ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்
சர்வார்த்தம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்
திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –
ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன்
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன் –
வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்
——-
ஸ்ரீ நம்பிள்ளை தனியன்
வேதாந்த வேத்யாம்ருத வாரிராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமர்க்யம்
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவரி தாசம்–
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா சதா
யத் பிரசாத ப்ரபாவேன சர்வ சித்திர பூந்மம-
————————————————————
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை -ஆறாயிரப்படி -திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை -நஞ்சீயர் ஒன்பதினாயிரப்படி
ஸ்ரீ ராமாயணம் பிரக்ரியை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -இருபத்து நாலாயிரப்படி
சுதபிரகாச –பிரக்ரியை -முப்பத்தாயிரப் படி -நஞ்சீயர் -வடக்குத் திரு வீதிப் பிள்ளை ஏடு படுத்த
பன்னீராயிரப்படி -ஸ்ரீமத் பாகவத பிரக்ரியை -ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
32 -எழுத்துக்கள் ஒரு படி -ஒற்று எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள்–எண்ணாமல் –
ஈடு -பகவான் இடம் ஈடுபடுத்தும்
இடு -எழுதல் -மருவி ஈடு –ஆடு புட் கொடி- அடு புட் கொடி -போலே –
கவசம் இடுதல் -ஆத்மாவுக்கு கவசம் போலே இது -அஹங்காராதிகள் இடம் ரஷித்து கொடுக்குமே-
அரும் பத விளக்கங்கள் இரண்டு -அரும் சொல் பொருள் -இது மணி பிரவாளம் என்பதால் –
உபன்யாசம் தானே ஏடு படுத்தி பட்டோலை கொண்டார் -சங்கதிகள் -பிரமாண விளக்கங்கள் -ஆகாரம் -எங்கே பிரமாணம் என்று காட்டி அருளி-
ஆத்தான் ஜீயர் -அடைய வளைந்தான் அரும் பத விளக்கம் -ஜீயர் -சமஸ்க்ருத பிரசுரம்-
அனந்த குல திலகர் குணகரம்பாக்கம் ராமானுஜ ஜீயர் அரும் பத விளக்கம் -தமிழில் –
——————————————–
ஸ்ரீயபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான -சர்வேஸ்வரன் -மாறி மாறி பலபிறப்பும் பிறந்து -2-6-8-என்கிறபடியே -ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து வெள்ளம் யான் மூழ்கினன்-2-6-8–என்று முதலிலே தம் திரு வாயாலே சொல்ல
வல்லராம்படியாக முதல் அடியிலே விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் –
1-ஸ்ரீயபதியாய் -2-அவாப்த சமஸ்த காமனாய் -3-சமஸ்த கல்யாண குணாத் மகனான 4–சர்வேஸ்வரன்-பாட்யே கே யே ஜே மதுரம் -வால்மிகீயே மஹா ரிஷி -வேத –சாஷாத் இராமாயண -வக்த்ரு/ பிரபந்த / -விஷயம் –மூன்று வைலஷண்யம் சொல்லி –
இங்கே -பகவத் நிர்ஹேதுக கடாஷ லப்த ஞான வைலக்ஷண்யம் –இத்தால் பலித்த – -ஆப்ததமத்வம் – ஆப்தன் -திருமோகூர் -இவர் ஆப்ததமர் -யதார்த்த தரிசித்த்வம் -யதா த்ருஷ்ட அர்த்த வாதித்வம் -ரிஷிகளில் வ்யாவ்ருத்தி –
கடாஷத்துக்கு -வக்த்ரு வைலஷண்யம்-ஸ்ரீ யபதி –யாதி விசேஷண சதுஷ்ட்யமும் வேண்டும் -1–உபயோகியானவை –பலன் நம்மிடம் வரவும் இந்த நான்கும் வேண்டும்
-2–கடாஷ அவ்யபிசார –பல வ்யாப்தி –இரண்டுக்கும் இந்த நான்கும் வேண்டுமே –
பிராட்டிபுருஷகாரம் -நித்ய சம்சாரிகளுக்கு -வேண்டுமே -பிராட்டி கடாஷித்து இருந்தாலும் -பச்சை அபேஷித்து இருக்கும் –அபூர்ணன் இல்லையே -அவாப்த சமஸ்த காமன் –நிர்ஹேதுக கடாஷம் -செய்து அருளுபவன் -பாபங்கள் இருந்தாலும் விடேன் தயாளு கிருபாவாளன் –சமஸ்த கல்யாண குணாத்மகன் –தோஷ போக்யத்வ ரூப-ஹேது பூத சம்பந்தம் சொல்லுகிறது சர்வேஸ்வரன்
யதவா -அன்றிக்கே –
யாரோ ஒருவர் இடம் கடாஷம் கூடுமோ –சர்வேஸ்வரன் -ஸ்வாமி தாசன் சம்பந்தம் –பட்டத்துக்கு உரிய யானையும் அரசும் -ஆராயக் கூடாதே -நிரந்குச ஸ்வாதந்த்ரன் –
கர்ம அனுகுண உபேஷைக்கும் ஹேது அன்றோ –சமஸ்த கல்யாண குணாத் மகன் -அன்றோ -தாதி குண விசிஷ்டன் -பச்சை எதிர்பார்க்குமோ
–அவாப்த சமஸ்த காமன் -பூரணன் -எதானாலே பூரணன் –ஸ்ரீ யபதி அன்றோ
ஆரோகணம் -இரண்டாலும் அருளிச் செய்கிறார் அவரோகணம்-சோத்யங்கள் -கேள்விகளுக்கு பதில்
பல வியாப்தி -நம்மிடம் பலிக்குமா -கேள்விக்கு –
அவன் –இச்சாக்ருத பிரவ்ருத்தி விகதி ரஹித நிரந்குச ஸ்வா தந்த்ரன் –சர்வேஸ்வரன்
ஞான சக்தாதிகள் உண்டு பல பரதத்வ உபயோக சமஸ்த கல்யாண குணங்கள் உண்டே -பச்சை எதிர்பார்க்காத பூரணன் -நிர்ஹேதுக பல ப்ரதன்-பூர்த்தி காதாசித்கம் இல்லை -நித்ய பூரணன் ஸ்ரீ யபதி –
அதவா –
சர்வாதிக லஷணம் ஸ்ரீ யபதி -விசேஷ கடாஷம் –அபரிச்சேத்ய ஐஸ்வர்யம் –அவாப்த சமஸ்த காமன் –வேண்டிற்று எல்லாம் தரும்-
கோதில வள்ளல் மணி வண்ணன் -உபய விபூதி –
ப்ரதிபந்த நிவர்த்தக பூர்வக-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ரத ஞானாதிகள் –சமஸ்த கல்யாண குணாத்மகன் –
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -நத்யஜேய கதஞ்சன -ஆஸ்ரித பரதந்த்ரன் ஆனாலும் -குணங்களே -தடுத்தாலும் -அபய பிரதானத்தில் கண்டோமே –சர்வேஸ்வரன்
ஏறிட்டுக் கொண்ட பாரதந்த்ர்யம் கொண்டவன் அன்றோ -ஆஸ்ரிதன் தடுத்தாலும் -அவனையே அனுப்பி ஆனயேனம்-
ராவணனே வந்து இருந்தாலும் அவன் மூலமே கைக் கொண்டாரே -அஸ்மாத் துல்யோ பவத் -என்று அவனே பிரார்த்திதானே
தான் நினைத்ததையே ஆஸ்ரிதரை சொல்ல வைத்து பலம் அருளுவான் –
கடாஷம் பல பரதம் -உபயோகிகள் இந்த நான்கும் பார்த்தோம் -சௌலப்யம் பரத்வம் இரண்டும் சித்திக்கும் –
ஆச்ராயண சௌகர்ய ஆபாத குணங்கள் –மாம் -ஆஸ்ரித கார்ய -குணங்கள் அஹம் -இரண்டுமே சித்திக்கும் –
பிராட்டி ஈஸ்வர பிரதான ஸ்வரூப நிரூபக தர்மம் –அதிசய ஹேது -புருஷகாரத்வேன -பல வியாப்திக்கு –
மங்கள ரூபி -கிரந்தத்துக்கு –ஸ்ரீ யபதி ஆரம்பம்
உபய விபூதி நாதன் -அவாப்த சமஸ்த காமன் -பூர்ணன்-குணங்கள் நம்மிடம் சேர சமஸ்த கல்யாண குணங்கள்
தடுத்தாலும் -நிரந்குச ஸ்வா தந்த்ரன் சர்வேஸ்வரன்
உபாயம் -சௌலப்யம் -உபேயம்-ஞான சக்தி பரத்வம் -இரண்டுக்கும் உடலாய் -இந்த நான்கும் –
ஸ்ரீயபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான -சர்வேஸ்வரன் –
மாறி மாறி பலபிறப்பும் பிறந்து -2-6-8-என்கிறபடியே -ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த இவரை
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து வெள்ளம் யான் மூழ்கினன்-2-6-8–என்று முதலிலே தம் திரு வாயாலே சொல்ல
வல்லராம்படியாக முதல் அடியிலே விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் –
அடுத்து -அகில இத்யாதி ஸ்லோகம் போலே -த்வயார்த்தம் -அர்த்த பஞ்சகம் சொல்லும் என்கிறார் –
ஸ்ரீ யப்தியாய் இத்த்யாதியால் பிராப்ய பிராபக பூத பர ஸ்வரூபம் சொல்லி –
மாறி மாறி பலபிறப்பும் பிறந்து -2-6-8-என்கிறபடியே -ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி -நித்ய சம்சாரியாய்ப் போந்த விரோதி ஸ்வரூபம்
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து வெள்ளம் யான் மூழ்கினன்-2-6-8–என்று-அம்ருத சாகரம் நிமக்னன்–ஸ்ரீ ராமானுஜர் இந்த பாசுரம் கொண்டே பல ஸ்வரூபம்
இவரை -யான் -ஆத்மஸ்வரூபம்
விசேஷ கடாஷம் –அருளினான் -உபாய ஸ்வரூபம் –
ஸ்ரீ யபதியாய் இத்யாதியால் -விசேஷ சதுஷ்ட்ய பூர்வ உத்தர வாக்ய கத -ஸ்ரீ மன் நாராயண –ஸ்ரீ மதே -நாராயணாய– இரண்டையும் –
மாறி –இத்யாதி நமஸ்-சப்தத்தால் போக்கப் பட்ட விரோதி –
அடியை -சரண சப்தார்த்தம்
அடைந்து –கிரியா பதம் –பிரபத்யே -உபாயம் நாம் பற்றும் பற்றும் அல்ல
விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் -சரனௌ-உபாயார்த்தம்
யான் -உத்தம புருஷன் -பிரபத்யே யான் பற்றினேன் -யான் மூழ்கினேன் -யான் சொல்லா விடிலும் அர்த்தாத் சித்தம்
-கிடைக்கப் போகும் பேற்றின் பெருமையால் சொல்லிக் கொள்கிறார்
மூழ்கினான் -ஆய -சதுர்த்த்யர்த்தம்
உள்ளம் தேறி -ஸூய போக்த ராஹித்யம் -பிரபலதர விரோதி நிவர்த்தகம் –
வஸ்து நிர்தேசமும் –நமஸ்கார -ஆசீர்வாதங்கள் -ஆசீஸ் வசனங்கள் -மூன்றுடன் உபக்ரமிக்கிறார்
மூன்றும் தன்னடையே அமைந்தது -அருளப் பாடினவர் ஆகையாலே
மாதவன் பேர் ஓதுவதே ஒத்தின் சுருக்கு –ஸ்ரீ யபதி –சாம வேத சங்க்ருஹம்
அடியை அடைதல் –நமஸ்காரம்
ஸூ லாப அனுசந்தானம் பர உபதேச கர்ப்பம் -ஆசீஸ் -உங்களுக்கும் இந்த பெருமை கிட்டுமே -ஆனந்த கடலில் மூழ்க –
விசேஷ -பூர்வ நிலையை ஸூ சிப்பிக்கும் -நித்ய சம்சாரியாய்ப் போந்த -மாறி –பிறந்து -2-6-8–ஜன்ம பரம்பரைகளில் தோள் மாறி-
கடாஷத்தின் நிர்ஹேதுகத்வம் ஸூ சிதம்–நித்ய ஸூ ரிகள் போலே சொல்வது பெருமை சொல்ல வந்தது
அடியை அடைந்து –அதனால் -உள்ளம் தேறி -கர்மாதி சாதனாந்தரங்களால் இல்லை –
அரங்கன் அழகு ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெருக வைத்ததே –
உள்ளம் தேறி -ஞானம் -பிராமாண்யம் /-மூழ்கினேன் குமிழ் நீர் உண்ணுதல் சப்தம் போலே திருவாய்மொழி –பக்தி வழிந்து-பரிவாஹ -திருவாய்மொழி
க்யாதி லாப பூஜா -குற்றங்களும் இல்லை-
முதலிலே-விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று முதலிலே தம் வாயாலே சொல்லும் படி –முதலிலே-சம்சார முதலிலே –பக்தி முளைக்கும் பொழுதே–பிரபந்த தொடக்கம் -மூன்றும் – -உயர்வற உயர் நலம் அருளி –
கர்ம ஞானம் பக்தி ஆரம்ப விரோதி தொலைத்து -பர பக்தி –தர்சன ஆகாரம் -அர்ச்சிராதி கதி –இத்யாதி இல்லாமல் முதலிலே-இங்கே -விக்ரகத்துடன் -த்ரிகுண மயமான சரீரத்துடன்-அதிலும் பிரபந்த ஆரம்பத்திலே -தம் திரு வாயாலே சொல்ல வல்லராம்படியாக -சொன்னார் இல்லை -வல்லமை –விசேஷ கடாஷ பலன் -விஸ்ரம்ப அதிசயம்-
ஏற்கும் பெரும் புகழ் -சடகோபன்
முதல் அடியிலே -இங்கு –முழுச் சொல்லு –சாதன தசையில் -கர்ப்ப காலத்திலே-என்றபடி -நிர்ஹேதுகமாக என்றபடி –
புருஷகாரம் எதிர்பார்க்காமல்
கருவிலே திருவுடையார் -கர்ப்ப ஸ்ரீ மான்
வாழ்வினை -முத்துச் சொல் -பிராப்யம் -அங்கு
விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் –1–பக்தி ரூபாபன்ன ஞானம் -விசேஷ கடாஷம் -கேவல ஞானம் -முக்தி அத்வைதம்
-பக்தி ரூப ஆபன்ன -ஞானம் பக்தி வடிவை அடைந்த ஞானம்
2-ஊரும் உலகும் திருந்த -விசேஷ கடாஷம்
3-எங்கும் பக்க நோக்கு அறியான் –நம் மேல் ஒருங்கே பிறள வைத்தான் -விசேஷ -சொட்டை குலத்தில் -ஐதிகம்/4-தத்தவங்களை விசதமாக அறியும் படி விசேஷ கடாஷித்தான்-5-நிர்ஹேதுக -6-தன் பேறாக கடாக்ஷம் என்றுமாம்
பிருந்தாவனம் பகவத் கிருஷ்ணே நாக்லிஷ்ட கர்மணா ஸூபேன மநஸா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -என்கிறபடியே-ஸ்ரீ பிருந்தா வனத்தை உத்பன்ன நவசஷ்பாட்யம் -என்னும்படி கடாஷித்தால் போலே-7-தத்தவங்களை விசதமாக அறிய வல்லராம்படி கடாஷித்தான் –
பிருந்தாவனம் பகவத் கிருஷ்ணே -பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவர்
அக்லிஷ்ட கர்மணா -அநாயாசேன
ஸூபேன
மநஸா-சங்கக்ல்ப ரூப ஞானத்தால்
த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்சதா -அபீப்சதா -அவன் ஆசைப் பட்டதால் -தன் பேறாக –பிராப்திக்கு உகப்பானும் அவனே
பிரமாணத் திரட்டு -மா முனிகள் அருளி உள்ளார் -ஈட்டுக்கும் –ஞான சாரம் –பிரமேய சாரம் -இரண்டு பிரபந்தங்களுக்கும்
நவசஷ்பாட்யம்–புதிதாக புல் இப்பொழுதே வளரும் உத்பன்ன –இந்த்ரகோபம்- பட்டுப் பூச்சி நிறைத்தால் போல் -புல்லில் பனித்துகள்
ஸூர்ய கிரணங்கள் பட்டு -பூமியில் பத்ம ராக கற்கள் மரகத கற்கள் பதித்தால் போலே
பர பக்தி –மடல் -தூது -பிரணய ரோஷம் இவற்றைக் காட்ட இந்த திருஷ்டாந்தம் -பெருமாள் அனுக்ரஹத்தால் நடந்தவை என்று காட்ட
விசதமாக -ஞானம் உண்டாக்கி –தன் முகேன சம்சாரிகளுக்கு உண்டாக்கி –தத் உஜ்ஜீவனம் தனக்கு லாபம் -பிரபந்த ஸ்ரவண ஜனித ஹர்ஷம் தென்னா தென்னா -வென்னும் என் அம்மான்-ஆஸ்ரிதர் கிருதார்த்தர் ஆகவும் தொண்டர்க்கு அமுது உண்ண-இவ்வளவும் விசதம் –
இதர தர்சனங்களில் தத்தவங்களை பதினாறு என்பார் -ஆறு என்பாராய் பஹூ பிரகாரங்களாலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள் -விருத்த -விவித -விசேஷ பிரதிபத்திகள்-
எங்கனே என்னில்– 1—லோகாயாதிகன் -ப்ருதிவ்யாதி பூதங்கள் நாலி னுடைய -மண் நெருப்பு காற்று அக்னி -கூட்டரவில் சைதன்யம்
என்று ஒரு தர்மம் பிறக்கும் -அதுக்கு உண்டான ஸூ க துக்கங்களே ஸ்வர்க்க நரகங்கள் -அவற்றினுடைய பிரிவிலே சைதன்யம் நசிக்கும் –
அவ்வருகு ஒன்றும் இல்லை -எனபது அவனுடைய சித்தாந்தம் –
-ஆர்ஹதன் -என்னும் ஜைனன்–கார்ய காரண ரூபத்தாலே ஜகத் நித்ய அநித்யமும்-பின்ன அபின்னமும் -சத்ய அசத்தியமுமாய் இருக்கும் –
ஆத்மாக்கள் கர்ம அநு ரூபமான சரீரங்களுடைய பரிணாமத்தையே தனக்குப் பரிணாமாகக் கொண்டு இருக்கும் –
சம்சாரம் அநாதி -மல தாராணாதிகளாலும்-ஆத்ம ஜ்ஞானத்தாலும் -பிரகிருதி விநிர் முக்தராய்-ஊர்த்த்வ கதியை ப்ராபியா நிற்கை மோஷம் ஆகிறது -என்றான்
வேதத்துக்கு விருத்த பிரதிபத்தி பண்ணுவார்கள் -விபிரதிபத்தி -விவித -பஹூ முகம் –
-நையாயிகன் -16-தத்வம் என்பர் —தார்க்கிகன் -வாத பிரதிபாதம் ரீதி தர்க்கம் ந்யாயம்-வைசேஷிகன் த்ரவ்ய -குண -கர்மம் -ஆறு தத்வங்கள்
-சாங்க்யன் -25-தத்வங்கள் —நிதீச்வர சாங்க்யன்-
இத்தோடு ஈஸ்வரனையும் கூட்டி ஷட் விம்ச தத்வ யோகிகள் 26
நியதி காலம் இத்யாதி -11 கூட்டி 36 முப்பாதாறு தத்வம்– பாசுபதிகள் –
-புத்தர்கள் 35 தத்வம் –
உபாய உபய விபிரதிபத்திக்கும் உப லஷணம் இது -தத்வ ஹித புருஷார்த்தங்களில் இத்தனை மதஸ்தர்கள் என்றபடி –
போக்தா போக்கியம் ப்ரேரிதா –ஷரம் பிரதானம் -இத்யாதி சுருதி வாக்யங்கள் தத்வத்ரயம்-
சரீரம் -பாஞ்ச பௌதிகம் –பிராக்ருதம்
-பூதங்கள் -பிரகிருதி மகான் அஹங்காரம் -பஞ்ச பூதங்கள் பஞ்ச தன்மாத்ரைகள் -இந்த்ரியங்கள் -கர்ம ஞான மனஸ் -சாத்விக அஹங்காரம் -இந்த்ரியங்கள் -கர்ம ஞான மனஸ்-தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றின் யாதாம்யா ஞானம் விசதமாக அறியப் பெற்றவர் -சின்னத்தில் இருந்து பெரிசு உருவாகும் -அணுவாதிகள் -பெரிசில் இருந்து -ப்ரஹ்மமே காரணம் -வைதிக மதம் -தத்வ ஹித புருஷார்த்தம் -காரணங்கள் -முக்தி மோக்ஷம் இவற்றில் வாசி சொல்லி புற மதங்கள் –
17 புற மதவாதிகள் -ஸ்ரீ பாஷ்யம் 2 அத்யாயம் -விளக்கி –
லோகம் பரவி கண்டதே காட்சி கொண்டதே கோலம் லோகாயாதிகள் -குத்ருஷ்டிகளில் முதலில் –
4-பல அத்யாயம் -3-சாதனா அத்யாயம் –2-அவிரோத அத்யாயம் —ப்ரஹ்மமே ஜகத் காரணம்
– 1- சமன்வய அதிகாரம் -ப்ரஹ்மம் ஜகத் காரணமே –
அயோக விவச்சேதம்-ராமன் வில்லாளியே -பண்பு அவர் இடம் கூடியே யோகம் -கூடும்
அந்ய யோக விவச்சதம் -ராமனே வில்லாளி –
எங்கனே என்னில்- -லோகாயாதிகன் -ப்ருதிவ்யாதி பூதங்கள் நாலி னுடைய -மண் நெருப்பு காற்று அக்னி -கூட்டரவில் சைதன்யம்
என்று ஒரு தர்மம் பிறக்கும் -அதுக்கு உண்டான ஸூ க துக்கங்களே ஸ்வர்க்க நரகங்கள் -அவற்றினுடைய பிரிவிலே சைதன்யம் நசிக்கும் –
அவ்வருகு ஒன்றும் இல்லை -எனபது அவனுடைய சித்தாந்தம் –
லோகாயுதன் -சாருவாகன் -நன்றாக பேசுபவர் -தேகமே ஆத்மா -சுக துக்கம் -அனுபவம் -ஆத்மா தேவை இல்லாமல் ஞானம் பிறக்கும் -என்பவர்
பூதங்கள் -கூட்டரவால் -தாம்பூலம் போலே -என்பர் -ஜாபாலி பெருமாள் மீண்டு வர சொன்ன மதம்
யாவத் ஜீவம் சுகம் ஜீவேத் -லௌகிக அபிமத -லோகேஷூ ஆயுதம் -ச்தூலோஹம்-க்ருசோஹம்-நான் சுகமாக தூங்கினேன்
-தேகமே ஸ்தூலம் க்ருசம் -பிரத்யஷத்தால் உண்டு -அத்ருஷ்டம் இல்லை -ஞான நாசம் மோஷம் என்பர் –
2–ஆர்ஹதன் -என்னும் ஜைனன்–கார்ய காரண ரூபத்தாலே ஜகத் நித்ய அநித்யமும்-பின்ன அபின்னமும் -சத்ய அசத்தியமுமாய் இருக்கும் –
ஆத்மாக்கள் கர்ம அநு ரூபமான சரீரங்களுடைய பரிணாமத்தையே தனக்குப் பரிணாமாகக் கொண்டு இருக்கும் –
சம்சாரம் அநாதி -மல தாராணாதிகளாலும்-ஆத்ம ஜ்ஞானத்தாலும் -பிரகிருதி விநிர் முக்தராய்-ஊர்த்த்வ கதியை ப்ராபியா நிற்கை மோஷம் ஆகிறது -என்றான்
ஆர்ஹதன் -ஜைனன்-நிர்ணயம் பண்ண கூடாது -இது என்று -பங்க வாதம் -சப்த பங்கி வாதம் –ஏக அந்தம் இது தான் முடிவு என்ன பண்ண முடியாது
ஸ்யாத் அஸ்தி –இருக்கலாம் -ஸ்யாத் நாஸ்தி -இல்லாமல் இருக்கலாம் -ஸ்யாத் அஸ்திச்ச நாஸ்திச்ச–
ஸ்யாத் அவக்தவ்யஞ்ச உள்ளது என்றோ இல்லது என்றோ சொல்ல முடியாமல் இருக்கலாம் –
-ஸ்யாத் அஸ்திச்ச அவக்தவ்யஞ்ச -ஸ்யாத் நாஸ்திச்ச அவக்தவ்யஞ்ச – ஸ்யாத் அசிதிச்ச நாஸ்திச்ச அவக்தவ்யஞ்ச
இது போலே பின்ன அபின்ன சத்ய அசத்திய நித்ய அநித்திய -21-சொல்லுவார்கள்
2-2-31-/32-ந ஏகஸ்மின் அசம்பவாத் –ஒரே சமயத்தில் விருத்த தர்மங்கள் ஓர் பொருளில் ஒட்டாது –
ஏ வஞ்ச -ஆத்மா அகார்ச்ன்ய -நிறைவின்மையான குற்றம் வரும் -யானை பிறவி எலி பிறவி -விகாரம் இல்லை ஒத்துக் கொண்டார் -எங்கு இருக்கும் –
திகம்பரன் -திக்கே அம்பரம் ஆடை உடுத்தாமல் என்றபடி -ஆறு தத்வம் -ஜைனர் -தேகம் -ஆத்மா -ஈஸ்வர சத்பாவம் இல்லை -தேக பரிமாணம் –
சாஸ்திரம் அணு சொல்வதை மாற்றி -ஜகத் -கர்மங்கள் -அனுரூபமான சரீரம் -சம்சாரம் அநாதி -முக்தி ஊர்த்தகதி போவதே —
தத்வங்கள் எத்தனை / ஆத்மா தத்வ விசாரம் / ஈஸ்வர தத்வ விசாரம் / ஜகத் உண்மையா பொய்யா / ஜகத்துக்கு காரணம் எது / கர்மங்கள் விசாரம் / சம்சாரம் -மாறி மாறி பிறப்பது பற்றிய விசாரம் / முக்தி யாது / முக்திக்கு சாதனம் யாது –
இந்த விஷயங்கள் பற்றியே புற மதங்கள் –
லோகாயுதன் -தேகமே தத்வம் / தேகமே ஆத்மா / ஈஸ்வரன் இல்லை / ஜகத் உண்மை / ஆகாசம் இல்லாமல் நான்கும் சேர்ந்து / கர்மங்கள் இல்லை / நான்கின் கூட்டரவால் சைதன்யம் -அதுவே சம்சாரம் / பிறந்த ஞானம் நசித்தால் முக்தி -தேகம் அழிந்து முக்தி / சாதனம் நான்கு பூதங்கள் பிரிந்து போவது முக்திக்கு சாதனம் –
இப்படி பொருத்தி பார்த்து மற்ற மாதங்கள் பற்றி அறியலாம் –
ஆர்ஹதன் – ஆறு தத்வங்கள் என்பர் -தேகம் ஆத்மா -ஈஸ்வரன் இல்லை -காலம் ஆகாசம் தர்மம் அதர்மம் -இத்யாதி – தேகம் பரிமாணம் ஆத்மா -சாஸ்திரம் அணு சொல்வதை மாற்றி / ஜகத் உண்டு / கர்மங்கள் உண்டு / சம்சாரம் அநாதி நம் போலே / மேலே செல்வது முக்தி / ஆத்ம ஞானம் மல தாரணம் – ஜீவா ஹிம்சை பண்ணாமல் -தலை மளித்தல் போல்வன -மவ்வனமாக இருந்து -மயில் தோகை-திகம்பர் -முக்தி சாதனங்கள் இவை –
-பௌத்த மதங்களில் வைத்துக் கொண்டு–3- வைபாஷிகன் -பரமாணு சங்காதமாய்-ப்ரத்யஷ சித்தமாய் -ஷணிகமுமாயும் -இருக்கும் ஜகத்து –
(அந்த ஞானமே ஆத்மா -)தத் விஷய ஜ்ஞானமும் ஷணிகம் வேறோர் ஆத்மா வில்லை -இதில் ஸ்திரத்வ புத்தி சம்சாரம் -ஷணிக புத்தி மோஷம் என்றான் –
4–சௌத்ராந்திகனுக்கு சித்தாந்தம் அதுவேயாய் இருக்கச் செய்தே -அநுமான சித்தம் ஜகத்து -என்றான் –அதுவே அவனுக்கு விசேஷம் –
5–யோகாசாரன் -ஜ்ஞாத்ரு ஜ்ஞேயங்கள் ப்ரமம் -ஜ்ஞானமே யுள்ளது -அதுவும் ஷணிகம் என்று இருக்கை மோஷம் -என்றான் –
6--மாத்யமிகன் -பிரமாணமும் பிரமேயமும் பிரமாதாவும் இவை யுண்டு என்று அறிகை ப்ரமம் –சூன்யத்தால் சூன்யம் என்று அறிகை மோஷம் என்றான்-
வைபாஷிகன்-பரமாணு -இனி மேல் பிரிக்க முடியாத -சங்கா தத்தாலே ஜகத் -உண்டு பிரதிஷ சித்தம் என்பர் –
அதற்குள் -பிரவாஹ ரூப ஜ்ஞானம் -லோக விவகாரம் -ஞானம் உடையவரை ஒத்துக் கொள்ள வில்லை –
ஞானமே ஆத்மா -அவரும் ஷணிகம்–கர்மங்கள் இல்லை -சம்சாரம் உண்டு–ஸ்த்திரம் என்ற நினைவே சம்சாரம் –
ஷணிக புத்தி மோஷ சாதனம் -சூன்யமே முக்தி -இதை நிரசிக்க-3- ப்ரஹ்ம ஸூ த்ரங்கள்-
சமுதாய உபய ஹேதுகேபி-தத் அப்ராப்தி –ஓன்று ஒன்றுடன் கூடி சேர்ந்தால் உண்டாகும் என்றால் ஷணிகம்
உபயதாஷா தோஷாத் -இல்லாத பொருளில் உருவாகும் -உருவாகுவது அழியும் என்கிறாய் -இல்லாததில் உருவானால் ஜகத் சூன்யம் ஆகுமே –
அனுச்ம்ரிதி-ஞானம் ஷணிகம் நினைவே வாராதே –
வைபாஷிகன் -ஞானம் ஒத்துக் கொண்டு -ஞானமே ஆத்மா -அதுவும் க்ஷணிகம் / ஈஸ்வரன் இல்லை /ஜகத் உண்டு -பிரத்யக்ஷ சித்தம் /பரமாணுக்கள் கூடி ஜகம் / கர்மா இல்லை / சம்சாரம் -ஸ்த்ரம் என்று அறிந்தால் -க்ஷணிகம் என்று உணர்வதே முக்தி /சங்க புத்தி முக்திக்கு சாதனம் /முக்தி சூன்யம்
சௌத்ராந்திகனுக்கு சித்தாந்தம் அதுவேயாய் இருக்கச் செய்தே -அநுமான சித்தம் ஜகத்து -என்றான் –அதுவே அவனுக்கு விசேஷம் –
ந அசதக அத்ருஷ்டத்வாத் –சூத்ரம் -அறிவில் உள்ள நீலம் அழிந்த பொருளில் இல்லை
அசதக ந— இல்லாத பொருளில் இல்லை -கடத்தில் – அதிருஷ்ட்த்வாத் -அழியும் பொழுது தன்னிடம் உள்ளதை கொடுத்து போகாதே -புத்தியில் பட்ட கறுப்பு குடத்தில் இருந்து வர வில்லை -கறுப்பு பார்க்கும் பொழுது எல்லாம் குடம் நினைவு வராதே -குடை போல்வனவும் உண்டே -நீலம் பார்க்கும் பொழுது எல்லாம் குடம் நினைவு வராதே-
உதாசீனா அபி சைவம் சித்தி -வெறும் உள்ளாருக்கு பலம் சித்திக்கும் -அனுமான சித்தம் இல்லை-
சௌத்ராந்திகனுக்கு-இரண்டே தத்வங்கள் – ஆத்மா ஞானம் -ஈஸ்வரன் இல்லை -ஜகத் அனுமான சித்தம் -கர்மம் இல்லை -ஸ்த்ரத்வ புத்தி சம்சாரம் -மோக்ஷம் -க்ஷணிகம் என்று அறிவதே / -சூன்யமே முக்தி
யோகாசாரன் -ஜ்ஞாத்ரு ஜ்ஞேயங்கள் ப்ரமம் -ஜ்ஞானமே யுள்ளது -அதுவும் ஷணிகம் என்று இருக்கை மோஷம் -என்றான் –
அறிவும் அறியப் படும் பொருளும் ஒன்றாகவே கிரஹிக்கப்படும்-இரண்டும் ஒன்றே என்பான் -கடம் கட ஞானம் இரண்டும் ஒன்றே –
அபாவா ந உபலப்த்வே –சூத்ரம்
இரண்டும் ஓன்று என்றால் இரண்டா ஒன்றா -அப்போதே இரண்டு தானே-அபாவா ந-
ந பாவ அனுபலப்த்வே –சூத்ரம்-உள்ள வஸ்துக்கள் -இரண்டை பற்றிய அறிவும் அறியப்படும் பொருள் இல்லாமல் இல்லையே-அறிபவனையும் அறியப் படும் பொருளையும் பற்றாமல் அறிவே இல்லையே –
யோகாசாரன்-ஒன்றே தத்வம் ஞானம் மட்டும் -அது க்ஷணிகம் -ஈஸ்வரன் இல்லை -ஜகத் இல்லை /பிரமம் தான் காரணம் என்பான் / கர்மங்கள் இல்லை / ஜகத் உண்மை என்று அறிந்தால் சம்சாரம் /க்ஷணிகம் புத்தி -ஞானம் க்ஷணிகம் என்ற புத்தி ஏற்பட்டால் மோக்ஷ சாதனம் /சூன்யம் தான் மோக்ஷம்
மாத்யமிகன் -பிரமாணமும் பிரமேயமும் பிரமாதாவும் இவை யுண்டு என்று அறிகை ப்ரமம் –சூன்யத்தால் சூன்யம் என்று அறிகை மோஷம் என்றான்
மாத்யமிகன்-சூன்யத்தால் சூன்யத்தை சூன்யம் என்று அறிந்து சூன்யத்தாலே சூன்யத்தை அடைவதே மோஷம்
ஷணிக விஜ்ஞ்ஞான ஞானம் பௌத்னுக்கு முக்கியம் —இவர்களுக்கு ஆகாசம் -இல்லை -நான்கு பூதங்கள் தான் –
அனுபத்தேச்ச –சூத்ரம் -பொருந்தாமையும் வருகிற படியால்-
உபபத்தி பொருந்துவது –அனுபபத்தி-பொருந்தாமை -நீ சொல்லும் வாதம் பொருத்தம் இல்லையே என்றபடி –
எந்த சப்தமும் சூன்யம் ஸ்தாபிக்காதே
அஸ்தி -சப்த்தாதால் இயலாது -நாஸ்தி சப்தத்தால் இயலாது இங்கு இல்லை இப்பொழுது இல்லை-உனக்கு கொடுக்க இல்லை –
பாவ அபாவ விசிஷ்டம் -மண்ணின் உடைய அபாவம் குடம்-
உளன் இரு தகைமையோடு -உளன் எனில் உளன் -அவன் உருவம் இவ் வுருவுகள் -உளன் அலன் எனில் -அவன் அருவம் அவ்வருவுகள் -உளன் என இலன் என இவை குண -அஸ்தித நாஸ்தித்வ விசிஷ்டா ப்ரஹ்மம் உளன் ஒளிவிலன் பரந்தே-ஸத்கார்ய வாதம் –
மாத்யமிகன்-தத்துவங்களே இல்லை /ஆத்மா இலை / ஈஸ்வரன் இல்லை / ஜகத் இல்லை -பிரமம் -கர்மங்கள் இல்லை / தத்வம் உள்ளது என்ற நினைவே சம்சாரம் / சூன்யம் என்கிற புத்தி மோக்ஷ சாதனம் / சூன்யமே மோக்ஷம் –
7/8-நையாயிக வைசேஷிகர்கள் -ஜகத்துக்கு உபாதான காரணம் பரமாணுக்கள் -ஆநும நிகேச்வரன் நிமித்த காரணம் -அனுமானத்தால் ஈஸ்வரன் என்பர் -நிமித்த காரணம் ஸர்வேஸ்வரன் என்பர் –
சம்சாரம் அநாதி -ஈஸ்வர உபாஸ்தியாலே ஸூக துக்க ஜ்ஞானங்கள் நசிக்கை மோஷம் என்றார்கள்-
நையாயிக வைசேஷிகர்கள்-16 தத்வங்கள் /ஆத்மா உண்டு /ஈஸ்வரன் /ஜகத் /காரணம் பரமாணு / கர்மங்கள் உண்டு / உபாசனம் மோக்ஷ சாதனம் / பாஷாண கல்பம் மோக்ஷம் பாஷாண கல்பம் போலே கல்லை போலே ஆவதே மோக்ஷம் -இதுக்கு பகவத் உபாசனம் என்பர் -நையாயிக வைசேஷிகர்கள் –அஷபாதர் கணாதர் -மதங்கள் -ஜகத்துக்கு உபாதான காரணம் பரமாணுக்கள் -ஆநும நிகேச்வரன் நிமித்த காரணம் –
சம்சாரம் அநாதி -ஈஸ்வர உபாஸ்தியாலே ஸூக துக்க ஜ்ஞானங்கள் நசிக்கை மோஷம் என்றார்கள்
சமவாயி சம்பந்தம் –மற்று ஒன்றை ஆஸ்ரயித்து காரணம்
படத்துக்கு நூல் சமவாயி காரணம் -வர்ணத்துக்கு நூலின் வர்ணம் அசமவாயி காரணம்
குணம் குணி /அவயவி அவயவம் /கிரியா கிரியாவான் /விசேஷம் பரமாணு /
மகத்தீர்கத்வாத் வா ஹஸ்த பரிமண்டலம் —அவயவம் உடன் உள்ளதா இல்லையா பரமாணு -சிதைக்க முடியாதே -நூல்களுக்கு ஆறுபக்கங்கள் -எல்லா பக்கமும் சேராதே
சேர்ந்ததுக்கு காரணம் அத்ர்ஷ்டம் காரணம் என்பர் -அத்ர்ஷ்டம் வஸ்துவிலா ஆத்மாவிலா -வஸ்துவில் சேர்ந்து கொண்டே இருக்குமே –
ஆத்மாவில் இருந்தால் அது எப்படி பரமாணுக்களை சேர வைக்கும் –-உபயதா — விசேஷம் பரமாணுவை சார்ந்து இருக்கும் – வைசேஷிகன் பேர் இதனால் -கிரஸ்வ பரிமண்டலம் -பரமாணு அவயவம்-இல்லாதது -கூடின பக்கம் எது -நூல்கள் சேர்கின்றன -எல்லா பக்கமும் நூல் கள் சேராதே –
பரமாணு சேர காரணம் -அத்ரிஷ்டம் என்பர் -ஸர்வேஸ்வரன் அனுமான சித்தம் -பிரதம அத்ரிஷ்டம் வஸ்துவிலா ஆத்மாவிலா –
வஸ்துவில் இருந்தால் அணுக்கள் சேர்நது கொண்டே இருக்க வேண்டுமே -ஆத்மாவில் இருந்தால் பரமாணுக்கள் கூட காரணம் இல்லையே -ஒவ்வாது –
9–பாஸூபதன்-பரமாணுக்கள் உபாதான காரணம் -ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் -சம்சாரம் அநாதி –
ஆகம உக்தமான கர்ம அனுஷ்டானத்தாலே பசுபதி சாரூப்யத்தைப் பெறுகை மோஷம் -என்றான்-36 தத்வங்கள் / ஆத்மா உண்டு -ஈஸ்வரன் உண்டு ஆகமம் சித்தம் -ஈஸ்வரன் நிமித்த காரணம் மாத்திரம் / பசுபதி ஆகமம் படி கர்மங்ககள் அனுஷ்டிக்கை முக்திக்கு சாதனம்-
பாஸூபதன்-பரமாணுக்கள் உபாதான காரணம் -ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் -சம்சாரம் அநாதி –
ஆகம உக்தமான கர்ம அனுஷ்டானத்தாலே பசுபதி சாரூப்யத்தைப் பெறுகை மோஷம் -என்றான்
ஆறு முத்ரைகள் கொண்டு பஸ்மம் தரித்து -ருத்ராஷம் குண்டலம் கழுத்தில் கையில் தலையில் பூணூல் தரித்து
ஜடை முடி -த்யானம் பிரணவ ரூபம் -சைவ ஆகமம் படி –
பத்யுகு அசாமஞ்சாச் -பொருந்தாதபடியால் -வேதத்துக்கு விருத்தம் -நாராயண அனுவாஹம் -புருஷ ஸூ கதம் –
ந சத் ந அசத் சிவா ஏவ கேவல –இந்த்ரனே -ஹிரண்ய கர்ப்பனே -போன்ற சுருதி வாக்யங்கள் உண்டே –
ஜகத் காரணம் -சத் /ஆத்மா /ப்ரஹ்மம் /இந்த்ரன் /நாராயணன் பல சொல்லி –
முதலில் உள்ளதே -என்று சொல்லி -அறிவுள்ள ஆத்மா -வே காரணம் -பெரியது ப்ருஹத் தான் காரணம் -அணுக்கள் சேர்ந்து இல்லை
அந்த ப்ரஹ்மம் யார் -பல வாக்யங்கள் -மாணவர் கூப்பிடு -குடை பிடித்தவனை கூப்பிடு -சுருக்கி -பொது சொல் விசேஷயத்தில் பர்யவசிக்கும் –
சத் ஆத்மா ப்ரஹ்ம –பொது சொல் போலே –சிவ இந்த்ரன் பிரம்ம -போன்ற சொற்களும் -பொது சொல்
ஸ்தாணு –தஷிண பினாக்னி பெண்ணை ஆறு திருக் கோவலூர் வில்லைக் கை பிடித்து இருக்கும் சிவன் நெல்லூர் உத்தர பினாக்னி நதி உண்டு
யௌகிகம் பத சேர்க்கை -ரூடி அர்த்தம் -இரண்டும் உண்டே ரூடி பிரசித்தம் -பங்கஜ -சேற்றில் பிறந்த செந்தாமரை
காளான் -இல்லையே -யௌகிகம் பல பொருள்கள் வரலாம் –த்விஜ -பல் பிராமணன்
நாராயணன் -பாணினி சூத்ரம் சிவனை சொல்ல முடியாதே –சூர்பணகை-இதே போலே
அதிஷ்டானம் -சரீரம் இல்லாமல் பண்ணுகிறாரா இல்லாமல் -செய்கிறாரா -அவரை யார் படைத்தார் -உன் மதத்தின் படி பொருந்தாது -அதிஷ்டானம் அனுபத்தேதே –
10-/11/-சாங்க்ய யோகிகள் -பிரகிருதியே ஸ்வ தந்த்ரமாய்க் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது -அந்த பிரகிருதியோடு
ஆத்மாவுக்கு உண்டான அநாதி சம்பந்தம் சம்சாரம் –பிரகிருதி புருஷ விவேகம் மோஷம் -என்றார்கள் –
–சாங்க்ய யோகிகள் -பிரகிருதியே ஸ்வ தந்த்ரமாய்க் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது -அந்த பிரகிருதியோடு
ஆத்மாவுக்கு உண்டான அநாதி சம்பந்தம் சம்சாரம் –பிரகிருதி புருஷ விவேகம் மோஷம் -என்றார்கள் –
சாங்க்யர் –சேஸ்வர நிரீஸ்வர -இரண்டு வகை –கபிலர் -ஆகம நிஷ்டர் -ப்ரஹ்மம் இல்லை -நிரீஸ்வர மதம் –
சங்க்ய-புத்தி –ஸ்படிகம் -செம்பருத்தி பூ அருகில் -சிகப்பு ஏறிடுமே
ஞாத்ருத்வம் -கர்த்ருத்வம் -அத்யாசம் ஒன்றின் தன்மை மற்று ஒன்றில் இருப்பது போலே அனுசந்தானம்
தேவபூதி -கர்த்தம பிரஜாபதி –தாயாருக்கு கபிலர் உபதேசம் -சேஸ்வர கபிலர் அவர் –
சகர -கபிலர் -கண்ணை சாம்பல் -பகீரதன் -கதை உண்டே
யோகிகள் -பதஞ்சலி நிஷ்டர் /-ஹிரண்ய கர்பர் மதம்நிஷ்டர் / -ஆத்மா அப்ரஹ்மாத்மகம்-சரீரம் இல்லை என்பர் –
வைதிக மதத்தில் நேக நா இஹ நாநா அஸ்தி கிஞ்சித் அப்ரஹ்மாத்ய பொருள் இல்லை -சர்வம் ப்ரஹ்மாத்மகம் –
காரணப் பொருள் தன்மை காரியத்தில் இருக்க வேண்டுமே ப்ரஹ்மம் ஜகத்துக்கு காரணம் ஆனால் சுக துக்கம் விகாரம் அறிவற்ற தன்மை -வருமே -இவர்கள் ஆஷேபம்
பிரகிருதி தான் ஜகத் கார்யம் இதனால் என்பர் –
2-2-1-ரசனா அனுபபத்தே -ரசனம் பண்ணுதல் -படைத்தல் என்பது பொருந்தாதா படியால்
பிரதானம் -ஞானம் உடைய ஆத்மாவால் அதிஷ்டானம் செய்தால் தான் சிருஷ்டிக்க முடியும்
குயவன் -மண் -குடம் –
ந அனுமானம் பிரவர்த்தேச்ச -பிரவ்ருத்திக்கும் ஆத்மாவும் வேண்டும் –அறிவுள்ளத்து -இருந்தால் தான் படைக்க /செயல் பட
பயோம்புவது சேது ந —பயஸ் -பாலை உறக்குத்தி தயிர் -ஆத்மா குறுக்கே வர வில்லை
தண்ணீர் -இள நீர் -இரும்பு கதவு -மரம் -தேர் -அனுமானத்தால் ஸ்தாபித்து
எல்லா பாலும் தயிர் ஆக வில்லையே –
வியதிரேக –அன்யத்ர-
மாடு -புல் -பாலாகிறதே-போலே பிரகிருதி ஜகம் காள மாடு புல் சாப்பிட்டு பால் ஆக வில்லையே
12/13–பாட்ட ப்ரபாகரர்கள் –நித்யராய் அநேகராய் சர்வகதராய் அநாதி கர்மத்தாலே சம்சரிக்கிறார்கள் -ஆத்மாக்கள் —
ஜகத்து பிரவாஹ ரூபேண நித்யம் -கர்ம அபூர்வமே ஆத்ம ப்ராப்தி ரூப மோஷ ஹேது -ஈஸ்வர சத்பாவம் இல்லை -என்றார்கள்-குத்ருஷ்டிகள் கோஷ்டி -இவர்கள் தொடங்கி -மேலே -சங்கர பாஸ்கர பாட்ட பிரபாகர் -யாதவ பிரகாசர் -தங்கள் மதம் -யதி தர்ம சமுஜ்யம் -யாதவ பிரகாசர் திரும்பி வந்து செய்த கிரந்தம் —
மீமாம்சகர்கள் -பாட்ட ப்ரபாகரர்கள் –நித்யராய் அநேகராய் சர்வகதராய் -விபு என்றபடி -அநாதி கர்மத்தாலே சம்சரிக்கிறார்கள் ஆத்மாக்கள் —
ஜகத்து பிரவாஹ ரூபேண நித்யம் -படைக்கப் பட வில்லை என்றவாறு -கர்த்தா எதற்கு –
-கர்ம அபூர்வமே ஆத்ம ப்ராப்தி ரூப மோஷ ஹேது -ஈஸ்வர சத்பாவம் இல்லை -என்றார்கள்
வழி -வேதங்கள் விதித்த கர்மங்கள் செய்து –அபூர்வம் -உருவாக்கி மோஷம் கொடுக்கும் -அபூர்வங்கள் சேர்ந்து மகா பூர்வம்-நித்யாபூர்வம் அநித்யப்பூர்வம் இரண்டு வகை -பல அபிசந்தி ரஹிதம் -கர்மம் செய்து நித்யாபூர்வம் -நித்ய அபூர்வம் தான் மோக்ஷம் கொடுக்கும் என்பர் -ஜகத் நித்யம் காரணம் வேண்டாமே –
ப்ரஹ்மத்துக்கு உள்ள குணங்களை அபூர்வத்தில் ஏறிட்டு சொல்வார்கள் -சங்கர பாஸ்கர பாட்டர் -மாயா -/சத்யமான உபாதி -/பிரமத்தின் விகாரம் பரிணாமம் -ஜகத் /ஆத்மா இவற்றால் –
14–மாயாவதி -நிர்விசேஷ ( சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதங்கள் இல்லாமல் )சின் மாத்ரமே மாயா சபளமாய்க் கொண்டு -விசேஷமானது -பேதம் –ப்ரஹ்மம் ஆத்மா -சஜாதீய -ப்ரஹ்மம் அசித் விஜாதீய -ஸூவ கத -ப்ரஹ்மம் திரு மேனி திருக் கல்யாண குணங்கள்-நிர் விசேஷம் இம்மூன்றுமே இன்றிக்கே இருக்கை -சத் ஏவ ஏக மேவ அத்வதீயம் சுருதி என்பர் -வஸ்து துச்சம் இல்லை -ஆகாச தாமரை முயல் கொம்பு போலே இல்லை -என்பர் -சீன மாத்திரம் ஞானமாகவே இருக்கும் ஞானம் உடையவன் என்றால் ஞானம் ஓன்று உடையவன் என்று இருக்க வேண்டுமே -மாயை -சரீரம் – உபாதியும் பொய்-என்றார் இவர் இதில் வாசி மேலே –
( மாயையால் கலந்து )சம்சாரம் -தத் த்வமஸி-இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞானத்தாலே அந்த ப்ரமம் போகை மோஷம் என்றான் -பர ப்ரஹ்மம் ஏவ அஞ்ஞம் பிரம பரகதம் -சம்சரதி –சங்கர மதம் –
மாயாவதி -நிர்விசேஷ ( சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதங்கள் இல்லாமல் )சின் மாத்ரமே மாயா சபளமாய்க் கொண்டு –
( மாயையால் கலந்து )சம்சாரம் -தத் த்வமஸி-இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞானத்தாலே அந்த ப்ரமம் போகை மோஷம் என்றான் –
ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் -காரணங்கள் பல -அவற்றுக்கும் காரணம் ஒன்றே -அத்தை அறிந்தால் –
அந்த ஓன்று உள்ளதா -உத -அந்த ப்ரஹ்மம் -தத் த்வம் அஸி -ஐததாம்யம் இதம் சர்வம் -ஏதத் ஆத்மா -தத் சத்யம் -தத் த்வம் அஸி -பிரம்மாவை ஆத்மாவாக கொண்டு உள்ள அனைத்தும் –
சாமா நாதி கரண்யா -அந்த ப்ரஹ்மம் நீயாக இருக்கிறாய் –
ப்ரஹ்மம் சங்கல்ப்பித்து கொண்டு -இவற்றை படைத்து -எண்ணிறந்த தத்வங்கள் –
அடைமொழி -விட்டு இலக்கணை -விசேஷணம் விட்டு சொல்வது
ஜகத்துக்கு அந்தராத்மாவாய் காரணமான ப்ரஹ்மம் ச்வேதகேது உனக்கும் அந்தராத்மா காரணமான ப்ரஹ்மம் –
தத் ப்ரஹ்மம் –த்வம் ஆத்மா என்று கொண்டு அத்வைதம் தப்பாக விசேஷணம் இல்லாமல் அர்த்தம் கொண்டார்கள் –
தத் -ப்ரஹ்மம் -த்வம் -ப்ரஹ்மம் -தவறு இல்லையே -சொல்லும் பிரகாரம் வேறே –சரீரம் அனைத்தும் நம் சம்ப்ரதாயம் –
மாயை -அவித்யை -வாக்ய ஜன்ய ஞானத்தால் -மோஷம் –
கானல் நீர் சொன்னதும் பிரமம் போவது போலே –
மடிப்புடவையை வெந்தால் உண்டியும் பாவும் -பாதித்த அனுவ்ருத்தி -இன்னும் தொடரும் பிரமம் -என்றவாறு -அபேத ஞானம் வந்தாலும் பேத ஞானம் தொடரும் –
வாசி உண்டே நேற்றும் இன்றும் -நேற்று தண்ணீர் குடிக்க முற்பட்டேன் -புடவை உடுத்திப் போனேன் -இன்று இல்லையே -ராமானுஜர் –
இதனால் உபாதி சத்யம் என்றார் பாஸ்கரர் -அடுத்த
சோஹம் அந்த பிரமத்துக்கு சரீரம் -சகாவுக்கு அஹம் சரீரம் -புரியாமல் ஆனந்தாக்கள் சொல்வதைக் கேட்டால் சோகம் பிறக்கும் –
சர்ப்பம் இல்லை கயிறு ஞானத்தால் மட்டுமே நிவர்த்திக்கப்படும் -அவித்யை -ஞானத்தாலே மோஷம் என்பர்-
பிறப்பிலி பல் பிறவிப் பெருமான் -பிறப்பிலி -கர்மாதீனமாக -கிருபையாலே பல் பிறப்பு பிறக்கிறான் -எத்தையும் விடாமல் –
கடக சுருதி -கொண்டு பேத அபேத ஸ்ருதிகள் சேர விட வேண்டும் –
15–பாஸ்கரீயன்-அந்த ப்ரஹ்மம் தானே -சத்ய உபாதி ( தேஹம் இந்த்ரியம் )மிஸ்ரமாய்க் கொண்டு பிரமிக்கை சம்சாரம் –
வர்ணாஸ்ரம தர்ம உபேதமாய்-வாக்ய ஜன்ய ஜ்ஞான பூர்வகமாய் யுள்ள உபாசன ஆத்மக ஜ்ஞானத்தாலேஉபாதி நசிக்கை மோஷம் என்றான்
பாஸ்கரீயன்-அந்த ப்ரஹ்மம் தானே -சத்ய உபாதி ( தேஹம் இந்த்ரியம் )மிஸ்ரமாய்க் கொண்டு பிரமிக்கை சம்சாரம் –
வர்ணாஸ்ரம தர்ம உபேதமாய்-வாக்ய ஜன்ய ஜ்ஞான பூர்வகமாய் யுள்ள உபாசன ஆத்மக ஜ்ஞானத்தாலேஉபாதி நசிக்கை மோஷம் என்றான்
ப்ரஹ்மம் ச குணம் என்பர் –பேதாபேதாவாதி இவர் -அபேதமும் உண்டு பேதமும் உண்டு –
பாஸ்கரீயன்-அந்த ப்ரஹ்மம் தானே -சத்ய உபாதி ( தேஹம் இந்த்ரியம் )மிஸ்ரமாய்க் கொண்டு பிரமிக்கை சம்சாரம் –
வர்ணாஸ்ரம தர்ம உபேதமாய்-வாக்ய ஜன்ய ஜ்ஞான பூர்வகமாய் யுள்ள உபாசன ஆத்மக ஜ்ஞானத்தாலேஉபாதி நசிக்கை மோஷம் என்றான்
ப்ரஹ்மம் ச குணம் என்பர் –பேதாபேதாவாதி இவர் -அபேதமும் உண்டு பேதமும் உண்டு – –
இவர் ச குண பிரமம் என்பர் -ச விசேஷ பிரமம் -உபாதி சத்யம் -தேகம் இந்த்ரியம் புத்தி உண்மை -பட்டு பிரதிபலிக்கிறார் –
பாரமார்த்திகம் -உண்மை -உபாசனத்தால் மோஷம் -யாரை -ப்ரஹ்மத்தை உபாதி நசிக்கை -வாக்ய ஜன்ய ஞானம் பூர்வகமாக -நானும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதையே -என்பர் –கடாகாசம் மடாகாசம் -ஆகாசம் -குடத்துக்கு உள்ளே இருக்கும் -மடத்துக்கு உள்ளே மடாகாசம் -அளவுபடுத்துவது தான் உபாதி –குடம் உடைத்தால் ஒன்றாகுமே –ஏகி பாவம் –
சரீரத்துக்கு உள்ளே இருந்த ப்ரஹ்மமும் வெளியில் உள்ள ப்ரஹ்மமும் ஒன்றாகும் -ஐக்கியம் –
பரம் ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் சங்கரர் –தத் பரோபாத்யா விவசம் கர்மம் வசம் உபாதியால் –பிரமமே சம்சாரம்
16–யாதவ பிரகாசன் –அந்த ப்ரஹ்மம் தானே சத்யமான சித் அசித் ஈச்வராத்மகமாய்க் கொண்டு பிரமிக்கிறது –
அதுக்கு உண்டான பேத ஜ்ஞானம் சம்சாரம் -ஜ்ஞான கர்ம சமுச்சயித்தினாலே பேத ஜ்ஞானம் போகை மோஷம் -என்றான் -அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் பேதம் ஸ்வாபாவிகம் / சித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் ஸ்வாபாவிகம்
யாதவ பிரகாசர் சித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் பேதாபேதம் இயற்க்கை என்பர் யாதவ பிரகாசர் –இது தான் பேதாபேத வாதம் –
யாதவ பிரகாசன் -அந்த ப்ரஹ்மம் தானே சத்யமான சித் அசித் ஈச்வராத்மகமாய்க் கொண்டு பிரமிக்கிறது –
அதுக்கு உண்டான பேத ஜ்ஞானம் சம்சாரம் -ஜ்ஞான கர்ம சமுச்சயித்தினாலே பேத ஜ்ஞானம் போகை மோஷம் -என்றான் –
ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கிற வைதிக சித்தாந்தத்தில் காட்டில் ப்ரஹ்மத்தை கதி பய சக்தி
விசிஷ்டமாகக் கொண்டான் இத்தனை -அதுவே அவனுக்கு விசேஷம் –
யாதவ பிரகாசன் -அந்த ப்ரஹ்மம் தானே சத்யமான சித் அசித் ஈச்வராத்மகமாய்க் கொண்டு பிரமிக்கிறது -ஏக தத்வ வாதியாக இருந்தும் –
அதுக்கு உண்டான பேத ஜ்ஞானம் சம்சாரம் -ஜ்ஞான கர்ம சமுச்சயித்தினாலே பேத ஜ்ஞானம் போகை மோஷம் -என்றான் –
ஞான கர்ம சமுச்சயம் -வித்யா -ஞானம் அவித்யா கர்மம் -இரண்டு சாதனங்கள் -அநிஷ்ட நிவ்ருத்தி -கர்மத்தால் -இஷ்ட ப்ராப்தி ஞானம் என்பர்
நாம் கர்ம யோகம் ஞான யோகத்துக்கு அங்கம் –
விகாரம் பரிணாமம் -இவன் பாஷம் -பரிணாம ரூப விசேஷம் இவன் அங்கீ கரிக்கிறான்
ஓன்று தான் -மூன்றாக பிரமித்து -பிரமம் போனால் மோஷம் -ஸ்வச்மாத் அபின்னமான வேறுபடாத சித் அசித் ஈச்வரர்கள் இடத்தில் பேத புத்தியே பிரமம் –
ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கிற வைதிக சித்தாந்தத்தில் காட்டில் ப்ரஹ்மத்தை கதி பய சக்தி -விசிஷ்டமாகக் கொண்டான் இத்தனை -அதுவே அவனுக்கு விசேஷம்
அசித் பிரமத்துக்கும் பேதமும் அபேதமும் ஸ்வாபாவிகம் -இயற்க்கை- மாறாது
சித்துக்கும் பிரமத்துக்கும் அபேதம் ஸ்வா பாவிதம் -பேதம் செயற்கை ஔபாதிகம் -என்பர் பாஸ்கர பஷம்-
யாதவ பிரகாசர் -சித்துக்கும் பிரமத்துக்கும் பேதம் அபேதம் இரண்டும் இயற்க்கை
ஏவம் மாயா -உபாதி -விகார -வாதிகள் –அசூபச்ய ஆஸ்பதம் -அசுபத்துக்கு இருப்பிடம் யாதவ பிரகாசர்-பேத ஞானமே சம்சாரம் -ஞான கர்ம சமுச்சயம் சாதனம் -ஐக்கிய ஞானம் –
17–ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கிற வைதிக சித்தாந்தத்தில் காட்டில் –ஏகாயன மதம் -ப்ரஹ்மத்தை கதி பய சக்தி-விசிஷ்டமாகக் கொண்டான் இத்தனை -அதுவே அவனுக்கு விசேஷம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கிற வைதிக சித்தாந்தத்தில் காட்டில் ப்ரஹ்மத்தை கதி பய சக்தி-விசிஷ்டமாகக் கொண்டான் இத்தனை -அதுவே அவனுக்கு விசேஷம் –
ஏகாயன மதம் -மத்வாச்சார்யர் அப்புறம் பிரகாசப் படுத்தினார் -ஏகமே அயனம் -ஒன்றே -நாராயண –
சேஷி தம்பதி மிதுனம் -நமக்கு -இன்பம் பயக்க எழில் மகள் மாதரும் தானும் -ஸ்ரீ பூமி நீளா-தேவிமார் மூவருடன் –
கதி பய சக்தி பூரணமான சக்தி இல்லை -என்பர் -லஷ்மி சேராமல் பூர்ணம் -வாராதே -சுவையன் திருவின் மணாளன் –
நாம் மிதுனாயினர் –அத்திரு அவனைப் பற்றும் இத்திரு இருவரையும் பற்றும்
மார்பை பிரார்த்தித்து இருக்கும் அத்திரு -இத்திரு திருவடியை ஆசை பட்டு இருக்கும்
அபூர்ண சக்தி விசிஷ்டத்வம் -இவர் மதம் –
ஹரிபரத சத்யம் ஜகத் -தத்வ பின்ன -ஹரி அனுசர பக்தி தத் சாதனம் -ஆத்மா சத்பாவத்த்க்கு பிரமம் காரணம் இல்லை என்பர் ஸ்வ தந்த்ரன் என்பர் –
11 பாஹ்யர் -6 குத்ருஷ்டிகள் நிரசனம் பண்ணி அருளினார்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-