ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் ஸாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மே அஸ்து பூயஸே
வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம சரண ஸ்ரீ தரம் சாம்ச்ரயேயம்
ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸே நான்யே ஸூ த்ரவத்யா ஸமே யுஷே
நமோ நாராயணாயேதம் கிருஷ்ண த்வைபாய நாத்மகே
யதாமுஷ்யாயணா வேதா மகா பாரத பஞ்சமா
ஜாதோ லஷ்மண மிஸ்ரா ஸம்ச்ரய தநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத்ருஷே
பூ யோ பட்டபரா சரேதி பணித ஸ்ரீரங்க பர்த்ரா ஸ்வயம்
ஸ்ரீ ஸ்ரீரங்கபதி ப்ரஸாதத்ருஷயா ஸ்ரீ ரங்க நாதாஹ்வய
ஸ்ரீ ரங்கேச்வர காரிதோ விவ்ருணுதே நாம் நாம் ஸஹஸ்ரம் ஹரே
சம்சாரோ அய்ம பண்டிதோ பகவதி ப்ராகேவ பூய கலௌ
பூர்ணம் மன்யதமே ஜானே ச்ருதிசிரோ குஹ்யம் ப்ருவே சாஹசாத்
தாத்ரா ஸ்தோத்ர மிதம் பிரகாசயதிய ஸ்துத்யஸ்ஸ யஸ்தா வுபௌ
வியாச காருணிகோ ஹரிஸ்ஸ ததிதம் மௌர்க்யம் சஹேதாம் மம
அர்த்தே ஹரௌ ததபிதாயிநி நாமவர்கே
தத் வ்யஞ்ஜகே மயி ச பந்த விசேஷ மேத்ய
ஸேவதவமேததம்ருதம் இஹ மா ச பூவன் –
——————————————————————————————————————————————–
மஹா பாரத ஸாரத்வாத் ரிஷிபி பரிகாநன
வேதாசார்ய ஸமா ஹாராத் பீஷ்மோத்க்ருஷ்ட மதத்வத
பரிக்ரஹாதிசயதோ கீதாதியைகார்த்தஸ்ஸ ந
ஸஹஸ்ர நாமாத்யாய உபாதேய தமோ மத
தேவோ நாம ஸஹஸ்ரவான் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே –திருவாய் 8-1-10-
தமர் உகந்தது எப்பேர் அப்பேர் –
—————————————————————
கிமேகம் தைவதம் லோகே -பவத பரமோ மத –ஒப்பற்ற தெய்வம் யார்
கிம்வாபி ஏகம் பராயணம் -பவத பரமோ மத –அடையத் தக்க பிராப்யம் எது
ஆக பிராப்யம் பற்றி முதல் இரண்டு கேள்விகள் –
ஸ்துவந்த கம் -பவத பரமோ மத -யாரை குண சங்கீர்த்தனம் பண்ணி பூஜித்து
கம் அர்ச்சந்த மாநவா சுபம் ப்ராப்நுயு -பவத பரமோ மத -யாரை பக்தியுடன் உபாசித்து இஹ பர இன்பங்கள் அடைகிறார்கள் –
கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் -பவத பரமோ மத -தேவரீர் ஸ்வீகரித்த மேலான தர்மம் எது –
கிம் ஜபன் முச்யதே ஜந்து ஜன சம்சார பந்தநாத் -பவத பரமோ மத -எந்த மந்திர ஜபத்தால் பந்தம் அறும்
இவை உபாயம் பற்றிய நான்கு கேள்விகள்
பவத பரமோ மத -உமது அபிப்ராயத்தால் –ப்ரியதமமான பலனையும் ஹிததமமான உபாயத்தையும் கேட்கிறார்
ஆறாவது கேள்விக்கு பீஷ்மர் பதில் முதலில்
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸ்ஹஸ்ரேண புருஷ ஸததோத்தித
பழுதே பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
அசந்நேவ ஸ் பவதி –
அடுத்து 3/4 கேள்விகளுக்கு பதில்
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –சர்வ துக்காதி கோ பவேத்
ஜப ஆலம்பனம்-ஸஹஸ்ர நாமம்
பக்த்யா அர்ச்சயன்
பக்த்யா த்யாயன்
பக்த்யா ஸ்துவன்
பக்த்யா நமஸ்யன்
அச்சுதா அமரர் ஏறே –என்னும் இச்சுவை
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -திருவாய் -10-4-1-
வணக்குடை தவ நெறி -1-3-5-
ஸ்ததம் கீர்த்தயந்தோமாம் நமஸ் யந்தஸ் சமாம் பக்த்யா -ஸ்ரீ கீதை -9-14
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -ஸ்ரீ கீதை -9-4
காரணந்து த்யேய
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே —
நாரணன் எம்மான் பாரணங்காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே –
தானே யுலகெல்லாம் -தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
யஜ்ஞென தானேன தபஸா நோசகேன-
வியாசரும் -ஆலோத்யா சர்வ சாஸ்த்ராணி விசார்யச புன புன
இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயோ நாராயணஸ் சதா –
ஆலம்பனம் -கூராழி வெண் சங்கேந்தி
வேர் சூடுமவர் மண் பற்று கழற்றாதாப் போலே
ஜ்ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் –
தர்மரின் மூன்றாவது கேள்விக்கு -கம் ஸ்துவந்த –
பீஷ்மர் –
தமேவ சார்ச்யந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம்
த்யாயன் ஸ்துவன் நமஸ் யம்ஸ்ஸ யஜமாநஸ்த மேவச –
அநாதிநிதனம் விஷ்ணும் சர்வலோக மகேஸ்வரம்
லோகாத் யஷம் ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் –
ப்ரஹ்மணயம் சர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம்
லோகநாதம் மஹத் பூதம் சர்வ பூத பவோத் பவம் –
10 அடை மொழிகள்
1-அநாதிநிதனம் -ஆதி அந்தம் இல்லாதவன் -தேச கால வஸ்து பரிச்சேதன்
2-விஷ்ணும் -வ்யாப்தி
3-சர்வலோக மகேஸ்வரம்
4-லோகாத் யஷம் -அனைத்தையும் கண்களால் காண்பவன்
5-ப்ரஹ்மணயம் -வேத பிரதிபாத்யன்
6-சர்வ தர்மஜ்ஞம் –
7-லோகாநாதம்
8-மஹத் பூத்
9-கீர்த்தி வர்த்தநம்
10- சர்வ பூத பவோத் பவம் -ஆதி காரணன் –
ஸ்துவன் நித்யம் சர்வ துக்காதிகோ பவேத் -ஸ்துவந்த கம் கேள்விக்கு இப்படி பீஷ்மர் பதில் அருளுகிறார்
யதாததாவபி குண சங்கீர்த்த்தனம் குர்வன்-ஏதோ ஒரு முறையில் திவ்ய நாம திருக் குணங்களைப் பாடுதல் –
இனி ஐந்தாம் கேள்விக்கு -கோ தர்ம சர் தர்மாணாம் -பதில்
ஏஷ மே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத ‘
யத் பக்த்யா புண்டரீ காஷம் ஸ்தவைரச் சேன்நரஸ் ஸதா –
ஏஷ -மேலே சொல்லப்பட்ட அர்ச்சன ஸ்தவ நாதிகளால்-அன்புடன் பூஜிக்கை –
அதிகதம -மிகச் சிறந்த தர்மம்
யத் பக்த்யா -ப்ரீதி உட் கொண்ட -ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –
அர்ச்சேத் -ஆராதிப்பவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
சதா -கால தேச சுத்தி வேண்டா
அபஹத பாப்மா -அமலன் -விமலன் -நிமலன் -நின்மலன் –
அவன் திரு உள்ளம் உகந்து -விதி வாய்க்கின்று காப்பாரார் –
ஸ்வாராதன் –
கலௌ சங்கீர்த்ய கேசவம் –
அடுத்து கிம் வாப்யேகம் பராயணம் –உபேயம் பற்றி கேள்விக்கு பதில் –
1-பரமம் யோ மஹத் தேஜ–பரம் -மஹத் இரண்டு விசெஷணங்கள்-கோடி சூர்ய சம ப்ரப-
2- பரமம் மஹத் தப -தப -நியந்தா பொருளில்
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
3-பரமம் மஹத் ப்ரஹ்ம -ஸ்வரூப ப்ருஹத்வம் குண ப்ருஹத்வம் –
ப்ரஹ்மணத்வம் -தன்னை கிட்டியவரை தன்னைப் போலே பெரிதாக்க வல்லவன் –
4-பரமம் பராயணம்
5-பவித்ரானாம் பவித்ரம்
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் சாரா
வாயினால் பாடி -..போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
ஹரிர் ஹரதி பாபானி
தத்யதா இஷீக தூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயதே -சாந்தோக்யம்
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவனே
6- மங்களா நாஞ்ச மங்களம் –
இனி கிமேகம் தைவதம் லோகே -முதல் கேள்விக்கு பதில் –
தைவதம் தேவதா நாம் ஸ -என்று தொடங்கி
மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5-
லோக ப்ரதானச்ய – ஜகன்நாதச்ய
சர்வ பாபபயாபஹம் நாம சஹச்ரம்
ஸ்ருணுமே-கேள் -தர்மா -தட்டி எழுப்பி சொல்கிறார் பீஷ்மர்
கௌணாநி -குண செஷ்டிதங்கள்
விக்யாதாநி -பிரசித்தமானவை
ரிஷிபி -சநகர் நாரதர் போல்வார்
பரிகதாநி -எல்லா திக்குகளிலும் அத்யந்த சிநேக பக்திகளுடன் பாடப்பட்டவை
பூதயே -வாழ்ச்சியின் பொருட்டு
பூ சத்தாயாம்
கடல் வண்ணன் பூதங்கள் -திருவாய் -5-2-1-
மஹாத்மநா-தனக்கும் தன தன்மை அறிவரியான் –
அஹம் வேதமி மகாத்மா
அப்ரமேயம் ஹி தத்தேஜ –
கிம் ஜபன் முச்ச்யதே உபோத்காதம்
பத்தோ முச்யேத பந்த நாத்யாதி ப்ரஹ்ம ஸநாதநம் -என்று
சம்சார பந்தம் நிவ்ருதியும்
ப்ரஹ்ம பிராப்தியும்
பலமாக சொல்லி முடிகிறது
யதோபாசனம் பலம்
சூழ்ந்து இருத்து ஏத்துவர் பல்லாண்டு -பல்லாண்டு இங்கே -அதே பலன் அங்கும்
———————————————————————————————
அனுஷ்டுப் சந்தஸ் -32 உயிர் எழுத்துக்கள் கொண்ட ஸ்லோகங்கள்
தேவதை –தேவகி நந்தனன் ஸ்ரீ கிருஷ்ணன் -சக்தி
அம்ருதாம்சூத்பவோபாநு -சந்திர வம்சத்தில் உதித்த சூர்யன் -குல விளக்கு – பீஜம் -ஆதாரம் -மூல காரணம்
த்ரிசாமா -சாம ருக்குகளால் பாடப் பட்டவன் -எனபது ஹிருதயம்
சாந்தி அடைவது -பலன் -எல்லா தோஷ நிவாரணம் -ப்ரஹ்ம பிராப்தி –
உத்பவ ஷோபணோ தேவ -எனபது இதின் உயர்ந்த மந்த்ரம் –
சங்க ப்ருந் நந்தகீ சக்ரீ -இதுக்கு கீலகம் -அச்சாணி
இதின் கவசம் -காப்பு -த்ரிசாமாசாமக
யோநி கர்ப்பம் -ஆநந்தம் பரப்ரஹ்ம எனபது
ருதுஸ் ஸூதர்சன கால -எனபது திக்குகளை அடக்கிய பரப்பு
ஸ்ரீ விஸ்வ ரூபம் தான விஷயம்
ஸ்ரீ மஹா விஷ்ணு கைங்கர்ய ரூபே சஹஸ்ரநாம ஜபே விநியோக
———————————————————————————————————————-
திரு நாமத் தொகுப்பு
1—பரதவ பரமான திரு நாமங்கள் -1-122
1-1-வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்-1-4
1-2-சர்வ சேஷித்வம் -5-9
1-3-தோஷம் தட்டாத பரமாத்மா -10-11
1-4-முக்தர்களுக்கு பரம கதி -12-17
1-5-முக்திக்கு உபாயம்-18-19
1-6-சேதன அசேதன நியாமகன் -20
1-7-சமஸ்த இதர விலஷணன் -21-65
1-8-த்ரிவிதசேதன வ்யதிரிக்தனும் நியாமகனும் 66-88
1-9-உபாய உபேய ஸ்வரூபி -89-100
1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122
2—வ்யூஹ நிலை பரமான திரு நாமங்கள் -123-146-
3—விபவ நிலை பரமான திரு நாமங்கள் -147-
3-1–விஷ்ணு அவதாரம் -147-152
3-2- வாமன அவதாரம் -153-164
3-3-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் -165-170-
3-4-பர வ்யூஹ விபவ மூன்றுக்கும் பொதுவான ஞான பலாதி ஆறு குணங்கள் உள்ளமை சொல்வது -171-181
3-5-குணங்களுக்கு ஏற்ற செயல்களைச் சொல்வது -182-186
3-6- ஹம்சா அவதாரம் -187-194-
3-7- பத்ம நாப அவதாரம் -195-199
3-8-நரசிம்ம அவதாரம் -200-210
3-9-மத்ஸ்ய அவதாரம் -211-218
3-10- உபநிஷத் பிரதிபாத்ய விராட் ஸ்வரூபம் -226-247-
3-11-சித் அசித் இவைகளாலான ஐஸ்வர்ய பூர்த்தி -248-271
3-12-விஸ்வரூபம் -272-300
3-13-வடபத்ர சாயி -301-313-
3-14-பரசுராம ஆவேச சக்தி அவதாரம் -314-321
3-15-கூர்ம அவதாரம் -322-327
3-16-பர வாசுதேவன் -குண வாசகம் -333-344
3-17–பரவாசுதேவன் -ரூப வாசகம் -345-350
3-18-பர வாசுதேவன் -விபூதி -351-360
3-19-பரவாசுதேவன் -லஷ்மி பதித்வம் -361-379
3-20-சேதனர் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384
3-22-தருவ -385-389
3-23-ஸ்ரீ ராம அவதார -390-421
3-24-கல்கி -422-436
3-25-ஜ்யோதிர் மண்டல பிரவ்ருத்தி தர்ம ப்ரவர்தகன் -437-445
3-26-யஞ்ஞ ஸ்வரூபன் 446-450-
3-27-நர நாராயண -451-457
3-28- அலை கடல் காய்ந்த -458-470
3-29-தர்ம சாஸ்திர -471-502-
3-30-ஸ்ரீ ராம தர்ம ராஷகன் -503-513
3-31-பாகவத சாத்வத ரஷகன் -514-519-
3-32-கூர்ம -520-521-
3-33-அநந்த சாயி -522-523-
3-34-பிரணவ ஸ்வரூபி -524-528-
3-35-கபில -அம்ச அவதாரம் -529-538
3-36- வராஹ -539-543-
3-37-சுத்த சத்வ ஸ்வரூபி -544-568
3-38-நாராயண -569-574-
3-39-வியாச -575-589
3-40-தர்மப்படி பலன் அளிப்பவன் -590-606-
3-41-ஸ்ரீ சம்பந்த மங்கள ப்ரதன் -607-629
3-42-அர்ச்சாவதார -630-696
4-1- கிருஷ்ண அவதாரம் -697-786
4-2-புத்த அவதாரம் -787-810
4-3- சிஷ்ட பரிபாலனம் -811-825
4-4-அனுபிரவெச ரஷனம் -826-838
4-5- அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன் -839-848
5-1-இமையோர் தலைவன் -849-850
5-2-யோகியர் தலைவன் -851-854
5-3-யோகத்தில் இருந்து நழுவியவரை உத்தரிப்பவன்
5-4-துஷ்டர்களை நிக்ரஹிப்பவன் -862-870
5-5-சாத்விகர் தலைவன் -871-880
5-6-அர்ச்சிராதி -881-891
5-7-மோஷ ஆநந்தம் தருபவன் -892-911
5-8- கஜேந்திர மோஷம் -912-945
6- பகவான் செய்யும் செயல்களின் பிரயோஜனம் -946-992
7-திவ்ய ஆயுதங்கள் ஏந்திய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தன் -993-1000
————————————————————————————
நான்கு இடங்களில் உள்ள இரண்டு திரு நாமங்கள்
பிராணத–66–322-409-956
66-பிராணத-த்ரிவித சேதன வ்யதிரிக்த -திரு நாமம்
பிராணனைக் கொடுப்பவன் –
தன்னை நித்ய அனுபவ சக்தி கொடுப்பவன்
தனியேன் ஆர் உயிரே-10-10-1-உன் சுவட்டை அறிவித்து
சுவட்டை சுவையை பிரித்தாளும் முடியாதபடி
குணா விஷ்காரத்தாலே -தரிப்பித்தவனே –
322-பிராணத-கூர்ம அவதார திரு நாமம்
உயிர் அளிப்பான் -பலம் உள்ளவன் -அநந்த பல சக்த்யே -மந்தர பர்வதம் தாங்கி
அமரர்கட்கு அன்று ஆரமுதூட்டிய அப்பன் -3-7-5- –
409-பிராணத -ஸ்ரீ ராமாவதார திரு நாமம்
உயிர் அளிப்பவன் -அகாலபலி நோ வ்ருஷா –
உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
956 -பிராணத
உயிர் அளிப்பவன்
சப்தாதி விஷயங்களால் ஆத்மா நாசம் அடைதாரை உஜ்ஜீவிப்பவன்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5-
—————————————————————————
நிவ்ருத்த்மா -231-453-604-780
231
விராட் ஸ்வரூபம் -உத்கதம் ஸ்வரூபம் யஸயஸ்-சர்வோத் க்ருஷ்டன் –
பராத்பரம் யன் மகாதோ மஹாந்தம் –
பராத்பரன் –
453-
நர நாராயணன் -தர்மம் தந்தை மூர்த்தி தாய்
நாராயணன் பரம விரக்தன் வைராக்யத்துக்கு இருப்பிடம்
நிவ்ருத்தமான மனதை உடையவன்
திரு மந்த்ரம் நிவ்ருத்தி தர்ம பரம்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாராயணனே -பெரிய திரு -3-8-1-
எங்கு ஆனும் ஈது ஒப்பதோர் மாயம் உண்டோ நர நாராயணனாய் யுலகத்து அற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே -நாச்சியார் திருமொழி -2-1-
604-
நிவ்ருத்தி தர்மம் ப்ரபன்னன் -புனராவ்ருத்தி இல்லாத தன லோகம் அளிக்கிறான்
ஜ்க்னானி தனது ஆத்மாவாக கொண்டு
ஆழியான் அருள் தருவான் விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -திருவாய் -10-6-3-
780-
லோக சேமத்துக்காக செயல் செய்பவன் –
வரம்பில்லாத மாயை மாய வரம்பிலாத கீர்த்தியாய் -திருச்சந்த -96
—————————————————————————————————————————————–
மூன்று இடங்களில் உள்ள பதினொன்று திரு நாமங்கள்
1—அச்யுத -101-319-557-
அச்யுத -101-ஆஸ்ரித வத்சலன் –
அச்சுதன் அமலன் என்கோ -3-4-5-
ஆபிமுக்யம் -பற்றி உண்டாரை நழுவ விடாதவன்
மித்ரா பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –
அச்யுத -319-
அவதரித்து தன் நிலையில் நின்று நழுவாதவன் –
தன்னைப் பற்றியவரை நழுவ விடாதவன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே –திரு மாலை -2
அச்யுத -557-சுத்த சத்வ ஸ்வரூபி –
ஸ்வா பாவிக ஈஸ்வரன் – -சர்வேஸ்வரன்
வீவில் இன்பம் மிக எல்லை நிலஜ்ந்த நம் அச்சுதன் -4-5-3-
—————————————————————————————————————-
2–அஜ -96-206-524-
அஜ -96
உபாய ஸ்வரூபி
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைபவன்
என் தன் மெய் வினை களைந்து நல ஞானம் அளித்தவன் –
பிறப்பிலி -அகாரத்தால் சொல்லப் படுபவன்
அஜ -206- நரசிம்க அவதாரம்
ஸ்தம்பம் -உள்ளே இருந்து தோற்றி –நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க வுருவாய் -பெரியார் திரு மொழி -1-6-9-
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அநேக சித் -அநேகரையும் வென்றவன்
524
பிரணவ ஸ்வரூபி –
அகார வாச்யன்
அழிவற்ற –
ஆதியாதி யாதி நீ சோதியாக சோதி நீ ஆதியாகி ஆயனாய மாயனே -திருச் சந்த -34/34
—————————————————–
3–பிராண -67-321-408-
பிராண -67-
த்ரிவித சேத்னரில் வாயாவ்ருதன் -அவர்கள் ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் அதீனம் –
உயிராக இருப்பவன்
ஒத்தார் எப்பொருட்கும் உயிராய் -2-3-2-
321-அவதாரத்திலும்
அடியார்க்கு ஜீவநாடி –
ஓர் உயிரும் ஆனாய் -6-9-7-
408-ஸ்ரீ ராமபிரான் திருநாமம் –
எல்லாரையும் எல்லா வற்றையும் உய்வ்விப்பவன்
என்னாவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5-
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1-
——————————————————————————————-
4-பத்ம நாப -48-198-347-
48-சமஸ்த இதர வி லஷணன் –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகன் -நாச் -11-2-
பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -2-2-4-
198- ஸ்ரீ விஷ்ணு பரமான திரு நாமம்
தாமரைப் யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம் -1
347-ரூப வாசக திருநாமம்
அயனைப் படைத்த எழில் உந்தி -அமலனாதி –
———————————————————————-
5-மாதவ -73-169-741-
73- த்ரிவித சேதன வ்யதிரிக்த-நியாமகன் –
திரு மகளார் தனிக் கேள்வன்
திருவுக்கும் திருவாகிய செல்வன்
அகலகில்லேன் இறையும்
வங்கக் கடல் கடைந்த மாதவன்
அமுதில் வரும் பெண்ணமுது கொண்ட மாதவன்
169-துஷ்ட நிக்ரக இஷ்ட பரிபாலனம்
ஞான பரதன்
கற்கும் கல்வி நாதன் -5-6-2-
அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
741-கிருஷ்ண பரமான திரு நாமம்
மலர் மகளுக்கு அன்பன்
திருமகளார் தனிக் கேள்வன்
மா மாயன் மாதவன் வைகுந்தன்
மா -மௌநம்
தா -த்யானம்
வ -யோகம் -இவற்றால் சாஷாத் கரிக்கப் படுமவன் –
———————————————————————————————
6-வஸூ-105–271–701-
105-ஆஸ்ரித வத்சலன் –
எண்ணிலும் வரும் -என் பேரைச் சொன்னாய் –
அனுகூல லேசம் உள்ளார் உடனும் அன்புடன் வசிப்பவன் -271-
271–ஐஸ்வர்ய பூர்த்தி –
தனம் உள்ளவன் -வைத்த மா நிதி
வா ஸூ தேவஸ் சர்வம்
உண்ணும் சோறு —எல்லாம் கண்ணன்
தன்னைத் தந்த கற்பகம் -2-7-1-
தனம் மதியம் தவ பாத பங்கஜம்
701-கிருஷ்ண பரமான திரு நாமம் –
ஸலோகாநாம் ஹிதார்த்தாய ஷீரோதே வஸதே பிரபு
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேந -நாக பர்யங்கே முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம் –
பார் கடலில் பையத் துயின்ற பரமன் பயில வினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன் -3-7-1-
———————————————-
7-வாஸூ தேவ –333–700–714-
333- பர வா ஸூ தேவ குணா வாசகம்
எங்கும் வசிப்பவன் -வ்யாபக திரு நாமம் -த்வாதச அஷரி-
சர்வம் வசதி -இவன் இடம் எல்லாம் உள்ளன
சர்வத்ர வசதி -இவன் எங்கும் வசிக்கிறான்
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித
தேவு -திவு -க்ரீடாயாம் – லீலையாக நடத்துபவன் -ரமிப்பவன்
உலகங்களுமாய் இன்பமில் வெநநரகமாகி இனிய நால்வன் சுவர்க்கங்களு மாய்
மன் பல் உயர் களுமாகிப் பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டுடையான் -3-10-7-
தேவன் -தேஜஸ் -விளக்கமுற்று
ஆர்ந்த ஜ்ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே -1-5-10-
உன் தன பொய் கேட்டு நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திருமொழி -6-1-
700-கிருஷ்ண அவதார பரமான திரு நாமம் –
வாஸூ தேவ புத்திரன்
எங்கும் உளன் கண்ணன் –
மற்பொரு தோளுடை வாசு தேவா -பெருமாள் திருமொழி -6-6-
714-
கூசி நடுங்கி யமுனை யாற்றில் நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திருமொழி -6-1-
வாசுதேவ தேவகி குழந்தை -யோகிகளுக்கு பர தத்வம்
மதுரா பெண்கள் மன்மதன் -மல்லர்களுக்கு இடி கம்சனுக்கு மிருத்யு
————————————————————————
8-வீரஹா -168–747-927-
168-துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலனம்
வீரர்களையும் கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளான தர்க்க சூரரை வெல்பவன்
சாருவாக மதம் நீறு செய்து யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் -ஆர்த்தி -29 எம்பெருமானாரை நினைப்பூட்டும்
747-கிருஷ்ண பரமான திரு நாமம்
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடைப் போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறட்ட தூ முறுவல் பிரான் -5-3-8-
வெந்திறல் வீரரின் வீரர் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-2-
927-கஜேந்திர மோஷ பரமான திரு நாமம்
எம்பிரான் ஏழையேன் இடரைக் களையாயே -பெரியாழ்வார் -5-1-9-
அடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி -1-10-1-
—————————————————————————-
9-விஷ்ணு -2-259-663-
2-எங்கும் வியாபித்து உள்ளவன்
ஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி
யாவையும் யாவரும் தானாய்-
விச்வம் -பூர்த்தியில் நோக்கு விஷ்ணு வ்யாப்தியில் நோக்கு
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-
259-ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நாங்கள் நாதனே -1-9-9-
663-சர்வ சகதீசன் -என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
எமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையன் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே -2-7-4-
——————————————————————————
10–ஸ்ரீ மான் -22-180-222
அழகியவன் –
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
அழகியான் தானே அரி யுவன் தானே -நான் -திரு 22
-180-திவ்ய ஆபரண செல்வம்
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவனே -8-8-1-
222-தாமரைக் கண்ணன் -மத்ஸ்ய கமலா லோசன
மீனாய் ஆமையாய் –கார் வண்ணனே –கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தன் -2-8-5-
——————————————————————————-
11-சத்ய -107-213-873-
107-ஆஸ்ரித வத்சலன்
சத்துக்களுக்கு அனுகூலன்
213-மத்ஸ்யாவதார பரமான திருநாமம்
நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே -9-10-6
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-7
873-சத்வ குணத்தை வளர்ப்பவன் –
திரு மெய் மலையாளா -பெரிய திருமொழி -3-6-9-சத்யகிரி ஈசன் –
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகன் -பெரிய திருமொழி -5-6-9
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்