கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –
விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –
—————————–
இந்த அத்யாயம் -11 ஸ்லோகம் வரை முன்னுரை
அத்யாயம் பிரிந்தது –
ஆளவந்தார் -சாஸ்திரம் பிறக்க இந்த முன்னுரை
வியாசர் –
சோகம் சொல்லும் -முதல் அத்யாயம்
சோகம் போக்கும் மேல் ஸ்லோகங்கள்
இரண்டு தன்மைகள் உண்டே இவற்றுக்கு
————-
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-
காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –
நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-
நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.
சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –
12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —
—————————————————-
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ருபயா விஷ்டம் அஸ்ரு பூர்ணாகுலேக்ஷணம்.–
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந—-৷৷2.1৷৷
ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
தம் = அவனிடம்-தம்-அப்பேர்ப்பட்ட உயர்ந்த அர்ஜுனன்
ததா = இவ்வாறு
க்ருபயா = தன்னிரக்கத்துடன்
அவிஷ்டம் = நிறைந்த
அஸ்²ரு = கண்ணீர்
பூர்ணா = நிறைந்த
ஆகுல = குழம்பிய
இலேக்ஷணம் = தோற்றம்
விஷீத³ந்தம் = கவலை கொண்ட-எண்ணம் குலைந்து வருந்தி இருப்பவனும்
இதம் = இந்த
வாக்கியம் = வாக்கியம்
உவாச = கூறினான்
மது⁴ஸூத³ந: = மதுசூதனன்
தொடர்ந்து சஞ்சயன் பேசினான்
இது அடுத்த அத்யாயம் என்பதால் மீண்டும் இங்கு ஸஞ்சய உவாஸ
சஞ்சயன் சொன்னான்
அவ்விதம் இரக்கம் நிறைந்து நீர் நிரம்பிக் கலங்கிய கண்களுடன் சோகத்தோடு கூடிய
அந்த அர்ஜுனனிடம் பகவான் மது ஸூதனன் இவ்வாறு கூறினான்
தேவை இல்லா இடத்தில் கிருபை -கண்ணீர் விட்டு உடம்பு நடுங்கி —
மது சூதனன் -பிரதிபந்தகம் நீக்கி அருள -வேதம் மீட்டுக்கொடுத்த அவதாரம் –
கண்ணை இழந்த நான்முகனுக்கு -ஹயக்ரீவர் அவதாரம் –
மது கைடபர் -ரஜோ தமோ குணம் போக்கி -உள்ளுறைப் பொருள் –
வைக்கக் கூடாத இடத்தில் பாசம் கருணை-ரஜஸ் தமோ போக்கி –
ஸத்வ குணம் வளர்க்க இந்த ஸப்த பிரயோகம் –
முக்குணத்தில் இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று –
மனஸ்ஸூ -கருணை -வெளிப்பாடு கண்ண நீர் -கலக்கத்தாலே -சோக கண்ணீர் –
மேலும் துன்பப்பட்டான் -பர துக்க துக்கித்தவம் தானே கருணை –
கிருபயா ஆவிஷ்டம் பீடிக்கப்பட்ட
கோபத்தால் பீடிக்கப் பட்ட வசம் -போல் சொல்லலாமோ -என்னில்
இங்கு தர்மம் செய்யத் தடை என்பதால்
செயல் இழந்து நிலையில் இருந்து இறங்கி தேரின் நடுவில் அமர இது காரணமானதே
இந்த சப்த பிரயோகம்
—————–
ஸ்ரீ பகவாநுவாச
குதஸ் த்வா கஸ்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம்.—
அநார்யஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்திகரம் அர்ஜுந—৷৷2.2৷৷
குதஸ்-எதற்க்காக
த்வா -உன்னை
கஸ்மலம் இதம் -இந்த வருத்தம்
விஷமே ஸமுபஸ்திதம்.—தகாத இடத்திலே வந்து அடைந்து இருக்கிறது
அநார்யஜுஷ்டம் -அறிவற்றவர்களால் அடையப்படுவதும்
அஸ்வர்க்யம் -மறுமைக்குத் தடையாய் இருப்பதும்
அகீர்திகரம் -இகழ்வுக்குக் காரணமானதும்
அர்ஜுந—
ஸ்ரீ பகவான் சொன்னார்
கடுமையாக பேசி அவனது நிலை மாற்ற –
அர்ஜுனா -அறிவற்றவர்களால் அடையப்படுவதும் -மறுமைக்குத் தடையாய் இருப்பதும் –
பழிக்குக் காரணதுமான இந்த வருத்தம் தகாத இடத்தில் எதற்க்காக உன்னை வந்து அடைந்தது
மநோ வியாதி போக்க –கஷ்மலம்–இதம் -தாழ்ந்த அபிப்ராயம் –வரக் கூடாத இடத்தில் –
உனக்கா இப்படி – சிறந்த வில்லாளி –பெரியவர்கள் மனஸ் கெட –கீர்த்தியும் வராது –
சுவர்க்கமும் கிட்டாது -எதனால் இப்படி
எதனால் வந்தது என்று கேட்பதில் தாத்பர்யம் இல்லை
வந்து இருக்கக் கூடாதே
நீ சொன்னது எல்லாம் தவறான காரணங்கள்
மூன்று குற்றங்கள்
ஆர்யர்களால் -ஆர்ய -தத்வம் உண்மைப்பொருள் -இல்லாத -குதர்க்கம் -தவறான -யுக்தி –
இவற்றில் இருந்து விலகி தூராத் புத்தி -இருப்பவர்கள் -கந்தமே இல்லாதவர்
இதுக்கு எதிர்மறை அநார்யர்-
அவர்களுக்கு பிரியமானது -அவர்களால் அடையப்படும் கலக்கம் -உனக்கு வரலாமோ –
அறிவிலிகளால் அடையப்படும் என்றும் அறிவுடையவர்களால் அடையப்படாது என்றும் கொள்ளலாம்
அடுத்த குற்றம் -மறுமைக்கு விரோதம் -முரண் பட்டது
மூன்றாவது இகழ்ச்சிக்கு வழி வகுக்கும் –
————-
க்லைப்யம் மாஸ்ம கம பார்த்த நைதத்த்வய் யுப பத்யதே.—
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப—৷৷2.3৷৷
க்லைப்³யம் = ஆண்மையற்ற-பயம் கொள்ளித்தனம் –
(அலித்தன்மை -என்பதால் கோழைத் தன்மை என்றபடி )
மா ஸ்ம = இல்லாத
க³ம: = நீ சென்ற
பார்த² = பார்த்த-குந்தி புத்திரனே
ந = இல்லை
ஏதத் = இந்த
த்வய் = உன்னிடம்
யுபபத்³யதே| = பொருந்தியது ?
க்ஷுத்³ரம் = கீழான
ஹ்ருத³ய = மன
தௌ³ர்ப³ல்யம் = தளர்ச்சி-மனத்தின் பலம் இன்மை
த்யக்த்வ = கைவிட்டபின்
உத்திஷ்ட = எழுந்து நில்
பரந்தப = எதிரிகளை அழிப்பவனே
குந்தியின் மகனே -பயன்கொள்ளித் தனத்தை அடையாதே –இத்தன்மை உன்னிடத்தில் பொருந்த வில்லை
எதிரிகளை அழிப்பவனே-மிகத் தாழ்ந்ததான மநோ பலமின்மையை விட்டு எழுந்திரு -என்று பகவான் கூறினான்
இந்திரன் பிள்ளை
ஊர்வசி -தாயே என்று அழைத்தான்
ஆண்மை இல்லாமல் அலி ஆவாய் சபிக்க
ஒரு வருஷம் காலம் என்று குறைத்து – இருக்க -இந்திரன் சொல்ல ஊர்வசியும் –
அஞ்ஞாத வாசத்தில் இது உபயோகப்படும் -என்றார்களே –
அலி போன்ற தன்மை –மனஸ் ஒடிந்து உள்ள தன்மை உன்னிடம் சேராதே -தொலைத்து -எழு-
உன்னையே இப்படி தபிக்கச் செய்யலாமோ –
பரந்தப உத்திஷ்ட என்றாலே யுத்தம் செய்ய வேண்டும் என்றதாயிற்று
சப்தகம்-இவற்றில் ஓன்று -அநவஸாதம் -அவசாதம் -அது இல்லாமை
தேச கால வை குண்யாத் – -தீனத்தவம் வருமோ -முன்பு இருந்த குறைகளாலோ
இப்பொழுது உள்ள குறைகளாலோ பின் வருமோ -என்கிற நினைவாலே
பயம் சோகம் -ஜன்ய தீன மனஸூ அவசாதம்
மகிழ்வோ வருத்தமோ அதிகமாகக் கூடாதே -நடு நிலையாக இருக்க வேண்டுமே
—————
அர்ஜுந உவாச
கதம் பீஷ்மமஹம் சங்க்யே த்ரோணம் ச மதுஸூதந.—
இஷுபி ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந–৷৷2.4৷৷
அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்
கதம் = எப்படி ?
பீ⁴ஷ்மம் = பீஷ்மர்
அஹம் = நான்
ஸங்க்யே = போரில்
த்³ரோணம் = துரோணர்
ச = மேலும்
மது⁴ஸூத³ந| = மதுசூதனா
இஷுபி⁴: = அம்புகளால்
ப்ரதியோத்ஸ்யாமி = எதிர்த்து போர் புரிவேன்
பூஜார்ஹாவ = பூஜைக்குரியவர்களை
அரிஸூத³ந = அரிசுதனா–
ஹரி -அரம் -சக்கராயுதம் கொண்டு எதிரிகளைக் கொல்பவன் -என்றுமாம் –
அர்ஜுனன் சொன்னான் –
எதிரிகளை அழிப்பவனே -மது என்னும் அரக்கனை அழித்தவனே -பூஜிக்கத் தகுந்த வர்களான
பீஷ்மரையும் த்ரோணரையும் குறித்து எப்படி நான் அம்பு எய்த்து யுத்தத்தில் சண்டை புரிவேன்
இங்கும் மது சூதன -சப்தம் –பூஜைக்கு உரியவர் பீஷ்மரையும் த்ரோணரையும் –
சாந்தீபன் சூதனன் இல்லையே உனக்கு பெயர்-
பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டியவர்களை எவ்வாறு அம்பால் எய்வது
வாயால் சொல்லக் கூசுகிறான்
கொன்று தான் ஆக வேண்டும் -எதிர் போர் இடுவேன் என்கிறான் –
———
குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந் ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே–
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிர ப்ரதிக்தாந்—৷৷2.5৷৷
குரூந் -பீஷ்மர் துரோணர் முதலான பெரியவர்களை
அஹத்வா –கொல்லமல்
இஹ லோகே -இவ்வுலகில்
மஹாநுபாவாந் –மதிக்கத் தக்கவர்களான
பைக்ஷம போக்தும் அபி =பிச்சை எடுத்து உண்பதும் கூட
ஸ்ரேயோ ஹி -சிறந்தது அன்றோ
அர்த்தகாமாம் -பொருளில் மிகவும் பற்று உள்ள
குரூந் ஹத்வா து -பெரியவர்களைக் கொன்று விட்டு
ருதிர ப்ரதிக்தாந்-அவர்களுடைய ரத்தத்தால் நனைந்து இருக்கும்
போகான் -அவர்களுடைய போகங்களை
இஹைவ புஞ்ஜீய போகாந் -அவர்களுடைய இடத்திலே இருந்து கொண்டு எப்படிப் புசிப்போம்
போக்தும் -கர்த்தும் -பாட பேதங்கள் –
பிச்சை எடுத்து உண்பதும் -அல்லது பிச்சை எடுப்பதும் -என்றபடி –
கதம் -முன் ஸ்லோக பதம் இங்கே தருவித்துக் கொள்ள வேண்டும் –
மதிக்கத் தக்கவர்களான பெரியவர்களைக் கொல்லாமல் இவ்வுலகில் பிச்சை எடுத்து உண்பதும் சிறந்தது அன்றோ
பெரியவர்களைக் கொன்று விட்டு அவர்களுடைய ரத்தத்தால் நனைந்து இருக்கும் செல்வம் காமம் முதலிய
போகங்களை இங்கேயே எப்படி அனுபவிப்பேன்
ப்ராஹ்மணன் ப்ரதிக்ரஹண-பிச்சை எடுத்து -செய்யலாம்
ஷத்ரியனுக்கு தர்மம் இல்லை -அத்தைக் கூட செய்வேன் பாபம் கொஞ்சம் தான் வரும் என்கிறான் –
அவர்கள் அரியணையிலே அமர்ந்து கொண்டு உண்பது மிகவும் மோசமே –
ருதிரம் – உப சேஷணம் -ஊறுகாய் போல் -தானும் உண்ணப்பட்டு மற்றவற்றை உண்ணவும் உதவுமே –
நடந்து கொண்டே உண்ணக் கூடாதே -இரண்டுமே உண்ணத் தகாதவை இங்கு –
அவர்கள் ரத்தம் உண்டு அதிலே தோய்ந்த ஸூகம் –ஜூபுக்ஸித-ஸூகம் -அறுவறுக்கத்தக்கது
புலி துரத்த கிணற்றில் இறங்கி -அங்கு பாம்புகள் ஏறி வர -அங்கு உள்ள மரத்தில் இருந்து தேன் சொட்ட
இவன் சுவைத்து ஆனந்தப்படுவது போல் ஸம்ஸார சுகம் –
ஷத்ரியன் இப்படி -அலி பேச்சு –
குருக்களுக்கு அர்த்தம் பொருளில் ஆசையால் என்னை எதிர்க்கிறார் –
காட்டுக்கு ஓடுகிறேன் -இருந்து என்ன பிரயோஜனம் -மனஸ் உடைந்து எதிர்மறையாக செயல் பட வைக்கும் –
தக்ஷிணை கொடுக்க வேன்டும் -ராஜ்யம் கொடுப்பேன் -ரத்த கரை உடன் ராஜ்யம் ஆளவா-
இவர்களுக்கு தர்ம புத்தி உண்டே
மற்றவர் நலனுக்காக தங்கள் ஆசையை விடுவது உயர்ந்த நிலை
அவர்களுக்கு அர்த்த காமங்களில் ஆசை
ஆசையாக நானே உள்ளேன் -விபூதி அத்யாயம் -தர்மத்துக்கு அனுகுணமான ஆசையை அங்கு சொன்னபடி –
————-
ந சைதத்வித்ம கதரந்நோ கரீயோ–யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு–
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம–ஸ்தேவஸ்திதா ப்ரமுகே தார்தராஷ்ட்ரா—৷৷2.6৷৷
ந = இல்லை
ச = மேலும்
ஏதத் = இந்த
வித்³ம: = நாம் அறிந்த
கதரந் = இரண்டில்
நோ = நமக்கு
க³ரீயோ = சிறந்தது
யத்³வா = அல்லது
ஜயேம = வெற்றி
யதி³ வா = அல்லது
நோ = நம்
ஜயேயு:| = வெற்றியா
யா = அவர்கள்
ஏவ = நிச்சயமாக
ஹத்வா = கொன்ற பின்
ந = இல்லை
ஜிஜீவிஷாமஸ் = வாழ விருப்பம்-ஜீவிதும் இச்சா ஜீவிஷம் –
தே = அவர்கள்
அவஸ்தி²தா: = அணி வகுத்து நிற்கும்
ப்ரமுகே²= எதிர்த்து நிற்கும்
தா⁴ர்தராஷ்ட்ரா: = திருதராஷ்ட்ர கூட்டத்தார்
நாங்கள் வெற்றி கொள்வோமோ அல்லது வெல்லப் படுவோமோ என்னும் இவ்விரண்டினுள் எது
நமக்குச் சிறந்தது என்னும் இதையும் நாம் அறியோம்
நாம் எவர்களைக் கொன்று வாழ விரும்ப வில்லையோ
அந்த துரியோத நாதியரே நமக்கு முன்னால் நிற்கிறார்கள்
ஓடினாலும் உன்னை கொல்லுவார்களே-என்று கேட்டதாக -கொண்டு பதில் —
யுத்தம் முடிவு நான் அறியேன் –
யாரைக் கொன்று நான் ஜீவிக்க முடியாதோ அவர்கள் அன்றோ எதிரில்
இருவருக்கும் நன்மை வரும் நிலை வராது
நாங்கள் அவர்களைக் கொன்று அவர்களும் இழந்து நாங்களும் துக்கித்து இருப்பதை விட
அவர்களது சந்தோஷம் படட்டுமே
நாங்கள் என்று அனைவரையும் சேர்ந்தே இங்கு சொல்கிறான் அர்ஜுனன் –
அனைவருக்கும் இதே அபிப்ராயம்
நீ தான் பூமி பாரம் குறைக்க யுத்தத்தில் மூட்டுகிறாய் என்றவாறு
தர்மம் அறிந்தவர்கள் இப்படி கொலை செய்தார்களே உலகும் ஏசும்
முதலில் தெரியாது சம்சயம்
பின்பு தெளிந்து இவனே பதில்
இந்திரஜித் ப்ரஹ்மாஸ்திரம் விட இளையபெருமாள் நாமும் ப்ரஹ்மாஸ்திரம் விடலாமே என்ன
பெருமாள் -யார் ஒருவன் நேராக சண்டை போடவில்லையா -எவன் மறைந்து போர் புரிகிறானோ -அவனைக் கொல்ல
தர்மம் அறிந்த நாம் குலமே அழியும்படி செய்யக் கூடாது என்றானே –
——-
கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம்
ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—৷৷2.7৷৷
கார்பண்ய = கோழைத்தனமாக-மன உறுதி இல்லாத
தோஷோ பஹத = தோஷம், குற்றம், குழப்பம்
ஸ்வபா⁴வ: = குணத்துடன்
ப்ருச்சா²மி = நான் கேட்கிறேன்
த்வாம் = நீ
த⁴ர்ம = தர்மம், அறம்
ஸம்மூட = அறியாமல்
சேதா:| = அறிவு
யச் = அது, அந்த
ச்²ரேய: = உயர்ந்த, சிறந்த
ஸ்யாந் = இருக்கும்
நிஸ்²சிதம் = நிச்சயமாக, உறுதியாக
ப்³ரூஹி = சொல்
தந் = இந்த
மே = என்னிடம்
ஸி²ஷ்யஸ் = சீடனான
தே = உன்
அஹம் = நான்
ஸா²தி⁴ = கட்டளை
மாம் = எனக்கு
த்வாம் = நீ
ப்ரபந்நம் = சரண் அடைகிறேன்
மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ
அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –
உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக
நல்லது சொல் கேட்க்கிறான் இதில் –மனஸ் துர்பலமான நிலை –தர்மம் எது அதர்மம் எது குழம்பி உள்ளேன் —
சிஷ்யன்-பிரபன்னன் -அடி பணிந்து கேட்க்கிறேன்
எது எனக்கு சிறந்தது -என்று நான் நிச்சயமாக அறியும் படி சொல்லி அருள் –
கீழே 53 ஸ்லோகங்களில் தனது நிலையையே சொல்லி
இதில் மட்டுமே பிரார்த்தனை –
பிரார்த்தித்த சிஷ்யனுக்கு ஆச்சார்யர் உபதேசிக்க வேண்டும்
தைர்யம் தானே இயற்க்கை அர்ஜுனனுக்கு
கோ க்ருஹணம்-ஒருவனாக கௌரவர்களைத் தோற்கடித்தவன்
தர்மம் -விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மம்
கார்ப்பண்யம் என்கிற தோஷம் என்றும்
கார்ப்பண்யத்தாலும் -கர்த்தவ்ய விசேஷ அஞ்ஞானம் என்றும்
சோகம் போக்கிக் கொள்ள வழி அறியாத தன்மை என்றுமாம்
குல க்ஷயம் -அழித்தால் என்ன ஆகுமோ என்கிற தோஷமும்
த்யாஜஸ்ய அபரித்யாகமே -பெரிய குற்றம் -தேசிகன் -முன்னேற்றத்துக்குத் தடைகளை விலக்காமை –
வீடுமின் முற்றவும் –
தயா ஜனக -தீந வ்ருத்தி ஆகிஞ்சன்யம் நிரதத்வம் -போக்கற்றவன்- கிருபணன்
இதுக்கும் மேல் யாஜ்ஜ வல்க்யர்-கார்க்கி இடம் -கிருபணன் -உலகில் பரமாத்மாவை அறியாமல் உழன்று இருப்பவர் –
ஒரே கேள்வி -700-ஸ்லோகங்கள் –
தெரிந்த அத்தனை நல்லதையும் சொல்லி
வள்ளல் தன்மை -பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் இவன் தன்மையால் தானே –
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தோர்க்கும் இந்த பரம காருண்யம் உண்டே –
ஸ்ரீ கீதாச்சார்யனை பின் பற்றி இவர்கள் –
உன்னிடம் கேட்க்கிறேன்
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல கிருஷ்ணனே அனைத்தும் இவர்களுக்கு
அவனே ஸர்வஞ்ஞன் என்று அறிந்தவன்
உன்னுடைய தயைக் காட்ட நானே மிக சிறந்த பாத்திரம் -ஆளவந்தார்
பயன் இருவருக்குமான பின்பு -அமுதனார் –
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் நீ
நிச்சயமாக நன்மையை எது கொடுக்குமோ -அத்தை உபதேசிப்பாய் –
யாருடைய நிச்சயம் -கண்ணா நீ எனக்கு எது நல்லது என்று நினைக்கிறாயோ
சிஷ்யனுக்குத் தான் ஆச்சார்யர் உபதேசிக்க வேண்டும்
புத்ரனாகவும் இருந்தாலும் உபதேசிக்க வேண்டும்
நாங்கள் உனக்கு சிஷ்யர்கள் தானே
அது மட்டும் அல்ல
ப்ரபன்னன் -சரணாகதி அடைந்துள்ளேன்
சிக்ஷணம் செய்து அருள் என்பதே ஸாதி –
அரி பிராணன் ரக்ஷதி-உயிரைக் கொடுத்தாகிலும் சரணாகதர்களை ரஷிப்பேன்
————-
ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷண மிந்த்ரியாணாம்.
அவாப்ய பூமாவஸ பத்நம் ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்—-৷৷2.8৷৷
ந = இல்லை
ஹி = அதனால்
ப்ரபஸ்²யாமி = நான் காண்கிறேன்
மமா = என்
அபநுத்³யாத்³ = விட்டு விலகி
யட் = அது
சோ²கம் = சோகம்
உச்சோஷணம் = தீர்ந்து போதல்-உலர்த்துவதான
இந்த்³ரியாணாம்|= புலன்களை
அவாப்ய = அடைந்த பின்
பூமா = பூலோகம்
அஸபத்நம் = பொறாமை படும் படி, உயர்ந்த-எதிரிகள் அற்றதான
ருத்³த⁴ம் = சிறக்கும்
ராஜ்யம் = இராஜ்யம்
ஸுராணாம் = தேவர்கள்
அபி = மேலும்
சா = மேலு
அதி⁴பத்யம் = ஆண்டாலும்
எதிரிகள் அற்றதும்-தன தானியங்களால் நிறைந்ததுமான பூ உலகில் ராஜ்யத்தையும் –
தேவர்களுக்கு அதிபதியாக இருப்பதையும் -அடைந்தாலும் கூட என்னுடைய இந்திரியங்களை மிகவும்
உலர்த்துவதான வருத்தத்தை யாது ஓன்று போக்குமோ அத்தை நான் காண வில்லை -என்று அர்ஜுனன் கூறினான் –
கண்ணுக்கு பட வில்லை -என்கிறான் –
வேறே உபாயம் உண்டா கண்ணன் கேட்டதாக கொண்டு –
சோகம் தீர்க்க -ஓடுவதை விட –
இந்திரியங்களை வற்ற அடிக்கும் சோகம் —
மூன்று லோகம் கிடைத்தாலும் இந்த கேள்விக்கு பதில் இல்லையே -என்கிறான்
சிதையில் படும் பாட்டை விட சிந்தை படும் பாடு பெரியதாகக் கண்டான் அன்றோ
போகங்கள் போக உபகரணங்கள் போக ஸ்தானங்கள் அனைத்தும் செழிப்பாக உள்ள
இந்த பூமி முழுவதும் அரசாண்டாலும் –
எதிரிகளே இல்லை என்றாலும் இந்த சோகம் போகாது
மேலே இந்திர-ஐஸ்வர்யம் பெற்றாலும் சோகம் போகாது
ஆனந்தவல்லி -மனுஷ்ய ஆனந்தத்துக்கு -யுவாஸ்யாத் -செல்வம் நிறைந்து -நோய்கள் இல்லாத உடல் –
பலிஷ்ட-பூர்ணன் -தொடங்கி பித்ருக்கள் கந்தர்வர் தேவர் ப்ருஹஸ்பதி நான்முகன் –
மேலே மேலே நூறு மடங்கி -யதோ வாசோ நிவர்த்தந்தி
———
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ பரந்தப–
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ—-৷৷2.9৷৷
ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ஏவம் = இவ்வாறு
உக்த்வா = (அர்ஜுனன்) சொன்ன பின்
ஹ்ருஷீகேஸ²ம் = ரிஷிகேசன் என்ற கண்ணன்
கு³டா³கேஸ²: = தூக்கத்தை வென்ற
பரந்தப:| = எதிரிகளை அழிக்கும்
ந = இல்லை
யோத்ஸ்ய = சண்டை இடுதல்
இதி = இந்த
கோ³விந்த = கோவிந்தா
உக்த்வா = கூறிய பின்
தூஷ்ணீம் = அமைதியாக
ப³பூ⁴வ = அமர்ந்தான்
ஹ = உறுதியாக
ஹ -வருத்தத்தைக் காட்டும் பத பிரயோகம்
சஞ்சயன் சொன்னான் –
அரசே உறக்கத்தை வென்ற அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணன் இடம் இவ்வாறு கூறி
நான் போர் புரிய மாட்டேன் என்று கூறி விட்டுப் பேசாமல் இருந்தான்
ஹா ஆச்சர்யம் –தூக்கம் சோம்பல் வென்ற அர்ஜுனன் சோம்பி –
கோவிந்தன் இடம் சொல்லி -கோழை போலே சொல்கிறானே –
இந்திரியங்களை கட்டுப்படுத்தும் -ரிஷிகேசன் -ஆனந்தம் கொடுக்கும் -ஆள்பவன் –
கீழே சோகம் வாட்ட -அத்தைப் போக்கி அருள இந்தப் பத பிரயோகம்
ஸ்வாமி தானே சொத்தை ரக்ஷிக்க வேண்டும்
கீதா சாஸ்திரம் கேட்க்கும் படி புலன்களை ஆக்கி அருள வேண்டுமே
கிரஹிக்கும் சக்தியையும் அவனே தந்து அருள வேண்டும்
தூக்கம் சோம்பல் -வென்றவன் அர்ஜுனன் -ஆலஸ்யம் தமோ குணம் -மயக்கும்
பிரமாதம் கவனக் குறைவு -தூக்கம் மோகம் -நான்கும் தமோ குணம் தரும்
இங்கு மயக்கம் மட்டும் -தூக்கம் சோம்பல் வென்றவன் –
பரந்தப -எதிரிகளைத் தஹிக்கத் தக்கவன் –
கோவிந்தன் இடம் யுத்தம் செய்ய மாட்டேன்
சிறந்த பேச்சு சாமர்த்தியம் கொண்டவன்
வாக்கு பூமி பசு –
பேச்சு சாமர்த்யத்தால் இவனை யுத்தத்தில் மீள -நீ சொன்னபடி செய்வேன் –
கோ விந்த -பூமியை அடைந்து
மண்ணின் பாரம் நீக்கவே வட மதுரை பிறந்தவன்
ஹ—வருத்தம் -சஞ்சயனுக்கு இங்கு
ஹ -வருத்தத்தைக் காட்டும் பத பிரயோகம்
விபீஷணனை அபிஷேகம் செய்து -க்ருதக்ருத விஜ்வர பிரமுமோத- ஹ -வால்மீகி அங்கு
——–
தமுவாச ஹ்ருஷீகேஷஸம் ப்ரஹ ஸந்நிவ பாரத–
ஸேநயோருபயோர் மத்யே விஷீந்தமிதம் வச—৷৷2.10৷৷
தம் = அவனிடம் (அர்ஜுனனிடம்)
உவாச = கூறினான் (கண்ணன்)
ஹ்ருஷீகேஸ²: = ஹிரிஷிகேச
ப்ரஹஸந் = புன்னகை பூத்து-சிரிப்பவன் போலே
இவ = இவ்வாறு
பா⁴ரத| = பாரத குல தோன்றலே
ஸேநயோ = சேனைகளின்
உப⁴யோர் – இரண்டு
மத்⁴யே = மத்தியில்
விஷீத³ந்தம் = துக்கத்துடன் இருக்கும் வருந்துகின்றவனான
இதம் = இவ்வாறு
வச: = பேசினான்
பரத குலத்து உதித்த த்ருதராஷ்ட்ரனே-கண்ணன் இரண்டு சேனைகளுக்கும் நடுவில் வருந்துகின்றவனான
அர்ஜுனனைக் குறித்து சிரிப்பவன் போலே இவ்வார்த்தையைக் கூறினான்
சிரித்துக் கொண்டே -மந்த ஸ்மிதம் -பதில் சொல்கிறான் -உபதேசம் -சொல்கிறவர் அழுது கொண்டே சொல்லக் கூடாதே –
ஆழ்ந்த விஷயம் – மாய சிரிப்பு -வியாஜ்யமாக ஸ்ரீ கீதை தரப் போகிறேன் –
தேஹாத்ம விபாகம் இல்லாத ஷத்ரியன் – சங்கை உருவாக்கி -பீஷ்மர் துரோணர் நிறுத்தி
கை காட்டி -வருத்தம் வர வைத்து -சிரிப்பு வருமே -விளையாட்டு பொம்மை தானே நாம்
தனக்கு தெரிந்த அனைத்து நல்ல விஷயங்கள் -அத்யாத்ம ஸாஸ்த்ரம் வெளியிட்டு அருளுகிறார்
யுத்தம் செய்து மோக்ஷமே பெறலாம்
பொதுவான கேள்வி -சிறப்பான பதில்
இதிலும் ஹ்ருஷீ கேசன் -இந்திரியங்களுக்கு ஏற்பட்ட வாட்டம் போக கீழே -சோகம் போக்க தகுதி
இதில் அவன் இந்திரியங்கள் போன வழியில் போகாமல் -காண்டீபம் எடுத்து போர் செய்ய
ஐவர் திசை திசை எத்துகின்றனரே –
2-12 தொடங்கி 18 -அத்யாயம் முடியும் வரை சிரிப்பது போலே
பல பல அர்த்தங்கள் கொள்ளலாமே -ஒவ்வொன்றுடன் சேர்த்ததை
தம் -ப்ர ஹஸன் -பரி ஹாஸம் -தோற்ற -துரோணாச்சார்யார் சிஷ்யன் -தர்ம சிந்தனை யுள்ளவனா இப்படி கலங்குவது –
அகஸ்மாத் -காரணமே இல்லாமல் -நிர் யுத்த –
முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் -பித்ருலோகம் அறிந்தவன் -இவர்களைக் கொல்லுவதா என்று கலங்கி –
பிரஹாச -உவாஸ -கீதா சாஸ்திரம் -ஆழ்ந்த கருத்துக்கள் -உபநிஷத்தில் குஹ்யமானவற்றை புரிய வைக்க –
சிரிப்புடன் ஆனந்தமாக அருளிச் செய்கிறான்
ஆச்சார்ய பீடம் -அலாப்ய லாபம் பெற்றதாலும் சிரிப்பு –
ஸங்கல்ப லேசத்தாலே செய்ய முடிந்த கார்யம் உபதேசித்து உலகோர் உய்ய வாய்ப்பு கிட்டிற்றே
தேஹாத்ம விவேகம் அறிந்தும் மறந்து பேசினான் –
மழுங்காத–உன் சுடர்ச் சோதி மறையாதே -த்வரைக்கு நமஸ்காரம் -போலவே இங்கும் கீதா சாஸ்திரம் அருள வாய்ப்பு கிட்டியதே
ஹ்ருஷீ கேச உவாச ப்ர ஹாஸ -மனத்தைக் கலக்கினவனும் நானே -போக்குபவனும் நானே
பாரத ப்ர ஹாஸ -அட்ட ஹாஸ சிரிப்பு என்று த்ருதராஷ்டர் உணர -உன் பக்ஷம் தோல்வி நிச்சயம்
வாயால் மட்டும் வார்த்தைகளால் மூலம் உபதேசம் அல்ல -யுத்தத்துக்கு நடுவில் -உபதேசம் -இங்கிதங்கள் -body language -பல அர்த்தங்கள்
தான் நின்ற நிலையிலே -அறியும்படி -ஸஞ்சயனும் கண்டான் அவற்றை எல்லாம் –
—————-
ஸ்ரீ பகவாநுவாச-
அஷோச்யா நந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே.—
கதாஸூநகதா ஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா—-৷৷2.11৷৷
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
அஸோ²ச்யந் = வருந்தத் தகாதவர்களைக் குறித்து
அநந்வஸோ²சஸ் = வருந்துபவனே
த்வம் = நீ
ப்ரஜ்ஞா = ப்ர + ஞானம் = உயர்ந்த ஞானம்
வாதா³ம் = வாதம், சொற்கள்
ச = மேலும்
பா⁴ஷஸே| = நீ சொல்கிறாய்
கதாஸூந் = மூச்சு விடுபவர்கள் போய் விட்டார்கள் (இறந்தவர்கள்)உயிர் அற்ற தேஹங்களைக் குறித்து
ந = இல்லை
அகதா ஸூம்ஸ் = மூச்சு விடுபவர்கள்-உயிருள்ள ஜீவர்களைக் குறித்து
ச = மேலும்
நா = இல்லை
அநுஸோ²சந்தி = வருத்தம்
பண்டி³தா: = ஞானிகளுக்கு
கண்ணன் கூறினான்
அர்ஜுனா நீ வருந்தத் தகாதவர்களைக் குறித்து வருந்தினாய் -மிகவும் அறிவுள்ளவன் போல் பேசுகிறாய் –
அறிவாளிகள் உயிர் அற்ற உடல்களைக் குறித்தும் உயிருள்ள ஜீவர்களைக் குறித்தும் வருந்துவது இல்லை
பண்டிதர் வருத்தம் படக் கூடாத விஷயம் -இவர்களை பார்த்து வருத்தப் பட கூடாதே –
ஞானி போல சில சமயம் பேசுகிறாய் -நீ எந்த கோஷ்ட்டி அறிய முடிய வில்லையே
அனு- பின் தொடர்ந்து வருந்துகிறாய் என்று பொருள் கொள்ளக் கூடாது
சோகம் படக் கூடாத இடத்தில் சோகம் பட்டு -அஞ்ஞானி – பித்ரு பிண்டம் இல்லாமல் -சொல்லி ஞானி போலவும் பேசி
குல ஷயம் குல நாசம் அறிந்தவன் சாஸ்த்ர ஞானம் அறிந்தவன் -போலவும் பேசி -வாழ்வதே பரமாத்மாவுக்கு தானே
ஆத்ம தேஹம் வாசி அறிந்தவர் துக்கம் அடைய மாட்டார்களே -இதுவே ஞானம் -பண்டிதன் போலே நடந்து கொள்-
சிற்றத்தின்-செற்றத்தின்- வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் -இந்த ஸ்லோகத்தை கொண்டே பிறந்தது
அடியேன் சிறிய ஞானத்தன்-சிறியது – -ஜீவாத்மா-ஆக்கையின் வழி உழல்வோம் —
இதுவும் முன்னுரையிலே சேர்த்து –உபதேசம் அடுத்த ஸ்லோகம்
ஸாஸ்த்ரம் இதன் மூலம் மேல் தொடங்கும் -கேட்பவனுக்கு கவனம் ஏற்பட -பரிஹாஸ சிரிப்புடன் -தட்டி எழுப்பி பேசுவது
கண்ணன் பேச்சாக இருந்தாலும் உபதேசத்தில் அடங்காது –
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானம் அர்ஜுனனுக்கு இல்லையே -ஆத்ம யாதாத்ம்ய ஞானம்
யுத்தம் தர்மமானது -அதுக்கும் மேலே மோக்ஷத்தையே பெற வைக்கும் –
பலத்தில் ஆசை இல்லாமல் செய்ய வேண்டுமே -அத்தைப் புரிய வைக்க வேண்டுமே –
இரண்டு விஷயங்களையும் புரிய வைக்க வேண்டுமே
லங் லகாரத்தில் -வருந்தினாய் -இறந்த காலம்
அறிவால் வரும் பேச்சுக்களை பேசுகிறாய் வர்த்தமானம் –
சற்று முன் சொன்ன ஒன்றை நிகழ் காலத்தில் பேசலாம் பாணினி ஸூத்ரம்
அஸூன் -பிராணன் உயிர்
கத -நீங்கியது
உயிர் உள்ள பொருள்களையும் உயிர் நீங்காத -பொருள் களையும் பற்றியும் -என்பதால்
தேஹ ஆத்மா விஷயங்களையே சொன்னவாறு
உடலிலே தானே பிராணன் –
லக்ஷணையால் நிலை அற்ற ஒன்றையும் நிலையான ஒன்றையும் சொன்னவாறு -இரண்டையும் பற்றி பண்டிதர் வருந்த மாட்டார்கள்
கங்கையில் கிராமம் -சொல் தொடருக்கு கங்கைக் கரையில் பொருள் போல் லக்ஷணை அர்த்தம் இங்கும் கொள்ள வேண்டும்
பேச்சில் மட்டும் அறிவாளன் பேச்சு -மனதில் ஆழமாகப் பதியாத அறிவு என்றும் காட்டுகிறான்
ஒரு மாசம் உபவாசம் இருக்க திருக்கோஷ்டியூர் நம்பி விதிக்க -எம்பெருமானாரும் இருக்க -உடல் மெலிய
பார்ஸ்த்வத்தார் சொல்ல
ரஹஸ்ய அர்த்தம் கேட்க்காமல் உயிர் விட மாட்டார் -அவ்வளவு த்வரை உண்டு –
இப்படி தேஹ ஆத்ம விபாகம் நன்கு அறிந்தவர்கள் நம் முன்னோர்
———
இந்த அத்யாயம் -11 ஸ்லோகம் வரை முன்னுரை
அத்யாயம் பிரிந்தது –
ஆளவந்தார் -சாஸ்திரம் பிறக்க இந்த முன்னுரை
வியாசர் –
சோகம் சொல்லும் -முதல் அத்யாயம்
சோகம் போக்கும் மேல் ஸ்லோகங்கள்
இரண்டு தன்மைகள் உண்டே இவற்றுக்கு
–————-
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-
காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –
நித்யாத்ம அசங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோக தீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-
நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோக தீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.
சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –
12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி
அப்புறம் உபாயம் —
சாங்க்யம்-அறிவு -அறிவால் அறியப்படும் -ஆத்மா -என்று இங்கு பொருள்
யோகம் -நழுவாமல் நியத அனுஷ்டானம் செய்வது -கர்ம யோகம் –
இரண்டையும் பற்றின தீ ஞானம் சொல்லப்படுகிறது இதில்
அந்த அர்ஜுனனின் மோஹம் தீர்க்க
சரணாகதி செய்த அவன் -கலக்கம் போக்க –
இங்கு யுத்தம் செய்வதே இவனுக்கு வர்ணாஸ்ரம தர்மம்
எப்படிப்பட்ட தீ என்றும் இதிலே உண்டே
நித்ய ஆத்மா –
அசங்க கர்ம ஈஹா -பற்று இல்லாத -கர்மங்களின் அனுஷ்டானம் –
கோசார -இரண்டையும் விஷயமாக
லஷ்யம் என்ன
ஸ்தித தீ லஷா -நிலை நின்ற அறிவு -இதுவே ஞான யோகம் –
தீ -ப்ரதிஞ்ஞா -அடைவதே குறிக்கோள் -லஷ்யம்
புலன்களைக் கட்டுப்படுத்து த்யானம் செய்வதே –
இவை அனைத்தையும் அழகாக சுருக்கமாக சொல்லும் ஸ்லோகம் –
கீழே முதல் ஆறு அத்தியாயங்கள் சுருக்கம் பார்த்தோம்
நான்கு படிக்கட்டுகள்
1-கர்ம யோகம் -பற்று அற்ற வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனது தூய்மை ஆக்கி பின்பு –
இதுவே மேலே செல்ல அதிகாரம் தரும்
2-ஞான யோகம் -புலன்களை அடக்கி ஜீவாத்மா சாஷாத் காரத்துக்கு அடிப்படை –
கேள்வி ஞானம் போல் இது -இதுவே -மேலே செல்ல அதிகாரம் தரும்
3-யோகம் -ஆத்ம சாஷாத்காரம் அடைவது-ஆழ்ந்த மனதில் பதிந்து – –
நித்யம் அணு சேஷத்வம் இத்யாதி ஆத்மஸ்வரூபம் நன்றாக அறிந்து -இடைவீடின்றி அனுபவம்
4-ஆத்ம அநு பூதி ஸித்த்யர்த்தே –கண்டபடியால் பிறந்த -ஆத்ம அனுபவம்
இவற்றுள் முதல் இரண்டும் இதிலே விஸ்தாரமாக உள்ளன
—————————————————-
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷
ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = ஸர்வேஸ்வரனான நான்
ஜாது = முற்காலத்தில் எப்போதும்
ந = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்
சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –
எப்போதும் நான் உள்ளவனே யாவேன்
நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்
இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே
நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –
நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –
நான் நேற்றைக்கு இருந்தேன் இல்லை என்பது இல்லை –அஹம் ஜாது–ந ஆஸம் இது ந
நீ இன்று இருக்கிறாய் அல்ல என்பது இல்லை –
இரட்டை இல்லை சொல்லி திடமாக -தன்னை -அவனை -ராஜாக்களை -ஜனாதிப –
ஆத்ம நித்யம் –மற்ற புற மதங்களை போக்கி –
சஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் –
த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம்
நித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான்
நாராயணனே நமக்கே பறை தருவான் –
அனு ஷங்கமும் அத்யாஹாரமும் செய்து இந்த ஸ்லோகார்த்தம் அறிய வேண்டும்
உத்பத்தி அழிவு இல்லை
ஆத்மா -உடல் -உண்மையாக அறியும் தர்ம யுத்தம் -மூன்றும் இதில் உண்டே
அர்ஜுனனுக்கு யுத்தமே வர்ணாஸ்ரமம்
உபாயம் வழி ப்ராபகம் கர்மாநுஷ்டானம் -உபேயம் இலக்கு -ஜீவாத்மா இப்பொழுது –
பெருமையை இதில் சொல்லி -தேகத்தை விட வேறுபட்டது
இலக்குக்கு பெருமையைச் சொல்லி -ஆசை விளைக்க வேண்டுமே -ஆகவே அத்தை முதலில் சொல்ல வேண்டுமே
நாராயணனே பறை தருவான் உபதேசத்தில் பறை இலக்கு முதலில் தருவான் உபாயம் பின்பு
அனுஷ்டான வேளையில் கறவைகள் முதலில் உபாயம் சிற்றம் சிறுகாலை உபேயம் போல் உண்டே
இரண்டு ந பிரயோகம் -double negative -உறுதியாக மனதில் படி
அர்ஜுனன் வில்லாளி -சொல்லாமல் அர்ஜுனனைத் தவிர சிறந்த வில்லாளி இல்லை போல்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் போல்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தேச கால வஸ்து அபரிச்சேத்யன் -அநாதி நிதான -ஸாஸ்வதம்-அநந்தன் – –
தான் நித்யம் -ஆதி அந்தம் இல்லாமல் -பிரசித்தம் -அத்தை த்ருஷ்டாந்தம் ஆக்கி -நீயும் இந்த மன்னர்களும் நித்யம்
ஜீவர்கள் அணு -இருந்தாலும் நித்யம் -பூத பவ்ய பவத் பிரபு -ஸ்வாமி
பரமாத்மா -ஸர்வேஸ்வரன் எப்போதுமே நிலையாக இருக்க வேண்டும் என்றால்
புகப்பட்ட பொருள்களும் இயக்கப்படும் பொருள்களும் நித்தியமாக இருக்க வேண்டுமே
அர்ஜுனன் அறிந்த ஒன்றை த்ருஷ்டாந்தமாகக் காட்டி
நாரதர் வியாசர் பீஷ்மர் போல்வார் உபதேசித்து உள்ளவற்றை நேராகக் கண்டேன்-
புருஷன் சாஸ்வதம் என்று விஸ்வரூபம் கண்டதும் சொல்கிறானே
ந ஸ ஸீதா அஹம் –அக்குளத்தில் மீன் என்பதற்கு இளைய பெருமாள் பிராட்டியைத் திருஷ்டாந்தம் ஆக்கினார் அன்றோ
பாஸ்கரனும் பிரபையும் போல் பிரசித்தம் -அஹம் அபி ராகவா –
நான்காம் அத்தியாயத்தில் அவதார ரஹஸ்யம் அருளிச் செய்து – தவ ச அர்ஜுன -பிரசித்தமான -அத்தை
த்ருஷ்டாந்தம் ஆக்கி -உனக்கு உள்ள பிறவிகள் போல் பஹு –ஜென்மம் –
உனக்கு கர்மாதீனம் -எனக்கு கிருபாதீனம் -அப்ராக்ருதம் -என்று காட்டி அருளுகிறார் –
நான் முற்காலத்தில் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை
நீ முற்காலத்தில் இல்லாமல் இருந்தாய் என்பது இல்லை
இந்த அரசர்களும் முற்காலத்தில் இருந்தார்கள் என்பது இல்லை
ஆஸம் -சொல்லுக்கு இவ்வாறு மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்
ந ஆஸீ -ந ஆஸந் -அத்யாஹாரம் இங்கு
ஜாதி -அனுஷங்கம்
அனுஷங்கம் -முன் இடத்தில் உள்ள சொற்களை மேல் சேர்த்து சொல்வது
அத்தியாஹரம் -புதிதாக சேர்த்துக் கொள்வது -தருவித்து கொள்வது
முற்காலத்தில் இல்லை என்றது உத்பத்தி இல்லை
பிற்காலத்தில் -ஸர்வே வயம்- நாம் அனைவரையும் இருக்க மாட்டோம் என்பது இல்லை -அழிவும் இல்லை –
நிகழ் காலம் சொல்ல வில்லையே என்றால்
கத்யத்திலும் -அன்ருதம் ந உக்த பூர்வம் ந வஷ்யே -முன்பும் பொய் சொல்ல இல்லை
பின்பும் பொய் சொல்லப் போவது இல்லை -ஸுக்ரீவனுக்கு பெருமாள் சொன்ன
ராமனுக்கு இரண்டாவது பேச்சு இல்லை மேலும் சொல்லி -ராமோ -த்விர் ந பாஷதே –
நிகழ் காலத்தை வரும் காலத்தில் இறந்த காலத்திலும் சேர்க்கலாம் அன்றோ என்றுமாம்
12-38 ஸ்லோகம் வரை சாங்க்யம் அர்த்தம்
மேல் கர்ம யோகம்
தத்வம் -உண்மைப்பொருள் -தத்வ ஞானம் மோக்ஷம் அஞ்ஞானம் ஸம்ஸாரம்
அத்வைதிகள் ஒரே தத்வம் -சாங்க்யர் இரண்டு -நம் சம்ப்ரதாயம் தத்வ த்ரயம்
தத்வம் அஸி -சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் அபேத சுருதிகள்
போக்தா போக்யம் ப்ரேரி தாரம் ச மத்வா -ஷரம் அக்ஷரம் -பேத ஸ்ருதிகள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -அவன் எனக்குள் ஆத்மா –யஸ்ய ப்ருத்வீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -கடக ஸ்ருதி
இந்த ஸ்லோகம் தத்வ த்ரயங்களையுமே சொல்லுமே
ருஜு ஆர்ஜவம் -சூர்ப்பணகை இடம் கூட -இவனோ கிருஷ்ணாஸ்ரய இத்யாதி -கலக்கம் போக்க உபதேசம்
தேஹாத்ம அபிமானம் போக்கி
ஜீவ பரமாத்ம பேதமும் -நீ இவர்கள் -ஜீவ பேதமும்-காட்டி அருளி
உடல் முற்காலத்தில் இல்லாமல் இருந்ததே-பிற் காலத்தில் அழியப் போகிறது –
நேராக இது பற்றி ஸ்லோகத்தில் இல்லை என்றாலும் உள்ளுறைப் பொருள் உண்டே –
இவ்வாறு தத்வ த்ரய உபதேசம் பண்ணி அருளுகிறார் –
நான் அறிகிறேன் என்னுடைய உடல் -உத்திகளும் வாசியைக் காட்டுமே
ப்ரத்யக்ஷம் கொண்டு அசேதனம் அறிகிறோம்
அனுமானம்
சப்தம் வேதம் கொண்ட ஜீவ பரமாத்ம ஞானம் பெறுகிறோம் –
இந்த்ரியங்களைக் கொண்டு அறிகிறோம் -அவற்றுக்கு அறிவு இல்லையே
கரணம் கருவி என்று சொன்னாலே கர்த்தா இருக்க வேண்டுமே -இந்திரியங்களுக்கு அதிஷ்டானம் இயக்க ஜீவாத்மா வேண்டுமே
நியாய மதத்தால் அனுமானத்தால் மட்டும் ஈஸ்வரனை அறியலாம்
உண்டாக்கியவன் -குயவன் குடத்துக்கு -போல் என்பர் –
ஸாஸ்த்ர யோநித்வாத் -நம் ஸம்ப்ரதாயம் –
பாதக ஞானம் கொண்டு -கயிறு பாம்பு இல்லை அறிவது -மஞ்சள் காமாலை -காரணமாகவும் தப்பாக க்ரஹிக்கலாம் –
ந ஜாயதே ம்ருத்யதே வேதமும் ஆத்மா நித்யம் என்பதைக் காட்டும்
அனைவருக்கும் ஒரே ஆத்மா என்றால் ஒருவர் துக்கமும் சுகமும் படக் கூடாதே
கூடிற்றாகில் நல்லுறைப்பு -கூடாமையைக் கூடினால் –அது அதுவே -ஸாம்யம் என்பது ஓன்று அல்ல –
ஆனந்தத்தில் ஸாம்யம் -ஸாலோக்யம் சாரூப்பியம் -சாயுஜ்யம்
பரமம் ஸாம்யம் உபைதி-கர்ம பந்தம் அற்று -ஸ்வ ஸ்வரூபம் ஆவிர்பாவம் பெற்று –
நிகர் ஸாம்யம் சொன்னாலே இரண்டு வியக்தி இருக்க வேண்டுமே
———-
தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷
தேஹிநா = உடலை உடையவன்
அஸ்மிந் = இந்த
யதா = அப்படியே
தேஹே = உடல்
கௌமாரம் = குழந்தைப் பருவம்
யௌவநம் = இளமைப் பருவம்
ஜரா = முதுமை பருவம்
ததா = எப்படியோ
தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவதைப் போல
தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்
தத்ர = அது போல
ந = இல்லை
முஹ்யதி = குழப்பம் மயக்கம் அடைவது
இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் எப்படி ஏற்படுகின்றனவோ அப்படியே
இந்த உடலை விட்ட வுடன் மற்றொரு உடலை அடைவதும் ஏற்பட்டே தீரும் –
அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை -தீரர் சோகப் பட மாட்டார்
கீழே ப்ராப்யம் -ஆத்ம ஸ்வரூபம் சொல்லி
இதில் த்யாஜ்யம் -நிவர்த்யம் சொல்ல வேண்டுமே –
உடலைப் பார்த்தும் ஆத்மாவைப் பார்த்தும் பண்டிதர் வருந்துவது இல்லை -நீயும் வருந்தாதே என்றார்
எதனால் வருந்த வேண்டாம் என்பதை இதில் சொல்கிறார்
தேஹி -தேகம் உடையவன்-ஆத்மா – -குணி -குணம் உடையவன் போல்
தீர -தைர்யம் உள்ளவன் -சாமர்த்தியம் -தத்வ ஞானம் உள்ளவன் -பிரகரணத்துக்குச் சேர அர்த்தம் கொள்ள வேண்டுமே
ஆத்மா ஸ்திரம் என்று அறிந்தவன் -மயக்கம் கலக்கம் அடைய மாட்டான் -என்றவாறு
அஸ்மின் தேஹ -இந்த உடலில் -அவஸ்தைகள் தஸா விசேஷங்கள் –
தேஹாந்த்ர பிராப்தி -வேறே உடல் அடைவது இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு தானே -இந்த உடலுக்கு இல்லையே –
ஆத்மாவுக்கு -இந்த உடலில் உள்ள மாற்றங்கள் -ஸ்வ பாவம் மாறுவது போல் -வேறே உடல் கொள்வதும் என்றபடி
கீழே ஆத்மா நித்யம் என்றால் பிறப்பு இறப்பு என்பது பற்றியே விளக்கம் இந்த ஸ்லோகம்
வேறே சரீர சம்பந்தமே பிறப்பு -இந்த சரீர பிரிவே இறப்பு என்றவாறு
சரீரம் பற்றிய உண்மையும் விளக்குகிறார் இதில் -இயல்பே மாறிக்கொண்டே இருப்பது தானே -ஆகவே இது தள்ளத் தக்கதே என்றவாறு
ஆத்மாவைப் பற்றி வருந்தக் கூடாது என்றவாறு
உடல் மாறும் பொழுது வருத்தம் உண்டே என்றால் -அவர்கள் ஆத்மாவை உள்ளபடி அறியாமலே வருந்துகிறார்கள் என்றவாறு
தேஹாத்ம அபிமானம் தொலைக்க வேண்டும் என்றபடி
மேலே உடலுக்காகவும் வருந்தாதே என்பதை 24 ஸ்லோகம் தொடங்கி விளக்குகிறார்
தீரர் அதுக்கும் சோகப்பட மாட்டார் என்றுமாம்
இயற்கையாக நடப்பதற்கு துக்கம் பட வேண்டாமே
அடுத்த இரண்டு ஸ்லோகங்களால் இந்த நிலையை அடையும் வழியை விளக்குகிறார்
———–
மாத்ரா ஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக துக்கதா–
ஆகமாபாயிநோ நித்யாஸ்தாம் ஸ்திதிக்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷
மாத்ரா = பொருள்கள், இயற்கை
ஸ்பர்ஸா = உணர்ச்சி
து = அது
கௌந்தேய = குந்தி புத்திரனே
ஸீ²த = குளிர்ச்சி
உஷ்ண = சூடு
ஸுக = சுகம்
து³:க²தா³: = துக்கம்
ஆக³ம் = வரும்
அபாயிநோ = போகும்
அநித்யாஸ் = நிரந்தரம் இல்லாதது
தாம் = அவை
ஸ்திதிக்ஷஸ்வ = பொறுத்துக் கொள்ள வேண்டும்
பா⁴ரத = பாரத குல தோன்றலே
குந்தீ புத்திரனே தந் மாத்ரா கார்யமான -சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களோடும் -அவற்றை உடைய பொருள்களோடும்-
இந்திரியங்களின் சேர்க்கைகள் குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன –
இவை உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக் கூடியவை -அவற்றைப் பொறுத்துக் கொள்
அசேதனங்கள் -24 வகையாகப் பிரித்து -ப்ரக்ருதி -மஹான் -அஹங்காரம்
சாத்விக ராஜஸ தாமச -மூன்று வகை த்ரவ்யங்கள்
சாத்விக அஹங்காரத்தில் இருந்து ஐந்து ஞான இந்திரியங்கள் ஐந்து கர்ம இந்திரியங்கள்
நாக்கு -இரண்டு கார்யங்கள் -சுவையை அறியவும் ரசன இந்திரியம் அதுக்குள் நுண்ணியதாக இருக்கும்
நாக்கை நகற்றி ஒலி எழுப்புகிறோம் -பேசுவதற்கு -கர்ம இந்த்ரியங்களுக்குள் இது
வாக் பாணி கை பாயு உபஸ்தம்
மேல் மனஸ்ஸூ
தாமஸ அஹங்காரத்தில் இருந்து பஞ்ச தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் –
முதலில் ஆகாசம் -வாயு -நெருப்பு -நீர் -பிருத்வீ
இடப்படும் நிலை
ஸப்த தன்மாத்ராம் -ஆகாசம் -ஸ்பர்சம்-வாயு -ரூப-நெருப்பு -ரஸ -ஜலம் -கந்த -பிருத்வீ
ஆகாசத்தில் சப்தம் மாத்திரம் இருக்கும்
வாயுவில் -சப்தமும் ஸ்பர்சமும் இருக்கும்
நெருப்பில் -நிறமும் சேர்ந்து சப்தமும் ஸ்பர் சமும் இருக்கும்
நீரில் சுவை சேர்ந்து சப்தமும் ஸ்பர்சமும் நிறமும் இருக்கும்
பிருத்வியில் கந்தத்துடன் சப்தமும் ஸ்பர்சமும் நிறமும் சுவையும் இருக்கும்
பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய் தீ
நிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே –
மாத்ரா -உண்டான ஐந்து குணங்கள் உடன் கூடிய ஐம் பூதங்களும்-உண்டான உலகில் உள்ள பொருள்கள் –
காரணம் உள்ள ஒன்றை காரியத்தால் சொன்னது போல்
ஸ்பர்சம் -நம்முடன் உள்ள இந்திரியங்களுக்கும் பொருள்களுக்கும் உண்டான தொடர்பைச் சொன்னவாறு
அர்த்தங்கள் என்று உலகில் உள்ள பொருள்கள் சொன்னவாறு
இந்தத் தொடர்பால் தானே குளிர்ந்து வெப்பம்-இவற்றால் உண்டாகும் -இவற்றைச் சொன்னது உபலக்ஷணம்
துக்கம் சுகம் உண்டாகும் அன்றோ
தா -கொடுப்பது
வரம் ததாதி வரத போல்
இந்த தொடர்பால் வரும் போகும் -நிரந்தரம் இல்லையே –
இத்தையே -ஆகமம் -வருவதும் -அபாயந -போகும் -அநித்யம்
இவை அடியோடு போவது முக்தி அடைந்த பின்பே தானே
அங்கு அனைத்தும் அப்ராக்ருதம் தானே
மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ யாகி என்னை அளித்தானே
பொங் கைம் புலனும் பொறி ஐந்தும் கரும இந்திரியம் ஐம் பூதம்
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி மானங்கார மனங்களே –10-7-10-
மண்ணுடன் வேர் பற்று சூடுமா போல்
பாகவதர்கள் உடன் இடி பட்டு- ஸ்பர்சம் மோந்து -இடை கழியே பற்றி
நீயும் திரு மகளும் நின்றாயே நித்ய வாசம் செய்கிறானே
வருவது போவது -சொல்லி -மேலும் -அநித்தியம் என்பது -வரவே வராது என்றவாறு
நீ இவற்றைப் பொறுத்துக் கொள்ள வேணும் –
பரத குலத்தில் பிறந்த பெருமை உண்டே உனக்கு
ஆத்மாவின் நித்யம் சொல்லும் பிரகரணத்தில்-மேலே 16 தொடங்கி ஆத்மாவின் நித்யத்வமே
விரிவாகச் சொல்லிப் போக – இதுவும் அடுத்ததும் தேஹம் பற்றி எதனால்
யுத்தம் செய்து இந்த துன்பங்களைப் பொறுக்க வேண்டுமா என்றவன் இடம் இவை அநித்யம்
பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறான்
14 15 இரண்டும் வழி -கர்ம யோகம் பற்றி சுருக்கமாக சொல்கிறான் –
ஆத்மா அடையப்பட வேண்டியது சொல்லி -தேஹம் த்யாஜ்யம் என்று சொல்லி –
வர்ணாஸ்ரம தர்மமே வழி என்று சுருக்கமாக 12-13-14-15 ஸ்லோகங்களிலே
ஸாஸ்த்ர அர்த்தங்கள் அனைத்தையுமே சொல்கிறான்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர வாசிகள் கர்மம் அடியாகவே -கர்மங்களும் அநாதி –
ஆதி இல்லை என்றாலும் அந்தம் உண்டே –
உடல் தானே சம்சாரத்திலே கட்டுப்படுத்தி உள்ளது -சரீரம் தானே முதல் தர்ம சாதனம் –
நற் செயல்களை செய்யவே படைக்கப்பட்டது -விசித்ரா தேஹ சம்பத்தி –
உடலைக் கொண்டே பந்தம் போக்கிக் கொள்ள வேண்டும்-வர்ணாஸ்ரம தர்மங்கள் செய்வதே முதல் படி –
அல்ப அஸ்திர பலன்களில் ஆசை இல்லாமல்-முக்தி உயர்ந்த பலன் ஒன்றிலுமே குறிக்கோளாக
கர்மங்கள் செய்து -அவனுக்கு உகப்பு உண்டாக்கி பெற வேண்டுமே –
இரட்டைகள் வந்து போகும் -பொறுத்துக் கொள்ள வேண்டும் –
முக்தி அடைய யுத்தம் தான் வழி என்று மேல் வியக்தமாக சொல்கிறான் –
சுகம் துக்கம் இரண்டையுமே பொறுத்துக் கொள்ள வேண்டுமா -சீத உஷ்ண -இரட்டைப் போலே -சுகம் துக்கம் –
சுகத்தால் கௌரவம் வராமல்-ஆனந்தம் தலை மண்டி அஹங்காரம் படக்கூடாதே -humility -வேண்டுமே –
இதுவே மோக்ஷம் அடையும் வழி என்று அடுத்த ஸ்லோகம் –
———-
யம் ஹி ந வ்யத யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப—
ஸம துக்க ஸுகம் தீரம் ஸோம் அம்ருதத்வாய கல்பதே—৷৷2.15৷৷
யம் = அவன்
ஹி = அதனால்
ந = இல்லை
வ்யத²யந்த் = சேர்ந்திருது
மன உறுதியைக் குலைப்பது இல்லையோ -என்றவாறு
யேதே = அவை-இந்த இந்திரிய அர்த்த ஸ்பர்சங்கள்
புருஷம் = மனிதன்
புருஷர்ஷப = புருஷ + ரிஷப = காளை போல உயர்ந்தவன்
ஸம துக ஸுகம் = துக்கத்தையும் சுகத்தையும் சமமாக
தீ⁴ரம் = வீரம் உள்ளவன்
ஸோ = அவன்
அம்ருதத்வாய = நிரந்தரமாக, இறப்பு இல்லாதவனாக
கல்பதே = காலம் தோறும் இருப்பான்
புருஷர்களுள் சிறந்தவனே-ஸூக துக்கங்களை சமமாக எண்ணுபவனாய் -தைர்யம் உடையவனாக எந்தப் புருஷன்
இவைகள் -புலன்கள் -மற்றும் போகங்களின் சேர்க்கைகள் -கலங்க வைப்பது இல்லையோ
அந்த மனிதனே மோக்ஷத்தை அடைய வல்லவனாவான்
பொறுத்துக் கொண்டால் -அத்ருஷ்ட பலம் கிட்டும் -குல ஷயம் நரகம் தான் கிடைக்கும் என்று எண்ணினவனுக்கு பதில் –
இது நேராக சொல்லாமல் -எந்த புருஷன் சுக துக்கம் பார்க்காமல் பொறுத்து இருப்பவன் அடைவான்
அவனைப் பார்த்து சொல்ல வில்லை -நீ இந்த நிலைக்கு வரவில்லை என்று ஸூ சகம்
நீ இன்னும் பந்துக்கள் பாசம் ஸ்நேஹம் இவற்றில் ஆழ்ந்து உள்ளாய் -புருஷ ரிஷப விபரீத லஷணையில் இங்கு –
பக்குவம் அடையவில்லை என்று கோடி காட்டுகிறான்
மன உறுதி -என்று -ந சால யந்தி-அசைப்பது -இவை பீடிக்கும் -சுக துக்கம் வந்தாலும் நிலை பெற்று இருக்க வேண்டும்
சம சுக துக்க -என்று சமமாக -அறிவிலி போல் இல்லை -இரண்டும் ஒரே அளவில் வரும் என்பது இல்லை –
துக்கம் கூட சுகம் போல் ஏற்றுக் கொள்பவன் என்றபடி –
பெரிய இலக்கு நோக்கிப் போகும் பொழுது வரும் அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டுமே –
சுக சாதனத்வாத் -மோக்ஷம் பரம ஆனந்தத்துக்கு வழி என்று உணர வேண்டுமே
அம்ருதத்வம் -மரணம் இன்மை -முக்தி -ம்ருதத்வம் -மரணம் –
இத்தால் ப்ராபகம் கர்ம யோகம் என்று சுருக்கமாக சொல்லி -மேல் விவரித்து சொல்கிறான்
1-ஆத்மா அழியாதது
2-உடல் அநித்யம்
3-சுகம் துக்கம் பொறுத்துக் கொள்ள வேண்டும் சொல்லி
அவனது சோக நிவ்ருத்திக்கு மூன்று ஹேதுக்கள் சொன்னபடி
முக்தி பற்றி இரண்டாம் அத்தியாயத்தில் இல்லை இருந்தாலும் -கர்மங்களை விடக் கூடாதே –
இதுவே தகுந்த முதல் படி -என்று நமக்கு அறிவிக்கைக்காக
ஸாஸ்த்ர அர்த்தமே சுருக்கமாக சொல்கிறான்
மேல் காரணங்களை விவரித்து ஆத்ம நித்யத்வத்தை விளக்குகிறார்
————–
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்வ தர்ஸிபி–৷৷2.16৷৷
ந = இல்லை
அஸதோ = சத் என்றால் உள்ளது. அ+சத்து என்றால் இல்லாதது
வித்³யதே = உள்ளது
பா⁴வோ = இருப்பது
ந = இல்லை
அபாவோ = இல்லாதது
வித்³யதே = அது
ஸத:| = உண்மையில்
உப⁴யோ = இரண்டிலும்
அபி = அது அன்றி
த்³ருஷ்டோ = பார்த்தல், அறிதல்-இவ் வண்ணமாக அறிகிறார்கள்
அந்த = அந்தம், முடிவு, இறுதி
து = ஆனால்
அநயோ = அந்த இரண்டில்
தத்த்வத³ர்ஸி²பி⁴:= தத்துவம் + அர்சிபி = தத்துவத்தை அறிந்தவர்கள். உண்மையை அறிந்தவர்கள்.
இது முதல் 37 ஸ்லோகம் வரை ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி
மேல் பற்று அற்ற கர்ம யோகம் தான் ஆத்மாவை உள்ளபடி அறிய சரியான வழி என்று அருளிச் செய்கிறான்
இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளதின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது -உடல் அநித்யமானது
உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லதின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது
உடல் ஆத்மா இவ்விரண்டையும் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப் பட்டுள்ளது
இந்த இரண்டினுடைய -கண்ணால் காட்டி -ஜீவாத்மா பற்றியும் உடல் பற்றியும் –
உண்மைப் பொருள்களை யாதாத்ம -உண்மையாக அறியும் சக்தி உள்ளவர்கள்
முடிவு காணப் பட்டுள்ளவை –
முடிவு -அழிவு பொருளில் இல்லை நிஷ் கர்ஷம் என்றவாறு
ஆத்மாவுக்கு அழிவு இல்லையே
திடமான நிர்ணயம் –
ஆஸ்திகன் அஸ்தி உள்ளவன் என்று சொல்பவன் -இருப்பு -ஸத் கார்ய வாதம்
ப்ரஹ்மம் உள்ளது என்று அறியாதவன் அசத்தாகிறான்
பாவ -இருப்பு -தன்மை இது -இல்லாமைக்கு எதிர் பதம்
இல்லாமை உள்ள பொருளுக்கு இல்லாத பொருள்
இருக்கும் பொருளுக்கு இல்லாமை என்பது ஏற்படாதே
ஸத் கார்ய வாதம் -குடம் செய்ய முன் மண் -அவஸ்தை
law of conservation of matter -வடிவ மாறுதல் உண்டு -புதிதாக உண்டாகாதே –
இது நமது சித்தாந்தமே யாகிலும் இத்தைச் சொல்ல வரவில்லை இங்கு
இத்தை சொல்லும் பயன் இல்லையே இங்கு
அசத்-உடல்
சத் -ஆத்மா
என்ற பொருள்களில் பிரயோகம்
ஒரே தன்மையாக -மாறாமல் -என்றும் உள்ளதால் ஸத் என்று ஆத்மாவையும்
மாறிக் கொண்டே இருப்பதால் உடல் அஸத் என்றும் கொள்ள வேண்டும் –
பாவம் -நித்யத் தன்மை உடலுக்கு ஒரு நாளும் கிடையாது
அபாவம் -அழிவு -ஆத்மாவுக்கு ஒரு நாளும் கிடையாது
ஆகவே இரண்டையும் பற்றி நீ சோகப்பட வேண்டாம் என்கிறான் –
ஞானம் சத் -மற்றவை அஸத் -விஷ்ணு புராணம் -பிரமாணம் காட்டி அருளுகிறார்
ஆத்மா ஞானம் வடிவானவர் ஞானம் உடையவர் –
எதனால் அப்படி என்று விவரிக்கிறார் மேல்
வெறும் உபதேசம் மட்டும் இல்லையே
——
அவிநாஷி து தத் வித்தி யேந ஸர்வமிதம் ததம்.–
விநாஸ மவ்யயஸ் யாஸ்ய ந கஸ்சித் கர்துமர்ஹதி—৷৷2.17৷৷
அவிநாஸி = நாசி, நாசம், அவி + நாசம் = அழிக்க முடியாதது
து = ஆனால்
தத்= அது
வித்³தி= நீ உணர்வாய்
யேந = அதன் மூலம்
ஸர்வம் = அனைத்தும்
இதம் = இது
ததம் = பரந்து பட்ட, வியாபித்துள்ள
விநாஸம் = அழியும்
அவ்யயஸ்யா = மாறாத
அஸ்ய = அதன்
ந = இல்லை
கஸ்²சித் = அவன்
கர்தும் = செய்பவன்
அர்ஹதி = இயலும் , முடியும்
உடலுக்கு நித்யத் தன்மை கிடையாது என்பதை கிரமத்தில் விவரித்து சொல்லாமல்
இதில் எந்த ஆத்ம வஸ்துவினால் இந்த -கை காட்டி காட்டும்படியான – எல்லா அசேதனப்
பொருள்களும் வியாபிக்கப் பட்டுள்ளனவோ அந்த ஆத்ம தத்வத்தை அழியாதது என்றும்
ஆத்மாவை அழிக்க முடியாது என்று அறிந்து கொள் என்றும் விவரித்து
இத்தைப் புரிந்தால் தானே அவன் சோகம் போகும் –
இதுவே தானே இலக்கு -அடையப்பட வேண்டியது –
தேஹாத்ம அபிமானம் போக வேண்டுமே -வேறுபடுத்துவத்துக்குத் தன்மையை விவரிக்க வேண்டுமே –
தில தைலவத் -எள்ளுக்குள் எண்ணெய்
கட்டைக்குள் நெருப்பு போல்
புகுந்து இருப்பதே ஆத்மா -ஆகாசம் போல் -ஸூஷ்மம் –
கரந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் நின்ற பெரு மாயா -ஆழ்வார்
ஒன்றை அழிக்க நுண்ணிய பொருளாலே முடியும்
கட்டையால் அடிக்கும் பொழுது காற்று நுண்ணியதாக சென்று அழிக்கிறது
ஆத்மா நெருப்பு நீர் கத்தி அம்பு கதை விட சின்னதாக இருப்பதால் அழிக்க முடியாதே
ஆத்மாவை விட நுண்ணிய பகவான் அழிக்கலாமே என்னில் –
அழிக்க ஆசைப்பட மாட்டானே –
ஆகையால் அழிவு இல்லை என்று புரிந்து கொள்
நெல் நுனி – நூறு நூறாகக் கூறு போட்டு -அத்தை விட சின்ன ஆத்மா –
ஒரே ஆத்மா எல்லாப் பொருள்களில் இருக்கும் என்பது இல்லை —
வெவ்வேறே காலத்தில் வெவ்வேறே பிறவிகளில் வெவ்வேறு பொருள்களில் வியாபிக்கும் சக்தி
ஆத்மாவுக்கு உண்டு என்றும் கொள்ளலாம்
————————
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஃ ஸரீரிண–
அநாஸிநோ அப்ரமே யஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத—৷৷2.18৷৷
அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய
இமே = இவை
தே³ஹா = வடிவங்கள்
நித்யஸ்ய = நிரந்தரமான
உக்தா: = சொல்லப் பட்டது
ஸ²ரீரிண:| = வடிவங்களை தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்
அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற
அப்ரமேயஸ்ய = அளவற்ற
தஸ்மாத் = எனவே
யுத்⁴யஸ்வ = போர் செய்
பா⁴ரத = பாரத குல தோன்றலே
தோற்றம் இல்லாதவனும் அழிவற்றவனும் அனுபவிக்கப்படும் அசேதனத்திலும் வேறுபட்டு அனுபவிப்பவனாயும்
இருப்பவனுமான ஆத்மாவின் இந்த உடல்கள் கர்மம் கழிந்த உடன் அழிந்து விடுகின்றன என்று
சாஸ்திரங்களில் சொல்லப் படுகின்றன-
எனவே போர் செய்வாயாக
நித்யம் –ஞான மயம் -கர்மம் அனுபவிக்கும் கருவி -அறியப்படும் பொருள்- ஸூஷ்மம்-
ஐந்து வாசிகள் ஆத்மாவுக்கும் தேகத்துக்கும்-
அந்த வந்த -அந்தவான் -அந்தம் -முடிவு -அழிவு உடையவை –
குணம் -குணவான் போல் –
சரீரி -சரீரம் கொண்ட -ஆத்மா -நித்யம் -உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை
தேகம் -சரீரம் -அந்தம் ரூபம்-ஆக்கை -பர்யாய சப்தங்கள்
இமே சரீரியின் தேகம் -இங்கு கண்ணால் காணப்படும்- ஆத்மாவின் இந்த உடல்கள் -என்று –
ஐம் பூதங்களாலான தேகம் -பூத ஸங்காஸம் –
இதுவும் கீழ் போல் அனுமானம் -ஆத்மா நுண்ணிய படியாதலால் அழிக்க முடியாதது போல்-
தேகம் ஐந்து சேர்க்கை யாதலால் அழிந்தே தீரும்
திக உபசயே தாது – பல அவயவங்களின் சேர்க்கை -வளருவதால் தேகம் -ச அவயவம் –
சீரியதே இதி சரீரம் -தேய்ந்து இருப்பது சரீரம்
ஆத்மா எதற்க்காக இந்த சரீரம் ஏற்றுக் கொண்டார் என்பதை காட்டவே இந்த பதங்கள் பிரயோகம்
தனது கர்ம வினைப் பயனை அனுபவிக்கவே -கர்ம பல போகமே-காரணம் -கர்மங்கள் முடிந்ததும் இது அழிந்து போகுமே –
ஆத்மா நுண்ணியதாய் – உள்ளே புகுந்து இருந்தபடியால் அழிக்க முடியாதது கீழ் பார்த்தோம் –
அதனாலே தேகம் நுண்ணியது அல்ல
ஆக நான்கு காரணங்களால் தேகம் அழியும் -ஆத்மா அழியாதது என்பதைத் தெளிவாகக் காட்டி உள்ளான்
ஆத்மா பூதச் சேர்க்கை யால் ஆக்கப்பட வில்லையே –
ஞான மயம் -ஞானம் உடையது -ஞானம் வடிவானது
ஆத்மா -நிர் அவயவம் –
அப்ரமேயஸ்ய ஆத்மாவுக்கு அடை மொழி –
ஞானம் பிரமம்-தவறான ஞானம் -பிரமா சரியான ஞானம்
ப்ரமேயம் அறியப்படும் பொருள் -அறிவுக்கு இலக்கு விஷயம்
பிரமாணம் -அறிய உபகரணம்
அப்ரமேயம் -ப்ரமேயத்தை விட வேறு பட்டவன் ஆத்மா என்றவாறு –
சரியான ஞானத்தால் அறியப்படாத பொருள் என்று கொள்ளக் கூடாது
நான் தூங்கினேன் -அறிகிறோமே –
ப்ரமேயம் மாத்ர பின்னம் -பிரமேயம் மட்டும் அல்ல -சரியான அறிவை யுடையவரும் –
சரியான அறிவுக்கு விஷயமும் ஆனவன் ஆத்மா
அறிவை யுடையவன் ப்ரமாதா
அப்ரமேயம் என்றால் பிரமேயமாகவும் பிரமாதாவாகவும் இருக்கும் ஆத்மா என்றபடி –
கர்மங்கள் முடிந்தால் தேகம் அழியும் -அதுக்கு எதிர்த் தட்டான ஆத்மா அப்ரமேயம்
அறியப்படும் பொருள்கள் தானே அனுபவிக்கப் படுகின்றன
ஜீவாத்மா அறிபவர் மட்டும் அல்ல அனுபவிப்பவர் -போக்தா –
அனுபவிக்க ஏற்றுக் கொண்ட சரீரம் அழியும் –
ஆத்மா அழியாதது என்று காட்டவே இந்தப் பதப் பிரயோகம் –
இந்த ஞானத்தால் சோகம் தீர்ந்து
கர்ம யோகம் -பற்றற்ற கர்மாக்களை செய்து
ஆத்ம சாஷாத்காரம் அடைவாய் என்றபடி
இவற்றையே மேலே விவரித்து அருளப் போகிறார் –
—————
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்-
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே–৷৷2.19৷৷
ய = அவன்
ஏநம் = இந்த
வேத்தி = அறிபவன் (அறிவதாக நினைப்பவன்)
ஹந்தாரம் = கொலை செய்வதாக
ய = அவன்
ஸ்அ = மேலும்
ஏநம் = இந்த
மந்யதே = நினைக்கிறான்
ஹதம்| = கொன்றதாக
உபௌ = இருவரும்
தௌ = இரண்டு
ந = இல்லை
விஜாநீதோ = அறிவது
ந = இல்லை
அயம் = அவன்
ஹந்தி= கொல்லப் படுவது
ந = இல்லை
ஹந்யதே = கொல்வதும்
எவன் ஒருவன் ஆயுதம் நெருப்பு முதலானவற்றால் ஏதாவது ஒன்றை இந்த ஆத்மாவைக் கொல்லுபவனாகவோ-
அல்லது இந்த ஆத்மாவைக் கொல்லப் படுபவனாகவோ நினைக்கிறானோ
அவ் விருவரும் ஆத்மாவை அறிகிறார்கள் அல்லர் –
ஆயுதம் நெருப்பு முதலியவை ஆத்மாவைக் கொல்லுவது இல்லை -ஆத்மாவானது கொல்லப் படுவதும் இல்லை –
கொல்லுபவனாக நினைத்தாலோ
கொல்லப் பட்டதாக நினைத்தாலோ– ஞானி இல்லையே –
கடவல்லி யில் இதே போல்
ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ் சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷ 1.2.19 ৷৷
ஹந்தா சேந்மந்யதே ஹந்து்ம் -கொல்லப் போக சங்கல்பம் கொண்டால் முட்டாள்
ஹதஷ் சேந்மந்யதே ஹதம் -கொல்லப் படுவேன் என்று நினைத்தாலும் முட்டாள்
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே -ஆத்மா அழியாதே -எனக்கு நாசம் இல்லை –
என் சரீரத்துக்கு தலை வலி வயிற்று வலி அழிவு இதுக்கு நினைவு வேண்டுமே
இது எந்த விதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.
கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன்
என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது.
உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.
இன்னாரை இந்த ஆத்மா கொல்லுகிறார் என்றோ -இன்னாரால் இந்த ஆத்மா கொல்லப்படுகிறார் என்றோ
முதல் பாகம் கொஞ்சம் வேறுபாடு -அடுத்த பாகம் இந்த ஸ்லோகப்படியே உள்ளது –
இதில் குறுகிய அர்த்தம் இல்லை
ஆத்மாவை அசேதனமோ சேதனமோ ஈஸ்வரனோ அழிக்கலாம்
இங்கு பரந்த அர்த்தம் -ஆத்மாவை மட்டும் சொல்லாமல் உள்ளது
ராமன் ராவணனைக் கொன்றான் என்று உண்டே -வால்மீகிக்கு அறிவு இல்லையா -சங்கை வருமே
ராவணன் சொல் உடலை மட்டும் குறிக்காதே -உள்ளே இருக்கும் ஆத்மா பிரிந்த பின்பு ராவணன் சொல்லால் சொல்ல முடியாதே –
உடலோடு கூடும் ஆத்மாவைத் தானே குறிக்கும் –
கொலை என்னும் சொல் அர்த்தம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்
கொலை என்பது ஆத்மாவை தேகத்தில் இருந்து பிரிப்பதையே குறிக்கும்-நாஸத்தைக் குறிக்காது –
தேஹ வ்யோஹம் -என்பதையே குறிக்கும் -இதுவே ஹிம்சை -ஹனனம் –
———
ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே—৷৷2.20৷৷
ந = இல்லை
ஜாயதே = பிறப்பது
ம்ரியதே = இறப்பது
வா = மாறாக
கதா³சிந் = எப்போதும்
ந = இல்லை
அயம் = அவன்
பூ⁴த்வா = தோன்றிய பின்
ப⁴விதா= நிலைத்து இருத்தல்
வா = மேலும்
ந = இல்லை
பூ⁴ய:| = மறுபடியும்
அஜோ = பிறப்பது இல்லை
நித்ய: = நிரந்தரமான
ஸா²ஸ்²வத = அநாதியான
அயம் = அவன்
புராணோ = பழமையானது
ந = இல்லை
ஹந்யதே = கொல்லப் படுவது
ஹந்யமாநே = கொல்வதும்
ஸ²ரீரே = உடல்
ஆத்மா ஒரு போதும் உண்டாவதும் இல்லை -அழிவதும் இல்லை –
இவ் வாத்மா கல்பத்தின் தொடக்கத்தில் உண்டாகி
மறுபடியும் கல்பத்தின் முடிவில் அழிவான் என்பதும் இல்லை –
இவன் உத்பத்தி அற்றவன் –
அழிவற்றவன் –
பரிணாமம் அற்றவன் –
பழையவனாயினும் புதியவனாய் இருப்பவன் –
எனவே உடல் அழிக்கப்படும் போதும் இவ் வாத்மா அழிக்கப் படுவது இல்லை
விகாரங்கள் -சரீரத்துக்கு –
வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை –
கல்ப ஆதியில் தோற்றம் பிரமனுக்கு -கல்ப -முடிவில் அவனுக்கு –
1000 சதுர் யுகம் அவனுக்கு பகல்-அவனுக்கும் அழிவு காட்ட மீண்டும் சப்தம் –
நித்ய-நைமித்திக பிரளயம்-மூன்று லோகம் அழியும்- பிராகிருத பிரளயம் பிரமனுக்கும் முடிவு –
ஆத்யந்திக பிரளயம் -சரணாகதன் திரும்ப மாட்டானே
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன் -un usual as usual மாறுவதே பழக்கம் –
அசேதனங்களுக்கு ஷட் பாவ விகாரங்கள்
அஸ்தி -ஜாயதே -பரிணமதே -விவர்த்ததே -அப்ஷயதே- விநஸ்யதே
இருப்பு -பிறப்பு -மாறுதல் -வளர்த்தல் -தேய்த்தல் -அழிதல்
இரண்டைச் சொன்னது மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் -இவை ஜீவாத்மாவுக்குக் கிடையாது
கீழே அழிவு இல்லை என்ற-அத்தை விவரித்து -இந்த ஸ்லோகம் –
ஸத் கார்ய வாதம் -துணிக்கு முன்பு நூல் -எரித்தால் சாம்பல் -conservation of matter-உண்டே –
அவஸ்தா பேதமே உண்டே -வடிவத்துக்கு ஏற்ப பெயரும் பிரயோஜனமும்
வாசாரம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்திகா இத்யேவ சத்யம் -சாந்தோக்யம்
முன் நிலை அழிந்து அடுத்த நிலை உருவாகும் -மண் உருண்டை நிலை இழந்து பானை ஆவது -இதுவே பிறப்பு –
வாயும் வயிறுமான நிலை -இது போன்ற அவஸ்தா பேதமும் ஆத்மாவுக்கு இல்லையே –
வளர்வதும் தேய்வதும் கிடையாது
ஸ்வரூப விகாரம் -பொருளே மாறுவது -ஸ்வ பாவ விகாரம் -தன்மை மாறுவது
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை
ஜைனர் பூனைக்குள் உள்ள ஆத்மா பூனை அளவு என்பர் -அது தவறு என்று இங்கு தெரிவிக்கிறார்
அறிவு தானே தன்மை -அது மாறும் -ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொருவருக்கும் ஞானத்தின் அளவு மாறும்
ஞான சுருக்கம் விரிவு உண்டே -கல் -மரம் -பிராணி -மனுஷ்யர் -தேவர் -ஸ்வ பாவம் விகாரம் -உண்டே
எப்போதும் இல்லை -கதாசித்-
கல்பத்தின் தொடக்கத்தில் நீரோடு படைத்தான் ஸ்ருஜ்யதே -கல்ப காலம் -உண்டே என்னில்
ஒன்றும் தேவும் யாரும் இல்லாத அன்று உயிர் படைத்தான்
ஏகோ நாராயண ஆஸீத் -ந ப்ரம்மா ந ஈஸா போன்ற வாக்கியங்கள் உண்டே –
இத்தை விளக்கவே -நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
ஸ்ருஷ்ட்டி என்பது ஒரு உடலுடன் சேருதலையே குறிக்கும் –
நாம் பிரிந்து தனித்து இல்லாமல் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -ரூபத்தில் இருந்து
பின்பு ஸ்தூலமாக உடல் உடன் சேர்ந்து இருப்பதையே ஸ்ருஷ்ட்டி என்கிறோம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மனுஷ்ய கணக்கு -தேவர் கணக்கு -நான்முகன் கணக்கு -பல அண்டங்கள் பல நான்முகன் உண்டே -அவர்கள் காலக்கணக்கு
நீடூழி வாழ வேண்டும் போல் -இங்கும்
அஜாய -அயன் இதுவே -மருவி உள்ளது –
ஸாஸ்வதம் -நிலைகளில் மாற்றம் இல்லை
புரா -அபி நவம் -பழைமையாக இருந்தாலும் புதிதாக -ஆச்சர்யம் -வியப்பூட்டும் படி இருக்கும் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே –
நித்ய ஸூரிகளை -ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் –
நித்யம் அனு க்ஷணம் நவீன ரசாரத்தா பாவை என்று அருளிச் செய்கிறார்
தொடக்கமே இல்லாத பழைமை -க்ஷணம் தோறும் ஆச்சார்யம் -எல்லா ஆத்மாக்களுக்கும் இது பொருந்தும் –
கட உபநிஷத் ஸ்லோகம் இதே போல்
விபஸ்ச்சித் -விவிதம் பலதரப்பட்ட -இந்த சொல் மட்டுமே கதாசித் என்று இங்கு உள்ளது
ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் —
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே ৷৷ 1.2.18 ৷৷
ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்–ஆத்மா பிறக்கவும் இறப்பதும் இல்லை -யமனை பார்த்து மிருத்யு பயம் எதனால்
உடம்பு எடுத்துக் கொண்டால் ஜனனம் விட்டால் மரணம் –
கதா சித் கீதை- இங்கு விபச்சித்
நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் –யார் இடம் உத்பத்தி இல்லை யாரையும் உத்பத்தி பண்ணாதே -மண் குடம் போலே இல்லை
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ -பிறப்பிலி நித்யம் -சாஸ்வதம் -ஏக ரூபம் –அநாதி
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே -கொல்ல முடியாதே -நித்யம் அழியும் சரீரத்துக்குள் இருந்தாலும் –
சுக துக்கம் அனுபவிக்கிறான் ஸூஷ்மம் தானே -பண்டிதர் இத்தைப் பற்றி கவலைப் படாதவர்-நித்யம் புரிந்து கொள் -கீதை -2-12-ஆரம்பம்
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை. எதனிடமிருந்தும் தோன்றவில்லை,
எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லை. இதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லை.
இது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது,
பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.
—————-
வேதாவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்.–
கதம் ஸ புருஷ பார்த்த கம் காதயதி ஹந்தி கம்—৷৷2.21৷৷
வேத = அறிந்தவன் (வித்தை, அதில் இருந்து வேதம், அதில் இருந்து வேதா)
அவிநாஸிநம் = நாஸி என்றால் நசிப்பது, அழிவது. அவி + நாஸி என்றால் அழியாதது
நித்யம் = நிரந்தரமானது
ய = அவன்
ஏநம் = இது
அஜம் = பிறக்காதது
அவ்யயம் = மாறாதது
கதம் = எவ்வாறு
ஸ = அவன்
புருஷ: = ஆள், அவன், செய்பவன்
பார்த = பார்த்தனே
கம் = எவன்
காதயதி = கொல்பவன்
ஹந்தி = கொலை செய்வது
கம் = யார்
அர்ஜுனா எவன் இவ்வாத்மாவை அழிவற்றவனாகவும் பிறப்பற்றவனாகவும் குறைவற்றவனாகவும் இருப்பதால்
என்றும் இருப்பவனாக அறிகிறானோ அந்த மனிதன் ஒரு ஆத்மாவை எப்படிக் கொல்வான்-
ஓர் ஆத்மாவை எப்படித் தான் மற்று ஒருவனைக் கொண்டு கொல்விப்பான்
நித்யம் என்று அறிந்தவன் -கொல்ல முயலுவானோ —
கொல்ல முடியாதே
சண்டை போடலாம் -அது உன் ஷத்ரிய கர்மம் –
அசேதனம் அறிவற்ற -பரார்த்தம் -நித்யம் -மாறிக் கொண்டே இருக்கும்
ரித்விக்குக்கள் கொண்டு எஜமானன் யாகம் செய்கிறான் –
கர்த்ருத்வம் -நேராகவும் ஆள்களைக் கொண்டு செய்தாலும் –
எப்படிக் கொல்வான் -என்றும் கொல்ல வைப்பான் -என்றும் –
நெருப்பு சுடுவது இயற்க்கை
ஆத்மா நித்யம் என்பதும் இயற்க்கை
கொன்று விடுவேனோ என்ற கலக்கம் -சோகம் படுவதும் படாததுமே -தாத்பர்யம்
உண்மையான அறிவு கொண்டவன் சோகப்பட மாட்டானே –
அநாத்மனி ஆத்மபுத்தி -அஹங்காரம் மமகாராம் -இரண்டுமே சோக காரணம்
————–
அனுஷ்டுப் சந்தஸ்ஸுக்களிலே பல ஸ்லோகங்கள்
சில மட்டும் அப்படி அல்ல -அது போல் இதுவும்
வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷
வாஸாம்ஸி – உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.
ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்
யதா = எவ்வாறு
விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ
நவாநி = புதிய
க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது
நரோ = மனிதன்
அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை
ததா = அது போல
ஸ²ரீராணி = உடல்
விஹாய = அனுபவம் தீர்ந்த பின்
ஜீர்ணாந் = பழையது ஆன பின்
அந்யாநி = மற்றது
ஸம்யாதி = அடைகிறது
நவாநி = புதிய
தே³ஹீ = உடலை உடைய அது
மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ
அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் –
அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே –
நல்ல சரீரம் தான் கிட்டும் –
ரமணீய போக சாதனம் தானே சரீரம் –
உடலை இழந்தால் அனுபவம் இழந்து சோகத்துக்கு காரணம் ஆகுமே என்னில்
உடல் -தர்மத்துக்காக -சாதனம் என்று உணர வேண்டும்
விசித்ரா தேக சம்பத்து ஈஸ்வராய நிவேதிதம்
கண் அவனையே காணவும் -உணர வேண்டுமே
தர்மத்துக்கும் கைங்கர்யத்துக்கும் அன்றோ படைக்கப் பட்டது
எண்ணக் கண்ட விரல்களால் இறை போதும் எண்ண கிலாது ஊத்தை வாய்க்கு
கவளம் உண்ணுகிறார்களே –பெரியாழ்வார் –
தர்ம கார்யம் செய்ய முடிய வில்லையே என்ற கவலை சோகம் வருமே என்னில்
வஸ்திரங்கள் கிழிய கிழிய வேறே வாங்கிக் கொள்வது போல்
பால்யத்தில் உபயோகித்த வஸ்திரம் மாறுவது போல்
வேத நூல் பிராயம் நூறு–பாதியும் உறங்கிப் போகும் –பேதை பாலகன் அதாகுமே —
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
பழுது அடைந்த சரீரம் அழியக் கவலை வேண்டாமே
உடலை விடும் பொழுதே அடுத்த உடல் கிடைக்கும் படி உள்ளதே -ஆகையால் வருத்தம் வேண்டாம்
சரணாகதி கத்யம் -இவ வஸ்திரம் -ஸூகேந -எளிமையாக பிரிந்து -அவன் அனுக்ரஹத்தால் –
ஆடை தூக்கிப் போடுவது போல் முக்தி அடைகிறான்
அங்கும் இச்சா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் உண்டே
கல்யாண தரம் ரூபம் -நவானி தேகம் கொள்கிறான்
எடுத்துக் கொள்ளும் தேகம் நன்றாகவே இருக்கும்
இதுக்கு பிரமாணம் -எது என்னில்
ஸாஸ்திரமே பிரமாணம்
ப்ரஹதாரண்யம் ஆறாவது அத்யாயம் சொல்லுமே
அயம் ஆத்மா இயம் சரீரம் –அந்யத் நவ தரம் –கல்யாண தரம் ரூபம் க்ருதே –பூதாநாம் -காந்தர்வம் வா –
சோகப்படாதே -என்றேன் –
சந்தோஷப்படக் காரணம் ஆகுமே என்றவாறு
———–
நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷
ந = இல்லை
ஏனம் = இந்த
சி²ந்த³ந்தி = வெட்டினாலும்
ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்
ந = இல்லை
ஏனம் = இந்த
த³ஹதி = எரிதல்
பாவக:| = தீயில்
ந = இல்லை
ச = மேலும்
ஏனம் = இந்த
க்லேத³யந்த்தி = நனைவது
அபா = தண்ணீரில்
ந = இல்லை
ஸோ²ஷயதி = உலர்வது
மாருத: = காற்றில்
இவ் வாத்மாவை
ஆயுதங்கள் வெட்டுவது இல்லை –
நெருப்பு எரித்து அழிப்பது இல்லை –
நீர் கரைத்து அழிப்பது இல்லை –
காற்று உலர்த்தி அழிப்பது இல்லை
வெட்ட முடியாதே -கொழுத்த முடியாதே -நனைக்க முடியாதே -உலர்த்த முடியாதே –
கீழே 17 ஸ்லோகம் சொன்னதை உதாரணங்கள் உடன் விளக்குகிறார் இதில்
ஆத்மா மிக நுண்ணியமாக இருப்பதால் அழிக்க முடியாது என்று பொதுவாகச் சொல்லி
எதிலும் இது வியாபித்து இருப்பதால் எதாலும் அழிக்க முடியாது என்று சொன்னதை
ஆயுதங்கள் -நீர் -நெருப்பு -காற்று -போன்றவை அழிக்க முடியாது என்கிறார்
வெட்டவில்லை -மட்டும் அல்ல -வெட்ட அர்ஹம் இல்லை -பாஷ்யம் –
வெட்டவே திறன் இல்லை -அதுக்குள்ளும் ஆத்மா இருப்பதால்
இதே போல் எரிக்கவும் நனைக்கவும் கரைக்கவும் உலர்த்தவும் அர்ஹம் அல்லன
———–
அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷
அச்சே²த்³யோ = வெட்ட முடியாது
அயம் = அது
அதாஹ்யோ = எரிக்க முடியாது
அயம் = அது
அக்லேத்³யோ = நனைக்க முடியாது
அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நித்ய: = நிரந்தரமான
ஸர்வக³த:= எங்கும் நிறைந்த
ஸ்தா²ணு = உறுதியாக
அலோயம் = நகராத
ஸநாதந: = புராதனமானது
இவ்வாத்மா
1-வெட்டப்பட முடியாதவன்
2-எரிக்கப்பட முடியாதவன் –
3-கரைக்கவும் முடியாதவன் –
4-உலர்த்தப்படவும் முடியாதவன் –
இவ்வாத்மா
1-எல்லா அசேதனங்களிலும் பரவி இருப்பவன் –
2-நித்தியமாக இருப்பவன் –
3-நிலையான தன்மை உடையவன் –
4-அசைக்க முடியாதவன் –
5-பழமையானவன் –
6-அந்தராத்மாவா இருப்பவன் –
7-ஒரே மாதிரியாக இருப்பவன்-
வெட்டப்பட தகாதவன்
எரிக்கப்பட தகாதவன்
கரைக்கவும் தகாதவன்
உலர்த்தப்படவும் தகாதவன்-
இதற்கான தன்மை இல்லாதவன் என்றவாறு
ஸர்வ கத -முக்கிய காரணம் –
அனைத்துக்குள்ளும் இருப்பவன் -உடலுக்குள் என்றபடி –
பல பிறவிகளில் பல பொருள்களில் புகும் சக்தி உள்ளது என்றபடி
ஒவ்வொரு பொருள்களுள் ஆத்மாக்கள் உள்ளன என்றுமாம்
உள்ளே இருப்பதால் தான் அவை இதுக்கு உடல்
எடுத்து நிறுத்தி ஆணை செய்து செலுத்தும் சாமர்த்தியம் ஆத்மாவுக்கு உண்டு
ஆத்மா பிரிந்தால் இவை உடலாக இல்லாமல் பிணமாக ஆகுமே
நித்யம் -என்பதே தாத்பர்யம்
ஸ்தாணு -நிலையான தன்மை -பொருள்களுக்கு பரிமாணம் ரூபம் மாறுவது போல் -ஸ்வ ரூப விகாரங்கள் அல்லவே
அஸ்தி -போன்ற ஷட் பாவ விகாரங்கள் அசேதனங்களுக்கு உண்டு -அது போல் இல்லை
அசலம் -அசைக்கப்பட முடியாதது -அதுவே இயற்கையாக மாறாமல் இருந்தாலும்
வேறே ஒன்றால் செயற்கையாக அசைக்க முடியுமோ என்னில்
அதுவும் உட்படுத்த முடியாது என்றபடி
சநாதன-பழைமை -அநாதி -ஆதியும் இல்லாதவன் –அழிவு இல்லா விட்டாலும் தோற்றம் இருக்குமோ என்னில் –
அதுவும் இல்லை என்றவாறு – உண்டாக்கப்படுவதும் இல்லை -முடிவும் ஆரம்பமும் இல்லை ஆகவே நித்யம்
————
அவ்யக்தோயம் அசிந்த்யோயம் அவிகார்யோயமுச்யதே.—
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதும் அர்ஹஸி—৷৷2.25৷৷
அவ்யக்தோ = வெளிப்படாத , புலன்களுக்கு எட்டாத
அயம் = அது
அசிந்த்யோ = சிந்தனைக்கு எட்டாத
அயம் = அது
அவிகார்யோ = மாற்ற முடியாத
அயம் = அது
உச்யதே = சொல்லப் பட்டது
தஸ்மாத் = அதனால்
ஏவம் = எனவே
விதி³த்வ = அதை அறிந்த பின்
ஏனம் = அது
ந = இல்லை
அநுஸோ²சித் = அறிந்த பின்
அர்ஹஸி = நீ இருக்கக் கடவாய்
இவ்வாத்மா
1-அழிவுடையவனாக அறியப்படாதனாகவும் –
2-இவனே அழிவு உடையவற்றின் தன்மைகளை உடையவனாக நினைக்கவும் தகாதவனாகவும் –
3-இவனே மாறுபாடு அற்றவனாகவும்
கூறப்படுகிறான் –
ஆகையால்
இவனை இவ்வண்ணமாக அறிந்து கொண்டு நீ வருந்தக் கூடாது
அழிவு உடையவன் என்று நினைப்பவன் முட்டாள் –
விகாரம் இல்லையே –
கவலைப் பட வேண்டாம் –
சோகப்பட நீ அர்ஹன் அல்ல என்கிறார் இதில்
நாம் பார்க்கும் அனைத்துமே -அசேதனங்கள் அனைத்துமே மாறிக் கொண்டே -அழியக் கூடியதாகவே உள்ளனவே –
அதே லோகத்தில் நானும் இருக்க இதே தன்மை ஆத்மாவுக்கு இருக்கும் என்ற சங்கையை நிவர்த்திக்கிறான் இதில்
வியக்தம் -தெளிவாக என்று கொண்டு –
அவ்யக்தம் -தெளிவு இல்லாமல் மறைக்கப் படுபவன் என்று சொல்ல வரவில்லை
ஆத்மாவைப் பற்றிய யாதாத்ம்ய உபதேசம் பண்ணுகிறவன்
ஆத்மா சாஷாத்காரமே பலன் முதல் ஆறு அத்தியாயங்களின் சாரம்
வியக்தம் -இங்கு புலன்களைக் கொண்டு அறியப்படுபவை –
பஞ்ச ஞான இந்த்ரியங்களால் -அறியப்படுபவன -என்று கொள்ள வேண்டும்
அவ்யக்தம் – இந்த்ரியங்களால் அறியப்படாதவன் –
ப்ரத்யக்ஷம் மட்டும் பிரமாணம் அல்லவே -அனுமானமும் பிரமாணம் தானே –
அதீந்த்ரியம் -இந்திரியங்களுக்கு அப்பால் பட்டது
நெருப்பை தோல் என்கிற இந்த்ரியத்தால் சூடு என்று அறிவதால்
நெருப்பின் தன்மை சுடுவது என்று உணர்கிறோம்
நான் என்கிற அனுபவமும் பிரமாணம் -நான் நன்றாகத் தூங்கினேன் -நான் அறிகிறேன் –
நான் இத்தை ஆசைப்படுகிறேன் போன்றவை உண்டே
வேதம் -ஆகமமும் பிரமாணம்
ஞானத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ஆத்மாக்கள் நித்யம் என்றே சொல்லும்
பிரமாணங்கள் மாறுவதால் உலகப் பொருள்களின் தன்மை ஆத்மாவுக்கு இல்லையே
அதே போல் தன்மை இதுக்கு உண்டு என்று நினைக்கவும் கூடாதே
அவ்யக்தம் -அசிந்த்யம்–அவிகாரோயம் என்பதுக்கு -இவ்வாறு அர்த்தம் கொள்ள வேண்டும்
இவ் வண்ணமாக அறிவது
கீழ் சொன்ன காரணங்கள் அனைத்தையும் இங்கே சேர்த்துக் கொள்ள வேண்டும்
ஆகவே சோகப்பட நீ அர்ஹன் அல்லவே –
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-
மின்னுருவாய் முன்னுருவில் –
முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷ -பரித்ர்ஷ்டமான பதார்த்தங்களில் –
மின்னின் உடைய ஸ்வபாவத்தை பிரகாசிப்பித்தான் –
அதாவது –
பிரத்யஷ பரித்ர்ஷ்டமான -பிரகிருதி ப்ராக்ருதங்களின் அஸ்த்ரையத்தை பிரகாசிப்பித்தான் -என்கை –
இப்பிரக்ருதி சேதனனோட்டை சம்பந்தத்துக்கு ஹேது பேதம் உண்டான போது –
இதுக்கு ஸ்வபாவ பேதம் உண்டாகக் கடவது –
ஹேது பேதம் -ஆவன –
1-கர்மத்தால் பந்திக்கையும் –
2-கிருபையால் பந்திக்கையும்
3-இவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளுகையும்
4-மற்று உள்ளார்க்கு ஜாயமான கடாஷம் பண்ணுகையும் –
அதாவது –
கர்மத்தால் பந்தித்த போது -ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களுக்கு திரோதாயகமாய் இருக்கையும் –
தன் பக்கல் -அஸ்த்ர்யத்தையும் அபோக்யதையும் மறைத்து
ஸ்த்ர்யத்தையும் போக்ய புத்தியையும் பிறப்பிக்க கடவதுமாய் இருக்கும்-
பகவத் பிரசாதத்தாலே பந்தித்த போது
ஸ்வ விஷயத்திலும் ஸ்வ கீயங்களிலும் கிடக்கிற
அஸ்த்ரையத்தையும் அபோக்யதையையும் பிரகாசிக்கக்கடவதாய்
ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களையும் பிரகாசிப்பிக்க கடவதாய் இருக்கும் –
இப்போது
பகவத் பிரசாதம் அடியாகையாலே
பிரகிருதி பிராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசிப்பித்தது
த்யாஜ்யதா பிரதிபத்தி உண்டாய்த்து -என்கை –
விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ர்தா -என்றும்
சரீரமாத்ரம் கலு தர்ம சாதனம் -என்றும் –
புருஷார்த்த சாதனம் என்றும்-
தர்மத்துக்கு பிரதான உபகரணமான பிரக்ருதியாதிகளை த்யாஜ்யம் என்னக் கடவதோ -என்னில் –
போஜநார்த்தமாக அங்கீ கரித்த கலமும்
போஜன அநந்தரம் அஸ்பர்சமாப் போலேயும் –
அவப்ர்த ஸ்நான அநந்தரம் யூபாதிகள் அஸ்பர்சமாப் போலேயும்
இதுவும் கார்ய அநந்தரம்-ஜ்ஞானம் பிறந்த பின்பு – த்யாஜ்யமாகக் கடவது –
மின்னுருவாய் -என்ற
சாமாநாதி கரண்யம் -உபகார்யா உபகார பாவ சம்பந்த நிபந்தனம் –
இப்படி இவை அஸ்தரம் ஆனால் அநந்தரம் ஸ்திரமான ஆத்ம வஸ்துவே-ஜ்ஞாதவ்யமாகக் கடவது –
அஹம் -என்று பிரத்யஷிக்கிற ஆத்ம வஸ்துவை
தேஹம் என்பார்
இந்த்ரியம் என்பார்
மனஸ் என்பார்
பிராணன் என்பார்
புத்தி என்பார்
இப்படி பண்ணுகிற விப்ரதிபத்தி -சமித்து யதாஜ்ஞானம் பிறக்கைக்கு
சாஸ்திர அபேஷை உண்டாகையாலே
சாஸ்திர பிரதானம் பண்ணினார் -என்கிறார் மேல் –
வேத நான்காய் –
ஆத்மாவின் உடைய யாதாம்ய பிரதிபாதன பரமான வேதங்கள் நான்குமாய் –
வெறும் ஆத்மா பரமயோ வேதங்கள் என்னில் -தத்வ த்ரயத்தையும் பிரதி பாதியா நிற்க –
அல்லாத தத்வ த்யவமும் இவனுக்கு இன்னது த்யாஜ்யம்
இன்னது உபாதேயம்
என்கைக்காக பிரதிபாதிக்கப் படுகிறது இத்தனை ஒழிய
ஆத்ம பரமேயாகக் கடவது –
ஆனால் த்யாஜ்ய உபாதேயங்களைச் சொல்ல அமையாதோ –
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என் என்னில் –
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் (நிச்சயத்துக்கு ஹேதுவான விஷயம் )ஸ்வரூபம் ஆகையாலே
ஸ்வரூப அனுரூபமான த்யாஜ்யம் இன்னது
ஸ்வரூப அனுரூபமான உபாதேயமின்னது -என்று அறியும் போது
ஸ்வரூபத்தை அறிய வேணும் இறே –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் இல்லாத போது
சரீர மாத்ரம் த்யாஜ்யமாய்
புத்திர பசு அந்நாதி மாத்ரம் உத்தேச்யம் ஆதல் –
சரீர வியதிரிக்தம் ஆத்மாவான போது
புத்திர பசு அந்நாதிகள் த்யாஜ்யமாய்
ஸ்வர்க்கம் உத்தேச்ய மாதல் செய்யும் இறே-
சாஸ்திர அபேஷை சேதனனுக்கே ஆகையாலே சேதன பரமாகக் கடவது –
ஈஸ்வரன் ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையாலும்
அசித் தத்வம் ஜடம் ஆகையாலும் சாஸ்திர அபேஷை இல்லை –
இனி சாஸ்திர வச்யனுமாய் -ஜ்ஞாதாவுமான சேதனனைப் பற்றி -சாஸ்திரம் உதிக்கக் கடவது –
வேதம் பிரதிபாக்கிற மாத்ரம் அன்றிக்கே வேதம் உண்டாக்கினதும் இவனுக்கே –
இவ்விடத்தில் ஸ்வார்த்த பிரகாசத்வத்தைப் பற்ற -ஸ்ருதி மறை -என்னாமல் –வேதம் -என்கிறது –
பிரகாசம் உண்டோ என்னில்
மறையாய நால் வேதம் -என்கிறபடியே
தன்னை அதிலங்கித்தார்கு ஸ்வார்த்த திரோதாயகமாயும்
தன் பக்கலிலே புபுத்ஷூக்களுக்கு -ஸ்வார்த்த பிரகாசமாயும் இருக்கும் –
போத்தும் இச்சு புபுத்ஷூ -அறிய வேணும் என்கிற இச்சை உடையவன் -என்றபடி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்க்கு அரிய வித்தகன் -என்கிறபடியே
பிரமேய ஸ்வ பாவம் பிரமாணத்துக்கும் உண்டாய் இருக்கும் -என்கை –
இங்கு வேதம் நான்கு -என்கிற சாமாநாதி கரண்யம் –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய – என்று
பிரதிபாத்ய பிரதிபாதிக பாவ சம்பந்த நிபந்தனம் அன்று –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
பிரதார்த் பிரத்தேய பாவ சம்பந்த நிபந்தனம் –
அநந்தரம் இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும்
எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் –
விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே
அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவ ஸ்சேந்த்ரி யோத்பவம் – என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –
ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ச்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –
முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
என்று -மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷட்வய -என்கிற
மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –
முளைத்து –
பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே
தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும்
பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –
எழுந்து –
பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே
மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று
(விளக்கு ஒளியாய் திங்கள் தானாய் -என்கிற இத்தால்
ஸ்ரவண மனன நிதித்யசங்களாலே பரமாத்மாவைக் காணுமா போலே
இவற்றால் இங்கே ஜீவாத்மாவைக் காணும் படி சொல்கிறது )
திங்கள் தானாய் –
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
தானான திங்கள் -என்று –
ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே
ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் –
பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று
நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –
நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே-
சாஷாத்காரம் சித்தித்ததாவது –
சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் –
சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே –
சதி ஆஹ்லாதே -என்கிறபடியே
ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும்
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை தருஷ்டாந்திதது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக –
பின்னுருவாய் –
பின்னான தத்வமாய் –
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி –
இருபத்தஞ்சாவது தத்வமான ஆத்மா சாஷாத்க்ர்த்யன் ஆகையாலே
சதுர்விம்சதி தத்வாத்மிகையான பிரகிருதிக்கு அவ்வருகாய் பிரிந்து தோற்றுகிறபடி –
தேகேந்த்ரிய மன பிராண தீப்யோன்ய அநந்ய சாதன
நித்யோவா பீப்ரதி ஷேத்ர மாத்மாபின்னஸ் ஸ்வதஸ் ஸூகி –
என்னக் கடவது இறே –
அநந்தரம் -இப்படிப் பட்ட ஆத்மவஸ்து
வ்யாப்தகதமான தோஷங்களால் ஸ்பர்சிக்கப் படான் -என்கிறார் –
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் –
முன்னுருவாகிறது -கீழே மின்னுரு -என்று கொண்டு சொன்ன
ப்ரத்யக்ஷ பர்த்ர்ஷ்டமான பிரகிருதி பிராக்ருதங்களை –
அதில் உண்டான பிணி மூப்பு பிறவிகளோடு
ஸ்பர்சம் இல்லாத ஆத்மவஸ்து –
பிணி -துக்கம் –
இத்தால் அஞ்ஞாநாதிகளை உப லஷிக்கிறது –
மூப்பு பிறப்பு -என்கையாலே ஷட் பாவ விகாரங்களை உப லஷிக்கிறது –
நிர்வாண மய ஏவாய மாத்மா ஜ்ஞான மயோமலா -என்று
துக்காதிகள் பிரகிருதி தர்மமாய்
ஆத்மாவோடு சம்பந்தம் இல்லை -என்னக் கடவது இறே –
ஸவதஸ் ஸூகியாய் இருக்கிற ஆத்மாவுக்கு
துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதோவோபாதி
ஜடமான பிரக்ருதிக்கும் துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதே யாகிலும்
ஊமத் தங்காய் உடைய சம்சர்க்கத்தாலே ப்ரமம் வருகிறாப் போலே
பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஆத்மாவுக்கு துக்காதிகள் வருகையாலே
துக்காதிகள் பிரகிருதி தர்மமாகவே கடவது
இறப்பதற்கே எண்ணாது –
இறக்கை யாவது -மரிக்கை
மரணத்தை எண்ணாதே
கீழ் -ஷட் பாவ விகாரங்களிலே தேக அனுபந்தியான மரணத்தைச் சொல்லிற்று
இங்கே ஸ்வரூப அனுபந்தியான மரணத்தைச் சொல்லுகிறது -அதாகிறது
கைவல்யம் –
ஸ்வதஸ் ஸூகியான ஆத்மாவினுடைய அனுபவ ஸ்வரூபமாய்
தனியே ஒரு புருஷார்தமாய்
புனராவர்த்தி இல்லாத கைவல்யத்தை மரணம் என்னக் கடவதோ -என்னில்
மரணம் ஆகிறது
ஆத்மவியோகமாக லோகத்திலே பிரத்யஷியா நின்றது இறே –
இதுவும் அப்படியே
சாஷாத் ஆத்மபூதனான பரமாத்மாவியோகத்தாலே மரணம் ஆகக் கடவது –
பிரத்யஷமாக ம்ர்தமான சரீரம் நஷ்டம் ஆகை போலே
இது நசியாமையாலே இத்தை மரணம் என்னலாமோ -வென்னில்
ஸ்வரூப அனுரூபமான போகம் இல்லாமையாலே
பர ஹ்ர்தயத்தால் மரணமாகக் கடவது –
ம்ர்தோ தரித்ர புருஷ -என்று
போக்தாவானவன் தரித்ரனை ம்ர்தன் என்னுமா போலே
இந்த கைவல்யம் அந் நாதனுக்கு மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது –
எண்ணாது –
இத்தை தருகைக்கு எண்ணாதே போந்தான் –
ஜரா மரண மோஷாயா மாமாச்ரித்ய தந்தியே -என்று
இத்தை புருஷார்தமாகக் கொடுக்கக் கடவன் –
அவன் இப்போது இப்படி படு குழியில் விழாதபடி
இத்தை எனக்கு எண்ணாதே போந்தான் –
அவனது எண்ணம் கொண்டே நமக்கு ஜீவனம் ஆகையாலே
எண்ணாது -என்கிறார் –
இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்
எண்ணும் பொன்னுருவாய் -என்று
திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –
எண்ணும் –
போக்யாதிசயத்தாலே
நேதி நேதி -என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி
இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று
ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க
ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை
பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –
பொன்னுருவாய் –
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-
மணி வுருவில் பூதம் ஐந்தாய் –
உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணிவுருவில் –
மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோமயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் சுத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-
மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை வ்யாவர்த்திக்கிறது
அதவா
மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்
ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்
அசாதாரணமான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தொடு வாசி அற
இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –
பிரதான புருஷேச்வர -என்னக் கடவது இறே-
இப்படி விலஷணமாய் இருக்குமவன் துர்லபமாய் இருக்குமோ வென்னில் –
புனல்வுருவாய் –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாய் இருக்கும் ஜலம் போலே -என்க-
இப்படி சர்வ ஸூலபன் ஆனால் என் வருகிறதோ என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
ஆஸ்ரித சுலபனானோபாதி
பிரதிகூலர்க்கு அக்னி போலே அநபிபவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –
அனலுருவில் திகழும் –
அபிதபாவ கோப மம் -என்று
நினையாத போது அந்தரங்கருக்கும் அநபிபவனாய் இருக்கும் அவன்
(ஸ்ரீ பரதாழ்வானுக்கும் ஆனதே )
உகவாதார்க்கு அநபிபவனாய் இருக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –
சோதி தன்னுருவாய் –
கீழே ஸ்பர்ஹணீ யதையாலே பொன்னுருவாய் -என்று
ஸ்வரூபம் ஸூவம் பிரகாசமாய் இருக்கும் என்றது –
நாட்டில் ஜ்யோதிஸ் பதார்த்தங்களுக்கு ஜ்யோதிஸூ உண்டாகிறது
தன்னோட்டை சம்பந்தத்தால் யாம்படி இருக்கை –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -என்னக் கடவது இறே —
என்னுருவில் நின்ற —
என்னுடைய ஆத்மாவில் நிற்கிலும் தனக்கு அவத்யவஹமாய் இருக்க
எனக்கு த்யாஜ்யமான வடிவில் வந்து நின்றான் என்க –
நின்ற –
இவர் மடல் எடுக்கையாலே -தன்னுடைய சாத்தா ஹாநி பிறக்கும்படியான-கலக்கம் சமித்து -தரித்து நின்றபடி –
எந்தை –
சத்தையோபாதி சேஷித்வமும் உறுதிப் படுத்திய படி –
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி –
அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –
ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –
இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்
சத்தையும்
சேஷித்வமும்
விக்ரஹமும்
பெற்றானே -இருக்கிறபடி –
ஆக
1-பிரகிருதி ப்ராக்ருதங்களில் அஸ்த்ரத்தையை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
2-ஸ்வ ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
3-கைவல்யத்தில் போகாதபடி நோக்கின அவ் அளவு போராதோ –
அதுக்கு மேலே
4-தன்னுடைய ஸ்வ ரூபத்தையும்
5-ஸ்வரூப பிரகாசமான விக்ரஹத்தையும் காட்டித் தந்தது போராதோ –
6-அதுக்குமேலே த்யாஜ்யமான என் சரீரத்தில் புகுந்து நிற்பதே –
அதுக்கு மேலே
7-தன்னுடைய திருவடிகளை என் தலை மேல் பொருந்த வைப்பதே –
என்று தமக்கு அவன் பண்ணின உபகார பரம்பரைகளை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –
ஆக
இப் பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
(சாமான்யேன தேகாத்ம அபிமானிக்கும் -கேவலனுக்கும் -பகவத் பரனுக்கும் -மூவருக்கும்
மூன்று தத்துவமும் புருஷார்த்தம் என்றபடி )
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் -(ஆத்மாவை நிஹீனம் என்றது கைவல்யத்துக்கு உறுப்பாகையாலே )
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஈஸ்வரன் தன ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –
முன்னுரு -வியக்தம்
மின்னுருவாய் -மின்னலைப் போல் உள்ளவை
பின்னுரு -25 தத்வம் -காட்டிக்கொடுத்தான்
பிறப்பிலியாய் -பிணி மூப்பு இத்யாதி இல்லா தன்மையைக் காட்டிக் கொடுத்தான்
இருப்பதற்கே எண்ணாது -அந்தமும் இல்லா நித்யம்
————-
அப் யுமகம வாதம் -இது முதல் மூன்று ஸ்லோகங்கள் –
அவனது அபத்தமான தவறான கருத்தையும் கொண்டு ஸாதிக்கிறான்
உடலே ஆத்மா என்று கொண்டு அதிலே பல ஒவ்வாமைகள் இருப்பதைக் காட்டுகிறான்
அத சைநம் நித்ய ஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்.—
ததாபி த்வம் மஹா பாஹோ நைவம் ஸோசிது மர்ஹஸி৷৷2.26৷৷
அத = அது மட்டும் அல்ல
ச = மேலும்
ஏனம் = இது
நித்ய ஜாதம் = எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது
நித்யம் = எப்போதும்
வா = அல்லது
மந்யஸே = நீ நினைத்தால்
ம்ருதம் = இறந்து கொண்டே இருக்கிறது
ததா = அப்படியே இருந்தாலும்
அபி = அதனால்
த்வம் = நீ
மஹா பா³ஹோ = பெரிய கைகளை கொண்டவனே
ந = இல்லை
ஏனம் = இது
ஸோ²சிதும் = வருந்துதல்
அர்ஹசி = நீ தகாது
நீண்ட கைகளை உடையவனே முற்கூறியபடி அல்லாமல் இவ்வாத்மாவை என்றும் உண்டாகிறது என்றும்
இறக்கிறதுமான உடலாகவே நினைக்கிறாயாகில் –
அப்படி நினைத்தாலும்
நீ இவ்வாறு வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை
ஆத்மாவே தேகம் பிறக்கும் இறக்கும் என்று கொண்டாலும் நீ சோகப் பட வாய்ப்பில்லை —
லோகாயுதன் -கண்டதே கோலம் கொண்டதே காட்சி
ஜாபாலி -வாதம்
ஆத்மாவே தேகம் என்றால் பாபம் புண்ணியம் கவலையே வேண்டாமே-
அத ச -அத அத -முன் கற்ற மீமாம்ஸா சாஸ்திரம் கற்ற பின்பு
அதனாலே போல் இங்கும்
அத -புதிதாக வேறே பிரகரணம் என்பதைக் காட்டவே இப்பத பிரயோகம்
நித்யமாகவும் எப்போதும் பிறப்பு இறப்பு உள்ளவராகவும் என்று கொள்ளாமல்
நித்யம் -நியதம் அர்த்தம் -தவறாமல் நடப்பது என்று கொண்டு
நித்ய ஜாதம் -தவறாமால் பிறப்பு உண்டு
நித்ய ம்ருதம் -தவறாமல் அழிபவராகவும்
மாறுவதே இயற்க்கை என்றவாறு -ஒரு நிலையில் ஸாஸ்வதமாக இல்லாமல் –
உடலே ஆத்மா என்று எண்ணுவாயாகில் என்றபடி
சாருவாக மதம் போல் இல்லாமல்
சிலர் உடலே ஆத்மா என்று சொல்லாமல்
உடல் உண்டாகும் பொழுது ஆத்மாவும் உண்டாகிறது என்று சொல்வர்
உடல் அழியும் பொழுது ஆத்மாவும் அழியும் என்பர்
இதிலும் பல ஒவ்வாமை உண்டே
கர்ம பலன் எவ்வாறு வரும் –
மஹா பாஹோ -மனஸ் வலிமையையும் சொன்னவாறு
ஏவம் இவ்வாறு சோகப்படக் கூடாது
இந்த ஏவம் விசேஷணம் -இந்த ஸ்லோகத்தில் தானே -கீழ் எல்லாம் இல்லையே
ஆக இந்த மதத்தில் தான் சோகம் படக் காரணமே இல்லை என்பதைக் காட்டியவாறு
கொஞ்சம் கூட சோகப்படக் கூடாது –
அழிவது இயற்க்கை என்று உணர்ந்த பின்னர் சோகப்படவே வேண்டாமே
இன்னும் குல நாசம் நரகம் சொன்னது எல்லாம் இந்த மதத்தில் வராதே
அந்த பயன்களும் இல்லையே இதில் -ஆகவே சோகப்படக் கூடாதே –
————
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச.–
தஸ்மாதபரிஹார்யேர்த்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.27৷৷
ஜாதஸ்ய = பிறந்தவன்
ஹி = அதனால்
த்⁴ருவோ = நிச்சயமாக
ம்ருத்யுர் = இறப்பதும்
த்⁴ருவம் = நிச்சயம்
ஜந்ம = பிறப்பும்
ம்ருதஸ்ய = இறந்தவனும்
ச| = மேலும்
தஸ்மாத³ = அதனால்
அபரிஹார்யே = தவிர்க்க முடியாது
அர்தே = உண்மையில்
ந = இல்லை
த்வம் = நீ
ஸோ²சிதும் = வருந்துதல்
அர்ஹஸி = தகாது
உண்டாவதற்கு அழிவு தவிர்க்க முடியாதது –
அழிந்ததற்கு மறு பிறப்பும் தவிர்க்க முடியாதது –
ஆகையால் தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் நீ வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை
சோகிக்க அர்ஹதை இல்லை –
பிறந்தது என்றால் இறக்க வேன்டும் –
இறந்தவை பிறக்கவும் செய்ய வேன்டும் –
பரிகாரம் இல்லாமல் இருக்க எதற்கு சோகிக்க வேன்டும் —
லிபி மாத்த ஒருவனே -திருவடி மகரந்த தூள் தானே மாத்த முடியும் -கிருபை ஒன்றே கர்மம் போக்கும் –
ஜோதிஷம் பரிகாரம் சொல்லாது -இன்னது நடக்கும் என்றே சொல்லும்
அர்ஜுனன் இதனாலே தான் ஓடுகிறேன் – வென்றால் -பிறக்கும் ஜெயம் -பின்பு இறப்பு தோல்வி -ஸூஷ்மமான அர்த்தம்
குடம் தன்மை மரணம் -மண்ணான தன்மைக்கு ஜனனம் –பானை பண்ணும் பொழுது -மண் அவஸ்தை மரணம் -கூட அவஸ்தை பிறப்பு –
வீர ஸ்வர்க்கம் பிறக்கும் பீஷ்மர் மரணம் -இது தான் பிறந்தால் இறப்பு -என்றது –
ஹி -அன்றோ -பிரஸித்தமான அர்த்தம் தானே
உண்டானவை அழியும் அறிகிறோம்
அழிந்த ஓன்று மீண்டும் உண்டாகுமா -என்னில்
இது ஆத்மாவின் மாரு பிறவியைச் சொல்கிறாரோ என்னில் -அது அன்று
இது அப்யுமகம வாதம் தானே
ஸத் கார்ய வாதத்துக்கு மூலம் இது
புதிதாக பொருள் உண்டாகாமல்
அவஸ்தா பேதம் தானே உண்டு
அபாவம் -இன்மை -தனியான பொருள் இல்லை
மண் உருண்டை -மாற்றி குயவன் -குடம் -செய்வது போல்
குடம் உண்டானது என்றால் மண் உருண்டை அழிந்து குடமானது என்றவாறு
இருக்கும் பொருள் தானே உரு மாற்றம் அடைகிறது
இப்படி தவிர்க்க ஒண்ணாதது பற்றி நீ சோகப்படக் கூடாதே –
———
அவ்யக்தாநி பூதாநி வ்யக்த மத்யாநி பாரத—
அவ்யக்த நிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா–৷৷2.28৷৷
அவ்யக்தாதீநி = அதன் மூலம் வெளிப்படாதது
பூதாநி = உயிர்கள்-தேவாதி சரீரங்கள்
வ்யக்தமத்யாநி = நடுவில் வெளிப்பட்டு இருப்பது
பா⁴ரத = பாரதா
அவ்யக்தநித⁴நாந் = அதன் முடிவு வெளிப்படாதது
யேவ = நிச்சயமாக
தத்ர = இதில்
கா = ஏன்
பரிதே³வநா |= வருத்தப் படுகிறாய்
அர்ஜுனா தேவர் மனிதர் முதலான உடல்கள் காணப்படாத முன் நிலையை உடையனவாகவும்-
காணப்படாத பின் நிலையை உடையனவாகவுமே உள்ளன –
அவ்விஷயத்தில் வருந்துவது எதற்காக
பூத காலம் அறிய முடியாது -நிகழ் காலம் மட்டும் தெரியும் -மேலே வருவதையும் தெரியாமல் –
கவலை படக் காரணம் இல்லையே -துக்கப் பட எந்த வழியிலும் காரணம் இல்லையே –
யே இப்போது உள்ள அவஸ்தை நிலை ஒன்றே நீ அறிவாய்
முன்புள்ள நிலையையும்
பின்புள்ள நிலையையும்-அவ்யக்தம் – தெரியாதே
இதனாலும் வருத்தம் கொள்ளக் கூடாது
பூதம் -இங்கு சரீரம் மட்டும் -பிரகரணப்படி இவ்வாறே கொள்ள வேண்டும் –
பொதுவாக பூதம் -உடலோடு கூடிய ஆத்மாவைச் சொல்லும்
பஞ்ச பூதங்கள் நிலம் இத்யாதியைச் சொல்லும்
விதுரன் உபதேசம் -திருதராஷ்டனுக்கு -துரியோதனன் இறந்த பின்பு –
இப்போது தான் சம்பந்தம் -முன்பும் பின்பும் இல்லையே
முன் அவ்யக்தம்
இப்பொழுது தான் வியக்தம்
பின்பும் அவ்யக்தம்
இயற்க்கை அவ்யக்தம் என்றால் மரணம் வரவேற்க வேண்டும்
பீஷ்மர் அழிந்து தான் முக்தர் ஆவார்
வியக்தமே இயற்க்கை என்றால் -முன் இருந்த நிலையில் இருந்து தானாகவே இந்த அவஸ்தை அடைந்தது
மீண்டும் செயற்கையாக அவ்யக்தம் ஆனாலும் கவலை கொள்ள வேண்டும்
முன்பு தானாக மாறியது போல் மாறுமே
ஆகவே நீ வருந்த காரணமே இல்லை
கிம் நிமித்த என்ன காரணத்தால் சோகப்படுகிறாய்
மாறுதலே இயற்க்கை என்று உணர்ந்து சோகப்படாமல் இருக்க வேண்டும் என்றவாறு –
————
ஆஸ்சர்யவத் பஸ்யதி கஸ்சிதேந—-ஆஸ்சர்யவத் வததி ததைவ சாந்ய–
ஆஸ்சர்யவத்யை நமந்ய ஸ்ருணோதி–ஸ்ருத்வாப்யேநம் வேத ந சைவ கஸ்சித்—৷৷2.29৷৷
ஆஸ்²சர்யவத் = ஆச்சரியப் படுதல்
பஸ்²யதி = பார்ப்பவன்
கஸ்²சித் = எவனோ
ஏனம் = அவன்
ஆ ²சர்யவத் = ஆச்சரியப் படுகிறான்
வத³தி= பேசுபவன்
ததா = அதைப் போல
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அந்ய: = மற்றவன்
ஆஸ்²சர்யவச் = ஆச்சரியப் படுகிறான்
ச = மேலும்
ஏனம் = அவன்
அந்ய: = மற்றவன்
ஸ்²ருணோதி = கேட்பவன்
ஸ்²ருத்வா = கேட்டபின்
அபி = மேலும்
ஏனம் = அவன்
வேத = அறிந்தவன்
ந = இல்லை
ச = மேலும்
கஸ்²சித் = யாரோ ஒருவன்
ஆச்சர்யமாக இருக்கும் இவ்வாத்மாவை பல கோடியில் ஒருவனே காண்கிறான் –
அப்படியே ஆச்சர்யமாக இருக்கும் இவனை பல கோடியிலே ஒருவனே பேசுகிறான் –
ஆச்சர்யமாக இருக்கும் இவனை பல கோடியிலே ஒருவனே கேட்கிறான்-
கேட்டும் ஒருவனும் இவனை அறிகிறான் அல்லன்
ஆத்ம ஞானி உடைய பெருமை-பார்க்க பேச- கேட்க–அறிய -துர்லபம் —
ஓர் ஒருவர் உண்டாகில் –எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –
38 ஸ்லோகம் வரை ஆத்மா நித்யம் பற்றி அருளிச் செய்கிறான்
கீழே அவன் வாதம் ஒத்துக்கொண்டு அதிலும் ஒவ்வாமை சொல்லி
இதில் தனது ஸித்தாந்தம் மீண்டும் –
இதில் ஆத்மாவை யாதாத்மாக அறிவது எவ்வளவு கடினம் என்பதை அருளிச் செய்கிறார்
அந்த துர்லபத்தில் -கோடியில் ஒருவனாக நீ இருக்க வேணும்
யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் -ஸ்ரீ வசன பூஷணம் பற்றி பிள்ளை லோகாச்சார்யார் –
கரை காண்பது அரியது என்றவாறு -மேன்மை இருக்க இருக்காது தான் அறிவது அரியதாயும் -அப்ரமேயமாயும் –
அறிய அபி நிவேசம் மிக்கு வருவதையும் இருக்கும் –
பெருமை அறிந்தால் தான் முமுஷு வாக ஆசை கொள்ளுவோம்
அபூர்வமான படியால் ஆச்சர்யப்பட வைக்கும் –
வேதம் -கர்மவிதி -பக்குவமான -தர்ம கார்யங்கள் செய்யச் செய்ய பாபக்கூட்டங்கள் குறைந்து –
விலகி-நல்ல ஞானம் வந்து சிலர் காண்கிறார்கள் –
மேலும் கோடியில் ஒருவரே பேசி -கேட்டு -அறிகிறார்கள்
சொல்பவரும் அரிது கேட்பவரும் அரிது –
பார்த்தாலும் பேசினாலும் -கேட்டாலும் – -சிலரே உள்ளபடி அறிய மாட்டார்கள் –
லௌகிக பதார்த்தம் இல்லையே
அறிவே வடிவமாயும் அறிவைக் கொண்டும் நித்யமாயும் ஆனந்தமயமாயும் -உள்ள வஸ்து அன்றோ –
ஒருவர் தான் அப்பியாசம் செய்து செய்து காண்கிறார்கள் –
கண்டவர்களில் ஒருவர் தான் ரஹஸ்யமான அர்த்தங்களை பேசுகிறார்கள் —
அவர்களில் ஒருவர் தான் கேட்க்கிறார்கள் -அவர்களில் ஒருவர் தான் சிஷ்ய லக்ஷணம் நிறைந்த
உன்னைப் போல்வார் தான் அறிய முடியும் -என்று அர்ஜுனனைப் புகழ்கிறான் இதில் –
நம்பிள்ளை அனுக்ரஹத்தால் பிள்ளை லோகாச்சார்யார் -இவர் சொல்லும் வார்த்தை புரியும் -ஆழ்ந்த அர்த்தம் அறிய அறியதாகும்
நம்பெருமாள் அனுக்ரஹத்தால் அழகிய பெருமாள் நாயனார் -இவர் சொல்லும் கூட அறிய அரியதாய் இருக்கும்
பிரிவில் இலேனுக்கு இளங்கோவும் அக்குளத்து மீன் இறே போல் இருக்கும் –
சர்வஞ்ஞனான அவனுக்குத் தக்க கீதா சாஸ்திரம் கேட்டு அனுஷ்டித்த பெருமை அர்ஜுனனுக்கு உண்டே
திரும்பி வைத்தும் அர்த்தம் கொள்ளலாம் –
முதலில் கேட்டு -பின்பு பேசி -நினைக்க நினைக்க த்யானம் -செய்து -ஆலோசனை –
மனனம் செய்தால் தானே பேசுவோம் –
த்யானம் செய்ய செய்ய அந்த ஆத்மாவை உள்ளபடி காணலாம் –
————
தேஹீ நித்யமவத்யோயம் தேஹே ஸர்வஸ்ய பாரத.–
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.30৷৷
தே³ஹீ = உடலை உடையவன்
நித்யம் = நிரந்தரமாக
அவத்யோ = வதைத்தல் என்றால் கொல்லுதல்.
அ + வதை என்றால் கொல்லப் பட முடியாதது
அயம் = அது
தேஹே = உடலில்
ஸர்வஸ்ய = எங்கும் நிறைந்து இருக்கிறது
பாரத = பாரத குலத் தோன்றலே
தஸ்மாத் = அதனால்
ஸர்வாணி = அனைத்து
பூதாநி = உயிர்களிலும்
ந = இல்லை
த்வம் = நீ
ஸோசிது = கவலைப் படுவது
மர்ஹஸி = தகாது
தேவர் மனிதர் முதலிய அனைவருடைய உடல்களும் கொல்லப் பட்ட போதிலும்
அவ்வுடலில் இருக்கும் ஆத்மா எப்போதும் கொல்லப் பட முடியாதவன் –
பரத குலத்தில் உதித்தவனே-எனவே எல்லா உயிர்களைக் குறித்தும் நீ வருந்துவதற்கு உரியன் அல்லன்
பல்லவி அநு பல்லவி போலே சோகப் படாதே -கடைசி வரை தாயார் போலே -வாத்சல்ய தரம் –
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –உந்தியில் புகுந்து -ஆதரம் பெறுக வைத்து –
எல்லா தேகத்துக்குள்ளும் ஆத்மா நித்யம் தான் -எந்த ஜீவ ராசிகளை பற்றியும் கவலைப் பட வேண்டாம்
புநர் யுக்தி தோஷம் இல்லை -அர்ஜுனனுக்கும் இன்னும் ஒரு சங்கை இருப்பதை அறிந்து அத்தையும் நீக்குகிறான் இதில் –
உலகில் தேவர் மனுஷ்ய ஸ்தாவர ஜெங்கம -இவற்றுள் அசுரர் ராக்ஷசர் -வாசிகள் -ஏற்றத்தாழ்வுகள் உண்டே
ஆயூஸூ சக்தி வாசிகள் உண்டே இவற்றுள்
யாதநா சரீரம் நரகங்களில் உண்டே -அங்குள்ள துன்பம் அனுபவிக்க -திடமான சரீரம் பெற வேண்டுமே –
உடலில் ஏற்றத் தாழ்வுகள் போல் ஆத்மாவிலும் ஏற்றத் தாழ்வுகள் -பேதங்கள் -காணப்படுகிறது என்று அர்ஜுனன் நினைக்க –
ஞானத்தில் ஸூக துக்கங்களில் வேறுபாடு போல் -சில நித்யமாயும் அநித்யமாயும் இருக்குமோ என்ற சங்கை -கொண்டான் –
பொதுப்படையாக மீண்டும் ஆத்மாக்கள் அனைவரும் நித்யம் என்கிறான்
ஸத் வித்யா -ஐதத்தாத்ம்யம் இதம் ஸர்வம் –தத்வமஸி ஸ்வேத கேது
முன்னால் சொல்லப்பட்ட -அந்தராத்மா பொதுப்படையாகச் சொல்லி –
அவனே உனக்குள்ளும் அந்த பரமாத்வே தான் உள்ளான் –
இங்கு கீழே நான் நீ இவர்கள் நித்யம் என்று சொல்லி இங்கு
பொதுப்படையாக -ஸர்வஸ்ய -ஸர்வாணி பூதாநி -அனைத்து உடலுக்குள்ளும் உள்ள ஆத்மா நித்யம் என்கிறான் –
———–
அஸ்தான காருண்யம் விலக்கினது இது வரை-
தர்ம அதர்ம கலக்கம் -மேலே -4 –ஸ்லோகங்களில் சொல்லி
அஸ்தானே ஸ்நேஹம் மேலே–3–ஸ்லோகங்களில் சொல்லப் போகிறான் –
மூன்று கஷ்டங்கள் -இருந்தது அர்ஜுனனுக்கு
தவறானவர்கள் இடத்தில்-உடலில் – அஸ்தான காருண்யம் -10-30 வரை காட்டி
அடுத்து 31-34- வரை தர்மமான யுத்தத்தை அதர்மம் என்று நினைத்தான் -அந்த மயக்கம் போக்கி
தவறானவர் இடத்தில் ஸ்நேஹம் -35-38- வரை
இப்படி பேடிகா விபாகம் -ஆத்மாவின் தன்மையைப் பற்றி மூன்று மயக்கங்களையும் போக்கி அருளுகிறார் –
————
ஸ்வ தர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி—
தர்ம்யாத்தி யுத்தாச் ஸ்ரேயோந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே–৷৷2.31৷৷
ஸ்வத⁴ர்மம் = ஸூய தர்மம்
அபி = அதை நினைத்து , அதனால்
ச = மேலும்
அவேக்ஷ்ய = அவசியம்
ந = இல்லை
விகம்பிதும் = நடுங்குதல் , தடுமாறுதல்
அர்ஹஸி = உனக்குத் தகாது
த⁴ர்ம்யாத்³தி⁴ = தர்மமப் படி
யுத்³தா⁴ச் = யுத்தம் செய்யாமல் இருப்பது
ஸ்ரேயோ = நல்லது, உயர்ந்தது
அந்யத் = மற்றது
க்ஷத்ரியஸ்ய = க்ஷத்ரியனின்
ந = இல்லை
வித்³யதே = அங்கே
மேலும் போர் செய்தலாகிய உன்னுடைய தர்மத்தை நோக்கினாலும் போரில் இருந்து நீ நழுவுதற்கு உரியன அல்லை
அரசனுக்கு தர்மத்தை மீறாத போரைக் காட்டிலும் நன்மை பயப்பது வேறு ஓன்று இல்லை அன்றோ –
ஷத்ரியன் ஸ்ரேயஸ் மோக்ஷம் போக தர்ம யுத்தம் -கிடைக்காத வாய்ப்பு கிட்டும் பொழுது சோகிப்பாயோ–
அந்தணன் -ஞானம் -வேறே வழியால் மோக்ஷம் இல்லை போலே -ஷத்ரியனுக்கு தர்ம யுத்தம்
சண்டை போடாமல் கர்மம் நழுவி நீ நரகம் -துரியோதனன் வென்று அதர்ம ராஜ்யம் நடத்தி அவனும் நரகம் போவான் –
அபி ச -மேலும் -என்று இது வேறே பிரகரணம் என்பதைக் காட்டி அருளுகிறார் – இறே
ஸ்வ தர்மம் -உனக்கு விதிக்கப்பட்ட தர்மம் –
ஸ்வ சாகை -அவர் அவருக்கு உரிய சாகை -இத்தை முடித்து ஆசைக்காக வேறே படிக்கலாம்
வேதம்-ஸ்ருதி – ஸ்ம்ருதி -மமை வாக்யை -அவனது ஆஜ்ஜை -இவை தானே இவற்றை விதிக்கும் –
ப்ரஜா பாலநம் -இவனுக்கு விதித்த தர்மம் -அதுக்காகவே யுத்தம் தர்ம யுத்தம் –இதுவே ஸ்ரேயஸ்
ஆயுதமானம் பிரசன்னம் ப்ராஞ்ஜலிம் சரணாகதி யுத்தம் செய்யாமல் ஓடி —
ஆயுதம் இல்லா -மறைந்து உள்ளவனையும் – அஞ்சலி செய்து சரண் அடைந்தவனையும் –
மதி கலங்கி உள்ளவனையும் தாக்கக் கூடாது- ராமர் இளைய பெருமாளுக்கு -இவை அதர்ம யுத்தம் –
தொடங்கிய யுத்தம் விடக் கூடாது -என்கிறான் –
ஹிம்சை -அப்போது தத் கால துன்பம் -அநர்த்த பர்யவஸ்யம் -நீண்ட காலத்துக்கு கேடு செய்யும் கார்யம் தான் ஹிம்சை –
அறுவை சிகிச்சை ஹிம்சை ஆகாதே -நரகம் ஹிம்சை கொடுக்கும் –
இங்கு தர்ம யுத்தத்திலே ஹிம்சையே கிடையாது -நல்ல சரீரம் -புதிய துணி களைவது போல் –
ஆகவே சோகப்படாதே என்றானே முன்னமே –
————–
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்க த்வார மபாவ்ருதம்.–
ஸுகிந க்ஷத்ரியா பார்த்த லபந்தே யுத்தமீத்ருஸம்–৷৷2.32৷৷
யத்³ருச்ச²யா = சந்தர்ப்ப வசத்தால்-தானாகவே
சா = மேலும்
உபபந்நம் = கிடைத்தல்
ஸ்வர்க³ த்வாரம் = சொர்க்கத்தின் நுழை வாயில்-மோக்ஷத்துக்கு சாதகமாய் இருப்பதான
அபாவ்ருதம்| = -தடை நீங்கப்பட்ட -திறந்து இருக்கிறது
ஸுகி²ந: = புண்யசாலியான-மகிழ்ந்து இருப்பவனே
க்ஷத்ரியா: = க்ஷத்ரியா
பார்த² = பார்த்தா
லப⁴ந்தே = அடைகிறார்கள்
யுத்³தம் = போர்
இத்³ருஸ²ம் = இந்த மாதிரி
குந்தியின் மகனே தானாகவே வந்து அடைந்து இருப்பதும்
தடை நீங்கப் பெற்ற மோக்ஷ சாதனமாக இருப்பதுமான
இந்தப் போரை பாக்யமுள்ள அரசர்களே அடைகிறார்கள்
யதிருச்சயா யஸ்ய கச்சித -யத்னம் செய்யாமல் -முன் செய்த புண்ணிய பலன் -அதிருஷ்ட பலன் –
அவனது -ப்ரீதி -அப்ரீதி -தானே புண்யம் பாபம் -ஆகும் –
யதிருச்சியா ஆரூரோக- கூனி மேல் மாடிக்கு ஏறினாள் -அவனது இச்சையால்-ஸங்கல்பத்தாலே தானே –
ஸ்வர்க்கமே பொருட்டாக அர்ஜுனன் கொள்ள மாட்டானே
இங்கு ஸ்வர்க்கம் -முக்தர் அடையும் பரமபதம் -உயர்ந்த ஸூகமான மோக்ஷம் –
————-
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி.–
தத ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாப மவாப்ஸ் யஸி—৷৷2.33৷৷
அத = மேலும்
சேத் = ஆனால்
த்வம் = நீ
இமம் = இந்த
த⁴ர்ம்யம் = சரியான
ஸங்க்³ராமம் = படை, யுத்தம்
ந கரிஷ்யஸி = செய்யவில்லை என்றால்
தத: = அதன் பின்-அக் காரணத்தாலே
ஸ்வத⁴ர்மம் = ஸ்வதர்மம் பயனாக மோக்ஷம் முதலியவற்றையும்
கீர்திம் = புகழ்
ச = மேலும்
ஹித்வா = விட்டபின்
பாபம் = பாவம்
அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்
இப்படி அல்லாமல் நீ இந்த அறப் போரைச் செய்யவில்லை யானால் அக்காரணத்திலேயே
உன் வர்ணத்தின் பயனையும் புகழையும் கை விட்டு பாவத்தை அடைவாய் –
தர்ம யுத்தம் ஒரு வேளை பண்ணாமல் ஓடினால் –
தர்மமும் விட்டவனாக -ஸ்வர்க்கமும் கீர்த்தியும் இழந்து போவாய்-
நீ ஷத்ரியன் -நாட்டை ரக்ஷிக்க -கடைமைப் பட்ட நீ
நீ -இமம்-இந்த யுத்தத்தைக் கை விடக் கூடாது -இது ஆரம்பிக்கப்பட்ட யுத்தம்
நித்ய கர்மம் -நைமித்திக கர்மம் -காம்ய கர்மம் -அனுஷ்டானம் -மூன்று வகைகள் உண்டே
ஆக இம்மைப் பயனும் கீர்த்தியும் -மறுமைப் பயனும் ஸ்வர்க்கமும் – -இழப்பாய்
மேலும் பாபங்களையும் சேர்ப்பாய் –
———-
அகீர்த்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்.–
ஸம்பாவிதஸ்ய சாகீர்த்திர் மரணாத ரிச்யதே—৷৷2.34৷৷
அகீர்திம் – கீர்த்தி என்றால் புகழ்.
அ + கீர்த்தி என்றால் புகழ் இல்லாதது. இகழ்
சா – மேலும்
அபி – அது மட்டும் அல்லாமல்
பூ⁴தாநி – மக்கள்
கத²யிஷ்யந்தி – கூறுவார்கள்
தே – உன்னை
அவ்யயாம்| – நீண்ட காலம் இருக்கக் கூடிய-எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக்கூடிய
ஸம்பா⁴விதஸ்ய – புகழுடைய-சாதுர்யம் வீரம் போன்ற நற் குணங்களை யுடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு
சா – மேலும்
அகீர்தி – இகழ்
மரணாத³தி – மரணத்தை விட
அரிச்யதே = கொடுமையானது
எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக் கூடிய பழியை எல்லாரும் உனக்குக் கூறுவார்கள் –
வீரம் முதலிய நற் குணங்கள் உடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு
பழிச் சொல் என்பது மரணத்தைக் காட்டிலும் கொடியதாகிறது
அகீர்த்தி உலகம் எங்கும் பரவும் –இதிஹாச புராணம்-எழுதுவோர்க்கு வாய்ப்பு –
வீர்யம் மிகுந்த நீ -அகீர்த்தி மரணம் விட மோசமாகும் –
பூதாநி -உடல் உடன் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும் -குறைவற்ற பழிச்சொல் –
மாறாமல் எப்பொழுதும் எங்கும் இருக்குமே
விரோதிகளும் வீரத்தை இல்லை சொல்ல முடியாத புகழ் யுடைய -யுனக்கு –
இந்த பழிச்சொல் மரணத்தை விட கொடியதாய் இருக்குமே
————-
இனி நான்கு ஸ்லோகங்களால் அஸ்தானே ஸ்நேஹம் வைத்துள்ளாய்
என்பதைக் காட்டி அருளுகிறார்
இயற்கையாகவே தீயவர் தானே -அத்தைக் காட்டவே அமையுமே –
பயாத்ரணாது பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா—
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்—৷৷2.35৷৷
ப⁴யாத் = பயத்தினால்
ரணாது = போர்க் களத்தை
உபரதம் = நீ விட்டு விலகி விட்டாய் என்று
மம்ஸ்யந்தே = அவர்கள் நினைப்பார்கள்
த்வாம் = உன்னை
மஹாரதா²: = மஹா இரதர்கள்
யேஷாம் = அவர்களின்
ச = மேலும்
த்வம் = உன்னை
பஹுமத் = பெருமை மிக்க
பூத்வா = செய்த பின்
யாஸ்யஸி = நீ அடைவாய்
லாக⁴வம் = சிறுமை
பெரு வீரர்களான எதிரிகள் உன்னை அச்சத்தினால் போரில் புற முதுகு இட்டவனாக நினைக்கப் போகிறார்கள்
எந்தப் பெரு வீரர்களுக்கு நீ இதுவரை மதிக்கத் தக்கவனாக இருந்தாயோ அவர்களுக்கு எளியவனாக ஆகப் போகிறாய்
பயத்தால் ஓடினால் -மகா ரதர்கள் கேலி பேச –யாரால் நீ மதிக்கப் பட்டாயோ அவர்களே உன்னை இகழும் படி –
வீரன் -எதிரி -இரண்டாகும் இருந்து -செய்வதை -கேலி பண்ணுவார்கள் –
ஸ்நேஹம் -வேறே – கோழை வேறே -பொறுமை வேறே -வாசி ஸூஷ்மம் –
தாங்களே மஹா ரதர்கள் எண்ணிக் கொள்பவர்கள் அன்றோ
இவர்கள் செய்த செயல்களை நினைத்துப் பார்
இவர்கள் இடத்திலேயே ஸ்நேஹம் வைப்பது
நீ எதிரியாகவும் பலவானாகவும் இருப்பதால் உன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருப்பார்கள்
மதிக்கப்பட்டு இருந்தாய்
கருணையால் -பாசத்தால் ஓடுகிறாய் என்று எண்ண மாட்டார்கள்
ஸ்நாத்வா புஞ்சீத -குளித்து விட்டு உண்ணப் போகிறேன் போல் இங்கும்
த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்-
முன்பு மதிக்கப்பட்டவனாய் இருந்து பின்னால் எளியவனாய் எண்ணப்படுவாய் –
———
அவாச்ய வாதாம்ஸ்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா–
நிந்தந்தஸ் தவ ஸாமர்த்யம் ததோ துக்க தரம் நு கிம்—৷৷2.36৷৷
அவாச்ய வாதா = சொல்லத் தகாத
ச = மேலும்
பஹூந் = பல
வஷ்யந்தி = சொல்லுவார்கள்
தவா = உன்னை
அஹிதா:| = எதிரிகள்
நிந்த³ந்தஸ் = நிந்தனை செய்வார்கள்
தவ = உன்
ஸாமர்த்²யம் = சாமர்த்தியத்தை, திறமையை
ததோ = அதை விட
து³:க²தரம் = துன்பமானது
நு = இப்போது
உன் எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்திப்பவர்களாய் பேசத் தகாத பல வகைச் சொற்களையும்
சொல்லப் போகிறார்கள் -அவற்றைக் கேட்பதில் காட்டிலும் கொடிய துன்பம் வேறு ஓன்று உண்டோ –
வாயாலே பேசிக் கூடாத -கோழை போலே -ஹிதம் விரும்பாதவர்கள் –நீ யோகி அல்ல வீரன் –
சகிக்க முடியாதே துக்கம் தரும் -மரணம் விட மோசம் -காண்டீபம் -தர்ம புத்திரர் கேலி பண்ணுவார் –
ஒரே நாளில் முடிப்பேன் என்று சொல்லி ஆரம்பித்து -தீ வைத்து கொள்ளுவேன் என்று போனான்
இப்பொழுது யுத்த ரங்கம் விட்டு போகிறாய் -என்று ஸூசகம்
சொல்லத் தகாத வசவுச் சொற்கள் -பேசுவார்கள்
அருவருக்கத் தக்க கடுமையான கேலிப்பேச்சு பேசுவார்கள்
எங்களுக்கு முன்னால் தாக்குப் படாமல் ஓடுகிறானே கோழை -என்று வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
கீழே முன் செய்த தீமைகள் பற்றிச் சுட்டிக் காட்டி
இதில் இனியும் தவறான வார்த்தையே பேசுவார்கள்
இவர்கள் பேசும் அந்த அவச் சொற்களைப் கேட்பதை விட துக்கம் உண்டோ
இதுவே துக்க தரம் அன்றோ
தரம் -தமம் -போன்று குணத்தை சொல்லும் பொழுது தான் சொல்லலாம்
மனுஷ்யத் தன்மை -ஜாதியில் தார தம்யம் சொல்ல முடியாதே
துக்கம் -பிடிக்காத தன்மையைச் சொன்னவாறு இங்கில்லை
காண்டீபம் பற்றி வில்லையை யுதிர்ஷ்டர் பின்பு தவறாகப்பேச -கொல்லப்போக
கண்ணன் த்வங்காரம் செய்து -மதிப்புடன் சொல்லாமல் பேசுவது கொல்வதற்கே சமம் –
த்வங்கார அத்யாயம் -மஹா பாரதத்தில் உண்டே
இப்படி துரியோத நாதிகள் பேசத் தொடங்கினால் -அதுவே துக்கதரம் ஆகுமே –
—————-
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்–
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத நிஸ்சய–৷৷2.37৷৷
ஹதோ = கொன்றால்-தர்ம யுத்தத்தில் கொல்லப்பட்டால்
வா = மறுபக்கத்தில்
ப்ராப்ஸ்யஸி = நீ அடைவாய்
ஸ்வர்க³ம் = ஸ்வர்கம்-இங்கு மோஷத்தையே சொன்னவாறு
இந்திர லோகம் ஆளும் அச்சுவை போல்
ஜித்வா = வென்ற பின்
வா = மறுபக்கம்
போ⁴க்ஷ்யஸே = அனுபவிப்பாய்
மஹீம் = இந்த உலகை
தஸ்மாது = எனவே
உத்திஷ்ட = எழுந்து நில்
கௌந்தேய = குந்தி புத்திரனே
யுத்³தா⁴ய = யுத்தம் செய்யவாய்
க்ருத நிஸ்²சய: = துணிந்து,
குந்தியின் மகனே அறப் போரில் கொல்லப் பட்டாலும் மோக்ஷத்தை அடையப் போகிறாய் –
போரில் வென்றாலும் பூமியை அனுபவிக்கப் போகிறாய்
ஆகையால் போரில் உறுதி உடையவனாக எழுந்து இருப்பாயாக
வீர ஸ்வர்க்கமோ ராஜ்யமோ கிட்டும் –ஆத்ம சாஷாத்காரம் -உனக்கு ஏற்பட்ட கர்ம யுத்தமே –
இடப் பட்ட பணி இதுவே -அதனால் எழுந்து இரு -யுத்தமே மோக்ஷ சாதனம் என்று நிச்சயப்படுத்து என்றவாறு –
உலகம் ஆள்வதிலும் ஸ்வர்க்கத்திலும் அர்ஜுனனுக்கு ஆசை இல்லையே
மோக்ஷ சாம்ராஜ்யத்துக்குக்கு அதிபதி ஆவாய்
படிப்படியாக தர்மயுத்தம் அங்கு கூட்டிச் செல்லும் என்கிறான்
உத்திஷ்ட-யுத்தம் செய்வதற்காகவே யுத்தம் செய்ய உறுதி கொண்டு –
பலத்தில் ஆசை பற்று இல்லாமல் -யுத்தம் செய்ய எழுந்திரு
இது தானே கர்ம யோகம்
ஸ்வயம் பிரயோஜனமாகவே திரு நாம சங்கீர்த்தனம் செய்வதே உயர்ந்த நிலை போல்
கௌந்தேய -குந்தி புத்ரனாய் இருந்து இப்படி மறந்து -தர்மயுத்தம் செய்யாமல் இருக்கலாமோ
அஸ்தானே ஸ்நேக விஷயம் சொல்லி முடித்து
மேலே கர்ம் யோகம் -53-ஸ்லோகங்கள் வரை –
———–
ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.–
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி—৷৷2.38৷৷
ஸுக²து³:கே² = சுகம், துக்கம்
அதற்குக் காரணமான
லாபா⁴லாபௌ⁴ = இலாபம் – அ இலாபம்-விரும்பிய பொருள் கிடைப்பதாயும் கிடைக்காமலும்
அதற்குக் காரணமான
ஜயாஜயௌ| = ஜெயம் – அ ஜெயம்
ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு
ததோ = பின்
யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய
யுஜ்யஸ்வ = தயாராவாய்-முயல்வாய்
ஏவம் = இவ்வாறு-இவ்வண்ணமாகப் போர் புரிந்தால்
பாபம் = பாவம்-துன்ப மயமான ஸம்ஸாரத்தை
அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்
இன்ப துன்பங்களையும் லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாக நினைத்து
அதற்குப் பிறகு போரில் முன் நிற்பாயாக -இவ்வாறு செய்தாயாகில் நீ பாவத்தை அடைய மாட்டாய்
ஆத்ம சாஷாத்காரம் பெற– ஞான யோகம் –ஞான யோகம் பண்ண –மனஸ் சுத்தி -பற்று அற்ற கர்ம யோகம் –படிக்கட்டு –
மேலே கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் என்பான் மூன்றாம் அத்யாயம் –
பாபம் -சம்சாரம் கிடந்தது -ஸூகம் துக்கம் – லாபம் நஷ்டம் – வெற்றி தோல்வி -இரட்டைகளை சமமாக -நினைத்து –
பலம் -இவை -இவற்றை மறந்து –யுத்தத்துக்காக செய்ய வேன்டும் —
ஸ்ரீ ராமனாக அவதரித்து நடத்தி காட்டியதை ஸ்ரீ கண்ணன் உபதேசிக்கிறார் இங்கு –
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதே ராஜ்யம் இல்லை என்றதும் –
முமுஷு வர்ணாஸ்ரமம் செய்ய வேண்டியபடியை இதில் விவரிக்கிறார்
தர்ம கார்யம் செய்யும் பொழுது இடையில் வரும் இன்ப துக்கங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்
சமமாகவே எண்ண -மனஸ்ஸூ -தளும்பாமல் இருக்க வேண்டும் –
நடுநிலையை இழக்காமல் இருக்க வேண்டும் –
அல்பம் அஸ்த்ரம் இங்குள்ள ஆனந்தம்
அங்கு அபரிச்சின்ன நிரதிசய ஆனந்தம் –
சிஷ்யன் தாஸன் சரணாகதன் -நல்லதை உபதேசிக்கக் கேட்டானே
ஆகவே மோக்ஷத்துக்கு வழி உபதேசிக்கிறார் இதில்
இந்த ஸ்லோகத்தில் மேலே விவரித்துச் சொல்லப் போவதைக் கோடி காட்டி அருளுகிறார்
————
ஏஷா தேபிஹிதா சாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு.–
புத்த்யா யுக்தோ யயா பார்த்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி—৷৷2.39৷৷
ஏஷா = இதை
தே = உனக்கு
அபிஹிதா = கூறினேன்-உபதேசித்தேன்
ஸாங்க்²யே = சாங்கிய கோட்பாடுகளின் படி-ஆத்ம தத்வ விஷயத்தில்
புத்தி = அறிவு
யோகே = யோகத்தில்
து = நீ
இமாம் = இந்த
ஸ்²ருணு| = கேட்பாய்
புத்த்யா = புத்தியுடன்
யுக்தோ = சேர்ந்து
யயா = அதன் மூலம்
பார்த = பார்த்தனே
கர்மப³ந்த⁴ம் = கர்ம பந்தம்-கர்மாவினால் ஏற்படும் சம்சார பந்தம்
ப்ரஹாஸ்யஸி = நீ விடுபடுவாய்-அத்தைக்கேள்
பார்த்தனே அறியத் தக்க ஆத்ம தத்வ விஷயத்தில் இந்த புத்தி உனக்கு உபதேசிக்கப் பட்டது
கர்மங்களுக்குச் சொல்லப்படும் புத்தி யோக விஷயத்தில் -அடுத்த படி சொல்லப் பட இருக்கும் –
புத்தியைக் கேட்பாயாக -எந்த புத்தியோடு கூடிய நீ கர்மத்தினால் ஏற்படும் சம்சார பந்தத்தை விடுவாயோ –
அத்தைக் கேள்
சாங்க்யம் ஆத்ம விஷயம் -கர்ம யோகம் பண்ணும் புத்தி -சொல்கிறேன் –
புத்தி உடன் சேர்த்து கர்ம யோகம் செய்பவன் சம்சாரம் தொலைக்கிறான் –
பிரகரணம் மாறுவதால் ஸ்ருணு- கேளாய் என்கிறான் –
யோகம் -கர்மா யோகம் என்றவாறு -சாதனம் -என்றவாறு -யோகம் கூடியது -என்றுமாம்
கர்ம யோக புத்தி வந்தால் -அவன் கூட சேருவோமே
1-ஆத்மா நித்யத்வம் அறிந்து
2-ஞானத்துடன் கர்மங்களை செய்து -ஞான யோகம் லஷ்யம் அடைய –
கர்மா அனுஷ்டானம் பண்ணும் அறிவு -ஞானப்பகுதி -பயனில் பற்று இல்லாமல் செய்ய வேண்டும்
என்ற அம்சமே இதில் உபதேசம் –54 ஸ்லோகம் வரை இது உபதேசம்
ரஜோ தமஸ் அகற்றி மனஸ்ஸு தூய்மையான பின்பே அடுத்து -ஏகாக்ர -மனதை ஒருமுகப்படுத்தி
3-அடுத்து ஞான யோகம் உபதேசம்
த்யானம் சிந்தனம் -ஆலோசனை -55 ஸ்லோகம் முதல் மேல் இந்த உபதேசம்
சாங்க்யம் -ஒரே சொல் பல அர்த்தங்கள் -இங்கு ஆத்ம ஞானத்தைச் சொல்லும்
புத்யா சம்வித்தி மேதா மதி -பர்யாய ஸப்தங்கள்
ஆத்மாவைப் பற்றி- ஆத்மாவின் கண் -புத்தி ஏற்படும்படி உபதேசம் –
யுக்திகளை உபதேசித்து -ஆத்மா நித்யம் என்று அறிய -தேவையான புத்தியை-அறிவை – உபதேசித்தான்
காரணங்களைப் பற்றிய அறிவு -தத் ஞானாய ஞாதவ்ய புத்தி -பாஷ்யத்தில்
இரண்டு அறிவுகள் உண்டே
அபரோக்ஷம் ப்ரோஷம் -ஞானத்தில் இரண்டு வகை சாஷாத்காரம் ப்ரத்யக்ஷம் -அபரோக்ஷம் -பர்யாயம்
எழுதி வைத்தத்தை படித்து பெற்றும் அறிவு பரோக்ஷ ஞானம் -கேட்டு அறிவது
த்யானம் செய்யச் செய்ய மனசால் ஆத்மாவை உள்ளபடி அறிவது இரண்டாம் நிலை –
யோகம் -இங்கு கர்ம யோகத்தை குறிக்க வில்லை
இங்கு -சேர்க்கை- உபாயம் -கர்மம் அனுஷ்டானம் செய்யும் பொழுது புத்தியின் சேர்க்கை
குடத்தை பூமியில் வைத்தேன் -குடம் பூமி தொடர்பை ஏற்படுத்தினேன் -இரண்டும் ஒன்றே
இங்கு யோகம் -சேர்க்கையைப் பற்றிய அறிவுச் சேர்க்கையை உபதேசிக்கிறேன் கேள் என்கிறான் –
இந்த புத்தி உனக்கு வந்தால் கர்மங்களால் ஏற்படும் பந்தம் -கட்டு -சம்சாரம் -கட்டை அவிழ்த்து விடுவாய் என்றவாறு –
கர்மங்களை விட்டு விடுவாய் என்றால் பொருந்தாதே –
இந்த அறிவின் ஏற்றத்தை அடுத்த ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறான்
————————
நேஹாபி க்ரம நாஸோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே–
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்–৷৷2.40৷৷
ந = இல்லை
இஹ = இங்கு
அபி க்ரம நாஸோ = அபி+கர்ம +நாச = கர்மங்களில் இருந்து விடுபட-தொடங்கியது வீணாகப் போவது
அஸ்தி = இருக்கிறது
ப்ரத்யவாயோ = எதிர்வினை, குறைவு,-தோஷம்
ந= இல்லை
வித்³யதே| = இருக்கிறது
ஸ்வல்பம் = கொஞ்சம்
அபி = இப்போது
அஸ்ய = இதன் மூலம்
த⁴ர்மஸ்ய = கர்ம யோகமாகிய தர்மத்தின் மூலம்
த்ராயதே = காக்கிறது
மஹதோ = பெரிய
பயாத் = ஸம்ஸார பயத்தில் இருந்து
கர்ம யோகத்தில் தொடங்கியதற்கு அழிவு இல்லை -தொடங்கி விட்டு விட்டாலும் தோஷம் கிடையாது –
கர்மயோகம் எனப்படும் இந்த தர்மத்தின் சிறு பகுதியும் பெரிதான சம்சார பயத்தில் இருந்து காப்பாற்றுகிறது –
நடுவில் நழுவினாலும்-கர்ம யோகம் – -அடுத்த ஜென்மம் விட்ட இடத்தில் தொடரும் -தப்பானாலும் தோஷம் இல்லை
ஞான யோகம் பக்தி யோகம் அப்படி இல்லையே -கொஞ்சம் பண்ணினாலும் -முடிந்த அளவு செய்து தொடரலாம்-
தொடங்கப்பட்ட செயல் -இடையில் தடங்கல் ஏற்பட்டு நிறுத்தினாலும் –
பயன் அளிக்காமல் வீணாகப் போகாது -பல சாதன பாவ நாசம் இல்லை –
யாகம் தேவதைக்கு நமது பொருளை சமர்ப்பிப்பது பாதியில் -நிறுத்தினால்-பலன் கிட்டாது என்பது மட்டும் இல்லை
அவர்கள் அப்ரீதி பாபம் வந்து சேரும்
கர்மயோகம் தொடங்கி நிறுத்தினால் பாபமும் வராது என்கிறான்
கைசிக புராணம் -மஹாத்ம்யம் -நம்பாடுவான் -பெருமாளே அபிமானித்து –
சோமசர்மா அந்தணர் -ப்ரஹ்ம ரஜஸ் – ஐந்து நாள் யாகம் முடிப்பதற்கு முன்பு மரணம் அடைந்து –
லோபம் மோஹம் பீடிக்கப்பட்டு இருந்தேன்
அது சாதாரணமான கர்மங்கள்
இங்கு கர்மயோகம் -புத்தி யுடன் சிறிய அளவும் அனுஷ்ட்டித்தாலும் ஸம்ஸார பயத்தில் இருந்து காக்கும் –
அந்த புரிதல் ஞானம் -தான் இந்த ஏற்றம் கொடுக்கும் –
இத்தை மேலே விளக்குகிறான்
கவனக் குறைவாலோ வேறே எதனாலோ விடப்பட்டு இருந்தாலும் சிறிது காலம் கழிந்தாலும்-
விட்ட இடத்தில் இருந்து – தொடர்ந்து செய்யலாம்
—————
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குரு நந்தந—
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோவ்யவஸாயிநாம்—৷৷2.41৷৷
வ்யவஸாயாத்மிகா = உறுதியான-ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்தை முன்னிட்ட
பு³த்³தி = புத்தி
ஏக = ஒன்று
இஹ = இங்கே
குரு நந்த³ந = குரு குல தோன்றலே
ப³ஹு ஸா²கா² = பல கிளைகளை
ஹி = அதனால்
அயநந்த = அநேக-கணக்கற்ற பலன்களை பற்றியவை யாகையால் கணக்கற்றவை
சா = மேலும்
பு³த்³த⁴யோ = புத்தி
அவ்யவஸாயிநாம் = ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்தை -மன உறுதி இல்லாதவர்கள்
அர்ஜுனா கர்மயோக விஷயத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயத்தை முன்னிட்ட அறிவு மோக்ஷ ரூபமான
ஒரே பலனைப் பற்றியது ஆகையால் ஒரு படிப்பட்டது
ஆத்ம ஸ்வரூபம் நிச்சயம் மற்றவர்களுடைய காம்ய கர்ம விஷயமான புத்திகள் கணக்கற்ற பலன்களைப் பற்றியவை
ஆகையால் கணக்கற்றவை -பல பிரிவுகளை உடையவை –
உயிரான ஸ்லோகம் -ஆத்ம சாஷாத்காரம் -குறியாக கொண்டு -கர்ம யோகம் -ஒரே நேர் பார்வை –
நிறைய கிளைகள் -மற்ற பலத்தில் ஆசை வைத்து -ஒன்றுமே கிட்டாமல் -காம்ய கர்மங்கள் கூடாதே -ஏகாக்ர புத்தி-
நித்ய நைமித்திக காம்ய கர்மாக்கள் உண்டே -காம்ய கர்மாக்கள் கூடாதே -பலத்தில் ஆசை இல்லாமல் – –
கர்ம யோகத்துக்கு நித்ய நைமித்திக கர்மாக்கள் உதவும் –
இஹ -சாஸ்திரீய ஸர்வஸ்மின் கர்மணி-சாஸ்திரங்களில் விஹிதமான கர்மம்
நித்ய நைமித்திக காம்ய கர்மங்களும் அவற்றின் அங்கங்களும் ஸாஸ்த்ரம் சொல்லுமே
நித்யம் -நியதமான கர்மம்-சந்த்யா வந்தனம் -அமாவாசை தர்ப்பணம் -ஸ்ரார்த்தங்கள் -தவறாமல் வருபவை நித்யம்
நைமித்திக -நிமித்தம் காரணம் -இருப்பதால் -கிரஹணம் தர்ப்பணம் போன்றவை –
காம்ய -செய்தே ஆகவேண்டும் என்று சொல்லாது -ஆசையால் -பயனை உத்தேசித்துச் செய்வது –
ப்ரதிஷிதம் -செய்யாதே என்றும் சில வற்றைச் சொல்லும்
லௌகிக விஷயம் ஸாஸ்த்ரம் சொல்லாதே -அவிஹித அப்ரதிஷிதம் -உண்ணு குளி போன்றவை
குரு நந்தன -கௌரவர்கள் இரு வம்சமும் -அந்த வம்சம் ஆனந்தம் படுப்படியான அர்ஜுனா
மோக்ஷம் பலம் மட்டும் என்பதால் ஒருபடிப்பட்டவை இந்த ஞானம்
அல்ப அஸ்திர பலன்கள் பல பல என்பதால் -இவர்கள் அறிவும் பலவாகும்
வ்யவஸாயாத்மிகா புத்தி
கீழே பரக்க சொன்ன ஆத்மா யாதாத்ம்ய நிச்சய -புத்தியை பூர்விகா முன்னிட்டு கொண்டு இருக்கும் முமுஷுக்களின் அறிவு
ஆத்மா யாதாத்ம்ய –உள்ளபடி அறியாதவர் முமுஷுவாக முடியாதே
இருவரும் செய்யும் கர்மங்கள் ஒன்றாக இருந்தாலும் புரிதலில் வேறுபாடு உண்டே
முமுஷுக்கள் ஞானம் ஏக -மோக்ஷம் பற்றியே இருக்குமே -செய்ய வேண்டிய கர்மங்கள் பலவாக இருந்தாலும் –
லௌகீகர் ஆத்ம பற்றிய அடிப்படை ஞானம் இருந்தால் தான் சுவர்க்கம் செல்ல இத்யாதிகளை முயல்வான்
ஆனால் யாதாத்ம்ய ஞானம் இல்லாதவர் -எனவே இவர்கள் ஞானம் பலவாக இருக்குமே
அநந்தா -பிரதான பலன்களே எண்ணிக்கை அற்றவை என்றும்
மேலே பஹு சாஹா -என்று -அவாந்தர பலன்களுக்காக வெவ்வேறே வழிகள்
அவித்யா -கர்ம அனுஷ்டானம்-= மிருத்யு சம்சாரம் தாண்ட -வேதமும் சொல்லும்
யஜ்ஜேந தானேன -முயல்கிறார்கள்
ஏக பலார்த்த -மோக்ஷம் ஒன்றுக்கே -செய்கிறார்கள்
மோக்ஷம் பலனில் உள்ளவன் பலனில் ஆசை இல்லாமல் அனைத்தையும் செய்கிறான் –
நித்ய நைமித்திக கர்மங்களையும் முமுஷு கண்டிப்பாக பலனில் ஆசை இல்லாமல் செய்ய வேண்டும்
செய்யச்செய்ய முன் செய்த பாப பலன்கள் கழியும் –
காம்ய கர்மங்கள் -மோக்ஷத்தில் ஆசை உள்ளதால் -பகவத் ஆராதன ரூபமாக -யதா சக்தி – அனைத்தையும் செய்யலாம் –
—————
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபஸ்ஸித–
வேதவாதரதா பார்த்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷
யம் = அது
இமம் = இந்த
புஷ்பிதாம் = மலர்ந்தது-
காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது அழகாய் இருப்பதால்
வாசம் = உரை
ப்ரவத³ந்தி = சொல்கிறார்கள்
அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்-சிற்றறிவாளர்கள்-
வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்-
ஸ்வர்க்காதி பலன்களை பேசும் ஸ்ருதிகளில் ஈடுபட்டவர்களாய்
பார்த² = பார்த்தா
ந = இல்லை
அந்ய = மற்றவை
அஸ்தி = இருக்கிறது
இதி = எனவே
வாதி³ந: = சொல்பவர்கள்
ஸ்வர்க்காதிகளைக் காட்டில் சிறந்த பலன் இல்லை என்று பேசுபவர்கள் என்றவாறு
இது தொடங்கி மூன்று ஸ்லோகங்களாலே ஒரே விஷயம் –
உண்மை அறிவுடன் -செய்யும் கர்மங்களில் புரிதல் உடன் செய்தால் முமுஷு ஆவான்
இல்லை என்றால் என்ன குறைகள் வரும், என்று அருளிச் செய்கிறான் இவற்றால் –
இவற்றில் முதல் இரண்டு ஸ்லோகங்களை சேர்த்தே அர்த்தம் கொள்ள வேண்டும்
காம்ய கர்மங்களைச் செய்பவர்கள் -வேதம் சொன்னபடியே அனுஷ்டிப்பவர்கள் –
பற்று அற்ற முறையில் செய்தால் முக்தி கிட்டும் என்று அறியாமல் -செய்பவர்கள்
ஸம்ஸாரத்துக்குள்ளே இருந்து அனுபவிப்பவர்கள் இப்படிப்பட்ட பேச்சு
இவர்களுக்கும் இப்படிப்பட்ட பேச்சுக்களுக்கும் விசேஷங்கள் மேல் உள்ளன –
வாதங்களின் ரதி -ஆசை உள்ளவர்கள் -இந்த லோகப் பயன்களில் ஆசை உள்ளவர்கள்
அந்யத் -வேறே ஓன்று ந அஸ்தி வாதிந இல்லை என்று கூறுபவர்கள் –
இவர்கள் விபஸ் சித் -பலதரப்பட்ட விவிதம் -அறிந்தவர்கள் இல்லையே –
அவிபஸ்சித் -புல்லறிவாளர்கள் என்று பெயர் கொடுக்கிறான்
புஷ்பிதாம் வாசம்-பூப் போல் மலர்ந்து -கொண்டாட வில்லை -பூ மாத்திரமே -காய்க்காது பழுக்காது -ராமானுஜ பாஷ்யம் –
செம்பருத்தி பூ காய்க்காதே அது போல்
வதந்தி-பேசுபவர்கள் – -பிர வதந்தி -நன்றாக பேசுபவர்கள்
யாதொரு பேச்சை பேசுகிறார்களோ
இதன் பூர்த்தி அடுத்த ஸ்லோகத்தில் உள்ளது
————–
காமாத்மாந ஸ்வர்கபரா ஜந்ம கர்ம பல ப்ரதாம்.–
க்ரியா விஷேஷ பஹுளாம் போகைஸ்வர்ய கதிம் ப்ரதி–৷৷2.43৷৷
காமாத்மாந: = ஆசையில் அகப்பட்டவர்கள், ஆசையில் மூழ்கியவர்கள்
ஸ்வர்க³பரா = ஸ்வர்கம் வேண்டும் என்று மிக விரும்புவார்கள்
ஸ்வர்க்கத்தையே பரம புருஷார்த்தமாகக் கொண்டவர்கள்
ஜந்ம = பிறப்புக்கும்
கர்ம = செய்கின்ற தொழிலுக்கும்
ப²லப்ரதா³ம் = பலனை பிரதானமாக எதிர்பார்ப்பவர்கள்
க்ரியா = கிரியைகள். யாகம், பூஜை போன்றவை
விஸே²ஷ = சிறப்பான, விசேஷமான
ப³ஹுலாம் = பல விதமான
தத்வ ஞானம் இல்லாமையாலேயே பல கிரியைகள் நிறைந்து இருப்பதான
போ⁴கை = போகம் (வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவை)
³ஸ்²வர்யக³திம் = ஸ்வர்கத்தை அடைய வேண்டும் என்று
ப்ரதி = நோக்கத்துடன்
இதிலும் அடைமொழி -இவர்களுக்கும் இவர்கள் பேச்சுக்களுக்கும் -உண்டு
இதில் ஆத்மா பதம் மணத்தைச் சொல்லும் –
காமாத்மந -காமங்களில் மனசை ஈடுபடுத்தி வைத்து இருப்பவர்கள் –
இது பொதுவாகச் சொன்னது -த்ருஷ்ட பலன்களை சொல்லி
ஸ்வர்க்கமே பரம புருஷார்த்தம் என்று உள்ளவர்கள் -இது விசேஷித்துச் சொன்னது -அத்ருஷ்ட பலனைச் சொல்லி –
இவை இரண்டும் பேசுபவர்க்கு அடைமொழி
கீழே மூன்று அடைமொழிகள் இவர்களுக்கு உண்டே
இனி பேச்சுக்கு அடைமொழிகள் மூன்று
1-போகம் ஐஸ்வர்யம் -இதுவே செல்வம் -குறித்து பேச்சு –
2-ஜென்ம கர்மம் பலமாகக் கொடுக்கக் கூடியவையே இச்செயல்கள் -பற்றிய பேச்சு -முக்தி பெற்றுக் கொடுக்காதே –
புண்யம் உள்ளவரை ஸ்வர்க்கம் அனுபவித்து பூமியை மீண்டும் அடைகிறார்கள்
ப்ராப்யம் அந்தம் -முடிவு உண்டே -கர்மங்கள் அடிப்படையில் ஏற்ற பிறவி -பெறுகிறான் –
3-கிரியா விசேஷ பஹுளா -பல செயல்களை உட்க்கொண்டதாக இருக்குமே –
முமுஷுவோ பற்று இல்லாமல் செய்யும் புத்தி அம்சம் உண்டே -செயலை விட புத்தியே பிரதானம் இவர்களுக்கு
இவனுக்கோ அது-ஆத்ம ஞானம் – இல்லையே
புஷ்பிதாம் வாசாம் கீழேயே பார்த்தோம்
———–
போகைஸ்வர்ய ப்ரஸக்தாநாம் தயாபஹ்ருத சேதஸாம்–
வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷
போ⁴கை = போகம், ஆடம்பரம்
ஐஸ்²வர்ய = ஐஸ்வர்யம் என்றால் அதிகாரம், ஆட்சி.
ஈசன் = தலைவன்.
ஈஸ்வர = தலைமை பீடம்.
ஐஸ்வர்யம் = அதிகாரம், தலைமை பொறுப்பு, ஆட்சி.
ப்ரஸக்தாநாம் = ஆட்பட்டு, உந்தப்பட்டு , ஆசைப்பட்டு
அந்த புல்லறிவாளர்களுக்கு
தயா = அதனால்
அபஹ்ருத = அபகரிக்கப்பட்டு, களவாடி, தொலைந்து போய்
சேதஸாம் = மனம், இதயம், புத்தி
அபஹ்ருத சேதஸாம் = அழிக்கப்பட்ட அறிவுடையவர்களாய் –
வ்யவஸாயாத்மிகா = உறுதிப்பாட்டில் இருந்து, நிலைத்த தன்மையில் இருந்து
ஆத்மாவின் உண்மை நிலையைப் பற்றின நிச்சயத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்
பு³த்³தி⁴ = புத்தி-முற்கூறிய கர்மயோக புத்தி
ஸமாதௌ⁴ = நிலை நின்ற, உறுதியுடன் நின்ற, சம நிலைப் பட்ட
ந = இல்லை
விதீ⁴யதே = விதிக்கப்பட்டு இருக்கிறது
பார்த்தனே வேதங்களில் கூறப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களை பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய் –
காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் -சுவர்க்கத்தை விரும்புவர்களாய் –
சுவர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த பலன் இல்லை என்று பேசுகின்றவர்களான சிற்று அறிவாளர்கள்
ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பதாகிய செல்வத்தை அடைவது குறித்து காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது
அழகாக உள்ளதாய் -மறு பிறப்பு முதலிய கர்மங்களாகிய பலன்களை அளிப்பதாய் -பல செய்கைகளை யுடைத்தான
யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ -அந்தப் பேச்சுக்களால் அழிக்கப் பட்ட அறிவை உடையவர்களாய்
ஸ்வர்க்காதி செல்வங்களில் ஈடுபட்டவர்களான அப் புல்லறிவாளர்களுக்கு மனத்தில் ஆத்ம ஸ்வரூப நிச்சயத்தை
முன்னிட்டுக் கொண்டு இருக்கும் கர்ம யோக புத்தி உண்டாவது இல்லை –
காம்ய கர்மாக்கள் கூடாது என்றால் வேதம் சொல்வது எதனால் –சிற்று அறிவு கொண்டு -பூ பூத்தால் போலே பேசி –
காய் கனி –இல்லாமல் -வாதம் பண்ணுபவர்கள் –ஸ்வர்க்கம் ஒன்றே பலம் என்பர் –
காமிய கர்மங்கள் ஜென்மம் மீண்டு மீண்டு கொடுக்கும் -கிரியா விசேஷங்கள் பல உண்டு
அனுபவத்தில் மனஸ்–புத்தி தப்பான வழியில் –செல்பவர்களுக்கு இந்த ஏகாக்ர புத்தி விளையாது –
பற்று அற்ற கர்மங்களை செய்வதற்கு இவனை மூட்ட
இப்படி இல்லாதவர்களை நிந்திக்கிறான் இம்மூன்று ஸ்லோகங்கள்
இதில் வரும் சங்கை போக்க அடுத்த இரண்டு ஸ்லோகங்கள்
இப்படிப் பட்ட ஒன்றை வேதம் எதற்க்காகப் போதிக்க வேண்டும்
தந்தை ஹிதம் -தாய் பிரியம் -போல் தானே சாஸ்திரம்
இப்பிறவியில் மட்டும் தான் இவர்கள் -உடலுக்கு நல்ல விஷயம் சில சமயங்களில் சொல்லுவார்கள்
வேதமோ அனைத்து பிறவிகளுக்கும் தாய் தந்தை அன்றோ
அப்படிப்பட்ட வேதம் ஸ்வர்க்கம் பற்றியும் அடைய வழியையும் உபதேசிப்பான் என்
இதுக்குப் பதில் அடுத்த இரண்டு ஸ்லோகங்கள்
———-
த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.–
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவாந்—-৷৷2.45৷৷
த்ரை = மூன்று
குண்ய = குணங்களின்
விஷயா = விசேஷ தன்மை பற்றி
வேதா = வேதங்கள்
நிஸ் = விலகி, தாண்டி, ஒட்டாமல்
த்ரை = மூன்று
குண்யோ = குணங்களில் இருந்து
ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா
நிர் = இல்லாமல்
த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை
நித்ய = எப்போதும்
ஸத்த்வ = சத்வ
ஸ்தோ = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்
நிர் = இல்லமால்
யோக = ஆடம்பரங்களில்
க்ஷேம = சுகங்களில்
ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி
வேதங்கள் முக்குணங்களை உடையவர்களுக்கு நன்மையைக் கூறுபவை
அர்ஜுனா முக்குணங்களையும் உடையவன் ஆகாமல் இரு
ஸூகம் துக்கம் முதலிய இரட்டைகளைப் பொறுத்துக் கொள்பவனாகவும் –
தினம் தோறும் வளரும் சத்வ குணத்தை உடையவனாகவும் –
பொருள்கள் அடைவதாகிய யோகம் -அடைந்தவற்றைக் காப்பதாகிய க்ஷேமம் -ஆகியவற்றில் முயற்சி அற்றவனாகவும்
ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டவனாகவும் ஆவாய் –
இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று —
மகா க்ரமன் -மஹதி அனுபூதி படிக்கட்டு வைப்பான் தன்னிடம் சேர்க்க
வேத நூல் ஒதுகின்றது உண்மை -த்வந்தம் -சுக துக்கம் -இத்யாதி –
யோகம் -கிடைக்காதது கிடைப்பது –
க்ஷேமம் -கிடைத்தது நிலைக்கும் -ஆத்மா சாஷாத்காரம் கிட்டி தங்க வேன்டும்
ஆயிரம் தாய் தந்தை போல் வேதம் -அனைவருக்கும் -அநேக காலத்திலும்
முக்குண வசப்பட்டு அன்றோ மக்கள் உள்ளார்கள்
ஒருவரே வேறே வேறே காலத்திலேயே வேறே வேறே குணம் தானே பிரதான்யமாக இருக்குமே
ஆகவே அனைத்தையும் பரக்க உபதேசிக்க வேண்டுமே-
நின்று நின்று–சென்று சென்றாகிலும் கண்டு –சென்மம் கழிப்பான் என்று உன்னி உன்னி உலகம் படைப்பான் -அன்றோ –
நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.—முக்குணங்கள் அற்றவனாக இருக்க வேண்டும் –
சத்வம் மட்டும் வளர்த்து இருக்க வேண்டும் -ஓன்று உள்ளவனை மூன்று பழங்கள் இல்லாதவன் -சொல்லலாமே -அதே போல்
நித்தியமான ஸத்வஸ்தக-நிலை பெற்று இரு என்று அடுத்த பத பிரயோகம் உண்டே
அர்ஜுன -பத பிரயோகம் -மனஸ் வெண்மை சத்வம் வளர்ந்தவன் நீ அன்றோ –
இத்தையே வளர்த்துக் கொள்
இரட்டையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்
பொறுத்துக்க கொள்ள வேண்டும் -இரண்டாம் அத்யாயம் 12 ஸ்லோகம் முன்பே பார்த்தோம்
ஆகார ஸூத்தி ஸத்வ ஸூத்தி
கர்மங்களை புரிதல் உடன் செய்துட்டு கொண்டே இருக்க இது வளரும்
யோக-அப்ராப்யஸ் ப்ராப்தம் -கிடைக்காதவை கிட்டுவது
க்ஷேமம் -கிடைத்தவை தக்க வைத்துக் கொள்ளுவது
ஆத்மாவான் -இது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்
மற்ற லௌகிக விஷய யோகமு ஷேமமோ குறிக்கோள் இல்லாமல்
உன்னை உண்மையாகப் புரிந்து -கேள்வி ஞானம் -செயல்களால் வளர்த்து –ஆத்ம சாஷாத்காரம்-அடைய வேண்டும் –
இத்தை -உனக்கு வேண்டிய பகுதியை மட்டுமே நீ கொள்ள வேண்டும் -என்பதற்கு
எடுத்துக் காட்டி விளக்குகிறான் அடுத்த ஸ்லோகத்தில்
————-
யாவாநர்த உதபாநே ஸர்வத ஸம்ப்லுதோதகே.–
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத—৷৷2.46৷৷
யாவாந் = அதுவரை, அந்த அளவு
அர்த = பயன், உபயோகம், தேவை
உத³பாநே = குளம், குட்டை, ஏரி-நீர் நிலையில்
ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்
ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது
தாவாந் = அந்த அளவு
ஸர்வேஷு = அனைத்து
வேதே³ஷு = வேதங்களில்
ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு-வைதிகனுக்கு
விஜாநத: = அறிந்தவனுக்கு (விஞானத் )-அறிவாளியான முமுஷுக்கு
எல்லாப் புறத்திலும் நிறைந்த நீரை உடைய நீர் நிலையிலே -அந்த நீரை உபயோகிக்க விரும்புவனுக்கு
எவ்வளவு மட்டும் பயன் உள்ளதோ அவ்வளவே கைக் கொள்ளப் படுகிறதோ
அப்படியே எல்லா வேதங்களிலும் வைதிகனாய் அறிவாளியான முமுஷுக்கு மோக்ஷ சாதனமாய் இருப்பது
எவ்வளவோ அவ்வளவே ஏற்றுக் கொள்ளத் தக்கது –
அதாவது
எல்லா வேத பாகமும் ஏற்றுக் கொள்ளத் தக்கது அன்று என்று கருத்து
நமக்கு வேண்டிய தண்ணீரை தானே குடிப்போம் -வேதத்தில் நமக்கு உள்ளதை மட்டும் கொள்ள வேன்டும் –
தாகம் உடையவன் தனக்கு வேண்டிய தண்ணீரை மட்டும் கொள்ளுவது போல்
முமுஷு -தனக்கு வேண்டிய ஒன்றையே -பற்று அற்ற கார்ய யோகத்தையே -கொள்ள வேண்டும்
செய்யாதன செய்யோம்
மேலையார் செய்வனகள் போல் கொள்ள வேண்டும் –
ப்ராஹ்மணன்-வைதிகனையே இங்கு குறிக்கும் – -ஷத்ரியனுக்கு உபதேசம் இது அன்றோ
விஜயநத -நல்ல ஞானம் -தள்ள வேண்டியவற்றைத் தள்ளி கொள்ள வேண்டிய ஒன்றையே கொள்ளுமவன்
————
கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷
கர்மணி = வேலை செய்வதில்-நித்ய நைமித்திக கர்மங்களில் மட்டும்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = ‘பல்’ என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
ஸ்வர்க்காதி பலங்களிலே ஆசை கொள்ளாமல்
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி -மோக்ஷ சாதனா கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில்
முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்
அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் —
கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை –
கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் –
மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-
முமுஷு கர்மங்களை விட முடியாது -பலன்களைத் தானே விட வேண்டும் –
இவற்றைச் செய்ய செய்யவே ஸத்வ குணம் வளரும்
கர்மங்களில் மட்டுமே உனக்குத் தகுதி -முமுஷுவான உனக்கு –
நித்ய கர்மங்கள் -சந்த்யா வந்தனம் போல்வன மற்ற கர்மங்கள் செய்ய யோக்யம் கொடுக்கும்
இரண்டாவது பகுதியால் -கர்மணி -ஏவ -பலன்களில் தகுதி இல்லாமல் -ஆசைப்படாமல் -செய்ய வேண்டும்
கீழே மூன்று ஸ்லோகன்களால் நிந்தை செய்தார் -துக்கமயமான ஸம்ஸார சூழலிலே சிக்கி உழல்வோமே
மூன்றாவது பக்தியால் -கர்மங்களுக்கும் பலங்களுக்கும் நீ காரணமாகாதே -என்கிறான் –
முரண்பாடு இல்லை -நீ தான் கரமத்துக்குக் காரணம் கர்வம் கூடாதே
அகர்த்ருத்வ அனுசந்தானம் -மேலே விவரித்து சொல்லுவான் -அடுத்த அத்தியாயத்தில்
நான்காவது பக்தியால் -அகர்மணி -செய்யாமல் இருப்பதில் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் –
————–
யோகஸ்த குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய.–
ஸித்த்யஸித்த்யோ ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே৷–৷৷2.48৷৷
யோக³ஸ்த²: = யோகத்தில் இருப்பவன்
குரு = செய்வான்
கர்மாணி = காரியங்களை
ஸங்க³ம் = தொடர்பு
த்யக்த்வா = விட்டுவிட்டு
த⁴நஞ்ஜய = தனஞ்சய
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: = சித்தி , அசித்தி (வெற்றி , தோல்வி)
வெற்றி முதலியவை ஸித்திப்பதிலும் ஸித்தியாது இருப்பதிலும்
ஸமோ = சமமாக
பூ⁴த்வா = அடைந்தபின்
ஸமத்வம்= ஒன்றாக
யோக³ =யோகம் என்பது
உச்யதே = இதுவே
அர்ஜுனா ராஜ்ஜியம் உறவினர் முதலானவற்றில் பற்றைக் கை விட்டு -வெற்றி முதலானவை கிடைத்தாலும்
கிடைக்கா விட்டாலும் ஒருபடிப்பட்டவனாய் -யோகத்தில் இருப்பவனாய் -கர்மங்களைச் செய்வாயாக –
வெற்றி முதலானவை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் ஒருபடிப் பட்டு இருத்தல் யோகம் என்று சொல்லப்படுகிறது –
சமத்துவம் புதிய கருத்து –சித்தியோ அசித்தியோ -வெற்றியோ தோல்வியோ ஒன்றாக நினைத்து —
யோகத்தில் நிலை நின்று கர்ம யோகம் செய்து -பற்றுதல்களை தொலைத்து -தனத்தை வெல்லுவாய் –
சங்கம் வெல்வது அரிது என்பதால் தனஞ்சயன் -ஒரு சிஷ்யனும் சரண் என்று சொல்ல வில்லையே –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் இடமே பலித்தது –கர்ம யோகி -சுக துக்கம் சமமாக பார்ப்பார்களே –
குரு -செய் -ஆணை இடுகிறான்
பயனில் பற்றும் இல்லாமல் -பந்துக்களில் பற்றும் இல்லாமல் -செய் -சங்கம் த்யக்த்வா
யோகத்தில் இருந்து கொண்டு செய்ய வேண்டும் -யோகஸ்த்தஸ் -த்யானம் சொல்லாமல் –
சமத்துவம் பற்றியே இப் பத பிரயோகம் -இரட்டைகளைத் தாண்டி -சமமாகப் பார்க்க வேண்டுமே
மேலே யோகம் 5 அத்யாயம் ஆத்மாக்களை சமமாக பார்ப்பது பற்றிச் சொல்வான்
யோகம் -சித்த சமாதானம் -ஒருமித்த நிலை என்றபடி
—————
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தநஞ்ஜய.–
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா பலஹேதவ—৷৷2.49৷৷
தூ³ரேண = ரொம்ப தூரத்தில்
ஹை = நிச்சயமாக
அவரம் = தாழ்ந்தது
கர்ம = கர்மம், வினை, தொழில்
புத்தி யோகாத் = புத்தி யோகத்தில் இலயித்து
தநஞ்ஜய = தனஞ்சய
புத்தௌ = புத்தியை
ஸரணம் = சரணம்
அந்விச்ச = அடை
க்ருபணா: = லோபிகள்
பல = பலனை
ஹேதவ: = எதிர்பார்ப்பவர்கள்
அர்ஜுனா, புத்தி யோகத்தை விட பலனை எதிர்பார்த்து செய்யும் காரியங்கள் பல மடங்கு தாழ்ந்தவை.
புத்தியை சரணடை. பயன் கருதி காரியம் செய்பவர்கள் கீழானவர்கள்
அர்ஜுனா புத்தியோடு கூடிய கர்மத்தைக் காட்டிலும்
அந்த புத்தி அற்ற காம்ய கர்மம் மிகவும் தாந்தது அன்றோ –
ஆகையால் முன் கூறிய புத்தியில் புகல் அடைவாயாக –
காம்ய பலனில் விருப்பம் வைப்பவர்கள் சம்சாரிகள் ஆகின்றனர் –
தரித்ரர்கள் -தாழ்ந்த பலத்துக்காக பண்ணுபவர்கள் —
புத்தி யோகம் விட கர்ம யோகம் மிகவும் தாழ்ந்தது –என்கிறான் இல்லை -53-ஸ்லோகம் மேல் தான் ஞான யோகம்
தியாக புத்தி உடன் செய்யும் கர்ம யோகமே உயர்ந்தது என்றவாறு —
புத்தியில் புகலிடமாக ஆஸ்ரயிப்பாய் -புத்தியை முதலில் சம்பாதித்து கொள் என்றவாறு –
இரட்டைகளை சமமாக பார்த்துக் கொள் மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறானே என்னில்
கர்மயோகத்தில் முக்கியமான கருத்து இதுவே என்பதால்
இவை தாக்கிக் கொண்டே இருக்கும் -பொறுத்துக் கொள்ள வேண்டுமே –
உபக்ரமம் -உபஸம்ஹாரம் -நூலுக்கு கருத்து
அப்யாஸம்
அபூர்வத
பலம்
அர்த்தவாதம் புகழ்ந்து
உபபத்தி -பொருத்தம் என்று யுக்திகளை சொல்லுவது
இதுவே மையக்கருத்து என்பதால் மீண்டும் மீண்டும் சொல்கிறான் –
புத்தி யோகம் -புத்தியுடன் சேர்ந்த கர்ம அனுஷ்டானம் -என்றவாறு -புத்தி யுக்தாத் –
இது இல்லாமல் -கேவலம் கர்மா -புரிதல் இல்லாத கர்ம அனுஷ்டானம்
அவரம் -தாழ்ந்தது
தூரேனே அவரம் -மிகவும் தாழ்ந்தது -சம்சாரத்தில் ஆழ்த்துமே
மோக்ஷம் பெரிய செல்வம் இழந்த தரித்ரர்கள் ஆவார்கள்
—————–
இப்படிச் செய்வதால் பெரும் பலன்களை
இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் சொல்கிறான்
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதே—
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக கர்மஸு கௌஷலம்—৷৷2.50৷৷
பு³த்³தி⁴ = புத்தி
யுக்தோ = இணைந்து, சேர்ந்து
ஜஹாதி = விட்டு விட்டு , விலகி
இஹ = இங்கு(கர்மயோகம் செய்யும் பொழுது என்று அத்யாஹாரம் )
உபே = இரண்டும்
ஸுக்ருத = நல்லதும்
துஷ்க்ருதே= தீயதும்
தஸ்மாத் = எனவே
யோகா³ய = யோகத்தின் மூலம்
யுஜ்யஸ்வ = சேர்ந்து, இணைந்து
யோக³: = யோகம்
கர்மஸு = கர்ம வினைகளின்
கௌஸ²லம் = சிறப்பானது, உயர்ந்தது ||2-50||
கர்மம் செய்கின்ற போது முன் கூறிய புத்தியோடு கூடிய புருஷன் புண்ய பாபங்கள் இரண்டையும் விடுகிறான்
(புண்ணியமும் பாபம் போல் தள்ள வேண்டியதே முமுஷுக்கு
தங்கச் சங்கிலி -விலங்கு – போல் தானே இதுவும் )
ஆகையால் முன் கூறிய புத்தி யோகத்தின் பொருட்டு முயற்சி கொள்வாயாக –
கர்மங்கள் செய்யப்படும் போது இந்தப் புத்திச் சேர்க்கை மிகுந்த சாமர்த்தியத்தால் ஏற்படுவது –
சாமர்த்தியமாக -எல்லாம் செய்து -நம்மது இல்லை –தியாக உணர்வுடன் செய்தால் -இரண்டையும் விட்டு –
இங்கேயே -ஸூஹ்ருதம் -ஈஸ்வர ப்ரீதியும் அப்ரீதியும் -இதுவே புண்ய பாபங்கள் —
தாழ்ந்த பலன்களை கொடுக்கவும் ஈஸ்வர ப்ரீதியால் -வேறே வழியில்லாமல் கொடுக்கிறேன் -என்றவாறு –
ஆத்ம சாஷாத்கார பலத்துக்காக செய்தால் மட்டுமே உண்மையான ப்ரீதியுடன் வழங்குவான் –
————-
கர்மஜம் புத்தி யுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண–
ஜந்ம பந்த விநிர்முக்தா பதம் கச்சந்த்யநாமயம்—৷৷2.51৷৷
கர்மஜம் = கர்மத்தில் இருந்த ஜனித்த, பிறந்த
பு³த்³தி⁴யுக்தா = புத்தியுடன் சேர்ந்த
ஹி = அதனால்,
ப²லம் = ஸ்வர்க்காதி பலன்கள்
த்யக்த்வா = தியாகம் செய்தும்–துறந்து
மநீஷிண:| = அறிவுள்ளவர்கள்
ஜந்மப³ந்த⁴ = பிறவித் தொடர்பு-கட்டு-
விநிர்முக்தா: = நன்கு விடு படுகிறார்கள்
பத³ம் = பரமபத
க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்
அநாமயம் = துன்பத்தை விட்டு
அறிவாளிகள் முன்பு கூறிய புத்தியோடு கூடியவர்களாய்
காம்ய கர்மத்தினால் உண்டாகும் ஸ்வர்க்காதி பலன்களை விட்டு
கர்மத்தைச் செய்வதன் மூலம் பிறப்பாகிற கட்டில் இருந்து நன்கு விடுபட்டு
துன்பம் அற்ற பரம பதத்தை அடைகின்றனர் அன்றோ
மூன்று வித தியாகம் சேர்ந்த புத்தி -மீண்டும் மீண்டும் இதை சொல்லி –
திட புத்தி வர –கர்ம யோகம் ஒரே பலனுக்காக –
ஜென்மம் பந்தம் இல்லாமல் -மோக்ஷ பதம் பெற்று -வியாதி அற்ற பரமபதம் -அடைகிறான் –
விநிர்முக்தா: = நன்கு விடு படுகிறார்கள்
ருசி வாசனைகள் இல்லாமல் நச புநர் ஆர்த்தி
சம்சார கட்டுக்கள் விலகி பரமாத்வை அடைந்து -இயற்க்கை நிலை -நித்ய கைங்கர்யம் –
இவற்றையே பதம் பதம் சொல்லும் 0ஸ்வரூப ஆவிர்பாவம் அடைவான்
பக்தி யோகத்தால் தான் முக்தி -அதுக்கு அடிப்படை கர்மயோகம் -என்பதால் சிறப்பித்துச் சொல்கிறான்
——————–
யதா தே மோஹகலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி.–
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச–৷৷2.52৷৷
யதா -எப்போது
தே புத்தி -உன் அறிவு
மோஹ கலிலம் -விபரீத ஞானம் ஆகிற கலக்கத்தை
வியதி தரிஷ்யதி -கடக்கப் போகின்றதோ
ததா -அப்போது
ஸ்ருதஸ்ய -இதற்க்கு முன் என்னால் கைவிடத்தக்கதாகச் சொல்லப்பட்ட பலன் முதலியவற்றைக் குறித்தும்
ஸ்ரோ தவ்யஸ்ய ச -இனி சொல்லப் போகின்றதைக் குறித்தும்
நிர்வேதம் கந்தாஸி -உன்னை நீயே இகழ்ந்து கொள்ளப் போகிறாய் –
எப்போது உன் அறிவு விபரீத ஞானம் ஆகிற கலக்கத்தை கடக்கப் போகின்றதோ அப்போது –
இதற்கு முன் என்னால் கை விடத் தக்கதாகச் சொல்லப்பட்ட பலன் முதலியவற்றைக் குறித்தும்
இனிச் சொல்லப்பட போகின்றதைக் குறித்தும் நீயே உன்னை இகழ்ந்து கொள்ளப் போகிறாய்
மயக்கத்தால் -கலங்கி -மோகம் -தேஹாத்ம பிரமம் –உபதேசம் கேட்டு வெளியில் வந்து –வெறுப்பு அடைந்து —
சொல்வதையும் சொல்லப் போவதையும் –
தேகம் -நஸ்வரம் அறிந்த பின்பு வெறுப்பு வருமே -நித்தியமான ஆத்மா பற்றி அறியாமல் -இருந்தோம் –
பழுதே பல காலம் போயின என்று அஞ்சி அழுவோமே –
நிர்வேதமே முதல் அடையாளம் -திருந்துவதற்கு -குல பாம்சனம் -திரும்பி விபீஷணன் -முதல் அடி –
கர்மங்களை செய்யச் செய்ய -உனக்கே இவை நன்றாகத் தெரியுமே
தே -கர்மயோகம் செய்து கொண்டே இருக்கும் உனக்கு
மனக் கலக்கம் குறைந்து -ஆத்ம யாதாத்ம்ய ஞானம் பிறக்கும் –
வியதி தரிஷ்யதி
தரணம் -தாண்டும்
நன்றாகத் தாண்டுவது -மீண்டும் கலக்கம் வராதபடி -ச வாசனமாகக் கைவிட்டு
மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம்பரிசு அறிந்து கொண்டு
ஐம் புலன் அகத்து அடக்கி – –காம்பற தலை சிரைத்து –
ஆத்மாவை நிழலில் வைத்து -உடலை வெய்யில் வைக்க வேண்டுமே –
அதன் நன்மைக்கு மட்டுமே கார்யங்கள் செய்ய வேண்டும் –
நிர்வேதம் -தாழ்ந்த விஷயம் பற்றியதாலும் உயர்ந்த விஷயம் இழந்தாலும் -வெறுப்பு உண்டாகும் –
இதுவரை தள்ளத்தக்க பலன் -இவ்வுலகப்பலன் –
இனி சொல்லப்போவது ஆத்மாவின் உத்க்ருஷ்டம் –
—————–
இது தொடங்கி -யோகம் -ஆத்ம சாஷாத்காசாரம் பெருமை
கர்மயோகத்தால் -அடையப்படும் நிலை -அடுத்த படி
நித்தியமான விஷயம் அன்றோ -லௌகிக விஷயம் போல் அல்ப அஸ்திரம் அல்லவே –
நிரந்தர அபரிச்சின்ன ஸூகம் -ஞான ஆனந்த ஸ்வரூபம் தானே
ஸ்ருதி விப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா.—
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி—-৷৷2.53৷৷
ஸ்ருதி விப்ரதிபந்நா -என்னிடம் கேட்பதால் ஏற்பட்ட சிறந்ததான
அசலா -ஒருபடிப்பட்டதான
தே -உன்னுடைய
புத்தி -அறிவானது
ஸமாதவ்–கர்மயோகத்தால் தூய்மையான மனதில்
யதா -அப்பொழுது
ஸ்தாஸ்யதி நிஷ்சலா.—அசைக்க முடியாதது ஆகிறதோ
ததா -அப்போது
யோகம் -ஆத்மா சாஷாத்காரத்தை
அவாப்ஸ்யஸி—-அடையப்போகிறாய்
என்னிடம் கேட்டதால் விசேஷமாக அறியப் பட்டதாய் -ஒருபடிப்பட்டதாய் இருக்கும் உன்னுடைய அறிவானது
மனத்தில் எப்பொழுது அசைக்க முடியாதது ஆகிறதோ
அப்போது ஆத்ம சாஷாத் காரத்தை அடையப் போகிறாய்
யோகம் -ஆத்ம சாஷாத்காரம் -இங்கு -ஸ்ருதி -இது வரை கேட்டு -நல்ல விசேஷ ஞானம் பெற்று –
ஒரு முகப் பட்ட புத்தி -அசலா புத்தி — மனஸ் -சமாதி -அசைக்க மாட்டாத ஞானம் வந்து இருக்கும் –
ஞான யோகம் பிறக்கும் என்றவாறு -ஆத்ம சாஷாத்காரம் கிடைக்கும் -என்றவாறு –
ஹிமாசலம் -ஹிமா பனி -அசலம் -மலை
சிறந்த ஞானம் -மாறாதது
அந்த புத்தி நிலை பெற்று இருக்க வேண்டும்
ஸ்ரவணம் மனனம் -கேட்டு -அசை போட்டு ஆலோசனைப் பண்ணி-
மனசில் நன்றாகக் பதிக்கப் பட வேண்டிய ஞானம்
சமாதவ் -சமாதி -மனசைச் சொன்ன படி -த்யானம் -அறிவின் நிலைக்கும் உபயோகப்படும் –
இங்கு அசையாத புத்தி ஏற்பட தூய்மையான-நிர்மலமான மனசே காரணம்
கர்மயோகம் செய்யச் செய்யத் தானாகவே புரியும் என்றார்
தைல தாராவத் -எண்ணெய் ஒழுக்கு தாரை போல் பிசிறு இல்லாமல் -சமாதி –
அந்யோன்ய ஆஸ்ரயம்
யோகம் -செய்யச் செய்ய -யோகம் நிலை பெரும்
பலபடிகள்
சாஸ்த்ர ஜன்ய ஆத்மஞானம் -அடிப்படை ஞானம் –
நெருப்பு சுடும் -கேள்வி ஞானம் -தொட்டுப்பார்த்து தெரிவதும் முன்
சக்கரைப் பொங்கல் இனிக்கும் -கேள்வி ஞானம் -அனுபவ ஞானம் இரண்டு நிலைகள் உண்டே
தத் ஞான பூர்வக கர்மயோகம் -அடிப்படை ஞானம் பெற்று
உலக விஷயம் த்யாஜ்யம் – -பற்று அற்ற கர்மங்களைச் செய்து –
ஞான யோகத்தில் நம்மை நிறுத்தும்
இத்தை பலகாலும் செய்ய ஆத்மா சாஷாத்காரம் பெற்று ஸூகம் அனுபவம் –
இது அடுத்த நிலை -இனிமையை நேராக உண்டு அனுபவிப்பது போல் –
ஆக நான்கு நிலைகள்
1-கேள்வி ஞானம் பெற்று -சாஸ்த்ர ஜன்ய ஆத்ம ஞானம்
2-கர்ம யோகம் -தூய்மை ஆக்கப் பெற்ற மனஸ்
3-ஞான யோகம் -அசையாமல் நிலை பெற்ற அறிவு ஸ்தித ப்ரதிஞ்ஞன்
4-ஆத்ம சாஷாத்காரம் யோகம் -ஆத்ம அவலோகநம் -மனஸால் காண்பது –
ஆக மூன்றுமே யோகங்கள்
இந்த விஷயங்கள் ஆறு அத்தியாயங்களில் விளக்கம் -இந்த ஸ்லோகம் அதுக்கு முன்னுரை
———————-
இப்படிப்பட்ட ஞான யோக நிஷ்டன் என்ன பேசுவான்
எப்படி நடப்பான் –
அவன் பண்புகள் என்ன -ஆசையுடன் கேட்கிறான்
முக்கரண விருத்திகள் பற்றிய கேள்வி –
அர்ஜுந உவாச-
ஸ்தித ப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ.–
ஸ்திததீ கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்—৷৷2.54৷৷
அர்ஜுந உவாச-அர்ஜுனன் கூறினான்
ஸ்தித ப்ரஜ்ஞஸ்ய -ஞான யோக நிஷ்டனுக்கு
க-எது
பாஷா -வாசகமான -குறிக்கக் கூடிய சொல் –
ஸமாதிஸ்தஸ்ய -மனத்தைத் தனது வசத்தில் வைத்து இருக்கும்
கேஸவ.–கேஸவனே
ஸ்திததீ -அந்த ஞான யோக நிஷ்டன்
கிம் ப்ரபாஷேத -என்ன பேசுவான்
கிம் ஆஸீத -மனத்தால் என்ன நினைப்பான்
வ்ரஜேத கிம்—உடலால் என்ன செய்வான்
அர்ஜுனன் கேட்கிறான்
கேசவனே சமாதியில் இருக்கும் ஞான யோக நிஷ்டனைச் சொல்லும் சொல் எது
அந்த ஞான யோக நிஷ்டன் என்ன பேசுவான் –
மனத்தால் என்ன செய்வான் -உடலால் எவற்றைச் செய்வான்
ஞான யோகி -அசைக்க மாட்டாத ஞானம் படைத்தவன் -வேறு பலனுக்கு குறி இல்லாமல் –
ஆத்ம சாஷாத்காரம் -எப்படி விளக்குவார்கள் —
என்ன பேசுவான் -அவன் மானஸ காயிக- செயல்கள் என்ன -மூன்றையும் பற்றி கேட்கிறான் –
மேலே நான்கால்–நான்கு நிலைகள் —
முதல் படிக்கட்டு -58–யத்னம் முயலுவது முதல் நிலை
வ்யதிரேக
ஏகேந்த்ர
வசீகரா சமஞ்ஞா –
இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி -பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் –
வ்யதிரேகம் அடுத்து மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம்
வசீகரம் அனைத்தையும் அடக்குவது
——————-
முதலில் நான்காம் நிலையைச் சொல்லி
அது வர மூன்றாம் நிலை -அதுக்கு இரண்டாம் நிலை -அதுக்கு முதல் நிலை
இறங்கும் கிராமத்தில் நான்கு ஸ்லோகங்கள் வைராக்யம் பற்றி
நான்கு ஞான யோக நிலைகள் அருளிச் செய்கிறான்
ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோ கதாந்.–
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷
ஸ்ரீ பகவாநுவாச–ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்
பார்த்த-அர்ஜுனா
ஆத்மநா–ஆத்மாவைப் பற்றி நிற்கும் மனத்தினால்
ஆத்மநி ஏவ -ஆனந்த ரூபமான தனது ஆத்மாவிலேயே
துஷ்ட-ப்ரீதி யுடையவனாய்
மநோ கதாந்-மனத்தினில் இருக்கும்
ஸர்வாந் காமாந்-மற்ற பலன்களை பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும்
யதா-எப்பொழுது
ப்ரஜஹாதி – நன்கு கை விடுகிறானோ
ததா -அப்போது
ஸ்தித ப்ரஜ்ஞஸ் உச்யதே—ஸ்தித ப்ரஞ்ஞன் என்று கூறப்படுகிறான்
ஸ்ரீ பகவான் சொன்னான்
அர்ஜுனா ஆத்மாவையே பற்றி நிற்கும் மனத்தினால் ஆனந்த ரூபமான
தன் ஆத்மாவிலேயே ப்ரீதி உடையவனாய்
மனத்தினில் இருக்கும் மற்ற பலன்களைப் பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும்
எப்பொழுது கை விடுகிறானோ
அப்போது ஸ்திதபிரஞ்ஞன் என்று கூறப்படுகிறான்
வசீகரம் -கடைசி நிலை –
சர்வ ஆசைகளையும் விட்டு -ஆத்ம சாஷாத்காரம் தவிர —
மனசால் ஆத்மா இடமே செலுத்தி ஸந்தோஷம் அடைகிறான்
ஜித-இந்திரியங்களை வென்று பரிசுத்த மனஸை கொண்டவனே –
ஆத்ம ஸ்வரூபம் த்யானிப்பவனே ஞான யோகி –
பலன் யோகம் -ஆத்ம சாஷாத்காரம் -கேட்டு அறிவதற்கு மேலே தானே -பார்த்து புரிந்து கொள்ளலாம்
ப்ரஜஹாதி-ச வாசனமாக அடியோடு நன்கு விட்டு விடுகிறான் -ஆசைக்கு வேர் வாசனை -பதிவுகள் –
மீண்டும் வந்து மூடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்
ஆத்மாவை மட்டுமே நினைக்கும் மனசால் ப்ரீதி அடைபவன் -மற்ற லௌகிக விஷயங்களைக் கணிசிக்க மாட்டான்
மனசால் ஆத்மாவை மட்டுமாலேயே ப்ரீதி அடைகிறான் –
அப்போது அவன் ஞான யோக நிஷ்டன் -வஸீகார ஸம்ஹை -வைராக்யம் -இறுதி நிலை -உயர்ந்த படி
த்ருஷ்ட -பலன்களில் ஆசை இல்லாமல் –ஸ்ரவண-கேட்டு விஷய வித்ருஷ்ண்யா ஆசை இன்மை -பதஞ்சலி யோக சாஸ்திரம்
பிரகலாதன் பாம்பு கடிப்பதையும் அறியாமல் -மலையில் இருந்து தள்ளி விட்டாலும் உள்ளே இருக்கும்
அவனுக்கு என்ன ஆகுமோ -என்று உடலை அறியாமல் இருந்தானே
ஆஹ்லாத -குளிர்ந்து -அவன் உள்ளே இருப்பதையே நினைத்து இருந்தானே
இங்கு ஜீவாத்மாவைப் பற்றி அப்படி இருக்க வேண்டும்
————–
துக்கேஷ்வநுத் விக்நமநா ஸுகேஷு விகத ஸ்ப்ருஹ-
வீத ராக பய க்ரோத ஸ்திததீர் முநிருச்யதே–৷৷2.56৷৷
துக்கேஷு -துன்பம் தருமவை வந்து அடைந்த போதிலும்
அநுத் விக்நமநா -துன்பப் படாதவனாய்
ஸுகேஷு -இன்பம் தருமவை வந்த போதிலும்
விகத ஸ்ப்ருஹ-அவற்றில் ஆசை அற்றவனாய்
வீத ராக பய க்ரோத -ராகம் பயம் கோபம் அற்றவனாய்
முனிர் -ஆத்மாவைப் பற்றியே மனனம் செய்கின்றவனாய் இருப்பவன்
ஸ்திததீர் உச்யதே–ஸ்தித ப்ரஞ்ஞன் எனப்படுகிறான்
துன்பம் தருமவை வந்து அடைந்த போதிலும் துன்பம் அடையாதவனாய் –
இன்பம் தருமவை வந்த போதிலும் அவற்றில் ஆசை அற்றவனாய் –
ஆசை பயம் கோபம் முதலியவை அற்றவனாய் -ஆத்மாவைப் பற்றியே மனனம் செய்பவனாய்
இருப்பவன் ஸ்தித பிரஞ்ஞன் எனப்படுவான்
ஏகேந்த்ரம் -மனன சீலன் முனி –
ஆத்மா இடமே மனசை செலுத்தி -துக்கம் வந்தால் கலங்காமல் -சுகம் வந்தால் மகிழாமல் —
கீழே சுகம் துக்கம் -இங்கு சுக காரணம் -துக்க காரணம் –
ராகம் பயம் க்ரோதம் மூன்றையும் விட்டு –அநாகதேஷூ ஸ்ப்ருஹ ராகம் -வர போகும் நல்லது பற்றி
இனம் புரியாத ஆசை வருமே அது தான் ராகம் –
பிரிய விஸ்லேஷம் அப்ரிய ஆகாத —பயம் முதல் நிலை –
அப்புறம் துக்கம் –எதிர்பார்க்கும் நிலையில் –
க்ரோதம் -பயம் -வந்து -செய்யும் செயல்கள் தானே –
ஆசை மாறி கோபம் -ஆசை இருந்தால் தானே கோபம் வரும் –
ஏக இந்திரிய ஸம்ஹை -மனஸ் ஒன்றே
கீழே உலக விஷயங்களை அறிவதே இல்லை -இது ஏற்பட மூன்றாம் நிலை வேண்டுமே
உலக விஷயங்கள் தெரிந்தாலும் சுக துக்கம் வந்தாலும் பாதிக்கப்படாமல் -மனசால் படாமல் –
இவற்றில் பற்று இல்லாமல் இருப்பவன்
வரும் காலம் துக்கம் வருமோ என்ற எண்ணமே பயம்
வீத பய -விட்டு விட்டவன்
வீத ராக -நாளை இன்னும் வேண்டும் ஆசை அற்றவன்
க்ரோதம் -ஆசைப்பட்டது ஓன்று கிடைக்காமல் -ஆசைப் படாதது கிட்டியதால் -அடையும் மனசின் மாறுபாடு
சேதனன் மேல் -வருமது தானே கோபம்
இதுக்கு ஹேது பூதன் -சேதனாந்தரனுக்கு துக்கம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணமே கோபம்
நிர்வேதம் -தன்னையே இகழ்ந்து கொள்வது –
முனி மனன சீலன் -இவருக்கு ஆத்மாவிலேயே நினைவு –
த்யானம் செய்யச் செய்ய வாசனையும் போகும்
பதிவுகள் நீங்காமல் இருக்கும் இந்த மூன்றாவது நிலையில்
ஆசைகளை அடியோடு நின்ற நிலை அடுத்தது -இது ஒன்றே வாசி
————–
ய ஸர்வத்ராநபி ஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய ஸூபாஸூபம்.–
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—–৷৷2.57৷
ய -எவன் ஒருவன்
ஸர்வத்ர-இனிய பொருள்கள் அனைத்திலும்
அநபி ஸ்நேஹஸ் -மிகுந்த ஈடுபாடு அற்றவனாய்
தத்தத் ஸூபாஸூபம்.–அந்த அந்த நன்மை தீமைகளை
ப்ராப்ய-அடைந்தும்
நாபிநந்ததி -நன்மையைப் புகழ்வது இல்லையோ
ந த்வேஷ்டி -தீமையை இகழ்வதும் இல்லையோ
தஸ்ய ப்ரஜ்ஞா -அவனுடைய அறிவு
ப்ரதிஷ்டிதா—–நிலை நிற்கிறது – அவனும் ஸ்தித ப்ரதிஞ்ஞன் -என்றபடி
எவன் ஒருவன் இனிய பொருள்கள் அனைத்திலும் மிகுந்த ஈடுபாடு அற்றவனாய் –
அந்த அந்த நன்மை தீமைகளை அடைந்தும் -நன்மையைப் புகழ்வது இல்லையோ –
தீமையை இகழ்வது இல்லையோ -அவனுடைய அறிவு நிலையானது
வ்யதிரேகம் -ஆசையை திருப்புவது –இவன் தான் ஞான யோகி –
எங்கும் இருந்து -ஆசை காட்டாமல் உதாசீனனாக -பற்று அற்று –
ஸூபம் அஸூபம் -இன்பமோ துன்பமோ படாமல் -பக்குவப்பட்டு -புகழுவதும் இகழுவதும் இல்லாமல்-
வ்யதிரேக ஸம்ஹை இது – வேறுபாடு அறிவது வைராக்யம் வளர்க்க -இது வேண்டும்
சில ஆசைகள் முதல் நிலையில் விலகி -மீதம் உள்ளவற்றையை ஆலோசனை பண்ணி விட்டு விட முயல வேண்டுமே
இந்த ஆலோசனை -பிரித்துப் பார்த்து -விடுவது -வ்யதிரேக -விசேஷித்து -சிறப்பான முயற்சி செய்வது தான் இது
அபி -சப்தம் -ரொம்ப பாசம் சுகம் துக்கம் இல்லை இந்த நிலையில் -ஆனால் ஓர் அளவில் உண்டு இவனுக்கு
————–
யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷
யதா -எப்போது
அயம் -இந்த ஞான நிஷ்டன்
இந்த்ரியாணீ-விஷயங்களைத் தொட முயலும் இந்திரியங்களை
கூர்மோங்காநீவ-கூர்ம அங்காநி இவ -ஆமை தன்னுடைய அவயவங்களை உள்ளே இழுத்துக் கொள்வது போல்
ஸர்வஸ-எல்லாப் படியாலும்
இந்ந்த்ரியார்தேப்யஸ் -சப்தம் முதலான விஷயங்களில் நின்றும்
ஸம் ஹரதே -இழுத்துக் கொள்கிறானோ
தஸ்ய ப்ரஜ்ஞா -அவனுடைய அறிவு
ப்ரதிஷ்டிதா—-நிலை நிற்கிறது -அவனும் ஸ்தித ப்ரதிஞ்ஞனே என்கை
எப்போது இந்த ஞான நிஷ்டன் இந்திரியங்களை ஆமை அவயவங்களை இழுத்துக் கொள்வது போலே
எல்லாப் படியாலும் விஷயங்களில் நின்றும் இழுத்துக் கொள்கிறானோ அவனுடைய அறிவு நிலையாக நிற்கிறது
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா–அவனுடைய ஞானம் நிலை பெற்றது -மீண்டும் மீண்டும் வரும் –
ஆமை -போலே சுருக்கிக் கொண்டு -விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்து —
பகவத் விஷயம் மட்டுமே -கண்டு பேசி கேட்டு -சப்த்தாதிகளில் இருந்து இழுத்து –
அப்பொழுது தான் மனசை ஆத்மா இடம் செலுத்த முடியும் —
யதமான ஸம்ஹிதா -யத்னம் செய்பவன் பற்றி இது -முதல் நிலை –
சப்தம் ஸ்பர்சம் ரூபம் கந்தம் ரஸம் -ஐந்து விஷயங்கள் -அர்த்தங்கள்
கண் காது மூக்கு நாக்கு தோல் -ஐந்து இந்திரியங்கள் -ஆசைப்பட்டு போகுமே
அவற்றை உள் வாங்கி தடுத்து அடக்கி திருப்ப வேண்டுமே -ஸம்ஹரதி-ஆமை த்ருஷ்டாந்தம் –
தேவையில்லாத விஷயங்களில் இருந்து இழுத்துக் கொள்ள வேண்டுமே
ஸர்வத்ர -எல்லாப் படிகளாலும் -எல்லா புலன்களையும் அடக்க வேண்டுமே -ஸர்வ ஸஹ –
தோஷங்களைப் புரிந்து கொண்டு இழுக்க வேண்டும்
மூன்றாம் நிலையில் -வாசனை போக்கவே முனி பத பிரயோகம்
மனனம் பண்ணப் பண்ணவே போக்க முடியும் –
புருஷனை வெறுக்கும் பெண்ணை உயர்ந்த ஆணைக் காட்டித் திருத்தி –
அவளது ஆண் த்வேஷம் விலக்குவது போல் -தாத்பர்ய சந்திரிகை தேசிகன் காட்டி அருளுகிறார்
————–
ஞான யோகம் அடைவது மிகவும் கடினம் என்று இரண்டு ஸ்லோகங்கள்
எளிய வழி -61- ஸ்லோகத்தில்
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷
நிராஹாரஸ்ய -நிர் ஆஹாரஸ்ய -விஷயங்களில் நின்றும்
தேஹிந–இந்திரியங்களை இழுத்த -தேஹம் உடைய -ஜீவனுக்கு
விஷயா -விஷயங்கள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் -நிறம் ரசம் சுவை கந்தம் மணம் –
ரஸவர்ஜம் -அவற்றில் ஆசை தவிர –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்
விநிவர்தந்தே -நீங்கு கின்றன-ஆசை மாத்ரம் நீங்குகிறது இல்லை
அஸ்ய -இந்த ஞான யோக நிஷ்டனுக்கு
ரஸ அபி -இவ் வாசையும்
பரம் -விஷயங்களைக் காட்டிலும் ஸூகமாய் இருக்கையாலே மேலான ஆத்ம ஸ்வரூபத்தை
த்ருஷ்ட்வா நிவர்ததே–கண்டவுடனே நீங்குகிறது
விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை
ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் –
ஏக ஆஸ்ரய தோஷம்
ஆசை தவிர விஷயங்கள் -சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர எல்லாம் போகும் –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்
ஆசை கூட ஆத்ம சாஷாத்காரம் வந்தால் போகும் –
பிள்ளை உறங்கா வல்லி தாசருக்கு உயர்ந்த திருக்கண் அழகைக் காட்டி திருத்திய ஐதிக்யம் போல்
யோநித்ய –அச்யுத பதாம்புஜ ருக்ம யுக்ம ஆசை கொண்டு லௌகிக விஷய வைராக்யம் அடைந்தது போல்
—————–
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷
கௌந்தேய -குந்தி புத்ரனே
விபஸ்சித.–பகுத்து அறிவு யுடையனாகவும்
யததா அ பி -ஆத்ம தரிசனத்தின் பொருட்டு முயற்சி செய்பவனாய் இருந்தாலும்
புருஷஸ்ய -மனிதனுடைய
ப்ரமாதீநி-பலமுடையவையான
இந்த்ரியாணி -இந்திரியங்கள்
ஹரந்தி ப்ரஸபம் மந—நெஞ்சை பலாத்காரமாக இழுக்கின்றன
குந்தீ புத்திரனே
அறிவாளியாயும் -ஆத்மாவைக் காண்பதற்கு முயற்சி செய்பவனாயும் இருந்த போதிலும்
மனிதனுடைய வலிமையான இந்திரியங்கள் நெஞ்சை வலிந்து இழுக்கின்றன
இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் —
பிரத்யனம் செய்தாலும் —
இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –
—————-
தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.61৷৷
தாநி ஸர்வாணி -விஷய ராகம் உள்ளதாய் இருக்கையாலே வெல்ல அரிய அந்த எல்லா இந்திரியங்களையும்
ஸம் யம்ய -விஷயங்களில் நின்றும் இழுத்து
மத்பர-என்னிடமே ஈடுபட்டு
யுக்த -சித்த யுடையவனாய்
ஆஸீத –வாழக் கடவன்
யஸ்ய- எவனுக்கு
இ ந்த்ரியாணி-மனம் முதலிய இந்திரியங்கள்
வஸே -என்னுடைய அருளால் வசப்பட்டு நிற்கின்றனவோ
தஸ்ய ப்ரஜ்ஞா -அவனுக்கு அறிவு
ப்ரதிஷ்டிதா—ஹி—நிலை நிற்கின்றது அன்றோ
எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –
எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –
குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் –
சித்த சமாதானம் உடன் அவன் இடமே நிலை பெற செய்து
ஜிஹ்வே கேசவ கீர்த்தி -படைத்த பலன் -மயில் கண்ணுக்கும் நம் கண்ணுக்கும் வாசி இருக்க வேண்டுமே
பாம்பு பூத்து ஓட்டைக்கும் காது ஓட்டைக்கும் –
பிணம் கைக்குக்கும் நம் கைகளுக்கும் –
மரம் வேருக்கும் நம் காலுக்கும் –
வாசி உண்டே அன்றோ
ஈஸ்வராய நிவேதிது–முக்கரணங்களாலும் கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
ஐவர் திசை திசை வலித்து ஏத்துகின்றனர்
கட்டுப்படுத்த முடியாது
ஆகவே உலக விஷயங்களில் இருந்து இழுத்து
அவன் இடம் ஈடுபட்டால் –
கண் அவனையே கண்டு
நாக்கு வாய் அவனையே பேசி
மெதுவாக பாபங்களைப் போக்கும்
நெருப்பு கொழுந்து விட்டு எரிய -மனசில் விஷ்ணுவை வைத்தால் -யோகிகளுக்கு -த்யானிப்பவர்களுக்கு –
சர்வ கில்மிஷம் -போக்கிக் கொடுத்து அருள்கிறான் –
திவ்ய மங்கள விக்ரஹத்தில் ஆழ்ந்து -மனஸ் -ஒருமிக்க –
பரமாத்மநி ரக்த -இடம் கொடுக்க -அவனே மற்றவற்றை அகற்றி முழுவதும் வியாபித்து அருளுவான் அன்றோ
—————–
கீழே மனசை அவன் பக்கம் ஈடுபடுத்தி இந்திரியங்களை வெல்லலாம் என்றவன்
அப்படி செய்யாமல் தானாகவே இந்திரியங்களை வெல்ல நினைக்கும் அதிகாரி நிலையை
இதிலும் அடுத்த ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறான்
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷
த்யாயதோ விஷயாந் -என்னை த்யானிக்காத -சப்தம் முதலிய ஐந்து விஷயங்களையும் அநாதி வாசனையினால் சிந்திப்பவனாய் –
பும்ஸஸ் -அதிகாரிக்கு
ஸங்கஸ் தேஷூ-அவ்விஷயங்களில் பற்று
உபா ஜாயதே-வளருகிறது
ஸங்காத்-அப் பற்றினால்
காம-விஷயங்களைப் பெற்று அல்லது தரிக்க மாட்டாமைக்கு உறுப்பான காமம்
ஸம் ஜாயதே -அதிகமாக ஏற்படுகிறது
காமாத் -அந்தக் காமத்தினால்
க்ரோத-கோபம்
அபி ஜாயதே —பரவலாக உண்டாகிறது
சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்
முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது
இதிலும் அடுத்ததிலும் -படிக்கட்டு -அவரோகணம் –
தலை குப்புற விழ –
ஈஸ்வரனை நினைக்காமல் –விஷயாந்தரங்கள் –சங்கம் -பற்று முதலில் பிறக்கும் –
சங்கம் காமமாக மாறும் -ஆசை பிறக்கும் –
கிடைக்காமல் தடுத்தவன் பேரில் க்ரோதம் பிறக்கும்-
இன்னார் இனையார் என்று பார்க்காமல் அன்றோ கோபம் பரவும் -இதற்கு அபி ஜாயதே பத பிரயோகம்
இது மேலும் பரவும் விதம் அடுத்த ஸ்லோகம்
கோபம் வந்தாலே செய்யத்தக்கது செய்யத்தக்கது என்ற பகுத்து அறிவு போகுமே
இதுவே ஸம்மோஹம்
இது நினைவை -இலக்கை அடையும் வழி என்ற நினைவை -அழிக்கும்
அது அறிவை -உறுதியை -அழிக்கும்
இதனால் சம்சார சூழலிலே உழன்று இருக்க நேரிடுமே –
ஆத்ம நாஸத்துக்கே சமம் ஆகுமே
ஆக்கையின் வழியே உழன்று போக நேரிடுமே
—————-
க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷
க்ரோதாத்-கோபத்தினால்
ஸம்மோஹ -செய்யக்கூடிய மற்றும் செய்யக் கூடாத செயல்களை பற்றிய பகுத்து அறிவு இன்மை
பவதி-ஏற்படுகிறது
ஸம்மோஹாத் -பகுத்து அறிவு இன்மை யினால்
ஸ்ம்ருதி விப்ரம—பவதி -இலக்கைப் பற்றின நினைவின் அழிவு ஏற்படுகிறது
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் –நினைவின் அழிவினால்
புத்திநாஸ பவதி -இலக்கை அடைவிக்கும் வழியைப் பின் பற்றுவதில் தேவையான உறுதியின் அழிவு ஏற்படுகிறது
புத்திநாஸாத் -உறுதியின் அழிவினாலே
ப்ரணஸ்யதி—ஸம்ஸாரத்திலே மூழ்கி அழிகிறான்
கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்
க்ரோதம் -வந்தால் பகுத்து அறிவு போகும் —
ஸ்ம்ருதி நினைவு போகும் —
இருக்கும் ஞானமும் அற்று போகும் –
புத்தி நாசம் ஆனால் பிணம் போலே தானே –
இப்படி படிக்கட்டு -கீழே விழ –
—————
இதுவும் அடுத்த ஸ்லோகமும் ஒரு பேடிகை
மனசை அவன் இடம் ஈடுபடுத்த நடக்கும் நன்மைகளை அருளிச் செய்கிறான் –
ஆத்ம சாஷாத்காரம் பெற்று முக்தனாகவே ஆகலாம் என்கிறான் –
ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷
ராக த்வேஷ -எனது அருளாலே ராகமும் த்வேஷங்களும் -ஆசையும் வெறுப்பும்
வியுக்தைஸ்து –நீங்கப் பெற்றவையாய்
ஆத்ம வஸ்யைர் -தனக்கு வசப்பட்டு இருப்பவையான
இந்த்ரியைஸ் -இந்த்ரியங்களால்
விஷயாந் -சப்தாதி விஷயங்களை
சரந்.–கடந்தும் நிற்பவனாய்
விதேயாத்மா -மனத்தை அடக்கியவனான புருஷன்
ப்ரஸாம் -மனத் தெளிவை
அதி கச்சதி–அடைகிறான்
ஆசை வெறுப்பு முதலியவை நீங்கப் பெற்றவையாய்
தனக்கு வசப்பட்டு இருக்கின்ற இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களைக் கடந்து நிற்பவனாய்
மனத்தை அடக்கிய புருஷன் மனத்தெளிவை அடைகிறான் –
நினைத்தால் அருளுவான் -பிரசாதம் -மனஸ் தெளிவு அடைகிறான் –
வசப்பட்ட இந்த்ரியங்களால் விஷயம் தாண்டி –
ராகம் த்வேஷம் இல்லாமல் – தெளிந்த மனசில் ஞான யோகம் பிறக்கும் –
ஒரே படிக்கட்டு வேறு வேறு விதமாக அருளிச் செய்கிறான் –
ஸூபாஸ்ரயம்-திவ்ய மங்கள விக்ரஹம் -மனசால் பிடிக்கும் படியும் -மங்கள கரமாயும் இருக்கும்
பகவத் ஸ்வரூபம் ஸூப மாக இருக்கும் ஆஸ்ரயிக்க துர்லபம்
நமது ரூபம்-ஆஸ்ரயிக்கும் படி இருக்கும் ஸூபமாக இருக்காதே
————–
ப்ரஸாதே ஸர்வ துக்காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே.–
ப்ரஸந்ந சேதஸோ ஹ்யாஸூ புத்தி பர்யவதிஷ்டதே–৷৷2.65৷৷
அஸ்ய -இப்புருஷனுக்கு
ப்ரஸாதே -ஸதி -மனத்தெளிவு ஏற்பட்ட வுடன்
ஸர்வ துக்காநாம் ஹாநி-எல்லாத் துன்பங்களின் அழிவு
உபஜாயதே.–உண்டாகிறது
ஏன் என்றால்
ப்ரஸந்ந சேதஸோ -மனத்தெளிவு ஏற்பட்ட வனுக்கு
ஆஸூ –விரைவில்
புத்தி -ஆத்மாவைப் பற்றின அறிவு
பர்யவதிஷ்டதே–ஹி -நிலை நிற்கிறது அன்றோ –
இவனுக்கு மனத்தெளிவு ஏற்பட்டவுடன் எல்லாத் துன்பங்களின் அழிவு ஏற்படுகிறது –
மனத்தெளிவு ஏற்பட்டவனுக்கு விரைவில் அறிவித் தெளிவு ஏற்படுகிறது அன்றோ
அவனுக்கு தானே -ஞான யோகம் பிறக்கும் –
ஆத்யந்த துக்க நிவ்ருத்தி-மீண்டு வராத துக்கம் – தானே மோக்ஷம் -பேர் இன்பம் –
முக்தன் -தூய்மையான மனஸால்-உடனே புத்தி நன்கு நிலை பெற்று – -ஸ்திர ப்ரஞ்ஞன்-
கர்ம யோகம் செய்து -த்யானமும் செய்து -மனஸ் அழுக்கு போக்க
வெகு விரைவில் ஞானம் நிலை பெற்று -ஆத்ம சாஷாத்காரம் -பக்தி யோகம் -முக்தன் -இப்படிப் படிக்கட்டு
——————–
என்னை நினைக்காமல்- ஈடுபடாமல்- இருந்தால்
ஞான யோகம் கிட்டாது என்று மட்டும் இல்லை
அதனால் அடையப்படும் ஆத்ம சாஷாத் காரமோ
முக்தியோ கிட்டாது என்கிறார் இதில்
நாஸ்தி புத்திர யுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா.–
ந சாபாவயத ஸாந்திர் அஸாந்தஸ்ய குத ஸுகம்–৷৷2.66৷৷
அயுக்தஸ்ய-என்னிடம் ஈடுபடாத நெஞ்சை யுடையவனுக்கு
புத்தி -ஆத்மாவைப் பற்றின அறிவு
நாஸ்தி -ஸித்திக்காது
அயுக்தஸ்ய – அவ்வறிவு அற்றவனுக்கு
பாவநா.– த்யானம் -அந வ்ரத பாவனமே த்யானம்
ந ச அஸ்தி -கை கூடாது
அபாவயத -ஆத்ம த்யானம் அற்றவனுக்கு
ஸாந்திர் -விஷயங்களில் ஆசை இன்மை
ந ச அஸ்தி -ஏற்படாது
அஸாந்தஸ்ய -விஷயங்களில் ஆசை இன்மை அற்றவனுக்கு
குத ஸுகம்–பேர் இன்பம் எவ்வாறு கிட்டும்
என்னிடம் ஈடுபடாதவனுக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவு உண்டாகாது –
அறிவு அற்றவனுக்கு ஆத்ம த்யானம் கைகூடாது
ஆத்ம த்யானம் அற்றவனுக்கு விஷயங்களில் ஆசையின்மை ஏற்படாது –
விஷயங்களில் ஆசையின்மை அற்றவனுக்கு பேரின்பம் எப்படிக் கிடைக்கும்
இன்னும் ஒரு படிக் கட்டு –
ஆத்மா அறிவு இல்லாமல் -புத்தி இல்லாமல் -கண்ணனை நினைக்காமல் -த்யானம் பண்ண மாட்டான் –
விஷய ஆசை போகாதே -பாவனா -த்யானம் -ஷாந்தி ஏற்படாதே -சுகம் -சாஷாத்காரம் கிடைக்காதே
—————-
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநுவிதீயதே—
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவமி வாம்பஸி—৷৷2.67৷৷
சரதாம்-இஷ்டப்பட்டு விஷயங்களில் ஈடுபட்டும்
இந்த்ரியாணாம் -இந்திரியங்களை
யத் மந -எந்த மனம்
அநுவிதீயதே—பின்பற்றும்படி புருஷனால் செய்யப்படுகிறதோ
தத் -அந்த மனம்
அஸ்ய-இப் புருஷனுடைய
ப்ரஜ்ஞாம்-ஆத்ம விஷயமான அறிவை
வாயு -எதிர்த் தசையில் வீசம் காற்றானது
அம்பஸி நாவம் -தண்ணீரால் செலுத்தப்படும் கப்பலை
இவ-எதிர்த் திசையிலே இழுத்துச் செல்வது போலே
ஹரதி ஹி -விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்கின்றது அன்றோ
விஷயங்களில் ஈடுபடும் இந்திரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி
செய்யப்படுகிறதோ அந்த மனம்
இவனுடைய அறிவை காற்றானது கப்பலை இழுப்பது போலே
விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்லுகிறது அன்றோ
மனசை இந்திரியங்கள் பின்னே போக விட்டால் -பட்டி மேய்ந்தால் –
மனம் -ஆத்ம விஷய ஞானத்தை இழுக்கும் –புத்தி வளர விடாமல்
எதிர்த்து வீசும் காற்று படகை தத்தளிக்க விடுவது போலே -ஆகுமே –
பகவானை நோக்கி செலுத்துவதே ஒரே வழியாகும்
——————-
தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—৷৷2.68৷৷
மஹா பாஹோ -தடக் கையனே
தஸ்மாத் -ஆகையால்
யஸ்ய இந்த்ரியாணீ-எவனுடைய இந்த்ரியங்கள்
இந்த்ரியார்தேப்யஸ்-விஷயங்களில் நின்றும்
ஸர்வஸ- எல்லாப் படியாலும்
நிக்ருஹீதாநி –இழுக்கப் பட்டனவோ
தஸ்ய -அவனுக்கு
ப்ரஜ்ஞா -ஆத்ம விஷயமான அறிவு
ப்ரதிஷ்டிதா—நிலை நிற்கிறது
நீண்ட கைகளை உடையவனே
ஆகையால் எவனுடைய இந்திரியங்கள் விஷயங்களில் இருந்து
எல்லாப் படியாலும் இழுக்கப் பட்டனவோ
அவனுக்கு ஆத்ம விஷயமான அறிவு நிலை நிற்கிறது
அதனால் -எல்லா வற்றில் நின்றும் விலக்கி -விஷயங்களில் இருந்து
இந்திரியங்களை அடக்க வேண்டும்
இது வரை இந்திரியங்களை அடக்குவது பற்றி அருளிச் செய்தான்
——————
ஞான யோகத்தின் பலன்களை பற்றி மூன்று ஸ்லோகங்கள் சொல்லி
இரண்டாம் அத்யாயம் நிகமிக்கிறார்
வசீகர ஸம்ஹிதை ஒரு ஸ்லோகத்திலும்
ஏகாந்தர ஸம்ஹிதை ஒரு ஸ்லோகத்திலும்
வ்யதிரேக யஜமான ஸம்ஹிதை இரண்டையும் ஒரு ஸ்லோகத்திலும் அருளிச் செய்து
அத்யாய அர்த்த சுருக்கம் இறுதியில் ஒரு ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார் –
யா நிஸா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ.
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே–৷৷2.69৷৷
யா -யாதொரு ஆத்ம விஷயமான அறிவு
ஸர்வ பூதாநாம் -எல்லா ஜீவ ராசிகளுக்கும்
நிஸா-இரவு போல் இருண்டு கிடக்கிறதோ
தஸ்யாம் -அவ்வறிவு விஷயத்தில்
ஸம்யமீ–இந்திரியங்களை அடக்கிய ஞான யோகி
ஜாகர்தி-விழிப்புடன் இருக்கிறான்
யஸ்யாம் -யாதொரு ஸப்தம் முதலான அறிவில்
பூதாநி -ஜீவ ராசிகள்
ஜாக்ரதி -விழிப்புடன் விளங்குகின்றனவோ
ஸா -அவ் வறிவு
பஸ்யதோ -ஆத்மாவைப் பார்க்கிறவனாய்
முநே–அதை மனனம் செய்பவனான ஞான யோகிக்கு
நிஸா-இரவு போல் இருண்டு கிடக்கிறது –
பிராஜ்ஜா பெண் பால் சொல் அறிவு முன்பு சொல்லப் பட்டது
அத்தையே இங்கு -ய -எவள் ஒருத்தி -எந்த அறிவானது பொதுச் சொல்
யாதொரு ஆத்ம விஷயமான அறிவு எல்லா ஜீவ ராசிகளுக்கும் இரவு போலே இருந்து இருக்கிறதோ –
அவ் வறிவு விஷயத்தில் இந்திரியங்களை அடக்கியவன் விழிப்புடன் இருக்கின்றான்
யாதொரு சப்தாதி விஷயமான அறிவில் உலகோர் விழித்து இருக்கிறார்களோ அவ் வறிவு
ஆத்மாவைப் பார்ப்பவனாய் அதையே மனனம் செய்பவனுக்கு இரவு போல் இருந்து கிடக்கின்றது
முதிர்ந்த நிலை –ஞானிக்கு பகல் இரவு -உலோகோருக்கு மாறி -ஆத்ம விஷய ஞானம் வெளிச்சம் -இவனுக்கு –
உலக விஷயம் இவனுக்கு இரவு–மஹாத்ம்யம் தெரிவிக்கிறான் –
வஸீ கார ஸம்ஹிதை நான்காம் நிலை -மனம் முழுவதும் ஆத்மாவையே சிந்தித்து
உலக விஷயங்களில் வைராக்யம் -அறிவதே இல்லை
ஆத்ம தர்சனம் நிலை பெற்றவன் ஆகிறான்
சப்தாதி அதர்சன பர்யவசி -மற்றவற்றைக் காணாத அளவில் -என்றபடி –
————
ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷
யத்வத்–எப்படி
ஆபூர்யமாணம் –தானே நிறைந்து இருப்பதாய்
அசல ப்ரதிஷ்டம் -ஒரே நிலையில் இருப்பதான
ஸமுத்ரம் -கடலை
ஆப ப்ரவிஸந்தி .–நதீ ஜலங்கள் பிரவேசிக்கின்றனவோ
தத்வத் -அப்படியே
ஸர்வே காமா -ஸப்தம் முதலான விஷயங்கள் அனைத்தும்
யம் ப்ரவிஸந்தி -எவனைப் பிரவேசிக்கின்றனவோ
ஸ -அவனே
ஸாந்திம் ஆப்நோதி-விஷய அனுபவங்கள் நீங்கப் பெறுகை யாகிற சாந்தியை அடைகிறான்
காமகாமீ ந ஆப்நோதி —ஸப்தம் முதலான விஷயங்களை விரும்பி விகாரம் அடைபவன் சாந்தியை அடைவது இல்லை-
எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை
நடு நிலை –இதில் -சமுத்திரம் உதாரணம் -தானே நிறைந்து -கலக்க முடியாதே -நதிகள் வந்து நிறைக்க வேண்டாம் –
நதிகள் ஓடி சமுத்திரத்தில் சேருமோ அதே போலே -ஞான யோகி -தானே மனனம் பண்ணி நினைவு –
நல்லது கண்டு ஆனந்தம் -கெட்டது கண்டு துக்கம் இல்லை -நதிகள் சேர்ந்து கடல் உயராதது போலே
இந்திரியங்கள் விஷய அனுபவம் மனஸ் உள்ளே வந்தாலும் -ஸூகமோ துக்கமோ இல்லாமல் –
விகாரம் இல்லாமல் -என்றவாறு
கீழே உள்ளேயே வர விட மாட்டாதவன் நிலை -உயர்ந்தது
முனி ஆத்மாவையே மனனம் பண்ணி தன் நிறைவு பெற்று -ஆத்மாவை நினைத்தே பூர்ணமாக இருக்கும் ஞான யோகி
விகாரம் அடையாமல் -அசல ப்ரவிஷ்டாம் -கடல் போல் நிரம்பி அசையாமல் -இருப்பானே
ஏகேந்த்ர ஸம்ஹிதை நிஷ்டன் இதில்
பற்றுதல் -காமம் -ஆசையின் முதிர்ந்த நிலை -இங்கு காமம் -ஆசையை விளைவிக்கும் சப்தாதி விஷயங்கள் –
இவை அவனால் அறியப்படுவதாக இருந்தாலும் விகாரம் அடைவது இல்லை
நதி ஜலம் வருவதால் நிறைந்தும் வராவிடில் குறைவதும் இல்லையே கடலுக்கு
அதே போல் இங்கும் இந்த ஞான யோகி மாறாமல் இருக்கிறான் என்றவாறு –
சுகம் துக்கம் இவை வருவதற்குக் காரணம் இருந்தாலும் விகாரம் அடையாதவன் தானே மூன்றாம் நிலை
இவன் தானே அடுத்த நிலைக்குப் போவான்
காம காமீ -சப்த்தாதி விஷயங்களுக்கு ஆசைப்படுபவன்
இவன் அப்படி இல்லையே
இவனும் ஆத்மாவைக் கண்டு கொண்டு இருப்பவன்
அடுத்த நிலை தானே ஆத்மாவை மட்டுமே கண்டு கொண்டு இருப்பவன்
————–
விஹாய காமாந் யஸ் ஸர்வாந் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ—.
நிர்மமோ நிரஹங்கார ஸ ஸாந்தி மதிகச்சதி–৷৷2.71৷৷
ய புமான் -எந்த மனிதன்
ஸர்வாந் காமாந்-ஸப்தம் முதலான விஷயங்கள் அனைத்தையும்
விஹாய -கை விட்டு
நிஸ்ப்ருஹ-அவற்றில் ஆசை அற்றவனாய்
நிர்மமோ-மமகாரம் அற்றவனாய்
நிரஹங்கார-அஹங்காரம் அற்றவனாய்
சரதி-வாழ்கிறானோ
ஸ -அவன்
ஸாந்திம் அதி கச்சதி–விஷய அனுபவம் நீங்கப் பெருகை யாகிய சாந்தியை அடைகிறான் –
எந்த மனிதன் சப்தாதி விஷயங்கள் அனைத்தையும் விட்டு -அவற்றில் ஆசை அற்றவனாய் –
மமகாராம் அஹங்காரம் அற்றவனாய் வாழ்கிறானோ அவன் சாந்தியை அடைகிறான்
முயல்பவன் நிலை –ஸாந்தி அடைகிறான் –பகவானையே நினைந்து –விஷயங்களை விலக்கி- –
ஆசையை விலக்கி -என்னது இல்லை –
அஹங்காரம் தொலைத்து -மமகாராம் -இப்படி ஒரு படிக் கட்டு -அநஹத்தை அஹமாக நினைப்பது –
நான் அல்லாத சரீரத்தை ஆத்மா நினைப்பது அஹங்காரம் –
தான் அல்லாததை தான் என்று நினைப்பது அஹங்காரம் -தன்னது அல்லாததை தன்னது என்று நினைத்தால் மமகாராம் –
முதலில் மமகாராம் தொலைத்து -தேகம் உடன் சம்பந்தம் பெற்றதை விலக்குவோமே -அஹங்காரம் போகும் –
முதல் இரண்டு நிலைகள் இதில்
சப்தாதி விஷயங்களைக் கை விட்டு -ஆமை போல் -யஜமான சம்ஹிதை -முதல் நிலை
ஸர்வான் காமான் -அனைத்தையும் –
புலன்களையும் மாற்று -ஒதுக்கி அடுத்து பற்றுதலையும் விட்டு
பற்று அற்றவனாக இருப்பவன் -இரண்டாம் நிலை -ஆசையையும் நீக்கி -வியதிரேக ஸம்ஹிதை –
இன்னும் இரண்டு நிலைகள் வேண்டும்
மமகாரம்
அஹங்காரம்
போக்க வேண்டுமே
சங்கிலித் தொடர் இவை
உடலே நான் என்று -தேஹாத்ம பிரமம் அஹங்காரம் –
இது வந்தால் என்னது மமகாரம் வரும் –
அடைய ஆசை வரும் ஸ்ப்ருஹ
அடைய முயல்வான்
இந்த நான்கும் கூடாது அன்றோ
உடலுக்கு நன்மைகள் தரும் ஒழிய ஆத்மாவுக்கு விநாச ஹேது அன்றோ –
—————–
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி பார்த்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி–.
ஸ்தித்வாஸ்யாமந்த காலேபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி—৷৷2.72৷৷
பார்த்த-அர்ஜுனா
ஏஷா ஸ்திதி-ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு அஸங்க கர்மத்தில் இப்படி நிலை நிற்பது
ப்ராஹ்மீ -ஞான யோகத்தை விளைப்பதன் மூலம் ப்ரஹ்மம் எனப்படும் ஆத்மாவை அடைவிக்கிறது
ஏநாம் -அசங்க கர்மத்தில் நிலை நிற்பதாகிய இதை
ப்ராப்ய-அடைந்து
நவி முஹ்யதி-ஒருவன் சம்சாரம் மயக்கம் அடைவது இல்லை
அஸ்யாம் -இந்தக் கர்மயோக ஸ்திதியில்
அந்த காலேபி -ஆயுளின் கடைசிப் பகுதியில் ஆவது
ஸ்தித்வா -நிலை நின்று
ப்ரஹ்ம நிர்வாணம் -ஸூக ரூபமான ஆத்மாவை
ருச்சதி—அடைகிறான் –
அர்ஜுனா இப்படிப்பட்ட நிலை ப்ரஹ்மம் எனப்படும் ஆத்மாவை அடைவிக்கிறது –
இதை அடைந்து மனிதன் மயக்கம் அடைவது இல்லை –
ஆயுளின் கடைசிப் பகுதியிலாவது இதில் நிலை நின்று ஆத்மாவை அடைகிறான்
சுகமான ஆத்ம தர்சனம் -அசங்க கர்மத்தை ஆத்ம ஞானம் உடன் அனுஷ்ட்டித்து –
பற்று அற்ற கர்ம யோகம் ஞானத்துடன் –சோகப்பட மாட்டான் –
கர்ம யோகத்தில் இருந்து கடைசி காலத்தில் ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான் –
பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் அடையும் பலன் இதில்
ஞான யோகம் கர்ம யோகத்தின் அடுத்த நிலை தானே
ஆத்மாவை உண்மையாகப் புரிந்து மோக்ஷத்துக்காக -மட்டுமே -தாழ்ந்த பலன்களில் பற்று அற்ற –
அசங்க கர்ம அனுஷ்டானம் செய்வதன் பலன்
இப்படிச் செய்வதே கர்ம யோகம் ப்ரஹ்மத்தையே அடைவிக்கும்
இந்தப் பிரகரணம் -உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்ம ஸ்வரூபம் -சொல்லப்படுகிறது
பார்த்தா -என்னுடைய அத்தை பிள்ளையே -இதுவே உனக்குத் தகுந்தது -தர்ம யுத்தம் உனக்கு விதிக்கப் பட்டுள்ளது –
தேஹாத்ம பிரமம் -கலக்கம் மயக்கம் போகுமே
பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கும் -அழுக்கு – அடைய மாட்டான் –
அந்த காலத்தில் -கடைசிக் காலத்தில் இந்த நிலையில் இருந்தால் கூட பயன் பெறுவான் என்றவாறு –
இறுதிக் காலத்தில் இருந்தாலே இப்படி ஸூகம் கிட்டும் என்றால் இளைய வயதிலே பண்ணலாம்
பண்ணா விட்டாலும் துக்கப்படாதே என்று அருளிச் செய்கிறான்
ஆத்மாவை அறிந்து அதில் ஆனந்தம் அடைந்து சாந்தி அடைகிறான் என்றவாறு
இந்த அத்யாயம் கர்மயோகம் சொல்ல
வந்தது அதன் இலக்கம் ஞான யோகம் என்பதால் அத்தையும் அருளிச் செய்தான்
சாங்க்ய யோகம் –
நித்ய ஆத்மா உபதேசம் தொடங்கி
அசங்க கர்ம ஈகா அனுஷ்டானம்
இரண்டையும் உபதேசம்
நிலை பெற்ற ஞானம் ஜித தீ ப்ரஜ்ஜா இலக்கு -அடையப்படும் பலன்
கலக்கம் போக்க -மோஹம் சாந்தி அடைய உபதேசம் –
மகா விஷ்ணு லஷ்மி தேவியிடம் சொல்ல ருத்ரன் பார்வதிக்கு சொல்லிய கதை -2 அத்யாயம் பலன் –
தேவ சர்மா -புரந்தரம் வாழ்ந்து கர்மாக்கள் பல செய்தாலும் சாந்தி இல்லாமல் நிம்மதி இல்லாமல் இருந்தான்
ஹோமங்கள் பல செய்தாலும் -இவை அனைத்தும் ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகலோடு ஆகும்
இடையனைப் பார் என்று சொல்ல அவனும்
கோதாவரிக் கரையில் மித்ரவானைப் பார்த்து
சாந்தி தவழும் திரு முகத்துடன் இருக்க
அவனை சேவிக்க -அவனும் இவரை உட்க்கார வைத்து உபசரித்தான்
மாடு கன்று மேய்த்து கவலை இல்லாமல் இருக்கிறேன்
ஆட்டுக் கிடாயில் ஒரு ஆடு மூலம் சாந்தியாக இருக்கிறேன் -என்றான்
ஆட்டை புலி துரத்த -பின் சென்றேன்
முன் யுகத்தில் துர்மதன் கோதாவரி கரையில் ப்ராஹ்மணன் தூர்த்த சகவாசம்
முன்பு -நரகம் சென்று துக்கம் அனுபவித்து முடித்து மீண்டும் ப்ராஹ்மணானாக பிறந்து
தாசி இடம் செல்ல -அவளோ வேறே ஒருவன் இடம் இருக்க –பிராணன் போக பிசாசு ஆகி -வேடன் அடித்து கொல்ல
அவர்களே இந்த ஜென்மத்தில் வேடன் புலி பிசாசு ஆடு
-ஓடும் பொழுது ஒரு விஷ்ணு கோயில் அருகில் வர சடக்கென நிற்க
முன் யுகத்தில் நான் செய்த தப்பு உணர்ந்தேன் -நான் உனக்கு இறை ஆவேன் என்று சொல்ல
இவனும் உன்னைக் கொன்றால் என்ன பலன் என்று சொல்ல
இருவருக்கும் ஞானம் வர
மித்ரவான் இடம் காரணம் கேட்க
அந்த மரத்தின் மேல் குரங்கு சாந்தி தோன்ற இருக்க
அது சொல்லிய விருத்தாந்தம்
கோயில் பாறாங்கல் முழுவதும் 2 அத்யாய ஸ்லோகங்கள்
தேவர்கள் கட்டிய கோயில்
அங்குள்ள அர்ச்சகர் மனம் சாந்தி இல்லாமல் இருக்க -வேத வித்து வந்து இவற்றைக்
கையால் எழுதி தினம் சொல்ல சாந்தி வரும் என்றார்
அப்படியே அவரும் செய்து சாந்தி பெற
நானும் தினமும் அத்தைப் பார்த்து குரங்கு தன்மை இல்லாமல் வருபவர்களுக்கு உபதேசிக்கிறேன் என்றதாம்
கொல்லப்பட்டேன் என்பதும் கொன்றேன் என்பதும் சொல்பவர்கள் அறிவிலிகள்
தேவ சர்மா இத்தைக் கேட்டு பற்று அற்றவனாக வாழ்ந்தான்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –