீ எம்பெருமான் யுடையவும்-தம்முடையவும் உத்கர்ஷ அபகர்ஷங்கள் திரு உள்ளத்திலே பட்டு

அங்கூடுருவ ஓர்ந்து –
இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில் நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து
அருவினையேன் -என்று துடங்கி
அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் ஆராய்ந்து இப்படி தீர்க்க தர்சியாய் தர்சித்து –

தளர்வுற்று –
மிகவும் அவசன்னராய்-ந கல்வத்யைவ யதி ப்ரீத்தி -இத்யாதிப் படியே

(பிராட்டி பெருமாள் உத்கர்ஷத்தையே நினைத்து தன்னை முடித்துக் கொள்ளாதால் போலேயும்
இளைய பெருமாள் தன் அவதாரம் முடித்துக் கொண்டு மீண்டால் போலேயும்
உத்தர இராமாயண ஸ்லோகம்)

நீங்க நினை மாறனை –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை பண்ண எண்ணுகிற ஸ்ரீ ஆழ்வாரை

நீங்குகை
ஸ்வ விநாசம் ஆனாலும் ஸ்ரீ ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விஸ்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை

மால் –
தன் செல்லாமையைக் காட்டி ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
நெடுமாலே – மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஏவம் வித வ்யாமுக்தன் ஆனவன் –

நீடு இலகு சீலத்தால் –
நெடுகிப் போரும்தான-நித்ய விசதக சீல குணத்தாலே
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-

பரிந்து பாங்குடனே சேர்த்தான் –
பரிந்து பாங்குடனே சேர்க்கையாவது-
இவனை ஸ்நிக்தநோபாதியாக ஸ்நேஹித்து மங்க விடாமல்-அலாப்ய லாபமாக ஹர்ஷதுடனே சங்கதாராக பண்ணினான்
ஸ்ரீ திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

————————————————

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்-ஸ்ரீ யபதியான பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்-ஷூத்ர உபகரணான இவனால் பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை -பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

———————————————–

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

————————————————

வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் –
ஹேய பிரத்ய நீக கல்யாணை கதானான ஸ்ரீ சர்வேஸ்வரன் யுடைய ஸ்வ ஆராதன ஸ்வ பாவத்தை –

பண்புடனே பேசி –
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம் ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி -புரிவதும் புகை பூவே – என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே
பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-

அரியனலன் ஆராதனைக்கு என்று –
இப்படி பத்ர புஷ்பாதிகளாலே -ஸ்வ ஆராதனாகையாலே ஆஸ்ரயிக்கும் இடத்தில்
சபர்யா பூஜிதஸ் சமயக் -என்னும்படி ஸபர்யைக்கு அருமை இல்லாதவன் என்றபடி –

உரிமையுடன் ஓதி யருள் மாறன் –
அந்தரங்கமான சிநேகத்தோடு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
அதாவது –
எது ஏது என் பணி என்னாது அதுவே யாட் செய்யுமீடே -என்றும்
உள் கலந்தோர்க்கு ஓர் அமுதே -என்றும்
அமுதிலும் ஆற்ற இனியன் -என்றும்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே-என்றும்
அவனைத் தொழுதால் -என்றும்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றும்
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் செய்தவை -என்கை –

ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு –
இப்படி உபதேசிக்கையாலே-இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்-பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

————————————————————

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயண ரச்யதையை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே
அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று
ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே
பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும்
ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே
ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை
பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு ————7-

வியாக்யானம்–

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் –
ஜன்ம சம்பந்தம் அற்று
நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே
நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுஹ்ரகிக்கும் ஸ்வ பாவனான
ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –

ஏவம் விதனானவன்
அறவினியன் பற்றும் அவர்க்கு என்று-
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-
தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி –

மற்றும் அவனுடைய போக்யதைக்கு அனுகுணமாகும் படி
ஆழிப் படை அந்தணனை -என்றும்
ஒண் சுடர்க் கற்றையை என்றும்
விடுவேனோ என் விளக்கை -என்றும்
பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –என்றும்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -என்றும்
அருளிச் செய்தவையும் தத் சேஷங்களாகக் கடவது –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு-
குணைர் விருருசே ராம-என்னும்படி
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று
இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று
நெஞ்சே
சீக்ர கதியாகச் சென்று பற்று –
முந்துற்ற நெஞ்சாய்
அங்கே  பற்றும் படி ஓடு-

—————————

அவதாரிகை –

இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும்
ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத் த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன் என்கிற -ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

—————————————————–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-

———————————————-

வியாக்யானம்–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி –
சஞ்சலமாய்-நின்றவா நில்லா நெஞ்சும் – அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே செவ்வை கெட நடக்கும் குடிலரோடு கூடிக் கலந்து –

நெடுமால் அடிமை கொள்ளும் நிலை —
சர்வ ஸ்மாத் பரனானவன் அடிமை கொள்ளும் ஆர்ஜவ ஸ்வபாவத்தை –

நாடறிய ஒர்ந்து –
நாட்டார் அறியும் படி ஆராய்ந்து –

அவன் -தன் செம்மை-
தெனதே தம நுவ்ரதா- ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா -என்னும் படியான அவனுடைய ஆர்ஜவத்தை

உரை செய்த –
அருளிச் செய்த –
அதாவது
ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும்
நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்-அருளிச் செய்தார் -என்கை

இப்படி உரை செய்த -மாறன் என –
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் என்று அனுசந்திக்க –

ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை –
ஸ்வரூப அனுரூபமான சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி நிலை நிற்கும் –

————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ எம்பெருமான் உடைய சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்-தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்-அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம்
எல்லாவற்றையும் இவன் ஒருவனுடனே சர்வ இந்த்ரியங்களாலும் சர்வ காத்ரங்களாலும் பொறுக்கப் பொறுக்க பரிமாறும் –
என்கிற-இவையும் அவை யில் அர்த்தத்தை இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

———————————————————-

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் –9-

ஆற்ற -சாத்மிக்க சாத்மிக்க

——————————————————-

வியாக்யானம்–

இவை யறிந்தோர் தம்மளவில் –
இந்த ஆர்ஜவ குணத்தை அறிந்தவர்கள் விஷயத்தில்
ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று –
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஹ்ருஷ்டனாய் சாத்மிக்க சாத்மிக்க சர்வ அவயவங்களிலும்
சம்ஸ்லேஷிக்கும் ரசம் தன்னைப் பெற்று-பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்
செறிப்பு தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அதாவது
சரா மோவா நரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-(ச ராமோவா நரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-சுக்ரீவனுடைய பிரசாதம் கிட்டுமோ என்று இருந்த பெருமாள் போல் )என்னும்படி
என்னுடைச் சூழல் உளானே-
அருகல் இலானே-
ஒழிவிலன் என்னோடு உடனே –
கண்ணன் என் ஒக்கலையானே-
மாயன் என் நெஞ்சின் உளானே
என்னுடைத் தோள் இணையானே
என்னுடை நாவின் உளானே
கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே
என் நெற்றி உளானே
என் உச்சி உளானே –
என்று தலைக்கு மேலே ஏறின படியை அடி ஒற்றின படி –

அணையும் சுவை யாவது –
அருகலில் அறுசுவை-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை கலவியில் ரசங்கள் எல்லாம் ‘
ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச –
இப்படிப் பெறாப் பேறு பெற்று-அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை கேவலம் வாக்காலே வசிக்க(கேவலம் நாவினால் நவிற்று இன்பம் எய்யலாமே )

மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் யுடைய ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –

பொரு -என்று ஒப்பாய்-அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

————————————————————

அவதாரிகை –

சர்வாங்க சம்ச்லேஷம் பண்ணுகைக்கு ஹேத்வாந்தரம் காணாமல் ‘
நிர்ஹேதுகமாகாதே -என்று நிர்வ்ருத்தர் ஆகிற படியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில்

இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற இந்தப் பேற்றுக்குத் தகுதியாக
இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்

புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே
அத்வேஷம் துடங்கி
பரிகணிநை நடுவாக
பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து
வந்து
நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும் ஸ்வபாவன் என்று அவனுடைய நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து
நிர்வ்ருத்தராகிற –பொருமா நீள் படையில் அர்த்தத்தை பெருமாழி சங்குடையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

———————————————————-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-திரமாக -ஸ்திரமாக என்றபடி -எதுகைக்கு ஒக்கும்

————————————————-

வியாக்யானம்–

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து –
சத்ருக்கள் மேலே பொரா நிற்கிற ஸ்ரீ திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
திவ்ய ஆயுதங்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே சஷூர் விஷயமாம் படி வந்து
பொரு மா நீள் படை என்று துடங்கி கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தருமாறு ஓர் ஏது அறத் தன்னை –
நிர்ஹேதுகமாக தன்னை உபகரிக்கிற உபாயத்தை –

ஓர் ஏது அறத் தன்னை -தருமாறு-
ஒரு ஹேது இன்றிக்கே நிர்ஹேதுகமாக பல ஸ்வரூபனான தன்னையே தருகிற பிரகாரத்தை –

திறமாகப் பார்த்துரை செய் மாறன் –
அதாவது
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் என் கண்ணுள்ளே வரும் -என்கிற
பக்திக்கும் பரிகணைனைக்கும் ஒக்க முகம் காட்டும் படிக்கு மேலே
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -என்று
குகேனே சஹித சங்கத சீதயா லஷ்மணஸ்ய என்று கரை சேர்த்த நிர்ஹேதுக கிருபையை
அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து
அந்த பிரகாரத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய

(குகன் உடன் கூடிய பின்பு இவர்களுடன் இருப்பும் இருப்பானதே -முன்பு தன்னம் தனியாக தவித்து இருந்தாரே பெருமாள்-இதே போல் ஹனுமதா சங்கதா -பெறாப் பேறாக தான் நினைக்கும் படி-ஸ்வார்த்தமாகவே கொள்ளுபவன் )

(எண்ணவும் வேண்டாம் வேறே ஒன்றை எண்ணி 26 வாயாலே சொன்னாலும்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே-இதுவும் கூடவும் இல்லாமல் -தன்னையே நினைப்பவனாகக் கொள்ளும் ஸ்வ பாவன் அன்றோ)

பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் –
இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை வெளியிட்ட ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி என் சிரஸ் சாந்து பஜித்திடுக –
திருக் குருகைப் பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று
என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக-

இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே
தாம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை அருளிச் செய்து அருளினார் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–5-3–மாசறு சோதி –சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப கிண்ண
ஹ்ருதய லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் –
இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி -மலியும் சுடர் ஒளி மூர்த்தி அன்றோ
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப –மா லோலன்
லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் -உபாயாந்தாராம் பற்றி அறியாத ஆழ்வாரோ என்னில் –
அபி சப்தம் இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச -பார்யா தசையில் மடல்

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஜோதிர் உபாங்க கத்வாத் சரசிஜ நயன அநிஷ்ட
வித்வம்ச கத்வாத் ஸ்ரீ தசரசித தயா உத்கிருஷ்ட
சௌலப்ய யோகாத் ரஷாயாம் சாவயதானாத்
சுபகத தனு சோபகார அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–

1-ஜோதிர் உபாங்க கத்வாத் –மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை

2-சரசிஜ நயன –என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்

3–அநிஷ்ட வித்வம்ச கத்வாத் –ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை சார்ந்து சுவைத்த
செவ் வாயன் என்னை நிறை கொண்டான்

4-5–ஆஸ்ரித தயா –பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன்–என்றும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்-என்றும் அருளிச் செய்கையாலே

6-உத்கிருஷ்ட சௌலப்ய யோகாத் –வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-

7–ரஷாயாம் சாவயதானாத் –அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்

8-சுபகத தனு –தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை

9-சோபகார –சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்

10-அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்

ஸூ ஆஸ்ரிதற்கு -அதி பிரேமம் உண்டாக்கி -ஆஸ்ரிதர் -தப்பாகிலும் அடைய யத்னம் பண்ணும்படி செய்து அருளுபவன் —

——–

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

———–

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-

————

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

———-

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

——-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

———–

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

——-

வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

—————

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

———

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

———-

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

——–

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -43-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
கீழ் -5-2-பிரஸ்துதமான வடிவு அழகை அனுபவிக்கப் பெறாமல்
மடல் எடுக்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இப்படி இவர் பிறரைத் திருத்தி-4-10-
அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணி கை ஒழிந்த பின்பு-5-2-
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்று
அவன் சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து
பழைய தம் இழவு-ஏறாளும் இறையோன் இழவு- 4-8- தலை எடுத்து
வழி அல்லா வழியில் இழிந்து
இரண்டு தலையையும் அழித்தாகிலும் அவனோடு கலக்கக் கடவோம்
என்று ப்ராப்ய ருசி பாரவச்யத்தாலே
முன்னாடி தோற்றாமல் கண் கலங்கிச் செல்லும்
தம் தசா விசேஷத்தை
அவனோடு கலந்து பிரிந்து
ஆற்றாமையாலே கண்ணான் சுழலை இட்டு
நாடாகப் பழி சொல்லும்படி
அவனுக்கு அவத்யம் விளைவித்து
என்று மடலூருகையில் ஒருப்பட்டு சொல்லுகிறாள்
ஒரு பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
மாசறு சோதி- யில் அர்த்தத்தை
மாசறு சோதி கண்ணன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்———-43-

வியாக்யானம்–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து –
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்றும்
என் செய்ய வாய் -மாசறு சோதி -மணிக்குன்றம் -என்றும்
எம் கண்ணன் -என்றும்
சொல்லும் படி அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட கிருஷ்ணன்
தன் ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே
அபி நிவேசம் அதிசயத்து -அதாவது –

பாசறவெய்தி -என்றும்
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பூர்ந்த -என்றும்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி யோர் சொல்லிலேன் -என்றும்
காதல் கடல் புரைய விளைத்த -என்றும்
கொடிய வன்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்றும்
மணி வண்ணன் வாசுதேவன் வலை யுள் அகப்பட்டேன் -என்றும்
தலையில் வணங்க வுமாம் கொலோ -என்றும்
எந்நாள் கொலோ யாம் உறுகின்றது -என்றும்
அருளிச் செய்தவை -என்கை –

இப்படி ஆசை அதிசயிக்கையாலே –
பழிக்கு அஞ்சாமல் –
ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு
இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணைக்குமவள் ஆகையாலே
அஞ்சாதே –
அப் பழிச் சொல்லே தாரகமாக
அதாவது –
சீதே தஸ்மாத் துக்கம் அதோ வநம் -என்று வனத்தை நிஷேதித்து அருளிச் செய்ய
அக்ரதஸ் தேக மிஷ்யாமி -என்றும்
யான சக்யா புரா த்ரஷ்டும் போதை ராகாசகை ரபி
தாமத்ய சீதாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜனா -என்றும் சொல்லுகிறபடியே
ஊரவர் கவ்வை தோழி என் செய்யும் -என்றும்
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழி இனி நம்மை -என்றும் –
தீர்ந்த என் தோழி என் செய்யும் ஊரவர் கவவையே -என்றும்
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் மடுத்து -என்றும்
அன்னை என் செய்யுமே -என்றும்
அன்னை என் செய்யில் என் – ஊர் என் சொல்லில் என் தோழிமீர் -என்றும்
அவர்கள் நிஷேத வசனங்களை ஒரு சரக்கு அறச் சொன்னவை -என்கை –

பழிக்கு அஞ்சாமல் ஏசறவே –
அபவாத பீதி இன்றிக்கே ஏசும் எல்லை கடந்து
அன்றிக்கே
எல்லாரும் துக்கிக்க -என்றுமாம் –
அன்றிக்கே
ஏசவே -என்ற பாடமான போது
பழி சொல்லவும் சொல்லி-ஏச என்று ஆகவுமாம்-

மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர் –
அதாவது
குதிரியாய் மடலூர்துமே -என்றும்
நாடுமிரைக்கவே –யாம் மடலூர்ந்தும் -என்றும்
ஜகத் ஷோபம் பிறக்கும்படி
இஜ் ஜகத்திலே மடலூர ஆழ்வார் ஒருப்பட்டார்
தாம் அவதரித்த இவ் ஊரில் உள்ளார்
இச்சாஹாச பிரவ்ருதியைக் கண்டு ஹ்ருதயம் கம்பிக்கும்படியாக-கம்பனம் -நடுக்கம் –
இப்படி உத்யோகித்த இது ஏதாய் விளைகிறதோ -என்று
தாமும் அவ் ஊரில் அவதரித்தவர் ஆகையாலே
இவரும் தளும்புகிறார்-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி–ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்-

March 26, 2021

ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர்.
திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர்.
அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன.
இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து.
இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள்.
இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள்
திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும்.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன.
மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும்,
ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது.
முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன.
அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.

இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள் பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக
அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ?
அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள்.
முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும்.
அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும்.
ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்.
இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும்.
இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது.
வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.

பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில்
கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி.
வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில்
அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.

அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து
வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள்.
அவர்தான் திருக்குருகூர் வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர்.
அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா?
அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை.
ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள்.
ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார்.
மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து
அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப் பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.

முன்னுரையில் எழுதுகிறார் –

“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து,
ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப் பொருளையும் பொதுவாக நோக்கி
அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”

கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.

மாலை வழி மறித்தே மந்திரங்கொள் வாட் கலியன்
கோலத் திரு மொழியால் கூறு பொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில் சுருக்கி ஆக்க முயல் பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.

மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள் பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

திருமொழி அந்தாதி பேசுகிறது –

வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசை மொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.

அடுத்த திருமொழி ஆரம்பம்

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே

திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –

வாலி மதனழித்த வல் வில்லி நம் வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.

அடுத்த திருமொழி தொடக்கம்

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

திருமொழி நூற்றந்தாதி –

முற்ற மூத்து மொய் குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளை யவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீள வுரை தந்தே நமக்கு

இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.

ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலி நெஞ்சே நாளும் தொழு தெழுகென்றே சொல்
கலியனுரை வேதக் கலை.

கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல் வினைக்கு வாள்.

__________________

வாணிலவு மாதர் நகை தப்பி நிமி வனத்தே
சேணுயர் வான் சேவடியே சேர்தி யெனப் – பேணு நெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.

__________________

அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரை தேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு

__________________

கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே

இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்

செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்

தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.

__________________

தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்

வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா

புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்

கவிநமக்கு வாழ்வருளும் கண்

__________________

கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர் களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட் கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.

———————————–

ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ
நேயத்தே பித்தளை நற் செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேணுமோ மதித்து உன்னைப் பேணுகைக்கே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில் நூறு திருவாய் மொழிகளில் ஸ்ரீ ஆழ்வாருடைய திருநாமங்கள்

October 4, 2019

1-உயர்வற உயர் நலம் —————மாறன்
2-வீடுமின் முற்றவும்——————மாறன்
3-பத்துடை அடியவர் —————–மாறன்
4-அஞ்சிறைய மட நாராய்————-மாறன்
5-வள வேழ் உலகின்—————–மாறன்
6-பரிவதில் ஈசன்——————–மாறன்
7-பிறவித் துயரற——————-மாறன்
8-ஓடும் புள்————————-மாறன்
9-இவையும் அவையும்—————-மாறன்
10-பொருமா நீள் படை—————-மாறன்

11-வாயும் திரை யுகளும்————–மாறன்
12-திண்ணன் வீடு——————–மாறன்
13-ஊனில் வாழ் உயிர்—————-மாறன்
14-ஆடி யாடி————————-மாறன்
15-அந்தாமத்து அன்பு—————–சந்தாபம் தீர்ந்த சடகோபன்
16-வைகுந்தா மணி வண்ணா———-மாறன்
17-கேசவன் தமர்——————- -மாறன்
18-அணைவது அரவணை மேல் ——-மாறன்
19-எம்மா வீட்டு ———————-மாறன்-
20-கிளர் ஒளி————————மாறன்

21-முடிச் சோதி———————–மாறன்
22-முந்நீர் ஞால———————-குருகையர் கோன்
23-ஒழிவில் காலம்——————–மாறன்
24-புகழும் நல் ஒருவன்—————-மாறன்
25-மொய்ம்மாம் பூம் பொழில்———–மாறன்
26-செய்ய தாமரைக் கண்ணன்———மாறன்
27-பயிலும் சுடர் ஒளி—————–மாறன்
28-முடியானே ———————–மாறன்
29-சொன்னால் விரோதம்————–குருகூர் மன்
30-சன்மம் பல பல——————-மாறன்

31-ஒரு நாயகமாய்——————-மாறன்
32-பாலனாய் ஏழு உலகு————–குருகூரில் வந்துதித்த கோ
33-கோவை வாயாள்——————மாறன்
34-மண்ணை இருந்து துழாவி———-மாறன்
35-வீற்று இருந்து ஏழ் உலகு———–மாறன்
36-தீர்ப்பாரை யாமினி —————-மாறன்
37-சீலமில்லா சிறியேன்—————தென் குருகூர் ஏறு
38-ஏறாளும் இறையோன்————–மாறன்
39-நண்ணாதார் முறுவலிப்ப———–மாறன்
40-ஒன்றும் தேவு———————மொய்ம் மகிழோன்

41-கையார் சக்கரத்து—————–மாறன்
42-பொலிக பொலிக பொலிக———மாறன்
43-மாசறு சோதி———————மாறன்
44-ஊரெல்லாம் துஞ்சி—————மாறன்
45-எங்கனயோ———————-மாறன்
46-கடல் ஞாலத்து——————-மாறன்
47-நோற்ற நோன்பிலேன்————-மாறன்
48-ஆராவமுதே———————-மாறன்
49-மானேய் நோக்கு—————–மாறன்
50-பிறந்தவாறும்——————–மாறன்

51-வைகல் பூம் கழி வாய்————காரி மாறன்
52-மின்னிடை மடவார் ————–குருகையர் கோன்
53-நல் குரவும் செல்வமும் ———–தமிழ் மாறன்
54-குரவை ஆய்ச்சி——————பராங்குசன்
55-துவளில் மா மணி—————மாறன்
56-மாலுக்கு வையம்—————-மாறன்
57-உண்ணும் சோறு—————-மாறன்
58-பொன்னுலகு ஆளீரோ———–மாறன்
59-நீராய் நிலனாய்—————–காரி மாறன்
60-உலகமுண்ட பெருவாயன்———மாறன்

61-உண்ணிலாவிய——————மாறன்
62-கங்குலும் பகலும்—————-மாறன்
63-வெள்ளிச் சுரி சங்கு————-சடகோபர்
64-ஆழி எழ சங்கும் எழ————-மாறன்
65-கற்பார் ராம பிரான்————–மாறன்
66-பாமருவு மூவுலகில்————–அண்ணல்
67-ஏழையர் ஆவி——————-மாறன்
68-மாயா வாமனா——————மாறன்
69-என்றைக்கும் என்னை————மாறன்
70-இன்பம் பயக்க——————மாறன்

71-தேவிமார்———————–மாறன்
72-நங்கள் வரிவளை—————மாறன்
73-அங்கும் இங்கும் —————மாறன்
74-வார்கடாவருவி——————மாறன்
75-மாயக் கூத்ததா—————–சடகோபன்
76-எல்லியும் காலையும்————-மாறன்
77-இருத்தும் வியந்து—————சடகோபர்
78-கண்கள் சிவந்து—————-காரி மாறன்
79-கரு மாணிக்க மலை————மாறன்
80-நெடுமாற்கு அடிமை————-மாறன்

81-கொண்ட பெண்டிர்—————மாறன்
82-பண்டை நாளில்—————–மாறன்
83-ஓர் ஆயிரத்தில்——————மாறன்
84-மையார் கரும் கண்ணி———–மாறன்
85-இன்னுயிர் சேவலில்————–மாறன்
86-உருகுமால் நெஞ்சம்————-மாறன்
87-எங்கானலில் அர்த்தத்தை———-மாறன்
88-அறுக்கும் வினை—————-மாறன்
89-மல்லிகை கமழ் தென்றலில்——-மாறன்
90-மாலை நண்ணி——————மாறன்

91-தாள தாமரை———————மாறன்
92-கெடும் இடர்———————-மாறன்
93-வேய் மரு தோளிணை————-மாறன்
94-சார்வே தவ நெறி—————–மாறன்
95-கண்ணன் கழலிணை————–மாறன்
96-அருள் பெறுவார்——————மாறன்
97-செஞ்சொல் கவிகாள்————–மாறன்
98-திரு மால் இரும் சோலை மலை—-மாறன்
99-சூழ் விசும்பு அணி முகிலில்——–முடி மகிழ் சேர் ஞான முனி
100-முனியே நான் முகனே————முனி மாறன்

————

மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/
சடகோபன் –15
மாறன் –16/17/18/19/20/21/
குருகையர் கோன் -22
மாறன் –23/24/25/26/27/28
குருகூர் மன்-29
மாறன் -30/31-
குருகூரில் வந்து உதித்த கோ -32
மாறன் -33/34/35/36
குருகூர் ஏறு -37
மாறன் -38/39
மொய்ம் மகிழோன் -40
மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50
காரிமாறன் -51
குருகையர் கோன் -52
மாறன் -53
பராங்குசன் -54
மாறன் -55/56/57/58
காரிமாறன்-59
மாறன் -60/61/62
சடகோபர் -63
மாறன் -64/65
அண்ணல் -66
மாறன் -67/68/69/70/71/72/73/74
சடகோபன் -75
மாறன் -76
சடகோபர் -77
காரிமாறன் -78
மாறன் -79/80/81/82/83/84/85/
மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
ஞான முனி -99
முநி மாறன் -100-

—————

1-மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/23/24/25/26/27/28–30/31/33/34/35/36–
-38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76-
–79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98—————–ஆக எழுபத்து மூன்று தடவைகள்

2-காரி மாறன் -வைகல் பூம் கழி வாய்-51/நீராய் நிலனாய்-59-/கண்கள் சிவந்து-78——மூன்று தடவைகள் –

3-சடகோபன் –அந்தாமத்து அன்பு -15 /மாயக் கூத்ததா-75—————————-இரண்டு தடவைகள்–
4-குருகையர் கோன் –முந்நீர் ஞாலத்தில்-22/மின்னிடை மடவாரில்-52——————-இரண்டு தடவைகள்–
5-சடகோபர் –வெள்ளிச் சுரி சங்கு-63 /இருத்தும் வியந்து-77————————–இரண்டு தடவைகள்

6-குருகூர் மன்—சொன்னால் விரோதம்-29——————————————-ஒரே தடவை
7-குருகூரில் வந்து உதித்த கோ –பாலனாய் ஏழு உலகு-32—————————-ஒரே தடவை
8-தென் குருகூர் ஏறு –சீலமில்லா சிறியேன்-37————————————–ஒரே தடவை
9-மொய்ம் மகிழோன் –ஒன்றும் தேவு-40——————————————–ஒரே தடவை
10-பராங்குசன் -குரவை ஆய்ச்சி-54————————————————-ஒரே தடவை
11-அண்ணல் –பாமருவு மூவுலகில்-66———————————————-ஒரே தடவை
12-முடி மகிழ் சேர் ஞான முனி-99————————————————–ஒரே தடவை
13-முநி மாறன் -முனியே நான் முகனே-100——————————————ஒரே தடவை

ஆக பதிமூன்று திருநாமங்கள் பிரயோகப்படுத்தி அருளிச் செய்துள்ளார்

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -பத்தாம் பத்து —

October 4, 2019

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

இதில்-நாள் இடப் பெற்று-வழித் துணையோடு போக ஒருப்படுகிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

—————

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-

—————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

—————-

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-

இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே-அருளிச் செய்கிறார் -என்கை –

—————-

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –

இதில் ஸ்ரீ பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும் விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு தம்மை அவன் ஸ்ரீ திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி கொடு போக வேணும் என்று தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் -தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை-அனுவதித்து அருளிச் செய்கிறார் அருளால் அடியில் -தொடங்கி -என்கை –

—————–

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-

இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————–

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

இதில்-இப்போது ஆதரிக்கிற தேவர்-அநாதி அநாதர ஹேது சொல்லும் என்று-மடி பிடித்துக் கேட்க
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லாமல்
நிருத்தனனான படியை அருளிச் செய்கிற ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
முதலிலே
அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து
தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து
தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி
நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து
நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க –
அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க
நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்
தம்மை அவன் அங்கீ கரித்த படியையும்
அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்து
இது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற
திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை
திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-

————-

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-

இதில் ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை அடையக் காட்ட அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

————–

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –

——————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -ஒன்பதாம் பத்து —

October 4, 2019

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

இதில் -சோபாதிக பந்துக்களை விட்டு நிருபாதிக பந்துவை பற்றச் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார்
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே
பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு –
அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு
பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி
நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை
கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

தண்டற -தடை இல்லாமல் –

இதில் –
பந்து க்ருத்யம் எல்லாம் செய்ய வேணும் -என்று பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து-
அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட-
பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து –
திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –
மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் –
திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்-
திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்-
கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே
ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை
பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–83-

இதில்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஸ்ரீ ஆழ்வார் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் –
ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

———————

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

இதில் -விலஷண விக்ரஹ உக்தனானவனை காண-ஆசைப்பட்டு கூப்பிடுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –
இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று
தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே
மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

—————–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-

இதில் -ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்டு-அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்
அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே
ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல் இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற -இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை
இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –

———————

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

என்னால் -என் நா என்றுமாம்-

இதில் ஸ்ரீ ஆழ்வார் உடைய அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தான வித்தராம் ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————-

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

———————

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்—88-

இதில் தூதர் வரும் அளவும் பற்றாமல் ஸ்ரீ திரு நாவாயில் போய்ப் புக வேணும் என்று
மநோ ரதிக்கிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே
பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு
அவ்வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை
அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

——————-

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

மல்லடிமை – பூர்ண அனுபவம் –
மால் -மருட்சி அஞ்ஞானம்-
தொல் நலம் -ஸ்வாபாவக பக்தி – சஹஜ பக்தி –

இதில்-ஒரு சந்தையில் யுண்டான ஸ்ரீ ஆழ்வார் அபிசந்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
அறுக்கும் வினையில் பெரிய த்வரையோடே மநோ ரதித்தவர் த்வர அனுகுணமாக பிராப்ய பூமியிலே புக்கு
அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு
நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன்
மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே
சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற
மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

———————–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் –90-

இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
நாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே
உம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-
விலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —
அத்தாலே ஹ்ருஷ்டராய்-
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே
புஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –
அதுக்கு மாட்டாதார் –
இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று
சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை
மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-