6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-
892-அக்ரஜ
முன்னே விளங்குபவன் -பர்யங்க வித்யை
தேவிமாராவார் திரு மகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் –வான் உயரின்பம மன்னி வீற்று இருந்தாய் -8-1-11-
893-அநிர் விண்ண-
துயர் அற்றவன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-
சோம்பாது இப் பல்லுலகை எல்லாம் படைவித்த வித்தா -முன்பே 436-பார்த்தோம்
சேதனனை துயர் அறச் செய்வதில் சதா முயற்சி யுடையவன்
894-சதா மர்ஷீ
பொறுமை உள்ளவன் -எல்லா கைங்கர்யங்களையும் முக்தன் பாரிப்பு எல்லாம் அடங்க செய்வதை பொறுமை உடன் ஏற்றுக் கொள்பவன்
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-
895-லோகாதிஷ்டானம்-
உலகங்களுக்கு ஆஸ்ரயமாய் இருப்பவன் -இவற்றைத் தாங்குபவன் -இங்கு நித்ய விபூதியை குறிப்பிடுகிறது –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடு தரும் ஆழிப் பிரான்-3-9-9-
896-அத்புத –
அத்புதமாய் உள்ளவன் -அத்புதம் -என்றும் பாடம்
அப் பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே –
சதா பஸ்யந்தி சூரய –
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் யாம் -பெரிய திரு மொழி -8-1-9-
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மான்
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் -பெரிய திரு மொழி -10-10-9-
அற்புதன் நாராயணன் -8-6-10-
897-சநாத்-
அனுபவிக்கப் படுபவன் -அஹம் அந்நாத-
விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனி -2-3-2-
எனக்கு ஆராமுதானாய் -10-10-5-
898-சநாதநதம –
மிகப் பழைமை யானவன்
ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே-2-5-4-
வைகல் தோறும் என் அமுதாய வானேறே -2-6-1-
899-கபில –
விளக்கமுற்றவன் -காள மேகம் மின்னல் போலே பிராட்டி உடன் -ஒளி மயமான பரம பதத்தில் –
கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாம் -9-5-7-
900-கபிரவ்யய –
அழிவில்லா ஆனந்தம் அனுபவிப்பவன்
பெரிய சுடர் ஞான இன்பம் -10-10-10-
901-ஸ்வஸ்தித –
மஹா மங்களங்களைக் கொடுப்பவன்
ஸ்ரீ பாஷ்யம் -சம்ஸார அக்நி விதிப நவ்ய பஹத ப்ராணாத்ம சஞ்சீவிநீ -ப்ரஹ்ம ஞானம் உள்ளவனே சத் -என்பர்
அசந்நேவச பவதி -அசத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத -சந்த மேநம் ததோ விது-தைத்ரியம்
இந்த மெய் ஞானம் அருளி பரம பதம் பேற்றையும் அளிப்பவன்
உயர் வினையே தரும் ஒண் சுடர்- 1-7-4-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தான் -பெரியாழ்வார் -5-2-8-
902-ஸ்வஸ் திக்ருத் –
மஹா மங்களத்தை செய்பவன் –
ஸோஅஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சித –
முக்தர்களுக்கு போக மகிழ்ச்சி அளிப்பவன்
முட்டில் போகத்தொரு தனி நாயகன் -3-10-3-
903-ஸ்வஸ்தி –
தானே மங்கள ரூபமாக இருப்பவன் –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
செங்கனி வாய் செய்ய தாமரைக் கண்ணன் கொங்கலர் தண் அம் துழாய் முடியன் -6-6-2-
மாண் குறள் கோலப் பிரான் -5-9-6-
904-ஸ்வஸ்திபுக் –
மங்களத்தை பரிபாலிப்பவன் –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே -6-10-7-
905 -ஸ்வஸ்தி தஷிண –
மங்களத்தை யாக தஷிணையாக தருபவன் -தீர்க்க சத்திர யாகம் -செய்து தன்னை அளிக்கிறான்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
வானவர் போகம் –வானவர் முற்றும் ஒளி வண்ணன் -3-4-7-
906-அரௌத்ர-
கடுமை இல்லாமல் குளிர்ந்து இருப்பவன்
நலம் கடல் அமுதம் –அச்சுவைக் கட்டி -3-4-5-
907-குண்டலீ-
காதணிகளை அணிந்து இருப்பவன்
இலகு விலகு மகர குண்டலத்தன் -8-8-1-
மகர நெடும் குழைக்காதன் மாயன் -7-3-10-
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட -திரு நெடும் தாண்ட -21-
908-சக்ரீ-
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-
திவ்ய ஆபரணமாயும் ரஷையாயும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-3-3-
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் –ஒருநாள் காண வாராயே -6-9-1-
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
909-விக்ரமீ-
பராக்கிரமம் உள்ளவன் –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால்
எழுதிக் கொண்டேன் இராம நம்பீ-பெரியாழ்வார் -5-4-6-
சமுத்திர இவ காம்பீர்ய
முன்பே 76-பார்த்தோம்
910-ஊர்ஜித சாசன-
பிறர் கடக்க முடியாத உறுதியான கட்டளை பிறப்பிப்பவன்-
திவ்ய ஆஞ்ஞை
ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வன் -திரு வாசிரியம் -3
சர்வேச்வரேச்வரன்
911-சப்தாதிக –
சொல்லுக்கு எட்டாதவன்
தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையானை –சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே -2-5-8-
யதோ வாசோ நிவர்த்தந்தே
தேநீர் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா
தூ நீர்க்கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே -8-5-4-
——————————————————————-
7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-
912-சப்த சஹ –
ஆர்த்த நாத கூப்பீட்டை சுமப்பவன்
ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணன் -திருமாலை -44-
கைம்மா துன்பம் கடிந்த பிரான் -2-9-1-
913-சிசிர –
வேகமாகச் செல்பவன் -பகவதஸ் த்வராயை நம-
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று ஆழி தொட்டான் -பெரிய திரு மொழி -2-3-9-
போரானை பொய்கை வாய்க் கோட்பாட்டு நின்றவறி–நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் என்னாரிடரை நீக்காய் -என வெகுண்டு தீராத சீற்றத்தால்
சென்றிரண்டு கூறாக ஈராவதனை இடற் கடிந்தான் எம்பெருமான் பேராயிரம் உடையான் -சிறிய திரு மடல்-
914-சர்வரீகர –
பிளக்கும் திவ்ய ஆயுதங்களை கையில் ஏந்தியவன் -சென்று இரண்டு கூறாக
பஞ்ச திவ்ய ஆயுதங்களை -குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
908 சக்ரீ முன்பே பார்த்தோம்
915-அக்ரூர –
க்ரூரம் இல்லாதவன் -முதலையை உடனே கொல்ல மனஸ் இல்லாமல் ஆழி தொட வில்லை
கானமர் வேழம் கை எடுத்து அலர கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப்
புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை-பெரிய திரு மொழி -2-3-9-
ஆயர் கோபிகள் அகரூர் கண்ணனை கூட்டி சென்றதால் க்ரூர ஹ்ருதயர் -எனப்பட்டார்
916-பேசல –
அழகன் -அலைய குலைய ஓடி வந்ததால் வஸ்த்ரம் மாலை திரு ஆபரணங்கள் கலைந்து இருந்தும்
அழகில் குறை இல்லாமல்
பருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பரமன் -நாச் திரு -14-10-
917-தஷ –
வேகம் உள்ளவன் -முன்பே 913 சிசிர பார்த்தோம் இந்த பொருளில் -முன்பே 424 பார்த்தோம்
918-தஷிண –
இனிய இயல்பு உடையவன் -முன்பே வந்து யானைக்கு உதவப் பெற்றிலோமே-
சாந்தவனை கஜேந்த்ரஷ்ய அனுகூல தஷிண -சொல்லி ஆஸ்வாசம் செய்து அருளினான்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினான் -3-1-9-
919-ஷமிணாம் வர
பொறுமை உள்ளவரில் சிறந்தவன் -அபவத்தத்ர தேவேச
கைம்மா துன்பம் கடிந்த பிரான் -2-9-1-
920-வித்வத்தம –
அறிவில் சிறந்தவன் -யானையின் ரணத்தை ஆறச் செய்த சிறந்த வைத்தியன்
உத்தரீயம் வாயில் வைத்து ஊதி உஷ்ணப்படுத்தி -புண்ணில் வைத்து வேது கொண்டவன் –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –
921-வீத பய
யானையின் பயத்தை போக்குபவன் -அவன் வந்த வேகம் கண்டதுமே எல்லா பயங்களும் போந்தன
922-புண்ய ஸ்ரவண கீர்த்தன –
கஜேந்திர சரிதம் கேட்பதை மிக்க புண்ணியமாம் படி அனுக்ரஹித்தவன் -சொல்பவர் கேட்பவர் -யாவர்க்கும் பாபங்கள் போகும்
யானையின் இடர் கடிந்த புணர்ப்பே –முதலாம் -2-8-2–கைக்குமதல் புண்ணியம்
923-உத்தாரண
கரை ஏற்றுமவன்-யானையையும் முதலையையும் ஒக்க கரை ஏற்று சாபம் விமோசனம் அடையச் செய்து அருளி
கம்ப மா கரி கோள் விடுத்தான் -பெரியாழ்வார் -5-1-9-
924-துஷ்க்ருதிஹா –
தீங்கு செய்பவரைத் தொலைப்பவன்
பொல்லா அரக்கரைக் கிள்ளிக் களைந்தானை
வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தான் -பெரிய திருமொழி -6-8-3-
925-புண்ய
பாபங்களைப் போக்கடிப்பவன்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியன் -திருச்சந்த -45-
அடியேன் மனம் புகுந்த புண்ணியனே -பெரிய திருமொழி -3-5-7-
முன்பே 692 பார்த்தோம்
926-துஸ் ஸ்வப்ன நாசன
கெட்ட கனவுகளை போக்குபவன்
இந்த சரித்ரம் கெட்ட கனவுகளைப் போக்கும்
எல்லா பகவ திரு நாமங்களுக்கும் இந்த மகிமை உண்டே
927-வீரஹா –
பாசங்களை விடுவிப்பவன் -யானையை முதலை இடம் இருந்தும் -யம பாசத்தின் நின்றும் விடுவிப்பவன்
முன்பே 168/747 பார்த்தோம்
எம்பிரான் ஏழையேன் இடரைக் களையாயே-பெரியாழ்வார் -5-1-9-
அண்ணா அடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி -1-10-1
928-ரஷண-
காப்பாற்றுபவன்
ஸ்பர்சம் -அணைத்தல் – இனிய பேச்சு -மூலம் யானையைக் காப்பாற்றி அருளினவன்
நன்மையே அருள் செய்யும் பிரான் -பெரியாழ்வார் -5-1-8-
929-சந்த
வளரச் செய்பவன் -ஆஸ்ரிதர்களுக்காகவே இருப்பவன் -பக்தாநாம் -ஜிதந்தே –
சநோதி-வாரிக் கொடுப்பவன் -வள்ளல் மணி வண்ணன்
930-ஜீவன
உயிர் அளிப்பவன் -உயிர் அளிப்பான் -திரு விருத்தம் 1-
தொழும் காதல் களிறு அளிப்பான் – 3-1-9-
முதலைக்கும் உயிர் அளித்தான்
தேவலர் முனிவர் சாபத்தால் ஹூ ஹூ என்ற கந்தர்வன் முதலை ஆனான் -ஜீவனம் -என்றும் பாடம்
931-பர்யவச்தித –
சுற்றும் நின்றவன்
வாத்சல்யம் மிக்கு
அவா வறச் சூழ் அரி-10-10-11-
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -8-3-6-
932-அநந்த ரூப-
எண்ணிறந்த ரூபங்களை உடையவன் -ஆஸ்ரித ரஷண அர்த்தமாக
வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -1-3-2-
பல பலவே சோதி வடிவு -2-5-6-
933-அநந்த ஸ்ரீ
அளவற்ற செல்வம் உடையவன் -உபய விபூதி நாதன் -எல்லாம் பக்தாநாம்
செல்வர் பெரியார் -நாச்சியார் -10-10-
செல்வத்தினால் வளர் பிள்ளை -பெரியாழ்வார் -2-8-8-
934-ஜிதமன்யு –
கோபத்தை வென்றவன் –
சரணாகதனான கஜேந்த்ரனுக்கு இன்னல் விளைவித்த நீர் புழுவை கோபியாமல் நல் வாழ்வு அளித்தவன்
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் -மூன்றாம் திரு -99
935-பயாபஹ
ஆஸ்ரிதர் பயத்தை போக்குபவன் –
பய நாசன -838-முன்பே பார்த்தோம்
நம்பனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-8-
நம்பனே ஆழி முன் ஏந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே -பெரியாழ்வார் -5-1-9-
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச் ச பீதா கோரேஷூ ச வ்யாதிஷூ வர்த்தமானா
சந்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூகி நோ பவந்து
936-சதுரச்ர-
ஆஸ்ரிதர் -கார்யம் உடனே செய்து முடிக்கும் -சதுரன் -சமர்த்தன்
ஆதி மூலமே -தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே-3-1-9-
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-
937-கபீராத்மா –
ஆழம் கண்டு அறிய முடியாதவன் -சமுத்திர இவ காம்பீர்யே
பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கரிய கண்ணன் -7-7-11-
நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பர்-8-3-9-
பேராழியான் தன் பெருமையை கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் கானான் -நான்முகன் திருவந்தாதி -73
938-விதிச –
எல்லாருக்கும் மேலாய் இருப்பவன் -பிரமன் சிவன் இவர்கள் ஸ்துதிக்கு அப்பால் பட்டவன்
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி-1-7-8-
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது அருமா வெய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மான் -10-7-6-
சிவர்க்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய எம்மானை -2-7-12-
தானே வந்து யானைக்கு அருள் செய்த கபீராத்மா விதிச
939-வ்யாதிச
பதவிகளைத் தருமவன் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-
940-திச-
நியமிப்பவன்
இருக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -5-2-8-
ராஜாக்கள் ஊர் தோறும் கூறு செய்வார்களை வைக்குமா போலே
941-அநாதி
ஈச்வரோஹம் என்று இருப்பாரால் அறியப்படாதவன்
அருளை யீ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் ஏத்தும் அம்மான் -10-7-7-
942-பூர்புவ
உண்மையில் வாழ்பவருக்கு இருப்பிடம்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம்ததோ வித்து
அவனை சேஷி ஸ்வாமி அறிந்தவன் பூ -இருப்பவன்
கடல் வண்ணன் பூதங்கள் -5-2-1-
ஸ்வரூப ஞானம் உள்ளவனுக்கு புவ இருப்பிடம்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் -பெரியாழ்வார் -5-4-5-
முன்பே 430 பார்த்தோம்
943-லஷ்மீ
தானே எல்லா வித செல்வமாய் உள்ளவன்
பெரும் செல்வமும் நன் மக்களும் –அவரே இனி யாவாரே -5-1-8-
பவத்கதம் மே ராஜ்ஜியம் ச ஜீவிதம் ச ஸூ கா நிச -யுத்தம் -19-6-
கிருஷ்ணாஸ்ரைய கிருஷ்ணபல கிருஷ்ண நாத –
944-ஸூ வீர
சிறந்த வீர்யம் உள்ளவன்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் -3-2-3-
945-ருசிராங்கத-
அழகான திவ்ய மேனியை அடியார்கள் அனுபவிக்க தருமவன்
கண்கள் சிவந்து வாயும் சிவந்து கனிந்து –நான்கு தோளன் ஒருவன் அடியேன் உள்ளானே -8-8-1
வெண் பல் சுடர் செவ்வாய் முறுவலோடு என்னுள்ளத்து இருந்தான் -8-7-7-
பக்தாநாம் பிரகாசயே -ஜிதந்தே
————————————————————————
8-பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமங்கள் -946-982-
946-ஜனன-
பிறப்பிப்பவன்-சிருஷ்டி கர்த்தா –
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -3-2-1-
947-ஜன ஜந்மாதி –
பிறவிப் பயனாக இருப்பவன் -அத்யமேஸ் பலம் ஜன்ம -அக்ரூரர்
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் மாதவன் இருப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த 94/95-
948-பீம –
பயங்கரன் -அசுரர்க்கு வெம் கூற்றம் -6-3-8-
ஷிபாமி -ந ஷமாமி -முன்பே 359 -பீம -பார்த்தோம்–837 பயக்ருத் பார்த்தோம்-
949-பீம பராக்கிரம
பயங்கரமான பராக்கிரமம் உடையவன்
காய்ச்சின வேந்தன் -9-2-6-
அசுரர்கட்கு இடர் செய் கடு வினை நஞ்சு -9-2-10-
950-ஆதார நிலய-
சாதுக்களுக்கு இருப்பிடம்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் -பெரியாழ்வார் -5-4-5-
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு மொழி -7-4-4-
பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமான் -3-7-5
951-தாதா-
தர்மத்தை உபதேசிப்பவன் -உபதேசித்தும் அனுஷ்டித்தும் தாங்குபவன்
உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-
952-புஷ்ப ஹாஸ-
மலரும் புஷ்பம் போலே இனியவன்
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு ஒளி காட்டுகின்றீர் -நாச்சியார் -9-3-
தே நீர் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா -8-5-4-
953-பிரஜாகார –
விழித்து இருப்பவன்
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்த செல்வனார் -நாச்சியார் 11-7
954-ஊர்த்வக –
மிக உயர்ந்தவன் -கருத்தின் கண் பெரியன் -10-8-8-
தனது பேறாக ரஷித்து அருளுபவன்
955-சத்பதாசார
தாஸ்ய ரசத்தில் தூண்டி நல் வழிப் படுத்துபவன்
உற்றேன் உகந்து பணி செய்து உண பாதம் பெற்றேன் -10-8-10-
956-பிராணத-
உயிர் அளிப்பவன்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5-
957-பிரணவ –
வணங்கச் செய்பவன் -பிரணவ அர்த்தம் உணர்த்தி -திருவடிகளைத் தொழுது எழச் செய்பவன்
மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-
958-பண
வியாபாரம் செய்பவன்
சேஷி சேஷ பாவம் மாறாடி
என் மாய வாக்கை அதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் -10-7-3-
959-பிரமாணம்
பிரமாணமாய் இருப்பவன்
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திரு -61
வேதம் வேதத்தின் சுவைப் பயன் –என்னை யாளுடை யப்பன் -பெரிய திரு மொழி -2-3-2-
முன்பே 429 பார்த்தோம்
960-பிராண நிலய
சகல ஆத்மாக்களுக்கும் இருப்பிடம்
சாலப்பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -6-9-3-
961-பிராண த்ருத்
பிராணங்களைத் தரிப்பவன் –
தாய் தந்தை உயிராகின்றாய்-2-6-10-
962-பிராண ஜீவன –
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் -6-7-1-
963-தத்வம்
சாரமாய் உள்ளவன் -சத்தா ஹேது
கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே -8-1-7-
இளம் குயிலே என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே -நாச்சியார் -5-6-
உலகுக்கு ஓர் உயிர் ஆனாய் -6-9-7-
சாரதோ ஜகத க்ருத்ஸ்நாத் அதிரிக்தோ ஜனார்த்தன -பிரமாணம்
964-தத்வ வித்
தத்துவத்தை அறிந்தவன்
எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் -8-4-9-அவன் ஒருவனே அறிவான்-
965-ஏகாத்மா
உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிராய் இருக்கும் தனிப் பெரும் பரமன்
ஆர் உயிரேயோ அகலிடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பேர் உயிரேயோ
தேவர்க்கும் தேவாவோ ஓர் உயிரேயோ உலகங்கட்கெல்லாம்-8-1-5-
966-ஜன்ம ம்ருத்யு ஜாரதிக
பிறப்பு இறப்பு மூப்பு கட்கு அப்பால் பட்டவன்
அமலன் ஆதி பிரான்
967-பூர்புவஸ் வஸ்தரு-
மூ வுலகத்திய ஜீவ ராசிகளும் தங்கும் மரமாய் உள்ளவன்
பூ புவ ஸூவ பூமி வானம் சுவர்க்கம் -ஜீவர்களும் தங்கும் மரம்
வாசு தேவ தருச்சாயா
மூவாத் தனி முதலா மூ வுலகும் காவலோன் -2-8-5-
968-தார –
திரு நாவாய் -சம்சாரம் கடலைத் தாண்டுவிக்கும் கப்பல்
விஷ்ணு போதம்
முன்பே 340 பார்த்தோம்
நாரணன் சேர் திரு நாவாய் -9-8-3-
969-சவிதா –
உண்டாக்குமவன் -சாஷாத் ஜனிதா சவிதா-
சவிதா என்று சூரியனையும் சொல்லும்
முன்பே 887 பார்த்தோம்
வள வேழு உலகின் முதலாய வானோர் இறை -1-5-1-
970-ப்ரபிதாமஹ –
தாத்தாவின் தந்தை -பிதாமஹன் நான்முகன் -பிரஜாபதிகளைப் படைத்து அவர்கள் மூலம் பிரஜைகளைப் படைப்பதால்-
ஆதுமில் பாழ் நெடும் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி தன்னுள்ளே தோற்றிய இறைவன் -7-5-4-
971-யஞ்ஞ-
தானே யஞ்ஞமாய் உள்ளவன்
செய்கின்ற கிறி எல்லாம் நானே என்னும் -5-6-4-
ஜப யஞ்ஞ ரூபமாய் இருப்பவன்
முன்பே 446 பார்த்தோம்
அந்தணர் தம் ஓமமாகிய அம்மான் -பெரிய திரு மொழி -8-6-5-
பண்டை நான் மறையும் வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான் -பெரிய திருமொழி -5-7-1-
மறையாய் வேள்வியாய் தக்கணையாய் -பெரியாழ்வார் -4-9-5-
முன்பே 446 பார்த்தோம்
972- யஞ்ஞபதி-
யஞ்ஞங்களுக்கு ஸ்வாமி -பல ப்ரதன்
அஹம் ஹி சர்வ யஞ்ஞா நாம் போக்தாச ப்ரபுரேவச-ஸ்ரீ கீதை -9-24-
தத்ர தத்ரபல பிரதாதா சாஹமே வேத்யர்த்த
973-யஞ்வா-
யாகம் செய்பவன் -அனுஷ்டிக்க சக்தி இல்லாதார் நித்ய கர்மாக்களையே யாகம் எனபது இதனை தானே அனுஷ்டிப்பவன்
974-யஞ்ஞாங்க-
பிறர் அனுஷ்டிக்கும் யஞ்ஞங்களை தான் அனுஷ்டிப்பதற்கு அங்கமாய் உள்ளவன்
அங்கம் -துணையாக -அஹ்ய சேஷ பூதம்
975-யஞ்ஞவாஹன-
யாகத்தை நடத்தி தருமவான் -சக்தி ஸ்ரத்தை அளித்து
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-
976-யஞ்ஞப்ருத் –
யாகத்தை நிறைவுறச் செய்பவன்
பிராயச் சித்தான்ய சேஷாணி ஸ்ரீ கிருஷ்ணாநுஸ்மரணம் பரம்
977-யஞ்ஞக்ருத்-
யாகங்களை உண்டாக்கியவன் -பரஸ்பரம் பாவயந்த -தேவர்கள் மனுஷ்யர்கள்
பண்டை நான்மறையும் வேள்வியும் தானாய் நின்ற வெம்பெருமான் -பெரிய திரு மொழி -5-7-1-
978-யஞ்ஞீ-
யஞ்ஞங்களால் ஆராதிக்கப் படுபவன் -சர்வ சேஷி
செய்கைப் பயன் உண்பேனும் யானே -5-6-4-
அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா -ஸ்ரீ கீதை -9-24
979-யஞ்ஞ புக்
யஞ்ஞங்களை அனுபவிப்பவன் -அந்தராத்மா -தடை இன்றி ரஷிப்பவனும் அவனே
980-யஞ்ஞ சாதன
யஞ்ஞங்களை சாதனமாக ஆக்குமவன்
தன்னைப் பற்றிய அறிவின் மூலம் தன்னை அடைய யஞ்ஞங்களை உபாயமாக ஆக்குமவன்
முன்பே 981 பார்த்தோம் –
981-யஞ்ஞாந்தக்ருத்
யாகத்தின் பலனை உண்டாக்குபவன்
கர்ம அனுஷ்டானம் பலன் பரதவ ஞானம்
சர்வம் கர்மம் அகிலம் பார்த்த ஜ்ஞானே பரி சமாப்யதே-ஸ்ரீ கீதை -4-33-
982-யஞ்ஞ குஹ்யம் –
யாகங்களின் அடிப்படை ரகஸ்யமாக உள்ளவன்
சர்வே வேதா சர்வ வேதா சர்வ சாஸ்த்ரா சர்வே யஞ்ஞா சர்வ இஜ்யச்ச கிருஷ்ண -மகா பாரத பிரமாணம்
விது க்ருஷ்ணம் பிராமணாஸ் தத்வதோ யேதேஷாம் ராஜன் சர்வ யஞ்ஞா சமாப்த
செய்த வேள்வியர் -5-7-5-
983-அன்னம்
உண்ணும் சுவை யமுதாக உள்ளவன் -யாத்மதா பலதா –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1-
வாசு தேவஸ் சர்வம் -ஸ்ரீ கீதை -7-9
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
தேனும் பாலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உணர்வில் நின்றான் -8-8-4-
984-அந்நாத –
தன்னை அனுபவிப்பவனை தான் இனிதாக அனுபவிப்பவன்
அன்னம் அந்நாத ஏவச -ஏவ -அவன் ஒருவனே அத்விதீயம்
வாரிக் கொண்டு உன்னை விழுந்குமவன் என்று ஆர்வுற்ற என்னை –என்னில் முன்னம் பாரித்துத்
தான் என்னை முற்றப் பருகினான் -9-9-10-
985-ஆத்மயோநி –
ஒரு நீராக கலக்கச் செய்பவன் -பாலுடன் சக்கரை சேர்வது போலே
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -2-3-1-
986-ஸ்வயம் ஜாத-
தான் தோன்றி -பிரார்த்திக்காமல் நிர்ஹெதுகமாக அவதாரம் செய்து அருளி
உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-
987-வைகாந-
வேரோடு பெயர்ப்பவன்
கான் -தோண்டி எடுப்பது
தான் அவதரித்து பிறவி துக்கங்களை வேரோடு போக்கி அருளி
அடியார் அல்லல் தவிர்த்தான் -8-3-5-
தண்டு ஏந்தி எம் இடர் கடிவான் -9-2-6-
988-சாம காயந-
முக்தர்கள் சாம கானம் பண்ணக் கேட்டு இருப்பவன்
பாட்டுக் கேட்கும் இடம் -ஏதத் சாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
எந்தை எம்பெருமான் என்று வானவர் சொல்லும் பெருமான் -1-10-7-
989-தேவகி நந்தன –
தேவகி பிராட்டியை களிப்பிக்கும் குமாரன்
தேவகி சிங்கமே தாலேலோ -பெரியாழ்வார் -1-3-4-
ஏஷமே சர்வ தர்மாணாம் தர்மோ அதிகதம -பீஷ்மர் அவனைச் சுட்டிக் காட்டி அருளி
யஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தீதே ஜனார்த்தன
கரியவாகிப் புடை பரந்து நீண்ட வப் பெரிய வாய கண்களை உடைய ஜனார்தனன் கிருஷ்ணன்
990-ஸ்ரஷ்டா
படைப்பவன் -பர வாசுதேவனும் கிருஷ்ணனே
கடல் ஞாலம் செய்வேனும் யானே -5-6-1-
அஹம் க்ருதஸ் நஸய ஜகத பிரபவ -ஸ்ரீ கீதை -7-6-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -3-2-1-
991-ஷீதீச
பூமியை ஆள்பவன் -கண்ண பிரான் -பூதேவியின் துயர்களை களைபவன்
நாளும் இங்கு ஆள்கின்றானே–10-4-2-
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே–6-10-10-
ஆள்வான் ஆழி நீர் -10-5-4-
992-பாப நாசன
பாபங்களை அழிப்பவன்
அமுதம் அன்ன செயல்களை பற்றிக் கேட்பதும் ரசிப்பதும் சகல பாபங்களையும் போக்கும்
அவதாரங்கள் மூலம் அடியவர் வெளிப்பகையும் உள்பகையும் போக்குபவன்
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி –
பாப நாசன் கண்ணன் -3-6-2-
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித்
தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திரு மொழி -5-4-3-
993-சங்க ப்ருத்-
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-9-3-
பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீகேச –சகோஷோதார்த் தராஷ்ட்ரானாம் ஹ்ருதயானி வயாதாரயத்-ஸ்ரீ கீதை
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -6-9-1-
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரம் -பெரியாழ்வார்
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -நாச் திரு மொழி -7-8-
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே -நாச் திரு -7-7-
தமாசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
993-நந்தகீ –
அறநெறி நாந்தக வாளே பெரியாழ்வார் திருமொழி – 5-2-9-
நந்தன -மகிழ்விப்பவன்
995-சக்ரீ-
கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தடவரைத் தோள் சக்கர பாணி -பெரியாழ்வார் -5-4-4-
996-சார்ங்க தந்வா –
சர வர்ஷம் வவர்ஷஹா
சார்ங்கம் உதைத்த சர மழை
சார்ங்க வில் சேவகனே–பெரியாழ்வார் -5-4-4-
997-கதாதர
கௌமோதகி
அழகிய சார்ங்கமே தண்டே -பெரியாழ்வார் -5-2-9-
குனி சாரங்கன் ஒண் கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
998-ரதாங்க பாணி –
கால சக்கரத்தாய் கடலிடம் கொண்ட கடல் வண்ணனே கண்ணா -7-2-7-
சக்ரீ -ஸ்ரீ சக்கரத் ஆழ்வாரை உடையவன்
இது கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-
999-அஷோப்ய
அசைக்க முடியாதவன்
ப்ரபன்னாயா அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம-உறுதியான வ்ரதம் கொண்டவன்
தேசுடைய தேவனார் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் திரு -11-5-
முன்பே 807 பார்த்தோம்
1000-சர்வ ப்ரஹரணாத் யுத
எண்ணற்ற திவ்ய ஆயுதங்கள்
அங்குல் யக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
காகாசுரனை புல்லாலே
ஆஸ்ரித சம்ரஷணம் தீர்க்க சத்ரம் நீண்ட யாகம்
திவ்ய ஆயுத ஆழ்வார்கள் ரஷண தீஷை கொண்டவர்கள்
சர்வ ப்ரஹரணாத் யுத ஓம் நம இதி
தொழுதல் தபஸ் தானம்
ஒரு நமஸ்காரம் பத்து அசவமேதங்கள் செய்த பலன் கொடுக்கும்-
———————————————————
வன மாலி கதீ சாரங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மன் நாராயணோ விஷ்ணுர் வாசுதேரவோஸ் பிரஷது
ஹரேர் நாமைவ நாமைவ புவி மங்களம்
கலௌ நாஸ்தயேவ நாஸ்தயேவ கதிர் அந்யத
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply