ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்
பக்த அம்ருதம் விஸ்வ ஜன அனுமோதனம்
சர்வ அர்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –
இரண்டாம் வேற்றுமை உருபில் அனைத்தையும் –திராவிட வேத சாகரம் ––அஹம் நமாமி-திராவிட சாகரத்தை வணங்குகிறேன்-
அனுமோதனம் -பேர் ஆனந்தம்
சர்வ வர்த்ததம் -எல்லா ஆழ்ந்த பொருள்கள் கொண்டது
ஸ்ரீ சடோ கோப வாங்மயம் -திரு வாய் மொழி –
பக்த அம்ருதம்
பண் கொள் ஆயிரத்து இப்பத்தால் பத்தராகக் கூடும் -3-6-11-
– பத்தர் பரவும் ஆயிரத்தின் –3-5-11-
-பத்தர் பித்தர் பேதையர் பேசின -கம்பர் -நாத முனிகள் அரங்கேற்றம்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலை சொன்னேன் -9-4-9-
விஸ்வ ஜனம் -அனுமோதனம் -பிரபன்னர்களுக்கு மட்டும் இல்லை -ஜனம் -பிறந்த அனைவருக்கும் –
கண்டவாற்றால் உலகு தனக்கே நின்றான்தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் -நோற்றது அவன் -நான் நூற்க -அடியார்க்கு இன்ப மாரி – கோரா மா தவம் செய்தனன் கொல் -பெரிய பெருமாள் அன்றோ தவம் செய்தார் –
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை பார் பரவு இன் கவி 7-9-5-
சர்வார்த்ததம்
ஆற்ற நல்ல வகை –காட்டும் அம்மானை –அமரர் தம் ஏற்றை –எல்லாப் பொருளும் விரித்தானை –4-5-5-
மிக்க இறை நிலையும் தொடங்கி -பகவத் சேஷத்வம் தொடங்கி -உயர்வற உயர்நலம் உடையவன் –
-மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்க பாடி -என் நெஞ்சுள் நிறுத்தினான் -பாகவத சேஷத்வம் வரை அருளி
கங்கை காங்கேயன் பாடிய எச்சில் வாய் இல்லையே -அசத் கீர்த்தனம் இல்லையே
அறிய வேண்டிய அர்த்தம் –
ஸ்ரீ சடகோப வாங்மயம்
குருகூர் சடகோபன் சொல் -1-1-11–சாட்யம் போக்கி -பிறர் சாட்யமும் போக்கி-சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்–வேத சார -சாம வேத சார -சாந்தோக்யம் சார -உத்கீதம் -உத்கீத பிரணவம்
உ து -விளக்க 1102- உயர்வற –பிறந்தார் உயர்ந்தே
உத்காதா -தொனியில் பாட உத்கீத பிரணவம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம்
வேத அரும் பொருள் நூல்களை -வண் தமிழ் நூலாக்கி 9-3-3-
எய்தற்கு அரிய –ஆயிர இன் தமிழ் பாடினான் –
-அளவியன்ற அந்தாதி –வான் ஓங்கு பெரு வளமே -1-4-11-
– பத்தர் பரவும் படி சொல்லிற்று -1-5-11-
கடல்– திருவாய்மொழி ஒப்புமை –
பக்தர்களுக்கு அமுதம் இது –மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து –துறைப் பால் படுத்தி
தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம் -பாம்பணைப் பள்ளியன் அன்பர் -ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் கழல் அன்றி ஜன்ம விடாயுக்கு நிழல் இல்லை
கம்பர் -நாய் போல் –பிறவி என்னும் நோய் –இம்மைக்கும் எழுமைக்கும் மருந்து
விண்ணவர் அமுது உண்ண -அது -தேவர்களுக்கு போக்கியம் விண்ணின் மீது அமரர்க்காக
இது பாலோடு அமுதம் அன்ன ஆயிரம் -8-6-11-அவனித்தேவர் களுக்காக -8-4-10-விளையாடும் பூமியில் உள்ளார் –பூ சுரர் போக்யம்
ஆராவமுதத்தை உடைத்தாய் இருக்கும் இது –அது அமுதம்
-கடல்-அது சர்வ ஜன சந்தோஷம் -அபிமத ப்ரதம் -தர்ச நீயம் –
இது-முதல் பத்தர் வானவர் என் அம்மான் -ஆச்சார்ய ஹிருதயம் -187 சூர்ணிகை –
வீட்டின்ப இன்ப இன்ப பாக்களில் -த்ரவ்ய பாஷா ஆராய்ச்சி–இன்ப மாரியில் ஆராய்ச்சி -மாத்ரு யோனி பரிஷை உடன் ஒக்கும் –
இவற்றில் பிராவண்யம் -அர்ச்சாவதாரத்தில் -இவள் பரமே –திரு விருத்தம் இளைமை -பிராயத்தில் இருந்து -இவளுக்கு பக்தி உண்டு
இவள் பரமே என்ன உண்டாய் -தேவர் போகய அமிர்தம் போல் அன்றிக்கே –
என் நாவில் இன் கவி தமிழர் இசை காரர் என் வாய் முதல் அப்பன் பத்தர் வானவர் கேட்டு ஆரார் –
தென்னா என்னும் என் எம்மான் -அவனும் தலை -மகுடம் சாய்க்க வல்ல கவி பாடும்
பார் பரவும் என்னும் படி –சேஸ்வர விபூதி த்வய போக்யமாய் இருக்கும் –
ஈஸ்வர ஈசிதவ்ய வாசி இன்றி போக்யமாய் இருக்கும் -இது
அம்பஸ்–அகஸ்த்யர் வாயில் இருந்து வந்த நீர் கடல் –
இது சடகோப வாங்மயம் -சந்தஸ் –
திரு வாய் மொழி -நேரான மொழி பெயர்ப்பு -ஸ்ரீ சடகோப வாங்மயம்-
சந்தன சாகா சாமான்யம் -கடல் -சகஸ்ர சாகா -சார -சந்தனம்-
சாம வேத சாரம் -சர்வ சாகா சாரம் -சந்தன சாகா சமாகத்தை அருகாமை
சர்வ வேத சாகா உபநிஷத் சமம்
அஞ்சலிம்-ப்ராங்முகம் க்ருத்வா –அசரண்யனுக்கு சரண்யமாய் இருக்கும் –கடலுக்கு முன் பெருமாள் கடல்
வண் தமிழ் நூல்களான இது சடகோபன் பாட்டு என்றவாறே நாடு அடைய கை எடுக்கும் படியாக அனுசந்திக்க -என்றதும் கை கூப்புவோம் உலகமே –
வந்தே இராமாயண ஆர்ணவம் -போலே
ஸ்லோகஜால ஜல தீர்ணம் -நீர்
சர்க்கம் -500 -கல்லோலங்கள்
காண்டம் -6 முதலைகள் –
அங்கு 24000/சதுர விம்ச -இங்கு சீர்த் தொடை ஆயிரம் 24
தீர்த்தங்கள் ஆயிரம்
500 சர்க்கம் -பத்து நூறு என்னும் படி இருக்கும்
ஷட் காண்டம்- ஷட் பதார்த்த த்வய பிரதிபாத்யமாய் இருக்கும்-தீர்த்த சரணாகதி திருவாய் மொழி என்பதை சார சங்க்ரஹத்தில் சொன்னோம் –
7 காண்டங்கள்- 630 சர்க்கம் -24000 ஸ்லோகங்கள்
6 காண்டங்கள் 500 சர்க்கம் –
பத்து பத்தாக இருக்கும் தமிழ் வேத சாகரம்
அது ரகு வம்ச சரிதம்– இது முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல்மாலை ஆயிரம்
இஷ்வாகு -தண்டகன் –அம்பரிஷன் –ககுஸ்தன் –பகீரதன் -ரகு -ராகவன் –
வால்மீகி பகவான் ரிஷி –-ஔபசாரிகம் வாய்பேச்சுக்காக-ப்ரோக்தம் குருகூர் சடகோபன் சொல்
மகா பாதக நாசனம் -அரு வினை நீர் செய்யும் படியாய் இதுவும் இருக்கும்
சம்சார பதவி நீக்கும் -வானின் மீது ஏற்று -8-4-11-அருள் கொடுக்கும்
திருவடியே அடைவிக்கும் – -4-9-11-கீதா உபநிஷத் -கோதா உபநிஷத் -போலே இதுவும் சடகோப உபநிஷத் –தனிக் கேள்வி அது -இது மிதுனத்தில் இன்பம் பயக்க -எழில் மாதரும் –
————————————————————————–
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்–
திருவழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் -அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —
இத்தால் உத்தேச்ய வஸ்துவின் சம்பந்த சம்பந்தம் பெற்ற வஸ்துக்களும் உத்தேச்யம்
பெண் புக்ககத்தாரை ஆசைப்பட்டு இருக்கும் பிள்ளை வேட்டகத்தாரை ஆசைப் பிடித்து இருக்கும் –
நாடு ஊர் ஆறு –வாசி அற அனைத்தும் -உத்தேச்யம் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திருக் கோயில் -அப்பன் கோயில் –
ஆழ்வார் திருவடி ஸ்பர்சம் -பட்டதால் -பிரசன்னமான மனசே -வைகுந்த சேவகனார் சேவடியோபாதி வைகுந்த வானோடும் உத்தேச்யம்-இறந்தால் தங்குமூரான-கண்ணன் விண்ணூர் -அமுத விரஜை ஆறும் -ஆர்த்தி பிரபந்தம் -20-மூன்றும் உத்தேச்யம் போலே -இங்கும் இவை உத்தேச்யம் -இணை அடி மூன்றிலும் ஸ்பர்சித்து இருக்குமே -அதனால் சேர்த்து சிந்தியாய் -இவற்றுடன் –
கவளை யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்னும் —-காமருசீர் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என்னானை என்னும் –
தவள மாடு நீடு நான்கைத் தாமரையாள் கேள்வன் என்னும் –பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் -பள்ளி பாடுவாளே -4-8-1-மூன்று என்னும் -இங்கு போலே அங்கும்
மூன்று என்றும் உண்டே
வாய்ந்த வழுதி வள நாடன் -நிரூபகம் ஆழ்வாருக்கு -திருவடிகள் நாட்டோடு நடக்கிறது
குருகூர் நகரான் -அதுவும் அப்படியே
பொருநல் சங்கணித் துறைவன் -10-3-11—நரசிம்ஹ சந்நிதி -பின் பக்கம் தீர்த்தவாரிக்கு எழுந்து அருளுவார்
—ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வை ஷம்யம் வாசாம் அகோசரம் -நாயனார் –
மருவ இனிதாய் இருக்கும் -வலைச் சேரி இடைச் சேரி இல்லையே -மீன நவநீதங்கள் இல்லையே —இப்பொழுதும் இறங்கி தீர்த்தம்-
நல் ஞானத் துறையிலே படிந்து ஆடி –வண் சடகோபன் போலே இதுவும் -திருவடியும் வண்மை யுடைத்தாய் இருக்கும் -சடகோபன் எங்கும் சாதிப்பார்களே -குரு பதாம் புஜாம் த்யாயேத் -மற்று ஒன்றில் மருளாதே –
அன்றிக்கே
பொலிந்த நின்ற பிரான் ஆதிப்பிரான் அடி இணையே சிந்திப்பாய்
நாடு ஊர் ஆறு மூன்றுக்கும் அவனுக்கும் பொருந்தும்
வைகுண்ட புவன லோகம் -நாட்டையும் –புரி -ஊரும் -திருமா மணி மண்டபம் -விரஜையும்-அமிருத வாஹினி-தத் விஷ்ணோ பரமம் பதம் -அருமறையின் தாத்பர்யம் அர்ச்சை -வேத சரம நிலை அருளிச் செயல் -திருக் குருகூர் –ஆதி பிரான் நிற்க -நீள் கழலையும் திருவாய்மொழியில் சொல்லிற்று-இத்தை மற்றை உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்-அன்றிக்கே-
குட்ட நாடு -நாட்டையும் அருளிச் செய்வது-திரு வண் வண்டூர்-தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளே -7-2-6–திவ்ய தேச திவ்ய நகர திவ்ய ஆறு திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தார் –அடியிணைகளை சிந்தியாய் எப்பொழுதும் சிந்தியாய் -என்று அரு மறைகள் அந்தாதி செய்து ஆழ்வார் வெளியிட்டு அருளினார்
ஆதிப்பிரான் தான் -யானாய் தன்னைத் தான் பாடி -என்றுமாம்
அதவா-
வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வ பர முது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களிலே ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய்-ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தார் –70-சூர்ணிகை-
முது வேத முதல்வன் -பரத்வ பரம் /வ்யாப்தி -அந்தர்யாமி –
ஓதின நீதி -வ்யூஹம் பரம்-பாஞ்சராத்ர ஆகமம்
கேட்ட மனு -மனு ஸ்ம்ருதி-அந்தர்யாமி பரம்-
படு கதை -இதிஹாச புராணங்கள்-அவதரணங்கள் பரம்–
ஆக மூர்த்தியாய் -அர்ச்சை –அருளிச் செயல்கள் பரம்–இப்படி ஐந்தும்
திருநாம பாட்டுக்கள் தோறும்- நாடு ஊர் ஆற்றை- சொல்லி தமக்கு நிரூபகம் மிக்க வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி-என்பதால் -திருவடிகள் உடன் இவற்றை இணைத்து-ததீய வைபவம் தானே வேத தாத்பர்யம்
சிந்தித்து தெளிந்து–திராவிட உபநிஷத் ஆச்சார்யர் உடைய அங்க்ரி யுகளம் -தெளிவுற்ற சிந்தையர் -7-5-11- தெளிந்த என் சிந்தை -உபாயம் உபேயம் என்று தெளிந்து –மனசே சந்ததம் நினைத்து கொண்டு இருப்பாய் –
————————————————————————–
ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் -தனத்தாலும்
ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று –
வாசா யதீந்திர மனசா வபுஷா ச யுஷ்மத்–பாதாரவிந்த யுகளம் குருணாம் –கூரேச நாத குருகேச –போலே-
பேணுகை -திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே– 4-10-9-குருகூர் புர மாகாத்ம்யம் -அறிந்து -சிந்தனைக்கு விஷயம் -பாடி ஆடி பரவிச் சென்மின்கள் -4-10-2-சம்ப்ரம நர்த்தனம் –
மனசால் நினைத்தும் வாயாலே பாடி விரும்பி-பேணுகை- விரும்புகை -பாடுகை நினைக்கை -ஆடுகை
மனத்தால் -முதலில் -நினைத்ததை தானே பேச வேண்டும் மனம் பூர்வ வாக் உத்தர -க்ரமம்
மனஸ் ஏகம் கர்மம் ஏகம் வாய் ஏகம்-ஆர்ஜவம் — மனசால் நினைத்து வெட்கி பேசாமல் இருக்கக் கூடாது –
ஆடி ஆடி அகம் கரைந்து —மால் கொள் சிந்தையராய் ஆட்டம் -ஈட்டம் கண்டு
ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்தில் விருப்பம் உள்ளார் அடைய பஜித்தேன் -அந்யரை ஆதரித்து பஜிக்க மாட்டேன் –
நல்லார் நவில் குருகூர் -திருவிருத்தம் -100-
சமூஹமாய் உள்ளவர்கள் இனத்தார் ஒரே மனஸ் யுடையவர் ஒரே கோஷ்டி சஜாதீயர்
10-6-11- குருகூர் சடகோபன் பாட்டில் அன்வயம் உள்ளவர்கள்
குழாங்கள் தென் குருகூர் -2-3-11-
பிசாசான் -தனவான் யக்ஷன் –பஹு வசனம் -விரல் நுனியால் பெருமாள் அழிப்பார்-கூட்டம் கூட்டமாக எடுத்தது போலே –
திருவாய் மொழியில் அதி பிராவண்யம் உள்ளார் இடம் கூடுவேன் என்றவாறு –
அந்யரை அநாதரிப்பேன்
மற்று ஒரு தெய்வம் உளது என்பார் உடன் உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை – போலே
இதுக்கு அடி மேலே சொல்லுகிறது –தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -தனம் மதியம் தவ பாத பங்கஜம்-ஆழ்வார் திருவடிகளைப் பற்றிய நமக்கு விபூதி சர்வம் என்னும் படி -ஆளவந்தார் ஆழ்வாரை மாதா பிதா ஸ்லோகத்தில் அருளிச் செய்தாரே
எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –அன்னையாய் அத்தனாய் -மாதா பிதா -பிரியம் ஹிதம் –ஜனகரான ஆழ்வார் –பிராப்த சேஷியான ஆழ்வார் திருவடிகள் எந்தை பாதங்கள் -வகுத்த சேஷி
யாமுடைய -தத் சேஷ பூதர் -சரீரமான அனைவருக்கும் அடிமை தானே -அனன்யார்ஹ சேஷத்வத்துக்கு கொத்தை வராது-
-ராவணன் -ஒத்துக் கொள்ள வில்லையே -அதனால் கூடாது
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-நித்யம் சொல்லுகிறோம் -அந்தர்பூதர்கள் -பணியா அமரர் -நித்ய சூரிகள் வணங்கா முடி -தலை குனியாத வர்கள் இடத்தில் கூழைக் கும்பிடு போடாதாவர்
பற்று என்று பற்றிப் பரம பரம் பரனை -10-4-10-
————————————————————————–
ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன் –
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற –
நிற்கப் பாடி -மதுரகவி நாத முனிகள் -ஆழ்வார் பிரசாதம் நமக்கோ
எம்பெருமானார் திருவடிகளே சரணம் -ஆர்த்தி பிரபந்தம் -ஸ்ரீ ஸூக்தி -இவரே உடையவர் -அனைத்தும் -பொறுப்பு -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –
உடமையை நாம் பிரார்த்திக்க யுடையவர் இடம் தானே
உள்ளம் தேங்கி அனுஷ்டான பர்யந்தம்
அஷட் கரணம் ஆறாவது காதுக்கு கேட்க்கக் கூடாது -மூன்றாவர் -ஐஞ்சாம் காதுக்கு சொல்ல வில்லை
பாதம் -பாதங்கள் என்றபடி
ஆய்ந்த -விலஷணம் என்றபடி
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் -3-9-11-
கம்பர் -தம்மை சடகோபர் அந்தாதி சொல்லிக் கொண்டார்-
அங்குத்தைக்கு-ஏற்புடைய -அனுரூபமாய் -ஆழ்வாருக்கு -இவர் மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
ரெங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் -பராங்குச பாதாம்புஜ ப்ருங்க ராஜம் -பெருமாள் ஆழ்வார் இருவருக்கும் பொருந்திய இராமானுச முனி –
முனி மனன சீலர் -சம்சாரிகளை கடைத்தேற மார்க்கம் -சொத்தை சுவாமி இடம் சேர்க்க –அப்போது ஓர் சிந்தை செய்து –
மிடற்றைப் பிடிக்குமா போலே ஆழ்வார் அருளிச் செயல்கள் -கூரத் ஆழ்வான்-
என்றோ அபசாரப் பட்ட வண்ணான் –ஈரம் கொல்லி –கைங்கர்யம் கொண்டு அருளிய பின்பு -அரங்கன் இடம் பிரார்த்தித்தார் முனி –
பிரணதி பண்ணா நின்றேன்- திருவடிகள் -ஒப்புச் சொல்ல முடியாத பொருந்திய திருவடிகள் -ஊமையன் பேறு பெற்ற ஐதிகம் -செம்மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை
பிராப்ய புத்த்யா-ராமானுஜ்ச்ய சரணம் பிரபத்யே -வர்த்தமானம் -வணங்குகின்றேன் -பிரபத்யே த்வயம் போலே
உபாயம் புத்தி -சக்ருத்–பிராப்யத்வேன-
சக்ருதேவ -சடக்கு என கூரத் ஆழ்வான்
நூறு தடவை -செய்தாலும் கிடைக்கும் பேற்றுக்கு ஒரு தடவை போலே
உபாயத்வேன –
சம்சார பீதி வரும் பொழுது -பிரபத்யே சொல்லிக் கொண்டு நம்பிக்கை
கைங்கர்ய ரூபேண எப்பொழுதும்
மனஸ் பெற பிரார்த்திக்கிறோம் -அழுக்கு-காமாதி தோஷாதி-போக்கி அருளுவார் -ஸூ பிரதிஷ்டம்-பேராத உள்ளம் பெற –
ஆய்ந்த -ஆய் கொண்ட சீர்-வள்ளல் ஆழிப் பிரான் –3-9-9- -ஆய பெரும் புகழ் எல்லையிலாதன பாடிப் போய் 3-9-8-
விலஷணம் -விசேஷ விசித்திர விபரீத விசேஷணம் –விசேஷமான லஷணம் நிரவதிகம் –எல்லை இல்லா கல்யாண குணங்களால் பூர்ணர் –சீரார் -சீர் ஆர்ந்து பொருந்தி உள்ள -ஞான பல ஐஸ்வர் யா வீர்ய சக்தி தேஜஸ் – -ஷாட் குண்யம் –
ஆறு பத்துக்களுக்கும்– பரத்வ ஞானம் ஞப்த்தி-முக்தி -வ்ருத்தி-கைங்கர்ய பிரார்த்தனை – –விரக்தி -வைராக்கியம் —பக்தி -ஆராத பெரும் காதல் -பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்க காதல் –பிரபத்தி -அடிக் கீழ் புகுந்து அமர்ந்தேனே-நிரவதிக இந்த ஆறு குணங்கள்-
அதி ஸூலபமான திராவிட வேதம் தரிக்கும் படி-நிச் சலனமான மனசை பெற –
அன்றிக்கேஆய்ந்த பெரும் சீர் -சடகோபனுக்கும் -திருவாயமொழிக்கும் கொள்ளலாம் –
ஆய்ந்த பெரும் சீர்மை -விசேஷணம் -செந்தமிழ் வேதம் -திருவாய்மொழி –அடை மொழி ஆக்கி –
சீர்த் தொடை ஆயிரம் –பிரபந்த தாரணத்துக்கு —
தீ மனம் கெடுத்து–ஸ்ரீதரனே -மருவித் தொழும் மனம் –ஆச்சார்யர் அருள வேண்டுமே -2-7-கேசவன் தமர் –
ஆழ்வார்கள் அனைவருக்கும் அவனே ஆச்சார்யர் -நமக்கு ஆச்சார்யரே தெய்வம் –
தங்கு மனம் நீ எனக்கு தா -பெரிய திருமொழி தனியன் -தவராசா -எதிராஜர் -பொங்கு புகழ் மங்கையர் கோன் -ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் –
மாறன் பணித்த மறை உணர்ந்தவர் –இராமானுச நூற்று அந்தாதி 44-இவர் தானே -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் –
தென் குருகைப் பிரான் பாட்டு என்னும் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் -29
பாய் மதகமாக யுடையவர் –எங்கள் இராமானுச வேழம்–வலி மிக்க சீயம் இராமானுசன் -பரபரப்பு பெருமதம்-சிம்மம் யானை இரண்டும் –
மோகனாச்த்ரம் தூங்கும் கோபிகள் -ஜ்ரும்பனாச்த்ரம் -வெளியில் உள்ள கோபிகள்-துடித்தும் மயங்கியும் கோபிகள் இரண்டு வர்க்கம் உண்டே –
திருவாய்மொழி மணம்–உரு பெரு செல்வமும் -அறிதர நின்ற -19- தந்தை தாய் எல்லாம் திருவாய்மொழி -செம் தமிழ் ஆரணமே-இன் நீணிலத்தோர் அறியும் படி
அவர் திருவடிகள் ஆகையாலே இவரை அர்த்திக்கிறது -ஸ்ரீ ராமானுசன் ஆழ்வார் திரு நகரி சாதிப்பார்கள் -மற்ற திவ்ய தேசங்களில் மதுரகவி ஆழ்வார் திருவடி நிலைக்கு –
அங்கி -அங்கம் -உபாங்கம் -வித்யா ஸ்தானங்கள் -4/6/8 -வேத சதுஷ்டயம் அங்க உபாபங்கள் 14-அருளிச் செயல்கள் அனைத்தையும் பேராத உள்ளம் பெற அனுக்ரஹிக்க வேணும் என்ற பிரார்த்தனை –
தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ் இல்லாமல் இவை ஒன்றிலுமே நின்று -ஏகாக்ர சித்தம் -கொடுத்து அருளுவீர் -என்றபடி
————————————————————————–
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன்
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன் –
தேவகி யசோதை போலே– ஆழ்வார் உடையவர் இருவரும் –கண்ணன் -திருவாய்மொழி
வ்ருஷ ஷண்டம்-மரக் கூட்டங்கள் -சூர்யன் நுழைய கேட்டே வர
வான் ஏந்து சோலை -சோலை அணி திருவரங்கம் – -ஆபரணம் போல்
திட் கொடி மதிள் சூழ்-7-3-2–ஸூக்த ப்ருங்க –தீர்த்தம் -சுந்தரி -ஸ்யாமம் -வேதம் மறைத்த பெருமாளை உயர்த்தி காட்டும் காவேரி –
மதிள் திருவரங்கம் -திருமாலை -42–வானை யுந்து மதிள் -9-10-4-ஏழு மதிள்கள் திருக் கண்ண புரம்-இருந்ததாம் –
வண் புகழ் மேல்-ஸ்லாக்கியமான கல்யாண குணங்களுக்கு விஸ்த்ரமாக அருளிய முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமும் –
ஆழ்வார் -திருவேங்கடமுடையான் பஷபாதி
ஆழ்வார்கள் ஸ்ரீ ரெங்கம் -நம் பெருமாள் -பட்டர் -கொண்டாட்டம் -வைத்த அஞ்சல் என்ற கையும் -உபய பிரதானம்
சீர்த் தொடை ஆயிரம் –
பத்து அர்த்தங்களும் கங்குலும் பகலும் திருவாய்மொழியில் உண்டே -இதனால் தான் ஆயிரமும்-
நலம் உடையவன் –ஈறில வண் புகழ் நாரணன் –ஆராதய ஜகன் நாத –இஷ்வாகு குலதனம் –-நாராயண –விசாலாட்சி –
வாழ் புகழ் நாரணன் -தமரைக் கண்டு உகந்தே-10-9-
திருவாய் மொழிக்கு இலக்கு இவரே -உபக்கிரமம் உபசம்ஹாரம் –நலம் திகழ் நாரணன் -பெருமாள் திருமொழி 10-11--இவர்-
நாராயண பர ப்ரஹ்மம்-
பத்து குணங்கள் –
1- பரத்வம் -2-காரணத்வம் –3-வியாபகத்வம் -4-நியந்த்ருத்வம் –
5-காருணிகத்வம்-6-சரண்யத்வம்–7-சக்தித்வம் -8-சத்யகாமத்வம்
9-ஆபத் சகத்வம் -10-ஆர்த்தி ஹரத்வம் –பத்து பத்துக்களிலும் அருளிச் செய்தார்
1-1-பரபரன் -/2-1- சோராத எப் பொருளுக்கும் ஆதி
3-1-முழுதுமுமாய்/4-1-மருகலில் ஈசன் –வீடு அக்தே
ஆவா என்று அருள் செய்து -5-1- /ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள்-
6-1-சரண்யன்-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் /6-3-7- வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவருக்கும் வன் சரண்-/
7- 1–எண்ணிலா பெரு மாயனே -சக்தித்வம்/
தேவிமாராவார் –திரு மகள் பூமி -சத்யா காமத்வம் 8-1-/
முற்றவும் உண்ட பிரான் -9-1-/
காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலோம் கதியே -10-1-ஆர்த்தி ஹரத்வம்-பத்து அர்த்தங்களும் -கங்குலும் பகலில் காணலாய்
வடிவுடை வானோர் தலைவனே என்னும் -பரத்வம்
முன் செய்து இவ்வுலகம் -காரணத்வம்
உண்டு உமிழ்ந்து அளந்தாய் -ஆபத் சஹத்வம்
விண்ணோர் முதல் -பரத்வம் -காரணத்வம்
கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் -வியாபகத்வம்
என்னுடைய ஆவி -வியாபகத்வம்
கால சக்கரத்தாய்–மூ உலகு ஆளி –நியந்த்ருத்வம்
இவள் திறத்து அருளாய்– காருணிகத்வம்
பற்றிலார் பற்ற நின்றான் -சரண்யத்வம்
அலை கடல் கடைந்த ஆரமுதே -சக்தித்வம்
என் திருமகள் —ஆய மகள் அன்பனே என்னும் -பத்னி பரிஜன-சத்யகாமத்வம்
முகில் வண்ண அடியை அடைந்து -அருள் சூடி உய்ந்தேன் -ஆர்த்தி ஹரத்வம் –
ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகர் ஆனால் போலே நம் பெருமாள் அதிகர் என்னவுமாம் -மூன்றாவது காரணம் இது-சேராதன உளவோ பெரும் செல்வருக்கு -என்னக் கடவது இ றே--பெரிய பெருமாள் விஷயமாகவே திருவாய்மொழி
-வண் தமிழ் நோற்க நோற்றேன் –4-5-10-என்றபடி தவம் செய்தவர் ஆழ்வார்
வருந்தி பெற்ற பிள்ளையை வளர்க்கும் தாய் -தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -வர்த்திப்பித்த மாதா எம்பெருமானார்-
ஞானக் கலையான திருவாய்மொழிக்கு ஜன்ம பூமி ஆழ்வார்-தத் வர்த்தகர் எம்பெருமானார்
ஞான சந்தானம் வளர்த்தி யோடு நடந்து செல்வது -ஞான புத்திர பேறு-
பெற்றார் பெற்று ஒழிந்தார்-பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை –
மிடுக்காலே காத்து நோக்கும் -4000 வருஷம் சென்ற பின் வளர்த்த தாய் திருவவதாரம்
தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணனை -வண்ணன் புருவம் இருந்தவாறு -பெரியாழ்வார் -1-3-17-வளர்க்கும் தாய் மிடுக்காலே -யசோதை –
தாயரில் கடையாயின தாய் -புலம்பும் படி-
ஒருத்தி மகனாய் –ஒருத்தி -பட்டர் -மற்று -விட்ட காரணம் -பெற்ற வைபவம் வளர்த்த வைபவம்-சாயாமிவ பூமி நீளா போலே அங்கே -இங்கே சமமான வைபவம்
என் அவலம் களையாய் ஆடுக செங்கீரை –அம்மா சொன்னதை கேட்க வேண்டுமே -பிள்ளையை வசப்படுத்தி-
நாராயணன் வசதி -திருவாய்மொழியில்-கண்ணனே திருவாய்மொழி-
எம்பெருமானார் திருவாய்மொழி யை தன் வசம் ஆக்கி கொண்டு -விரோதிகள் இடம் இருந்து காத்து —
போதரு கண்டாய் –அசல் அகத்தார் –கேட்க மாட்டேன் –
தூஷணம் – தூசனம் சொல்லும் தொழுத்தை மாறும் தொண்டரும் -நின்ற இடத்தில் நின்றும் –தாய் சொல்லு கொள்ளுவது தன்மம் கண்டாய் –தன்மம் -தர்மம் –குற்றம் சொல்வாரையும் -வாய்ப்புடை புடைத்து -தன் வசம் ஆக்கி –
தீய புஞ்சிக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் கருத்தை குலைத்து -கஞ்சன் கொடியன் –காப்பாரும் இல்லை என்று இரந்து–
மைத்தடம் கண்ணி–நீல நிறத்து சிறு பிள்ளை –நிறம் பெற வளர்த்து -கட்டுண்ணப் பண்ணி —அவதார பிரயோஜனம் சித்திக்கும் படி வளர்த்து — பிரமேய சாரத்தை வர்த்தித்தால் போலே-பிரமாண சாரத்தை வர்த்திப்பித்த ராமானுஜர்-
பிள்ளை லோகாச்சார்யார் பிரமேய ரக்ஷணம் தேசிகன் பிராமண ரக்ஷணம் பண்ணினைத்து போலே – ஆழ்வார் -அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகள் பாஷா கானம் சாம வேத சாரம் -அபிபூதமாய் வருகிற -படியைக் கண்டு ஸ்ரீ பாஷ்ய ஸூ க்திகளால்-நிரோதித்து
அத்தை இதுக்கு காவலான வேலியாக கற்ப்பித்து-திருவாய்மொழி யை தன் வசம் ஆக்கி-ஸ்ரீ பாஷ்யம் வேலி திருவாய் மொழி பயிர் –
திருக் குருகைப் பிள்ளானைக் கொண்டு -இன்பம் மிகு ஆறாயிரம் ஏவி இட்டு -கீதாச்சார்யர் இட்ட பயிரை அடியார் ரஷித்து-தேவர்களை நியமித்து அருளினது போலே -இங்கும் ஆழ்வார் ஆகிற –ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேண்டுமே –அடியான் -மாறன் அடி பணிந்த அடியவர் அன்றோ இவர் –
————————————————————————–
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன்
மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகி தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல் —
அர்த்த பஞ்சகம் -அறுத்த பஞ்சகம் -அஹங்கார மமகாரம் தொலைக்க -அறிய வேண்டும் -ஸ்ரீ பதி-அஸ்ய சேதனச்ய
சேதனச்ய-
ஹேதுத்வேன உபாய -சமாஸ்ரைய
அநிஷ்ட ஹானிம் -விரோதி
இஷ்டச்ய பிராப்தி -குருதே ஸ்வயம் -நிர்ஹேதுகமாக தானே-அருளுகிறார் –
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் முதலில் இத்தை அருளி -இரண்டு பத்துக்களும் ஒவ் ஒன்றுக்கும்-
ஸ்ரீ யபதி சேதனச்ய அஸ்ய ஹேதுத்வேன சமாஸ்ரைய அநிஷ்ட ஹானிம் இஷ்டச்ய பிராப்தி குருதே ஸ்வயம்-
திருமந்தரம் -வேதம் -சங்க்ரஹம்–ஓங்கார -வித்து –
பத த்ரயத்தால் பிரதி பாதிக்கப்படும் அர்த்த பஞ்சகம்
அகாரம்/ நாராயண -பர ஸ்வரூபம்
மகாரம் -ஜீவ ஸ்வரூபம்
உபாயம் -நமஸ் சொல்லும்
விரோதி -மக-எனக்கு உரியவன் என்பதே விரோதி
ஆய -பிராப்யம்
திருமால் அவன் கவி -திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் -மருள் மயர்வு அற -மதி நலம் –
வாழ் வினை -அடை மொழி போட ஒன்றும் இல்லை பேச்சுக்கு எட்டாதே
இறை நிலை –மிக்க -இரண்டு நிலைகள் -ஆபாத ப்ரதீதி –
உணர்ந்து உணர்ந்து இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்-1-3-6-
அறிந்து கொள்ள அப்பால் பட்டது
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து -ஆத்மஸ்வரூபம் சொல்லி மேலே -உணர்ந்து -ஞானம் -ஞானம் உடையவன்-
-ஜீவாத்மா ஞப்த்தி மாதரம் மாயாவாதிகளை கண்டிக்கிறார்
ஞானமயம் -ஞான குணம் -ஞானமாகவும் ஞானம் உடையவனும் -ஸ்வரூபம் குணம் இரண்டும் ஞானம்
இழிந்து அகன்று உயர்ந்து -உருவியந்த இந்நிலைமை உருவம் வேறு பட்ட -பிரகிருதி வேற ஆத்மா வேற -உணர்த்தியாலே ஞானத்தாலே வியாபித்து
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து -பிரக்ருதியை சொன்னது போலே
உடல் மிடை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -தர்ம பூத ஞானம் வியாபிக்கும் ஆத்மாவுக்கு
சௌபரி-பல சரீரம் இத்தைக் கொண்டே –
உணர்ந்து உணர்ந்து –இறை நிலை உணர்வு அரிது -அலங்க்ருத சிறைச்சேதம்-முடியாது சொல்ல இவ்வளவு பீடிகை
அசேதன சேதன வ்யா வ்ருத்தி –சர்வ ஸ்மாத் பரன் -புருஷோத்தமன் –
பரமம் மஹீச்வரம் -நாராயண பரஞ்சோதி -பர ப்ரஹ்மம் -பர தத்வம் -பரமாத்மா -நான்கு பர –
மனிசற்கு தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –
தேவ தேவனை என்றும்
3-1-பரஞ்சோதி நீ –பரமாய் மிகும் ஜோதி முழுதுண்ட பரபரன் என்றும்
வானோர் இறை என்றும் -கழி பெரும் தெய்வம் என்றும்
பெரும் தெய்வம் -என்றும்
பெரியவப்பனை என்றும்-நம் திருவுடை அடிகள் -1-3-8- என்றும் –சர்வ ஸ்மாத் பரன் -மிக்க இறை நிலை -ஆயிற்று –
அழுந்த பதித்த சிகப்பு குழம்பு – திரு மார்பில் காட்டிக் கொடுக்குமே -வேதாந்த விசாரம் நிறுத்திற்று –
ஸ்ரீ யபதித்வம்
திருவுடை அடிகள் திரு மகளார் தனிக் கேள்வன் -திரு மா மகள் கேள்வா தேவா -சர்வ ஸ்மாத் பிரான்
திருமங்கை நின்று அருளும்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் -திரு வில்லா தேவரை —
பரன் திறம் அன்றி தெய்வம் வேறு இல்லை
மிக்க -இறை -எளிமைக்கு எல்லை காண முடியாது
ஆஸ்ரித பாரதந்த்ரம் உடன் நிற்கும் அர்ச்சை -அவன் இவன் என்று கூளேன் மின் -வைகுந்த நாதன் இவன் என்று குறைக்காமல்
-அர்ச்சையே -அருகில் -பெருமை இவனே அவன் என்று சொல்லலாம் –எளிவரும் இயல்பினன்-எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம் –மிக்க இறை நிலையும்
மெய்யாம் உயிர் நிலையும்
உருவியந்த –பிரகிருதி -வாசி நித்யன் ஆனந்த
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள்-
உணர்வைப் பெற ஊர்ந்து -யானும் தானாய் ஒழிந்தான் -8-8-3-கண்கள் சிவந்து -ஆழ்வாருக்கு காட்டி அருளின ஜீவ ஸ்வரூபம்
உன்னில் என்னில் வேறு இல்லை பிரகார பாவம் -உணர்வும் – உடம்பு பழுதேயாம்-ஆத்மஸ்வரூபம் உயர்ந்ததே
தேக இந்த்ரிய மனம் பிராண புத்தி விலஷணன்
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -ஜீவாத்மாகவே நின்றான்
சரீரமாக உணர்ந்தேன்
உயிர் வீடுடையான் -வீடாக சரீரமாக ஆத்மாவை யுடையவன் –
பிரக்ருதே பரனாய்–ஞானானந்த ஸ்வரூபனே ஞான குணகனாய் -நித்யனாய் ஈஸ்வரனுக்கு சரீரவத் பரதந்த்ரனாய் -படியைச் சொல்லுகிறது –
மெய்யாம் -உயிர் நிலை என்றது -பிரகிருதி மெய் இல்லை என்றவாறு
சத்யஞ்ச -என்றும் சேதனன் உண்மை -அசேதனம் மாறுமே என்பதால்
உள்ளது என்றும் -மேம் பொருள் –மெய்ம்மையே -என்றும் –
பிரகிருதி ஸ்வ பாவங்களில் காட்டில் ஆத்மஸ்வரூப நித்யத்வம் சொல்லிற்று
அன்றிக்கே
மெய்யாம் -சரீரமாக இருக்கும் ஜீவன் என்றபடி -பரமாத்மாவுக்கு
யஸ்யாத்மா சரீரம் -அந்தர்யாமி பிராமண்யம் -மெய்யாம் உயிர் நிலை தமிழ் மொழி –
சரீர சரீரி பாவம் சொல்லிற்று
மெய்ம்மையை மிக உணர்ந்து -மிக –ததீய சேஷத்வ பரதந்த்ரன்
தம் அடியார் அடியார் -3-7-10-என்றும் -சப்த பர்வ-
தொண்டர் தொண்டன் சடகோபன் –7-1-11-என்றும்
சிறு மா மனிசரே என்னை ஆண்டார் இங்கே திரியவே ததீய சேஷத்வம்
தக்க நெறி -அத்யந்த -பரதந்த்ரனுக்கு தகுந்த நெறி -தந்த்ரம் -பிரதானம் -பர -பகவான் -யஸ்ய -யாருக்கோ அவன் பரதந்த்ரன் –
நெறி காட்டி நீக்குதியோ -நின் பால் கரு மா -மேனி காட்டுதியோ -இதுவே தக்க நெறி தகாத நெறி-சாதனாந்தரங்கள்-
நீ அம்மா காட்டும் நெறி -பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தையும் நீயே
9-1- கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் –அவன் அடி சேர் -கண்ணன் அல்லால் இல்லை அல்லை சரண்
சரீர ரஷணம் சரீரி தானே போக்க வேண்டும்-
என் உடம்பில் அழுக்கை யானே போக்கிக் கொள்ளேனோ -மாசுச -அர்ஜுனனுக்கு அருளி -எம்மை ஆளும் பரமர் -என்றும் உபாயமும் பாகவதர் திருவடிகளே ததீய சேஷத்வம் ஸ்வரூபம்-
3-3-7- எம்மை நாள் உய்யக் கொள்ளும் நம்பர் –உபாய யாதாத்ம்யம் இதுவே –
தடையாகி -தொக்கி –இயலும் -ஊழ் வினை –
விரோதியாய் திரண்டு வர்த்திக்கிற
முன் செய்த முழு வினை -பாரமாய பழ வினை –
ஊழ்மை பழைமை பழைமையான கர்மம்
பொய் நின்ற ஞானமும் அவித்யா பொல்லா ஒழுக்கும் -தப்பான ஆசாரம் -அழுக்கு உடம்பும்
அவித்யா கர்மா வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் -பகவத் ஸ்வரூப திரோதானம் –
விரோதி ஸ்வரூப யாதாம்யம் -அஹங்கார மமகாரங்கள் –யானே என்னை அறியகில்லாதே யானே என் தனதே என்று இருந்தேன் –
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
பீஜம் -அநாத்மா ஆத்மா புத்தி தன்னது அல்லாத பொருளில் தன்னது -விஜ பீஜம்
யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு -திரு விருத்தம் -95-மூதாவியில் தடுமாறும் முன்னமே
இது தான் அனுகூலர் பக்கல் -அநாதரத்தை பிறப்பிக்கும்- பாகவத அபசாரம்
-தேகாத்ம பிரமம் மூலமாக ஸ்ரீ வைஷ்ணவர் திறத்தில் ஜன்ம நிரூபணத்தை மூட்டி
மன் பக்கல் –சன்மம் நிரூபணம் ஆவிக்கு -நேர் இழுக்கு -சப்தகாதை
ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் –
வாழ்வினை பிராப்ய ஸ்வரூபம் -வாழ்வை என்ற படி வாழ்வினை -ஒரே சொல்
நின் தாளிணை கீழ் வாழ்ச்சி –வாழ்வார் வாழ்வு எய்து ஞாலம் புகழவே -வாழ்வு -கைங்கர்யம்
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவன் உகந்த படியை செய்து ஆனந்திப்பிக்கை
அன்றிக்கே
அவன் அடியார் நனிமா கலவி இன்பமே -நாளும் வாய்க்க நம்கட்கே
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -அங்கும்
அடியார்கள் தம் ஈட்டம் –அது காணும் கண் பயன் ஆவாதே
சரம பிராப்யம் இதுவே –
ஆதாரம் -அதிகரணம் -இருப்பிடம் -அர்த்தபஞ்சக ஞானத்துக்கு இருப்பிடமாக இருக்க வேண்டும்-பரமாத்மா ஜீவாத்மா இருவரும் -ஞானம் உடையவர்கள் அன்றோ -ஜடப் பொருள் இல்லையே -அடிமைத் தனத்தால் பரமாத்மா இடம் சேர்ந்து இருப்போம் –
ஸ்ரீ கௌச்துப ஸ்தானம் -ஆத்மா –
பிரதி யோகி -பரமாத்மா ஜீவாத்மா -கூடியே இருக்கும் -விட்டுப் பிரியாத சம்பந்தம் சேஷித்வம் அவனது சேஷத்வம் நமக்கு-
பிரத்யக்கு தனக்கு தோற்றினால்– -பராக் பிறருக்கு தோற்றுவது-
பிராப்தச்ய -ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி -வேத வேதார்த்த வேதியன -முனி -சட கோப முனி ஆகிய இவர் திவ்ய ஸூ க்தியும்-
ரகச்யத்துக்கு ஓர் எழுத்தும்-பிரணவம் அதுக்கு ஓர் உருவும் போலே – அகாரம் -யானவற்றிலே-இமையோர் அதிபதி- அடியேன் மனனே– பொய் மயர்வு –பிறந்து அருளினான் -விண்ணப்பம் -தொழுது எழு என்ற பஞ்சகத்தோடே-ஆதித்ய ஹிருதயம் -சூர்ணிகை -212-இமையோர் அதிபதி- பர ஸ்வரூபம்
அடியேன் மனனே -ஜீவ ஸ்வரூபம்
பொய் மயர்வு -விரோதி ஸ்வரூபம் -விகாரம் அடைவதால் பொய் -பொய்யைப் பற்றிய ஞானம் -அஜ்ஞ்ஞானம் -கர்மம் -ஜன்மம் –
பிறந்து அருளினான் -உபாய ஸ்வரூபம் -அவனது இன்னருள் பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு
விண்ணப்பம் தொழுது எழு– -பிராப்ய ஸ்வரூபம் -வாசிக கைங்கர்யம் -விண்ணப்பம் -காயிக கைங்கர்யம் தொழுது எழு என் மனனே மானச கைங்கர்யம் –என்று இ றே அடியிலே அருளிச் செய்தது -அடி என்று உபக்ரமத்திலே
அவித்யாதி ஸ்வரூப ஸ்வ பாவத் மேஸ்வர பந்த ரஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீய அபிமான-உபதேச விஷய அந்யதாபதேச ஹேத்வாதிகளும் சங்க்ருஹீதம் -சூர்ணிகை -212-
உயர்வற -பரத்வே பரத்வம் —திண்ணன் வீடு —அணைவது அரவணை மேல்-உத்பாதகன் இணைவனாம் சுசீலன் —ஒன்றும் தேவு -பரத்வம் -அர்சாயாம் பரத்வம்
பயிலும் சுடர் –பாகவத சேஷத்வம் -ஜீவாத்ம ஸ்வரூபம் –-ஏறாளும்—இடம் கொடுத்து -சௌசீல்யம் —கண்கள் சிவந்து -8-8–அம்சம்
ஜீவாத்மா –கருமாணிக்கம் -8-9–குட்ட நாட்டு திருப்புலியூர் அனந்யார்ஹத்வம் –ஜீவ ஸ்வரூபம்-
வீடு மின் முற்றவும் —சொன்னால் -அசேவ்ய சேவா –ஒரு நாயகமாய் -ஐஸ்வர்யம் கைவல்யம் விரோதிகள் —கொண்ட பெண்டிர் -ஆபாச பந்துக்கள் -விரோதி ஸ்வரூபம்
நோற்ற நாலும்-உபாய ஸ்வரூபம் 5-7/8/9/10 –நோற்ற நோன்பு –ஆராவமுதே –மானே நோக்கு -பிறந்தவாறும் -கிருஷ்ணாவதாரத்தில் -உருகாமல் இருக்க-மோஷார்த்தமாக இல்லை இதில் –
உலகம் உண்ட பெருவாயா -6-10–பிராட்டி உடன் -சேர்ந்த இடத்தில் சரண் –ஐந்தாவது -அர்ச்சையில் –
எம்மா–பிராப்ய நிஷ்கர்ஷம் -2-9–ஒழிவில் –3-3- பிராப்யம் புருஷார்த்தம் கைங்கர்யம் -இறைஞ்சி -பிரார்த்தித்து-
நெடுமாற்கு அடிமை —பாகவத கைங்கர்யமே பிராப்யம் –பயிலும் ஜீவ ஸ்வரூபம் -அவர்கள் ஸ்வாமிகள் காட்டி –
வேய் மறு தோளிணை-அவன் உகந்த கைங்கர்யம் –
இருப்பதில் விசதமாக்கி -எண்பதிலே பரப்புகையாலே –
வேதத்தியல் ஓதும் -குருகையர் கோன் யாழின் இசை வேதம் -தான் தோன்றி குறை இல்லையே-ஆழ்வார் அருளிச் செய்த அதிசயம்-
எய்தற்கு அரிய –சடகோபன் –பெரியவர் பாதங்களே -தரிக்கும் ராமானுஜன் -அமுதனார்
கான ஸ்வரூபி யாகிய -யாழின் இசையே அமுதே -சர்வேஸ்வரனை பிரதி பாதிக்கையாலே
பண் கொள் ஆயிரம் -சாம வேதம் போல் சரசமாய் இருக்குமே-பண்ணார் -பாடல் பண்புரை இசை கொள் வேதம் -சூர்ணிகை -50-வேத சாம்யம் -விசதமாக ஆச்சார்யா ஹிருதயம்
-வேத நூல் -இருந்தமிழ் நூல் /ஆஜ்ஞை -ஆணை /வசையில் -ஏதமில் /சுருதி -செவிக்கு இனிய /-ஓதுகின்றது உண்மை -பொய்யில் பாடல் /பண்டை -நிற்கும் – முந்தை -அழிவில்லா -என்னும் லஷணங்கள் ஒக்கும் -சூர்ணிகை 45-
சொல்லப்பட்ட வென்றவிதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி -அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே-அநாதி -ப்ரஹ்மா பிரவர்த்தனம் பண்ணி -உபதேசித்தார் போலே -சூர்ணிகை 46-
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்திர தர்சிகளைப் போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும் -சூர்ணிகை 47-அதிக்ரமித்து பார்ப்பவர் -என்றதாயிற்று –மந்த்ரம் தர்சித்து ரிஷி -நம்மை முன்னேற்ற மனன முனி-படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பநமாமே –சூர்ணிகை 48-
இயற்பா மூன்றும் வேதத்ரயம் போலே -பண்ணார் பாடல் பண்புரை இசைகொள் வேதம் போலே -சூர்ணிகை -50-ருக்கு சாமத்தாலே சரசமாய் ச்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவை யாயிரம் யாயிற்று -சூர்ணிகை -51-
அமர்ந்த சுவை -திரு விருத்தம் இசை கூட்ட –சாம வேதம் -ஹாவு ஹாவு ஹாவு -போலே பரம்புமா போலே –
விண் மீது இருப்பாய் -பர ப்ரஹ்ம ஸ்வரூபம் காணலாம் -பராத் பரன் உடைய ஐந்து நிலைகள் என்றவாறு —அர்ச்சையும் பரன் -ஒன்றும் தேவும் அர்ச்சை பரத்வம் –
அடியார்ந்த வையம் உண்டு –அடியார் -3-7-10-பாகவத சேஷத்வம் -ஜீவ ஸ்வரூபம் காணலாம்-
உழலையிலே உபாய ஸ்வரூபம் -5-8-11–காணலாம் –கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -நாம் பற்றும் பற்றும் உபாயம் இல்லையே
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் -5-7-8-விரோதி ஸ்வரூபம் காணலாம்
பலம் -பிராப்யம் –புருஷார்த்தம் ஸ்வரூபம் -உற்றேனில் உணரலாம் உற்றேன் –உன பாதம் உகந்து பணி செய்தது உன் பாதம்-உற்றது உன பாதம் உபாயமும் திருவடிகள் – –உகந்து பணி செய்தது பலம் புருஷார்த்தம் -இதுவும் திருவடிகளே – உணரலாம் -காணலாம் – சொல்லாமல் –
திருமந்திரத்தில் அர்த்த பஞ்சகம் உண்டே என்கிறார் மேல் –
எண் பெருக்கு -அந்நலம் –திண் கழல் சேர -1-2-10
வண் புகழ் நாரணன் -பர ஸ்வரூபம் – -அகாரம்
ஒண் பொருள் ஜீவ ஸ்வரூபம் -மகாரம் –
திண் கழல்-பிராப்யம் -புருஷார்த்தம்
திண் கழல் சேரே -உபாய ஸ்வரூபம் -நமஸ்
பொருள் -அசேதனம்-விரோதி ஸ்வரூபம் -சேராதது விரோதி என்றுமாம்-
எனக்கே ஆட் செய்வாய் –தனக்கே யாக –
தனக்கே –கண்ணன் பர ஸ்வரூபம்
என் மனக்கே வந்து- ஜீவ ஸ்வரூபம்
இடை வீடு இன்றி மன்னி -உபாய ஸ்வரூபம்
இடை வெளி முன் விட்டது -விரோதி ஸ்வரூபம் -எனக்கே யாக கொண்டது -எனக்கும் தனக்குமாக கொள்வதும்– விரோதி
ஆட்செய்-பிராப்ய-
-ஒழிவில் காலம் -வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் -3-3-1/6-இரண்டிலும் –நமஸ் உபாயம் மட்டும் வேங்கடங்கள் -நம வேன்னலாம் கடமை -உபாய
திரு வேங்கடத்து எழில் கொள் சோதி பர ஸ்வரூபம்
நாம் -ஜீவ ஸ்வரூபம்
அடிமை செய்ய -பிராப்ய ஸ்வரூபம்
வழு உள்ளவை -விரோதி ஸ்வரூபம் -மம விரோதி –
–திருமந்த்ரார்த்தம் காணலாய் இருக்கும் -வேத சாரம் –
சீலம் இல்லா சிறியேன் –நாராயணா கோல மேனி
சீலம் இல்லா சிறியேன் -மகாரம்
ஞாலாம் உண்டாய் -பர ஸ்வரூபம்
கோல மேனி காண–பிராப்யம்
வாராய்- உபாயம்
செய்வினையோ பெரிதால் -விரோதி ஸ்வரூபம்-
களைவாய் துன்பம் -உபாயம்
களை கண் மற்று இலேன் -ஜீவ
மா மாயா -பர ஸ்வரூபம்
துன்பம் -விரோதி ஸ்வரூபம்
இளையாது உன தாள் பிடித்து -பிராப்ய ஸ்வரூபம்
ஞலாத்தூடே –நடந்தும் -கிடந்தும்–6-9-3-
சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -உபாயம்
காக்கும் இயல்பினன் கண்ண பிரான்-கோலத் திருமா மகளோடு நீ -பர ஸ்வரூபம்
உன்னைக் கூடாதே -சாலப் பல நாள் அடியேன் -ஜீவ ஸ்வரூபம்
இன்னம் தளர்வேனோ -விரோதி ஸ்வரூபம்
அர்த்த பஞ்சகமும் காணலாம் –
அகாரத்தாலே மகாரத்தாலும் ரஷகனும் ரஷ்யமும் -பர ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம்
பிரணவம்- சேஷத்வ ஞானம் ஸ்வரூப ஞானம் -ஸ்வரூப சிஷா
நம -உபாய சிஷா
நாராயணாய – புருஷார்த்த சிஷா–திருத்திப் பணி கொள்ள இந்த திரு மந்த்ரம் –
சாதி மாம் பிரபன்னம் -குழப்பம் தீர்த்து -அர்ஜுனன் -சிஷை இது
வித்யா தானம் முதலில் இருந்து சொல்லுவது
ஆய – சதுர்த்தி-உகாரம் -பிராப்தி பலம் சொல்லும் ரஷிக்கும் ஹேது -காரணம் பலம் -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் –
அவனுக்கே கைங்கர்யம் தானே பலம் -அனன்யார்ஹ சேஷ பூதன்
விபத்தி உடன் உள்ள நாராயண -பிரார்த்தனாயாம் சதுர்த்தி இது -அது தாதர்த்ய சதுர்த்தி -சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் கைங்கர்யம்-திருவாய் மொழியில் சொல்லப்பட்ட அர்த்தங்கள் எல்லாம் திரு மந்த்ரத்திலும் -அர்த்த பஞ்சகத்திலும் உண்டே -என்றவாறு -உற்றேனிலே உணரலாம் பிராப்யம்-திரு மந்த்ரத்திலும்-
திருமந்தரம் பிராப்ய பிரதான்யம்
சரம ஸ்லோகம் உபாய பிரதான்யம்
த்வயம் உபாய பிராப்ய- உபய பிரதான்யம்
-திருவாய் மொழி -உற்றேனில் உணரலாம் -ஐந்தை சுருக்கி ஓன்று பிராப்யமே –
திலதம் உலகுக்காக நின்ற -திருவேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும்
உலகில் உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்தே –
இருவரும் ஒருவரே நின்றான் கிடந்தான் -மந்தி பாய் –இத்யாதி
-ஸ்ரீ ராமானுஜர் ஏவ பிள்ளான் ஆறாயிரப்படி -மேலும் பல வியாக்யானங்கள் -இறுதியில் -ஸ்ரீ மணவாள மா முனிகள் ஈட்டுப் பெருக்கர்
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மன் நாத முனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply