அம்ருத்யுஸ் சர்வ த்ருக் சிம்ஹ சந்தாதா சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரி -ஹா
3-8-நரசிம்ஹ அவதார திரு நாமங்கள் -200-210 மேல் ஸ்லோகம் –
200-அம்ருத்யு
ம்ருத்யு வின் விரோதி -பிரகலாதனை மிருத்யு விடம் இருந்து ரஷித்து அருளி
நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் -மூன்றாம் திரு -98
201- சர்வ த்ருக் –
யாவரையும் பார்ப்பவன் -நியமிப்பவன்
இவையா எரி வட்டக் கண்கள் -நான் முகன் -21
பார்த்தான் அரு சமயங்கள் பதைப்ப -பிரமாணங்கள் பார்த்து அருளிய நம் ராமானுசன்
202- சிம்ஹ
சிங்கப் பிரான்
இமையோர் பெருமான் அரி பொங்கக் காட்டும் அழகன் -நான் முகன் -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் முகன் திரு -22
அசோதை இளம் சிங்கம்
மீண்டும் வரும் -489-தண்டிப்பவன்
203-சந்தாதா –
பக்தர்களை தன்னிடம் சேர்த்து கொள்பவன்
யானையின் மஸ்தகத்தை பிளக்கும் சிங்கம் – குட்டிக்கு பால் கொடுக்கும்
204-சந்திமான் –
சந்தி சேர்க்கை நித்யமாக பண்ணுபவன் -மான் -மதுப் -நித்ய யோகம் -ஸ்ரீ மான் போலே
ஆஸ்ரிதர் தவறு செய்தாலும் என் அடியார் –செய்தாரேல் நன்று செய்தார் -என்பவன்
205-ஸ்திர –
நிலையாய் நிற்பவன் -சலனம் அற்றவன்
நிலை பேரான் என் நெஞ்சத்து எம்பெருமான் எப்பொழுதும் -10-6-6-
நாம் பெற்ற நன்மையையும் அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் திரு -58-அருளுகையே இயல்பாக உடையவன் –
206-அஜ –
பிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு
வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514
207-துர்மர்ஷண-
எதிரிகளால் தாங்க முடியாத தேஜஸ் -ஹிரண்யன் பொன் உருகுமா போலே உருக்கிய தேஜஸ்
இவையா பிலவாய் இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
குடல் மாலை சீரார் திரு மார்பின் மேல் கட்டி ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -சிறிய திருமடல்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -9-10-6
208-சாஸ்தா –
சாசனம் பண்ணுமவன்
ஒரு மூ யுலகாளி -9-8-9-
சிம்ஹ கர்ஜனையால் சிஷிப்பவன் -இகலிடத்து அசுரர்கள் கூற்றம் -9-2-2-
209-விஸ்ருதாத்மா –
வியந்து கேட்கப்படும் சரித்ரம்
என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -2-8-9-
210- ஸூராரிஹா –
தேவர்கள் எதிரிகளை முடிப்பவன்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே -8-1-4-
ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கையன் -பெரியாழ்வார் -1-6-9-
——————————————————————
3-9-மத்ஸ்ய அவதார திரு நாமங்கள் -211-225-
211- குரூர் குரு தம
குரு தம குரு -பரமாச்சார்யன் –
அறியாக் காலத்துள்ளே அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
பிதா மகராண ப்ரஹ்மனுக்கும் வேதங்கள் வெளிட்டு உபதேசித்து அருளினவன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -பெரியாழ்வார் -5-2-8-
212-தாம –
இருப்பிடம் – மநு என்கிற பக்தன் இடம் அனைத்தையும் தன் கொம்பில் கட்டி விட சொல்லி ரஷித்தவன்-
மீனாய் ஆமையுமாய்-2-1-10-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் -பெரிய திருமொழி -8-8-10-
தேவுடை மீனாய் ஆமையாய் -பெரியாழ்வார் -4-9-9-
முன்பு 62 த்ரிககுத்தாம பார்த்தோம்
213-சத்ய
நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-
நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7
214-சத்ய பராக்கிரம
வஞ்சனை அற்ற ஆற்றல்
தீய புந்திக் கஞ்சனை வஞ்சனை செய்தவன்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சன் -பெரிய திருமொழி -7-10-8-
215-நிமிஷ –
கண் மூடி -அநாஸ்ரிதரை கடாஷியாதவன்
சந்தமர் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன்
நின்றான் -பெரிய திரு மொழி -2-3-6-
216-அநிமிஷா –
மீன் பார்வையாலே முட்டைகளை வளரச் செய்யும்
ஆஸ்ரிதர்களை குளிரக் கடாஷித்து அருளி
மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-
217-ஸ்ரக்வீ
பரத்வ ஸூ சகமான மாலை அணிந்தவன் -வைரம் முத்து ஐந்து வித வைஜயந்தி மாலை
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட -நாச் -14-2-
திருத் துழாய் மாலையைச் சொல்லிற்றாகவுமாம்
தோளிணை மேலும் புனைந்த தண் அம துழாய் உடை அம்மான் -1-9-7-
218-வாசஸ்பதி –
சொல்லுக்கு அதிபதி
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்ல வல்லரே -திருச்சந்த -118
219-
உதாரதீ
சிறந்த ஞானம் உடையவன் -சர்வஞ்ஞன் -எல்லையில் ஞானத்தன் -கம்பீர ஸ்வபாவன்
ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-9-
220-அக்ரணீ
மேலே நடத்துமவன் -ஞான உபதேசம் செய்து ப்ரஹ்மத்தை அடைய
அறியாக் காலத்து உள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து அறியாதன அறிவித்த அத்தா -2-3-3/5
221-க்ராமணீ –
தலைவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் -தேவாதி தேவப் பெருமான் -2-8-5
எம்மான் அமரர் பெம்மான் -2-7-10
222–ஸ்ரீ மான் –
சிறப்புடையவன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையுமாய் –கார் வண்ணனே
கார் வண்ணன் கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவபெருமான் என் தீர்த்தன் -2-8-5-
முன்பே 22/180 பார்த்தோம்
223-நியாய –
நீதிமான்
செய்குந்தா வரும் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-
224-நேதா –
கரை சேர்ப்பவன் -ஆஸ்ரிதர்கள்
அடியார்களைக் கொண்டு போய் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பன் -3-7-7-
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து -7-5-10-
225-சமீரண-
திவ்ய சேஷ்டிதங்கள்-
மீன் உருவில் ரஸாதல லோகம் சென்று வேதங்களை மீட்டு வெளிப்படுத்தி பிரமனுக்கு அளித்தவன்
ஆதி முதல்வனே பிரமனுக்கு வேதம் ஈந்தவன் –
அன்னமும் கேழலும் மீனுமாய் ஆதி -பெரிய திருமொழி -9-2-10-
மத்ஸ்ய மூர்த்தியே ப்ரஹ்ம வித்யா ப்ரவர்தகன்
————————————————————-
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமங்கள் -226-247
226-ஸஹஸர மூர்தா –
தலைகள் பல பல – உடையவன் -தோள்கள் ஆயிரத்தாய்-முடிகள் ஆயிரத்தாய் -8-1-10-
227-விச்வாத்மா –
எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-
228-ஸஹஸ்ராஷ-
துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் -8-1-10
229–ஸஹஸ்ரபாத்-
தாள்கள் ஆயிரத்தாய் -8-1-10-
230-ஆவர்த்தன –
திருப்புவான் -சம்சார சுழலை சுழற்றுபவன் -கால சக்கரத்தான் -4-3-5-
231-நிவ்ருத்தாத்மா –
ப்ராக்ருதங்களுக்கு அப்பால் பட்டவன் -சர்வ உத்க்ருஷ்டன் -பராத்பரன் –
மீண்டும் 453–604–780-வரும்
232-சம்வ்ருத
நன்கு மறைக்கப் பட்டவன் -அஹம் வேதமி -விச்வாமித்ராதிகளுக்கு
உயர்வற உயர் நலம் உடையவன் -ஆழ்வார் உணர்ந்தார்
காணலுமாகான் உளன் அல்லன் இல்லை அல்லன் -2-5-10
233-சம்ப்ரமர்த்தன –
நன்றாக அழிப்பவன்-அஞ்ஞானம் தமஸ் அழித்து-
உணர்விலும் உம்பர் ஒருவனை என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -8-8-3-
234-அஹஸ் சம்வர்த்தக –
பகலை காலத்தை நடத்துபவன் -கால சக்கரத்தாய் -7-2-7-காலம் அவன் அதீனம்
235-வஹ்நி-
வஹிப்பவன் –
ஒரு மூ யுலகும் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மால் -10-8-9-
236- அநில –
ஜீவிக்கச் செய்பவன் காற்று-அநிலம்-பிராண வாயு நம்மை ஜீவிக்க செய்வதால்
காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் அம்மான் -10-8-1
237-தரணீதர-
தரிப்பவைகளையும் தரிப்பவன்
நாகமேந்து மண்ணினைக் காத்து ஏகமேந்தி நின்றவன் -திருச்சந்த -6
238-ஸூப்ரஸாத –
மிக்க அருள் புரிபவன் -அக்ரூர் மாலா காரர் –ஈரம் கொல்லி
நல் அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-
239-பிரசன்நாத்மா-
தெளிவுற்ற சிந்தையன் -7-5-22
சமோஹம் சர்வ பூதேஷு -இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே -பெருமாள் திருமொழி -8-9-
240-விச்வருக்
அனைத்தையும் படைப்பவன்
பாமரு மூ வுலகும் படைத்த பற்ப நாபா -7-6-1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-
யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-
புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திரு -8-2 –
241- விச்வபுக் விபு –
எங்கும் பரந்து இருந்து ரஷிப்பவன்
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இருந்து நின்ற பெரு மாயா -8-5-10
தானேயாகி நிறைந்து எல்லா யுலகும் உயிரும் தானேயாய் -1-7-2-
242-சத்கர்த்தா –
சத்துக்களை பஹூ மானிப்பவன்-தமர்கட்கு எளியான் -10-5-9
243-சத்க்ருத –
சாதுக்களால் பூஜிக்கப் படுமவன்
செழு நிலத் தேவர் நான் மறையோர் திசை கை கூப்பி ஏத்தும் -8-4-8
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
சபரி மாலாகாரர் -போல்வார் இடம்
244-சாது –
ஆஸ்ரிதர் நியமனம் -தூது போதல்-தேரோட்டல்
இன்னார் தூதன் என நின்றான்
இந்த்ரன் சிறுவன் தேர் முன் நின்றான்
245-ஜஹ்நு-
மறைப்பவன் -பிறர்களுக்கு அரிய வித்தகன் -1-3-1-
246-நாராயண –
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே சமீரித-ஆளவந்தார்
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
எகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நே மே த்யாவா ப்ருதிவீ
வண் புகழ் நாரணன் -10-9-1
நாரணன் முழு வெழ் உலகுக்கும் நாதன் வேத முயன் -2-7-2
நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாய
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-1-
நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் -சிறிய திருமடல்
நானும் சொன்னேன் நமர்களும் உரைமின் நமோ நாரணமே -பெரிய திருமொழி -6-10-6-
நாராயணா என்று ஓதுவார் உரைக்கும் உரை உண்டே -முதல் திரு -95
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இரண்டாம் திருவந்தாதி -81
நாமம் பல சொல்லி நாராயணா -மூன்றாம் திரு -8
நலம் திகழ் நாரணன் -பெருமாள் திருமொழி -10-11
இன்னம் பல உண்டே –
247-நர –
அழியாதவன் -அழிவற்ற நித்ய வஸ்துக்கள்
நரனாக அவதரித்தவன் –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணனே நரனே -நாச் திரு -2-1-
நர நாராயணனாய் உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-
———————————————————-
3-10–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-
248-அசங்யேய-
எண்ணில் அடங்காதவன் -நித்ய வஸ்துக்களின் திரள் -சமூஹம் எண்ணிறந்தவை –
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3-
249-அப்ரமேயாத்மா –
அனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து
எங்கும் உளன் கண்ணன் -2-8-9
கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10
பரந்து தனி நின்றவன் -2-8-10
250-விசிஷ்ட –
தனிச் சிறப்பு யுடையவன் -ஸ்வாபாவிக பராத்பரன் –
251-சிஷ்டக்ருத் –
பிறரை உயர்த்துபவன் -சிட்டன் ச்ரேஷ்டன்
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -7-2-4-
தம்மையே ஒத்த அருள் செய்வர் -செய்வார்கட்கு உகந்து
252- சுசி –
தூய்மை உடையவன் -தேஜஸ் -157 பார்த்தோம்
அரங்க மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை –
தேவர்க்கும் அறியலாகா அந்தணனை
253-சித்தார்த்த –
எல்லாம் உடையவன் -அவாப்த சமஸ்த காமன்
நிகரில் புகழாய்- உலகம் மூன்று உடையாய் என்னை யாள்வானே -6-10-10-
254-சித்த சங்கல்ப –
நினைத்த படி நடத்த வல்ல சத்ய ஸங்கல்பன் –
எல்லையில் ஞானத்தன் –ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-8
மழுங்காத ஞானமே படையாக உடையவன் -3-1-9-
255- சித்தித-
சித்திகளை அளிப்பவன் –
ஆய கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் -3-9-9-
256-சித்தி சாதந-
ஆறும் -உபாயமும் -இனிதாக உள்ளவன்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -6-7-10-
தேனே மலரும் திருப்பாதம் இறே
257-வ்ருஷாஹீ
அடையும் நாள் நன்னாளாய் இருப்பவன்
அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன்தாள் பிடித்தே செலக் காணே -5-8-3-
அக்ரூரர் பாரித்த படியே
258-வருஷப –
அனுக்ரஹத்தை பொழிபவன்
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-
259-விஷ்ணு
எங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்
எங்கும் தானாய நாங்கள் நாதனே -1-9-9-
2–பார்த்தோம் -663 மீண்டும் வரும்
260-வ்ருஷபர்வா -தர்மம் படிகளால் அடையப்படுபவன் வர்ணாஸ்ரம கர்ம யோகம்
261-வருஷோதர –
தர்மமே உருவான திரு வயிற்றை உடையவன் -உதரம்
தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய-2-7-12
ஆராத்ய ஸூலபன்
262-வர்த்தன
வ்ருத்தி செய்பவன்
263-வர்த்தமான
வளர்ச்சி அடைபவன் -ஆஸ்ரிதர் களுக்கு உதவியதால் வந்த புகர்
திகழும் தன் திருவருள் செய்து என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் -8-7-5-
264-விவிக்த –
அத்விதீயன் -நிகரில் புகழாய் தன் ஒப்பார் இல் அப்பன் -6-3-9
265-ஸ்ருதிசாகர
ஸ்ருதிகளுக்கு கொள்கலம் –
நாராயண பரா வேதா -வேதைச்ச சர்வை அஹமேவ வேத்ய
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -பெரிய திருமொழி -2-3-2-
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் -பெரிய திரு மொழி -9-4-9-
நாரணன் வேதமயன் -2-7-2-
266-ஸூ புஜ –
அழகிய புஜங்களை உடையவன்
கற்பக காவென நற்பல தோளன் -6-6-6
ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு மால்
267-துர்த்தர –
தடுக்க முடியாதவன்
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி -பெரிய திருமொழி -9-1-4-
268-வாக்மீ-
கொண்டாடும்படியான வாக்கை உடையவன்
வேதம் அவன் வாக்கு -கீதாம்ருதம் பொழிபவன்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று -நடந்த நல் வார்த்தை அறிந்துமே
வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி யாவரோ -7-5-9
தேசுடைய தேவர் திரு வரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் 11-8
269-மஹேந்திர
சிறந்த ஐஸ்வர்யம் உடையவன்
இந்திர – இதி பரம ஐஸ்வர்யே-
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
270- வஸூத-
தன்னைக் கொடுப்பவன்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான்
271-வ ஸூ –
தனமாய் உள்ளவன் வைத்த மா நிதி
உண்ணும் சோறு -வாசுதேவஸ் சர்வம்
தன்னைத் தந்த கற்பகம்
105 பார்த்தோம் மீண்டும் 701 வரும்
——————————————-
3-12-விஸ்வ ரூபம் -திரு நாமங்கள் 272-300
272-நைக ரூப –
பல உருவங்களை உடையவன் -பஸ்யாமி த்வாம் சர்வதோ அநந்த ரூபம் –
ஏக மூர்த்தி இரு மூர்த்தி பல மூர்த்தியாகி -4-3-3-
ஏக மூர்த்தி நன்மை சேர் எண்ணில் மூர்த்தியாய் -திருச்சந்த -17
273-ப்ருஹத் ரூப
பெரிய உருவம் -அனந்தனை எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் யாவரும் தானே -3-4-9-
பெரு மா மேனி யண்ட மூடுருவப் பெரும்திசை யடங்கிட நிமிர்ந்தோன் -பெரிய திரு மொழி -9-1-8-
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குழம்பில் காண கணப்ப திரு வகாரம் -பெரிய திரு மொழி -4-4-8-
274-சிபிவிஷ்ட –
ஒளிக் கிரணங்களாலும் வியாபகம் சிபி ரஸ்மி கிரணம்
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே -பெரிய திருமொழி -1-10-9-
திகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ ஒளி மணி வண்ணனையே -3-4-1-
275-பிரகாசன
விளங்கச் செய்பவன் -திவ்ய சஷூஸ் கொடுத்து அர்ஜுனனுக்கு காட்டி அருளி
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -பெரிய திருமொழி -3-8-1
276-ஓஜஸ் தேஜோ த்யுதிதர
பலம் பராக்கிரமம் தேஜஸ் -எல்லாம் ஓஜஸ் -பலம் தேஜஸ் தேசு த்யதி பிரகாசம் ஒளி
குன்றம் ஓன்று ஏந்தியதும் நிகரில் மல்லரை செற்றதும் நிரை மேய்த்தத்வும்
நீள் நெடும் கை சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் செய்கை -6-4-3
திவி ஸூ ரய சஹச்ரச்ய பவேத் யுக துத்திதா -சஞ்சயன் ஆயிரம் சூர்யன் போன்ற கிருஷ்ணன் பிரகாசம்
277-பிரகாசாத்மா
ஒளி படைத்தவன் –ஒளி மணி வண்ணன் -3-4-8
மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து நன் தெய்வ நிலை யுலகில் புக உய்க்கும் அம்மான் -3-10-6
278-பிரதாபன
தபிக்கச் செய்பவன் -பகைவர்களை
தானே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத் திரு சுடருமாய இறை -மூன்றாம் திரு -39-
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு ஆரா வெழுந்தான் அரி உருவாய் -சிறிய திரு மடல்
279-ருத்த
சம்பத்தால் பூரணன்
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் நாச் திரு -10-10-
280-ஸ்பஷ்டாஷர –
ஸ்பஷ்டமான அஷரங்கள்-வேத அஷர ராசி -சுடர் மிகு ஸ்ருதி
281-மந்திர –
மந்தாரம் த்ராயத இதி மந்திர
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடு -4-
282-சந்த்ராம்சு
குளிர்ந்த தேஜஸ்
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
283-பாஸ்கரத்யுதி-
சூர்யன் போன்ற தேஜஸ்
கதிர் மதியம் போல் முகத்தான்
சீரார் சுடர்கள் இரண்டாய் -6-9-1-
284-அம்ருதாம்சூத்பவ –
அம்ருத அம்சு உத்பவ -சந்த்ராம்சு தோற்றுவாய்
285-பாநு-
வெய்ய கதிரோன் பீஷோதேதி சூர்யா
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஏனமாய் யிடந்த மூர்த்தி -திருச்சந்த -114
திங்களும் ஞாயிருமாய்ச் செழும் பல் சுடராய் மாயா -7-8-2
286-சசபிந்து
துஷ்டர்களை அளிப்பவன் -கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்
சசம் -என்றால் குடிலமதி- வக்கிரமான செயல் உடைமை பிந்து இதை அறிந்து மாற்றுபவன்
பானு கேட்ட செயலை எரிப்பவன்
287-ஸூ ரேச்வர
தேவர்க்கும் தேவர் -இமையோர் தலைவன் வானோர் கோமான் அமரர்கள் அதிபதி
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ -8-1-5-
288- ஔஷதம் –
சம்சாரம் தீர்க்கும் மருந்து
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
செடியார் வினை தீர் மருந்து
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு
289-ஜகத் சேது –
அணை-அணையாய் பரிபாலனம் -திரு வெக்கா –
வேகா சேது அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம் -திருச்சந்த -64
290-சத்ய தர்ம பராக்கிரம –
வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பினைக்குவடி இறுத்திட்டு —கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் -8-4-1-
மாறில் போர் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10-
291-
பூத பவ்ய பவன் நாத –
போகின்ற காலங்கள் போய காலங்கள் போக்கு காலங்கள் தாய் தந்தை யுயிர் ஆகின்றாய்
மூ வுலகுக்கும் நாதனே பரமா -2-6-10
292-பவந-
சஞ்சரிப்பவன் -காற்று போலே
காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
மீண்டும் 817-தானே வந்து பாபம் தாபம் தீர்த்து அருளி
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திருமொழி -1-10-9-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
அமலங்களாக விளிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-
293-பாவநா-
தூய்மை அளிப்பவன் -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் –
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே -2-8-5-
திரு வாறன் விளை யுறை தீர்த்தன் -7-10-10
கரம் நான்குடையான் பேரோதி தீர்த்த கரராமின் -இரண்டாம் திரு -14
294-அநல-
திருப்தி பிரவாதவன்
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி -53
ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாப சர்ப்பதி-
295-காமஹா-
ஆசைகளைக் களைபவன்
ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோ ஸ்திதம் -ஜிதந்தே
சோலை மலை இனக் குறவர்கள் புது ஆவி காட்டி நின் பொன்னடி வாழி -என்ன வைப்பான்
296-காமக்ருத்
விரும்பக் கூடியவைகளை உண்டாக்குபவன்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -5-3-3- –
297-காந்த
விரும்பப் படுபவன்
எந்தாய் கொடியேன் பருகும் இன்னமுதே -7-1-7-
298-காம –
ஆசைப் படத் தகுந்தவன்
காமனைப் பயந்த காளை
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -4-4-5
299-காம ப்ரத-
இஷ்டங்களைக் கொடுப்பவன் –
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
வஸூ ப்ரத -698-699-தன்னை தேவகிக்கு பிள்ளையாக அளித்து வாசு தேவனுக்கு கண்ணன் தந்தை பெருமை அளித்தவன்
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –
முழுதும் வெண்ணெய் அளைந்து–தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-
300-பிரபு –
ஈசன் மாயன் என் நெஞ்சில் உள்ளான் -என் நெற்றி யுளானே நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிறை மலர்ப் பாதங்கள் -1-9-10
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர –
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply