மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
நீல மணி போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனே
அதி ரமணீயமாய் -அத்யுஜ்வலமாய் -அதி ஸூகுமாரமாய் -அதி ஸூலபமாய்
இருந்துள்ள வடிவைக் கொண்டு முரட்டு அசுரர்கள் உடைய சகாசத்திலே செல்லுவதே –
க்வ யௌவ நோன் முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி
க்வ வஜ்ர கடி நா போக சரீரோ யம்ம ஹாஸூர -என்று -வெண்ணெய் அமுது செய்து வளர்த்த சிறு பிள்ளையை முரட்டு வடிவை உடைய மல்லரோடே ஒக்கப் போர விடுவதே –
ந ஸமம் யுத்தம் இத்யாஹூ -என்று கூப்பிட்டார்கள் இ றே ஸ்ரீ மதுரையில் பெண்கள்
சௌகுமார்யம் பய ஹேதுவாகிறது -சௌலப்யம் பய ஹேதுவோ -என்னில் –
அஸூர நிரசன அர்த்தமாக தேவதைகள் சரணாகதி பண்ணின மாதரத்தில்
ஸூலபனாய் அஸுரர்கள் அஸ்யத்திலே புகும் -என்று அத்தாலே பயப்படுகிறார்-
——————-
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்தித் பதித்து தலை பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் –-1-2-2- நாலாயி:24/1
திருவடிகளுக்கு செம்பஞ்சு சாத்துகிற போது ஒன்பது விரலுக்கும் நவ ரத்ன
வர்ணத்தையும் -மற்றொரு விரலுக்கு ஸ்வர்ண வர்ணத்தையும் – பரபாகம் தோற்ற மாறி மாறி சாத்துகையாலே –
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனுடைய -திருவடிகளில் பத்து விரலும் –
முத்து மாணிக்கம் வயிரம் முதலான நவ ரத்னங்களையும் நல்ல பொன்னையும் –
மாறி மாறி பதித்து சேர்த்தாப் போலேயாய் -மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனுடைய-திருவடிகளில் உள்ள-திரு விரல்களினுடைய லஷணத்தில்
ஒன்றும் குறை இன்றிக்கே எனக்கும் தன்னிலே சேர்ந்த படியை காணும் கோள்-நவ ரத்னத்துக்கும் உப லஷணம்
ரத்னத்து அளவு அன்றிக்கே தன் பிரேமத்தால் முத்தை முற்பட இட்டு மாணிக்கத்தை இடுகையாலே –
தத்திப் பதித்து -என்கிறது –தத்தி-என்றது -தத்தவாய் -மாறப் பதித்து என்றபடி
வணங்கி -என்றது வணங்க என்றால் போலே
தலைப் பெய்தாற் போலே என்கையாலே
நீளமுடைத்தான பத்து நீல ரத்னத்தின் அக்ரத்திலே
நவ ரத்ன வர்ணத்தையும்
பொன்னின் வர்ணத்தையும் சேர்த்தால் போல் இருந்தது என்கைஓர் ஆபரணத்திலே நவரத்னத்தையும் முத்தையும் அழுத்திச் சேர அனுபவிப்பாரைப் போலே அனுபவித்து
இவை உபமானம் போராமையாலே
மணி வண்ணன் பாதங்கள் பத்து விரலும் ஒத்திட்டு இருந்தவா காணீரே -என்கிறார்
——————–
குருமா மணி பூண் குலாவி திகழும் – நாலாயி:32/3
இப்பிள்ளை யுடைய ஸ்ரீ கௌஸ்துபம் போலே விளங்கா நின்ற நீல ரத்னம் -என்னுதல்-ஏதேனும் ஒரு ரத்னம் ஆகிலும் திரு மேனியின் பிரபையாலே நீலம் ஆய்த்து என்னுதல் –
ஏவம் பிரகாரமான திரு மார்பைக் காணீர் -என்கிறார்-கௌஸ்துப ஆபரணம் -ஸ்ரேஷ்டமாய் ஸ்லாக்கியமான ஆபரணம் –(கௌஸ்துபம் -நீல நாயகம் -ஜீவாத்மாவுக்கு பிரதிநிதி
அஸ்திர பூஷண அதிகாரம் –
—————
உருவு கரிய ஒளி மணி_வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே – நாலாயி:39/3,4
ரூபத்தால் கரியதாய் –மிக்க பிரகாசத்தை யுடைய நீல ரத்னம் போலே இருக்கிற திரு மேனியை யுடைய- உஜ்ஜ்வலமாய் இருந்துள்ள மணி போன்ற வடிவை உடையவன் –
மதனன் கருப்பு சிலை போல் இருக்கிற திரு புருவங்களின் அழகை காணுங்கோள்-
—————
உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ – –1-3-2–நாலாயி:45/1
உடையிலே ஆர்ந்த பொன் மணி முதலான ரத்னங்களோடேஅலங்க்ருதமாகவும்
மிக்க பிரகாசத்தையும் யுடைத்தான மாதளம் பூ முதலான பூத் தொழில்களையும் சேர்த்த அரை வடத்தையும்
————-
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ – –1-3-5–நாலாயி:48/4
இவன் த்ரவ்ய சாத்யன் அல்லன் என்று அறிந்து தொழுத பின்பு திரு மேனியில் யுண்டான பிரகாசம் சொல்லுகிறது – நீல ரத்னம் போன்ற நிறத்தை யுடையவன் –ஓர் ஆபரணமும் வேண்டாதபடி பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை உடையவனே -தாலேலோ
——–
உச்சி மணிச்சுட்டி ஒண் தாள் நிரை பொன் பூ – 1-3-8-நாலாயி:51/2
திருமுடியிலே சாத்துகைக்கு ரத்ன அலங்க்ருதமான சுட்டியும் -ஒள்ளிய தாளை உடைத்தாய் –
திரு முடியிலே ஒழுங்கு பட சாத்துகைக்கு ஈடான பொற் பூவும் –
————
உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் –1-5-1- நாலாயி:64/1
கரண களேபர விதுரராய்-போக மோஷ சூன்யராய் கிடக்கிற ஆத்மாக்கள் –
உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக லோகத்தை சிருஷ்டித்து –பின்பு அவாந்தர பிரளயம் வர –
அதில் அழியாதபடி உள்ளே வைத்து -நோக்கின அழகிய திரு வயிற்றை உடையவனே-அசந்நேவ-என்று மூல பிரக்ருதியிலே கிடந்த ஆத்மாக்களை போக மோஷ யோக்யராக சிருஷ்டிக்க ஸ்ருஷ்யரான அளவிலே மீண்டும் அபராதங்களிலே ப்ரவர்த்திக்கையாலே
சம்ஹரிக்க பிராப்தமாய் இருக்கச் செய்தேயும் சம்ஹரியாமல் அழகிய திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கையாலே -உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா-என்கிறார் –
———-
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் -1-5-10- நாலாயி:73/2
திருவரையில் கிண்கிணியும்-தங்கிய பொன் திரு வரை நாணும் கோவை யிட்ட தாளை யுடைத்தாய் நன்றான மாதளையின் பூவோடு கோக்கப் பட்ட பொன் மணிகளும்
—————-
ஆணிப் பொன்னால் செய்த ஆய் பொன் உடை மணி பேணி பவள வாய் முத்து இலங்க பண்டு -–1-6-1- நாலாயி:75/2,3
பழிப்பு அற்று – அழகியதாய் இருந்துள்ள –அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் –
மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் –
ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல்-நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் –
கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது -(ஆணிப் பொன் என்பதால் -அழகு -மேல் பகுதி மணியின் நாக்கு மட்டும் மாணிக்கம் -சப்திக்குமே-நாக மாணிக்கம் என்று இத்தையே சொல்லுவார் )
——–
பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன-என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல்–நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன் – நாலாயி:77
என்னுடையவன் என்று அபிமாநிக்கலாம் படி -எனக்கு பவ்யனாய் – நீல ரத்னம் போன்ற –
வடிவை உடையவனாய் இருக்கிறவனே -மாணிக்கம், மரகதம், புஷ்ய ராகம், வைரம், நீலம், கோமேதகம்,வைடூர்யம் என்கிற பல வகைப் பட்ட ரத்னங்களும் –இனிய பவளமும் -பகை தொடையாக அழுத்தி –வாசா மனோகரமான அழகை உடைத்தாய் கொண்டு விளங்கா நின்ற பொன் தோட்டின் அழகுக்கு மேலே–உன்னுடைய அழகியதான திருப் பவளத்திலே திரு முத்துக்கள் பிரகாசிக்க –
———-
தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப – நாலாயி:86 /1
கம்பத்தை முறித்து -காலில் துடரை இழுத்து கொண்டு -நடக்கையாலே – காலில் கிடந்த சங்கிலித் துடரானது -சலார் பிலார் என்று சப்திக்க – துடர் என்று விலங்கு–ஆனை விலங்கு சங்கிலியாய் இறே இருப்பது -சலார் பிலார் என்கிறது சப்த அநு காரம் –முதுகில் கட்டின பொன் கயிற்றால் தூங்குகிற மணியானது த்வநிக்க-பொன் மணி -என்கிற இடத்தில் –
பொன் என்கிற இத்தால் -பொற் கயிற்றை சொல்லுகிறது –உடன் கூடி கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க –சேவடிக் கிண் கிணி-என்றபடி –திருவடிகளில் சாத்தின சதங்கைகள் யானவை – தன்னிலே கூடி சப்திக்க –அன்றிக்கே –திருவரையில் சாத்தின சதங்கை வடமானது – நழுவி விழுந்து – திருவடிகளோடு சேர்ந்து – இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம் –
———-
உடன் கூடி கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க -நாலாயி:86/3
திருவரையில் கட்டின மணியானது பறை போல் சப்திக்க –
———-
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:87/4
தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –
தளர் நடை நடவானோ –
———
கடும் சே கழுத்தின் மணி குரல் போல் உடை மணி கணகணென – நாலாயி:92/3
கடிதான சேவின் கழுத்தில் -கட்டின மணி உடைய த்வனி போலே -திருவரையில் கட்டின மணியானது -கண கண என்று சப்திக்கும்படி –
———-
மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/3
லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –
———–
மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/4
ஆச்சர்யமான குணங்களை உடையவனாய் – நீல ரத்னம் போன்ற வடிவை உடையவன் ஆனவனுடைய திருவடிகளிலே ஸ்வ சேஷத்வ அநு ரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணும் – சத் புத்ரர்களைப் பெறுவர்-மக்கள் -என்று அவி விசேஷமாக சொல்லுகையாலே –வித்தையாலும் -(சிஷ்யர் களாகவும் ) ஜன்மத்தாலும் வரும் – உபய வித புத்ரர்களையும் சொல்லுகிறது –
————–
வேந்தர்கள் உட்க விசயன் மணி திண் தேர் –1-9 4- நாலாயி:111/3
அர்ஜுனனுடைய அழகியதாய் – திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் –
என்னைப் புறம் புல்குவான்
————
வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:154/4
பேய்ச்சி உடைய வஞ்சனையில் அகப்படாதே -அவளை நிரசித்து – உன்னை நோக்கித் தருகையாலே -நன்றான புகழை உடையவனாய் – அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகம் ஆகும்படி
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனே –மாணிக்கத்துக்கு மாசு ஏறினால் போல் -உன் திருமேனியில் வந்தேறியான புழுதி முதலானவை போம் படி திருமஞ்சனம் செய்ய வர வேணும் –
———–
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:160/4
வடி வழகுக்கு ஒன்றே உபமானம் ஆவது ஓன்று இலாமையாலே அங்கும் இங்கும் கதிர் பொருக்குகிறாள்-மாணிக்கம் போலேயும் -மரகதம் போலேயும் இருக்கிற வடிவு அழகை உடையவனே -என்கை-
——–
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:163/4
பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை உடையவன்-காயாம்பூ போலே போது செய்யாதே ஒரு படி பட்டு இருக்கும் நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் என்கை–
—————
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனாய் – ஸ்வா தந்த்ர்யத்தில் பூர்ணனானவனுக்கு ஓர் கோல் கொண்டு வா –
————
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ – நாலாயி:179/2
ரத்நாதிகளாலே அலங்க்ருதமான தலைகளை ஒரொன்றாக அறுத்த இடத்தில் –
அவன் கொண்ட வர பலத்தாலே மீளவும் மீளவும் கிளருகையாலே –
பத்தும் சேர ஒரு காலே அற்று விழும்படியாக
———–
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:197/3
மேகங்கள் தவளும்படியான உயர்த்தியை உடைத்தாய் -மணி மயமான மாடங்களையும் –
அரணாக போம்படியான மதிளையும் உடைத்தான – திரு வெள்ளறையிலே -நிலையார நின்றவனே-
———–
நன் மணி மேகலை நங்கைமாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதி யாடித் திரியாமே கன் மணி நின்றதிர் கானத ரிடைக் கன்றின் பின்னே
என் மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/1
நல்ல ரத்னங்களாலே சேர்க்க மேகலையை உடையராய் – ஜாதி உசிதமான குண பூர்த்தியை உடையரான -பெண்களோடே – ஒரு நாள் இரண்டு நாள் அன்றிக்கே
நாள் தோறும் –அழகிய நீல ரத்னம் போலே இருக்கிற திருமேனி -அவர்களோடு இட்டீடு கொள்ளுகையாலே புழுதி யாடி திரியாத படியாக -மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியக் காண்கை போலே -காணும் – இவள் தான் உகந்து இருப்பது –கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் -என்கிறபடியே – மலை மேல் காடுகளில் -கன்றுகளை மேய்க்கையாலே -ஜாதி உசிதமாக இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும் –
அவை தான் கூப்பிடுகிற த்வநியாலும் –அங்கு உண்டான மலையானது -மணி த்வனி போலே நின்று பிரதி த்வனி எழும்படியான காட்டு வழியிலே ஏதேனும் ஒன்றைக் கண்டவாறே வெருண்டோடுகிற கன்றுகளின் பின்னே எனக்கு அனுபாவ்யமான நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனைப் போக விட்டேன் – எல்லே பாவமே –
————–
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய – நாலாயி:243/1,2
இப்போது செய்கை அன்றிகே -எல்லா காலத்திலும் எனக்கு ரசாவ்ஹனானவனை-எனுக்கு அனுபாவ்யமான நீல ரத்னம் போன்ற வடிவை உடையவனை-
————–
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ– நாலாயி:269/2
நீல ரத்னம் போன்ற நிறத்தை உடையதாய் நெடிதாய் இருக்கிற திருத் தோளை அதுக்கு காம்பாகக் கொடுத்து –பஞ்ச லஷம் குடியில் உள்ளார்க்கும் பசுக்களுக்கும் மழையால் நலிவு வராத படியாகவும் –பசுக்களுக்கு சுவடு படாத புல்லும் தண்ணீரும் உண்டாம் படியாகவும் தலை கீழாக கவிழ்த்த மலை-சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய (திருவாய்) -என்கிறபடியே -அவனை சூழ -எல்லா பார்ச்வத்திலும் இடைவிடாமல் தங்குகிற தெளிந்த சுனை நீர் அருவிகள் ஆனவை –விளங்கா நின்ற அழகிய முத்து வடம் போலே தனித் தனியே பிரகாசிக்க-அது தான் அவனுக்கு ஒரு முத்துச் சட்டை என்று தோற்றும்படியாக நின்று காட்சி கொடா நிற்கும்-
———–
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2
அழகு மிக்கு இருந்துள்ள திரு உகிர்கள் ஆனவை நொந்தனவும் இல்லை-நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை உடையவன் எடுத்த மலையும் –அத்தை இவன் எடுத்து நின்ற நிலையும் – ஒரு இந்திர ஜாலம் –
——–
மாயன் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே -– 3-7 -2- – நாலாயி:287/4
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களையும் நீல ரத்னம் போன்ற வடிவையும் உடையவன் விஷயத்திலே-இப்படி செம்மை சொன்ன இவள் –அதுக்கு சேராதபடி –அவன் குண சேஷ்டிதங்களைச் சொல்லுவது-வடிவு அழகைச் சொல்லுவதாய் கொண்டு பிச்சேறா நின்றாள்-
———-
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – – 3-7-8- –-நாலாயி:293/4
ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன்
விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-
———-
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளரே – நாலாயி:306/4
சம்ஸ்க்ருதம் சப்தம் போல் அன்றிக்கே -இருண்டு பொருள் தெரியாமை -அன்றிக்கே
பெண்ணுக்கும் பேதைக்கும் அறியலாம்படி ஸ்வார்த்த பிரகசகமாய் தூய்மையை உடைத்தான திராவிட பாஷையாய் – ஓர் ஒன்றே ஓர் ஆத்மாவுக்கு உஜ்ஜீவனமாய் போரும் என்னும்படி இருக்கிற பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக அனுசந்திக்க வல்லவர்கள்-பழிப்பு அற்ற நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவனுக்கு சேஷ பூதராய் அடிமை செய்யப் பெறுவார்-
———
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
இப்படி இருக்கிறவனுடைய-பாம்பால் ஆப்புண்டு-(பெரிய திருவந்தாதி ) என்கிறபடியே
காளியன் தன் உடலாலே நெருங்க சுற்றிக் கட்டின அளவிலும் அதில் ஈடுபடாதே உதறி பொகட்டு -வாலை பிடித்து தூக்கி மேல் நின்று ஆடின தோள் வலியையும் வீரப் பாட்டையும் பாடிப் பற-காளியனுக்கு பிராணனைக் கொடுத்து துரத்தி ஒட்டி விட்டு
விஜ ஜலமான பொய்கையை அமர்த ஜலமாம் படி கடாஷித்து பசுகளும் இடையரும் முன்பு போலே தண்ணீர் குடிக்கும்படி பண்ணுகையாலே – பழிப்பு அற்ற நீல ரத்னம் போலே திரு மேனியின் அழகு விளங்கும்படி நின்றவனை பாடிப் பற என்று பிரதி கோடி யானவளை பார்த்து நியமிக்கிறாள்-
——–
செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது – நாலாயி:318/2
நெருங்கின ரத்னங்களோடே கூடின அபிஷேகத்தை யுடைய ஜனக ராஜன் –
தேவரீருக்கு சுல்கமாக விட்டு வில்லை முறித்து-
———-
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
விடப்பால் அமுதால் அமுது செய்திட்ட (திருவாய் -1-5 )-என்கிறபடியே அவளுடைய விஷப் பாலை அம்ர்தமாக அமுது செய்து – அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக் கொடுக்கையாலே – நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான திருமேனியை உடையவனாய் இருந்தவனை
———–
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/2
தம்தாம் வஞ்சனைகளால் தாம் தாம் முடியும்படியாக திரு ஆய்ப்பாடியிலே வளர்ந்த-காளியனுக்கு வஞ்சனமும் மடிவும்-ஆத்மா அபஹாரமும் அபிமான பங்கமுமாகக் கடவது-மணி வண்ணன் மலை-இப்படி விரோதிகள் தேய -வளர்ந்தவன் – நீல ரத்னம் போன்ற வடிவோடே நித்ய வாசம் பண்ணுகிற மலை
————-
துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர் – நாலாயி:361/3
பிரளயத்தில் அழியாதபடி சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைக்கிற இடத்தில்
ஓர் ஒன்றாக அன்றிக்கே -திரளப் பிடித்து அமுது செய்த-தூ மணி வண்ணன் தன்னை
இவற்றை வயிற்றில் வைத்து நோக்கின பின்பு திரு மேனியில் பிறந்த புகரை சொல்லுகிறது உண்டார் மேனி கண்டால் தெரியும் இறே -பழிப்பு அற்ற நீல மணி போலே இருக்கிற வடிவை உடையவன் தன்னை-
———–
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் – -4-4-3 –நாலாயி:362/1
நல்ல நிறத்தை உடைத்தான மாணிக்கங்களையும் அப்படியே இருந்துள்ள மரகதங்களையும்
பக்கத் தொடையாக கொண்டு ஒழுங்கு பட அழுத்தி
———
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:392/2
எண் திசையும் பேர்த்தகர நான்குடையான் -என்கிறபடியே அதி விஸ்த்ரமாய் கொண்டு கிளர்ந்து –அவர்கள் இருப்பிடங்களைச் சென்று கிட்டின –நீல ரத்னத்தின் நிறத்தை உடைத்தான வடிவை உடையவனாய்-ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப -என்கிறபடியே –கீழ் மிதித்த திருவடிகளாலே பூமி முதலாக கீழ் உள்ள லோகங்கள் எல்லாவற்றையும்-அப்படி மேல் எடுத்த திருவடியால் வூர்த்த்வ லோகங்கள் எல்லாவற்றையும்-பெறாப் பேறு பெற்றால் போலே பதறி அளந்து கொண்ட வ்யாமோகத்தை உடையனான-இவ் வ்ருத்தாந்த்ததாலே -எல்லாருடைய அந்ய சேஷத்வ ஸ்வா தந்த்ரியங்களைப் போக்கி எல்லா ஜகத்துக்கும் தானே சேஷி என்னும் இடம் தோற்றா நின்ற சர்வாதிகனான- புருஷோத்தமனுக்கு ப்ராப்யமான தேசம்
——–
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:393/4
ஒளியை உடைத்தாய் ஸ்ரேஷ்டமாய் இருக்கிற ரத்னங்களைக் கொழித்து கொண்டு
இழிகிற புனலை உடைத்தான கங்கையினுடைய கரையிலே கண்டம் என்னும் கடி நகரே —
———-
எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் -சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – 4 9-7 –-நாலாயி:418/3-4
அதி பிரகாசமாய் இருப்பதொரு நீல ரத்ன பர்வதத்தின் மேலே-பாலாதித்யர்கள் உதித்தால் போல்-ஸ்ரீ திரு அனந்த ஆழ்வான் இடத்தில் அழகிய பணங்களின் மேல் உண்டான
பெரிய ரத்னங்கள் ஆனவை மிகவும் பிரகாசியா நிற்கும்-இத்தால்
ஸ்ரீ திரு அரவணையின் மேலே -பச்சை மா மலை போலே இருக்கும் திரு மேனியோடு
பள்ளி கொண்டு அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவிப்பார்க்கு
அத் திரு அனந்த ஆழ்வானுடைய ஒளி தானே பிரகாசமாய் இருக்கும் படி சொல்லுகிறது –
——–
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே -4-10 -10– நாலாயி:432/4
பழிப்பு அற்ற நீல மணி போலே இருக்கிற வடிவு அழகை உடையவனுக்கு –
மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்று சர்வ காலமும் மங்களா சாசனம்
பண்ணுபவர்கள் தாங்கள் ஆவார்-இங்கு இருந்த நாளும் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருந்து – சரீர அவசானத்தில் -ஸ்ரீ பரம பதத்தில் போய் -நித்ய ஸூரிகள் திரளிலே புகுந்து – சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்கிறபடியே அங்கே எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுபவித்து — கால தத்வம் உள்ளதனையும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருக்கப் பெறுவர் –
————-
மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/3
மருந்தாய் இருக்கை அன்றிக்கே – மருந்து அறிவதும் செய்யும் –இது தான் –
மலை மேல் மருந்துமாய் –ஏக மூலிகையுமாய் –ஸக்ருத் சேவ்யுமாய்- பலியாத மருந்து பல காலும் சேவித்தாலும் பலியாது இறே-இவ் ஒவ்ஷதம் தான் வேறு ஒரு ஒவ்ஷதம் பொறாத அளவு அன்றிக்கே – மீண்டு தன்னையும் பொறாது-மருத்துவன் -என்று ஆசார்யன்
ஆய் – -என்று ஏறிட்டு கொண்டான் என்றது ஆகையால் இறே- பீதக வாடைப் பிரானார் வந்து இவரை -இராப்பகல் ஒதுவித்தது –மா மணி வண்ணா-மருந்து இருக்கிறபடி – மணி மந்திர ஒவ்ஷதம் –என்னக் கடவது இறே-மணியும் – மந்த்ரமும் –ஒவ்ஷதமும் -நாட்டுக்கு வெவ்வேற-இங்கு எல்லாம் ஒரு தலைத்த விஷயம்-அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரம் என்று
நெஞ்சுக்கு இனிய மந்த்ரமும்-மறவாத மந்த்ரமும் – வாழும் மந்திரமும் -இது இறே
அச்சுதன் அமலன் (3-4 )இறே-நச்சு மா மருந்தம் -(3-4 )
நழுவ விடாததுமாய் – ஹேயத்தைக் கழிக்குமதாய் – ஆசைப்படும் மருந்து இறே –
———-
மாமான் மகளே மணி கதவம் தாள் திறவாய் – நாலாயி:482/3
நீங்களே திறந்து கொண்டு புகுரும் கோள் என்ன – மாணிக்கங்களின் ஒளியினாலே
தாள் தெரிகிறது இல்லை-நீயே திறவாய் -என்கிறார்கள் –அவர்கள் அழையா நிற்க நீ பேசாதே கிடக்கிறது என்-என்று தாயார் கேட்க-புறம்பு நின்றவர்கள் அது கேட்டவாறே-
மாமீர் அவளை எழுப்பீரோ -என்கிறார்கள் –மணி மாட மாளிகை யாகையாலும் –
மணிக் கதவாகையாலும்- சுவருக்கும் கதவுக்கு வாசி தெரிகிறது இல்லை –
நீயே திறவாய் என்கிறார்கள்-இவர்கள் தான் திறந்து நின்றாலும் சிலர் புகுர இடவல்லது புகுரார்கள் காணும்-துரியோதனன் நீருக்கும் ஸ்படிக மண்டபத்துக்கு வாசி அறியாதே தடுமாற திரௌபதி சிரித்தால் போலே மைத்துனமை கொண்டாடி சிரிக்க ஒண்ணாது –மணி மாடத்தினுடைய மணிக் கதைவையும் மணித் தாள் திறவாய் –அதாவது த்வத் அனுபவ விரோதியான தேஹாத்மாக்கள் இரண்டிலும் உண்டான மமகாரத்தைப்
தவிர்ப்பாய் -என்றபடி –அன்றிக்கே த்வத் அனுபவ விரோதியான பகவத் சௌந்தர்யத்திலும்
பகவத் பக்தியிலும் மம காரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள்
———-
வாயில் காப்பானே மணி கதவம் தாள் திறவாய்-ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை-மாயன் மணி_வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் – நாலாயி:489/3
மணிக் கதவம்-பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்னுமா போலே புகுவாரை தன் அழகாலே கால் கட்டும் கதவினுடைய தாள் திறவாய்-திரு வாசலுக்குள் புகுவாரை கால் கட்டும் இது
அவன் புக்காரை புறப்படாதபடி கால் கட்டும் தன் அழகாலே –பெண்கள் மாளிகை எல்லாம் மணிக் காதவமாம் படி சாதரம்யம் கொடுக்கிற கிருஷ்ணன் மாளிகை வாசல் மணிக் கதவமாகச் சொல்ல வேணுமோ-ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே-ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்- அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும்-தவிர்த்து அருளாய்-மணி வண்ணன் – தாழ நில்லா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு – பூ அலர்ந்தாப் போலே வார்த்தை சொல்லுகிற போதை ஒஷ்ட ஸ்புரணம் -பிரகாசம் -என்னவுமாம்- வாக்மீ ஸ்ரீ மான் என்னுமா போலே
————–
மாலே மணி_வண்ணா மார்கழி நீர் ஆடுவான் – நாலாயி:499/1
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும் முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந் நீர்மை இன்றிக்கே காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவு -என்னவுமாம் –
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே-தாமரையில் இருக்கிறவள் அத்தை விட்டு வருவது இவ் வடிவைக் கண்டு இறே –
பனி மலராள் வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன் (பெரிய திருமொழி-2-2) இப்படி வடிவு படைத்தாரும் பிறரத்தை ஆசைப் படுவார்களோ-பிச்சர் கையில் மாணிக்கமாய் -உன்னுடம்பு உன்னதாமோ (ந தே ரூபம் –பக்தாநாம் அன்றோ )
மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை என்று நம்மை ஆச்சி பல காலம் சொல்லும் –பிச்சு வடிவில் தெரிந்து இருக்கும் என்றுமாம்-பெண்கள் பிச்சுக்கு நிதானம்(கண்ணன் என்னும் கரும் தெய்வம் அன்றோ )
———-
மருப்பினை ஒசித்து புள் வாய் பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – 1-10-நாலாயி:513/2
குவலயா பீடமானது பிளிறி எழும்படியாக அதன் கொம்பை அநாயாசேன முறித்து
பகாசூரனை வாயைக் கிழித்து-வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனோடே என்னைச் சேர்த்து விடு -என்று
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –
அநிஷ்ட நிவர்த்தகன் -ப்ராபகன் -மணி வண்ணன் -பிராப்யன்
—————
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
இத் தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –-தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ-மாதவன் -மணி வண்ணன் – தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ-இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம்
த்வம் பிரகாசசே -ஜிதந்தே -1-5-இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –
——————
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என் -5-6- நாலாயி:550/3
அவன் விபூதி அழியா நிற்க – நோக்காதே நீ கிடந்தது உறங்குமாய் அன்றோ உன் செருக்கு இருக்கிறது-நான் இப்படி நோவு படா நிற்க படுக்கையிலே பொருந்தும் படியாய் இருக்கிறதன்றோ உன் தசை
—-
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – 14-5-நாலாயி:641/1
ஸ்ரீ தேவியை தனக்கு என உடையவன் ஆகையால் பரம ரசிகன் –
தன்னுடைய ரசிகத்வம் -எனக்கு முடிந்து ஆளலாம் படி பவ்யனாய் இருக்கிறவனை –
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – —கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே-–1-1-நாலாயி:647/1-4
இருள் சிதறிப் போம் படி ஜ்யோதிஸ்சை உடைய மணிகள் விழுக்கிற நெற்றியையும்-இனமான துத்தி -அதாவது இரண்டாய்ச் சேர்ந்த திருவடி நிலை என்று சொல்லுகிறவற்றை உடைத்தான பணங்கள் ஆயிரத்தையும் பூரணமாக யுடையனாய்-அழகு மிக்கு ஒக்கத்தை உடைத்தாய் மறுவற்ற வெள்ளப் படுக்கை யாகிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானை மேவி-வைகுண்டேது பரே லோகே –என்று சொல்லுமது அங்கே காணும் இவருக்கு திருவரங்கம் ஆகிற மஹா நகரத்திலே-தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட-ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை-கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்-கலியர் -சோற்றைக் கண்டு கொண்டு -என்னுமா போலே-பட்டினி விட்ட என் கண்கள்-அங்கே கண்டு -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் களிப்பை இங்கே கண்டு களிப்பது என்றோ –
———-
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் –மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே -1-5-நாலாயி:651/3
மணி மயமான மாடங்களையும் மிக்க ஐஸ்வர்யத்தையும் உடைய-மிக்க அரணான பெரிய மதிளை உடைய பெரிய கோயிலிலே திரு வநந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும்-அழகிய வடிவை உடைய சர்வேஸ்வரனைக் கண்டு கொண்டு-நான் பூ முடி சூடின தலை என்றோ அவன் திருவடிகளில் வணங்குவது –
————
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் -7-5- நாலாயி:712/1
திரு நெற்றியிலே கூடப் பிறந்தால் போலே இருக்கும் திருச் சுட்டியானது அசையும் படி-அழகிய வாயில் முத்தம் –
———-
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே —கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ- நாலாயி:719/1
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய –
ஸ்ரீ கௌசலையாருடைய அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே-அழிவில்லாத மதிளாலே சூழ்ந்த ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே எனக்கு திருஷ்டிக்கு நிர்வாஹகனாய் நிற்கிறவனே-தேவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே எனக்கு அமிர்தமானவனே- தேவர்களுடைய அமிர்தம் உப்புச் சாறு இறே – அது அன்று இறே இவருடைய அமிர்தம் இருந்த படி –
———-
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ-கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கரு மணியே எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ-காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ-கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ-காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்தி மனே தாலேலோ-கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ-களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ-காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே ஏ வரி வெம் சிலை வலவா இராகவனே தாலேலோ-
கண்டவர்கள் நெஞ்சுகளை தாங்களும் இசைந்து கொடுக்கும் படி
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவனே-அவதாரத்தில் பிற்பாடரான எட்டு திக்கிலும் உள்ளாறும் வந்து வாழும் படி நின்றவனே –காதசித்க சம்பந்தத்தால் வரும் ஸூ த்தி யோகம் இறே கங்கைக்கு உள்ளது சம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஸூத்தி மிக்கு இருக்கிற ஸ்ரீ திருப் பொய்கையை உடைய ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே-ராஜ வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே-ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –கற்பது ஒரு தேசத்திலே இருந்து ஒரு காலத்திலேயாய்-பிராப்ய வஸ்துவைக் கிட்டி
அனுபவிப்பது ஒரு தேச விசேஷத்திலேயாகாமே
பிராப்ய வஸ்து தெற்கு திக்கிலே காணலாம் படி ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நின்றவனே-பெற்ற தாயான நான் உம்மைப் பிரியில் தரியேன் என்று ஸ்ரீ கௌசலையார் பின் தொடரச் செய்தேயும் மாற்றுத் தாயான கைகேசி சொல்லு மாறாதே வனத்தே போந்தவனே –காற்றாலே உள்ளுக் கிடக்கிற ரத்னங்களை கரையிலே ஏறிடும் என்னுதல்
கால் வாய்களில் மணிகளைக் கொடு வந்து கரையிலே ஏறிடும் என்னுதல்-வாலியைக் கொன்று ஊரில் தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே –(ஒரு வாலியைக் கொன்று ஒரு வாலி தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே என்று சாடூக்தி அருளிச் செய்கிறார் )சகல வித்யா ஸ்தலங்களும் கை வந்து இருக்குமவர்கள் உன்னை அனுபவிக்கும் ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே-ஸ்ரீ சார்ங்கம் கை வைத்து இருக்குமவனே – அது தான் மிகை என்னும் படியான வீரப் பாட்டை உடையவனே –களையாகப் பறித்து கரையிலே பொகட்ட செங்கழு நீர்கள் பொகட்ட இடங்களிலே கிடந்தது தன்னிலத்திலே அலருமா போலே செவ்வி பெற்று அலரும் ஸ்ரீ திருக்கண்ண புரம்-தம்பிமார்க்கு உறுப்பாகாத போது-என் பிராண்ன்களும் எனக்கு வேண்டா என்னுமவர் இறே-ஒருவர் ஏற்றிப் பாய்ச்ச வேண்டாத படி தானே வந்து எங்கும் பரக்கும் காவேரியை யுடைய
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே-ஏவிலே மூட்டக் கடவதாய் தர்ச நீயமாய் பிடித்த பிடியிலே சத்ருக்கள் மண் உண்ணும் படியான ஸ்ரீ சார்ங்கத்தை உன் கருத்திலே நடத்த வல்லவனே –
———-
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–
அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண-கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலேதன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி -10-9-
விலஷணனான பிராமணனுடைய புத்திரன் பிராணனை மீட்டு –
ஸ்ரீ அஹஸ்த்ய பகவான் கொடுத்த பெரு விலையனான ஹாரத்தையும் சாத்தி யருளி
ஸ்ரீ திரு வயோத்யையிலே புகுந்து லவணா ஸூரனை ஸ்ரீ சத்ருகன ஆழ்வானை விடுவித்து வீர ஸ்வர்க்கத்திலே குடியேற்றுவித்து
இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை-10-10-
வீர ஸ்ரீ விளங்குகிற திருத் தோள்கள் நாலோடும் கூட -அங்குள்ளார் உகக்கும் படி எழுந்து அருளி-ஸ்ரீ பரம பதத்திலே போய்ப் புக்கு தன் மேன்மை எல்லாம் தோற்றும்படியான ஸ்ரீ ஈஸ்வரனை-
——–
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே -21- நாலாயி:892/4
அழகு மிக்கு இருந்ததாய் செம்பொன்னான அருவரை உண்டு -மகா மேரு
அத்தோடு ஒத்து இருந்துள்ள சம்சாரத்துக்கு ஆபரணமாய் தர்தச நீயமாய்
ஸ்திரமாய் சர்வ ஆதாரமாய் இருக்கை –அம் மேருவை புடை படத் துளைத்து
அது விம்மும்படி ஒரு நீல ரத்னத்தை அழுத்தினால் போல் ஆய்த்து கோயில் ஆழ்வாருக்கு உள்ளே பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –கண் வளர்ந்து அருளுகிற அழகை கண்டு நெஞ்சாலே பரிச்சேதிக்கலாம் படி இருந்ததோ-ஸ்வரூபத்தை பரிச்சேதிக்கிலும்
தத் ஆஸ்ரயமான கல்யாண குணங்களை பரிச்சேதிக்கிலும் வடிவு அழகை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை –
————
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் – நாலாயி:920/1
மேடு -கொம்புகள் வளர்ந்து -இளமை பிராயம்–
மேடு -கொம்பு வளர ஆரம்பம் -நஞ்சீயர் -மேடாக வளர்ந்தன என்றுமாம்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிகிறார்-கீர்த்தியில் பெருத்து மூர்த்தியில் சிரித்து எம்பார் போல்வார்-
பொழுது போக்க குழல் வூதுகிரார்கள் -கட்டுப்படாத மாடுகள் இல்லையே இவைகள் -ஆகவே ஊதுவது பொழுது போக்குக்காக
விரஜை-ரிஷப ஒலி எங்கும் ஒலித்ததாம்-ரிஷபங்கள் கொஞ்சமாக இருக்கும் குறுக்க வர அவை விலகும் — இவை நகராமல் மேய்ந்து இருப்பதால் இவைகள் மணிகள் த்வனிக்காதே – ஆகவே விடை மணி குரல் -பசுக்களின் நடுவில் ரிஷபங்கள்
விரஜா பூமியில் இந்த ஓசை எங்கும் பரந்த –பாகவதம்-இதை கொண்டே-
கீசு கீசு-மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் -முப்போத்தும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்- காசும் பிறப்பும் கல கல கை பேர்த்து ஒலி-நிரஸ்தய–அமங்களம் எல்லா இடங்களிலும் -போக்கி -இந்த த்வனி-ஸ்ரீ வைகுண்டம் வர போனதாம் இந்த ஒலி –
———–
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1
பன்னிரண்டு ஆதித்யர்களும்-விலக்ஷணமாய்-பெரிதான-தேரோடுகூட
———-
கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் – நாலாயி:935/3
அழகியதாய் பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களாலே செய்யப்பட ஆரமும்-ஸ்ரீ கௌஸ்துபம் போலே மஹார்க்கமாய்ப் பெரு விலையனான மாணிக்கங்களாலே அழுத்தப் பட்டு திரு மேனிக்கு அலங்காரமான ஹாரத்தையும்-நாய்ச்சியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற திரு மார்வுக்கு ஒரு ரத்ன ப்ரகாரம் போலே -அபி ரூபமாய் -அதி மஹத்தாய் -மஹார்க்க ரத்னமான திருவாரமும் –
————
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி – 1-1-6–நாலாயி:953/3
நித்ய வசந்தமான சோலையையும் மா மதிளையும் உடைத்தான தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது–மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –-எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-
———–
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் – நாலாயி:960/3
பரிமளத்தை உடைத்தான வேங்கையினுடைய நறு மலர் அமளியும் உண்டு-செவ்வியிலே உதிர்ந்த பூக்களால் உண்டான படுக்கை–அமளி-படுக்கை-அதிலே மணி யறை மிசை-சம்போகத்துக்கு ஏகாந்தமான இருண்ட நீலப் பாறைகளை உடைத்தாய் முழைஞ்சுகளிலே களிற்று யானையாவது பிடி யோடு கூட மணி யறை மாணிக்கப் பாறை
அறை – பாறை-மிசை-மேல்–அற –விலஷணமான பாறை -என்றுமாம்
————
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள்—பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே- 1-2-4– நாலாயி:961/2-4
முன்பு சத்ருவான ஹிரண்யனுக்கு அஞ்சி -முடியையும் பொகட்டுப் போட்டு
மனுஷ்யராய் வேற்று உருக் கொண்டு திரிந்தார்கள் –
இப்போது தம் தாம் ஸ்வரூபங்களும் பதங்களையும் பெறுகையாலே
எங்களுக்கு குடி இருப்பு பண்ணித் தந்தது -என்று அந்த உபகார ஸ்ம்ருதியாலே
ஒருவர் காலில் வணங்கோம் -என்று இறுமாந்து இருக்கக் கடவர்கள்
தங்கள் முடிகளைத் திருவடிகளிலே தட்டும்படி விழுந்து எழுதிக் கொடுக்கும்படி இருந்த-பிறங்கு மா மணி-அவை தான் ஒரு பாறை மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே -ஒரு மலை போலே யாயிற்று கிடப்பது-பெருத்து ஸ்லாக்யமாக இருந்துள்ள மாணிக்கங்கள் ஆனவை-
———-
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து – 1-2-6-நாலாயி:963/2
ப்ராமணிகளைப் போலே யாயிற்று தேவர்களும் ப்ரஹ்ம ஹத்யை சொல்லிப் பழி இடுவாரும் தலை அறுப்பாரும் – தலை அறுப்புண்பாருமாய் இறே இருப்பது-இப்படி இருப்பவர்கள் கிண்ணகத்தில் இழிவாரைப் போலே ஒரு மிடறராய் இருப்பார்கள் ஆயிற்று
தேவர்கள் அடங்கலும் திரண்டு இறுமாப்பாலே வணங்கோம் -என்று இருக்குமது தவிர்ந்து –
பக்ந அபிமாநராய் திருவடிகளிலே தலைகள் பட வணங்கும்படி ஆயிற்று
அங்கு எழுந்து அருளி இருக்கிறது-பரத்வத்தில் வணங்கதார் எல்லாரும் சீலம் கண்டு வணங்கும்படியாக இருக்கிற தேசம் ஆயிற்று-
————
வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே -1-4-3- நாலாயி:980/4
வேகத்தாலே மிடுக்கை உடைத்தாய் தெளிவை உடைத்தாய் இருக்கும் ஆயிற்று
————-
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – 1-4-4-நாலாயி:981/4
கிருஷ்ணன் படியாய் ஆயிற்று ஜலத்தின் உடைய செருக்கும் இருப்பது மலராலே அணியப்பட்ட குழலை உடையராய் அப்சரஸ்கள் உடைய பரிவட்டத்தையும் ஹாரத்தையும் வாரி அணிகிற நீர் என்னுதல் அழகிய நீர் என்னுதல்-இவற்றைத் திரட்டிக் கொண்டு தர்ச நீயமான நீரானது ரத்னங்களைக் கொழித்துக் கொண்டு வந்து இழியா நின்றுள்ள வதரி யாஸ்ரமத்து உள்ளானை –தொழுது எழு -என்கிற இது-இத் திரு மொழிக்கு எல்லாம் கிரியை-
மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – -1-4-9-நாலாயி:986/4
எங்கும் ஒக்க பரந்து பெரு நீராய்-அது அடைய தெளிந்து இருப்பதான கங்கையின் கரை மேல்
——–
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை – 1-4-10-நாலாயி:987/1
பெரிய வேகத்தோடே வருகிற திரளை உடைத்தாய் –தெளிந்த ஜலத்தை உடைத்தான –
கங்கையின் கரை மேலே ஸ்ரீ பதரி காஸ்ரமத்திலே இருக்கிற சர்வேஸ்வரனை கவி -பாடிற்று-
—————-
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – 1-8-2-நாலாயி:1019/3
கொண்ட கொண்ட வடிவம் எல்லாம் இவருக்கு உத்தேச்யமாய் இருக்கும் ஆயிற்று –அவன் கொண்ட வடிவம் ஆகையாலே – கிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய்
கலி யுகத்தில் கறுத்த நிறத்தை உடையவனாய் -த்வாபர யுகத்தில் வந்தவாறே ஸ்யாமமான நிறத்தை உடையவனாய் இருக்கும் என்று-இவ்வடிவுகளை அநு சந்தித்து தெள்ளியார் -உண்டு -அநந்ய பிரயோஜனர் ஆனவர்கள் நாள் தோறும் வணங்குவர்கள் ஆயிற்று – நித்ய ஸூரிகளைப் போலே நித்ய அனுபவம் பண்ணும் –
————
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள் –1-10-8- நாலாயி:1045/2
ஒளியை உடைத்தான ரத்னம்-ஒளியை உடைத்தாய் நீர்மையை உடைத்தாய் இருக்கிற முத்துக்களை வேய் விட்டு உதிரா நிற்கும் ஆயிற்று – மூங்கில்கள் ஆனவை முற்றி வெடித்து முத்துக்களை சொரியா நிற்கும் வாயிற்று – இப்படிப்பட்ட திருமலையை வாஸஸ் ஸ்தானமாக உடைய –
———-
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை –1-10-10- நாலாயி:1047/2
சிம்ஹம் கிடந்த முழைஞ்சு -யாயிற்று – இப்படி உணர்ந்து நோக்குகிறது –
மிடுக்கு மிக்க தோள் உடைய தர்ச நீயமான வடிவை உடையனான சர்வேஸ்வரனை –
——
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன் அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த – 2-2-9-நாலாயி:1066/2,3
ஒரு நாளும் பிரிவால் வரும் வ்யசனம் இன்றிக்கே நித்ய சம்ச்லேஷத்தாலே
கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி மார்வு படைத்தவன் –
————
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை –2-5-5- நாலாயி:1092/2
அத்யந்த முக்தனாய் ஒரு பவனனான ஆலிலையிலே விழுக்காடு பாராதே நித்ரா ஸூகம் அனுபவித்தானை –மிக ஒளியை உடைய நீல கிரி போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கையும் உடையவனை –
———-
மஞ்சு உயர் மா மணி குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை -2-8-4- நாலாயி:1121/1
மேக பதத்தளவும் செல்ல ஓங்கி ரத்னங்களை உடைத்தாய் இருக்கிறதோர் ரத்ன கிரியைத் -கோவர்த்தன கிரியைத்-தரித்து
———-
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற – -2-8-5-நாலாயி:1122/3
மேரு போலே இருக்கிற தோள்களும்-ரத்னங்களுக்கு தானே கௌஸ்துபம் உண்டாய் இருக்குமே-பெரிய பிராட்டியாரும் பாஞ்ச ஜந்யமும்-இவை ஒரு கால் உண்டாய்
ஒருகால் இல்லையாம் கடல் போல் அன்றிக்கே தங்குகின்ற கடல் போலே இருக்கிற
(கடலே நித்யம் இல்லையே -அபூத உவமை இல் பொருள் உவமை -தங்குகின்ற கடல் )
————
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
அருளாள பெருமாளாய் நின்று சர்வ அபேஷிதங்களையும் தருகிறவனுக்கு வாசஸ் ஸ்தானம்-ரத்ன மயமான மாடங்கள் சூழ்ந்த தர்சநீயமாய் இருக்கிற கச்சியில்-
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – 2-10-6-நாலாயி:1143/4
மிகவும் செறிந்து இருப்பதாய் ரத்ன மயமான மாடங்கள் உஜ்ஜ்வலமாய்த் தோற்றுகிற
திருக் கோவலூரிலே காணப் பெற்றேன்-நான்-இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-
——–
சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல் – 3-1-4–நாலாயி:1151/3
பரஸ்பரம் நெருங்கி -அன் நெருக்கம் பொறாமையாலே சாரமானது பிரவஹியா நின்றுள்ள
மெல்லிய கரும்பின் உடைய இளங்கழை-உண்டு – நுனியானது ஆகாசத்திலே சென்று வளர இனி அவ்வருகு போக ஒட்டோம் என்று தடுக்கும் ஆயிற்று ஆகாசம் – இப்படி வளர்ந்த கரும்பின் உடைய அழகிய நிழலை உடைத்தாய்
———
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் – -3-1-7-நாலாயி:1154/2
ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ
என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய- தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம்
————
வேல் கொள் கை தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணி தேர் – 3-1-9-நாலாயி:1156/1
அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு – ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது – உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –
(ஈடு -கவசம் என்றபொருளும் உண்டே -ஈடு திருவாய் மொழிக்கு கவசம் போல் என்றும் )
தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி – தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம்
ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்தானம் –
———–
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே- -3-2-3-நாலாயி:1160/3
ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து
செம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள தில்லை-
———
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – 3-2-6-நாலாயி:1163/2
உஜ்ஜ்வலமாய் கருமை மிக்கு இருந்துள்ள மணி போலே இருக்கிற திரு நிறத்தோடு கூடின விக்ரஹத்தை உடையவனை உங்கள் ஹிருதயத்தில் நித்யவாசம் பண்ணும்படி வாழ வல்லீர்-(எல்லார் உள்ளத்திலும் இருந்தாலும் உள்ளுவார் உள்ளத்தே உகந்து இருப்பான் அன்றோ )
————-
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை – 3-5-2–நாலாயி:1189/1
ஒரு நீல கிரியானது தன் மேலே பெரு விலையனாய் இருபத்தொரு ரத்னம் உஜ்ஜ்வலமாம்படி சாய்ந்தால் போலே திரு வநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே அழகிய திரு மேனியிலே ஸ்ரீ கௌஸ்துபம் விளங்கக் கண் வளர்ந்து அருளுகிற படி –
———
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் –3-6-2– நாலாயி:1199/3
மணிகளும் செங்கழு நீருமாயிற்று பர்யந்தங்கள் அடங்கலும் இருப்பது –
அன்றிக்கே-மணி என்று அழகாய் அழகிய செங்கழு நீர் அலரும்-என்னுதல் -அழகிய செங்கழு நீர்களானவை அலரா நின்றுள்ள பர்யந்தங்களை உடைத்தான வயலாலே சூழ்ந்த
திருவாலியிலே வந்து இருந்தவன் –-அன்றிக்கே நீர்களானவை கொழித்து எறடா நின்றுள்ள மணிகளையும் செங்கழு நீரையும் உடைத்தான பர்யந்தங்கள் என்றுமாம் –
———
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே – நாலாயி:1205/4
அவன் கூட இருந்த போது-இது ஒரு நிறமே -என்று வாய் புலற்ற கேட்டிருக்குமே -அல்லது தன் வடிவை தானே ஸ்லாக்கிகிறாள் அன்றே-
—————
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – –3-8-1-நாலாயி:1218/4
இப்படிப் பட்ட திரு நாங்கூரில் திரு மணி மாடக் கோயிலை ஆஸ்ரயி என்கிறார்-
மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே—3-8-2-
மலைப் பண்ட மண்டத் திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-3-
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4-
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-
மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-9-
வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு-3-8-10-
தர்ச நீயமான திரு நாங்கூரில் திரு மணி மாடக் கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரனுக்கு
——-
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் –3-9-4– நாலாயி:1231/3
சிலை என்று வில்லுக்கு பர்யாய சப்தமாய் வில் என்று ஒளியாய்-ஒளி விளங்கா நின்றுள்ள மணி மயமான மாடங்களின் உச்சி மேலே உண்டான -சூலமும்-இதாயிற்று அவ் ஊரில் கிருஹங்களின் அடைய இருக்கும்படி –
———-
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே ––3-9-9– நாலாயி:1236/4
தெருவுகள் தோரும் ஆகாசத்திலே சஞ்சரிக்கிற சந்தரன் உடைய கீழ் வயிறு தேயும்படியான
மணிமயமான மாடங்களை உடைய –
————-
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை -3-10-8- நாலாயி:1245/3
கொடியை உடைத்தாய் மதிள்கள் மாளிகைகள் கோபுரங்கள் நெருங்கின மணிகளை உடைத்தான மண்டபங்கள் சாலைகள் இவற்றை உடைத்தாய்-பிராமணர் கூடித் திரண்ட ஆரவாரத்தால் மிக்கு இருப்பதாய் சோலையில் உண்டான செவ்விப் பூவிலே மது பானம் பண்ணி வண்டுகள் பாடா நிற்பதுமான-
————-
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் -–4-1-5- நாலாயி:1252/2
ஒளியை உடைத்தான மணிகள்-சந்தனம்-அகில்-பொன் -இவற்றை-தெளிந்த திரைகள் வரத் திரட்டுகிற திகழ் மண்ணித் தென் கரை மேல்
——-
உயர் மணி மகுடம் சூடி நின்றானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே -4-3-4– நாலாயி:1271/4
பசுக்களையும் இடையரையும் நோக்குகைக்காக கோவிந்த அபிஷேகம் பண்ணி நின்றாப் போலே சம்சாரிகள் உடைய ரஷணத்துக்காக முடி சூடி நிற்கிறவனை
————-
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை – 4-4-1-நாலாயி:1278/1
த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்-என்று
பாண்டவர்களுக்கு சத்ருக்களான துர்யோ நாதிகளை நீங்கள் என் சத்ருக்கள்
உங்கள் சோறும் எனக்கு உண்ணல் ஆகாது-உங்களுக்கு என்னை புஜிப்பிக்கலும் ஆகாது -என்று அருளிச் செய்த படி-தனக்கு மாற்றாரான துர்யோ நாதிகள் உடைய ரத்னங்களாலே சமைக்கப் பட்ட முடியும் மிடுக்கும் திக் விஜயம் பண்ணிப் பெற்ற மதிப்பும்
———
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – 4-4-4-நாலாயி:1281/4
சம்பத்து ஆர்ந்து மாணிக்கங்களால் அலங்கரிக்கப் பட்ட மாடங்கள் திகழுகிற திரு நாங்கூர்
———–
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – -4-4-5–நாலாயி:1282/2
இருவருடைய முலைகளிலும் விளங்கா நின்றுள்ள ஒளியை உடைத்தான மாணிக்கங்களாலே சமைக்கப் பட்ட ஹாரமானதுவும் திரிசரம் பஞ்ச சரமான முத்து வடமும் உரச-அத்தால் மூவாதே இருக்கிற மலை போன்ற நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
——-
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – 4-4-9-நாலாயி:1286/4
ஓங்கி இருந்துள்ள நான்மறையை நாவாலே தாங்க வல்ல பிராமணரை உடைத்தாய்
ஆகாசத்திலே தட்ட உயர்ந்த மணி மாடங்களை உடைத்தான திரு நாங்கூர்
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை – நாலாயி:1287/1
ஐஸ்வர்யம் அணிந்த மணிமயமான மாடத்தை உடைய திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்தில் நிற்கிற புண்டரீகாஷனான சர்வேஸ்வரனை
———–
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி – -4-9-8–நாலாயி:1335/3
க்ருத யுகத்தில் புருஷர்கள்–சத்வ பிரசுரர் ஆகையால்–வெளுத்த நிறத்தை உகப்பவர்கள் என்று–அதுக்காக வெளுத்த நிறத்தை கொண்டான் ஆய்த்து-அவர்கள் உகந்ததை நாம் செய்யவே-நாம் உகந்ததை இவன் செய்தான்–நாமும் இவன் தன்னை உகப்போம் -என்று ஆதரிப்பார்கள் என்று பார்த்து –அவ் வழியாலே அனந்தரத்தில் உள்ளாருக்கு ரஜோ குணம் அளாவி இருக்கையாலே அவர்கள் உகந்த சிவந்த நிறத்தை உடையவன் ஆனான் அதுக்கு அனந்தரம் மணியின் வண்ணத்தை உடையவன் ஆனான்-
————
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் -4-10-3- நாலாயி:1340/2
கரையிலே நிற்கிற கடம்பின் உச்சியிலே போய் ஏறி அவனுடைய பணங்கள் இறும்படியாக பாய்ந்து (பூத்த கடம்பு ஏறி -கிளையாக இருந்து இருக்கக் கூடாதோ என்று ஆசைப்படும் படி -அணைய இத்யாதி – பெருமக்கள் -தாஸ்ய சுகம் அறிந்த பாகவதர் திரு மாளிகையில் புழுவாக பிறக்கவும் ஆசைப்படுவார்கள் )அதில் உண்டான பல வகைப் பட்ட ரத்னங்கள் சிதறும் படி –அன்று துடங்கி பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம்
எழுதிக் கொள்ளலாம் படி பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
———-
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – –செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே—நாலாயி:1341/3/4
துறைகள் தோறும் துறைகள் தோறும் பொன் மணிகள் கொழித்துக் கொடு வந்து
எறடா நின்றுள்ள திரண்ட திரைகளை உடைத்தான மண்ணியின் தென் பால் –செறிந்த அழுத்தின மணிகளை உடைத்தான மாடங்களிலே கட்டின கொடிகளானவை ஆதித்ய பதத்தளவும் சென்று அவனுக்கு இதஸ்தத சஞ்சரிக்க ஒண்ணாத படி தகையா நிற்கும் ஆய்த்து-
———–
படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – 4-10-8–நாலாயி:1345/3
பூமியிலே உண்டான மாடங்களிலே நட்ட தூண் அடியிலே அழுத்தின நாநாவான ரத்னங்களின் ஒளியாலே
——–
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – –5-3-10–நாலாயி:1377/1
மணி மயமான மாடங்களாலே சூழப் பட்ட-திரு வெள்ளறை யில் நித்ய வாஸம் பண்ணுகிற –
————
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி-5-4-1- – நாலாயி:1378/3
சந்தனத்தோடே கூட மணிகளையும் கொழித்து எறடா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரி
———-
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் மணி நீள் முடி – நாலாயி:1379/1
பிரளயத்திலே பூமிப் பரப்பு அடங்க எடுத்து வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின ஆச்சர்ய சக்தி உக்தன் –ஆதி ராஜ்ய பிரகாசகமான
திரு அபிஷேகத்தை உடையனாய் -(ஆதி ராஜ்ய ஜல்பிதா )
—————
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி -5-4-9- நாலாயி:1386/3
சஹ்ய பர்வதத்தில் உண்டான வேய்கள் உதிர்த்த முத்தும் அதில் உண்டான மணிகளையும் கொண்டு வந்து எறடா நின்றுள்ள மிக்க புனலை உடைத்தான காவிரி –
————–
கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கரு மணியை மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை -–5-6-1- நாலாயி:1398/1,2
ஆனையில் கிடந்த கிடக்கை -என்று ஓர் ஆனை கைகளையும் கால்களையும்
பரப்பிக் கொடு கிடக்குமா போலே கிடக்கிற கிடை – நீண்ட துதிக்கையை உடைத்தாய்
பருவத்தால் இளையதாய் இருப்பதொரு ஆனை சாய்ந்தாப் போலே இருக்கிறவனை –(திருப் பாற் கடலிலே )கடலில் பாழ் தீரும்படி ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே
இருக்குமவனை –
————
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – 5-7-7-நாலாயி:1414/2
க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான ராவணன் உடைய அக்னி கல்பமாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள ரத்னங்களாலே செய்யப் பட்ட முடிகளை பொடி செய்து -என்னுதல்-அன்றிக்கே-எரி விழித்து –திருவினைப் பிரித்த என்னுதல்
———-
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்கு – 5-7-9–நாலாயி:1416/2
சிறு வடிவைக் கொண்டு பெரிய லோகங்களை வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளி-ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்-
————–
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து – நாலாயி:1417/1
பொன்னும் பெரு விலையனான ரத்னங்களும் முத்துக்களும் சுமந்து தன்னில் தான் பொரா நின்றுள்ள திரைகளை உடைய மகா நதி உண்டு -காவேரி அது பர்யந்தத்திலே சூழப் பட்டு இருப்பதாய்-
———
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – -5-10-3-நாலாயி:1440/3
அது தன்னில் பொன் படுமா போலே காணும் சஞ்சரியா நின்றுள்ள தும்பிகள்-மணி -அழகு-எப்பொழுதும் ஒக்க கருவடைந்த பயிரேயாய் இருக்கையாலே-இருண்டு இருந்துள்ள வயலாலே சூழப் பட்டு
——-
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – -–5-10-9–நாலாயி:1448/3
பெருகின நீரானது கொடு வந்து தள்ளுகிற ரத்னமானது ராத்ரியில் இருளானது
தன் கிரணம் கொண்டு தள்ளுகிற -ஒளி எங்கும் ஒக்க பரந்து இருக்கும் ஆய்த்து –
———-
மை ஒண் கரும் கடலும் நிலனும் மணி வரையும் -6-3-6- நாலாயி:1473/1
சர்வேஸ்வரன் உடைய திரு மேனிக்குப் போலியாய் அஞ்சனம் போலே தர்ச நீயமாய் இருந்துள்ள சமுத்ரமும் அது வேலியாக உள்ளே கிடக்கிற பூமியும் அந்த பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற குல பர்வதங்களும் இப்படிப் பட்ட இதுக்கு இரண்டு விளக்கு ஏற்றினால் போலே இருக்கிற் சந்திர ஸூர்யர்களும் –
————
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே–6-6-1- நாலாயி:1498/3/4
பரிமளத்தை புறப்பட வருகிற செண்பகத்தில் உண்டான பரிமளத்தைப் புஜித்து
அத்தாலே நரை திரை (மூப்பு )மாறி அச் செண்பகத்தில் உண்டான வெக்கையை மாற்றும் ஆய்த்து மகிழம் பூவிலே படிந்து –செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்
அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன் இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன் வாசி அற உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு அவ் ஊரில் உள்ளதாகையாலே –மணி அழகாய் கிழத்தன்மை போய்
செண்பகம் போன வண்டு -அவ் ஊரில் உள்ளவர்களாய் – வர்ஜனீயமான பிராகிருத போகங்களை புஜித்தும் -ஸ்வரூப நாசம் போகாமல் பகவத் அனுபவத்தால் போன படி-
ஆனால் அது இவருக்கு உத்தேஸ்யமோ என்னில் திவ்ய தேச வாசித்தால் -செய்தாரேல் நன்றே செய்தார் என்னும் அவன் அன்றோ இவர்களையும் அவன் கைக் கொள்ளுவதால்
ஆகவே அவர்கள் எனக்கும் உத்தேச்யர்களே
————
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/3/4
உழுகிற செய்களிலே வரம்புகளிலே மணிகளைக் கொடு வந்து சிதறா நிற்பதாய்
லோகம் அடங்கலும் அகிலையும் சந்தனத்தையும் கொள்ளை கொள்ளும்படியாக –தர்ச நீயமான பொன்னியானது சம்ருதிகளைக் கொடு வந்து கொடுக்கிற திரு நறையூர் என்று
ஊருக்கு விசேஷணம் ஆதல்-அன்றிக்கே சோழன் தனக்கு விசேஷணம் ஆதல்-அவனுடைய
விலாச சேஷ்டிதங்கள் உடன் காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே வாசி அற
இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே –
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல் மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங் கொண்ட சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-2-
யுத்தத்தில் வந்து எதிர்ப்பாராய் வீரக் கழலை உடையராய் இருக்கிற ராஜாக்கள்
முடிகளிலே காகமானது படியும் படியாக –ஆயுதத்தைக் கொண்டு வ்யாபரித்தான் ஆய்த்து-அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு
வாசி அற -இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-4-
அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு –
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-5-
கிளர்ந்து கொண்டு நடுவே தகைந்து கொண்டு இருக்கிற மலைகளை முறித்து
அந்த மலைகளிலும் சஹ்யத்திலும் உண்டான பொன்களையும் மணிகளையும் கரையிலே கொடு வந்து சிந்துமாய்த்து –வெளி நிலம் உள்ள இடம் எங்கும் பரந்து பூமிப் பரப்பு அடங்கலும் தானே கைக் கொள்ளும் ஆய்த்து – பொன்னி நாடன் -பொன்னி நாட்டை உடையவன் -ஆக மூன்று ராஜ்யமும் தானே ஆண்டான் ஆய்த்து –அவன் பூமியை அடைய அளந்து கொண்டத்தோடு இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு அவனை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – 6-6-6-நாலாயி:1503/4
பாண்டிய நாட்டையும் மேல் கொங்கையும் கொண்ட சோழன் சேர்ந்த — சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே –
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் -சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே— நாலாயி:1504/3/4
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக ஆஸ்ரயிக்கிற தேசம் –
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —-6-6-9-
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலை-6-6-10-
யதா பூத வாதிகளாய் வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லராய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நறையூரிலே வர்த்திக்கிற
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
———–
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி ––6-9-8- நாலாயி:1535/3
மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நிலை யார நின்றான் ஆய்த்து-நிற்கிற போதை அழகைக் கண்டு
இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் -மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய திருநறையூரில் மன்னி நிலையார நின்றான் –
————–
வாவி தடம் சூழ் மணி முத்து ஆற்று நறையூர் நெடுமாலை — –6-10-10- நாலாயி:1547/1
பொய்கைகளையும் அளவுபட்ட நீர் நிலைகளையும் உடைத்தாய் இருந்துள்ள திரு நறையூரிலே வந்து நிற்கிற சர்வாதிகனான சர்வேஸ்வரனை –
—————
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற -7-1-8– நாலாயி:1555/3
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே-பலத்தோடு வ்யபசரியாதவனே –முளையாத வித்து – நிஷ்பலம் என்பதால் – முளைக்கின்ற வித்தே –உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –என்கிறார்-
—————–
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – –7-3-7–நாலாயி:1574/4
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய் ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய் பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை – இந் நிறத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )
————
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – –7-3-9-நாலாயி:1576/4
புகர் பெற்ற வடிவை உடையவனாய் நின்றவனை –அத்தாலே குளிர்ந்த நிறத்தை உடையவனாய் நின்றபடி – இப்படிப் பட்ட இவனை அல்லது போற்றி என்று என்னுடைய ஹிருதயம் ஆனது -மங்களா சாசனம் பண்ணாது – பாழாளாகப் படை பொருதானுக்கு அல்லது என்னுடைய ஹிருதயமானது பல்லாண்டு பாடாது –
————
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – -7-4-1–நாலாயி:1578/3
ஸூவர்க்கத்தில் ஸூகப் ப்ரதானனாய் வர்த்திக்கிற சந்தரன் உடைய கீழ் வயிற்றை போழும்படியான ஒக்கத்தை உடைத்தாய் மணி மயமான மாடங்களால் வந்த நிரதிசய சம்பத்தை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே இருக்கிற ஸ்வாமி –
————–
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் – நாலாயி:1584/2
மை பரம்பா நின்றுள்ள அஞ்சன கிரி போலே இருக்கிற வடிவை உடைய ஆச்சர்ய பூதனே -என்றும் –
————-
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து –7-5-7 நாலாயி:1594/3
கரையை உடைத்தான கடல் போலே யாய்த்து திரு வீதிகள் உடைய பெருமை இருக்கும் படி –ஸ்வர்க்கத்து அளவும் ஓங்கி இருப்பதாய் சாந்திட்டு அத்தாலே வெளுத்து இருப்பதாய்
மணி மயமான மாடத்தில் உண்டான –
——————–
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – 7-7-10-நாலாயி:1617/3
சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை-லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப் பத்தையும் அப்யசிக்க வல்லார் –
————-
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – 7-8-3–நாலாயி:1620/3
சஹ்ய பர்வதத்தில் விளங்கா நின்ற சந்தனத்தையும் அகிலையும் பொன்னையும் ரத்னங்களையும் வாரிக் கொண்டு போந்து –
———
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் –7-8-9– நாலாயி:1626/3
இளமை மிக்கு வருகிற பொழிலாலே தழுவப் பட்டு-அத்தாலே எழில் மிக்கு இருக்கிற திரு வீதியிலே திரு நாள்களில் ரத்னங்களால் அழுத்தப் பட்ட திண்ணைகள் தோறும்-
———-
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர் சலசயனத்து – 7-9-1–நாலாயி:1628/3
நினைவு இன்றிக்கே இருக்க கடல் ஏறி வந்த படியாலே அங்கு உண்டான ரத்நாதிகள் விளங்கா நின்றுள்ள
———-
காசினை மணியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே –-7-10-4- நாலாயி:1641/4
எனக்கு கைம் முதல் இல்லாத வன்று அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான
நிதியானவனை –பொன் போலே ஸ்ப்ருஹணீயம் ஆனவனை –அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை – சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-
—————
கூற்றினை குரு மா மணி குன்றினை நின்றவூர் நின்ற நித்தில தொத்தினை – 7-10-5-நாலாயி:1642/3
ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுத்து கொடு போகா நின்றால் ஆரேனும் சிலர் விலக்கினார் உண்டாகில் இரு துண்டம் ஆக்குகைக்கு ஈடான பரிகரத்தை உடையவனாய்
சத்ருக்களுக்கு மிருத்யு போல் ஆனவனை -ஸ்லாக்யமான நீல ரத்ன பர்வதம் போன்ற வடிவை உடையவனை – அங்கே கொடு போனால் காட்சி கொடுக்கும் படியான வடிவு இருக்கிறபடி –
———
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் – 8-1-3-நாலாயி:1650/1
நெருங்கி இருப்பதாய் – பெரு விலையனான ரத்னங்களாலே அலங்க்ருதமான
திரு அபிஷேகத்தின் மேலே சாத்தின திருத் துழாய் மாலையானது தோன்றா நிற்க
உங்கள் வார்த்தை செவிப் படுமோ -என்ன நின்றாள் –
சேஷித்வ ஸூசகமாய் இருக்கும் இறே திரு அபிஷேகமும் திருத் துழாயும் –
அர்ஜுனனுக்கு பர பஷத்தின் உடைய கழுத்து தோற்றினால் போலே
வைத்த வளையமே யாயிற்று இவளுக்கு தோற்றுகிறது –
(லஷ்யத்திலே குறி இருவருக்கும் -அவனுக்கு பக்ஷி உடைய கழுத்து -இவளுக்கு வளையம் ) மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் –
வளையத்தின் நின்றும் நெஞ்சைப் பறித்துக் கொண்டது திரு மகரக் குழை –
அவற்றால் வந்த அழகுக்கு கை விளக்கு பிடித்துக் காட்டினாப் போலே யாயிற்று
திரு மகர குண்டலங்களின் உடைய புகர் இருக்கிறபடி –
மின்னா நிற்பதாய் மஹார்க்கமான ரத்னங்கள் அழுத்தப் பட்ட திரு மகர குண்டலங்கள் ஆனவை-அவற்றை உள்ளாக்கி தான் புறம்பே திருமேனி அடங்கலும் முட்டாக்கிடும்படி பிரகாசியா நின்றது -என்னா நின்றாள் – (மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட -திரு நெடும் தாண்டகம் -)பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால் –பொன்னாலே செய்யப் பட்ட ரத்னங்கள் அழுத்தி இருந்துள்ள ஹாரமானது அவ் வாரம் தனக்கும் ஆரமாய் இருக்கிற திரு மார்பிலே விளங்கா நின்றது என்னா நின்றாள் -பொன்னின் ஹாரம் மா மணி இரண்டும் சேர்ந்த அழகு என்றபடி –
—————
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் -8-1-7– நாலாயி:1654/3
கிட்டினதனையும் மையேயாய் இருக்கிறது இத்தனை யாயிற்று-இருண்ட நிறத்தை வளரா நின்றுள்ள நீல மணி -போன்ற என்கை –மல்கு நீலச் சுடர் தழைப்ப–7-6-6-என்கிறபடியே –
(நீலக்கடல் கடைந்தாய் -பாற் கடலையும் இவனது மை வண்ணம் அத்தையும் நீலம் ஆக்கிற்றே-பிராணவாரா விமானமும் வெண்மை நிறமாய் இருக்கச் செய்தேயும் உள்ளே இருக்கும் அவனாலே கறுத்து தோன்றுகிறது -பட்டர் )
———–
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் – 8-1-9-நாலாயி:1656/1
தன் நிலத்திலே நின்ற போது மணம் மட்டமாய் – திருக் குழலிலே ஏறினவாறே இரட்டிற்றாய் இற்று இருப்பது –வண்டுகள் பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று-
——–
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம் – —8-2-8–நாலாயி:1665/3
தொண்டெல்லாம் பண்டு இவன் அடியைப் பற்றி கிடக்குமா போலே கிடீர்
தானுகந்த ஊரிலே வண்டுகள் இவள் மயிரைப் பற்றி கிடக்கும் படி -தெய்வ வண்டுகளான எம்பெருமான்களை –இது ஒப்பனை அழகு இருந்தபடி –என் பேதை – மம சுதா-என்கிறபடியே அபிஜாதை -என்கிறாள் –பேதை -முக்த்தை —உன் மகள் முக்த்தை யன்றே –
விதக்த்தைகளும் அவ்வருகே அன்றோ இவள் பரிமாற்றம்-இவள் நிறம் கொள்ளக் குறை என் என்ன-நன் மணி வண்ணன் -என்கிறபடியே உம்முடைய நிறத்தை கொடுக்கை அன்றோ தகுவது-அது கிடக்க –-முக்த்தை அன்றோ-ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவள் அன்றோ –
உமக்கு ஸ்வரூப ஜ்ஞானம் இன்றியிலே ஒழிய வேணுமோ –
————–
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் – —8-3-2–நாலாயி:1669/2
மலைக்கும் மாடத்துக்கும் வாசி தெரிந்து பிரதிபத்தி பண்ண ஒண்ணாத படியாய்
ரத்ன மயமான மாடங்களை உடைத்தான திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற –
———-
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் – —8-3-3–நாலாயி:1670/1
ஒக்கத்தை உடைத்தாய்-பெரு விலையனான ரத்னங்களை உடைத்தாய் உள்ள
மாடங்களில் உண்டான சூலமானது –
————-
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் – —8-5-7–நாலாயி:1694/3
விளங்கா நின்று கொண்டு சுடுகிற கிரணங்களை உடைய பால சந்த்ரனோடே
வ்ருஷபத்தின் உடைய கழுத்து மணி ஓசையும் முடியா நின்றது
———-
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் –8-5-9– நாலாயி:1696/3
சீற்றத்தையும் பெரிய வடிவையும் உடைத்தான வ்ருஷபத்தின் உடைய கழுத்திலே உண்டாய்
கண்ணுக்கு ஆபாசமாய் கார்யத்தில் முடித்து விட வற்றான மணியினுடைய த்வநியானது
என்னுடைய ஹிருதயத்தை சிதிலமாக்கா நின்றது –
————-
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை – —8-7-3–நாலாயி:1710/1
மேகத்திலே போய் புக்கொன்றி அவன் கல் வர்ஷத்தை வர்ஷிக்க இந்த்ரன் கருத்தை பின் சென்று வர்ஷிக்கும் அத்தனை இறே-மேகங்களில் இந்த்ரன் பிரேவேசித்து -உறு-வரை -கல் -தன்னையே ரஷகனாய் உடைத்தாய் இருந்துள்ள பசு நிரையானது அறிவு கெட்டு கலங்க –மணி -என்று அழகாய்-அதாகிறது அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே
அவனே ரஷகனாம்படி இருக்கை-(சமித்து பாதி சாவித்ரி பாதியாய் இல்லாமல்
ஈஸ்வர ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி இருந்த அழகு )
—————
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை –8-7-9- நாலாயி:1716/3
வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள திரு ஆழியை உடையனுமாய் நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை உடையவர் -( உடைய ஸ்தானம் இது )
——————–
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை – -8-9-1-நாலாயி:1728/2
மை போன்ற நிறத்தை உடைய பெரு விலையனான மணி போன்றவனை –
அழகிய மரகதத்தை –
————
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின் – —8-9-2–நாலாயி:1729/2
தன்னைச் சேர்ந்தார்க்கு வரும் அவமானங்களை போக்கும் மணியை – மணியை -என்கிறது சிந்தா மணியை –(சிந்தா மணி -சிந்தாமல் சிதறாமல் சிந்தித்தவற்றை கொடுக்கும் -சிந்தனைக்கு அழகியான் )
————-
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – —9-1-2-நாலாயி:1749/4
ஒளி விடா நின்றுள்ள மாளிகைகள் ரத்ன மயமான மதிள்கள் இவற்றை உடைத்தான –
திரு கண்ணங்குடி யுள் நின்றானே –
————–
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர – 9-1-6–நாலாயி:1753/1
மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து-
—————-
வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் -9-1-8– நாலாயி:1755/3
சஹ்ய பர்வதத்தில் இருக்கிற ரத்னங்கள் மரகத திரள் வயிரம் என்கிற ரத்ன விசேஷங்கள்
மூங்கில் உதிர்த்த முத்துக்கள் -இவற்றை –
———–
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் -9-1-9– நாலாயி:1756/2
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –
————-
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி – —9-2-2–நாலாயி:1759/3
யுவாக்கள் தங்கள் ஒப்பனை கண்டு காலிலே விழும்படி இருக்குமவர்கள்
(இளம் பெண்களும் இப்பெருமாள் ) காலிலே விழும்படி இரா நின்றார் –பல ரத்னங்கள்
முத்துக்கள் இவற்றோடு கூட மிக்க புகரை உடைத்தான ஆபரணங்களாலே ஒப்பித்தும் இரா நின்றார் –
—————
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே – -9-3-2–நாலாயி:1769/4
உத்தேஸ்ய சித்திக்கு இருந்த இடம் விட்டுப் போக வேண்டாத தேசம்
பொருளவையில் பிரிகிறேன் -என்றவனுக்கு கண் அழிவு சொல்ல ஒண்ணாத தேசம் –
(ஆபரணம் சூட்டி அழகு பார்க்க பொருள் ஈட்ட வேண்டும் -பிரிந்து கப்பல் ஏறி போக வேண்டாமே –கடல் அலைகளே அனைத்தும் உந்தி தள்ளுகின்றனவே )
————
பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே –9-3-4– நாலாயி:1771/4
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –பாவியேன் -அத் தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –
————
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே – —9-3-5–நாலாயி:1772/4
கடலில் திரைகள் ஆனவை சங்குகள் ஈன்ற முத்தைக் கொடு வந்து தள்ளா நிற்கும் ஆயிற்று –உத்பத்தி காலத்திலே காணலாய்-பின்பு அறிவார் கையிலே இட்டுப் பரீஷிக்க வேண்டாதே யிருக்கை–திரைக் கிளர்த்திகளிலே அறை யுண்டு வழிகளிலே ஈனுமாயிற்று –
அன்றியே-சங்குகளையும் மணிகளையும் தள்ளா நின்று இருந்துள்ள புல்லாணியே -என்னவுமாம் –
———
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – —9-3-6–நாலாயி:1773/2
அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது-
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினவன் –இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன்-இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன்
———————
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல் -புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன் -—9-4-7– நாலாயி:1784/1
மிகவும் கர்க்கரமாய் இடி போலே இருந்துள்ள சப்தத்தை உடைய ருஷபத்தின் உடைய கறுத்த மணியின் உடைய நாவில் உண்டான சஞ்சாரமாவது – அந்த நாகுகளை சேக்கள் தொடருகிற போது அவை ஓடுகிறது-தலைமகன் மேல் விழத் தான் இறாய்க்கும் படிக்கு
ஸ்மாரகமாய் நலியா நின்றதாயிற்று –புரஸ் க்ருத்ய ரதே சீதாம் ருஷபோ கோ வதூமிவ-என்னக் கடவது இறே –சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே
ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும் தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் –
———–
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் –—9-5-3– நாலாயி:1790/3
அவன் ஆகிறான் -சாலப் பெரியான் ஒருவன் இறே-அவனுக்கு இவற்றுக்கு இடைய வேண்டாவே –பெரியவன் என்று கை வாங்க ஒண்ணாதே – மேல் விழுந்து பெற வேண்டும்படியான வடிவைப் படைத்தவன் –அவன் விபூதியில் ஆச்சர்யமான
பாதக பதார்த்தங்களுக்கு எண்ணில்லை –அன்றில் -தென்றல் -கடலோசை -என்றால் போலே சொல்லுகிறவற்றுக்கு ஒரு எண்ணில்லை இறே –
————-
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி வானவருச்சி வைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்—9-5-4-நாலாயி:1791/1
கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதி விஷயமாய் பாதகம் ஆகா நின்றது –படுபாடு அல்லது அறியாத நாகுகளோடே அணைந்து தான் தன்னுடைய ஸ்த்ரீத்வாதி களாலே இறாய்க்க
அவன் மேல் விழும்படிக்கு ஸ்மாரமாகா நின்றது –கறுத்த ககுத்தை உடைத்தாய் இருக்கிற
ஒரு மணி யாய்த்து – மற்று உள்ள பாதக பதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லை யாயிற்று –அந்த மணி யோசை யாகிறது -அல்லாதவை போல் அன்றிக்கே
செவி வழியே புகுந்து பாதகம் ஆகா நின்றது இறே – இது ஒழிந்தது அடைய உறங்கிற்று இறே-தொட்டார் மேலே தோஷமாம் படி இருக்கிற ஹிருதயத்தை தள்ள ராத்ரியாக நித்தரை இன்றிக்கே நோவு படா நின்றேன் –அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –அவனுடைய பெருமை பேசி
ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில் ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது-பெரு விலையனான ரத்னங்களை நீரானது கொழித்து எறடா நிற்பதான
பர்யந்தத்தோடே கூடின திருக் குறுங்குடியிலே கொடு போய் பொகடுங்கோள் –
————
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு – கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/3/4
திண்ணியதாய் இருந்துள்ள இமில் உண்டு ககுத்து – அத்தை உடைத்தான வ்ருஷபத்தின் உடைய கழுத்தில் மணியும் அவிழ்த்து விடுவார் இல்லாமையாலே மணி தானும் திண்ணியதாகலாம் இறே –பிராமணன் உடைய குழல் ஓசைக்கு கேளாள் காணும் இவள் –
இடையன் உடைய இனிதான குழல் ஓசையும் – அதினுடைய ரஸ்யத்தை எவ்வளவு உண்டு -அவ்வளவும் பாதகமாம் இறே –இவை பாதகமாம் படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்து ஏறக் கொடு போய் பொகடுங்கோள் –
கொண்டல் போலேயும் நீல மணியினுடைய நிறம் போலேயும் இருக்கிற
நிறத்தை உடையனானவன் வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடுங்கோள் –
—————
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம் -–9-5-6– நாலாயி:1793/3
வாயால் போந்ததைச் சொல்லி சிரித்தார்கள் ஆகிலும்-ஸ்த்ரீத் வாதிகளை காற்கடைக் கொண்டாள்-அவனை மறந்திலள்-என்றால் போலே சில வற்றைச் சொல்லி சொல்லி சிரித்தார்களே யாகிலும் –அவர்கள் நம்முடைய ஸ்ம்ருதிக்கு உத்போதகர் ஆனார்களாம் இத்தனை-மறுப்பு நம் கையில் கிடக்கும் படியோ – அவன் வடிவு படைத்தது –மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் – கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –
———
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற – —9-7-2–நாலாயி:1809/3
நெருங்கின மணிகளால் செய்யப் பட்ட முடியை உடையரான பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் –
(முடியைச் சொன்னது முடி இழந்த யது குலத்தில் பிறந்ததைக் காட்டி அருள )
————-
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து -—9-8-1– நாலாயி:1818/3
நல்ல சந்தனத்தோடே கூட பெரு விலையனான ரத்னங்களையும் அந்த சந்தன மரங்களையும் வேரோடு பறித்து விழ விட்டு பெரிய ரத்னங்களையும் கூடக் கொண்டு –
தர்ச நீயமான மயில் தழையையும் உருட்டிக் கொண்டு அருவிகள் ஆனவை நெருங்கி –வந்து -இழியா நின்றுள்ள பர்யந்தத்தை உடைத்தான திருமலையை வணங்குவோம்-வா என்னோடே ஒரு மிடறான நெஞ்சே –
—————-
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – 9-8-3–நாலாயி:1820/4
இந்த வேங்கையை உடைத்தான வெளி நிலத்திலே அங்கு உள்ள குறவர் ஆனவர்கள் தம்தாமுடைய எறி கவனையிலே வைத்து எறிந்த மணி யினுடைய ஒளி எங்கும் ஒக்க பரம்பா நின்றுள்ள பர்யந்தத்தை உடைய மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —
—————
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1
த்விதா பஜ்யேய மப்யேவம் ந நமேயம் -என்கிறபடியே இரண்டாக பிளக்கிலும் வணங்கேன் -என்று இருந்த ராவணன் யுத்த பூமியிலே மடிய – தேவதைகள் உடைய வரத்தாலே திண்ணியதாய் ரத்ன மயமான முடி பத்தும் புற்று மறிந்தால் போலே கிடந்தது துடிக்க –
———–
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து -9-8-7- நாலாயி:1824/3
மரகதத்தின் உடைய ஒளியை யுடைத்தாய் கொண்டு ஆகாச அவகாசம் அடையும் படி ஓங்கி இருந்துள்ள சோலையில் உள்ளில் நீலப் பாறைகளில் உண்டான வழியே போய்ப் புக்கு –மான்கள் ஆனவை-அங்கு உள்ள தேன்களைப் பருகா நின்றுள்ள பர்யந்தத்தை உடைய –
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
————-
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் -–9-8-10– நாலாயி:1827/1
பரிமளம் படிந்தாப் போலே வண்டுகள் மது பானம் பண்ணா நின்றுள்ள பர்யந்தத்தை உடைத்தான திருமலையிலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அழகரை –
————
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு – —9-10-3-நாலாயி:1840/1
கிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய் கலி காலத்தில் ஏதேனும் வடிவு கொண்டாலும் விரும்புவார் இல்லாமையாலே கறுத்த நிறத்தை உடையவனாய்
த்வாபரத்திலே நீல நிறத்தை உடையனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
சர்வாதிகனாய் வைத்து –
————
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – –மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர்-9-10-5-நாலாயி:-1842/1/3
மரக் கலங்களை உடைய மகார்ணவம் போலேயுமாய் ஸ்லாக்கியமான நீல மணி போலே இருக்கும் திரு நிறத்தை உடையனாய் –மேகத்தில் சென்று கிட்டி மணி மயமான மாடத்திலே
கட்டின வெள்ளைக் கொடி ஆகாசத்தின் மேலே உயரப் பரந்து ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற சந்த்ரனைச் சென்று ஸ்பர்சியா நிற்கும் மிகவும் உயரா நின்ற சந்த்ரனை அணையா நின்ற
திருக் கோட்டியூரானே –
————-
பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர் – —10-1-2–நாலாயி:1849/1
பொன் போலே ஸ்ப்ருகணீயனாய் பெரு விலையனாய் ஸ்ரமஹரமான மணி போலே ஸ்லாக்கியமானவனாய் –
——–
முத்தினை மணியை மணி மாணிக்க – –10-1-8–நாலாயி:1855/3
முத்து போலே உடம்பிலே அணைந்தால் விடாய் கெடும்படி குளிர்ந்து இருக்குமவனை
நீல மணி போலே கண்ணுக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கை
பெரு விலையனான மாணிக்கம் போலே – தர்ச நீயமாய் இருக்கும் வடிவு அழகு அன்றிக்கே
இதுக்கு எல்லாம் சர்வ காரண பூதனாய் இருக்குமவனை திரு விண்ணகர் காண்டுமே –
————
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – 10-2-7-நாலாயி:1864/4
நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-
—————-
ஓங்கு ஓத_வண்ணனே சப்பாணி ஒளி மணி_வண்ணனே சப்பாணி – -10-5-1–நாலாயி:1888/4
புகரை உடைத்தான மணி போலே இருக்கிறவனே – (அவதார பிரயோஜனம் பெற்றோமே -ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண அன்றோ போந்தது )வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –
————-
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து -—10-8-5- நாலாயி:1926/2
ஆபரண கோடியோடு ஒக்க சொல்லுகையாலே அதுவும் அழகுக்கு உடலாம் இத்தனை –
பெரு விலையனான ரத்னங்களை உடைத்தான திரு வாபரணங்களைச் சாத்தி –
——–
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – –10-9-7-நாலாயி:1938/3
முக்த்தமான மானின் உடைய நோக்கோடு யுடையளாய் (நோக்கு ஒத்த நோக்கை உடையளாய் ) விலஷணமான நிறத்தை யுடையளாய் இருக்கிற இவளுடைய முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை –
—————
மா வாய் கீண்ட மணி_வண்ணனை வர – -—10-10-3-நாலாயி:1944/3
பகாசுரன் உடைய வாயைக் கிழித்த விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும்
விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு –(ஸுலப்யமும் ஸுந்தர்யமும் மணி வண்ணன் )
——————-
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி_வண்ணன் அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே – கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே-—11-2-3-நாலாயி:1964/1,2,4
அவன் வர விட்ட மல்ல வர்க்கத்தோடு கம்சன் முடியும்படி என்று விரோதி போகப் பெற்றதாலே ஸ்ரமஹரமான வடிவும் தானுமாய் இருக்கிறவன் –அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை –சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே –வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-(பசு மாட்டைத் தொடர்ந்து ) அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது
ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது -( அராஜகமான இடமாயிற்றே )
————
மா மணி_வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே -—11-2-7- நாலாயி:1968/4
சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் – தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம் அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது (முலைகள் பக்தி -அவனுக்கே என்றே இருக்குமே-கண் -ஞானம்-இடை -வைராக்யம் )
—————
கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே -11-6-9– நாலாயி:2010/4
மேகம் போலே உதாரனான கையை உடையனாய்-மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன்-ஸ்ரமஹரமான திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே –
————–
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை – -11-7-2–நாலாயி:2013/3
துளை பட்டு சிலர் விநியோகம் கொண்டு அன்றிக்கே அனுபபுக்த்தமாய் ஒளி மழுங்காதே
ஜாதியான ரத்னத்தை –
————–
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும் –—11-7-5– நாலாயி:2016/1
பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை-நெஞ்சாலே முகக்கலாய் இருக்கை –குளிர்ந்து ஸ்ரமஹரமாய் இருக்கை –
———–
மணியே மணி மாணிக்கமே மதுசூதா – -11-8-8–நாலாயி:2029/3
கண்டார் கண் குளிரும்படி நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே –
கேவலம் அவ்வடிவு அழகேயாய் அஸ்ரேஷ்டமதாய் இருக்குமது அன்றிக்கே-பெரு விலையனான ரத்னம் போலே ஸ்வாபாவிகமான மேன்மையை உடையவனே –இப்படி நீர் வடிவு அழகை அனுபவிக்கும் இடத்தில் உம்முடைய விரோதியைப் போக்குவார் ஆர் என்ன –
அதுவும் தேவரே – மதுவாகிற அசுரனைக் களை எடுத்தால் போலே தேவர் என் விரோதியைப் போக்கித் தர நான் அனுபவிக்கும் அத்தனை –
—————-
ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப – 2-நாலாயி:2033/2
ஆஸ்ரித விரோதியான ராவணனைக் கொன்ற படியாலே செருக்கி பொன் போலே புகர்த்து
நல்ல மணித் திரள் போலே போக்யன் ஆனவனை –அழகிய நீல ரத்னங்களைக் குவித்து வைத்தாற்போல் இனியனாயிருப்பவனென்கிறது எழில் மணித்திரளை யென்றதனால்.-
—————–
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – -6-நாலாயி:2037/2
இப்படி செய்கைக்கு ஹேது என் என்னில் –கோவினை –நிர்வாஹகன் ஆகையாலே-குடந்தை மேய – இன்னும் சம்சாரிகள் இடர் பட்டார் உண்டாகிலும் கை கழியப் போக ஒண்ணாது என்று திருக் குடந்தையிலே படுக்கை பொருந்தி பள்ளி கொண்டவனை –குரு மணித் திரளை – ஸ்ரேஷ்டமான நீல ரத்ன சமூஹம் போலே புகர்த்து குளிர்ந்த -வடிவு அழகை உடையவனை –
————-
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி -1– நாலாயி:2052/3
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-மணி வுருவில் பூதம் ஐந்தாய் –-உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணி வுருவில் –பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோ மயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் ஸூத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.-மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை(பகவத் ஸ்வரூப திரோதான கரீம் )வ்யாவர்த்திக்கிறது
அதவா-மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்-ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்-அசாதாரணமான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தோடு வாசி அற-இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –பிரதான புருஷேச்வர -(ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் )என்னக் கடவது இறே–
————
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்-9- – நாலாயி:2060/1
ஓர் ஆஸ்ரயன் இக் கரையிலே திருப் பள்ளித் தாமத்தை சமைத்து இச் செவ்வி மாறுவதற்கு முன்பே போய்ச் சாத்த வேணும் என்று நினைத்து கடல் வற்றினால் அல்லது நமக்கு வழி போக ஒண்ணாது என்று கடலை இறைக்கத் தொடங்க-இவனுடைய ஆதர அதிசயத்தைக் கண்டு கடல்கரையிலே இவன் ஆக்கின திருவிளை ஆடல் சூழலுக்கு உள்ளே வந்து
தரைக் கிடந்த இடமாய்த்து –திருக் கடல் மலை –ஆனால் முந்நீர் மல்லை -என்ன அமைந்து இருக்க கீழில் விசேஷணங்களுக்கு பிரயோஜனம் என் என்னில் –
மரக்கலம் ஆகிறது த்வீபாந்தர வஸ்துவை த்விபீந்தாரத்திலே வந்து தள்ளும் அது இறே –
அப்படியே பரமபத நிலயனான தன்னை லீலா விபூதியிலே கொடு வந்து பொகட்டது ஆய்த்து ஆஸ்ரித வாத்சல்யம் –இதுக்கு –மரக்கல ஸ்தாநீயம் -ஆஸ்ரித வாத்சல்யம் –
மா மணி -மகார்க்கமான மணி –-கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்றும்
வானவர் உச்சி வைத்த பெரு மணி -என்றும் சொல்லுகிற மாணிக்கத்தை இறே கொடு வந்து தள்ளிற்று –
————
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – 11-நாலாயி:2062-/3
மட்டு விக்கி –1-பெரிய அபிநிவேசத்தோடே மது பானம் பண்ண இழிந்து
விடாயின் மிகுதியாலே விக்கின படியைச் சொல்லுதல்-2-மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணின இடத்திலும் அபிநிவேசம் மாளாத படியாலே தரித்து -இழிய அவகாசம் இல்லாத படியாலே -விக்கின படியைச் சொல்லுதல் –3-சாரஸ்யத்தாலே உள் இழியவும் மாட்டாமல் உமிழவும் மாட்டாதே நடுவே நாக்கடியிலே வைத்து இருக்கிறபடியைச் சொல்லுதல் –4-மனுஷ்யர்க்கு அன்ன பானாதிகள் இரண்டும் தாரகம் ஆகையாலே
அன்னத்தாலே விக்கினால் நீராலே சமாதானம் பண்ணலாம் –மதுவ்ரதம் ஆகையாலே மதுவினால் விக்கினால் மதுவை இட்டு ஆஸ்வசித்தல் தவிருதல்-செய்யும் இத்தனை ஒழிய
த்ரவ்யாந்தரத்தால் ஆஸ்வசிப்பிக்க ஒண்ணாது இறே –பதிம் விஸ்வஸ்ய -(தைத்ரியம் நாராயண வல்லி) என்கிறபடியே பதி வ்ரதைக்கு வந்த ஆபத்தை பதி தானே போக்குமது ஒழிய விஷயாந்தரங்களால் பரிஹரிக்க ஒண்ணாதே இறே-மணி வண்டு –
ரசாயன சேவை பண்ணின படியாலே –நரை திரை மூப்பு அற்று இருக்கிறபடி –
அரும்பினை அலரை -என்கிற விஷயத்துக்கு ஸ்மாரகமாய் இருக்கிறத்கு ஆய்த்து –
இவளுடைய மயிர் முடியைக் கண்டு –தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -என்கிறபடியே
ஒரு தெய்வ வண்டு படும் அலமாப்புக்கு ஸ்மாரகமாய் இருக்கிறது ஆய்த்து – இவள் குழலிலே மதுவாலே வண்டுகள் படும் அலமாப்பு –
————
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – -30-நாலாயி:2081-/3
இவர் தரித்த வாறே ஊரும் ஸ்திரமான படி –கல்பாவசாநத்து அளவும் அழிவு இன்றிக்கே
ஸ்லாக்கியங்களான ரத்னங்களாலே செய்யப்பட மாடங்களை உடைத்தான -திருமங்கை –பஷியின் காலில் விழுந்தவர் திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனார்-
————-
பேர எறிந்த பெரு மணியை கார் உடைய – -38-நாலாயி:2119/2
அவை ஒளிக்குச் சலித்து மலை பேர்ந்தாப் போலே பேரும்படிக்கு ஈடாக எறிவர்கள் ஆய்த்து-ஒரு மலையின் மேலே ஒரு மணியை விட்டு எறிந்தாப் போலே யாய்த்து-மஹார்க்கமான மணிகளை விட்டு எறிகிறபடி-இத்தை – காருடைய மின்னென்று புற்றடையும் – இம் மணிகள் சென்று தாக்கின வாறே யானையின் கறுப்பும் அவற்றின் புகருமாகத் தம்மிலே விரவித் தோற்றுமே-அத்தை மேகத்தோடு கூடின மின்னாகக் கருதி அதுக்கு அனந்தரமான இடிக்கு பயப்பட்டுத் தனக்கு ரஷை யுள்ள பூமியிலே புக்கு ஒதுங்கா நின்றது
கார் உடைத்தான மின் என்னும் படி மேகத்தின் உடம்பிலே இறே மின் தோன்றுவது-திருமலையோடு-அங்கு ஊருகிற சர்ப்பத்தோடு-சஞ்சரிக்கிற யானையோடு-அத்தை எறிகிற குறவரோடு-அதுக்கு சாதனமான மணியோடு-இதுக்கு அஞ்சி அது போய்ப் புகுகிற் புற்றோடு வாசி அற இவர்க்கு எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து-
———-
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – –53–நாலாயி:2134/3
மங்கள தீபம்-அணி விளக்கு -என்று பாடமான போது அழகிய தீபம் -என்னவுமாம்-ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்னும் போது மங்கள தீபமாய் இருக்கும்
—————-
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால் – 74–நாலாயி:2155/2
பஸ்மச் சந்த -என்று பஸ்மத்தைத் தரித்து பிராயச் சித்த வேஷியாய் இருக்கும் அவன் –கண்டார்க்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கும் இவன் –
—————
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா – 4–நாலாயி:2185/2
அபி நிவேசம் ஆகிற உஜ்வலமாகா நின்ற ரத்னங்களும் வைரங்களும் ஆகிற அல்லியையும் தாதியும் சேர்த்து யுண்டாக்கி-திகழா நின்றுள்ள மணியும் வைரமும் ஆகிறது -பக்தி விசேஷமாய் இருக்கிறபடி-இப்படி உபமான ரஹிதமாய் இருப்பதொரு பாவ புஷ்பம் ஆகிற தாமரைப் பூவை தரித்துக் கொண்டு பணிந்தேன் -ஆஸ்ரயித்தேன்-ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் – மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்-இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ச்நேஹத்தை-மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை-நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2–பக்தியைப் பாவ புஷ்பமாக நிரூபிக்கைக்கு காரணம் பெரிய பிராட்டியாரோடு எம்பெருமானை அனுபவிக்கையால் பிறந்த விபாகம்-அன்பே தகளியா -என்று ஒரு விளக்கை ரூபித்தால் போலே ஒரு புஷ்பமாக ரூபித்து அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்
————
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து – 31-நாலாயி:2212/4
அவர்கள் நீல ரத்னம் போலே குளிர்ந்து இருந்துள்ள வடிவை மகிழ்ந்து காணப் பெறலாம்
—————–
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே ––41-– நாலாயி:2222/3
அவர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்தது அவ் வடிவு அழகைப் போலே காணும்
நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவன் திருவடிகளையே நெஞ்சே நீ மறவாதே கொள்-
——————–
மணி திகழும் வண் தடக்கை மால் -46- நாலாயி:2227/4
நீல மேனி போலே ஸ்ரமஹரமான வடிவையும் உதாரமாகச் சுற்றுடைத்தான திருக் கைகளையும் -யுடையனான சர்வேஸ்வரன் – தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-மால்-சர்வாதிகன் -பிச்சன் என்றுமாம்-
————
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம் -51– நாலாயி:2232/1
நெஞ்சே -நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய திருவடிகளைப் புத்தி பண்ணு கிடாய் –மறக்கலாய் இருக்கிறதோ -தோற்று அடியிலே விழு –
——–
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல – -72-நாலாயி:2253/3
நீல மணி போலே இருக்கிற நிறத்தை யுடையனான திருவேங்கடமுடையானுடைய
செவ்வித் திருவடிகளிலே கிட்டும்படி -அது செய்யும் இடத்தில் –வேங்கடவன் பேராய்ந்து-கொண்டு-திருவேங்கடமுடையானுடைய திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு
இது என்ன நீர்மை என்று கொண்டு-அவன் திருவடிகளிலே கிட்டும்படி போதை யணிவோம்-
பூவைக் கொண்டு ஆஸ்ரயிப்போம்-
————-
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் -–86- நாலாயி:2267/3
ஸ்வ யத்னத்தால் உடம்பு நோவப் பண்ணின தபஸ் ஸால்-ஸ்வ யத்னத்தால் காண்பரிய மேக– மேகம் போலேயும்-நீல மணி போலேயும் ஸ்ரமஹரமான வடிவை யுடையவனை –அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ் ஸூ பண்ணிக் கண்டேன் – அவன் காட்ட கண்டேன் இத்தனை இறே-ஒரு தபஸ்ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-
————–
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய் – 95-நாலாயி:2276/2
சிறுக்கனுக்கு விரோதி போகப் பெற்றது என்று நீல மணி போலே குளிர்ந்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் – அதி ஸூ குமாரமாய் -ஸ்லாக்யமாய்-இருக்கை –
————-
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ -96- நாலாயி:2277/1,2
ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்-அவனே கருட வாஹனன் –அணியப்பட்ட மணிகளையும் துத்தி என்று பொறியையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுமவன் –அனந்த சாயி – இவை இரண்டாலும் சர்வேஸ்வரன் -என்றபடி –எங்கள் பிரான் –அத்தியூரான் –அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் – எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –
————
திரு மா மணி_வண்ணன் தேசு – -9-நாலாயி:2290/4
காந்தி மிகுத்ததான பெரு விலையனான ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்-ஸ்ரீமத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி-சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார் இறே-புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும்
இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –
————-
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு – 15-நாலாயி:2296/2
அத் திவலைகள் திரு மேனியிலே படாதபடி தாழ்ந்த பணி மணிகளாம் பணத்தில் உண்டான ரத்னங்களாலே –அதனாலே அலங்க்ருதனான திரு வநந்த ஆழ்வான் ஆகிற பள்ளி மெத்தையிலே –கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்-
————
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – 37–நாலாயி:2318/3
நவ ரத்னன்களை உடைத்தான ஆபரணங்களையும் திரு வாரத்தையும் உடைத்தாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள திரு மார்வை உடையனானவன் – பன் மணிப் பூணாரம் -என்று ஒரு சொல் ஆகவுமாம்-
———–
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் – 41-நாலாயி:2322/1
அழகிய ரத்னங்களாலே சமயப் பட்டு இருப்பதாய்-அங்குத்தைக்குத் தகுதியான
திரு வபிஷேகமானது-அண்ட பித்தி அளவும் சென்று கிட்டி –
—————-
மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி -42- நாலாயி:2323/2
விரோதியைப் போக்குகையாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு
நின்றவன் –அப்போதை அழகு –
—————-
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் —மணி நீர் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் – -50- நாலாயி:2331/1/3
ஆழ்ந்து நிர்மலமான நீரை உடைத்தாய் இருந்துள்ள சுனையிலே வளர்ந்த –
பழையதான நீரை உடைத்தான மடுவிலே மனுஷ்யர் முகம் காணாத படி வளர்ந்த –பெரிதான முதலையை நீர்ப் புழு என்று பாராதே சினத்தோடு கொன்றான் –
பீஷ்மாதிகள் மேலும் விடாத திரு வாழியை இறே-ஒரு முதலையின் மேலே விட்டது –
அதுக்கடி ஆஸ்ரித வாத்சல்யம் -இருந்தபடி –இத்தை முடித்துப் பின்னை தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து – ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –ஆபரண ரூபமான நீல நிறத்தை யுடையனாய்ச் – சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடியை உடையனான – சர்வேஸ்வரன்- மா முதலை கொன்றான் –தன் விடாய் தீர்ந்தான் –
————–
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள் – 59-நாலாயி:2340/3
திருத் தோளில் இட்ட மாலையானது சூழப் போந்து திருவடிகள் அளவும் கிடக்கும் படி –
மை போல் என்கிறது திருமேனிக்கும் போரும்படி உபமானம் தன்னையே சிஷிக்கிறது-சூழ்ந்திரு என்று மேலோடு கூட்டி இவ் ஒப்பனை அழகைக் கண்டு இறையும் அகலகில்லேன் -என்று சூழ்ந்து போந்து பெரிய பிராட்டியார் விட மாட்டாதே திரு மேனியிலே உடையவன் -என்றுமாம்-பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணும் படியை சொல்லிற்று ஆகவுமாம் –காந்தி மிக்குப் பெரு விலையனான ரத்னத்தோடே ஒத்த நிறத்தை யுடையவன்-திருவையும்
மா மணியையும் திரு மார்விலே யுடையவன் -என்றுமாம்-பெரிய பிராட்டியாரை யுடையனாய்
ஸ்ரமஹரமான வடிவையும் உடையவன் –
————
காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் ஏய்ந்த பண கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த -66- நாலாயி:2347/1,2
திரு வநந்த வாழ்வான் உடைய பணங்களில் உண்டான ரத்னங்களின் உடைய
ஒளிகளானவை இருளைப் போக்கும் போது காய்ந்து போக்கா நிற்கும் ஆயத்து
————
நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள் -80- நாலாயி:2361/1
தாமச தேவதையாகை யாலே-அவனை ஆஸ்ரயிக்கையாலே – சர்வேஸ்வரன் என்று அறியாதே எதிரிட்டு நின்ற –நிரைகளை யுடைத்தான மணிகளை யுடைய தேரின் மேலே வந்து தோற்றின வாணனுடைய-
————
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி -87- நாலாயி:2368/1
கண்ணனே – கலந்து மணி இமைக்கும் நின் மேனியை மரகதமே மலர்ந்து காட்டா நின்றது –கிருஷ்ணனே – ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம்-ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம்-ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –
————–
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் -96- நாலாயி:2377/1
வாழ்த்துகையே ஸ்வரூபமான வாயை யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –
————-
மலைப் பேர் அருவி மணி வரன்றி வந்து இழிய யானை-39- – நாலாயி:2420/3
மலையிலே பெரிய அருவிகள் மாணிக்கங்களைக் கொண்டு இழிய- மின்னித்து என்று ஆனைகள் பயப்பட்டு – வரை எனப் பெயர் தருகிற பெரும் பாம்பின் வாயிலே புகும்படியான வெற்பைப் பிராபிக்க வென்று கூடல் இழையா நிற்பன் –மாணிக்கத்தின் ஒளியை நெருப்பு என்று கருதி யானை வெருவும் – மின்னாகக் கருதிப் பாம்புகள் புற்றிலே ஒடுங்கும் -என்னவுமாம் –மழைப் பேரருவி -என்று பாடமான போது நிரந்தர வர்ஷத்தாலே வெள்ளம் இட்டுப் பெருகுகிற திரு அருவிகள் ஆனவை என்று பொருளாகக் கடவது –
—————
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று – 46-நாலாயி:2427/1
பெரிய சந்த்ரனை அழகிய விளக்காக வைப்ப திருவேங்கடமுடையானுக்கு என்றே
எப்போதும்-வாங்குகைக்குக் கை நீட்டா நின்றுள்ள யானையை எங்கும் வேடு சூழ்ந்து கொள்ள அவர்களோடு எதிர்த்துக் குறவர் வில்லெடுக்கும் திரு மலையை நாட்டில் உள்ளார் சூழ்ந்து ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் நன்று –
—————–
நன் மணி_வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும் பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் –-47- நாலாயி:2428/1
ஸ்ப்ருஹணீயமான நிறத்தை யுடையவனுடைய ஊர் -ஆளியும் -மிடுக்கை யுடைத்தான சிம்ஹமும் –நாநா வர்ணமான மணி நீரோடு சஞ்சரித்து அருளுகிற காடும் வானரமும் வேடுமுடைய வேங்கடம்-திரு வருவிகள் பெருகப் புக்கால் இவை எல்லாவற்றையும் உடைத்தாய் இருக்கை-ருக்கு இறாய்த்து மரங்களிலே ஏறுகிற வானரமும் வேடரும் -என்றுமாம்
————-
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ -9- நாலாயி:2486/2
அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை-எவரும் பிரிய வல்லரல்லர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவரைப் பிரிந்து தங்களுக்குத் தரிக்க ஒண்ணாமை –
———–
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை-12 – நாலாயி:2489/1
விலஷணமான நிறம் போகிறபடி-மாமைத் திறத்துகொலாம் -திரு விருத்தம் -5- என்று ஆசைப் பட்ட நிறம் போகிறபடி-மணி மாமை குறைவிலமே -ஏறாளும் -அவன் விரும்பாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாம் என்றாரே -ஐஸ்வர்யம் த்யாஜ்யம் ஒரு நாயகமாய்
கொண்ட பெண்டிர் லோக யாத்திரை த்யாஜ்யம் -காண காணச் சரக்கு வாங்குகிற படி
இவ்வளவிலே (அவன்)வரிலும் மீட்கலாமாய் இருக்கிறபடி – (போய்க்கொண்டே இருக்கிறதே -வர்த்தமானம் )மணி மாமை என்று தன் நிறத்தைத் தானே கொண்டாடுவான் என் என்னில்-ஒரு நிறமே-ஒரு எழிலே என்று அவன் கொண்டாடும் படிகளை கேட்டிருந்த படியாலே தனக்குத் தான் அன்றியிலே அவனுக்குக்காகத் தான் இருக்கையாலும் –அத்யந்த சேஷத்வம் -தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் அறிந்தவர்-அவன் கொண்டாடினவற்றைக் கொண்டாட வேண்டுமே
——–
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் -31- நாலாயி:2508/2,3
திரு மலை நோக்கிப் போகும் மேகங்காள் !- என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்- சொல்லுகிறிலிகோள்–திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே
போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டிகோள் ஆகில் உங்கள் திரு அடிகளை என் தலையில் வையுங்கோள் என்றால் வைப்புதிகளோ ? திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்கக் கிடைக்குமோ ?-அழகிய பொன்னாலும் பெரு விலையாலும் மாணிக்கங்களால்
(பொன்னில் அழுத்தப்பட்ட மா மணிகள் என்றுமாம் ) திக்குகள் உண்டான இருளை சுரமேற்று நிற்பதும் செய்து- (சுரமேற்று நிற்பதும் செய்து-குகைக்குள் போகச் சொல்லி விரட்டி விடுவது ) வலிதான தாளை உடைத்தாய் இருக்கும் திரு மலையிலே —
சிமயம்-சிகரங்கள் என்றுமாம் —மலைச் சிகரங்கள் என்றும் சிகரங்களின் நடுவில் என்றுமாம்-
—————-
மைய வண்ணா மணியே முத்தமே என்தன் மாணிக்கமே –84– நாலாயி:2561/4
கண்டார் கண்ணிலே அஞ்சனம் எளிதினால் போல் குளிர்ந்து இருக்கும்படி –மைப்படி மேனியான் அஞ்சன வண்ணன் அன்றோ அவன் -அப்படியே இருக்கச் செய்தே -முடிந்து ஆளலாய் இருக்கிறபடி –உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி இருக்கை -பெரு விலையனாய் இருக்கை -மைய வண்ணா குளிர்ச்சி – கண்ணுக்கு மட்டும் இது-முத்தமே -குளிர்ச்சி -உடம்பிலே ஏறிட்டுக் கொள்ளும்படி அன்றோ-இவ் வாழ்வாருக்கு மோஹம் ஆவது –எத்திறம் -என்ற இடத்தில் சௌலப்யம் குணம் மாத்ரம் அனுபவம்-
முகில் வண்ணன் விஷயத்தில் அழுந்தின அனுபவம் மாத்ரமே – அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே-கிளப்பி விட -தேடிக் கூப்பிடுகிறார் –அபரிச்சின்ன வைபாவனாய் இருக்கச் செய்தேயும் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த சுலபனாய்-கண்டார் கண் குளிரும்படி -சம்சார தாபம் ஆறும்படி –-அஞ்சன கிரி போன திரு மேனி உடைய-சௌலப்யம் அனுபவித்து –
அவனைக் காண வேணும் த்வரையில் அருளிச் செய்கிறார் –சௌலப்யம் அழகையும் காட்டி -கோபிமார் திரளில் ரசக் கிரீடை பண்ணின படியையும் தண்ட காரண்யத்தில் ருஷிகள் கோஷ்டியில் வீற்று இருந்த படியையும் – சகல திவ்ய ஆயுத சோபை உடன் – காண ஆசை கொண்டு அருளுகிறார் –
————
மருங்கு ஓதம் மோதும் மணி நாக_அணையார் -55- நாலாயி:2639/1
கடலில் திரைத் திவலை துடை குத்தத் திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவர்-அருகே செல்ல அரியரேலும் நமக்கு ஒருபடிப்பட ஹ்ருதயத்திலே எப்போதும் உளர்-
———
மணி காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் -–62– நாலாயி:2646/3
நக்ஷத்திரங்கள் ஆகிற கம்புகளையும்-உடு பதி என்னுமா போலே நக்ஷத்ரங்களுக்கு ராஜாவான சந்த்ர சுக்ரர்களைக் குழலாக யுடைத்தான நித்யமாய்ப் பெருத்த ஆகாசமாகிற குடைக்கு நீல மணியாலே சமைந்த தொரு காம்பு போலே வளர்ந்து பூமியை அளந்தான்-
————-
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் — நாலாயி:2672/39
மாறாத ஜல சம்ருத்தியையும் யுடைத்தான-பெருகி வாரா நின்ற -திருப் பொன்னி மஹார்க்கமான ரத்னங்களைக் கொழித்து ஏற வருகிற
————–
வார் ஆர வீக்கி மணிமேகலை திருத்தி –கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் நாலாயி:2677-78/2
வார் சபலமாம் படி வீக்கி -என்னுதல்-வாராலே ஆரக் கட்டி -என்னுதல்
கொல்லும் யானைக்கு முகபடாம் இட்டால் போலே –-இக்கச்சுக் கிடந்தது இல்லையாகில் அவனைப் பிச்சேற்றலாம் கிடீர் -என்கிறாள் –மணிமயமான மேகல ஆபரணத்தை அமைத்து
அதாவது-பிராட்டி யமுனையில் தெப்பம் ஏற ஒருப்பட்டால் போலே அவனுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணின படி –கொல்லும் யானைக்கு முகபடாமிட்டால் போலே முலையின் அழகைக் கச்சாலே மறைத்திலேன் ஆகில் நான் பட்டது அவன் படும் கிடீர் -என்கை -பரியட்டத்தைப் பேணாதே புறப்பட்டேனாகில் என் அவஸ்தை அவனுக்குப் பிறக்கும் கிடீர் -என்கை –
அவனோடு கலந்து பெற்ற நிறமும் அத்தாலே தரித்த வளைகளும்-கண்டிலேன் –
தன் நிறத்தை தான் காரார் மணி நிறம் -என்பான் என் என்னில்
நீல மணி போலே ஒரு வடிவு இருக்கும் படியே -என்று அவன் வாய்ப் புலத்தக் கேட்ட வாசனையாலே காரார் மணி நிறம் -என்று ஸ்லாக்கிகிறாள்-எதிர்த்தலையை இக்காட்சி காணக் கடவ நான் அத்தலை இத்தலையாய் நான் காணேன்-ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் -என்று எப்போதும் அவன் விரும்பிக் கொள்வது இவை இறே –
—————
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
செவ்வி மாறாத தாமரைப் பூவைப் பிடித்த கையத்தனையும் ஒழிய நீரிலே அழுந்தினவன் ஆயிற்று-சர்வ ஸ்வாமி யானவனே -விடாய்த்தார்க்குத் தண்ணீர் வார்க்குமவன் அன்றோ நீ -உன்னுடம்பை ஆசைப்பட்டாருக்குக் கொடுக்குமவன் அல்லையோ நீ-
———–
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன் – நாலாயி:2699/3
இப்போது பவ்யமான நெஞ்சே -என்கிறது அன்று-அறிவு மாண்டு கிடக்கிற நெஞ்சே -என்றபடி – அவனை நோக்கி எல்லாம் உண்டாயிற்றே -எழுந்திராய்-சென்று என்றபடி
வரவு செலவைக் காட்டும் இறே –அவன் பக்கலிலே சென்று–தன்னைப் பிரிந்தார் மடல் எடுக்கும்படி பண்ண வல்ல வடிவு படைத்தவனே-
———-
கார் ஆர் மணி நிற கண்ணனூர் விண்ணகரம் – நாலாயி:2707/1
பரம பதத்தை விட்டுக் குறைவாளர்க்கு முகம் கொடுக்கத் திரு விண்ணகரிலே வந்தான்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழல் – என்று பிரசித்தம் இறே –
குறைவாட்டியாய் இருக்கிற எனக்கு முகம் தந்தானோ இல்லையோ -என்று என் வடிவைக் காட்டுகிறேன் –
—————
சென்னி மணி குடுமி தெய்வ சுடர் நடுவுள் –மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச – -நாலாயி:2711/2
பணா மணியினுடைய கொழுந்து விட்டு ஓங்குகிற அப்ராக்ருத தேஜஸ்சின் நடுவே –
கங்கா தரங்கத்தின் உள்ளே இருக்குமவர் போலே –திரு மேனியின் நிறத்தால் வந்த இருட்சிக்கு கை விளக்குப் பிடித்தால் போலே இருக்கிற தாயிற்று – திரு மகர குண்டலங்களின் புகர்-மின்னா நின்றுள்ள ரத்னன்களை உடைத்தான மகர குண்டலம்-தன்னுடைய ஒளியைப் பரப்ப-
—————–
மன்னும் மணி தலத்து மாணிக்க மஞ்சரியின் – மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் – மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர – நாலாயி:2725-26-28-
மாணிக்கங்களைக் கொத்துப்-பூம் கொத்தாகத்த் தூக்கி-ஆடுவார் சாய்ந்து இருக்கை-தேவ ஸ்திரீகள் –நீரூட்டி வளர்த்தால் போலே கையாலே தடவி வளர்த்த-அந்த போக்யதையை அனுபவித்து –மேகம் இளைப்பாறும்-போக்யனான சந்திரனும் அப்படியே –பள்ளப் பாறை யுள்ள ஸ்தலம்-மாணிக்கத்தின் அழுக்கை கழற்றி-நிலை விளக்காக வைத்து –அடுத்து ஒரு கால் பார்க்க-கால தத்வம் உள்ளதனையும் வவ்வலிடும்படி பண்ணும்-படுக்கை படுத்த படி கண்டு வாய் புலர்த்த -நாநா வர்ணமாகப் பரப்பப் படுத்த படுக்கையிலே –காற்றைப் பிடித்து புகுரவிட வற்றாய் இருக்கை-வேண்டின போதே தானே திறப்ப –அவ்வழியே புகும் தென்றலைப் பேசுகிறது-அன்னங்கள் புக்கு அள்ளல் சேற்றை உழக்குமா போலே-தேனும் சுண்ணமும் தாதும் ஒன்றாக உழக்க –அத்தாலே அது துகளாய் ஒளி மிக்க நீலப் பாவின் சின்ன நறும் தாதை ராஜாக்கள் வளையம் வைக்குமா போலே வைத்து மந்தாரப் பூவைத் தோளில் தோள் மாலையாக ஏறிட்டு கற்பகத்துக்கு எழுதிக் கொடுத்த வண்டுகள் தன்னைக் கொண்டு எழுந்து போகும் படியாய் –
————
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் – நாலாயி:2734/2
ஸ்திரீகளோடே போக உபோகாதத்திலே கால ஷேபத்தைப் பண்ணி வேண்டிடத்து விளையாடுதல் -என்னுதல்- வேண்டிடத்து மன்னும் மணித்தலத்து என்று மேலே கூட்டுதல் –
நெடும் போது விளையாடி ஆயாசிக்கையால் உண்டான ஸ்ரமம் ஓர் இடத்திலே இருந்து ஆற வேண்டி இருக்கும் இறே–இவனுடைய புண்ய பலம் பக்வமாய் இருக்கையாலே இவன் இருக்க அபேஷிதமான விடத்தே அப்போதே அது உண்டாய் இருக்கும் –உண்டான நீல ரத்னங்களாலே சேர்த்துச் சமைக்கப் பட்டு இருந்துள்ள நிலத்திலே-மாணிக்கக் கொத்துக்களை இடையிடையே அழுத்துவார்கள் ஒரு பிரதேசத்திலே பொன் அரிதாய் இருக்குமா போலே அங்குத்தையார்க்கு ஆச்சர்யமாய் இருப்பது பளிங்கு யாயிற்று –நாகின் மேல் பிச்சேறின விடையினுடைய த்வனி யோவாதே மணி புலம்ப-அக்னி சகாசத்திலே தளிர் சுருங்குமா போலே சுருளாதார்- இது தான் இறாய்க்க-அது தான் மேலே விழும்படி –
————-
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் – நாலாயி:2748/2
புண்யத்துக்காகிலும் மஹா பாரதம் கேட்டு அறிவது இல்லையோ –பிரசங்காத் நினைக்க -தாம் ஈடுபட்ட படியாலே ஆச்சர்ய பூதன்-தம்மை அணைத்த தோளை நினைத்துக் கிடையாமை –வழி போவார் அடித்த படி -ஆழம் காலிலே ஈடுபட்டு –பாவியேன் -என்கிறாள் –
—————-
பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் – நாலாயி:2755/1
பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறாப் பூத்தால் போலே திரு மேனியில் உண்டான திருக்கண்கள் திரு வாய் திருக்கை திருவடிகள்-இருக்கும் படி
————-
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/1,2
வ்யசநிக்கைக்கு தானே தனி என்னும் அத்தனை –இனிய பாட்டுக் கேட்டால் படுமோபாதி படுத்த வற்றாய் இருக்கை- ஹ்ருதயத்திலே வருவதற்கு முன்னே செவியிலே சுட்டுக் கொடு வரும் –நாகானது வெருவி இருக்க அது தன்னையும் தன நசையாலே விட மாட்டாதே தொடருகையாலே மாறாதே த்வநிக்கிற தனி மணியினுடைய இனிய இசையை யுடைத்தான த்வனியும் –நாட்டார்க்கு இதினுடைய த்வனி செவிப் படா நிற்கச் செய்தேயும் ஜீவியா நிற்பார்கள் இறே-இவ் விரஹம் வேறு ஒருவர்க்கு இல்லையே – ஆகையாலே பாதகத்வம் இவளுக்கே இ றே யுள்ளது –
———
மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து – நாலாயி:2766/1
முடியைப் பற்றின போதே பிராணன் போயிற்று-பின்னை பிணத்தை இழுக்குமோபாதி தன்னுடைய பிராட்டி சாயக் கடவ மடியிலே-என்னைப் போல் அன்றிக்கே-முருட்டுப் பையலையோ மடியில் ஏற்றுவது -என்கிறாள் –நெடு நாள் ராஜ்ஜியம் பண்ணுவதாக முடி கவித்து இருக்கிற குஞ்சியைப் பற்றி அருகே வர இழுத்து-வரவீர்த்து -இற்றைக்கு முன்பு பரிபவப் பட்டு அறியாதவன் ஆகையாலே பிடித்த பிடியிலே பிணம் ஆனான் -பின்பு வர இழுத்துக் கொண்ட வித்தனை –
———-
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த – நாலாயி:2770/2
இவன் வாமனனாய் நின்றான்-திரு அபிஷேகமானது வளர்ந்து உபரிதன லோகங்கள் எங்கும்சென்று புக்கு வ்யாபரித்தது –எடுத்த திருவடிகள் திரு அபிஷேகத்தோடே இசலி வளர்ந்த படி-முடி பாதம் எழ -திருவாய் மொழி -7-4-1-என்றும்-அத்ய திஷ்டத்த சாங்குலம்-என்றும் சொல்லக் கடவது இறே
——–
பொன்னி மணி கொழிக்கும் பூம் குடந்தை போர் விடையை – நாலாயி:2772/2
அவதாரங்களைப் பண்ணி-பிரதிபஷ நிரசனம் பண்ணி இளைப்பாறச் சாய்ந்தவனை -திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை -திருவாய் மொழி -5-8-9-
—————
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் – நாலாயி:2773/6
பொன்னையும் மணிகளையும் கொண்டு ரத்னஆகாரம் தொடுப்பாரைப் போலே
அர்ச்சாவதார ஸ்தலங்களை சேர்க்கிறார்-பிரதி பஷத்துக்கு கணிசிக்க ஒண்ணாமை -ரிஷபம் போலே நிற்கிறவன் -அத்தாலே என்னைத் தோற்பித்துக் கொண்டவன் –
அற்ற பற்றார் -சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -திருச்சந்த -52-என்றும்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -நாச் திரு -11-5-என்றும்
ஸ்தாவர பிரதிஷ்டியாக மன்னி கண் வளரும் தேசம் – கண்டார் விடாத தேசம் -என்றுமாம்
அரங்கத்தம்மா மணி –அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி-மா மணி -பெரிய மணி -கறுத்த மணி –கோயில் மணியினார் -திருமாலை -21
தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமாள் திருமொழி -1-1-
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா –மணியே மாணிக்கமே -பெரிய திரு -11-8-8-திருநாள் சேவிக்க வென்று வந்து-பின்பழகும் பிறகு வாளியும் அழகும் -கொக்குவாயும் கடைப்பணிக் கூட்டமும் இருக்கிற படியைக் கண்டு ஷேத்ர சன்யாசம் பண்ணி -வர்த்திக்கும் படிக்கு ஈடாக-வாயிற்று கோயிலிலே கண் வளர்ந்து அருளும் படி –
பெரு விலையனான ரத்னங்களை முடிந்து ஆளலாய் இருக்குமா போலே
ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் யுள்ளவனை –திருநாடு -திருப் பாற் கடல் மற்றும் உள்ள தேசங்களில் விரும்பி இருக்கும் தேசம் -என்றுமாம் –
கோயில் மணியனார் -திருமாலை -21 -என்னக் கடவது இறே –
மணியே மணி மாணிக்கமே -பெரிய திருமொழி -11-8-8–என்று ரத்ன ஸ்ரேஷ்டம் இறே -பொன்னி அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமாள் திருமொழி -1-1-என்றும்–மணி இரண்டு இறே-மன்னும் அரங்கம் –-நல் சரக்கு படும் துறை –
———-
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை – நாலாயி:2774/2
பரமபதம் கலவிருக்கை யாய் இருக்க -அங்கு நின்றும் போந்து-திருப் பாற் கடலிலே வந்து என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி அத்தாலே அத்யுஜ்ஜ்வலன் ஆனவனை –
——–
சென்னி மணி சுடரை தண்கால் திறல் வலியை – நாலாயி:2775/1
நித்ய ஸூரிகளுக்கு சிரோ பூஷணம் ஆனவனை-அமரர் சென்னிப் பூவாகையாலே வானவர்க்கு சென்னி மணிச் சுடர் -என்னக் குறை இல்லை இறே-
————–
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை – நாலாயி:2783/1
திரு நாங்கூரில் திருமணி மாடக் கோயிலிலே விடாதே நின்று அருளி அடிமை கொண்டு அத்தாலே நாயகன் ஆனவனை –
————
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது 1-4-8- நாலாயி:2939/3
சமுதாய சோபையோடு நிறத்தில்-புஷ்கல்யமும் – நிறைவையும் இழந்தேன்.
‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது;
கதே ஜலே சேது பந்தம் -‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று,
இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி,‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.
————
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – 1-5-5--நாலாயி:2947/3
த்ரிபாத் விபூதி நிறம்பும் படியான தேஜஸ் சையும் -நீல மணி போலே ஸ்ப்ருஹணீயமான நிறத்தையும் யுடையவனே-குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகர் படைத்த வடிவை யுடையவனே! இதனால், பக்தானாம் ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார்.
————
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே -1-10-6- நாலாயி:3003/4
அவர்கள் அளவு அன்றிக்கே, குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் தாயைப் போலே, சம்சாரத்திலே ஒக்க விழுந்து எடுக்குமவன்.-அடையத் தக்கவன் ஆகையாலே ‘இங்கு வந்து அவதரிக்கிறான்’ என்பார். ‘ஈசன்’ என்கிறார். இனி, ‘இங்கு வந்து அவதரித்து ஈர் அரசு தவிர்க்கையாலே ‘ஈசன்’ ஆனான்’-தன் வடிவழகைக் காட்டி இவரை முறையிலே நிறுத்தினான்.-மணிவண்ணன்--சிற்றின்பங்களில் விருப்புள்ளவர் ஆகாதபடி இவரை மீட்டு நன்னெறியில் நிறுத்துவதற்கு இறைவனுடைய வடிவழகு காரணமாய் இருந்ததாதலின், அதனை ‘மணிவண்ணன்’ என்ற சொல்லாற் குறித்தும்,-எந்தையே– தன் சேஷித்துவத்தைக் காட்டி இவருடைய சேஷத்துவத்தை நிலை நிறுத்தினவன் ஆதலின், அவனை‘எந்தையே’ என்ற சொல்லாற் குறித்தும் தெரிவிக்கிறார்.
————-
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10- நாலாயி:3007/4
பெரு விலையனான ரத்னம் கை புகுந்தால் -அத்தை முடிந்து அனுபவியாதே உதறுவார்களோ-மறவாமைக்குப் பரிகரம் அவன் கையில் உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே
மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்-அநாதிகாலம் -மறந்தேன் உன்னை முன்னமே -என்று விஸ்மரித்துப் போந்த நான்-பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து புகழை யுடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை
எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்த பின்பு நான் அவனை அநாதரிப்பேனோ –நினைக்கையில் ஸ்வா தந்திரம் இல்லாமை யாலே மறக்கையிலும் ஸ்வா தந்திரம் இல்லாமை -என்றபடி
————
மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர் –1-10-11- நாலாயி:3008/1
முந்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார்.-‘தென் குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம்.-‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார்.-அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார். –இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.
——————–
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி -2-6-1- நாலாயி:3064/1
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்ய புத்ர’ என்னுமாறு போன்றும்,
திருவாய்ப்பாடியில் பெண்கள்‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும்,
‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச் சொல்லுகிறார்.
இதனால், ‘நித்திய விபூதி யுக்தன் தம்முடனே வந்து கலந்தான் என்று ஹ்ருஷ்டராகிறார் – மகிழ்கின்றார்’ என்னுமிடம் தோன்றுகிறது.
‘ஆயின், இப்பொழுது திருப்பெயர்களை அடுக்கிக் கூறுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,-போகம் உத்கூலமானால்-பரஸ்பர நாம க்ரஹணத்தால் – ஒருவர்க்கு ஒருவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அதனால் தரிப்பது என்பது ஒன்று உண்டு அன்றே? நீல ரத்தினம் போன்று குளிர்ந்த வடிவுடையவனே!-அணைத்த போது உண்டான ஸ்பர்சத்தால் திமிர்த்துச் சொல்லுகிறார்.‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று;-‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று;-‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று; இம் மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.
—————
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே –3-4- 7-நாலாயி#3160/4-
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற –3-4-8-நாலாயி:3161/1
மேலே கூறின வடிவழகு பின்னாட்டின படி.
—————–
திரு மணி_வண்ணனை செங்கண் மாலினை தேவ பிரானை – –3-5-10--நாலாயி:3174/2
உபாசகனுக்கு விக்கிரஹத்தைப் பற்றுக்கோடாகச் -சுபாஸ்ரயமாய் -சொல்லா நின்றதே யன்றோ? ஆதலின், அவனுக்கு உத்தேஸ்யமாய் இருந்துள்ள விக்கிரஹத்தை யுடையவனை; ஒளி மிக்கிருந்துள்ள நீல மணி போலே சிரமத்தைப் போக்குகிற வடிவை யுடையவன் என்றபடி-
———–
குரவை கோத்த குழகனை மணி_வண்ணனை குடக் கூத்தனை – 3-6-3-நாலாயி:3178/2
நித்திய ஸூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் – பவ்யன்-அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை;‘நீல மணி போலே சிரமத்தைப் போக்குவதாய் உள்ள விக்கிரஹத்தை உடையவன்’ -திருக்குரவைக்கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.
மன்றம் அமர கூத்தாடி -இவன் ஆடி விட்டு போன பின்பும் கோபிமார்கள் மன்றிலே அமரும் படி –அத்யயன உத்சவம் முடிந்த பின்பும் அத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு அசை போடுவது போலே-
————
கெழுமிய கதிர் சோதியை மணி_வண்ணனை குடக் கூத்தனை – நாலாயி:3182/2
அநாதியாகப் பிறந்து இறந்து போந்த என் ஆத்துமாவோடே கலந்து அத்தாலே பேரொளியன் ஆனவனை.-தாம் கிட்டுகை இறைவனுக்கு நிறக்கேடு என்று இருந்தார் இவர்; அது மற்றைப்படியாய்த் தம்மைச் செறியச் செறியப் பேரொளியனாய் இருந்தானாதலின், ‘கெழுமிய கதிர்ச்சோதியை’ என்கிறார்-வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் – நிறம்.-இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம்.-இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக்கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.
————-
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை-3-7-2- – நாலாயி:3188/2
பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கிற வடிவழகைக் காட்டி என்னைத் தனக்கே உரிமையாக்கினவனை.-இதனால், சிலரை அகப்படுத்துகைக்குத் தோள்கள் தாமும் மிகையாம்படி இருக்கிற வடிவழகைத் தெரிவித்தபடி.
‘அடியார் பக்கல் அன்புடையராய்ச் செல்லும் இவர் இறைவனை ‘எம்மான்’ என்பான் என்?’ எனின், அடியார் பக்கலிலே சென்ற மனத்தையுடையராய்ப் போவாரை நடுவே வழி பறிக்கும் வடிவழகுடையவன் ஆதலின், ‘எம்மான்’ என்கிறார்.
அன்றியே, ‘அடியாரை விரும்பும்படி செய்ததும் இவ்வடிவழகாலேயாதலின், ‘எம்மான்’ என்கிறார்’ என்னலுமாம்.
இரண்டுக்கும் ஹேது அழ்கு தானே -தன்னிடம் அடிமை கொள்வதற்கும் -ததீயர் இடம் போவாரை வழி பறிக்கவும் -இதே அழ்கு-ததீயர் இடம் ஆட்செய்ய்து அருளுவதற்கும் இதே அழ்கு தான்-குண கிருத தாஸ்யத்துடன் நாம் போனோம் -வழி பறித்து ஸ்வரூபம் உணர்த்தி ஆள்படுத்தி வைக்கிறான் என்றபடி –
—————
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை -3-7-6– நாலாயி:3192/2-
அகப்படாதாரை அகப்படுத்துகைக்கு ஈடான கண்ணி இருக்கிறபடி.
கண்ணி -மிருகம் வளைக்க -கண்ணி போட்டு பிடிப்பது போலே -ஆயுதத்தால் அகப்படாதவரை இத்தைக் கொண்டு அகப்படுத்த – திருமேனியில் பரிசத்தாலே செவ்வி பெற்றுத் தேன் பெருக்கு எடுக்கின்ற நறு நாற்றத்தையுடைய திருத்துழாய்மாலையையும் உடையனாய்;-‘நாதனை’ என்ற பாசுரத்தில், நறுந்துழாய்ப் போதனை’ என்ற பகுதியை நினைக்கிறது.-பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கின்ற திருநிறத்தைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாம்படி செய்தவனை; ‘மணியை வானவர் கண்ணனை’-1-10-11- என்கிறபடியே, நித்திய சூரிகளை எழுதிக்கொண்ட படியே காணும் இவரையும் எழுதிக்கொண்டது
————–
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் -3-7-9– நாலாயி:3195/3
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்றவர்,
‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று, இவரும் மேற் பாசுரத்திலே ‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார்.
அந்தப்புரத்துக்கு காவல் வேண்டுமே -இதனால் நம்மாழ்வார் பெரியாழ்வார் -இப்படி அருளிச் செய்கிறார்கள் – வலப்பக்கத்தே தரிக்கப்பட்ட திருஆழியை உடையனாய் அதற்குப் புகலிடமான நீலமணி போலே சிரமத்தைப் போக்குகின்ற வடிவழகை யுடைய அறப் பெரியவனுக்கு.-
————–
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையை பாடினால்-3-9-4- – நாலாயி:3212/3
நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனானவனைக் கவி பாடினால். ‘பாடிக் கொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே,-கவி பாடி முடி சூடி இருக்கின்றவர்கள் அன்றோ? ஆதலின், ‘ஒளி மிக்க மணிகளையுடைய முடியுடை வானவர்’ என்பார்,
‘மின்னார் மணி முடி விண்ணவர்’ என்கிறார். இதனால், ‘சென்று காணும் திரள் கவி பாடி முடி பெற்றவர்கள்’ என்றதனைத் தெரிவித்தபடி.-‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்கிறபடியே, கவி பாடிச் சென்றவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டாடிக் கேட்பிப்பாரும் அவர்கள் என்பார்,‘விண்ணவர் தாதை’ என்கிறார். ‘பாடுதலே பிரயோஜனம்போரும்’ என்பார், ‘பாடினால்’ என்கிறார்.-இனி, முடி இறைவனுக்கே அடை ஆகும் போது, ‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை.-சடை முடி இல்லை – தான் சூடி கொண்டு இருக்கும் முடியையே அருளுவான் -தானாகவே -சாம்யா பத்தி அருளுவான் –பீதக வாடை உடுத்தி களைந்தன ஆசைப் படுவோமே –
————-
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ –3-9-5- நாலாயி:3213/4
ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது,‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல், கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன,
என் வள்ளல் –-நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன்.
மணி வண்ணன் –கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு.-உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்;
கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?
கொடுத்து கொள்ளாதே கொண்டதுக்குக் கைக்கூலி கையூட்டு கொடுக்க வேண்டும் -ஓன்று நூறாயிரம் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்-மணி வண்ணன்தன்னைக் கவி சொல்ல வம்மின் – நான் சொல்லுகிற படியை உடையவனைக் கவி பாட வாருங்கோள்.
‘பிற்காலியாதே கடுகப் புகுரப் பாருங்கோள்’ என்பார், ‘வம்மின்’ என்கிறார்.
————-
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி_வண்ணன் கண்ணன் -3-10-2– நாலாயி:3221/2
ஓர் யோகு புணர்ந்த – ‘எல்லா ஆத்துமாக்களும் நம்மைக் கிட்டிக் கரைமரம் சேர்தற்கு உரிய விரகு யாதோ?’ என்று இவற்றைக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தல்; அன்றிக்கே, இப்படிக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே
அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்; ‘அவ்வாறு சிந்தித்தலைக் கூறுகிறார்’ என்னலுமாம்.
இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான் என்கிறார் மேல்:ஒளியையுடைய நீலமணி போலே இருக்கிற வடிவையுடைய கிருஷ்ணன். ‘காக்கப்படும் பொருள்களைத் தன் வடிவழகாலே கரை மரம் சேர்க்கைக்காகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்’ என்றபடி. ‘ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோ’ என்றார் பட்டர்பிரானும்.
—————–
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்-மினோ – 4-1-5–நாலாயி:3235/4
நீலமணி போன்று காந்தியையுடைத்தான திருமேனி;
அன்றிக்கே,-‘நீலமணியைக்காட்டிலும் விஞ்சின அழகையுடைத்தான திருமேனி’ என்னுதல்.
————
ஒன்றிய திங்களை காட்டி ஒளி மணி_வண்ணனே என்னும் –-4-4-4- நாலாயி:3267/1
எல்லாக் கலைகளும் நிரம்பின சந்திரனை அருகு நின்றவர்களுக்குக் காட்டி.-‘ஒளி மணி வண்ணனே!’ என்று அழைக்கின்றாள். ‘புகரையுடைத்தான இரத்தினம் போலே குளிர்ந்த
வடிவோடே அணைக்க வந்ததே!’ என்பாள் என்றபடி.
அன்றிக்கே,-‘இவன் மிக்க ஒளியையுடைய சர்வேசுவரன்’ என்று அவர்களுக்குச் சொல்லா நிற்பாள் என்னுதல்.-சைத்ய குண சாம்யம் -சந்த்ரனுக்கும் இவனுக்கும் -வா -சப்தம் சேர்த்து -சம்போதனம் -வாராய் -சொல் சேர்த்துக் கொண்டு–கொதித்து கிடக்கும் அங்கங்களுக்கு குளிரும் படி வா என்கிறாள் -சந்திரன் சதி ஆஹ்லாத சைத்திய குளிர்ந்த–கேட்ட அவர்கள். ‘இம்மழுங்கல் சந்திரன் அவன் ஆகையாவது என்?’ என்பார்களே? ‘ஐயம் இன்று; இவன் அவனே’ என்பாள்,‘ஒளி மணி வண்ணனே’–ஸூ நிச்சிதம்- எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறுகிறாள்.
————-
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு – –4-6-6–நாலாயி:3291/3
நீலமணிபோலே அழகிய நிறத்தையுடையனாய், குணங்களாலும் செயல்களாலும் ஆச்சரியத்தையுடைய சர்வேசுவரனுடைய அடியார்களுடைய பாத தூளியைக் கொண்டு வந்து அணிய முயன்றால்.‘ஒழுக்கத்தால் உயர்ந்த குலத்தில் பிறந்த பழி ஆகையாலே கழுவாயைக் கனக்க விதித்தோமத்தனை;-பாததூளியினுடைய பிரபாவத்தைப் பார்த்தால் இவையெல்லாம் வேண்டா; முயலுதல் மாத்திரம் அமையும்,’ என்பாள், ‘அணிய முயலின்’ என்கிறாள்.
‘தொண்டர் அடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே!’ என்றாரே-குலசேகரப்பெருமாள்- அன்றோ?
நலம் தரும் காரியங்களில் நினைதல் மாத்திரமே அமையும்; தீமை தரும் காரியங்களில் வர்ஜனமே வேண்டும்.
வண்டரும் சுண்டர் ( செண்டர் என்பர் ) என்கிறவர்களுக்கு –த்ரவ்யம் சேமிக்க வைக்கும் கைங்கர்ய பரர்-ராமானுஜர் நியமித்தவர்கள் –
அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை இங்கே நினைப்பது. ‘என்றது என் சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித்
‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும் மெய் என்று திருவடி தொழுது,
‘அது அமணன் பாழி’ என்று அறிந்தவாறே மோஹித்து விழ,
பிள்ளை உறங்கா வில்லி தாசர் தம் ஸ்ரீ பாத தூளியை அவர்களுக்கு இட,
உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை உணர்த்தியபடி.
————–
தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – நாலாயி:3296/1
இதற்கு, ‘மோஹித்தவள் சிறிது தெளிந்தவாறே, மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண் விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’ அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய்மொழி யாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை. அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ?
அது வேண்டாதே, தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று, உட்புகுந்தாராய் அறிந்தாராய்-உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.-தனக்கும் தன் தன்மை அறியாதவன் அன்றோ –
முன்பு மயக்கம் -அழுகை இல்லை-தெளிந்தாள்-சம்ச்லேஷம் இல்லையே என்று கூவுவாள் அடுத்த பதிகம் -நடுவு நிலை இல்லையே இவளுக்கு-தோழி வார்த்தை கேட்டதுமே தெளிந்தாள் -திரு நாம சங்கீர்த்தனம் –
நமனும் முத்கலனும் பேச நரகமும் ஸ்வர்க்கமும் ஆகும் நாமங்கள் உடைய நம்பி பிரபாவம் தோழியும் அறிய வில்லையே –
———-
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே –4-8-1- நாலாயி:3308/4
மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல். துரியோதனன் ‘உண்ண வேண்டும்’ என்ன,
‘பகைவனுடைய அன்னம் உண்ணத்தக்கது அன்று; பகைவர்களையும் உண்பிக்கக்கூடாது,’ என்கிறபடியே,-தன் அடியார்களுடைய பகைவர்களைத் தனக்குப் பகைவர்களாகக் கொண்டு வழக்குப் பேசுமவன் அன்றோ?-பகைவர்களை அழியச்செய்து விடாய்த்துத் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அவன் வந்து அணையாத நல்ல நிறத்தால்-ஒரு விருப்பம் உடையோம் அல்லோம். நிறத்திலே அவன் ஆதரிக்குமன்று அன்றோ இத்தால் காரியமுள்ளது?
அல்லது, நிறக் கேடாமித்தனை அன்றோ? -நிறம் -ஸ்வரூபம் என்றுமாம்-
————-
மணி மாமை குறைவு இல்லா மலர்_மாதர் உறை மார்பன் —-மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே-4-8-2– நாலாயி:3309/1/4-
மணி மாமை குறை இல்லா மாதர்’ என்கையாலே, தன்னைப்போன்று ‘மணிமாமை குறை இலமே’ என்ன வேண்டாதவள் என்பதனைத் தெரிவிக்கிறாள். அவள் எப்பொழுதும் அண்மையில் இருப்பதாலே என்னை அடிமை கொண்டவன்.
குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும் கூட இருக்கச்செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில், என் உடைமையால் எனக்குதான் பிரயோஜனம் என்?
மலரில் மணத்தையே வடிவாக வகுத்தாற்போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள்.
நிறமே அன்றிக்கே, பிரியத் தகாத மென்மைத்தன்மையும் உடையவள்,’ என்பாள், ‘மாதர்’ என்கிறாள்.
மாது – மிருதுத்தன்மை. உறை மார்பன் – அவள் நித்திய வாசம் செய்கிற திருமார்வையுடையவன்.
1–மலரில் பிறப்பு மாத்திரமேயாய், நித்திய வாசம் செய்வது மார்பிலேயாதலின்,
உறை மார்பன்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள்.
2– தான் பிறந்த மலர் நெருஞ்சிக் காடு ஆம்படியான மார்வு படைத்தவன் என்பதாம்;
அனிச்சமும் அன்னத்தின் தூவியும்-(தூவி சிறகு ) மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ என்றானே யன்றோ?
அனிச்சப்பூ -நோக்கவே கன்னிச் சிவக்கும் -அன்னத்தின் சிறகு -மென்மையாக இருக்கும் –
இவை இரண்டுமே மாதர் அடிக்கு நெரிஞ்சிப் பழம்–என்றவாறு
3–முத்தன் இவ்வுலகவாழ்க்கையை நினையாதாப்போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன்.-பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று,-இவள் தான் பிறந்த மலரை நினைப்பது.
4-அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!
நீல இரத்தினம் போன்ற கறுத்த நிறத்தையுடையவன்; என்றது,-தஹ பச – சுடு அடு’ என்று அன்று அடிமை கொண்டது;-பிடாத்தை விழி விட்டு வடிவைக் காட்டி அடிமை கொண்டான்’ என்றபடி.-வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம் உண்டு?
நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே, அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்று அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’ என்பது.
நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு-சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ் வாக்கியம், ரசோக்தி.
பிராட்டி அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறி இரேனோ?
தோள் அழகை எனக்குக் காட்டிற்றிலனாகில், நான் ஆறி இரேனோ?
கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில், ‘சம்பந்தம் இல்லாத விஷயம்’ என்று ஆறி இரேனோ?
வடிவழகால் அன்றிக் குணத்தாலே என்னை அங்கீகரித்தானாகில் நான் ஆறி இரேனோ?’ என்கிறாள்.
—————
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன் மணி நீல வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறையிலமே. –4-8-7- நாலாயி:3314/3
நீல மணி போலே வளரா நின்றுள்ள ஒளியை யுடையவன்.-கை மேலே இலக்கைப் பெறாதார்க்கு நாடோறும் படி விட வேண்டுமே அன்றோ?
படி விடாத போது அரை க்ஷணமும் நில்லார்களே அவர்கள். இவர்கள் விருத்தவான்கள் ஆகையாலே அன்றோ-கைமேலே இப்படிப் பெற்று வாழ்கிறார்கள்? ‘படி கண்டறிதியே’ என்னக் கடவதன்றோ?மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில், சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்த படியைச் சொல்லுகிறது.
————-
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு —–4-9-4- நாலாயி:3322/3
செல்வம் அழிவதற்குக் காரணம்’ என்னுமதனை என் நெஞ்சிலே படுத்தி எனக்கு ஒளதார்யத்தைச் செய்தவனே!-மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? சாதந அநுஷ்டானம்,-மற்றொன்றனைப் பண்ண-ஆச்சார்யர் உபதேசாதிகள்- அன்றாயிற்று.
அன்றிக்கே,-வள்ளலே-மணி வண்ணா-செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’என்பார்,
‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம்.–பச்சை வடம் கழற்ற விட்டு -அழகைக் காட்டி அருளினாய் –
————–
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – 4-9-5-நாலாயி:3323/4
நினைவிற்கும் எட்டாத உலக நாதரான ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே. ஏழுலகும் தனிக் கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்க வேண்டும்.-ஐம்புல இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை,
‘அவ்வடிவை நாய்க்கு இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போக வேண்டும். ‘மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே, இவன் படியைக்கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ?
————–
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள் -–4-10-1– நாலாயி:3330/3
இப்படிப் படைத்தவன் தான் தூரத்தில் உள்ளவனாய் நிற்கை யன்றிக்கே, மலைகளைக் கொடு வந்து சேர வைத்தாற்போலே இருப்பனவாய்,-மணி மயமான மாடங்களினுடைய உயர்ச்சியை யுடைத்தான திருநகரியிலே நின்ற. பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவரோ என்னும் ஆசையால் பல நாள் குகனோடு கூட-அங்கே நின்றிருந்தேன்,’ என்னுமாறு போலே, நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு ‘நான் வணங்கமாட்டேன்,’ என்னாமல், வணங்குவர்களோ?
அன்றிக்கே,-நாம் வளைந்து கூட்டிக் கொள்ளப் புக்கால், விலக்கா தொழிவர்களோ!’ என்று கொண்டு காலத்தை எதிர் நோக்கினவனாய் நிற்கின்றபடி.
அங்குச் சேஷியைப் பெறுகைக்குச் சேஷ பூதனானவன் நின்ற நிலை;
இங்கு அடியவர்களைப் பெறுகைக்கு இறைவன் நின்ற நிலை.
சேஷ பூதனை லபிக்க சேஷி நிற்கும் நிலை –
—————
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல – 5-1-2-நாலாயி:3342/1,2
“அதன்பின் கடகட என்ற ஓசையைக் கேட்டுப் பரவசத்தை அடைந்த ஆயர்கள் அங்கு வந்தார்கள்”,“தாமரைக் கண்ணனான அந்தக் கண்ண பிரானும் சென்றார்” என்கிறபடியே, இவற்றைத் தப்பிப் போய், முரிந்து விழுகிற ஓசையைக் கேட்டு முன்பு இல்லாததனைக் காணும் காட்சியாலே சிவந்த மலர்ந்த கண்களும் தானுமாய் இருக்கிறபடி.
“புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை” என்னக் கடவதன்றோ.
அழகிது என்னில், நாட்டில் உள்ள அழகைப் போன்றது ஆம் என்று நினைத்து,
வேறுபாடு தோன்ற ‘பொல்லா மணியே!’ என்கிறார் என்னுதல்.
அன்றிக்கே, நாட்டார் கண்டு கண்ணெச்சில் படாமைக்குக் கரி பூசுகிறார் என்னுதல்.
அன்றிக்கே, தொளையாதமணி; அதாவது பிறரால் அநுபவிக்கப்படாத மணி என்னுதல்;
பொல்லல் – தொளைத்தல். இதுவும் யசோதைப் பிராட்டி அருகில் நின்று சொன்ன வார்த்தை.
———–
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் —5-1-3- நாலாயி:3343/2
பரம ஔதாரன்-பெரு விளையனான ரத்னம் போலே ஸ்லாக்யமான வடிவை எனக்கு உபகரித்தவனே-என்று என்றே –வீப்சை -அபுத்யா சொல்லா நிற்கச் செய்தேயும் சஹ்ருதயமாகச் சொல்கிறான் என்று தோற்றும்படியாகப் பல காலும் சொல்லி-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் -உடன் இருந்து அறியும் உன்னையும் –சர்வஜ்ஞ்ஞன்-சர்வ அந்தர்யாமியான நீயும் மெய் என்று கருதும் படி உன்னையும் பகட்டும் க்ருத்ரிம யுக்தமான மனசை-
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே –5-3-1- நாலாயி:3363/1,2
இவளுடனே கலந்ததனால் உண்டான பிரீதியாலே புன்முறுவல் பூத்து வடிவிலே வேறுபாடு தோற்ற நின்ற நிலை ஆயிற்று-இவளைக் கையும் மடலுமாம்படி தொட்டு விட்டது. வாய்க் கரையிலே நின்று மடல் எடுக்கிறாள்;-கழுத்துக்கு மேலே அன்றோ இவள் மடல் எடுக்கப் பார்க்கிறது.-மனஸ் சஹாயம் இல்லாமல் –மாணிக்க மலை போன்று இனியன் ஆனவனை.–மணிக் குன்ற பெருமாள் -தஞ்சை மூன்று கோயில்களில் ஓன்று –
அதாவது, ‘கழுத்துக்கு மேலே அன்றிக்கே, மெய்யே மடல் எடுக்கச் செய்துவிட்டது என்கிறாள். என்றது, -ஹிருதயமாகவும் என்றுமாம் –
என்னோடே வந்து கலந்ததனாலே வடுவில் வைவர்ண்யம் போய்ப் புகர்த்துக் குளிர்ந்து நிலை பெற்றபடியும்,-பிரிவை நினைத்துக் கால் வாங்க மாட்டாதே நின்ற நிலையுங் காண் என்னை மடலிலே துணியப் பண்ணிற்று என்கிறாள் என்றபடி.
அசலம் பிரிவை பிரசங்கிக்கவும் மாட்டோம் மலை போல் நிற்கிறேன் -என்கிறான் மலைக் குன்றப் பெருமாள் அன்றோ –
————-
மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே – –5-3-6-நாலாயி:3368/4
வண் துவராபதி மன்னன்’ என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
“பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்” என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக்கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே,-மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது-நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.-அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு. காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.வாசு தேவன்-வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு-
—————-
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – –5-7-2-நாலாயி:3408/3
சந்திர மண்டலம் வரை செல்ல உயர்ந்து இரத்தின மயமான மாடங்களை யுடைய சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?
————–
வான நாயகனே மணி மாணிக்க சுடரே – 5-7-6-நாலாயி:3412/2
தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று-ரக்ஷகமே- ஆராய்ந்து போருவது.-இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.-நித்ய சூரிகள் உடன் இருக்கும் பொழுதும் இவர் நினைவே அவனுக்கு-உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து, இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்தியசூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.-இரத்தினங்களுக்குள்ளே சிரேஷ்டமான இரத்தினம் என்னுதல்.-ஸ்ரேஷ்டமான ரத்னம் -மணி மாணிக்கம் -சுடர் -தேஜஸ் -திவ்ய மங்கள விக்ரஹம்
மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் ஒளியையுடைத்தாயிருப்பவன் என்னுதல்.-
மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –
சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் —
இரண்டு வித தேஜஸ் உண்டே –அப்ரமேயம் சீதயா உண்டே
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –
———–
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – 5-7-8-நாலாயி:3414/3
மிக்க ஒளியை யுடைத்தாய், மணி மயமான மாடங்களின் ஓக்கத்தை யுடைத்தான சிரீவரமங்கைக்குப் பிரதானனானவனே!-பகர் என்பதும், கதிர் என்பதும் ஒருபொருட்சொற்கள்; மிக்க ஒளி என்பது பொருளாம்.
‘பகற்கதிர்’ என்று பாடமான போது,-சூரியலோகம் வரையிலும் செல்ல உயர்ந்து ஒளியையுடைய மணி மாடங்கள் என்று பொருள் கூறுக. பகல் – சூரியன்.
———————–
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – -5-8-9-நாலாயி:3426/3
திசைகளிலே ஒளி பரவாநின்றதாய், காட்சிக்கு இனியதாய், பெருவிலையனான இரத்தினங்கள் சேராநிற்கிற திருக்குடந்தையிலே.–புருஷ ரத்னங்கள் – –‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷ ரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.
——————
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் -6-3-9– நாலாயி:3481/2
பொன்னும் மணியும் முத்தும் போலே போக்யனாய்-பொன்னைப் போன்றவனும் மணியைப் போன்றவனும் முத்தைப் போன்றவனும் என் அப்பனும் ஆகி -பொன் போலே தன்னுடைய ஸ்ப்ருஹணீயதையை பிரகாசிப்பித்தும் – அதில் காட்டில் உஜ்ஜ்வல்யத்தாலும் மஹார்ஹத்தையாலும் வேறுபட்ட ரத்னம் போலே தன்னுடைய தேஜஸ்விதையை பிரகாசிப்பித்தும் முத்துப் போலே தன் சீதளமான நீர்மையை பிரகாசிப்பித்தும் -இப்படி பஹுமுகமாக-எனக்கு உபகாரகனுமாய்–வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள; எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன்.
—————–
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் -6-5-1– நாலாயி:3495/1
குற்றமுண்டாகிக் கழிந்தது அன்று.-ஜீவன் பரன் என்னும் இருவர்க்கும் பாபம் இல்லாமை முதலானவைகள் உண்டாயிருக்கச் செய்தே, ஜீவாத்மாவுக்குக் குற்றம் உண்டாகிப் பகவானுடைய திருவருளாலே அது கழியும்; பரமாத்மா குற்றங்கள் சேரத் தகுதி இல்லாதவனாகவே இருப்பான்; அப்படியே யாயிற்று, அவ்வூரில் மாடங்களில் இரத்தினங்களும்.
துவள்-குற்றம்.
இல் – அது இன்றிக்கே இருக்கை.
மா மணி – ஒளியே அன்று; பெரு விலையனுமாயிருக்கும். ‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலே யுள்ளவை’ என்னுதல்,-சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல்,
உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ? அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?
————–
வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்-6-5-6- – நாலாயி:3500/4
கழிகிற நாள்தோறும்-தாழ்த்து விடுகிற நாள் தோறும் என்னுதல் –-இவ்விஷயத்தில் இவள் அவகாஹித்த படி கண்டி கோளே–தனக்கு முடிந்து ஆளலாம் படி ஸூக்ரகமான நீல ரத்னம் போலும் வடிவழகை யுடையவனுடைய ஸுலப்ய ஸுந்தர்யாதி ப்ரகாசகங்களான நாமங்களேயாய் இரா நின்றன – வாயாலே சொல்லுகிற சொலவும் வடிவழகுக்கு வாசகமான வற்றையே சொல்லா நின்றாள்.-குண விஷயமாதல் விபூதிவிஷயமாதல் அன்றிக்கே, வடிவழகிற்குத் தோற்றமை தோற்றச் சொல்லா நின்றாள். இவள் நிலை எது? நம் நிலை எது?-உங்களது ஸ்வரூப ஞானம்; இவளது உருவ ஞானம். நாரசிம்ஹவபு ஸ்ரீ மான் -அழகால் வந்த ஸ்ரீ மத்வம் போலே-
—————
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – 6-5-9–நாலாயி:3503/2
சேதனம் என்றும், அசேதனம் என்றும் வேறுபாடு அற அழியும்படி காணும்,
இவள் வாய்விட்டுக் கூப்பிடும் படி. –உம்மைத்தொகை -சேதனம் சமுச்சயம் –எம்பாரை ‘மரங்களும் இரங்கக் கூடுமோ?’ என்று கேட்க,
இது அருளிச்செய்த அன்று தொடங்கி எத்தனை பாவ சுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது;-இங்ஙனே இருக்கச் செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம் செய்யப் பார்த்தாலும் சுக்கான் பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால் சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்று அருளிச் செய்தார்.-“மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்” -பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4.-என்று
அவதாரத்தில் திருக்குழல் ஓசையில் பட்ட எல்லாம் இத் துன்ப ஒலியிலே படுமாயின;
“மரங்களும் வாடி நின்றன”-ஸ்ரீராமா. அயோத். 59 : 10.
“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:”என்று, இராமனைப் பிரிந்த பிரிவில் பட்ட எல்லாம் இவள் பேச்சிலே படா நின்றன.
அசேதனமான மரங்களும் கூட இரங்கும்படி மஹா ஆர்த்தியோடே மணி வண்ணவோ என்று கூப்பிட்டு அலைத்து-நீல மணி போலே குளிர்ந்து இருக்கிற திரு நிறத்தை உடையவனே என்னா நின்றாள்-பகவானுடைய குணங்களைக் காட்டிலும் குண நிஷ்டர் பாசுரம் அழிக்கும் போலே காணும்-இவளையோ தான் நீங்கள் மீட்கப் பார்க்கிறது! வடிவழகைச் சொல்லி யன்றோ கூப்பிடுகிறது.
———–
வந்திருந்து உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம் –6-8-10-– நாலாயி:3537/1
ஆபி முக்யம் பண்ணி இருந்து-இது என்ன ஆபத்திற்குத் துணையாகும் தன்மை தான்! உங்களுடைய நல்லெண்ணம் இருந்தபடி என் தான்! இளைய பெருமாளை இடுவித்து வெதுப்பி அழைப்பிக்க வேண்டாதிருக்கை-மஹாராஜருடைய இடரைப் பெருமாள் வினவிக் கொண்டு சென்று தீர்த்தாற் போலே என் துன்பத்துக் கெல்லாம் உடன் கேடராயிருந்து-பரமபதத்தில் ஆண்களும் பெண்களுமாக இருந்தாலும் அடிமைக்கு உறுப்பாக இருக்குமாறு போலே,
இவற்றினுடைய இந்தப் பேதமும் தன்னுடைய காரியத்துக்குக் காரணம் என்றிருக்கிறாள்-பிரிந்து தானும் உடம்பு வெளுத்து பேடையையும் உடம்பு வெளுக்கப் பண்ணும் சேவலைப் போல் அன்றிக்கே இருக்கை –இதுவும் ஒரு சேவலே தான்! தன்னுடைய மணிச் சேவல் கடக்க இருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான் குறி யழியாதே யன்றோ இருக்கிறது.
————–
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே-–6-10-3- – நாலாயி:3552/3
நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நிற்கிற இ றே என்னை விஷயீ கரிக்க திருமலையில் வந்தது -தெளிந்து நன்றான நிரதிசய போக்யமான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும் கொழித்து ஏறட்டுகிற திருமலையிலே நின்றருளுகிற சர்வேஸ்வரனே!உன் கிருபையால் ஸூ பிரசன்ன ரமணீய சவில சரித்தரங்க பரம்பரா நீதமான விமல ருசி விவிய மணி கனக
மௌக்திக நிகரங்களாலே விராஜமானமான திருமலையில் நின்று அருளின
உன் திருவடிகளில் பிரானே என்னைச் சேர்த்து அருள வேணும் என்கிறார் –
——————
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் –-7-2-3- நாலாயி:3574/1
இதற்குச் சீயர் அருளிச் செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று. நாணத்தைக் கொண்டே அன்றோ பெண்மையை அறிவது? ஸ்வரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் ஸ்வரூபமும் போயிற்றாமத்தனை அன்றோ? நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே! இவள் நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில்,கணவனுடைய திருப் பெயரைச் சொல்லா நின்றாள்.-பெற்ற தாய் முன்னே வடிவழகினைச் சொல்லா நின்றாள்.-நான் கேட்டாலும் மறைக்குமதனைத் தான் வெளியிடா நின்றாள். காதலி ஆசைப்படுவது வடிவழகினை அன்றோ? தான் அகப்பட்ட துறையினைச் சொல்லா நின்றாள்-காமினி யானவள் வடிவு அழகிலே இறே ஈடுபடுவது -அது தோற்ற வாய் விடா நின்றாள் -அதிருஷ்ட பூர்வ வ்யஸ நா ம்ருது சீலா மனஸ்வி நீ தேனை துக்கேன ருததீ நைவ மா கிஞ்சி தப்ரவீத் -என்று எல்லா தசையிலும் வாய் விடக் கடவது அன்றிக்கே இறே இருப்பது
————
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் -7-2-6– நாலாயி:3577/2
இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று. தைரியக் குறைவு உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று சொல்லுகிற போதை அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி.
‘அழகிய முறுவலை யுடைய முகத் தாமரையைத் தரித்தவனை’ என்னக் கடவதன்றோ? –
அங்கே அவாக்ய அநாதரா –-செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் என்னும் படி இறே முறுவல் துவக்க வல்ல படி -புஷ்பம் மலருகிற போது எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறக்குமாறு போலே, புன் முறுவல் செய்யும் போது வடிவிலே எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறந்தபடி.-ஸ்மிதம் பண்ணும் போது திருமேனி எங்கும் ஒக்கப் பிறக்கும் எழிலும் குளிர்த்தியும் இருந்த படி-
————-
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே -7-3-2– நாலாயி:3584/4
இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது-ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற உபகாரன்-மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி.-அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக் கொண்டு இருக்கிறவன்-ஆக,-‘மேன்மை அளவிடவோ?-வடிவழகு அளவிடவோ?
நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.-செங்கனி வாயின் திறத்ததுவே.–-இவை மூன்றிலும் போக ஒட்டாத ஸ்மிதத்திலே படிந்தது-பிரிவை பிரசங்கித்து தாழ்வு தோற்ற வார்த்தை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே ஸ்மிதம் பண்ணி நின்ற படி-பரம பாத நிலயனான மேன்மை யுடையனாய் உஜ்ஜவலமான மாணிக்கம் போலே இருக்கிற வடிவை யுடையனாய் ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய சிவந்த கனி போலே இருக்கிற அதர சோபையிலே சக்தமாயிற்று-ஆஸ்ரய ஸூ லபனாகைக்காகத் திரு நாட்டில் நின்றும்
ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் வந்து பிறந்து அருளி அக்காலத்திலே பெறாதாருடைய இழவு தீரும்படி தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரையிலே பரிபூர்ணனாய் எழுந்து அருளி இருந்த அவனுடைய மத் சம்ச்லேஷத்தாலே புதுக் கணித்த திருப் பவளத்திலே என் நெஞ்சு இராக் பகல் போய்ப் படிந்து கிடக்கும் – இனி நான் எங்கனே போகாது இருக்கும் படி -என்கிறாள் –
—————
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த –7-3-10-– நாலாயி:3592/2
மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே ஓக்கமுடைத்தாய்,
இரத்தின மயமான மாடங்களையுடைய பெரிதான தென்திருப்பேரெயில் வீற்றிருந்த அவனுடைய ஒரோ அவயங்களில் படிந்தாரை மீட்கலாயோ இருப்பது?தான் அகப்பட்ட துறையைச் சொல்லுகிறாள்-
————–
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய் – –7-7-10–நாலாயி:3636/2
‘இவளைத் தப்புவித்தோமாம் விரகு என்?’ என்று நெஞ்சிலே விசாரிக்கையும்,
கால் வாங்கிப் பேர நிற்கவும் ஒண்ணாதபடி சூழ நின்றும் பொடியா நின்றீர்கோள்.
அன்றிக்கே,‘போயும் வந்தும் பொடியா நின்றீர்கோள்’ என்னுதல்-மிக்க புகரை யுடைத்தான இரத்தினத்தினுடைய ஒளியை யுடைத்தாய்க் கொண்டு கண்ட இடம் எங்கும் பரம்பா நின்றுள்ள ஒளியை யுடைய திருமுடியிலே ஒருமைப் பட்டது-நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் — என்னுடைய உள்ளம்-‘அங்கே விலை செய்து கொடுத்தது’ என்னுதல். என்றது,- ஒருப்பட்டது தத்பரமானது ஐகாந்த்யம் – ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –-‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.-
————
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே-–7-10-4- – நாலாயி:3663/4
எல்லா உலகங்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து வைத்து, நல்லார்களை நலம் புரிந்து காத்தல் நிமித்தமாக ஸ்ரீமதுரையிலே வந்து அவதரித்த-தன் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை அன்றோ இதர ஸஜாதீயம் ஆக்கிற்று? ஆகையாலே, -ஆஸ்ரித அனுபாவ்யமாம் படி வாய்த்த நீல ரத்னம் போலே இருக்கிற திரு நிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிற மஹா உபகாரகனுடைய விகசிதமான திருவடித் தாமரைகளை -அழகிய நீல மணி போன்ற திரு நிறத்தை யுடைய உபகாரத் தன்மையனான கிருஷ்ணனுடைய மலர்ச்சி பொருந்திய திருவடிகளாகிற செவ்விப் பூக்களை ஈங்கு மனத்து நினைக்கப் பெற வாய்க்குங்கொல். நிச்சலும் எப்பொழுதும்-அவன் எழுந்து அருளி இருந்த திரு வாறன் விளையிலே அவன் திருவடி மலர்களை நெஞ்சால் என்று அனுபவிக்கக் கூடும் -என்கிறார் –
———
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை-7-10-5- – நாலாயி:3664/3
பரியங்க வித்தியையிற் சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய சர்வேஸ்வரன், அப் படுக்கையைக் காட்டிலும் விரும்பி வசிக்கும் தேசமாயிற்று-தேவர்கள் பெய்த மலர்களோடு கூடி, மணி மயமான ஓக்கத்தை யுடைத்தாய், ஓங்ஙின மதிளை யுமுடைத்தான திருவாறன்விளை-தேவர்கள் வர்ஷித்த புஷ்ப்ப வருஷடியோடே கூட ஓங்கின மணி மயமான மாடங்கள் -ஓங்கின மதிள் இவற்றை யுடைய -திரு வாறன் விளையைப் பாடுங்கோள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –
———————
பாவியேன் தன்னை அடுகின்ற கமல கண்ணது ஓர் பவள வாய் மணியே ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் -8-1-1- நாலாயி:3671/3,4
புருஷகாரம் உண்டாய் விபூதியை உடையவனாய் அடியாருக்கு அதீனமான விக்ரகத்தை உடையவனாய்- இருக்க இழக்க அடியான பாபத்தை செய்த என்னை –
அன்றிக்கே –-அந்த இல்லற தர்மத்துக்கு புறம்பாவானே -என்னுதல்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனே -பெரிய திருமொழி -7-1-9-கண்ண -ஓர் என்று கொண்டு ஸம்போதானம்-அழகிய முறுவலைக் கொண்டு உள்ள முகத்தாமரையை தரித்தவனே – ஸ விலாஸ ஸ்மிதாதாரம் பிப்ராணாம் முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-21-என்கிற புன்சிரிப்பை உடையவனே-விடாயர் முகத்தே குளிர் நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே சிரமத்தை போக்குகிற வடிவை உடையவனே இவை கண்டீர் எனக்கு பாதகம் ஆகின்றன-ஆகவே இவருக்கு பிராணன் ஒரு வாயு விசேஷம் அன்று –
நாய்ச்சிமாரோடும் நித்ய ஸூரிகளோடும் கூடிய கண்ணும் வாயும் வடிவும் ஆயிற்று–இவருடைய உயிர் இருப்பது-தரித்து கொண்டு இருப்பதான பிராணனாய் இருக்கை அன்றிக்கே– இனிய பொருளை புறம்பே தேட வேண்டாதே இனிய பொருளும் தானேயாய் இருக்கை-
————
திகழும் மணி குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் ––8-7-5- நாலாயி:3741/3
என் உள்ளே வந்து புகுந்து-பெறாப் பேறு பெற்றவனாய் நிலை பெற்று புகர் உடையானாய்-கால் வாங்கிப் போக மாட்டாதே விளங்கா நின்றுள்ள ஒரு ரத்ன மலை போலே நின்றான் –விளங்கா நின்றதொரு நீல மலை போலே என்னுள்ளே நின்ற இம் மஹா குணத்தை அல்லது மற்று ஒரு புகழை ஒரு புகழாக மதியேன் —என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த குணத்தையும் இனி நான் ஒரு சரக்காக நினைத்து இரேன்-
————
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல்-8-9-1- – நாலாயி:3759/1
அனுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி கருமையை உடைத்தாய்-பிரகாசத்தால் மிக்கு இருப்பதாய்- தனக்கு மேல் ஒன்றும் இல்லாத இனிமையை உடையதாய்-இருப்பது ஒரு மலை மேலே-அன்றிக்கே-கரிய நிறத்தோடு கூடிய இருள் நீக்குவது ஒரு மலை -என்றுமாம்
இல் பொருள் உவமை இருக்கிறபடி –இப்படி இருப்பது ஒரு மலை மேலே –தெளிந்தது ஒரு தடாகமாய் அது காடுபடத் தாமரை பூத்தாப் போலே ஆயிற்று-திருமேனியும்-அழகிய உறுப்புகளும் இருப்பது –
————–
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – -8-9-3-நாலாயி:3761/4
ஒளி பொருந்திய மாணிக்கங்களை உடைய-ஓங்கின மாடங்களை உடைத்தாய்-கற்பகாலம் வரையிலும் அழியாததான- திருப் புலியூரிலே அழகைப் புகழும்-பிராட்டி ஸ்ரீ மிதிலையை விட்டு ஸ்ரீ ராகவன் வீட்டிலே என்று-திரு அயோத்யைப் புகழுமாறு போலே -இவள் திரு நகரியை விட்டு திருப் புலியூர் புகழையே புகழா நின்றாள் -என்பாள் வளமே புகழும் -என்கிறாள் –பகைவர்களால் வெல்ல முடியாத அயோதியை -என்கிற-பரமபதத்தை நினைத்து இருக்குமாறு போலே காணும்-இவள் இவ் ஊரை நினைத்து இருப்பது-அந்த ஸுர்ய வீர்யாதி குணங்களையே இவள் இராப்பகல் புகழா நின்றது என்கிறாள் –
————
குன்ற மா மணி மாட மாளிகை கோல குழாங்கள் மல்கி –8-9-10- நாலாயி:3768/2
மலை போன்று சலிப்பிக்க ஒண்ணாததாய்-பெரு விலையனான ரத்னங்களால் செய்யப் பட்டு இருந்துள்ள மாடங்களின் உடையவும் மாளிகைகளின் உடையவும்-காட்சிக்கு இனிய குழாங்களால் மிக்கு –மலை போலேயாய் -மஹார்க்கமான ரத்னங்களால் செய்த மாடம் என்ன -மாளிகை என்ன -இவற்றினுடைய தர்ச நீயமான திரள்களாலே இடை பாழ் அற நெருங்கி -க்ருஹகாடாமவிசித்ராம் -என்னுமா போலே-
————
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே -–8-10-8– நாலாயி:3777/4
-நிறைந்த ஒளியை யுடைய பல ஆதித்யர்களுடைய தேஜஸ் ஸை யும் -கோள் என்று க்ரஹங்களாய் -அவை தான் தேஜோ பதார்த்தங்கள் ஆகையால் தேஜஸ் ஸை லஷிக்கிறது – ஓர் இரத்தின மலை சாய்ந்தாப் போலே ஆயிற்று-கண் வளர்ந்து அருளிய படி –
————-
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா –9-8-10- நாலாயி:3867/4
ஒரு தேச விசேஷத்திலே சென்று-காணக் கூடியதான வடிவினைக் கொண்டு
அடியார்களுக்காக வந்து நித்ய வாசம் செய்கிறவனே-அவ் வடிவினை எனக்கு காட்டாத அன்று-உன் வரவு வாராமைக்கு சமம் -என்கை-
————–
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானை –9-8-11-– நாலாயி:3868/1
பல வகைப் பட்ட நிறங்களை உடைய-ரத்னங்களாலே செய்யப் பட்ட-மாடங்களை உடைத்தாய்–நாநா வர்ணங்களான ரத்னங்களாலே செய்யப்பட மாடங்களை யுடைத்தாய் -நிரதிசய போக்யமான திரு நாவாயிலே நின்று அருளினவனை-எல்லை இல்லாத இனிமையை உடைய-திரு நாவாயிலே நின்று அருளினவனை-
————–
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ -9-9-2- நாலாயி:3870/1
புலம்பு உறு மணி-நாகுகளை தொடர்கிற சேக்கள் கழுத்திலே-மணியினுடைய ஒலி –
அந்நாகுகள் கை புகுராமையாலே கூப்பிடுமாறு போலே இரா நின்றது –அந்நாகுகள் கிட்டாமையாலே கூப்பிடுகிறால் போலே யாய்த்து த்வநிக்கிற படி -அது தமக்கு ஸ்மாரகமாய் நலியா நின்றது –
———–
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த -9-9-10– நாலாயி:3878/1
அவன் தான் வருகின்றிலன் – அவனைக் கணவே-துன்புறுத்தும் பொருள்கள் எல்லாம் இன்புறுத்தும் பொருள்களாகத் தோற்றும் அன்றோ–பெரிய மணி ஒலிக்க-விரும்பிய பொருள்கள் கை புகுந்தால் அல்லது மீளாத-வலிய ஏறுகளோடு கலந்த-அழகிய சிநேகத்தை உடைய நாகுகள் அந்த சேர்க்கையால் உண்டான உவகையாலே-களித்துக் குதித்து ஓடா நின்றன –இதனால் நான் சோகத்தோடு இருந்தேன்-இவை உவகைக்கு போக்குவீடா நின்றன -என்கிறாள் –
——————-
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம் -–9-10-8– நாலாயி:3887/3
மணியாலும் பொன்னாலும் செய்த மதிளாலே சூழப் பட்ட-திருக் கண்ணபுரத்திலே-
———–
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்ததயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே -10-1-8- நாலாயி:3898/4
உயர்ந்த சோலைகளாலும்-அழகிய தடாகங்களாலும்-அலங்கரிக்கப் பட்ட-ஒளியை உடைய-திரு மோகூர்-சோலையைக் கண்டால் -அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்-
தடாகங்களைக் கண்டால் சிரமத்தை போக்குகின்ற அவன் வடிவினை நினைப்பூட்டுவதாக இருக்கும்-வாசத் தடம் போல் வருவான் அன்றோ அவன் தானே –புண்டரீகத் தடாகம் நின்ற சேவை தானே நம்பெருமாள் ––சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்
பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம்
மரு பூமி -நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன- இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய் சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-
இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30- என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –
———–
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செவ்வாய் –10-1-9- நாலாயி:3899/1
தெளிந்த தடாகம் போல் ஆயிற்று திருவடிகள் இருப்பன -என்றது சிரமத்தை போக்கக் கூடிய திருவடிகள் -என்றபடி –
————–
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து -10-3-5- நாலாயி:3917/3
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்பு -என்னுதல்-
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தின் புகரே யாம்படி இருக்கும் -என்னுதல்-
கலவியிலும் கழற்ற ஒண்ணாதபடி அன்றோ கௌஸ்துபம் இருப்பது –
எல்லை இல்லாத இன்பத்தை கொடுக்க கூடியது அன்றோ -என்னக் கடவது இறே –
ச்வோசித விவித விசித்ரானந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய-நிரதிசய சுகந்த நிரதிசய சுகச்பர்ச கௌச்துப -சரணாகதி கத்யம்-5-
இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்–புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –
—————
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய்––10-3-7- – நாலாயி:3919/3
நீல மணி போன்ற வடிவை உடையவனே-மா -கருமை-
இவ் வடிவினைக் கொண்டே நீ போகிறது-வெயில் கானல் பொறுக்குமோ இவ்வடிவு –
உன்னை நீ பிரிந்து அறியாயே -முன்பு அவன் இழவைச் சொன்னாள்-இப்போது தன் இழவைச் சொல்லுகிறாள் -பெரு விலையனான நீல மணி போன்ற வடிவை யுடையவன் -இவ்வடிவைக் கொண்டே போகப் புகுகிறது –
———–
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் -10-4-7– நாலாயி:3930/3
நீல மணியின் ஒளியை வடிவை வகுத்தால் போலே இருந்துள்ள வடிவை யுடையவன் –அடிமை கொள்ளும் வடிவு இருக்கிறபடி –-பிறவியை உண்டாக்கினாலும்-விடும்படியாகவோ வடிவின் அழகு இருக்கிற படி-
———————
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் – 10-6-7–நாலாயி:3952/3
திரை மிக்கு இருந்துள்ள கடலாலே-சுற்றும் சூழப் பட்டு இருப்பதாய்
தென்னாட்டுக்கு ஒரு திலகம் போலேயாய்- மலைகளை நெருங்க வைத்தால் போலே மணி மயமான மாடங்களை உடைத்தான திரு வாட்டாற்றினை கலவிருக்கையாக உடைய-சர்வேஸ்வரன் உடைய –
————-
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே –10-7-7– நாலாயி:3963/4
இவர்களை அடங்கலும் ஒரு மிடறு செய்து ஏத்தும்படியாக-சர்வேஸ்வரன் தான் விரும்பி வந்து- மேல் விழுந்து படுகாடு கிடக்கும் தேசம் ஆயிற்று –பேற்றினை அடைவதற்கு தடைகளாக உள்ளவற்றை-அடையப் போக்கும் தேசம் ஆயிற்று-
அன்றிக்கே- திருமலையை ஒழிந்தது ஒன்றே பெறத் தக்க பேறு-என்று பிறக்கும் புத்தியைத் தவிர்த்து தருமாயிற்று -என்னலுமாம்-அது தான் என் என்னில் –
திருமால் இரும் சோலை மலையே –ஸ்வயம் புருஷார்த்தம் திருமலை -என்றதாயிற்று –
——–
குரு மா மணி உந்து புனல் பொன்னி தென்-பால் – 10-8-1-நாலாயி:3968/3
பெரு விலையனாய் தர்ச நீயமான ரத்னங்களைக் கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள புனலை யுடைய பொன்னித் தென் கரையிலே-
—————
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் -10-8-8– நாலாயி:3975/3
தேசத்தில் போக்யத்தையும் -மேன்மையும் இருக்கிற படி -நாநா வர்ணமாய் மஹார்க்கமான ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களாலே சூழப் பட்ட தேசம் –
———
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி -10-9-7- நாலாயி:3985/3
மிக்க ஒளியை யுடைத்தாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம்-பரத்வன்- ஷீராப்தி நாதனாகவும்- ஸ்ரீ கிருஷ்ணனாகவும் -அந்தர்யாமியாகவும் -அர்ச்சாவதாராமாகவும் ஆவிர்பவித்து பட்ட பாடு எல்லாம் பலித்ததே -நீர்மை சொல்லப் பட்டது – அவன் சென்று பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று அன்றோ ஸ்தோத்ரம் செய்வார்கள் – ஆதி ராஜ்யம் -கோள் சொல்லிக் கொடுக்கும் -நீர்மையில் தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்த அடியவர்கள் அன்றோ இவர்கள் – அடியார்களை தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம் சொன்னார்கள்-
———–
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து -10-9-11- நாலாயி:3989/1
அவர் வந்து எதிர் கொள்ள –வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள –
அன்றிக்கே – இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் –ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –
———————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply