இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே-6–
ஆறாம் பாட்டில் –
ஆழ்வார் இப்போது இங்கே விஷயீ கரித்தாலும் -நீர் தாம் அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த
விஷயம் ஆகையாலே மறுவல் இடிலோ -என்ன –
விடுவனோ நான் என் மணிவண்ணனை
நத்யஜேயம் கதஞ்சன
ஸூ அனுபவமா – -பர உபதேசமோ -சங்கா பரிகார முகேன அருளிச் செய்கிறார் -பகவத் கிருபை போல் இல்லையே -பகவத் த்யானம் நழுவும் –
அச்யுதன் -நினைத்தால் நழுவ விட மாட்டான் -ஸ்வ தந்த்ரன் வேறே -ஆழ்வார் பாரதந்த்ர்யம் மிக்கவன் –
அங்கன் மறுவல் இடும்படியாயோ ஆழ்வார் பிரசாதம் என் பக்கல் இருப்பது -என்கிறார் -மான் ஜடபரதர் கதை –
ஆழ்வார் -கிருபை -ஸூசீநாம் ஸ்ரீ மதாம் கேஹே யோகப் ரஷ்டோபி ஜாயதே -என்றும் -சமாதி பங்கஸ் தஸ்யா சீத்-என்றும்
பிரம்சம் பிரசங்கிக்கும் –பகவத் கிருபை அளவில் நினைத்து இருக்கலாமோ-
நீர் க்ருதக்ருத்யரான படி எங்கனே என்னில் -ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும்
ஆழ்வார் தம்மையே ஏத்தும் படி பண்ணினார் என்கிறார் –
கீழ் உள்ள தோஷமும் நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிப் போக்கினேனோ-ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
புகையால் சூழப்பட்ட நெருப்பு போலே பிரியாத பாபங்கள் -கண்ணாடியில் அழுக்கு மீண்டும் மூடும் –
பனிக்குடம் கர்ப்பை -தானாக உடைந்து வராதே -அவன் திருவடி பற்றியே வெளி வர வேண்டும் -மூன்று திருஷ்டாந்தங்கள்
ஆழ்வார் அங்கீ காரத்தால் போய்த்தாகில் அவ்வங்கீ காரம் மாறினால் அன்றோ அது மேலிடுவது
ஆழ்வார் என் தோஷம் கண்டு ஒரு காலும் இகழார்-இது காண மாட்டி கோளோ வென்று இப்பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –
குற்றம் இருப்பதாலே நான்மறையாளர்கள் கை விட ஆழ்வார் கைக் கொண்டார் -இன்னும் மேலும் மேலும் குற்றம் வந்து கொண்டு இருக்க ஆழ்வார் கை விட மாட்டார் என்கிறார்
கீழ்ப் பாட்டில் ஆழ்வார் திருவடிகளில் உண்டான தம்முடைய -1-ஜ்ஞான –2-பக்திகளைச் சொன்னார் -சதிர்த்தேன் -என்றதால்-
இதில் அவர் பக்கல் தமக்குப் பிறந்த -3– வ்யவசாயம் சொல்லுகிறார் –முதிர்ந்த -அறிவு -பக்தி -உறுதி -மூன்றும் வேண்டுமே
தாம் அங்கீ கரித்த இன்று முதல் யாவதாத்மா பாவியாகத் தம்முடைய குண கீர்த்தனம் பண்ணிப் போரும்படி என் பக்கலிலே
கிருபையைப் பண்ணின ஆழ்வார் குற்றம் கண்டு கைவிடப் புகுகிறாரோ என்று இகழாமைக்கு அடி சொல்லுகிறார் இப்பாட்டின் முற்கூற்றாலே-
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்-ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
என் தோஷமே பச்சையாகக் கைக்கொண்ட இன்று தொட்டும்
மேல் உள்ள காலங்களிலும் –தோஷம் போகாத எல்லா காலங்களிலும் –
இப்போதை அங்கீகாரம் யாதொருபடி இருக்கிறது -இதன் கீழ் யாய்த்து மேல் உள்ள காலம் அடைய அவர் என்னை விடாத படி என்று தாத்பர்யம்
இவருடைய நியமம் இருக்கிற படி ஒரு தேச விசேஷத்திலே போனாலும் ஆழ்வார் கீழே ஒதுங்குமவர் யாய்த்து இவர் –
பிரதமம் பல்லவம் -புஷ்பம் -பலம் -மூன்று நிலைகள் –உபாயம் -உபேயம்-பெருமாள்
-பாகவர் -நடு நிலை -ஆச்சார்யர் பரம் மூன்றாம் நிலை
திருக் குருகூர் நம்பிக்கு அன்பன் ஆகையாலே ப்ரீதி புரச்க்ருதத்வம் உண்டாய்த்து –ப்ரீதி உந்தப்பட்டு பின்னால் போனான் –
இவருக்கு ப்ரீதி -திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய்
எம்பிரான் –ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
எனக்கு ஸ்வாமி யானவர் -ஸ்வாமி யானவன் ஸ்வ த்தைக் குற்றம் கண்டு இகழுமோ
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த
வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்
இன்று தொட்டும் எழுமையும் எனக்கு எம்பிரான் என்று கீழோடு கூட்டலாம்
ஒருகால் பகவத் ஸ்வம்மாய் ஒருகால் ஆழ்வார்க்கு ஸ்வம்மாய் இராதே சர்வ காலமும் ஆழ்வாருக்கு ஸ்வம் என்று தம்மை நினைத்து இருக்கிறார் யாய்த்து
இரண்டு என் -வேண்டுமோ -உபகாரம் -பெருமாள் திருவடியில் சேர்ப்பது -மற்றவர்களுக்கு -இவருக்கு அதர பரத்ர
-போலே அங்கும் மாறாதே -அடியேனுக்கு அடியேனுக்கு இரான் என்கிறார்
எம்பிரான் –
எனக்கு உபகாரகர் ஆனார் –
என்னுடைய குன்றனைய குற்றத்தையே குணமாகக் கொண்டு நான் அதபதியாமல் நோக்கினவர்
குன்ற மாடம் -அங்கு குன்றனைய குற்றம் கொண்ட நான் -அதனால் உபகாரகர் –
என்னுடைய அஹங்கார அர்த்த காமங்களில் நசை அறுத்து ஆத்ம ஜ்ஞானாதிகளை உபகரித்த அளவன்றிக்கே
பகவத் விஷயத்தில் காட்டிக் கொடாதே தாமே கைக்கொண்ட மஹா உபகாரகர்-4/5/6-பாசுரங்களை திரள அருளிச் செய்கிறார் –
இறப்பதற்கு எண்ணாதே –மின்னுரு பின்னுறு பொன்னுரு -கைவல்யம் நசை அறுத்து -தன் இடத்தில் ஆசை வளர்ந்தார் அங்கே
இங்கு தன் புகழ் ஏத்த அருளினான் -மேலே
மேல் அந்த உபகாரம் தன்னை உபபாதிக்கிறார்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-
தம்முடைய சத்குண சம்ஸ்துதியைப் பண்ணும் படி அருளைப் பண்ணினார் –
ஏழையர் ஆவி -இணைக் கூற்றங்கள் -உயிர்க்கு அவை காலன் போன்ற வார்த்தைகள் ஆழ்வார் ஸ்துதி –
பேர் அருளாளன் -அருளாத நீர் -என்று திருநாமம் சாத்துவார் ஆழ்வார்
இங்கே சம்ஸ்துதி –
விஷம புத்தி நை ர் குண்யம் கிடையாது என்று நிரூபிக்க வேண்டும் அவன் இடத்தில் -ஆழ்வார் இடம் அது போன்ற
வழக்கே இல்லை -சத்குணம் -மோஷ ஏக ஹேது –
தன் புகழ் ஏத்த அருளினான்
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி -முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே -நின்று -இதுவும் –
என்று இறுதியாக தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்-
ஏத்த
நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி -மொய் கழலே ஏத்த முயல் -என்ற -பெரிய திருவந்தாதி முதல் இறுதி பாசுரங்கள்
ஆழ்வார் தம்மைப் போலே –பாட முயல்கிறார் ஆழ்வார் அங்கு -அமுதமாக பாடி பிரத்யுபகாரம் செய்ய முயல்கின்றேன் என்கிறார் இவர் –
வாசிக கைங்கர்யம் முடித்து காயிக கைங்கர்யம் முயல்கிறார் என்றபடி-
ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே பத்தும் பத்தாக எத்தும்படி அருளினார்
தன் புகழ் ஏத்த
ஆழ்வார் பகவத் குணங்களையே புகழும் படித் திருத்தினாரே யாகிலும் இவர் தம்முடைய ப்ரீதியாலே தன் புகழ் ஏத்த அருளினார் என்கிறார்
பெருமாள் ஆச்சார்யர் பாகவதர்களை சமமாக -நின்னோடும் ஒக்க வழிபட அருளினாய் -அறிந்து ஆழ்வார் புகழ் பாடுகிறார் –
சமம் தானே -நீர் எதற்கு பெருமாளை தள்ளி ஆழ்வாரை பற்றிநீர் -ஐஸ்வர்யம் விட்டு பெருமாளை பற்றுவது போலே பெருமாளை விட்டு ஆழ்வாரை பற்றினேன்
உபகார ச்ம்ருதியால் -உபகார வஸ்து கௌரவத்தால் ஆச்சார்யரை பற்றி இருக்க வேண்டுமே
தன் புகழ் ஏத்த
பகவத் குணங்கள் போலே குற்றம் காண்கையும்-கண்டத்துக்கு தக்க தண்டம் பண்ணுகையுமாயோ ஆழ்வார் குணங்கள் இருப்பது
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் என்கிறபடியே வாத்சல்ய உத்தரமாய் அன்றோ இருப்பது
ஆழ்வாருடைய நிகரில் புகழ் இது இ றே –ஆழ்வார் -6-10-10- அருளியதை ஆறாம் பாசுரத்தில் அருளிச் செய்கிறார் -இரண்டும் வாத்சல்யம் –
தன் புகழ் ஏத்த அருளினான்
இவருடைய புருஷார்த்த சாதனங்கள் இருக்கிறபடி –
புகழ் ஏத்துவது புருஷார்த்தம் -அருளினான் எனபது சாதனை
கண்ணே உன்னைக் காண -சாதனம் -புருஷார்த்தம் அங்கு ஆழ்வாருக்கு
இவ்வாசிக கைங்கர்யத்துக்கு சாதனம் ஆழ்வார் கிருபை என்று அறுதி இடுகிறார்
நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ வென்று எனக்கு அருளி -என்று கடகர் அங்கீ காரத்துக்கும் கருணையே வேணும் என்று
ஆழ்வார் பாடே அறிந்து வைப்பரே
ஏத்தும் இடத்தில் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
ஆழ்வாருடைய குணங்களைப் புகள்கையே புருஷார்த்தம்
அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –
புருஷார்த்த பூதர் –சாதனா பூதர் -அத்யவசாயம் ப்ரதர் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இ றே அத்யவசாய ப்ரதரும் –
நின்று தன் புகழ் ஏத்த
அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே -முனே வஷ்யாம்யஹம் புத்வா -என்கிறபடியே –
நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் -கோன் வஸ்மி கேட்டதும் நின்று நாரதர் அருளினது போலே-
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்–ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம்
மேல் ஒரு நாளிலே பலிப்பதாக விட்டு வைக்கிறாரோ
விஷயீ கரித்த இன்று தொடங்கி
ஏழு ஜன்மம் என்கிறது உப லஷணம்-மேல் உள்ள காலம் எல்லாம் என்றபடி
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்திலே ஆழ்வார் சொல்லுமத்தை உபகார ச்ம்ருதியாலே -எம்பிரான்
-என்று அவர் விஷயத்திலே சொல்லுகிறார் -நம்மாழ்வார் பிரான் பெரு நிலம் கீண்ட -பொதுவாக இவர் எம்பிரான் –
இன்று தொட்டும்-
விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே –ஆஸ்ரயிப்பதொரு காலமும்
–பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –
விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ இருப்பது
எழுமையும் –
ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –
எம்பிரான் –
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை
உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்
அருளினான் ஆகையாலே தானே எம்பிரான் என்போம் -இங்கே பிரான் முதலிலே சொல்லி –அருளினது பின்னாலே –
உபகார ஸ்ம்ருதி அதிசயம் –
ஆழ்வார் -உயர்வற உயர்நலம் –மயர்வற மதி நலம் அருளியதை சொல்லி பின்பு அயர்வறும் அமரர்கள் அதிபதி அருளியது போலே
எம்பிரான் –
என் ஸ்வாமி-
நின்று –
ஒருபடிப்பட நின்று
உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து
பின்பு அது கிட்டினவாறே
அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை –
நின்று –ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
ப்ராப்யத்தில் பிரதம அவதியாகில் இ றே கமன பிரசங்கம் உள்ளது
எல்லை நிலத்தில் புக்கார் நிலை நிற்கும் அத்தனை இ றே
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இ றே
இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –
தன் புகழ் ஏத்த –
ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ
ஆழ்வார் உடைய பெருமை இருப்பது –
தன் புகழ் -அவன் புகழ் சொல்லாமல் -தன் -அவனையும் உள் அடக்கிய புகழ் –
அருளினான் –
நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –
மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை
ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறா இ றே இவர் –
என்னை அருளினான் -சொல்ல வில்லை -ஆழ்வார் மயர்வற மதி நலம் எனக்கு அருளினான் சொல்ல வில்லை
அனைவருக்குமாக என்று நினைப்பவர்கள் அன்றோ
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி –
தம்மையும் ஏத்தி இன்னம் ஒரு விஷயத்தை ஏத்த வேண்டும்படியோ ஆழ்வார் உடைய
பூர்த்தி இருப்பது –
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் -என்று ஆழ்வார் அருளிச் செய்யும் அது இ றே
இவர் நெஞ்சில் வாஸிதமாய் இருப்பது -அத்தைச் சொல்லுகிறார் –
என்றும் என்னை இகழ்விலன் –
என்றும் இகழ்விலன் –
என்னை இகழ்விலன் –
யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .
என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ
தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை
புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
காண்மினோ
இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –
என்றும் என்னை இகழ்விலன் -காண்மினே–ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
தாம் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஹேது சொல்லுகிறார்
ஆழ்வார் சந்நிதி போலே காணும் இவரைப் பேசுவிக்கிறது
உங்களைப் போலே பகவத் விஷயத்தில் அன்றி நான் ஆழ்வார் கவியானபடி காண மாட்டி கோளோ-
என்றும் என்னை இகழ்விலன் -ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
எனக்கு தோஷம் மேலிட்ட போதோடு குணம் மேலிட்ட போதோடு –ஆழ்வாரால் அங்கீகாரம் பட்டவர் என்பதே குணம் – வாசியற -என்னை அநாதரிக்கிறிலர்-
ஸ்ரீ பரத ஆழ்வான் சரண் 14 வருஷம் கழித்தே பலித்ததே-
நம்பி என்னை என்றும் இகழ்விலன்
அவர் என்னை அநாதரிப்பார் ஆகில் அவருடைய பூர்த்தி நிறம் பெறும் படி என்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்
அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாது
அசலம் -பிரணய ரோஷம் -மின்னிடை மடவார் -6-2-11- -அடி பட்ட கண்ணனுக்கு -தொடர்பு -அடிக்க அடிக்க நகராது இருந்தானே -நிற்கமும் முடிக்காமல் தவித்து இருந்தானே
இவனை போ போ -சொல்ல போகவும் மாட்டாமல் நிற்கவும் மாட்டாமல் ஆழ்வார் பிரணய ரோஷம் -தவிப்பது –
அசலத்வம் -நகரமாட்டாத தன்மை காட்டி –
இது போன்றவை இல்லை -மலை போலே சலிக்காமல் நிற்பார் ஆழ்வார்
காண்மினே
இவ்வர்த்தம் உங்களுக்கு ஏறக் காண மாட்டி கோளோ
காண்மினே
பகவத் குணங்களை யாராய்கிற நீங்கள் அத்தை விட்டு ஆழ்வார் குணங்களை நெஞ்சாலே காண மாட்டி கோளோ
காண்மினே
ப்ராப்த முத்தம குணாந பரித்ய ஜந்தி -என்றும் -பாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே
பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –
அதமன் -விக்னங்கள் வரும் என்று தொடங்காமல்
மத்யமன் -விக்னங்கள் வருவதை கண்டு தயங்காமல்
உத்தமன் -விக்னங்கள் வந்தாலும் கை விடாமல் ஆச்சார்யர் திருவடிகளே என்று இருக்க நம்மை அழைக்கிறார் –
மறத்தைப் போக்கி சேஷத்வம் உணர்த்தும் ஆச்சார்யர் தானே பாணர் அங்கே -நீணிலா முற்றம்நின்று இவள் நோக்கினாள்
-காணுமோ கண்ணா புரம் என்று காட்டி – ஆச்சார்யர் திண்ணமாக இருக்க இவள் உறுதி குலையுமோ என்றவாறு
—————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply