Archive for September, 2019

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் – –ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம் -உத்தரார்த்தம் -அஹம் பதார்த்தம்/ த்வா பதார்த்தம் /சர்வ பாபேப்யோ பதார்த்தம்/மோக்ஷயிஷ்யாமி பதார்த்தம்/ மாஸூச பதார்த்தம்– –

September 3, 2019

ஆக பூர்வார்த்தம்
த்யாஜ்யமான சாதனங்களையும்
அவற்றினுடைய அனந்தத்யத்தையும்
தியாகத்தையும்
தியாக பிரகாரத்தையும்
தியாகம் அங்கம் என்னும் இடத்தையும்
ஸ்வீ கார்ய ஸ்வரூபத்தையும்
தந் நைரபேஷ்யத்தையும்
ஸ்வீ கார பிரகாரத்தையும்
ஸ்வீ காரத்தையும் –சொல்லிற்று

————————————–

ஆக இத்தால் அதிகாரி க்ருத்யம் சொல்லி
மேல் இப்படி பிரபத்தவ்யனான ஈஸ்வர க்ருத்யத்தையும்
பிரபக்தாவான அதிகாரி வுடைய க்ருத்ய லேசத்தையும் சொல்லுகிறது
பிரபத்தவ்ய க்ருத்யம் பிரபத்தவ்ய பல மோக்ஷ விரோதி சகல பாப நிவர்த்தகம்
ப்ரபந்ந க்ருத்யம் தத் பல நிர்ப்பரத்த்வ அநு சந்தானம்

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச
அஹம்
என்று கீழ்ச் சொன்ன உபாய பலமான இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாய் இருக்கையாலே
நிவர்த்யமான அநிஷ்ட ஸ்வரூபம் மேல் சொல்லக் கடவதாய்க் கொண்டு நிவர்த்தகமான ஸ்வரூபத்தை –
அஹம் -என்று காட்டுகிறது
உபாயமாக உன்னாலே ஸ்வீ கரிக்கப்பட்ட நான் -என்றபடி

மோக்ஷயிஷ்யாமி -என்கிற உத்தமனுக்கு பிரதிசம்பந்தியாய்க் கொண்டு -அஹம் -சப்தம் வாரா நிற்கப் பிரித்து
அஹம் என்கிற இதுக்கு ஒரு விவஷை யுண்டு -அதாவது
த்வத் ஸ்வீ க்ருதனான நான் -என்றவாறே ஸ்வீ கார்ய ரூபமான வாத்சால்யாதி குண வைசிஷ்டியே தோற்றும் –
அத்தை வியாவர்த்தித்துக் கார்ய கரத்வ உபயோகி ஞான சக்த்யாதி குண வைசிஷ்ட்டி தோற்றுகைக்காக-

அஹம்
தேவ மனுஷ்யாதி அபிமானிகளுடைய அஹம் அர்த்தம் அவ்வளவில் பர்யவசிக்கும்
பிரகிருதி ஆத்ம விவேகம் பண்ணின வனுடைய அஹம் அர்த்தம் ப்ரக்ருதே பரமாய்
பர சேஷமான ஆத்ம வஸ்துவின் பக்கலிலே பர்யவசிக்கும்
ஈஸ்வரனுடைய அஹம் அர்த்தம் ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தங்களையும் தனக்கு விபூதியாக உடையவன்
ஆகையால் உள்ளது எல்லாம் காட்டும்
இவ் வஹம் சப்தம் கீழ்ச் சொன்ன இடத்தில் ஸுலப்யாதி குணோபேதனான நிலையைக் கழித்து
ஞானாதி குண பரிபூர்ணனான நான் என்கிறது
அதுக்கு அடி மேல் சொல்லுகிற பாப விமோசனத்துக்கு ஞான சக்த்யாதிகள் அபேக்ஷிதம் ஆகையால் –

ஆக
சர்வஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -நிருபாதிக சேஷியாய் –
நிரவதிக தயாவானான நான் என்றபடி
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ச தீஷு நேஹபாபம் பராக்ரமம் இதும் அர்ஹதி மாமகீநம் -என்று
ஞான சக்தி கிருபாதிகளைப் பாப நிவ்ருத்திக்குப் பரிகரமாக ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார் –

நிவர்த்தந அதிகாரி ஸ்வரூபமும் -நிவர்த்த்யம் இன்னது என்னும் இடம் அறிகைக்கும் சர்வஞ்ஞனாக வேணும்
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -என்னக் கடவது இறே –

அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கு சர்வ சக்தியாக வேணும் -இந்த சர்வ சக்தித்வம்
முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த -என்று
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்த சக்தி யோகத்திலும்
பக்கமே கண்டாருளர் -என்று அதீந்த்ரியனான தன்னை இந்திரிய கோசரனாக்கின சக்தி யோகத்திலும்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற-என்று அணு பூத வஸ்துக்களிலே விபுவான தான்
பரிசாமாப்ய வர்த்தித்தவ ரூப சக்தி யோகத்திலும்
நினைத்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே -என்று ஜகத்துக்கு உபாதானமாகா நிற்கப்
பரிணமியாதே காரணமான சக்தி யோகத்திலும் அதிகமாய் இருக்கும்
அதுக்கு அடி நித்ய சம்சாரியாய் -பகவத் விமுகனான சேதனனை -என்னை இசைவித்து நானும் பிசைந்தேன் என்றும் படி
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து -என்கிறபடியே இசைவித்து
தேந சேத விவாத -என்கிற அவிவாதத்தை யுண்டாக்கிப் பாப விமோசனம் பண்ணுகையாலே எதிர்தலையை இசைவிக்க வேணும் –
அவற்றுக்குத் தன் இசைவே வேணும் -ஆகையால் இவற்றில் காட்டில் இதுக்கு ஆதிக்யம் உண்டு

சர்வ சக்தி யானாலும் அபூர்ணனாய் இருக்குமாகில் ப்ரயோஜனத்தில் நினைவாய் இவன் கார்யம் செய்யக் கூடாது –
அது வேண்டாதபடி அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கும் என்கிறது –
சர்வஞ்ஞனுமாய் -சர்வசக்தியுமாய் -அவாப்த ஸமஸ்த காமனானாலும் -பிறர் கார்யம் செய்யக் கூடாதே –
அது வேண்டாதபடி நிருபாதிக சேஷி என்கிறது

சர்வஞ்ஞத்வம் அபராதங்களை அறிகைக்கும்
சர்வசக்தித்வம் தத் அனுகுண தண்டதரனாகைக்கும்
அவாப்த ஸமஸ்த காமத்வம் சிலவற்றைக் கொடுத்து கழித்துக் கொள்ள ஒண்ணாமைக்கும்
சர்வ ஸ்வாமித்வம் இப்படிச் செய்யா நின்றால் நிவாரகர் இல்லாமைக்கும்
உறுப்பாய் இறே இதன் பூர்வம் போந்து

இப்போது அவற்றைக் கழித்து
சர்வஞ்ஞத்தை ரக்ஷண வீதியிலும்
சர்வ சக்தித்வத்தை ரக்ஷண வியாபாரத்திலும்
அவாப்த ஸமஸ்த காமத்வத்தை பிரயோஜன நிரபேஷ ரக்ஷணத்திலும்
ஸ்வாமித்வத்தைத் தன் பேறாகச் செய்கையிலும்
உபயுக்தம் ஆக்குகைக்கு பர துக்க அஸஹிஷ்ணுதா லக்ஷணமான பரம தயை வேணும்
இதுக்காக நிருபாதிக தயாவானாய் இருக்கும் என்கிறது –
ஆக க்ருபா ஸஹ க்ருதமான ஞான சக்த்யாதி குணங்களே இவனுக்கு உஜ்ஜீவன ஹேது ஆவது

விதி வாய்க்கின்று காப்பார் யார்
சேமம் செம் கோன் அருளே
ஆழியான் அருளே நன்று
துணியேன் இனி நின் அருள் அல்லது –இத்யாதிகளில் ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள்
க்ருபயா கேவல மாதமஸாத் குரு
கேவலம் மதீயயைவ தயயா
க்ருபயா சரணம் பவ
தய ஸ்வ மாம் குணமய ரங்க மந்த்ர
தேஹி மே க்ருபயா நாத –இத்யாதிகளாலே கிருபையே உத்தாரகம் என்னும் இடத்தை
ஆச்சார்யர்களும் அருளிச் செய்தார்கள்

ஆக இந்த சர்வஞ்ஞத்வாதி குணங்கள் இவ் -வஹம்-அர்த்தத்தில் அநுசந்தேயங்கள்
இவை சேதனனுடைய அநந்ய சாதனத்வ வ்யவசாயத்துக்கும் அடியாய் –
ஈஸ்வரனுடைய விரோதி நிரசனத்துக்குப் பரிகரமுமாய் இருக்கும் –

மாம் -என்று தன் ஸுலப்யத்தைக் காட்டினான்
அஹம் -என்று பரத்வத்தைக் காட்டுகிறான்
மாம் -என்கிற நிலையிலே -தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்த ஸுலப்யம் தோற்றும்
அஹம் -என்கிற நிலையிலே தார் மன்னர் தங்கள் தலை மேலான பரத்வம் தோற்றும் –
மாம் -என்று
பற்றலர் வீயக் கோல் கைக் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் -என்று
கொல்லா மாக் கோலான உளவு கோலும் கையுமாக நிலையைக் காட்டினான்
அஹம் -என்று -வெள்ளை விளி சங்கு வெம் திடர் திருச்சக்கரம் ஏந்து கையன் -என்று கையும் திருவாழியுமான வேஷத்தைக் காட்டுகிறான் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் -என்கையாலே மாம் என்று தர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டினான்
அஹம் சர்வே பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே -அஹம் -என்று அதர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டுகிறான்
மாம் -என்று சரணம் -என்கிற உக்தியும் சஹியாத நிரபேஷமான நிலையாகையாலே உக்திக்கு விபரீதமான நிலையைக் காட்டினான்
அஹம் என்று பாப விமோசகத் வத்தாலே -அனுஷ்டானத்துக்கு விபரீதமான நிலையைக் காட்டுகிறான்
அஹம் மோக்ஷயிஷ்யாமி என்கையாலே பந்தகனான நானே விமோசகன் ஆனால் வேறு நிவாரகர் உண்டோ என்று
தன்னுடைய சமாப்யதிக ராஹித்யத்தைச் சொல்லுகிறான்

ஆக
சர்வஞ்ஞனுமாய் -சர்வ சக்தியுமாய் -அவாப்த ஸமஸ்த காமனுமாய் -சர்வ ஸ்வாமியுமாய் -பரம தயாவுமான –
நான் என்றதாயிற்று –

——————-

அநந்தரம் -த்வா -என்று –
நிவர்த்த்ய பாப ஆஸ்ரய பூதனாய் –
நிவ்ருத்த்ய உபாயத்தைப் பற்றி அவன் பக்கலிலே சர்வ பரங்களையும் ந்யஸித்து
விமுக வ்யாவ்ருத்தி ஸூ சகமான ப்ரபத்தியை உடையவனாய் –
பாப நிவ்ருத்தி அவசர ப்ரதிக்ஷகனான அதிகாரியைச் சொல்லுகிறது

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் சரணம் வ்ரஜ -என்று விதித்த பிரகாரத்தில்
சாதனாந்தரங்கள் நமக்கு சாதனம் அன்று என்கிற பிரதிபத்தி விசிஷ்டனாய்
தத் ஹேதுவான ஸ்வரூப பாரதந்தர்ய ஞானவானாய்
தத் ஹேதுவான ஈஸ்வர ஏக ரஷ்யத்வ பிரதிபத்தி யுடையவனாய்
தத் கார்யமான பகவத் சேஷத்வ ஞானத்தையும்
தத் பர்யவசாந பூமியான ததீய சேஷத்வ ஞானத்தையும் யுடையவனாய்
புருஷாந்தரங்களில் விமுகனாய்
ஸ்வீ காரத்தில் உபாயத்வ புத்தியை ச வாசன பரித்யாகம் பண்ணி

ஞான க்ரியா பஜன சம்பத கிஞ்ச நோஹ மிச்சாதி கார சகநா நு சயா ந பிஞ்ஞ–இத்யாதிகளில் படியே –
சாதனாந்தரங்களில் அநந்வயத்தாலே அகிஞ்சனனாய் -அவற்றில் இச்சையும் இன்றிக்கே -அதிகாரமும் இன்றிக்கே –
அஞ்ஞான அசக்திகளையும் அபிராப்தியையும் அனுசந்தித்து -அத்தாலே தத் விஷயமான அநு சயமும் இன்றிக்கே
சித்த உபாய பிரதிபத்தி அனுவ்ருத்தியும் சாதனாந்தர சமானமாக அனுசந்தித்து இருப்பானாய் –
ஆக இப்படி -தியாக ஸ்வீ கார விசிஷ்டனாய்க் கொண்டு சர்வ ஸூலபனான என்னையே
நிரபேஷ உபாயமாகப் பற்றி க்ருதக்ருத்யனாய் நிற்கிற உன்னை என்றபடி –

அஹம் -என்கிற இடத்தில் –
சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனாய் உபாய பூதனானவனுடைய ஸ்வ இதர சகல சாதனாந்தர நைரபேஷ்யத்தாலும்
த்வா -என்கிற இடத்தில் –
அஞ்ஞான அசக்திகள் அபிராப்தியையும் யுடையனாய்க் கொண்டு
பரித்யக்த ஸமஸ்த சாங்க சாதனான வதிகாரியினுடைய ஆகிஞ்சன்யத்தாலும்
இந்த ரஷ்ய ரஷக பாவத்தினுடைய ஸுவ்சாத்ருஸ்யம் தோற்றுகிறது –

ஏவம் பூதனான அதிகாரியினுடைய க்ருதக்ருதையை -தஸ்யை வம் விதுஷ-என்கிற அநு வாகத்தாலே சொல்லிற்று
ஏவம் விதுஷ -என்று சத்யம் தபஸ் ஸூ தமம் முதலாக யஜ்ஜம் முடிவாக கர்ம யோகத்தைச் சொல்லி
மாநசம் என்று ஞானயோக பக்தி யோகங்களைச் சொல்லி இவற்றில் ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாகச் சொல்லி –
எல்லாத்துக்கும் மேலாக -ப்ரஹ்மணே த்வா மஹச ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத -என்று
ஸ்ரீ யபதியாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வ ஸ்வாமியான நாராயணன் திருவடிகளில் ஆத்மாத்மீய அகில
பர சமர்ப்பணம் ஆகிற ப்ரபத்தியை ந்யாஸ சப்தத்தால் சொல்லி
தஸ்மான் ந்யாஸம் யேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு-என்று அந்த பிரபத்தியே சத்ய தபாதிகளான சாதனாந்தரங்களில் அதிகமாகச் சொல்லி
இப்படிக் கீழ் அநு வாக த்வயத்திலும் சொன்ன சாதனாந்தர தியாக நிவ்ருத்தி பூர்வகமான சித்த உபாய பரிக்ரஹத்தை –
ஏவம் விதுஷ -என்று சொல்லி -தஸ்ய -என்று இந்த சரணாகதி ஸ்வரூபத்தை யாதாவாக அநு சந்தித்த சேதனனுக்கு
ஸ்வீ க்ருத ந்யாஸ ரூப சாதன வைபவத்தால் சர்வ கர்ம அநு பூர்த்தியையும் சொல்லிற்று

ஆத்மா யஜமான –என்று தொடங்கி -ஸ்ரோத்தரமக்நீத்-என்று முடிவாக -சரணாகதி ஞானாவானான புருஷனுடைய
ஆத்மாத்மீயங்களை யாக உபகரணமாக வகுத்து இத்தை ஒரு யாகமாகச் சொல்லி –
யாவத்த்ரியதே சா தீஷா -என்று தொடங்கி -சர்வ வேத சம்வா ஏதத் ஸத்ரம்-என்று முடிவாக
அவனுடைய சரீர ஸ்திதி உள்ளளவும் தீக்ஷையாகச் சொல்லி இவனுடைய ஸ்திதி கமந சயாநாதி வ்யாபாரங்களாலே
சர்வ கர்மங்களினுடையவும் சித்தியாகச் சொல்லி -யந் மரணம் ததவப்ருதம்-என்று இந்த யாகத்துக்கு அவப்ருதம்
இவனுடைய சரீர விமோசனமாகச் சொல்லி –

ய ஏவம் வித்வா அநுதய கயநே ப்ரமீயதே -என்று தொடங்கி -ப்ரஹ்மணோ மஹிமாந மாப்நோதி -என்ற அறுதியாக
அர்ச்சிராதி மார்க்க கமனமும் -ஆதி வாஹிக ஸத்காரமும் -ஆவரணாதி லங்கனமும் -விராஜா ஸ்நாநமும் –
ஸூஷ்ம சரீர விதூநநமம் -அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக ஆவிர்பாவமும் -அப்ராக்ருத விக்ரஹ பரிக்ரஹமும் –
அகால கால்யமான திவ்ய தேச பிராப்தியும் -ஐரம்மதீய திவ்ய சர பிராப்தியும் -திவ்ய அப்சரஸ் ஸூக்களுடைய அப்ராக்ருத அலங்காரமும் –
திவ்ய கோபுர பிராப்தியும் -அனந்த கருடாதி ஸூரி பரிஷத் ப்ரதயுத கமனமும் ராஜ மார்க்க கமனமும் -ப்ரஹ்ம வேஸ்ம பிரவேசமும் –
அப்ராக்ருத திவ்ய மண்டப பிராப்தியும் -பரமாத்ம தரிசனமும் -பரம புருஷ ஸ்துதி பிரமாணதிகளும்-தத் சமீப பிராப்தியும் –
பர்யங்க ஆரோஹணமும் -பகவத் உத்சங்க ஆசனமும் -ஆலோக ஆலாப ஆலிங்க நாதிகளும்-ஸ்வரூப ரூப குண விக்ரஹாதி அனுபவமும் –
அனுபவ ஜெனித ப்ரீதி அதிசயமும் -ப்ரீதி ப்ரேரித அநேக விக்ரஹ பரிக்ரஹமும் -சர்வ தேசாதி விஸிஷ்ட சர்வ பிரகார கைங்கர்ய பிராப்தியும் –
கைங்கர்ய ஜெனித பகவந் முகோலாச அனுபவமும் ஆகிற புருஷார்த்த லாபத்தைச் சொல்லிற்று

விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோயே தேஷாம் ராஜந் சர்வ யஜ்ஜாஸ் ஸமாப்தா-என்றும்
க்ருஷிர்ப் பூ வாசகஸ் சப்த -இத்யாதிப்படியே சத்தா தாரகனும் மோக்ஷ ப்ரதனுமான கிருஷ்ணனையே
நிருபாதிக ரக்ஷகனான அறிந்தவர்கள் சர்வ யஜ்ஜ்ங்களும் பூர்ணமாக அனுஷ்ட்டித்தார்கள் என்று சொல்லிற்று

க்ருதாந்யநேந ஸர்வாணி தபாம் சித பதாம் வர –சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஜாஸ் சர்வ தாநாநி சஷணாத் –
க்ருதாந்ய நேந மோக்ஷஸ் சதஸ்ய ஹஸ்தே ந சம்சயே-என்று இந்த உபாய ஞானம் உள்ள புருஷனைக் கீழே சொல்லி
அவனாலே எல்லா தபஸ் ஸூ க்களும் பண்ணப்பட்டன-சர்வ யஜ்ஜ்ங்களும் பண்ணப்பட்டன –
எல்லா தீர்த்த ஸ்நானங்களும் பண்ணப்பட்டன -சர்வ தானங்களும் பண்ணப்பட்டன -மோக்ஷம் அவன் கையிலே –
இவ்வர்த்தத்தில் சந்தேகம் இல்லை என்று சொல்லிற்று

யாநி நிஸ்ரேய சார்த்தாநி ஸோதிதா நிதபாம் ஸிவை -தேஷாந்து தபஸாம் ந்யாஸம் அதிரிக்தம் தபஸ் ஸ்ருதம் -என்று
மோக்ஷ சாதனமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட தபஸ் ஸூ முதலான சாதனங்கள் எல்லாவற்றாலும்
ந்யாஸம் என்கிற சாதனமே உத்க்ருஷ்ட சாதனம் என்றும் சொல்லி –

சமித்சாதன காதீநாம் யஜ்ஜா நாம் ந்யாஸ மாத்மந -நமஸோ யோக ரோத்தேவேச ஸ்வத்வர இதீரீத —
யாக சாதந பூதேந ஸ்வாத் மநா சேஜ்ய மீஸ்வரம் -அயஜத்தா நி தர்மாணி ப்ரதமா நீதி சஸ்ருதம் -இத்யாதியாலே
சமிதாதி சாதனங்களால் பண்ணப்படுவதான யஜ்ஜ்ங்கள் எல்லாவற்றிலும் காட்டில் ஈஸ்வரன் பக்கலிலே
ஆத்ம பர ந்யாஸம் பண்ணி இருக்கும் அதுவே நல்ல யஜ்ஜமாவது என்றும்
யாக சாதனா பூதனான தன்னாலே இஜ்யனான சர்வேஸ்வரனை யஜிக்குமது பிரதான தர்மம் என்றும் சொல்லிற்று இறே

ஏவம் ரூபமான சரண வரணம் பண்ணி க்ருதக்ருத்யனான அதிகாரிக்கு
கிமஹம் சாது ந அகரவம் கிமஹம் பாபம் கரவம் -என்கிற ந்யாயத்தாலே
புண்ய கர்மங்கள் பண்ணாது இருந்தோம் -பாப கர்மங்கள் பண்ணினோமே என்கிற பயம் இல்லை –
உபாயத்வேந வரணீயனான ஈஸ்வரன் -ஸ்மராமி -என்கிறபடியே -இவனுக்கு அபேக்ஷித சகல க்ருத்யங்களும் நிர்வஹித்துக் கொண்டு
போருமாகையாலே இவனுக்கு கர்த்தவ்யம் ஸ்வ நிர்ப்பரத்வ அனுசந்தானம் பண்ணிக் கொண்டு இருக்கையும்
வாசநா நிபந்தனமாகப் பிறந்த தப்புக்களுக்கு உபாயத்தில் பண்ணின விஸ்வாச அதிசயத்தாலே நிர்ப்பரனாய் இருக்கையும் –

ஆக- த்வா -என்று
தியாக ஸ்வீ கார விசிஷ்டனான உன்னை என்று ஸ்வீ கர்த்தாவான அதிகாரி விசேஷத்தைச் சொல்லிற்று
மேல்
ஸ்வீ கார்ய வஸ்து க்ருத்யத்தையும் ஸ்வீ கர்த்தரு க்ருத்ய லேச ததையும் சொல்லுகிறது

———–

அஹம் -என்று நிவர்த்தக ஸ்வரூபம் சொல்லி
த்வா -என்று நிவர்த்தய ஆஸ்ரயம் சொல்லி
அநந்தரம் -சர்வ பாபேப்ய-என்று நிவர்த்தய ஸ்வரூபம் சொல்லுகிறது

சர்வ பாபேப்ய-
பாபமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் -இதுவும் த்ரி ப்ரகாரமாய் இருக்கும்
பாப -சப்தத்தால் -அநாதத ரூப துக்க பல ஹேதுவானவற்றைச் சொல்லுகிறது
அதில் நரக பல ஹேதுவான கேவல பாபத்தைச் சொல்லுகிறது அன்று
பந்தகம் ஆகையால் புண்ய பாப ரூபமான உபாயவித கர்மத்தையும் சொல்லுகிறது –
அதுக்கு அடி மோக்ஷ விரோதி பிரகரணம் ஆகையால்
தத் ஸூ க்ருத துஷ் க்ருதே விதூ நதே -என்றும்
புண்ய பாபே விதூய -என்றும்
பாப க்ருத்யாம் -என்றும்
தஸ்ய பிரியா யஜ்ஜஸ் தபஸ் ஸூ க்ருதம் உபபந்தி அப்ரியா துஷ் க்ருதம் -இத்யாதிகளாலே
ஸூக்ருத சப்த வாசியான புண்யத்துடன் துஷ் க்ருத சப்த வாஸ்யமான பாபத்துடன் வாசியற-
இரண்டையும் உதறிப் பொகடும் என்றும்
ஸூக்ருதத்தை இவன் இருந்த நாளில் இவன் பக்கல் அனுகூலர் பக்கலிலும்
துஷ் க்ருதத்தை இவன் பக்கலில் பிரதிகூலித்தார் பக்கலிலும் பகிர்ந்திடும் என்று சொல்லுகையாலே
உபயமும் பாப சப்த வாஸ்யமாய் நிவர்த்தய கோடியிலே புகுமவை இறே

ஆழ்வாரும் -சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து –என்று
எள்ளில் எண்ணெயயைப் போலேயும் -ஆரணியில் அக்னியைப் போலேயும் விடாமல் பொருந்தி இருப்பதாய்
சர்வ சக்தியாலும் விடுவிக்க அரிதாம் படி வலித்தாய் இருக்கிற புண்ய பாப ரூபத்தாலே உபய விதமான கர்மங்களை
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே தள்ளி என்றார் இறே
வீடு திருத்துவான் -என்கிற மோக்ஷ பிரகரணம் ஆகையால்
ஐஹிகமான புத்ர பசு அந்நாதி ரூப பல ஹேதுவான புண்யத்துடன்
தாபா த்ரயாதி அனுபவ ஹேதுவான பாபத்துடன் ரௌரவாதி நரக ஹேதுவான பாபத்துடன் வாசியற
எல்லாவற்றையும் பாப சப்தத்தால் சொல்லுகிறது –

ஆக -பாப -சப்தத்தால் –
சாம்சாரிக சகல துக்க ஹேதுவாய் -நிரதிசய ஆனந்த ரூப பகவத் ப்ராப்திக்கும் -பிரதிபந்தகமான சகல கர்மங்களையும் சொல்லிற்று
ஸ்வரூப விரோதியாயும் -சாதன விரோதியாயும் -ப்ராப்ய விரோதியாயும்-பிராப்தி விரோதியாயும் –
சதுர் விதமாய் இறே விரோதி தான் இருப்பது –
அதில் ஸ்வரூப விரோதி -ப்ரணவத்தில் மத்யம பதத்தாலும் –
சாதன விரோதி-திரு மந்திரத்தில் மத்யம பதத்தாலும் -நிவ்ருத்தம் ஆயிற்று
ப்ராப்ய விரோதி -த்வயத்தில் சரம பதத்தால் நிவ்ருத்தம் ஆயிற்று
பிராப்தி விரோதி நிவ்ருத்தி சொல்கிறது இப் பதத்தாலே –

இதில் பஹு வசனத்தால்
பிராப்தி விரோதி பாஹுளயத்தைச் சொல்லுகிறது -அவை யாவன –
அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
அவித்யை யாகிறது -அஞ்ஞானம் -அது தான் ஞான அநுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -ரூபேண த்ரிவிதமாய் இருக்கும் –
ஞான அநுதயமாவது-ஒரு பதார்த்த விஷயமாக ஒரு ஞானமும் உதியாமை
அந்யதா ஞானம்-ஆவது -பதார்த்த விஷயமான ஸ்வ பாவத்தை அந்யதாவாக க்ரஹிக்கை
சம் ப்ரதி பன்னமாக ஸ்வேதமான சங்கத்தை பீதகமாய்- பிரமிக்குமா போலே
விபரீத ஞானமாவது -பதார்த்த ஸ்வரூபத்தை விபரீதமாக க்ரஹிக்கை -ரஜ்ஜுவில் சர்ப்ப புத்தி போலே
இவை மூன்றும்
ஆத்மா என்று ஒரு வஸ்து உண்டு என்று அறியாமையும்
ஆத்மா உண்டு என்று அறிந்தால் அவனை ஸ்வ தந்த்ரனாக நினைக்கையும்
ஆத்மாவானது தேகமே தான் என்று அறிகையும் –

கர்மா ஆவது
அக்ருத் கரண-க்ருத்ய அகரண-பகவத் அபசார -பாகவத அபசார -அஸஹ்யா அபசார -ரூபமாகவும்
புண்ய பாப ரூபமாகவும்
பாதகம் -அதி பாதகம் -மஹா பாதகம்
தொடக்கமான விசேஷங்களால் பஹு விதமாக -பூர்வா கோஸ்த்த ராக ரூபமாய் இருக்கும்

அக்ருத்ய கரணமாவது -சாஸ்திரங்களில் அவிஹிதமானவற்றைச் செய்கை
க்ருத்ய அகரணமாவது -விஹிதமானவற்றைச் செய்யாது ஒழிகை –
பகவத் அபசாரமாவது -பகவத் அர்ஹமான த்ரவ்யங்களைத் தான் ஜீவிக்கையும்
ஜீவிப்பார் பக்கல் சா பேஷனாயும் அயாசிதமாகவும் யாசிதமாகவும் ஜீவிக்கை யும் –
அர்ச்சாவதாரத்தில் உபாதான ஸ்ம்ருதி
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை தேவதாந்தரங்களோடே சமமாக நினைக்கையும்
அவனதான ஆத்மாத்மீயங்களைத் தன்னதாக நினைத்து இருக்கையும் முதலானவை –
பாகவத அபசாரமாவது
அர்த்த காம அபிமானாதிகள் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடே த்வேஷம் பண்ணுகையும்
ஞானாதிகர் ஆனவர் விஷயத்தில் ஞானத்வாரா உபாதேயர் என்று காண்கை அன்றிக்கே
ஜென்ம வ்ருத்தங்களை இட்டு குறைய நினைக்கையும்
விலக்ஷணர் – விகல கரணர் பாட பேதம் பக்கலிலே-ஷேப யுக்தி பண்ணுகையும்
அவர்கள் பக்கலிலே சஜாதீய புத்தியும் முதலானவை –
அஸஹ்யா அபசாரமாவது –
பகவத் பாகவத விஷயமான உச்சாரயங்கள் கண்டால் அசஹமானனாய்க் கொண்டு அதி வ்ருத்தி பண்ணுகை

பிரகிருதி சம்பந்தம் ஆவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சரீர சம்பந்தம் -இவை அடியாக வரக் கடவதான -ராக த்வேஷம் முதலானவை –
ருசி வாசனைகள் ஆவன-
குண தாரதம்யத்தாலே இந்த ஞானாதிகளைப் பற்றி வரக் கடவதான ருசியும்
அவற்றைப் பற்றி வருகிற அநாதி வாசனையும்
ஆழ்வாரும் -பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்று பிரதானமான
அஞ்ஞான -அசத் ப்ரவ்ருத்தி -தேஹ சம்பந்தங்களை அருளிச் செய்து
இந்நின்ற நீர்மை -என்று தத்கதமான ருசி வாசனைகளை அருளிச் செய்து
இனி யாம் உறாமை -என்று அவை தான் பகவந் நிவர்த்த்யமாக அருளிச் செய்தார் இறே

ஆக –
பாபேப்ய-என்ற பஹு வசனத்தாலே -பிராப்தி விரோதி சகல பாபங்களையும் சொல்லிற்று –
ஆக
இவ்வளவாலே-சாதனாந்தர நிஷ்டனுடன் -சித்த சாதன நிஷ்டனுடன் -வாசியற –
சாதாரணமாக நிவர்த்திக்கப்படும் பாபங்களைச் சொல்லிற்று –

————

அநந்தரம் -சர்வ -சப்தத்தால் –
சித்த சாதன நிஷ்டனுக்கு -விசேஷ நிவர்த்த்யமான பாபத்தைச் சொல்கிறது -அதாவது
தததிகம உத்தர பூர்வாக யோரஸ்லேஷ விநாசவ் –தத் வியபதேசாத் – இதர ஸ்யாப்யே வமஸ்லேஷா -என்று
பூர்வாகத்துக்கு அஸ் லேஷத்தையும்-ப்ரமாதிகமாய்ப் பிறந்த உத்தராகத்துக்கு விநாசத்தையும் சொல்லி வைத்து
போகேநத் விதரேஷப யித்வாத சம்பத்ஸ்யதே -என்று அந்த பூர்வ உத்தராகங்களை ஒழிந்த பிராரப்த கார்யமான
புண்ய பாப ரூப கர்மங்கள் சாதனாந்தர நிஷ்டனுக்கு அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் என்று சொல்லிற்று
சித்த சாதன நிஷ்டனுக்கு அப்படி அன்றிக்கே ப்ராரப்தமும் சர்வ சப்த வாஸ்யமாகக் கொண்டு நிவர்த்தயாம் என்கிறது –
அதுக்கு அடி -பாப சப்த உப பதமான சர்வ சப்தத்தால் -நிவர்த்தய அம்சத்தைச் சொல்லுகையாலே –
சர்வ சப்தம் தனக்கும் சங்கோசம் இல்லாமையாலும்
மாஸூச -என்கிற சோக நிவ்ருத்தி -பாபங்களினுடைய நிரவசேஷ தியாகத்தில் அது கூடாமையாலும்
ப்ராரப்தமும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது –

சாதனம் பகவத் ப்ராப்தவ் ச யே வேதிஸ் திரா மதி -ஸாத்ய பக்திஸ் ஸ்ம்ருதா ஸைவ பிரபத்தி ரிதி கீயதே –
உபாயோ பக்தி ரேவதி தத் ப்ராப்தவ் யாதுசா மதி -உபாய பக்தி ரேதஸ்யா -பூர்வோக்தைவகரீயஸீ –
உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசநீ -ஸாத்ய பக்திஸ் துசாஹநதரீ பிராரப்தஸ் யாபி பூய ஸீ -என்று
பகவத் ப்ராப்திக்கு பகவத் விஷயமே சாதனம் என்கிற நினைவுக்கு ஸாத்ய பக்தி என்று பெயர் –
அது பிரபத்தி என்று சொல்லப்படும் –
பகவத் பிராப்தி உபாயம் பக்தி என்கிற நினைவுக்கு உபாய பக்தி என்று பெயர் –
இதில் காட்டில் பூர்வ உக்தையான ப்ரபத்தியே ஸ்ரேஷ்டை –
உபாய பக்தியான பக்தி யோகம் பிராரப்த வ்யதிரிக்தங்களான பாபங்களைப் போக்கும் –
ஸாத்ய பக்தியான பிரபத்தி யோகம் -பிராரப்த ரூப பாபத்தையும் போக்கும் என்று சொல்லுகையாலும் –
ப்ரபத்தியானது பிராரப்த விநாசிநீ என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம் –

ஆனால் பிரபன்னனுக்கு துக்க ஹேதுவான பிராரப்த சேஷம் அனுபவிக்க வேண்டுவான் என் என்னில் –
பிராரப்த கர்ம நிபந்தந சோகம் ஒழிய பிராரப்த சரீர விஷயமான சோகம் இல்லாமையால் –
உண்டாயிற்றாகில் அப்போதே நசிக்கும் -ஆகை இறே ஸ்ரீ பாஷ்யகாரர் –
ஆராப்த கார்யாந் அநாரப்த்த கார்யாம்ஸ் ச சர்வான் அசேஷத க்ஷமஸ்வ – என்று
ப்ராரப்தமும் ப்ரபத் தவ்யனான பகவான் க்ஷமிக்கத் தீருமாக அருளிச் செய்தது –

சரண்யனான ஈஸ்வரனும் -ஸ்மர்த்தா-என்று மாநாசமான -ப்ரபத்தியைச் சொல்லி
தத -என்று அதனுடைய நைரந்தர்யத்தைக் கழித்து -ம்ரியமாணம் -என்று சரீர அவசா நத்தில் பலமாகச் சொல்லி
ததஸ் சப்தத்தால் சாதகனின் காட்டில் ப்ரபன்னனுக்கு வாசி என்னும் இடத்தை ஸூசிப்பித்து
காஷ்ட பாஷாண ஸந்நிபம் -என்று அந்திம ஸ்ம்ருதிம் அந பேஷிதம் என்று –
அஹம் ஸ்மராமி-என்று அந்திம ஸ்ம்ருதியையும் தானே ஏறிட்டுக் கொண்டு
மத் பக்தன் -என்று அவனுடைய அந்தரங்கதையைச் சொல்லி
பரமாம் கதிம் நயாமி-என்று தானே ஆதி வாஹிகனாய்க் கொண்டு தேச விசேஷத்தை ப்ராபிப்பன் என்கையாலே
இவனுக்கு பிராரப்த கர்மம் அனுபவிக்க வேண்டாம் என்னும் இடத்தை அருளிச் செய்தான் –

நாவிர தோதுஸ் சரிதா ந நா சா ந தோ ந ஸமாஹிதா -ந சாந்த மாநஸோ வாபி பிரஞ்ஞா நே நைவ மாப் நு யாத் -என்று
துஷ் கர்மங்களில் நின்றும் நிவ்ருத்தன் அன்றாகிலும் இந்த பிரபத்தி ஞானத்தால்
ஞான லாபம் உண்டாகக் கடவது என்று சொல்லிற்று –
ஆகையால் பிராரப்த கர்மமும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது

அதுக்கு மேலே -சர்வ தர்மான் -என்று த்யாஜ்யத்வேந விஹிதமான தர்மங்களில் உபாயத்வ புத்தி பின்னாற்றிற்று ஆகில்
அதுவும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது –
அதுக்கு அடி சாதனாந்தர ஸத்பாவ பிரதிபத்தியும் அத்யந்தா பாவமாக வேணும் என்று பரி சப்தத்தால் சொல்லுகையாலே
சதாசார்ய உப திஷ்ட ஞானனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணின அநந்தரம் கர்ம ஹேதுக சரீரஸ்தன் ஆகையால்
அந்த கர்ம பராபல்யத்தாலும் அநாதி வாசனா நிபந்தனமாக புத்தி பூர்வகமாகவும் பிராமாதிகமாகவும் உண்டான பாபங்களும்
சர்வ சப்த வாஸ்யமாய்க் கொண்டு நிவ்ருத்தமாகக் கடவது

இவன் ஸ்வீ கரித்த சாதனம் பலாவ்யபசாரி யாகையாலும் -துன்ப வினைகள் என்றும் -உற்ற இரு வினையாய் என்றும்
பாவமும் அறமும் இறே உபாயபூதனனுடைய கோபமும் அருளும் ஆகையால் அவன் பொறுத்தேன் என்னத் தீருமது ஆகையாலும்
இவன் தான் பூர்வாகத்தோடு உத்தராகத்தோடு பிரார்ப்பத்தோடு வாசியற பிராப்தி விரோதி சகல அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான
இஷ்ட ப்ராப்திக்கு நிரபேஷ சாதனமாக பகவத் விஷயத்தைப் பற்றி இருக்கையாலும் சேதனகதமானவற்றில் சேஷிப்பது ஓன்று இல்லை இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் -வர்த்தமானம் வரத்திஷ்யமானஞ்ச சர்வம் க்ஷமஸ்வ -என்று
வர்த்தமான பாபத்தோடே கூட ஆகாமியான பாவத்தையும் கூட்டி அவை எல்லாவற்றையும் க்ஷமிக்க வேணும் என்று அபேக்ஷித்ததும் –
அத்தைப் பற்ற இறே உத்தராகம் அவசமாக வருமது ஆகையாலும் புத்தி பூர்வகமாக வந்தாலும் ஞானவானாகையாலே
அநந்தர க்ஷணத்தில் அநு ப்த்தனாகையாலும்
பிரபத்த்வயவனுடைய ஞான சக்தி பூர்த்திகளையும் கிருபையையும் அனுசந்தித்து அவ்வனுசந்தானத்தாலே
திருட சித்தனாம் ஆகையாலும் சர்வ சப்த அந்தர்பூதமாகக் கடவது

கால ஷேப அர்த்தமாகப் பண்ணும் அநு கொள்ள வ்ருத்திகளில் சாதன புத்தி பின்னாற்றிற்று ஆகில்
அதுவும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய
ஸக்ருத் ஏவம் ப்ரபந்நஸ்ய -என்று புந பிரபத்தி நிஷேத பூர்வகமாக ஸக்ருத் ப்ரபத்தியே அமையும் என்னா நிற்கச் செய்தேயும்
ஆபத்தசையில் கலக்கத்தாலே பிரபத்தி பண்ணினான் ஆகில் அதுவும் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது
லோக ஸங்க்ரஹார்த்த ப்ரவ்ருத்திகளும் சர்வ சப்த அந்தர்பூதமாகக் கடவது

இவன் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினவன் ஆகையால் -ஏவம் பூத ஞானவான்களாய்
சித்த சாதன பரிக்ரஹம் பண்ணி இருக்கும் சாத்விக அக்ரேஸரானவர்களும் தம் தாமைப் பற்ற
விதி இன்றிக்கே இருக்கச் செய்தேயும் அத்தனை பாகம் இல்லாத சிஷ்ய புத்திரர்களை பற்ற நாம் இவர்கள்
உஜ்ஜீவனத்துக்கு ஹேதுவாகை ஒழிய நாசத்துக்கு ஹேதுவாகை ஒண்ணாது என்கிற ஆந்ரு சம்சயத்தாலே
அனுஷ்ட்டிக்க வேண்டுவன சில கர்மங்கள் உண்டு –
இவை ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்ட்டித்தாலும் ஒரு பலத்தோடு சந்திப்பிக்கக் கடவது –
அந்த பலத்தில் இவனுக்கு அபேக்ஷை இல்லாமையாலும் உண்டானாலும் அப்ராப்தம் ஆகையாலும்
அதுவும் பாபமே ஆகையால் சர்வ சப்த வாஸ்யமாகக் கடவது –

ஆக -சர்வ பாபேப்யோ -என்று
அவித்யா கர்மா வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள்
பூர்வ உத்தராக ப்ராரப்தங்கள்
சரீர சம்பந்த நிபந்தனமாகவும்
அபிமான நிபந்தனமாகவும்
ஆந்ரு சம்சயத்தாலும் வரக்கடவதாய்
பிராப்தி விரோதமான சகல பாபங்களையும் சொல்லிற்று

அங்கன் அன்றியிலே
பாபேப்ய-என்கிற பஹு வசனத்தில் சர்வ பாபங்களும் உபாத்தமாயிற்றாய்
சர்வ சப்தத்தால் இவை எல்லாவற்றையும் என்று சாகல்ய பரமாகவும் சொல்லுவார்கள்

பாபங்களிலே சிறிது கிடப்பது பிரபத்தவ்யன் குறையால் யாதல்
பிறப்பத்தாவின் குறையால் யாதல் ஆக வேணும் இறே
அஹம் சப்த யுக்தமான ஞான சக்த்யாதிகளில் குறை இல்லாமையால் பிரபத்தவ்யன் பக்கலிலே குறை இல்லை
த்வா -என்கிற இடத்தில் தியாக ஸ்வீ காரங்களில் வைகல்யம் இல்லாமையால் பிரபத்தாவின் பக்கலிலே குறை இல்லை

————————–

மோக்ஷயிஷ்யாமி -என்று
ஏவம் ரூப சகல பாபங்களினுடையவும் நிவ்ருத்தி பிரகாரத்தைச் சொல்கிறது –
மோக்ஷயிஷ்யாமி-
யாவை சில பாபங்கள் நிமித்தமாக நீ பயப்படுறாய் -அந்த பாபங்கள் தானே உன்னை விட்டு போம்படி பண்ணுகிறேன்
இதில் -தாத் வர்த்தத்தாலேஅவை தான் என்னைப் பற்றின ராஜ குல சம்பந்தத்தால்
இவன் நமக்கு ஆஸ்ரயம் அன்று என்று கள்ளர் பட்டது பட்டுப் போம் என்றபடி –

அதாவது –
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -என்கிறபடியே –
ஆகாசத்தில் கரந்து கிடக்கிறதோ -சமுத்திர ஜலத்தில் கரைந்து போயிற்றோ -காற்றோடு பரந்து போயிற்றோ –
நெருப்பிலே புக்கு வெந்து போயிற்றோ -மஹா பிரஸ்தானம் போயிற்றோ –
கண்ட கே நைவ கண்டகம்-என்னுமா போலே கன்றாய் வந்த அஸூரனைக் கொண்டு விளாவாய் வந்த அஸூரனை
நிரசித்தவனுடைய திருவடிகளில் தலை சாய்த்த அளவிலே அநாதி காலம் என்னைக் குடிமை கொண்டு போந்த
வலிய பாபங்களைப் பார்ஸ்வத்திலும் கண்டிலோமீ என்று ஆஸ்ரய பூதனான இவனும் அறியாதபடி போகை–

நின்னுள்ளேனாய்ப் பெற்ற நன்மை -என்று நாம் பகவத் ரஷ்ய பூதர் என்கிற அனுசந்தான மாத்திரத்தாலே
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தன -என்கிறபடியே அநாதி கால ஆர்ஜிதமான மஹா பாபங்கள் எல்லாம்
காடு பாய்ந்து போயிற்று என்னா நின்றது இறே

யதை ஷீ கா தூல மக்நவ் ப்ரோதம ப்ரதூயேத ஏவம் ஹாஸ்யா ஸர்வே பாப்மான ப்ரதூயந்தே -என்றும்
ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கை -மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புக்கு
தரு வா நின்றனவும் தீயினில் தூசாகும் -என்கிறபடியே –
வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் சரண் -என்று நினைக்க
பூர்வ உத்தராக ப்ராரப்தம் முதலான சகல பாபங்களும் நெருப்பினால் போட்ட பஞ்சு போலே
பிணம் காண ஒண்ணாதபடி தக்தமாய் போம் என்கிறது

இதில் -ணி-ச்சாலே –
உபாய பூதனான ஈஸ்வரனுக்கு இந்த பாப விமோசனத்தில் ப்ரயோஜக கர்த்த்ருத்வம் ஒழிய
ஸ்வயம் கர்த்த்ருத்வம் இல்லை -ஆதித்ய சந்நிதியில் அந்தகாரம் போலே தானே விட்டுப் போம் என்கிறது

இவை தான் விட்டுப் போகையாவது-புகுந்து கழிந்தது என்று தெரியாதபடி போகை -அதாவது
இவை ஸ்ம்ருதி விஷயமானாலும் -ஸ்வ நிர்ப்பரத்வ அநு சந்தானத்தாலே இவன் நிர்ப்பயனாம் படி போகை
மோக்ஷயிஷ்யாமி -என்கிற இடத்தில்
பவிஷ்ய தர்த்த ஸூ சகமான வசனம் பல விளம்பம் சொல்லுகிறது அன்று
ஏதத் கர்ம கரிஷ்யாமி -என்கிற இடத்தில் தாத் காலிகமான சங்கல்பத்துக்கு வாசகமாகிறாப் போலே
சத்ய காலீந விரோதி நிவ்ருத்தியில் சங்கல்பத்தைச் சொல்கிறது –
உபாய பூதனுடைய இந்த சங்கல்ப மாத்திரத்தாலே பிராப்தி விரோதி சகல பாபங்களும் போம் என்கையாலே –
பாபங்களாவன–பகவந் நிக்ரஹ ரூபமாய் இருப்பது ஒன்றாய் அவன் ஷமித்தேன் என்னத் தீரும் என்னும் இடம் தோற்றுகிறது –
சேதனன் பண்ணின கர்மங்கள் அப்போதே நசிக்கும் –
கிரியாவானவன் அஞ்ஞன் ஆகையால் மறக்கும் –
சர்வஞ்ஞனானவன் ஈஸ்வரனுடைய ஹ்ருதயத்தில் கிடந்து இறே இவை பல பர்யந்தம் ஆவது –
நிருபாதிக ரக்ஷகனான ஈஸ்வரன் -நீ என்னைக் கைக் கொண்ட பின் -என்கிறபடியே
இவனை ரஷ்யத்வேந அங்கீ கரித்த அன்று அவனைப் பொறுத்த போதே தீருமே -ஆகை யிறே
சர்வம் க்ஷமஸ்வ -என்றும்
கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு -என்றும் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்தது –
ஆகையால் இவனுடைய பூர்வாகத்தை க்ஷமித்து உத்தராகத்தில் அ விஞ்ஞாதவாய் இருக்கும்
ஆகையால் பாபங்கள் எல்லாம் பகவத் சங்கல்ப மாத்திரத்திலே நிவ்ருத்தமாம் என்றது ஆயிற்று –

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இருப்பவை பேர்த்துப் பெரும் துன்பம் வேரற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்து -என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடத்தின திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தையில் சொல்லுகிற சித்த சாதனத்தைப் பற்றினவர்களுக்கு
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்தி பலமாய் இருக்க
ஜரா மரண மோஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தியே -என்று ஜரா மரணாதி ஆஸ்ரயமான சரீர விமோசன மாத்ரத்தையே
பலமாக இழிந்த கேவலனைப் போலே விரோதி நிவ்ருத்த மாத்ரத்தையே பலமாகச் சொல்லுவான் என் –
சேஷத்வ ஞான பூர்வகமாக உபாய வரணம் பண்ணின இவ்வதிகாரிக்கு இஷ்ட ரூபமான கைங்கர்ய லாபமே பிரதான பலமாய் –
தத் சித்திக்காக விரோதி நிவ்ருத்தியும் அப்ரதான பலமாய்க் கொண்டு வருமதாய் இருக்க என்னில்

இவ்வுபாய வரணம் பண்ணின இவ்வதிகாரியுடைய பகவத் கைங்கர்யார்த்தித்தவம் ஆகிற முமுஷுத்வத்தாலும் –
பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ரூப ஞான பூர்வகமாக தத் அநு ரூப உபாய வரணம் பண்ணினவன் ஆகையாலும் –
இவன் ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஏவம் ரூப சேஷத்வமே நிலை நின்ற வேஷமாய் இங்கு நிவர்த்த்யமாகச் சொல்லுகிற
அவித்யாதிகள் வந்தேறி யாகையால் -அந்த விரோதி நிவ்ருத்தமானால் -மம சஹஜ கைங்கர்ய விதய-என்று
ஸ்வரூபத்துக்கு சகஜமாய் உபாய பலமாய் இவனுக்கு அபிமதமான கைங்கர்யம் -ஆவிஸ்ஸ்யு -என்கிறபடியே
தன்னடையே ஆவிர்ப்பவிக்கும் அதாகையாலும் மல யோகத்தால் மழுங்கின

மாணிக்கத்தை மாசறக் கடைந்தால் ஸ்வதஸ் ஸித்தமான ஓளி பிரகாசிக்குமா போலே
ஸ்வா பாவிகமான கைங்கர்யமும் பிரகாசிக்கும் ஆகையால் விரோதி நிவ்ருத்தியே பிரதானம் என்கிற ஆகாரம் தோற்ற
பிரதான பலமான கைங்கர்யம் சொல்லாதே தத் அங்கமான விரோதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று

சேஷோஹி பரமாத்மந -என்று சேஷித்வேந பிரசித்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு அவித்யாதிகளான விரோதிகள்
வந்தேறி என்னும் இடம் தந் நிவ்ருத்தியே பிரதானம் என்னும் இடம் சொல்லுகிறது –
யதா ந க்ரியா தேஜ்யோத் ஸ்நா மல ப்ரஷாள நாந மணே-தோஷ ப்ராஹாணாந் நஞ்ஞாந மாத்மந க்ரியதே ததா
யதோத பாந கரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் – ஸ்தேவநீய தேவ்யக்தி ரசதஸ் சம்பவ குக-
ததா ஹேய குணத்வம் சாதவ போதாதயோ குணா -பிரகாச யந்தே ந ஜன்யந்தே நித்யா யே வாத்மநோஹி தே -என்று
யாதொரு படி ரத்னத்துக்கு ஆகந்துகமான அழுக்கைப் போக்குகிற இத்தால் ஸ்வா பாவிகமான ஒளியைப் பிரகாசிப்பிக்கிறது ஒழிய
அபூர்வமான ஒளியை உண்டாக்குகிறது இன்றிக்கே ஒழி கிறது
அப்படியே ஆத்மாவுக்கு வந்தேறியான தோஷத்தை போக்குகிற இத்தால் ஸ்வா பாவிகமான ஞானத்தை பிரகாசிக்குமது ஒழிய
முன்பு இல்லாத ஒரு ஞானத்தை உண்டாக்குகிறது அன்று என்றும் –
யாதொருபடி கிணற்றைக் கல்ல ஜலமும் ஆகாசமும் அப்போது உண்டாகிறது அன்று இறே –
பூர்வமாக உள்வாயில் கிடக்கிறவற்றை பிரகாசிப்பிக்கிறது –
அப்படியே ஹேய குணங்கள் கழிகையாலே ஞானாதி குணங்கள் பிரகாசிக்கின்றன –
அவை ஆத்மாக்களுக்கு நித்யங்கள் அன்றோ இருப்பன என்றும் சொல்லிற்று

பகவச் சாஸ்த்ரத்திலும் –பூர்வம் முக்தா காம பந்தைர் மத்தேச பிராப்தி பூர்வகம் -நிஸ் சங்கோசா பவந்த்யேதே
மம சாதரம்யம் ஆகதா –ஆவிர்ப்பூதஸ் ஸ்வரூபாஸ் ச வித்வஸ்த அசேஷ கல்மஷ–
ஸமஸ்த ஹேய ரேதவம்சாத் ஞான ஆனந்த்தாத்யோ குணா -பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நிக்யாஹ் யாத்மகுணாஸ் சதே–என்று
ஸமஸ்த பிரதிபந்தக கர்மங்களாலும் முக்தராய் -நம்முடைய தேசத்தைப் பிராபித்து நம்மோடே சாதரம்யம் பெற்றவர்கள்
முன்பு சங்குசிதமான ஞானாதிகள் பிரகாசிக்கையாலே நிஸ் சங்கோசர்கள் ஆவார்கள் என்றும்
அசேஷ பாபங்களும் வித்வஸ்தங்களாய்ப் போகையாலே ஆவிர் பூதமான ஸ்வ பாவத்தை உடையவர்கள் என்றும் –
ஸமஸ்த ஹேயங்களும் கழிகையாலே ஞானாந்த குணங்கள் பிரகாசின்றன அத்தனை -உண்டாக்குகின்றன அன்று என்றும்
ஆத்மாவுக்கு நித்யங்களான குணங்கள் இ றே அவை என்று பகவான் தானே அருளிச் செய்தான்

ஸ்ருதியிலும் -பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ் பத்யதே
என்று பரஞ்சோதியைஸ் யைக் கிட்டினால் ஸ்வா பாவிகமான ஸ்வரூபம் பிரகாசிக்கும் என்று சொல்லிற்று இறே –
சம்பத்ய ஆவிர்பாவஸ் ஸ்வேந சப்தாத் -என்று ஸூத்ரத்திலும் சொல்லிற்று
ஆகையால் பிரதான பலம் இஷ்டபிராப்தி கைங்கர்யமே யாகிலும் -அதுக்கு
விரோதி நிவ்ருத்தி மாத்திரமே அபேக்ஷிதமாகிற ஆகாரத்தாலே பிரதானமாக விரோதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று

கேவலனுக்கு விரோதி நிவ்ருத்தி யானவாறே-பகவத் பிராப்தியும் -அனுபவமும் -அனுபவ ஜெனித ப்ரீதியும் –
ப்ரீதி காரித கைங்கர்யமும் -உண்டாகாது ஒழிவான் என் என்னில்
யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்யதே -என்று கைங்கர்ய அர்ஹமான சேஷத்வ ஞானம் உடையவனாய்
தத் கார்யமான ஸ்வரூப பாரதந்தர்யத்தை அனுசந்தித்து தத் அனுரூபமான புருஷார்த்த அபேக்ஷையும் பண்ணி
தத் அனுரூப உபாய வரணமும் பண்ணுகை அன்றிக்கே
பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று -என்கிறபடியே ப்ரக்ருதி விநிர்முக்தாத்ம ஞான மாத்திரத்திலே நின்று
மின்மினி போல் தோற்றுகிற தன்னைக் கண்டு கொண்டு இருக்கிற அளவிலே புருஷார்த்தமாகச் சொல்லுகையாலே
அவனுக்கு பகவத் அனுபவமும் தத் ப்ரீதியும் ப்ரீதிகாரித கைங்கர்யமும் உண்டாயிற்று இல்லை –
அல்லது ஆத்மாவுக்கு கைங்கர்யம் ஆகிற புருஷார்த்த பிரார்த்தனை ஸ்வா பாவிக ஆகாரம் அல்லாமை அன்று

சேஷ பூதனுக்குக் கைங்கர்யம் சகஜம் -ஞாதாவுக்கு தத் பிரார்த்தனை சகஜம் -ஆயிருக்க
கேவலனுக்கு இந்த ஞானம் பிறவாது ஒழிந்தது சேஷியான ஈஸ்வரனுடைய இச்சாதீனமான விநியோகம் ஒழிய
ஸ்வாதீனமாக வருவது ஓன்று இல்லாமையால்
இஷ்ட பிராப்தி ரூபமான பகவத் அனுபவத்துக்கும் அர்ஹதா மாத்திரமே இவனுக்கு உள்ளது –
சேஷியானவன் அனுபவிக்கும் போது அல்லது அனுபவிக்க ஒண்ணாதே -ஆகையிறே
க்ரியதாம் இதி மாம் வத-என்றும் -கூவிக் கொள்ளாய் -என்றும் பிரார்த்தித்தும் -சர்வம் கரிஷ்யாமி -என்கிற
சங்கல்பத்து அளவில் நின்றதும் -ஆகையால் கைங்கர்யம் ஆத்மாவுக்கு சகஜமே யாகிலும்
தத்ரிரோதாயகமான விரோதியைப் போக்கிக் கைங்கர்யத்தை பிரகாசிப்பிக்கிறான் ஈஸ்வரனே என்கிறது –

ஆக ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று உபாய க்ருத்யம் சொல்லுகிறது

அன்றியிலே
மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு – மாமேவைஷ்யசி சத்யந்தே ப்ரதிஜாநே ப்ரியோஸிமே –என்று
என் பக்கலிலே நெஞ்சை வை -என்னையே ஸ்நேஹ பூர்வகமாக இடைவிடாமல் த்யானம் பண்ணு –
ஸர்வ கர்மங்களாலும் என்னையே ஆராதி-என் பக்கலிலே சமர்ப்பித்த ஸர்வ பரனாய்க் கொண்டு நமஸ்ஸைப் பண்ணு –
அநந்தரம் என்னையே அடையக் கடவை -நீ எனக்கு பிராப்யன் ஆகையால் உனக்கு சாத்தியமே ப்ரதிஜ்ஜை பண்ணுகிறேன் -என்று
கீழ்ச் சொன்ன ஸ்வ பிராப்திக்கு ஒரு ஸூகர சாதனத்தை விதிக்கிறது ஆகையால்
இஸ் ஸ்லோகத்தில் தனித்துப் பலம் சொல்லாதே அதுக்கு அபேக்ஷிதமான விரோதி நிவ்ருத்தி அங்குச் சொல்லாமையாலும்
இவ்வுபாய விசேஷ ஸ்வீ காரம் பண்ணின அதிகாரிக்கு விசேஷண நிவர்த்த்யமான விரோதி வேஷம் சொல்ல வேண்டுகையாலும்
பாபேப்யோ என்கிற பதத்தாலும்
ஸர்வ சப்தத்தாலும் –அந்த விரோதிகளைச் சொல்லி
மோக்ஷயிஷ்யாமி -என்று அவற்றினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது என்னவுமாம்

ஆக -அஹம் -என்று சொன்ன
உபாய பூதனுடைய க்ருத்யம் சொல்லிற்று-

—————

அநந்தரம் -த்வா -என்று நிர்த்தேசித்த அதிகாரியினுடைய க்ருத்ய லேஸம் சொல்லுகிறது
மாஸூச –என்று
மாஸூச –
சோகியாதே கொள் என்று விதிக்கிறது –
இத்தால் -வ்ரஜ -என்கிற விதியோபாதி சோக நிஷேத விதியும் கர்த்தவ்யம் என்னும் இடம் தோற்றுகிறது –

இனி சோகிக்கை யாவது
அநிஷ்ட நிவ்ருத்த ரூப பலத்துக்கு ஸ்வ இதர சகல ஸஹாய அஸஹமாய் வாத்சல்யாதி குண விசிஷ்டமாய்
ஞானாதி குண விசிஷ்டமாய் இருக்கிற வஸ்துவை உபாயமாகப் பற்றி ஸ்வ பரங்களையும்
அவன் பக்கலிலே ந்யஸித்து நிற்கிற நிலைக்கு விருத்தம் இறே

ஆகையால் பிரணவத்தில்-பகவத் ஏக ரக்ஷ்ய பூதனாகவும் -பகவத் அநந்யார்ஹ சேஷ பூதனாகவும் -சொல்லப்பட்ட
ஆத்மாவுக்கு ஞாத்ருத்வ நிபந்தனமாக வருகிற ஸ்வ ரக்ஷகத்வ அபிமானத்தையும் -ஸ்வ சேஷித்வ அபிமானத்தையும் –
ஸ்வ ஸ்வாமித்வ அபிமானத்தையும் –
ஞானவாசி தாத்வ ஆஸ்ரயமான ஷஷ்டி அந்த மகாரத்தாலே அதை நிஷேதிக்கிற இடத்தில் நிஷேத்ய வாசியான
மகாரத்துக்கு முன்னே நிஷேத அக்ஷரமான ந காரம் முற்பட்டால் போலேயும்
புருஷார்த்தத்தில் ஸ்வ கீயத்வாதி நிஷேதம் பண்ணுகிற நமஸ் சப்தம் கைங்கர்ய
பிரார்த்தானா வாசி பதத்துக்கு முற்பட்டால் போலேயும்

ஸர்வ தர்ம பரித்யாகம் சொல்லுகிற இடத்தில் த்யாகத்தினுடைய வத்யநதா பாவத்தில் அல்லது
ஸ்வரூப பூர்த்தி இல்லாமையாலும் –
ஸ்வீ கார உபாயத்துக்கு உதயம் இல்லாமையாலும் தத் வாசகமான பரி சப்தம் தியாக சப்தத்துக்கு முற்பட்டால் போலேயும்
வ்ரஜ என்கிற விஹிதமான யுபாய ஸ்வீ காரம் சித்த உபாய விஷயமான பிரதிபத்தி மாத்ரமாய் –
தானும் உபாயமும் இன்றிக்கே ஸஹ காரியும் இன்றிக்கே ஒழிகையாலே
தத் வ்யாவர்த்தகமான -ஏக-பதம் ஸ்வீ கார விதானம் பண்ணுகிற வ்ரஜ என்கிற பதத்துக்கு முற்பட்டால் போலேயும்
ந்யஸ்த பரனான இவனுக்கு உண்டான சோக உதயமும்
ஸ்வ பல அன்வயத்தையும் ஸ்வ ரக்ஷண அன்வயத்தையும் காட்டும் ஆகையால்
சோகம் பிரஸ்த்துதம் ஆவதற்கு முன்பே நிஷேத அக்ஷரம் முற்படுகிறது

ஸ்வ கத ஸ்வீ காரம் -உபகார ஸ்ம்ருதியும் -ஸ்வரூப விருத்தமாய் –
பர ஸ்வீ கார விஷயத்துவமும் பரபல ப்ரபத்தியுமே ஸ்வரூபாயவாம் படி இறே
ஸ்வரூப யாதாத்ம்யத்தைப் பார்த்தால் இருப்பது –
ஆகையால் இவ்வதிகாரிக்கு யாவத் பல பிராப்தி நிர்ப்பரனுமாய் நிர்ப்பயனுமாய் இருப்பதே
கர்த்தவ்யம் என்கிறது -அதாவது
தன்னுடைய பாரதந்தர்ய அனுசந்தானத்தாலும் -உபாய பூதனனுடைய -ஞான சக்த்யாதி குண அனுசந்தானத்தாலும்
நிர்ப்பரனாய் இருக்கையும் -தான் சேஷபூதன் ஆகையால் பலித்வம் இல்லை –
பரதந்த்ரன் ஆகையால் உபாய கர்த்ருத்வம் இல்லை
பல அலாப நிபந்தனமாகவும் -உபாய அபாவ நிபந்தனமாகவும் சோகிக்க பிராப்தி இல்லை –
உபாயாந்தர ஸ்ரவணத்தில் சோகித்திலன் ஆகில் அவற்றினுடைய துஷ் கரத்வ
ஸ்வரூப அநநு ரூபத்வாதி தோஷங்கள் அறிந்திலனாயும்
இவற்றினுடைய தியாகத்தில் அல்லது சித்த உபாயம் அந்வயம் உண்டாகாது என்னும் இடம்
அறிந்திலன் ஆகில் உபாய அதிகாரம் இல்லை –
சித்த உபாய ஸ்ரவணத்தில் சோகித்திலன் ஆகில் அவனுடைய சஹாயாந்தர அஸஹத்வமும் ஸ்வரூப ப்ராப்தயையும்
முதலான குணங்களையும் அறிந்திலன்
அதில் தனக்கு கர்த்தவ்ய அம்சம் ஒன்றும் இல்லை என்கிற ஆகாரமும் அறிந்திலன் ஆகில் உபேய அதிகாரம் இல்லை

ஆகையால்
முன்புற்றை சோக அனுவ்ருத்தி ஸாத்ய சாதன யாதாத்ம்ய ஞான கார்யம் –
பின்புற்றை சோக நிவ்ருத்தி -சித்த சாதன யாதாத்ம்ய ஞான கார்யம்
சித்த உபாய ஸ்வீ கார அநந்தரம் சோகம் அநு வர்த்திக்கிறது ஆகில் தியாக ஸ்வீ கரத்தில் அந்வயம் இல்லை –
துஷ் கரங்களாய் -ஸ்வரூப விருத்தங்களான சாதனாந்தரங்களினுடைய தர்சனமும்
ஸூ கரமுமாய் ஸ்வரூப அநு ரூபமான சாதன அதர்சனமும் தத் சாபேஷதையும் வ்யவஹிதத்வமும் அதில் அருமையும்
அசாமர்த்யமும் ஸ்வீ கர்த்தாவினுடைய கிஞ்சநதையும் -விரோதி பாஹுல்யமும் தன் நிவ்ருத்தியில் சக்தியும் இறே சோக காரணம்
இவை இல்லாமையால் சோகிக்க வேண்டா என்கிறது -எங்கனே என்னில்

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று -துஷ்கரத்வாதி தூஷித சாதனாந்தரங்களை த்யஜிக்கச் சொல்லுகையாலே
சாதனாந்தர தர்சனம் அடியாக சோகிக்க வேண்டா
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று ஸூகர சாதனத்தைப் பற்றச் சொல்லுகையாலே அனுரூப சாதன
அதர்சன நிபந்தனமாக சோகிக்க வேண்டா
மாம் -என்று வாத்சல்யாதி குண விசிஷ்டனாகச் சொல்லுகையாலே ஸ்வ தோஷம் அடியாகவும் –
அவனுடைய அப்ராப்தி அடியாகவும் -தன்னுடைய தண்மை அடியாகவும் –
அவனுடைய துர் லபத்வம் அடியாகவும் சோகிக்க வேண்டா –
ஏகம் -என்று நிரபேஷமாகச் சொல்லுகையாலே சாபேஷதை அடியாக சோகிக்க வேண்டா
சரணம் -என்று -அவ்யவஹிதமாக சாதனமாகச் சொல்லுகையாலே வ்யவஹிதம் என்று சோகிக்க வேண்டா
வ்ரஜ -என்று மானஸ வியாபாரமாகச் சொல்லுகையாலே அருமை அடியாக சோகிக்க வேண்டா
அஹம் -என்று ஞானாதி குண பூர்ணமாகச் சொல்லுகையாலே அசாமர்த்யம் அடியாக சோகிக்க வேண்டா
அதில் சர்வஞ்ஞத்வத்தாலே நிவர்த்த அம்சமும் ப்ராப்தவ்ய அம்சமும் அறியான் என்று சோகிக்க வேண்டா
அவாப்த ஸமஸ்த காமனாகையாலே அபூர்த்தி அடியாக சோகிக்க வேண்டா
ஸ்வாமி யாகையால் அப்ராப்தன் என்று சோகிக்க வேண்டா
கிருபாவத்தையாலே கார்யம் செய்யுமோ செய்யானோ என்று அஞ்ச வேண்டா
த்வா -என்று ஆகிஞ்சன்யத்தைச் சொல்லுகையாலே ஸ்வ ரக்ஷண அந்வயம் அடியாக ரஷிக்க மாட்டான் என்று சோகிக்க வேண்டா
ஸர்வ பாப விமோசகன் ஆகையால் விரோதி பாஹுல்யம் அடியாக சோகிக்க வேண்டா
மோக்ஷயிஷ்யாமி -என்று அவை தானே விட்டுப் போம் என்கையாலே நிவ்ருத்தியில் சக்தி அடியாக சோகிக்க வேண்டா

ஆக
துஷ் கரத்வாதி தோஷ தூஷித சாதனாந்தரங்களை த்யஜித்து வத்சல்யனுமாய் -ஸ்வாமியுமாய் -ஸீலவானுமாய் -ஸூலபனுமாய் –
நிரபேஷனுமாய்-பரம ஆப்த தமனுமாய் -நிரவதிக தாயாவானுமாய் -இருக்கிற என்னைப் பற்றுகையாலும்
சக்ருதேவம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவ அன்யதிஷ்யதே -என்று என்னையே நிரபேஷ உபாயமாகப் பற்றின உனக்கு
கர்தவ்ய அம்சம் இல்லாமையாலும் -சர்வஞ்ஞாதி குணாகனான நான் உன்னுடைய அவித்யாதி சகல பாபங்களையும்
மறுவலிடாத படி போக்கி அசங்குசிதமான அனுபவ கைங்கர்யங்களில் அந்வயிப்பித்து
ஆனந்த நிர்ப்பரனாம் படி பண்ணுகிறேன் என்கையாலும் ஒரு பிரகாரத்தாலும் சோகிக்க ஹேது இல்லை
நீ உன்னுடைய ஸர்வ பரங்களையும் என் பக்கலிலே வைத்து வாழும் சோம்பனாய்-செயல் தீரச் சிந்தித்து வாழ்ந்து
கண்ணனைத் தாள் பற்றிக் கேடு இன்றிக்கே இருக்கையாலே உன்னைப் பார்த்தால் சோகிக்க ஹேது இல்லை –
சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனான நான் ஜன்ம சன்மாந்தரம் காத்துத் தாளிணைக் கீழ் கொள்ளுமவனாய்-
இரு வல் வினைகளையும் சரித்து -வீடு திருத்தி விசும்பு ஏற வைக்கப் பாரிக்கையாலே
என்னைப் பார்த்தாலும் சோகிக்க ஹேது இல்லை
துன்பமும் இன்பமுமாகிய செய் வினையாய்
உற்ற இரு வினையாய்
நல்வினையும் தீ வினையுமாவன் -என்கிறபடியே
விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களாய்
வினை பற்று அறுக்கும் விதியான நம்முடைய அதீனமாய் நாம் பொறுத்தோம் என்னத் தீருமதாகையாலே
விரோதியைப் பார்த்தாலும் ஹேது இல்லை –

இனி சோகித்தாயாகில்-நமக்கு சேஷமும் பரதந்த்ரமுமாய் -அத ஏவ -பல சாதனங்களில் அந்வயம் இன்றிக்கே இருக்கிற
உன் ஸ்வரூபத்தையும் அழித்து உன்னையும் பலியுமாக்கி ஸ்வ தந்திரனாயும் கொண்டு
ஆதித்ய சந்நிதியில் அந்தகாரம் நில்லாதப் போலே ஹேயப்ரத்யநீகனான நம்முடைய சந்நிதியில்
ஹேயம் இல்லாது என்கிற நம் ப்ரபாவத்தையும் அழித்தாயாவுதி

ஈஸ்வரோஹம் அஹம் போகி-என்று அஹங்கார மமகார தூஷிதனாய் -ந நாமேயம் என்று மமக தூஷிதனாய் –
ரக்ஷகனான நானே ஷிபாமி -ந ஷமாமி -என்னும்படி பண்ணிக் கொண்டு அதுக்கு அடியான
பாபம் மூர்த்த அபிஷிக்தமாய் இருக்க சோகியாது இருந்த அறிவு கேட்டோபாதி போரும்–
நீயும் என் பக்கலிலே ந்யஸ்த பரனாய் -நானும் உன் கார்யம் எனக்கே பரமாக ஏறிட்டுக் கொண்டு
சகல பாபங்களையும் போக்குவேன் ஆனபின்பு சோகிக்கையும்

சோகித்தாய் ஆகில் நீ பண்ணின பர ந்யாஸமும் வ்யர்த்தமாய் நான் பாப விமோசனம் பண்ணுகிறேன் என்றதும் நிரரார்த்தமாய்
உன் காரியத்துக்கு நீயே கடவையாய் பழைய பாப பல அனுபவமும் நீயுமாய் விடுவுதி
ஆனபின்பு சோகத்தை விட்டு நிர்ப்பரனுமாய் நிர்ப்பயனுமாய் மத் ப்ராப்தியிலே நிஸ் சம்சயனுமாய்க் கொண்டு
ஸூகமே இரு என்றதாயிற்று

ஆக
த்யாஜ்ய ஸ்வரூபத்தையும்
தியாகம் ஸ்வீ காரம் என்னும் இடத்தையும்
ஸ்வீ கார்யமான உபாயத்தை சீர்மையும்
தந் நைரபேஷ்யத்தையும்
உபாயத்வம் ஓவ் பாதிகம் அன்று நிருபாதிகமே என்னும் இடத்தையும்
ஸ்வீ காரம் மாநஸம் என்னும் இடத்தையும்
உபாயம் ஸர்வ சக்தி யுக்தம் என்னும் இடத்தையும்
அதிகாரியுடைய ஆகிஞ்சன்யத்தையும் –
நிவர்த்த்யமான பாபங்களையும்
தத பாஹுல்யத்தையும்
தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும்
அதிகாரியினுடைய நிர்ப்பர-நிர்ப்பயத்வங்களையும் சொல்லித் தலைக் காட்டுகிறது

ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம் முற்றிற்று

ஸ்ரீ திருவரங்கச் செல்வனார் என்னும் ஸ்ரீ பரகாலார்யர் அருளிச் செய்தவை ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் என்னும் இந்த ஸ்ரீ கிரந்தம்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் – –ஸ்ரீ சரம ஸ்லோக பிரகரணம் -பூர்வார்த்தம் -மாம் பதார்த்தம்/ ஏகம் பதார்த்தம்/சரணம் பதார்த்தம் / வ்ரஜ பதார்த்தம்– –

September 1, 2019

ஆக
சர்வ தர்மான்–பரித்யஜ்ய-பத த்வயத்தாலும் –
த்யாஜ்யமான தர்மங்களையும்
தியாக பிரகாரத்தையும்
தியாகம் -ஸ்வீ காரத்துக்கு அங்கம் என்னும் இடத்தையும் சொல்லிற்று

———-

அநந்தரம் தியாக அங்கமான ஸ்வீ காரத்தைச் சொல்லுகிறதாய்க் கொண்டு
ஸ்வீ கார ஸ்வரூபத்தை -மாம் -என்கிற பதத்தால் சொல்லுகிறது –
இவ்விடத்தில் பதர் கூட்டத்தை விட்டு மணி பர்வதத்தை அண்டை கொள் என்பாரைப் போலே இறே
இந்த விதி த்வயமும் என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் என்று
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வார் –
சாதனாந்தரங்கள் ச அபாயங்களாய் -அநேகங்களாய் -அசேதனங்களாய் -இருக்கையாலே
பதர் கூட்டம் போலே என்கிறது
இவன் சித்த ஸ்வரூபனாய் -ஒருவனாய் -பரம சேதனனாய் -இருக்கையாலே
மணி பர்வதம் போலே என்கிறது –

மாம் -என்று
த்வத் சாரத்யே ஸ்திதனான -என்னை என்றபடி –
இத்தால் நீ விமுகனான அன்றும் -அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கியும்
கரண களேபர விதுரனாய் -அசித் அவிசேஷிதனான அன்றும் -தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்
பின்பு நீ அபி முகனாய் உஜ்ஜீவிக்கக் கூடுமோ என்று கரண களேபர பிரதானம் பண்ணியும்
பின்பு அவற்றைக் கொண்டு ப்ரவ்ருத்திகள் செய்கைக்காக அநு பிரவேசித்து
தன்னைப் பெறுகைக்கு உடலாய் இருபத்தொரு ஞான விசேஷம் உண்டாமோ என்னும் நசையாலே
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து

த்ருதி நியமன ரஷா வீக்ஷணைஸ் ஸாஸ்த்ர தான ப்ரப்ருதி பிர சிகித்ஸ்யாந் பிராணிந –
ப்ரேஷ்ய பூய்-ஸூர மநுஜ திரஸ்சாம் லீலயா துல்ய தர்மாத் வமவதரசி தேவோ ஜோபி சந்நவ்ய யாத்மா -என்று
இப்படியே தரித்து -நியமித்து -ரக்ஷண அவகாசமான ரஷ்ய அபேக்ஷை பார்த்து இருந்து -ஸாஸ்த்ர பிரதானம் பண்ணி –
செய்து போந்த விவ்வோராகார விசேஷங்களாலே ரக்ஷண அவகாசம் பண்ணிக் கொடாமையாலே –
ரக்ஷணத்தில் ஒரு சிகித்ஸை இல்லாத பிராணிகளைக் பார்த்து தேவ திர்யக்காதி யோனிகளிலே
அவர்களோடே ஸமான தர்மாவாய்க் கொண்டு அவதரியா நிற்புதி –
ஜனன மரணாதி யோக்யம் இன்றிக்கே நித்யனாய் இருக்கச் செய்தேயும் என்கிறபடியே
ஓலைப்புறத்திலே செல்லாத இடத்தை எடுத்து விட்டு நடத்துவாரைப் போலே
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணுவதாய் இப்படி எதிர் சூழல் புக்குத் திரிகிற
தனது வியாபாராதிகளைக் காட்டுகிறான்

மாம் -என்று
தனது வ்யாமோஹத்தைக் காட்டுகிறான் என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் -அதாவது
வைகுண்டேது பரே லோக -இத்யாதிகளில் படியே –
பக்தைர்ஸ் பாகவத ஸஹ-என்கிற வைகுந்தத்து அமரரும் முனிவருமான அயர்வறும் அமரர்களோடு
ஸ்ரீ பூமி நீளா தேவிமார்களோடே எழுந்து அருளி இருந்து -நிரந்தர பூர்ண அனுபவம் நடக்கச் செய்தேயும் –
லீலா விபூதியில் உள்ளாருடைய இழவே திரு உள்ளத்தில் பட்டு –
ச ஏகா கீ ந ரமேத -என்று அவ்வனுபவம் உண்டது உருக்காட்டாதே திரு உள்ளம் புண்பட்டு
இவர்களையும் அவ்வனுபவத்தில் மூட்டலாமோ என்னும் நசையாலே அவதரித்தது தாழ நின்று
அவன் கால் தலையிலே பட நின்று வியாபாரித்த தன் வியாமோஹம் எல்லாம் தோற்றும்படி இருக்கை –

நீ உனக்கு போக்யமான சப்தாதி விஷயங்களை புஜிக்கையாலே உன் உடம்பில் புகரைப் பார் –
எனக்குப் போக்யமான உன்னை அனுபவிக்கப் பெறாமையாலே என் உடம்பில் வெளுப்பைப் பார் –
என்று சட்டையை விழ விட்டுக் காட்டுகிறான் -என்று ஸ்ரீ எம்பார் அருளிச் செய்வார்
போக்தாவுக்கு தன் போக்ய ஜாதத்தில் ஓன்று குறையிலும் குறையாய் இருக்கும் இறே –
அஹம் அன்னம் -என்று ஆத்மவஸ்து அத்தலைக்கு போக்யமாய் இறே இருப்பது –

ஆக -மாம் -என்று
பர -வ்யூஹாதிகளையும் -விபவாந்தரங்களையும் –
இவ்வாகாரம் தன்னில் நவநீத ஸூவ்யார்த் அபதாநாந்தரங்களையும் வ்யாவர்த்தித்து –
உனக்கு சாரதியாய் -உனக்கு இழி தொழில் செய்து நிற்கிற என்னை -என்று
பார்த்தன் தன் செல்வத் தேர் ஏறு சாரதி -என்றும்
கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் -என்றும்
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் -என்றும் சொல்லுகிற
தேசம் அறிய ஓர் சாரதியான நிலையைக் காட்டுகிறது –

மாம் -என்று –
ஆஸ்ரயணீயமான வ்யக்தியைச் சொல்லுகையாலே -ஆஸ்ரயண உபயோகியாக
நிகரில் புகழாய் -உலகம் மூன்று உடையாய் -என்னை ஆள்வானே -திருவேங்கடத்தானே -என்று
ஆம் முதல்வரால் அனுசந்திக்கப் பட்டு
அனுஷ்டான வாக்கியத்தில் நாராயண பதத்தில் அனுசந்தேயமான
வாத்சல்யாதி குண சதுஷ்ட்யங்களும் அனுசந்தேயங்கள்

வாத்சல்யமாவது –
அன்று ஈன்ற கன்றின் பக்கல் தாய் பண்ணும் வியாமோஹம் -அதாவது
சுவடு பட்ட தரையில் புல்லையும் காற்கடை கொள்ளும் தேநு வானது-தன் கடையில் நின்றும் புறப்பட்ட
கன்றினுடைய தோஷத்தைத் தன் பேறாக நக்கித் தன் முலைப்பாலாலே தரிப்பிக்குமா போலே
ஆஸ்ரித கதமான தோஷமே போக்யமாக அங்கீ கரித்து
பாலே போல் சீர் -என்கிற தன் கல்யாண குணங்களால் அவர்களை ரஷிக்கை-

ஸ்வாமித்வமாவது
ஆஸ்ரிதருடைய பேறு இழவுகளால் உண்டான ஸூக துக்கங்கள் அவர்களுக்கு
அன்றிக்கே யாம் படி அவர்களை உடையனாகை-

ஸு சீல்யமாவது
அவாக்ய அநாதர-என்கிறபடியே பெரிய மேன்மையை உடையவனாய்
அவன் எவ்விடத்தான் நான் யார் -என்னும்படி இருக்கிறவன் -ஷூத்ர சம்சாரியான சேதனனோடு
அவன் சிறுமையாதல் -தன் பெருமையாதல் -தன் நெஞ்சில் படாதபடி -புரையறக் கலக்கை

ஸு லப்யமாவது
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்கட்க்கு கட்கரிய கண்ணன் -என்கிறபடியே
அதீந்த்ரியனான தான் எல்லாருடைய கண்ணுக்கும் இலக்காய்க் கொண்டு ஸூலபமாய் நிற்கை

நயோத்ஸ் யாமி -என்று தர்மத்தில் அதர்ம புத்தி பண்ணி யுத்தத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனன்
தோஷம் பாராமல் மேல் விழுந்து தன் பேறாக அவனுக்கு அத்யாத்ம உபதேசம் பண்ணுகையாலே
வாத்சல்யம் காணலாம்

அர்ஜுனனுக்கு இழி தொழில் செய்து -அவன் ரதியாய் இவன் சாரதியாய் -அப்ராதனாய் நிற்கிற தசையில்
தன் சர்வ சரீரித்வ -சர்வ நிர்வாஹத்வாதிகளை உபதேசியா நின்று கொண்டு –
தேவர் தலை மன்னர் தாமே -என்றும்
பார்த்தன் தன் தேரை யூரும் தேவன் -என்றும் சொல்லும்படியாய் இருக்கிற
வைஸ்வரூபத்தைக் காட்டுகையாலே ஸ்வாமித்வம் காணலாம் –

அதிசயித ஞானரான ஸூரிகளுக்கும் எட்ட அரியனாய் இருக்கிற தானே
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகேதி -என்றும்
சேந யோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே ச யுக -என்று
வாராய் தோழனே கிருஷ்ணனே யாதவனே என்று அழைத்து -தேரை நடத்து -புரவியை விட்டுக் குளிப்பாட்டு -என்னும்படி
பார்த்தர்க்காய் -ஐவர்க்காய் -தேர் மன்னார்க்காய் -என்கிறபடியே அவர்களுக்கு கை ஆளாகக் கொண்டு
பங்காக முன் ஐவரோடும் அன்பளவி நிற்கையாலே ஸு சீல்யம் காணலாம் –

ந ச நத்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்க நைநம் –என்றும்
நமாம் ச சஷுர் அபி வீஷதேதம -என்றும்
யஸ்யாவதார ரூபாணி ஸமர்ச சந்திதி வவ்கச -என்றும்
அ பஸ்ய நத பரம் ரூபம் -என்றும்
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் -என்றும்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்–என்றும்
நீறாடி தான் காண மாட்டாத -என்றும்
இத்யாதிகளால் சொல்லுகிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் ஸ்வ யத்னத்தால் காண நிலம் இன்றிக்கே இருக்கிற விக்ரஹத்தை
திவ்யம் ததாமி தே சஷுர் பஸ்யமே யோகமைஸ்வரம் –என்று அர்ஜுனனுக்கு திவ்ய சஷுசைக் கொடுத்து அனுபவிப்பித்து
விஸ்வரூப தரிசனத்தால் வந்த ஹர்ஷ பயங்களாலே
க்ரீடி நம்கதிகம் சக்ர ஹஸ்த மிச்சாமி த்வாதரஷ்டு மஹம் ததைவ-தேநைவ ரூபேண சதுர்புஜேந சஹஸ்ர பாஹோபவ விஸ்வ மூர்த்தே -என்று
பரிசரித பூர்வமான ஸூபாஸ்ரய விக்ரஹத்தையே காண வேணும் என்று பிரார்த்தித்த அளவில்
வ்யபேதபீ ப்ரீதமநா புநஸ்த்வம் ததேவ மே ரூப மிதம் பிர பஸ்ய -என்று ஸ்வ அசாதாரண விக்ரஹத்தைக் காட்டியும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய-என்று நித்ய ஸூரீகள் கண்டு சத்தை பெற்றும் போருகிற திவ்ய விக்ரஹத்தை
அர்ஜுனனுக்குக் கடகாக்கி ஒதுங்குகைக்கும் துரியோதனாதிகளில் இலக்காவதிலே செய்யவும் பண்ணி நிற்கையாலே
ஸுலப்யம் காணலாம்

இந்த வாத்சல்யாதிகளில் காட்டில் கீழ் சொன்ன வ்யாமோஹ குணமே ஆஸ்ரிதற்கு உத்தாரகம் ஆவது
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத்
தான் என்னை முற்றும் பருகினான் -என்கிறபடியே ஒரு சேதனனைப் பெற்றானாகில் உஜ்ஜீவித்தல் –
இல்லையாகில் நாவிலும் பல்லிலும் நீர் அற்றுக் கிடக்கும்படியான வ்யாமோஹத்தோடே என்னை முற்றப் பருகினான்
உய்யும் உபாயம் மற்றின்மை தேறி -என்று தன்னுடைய ஆத்மசத்தையை அவனுக்கு அலங்காரமான திரு ஆபரணம் திரு மாலைகளாகவும்
இவருடைய யுக்தி மாத்திரமே திருப்பீதாம்பரம் முதலான அலங்காரங்களாகவும் கொள்ளும் படியான
வ்யாமோஹம் அல்லது உஜ்ஜீவன உபாயம் இல்லை என்றார் இறே

அல்லாத சரண்யர்களில் இவனுக்கு விசேஷம் –
நிருபாதிக ரக்ஷகத்வமும் இந்த வ்யாமோஹ குணமும் என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை வார்த்தை –

இவ்விடத்தில் -மாம் -என்கிற
அபரோக்ஷ நிர்த்தேசத்தால் பிரகாசிதமாய் -கீழ்ச் சொன்ன ஸுலப்ய குணத்துக்கு விஷயமாய் –
ஆஸ்ரயண உபயோகி தயா த்வயத்தில் -சரண -சப்தத்தால் சொல்லப்பட்ட விக்ரஹவத்தையும் சொல்லுகிறது –
அதாவது
சேநா தூளி தூ சரிதமாய் -அலை எறிகிற கொத்தார் கருங்குழலும்-
ஸ்வேத பிந்துஸ் தபதிதமான கோள் இழை வாண் முகமும்
ஆஸ்ரித விரோதி தர்சனத்தாலே சீறிச் சிவந்து சிதற அலர்ந்த தாமரைத் தடாகம் போலே
கண்டவிடம் எங்கும் அலை எறிகிற திருக்கண்களும்
காளமேக நிபஸ்யாமமாய் இருந்து குளிர்ந்த திரு மேனியும்
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு அணைந்த வனமாலையும்
அதுக்கு பரபாகமாம்படி சாற்றினை அந்தி போல் நிறத்தாடையும்
தூக்கின வுளவு கோலும்
ஞான முத்திரையோடு கூடின அணி மிகு தாமரைக்கு கையில் கோத்த சிறு வாய்க் கயிறுமாய்
நிற்கிற நிலையைக் காட்டுகையாலே விலக்ஷண விக்ரஹ யோகம் தோற்றிற்று

மாம் -என்று
விலக்ஷண விக்ரஹ உபேதமாய் -வாத்சல்யாதி குண விசேஷ வஸ்துவைச் சொல்லுகையாலே –
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸா
ஸ்ரீ வத்ஸ வக்ஷ ஸம்ஜாதம்
திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற –என்கிறபடியே இந்த விக்ரஹத்துக்கு நிரூபக பூதையாய்
அலர் மேல் மங்கை உறை மார்பா -நிகரில் புகழாய் –இத்யாதிகளாலே
வாத்சல்யா திகளுக்கு உத்பாவையாக ஸ்ரீ நம்மாழ்வாரால் அனுசந்திக்கப் பட்டு இருப்பவளாய்
ஆஸ்ரியிக்கும் சேதனரை அபராத அபஹரணம் பூர்வகமாக அங்கீ கரிக்கும்படி பண்ணக் கடவ
புருஷகாரத்துக்கு அநு ரூபமான உபய விஷய சம்பந்தத்தை உடையளாய் இருக்கிற
ஸ்ரீ லஷ்மி சம்பந்தம் இப்பதத்திலே அநு சந்தேயம்

ஸ்ரீ கர்ப்ப பரமேஸ்வர
திருவுடை யடிகள்
திரு மகளார் தனிக்கேள்வன் பெருமை உடைய பிரானார்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே பிரகாசிக்கிறது ஸ்ரீ சம்பந்தத்தால் இறே

ஆக
புருஷகார வஸ்துவையும் -வாத்ஸல்யாதி குண விசேஷங்களையும் சொல்லுகையாலே
அநு சந்தான ரஹஸ்யத்தில் பிரதமபதமான ஸ்ரீமத் பதத்தையும் நாராயண பதத்தையும் நினைக்கிறது –
இப்படி வேண்டுகிறது
விதி அனுஷ்டானங்களுக்கு ஐக்கியம் உண்டாக வேண்டுகையாலே –
ஸ்ரீ மானான நாராயணனை இறே அங்கெ உபாயமாக பிரார்த்திக்கிறேன் –
ஆக
ஸ்ரீ மத்தை சொல்லுகையாலே அபராதாதிகள் பாராமல் ரஷிக்கும் என்கிறது
நாராயண பாதத்தால் புருஷகார பூதையானவள் சிதகுரைக்கும் -என்றும் –
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்றும்
அவளோடு மறுதலைத்து ரஷிக்கும் ஸ்வ பாவத்தைச் சொல்லுகிறது –

இப்படி ஸ்ரீயப்பதியான நாராயணன் ஆகிறான் ஸ்ரீ கிருஷ்ணன் என்னும் இடம்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய ஆஹ்யாதோ மதுராம் புரீம் -என்று சொல்லிற்று –
ருக்மணீ கிருஷ்ணம் ஜென்மநி -என்கையாலே ஸ்ரீயப்பதித்வம் அநு வார்த்தைக்கும் இறே
குணியான வாஸ்து புக்க இடத்தே குணங்களும் புகுருமாகையாலே நாராயணத்வம் அநு வருத்தமாகக் குறை இல்லை –
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திர் அபிசாப்யயா
சர்வம் க்ருதஸ்நஸ்ய ஜகத் பிரபவ பிரளய ஸ்தரர
மயி சர்வம் தமோ பர தம ஸூத்ர மணி கணா இவ
மயா ததமித்தம் தம் சர்வம் ஜகத் வ்யக்த மூர்த்திநா
மத் ஸ்தாநி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ்வ வஸ்தித -நச மத் ஸ்தாநி பூதாநி பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -இத்யாதிகளாலே
நாராயண பத யுக்தமான
சர்வ காரணத்வ
சர்வ சம்ஹர்த்ருத்வங்களும்
சர்வ வியாபகத்வ
சர்வ ஆதாரத்வாதிகளும்
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் அநு சந்திக்கப் படா நின்றது இறே
ஆகையால் –
ஸ்ரீயப்பதியாய் நாராயணனான என்னை என்றபடி –

ஆனால் நாராயண சப்த உக்தங்களான சகல குணங்களும் அனுசந்தேயங்கள் ஆகாதோ என்னில்
மாம் -என்று ஆஸ்ரயணீய வ்யக்தியைச் சொல்லுகையாலே ஆஸ்ரயணீய உபயோகியான வாத்சால்யாதிகளை இங்கே அநு சந்தித்து
அஹம் என்று அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிரதனானவன் பக்கலிலே தத் உபயோகிகளான ஞான சக்த்யாதிகளையும்
அனுசந்திக்கப் பிராப்தம் ஆகையால் சகல குணங்களும் அனுசந்திக்க வேணும் என்கிற நியமம் இல்லை

ஆக
ஆஸ்ரித சேதனனுடைய ஸ்வ அபராத பய நிவ்ருத்தி ஹேது பூத புருஷகார யோகமும்
ஸ்வ தோஷ தர்சன பய நிவ்ருத்தி ஹேது பூத வாத்சல்யமும்
அப்ராப்ததா நிபந்தன பய நிவ்ருத்தி ஹேதுவான ஸ்வாமித்வமும்
ஸ்வ நைச்சியதா நிபந்தந பய நிவ்ருத்தி ஹேதுவான ஸுசீல்யமும்
துர் லபத்வ நிபந்த பய நிவ்ருத்தி ஹேதுவான ஸுலப்யமும்
மாம் என்கிற ஆஸ்ரயணீய வஸ்துவின் பக்கலிலே அநு சந்தித்ததாயிற்று

————-

அநந்தரம் -ஏகம் -சப்தம்
இவ் உபாய விசேஷத்தைச் சொல்லும் இடங்களிலே
த்வமே வோபாய பூதோ மே பவ
தமேவ சரணம் கச்ச
மா மேவயே பிரபத்யந்தே
நாமேவ ஸாத்யம் புருஷம் பிரபத்தயே
தமேவ சரணம் ப்ராப்ய
பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் –இத்யாதிகளாலே
அவதாரணம் ஸஹிதமாக பிரயோகித்துக் கொண்டு போருகிற ஸ்தான ப்ரமாணத்தாலே
உகாரம் போலே ஏக சப்தமும் அவதாரணமாய் உபாயத்தினுடைய சஹாயாந்தர அஸஹத்வ ரூப நைரபேஷ்யத்தைக் காட்டுகிறது –

ஏக சப்தத்துக்குப் பொருள் த்வித்வ வ்யாவ்ருத்தி இறே -இத்தால் எது வியாவர்த்த்யம் என்னில்
உபாயத்வேந ஆஸ்ரயணீயமாய் ஆகிற இவ் வஸ்துவுக்கு விசேஷணமான ஏக சப்தம் ஆகையால்
தத் பிரதி கோடியான யுபாயாந்தரங்கள் -உபாய உபயோகிகளாய் வருமவை இறே -வ்யாவர்த்தங்கள் ஆவது –
அதில் கர்ம ஞாநாதி சாதனாந்தரங்களினுடைய தியாகம் கீழே சொல்லுகையாலே அவை வியாவர்த்தங்கள் என்ன ஒண்ணாது
ஸ்வீ கர்த்தாவான சேதனனுடைய முமுஷுத்வத்தாலும் -பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூப நிஷ்டையாலும்
மத்தத பரதரம் அந்நியத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய -என்கிற ஆஸ்ரயணீயனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தாலும்-
தேவதாந்தரங்கள் இங்கு அப்ரஸ்துதங்கள் ஆகையாலும் அவை வியாவர்த்தங்கள் என்ன ஒண்ணாது –
இது தான் சுத்தமான சாதனத்தைப் பற்றி வருகிற பிரதிபத்தி மாத்ரம் ஆகையால் –
அதில் உபாயத்வமாதல் -அங்கத்வம் ஆதல் -இல்லாமையால் –
மாம் சரணம் -என்று உபாயத்வம் மாம் என்று நிர்த்தேசிக்கப்பட்ட வஸ்துவின் மேலே கிடக்கையாலும்
அது தான் சஹாயாந்தரங்களை சஹியாதபடி நிரபேஷமாகையாலும்-
பிரபத்தியில் உபாயத்வமும் அங்க பாவமும் இல்லை

உண்டாமாகில் இவ் உபாயத்துக்கு உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூபமான சித்தத்வ நைரபேஷ் யங்கள் இல்லையாம்
ஆனால் ஏக சப்தத்துக்கு வியாவர்த்யமாக ஓன்று இல்லாமையால் அது நிரர்த்யம் ஆகுமே என்னில்
உபாயாந்தர வ்யாவ்ருத்திக்கு அவகாசம் இல்லையே யாகிலும் -சித்த உபாய பிரபத்தியில் அங்க பாவம் இல்லையே யாகிலும் –
யத் அநந்தரம் யத் பவதி தத் தஸ்ய காரணம் -என்று யாது ஓன்று உண்டான அநந்தரத்தில் யாது ஓன்று உண்டாம் –
அதுக்கு முன்னிலது காரணம் என்கிற நியாயத்தால் –
உபாய உபேயத்வேததி ஹத வதத்வம் நது குணவ் -என்று உபாயத்வம் நித்யமே யாகிலும் இவனுடைய ஸ்வீ கார அநந்தரம்
அவனுடைய உபாய பாவம் ஜீவிக்கையாலே
ஸ்வீ காரத்திலே அங்க புத்தி பிறக்கைக்கு யோக்யதை யுண்டாகையாலே அது வ்யாவர்த்யம் ஆகலாம்

ஆனால் அங்க பாவம் கழிகிற படி எங்கனே என்னில் -அங்கமாவது அங்கிக்கு கிஞ்சித் காரமாமது இறே –
அந்த கிஞித்காரம் தான் ஸ்வரூப உத்பாதகமாயாதல் –
உத் பன்ன ஸ்வரூபத்துக்கு வர்த்தகமாயாதல் –
வர்த்தித்த ஸ்வரூப பல பிரதமாயாதலாய் இருக்கும் –
அதில் சித்த ஸ்வரூபம் ஆகையால் உத்பத்த்ய அபேக்ஷை இல்லை –
ஏக ரூபமாகையாலே வ்ருத்த்ய அபேக்ஷை இல்லை
பரம சேதனன் ஆகையாலும்
அமோக ஸங்கல்பன் ஆகையாலும்
சர்வஞ்ஞாதி குண விசிஷ்டன் ஆகையாலும்
நிருபாதிக ஸூஹ்ருத் தாகையாலும்
பல பிரதா நத்திலும்
அந்ய சாபேஷதை இல்லை –

யத் யத் சாதனம் தத் தத் சாங்கம்–என்கிறபடியே உபாயமாகில் அங்க சா பேஷமாய் அன்றோ இருப்பது –
பக்த்யாதிகளைப் போலே என்னில் –
அது உபாயத்வ நிபந்தனம் அன்று -சாத்யத்வ நிபந்தனம் -எங்கனே என்னில் -பக்தி –
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி–நராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்னே பக்தி ப்ரஜாபதி -என்கிறபடியே
சிர காலம் ஸாத்யம் ஆகையால் கர்ம ஞானங்களை அபேக்ஷித்து இருக்கும்
சிர காலேந நிஷ் பன்னமாக வேண்டுகையாலே பகவத் ப்ரசாதாதி சா பேஷமாய் இருக்கும்
அசேதனம் ஆகையால் பல பிரதானத்திலும் ஈஸ்வர அனுக்ரஹ சா பேஷமாய் இருக்கும் –
இவ் உபாயம் அவற்றை அபேக்ஷித்து இராது -ஆகையால் ஸ்வீ காரம் அங்கமாக மாட்டாது –

உபாயாந்தரங்கள் உபாயமாகிறது பல பிரதரான தேவர்களுக்கு ப்ரசாதனம் ஆகிறவோ பாதி இதுவும் ப்ரசாதனம் ஆனாலோ என்னில் –
அவர்கள் பல பிரதான உந்முகர் அல்லாமையாலே ப்ரசாதன சா பேஷைதை உண்டு
இங்கு உபாய பூதனான ஈஸ்வரன் எதிர் சூழல் புக்கு ஆள் பார்த்துத் திரிகிறவன் ஆகையாலும்
நிருபாதிக ரக்ஷகன் ஆகையாலும் அவனுக்கு ப்ரசாதனமாகச் செய்ய வேண்டுவது இல்லை
உண்டு என்று இருக்கில் தனக்கு ஸ்வா பாவிகமான ஸ்வரூப பாரதந்தர்யத்தையும் கழித்து
அவன் ரக்ஷகத்வத்தையும் சோ பாதிகம் ஆக்குகிறான் அத்தனை –

ஆனால் இவ்வுபாயம் இத்தனை நாளும் ஜீவியாது ஒழிவான் என் என்னில் –
உபாயமாவது -ஒருவனுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரம் பண்ணுகையாலே அதுக்கு ஒரு அதிகாரி யாகில் அபேக்ஷிதம் –
ஸ்வீ காரம் என் செய்ய என்னில் ப்ரயோஜனாந்த பரரிலும்-சாதனாந்தர நிஷ்டரிலும் காட்டில் வியாவ்ருத்தமான
அநந்ய ப்ரயோஜனத்வ அநந்ய சாதனத்வங்களை பிரகாசிப்பிக்கிறது –

இப்படி இவனுடைய ரக்ஷணத்தில் உத்யுக்தனாய் -நிருபாதிக ரக்ஷகனாய் இருக்கிறவன் பக்கலிலே
யாசநா பிரபத்தி
ப்ரார்த்தநா மதி -என்கிற பிரார்த்தனை வேண்டுவான் என் என்னில்
மோக்ஷ தசையில் -சர்வம் கரிஷ்யாமி -என்கிற சங்கல்ப அநு குணமாக சர்வ கால சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசிதமான
சர்வ வித கைங்கர்யங்களையும் கொள்ளுவதாக ஒருப்பட்டு இருக்கச் செய்தேயும் –
அடிமை கொள்ளுகிறவன் உத்துங்க தத்வம் ஆகையாலும் –
அவாப்த ஸமஸ்த காமனாய்க் கொண்டு நிரபேஷனாகையாலும்-
அடிமை தான் ஸ்வரூப சத்தா ஹேதுவான சேஷத்வத்தினுடைய உத்பத்தி ஹேதுவாய்க் கொண்டு
அநு ரூபமாய் அபிமதமாய் இருக்கையாலும்-
சேஷ விருத்தியில் ஆதார அதிசயத்தாலும் பிரார்த்தனை வேண்டினவோபாதி
இங்கும் உபாய பூதனானவன் ரக்ஷண உன்முகனாய் இருக்கச் செய்தேயும்
அவன் ஸ்ரீ யாபதித்தவ நாராயணத்வாதிகளாலே சர்வாதிகனாய் இருக்கையாலும்
தன்னுடைய ஸ்வரூப பாரதத்ர்ய அனுசந்தானத்தாலே இவ் உபாயத்தில் தனக்கு உண்டான ஆதார அதிசயத்தாலும்
பரதந்த்ர சேதனன் ஆகையாலும்
சைதன்ய கார்யமான பிரார்த்தனை வேண்டும் –

அங்கு கைங்கர்யம் சேஷ பூதமான ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான புருஷார்த்தம் ஆகையால்
சேஷ பூதனனுடைய சைதன்ய காரியமாக பிரார்த்தனை புகுந்தது –
இங்கு உபாய விசேஷமும் பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபம் ஆகையால் பரதந்த்ரனுடைய
சைதன்ய காரியமாக பிரார்த்தனை புகுந்தது
ஆகையால் இந்த ஸ்வீ காரம் அதிகாரியை விசேஷித்துக் கொடுக்கிறது –
உபாயமும் அன்று
உபாய அங்கமும் அன்று
பிரபத்தவ்யனுக்கு ரக்ஷகத்வ சேஷித்வாதிகள் ஸ்வ ரூபம் ஆனால் போலே
ரஷ்ய ஸ்வரூபனான ப்ராப்தாவுக்கும் இப்பிரபத்தி ஸ்வரூபம்

அவ ரஷனே -மந ஞாநே -என்கையாலே ரக்ஷண தர்ம ஆஸ்ரய வஸ்துவுக்கு ரஷ்ய விஷயம் அபேக்ஷிதமானால் போலே
ஞான ஆஸ்ரய வஸ்துவுக்கும் ஜேய விஷயம் அபேக்ஷிதமாய் இருக்கும் –
இருவருக்கும் இரண்டும் விஷயமாய் இருக்கையாலும் இரண்டு தர்ம க்ராஹக பிராமண சித்தம் ஆகையாலும்
இருவருக்கும் இரண்டும் ஸ்வரூபமாய் இருக்கும்

இனி அதிகாரிக்கு அங்க பாவம் உண்டாகில் ஸ்வீ காரத்துக்கும் அங்க பாவம் உண்டு –
ஷுத்து அன்னத்துக்கு சாதனம் இன்றிக்கே போஜநா பேஷதா யோதகமாகிறவோபாதி –
இதுவும் உபாயத்வ சம்பாதனம் பண்ணுகிறது அன்று -ரக்ஷகா பேஷாத் யோதகமாய்க் கிடக்கிறது
த்வமே வோபாய பூதோ மே பவ
ததேகோ பாயதா யாச்ஞா -என்று இறே லக்ஷண வாக்கியங்களும் –
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -என்று இப்பிரபத்திக்கு உபாய கார்யத்வம் உண்டு
அத்தனை அல்லது உபாய ஹேதுத்வம் இல்லை
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்
என் செய்கின்றாய் சொல்லு -என்று அவன் நினைவே இறே உபாயம்
இத்தலைக்கு -தத்தஸ்ய -என்று இருக்கைக்கு மேல் இல்லையே
ராஜ மஹிஷி கூலிக்குக் குத்துதல் -குடம் சுமத்தல் -செய்யுமோ பாதி இறே இவன் ஸ்வ ரக்ஷண வியாபாரத்தில் இழிகை யாகிறது
ராஜாவுக்கு போக யோக்யமாய் -அவனாலே ரஷ்யமான சரீர ரக்ஷணம் பண்ணினால்
அவளுக்கும் ஸ்வரூப ஹானியாய் ராஜாவுக்கும் அவத்யமாம் போலே இறே
ஈஸ்வர சேஷமாய் -ஈஸ்வர ஏக ரஷ்யமான ஸ்வரூப சம் ரக்ஷணத்தில் அவன் இழிந்தால்
இவனுக்கும் ஸ்வரூப ஹானியாய் ஈஸ்வரனுக்கு அவத்யமாம் படியாய் இருக்கையாலே
இந்த ஏக சப்தம் -வ்ரஜ -என்று விஹிதமான -ஸ்வீ காரத்திலும் அங்க பாவத்தைக் கழிக்கிறது –

அதவா இந்த ஏக -சப்தம்
சரண சப்த விசேஷணமாய் -அத்தாலே -அத்விதீயமான உபாயம் என்கிறது என்று அருளிச் செய்வார்கள்
அத்தாலும் உபாய நைரபேஷ்யமே பலிக்கிறது
நிரபேஷ உபாயம் ஆகையால் இறே ஆனுகூல்யாதிகளும் அங்கம் இன்றிக்கே
சம்பாவித ஸ்வ பாவங்களாகப் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வர்

—-

சரணம்-
கீழ் மாம் என்று ஸ்வீ கார்யத்வேந சொன்ன வஸ்துவை ஸ்வீ கரிக்கும் பிரகாரத்தைச் சொல்கிறது
சரணம்
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ் சப்தஸ் சரணம் இத்யயம்-வர்த்ததே சம்ப்ரதஞ் சைஷ உபாயர்த்தைக வாசக -என்கிறபடியே
சரண சப்தம் உபாயத்தையும் க்ருஹத்தையும் ரஷிதாவையும் காட்டுமே யாகிலும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற சாதனாந்தர தியாகத்துக்கு அந்தர் பாவியாய் –
பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற பாப விமோசனத்துக்குப் பூர்வபாவியான சரண வரணமாகையாலே
உபாய வாசியாய்க் கிடக்கிறது –

ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி ராஸ்தே -என்றும்
ஸோஸ் நுதே சேர்வான் காமான் ஸஹ -என்றும்
சதா பஸ்யந்தி -என்றும்
ஸ்ரீ யபதியாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -விலக்ஷண விக்ரஹ உபேதனான -வஸ்துவையைப்
ப்ராப்யமாகச் சொல்லுகையாலும்
ஸ்ரீ த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மதே சப்தத்தாலும் -நாராயண -பதத்தாலும் -ஸ்ரீ யபதியாய் -கல்யாண குணாகரமாய் –
விலக்ஷண விக்ரஹ விசிஷ்டமான வஸ்துவையே -கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா ப்ராப்யமாகச் சொல்லுகையாலும் –
கீழ் -மாம் -என்று நிர்தேசிக்கப் பட்ட வஸ்துவுக்கு உபேய தயா வரணம் உண்டாகையாலே-
இப்போது உபேய தயா வரணத்தைக் கழித்து உபாய தயா வரணத்தைச் சொல்லுகிறது –

கீழே ப்ரஸ்துதமான சாதனாந்தர தியாகமே இத்தையும் சாதனத்தில் ஒதுக்கித் தாராதோ என்னில்
தஸ்ய கார்யம் ந வித்யதே
ஷேத்ரஞ்ஞா காரணீ ஞானம் கரணம் தஸ்ய தேநதத் -நிஷ் பாத்ய முக்தி கார்யம்வை க்ருதக்ருத்யம் நிவர்த்ததே -என்கிறபடியே
ஸாத்ய சித்தி அநந்தரம் சாதன தியாகம் கூடும் ஆகையாலும்
ப்ராபக சமயத்தில் போலே ப்ராப்ய சமயத்திலும் சாதனாந்தர தியாகம் வேண்டும் ஆகையாலும்
த்யாஜ்யமான சாதனாந்தரங்கள் இத்தை சாதனத்தில் ஒதுக்கித் தர மாட்டாது

ஆனாலும் உபாய ஸ்வீ காரத்துக்கு அங்க தயா விதேயமான உபாயாந்தர தியாகம் ஆகையால்
ஸ்வீ கார வஸ்துவினுடைய உபாயத்வத்தைக் காட்டுமோ என்னில்
ஆ ஷே பதே ப்ராப்தா தாபிதா நிகம் க்ராஹ்யம் -என்கிற நியாயத்தாலே அர்த்த ஸித்தமாய் வருமதிலும் சப்தத்தால் வருமது
அழகியது ஆகையால் -மாம் -என்று நிர்தேசிக்கப் பட்ட வஸ்துவினுடைய உபாய தயா வரணத்தைக் காட்டுகிறது –
ஆக -சரண சப்தம் –
இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரத்துக்கு அவ்யஹித சாதனம் வாத்சல்யாதி குண விஸிஷ்ட வாஸ்து என்றதாயிற்று –

————-

அநந்தரம் -வ்ரஜ -என்று -ஸ்வீ காரத்தை விதிக்கிறது –
மாம் -என்று ஸ்வீ கார வஸ்துவைச் சொல்லிற்று –
ஏகம் -என்று அதனுடைய நைரபேஷ்யத்தைச் சொல்லிற்று
சரணம் என்று ஸ்வீ கார பிரகாரத்தைச் சொல்லிற்று
இதில் ஸ்வீ காரத்தைச் சொல்கிறது –

கீழ் -பரித்யாஜ்யமாகச் சொல்லிற்று
ஏச வேதமி தோ விப்ராயே சாத்யாத்ம விதோ ஜனா -தேவதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் -என்று
சனாதன தர்ம வ்யதிரிக்தமான ஸாத்ய சாதனங்களையும் -தத் அங்க தயா விஹிதமான சித்த தர்மத்தையும் –
இங்கே ஸ்வீ கார்யத்வேந விதிக்கிறது –
சாஷாந் மோக்ஷ ஸாதனமாய் நிரபேஷமான சித்த தர்மத்தை –

ஆக -வ்ரஜ -என்று –
சாதனாந்தர தியாகத்தை -அங்கமாக உடைத்தாய் -அத ஏவ -த்யாஜ்ய கோடியிலும் உத்தீர்ணமாய்-
வாத்சல்ய குண விசிஷ்டமாய் நிரபேஷமான வஸ்துவை விஷயமாக உடைத்தாய் –
உபாய கோடியிலும் உபேய கோடியிலும் அநநு ப்ரவிஷ்டமாய் -மஹா விஸ்வாச பூர்வகமாய்-பிரார்த்தநா கர்ப்பமாய் –
அத்யவசாத்மகமாய் -பகவத் ரக்ஷகத்வ அனுமதி ரூபமாய் -சைதன்ய காரியமாய் -பகவத் பிரீதி ஹேதுவாய் –
ஸ்வரூப அனுரூபமாய் -வ்யபிசார விளம்ப ரஹிதமாய் -ஸக்ருத் அநுஷ்டேயமாய் –
இருபத்தொரு ஞான விசேஷத்தை விதிக்கிறது -எங்கனே என்னில்

சர்வ தர்மான் பரித்யஜ்ய -வ்ரஜ -என்று தியாக -ஸ்வீ காரங்கள் இரண்டையும் -ஏக கர்த்த்ருமாகச் சொல்லுகையாலும்
த்யஜ்ய-என்கிற இடத்தில் ல்யப்பாலும் இந்த ஸ்வீ காரம் தியாக அங்கம் என்னும் இடத்தைக் காட்டுகிறது –
இந்த உபாய வரணம் தான் -உபாயமும் அன்றிக்கே -உபாய அங்கமும் அன்றிக்கே –
பகவத் உபாயத்வ ஞான மாத்ரம் ஆகையால் -சைதன்ய காரியமாய் -சரண்யனுடைய உபதேசமாய்க் கொண்டு
உபாய கார்யம் ஆகையால் த்யாஜ்ய கோடியில் உத்தீர்ணமாய் இருக்கும் என்கிறது –
ஸ்வ தோஷ தர்சநாதிகளாலே பீதனாய்-ஆஸ்ரயணத்தில் வெருவினவனுக்கு தத் பீதி நிவர்த்தகமான
வாத்சல்யாதி குண விஸிஷ்ட வஸ்துவை விஷயமாகக் காட்டுகிறது
மாம் ஏகம் சரணம் -என்று அவ்வஸ்துவினுடைய நிரபேஷ உபாயத்வத்தைச் சொல்லுகையாலே
ஸ்வீ காரம் உபாய கோடியில் அநநு ப்ரவிஷ்டம் என்னும் இடத்தைக் காட்டுகிறது –

மஹா விஸ்வாச பூர்வகம் தத் ஏக உபாய தாயாஸ்ஞா -என்று லக்ஷண வாக்கியத்தில் சொல்லுகையாலும்
சக்தேஸ் ஸூப ச தத் வாச்ச க்ரூபா யோகாச்ச சாஸ்வதாத் -ஈசேசி த்வய சம்பந்தாத் நிதம் ப்ரதமாதபி ரஷிஷ்ய தயநுகூலாந் ந
இதி யா ஸூ த்ருடாமதிச விச்வாசோபவேச் சக்ர சர்வ துஷ் க்ருத நாஸந-என்று சர்வ சக்தி யோகத்தாலும்-
ஸ்வதஸ் ஸித்தமாய் நிர்ஹேதுகமான க்ருபா யோகத்தாலும் ஸ்வா பாவிகமான நியன்தரு நியாம்ய சம்பந்த்தாலும் –
இவ்வாகாரங்கள் விமுகர் அல்லாத நம்மை ரஷிக்கும் என்று திருட அத்யவசாயத்தைச் சொல்லுகையாலும்
ப்ரபத்யே -என்று இந்த ஸ்வீ காரத்தை ஸ்வ கதமாக அனுசந்திக்கிற இடத்தில் –
பர -என்கிற உப சர்க்கத்தாலே மஹா விஸ்வாசத்தைச் சொல்லுகையாலும்
விஸ்வாச பூர்வகம் பகவந்தம் நித்ய கிங்கரதாம் பிரார்த்தயே -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் விஸ் வாச பூர்வகமாக பிரார்த்திக்கையாலும்
மஹா விஸ் வாச பூர்வகம் என்னும் இடத்தைக் காட்டுகிறது

ஆக இத்தால்
ஸ்வ க்ருத தோஷ தர்சனத்வம் -உபாய பல்குத்வம் – உத்தேச்ய துர் பலத்வம் -ஆகிய சங்கா த்ரய நிவர்த்தக
பகவத் ஸ்வரூப ரூப குண அனுசந்தானத்தாலே பிறந்த மஹா விஸ் வாசத்தைச் சொல்லுகிறது –

இவை சங்கா த்ரய நிவர்த்தகம் ஆகிறபடி எங்கனே என்னில்
நங்கள் திரு -என்று ஆஸ்ரயிக்கிற சேதனனோடும் -ஆஸ்ரயணீயனான ஈஸ்வரனோடும் உண்டான
மாத்ருத்வ மஹிஷீத்வ ரூபமான சம்பந்தத்தை உடையவள் ஆகையால் ஸ்வ அபராத பீதனான சேதனனுக்கு ஆஸ்ரயணீயையாய்-
அவன் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றை ஈஸ்வரனைக் கேட்பித்தும்-
இவன் அபராதங்களைப் பொறுப்பித்துச் சேர விடுகைக்கு உறுப்பான ஸ்ரீ மத்தையை அனுசந்திக்கையாலும் –
அவளாலே உத்பூதமாய் தோஷமே போக்யமாக அங்கீ கரிக்கைக்கு உறுப்பான வாத்சல்ய குண அனுசந்தத்தாலும்
ஸ்வ க்ருத தோஷ தர்சனத்தாலே வந்த பயம் போம் –

ஸ்வத்தினுடைய லாபம் ஸ்வாமிக்கு ஆகையால் தன் பேறாகக் கார்யம் செய்கைக்கு உறுப்பான
ஸ்வாமித்வ ரூப ஸ்வரூப அனுசந்தானத்தாலும் அசரண்ய சரண்யத்வம் ஆகிற குண அனுசந்தானத்தாலும்
உபாய பல்குத்வ நிபந்தனமான பயம் போம்

நாராயணன் என்கிற ஸ்வ பாவிக சம்பந்த யுக்த ஸ்வரூப அனுசந்தானத்தாலும் –
ஆஸ்ரிதருக்கு செய்ய வேண்டுமவை அறிக்கைக்கு ஈடான சர்வஞ்ஞத்வத்தையும் –
அறிந்தால் போலே தலைக் கட்டுகைக்கு உறுப்பான சர்வ சக்தி யோகத்தையும்
அபேஷா நிரபேஷமாகச் செய்கைக்கு உறுப்பான ஓவ்தார்ய குணத்தையும்
அபராத ஞானாதிகளுக்கு உறுப்பான குண விசேஷங்களை ரக்ஷண உபையுக்தம் ஆக்குகிற கிருபா குணத்தையும்
அனுசந்திக்கையாலும் உத்தேச்ய துர் லபத்வம் அடியாக வந்த பயம் போம் –

ஆக இப்படித் தன்னுடைய ஸ்வரூப சித்தி அர்த்தமாகவும் -குண சித்தி அர்த்தமாகவும் -ரஷிக்கும் என்கிற
மஹா விஸ்வாச பூர்வகமாய் இறே பிரபத்தி இருப்பது
யாசநா பிரபத்தி
ப்ரார்த்தநா மதி
தமியேனுக்கு அருளாய்
அடிசேர் வண்ணம் அருளாய்
அருளாய் உய்யுமாறு எனக்கு -என்று ப்ரார்த்தநா ரூபமாக அனுசந்திக்கையாலும்
இவ்வுபாயத்தில் ஸ்வீ கர்த்தாவுக்கு உண்டான ஆதார அதிசயத்தாலும்
பிரார்த்தநா ரூபமாய் இருக்கும் என்னும் இடத்தைக் காட்டுகிறது –
அறம் தானாய் திரிவாய்-உன்னை என் மனத்தே திறம்பாமைக் கொண்டேன்
களை கண் மற்றிலேன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்கையாலும்
ஸூ த்ருடா மதி என்று திருட அத்யவசாயத்தைச் சொல்லுகையாலும் அத்யவசாயாத்மகமாய் இருக்கும்

வைத்தேன் மதியால் -என்று அனுமதியைச் சொல்லுகையாலும்
மாம் சரணம் வ்ரஜ -என்கிற உபதேச அனுகுணமாக -ப்ரபத்யே -என்று அனுசந்திக்கையாலும்
பகவத் ரக்ஷகத்வ அனுமதி ரூபமாய் இருக்கும்
பிரணவ யுக்தமான பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் சேஷ சேஷி பாவ சம்பந்த சம்பாதனம் பண்ணுகிறது அன்றிக்கே
சேதனனான இவனுடைய பிரபத்தி ரூபமாகையாலே சைதன்ய கார்யம் ஆகிறவோ பாதி
சாதனாந்தர நிவ்ருத்தி பூர்வகமான சித்த சாதனத்தவ பிரதிபத்தியும் உபாயத்வ சம்பாதனம் பண்ணுகிறது அன்றிக்கே
ஸித்தமான உபாயத்தைப் பற்ற உண்டான பிரதிபத்தி ஆகையால் சைதன்ய காரியமாய் இருக்கும்

உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி என்கையாலும்
நானே சர்வ பாபங்களையும் போக்குகிறேன் என்கையாலும் –பகவத் பிரீதி ஹேதுவாய் இருக்கும் –
தாத் வர்த்தமான ரக்ஷகத்வத்துக்கு பிரதி சம்பந்தி தயா ரஷ்யமான வஸ்துவுக்கு ஸ்வ வியாபார நிஷேத பூர்வகமாக
ரஷக வ்யாபார ஏக ரஷ்யமாகை உசிதம் ஆகையாலும்
பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு பர வியாபாரமே ரக்ஷகம் ஆகையாலும் ஸ்வரூப அனுரூபமாய் இருக்கும் –
சித்த ஸ்வரூபம் ஆகையாலும் -சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -என்று அமோக சங்கல்பம் ஆகையாலும்
பிராரப்த கர்ம அவசானம் பார்க்க வேண்டாதபடி ஆரப்த சரீர அவசானத்தில் பலமாகையாலும்
வ்யபிசார விளம்ப விதுரமாய் இருக்கும்

சக்ருதேவம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவாந்ய திஷ்யதே -என்று
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த க்ருதஸ் சம்சார தாரக –
நரஸ்ய புத்தி தவ்ர்ப்பல்யாத் உபாயாந்தர மிஷ்யதே-என்றும்
சக்ருத அனுசந்தான மாத்திரத்தாலே சம்சார தாரகம் என்கிறபடியே ஈஸ்வரனே உபாயம் என்று ஒரு கால் அனுசந்தித்தால்
பின்னை கர்தவ்யம் இல்லை என்கையாலும்
இதில் விஸ் வாசம் பண்ண மாட்டாத துர்ப் பல புத்திகள் ஆகையால் உபாயாந்தரம் தேடுகிறார்கள் அத்தனை என்கையாலும்
சக்ருத அநுஷ்டேயம் என்னும் இடம் சித்தம்

சக்ருத அநுஷ்டேயமாய் -பின்பு கர்தவ்ய அம்சம் இன்றியிலே இருந்தது ஆகிலும்
ஸ்வர்க்க அர்த்தமான ஜ்யோதிஷ்டோமம் சப்தாஹஸ்ஸிலே ஸமாப்தமானாலும் தத் கார்யமான அக்னி ஹோத்ர ஹோமம்
யாவச் சரீர பாதம் அநுஷ்டேயமாகிறாப் போலே இதில் விஸ்வாசம் யாவத் பல பிராப்தி நடக்க வேணும்

அக்னி ஹோத்ரம் ஜூஹு யாத் ஸ்வர்க்க காம -என்று அனுஷ்டியாத போது ஸ்வர்க்கம் ஆகிற பல சித்தி இல்லையாய்-
பல சித்தி யாகிற அக்னி ஹோத்ர ஹோமத்தையும் -கேவல சைதன்ய கார்யமான ஸ்வீ காரத்தில் மேல் வருகிற
விஸ்வாச விசேஷத்தையும் சமமாகச் சொல்லலாமோ என்னில்
விஸ் வாசத்துக்கு பல ஹேதுத்வம் இல்லையாகிலும் –
பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கையும்
யாவத் பல பிராப்தி கால ஷேபம் ஆகையும்
சம்சார தோஷ அனுசந்தான தசையில் நிர்ப்பயனாய் இருக்கையுமாகிற பலன்கள் இதுக்கும் உண்டாகையாலே
சொல்லலாம் அல்லது சாதன அங்கத்வம் ஸ்வீ காரத்துக்கும் இல்லையாய் இருக்க
ததகதமான விஸ் வாசத்துக்கு உண்டாகிறது அன்று இறே

இந்த விஸ்வாசா வ்ருத்திகள் கணையத்துக்கு உள் இருப்பாரைப் போலே
நிர்ப்பரனாய் இருக்கைக்கு உறுப்பு என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

ஏவம் ரூபமான ஸ்வீ காரத்தை விதிக்கிறது -வ்ரஜ -என்கிற மத்யம புருஷ ஏக வசனத்தாலே
ப்ரபத்யே -என்கிற ஸ்வீ கார அனுசந்தானத்தில் காட்டில் இதுக்கு வாசி –
தியாக விசிஷ்டமாக விதிக்கையும் -நிரபேஷமாக விதிக்கையும் –
ஸுலப்யாதி குண விஸிஷ்ட வஸ்து விஷயத்துவமும் இரண்டுக்கும் உண்டு
இது தான் வ்ரஜ -கதவ்-என்கிற தாதுவில் கதி விசேஷமாய் –
கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய் புத்தி கதியைக் காட்டுகிறது -இந்த கதி விசேஷம்
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிறபடியே
த்ரிவித காரணத்தால் உண்டாயிற்றாகில் பூர்ண பிரபத்தியாய் அதிகாரி வைபவம் பிரகாசிக்கக் கடவது –
ஏக கரண மாத்திரத்தில் ஆனபோது பகவத் வைபவம் பிரகாசிக்கக் கடவது –
ஆனாலும் பிரபத்தி யாகிறது பிரபத்தி யாகையாலே மாநசமாகக் கொள்ளக் கடவது

ஆக
இந்த ஸ்வீ காரத்துக்கு தர்ம தியாகம் அங்கமாகக் கடவது –
தியாக விசிஷ்டமான ஸ்வீ காரம் அதிகாரி விசேஷணமாகக் கடவது
ஸ்வீ கார விசிஷ்டனான அதிகாரிக்கு வாத் சல்யாதி குண விசிஷ்டன் உபாயமாகக் கடவன்

ஆக பூர்வார்த்தம்
த்யாஜ்யமான சாதனங்களையும்
அவற்றினுடைய அனந்தத்யத்தையும்
தியாகத்தையும்
தியாக பிரகாரத்தையும்
தியாகம் அங்கம் என்னும் இடத்தையும்
ஸ்வீ கார்ய ஸ்வரூபத்தையும்
தந் நைரபேஷ்யத்தையும்
ஸ்வீ கார பிரகாரத்தையும்
ஸ்வீ காரத்தையும் –சொல்லிற்று

ஆக இத்தால் அதிகாரி க்ருத்யம் சொல்லி
மேல் இப்படி பிரபத்தவ்யனான ஈஸ்வர க்ருத்யத்தையும்
பிரபக்தாவான அதிகாரி வுடைய க்ருத்ய லேசத்தையும் சொல்லுகிறது
பிரபத்தவ்ய க்ருத்யம் பிரபத்தவ்ய பல மோக்ஷ விரோதி சகல பாப நிவர்த்தகம்
ப்ரபந்ந க்ருத்யம் தத் பல நிர்ப்பரத்த்வ அநு சந்தானம்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-