Archive for September, 2016

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-7-

September 20, 2016

அநு கரித்து தரித்து பார்த்த இடத்திலும் அதுவும் ஸ்மாரகமாய்க் கொண்டு மிகவும் வியஸன ஹேதுவாய் -இவ்வளவிலும்
அவன் வந்து முகம் காட்டக் காணாமையாலே -நம் பக்கல் தன்னை அனுபவிக்கைக்கு பரிகரமான ஞான பக்தியை
தன்னைப் பெறுகைக்கு சாதனங்களாக நினைத்து இவ்வுபாயம் தலைக் கட்டினவாறே நம்மை பிராபிக்கிறார் என்று
அவன் ஆறி இருந்தானாகக் கொண்டு அவனுக்கு தன் நிலையை விண்ணப்பம் செய்யவே தம் அபேக்ஷிதம் கிட்டும் என்று பார்த்து அருளி
-தம் பரிகரம் அடங்க சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளின ஸ்ரீ வானமா மலையை தன் வெறுமையை முன்னிட்டு கொண்டு சரணம் புகுகிறார் –

—————————————————————-

எனக்கு பேற்றுக்கு உடலாய் இருபத்தொரு கைம்முதல் இல்லை -இல்லாமையாலே ரக்ஷக அபேக்ஷை யுண்டு -பூர்ணரான தேவர் ரஷ்ய விஷயர்த்தியாய் இருந்தீர் -ஆகையாலே தேவரீர் என் அபேக்ஷிதம் செய்து அருள வேணும் என்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

நோற்ற நோன்பிலேன்
நோன்பிலேன் என்னாதே-நோற்ற நோன்பிலேன் -என்கிறது -பல வியாப்தமாம் படி யனுஷ்டித்தமாய் இருபத்தொரு கர்மம் இல்லை என்கிறது -என் ஆற்றாமையால் சில யுண்டானாலும் சக்ரவர்த்தியுடைய புத்ர காமேஷிடி போலே யாதல் -ஸ்ரீ வ ஸூ தேவருடைய அநந்த விரதம் போலே பல வியாப்தமாய் இருபத்தொரு தர்மம் இல்லை –ந தர்ம நிஷ்டோஸ்மி-என்கிற இடத்தில் தர்மம் இல்லை என்னாதே தர்ம நிஷ்டை இல்லை என்றால் போலே –
நுண்ணறிவிலேன்-
அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இ றே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று -இவை இல்லை யாகில் முதல் இல்லார் அத்தாலே வரும்
பலத்தை இழக்கும் அத்தனை அன்றோ -என்னில்
ஆகிலும் இனி உன்னை விட்டொன்று-ஆற்ற கிற்கின்றிலேன் –
இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இ றே
இனி -என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ
இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –
அரவின் அணை அம்மானே!
இதுக்கு கீழே தம்முடைய வெறுமை சொல்லிற்று -இதுக்கு மேலே அவனுடைய உபாய பாவம் சொல்லுகிறது -அவனைப் பார்த்தாலும் இவருக்கு இழக்க வேண்டா -தம்முடைய அதிகாரத்தை பார்த்தாலும் இழக்க வேண்டா -திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக உடைய சர்வேஸ்வரனாய் வைத்து -விசத்ருசமான சம்சாரத்திலே ஒரு ஹேது இன்றிக்கே இருக்க புகுந்து இருக்கிறது என்னை விஷயீ கரிக்கைக்காக வன்றோ அரவை அணையாக யுடைய சர்வேஸ்வரனே
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வரள் தாமரை யுண்டாகையாலே -சேற்றுத் தாமரை என்று விசேஷிக்கிறார் -செந்நெல்களூடே அலர்ந்த தாமரைகள் செந்நெலுக்கும் கூட நிழல் செய்யா நிற்கும் என்கை -வான மா மலைக்கு சத்ருசமாய் இருந்துள்ள போக்யதையைச் சொல்லுகிறது
பரமபதத்தில் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வர்த்திக்கிற தேசம் -சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே
அஜஹத் ஸ்வ பாவனாய் வருகையால் தன் ஐஸ்வர்யத்தால் உள்ள வேறுபாடு எல்லாம் தோற்ற இருக்கிற படி -நீ பரமபதத்தில் இருந்தாய் ஆகில் நான் ஆறி இரேனோ-உன் பூர்த்தியில் குறை யுண்டாகில் தான் நான் ஆறி இரேனோ
அவ்விருப்பு சர்வ சாதாரணமாய் இருக்கச் செய்தே-எந்தாய் -என்று -இவர் தம்மை எடுக்கைக்காக என்று இருக்கிறார்
உனக்கு மிகை அல்லேன் அங்கே-அங்கே வீற்று இருந்த உனக்கு மிகை அல்லேன் -ரஷ்ய விஷயம் தேட்டமான உனக்கு புறம்பு அல்லேன் -உன் திருவடிகளில் அடிமை ஒழிய தரிக்கும் பிரகிருதி அல்லேன் -தவ சார்த்த பிரகல்பதே என்கிறபடியே இத்தலையில் பேறால் வந்த உகப்பும் தேவர்க்கே என்றுமாம் -ப்ரீதி உன் பக்கலிலே யானால் இழவும் உன் பக்கலிலே யாக வேண்டாவோ –

————————————————————-

ஆற்ற கிற்கின்றிலேன் -என்கிற ஆற்றாமை போருமோ-பிரதிபந்தகங்கள் உண்டே என்னில் -அத்தையும் பிராட்டியுடைய விரோதியை போக்கினால் போலே தேவரே போக்கி கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்-எங்குற்றேனுமலேன்
சாதனம் அனுஷ்ட்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் -சாதனம் அனுஷ்டானம் பண்ணுமவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி ஸுந்தரியாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணும் ஆசையால் பலஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டான ஷமனும் அல்லேன் -இது பூர்வர்கள் நிர்வாகம் –
அதவா –
நீ இருந்த இடத்தே வந்து கிட்டி உன்னை அனுபவிக்கிறேன் அல்லேன் -உன் பக்கல் நிரபேஷராய் இருக்கிற சம்சாரிகளிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -உன்னை ஒழிய தரித்து இருக்கிற சம்சாரிகளோடே பொருத்தம் யுடையேன் அல்லேன் –அங்கு வர மாட்டேன் -அபி நிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருத்தம் உடையேன் அல்லேன் -என்றுமாம் –
இலங்கை செற்ற அம்மானே!
இவ்வளவில்-செய்ய அடுத்து என் -என்ன -தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்தவள் விஷயத்தில் பண்ணினதை என் விஷயத்தில் பண்ண வேணும் –
அம்மான் -சர்வ சாதாரணன் ஒரு வியக்தியிலே செய்தது எல்லாருக்கும் பொது வன்றோ -பிராட்டியோடு சம்சாரியோடு வாசி யுண்டோ ப்ராப்தியில் -த்வயி கிஞ்சித் சமா பன்னே-என்று ஆஸ்ரயித்தவன் பக்கல் பக்ஷ பாதம் மிக்கு அன்றோ இருப்பது -பிராட்டி இலங்கையை அழித்தல்-ராவணனை அழித்தல் செய்யில் அன்றோ என் விரோதி நிவ்ருத்தியில் எனக்கு பிராப்தி யுள்ளது -ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ தேஜஸா என்றாள் இ றே-அவதாரத்தில் பிற்பாடார் ஆனீரே என்ன
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சந்த்ர பதத்தில் செல்ல ஓங்கின மணிமயமான மாடங்களை யுடைத்தான சி ரீ வர மங்கல நகரிலே பிற்பாடார்க்கும் இழக்க வேண்டாத படி நித்ய சந்நிஹிதனாய் இருக்கிறவன் -சந்த்ர ஸூ ர்யர்களும் வந்து இளைப்பாறும் தேசம் என்கை -சந்நிதி யுண்டானாலும் ஸஹ காரிகள் வேண்டாவோ என்ன –
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–
எப்போதும் கை கழலா நேமியனாய் யன்றோ இருக்கிறது -சாப மானய என்ன வேண்டாவே -பக்திக்கு கர்மா ஞான ஸஹ காரம் போலே யாயிற்று இவனுக்கு திவ்யாயுதங்கள் -உபாயம் புஷ்கலமானாலும் அதிகாரி சம்பத்தியும் வேண்டாவோ என்ன
தமியேனுக்கு
என் பக்கல் ஸத்தாத்திரேகி இருப்பது ஒன்றும் இல்லை என்னுதல்-ஆற்றாமையோடே ஒரு துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு என்னுதல் -செய்ய வேண்டுவது என் என்ன
அருளாயே
ருசிக்குப் பண்ணின க்ருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை என்கிறார் –

—————————————————————–

சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி-என்கிறபடி பலம் உம்ம தான பின்பு சாதனத்திலும் அந்வயம் வேண்டாவோ என்ன -இவ்வளவும் வர இதுக்கு முன்பே நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த பின்பு நீயே செய்து அருள வேணும் என்கிறார் –

கருளப்  புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட
பெரிய திருவடியை த்வஜமாகவும் -திரு வாழியை ஆயுதமாகவும் -பரம பதத்தை ஸ்தானமாகவும் யுடையாய் வைத்து -பெரிய திருவடியை மேற்கொள்ளுதல் -திரு வாழியை சலியாமல் பிடித்தல் -பரமபதத்தை இருப்பிடமாக யுடையனாதல் -இவையாயிற்று சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் -ஒரோ ஒன்றே அமைந்து இருக்க சர்வ பிரகார பரி பூர்ணனாய் இருக்கிற படி
கருளப்புள்-புள் என்று பக்ஷி சாமான்யம் -கருடனாகிற புள் என்று விசேஷிக்கிறது -யீடே என்கிற இத்தை யீளே என்னுமா போலே கருள் என்கிறது -பிரதிபக்ஷத்தின் மேல் சீற்றம் யுடையவன் என்றுமாம் -கருளுடைய பொழில் மருது-என்ன கடவது இ றே
என் கார் முகில் வண்ணா
ஸ்தல விசேஷம் பாராதே என் பக்கலிலே உதார குணத்தை காட்டி அருளினவனே –என் அளவு பாராதே பிரயோஜன நிரபேஷமாக பண்ணின படி -பண்ணின உதாரம் என்ன என்ன –
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்
பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்
நித்ய ஸூ ரிகளை போலே திரள் திரளாக பகவத் குண அனுபவம் பண்ணி வர்த்திக்கிறவர்கள்
இத்தலையில் சாதனமும் இல்லை -செய்யலாவதொரு பிரதியுபகாரமும் இல்லை என்று பகவத் குண அனுபவமே யாத்ரையாய் இருக்குமவர்கள்
அருள் செய்து அங்கு இருந்தாய்
-சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் அர்த்திக்க அன்றிக்கே அவர்கள் பக்கல் தண்ணளி யாலே வந்து இருந்தவன் -என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்து இருந்தாய் என்றுமாம் -கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்
அறியேன் ஒரு கைம்மாறே
இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங்நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை என்கை –

——————————————————————

பிரயோஜன நிரபேஷமாக ரஷிக்கும் என்னும் இடத்துக்கு உதாஹரணங்களை சொல்லி – -இப்படியே ரஷிகைக்கு கடவையான உன்னைக் கிட்டுக்கைக்கு  என்னால் செய்யலாவது உண்டோ  என்கிறார் –

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
எதிரிகளாய் சேர்ந்த படையை யுடைய துர்யோதயநாதிகள்-தங்கள் அளவன்றியே படை யடைய நான் எதிர் நான் எதிர் -என்று வந்தது என்கை -எதிரிகளாய் சேர்ந்து சாயுதரான நூற்றுவர் என்றுமாம் -த்விஷத் அன்னம் ந போக் தவ்யம்-என்கிறபடியே தனக்கு சத்ருக்களாய் நினைத்து இருக்கிற படி
மங்க -முடிய – / ஓர் ஐவர் -தனியான ஐவர் / அவர்களுக்கு தன்னை சேஷ பூதன் ஆக்கின படி -பக்தானாம் என்ற படி
அன்று -அன்று செய்ததும் பாண்டவர்களுக்காக அன்று தான் அல்லது புகல் இல்லை என்று என் நெஞ்சிலே படுகைக்காக உபகரித்தான் என்று இருக்கிறார் –
ஆச்சர்யமான யுத்தம் பண்ணி -என்னுதல்-க்ருத்ரிம யுத்தம் என்னுதல் -பகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் என்று எடுத்தும் -சத்ருக்கள் உயிர் நிலையை காட்டிக் கொடுத்தும் செய்தவை என்கை –
பண்ணி -மூடக்கோல் மாத்திரம் இ றே இவர்கள் -தானே செய்தான் என்கை
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
அவர்களை அழியச் செய்ததும் தன் பேறாக நினைத்து இருக்கிறார் –
பாண்டவர்களை போலே ஒரு அபேக்ஷையும் இன்றிக்கே-பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாய் -அந்த பூமிக்கு என்ன கைம்முதல் உண்டாய் எடுத்தாய்
அம்மானே -உன் வஸ்து நோவு படாமைக்காக எடுத்தாய் அத்தனை அன்றோ –
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
இப்போது அஸந்நிஹிதன் என்கிற கண் அழிவும் இல்லை என்கிறார் -அற த் தெளிந்த ஞானத்தை யுடையராய் இருக்கை-தங்கள் அனுஷ்டானம் சாதனம் என்று இராதவர்கள் வைதிகமாய் அநந்ய ப்ரயோஜனமான சமாராதனங்கள் இடைவிடாதே செல்லா நிற்கை -சாதனம் ஆகில் இ றே ஒரு கால் செய்து விட வேண்டுவது –
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–
அவர்களோடு ஓக்க குடி ஏறி அவர்களோட்டை சாம்யா பத்தியால் வந்த ஐஸ்வர்யத்தை யுடையவன் ஆகையால் க்ருதார்த்தனாய் இருந்தாய் -அநந்ய சாத்யனாய் இருந்துள்ள உன்னைப் பெறுகைக்கு ஈடான யத்னம் பண்ணுகை என்று ஒரு பொருள் உண்டோ -நீ இங்கு வருகைக்கு பண்ணின யத்னம் இ றே பிராப்திக்கும் என்னால் பண்ணலாவது-

————————————————————

ஆஸ்ரித பக்ஷ பாதத்தையும் சி ரீ வர மங்கல நகரில் இருப்பையும் உமக்கு காட்டினோம் ஆகில் எங்கு  எய்தக் கூவுவனே என்று ஒன்றும் பெறாதாரைப் போலே கூப்பிடா நின் றீரே  என்ன -செய்த அம்சம் அறிந்தேன் -அத்தால் பர்யாப்த்தன் ஆகிறிலேன்-என்கிறார்

எய்தக்  கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?
தம்முடைய வெறுமை திரு உள்ளத்தே படுகைக்கு திரியவும் சொல்லுகிறார் -நீ எனக்கு கைப்படும் படியாக நான் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ -உன்னோபாதி நான் என்னை அறிவேனோ -என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்க்கிறார் –
எனக்கு -இந்த சர்வ சக்தியைக் கண்ட வாறே -தன் கார்யம் தானே செய்து கொள்ளுகிறான் என்று இருக்கிறாயோ –
எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
எவ்வகைப்பட்ட சத்ரு சமூகங்கள் தோறும் சென்று புக்கு -தெய்வர் -என்று சத்ருக்கள் -தெய்வம் என்று சத்ரு சமூகம் -எவ்வ -எவ்வகைப் பட்ட –
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
புத்த முனியாய் புக்கு -வேதத்துக்கு அப்ராமாண்யத்தை யுபபாதித்து-அவர்களுக்கு வைதிக சிரத்தையை அறுத்து -உனக்கு அவர்கள் தூரஸ்தரராம் படி பண்ணினவனே
கரு மேனி -அவர்கள் சத்யம் என்று இருந்ததை அழைத்தது-வடிவு அழகைக் காட்டி யாயிற்று –
அம்மானே -சர்வ ஸ்வாமியாய் இருக்கச் செய்தே-அப்படிச் செய்தது ஆஸ்ரித பக்ஷ பாதத்தால் யன்றோ -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் செய்யுமத்தை ஆஸ்ரித விஷயத்தில் செய்வதோ -அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தால் போலே இருக்கிறதாயிற்று சித்த சாதன பரிக்ரஹித்தை நெகிழ்ந்து சாதனத்தில் மூட்டுகிற இது
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்-கைதொழ இருந்தாய்-
க்ருதக்ருத்யரானவர்கள்-விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்தவதோ யே தேஷாம் ராஜன் சர்வஞ்ஞாஸ் ஸமாப்த
பூமியிலே இருக்கச் செய்தே நித்ய ஸூ ரிகள் பரிமாற்றமாய் இருக்குமவர்கள் -சித்த சாதனராய் இருப்பார்க்கு அனுபவத்தில் இ றே அன்வயம்
அறா -இவர்கள் நிரந்தரமாக வர்த்திக்கும் தேசம் -நகர் கை தொழுகை யாவது -மஞ்சா க்ரோஸந்தி போலே இவர்கள் அனுவர்த்த நமே தாரகமாய் இருந்தாய்
அது நானும் கண்டேனே!–
அநுபூத அம்சத்தை இல்லை என்கிறேன் அல்லேன்-அனுபாவ்ய அம்சம் யுண்டாகையாலே சொல்லுகிறேன் -அடிமை கொள்ளுகிற நீ சந்நிஹிதன் ஆனமை அறிந்தேன் -எனக்கு அத்தால் போராது -உன் திருவடிகளில் கைங்கர்யமே யாத்ரையாகப் பெற வேணும் என்று வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

———————————————————————

அந்த வாக்ய சேஷத்தால் சொன்ன கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் –

ஏனமாய்  நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

ஏனமாய் நிலம் கீண்ட-என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
ஆபன்னரானார் அறிவிக்கையும் மிகையாம் படி யன்றோ உன்படி இருப்பது -ரக்ஷணம் ஒரு தலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ -பிரளயங்கதையான பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயத்தில் நின்றும் கொண்டு ஏறினவனே
பிரளயங்கதையான பூமியை மஹா வராஹமாய் எடுத்தால் போலே சம்சார பிரளயம் கொண்ட என்னை கிருஷ்ணனாய் வந்து எடுத்தாய் என்கிறார் –
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் வைத்து என்னை அடிமை கொண்டவனே -நித்ய ஸூ ரி களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருந்தால் போலே என்னையும் அடிமை கொண்டவனே என்றுமாம் -என்றும் ஓக்க என்னை குழைச் சரக்காய் நினைத்து என் சத்தையை நோக்கிக் கொண்டு போந்தவனே -நித்ய ஸூ ரிகளை அனுபவிப்பிக்க என்றும் ஓக்க உணர்ந்து இருக்கும் இங்கு என் சத்தையை நோக்குகைக்கு என்றும் ஓக்க உணர்ந்து இருக்கும்
நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கக் கடவ வடிவு அழகைக் கொண்டு என்னை எனக்கு அத்வேஷத்தை யுண்டாக்கி -அதுவே எனக்கு தாரகமாம் படி எனக்கு உபகரித்தவனே
மணி மாணிக்கம் -ரத்ன ஸ்ரேஷ்டம்-பெரு விலையனான மாணிக்கம் என்றபடி
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
தேன் மிக்கு இருந்துள்ள மாம் பொழிலை யுடைத்தாய் சிரமஹரமான சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் கை தொழும் படி இருக்கிற
வான மாமலையே!
நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் அபரிச்சேதயமான வடிவு அழகை இவ்வூரில் உள்ளார் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே-இவ்விருப்பில் பரமபதத்தில் மேன்மை எல்லாம் இவருக்கு தோன்றா நின்றது என்கை
அடியேன் தொழ வந்தருளே.–
அநந்ய கதியான நானும் அடிமை செய்யும் படி என் முன்னே உலாவி அருள வேணும் -சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன் -என் முன்னே உலாவி அருள வேணும் என்கிறார் –

———————————————————————-

அடியேன் தொழ வந்து அருளே -என்ற ஓத்தே வந்தேன் என்ன காணாமையாலே நம்மை உபேக்ஷித்தேனோ -வந்து அருள் என்கிற நிலையம் குலைகிறதோ என்று அஞ்சி என்னை அகற்றாது ஒழிய வேணும் என்கிறார் –

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-

வந்தருளி-
நான் அபேக்ஷியாது இருக்க -வந்து அருளி -பரமபதம் -கலவிருக்கையாய் இருக்க நான் இருக்கிற சம்சாரத்திலே வந்து அருளி -நித்ய ஸூ ரிகள் சதா தர்சனம் பண்ணா நிற்க -விமுகனான என் பக்கலிலே வருவதே -யஸ்ய ப்ரஸாதே சததம் ப்ரஸீதே யுரிமா ப்ராஜா ச ராமோ வா நரேந்த்ரஸ்ய ப்ரஸாத மபி காங்ஷதே
என் னெஞ்சிடம் கொண்ட-
நித்ய ஸூ ரிகள் நெஞ்சிலே இருக்குமவன் நித்ய சம்சாரி நெஞ்சிலே புகுவதே -ஆவாஸம் த்வஹம் இச்சாமி -என்கிறபடியே என் அனுமதியை அபேக்ஷித்துக் கொண்டு புகுந்தான் –
வானவர் கொழுந்தே!
நித்ய ஸூ ரிகளுக்கு சத்தா ஹேதுவானவன் தன் சத்தை என்னாலே என்று இருந்தான் -இப்போது என்னை அகற்றப் பார்த்தால் மேல் விழுந்து என் நெஞ்சில் புகுந்து உன்னால் அல்லது செல்லாத படி பண்ணிற்று என்கை –
உலகுக்கோர்-முந்தைத் தாய் தந்தையே!
மாதா பிதாக்கள் பிரஜைகளின் உடைய ப்ரிய ஹிதங்களை பண்ணுமா போலே லோகத்துக்காக ப்ரிய ஹிதங்களை பண்ணுமவன் –ப்ரார்த்தா பர்த்தாச பந்துச்ச பிதாச மம ராகவா -என்று இருப்பார்க்கு அன்று -லோகத்துக்காக -பூதா நாம் யோவ் யயா பிதா -அத்விதீயனாய் பழையனானவன்-தாய் தமப்பன் என்று தோற்றி மணல் கொட்டகம் போல் அழிந்து போகாதே அழியாத தாயும் தமப்பனும் -எம்மானும் எம்மனையும் என்னை பெற்று ஒழிந்ததின் பின் அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நல் மான ஒண் சுடர்-என்ன கடவது இ றே
முழு ஏழுலகும் உண்டாய்!
ஆபத்து வந்தவாறே வயிற்றிலே வைத்து நோக்கும் தாயைப் போலே நோக்கினவனே -இன்று அகற்ற நினைத்தால் சத்தையை நோக்கிப் போந்தது என் -என்கை –
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
தொழிலுக்கு செவ்வை யாவது -பிரயோஜனாந்தர புத்தியும் இன்றிக்கே -சாதன புத்தியும் இன்றிக்கே ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை –
வேத கோஷமும் வைதிக க்ரியா கோலாஹலமும் மாறாதே செல்லுகை
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.-
பரமபதத்தில் சாவதி போலே புகழ்-இங்கே வந்த பின்பாயிற்று புகழ் அந்தம் இன்றிக்கே ஒழிந்தது -பஹவோ நிரூப கல்யாண குணா புத்ரஸ்ய சந்திதே-பரமபதத்தை விட்டு வந்து இங்கே ஆர்ஜித்த புகழை ஒரு வியக்திக்காக இழக்கிறது என் என்கை
அடியேனை அகற்றேலே
வர வேணும் என்கிற நிலையும் போய் அகற்றாது ஒழிய வேணும் என்கிறார் -இதனுடைய ரக்ஷணத்தில் உன்னை ஒழிய ப்ராப்தர் யுண்டாய்த் தான் அகற்றுகிறாயோ –

——————————————————————

உம்மை அகற்றினோமோ -இங்கே வந்து நிக்கிறது உமக்காக வன்றோ என்ன – அடிமைக்கு விரோதியான சப் தாதி விஷயங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே என்னை அகற்றினாய் அல்லையோ என்கிறார் –

அகற்ற நீ  வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன் -யுகாவாதாரை யன்றோ யகற்றுவது -உமக்கு என் என்ன –
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
அவை அபுருஷார்த்தம் என்று அறிந்த என்னையும் -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப் தாதி விஷயங்களில் தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன் -உன்பக்கல் ந்யஸ்த பரனான என்னையும்-என்றுமாம் -நீர் அஞ்சக் கடவீரோ என்ன -விளம்ப ஹே து இன்றிக்கே இருக்க விரோதி கிடைக்கையாலே அஞ்சா நின்றேன்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
மிக்க ஒளியை யுடைய மாணிக்கங்களை யுடைய உயர்ந்த மாடங்கள் -பகர் என்றும் புகர் / கதிர் என்றும் புகர் -மிக்க புகர் என்றபடி
பகற்கதிர் என்ற பாடமான போது ஆதித்ய பதத்து அளவும் செல்ல உயர்ந்த ஒளியை யுடைய மணி மாடங்கள் –
சி ரீ வர மங்கைக்கு நிர்வாஹகன் ஆனவனே -பரமபதத்தை விட்டு இங்கே வந்து இருக்கிறது ஆஸ்ரிதற்கு கைங்கர்ய விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுக்கைக்காக அன்றோ என்கை –
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே-
உகவாதார்களுக்கு ஒரு நாளும் கிட்ட ஒண்ணாதபடி இருக்குமவனே -புகலுக்கு அரிய-அசாதாரணனாய் இருக்கிற என் விஷயத்திலும் அத்தைச் செய்யவோ -உமக்கு கிட்டக் குறை என் என்ன -பகா ஸூ ரனை நிரசித்தால் போலே என் பிரதிபந்தங்களை போக்கி அருள வேணும்-

—————————————————————–

அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய் -என்று அஞ்சுகிற உமக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்ன சக்தனாய் சந்நிஹிதனாய் இருக்கிற நீ என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளில் கைங்கர்யத்தை தந்து அருள வேணும் என்கிறார்

புள்ளின்  வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த –
பிரதி கூலங்களை நிரசிக்கும் சர்வ சக்தி யானவனே -முன்பு தமக்குப் பண்ணின உபகாரங்களைப் பேசி அப்படியே மேலும் செய்து அருள வேணும் என்கிறார் –அர்த்தித்து சொல்லுவார் -முன்பு பண்ணின உபகாரங்களை என்னுமா போலே அருளிச் செய்கிறார் -பகா ஸூ ரனை அழித்து யாமளார்ஜுனங்களை நிரசித்து உன்னைத் தந்தாய் -எருதுகள் ஏழையும் நிரசித்து நப்பின்னை பிராட்டியை யுண்டாக்கினாய் -உபாய பூதனான உன்னை யுண்டாக்கி உபாய பரிக்ரஹம் பண்ணுவார்க்கு புருஷகார பூதையையும் யுண்டாக்கினாய்
 என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
ஒருவருக்கும் தெரியாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை எனக்கு வெளிச் சிறக்கப் பண்ணி என்னை அகப்படுத்திக் கொண்டவனே -தொடுவே செய்து இளவாய்ச்சியர் கண்ணினுள் -என்ன கடவது இ றே -நப்பின்னை பிராட்டிக்கு சர்வ ஸ் வதானம் பண்ணின நிரதிசய போக்யமான வடிவை எனக்குத் தந்தவனே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
தம் தாமுடைய ரக்ஷணத்தில் தங்களுக்கு பிராப்தி இன்றிக்கே அவனே கடவன் என்னும் தெளிவு பிறக்கும் படி வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் -லஷ்மணஸ்ய ச தீமத-என்னுமா போலே ஆஸ்ரித விஷயத்தில் நீ வழி தப்பினாலும் உன்னைத் திருத்தும் படி தெள்ளியார் மிக்கு இருந்துள்ள தேசம் -நெருங்கி வர்த்திக்கிற தேசம் -ஆஸ்ரயண வேளையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தெளிவு போலேயும்-அசோகா வலையில் பிராட்டி தெளிவு போலேயும் தெளிந்து இருக்குமவர்கள் –
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.
என்னை விஷயீ கரிக்கைக்காக சர்வகத வஸ்து-புறம்பு இல்லை என்னலாம் படி பரிசாமாப்ய வர்த்திக்கிற படி –
சென்று அற்ற எனக்கு உன் திரு வடிகளிலே கைங்கர்யம் கிட்டும் வகை பண்ணி அருள வேணும் -கைங்கர்யம் என்றும் உய்வகை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு -த்வ ரித்து இலராகில் அவன் வைலக்ஷண்ய ஞானம் இல்லையாக கடவது -இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தில் தண்மையில் ஞானம் இல்லையாக கடவது-

———————————————————————

அருளாய் உய்யுமாறு எனக்கே என்றார் -அப்போதே வந்து அருளக் கண்டிலர் -ஏதேனும் தசையிலும் உன் திருவடிகளே சரணம் -என்று இருக்கும் படி என்னைப் பண்ணின மஹா யுபகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லை என்கிறார் –

ஆறெனக்கு  நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்
ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்-
இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –
உனக் கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன்– இத்தெளிவைப் பிறப்பித்த உனக்கு சத்ருசமான பிரதியுபகாரம் அன்றிக்கே-போலியாய் இருபத்தொரு பிரதியுபகாரமும் அகிஞ்சனான நான் காண்கிறிலேன் -உம்மைத் தந்தாலோ என்ன –
என தாவியும் உனதே-
ஸ்வரூப ஞானம் இல்லை யாகில் செய்யலாயிற்று -மயர்வற மதி நலம் அருள பெற்றில்லை யாகில் பிரதியுபகாரம் பண்ணினேனாய் நெஞ்சாறல் படாது ஒழியல் யாயிற்று -உதவிக் கைம்மாறு –
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை-
நீ தான் அபூர்ணன் ஆனாயாகில் செய்யலாயிற்றே என்கிறார் -சேற்றை யுடைத்தான கரும்பும் -அதற்கு நிழல் செய்யும்படியான செந்நெலும் மிக்கு இருந்துள்ள சிரமஹரமான சி ரீ வர மங்கை –
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–
திருத் துழாய் மாலை சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் –
பரிமளிதமாய்-தர்ச நீயமான திருத் துழாய் -நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவனே –
தேசம் அது –போக்யம் அது -குறைவற்றவர்கள் சாபேஷராய் இருக்கிறார் -நான் எங்கனே யுபகரிக்கும் படி
நீ குறைவாளன் ஆதல் -நான் அகிஞ்சனன் இன்றிக்கே ஒழிதல்-நீ உபகரியாது ஒழிதல் -நான் சேதனன் இன்றிக்கே ஒழிதல் செய்யப் பெற்றதோ-

—————————————————————

நிகமத்தில் இது திரு வாய் மொழியை சாபிப்ராயமாக  சொல்ல வல்லார்  நித்ய ஸூ ரிகளுக்கு  என்றும் போக்யராவார்-என்கிறார்-

தெய்வ  நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
சர்வேஸ்வரனாய் -ஆஸ்ரித வத்சலனாய் -தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியாய் அபேக்ஷிதம் செய்து கொடுக்குமவன் திருஅடிகளிலே
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
இவர் உபாய அத்யாவச்யத்தாலே தரித்த வாறே பொழிலும் நித்ய வசந்தம் ஆயிற்று
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
யதாமுஷ்யாயணா வேதா -என்கிறபடியே வேதங்கள் அபிஜாதமான படி -வேதம் பர தசை போலே -அவதாரம் போலே திரு வாய் மொழி
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–
சாபிப்ராயமாக கற்கும் அவர்கள் -சர்வ காலமும் நித்ய ஸூ ரிகளுக்கு போக்ய பூதராவார் -அதுக்கு அடி-உபாய உபேயங்கள் இரண்டும் ஈஸ்வரன் என்று இருக்குமது அவர்களுக்கு அபிமதம் ஆகையாலே


கந்தாடை       அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-7-

September 20, 2016

அநு கரித்து தரித்து பார்த்த இடத்திலும் அதுவும் மிகவும் ஸ்மாரகமாய்க் கொண்டு வ்யஸன ஹேதுவான திசையிலும்
எம்பெருமான் வந்து தோற்றி அருளா விட்ட வாறே -இவர் தாமே ஞானாத் யுபகரணங்களை யுடையர்-அந்த யுபாயங்கள் தலைக் கட்டினவாறே
நம்மை வந்து பிராபிக்கிறார்-என்று எம்பெருமான் விரைதல் கேட்டு இருக்கிறானாகக் கொண்டு எம்பெருமானுக்கு
நம்முடைய ஸ்திதியை விண்ணப்பம் செய்ய -நம்முடைய அபேக்ஷிதங்களை செய்து அருளும் என்று பார்த்து அருளி
கடற்கரையிலே ஸ்ரீ ஸூக்ரீவ மஹா ராஜர் தொடக்கமான முதலிகளோடும் இளைய பெருமாளோடும் சர்வ ரக்ஷண தீஷிதனாய் கொண்டு
இருந்து அருளின சக்கரவர்த்தி திரு மகனை -ராவனோ நாம துர்வ்ருத்த -என்று தொடங்கி-தன்னுடைய ஸ்வரூபத்தை அறிவித்து
அநந்ய ப்ரயோஜனநாயக் கொண்டு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புக்கால் போலே
-தன்னுடையார் எல்லாம் சேவை பண்ண பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளின ஸ்ரீ வானமா மலையைச் சரணம் புகுகிறார் –

———————————————————————

கர்மாதி உபாய ரஹிதராய் -ரக்ஷக அபேக்ஷரான ஆழ்வார்-பூர்ணனாய் -ரஷ்ய விஷயர்த்தியாய் உள்ள எம்பெருமானைக் கண்டு தம்முடைய அபேக்ஷிதம் பெறுகைக்கு உத்தியோகிக்கிறார்  –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
பல வ்யாப்தமாம் படி அனுஷ்டிதமான கர்மமாதல் –தாத்ருஸ ஞானமாதல் -உடையேன் அல்லேன்-இவை உண்டானால் உண்டாக்க கடவ பக்தி இல்லை என்னுமிது கிம்புனர் ந்யாய சித்தம் –பக்தியில்லை யாக்கிற்று – அத்தை உபாயமாக நினைத்திராமை
இனி உன்னை விட்டொன்று-ஆற்ற கிற்கின்றிலேன்
அத்யந்த போக்யனான உன்னைவிட்டு இனி ஒரு க்ஷணமும் தரிக்க மாட்டுகிறிலேன்
அரவின் அணை அம்மானே!சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்-வீற்றிருந்த எந்தாய்!
அநந்த சாயியான சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து சேறான நிலங்களில் செந்நெல்கள் நடுவே தாமரை அலரா நின்றுள்ள சிரீவர மங்கல நகரிலே உன் வேண்டற்பாடு தோற்றும் படி இருந்து அருளின இருப்பைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே –
உனக்கு மிகை அல்லேன் அங்கே.
ரஷ்ய விஷயம் தேட்டமாய் கொண்டு இருக்கிற உன்னுடைய நீர்மைக்கு புறம்பு அல்லேன் -உன்னுடைய திருவடிகளில் அடிமை ஒழிய ஒரு க்ஷணமும் தரிக்கும் பிரகிருதி அல்லேன் -இவ்வாத்மா அடிமை செய்து க்ருதார்த்தம் ஆனால் இத்தால் வந்த ப்ரீதியும் தேவரீருக்கே என்றுமாம் –

——————————————————————-

திருவடிகளை நான் பெறும் இடத்தில் பிரதிபந்தகம் உண்டு எனில் அத்தையும் நீயே போக்கி உன் கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

சாதனம் அனுஷ்ட்டித்து முக்தி ப்ராப்தனாய் இருக்கிறேன் அல்லேன்-சாதன அனுஷ்டானம் பண்ணுகிறேன் அல்லேன் -உன்னைக் காண வேணும் ஆசையினால் பல ஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டானம் ஷமனும் அல்லேன் -அங்கு வர மாட்டேன் -என் அபிநிவேசத்தால்  இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருந்துகிறது இல்லை என்றுமாம் -சந்திரனுக்கு தோள் தீண்டியான மணி மாடங்களை யுடைத்தான சிரீ வர மங்கல ம் ஆகிற நகரத்திலே நித்ய சந்நிஹிதனாய் பிரதிபந்தகத்துக்கு ஈடான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திரு வாழியையும் யுடையையாய் இருக்கிற நீ ராவணனைப் போக்கினால் போலே என் பிரதிபந்தகங்களையும் போக்கி உன்னைப் பெறாதே
தனிப்பட்டு கிடக்கிற எனக்கு –

——————————————————————-

உம்மை விஷயீ கரித்தால் பிரயோஜனம் என் என்னில் -சர்வ பிரகார பரி பூர்ணனான நீ அத்யந்த நிஹீனனான என்னை விஷயீ கரித்துப் பெற்றது ஒரு பிரயோஜனம் கண்டிலேன் -வெறும் உன் க்ருபையாலே செய்து அருளினாய் அத்தனை -அப்படியே மேலும் என் அபேக்ஷிதங்கள் செய்து அருள வேணும் என்கிறார் –

கருளப்  புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

பெரிய திருவடியை த்வஜமாகவும் -திரு வாழி யாழ்வானை ஆயுதமாகவும் -ஸ்ரீ வைகுண்டத்தை ஸ்தானமாகவும் உடையையாய் இருந்து வைத்து என் பக்கலிலே உதார்யத்தை பண்ணி உன்னை அறியாமையாலே அவஸ்துவான என்னை அறிவித்து ஒரு சரக்காக்கி அடிமை கொண்டாய்
அறத் தெரியும் படி நாலு வேதத்தையும் அப்யசித்தார்கள் க்ருதார்த்தராம் படி சிரீவர மங்கல நகரில் உள்ளார்க்கு எல்லாம் உன்னுடைய ஸுந்தரியாதிகளை அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு என்னை அடிமை கொள்ளுகைக்கு ஈடாக அங்கே இருந்தாய் -இவ்வுபகாரத்துக்கு பிரதியுபகாரம் நான் செய்தேனாக இருந்திலேன் –

——————————————————————

பிரயோஜன நிரபேஷமாக ரஷிக்கும் என்னும் இடத்துக்கு உதாஹரணங்களைக் காட்டி -இப்படியே ரஷியா விடில் என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை என்கிறார் –

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

பாண்டவர்களுக்கு எதிரியாய் வந்து சேர்ந்த படையை யுடைய துர்யோத நாதிகள் நூற்றுவரும் சஸைன்யமாக நசிக்கும் படி தனியரான ஐவர்க்காக ஆச்சர்யமான யுத்தங்களை பண்ணி பிரதிபக்ஷத்தை எல்லாம் பொடி யாக்கினவனே –
அது செய்தவன் அஸந்நிஹிதன் இ றே என்ன ஒண்ணாத படி தெளிந்த அறிவுடையானவர்கள் உடைய வைதிகமாய் அநந்ய பிரயோஜனமான சமாராதனங்கள் நிரந்தரமாக செல்லா நின்றுள்ள சி ரீ வர மங்கல நகரிலே அவர்களோடே குடி ஏறி பெறாப்   பேறு பெற்று க்ருதார்த்தனாய் இருந்து அருளினாய் -நீயே விஷயீ கரிக்கும் இத்தனை போக்கி நான் உன்னை பெறுகைக்கு ஈடான யத்னம் பண்ணுகை என்று ஒரு பொருள் உண்டோ –

——————————————————————-

சிரீவர மங்கையில் இருந்த இருப்பை உமக்கு காட்டினோம் இ றே -என் செய்ய அக்ருதார்த்தர் ஆகிறீர் என்ன -அத்தால் போராது என்கிறார் –

எய்தக்  கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

தம்முடைய நிஸ் சாதனத்தை எம்பெருமான் திரு உள்ளத்தே படுக்கைக்கு மீளவும் சொன்னார் –
மிகவும் துஸ் சாதாரான சத்ருக்கள் நடுவும் புக்கு நின்று வடிவு அழகைக் காட்டி வஞ்சித்து அவர்களுக்கு எட்டாது இருக்குமவனே -நீ வஞ்சகனாய் எட்டாது இருப்பது சத்ருக்களுக்கு அன்றோ என்று கருத்து –
க்ருதக்ருத்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரந்தரமாக வர்த்திக்கும் சி ரீ வர மங்கல நகரிலே அடிமை செய்ய இருந்தாய் -அது நானும் கண்டேன் -அத்தால் நிரபேஷம் அன்று

——————————————————————

வேறு உமக்கு அபேக்ஷிதம் தான் என்  என்ன -நான் ஆசைப்பட்ட படியை அடிமை செய்யலாம் படி வந்து அருள வேணும் என்கிறார் –

ஏனமாய்  நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

பிரளய ஆபத்தில் நின்றும் பூமியை எடுத்து அருளினால் போலே என்னை சம்சாரத்தில் நின்றும் எடுத்து அருளினை மஹா உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணனே -அயர்வறும் அமரர்களோடே ஓக்க என்றும் என்னை விஷயீ கரிக்குமவனே -நிரதிசய போக்யனாய்க் கொண்டு தேன் மிக்கு இருந்துள்ள மாம் பொழிலை யுடைத்தாய் சிரமஹரமான சி ரீ வர மங்கலத்தில் உள்ளார் கை தொழும் படி இருக்கும் வானமா மலையே –

————————————————————–

தாம் அபேக்ஷித்த போதே அபேக்ஷிதத்தை செய்யாது ஒழிந்த வாறே நம்மை கை விடப் பார்த்து அருளினானோ என்று நினைத்து அடியேனை அகற்றாது ஒழிய வேணும் என்கிறார் –

வந்தருளி  என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-

அயர்வறும் அமரர்களுக்கு தலைவனாய் வைத்து நான் அபேக்ஷியாது இருக்க நீயே வந்து அருளி என் நெஞ்சை உனக்கு ஸ்தானமாகக் கொண்டு எல்லார்க்கும் தாயும் தமப்பனும் போலே பரிவனுமாய் எல்லாரையும் பிரளய ஆர்ணவத்தை நலிவு படாமே திரு வயிற்றிலே வைத்தும் பரிஹரித்து அருளுவதும் செய்து பிரயோஜன நிரபேஷமான ப்ரவ்ருத்திகளை யுடையரானவர்கள் யுடைய வைதிக சமாராதானங்கள் ஒழுக்கு அறாதே செல்லா நின்று இருந்துள்ள சிரீ வர மங்கல நகரிலே முடிவில்லாத புகழை யுடையையாய்க் கொண்டு இருந்த நீ –

——————————————————————-

உம்மை அகற்றினோமோ என்னில்-உன் திருவடிகளில் அடிமைக்கு விரோதியான சப் தாதி விஷயங்கள் பரிமாறுகிற சம்சாரத்திலே வைத்த போதே என்னை யகற்றினாய் யல்லையோ -என்கிறார் –

அகற்ற நீ  வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

அத்யாச்சர்யமாய் ஒருவராலும் தப்ப ஒண்ணாதாய் இருக்கிற ஐந்து இந்திரியங்களும் நீ வேண்டாதாரை அகற்ற வைத்தாய் என்னும் இடம் நான் அழகிதாக அறிந்தேன் –
உமக்கு வந்தது என் என்னில் -அவை அபுருஷார்த்தம் என்று அறிந்து இருக்கிற என்னையும் உன் திருவடிகளில் வராதபடி பண்ணி தப்பித் புறப்பட ஒண்ணாத படி இருக்கிற சப் தாதி விஷயங்களின் உள்ளே தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன்
மிக்கு இருந்துள்ள ஒளியை யுடைத்தாய் உயர்ந்து இருந்துள்ள மணி மாடங்களை யுடைய சி ரீ வர மங்கைக்கு ராஜாவாய் யுள்ளவனே
சத்ருக்களுக்கு என்றும்-அநபி பவ நீயனாய் அவர்களை முடிக்கும் ஸ்வபாவனானவனை -அப்படியே என்னுடைய பிரதிபந்தகத்தையும் போக்க வேண்டாவோ –

——————————————————————–

உன்னுடைய திவ்ய சேஷ்டிதாதிகளாலே என்னை தோற்பித்து அடிமை கொண்டு என்னுடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்க்கைக்காக சி ரீ வர மங்கல நகரிலே எழுந்து அருளி இருந்த நீ என்னுடைய அபேக்ஷிதம் குறையும் செய்து அருள வேணும் என்கிறார்

புள்ளின்  வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-

புள் தொடக்கமான பிரதி கூலங்கள் எல்லாம் நிரசிப்பதும் செய்து ஒருவருக்கும் இன்னபடி இருக்கிறது என்று அறிய ஒண்ணாத மஹாச்சார்யங்களைக் காட்டி என்னை அகப்படுத்திக் கொண்டு அருளினவனே –
நிரதிசய போக்யனாய்க் கொண்டு வேதாந்த வித்துக்களாய் ஆஸ்ரித விஷயத்தில் நீ வழி தப்பித் போகிலும் உன்னைத் திருத்தும் படி தெள்ளியார் மிக்கு இருந்துள்ள சி ரீ வர மங்கையுள் இருந்து அடிமை கொண்டவனே -என் அபேக்ஷிதம் செய்து அருளி என்னை உஜ்ஜீவிப்பித்து அருள வேணும்-

——————————————————————–

ஏதேனும் துர்த் தசையிலும் உன் திருவடிகளே சரணம் என்று இருக்கும் படி என்னைப் பண்ணி யருளின இம் மஹா யுபகாரத்துக்கு பிரதியுபகாரத்துக்கு இல்லை என்கிறார் –

ஆறெனக்கு  நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

உம்முடைய ஆத்மாவைத் தந்தாலோ என்னில் -அதுவும் பண்டே உள்ளது -அதி சம்ருத்தமான சிரீ வர மங்கல நகரில் நின்று அருளின நிரதிசய போக்யனுமாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே -பரி பூர்ணனான உனக்கு அகிஞ்சனனான நான் ஒன்றும் தரப் பெற்றிலேன் என்று கருத்து –

———————————————————————

நிகமத்தில் இது திரு வாய் மொழியை சாபிப்ராயமாக இனியராய்க் கொண்டு சொல்ல வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு என்றும் போக்யராவார்-என்கிறார் –

தெய்வ  நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-

சர்வேஸ்வரனாய் ஆஸ்ரித வத்சலனாய் ஆஸ்ரிதருடைய அபேக்ஷிதங்களை செய்து கொடுக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானுடைய திருவடிகளில் –
நித்ய வசந்தமான பொழிலொடு கூடின திரு நகரியை யுடைய ஆழ்வார் –

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-6-

September 18, 2016

கீழ் ப்ரீதி அப்ரீதி சமமாக சென்றது -இதில் அப்ரீத் யம்சமே தலை எடுத்து -ஸ்மரித்து தரித்ததும் போய்
ஆத்ம தாரணம் பண்ண முடியாமையாலே -அநு கருத்து தரித்த கோபிமார்களை போலே -அநு காரமாய்ச் செல்லுகிற இவள்
தசையை கண்ட திருத் தாயார் – –இந்த விகாரம் மந்த்ர ஒவ்ஷாதிகளாலே வந்ததோ ஆற்றாமையால் அநு கரித்து தரிக்கிறாளோ -என்று
சங்கித்து அவனோட்டை வசன வ்யக்தி சாதர்யம்த்தாலும்-அவனுடைய ஞான முத்ரா நிரீக்ஷணாதிகளோடு உண்டான சாதர்யம்த்திலுமாக-
எம்பெருமான் இவள் பக்கலிலே ஆவேசித்தால் போலே இரா நின்றது -என்று இவள் ப்ரவ்ருத்திகளை இன்னபடி என்று அத்யவசிக்க மாட்டாமையாலே
வினவ வந்தவர்களை நோக்கிச் சொல்லுகிறாள் -இடைப் பெண்களை போலே-சேஷ்ட்ய அநுகாரம் இல்லாமையால் யுக்தி அநுகாரமாக செல்லுகிறது –
மயர்வற மதிநலம் அருள பெறுகையாலே -அநுகாரம் அவர்களை போலே அவதாரத்து அளவிலேயாய் ப்ராதேசிகம் இன்றிக்கே-
ச விபூதிகனானவனை யநுகரிக்கையாய் விபூதி அத்தியாயத்தில் சொன்ன படியே ப்ராசுர்யேண அநுகரிக்கிறாள்-
கீழில் திருவாய் மொழியில் விக்ரஹ வைலக்ஷண்யம் சொல்லிற்று -இதில் அதுக்கு உள்ளன ஸ்வரூபத்தை அனுசந்திக்கிறாள்
-தேஹாத்ம அபிமானம் முற்றினால் வேறு ஓன்று தோற்றினால் போலே -பிரகாரியான அவ்வளவும் செல்ல தன்னை யநுசந்தித்த பாவனா பிரகரக்ஷத்தாலே
-அஹம் மனுரபம் ஸூ ர்யச்ச-தத்பாவ மா பன்ன–மத் தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்கிறபடியே அவன் பாசுரமேயாய் இருக்கத் தட்டில்லை –

————————————————————————-

என் மகள் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள் எல்லாம் பண்ணினேன் என்னா நின்றாள்இது எம்பெருமான் தன் பக்கல் ஆவேசிக்க  சொல்லுகிறாப்  போலே இருந்தது என்கிறாள் –

கடல்ஞாலம்  செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-
கடலோடே கூடின ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக ஸ்ருஷ்டித்தேன் என்னும் -அஹம் க்ருத்நஸ்ய ஜகத் பிரபவ -என்னா நின்றாள் -யானே என்கிற அவதாரணத்தாலே -த்ரிவித காரணமும் ஆகை -ததா தர்சித பந்த்தா நவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார கௌ -என்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளும் கரண கோடியிலேயாம் –
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்-
இத்தனை ஆவேனும் -இத்தை உண்டாக்கி வஸ்துத்வ நாம பாக்துத்வங்களுக்காக அநு பிரவேசிக்கையாலே இஜ் ஜகத்து மத் ஆத்மகம் -சாமா நாதி கரண்யம்–அநு பிரவேச க்ருத்யம் -தத் அநு ப்ரவஸ்ய ஸச் சத்யச்சா பவத் -ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லை என்கை –
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
இத்தை மஹா பாலி அபஹரிக்க -அவன் பக்கலிலே உதார குணம் கிடைக்கையாலே -உபாயத்திலே அர்த்தியாய் என்னை தாழ விட்டு அளந்து கொண்டேனும் யானே என்னும் -கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
அபஹார மாத்திரமே யன்றிக்கே-பிரளய ஆர்ணவ நிமக்னையான பூமியை அபேஷா நிரபேஷமாக -மஹா வராஹமாய் எடுத்தேனும் யானே என்னும் –
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்-
பூமி அளவே அன்றிக்கே-சகல லோகங்களையும் பிரளயம் கொள்ளப் புக்க -பிரளயம் வாரா நின்றது -என்றும் அறியாதே இருக்க -நானே அறிந்து நோக்கினேன் என்னும்
யானே -அர்த்திப்பார் இன்றிக்கே இருக்க நானே வயிற்றிலே வைத்து நோக்கினேன் என்னும் –
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?-கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
சர்வ ஸ்ரஷ்டாவாய் -சகல அந்தர்யாமியாய் -சர்வ ஆபத் சகனானவன் வந்து ஆவேசித்தானோ -அறி கிறி லேன்-உன்னைக் கொண்டு நிர்ணயிக்க வர நீ சம்சயியா நின்றாயீ என்ன -இவ்விஷயத்தில் என்னளவும் புதியது உண்ணாதே நித்ய சம்சாரிகளான உங்களுக்கு எத்தை சொல்லுவது என்கிறாள் –
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே-
சம்சாரத்தில் இருந்து வைத்து நித்ய ஸூ ரிகள் யாத்ரையாய் செல்லுகிற என் மகள் படியை –

—————————————————————

சர்வ வித்யா வேதனமும் வித்யா ப்ரவர்த்திகாதிகளும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்

கற்குங்  கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
அல்ப காலத்தில் சாந்தீபனியோடே நான் கற்ற பரப்புக்கு எல்லை இல்லை என்னா நின்றாள் என்னுதல்-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீண்டது என்னை என்னா நின்றாள் என்னுதல்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
வித்யைக்கு நிலம் அன்றி இருக்கும் அளவு அன்றிக்கே எல்லாரும் அப்யசிக்கும் வித்யைகள் நான் இட்ட வழக்கு என்னும் -த்வமேவ வித்யா -என்ன கடவது இ றே
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
அதிகரிக்க கடவ வித்யைகளை ஸூ ப்த பிரபுத்த நியாயத்தாலே உண்டாக்குவேன் நானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
இவற்றினுடைய தாத்பர்ய நிர்ணயம் பண்ணுவேன் நானே என்னா நின்றாள் என்னுதல் -அத்யாபகரும் அத்யேதாக்களும் இரண்டும் நானே என்னும் என்னுதல் -பரக்க கற்று வைத்தே -சூன்யமே தத்வம் என்கிறாரும் உண்டு இ றே -தீர்க்கை யாவது அவற்றின் முடிவு காண்கை
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
சாரம்-வித்யா சாரமான பலம்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
நாதன் – சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன்
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
பகவத் விஷயம் என்றால் இன்று கற்க வேண்டி இருக்கிற உங்களுக்கு இவற்றைச் சொல்ல விரகு உண்டோ
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.
அறியத் தொடங்கும் பருவத்தை யுடைய இவள் புக்கு அவகாஹிக்கிற நிலங்களை என்னால் பேசலாயோ விருக்கிறது-

————————————————————–

அபரிச்சேதயமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள் –

காண்கின்ற  நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–5-6-3-

காணப்புக்கால் கண்டு முடிய ஒண்ணாத பரப்பை யுடைத்தாய் இருக்கை-காண்கை யாவது -சாஸ்திரத்தாலே காண்கை என்றுமாம் –
கடல் போலே தர்ச நீயமாக கண்டு முடிய ஒண்ணாத போக்யதையை யுடைத்தான திரு நிறத்தை யுடையவன் –
நீங்கள் காண்கின்ற படிக்கு மேற்பட்ட உட்ப்புக்கேன் ஆகிலும் என்னால் பாசுரம் இட்டுச் சொல்லலாவது இல்லை -கரையிலே நின்றாரோடு உட்ப்புக்காரோடு வாசி இல்லை -நமக்குத் தெரியாத நிலத்திலே புக்கு அவகாஹித்த என் மகள் பண்ணுகிற சேஷ்டிதங்கள்-

—————————————————————-

க்ரியாதிகள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள் –

செய்கின்ற  கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-

வர்த்தமான காலத்தில் உள்ள கிரியா ஜாதங்கள் -பவிஷ்ய காலத்தில் உள்ள கிரியா ஜாதங்களும் -பூத காலத்தில் செய்தவற்றையும் –
சகல கர்மங்களினுடையவும் பல போக்தாவும் -அஹம் ஹி சர்வ யஞ்ஞா நாம் போக்தா -என்னா நின்றாள்
அனுஷ்டாதாக்களை அனுஷ்ட்டிக்கப் பண்ணுவேனும் -என்னை ஆஸ்ரயிக்க பண்ணுவேன் என்னுதல் –
இவள் கண்ணின் அழகாலும் அவன் ஆவேசித்தால் போலே இரா நின்றது – அஸி தேஷ்ணை யாகை தவிர்ந்து புண்டரீகாக்ஷன் வடிவை யுடையளாகா நின்றாள் -புண்டரீகாக்ஷனுக்கு இ றே இப்பிரவ்ருத்திகள் உள்ளது –
ஆழம் காண மாட்டாத படு பாடரான உங்களுக்கு —செய்ய -செவ்வை யுடைய –
சிவந்த கனி போலே இருக்கிற வாயை யுடையளான பாலையிடை யாட்டத்திலே -விவர்ணையாய் இருந்துள்ள இவள் அநு காரத்தாலே-இவளுடைய அதரம் தன்நிறம் பெற்று இருக்கிற படியை -அவிக்ருதையாய் இருக்கிற நான் எத்தைச் சொல்லுவேன் –

—————————————————————

ஜகத் ரக்ஷண பிரமுகரான -ஆதி -சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணுவேன் நான் என்னா நின்றாள் என்கிறாள் –

திறம்பாமல்  மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
ஒருவர் கூறை எழுவர் குடுக்கிற சம்சாரத்திலே ஒருவருக்கும் தப்பச் செய்ய ஒண்ணாத படி -பூமி எல்லாம் ஒரு துணை இன்றிக்கே காக்கிறேன் என்னும் -பீஷாஸ்மாத் வாத பவதே -என்கிற ஆஞ்ஞானி யாலே சிறியதை பெரியது தின்னாமே நோக்குகிறேன் நானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
சலியாத படி கோவர்த்தனத்தை எடுத்தேன் என்னும் -இடையர் மேல் ஆதல் -பசுக்கள் மேல் ஆதல் ஒரு துளி விழாத படி எட்டுக்கை
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
தப்பாதபடி கோலி அ ஸூ ரரைக் கொன்றேன் என்னும் -மாரீசனை விட்டது ராவணனுக்கு பார்வையாக
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
லோகத்தில் என் படிகளைக் காட்டி -பகலை இரவாக்கியும் ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும் -ஆச்ரித பக்ஷ பாதத்தை வெளியிட்டும் -ந காங்ஷே விஜயம் க்ருஷ்ண -என்கிற அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாமல் கடைகை-தப்பாமல் கடைகை -மந்தரம் கீழே விழுதல் -மேலே கொந்தளித்தல் செய்யாத படி மஹா தத்துவத்தை கலக்கினேன்-
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
தன் சாசனத்தை ஒருவராலும் தப்ப ஒண்ணாத படியான சர்வேஸ்வரன்
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?-திறம்பாது என் திருமகள் எய்தினவே.
கேட்டு அல்லது போகோம் என்று இருக்கிற உங்களுக்கு லஷ்மீ சமையான என் மகள் பகவத் குணங்களில் தப்பாதே யகப்பட்ட படிகள் -ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாத படி இ றே அகப்பட்டது-

———————————————————————-

கிருஷ்ண சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணினேன் நான் என்று இவள் சொல்லா நின்றாள் என்கிறாள் –

இன வேய்  மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
திரள் திரளான மூங்கிலை யுடைத்தான கோவர்த்தன கிரி -மலையைக் கவிழ்த்துப் பிடித்த போது அணுக்கனை கவிழ்த்துப் பிடித்தால் போலே இருக்கை
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
திரளான எருதுகள் ஏழையும் ஊட்டியாக நெரித்தேனும் யானே
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
வத்ஸ மத்யகதம் பாலம் -என்று என்னோடே ஒத்த பருவத்தில் கன்றுகளை மேய்த்தேனும் நானே
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
பருவம் நிரம்பின பசுக்களை மெய்த்தேனும் நானே
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
பிரதமத்தில் ப்ரஹ்மசர்யத்தை அனுஷ்ட்டித்து பின்பு கார்ஹஸ்யத்திலே இழியுமா போலே என் தரத்தில் இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் தீம்புக்குத் தலைவனும் நானே
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்கையாலே தன் பருவத்தோடே ஒத்த நித்ய ஸூ ரிகள் என்னுதல் -தனியே அனுபவிக்க நாட்டாமை யாலும் ஒருவரை ஒருவர் பிரிய மாட்டாமையாலும் திரண்டு இருக்கிற நித்ய ஸூ ர்யர்கள் என்னுதல்
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
தன்னில் ஒத்த வேல் ஒழுங்கு போலே இருக்கிற கண் அழகை யுடைய உங்களுக்கு -கேட்க்கையிலே அவஹிதராய் இருக்கிற படி
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே
தன் கண்ணுக்கு இலக்கானார் படும் பாட்டை தான் படுகிறவள் உற்றவற்றை என் சொல்லுகேன் –

———————————————————————–

எம்பெருமான் ஆஸ்ரிதர் விஷயத்தில் இருக்கும் இருப்பை தன் படியாக பேசா நின்றாள் -என்கிறாள் –

உற்றார்கள்  எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
ஒரு உபாதியால் வந்த பந்துக்கள் ஒருவரும் இல்லை என்னுதல் -என் படியை அறிந்து எனக்கு ஸ் நே ஹிக்கக் கடவார் ஒருவரும் இல்லை என்னுதல் –உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
பதிம் விஸ்வஸ்ய என்கிறபடி -பார்த்தால் இஜ்ஜகத்தில் உள்ளார் எல்லாருக்கும் பந்துக்கள் என்னுதல்-அவர்கள் இப்படி இருந்தமை இருந்து வைத்தே நிருபாதிக பந்துவாய் எல்லார்க்கும் ஸ்நேஹிதனாய் இருப்பேன் என்னுதல் –
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
சிலர் என்னை ஆஸ்ரயிக்கப பண்ணுவேனும் யானே
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
பிரயோஜனாந்த பரரைபிரயோஜனங்களைக் கொடுத்து அகற்றுவேனும் யானே என்னும் -என்னுதல் -அவர்களை ஸுந்தரியாதிகளைக் காட்டி அழிப்பேனும் நானே என்னுதல்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
அநந்ய பிரயோஜனர்க்கு எல்லா உறவும் நானே என்னுதல் –அநந்ய பிரயோஜனர்க்கு அநந்ய பிரயோஜனனாய் இருப்பேனும் நானே என்னுதல்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
எத்தனையேனும் அளவுடையார்க்கும் முட்டக் காண ஒண்ணாத படியான ஆச்சர்ய பூதன்-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாதவன்
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
ஆனாலும் பந்துக்களான எங்களுக்கு சொல்ல வேண்டாவோ என்னில்-பந்துக்களாக அமையுமோ -விஷயம் சொல்லாக வேண்டாவோ -உறவு முறையான உங்களுக்கு என்ன பாசுரத்தை சொல்லிச் சொல்லுவேன்
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே
பருவம் நிரம்பாத என் பெண் ஈடு பட்டுச் சொல்லுகிற வார்த்தைகளை வாய்க் கரையிலே நிற்கிற நான் எத்தைச் சொல்லுவது –

————————————————————–

ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப் படுகிற சதுர்முகப் பிரமுகரும் நான் இட்ட வழக்கு  என்னா நின்றாள் என்கிறாள்

உரைக்கின்ற  முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
வேதத்தில் அர்த்தவாத பிரசங்களிலும் தாமச புராணங்களிலும் சொல்லுகிறவன் -பிரான் -ஸூவ கோஷ்ட்டியில் பிரசித்தன்-ருத்ராணாம் சங்கரஸ்ஸாஸ்மி -என்று ஈஸ்வரனுக்கு பிரகாரமாக சொல்லப்பட்டவன் என்றுமாம் –
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
ப்ராஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா ஷ்ரேஷ்டாயா -என்று ருத்ரனுக்கும் ஜனகனான ப்ரஹ்மா நான் இட்ட வழக்கு என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
ப்ரஹ்மாவால் ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்கு கடவராக சாஸ்திரங்களில் சொல்லப் படுகிற பிரஜா பதிகளும் நான் இட்ட வழக்கு -என்னும் -ப்ரஹ்மா தஷாதய கால என்று பகவத் பிரகாரமாக சொல்லப் படுகிறவன் என்றுமாம்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
நகிரிந்த்ர த்வதுத்தர-என்று சொல்லப் படுகிறவன் என்னுதல் -தேவா நா மஸ்மி வாசவ என்று பிரகாரமாக சொல்லப் படுகிறவன் என்னுதல்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
வேதாரத்தை ஸ்மரித்து கர்த்த வ்யாகர்த்தவ்யங்களை சொல்லும் மன்வாதிகளும் நான் இட்ட வழக்கு என்னும் –
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
நீலதோயத மத்யஸ்தா -என்று வ்ரஷூக வலாஹகம் போலே சொல்லப்படுகிறவன் என்னுதல் -வார்த்தை சொல்லுகிற போதை அழகை சொல்லுதல்
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
சொல்ல ஒண்ணாது என்று அறியாதே -சொல்லு சொல்லு என்கிற லௌகீகரான உங்களுக்கு என் சொல்லுகேன்
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.
அதி லோகமான பேச்சை யுடையளாய் ஸூ குமாரை யாகையாலே -துக்க ச ஹை அன்றிக்கே-பதிசம்யோக ஸூ லபம் வய -என்று உப நக்தோடே சேர்க்க வேண்டும் பருவத்தை யுடைய இவளுக்கு ஓடுகிற தசையை –
கோமள ஒண் கொடிக்கே.-கொழுந்து விடுகிற அழகை யுடைய என் பெண்ணுக்கு –

———————————————————–

அகர்மவஸ்யத்வ  பிரமுகரான பகவத் யுக்திகளை தன்னினவாகப் பேசா நின்றாள் என்கிறாள் –

கொடிய  வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கர்ம வஸ்யரைக் கண்ணுற்று நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும் -அநஸ்நன் நன்யோ அபிசாக தீதி-நாட்டில் பிறந்து படைத்தன பட்டு -என்கிறபடி இச்சையாய் வரும்து தவிர்க்கப் போகாது
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
அவன் நான் இட்ட வழக்கு என்னும் -கர்மம் ஆகிறது என்னுடைய நிக்ரஹம் அன்றோ என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
பிரதி கூலர்க்கு கொடிதான பாபத்தை விளைப்பேனும் நானே என்னும் -ஆஸ்ரிதர் திறத்தில் விரோதிகளை பாபங்களிலே மூட்டுகை
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்ஸாரேஷூ நராதமான் ஷிபாம் யஜஸ்ரமசுபா நா ஸூ ரீஷ் வேவ யோ நி ஷூ
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
ஆஸ்ரிதற்கு அவசியம் அநு போக்தவ்யமான கர்மத்தை போக்குவேனும் நானே என்னும் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னா நின்றாள் –
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-
கொடியான் இலங்கை என்ற இடம் தாயார் வார்த்தை -அவனால் ஆவிஷடையாய் இருக்கிறவன் இத்தனை மதித்து வார்த்தை சொல்லாள் இ றே-சுரி குழல் கனிவாய்த் திருவினை பிரித்த கொடுமையை யுடையவன் -என்று இருக்கும் இ றே திருத் தாயார் –
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
ஆஸ்ரித விரோதிகளுக்கு ம்ருத்யுவான பெரிய திருவடியை வாஹனமாகவும் த்வஜமாகவும் யுடையவன்
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
நமக்கு நிலம் அன்று அறியாதே அதி நிர்பந்தம் பண்ணுகிற உங்களுக்கு
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே
இவளை அநு கரித்து தரிக்க காண்கையான மஹா பாபத்தை பண்ணின என் மகளுடைய
கோலங்கள்
தர்ச நீயமான வியாபாரங்கள் என்னுதல்-ஒருப்பாடுகள் என்னுதல் –

————————————————————–

ஸ்வர்க்க பிரமுகமான பதார்த்தங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்று சொல்லா நின்றாள்-

கோலங்  கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

ஸூக ரூபமான ஸ்வர்க்கங்களும் –நிலை நில்லாமையாலே முகப்பில் தர்ச நீயதையைப் பற்றிச் சொல்லுகிறது –
ஸூக கந்தமும் இன்றிக்கே நிஷ்க்ருஷ்ட துக்கமே யான நரகமும்
நிஷ்க்ருஷ்ட ஸூகமாய் அபுநாவ்ருத்தி லக்ஷணம் ஆகையால் அபரிச்சின்ன ஸூகமான மோக்ஷமும்
கோலம் கொள் உயிர்களும்
நாநா வேஷமாக எழுதி அணிந்து தோற்றுமவர்களைப் போலே -கர்ம அநு குணமாக தேவாதி சரீர பிரவேசம் பண்ணக் கடவ ஆத்மாக்களும் -ஞானானந்த லக்ஷணமான ஆத்மாக்களும் என்றுமாம் –
கோலம் கொள் தனி முதல்
விசித்திர காரிய காரிணி யான பிரகிருதி என்னுதல்
அப்படிப்பட்ட சங்கல்ப ஞானம் என்னுதல்
உபயத்தையும் பிரகாரமாக யுடையனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான சர்வேஸ்வரன் என்னுதல்
கோலம் கொள் முகில் வண்ணன்
வில்லிட்டு மின்னி தர்ச நீயமான மேகம் போல் இருக்கிற திரு நிறத்தை யுடையவன்
விஷய ஸ்வபாவம் அறியாதே கேட்க்கையிலே ஒருப்படா நின்று இருந்துள்ள உங்களுக்கு -அழகிய மாலையையும் மயிர் முடியையும் யுடைய என் மகளுக்கு பிறந்த இவ்வஸ்தைகளை-தன் மயிர்முடி கண்டார் படும் பாட்டை தான் படுகிற இவள் படிகள் பேச்சுக்கு நிலமோ-

—————————————————————

நிகமத்தில் இப்பத்தும் வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறார் –

கூந்தல்  மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்-குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
விஷ்ணோ ஸ்ரீ என்று அவனுக்கு நிரவாதிக சம்பத்தான பிராட்டிக்கும்-அந்த சம்பத்துக்கு விளை பூமியான ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் -வல்லபையான ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் -காந்தனானவனை -இத்தால் -ஒரு அவதார மாத்ரத்து அளவன்றிக்கே-உபய விபூதி நாதனான பூர்ண விஷயத்திலே அநு கரிக்கிறாள் என்று தோற்றி இருக்கிற படி
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
வாய்க்கை யாவது கிட்டுகை -அதாவது பாவனா ப்ரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்கை
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
அந்தரங்க வ்ருத்தி செய்து -இவர் பாசுரத்தையே அந்தரங்க விருத்தியாக கொள்ளுகை-இவர் தாம் வாசிகமான விருத்திக்கு அவ்வருகு ஷமர் அல்லர்
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்-இவையும் ஓர் பத்தும் வல்லார்
ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை
உலகில்-ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்-அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–-
இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்ன கடவது இ றே
இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை


கந்தாடை       அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-6-

September 18, 2016

கீழில் திருவாய் மொழியிலே சென்ற வியசனமே தலையெடுத்து ஆத்ம தாரணம் பண்ண முடியாமையாலே -ஸ்ரீ கோபிகளைப் போலே
கிருஷ்ணனுடைய சேஷ்டிதாதிகளையும்-மற்றும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாராதிகளையும் அநுகரித்து தரிப்பேன் என்று அதிலே
உபக்ராந்தை யான இவள் தசையை அனுசந்தித்து -இவள் தனுக்கு தாரண அர்த்தமாக அநு கரிக்கிறாள் -என்று தன் கலக்கத்தாலே
துணிய மாட்டாதே -இந்த விகாரம் மந்த்ர ஒவ்ஷாதிகளாலே பிறந்ததோ தனக்குத் தானே பிறந்ததோ -என்று இப் புடைகளாலே
பல சங்கைகளை பண்ணி -கீதாச்சார்யனான கிருஷ்ணனோட்டை வசன வ்யக்தி சாதர்யம்த்தாலும்-அவனுடைய ஞான முத்ரா நிரீக்ஷணாதிகளோடு
உண்டான சாதர்யம்த்திலுமாக-எம்பெருமான் இவள் பக்கலிலே ஆவேசிக்கையாலே அவனுடைய பேச்சை பேசுகிறாப் போலே இருந்தது
-இவளுடைய அதிலோகமான ப்ரவ்ருத்திகள் இன்னபடி என்று அத்யவசிக்க முடிகிறது இல்லை -என்று வினவ வந்தவர்களை நோக்கி
திருத் தாயார் சொல்லுகிறாள் -இடைப் பெண்களை போலே சேஷ்ட அநு கார க்ஷமை அல்லாமையாலே
ஸ்ரீ கீதையில் விபூதியத்யாய படியே ப்ராசுர்யேண அநு கரிக்கிறாள் –

—————————————————————

என் மகள் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள் எல்லாம் பண்ணினேன் என்னா நின்றாள்இது எம்பெருமான் தன் பக்கல் ஆவேசிக்க  சொல்லுகிறாப்  போலே இருந்தது என்கிறாள் –

கடல்ஞாலம்  செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடலோடே கூடின ஜகத்தை-சஹாயாந்தர நிரபேஷமாக ஸ்ருஷ்டித்தேனும் நானே என்னும் -இஜ் ஜகத்து மதாத்மகம் ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லை என்னும் -இத்தை மஹா பாலி அபஹரிக்க-சிலர் உபாய உபதேசம் பண்ணாதே இருக்க நான் அளந்து கொண்டேன் என்னும் –பிரளய ஆர்ணவத்திலே அழுந்தின இத்தை ஸஹாய நிரபேஷமாக எடுத்தேனும் நானே என்னும் -பூமி தான் பிரளயம் வாரா நின்றது என்று அறியா நிற்க நானே அறிந்து வயிற்றிலே வைத்து பரிஹரித்தேன் என்னும் –
இப்பூமியில் இருந்து வைத்து என் மகள் மேன்மேல் எனச் சொல்லுகிற இவற்றை லௌகீகரான உங்களுக்குத் சொல்ல உபாயம் உண்டோ-

————————————————————-

சர்வ வித்யா வேதனமும் வித்யா ப்ரவர்த்திகாதிகளும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்

கற்குங்  கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

நான் கற்ற வித்யா ஸ்தலத்துக்கு ஒரு முடிவு இல்லை என்னும் -எல்லாரும் விரும்பி கற்கிற வித்யைகள் நான் இட்ட வழக்கு என்னும் -அவற்றை யானே உண்டாக்கினேன் என்னும் -அவற்றினுடைய தாத்பர்ய நிர்ணயம் என்னாலே என்னும் -வித்யாபலம் நானே என்னும் -அப்யஸிக்கப்படும் சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன் வந்தேறினானோ -அறிவில்லாத உங்களுக்கு அறியத்  தொடங்கும் பருவத்தை யுடைய இவள் அனுசந்திக்கிற இவற்றைச் சொல்ல விரகு உண்டோ –

——————————————————————–

அபரிச்சேதயமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள் –

காண்கின்ற  நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய்கின்றவே.–5-6-3-

கடல் போலே எப்போதும் தர்ச நீயமான திரு நிறத்தை யுடையவன் -நீங்கள் காண்கிற படிக்கு மேற்பட்ட என்னாலே சொல்லலாவது இல்லை -நமக்குத் தெரியாத நிலத்திலே புக்கு அவகாஹித்த என் மகள் பண்ணுகிற சேஷ்டிதங்கள் -இப்பாட்டில் காண்கின்ற -என்கிற வெல்லாம் ப்ரமாணத்தாலே காணும் காட்சி -என்றும் சொல்லுவர்-

—————————————————————-

க்ரியாதிகள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள் –

செய்கின்ற  கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-

வர்த்தமான கிரியைகளும் -மேல் வருவதான கிரியைகளும் பண்டு செய்த கிரியைகளும் –
கிரியா பலம் புஜிப்பேனும் க்ரியா கர்த்தாக்களை அவற்றில் ப்ரவர்த்திப்பேனும் –
இவள் கண்ணின் அழகாலும் அவன் ஆவேசித்தால் போலே இரா நின்றது –
ஆழம் காண மாட்டாதே படுபாடரான உங்களுக்கு எத்தைச் சொல்லுவேன் -சிவந்த கனி போலே இருக்கிற வாயை யுடையாளாய் இருக்கிற சிறு பெண் பிள்ளை இடையாட்டத்தில்
செய்ய கனிவாய்– அநுகார ரசத்தால் பிறந்த புஷ்கல்யத்தை சொல்லுகிறது-

——————————————————————

ஜகத் ரக்ஷண பிரமுகரான -ஆதி -சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணுவேன் நான் என்னா நின்றாள் என்கிறாள் –

திறம்பாமல்  மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
ஒருவருக்கும் தப்ப செய்ய ஒண்ணாத படி இப்பூமி எல்லாம் ஒரு துணை இன்றிக்கே காக்கின்றேன்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
சலியாத படி கோவர்த்த உத்தாரணம் பண்ணினேன்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
தப்பாத படி கோலி அ ஸூரரை முடித்தேன்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
இப்படி கோவர்த்தன உத்தாரணம் பண்ணி ஒருவருக்கும் அறிய ஒண்ணாத என் படியை லோகத்தில் ஆவிஷ்கரித்து-தர்ம புத்ராதிகள் ஐவரையும் காத்தேன்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
நினைத்தபடி தப்பாமல் கடலைக் கடைந்தேன்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
ஒருவருக்கும் தன் சாசனத்தை தப்ப ஒண்ணாத படியான சர்வேஸ்வரன்
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?-திறம்பாது என் திருமகள் எய்தினவே.
கேட்டு அல்லது போகோம்-என்று நிர்பந்திக்கிற உங்களுக்கு எத்தைச் சொல்லுகேன் -லஷ்மீ சமையான என் மகள் பகவத் குணங்களில் தப்பாமே அகப்பட்ட படிகள் –

————————————————————-

கோவர்த்தன உத்தரணம் முதலான கிருஷ்ண சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணினேன் நான் என்று இவள் சொல்லா நின்றாள் என்கிறாள் –

இன வேய்  மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

இன வேய் மலை –
திரள் திரளான மூங்கிலை யுடைத்தான கோவர்த்தன கிரி –இன ஆயர் தலைவன் –
ஒரு தரத்தில் ஆயர்களுக்கு எல்லாம் பிரதானன்
இனத் தேவர்
தனித்தனி பகவத் குணங்கள் அனுபவிக்க முடியாமையாலும் –ஒருவரை ஒருவர் பிரிய மாட்டாமையாலும் திரண்டு இருக்கிற அயர்வறும் அமரர்கள்
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
வேல் போலே இருக்கிற கண்ணை யுடையீர்-கேட்க்கைக்கு அவஹிதராய் இருக்கிறபடி –
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–
தான் படுகிற பாட்டை பிறரைப் படுத்த வல்ல கண்களை யுடைய இவள் உற்ற இவற்றை என் சொல்லுகேன் –

————————————————————————

எம்பெருமான் ஆஸ்ரிதர் விஷயத்தில் இருக்கும் இருப்பை தன் படியாக பேசா நின்றாள் -என்கிறாள் –

உற்றார்கள்  எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
இஜ்ஜகத்தில் என் படி அறிந்து எனக்கு பந்துக்களாய் இருப்பார்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
அவர்கள் அப்படி இருந்தமை அறிந்து வைத்தே நான் எனக்கு உறவாக நினைத்து இராதார் ஒருவரும் இல்லை
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
சிலர் என்னை ஆஸ்ரயிக்கும் படி பண்ணுமவன் நான்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
ஆஸ்ரயிக்கும் அவர்களில் பிரயோஜனாந்த பிறர்க்கு அவர்கள் வேண்டியவற்றை கொடுத்து அவர்களை அகற்றுவேன் நான் -என்னுடைய ஸுந்தரியாதிகளை காட்டி அவர்களை ஈடுபடுத்துவேனும் யானே என்னும் என்றுமாம் –
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
அநந்ய பிரயோஜனர்களுக்கு எல்லா பந்து க்ருத்யமும் பண்ண வேணும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
எத்தனையேனும் அளவுடையார்க்கும் முட்டக் காண ஒண்ணாத படியான அத்தியாச்சார்ய பூதன் ஆனவன்
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உறவுமுறையான உங்களுக்கு என்ன பாசுரத்தாலே சொல்லுவேன்
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–
ஈடுபட்டு அத்யந்த பாலையான என் மகள் சொல்லுகின்றன-

——————————————————–

ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப் படுகிற சதுர்முகப் பிரமுகரும் நான் இட்ட வழக்கு  என்னா நின்றாள் என்கிறாள்

உரைக்கின்ற  முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

காலதத்வம் உள்ளதனையும் பேசினாலும் பேசி முடிக்க ஒண்ணாத அழகை யுடையவன் -வார்த்தை அருளிச் செய்யும் போதை அழகாய்ச் சொல்லிற்று ஆகவுமாம்-
அதி லோகமான பேச்சை பேசுவதும் செய்து துக்க சஹையும் இன்றிக்கே இருக்கிற -இவ் விலக்ஷணை யான பெண் பிள்ளைக்கு பிறந்த அவசாதத்தை சொல்லு சொல்லு என்று நிரந்தரமாகச் சொல்லுகிற லௌகீகரான உங்களுக்கு எத்தைச் சொல்லுவேன் –

—————————————————————–

அகர்மவஸ்யத்வ  பிரமுகரான பகவத் யுக்திகளை தன்னினவாகப் பேசா நின்றாள் என்கிறாள் –

கொடிய  வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கர்ம வஸ்யரை நலியுமா போலே என்னை நலியக் கடவதாய் கொடுமையான கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
அவை நான் இட்ட வழக்கு
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
பிரதி கூலர்க்கு கொடிதான் பாபத்தை விளைப்பேனும் நானே
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
அநு கூலர்க்கு கொடிதான வினையைத் தீர்ப்பேனும் நானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
லங்கையை ஒரு படி அழித்தேன்-கொடியான் என்கிற அம்சம் அத்தனையும் திருத் தாயார் வார்த்தை
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
பிரதி பக்ஷத்துக்கு கொடியனான பெரிய திருவடி
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
சொல்லு சொல்லு என்று மிகவும் அலைக்கிற உங்களுக்கு யத்தைத் சொல்லுகேன்
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–
இப்படி படுகைக்கு ஈடான பாபத்தை பண்ணின என்னுடைய மக்களுடைய ஒருப்பாடுகள்
கோலங்கள் -தர்ச நீய ப்ரவ்ருத்திகள் ஆகவுமாம் –

——————————————————————-

ஸ்வர்க்க பிரமுகமான பதார்த்தங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்று சொல்லா நின்றாள்-

கோலங்  கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

கலப்பற்ற ஸூ கரூபமான ஸூ வர்க்கம்
ஸூக கந்தமும் இன்றிக்கே வெறும் தூக்கமே யான நரகம்
அபரிச்சின்ன ஸூ க ரூபமான மோக்ஷமும்
கோலம் கொள் உயிர்களும்
நாநா வேஷமாக எழுதி அணிந்து தோற்றுமவர்களைப் போலே -கர்ம அநு குணமாக தேவாதி சரீர பிரவேசம் பண்ணக் கடவ ஆத்மாக்களும் -ஞானானந்த லக்ஷணமான ஆத்மாக்களும் என்றுமாம் –
கோலம் கொள் தனி முதல்
விசித்திர கார்ய ஜனன சக்தி யுக்தையான மூல பிரகிருதி -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -இது எல்லா வற்றுக்கும் அடியாய் இருக்கிற சர்வேஸ்வரன் என்னுதல்
கோலம் கொள் முகில் வண்ணன்
வில்லிட்டு மின்னி தர்ச நீயமான மேகம் போல் இருக்கிற திரு நிறத்தை யுடையவன்
கேட்க்கையிலே ஒருப்படா நின்று இருந்துள்ள உலகத்தீர்க்கு அழகிய மாலையையும் மயிர் முடியையும் யுடைய என் மகளுக்கு பிறந்த இவ்வஸ்தைகளை என் சொல்லுவேன் –

——————————————————————

நிகமத்தில் இப்பத்தும் வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறார் –

கூந்தல்  மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

வாய்ந்த-சாஷாத் கரித்த / ஆய்ந்த -ஆராய்ந்து சொன்ன
உலகில் ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் -லோகத்தில் எல்லாரும் கொண்டாடும்படியான பெரும் செல்வத்தை யுடையராய்
திருமால்-அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே
இத் திருவாய்மொழியில் ஆழ்வார் பண்ணின அநு காரம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமாய் இருக்கையாலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தி பண்ணப் பெறுவார்

————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-5-

September 17, 2016

அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் -என்று வெறுத்த ஆதித்யனும் உதித்து -ராத்திரி வியசனமும் அந்த ஆதித்ய
உதயத்தால் சிறிது நீங்கி -அன்னையரும் தோழியரும் நீர் என்னே என்னாதே -என்று சொன்ன ஹிதம் சொல்லுகிற அன்னையும் தோழியரும் உணர்ந்து
-ஹிதம் சொல்வாரும் அசாத் துணை யாவாரும் உண்டாகையாலும் -ஒன்றை ஸ்மரித்து தரிக்கைக்கு -நீயும் பாங்கு அல்ல காண் நெஞ்சமே -என்கிற
நெஞ்சமும் பாங்காய் முன்பு அனுபூதமான நம்பியுடைய ஸுந்தரியாதிகளை ஸ்மரிக்கை யாலும் சிறிது தரிப்பு உண்டாய் –
அப்போது காணப் பெறாத வியசனத்தாலே விஷாதம் உண்டாகையாலே -ப்ரீதி அப்ரீதி சமமாக செல்லுகிறது —
திருவடி வார்த்தை சொன்ன அநந்தரம்-பிராட்டி -அம்ருதம் விஷ ஸம்ஸ்ருஷ்டம் த்வயா வாநபராஷிதம்-என்று பெருமாள்
தன்னை யல்லது அறியாதே இருந்தார் என்ற வார்த்தையால் ப்ரீதியும்-அவர் தளர்ந்தார் என்ற வார்த்தையால் அப்ரீதியுமாய் இருந்தால் போலே
-பகவத் ஸுந்தரியாதிகள் ஸ்ம்ருதி விஷயமாகையாலே ப்ராப்ய ருசி நலிகிற படியைக் கண்டு பந்துக்கள் -இத்தனை அதி ப்ராவண்யம் ஆகாது
-இது உன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கும் ஆபீஜாத்யத்வத்துக்கும் அவன் தலைமைக்கும் போராது -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க –
உங்களுக்கு அபி நிவேசம் போராமையாலும்-நம்பி படிகள் தோற்றாமையாலும் மீட்கப் பார்க்கிறிகோள் அத்தனை –
நான் மயர்வற மதி நலம் அருள பெறுகையாலே நம்பியுடைய ஒப்பனை அழகிலும் வடிவு அழகிலும் திரு ஆபரண சேர்த்தி அழகிலும்
வேண்டற்பாட்டிலும் அகப்பட்டேன் -உங்கள் ஹித வசனத்தால் மீட்க ஒண்ணாது என்று தன் படிகளை சொல்லி –
எத்தனையேனும் அளவுடையரே யாகிலும் பரிவு இல்லாதார்க்கு அறிய முடியாது இருக்க பெற்றோமே என்று ப்ரீதியோடே தலைக் கட்டுகிறது-
மாசறு சோதியில் -ப்ராப்ய த்வரையால் உபாய அத்யவசாயம் கலங்கின படி
-ஊர் எல்லாம் துஞ்சியில் – த்வரையும் கூடக் கலங்கி முடிவு தேட்டமான படி
-இதில் ரக்ஷகன் அவனே என்னும் துணிவு செல்லா நிற்க ப்ராப்ய ருசி நலிகிறது
-ஏழையர் யாவியும்-உரு வெளிப்பாடாய் இரா நிற்கச் செய்தே-இவ்வளவு அன்றியே பாதகத்வம் முறுகி இருக்கும் –

————————————————————————-

திருக்கையில் ஆழ்வார்களோடே சேர்ந்த திரு முகத்தில் அழகை அனுசந்தித்து என் நெஞ்சு மிகவும் பிரவணம் ஆகா நின்றது -என்கிறாள் –

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
இஸ் ஸுந்தர்யத்திலே மூட்டின நீங்களே மீட்கப் பார்க்கிற படி எங்கனேயோ –நீங்கள் கற்பித்தது பலிக்கப் பூக்கவாறே பொடியும் இத்தனையோ –
நீர் -என் பிரகிருதி அறியும் நீங்கள் –
என்னை முனிவது-என்னுடைய பிராவண்யத்துக்கு அடியான நம்பியுடைய வடிவு அழகை அன்றோ இன்னாதாவது -உங்களையும் மறந்து -என் ப்ரக்ருதியையும் மறந்தால் விஷயத்தையும் மறக்க வேணுமோ
முனிவது–எங்ஙனேயோ-கொண்டாட வேண்டும் தசையில் போடுவது எங்கனேயோ
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
இக்குடிக்காக முற்றூட்டான நிரதிசய ஸுந்தரியத்தோடே திருக் குறுங்குடியிலே நின்று அருளின நம்பியை -உடைய நங்கையார் நம்பியை ஆஸ்ரயித்து யாயிற்று ஆழ்வாரைப் பெற்றது – அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்து அன்று இ றே பெற்றது –நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற-
நகரீ லக்ஷணங்களை உடைத்து என்று ஊரோடே கூட்டவுமாம் -நம்பியை -கல்யாண குண பூர்ணணை -குணங்களால் பூர்ணமான விஷயத்தே யன்றோ நான் அகப்பட்டது –திருக் குறுங்குடியிலே புகுந்த பின்பு யாயிற்று பூர்ணன் யாயிற்று
நான் -சாபல்யத்தாலே பூர்ணையான நான் –கண்ட பின் -மீட்கப் பார்க்கில் ஒக்கவே துடக்க வேண்டாவோ
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே வாகாம்ருத சாரஸ்யத்தை அறியும் ஸ்ரீ பாஞ்ச கண்ட பின் -மீட்கப் பார்க்கில் ஒக்கவே துடக்க வேண்டாவோ
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்ஜன்யத்தோடு சாம்யம் உண்டே -ஸ்யாமளமான வடிவுக்கு பரபாகமான ஆழ்வார்களோடே யுண்டான சேர்த்தியோடும் -இரண்டிலும் வந்து அலை எறிகிற திருக் கண்களோடும் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் என்கிற இவை யுண்டாய் இருக்கை
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.
சிவந்த கனி போலே இருந்த முறுவல் ஒன்றினோடும் -விசேஷ கடாக்ஷத்தால் பத்த பாவரானால் அது தன் பேறாகம் முகம் கொடுக்கும் முறுவல் -வேறு ஒரு அழகை நினைக்க வேண்டாத முறுவல் –
ஜாதி வியக்தி தோறும் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே நெஞ்சு அழகு தோறும் செல்லா நின்றது –
செல்கின்றது -இன்னமும் தறை கண்டது இல்லை –
நாங்களும் அவ்வழகை அனுபவித்து அன்றோ இருக்கிறது என்ன –என் நெஞ்சமே –அவன் தானே காட்டக் கண்டு அனுபவித்த என் நெஞ்சு -உங்கள் வார்த்தை கேட்க்கைக்கு நெஞ்சுடையாரை யன்றோ ஹிதம் சொல்லி மீட்பது –

—————————————————————

நம்பியுடைய தோள் அழகும் ஆபரண ஸ்ரீ யும் சர்வோதிக்கமாக நலியா நின்றன என்கிறாள் –

என்  நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
நாங்களும் நம்பியை அனுபவித்தே ஸ்த்ரீத்வம் கெடாமல் இருக்கிறி லோமோ -எங்களுடைய ஹித வசனம் கேளாதே மாரு மாற்றம் சொல்லுகை போராது காண் என்ன -ஏன் நெஞ்சு போலேஅதி பிரவணமான நெஞ்சை யுடையீராய் அனுபவித்து அறியுங்கோள்-
என்னை பொடியாதே -என் நெஞ்சை யுடையீராய் காணப் பெறுமன்று-பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே-என்று உங்களை நீங்களே பொடிவுதி கோள்-என் நெஞ்சை இரவலாக வாங்கிக் காண மாட்டி கோளோ-என்னை பொடியாதே -மாயாம் ந சேவே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தெற்குத் திக்கிலேயாய் -நன்றான சோலை என்னுதல்-தென்னன் கொண்டாடும் சோலை என்னுதல் –நம்பி அழகுக்கு முன்னே சோலை அழகு வந்து வடும்பிடுகிற படி
சோலைத் திருக்குறுங்குடி நம்பியை- நம்பிக்கு ஆபரணம் போலே யாயிற்று ஊருக்கு சோலை
நான் கண்ட பின் -சோலையிலும் ஒப்பனையிலும் ஆழம் கால் படும் நான் –
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு யஜ்ஜோ பவீதமும்-பரந்த மின் திரள் சுழித்தால் போல் இருக்கிற திரு மகர குண்டலமும் -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் திரு மார்பிலே கழற்றிச் சாத்த வேண்டாத படியான ஸ்ரீ வத்ஸமும் -நாய்ச்சிமாரோடு கலக்கும் போதும் கழற்ற வேண்டாத ஆபரணங்களும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.
திரு உடம்போடு பொருந்தின திரு அணி கலன்கள் -கற்பக தரு பணைத்தால் போலே யாய் -சர்வ பூஷண பூஷார் ஹங்களான-திருத் தோள்களும்
வந்தெங்கும் நின்றிடுமே.-உங்கள் ஹித வசனங்களைக் கேட்டு அகல நினைத்தாலும் அங்கேயங்கே நில்லா நின்றது -வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி -என்கிறது உகப்பார்க்கும் ஒத்தது-

————————————————————

நம்பியுடைய திவ்யாயுத வர்க்கம் உள்ளும் புறமும் ஓக்கத் தோற்றா நின்றது என்கிறாள் –

நின்றிடும்  திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நின்றிடும் திசைக்கும் நையும் என்று –
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -என்று ராம சரங்களால் யுகாவாதார் படுமத்தை முக பேதத்தாலே திவ்யாயுதங்கள் படுத்தா நின்றது -ஸ்தப்தையாக்குவது -அறிவு கெடுப்பது -ஸைதில்யத்தை விளைப்பது ஆகா நின்றது -ஸ்தப் தையாகா நின்றாள் அறிவு கெடா நின்றாள் சிதிலை யாகா நின்றாள் என்று குற்றமாகா நினைத்து பொடியா நின்றி கோள் -சில ஸ்தம்பநத்தை பண்ணும் -சில உள்ளறிவை போக்கும் -சில அறிவு கொடுத்து ஸைதில்யத்தை விலைக்கும்
அன்னையரும் முனிதிர்-
இந்த சைத்திலயத்துக்கு அடியான நீங்களும் பொடியா நின்றி கோள் -இந்த அழகில் உங்களுக்கு அந்வயம் இல்லையாய் பொடி கிறி கோளோ -ஊராய்த் தான் சொல்லு கிறி கோளோ -இக்குடிக்காக உள்ள ப்ராவண்யம் என்னளவில் வந்தவாறே குறையுமோ
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-
மலைகளை சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்களை யுடைய திருக் குறுங்குடி நம்பியை
நான் -திவ்ய ஆயுத சேர்த்தியில் ஆழம் கால் படும் நான் –வீர பத்னிகள் தோற்கும் அது இ றே
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
ஆயுத கோடியிலும்-ஆபரண கோடியிலும் -முதல் உடலாய் இ றே இருப்பது -வென்றி கொள்ளும் வில்லும் -அல்லாதவற்றுக்கும் வென்றி என்கிறது உப லக்ஷணம் -உகப்பாரோடு உகவாதாரோடு வாசி இல்லை வெற்றி கொள்ளுகைக்கு -அனுகூலரை ஆபரணமாய் அழிக்கும்-பிரதிகூலரை ஆயுதமாய் அழிக்கும் -ஆகார த்வயத்தாலும் வெற்றியே ஸ்வ பாவமாய் இருக்கை-சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–
மறக்க ஒண்ணாத படி இடைவிடாதே ப்ரத்யஷித்து என் கண் வட்டத்தை விடுகிறனவில்லை –
நெஞ்சுளும்-நீங்கா வே –
கண் முகப்பே நின்று நலிய புக்க வாறே கண்ணை புதைத்தாள் -அகவாயிலும் வந்து பிரகாசிக்கப் புக்கது -உபய ஆகாரத்தாலும் அனுபவிக்க வல்லவள் காணும் இவள் –

—————————————————-

ரக்ஷணத்துக்கு கவித்த முடியும் -தனி மாலையும் -பரிவட்டப் பண்பும் முதலானவை பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன வென்கிறாள்

நீங்க  நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

நீங்க நில்லா கண்ண நீர்கள்-
அவன் நீங்க -கண்ண நீர்கள் நீங்கு கின்றன இல்லை என்னுதல் -பேர நிற்கிறது இல்லை என்னுதல் -மாற்ற நில்லா என்னுதல் –அப்போது நீக்க வென்று வல் ஒற்றாக கடவது –
என்று அன்னையரும் முனிதிர்
இவ்விஷயத்தில் இல்லை யானால் ஆனந்தாஸ்ருவும் இல்லையோ –
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தேன் மாறாத சோலை -அச் சோலையில் தேனை மாற்ற வல்லி கோளோ -என் கண்ண நீரை மாற்றுகைக்கு -இவள் கண்ண நீர்க்கு ஸஹ்யம் போக்யத்தை யாயிற்று
நான் -ஸ்வாபாவிகமான மேன்மையில் ஈடுபட்ட நான் –
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
தர்ச நீயமாய் குளிர்ந்த திரு மாலையும் -உபய விபூதி ரக்ஷணத்துக்கு முதலி என்று தோன்றும் படி இட்ட தனி மாலையும் -ஸ் ப்ருஹணீயமான திரு அபிஷேகமும் -உபய விபூதி நாதன் என்று கோட் சொல்லுகிற முடி என்கை
வடிவும் -அந்த முடிக்கு தகுதியான விக்ரஹமும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–
திருவரைக்கு தகுதியான பட்டும் –நாண்-விடு நாண்
பாவியேன் -உரு வெளிப்பாடாய் செல்லா நிற்க அனுபவிக்கப் பெறாத பாபத்தை பண்ணினேன் -அனுபவத்துக்கு விஷயமாகாது ஒழிந்தால் -உள்ளு -பெரிய திருநாளாக செல்ல வேணுமோ –
பக்கத்தவே.-ஆதி ராஜ்ய ஸூ சகமான முடியும் தனி மாலையும் -இவை தான் மிகை என்னும் வடிவும் -அதற்குத் தகுதியான திருப் பீதாம்பரமும் பக்கம் விட்டுப் போகிறது இல்லை -அணைக்க எட்டுகிறதும் இல்லை -என்கை –

————————————————————–

ஒன்றுக்கு ஓன்று தகுதியான நம்பி திரு முகத்தில் அழகுகள் என்னை உயிர் நிலையில் நலியா நின்றன என்கிறாள்

பக்கம்  நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

பக்கம் நோக்கி நிற்கும் –
தன் தசையே செப்பேடாக வர சம்பாவனை ஒழிய பார்ஸ்வத்தையே பார்த்து நில்லா நின்றாள் -நை ஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நே மான் புஷ்ப்ப பல த்ருமான் – ஏகஸ்த்தஹ்ருதயா நூநம் ராம மேவா நு பஸ்யதி
நையும்
வரக் காணாமையாலே அங்கனம் இருக்க மாட்டாதே சிதிலை யாகா நிற்கும் –
என்று அன்னையரும் முனிதிர்
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்த படியை அறிந்து வைத்த நீங்களும் பொடியா நின்றி கோள்-பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூ ஸ் நிக்த-என்னும்படி இ றே இருப்பது
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படியான கீர்த்தியை யுடைய -அந்த கீர்த்தியே தாரகமாய் இருக்கிற நான்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
திரண்ட சோதி –ஆ தொண்டை பழம்-உபமானத்தை சிஷித்துக் கொண்டு இழிய வேண்டும்படியான திருவதரம்-தேஜஸ் தத்துவங்களை திரட்டினால் போலே இருக்கிற ஆ தொண்டை பழம் இதுக்கு த்ருஷ்டாந்தமாம் அத்தனை -உபமான ரஹிதமாய் நீண்ட புருவங்களும் –
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே
அப்புருவத்துக்குத் தகுதியாக தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்
பாவியேன் -அவன் அழகை அனுசந்தித்தால் பிரியப்படுகை யன்றிக்கே நோவு படும் படியான பாபத்தை பண்ணினேன்
ஆவியின் மேலனவே-தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -உள்ளு வெளிச்சு இருக்கிறாப் போலே புறம்பும் ஆகப் -பெற்றோம் ஆகிறிலோம்-

————————————————————

நம்பியினுடைய திரு முகத்தில் அவயவ சோபைகள் என் நெஞ்சு நிறைய புகுந்து நலியா நின்றன என்கிறாள் –

மேலும்  வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-
இப்போது அன்றிக்கே -இக்குடி உள்ள அளவும் பிரபலமான பழி-
நங்குடி-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கும் நம் குடிக்கு –
இவள் -வன் பழி -பழியை விளைப்பிக்குமவள்
தாயார் நம்பியைக் காண இடம் கொடாதே நோக்கா நின்றாள் -நாட்டார் செய்யுமத்தை நோன்பு நோற்று பெற்ற தான் செய்யா நின்றாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-
ஸ்ரமஹரமான சோலை சூழ்ந்த திருக் குறுங்குடி நம்பியை
நான் -பழி புகழாம் படி அவகாஹித்த நான் –
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்-
அழகு மிக்க கொடி போலே இருக்கிற மூக்கும் -அழகு கொழுந்து விட்ட தொரு கொடி போலே இருக்கை-
அக் கொடி பூத்தால் போலே யாய் -தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களும் -அது ஒரு பலத்தை உண்டாக்கினால் போலே கனி போலே இருக்கிற திருவதரமும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–
இவற்றுக்கு பரபாகமாய் -தாமரை இலை போலே இருக்கிற திரு மேனியும் –
கற்பக தரு பணைத்தால் போலே மநோ ஹரமாய்-அவ் வழகைக் காத்தூட்ட கடவ தோள்களும்
என் நெஞ்சம் நிறைந்தனவே.–ஹித வசனம் கேட்க்கைக்கு நெஞ்சில் இடம் இல்லை –

————————————————————————

நம்பியுடைய திருமேனி அழகு வெள்ளம் என்னுடைய நெஞ்சில் வேர் விழுந்தது என்கிறாள்

நிறைந்த  வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-
அதி மாத்ரமாய் -ஒருத்தரால் மீட்கப் போகாத பகவத் ப்ராவண்யத்தை சொல்கிறது -வகுத்த விஷயமே யாகிலும் நாம் மேல் விழுந்து பெறுகை அவத்யம் என்று இருக்கும் குடி -இங்கு தாயார் வார்த்தையும் -மக்கள் வார்த்தையும் -இரண்டும் இவ்வாழ்வார் வார்த்தை இ றே -பழி -என்று பரிஹரிக்கிறவள் -உபாயத்தில் கொத்தை யறுக்கிறாள்-பழி பாராதே மேல் விழுகிறவள்-உபேயத்தில் கொத்தை யறுக்கிறாள் -தாயார் பூர்வார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கிறாள் -உபேய ருசியால் செய்கிறவற்றை உபாய புத்தி பண்ணித் தவிருகை அர்த்தம் அன்று -அவற்றில் கர்த்தவ்ய புத்தி பண்ணி யனுஷ்டிக்கையும் அர்த்தம் அன்று -ப்ராப்ய ருசி யடியாய்த் தவிரலாவது ஓன்று இல்லை -உபாய புத்தயா த்ருணச்சேதமும் மிகை -பிள்ளைகள் விவாஹ அர்த்தமாக ஆழ்வான் பிரதிபத்தியை யநுசந்திப்பது –
த்ருஷ்டத்தோடு அத்ருஷ்டத்தோடு வாசி என்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-
நம்பிக்கு அதிசயத்தை பண்ணும் கீர்த்தி
நான் -அந்த கீர்த்தி யோபாதி அவனுக்கு சிறந்த நான் –யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத்தேஜ
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்-
அபரிச்சின்னமான தேஜஸ்ஸினுள்ளே உன்நேயமாம் படி யாயிற்று திரு மேனி இருப்பது -இது தேஜஸ்ஸினுள்ளே வடிவு தான் அபரிச்சேதயமான போக்யதையை யுடையதாய் நித்ய ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–
இந்த விக்ரஹத்தோடே நெஞ்சு நிறையும்படி நின்றான் -அவன் நிறைவைக் குறைக்கில் அன்றோ என் பழியைக் குறைப்பது –
நேமி அம் கை உளதே.–-அல்லாத அழகுகள் எல்லா வற்றிலும் மிகுதியாய் யாயிற்று கையும் திரு வாழி யும் இருப்பது -வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக் கையிலே திரு வாழி யானால் மீட்கப் போமோ –

————————————————————–

சார்வத்ரிகமான அங்க சோபை என் முன்னே நின்று நலியா நின்றது என்கிறாள்

கையுள்  நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்-
கை தொடப் பொறாத ஸூ குமாரமான முகத்தை ஆற்றாமையால் கை உள்ளே வைக்கும் –தன் கை பட்ட நோவு பொறாமை நோவு பட்டு நையும்-
தாய்மாரான நீங்கள் இப்படி செய்யா ஊரவர் கவ்வையை நாம் இன்னாதாகிறது என் -காந்தக்கர ஸ்பர்சம் ஒழிய தன் கை பாடவும் பொறாது முகம் -இத்தால் தன்னோடு தனக்கு அந்வயம் அல்லாத பாரதந்தர்யத்தை சொல்கிறது
நையும் -அவ்வளவும் அன்றிக்கே மிகவும் அவசன்னையாம்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்-
பழைமையாலே கறுத்த மாடம் –என்னுதல் -நம்பியோட்டை நிழலீட்டாலே கறுத்த மாடம் என்னுதல் -சோபயன் தண்டகாரண்யம் –
நான் -மாடத்தில் பழமை போலே நைவுக்கு பழைமையான நான் -நைவாய வெம்மே போல் -என்ன கடவது இ றே
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்-
அநந்யார்ஹம் ஆக்கும் கண்ணும் -அதுக்குத் தோற்றார் இளைப்பாறும் அல்குலும் -கீழையும் மேலையும் கொண்டு எறி யும் படி உன்நேயமான இடையும் -இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–
தர்ச நீயமாக கண்டால் மறக்கப் போகாத குழல்கள் வந்து அலை எறியா நிற்பதாய் அணைக்கப் பாங்கான தோளும்-மொய் -அழகு
பாவியேன் -முன்னே நில்லா நிற்க அனுபவ யோக்யம் அல்லாத பாபத்தை பண்ணினேன் -கண் வட்டத்தில் தோற்றா நிற்க அணைக்க எட்டாது இருக்கிறதே –

———————————————————-

நம்பி போக்யத்தை எல்லா வற்றோடும் கூட என் நெஞ்சிலே புகுந்து விடுகிறிலன் என்கிறாள் –

முன்னின்றாய்  என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்-
ஒருவராலும் காண ஒண்ணாதபடி வர்த்திக்கும் ஸ்த்ரீத்வத்தை யுடையவள் யாயிற்று இவள் -யா நசக்யா புராத்ரஷ்டும் பூதைராகாசனகாபி -என்னும்படி இருக்குமவள் இ றே -துணையாவாரோடு பொடிவாரோடு வாசி அற பொடியத் தொடங்கிற்று
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-
பிரளயாந்தஸ்திரமான மாடம் என்று தோற்றும் படி இருக்கை -ந ப்லாவ்யதி சாகர -நான் -லஜ்ஜையைக் கை விட்ட நான் –
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்-
சென்னியில் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகம் தொடக்கமான அசங்க்யாத திவ்ய ஆபரணத்தை யுடையவன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–
பூஷண பூஜ்யங்களுடைய சேர்த்தியால் கண்ட சக்கரையும் சேலப் பாலும் கலந்தால் போலேயாய்
வந்து என் நெஞ்சம் கழியானே.–வந்து என் நெஞ்சிலும் நின்றும் போகிறிலன் -முன் நிறுத்தினாரை தவிர்க்க மாட்டாதே முன்னே நின்றேன் என்று என்னையும் பொடியும் அத்தனையோ-எனக்கு மறைக்கை தேட்டம் -முடியாமை இருக்கிறேன் அத்தனை –

——————————————————————–

நம்பியுடைய திருமேனி என் நெஞ்சில் பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள் –

கழிய  மிக்கதோர்  காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் -நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் -சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –
தாயார் நம்பியை நினைக்கவும் விட்டுக் கொடாள்-ஒரு விஷயத்தில் பிரவணையாக காண வல்லனே என்று இருந்தவள் -நெஞ்சையும் காவலிடா நின்றாள் -கிருஷி பண்ணினவள் தானே நிஷேதிக்கிறது -தர்மி லோபம் வரும் அளவாகையாலே
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குறைவற்ற கீர்த்தி -கீர்த்தி போலே ப்ருதக் ஸ்திதி இல்லாத நான் –
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
நித்ய ஸூ ரிகளுடைய சமூகங்கள் திரண்டு அனுபவிக்க கிண்ணகத்தில் இழிவாரை போலே திரள் திரளாக வாயிற்று இழிவது
அழகு வெள்ளத்தின் நடுவே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே
உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்
இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே
அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறி லோமே என்ன -சிவ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணா தாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –

———————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே வைஷ்ணவர்கள் என்கிறார் –

அறிவரிய  பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

அறிவரிய பிரானை –
ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களால் அறிய ஒண்ணாது ஒழிய பெற்றோமே என்கிறார் -இக்குடியில் உள்ளார் ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களோ என்னில்-இவளால் மீளலாம் என்று மீட்கப் பார்த்த போதே -தம் தம்மாலே பெறவுமாம் -என்று இருந்தார்களாம் இ றே
ஆழி அம் கையனையே அலற்றி
கையும் திரு வாழி யுமான அழகையே சொல்லியாயிற்று இதில் கூப்பிட்டது -முதலிலே சங்கினொடும் நேமியோடும் -என்னா-வில்லும் தாண்டும் வாளும் சக்கரமும் -என்னா -நேமியங்கை யுளதே என்னாதே-இதுவே யாயிற்று எல்லா வற்றோடும் சேர்த்து அனுபவித்தது
நறிய நன்மலர் நாடி –
பரிமளிதமான செவ்விப் பூவாக பாட்டுக்களைத் தேடிக் கொண்டு -சொல் மாலைகள் என்றும் -அடி சூட்டலாகும் அந்தாமமே -என்றும் சொல்லக் கடவது இ றே
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
இவ் ஊரில் ஜென்மமாயிற்று இவர்க்கு இப் பிராவண்யத்தை விளைத்தது -நம்பி யுடைய அழகை முற்றூட்டாக காண வல்ல ஆழ்வார் என்றுமாம்
அழகை மெய்க் காட்டுக் கொண்ட இப்பத்து என்னுதல்-திவ்ய லாஞ்சனங்களை சொன்ன இப்பத்து என்னுதல் –
திருக்குறுங்குடி யதன்மேல்-அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே-
பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இ றே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்
ஆழ்கடல் ஞாலத்துள்ளே-வைட்டணவர்-
மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளினை ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள்


கந்தாடை       அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-5-

September 17, 2016

இப்படி ராத்திரியில் அத்யந்தம் அவசன்னை யான பிராட்டி விடிந்தவாறே செல்லுகிற வியசனம் சிறிது நீங்கி -முன்பு அநு பூதமான
நம்பியுடைய ஸுந்தரியாதிகளை ஸ்மரிக்கையாலே சிறிது தரிப்போடே கூட -இப்போது காணப் பெறாத வியசனத்தாலே நோவு படுகிற இவளை
-தோழிமாரும் தாய்மாரும் மற்றும் உண்டான உறவுமுறையாரும் நீ இப்படி வியசனப்படுகை ஸ்த்ரீத்வத்துக்கும் ஆபீஜாத்யத்துக்கும் போராது என்று
பொடிய-நம்பியுடைய அழகிலே நான் அகப்பட்டபடி அறியாமை இ றே என்னைப் பொடிகிறது என்னை – நாங்களும் நம்பியைக் கண்டு வருகிறோம்
-எங்களுக்கு இப்படி அவசானம் பிறவாதே ஸூ கிகளாய் இரா நின்றோம் -நீ இங்கனம் படுவான் என் என்ன-என்று அவர்கள் கேட்க
-ஸ்நேஹஹீனரான உங்களுக்கு நம்பியுடைய அழகும் ஒப்பனையும் திவ்ய அவயவங்கள் அழகும் தன்னில் சேர்த்தியும் தோற்றமோ –
-அப்படி அறிக்கைக்கு ஈடான அறிவையும் ஸ்நேஹத்தையும் அவன் எனக்குத் தந்து அருளுகையாலே நான் அறிந்தேன் -என்று
அவர்களுக்கு சொல்லி -இப்படிப்பட்ட நம்பியுடைய அழகிலும் வேண்டற்பாட்டிலும் தான் மிகவும் அவஹாஹித்து -எத்தனையேனும்
அளவுடையரே யாகிலும் அவன் பக்கல் பரிவு இல்லாதவர்க்கு அறிய முடியாது இருக்கப் பெற்றோமே -என்று ப்ரீதையாய் முடிக்கிறாள் –

———————————————————————-

ஆழ்வார்களோடே சேர்ந்த திரு முகத்தில் அழகை அனுசந்தித்து என் அந்தக்கரணம் அங்கே மிகவும் பிரவணம் ஆகா நின்றது -என்கிறாள் –

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-

என்னுடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கிற தாய்மாரான நீங்கள் என்னுடைய அவசாதத்துக்கு அடியான நம்பியுடைய அழகை இன்னாதாகாதே என்னை முனிகிற படி எங்கனே –
நமக்காக நிரதிசய போக்ய ஸுந்தரியத்தோடே திருக் குறுங்குடியிலே நின்று அருளின நம்பியை –
பாட்டுத் தோறும் –நான் -என்கிறது -சாபல அதிசயத்தாலே  / –நேமி -திரு வாழி –
சிவந்த கனி போலே இருக்கிற திருப்பவளம் ஒன்றோடும் மிகவும் பூணா நின்றது என்னுடைய அந்தக்கரணம் –

————————————————————–

நம்பியுடைய திரு மார்பிலும் திருத் தோளிலும் யுண்டான ஸ்வா பாவிகமான அழகும் திரு அணிகலன்களும் அழகும் சுற்றும் வந்து நின்று என்னை நெருக்கா நின்றன என்கிறாள்

என்  நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

நம்பி திரு அழகை நாங்கள் அனுபவித்தோம் அல்லோமோ -நாங்கள் பேசாது இருக்க நீ இங்கனம் படுகிறது என் -என்று அவர்கள் பொடிய -என்னை நீங்கள் பொடியாதே உங்களுக்கு காண வேனுமாகில் என்னைப் போலே ஸ்நேஹ யுக்தமான நெஞ்சை யுடையீராகக் கொண்டு அனுசந்தித்து அறியுங்கோள்
தென்னாட்டு சோலை சூழ்ந்த திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூல் -மின்னா நின்றுள்ள திரு யஜ்ஜோபவீதம்
மன்னு பூண் -திரு உடம்போடு பொருந்தின திரு அணி கலன்கள்-

————————————————————————–

நம்பியுடைய ஸ்ரீ சார்ங்கம் தொடக்கமான திவ்யாயுத வர்க்கம் புறம்பும் உள்ளும் ஓக்க நிரந்தரமாக தோற்றா நின்றன -என்கிறாள்

நின்றிடும்  திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நம்பியுடைய  ஸுர்யாதிகளிலே அகப்பட்டமை அறிந்த தாய்மாரான நீங்களும் ஸ்த்தையாகா நின்றாள் -அறிவு கெடா நின்றாள் -சிதிலையாகா நின்றாள் -என்று பொடியா நின்றி கோள் -வென்றி வில்-வென்றியைக் கொடுக்கும் வில் –

————————————————————–

திருத் தோள் மாலை திருப் பரி வட்டம் முதலானவை எல்லாம் என் பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன -என்கிறாள் –

நீங்க  நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

நம்பியை பிரிந்தால் தரிக்க மாட்டாள் என்று அறிந்த தாய்மாரான நீங்களும் கண்ண நீர் மாறுகிறது இல்லை என்று பொடியா நின்றி கோள்
-வடிவு -திரு உடம்பு / பாங்கு தோன்றும் பட்டும்— திருவரைக்குத் தகுதியாய் தோற்றுகிற பட்டு -/ நாண்-விடு நாண் –
கண்டு வைத்து அனுபவிக்கப் பெறாத இன்னாப்பாலே பாவியேன் என்கிறாள் –

——————————————————————

திருக் குறுங்குடி நம்பிக்கு கீர்த்தி தகுதியானால் போலே -ஒன்றுக்கு ஓன்று தகுதியாய் இருக்கிற திருப் பவளம் முதலான திரு முகத்தில் அழகுகள் ஆனவை என் உயிர்  நிலையில் நலியா நின்றன -என்கிறாள் –

பக்கம்  நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

தன் தசையை அனுசந்தித்து -சர்வதா அருகே வரக் கூடும் -என்று வர சம்பாவனை உள்ள பார்ஸ்வத்திலே பார்த்து நில்லா நின்றாள் -பின்னை அங்கனம் நிற்க மாட்டாதே சிதிலை யாகா நின்றாள் என்று என்னோடே பழகி இருக்கிற தாய்மாரான நீங்களும் பொடியா நின்றி கோள் –
தொக்க சோதித் தொண்டை வாய் -திரண்ட சோதியை யுடைத்தாய் சிவந்து இருக்கிற வாயும்
-தொண்டை – ஆ தொண்டை பழம்
தக்க தாமரைக் கண்ணும்-புருவத்துக்கு தகுதியாய் தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்
பாவியேன்-அவன் அழகை நினைத்தால் நோவு படுக்கைக்கு ஈடான பாபத்தை பண்ணினேன் –

————————————————————-

திவ்ய அவயவங்களினுடைய அழகுகள் என் நெஞ்சு நிறைய புகுந்து நலியா நின்றன என்கிறாள் –

மேலும்  வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

இப்போது அன்றிக்கே மேலும் நம் குடிக்கு நிலை நிற்கும் பழியை விளைக்கும் இவள் என்று தாயார் நமக்கு நம்பியைக் காண இடம் கொடாதே நோக்கா நின்றாள் –
கோல நீள்கொடி மூக்கு-
கோலம் கொழுந்து விட்ட தொரு கோடி போலே இருக்கிற திரு மூக்கு

—————————————————————-

நம்பியுடைய திருமேனி அழகு வெள்ளம் என்னுடைய நெஞ்சில் வேர் விழுந்தது என்கிறாள்-

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

ஒருவராலும் போக்க ஒண்ணாத பழி –
பாக்யத்தை மிக்கு விலக்ஷணமான திரு மேனி
அல்லாத அழகில் காட்டில் கையும் திரு வாழி யுமான அழகே ஹிருதயத்தை வருத்தா நின்றது என்று கருத்து-

—————————————————————-

அழகிய குழல் தாழ்ந்த தோள்களோடே கூடின மற்றும் உண்டான திவ்ய அவயவங்களிலே அழகுகள் என் முன்னே நின்று நலியா நின்றன என்கிறாள் –

கையுள்  நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

கை தொடப் பெறாத ஸூ குமாரமான முகத்தை விஷணையாய் கையிலே வைக்கும் -மிகவும் அவசன்னையாம் என்று அன்னியரைப் போலே தாய்மாறான நீங்களும் பொடியா நின்றி கோள்
மைகொள் மாடம்-நம்பியுடைய திருமேனியில் நீலமான தேஜஸ் சாலே கறுத்த மாடம் -பழமையாலே கறுத்த மாடம் என்றுமாம்
பாவியேன் -இவ் வழகை வனுபவித்து பிரிகைக்கு ஈடான பாபத்தை பண்ணினேன் –

—————————————————–

அழகு எல்லாவற்றோடும் கூட நம்பி வந்து என் நெஞ்சிலே புகுந்து எனக்கு மறக்க ஒண்ணாத படி ஒரு க்ஷணமும் என் நெஞ்சை விட்டு போகிறிலன் என்கிறாள்

முன்னின்றாய்  என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

ஒருவராலும் காண ஒண்ணாத படி வர்த்திக்கும் ஸ்த்ரீத்வத்தை யுடையையான நீ கண் காண வந்து நிற்பதே -என்று தோழிமாரும் தாய் மாறும் திரள நின்று நலியா நின்றி கோள் –மன்னுகை-கால் உள்ளதனையும் செல்லுகை –உலப்பிலாமை -முடிவில்லாமை
இப் பூஷண பூஜ்யங்களுடைய சேர்த்தியாலே கண்ட சக்கரையும் பாலும் கலந்தால் போலே நிரதிசய போக்யனாய் என் ஹிருதயத்தை விட்டு போகிறிலன்

—————————————————————-

நம்பியுடைய திருமேனி என் நெஞ்சில் பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள் –

கழிய  மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

லோகத்தில் தங்களுக்கு அபிமதரைப் பிரிந்தால் நாள் செல்ல நாள் செல்ல ஸ்நேஹம் குறையக் கடவதாய் இருக்க -இவளுக்கு வர்த்தியா நின்றது என்று தாயாரானவள் நம்பியை அனுசந்திக்க ஒட்டு கிறிலள்
வழுவில் கீர்த்தி-பூரணமான கீர்த்தி
அயர்வறும் அமரர்களுடைய சமூகங்கள் திரண்டு அனுபவிக்க அழகு வெள்ளத்தின் நடுவே உஜ்ஜவலமாய் தோற்றுகிற வி லக்ஷணமான திரு வடிவு என்னுடைய ஹிருதயத்தில் விகசியா நின்றது
ஓ ர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அது கிட்டின வாறு இன்னார் என்று அறியேன் என்னுமா போலே கலங்கி நிலையிட ஒண்ணாமை-

————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே வைஷ்ணவர்கள் என்கிறார் –

அறிவரிய  பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

கையும் திரு வாழியுமாய் இருக்கிற தன்னுடைய திரு அழகு ஒருவருக்கும் தெரியாத படி இருக்கிற மஹா உபகாரகனை அவ்வுபகார ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே பரவசராய் அலற்றி
மிகவும் பரிமளத்தை யுடைய செவ்விப் பூவாகக் கொண்டு நம்பியுடைய திரு அழகை முட்டக் காண்கைக்கு ஈடான ப்ரபாவத்தை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த அவனுடைய திவ்ய லாஞ்சனங்களை ஆயிரம் திருவாய் மொழியிலும் ஸுந்தர்ய சீலாதிகளால் -திரு நாட்டிலும் -அவதாராதிகளிலும் பரத்வம் உள்ளது நம்பி பக்கலிலே என்று உபபாதித்த இத்திருவாய் மொழியை வியக்தமாக கற்று இருக்குமவர்கள் –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-4-

September 16, 2016

நாடும் இரைக்கவே நாம் மடலூர்ந்தும் -என்று பெரிய த்வரை இறே கீழ் சென்றது -மடல் எடுக்கை தான் அவனை பெறுகையோபாதி தேட்டமாம் படி
பலஹானி பிறந்து இவ்வளவிலே ராத்திரி வந்து கைக்கொண்டு -அது தான் சந்த்யா மாத்திரம் அன்றிக்கே-மத்திய ராத்ரியாகி –
சராசரங்கள் அடைய உறங்கி -ஹிதம் சொல்லும் பந்துக்களும் -இவள் ஆர்த்தி பொறுக்க நாட்டாமை பரவசராய் விழுந்து –
உசாத்துணையும் இன்றிக்கே தனிப்பட்டு -வியசனத்துக்கு அடியான தன்னுடைய பாபத்தையும் -இஸ் சமயத்தில் முடிய ஒண்ணாத
பாரதந்தர்யத்தையும் அனுசந்தித்து -விஷஸ் யதாதா நஹிமே அஸ்தி கச்சித் சஸ்த்ரஸ்யவா நேஸ்மநி ராக்ஷஸஸ்ய -என்று
இத்தனை விஷம் தருவாரையும் காண்கின்றிலேன்-விஷம் போலே நின்று கொல்லுகை அன்றிக்கே அப்போதே முடியும் படி –
ஒரு சஸ்திரம் தருவாரையும் காண்கின்றிலேன் -அவரைப் பிரிந்து உயிர்க் கொலையாக்கும் ராவண க்ருஹத்தில் நற்கொலை யாக்கும்
பரிகரத்தை தருவார் சில தார்மிகரைக் கிடைக்குமோ -என்னும் தசையாய் -பிரளய ஆபத்து தசையில் யுதவும் புருஷோத்தமனுடைய
குணங்களை அனுசந்தித்து -அவையும் எனக்கு கார்யகரமாவது ஒழிவதே -என்று வேண்யுத்க்ரநத்திலே ஒருப்பட்ட பிராட்டி போலே
முடிவு தேட்டமான தசையில் ஈஸ்வரன் ஜகத் ரக்ஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே யோக நித்திரை பண்ணா நின்றோம் -என்று
தன்னுடைய ரக்ஷண உத்தியோகத்தை ஸ்மரிப்பிக்க -நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனான பின்பு
இனி ஒரு தட்டு இல்லை என்று அவன் குண ஞானத்தால் தரித்து தலைக் கட்டுகிறது-

—————————————————————-

பிரளய ஆபத் சகனானவன் -என்னை விரகப் பிரளயம் கொள்ள வந்து உதவிற்று இலன் -இனி சத்தையை நோக்குவார் யார் என்கிறாள் –

ஊரெல்லாம்  துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

ஊரெல்லாம் துஞ்சி –
சிலருடன் போது போக்க ஒண்ணாத படி ஊராக உறங்கிற்று -உணர்ந்து இருப்பார் சிலரும் உறங்குவார் சிலரும் இன்றிக்கே இருந்ததே குடியாக குடியாக உறங்கிற்று –
இவள் பிறந்த ஊர் ஆகையால் இவள் தசையை அனுசந்தித்து சோகத்தால் சோர்ந்து கிடந்த படி –நாக பாசத்தின் அன்று போலே ஓன்று இரண்டு பேராகிலும் உணர்ந்து இறுக்கப் பெற்றதோ -பழி சொல்லுவாரும் இன்றிக்கே -ஹிதம் சொல்லுவாரும் இன்றிக்கே -உசாத் துணையும் இன்றிக்கே -இருக்கிற படி -புறம்பு போய் ஒன்றைக் கண்டு தரித்தாலோ என்னில்
உலகெல்லாம் நள்ளிருளாய்-
பிரளயம் கோத்தால் போலே பதார்த்தங்கள் அடைய இருள் மறைத்தது
நள்ளிருள் -செறிந்த இருள் -என்னுதல் -நடு இருள் என்னுதல்-சகல பதார்த்தங்களும் ஒடுங்கினால் ராத்திரிக்கு அசாதாரணமான ஒலி என்னுதல் – பதார்த்த தர்சனம் பண்ணியும் தரிக்க ஒண்ணாத படியாய் யாயிற்று -என்கை –
நீரெல்லாம் தேறி –
ஜல சர தத்துவங்களும் த்வனி அடங்கி-ஸ்ரவண இந்த்ரியத்துக்கு முதலிலே விஷயம் இல்லை என்கை –ஆக மூன்று பதத்தாலும் வாக் இந்த்ரியத்துக்கும் சஷூஸ்ஸூ க்கும் ஸ்ரவணத்துக்கும் விஷயம் இல்லை என்கை –பகலில் வந்தால் இந்திரியங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களில் பாலி பாய்ந்து ஆற்றாமை மட்டம் செய்யும் -அங்கனம் ஒன்றும் இன்றிக்கே சர்வ இந்திரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே யாய் ஆற்றாமை விஞ்சி இருக்கும் இ றே
ஓர் நீளிரவாய் நீண்டதால்-
பகல் விரவிய இரவு அன்றிக்கே இரவே யாக -மனுஷ்ய ராத்திரியில் காட்டிலும் தேவர்களுடைய ராத்திரி நீண்டு இருக்கும் இ றே -அதுக்கும் ஒரு அவதி உண்டு இ றே -அங்கனம் ஓர் அவதி காண் கிறி லோம்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்-
பிரளய ஆபத்தில் தரம் பாராதே எல்லாரையும் ரஷித்தான்-ஜகத்துக்கு எல்லாம் வந்த ஆபத்து போருமாயிற்று இவளுக்கு வந்தது – -பிரளயம் கொள்ளப் புக்க ஜகத்து மடல் எடுக்க புக மாட்டாமை யன்றே ரஷித்தது-தம் தம்மால் பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்துக்களில் உதவுமவன் அன்றோ -அன்று ஒருவர் அர்த்தியாது இருக்க ரஷித்தான் -இன்று இரந்ததே குற்றம் –
நம் பாம்பணையான்-ஆர்?எல்லே! வல்வினையேன்-
உடம்பிலே அணைய வேணும் என்பார்க்கு உடம்பு கொடுக்குமவன் -சம்சாரிகளுக்கு செய்யுமதும் பெற்றிலேன் -அநந்ய பிரயோஜனர்க்கும் செய்யுமதும் பெற்றிலேன்-சாமான்ய ரக்ஷணமும் இல்லை யாயிற்று -விசேஷ ரக்ஷணமும் இல்லையாயிற்று
நம் -சம்ச்லேஷ தசையில் கையாளாகத் தாழ நின்று பரிமாறின படி -அத்தாலே கூப்பிடுகைக்கு வேண்டுவது பண்ணிப் போனான் அத்தனை
வாரானால் -வருகிறிலன் -வயிற்றிலே வைத்து ரக்ஷிக்க வேண்டா -உடம்பிலே அணைக்க வேண்டா -வந்து முகம் காட்ட அமையும் –
த்ருஷ்ட ஏவ ஹி ந சோக மப நேஷ்யதி ராகவா -தமஸ் சர்வஸ் யலோகஸ்ய ஸமுத்யன் நிவ பாஸ்கர
ஆவிகாப்பார் இனியே.–
பிரளயத்தின் கையிலே அகப்பட்டாரை போலே இந்த ராத்ரியின் கையிலே அகப்பட்டு கிடக்கிற நான் பிராண ரக்ஷணம் பண்ணவோ -எம்மில் முன் அவனுக்கு மாய்வராலோ -என்று எனக்கு முன்னே தளருகிற தோழி காக்கவோ -ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ -பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ
எல்லே -என்னே –ஆச்சர்யத்தாலே யாதல் -தோழி சந்நிதி இன்றிக்கே இருக்க -வாசனையால் அவளை சம்போதிக்கிறாள் ஆதல் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவன் ஆனவன் உதவாதபடியான மஹா பாபத்தை பண்ணினேன்
வல் வினையேன் ஆவி -விரஹத்துக்கு சளையாதே ஆவி -பிரிவே ஹேதுவாக நூறே பிராயம் என்னும் ஆவி
இனி –யார் -ஆபத்துக்களில் உதவிப் போருமவன் உதவாத பின்பு பாதகர் என்னை நோக்கவோ –

———————————————————–

இத்தசையில் உதவக் கடவ கிருஷ்ணனும் வருகிறிலன் -நெஞ்சே நீயும் அபவ்யமாகா நின்றாய் -என்கிறாள்

ஆவி  காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆவி காப்பார் இனியார்? –
உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -இனி காப்பார் யார் –
ஆழ்கடல் மண் விண் மூடி-மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்-
அபரிச்சேத்யமான கடலையையும் பூமியையும் ஆகாசத்தையும் மறைத்து -அவ்வளவிலும் பர்யவசியாதே மஹத்தான விகாரத்தை யுடையதாய் -நித்ய விபூதியையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது -ஸ்ரீ விஸ்வரூபம் காட்டினாள் போலே சர்வசக்தி செய்யுமத்தையும் செய்யா நின்றது –அத்விதீயமாய் அதி பிரபலமான ராத்ரியாய் முடிவு காண போகிறது இல்லை -நூறு ஆயிரம் ஆதித்யர்களாலும் பேதிக்கப் போகாத ப்ராபல்யம் -இருளுக்கும் இராத்திரிக்கும் வாசி தெரிவிக்க மாட்டாமையாலே -இருளை இராத்திரி என்கிறாள் –
காவி சேர் வண்ணன் –
புல்லேந்தீவர பத்ராபம் –என்கிற நிறத்தை யுடையவன் –இருளோடு செறிந்த நிறம் நிறம் ஆகையால் -இருளோடு செறிந்து வரலாம் கிடீர் கம்சன் காவலாக வைத்த துஷ்ப்ரக்ருதிகள் கண் படாத படி -இருளிலே வந்து அவதரித்தவர் -அன்று தாமஸ பிரக்ருதிகளை போக்க வந்தவனுக்கு இன்று இந்த தமஸை போக்கல் ஆகாதோ
என் கண்ணனும் வாரானால்
முன்பு இராத்திரிகளில் வந்து உதவுமவன்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.-
அவனும் என்னுடையவனாய் இ றே உதவாது ஒழிந்தது -ஆபத்துக்கு உதவாதவனாய் யன்றே -அது உனக்கும் ஒக்கும் இ றே -என் கண்ணன் என்னலாம் படி இ றே அவன் பவ்யதை-பவ்யரானார் அடங்க அபவ்யராம் பாவத்தை பண்ணினேன் –
நீயும் பாங்கு இல்லையே
சேஷியாய் ஸ்வ தந்த்ரனானவன் செய்யுமத்தை பார தந்தர்யமே ஸ்வரூபமாய் இருக்கிற நீயும் செய்ய வேணுமோ -பிரணயித்வத்தை விட்டேன் என்னலாம் ஸ்வ தந்த்ரன் ஆகையால் -உனக்கு அங்கனம் இருப்பது ஓன்று உண்டோ –

———————————————————–

சகல துக்கங்களையும் கெடுத்து உஜ்ஜீவிப்பிக்கும் ஸ்வ பாவனான காகுத்ஸனனும் வருகிறிலன் -பரதந்த்ரை யாகையாலே முடியவும் விரகு பெறுகிறிலன் என்று இன்னாதாகிறாள்

நீயும்  பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்-ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
மன ஏவ என்கிறபடியே உன்னை ஒழிய ஒரு கார்யம் செய்ய ஒண்ணாத படி பிரதானமான நீயும் பாங்கு ஆகிறது இல்லை -முதலிலே நெடிதான இராத்திரியும் -முடிவு காண ஒண்ணாதே வளரா நின்றாலும் குறைந்து வரலாம் இ றே -அங்கனம் செய்யாதே நிலை பெறுகிறது இல்லை -அவ்வளவு அன்றிக்கே ராத்திரி என்கிற பேரை பொகட்டு கல்பம் என்கிற பேரை யுடைத்தாய் -அவ்வளவிலும் தலைக் கட்டாதே நெடுகா நின்றது –
காயும் கடும் சிலை
பிரதி பக்ஷத்தை தக்தமாக்குவதாய் -பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத சிலை -அவஷ்டப்ய மஹத்தநு-வில்லை அணைக்கவே பணி போரும்படி இ றே இருப்பது –
என் காகுத்தன் வாரானால்
பிராட்டிக்கு உதவியது தனக்கு உதவிற்று என்று இருக்கிறாள் -ஒரு நாள் ஓர் ஆபத்தில் உதவினார்க்கு பின்பு உதவல் ஆகாதோ -தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்ன கடவது இறே
கீழே கண்ணனும் வாரானால் -என்றாள்-அபி ஷிக்த ஷத்ரிய புத்ரன் அல்லேன்-என்ற அவன் வரத் தவிர்ந்தாலும்-முடி சூடி நோக்கிப் போந்த குடியிலே பிறந்ததற்கு வர வேண்டாவோ
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றார்கள் இ றே -பெண்கள் இருந்த இடத்தே சென்று விரோதியைப் போக்கினவன் வருகிறிலன் -அபியாதா ப்ரஹர்த்தாச-என்ன கடவது இ றே –
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே
அபிமதர் வாரா விட்டால் முடிகை இ றே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-
வல்வினையேன் –
அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே
பெண் பிறந்தே –
முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

———————————————————————

கண்டார்க்கு பொறுக்க ஒண்ணாத வ்யஸனம் செல்லா நிற்க வரையாதே ரக்ஷிக்கும் ஸ்ரீ வாமனன் வருகிறிலன் -என்னுடைய சிந்தா வ்யத்தையே போக்குவார் என்கிறாள் –

பெண்  பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று-
பர தந்தரைகளாய் ம்ருது ப்ரக்ருதிகளாய் பிறந்த ஸ்த்ரீகள் -அனுபவிக்கும் மஹா துக்கம் -பாரதந்தர்யத்தாலே முடியவும் மாட்டாதே -மார்த்வத்தாலே கிலேசமும் பொறுக்க மாட்டாதே ஒழிகை –
இந்த துக்கத்தை பொறுக்க மாட்டேன் என்று -சர்வ ரக்ஷகன் பொறுக்கும் அத்தனை போக்கி -ரக்ஷண மாத்திரத்திலே அந்வயித்தவர்கள் -பொறுக்க வல்லார்களோ -வகுத்தவன் பொறுக்கும் இத்தனை போக்கி அந்நியர் பொறுக்க வல்லர்களோ -வகுத்தவன் பொறுக்கும் அத்தனை போக்கி அந்நியர் பொறுக்க வல்லார்களோ –உத்தர்த்தும் அர்ஹஸி ஹரேத் புருஷோத்தமோ அஸி -என்று புருஷோத்தமன் பொறுக்கும் அத்தனை போக்கி அந்நியர் பொறுக்க வல்லர்களோ
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் –
தோற்றத்தில் துக்க நிவ்ருத்தியை பண்ணுமவன் –
ஈஸ்வர ஆஞ்ஜையால் இருந்த இடத்தில் இராதவனும் தோற்று கிறிலன் –
ஒளித்தான் -ஈஸ்வரபடர் காண ஒண்ணாத படி மறைந்தான் -இத்தர்மஹாநி காண்பதில் ஈஸ்வர ஆஞ்ஞாதி லங்க நத்தால் வந்தது அனுபவிக்க அமையும் -என்று இருந்தான்
இம் மண்ணளந்த-
இப்பூமிக்கு என்ன ஆபத்து உண்டாய் அளந்தான் –இப்பூமி மஹா பாலி கையில் அகப்பட்டது எல்லாம் இவள் விரஹத்தின் கையில் அகப்பட்டாள் யாயிற்று -பூமியை வரையாதே அளந்தவன் –
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்-
மஹாபலியால் நெருக்கு உண்ட பூமியின் கிலேசம் போக்க குளிர நோக்கின கண்ணின் பரப்பை யுடையனாய் -அதின் கிலேசம் போனதினால் யுண்டான ப்ரீதியால் பண்ணின ஸ்மிதத்தாலே சிவந்த அதரத்தை யுடையவன் -பிறர் பிரயோஜனத்துக்கு இரங்குமவன் தன பிரயோஜனத்தை விட்டு வைப்பதே
நம் காரேறு வாரானால்-
பூமியின் கிலேசம் போனது தன் பேறு என்னும் இடம் நிறத்தில் தோற்றி-இது கைப் பட்டது -என்று மேனாணித்து இருந்தவன் –
வாரானால் -இரக்க வேண்டா -அளக்க வேண்டா -வடிவு அழகைக் காட்ட அமையும் –
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–
வேதங்களுக்கு நிலம் அல்லாத பகவத் விஷயத்தை யுள்ள படி பேசினார் -தம்முடைய சிந்தா வ்யதை தம்முடைய ஞானத்துக்கு அவிஷயம் ஆயிற்று -அபரிச்சின்னம் என்னுமது ஒழிய இவ்வளவு என்ன ஒண்ணாது
தீர்ப்பாரார்
வரையாதே சர்வ ரக்ஷகனானவன் உபேக்ஷித்த பின்பு யாராலே போக்கலாம்
என்னையே –
மறக்கவும் மாட்டாதே நினைக்கவும் மாட்டாதே இருக்கிற என்னை -இது இவளுக்கே யுள்ளது ஓன்று –

——————————————————————

ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

ஆர் என்னை ஆராய்வார்?
தன்னை நலிந்த ராக்ஷஸிகளையும் கூட -அஞ்சாதே என்று ஆராய்ந்தாள் இ றே -ஆர் என்னை ஆராய்வார்? -என்கிறாள் –
அன்னையரும் தோழியரும்-
இவளுடைய அவசாதிசயம் தாய்மாரோடு தோழிமாரோடு வாசி அற சொல்லும் படி யாய் விட்டது -என் நினைவே நினைவாய் இருப்பார்க்கும் -நிஷேதிப்பார்க்கும் வாசி யற்றது
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்-
அன்னையரும் தோழியருமான நீங்கள் -என்னே என்னாதே -என் பட்டாய் என்னாதே என்னுதல்-அன்றியே
நீர் -இது ஒரு நீர்மையே –அவனுக்கு தன்னை ஒழியச் செல்வதாய் இருக்க -அவனை ஒழிய தனக்குச் செல்லாத படியாய் இருக்கிற இது ஒரு ஸ்வ பாவமே
என்னே -இது ஒரு ஆச்சர்யம் ஆதல் –
நீளிரவும் துஞ்சுவரால்-
நெடிய ராத்திரி எல்லாம் எனக்கு உறங்காது ஒழிகை ஸ்வ பாவமாய் இருக்கிறாப் போலே அவர்களுக்கும் உறங்குகையே ஸ்வ பாவம் யாயிற்று -பிரதம யோஜனையில் – துஞ்சுதிர் என்னும் அர்த்தத்தை காட்டக் கடவது –
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்-
வர்ஷூகமான மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடைய கிருஷ்ணனும் வருகிறிலன் -தாஸாம் ஆவீர்பூத் -என்று ஒரு நீர் சாவியிலே வர்ஷித்தால் போலே தோற்றுமவன் வருகிறிலன் –
நம் கண்ணனும்-பெண்களுக்கே யுதவுமவன் வருகிறிலன் –
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.
காரியத்தால் நான் முடியச் செய்தேயும்-இன்னாள் இன்னாள்-என்கிற பேர் என்னை முடிந்தேனாக ஓட்டுகிறது இல்லை –அவனோடே ஒத்ததீ இதுவும் –அவன் வாராதாவோபாதி இதுவும் போகிறது இல்லை -இத்தால் சென்று அற்ற நிலையைச் சொல்லுகிறது -சப்த அவசேஷை யானேன் என்றபடி –
வல்வினையேன் -முடிகை தேட்டமான வளவிலும் முடிய பெறாத பாபத்தைப் பண்ணினேன் –
பின் நின்றே-நான் முடிந்த பின்பும் பின்னே நின்று பேர் என்னை முடிந்தேனாக ஓட்டுகிறது இல்லை
நாமரூபே வ்யாகரவாணி -என்கிறபடியே ஓக்க வந்தால் ஒக்கப் போகலாகாதோ –

———————————————————————

விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாத  பிராணனை   ரஷிப்பார் ஆர் -என்கிறாள் –

பின் நின்ற  காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

பின் நின்ற காதல் நோய் –
புக்க இடம் புக்கு -பின்னாட்டிக் கொண்டு திரிகிற பிரேம வியாதியானது -இதுக்கு இடைந்தால் வேறு நிழல் இல்லையாய் இரா நின்றது –
நெஞ்சம் பெரிதடுமால்-
நெஞ்சை மிகவும் நோவு படுத்தா நின்றது –பாதகம் பாத்யத்தின் அளவன்று-என்கை -அக்னி போல் தனக்கு ஆச்ரயமான நெஞ்சை தக்தமாக்கா நின்றது –
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்-
பதார்த்தங்கள் தோற்றாத படி முன்னே நின்று ராத்ரியாகிற கல்பம் கண்ணை மறையா நின்றது -பிரேம வியாதியும் ராத்திரியும் முன்பும் பின்புமாய் க்ருத சங்கேதங்களாய் நலிகிற படி உட்கண்ணும் அழிந்து புறக் கண்ணும் அழிந்தது -க்ராஹகமுமாய் ப்ரகாசகமுமான கண்ணை க்ராஹ்ய மான இருள் மறையா நின்றது
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-
ஆர்த்த த்ராணர்த்தமாக எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கிறவன் -இவ்விருள் போக்குகைக்கு ஆயுதம் எடுக்க வேண்டா என்கை –
எம் மாயவனும்-ஜயத்ரவதத்தின் அன்று பிரகாச த்ரவ்யமான திரு வாழி யைக் கொண்டு தமஸை அழைக்குமவன் -நிவர்த்தகத்தை கொண்டு நிவர்த்தியத்தை அழைக்குமவனுக்கு அத்தைக்கு கொண்டு நிவர்த்தியத்தை போக்கத் தட்டு இல்லை இறே-எம் என்று கிருஷ்ணாவதாரத்தில் தமக்கு உண்டான அசாதாரண்யத்தை சொல்லுகிறார்
வாரானால் -பிரதிஞ்ஜையை யழித்து விருத்தத்தை யனுஷ்ட்டிக்க வேண்டா -வந்து வடிவைக் காட்ட அமையும் என்கை -வருகைக்கு இச்சை இல்லாமை போக்கி வருவோம் என்றால் அருமை இல்லை இ றே
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–
இப்படியே முடியாதே நோவு படுத்தா நின்றுள்ள உயிராகிய சத்ருவை போக்குவார் ஆர் -முடியும் அளவிலும் நூறே பிராயமாய் இருக்கிற ஆத்மவஸ்துவைப் போக்கி ரஷிப்பார் ஆர் -அச்சேத்யோயம் அதாஹ் யோயம் -என்கிற வசனத்தைக் கொண்டு தன்னை முடியாதது ஒன்றாக நினைத்து நலியா நின்றது -பிரிவிலும் முடியாத என்னுயிர்ப்பகையை நீக்கி என்னை நோக்குவார் ஆர் -என்று ஒரு தமிழன் இட்டு வைத்தான் –
இவ்விடத்தே -சர்வ ரக்ஷகனும் உதவாத தசையில் –

————————————————————

ராத்திரி யாகிற யுகம் செல்லா நிற்கவும் எம்பெருமான் வந்து தோற்றாது ஒழிந்த வாறே -அநிமிஷர் ஆகையால் உறவு முறையாரைப் போலே -இவ்வவஸ்தையிலே உறங்காதே நீர்மையை யுடையருமாகையாலே -தெய்வங்காள் என் செய்கேன் -என்று தன் செயல் அறுதியாலே சொல்லுகிறாள் –

காப்பார்  ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

காப்பார் ஆர் இவ்விடத்து?
ரக்ஷகன் உதவாத தசையில் இனி பாதகர் நோக்கவோ -நாம் நோக்கிக் கொள்ளவோ -அவனத்தை-எனக்கு -என்கையோ பாதி இ றே -அவனுடைய ரக்ஷணத்தை நாம் ஏறிட்டு கொள்ளுகை-
கங்கிருளின் நுண் துளியாய்ச்-
நுண் துளி -சிறு துளி -தடித்த இருளையும் சிறு துளியையும் யுடைத்தாய்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்-
நெடுமையே ஸ்வ பாவமாய் இருக்கிற கல்பமாய்க் கொண்டு முடிவு இன்றிக்கே செல்லுகிற ராத்திரியிலே
அதவா -மருங்குலை -மருங்கு என்னுமா போலே கங்குலை – கங்கு என்று குறைத்தாய் -ராத்திரியில் இருள் என்றுமாம் –அப்போது கங்குல்வாய் என்று -கால பரமாய்-இக்காலத்தில் என்ன கடவது -சப்த ராத்ரம் தச ராத்ரம் -என்னுமா போலே
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
இவ்விருளைப் போக்குகைக்கு சந்த்ராதித்யர்கள் சேர உதித்தால் போலே கையும் ஆழ்வார்களுமாய் வந்து தோன்றுகிறிலன் –
சந்த்ர மண்டலம் போலே தாமோதரன் கையில் -என்றும் –
மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் -என்றும் சொல்லக் கடவது இ றே
அவ்விருளைப் போக்கும் போது இவர்கள் வேணும் என்கை -தூ -தூய்மை -பால -ஸ்வ பாவமாக உடைத்தாகை-ரக்ஷண பரிகரங்களை தரித்து ரக்ஷணத்திலே தீஷித்து இருக்கிறவனும் வருகிறிலன்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்!
தீமையே ஸ்வ பாவமாக யுடைத்தாய் -போக்கப் போகாத படியான பாபத்தை பண்ணினேன் -ரக்ஷகனும் அநாதரிக்கும் படி பண்ணின பாபம் என்கை –
தெய்வங்காள்! என்செய்கேனோ?
தேவதைகளுக்கும் இவளுக்கும் அநிமிஷத்துவத்தாலே ஒரு சாம்யம் உண்டு -அவர்கள் பிறப்பே அநிமிஷர் -இவள் விரஹத்தாலே அநிமிஷை -தோழிமாரும் உறங்குகின்ற சமயத்திலே இவர்கள் உணர்ந்து இருக்கையாலே தன் ஆர்த்தி பொறுக்க மாட்டாமை உறங்காது இருக்கிறார்களாக கொண்டு -இவர்களில் காட்டில் நமக்கு வேறு உறவு உண்டோ -என்று -என் செய்கேன் என்று தன் செயல் அறுதியை அவர்களுக்கு அறிவிக்கிறார்கள்-

——————————————————————-

ராத்திரியும் பாதகமாய் ரக்ஷகனும் வாராது இருக்கவும் -குளிர்ந்த தென்றலானது நலியா நின்றது என்கிறாள் –

தெய்வங்காள்  என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்-
வேறு உறங்காது இருப்பார் இல்லாமையால் -பின்னையும் தன் செயல் அறுதியாலே சொல்லுகிறாள் -கீழ் சொன்ன கல்பம் -ஒரு ராத்திரி மாத்திரம் -என்னும்படி -ஒரு ராத்திரி தானே அநேக கல்பங்கள் ஆகா நின்றது -ஸுபரி போகத்துக்காக பல வடிவு கொண்டால் போலே -ராத்திரியும் நலிகைக்காக அநேகம் வடிவு கொண்டது –
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-
பிரசங்கத்தாலே வந்து நலிகை யன்றிக்கே -புத்தி பூர்வமே -முடித்து அல்லது போகேன் என்று ஆக்ரஹம் யுடையாரைப் போலே நின்று -ராவணன் இடம் பார்த்து வந்தால் போலே -விரஹ தசை என்று அறிந்து வந்து நலியா நின்றது –
எனதாவி மெலிவிக்கும்–
நலி கைக்கும் ஆஸ்ரயம் இல்லாத படி சென்று அற்ற உயிரை நலியா நின்றது
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
நினைத்தபடி விதேயமான திரு வாழி யை யுடைய -பாவஞ்ஞமான பரிகரத்தை யுடையவன் கிடீர்-
என் கண்ணனும் வாரானால்-
ஆஸ்ரிதற்காக தன் ப்ரதிஞ்ஞஜையை அழிய மாறுமவன் -கையில் திரு வாழி யை விட்டு இருளைத் துணித்து தன் வடிவைக் காட்டுகிறிலன்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–
குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் -தை வருகை யாவது -தடவுகையாய் -காந்தனுடைய ஸ்பர்சத்துக்கு ஸ்மாரகமான தென்றல் என்றுமாம் –
வெம்சுடரில் தான் அடுமே-
சுடர் என்று லௌகிக அக்னி -வெஞ்சுடர் என்று -அதில் காட்டில் கொடிய நரக அக்னி -அதில் காட்டிலும் நலியா நின்றது -நரக அக்னியில் காட்டில் விஸ்லேஷ தசையில் அனுகூல ஸ்பர்சம் கொடிதாய் இ றே இருப்பது -அத்யுஷ்ணமான நெருப்பில் காட்டில் சுடா நின்றது என்கை –

————————————————————

ராத்திரி நலியா நின்றது -ஸூர்யோதமும் நமக்கு என்றவாறே ப்ரார்த்தயமாய் விட்டது -ரக்ஷகனானவனும் தோற்று கிறிலன் -என்னுடைய மநோ துக்கத்தை போக்குவார் யார் இனி வேறு என்கிறாள் –

வெஞ்சுடரில்  தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்-
வளர்ந்த இருளும் சிறு துளியாய் -ராத்ரியானது நெருப்பில் காட்டில் நலியா நின்றது -ராவணன் மாரீச சஹனாய் வந்தால் போலே -ராத்திரி சிறு துளியை சஹகாரமாகக் கொண்டு வந்தது -இரண்டையும் போகத்துக்கு வர்த்தகமாக சொல்லக் கடவது இ றே
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்-
தன்னுடைய தோற்றத்தில் இருளை போக்கி துக்க நிவ்ருத்தியை பண்ண வல்ல ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிதான உதய ஸூ சகமான தேரும் தோன்றுகிறது இல்லை
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்-
இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இ றே
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–
இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இ றே ஆதித்யன் போக்குவது –
நின்று ருகுகின்றேனே.–-நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்-
விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –

——————————————————————–

இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்து அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே லோகமாக யுறங்குவதே என்கிறாள் –

நின்று  ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்-சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்-
முடிவு இன்றிக்கே நிரந்தரமாக உருகுகிற என்னை போலே மஹாதத்த்வமான ஆகாசம் சென்று அற்று நுண் துளியாய் உருகிச் செல்லுகிற ராத்திரியில் சகல பதார்த்தங்களும் அவகாச பிரதானம் பண்ணும் மஹா தத்வம் அழிகிற படிக்கும் வேறு த்ருஷ்டாந்தம் இல்லை –என்னை சொல்லும் அத்தனை -அளவுடையார் எல்லாம் அழிகிற காலம் ஆகாதே –
அன்றொரு கால் வையம் அளந்த –
ஒரு காலத்திலே காதாசித்கமாக பூமியை அளந்தான் அத்தனை –நியத ஸ்வ பாவன் அன்று என்றாகிலும் சொல்லுகிறார் இல்லை -இவள் தான் வரையாதே அளந்து கொண்ட மஹா குணத்தை யுடையவன் தன்னாலே வந்த ஆற்றாமைக்கு உதவாது ஒழியுமோ என்று பார்த்து இருந்தாய் -வாரான் என்று சொல்ல அமையும் –
பிரான் வாரான் என்று-
உபகாரகன் என்று இ றே பிரமித்து இருக்கிறது -பெருக்காறு வற்றினால் போலே அக்காலத்திலே வற்றிற்று என்றாகிலும் சொல்ல அமையும் –
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.-
அவன் திறமாக ஒரு வார்த்தையும் அமையும் –கடியன் கொடியன்-என்று அவன் குண ஹானியைச் சொல்லவும் அமையும் -ஒரு கால் -ஒரு கால் சொல்லவும் அமையும் -வாரான் என்ற போதே முடியாதார்க்கு இ றே இரு கால் சொல்ல வேண்டியது
உலகோர் உறங்குமே.-
அன்னையரும் தோழியரும் -என்று இன்னாதானது லோகமாக சொல்ல வேண்டும்படி யாயிற்று அதுக்கு பின் பிறந்த அவசாத அதிசயம் -வாராதவனே நல்லன் என்னும்படி இருந்ததீ சந்நிஹிதரான லோகத்தார் படி –

—————————————————————–

நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை –

உறங்குவான்  போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்-
நம்மால் கார்யம் இல்லாத இவர்களால் கார்யம் என் -என்று லோகத்தாரை விட்டு -இத்தசையை விளைத்தவன் இவ்வளவில் செய்வது என் -என்று அவளை அனுசந்தித்தார் -ஜகத் ரக்ஷணார்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படியை அனுசந்தித்து –இப்போது வாராமையாலே வெறுத்தோம் அத்தனை -நம்முடைய ரக்ஷண சிந்தை பண்ணிக் கிடக்கிறன் நம்மைக் கை விடான் -என்று இம் மஹா குணத்தை அனுசந்தித்து தரிக்கிறார்-கண் வளருகை என்று ஒரு பேராய்-ஜகத் ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-
இவர் குண ஆவிஷகாரத்தாலே தரித்தவாறே -திரு நகரியும் தரித்த படி -விஸ்லேஷத்தில் அபி வ்ருஷா என்றும் -சம்ச்லேஷத்தில் அகால பலீனோ வ்ருஷா -என்றும் இ றே இருப்பது –
சிறந்த பொழில் -சம்ருத்தமான பொழில் –
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்-இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ
பண்ணிலே கிளர்ந்த அந்தாதி -நிறம் -பண் -இப்பத்தை அனுசந்தித்தால் -எங்கனே சரீர விஸ்லேஷம் பிறந்து போய் பரம பதம் புகாது ஒழி யும் படி
பேர் என்னை மாயாதால் -என்று முடிகை தேட்டமாய்-அது தானும் பெறாதே -இவர் பட்ட கிலேசத்தை படாதே -இப்பாசுரத்தை கேட்டு பிழையார் என்கை –
பகவத் பரர் உடைய ஆர்த்தியைக் கண்டால் தரிக்க மாட்டாதே ஒழி கை இ றே ஸ்வரூபம் -இவருடைய பாவ பந்தம் இல்லையே யாகிலும் இவர் தசையை அனுசந்தித்தால் பரம பதம் புகாது ஒழிய சம்பாவனை இல்லை என்கிறது –


கந்தாடை        அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-4-

September 16, 2016

இப்பிராட்டி தன் தவ்ர்பல்யத்தாலே மடலூரவும் மாட்டாதே இருக்கச் செய்தே -அதுக்கு மேலே இராத்திரியும் வந்து -சராசரங்கள் அடைய உறங்கி
-பந்துக்கள் எல்லாம் இவள் ஆர்த்தி பொறுக்க மாட்டாதே பரவசராய் நிதரிக்கிற தசையில் தனிப்பட்டு கலங்கி அநேக கல்பமாய்
மஹா அந்தகாரமாய் தனக்கு பிழைக்கைக்கு அவகாசம் தராது இருந்துள்ள ராத்ரியையும் -தன் வியாசனத்துக்கு ஹேதுவான கொடிய கர்மத்தையும் –
ஏவம் விதமான தசைகளில் உதவக் கடவனான புருஷோத்தமனையும் -அவனுடைய தாஷிண்யாதி குணங்களையும் -இவற்றை எல்லாம் பல காலும் சொல்லி
-இத்தசையில் தன்னை ஐயோ என்று கிருபை பண்ணி யாதல் -இது யுக்தம் அன்று என்று பொடிந்தால் முகம் காட்டுவார் ஒருவரையும் பெறாதே
அத்யந்தம் அவசந்தனையாய் மிகவும் பிரலாபித்து முடிய புகுகிறவள் -ஜகத் ரஷா சிந்தாத் மிகையான யோக நித்திரையை பண்ணி இருக்கிறவன்
நான் இப்படி அவசந்தனையாக என்னை உபேக்ஷியான் என்று தரிக்கிறாள்-

—————————————————————-

ராத்ரியாகிற இம் மஹா ஆபத்தும் செல்லா நிற்க ஆபத் சகனான எம்பெருமான் வருகிறிலன் -இனி எனக்கு ரக்ஷகர் ஆவார் உண்டோ -என்கிறாள் –

ஊரெல்லாம்  துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-

ஊர் எல்லாம் உறங்குகையாலே சிலருடன் போது போக்கப் பொறாமையாலும் லோகம் எல்லாம் மஹா அந்தகாரமாகையாலும் ஒன்றைக் கண்டு காலஷேபம் பண்ணப் பெறாமையாலும் ஜலதத்வமும் ஒலி அடங்கி ஸ்ரவண இந்த்ரியத்துக்கு விஷயம் இல்லாமையாலும் ஹ்ருதயம் தனிமைப்பட்டு ஆற்றாமை மிகுகையால் பண்டு போல் நீள் இரவாகாதே-எல்லா ராத்ரிகளும் ஒரு நெடிய ராத்ரியாய் அதுக்கு ஓர் அவசானம் காணப் பெறுகிறது இல்லை எல்லார்க்கும் ஆபத் சகனாய் ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவன் இத்தசையில் வந்து தோற்றுகிறிலன் –
ஏவம் விதனானவனும் கூட வாராது ஒழிகைக்கு ஈடான பாபத்தை பண்ணின என்னுடைய பிராணனை –
எல்லே –என்று தோழியுடைய சந்நிதியில் அவளை சொல்லும் சொல்லை சொல்கிறாள் –
நம் என்றும் எம் என்றும் பல பாட்டில் சொல்கிறது -சம்ச்லேஷ தசையில் அவன் தனக்கு கை வந்தபடியே நினைத்து –

———————————————————————-

இத்தசையிலே கிருஷ்ணனும் வந்திலன் –மஹா பாபியான என்னோட்டை சம்பந்தத்தால் நெஞ்சே நீயும் பாங்கு இன்றியே ஒழியா  நின்றாய் – என்கிறாள் –

ஆவி  காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

அபரிச்சேத்யமான கடலையும் பூமியையும் ஆகாசத்தையும் அடைய மறைத்து அவ்வளவு அன்றிக்கே மஹா விகாரத்தை யுடைத்தாய் நூறாயிரம் ஆதித்யர்கள் வந்தாலும் பேதிக்க ஒண்ணாதது ஒரு ராத்திரி வந்து தனக்கு அவசானம் இல்லாத படி யாயிற்று -காவி சேர் வண்ணன்-கவி போலே இருக்கிற நிறத்தை யுடையவன் –

—————————————————————–

சகல துக்கங்களையும் கெடுத்து உஜ்ஜீவிப்பிக்கும் ஸ்வ பாவனான காகுத்ஸனனும் வருகிறிலன் -பரதந்த்ரை யாகையாலே முடியவும் விரகு பெறுகிறிலன் என்று இன்னாதாகிறாள்

நீயும்  பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

அபரிச்சேத்யமாம் படி வளர்ந்த ராத்திரி கல்பமாய் வந்து தோற்றி ஒன்றும் குறைந்து காட்டாதே நெடுகிற்று-பிரதிகூலரை தஹிக்கும் ஸ்வ பாவமாய் தரிசன மாத்திரத்திலே பயாவஹமான ஸ்ரீ சார்ங்கத்தை யுடையனான சக்ரவர்த்தி திருமகனும் வருகிறிலன்-

———————————————————————-

கண்டாருக்கு பொறுக்க ஒண்ணாத படி வியசனப்படா நிற்க-எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் வருகிறிலன்-என்னுடைய நிரவதிக  சித்தா வியசனத்தை போக்குவார் ஆர் -என்கிறாள்

பெண்  பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

நான் படுகிற மஹா துக்கத்தை பெண்ணாய் பிறந்தார் படும் மஹா துக்கம் -இனி நான் காண மாட்டேன் என்று தான் வரில் நமக்கு ஆச்வாஸ கரமான ஒளியை யுடைய ஆதித்யன் வராதே ஒளித்தான்
குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்கி ரக்ஷிக்கும் ஸ்வ பாவனாய் நிரதிசய ஸுந்தர்ய யுக்தனாய் ஜகத்தின் யுடைய ஆபன் நிவாரணத்திலே மேனாணித்து இருக்கிறவன்-

————————————————————–

துர்த்தசையில் உதவக் கடவரான அன்னையரும் தோழிமாரும் ஆராய்கிறிலர்கள்-அவர்கள் உதவாத போது வந்து உதவக் கடவ கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் போய் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்-

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-

நான் அவசன்னை யானால் உதவக் கடவ நீங்களும் -நீ என் பட்டாய் என்னாதே நான் ஈடுபடுகிற இராவெல்லாம் கிடந்தது உறங்கா நின்றி கோள்
உன்னுடைய நீர்மை என் என்று வினவாதே உறங்கா நின்றார்கள் என்றுமாம் –
வர்ஷூகமான மேகம் போலே சிரமஹரமான திரு நிறத்தை யுடைய கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் முடிந்த பின்பும் என் பேர் என்னை முடிந்தேனாக ஓட்டுகிறது இல்லை

—————————————————————

விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாது இருக்கிற என்னை ரஷிப்பார் ஆர் -என்கிறாள் –

பின் நின்ற  காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

விடாதே தொடருகிற காதல் ஆகிற வியாதி நெஞ்சை மிகவும் நோவு படுத்தா நின்றது –ராத்ரியாகிற கல்பம் முன்னே நின்று பதார்த்தங்களும் தோற்றாத படி கண்ணை மறையா நின்றது –
ஆர்த்தத்ராணார்த்தமாக எப்போதும் கை கழலா நேமியனாய் அத்யாச்சர்யா பூதனான கிருஷ்ணன் வருகிறிலன் -ஜயத்ரவதத்தின் அன்று தேஜோ ரூபமான திரு வாழியைக் கொண்டு பகலை இரவாக்கின அத்யாச்சர்ய பூதனான கிருஷ்ணன் -திரு வாழியை இட்டு இரவைப் பகல் ஆக்கிக் கொண்டு தோற்றுகிறிலன் என்று கருத்து
நீள் ஆவி காப்பார் ஆர் -துர்த்தசையிலும் முடியாதே என்னை நோவு படுத்தா நின்றுள்ள இவ்வுயிர் ஆகிற பகையை போக்குவார் ஆர் -என்றுமாம் –

———————————————————————-

ராத்திரி யாகிற யுகம் செல்லா நிற்கவும் எம்பெருமான் வந்து தோற்றாது ஒழிந்த வாறே -அநிமிஷர் ஆகையால் உறவு முறையாரைப் போலே -இவ்வவஸ்தையிலே உறங்காதே நீர்மையை யுடையருமாகையாலே -தெய்வங்காள் என் செய்கேன் -என்று தன் செயல் அறுதியாலே சொல்லுகிறாள் –

காப்பார்  ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?–5-4-7-

ராத்திரி இருளும் சிறு துளியாய் நெடுமை ஸ்வ பாவமான கல்பமாய் முடிவின்றிக்கே செல்லுகிற இக்காலத்தில் –
மருங்குலை -மருங்கு -என்றால் போலே -கங்குலை -கங்குல் -என்கிறது –
நிர்மலமாய் வெளுத்து இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திரு வாழி யையும் ஏந்தி இவ்வந்த காரம் எல்லாம் போம்படி வந்து தோன்றுகிறிலன் –
அவன் அங்கீ கரியாத படி பண்ண வற்றான மஹா பாபத்தை யுடையேன் –

————————————————————

ஒரு ராத்திரி அநேகம் யுகமாய் மிகவும் பாதியா நின்றது  -எம்பெருமானும் வருகிறிலன் -அதுக்கு மேலே தென்றலும் நலியா நின்றது என்கிறாள்

தெய்வங்காள்  என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-

முடித்து அல்லது போகேன் என்று வந்து என் ஆத்மாவை முடித்து அல்லது போகேன் என்று வந்து -என் ஆத்மாவை மிகவும் நோவு படுத்தா நின்றது -நினைத்தபடி விதேயமான திரு வாழி யை யுடையனான கிருஷ்ணனும் வருகிறிலன் -துஸ் ஸஹமாம் படி தடவிக் கொண்டு வருகிற குளிர்காற்று அத்யுஷ்ணமான நெருப்பில் காட்டில் சுடா நின்றது –

——————————————————————-

ராத்திரியும் மிகவும் பாதியா நின்றது -வரக் கடவதான ஸூர்ய உதயமும் நமக்கு  என்றவாறே  ப்ரார்த்தமாய் விட்டது -எம்பெருமானோ வந்து தோன்றுகிறிலன் -நான் நின்று நோவு படும் அத்தனை போக்கி என்னுடைய உபாதை போக்க கடவ யாருண்டோ இனி என்கிறாள் –

வெஞ்சுடரில்  தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

வீங்கா நின்றுள்ள இருளையும் நுண் துளியையும் யுடைத்தாய் கொண்டு ராத்ரியானது நெருப்பில் காட்டில் நலியா நின்றது -தோற்று அரவிலே இருளை போக்கி நம்முடைய கிலேச ஹானியை பண்ண வல்ல அழகிய ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிய தேரும் தோன்றுகிறது இல்லை –
இங்கனம் துஸ் ஸஹமான தசை செல்லா நிற்க சிவந்த ஒளியை யுடைத்தாய் தாமரைப் பூப் போலே இருக்கிற அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஸ்ரீயபதியானவனும் வந்து தோன்று கிறிலன்-

——————————————————————–

இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்தும் அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே  இந்த லோகம் உறங்குவதே -என்கிறாள்

நின்று  ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

நிரந்தரமாக உருகுகிற என்னைப் போலே இந்த பெரும் பரப்பை யுடைய ஆகாசம் தேய்ந்து உருகுகிற சிறு துளியை யுடைய ராத்திரியிலே
யாதிருச்சிகமாக அன்றே ஒருகால் பூமியை அளந்தான் அத்தனை -அது நியதி ஸ்வ பாவம் அன்று -அத்யந்த நிர்க்ருணன் என்றாகிலும் ஒரு வார்த்தையை ஒரு கால் சொல்லாதே –

——————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழியில் ஆழ்வாருக்குச் சென்ற ஆர்த்தியை அனுசந்தித்தார் எங்கனே தரிக்கும் படி -என்கிறார் –

உறங்குவான்  போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

கண் வளருவான் போல் ஜகத் ரக்ஷ உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை -இது -தமக்கு தரிப்பு பார்த்த படி –
சிறந்த பொழில்-சம்ருத்தமான பொழில்
நிறம் -பண்

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -5-3-

September 15, 2016

கீழே நண்ணாதார் முறுவலிப்ப-திருவாய் மொழியில் -சம்சாரிகள் துர்கதியை அனுசந்தித்து -ஒன்றும் தேவு-திருவாய் மொழியிலே
-அவர்களைத் திருத்தி -இவர்களில் அந்நிய தமராய் இருந்த நம்மை இவர்களையும் திருத்தும் படி பண்ணுவதே -என்று ஈஸ்வரன் பண்ணின
உபகாரத்தை அனுசந்தித்து திருந்தினவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணின பாவவ்ருத்தி பர்யவசித்து-ஏறாளும் இறையோனில்
தமக்குப் பிறந்த இழவே தலையெடுத்து -ஆற்றாமையால் மடல் எடுத்தாலும் கிட்டுவோம் -என்று துணிகிறாள் –
ஏறாளும் இறையோனில்-அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டேன் என்று தன்னை முடிக்கப் பார்த்தாள்
-அது அவனது ஆகையால் முடிந்தது இல்லை -இதில் அத்தலையே பிடித்து அழிக்கத் தொடங்கினாள் –
அங்கு உயிரினால் குறைவிலம் -என்று உயிரை வேண்டா என்றாள் -இங்கு உயிருக்கும் உயிரை வேண்டேன் என்கிறாள்
–இதில் அவன் ஸ்வரூபத்தை அழிக்கப் பார்க்கிறாள் –
அவன் தானே மேல் விழ-தம்மோட்டை கலவி அவனுக்கு அவத்யம்-என்று அகன்றவர் தம்மைப் பாராதே -வழி யல்லா வழி யாகிலும்
அவனோடே சம்ச்லேஷிப்போம் என்று தமக்குப் பிறந்த தசா விசேஷத்தை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார்
அதவா
மலியும் சுடர் ஒலி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை -என்று வடிவு அழகை அனுசந்தித்த போதே பெற வேணும் என்னும்
ஆசை பிறந்து அது கிடையாதே ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய் -அவள் பேச்சாலே தம்முடைய தசையை பேசுகிறார் என்றுமாம்
அவனைப் பிரிந்து புணர்ந்தாள் ஒரு பிராட்டி தன் ஆற்றாமையாலே எல்லாரும் இகழும் படி-தன்னுடைய பிறப்பையும் பந்துக்களையும் தோழிமாரையும் மற்றும் உள்ள மரியாதைகளையும் பாராதே –
நாம் மடலூர்ந்தே யாகிலும் அவனோடே சம்ச்லேஷிப்போம் என்று அத்யவசிக்க இத்தை அறிந்த தோழி கார்யம் அன்று என்று கற்பிக்க-அவளுக்கு தன் தசையை அறிவித்து மடலூருகை தவிரேன் என்கிறாள் –

———————————————————————

இப்பிராட்டி மடலூரத்  துணிந்தமையை அறிந்த தோழி -இது அபவாதகரம் என்று நிஷேதிக்க -நான் அவனுடைய ஸுந்தர்யாதி களிலே அகப்பட்டு பழிக்கு அஞ்சாத தசை யானேன் -என்கிறாள் –

மாசறு  சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

மாசறு சோதி –
நான் அவனை மாசறு சோதி யாக்கக் காண் புகுகிறது -விரக்தராய் ஸ்வரூபஞ்ஞராய் இருக்கிற இவருக்கு உட்பட இப்படி மடல் எடுக்கும் படி இ றே விஷய வைலக்ஷண்யம் –
பக்தா நாம் என்கிற வடிவை நிலை நிறுத்தப் புகுகிறேன் -விசேஷணங்கள் அடைய மடல் எடுக்கைக்கு விஷயம் ஆக்குகிறாள் -அழுக்கு அற்ற அழகை யுடையவனை -அழுக்கு மாசு ஆகிறது -வியதிரேகத்தில் மடல் எடுக்காது ஒழிகை -இவ் வழகு விஸ்லேஷத்தில் மடலில் மூட்டாதாகில் -அல்லாத விஷயத்தோ பாதியாம் என்கை -அவ்வடிவைப் பிரிந்த போது-ஏன் மரியாதையை நோக்கி இருக்கவோ என்கிறாள் –
என் செய்ய வாய்-
கலந்த போது அகவாயில் ஹர்ஷம் தோற்றும் படி ஸ்மித்தத்தாலே விக்ருதனாய் இருந்த படி –
என் செய்ய வாய்–மாசறு சோதி —
ஸ்மிதமும் வடிவு அழகும் ஆயிற்று என்னை மடலிலே மூட்டிற்று -பண்டும் ஒரு ஸ்மிதம் இ றே ஊர் பூசல் விளைத்தது -இவள் கையில் மடலைக் கொடுத்து ஊர் பூசல் ஆக்கிற்று ஒரு ஸ்மிதம் இ றே -அவாக்ய அநாதர என்று -ஒருத்தரையும் மதியாதவன் -என்னோடே கலந்து பெறாப் பேறு பெற்றால் போலே விக்ருதனாய் இருக்க நான் ஸ்த்ரீத்வத்தை நோக்கி இருக்கவோ –
மணிக் குன்றத்தை-
கலந்த போது குளிர்ந்த ஒளியை யுடையனாய் -பிரிவு ப்ரஸக்தமாய்-தன் செல்லாமையாலே கால் வாங்க மாட்டாத படி நின்ற படி -அவிகாராய என்கிற வடிவும் இப்படி விக்ருதமாய் இருக்க -நான் அவிக்ருதையாய் இருக்கவோ
ஆசறு சீலனை –
தன்னுடைய உத்கர்ஷமும்-இவள் அபகர்ஷமும் பாராதே கலப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்று சொல்லும் படி பண்ணக் காண் நான் புகுகிறது –
வடிவிலே அகப்பட்ட அளவேயோ—அகவாயில் குணத்திலும் அன்றோ அகப்பட்டது -குற்றம் அற்ற சீலத்தை யுடையவனை –அதாவது கலக்கிற போது தன் பேறாக வந்து கலக்கை-என் பேறாக வந்து கலந்தானோ என் ஸ்வரூபத்தை நோக்கி இருக்க
ஆதி மூர்த்தியை –
என்னை பெறுகைக்கு க்ருஷி பண்ணிப் போந்தவனை -மஹா புருஷ பூர்வஜ-என்கிறபடியே என் பேற்றுக்கு முற்பாடானாய் இருக்க -நான் ஆற்றாமையிலும் பிற்பாடை யாகவோ -தன் மேன்மை பாராதே என் சிறுமை பாராதே கலந்தவன் அன்றோ -நான் ஆறி இருக்கவோ –
ஆதி மூர்த்தியை –
அவன் நீர்மை எதுவானாலும் உன் மதிப்பிற்கு போராது காண் மடல் எடுக்கை என்ன –பெரு மதிப்பனைக் குறித்து -மடல் எடுத்தால் அம் மதிப்பு உண்டாம் அத்தனை அன்றோ –
காரணந்து த்யேய-என்று சாஸ்திரங்கள் மூட்டுகிற விஷயத்திலே யன்றோ நான் மடல் எடுக்கிறது
நாடியே-பாசற வெய்தி –
நிரந்தரமாகத் தேடி -பலித்தது இது என்கிறாள் -ஆனாலும் உன் அறிவுக்கு போராது என்ன
அறிவிழந்து எனை நாளையம்-
அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது -ஆனாலும் ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண்டாவோ -என்ன –
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–
அவ்வெல்லை கடந்திலமோ –என்கிறாள் –
ஏசறும் ஊரவர்-ஏசி அற வேணும் -என்று இருக்கிறவர்கள் -ஏசுகையிலே துணிந்து இருக்கிறவர்கள் –
கவ்வை -பழி – / தோழி! என்செய்யுமே?–-இவ்விஷயத்துக்கு புறம்பானோர் சொல்லுமதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்று அறியாயோ -அவர்கள் பழி நமக்கு புறம்பாம் அத்தனை அன்றோ -நமக்கு இது உபகாரகம் அன்றோ -பழி பற்று அறுக்கிறது-
அலர் எழில் ஆர் உயிர் நிற்கும் அதனைப் பலர் அறியார் பாக்கியத்தால் –நமக்கு ஸ்மாகரம் அன்றோ -என்கிறாள் –

————————————————————

எல்லா தசையிலும் பழி பரிஹரிக்க வேண்டாவோ -என்ன பரிஹரிக்கும் எல்லை கடந்தது காண் என்று தன் வடிவைக் காட்டுகிறாள் –

என்  செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி –
இனி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள் -மேல் அடங்க இனி என்கிற இதன் விவரணம்
தோழீ -இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே மீட்க வேண்டாவோ –
நம்மை -நிறத்தில் வேறுபாடு அவளுக்கும் ஒத்து இருக்கும் படி -ஏஹம் துக்கம் ஸூ கஞ்ச சவ்-வாயாலே மடல் எடுக்க வேண்டா என்கிறாள் அத்தனை வைவர்ணயம் இருவருக்கும் ஒத்து இருக்கும் –
யாமுடைத் துணை என்னும் தோழி மாறும் எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ-எனக்கு அவன் வேணும் என்னும் அளவு இ றே இவளுக்கு உள்ளது –இவள் நோவு போக வேணும் -என்றும் இருவரும் சேர வேணும் என்றும் இரட்டித்து இ றே அவள் நோய் இருப்பது –
ததா ஸீன் நிஷ் பிரபோத்த்யர்த்தம் ராஹு க் ரஸ்த இவாம் சுமான்-என்று பெருமாளின் காட்டில் ஒழி மழுங்கினார் இ றே மஹா ராஜர்
இவ்வை வரண்யத்துக்கு அடி சொல்லுகிறது –
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை –
கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை ச்ரவஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இ றே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் -தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இ றே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –
என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை -இழந்தவை இன்னவை என்கிறாள் -மேல்
முன் செய்ய மாமை இழந்து
முன்னே உள்ள மாமை என்னுதல் -நிறைக்கு முன்னே என்னுதல் -முன்னே காண காண என்னுதல் -முன்பு தோன்றினவற்றை வாங்கி இ றே கிழிச் சீலை யறுப்பது-
செய்ய மாமை -ஸ் ப்ருஹணீயமான மாமை என்கை –சிவப்பைச் சொல்லுகிறது அன்று -தாத்பர்யம்
இழந்து -அவன் விரும்பியதாகையாலே நிறம் நிதி இழந்தாப் போலே சொல்லுகிறாள்
மேனி மெலி வெய்தி-
வடிவு தான் நீர்ப்பண்டம் போலே காண காணக் சருகு ஆகிறபடி -நிறம் வந்தாலும் -அவன் தான் வந்தாலும் -ஆஸ்ரயம் இல்லை என்கை –
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–-
அவயவியாய் தேடுகிறேனோ -அவயவங்கள் தோறும் அழிந்து வாரா நிற்க -அவன் வாய் புலற்றுமது ஆகையால் என்னது என்கிறாள் -அவன் உகந்த வழியால் தமக்கு ப்ராப்யம் ஆகலாம் இ றே
தொழுது வைத்தேன் –அவன் என்னது என்று சொல்லக் கேட்டு இருக்குமே -அத்தாலே என்னது என்கிறாள் –
சிவந்த வாயும் -கறுத்த கண்ணும் -ஒரு வெளுப்பு ஆயிற்று -பிரளய காலத்திலேயே ஸூ க்ஷேத்ரம் போலே ஏகோதகமாய் அழிந்தது –
பயப்பூர்ந்தவே.-விஷம் ஊர்ந்தால் போலே வைவர்ணயம் வண்டலிட்டு வாரா நின்றது
மடலை நிஷேதித்தாய் யாகிலும் -வடிவை மறைக்கலாமோ என்கிறாள் –

——————————————————————-

ஏதேனும் ஒரு லோக யாத்ரையாலே போது போக்கி இருக்க வன்றோ அடுத்து என்ன -அவனால் அல்லது எனக்கு செல்லாதான பின்பு அவ்வெல்லை கழிந்தேன் என்கிறாள்-

ஊர்ந்த  சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்-பேய் முலை-சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்-
பூதனை விஷயமாகவும் சகடாசூரன் விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களாலே -அவர்கள் நிரஸனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் என்கிறாள் –பருவம் நிரம்பி ப்ரணயத்தில் தேசிகனாய்ச் செய்தவை ஒழிய பால சேஷ்டிதங்களும் தனக்காக செய்தான் என்று இருக்கிறாள் –அவதரித்தது தனக்கு என்று இருக்கையாலும்-ஸ்நேஹம் சத்தா ப்ரயுக்தம் ஆகையால்
ஊர் சகடம் அன்று -ஊர்ந்த சகடம் – அது செய்தது எல்லாம் செய்தற்றது -இவன் மௌக்கியத்தாலே அகப்பட்டான்-திருவடிகளினுடைய அவதானத்தாலே பிழைத்தான் அத்தனை –தாயார் ரக்ஷகமாக நிறுத்தின சகடம் -பாடி காப்பாரே களவு காண்பாரைப் போலே இ றே நலிந்து –
உதைத்த பாதத்தன்-
ஸ்தன்யார்த்தீ ப்ரருரோத ஹா -என்று -முலையை நினைத்து சீறிச் திருவடிகளை நிமிர்த்தான் -மேல் விழுந்த சகடம் துகளாகப் போயிற்று -இது பக்வ தசை என்னும் படி இ றே பூதனை நிரசன தசை
பேய் முலை-சார்ந்து சுவைத்த செவ்வாயன் –
யசோதை பிராட்டி மடியிலே அணைந்து முலைக்கு கீழே முழுகினால் போலே யாயிற்று முலை யுண்டது
சுவைத்த -பிராண ஸஹிதம் பபவ் -என்னுமா போலே உயிரும் முலையிலே சுரக்கும் படி யாயிற்று முலை யுண்டது
செவ்வாயன் –பிள்ளைகள் தாய் முகத்திலே சிரிக்குமா போலே ஸ் மீதம் பண்ணின திரு வதரத்திலே பழுப்பை யுடையவன் –
என்னை நிறை கொண்டான்
ஒரு செயலால் இரண்டு ஸ்த்ரீ வதம் பண்ணினான் -ஆசைப்பட்டாரிலே உகவாதாரே நன்று ஆயிற்று காணும் –அவளை நற்கொலையாகக் கொன்றான் -என்னை உயிர் கொலையாகக் கொன்றான்
நிறை -நிறைவு -அடக்கம் -ஸ்த்ரீத்வம் -நிரூபகமான ஸ்த்ரீத்வம் போனால் நிரூப்யம் உண்டோ என்கை –
அவன் அப்படி செய்தால் லோக யாத்ரையோடு போது போக்கினாலோ என்ன
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்-
போயும் வந்தும் அவன் திறமான சொற்கள் அல்லது வேறு போது போக்கைக்கு சொல்லுடையேன் அல்லேன்
அவனை நினை -அவனை மற-என்று சொல்லுகிற இத்தனை இ றே -இத்தை இ றே ஏது செய்தால் மறக்கேன் என்கிறது –
நாம் இவ்விஷயத்தில் மூட்டப்படும் பாடும் நம்மாலும் மீட்க ஒண்ணாத படி ப்ரவணை யாவதே -என்று ப்ரீதை யானாள்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–
அந்தரங்கை யான நீ நிஷேதிக்கக் கடவையோ -அதில் குறை யுண்டோ ஊரார் பழிக்கு அஞ்சி அன்றோ நான் விலக்குகிறது-என்ன ஊரார் பழி கொண்டு கார்யம் என் -உன் நெஞ்சில் குறை இல்லாமை யன்றோ எனக்கு வேண்டுவது என்கிறாள் –

—————————————————————–

இவளை எத்தைச் சொல்லி மீட்கலாவது என்று பார்த்து -ஊரார் கிடக்க உன்னோடே கலந்து வைத்து  நிர்க்ருணரைப்   போலே  வாராத அவன் தானோ நன்றாகச் செய்தான் என்ன -இவர்கள் பழி நமக்கு உத்தேச்யமாம் படி ப்ராவண்யத்தை விளைவித்தவனை குறை சொல்லக் கடவையோ என்கிறாள்-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

ஊரவர் கவ்வை எருவிட்டு –
ஊரார் சொல்லுகிற பழியை ப்ரேமத்துக்கு எருவாக இட்டு -பிராதி கூல்ய-நிவ்ருத்தி பிறந்து -இவ்விசயத்தே கை வைத்த அன்றே பழி சொல்லாத தொடங்கினார்கள் -விபீஷணஸ்து
தர்மாத்மா நது ராக்ஷஸ சேஷ்டித்த -என்றாள் இ றே ஒருத்தி -நான் மறக்கப் பார்த்தாலும் -அவர்கள் ஸ்மாரகராய் அவத்யக்கரராக நின்றார்கள் -இவர்களால் இ றே எனக்கு தரித்து இருக்க லாயிற்று
அன்னை சொல் நீர்படுத்து-
தாயார் சொன்ன ஹித வசனத்தை நீராக நிறுத்தி –
ஊரார் பழி சொல்லப் புக்க பின்பு இ றே தாய் மாரும் அறிந்தது -எருவாகிறது ஒரு கால் இட்டு விடுமத்தனை -இ றே -நீர் எப்போதும் வேணும் -அகத்துக்கு உள்ளே இருந்து எப்போதும் சொல்லா நிற்கும் இவள் -ஊரார் இரு கால் சொல்லி விடும் அத்தனை
ஈர நெல் வித்தி-
சங்கம் ஆகிற நெல்லை வித்தி -சங்கத்துக்கும் அவன் அடி என்று இருக்கிறாள்
முளைத்த –
வித்தினாலும் முளைக்கும் போது அவன் வேணும் என்று இருக்கிறாள் -அரி பக்ஷ ஜய்ஸ் ஸூ கம்
நெஞ்சப் பெருஞ் செய்யுள்-
சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே த்ரிபாத் விபூதி சத்ருசமாம் படி பண்ணி
பேரமர் காதல்-
ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -உஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –
ஈரம் -சங்கம் /காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம –
கடல் புரைய விளைவித்த-
அப்ரமேயோ மஹா த-என்ற கடல்தி ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை
கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் -பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இ றே காதல் பெருகின படி -இது இ றே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –
காரமர் மேனி –
எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இ றே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு
நம் கண்ணன்
விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும்
நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இ றே
தோழீ! கடியனே?–
இவ்விஷயத்தில் மூட்டுகைக்கு க்ருஷி பண்ணின நீ -இப்படி ப்ராவண்யத்தை விளைத்தவனை -நிர்க்ருணன் -என்னக் கடவையோ -அவன் நீர்மை சொல்லிப் பொருந்த விடுகையும் குற்றம் சொல்லி மீட்க்கையும் உனக்கே பரமாவதே -தாய்மார் வார்த்தை போலே இரா நின்றதீ உன் வார்த்தையும் –

———————————————————–

நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள் –

கடியன்  கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட-அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
அவன் குண ஹானியை உன்னில் காட்டில் அறிந்த நான் சொல்லக் கேள் என்கிறாள்
கடியன்-ஸ்வ கார்ய பரன்-எதிர்த்தலை பாராதே மேல் விழுந்து சடக்கென கலக்குமவள்
கொடியன்-எதிர்தலையிலே நோவு பாராதே பிரிய வல்லவன் -நோபஜனம் ஸ்மரன் என்று வேறு ஓன்று தோற்றாத தசையில் பிரிவை பிரசங்கித்து பிரிய வல்லவன் –
நெடிய மால் -பிரிய புகா நின்றான் என்று அறிந்தால் அநபிபாவநீயனாய் எட்டப் போகாதவன் -மால் என்று பெருமை –நெடுமையால் அதன் மிகுதி -கை புகுந்தாலும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை-
உலகங் கொண்ட-அடியன் -சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொள்ள வல்ல திருவடிகளை யுடையவன் –கொடுத்தவனுக்கு ஓர் அடியும் சேஷியாத படி கொல்லுமவன் -ஸர்வஸ்வாதனம் பண்ணுவாராய்ப் போலே வந்து -ஸர்வஸ்வாபஹாரம் பண்ணும் வஞ்சகன் –
அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்-
வடிவைக் கண்டால் -ஸர்வஸ்வாதானம் பண்ண இருக்கிறானோ –ஸர்வஸ்வாபஹாரம் பண்ண இருக்கிறானோ என்று தெரியாதபடி ஆச்சர்ய ஸ்வ பாவன்–என்னுடைய ஆத்மாத்மீயங்கள் உன்னது என்று சொல்லி வைத்து இத்தலையில் உள்ளவற்றை எல்லாம் –ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினவன் –ஆகிலும் -அங்கனமே ஆகிலும் –
கொடிய என் நெஞ்சம்
உல்லோ கமான நெஞ்சு -குணம் கண்டால் பற்றவும் தோஷம் கண்டால் விடவும் இ றே லோகத்தில் கண்டு அறிவது -தோஷம் காண காண மேல் விழும் நெஞ்சு -நீ சொல்ல மாட்டாததும் -சிசுபாலாதிகள் சொல்லுமதுவும் சொல்ல மாட்டேனோ -அவனை விடுகைக்கு உறுப்பாம் ஆகில் –
அவனென்றே கிடக்கும்-இத் தோஷங்களை உடையவன் அன்றோ தத் சம்பந்தத்தால் மேல் விழா நிற்கும் -என்று பிள்ளான்
விசேஷணங்களில் தாத்பர்யம் இன்றிக்கே-விசேஷியத்தில் ஊன்றா நின்றது -என் நெஞ்சுக்கு மாயாவாத ருசி உண்டோ அறிகிறிலேன் -என்பர் ஜீயர் -இத்தால் குண நிபந்தனம் அன்று அவனோட்டை சம்பந்தம் -சத்தா ப்ரயுக்தம் -என்கை –
எல்லே!-
ஆச்சர்யம் ஆதல் –தோழியை சம்போதிக்கிறாள் ஆதல் -தன்னை கை கடந்த படியைக் கண்டு முகம் மாறின தோழியை வாராய் என்று கையைப் பிடிக்கிறாள் –
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே-
ப்ரணய கதைகள் அறிகைக்கு ஈடான வடிவு அழகையும் குணத்தையும் உடைய நீ மடலை நிஷேதிக்க கடவையோ-
நான் விலக்குகிறேன் அல்லேன் -தாயார் வெறுக்கும் -என்று சொல்லுகிறேன் என்ன -உன் வார்த்தை கேளாத நானோ தாயார் வார்த்தை கேட்கப் புகுகிறேன் -அந்நிலை கழிந்தது இல்லையோ என்கிறாள் –

———————————————————————-

தோழிமார் எல்லாரும் வந்து -நீ இப்படி செய்யில் தாயார் முடியும் -அத்தாலே ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் என்ன -கிருஷ்ணனுடைய ஸ்மித வீக்ஷணாதிகளிலே அகப்பட்டேன் -எல்லார்க்கும் என் பக்கல் நசை அற அமையும் என்கிறாள் –

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

அன்னை என் செய்யில் என்?
கீழே தாயார் பொறாள்-என்ன பொறாதே செய்வது என் -என்றது –
இதில் -அவள் என் செய்யும் -என்று வ்யவசிதை யானாள்-என்றால் -அவள் ஜீவியாள் கிடாய் –என்ன ஜீவிக்கில் என் -முடியில் என் -என்கிறாள் –
இப்படி தாயை உபேக்ஷித்தால் ஊரார் பழி சொல்லுவார்கள் என்ன –
ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
குண கதனம் பண்ணில் என் –குரவ கிங்கரிஷ்யந்தி -ஜீவிப்பார்க்கு அன்றோ இவர்களைக் கொண்டு கார்யம் உள்ளது
எல்லாரையும் உபேக்ஷித்தாலும் எங்கள் வார்த்தையை கேட்க வேண்டாவோ என்ன –
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
என்னைக் கடல் கொண்டது -எனக்காய் இருக்கிற உங்களுக்கும் யாகாதபடி அகப்பட்டேன் –என் கார்யம் நான் நினைத்தபடி யாகில் யன்றோ உங்கள் வார்த்தை கேட்டு மீளுவது –
என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –
இனி உமக்கு ஆசை இல்லை-இவ்விஷயத்தில் மூட்டுகை அன்றிக்கே-மீட்கப் பார்க்கில் பின்பு உங்களுக்கு என் பக்கல் நசை இல்லை –
முன்னை அமரர் முதல்வன் –
பெரியார் சிறியோர் என்று இன்றிக்கே ஆழப் பண்ணும் கடலிலே அகப்பட்டேன் -யத்ர ருஷய பிரதமஜா யே புராணா-என்கிற நித்ய ஸூ ரிகளுக்கும் சத்தா ஹேதுவாய் இருக்கிற மேன்மையை யுடையவன் –
வண் துவராபதி-மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.-
வண் துவராபதி-மன்னன்– அம்மேன்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத நீர்மையை யுடையவன் -பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய -என்று பெண்களுக்கு ஓலக்கம் கொடுத்து கொண்டு இருக்கும் இருப்பு -நித்ய ஸூ ரிகள் ஓலக்கத்துக்கும் அவ்வருகே ஓன்று இ றே -அது மேன்மைக்கு முடி சூடி இருக்கும் இருப்பு -இது நீர்மைக்கு முடி சூடி இருக்கிற இருப்பு -நாயகன் பக்கல் பதினாறாயிரம் பேர் மடல் எடுக்கை தவிரில் அன்றோ நான் மடல் எடுக்கை தவிருவது
மணி வண்ணன் -நீர்மையைத் தப்பினாலும் தப்ப ஒண்ணாத வடிவு அழகு -பிரணயிநி துவக்குண்பது வடிவு அழகிலே இ றே
வாசுதேவன் -அதில் காட்டிலும் ஆபி ஜாதியத்திலே யாயிற்று அகப்பட்டது –ஸ்நுஷாதசரதஸ் யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபி ந
வலையுளே அகப்பட்டேன் -நோக்கிலும் முறுவலிலும் அகப்பட்டேன் -முகப்பில் அனுகூலம் போலே தோற்றி பந்துக்களோட்டை தொற்றை யறுத்து வ்யதிரேகத்தில் முடிய ஒண்ணாது இருக்கை-

———————————————————————

அவன் குண ஹானி சொன்னார் வாய் அடங்கும் படி நாம் அவனைக் கண்டு வந்த உபகாரத்துக்கு தலையால் வணங்க வல்லோமே என்று உயிர்த் தோழிக்கு சொல்லுகிறாள் –

வலையுள்  அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

வலையுள் அகப்படுத்து என்னை- நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
தன்னுடைய குண சேஷ்டிதாதிகளாலே-என்னை அகப்படுத்திக் கொண்டு -இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்னும்படி -தான் என்றால் என்னிலும் அதி ப்ரவணமான
நெஞ்சை அழைத்துக் கொண்டு -எட்ட ஒண்ணாத படி ஷூபிதமான கடலிலே கண் வளர்ந்து அருளினான் –
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்-
எட்டாத படி இருந்தாலும் கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகு விட ஒண்ணாதாய் இருக்கிறபடி-ஏதேனும் ஒருபடி கிட்டியாகிலும் பெற வேண்டும்படி இருக்கை
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு-
அவளுடைய தர்சனம் தனக்கு அனுகூலமாய் இருக்கையாலே கொண்டாடி சம்போதிக்கிறாள் –
கலையை யுடைத்தாய் அகன்ற நிதம்பத்தை யுடையளாகை –
உன் வடிவு அழகு போலே இருக்க வேண்டாவோ வார்த்தை -என்கை –
அன்றிக்கே -மடியிலே கிடந்தது வார்த்தை வார்த்தை சொல்லுகிறாள் ஆகவுமாம்-பிரிந்த போது ஹிதம் சொன்னாளே யாகிலும் காணும் போது நாலு கண்ணாலும் காண வேணும் -தனி காண மாட்டாள் யாயிற்று
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.
வந்த உபகாரத்துக்கு நாமும் அவன் பக்கல் வணங்கக் கூட வற்றோ -அவன் தானே வர விருக்கை யன்றிக்கே தானே மேல் விழுந்தாள்-அவன் வந்திலன் -என்கிற ஸ்த்ரீகள் முன்னே அவன் குண ஹானியைச் சொல்லி ஷேப வசனங்களை பண்ணுகிறார் முன்னே என்றுமாம்
பிரணயி வணங்கப் பெறுமோ என்னில் -சிஷ்டாசாரம் உண்டு -கௌசல்யா லோக பார்த்தாராம் ஸூ ஷூ வேயம் மனஸ்வி நீ தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா ஸாபி வாதய-
தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை -என்று தாயமாரோ பாதி கழித்தாள் கீழே
தீர்ந்த என் தோழீ -என்ற உயிர் தோழி யாகையாலே இவளை சம்போதிக்கிறாள் –

————————————————————–

மஹா உபகாரகன் ஆனவனை-குண ஹீனன் என்று சொல்லுகிற தாய்மார் இவனை யாகாதே நாங்கள் குண ஹீனன் என்று சொல்லிற்று -என்று லஜ்ஜிக்கும் படி என்றோ நாம் அவனைக் காண்பது -என்கிறாள் –

பேய் முலை  உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து- மருதிடை-போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட-
பூதனை யுடைய முலை வழியே பிராணனை முடித்து -அந்த அவசாதத்தை தப்பி ரக்ஷையாக நிறுத்தின சகடம் தானே அஸூரா வேசத்தாலே மேல் விழ-அத்தை நிரசித்து -தவழ்ந்து போகா நிற்க முன்னே நின்ற யமளார்ஜ்ஜுனங்களின் நடுவே போ அவ்வாபத்தை தப்பி தன்னைக் கொண்டு தப்புகை அன்றிக்கே அஸூர விஷ்டமான குருந்தை வேரோடு பறித்து -பகாசூரனை நிரசித்து -குவலயா பீடத்தை முடித்த
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
பெரு மிடுக்கை யுடையவையாய் இருக்கச் செய்தேயும் ஒன்றுக்கும் பாத்தம் போராமையாலே ஸ்மிதம் பண்ணினான் -வெளுத்த தந்த பங்க்தியும் ஆதொண்டை பழம் போல் இருக்கிற திரு வதரத்தை யுடையனாய் -எனக்கு உபகாரகன் ஆனவனை –
இவள் தலைமைக்கு -பூத்தரு புணர்ச்சி -புனல் தரு புணர்ச்சி -களிறு தரு புணர்ச்சி -என்று தமிழர் சொன்ன வகை போய் -அவன் தன்னை நோக்கினத்துக்கு இவள் எழுதிக் கொடுக்கிறாள் இ றே -மடலை எடுத்து அழிக்க நினைக்கிறவள்-உபகாரகன் என்பான் என் என்னில் -அச்சம் உறுத்தி முகம் காட்டுவித்துக் கொள்ளுகை ஒழிய அழிக்க நினைக்கிறாளோ -காணும் இத்தனை யாம் படி தன்னை நோக்கி வைத்தான்
நாம் உறுகின்றது தோழீ!
நாம் என்றோ கிட்டுவது -யாம் -பேறு இருவருக்கும் ஒத்து இருக்கிற படி -சோகாஸ் யாஸ்ய கதா பாரம் ராகவோ அதிகமிஷ்யாதி
அன்னையர் நாணவே.
அவனுக்கு குண ஹானி சொல்லுகிற தாய்மார் லஜ்ஜிக்கும் படி -இவள் தான் அவனைப் பெற்ற தனக்கு வரும் லாபம் ஒழிய -இவனையே நாம் இப்படிச் சொல்லிற்று என்று அவர்கள் லஜ்ஜித்து கவிழ்ந்து நிற்கை உத்தேச்யம் என்று இருக்கிறாள் –

——————————————————————

தன் நெஞ்சில் வியவசாயத்தை பிறருக்காக மறைத்துப் போந்தாள்-இதுக்கு முன்பு -அத்தை தோழிக்கு வாய் விடுகிறாள் –

நாணும்  நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

நாணும் நிறையும் கவர்ந்து
அகம் விட்டு புறப்படக் கடவது அன்றிக்கே இருக்கிற லஜ்ஜையும் -அகவாயில் உள்ளது வாய் விடக் கடவது அன்றிக்கே இருக்கிற மடப்பத்தையும் அபஹரித்து
என்னை –
அவையே நிரூபகமான என்னை –
நன்நெஞ்சம் கூவிக்கொண்டு-
அவற்றுக்கு ஆஸ்ரயமாய்-என்னிலும் தன் பக்கலிலே ப்ரவணமான நெஞ்சையும் அபஹரித்து
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை-
மிகவும் உயர்ந்த பரமபத்திலே கொடு போய் இருக்கும் -இந்த்ராதிகள் குடி இருப்பு போல் அன்றிக்கே சர்வதிகமாய் இ றே பரமபதம் இருப்பது –
இவள் தன் த்வரையாலே-திருப் பாற் கடலிலே கிடக்கில்-திரையில் படியிட்டு வரக் கூடும் என்று நினைத்து -நம்முடைய த்வரையாலும் சென்று கிட்ட ஒண்ணாத தேசத்திலே இருந்தான்
தேவ பிரான் -இங்கு நின்றும் கொடு போன வொடுக்கு மாடுகளை அங்கு உள்ளார்க்கு பாரித்துக் கொண்டு இருக்கிற படி -நாம் சம்சாரத்தில் போய் பெற்றது இது என்று காட்டுகிற படி
தன்னை -சர்வ உத்க்ருஷ்டனை நான் அழிக்கப் புகுகிற படி பாராய்
ஆணை
பகட்டுக்கள் இத்தனை போக்கி செய்து முடிக்க புகுகிறாளோ என்று தோழி இருக்க -உன் ஆணை என்கிறாள்
என் தோழீ!
இவள் இத்தனையும் செய்து முடிப்பது காண் என்கிறது தோற்ற தோழி இருக்கிற படியைக் கண்டு -என் தோழி என்று உகக்கிறாள் –
ஆணை -என் -என்று சொல்லுவாரும் உண்டு -நீ என் நினைவை பின் செல்வாயானால் இனி தடை என் என்கிறாள் –நீ என் வழியே ஒழுகுவாய் ஆனால் கூடாதது உண்டோ
உலகு தோறு அலர் தூற்றி-
ஒரு லோக மாத்திரத்திலே பழி சொல்லி விடுவேனோ -பரம பதம் எல்லையாக பழித்துக் கொடு செல்லுகிறேன்-அலர் -பழி -என்னை ஊரார் பழி சொல்லும் படி பண்ணினான் தன்னை லோகமாக பழி சொல்லும் படி பண்ணுகிறேன்
ஆம்-கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.-
என்னாலான மிறுக்குகள் செய்து -கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –
சென்று கும்பிடக் கடவேன்
குதிரியாய்-என்று தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் -இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இ றே -அவை போகையாலேகேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்
குதிரி -குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –
மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –
மடலாகிறது -அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி பனை மடலையைக் குதிரையாய்க் கொண்டு -உடம்பைப் பேணாதே மயிரை விரித்து கண் வாங்காதே பார்த்துக் கொண்டு திரியா நின்றால்-போக உபகரணங்கள் கண்டால் அக்னி கல்பமாய் இருக்கக் கடவதாய்-இப்படி செல்லா நின்றால் -ராஜாக்கள் கூட்டுதல் -ஆற்றாமை கூட்டுதல் -இரண்டு தலையிலும் உள்ள பந்துக்களும் கை விட்டு ஒருவருக்கு ஒருவர் தஞ்சமாய் முடிகை தானே பேறாகச் செய்யுமதாயிற்று –

——————————————————————-

இருந்ததே குடியாக ஷோபிக்கும் படி மடலூர்ந்தாகிலும் நிரதிசய போக்யனானவனை கணக்கு காட்டுவோம் என்கிறாள் –

யாமடல்  ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

யாமடல் ஊர்ந்தும்
செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ நாம் மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது -பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது
எம் ஆழி அங்கைப் பிரானுடைத்-
கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகைக் காட்டி இப்படி மடல் எடுப்பித்தவனுடைய –
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
மடலைக் கொடு புறப்பட்டால்-எதிரே வந்து என் கையில் மடலை வாங்கி தன் தோளில் மாலையை வாங்கி என் தோளில் இடில் இ றே அவனுக்கு நிறம் உள்ளது -இல்லையாகில் அவன் படும் பாடு பாராய் -செவ்வி மாலை சூடக் காண் நான் வேண்டி இருக்கிறது -என் தோளில் மாலை பாராய் சரு கான படி -அத்தலையை அழித்து ஆகிலும் பெற கடவோம்
தூ மடல் -செவ்வித் திருத்த துழாய் -உனக்கு நிரூபகமான ஸ்த்ரீத்வம் எல்லா அளவிலும் கெடாது காண் என்ன –
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
லஜ்ஜா சூன்யமாய் -லோகமாக திரண்ட இடத்தே சொல்லி விட்டேன் -தெருவுகள் தோறும் புகக் கட வேன் –
அயல் தையலார்-க்ருஹ அர்ச்சனைகள்-அர்ச்சக பராதீனன் என்றும் சொல்லி மூலைகளில் இருக்க ஒட்டுவேனோ -அந்நியர்களான ஸ்த்ரீகள்
நாமடங்காப் பழி தூற்றி
அவர்களுக்கு நா புரளாத பழி என்னுதல்-
நா மடங்காதே -வாய் ஓவாதே பழி சொல்லும்படி என்னுதல்
தூற்றி -சிசுபாலாதிகள் வாக்கில் கேளாததும் கேட்க்கும் படி
நாடும் இரைக்கவே-
அவன் ஊரார் கவ்வை பரிஹரியானாகில் நாடாகப் பழி சொல்லும் படி பண்ணுகிறேன் -ஜகாத் ஷோபத்தை பண்ண கட வேன் -இந்நாட்டுக்கு ஓர் பேர் இ றே உண்டாகப் புகுகிறது – ஒருத்தி ஒருவனை படுத்திற்று இ றே -ஒருவன் முகம் காட்டிற்று இலன் -என்னும்படி பண்ணுகிறேன் -ஒருவன் உளன் ஆகில் ஒருத்தி உடம்பு இங்கனம் இருக்க அடுக்குமோ ஜகத்து நிரீஸ்வரம் என்னும்படி பண்ணுகிறேன் -கலந்த என் வார்த்தையில் காட்டிலோ வடிவு இல்லாத வேதத்தின் வார்த்தை -எல்லாரையும் நாஸ்திகர் ஆகும் படி பண்ணுகிறேன்
நாடும் இரைக்கவே–யாம் மடலூர்தம் -தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-

———————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்

இரைக்குங்  கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் –
ஷூ பிதமான கடல் போலே இருக்கிற வடிவு அழகை யுடையவன் -மடல் எடுப்பித்த வடிவு அழகு இருக்கிறபடி -சாபமாநய-என்ற போது கடல் பயத்தால் வெருவுண்டால் போலே -இவள் மடலில் துணிந்த வாறே சர்வாதிகன் கலங்கின படி என்றுமாம் -இது அனந்தாழ்வான் வார்த்தை -எப்போதும் கடலின் ஸ்வ பாவத்தை யுடையவன்
கண்ணபிரான் தன்னை-
சம்ச்லேஷ தசையில் தாழ நின்று பரிமாறின படி -வடிவு அழகு அது -ஸ்வ பாவம் அது -மடலூராது ஒழிய போமோ
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன-
இவர் வியவசிதரான வாறே -அவன் வரவு அணித்து -என்று சோலை சஞ்சாத பரிமளம் ஆயிற்று
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-
இவர் ஆற்றாமையால் முன்னாடி தோற்றாதே இருந்த தசையில் சொல்ல செய்தேயும் -எழுத்தும் சொல்லும் பொருளும் அடியும்தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும் சேர விழுந்த படி -ருஷி சோகாவேசத்தாலே சொன்னது ப்ரஹ்மாவின் பிரசாதத்தாலே ஸ்லோகம் ஆனால் போலே -பகவத் பிரசாதம் அடியாக சர்வ லக்ஷனோ பேதம் ஆயிற்று
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–
இத்திருவாய் மொழியை சொல்ல வல்லார்க்கு உத்தேச்ய பூமி பரமபதமாக கடவது என்னுதல் -இது சொன்னவர்கள் இருந்த இடமே பரமபதம் என்னுதல் -அதாகிறது அவர்களுக்கு இவரைப் போலே மடல் எடுக்க வேண்டா -அவன் தானே மடல் எடுத்து இவர்கள் இருந்த இடத்தே நித்ய சம்ச்லேஷம் பண்ணும் என்கிறது –


கந்தாடை       அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -5-3–

September 15, 2016

கீழில் திருவாய் மொழியில் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியை கண்டு மங்களா சாசனம் பண்ணியும் -ஸம்சயாநரைத் திருத்தியும் சென்ற பாவ வ்ருத்தி பர்யவசித்த பின்பு எம்பெருமானுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே தோற்று -பழைய படி பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து -அது கைவராமையாலே அவசன்னராய் —
எம்பெருமான் மேல் விழவும்-தம்மோடு கலந்தால் அவனுடைய குணங்களுக்கு கிலானி பிறக்கும் என்று பார்த்து அகலும் ஸ்வ பாவரான ஆழ்வார் -தம் ஸ்வரூபத்துக்கு போராத படி -வழி யல்லா வழி யாகிலும் எம்பெருமானோடே சம்ச்லேஷிப்போம்-என்று தமக்கு பிறந்த தசா விபாகத்தை அந்யாபதேசத்தால் பேசுகிறார் –
எம்பெருமானை புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தன் ஆற்றாமையால் எல்லாரும் இகழும் படி தன்னுடைய குடிப்பிறப்பையும் பந்துக்களையும் தோழிமாரையும் மற்றும் உள்ள மரியாதைகளையும் பாராதே மடலூர்ந்தாகிலும் அவனோடே சம்ச்லேஷிக்கையிலே அத்யவசிக்க-
இத்தை அறிந்த தோழி யானவள் இது கார்யம் அன்று கற்பிக்க -அவளுக்கு தன் தசையை அறிவித்து மடலூருகை தவிரேன் என்கிறாள்
என்றாலும் இறையோன் -திருவாய் மொழியில் தான் முடிய பார்த்தாள்-இத்திருவாய் மொழியில் அவன் ஸ்வரூபத்தை அழிக்கப் பார்க்கிறாள் –

—————————————————————

இப்பிராட்டி மடலூரத்  துணிந்தமையை அறிந்த தோழி -இது அபவாதகரம் என்று நிஷேதிக்க -நான் அவனுடைய ஸுந்தர்யாதி களிலே அகப்பட்டு பழிக்கு அஞ்சாத தசை யானேன் -என்கிறாள் –

மாசறு   சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

என்னோட்டை சம்ச்லேஷ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே முறுவல் செய்த திருப் பவளத்தை உடையனாய் -மடலூர்ந்தே யாகிலும் சம்ச்லேஷிக்க வேண்டும் படி அபரிச்சேத்யமான அழகை யுடையனாய் தன் பேறாக வந்து சம்ச்லேஷிக்கும் ஸ்வ பாவனுமாய் பெரும் மதிப்பனும் ஆனவனை-
நிரந்தரமாக தேடி துக்கப்பட்டு அறிவு இழந்து அநேக காலம் உண்டு தோழீ -ஏசுகையிலே துணிந்த ஊரார் சொல்லும் பழி எத்தைச் செய்வது –
பாசறவு -பந்துக்கள் பக்கல் பற்றுகையுமாம்-

—————————————————————

ஏதேனும் தசையிலும் இங்கனம் செய்வது கடவல்ல என்ற தோழியைக் குறித்து தரிப்பு அரிதாம் படி  ஹ்ருதயத்திலும் சரீரத்திலும் பிறந்த ஸைதில்யத்தை அறிவிக்கிறாள் –

என்  செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

சம்ச்லேஷ தசையிலே என் பக்கல் மிகவும் பிரவணனாய் ஸ்நேஹமாக நோக்கின நோக்காலே என்னை நிறையக் கொண்டான்
நிறை போவதற்கு முன்பே அழகிய நிறத்தையும் இழந்து உடம்பும் மெலிந்து அவனுக்கு அத்யந்தம் ஸ்ப்ருஹணீயமான என்னுடைய சிவந்த வாயும் கறுத்த கண்ணும் விவர்ணம் ஆயிற்றன –
நிறை யாகிறது மனசிலே ஓடுகிறது ஒருவருக்கும் தெரியாத படி இருக்கை –

—————————————————————

ஏதேனும் சிலவற்றால் போது போக்கி இருக்கும் அத்தனை அல்லது அஸத்ருசங்களிலே ப்ரவர்த்தித்தால் நாடு பழி சொல்லாதோ என்னில் -எனக்கு அவனால் அல்லது செல்லாது -நாட்டார் சொல்லும் பழி என்னை எத்தைச் செய்வது -என்கிறாள் –

ஊர்ந்த  சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

யசோதை பிராட்டி முலையிலே அணையுமா போலே அணைந்து பேய் முலையைச் சுவைப்பதும் செய்து -தாய் முகத்தில் சிரிக்குமா போலே முறுவல் செய்கையாலே சிவந்த திருப் பவளத்தை யுடையவன் -இச் சேஷ்டிதங்களால் என்னை நிறை கொண்டான் –
போயும் வந்தும் அவன் திறமான சொல்லால் அல்லது போது போக்குகைக்கு வேறு ஒரு சொல் உடையேன் அல்லேன்-
தீர்ந்த என்றதுக்கு கருத்து -அந்தரங்கை யான நிஷேதிக்கக் கடவையோ-என்று –

—————————————————————

இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார் –

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

ஊரார் சொல்லும் பழி யாகிற எருவை இட்டு தாயார் சொல்லும் ஹித வசனம் ஆகிற நீரைப் பாய்ச்சி சங்கமாகிற நெல்லை வித்தி முளைத்த நெஞ்சு ஆகிற பெரிய செய்யிலே
பெரிதாய் கால தத்வம் உள்ளதனையும் கிடையா விட்டாலும் விடாத காதலை கடல் போல் விளைவித்த வ்ரஷூக்கமான மேகம் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனாய் நான் இட்ட வழக்கான கிருஷ்ணன்-

————————————————————————-

நான் சொன்ன படி குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே நைர்க்ருண்யாதி அநேக தோஷங்களை யுடையவனே யாகிலும் என்னுடைய நெஞ்சு அவனை அல்லது அறியாது என்கிறாள் –

கடியன்  கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

ஸ்வ கார்ய பரனாய் பிறர் நோவு அறியாதே ஒருவருக்கும் எட்டாதானாய் -வஞ்சகனாய் -துர்ஜேய ஸ்வபாவனாய் இருந்தானே யாகிலும்
அதி லோகமான என் நெஞ்சு அவனை அல்லது அறியாதே இருக்கும்
எல்லே -தோழியை குறித்து சம்போதான வசனம்
ப்ரணய கதைகள்அறிக்கைக்கு ஈடான வை லக்ஷண்யத்தை யுடையளாய் வைத்து என்னை இப்படி நலியலாமோ -என்று கருத்து –
இங்கனம் நீ துணிந்தால் தாயார் பொடியாளோ என்னில் -அவள் பொடித்து செய்வது என் –

——————————————————————

நீ இப்படி துணிந்தால் தாயார் ஜீவியாள்-அத்தாலே ஊரார் பழி சொல்லுவார் என்று தோழிமார் சொல்ல கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதாதிகளிலே நான் அகப்பட்டேன் -இனி யார் என் செய்யில் என் என்கிறாள் –

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

இனி ஆசை இல்லை என்கிறது என் –என்னில் -முன்னை அமரர்  -முதல்வனாய் வைத்து வண் துவராபதிக்கு மன்னனாய் ஸ்ப்ருஹணீயமான திரு நிறத்தை யுடைய ஸ்ரீ வஸூ தேவர் திருமகனுடைய விஷித குண  சேஷ்டிதங்கள் ஆகிற வலையுள்ளே தப்ப ஒண்ணாத படி அகப்பட்டேன்  –

——————————————————————–

அவனை குண ஹானி சொல்லுகிறவர் வாய் அடங்கும்படி நாம் அவனை வரக் கண்டு வந்த உபகாரத்துக்காக தலையால் வணங்க வல்லோமே -என்கிறார் –

வலையுள்  அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

தன்னுடைய குண சேஷ்டிதாதிகளிலே என்னை அகப்படுத்திக் கொண்டு தான் என்றால் என்னில் காட்டிலும் ப்ராவண்யத்தை யுடைய நெஞ்சைத் தன் பக்கலிலே அழைத்துக் கொள்ளுவதும் செய்து அபலைகளுக்கு செல்ல ஒண்ணாத படி அலை எறிகிற கடலுள்ளே கண் வளர்வதும் செய்து காண்டற்கு அதி ஸ்ப்ருஹணீயமான திருவாழியை யுடைய சர்வேஸ்வரனை –
கலை கொள் அகல் அல்கும் தோழி-அவளுடைய தர்சனம் தனக்கு அனுகூலம் ஆகையால் கொண்டாடி சம்போதிக்கிறாள்-

————————————————————

மஹா உபகாரகன் ஆனவனை-குண ஹீனன் என்று சொல்லுகிற தாய்மார் இவனை யாகாதே நாங்கள் குண ஹீனன் என்று சொல்லிற்று -என்று லஜ்ஜிக்கும் படி என்றோ நாம் அவனைக் காண்பது -என்கிறாள் –

பேய் முலை  உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பூதனை தொடக்கமான விரோதி வர்க்கத்தை போக்கி அது பாத்தம் போராமை ஸ்மிதம்  பண்ணுகையாலே வெளுத்த திரு முகத்தையும் -சிவந்த திருப் பவளத்தையும் யுடைய திவ்யாஸ்யத்தையும் யுடையனாய் இப்படி உபகாரம் ஆனவனை –

————————————————————————-

தன் நெஞ்சில் மடலூர வேணும் என்று துணிந்த துணிவை வ்யக்தமாக தோழிக்கு வாய் விடுகிறாள் –

நாணும்  நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

லஜ்ஜையும் அடக்கத்தையும் நிஸ்சேஷமாக்கி போக்கி அவ்வழியே தான் என்றால் மிகவும் பிரவணமான என்னுடைய நெஞ்சையும் தன் பக்கலிலே அழைத்துக் கொண்டு மிகவும் தூரமான திரு நாட்டிலே இருக்கிற அயர்வரும் அமரர்கள் அதிபதியை –
வாயால் நிஷேதியாதே நின்று வைத்தே இவள் இத்தனையும் செய்து முடிப்பது காண்-என்று உகந்து இருக்கிற தோழியை -ப்ரீதியாலே என் தோழீ என்று சம்போதித்து உன் ஆணையே உலகு தோறும் அவனை பழி தூற்றி செய்யலாம் மிறுக்குகள் எல்லாம் செய்து தடை நில்லாதே மடலூராக கட வேன்-

——————————————————————

இருந்ததே குடியாக ஷோபிக்கும் படி மடலூர்ந்தாகிலும் நிரதிசய போக்யனானவனை கணக்கு காட்டுவோம் என்கிறாள் –

யாமடல்  ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

மடலூர்ந்தாகிலும் -கையும் திருவாழியையும் காட்டி நம்மை இப்பாடு படுத்தினவனுடைய செவ்வித் திருத்த துழாய் மலர் கொண்டு சூடுவோம்
நாம் ஸ்த்ரீத்வத்தை தவிர்த்து ஆபத்துக்கள் வாயிலும் புறப்படாத குண ஹானியை தெருவுதோறும் பிரசித்தமாகச் சொல்லி ஜகாத்தும் ஷோபிக்கும் படியாக –

———————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்

இரைக்குங்  கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

ஓதம் கிளறுகிற கடல் போலே இருந்த திரு நிறத்தை யுடையனாய் தண்ணளியையும் யுடையனான கிருஷ்ணனை
தாம் வ்யவசித்தர் ஆனவாறே -எம்பெருமானுடைய வரவு அணித்து-என்று சஞ்சாத பரிமளமான திருச்சோலை
நிரைக்கொள் அந்தாதி-ஸூ சங்கதமான அர்த்த சப்தங்களை யுடைத்தாகை

————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-