தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/3
இப்படி ஐஸ்வர்யத்தில் ப்ரேமம் போய் பகவத் பிரேம யுக்தர் உடைய திரளிலே உளரான நீங்கள்-தொண்டைக்குலம் என்று தனியே ஒரு சந்தானம் போலே காணும்
தேஹமே ஸ்வரூபம் என்று இருப்பாருக்கும் -சேஷத்வமே ஸ்வரூபம் -என்று இருப்பாருக்கும்
இத்தனை வாசி உண்டு இறே-தொண்டைக் குலத்தை வந்து அன்வயித்தவாறே -மமேதம் -என்று இருந்த காலம் ஜன்மாந்தரமாய் தோற்றும் இறே -ஒரு ஜன்மத்தில் த்விஜன்மன் ஆகிறான் இறே-ராஜர்ஷியான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே ப்ரஹ்மர்ஷியானான் இறே-அங்கு தபஸாலே வர்ண பேதம் பிறந்தது இங்கு பகவத் ப்ரசாதத்தாலே ஸ்வரூப பேதம் பிறந்தது உனக்கு நான் -என்ற அநந்தரம் -நான் எனக்கு -என்ற விது வ்யதிரேகமாய் தோன்றும் இறே-இப்படி அநந்ய பிரயோஜனரான நீங்கள் மங்களா சாசனம் பண்ணும் கோள்-பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே-என்று அவன் குளிர நோக்கும் –பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந்நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்-உங்களுக்கு இம் மாத்ரத்தாலே ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு சம்ர்த்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –
————————–
தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில் – நாலாயி:9/2,3
ப்ரார்த்த நீயமாக வேண்டுகிறதுக்கு ஹேது-வகுத்த சேஷியது யாகையாலே -சாத்தும் திருப் பரிவட்டம் அடைய திரு பீதாம்பரத்தின் உடைய-ஆவேச அவதாரம் ஆகை –நின் பீதக வாடை –ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வ அநுரூபைரநூபமை என்று சேதன கோடியிலே இறே-திருப் பீதாம்பரத்தை சொல்லுகிறது-உடுத்து-இது இறே அநந்ய பிரயோஜனருக்கு ஆபரணம்-அங்கன் அன்றியே –பக்தாநாம்-என்று இருக்குமவன் ஆகையாலே இது தான் சேஷி அளவிலே வந்தவாறே பிரதிபத்தி வேறு பட்டு இருக்கும் -ராஜாக்களுக்கு இரட்டை பிடித்து-கொடுக்குமவர்கள் -வாக்காக பிடித்து -தங்கள் அரையிலே உடுத்திருந்து யோக்யமாம்படி-பண்ணிக் கொடுப்பார்கள் -அதுவாய்த்து இவனுக்கு நினைவு-கலத்ததுண்டு –அமுது செய்து கை வாங்கின தளிகை மாற்றினால் பிரசாதம் போஜ்யம்–த்வதீயபுக் தோஜ்ஜித சேஷ போஜிநா -என்னக் கடவது இறே -ப்ரசாதமே தாரகமாய் இருப்பார் சிலர் நாங்கள் – குரோர் உச்சிஷ்டம் புஞ்ஜீத -என்று விதி ப்ரேரிரதராய் கொண்டு பிரதிபத்தி பண்ணுவர்கள் ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவர் -ஸ்வரூப ஜ்ஞானம் உடையார் தத் ஸித்தி யர்தமாக பிரதிபத்தி பண்ணுவர்கள் -பகவத் ப்ரேம யுகதர் ஸ்வயம் பிரயோஜனம் என்று இருப்பர்கள் –இச் சேஷத்வ காஷ்டையான ததீயர் உடைய பிரசாதம் -தருவரேல் -என்கிறபடியே-அதி க்ர்தாதிகாரமாய் இருக்கும் -சர்வ சாதாரணனது ஆகையாலே பிரயோஜனாந்த பரனுக்கும்-போக்யமாய் இறே பகவத் பிரசாதம் இருப்பது -திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –சுவடர் பூ சூடும் போது புழுகிலே தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய் இருக்கும் என்கை -அவன் தானும் சிலர் -சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன் ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இறே-இத் தொண்டர்களோம்-இப்படிப்பட்ட அடியார்கள் இறே நாங்கள் – எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இறே நாங்கள் –
———————
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா -2-7-9- நாலாயி:190/2
இந்த விபூதியில் முமுஷுக்களாய்-உன் பக்கல் பிரேம யுக்தர்களாய் இருக்கும்
அவர்களுடைய மனசினுள்ளே -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பிலும் காட்டிலும்
உகந்து நித்யவாசம் பண்ணுமவனே –
—————–
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று – நாலாயி:209/3
இவ்வளவேயோ -இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும் இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும் உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் – அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –
—————–
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்-4-9-2
என் அடியார் அது செய்யார் -என்பதிலும் -சிதகுரைக்கும் -என்கிறது இறே உத்தேச்யம்
கைக் கொள்ளுகைக்கு சொல்லும் வார்த்தை போல் அன்றிக்கே கை விடாமைக்கு சொல்லும் வார்த்தை-அடியார் -என்று ஸ்வா தந்த்ரய நிவர்த்தி-தன்னடியார் -என்று அந்ய சேஷ நிவர்த்தி-அடியார் என்பது சேஷியும் உபாயமும் உபேயமும் தானாக பற்றினவர்களை -அடியார் -என்று நிரூபகம் இவர்களுக்கு –குல சரண கோத்ராதிகள் நிரூபகம் மற்றையார்க்கு ஒவ்பாதிகமுமாய் அநித்யமுமாய் இருக்கும் அது –நிருபாதிகமுமாய் நித்யமுமாய் இருக்கும் இது-பல சதுப் பேதிமார் -என்று நிரூபகம் அவர்களுக்கு-திரு நாரணன் தொண்டர் -என்று இறே இவர்களுக்கு நிரூபகம்-ஒரு மிதுனம் சேஷி ஆனால் – தம் அடியார் என்ன வேண்டாவோ என்னில் – தன் என்கிறதுக்கு உள்ளே தானும் அந்தர்பூதை ஆகையாலே அவன் ஸ்வரூப ரூப குண விபூதி இத்தனையும் இவள் தோயல் வாசி இறே என்னுதல் –தோயல் வாசி-இவளை இட்டே நிரூபிக்க வேண்டும் )
அடியார் -என்பதுக்கு உள்ளே அடிமையில் அந்தர்பாவம் தனக்கும் உண்டாகையாலே என்னுதல் –(அஹம் -அஹந்தா -ஸ்வரூப நிரூபக தர்மம் -அநந்யார்ஹதவத்தாலே தன் -என்றாலே இவளையும் சேர்த்தே குறிக்கும்-கடி மா மலர்ப் பாவையோடே சாம்ய ஷட்கம் –
அடியார் சப்தகத்துக்குள் பிராட்டியும் சேர்ந்த பின்பு நம் அடியார் சொல்ல முடியாதே )இத்தால்-நார கோடி கடிதை என்கை- மித்ர பாவேன -என்றும் – உகந்த தோழன் -என்றும் –
அவன் நினைவு ஆகையாலே அவன் முன்னே -நம் அடியார் -என்ன மாட்டாளே
தானும் -மித்ர மௌபிகம் -என்றாளே -அத்தாலே என்னுதல் –அடியார் -என்ற பஹூ வசனம் –
ஊர் இரண்டிட்டவாறே (நித்ய விபூதியும் லீலா விபூதியும் -) அடியாரும் இரண்டிட்டதே மேலாத் தேவர்களும் -நிலத் தேவரும் -என்று இந் நிலத் தேவர் விஷயமாக இறே சிதகுரைப்பது
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது
இருள் தெரிந்து நோக்கின அடியார் விஷயம் இறே இது -(பூதத்தாழ்வார் )
என் அடியார் அது செய்யார் –
ஸ்வதந்தரும் அந்ய சேஷ பூதரும் செய்யும் அத்தை என் அடியார்களும் செய்வார்களோ
செய்தார்கள் என்று நிர்பந்த்தாய் ஆகில் –
அவர்கள் என் அடியார் ஆகிறார் -உன் அடியார் அன்றே- நீ செல்ல நில்லு-அது செய்யார் -ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் – பின்பு அவன் மன்றாடும்
சிதகுரைக்கும் -என்றது ஸ்ரீ மகாராஜர் கோடி
என் அடியார் அது செய்யார் -என்றது ஸ்ரீ திருவடி -ஸ்ரீ இளைய பெருமாள் கோடி
சிதகுரைக்கை -புருஷகார க்ருத்யம்
அடியார் அது செய்யார் -என்றது சரணாகத க்ருத்யம்
நன்று செய்தார் -என்றது சரண்ய க்ருத்யம்
————–
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே – 4-9- 3-நாலாயி:414/4
புனராவ்ருத்ய அபாவத்துக்கும் –நித்ய கைங்கர்ய லாபத்துக்கும் உடலான தன்னுடைய பிரசாதத்தை இவர்களுக்கு கொடுத்து-சேஷத்வமே நிரூபகமாய் இருக்கிற இவர்களை –
ஒவ்பாதிகமான நிரூபகங்கள் எல்லாம் சம்சார தசையில் வந்து கழிந்து போமவை இறே
ஆவிர்பூத ஸ்வரூபன் ஆனால் -சேஷத்வமே நிரூபகமாய் இறே இருப்பது
(ஸ்வேந ரூபேண ஆவிர்பாவம் கிடைக்குமே அங்கே )ஸ்வரூப அனுரூபமான விருத்தி விசேஷத்தைக் கொள்ளுமவன்-ராஜ புத்திரன் தலையிலே முடியை வைக்குமா போலே
சேஷ பூதரான இவர்களுக்கு கைங்கர்ய சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும்படி சொல்லுகிறது
அவன் தனக்கும் ஸ்வரூப சித்தி -ஆள் கொள்ளுகையால் இறே-இவன் அடிமை செய்து ஸ்வரூபம் பெறும்-அவன் அடிமை கொண்டு ஸ்வரூபம் பெறும்-சேஷ பூதனுக்கு ஸ்வரூப சித்தி கிஞ்சித் காரத்தாலே ஆனால் போலே-சேஷிக்கு ஸ்வரூப சித்தி கிஞ்சித்கார பிரதி சம்பந்திதையாலே இறே
—————
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே -–1-3- நாலாயி:649/4
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவன் திருவடிகளின் கீழே புஷ்பாத் உபகரணங்களைப் பணிமாறி-அங்கு அந்தரங்க வ்ருத்தி செய்யும் அவர்களோடு சஜாதீயனான நானும் கிட்டுவது என்றோ அடியார்கள் குழாங்கள் –இத்யாதி —
————–
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்-1-7- – நாலாயி:653/2,3
மிக்க துக்கத்தை விளைப்பதான – பாரமாய பழவினை பற்று அறுத்து-பஞ்ச காலம் -என்னுதல்-பெரிய முப்பொழுது என்னுதல்-இக் காலங்களிலே ஏத்தி-அளவிறந்த பழைய மரியாதையிலே -சிலவரால் கலக்க ஒண்ணாத படி –நிலை நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களான –ஆன்ருசம்சய பிரதானராய் இருக்கும் அவர்களுக்கு பரம பிராப்யமானவனை-
———-
தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி – 1-9-நாலாயி:655/1
தூராக் குழி தூற்று எனை நாள் அகன்று இருப்பன் -என்று சம்சாரிகள் சப்தாதி விஷயங்களிலே அனுபவித்தாலும் இந்த்ரியங்களைத் திருப்தி யாக்கப் போகாதாப் போலே
பகவத் அனுபவம் ஒருக்காலும் ஆராது இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாத்திலே
என்னையும் கூடிக் கலசி –
————–
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்–1-10-நாலாயி:656/2
நித்ய துக்கத்தை விளைப்பதான பாபங்கள் அகல-துக்கம் விஸ்ரமியாத நித்யமான ஸூகம் வளர-பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே-நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு-அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து-என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –
——————
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே –2-1- நாலாயி:659/3,4
ஆட வேணும் என்னும் கார்யா புத்யா யன்றியிலே ப்ரேமம் ஒட்டாமையாலே ஆட்ட மேவி-அலர்ந்து கார்யப் பாடறக் கூப்பிட்டு-க்ரம பிராப்தி பெறாமையாலே -அறிவு குடி போய் பரவசராய் அநந்ய பிரயோஜனருடைய-இப்படி இருப்பார் உமக்கு எத்தனை பேர் வேணும் என்ன –கண்டிட கூடு மேல் அது காணும் கண் பயன் ஆவதே– இது கூடிற்றாகில் பிரயோஜனம் கண்ணுக்கு இது அல்லது இல்லை – த்ருஷ்ட பிரயோஜனம் இது
—————-
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – -2-3-நாலாயி:660/4
காவேரி பெரு வெள்ளமாய் மலைப் பண்டம் கொண்டு வருமா போலே அமைக்க நில்லாதே
கடல் குடமாக வெள்ளம் இடுகிற கண்ணீரைக் கொண்டு-அங்குப் பாங்காக திரு அலகு பணி செய்து வைத்தால் இவர்கள் கண்ண நீராலே சேறாக்குவார்கள் யாய்த்து-அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர மங்களார்த்தமான ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-
—————-
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே-2-4- – நாலாயி:661/4
ஆஸ்ரீத ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமை காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினான்-அவதார காலத்தில் இழந்தார் இழவு தீர வந்து ஸூலபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய செயலாலே எழுதிக் கொடுத்தவர்கள் யாய்த்து –நாவானது தழும்பு ஏறும்படி-அம்மே என்பாரைப் போலே திரு நாமத்தை அடைவு கெடச் சொல்லி
-ப்ரணாமம் பண்ணின படி தோற்ற உடம்பு எல்லாம் தழும்பாக – ஸ்ரீ சிறியாத்தானைப் போலே ஏத்தி – இப்படிப்பட்ட செயல்களை சொல்லி ஏத்தி –மனசிலே வைத்து ஏத்துகையாலே விஷயத்தைக் கிட்டினால் பிறக்கும் நிரதிசய ஆனந்த யுக்தராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாதங்களை-அவர்கள் தாங்கள் அகப்பட்ட நவ நீத சௌர்யத்தில் போகாது என் நெஞ்சு -அதிலே அகப்பட்டவர்கள் தங்களை ஏத்தி வாழ்த்தும் அத்தனை –இச் செயலுக்கு இவர்கள் நிலவராவதே -என்று ஸ்தோத்ரத்தை பண்ணி – இது நித்யமாக வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் என் நெஞ்சு –
——————–
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே -2-6– நாலாயி:663/4
என்னை அனந்யார்ஹம் ஆக்கின ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே பக்தி உண்டாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அநேக ஜன்மங்கள் பிறந்து அவர்களுக்கு அடிமை செய்ய வேணும் என்று ஆசைப் படா நின்றது என் நெஞ்சு –
———–
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே -2-8– நாலாயி:665/4
செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் –
ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து-ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பித்தேறா நின்றது -என்கிறார் –
————-
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே -2-10– நாலாயி:667/4
ஸ்ரீ யபதியான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ-வைஷ்ணவர்களுடைய-ஆத்ம தாச்யத்திலே என்றும் ஒக்கப் பொருந்தின திரு உள்ளத்தை உடையரோம்-கொல்லிக்கும் மதுரைக்கும் உறையூருக்கும் -நாயகரான பெருமாள் –
ஸ்ரீ பெரிய உடையாருடைய இழவாலே வந்த வெறுப்பாலே –
வனவா சோம ஹோதயா -என்று போய்-
ராஜ்யாத்பரம்சோ வ நே வாச –என்று வந்ததுக்குப் போந்து அது பிரியமாய் இருந்தவர்
இவ் விழவாலே அடியிலே போந்ததுவும் எல்லாம் தமக்கு வெறுப்புக்கு உடலானாப் போலே
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் -என்றும்
இவ்வரசும் யான் வேண்டேன்-என்றும்-சொல்லுகிற இவர்க்குத் ததீய சேஷத்வத்தைத் தந்த ஜன்மம் என்று ராஜ ஜன்யம் தன்னையும் கொண்டாடுகிறார் இறே-இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்-இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –
———
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே–10-10– நாலாயி:750/4
அவ்விருப்பில் ஒன்றும் குறையாமே காலதத்வம் உள்ளதனையும் இங்கே நமக்காக நித்ய வாஸம் பண்ணுமவனை அநந்ய பிரயோஜனரான நீங்கள் அவனை ஆஸ்ரயித்து க்ருத்தார்த்தர் ஆகுங்கோள் –
—————
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே -5- நாலாயி:876/4
அடிமை பூண்டு-தனக்கு வகுத்த சேஷ வ்ருத்தியை ஏறிட்டுக் கொண்டு-என்று ஏறிட்டு கொள்ளுகை அன்றிக்கே – உகந்து ஏறிட்டுக் கொண்டு –இவ் வாத்மாவுக்கு தாஸ்யம் இறே ஆபரணம்-த்ருமசீரை ரலங்ர்த்த -என்றது ஆபரணமானால் போலே நம் பெருமாளுக்கு சேர சுந்தர பாண்டியன் தம்பிரான் பதக்கம் போலே இவனுக்கு தாஸ்யம் இறே ஆபரணம் –அவனுக்கும் அது நெஞ்சிலே கிடப்பது ஓன்று -இவனுக்கும் இது நெஞ்சிலே கிடப்பது ஓன்று இறே-இடும்பை பூண்டு -என்கிறது போல் அன்றே இது –அஹம் சர்வம் கரிஷ்யாமி –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிறது இறே இது –பூண்டு -என்கிற
சப்தம் இரண்டிலும் ஒத்து இருக்க நெடு வாசி பட அர்த்தம் சொல்லுவான் என் என்னில்
அர்த்த பலத்தாலே -அப்ராப்த விஷயத்தில் சேவையை – சேவா ச்வ வ்ர்த்தி -என்றும்
பிராப்த விஷயத்தில் பாரதந்த்ர்யத்தை –பாரதந்த்ர்யம் பரே பும்சி -என்றும் –
சாகிபர்த்தம் ந சேவ்யதே -என்றும் விஷயம் பேதித்தால் போலே இங்கும் அர்த்த பலத்தாலே பேதித்துச் சொல்கிறது
—————
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே -20- நாலாயி:891/4
கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு வைத்து-இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடைய தாஸர்களுக்கு அகலப் போமோ-இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –ஆமே -என்றது-எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இறே அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டு புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி
ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?
——————
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு –34 நாலாயி:905/2
ஜ்ஞான ஹீநன் என்று நாட்டார் அறியாமல் பகட்டி மறைத்துப் போந்தேன்-எமக்கு ஒரு ஆத்ம குணம் இல்லை என்று சொல்லும் பொழுது அவன் அந்தராத்மாவாய் அறிய வில்லை என்பன் –அத்தாலே அவர்களும் இவனுக்கு ஆத்மா விஷய ஜ்ஞானமும் பரமாத்மா விஷய ஜ்ஞானமும் உண்டு என்று நினைத்து இருக்கும் படியாக அவர்களை மறைத்துப் போந்தேன்-அடியில் அநாத்ம குணம் உண்டாய் இருக்க இறே இல்லை என்பது அக் களவுக்கு உன்னையும் பெரு நிலையாக நிறுத்திக் களவு கண்டு போந்தேன்-ஒரு நன்மையையும் இன்றிக்கே இருக்கிற நானும் ஆத்ம குண பேதர் அதிகரிக்கும் உன்னுடைய அடிமையிலே
அந்வயியா நின்றேன் – ஆர் செய்யக் கடவ அடிமையிலே ஆர் அன்வயிக்கிறார்-சண்டாளன் வேத அத்யயனத்தில் அதிகரித்தால் நாட்டார் கர்ஹிப்பர்கள் என்றும்
ஸ்வாத்மாப்யானம் விகர்ஹதே -என்றும் தானும் அருளா நிற்கும் இறே – அப்படியே படுகிறார் –உன்னைக் களவு கண்டு விடும் அளவு அன்றிக்கே
சாத்விகர் சிரஸா வஹிக்கும் படி ரூப நாமங்களைத் தரித்துப் போந்தேன் –1-பரப்பு மாறத் திரு நாமத்தை இடுவது –
2-ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரிப்பது
3-அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொல்லுவது –
4-உன் போக்யதையைச் சொல்லுவது –
5-யமாதிகள் தலையில் என் கால் என்பதாய்
6-நானும் ஒருவனாய் பரோபதேசம் பண்ணுவதாய்
எத்தனை செய்தேன்
எத்தனை ஜல்ப்பித்தேன் – என்கிறார் –
————
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல் – நாலாயி:916/3
திருத் துழாய் ஆழ்வாருக்கு அடிமை செய்யுமவர்-புருஷார்த்ததின் எல்லையிலே நின்றவர் –
இது தான் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் அடிமை செய்த படி யாதல் –துளபத் தொண்டாய -என்கையாலே – அபசாரம் தட்டாத கைங்கர்யம் -என்கை –துடை ஒத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி -என்னக் கடவது இறே-ஸ்வா பாவிகமான பகவத் சேஷத்வத்தின் சீமையிலே –
சஹஜ கைங்கர்யத்தின் உடைய மேல் எல்லை ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யம் இறே –இத்தால்
தொண்டர் அடிப் பொடி -என்ற பேரை உடையவர் – இவருக்கு ஞான ஆனந்தங்கள் அன்று காணும் நிரூபகம்-அடிப் பொடி -என்கையாலே – தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -என்றாப் போலே இருக்கிறது யாய்த்து –
————
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – 10-நாலாயி:926/4
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்-தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்–இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்-உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை-இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி –எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி – ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ- திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –
————-
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற -8- நாலாயி:944/1
சேஷ பூதனுக்கு ஆனந்திக்கையே ஸ்வரூபம்-சேஷ பூதராகையும் ஹ்ருஷ்டராகையும் வேறு இல்லை காணும்-இவன் அருளை அனுசந்தித்து ஹ்ருஷ்டா என்கிறபடியே ஹ்ருஷ்டராம் இத்தனை –இவ்வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் -அதுவும் அவனது இன்னருள் -என்றும்-அருள் பெறுவார் அடியார் -என்றும் இங்கனே இறே இவர் தாமும் அருளிச் செய்வது -அப்படி இருக்குமவர்கள்–திருவாய் மொழி பாடிற்றும் பகவத் ப்ரிணநார்த்தமாக வன்றிக்கே சாத்விக அக்ரேசருடைய முக மலர்த்திக்கு உறுப்பாக வாய்த்து –ஜ்ஞான விஷய பூதனான ஈஸ்வரனுடைய பிரியத்துக்கு அன்றிக்கே ஜ்ஞான நிஷ்டரான சாத்விகர் உகக்கைக்காக வாயிற்று திருவாய் மொழி பாடினது-சேஷவ்ருத்தி புருஷார்த்தம் என்னும்படி ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவர்கள் -சேஷத்வ ஜ்ஞானம் சேஷவ்ருத்தி சேஷம் இறே=அப்புருஷார்த்ததுக்கு சாதனமும் அவனுடைய கிருபை என்று இருக்கும் அவர்கள்
ஆகையாலே கைங்கர்யம் புருஷார்த்தம் -கருணை சாதனம் என்று இருக்குமவர்கள்
————–
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும்-1-1-7 – நாலாயி:954/2
லோகத்தில் நீசர் அர்த்திகளாய் திரிவாரைக் கண்டவா பாடும் ப்ரதிபந்தங்களை சொல்லித் திரிகிற (கண்ட பேருக்குத் தொண்டர் என்றபடி)நாலாயி:954/2
—————
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் -1-1-10 நாலாயி:957/2,3
அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை
வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன-அப்ராக்ருதமாய் –
கேட்டார் ஆரார்கள் (செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு
அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-சரீர அவஸாநத்தில் யம படற்கு அஞ்சாதே இத் திரு நாமங்களை சொல்லும் கோள்-இவ்வருகு உண்டான வியசனங்கள் வந்த போதும் இத்தையே சொல்லுங்கோள்-சரீரத்தோடு இருப்பதால் இவை எல்லாம் வருகை பிராப்தம் அன்றோ என்று இத்தை மதியாதே அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் பிரயோஜனம்-நம்முடைய பாபங்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சு-( பிரதி ஹதம் இல்லாத -மாற்ற ஒண்ணாத )எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணா -என்று நமக்கு இனிய திரு நாமமே பாபத்துக்கு நஞ்சு – அல்லாதன எல்லாம் சம்சாரத்திலே வேர் பற்றுக்கைக்கு உடலாய் இருக்கும் – இதினுடைய அர்த்த அனுசந்தானமே சம்சாரத்தை வேர் அறுப்பது என்னும் இவ் வர்த்தத்தை எல்லாரும் புத்தி பண்ணி -இருக்கலாகாதோ-
——————-
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே -1-2-10- நாலாயி:967/4
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தம் வாயாலே அரிய இன்னிசை -என்பதே என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சிலரோடு பிணக்கி கையிலே தாளத்தை பொகட்டு-இந்த பதிகத்தை என்னுடன்- இயலிலும் இழியலாம்-பொருளிலும் இழியலாம்
இசையில் ஒருவராலும் இழிய ஒண்ணாது-அருமையால் நினைக்கிறது பெருமை
இனிமையால் நினைக்கிறது -சுவைப் பாட்டை –அருமை பெருமைகளையும் சுவைப் பாட்டையும் உடைத்தாய் இருக்கும்-இத்தைப் பாடுமவர்கள் ஆயிற்று சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகிறார்-அவர்களை பாபங்கள் கிட்டாது –சர்பங்கள் ஆனவை மேகங்களை ஆமிஷமாக புத்தி பண்ணி மேல் விழுமா போலே-இத்தை அப்யசித்தார்கள் பக்கல் சர்வேஸ்வரன் போக்யதா புத்தி பண்ணி அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கி
அவனாலே விஷயீ கரிக்கப் பெறுவார்கள்-இப் பாசுரங்களைச் சொன்னவர்களை –அச் சொல் வழியே சர்வேஸ்வரன்- அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-
நடுவில் பாபங்களுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் ஓடிப் போகுமே – சர்வேஸ்வரன் போக்க வேண்டுமா -வினைகள் தாமே போகுமே – பகவத் அனுபவத்தில் ஈடுபடாமல் இருக்க வினைகள் கிட்டும்=அவனை அனுபவிக்கவே இவை தன்னடையே போகுமே –
மோக்ஷயிஷ்யாமி -அவனும் வேண்டாமே நானும் வேண்டாமே -தன்னடையே விலகிப் போகுமே – மத் மன பவ இத்யாதி-
————
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே – –1-3-9–நாலாயி:976/4
அநுகூல வ்ருத்திகளை பண்ணா நின்றுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாத்துகைக்கு ஈடான மாலைகளையும் ஏந்தி திரு நாமங்களையும் சொல்லி பாடுவதாக ஆடுவதாக நிற்பர்கள்-அத்திரளிலே புக்கு அவர்களில் ஒருவராய் ஆஸ்ரயிப்போம்
—————
கொண்டு தொண்டர் பாடி ஆட கூடிடில் நீள் விசும்பில் –1-3-10- நாலாயி:977/3
இவற்றைக் கொண்டு – வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருக்கிறவர்கள் பாடுவதாக ஆடுவதாக கூடிடில்-
————–
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – 1-4-4-நாலாயி:981/1-
இப்போது உனக்கு உறுதியாக ஒரு நல் வார்த்தை சொல்லுகிறேன் -நெஞ்சே கேள்
சொல்லச் செய்தே பின்னையும் சொல்லாததின் பலமே யாகாமே நீ அவனைத் தொழுது உஜ்ஜீவிக்கப் பாராய் –நம் விரோதியையும் போக்கி பரம பதத்தையும் நமக்குத் தரும்
————-
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் -1-5-9– நாலாயி:996–/1
வழு விழா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளும் –நித்ய சூரிகளும் –கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் -தேவரீரே எங்களுக்கு ஆஸ்ரயணீ யனாகவே எங்களுக்கு அருள வேணும் என்று தனித் தனியே சொல்லா நின்று கொண்டு சேருகிற கோயில் அருகு எல்லாம் –
———-
காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் -1-6-3- நாலாயி:1000/2
ந்ரு பசு -என்னுமா போலே – கண்ணுக்கு தோற்றின விஷயங்களில் இவை சாஸ்திரங்கள் நிஷேதித்த விடம் என்று மீண்டு அறிவது இல்லை தோற்றின படி மூலை யடியே திரிந்த இத்தனை –தொண்டன் ஆகிறான் பரதந்த்ரன்-அது அப்ராப்த விஷயங்களில் ஆன போது
அபகர்ஷ ஹேதுவாக கடவது – ப்ராப்த விஷயங்களில் ஆன போது உத்கர்ஷ ஹேதுவாக சொல்லக் கடவது –
—————
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடை – 2-1-3-நாலாயி:1050/1
இண்டை -என்று பூ மாலைக்கு பேர்-ஆக பூ மாலை என்ற பேர் பெற்றவற்றைக் கொண்டு
எண்ணிடிசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி-திருவாய் மொழி -என்கிறபடியே-பகவத் விஷயத்தில் அடிமை செய்யுமவர்கள் கையிலே பூ மாலை கொண்டு வாயாலே ஏத்தா நின்று கொண்டு அடிமை செய்கிறவர்கள் உடைய –அவர்களோடு-சம்பந்த சம்பந்திகளோடு-ஒரு நாள் கார்யம் செய்தவர்களோடு-வாசி அற எல்லாரையுமாகக் கொண்டு போய் – நித்ய விபூதியிலே வைக்கும் –நீர்மையை அனுசந்தித்து -என்னெஞ்சமே இங்குத்தை இருப்பு தன்னையும் இழக்கிறோமோ -என்று அஞ்ச வேண்டி இருக்க அவ்வருகே போய் அடிமை செய்ய ஆசையை உடையை ஆவாயே நீ –மீமிசை அண்டம் என்று பரம பதத்தை சொல்லுகிறது–மஹா ஆகாசம் பரம ஆகாசம் -என்னக் கடவது இறே–உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே–திருமலையிலே வந்து புகுந்து–இவரை அடிமை கொள்வதற்கு முன்பு உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன்
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – 2-1-4-நாலாயி:1051/1
ஸ்திரீ கோபிமார் உடன் கலக்குமா போலே ஆஸ்ரிதர் உடன் பரிமாறுமவன் -மேகங்களை சென்று தள்ளும்படி அவ்வளவும் வளர்ந்த சிகரங்களை உடைய திருமலையை வாஸஸ் ஸ்தானமாகக் கொண்டு-ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய் இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-( அறிவார் உயிரானாய் )
—————
துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே— –2-1-6- நாலாயி:1053/1
துவரூட்டி இருந்துள்ள சிவந்த ஆடையை உடையராய் – தலை மயிரைப் பறித்து பொகட்டி இருக்கிற சமண் தொண்டர் உண்டு -அமணர் ஆகிறார்-அவர்கள் தாங்கள் கண்டபடி மேல் விழுந்து புஜித்து-அதுக்கு மேலே – தங்களோடு ஒத்து தங்கள் தர்சநத்திலே ருசி உடையராய்
அந்த வேஷ தாரணத்தையும் பண்ணி இருக்கிறவர்களும் கடவராய் இருக்கிற தாங்களும்
சரீரம் ஆனது தடிக்கும்படியாக –அவர்கள் செய்தபடி செய்ய-வ்யாவ்ருத்தமான படியை வுடைய உன்னைத் தான் ஆர் என்பர் –கவரிகளை உடைத்தான ம்ருகங்கள் உடைய திரள் வந்து சேருகிற திருமலையை வாஸ ஸ்தானமாக வுடையவனே –இடம் மிக்கு இருந்துள்ள விசும்பு உண்டு -த்ரி பாத் விபூதி அதிலே உண்டான அநந்த வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-
—————-
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும் –2-2-6- நாலாயி:1063/1
அவன் நெஞ்சு இரங்கும் படி சரண வரணம் பண்ணுமா போலே தாழ்ந்தார் சொல்லுவதொரு பாசுரம் –சமஸ்த கல்யாண குணாத்மகனே –சோத்தம் -என்று கொண்டு வைஷ்ணவர்கள்
ஒருவருக்கு ஒருவர் முற்பட்டு மேல் விழுந்து மாறாதே அழைக்கும் ஆப்தன் –பரமாப்தியால் குறைவற நிற்குமவன்-எவ்வுள் கிடந்தானே –
———-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை –-2-2-10- நாலாயி:1067/1
பூ மாலைகளைப் பணிமாறி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இங்கேயே அடிமை செய்து
வாழலாம் படி திரு எவ்வுள்ளிலே கிடந்தவனை கவி பாடிற்று –
————
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – —2-5-1-நாலாயி:1088/2
பிரபல பிரதிபந்தகங்களை கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை –பரி உண்டு குதிரை-அதின் வாயைக் கிழித்த வீரஸ்ரீயை உடையவனை –ச பிரமாதமான செயலை இறே செய்தது – அதின் கையிலே அகப்பட்டு தன்னை தப்புவித்த செயலாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை –தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே முளைத்து எழுந்த – பரிணாமாதிகள் இல்லை என்ன ஒண்ணாது இவ் வஸ்துவுக்கு – நித்ய வஸ்து என்ன ஒண்ணாது -(வளரும் -முளைத்து எழும் வஸ்து )
சந்தமேநம் -என்னுமா போலே யாயிற்று
வஸ்து நித்யமாய் இருக்கச் செய்தே இறே -அஸன்நேவ என்கிறதும் -சந்தமேநம்-என்கிறதும்
அவனை அறியாத வன்று தான் இலானாய் அறிந்த வன்று உளனாய் இருக்குமா போலே
அவனும் தன்னை இவன் அறிந்த அன்று தான் உளனாய் -அறியாத அன்று இலானாய்
இருக்கும் ஆயிற்று –அஸ்தமிக்காத சப்தமே அவன் அஸ்தி என்பதே -உளன் என்று அறிந்தால் இருப்போம் -இல்லை என்று நினைத்தால் நாம் இல்லை
இதே போலே பகவானும் -நாம் அறிந்த அன்று தான் உளனாய் துயர் அறுப்பானே -மஹாத்மா விரகம் பொறுக்க மாட்டானே -இவன் அவனுக்கு இத்தனை ஸ்ப்ருஹணீயமாய் -இற்றிலன் ஆகில் இவன் சேஷ பூதனாய்-அவன் சேஷியாய்-இத் தலைக்கு அதிசயத்தைப் பண்ண -அவன் உகக்கக் கடவனாய்
இது பின்னை இவனுக்கு புருஷார்த்தம் ஆகிற இந்த ப்ராப்திகள் எல்லாம் குலையும் இறே –
உத்பத்தி வ்ருத்திகள் எல்லாம் அங்கே யாயிற்று-அதுக்கடி என் என்னில் –
(உத்பத்தி முளைத்து / எழுந்த வ்ருத்திகள் / அங்கே யாயிற்று தொண்டர் சிந்தையுள்ளே )
—————
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – 2-5-2-நாலாயி:1089/1
பூண்ட அவத்தம் -அவத்தம் பூண்டு – வ்யர்த்தமான கார்யங்களை ஏறிட்டுக் கொண்டு –
சாத்விகரோட்டை சஹ வாசமும் வைதிக புருஷார்த்தங்களைப் பெற வேணும் என்னும் அதுவும் -தவிர்ந்து வ்யர்த்தமான வற்றை ஏறிட்டுக் கொண்டு –பிறர்க்கு அடைந்து-பிறர்க்கு தொண்டு பட்டு – அப்ராப்த விஷயங்களிலே ப்ராப்த விஷயத்தில் போலே இருக்கத் தாழ்வு செய்து – அசேவ்யரை சேவித்து –
————
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் – நாலாயி:1096/1
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருப்பாரைச் சொன்னபடி –
ஆயார் என்றது ஆனார் என்றபடி – அவர்கள் ஜாமதக் ந்யஸ்ய ஜல்பத-என்கிறபடி
அடைவு கெட்டு ஏத்தும்படியான திருவடிகளை உடையவனை –
(ஜமதக்கினி-பரசுராமர் -நாரதர்- கிருஷ்ண த்வைபாயனர்-இத்யாதிகள் சொல்லக் கேட்டுள்ளோமே )நம்முடைமை ஒன்றும் தவர ஒண்ணாது என்று தான் கொடு வந்து திருவடிகளை தலையிலே வைத்த ஸ்வபாவத்தை உடைய நீர்மையில் தோற்று –
இனி நாமும் அவன் உகந்த அடிமை செய்து உளோம் ஆவோம் – என்கிற இவ்வர்த்தத்தில் விண்டவன் உண்டு – விண்டானை -தென்னிலங்கை யரக்கர் வேந்தை- ந நமேயம் -என்று இருக்கிறவனை – ஆளாய் உய்தல் விண்டார்க்கு எல்லாம் பிரபுவாய் இருக்கிறவனை-அவனை நாயும் நரியும் கழுகும் பருந்தும் பற்றி யிசிக்கும்படியாக –பிரதிகூல நிரசனத்துக்கும் அனுகூலருக்கு தர்ச நீயமாய் இருக்கைக்கும் கையும் வில்லுமான இருப்பே அமையும் –அபௌருஷேயமாகையாலே நித்தியமாய் – நிர்தோஷமாய் பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணமான வேத அஷர ராசியும்
தன்னுடைய சமாதாரான ரூபமான வைதிக கர்மங்களுக்கு உப லஷணங்களான பஞ்ச மஹா யஞ்ஞங்களும் – இந்த வைதிக கிரியைகள் தன்னை சமாராதான ரூபம்
என்னும் இடத்தை சொல்லுகிற அங்கங்கள் ஆறும் – கேள்வியாலே அனுசந்திக்கப் படுவதான-சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான
வழியைக் கண்டு வைத்தவனை –தொண்டனேன் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே – அப் பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே
இக் கண்ணாலே காணப் பெற்றேன் –
—————-
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான் -2-6-10- நாலாயி:1107/2
பரிமளம் பிரவஹியா நின்றுள்ள பெரிய வீதிகளை உடைத்தான திருக் கடல் மல்லையிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற சர்வ ஸ்வாமி உடைய திருவடிகளையே அனுசந்திக்கும் சேஷ பூதர் சேஷத்வத்திலே நின்றவன் – ஜ்ஞான ஆநந்தங்கள் அல்ல நிரூபகம் பாகவத சேஷத்வமே என்கிறார் –
————–
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – 2-7-10-நாலாயி:1117/2
அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் –
இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்-இப்படிப் பட்ட ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு
தீர்க்கைக்காக திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
———
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை – 2-10-4-நாலாயி:1141/2-
ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும் சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம் ஆயனே கரும்பு-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – பக்தர்களுக்கு -தேனே பாலே கண்ணாலே அமுதே -என்னும்படி இருக்கும் எம்பெருமான் — முதல் ஆழ்வார்களை நெருக்குண்டு அனுபவித்த கரும்பு -அன்றோ அவன் -கருப்பஞ்சாறு மூன்று திருவந்தாதிகள் –
பூண்ட நாள் சீர்க் கடலை யுட் கொண்டு திருமேனி நன்னிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து ஜ்ஞானஹரத்தைப் பூரித்து தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து ஒளித்துக் கண்டு உகந்து பர சம்ருத்தியே பேறான அன்பு கூரும் அடியவர் உறையிலிடாதவர் புயற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும்–ஆசார்ய ஹிருதயம்-
மூன்றாம் பிரகரணம் -சூர்ணிகை -155–
இதற்கு ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவரான
முதல் ஆழ்வார்கள் – அப்படிப் பட்ட அடியவர்கட்கு அமுதமாய் இருந்தவன் திருக் கோவலூர் எம்பெருமான்
அடியவர் –
அன்பு கூரும் அடியவர் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவர்-
என்று வகுத்துக் கொண்டு
அடியவர் -என்றது பேய் ஆழ்வாரை –
இவர் -திருக்கண்டேன் –இன்றே கண்டேன் -திருவடி ஒன்றே உத்தேச்யம் என்று உபகிரமித்து
பைம்பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி-என்றும்
முயன்று தொழு நெஞ்சே தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும் –
கரியான் கழலே தெருள் தன் மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை அறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்றும்
மத்யத்தில் -40-60-பாசுரங்களில் பேசி அருளி –
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்கு சார்வு -என்று
அவசானத்திலும் தாளையே பேசித் தலைக் கட்டினார்
ஆக இப்படி அடியையே சிக்கெனப் பிடித்து -பேய் ஆழ்வார் அடியார் -ஆகிறார் –
அன்பு கூரும் அடியவர் -அன்பு மிகுந்த அடியவர் -பூதத் ஆழ்வார்
அன்பே தகளியா -தொடங்கி
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று
தம் அன்பு மிகுதியை வாய் விட்டு உரைத்தவர் –
இனி அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் – பொய்கை ஆழ்வார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
இப்படிப் பட்ட மூன்று அடிவர்கட்கும் ஆரா வமுதம் ஆனான் -திருக் கோவலூர் ஆயன்–
ஸ்ரீ தேசிகனும்-காஸார பூர்வே கவி முகய விமர்த்த ஜன்மா பண்ணா தடேஷூ
ஸூ பகஸ்ய ரசோ பஹூஸதே –
அமுதம் -என்ற ஆழ்வார் சொல்லை இங்கே கரும்பு -என்கிறார் -பரம போக்யதை –
குழாவரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு தீம் கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த -என்கிற பாசுரம் பற்றியே தேசிகன் ஸ்ரீ ஸூக்தி
திருமங்கை ஆழ்வார்
அடியவன்
அடியவர்
அடியவர்கள்
என்று முப்புரி யூட்டினமை-காண்க-
ஸ்பஷ்டமாக அருளாமல் -ரசம் மிக்கு -அனுபவிக்க-ஆளவந்தார் -மாதா பிதா யுவதயா-நம் ஆழ்வார் திரு நாமம் சொல்ல வில்லை –
வகுளாபிராமம் -விசேஷண சுவாரஸ்யம் –
————–
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் – 3-1-3-நாலாயி:1150/1,2
பூமிப் பரப்பு அடங்கலும் வயிற்றிலே எடுத்து வைத்து ஒரு பவனான ஆலம் தளிரிலே
கண் வளர்ந்து அருளின ஆச்சர்ய சக்தி உக்தன் – அகடிதகடங்களைச் செய்தும் ஆஸ்ரித அடியவர்க்கு மெய்யனாகிய – காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே
தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-
இதுவும் அகடிதகடநா சாமர்த்தியம்-ரஷணம் பண்ணுமவன்--நித்ய ஸூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே
இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –
————–
————–
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் -3-8-10- நாலாயி:1227/2
தர்ச நீயமான திரு நாங்கூரில் திரு மணி மாடக் கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரனுக்கு நித்ய கைங்கர்யத்தில் அதிகரிக்கையாலே வந்த நிரதிசய சம்பத்தை உடையராய் –நல்ல வயலை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் ஒலியை உடைத்தாய் அருளிச் செய்த தமிழ் தொடை யாகிற இத் திரு மொழியைக் கற்றார்
————–
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் – 3-10-1-நாலாயி:1238/1
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும் முதலில் குற்றம் தன்னை காண்கிறது என் பின்னைப் பொறுக்கிறது என் -என்று குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும் இரண்டு இடத்திலும் விளங்க –குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி – குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில் குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-இப்படிப் பட்ட பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –பொறுப்பிக்கும் அவளும் பொறைக்கு உவாத்தானவளும் (தூண்டி விட்டு காரணமாக இருப்பவளும் ) எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட இப்படி இருக்கிற இவன் அல்லது லோகத்திலே
வேறு ஆஸ்ரயணீயர் அல்ல என்று ஏழு வகைப்பட்ட லோகங்கள் உள்ளாறும் அடைய ஆஸ்ரயிக்க தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –இவனை அனுபவிக்கையே யாத்ரையாம் படி இருக்கையாலே
மிக்க புகழை உடைய ப்ராஹ்மனர் வர்த்திக்கிற இடங்கள்-
—————-
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை–4-3-9- – நாலாயி:1276/2
ஸ்ரமஹரமான வடிவை எனக்கு முற்றூட்டாக்கினவனே -என்று நினைத்து ஹிருதயமானது பக்வமாய் இருக்கும் சேஷ பூதர் இடைய ஹிருதயத்தில் ஊறிய தேன் போலே நிரதிசய போக்யன் ஆனவனை
—————
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே-4-9-7- – நாலாயி:1334/4
நான் உபேஷித்தால் தான் இவற்றுக்கு அவ்வருகு போக்குண்டோ-ஆன பின்பு நான் நினைத்த போது கார்யம் செய்கிறோம் -என்று ஆறி இருக்கைக்கு உம்முடைய பரம பதத்தில் நித்ய ஸூரிகளோ-மரு பூமியிலே தண்ணீர் போலே உம்மை ஒழிய உண்டு உடுத்துப் போது போக்குகிற இஸ் சம்சாரத்தில் உம்மால் அல்லது செல்லாத படி இருக்கிற நாங்கள் உஜ்ஜீவீயாமோ-நீர் அவாக்ய அநாதர என்று இங்கு இருந்தால் நாங்கள் ஸ்வரூப ஞானத்தால் அதிலே துவக்குண்டு கண்டு கொண்டு இருக்க மாட்டோமே-வாய் திறந்து சொல்லி கார்யம் கொண்டால் தான் உஜ்ஜீவிப்போம் –
————-
எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் –4-9-9- நாலாயி:1336/2
என்னுடைய் குலகுரு என்று ஏழு படி கால் தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்தை பேதித்துச் செல்லாதே வந்து நிற்கிற எங்களுக்கே நேராக கணக்கிட வல்லீராகா நின்றீர்
—————-
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ – 5-2-5-நாலாயி:1362/1
சங்கைஸ் ஸூராணாம்-என்கிறபடியே ஆஸ்ரிதர் ஆனவர்கள் திரண்டு ஏத்த
திரு மேனியில் ஏக தேசமானது ( திருவடி கதிரவனைத் தாண்டி ஓடிற்றே )
ஆதித்ய பத்தைத் தளவில் சென்று ஸ்பர்சிக்க ஆகாச அவகாசம் உள்ள இடமடையத்
தன் திரு மேனியாலே பாரித்த ஸ்வாமிகள் வர்த்திக்கிற ஊர் போலே –
(விபு வேறே இங்கு பாரித்து வளர்ந்தது )
—————-
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் – 4-10-9-நாலாயி:1346/2
ப்ரஹ்மாதிகள் -உமயா சார்த்த மீசாநா மாஹாத்ம்யம் -என்கிறபடியே பார்யா புத்ராதிகளோடே திரண்டு நாங்கள் ஆபந்னரான அன்றைக்கு தேவரை ஒழிய ஒரு புகலிடம் உண்டோ என்று அவன் உடைய குணங்களை சொல்லி நின்று ஏத்த –தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக திருப் பாற் கடல் கோயிலிலே கண் வளர்ந்து அருளினவன்-வெள்ளியங்குடி யதுவே
————–
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு – நாலாயி:1448/3
செவ்விப் பூ மாலையை கையிலே கொண்டு முன்பு நாம் பண்ணி வைத்த பாபங்களை அடையப் போக்க வேணும் என்று திருவடிகளின் மேலே சங்கைஸ் ஸூ ராணாம்-(ஸ்ரீ விஷ்ணு தர்மம் -மங்களங்களை வளர்க்க )-என்கிறபடியே தேவர்களும்
மற்றும் திருவடிகளுக்கு நல்லாராய் இருப்பாரும் ஆஸ்ரயிக்க நின்று –
அர்த்தித்து நின்று பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே அண்டங்கள் உடன் கூட பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே –
—————-
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – 5-8-3-நாலாயி:1420/4
ஸ்வரூப ஞானம் பிறந்தவாறே ஸ்வரூப அனுரூபமான உபாயத்தைப் பரிக்ரஹிக்கும் இத்தனை இறே –த்வராயை நம-என்கிறபடியே மடுவின் கரை தேடி வர வேண்டாதே
நான் அகப்பட்ட மடுவிலே அன்றோ வந்து சாய்ந்து அருளுகிறது
காமரு பூம் பொழில் அங்கு இங்கு அணி பொழில் –அங்கு முதலை ஓன்று-இங்கு ஐந்து
திவ்யம் வர்ஷ சஹஸ்ரகம் -என்கிறபடியே காலம் அளவு பட்டு இருக்கும் அங்கு-1000 தேவ வர்ஷம் – இங்கு காலம் அநாதி-அங்கு பொய்கை அளவுபட்டு இருக்கும் இங்கு சம்சாரார்ணவம் –
—————–
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே -5-8-10– நாலாயி:1427/4
முகம் அறிவார் முத்தைச் சேரக் கோத்து கையிலே இட்டுக் காணுமா போலே –
(அர்த்த புஷ்ட்டி உள்ள -நவ ரத்ன மாலை யன்றோ இதுவும் )பகவத் விஷயத்தில் சபலராய் இருப்பார் –பால் குடிக்க நோய் தீருமா போலே இவருடைய பாசுரத்தைச் சொல்ல
ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி போலே
—————–
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே – 5-10-10-நாலாயி:1447/4
நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன தேசம் ஆகையாலே இவ் விடம் நமக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம் என்னும் பிரதிபத்தியோடே கூட அப்யசிக்க வல்ல அடியவர்கள் உடைய க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே இருக்கிற பாபங்கள் ச வாசனமாகப் போம் –
————
சொல்லாய் திருமார்வா உனக்கு ஆகி தொண்டு பட்ட – 6-3-9-நாலாயி:1476/1
தேவர் இதுக்கு ஒரு போக்கடி சொல்ல வேணும்-ஸ்ரீ லஷ்மி பதியாய் இருக்கிற நீ
எனக்கு ஓன்று சொல்லாது ஒழிய ஒண்ணாது இவன் தான் பண்ணின பாப பலம் தான் அனுபவிக்கிறான் -என்று நீ ஆறி இருக்கைக்கு நான் ஒரு பிரஹ்மசாரி எம்பெருமானையோ பற்றிற்று-ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்
————
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – –6-10-7–நாலாயி:1544/4
வர்ஷத்தாலே நோவு படுகிற பசுக்களுக்கும் இடையருக்கும் ஒரு நோவு வாராதபடி
மலையை குடையாக கொண்டு நோக்கின ஸ்வாமி உடைய திரு நாமம் –காரண பூதனானவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே-பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே –பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன் இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை –சஹஸ்ர அஷரீ மாலா மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல – (அஷ்டாக்ஷரம் கூட இல்லையே )
————
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு -7-1-7 நாலாயி:1554/3
ஆஸ்ரிதர்க்கு வாஸஸ் ஸ்தானமாய் உள்ளவனே –அடைவு கெட ஏத்தித் தொழும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –என்னோடு ச கோத்ரிகளாய்
தான் உகந்த ஊர் எல்லாம் -திரு நெடும் தாண்டகம் -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –
———–
தொண்டாய் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே – 7-1-10-நாலாயி:1557/2
என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையி கோளாய் பாடுவது ஆடுவதாகவே பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –முதலில் உம் தமக்கு விசும்பு உண்டு பின்பு துயர் இல்லை க்ரமம் மாறி பேறு
————-
பாடேன் தொண்டர் தம்மை கவிதை பனுவல் கொண்டு – 7-2-2-நாலாயி:1559/3
சாஸ்திர உக்தங்களான லஷணங்களிலே குறைவற்று இருக்கிற கவிகளைக் கொண்டு நீசரைப் பாடுவது தவிர்ந்தேன் –(தொண்டர் இங்கு விஷயாந்தர ப்ராவண்யம் உள்ளவர்களை நாவில் இன் கவி ஒருவருக்கும் கொடிக்கிலேன் )கவிதைப் பனுவல் என்றது -பனுவல் கவிதை -என்ற படியாய் பனுவல் என்று நூலாய் -சாஸ்திரம் -என்ற படியாய்
சாஸ்திர உக்தமான லஷணங்களிலே குறை அற்ற கவி -என்றபடி –
————
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – 7-3-10-நாலாயி:1577/3
நிரதிசய போக்யமாய் குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகளை திரு முடிக்கு வளையமாக வைத்தும் –நம புரஸ்தாத் அத ப்ருஷ்ட -முன்னும் பின்னும் எல்லாப் பக்கமும் தொழுத அர்ஜுனன் –என்கிறபடியே தொழுதும்-தொழப் பெற்ற ஹர்ஷத்தாலே இச் சரீரம் இருந்த இடத்தே இராதே ஆடியும் –தாம் அறிந்ததாக அனுபவித்து விடுகை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் அனுபவ யோக்யமாம் படி-பக்தாம்ருதம்–தொண்டர்க்கு அமுது உண்ண -என்கிறபடியே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் விருந்து இட்டார் ஆய்த்து –
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
அது தான் ச பாத லஷ க்ரந்தமாய் புக்க இடமும் புறப்பட்ட இடமும் அறியாதே இருக்கை அன்றிக்கே பாடல் பத்தும் பகவத் விஷயத்தில் ருசி உடையார் இத்தைப் பாடப் பாருங்கோள்-கரும்பு தின்னக் கூலி இறே-பாடுகை தானே பிரயோஜனமாக போந்து இருக்க
அதுக்கு மேலே பிராப்தி பிரதிபந்தகமான பாபங்கள் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் இல்லை -என்று தன்னடையே விட்டுப் போம் –
—————–
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – 7-4-6-நாலாயி:1583/2
முன்பு வராக கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய் – அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை எடுத்துக் கொண்ட ஏறின நீர்மையை உடையவனே – என்று மாறாதே சொல்லி
அந் நீர்மையிலே தோற்று தேவர் திருவடிகளிலே அடிமை யானேன் –தேவர் திருவடிகளே எனக்குத் தஞ்சம் – வேறு ஒரு ஆஸ்ரயத்தை (அபாஸ்ரயத்தை) உடையேன் அல்லேன் –இது சபதம் பண்ணித் தரலாம் -(அவனுக்கும் நமக்கும் )
—————
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/3,4
தாவி வருகின்ற மாவை உடைய தேரை அர்ஜுனன் உடைய தேரை நடத்தி பிரதி பஷத்தை அழிக்கும் கிருஷ்ணன் போலே நடத்தி சத்ருக்களை அழியச் செய்த ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –ஹேய ப்ரத்ய நீகமாய் தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம் மாலையைச் சூட்டுங்கோள் –பாகவத பிரபாவம் சூடுவதே பலன் -வேறே வேண்டாமே –
———-
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர் அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் –-7-9-3 நாலாயி:1630/1,2
அநாதி காலம் பண்ணின பாபங்கள் அடங்கலும் பறந்து போம் – தொழுது உஜ்ஜீவியுங்கோள் –அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டு இருக்கிற நீங்கள்விழுந்து ஆஸ்ரயிங்கோள் –(சிறு தொண்டீர்-அல்ப விஷயாந்தர ப்ராவண்யம் உள்ளவர்களே )அங்கன் அன்றிக்கே –சிறு தொண்டீர்- அந்தரங்க கிங்கராக வேண்டி இருப்பீர் –
பணிமின் –ஆஸ்ரயிங்கோள் -என்னுமாம் –
———————
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா – -8-2-8-நாலாயி:1665/1
இப் பரப்பு எல்லாம் என்கிறாள் –-தொண்டர் -பகவத் பக்தர் -எல்லாம் ஆர்த்தராயும்
ஆத்மபிராப்தி காமராயும் பகவத்பிராப்தி காமராயும் -இருக்குமவர்கள் –
இவர்களுக்கு பந்தத்திலும் ஆஸ்ரயணத்திலும் பேதம் இல்லை இறே –
பலத்திலே இறே பேதம் -ஆகையால் -எல்லாம் -என்கிறாள் –
தொண்டெல்லாம் -என்று -பக்தரைக் காட்டுமோ என்னில் – மஞ்சா க்ரோசந்தி -என்னுமா போலே –
————–
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -8-4-10 – நாலாயி:1687/4
ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான சர்வேஸ்வரனை –சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து
எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
(வாஸா தர்மம் அவாப்னோதி -ஸீதா பிராட்டி திருவடியிடம் பிரார்த்தித்தால் போல்)இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும் –தொண்டரும் -நம்மையும் கூட்டிக் கொண்டு தனது பேறு நமக்கு எல்லாருக்கும் கிட்டும் என்கிறார் –
——————-
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் -–8-6-1– நாலாயி:1698/1
வழு விலா வடிமை செய்ய வேண்டும் என்று-( 3-3-1 ) பாரித்து கொண்டு இருக்கிறவர்களே –அசந்நேவ ச பவதி-(தைத்ரியம் ) -என்னும் நிலை கழிந்து அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன் –அது எது என்றால் – கண்ண புரம் நாம் தொழுதுமே –அவனும் நாமும் இவர்களும் சேர வர்த்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த திருக் கண்ண புரத்தை தொழுவோம் –
————–
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய-8-7-2- – நாலாயி:1709/3
கல்யாணங்கள் மேன் மேல் உண்டாகிற திரு நாளிலே-அன்றிக்கே-மணம் -என்று -கை கோக்கைக்கு பேராய் நெருங்கக் கோத்துக் கொண்டு சேவித்து நிற்கிற திரு நாளில் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள திருக் கண்ண புரம் –
மணம் மிக்க உத்சவத்துடனே அடியவர் கூடின -என்றுமாம் –
——-
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் கருதிய கணபுரம் அடிகள்-தம் இடமே -8-7-7- நாலாயி:1714/3,4
நல்ல ஸ்வரத்தை உடையதாய் தன்னைப் பெறிலும் பெற அரிதாய் இருக்கிற வேதங்களை
அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார்
தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற திருக் கண்ண புரம் –
வேத நாவர் விரும்பும் திருக் கண்ண புரம் –திருவாய் மொழி -என்னக் கடவது இறே-
————–
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ – -8-7-5-நாலாயி:1712/1
ஸ்ரீ வைஷ்ணவர்களும் ப்ரஹ்மாதிகளும் சனகாதிகளும் தொழுது உஜ்ஜீவிக்கும் படியாக –அந்தரிஷத்தோடு பூமிப் பரப்பை அளந்தவர் –பூசல் செய்து – த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய – ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை அக்னியானது கிளர்ந்து வியாபாரிக்கும் படி பண்ணினவர் –
—————
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே -8-7-10- நாலாயி:1717/4
அழகிய இசையோடு கூட – இத் திரு மொழியை –வண் குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் –
இத்தை அப்யசிக்குமவர்கள் –அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற
பாபங்கள் கிட்டாது –
—————
ஆனான் தன்னை கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த – 8-8-10-நாலாயி:1727/3
மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –
(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )
திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம் –
————-
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே – நாலாயி:1737/3,4
விஷய வைலஷண்யத்தை ஒழியவே மிக்க நன்மையை உடைத்தாய் இருக்கிற
இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –
(பாவின் இன்னிசைப் பாடித் திரிவேன் -இன்னிசையே போதும் -நாவினால் நவிற்று இன்பம் எய்த )கடல் சூழ்ந்த பூமியிலே இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –அன்றிக்கே – மம சாதர்மம் ஆகதா சர்க்கேபி நோ பஜாயந்தே பிரளயே நவ்ய தந்திச (ஸ்ரீ கீதா ஸ்லோகம் ) -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்கப் பாருங்கோள் என்னுதல் -(பொலிக பொலிக பொலிக –கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து இசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் -5-2-1-போல் இவரும் இங்கு )
——————-
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம் – நாலாயி:1738/3
தாயும் தமப்பனும் சேர இருக்க அனுவர்த்திப்பாரைப் போலே அவனும் அவளுமான் சேர்த்தியிலே அடிமை செய்ய வேண்டும் என்று ஆய்த்து இவர் ஆசைப் பட்டு இருப்பது –
பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும் சாபல்யத்தை உடைய எனக்கு –(உனக்கு இல்லாமல் உன் தனக்கே என்று மிதுனம் சொன்ன படி )நீ செய்து அருளப் பார்த்தது என் சொல்லு – பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது – உபாய பாவததிலே குறைவற இருக்கிற நீ செய்து அருளுவதாக நினைத்து இருக்கிறது என் சொல்லு –
(உபாய பாவம் உனக்கே -அவள் புருஷகாரம் செய்தாயிற்றே )தம்முடைய உகப்பை பேற்றுக்கு பரிகரமாக நினைத்து இருக்கிறிலர் – அவன் நினைவே பேற்றுக்கு பரிகரமாக நினைத்து இருக்கையாலே -சொல்லு என்கிறார் –
(இவர் விருப்பம் ஆசை த்வரை எல்லாம் அதிகாரி ஸ்வரூபமே )
—————–
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக ——8-10-9– நாலாயி:1746/1
முந்துற முன்னம் நீ செய்தது இவனை நம்முடையான் என்று அங்கே நாட்டுங்கள் -என்றாய்
நீ எனக்கு பிரதம ஸூஹ்ருதமாக செய்தது-இவனை நம்முடையனாக அங்கே நாட்டுங்கள் என்று சொன்னாய் –(நம்முடையானாக அடிமை செய்ய வைத்துக் கொள்ளும் அந்த கணக்கில் வைத்து ஸ்திரப்படுத்தி அருளினாய் (முத்ரை மோதிரம் கொடுத்து அருளினாய் )
————
பண்டமாய் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் – நாலாயி:1747/3
கேட்ட சீர் பரமபத பரமன் போல் அன்றே –உண்டான சம்பந்தத்தை பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி நிரவதிக சம்பத்தை உடைத்தான திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரனை –ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைச் சொன்னால் அதிலே சிலர் விப்ரதிபத்தி பண்ணுகை அன்றிக்கே ஆழ்வார் ஆகில் தொண்டர் -என்று எல்லாரும் நெஞ்சில் கொள்ளும்படியான நன்மையை உடையராய் இருப்பார் ஆயிற்று – இதில் விமதி விஷயம் இன்றிக்கே இருக்கை –
கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-
ஆழ்வார் ஒலியை உடைத்ததாக அருளிச் செய்த மாலை-இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்-ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
பரமபதம் ஆட்சியாகக் கடவது –-அண்டம் -ஆகாசம் -பரமாகாசம்-சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )கண்டேனுக்கு இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் –
——————
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே-9-3-10 – நாலாயி:1777/4
முநி ப்ரணீதம் -என்னுமா போலே ஆப்த வசனமாய் இருக்கை-வலம் கொள்ளுகை-வளைய வருகை-இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம்-அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம்-அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் – ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் – துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே-இத்தை இங்கே அப்யசிக்க
அவர்கள் இங்குத்தை தனிமை தீர அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய்
நித்ய விபூதியிலே புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார் –
————-
வாழ கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் கேழல் செம் கண் மா முகில்_வண்ணர் மருவும் ஊர் -9-6-3- நாலாயி:1800/1,2
கிலேசித்து நோவு பட வேண்டாதே – வாழுகைக்கு வழி பார்த்து வைத்தோம் –கைங்கர்ய ருசி உடைய நீங்கள் கடுக வாருங்கோள் –ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமாக கைக் கொள்ளும் வடிவு ஒழிய தனக்கு என்ன ஒரு ரூபம் இல்லையாயிற்று –மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே
(ஸ்ரீ யபதி கேசவன் புண்டரீகாக்ஷன் -எல்லா அவதாரங்களிலும் உண்டே )
காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
—————-
தூ நீர் பரவி தொழுமின் எழு-மின் தொண்டீர்காள் மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில் -9-6-6- நாலாயி:1803/2,3
தூப தீபங்களுக்கு அக்னி அர்க்க்யாதிகளுக்கு ஜலம் நாநா விதமான புஷ்பம் இவற்றோடு கூட கந்த த்ரவ்யமான சந்தனம் இப்படி சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு
அதிகாரிகளான நீங்கள் அடைவு கெட ஏத்தி அஞ்சலியைப் பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – அதிகாரிகளாய் -அநந்ய பிரயோஜனராய் -கைங்கர்ய ருசியை உடைய நீங்கள் –
—————
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – -9-6-9-நாலாயி:1806/2,3
பிரபல கர்ம பிரதிபந்தமாய்க் கொண்டு அது சமைந்தால் அனுபவித்திலே இழிகைக்கு அவசரம் பார்த்து நிற்கிற பாபம் —(சஞ்சித கர்மாக்கள் )அங்கன் என்றால் பிரதிபத்தம் அன்றிக்கே அப்போது அனுபவிக்கிற பாபம் (ப்ராரப்த கர்மாக்கள் )இவை நசிக்கும் படியாகச் செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –
——————–
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன்-–9-8-10– நாலாயி:1827/2
பரிமளம் படிந்தாப் போலே வண்டுகள் மது பானம் பண்ணா நின்றுள்ள பர்யந்தத்தை உடைத்தான திருமலையிலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற அழகரை –அவ்வடிவு அழகிலே துவக்குண்டு ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை அடைவு கெட ஏத்தும் ஸ்வ பாவராய் அதின் எல்லையிலே நின்றால் போலே சத்ரு நிரசனத்தால் வந்த கரை கழற்ற அவசரம் இல்லாத சுடர் ஒளி நெடு வேலை கையிலே உடையராய் சூழ் வயலை உடைத்தான திருவாலி நாட்டை உடையராய் –
————
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் – —9-10-1–நாலாயி:1838/1,2
எங்கள் அசாதாரண்ய ஸ்வாமி -அசாதாரண்யம் தோற்ற எமக்கே எமக்கு-எங்கள் அசாதாரண )உபகாரகன் –அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து ஆஸ்ரிதரான எங்களுக்கு ஸ்வாமியுமாய்-உபகாரகனுமாய் –அடியவர் தங்கள் -என்றது -அடியவர்க்கு -என்றபடி
தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அவர்களுக்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –
———————–
சொல் திறம் இவை சொல்லிய தொண்டர்கட்கு அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே – 10-1-10-நாலாயி:1857/3,4
சாஸ்திர மரியாதை தப்பாத படி சொன்ன சப்த ராசி ரத்ன குவை போலே – இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு-விச்சேதம் இல்லை –-நச புனராவர்த்ததே-ஆண்மின்கள் வானகம் ஆளியான் தமர் –திருவாய் 10-9–என்கிறபடியே நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –
———
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – 10-2-10-நாலாயி:1867/3
தேவ ஜாதி குடி கிடக்கும்படி தர்ச நீயமான இலங்கையை அழித்த சக்கரவர்த்தி திரு மகனைக் கவி பாடிற்று –அவரைப் போலே ஆண் பிள்ளை ஆனவர் ஆயிற்று
கவி பாடினார்-புகன்ற -சொன்ன –தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது
ஜிதந்தே -என்றால் – எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே-இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் பரம பதம் – அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ
—————
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கை தண்டு என்ற ஆறே -10-9-4- நாலாயி:1935/4
உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை-பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு-சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே
வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி உரிய அடியார் கையில் ஆயுதத்தோ பாதியாக நினைத்திரா நின்றாய் –
—————–
தொண்டீர் பாடுமினோ – 10-10-10-நாலாயி:1951/1
பகவத் விஷயத்தில் சாபல்யம் உடையார் எல்லாரும் பாடுங்கோள்-வண்டுகள் ஆர்ந்த பொழிலை உடைய திருமங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகரான –அழகிய மாலையை உடைய வேலை நிரூபகமாக உடைய ஆழ்வார் அருளிச் செய்த மாலைகள்-தொண்டீர் பாடுமினோ –பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –
———–
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே – –11-1-9-நாலாயி:1960/3
அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை
வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –திருத் துழாயில் பரிமளம் உத்தேச்யம் ஆகில்
தொண்டர் இட்ட -என்ன அமையாதோ-மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –
அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே-இவளுக்கு கண் உறங்குவதும்
பழைய நிறம் வருவதுவும் –அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும் நிறமும் பழைய படி யேயாம்-
—————-
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய – 11-4-9-நாலாயி:1990/1
நமக்கு வேறே ஒரு துணை உண்டு என்று இராதே தொழும் கோள் –-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –முடிய வேணும் என்று நினைத்து உண்ண முலை கொடுத்த பூதனை உடைய பிராணன் முடியும் படிக்கு ஈடாக யுண்டு வெண்ணெயை ஆசைப் பட்டு –பணைத்த முலையை உடைய யசோதை பிராட்டி உரலோடு கட்ட அத்தைக் கொண்டோடின மிடுக்கை உடைத்தாய் –ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக
நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும்-இது நிச்சிதம் –பூதநா நிரசனமும் சகடாசூர பங்கமும் இதுக்கு நிதர்சனம்-கர்ம பலன்களை -ருசி வாசனைகள் உடன் போக்குவான் என்றபடி-
————-
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே -11-4-10– நாலாயி:1991/4
வில்லிலே பொருந்தி-அக்னி கல்பமான சரங்களை நடத்தின நம்முடைய சர்வேஸ்வரனை –திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த பாடலை நெஞ்சாலே தரித்தும்
இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள் பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள் –
————-
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனைய ஏத்தீர்களே -–11-6-1- நாலாயி:2002/4
தொண்டர்காள்-அப்ராப்த விஷயத்திலே தொண்டு பூண்டு இருப்பீர்களே-சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள் –உபகார ஸ்ம்ருதியை விடாதே கொள்ளுங்கோள்
—————–
கொற்ற போர் ஆழியான் குணம் பரவா சிறு தொண்டர் கொடிய ஆறே – -11-6-3-நாலாயி:2004/4
கடலுக்கு அபிமாநியானவன் விழுங்காத படி தன் வயிற்றிலே வைத்து ரஷித்து-ஐஸ்வர்ய ஸூசகமாய்-எதிரிகளை முடிக்க வற்றான திரு வாழியை உடையவன் உடைய குணங்களை
அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள்
க்ரௌர்யம் இருந்த படி என் –
அவாந்தர பிரளயம் -ருத்ரன் நான்முகனை வயிற்றில் வைக்க வில்லை-பிராகிருத பிரளயத்தில் விழுங்குவது இல்லை ஒன்றி விடுமே-அவர்கள் அபிமான அந்தர்பூத்தமான லோகத்தில் உள்ளாரை விழுங்கியதால் – அவர்களால் ரக்ஷிக்க முடியாமல் இவன் ரக்ஷிப்பதால் அவர்களையும் விழுங்கியதுக்கு ஒக்குமே –
—————
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற -11-6-6- நாலாயி:2007/3
நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க – அங்கே-புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் –(தன்னை வணங்க வைத்த கரணம் இவை -இராமானுஜர் காட்டிக் கொடுக்க )அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –
————
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் -–11-6-9– நாலாயி:2010/2
தன் பக்கலிலே பக்தி பண்ணினவர்களுக்கும் – மனனம் பண்ணினவர்களுக்கும்
தேவர்களுக்கும் தான் அருளி உலகம் ஏழையும் உண்டு –பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய்
மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான திருக் குடைந்தையை
பாடி ஆடீர்களே –
———————-
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை – 11-7-2–நாலாயி:2013/3
தஷிணையாக மஹா பலி கொடுத்த கொடை இன்னம் போராது என்னும் படி இருந்தவன்-
(கொடை போராமல் மூன்றாவது அடிக்கு இடம் இல்லாதபடி )துளை பட்டு சிலர் விநியோகம் கொண்டு அன்றிக்கே அனுபபுக்த்தமாய் ஒளி மழுங்காதே ஜாதியான ரத்னத்தை –உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று
ஆஸ்ரிதர் ஈடுபட்டு நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவன் -அவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –ஷேபம் –
——————
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று -11-7-7– நாலாயி:2018/3
அன்பு முற்றிய அவஸ்தையே ஆர்வம்-அன்பாவது ஸ்நேஹம்-ஆர்வமாவது பெறாது ஒழியில் முடியும் படியான ஆற்றாமை –புஷ்பாதி உபகரணங்கள் பண்டே சமைத்து இருந்தன –
அவன் தன்னை தாழ விட்டு நின்றான் –இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை –நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல –அநதிஷ்டமான நெஞ்சு ஆஸ்ரயம் இல்லாத -நினைவுகளுக்கு இருப்பிடம் இல்லாத
தாம் உளரே –பூ உளதே –பொய்கை ஆழ்வார் -ஈடு பாடு வேண்டுமே
——————
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய் – -11-8-9-நாலாயி:2030/2
பிதா ராஜ்யம் பண்ணி ஸூகித்துப் போரா நிற்க புத்ரனாவான் தரித்ரனாய் இருக்குமா போலே அவனுடைய நைரபேஷத்தையும் தம்முடைய தய நீய தசையையும்
அனுசந்தித்து ஐயோ -என்கிறார் –தய நீய தசையை ப்ராப்தனாய் இருக்கிற என் பக்கலிலே
கொள்வார் தேட்டமாய் புறம்பு வழிந்து போம்படியான உன்னருளைப் பண்ண வேணும் –
———–
விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே – நாலாயி:2032/4
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும் என் கருமத்தாலும் தவிர்க்க ஒண்ணாத கிருபை –விதி வாய்க்கின்று காப்பார் யார்-விதி சூழ்ந்ததால்-இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –(விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய்மொழி -5-1-1–விதி சூழ்ந்ததால் -திருவாய்மொழி -2-7-6–நன்று சூட்டும் விதி எய்தினம்-திருவாய்மொழி -4-5-7-)கேசவன் தமர்க்கு இப்பால் எல்லாம் விதி என்கிறார் பகவத் கிருபையை-நன்று சொல் மாலைகள் சூட்டும் படியான பாக்கியம்)கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே – சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது –
பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை -நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி-ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும் ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் –
இழந்தது கண்டால் போலே இருக்கிறது –அவன் மால்-நான் தொண்டன் இனி விட உபாயம் உண்டோ –அவனுக்கு என் பக்கல் ஸ்நேஹம் இல்லை என்ன ஒண்ணாது –
நான் அதிலே ஈடு பட்டிலேன் -என்ன ஒண்ணாது – ஆன பின்பு -எத்தைச் சொல்லி விடுவது –வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை=
‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க:
வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு.
அன்றியே,“என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம்.
விதி யென்னும் வட சொல் பாக்கியத்தைச் சொல்லும்.
தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார்.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப் பெற்ற அடியேன் இனி விட மாட்டேன் என்றார் ஆயிற்று .)
—————–
பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே –6- நாலாயி:2037/4
அயர்வறும் அமரர்களுக்கு சிரோ பூஷணம் ஆனவனை – அரும்பினை அலரை -என்ற பூ தானே அவன்-பாத பற்புத் தலை சேர்த்து -என்ன வேண்டாவே -அவர்களுக்கு –இவ் விஷயத்தை புகழ்ந்தார்களாகக் கொண்டோம் – இதுக்குப் பாசுரம் எங்கே தேடிச் சொன்னார்கள் – கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே குமுழி நீர் உண்டு போம் இத்தனை போக்கி – என் சொல்லிப் புகழ்வர் தாமே –அரும் பொருள் ஆதல் அறிந்தன -என்று அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய பாசுரம் இட்டுப் புகழப் போகாது –இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக் கண்டன்று; போது போக்க வேண்டியத்தனை என்றதாம்.
—————-
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு -11– நாலாயி:2042/1
செய்யும் அடிமை எல்லாம் அடைவு கெடப் பேசி –(பவாம்ஸ்மு ஸஹ வைதேஹயா கிரிஸாந ஷுரம்ஸ்யதே, அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வபத சச தே-அயோத்யா -31-25)உன்னைக் கண்டு வைத்து அடைவு கெட தொழப் போமோ – -என்னும்படியே –திருவடிகளிலே வணங்குகிற பிரகாரத்தை மநோரதித்து –தன்னாலே மநோ துக்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாமே -கொள்ளப் போமோ – மனக் கவலை தீர்ப்பார் அவரே இறே-
————
தூய்மை இல் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -12 நாலாயி:2043/2
தப்புச் செய்தோம் -என்கிற அனுதாபமும் இல்லாத நான் –கண்டது எல்லாவற்றிலும் தொண்டு பட்டு திரிந்த நான் –நித்ய ஸூரிகள் இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் –
சொல்லி யற்றது -இதுக்கு முன்பு அழிந்து அறியாத ஓன்று – நமோ நாராயணா -என்று பல்லாண்டு பாடி ஜீவிக்கக் கடவர்கள் – இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் –தொல்லை நாமத்தை நான் சொல்லி விடுகை அன்றிக்கே –
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்றுஇப்படி அழிப்பார் உண்டோ –
———————
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே – நாலாயி:2046/4
நெஞ்சு என்ற பேராய் பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –
தூய மா மாலைகொண்டு சூட்டுவன் தொண்டனேனே – நாலாயி:2047/4
தேவ ஜாதிகள் சொல் போல் அன்றிக்கே –தூய-பிரயோஜன நிரபேஷமான-மா மாலை சொற்கள் ஆகிற செவ்வி அழியாத -மாலையைக் கொண்டு –சூட்டுவன் தொண்டனேனே –இத்தால் அல்லது செல்லாத சபலன் –-அநசூயை பிராட்டிக்கு சூட்டினாப் போலே-(அடியவன் -கீழ் நீராட்டி
தொண்டன் -இங்கு சூட்டி –இரண்டும் பிரதான பாசுரங்கள் –நித்ய அனுசந்தானம் )
(இப் பத்தால் அடி சூட்டலாகும் அந் தாமமே -திருவாய்மொழி -2-4-11-
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-)
————-
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் – 10-நாலாயி:2061/1
இத்தால் பிராப்ய பிராபகங்களை பிராபிக்க வுரிய அதிகாரி ஸ்வரூபத்தை சொல்கிறது –
உனக்கு புகழே வடிவாய் இருக்கிறாப் போலே அன்றோ எனக்கு இகழ்வே வடிவாய் இருக்கிறபடியும் –ஆகிஞ்சன்யம் இறே அதிகாரம் ஸ்வ தோஷம் சம்பாதிக்க வேண்டியது இல்லை –ஜ்ஞாபனமே-அபேக்ஷிதம் –உன் பக்கலில் அதி சபலனான நான் –
இத்தால் –பிராப்ய ருசியைச் சொல்லுகிறது –பிராபகப் பிரார்த்தனைக்கு -ஆகிஞ்சன்யமும் -ஸ்வ தோஷ ஜ்ஞாபனமும் வேண்டினவோ பாதி பிராப்யப் பிரார்த்தனைக்கு பிராப்ய ருசி வேணும் இறே – ஆகிஞ்சன்யமும் அவனை ஒழிய செல்லாமையும் இறே-த்வயத்துக்கு அதிகாரம் –அதவா-இகழ்வாய தொண்டனேன் நான் – ஒரு கட தாசி சார்வ பௌமனை ஆசைப்பட்டால் நாட்டார் இகழுமா போலேயும் மௌஷ்டிகன் அபிஷேகத்தை ஆசைப் பட்டால் இகழுமா போலேயும் அன்றோ நித்ய சம்சாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது-
(‘இகழ்வாய்‘ என்பதை, ‘இகழ்வு ஆய‘ என்றும் ‘இகழ் வாய‘ என்றும் பிரிக்கலாம்;
அடைவே, நீசனாகிய என்றும்,
இகழத் தக்க வாய் மொழியை யுடையேனான என்றும் பொருள் காண்க.
தண்ணீர்க்குடமெடுக்கும் தாஸியொருத்தி ஸார்வ பௌமனை ஆசைப் படுதல் போலவும்
பிச்சை யாண்டி பட்டாபிஷேகத்தை விரும்புதல் போலவுமன்றோ நித்ய ஸம்ஸாரியான நான் உன்னை ஆசைப்படுகிறது என்கிறார்.)
———————–
தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே-திருவாசிரியம்-3- – நாலாயி:2580/8
அத்விதீய பர தெய்வம் – இப்படி அத்விதீய பர தெய்வத்துக்கு ஆளாகவோ ஆசைப்படுகிறது என்னில்-அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே-ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு-இனி நாம்
ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க
கர்மத்தால் நான் என்றும்
என்னது என்றும் போந்தோம்இனி சேஷித்த காலமாகிலும்
இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் –
அவர்களோடே ஒப் பூணாய் ஒத்த தரமாகவோ என்னில்
ஆளாகவே
அவர்களுக்கும் ஆளாய் –
நான் எனக்கு -என்ற இருப்பும் கலந்து செலவோ என்னில் –
ஆளாகவே —
ஆளாகும் தரம் அன்றிக்கே சேஷத்வமே வடிவாக
இசையும் கொல்
அவன் ஆள் பார்த்து உழி தருவான் -நான்முகன் -60-ஆகையால்
இவ்வர்த்தத்தில் இவனை இப்போதாக இசைவிக்க வேண்டா –
இவர் எப்போது என்று பிரார்த்திக்கிறவர் ஆகையால் இவர்க்கு இசைவு உண்டு
இசையுங்கொல் என்பான் என் என்னில் –
பாகவத சேஷத்வமாகை யாகிறது கூடுவது ஓன்று அல்லாமையாலே
கூடாத அர்த்தம் இங்கனே கூட வற்றோ -என்கிறார் –
ஊழி தோறு ஊழி
இந்த பாகவத சேஷத்வம் தான் சில காலமாய்க் கழிய ஒண்ணாதே –
கல்பம் தோறுமாக வேணும் –
அது தன்னிலும்
ஓவாதே
ஒரு ஷணமும் இடை விடாதே யாக வேணும் –
அவாப்த ஸமஸ்த காமனாய்-
ஸ்ரீ யபதியாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான(திருவாய்-1-1-1 ) சர்வேஸ்வரன்
சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காகத் தன்னைப் பேணாதே இங்கே வந்து அவதரித்த இடத்து –
துஷ் ப்ரப்ருதிகளான சிசுபாலாதிகள் அது பொறுக்க மாட்டாமே முடிந்து போனால் போலே –
இப்போது பாகவதர்களுடைய பெருமை அறியாதே
இவர்களும் நம்மோடு ஓக்க அன்ன பானாதிகளாலே தரியா நின்றார்கள் ஆகில் நம்மில் காட்டில் வாசி என் என்று
சஜாதீய புத்தி பண்ணி சம்சாரிகள் அநர்த்தப் படுகிற படி
அவதரித்த சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாம் அன்று இறே
இவர்களும் சம்சாரிகளோடே சஜாதீயர் ஆவது
இவ் வுலகில் இவ் வுண்மையை அறிவது அரிது அன்றோ என்றபடி
————–
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த – நாலாயி:2845/2
தொண்டர் குலாவும் –-கண்டேன் திருவரங்கமே யான் திசை –என்றும் -இனி அறிந்தேன் தென் அரங்கத்தை -என்றும்
தேனார் திருவரங்கம் -என்றும் -பண்டரங்கமே எதுவும் -என்றும் -திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -என்றும் –
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னை கண்ணாரக் கண்டு -என்றும் –
அணி அரங்கத்தே கிடந்தாய் -என்றும் -அரங்கத்தம்மா -என்றும் -அண்டர்கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்றும் -நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் சூழ் அரங்கத்தம்மானே -என்றும்
அவருடைய போக்யதையில் ஈடுபட்டு இருக்கிற பொய்கையார் தொடக்கமான ஆழ்வார்கள் பத்துப் பேரையும் –
அன்று எரித்த திருவிளக்கை தன் திரு உள்ளத்தே இருத்தும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே கொண்டாடி நிற்கிற —
அவர்கள் பக்கலிலே எப்போதும் பிரதி பத்தி பண்ணிக் கொண்டு போரா நிற்கிற என்றபடி –குலவுதல் -கொண்டாட்டம்
—————–
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால் சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – 81-நாலாயி:2871/1,2
வேறொரு விஷயத்தில் மனச்சு பிரிவின்றிக்கே தேவரீருடைய சேர்த்தி அழகை உடைத்தான
திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர்கள் -பக்கல்-
ஒரு பொருத்தம் இன்றிக்கே நின்ற எனக்கு –
அவர்களுக்கே அனந்யார்ஹசேஷம் என்னும் நினைவை பிறப்பிக்கையாலே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அமலனாதி பிரான் – 1-என்றும்
அடியார்க்கு ஆட்படுத்தாய் -திருப் பள்ளி எழுச்சி – 10- என்றும் சொல்லுகிறபடியே
தாமுகந்தாரை ஸ்வகீயர் அளவிலே சேர்க்கும் ஸ்வபாவராய்
பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி இருக்கும் –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்
சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று
பெறுவித்து அருளினவரே !
இப்படியான பின்பு
தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .
அதவா –
சோர்வின்றி -இத்யாதிக்கு
அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி -உன் தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு -இன்று பெறுத்தும் இராமானுச -என்று அந்வயித்து –
பகவத் சேஷத்வத்துக்கு இசைகையாலே ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளை விடாமல் உறைக்கப் பற்றி –
(அதனாலேயே ) துர்மானத்தாலே ஸ்ரீ பாகவத சேஷத்வத்துக்கு இசையாமல் -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பார் பக்கல்
சேராமல் நின்ற வெனக்கு -அத்தை இன்று லபிப்பித்து அருளின தேவரீர் கிருபைக்கு ஒப்பு இல்லை என்னவுமாம் .பிடித்தார் பிடித்தாரை பற்றி குறை இல்லாமல் இருப்போம் –
ஸ்ரீ அரங்கன் திருவடி பிடித்த செருக்கால் -இருந்தேன் -அடியார் அடியாரை பிடிக்காதவரை அரங்கன் விரும்பானே –
இப்பொழுதோ -ஸ்ரீ ஆழ்வான் திருவடி சம்பந்தம் பெற்ற பின் ஸ்ரீ அரங்கன் விரும்பி மேல் விழுகிறான் —
ஸ்ரீ பாகவதர் திருவடிகளை பெற்றுக் கொடுத்தீர் -ஸ்ரீ அரங்கன் திருவடிகளை பெற்றுக் கொடுத்தீர் –
சிர் ஒன்றிய கருணைக்கு ஒப்பு இல்லை -இப்படி அருளிய ஸ்ரீ ஸ்வாமியின் இன்னருளுக்கு எதுவுமே ஒப்பு இல்லையே –
ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி சீயர் ஐதீகம் –பாகவத சேஷத்வம் அறியாமல் பண்டே பல காலும் போயின என்று அழுதேன்-நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர் பக்கல் –
யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் -கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்று சொல்லப்பட்ட
மகத்துக்கள் விஷயத்தில் என்றபடி –
——————
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய் -<-84 நாலாயி:2874/2
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ -இவ்வளவாக திருத்தி என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து நித்ய வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு அனந்யார்ஹா சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –அவதாரணத்தாலே –அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் -உனக்கே நாம் ஆட் செய்வோம் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே — ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால் மனந்தனைக் கட்டி’ என்னக் கடவது இறே !
ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அது தன்னிலும் பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; –
பக்தி உபக்ரம மாத்ரத்தையே -பத்தியின் தொடக்கத்தைச் சொல்லுகிறது.
‘பத்தியின் தொடக்கம் என்று இதனை நியமிப்பார் யார்?
அதனுடைய-சரம அவஸ்தையை – முடிவான எல்லையினைக் காட்டினாலோ?’ என்னில்,
அஃது ஒண்ணாது; ‘என்னை?’ எனின்,
இப்போது இங்குச் சொல்லிக் கொண்டு போருகிற இது, குணப் பிரகரணம் ஆகையாலும்,
சர்வேஸ்வரனுக்கு ஓர் -உத்கர்ஷம் -ஏற்றஞ்சொல்லுகை இப்போது இவர்க்கு -அபேக்ஷிதம் -விருப்பம் அல்லாமையாலும்,
தம் தாமை ஒழியச் செல்லாதாருக்கு ஸ்நேஹிக்குமது அல்லாதாருக்கும் உண்டாகையாலும்
(தம்மையே நம்பி வந்து அடைந்தவர்களிடத்தில் தாமும் அன்புடன் இருத்தல் ஏனையோர்க்கும் உண்டு ஆகையாலும்,)
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -( ‘நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த
இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ )என்னுமவன் ஆதலானும்,-
உபக்ரம மாத்ரத்தையே – பத்தியின் தொடக்கத்தையே சொல்லிற்றாகக் கடவது
மேலும்,ஆஸாலேசம்- ஆசை சிறிது உடையார்க்கும் தன்னைக் கொடுப்பதாக-பகவத் யுக்தியும் யுண்டாயாய் இருந்தே ஆதலானும்,
‘எதிர் சூழல் புக்கு’ என்றும்,
‘என்னின் முன்னம் பாரித்து’ என்றும் விலக்காமை தேடித் திரிவான் ஒருவன் ஆதலானும் மேலதே பொருள்.
(உடைமை – செல்வம்) ‘இவை கனத்த உடைமை ஆகுமோ?’ எனின்,
இவ் வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே,
நித்திய ஸூரிகளைக் காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.
‘இறைவன் நினைத்திருப்பானோ?’ எனின், இவர்கள் பக்கலிலே இவ்வளவு உண்டானால், பின்னை ‘
இவர்களுடைய பாரத்துக்கு எல்லாம் நானே கடவன்,’ என்று இருப்பவன் இறைவன்;
மேலும் இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ,
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான் (விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’) என்றார்?
லஷ்மணோ லஷமே சம்பன்ன (‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ )என்றார் இளைய பெருமாளை.
இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐஸ்வரியம்;
இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார். (இது உடைமை என்ற சொல்லின் விகாரம்.)
இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார்.
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம (‘உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின்,
சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ )என்று, இன்று கிட்டிற்று ஒரு குரங்கை,-
நித்ய ஆஸ்ரிதையான – என்றும் தன்னையே அடைந்திருக்கிற -பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ!
ஆதலால், இறைவனுக்கு-சேஷ பூதராய் – அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள்
ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்;
இங்கு, இவ் விலக்காமையினை யுடையவர்களே யாவர். ‘காரணம் என்னே?’ எனின்,
அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்;
குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!
—————
கழிமின் தொண்டீர்கள் கழித்து – நாலாயி:2961/1
பாஹ்ய விஷயங்களில் -புறப் பொருள்களிலுள்ள ருசியைக் கழியுங்கள்.
கழிக்கையாவது, ‘பொல்லாது’ என்று இருக்கை. –
இந்த ருசியைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்கள் ஆதலின், ‘தொண்டீர் கழிமின்’ என்கிறார்-பகவத் விஷயத்தில் -சாபலம-ஆசை யுடையவர்களே, கழிக்கப் பாருங்கள்.
—————
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ –3-4-3- நாலாயி:3156/2
நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்றார் விழும் நிலத்தைச் சொல்லுகிறது.
அழகிய புகரையுடைய திருவடிகளையுடையவன் என்பேனோ!
——————-
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – 3-4-5-நாலாயி:3158/1
தன் பக்கல் -அடியவர்கள் -சரணாகதர்கள் -பர ந்யாசம் – நியஸ்தபரரானவருடைய எல்லாத் துக்கங்களையும் போக்கிப் பாதுகாக்குமவன்;
இதனால், இப்படிச் ‘சேய்மையில் உள்ளவன்’ என்று-நித்திய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு -எட்டாக்கனி அடியார்கள்
இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி.
—————–
தீர்ந்த அடியவர்-தம்மை திருத்தி பணிகொள்ள வல்ல – நாலாயி:3175/1
பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;
அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,
‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே
——————–
நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் – 3-7-4-நாலாயி:3190/3
அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலே காணும்; ‘உன் திருமார்வத்து மாலை நங்கை’ என்பர் மேல்.-திரு ஆபரண ஆழ்வார்களாகிறார் நித்திய சித்த புருஷர்களாகையாலே இவர்களையுடையவன் திரு நாரணன் என்கையாலே,
இம்மிதுனமே உலகத்துக்குச் சேஷி என்கிறார்,’ என்னுதல்.-இறைவனாந் தன்மைக்கு எல்லை அம்மிதுனமாய் இருப்பது போன்று, அடிமையாம் தன்மைக்கும் எல்லையாய் இருக்கிறவர்கள்.-உச்சிவீடும் விடாதே நடு நெருங்கி வருகின்ற பிறவிகளில் இடங்கள்தோறும் ஓர் ஒப்பனையால் அன்றிக்கே வெறும் புறத்திலே நமக்குத் தலைவர்கள்;
இடையில் இருப்பது ஆர்ந்து -செறிந்து -இடை வெளி இல்லாமல் -நடு நெருங்கி வருகிற -என்கிறார் – அடைமொழி இல்லாமல் தொண்டர் தொண்டர் -வெறும் புறத்திலே சேஷிகள் -ஸ்வரூப க்ருத தாஸ்யம் –
அன்றிக்கே,‘ஸ்ரீமானான நாராயணனுக்கு அடிமை புக்கிருப்பார்க்கு ‘இச்சேர்த்தி அறிந்து இவர்கள் பற்றுவதே!’ என்று அடிமை புக்கார்க்கு அடியேன் என்கிறார்,’ என்னுதல்.
அவர்கள், எங்களை எண்ணாதே இருந்த போதும் எமக்கு ஸ்வாமிகளே யாவர் என்பார்,
அவர்கள் தாங்களை ஸ்வாமி என்று எண்ணா விடிலும் -‘எமக்கு எம் பெருமக்களே’ என்கிறார்.‘எங்களுக்கே உரிய தலைவர்கள்’ என்றபடி.
தொண்டர் தொண்டர் கண்டீர் -தங்கள் அபிப்ராயத்தால் தொண்டர் -எம் நினைவால் அசாதாராண சேஷிகள் -என்கிறார் -பிரணவ அர்த்தம் –
————–
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் – 3-7-11நாலாயி:3197/3
இருக்கு வேதம் போலவும், ‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம்.-இதில் சர்வேசுவரனைச் சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜன கோடியிலே யாமித்தனை.
உபசர்ஜன கோடி அவனைப் பற்றி -உடையவன் –திருமால் அடியார் -திருமாலை சொல்லித் தானே அடியார் -திருமால் அடியாருக்கு விசேஷணம் –-ஆரக்கற்கில் – நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில். இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல்.அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல் அறும்.
அடியார்க்கு அடிமையாகும் தன்மை கிட்டும் சொல்லாமல் -வியாதி போக்க சக்கரைப் பொங்கல் போலே அநிஷ்ட நிவ்ருத்தி – ஆனபின்பு இஷ்ட பிராப்தி -பாகவத கைங்கர்யம் பள்ள மடை தன்னடையே வரும் –
—————
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆமினோ – 4-1-6-நாலாயி:3236/4
ஆழ்ந்து பரந்த கடலைப் படுக்கையாக வுடைய சர்வேஸ்வரன். திருமேனியின் சௌகுமார்யத்துக்குத் தகுதியாக உறுத்தாதபடியான ஆழத்தையுடைத்தாய், திவ்ய அவயவங்களைப் பரப்பிக் கொண்டு கண் வளர்கைக்குத் தகுதியான பரப்பையுடைத்தாய் இருக்கின்றமையைத் தெரிவிப்பார், ‘ஆழ்ந்து ஆர்’ என்கிறார். ‘திருப்பாற்கடலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறது கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அல்லவே?
நம்மால் பற்றப்படுமவன் ஆகைக்காக அன்றோ? ஆன பின்னர், அவன் நினைவோடே சேரச் சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினைப் பற்றுங்கோள்,’ என்பார், ‘கடற்பள்ளி அண்ணல்’ என்கிறார்.-சர்வ சமாஸ்ரயணீயனாக ஆவதற்கே -இங்கே கிடக்கிறான் –
அடியவர் ஆமினோ –
அவன் தலைவனாயிற்ற பின்பு நீங்கள் உங்கள் அடிமையை இசையப் பாருங்கோள்.
அன்றிக்கே, தாச பூதர் -இயற்கையிலே அடிமை அல்லாதது ஒரு பொருளை இன்று அடிமை ஆக்கிக் கொடுத்ததாக நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார் ஆகவுமாம்.
—————
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8–நாலாயி:3304/3
பிரீதி மாறாதே செல்லும்படியாக. – இந்தக் கைங்கரியத்தில் இனிமை அறிந்த நாங்கள்.
‘கேசவன் தமர்’க்குப் பின் தனியர் அல்லராதலின், ‘தொண்டரோம்’ என்கிறார்.-பிரீதியினாலே தூண்டப்பட்டவர்களாகிப் பாடுவது ஆடுவதாம்படி.
‘இதுவாயின், முன்பே நாம் செய்வதாக இருந்தது ஒன்றே அன்றோ?
இந்தச் சரீர சம்பந்தம் அற்றால், ஒரு தேச விசேடத்தில் கொண்டுபோய்,
‘மேலே சொல்லப் போகிற சாமத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்னும்படி பண்ணுகிறோம்,’ என்ன, ‘அதுவோ நான் விரும்புகிறது? அன்று; இங்கேயே,’ என்கிறார் மேல் -கடல் சூழ்ந்த இவ்வுலகத்துள்ளே நான் காண வரவேண்டும். என்றது,
‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது என்கிறார்’:
———–
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்று ஆர்த்தும் – நாலாயி:3353/2
பாகவதர்கள் விஷயத்தில் ஆசையுள்ளவர்களாய், பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று இருப்பார் அடையத் திரளுங்கோள்.
‘வாருங்கோள்’ என்பது, என்ன பிரயோஜனத்துக்கு? என்னில்,பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.
தொழுகை பிரயோஜனம் -சடக்கென அப்பொழுதே ப்ரத்யக்ஷ பலம்-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் – ‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அது தானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.-ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி.
———–
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே-5-2-5- – நாலாயி:3356/4
ராக்ஷஸ தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத் தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக் கொண்டு,-ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது,“ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தின படி.
“வாழ் ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேட வேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு,
‘அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’ என்று தேட வேண்டும் படியாயிற்று என்றபடி.பிறர்க்குத் தொண்டு செய்தல் நாய்த் தொழிலாகும்” என்கிற மற்றை விஷயங்களிலே
தொண்டு பட்டிருக்க உங்களைக் கல்பந்தானே வருத்திக் கொண்டு, தானும் பேரும் என்னுதல்;-அன்றிக்கே,-வைகுந்தன் பூதங்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பேர்ப்பர் என்னுதல்.
———–
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே-5-2-6- – நாலாயி:3357/4
கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்குமவர்கள் வந்தார்கள்.
நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய சூரிகள்.-
எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.-நன்றான இசை பாடியும், பரபரப்போடு நிருத்தம் பண்ணியும், இப்படிப் பூமி அடையப் பரந்தார்கள்.-அவர்கள் பாடே சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்-அவர்களோடே சென்று சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.-எம்பெருமானார் நிர்வாஹம்-தொண்டீர் –தக்கது அல்லாத விஷயத்தில் தொண்டு பட்டிருக்கிற நீங்கள். என்றது, திருந்துகைக்கு யோக்கியதை யுடைய நீங்கள் என்றபடி.-அது செய்யுமிடத்தில்,-தொழுத பின்னர் “எனக்கு ஒன்று தா, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாமல் வணங்குங்கோள் என்கிறார்.
————-
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர் ஒக்க தொழ கிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இல்லையே -5-2-10- நாலாயி:3361/3,4
வகுத்தது அல்லாத விஷயத்திலே தொண்டு பட்டுத் திரிகிற நீங்கள், அவர்களோடு ஒக்கச் சர்வேச்வரனை அடைந்து வணங்கப் பெறில் உங்கள் தோஷம் போகையே அன்றிக்கே, யுகம் காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷமும் போம் என்கிறார்.
—————–
உலகங் கொண்ட அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் -5-3-5- நாலாயி:3367/2
அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும் போதும் நானே சொல்ல வேணுங்காண்;
நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட்புகா நின்ற என்னளவு தெரியுமோ உனக்கு அவனை;-ஆன பின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள்.-கடியன்-கூரியன்; தன் காரியத்திலே நோக்குள்ளவன். என்றது, தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால், எதிர்த்தலையின் அளவு பாராதே மேல்விழுந்து வந்து கலக்குமவன் என்றபடி. கடுமை-கூர்மை.
————–
உரிய தொண்டர்தொண்டர் தொண்டன் சடகோபன் – 6-9-11-நாலாயி:3549/2
திருமகள் கேள்வனான சர்வேஸ்வரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார்,
சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும், பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும், பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘ தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.–தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;
‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;
தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;
‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.-ததீய சேஷ பூதன் – ஆத்ம -அஹமர்த்தம்
“பயிலும் சுடர் ஒளி” என்ற திருவாய்மொழிக்குப் பின்பு அடியார்கட்கு அடிமையாக இருத்தல் அளவாக ஆயிற்று,
இவருடைய அஹம் என்ற சொல்லுக்குப் பொருள் இருப்பது. -இவ்வளவு வருகை அன்றோ அநந்யார்ஹ சேஷத்வமாவது. பகவானுடைய வைலக்ஷண்யத்தையும் சம்சாரத்தினுடைய தோஷத்தையும் தெளிவாகச் சொன்ன இப்பத்தும்-சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.-குண க்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான
தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே – நாலாயி:3549/4
———–
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4
உனக்கு ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் பாதுகாப்பவன் அல்லையோ நீ! ஆன பின்பு உனக்கு இது போருமோ?’
திருமுடி தொடக்கமான திவ்விய ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு நித்திய ஸூரிகள் நடுவே இருக்கக்கடவ நீ, உலகத்திற்கு எல்லாம் காரணனாய்ப் பரப்பை யுடைத்தான பூமியைப் படைத்து, பின் பிரளய ஆபத்து வர வயிற்றிலே எடுத்து வைத்து,
பின் வெளி நாடு காணப் புறப்பட விட்டு, பின் மஹாபலி கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, பின் நைமித்திகப் பிரளயத்திலே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி, இப்படிகளாலே எல்லா இரட்சணங்களையும் செய்யுமவன் அல்லையோ?-இவன் இரட்சகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ?
மதுவைப் போக்கினாற்போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே அன்றோ குறை?
——————-
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3571/3
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்; தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.
————–
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளி தொழுமின் தொண்டீர் அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் —7-10-6- நாலாயி:3665/1,2
இவன் தான் போக்கப் பார்க்கும் அன்று அன்றோ, புதுப் புடவை அழுக்குக் கழற்றுமாறு போலே சிறிது கிடக்கச் சிறிது போவது?
அங்ஙன் அன்றிக்கே, வரம்பில் ஆற்றலை யுடை இறைவன் போக்கும் அன்று வாசனையோடே போமே அன்றோ?-துர் வியாதி என்றது நல் வியாதிக்கு வ்யாவ்ருத்தி -ஆழ்வாருக்கு உற்ற நல் நோயான விரஹ நோய் வருமே
மருத்துவனாய் -என்றது ஆச்சார்யனாய் என்றபடி-அவனைச் சொன்னது தேசத்துக்கும் உப லக்ஷணம்-அதனை நினைத்துப் பற்றப் பாருங்கோள், பகவத் விஷயத்தில் ஆசையுடையீர்!
————–
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே – நாலாயி:3672/3
ஒரு கால் காணுமாறு அருளாய் -என்றால் அப்போதே செய்யக் காணா விட்டால் -நாமே முயற்சி செய்யப் பெறுகிறோம் -என்று இருக்குமவர் அன்றே இவர் –
மழைத் தாரையால் அல்லது தரியாத சாதகம் போலே– அவன் அருளே பார்த்து இருக்குமவர் ஆகையாலே மீண்டும் காணுமாறு அருளாய் என்கிறார் –காணுமாறு அருளாய் – 8-1-2-திருவாறன் விளை என்னும் திவ்ய தேசத்தை அணித்து ஆக்குதல்–அன்றிக்கே –
எனக்கு அவ்வளவும் கால் நடை தருதல் செய்யும்படி பண்ணுவாய் -என்னுதல் –தொண்டனேன் கற்பகக் கனியே- ஐம்புல இன்பங்களிலே நோக்கு உள்ளவனாய்–அவற்றிலே சபலனாய் திரிகிற எனக்கு அதனைத் தவிர்த்து உன்னை –சர்வ ஸ்வதானம் -முற்றும் கொடுத்தவன் இலையோ –
————–
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே – நாலாயி:3673/2
இவள் ஆற்றல் இருந்தால் போய் காண் என்றால் -பின்னை அவனுக்கு கண்ணீர் பாய்கைக்கு மேற்பட இல்லை –-யதிசக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் – -5-6-115
சர்வ சக்தன் ஆற்றல் இல்லாதவன் போலே தோற்ற இருக்கை அன்றோ-இவள் நியமிக்க வல்லள் ஆகிறது–அடியார்கள் இட்ட வழக்கு ஆகையே தன்மையாக உடையவனே-
-உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது – முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச் சரக்ஷக சேஷி -நவ வித சம்பந்தம் –நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது
அடியேன் என்று நான் சொல்ல நீ ஈச்வரனாய் இரா நின்றாய் என்றபடி-
——————
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே – நாலாயி:3681/4
வேத வாக்குகள் எந்த ஆனந்த குணத்தின் நின்றும் சொல்ல மாட்டாது மீண்டனவோ -என்கிறபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று தைத்ரியம் -9-1-
மீளுகை அன்றிக்கே பகவான் உடைய குணங்களுக்கு நேரே வாசகமாக இருத்தலின் –
உரிய சொல் மாலை -என்கிறது-அநாதி காலம் பகவான் இடம் விருப்பு இல்லாதவர்களாய் –வேறு விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் – அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்–அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -6 இல்லாதவன் ஆகிறான் என்கிறபடியே–இல்லாதவர்களைப் போலே இருக்கிற நுங்கட்கு –இருக்கின்றவனாக அறிகிறார்கள் -என்றபடியே உஜ்ஜீவிக்கலாம்
—————
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே -8-5-6- நாலாயி:3720/4
வேறு பிரயோஜனதுக்காக அழைக்கிறேனோ-ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்னை வழுவிலா-அடிமை கொள்ள வேண்டும் -என்று அன்றோ அழைக்கிறது-கிரமப் பிராப்தி பொறுக்க வல்லேனாய் தான் தாழ்க்கிறாயோ – பரபரக்கிறார் -என் துயர ஒலி கேட்டால் -கிரமத்தில் வருகிறோம் -என்று ஆறி இருக்கலாய் இருந்ததோ –மா நீர்க் கொண்டல் சஞ்சரிக்கும் ஆகாசத்தில் தோற்றவும் அமையும்-அன்றிக்கே-பரமபதத்தில் இருக்கிற இருப்போடே வந்து தோற்றவும் அமையும் –மண் மேல் தான் அவதரித்துத் தோற்றவுமாம்-விரி நீர்க் கடல் தான் – திருப் பாற்கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறபடி வந்து தோற்றவுமாம் –தூணிலே வந்து தோன்றினால் போதே யாதல்-
யானைக்கு வந்து தோற்றினால் போதே யாதல் தோற்றவுமாம் –உன் திருவடிகளில் கைங்கர்யத்தில் ஆசை கொண்ட யான்-எனக்கு உய்விடமான திருவடிகளைக் காண –பல நாள் வேண்டும் -என்று நிர்பந்திக்கிறேனோ- என் ஆத்துமா கிடக்கைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேண்டும்-
——————
நேர்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே– 8-9-11-நாலாயி:3769/2
இதனால் இவர் படி சொல்கிறது – அவன் இறைவனாம் தன்மைக்கு எல்லை ஆனால் போன்று-இவர் அடிமை யாம் தன்மைக்கு எல்லை யாம்படி –இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –
ஆக-இப்பாட்டால் சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்- ஆத்ம ஸ்வரூபத்தையும்-
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்- இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்- சொல்லிற்று ஆயிற்று —
——————-
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே – –9-1-1–நாலாயி:3781/4
அடியோமாய் உஜ்ஜீவிக்கை ஒழிய நம்மதாய் அவனுக்கு கொடுக்க வேண்டுவது ஒன்றும் இல்லை -சேஷத்வத்தை இசையும் அத்தனை -சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையால் அத்தை அறிகை உஜ்ஜீவனம் -சேஷத்வத்தை இழக்கை இ றே நாசமும்-வேறே துணை உண்டாய் இருக்க இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன் -இவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் -இல்லையாகில் இல்லையாம் அத்தனை -அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
————
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – 9-2-1-நாலாயி:3792/3
உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ -என்கை -சபரிகரமாக-சாஸ்திரங்களில் சொல்லுகிற முறை தப்பாதபடி வந்து ஆடச்செய்யும் அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -மாமக்ரூரேதி வஹ்யதி என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –வார்த்தை யில் தோற்றாத பந்தமும் நோக்கிலே அனுபவிக்கும் படி குளிர நோக்கி யருள வேணும் -தெளிந்த நீரையுடைய திருப் பொருநலோடே சேர்ந்த அழகிய நீர் நிலம் சூழப் பட்ட திருப் புளிங்குடியிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவனே -தேவர் ஸுகுமார்யத்துக்கு சேரும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான தேசத்திலே கண் வளர்ந்து அருளின அம்சம் உண்டு -இதின் கார்யம் பெற வேணும் -என்கிறார் -செய்த அம்சத்தில் க்ருதக்நராக ஒண்ணாதே –
—————
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் -9-2-2-நாலாயி:3793/2
முன்பு பெரிய ஆற்றாமையோடு-ஸ்ரீ வசிஷ்ட பகவான் தொடக்கமானவரை புருஷகாரமாகக் கொண்டு மீட்பதாக சென்றவன் –தன் ஆசையால் நிர்பந்திக்குமதுவும் இன்றிக்கே-அப்போது ஆனந்தம் அடைந்தவனாய்- சத்ருகன ஆழ்வானோடு கூடினவனாய் தேரில் ஏறினான் -என்கிறபடியே-உவகையையனாய் மீண்டான் அன்றோ –
அப்படியே – உன்னுடைய ஆணையை மீறாமல் உன் திருவடிகளுக்கு தப்பாமல்
அன்றிக்கே – உன்னுடைய விரும்பத் தக்கவான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல்
அதாவது வேறு பயன் ஒன்றையும் கருதாவராய் இருத்தல் -என்றபடி-அடிமை முறை தப்பாதே போருகிற-வேறு கதி இல்லாத எங்களுக்கு திருவருள் செய்து –
——————
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி – 9-2-3-நாலாயி:3794/2
மிருது தன்மை உடைய திரு உடம்பு அசையும்படி -என்றது- விரும்புகிற வர்களையே பார்க்கும் இத்தனையோ-உன் தன்மையையும் பார்க்க வேண்டாவோ -என்றபடி –இந்நிலையில் செய்ய அடுப்பது இது-இந்நிலையில் செய்ய அடுப்பது இது -என்று உணர்த்தி-அந்தரங்கமான தொண்டுகளைச் செய்து -என்றது-
பெருமாள் தமக்கு வேண்டிய கார்யங்களிலே நோக்கு இல்லாமலே இருந்த போதும்-
இவ்வடிமையைக் கொண்டருள வேணும் என்று-அவ்வவ் காலம் தோறும்-
என்னை நியமித்து அருள வேணும் என்று வடிம்பு இட்டு அடிமை செய்தாப் போலே-
அந்தரங்கமான தொண்டுகளை செய்து -என்றபடி –
பரவாநச்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-ஆத்மாவுக்கு இயற்கையாகவே அமைந்த அடிமை ஆகையாலே-பழையதாய் போருகிற அடிமை-
அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம்
யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –
எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –
இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது – அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் – கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால் வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் -மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –
————–
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -9-4-9- நாலாயி:3822/3
தன்னை அனுபவிக்கப் பெற்று-அதற்கு மேலே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அமுதமாம்படி
திருவாய்மொழி பாடவும் பெற்றேன் –என்கிறார் –-என்னளவும் அன்றிக்கே –ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகன் ஆகப் பெற்றேன் – நானும் உண்டு-என் வேலையாள்களும் ஜீவித்து-என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –என்பாரைப் போலே – சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்-அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –சர்வேஸ்வரனாலே-அடியவனாக-அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –
————-
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை – 9-6-1-நாலாயி:3836/2,3
உயிரால் பொறுக்க ஒண்ணாதபடி ஆசை பெருகா நின்றது –பிள்ளாய் -அணு அளவிதான இவ் உயிரின் அளவு அன்று- ஆற்றுப் பெருக்கு போன்று மென்மேலும் என -பெருகா நின்றது -என்பார் -பெருகும் -என்று நிழல் காலத்தில் அருளுகிறார்-ஆல் – என்பது துக்கத்தின் மிகுதியைக் காட்டுகிறது -என்றது-நெஞ்சம் உருகாமல் வேட்கையும் பெருகாமல்
என்று தம்மால் அடக்க ஒண்ணாத துக்கம் தோற்றச் சொல்லுகிறார் -என்றபடி –மனத்தினை உருகாமல் கரை கட்டுவேனோ- வேட்கை பெருகாமல் தகைவேனோ- இவற்றுக்கு அடியான அவன் குணங்களைத் தவிர்ப்பேனோ –அதற்கு அடியான என் ஆசையைத் தவிர்ப்பேனோ –
ஆசை எட்டாதது -என்று கை வாங்க ஒட்டுகிறது இல்லை – அவன் அழகு முதலிய மிக உயர்ந்த குணங்கள்-மறந்தும் தரித்து இருக்க ஒட்டுகிறது இல்லை –
—————-
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி 9-8-6- நாலாயி:3863/2
கரணங்கள் தனித் தனியே விரும்பும் நிலை அன்றோ ஆழ்வாருக்கு –
நான் செய்த படி செய்ய-கண்களின் விடாய் கெடுவது என்றோ-ஒரு நாளில் காண்கை நிச்சயம்-ஆன பின்பு இந் நிர்பந்தத்துக்கு பலம் என் என்னில் –துரிசு இன்றி –உனக்குத் தொண்டே ஆய் ஒழிந்தேன் –வேறு ஒன்றில் பற்று இல்லாமல்-உன் திருவடிகளில் மிக்க காதலன் ஆனேன் –அரைக் கணம் இழக்க மாட்டாதபடி அன்றோ என் ஆசை இருப்பது-
இங்கு -துரிசு -என்றது உலக விஷயங்களில் மனம் செல்லுதல் –
—————–
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே – நாலாயி:3879/4
பிரளய காலத்தில் பாதுகாத்து-அழிந்தவற்றை அடைய உண்டாக்கின சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஆயிற்று சொல்லிற்று –தொண்டீர்-அணி குருகூர் சடகோபன் மாறன்-அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி-அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா-அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல் சொன்ன இப்பத்தும் கொண்டு-அம்மாலை நண்ணித் தொழுது-அவனியுள் அலற்றி உய்ம்மின் -என்று கூட்டுக –இப்போது இது சொல்லிற்று-விரகப் பிரளயத்தின் நின்றும்-தம்மை எடுக்க வேண்டும் -என்கைக்காக-அப்படிப் பட்ட காதலை விளைக்க வல்லவனைக் கிட்டி-அவனைத் தொழுது- அவன் பக்கல் ஆசை உடையார்-பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு உய்ந்து போகப் பாருங்கோள் –அகாராம் ஈஸ்வர விசேஷணம் -அம்மாளை -ஆலோ ஆலோ என்று கதற வைத்த வியாமோஹன்-இப்பாசுரத்தை கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா – என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –
———-
உள்ளி நாளும் தொழுது எழு-மினோ தொண்டரே – 9-10-2-நாலாயி:3881/4
மதிள்கள் சூழ்ந்த திருக் கண்ணபுரம்-காவல் மிக்கு இருப்பதனால் அச்சம் இல்லாத தேசம்-என்று அதனை நினைத்து –சர்வேஸ்வரன் விஷயத்தில் பக்தியை உடையீராய் இருக்கும்-நாளும் தொழுது- பிறவிப் பெறும் கடலில் நின்றும் கரை ஏறும் கோள்- பருவம் அல்லாத காலத்தில் கடல் தீண்டல் ஆகாது என்னுமாறு போலே சர்வேஸ்வரன் விஷயத்தில் கால வரை யறை இல்லை-ஆதலால் நாளும் -தொழுது -என்கிறார் –
——–
தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் – 9-10-3-நாலாயி:3882/1
திருக் கண்ணபுரத்தில் நின்று அருளினவன்-உபய விபூதி நாதன் ஆயிற்று
உங்கள் துயர் கெட-அநந்ய பிரயோஜனராய்-வேறு ஒரு பயனையும் கருதாதவர்களாய்-ஏகமாய்- வணங்குங்கோள்-என்கிறார்-ஆசை சிறிது உடையீரான நீங்கள் -என்னுதல்
அன்றிக்கே –ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்வதற்கு இட்டு பிறந்த -நீங்கள் -என்னுதல்-துயர்களும் மேலே கூறிய இவர்களுக்கு வேறுபட்டு அன்றோ இருப்பன – சிற்றின்பத்தின் ஆசையால் உளதாய துயர் -என்னுதல்
சர்வேஸ்வரனை இறைஞ்சப் பெறாமையால் உளதாய துயர் -என்னுதல் –நீங்கள் அநந்ய பிரயோஜனராய் -என்னுதல்-அன்றிக்கே நீங்கள் எல்லாரும் ஒரே மிடறாய் -என்னுதல்
தொண்டர் -என்கையாலே எல்லாரும் ஒரே மிடறு ஆகலாம் அன்றோ –
—————-
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்மினே –10-1-4- நாலாயி:3894/4
தேவர்கள் முதலாயினார்கட்கு சுலபன் ஆனால் போல்- நமக்கு சுலபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினவன் –நம்முடைய எல்லா துக்கங்களும் கெடும்படியாக-அவனுடைய திருவடிகளை அடைவோம் –நம்மோடு ஒரு குலத்தாராய்-இருப்பார் அடங்க திரளுங்கோள்
—————-
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனிமுதல்வன் -10-1-5- நாலாயி:3895/1
பகவான் இடத்தில் ஆசை உடையீராய் இருப்பீர்-அனைவரும் வாருங்கோள் –தனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்-மூன்று விதக் காரணமும்-தானே யானவன்
தஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த-நீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர-நீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும்
சதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற-பிரமாண சித்தியைப் பற்றி -நம் -என்கிறார்
அன்றிக்கே தம் வடிவு அழகினையும்-தமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –
—————–
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின் –10-1-8- நாலாயி:3898/1
திரு மோகூரிலே நின்று அருளினவனான-ஆண் பிள்ளையான சக்கரவர்த்தி திருமகனை அடைய-நம்முடைய துக்கம் எல்லாம் போம் –என்கிறார்-துயர் கடிது கெடும்-விரும்பாது இருக்கச் செய்தே நம்முடைய துக்கங்கள் தம்மடையே-சடக்கென போகும் –வந்து அடைந்து-வந்து கிட்டி –வழித் துணை இல்லை -என்று வருந்துகிற நீங்கள்-அடைந்து வணங்குமின் –
———–
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக -10-4-9- நாலாயி:3932/3
கண்ட அளவிலே –சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாசுச -ஸ்ரீ கீதை -18-66-என்கிறபடியே-அவன் அடியாக வருகிறதே அன்றோ-இவர் கேவலர் அல்லர் -அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்- த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் – பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே – பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் – உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –அந்த சரம ஸ்லோகத்துக்கு இதுவும் கருத்து -என்கிறார்-வந்தேறியான விரோதி யானது-கர்மங்கள் – போகக் கடவதே–அன்றிக்கே –உபாயத்துக்கு பலத்தைக் கொடுக்கும் தன்மை உண்டே -என்னுதல்–இனி அடிமை நிலை நின்றதே இருக்குமே–அடிமை நிலை நின்றதாய் இருந்தால் -அவ் வடிமைக்கு தகுதியான தொண்டும்-நித்தியமாய் இருக்கும் என்பதும் அங்குப் போதருமே-என்று அங்கு போதரும் பொருளையே இங்கே வாய் விடுகிறார்-
அடிமை நித்தியமான பின்பு அதற்குத் தக்கதான தொண்டும்-நித்யமாகச் செல்லும் படியாக-மாம் ஏகம் சரணம் விரஜ -என்கிறபடியாலே-நான் அவன் திருவடிகளைக் காணப் பெற்றேன்-சரம ஸ்லோகம் வகையிலே கண்டேன்-சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே- கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் – மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை – ஸ்வயம் நிரபேஷம்-அவன் -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அடியேனும் பணி வகையே காணப் பெற்றேன் என்கிறார் –
————————
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே-10-6-1– நாலாயி:3946/1
காரணம் தான் இருக்கிறபடி – அடியார் தம் அடியார் ஆகையாலே -நமது விதி வகையே அருள் தருவான் அமைகின்றான் – திரி தந்தாகிலும் -தேவ பிரானுடை கரிய கோலம் திரு உரு காண்பன் –சர்வேஸ்வரன் செய்யும் மிக்க அருளுக்கு பாத்திரமாக இருப்பவர் சிலர் உளர் –அவர்கள் நமக்கு ஸ்வாமிகள்-அவர்கள் பக்கலிலே அவன் செய்த அருள்-நம்மளவும் வர வெள்ளம் கோத்தது காண் -என்கிறார்-சேஷத்வ காஷ்டையை உடைய – -நமக்கு நிரவதிக உபகாரம் பண்ணுவதற்காக உத்தியோகியா நின்றான் -அது தானும் நாம் நியமித்த படியே செய்வதாக இரா நின்றான்-நிரவதிக பிரசாதம் பெரும் -அடையாளம் -இதுவே நிரூபக தர்மம் -கைங்கர்யம் கிட்டே பெயர் –அதுக்கு அடியானை சேஷத்வ ஞானம் உள்ளார்க்கு அசாதாரண சேஷ பூதனான அடியேனுக்கு -திரு ஆழி ஆழ்வானைக் கை விடாமல் இருப்பது போலே-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே-தனது விஷயமாக -உத்தி யுக்தனாக தயாராகி -அது ஸ்வ தந்த்ரனாக தான் நினைத்த படி செய்யாமல் –அது நம் விதி வகையே- இதில் -புருஷார்த்தம் ஆகையால் -இப்படி தானே செய்ய வேண்டும் –
————–
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
இப்பத்தினை கற்க வல்லவர்கள்-செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே-வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை-ஆயிற்று ஆளுவது-இஷ்ட பிராப்தி – இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்-
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று-அங்கு உள்ளார் சொல்லுவது-
———-
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11- – நாலாயி:3989/2
அவர் வந்து எதிர் கொள்ள – வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள – அன்றிக்கே – இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் -ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ – இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது என்றவாறு –அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –அந்தமில் பேர் இன்பத்து -ஆழ்வாருக்கும் கொள்ளலாம்
இப்பதத்தினை கற்க வல்லார்- அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அவற்றிலே ஈடுபட்டவராய்- அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே-இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்- இங்கேயே முக்தர்களைப் போலே ஆவார்கள் –
———————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்