Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் -10-11-12-13-14–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 24, 2019

ந அவேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–10-

ப்ரபோ-பகவானே
ந அவேஷசே யதி –நீ கடாக்ஷித்து அருளா விட்டால்
ததோ புவ நான்ய மூநி நாலாம் -ததஸ் அமூநி புவநாநி பவிதும் ஏவ ந அலம்-அப்போது இவ்வுலகங்கள் உண்டாகவே மாட்டா
குத ப்ரவ்ருத்தி–ஒரு காரியமும் செய்ய மாட்டா என்பதைச் சொல்லவும் வேணுமோ
ஸ்வாமின்-இப்படியே
ஏவம் சர்வ ஜந்தோ-இப்படி எல்லா உயிர்கட்க்கும்
நி சரக்க ஸூ ஹ்ருதி -இயற்கையாகவே ஸூஹ்ருதம்-நன்மை -விரும்புவானான
த்வயி -உன்னிடத்தில்
ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–ஆஸ்ரித வாத்சல்யமான இந்தக் குணமானது ஆச்சர்யமே இல்லையே

ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்த பின்பு ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குகிறார் இது முதல்
அப்ஜ நேத்ர-என்று கீழே சம்போதித்த உடனே தண் தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருளி அனுக்ரஹித்தான்
தத் ஐஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி –ஸ்ருதி அடி ஒற்றி இவரும் அவேஷசே -என்று அருளிச் செய்கிறார்
ஈஷணம்-அனுக்ரஹத்தோடு கூடிய சங்கல்பம்
ஸ்வாபாவிக ஸூஹ்ருத்தாய் எல்லார் விஷயத்திலும் இருக்கும் நீ
என் விஷயத்திலும் -ப்ரீதி விசேஷமான வாத்சல்யம் காட்டி அருளுவது ஆச்சர்யமே இல்லையே –

ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்
காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்
ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்
தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் –சொல்லிற்று ஆயிற்று –

———-

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே–11-

நாராயண-நாராயணனே
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வராட் -பிரமன் சிவன் இந்திரன் -இவர்களை விட சிறந்த முக்தாத்மா
இதி ஏத அபி -என்கிற இவர்கள் எல்லாரும்
யஸ்ய தே மஹிமார்ணவ விப்ருஷஸதே-யாதொரு உன்னுடைய பெருமையாகிற கடலிலே திவலையாக ஆகின்றனரோ
( தஸ்மிந் ) த்வயி-அப்படிப்பட்ட உன்னிடத்தில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்-இயற்கையான உயர்வற்ற அதிசய ஐஸ்வர்யத்தை
க வைதிக ந ம்ருஷ்யதி –எந்த வைதிகன் ஸஹிக்க மாட்டான் –சஹியாதவன் அவைதிகன் ஆவான் என்கை

ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன்-என்பதை ஸ்தாபித்து அருளுகிறார் –
நாராயண அநுவாகத்திலே சொல்லிற்றே-
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்தரஸ் ச அக்ஷரஸ் பரம ஸ்வராட் -முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -ஜகத் வியாபார வர்ஜனம் -அவனுக்கு பரதந்த்ரர்களே
ப்ரஹ்மாதிகளுக்கு சொல்லப்படும் ஏற்றம் எல்லாம் உனது பெருமையின் சிறு திவலையே
அவர்களது ஈஸ்வரத்தன்மை ஸ்வாபாவிகமும் இல்லை -அநவதிக அதிசயமும் இல்லையே –
கர்ம வஸ்யர்கள் அன்றோ –
ஸ்வாபாவிக –
இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே
அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –
அநவதிக அதிசய-
இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது –
ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம்-சர்வ ஸ்வாமித்வம் -ஐஸ்வர்யம் பொறாதவர்கள்
வேத பாஹ்யர்களே அன்றோ –

——————–

கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க  புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—12-

கஸ்ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் யார்
பரம சத்த்வ சமாஸ்ரய க-சிறந்த சுத்த சத்வ குணத்துக்கு இருப்பிடம் யார்
பிரமன் ரஜோகுண அதிகன் -ருத்ரன் தமோகுண அதிகன் அன்றோ
க  புண்டரீக நயன -செங்கண் மால் யார்
உயிர்களுக்கு எல்லாம் தாயாய் அளிக்கிற தண் தாமரைக் கண்ணன் யார்
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
புருஷோத்தம க–புருஷோத்தமன் எனப்படுபவன் யார்
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே-எவனுடைய அநேகம் ஆயிரம் கோடி பாகங்களின் ஒரு பகுதியில்
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—இப்பிரபஞ்சம் முழுவதும் விசித்திரமான
சேதந அசேதன பிரிவுகளை உடையதாக இருக்கின்றது
அவனுடைய ஸ்வரூப ஏக தேசத்தில் சகல கார்ய வர்க்கங்களும் அடங்கும்

யஸ்யாயுதா யுதாம் சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா
மேரோரிவாணுர் யஸ்ய தத் ப்ரஹ்மாண்ட அகிலம் முநே –இத்யாதி பிரமாணங்கள்
அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்
ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் அர்ஜுனன் வியந்து நின்றானே
அயுதம் -பதினாயிரம் கலா என்றும்
அம்சம் -ஏக தேசம் என்றும் காட்டும்

இவனே சர்வ ஸ்மாத் பரன் என்பதை த்ருடப்படுத்தி அருளுகிறார்
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி–ஸ்ரீ குணரத்னகோசம்
விசித்திரம் -தேவ மனுஷ்யாதி ரூபா பேதம்
போக்ய போக உபகரணங்கள் போக ஸ்தானங்கள் -என்கிற விபாகன்கள்
வ்ருத்தம் -நிலை நிற்கிற படியைச் சொல்லும்
இதிலும் அடுத்த இரண்டு ஸ்லோகங்களிலும் கேள்விகள்
14-ஸ்லோகத்தில் த்வத் அந்ய க –உன்னைத் தவிர வேறே யார் -ஸ்பஷ்டமாக இருக்கும்
ஆகவே நீயே பரம் பொருள் என்று விஞ்ஞாபித்து அருளுகிறார் –

———–

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–13-

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை–இவை போன்ற இவர்கள் ஆபத்துக்களை விடுவிப்பதானாலும்
உயர்ந்த பலன்களை அளித்து அருளுவதாலும்
ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து -மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டு அருளி
சோமுகன் அசுரன் இடம் இருந்து ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் எடுத்து அருளி
ஹம்ஸாவதாரத்தாலும் வேதங்களை அருளி
குரு பாதகம் -குரு விஷயமான மஹா பாதகம்
தைய பீடை -அந்தகாசுரன் –வ்ருகாசூரன்-ஹிரண்ய ராவணாதிகள்
ஆதி -இவை முதலாக பல ஆபத்துக்களையும் போக்கி ரஷித்து அருளினவன்
ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
மஹிஷ்ட்ட பலப்ரதானை-சாமான்ய ஜீவர்களை ஈஸ்வரர் என்று கொண்டாடும் படி ஆக்கி அருளினவன்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ -புநஸ் தரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்
ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு பிரதா-என்றும்
கேசவஸ்ய ப்ரசாததஸ் –என்றும் பிரமாணங்கள் உண்டே
கோ அந்ய -உன்னைத்தவிர வேறே யார்
ப்ரஜா பஸூ பதி பரிபாதி கஸ்ய-பிரஜாபதியான பிராமனையும் பசுபதியான சிவனையும் ரஷிப்பார் யார்
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–அந்த சிவனானவன் தனது தலையிலே தரிக்கப்பட்ட
யாருடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தால் பரிசுத்தனானான்
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர் முக மணி கொண்டு
இழி புனல் கங்கை –பெரியாழ்வார்
ததம்பு பரயா பக்த்யா ததார சிரஸா ஹரஸ் பாவனார்த்தம் ஜடா மத்யே –ஈஸ்வர சம்ஹிதை
யஸ் ஸுவ்சனிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேன மூர்த்நீ விக்ருதேன சிவச் சிவோ பூத் –ஸ்ரீ மத் பாகவதம்

இதிஹாச புராண விருத்தங்களாலே இவனே சர்வ ஸ்மாத் பரன் என்று அருளிச் செய்கிறார்

ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
மங்கை பாகன் சடையினில் வைத்த கங்கை யார் பாதத்து நீர் வனசமேவு முனிவனுக்கு மைந்தனானது இல்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் யார் அகற்றினார் -செய்ய தாளின் மலரான் சிரத்திலானது இல்லையோ
வெங்கண் வேழம் மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ -வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்தது இல்லையோ
அங்கண் ஞானம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ -ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே

————

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க—14-

ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச -சிவன் பிரமன் முதலான உலகம்
கஸ்ய உதரே–யாருடைய வயிற்றில் இருக்கிறது
உதரே–பிரளய காலத்தில் ப்ரஹ்மத்திடம் அனைத்தும் உள்ளனவே
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுள்ளே அடங்குகின்ற -என்பதால்
திரு வயிற்றின் உள்ளே என்றது தன்னுள்ளே என்றபடி
நாராயணே பிரலீ யந்தே
லீயதே பரமாத்மனி
கோ ரஷதீ இமம் –இந்த பிரபஞ்சத்தை யார் காப்பாற்றுகிறார் –
காக்கும் இயல்பினன் கண்ணபிரான் –
(ப்ரபஞ்ச )அஜநிஷ்ட ச கஸ்ய நாபே-எவருடைய உந்தியில் நின்றும் இவ்வுலகம் உண்டாயிற்று
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
திரு நாபிக் கமலத்திலே நாராயணன் நான்முகனைப் படைக்க -நான்முகனும் சங்கரனைப் படைக்க
திரு நாபிக் கமலம் முதல் கிழங்காம்
த்வத் அந்ய க –உம்மை விட வேறு யார்
(இமம ) க்ரந்த்வா -இவ்வுலகத்தை ஒரு கால் அளந்தும்
க்ரந்த்வா -உள்ளும் புறமும் உறைந்து வியாபித்து நியமிக்கும் படி -சர்வ அந்தர்யாமித்வத்தை சொல்லும் என்றுமாம்
நிகீர்ய –அவாந்தர பிரளயங்களிலே -ஒருகால் விழுங்கியும்
புனருத் கீரதி -மறுபடியும் வெளி நாடு காண உமிழ்கிறான்
பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
கேன வைஷ -இவ்வுலகம் வேறு எவனால்
பரவாநிதி சக்ய சங்க—தலைவனை உடையது என்று சங்கிப்பதற்கும் கூடியது

ராஜஸ தாமச புராணங்களிலும் கூட ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்டிக்கப்படுபவர்கள் என்றும் கர்ம வஸ்யர்கள் என்றும் உள்ளனவே
அன்று எல்லாரும் யார்யாரோ இவர்கள் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் என்று
சர்வ ஆதார -சர்வ நியாமகன்-சர்வ சேஷி நீ ஒருவனே -உனக்கே பரத்வம் பொலிகிற படியால்
வேறே சங்கைக்கும் இடம் இல்லை -என்று நிகமிக்கிறார்

ஒருவன் ஜனகனாய் -ஒருவன் ஜன்யனாய்
ஒருவன் சேஷியாய் -ஒருவன் சேஷனாய்
ஒருவன் ஸ்ரீ ய பதியாய் ஒருவன் உமாபதியாய்
ஒருவன் புண்டரீ காஷனாய் ஒருவன் விரூ பாஷனாய்
ஒருவன் கருட வாஹனாய் ஒருவன் வ்ருஷப வாகனனாய்
ஒருவன் பாதகியாய் ஒருவன் சோதகனாய்
ஒருவன் புருஷோத்தமனாய் ஒருவன் புருஷனாய்
ஒருவன் சிரஸ் ஸ்தித பாத பங்கஜனாய்-ஒருவன் பாத பாம்ஸூ மாத்ரமாய்
ஒருவன் ஸூரி த்ருச்யனாய் -ஒருவன் வேதாள த்ருச்யனாய்
இப்படி தம பரகாசங்கள் போலே
ருத்ரனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் நெடு வாசி உண்டு ஆகையாலே
ருத்ரனுக்கு அஸ்மத் யாதிகளோபதி ஷேத்ரஜ்ஞதையாலே
ஈஸ்வரத்வ சங்கை இல்லை
பிரம்மாவுக்கும் சமான ந்யாயத்தாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை –
என்றது ஆயிற்று –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம் —

November 11, 2019

1. ஓம் நரசிம்காய நம
2. ஓம் மகாசிம்காய நம
3. ஓம் திவ்யசிம்காய நம
4. ஓம் மகாபலாய நம
5. ஓம் உக்ர சிம்காய நம
6. ஓம் மகாதேவாய நம
7. ஓம் சம்பாஜெய நம
8. ஓம் உக்ர லோகன்யாய நம
9. ஓம் ரதுராய நம
10. ஓம் சர்வ புதியாய நம
11. ஓம் ஸ்ரீமான்யாய நம
12. ஓம் யோக நந்தய நம
13. ஓம் திருவிக்ர மயா நம
14. ஓம் ஹாரினி நம
15. ஓம் ஹோலகலயா நம
16. ஓம் ஹாக்ரினி நம
17. ஓம் விஜயாய நம
18. ஓம் ஜெயவர்த நய நம
19. ஓம் பஞ்ச நாய நம
20. ஓம் பரமகய நம
21. ஓம் அகோரய நம
22. ஓம் கோர விக்ராய நம
23. ஓம் ஜிவாலன்முகாய நம
24. ஓம் ஜிவாலா மலின் நம
25. ஓம் மகாஜிவாலாய நம
26. ஓம் மகா பிரபாஹய நம
27. ஓம் நித்திய லக்சய நம
28. ஓம் சகஸ்சர கசாய நம
29. ஓம் துர்றிகாசாய நம
30. ஓம் பர்தவானாய நம
31. ஓம் மகா தமாஸ்திரேய நம
32. ஓம் யத பரஞ்ஜனய நம
33. ஓம் சண்ட கோபினே நம
34. ஓம் சதாசிவாய நம
35. ஓம் இரணிய கசிபு தேவ மிசைன் நம
36. ஓம் திவ்விய தானவ பஜனய நம
37. ஓம் கன பகராய நம
38. ஓம் மகா பத்ராய நம
39. ஓம் பல பத்ராய நம
40. ஓம் சூபத்ராய நம
41. ஓம் கராலிய நம
42. ஓம் விக்ராயை நம
43. ஓம் விகர்த்ரே நம
44. ஓம் சர்வ கத்துருகாய நம
45. ஓம் சிசுமராய நம
46. ஓம் திரிலோகதர்த மனே நம
47. ஓம் ஜய்சிய நம
48. ஓம் சரவேஸ்ராய நம
49. ஓம் விபாய நம
50. ஓம் பரகம் பனாய நம
51. ஓம் திவ்யாய நம
52. ஓம் அகம்பாய நம
53. ஓம் கவின் நம
54. ஓம் மகாதேவியே நம
55. ஓம் அகோஜெய நம
56. ஓம் அக்சேரயா நம
57. ஓம் வனமலின் நம
58. ஓம் வரப ரதேய நம
59. ஓம் விஸ்வம்பராய நம
60. ஓம் அதோத்யா நம
61. ஓம் பராப ராய நம
62. ஓம் ஸ்ரீவிஷ்ணவ நம
63. ஓம் புருசோத்தமயா நம
64. ஓம் அங்கோஸ்ரா நம
65. ஓம் பக்தாதிவத்சலாய நம
66. ஓம் நாகஸ்ராய நம
67. ஓம் சூரிய ஜோதினி நம
68. ஓம் சூரிஷ்வராய நம
69. ஓம் சகஸ்ர பகுய நம
70. ஓம் சர்வ நய நம
71. ஓம் சர்வ சித்தி புத்தாய நம
72. ஓம் வஜ்ர தம்ஸ்திரய நம
73. ஓம் வஜ்ர நகய நம
74. ஓம் மகாநந்தய நம
75. ஓம் பரம்தபய நம
76. ஓம் சர்வ மந்திரிக நம
77. ஓம் சர்வ யந்திரவித்ரமய நம
78. ஓம் சர்வதந்திர மகாய நம
79. ஓம் அக்தாய நம
80. ஓம் சர்வ தய நம
81. ஓம் பக்த வத்சல நம
82. ஓம் வைசாக சுக்ல புத்யாய நம
83. ஓம் சர நகத நம
84. ஓம் உத்ர கீர்த்தினி நம
85. ஓம் புண்ய மய நம
86. ஓம் மகாத் மய நம
87. ஓம் கந்தர விக்ர மய நம
88. ஓம் வித்ரயாய நம
89. ஓம் பரபுஜ்யாய நம
90. ஓம் பகாவான்ய நம
91. ஓம் பரமேஸ்வராய நம
92. ஓம் ஸ்ரீவத்சம்ஹய நம
93. ஓம் ஜெத்யாமினி நம
94. ஓம் ஜெகன் மயாய நம
95. ஓம் ஜெகத்பலய நம
96. ஓம் ஜெகனாதய நம
97. ஓம் தேவி ரூபா பார்வதியாய நம
98. ஓம் மகா ஹ காய நம
99. ஓம் பரமத் மய நம
100. ஓம் பரம்ஜோதினி நம
101. ஓம் நிர்கனய நம
102. ஓம் நர்கேஷ் ஸ்ரீனி நம
103. ஓம் பரதத்வய நம
104. ஓம் பரம் தமய நம
105. ஓம் ஷா சித் ஆனந்த விக்ரகய நம
106. ஓம் லட்சு-மி நரசிம் கய நம
107. ஓம் சர்வ மய நம
108. ஓம் த்ரய நம

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ கோதை நாய்ச்சியார் தாலாட்டு

September 28, 2019

ஸ்ரீ வில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் வளர்ப்பு புதல்வியான
ஸ்ரீ ஆண்டாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள் எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
காப்புச் செய்யுள் ஸ்ரீ திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது.
இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்புச் செய்யுள்–

சீரார்ந்த கோதையர் மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழ நிதம் பாடவே வேணு மென்று
காராந்த தென் புதுவைக் கண்ணன் திருக் கோயில்
ஏரார்ந்த சேனைய ர்கோன் இணையடியுங் காப்பாமே.

தென் புதுவை விட்டு சித்தன் திருவடியை நான் தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான் கூறத்
தெங் கமுகு மா வாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணி மகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான் செய்த பொற் கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத் தேரும்
ஆராதனத் தழகும் அம் மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பா மாலை பாடி மணி வண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனு தினமும் தான் துதிக்கக்
கச்சு முலை மாதர் கவிகள் பலர் பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனி விளங்கத்
தித்தியுடன் வீணை செக முழுதுந் தான் கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக் கோயில் தான் பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண்டிசை பாடச் 25

செண்பகப் பூ வாசனைகள் திருக் கோயில் தான் வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர் தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம் போடக்
குன்று மணி மாடங்கள் கோபுரங்கள் தான் துலங்கச்
சென்று நெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடை பயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலை சொரியச் செங்குவளை தான் மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ள 35

தேன் குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந் நெல் விளையச் செக முழுதும் தான் செழிக்கக்
கன்னல் விளையக் கமுக மரம் தான் செழிக்க
வெம்புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான் விளையக்
கம்மாய்கள் தாம் பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழையிடை பழுத்து வருக்கைப் பலாப் பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான் சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளி கூவ 45

அன்னமும் பேசும் அழகான தென் புதுவை
தலை யருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக்குளமும்
மலையருவி பாயும் வயல் சூழ்ந்த தென் புதுவைப்
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான்கொழிக்கும் தென் புதுவை 50

காவணங்கள் மேவிக் கதிரோன் தனை மறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுமை மணங்கமழும்
தென்னை மடல் விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிழ் விரியப் புதுவை வனந்தனிலே
சீராரு மெங்கள்விட்டு சித்தர் நந்தவனமதனில் 55

இளந்துளசி முல்லை ஏகமாய்த் தானும் வைத்து
வைத்த பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய்து உவந்திருக்கும் வேளையிலே
பூமிவிண்டு கேட்கப் புகழ்பெருகு விட்டு சித்தன்
பூமிவிண்ட தலம் பார்த்துப் போனார் காண் அவ்வேளை 60

ஆடித் திருப் பூரத்தில் அழகான துளசியின் கீழ்
நாடி யுதித்த நாயகியைச் சொன்னாரார்
அப்போது விட்டு சித்தன் அலர் மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கு 65

மெய்யார்ந்த தாயார் மேன்மைத் துளசி என்றாள்
அப்பேச்சுக் கேட்டு அவரும் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக் கோயில் தான் புகுந்து
புகுந்து மணிவண்ணன் பொன்னடிக் கீழ்ப் பெண்ணை விட்டு
ஊர்ந்து விளையாடி உலாவியே தான் திரிய 70

பெண் கொணர்ந்த விட்டுசித்தன் பெம்மானைத் தானோக்கி
பெண்வந்த காரணமென் பெம்மானே சொல்லுமென்றார்
அப்போது மணிவண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார்
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை 75

உந்தன் மனைக்கே உவந்துதான் செல்லுமென்றார்
சொன்னமொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைக் கையிலேதான் கொடுக்க
அப்போது விரசையரும் அமுதுமுலை தான்கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 80

மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையே தாலேலோ
அன்னமே தேனே அழகே அருமயிலே 85

சொர்னமே! மானே! தோகையரே தாலேலோ
பொன்னே! புனமயிலே! பூங்குயிலே! மான்றுளிரே!
மின்னே! விளக்கொளியே! வேதமே! தாலேலோ,
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார் தம்மாவல்
பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ! 90

மலடி விரசையென்று வையகத்தோர் சொன்ன
மலடுதனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ!
பூவனங்கள் சூழும் புதுவைப் புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்
கண்ணேயென் கண்மணியே! கற்பகமே தெள்ளமுதே! 95

பெண்ணே! திருமகளே! பேதையரே! தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனாபி டேகமே! தெள்ளமுதே!
வானோர் பணியும் மரகதமே! மாமகளே!
என் இடுக்கண் நீங்க ஈங்குவந்த தெள்ளமுதே! 100

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில் 105

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க ளோதி வென்றுவந்த ஆழ்வார்க்குச்
சீதைபோல் வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ! 110

பாமாலை யிட்டீர் பரமர்க்கு என்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதே!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்துப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தை தந்தை யென்று யியம்பும் பெரி யாழ்வார்க்கு 115

வந்து விடாய் தீர்த்தாய் மாதேநீ தாலேலோ!
பொய்கை முத லாழ்வார்க்குப் பூமகளாய் வந்துதித்த
மை விழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாயன் உகந்து மணம் புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 120

சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்வப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்
நாரணனை விட்டுவென்று நம்புமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் 125

பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ!
பாகவத வர்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாகவிடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
தென்புதுவை வாழுந் திருவிட்டு சித்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே! தாலேலோ! 130

சாத்திரங்கள் ஓதும் சத்புருட ராழ்வார்க்குத்
தோத்திரங்கள் செய்து துலங்க வந்த கண்மணியே!
வாழைகளுஞ் சூழ்புதுவை வாழுமெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே! தாலேலோ!
கன்னல்களுஞ் சூழ்புதுவை காக்குமெங்க ளாழ்வார்க்குப் 135

பன்னுதமிழ் என்னாளும் பாடநல்ல நாயகமோ!
பல்லாண்டு பாடும் பட்டர்பிரா னாழ்வார்க்கு
நன்றாக வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்
எந்தாகந் தீர்த்து வேழேழு தலைமுறைக்கும்
வந்தருளுஞ் செல்வ மங்கையரே தாலேலோ! 140

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே
அன்றொருநாள் விட்டுசித்தன் அமுதுமலர் தொடுத்துவைக்கத்
தொடுத்துவைத்த மலரதனைச் சூடியே நிழல்பார்த்து
விடுத்துவைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
அப்போது விட்டுசித்தர் அநுட்டான முதல்செய்து 145

எப்போதும் போல்கோவிலுக் கேகவே வேணுமென்று
தொடுத்துவைத்த மாலைதன்னைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்துமே வாழ்வாரும் நோக்கையில்கி லேசங்கொண்டு
என்னரசி கோதை குழல்போல யிருக்குதென்று
கண்ணாலே கோதையரைக் கட்டியே தானதுக்கிப் 150

பின்பு வனம்புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச்சாத்த
அப்போது மணவாள ஆழ்வாரைத் தான்பார்த்து
எப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே!
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையுந் தான்கூப்பித் 155

துன்றிவளர் கோதையரும் சூட்டியே தானும்வைத்தாள்
அம்மாலை தள்ளி அழகான பூக்கொணர்ந்து
நன்மாலை கொண்டு நாமுமக்குச் சாத்தவந்தேன்
என்றுசொல்ல, மணிவண்ணன் இன்பமாய்த் தான்கேட்டு,
நன்றாக வாழ்வாரே நானுமக்குச் சொல்லுகின்றேன் 160

உன்மகளும் பூச்சூடி ஒருக்கால் நிழல்பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்
அம்மாலை தன்னை ஆழ்வார் நீ ரெடுத்துவந்து
இம்மாலை சாத்தி யிருந்தீ ரிதுவரைக்கும்
இன்றுமுதல் பூலோக மெல்லாருந் தாமறிய 165

அன்றுமலர் கொய்து அழகாகத் தான்தொடுத்துக்
கோதை குழல்சூடிக் கொணர்வீர் நமக்குநிதம்
கீதமே ளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
இன்றுமுதல் சூடிக்கொடுத்தா ளிவள்பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான்பெறுவீர்! 170

என்றுரைக்க மணிவண்ண னேகினர்காண் ஆழ்வாரும்
சென்றுவந்த மாளிகையில் சிறப்பா யிருந்துநிதம்
நீராட்டி மயிர் முடித்து நெடுவேற்கண் மையெழுதிச்
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் 175

சீரான வாழ்வாரைச் சிறப்பாகப் பெண்கேட்க
அப்போது விட்டுசித்தன் அன்பான கோதையரைச்
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலைதான் கொடுத்து
உனக்குகந்த பிள்ளைக்கு உகந்தே மலர்சூடி
மனைக்கா வலனென்று மகிழ்ந்தேத்தி வாழும் என்றார் 180

அவ்வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தையென்று திரும்பியே தானுரைப்பாள்
வையம் புகழய்யா மானிடவர் பதியென்று!
உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர்
இவர்கள் பதியன்றி இரண்டாம் பதியில்லை 185

அவர்கள் தமைத்தாமும் அனுப்பியே வையுமென்றார்
இவ்வார்த்தை கேட்டு இனத்தோர்க ளெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
போனவுடன் விட்டுசித்தன் புன்னை புனமயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார் 190

ஒப்பில்லாநோன்பு உகந்துதா னேற்கவென்று
மணிவண்ண னைத்தேடி மனக்கருத்தை யவர்க்குரைத்துப்
பணிசெய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான்கேட்க
மகிழ்ந்து மணிவண்ணன் மகிழ்ந்து மறையோர்க்குப்
புகழ்ந்துதான் உத்தரவு பிரியமாய்த் தான்கொடுக்க 195

உத்தரவு வாங்கி உலகெல்லாந் தான்நிறைய
நித்தமோர் நோன்பு நேர்த்தியாய்த் தான்குளித்து
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போற்றி மணம்புணர வேணுமென்று
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை 200

சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான்பாடி
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூமாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைந்திருக்க
மாயவனும் வாரார்மலர் மாலைகளுந் தாராமல்
ஆயன்முகங் காட்டாமல் ஆருமனுப்பாமல் 205

இப்படிச் செய்தபிழை யேதென்று நானறியேன்
செப்புங்கள் தோழியரே! திங்கள்முகக் கன்னியரே,
தோழியருந் தாமுரைப்பார் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம்புணர்வான்
என்றுசொல்லக் கோதையரு மிதயங் குழைந்து நிதம் 210

அன்றில் குயில்மேகங்கள் அரங்கருக்குத் தூதுவிட்டார்,
தூதுவிட்டு[ம்] வாராமல் துய்யவட வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனிமேல் மனஞ்சகியேன்
என்று மனம்நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்றுவந்து தோழியர்கள் செப்பவே யாழ்வார்க்கு 215

அச்சேதி கேட்டு ஆழ்வார் நடுநடுங்கிச்
சென்றுவந்து பிள்ளைவிடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வைத்திருந்தால் மோசம்வரும்
என்று திருமகளை எடுத்துச் சிவிகைவைத்துச்
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 220

நல்லநாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்து தென் காவிரியில்
நீராட்டஞ் செய்து நொடிப்போதில் செபமுஞ்செய்து
சீராட்ட வந்து திருமகளைத் தான்தேட
பல்லக்கில் காணாமல் பைந்தொடியுங் காணாமல் 225

எல்லோருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார்
நின்று மனம்நொந்து நாற்றிசையும் தான்தேடிச்
சென்று திருவரங்கந் திருக்கோயில் தான்புகுந்து
ஒருமனையா ளுடனேயே உலகளந்த மாயவனும்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய் 230

என்று சொல்ல வாழ்வாரு மிரங்கித் திருவரங்கர்
சென்றுங்களையர் திருவடியைத் தான்தொழுவீர்
அப்போது கோதையரும் அரங்கர் மடியைவிட்டு
எப்போது மைய ரிணையடியைத் தான்தொழுவார்
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும் 235

வாழ்த்தி யெடுத்து மகிழ்ந்து வரங்கருக்கும்
வாழிமுதல் பாடி மங்களமுந் தான்பாடி
ஆழிநீர் வண்ண அழகாய் மணம்புணர்வாய்
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் அரங்கர்தமை
மன்றல்செய்ய வாருமையா மணவாளா வென்றுரைத்தார் 240

பங்குனி மாதம் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்குரஞ் செய்து அழகாய் மணம்புணர
வாருமையா வென்று மகிழ்ந்தேத்தி யரங்கரையும்
சீரணிந்த கோதையையுஞ் சிறப்பாகத் தானழைக்க
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடைகொடுத்து 245

தப்பாமல் நான்வருவேன் சீர்கோதை தன்னோடும்
என்றுசொல்ல ஆழ்வாரும் ஏகினார் வில்லிபுத்தூர்
சென்றுதிரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
கோதையர்க்கு மன்றல் கோலமாய்ச் செய்யவென்று
சீதையர்க்கு மன்றல் சிறப்பாகச் செய்யவென்று 250

ஓலையெழுதி உலகெல்லா மாளனுப்பி
கரும்பினால் கால்நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்டு
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்கவிட்டு
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான்போட்டு
மாங்கனிகள் தூக்கி வருக்கைப் பலாதூக்கித் 255

தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து
மேளமுடன் மத்தளமு முரசமுந் தானடிக்கக்
காளமுடன் நாதசுரம் கலந்து பரிமாற
வானவர்கள் மலர்தூவி வந்து அடிபணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த, 260

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர்தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரைகள் தாம்போட
இரத்னமணி யாசனமும் இரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்,
ஆழ்வார் கிளையும் அயலோர்கிளை யெல்லோரும் 265

ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்றவந்தார்
தூபங் கமழத் தொண்டர்களுந் தாம்பாட
தீபந் துலங்கத் திருவைண வோரிருக்க
வேதந் துலங்க மேன்மேலுஞ் சாத்திரங்கள்
கீத முரைக்கக் கீர்த்தனங்கள் தாமுழங்க, 270

வாத்தியார் புல்லெடுத்து மறைகள் பலவோதிப்,
பூரண கும்பமுதல் பொற்கலசந் தானும்வைத்து
நாரணனைப் போற்றி நான்மறைகள் தாமோத
இப்படிக்கு வாழ்வாரு மெல்லோருங் காத்திருந்தார்
சற்புருடர் வாராமல் தாமதமாய்த் தாமிருக்க, 275

கொற்றப்புள் ளேறிரங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கு ஊதி வில்லிபுத்தூர் தன்னில்வந்து
மணவாள ராகி மணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தனங்கொடுத்தார்
ஆடைமுத லாபரணம் அணிமுலைப் பாற்பசுக்கள் 280

குடைமுதல் தானங் கொடுத்து நிறைந்தபின்பு
மந்திரக் கோடி யுடுத்து மணமாலை
அந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தலின்கீழ் 285

கைத்தலம் பற்றிக் கலந்து பெருமாளும்
ஆழ்வாரும் நீர்வார்க்க அழகான கையேந்தி
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு முண்டு கழித்துமே வாங்கிருந்தார் 290

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பஞ்சிலை நாணல் படுத்து பரிதிவைத்து
ஓமங்கள் செய்து ஒருக்காலும் நீர்தூவி
காசு பணங்கள் கலந்துதா னங் கொடுத்து 295

தீவலஞ் செய்து திரும்பி மனையில்வந்து
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பர்த்தாவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதித்து அருந்ததியுந் தான்பார்த்து 300

அரிமுதல் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்து பம்ப போற்றி மறையோரை
அட்சதைகள் வாங்கி அரங்கர் மணவறையில்
பட்சமுடனிருந்து பாக்கிலையுந் தான்போட்டுக்
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் 305

சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்
அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது
என்று பெரியாழ்வார் இளகி மனமகிழ்ந்து
குன்று குடையெடுத்த கோனை மகிழ்ந்துநிதம், 310

வாழிமுதல் பாடி மங்களமுந் தான்பாடி
ஆழிமுதல் பாடி ஆழ்வாரும் போற்றி நின்றார்
வாழும் புதுவைநகர் மாமறையோர் தாம்வாழி!
ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தாம்வாழி!
கோதையரும் வாழி! கோயில்களும் தாம்வாழி! 315

சீதையரும் வாழி! செகமுழுதும் தாம்வாழி!

கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

——————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வைஷ்ணவம் -பரிபாடலில் -. திருக்குறளில் -சில பாடல்கள்–

September 25, 2019

பரிபாடல் தொல்காப்பியத்துக்கும் முன் என்பர் –
இளம் பெரு வழுதியார் –கடுவன் இள வெழியநியார் -கீரந்தையார் -நல்லேழினியார் – ஆகிய நால்வரும்
இயற்றியவை –பரி மேல் அழகர் உரை உண்டு -( ஸ்ரீ சூர்ய நாராயண சாஸ்திரி )
திருப்பரங்குன்றம்-திருமாலிருஞ்சோலை பற்றி உண்டே

இரண்டாம் சங்கம் -3700–வருஷங்கள் மூன்றாம் சங்கம் -1850-வருஷங்கள் -அது முடிந்து -1000-வருஷங்கள் முடிந்தன –
இரண்டாம் சங்கத்துக்கு –துவரைக் கோமான் -ஸ்ரீ கிருஷ்ண பகவானே இருந்ததாக உண்டாம்

திருமாற்கு இரு நான்கு செவ்வேளுக்கு முப்போதொரு பாட்டு காட்டுக்கு ஓன்று
மருவினிய வைகை இருபத்தாறு மா மதுரை நான்கு என்பர் செய்ய பரிபாடல் திறம் —

திருமாலுக்கு -8-/ செவ்வேல் முருகற்கு –31-/காட்டுக்கு -1-/ வைகை ஆற்றுக்கு -26-/மதுரைக்கு -4-ஆக -70-
இப்பொழுது -33-மட்டுமே உண்டு -இவற்றில் -22-ஓலைச்சுவடியில்
(இந்த -22-பாடல்களில் –திருமாலுக்கு -6-முருகனுக்கு -8-வைகைக்கு -8-)
மீதம்-11- நச்சினார்க்கு இனியார் உரைகளிலும் உள்ளவை-(இவற்றுள் -1-திருமாலுக்கு -6-முருகனுக்கு -4 வைகைக்கு -)

இந்த -7-பாடல்கள் திருமாலுக்கு -இவற்றுள் -6-திருமாலிருஞ்சோலை அழகருக்கும் -1-இருந்தையூர் பெருமாளுக்கும்

சோழ வர்மன் -சிபி -இஷுவாகு வம்சம்
நாவலம் தீவை சிலப்பதிகாரமும் சொல்லும்

————————

“செய்யாட் கிழைத்த திலகம்போல் சீர்க்கொப்ப
வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது
பொய்யாதலுண்டோ மதுரை புனைதேரான்
வையை உண்டாகும் அளவு. “–பரிபாடல் திரட்டில்

(திருமகளுக்கு இட்ட திலகம் போல, ஒப்பனை செய்யப்பட்ட பாண்டியனது வையை ஆறு மதுரை மாநகரத்துக்கு இட்ட திலகம் போன்றது.
அந்த ஆறு உள்ள வரையிலும் மதுரை மாநகர் சீர் பெற்று புகழ் பரப்பி விளங்கும் என்பது பொய்யாகுமோ? )

—————-

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரி சில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

(எமது அழகிய மதுரை , மாயோனது கொப்பூழில் மலர்ந்த தாமரையை ஒக்கும் . மதுரையின் தெருக்கள் அத்தாமரையின் இதழ்களை ஒக்கும் .
மதுரையின் நடுவில் அமைந்துள்ள அண்ணல் கோயில் அம்மலரின் நடுவில் உள்ள தாதை ஒக்கும் . சுற்றி வாழும் தண்டமிழ் மக்கள் ,
அந்தத் தாதின் மகரந்தத் தூளை ஒப்பர் . அவரை நாடி பரிசில் பெற வரும் இரவலர் , அந்த மகரந்தத்தை உண்ண வரும் பறவைகளை ஒப்பர் .
அந்தத் தாமரைப் பூவின் கண் தோன்றிய பிரம்ம தேவனின் நாவிலே தோன்றிய நான் மறைகளை , வைகறைப் பொழுதில் ஓதும் இசையே ,
மதுரை மாநகர மக்களாகிய எங்களைத் துயிலேழுப்புமே தவிர , சேரனது வஞ்சியும் , சோழனது கோழியும் (உறையூர்)
கோழியின் குரல் கேட்டு தூக்கம் கலைவது போல் அல்ல , நாம் வாழும் ஊரே . வாழிய இவ்வூரே.)

—————-

கடவுள் வாழ்த்து –கீரந்தையார் பாட்ட-நன்னாகனாரிசை–பண்ணுப்பாலை யாழ்.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலோடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச்
சேய் உயிர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை –5-

எரி மலர் சினை இய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனித்
திரு ஜெமிர்ந்து அமர்ந்த மார்பனை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை -10-

சேவல் அம் கொடியோய் –

நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20

றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.(இவை நான்கும் அராகம்)

சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
‘பொருவேம்‘ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:(இது ஆசிரியம்)

அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35(இது பேரெண்)

அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.(இது ஆசிரியம்)
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50

நிலனும், நீடிய இமயமும், நீ.(இவை ஆறும் பேரெண்)
அதனால்,( இது தனிச் சொல் )
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55

மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!(இது சுரிதகம்)
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,( இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)
ஆங்கு,( இது தனிச் சொல் )
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை–65-

யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68(இது சுரிதகம்)

——————

பாடல் 01–
ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை
தீ உமிழ் திறலோடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச்
சேய் உயிர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை –5-

எவ்வுயிருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இயல்பை உடைய , சினத் தீயை உமிழுகின்ற படம் விரிந்த
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷன் உன் தலை மீது நிழலாக இருக்கிறான் .
திருமகள் வீற்றிருக்கும் மலர் மார்பினை உடையவன் நீ.
குற்றமில்லா வெண்மையான சங்கினைப் போன்ற நிறத்தையும், மிக உயர்ந்த மூங்கில் கம்பின் உச்சியில் கட்டப்பட்ட
யானைக் கொடியினை உடையவனும், கூர்மையாகவும் , வளைந்தும் இருக்கும் கலப்பையினை உடையவனும்,
ஒற்றைக் குழையை அணிநதவனுமாகிய பலதேவனாகவும் நீ விளங்குகின்றாய்.

எரி மலர் சினை இய கண்ணை பூவை
விரி மலர் புரையும் மேனியை மேனித்
திரு ஜெமிர்ந்து அமர்ந்த மார்பனை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை -10-
சேவல் அம் கொடியோய்

கருடச் சேவல் கொடியைக் கொண்டவனே! தாமரை போன்ற அழகிய கண்களை உடையவன் நீ .
காயாம் பூவினது நிறத்தை உடையது உன் மேனி.
அத்திரு மேனியின் கண், திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம்
கௌஸ்துப மாலையை உடையவன் நீ.
கரிய மலையைச் சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல, பொன்னிற ஆடையை உடுத்தி உளாய்.

நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நாவன்மை உடைய அந்தணர் உணர்தற்குரிய அரு மறைப் பொருளே !
நினது அருளாலே உனது வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள், உன்னுடைய அருள் தழுவுதலாலே
நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற வல்லவர்கள் ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).
தம் அறியாமையினாலே உன்னோடு போர் செய்வோம் என்று வந்த அவுணர்களுடைய வலிமை கெடும் வண்ணம்,
போரின் கண் வென்ற குற்றமற்ற தலைமை உடைய அண்ணலே !

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20-

காமன், சாமன் என்னும் இருவருடைய தந்தையே !
விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்தவனே !
உன் வரவினை, (அவதாரத்தை அல்லது வரலாற்றை ) விளக்கமாக அறிந்து கொள்ளுதல் என்பது,
மயக்கம் தீர்ந்த தேர்ச்சி பெற்ற முனிவருக்கும் அரிதானது!
அப்படிப்பட்ட இயல்பினை உடையவனே !
முனிவர்களுக்கே அப்படி என்றால், நீ எப்படிபட்டவன் என்று உரைப்பது எங்களுக்கு மட்டும் எப்படி எளிதாகும் ?
அழகிய தாமரை மலரின் கண் வீற்றிருக்கும் திருமகளை மார்பினிலே தாங்கியுள்ளவனே!
அறிவதற்கு இயலாதது உன் வரலாறு என்று நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் ,
உன் மேல் எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும் பெருமையுடையது என்பதால், நாங்கள் கூறுவதை சிறுமை உடையது
என்று நீ கருதி எங்களை வெறுத்து விடாமல் அருள வேண்டும்.

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

வெற்றி மிகுந்த பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும்,
நின் அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;
நன்னெறியில் செல்லும் திறனில்லாதவரை, அந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும் நீயே;
அவ்வாறு திருத்துவதால், உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;
அழகும், எழுச்சியும் உடைய வானத்தின் கண் அணிபெற விளங்கும் ஒளிதரும் நிலவும் நீ;
சுடுகின்ற சுடரை உடைய சூரியனும் நீயே.

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50

நிலனும், நீடிய இமயமும், நீ.(இவை ஆறும் பேரெண்)
அதனால்,( இது தனிச் சொல் )
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,

ஐந்து தலைகளைத் தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும்,
கடத்தற்கரிய திறமையையும், வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவ பெருமானும் நீயே;
அவனால் செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே;
நன்மை தருகின்ற, குற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;
பூவின் மேல் இருக்கும் பிரம்மனும் நீ;
அவன் செய்யும் நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே;

வானின் கண் உயரும் மேகமும் நீ;
மாகம் என்னும் வானமும் நீ;
இந்தப் பூமியும் நீ;
நீண்டு நெடிதுயர்ந்த இமயமும் நீயே.
நீ இவரைப் போன்றவன், இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு காணப்படாமையால்,

பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!(இது சுரிதகம்)
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60

பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும் ஆள்வதற்கு அடையாளமாக
நின் வலப் பக்கத்தே ஏந்தி, நிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால், உனக்கு ஒப்புமை நீயேதான்!
உன் புகழ்தான் உனக்கு ஒப்புமையானது.
புள் என்னும் கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.
முறுக்கிய சங்கினை உடையவன் நீ.

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,( இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)
ஆங்கு,( இது தனிச் சொல் )
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை–65-
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68(இது சுரிதகம்)

இகழ்வாராகிய பகைவரை வென்று, கொன்று என்று தக்கவாறு செயல் புரியும்
மாறுபாட்டினை உடைய சக்கரப்படையை உடையவன் நீ.
கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை உடைய திருமேனியை உடையவன் நீ.
அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.
என இவ்வாறு கூறி, நாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு ஒன்று கூடி,
உன் திருவடியில் இணைந்து, என்றும் இந்தத் திருவடி விளங்குவதாக,
பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.
வாய்மொழிப் புலவனே!
வாய்மொழியாகச் சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!
உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் .

———————
பாடல் 02
(வராக கற்பம்)
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்

(திருமாலின் நிலைகள் )
நீயே, ‘வளையொடு புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்‘ என்போர்க்கு இளையை ஆதலும்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.

(திருமாலின் சிறப்பு)
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35

————-

பாடல் 03 (மாஅயோயே)பாடியவர் -கடுவன் இளவெயினனார்/இசையமைத்தவர்–பெட்டனாகனார்/பண் -பாலையாழ்

மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை
‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை,
இரு கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60
ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80
நால் வகை வியூகம்
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
பல திறப் பெயரியல்புகள்
இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

—————

இரணியனைத் தடிந்தமை )

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20

தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை
புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35

(கருடக் கொடி )
சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

(பகையும் நட்பும் இன்மை )
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்‘ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

———–

பாடல் 13 (மணிவரை)பாடியவர் –நல்லெழுதியார்/ இசையமைத்தவர் பெயர் அறியப்படவில்லை/பண் -நோதிறம்

(திருமாலைத் தொழுவார் பெறும் பேறு)
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்–
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் –தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.

(எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை)
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20
நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25

(பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்)

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்–
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்–
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35
இலங்கு ஒளி மருப்பின் களிறும் — ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

(புகழ்ந்து போற்றுதல் )
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும், 40
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்–அருள், செறல், வயின் மொழி; 45
முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை– 50
அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55
வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!– 60
அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்–
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64

———————-

பாடல் 15 (புலவரை)-பாடியவர் -இளம்பெருவழுதியார்/இசையமைத்தவர் -மருத்துவன் நல்லச்சுதனார்/பண் -நோதிறம்
(திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு )

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், 5
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று–அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே: குல வரை சிலவினும் 10
சிறந்தது–கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.

(‘திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துக’ எனல்)
அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்–
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்–
நாமத் தன்மை நன்கனம் படி எழ, 25
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!

(மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம்)
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் 30
சினையெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.

(சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல்)
சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே–
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.

(குன்றத்தில் பிறக்கும் ஓசைகள் )
மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, 40
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது–ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. 45

(குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்)
தையலவரொடும், தந்தாரவரொடும்
கைம் மகவோடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்–
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.

(பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல்)
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; 55
புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய அம்பினவை; 60
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
என ஆங்கு-
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
‘இருங்குன்றத்து அடி உறை இயைக!‘ என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. 66

—————

வான் ஆர் எழிலி மழை வளம் தந்த
தேன் ஆர் சிமைய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர் கொள்ள ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வா
நின் திருந்து அடி தலை உறப் பரவுதும் தொழுது –

(முகில் மலையின் கண் மழையை மிகுதியாகப் பொழிய ,
அந்நீர் நான் மாடக் கூடலில் உள்ள மக்கள்
விரும்பி எதிர் கொள்ளும்படி வருகின்ற துறையிடத்தே உள்ள
இருந்தையூர் என்னும் பதியில் எழுந்தருளியுள்ள செல்வ (திருமாலே )!
நின் திருவடியைத் தொழுது வாழ்த்துகின்றோம் .)

இருந்து அருளும்-செல்வன் -திரு நிறை மார்பன் -ஸ்ரீ கூடல் அழகர்- பெருமாள் பெயராலே திவ்ய தேசப் பெயர்
“செல்வனைப் போலத் திருமாலே ! நானும் உனக்குப் பழவடியேன் ”,
நான் மாடக் கூடல் -மதுரைக்கு முன் நாள் திரு நாமம்

இரும் துறையூர் –நீராடும் துறை
“ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும்
நீடு நீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள் ..” (மதுரைக் காண்டம் – துன்ப மாலை–சிலப்பதிகாரம் ஸ்ரீ இருந்த வளமுடையார் —

வானின் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணரர் பாற்று -திருக்குறள் –
இங்கும் மருந்து என்கிறதே

நின் திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.-திருந்தடி – திருத்தமான அடி
திருந்தடி எம் தலை மீது பொருந்தும் வண்ணம் , உன்னைத் துதித்து வணங்குகின்றோம்
இருக்கும் நிலையில் இருந்து , மேம்பட்ட நிலைக்கு , திருத்தி எடுத்துச் செல்லும் அடியாக இருந்ததனால் , அது திருந்தடி ஆயிற்று எனலாம் .
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் “.(ஆழ்வார்)
மகாபலியின் தலை மீது தன் அடி வைத்து அவனை அடக்கவும் செய்தார் , ஆட் கொள்ளவும் செய்தார் .
ஆட் கொண்டதன் பயனாக , அடுத்த மன்வந்திரத்தில் , அவனுக்கு இந்திர பதவியும் அருளினார் .

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதர்கெந்ட்ரு
எந்நாளும் நின்றிமையோர்கள் ஏந்தி இறைஞ்சி யினமினமாய் ,
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே ,
மெய்ன்னான் எய்தி என்னாளுன் அடிக்கண் அடியேன் மேவுவதே ?”(ஆழ்வார்)

ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.

(இருந்தையூரின் ஒரு பக்கத்தில் ,வேங்கையும் , வெண் கடம்பும் , மகிழ மரமும் ,அரும்புகள் மலர்ந்த நிலையில்
மற்றும் பல மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க ,நீல நிறம் கொண்ட மலை உள்ளது .)
இவ்வாறு இருந்தையூரின் மலை வளம் சொல்லப்படுகிறது .

ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.

( இருந்தையூரின் மற்றொரு பக்கம் , விண்ணென விரிந்த நீர் நிலைகள் உள்ளன .
அவற்றின் கண் உள்ள தாமரைப் பூக்களின் நடு நடுவே , வண்டுகள் தேன் பருக விரும்பி ஆர்பரித்துக் கொண்டிருக்கும் .
ஆங்கே , கயல் மீன்கள் விண் மீன்களைப் போல ஒளி வீசிக் கொண்டிருந்தன )இவ்வாறு இருந்தையூரின் நீர் வளம் சொல்லபடுகிறது .

ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையடு மாறுஉற்று
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து
திரி நரும், ஆர்த்து நடுநரும், ஈண்டித்,
திரு நயத்தக்க வயல்.

(இருந்தையூரின் மற்றொரு பக்கம் ,கருப்பஞ்சாறு பிழியப்படும் ஒலியுடன் , கள்ளுண்டு – அதனால் அறிவிழந்து திர்பவர்களும் ,
அந்த சாறு பிழியப்படும் ஒலிக்கு மாறு பட்டு ஒலிக்கும் வண்ணம் , ஏர் மங்கலப் பாட்டுப் பாடி வயலில் நாற்று
நட்டு வேலை செய்யும் ஆண்களும் , பெண்களும் இருக்கும் ,திரு எனப்படும் திருமகளும் விரும்பத் தக்க வயல் நிலைமைகள் .)
இவ்வாறு இருந்தையூரின் நில வளம் சொல்லபடுகிறது.

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)-வந்தே மாதரம் -மஹா கவி பாரதியார்

ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,
அறத்திற் திரியா பதி.

(இருந்தையூர் என்னும் அந்நகரத்தின் ஒரு புறம் , அற வழியில் நின்று , வேதத்தை நன்குணர்ந்து , முற்றிய தவத்துடன் ,
மாறாப் புகழுடன் அந்தணர்கள் வாழ்தலானே, ஏனையோரும் தத்தமக்குரிய அற ஒழுக்கத்தினின்று பிறழாமல் வாழும் ஊராக இருந்தது .)
இங்கே கேள்வித் திறத்தின் திரிவில்லா அந்தணர் என்று – வேதம் மற்றும் ஞான வழியில் தவறாத அந்தணர்கள் என்று காட்டுகிறது .
எங்கே அந்தணர்கள் நெறி தவறாமல் வாழ்கிறார்களோ , அங்கே மற்றவர்களும் , நெறி தவறாமல் வாழ்வார் என்று கூறப்படுகிறது .

ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல்
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
புண்ணிய வணிகர் புனை மறுகு

(அங்கே மற்றொரு பக்கத்தில் , உண்ணக்க்கூடியவையும் , பூசக்கூடியவையும் , பூணக் கூடியவையும் , உடுக்ககூடியவையும் ,
மஞ்சனமாடக் கூடியவையும் ஆகிய பொருட்களையும் , மேலும் பொன் , மணி மற்றும் மலையில் கிடைத்த பொருட்கள் ,
கடலில் கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் , பட்டாலும் , பருத்தியாலும் நெய்த துணிமணிகளை விற்கும்
வணிகர்கள் வாழும், அழகாகப் புனையப் பட்ட தெருவும் இருந்தது .)

ஒருசார்
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை

(ஒரு புறம் , மென்புலம் என்னும் மருத நிலத்திலும் , மற்றும் ,வன்புலம் என்னும் குறிஞ்சி, முல்லை நிலத்திலும்
தொழில் செய்யும் களமர் மற்றும் உழவர் வாழும் இடம் இருந்தது . இருந்தையூர் என்னும் அந்தப் பதியில்,
இம்மக்கள் அனைவரும் கூடி இன்பமாக வாழ்ந்து வந்தனர் .)

விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.

இரு கேழ் – இரண்டு விதமாக கருமை நிறம் உடைய /உத்தி – பாம்பினது படத்தின் கட்பொறி /எருத்தின்– கழுத்து–

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, .
விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரி வுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச்
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

(வண்டும் , தும்பியும் யாழிசையுடன் போட்டி போட்டுக் கொண்டு இசை பரப்ப , கரு மேகங்களும் அதிரடியுடன் ஒலிக்க,
அதற்குப் போட்டியாய் அருவிகளும் ஒலி எழுப்ப, அந்த இசைப் பின்னணியில் , மை தீட்டிய பெண்களுடன் ,
மணம் கமழும் மலர் மாலைகளை அணிந்த ஆடவரும் , பாடிக் கொண்டும் , ஆடிக் கொண்டும் இருக்க , பலவகைப் பட்ட விருப்பங்களுடனும் ,
விரும்பியவற்றைப் பெற்ற மகிழ்ச்சியுடனும் , பலரும் வணங்கும் வண்ணம் ஆங்கே தலை மீது சிறப்பாக அணிவகைகள் செய்தவண்ணமும்,
பூமகளைத் தன் தலை மீது அணிந்தவருமான நாகர் வீற்றிருக்கும் நகரமாக , அந்த செல்வன் நகர் திகழ்ந்தது .)

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல்.
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ்
தெரி அரி மது மகிழ்பு அரி மலர்
மகிழ் உண்கண், வாணுதலோர்-
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடுங் கடாக் களிற்று
அண்ணலவரோடு,
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்
குளவாய் அம்ர்ந்தான் நகர்.

(நீல மணி போன்ற நிறத்தினையும் அழகினையும் , கூறாகப் பிரித்து , அழகு படுத்தப பட்ட கூந்தலையும் , தெளிவான ஒலி எழுப்பும்
நெகிழ்ந்த சிலம்பினையும், வண்டுகள் மது உண்ணும் மலர் போன்ற அழகிய கண்களையும் , ஒளி பொருந்திய நெற்றியையும் , அழகாலும் ,
நடையாலும் மயில் போலவும் , அவற்றினின்று மாறுபட்டும் விளங்கும் பெண்கள் , மத யானை நடை உடைய தங்கள்
கணவன்மாரோடு , இணைந்து , அழகுபட வந்து , தங்கள் துன்பமும் , பிணியும் தீர்ந்து , நல்லவற்றை எல்லாம் தரவல்ல ,
தொன்று தொட்டு புகழ் உடைய மலையின் அடிவாரத்தில் , கல் சேர்ந்து கிடக்கும்
குள வாய் என்னும் நகரில் அமர்ந்த அந்த இறைவனைத் தேடி வருவார் .)

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, .
விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரி வுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச்
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

(வண்டும் , தும்பியும் யாழிசையுடன் போட்டி போட்டுக் கொண்டு இசை பரப்ப , கரு மேகங்களும் அதிரடியுடன் ஒலிக்க,
அதற்குப் போட்டியாய் அருவிகளும் ஒலி எழுப்ப, அந்த இசைப் பின்னணியில் , மை தீட்டிய பெண்களுடன் , மணம் கமழும்
மலர் மாலைகளை அணிந்த ஆடவரும் , பாடிக் கொண்டும் , ஆடிக் கொண்டும் இருக்க , பலவகைப் பட்ட விருப்பங்களுடனும் ,
விரும்பியவற்றைப் பெற்ற மகிழ்ச்சியுடனும் , பலரும் வணங்கும் வண்ணம் ஆங்கே தலை மீது சிறப்பாக அணிவகைகள்
செய்தவண்ணமும், பூமகளைத் தன் தலை மீது அணிந்தவருமான நாகர் வீற்றிருக்கும் நகரமாக , அந்த செல்வன் நகர் திகழ்ந்தது .)

ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,
அறத்திற் திரியா பதி.

(இருந்தையூர் என்னும் அந்நகரத்தின் ஒரு புறம் , அற வழியில்நின்று , வேதத்தை நன்குணர்ந்து , முற்றிய தவத்துடன் ,
மாறாப் புகழுடன் அந்தணர்கள் வாழ்தலானே, ஏனையோரும் தத்தமக்குரிய அற ஒழுக்கத்தினின்று பிறழாமல் வாழும் ஊராக இருந்தது .)

ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உண்டாம் இதில் -கடலில் இழந்த பின்பு மதுரையை பாண்டியர் நிர்மாணம் செய்தர் என்பர்
ஆகவே தான் இன்றும் நவகிரஹ சந்நிதி கூடல் அழகர் கோவிலில் உண்டே

————

திருக்குறள் -ஸ்ரீ கீதார்த்தம்

ஸ்திதிப்ரதஞ்ஞன் -மத்பாவம்
அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

திருக்குறள் – கடவுள் வாழ்த்து-பத்து பாட்டுக்களில் ஏழிலும் திருவடி

(1) ‘வாலறிவன் நற்றாள் ’ (குறள்-1) – நற்றாள் “நல்ல அடி ” -“
அடலாழி கொண்ட அறிவன் ” (ஆழ்வார்)
(2) “மண்மிசை ஏகினான் மாணடி” (குறள்- 3) – மாணடி “மாட்சிமை பொருந்திய அடி ” –
“மனனக மலமற மலர்மிசை எழுதரு மனனுணர் வளவிலன் ”(ஆழ்வார்).
(3) “வேண்டுதல் வேண்டாமை இலானடி ” (குறள் 4) –
“கொள்கை கொளாமை இலாதான் என் கலி ராகமிலாதான் ” (ஆழ்வார்)
(4) “தனக்குவமை இல்லாதான் தாள் ” (குறள்- 7) –
“தன்னோப்பாரில்லா அப்பன் ” (ஆழ்வார்)
(5) “அறவாழி அந்தணன் தாள் ” (குறள்- 8) –
“அறவனை ஆழிப்படை அந்தணனை ” (ஆழ்வார்)
(6) எண்குணத்தான் தாள் ” (குறள்- 9) – -(-வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -ஞானம் -பலம் -பிராப்தி -பூர்த்தி–பரிமேலழகர் உரை )
(7) “பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி ” (குறள் -10)
திருக்குறள் இரண்டு அடிகளால் அறம் பொருள் இன்பம் மூன்றையும் விவரிக்கும் –
குறளன்- வாமனன் இரண்டு திருவடிகளாலே அனைத்தையும் அளந்தான்

மடியிலா மன்னவன் எய்தும் உலகு அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு -சோம்பல் இல்லாத அரசன்
உலகு அளந்த உலகங்கள் எல்லாம் எய்துவான் -குறள்
ஒரு குறள் பாடும் குறள் பாடும் -வாமனன் பற்றிய குறள் –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மன் நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் –ஸ்ரீ மெய் விரத மான்யம் —

July 31, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————————————

சத்யவ்ரத மஹாத்ம்யம் –மெய் விரதம் -சத்ய விரதம் –29-பாசுரங்கள் கொண்ட பிரபந்தம் –
ஒரு பாசுரத்தால் ஸ்ரீ பாஷ்யம் -16-பாதங்கள் அர்த்தங்களையும் அருளிச் செய்கிறார் –

———

1687 முதல் –22 ஆண்டுகள் –உடையார்பாளையம் –ஒவ்ரங்க சீப் –
போதேந்த்ர சங்கராச்சாரியார் -பங்கார காமாச்சி -செஞ்சி கோட்டை முற்றுகை போராட்டம் –
பழைய சீவரம் கல்லைக் கொண்டு மூலவர் –
தானே காட்டக் கண்டார்கள் பின்பு-
அர்ச்சகர் கனவில் -யாக தீ சுடர் தாபம் -திருவால வட்டம் அருளினார் முன்பு ஸ்ரீ திருக்கச்சி நம்பி –
குளிர்ச்சியாக இருக்க வழி-ஜல நிவாஸம் தானே இருக்க அருளிச் செய்தானாம்
உடையார்பாளையம் -உத்சவ மூர்த்திகள் –1687-சென்று -1710-மீண்டு வந்தது பற்றிய கல் வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளதே
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் உதவியால் -1710-காஞ்சிக்கு மீண்டும் உத்சவரை எழுந்து அருள பண்ணி வந்தார் —
பங்குனி உத்திரட்டாதி நக்ஷத்ரம் பிரதிஷ்டை-கல்வெட்டு உண்டு

1781 -ஜூலை 31 -முதலில் எடுக்கப்பட்டதாக கல்வெட்டு
கிருதயுகம் ஹஸ்திகிரி அப்பன்
த்வாபர யுகம் -ஸ்ரீ ரெங்கம்
த்ரேதா யுகம் –புருஷோத்தம க்ஷேத்ரம்
கலியுகம் கலவ் வேங்கடம்
1937–1979–2019-ஏறக்குறைய -40-ஆண்டுகள் -எடுக்கப்பட்டதாக அறிகிறோம்-

கிடந்த கோலத்துடன் முதலிலே ஸ்ரீ ராமானுஜருக்கு விந்தியா பர்வதத்தில் –
வேடன் வேடுவிச்சி -ரூபத்தில் சேவை உண்டே

———————

யஸ்ய பிரசாத கலயா பதிர ஸ்ருனோதி பங்கு பிரதாவதி ஜலேந ச வக்தி முக
அந்த ப்ரபஸ்யதி ஸூ தம் லபதேச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி –ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

ஸ்ரீ பேர் அருளாளர் அனுக்ரஹத்தினால் -செவிடனும் செவி பெற்று -முடவனும் விரைந்தோடி -ஊமையும் பேசி –
குருடனும் கண்டு மாலதியும் குழந்தை பெறும் படி -அவரைத் தஞ்சமாகப் பற்றினேன் -ப்ரத்யக்ஷம் ஆதி அத்தி வரதர் வைபவத்தில் –

——————————-

ஸ்ரீ மெய் விரத மான்யம் -என்றும் அருளிச் செய்வர் இந்த பிரபந்தத்தையே

———————

இந்திரனுடைய வாஹனமான ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலை ரூபமாகவே
எம்பெருமானைத் தரித்துக் கொண்டு இருப்பதாலும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பகவானுடைய திருவடித் தாமரைகளிலே
தாமரை புஷபங்களை ஸமர்ப்பித்து உஜ்ஜீவித்த படியாலும்
திக்கஜங்கள் ஆராதிக்கும் க்ஷேத்ரம் ஆகையாலும்
ஸ்ரீ ஹஸ்திகிரி என்ற திருநாமம்

————————

வாழி அருளாளர் வாழி யணி யத்திகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதி என்னும் சார்வுடன் மற்று ஒன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு –1–

வாழி யருளாளர் வாழி யணி யத்திகிரி வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி —
பேர் அருளாளர் வாழ்க -பூமிக்கு அலங்காரமான ஸ்ரீ ஹஸ்திகிரி வாழ்க –
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க
சரணாகதி எனும் சார்வுடன் மாற்று ஒன்றை யரணாகக் கொள்ளாதார் அன்பு -பிரபத்தி என்னும்
உபாயத்துடன் வேறு ஒன்றை உபாயமாக
கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க -என்று மங்களா சாசனம் செய்தவாறு –

பேர் அருளாளர் -மிகுந்த கிருபையாலேயே ஆள்பவர் -ரக்ஷிப்பவர் -இதுவே நிரூபிக்கப் படுபவர்
உயர்வற உயர் நலம் யுடையவன் -என்றவாறு
கிருபையினால் ஆளப்பட்டவர் என்றுமாம் -அதற்க்கு வசப்பட்டவர் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் த்ரிவிக்ரமனையே -என்றதும் இங்கே அனுசந்தேயம்
ஸம்ப்ரதாய ரக்ஷகர் அன்றோ
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் தொழுதால் உன் தொல் புகழ் மாசூணாதோ –
அணி அத்திகிரி -பூமிக்கே அலங்காரம் ஹஸ்திகிரி -அதுக்கும் அலங்காரம் தேவப்பெருமாள் –
யாத்திராசன் வாசகத்தோர் -ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகளே நிரூபகமான நம் பூர்வர்கள்
வாழி ஸரணாகதி – உபாயமும் உபேயமும் தேவப்பெருமாளே என்று இருக்கும் மஹா விஸ்வாசத்துக்கும் பல்லாண்டு

————

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈரேழு வையகமும் படைத்து இலங்கும்
புண்டரீகத்து அயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்யத்தை உகந்து வந்து
தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நில மெய் விரதத்தில் தோன்றி நின்ற
கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறிப்பாகக் கொண்மினீரே—2–

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈர் ஏழு வையகமும் படைத்து இலங்கும் –எட்டுத் திசைகளையும் –
உப்பு பால் தேன் நெய் கருப்பஞ்சாறு தயிர் சுத்த ஜலம் -ஆகிய ஏழு சமுத்ரங்களையும் —
மஹேந்த்ரம் மலயம் ஸஹ்யம் சுக்திமான் ருக்ஷம் விந்த்யம் பாரியாத்ரம் -ஆகிய ஏழு குல பர்வதங்களையும்
அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும்
ஸ்ருஷ்டித்து பிரகாசிப்பவனும்

புண்டரிகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்கியத்தை யுவந்து வந்து -எம்பெருமானுடைய நாபிக் கமலத்து உதித்த ப்ரஹ்மாவால்
நடத்தப்பட்ட பெரிய அஸ்வமேத யாகத்தின் பரிசுத்தமான வாசனையுள்ள ஹவிஸை பெறுவதற்கு மகிழ்ந்து வந்து

தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நிலம் மெய் விரதத்துத் தோன்றி நின்ற –தொண்டை மண்டலம் என்னும் தேசத்தின் நடுவில்
பூமியிலே மிக பரிசுத்தமான ஸ்தலமான சத்யவ்ரதம் என்னும் திவ்ய ஷேத்ரத்திலே திருவவதரித்து சாஸ்வதமாக நிலை பெற்ற

கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறியாகக் கொண்மினீரே-பேர் அருளாளன் என்னும் மேகத்தின் கருணை என்னும் குணத்தையே –

மனத்தில் பாவமும் வாக்கில் ராகமும் கையில் தாளமுமாகிய பொருந்த வேண்டும் என வகுத்த பாரத சாஸ்திரத்தைத் தழுவி பண்ணும் இசையும் அமையுமாறு

பேர் அருளாளன் பெருமையை நாம் இந்த பிரபந்தத்தில் பேசுகின்றோம்-கூர்மையான அறிவு பெற்றோர்களே -நீங்கள் இதனைக் கவனத்துடன் அறிந்து கொள்க –

வேள்வியும் ஹவுஸும் அக்னியை நினைவூட்டிக் காட்ட அந்த தாபத்தை மறக்க
கருணை மழை பொழியும் காளமேகத்தைக் குறித்து அருளிச் செய்யும் சுவையை அனுபவிப்போம் –

———

வம்மின் புலவீர் அருளாளப் பெருமான் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமா மகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட பேர் அருளாளர் என்றும்
வியப்பால் விருதூதும் படி கரை புரண்ட கருணைக் கடலை
எவ்வண்ணம் பேசுவீர் ஈது என்ன பாங்கே-3-

வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழியம்மான் என்றும் —
புலவர்களே வாருங்கோள்—பேர் கருணைக் கடலானதாலே
அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமகளைப் பெற்றும் என்நெஞ்சம் கோயில் கொண்ட –பிராட்டியைத் தேவியாகக் கொண்டதுமாம் அன்றி
என் மனத்தை வாஸஸ்தலமாகக் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும்படி கரை புரண்ட -பேர் அருளாளர் என்றும் ஆச்சர்யமாய் —
ஆழ்வாராதிகள் பூர்வாச்சார்யர்கள் விருதுகளைக் கூறி முழங்கும் படி நின்ற கரை புரண்டு பெருகும்
கருணைக் கடலை எவ்வண்ணம் பேசுவார் ஈது என்ன பாங்கே-கருணைக் கடலான எம்பெருமானை
எவ்வாறு நீங்கள் பேச வல்லீர் -இவ்வாறு செய்வது என்ன நேர்மை -நாம் ஓன்று கூடி
அவன் பெருமையை ஒருவாறு பேசிப் பார்ப்போம் -என்றவாறு–

அதி நீசனான எனது நெஞ்சத்தையும் கோயில் கண்டு அருளி பேர் அருளாளன்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பெருமான் –
அருளாழி அம்மான்
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளன் பெருமை பேசக்கற்றவன் காமரு சீர்க் கலியன்

—————-

பிரபன்னனுக்கு பொறுப்பு நீங்கியமை -அம்ருத ரஞ்சனி 18-பாசுரமும் இதுவே –

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்குத் பரம் ஓன்று இலதே–4-

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத்–அர்த்த பஞ்சகத்தையும் சரீராத்மா பாவம் முதலிய சம்பந்தத்தையும்
அறிந்த ஆச்சார்யர்கள் உபதேசித்து அருள –
எம்பெருமானே உபாயம் உபேயம் என்று அறிந்த ஆச்சார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை சமர்ப்பித்து அருள
திருவருளால் -பிரதியுபகாரத்தை எதிர்பாராத சிறந்த கிருபையினால் –பிராட்டியுடைய கிருபையினால் என்றுமாம்

அன்றே யடைக்கலம் கொண்ட நம் மத்திகிரித் திருமால் -அப்பொழுதே -ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய
திரு ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் –

இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம் நன்றே வருவது எல்லாம் நமக்குப் பரம் ஓன்று இலதே-இப்பொழுதே
இசையின் -முக்தியைப் பெற நாம் சம்மதித்ததால்
தம்முடைய திருவடித்த தாமரைகளில் சேர்த்து கொண்டு அருளுகிறார்
இனி மறுபடியும் இக்கர்ம பூமியிலே பிறக்க மாட்டோம் -இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும்
இன்பங்களும் துன்பங்களும் ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே-
இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இல்லை –

இசையில் -அத்வேஷ மாத்ரமே வேண்டுவது –
இச்சைப்படும் காலத்திலேயே -கொடு யுலகம் காட்டாதே –
கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருளுவார் அன்றோ

ஒன்றே புகல் என்றது -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
ஒருவனே ஸித்த உபாயம் என்றபடி

உணர்ந்தவர் -என்றது -ஸாஸ்த்ர சார சம்பந்த விஷயங்களையும்
அர்த்த பஞ்சக விஷயமுமான ஞானத்தை யுடையவர்களாயும்
அவற்றை உபதேசிக்க வல்லவர்களாக ஆச்சார்யர்கள் என்றபடி

உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட -என்று அந்வயம்

இனிப் பிறவோம் -இங்கே திரிந்தேர்க்கு இழுக்குற்று என் என்கிறபடி
த்வரை அற்று இருக்கும் அளவிலும்
சரணமாகும் தன தாள் அடைந்ததற்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்கிறபடியே
அருளுபவர் என்றபடி

————

பிரமன் தனது முயற்சி கர்மத்தால் தடைபட வருந்துதல் —

வம்பவிழ் போதமர் மாதர் உகந்த வம் மா நிதியை
தம் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகிழ் மதியாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போல் அழுதனனே–5-

முகிழ் மதி -சுருங்கின ஞானம்
வல் வினை -பகவத் நிக்ரஹ சங்கல்பம் –
அம் மா நிதி -ஹிரண்ய நிதி -நித்ய அநபாயினி கொண்ட சம்பந்தம் மாறாத நிதி –
வம்பவிழ் -போக்யத்வம் விவஷிதம்

வம்பவிழ் போதமர் மாதர் உகந்தாம் மா நிதியைத் –வாசனையுள்ள மலர்ந்த புஷபத்திலே வசிக்கின்ற பிராட்டியின்
அன்புக்கு உரியனான பெரிய சேமநிதி போன்ற அவ்வெம்பெருமானை —
ஸ்ரீ யபதி-பராத்பரன் -சர்வ அந்தர்யாமி -சர்வ காரணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன்-
கல்யாணை குண கணன்–வாத்சல்யாதி குணக் கடல் –
கறந்த பாலுள் மறைந்து நிற்கும் நெய்யே போன்றவன் அன்றோ –

தன் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்-தன்னுடைய யோக பலத்தைக் கொண்டு
சாஷாத் கரிக்க நினைத்த ப்ரஹ்மா
முன் பல குற்றத்து வல்வினை மொய்க்க முகிழ் மதியாம்–முன்பு பல தவறான செயகைகளாலே
ஏற்பட்ட வழிய கர்மங்கள் சூழ்ந்து கொள்ள மழுங்கிய அறிவுடையனாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போலே அழுத்தனனே -எட்ட முடியாத சந்திரனைப் படித்துத் தரும்படி விரும்பிய
குழந்தையைப் போலே தனது எண்ணம் நிறைவேறாமையாலே அழுதான் –

————-

பிரமன் தன்னை வெறுத்துக் கொள்ளுதல் —

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முன்னம்
நெடும் காலம் இந்நிலமே நிலை யாப்புண்டு நீடுறைவான்
சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மை இது என்று
இடம் காத்து இருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே —6-

சடங்கால் –அங்கங்களினால் –

ஐந்துடன் -கர்ம இந்த்ரியர்களுடன்
ஆறும் -ஞான இந்திரியங்களும் மனஸ்ஸும்
என்ன தன்மை இது-பழுதே பளப்பாக்களும் போயின என்று அஞ்சி அழும் நிலை
அல்ப அஸ்திர பலன்களுக்காக தவம் செய்து வியர்த்தமே ஆயினவே –
பூண்டு -இந்த துக்க பரம்பரைகள் தானே விளைத்துக் கொண்டமை-

இடம் காத்து இருந்த திசைமுகன் –தன்னுடைய பிரம்மா பதவியை வழுவாது ரஷித்துக் கொண்டு இருந்த ப்ரஹ்மா
நெடுங்காலம் இந்நிலமே யாப்புண்டு நீடுறைவான்-நீண்ட காலம் இந்த பிரம்மா லோகத்தையே ஸ்திரமாய்
இருப்பதாகக் கொண்டு -நெடு நாள் அப்பதவியில் வாழ விரும்பி

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முனம் –முன்பே அடங்காத இந்திரியங்கள் ஐந்துடன்
ஞான இந்திரியங்கள் மனஸ் ஆறையும் அடக்கி

சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மையிது என்று தன்னை இகழ்ந்தனனே -விரதங்களால் பெரிய தபஸ் ஸூக்களைச் செய்தேன் –
நான் செய்த இக்காரியம் எத்தகையது -எவ்வளவு இழிவானது என்று தன்னையே வெறுத்துக் கொண்டான் –
கர்ம விசேஷத்தைக் கழிக்காமல் இந்த பதவியை சாஸ்வதம் என்று தவறாக கருதி பெரிய தவம் புரிந்து
இந்த ப்ரஹ்மாண்டத்திலே ஏறியும் இறங்கியும் அல்லல் பட
நெடும்காலம் வீணே சரீரத்தையும் துன்புறுத்திக் கொண்டேன் என்று நெஞ்சு உருகிக்
கண்ணீர் சோர்ந்து நெடு மூச்சு எறிந்து நிலத்தையே பார்த்து இருந்து
தன்னையே வெறுத்துக் கொண்டான் -என்றவாறு –

திசை முகன் -திகைத்த முகத்தன்-என்ற பொருள் பெற பிரயோகம் –

—————-

விண்ணுலகில் வீற்று இருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்ததாலும்
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா
எண்ணிய நற் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவமும் எட்டு இடமும் விட்டுப்
பண்ணிய நல் விரதம் எல்லாம் பலிக்கும் என்று பாரதத்தை பங்கயத்தோன் படிந்திட்டானே -7-

நற் புவனங்கள் ஏழும் ஆறும்–பூமி ஒழிந்த 13 லோகங்களும்
இரு மூன்று தீவமும் -ஜம்பூ த்வீபம் ஒழிந்த பிலக்ஷ -ஸால்மலி -குச -கிரௌஞ்ச -ஸாக -புஷ்கர -த்வீபங்கள்
எட்டு இடமும் -பாரத வர்ஷம் தவிர்ந்த -கிம் புருஷ -ஹரி -இலாவ்ருத -ரம்யக – ஹிரண்யக -குரு –
பத்ராஸ்வ -கேதுமால -என்று சொல்லப்பட்ட எட்டு ஸ்தலங்களும் –
இவற்றை விட்டு -பாரத வர்ஷத்தில் -ஸத்ய விரத ஷேத்ரத்தில் யாகம் பண்ண வந்தான் என்றபடி

பங்கயத்தோன்–பகவானுடைய திரு நாபிக் கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா
விண்ணுலகில் வீற்றிருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்தலாலும் —
பிரம்ம லோகத்தில் பிரம்மா பதவி வகித்த பெருமையாலும்
வேதங்கள் நான்கையும் உலகுக்கு வெளியிட்டமையாலும்

கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் -எம்பெருமானை மனத்தில் நிலை பெற்று நிற்கும் படி
நான் நேரில் சாஷாத் கரிப்பேன் என்று நினைத்து யத்னம் செய்து

காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா-அவ்வாறு சாஷாத் கரிக்க முடியாமல் தடை செய்த
தன்னுடைய கர்மத்தைக் கண்டு அதை போக்க நினைத்து

வெண்ணிய நல் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவம் எட்டிடமும் விட்டுப் -சாஸ்திரங்களில் கூறப் பட்ட
சிறந்த லோகங்கள் பதின்மூன்றையும்
ஆறு தீவுகளையும் எட்டு வர்ஷங்களையும் விட்டு

பண்ணிய நல் விரதம் எலாம் பலிக்கும் என்று பாரதத்தில் படிந்திட்டானே -செய்யப்பட சிறந்த விரதங்கள் எல்லாம்
பலன் தரும் என்று உறுதி கொண்டு
பாரத தேசத்திலே வந்து தங்கினான் –

ஆயிரம் கோடி யுகங்கள் எம்பெருமானை ஆராதித்து பிரமன் தனது பதவியைப் பெற்றதாக சாஸ்திரம் கூறும்
பூமி ஒழிய மற்ற லோகங்கள் பதின்மூன்றும் -பூமியிலும் ஜம்பூத்வீபம் தவிர மற்ற த்வீபங்கள் ஆறும் –
அதிலும் பாரத வர்ஷம் நீங்க மற்ற வர்ஷங்கள் எட்டும்
கர்ம பலன்களை அனுபவிக்கும் இடம் -என்பதால் தவம் செய்ய உரியன அல்ல என்று புறக்கணித்து
எல்லாவற்றுக்கும் தெற்கே உள்ளதாய் சகல தர்மங்களையும் அனுஷ்ட்டிக்க ஏற்றதான பாரத வர்ஷத்தில் வந்து புகுந்தான் என்றவாறு –

ஒன்பது வர்ஷங்கள்–பாரதம் கிம்புருஷம் ஹரி இலாவ்ருதம் ரம்யம் ஹிரண்யகம் குரு பத்ராசுவம் கேதுமாலம் -என்பன

ஏழு த்வீபங்கள் -ஜம்பூ பிலஷம் சால்மலி குசம் கிரௌஞ்சம் சாகம் புஷ்கரம் என்பன

பதினான்கு லோகங்கள் -அதல விதல ஸூதல தராதலா மஹாதல ரஸாதல பாதாளங்கள் -ஆகிய ஏழு கீழ் உலகங்களையும்
பூ புவ ஸூவ மஹ ஜன தப சத்யம் ஆகிய ஏழு மேல் உலகங்களையும் -சொல்லியவாறு —

—————–

பிரமன் விஸ்வகர்மனுக்கு கட்டளையிடுதல் –

எத்திசை நிலனும் எய்தி யாரும் தவம் செய்த அந்நாள்
சத்திய விரதம் செல்வாய் என்றதொரு உரையின் சார்வால்
அத்திசை சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை
உத்தர வேதி செய் என்று உரை அணங்கிறை உரைத்தான் -8-

உரை அணங்கு இறை –ஸ்ரீ சரஸ்வதிக்கு நாயகனான ஸ்ரீ நான்முகன்
அமரர் இல் எடுப்பான் தன்னை -ஸ்ரீ விஸ்வகர்மாவை உத்தர வேதியை நிர்மாணம் செய் என்றது
யாகங்களுக்கு அவஸ்ய அபேக்ஷிதமான-ஹவிர்த்தானம் -சதஸ்ஸூ -வாஸஸ் ஸ்தானங்கள்-இவற்றுக்கும் உப லக்ஷணம்-

உரை யணங்கு இறை யுரைத்தான் -வாக்கின் தேவதையான சரஸ்வதிக்கு நாயகனான ப்ரஹ்மா
எத்திசையும் நிலனும் எய்தி யரும் தவம் செய்த அந்நாள் –எல்லாத் திக்குகளிலும் உள்ள ஸ்தானங்களுக்கும் சென்று
ஒருவராலும் செய்ய முடியாத தவத்தைச் செய்த அக்காலத்திலே

சத்திய விரதம் செல்வாய் என்ற வோர் உரையின் சார்வால் –சத்யவ்ரத திவ்ய ஷேத்ரத்துக்கு போ என்ற
ஒரு அசரீரி வார்த்தையின் ஆதரத்தால்–
ஆயிரம் அஸ்வமேத யாக பலனை ஒரு அஸ்வமேத யாகம் இங்கே அளிக்கும்

அத்திசைச் சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை -அந்த திவ்ய ஷேத்ரத்துக்குச் சென்று –
தேவர்களுக்கு வீடு முதலியவற்றை அமைப்பவனாகிய
விஸ்வ கர்மனை அழைத்து யுத்தர வேதி செய் என்று -யாகம் செய்வதற்கு உத்தர வேதியைச் செய்து முடிப்பாயாக என்று கட்டளையிட்டான் —

ஸ்ரீ ஹஸ்திகிரியை நான்கு சதுரமாக வகுத்து அதையே யாக வேதியாக்கி யாகசாலை அமைப்பாயாக –
மேலும் யாகத்துக்கு வரும் தேவர் அசுரர் ராக்ஷசர் கின்னரர் கிம்புருஷர்
சித்தர் வித்யாதரர் மனுஷ்யர் முதலிய பல் திறத்தனாரும் நெருக்கம் இன்றிச் சுகமாய் வசிக்குமாறு
நீண்டு அகன்று உயர்ந்த மிக்கு அழகிய ராஜ தானியை
விரைவில் படைப்பாயாக என்று மிக விரைந்து கட்டளையிட்டான் –

———–

காஞ்சியின் பெருமை –அதிகார சங்கிரகம் -44-பாசுரமும் இதுவே —

உத்தம அமரத்தலம் அமைத்தது ஒரு எழில் தனு கணையால்
அத்திற வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்து உண்ணும் அத்தன் இடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி அத் திகிரியே –9-

உத்தம அமர்த் தலம் -ருத்ரனுக்கும் பகவானுக்கும் -வில் பரீஷைகைக்காக யுண்டான யுத்த ஸ்தலம்
ஒரு எழில் -அத்விதீயமான -கர்ஜனையாலே ருத்ர வில் பிளந்து போனமையால் –
பகவானைத் தவிர வேறு ஒருவரால் கையாள முடியாத வில் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –

அத்திர அரக்கன் -தபோ பலத்தால் அடையப்பட்ட அஸ்திர பலத்தை யுடைய ராவணன் –
அத்திற -பாட பேதம் –பகவானை எதிர்த்து போர் செய்ய வல்ல -அப்படிப்பட்ட திறல் யுடையவன் என்றபடி
ஒரு கொத்தென –பானு நேர் சரத்தால் பனங்கனி போலேப் பருமுடியும் யுதிர வில் வளைத்தோன் -என்கிறபடியே –
ஒரே பணத்தால் அடித்துத் தள்ளின என்றபடி
உதிர்த்த -கிள்ளிக் களைந்தானை -அநாயாஸேந செய்தமை

அத் திகிரி – அற முயல் ஆழிப்படை

அயோத்யா -வடமதுரை -மாயா -காசி -காஞ்சீ -அவந்தி -துவாரகா-ஏழும் முக்தி தரும் ஷேத்ரங்கள் –

உத்தம அமர்த்தலம் அமைத்தது ஓர் எழில் தனுவின் உய்த்த கணையால் -உயர்ந்த போர் காலத்தில் அமைக்கப் பட்ட
நிகரற்ற அழகிய வில்லினின்றும் செலுத்தப் பட்ட அம்பினால்

யத்திர வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன் -அஸ்திர பலமுள்ள ராக்ஷசனாகிய ராவணனுடைய தலைகள் பத்தையும்
ஒரு குலை என்று சொல்லும்படி அறுத்துக் கீழே தள்ளின பலமுடைய ஸ்ரீ ராமபிரானும்

மத்துறு மிகுத் தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்தது உண்ணும் அத்தன் இடமாம் -மத்தினால் கடையத் தகுந்த
அதிகமான தயிரையும் யசோதையால் வைக்கப்பட்ட அதிகமான வெண்ணெயயையும் அமுது செய்து
அருளிய ஸ்ரீ கண்ணபிரானுடைய வாஸஸ் ஸ்தலமாகிய

அத்திகிரி பத்தர் வினை தொத்து அற அறுக்கும் அணி அத்திகிரியே –ஸ்ரீ ஹஸ்திகிரி என்னும் திவ்ய க்ஷேத்ரம்
சம்பந்தம் இல்லாமல் ஒழிக்க வல்ல அழகிய
அந்த திவ்ய சக்ராயுதம் போன்றதே யாகும் -திவ்ய சக்ராயுதம் திவ்ய கைக்கு அழகுக்கு இட்ட திரு ஆபரணம் என்றுமாம்

———–

பிரமன் விஷ்வா கர்மா படைத்த ஸ்ரீ காஞ்சியைக் கண்டு மகிழ்தல் —

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும்
வன்மை ஏழு ஈர் இரண்டு வண்ணத்தாலும்
வானவர்க்கு வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண் மகளார்க்கு அலங்காரம் என்ன
மன்னு மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -10-

பூமியாகிய ஸ்த்ரீக்கு அரை நூண் மாலை போல் அன்றோ திருக் காஞ்சீ
காஞ்சீ ஆபரணத்துக்குத் துல்யமான நகர் என்றபடி –

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும் –
திடமான ரத்தினங்கள் தங்கத்தோடு இழைக்கப் பெற்று இருப்பதாலும்
அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப் பட்டு இருப்பதாலும்

வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும் –
கொடை நிறைந்த நான்கு ஜாதியரும் நிறைந்து இருப்பதாலும்-
அன்றிக்கே வெண்மை கருமை செம்மை பசுமை என்ற நான்கு நிறங்களால் என்றுமாம் –
தேவர்கட்க்கும் வியக்கத்தக்க அமைப்பினாலும்

ஒண்மையுடை வாசி விளி ஓசையாலும் ஒருகாலும் அழியாத அழகினாலும் –
இயற்க்கை அழகு அமைந்த குதிரைகளின் கனைக்கும் குரல் ஓசையினாலும்
ஒரு போதும் அழியாமல் நிலை பெற்ற அழகினாலும்

உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும் என்று கொண்டு நேர்மையுடைய சிறந்த பிரகாசம் உள்ள
வஸ்துக்களாலும் சிறந்த சப்தங்களாலும் என்றுமாம் –

மண் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும் மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -பூமிக்கு ஆபரணம் என்னும் படி பொருந்திய
மதிள்களை யுடைய ஸ்ரீ காஞ்சீபுரத்தைக் கண்டு ப்ரஹ்மா மகிழ்ச்சி யடைந்தான் –

———————

பிரமன் வசிட்டனை தன் மனைவியிடம் அனுப்புதல் –
ப்ரஹ்மா வஸிஷ்டரை ஆஜ்ஞா பித்த பிரகாரத்தை இப்பாட்டாலே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

எம்பெருமானுடைய வாத்சல்ய பிரகாரம் இப்பாட்டிலும்
அடுத்த பாட்டிலும்
அருளிச் செய்கிறார் –

காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைதவமே செய்வார்க்குக் காணகில்லாப்
பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற
நா மங்கை வந்திட நீ அழைப்பாய் என்று நன்மகனை நான்முகன் தான் நவின்றாட்டானே –11-

கைதவமே-கபட காரியமே -ஆஸ்ரயண வேளையிலே கைப்பற்றி போக வேளையிலே கைவிடுபவர்கள்
சாமங்கள் -ஜாமங்கள்
பூ மங்கை கேள்வனை -ராவணனைப் போலே பிரித்துக்காணாமல் –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
வடிவாய் நின் வழ மார்போனில் வாழும் மங்கையும் பல்லாண்டு
போற்ற -ஸ்துதிக்கவும் நமஸ்கரிக்கவும் ஆராதனம் செய்யவும் –
தனி இருந்து -ப்ரணய கலகத்தினால் தனியே இருந்து தபஸ்ஸூ செய்யச் சென்றமை ஸூசிதம் -த்யோதிதம்

நன்மகனை நான்முகன் தான்-நான்கு முகங்களையுடைய ப்ரஹ்மா நல்ல புத்திரனான வசிஷ்டனை அழைத்து
காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைத்தவமே செய்வார்க்கு காண கில்லாப்-காம்ய கர்மங்கள் பலவற்றை வெளியிடுகின்ற வேதத்தைக் கொண்டு –
பகவத் கைங்கர்யத்தைச் செய்யாது கபட காரியங்களையே செய்பவர்களுக்கு ப்ரத்யக்ஷமாகக் காண முடியாத

பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் –பூவில் வாழும் பிராட்டியின் நாதனான எம்பெருமானை நான் நேரில் சேவித்து ஸ்தோத்ரம் செய்வதற்காக
புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன் -புண்ணியங்களுக்குள் ஒப்பற்ற அஸ்வமேத யாகத்தைத் தொடங்கியுள்ளேன் –
மரீசி முதலிய ப்ரஹ்மரிஷிகளை ருத்விக்குகளாக்கிக் கொண்டான்

சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய்த் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற -யாமங்கள் கழிவதற்கு முன்பு -காலம் தாழாது விரைவாக நீ போய்
தன் பெயருள்ள சரஸ்வதி நதிக் கரையில் தனியாக இருந்து தபம் செய்பவளான –பெருமான் திருவடியில் நின்றும் அவதரித்த கங்கையை விட
சிறந்த நதி இல்லை என்ற பிரமனின் மீது கோபம் கொண்டு சரஸ்வதி நதிக் கரையில் சரஸ்வதி தவம் புரிந்தாள்

நா மங்கை வந்திட நீ அளிப்பாய் என்று நவின்றிட்டானே –வாக்கின் தேவதையான சரஸ்வதி இங்கு வந்து சேரும்படி
நீ அழைத்து வருவாயாக என்று கட்டளையிட்டான் –
ஊடல் நீங்காததால் வர மறுத்து விட்டாள் -சாவித்ரி தேவதை கொண்டு யாகம் செய்யத் தொடங்க -அசுரர்கள் இந்த யாகத்தை கலைக்க நினைத்து
சரஸ்வதி தேவியிடம் சொல்லி கலகமூட்ட -வேகவதி என்னும் வேறு ஒரு நதியாக பெருகி யாகசாலையை அழிக்க முற்பட்டாள் –

—————

சரஸ்வதி தேவி நதி வடிவம் கொண்டு வரும் மிடுக்கு —

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயருமன்ன வரசேறி வருவாள்
அத்தன் அயனத்த நயனுத்திதனை யத்திதென யுத்தி புரியாள்
நன்னடை விடா நடமிது என்ன நடவா நடுவுள் நண்ணு குடகேறி இழிவாள்
நற்பதிகள் அற்பதிகள் கற்புரள வற்புத மருக்கதியினால்
கன்னடை விடா விடமிலுன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக்
கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
அன்ன நய சீர் அயன் இது என் என விழா யமரர் மன்னு பதியேறி மகிழ
அச்சுதன் அணைத் தனுவிலத்திசை வரத்தகைய வற்று அணுகினாள்–12-

அத்தன் அயன் -ஆப்தனான ஸ்ரீ ப்ரம்மா
அத் தநயன் உத்திதனை -ஸ்ரீ வசிஷ்டருடைய வார்த்தையை
யத்து இது என யுத்தி புரியாள்–இப்படியே ஆகட்டும் என்னும் பதில் வார்த்தையை கொடாதவளும் –
அப்படியே ஆகட்டும் என்று சொல்லாதவள் என்றவாறு –

குடகு -கற் கூட்டங்களின் மேல்
மருக்கத்தி-வாயுவுக்கு சமமான வேகத்தினால்
கல் நடை விடாத இடம் இல் -கல்லிலே போவதை விடாத ஸ்தலம் இல்லாத
இரண்டு நகார பிரயோகம் -கல்லின் மேலேயே ப்ரவஹித்தமை

உன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக் கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
உன்னதி -உயர்ந்து இருப்பதனால்
சிறா -சிறுமை பெறாத -மற்ற மலைகளை விட உயரத்தில் சிறுமை பெறாத -அதாவ்துன் மிகவும் உயந்ததான
விகட -விசாலமான
மன்னு -மிகவும் உறுதியான
கிரி கூட மிடியக்-மலைச் சிகரங்கள் இடியும்படி

கட்ட விடை -கஷ்டமான -ஒருவராலும் அடக்க முடியாத ரிஷபங்கள்
அன்றிக்கே
வண்டி போன்றவற்றில் கட்டப்பட்ட விருஷபங்கள் என்றுமாம்

யிற்று விழ -சந்திப்பந்தங்கள் கீழே விழ
முற்றும் விழி யுற்று -நாலா பக்கங்களிலும் விழித்து விழித்துப் பார்த்து
அடைய விட்டு அருகுற-அனைத்தையும் பரித்யஜித்து ப்ரஹ்மாவிடம் சென்று ரக்ஷிக்கப் பிரார்த்திக்க
அன்றிக்கே
தங்கள் வண்டிகளில் கட்டப்பட்ட எருதுகள் கீழே விழ
ஆவாரார் துணை என்று சுற்றிலும் பார்த்து -யாவரையும் காணாமல்
எல்லாம் விட்டுத் தனித்தனியே நீஞ்சிக் கரை ஏற என்றுமாம்

அன்ன நய -தனது பத்தினியை சாந்தம் செய்ய முடியாமல்
சாஸ்த்ர விதியை அனுசரித்து வேறே பத்னிகளைக் கொண்டு யஜ்ஜம் செய்து நியாயமாக நடந்து கொண்ட
விழா வமரர் – யஜ்ஜம் ஆகிய மஹா உத்சவத்துக்கு வந்த தேவதைகள்

அணைத் தனுவில் –திருப்பள்ளி யாகிய ஆதிசேஷன் சரீரத்தில்
அன்றிக்கே
அணை போட்டால் போல் நிஸ்ஸலமான திருமேனியுடன் என்றுமாம் –
திருவணை -வேகா சேது -அன்றோ
தகைய வற்றணுகினாள் -தடுக்க பற்றுதலை அடைந்தாள் -அதாவது -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்
அன்றிக்கே
வற்றி -தனது வேகத்தை அடக்கிக் கொண்டு -கோபத்துக்குக்காக வெட்க்கி –
அணுகினாள் -சமீபத்தில் வந்தாள்

அச்சுதன் அணைத் தனுவில் அத்திசை வரத்-ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவன்
தனக்கு திருப்பள்ளியாகிற ஸ்ரீ ஆதி சேஷனுடைய சரிரத்திலே –
அணை போட்டால் போலே நிச்சலமான திருமேனியுடன் அத்திசை நோக்கி வர –
திரு அணை -வேகா சேது அன்றோ திரு நாமம் –
தகைய வற்று அணுகினாள்–தடுக்க வற்றுதலை அடைந்தாள் -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்-

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயரும் அன்ன அரசு ஏறி வருவாள் -ஹம்சம் போன்ற அழகை யுடையவளும்
அசைகின்ற ஹம்சம் போன்ற நடையை யுடையவளும் -உயர்ந்த ராஜ ஹம்சத்தின் மீது ஏறிக் கொண்டு வருபவளுமான
சரஸ்வதி தேவி -ஹம்ஸ வாஹனம் அன்றோ –

அத்தன் அயன் அத்தனையன் உத்திதனை அத்து இது என உத்தி புரியாள்-உயர்ந்தவனாகிய ப்ரஹ்மாவின்
அந்தப் புத்திரனான வசிஷ்டனுடைய வேண்டுகோளை இது அது அப்படியே யாகுக என்று சொல்லாதவளாய்

நல்நடை விடா நடம் இது என்ன நடவா நடுவு நண்ணு குவடு ஏறி இழிவாள் –இவ்வாறு ப்ரஹ்மா அழைத்தது
நல்ல ஒழுக்கத்தின் நின்றும் வேறுபடாதது போல்
தோற்றுகின்ற நாடகம் என்று நினைத்து நடந்து வழியிடையே எதிர்படுகின்ற குன்று மீது ஏறி இறங்குபவளாய்

நல் பதிகள் அல் பதிகள் கல் புரள அற்புத மருள் கதியினால் –நல்ல சமமான இடங்களிலும் அப்படியல்லாத மேடு பள்ளமான இடங்களிலும் உள்ள
கற்கள் புரளும் படி ஆச்சர்யமான வாயு வேகத்தால்

கல் நடை விடா இடம் இல் உன்னதி சிறா விகடன் மன்னு கிரி கூடம் இடியக் -பாறைகள் அசைந்து உருளாத இடம் இல்லாததும் உயரம் குறையாததும்
மேடு பள்ளம் பொருந்தியதுமான மலையின் சிகரம் இடிந்து போகவும்

கட்டு அவ்விடை இற்று விழ விழி முற்றும் உற்று அடைய விட்டு அருகு உற-அங்கே மலைப்பக்கம் -தாழ் வரை -ஆதி யற்று இடியவும் கண்களை
நாநா திசையும் சென்று பொருந்தும்படி செலுத்தி யாகவேதியின் சமீபத்துக்கு வர

அன்ன நய சீர் அயன் இது என் என விழா அமரர் மன்னு பத்தி ஏறி மகிழ –அப்படிப்பட்ட நன்மையையும் சிறப்பையும் யுடைய
பிரம்மா தேவன் இது என்ன என்று திகைத்து நிற்க
யாகமாகிய -உத்சவத்துக்கு வந்த மற்றைத் தேவர் ஸ்திரமான தங்கள் ஸ்தானத்துக்குச் சென்று தாம் உயிர் பிழைத்து வந்ததற்கு மகிழ்ந்து நிற்க

அச்சுதன் அணைத் தருவில் அத்திசை வரத் தகைய அற்று அணுகினாள்–பக்தர்களைக் காய் விடாத எம்பெருமான்
அணை யுருவத்தில் அங்கே தடுப்பதற்கு எழுந்து அருள வேகம் கெட்டு நெருங்கினாள் –

———————

எம்பெருமான் நதி நடுவே அணையாகக் கிடந்தது அருள் செய்தல்

அன்று நயந்த வயமேத மா வேள்வி
பொன்ற யுரை யணங்கு பூம்புனலாய்க் கன்றி யுர
ஆதி அயனுக்கு அருள் செய்தணை யானான்
தாதை அரவணையான் தான் -13-

நயந்த-அனுஷ்ட்டிக்கப்பட்ட
யுரை யணங்கு-ஸரஸ்வதி யானவள்
பூம்புனலாய்-அழகிய நதியாய் -ஆம்பல் நெய்தல் போன்ற -பூக்கள் கூடிய நதியாய்
கன்றி வர -கோபித்துக் கொண்டு பிரவஹிக்க
அரவணையான் தானே அணை யானானே -ஆச்ரித ரேஷன் த்வராதிசயத்தினாலே
மழுங்காத வை நுதிய இத்யாதி

அன்று நயந்த வயமேத வேள்வி பொன்ற வுரை யணங்கு பூம் புனலாய்க் கன்றி வர -அப்பொழுது ப்ரஹ்மாவினால் விரும்பிச் செய்யப்பட அஸ்வமேதம்
என்னும் பெரிய யாகம் அழிந்து போகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகயாகி கோபித்துக் கொண்டு பெருகி வர

ஆதி யயனுக்கு அருள்செய்து அணையானான் தாதை யரவணையான் தான் -உலகுக்கு தந்தையும் ஆதிசேஷனைப் பள்ளி கொண்டவனுமான
எம்பெருமான் ஸ்ருஷ்டிகாரணான ப்ரஹ்மாவின் மீது கருணையை வைத்து தானே அணையாகப் பள்ளி கொண்டான் –

—————

மூ வுலகினரும் அவ்வணையைக் கண்டு மகிழ்ந்து பேசுதல் —

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்த பிரான்
கருணை எனும் கடல் ஆடித் திருவணை கண்டதற்பின்
திரணகர் எண்ணிய சித்திர குத்தன் தெரித்து வைத்த
சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -14-

திரணகர்–திரள் நரகு -நரகங்களினுடைய
மன்னி-விலக்ஷணமாக நித்ய வாஸம் -தீர்த்தம் பிரசாதியாதே -நிலை நின்ற அர்ச்சாவதார
அயனார் -உபகாரக அதிசயத்தால் பஹு வசனம்
திருவணை கண்டதற்பின் -மூன்று லோகத்தாரும் கண்டு அனுபவித்த விலக்ஷணமான சேது –
அந்த நள சேதுவில் வ்யாவ்ருத்தி
சேவை கிட்டவும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தனின் கிருபையே காரணமாகும்

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்தபிரான் -பூமியில் ஸ்திரமாய் இருந்து ப்ரஹ்மாவினுடைய ஒப்பற்ற
தபஸ்ஸாகிய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி மஹா உபகாரம் செய்து அருளிய எம்பெருமானுடைய

கருணை எனும் கடலாடித் திருவணை கண்டதற் பின் -கிருபை என்னும் கடலில் நீராடி
அழகிய அந்த அணையை கண்ணார சேவித்த பின்பு

நரகுத் திரள் எண்ணிய சித்திர கூத்தன் அன்று தெரித்து வைத்த -நரகங்களின் கூட்டத்தை கணக்கிட்டுப்
பார்ப்பவனான யமனுடைய கணக்கனான சித்ர குப்தனால் கனக்குப் பார்த்து எழுதி வைக்கப் பட்ட

சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -கணக் கொலையில் குறித்து வைக்கப் பட்ட நம்மைச்
சூழ்ந்து நிற்கின்ற பாபங்கள் முழுவதும் நீங்கப் பெற்றோம்

இப்படி வேகவதி நதியாய் வந்த சரஸ்வதி தேவியின் கோப வேகம் அடங்குமாறு
திரு வெக்கா என்னும் திவ்ய தேசத்திலே பள்ளி கொண்ட எம்பெருமான் கடாக்ஷிக்க
அதனால் அவளும் மனக் கலக்கம் தெளிந்து வர அவளையும் கூட்டிக் கொண்டு ப்ரஹ்மா அஸ்வமேத யாகத்தை நடத்தினான் –
முடிவில் பசுவின் வைபையை அக்னியில் ஹோமம் செய்தான் –

———–

புண்ய கோடி விமானத்துடன் பேர் அருளாளன் ஆவிர்பவித்தல் —

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்காத துணிந்த அயனார்
அகலாத அன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல்
புகலோங்கு பொன் மலை என்றதோர் புண்ணிய கோடியுடன்
பகலோன் பகல் விளக்காகப் பரம் சுடர் தோன்றியதே -15-

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்கத் துணிந்த அயனார்–ப்ரஹ்மா அற்பமான லோக ஸூகத்தை
பெரிதாக எண்ணுவதற்குக் காரணமாயுள்ள சூழ்ந்து நிற்கும் தம் பாபங்களை ஒழிக்க உறுதி கொண்டு

அகலாத வன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல் -நீங்காத பக்தியுடன் அனுஷ்டித்த அஸ்வமேத யாகவேதியின் மீது

புகலோங்கு பொன்மலை யன்னவோர் புண்ணிய கோடியுடன்-புகழ் நிறைந்துள்ள ஸ்வர்ண பர்வதம் பொன்ற
ஒப்பற்ற புண்ய கோடி என்னும் விமானத்துடன்

பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே -சூரியனும் பகலில் வைத்த விளக்கு எண்ணலாம் படி
உத்தமமான பேர் அருளாளன்–
சித்திர மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் -சதுர்த்தசி திதியில் ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய ஹஸ்த நக்ஷத்ரம்
காலை நேரத்தில் ஆகிய தேஜஸ் ஆவிர்பவித்தது –

————–

காஹள த்வனி பிரகாரங்களை இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –
பேர் அருளாளன் திருவவதரித்ததைக் கண்டு நித்ய ஸூரிகள்
காலம் வலம் புரி வாத்தியங்களை உத்தி பெருமையை வெளியிட்டு அருளினர் –

பெருமையுடை யத்திகிரி பெருமாள் வந்தார்
பேராத அருள் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சி தனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் யவையாகும் பெரியோர் வந்தார்
திரு வுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -16-

அருளாளப் பெருமாள் -கிருபையே தனக்கு ஸ்வரூப நிரூபகம்

பெருமையுடை யத்திகிரிப் பெருமாள் வந்தார் -மிகப் பெருமையுடையரான ஸ்ரீ ஹஸ்திகிரி நாதர் எழுந்து அருளினர்
பேராத வருள் பொழியும் பெருமாள் வந்தார் -நீங்காத கருணையைப் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார் -அருமையான வேதத்தின் சிகரத்தில் -வேதாந்தங்களில் போற்றப்பட்டு நின்றவர் வந்தார்
அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார் -அங்கங்களுடன் அந்த வேத ஸ்வரூபரான அருமையான ஸ்வாமி வந்தார்
திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் -பிராட்டி சப்த ஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபமாய் நிற்பவர் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார் -தம் சிறந்த கிருபையினால் உயர்ந்த சாஸ்திரங்களை உலகுக்குத் தந்தவர் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார் -தம்மிடம் அன்பற்ற நாஸ்திகருக்கு மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -பரமபதத்துக்குச் செல்ல உபாயத்தை உபதேசித்து அருளியவர் வந்தார் -என்று
நித்ய ஸூரிகள் மிக மகிழ்ந்து திருச் சின்ன ஒலி செய்தனர் –

————-

நித்ய ஸூரிகள் மேலும் திருச் சின்னம் ஒலித்தல் —

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -17 –

ஆனை பரி தேரின் மேல் -திரு வாஹனாதிகளின் மேல் –
கண் கொடுக்கும் பெருமாள் -ரஹஸ்யார்த்த ஞானம் அருளியவர் என்றுமாம்

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவார் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் -பெரியாழ்வார்

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார் –ஸ்ரீ ஹஸ்திகிரியில் எழுந்து அருளிய பேர் அருளாளர் என்னும் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் -யானை குதிரை தேர் ஆகிய வாகனங்கள் மீது எழுந்து அருளும் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார் -ஸ்ரீ காஞ்சிபுரத்தில் கண்ணை அளிக்கும் பெருமாள் வந்தார் –
ஹரித வாரண ப்ருத்யர் என்பவருக்கு கண் கொடுத்து அருளிய ஐதிக்யம்
கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார் -மனஸினால் அனுசந்தித்தால் வேண்டிய வரங்களைக் கொடுத்து அருளும் தேவச் ஸ்ரேஷ்டர் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார் -மோக்ஷமாகிய மழையைப் பொழிகின்றவரும்
மேகம் பொன்ற நிறம் ஸ்வபாவம் யுடையவருமான எம்பெருமான் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார் -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதிமூலமே என்று
கூக்குரலிட அதனை காத்து அருள சக்தியுடையவர் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார் -ப்ரஹ்மா ஏற்படுத்திய உத்தர வேதிக்குள்ளே ஆவிர்பவித்தவர் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -நித்ய ஸூரிகளால் தொழப் படுகின்ற திருவடிகளையுடைய எம்பெருமான் வந்தார் –

——————-

தேவர்களும் முனிவர்களும் பரவசமாய் போற்றுதல் —

திரு பரி திசைந்த மகுடமும் மதி திகழ்ந்த வதனமும்
இருவகை இலங்கு குழல்களில் எதிர் பொர யுகந்த மகரமும்
ஒரு தக உயர்ந்த திருமகள் ஒளி மறுவில் மன்னும் அகலமும்
உருவரு உமிழ்ந்த யுதரமும் வுலகடைய நின்ற கழல்களும்
மருவினிடை ஓங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என
மருளற விளங்கும் ஒளி என மலர் அயன் உகந்த பயன் என
அருவில் உறைகின்ற உயிர் என வடியவர் உகந்த அமுது என
அரு மறைகள் ஒன்றி அடி தொழ வரும் வரதர் நின்ற பெருமையே -18-

உருவரு உமிழ்ந்த யுதரமும்-சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டி காலத்தில் உமிழ்ந்த திரு வுதரமும்
வுலகடைய நின்ற கழல்களும்-திரு உலகு அளந்த திருவடிகளை –
லோகங்கள் அடைய ஆஸ்ரயிக்கும்படியான திருவடிகளை என்றுமாம்-

மருவினிடை ஓங்கு புனல் என-நீர் இல்லாத பாலைவனத்தின் நடுவில் -லீலா விபூதியில் ஆவிர்பவித்து அருளிய
மலை குனிய நின்ற மலை -ஹஸ்திகிரி மேல் அஞ்சன கிரி

இருவகை இலங்கு குழை களில் எதிர் பொர உகந்த மகரமும் -இரண்டு வகையாக பிரகாசிக்கின்ற குண்டலங்களில்
எதிரே நின்று சண்டையிடுவதற்கு விரும்பியன போன்ற மீன்களும்

ஒரு தகவுயர்ந்த திருமகள் ஒளி மருவின் மன்னும் அகலமும் -ஒப்பற்ற கருணையினால் உயர்ந்து நிற்கும் பிராட்டி பிரகாசிக்கின்ற
ஸ்ரீ வத்சம் என்னும் திரு மறுவோடு நித்ய வாசம் செய்யும் திரு மார்பும்

உரு அரு உமிழ்ந்த உதரமும் உலகு அடைய நின்ற கழல்களும் -அசேதனத்தையும் சேதனத்தையும் ஸ்ருஷ்டித்த திரு வயிறும்
உலகோர் வந்து சரண் அடையும்படி நிற்கின்ற திருவடிகளும் -ஆகிய இவற்றுடனே
வரு மறைகள் ஒன்றி யடி தொழ வருள் வரதர் நின்ற பெருமையே -அருமையான வேதங்கள் ஒரே முகமாய் நின்று திருவடிகளைத்
தொழுது பேசும்படி அருளே வடிவெடுத்த பேர் அருளாளர் நின்ற பெருமை -எவ்வாறு இருந்தது என்னில்
மருவினிடை பொங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என -பாலை வனத்தின் நடுவில் எழும்பிய ஜலம் என்னும்படி யாகவும் –
அத்திகிரி என்னும் மலை வளையும் படி நின்ற மலை என்னும்படியாகவும்
மலர் அயன் உகந்த பயன் என வருவில் யுறைகின்ற யுயிர் என வடியவர் உகந்த அமுது என –பகவானுடைய திரு நாபிக் கமலத்தில்
உதித்த ப்ரஹ்மா விரும்பிய பலன் என்னும்படியாகவும்
சேதனப் பொருள்கள் வசிக்கின்ற உயிர் என்னும்படியாகவும் -சகல அந்தர்யாமியாக என்றவாறு —
பாகவதர்கள் விரும்புகின்ற அம்ருதம் என்னும்படியாகவும் இருந்ததே —
ப்ரஹ்மாதிகள் முனிவர்கள் பேர் அருளாளனும் அடியாராகப் பெற்றோமே என்று நினைந்து மகிழ்ந்து போற்றுகிறார்கள் –

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1-

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று சாஸ்திரங்களில் விளக்கிக்
கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து -அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல்பாதம் சாரார்த்தம்

சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள்
முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

சித்திரத்து எழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான
சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் -சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொல்லாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்

சிதைவில் மறை நெறியில் எறி அ உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில் ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின்
பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
அசேதனம் ஜகாத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய சர்வேஸ்வரன் ஜகாத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –

———–

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி
செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள் நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –

கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும் பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்

கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள் கர்மா இந்திரியங்கள் மனஸ் முழுதும்
தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –

————-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3-

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று

உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும் லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில்
சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் -அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்

உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும் வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்

உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

———–

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-

தமனி நெறி–ப்ரஹ்ம நாடி

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்

சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்

தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்

தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்

பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –

———————–

ப்ரஹ்மா பரபரப்பு மகிழ்ச்சி பயம் இவற்றையுடையவனாய்க் கிட்டிச் சென்று நித்ய ஸூரீகள்
அனுபவித்தற்கு உரிய எம்பெருமான் திருமேனியை அனுபவித்து தான் பெற்ற பேற்றை இவ்வாறு பேசுகிறான் –

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–20-

ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-
கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத் –ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்ரீ நீளா தேவி முதலிய
எல்லாத் தேவிமாரும் தன்னுடனே பிரகாசித்துக் கொண்டு நிற்க

தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய ஸூரியர் தன்னடிக் கீழ் வாழ -ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும்
ஆறு குணங்கள் முதலிய எல்லாக் குணங்களும் பிரகாசிக்க -தன்னைப் பொன்ற நித்ய ஸூரியர் தன் திருவடிகளின் கீழே நித்ய கைங்கர்யம் செய்ய

அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும் -அருமையான வேதங்களால் புகழப் படுகின்ற
அளவிடமுடியாத தேசமாகிய பரமபதத்தில் ஆதிசேஷனாகிய திருப் பள்ளியின் மேலே எழுந்து அருளி இருப்பதாலேயே சகலத்தையும் ரஷித்து அருளுபவனான

கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–நீல ரத்னம் போன்ற
பேர் அருளாளனை ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது சேவித்தேன் –
என்னுடைய கொடிய கர்மங்கள் முழுதையும் நான் காணவில்லை -கர்மங்கள் தொலைந்தன -என்றவாறு
யாகவேதியில் கண்ணாரக் கண்ட ப்ரஹ்மா மகிழ்ந்து ஆனந்த கடலில் அழுந்தி பித்தனாகி பின்பு சுய நிலை அடைந்து அனுபவிக்கிறான் –

———-

பேர் அருளாளனை உவமானங்களுடன் பிரமன் அனுபவித்தல் –

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்
அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடி கிரி நிலை கவர்தலே -21-

கரடி கிரி -ஸ்ரீ ஹஸ்தி கிரி
நிலை கவர்தல் -நின்று அருளுகை

அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார் -தம் திருவடிகள் இரண்டையும் அடைந்தபவர்களான
பாகவதர்களால் அனுசந்திக்கப்பட்ட பேர் அருளாளர்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடிகிரியினில் அவிர்த்தலே -நெருங்கியுள்ள பெரிய பிராட்டியுடனும் பூமிப் பிராட்டியுடனும்
ஸ்ரீ ஹஸ்திகிரியில் பிரகாசித்தல்

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம் -ஓர் ஆண் ஹம்ஸம் இரண்டு பெண் ஹம்ஸங்களை
சேர்ந்து பிரியாமல் இருக்கும் பிரகாரத்தைப் போலும் என்று சொல்லலாம்

பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம் -பெருகுகிற அருவிகளை பக்கத்தே பெற்றுள்ள
பெரிய ரத்ன பர்வதத்தை ஒக்கும் என்று அனுசந்திக்கலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம் -ஒரு ஆண் யானை இரண்டு பெண் யானைகளுடன்
சேர்ந்து இருந்த பெரிய அழகை போலும் என்று கூறலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம் -தன்னை விட்டுப் பிரியாத பிரகாசத்தோடு சாயையும்
பக்கத்தே பொருந்தப் பெற்ற சூர்யன் பிரகாசிப்பதை ஒக்கும் என்று புகழலாம்

கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம் -ஒரு மரம் கொடிகள் இரண்டுடன் குளிர்ந்து நிற்பதை போலும் என்று கொண்டாடலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்–குற்றம் இல்லாத வேதங்களோடு ஸ்ம்ருதிகளோடு
கூடிப் பிரகாசிக்கின்ற தர்மத்தின் ஸூஷ்மம் போலும் என்று கூறலாம் –

—————

திருக் கல்யாண குணக் கடலாய் இருக்கும் பேர் அருளாளனின் திவ்ய குணங்களை பிரமன் அனுபவித்துப் பேசுதல் —

வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் அருளாளர் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே –22-

தாம் எனினும் தமக்கு ஒவ்வார்–ஸ்ரீ பரமபத நாதனும் ஸ்ரீ தேவப்பெருமாளுக்கு சத்ருசராக மாட்டார் –
ஸுலப்யம் விஞ்சி அன்றோ இருக்கும் இங்கு –

அருளாளர்–பேர் அருளாளர்
வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் -ஆகாசம் முதலிய உலகமாகிய சோலைகள் அனைத்துக்கும் வேரைப் போலே ஆதாரமாக ஆவார் –
பிரபஞ்சம் முழுவதும் எம்பெருமானுக்கு லீலைக்காக ஏற்பட்ட நந்தவனம் போன்றதாகும் –
மரங்களை வேர் தரிப்பது போலே பேர் அருளாளன் தரித்து கொண்டு அருளுகிறான்

விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக் -வேதம் என்று சொல்லப்படும் உலகின் கண்ணுக்கு நடுவேயுள்ள கரு விழியைப் போன்றவர் ஆவார் –
வேதம் தெய்விக கண் போன்றதாகும் -பேர் அருளாளன் சாரமாய் விளங்குவதால் கரு விழி போன்றவன்

கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் –கருணையாகிய மழையைப் பெய்யும் தன்மையால் மேகத்தைப் போன்றவர் ஆவார் –
மேடு பள்ளம் வாசி பாராமல் பொழிவது போலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதம் பாராது கருணையாகிய மழையைப் பொழிகிறான்
கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் -நேரில் பார்த்த போதிலும் ஸ்வரூபத்தை முழுவதும் காண முடியாமையாகிய அதிசயத்தால் கடலைப் போன்றவர் ஆவார்-

கடலின் ஏக தேசம் கண்டு கடலைக் கண்டோம் என்னுமா போலே அவன் ஸ்வரூபம் திருமேனி குணங்களின்
ஏக தேசத்திலும் முழுவதையும் காண வல்லோம் அல்லோம்

நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் -பூமியைக் காப்பாற்றுகின்ற ஸ்வபாவத்தால் ஜலத்தை ஒத்து இருப்பார் –

நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்–நம்முடைய பெரிய அபராதங்களை பொறுத்துக் கொள்ளும்
ஸ்வபாவத்தால் பூமி தேவியைப் போன்று இருப்பார்

இப்படி ஒவ்வோர் அம்சத்தில் பேர் அருளாளனும் போலி யுவமானத்தைத் தேடி எடுத்தாலும் எல்லாக் குணங்களுடன்
கூடிய நிலையில் அவனுக்கு ஓர் அவமானமும் காண முடியாதே

ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே -இவருடைய குணங்கள்
முழுவதையும் ஆலோசித்தால் இவரை ஒத்தவர் யார் -ஒருவரும் இல்லை -தாமே என்றாலும் தமக்கு ஒத்தவராக மாட்டார் -என்று
பிரமன் அனுபவித்து பேசுகிறான் –

மேல் திசையில் உள்ள முகத்தால் யாகசாலையில் மேற் புறத்தில் அணையாகக் கிடக்கும் திரு வெக்கா எம்பெருமானையும்
கீழ்த் திசையில் யுள்ள முகத்தால் யாகவேதியில் திருவவதரித்து அருளிய பேர் அருளாளனையும் சேர அனுபவித்து
ஸ்வயம் வ்யக்தமாய்ப் பரஞ்சோதி யாய் யுள்ள ஒரே வாஸ்து யாகத்தை காத்ததால்
உபாயமாகவும் யாக வேதியில் யாகத்தின் பலனாக திரு அவதரித்த படியால்
பலனாகவும் காணப் படுகிறது என்று அனுசந்தித்தான்
அதிகார சுமையை மறந்து கைங்கர்யத்தில் ஊன்றி நின்று தொடர்ந்து ஸ்துதித்துக் கொண்டே இருந்தான் –

————–

பேர் அருளாளன் பிரமனுக்கு அருள் புரிதல் —

எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு
அன்னம் உயர்த்த செய்யோன் அன்று வேள்வி செய் வேதியின் மேல்
முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முகன் மற்றும் உனக்கு
என்ன வரம் தருவோம் என்று நாதன் இயம்பினனே -23-

அன்னம் உயர்த்த செய்யோன் -ஹம்சத்தைக் கொடியாக உயர்த்தவனும் -செந்நிறமுடைய ப்ரஹ்மா
எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு -எல்லா நிலத்திலும் கால் குழம்பினால்
அடையாளம் செய்த அழகிய குதிரையைக் கொண்டு
அன்று வேள்வி செய் வேதியின் மேல்-அந்நாளில் யாகம் செய்த வேதிகையின் மீது

நாதன் முன்னிலையாகிய மூர்த்தியன் -ஸ்வாமியான பேர் அருளாளன் எதிரே நின்ற திருமேனி யுடையனாகி
நான்முகன் மற்றும் உனக்கு என்ன வரம் தருவோம் என்று இயம்பினனே –ப்ரஹ்மாவே உனக்கு வேறு
எந்த வரத்தைக் கொடுக்க வேண்டும் கேட்ப்பாயாக என்று அருளிச் செய்தான் –
என்னை நேரில் கண்டவர்கள் சகல பலன்களையும் பெற வல்லவராவார் -என்று அவனை நோக்கிக் கூறினான் –

உன் திருமேனியை கண்டு அனுபவிக்கப் பெற்ற எனக்கு மற்று ஒன்றும் வேண்டாம் -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கும்படி
மெய்விரதம் என்னும் இந்த திவ்ய ஷேத்ரத்திலே
புண்ய கோடி விமானத்தில் எப்பொழுதும் தேவரீரைக் கண்ணாரக் கண்டு களிக்க அருள் புரிய வேண்டும் என்றான் –
இங்கேயே நித்யவாஸம் செய்கிறேன் என்றதும் ப்ரஹ்மாவும் யாகத்தைத் தலைக் கட்டி கிருதயுகத்தில்
செய்ய வேண்டிய முறைப்படி பேர் அருளாளனைப் பரிபூர்ணமாக ஆராதித்தான்-

————–

ப்ரஹ்மா அப்பொழுது அங்குள்ள மஹரிஷிகளுக்கு அபிகமனம் முதலிய
பஞ்ச கால ப்ரக்ரியை ஆராதிக்கும் முறைகளை உபதேசித்தல் –

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக்
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப்
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே -24-

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து -எம்பெருமானிடம் சென்று பிரபத்தியைச் செய்து
புஷ்பங்களைப் பறித்து சிவந்த திருவடி மலர்களை விரும்பி
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக் -நல்லது என்று சொல்லப் படுகிற ஜலம் தீபம் நல்லதாய்த் திருமுக மண்டலத்திற்கு
வாசனை தரும் பண்டம் வெற்றிலை ஆகியவற்றை சமர்ப்பித்து
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப் -சருக்கரை லட்டுடன் அன்னம் சீடை கரி ஆகியவற்றை சமர்ப்பித்து
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே — மறுபடியும் மந்த்ர ஜபம் செய்து அவனுடைய திருவடிகளை
த்யானம் செய்யுங்கோள் என்று உபதேசித்தான் –

அபிகமனம் -உபாதானம் -இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -இப்படி பஞ்சகால ப்ரக்ரியை அனுஷ்ட்டிக்க உபதேசம் செய்தான் –

———————

ஸ்ரீ பிரமன் தன்னுலகம் சென்று யோகத்தில் இருத்தல் –

ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின்
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான்
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -25-
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான் -அல்ப காலத்தில் இந்திராதி தேவர்களை நீக்கி வேறு ஒருவரை நியமிப்பவனும்
நான்கு முகங்களையும் யுடையவனுமான ப்ரஹ்மா
ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின் -கடல் போன்ற கர்மங்களை போக்குவதற்காக அஸ்வமேத யாகத்தை செய்து முடித்த பிறகு
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி -ஸ்ரீ ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் அனுமதி கொடுக்க ப்ரஹ்ம லோகம் சென்று
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -கல்ப காலத்திலும் அழியாததான பகவானுடைய த்யானத்தில் அமர்ந்து இருந்தான் –

பேர் அருளாளன் மிக மகிழ்ந்து முன்பு உனக்கு நான் கொடுத்த ப்ரஹ்மபதமாகிய அதிகாரத்தில் குறை தீர்க்கும்படி சரஸ்வதி சாவித்ரி முதலிய
உன் தர்ம பத்னிகளுடன் உன் லோகத்துக்கு சென்று எஞ்சிய அதிகாரத்தை நடத்துவாயாக என்று அருளிச் செய்ய
பேர் அருளாளன் திருவருளையும் மெய் விரத திவ்ய க்ஷேத்ர பெருமையையும் அனுசந்தித்துக் கொண்டு
யோக விசேஷத்தில் மூழ்கிக் கிடந்தது பாக்யசாலியாய் இருந்தான் –

—————

ஸ்ரீ பேர் அருளாளன் நான்கு யுகங்களிலும் வரம் அளித்தல் –

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–26-

அருளே என்று உபக்ரமித்ததையே -அருள் வரதர் -என்று உபசம்ஹரிக்கிறார்

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர் -முதல் யுகமாகிய க்ருத யுகத்தில் ப்ரஹ்மா சாஷாத் கரிக்கும் படி
நின்றவரும் அருளே வடிவு கொண்டவருமான பேர் அருளாளர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து -த்ரேதா யுகத்தில் தன்னிடம் பக்தி மிகுந்து இருந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை முதலை வாயில் நின்றும் காப்பாற்றி அருள் புரிந்து வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித்
துவாபரத்தில் -த்வாபர யுகத்தில் வாதம் புரிவதில் சிறந்த தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கு கருணை புரிந்து
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–காளி யுகத்தில் தேஜஸ் மிகுந்த ஆதிசேஷன் அனந்த சரஸ் என்னும் புஷ்காரிணியின் சமீபத்தில்
அதன் தலைவனாக இருந்து வணங்கி உஜ்ஜீவிக்கும்படி ஸ்ரீ ஹஸ்திகிரியிலேயே நிலை பெற்று நின்றார் –

——————

ஸ்ரீ பேர் அருளாளர் பேர் அருளால் இப்பிரபந்தம் பாடினமை –

வக்த்ரு வைலக்ஷண்யத்தையும் விஷய வைலக்ஷண்யத்தையும் நிரூபித்து அருளிக் கொண்டு
இப் பிரபந்தம் அனைவருக்கும் உபாதேயம்-என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –
இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்கள் என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே —
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் பரி ஸூத்தியைத் தரக் கூடியவர்கள் என்றவாறு

புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்
பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -27-

பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன் -அநாதியான நான்கு வேதங்களின் அந்தத்தில் -வேதாந்தத்தில் ஈடுபட்ட நான்
புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில் -திரு நாபித் தாமரை பிறப்பிக்கப் பெற்ற அநாதியான ப்ரஹ்மாவினுடைய
கபடம் இல்லாது அனுஷ்ட்டிக்கப் பட்ட பெரிய யாகத்தின் உத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்-பேர் அருளானாகிய மேகம் நிறைந்த கிருபையாகிய
மழையைப் பெய்திட்டு நிற்க -அதனால் உண்டான ஒப்பற்ற உயர்ந்த கூர்மையுள்ள அறிவாலும் பக்தியாலும்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -தொண்டை நாட்டில் உள்ள வேதங்களைக் கற்ற அந்தணர் நீடூழி வாழவும்
பரிசுத்தமான தமிழ் வேதம் வல்லவர் வாழவும் இப்பொமியில் சத்யா விரதம் என்னும் திவ்ய க்ஷேத்ரத்தைப் பற்றிய இப்பாசுரங்களை பாடி முடித்தேன் –

—————–

இப் பிரபந்தம் பாடி வீறு பெற்றமை

உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச்
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால் திசை படைத்த திசைமுகன் தான்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -28-

இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இசை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம்-ஒருகாலத்திலும் ஒருவராலும் ஒருபடியாலும் கலைக்க முடியாத விரதம் என்றபடி –

திசை படைத்த திசைமுகன் தான் -திக்குகளை ஸ்ருஷ்டித்தவனும் நான்கு திசைகளிலும் முகத்தை யுடையவனுமான ப்ரஹ்மா
உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச் –தாம் உஜ்ஜீவிப்பதற்கு
உபாயம் வேறு ஒன்றும் இன்றிச் சரணம் அடைந்தவர்கள் உஜ்ஜீவிப்பதற்காக -சரணாகத ரக்ஷணம் என்னும்
ஒப்பற்ற விரதத்தை தானே கைக் கொண்டவனும் -அதனால் உயர்ந்து நிற்பவனுமான எம்பெருமானை
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால்–தன்னால் செய்யப்பட வேறு எந்த விரதத்தாலும் நேரில் ஸாஷாத் கரிக்க முடியாத கவலையினால்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த-பலன் கொடுக்க வில்லை யாதலின் வீணாகப் போகும்
விரதங்களை யுடைய ஷேத்ரங்களுக்கு எல்லாம் போய் பயன் அற்றுத் திரும்பி இந்த ஷேத்ரமே புண்ணியத்தைப் பெற சாதனமாகும் என்று வந்து அடைந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -சத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின்
வைபவத்தை இப்பிரபந்தத்தால் புகழ்ந்து வேதாந்த தேசிகர் சிறந்து விளங்குகிறார் –

—————-

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்
தாரார் அருளாளர் தாள் நயந்து சீராக
மெய் விரத நன்னிலத்து மேன்மை இது மொழிந்தான்
கையில் கனி போலக் கண்டு –29—

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான் -பெருமை நிறைந்த ஸ்ரீ தூப்பூழில் திரு அவதரித்த ஸ்ரீ வேங்கட நாதன் என்னும் தேசிகர்
தாரார் அருளாளர் தாள் நயந்து -மாலை நிறைந்த பேர் அருளாளருடைய திருவடிகளையே விரும்பி
மெய் விரத நன்னிலத்து மேன்மை சீராக இது மொழிந்தான் -ஸத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின் பெருமையை
கையில் கனி போலக் கண்டு –உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனியைப் போலே அறிந்து சிறப்புடன் இந்த பிரபந்தத்தை வெளியிட்டார் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மன் நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் –(ஸ்ரீ மெய் விரத மான்யம்)–

July 31, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

—————————————————-

1687 முதல் –22 ஆண்டுகள் –உடையார்பாளையம் –ஒவ்ரங்க சீப் /
போதேந்த்ர சங்கராச்சாரியார் -பங்கார காமாச்சி -செஞ்சி கோட்டை முற்றுகை போராட்டம் –
பழைய சீவரம் கல்லைக் கொண்டு மூலவர் –
தானே காட்டக் கண்டார்கள் பின்பு-
அர்ச்சகர் கனவில் -யாக தீ சுடர் தாபம் -திருவால வட்டம் அருளினார் முன்பு ஸ்ரீ திருக்கச்சி நம்பி –
குளிர்ச்சியாக இருக்க வழி-ஜல நிவாஸம் தானே இருக்க அருளிச் செய்தானாம்
உடையார்பாளையம் -உத்சவ மூர்த்திகள் –1687-சென்று -1710-மீண்டு வந்தது பற்றிய கல் வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளதே

1781 -ஜூலை 31 -முதலில் எடுக்கப்பட்டதாக கல்வெட்டு
கிருதயுகம் ஹஸ்திகிரி அப்பன் / த்வாபர யுகம் -ஸ்ரீ ரெங்கம் / த்ரேதா யுகம் –புருஷோத்தம க்ஷேத்ரம் / கலியுகம் கலவ் வேங்கடம்
1854-1892–1937–1979–2019-ஏறக்குறைய -40-ஆண்டுகள் -எடுக்கப்பட்டதாக அறிகிறோம்-
2 nd ஜூலை 1979
12 th ஜூலை 1937
13th – 6 – 1892
18 th -8 -1854

கிடந்த கோலத்துடன் முதலிலே ஸ்ரீ ராமானுஜருக்கு விந்தியா பர்வதத்தில் -வேடன் வேடுவிச்சி -ரூபத்தில் சேவை உண்டே

நீண்டதொரு காலமாக நீரினுள் மூழ்கி நின்று
காண்பவர் வியக்கும் வண்ணம் கரை வந்த வரதன் தன்னை
மாண் புகழ் கொண்ட காஞ்சி மைந்தர்கள் வணங்கும் நாளில்
ஈண்டு வந்து இன்பம் உற்றேன் இறைவனின் செயலே அன்றோ -கண்ணதாசன் -15-7-79-அன்று ஸ்ரீ காஞ்சியில் எழுதியது

———————

க ப்ரஹ்மா -ப்ரஹ்மாவே ஆராதித்த திவ்ய தேசம் காஞ்சி -பெருமாள் கோயில் -சத்ய வரத க்ஷேத்ரம் –
புண்யகோடி விமானம் -கோடி தடவை பண்ணும் பலன் கிட்டும் -அனந்த சரஸ் -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம் –
யானை மலை -அத் திகிரி -அந்த -அழகிய சக்கரத்தாழ்வார் -என்றுமாம் -வரம் ததாதி வரதன்-
ஆழியான் அத்தி ஊரான் -என் நெஞ்சமேயான் -என் சென்னியான் -உள்ளில் உள்ள அழுக்கை கருதாமல் –
இதே போலே அனந்த சரஸ் -அந்த களேபரம் -கதம் ஆதாரம் இதுக்கு உமக்கு தேசிகன் -ஸ்ரீ வரதராஜ பஞ்சாத் –
உள்ளூவார் உள்ளத்து எல்லாம் உடன் இருந்து அறிந்து -தர்சனமே வாழ்வு –
நிதி நீர் -பக்தி சித்தாஞ்சனம் கொண்டே அறியலாம் –
கராரவிந்தே-பாலா முகுந்தன் -மார்க்கண்டேயர் -ஆலிலை -தன்னையும் கண்டு -உள்ளே புகுந்து -அனைத்தும் ஒடுங்கும் –
நாரங்களுக்குள் அவனும் -அவனுக்குள் நாரங்களும் -அக்ரூரரும் யமுனை நீராட்டம் பொழுது கண்டு அறிந்தார்-
உள்ளும் புறமும் வியாபித்து -நாமும் அத்தி வரதரை உள்ளும் புறமும் -கண்ணனின் பிரதிநிதியை இவரும் –
நாராயண அவதார அர்த்தம் விளக்கும் படி –
பாசி தூர்த்து –மானமிலா பன்றியாம் -நிலா மடந்தை தன்னை இடந்து –
நம்மை சம்சார கடலில் இருந்து இடந்து எடுத்து அருளவே இந்த கோலம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராய் அன்றோ உள்ளோம் –
நார-தண்ணீர் இருப்பிடமாக கொண்டவன் -பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து -கடைந்து -இத்யாதி
தீர்த்தன்-தீர்த்தத்துக்குள் இருப்பது அதிசயமோ
பிரதம சதகே விஷ்ய வரதன் -நாலாவது பதிகம் –பத்தாம் பத்து -உடல் ஆழி -கடல் ஆழி நீர் தோற்றி அதன் உள்ளே கண் வளரும் –
அடல் ஆழி அம்மானை -ஆழ்வார் இதுக்கு ஸூசகம் ஆகவே -40-வருஷங்கள்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் -கோரா மா தவம் செய்தனன் கொல்-சேதனன் லாபம் அவனுக்கே –
முத்து மாணிக்கம் -தொண்டை நாட்டில் ஆழ்வார்களை பெற்றுக் கொடுக்க தவம் -ஆச்சார்யர்கள் பலரும் -நமக்கு கிடைக்க தவம்
முதலில் சயனம் பின்பு நின்ற திருக்கோலம் -அது இது உது -எல்லாம் உசிதம்
கிடந்து-இருந்து -நின்று -அளந்து -மீண்டும் கேழலாய் கீழ்ப் புக்கு மீண்டும் புஷ்கரணியில் தனது ஸ்வ ஸ்தானம்
எழுந்து அருளுவதையே ஆழ்வார் மங்களா சாசனம் –

———————————–

ஸ்ரீ மெய் விரத மான்யம் -என்றும் அருளிச் செய்வர் இந்த பிரபந்தத்தையே

———————

ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலை ரூபமாகவே ஸ்ரீ எம்பெருமானை சாஷாத்காரித்ததால் ஸ்ரீ ஹஸ்திகிரி -திரு நாமம்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் திருவடிகளில் புண்டரீகம் சமர்ப்பித்ததாலும் என்னவுமாம்
திக் கஜங்கள் ஆராதித்த திவ்ய க்ஷேத்ரம் என்றுமாம்
நம் ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுக்கு விசேஷ கடாக்ஷம் செய்து அருளிய பெருமையும் உண்டே
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ தேவராஜனின் வடிவு அழகிலே ஈடுபட்டு மோகித்தவர்கள் ஆகையால் மங்களா சாசனம் அதிகம் இல்லை
அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவா -என்று அருளிச் செய்தமையால் அனைத்தும் இவனுக்கே
பரிபூர்ண சோபையிலே ஈடுபட்டு அது வாசா மகோசரமாய் இருப்பதால் வர்ணிக்காமல் இருந்தார்கள்
ஸ்ரீ எம்பெருமானார் உகந்து அருளி பிரதிஷ்டானம் செய்த மகிமையும் உண்டே
ஸ்ரீ கலியனுக்கும் தனம் இருந்தமை காட்டி அருளி உபகரித்தது
வேடன் வேடுவிச்சி ரூபமாக உபகரித்து ஸ்ரீ எம்பெருமானாரை ஸ்ரீ காஞ்சிக்கு விந்தியா பர்வதத்தில் இருந்து கூட்டி வந்து உபகரித்தது
ஸ்ரீ திருக்கச்சி நம்பி மூலம் ஆறு வார்த்தைகள் அருளிச் செய்து உபகரித்தது
ஸ்ரீ திவ்ய க்ஷேத்ர மஹிமையினால் தானே ஸ்ரீ தேவப்பெருமாளுக்கும் மஹிமை என்பதால்
ஸ்ரீ பேர் அருளாளன் மஹாத்ம்யம் என்னாமல் ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம் என்ற திரு நாமம்

இந்த கிரந்தத்தில் விஸ்தாரமாக நிரூபிக்கப் போகிற அர்த்தங்களை ஸூசிப்பித்துக் கொண்டு –
விஷய பிரயோஜன அதிகாரிகளையும் காட்டா நின்று கொண்டு
மங்களாசாசனம் செய்து அருளுகிறார் முதல் ஸ்லோகத்திலே –
பிரம்மா ருத்ராதிகள் -சமுத்திர ராஜனின் பத்தினியான ஸ்ரீ கங்கைக்கு உத்பத்தி ஸ்தானம் அன்றோ அரனின் சடா முடி –
இவர்கள் வணங்க பாரிஜாத மொக்குகளால் அலங்க்ருதமான திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணக் கடவோம்-
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே -என்றபடி –
பாவன தமமான ஸ்ரீ கங்கைக்கும் பாவானத்வம் அளிக்கும் திருவடி அன்றோ –

அவாப்த ஸமஸ்த காமன் பரிச்சின்னமான தேச விசேஷத்திலே சாந்நித்யம் பண்ணி அருளுவதும் –
உபய விபூதி நாதன் தனக்கு ஒரு இருப்பிடம் இல்லாதவன் போலே இங்கே அல்ப தேசத்தை
தனக்கு இருப்பிடமாக கொண்டு அருளுவதும் –
சர்வ சேஷி இந்த ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு அலங்காரமாக -வட மா மலை உச்சி -என்றபடி தன்னை சேஷமாக கொண்டு அருளுவதும் –
உத்தர வேதியிலே ஆவிர்பவித்து சகல மனுஷ நயன விஷயதாங்கனாய் இருக்கும் தன்மையும் -அருளிச் செய்து –
இக்கிரந்தத்துக்கு விஷயம் அவனது பரம கிருபையும் –
அதன் மூலமாக அவன் திருவடிகளே பிராப்யம் என்றும் நிரூபிக்கப் பட்டதாகிறது –

————————-

இவ்வர்த்த விசேஷங்களுக்கு ஹேதுவை நிரூபித்து அருளுகிறார்

வாழி அருளாளர் வாழி யணி யத்திகிரி
வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி
சரணாகதி என்னும் சார்வுடன் மற்று ஒன்றை
அரணாகக் கொள்ளாதார் அன்பு –1–

பேரருளாளர் வாழ்க, அலங்காரமான அத்தகிரி வாழ்க,
பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க,
ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதார் அன்பு வாழ்க.

கிருபா குணமே அன்றோ நிரூபணம் -பூமிக்கே அலங்காரமான ஸ்ரீ ஹஸ்திகிரி –
அதுக்கும் அலங்காரமாய் அன்றோ இவன் –
ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ ஸூக்திகளையே காலக்ஷேபமாக உடையவர்களுக்கும் மங்களா சாசனம் –
மற்று-என்று உபாயாந்தரங்கள் -பக்த்யாதிகள்
பரத்வம் கழற்ற உண்ணாமல் ஸ்வரூபத்தைப் பற்றி இருக்கும் -தாயாயாதி குணங்களோ ஸ்வரூபத்திலும் விஞ்சி இருக்கும் –
சாதகனுக்கு என் வசமாய்-என்னைப் பற்றும் சாதனமும் சரண நெறி அன்று உமக்கு சாதனங்கள்
இந்நிலைக்கு ஓர் இடையில் நில்லா -என்றவாறு –

———————-

சகல லோகங்களுக்கும் ஹிததம புராண உத்க்ருஷ்டமான ஸ்ரீ பேர் அருளாளன் பெருமையை –
பாவ ரஸ தாளங்களுடன் -அடியார்களின் ஹர்ஷத்துக்கு உறுப்பாக பண்ணும் இசையும் திகழப் பகர்கின்றோம் –
இத்தைக் குறிக்க கொண்டு கேட்டு அருள்மின்

எண்டிசையும் கடல் ஏழும் மலைகள் ஏழும் ஈரேழு வையகமும் படைத்து இலங்கும்
புண்டரீகத்து அயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்யத்தை உகந்து வந்து
தொண்டை எனும் மண்டலத்தின் நடுவில் பாரில் தூ நில மெய் விரதத்தில் தோன்றி நின்ற
கொண்டல் அருள் குணமே நாம் கூறுகின்றோம் கூர் மதியீர் குறிப்பாகக் கொண்மினீரே—2–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் அமுது செய்த சேவை ஸ்ரீ ஆழ்வாருக்கு அருளிச் செய்தது போலே
ஸ்ரீ தேவப்பெருமாள் ஹவிஸ்ஸை அமுது செய்தபடியே அர்ச்சா ரூபத்தில் சேவை சாதிக்க பிரார்த்திக்கிறார்
சர்வ உத்க்ருஷ்டமான அருள் குணத்தை அருளிச் செய்வதாக பிரதிஜ்ஜை செய்து அருளுகிறார்

——————-

வம்மின் புலவீர் அருளாளப் பெருமான் என்றும் அருளாழி அம்மான் என்றும்
திருமா மகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட பேர் அருளாளர் என்றும்
வியப்பால் விருதூதும் படி கரை புரண்ட கருணைக் கடலை
எவ்வண்ணம் பேசுவீர் ஈது என்ன பாங்கே-3-

புலவர்களே வாருங்கள்! அரூளாள பெருமான், அருளாழி அம்மான், பிராட்டியை தேவியாக கொண்டு
சதா தன் மார்பில் தரித்துக்கோண்டிருப்பவனும், கருணைக்கடல், வள்ளல் சதா என் மனதில் குடிகொண்டு
நித்ய வாசம் செய்யும் பேரருளாளர் என் அத்தகிரி பெருமானை பற்றி பேச யாருக்கும் நேர்மை கிடையாது-
அதாவது அவன் கருணை எல்லையை கடந்தது.
கருணைக்கடலாக எம்பெருமானை எவ்வாறு நீங்கள் பேசவல்லீர்-இவ்வாறு செய்வது என்ன நேர்மை?

பூர்ணமாக வர்ணிக்க முடியாவிட்டாலும் சக்திக்குத் தக்க சத்தைக்காக அனுசந்திக்கிறேன் என்றவாறு
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ எம்பெருமானை –
அருளாழி அம்மானைக் கண்டக்கால் –
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட ஸ்ரீ பேர் அருளாளன் பெருமை பேசிக் கற்றவன் காமரு சீர்க் கலியன் -என்று
இப்புடைகளில் ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செய்த படியே –
கால ஷேபத்துக்காக அறிந்த அளவில் ஸ்ரீ பகவத் குணங்களை வர்ணிக்க உபக்ரமிக்கிறோம் என்றவாறு –

—————————

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்குத் பரம் ஓன்று இலதே–4-

ப்ராப்யமும் பிராபகமும் அவனே-என்று தத்வ ஹித புருஷார்த்தங்களை-அர்த்த பஞ்சக ஞானம் – நன்றாக அறிந்த நம் ஸ்ரீ பூர்வர்கள் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று இத்யாதிகளில் படியே -உபதேசிக்க –
இசையில் -அத்வேஷம் மாத்திரம் -இல்லாமால்
திரு அருளால் -அபிமுகனாக்கும் ஸ்ரீ -அகில ஜெகன் மாதா -பலப்ரத உன்முகனாய் நின்று அருளும் நம் ஸ்ரீ தேவப்பெருமாள் –
நாம் இச்சைப்படும் காலத்தில் அப்பொழுதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய
திருவடிகளைக் கூட்டி அருளுவர்-என்றதாயிற்று
சரணமாகும் தான தாள் அடைந்தார்கட்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அன்றோ
இங்கு இருக்கும் காலத்தில் கால ஷேப அர்த்தமாக குண அனுபவம் பண்ணுவது உசிதம் என்பதால்
அதில் பிரவ்ருத்தி செய்யப்படுகிறது என்றதாயிற்று

—————————-

சர்வ சேஷியாய் -சர்வ நியந்தாவாய் -சர்வ ஆதாரமாய் -சர்வ காரணமாய் -அகில ஹேய ப்ரத்ய நீகனாய் –
கல்யாண குண ஏக தானனாய் -தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று –
மஹாதி ப்ரஹ்ம அண்டாந்தம் தாமாகவே ஸ்ருஷ்டித்து – -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்து
திசைமுகன் கருவுள் வீற்று இருந்து-விவித விசித்திர சந்நிவேஷங்களாகப் பகுத்து –
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்-பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாகி நின்ற –
தனக்கு சரீரமாக உடையவனால் சாஷாத்தாக திரு நாபி கமலத்தில் இருந்து உண்டாகி சிஷ்யனுமாய் –
கறந்த பாலுள் நெய்யே போல் -இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெரு மாயனை
ஸூவ யத்னத்தால் இளைப்பினை இயக்கம் நீக்கி இத்யாதி –

வம்பவிழ் போதமர் மாதர் உகந்த வம் மா நிதியை
தம் பலமே கொண்டு காணக் கருதிய தாமரையோன்
முன் பல குற்றத்து வல் வினை மொய்க்க முகில் மதியாய்
அம்புலி வேண்டிய பாலனைப் போல் அழுதனனே–5-

முகிழ் மதி -சுருங்கின ஞானம் / வல் வினை -பகவத் நிக்ரஹ சங்கல்பம் /
மொய்க்க -நெய் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போலே /வம்பவிழ் -போக்யத்வம் விவஷிதம்

—————————-

நின்றவா நில்லா அந்தக்கரணமே இதுக்கு காரணம் -இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினை கூறு செய்வதாக
ஏறவும் இழியவும் நெடும் காலம் காய கிலேசம் பட்டோம் -என்று
நெஞ்சு உருகி கண் பணித்து நெடு மூச்சு எறிந்து நிலத்தைப் பார்த்து இருந்தான் ஸ்ரீ நான்முகன்

அடங்காக் கரணங்கள் ஐந்துடன் ஆறும் அடக்கி முன்னம்
நெடும் காலம் இந்நிலமே நிலை யாப்புண்டு நீடுறைவான்
சடங்கால் பெரிய தவங்கள் செய்தேன் என்ன தன்மை இது என்று
இடம் காத்து இருந்த திசைமுகன் தன்னை இகழ்ந்தனனே —

சடங்கால் –அங்கங்களினால் –
இடம் காத்து இருந்த -தன்னுடைய ஸ்தானத்தை வேறு எவரும் ஆக்ரமிக்காதபடி காத்துக் கொண்டு இருந்த
ஸ்ரீ பகவத் ஆனந்த அனுபவத்தால் அடிக்கழஞ்சு பெற்றுப் போக்கக் கடவ காலத்தை –
பழுதே பல பகலும் போயின என்று தன்னையே நிந்தித்து
இந்நிலமே -அல்பம் அஸ்திரம் பலம் அன்றோ இங்கு –

—————————-

இப்படி நிர்வேதப்பட்ட நான்முகன் தர்ம அனுஷ்டானத்துக்கு உசிதமான ஸ்தானத்தில் புகுந்தான் –

விண்ணுலகில் வீற்று இருந்த மேன்மையாலும் வேதங்கள் ஈரிரண்டும் விரித்ததாலும்
கண்ணனை நான் கருத்துறவே காண்பன் என்னக் காணாமல் விலக்கிய தன் வினையைக் காணா
எண்ணிய நற் புவனங்கள் ஏழும் ஆறும் இரு மூன்று தீவமும் எட்டு இடமும் விட்டுப்
பண்ணிய நல் விரதம் எல்லாம் பலிக்கும் என்று பாரதத்தை பங்கயத்தோன் படிந்திட்டானே -7-

கருத்துறவே -மனசிலே பிரதிஷ்டனமாம்படி
அதல -விதல -நிதல -தலாதல-மஹா தல -ஸூதல –பாதாள -கீழ் லோகங்கள் ஏழும்
புவ-ஸூவ -மஹ -ஜன -தப – சத்யம் -பூமி -மேல் லோகங்கள் ஏழும்
ப்லக்ஷ-சால்மலி -குச-க்ரௌஞ்ச -சாக புஷ்கர-ஜம்புத்வீபம் -ஏழு த்வீபங்கள் –
எட்டு இடங்கள் -பாரத வர்ஷம் தவிர -கிம்புருஷ -ஹரி -இலாவ்ருத-ரம்யக -ஹிரண்யக -குரு-பத்ராஸ்வ -கேதுமால -என்ற வர்ஷங்கள்-

——————–

எத்திசை நிலனும் எய்தி யாரும் தவம் செய்த அந்நாள்
சத்திய விரதம் செல்வாய் என்றதொரு உரையின் சார்வால்
அத்திசை சென்று அழைத்து அங்கு அமரரில் எடுப்பான் தன்னை
உத்தர வேதி செய் என்று உரை அணங்கிறை உரைத்தான் -8-

உரை அணங்கு இறை –ஸ்ரீ சரஸ்வதிக்கு நாயகனான ஸ்ரீ நான்முகன்
அமரர் இல் எடுப்பான் தன்னை -ஸ்ரீ விஸ்வகர்மாவை உத்தர வேதியை நிர்மாணம் செய் என்றது
யாகங்களுக்கு அவஸ்ய அபேக்ஷிதமான-ஹவிர்த்தானம் -சதஸ்ஸூ -வாஸஸ் ஸ்தானங்கள்-இவற்றுக்கும் உப லக்ஷணம்

வாக்கின் தேவதையான ப்ரஹ்மா எல்லா திசைகளிலுமுள்ள ஸ்தானங்ககளுக்கும் சென்று
ஒருவராலும் செய்யமுடியாத தவத்தை செய்த காலத்தில் ஸத்யவ்ரத க்ஷேத்திரத்திற்கு போ என்று அசரீரி சொல்ல,
ப்ரஹ்மா விச்வகர்மாவை அழைத்து யாகம் செய்வதற்கு உத்திர வேதியை அத்தகிரியில் அமைப்பாயாக என்று உரைத்தான்.

—————————

இந்த ஸ்ரீ திவ்ய ஷேத்ரமே ஸ்ரீ ப்ரஹ்மாவுக்கு அபேக்ஷிதமான சர்வ பாவ நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கும் என்று
அனுசந்தித்த படியை அருளிச் செய்கிறார்

உத்தம அமரத்தலம் அமைத்தது ஒரு எழில் தனு கணையால்
அத்திற வரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்து உண்ணும் அத்தன் இடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி அத்திகிரியே –9-

அத்தன் -ஆப்தன் / உத்தம -சர்வ உத்க்ருஷ்டமான / சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை -என்பது போலே –
பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி உதிர வில் வளைத்தோன் -கிள்ளிக் களைந்தான் – அநாயாசேந சேஷ்டிதம் அன்றோ –

உயர்ந்த போர்களத்தில் அமைக்கப்பெற்ற அழகிய வில்லினின்று விடப்பெற்ற அம்பினால்
அஸ்த்ர பலமுள்ள ராவணனின் தலைகள் பத்தையும் ஒரு குலையாக அறுத்த ராமனும்;
மத்தினால் கடையப்பட்ட தயிரையும், வெண்ணையையும் உண்ட கண்ணன்-ஆகிய இருவருமான
என் ஸ்வாமி ஹஸ்தகிரி எனும் காஞ்சியில் பக்தர்களுடைய பாபங்களை அறவே ஒழித்து
நமக்காக அருள் பாலிக்க குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரமே அத்தகிரி.

———————————

இவ்வண்ணம் யாகம் செய்யும் இடமும் படை வீடுமாக -க -ப்ரஹ்மாவால் -என்பதால் ஸ்ரீ காஞ்சீ
ஸ்ரீ பூமாதேவிக்கு அரை நூண் மாலை போலே இருப்பதாலும் ஸ்ரீ காஞ்சீ
ஸ்ரீ காஞ்சீ ஆபரணத்துக்கு துல்யமான நகரம் –

திண் மணிகள் பொன்னுடனே சேர்தலாலும் சிதையாத நூல் வழியில் சேர்த்தியாலும்
வன்மை ஏழு ஈர் இரண்டு வண்ணத்தாலும் வானவர்க்கு வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசி ஒளி ஓசையாலும் ஒரு காலும் அழியாத அழகினாலும்
மன் மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னு மதிள் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே -10-

அயோத்யா வடமதுரை மாயை காசீ காஞ்சீ அவந்திகா வாரணாஸீ துவாரகா -ஏழும் முக்தி தரும் திவ்ய ஷேத்ரங்கள்

காஞ்சி நகர் திடமான ரத்தினங்களாலும், தங்கத்தாலும் சேர்த்து இழைக்கப்பட்டது.
அழியாத சிற்ப சாஸ்திரத்தால் அழகு பெற்றது.நாங்கு ஜாதியனரும் சேர்ந்து நிறைந்து
தேவர்களும் வியக்கத்தக்க அழகுடன், குதிரைகள் மற்றும் யானைகள் சூழ பூமிக்கு ஆபரணம் போன்ற
மதிள்களுடன் தேவலோகம் போல் காட்சிதரும்- காஞ்சியை கண்டு ப்ரஹ்மா மகிழ்ந்தார்

ரத்தினத்தோடு தங்கத்தை சேர்ந்து இழைக்கப்பெற்ற , அழியாத சிற்ப சாஸ்திரப்படி வடிக்கப்பெற்ற ,
கொடை நிறைந்த , நான்கு ஜாதியனரும் நிறந்த தேவர்களுக்கு வியப்பையூட்டும் இயற்கை அழகு அமைந்த,
குதிரைகள் கனைக்கும் ஓசையாலும், ஒருபோதும் அழியாத அழகு பெற்ற -பூமிக்கு ஆபரணம் போல
மதிள்கள் உடைய கச்சியை கண்டு பிரஹ்மா மிகவும் மகிழ்ந்தார்.

—————

இனி ப்ரம்மா யஜ்ஜைத்தை ஆரம்பித்து ரித்விக்குகளை வரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
தன் புத்ரன் வசிஷ்டரை ராஜ்ஜாபித்த பிரகாரத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார்

காமங்கள் பல கொண்ட வேதம் கொண்டு கைதவமே செய்வார்க்குக் காணகில்லாப்
பூ மங்கை கேள்வனை நான் கண்டு போற்றப் புண்ணியத்தில் நிகரில்லா விரதம் பூண்டேன்
சாமங்கள் கழிவதன் முன் சடக்கெனப் போய் தன்னாற்றில் தனியிருந்து தவம் செய்கின்ற
நா மங்கை வந்திட நீ அழைப்பாய் என்று நன்மகனை நான்முகன் தான் நவின்றாட்டானே –11-

காமங்கள் -காம்ய கர்மங்கள் /கைதவம் -கபட கார்யம்-ஆஸ்ரயண வேளையில் வேதங்களைக் கைப்பற்றி போக வேளையில் கை விடுபவர்கள்
பூ மங்கை கேள்வனை -மிதுனத்தைப் பற்ற -ராவணாதிகளைப் போலே அல்லவே
போற்ற -ஸ்துதிக்க -நமஸ்கரிக்க ஆராதனம் செய்ய என்றபடி
தனி இருந்து -பிரணய கலகத்தில் தனியே இருந்து தபஸ் ஸூ இருந்தமை ஸூசிதம்
கோபத்தில் இருக்குமவளை சமாதானப்படுத்தி அழைத்து வரக் கூடிய வாக் சாமர்த்தியம் உள்ள நன் மகன் –

—————–

சமாதானம் அடையாமல் வராததால் ஸ்ரீ சாவித்ரி போல்வாரை வைத்து அஸ்வமேத யாகம் பண்ண
கோபித்து வேகவதி நதியாகப் பெருகி அளிக்க உபக்ரமித்தத்தை அருளிச் செய்கிறார்

அன்ன வடிவாள் அசையும் அன்ன நடையாள் உயருமன்ன வரசேறி வருவாள்
அத்தன் அயனத்த நயனுத்திதனை யத்திதென யுத்தி புரியாள்
நன்னடை விடா நடமிது என்ன நடவா நடுவுள் நண்ணு குடகேறி இழிவாள்
நற்பதிகள் அற்பதிகள் கற்புரள வற்புத மருக்கதியினால்
கன்னடை விடா விடமிலுன்னதி சிறா விகட மன்னு கிரி கூட மிடியக்
கட்ட விடை யிற்று விழ முற்றும் விழி யுற்றடைய விட்டருகுற
அன்ன நய சீர் அயன் இது என் என விழா யமரர் மன்னு பதியேறி மகிழ
அச்சுதன் அணைத் தனுவிலத்திசை வரத்தகைய வற்று அணுகினாள்–12-

அன்ன வடிவாள் –ஹம்சம் பொன்ற சரீரம் –வெண்மை நிறம் கொண்டவள் —
அசையும் அன்ன நடையாள் -மெதுவாக சஞ்சரிக்கும் ஹம்ச கதி யுடையவன்
உயருமன்ன வரசேறி வருவாள் -உயர்ந்த –ஆகாசத்தில் பறக்கிற ஹம்ஸ ஸ்ரேஷ்டத்தில் ஏறி வருவாள்
இப்படி இருப்பவள் வேகவதி நதியாக வந்து கிரி கூடங்களில் ஏறி விழுவது எப்படி ஸம்பவித்ததோ-ஆச்சர்யம் த்யோதிதம்
அத்தன் அயன் -ஆப்தனான ப்ரம்மா -கோபத்துக்கு காரணம் அவன் இல்லை என்றவாறு
அத் தநயன் உத்திதனை -வசிஷ்டருடைய வார்த்தையை
யத்து இது என யுத்தி புரியாள்–இப்படியே ஆகட்டும் என்னும் பதில் வார்த்தையை கொடாதவளும் –
அப்படியே ஆகட்டும் என்று சொல்லாதவள் என்றவாறு –
நன்னடை -நல்ல நடை -வேகமான நடையை
விடா நடமிது என்ன நடவா -விடாததான நடனம் இது என்று சொல்லும்படி -நாட்டிய விசேஷம் என்று சொல்லலாம்படி
நடந்து கொண்டு இருக்கச் செய்தே
நடுவுள்-நடுவிலே அதி கம்பீரமாக பிரவஹத்திக் கொண்டு இருக்கையில்
நண்ணு குடகேறி இழிவாள்-அருகில் இருக்கும் கற் கூட்டங்களின் மேல் ஏறி இறங்கும் ஸ்ரீ சரஸ்வதி
நற்பதிகள்-நல்ல சமமான பிரதேசங்கள்
அற்பதிகள் -அப்படி அல்லாத மேடு பள்ளமான ஸ்தலங்கள் இவைகளில்
கற்புரள-கற்கள் புரண்டு வரும்படியாக
வற்புத மருக்கதியினால்-ஆச்சர்யமான வாயுவுக்கு சமமான வேகத்தினால்
கன்னடை விடா விடமில் கல்லிலே போவதை விடாத ஸ்தலம் -கல்லில் மேலே சென்றமையை சொன்னவாறு
உன்னதி சிறா –உயர்ந்து இருப்பதினால் சிறுமை பெறாத -மிகவும் உயர்ந்ததாக என்றவாறு
விகட மன்னு கிரி கூட மிடியக் -விசாலமான மிகவும் உறுதியான மலைகளினுடைய சிகரங்கள் இடியும்படி
கட்ட விடை–கட்டப்பட்ட அடக்க முடியாத வ்ருஷபங்கள்
யிற்று விழ– சந்தி பந்தங்கள் இற்றுப் போய் கீழே விழும்படி
முற்றும் விழி யுற்றடைய விட்டு –நான்கு பக்கங்களிலும் விழித்துப் பார்த்து -எல்லாவற்றையும் விட்டு –
உயிர் தப்பினால் போதும் என்று புத்ராதிகளையும் கூட த்யஜித்து
அருகுற-ப்ரம்மா அருகில் சென்று தங்களை ரக்ஷிக்கப் பிரார்த்திக்க
அன்றிக்கே
தங்கள் வண்டிகளில் கட்டிய எருதுகள் கீழே விழுந்ததால் ஆவாரார் துணை என்று எங்கும் பார்த்து யாரையும் காணாமல்
தனித்தனியே அவர்கள் நீந்திக் கரை சேர என்றுமாம்
அன்ன நய-ஹம்சத்தை அடையாளமாக யுடைய நியாயத்தை உடையவனாக -அதாவது பிரணய குபைத்தையான பத்தினியை
சாந்தம் செய்ய புத்ரனை அனுப்பியும் வாராமையாலே சாஸ்த்ர விதிப்படி வேறு பத்னிகளைக் கொண்டு நியாமாமாக யஜ்ஜம் செய்தவனான
சீர் அயன்-குணவானான ப்ரம்மா
இது என் என விழா யமரர் –இது என்ன ஆச்சர்யம் என்று மஹா உத்சவத்துக்கு வந்த தேவர்கள்
விஸ்மிதனாய் நிற்க
மன்னு பதியேறி மகிழ -ஸ்திரமான தங்கள் ஸ்தானங்களில் ஏறி -இன்று செத்து பிழைத்தோம் என்று மகிழ
அச்சுதன் அணைத் தனுவில் அத்திசை வரத்-ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவன் தனக்கு திருப்பள்ளியாகிற ஆதி சேஷனுடைய சரிரத்திலே –
அணை போட்டால் போலே நிச்சலமான திருமேனியுடன் அத்திசை நோக்கி வர –திரு அணை -வேகா சேது அன்றோ திரு நாமம் –
தகைய வற்று அணுகினாள்–தடுக்க வற்றுதலை அடைந்தாள் -பூமிக்குள் அந்தர்தானம் செய்தாள்
அன்றிக்கே
தன்னுடைய வேகம் எல்லாம் அடக்கிக் கொண்டு லஜ்ஜித்து அணுகினாள் சமீபத்தில் வந்தால் என்றுமாம்

——————-

ஸ்ரீ அரவணையோடே கூட ஸ்ரீ திரு அணையாக கிடந்த அளவிலே கண்ணும் மனமும் களிக்கக் கண்டு இவ்வண்ணம் பேசினார்கள் –

அன்று நயந்த வயமேத மா வேள்வி பொன்ற யுரை யணங்கு பூம்புனலாய்க் கன்றி யுர
ஆதி அயனுக்கு அருள் செய்தணையானான் தாதை அரவணையான் தான் -13-

அன்று நயந்த வயமேத மா வேள்வி-அப்பொழுது அனுஷ்ட்டிக்கப்பட்ட அஸ்வமேதயாகம்
பொன்ற யுரை யணங்கு பூம்புனலாய்க் கன்றி யுர–நசிக்கும்படி சரஸ்வதி அழகிய நதியாய் – கீழே நிரூபித்த பிரகாரமாய் –
ஆம்பல் நெய்தல் பூக்களுடன் கூடிய நதியாக -கோபித்துக் கொண்டு பிரவஹிக்க
ஆதி அயனுக்கு அருள் செய்தணையானான்-சர்வ ஜகத் காரணமானவன் பிரம்மாவுக்கு கிருபை பண்ணி
தாதை அரவணையான் தான் –அவனுக்கு பிதாவாகிய ஆதிசேஷனை சயனமாகக் கொண்ட சர்வேஸ்வரன் தானே
திரு அணையானான்-மழுங்காத வைனுதியால் இத்யாதிப்படியே வேறு ஒருவரைக் கொண்டு செய்யாமல்
தானாகவே செய்து அருளினான் என்றவாறு –

ப்ரஹ்மாவால் விரும்பி மேற்கொண்ட அசுவமேத யாகத்தை தடுக்க வாக் தேவதை சரஸ்வதி கோபத்தால்
நதியாகி பெறுகிவர எம்பெருமான் அதை காத்து பிரம்மனுக்கு அருள்பாலிக்க வேகவதியாக-
அணையாக பள்ளி கொண்டானே! என்னே அவன் கருணை.

———————————-

தரணியில் மன்னி யயனார் தனித் தவம் காத்த பிரான்
கருணை எனும் கடல் ஆடித் திருவணை கண்டதற்பின்
திரணகர் எண்ணிய சித்திர குத்தன் தெரித்து வைத்த
சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -14-

மன்னி -தீர்த்தம் பிரசாதித்துப் போகாமல் ஸ்திர பிரதிஷ்டனாய் அர்ச்சா ரூபம் கொண்டு சேவை
அய்யனார் -ப்ரம்மாவினுடைய -உபகார அதிசயம் தோற்ற பஹு வசனம்
திரு வேகா சேதுவைக் கண்ணால் கண்டபின்பு -இதற்கும் அவன் கிருபைக்கடலே காரணம் –
திரணகர்–திரள் நரகு -நரகங்களினுடைய

பூமியில் ஸ்திரமாயிருந்து ப்ரஹ்மாவினுடைய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி பேருபகாரம் செய்த
எம்பெருமானின் க்ருபை என்னும் கடலில் நீராடி, அணையை சேவித்தபிறகு
சித்ரகுப்தனால் எழுதிவைக்கப்பெற்ற கணக்கில் வந்த பாபங்கள் எல்லாம் நீங்கப்பெற்றோம்.

——————

சுக லேசம் எண்ணிய சூழ் வினை தீர்க்காத துணிந்த அயனார்
அகலாத அன்புடன் கொண்ட வயமேத வேதியின் மேல்
புகலோங்கு பொன் மலை என்றதோர் புண்ணியகோடியுடன்
பகலோன் பகல் விளக்காகப் பரம் சுடர் தோன்றியதே -15-

அல்ப ஸூகத்தையே பிராப்யமாக எண்ணியதால் தானாகவே சூழ்த்துக் கொண்ட வினைகளை நிவர்த்திப்பித்துக் கொள்ள
அகலாத அன்புடனே வினை தீர்க்கத் துணிந்து -அநந்ய பிரயோஜனனாய் என்றவாறு –

சித்திரை மாதம் -சதுர்த்தசி திதியில் ஞாயிற்றுக்கிழமை கூடிய மங்களகரமான ஸ்ரீ ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஆவிர்பவித்து அருளினான்
ஸ்ரீ நித்ய ஸூரிகள்-குழாங்கள் வாயால் ஊதப்பட்ட காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் ஆர்த்தன –

பெருமையுடை யத்திகிரி பெருமாள் வந்தார்
பேராத அருள் பொழியும் பெருமாள் வந்தார்
அருமறையின் உச்சி தனில் நின்றார் வந்தார்
அங்கமுடன் யவையாகும் பெரியோர் வந்தார்
திரு வுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்
மருவிலர்க்கு மயக்குரைக்கும் மாயோன் வந்தார்
வானேற வழி தந்தார் வந்தார் தாமே -16-

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே -16-

மருவிலர்க்கு -விஸ்வாசம் இல்லாதவர்களுக்கு
மயக்குரைக்கும் மாயோன் -வ்யாமோஹ சாஸ்திரங்கள் உபதேசிக்கும் வஞ்சகர்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் -கிருபையே நிரூபகம்
கண் கொடுக்கும் -ஞான சஷூஸ் –ரஹஸ்யார்த்த ஞானம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இவர் உபக்ரமித்த
ஸ்ரீ வசன பூஷணம் இரண்டு ஆற்றுக்கு நடுவிலே நிகமித்தார் அன்றோ –
முகில் வண்ணர் -ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் அன்றோ ஞான பிரதத்வம் –

திருமந்திரத்திற்கு பொருளாய்- அதாவது பேரழகை பொழிகின்றவராய்,
ஆனந்தத்திற்கு வசப்பட்டு நிற்பவர் வந்தார், நமக்கு உயர்ந்த சாஸ்திரங்களை தந்தவர் வந்தார்,
நாஸ்திகர்களுக்கு மேலும் மேலும் மோஹன சாஸ்திரங்களை வெளியிடுகின்ற வஞ்சகர் வந்தார்.
பரம பதத்திற்கு ஃஷெல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

பெருமையுடைய அத்தகிரி பெருமாள் எழுந்தருளினார். நீங்காத கருணயுடைய பெருமாள் வந்தார்.
வேதத்தின் சிகரத்தில் போற்றப்பட்டு நின்றார். சங்கு, சக்கர கதாபாணியாய் வேதஸ்வரூபியான பெருமாள் வந்தார்.
பிராட்டி ஸப்தஸ்வரூபமாய் நிற்க தாம் அர்த்த ஸ்வரூபியாக நிற்பார்.

தன்னுடைய சிறந்த க்ருபையால் உயர்ந்த சாஸ்த்திரங்களை உலகம் உய்ய தந்தவர் வந்தார்.
நாஸ்திகர்களுக்கு அவர்கள் மயங்கி விழ மோஹன சாஸ்த்திரங்களை தந்து தள்ளியவர் வந்தார்.
அடியவர்களுக்கு பரமபதத்திற்கு செல்ல உபாயத்தை உபதேசித்தவர் வந்தார்.

ஹஸ்தகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாள பெருமாள் , யானை, குதிரை, தேர் ஆகிய வாஹனங்களில்
கண்ணை மயக்கும் வண்ணம் வந்தார்.மனதால் நினைத்த மாத்திரமே வேண்டிய வரத்தை அருளும் பெருமாள் வந்தார்.
தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோக்ஷத்தையளிக்கும் பெருமாள் வந்தார்.
யானைக்கு அருளிய பெருமாள் வந்தார்.உத்திர வேதிக்குள்ளே ஆவிர்பவிப்பவர் , நித்ய சூரிகளால் தொழப்படுபவர்,
பக்தர்களுக்கு திருவடியை காண்பித்து அடைக்கலம் அருளும் பெருமாள் வந்தார்.

————————

ஆயிரம் கோடி ஆதித்யர்கள் ஓன்று சேர உதித்தால் போலே தேஜஸ்ஸூ தோன்றிற்று
இப்படி ஆவிர்பவித்து அருளின ஸ்ரீ பெருமாளுடைய மஹா தேஜஸ்ஸிலே காள மேக ஸ்யாமளனான படியைக் கண்டு –
காந்தியாகிற மழையைப் பொழியும் கருத்த மேகம் போலே -ஹர்ஷம் -விஸ்மிதம் இவற்றால் – பரவசராய் இங்கனம்
திரு அவயவ சோபையை பேசி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார்–

திரு பரி திசைந்த மகுடமும் மதி திகழ்ந்த வதனமும்
இருவகை இலங்கு குழல்களில் எதிர் பொர யுகந்த மகரமும்
ஒரு தக உயர்ந்த திருமகள் ஒளி மறுவில் மன்னும் அகலமும்
உருவரு உமிழ்ந்த யுதரமும் அலகடைய நின்ற கழல்களும்
மருவினிடை ஓங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என
மருளற விளங்கும் ஒளி என மலர் அயன் உகந்த பயன் என
அருவில் உறைகின்ற உயிர் என வடியவர் உகந்த அமுது என
அரு மறைகள் ஒன்றி அடி தொழ வரும் வரதர் நின்ற பெருமையே -18-

திரு பரி திசைந்த மகுடமும்–ஸூர்ய சத்ருச கிரீடமும்
மதி திகழ்ந்த வதனமும்-பூர்ண சந்திரன் பொன்ற திரு முக மண்டலமும்
இருவகை இலங்கு குழல்களில் எதிர் பொர யுகந்த மகரமும் -இரண்டு கபோலங்களிலும் தொங்கும் குழல்களிலே
ப்ரீதியுடன் ப்ரவர்த்தித்து இருக்கும் மகரங்களும்
ஒரு தக உயர்ந்த திருமகள் ஒளி மறுவில் மன்னும் அகலமும் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணி அருளும்
ஸ்ரீ வத்ஸம் திகழும் திரு மார்பும்
உருவரு உமிழ்ந்த யுதரமும்-சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டி காலத்தில் உமிழ்ந்த திரு வுதரமும்
வுலகடைய நின்ற கழல்களும்-ஸ்ரீ திரு உலகு அளந்த திருவடிகளை -லோகங்கள் அடைய ஆஸ்ரயிக்கும்படியான திருவடிகளை என்றுமாம்
மருவினிடை ஓங்கு புனல் என மலை குனிய நின்ற மலை என -பாலைவனத்தில் தானே கிளம்பா நிற்கும் ஜலம் போலே –
இந்த சம்சாரத்திலே ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாணை கதானனான ஸ்ரீ எம்பெருமான் –
பர்வதம் வணங்கும்படியாக அதன் மேல் நின்று அருளிய மலை போலே
மருளற விளங்கும் ஒளி என -அஞ்ஞானங்கள் போக்கும் ஜ்யோதிஸ் போலே
மலர் அயன் உகந்த பயன் என
அருவில் உறைகின்ற உயிர் என -சரீரத்தில் வசிக்கும் ஜீவாத்மாவைப் போலே
வடியவர் உகந்த அமுது என -அரு மறைகள் ஒன்றி அடி தொழ வரும் வரதர் நின்ற பெருமையே –

——————-

இவ்வண்ணம் தொழுது எழுந்து விண்ணப்பம் செய்தார்கள்–

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார்
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார்–19-1- ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் முதல் அத்யாய சாரார்த்தம் –

சித்து அசித்து என விரித்து யுரைத்தன அனைத்தும் அமைத்து உறையும் இறைவனார் –சேதனம் அசேதனம் என்று
சாஸ்திரங்களில் விளக்கிக் கூறப்பட்ட சகல வஸ்துக்களையும் படைத்து –
அவற்றுள் அந்தர்யாமியாய் வசிக்கின்ற தலைவராய் இருப்பவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
சிறிய பெரிய வுருவடைய யுடலம் என நடலம் இலது இலகு நிலையினர் –ஸூஷ்மமும் ஸ்தூலமுமான உருவமுள்ள
சேதன அசேதனம் என்னும் வஸ்துக்கள் முழுதும் தமக்குச் சரீரம் என்னும்படி நின்று அவற்றிலுள்ள தோஷம் தட்டாது
பிரகாசிக்கும் ஸ்வபாவம் யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
சித்தரத்தொழிலை யொத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் யுணர்வினார் -அழகிய சித்ரத்தைப் போன்ற
பத்தருக்கும் முக்தருக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஆதாரமான சுவர் என்று கூறப் படுகின்ற சங்கல்பத்தை யுடையவரும் –
சித்திரத்தை சுவர் தங்குவது போலே தன் சங்கல்பத்தால் சர்வேஸ்வரன் உலகத்தைத் தாங்குகின்றான் –
வேறு ஒன்றையும் தமக்கு ஆதாரமாகக் கொள்ளாமை -மூன்றாவது பாத சாரார்த்தம்
சித்தரத்தொழிலை-என்பதால் பிரகிருதி சம்பந்தத்தினால் ஆத்மாக்களுக்கு தேவாதி பேதங்கள் என்பது த்யோதிதம் –
சிதைவில் மறை நெறியில் எறி அரு உரு முறைகள் முறிய சிறை யரிய நிறைவினார் –அழிவு இல்லாத வேத மார்க்கத்தில்
ஒதுக்கப் பட்ட அந்த அசேதனத்தின் பிரகாரங்கள் தொலைந்து போக வரம்பு இல்லாத பெருமையை யுடையவரும்
பிற மதத்தினர் அசேதனமே உலகுக்கு காரணம் என்று விருத்தமாய் வழக்காட -சித்தாந்திகள் பல நியாயங்கள் உதவியால்
வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து
அசேதனம் ஜகத் காரணம் ஆகாது என்றும் எல்லையற்ற பெருமையையுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் ஜகத் காரணம் என்றும் ஸ்தாபித்தனர் –
இதனால் நான்காவதை பாத சாரார்த்தம் விளக்கப் பட்டது –
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே –எல்லையில்லா பெருமை உடையவன் என்றதாயிற்று –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார்
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –19-2-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இரண்டாம் அத்யாயம் சாரார்த்தம் –

கத்துவிக்க வல கத்து வித்தை வழி கற்ற வர்க்கு அசைவு இல் மறையினார் –எடுத்த இடம் எல்லாம் ஹேதுவை
ஆரவாரத்தோடு கல்பிக்கும் படி-செய்ய வல்ல ஜல்பம் என்னும் வாத மார்க்கத்தை-கத்து வித்தை -இவர்களைக் கத்தும் படி செய்யும் வித்தை
பரிச்சயம் செயதவரால் அசைக்க முடியாத விசித்திரமான சக்தியாகிய ரஹஸ்யத்தை யுடையவரும்
ப்ரஹ்மம் ஜகாத் காரணம் என்பதை ஸ்தாபித்து பிற மதத்தினர் ஸ்ம்ருதிகள் யுக்திகள் உடன் கல்பித்த விரோதங்கள்
நீங்கிய தன்மையாகிய முதல் பாத சாரார்த்தம் –
கபிலர் கண சாரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினர்-கபிலரும் கணாதரும் புத்தரும் ஜைனரும்
பாசுபதரும் -சைவரும் -ஆகியவர்கள்
மதங்கள் தொலைவதற்கு காரணமான ஆஸ்ரிதர் இடம் அருளாலே ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்னும் ஸ்ரீ ஸூ க்தியை
வெளியிட்டு அருளியவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார் -கம் இந்திரியம் -இந்திரியங்களுக்கு இலக்கண ஐந்து பூதங்களிலும்
ஜீவ வர்க்கத்திலும் மஹான் அஹங்காரம் என்னும் தத்துவங்களின் விஷயத்தில் போல் ஒரே காரணமாய் இருளிப்பவரும்
பஞ்ச பூதங்களையும் ஜீவர்களையும் தக்கவாறு ஸ்ருஷ்டிக்கும் தன்மை யாகிய மூன்றாம் பாத சாரார்த்தம்
கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் ஆதி இருடியார் –கூத்தாடுகிற கொடிய ஞான இந்திரியங்கள்
கர்ம இந்திரியங்கள் மனஸ் முழுதும் தோன்றுவதற்கு காரணமான நேரில் எல்லாவற்றையும் காண வல்ல முனிவர் போன்றவரும் —
இந்திரியம் முதலியவற்றுக்கு காரணமாகும் தன்மை –நான்காம் பாத சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் —-19-3-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் மூன்றாம் அத்யாயம் சாரார்த்தம் –

ஒத்து அனைத்து உலகும் ஒற்றி ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார் -எப்பொழுதும் ஒரே தன்மையதாய் இருந்து சுவர்க்கம் நரகம்
இவற்றுக்குச் செல்லும் சகல ஜீவர்களை தழுவித் தழுவி வருகின்ற இந்த சம்சாரத்தை நடத்துவதற்கு ஏற்ற சங்கல்பத்தை யுடையவரும்
இத்தால் சேதனருக்கு விழிப்பு ஸ்வப்னம் நித்திரை மூர்ச்சை மரணம் ஆகிய நிலைமைகளிலும் நிர்வாஹகராய் இருந்து சம்சாரத்தை
நடத்தி வைத்தலாகிய முதல் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று
உருவம் அருவம் எனும் உலகின் முடுகு இலகில் உவமை இது இலகு தலைவனார் -அசேதனம் சேதனம் என்னப்படும்
லோகத்தின் தோஷம் இல்லை என்னுமதில் சமமில்லாமல் பிரகாசிக்கின்ற ஸ்வாமியாய் இருப்பவரும் –
அந்தர்யாமியாய் இருந்தும் வியாப்த கத தோஷம் தட்டாமை-இரண்டாம் பாத சாரார்த்தம்
உத்தமப் படிவகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார் -உயர்ந்த பிரகாரங்களில் பலவகையாகப் பிரிக்கப்பட்ட பக்தி யோகங்களில்
வேறு உபநிஷத்துக்களில் இருந்து எடுத்துக் கொள்ளக் கருதப்பட்ட குணங்களை யுடையவரும் –
பக்தி யோகம் தஹர வித்யை சாண்டில்ய வித்யை பர வித்யை -இப்படி வித்யைகளை அனுஷ்ட்டிக்கும் போதும்
வேறு உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள அதே வித்யையில்
சொல்லிய மற்றைக் குணங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றுடன் கூடியதாகவும் ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் –மூன்றாவது பாத சாரார்த்தம்
உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினர் –பக்தி யோகத்துக்கு அங்கமாய் தங்களுக்கு தக்கவான வர்ணாஸ்ரம தர்மங்களில்
எளிதில் செய்ய முடியாத ஓர் உபாயத்தை அறிய விரைபவரிடம் அன்புடன் தலைக் கட்டி வைப்பவரும் –
சாத்விக தியாகம் -செய்யும் கர்மமும் அதன் பலனும் செய்யும் தன்மையும் தன்னுடையது என்று நினையாமல் அவற்றை எம்பெருமான் இடம் சமர்ப்பித்தல் –
இதனால் செத்தனர் செய்யும் கர்மங்களால் மகிழ்ந்து அருள் புரியும் தன்மையாகிய நான்காம் பாத சாரார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே —19-4-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் சாரார்த்தம் –

சத்து அசத்து எனும் அணைத்த அனைத்து வினை தொத்து அறுக்க வள துணிவினார் -புண்ணியம் பாபம் எனப்படுகின்ற உபாசிக்கும் ஜீவனைச்
சேர்ந்துள்ள சகல கர்மங்களும் தொடர்தலை ஒழிக்க வல்ல உறுதியை யுடையவரும் -முதல் பாதம் சாரார்த்தம்
சரியும் அளவில் உரியவரை அறிவு அரிய தமனி நெறி செருகு விரகினார்–சரீரத்தை விடும் காலத்து பரமபதம் செல்லத் தக்க ஜீவர்களை
அறிவதற்கு முடியாத ப்ரஹ்ம நாடி வழியாக பிரவேசிக்கச் செய்ய வல்லமை யுடையவரும் -இரண்டாம் பாதம் சாரார்த்தம்
தத்துவத் திரள் உதைத்து உதைத்து அடைவு தத்து விக்குமவர் தலைவனார் -பிரக்ருதியைச் சேர்ந்த சகல அசேதன தத்துவங்களின் கூட்டத்தையும்
காலால் உதைத்து தள்ளி வரிசையாக -சேதனரை சம்சாரத்தை விட்டுத் தாண்டுவிப்பவரான
ஸ்ரீ ஆதிவாகியிருக்கு ஸ்வாமியாய் இருப்பவரும் -மூன்றாம் பாத சாரார்த்தம்
தருகை உணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர் அடியமே -எம்பெருமான் பாலன் கொடுப்பதை நினைந்து உபாசனம் செய்யும் ஜீவர்
தம் திருவடிகளை நெருங்கி நிற்க அவரை விடாதவருமான கருணையே வடிவெடுத்த
ஸ்ரீ பேர் அருளாளருக்கு நாம் சேஷபூதர்களாய் இருக்கின்றோம் -நான்காம் பாத சாரார்த்தம்-

ஸ்ரீ பேர் அருளாளருக்கு சேஷபூதராகப் பெற்றோம் என்று மகிழ்ந்து வேதாந்த சாரார்த்தங்களை இவ்வாறு விண்ணப்பம் செய்தார்கள் என்றவாறு –

——————————————————-

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத்
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும்
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–20-

ப்ரஹ்மா பரபரப்பு மகிழ்ச்சி பயம் இவற்றையுடையவனாய்க் கிட்டிச் சென்று ஸ்ரீ நித்ய ஸூரிகள் அனுபவித்தற்கு உரிய ஸ்ரீ எம்பெருமான் திருமேனியை
அனுபவித்து தான் பெற்ற பேற்றை இவ்வாறு பேசுகிறான் –

திருமகள் மண் மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்கத் –ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்ரீ நீளா தேவி முதலிய
எல்லாத் தேவிமாரும் தன்னுடனே பிரகாசித்துக் கொண்டு நிற்க
தருமம் இரு மூன்று முதல் அனைத்தும் தோன்றத் தன்னனைய சூரியர் தன்னடிக் கீழ் வாழ -ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும்
ஆறு குணங்கள் முதலிய எல்லாக் குணங்களும் பிரகாசிக்க -தன்னைப் பொன்ற நித்ய ஸூரியர் தன் திருவடிகளின் கீழே நித்ய கைங்கர்யம் செய்ய
நின் தாள் இணைக்கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் -என்கிறபடி வாழ்ந்து கொண்டு இருக்கும் -நித்ய ஸூரிகள்
அருமறை சேர் அளவில்லா வவனியின் கண் அரவணை மேல் வீற்று இருப்பாள் அனைத்தும் காக்கும் -அருமையான வேதங்களால் புகழப் படுகின்ற
அளவிடமுடியாத தேசமாகிய பரமபதத்தில் ஆதிசேஷனாகிய திருப் பள்ளியின் மேலே எழுந்து அருளி இருப்பதாலேயே சகலத்தையும் ரஷித்து அருளுபவனான-
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -என்கிறபடியே சர்வலோக சம்ரக்ஷணம் செய்து அருளுபவனான –
கருமணியைக் கரி கிரி மேல் கண்டேன் எந்தன் கடுவினைகள் அனைத்தும் நான் கண்டிலேனே–நீல ரத்னம் போன்ற
ஸ்ரீ பேர் அருளாளனை ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது சேவித்தேன் –
என்னுடைய கொடிய கர்மங்கள் முழுதையும் நான் காணவில்லை -கர்மங்கள் தொலைந்தன -என்றவாறு
யாகவேதியில் கண்ணாரக் கண்ட ப்ரஹ்மா மகிழ்ந்து ஆனந்த கடலில் அழுந்தி பித்தனாகி பின்பு சுய நிலை அடைந்து அனுபவிக்கிறான் –

—————————————————-

பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்
அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடி கிரி நிலை கவர்தலே -21-

பேர் அருளாளனை உவமானங்களுடன் பிரமன் அனுபவித்தல் –
கண்கள் காண்டற்கு அரிய-காயாம்பூ வர்ண காந்தியுடைய சர்வேஸ்வரனை யஜ்ஜ வேதியிலே கண்டு-
ஹர்ஷார்ணவத்திலே மூழ்கி -மொய்மாம் பூம் பொழில் படியே –

அடி இரண்டையும் அடையும் அன்பர் அறிந்த பேர் அருளாளனார் -தம் திருவடிகள் இரண்டையும் அடைந்தபவர்களான
ஸ்ரீ பாகவதர்களால் அனுசந்திக்கப்பட்ட ஸ்ரீ பேர் அருளாளர்
அணுகும் மலர் மகள் அவனி மகளொடு கரடி கிரி நிலை கவர்தலே -நெருங்கியுள்ள ஸ்ரீ பெரிய பிராட்டியுடனும் ஸ்ரீ பூமிப் பிராட்டியுடனும்
ஸ்ரீ ஹஸ்திகிரியில் பிரகாசித்தல்
பெடை இரண்டை ஓர் அனம் அடைந்து பிரிந்திடா வகை பேசலாம் -ஓர் ஆண் ஹம்ஸம் இரண்டு பெண் ஹம்ஸங்களை
சேர்ந்து பிரியாமல் இருக்கும் பிரகாரத்தைப் போலும் என்று சொல்லலாம்
பெருகும் அருவிகள் அருகு மருவிய பெரிய மணி வரை பயிலலாம் -பெருகுகிற அருவிகளை பக்கத்தே பெற்றுள்ள
பெரிய ரத்ன பர்வதத்தை ஒக்கும் என்று அனுசந்திக்கலாம்
பிடி இரண்டோடு களவம் ஓன்று பிணைந்த பேர் அழ கோதலாம் -ஒரு ஆண் யானை இரண்டு பெண் யானைகளுடன் சேர்ந்து இருந்த
பெரிய அழகை போலும் என்று கூறலாம்
பிரிவில் ஒளியோடு நிழலும் அருகு உறும் இரவி இலகுதல் பரவலாம் -தன்னை விட்டுப் பிரியாத பிரகாசத்தோடு சாயையும்
பக்கத்தே பொருந்தப் பெற்ற சூர்யன் பிரகாசிப்பதை ஒக்கும் என்று புகழலாம்
கொடி இரண்டொடு விடவி ஓன்று குளிர்ந்தவாறு குலாவலாம் -ஒரு மரம் கொடிகள் இரண்டுடன் குளிர்ந்து
நிற்பதை போலும் என்று கொண்டாடலாம்
குறைவில் சுருதியும் நினைவும் இளகிய தரும அரு நிலை என்னலாம்–குற்றம் இல்லாத வேதங்களோடு ஸ்ம்ருதிகளோடு
கூடிப் பிரகாசிக்கின்ற தர்மத்தின் ஸூஷ்மம் போலும் என்று கூறலாம் –

————————————————–

வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் அருளாளர் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே –22-

திருக் கல்யாண குணக் கடலாய் இருக்கும் பேர் அருளாளனின் திவ்ய குணங்களை பிரமன் அனுபவித்துப் பேசுதல் —

அருளாளர்–ஸ்ரீ பேர் அருளாளர்
வேர் ஒப்பார் விண் முதலாம் காவுக்கு எல்லாம் -ஆகாசம் முதலிய உலகமாகிய சோலைகள் அனைத்துக்கும் வேரைப் போலே ஆதாரமாக ஆவார் –
பிரபஞ்சம் முழுவதும் எம்பெருமானுக்கு லீலைக்காக ஏற்பட்ட நந்தவனம் போன்றதாகும் -மரங்களை வேர் தரிப்பது போலே
ஸ்ரீ பேர் அருளாளன் தரித்து கொண்டு அருளுகிறான்
விழி ஒப்பார் வேதம் எனும் கண் தனக்குக் -வேதம் என்று சொல்லப்படும் உலகின் கண்ணுக்கு நடுவேயுள்ள கரு விழியைப் போன்றவர் ஆவார் –
வேதம் தெய்விக கண் போன்றதாகும் -பேர் அருளாளன் சாரமாய் விளங்குவதால் கரு விழி போன்றவன்
கார் ஒப்பார் கருணை மழைபொழியும் நீரால் –கருணையாகிய மழையைப் பெய்யும் தன்மையால் மேகத்தைப் போன்றவர் ஆவார் –
மேடு பள்ளம் வாசி பாராமல் பொழிவது போலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதம் பாராது கருணையாகிய மழையைப் பொழிகிறான்
கடல் ஒப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் -நேரில் பார்த்த போதிலும் ஸ்வரூபத்தை முழுவதும் காண முடியாமையாகிய
அதிசயத்தால் கடலைப் போன்றவர் ஆவார்-
கடலின் ஏக தேசம் கண்டு கடலைக் கண்டோம் என்னுமா போலே அவன் ஸ்வரூபம் திருமேனி குணங்களின் ஏக தேசத்திலும்
முழுவதையும் காண வல்லோம் அல்லோம்
நீர் ஒப்பார் நிலம் அளிக்கும் தன்மை தன்னால் -பூமியைக் காப்பாற்றுகின்ற ஸ்வபாவத்தால் ஜலத்தை ஒத்து இருப்பார் –
நிலம் ஒப்பார் நெடும் பிழைகள் பொறுக்கும் நேரால்–நம்முடைய பெரிய அபராதங்களை பொறுத்துக் கொள்ளும் ஸ்வபாவத்தால்
ஸ்ரீ பூமி தேவியைப் போன்று இருப்பார்
இப்படி ஒவ்வோர் அம்சத்தில் பேர் அருளாளனும் போலி யுவமானத்தைத் தேடி எடுத்தாலும் எல்லாக் குணங்களுடன் கூடிய நிலையில்
அவனுக்கு ஓர் அவமானமும் காண முடியாதே
ஆர் ஒப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால் தாம் எனினும் தமக்கு ஒவ்வாரே -இவருடைய குணங்கள் முழுவதையும் ஆலோசித்தால்
இவரை ஒத்தவர் யார் -ஒருவரும் இல்லை -தாமே என்றாலும் தமக்கு ஒத்தவராக மாட்டார் -என்று பிரமன் அனுபவித்து பேசுகிறான் –

தாம் எனினும் தமக்கு ஒவ்வார்–ஸ்ரீ பரமபத நாதனும் ஸ்ரீ தேவப்பெருமாளுக்கு சத்ருசராக மாட்டார் –
ஸுலப்யம் விஞ்சி அன்றோ இருக்கும் இங்கு
மேல் திசையில் உள்ள முகத்தால் யாகசாலையில் மேற் புறத்தில் அணையாகக் கிடக்கும் திரு வெக்கா எம்பெருமானையும்
கீழ்த் திசையில் யுள்ள முகத்தால் யாகவேதியில் திருவாவதரித்து அருளிய பேர் அருளாளனையும் சேர அனுபவித்து
ஸ்வயம் வ்யக்தமாய்ப் பரஞ்சோதி யாய் யுள்ள ஒரே வாஸ்து யாகத்தை காத்ததால் உபாயமாகவும்
யாக வேதியில் யாகத்தின் பலனாக திரு அவதரித்த படியால் பலனாகவும் காணப் படுகிறது என்று அனுசந்தித்தான்
அதிகார சுமையை மறந்து கைங்கர்யத்தில் ஊன்றி நின்று தொடர்ந்து ஸ்துதித்துக் கொண்டே இருந்தான் –

——————————————

எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு
அன்னம் உயர்த்த செய்யோன் அன்று வேள்வி செய் வேதியின் மேல்
முன்னிலையாகிய மூர்த்தியன் நான்முகன் மற்றும் உனக்கு
என்ன வரம் தருவோம் என்று நாதன் இயம்பினனே -23-

ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ பிரமனுக்கு அருள் புரிதல் —
இப்படி பரவசனாய் -முகிழ்த்த உடம்பும் -பனி அரும்பின கண்களும் -தழுதழுத்த மிடறும்-தளர்ந்த நிலையுமாய்க் கொண்டு –
தனது அதிகாரச் சுமையை மறந்து -அடிமையிலே அடி கொண்டு விண்ணப்பம் செய்ய
உனக்கு வேண்டிய வரங்களைக் கொள்வாய் என்று அருளிச் செய்தார்

அன்னம் உயர்த்த செய்யோன் -ஹம்சத்தைக் கொடியாக உயர்த்தவனும் -செந்நிறமுடைய ப்ரஹ்மா
எந்நிலமும் குரத்தால் குறி செய்த எழில் பரி கொண்டு -எல்லா நிலத்திலும் கால் குழம்பினாள் அடையாளம் செய்த அழகிய குதிரையைக் கொண்டு
அன்று வேள்வி செய் வேதியின் மேல்-அந்நாளில் யாகம் செய்த வேதிகையின் மீது
நாதன் முன்னிலையாகிய மூர்த்தியன் -ஸ்வாமியான பேர் அருளாளன் எதிரே நின்ற திருமேனி யுடையனாகி
நான்முகன் மற்றும் உனக்கு என்ன வரம் தருவோம் என்று இயம்பினனே –ப்ரஹ்மாவே உனக்கு வேறு எந்த வரத்தைக் கொடுக்க வேண்டும்
கேட்பாயாக என்று அருளிச் செய்தான் –
என்னை நேரில் கண்டவர்கள் சகல பலன்களையும் பெற வல்லவராவார் -என்று அவனை நோக்கிக் கூறினான் –
உன் திருமேனியை கண்டு அனுபவிக்கப் பெற்ற எனக்கு மற்று ஒன்றும் வேண்டாம் -சம்சாரிகள் உஜ்ஜீவிக்கும்படி
மெய்விரதம் என்னும் இந்த திவ்ய ஷேத்ரத்திலே
புண்ய கோடி விமானத்தில் எப்பொழுதும் தேவரீரைக் கண்ணாரக் கண்டு களிக்க அருள் புரிய வேண்டும் என்றான் –
இங்கேயே நித்யவாஸம் செய்கிறேன் என்றதும் ப்ரஹ்மாவும் யாகத்தைத் தலைக் கட்டி கிருதயுகத்தில் செய்ய வேண்டிய முறைப்படி
ஸ்ரீ பேர் அருளாளனைப் பரிபூர்ணமாக ஆராதித்தான்-

—————————————

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக்
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப்
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே -24-

ஸ்ரீ ப்ரஹ்மா அப்பொழுது அங்குள்ள மஹரிஷிகளுக்கு அபிகமனம் முதலிய பஞ்ச கால ப்ரக்ரியை ஆராதிக்கும் முறைகளை உபதேசித்தல் –

சென்று மலர் பறித்து என்நாதன் சேவடிப் போது உகந்து -எம்பெருமானிடம் சென்று பிரபத்தியைச் செய்து
புஷ்பங்களைப் பறித்து சிவந்த திருவடி மலர்களை விரும்பி
நன்று எனும் நீர் சுடர் நன்முக வாசம் இலை கொடுத்துக் -நல்லது என்று சொல்லப் படுகிற ஜலம் தீபம் நல்லதாய்த் திருமுக மண்டலத்திற்கு
வாசனை தரும் பண்டம் வெற்றிலை ஆகியவற்றை சமர்ப்பித்து
கன்னல் இலட்டுவத் தோடு அன்னம் சீடை கரி படைத்துப் -சருக்கரை லட்டுடன் அன்னம் சீடை கரி ஆகியவற்றை சமர்ப்பித்து
பின்னும் சேவித்து அவன் பாதம் பணிமின்கள் என்றனனே — மறுபடியும் மந்த்ர ஜபம் செய்து அவனுடைய திருவடிகளை
த்யானம் செய்யுங்கோள் என்று உபதேசித்தான் –
அபிகமனம் -உபாதானம் -இஜ்யை -ஸ்வாத் யாயம் -யோகம் -இப்படி பஞ்சகால ப்ரக்ரியை அனுஷ்ட்டிக்க உபதேசம் செய்தான் –

————————————————————–

ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின்
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி
நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான்
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -25-ஸ்ரீ பிரமன் தன்னுலகம் சென்று யோகத்தில் இருத்தல் –

நாழிகையில் வானவரை மாற்றியிடு நான்முகன் தான் -அல்ப காலத்தில் இந்திராதி தேவர்களை நீக்கி வேறு ஒருவரை நியமிப்பவனும்
நான்கு முகங்களையும் யுடையவனுமான ப்ரஹ்மா
ஆழி நிலை வினை கடிவான் அயமேதம் முடித்ததற் பின் -கடல் போன்ற கர்மங்களை போக்குவதற்காக அஸ்வமேத யாகத்தை செய்து முடித்த பிறகு
வேழ மலை நாயகனார் விடை கொடுக்க விண்ணேறி -ஸ்ரீ ஹஸ்திகிரி நாதரான பேர் அருளாளர் அனுமதி கொடுக்க ப்ரஹ்ம லோகம் சென்று
ஊழி எலாம் அழியாத வுயோகம் அடைந்து இருந்தானே -கல்ப காலத்திலும் அழியாததான ஸ்ரீ பகவானுடைய த்யானத்தில் அமர்ந்து இருந்தான் –
ஸ்ரீ பேர் அருளாளன் மிக மகிழ்ந்து முன்பு உனக்கு நான் கொடுத்த ப்ரஹ்மபதமாகிய அதிகாரத்தில் குறை தீர்க்கும்படி சரஸ்வதி சாவித்ரி முதலிய
உன் தர்ம பத்னிகளுடன் உன் லோகத்துக்கு சென்று எஞ்சிய அதிகாரத்தை நடத்துவாயாக என்று அருளிச் செய்ய
ஸ்ரீ பேர் அருளாளன் திருவருளையும் மெய் விரத திவ்ய க்ஷேத்ர பெருமையையும் அனுசந்தித்துக் கொண்டு
யோக விசேஷத்தில் மூழ்கிக் கிடந்தது பாக்யசாலியாய் இருந்தான் –

——————————————————–

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து
வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில்
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–26-பேர் அருளாளன் நான்கு யுகங்களிலும் வரம் அளித்தல் –

ஆதி யுகத்து அயன் கண்டிட நின்ற அருள் வரதர் -முதல் யுகமாகிய க்ருத யுகத்தில் ப்ரஹ்மா சாஷாத் கரிக்கும் படி நின்றவரும்
அருளே வடிவு கொண்டவருமான ஸ்ரீ பேர் அருளாளர்
காதல் உயர்ந்த கயிற்றைத் திரேதையில் காத்து அளித்து -த்ரேதா யுகத்தில் தன்னிடம் பக்தி மிகுந்து இருந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை முதலை வாயில் நின்றும் காப்பாற்றி
அருள் புரிந்து வாதுயர் தேவ குருவுக்கு இரங்கித் துவாபரத்தில் -த்வாபர யுகத்தில் வாதம் புரிவதில் சிறந்த தேவர்களின்
குருவான ப்ருஹஸ்பதிக்கு கருணை புரிந்து
சோதி யனந்தன் கலியில் தொழுது எழ நின்றனரே–கலி யுகத்தில் தேஜஸ் மிகுந்த ஸ்ரீ ஆதிசேஷன் அனந்த சரஸ் என்னும் புஷ்காரிணியின் சமீபத்தில்
அதன் தலைவனாக இருந்து வணங்கி உஜ்ஜீவிக்கும்படி ஸ்ரீ ஹஸ்திகிரியிலேயே நிலை பெற்று நின்றார் –

————————————————–

புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்
பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -27- ஸ்ரீ பேர் அருளாளர் பேர் அருளால் இப்பிரபந்தம் பாடினமை –

வக்த்ரு வை லக்ஷண்யத்தையும் விஷய வை லக்ஷண்யத்தையும் நிரூபித்து அருளிக் கொண்டு
இப் பிரபந்தம் அனைவருக்கும் உபாதேயம்-என்று நிகமித்து அருளிச் செய்கிறார் –

பண்டை நான்மறை மௌலி படிந்த யான் பாரின் மெய் விரதக் கவி பாடினேன் -அநாதியான நான்கு வேதங்களின் அந்தத்தில் –
வேதாந்தத்தில் ஈடுபட்ட நான்
புண்டரீகம் உயிர்த்த புராணனார் பொய்யின் மா மகா யுத்தர வேதியில் -திரு நாபித் தாமரை பிறப்பிக்கப் பெற்ற அநாதியான ஸ்ரீ ப்ரஹ்மாவினுடைய
கபடம் இல்லாது அனுஷ்ட்டிக்கப் பட்ட பெரிய யாகத்தின் உத்தர வேதியில்
கொண்டல் ஆர் அருள் மாரி பொழிந்திடக் கொண்டதோர் உயர் கூர் மதி யன்பினால்-பேர் அருளானாகிய மேகம் நிறைந்த கிருபையாகிய
மழையைப் பெய்திட்டு நிற்க -அதனால் உண்டான ஒப்பற்ற உயர்ந்த கூர்மையுள்ள அறிவாலும் பக்தியாலும்
தொண்டை மண்டல வேதியர் வாழவே தூய தென்மறை வல்லவர் வாழவே -தொண்டை நாட்டில் உள்ள வேதங்களைக் கற்ற அந்தணர் நீடூழி வாழவும்
பரிசுத்தமான தமிழ் வேதம் வல்லவர் வாழவும் இப் பூமியில் ஸ்ரீ சத்ய விரதம் என்னும் திவ்ய க்ஷேத்ரத்தைப் பற்றிய இப்பாசுரங்களை பாடி முடித்தேன் –

இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல் தீர்த்தங்கள் என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே —
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கும் பரி ஸூத்தியைத் தரக் கூடியவர்கள் என்றவாறு

—————————————————–

உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச்
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால் திசை படைத்த திசைமுகன் தான்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -28-இப்பிரபபந்தம் பாடி வீறு பெற்றமை –

இது தான் ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இசை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம்-ஒருகாலத்திலும் ஒருவராலும் ஒருபடியாலும் கலைக்க முடியாத விரதம் என்றபடி

திசை படைத்த திசைமுகன் தான் -திக்குகளை ஸ்ருஷ்டித்தவனும் நான்கு திசைகளிலும் முகத்தை யுடையவனுமான ஸ்ரீ ப்ரஹ்மா
உய் விரதம் ஓன்று இன்றி யடைந்தார் உய்ய வொரு விரதம் தான் கொண்ட யுயர்ந்த மாலைச் –தாம் உஜ்ஜீவிப்பதற்கு உபாயம்
வேறு ஒன்றும் இன்றிச் சரணம் அடைந்தவர்கள் உஜ்ஜீவிப்பதற்காக -சரணாகத ரக்ஷணம் என்னும் ஒப்பற்ற விரதத்தை
தானே கைக் கொண்டவனும் -அதனால் உயர்ந்து நிற்பவனுமான ஸ்ரீ எம்பெருமானை
செய் விரதம் ஒன்றாலும் தெளியக்கில்லாச் சிந்தையினால்–தன்னால் செய்யப்பட வேறு எந்த விரதத்தாலும்
நேரில் ஸாஷாத் கரிக்க முடியாத கவலையினால்
பொய் விரத நிலம் எல்லாம் போயே மீண்டு புகல் இதுவே புண்ணியத்து என்று சேர்ந்த-பலன் கொடுக்க வில்லை யாதலின் வீணாகப் போகும்
விரதங்களை யுடைய ஷேத்ரங்களுக்கு எல்லாம் போய் பயன் அற்றுத் திரும்பி இந்த ஷேத்ரமே புண்ணியத்தைப் பெற சாதனமாகும் என்று வந்து அடைந்த
மெய் விரத நன்னிலத்து மேன்மை ஏத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே -ஸ்ரீ சத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின்
வைபவத்தை இப்பிரபந்தத்தால் புகழ்ந்து ஸ்ரீ வேதாந்த தேசிகர் சிறந்து விளங்குகிறார் –

—————————————-

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான்
தாரார் அருளாளர் தாள் நயந்து சீராக
மெய் விரத நன்னிலத்து மேன்மை இது மொழிந்தான்
கையில் கனி போலக் கண்டு –29—ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளில் ஈடுபாட்டினால் பாடினமை –

சீராரும் தூப்புல் திருவேங்கடமுடையான் -பெருமை நிறைந்த ஸ்ரீ தூப்பூலில் திரு அவதரித்த ஸ்ரீ வேங்கட நாதன் என்னும் தேசிகர்
தாரார் அருளாளர் தாள் நயந்து -மாலை நிறைந்த ஸ்ரீ பேர் அருளாளருடைய திருவடிகளையே விரும்பி
மெய் விரத நன்னிலத்து மேன்மை சீராக இது மொழிந்தான் -ஸ்ரீ ஸத்ய விரதம் என்னும் சிறந்த திவ்ய ஷேத்ரத்தின் பெருமையை
கையில் கனி போலக் கண்டு –உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனியைப் போலே அறிந்து சிறப்புடன் இந்த பிரபந்தத்தை வெளியிட்டார் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –24-/ 25-

May 29, 2019

ஸ்ரீ தாரகா மந்த்ரம் -இருபத்து நான்காம் அத்யாயம் –

ஸ்ரீர் உவாச –
பரம் ப்ரஹ்ம பரம் தாம பரம் ஜ்யோதிர் அநுபமம்
லஷ்மீ நாராயணம் ப்ரஹ்ம தோஷ சூன்யம் நிரஞ்சனம் -1-
ஏக ஸர்வமிதம் வ்யாப்ய ஸ்திதம் சர்வ உத்தரம் மஹ
அஹந்தா அஹம் பரா தஸ்ய ப்ரஹ்மண பரமாத்மன-2-
ஹிதாயா சர்வ ஜீவாநாம் உன்மிஷந்தீ ஸ்வ வாஞ்சயா
சப்த ப்ரஹ்ம மயீ பூத்வா மாத்ருகா மந்த்ர விக்ரஹா -3-
பவாமிரிணீ
ப்ரதமம் தார ரூபேண யத் அஸ்மி ஏவம் சமுத்தரேத்-4-
ப்ரதமம் த்ருவமாதய தத கர்ணம் சமுத்தரேத்
நாபிம் சமுத்தரேத் பச்சாத் த்ரயம் ஏகத்ர யோஜயேத் மந்த்ரரூப அஹம் தத் தத் வாஸ்ய அநு கா -5-
ஓம் இதி ஏதத் ஸமுத்பன்னம் ப்ரதமம் ப்ரஹ்ம தாரகம்
பிந்துநா பூஷயேத் பச்சா நாதேன ததநந்தரம் -6-
த்யாயேத் சந்தத நாதேன தைல தாரா மிவாததாம்
ஏதத் தத் வைஷ்ணவம் ரூபம் தர்யக்ஷரம் ப்ரஹ்ம சாஸ்வதம் -7-

அநிருத்தஸ் த்வகார அத்ர ப்ரத்யும்ன பஞ்சம ஸ்வர
ஸங்கர்ஷனோ மகாராஸ்து வாஸூ தேவஸ்து பிந்துக–8
சதுர்ணாம விபாகஸ்து நாதஸ் தத்ர ஸூரேஸ்வர
நாதஸ்ய யா பரா காஷ்டா சா ஹந்தா பரமேஸ்வரி -9-நான்கு அக்ஷரங்களும் பிரிக்காத நிலையே நாதம் –
பகவானின் அஹம்-தானே பரமேஸ்வரி –
சக்தி ச பரமா ஸூஷ்மா நாதாந்தகக நாஹ்வயா
சப்த ப்ரஹ்ம மயீ ஸூஷ்மா சாஹம் சர்வாவகாஹிநீ –10-
விராமே சதி நாதஸ்ய ய ஸ்புடீ பவதி ஸ்வயம்
ஜ்யோதிஸ் தத் பரமம் ப்ரஹ்ம லஷ்மீ நாராயணாஹ்வயம்–11-
ஏதத்தே வைஷ்ணவம் தாம கதிதம் பவ்ருஷம் பரம்
சாந்தமஸ் யைவ யத்ரூபம் தஸ்ய தத்த்வம் நிஸாம்ய -12-
விஸ்ருஷ்டிம் பூர்வமாதாய ஸூர்ய மந்தே நியோஜயேத்
சன்னிகர்ஷே பரே ஜாதி தத் ஓம் இதி உதிதம் மஹ-13-
ஏதத் தத் பரமம் தாம சக்தி சம்ஹார லக்ஷணம்
ஸ்மர்ய மாணம் பரம் தத்வம் ப்ரகாசயதி யத் த்ருவம்-14-பிரணவம் உபாசகனுக்கு உயர்ந்த ப்ரஹ்ம தத்வம் காட்டி அருளும் –

ஸம்ஹ்ருத்ய சர்வ சம்பாரம் சுத்த அசுத்தாத்வ சம்பவம்
ஸ்ருஷ்டவ் ஸமுத்யதா சக்தி ஸூர்யே பும்சி சநாதனே–15-
பரமே போக்த்ரு சா விதாய பிரதி சஞ்சரம்
அக்னீ ஷோம மயாத் பாவாத் ஸ்தூலாத் சா பிரதிநிர்கதா -16-
தாம்பத்யம் மத்யமம் சஸ்வத் பிந்து நாத மயம் ச்ரிதா
சக்தி சாந்தாத்மகம் திவ்யம் ஸூஷ்ம தாம்பத்யம் ஆஸ்ரிதா-17-
பிரதி திஷ்டதி சா திவ்யே வ்யாபகே பரமாத்மனி
அஸ்ய மாத்ரா விதாநஜ்ஜை சார்தாஸ் திஸ்ர உதாஹ்ருதா-18-
த்ரயோ அக்நயஸ் த்ரயோ லோகாஸ் த்ரயோ வேதாஸ் த்ரயோ
வ்யூஹாஸ் த்ரயோ வர்ணாஸ் த்ரயோ ஸ்வரா -19-
த்ரி தயம் த்ரி தயம் சக்ர யத் கிஞ்சித் ஜகதீ கதம்
ததாதி த்ரி தயம் ஜ்ஜேயமர்த மாத்ரா நிரஞ்ஜனா-20-

சர்வே சப்த அகாரோத்தா உகாராத் தேஜஸாம் த்ரயம்
பிருதிவ்யாதி ப்ரக்ருத் யந்தம் மகாரோத்தம் புரந்தர -21-
ஜ்யோதிர்மயீ அர்த்தமாத்ரா சா சின்மயீ பரமா கலா
யுக்பி ஸ்வரை சபின் த்வந்தை ராத்யன்ன ஸ்வர ஷட்கயோ -22-
ஓம் ஆம் ஹ்ருதய நம/ஓம் ஈம் சிரசே ஸ்வாஹா / ஓம் ஊம் சிகாயை வசட்/ ஓம் லூம் கவசாய ஹூம் /
ஓம் ஐம் நேத்ராய ஓவ்ஷட்/உச்சரித்து அந்த அந்த இடங்களை எழுவத்துவது போலே தொட வேண்டும்
ஞானாதி குண ஷாட்காந்தை ரங்க க்லுப்திர முஷ்ய
நாபவ் ப்ருஷ்டே ததா பாஹ்வோ ரூருஜாநுப தேஷூ -23-
தார பூர்வான் குணான் பூயோ வின்யசேத் பாக சாசன
ஏவ வின்யஸ்ய தன் மந்த்ரம் அங்கோப அங்க சமன்விதம் -24-
ஸ்வ தேஹே குருராத்மஸ்தம் சிந்தயேத் புருஷோத்தமம்
விஸ்வாதி லய பூர்வம் து யதாவத் தன்னிபோத-25-
ஓம் ஞானாய நம-ஓம் ஐஸ்வர்யாய நம /ஓம் சக்தயே நம / ஓம் பலாய நம / ஓம் வீர்யாய நம /ஓம் தேஜஸே நம /
உபாசகன் தன் சரீரத்தில் உள்ளவனை புருஷோத்தமனாகவே சிந்தித்தபடி இருக்க வேண்டும் –

விஸ்வம் ஜாக்ரத் பத ஈசானம் ஸர்வேந்த்ரிய சமீரகம்
போக்தாரம் சப்த பூர்வாணம் பஞ்சாநாம் விஷயாத்மநாம் -26-
விஸ்வம் என்னும் தேவதையே விழிப்பு நிலையில் அதிஷ்டான தேவதை

அநிருத்தாத்மகம் தம் ச சிந்தயேத் பிரதம அக்ஷரம்
தம் சோப கரணம் தேவமகாரே ப்ரவிலாப்பய து–27-
அநிருத்தனாகவே அந்த விஸ்வத்தை உபாசகன் தியானித்து -அகாரத்தில் லயிக்கச் செய்ய வேண்டும்

அகாரம் தைஜஸே தேவே ப்ரத்யும்நே ஸ்வப்ந வர்த்தமகே
அந்தகரண வ்ருத்தினாம் ப்ரேரக ப்ரவிலாபயேத்-28-
அடுத்து ப்ரத்யும்ன ஸ்வப்ன அதிஷ்டான தேவதை-

தம் சோபகரணம் தேவம் உகாரே ப்ரவிலாபயேத்
உகாரம் சேஸ்வரே ப்ராஜ்ஜே சங்கர்ஷண தநுஸ்திதே–29-
ப்ராஜ்ஜ தேவதை சங்கர்ஷணன் -ஸூஷூப் தி நிலை அதிஷ்டான தேவதை

ஸூஷூப்தி பதகே சாஸ்வத் பிராணாதி ப்ரேரகே விபவ்
விலாப்ய தம் ச தேவேசம் துர்ய சமஸ்தே அர்த்த மாத்ரகே-30-
ஞான ஆனந்த மயே தேவே வாஸூதேவே விலாபயேத்
துர்யாதீதே ச தத் துர்யம் லஷ்மீ நாராயணாத்மநி -31-
வாஸூதேவனே துர்ய அவஸ் தையிலும் – அப்பாலும் உள்ள அதிஷ்டான தேவதை

ப்ரவிலாப்பய ஸ்வயம் திவ்யா மஹந்தாம் வைஷ்ணவீம் ச்ரயேத்
தன்மயஸ் தாத்ருசம் ப்ராப்ய லயஸ்தானம் தத க்ரமாத் –32-
ஜாகராமவ தீர்யாத தீஷிதம் சிஷ்யமப்ரத
சத்குருர் மன்மயோ பூத்வா தாரமத்யா பயேத் ஸ்வயம் -33-
சாங்கோ பாங்க க்ரமம் சஸ்வத் சசமாதிம் சவிஸ்தரம்
ச ச தத்யாத் ஸ்வ மாத்மாநம் தக்ஷிணாம் குரவே தனை–34-
லப்தாநுஜ்ஞஸ்தத குர்வன் பவ்ரச்சரணிகம் விதிக்கு
மஹா நதீ தடம் கத்வா ஸித்தாத்யாயதனம் து வா -35-
பாலசம் வா வனம் சம்யக் பர்யந்தாத்ருஷ்ட பூதலம்
ஸ்நாநம் த்ரிஷவணம் குர்வன் ப்ரஹ்மசாரி ஜிதேந்த்ரிய -36-
பயோயாவக பைஷாணா மச்ரந்நந் யதமம் ஸக்ருத்
குசோச்சயே நிஷண்ண சன் காசசீர குசேசய–37-
பவ்ரச்சரணிகம் -ஜபம் தியாகம் யாகம் முறைப்படி ஸ்நானம் அந்தணர்களுக்கு உணவு அளித்தால் ஆகிய ஐந்தும்

பாலாசம் தாரயேத் தண்டம் சம்வீதஸ் க்ருஷ்ண சர்மணா
மச்சித்தோ மன்மயோ பூத்வா குர்வாதிஷ்டேன வர்தமநா –38-
நித்யம் யோக பரோ பூத்வா சம்யக் ஜ்ஞான சமாதிமான்
தச லக்ஷம் ஜபேன் மௌநீ தாரம் சம்சார தாரகம் -39-
தாரக மந்த்ரத்தை -10-லக்ஷம் முறை ஜபித்து சம்சார லோகம் காப்பவன் ஆகிறான்

தசாம்சம் ஜுஹுயாத் பர்ணைர் சமித்பிர் சர்பிஷாபி வா
ப்ரீதா தஸ்ய ப்ரகாஸே அஹம் அஹந்தா வைஷ்ணவீ பரா –40-
சாதகஸ்ய தத சம்யக் சத் விவேகினி சேதஸி
லஷ்மீ நாராயணாக்யம் தத் சமாஸ்ரயம் ப்ரகாஸதே -41-
நூறாயிரம் முறையால் யாகம் செய்து ஸ்ரீ லஷ்மீ நாராயணன் சாஷாத்காரம் அடையச் செய்கிறேன்

ஜீவன்னேவா பவேன் முக்த புனீதே சஷுஷா ஜகத்
சித்தா ஸ்யுஸ் தஸ்ய மந்த்ராஸ்தே லௌகிகா வைதிகாச்ச யே -42-
ஸ்நாத சர்வேஷு தேவேஷு வித்யாஸூ சகலாஸூ ச
சித்தாந்தேஷு ச சர்வேஷு தீர்த்தேஷு ச பவேதசவ் -43-
இங்கேயே முக்தி பெற்ற நிலை அடைந்து கடாக்ஷத்தாலே ஜகாத்தை பாவனம் ஆக்குகிறான்
அனைத்து மந்திரங்களும் கை கூடி அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் –
ப்ரயோகா சர்வ மந்த்ராணாம் யாவந்தோ யாத்ருசாச்ச யே
தாவந்தரஸ் தாத்ரு சாஸ்தே அஸ்ய ப்ரயோகா இதி நிர்ணய –44—பூ புவ ஸ்வ -அ உ ம கரங்களில்
அஸ்ய வ்யாஹ்ருத யஸ்திஸ்ரோ வர்ண த்ரய சமுத்கதா
பத்ப்ய சமுத்கதா ஹயஸ்யா ஸாவித்ரீ சர்வ பாவநீ-45- –காயத்ரி மந்த்ரம் இவற்றால்
அஸ்யா பத் பட்யஸ்த்ரயோ வேதா ருக் யஜுர் சாம லக்ஷணா
இத்யேதன்மயம் ஏவேதம் லௌகிகம் வைதிகம் வச -46 -மூன்று பாதங்களில் இருந்தே மூன்று வேதங்களும்
யதா ந்யக்ரோத தாநாயாம் அந்தர் பூதோ மஹா த்ரும
ததேதம் வாங்மயம் விஸ்வம் அஸ்மின் அந்தஸ் ஸ்திதம் சதா 47–ஆலமர விதை போலே பிரணவம் -அனைத்தும் அடங்கும்
ஏதத் ஆத்யம் மஹா பீஜம் சப்தா நாம் ப்ரக்ருதி பரா
சப்த ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் மஹத் 48—மஹா பீஜ மந்த்ரம் -சப்த ப்ரஹ்மம்
ஓங்கார ப்ரணவஸ் தாரோ ஹம்ஸோ நாராயணோ த்ருவ
வேதாத்மா சர்வ வேதாதிராதித்ய சர்வ பாவன–49-
மோக்ஷதோ முக்தி மார்கச்ச சர்வ சந்தாரண ஷம
ஏவமாதீநி நாமாநி சாஸ்த்ரே சாஸ்த்ரே விசசணை -50-
ஓங்காரம்- பிரணவம் – தாரா -ஹம்சம்- நாராயணா- த்ருவம்- வேதாத்மா – சர்வ வேதாதி -ஆதித்யன் -சர்வ பாவாநம் —
மோக்ஷதா -முக்தி மார்க்கம் -சந்தாரண ஷம-போன்ற பலவும் – ஓம் -என்பதை குறிப்பதாகவே சாஸ்திரம் சொல்லும் –

அதீதாநி மஹா புண்யான் ஓங்காரஸ்ய மஹாத்மந
இதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம் –51-
அயமின்விச்சதாம் ஸ்வர்க்க போத பாரம் திதீர்ஷ்தாம்
ஹகாரவ்கார சம்யோகாதயம் பிரசாத சம்ஜ்ஞக –52-பிரணவமே ஓடம் -ஹ -ஓவ் -த்வனிகளின் கூட்டம் என்பதால் பிரசாதம்
பிண்டோ அயம் சர்வ தத்தவாநாம் பிண்ட பூத ச நாதந
சாதனம் பிரதிபத்திச் ச விநியோகோ அத தாரணா –53-
ஜீவஸ் யேவ ஹரேசாந பிரசாதஸ் யாஸ்ய வித்தி தத்
அஸ்யைவ சம்ஜ்ஞா மந்த்ரோ அயம் ஹம்ஸோ நாம மஹா மனு –54-
போக்தாரம் ப்ரதமம் வர்ணம் வித்தி போக்யம் த்விதீயகம்
நாராயண மயம் பூர்வமக்ஷரம் ஸ்ரீ யம் பரம் –55-
அக்நீஷோ மாத்மகாவேதவ் வர்ணவ் வித்தி சனாதனவ்
அநயோ ரந்தரா சக்ர பிந்து தர்மவ் வ்யவஸ்திதவ்–56-
சம்ஜ்ஞா -தொடக்கம் -ஹம்சம் உயர்ந்த மந்த்ரம் –ஹ — நாராயணன் / ஸ -ஸ்ரீ யை /சொல்லும்
இவை இரண்டும் அக்னி சோமன் -ஆகியவர்களை உள்ளடக்கி இருக்கும்
இவை இரண்டின் நடுவில் பிந்துவும் -ஸ்ருஷ்ட்டி /தர்மம் -சம்ஹாரம் -உள்ளது

ஆதாரான் மூர்த பர்யந்தம் போக்தாரம் வர்ண முந்நயேத்
விஸ்ரு ஜேந் முகதோ வர்ணம் த்வதீயம் போக்ய சம்ஜ்ஞகம் –57-
சர்வா ஸ்ருஷ்ட்டி க்ருதா தேந ஹம்ஸோச்சார ப்ரயோகத
அஜபேயம் சமாக்யாதா வித்யா சர்வாங்க சோபநா -58-
சதுஸ் ஷஷ்ட்யாதிகா சீதி கோடி சம்க்யாஸூ யோநிஷூ
தத் பேதேஷூ ச மந்த்ரோ அயம் ஸ்வயம் உச்சரதே சதா -59-
ஹம்ச-உச்சரிப்பு மூலம் ஸ்ருஷ்ட்டி / அஜபேயம் -என்னும் வித்யை -அனைத்து அங்கங்களுடன் கூடியது
பிரபஞ்சத்தில் -84-லக்ஷம் வகையான உயிர் இனங்களால் தானாகவே உச்சாடனம் செய்யப்பட்டுள்ளது –
நிச்வாஸேந சமம் வித்யா சமுதேத்யந்த உஜ்ஜ்வலா
உதயாஸ்தமயா வஸ்யா ச்வாஸ நிச்வாஸ துல்யகவ -60-
இந்த வித்யை உள்ள வளர்ந்தபடி இருந்து தானாகவே மூச்சு வழியாக மேலே எழுந்தது
இதன் வெளிப்படுதல் மற்றும் மறைதல் என்பது உசுவாச நிச்வாஸம் என்பது போன்றே உள்ளது –
ஷஷ்டி ச்வாஸ பவேத் ப்ராணா ஷட் ப்ராணா நாடிகா மதா
நாட்யா ஷஷ்டி ஹோராத்ர மேவம் கால க்ரியா கத்தி-61-
பிராணனின் -60-ஸ்வாசங்கள் உள்ளன -ஆறு பிராணங்கள் ஒரு நாடி -60-நாடி ஒரு பகல் இரவு ஆகும் –
இப்படி காலத்தின் பாகம்

ஏவம் ஹம்ஸோ தயாத் வித்தி ஸஹஸ்ராண்யேக விம்சதிம்
சதாநி ஷட் ச தேவேச தாவந்த ஸ்யுர்ஜபா க்ருதா -62-
இவ்விதம் ஹம்ச மந்த்ரத்தை வெளிப்படுத்தல் என்பது எந்த
ஒரு மந்திரத்தையும் -21600-உச்சாடனம் செய்த சக்தியை உண்டாக்கும் –

கிந்து சங்கல்ப நம் குர்யா தர ஹராதவ் மநீஷயா
ஏவம் சம்க் யான் ஜபாநஸ்ய கரிஷ்யாமீதி புத்தி மான் -63-
விச்யஸேத் பஞ்ச சங்காநி தேஷாம் ரூபம் நிபோத மே
ஸூர்ய சோமவ் சதுர்த்யந்தவ் நம ஸ்வாஹா சமன்விதவ் -64-
நிரஞ்சநவ் நிராபாசவ் வவ்ஷங் ஹூம்ஸ் படந்தகவ்
படந்தம் மூலமே வாஸ்த்ரம் இத் யங்காந் யஸ்ய பஞ்ச து -65-

ஓம் நமோ ஹஸ்தாய ஸ்வாஹா வவ்ஷத் ஹூம் பட்-என்ற மந்த்ரத்தை ஐந்து அங்கங்கள் உடன்
(தோஷங்கள் மயக்கங்கள் அற்ற ஸூர்ய சோமவ் இருவருக்கும் நம-
ஸ்வாஹா என்றும் – சதுர்த்யந்தவ் -நான்காம் வேற்றுமையுடன் இணைக்கப் பட்டு -இவையே ஐந்து அங்கங்கள்)

அயமேவ விபர்யஸ்ய பரமாத்ம மநு ஸ்ம்ருத
சம்ருத்வா சக்திம் ச சம்பாராம் ஸூர்யே போக்தரி சம்நயேத் -66-
சிஷ்டம் பிரணவ வச்சிந்த்யம் இதி சம்ஜ்ஞா மநோர் விதி
பத மந்த்ராஸ் த்ரயோ அஸ்ய ஸ்யுர் விதாநே பஞ்ச ராத்ரிகே -67-
விஷ்ணவே நம இத்யேவம் நமோ நாராயணாய ச
நமோ பகவதே பூர்வம் வாஸூ தேவாய சேத் யபி-68-
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ-69-
பதமந்த்ரச் சதுர்தோ அயம் ப்ரணவஸ்ய புரந்தர
ஓங்கார சஹிதா நேதாந் மந்த்ரான் பூர்வ விதோ விது-70-
இந்தமந்த்ரத்தை மாற்றி படிக்கும் போது பரமாத்ம மந்த்ரம் ஆகும் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி –

ஞானாதி குண சம்யுக்தைரஷரை ப்ரணவாதிபி
நமோஸ்தை அங்க க்லுப்தி ஸ்யாத் ததைவ உப அங்க கல்பநா-71-
ந்யூநா ஷரஸ்ய மந்த்ரஸ்ய வர்ணேந சரமேண து
உப அங்க கல்ப நா கார்யா தத் தத் குண பதைர் யுதா-72-
ததைவ ஸ்பீத வர்ணஸ்ய சிஷ்டைஸ் து த்வாத சாதிகை
ஸம்ஸ்தைச் சரமோ பங்கம் கல்பயேத் தேஜஸா ஸஹ -73-
கேவலஸ் தாரகச் சைவ சத்வாரச்ச ததாதிகா
பஞ்சை தே வியாபகா மந்த்ரா பாஞ்ச ராத்ரே ப்ரகீர்த்திதா -74-
நா ஸாத்யம் கிஞ்சி தஸ் தீஹ மந்த்ரைரேபிர் மஹாத்மபி
நிஸ்ரேணீ பஞ்ச பர்வைஷ பர ப்ரஹ்மாதி ரோஹணே -75-
ஏஷ திவ்யா மஹா சத்தா பஞ்ச மந்த்ரீ து மந்மயீ
அர்ச்சாநாஜ்ஜபதோ த்யாநாதி மாம் சம்யக் ஸமச்ரித
ஸ்வாம் சத்தாம் வைஷ்ணவீம் ப்ராப்ய பரம் ப்ரஹ்மாதி கச்சதி -76-

——————————–

அத்யாயம் –25 -கீழே தாரக மந்த்ரம் இனி சம்சார ரஷாக -தாரா அநு தாரா -மந்த்ரங்கள் –

இத்தம் தே கதித சக்ர தாரகஸ் யை ஷா விஸ்தர
சம்சார தாரிகாயா மே தாரிகாயா ஸ்ருணு க்ரமம் -1-
வர்ணா நாம் விதி சித்யர்த்தம் சம்ஜ்ஞா பூர்வம் நிசாமயா
ஸ்ருதாஸூ வித்வத்யாஸூ விதிர் மந்த்ரஸ் ப்ரவர்த்ததே -2-
அகாராஸ்வா ப்ரமேயச்ச பிரதமோ வ்யாபகஸ் ஸ்ம்ருத
ஆதி தேவஸ் தசாகார ஆனந்த கோபநஸ் ஸ்ம்ருத -3-அகாரம் பிரமம் -வியாபகம் -ஆதி தேவன் -அனந்தன் -கோபநன்

ராம சம்ஜ்ஞ இகாராச்ச இத்த இஷ்ட ப்ரகீர்த்தித
ஈகார பஞ்ச பிந்துர் வை விஷ்ணுர் மாயா புரந்தர -4-ஐகாரம் ராம -இத்தம் இஷ்டம் / ஈகாரம்-பஞ்ச பிந்து -விஷ்ணு -மாயா
உகாரோ புவநாக்யச்ச உத்தாம உதயஸ் ததா
ஊகார ஊர்ஜோ லோகேச ப்ரஜ்ஞா தாராக்ய ஏவ ச -5-

சத்யச்ச ருதாமா ச ருகார ச து ச அங்குச
ருகாரோ விஷ்டராக் யச்ச ஜ்வாலா சைவ பிரசாரணம்–6-
லிங்காத்மா பகவான் ப்ரோக்தோ லுகார ஸ்தாரக ஸ்ம்ருத
லுகாரோ தீர்க்க கோணச்ச தேவதத்தஸ் ததா விராட் –7-
த்ரயச்ர ஏகார சம்ஜ் ஞச்ச ஜகத் யோநி அவிக்ரஹ
ஐஸ்வர்யம் யோக தா தா ச ஜ ச ஐராவண ஸ்ம்ருத –8-
ஓகார ஓத தேஹச்ச ஓத நஸ் சைவ விக்ரமீ
ஓவ்ர்வோ அத பூத ராக்யச்ச ஒவ் ஸ்ம்ருதோ ஹி ஏஷ தாத்மக –9-
த்ரை லோக்ய ஐஸ்வர்யதோ வ்யாபீ வ்யோமேச ஓங்கார ஏவ ச
விசர்க ஸ்ருஷ்ட்டி க்ருத் க்யாதோ ஹி அகார பரமேஸ்வர -10-

ரு அக்ஷரம் -சத்யம் -ருதாமன் -அங்குச /ரூ அக்ஷரம் -விஷ்டரம் -ஜ்வாலா -பிரசாரணம்
லு அக்ஷரம் -லிங்காத்மா -பகவான் -தாரக /தீர்க்க கோண /தேவ தத்த -விராட்
ஏ அக்ஷரம் -த்ரயச்ர -ஜகத் யோநி -அவிக்ரஹ / ஐ அக்ஷரம் -ஐஸ்வர்யம் -யோக தாதா -ஐராவண
ஓ அக்ஷரம் -ஓத தேஹ -ஓதந -விக்ரமீ / ஒவ் -அக்ஷரம் -ஒவ்ர்வ – பூதார-ஒவ்ஷதம்
ஓம் -த்ரைலோக்ய ஐஸ்வர்யத -வ்யாபிந் -வ்யோமேச / ஹ அக்ஷரம் -வி சர்க்கம் -ஸ்ருஷ்ட்டி க்ருத் -பரமேஸ்வர

கமலச்ச கராலச்ச ககார ப்ரக்ருதி பரா
ககார கர்வ தேஹம்ச வேதாத்மா விஷ்வா பாவந -11-
கதத் வம்சீ ககாரஸ்து கோவிந்தாச்ச கதாதர
ககாரஸ் த்வத கர்மாம்சுஸ் தேஜஸ்வீ தீப்தமாம்ஸ் தத-12-
ங்கார ஏக தம்ஷ்ட்ராக்யோ பூதாத்மா பூத பாவன
சகாராச் சஞ்சலச் சக்ரீ சந்த்ராம்சு ச து கத்யதே -13-
சந்தபதிச் சலத்வம்சீந் சகாரச் சந்த எவச
ஜந்மகந்த்ரு அஜிதச் சைவ ஐகாரச் சைவ சாஸ்வத -14-
ஜகரோ ஜஷ சம்ஜ்ஞச்ச சாமக சாம பாடக
ஈஸ்வரச் ச உத்தமாக்யச்ச ஞகாரஸ் தத்த்வதாரக -15-

சந்த்ரீ டகார ஆஹ்லாதோ விச்வாப்யாய கரஸ் ததா
தாரா தரஷ்ட காரச்ச நேமி கோஸ்துப உச்யதே -16-
தண்ட தாரோ டகாராச்ச மவ்லச அகண்ட விக்ரம
டகார விஸ்வ ரூபச்ச வ்ருஷகர்மா ப்ரதர்தன -17-
ணகார அபயத சாஸ்தா வைகுண்ட இதி கீர்த்தித
தகாரஸ் தா லலஷ்மா ச வைராஜா ஸ்ரக்தர ஸ்ம்ருத -18-
தன்வீ புவந பாலச்ச தகார சர்வ ரோதக
தத்தாவகோசோ தமநோ தகார சாந்தித ஸ்ம்ருத -19-
தகார சார்ங்கத்ருத் தர்த்தா மாதவச்ச ப்ரகீர்த்தித
நரோ நாராயண பந்தா நகார சமுதாஹ்ருத -20-

டகாரம் -சந்த்ரீ -ஆஹ்லாத–விச்வாப்யாயகர – தராதர -நேமி -கௌஸ்துப -தண்ட தார -மவ்சல -அகண்ட விக்ரம –
விஸ்வரூப -வ்ருஷகர்ம -ப்ரதர்த்தன
ண காரம் -அபயத -சாஸ்த – வைகுண்ட –
த கராம் -தால லஷ்மண் -வைராஜ -ஸ்ரக்தர-தந்வீந் -புவந பால -சர்வ ரோதக -தத்தாவகாச -தமந- சாந்தித –
சார்ங்க த்ருத் -தர்த்தா -மாதவ –
ந காரம் -நர -நாராயண -பந்தா

பகார பத்ம நாபச்ச பவித்ர பச்சிமாநந
பகார புல்ல நயநோ லங்காலீ ஸ்வேத சம்ஜ்ஜிதா–21-
பகாரோ வாமநோ ஹ்ரஸ்வ பூர்ணாங்க ச ச கத்யதே
பல்லாதகோ பகாராச்ச ஜ்ஜேய சித்தி ப்ரதோ த்ருவ –22-
மகாரோ மர்த்ந கால பிரதாந பரிபட்யதே
சதுர் கதிர் யகாரச்ச ஸூ ஸூஷ்ம சங்க உச்யதே -23-
அசேஷ புவநாதாரோ ரோநல கால பாவக
லகாரோ விபுதாக்யச்ச தரேச புருஷேஸ்வர –24-
வராஹச் ச அம்ருதாதாரோ வகாரோ வருண ஸ்ம்ருத
சகார சங்கர சாந்த புண்டரீக ப்ரகீர்த்தித–25-
ந்ருஸிம்ஹச்ச அக்னி ரூபச்ச ஷகாரோ பாஸ்கரஸ் ததா
சகாரஸ்தவம் ருதஸ் த்ருப்தி சோமச்ச பரிகீர்த்தித -26-
ஸூர்யோ ஹகார பிராணஸ்து பரமாத்மா ப்ரகீர்த்தித
அனந்தேச ஷகாரஸ்து வர்காந்தோ கருடஸ்ததா -27-
அசேஷ சம்ஞ்ஞா வர்ணாநாம் இத்யேதா கீர்த்திதா மயா
அநுலோம விலோமேந வர்ண்யா வர்ணஸ்ய வை புந -28-
சம்ஞ்ஞா சங்க்யா ச யா சக்ர சாமான்ய சா மஹாமதே
சிதம்ஸா சர்வ ஏவைதே வர்ணா பாஸ்வர விக்ரஹா -29-
காரணம் சர்வ மந்த்ராணா லஷ்மீ சக்த் யுப ப்ரும்ஹிதா
ஸ்துதா சம்பூஜிதா தியாதா வர்ணா சம்ஞ்ஞா பிராதராத் -30-
எழுத்துக்களே மந்திரங்களின் காரணம் -ஸ்ரீ லஷ்மீ சக்தியால் அவை வலுவாக்கப்பட்டு
உபாசகனால் ஸ்துதிக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் த்யானிக்கப்படும் செய்யப்படுகின்றன

ப்ரய்ச் சந்தி பராம் ருத்தம் விஞ்ஞானம் பாவயந்த்யபி
பரஸ்பராங்க பாவம் ச மந்த்ரோத் பத்தவ் வ்ரஜந்த்யமீ–31-
அக்ஷரங்கள் மந்திரங்களில் ஓன்று மற்று ஒன்றுக்கு அங்கமாக இருந்து உபாசகனுக்கு செழிப்பும் ஞானமும் அளிக்கும்

சராசரே அஸ்மிம்ஸ் தன் நாஸ்தி யதமீபிர்ந பாவிதம்
நித்யா யத்யபி தா திவ்யா மந்த்ராணாம் மூர்த்தவ்ய பரா -32-
தாதாப்யே வம்விதைர் வர்ணைர்ப்பாவித இதை சிந்தனா
பவந்தி பூர்ண சமர்த்யா மந்த்ரா சாஸ்த்ர நிதர்சநாத் -33-அக்ஷரங்களால் ஆக்கப்பட்ட மந்த்ரங்கள் திவ்யம் நித்யம் பரிபூரணம் –

ஆலம்பனம் தியாம் சைவ பவந்த்யேவம் மஹா மதே
அபாக அபி யதா வ்யோம்நி தியா பாக பிரகல்ப்யதே–34-
ஸுகர்யாய ததா மந்தரே வர்ண பாக அனுசிந்த்யதே
க்ருதவைவ பாவகாம் வ்யாப்திம் வர்ணாநாம் பூஜனம் த்ரிதா -35-
மனசில் சிந்தித்து மூன்று முறைகள் பூமியில் எழுதப்பட்டதாக பூஜிக்க வேண்டும்

பூமவ் பத்மே ததா தேவ்யாஸ்தாநவ் மந்த்ரான் சமுத்தரேத்
பரமாத்மாந மாதாய யோஜயேத் கால வஹ்னி நா –36-
த்ரை லோக்ய ஐஸ்வர்ய தோபேத மாயாம் அஸ்மின் நியோஜயேத்
இதம் சா பரமா சக்திர் வைஷ்ணவீ சர்வ காமதா -37-
சதா பூர்ணா சிதா நந்தா மம மூர்த்திர் நிரந்தரா
இயம் சா பரமா நிஷ்டா யா சா ப்ரஹ்ம விதாம் த்ருவா-38-
அஸ்யாம் நிஷ்டாய தத்வஞ்ஞா விசந்தி ப்ரஹ்ம மன்மயம்
சவ்ஷா தத்வவிதாம் முக்யை சாஸ்த்ரே சாஸ்த்ரே விசிந்தயதே-39-
ஓதம் ப்ரேதம முஷ்யாம் வை ஜகச் சபிதார்த்த தாமயம்
அநயைவ சதா சாங்க்யை சாங்க்யா யே ஹம் சனாதநீ -40-

அநயைவ சமாதிஸ்த்தை ஸமாதீய சமாதிநா
அபிதீயே அநயை வாஹம் சைவ ஷட்த்ரிம்ச தந்திமா-41-
அவள் தாருகா -மூலமாகவே சமாதி நிலை அடைகிறார்கள் –
சைவர்களால் -36-வது தத்துவமாக கொள்ளப்படுகிறேன்–பதி மற்றும் சக்தி -பசு அல்லது ஜீவாத்மா -கலை காலம் -நியதி –
வித்யா- ராகம் -ப்ரக்ருதி -குணம் -பஞ்ச தன்மாத்திரைகள் -பஞ்ச பூதங்கள் -தச இந்திரியங்கள் –
மனம் -புத்தி -அஹங்காரம் -நான்கு பாசங்கள் –

மஹா ராஜீ ததைவாஹ மநயைவ த்ரயீ பரா
ருக் யஜு சாம சங்கதே ஸிந்த்யே ஸவ்ரே ச மண்டல -42-
ஸுரர்கள் வேத மண்டல மஹா ராணியாகக் கொள்ளப்படும் படி செய்கிறேன்

தருணீம் ரூப சம்பன்னாம் சர்வ அவயவ ஸூந்தரீம்
அநயைவ வ்யவஸ்யநித லோகாய தாவி ஸஷுணா-43-
லோகாயத உபாசகன் அனைத்து அவயவங்களிலும் அழகான பெண் -என்பவளாகக் கொள்ளும்படி செய்கிறேன்

க்ஷண பங்கவிதா நஜ்ஜைச் ஸிந்த்யே நிர்விஷயா ச தீ
ஆர்ஹதைச்சா நயை வாஹம் யஷீ நாம் நா ஸ்தோதிதா
அவள் மூலமே அனைத்தும் க்ஷண நேரம் நீடிக்கும் என்றும் தீர்மானிக்க இயலாதபடியான ஞானம் என்று
புத்தர்களால் நான் கொள்ளும் படி இருக்கிறேன் –
ஆர்ஹதர்-ஜைனர் -என்னை யஷை யாகக் கொள்ளும் படி இருக்கிறேன்

பரமா தாரிகா சக்திஸ் தாரிணீ தாரிகாக்ருதி
லஷ்மீ பத்மா மஹா லஷ்மீஸ் தாரா கௌரீ நிரஞ்ஜனா -45-
ஹ்ருல்லேகா பரமாத்மஸ்தா யா சக்திர் புவநேஸ்வரீ
சிச்சக்தி சாந்தி ரூபா ச கோக்ஷணீ கோஷஸம்பவா-46-
காமதேநுர் மஹாதேநுர் ஜகத்யோநிர் விர்பாவரீ
ஏவமா தீநி நாமாநி சாஸ்த்ரே விசஷணை-47-
தாரிகாயா நிருக்தாநி வேதே வேதே ச பண்டிதை
அஸ்யா ஏவாபரா மூர்த்திர் விஜ்ஜேயோ த்வநு தாரிகா -48-

ஸ்ரீ தாரிகாவின் திருநாமங்களை சாஸ்திரங்களும் வேதங்களும் பண்டிதர்களும் இவ்வாறு சொல்லும்
அநு தாரிகா அவளுடைய மற்றொரு ரூபம்

சாந்தம் நியோஜயேத் ஸ்தாநே பூர்வஸ்ய பரமாத்மந
சேஷமந்யத் சமம் ஹி ஏஷா தநுர்மே அந்ய அநு தாரிகா -49-
பரமாத்மந் என்பதற்குப் பதிலாக -சாந்தம் -என்பதைச் சேர்த்தால் -அதுவே அநு தாரிகா ரூபம் ஆகும் –
அதாவது -ச என்பதைச் சேர்த்து ஸ்ரீம் ஆகும் என்றவாறு –
தாரிகா யாமி வாஸ்யாம் ச விஜ்ஜேயம் வைபவம் மஹத்
இமே சக்தீ பரே திவ்யே மம தந்வவ் புரந்தர -50-
அநுதாரிகாவின் வைபவமும் தாரிகாவின் மேன்மை போன்றதே -இரண்டும் உயர்ந்த திவ்ய ரூபங்கள்

யத்கிம் சிதேதயா சாத்யம் சாதநீயம் ததன்யயா
இமே பூர்வா பரீபாவம் வ்ரஜத அந்யோந்ய வாஞ்சயா
சம்யக் சாதயதச் சைவ சாதகாநாம பீப்சிதம் -51-
இவற்றில் ஒன்றின் திறம் மற்று ஒன்றில் அடங்கியே காணப்படும் -இரண்டும் உபாசகனுடைய விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக உள்ளன –

-25-அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கோமளா தண்டகம் –

April 26, 2019

ஸ்ரீ கோமளா தண்டகம் –

சகல புவந மாதா சாகராதீச ஜாதா ப்ரணமத் அவந காமா பாஸ்கர க்ஷேத்ர தாமா
சகலித பய மூலா சார்ங்க தன்வானுகூலா ப்ரவிமல முக பிம்பா பாது மாம் கோமளாம்பா–

ஸ்ரீ கோமளவல்லி நாச்சியார் -சகல லோக மாதா -சமுத்ரராஜ திருப் புத்ரி -ஆஸ்ரித ரக்ஷண ஏக சங்கல்பம் கொண்டு
ஸ்ரீ பாஸ்கர ஷேத்ரத்தில் ஸ்ரீ சாரங்கபாணி ஆராவமுதாழ்வானுக்கு பிரியையாய் –
மாசற்ற திருமுக மண்டலத்துடன் எழுந்து அருளி -நம்மை ரஷித்து அருளுகிறாள் –

நான்கு ஸ்லோகங்கள் —
1 -ஸ்ரீ திருக்குடந்தை திவ்ய தேச வைலக்ஷண்யத்தையும் —
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை –சூழ் புனல் குடந்தை -அன்றோ —
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியாரை நமக்கு கொடுத்த மஹா உபகாரகத்துக்கு ஸ்ரீ திவ்ய தேசத்தை கொண்டாடுகிறார்
2–அடுத்த தண்டகத்தால் ஸ்ரீ கோமள வள்ளி நாச்சியாரின் மஹிமையையும்
3/4–பின் இரண்டு தண்டகங்களால் நாச்சியாரின் திவ்ய மங்கள விக்ரஹமும் வர்ணிக்கப்படுகின்றன

புவந தல லலாம பூதாம் நிமஜ் ஜத்-வ்யதா தாப ஹ்ருத் பூர ஜாதாம் புஜாந்தர் நிபீதாசவ
ஸ்த்ரீ ஸமேதா -அலி ஜங்கார கீதா பிராமாதி ஸீதாம்பு சஹ்யாத்ரி ஜாதா தரங்கோத்த வரத அங்குராஸ்ராந்த-
தூதாதி கூல-ஸ்த சூதாதி புஷ்பா ப்யுதீதா துலா மோத ஜாதா திரேக ப்ரீணீதா-
தநூத்ரேக வாதாயநா சன்மித ஸீதாம் ஸூ முக்யாஸ்ய லீலோத்பவத் சர்வ காலோன்மிஷ துங்க ஸை லோலாசன்
நிர்மலா லோக ஸூப்ராம்ஸூ -ஜாலோத்கட ப்ராந்திம் அஸ்ராந்த சத் த்ரவ்யவி ஸ்ராணநா சக்த விஸ்ராந்தி பூமி ஷமா பால
வர்யை சதா பாலிதாம் த்வஸ்த பாபா ப்ரமாத்யத் கஜாளீ–கநத் -கண்ட -பாளீ -மதா சவாத -கேளீ ஸமுத்யத் ரவளீந்த்ர-
ஸோபி-ப்ரதோளீ -ஸமுத்யன் -நிஷத்யா-லசன்-பண்ய-ஹ்ருத்யாம்-உதாரம் அவத்யா
நபிஞ்ஞாம் ச வித்யா – வதூ -விப்ரமோத்யாந -வேதாந்த -வித்யா ஸ்ரிதாம் -சாந்த தேஜ்யா வ்ரதாரப்த-
யாஜ்யந்த-வேலா -ஹூ தாஜ்யாதி–ஹவ்யாம்-ச போஜ்யா திதேயா
க்ர்ய- ராஜ்யாத்ருத-ஸ்தோத்ர -கோஷா ஹதா-சேஷ -தோஷாம்-க்வசின்னிர் நிமேஷா ங்கநா-நிர்விசேஷா –
க்ருதி-ஸ் பூர்ஜத் -ஏணாஷ்யுபா-ஸ்லிஷ்ட வீணா -ராவோஜ்ஜீவிதை-ணாங்க சூடா ஷி கோணா-க்நிஸாத்-
பஞ்ச பாணம் புரீம் கும்ப கோணாஹ்வயாம்-பூஷயந்தீ–ஸூரான் தோஷ யந்தீ நதான் போஷயந்தீ-பயம் சோஷ யந்தீ -மராளீ –
கருத்-வாதவேகா -வாமக்நா-ப்ஜ கர்ப்போத் பதத் -புஷ்பலிட்–ஸூசித-ஸ் வாம்பு-மஜ்ஜஜ்-ஜநாம்ஹோ -விமுக்தே –
ஸூ வர்ணாம் புஜின்யா-தடாந்தே -நமஸ்யார்த்தம் -அப்யாகதை-விஸ்மயான்-நிஸ் சலாங்கைர்-
இவா லங்க்ருதே புத்ரிகா ரூப தேவைர் -விமாநே சமாநே ஸ்திதா கோமளாம்ப-தவம் அஸ்மான் அவே -1-

தாயே ஸ்ரீ கோமள வல்லி -ஸ்ரீ திருக்குடந்தை என்னும் திவ்ய தேசத்தில் பொற்றாமரைக் கரையில்
இணையற்ற விமானத்தில் எழுந்து அருளி இருக்கிற நீ அடியோங்களை ரஷித்து அருள வேண்டும் –
இந்த திவ்ய தேசம் பூ மண்டலத்துக்கே திலகம் போன்றது -ஸஹ்யம் என்ற பர்வதத்தில் இருந்து உண்டான
திருக் காவேரி நதி சமீபத்தில் ஓடுகிறது -அதின் பிரவாகத்தில் முழுகுகின்றவர்களுடைய துன்பமும் தாபமும் நீங்குகின்றன –
அதில் உள்ள தாமரைகளில் வண்டுகள் தன் பேடைகளோடு மதுவைப் பருகிப் பாடிக் கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்றன –
அதின் அலைகளில் இருந்து எழும் குளிர்ந்த காற்று கரைகளில் வளர்ந்து இருக்கும் மா முதலிய மரங்களின் புஷ்பங்களில் இருந்து
வாசனையை ஏறிட்டுக் கொண்டு வீசுகிறது -இந்தக் காற்று பட்ட மாத்ரத்திலே நகரத்தில் உள்ள மதி முக மடந்தையர்களுக்கு
மன்மத தாபம் உண்டாகிறது -அதை ஆற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்கள் எப்போதும் தங்கள் மாளிகைகளின் மேல் மெத்தையின்
ஜன்னல்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் -இவர்களுடைய லாகிய முக சோபையைப் பார்த்தால்
பர்வத சிகரம் போன்ற மாளிகைகளில் சர்வ காலமும் மாசு மறுவற்ற பூர்ண சந்திரர்கள் தான் இவ்வூரில் இருந்து
வெளிச்சம் கொடுக்கிறார்களோ என்று பிரமிக்கும் படியாக இருக்கிறது

இத்தை ஆளும் அரசர்கள் நல்ல த்ரவ்யங்களை எப்போதும் கொடுத்துக் கொண்டு இருப்பதிலேயே
ருசி யுடையவர்களாய் இருப்பதால் அவர்களை தானத்திற்கு எல்லை நிலம் என்னலாம்-
வீதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக கன்னங்களில் மத ஜலம் பெருக சஞ்சரிக்கின்றன –
அத்தைப் பருகி வண்டுகள் கழித்து ரீங்காரம் செய்து கொண்டு இருக்கின்றன –
வீதிகளில் இரு புறமும் உயர்ந்த கடைகளில் வியாபாரத்திற்காக சாமான்கள் ஒழுங்காக வைக்கப்பட்டு வெகு அழகாக இருக்கின்றன –
நகரம் விசாலமாயும் தோஷம் என்பதே தெரியாததாயும் சகல பாபங்களையும் போக்குகிறதாயும் இருக்கிறது

சரஸ்வதி தேவிக்கு விளையாடும் உத்யான வானம் போன்றவர்களும் வேதாந்த ஞானம் நிரம்பியவர்களுமான
ஞானிகள் பலர் இங்கே இருக்கிறார்கள் -எப்போதும் பகவத் ஆராதனத்தையே செய்து கொண்டு யாகங்களையும் செய்கிறார்கள் –
யாகத்தின் முடிவில் செய்யப்படும் ஆஹூதிகளை தேவ ஸ்ரேஷ்டர்கள் உன்ன வருகிறார்கள் -அவர்களும் ஆராதிக்கும்படியாக
அப்போதும் ஓதப்படும் வேத மந்திரங்களின் கோஷம் சகல தோஷங்களையும் போக்க வல்லதாய் இருக்கிறது –
ஓர் இடத்தில் தேவ ஸ்த்ரீகள் தானோ என்று சந்தேகிக்கத்தக்க ஸூ லோசனைகளான ஸூந்தரிகள் வீணையை
அணைத்துப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -அந்த வீணா கானம் சந்த்ர சேகரனான ருத்ரனால் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட
மன்மதனனையும் உயிர்ப்பிக்கும்படி சிருங்கார ரசம் பொருத்தியதாய் இருக்கிறது

இவ்வாறு மஹிமையுள்ள ஸ்ரீ கும்பகோணத்தை அலங்கரித்துக் கொண்டு தேவதைகளை சந்தோஷிப்பித்து
ஆஸ்ரிதர்களை வாழ்வித்து அனைவரின் பயத்தையும் போக்கிக் கொண்டு நீ எழுந்து அருளி இருக்கிறாய் –
நீ திரு அவதரித்து அருளிய பொற்றாமரையில் விளையாடும் ஹம்ஸங்கள் சிறகுகளை அடித்துக் கொள்ளும் போது
அந்த வேகத்தினால் பக்கத்தில் உள்ள தாமரைப் புஷ்பங்கள் ஜலத்தில் அமிலவும் -அவற்றுள் வசிக்கும் கருத்த வண்டுகள்
திடீர் என்று மேலே கிளம்புவதை பார்த்தால் பொற்றாமரையில் நீராடும் பாக்யவான்களுடைய பாபங்கள்
அவர்களை விட்டு விலகி ஓடுவது இவ்விதமே என்று காட்டுவதாக உள்ளது –
இந்தக் கரையில் நீ கோயில் கொண்டு இருக்கும் திவ்ய ஒப்பற்ற விமானம் விளங்குகிறது –
அதை அலங்கரிக்கும் பிரதிமைகளைக் கண்டால் உன்னை சேவிக்க வந்த தேவதைகள்
இந்த திவ்ய தேச சீர்மையையும் உன் நீர்மையையும் கண்டு ஆச்சர்யத்தால் திகைத்து நிற்கிறார்களோ என்று நினைக்கும்படி இருக்கிறது

இப்படிப் பட்ட ஸ்ரீ திருக் குடந்தையில் பொற்றாமரைக் கரையில் அழகிய விமானத்தில் கோயில் கொண்டு இருக்கும்
ஸ்ரீ கோமள வள்ளித் தாயே நீ எங்களை ராஷ்ட்டித்து அருள்வாய்

————————

இவ்விதம் அழகும் செல்வமும் புண்யமும் நிரம்பிய திவ்ய தேசத்தில் தனது ஸுலப்ய குணத்தால்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார் எழுந்து அருளி இருந்த போதிலும் அவருடைய மேன்மைக்கு எல்லையில்லை என்று
சகல பல ப்ரதத்வம் முதலான குணங்களை சொல்லி அவள் மஹிமையைக் கொண்டாடுகிறார்கள் இரண்டாவது தண்டகத்தில்

அகில ஜனனி –
சார்ங்க பாணி ப்ரியே
கீர வாணி
ப்ரசர்ப்பத் க்ருபாணி ப்ரபா பந்துராணி வ்யதா
மோஷாணா நிஸ்துவத்-ரக்ஷணாநி ஸ்புடாநீ-ஈஷணாநி பிரகாமம் நிதேஹி ப்ரமோதம் விதேஹி
பிரணம்ரே மயி ப்ரோல்லஸத் பத்ம வாடீ க்ருஹே
ஸ்வர்ண சாடி யுதே-ஸ்வர் வதூடீ கரோத் ஷிப்த வீடி தல ஸ்வாத தாடீ-ஸூ சோனோஷ்டி
சேடீ பவத் -தேவ கோடீ-சிரஸ் -ஸ்தாஸ்னு -கோடீர ஜுஷ்டாங்க்ரி -யுக்மே
பிரியோரோ விஹாரே-ப்ரக்ருஷடாம் ஸூ ஹாரே -மராளீ ப்ரஸாரே மஹிஷ்டோ பஸாரே
க்ருதா கவ்யு தாஸே க்ருபா குப்தா தாஸ் பவத் த்ருஷ்ட்டி லேசோ பவேச் சேத் அதீஸோ
விசாம் வாதிசாம் வா ஜானோ ஜாயதே அல்போபி மூடோ அப்யஹோ
கல்ப வல்லீ ஸூமா நல்ப-மாத்வீ-ஜரீ -கல்ப -பூயோ -பவஜ்-
ஜல்ப -பாக்கம்சஜித் – தல்ப-பங்கம் -கிராகல்பயத்-யந்திகே-சார்ங்க தன்வா –
ஹ்வயம் பாஸேந யன் மஹஸ் தத் -பிரியாயாம் ரமாயாம் மஹோ தாரதா நித்ய –
சித்தா த்விதா அபீதி சர்வே புதாஸ் த்வாம் ரமே சவ்ரி-ராமே அரவிந்தாலயே-மே கதிர் -நத்வத் -அந்யே-ஸூரா
சிந்து -கன்யே -அம்பா லஷ்மீந்திரே
மந்திரேஷ் வஷி நிஷிப்யதாம்-நஸ் த்வயேத் -யாமந்தி -பிரகாமம் ஜகந்தி பிரமோ
தோல்ல சந்தி த்வயா அமூனி சந்தி-ஸ்புரச்–சந்த்ர -ரஸ்மிச்-சடா
மிஸ்ரிதே நேவ மேக வ்ரஜேந ஸ்வ-வக்த்ராத்மநா பூர்ண சந்த்ரேண பாச சாத்ய தேசே சீதை ரஜ்ஜூ ஜாலைர் –
நிபத் தாத்ம நேவா -அந்தகாரேண-கங்கா ஜரீ -சங்க -பாஜேவ–ஸூர்யாத்மஜா –
ஸ்ரோதசா மல்லிகா மாலிகா ஸோபிநா கேச பாசேன நீல பிரகாசேந சம்சோபிதே –
ஹேமா பாஅபித்வம் அத்யத்புதம்-
க்ருஷ்ண காந்தே ப்ரஸீதேதி ஸம்ப்ரார்த்யசே சாதுபி-2-

ஹே ஸ்ரீ கோமளாம்பா -நீயே சகல லோகங்களுக்கும் மாதா -ஸ்ரீ சார்ங்கபாணியின் பிரியை -கிளி போன்ற இனிய மொழியாள்
உன்னுடைய கடாக்ஷங்களில் கருணை ததும்புகிறது -அவை உன்னை ஸ்துதிப்பார் ஆபத்தைப் போக்கி அவர்களை ரஷித்து அருளும் –
அந்த கருணை கடாக்ஷங்கள் அடியேன் இடத்திலும் பரிபூர்ணமாக அருளத்தட்டும்
மலர்ந்த தாமரைகளோடு விளங்கும் பொய்கையையே உனது வாசஸ்தானம் -அழகிய பொன்னொத்த பட்டே உனது ஆடை –
தேவ ஸ்த்ரீகள் பக்தியுடன் வெற்றிலை ஏந்திக் கொடுக்க அத்தை அமுது செய்து உன் ஆதாரங்கள் சிவந்து இருக்கின்றன –
சகல தேவர்கள் க்ரீடங்களும் உன் திருவடிகளில் -ஸ்ரீ ஆராவமுத ஆழ்வானது திரு மார்பே உனக்கு விளையாடும் இடம்-
உனது நடை ராஜ ஹம்சம் போன்றது

உன்னுடைய திரு ஹாரமோ தேஜஸ்ஸால் வீசுகிறது–உன்னை அனைவரும் உபசரித்து பூஜிக்கிறார்கள் –
அனைவருடைய பாபங்களையும் நீக்கி கருணையால் திருத்தி ரஷித்து அருள்கிறாய் –
உன்னுடைய கடாக்ஷ லேசத்தாலே அல்பரும் சகல தேசாதிபதியாகிறார்கள் –
உனது கடாக்ஷ லேசத்தினால் மூடன்கூட கற்பக வருஷத்தில் புஷபங்களில் பெருகும் மது தாரை போலே
இனிமையான சொற்களால் ஆயிரம் நாவுடைய ஆதிசேஷனையும் ஜெயித்து விடுகிறான்
உன்னருகில் ஸ்ரீ சாரங்க பாணி -மஹ-பரஞ்சோதி மிளிர்கிறது -அதன் தாரமான -பத்னியான உன்னிடத்தில்
மஹோ தாரதை-மஹா உதாரமாய் -இருப்பதாலே உன் மூலமே அவனை ஆஸ்ரயிப்பது–
மல்லிகைப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கறுத்து நீண்டு அடர்ந்து இருக்கும் உன் கூந்தல்கள் பிரகாசம் –
பூர்ண சந்த்ர காந்தி மேகக் கூட்டங்கள் உடன் கலசி-கங்கா பிரவாஹமும் யமுனைப் பிரவாஹமும் கலந்தால் போலேயும் அழகாக உள்ளதே –
நீ ஹிரண்ய வர்ணமாய் இருந்தாலும் ஸ்ரீ கிருஷ்ண காந்தே -விரோதம் இல்லையே –

———————–

ஸ்ரீ கோமளவல்லி நாச்சியாரின் பரத்வம் ஸுலப்யம் முதலான ஆத்ம குணங்களை அனுபவிக்க இறங்கினர்
பள்ளமடையான திவ்ய மங்கள விக்ரஹ குணத்தின் அனுபவத்தில் வந்து சேர்ந்தார் –
இனி மேல் இரண்டு தண்டகங்களால் அந்த திவ்ய மங்கள விக்ரஹத்தையே அனுபவிக்கிறார் –
அவற்றுள் முதல் தண்டகத்தால் எல்லா விதத்தாலும் மநோ ஹரமான
திரு முக மண்டலத்தின் ஸுந்தர்யத்தில் ஈடுபட்டு அத்தை வர்ணிக்கிறார்

ஸூம -சர-லலாத -பிராமே க்ருதா பத்விராமே-ரமே சார்ங்கி -ராமே
சதா சாதரா மே மநோ வ்ருத்திர் ஆஸ்தாம் த்வயி ஸ்ரீ ஸ்புடம் மூர்த்த ஜாநாம் த்விதா சம் விபக்தாத்ம நாம்
அந்தரே பாஸ்வதா பவ்ய சிந்தூர ரேகான் விதேநாம்-
புதாந்தர் லசச் சஞ்சலா வல்லி சந்தேக சந்தாயிநா-தீர்க்க சீமந்த மார்கேண சாம் பூஷிதம் குங்குமை ரூஷிதம்
ஸூஷ்ம லஷ்மான்விதார்த் தேந்து துல்யேச கஸ்தூரிகா சித்ர கோத்பாஸிநா பால -பாகேந சோத் பாசிதம்
ரோசநா வாசிதும் மஞ்சிமா த்யாசிதம் மந்த ஹாலைஸ் சிதம்-வக்த்ர காந்தி ப்ரவாஹோத்த வீசி ப்ரமாதயிநா ருத்ர
நேத்ராக்நி நா அஸ்யாபி சார்த்தம் மாயா மா ஸ்ம பூத்தாஹ கர்மேதி நிச்சித்ய மாத்ருத்வ சம்பந்தத
ஸூந சாபா ஹிதே நேவ சாபோத்த மேந ப்ருவோர் த்வந்த்வத சோபமாநம் ஸ்ரியா நிஸ் சமானம் நிரஸ் தேந்து மாநம்
ஸ்ரவ-பூரா நீலோத்பல த்வந்த்வ மாத்வீக-பாநார்த்தம் அப்யாக தாப்யாம் புரோ விஷ்ய நா சாத்மகம் சமபகம் தத்-
பயே நேவ பாரி ப்லவாப்யாம் இவேந்திந்திராப்யாம் மணீ கர்ணா தாடங்க-ரஸ்மி ப்ரவாஹ ஸ்புரன் மீந சங்கா
வஹாப்யாம் முகே ஸ்வீய-பந்து -பிரமாத்-ஆகதாப்யாம் -இவேனத்தீ வராப்யாம் லசல லோசா நாப்யாம்–
ஜ்வலத் குண்டல த்வந்த்வ ரத்னா பிரபா சித்ரிதாப்யாம் முராராதி லீலா மணீ தரப்பணாப்யாம் கபோல-
ஸ்தலாப்யாம் ஸ்ரிதம் லோச நேந்தீவா -த்விட்-ப்ரமா-தாயி நீலோத்பலா -லங்க்ருத -ஸ்ரோத்ர யுக்தம் –
ஸூ கோத்பாத-சக்தம் -ப்ரஸாதாது-ஷக்தம்-ஸ்வ -பர்வோத்தித-ப்ராந்தி-சந்தாயி முக்தா –
ல சந்தஸிகா வம்ச-வல்ல யுஜ்ஜ்வலம் வக்த்ர சந்த்ராந்தர்-உத்பாஸி -பியூஷ பிந்து –
பிரமாதாயி -தந்தா ஸ்ரிதம் சந்த தத்யாம் முகம் -3-

ஹே ஸ்ரீ லஷ்மீ –ஸ்ரீ சாரங்க பாணி ப்ரியே -உன் திரு முக மண்டலத்தில் கேசங்களை சமமாகப் பிரித்து நீளமாக வகிடு எடுத்து
மங்களமான சிந்தூரத்தை இட்டு அலங்கரித்து இருப்பது மேக மண்டலத்தில் மின்னல் கொடி போன்று உள்ளதே –
ஸ்ரீ கஸ்தூரி திலகம் கூடிய திரு நெற்றி அர்த்த சந்திரன் போலே திரு முக மண்டலம் புன் முறுவல் பூத்து-
சோதி வெள்ளத்தில் எழுந்த அலை போன்று திருப் புருவங்கள் இருக்க –
மன்மதனை ருத்ரன் எரிக்கும் பொழுது தனது சீரிய வில் எரிந்து போகாது இருக்க தனது தாயான
உன்னிடத்தில் இருக்கும்படி அன்றோ திருப்புருவங்கள் –
திருக் காதில் அணிந்த நீலோத்பலங்களில் இருந்து பாயும் மதுவைப் பருக வந்து எதிரில் தோன்றிய திரு மூக்கு என்னும்
செண்பகப் பூவைக் கண்டு என் செய்வோம் என்று திகைத்து நடுங்கும் இரண்டு வண்டுகளைப் போலே திருக் கண்கள்-
திருக் காது அணிகலன்கள் தேஜோ ப்ரவாஹத்தில் நீந்தும் மீன்கள் போலே -திருமுகமும் தாமரையாய் இருப்பதால்
தங்கள் இனம் என்று எண்ணி பிரமிக்கும் திருக் கண்கள் -திருக் கபோலங்கள் ரத்னக் கண்ணாடிகள் போலே —
திருக் கண்கள் ஆகிற நீலோத்பல காந்தியே திருக்காதுகளில் அணியப்பட்ட நீலோத்பலம் –
திரு மூக்கின் நுனியில் தொங்கும் முத்து தானாகவே தோன்றியது போலே -திருப் பற்கள் அம்ருத பிந்துக்கள் போலே –
பர அனுக்ரஹ ஏக ஹேது வான திரு முக மண்டலத்தை கொண்ட உன்னிடம் என்னுடைய மனஸ்
பக்தி உள்ளதாகும் படி நீயே அருள வேண்டும் –

———————————————–

திரு முக மண்டல அனுபவம் படிப்படியாக திவ்ய அவயவ சோபையைக் காட்டி அவற்றை அனுபவித்து
திருவடிகள் அளவும் செல்லக் கொண்டு போயிற்று –
இனி வர்ணிக்க இயலாது என்று அறிந்து நீயும் உன் பதியுமே பர தத்வம் –
அடியேன் உங்கள் இருவருக்கும் தாஸபூதன்-என்று ஸ்வரூபத்தை உணர்ந்து
அடியேனுடைய ரக்ஷண பரம் உன் பொறுப்பு என்று சரணம் புகுகிறார் நிகமத்தில் –

கலித-நமதபீஷ்ட-பூர்த்தே-விதூ தாமரார்த்தே -ஸூரீ கீத கீர்த்தே -ஸ்புரந் -பவ்ய மூர்த்தே
த்வதீ யஸ்ய கண்ட ஸ்யபாச ஜிதஸ்ய ஸ்வகீய -ப்ரபோ சந்நிதவ் பங்க ஆஸீன் மமே திஸ்வ
வாசா விசிஷ்டா பிதாநே ஹ்ரியா பம்பம் இத்யே கதே சம்ப்ருவாணஸ்ய சங்கே சிது-
பாஞ்ச ஜன்யஸ்ய கோஷேண யுத்தாங்கணே சர்வ சங்காபிமான பராஹங்ப தேகிம் –
விதூத்யத் -கர ஸ்பர்ச-ஜாதா தரா-சக்ர வாகாயதி ஸ்யு பவேயுஸ்
ததைதத் -சமானா இதி ப்ராஞ்ஞ வர்யை ஸ்துதா ப்யாம்லசன்
நாபி-கூபாந்த -சமரோட ரோமாளி -வல்லீ-குளூச்ச பிரமாதா யகாப்யாம்
அமர்த்யாபகா-சோபித -ப்ராந்த-நீலாம் புதா ஸ்லே பவ ஸ்ருங்க
மேரு த்வய ப்ராந்த சந்தாய காப்யாம் சமுக்தா சராப்யாம் குசாப் யாம் லசத்-
க்ரோட -பாகே -நமத் தேவ பூகே ஹரவ் சானுராகே -ஸ்தநோர் வீதர-ப்ராந்தே
சஞ்சாத -வல்லீ -பிரமாதாயி-பாஹாக்ர தேசோல் லசத் -பல்லவ -ப்ராந்த சந்தாயி -பாண்யங்குலீ
பங்க்த்யுபர்யுத் பவ த் கோரக ஸ்ரேணி சந்தேக க்ருத்பிர் நகை ராஜிதே
யோகிபி–பூஜிதே -மத்திய சம்யோஜிதே மேகலா தாம்நி ஸர்பத்வம்-ஆ சங்க மாநேந லோகேந வல்மீக மேவேதி
சம்பா விதாயாம் ஸ்வகீ யாங்க பூஷாம் ஸூ பூரேசதாஸ் வர்த-சோபாம் வஹந்யாம் ஸ்வ நாப்யாம்
ப்ரமச் -சார்ங்கி -சித்தே ப்ரசஸ்த பிரபத்தே தவோரு ஸூ சாரூ ஜி தா தர்ச பாநூ ஜகத் தாத்ரி
ஜாநூ க்ருதாம் போஜ கேதவ்-க்ருபா வாபி பாதவ் -சமஸ்தே அபி லோகே சமாநாஸ் -த்வயா கே
த்வமேவாசி மாதா -ச சார்ங்க்யேவ நேதா தவை வாஸ்மி நித்யத் ததா வஸ்மி சத்யம் ரமே
பாஹி மாம் பாஹிமாம் தேவி துப்யம் நம-4-

ஹே ஸ்ரீ கோமளாம்பா ஆசிரித்தார்கள் மநோ ரதங்களை நிறைவேற்று அருளுகிறாய் –
தேவதைகளின் துன்பங்களைப் போக்கி அருளுகிறாய் -தேவ ஸ்த்ரீகள் உன்னை ஸ்துதிக்கிறார்கள் –
உன் திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ் எங்கும் பரந்துள்ளது-
உனது திருக்கழுத்தின் அழகு ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை தோற்கடிக்க -இப்படி கர்வ பங்கம் ஏற்பட்டத்தை
ஸ்ரீ சார்ங்க பாணி எதிரில் இருக்கும் போது பங்கம் என்று முழுதாக சொல்ல முடியாமல் –
பம் பம் என்று மாத்திரம் சொல்லி முடிக்கிறது -இப்படி பம் பம் ஒலியால் மற்ற சங்கங்களை அழைத்து
நானே தோற்ற பின்பு உங்கள் தோல்வியைச் சொல்ல வேண்டுமோ என்று அறிவிப்பது போலே இருக்கிறது –

சக்ரவாகங்கள் சந்திரனுடைய கர ஸ்பர்சத்தை ஸஹித்துக் கொண்டு இருக்குமாகில்-
அவைகளை முத்து மாலையுடன் கூடிய உனது ஸ்தனங்களுக்கு உபமானமாகச் சொல்லலாம் -என்பர்
இவை கொப்பூழ் என்னும் கிணற்றில் முளைத்த ரோமவரிசை என்னும் கொடியினால் தரிக்கப்பட்ட
இரண்டு பூம் கொத்துக்கள் போலே இருக்கின்றன –
ஸ்வச்சமான முத்து மாலைகளோடு உன் திரு மார்பில் விளங்கும் இரு ஸ்தனங்களும் இரண்டு சிறிய கார் மேகங்கள்
சிகரங்களில் வீற்று இருக்க -நாலா பக்கமும் வெண்மையான கங்கா ப்ரவாஹத்தின் காந்தி வீச உயர்ந்து நிற்கும்
இரண்டு மேரு பர்வதங்களோ என்று சந்தேகிக்கும் படியாய் இருக்கிறது –

உனது இரு திருப் புஜங்களும் ஸ்தனங்கள் ஆகிற மலைகளின் சாரலில் தோன்றிய இரண்டு அழகிய கொடிகள் போன்று உள்ளன –
திரு விரல்கள் கொடிகள் தளிர்த்த தளிர்களோ-என்றும் –
திரு நகங்கள் கொடிகள் புஷ்பித்த மொட்டுக்கள் வரிசைகளோ என்று சந்தேகிக்கும் படியாய் உள்ளன –
திரு ஒட்டியாணம் சலங்கை முதலான திவ்ய ஆபரணங்களின் கயிற்றை சர்ப்பம் என்று சந்தேகிக்கும் ஜனங்கள்
திரு நாபியை சர்ப்பம் வசிக்கும் புற்று என்று சந்திக்கும்படி இருக்கிறது –
தேஜஸ் வெள்ளத்தில் தோன்றிய சூழல் போலவும் உள்ளது –
ஸ்ரீ சார்ங்கபாணியின் மனஸ் அந்த சுழலில் அகப்பட்டுச் சுழன்று கொண்டே இருக்கிறது –
ஸ்ரீ சர்வ லோகேஸ்வரீ உனது திருவடிகளில் செய்யப்படும் பிரதிபத்தி சர்வ அபீஷ்டங்களையும் அருளும் –
ஓத்தார் மிக்கார் இலாயா மா தேவீ -அடியேன் தாஸபூதன் —
அடியேன் ஆத்மாவை உன்னிடம் சமர்ப்பித்து உன்னையே சரணம் அடைகிறேன் –

————————————-

நிகமத்தில் இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ கோமளவல்லி பிராட்டியின் பொருட்டு ஆகட்டும் என்று சொல்லித் தலைக் கட்டுகிறார் –

அதி மிருதுல வசன குமீபமீ -வரமேதத் வராத விஷ்ணு -கவி கதி தமீ
தண்டக ரூபமீ ஸ்தோத்ரம் கோமளவல்லீ மநோ முததே பவது–

மிகவும் மிருதுவான இந்த தண்டக ஸ்தோத்ரம் -ஸ்ரீ வரத விஷ்ணு என்ற கவியினால் இயற்றப்பட்டது –
இத்தை அப்யசிப்பார் ஸ்ரீ கோமள வல்லீ நாச்சியாருடைய திரு உள்ளத்திற்கு உகப்பு ஏற்பட்டு
சகல ஸ்ரேயஸ்ஸூக்களும் பெற்று ப்ரீதி காரித நித்ய கைங்கர்யமும் பெறுவார்

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வரத விஷ்ணு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோமள வல்லீ சமேத ஸ்ரீ சாரங்க பாணி பெருமாள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீத கோவிந்தம் –

February 2, 2019

ஸ்ரீ கீத கோவிந்தம்
ஸ்ரீ ஜய தேவர் -அருளிச் செய்தது -ஸ்ரீ போஜ தேவர் -ரமா தேவி குமாரர் -/ பத்மா தேவி மனைவி /
வங்க தேச ராஜா லஷ்மண சேனன் சபை புலவர் இவர்
ஸ்ரீ பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் அருளிச் செய்தது -இவர் பாட -இவர் தர்ம பத்னி பத்மா தேவி ஆடி சமர்ப்பணம்
12-சர்க்கங்கள் -ஒவ் ஒன்றிலும் அஷ்ட பாடல்கள் -ஆகையால் அஷ்ட பதி –
சில சர்க்கங்களில் பல அஷ்டபதிகள் -மொத்தம் -24-அஷ்ட பதிகள் –

யத் கோபீ வத நேந்து மண்டனமபூத் -மங்கள ஸ்லோகம் –
கார் ஒளி வண்ணன் நம் ஹ்ருதயத்திலே என்றும் நித்தியமாக நிலை பெற பிரார்த்தனை இதில்
திங்கள் திரு முகத்து சேயிழையீர் -முதலில் அணியும் கஸ்தூரி -கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
மலராள் தனத்துள்ளான் -மை வண்ண நிறுத்தினன் -யோகிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுக்கும் மை –
நித்யம் கரீச திமிராவில த்ருஷ்டயோ அபி சித்தாஞ்சனநேந பவ தைவ விபூஷி தாஷா
பஸ்யந்தி யுபர் யுபரி சஞ்சரதாம் அத்ருஸ்யம் மாயா நி கூடம் அநபாய மஹா நிதிம் த்வாம் -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
சித்தாஞ்சன மிவ ச்யாமாம் -அச்யுத சதகம்
அந்தர் ஜ்யோதி கிமபி -பகவத் த்யான சோபனம்
அந்தர் ஹிதோ நிதி ரசி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
நிதிர் அவ்யய -ஸ்ரீ சஹஸ்ர நாமம்

ராதா மநோ ரம ரமாவர–மங்கள ஸ்லோகம்
ராதையின் திரு உள்ளம் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளால் பூர்ணம் –
ராஸக்ரீடை தனி இடம் -அத்தை பத்மாவதி பதி ஜெயதேவர் கானாம்ருதமாக நமக்கு வழங்கியுள்ளார்

ஸ்ரீ கோபால விலாஸி நீ வலய-மங்கள ஸ்லோகம்
கோபிகள் கை வளையல்கள் போன்ற கண்ணன் திருப்பாதங்கள் –
இவற்றை அநவரதம் சித்தித்து அருளிய ஸ்ரீ கீத கோவிந்தம் -அவர் திருவடி போற்றுவோம்

———————–

ஸ்ரீ கீத கோவிந்தம் -1-
மேகை மேதுரம் அம்பரம் வனபுவ
ராதை இடம் கண்ணனை பசு மேய்த்து திரும்ப கூட்டி வர நியமிக்கிறார்ன் நந்தகோபர் –
பழம் நழுவி பாலில் விழுந்ததே -இவர்கள் லீலைகளுக்கு பல்லாண்டு பாடுவோம் –

முதல் அஷ்டபதி –
பிரளய பயோதி ஜலே
கேசவன் ஜெகதீசன் ஹரி -மீனாய் சத்யவ்ரதன் -பாண்டிய தேசம் -அந்த மஸ்த்ய அவதாரத்துக்கு மங்களம்-

முதல் அஷ்ட பதி -2-
ஷிதி ரதி விபுல தரே தவ திஷ்டதி —ப்ருஷ்டே தரணி தரண கிண சக்ர கரிஷ்டே
கேசவ த்ருத கச்சப ரூப ஜய ஜெகதீச ஹரே —
ஆதி கூர்ம மூர்த்தி –
மலை யாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி –லக்ஷம் யோஜனை -8-லக்ஷம் மைல்கள் பரப்பு திரு முதுகு
ஆமையான கேசவன் –
பரஸ்ய நிஸ்வாச வாத ஊர்மய புவன த்ரயீம் அவ்யாஸூ –மூச்சுக் காற்று நம்மை ரக்ஷிக்கட்டும்

முதல் அஷ்ட பதி -3-
வசதி தசன சிகரே தரணீ தவ லக்நா சசிநி கலங்க கலேவ நிமக்நா கேசவ த்ருத ஸூகர ரூப ஜய ஜெகதீச ஹரே
ஸ்ரீ கோபால வராஹ நாயனாருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -4-
தவ கர கமலவரே நகம் அத்புத
அரி பொங்கி காட்டி அருளிய ஸ்ரீ நரஸிம்ஹ வபூ ஸ்ரீ மானுக்கு மங்களம்
வண்டுகள் மதுபானர்த்தமாக தாமரையின் நுனி பகுதியை பிரிப்பதும் கிழிப்பதும் உண்டு
இங்கு ( கைத் )தாமரையின் நுனியே அன்றோ ஹிரண்யன் மார்பை கிழித்தது

முதல் அஷ்ட பதி -5-
ஸலயஸி விக்ரமணே பலிம்
அத்புத குள்ளன் -ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உபேந்திரனாய் பிறந்து ஓங்கி அளந்த உத்தமனுக்கு மங்களம்
ஹரி பாதோதகம் -ஸ்ரீ பாத அம்ருதமே கங்கா பிரவாகம்

முதல் அஷ்ட பதி -6-
ஷத்ரிய ருதி
கோகுல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவாள் போக்கிய புனிதன் -கார்த்த வீர் யாதிகள் குருதம் – –
குருஷேத்ரம் பக்கலில் மருக்கள் ஏற்படுத்தி அரசர்கள் குருதி -ஸ்யமந்த பஞ்சகம் -இடம் இன்றும் உண்டே –
ஸ்ரீ பரசுராமருக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -7-
விதரஸ தீஷூ ரணே
தசரதன் -என்பதால் பத்து ராவணன் தலைகளையும் திக் பாலர்களுக்கு கொடுத்து உகந்த
சக்ரவர்த்தி திருமகனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -8-
வஹஸி வபுஷி விசதே
நீல மேக ஸ்யாமளன் -கலப்பை ஆய்தம் தரித்த ஸ்ரீ பலராமனுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -9-
நிந்தசி யஜ்ஞவிதே
கள்ள வேஷம் பூண்டு புறம் புக்கவாறும்-பேச்சில் மயங்கி அசுரர்கள் உடைய
யாக ஸ்ரத்தை அழித்து தேவர்களை ரஷித்த புத்தவதாரத்துக்கு மங்களம்

முதல் அஷ்ட பதி -10-
ம்லேச்ச நிவஹ நிதநே
கலியுக முடிவில் -சம்பலம் கிராமத்தில் -விஷ்ணு யசஸ் -என்பவருக்கு பிள்ளையாய் –
தேவ தத்தம் என்கிற குதிரை மேல் ஏறி -வால் நக்ஷத்ரம் போன்ற கூரிய வாள் கொண்டு -பகைவர்களை அழித்து –
தர்ம ரக்ஷணம் செய்து அருள அவதரிக்கப் போகும் ஸ்ரீ கல்கி பகவானுக்கு மங்களம் –

முதல் அஷ்ட பதி -11-
ஸ்ரீ ஜய தேவ கவே இதம் –வேதான் உத்தரதே —
ஒரே ஸ்லோகத்தில் கீழே சொன்ன தசாவதாரங்களையும் சேர்த்து அருளி –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களைச் செய்து அருளி எம் இடர் தீர்க்கும் எம்பிரான் -உனக்குத் தோற்றோம் –
இப்பாடல்கள் தாமே அவன் திருவடிகளை பிராபிக்கும்

—————————————————

ஸ்ரீ கீதா கோவிந்தம் –
இரண்டாம் அஷ்ட பதி -1-
ஸ்ரித கமலா குச-
ஸ்ரீ யபதி –அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் -தேஜஸ் பரப்பும் திரு மகர குண்டலங்கள் –
வைஜயந்தி மாலைகள் -தரித்து விளங்கும் உனக்கு மங்களங்கள்

இரண்டாம் அஷ்ட பதி -2-
தின மணி மண்டல மண்டிந
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி -ஹிரண்ய மய புருஷ -யோகிகள் ஹ்ருத் புண்டரீகத்தில் பரம ஹம்ஸமாக இருக்கும் உனக்கு பல்லாண்டு –

இரண்டாம் அஷ்ட பதி -3-
காலியவிஷ

இரண்டாம் அஷ்ட பதி -4-
மது முர
ஸ்ரீ ஹயகீரனாக அவதாரம் -மதுகைடபர்களை நிரசித்து வேதங்கள் மிட்டாய் -வேத ஸ்வரூபி வாஹனம்

இரண்டாம் அஷ்ட பதி -5-
அமல கமல தல
சர்வ வ்யாபி -மம மாயா துரத்தயா-மாம் ஏவ -ஆஸ்ரிதர்க்கு தன்னையே தரும் கற்பகம்

இரண்டாம் அஷ்ட பதி -6-
ஜனக ஸூதா

இரண்டாம் அஷ்ட பதி -7-
தவ சரண

இரண்டாம் அஷ்ட பதி -8-/9/10
பத்மா பயோதர/ வசந்தே வாஸந்தீ/ ஸ்ரீ ஜெயதேவ கவேரிதம்

——————————–

ஸ்ரீ கீதா கோவிந்தம்
மூன்றாம் அஷ்டபதி -1-
லலித
ராதாவின் ஸஹி வசந்த கால வர்ணனை –
இலவங்கக் கொடி வளர்ந்து பருவமடைய -காற்று அணைக்க காதல் -ஹர்ஷத்தால் ஆட –
தேனை குடித்த வண்டுகள் ரீங்காரம் -குயில்கள் கூவ

மூன்றாம் அஷ்டபதி -2-
விஹரிதி ஹரி ரிஹ
விரஹத்தால் துடிக்க -கண்ணனோ மற்ற கோபிகள் உடன் கொஞ்சிக் குலாவுகிறான்

மூன்றாம் அஷ்டபதி -3-
உன்மத மதன
வகுள மலர்கள் பூத்து குலுங்க -வண்டுகள் மது பானம் பண்ணி களிக்க –
நாம் வாட கண்ணன் மற்றவருடன் குதூகலித்து இருக்க -நாம் தவிக்க

மூன்றாம் அஷ்டபதி -4-
ம்ருகமத –
கஸ்தூரி வாசம் கமழுகிறது -பூ மொட்டுக்கள் -விரஹத்தால் மன்மத அம்புகள் பிளக்கும் நம் ஹ்ருதயம் போலே

மூன்றாம் அஷ்டபதி -5-
மதன மஹீ பதி
மகிளம் பூ சிவந்த தண்டுகள் -மன்மதனின் செங்கோல் போலே –
பாடலம் பூ கொத்து கொத்து அவன் அம்பு போலே -பூங்கொத்துக்கள் அம்புறாத துணி போலே

மூன்றாம் அஷ்டபதி -6-
விகளிஸ் புரததி முக்த
வசந்த கால பூக்கள் காற்றில் ஆடுவது போலே காதலர்கள் மகிழ –
தாழாம் பூக்கள் கூர்மையாக ஹ்ருதயம் பிளப்பது போலே

மூன்றாம் அஷ்டபதி -7-/8/9
மாதவிகா பரிமள / ஸ்புர ததி முக்த /தத விதலித/ உன்மீலன் / அநேக நாரீ/ஸ்ரீ ஜெயதேவ
மல்லிகை பூ நறுமணம் / மா மரம் சுற்றி இளம் கொடி பிணைந்து /

மூன்றாம் அஷ்டபதி -10-
வசந்த கால இனிமை வன வாய்ப்பு குயில் ஓசை . பாத கமலா பக்தியை பெருக்கும் பாடல்கள்

——————–

நாலாம் அஷ்ட பதி –
சந்தன சர்ச்சித
சந்தனம் பூசி மாலைகள் அணிந்து ஒய்யார நடையால் கோபியை வசீகரித்து மகிழ்கிறான்
பீந பயோதர
குழல் ஓசையால் மயங்கி கோபி ஒருத்தி தழுவ
காபி விலாச
தேஜஸ் மிக்கு கண்டவர் தம் மனம் வழங்கும் படி -தாமரை திருமுக மதுவை க்ரஹிக்கும்
வண்டு போலே கண்களால் பருகும் படி
காபி கபோல தல
ரஹஸ்யம் சொல்லுவாள் போலே ஒரு கோபி அருகில் வர அவன் குனிய
ஒரு கோபி அவன் கன்னத்தில் முத்தம் இட்டாள்
ராதே அவனை போலே இவளும் பொல்லாதவள்
கேலிகலா
கோபி ஒருத்தி உடன் யமுனையில் லீலா ரசம் -அவனை ஆடையைப் பற்றி
இழுத்து செல்கிறாள் என்ன துணிச்சல்
கரதால தால
யமுனைக் கரையே கொண்டாட்டத்தில் திளைத்து இருக்க – ராஸக்ரீடை –
கொலுசுகள் த்வனி எங்கும் ஒலிக்க
அவன் குழல் ஓசைக்கு ஏற்ப வளையல்களை கொண்டு தாளம் தட்ட
ஸ்லிஷ்யதி
ஒருத்தியை அனைத்து -மற்று ஒருத்திக்கு முத்தம் -வேறே ஒருத்தியை கடாக்ஷித்து –
இன்னும் ஒருத்தி இடம் காதலை யாசிக்கும் கள்ளன்
விச்வேஷாம் நித்யோத்ஸங்க ராஸ உல்லாச
ராதே உன்னை தவிக்க விட்டு அவன் மற்ற கோபிகளுடன் கூடிக் களிக்கிறானே
ராதையும் கண்ணனை நெருங்கி -இருவரும் சேர்ந்து நம்மை ரக்ஷிப்பர்-
ஸ்ரீ ஜெயதேவ
இவற்றை பாடியும் கேட்டும் பக்தர்கள் அவனையே பெற்று மகிழ்வார்கள்

———————

சஞ்ச சரதர
குழல் ஓசையிலும் கண் வலையிலும் அகப்பட்டோம் -மயில் பீலி நம்மை அழைக்க –
அவன் கன்னம் உரசும் கர்ண குண்டலங்கள் செய்த பாக்யம் என்ன
சந்த்ரக
மேக ஸ்யாமளன் –
கோப கதம்ப
கோவைப்பழம் போன்ற திரு அதரம்/ ஸ்மிதம் கூற்றம் போலே
விபுல புலக
மெல்ல அசைந்து ஆட -திரு ஆபரணங்களும் அசைய
ஜலதபடல
மணிமய மகர
மகர குண்டலம் பீதாம்பரம் மோஹன ஸ்மிதம்
விசத கதம்ப
கதம்ப மரத்தடியில் ஸ்மிதம்
கண யதி குண க்ராமம்
சேஷ்டிதங்கள் நம் காதலைப் பெருக்குமே
ஸ்ரீ ஜெயதேவ
மதுவை நிரசித்த கண்ணன் திருவடிகள் தியானிக்கும் ஞானிகள் உள்ளம் நிறைந்துள்ளானே –

——————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஜய தேவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமாயணத்தில் –பரிஷ்வங்க-விஷய ஸ்லோகங்கள் —

February 2, 2019

ஸ்ரீ ராமாயணத்தில் பல பரிஷ்வங்கங்கள் உண்டு –
பிரசித்தமானவை சில –

பரத அக்ரூர மாருதிகளை பரிஷ் வங்கித்த மணி மிகு மார்பிலே குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு
மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்று –ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் –

1-தம் சமுத்தாப்ய காகுத்ஸ்த சிரஸ்யாஷிபதம் கதம் —பாரதம் ஆரோப்யம் உதித பரிஷஸ் வஜே –
ஆக்ராய ராமஸ் தம் மூர்த்திந பரிஷ் வஜ்ய ச ராகவ–பாரதம் ஆரோப்ய–அயோத்-100-3-
என்று பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானுக்கும்

2-சோப்யேநம் த்வஜ வஜ்ர அப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா சம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்ய ச பிரீத்யா ஸூ காடம் பரிஷஸ் வஜே —
ஸ்ரீ கண்ணபிரான் அக்ரூரருக்கு அளித்த பரிஷ் வங்கம்

3–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந –யுத்த -1-15-
பெருமாள் திருவடிக்கு கொடுத்த பரிஷ் வங்கம்

4-தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகா வஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹி பார்த்தாராம் பரிஷஸ் வஜே–ஆரண்ய-30-39-
கர தூஷண வத அனந்தரம் பிராட்டி பெருமாளுக்கு கொடுத்த பரிஷ் வங்கம்

மற்றவைகளின் தொகுப்பு –

5-தம் த்ருஷ்ட்வா ப்ரணதம் பார்ஸ்வே க்ருதாஞ்சலி புடம் ந்ருப க்ருஹ்யாஞ்சலவ் சமயாக்ருஷ்ய சச்வஜே ப்ரியமாத்மஜம் –அயோத் -3-34–
சக்கரவர்த்தி பெருமாளுக்கு பரிஷ் வங்கம்

6-ப்ரண மந்தம் சமுத் தாப்ய தம் பரிஷ் வஜ்ய பூமிப –அயோத்-4-11–
சக்கரவர்த்தி பெருமாளுக்கு பரிஷ் வங்கம்

7-பரிஷ் வக்தச் ச பஹுப்யாம் உபாக்ராதச் ச மூர்த்த நி –அயோத் -20-21–
ஸ்ரீ கௌசல்யா தேவி பெருமாளை பரிஷ் வங்கம்

8-ப்ரதக்ஷிணஞ் சைவ சகார ராகவம் புந புநச் சாபி நிபீட்ய சச்வஜே –அயோத் –25-46–
ஸ்ரீ கௌசல்யா தேவி பெருமாளை பரிஷ் வங்கம்

9-சுக்ரோச பதிமாயத்த ப்ருசமா லிங்க்ய ஸத்வரம் –அயோத் -30-22-
ஸ்ரீ சீதா பிராட்டி பெருமாளை பரிஷ் வங்கம்

10-தம் பரிஷ் வஜ்ய பஹுப்யாம் விசம்ஜ்ஞாமிவ துக்கிதாம் உவாச வசனம் ராம –அயோத்-30-26-
பிராட்டியை பெருமாள் பரிஷ் வங்கம்

11-தம் பரிஷ் வஜ்ய பஹுப்யாம் தாவுபவ் ராம லஷ்மணவ் –அயோத் -34-20-தாசாரதிகள் சக்கரவர்த்தியை பரிஷ் வங்கம்

12-புஜாப் யாம் சாது வ்ருத்தாப் யாம் பீடயந் வாக்யம் அப்ரவீத் -அயோத் -50-42–ஸ்ரீ குஹப் பெருமாளை பெருமாள் பரிஷ் வங்கம்

13-தாந் நராந் பாஷ்ப பூர்ணாஷாந் சமீஷ்யாத ஸூ துக்கிதான் பர்யஷ்வஜத தர்மஞ்ஞ பித்ருவன் மாத்ருவச்ச ச –அயோத் -102-47-
சித்ர கூடம் வந்த பவ்ர ஜனங்களை பெருமாள் பரிஷ் வங்கம்

14-ச தத்ர காம்ச்சித் பரிஜஸ் வஜே நரான் —அயோத் -102-48-
சித்ர கூடம் வந்த பவ்ர ஜனங்களை பெருமாள் பரிஷ் வங்கம்

15-ததேதி ச ப்ரதிஞ்ஞாய தம் பரிஷ் வஜ்ய சாதரம் சத்ருக் நஞ்ச பரிஷ் வஜ்ய பரதஞ்சேதம் அப்ரவீத் –அயோத் -112-27–
ஸ்ரீ பரத்தாழ்வானையும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானையும் பெருமாள் பரிஷ் வங்கம்

16-ஹத்வா துதிதம் பீமா பலம் விராதம் ராக்ஷஸம் வநே ததஸ் ஸீதாம் பரிஷ் வஜ்ய சமாஸ்வாஸ்ய ச வீர்யவான் –ஆரண்ய –5-1-
விராத வதத்துக்கு பின் பெருமாள் பிராட்டிக்கு பரிஷ் வங்கம்

17-ச நிரீஷ்ய ததோ வீரம் ராமம் தர்ம ப்ருதாம் வரம் சமாஸ் லிஷய ச பஹுப்யாம் இதம் வசனம் அப்ரவீத் –ஆரண்ய -7-7-
ஸூ தீஷ்ண முனிவர் பெருமாளுக்கு பரிஷ் வங்கம்

18-தவ் சம்ஸ் ப்ருசந்தவ் சரணா யுத்தாப்ய முநி புங்கவ கடாமாச் லிஷ்ய சஸ்நேஹமிதம் வசனம் அப்ரவீத் –ஆரண்ய -8-10–
ஸூ தீஷ்ணர் ராம லஷ்மணர்களை பரிஷ் வங்கம்

19-ச்ருத்வா ஜடாயுஷோ வாக்யம் ராமஸ் சவ்மித்ரிணா ஸஹ க்ருத்ர ராஜம் பரிஷ் வஜ்ய பரித்யஜ்ய மஹத் தநு–ஆரண்ய -67-22-
பெரிய உடையாரை பெருமாள் பரிஷ் வங்கம்

20-நிக்ருத்த பக்ஷம் ருதிராவ சிக்தம் ச க்ருத்ர ராஜம் பரி ரப்ய ராம –ஆரண்ய -67-29-
பெரிய உடையாரை பெருமாள் பரிஷ் வங்கம்

21–25–கிஷ்கிந்தா காண்டம் -5-14–/-7-16-/-12-12-/-39-1-/-40-1-/–ஐந்து இடங்களிலும்
பெருமாள் ஸூ க்ரீவ மகாராஜரை பரிஷ் வங்கம்

26-அத தஸ்மிந் நிமித்தாநி த்ருஷ்ட்வா லஷ்மண பூர்வஜ ஸூக்ரீவம் பரிஷ் வஜ்ய –யுத்த -41-1–
பெருமாள் ஸூ க்ரீவ மகா ராஜரை பரிஷ் வங்கம்

27-தாவுத் தாப்ய மஹா வீர்யவ் கருடோ வாசவோபமவ் உபவ் தவ் சஸ் வஜே –யுத்த –50-41–
பெரிய திருவடி ராம லஷ்மணர்களை பரிஷ் வங்கம்

28-ஏவம் உக்த்வா ததோ ராமம் ஸூ பர்ணஸ் ஸூ மஹா பல பரிஷ் வஜ்ய –யுத்த –50-55–
பெரிய திருவடி ராம லஷ்மணர்களை பரிஷ் வங்கம்

29-உபவேஸ்ய சமுத் சங்கே பரிஷ் வஜ்யா வபீடிதம் பிராதரம் லஷ்மணம் –யுத்த -92-10–
பெருமாள் இளையோனை பரிஷ் வங்கம்

30-ச தம் பிராதரம் ஆஸ்வாஸ்ய பரிஷ் வஜ்ய ச ராகவ –யுத்த -92-19–
பெருமாள் இளையோனை பரிஷ் வங்கம்

31-ஏஹ்யே ஹீத்யப்ரவீத் ராம லஷ்மணம் பர வீரஹா சஸ்வஜே ஸ்நேஹ காடஞ்ச –யுத்த -102-46–
பெருமாள் இளையோனை பரிஷ் வங்கம்

32-ராகவ பரம ப்ரீத ஸூக்ரீவம் பரிஷஸ் வஜே பரிஷ் வஜ்ய ச ஸூக் ரீவம் –யுத்த –115-6–
பெருமாள் ஸூக்ரீவ மகா ராஜரை பரிஷ் வங்கம்

33-தம் சமுத்தாப்ய காகுத்ஸ்த சிரஸ்யா ஷிபதம் -அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷஸ் வஜே –யுத்த -130-40–
பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானை பரிஷ் வங்கம்

34-புத்ரம் தசரதஸ் தத–பாஹுப்யாம் சம் பரிஷ் வஜ்ய –யுத்த -172-12–
சுவர்க்கத்தில் இருந்து வந்த சக்கரவர்த்தி பெருமாளை பரிஷ் வங்கம்

35-த்வாம் து த்ருஷ்ட்வா குசலிநம் பரிஷ் வஜ்ய ச லஷ்மணம் அத்ய துக்காத் விமுக்தோஸ்மி –யுத்த –172-15–
சக்கரவர்த்தி இளைய பெருமாளைச் சேர்த்து பரிஷ் வங்கம்

36-அபி ஷிக்தவ் ஸூ தா வங்கே ப்ரதிஷ்டாப்ய புரி தத பரிஷ் வஜ்ய மஹா பாஹு மூர்த்ந் யுபாக்ராய சா ஸக்ருத் –உத்தர -107-18–
பெருமாள் குசலவர்களை பரிஷ் வங்கம்

—————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-