ஸ்ரீராமாநுஜன் 263-265—30/58-ஸாதாரண ஐப்பசித் திருமூல மலர்-3-11-1970.
ஸ்ரீ சைலேச தயா பாத்ர ஸ்தோத்ரம்
இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரக்ரியை எப்படிப்பட்ட தென்றல்; ஸ்ரீசைலேச என்பதற்கு,
சகார -ரேப – ஈகார சகார -ஐகார, லகார-ஏகார, சகரர அகார-என்று வர்ண க்ரமம் சொல்லுவோம்; இதே ரீதியில் ஸ்ரீசைலேசதயாபாத்ர சுலோகத்திற்கு வர்ண க்ரம அடைவில்
ஒவ்வோரெழுத்தை ஆதியாக வைத்து : இந்த ஸ்தோத்திரம் அமைக்கப் பட்டிருக்கிறது.
1-(சம் நேர மித்ர )* சம்நோ மித்ர: * என்றும் * சம்நோ பவத்வர்யமா-என்றும் சொல்லுமவர்கள் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கட்டும் : அடியேனுக்கு அத்தகைய உக்திகளில் சிறிதும் ஆஸ்தையில்லை ;* சம் நோ ரம்ய வரோ பயந்த்ரு யமிராட் பூயாத் * [மணவாள மாமுளிகளே நமக்கு க்ஷேமங்கரராகக் கடவர் என்னுமிந்த ருக்கையே எனது நாக்கு அநவரதம் ஆவ்ருத்தி செய்யும்.
2-( ரங்கம் ரங்கம். ) *ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் க்ஷதப்ரஸ்கல நாதி *என்கிற சாஸ்திரத்தை யடி யொற்றி இருமல் தும்மல்களில் ரங்கம் ரங்கமென்பாரும், ஆசார்ய நாம ஸங்கீர்த்தனமே உத்தேச்ய மென்று கொண்டு ராமாநுஜ! என்பாரும், கேசவா மாதவா ! ! என்று பகவந் நாம கீர்த்தநம் பண்ணுவாரும் இவ்வுலகில் பலர் இருக்கட்டும். அப்படிப்பட்ட கீர்த்தனங்கள் என் காதில் விழவே வேண்டா: மணவாளமாமுனிகளென்கிற திருநாமமே எனக்குக் கர்ணாமிருதமாகும்.
3-(ஈசாநோபி ) ‘சிவன் பிரமன் இந்திரன் ஸூர்யன் இவர்கள் ஒருவரும் தெய்வமன்று,ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வம்” என்று வைதிகர்களின் ஸித்தாந்த மிருந்தாலும் அடியேனுள்ளத்திற் பதிந்த ஸித்தாந்தம் மணவாளமாமுனிகளே பரதெய்வமென்பதாம்.
4-(சத்தோநைவ ) எம்பெருமானே பரதெய்வமென்று கொண்டாடப்பட்டாலும் அப்பெருமான் செவிக்கினிய செஞ்சொற்களாலே விவேகிகளின் மனத்தைக் கவர வல்லவனல்லன்: ஏன்? ஸ்ரீ விஷ்ணு புராணம் பகவத்கீதை முதலியவற்றில் அப்பெருமானருளிச் செய்த திவ்ய கூக்திகள் பல இல்லையோ வென்னில் வ்யாஸ பராசராதி மஹர்ஷிகள் எதையோ எழுதிவைத்து பகவத்வாக்யமாக நம்மை வஞ்சிக்கிறார்களத்தனை;மணவாளமாமுனிகளோ வென்னில் அப்படி யல்லாமல் நேராகத் திருவவதரித்தருளி அமுதமன்ன மென்மொழிகளைத் தாமே யருளிச்செய்து அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றார்.
5-(ஐஸ்வர்யம் ) சிலர் லக்ஷ்மீ கடாக்ஷத்தாலாகும் சிறிது செல்வத்தைப் பெற்றுத் தங்களை ஒப்பற்றவர்களாக மதிக்கின்றார்கள்; அந்த அழியுஞ் செல்வத்தினால் என்னாகும்? உபயவிபூதியிலும் நித்யபோக்யமும் எல்லை யற்றதுமான நிதி அடியேனுக்குக் கிடைத்திருக்கின்றது; அந்த நிதிக்கு மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியென்று பெயர்; அப்படிப்பட்ட நிதியைப் பெற்றுள்ள அடியேனே மிகவும் தன்யன்
6-(லக்ஷ்மீச:) எம்பெருமான் முன்பு இராமபிரானாயும் கண்ணபிரானாயும்.அவதரித்து விச்வாமித்ரர் ஸாந்தீபிநி போல்வாரிடத்தில் சிஷ்யனாயிருந்து, அவர்கள்
ஜிதேந்த்ரியர்களன்றிக்கே நித்ய ஸம்ஸாரிகளா யிருக்கும்படியைப் பிறகு தெரிந்து
கொண்டு அந்தோ! ஆசார்யத்வ பூர்த்தியில்லாத இவர்களையா நாம் ஆசார்யராக
வரித்தோமென்று எம்பெருமான் திருவுள்ளம் வெறுப்புற்றே யிருந்தது. அக்குறையை அர்ச்சாவதாரத்தில் தீர்த்துக்கொள்ள விரும்பி ஒரு நாளும் விடவொண்ணாத ஆசார்யரைப் பெற விரும்பி ஆசார்யத்வ பூர்த்தியுடைய மணவாளமாமுனிகளை ஆசார்யராக வரித்து க்ருதக்ருத்யனாயினன்.
7-(ஏஷஸ்ரீவரயோகி.) மணவாளமாமுனிகளுக்கு விசதவாக் சிகாமணியென்கிற விருது ப்ரஸித்தமானது; உண்மையில் இந்த விருது இவரொருவர்க்கே தகுமேயன்றி மற்றெவர்க்கும் ஏற்காது. ஏனெனில், ஸந்தேஹிக்க இடமில்லாமலும்
விபரீதார்த்தங்கொள்ள வொட்டாமலும் வீண்வம்புவார்த்தைகளுக்குச் சிறிதும்
இடமளிக்காமலும் மிகவும் லலிதமாய் பரமபோக்யமான ஸ்ரீஸுக்திகள் நிரம்பிய வியாக்கியானங்களை அருளிச் செய்தவரென்கிற புகழ் மாமுனிகளுக்கே
அஸாதாரணமாய் விளங்குமதன்றோ.
8-(ஏதத்பத்த்ய.) எனது செவிக்கினியதோர் செஞ்சொல்லைக் கேண்மின்; மண
வாளமாமுனிகளின் மதுரமான ஸ்ரீஸூக்திகளை இடைவிடாது ஸேவித்துப் பாருங்கள்: அவரைப் போன்ற வோராசிரியர் இதுகாறும் இந்நிலவுலகில் அவதரித்ததுண்டா? இனியாகிலும் அவதரிக்க முடியுமா வென்று, நன்மதியுடையீர்! நீங்களேசிறிது சிந்தித்துப்பாருங்கள்
9-(சாந்திர் தாந்தி:) சமம் தமம் முதலிய ஆத்ம குணங்கள் சேதநர்களுக்கு அவசியம் வேண்டியவை யென்றும் அவரவர்கள் தங்கள் நூல்களில் கம்பீரமாக எழுதிவைக்கிறார்கள். ஆனால், அந்தத் திருக்குணங்களுக்குக் கொள்கலமான ஆசிரியர்யாவர்? என்று சிலர்சிந்திக்கப் புகுந்தால் அவர்களின் உள்ளத்தில் மணவாளமாமுனிகளே குடிகொண்டிருக்கக் கூடியவர். மாமுனிகளைப் போன்ற சமதமஸம்பந்நர் வேறொருவருமிலர்.
10-அந்தர்வாணி ) அஸூயை யற்றவித்வான்களை அடிபணிந்து ஒன்று விண்ணப்பம் செய்கிறேன்; நீங்கள் பல பல ஆசாரியர்கள் இயற்றிய பல நூல்களைப் பார்த்திருக்கிறீர்களே; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளிலுள்ள இன்சுவை
எந்த ஆசிரியருடைய திருவாக்கிலாவது கண்டதுண்டா? உள்ளவாறுரையீர்.
11-(தம்பம் கேவலம்) சில ஆசாரியர்கள் தங்கள் வாக்கினால் டம்பத்தை மாத்திரமே வெளியிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய வாக்குகளில் பெரும்பாலும்
பரநிந்தை தவிர வேறு என்ன காணமுடியும் ? நீறுபூத்த நெருப்பு என்னும்படியான மணவாளமாமுனிகள் ஒருவரே பரநிந்தாதிதோஷ லேசமுமற்ற பரமபோக்ய ஸ்ரீ ஸூக்திகளை யருளிச்செய்தவர்
12-(அந்தர்மாநஸம்) மற்றையோர்கள், நெஞ்சில் ஒன்றைவைத்துக் கொண்டுவாக்கில் வேறொன்றை வெளியிடுபவர்களாய் நூல்கள் எழுதிப் போருவர்கள்; பெரும்பாலும் அவர்கள் வஞ்சிக்க வல்லவர்கள்; அப்படிப்பட்ட துர்க்குண லேசமும் அற்றவரான மணவாளமாமுனிகள் ஸ்ரீரங்கநாதனுடைய தவப்பயனாகத்தோன்றினவர்:-அவர் எப்போதும் பக்தர்களின் உள்ளத்துள்ளே உறைபவர்.
13( யஸ் ஸர்வஜ்ஞ : ) (இந்தச்லோகத்தில் ஏழு வேற்றுமைகளும் வரிசையாக வரும்படி தொடையழகு காண்க.) எவர் ஸர்ஜ்ஞரென்று புகழ்பெற்றாரோ,எவரை ஸ்ரீரங்கநாதன் ஆசார்யராகக் கொண்டானே,எவரால் ஸ்ரீராமாநுஜதர்சநம் காக்கப்பட்டதோ, எவர் பொருட்டு நமஸ்காரம் நன்மை பயக்குமோ, எவரைக் காட்டிலும் மேம்பட்ட ஆசாரியர் இல்லையோ, எவருடைய தனியன் இவ்வுலகில் எஞ்ஞான்றும் வெற்றி பெற்று விளங்குமோ, எவரிடத்தில் ஸகல திருக் குணங்களும் பொருந்தி யுள்ளனவோ அந்த மணவாளமாமுனிகளைப் போற்றுகிறோம்
14-(ஆகாரம் வர) மணவாளமாமுனிகளின் பாற்கடல் போன்று பரமபோக்யமான திருமேனியை அடியேன் எப்போது ஸேவிக்கப்பெறுவேனென்று நெடுநாளாகக் கண்ணீர் விட்டழுது நைந்து கிடந்தேன்; அங்ஙனே துவண்டு கிடந்த அடியேனுக்கு மாமுனிகள் ஐயோவென்றிரங்கி அருள்செய்த படியை என்சொல்லுவேன்? எனக்குப் பெறாப்பேறு பெறுவித்தவரான அவரே மஹான்.
15-(பத்தயம் கிஞ்சந) காதோடு ஒரு இன்சொல் சொல்லுகேன் கேண்மின்-பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயத்திற்கு மிகச்சிறந்த வியாக்கியானத்தை யருளிச்செய்து தம்முடைய ஸர்வஜ் த்வத்தை விளங்கக் காட்டியருளின மணவாளமாமுனிகளையே அநவரதம் சிந்தை செய்மின் ; வேறுவழியால்
ஜன்மம் க்ருதார்த்தமாக விரகில்லை.
16-(ஆகாசே) சிறுவர்கள் (அவிவேகிகள்) சேற்றையெடுத்து ஆகாசத்தில் விட்டெறிந்தால் என்னாகிற தென்பதை அனைவரும் காணத் தட்டில்லையே.மண வாளமாமுனிகள் விஷயத்திலும் இந்த நியாயமே காணத்தகும். கருவிலே திருவிலாதார் மாமுனிகளின் அமுதமொழிகளில் தூஷணைகளைப் பிதற்றுவது அவர் களுக்கே அநர்த்தத்தை விளைக்குமதாம்.
17-(தம் தம் தேசிகம்) உலகில் புத்திமான்கள் அந்தந்த ஆசாரியரைத் துதிக்கும்போது ” மற்றஆசாரியர்களை விட்டு இவ்வாசிரியரையே தொழுங்கள்” என்று சொல்லுவதுண்டு; அடியேன் மணவாளமாமு களைத் துதிப்பது அந்த முறைமை யில் அல்ல; உண்மையில் மாமுனிகளைத் தவிர வேறு ஆசாரியர் இல்லை யென்று ஆணையிட்டுரைப்பேன்.
18-(ரங்கீ யஸ்ய) ஸ்ரீரங்கநாதன் யாவரொரு மணவாளமாமுனிகளின் திருக் குணங்களை நெடுநாள் ஆராய்ந்து நோக்கி சிஷ்யனானானோ அந்த மாமுனிகளுக்குப் பிறகு வேறொரு ஆசாரியர் இருக்கக் கூடாதென்று அவரோடு ஆசார்ய பரம்பரையை ஸமாப்தி செய்து விட்டான்; (அதாவது)பூருவாசாரியர்கள் என்கிற வியபதேசம் மாமுனிகளோடு முற்றுப்புள்ளி யடைந்திட்டது. இவ்விஷயம் உலகமெல்லாம்அறிந்ததேயாதலால் மாமுனிகளுக்குமேற்பட்ட ஆசார்யார் இல்லையென்று அடியேன் துணிந்து கூறுகின்றேன்.
19-(அத்யாச்சர்ய) பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்யஹ்ருதயமென்னும் திவ்ய க்ரந்தத்தை உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினார்; பரம போக்யமான அந்த வியாக்கியானத்தை இடைவிடாது ஸேவித்தால் ஸர்வஜ்ஞராகப் பெறலாம்.
20-(மத்தாநாமபி) அறிவிலிகளுக்குங்கூட நிகரற்ற ஸந்தோஷத்தை விளைக்கவல்ல பல ஸ்ரீஸூக்திகளைத் தமது நிர்ஹேதுக க்ருபையினாலேயே யளித்து உலகத்தை உய்வித் தருள்பவரான மணவாளமாமுனிகள் திருவாய்மலர்ந்தருளிய யதிரா விம்சதியைக் கண்டபாடம் செய்லு ஸதா அநுஸந்தியுங்கள்.
21-(தந்யாஸ் ஸ்யாம்.) எப்போதும் நாம் பாக்யசாலிகளாகவே யிருக்க வேணு மென்னும் விருப்புடையீர்! கேண்மின் ; மணவாளமாமுனிகளருளிச் செய்த வியாக் கியானத்தோடு கூட ஸ்ரீ வசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆசார்ய ஸந்நிதியில் அடிக்கடி ஸேவியுங்கள்; இதுவே பரமபாக்யம்; இதற்கு மேற்பட்ட பாக்யமில்லை
22-(ஈர்ஷ்யாதுர்க்குண) *பிறர்மினுக்கம் பொறாமையிலாப் பெருமைபெற்றுசமதமக் கடலாக விளங்குகின்ற மணவாளமாமுனிகளை விட்டு வேறொரு ஆசார்யரை ஆசரயிக்கின்றவற்கு என்னத்ரூப்தியுண்டாகும்? அன்னவற்கு ஆயுள் முழுவதிலும் உண்மைப்பொருள்களை யுணர்வதற்கு ப்ரஸக்தியில்லையாகுமன்றே
23-(பங்கோதைவ) மணவாளமாமுனிகளின் தனியனுக்கு இப்பூமண்டலத் தில் ஓரிடத்திலும் ஒருபோதும் பங்கம் விளைவதில்லையென்கிற (இந்தத்தத்துவத்தை நன்கு உணரவல்ல மஹான்களின் மனத்தில்மாமுனிகள் தவிர மற்றொரு ஆசாரியர் திருவடிவைக்கமுடியுமோ? அஸூயை யற்றவர்கள்இதனை ஆராய்ந்துணர்க
24-(அந்யாய்யார்த்த ) சிலர் தங்கள் சுவடிகளில் தப்பான அர்த்தங்களையேகூசாமல் பெரும்பாலும் எழுதிவைத்து, அவ்வளவோடும் நில்லாமல் “இதில் தப்பான அர்த்தம் ஒன்றுகூட இல்லை; எல்லாம் மஹாப்ராமாணிகமான அர்த்தமே எழுதிவைத்தோம்” என்றும் ஊடே யூடேயெழுதி உலகத்தை வஞ்சித்துக் கீர்த்தி பெறுவாருளர் ; அன்னவர்கள் கிடக்க ; மணவாள மாமுனிகளொருவரே பிராமாணிகர்களில் தலைவர்.
25-(கச்சிந்மாமிஹ) கீதையில் கண்ணபிரான் *கச்சிந்மாம் வேத்தி தத்வதஎன்று என்றைக்கோ சொல்லி வைத்தான்; ‘தன்னை யுள்ளபடி யறியவல்லவர்யாரோ வொருவர் ‘ என்று சொன்னஅந்தகீதையின்படி மணவாளமாமுனிகளொருவரே தத்வஜ்ஞராகத் திருவவதரித்தவர் ; அவருடைய ஸ்ரீஸூக்திகளில் ப்ராவண்யமுடையோமுக்கும் தத்வஜ் பாவனை உரியதேயாம்.
26-(தர்க்கவியாகரண . ) தர்க்கம் வியாகரணம் முதலான ஸகல சாஸ்த்ரங்களிலும் நிகரற்ற பாண்டித்யத்தைஸ்பஷ்டமாகக் காட்டவல்ல வியாக்கியானங்ககளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய நிகரில்புகழ் வாய்ந்த முமுக்ஷஎப்படி வியாக்கியானத்தை நெஞ்சே! இடையறாது அநுஸந்திப்பாயாக.
27-(யஸ்ய ஸ்வாது ) தம்முடைய பரமமதுரமான ஸ்ரீஸுக்திகளில் தமது பரம பராமாணிகத்வத்தை விளங்க வைத்தவரும், குடில் புத்தியின்றிக்கே ருபுத்தியா யிருப்பவரும், பிள்ளை யுலகாசிரியருடைய ஸ்ரீஸூக்திகளைக் காக்கவே அவதரித்தவரும், ஸ்ரீரங்கநாதனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவருமான மணவாளமாமுனிகள் எனது உள்ளத்துள்ளே யுறைகின்றார்.
28-(ஆதாவாதி.) முதலில் ஆதிசேஷனாயிருந்து பிறகு இளையபெருமாளாகவும் அதன்பிறகு எம்பெருமானாராகவும் அதற்குப்பிறகு மணவாளமானிகளாகவும் இங்னே அடைவே திருவவதாரமாயிற்றென்று ஸத்துக்கள் உண்மையுணர்ந்துபேசப்பெற்ற மாமுனிகள் அடியேனுடைய அகவிருளைப் போக்கியருளினார்.
29-(த ஸ்ஸந்தி ) ஆச்சரியமான பந்தங்களுடன் கூடின பல கவிதைகளைச்கணப்பொழுதில் இயற்றவல்ல கவிச்ரேஷ்டர்கள் பலர் இவ்வுலகிலுளர் ; இது கிடக்கட்டும். அவற்றால் என்னபயன்? அவையெல்லாம் ஒன்றுகூடினாலும் மணவாளமாமுனிகளின் அமுதமென் மொழிகளில் ஒரு அக்ஷரத்திற்கு இணையாகாவென்பது ஸத்யம்.
30-(இந்தேஸந்ததம்) மணவாளமாமுனிகள் பாற்கடல் போன்ற தமது திருமேனியொளியை என்னெஞ்சினுள்ளே விளங்கக் காட்டியருளா நின்று கொண்டுஸேவைஸாதிக்கின்றார். கனவிலுங் காண வரிதான அத்திருமேனி விளக்கத்தைப் பாவியேன் நனவிற்காணுமாறு அருள்செய்த அதிசயம் என்னே.
31-(கச்ேயம் யதி) ஒருகால் அடியேன் பரமபதத்திற்குச் செல்வேனாயின் அங்கும் மணவாளமாமுனிகளின் திருவடி வாரத்திலேயே ஸகல கைங்கரியங்களையும் செய்துகொண்டு அவருடைய மதுர ஸ்ரீஸுக்திகளையே அநுபவித்துக்கொண்டு
வாழக்கடவேன்; இல்லையாகில் ஜூனர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு மீண்டும்
இந் நிலவுலகுக்கே வந்து விடுவேனென்பது திண்ணம்.
32-(உர்வ்யாமத்ர) இவ்விருள் தருமாஞாலத்தில் பிறப்பு வெறுக்கத்தக்கதென்று பெரியார்கள் கூறுகின்றார்களெனினும் அது அடியேனுக்கு ருசிக்கவில்லை;ஏனெனில், அடியேன் இவ்வுலகில் இருந்துகொண்டும் மணவாள மாமுனிகளின் திவ்யஸுக்தி யமுதத்தையே பருகிக்கொண்டு எப்போதும் ஆனந்தசாலியாகவே யிருக்கிறேனன்றோ! ( துன்பமுண்டானாலன்றோ உலகவாழ்க்கை வெறுக்கதக்கதாம்).
33-(உக்தம் யத் ) நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் “கலியுங்கெடுங் கண்டு கொண்மின்” என்றருளிச் செய்தது எம்பெருமானாரை நோக்கி யென்பர்கள்
அவ்வெம்பெருமானார் தாமே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்
தருளிக் கலி வித்வம்ஸநமாகிற ஸ்வக்ருத்யத்தைக் குறையறச் செய்து தலைக்கட்டி
அவ்வாழ்வார் ஸ்ரீஸூக்தியை யதார்த்தமாக்கி யருளினார்.
34-பாணிநி முனியின் சாஸ்த்ரமான வியாகரணத்தில் விபரீதங்கள் பலகாணப் படும்.ந-காரம் ண- காரமாய் மாறிவிடும், ஸ – காரம் ஷ-காரமாய்மாறிவிடும். ப்ர நயதி, ப்ரணயதி வி-ஸஹதே,விஷஹதே. இத்யாதிகள் காண்க. மணவாளமாமுனிகளின் திருவாக்குக்களில் இங்ஙனே ஒரு விபரீதங்கூடக் காணமுடியாது. எதுவும் யதாவத்தாகவேயிருக்கும். இது சாடூக்தி.
35-(ஆவேசம் ) பொய்கையார் முதலான ஆழ்வார்களனைவரும் ஸ்ரீமந்நாதமுனிகள் முதலான ஆசார்யர்களனைவரும் மணவாளமாமுனிகள் பக்கலில் ஆவேசித்தனர் என்னலாம், அல்லது, வடமொழி தென்மொழி மறைகளின் பாக்யஸர்வஸ்வமும் ஒன்றுசேர்ந்து மாமுனிகளாக வடிவு பூண்டு உதித்தது என்று நிஷ்கர்ஷிக்கத்தட்டில்லை.
36-(ரங்காதீச்வர) ஸ்ரீரங்கநாதனுடைய பாக்ய பரம்பரையே மணவாளமாமுனிகளென்கிற திருநாமங் கொண்டு உலகில் அவதரித்தது என்கிற ப்ரதிபத்தியே அடியேனது நெஞ்சில் கொழுந்துவிட்டோங்குகின்றது; இவ்விஷயத்தில் அதிகமான உபபத்தியிருப்பதால் இதுவே திடமான ஸித்தாந்தமாக வடுக்கும்.
37-(ணத்வம்பாததே.)மஹாபண்டிதரென்று புகழ் பெற்ற அப்பயதீக்ஷிதர் நாராயண நாமத்தை சிவபரமாக நயிப்பிக்கவேணுமென்று சிரமப்பட்டு ணத்வம்பாதிக்கிறது ‘ என்றுசொல்லிக் கையொழிந்தார் என்பது ப்ரஸித்தமான விஷயம்;அவர்க்கு ஸ்ரீமந்நாராயணனிடத்தில் இருந்த த்வேஷம் உலகமறிந்ததே.அதனால்நாராயணனுக்கு ஒருகுறைவு நேர்ந்ததாகவில்லை. இதுபோலவே, வித்வான்களென்று பேர் படைத்த பிறர்கள் மணவாளமாமுனிகளிடத்தில் மாச்சரியம் கொண்டாலும் அதனால் குறையொன்றுமில்லை; அன்னவர்கள் படும் பாடு சொல்லவேணுமோ?
38-(அல்பீயா நஹம்) உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகளை பக்தியிற் சிறந்த மஹான்கள் துதிக்கவேணுமே யன்றி நீசனேன் நிறையொன்றுமிலேன் துதிப்பது தகுதியே யன்று; ஆயினும் அடியேன் ஓயாமல் அவரையே துதித் துக்கொண்டிருக்கிறேன்; இதற்காக நான் சிறிதும் வெட்கப்படுகின்றிலேன்; ஏனெனில், மாமுனிகளின் ஸகல வைபவங்களையும் உள்ளபடி யுணர இவ்வுலகினுள் அடி யேனொருவனே பாக்யம் பெற்றேனன்றோ.
39-(வல்லீதுல்ய ) வல்லிசேர்நுண்ணிடை மாதர்களோடு அணைவதனால் இன்பமுள்ள தென்று நீசர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இன்பமிருக்கலாம்; ஆனால் அது மிகவும் அற்பமானது; ஸ்ரீரங்கநாதனுக்கு ஆசார்யராக அமைந்த மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ஸாகரத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து உலகிலுள்ள ஸகலவித போகங்களாலும் விளையக்கூடிய ஸகலவிதமான இன்பங்களையும் நுகர்வோம் யாம்.
40-(அந்யாந்யேஷு ) உலகில் ஒவ்வொருவர்க்கும் லௌகிகமான பலபலகாரியங்க ளிருப்பதால் அவற்றில் போது போக்கநேர்ந்து அதிசுகாலம் வீணாகவே கழிந்து
போகிறது; மணவாளமாமுனிகளே! அடியேனுக்கு அப்படியல்லாமல் தேவரீருடைய
திவ்யஸ்ரீஸூக்திகளிலேயே ஸகல காலமும் செல்லும்படி அருள்புரிய வேணுமென்று
திருவடிவாரத்தில் வேண்டிக்கொள்கிறேன்.
41-(மஞ்ஜீராஞ்சித.) மாதர்கள் பாதச்சிலம்பு அணிந்துகொண்டு நடந்துசெல்லுமளவில் அச்சிலம்பொலி கேட்டு மயங்கிப்போவாருமுளர்; அதுகிடக்க; மணவாளமாமுகளின் தனியனை கோஷ்டிகளில் உரக்க அநுஸந்திக்கும்போது உண்டாகும் த்வநி விசேஷத்தைக் கேட்குமளவிலே அடியேன் வியாமோஹித்திருக்குமது ஸுப்ரஸித்தம்.
42-(யஸ்ய ஸ்யாநி ) மணவாளமாமுனிகளின் பரமபவித்திரமான திருக் கோலத்தைச் சிந்தைசெய்யும் பாக்கியமுடையார்க்குஎம்பெருமானார் தரிசனத்தில் நல்ல உணர்ச்சி விளையும். ஸகல தத்துவங்களையும் உள்ளபடி யுணரவல்ல யோக்யதை அவர்கட்கே உரியதாகும்
43-(யத்யப்யத்ர) இவ்வுலகில் நம்மாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்களும் நம்முடைய பக்திக்குப் பாத்திரமாகக் கூடியவர்களாக விளங்குகின்றார் களெனினும்,அடியேனுக்கு விசதவாக்சிகாமணிகளான ம ணவாள மாமுனிகளிடத்தில் மாத்திரமே விலக்ஷணமாய் நவம்நவமான பக்திஒளிர்கின்றது.
44-(அத்வாதம்) மணவாளமாமுனிகள் காட்டியருளின பத்ததியைப் பற்றினவர்களுக்குத் தத்வார்த்தங்களில் தூய நன்மதி விளங்குவது ப்ரஸித்தம்; தெளர்ப்பாக்யவசத்தாலே அந்த நல்வழியில் விமுகராயிருக்குமவர்கள படும்பாட்டை என்சொல்வேன்? அன்னவர்களின் பிறவியே வெறுக்கத்தக்கது.
45-(தந்யாந்திஸ்துல) மணவாளமாமுனிகள் தம்முடைய திவ்ய ஸ்ரீஸுக்தி)களில் விமுகராயிருப்பார்கட்கும் அன்பு உண்டாகும்படி கடாக்ஷித்தருளவேணுமென்று அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஏனெனில் ஸ்ரீவைஷ்ணவர்களாகபிறந்து மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளில் மாச்சரியங் கொண்டிருந்தால் அவர்களுக்கு இடையறாத துர்க்கதிகளன்றோ நேரும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு துர்க்கதி நேருவதென்றால் இந்த துக்கம் ஸஹிக்கக் கூடிய தன்றே. ஆகவே, தீயவர்களையும் நல்லவர்களாக்கி யருள்க.
46-ஈஷத்பத்தி:)மண வாளமாமுனிகளின் திருவடிகளில் ஸ்வல்பபக்தியிருந்தாலும், பரமார்த்தங்களை உள்ளபடி உணர் தற்கு அவ்வளவே போதுமானது.இங்ஙனமே மாமுனிகள் திறத்தில் சிறிது மாச்சரியமுண்டானாலும் பல கொடிய நரகங்களில் விழுந்துழல்வதற்கு அவ்வளவேபோதும். அந்தோ! இவ்வுண்மையை அறிந்து வைத்தும் நசித்துப்போக நினைப்பார் பலருளரே!!
47-( நத்வா ஸ்ரீவரயோகி ) அடியேனுடைய தலை மணவாளமாமுனிகளின் திரு வடிகளைத் தொழுது தன்யமாகின்றது. வாக்கு அவருடைய திருக்குணங்களைத் துதித்து க்ருதார்த்தமாகின்றது. உள்ளம் அவருடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்தை செய்து பவித்திரமாகின்றது. கை அவருடைய பரந்த புகழை யெழுதி ஸத்தை பெறுகின்றது.
48-(தத்தேரம்யவர ) மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி உண்மையில் கட லென்னத்தகும். கடல் செய்வதெல்லாம் செய்கின்றது இதுவும். கடல் ஸ்ரீயைத் தந்தது.இந்தக்கடல் பக்தர்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தந்திடுகின்றது. கடல் ரத்னங்களைத் தருகின்றது; இக்கடல் ஸக்குணங்களாகிற ரத்னங்களைத் தருகின்றது. (மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைப் பயில்பவர்கட்கு நற்குணங்கள் விளையுமென்கை.)
கடல் அலைகளைத்தரும். இக்கடல் மதுரோபதேச தரங்கங்களைத் தரும். கடல் சந் திரனைத் தந்தது; இக்கடல் நல்ல கீர்த்தியாகிற சந்திரனைத் தருகின்றது. (மாமுனி களின் ஸ்ரீஸுக்திகளைப் பயில்பவர்கட்கு நல்லபுகழுண்டாமென்கை)அக்கடல் கல்ப வ்ருக்ஷத்தைப்பயந்தது. இக்கடல் ஞானமாகிற கற்பகத்தருவைத் தரும். அக்கடல் அமுதமளித்தது. இக்கடல் வேதாந்த விழுப்பொருளாகிற அமுதமளிக்கவல்லது அக்கடல் ஹாலாஹல மென்னும் நஞ்சை நல்கிற்று; இக்கடல் (தத்வத்ரய வ்யா க்யாநாதிகளில்) பரமத த்வம்ஸந ஸ்ரீஸுக்தியாகிற ஹாலாஹலத்தைத்தரும். ஆகவே கடலென்னப் பொருந்தும். ( பரமத த்வம்ஸந ஸ்ரீஸூக்திகளும்தொண்டர்க்கு அமுதமேயானாலும் பிறருடைய திருஷ்டியாலே ஹாலாஹலமென்றது.)
49-(ரக்ஷயாம் நிபுண: ரக்ஷிக்க வல்லவன் லக்ஷ்மீபதி என்றொரு ப்ரஸித்தி வீணாகவே உலகிற் பரவியது. உண்மையில் மணவாளமாமுனிகளே நம்மைரக்ஷிப்பவராவர். இஷ்டப்ராப்தியையும் அநிஷ்ட நிவாரணத்தையும் செய்பவரே ரக்ஷக ராதலால் மாமுனிகள் தாமே தமது ஸ்ரீஸூக்திகளால் அவ்விரண்டையும் செய்துகொண்டு ஸம்ஸாரிகளை நன்கு ரக்ஷித்தருளா நின்றார்.
50-(அந்தநாம் ரவி) குருடர்களுக்கு ஸூர்ய கிரணங்களால் ஒரு பலனுமில்லை யென்பதால் ஸூர்யனுக்கு ஏதேனும் குற்ற முண்டோ? அதுபோல கருவிலே திருவிலாதார் சிலர் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளால் பயன் பெற்றிலரென்றால்
அதனால் என்ன சேதம்? பயன் பெற்று வாழ்கிற புனிதர்களைக் கண்டு தெளிக.
51-(பர்ஜந்யோ ஜல) மேகமானது கடல்நீரைப் பருகிப் பரமமதுரமாக வர் ஷிப்பதுபோல மணவாள மாமுனிகளும் சாஸ்த்ரக் கடலில் நின்றும் அளவற்றவிஷயங்களை முகந்து கொண்டு அதிமதுரமாக வர்ஷித்து பாக்யசாலிகள் பலரும் பருகிக்களிக்குமாறு செய்தருளா நின்றார்.
52-(ரக்ஷாபேக்ஷண.) “ஸர்வஜ்ஞோபி ஹி விச்வேசஸ் ஸதா காருணிகோபி ஸந்
ஸம்ஸார தந்த்ரவாஹித்வாத் ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ர தீக்ஷதே”என்கிறப யே ரக்ஷா
பேக்ஷ மாத்திரத்தையே எம்பெருமான் எதிர் பார்க்கிறானாதலால் நாம் பரக்கவொரு ஸாதநாநுஷ்டானம் பண்ணலாகாதென்று பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய்
ததை நன்கு விளக்குகின்ற மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ரத்னம் எம்பெருமானார் தரிசனத்திற்கு உயர்ந்த மணி விளக்காகவுள்ளது.
53-அந்தர்த்வாந்தம்.) அகவிருளையகற்றுவதற்கு உலகில் ஞானவிளக்கொன்று தவிர வேறொரு கருவி கிடையாதென்பது நிர்விவாதம். அப்படிப்பட்ட அணி விளக்கை இன்னருளால் ஏற்றிவைத்தவர் மணவாள மாமுனிகள் ஓருவரேயாவர். ஆயினும் அந்தோ! அவ்விளக்கில் சலபமாகி யொழிவாரும் சிலருளரே! அன்னவர் கட்கு நேரப்போகும் துர்க்கதியை என் சொல்வோம்!
54-(வந்தே ஸுந்தர.) க்ஷத்ர ஜனங்களுக்கு வியாமோஹத்தை விளைக்க வல்ல பலபல சுவடிகளை யெழுதி வைத்து உலகை வஞ்சிப்பார் பலருளர்; அன்னவர்களுடைய உக்திராசிகளால் அடியேனுடைய மனம் ஒருபோதும் விகாரமடையாதிருக்க வேணுமென்று மணவாளமாமுனிகளின் திருவடியிணையை இறைஞ்சுகிறேன்.
55-(அப்திர் லங்கித:) * அப்திர் லங்கித ஏவ வாநர படை:* என்று முராரிகவி பணித்தபடியே கடலைக்கடந்த வானர முதலிகளுக்குக் கடலின் ஆழம் தெரியாதாப்போலே உலகில் பண்டித்தரென்று பேர்படைத்தவர்களெல்லாரும் மேலெழுந்தவாரியாக அறிந்தவர்களே யன்றி சாஸ்த்ரார்த்த ஸாரங்களை உட்புகுந்து அறிந்தாரிலர்;மணவாள மாமுனிகளொருவரே ஆழ்ந்த அறிஞரென்று திண்ணமாகவெண்ணுக
56-(ண ஸ்த்ரு ) ண ஸ்த்ரு = தள” ” சச – லுதகதெள” என்றிப்படி தாது பாடங்களை நெட்டுருப் போட்டுக் கொண்டே வாணாளை யெல்லாம் வீணாளாகக் கழிக்கின்ற ஜடர்கள் அந்தோ! மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளை அறியப் பெற்றிலரே! நல்ல கதிக்கு வழி தேடுகின்றிலரே.
57-(அந்தஸ் ஸர்வ பதார்த்த) ஸகல பதார்த்தங்களிலும் உள்ளும் புறமுமொக்க வியாபித்திருக்கின்ற எம்பெருமானுடைய வ்யாப்தியாவது வஸ்துதோறும்
பரிஸமாப்ய வர்த்தமாநத்வமன்று என்று வாதிப்பவர்களும் பகவானுடைய விசித்திர சக்தியை ஸஹியாதவர்களுமான பிறரைத் தமது ஸ்ரீஸூக்தியால் உதறித்தள்ளுகின்ற மணவாள மாமுனிகளே ஸத்துக்களில் தலைவர்.
58-(மந்யந்தே வர) மணவாள மாமுனிகள் உடையவருடைய அபராவதாரமேயாவர். பெரும்பாலும் வியாக்யான ரூபங்களான கரந்தங்களையே அருளிச்செய் வதும், வீண் தூஷண பரிஹாஸ வாக்குக்களைப் பொழியாமலிருப்பதுமான தன்மைகள் இவ்விரண்டு ஆசார்யர்கள் பக்கலிலுமே நன்கு பொருந்தியிருப்பதால்
59-(வர்த்திஷ்ணூந்ப்ரதி) மேன்மேலும் ஞானவிளக்கம் பெறவேணு மென்றிருப் பார்க்கு ஒன்று சொல்லுகேன். சித்தப்ரமத்தை விளைக்கவல்ல பல்வேறு புத்தகங்களில் வீணாகப் போதைப் போக்குவது தகுதியற்றது : த்ராக்ஷரபாகத்திற்கு நிதர்சநமாக அமைந்த மணவாள மாமுனிகளின் அத்புத லலித திவ்ய ஸூக்திகளையே இடை வீடின்றி அனுபவியுங்கள்,
60-(அந்தஸ் ஸந்ததம்) என்னுள்ளத் துள்ளே மணவாள மாமுனிகளொருவர் தாமே தமது திருமேனி யொளியை விளங்கச் செய்தருளா நின்றுள்ளார்; வேறோ ராசிரியாக்காவது எம்பெருமானுக்காவது இனி என்னெஞ்சில் இடம் கிடைப்பரிது;-இல்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரே.
61-(நக்ஷத்ரேச) மணவாள மாமுனிகாள்! தேவரீருடைய திங்கள்போன்ற திருமுக மண்டல் தையும் நிலாப்போன்ற புன்முறுவலையும் செவியளவும் நீண்ட திருக்கண்களையும் திருவாய் மொழியின் மணம் கமழும் திருவதரத்தையும் திவ்யோர்த்வபுண்ட்ரஸுபகமான திருமேனியையும் நேரில் ஸேவிக்கப் பெற்றவர்களே பாக்யசாலிகள்.
62-.(தத்தேநிச்சல) மணவாள மாமுனிகள் என்னுள்ளத்துள் எப்போதுமெழுந்தருளியிருந்து தமது திருவடிகளில் ஸ்திரமான பக்தியை யளிக்கின்றார்:விரக்தியை விளைக்கின்றார்; பொருளாசையைப் போக்குகின்றார்; ஓ மனமே! குபேராதி பதவிகளைப் பெறுவதற்கும் நீ ஆசைகொள்ளாதே; விஷயாந்தரங்களில் ஓடநினைப்பதும் வேண்டா; மதயானைபோல் கண்டவிடமும் திரியாதே; மாமுனிகளிடத்தேஊன்றியிரு.
63-(ஏரண்டோபி ) * நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி திருமாயதே[மரமில்லாதவூரில் ஆமணக்கஞ் செடியும் மரமாம் ] என்றாப்போலே ஆங்காங்குப்பலரும் ஆசார்ய பீடத்தில் அமாந்து ஆசார்ய விருது வஹித்து விடலாம்-உண்மையில் மணவாள மாமுனிகளொருவர் பக்கலிலேயே ஆசார்யத்வ பூர்த்தியுள்ள தென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பேன்.
64-( ரக்ஷிஷ்யதி. ) உலகில் பலரும் எம்பெருமானையே ரக்ஷகனாக மயங்கி அவனையே துதிக்கின்றனர். அந்த பகவான் தானும் ஆசார்ய ஸம்பந்த மில்லா தாரைக் கடாக்ஷிக்க வல்லவனல்லன்; மணவாள மாமுனிகளிடத்திலேயே ஆசார்யத்வம் புஷ்கலமாதலால் இவருடைய ஸம்பந்தத்தை நோக்கியே அவன் ரக்ஷிக்கவல்லவன்; ஆதலால் மாமுனிகளே முமுக்ஷக்களுக்குத் தஞ்சம்.
65-(அத்வாத்வ ) நல்வழி தீ வழி தெரியாது திகைக்கின்றவர்களுக்குக் கை கொடுக்கவே பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த ரஹஸ்யார்த்தக்ரந்தங்களை மணவாளமாமுனிகள் பரமகிருபையோடு விசதமாக வியாக்யானித்தருளாதிருந்தால், அந்தோ ! உலகம் முழுவதும் ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துவளுமே! மாமுனிகளின் பேரருள் பேச்சுக்கு நிலமோ?
66-(மக்நாநாம்) மணவாள மாமுனிகளின் திருவடிகள் பிறவிக்கடலுள் அழுந்தினார்க்கு நாவாய் போலும்; அவருடைய திருவாக்குக்கள் விஷயவிஷதரங்களாலே கடியுண்டார்க்கு கருட மந்த்ரம் போலும்; அவருடைய திருமேனிவிளக்கத்தைச் சிந்தை செய்வது பாவங்களாகிற காட்டுத் தீயில் வேகின்றவர்களுக்கு வர்ஷதாரை போலும், அன்னவர் வாழ்க-
67-(யத்நோவ யவிதேய) ‘சைதன்ய கார்யமான ஸாதநா நுஷ்டானங்களை அவசியம் பண்ணியே தீரவேண்டும்; இல்லையானால் முக்திபெற வழியில்லை’ என்பாருடைய அகவிருளைப் போக்குமதாய் ப்ரபந்நர்களுக்கு அருமருந்தான ஸ்ரீஸக்திகளைப் பணித்தருளின மணவாள மாமுனிகள் அடியேனை *ஆம்முதல்வனிவ னென்று கடாக்ஷித்தருளினார்.
68-(அஹ்தாயாச்ரயத ) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளை உகந்து விரைந்து பணிமின்: பின்னை அவருடைய திவ்ய ஸூக்திகளுள் ஆர்த்திப் பிரபந்தத்தை உரக்க அநுஸந்தித்து எல்லா ஆர்த்திகளையும் உடனே தொலையப் பெறுங்கள்; ஸகல ச்ரேயஸ்ஸுகளும் தன்னடையே வந்து சேரும்படி கண்டு மகிழுங்கள்.
69-(ஐந்மாந்யத்ர) அடியேன் இப்போது போலவே எப்போதும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளையே சுவைத்திருப்பேனாயின் அடியேன் மீண்டு மீண்டும் இவ்வுலகிலே பிறக்கப் பெறுவேனாக; பிறவிதோறும் இப்பெரும் பாக்கியம் வாய்க்குமாகில் பரமபதத்திலும் வாஞ்சை யுடையேனல்லேன்; மாமுனிகளே! இதுவே உண்மையுரை : பூர்ணமாகக் கடாக்ஷித்தருள வேணும்.
70-(ஆசாரா .) மணவாள மாமுனிகள் காத்தருளின ஸதநுஷ்டானங்களில் பக்யசாலிகள் ஊன்றிப் போருவர்கள் : அங்ஙனல்லாத மற்றையோர் தீயவழிகளில் அலமந்து துவள்க. பரமபவித்திரமான இந்த ஸத்ஸம்பிரதாயஸரணியில் பரம பாக்ய வசத்தினால் பிறக்கப் பெற்றோமே யென்கிற களிப்பு அடியேனுக்கே உள்ளது.
71-(மந்த்ராஸ் ஸந்திஹி) மணவாள மாமுனிகளே! உலகில் பலபல பகவந் மந்த்ரங்கள் உள்ளன; அவற்றிற்கு என்ன பெருமை ஏற்பட்டது? அவற்றைச் சிந்திப்பாரார்? அவற்றில் யாருடைய உள்ளம் ஊன்றியிருக்கிறது? ஸ்ரீரங்கநாதனுடைய முகாரவிந்தத்தில் தோன்றின மதுவென்னலான (தேவரீர் விஷயமான) ஸ்ரீசைலேச மந்திரத்தின் பெருமையேயன்றோ உலக முழுவது மோங்கி நிற்கின்றது.
72-(ஆசார்யப்ரவரம் ) மணவாள மாமுனிகளிடத்தில் எல்லாப் பெருமைகளும் விளங்க நின்றாலும் ஒரு குறை மாத்திரம் உள்ளதேயாம்: அது என்னெனில்; மிகச் சிறந்து பரமபாவனமாய் விளங்கும் ஸ்ரீசைலேச மந்திரத்தைச் சிந்தை செய்யும் பாக்கியம் அவர்க்கு இல்லையாயிற்றே.
73-( த்வம் கிஞ்சந.) மணவாளமாமுனிகளே! ஒரு உண்மைகேளீர் : தேவரீருடைய மஹோத்ஸவம் கச்சிநகர் முதலான பலதலங்களில் பெருக்க நடக்கிறதன்றோ. அந்த ஸமயங்களில் அடியேன் அனுபவிக்கும் ஆனந்தாதிசயத்தை தேவரீர் விபவத்தில் அனுபவிக்கப் பெற்றிலீரன்றோ ( அப்போது மணவாளமாமுனிகளுத்ஸவமென்று ஒன்று நடைபெறவும் அவ்வானந்தத்தை அநுபவிக்கவும் ப்ராப்தமாகவில்லையே.] ஆதலால் இவ்வகையால் தேவரீரைவிட அடியேனே பாக்யசாலியாவேன்.
74-(அத்யேஷாமபி) திவ்ய தேசங்களில் மற்றும் பல ஆசிரியர்களுக்கும் உத்ஸவம் நடைபெற்றாலும் மணவாள மாமுனிகளுத்ஸவத்தின் வீறு விலக்ஷணமானதே. ஐப்பசி மாதம் அவதரிக்கப் போகிறதென்னும்போதே பிடித்து எமது நெஞ்சில் நடைபெறும் உத்ஸாஹ மஹோத்ஸவத்தை என் சொல்வோம்.
75-(ரங்காதீச்வர ) மணவாள மாமுனிகளே! அர்ச்சா மூர்த்திகளில் ஸ்ரீரங்க நாதனொருவனே பாக்யசாலி. அப்பெருமானேயன்றோ தேவரீருக்கு சிஷ்யனாக அமைந்த பெருமையை நாளைக்கும் காப்பாற்றி வருகிறான். ஒரு ஆசிரியர்க்கும் நடைபெறாத திருவத்யயனத் திருநாளை மாசிமாஸ க்ருஷணலபக்ஷத்வாதசியன்று தேவரீருக்கு அப்பெருமான் நடத்திப் போருவது சிஷ்யக்ருத்யம் அவர்ஐநீயம் என்றுகொண்டன்றோ?
76-(அத்யாஹம்வரயோகி) மணவாளமாமுனிகளே! இன்று அடியேன் தேவரீரைத் துதிக்கவிழிந்து, சிறிதும் ஆலோசனையின்றியே இங்ஙனே ச்லோக மாலிகையை விரைவாகவே விண்ணப்பம் செய்து வருகிறேன்; இந்த ஸ்தோத்திரமோ முடிவு பெற்று விடும். தேவரீருடைய பெருமைக் கடலிலோ சில திவலைகள் மாத்திரமே அநுபவிக்கப்பட்டன, முழுவதும் அநுபவிக்க எங்ஙனே முடியும்?
77-(மந்தப்ரஜ் ): மணவாள மாமுனிகளே! அடியேன் மந்தமதி யென்று பேர் பெற்றவனாயினும், தேவரீருடைய பெருமைகளை விளக்கும் ச்லோகங்களையே இடைவீடின்றித் தொடுத்துக் கொண்டிருக்கி றேனாதலால் மஹாப்ராஜ்ஞ னென்று விருது பெற்றேனானேன்; தேவரீருடைய திருவருளை என் சொல்வேன்?
78-(மந்த்ரம் த்வத்விஷயம்) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய தனியனான ஸ்ரீசைலேசத் திருமந்த்ரம் ஸகல திவ்ய தேசங்களிலும் புகழ் பெற்றுவருவதைக் கண்டு பொறாதார் சிலர் தாம் வேறொரு பத்யத்தை ஸ்ருஷ்டித்து அடிக்கடி பிரபலமான பரிபவத்தைப் பெற்று வருகிறார்களென்பதை நன்கு அறிந்தேயிருக்குமவர்கட்கும் அந்தோ! தேவரீருடைய பெருமை தெரியவில்லையே!
79-(உத்திஸ்ஸத்யதமா) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸூக்திகளே பொய்யொன்றுமில்லாதவை என்கிற உண்மையை நன்கு அநுபவித்துத் தெரிந்து கொண்டவர்களான பூருவாசாரியர்கள் * பொய்யிலா தமணவாளமாமுனி புந்திவாழி * என்று வாழ்த்தினார்கள், தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை ஆராயு மளவில் அந்த வாழ்த்து ஸத்யமானதே யென்று பறைசாற்றத் தட்டில்லை.
80-(நந்தாஅந்ந்த) * ஸித்திர் பவதி வா நேதி ஸ சயோச்யுத ஸேவிநாம் என்று பகவானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமே யுள்ளதாக சாஸ்த்ரம் முறையிடுகின்றது; அங்ஙனன்றிக்கே, மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றினார்க்கு ஸகல ச்ரேயஸ்ஸுக்களும் மல்குமென்று ஐயமற அறுதியிடப்பட்டதாம்,
81-(இந்த்ரஸ் ஸம்யமிநாம் ) பெரிய ஜீயர், மணவாளமாமுனிகள், அழகிய மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப்பிள்ளை மாதகாவால் வாழ்ந்தவர், திருவனந்தாழ்வான் திருவவதாரமானவர் என்றிங்ஙனே நாமாவளிகளை எனது நெஞ்சம் நிச்சலும் சிந்தை செய்து தூய்மை பெறுகின்றது.
82-(இந்தே ருத்ர வர) மணவாள மாமுனிகள் எங்கு எழுந்தருளியுள்ளாரென்று
கேட்டால். தம்மைச்சிந்திப்பார் சிந்தையினுள்ளும், திவ்ய தேசங்களிலும், திருவாய் மொழியின் இன்னிசை மன்னுமிடங்களிலும் எழுந்தருளியிருப்பதாகப் பலரும்
கூறுவர்; அடியேன் விண்ணப்பம் செய்வது அங்ஙனன்று; அவை யெல்லாவற்றோடுங்கூட என்னுள்ளத்துள்ளே யுறைகின்றா ரென்பதே உண்மை.
83-(மந்த்ரோ யஸ்ய) விவேகிகளான பாக்யசாலிகளுக்கு ஸர்வஸ்வமுமான தமது தனியனால் அர்ச்சாவதாரஸ்தலங்களை யெல்லாம் புனிதமாக்கி யருளாநின்ற
மணவாள் மாமுனிகளின் திருக்குணங்களைப் பன்னியுரைப்பதும் ஸகல பலன்களையு
மளிப்பதுமான இந்த ஸ்துதியானது வித்வான்களின் வாக்கிலே விளங்குக.
84-மந்யந்தாமிஹ) அடியேன் மணவாள மாமுனிகளொருவரையே பெருக்கத் துதிக்கிறேனென்பது பற்றிப்பொறாமையாளர் எதுவேனும் எண்ணுக ; ஸத்யமாக
விஜ்ஞாபிக்கிறேன்; மாமுனிகளைச் சிந்தை செய்யப் புகுந்தபின்பு, நம்மாழ்வார்
எம்பெருமானார் நம்பிள்ளை முதலானார் திறத்திலும் அடியேன் பக்தி குறையப் பெற்றேன், ஆதலால் மாமுனிகளையே துதிப்பது எனக்கு நித்யகால க்ஷேபமாயிற்று
85-(மந்தப்ரஜ் ஜநா )-இதன்மூலம் ஸம்ஸ்க்ருத ச்லோகங்களாயிருந்தாலும் அவற்றின் பொருளை ஸாதாரண வயுத்பந்நர்களும் எளிதாக அறிந்துகொள்ள வேணுமென்று நாரிகேளபாக மன்றிக்கே த்ராக்ஷாபாகமாக இத்தகைய ஸ்தோத்ரங்களை மணவாள மாமுனிகள் என்வாக்கில் நின்றும் அன்போடு வெளியிடுவித்தருள்கின்றார்; அப்பேராசிரியரின் பரம கிருபையை என்னென்பது!
ஸ்ரீ காஞ்சீ அண்ணங்கராசா ய ஸ்ரீ வைஷ்ணவதாஸன் விண்ணப்பஞ் செய்த ஸ்ரீ சைலேசதயாபாத்ர ஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.
ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ச்லோக ஷட்சதியில்-இரண்டாவதுஸ்தோத்ரம்.-ஸ்ரீ வரவர முநிகர்ணாம்ருதம்
(அவதாரிகை )எம்பெருமான்விஷயத்தில் ஈடுபட்டவர்கள் * மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று சொல்லி மங்களாசாஸநம் செய்வது போல மணவாள மாமுனிகளிடத்தில் ஈடுபட்டவர்கள் * வரவரமுநி பத கமல! ஐயஎன்று (வடமொழியில்) சொல்லி மங்களா சாஸநம் பண்ண ப்ராப்த மாகையாலே அந்த வாக்ய ஸந்நிவேசத்தை யிட்டு அதிலுள்ள அக்ஷரங்களின் அடைவே ஒரு ஸ்தோத்ரம் விஜ்ஞா பிக்கலாயிற்று. இதற்கு ஸ்ரீமத் வரவரமுநிகாணாம்ருதமென்று ஒரு பெரியார் நாமமிட்டருளினார். மேலேவரும் ரஸாயந ஸ்தோத்ரமும் இதுவும் லகுவான அக்ஷரங்களே நிரம்பப் பெற்றது.
86-(வரவர) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையே! நீ வாழ்க என்னும் பொருளதான * வரவரமுநிபதகமல! ஐய * என்கிற இந்த வொருபாதத்தையே சிந்தை செய்மின்; (அதற்குமேல் சக்தியிருந்தால்) இந்த பாதத்தின் எழுத்தடைவே அமைக்கப்பட்ட இந்த கர்ணாம்ருத ஸ்துதியையும் கண்ட பாடம் செய்து சொலலுமன். (வடமொழியிலுள்ளவது தேவநாகரலிபியிலுள்ளது)
87-(வரவர) மணவாள மாமுனிகளே! தேவரீருடைய திருவடிகள் அடியேனது மனத்தில் மாத்திரமே எப்போதும் ஸூர்யோதயமானாப்போலே விளங்கிக் கொண்டிருக்கின்றன என்னவே அடியேனுடைய ஜென்மம் ஸபலமாயிற்று.
88-(ரவிரிஹ) மணவாளமாமுனிகளே! ஸுர்யன் வெளியிருளை மாத்திரம் போக்க வல்லவனே யன்றி உள்ளிருளை யொழிக்க வல்லவனல்லன்; தேவரீர் அடியேனது அகவிருளையெல்லாம் அகற்றி யருள்கின்றீர்
89-(வசளிச) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய பரம மதுரமான ஸ்ரீஸூக்திகளையே ஸதா அடியேனுடைய வாக்குக்கும் நெஞ்சுக்கும் விஷயமாக்கி யருளிற்று; இனியெனக்கு ஸம்ஸார பயம் நடையாட விரகுண்டோ?
90-(ரகுவர) மணவாள மாமுனிகளே! இவ்வுலகில் ஸ்ரீராம க்ருஷ்ணாதி விக்ரஹங்களும் விளங்குகின்றன; தாராளமாக விளங்கட்டுமே ; தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹ மொன்றே அடியேனது கண்ணுக்குத் தோற்றுவதாம்
91-{முநிரிதி) முநியென்றும் குருவென்றும் யதியென்றும் இவ்வுலகில் மற்றும் பலரும் பேசப்பட்டிருந்தாலும் அந்த முநி -குரு – யதிபதங்களெல்லாம் மணவாளமாமுனிகள் திறத்திலே தான் அர்த்த புஷ்டியுடன் விளங்குவன
92-(நிதிமிவ) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்ய ஸ்ரீ ஸுக்திகளை உள்ளத்துள் நிதிபோல வைத்துக் காக்க வல்லவர்கள் பலபிறவிகளில் செய்தபாவங்களெல்லாம் ஒருநொடிப் பொழுதில் தொலையப்பெறுமவராவர்கள்.
93-(படுமதிரி ) இவ்வுலகில் விவேகியான வொருவன் தேவரீருடைய ஸ்ரீஸுக்திகளை ஓயாமல் வாய்க்கொள்வனாகில் அவன் ஹயக்ரீவனை வென்றவனென்று புகழ் பெற்றவனேயாவன்.
94-(தமசமமுக) சமதமாதி குணக்கடலென்று பெற்ற புகழினால் உலகத்தை யெல்லாம் பரிமளிக்கச் செய்தருளாநின்ற மணவாள் மாமுனிகளே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை என்னுடைய நெஞ்சகம் பால் எழுதியருள வேணும்.
95-(கலிபலம்) கலியின் கொடுமை நாள்தோறும் எவ்வனவு வளர்ந்து சென்றாலும் அதுபற்றி எனது நெஞ்சில் சிறிதும் அச்சமில்லை. ஏனென்றால். மணவாள மா னிகளின் ஸ்ரீஸக்திகளினால் என்னுள்ளம் தெளிவுபெற்றிருப்பதனால்.
96-(மம மதிரி ) மணவாள் மாமுனிகளே! அடியேன் எப்போதும் தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளையே நெஞ்சில் நிதியாகக்கொண்டிருக்கிறே னென்பதுபற்றி அடியேனது புத்தியைப் பலரும் கொண்டாடுகின்றனர், இஃது ஒக்கும்.
97-( லஸத்தி)மணவாளமாமுனிகளே! இவ்வுலகில் மற்றும் பல ஆசிரியர்களின் திருவாக்குகள் பல விளங்கினாலும் அவற்றால் பயனொன்றும் காணோம்; தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் அவதரியாதிருந்தால் இருள் செறிந்தேயிருக்கும்.
98-(ஜகதிதம்) இவ்வுலகமானது அளவுகடந்த ஆசாரியர்களை நிரம்பக்கொண்டது; இன்னமும் லக்ஷக்கணக்கான ஆசாரியர்கள் தோன்றட்டுமே; அதனாலென்ன? மணவாளமாமுனிகளொருவரே ஒப்பற்ற ஆசாரியர்
99-(யதிபதிமதம்) எம்பெருமானார் தர்சனத்தை விளங்கச்செய்வதற்கெறேன்இந் நிலவுலகில் திருவவதரித்தருளின பேரருட்கடலான மணவாளமாமுனிகள் அடி
யேனுள்ளத்துள் மகிழ்ந்து உறைகின்றார்.
100-(வரவர) மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸ்தோத்ரமானது ஒருகுணமுமற்றதாயினும் வித்யான்களின் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியைத் தருமென்பது திண்ணம், என்று விஜ்ஞாபித்து இந்த வடமொழி ஸ்தோத்ரம் தலைக்கட்டப்பட்டது.
ஸ்ரீ மத்வரவரமுநீந்த்ரக்லோக ஷட்சதியில் இரண்டாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி கர் ணாமருதம் முற்றிற்று.
ஸ்ரீமத்வரவரமுநீந்த்ர ஷட்சதியில்:- மூன்றாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி வைபவ ஸ்தோத்ரம்
“ ஸ்ரீ சைலேசதயாபாத்ரம் “ என்கிற தனியனிலுள்ள முப்பத்திரண்டு அக்ஷரங்களில் ஒவ்வொரு அக்ஷரத்தையும் அடைவே ஒவ்வொரு ச்லோகத்தின் முதலெழுத்தாகக் கொண்டது இந்த ஸ்தோத்ரம்.
101-(ஸ்ரீமத்வர.) கற்பகக்கொடிபோல் விரும்பிய பொருளனைத்தையும் பதந்தோறும் அளிக்கவல்ல ஸ்ரீஸூக்திகளையருளிச் செய்தவரும் ஸமஸ்த திருக்கல்யாண
குணங்களுக்கும் கொள்கலமுமான மணவாளமாமுனிகளை எப்போதும் வணங்குவன்
102-(சைல இவ.) மணவாளமாமுனிகளே ! தேவரீர், ஸ்ரீஸூக்திகளாகிற புண்ணிய நதிகளுக்கு மலைபோல் உத்பதிஸ்தானமாயும், ஸம்ஸாரதாபங்களினால் வருந்தினவர்களுக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போன்றவராயும், தீபநெறியாகிற இருளைத் தொலைப்பதில் இரவிபோன்றவராயும் விளங்கினீர்.
103-(லேசோபி ) தமது ஸ்ரீஸூக்திகளில் ஸ்வல்பபாகத்தைச் சிந்தனைசெய் தாலும் ஆனந்தம் பொங்கி வளரும்படியாக அவற்றைத் திருவாய்மலர்ந்தருளிய மணவாள மாமுனிகள் தமது திருவடித்தாமரைகளில் (அடியேன் போல்வார்க்கு) பக்தியை விளைத்தருளாநின்றார்.
104-(சமயதி ) தீவினைகளனைத்தையும் தொலைத்து நல்லறிவை நல்குகின்ற திவ்ய ஸூக்திகளைத் திருவாய் மலர்ந்தருளின மணவாளமாமுனிகள் எப்போதும் எனது உள்ளத்திலே விளங்கா நின்றார்.
105-தயயா)எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினாலே நம்மைக் காத்தருள்கிறானென்னுமிடத்தை விளங்கக்காட்டும் ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய் தருளின மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தில் நிர்ஹேதுக கருணையோடு எழுந் தருளியுள்ளார்.
106-(யாது ஸகலோபி.) மணவாள மாமுனிகளின் வியாக்கியானங்கொண்டே ஸகலார்த்தங்களையும் அறியக் கூடியதாகவுள்ள ஸ்ரீவசநபூஷணமென்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் அநுபவத்திலேயே அடியேனுடைய வாழ் நாளெல்லாம் செல்ல துவணும்.
107-(பாது வாயோகி ) ரஹஸ்யத்ரயார்த்தவிவரணமாகப் பிள்ளையுலகாசிரியர் பணித்தருளின முமுக்ஷப்படியை மிகவழகிய புனிதமான திவ்யஸூக்திகளினால் ஸத் ஸம்ப்ரதாயப்படியே வியாக்கியானித்தருளின மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.
108-(த்ரய்யந்தார்த்தம்) பிள்ளையுலகாசிரியர் பணித்தருளிய தத்வத்ரய மென்னும் ரஹஸ்யக்ரந்தத்தை வியாக்கியானித்தருளும் முகத்தால் ஸகல வேதாந்தஸாரப் பொருள்களையும் எளிய நடையில் உபகரித்தருளின மணவாள மாமுனிகளே நமக்கு அகவிருளை அகற்றவல்ல பேராசிரியர்.
109-( ரிஹ ஜகதி.) இவ்வுலகில் அவதரித்துள்ள பலபலவாக்குக்களை அநுபவித்து ஓய்வு அடைகின்ற எனது புத்தியானது மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளின் அநுபவத்திலிருந்து மாத்திரம் ஒருபோதும் ஒய்வடைகின்றதில்லை. “ எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமே .’ என்னுமா போலே நித்யாபூர்வமானவை மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளென்க.
110-(பவபயபேஷஜம்.)அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்ததும்
பிறவியென்னும் நோய்க்கு மருந்துமான ஆசார்யஹ்ருதய மஹாசாஸ்த்ரத்தின்
ஸகலார்த்தங்களையும் விசதமாகக் காட்டவல்ல வியாக்கியானத்தைத் திருவாய்
மலர்ந்தருளிய மணவாளமாமுனிகள் வாழ்க.
111-(பக்த்யா)மணவாளமாமுனிகளின் முகாரவிந்தத்தின் மகரந்தம் போன்றதும் ஸத்துக்களின் ஹ்ருதயத்திற்கு சோபாவஹமுமான உபதேசரத்தினமாலையென்னும் திவ்ய ப்ரபந்தத்தை அன்புடன் ஓதுமின் [இதில் (க்த்யா) இரண்டமெழுத்து ]
112-(தி துமயி) திருவாய்மொழியின் உட்பொருள்களைத் திருவாய்மொழிநூற்றந்தாதி யென்னும் திவ்யப்ரபந்த மூலமாக வெளியிட்டருளின் மணவாள மாமுனிகள் அடியேனுக்கு திவ்ய சக்ஷஸ்ஸை அருளவேணும்.
113-(குருபிரிஹ) இவ்வுலகில் பல பல ஆசிரியர்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீஸூக்திகள் அளவு கடந்தவை யுண்டெனினும் மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளிலுள்ள இனிமை இணையற்றதேயாம்
114-(குணவை) ஒரு யோக்யதையும் சிறிதுமில்லாத அடியேனுக்கும் மணவாளமா முனிகளின் திவ்யஸூக்திகளின் ஆழ்பொருள்களெல்லாம் நன்கு தெரியும் படி அந்தமாமுனிகளின் திருவருளே வாய்க்கவேணும். [ இந்த ச்லோகத்தில் ணகலைரம் இரண்டாமெழுத்தாக அமைக்கப்பட்டது.
115-(அர்ணவ ) .’ அப்ரமேயோ மஹோததி:” என்னப்பட்ட, கடலின் காம்பீர்யத்தையும் அளவிடவல்லார் சிலருண்டு: மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திக்கடலின்காம்பீர்யம் மாத்திரம் ஒருவர்க்கும் நிலமன்று. I இந்த ச்லோகத்தில் (ர்ண ) என்கிற எழுத்து இரண்டாமக்ஷரமாக அமைக்கப் பட்டது .)
116-(வம்சே ஸூமஹதி ) மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளில் பக்தி விசேஷம் இல்லாவிடினும் அத்வேஷமாவது இருந்திருக்குமாகில் அதன்பயனாக மாசில்குடிப்பிறப்பும் நல்லுணர்வின் மிகுதியும் சமதமாதி குணபூர்த்தியும் விளையுமென்று மஹான்கள் கூறுகின்றார்கள்.
117-( யதிபதி) மணவாளமாமுனிகள் எம்பெருமானாருடைய அபராவதாரமேயென்று அறுதியிடுவதற்குப் பலபல சான்றுகள் உள்ளனவாதலால் அவற்றையே எப்போதும் சிந்தை செய்வேனாக
118-(தீர்த்வா ) பிறவிக்கடலைக்கடந்து ஒருகால் விண்ணுலகம் சென்று சேரப் பெறுவேனாயினும் அங்கும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தியமுதமே அடியேனுக்கு உணவாக வேணும்.
119-(த்ரவதித்ருஷத பி) கேட்டவளவிலே கல்லும் உருகும்படியான நடையில் அமைந்த யதிராஜவிம்சதியை அருளிச்செய்தவரும் சமதமாதி ஸத்குண நிதியுமான மணவாளமாமுனிகள் உலகைக் காத்தருளவேணும்.
120-(ப்ரதயதி.) பகவத்கீதையின் அற்புதமான தாற்பரியத்தை விளங்கக்காட்ட வல்ல கீதாதாத்பர்ய தீபமென்னும் வியாக்கியானத்தை யருளிச்செய்த மணவாளமாமுனிகளின் சிறந்த திருநாமங்களையே என்வாய் உரைத்திடு .
121-(வரதாதிராஜ.) பேரருளாளன் விஷயமாகப் பரமபோக்யமான மங்களா சாஸந ஸ்துதியை அருளிச்செய்த மணவாள மாமுனிகளுக்கே என் வாக்கு அநவரதம் பல்லாண்டு பாடக்கடவது.
122-(ப்ரவணம்)எம்பெருமானாருடைய திருக்குணங்களை அழகாகப் பேசவல்லதும்
மணவாளமாமுனிகளின் வியாக்கியானத்தினால் சிறப்புற்றோங்குவதுமான இராமானுச நூற்றந்தாதியில் நெஞ்சே! எப்போதும் ஊற்றமுற்றிருப்பாயாக. (இந்த ச்லோகத்தில் ணகாரம் மூன்றாவது அக்ஷரமாக அமைக்கப்பட்டது.)
123-(வஞ்சயிதும்) கபடபக்தியினால் உலகை வஞ்சிக்க நினைத்தாலும் அந்தக் கபட பக்தியையும் மணவாளமாமுனிகள் விஷயமாகவே கொள்வது நலம். ஏனென்னில், மாமுனிகள் திறத்தில் பக்திபாவனை செய்யினும் ஆத்மா புனிதமாகுங்காணும்
“பொய்யேகைம்மைசொல்லி” இத்யாதி காண்க.
124-(தேயாத் வரவர.) மணவாளமாமுனிகள் பெரியாழ்வார் திருமொழிக்குத் தாமருளிச்செய்த இனிய வியாக்கியானத்தில் மிகவும் ஆழ்ந்து அவகாஹிக்கவல்ல
உள்ளத்தை எனக்கு அருள்புரியவேணும்.
125-(ரமயதிமம்) ஆசார்ய ஸார்வபெளமரான மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸகலப்ரமாண ஸங்க்ரஹமென்னும் [பிரமாணத்திரட்டு திவ்யகரந்தம் என்னுள்ளத்தை எப்போதும் உகப்பிக்கின்றது.
126-ய இ வரயோகி.) இந்நிலத்தில் அடிக்கொதிப்பால் ஆர்த்திப்பிரபந்த மருளிச் செய்தருளின மணவாளமாமுனிகள் ‘இன்னமொரு நூற்றாண்டிரும்‘ என்ற வாழ்த்துப்படியே இவ்வுலகில் எந்நாளுமெழுந்தருளியிருந்துகொண்டு நமது ஆர்த்திகளைத் தீர்த்தருளவேணும்.
127-(ஜாயாஜந்நீ) தாரமென்றும் தாயென்றும் தந்தையென்றும் ஸஹோதரனென்றும் பலரிடத்துப் பாலிபாயக் கூடிய அன்பு முழுவதும் அடியேனுக்கு மணவாளமாமுனிகளின் திருவடிகளிலேயே பதியக்கடவது. ஸகலவித பந்துக்களும்மாமுனிகளே யென்கை.
128-(மாதவ முகுந்த) எனது வாய், மாதவ! முகுந்த! முராரே! மதுஸு தந! கேசவ! என்சிற திருநாமஸங்கீர்த்தனங்களை விட்டிட்டு எப்போதும் மணவாள மாமுனிகளின் திருநாமங்களையே கூறப்பெற வேணும்.
129-(தலமபி) எனதுநெஞ்சு நின்றவாநில்லாது அலைபாய்வதேயானாலும் மணவாளமா முனிகளின் திருவடிகளில் மாத்திரம் ஒருபடிப்பட ஆழ்ந்த அன்பை யுடைத்தாயிருக்கின்றது. இங்ஙனே அருள்புரிந்த அந்த மாமுனிகளின் திருவருளை எங்ஙனே புகழ்வேன்.
130-(ரங்கீ ஸ்வயமி.) ஸ்ரீரங்கநாதனையும் தம்பக்கலிலே சிஷ்யனாகக்கொண்ட மாணவாள மாமுனிகளின் மஹிமை என்போன்ற சிறியோர்களின் இளைய புன்கவிதை களால் வருணித்துத் தலைக்கட்டக்கூடியதோ?
131-(முஹ ரிஹ) மணவாளமா னிகளின் ஸ்ரீஸத்தியமுதத்தைப் பருகிப் பருகிக் களித்த ஸ்ரீரங்கநாதன் சோதிவாய் திறந்து பணித்த* ஸ்ரீசைலேசத்தனியன் உலகிலுள்ள ஸகல மந்த்ரங்களையும் வென்று வீறுபெற்று விளங்குகின்றது.
132-(நிகில பி) ஆங்காங்குக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள னைவரும் மணவாளமாமுனிகளையே தேவதையாகக்கொண்ட எந்த ஸ்ரீசைல மந்தரத்தையே நாடோறும் திருச்செவிசாத்தித் திருவுள்ளம் பூரிக்கின் றனரோ அந்த மந்த்ரத்தையே நான் எப்போதும் ஜபிக்கக்கடவேன்.
133-(மஹதாம் சுபகுல) ஸ்ரீவைஷ்ணவதாஸனானவடியேன் பெரியோர்களின் நற்குலத்திற் பிறந்ததனாலும் பேராசிரியர் திருவருளுக்கு இலக்காகப் பெற்றதனாலும் இந்த ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்யலானேன்.
ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரஷ் சதியில் மூன்றாவதான ஸ்ரீவரவரமுநி வைபவ ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.
ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷ்சதியில் நான்காவதான ஸ்ரீமத் வரவரமுநி ஸ்தோத்ரம் ரஸாயநம்
ஸ்ரீசைலேசதயாபாத்ரமென்னும் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே நெடிலெழுத்து இன்றியே குறிலெழுத்துக்களையே அமைத்து இந்த ஸ்தோத்ர ரஸாயநம்இயற்றப்படுகிறது. (பாதங்களின் முடிவில் மாத்திரம் நெடி லெழுத்து இருப்பது விருத்தமன்று) இந்த ஸ்தோத்ரத்தில் தீர்க்காக்ஷரம் புகாமையினாலே ஸ்ரீசைலேசத்தனியனில் தீர்க்கமாகவுள்ள அஷரங்களும் இதில் ஹ்ரஸ்வமாயிருப்பது பொருந்தும்.
134-(ச் தஜநீ) அடியார்கள் செய்த பாவங்ளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தீயினில் தூசாக்குகின்ற மணவாளமாமுனிகள் தமது திருமேனியை எப் போதும் என்னுள்ளத்துள்ளே காட்டியருளா நின்றார்.
135-(சமதம) சமதமாதி குணக்கடலே! மிகத்தெளிவான வியாக்கியானாங்களை யருளிச் செய்யவல்லவரே! மணவாளமாமுனிகளே! அடியேன் இங்கு நாடேறும் தேவரீருடைய திருப்புகழ்களையே அநுபவியா நின்றேன்.
136-(லகுமயி )மணவாளமுனிகளே ! அடியேனுக்கு நல்ல புத்தியை நல்தவற்றான சிறந்த திருவருளை என்மீது விரைவில் செய்தருளவேணும். அந்தத் திருவருள் இல்லையேல் என் ஜன்மம் எப்படிஸபலமாகும்.
137-(சசதர ) திங்களைப்பழிக்கும் திருமுகமண்டலமுடையவரே! நற்குணங்களையெல்லாம் விளங்கக் காட்டியருளினவரே! சாந்தர்களான யதிகளுக்குள் தலைவரே அடியேனுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி நல்க வேணும்.
138-(தர தலத்) மணவாளமாமுனிகளே! சிறிது மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்ணோக்கத்தை அடியேன்மீது வீழ்த்தியருளவேணும்; இவ்வருள் வாய்க்காவிடில் என்னிற்காட்டில் வேறொரு மூடன் உலகில் தேறமாட்டான்.
139-( யதிபதி) தமது வியாக்கியான ஸ்ரீஸூக்திகளாலே ஸ்ரீராமாநுஜ தர்சந ஸாரார்த்தங்களை யெல்லாம் விளக்கினவரும் சிறந்த குணக்கடலென்று புகழ்பெற்ற வருமான மணவாள மாமுனிகள் வாழ்க.
140-(பவநஜ ) இளையபெருமாளாகத் திருவவதரித்து, திருவடி, ஸக்ரீவ மஹாராஜர் முதலான வானர முதலிகளோடு கூடப் பெருமாளுக்குக் கைங்கரியங்கள் செய்தருளினவரும் இந்திரஜித்தை அடர்த்தவருமான மணவாளமாமுனிகளே! அடியேன்மீது மிகவும் இரங்கியருள வேணும்.
141-(தநுரியம்) வணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருவருளால் தேவரீரதுதிருவடிகளில் அடியேனுக்கு இடையறாத சிந்தனை நிகழுமாயின் இப்புவியில் அடியேன் சிரஞ்ஜீவியாக வாழப்பெறுவேனாக.
142-(தியமஹம்) மணவாளமாமுனிகளே! ஒவ்வொரு நிமிஷமும் தேவரீருடையதிருக் குணங்களைத் துதிப்பதிலேயே என்னுடைய புத்தியையெல்லாம் உபயோகித்து வருகிறேன் ; தேவரீருடைய சிறந்த திருவருளே இதற்குக் காரணம்.
143-(பவமய) அருள்மிகுந்த மணவாள மாமுனிகளே! பிறவிக் கடலினுள்ளே விழுந்து துவளும் பலபல ஜனங்களுக்குக் கை கொடுக்க வல்லமையினாலே அவர்களெல்லாரும் துன்பம் தீர்ந்து இன்பம் பெறுமாறு செய்தருளாநின்றீர்.
144-யதிபதி)மணவாளமாமுனிகளே! எம்பெருமானாரும் தேவரீரும் வேற்றுருவ மல்லாமையாலே தேவரீரே எம்பெருமானாராக அவதரித்து அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களை யெல்லாம் என்னுள்ளத்துள் எழுதியருளவேணும்.
145-(திவி புவி )மணவாளமாமுனிகளே! அடியேனை விண்ணுலகில் கொண்டு வைத்தாலும் இம்மண்ணுலகிலேயே வைத்தாலும் என்மனத்தால் ஒருவாசியுமில்லை; எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களையே என்னுடைய ஸ்தோத்ரங்களுக்கு விஷயமாக்கிக் கொண்டிருக்க வேணுமென்பதொன்றே கோரிக்கை.
146-(குருவர ) மணவாளமாமுனிகளே! திருவாய் மொழியின் ஆழ்ந்த அழகியகருத்தை யெல்லாம் அடியேனது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தருளினீர்; அடியேன்பால் தேவரீருடைய திருவருள் மிகக்கனத்தது.
147-(ப்ரணமத.)(மாநிலத்தீர் !) மணவாள மாமுனிகளின் திருவடியை வணங்குமின், ஸ்ரீஸூக்திகளைச் செப்புமின், அவர்க்கேகைங்கரியம் செய்மின் ;இங்ஙனேயாகில் * நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர். (இந்த சலோகத்தில் முதலெழுத்தாக வரவேண்டிய ணகாரம் இரண்டாமெழுத்தாக அமைந்துளது.)
148-( ரசயிதும் ) மணவாள மாமுனிகளே! தேவரீரைத் துதிக்க வேணுமென்று அடியேன் நெஞ்சிற்கொண்டவனல்லேன்; ஆனாலும் தேவரீருடைய திருக்குணங்களெல்லாம் என்னெஞ்சில் அஹமஹமிகயா வந்து கூத்தாடுவதனால் இங்ஙனேதுதிகள் அமைகின்றன. ( இந்த ச்லோகத்தில் [ ர்ண )என்கிற எழுத்துக்கு பதிலாகரேபம் மாத்திரமே கொள்ளப்பட்டது.)
149-(வச ச.)மணவாளமாமு களே ! என்வாக்கிலும் மனத்திலும் எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களே விளங்குமாறு செய்தருளினீர் ; இனி வேறு எந்த ஆசாரியரும் என் மனத்தில் அடிவைக்க முடியாதபடி ஆய்விட்டது.
150-( யசஇ )மணவாளமாமுனிகளே ! தேவரீருடைய திருப்புகழ் இவ்வுலகமெங்கும்பரவி ” மணவ ள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்.” என்றுவீடுதோறும் நாடுதோறும் வாழ்த்தும்படியமைந்துளது. இப்பெருமையைச் சிலகுமதிகள் அபலாபம் செய்ய முயன்றதனால் என்ன சேதம்?
151-(த்திதிரிதி.) மணவாளமாமுனிகளே! * ஆண்டுகள் நாள் திங்களாய்நிகழ்காலமெல்லாம் என்கிறபடியே திதியாகவும் கிழமையாகவும் நக்ஷத்ரமாகவும் அயநமாகவும் கழிந்து செல்லுகின்ற நாட்களில் ஒருநொடிப் பொழுதும் தேவரீ ருடைய திவ்ய ஸக்தியின் அனுபவமின்றிக்கே யிருக்ககில்லேன்.
152-(த்ரவதிஹி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸுக்திகளை ஓய்வின்றிச் சித்தைசெய்கின்ற. என்மனம் நீர்ப்பண்டமாயுருகுகின்றது.மஹாஜ்ஞாதாக்கள் சொல்லவேண்டிய இவ்வார்த்தையை அல்பஜ்ஞனான அடியேன் சொல்லுவதற்காக வெட்கமும் படுகின்றிலேன்.
153-(ப்ரதயதி) மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விளக்குவது போலவே பல குத்ருஷ்டி மதங்களையும் கண்டித் தொழிக்கின்றன; இத்தகைய ஸ்ரீஸக்திகள் எனக்கு வாசோவிதேயமாக வேணும்.
154-(வபுஷிச.) மணவாளமாமுனிகளே! எனது மனமொழி மெய்களில் தேவர் ருடைய திவ்யமங்கள விக்ரஹவொளியே இடையறாது புரள்கின்றது; இப்படிப் பட்ட பாக்கியம் பாவியேனுக்கு எங்ஙனே வாய்த்ததோ?
155-(நதித்தி ) மணவாளமாமுனிகளே ! அடியேனுடைய த்ரிகரணவ்ருத்தியும் தேவரீர் திறத்திலேயே பெருகிச்செல்லுகின்றது; தேவரீரையே தொழுவது உட லின் பணி; தேவரீரையே மனனம் செய்வது மனத்தின் பணி,இந்த ச்லோகத்தின் முதலெழுத்து ணகாரத்திற்கு பதிலாக நகாரம் கொள்ளப்பட்டது.
156-(வரகவி) இப்புவியில் தைவ கடாக்ஷத்தாலே கவியியற்றும் வல்லமை வாய்ந்த பல பண்டிதர்கள் வரகவி யென்று விருது பெறுவதுண்டு; ஆனாலும் வரமு னிகவியென்று ஒருவரும் இதுகாறும் விருது பெறவில்லை; மணவாள மாமுனிகளையே இடைவிடாது துதிப்பதனால் அடியேனே அந்த உயர்ந்த விருதைப் பெற்றேனானேன்.
157-.(தச சக )மணவாளமாமுனிகளின் திருப்புகழைப் பேசுவதென்றால் அடி யேனுடைய கொண்டேயிருக்கும். வாக்கிலிருந்து ஆயிரமாயிரம் ஸ்துதிகளும் நாள்தோறும் அவதரித்துக் அவை ஸூர்ய சந்திரர்களுள்ளவளவும் விளங்கக் கூடும்.
158-(ரமயதி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனி யழகே அடி யேனது உள்ளத்தை மகிழ்விக்கிறது; எனது ஒப்பற்றவனுபவத்தை நான் எங்ஙனம் எடுத்துரைப்பேன்.
159 (யதிபதி .) மணவாளமாமுனிகளே! எம்பெருமானார் நம்மாழ்வார் உலகா சிரியர் முதலான ஆசாரியர்கள் விஷயமாகவும் கௌரவபுத்தியுடன் நான் பல ஸ்து திகளைப் பண்டு விண்ணப்பம் செய்திருக்கிறேன்; ஆயினும், ஐயோ! அதெல்லாம் எதற்குச் செய்தோமென்கிற அனுதாபமே மிகவுமடியேனுக்குள்ளது.
160-(ஜகதிதம்) இவ்வுலகில் பலபல காலங்களில் (பலபல மதங்களில்) பல பல ஆசிரியர் ஆசிரியர்கள் தோன்றியே வருகிறார்கள்: ஆயினும் மணவாள மாமுனிகளைப் போன்ற எந்த மதத்திலும் தோன்றவேயில்லையென்று ஆணையிடுவேன்.
161-(மஹிமஸு)மணவாள மாமுனிகளே! தேவரீருடைய பெருமைக்கடலில் ஒரு சிறு திவலையளவு கூட அடியேன் அநுபவிக்கவல்லவனல்லேன்; ஆயினும் ஓயாது தேவரீர் விஷயமான ஸ்துதிகளை எழுதுவதிலேஊன்றிக்கிடக்கிறேன்.
162-(தரலஹ்ருத்.) நான் சஞ்சலசித்தனேயானாலும் மணவாள மாமுனிகளிடத்தில் அன்பு இன்றிக்கே ஒரு நிமிஷமும் இருப்பதில்லை; தேவப் பெருமாளை ஸேவித்தாலுங் கூட மணவாளமாமுனிகளென்கிற நினைவோடு தான் ஸேவிக்கிறேன். (வரதன் என் கிற திருநாமத்தில் வரவர முனியின் திருநாமத்திலேகதேசம் கலந்திருப்பதனால்
163-(ரசயது.) இவ்வுலகில் பல கவிகள் மிகச் சிறந்த பல பல நூல்களை இயற்றட்டும்; யார் எந்த நூல் இயற்றினாலும் மணவாள மாமுனிகளின் திவ்யகுணங்களைப் பேசப் பிறந்த எனது நூல் தான் ஓங்கிநிற்கும்.
164-(முனி வர) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனியின் சிந்தனையே என்னுள்ளத்துள் இடைவீடின்றி யிருத்தலால் இவ்வுலகில் என் கைக்கு எட்டாதது ஒன்றுமில்லை; நானே அவாப்த ஸமஸ்த காமன்.
165-.(நிரவதி)ஒப்பற்ற எண்ணில் பல் புகழ் வாய்ந்த மணவாளமாமுனிகளே! தேவ ருடைய திருவருளால் நலம் மிகுந்த இத்தகைய ஸ்துதிகள் நாடோறும் நிமி ஷந்தோறும் அவதரித்துக் கொண்டே யிருக்க வேணும்.
ஸ்ரீமத் வரவர முநீந்தரஷட்சதியில் நான்காவதானஸ்ரீவரவரமுநிஸ்தோத்ர ரஸாயனம் முற்றிற்று
ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே மணவாள மாமுனிகள் விஷயமான மங்களாசாஸநஸ்துதி இது.
166-(ஸ்ரீசமரிச ) ஆழ்வாரெம்பெருமானார் ஸ்ரீஸுக்திகளாகிற அமுதத்தையே பருகும் மணவாளமாமுனிகள் வாழ்க.
167-(சைசவாத்) இளமையே தொடங்கி பகவத்குணக் கடலில் ஆழ்ந்த மணவாளமாமுனிகள் வாழ்க.
168-(லேகநே.) மிகத்தெளிவான வியாக்கியானங்களை அருளிச்செய்ய வல்ல ஆதிசேஷாம்சமான மாமுனிகள் வாழ்க.
169-(சடாரி) நம்மாழ்வார் கலியன் முதலான ஆழ்வார்களின் அருளிச் செயல் மணம் கமழும் திருவாக்கையுடைய மணவாள மாமுனிகள் வாழ்க.
170-(தயாபால) அருளாளப் பெருமாளெம் பெருமானாரருளிச் செய்த ஞான ப்ரமேய ஸாரங்களை வியாக்கியானித்தருளின அருட்கடலான மணவாள மாமுனிகள் வாழ்க.
171-(யாதாயாத.) ஸம்ஸாரமென்னும் பாலைநிலத்தில் நாம் திரிந்துழல் வதைத் தொலைத்தருளின மணவாளமாமுனிகள் வாழ்க.
172-(பாதாப்ஜ.) திருவடி பணிந்தார்க்கு நித்யமும் ஸ்ரீபாத தீர்த்தமளித் தருளித் தூய்மை பெறுவித்த மாமுனிகள் வாழ்க.
173-(த்ரய்யந்தார்த்தார்.) தத்வத்ரய வியாக்கியான முகத்தால் வேதாந்தப் பொருள்களை விவரித்தருளின மாமுனிகள் வாழ்க.
174-(தீமத்பி) கோயிலண்ணன் முதலான பெரியார்கள் அடிபணியப்பெற்ற மஹா தீரரான ணவாளமாமுனிகள் வாழ
175-(பயம்பயாப்தி) பிறவிக் கடலில் மூழ்கினவர்களின் அச்சத்தை அறவே போக்கியருளின மணவாளமாமுனிகள் வாழ்க
176-(யாதநாம்) நரகத்தில் நேரக்கூடிய வேதனை யொன்றும் நமக்கு நேராதபடி யருள் செய்த மணவாளமாமுனிகள் வாழ்சு.
177-(திவ்யஸூக்தி) அருளிச் செயலமுதத்தை அநவரதமும் பருகிக்களிக்கின்ற
மணவாள மாமுனிகள் வாழ்க.
178-(குரூணாமபி.) ஸகல ஆசார்யர்கட்கும் முன்னே எண்ணத் தகுந்தவரும் ரஹஸ்யார்த்த தத்வநிதியுமானமாமுனிகள் வாழ்க
179-(குணாதாம்) அளவிறந்த திருக்குணங்கட்குக் கடல் போன்று அடியார் திறத்துப் பரிவு பூண்ட மாமுனிகள் வாழ்க.
180-(அர்ணவாய) சிறந்த அர்த்தங்களுக்குக் கடல்போன்று அற்புதமான ஞானச் செல்வம் படைத்தமாமுனிகள் வாழ்க.
181-(வந்தே ஸ்தெளமி.) இறைஞ்சுகின்றேன் ஏத்துகின்றேன் வணங்குகின்றேன்
என்பவற்றுக்கு முக்கிய இலக்கான மாமுனிகள் வாழ்க
182-(யச் சதே.) நூற்றந்தாதியினால் திருவாய்மொழி யாயிரத்தின் பொருளை
யளித்த, எம்பெருமானார் தரிசன விளக்கான யாமுனிகள் வாழ்க.
183-.தீர்த்வா.) பிறவிக்கடலைக் கடந்து பரவாஸுதேவனை ஸேவிக்க விருப்ப முடையவர்களால் ஸேவிக்கப்பட வேண்டிய மாமுனிகள் வாழ்க
184-(த்ரவீபவ.) தம்முடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்திப்பாருடைய உள்ளத்தை யுருக்குபவரும் அருளிச் செயல்களின் பாக்கியமே வடிவெடுத்தவருமான மணவாள மா முனிகள் வாழ்க.
185-(ப்ரலயேபி.) பிரளயத்திலும் அழியமாட்டாத தனியனால் வைபவம் பெற்ற
உலகம் நிறைந்த புகழாளரான மாமுனிகள் வாழ்க.
186-(வசோபூஷண.)ஸ்ரீவசன பூஷணத்தின் உண்மைப்பொருளை உணர்த்தும் வியாக்கியானத்தை யருளிச்செய்து புகழ்மிக்கவரும் ஸர்வஜ்ஞரும் பரமோதாரருமான மாமுனிகள் வாழ்க.
187-(ணமுதாத்வர்த்த.) ணமுதாதுவின் பொருளான வணக்கத்தில் ஊற்றமே
நெஞ்சிற்குடிகொண்டிருக்கப்பெற்ற ஆசார்யசிகாமணி வாழ்க.
188-(வஸிஷ்டாதி.) வஸிஷ்டாதி மஹர்ஷிகளின் வாக்கைக் காட்டிலும் மிகச் சிறந்த ஸ்ரீஸூக்திகள் யருளிச்செய்தமாமுனிகள் வாழ்க
189-(தேசிகாநாப்) ஸகல ஆசாரியர்களும் ஒன்று சேர்ந்து உதிக்கப்பெற்றவரிவர்
என்று மஹான்கள் போற்றும் மாமுனிகள் வாழ்க.
190-ரந்த்ராந்வேஷி) என்ன தப்பு தவறு கிடைக்குமென்று தேடிப்பார்த்து தூஷிப்பதிலேயே கண்ணானவர்களுக்கும் நிலமல்லாத நிரவத்ய ஸ்ரீஸூக்திகளை யளித்த மாமுனிகள் வாழ்க.
191-(யதிப்ரவர ) ஸ்ரீபாஷ்யார்த்தங்கள் நிரம்பிய ஸ்ரீஸக்திகளைத்தந்தருளினவரும், வானமாமலைஜீயர் பட்டர்பிரான் ஜீயர் திருவேங்கட ராமாநுஜீயராகிய மூவரால் துதி செய்யப் பெற்றவருமான மாமுனிகள் வாழ்க.
192-(ஜாக்ரத்தசாயாம்) கனவிலன்றிக்கே நனவிலேயே அடியேனுக்கு ஸேவை ஸாதித்தருளின மணவாள மாமுனிகள் வாழ்க.
193-(மாயா துரத்யயேத்யேவம்) *மம மாயா துரத்யயா க என்று கடக்க வரிதாகக் கீதையிற் சொன்ன மாயையைத் தொலைத்தருளின மாமுனிகள் வாழ்க.
194-(தத்வார்த்தம்) ஸகல சாஸ்த்ர தத்துவப் பொருள்களையும் கையிலங்குநெல்லிக் கனியாகக் கண்டு நிஸ் ஸந்தேஹமாக உரைத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.
195-(ரஞ்ஜிதாசேஷ) எல்லாருடைய நெஞ்சையும் உகப்பித்தவரும், அகவிருளை அகற்றினவரும், அழகிய திருவாக்குக்களை யளித்தவருமான மணவாளமாமுனிகள் வாழ்க.
196-(முகபங்கஜ திருவாய்மலர்ந்தருளும் தேன்மொழிகளாலே முமுக்ஷக்
களைக் காத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.
197-(நித்யகைங்கர்ய) *சென்றாற்குடையா மித்யா திப்படியே நித்யகைங்கரியங்களிலே நிரதரான திருவனந்தாழ்வானே வந்து திருவவதரித்தவரான மணவாளமாமுனிகள் வாழ்க வாழ்கவே.
198-(மங்களாசாஸநம்) மணவாள மாமுனிகளின் திருக்குணங்கள் திகழநின்ற இந்த மங்களாசாஸந ஸ்துதியைச் சிந்தை செய்வார்க்கு நித்யஸ்ரீர் நித்யமங்கள முண்டாம் என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.
ஸ்ரீசைலேசதயாபாத்ரமங்களாசாஸன ஸ்தோத்திரம் முற்றிற்று.
200 (ச்லோ) க்ருதம் பூய பாபம் ப்ரதி கிமிதி சிந்தா பவதி வ ?
கலத்ரே தாதே வா தநய உத பந்துஷ்வபி புந:, விரக்த்யா மத்வாக்யே ருசிரிஹ பவேத்வாபரமித: கலித்வர்ந்தத்வம்ஸ் வரவரமுநிர் வோ த்ருவமவேத்– இதில் நான்கு பாதங்களிலும் க்ருத த்ரேதாத்வாபர கலியுகங்களின் பெயர் (முத்ராலங்கார ரீதியில்) அமைந்திருப்பது காண்க. (இனி கருத்துக்கேண்மின்.) ஜனங்களே! நீங்கள் செய்த அபரிமிதமான பாபத்தைப்பற்றி உங்களுக்கு ஏதுக்கு விசாரம்? மனைவி தந்தை மகன் உற்றாருறவினர் என்னுமிவர்களிடத்தில் நசையற்று என் வார்த்தையில் உங்களுக்கு ருசியுண்டாகுமா? (அப்படியானால் ) இன்று தொட்டு மெழுமையும் கலிகல்மஷத்தைப் போக்கவல்லவரான மணவாளமாமுனிகள் உங்களை அப தபாப்மாக்களாக்கி ரக்ஷித்தே தீருவர். மூன்றாம்பாதத்தில் பவேத் வாபரமித: என்றதில் த்வாபரயுகஸ்பூர்த்திகாண்க. இத பரம் மத்வாக்யே ருசிர் பவேத் வா? என்று அந்வயக்ரமம் காண்பது . மேல்வரும் நக்ஷத்ரமாலா பர்யந்த ஸ்தோத்ரங்களிலெல்லாம் இவ்வண்ணமாகவே முத்ராலங்கார ரீதியிலே ஸம்வத்ஸராதி நாமங்களின் விந்யாஸ முணரத்தக்கது.
ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோக ஷட்சதியில் இரண்டாவது சதகம் முற்றுப்பெற்றது.
ஸ்ரீ வரவரமுநி ஸம்வத்ஸரமாலாஸ்தோதாம் ஏழாவது.-ப்ரபவ முதலான அறுபது ஸம்வத்ஸாங்களின் பெயர்களை முறையே அறுபது சுலோகங்களில் அமைத்து மாமுனிகளின் திவ்ய குணாநுபவமாகச்செய்த தோத்திரமிது. இந்தத் தோத்திரத்தில் (வடமொழியமைப்பில்) இரண்டு நிர்ப்பந்தங்கள் கொள்ளப்பட்டன; (1) ப்ரபவாதி ஸம்வத்ஸநாமத்தை ச்லோகங்களின் தொடக்கத்திலேயே வைப்பது. (2) சுலோகந்தோறும் முதலில் வரும் எழுத்தையே மற்றமூன்று பாதங்களிலும் முதலெழுத்தாக வைப்பது.
201-(ப்ரபவோ பஹவஸ் ஸந்தி.) இவ்வுலகின்கண் புகழ் பெற்ற ப்ரபுக்கள் பலருளர்; இருக்கட்டுமே. மஹாப்ராஜ்ஞரான மணவாள மாமுனிகளே விவேகிகளுக்கு அத்விதீய ப்ரபுவாவர்.
202-(விபவாந் விவிதாந்ஸத்ப்ய:) மணவாள மாமுனிகளின் வைபவங்களைச்
சிந்தை செய்வதில் ஊக்கமுண்டானால் அது ஸத்துக்களுக்குப் பலவகைப்பட்ட
விபவங்களை விளைக்கவல்லதாகும்.
203-(சுக்லபக்ஷேந்துவந்நித்யம்.) மணவாள மாமுனிகளின் திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தூயமனத்தில் வைத்துச் சிந்தை செய்பவர்களுக்கு சுத்தஸத்வ குணமானது சுக்லபக்ஷத்துச்சந்திரன் போல் மேன்மேலும் வளர்ந்து செல்லும்.
204-(ப்ரமோதோதநுரஸ்மாகம்) எங்கும் புகழ்பெற்ற மணவாள மாமுனிகளின் ப்ரபாவங்களைச் சிந்தை செய்வதனால் நமது உள்ளத்தினுள் பேரின்ப வெள்ளம் பெருகுகின்றது.
205(ப்ரஜோத்பத்திக்ருதௌ நித்யம்) பரமபுருஷன் நிச்சலும் ப்ரஜைகளைப் படைத்துக் கொண்டே போவதில் வல்லவனே யொழிய, பெற்ற ப்ரஜைகளுக்கு உணவளிக்கவல்லவனல்லன்; அவன் படைத்த ப்ரஜைகளுக்கெல்லாம் உணர்வாகிற உணவையளிக்க அவதரித்தவர் நம் மணவாள மாமுனிகள்.
206(ஆங்கீரஸக்ருதாநந்தம்) மணவாள மாமுனிகள் எனக்குஆனந்தத்தை விளைவிக்கவல்ல தமது திவ்யமங்கள விக்ர திவ்யகாந்திகளை எனது நெஞ்சினுள் அடிக்கடி விளக்கிக் கொண்டே யெழுந்தருளியிருக்கிறார்.
207- (ஸ்ரீமுகாம்போஜநிர்கச்சத்) தமது முகாரவிந்தத்தில் நின்றும் வெளி வருகின்ற ஸ்ரீஸூக்திகளாகிற அமுதவெள்ளத்தைப் பெருக்குவதனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தை வளர்த்தருளாநின்ற மணவாளமாமுனிகள் வாழ்க.
208- (பவஸாகரஸந்தார்:) அன்பர்களே! ஸம்ஸாரஸாகரத்தைக் கடந்து வாழவேணுமென்று விரும்புகின்றீர்களாகில், மணவாள மாமுனிகளின் திவ்ய ஸ்ரீஸக்திகளில் பக்தி செலுத்துங்கள்.
209(யுவத்வம் ப்ராபுஷாம் மாபூத்) பாலப்பிராயத்திலும் முதுமைப்பிராயத்திலும் பெறமுடியாத நன்மைகளை யௌவனபிராயத்தில்தான் பெறமுடியும்; அந்தப் பிராயத்தைப் பெற்றிருப்பவர்களே! அதனைப் பாழ்படுத்தாமல் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைச் சிந்தனை செய்வதே உந்தமக்குத் தக்கதாம்)
210 (தாதுஸாம்யே ஸதி ஸ்வைரம்) கை நாடிகளெல்லாம் விஷமநிலையிலன்றிக்கே ஸம நிலையிலிருக்கும்போதே (நல்லகாரியங்களை ஸாதிக்கவேண்டியிருக்க. அது செய்யாதே )யதேஷ்டமாகத் தீயவழிகளிற்சென்றுழல்வதனால் என்னபேறுபெற்றதாகும்? எப்போதும் கண்டபாடமாகத் தரிக்கவேண்டியதான மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கண்டபாடமாக்கிக்கொள்ள முயலுங்கள்.
211 (ஈச்வரோ ஜகதாம் விஷ்ணு)ஜகத்துக்களுக்கெல்லாம் போஷகன்ஸ்ரீமஹாவிஷ்ணு வென்கிறார்கள்; அது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; அந்த ஸர்வேச்வரனையும் போஷிப்பவர் மணவாள மாமுனிகளேயாவர்.
212(பஹுதாங்யநேச்சாபி 🙂 தனதான்யங்களை அபரிமிதமாக ஸம்பாதிக்க வேணுமென்று எங்கும் சுழன்று திரிகின்ற ஸம்ஸாரிகளின் சிந்தையில் மணவாள மாமுனிகள் பெரும்பாலும் எழுந்தருளியிருப்பதில்லை யந்தோ!
213 (ப்ரமா திவ்யப்ரபந்தேஷ ) ஆழ்வாரருளிச் செயல்களில் யதார்த்த ஜ்ஞானம் பெற வேணுமென்று விருப்பங்கொண்ட ப்ராஜ்ஞர்கள் மணவாளமாமுனிகளின் திவ்ய க்திகளை விசேஷித்துச் சிந்தைசெய்யக்கடவர்கள்.ப்ரமாதி சஞ்சலஞ்சேதி ) கீதையில் சஞ்சலம் ஹி ம : க்ருஷ்ண! ப்ரமாதிபலவத்த்ருடம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்று(அர் னனால்) அடக்கவரித்தாகச் சொல்லப்பட்ட மனத்தை அடக்கியாண்டவர் புகழ் பெற்ற மணவாள மாமுனிகளே யாவர்.
214 (விக்ரமம் வாசி பிப்ராணா ) நா வீறு படைத்த நாவலர்களும் அஸூயை குடிகொண்ட நெஞ்சினராய் மணவாள மாமுனிகளின் பெருமைகளை மறைப்பதிலேயே குதூஹலங் கொண்டிராநின்றார்களந்தோ! .
215 (வ்ருஷபம் முநிவர்யாணாம்.) (விக்ரமவருஷத்திற்கு அடுத்தவருஷத்தை
வ்ருஷவர்ஷமென்று சிலரும் விஷ வருஷமென்று சிலரும் சொல்லுவர்கள்.
இரண்டுபடிக்குஞ்சேர இரண்டு சு லோகங்கள் விஜ்ஞாபிப்போம். (வ்ருஷ)
என்கிற பக்ஷத்திற்கு இந்த சுலோகம்.) முனிவர்களேறு என்றும் ஞானவ்ருத்த ரென்றும் புகழப்பெற்ற மணவாள மாமுனிகளை என்னுடைய ஸகலபாபங்களும் தீயினில் தூசாவதற்காகத் தஞ்சமாகப்பற்றுகிறேன்.-(விஷு என்பது வர்ஷநாம மென்னும் பக்ஷத்தில்){விஷ்வக்வ்யாபியச காய) எங்கும் பரந்த புகழ்த் திருமேனியினால் விளங்கா நின்ற நிரவத்யரான மணவாளமாமுனிகள் நூருண்டு வாழ வேணும்.
216 (சித்ரபா நுலஸத்பூ 🙂 எம்பெருமான் விசித்திரமான ஒளிகள் திகழும் திருவாபரணங்களை யணிந்து என்முன்னே நின்றாலும் அவனை விட்டு, என் சிந்தனைக்கினிய மணவாள மாமுனிகளை மட்டுமே யான் சித்தை செய்வேன்.
217 (ஸ்வபாநுபிஸ் தமோ பாஹ்யம்) கதிரவன் தனது கிரணங்களினால் வெளியிருளை மட்டும் போக்குகின்றான். பரமமதுர திவ்ய க்திகளையளித்த மணவாள மாமுனிகள் தமது திருவாக்குக்களினால் அகவிருளை அகற்றுகின்றார்.
218-.(தாரணோ பவவாராசே:) பிறவிக்கடலைக் கடக்கச் செய்பவரும்.திங்கள் போன்ற திருமுகத்தையுடையவரும், தாபத்ரயத்தையும் தணிக்க வல்லவருமான மணவாள மா முனிகள் என்னுடைய இருள்மலிந்த மதியை மாற்றி யருளவேணும். தெருள் கொள்ளச் செய்யவேணும்.
219- (பார்த்திவாந் தந்தர்ப்பாடயா ) செல்வச்செருக்குற்றபாமரப்ரபுக்களை நோக்கிச் செல்கின்றவர்கள் மணவாள மாமுகளின் பரமபவித்திரமான திருவடித் தாமரையை நோக்கிச் செல்லக்கடவர்கள்.
220 (வ்யயம் வாசாம் விதந்வந்தி) அறிஞர்களுங்கூட தங்களுடைய வாக்கை வீணாகவே அஸ்தானத்தில் விநியோகிக்கின்றார்கள்; அன்னவர்கள் தங்களது விவேக சக்தியைச் செலுத்தி, தாங்கள் படைத்த நாவீறுகொண்டு மணவாளமாமுனிகளைத் துதித்துத் துயர் தீர்வது நலம்.
221 (ஸர்வஜித் பகவாந் விஷ்ணு:) தனது மேன்மையினால் எங்கும் வெற்றி பெற்றவனான எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனாய் மணவாளமாமுனிகளுக்கு ஸச்சிஷ்யனாகி க்ருதார்த்தனாயினன்.
222 (ஸர்வதாரீ ஹரிஸ் ஸாக்ஷாத் )எல்லார்க்கும் ஆதாரபூதன் ஸாக்ஷாத் ஸர்வேச்வரனே யென்பதை நாம் மதிப்பதில்லை ; ஸர்வஜ்ஞரான மணவாளமாமுனிகளே தமது திவ்யஸூக்திகளால் அனைவர்க்கும் ஆதாரபூதராகிறார்.
223 (விரோதீதி கமப்யஸ்யாம்) இந்த நிலவுலகத்தில் ஒருவரையும் விரோதியென்று கொள்ளாதவராக ப்ரஸித்தரான மணவாளமாமுனிகள் விலக்ஷணரான ஆசாரியராவர். ( இந்த சுலோகத்தில் விபுலாயாம் – என்றது நிலவுலகத்திலென்றபடி விபுலா என்று பூமிக்குப்பெயர்; அமரகோசங்காண்க.)…
224( விக்ருதிம் யாந்தி பூயாம்:) பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்று ஆழ்வார் வெருவியருளிச்செய்த விஷயக்ராமங்களைக்கண்டு பலர் விகாரமடைகின்றார்கள்; நாம் விகாரமடைவது அவற்றலல்ல; மணவாளமாமுனிகளின் விசதவாக் விசேஷங்களாலேயாம். விகாரமடைவதாவது ககண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்தீர்ணபாஷ்பாம் புநா *காலாழும் நெஞ்சழியுங்கண் சுழலும் என்னும்படியான நிலைமை பெறுதல்.)
225 (வரா இவ விவேகாந்தா:) கழுதைகள்போல் விவேக சூநயர்களான சில தூர்த்தர்கள் மிகவும் மத்தர்களாய்க்கொண்டு மணவாளமாமுனிகளை தூஷிப்பது பொறாமை யினாலன்றோ. அதனாலென்ன ?
226(நந்தநந்தந க்ருஷ்ணேதி.).நந் தன்மைந்தனே! கண்ணனே! என்று பகவந்நாமங்கள் சொல்லுவதை யான் விட்டிட்டு மணவாள மாமுனிகளின் திரு நாமங்களைச் சிந்தை செய்வதிலேயே ஊன்றியிருந்து மகிழக்கடவேன்.
227 (விஜயோ விபுலஸ் தேஷாம்) மணவாளமாமுனிகளின் உலகமறிந்த பெருமைகளை யாவர் உபந்யஸிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்கும் வெற்றியே விளையும் ; உலகம் பரந்த புகழுமுண்டாகும்.
228.(ஜய ஏவ பவேந்நித்யம்) ‘மணவாளமாமுனியே! வாழி வாழி’ என்று உரக்க அநுஸந்திக்குமவர்களுக்கு இந்நிலவுலகில் எங்கும் ஐயமே யொழிய பராஜய ப்ரஸக்தியேயிராது
229(மந்மதாஜ்ஞாபடா: ப்ராய:) மனிசர்கள் பெரும்பாலும் மதனனது செங்கோலுக்கு ஆட்பட்டவர்களாய் ஸம்ஸாரமண்டலத்தில் மதங்கொண்டு திரிகிறார்கள். அடியேனோவென்னில், மணவாள மாமுனிகளின் திவ்யஸூக்திகளாகிற மதுவைப் பருகுவதனாலுண்டாகிற மதமுள்ள வன்.
230 (துர்மு கீதி ப்ரஸித்தாநாம்) சுடுமூஞ்சிகளென்று யாவராலும் பழிக்கப் பெற்ற துஷ்டர்களைச் சென்று துக்க நிவ்ருத்திக்காகப் பணியவேண்டா ; மணவாளமாமுனிகளின் பாலன்னமென்மொழிகளைக்கொள்ளுமளவில் கைலதுக்கங்களும் தொலையும்.
231 (ஹே விலம்பிதுமர்ஹம் ந) த்யாஜ்யோபாதேயங்களைப் பகுத்தறியவல்ல விவேகிகளே! (நான் சொல்லுவதை நிறைவேற்றுதலில் ) சிறிதும் தாமதிக்கத்தகாது. மணவாள மாமுனிகளின் பொற்றாமரையடிகளை அநாயாஸ மாகத் துதிக்கக்கடவீர்கள்.
232(விலம்பிகுண்டலோல்லாஸி) * மகரஞ்சேர் குழையிருபாடிலங்கியாடப் பெற்ற திருமுகமண்டலத்தையுடைய எம்பெருமான் என் முன்னே நிற்க வேண்டா, நின்றாலும், எங்கும் மணவாள மாமுனிகளையே காணப்பெற்ற வடியேன் அவனைக் காணகில்லேன்.
233(விகாரிதா து ஹேயேதி) விகாரமடைவதுஹேயமென்று அறிஞர்களு மறிகின்றார்கள், மணவாள மாமுனிகளின் வைபவங்களைச் சிந்திப்பதனா லுண்டாகும் விக்ருதி ஹேயமன்று; விரும்பத்தக்கதேயாகும்.
234 (சார்வரீசப்ரபாஜிஷ்ணு) திங்களொளியை வென்று விளங்கும் திரு மேனியை யுடையவரும் கூமாநிதியுமான மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி களை ஸேவிப்பதனால் ஸகல பாபங்களும் தொலையும்.
235(பலவாலாபாத் ஸதா ச) ஸம்ஸார ஸாகரத்திலழுந்தி, கரை சேர்வதற் குத்தோணி கிடைக்காமையினால் துன்புற்று வருந்திக்கிடப்பவர்கள் மணவாள மாமுனிகளின் தளிர்போன்ற திருவடிகளைத் திடமான தோணியாகபற்றுக.
236 (சுபக்ருத் ப்ரதிதோ விஷ்ணு:) நமக்கு நன்மைகள் செய்பவனென்று ப்ரஸித்தி பெற்றவனான எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்தருளவில்லை;
மணவாள மாமுனிகளே தமது திவ்ய ஸூக்திகளினால் உலகுக்கெல்லாம் நன்மை செய்து விளங்கினார்.
237-(சோபக்ருத்தாமஸாஹாரை:) தாமஸாஹாரங்களென்று கழிக்கப்பட்ட உணவுகளை யுண்டு ஊன்மல்கி மோடுபருத்தவர்களாகி வருந்தத்தக்க நிலைமையில் நிற்குமவர்கள் மணவாள மாமுனிகளின் திருமேனியழகைச் சிந்திப்பதனால் தங்கள் உடலைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுக. ச்லோகத்தில் (சோபக்ருத்] என்ற விடத்தில் இரண்டாமெழுத்து பவர்க்கத்விதீயம் –சோபமாவது தடிப்பு; அதை யுண்டு பண்ணவல்ல உணவுகள் தாமஸாஹாரங்கள் )
238-(க்ரோதீ ஜநோ வ்ருதைவாத்ர) காமம் க்ரோதம் முதலிய துர்க்குணங்களைத் தொலைக்க வல்லவரான மணவாள மாமுனிகளிடத்தில் க்ரோத பரவசர்களானார்-அஸூயைக்கு வசப்பட்டு வீணாக எதையோ பிதற்றுகின்றன
239-(விச்வா வஸுமதீ தேஷாம் மணவாளமாமுளிகளின் ஸகலவைபவங் களையும் நன்குணர்வார்க்கு பூமண்டலம் முழுதும் வசப்பட்டதாகும்
240-(பராபவ: கதாப்யஸ்மாங்) பரமபாவனமான மணவாளமாமுனிகளின் பொன்னடியாஞ் செங்கமலப்போதுகளைப் பணிகின்ற நம்மை அங்குமிங்குமெங்கும் எவ்விதமான பரிபவமும் அணுகாது.
241- (ப்லவம்கவேஷமாணா யே) பிறவியென்னுங்கடலில் தோணி பெரு
துழல்கின்றவர்கள் மணவாளமாமுனிகளைத் தோணியாகப் பற்றினால் வானரமுதலி
கள் கடலைக்கடந்தது போல் பிறவிக்கடலை அநாயாஸமாகக் கடக்கவல்லராவர்.
242(கீலகோத்பாடநோத்யுக்த.) கீலோத்பாடீவ வாநர: என்னும் நியாயத்தின்படி (அதாவது, வெறுமனே யிருக்க மாட்டால் தன்னுடைய அனர்த் தத்தைத் தானே விளைவித்துக் கொண்டதொரு குரங்கின் கதையின்படி) சில பாமரர்கள் தங்கள் விபத்தைத் தாமே தேடுகிறவர்களாய் மணவாளமாமுனிகளைப் பழிக்கப் புகுகிறார்கள் அந்தோ !
243. (ஸௌம்யஜாமாத்ருபகவாந்) ஸௌம்ய ஜாமாதா ‘ என்று திருநாமம் பெற்ற அழகிய மணவாளன் மணவாளமாமுனிகள் பக்கல் மிகவழகிய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டுதிவ்யமான தனியனை வெளியிட்டருளினான்.
244 (ஸாதாரணாஹ்வயே வர்ஷே) பகவத்ராமாநுஜரான எம்பெருமானார் ஸாத்விகர்களை நன்கு காத்தருளவேண்டி ஸாதாரண ஸம்வத்ஸரத்தில் மணவாள மாமுனிகளாக மீண்டும் அவதரித்தனர்.
245 (விரோதிக்ருத்ஸ்நம் துர்த்வாந்தம்) விசத வாக்சிகாமணிகளான மணவாள மாமுனிகள் உண்மையுணர்ச்சிக்கு இடையூறான அகவிருளை யெல்லாம் நிரஸிக்க வேண்டி விலக்ஷணனான ஸூர்யனென்னும்படி தோன்றியருளினார்.
246 (பரிதாவீமுஹர்ஜந்ம) ஜன்மபரம்பரைகளிலேயே தோள்மாறித் திரிகின்ற பாமரஜனம் மணவாளமாமுனிகளின் செய்யதாமரைத் தாளிணையை ஸேவித்து இடர்நீங்கி மகிழ்கின்றது.
247 (ப்ரமாதீ சாதாஜ்ஜந்து: சிலர் மஹாப்ரலயமாகும்வரையில் அவதான மற்று ஸம்ஸார ஸாகரத்தில் சுழலட்டும்; என்றேனுமொருநாள் மணவாளமாமுனிகளிடத்தில் ப்ராவண்யங் கொள்ள நேர்ந்தால் அன்றோடு துயர்தீர்ந்ததாம்.
248(ஆநந்தமமிதம் திவ்யம்) அளவு கடந்த ப்ரஹ்மானந்தத்தைஅடையவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரைகளை அன்போடு ஆராதிக்கக் கடவர்கள்.
249 (ராக்ஷஸாநாம் வதாயைவ) சக்ரவர்த்தி திருமகனார்அரக்கர்களை யழிக்கும் பொருட்டே அவதரித்தனர்; இளையபெருமாள் பாபிகளையும் காத்தருள்வதற்காக மணவாளமாமுனிகளாக வடிவெடுத்தார்
250– (நலக்ஷ்யம் யமதூதாநாம்) மணவாளமாமுனிகளைத் தொழுமவர்கள்,
நரகங்களில்- நகங்கள் ஆயுதங்கள் முதலானவற்றால் நலியுமவர்களான யமதூதர்
களுக்கு இலக்காகமாட்டார்கள்.
251-(பிங்கலாக்ரீதஸோமோத்தம் ) சுவர்க்கம் புகவேண்டி யாகஞ்செய்பவர்கள் ஸோமபானம் செய்வர்கள் ; அதற்காக ஸோமலதை ஸம்பாதிக்க வேண்டும்;-ஸோமலதையைக் காட்டிலிருந்து தாமாகக் கொண்டுவரக்கூடாது; * பிங்கலயைக ஹாயந்யா ஸோமம் க்ரீணாதி* என்று வேதத்தில் ஓதியிருக்கிறபடி பிங்கலவர்ணமான பசுவை விலையாகக்கொடுத்து ஸோமலதையை வாங்கவேணும். இத்தகையபரிச்ரமங்களைப் பிறர்வஹித்து ஸோமபானம் செய்யட்டும்: நாம் மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியமுதத்தைப் பருகிப்பூரித்திருக்கிறோம்.
252(காலயுக்திரசேஷாணாம்) மனிதர்காள்! அனைவர்க்கும் என்றேனுமொரு நாள் காலனோடு கூடவே நேரும்; வாழ்நாளில், என்றேனு மொருநாள் மணவாள மாமுனிகளின் கருணைக்கு இலக்காகிக் களித்திருங்கள்.
253-(ஸித்தார்த்தித்வம் து நைவாத்ர) உலகில் யாவர்க்கும் ஸாத்ய வஸ்துக்களில் அபேக்ஷை யுண்டாகுமே யொழிய ஸித்தவஸ்துக்களில் அபேக்ஷையுண்டாகாதென்று கொண்டு பிறர்ஸித்தோபாய பூதனான எம்பெருமானிடத்தில் அவிஸ்ரம்பத்தாலேஸாத்யோபாய விச்வாளிகளாகித் தடுமாறுகின்றனர். நாம் அப்படியன்றிக்கே மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸக்தியடியாக ஸித்தோபாயத்தின் கையையே பார்த்திருக்கின்றோம்.-(ஸித்தார்த்திதா யதி ஸ்ரீமத்) மணவாள மாமுனிகள் பக்கலிலே [அர்த்திதாஸித்தா யதி] அர்த்தித்வம் ஸித்திக்குமானால்- யாசிப்போமாகில்; ஸகலமான புருஷார்த்தங்களும் ஸித்தித்தே தீரும்; இது தடையற்ற ஸித்தாந்தம்.
254-(ரெளத்ரீம் தநுர்லதாமல்பாம் )இராமபிரான் அற்பமானதொரு சிவதநுஸ்ஸை யிறுத்தானென்பது பெரிதா? மணவாள மாமுனிகள் மிகக்கொடிய நமது ஸம்ஸாரப் புதர்களையெல்லாமன்றோ அரிந்து பொடுகிறார்.
255(துர்மதித்வம்ஸநீஸ் ஸூக்தீ:) மணவாளமாமுனிகள் தீயபுந்தியைத்
தொலைக்கவல்ல திவ்ய க்திகளை யளித்தருளினார். பிறர் அவற்றில் குறை
கூறிப்பாவங்களைக் கூடுபூரித்துக் கொள்கின்றனர்.
256-(துந்துபித்வா தத்துல்யை:) தோ ஷலவலேசமுமற்றுக் குணக்கடலாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளின் மீது தூஷணோக்திகளைப் பறையடிக்கின்ற பாவிகளை வையஞ்சுமப்பதும் வம்பு.
257-(ருதிரோத்காரி பாணொளகாந்) எம்பெருமான் (அவதாரங்களில் உதிரமொழுக நின்ற கொடியசரங்களைத்தான் வீசியெறியவல்லவன்; மணவாளமாமுனிகள் மதுரமான திவ்ய க்திகளாலே அநுகூலரோடு ப்ரதிகூலரோடு வாசியற எல்லாரையும் வசப்படுத்தியருள்கின்றார்.
258- (ரக்தா ப்ரம் ரஸஜ்ஞா மே ) என்னுடைய நாவானது எம்பெருமானைத்துதிப்பதை விட்டிட்டு அல்லும்பகலும் மணவாள மாமுனிகளைத் துதிப்பதிலேயே விரைந்து ஆசைக்கொண்டு கிளர்கின்றது.
259- (க்ரோதநோ தாருணோ மூர்க்க) மணவாளமாமுனிகளைத்தொழுமவர்
களின் வம்சத்தில் தோன்றுமவர்களெல்லாரும் ஸௌம்யமுகர்களாயும் நன்மை
செய்பவர்களாயும் சதுரர்களாயும் ஜனிப்பர்களேயொழிய ஒருவரும் மாருகத்
தோன்றார்.
260(அக்ஷயாஸ் ஸம்பதஸ் ஸாவா ) இங்குமங்கும்நீங்காத செல்வங்களையெல்லாம் நிறையப் பெறவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸம்வத்ஸர மாலாஸ்தோத்ரத்தை அநுஸந்திக்கக் கடவர்கள்.
ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் ஸம்வத்ஸரமரலாஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.
ஸ்ரீ வரவரமுநி அயநமாலா ஸ்தோத்ரம்-எட்டாவது.
261(பவாப்திஸந்தாரணதக்ஷிணா.) பிறவிக் கடலைக் கடத்த வல்லவைகளும் அமுதம் போன்றவைகளுமான சிறந்த திவ்ய ஸூக்திகளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தைவிட்டு அகலகில்லே னென்றிருக்கிறார். (இது தக்ஷிணாயன ச்லோகம்.)
262- (ஸர்வோத்தர ஸ்ரீ சடவைரிவாசாம்) லோகோத்தரமான நம்மாழ்வாரருளிச்செயலின் பரமபோக்யமான பொருளை ஸமய விசேஷத்தில் திருவாய்மலர்ந்தருளி ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ஸ்ரீ சைலேசத்தனியனைப் பெற்றவரான
மணவாள மாமுனிகளே பரத்தைவம். (இது உத்தராயண ச்லோகம்.)
263-(அயநநாம நிவேச்ய.) தக்ஷிணாயனோத்தராயண நாமங்களை யிட்டு மணவாள மாமுனிகளின் துதியரக இயற்றப்பட்ட அயநமாலாஸ்துதியை உள்ளத்துக் கொள்ளுமவர்களுக்கு எம்பெருமான் இங்குமங்கும் அன்போடு நல்வழி நல்குவன் காண்மின்- என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று
264- இங்ஙனே அபூர்வமாயும் விலக்ஷணமாயுமுள்ள துதிகளை மணவாள
மாமுனிகள் விஷயமாக விஜ்ஞாபனம் செய்துபோருமடியேனே க்ருதார்த்த ஜன்மா.
ஸ்ரீ வரவரமுந்யயநமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.
ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ச்லோகஷட்சதியில்-ருதுமாலா ஸ்தோத்ரம் ஒன்பதாவது-வஸந்தருது முதல் சிசிரருதுவீருக ஆறுருதுக்களின் பெயரையும் உள்ளீடாகக்கொண்டமாமுனிகளின் துதி.)
265-(ஸதைவஸந்த:) மணவரளமாமுனிகளின் திருவடியிணைகளையே எஞ்ஞான்றும் சிந்தை செய்பவர்களான ஸத்துக்கள் என்னுள்ளத்துள்ளே உறைபவர்களாகி எனக்குச்சிறந்த மகிழ்ச்சியை விளைத்து அருள்புரியக் கடவர்கள்.
266- (ஹாஹா! பவக்ரீஷ்மவிசேஷதப்தா:) ஸம்ஸாரமாகிற கொடியவேனிலில் தாபமுற்றவர்கள் விரைவில் ஸகல தாபங்களினின்றும் விடுபடுவதற்காக
மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரை நிழலிலொதுங்கிக் களிப்பார்களாக.
267-(ஸ்ரீமச்சடாராகி.) ஆழ்வாரெம்பெருமானார் முதலான பூர்வாசார்யர்
களனைவரும் திரண்ட திருவவதாரமான மணவாளமாமுனிகள் அன்பர்களுக்கு
இனியராய்க்கொண்டு பல்லாயிரமாண்டு வாழ்க.
268- (ஸ்ரீமத்வசோபூஷண.) ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு வியாக்கியான மருளிச் செய்தது முதலானவற்றாலே பரந்த புகழ்பெற்றவரும் யதீந்த்ரப்ரவணருமான மாமுனிகள் இவ்வுலகில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
269- (யோகீந்த்ர! ஹேமந்தரி.) மணவாள மாமுனிகளே! மிகச்சிறந்த மந்த்ரமான தேவரீருடைய தனியனை ஸதா அநுஸந்தித்து வருகின்ற அடியேன் பால் காருண்ய மாருதாநீத கடாக்ஷ தாரைகளைப் பெருக்கிப் பல பல நன்மைகளை மேன் மேலும் வளரச் செய்தருளவேணும்.
270-காருண்யபூரைச் சிசிராந்தரங்க) தி ரு வருள் வெள்ளங்களினால் குளிர்ந்த திருவுள்ள முடையவரான மணவாளமாமுனிகள் இப்போது போலவே எப்போதும் தமது திருக்கல்யாண குணங்களை ய நுஸந்திப்பதிலேயே அடியேளைக் குதூஹலமுடையேனாகச் செய்தருளவேணும்.
ஸ்ரீமத் வரவரமுநிருதுமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.
(ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோகஷட்சதியில் பத்தாவதான.)மாஸமாலா ஸ்தோத்ரம்
(மேஷ மாஸம் முதல் மீன மாஸமளவும் பன்னிரண்டு மாதங்களின் நாமங்களை உள்ளீடாக்கி மணவாளமாமுனிகளைத் துதிப்பது.)
271- (கலா நா மேஷ ஸர்வாஸாம்) ஸகல கலைகளுக்கும் நிதி போன்றவரான நம் மணவாளமாமுனிகள் அருள் கூர்ந்து எஞ்ஞான்றும் என்னுள்ளத்துள்ளேஉறைவாராக.
272- (வலாநாம் மநாயை ) புருஷர்ஷபரென்று கொண்டாடத்தக்க வரும் தீயவர்களைத் தணிப்பதற்காகவே இந்நிலவுலகில் அவதரித்தவருமான மணவாளமாமுனிகள் மேன்மேலு மோங்குக.
273- (கதிரேஷ பணீந்த்ரோந ) திவ்ய தம்பதிகளின் திவ்யாஜ்ஞையினாலே
மணவாள மாமுனிகளாகத் திருவவதரித்து நம்மை வாழ்வித்தருளின திருவனந்
தாழ்வான் தான் நமக்குப் புகல்.
274- (சரந்து வக்ரகதய 🙂 கர்க்கடே குடிலா கதி: என்கிறபடியே நண்டுகள் போலே குடிலகதியையுடையரான சிலர் அப்படியே திரிந்துழலட்டும்; மணவாளமாமுனிகளின் பக்தர்களிடத்திலே ரு கதியுள்ளதென்பது உலகறிந்தது.
275- (ஜந்மமருத்யுஜராவ்யாதி) பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளுக்கு அஞ்சி
யிருப்பவர்கள் ஸ்ரீமத் வரவரமுநிஸிம்ஹத்தினுடைய திருவருளையே தஞ்சமாகக்
கொள்ளக்கடவர்கள்.
276- (ஐரீம் கவேரகங்யாயா 🙂 காவிரியின் பெருக்கையும் மந்தமாக்கவல்ல
தம்முடைய ஸ்ரீ ஸூக்தி ராசிகளினால் இந்நிலம் முழுவதையும் புனிதமாக்க வல்ல
மணவாளமாமுனிகள் வாழ்க.
277-(தநோது வரயோகீந்த்ர.) ஆசார்ய ஹ்ருதயத்தின் சீரிய பொருள்களெல்லாம் அடியேனுள்ளத்தில் தங்குமாறு மணவாளமாமுனிகள் எனக்கு ஒப்பற்ற அருளைச் செய்தருள்க.
278- ாருணா ( வ்ருச்சிக ப்ராயா 🙂 தேள்களைப் போன்று விஷத்தைக் கக்குமவர்களான சில கொடியவர்கள் இந்நிலத்தைக் கெடுப்பவர்களுளர்; அன்ன வர்கள் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளினால் திருத்தம் பெறுக
279- (தநுஷா பகவாந் சத்ரூந்) எம்பெருமான் அவதரித்து “வில்லாலிலங்கைமலங்க” என்னும்படி அஸ்த்ரசஸ்த்ரங்களாலே பகைவரை வென்றானென்பதில் என்ன வியப்பு? மணவாளமாமுனிகள் தமது திருக்குணங்களினாலேயே உலகை வென்றாராயிற்று.
280- (பரம் தாம கரக்ராஹ்யம்) நலமந்தமில்லதோர் நாட்டை அஸ்மதாதிகளுக்கும் கைக்கு எட்டினதாகப் பண்ணுகைக்கே எம்பெருமான் மணவாளமாமுனிகளைத் திருவவதரிப் பித்தருளினான்.
281- (பகவாந் கும்பஸம்பூதி:) கும்பஸம்பவரான அகஸ்த்யர், பராசரர், வியாஸர் இத்யாதிகளான முனிவர்களிற்காட்டிலும் மணவாளமாமுனிகள் மிகச் சிறந்த முனிவராவார்.
282- (யே படந்தி.) ஸ்ரீவரவரமுனிமாஸ மாலையென்னும் இந்த ஸ்துதியை மகிழ்ந்து ஓதுமவர்கள் யாவரோ, அந்த இந்த பக்தர்கள் ஒருபோதும் இறையும் இடர்ப்படார். (ச்லோகத்தில் “‘அமீ ந ஜாதுசித்” என்றவிடத்தில் மீ நமாஸ ஸ்பூர்த்திகாண்க.)
ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் மாஸமாலாஸ்தோத்ரம் முற்றிற்று.
பதினூேராவது பக்ஷமாலா ஸ்தோத்ரம்.
283-(யுகலம் வரமுநி.) மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரையிணையை
நிச்சலும் சிந்தை செய்பவர்கள் தங்களது கீர்த்தியினால் இவ்வுலகத்தையெல்லாம்
வெண்ணிறமாக்க வல்லவர்களாவர்.
284-(ஸ்யூதாம் வரவரமுநிவர.) மணவாளமாமுனிகளின் திருக்கல்யாண
குணங்களாகிற முத்துக்களால் கோக்கப்பட்ட இந்த ஸ்துதிமாலையை எப்போதும்
கண்ட பூஷணமாகக் கொள்ளுமளவில் ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உங்களுக்கு
மங்களங்களை யளிப்பன்.
285- (பக்ஷமாலாமிமாம் வாசி.) இந்த வரவரமு நிபக்ஷமாலாஸ்துதியைத்
திருந்தச் சொல்லுமவர்கள் பக்கலில் எம்பெருமான் ப பாதியாயிருப்பன?
மார்பாரப் புல்கியும் அருள்வன்.
ஸ்ரீமத்வரவர முநீத்த்ரஷட்சதியில் பக்ஷமாலாஸ்துதி முற்றிற்று.
ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ஷட்சதியில் பன்னிரண்டாவதான ஸ்ரீவரவரமுநி திதிமாலா
(இந்தஸ்தோத்ரம் வடமொழியில் எழுத்தந்தாதியாக அமைக்கப்பட்டது.)
286-(ஸ்ரீமதி வரவரயோகிநி)-ப்ரதமை அத்புதமான வைதுஷ்யத்திற்கு நிதியான மணவாளமாமுனிகள் பக்கலில் பக்தியுள்ளவர்கள் யாவரோ அவர்கள்
ஸாத்விகர்களின் திரளில் தவருமல் ப்ரதமஸ்தானத்தில் எண்ணப்படுவர்கள்.
287-(நச்வரபுமர்த்தவாஞ்சாம்) த்விதீயை – நச்வரங்களான புருஷார்த்தங்களில் ஆசையை விட்டுத் தொலைத்து மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் அன்புமிக்கவர்கள் யாவரோ அவர்களுக்கு அத்விதீயமான நற்புகழ்விளையும். (சுலோகத்தில் நான்காம் பாதத்தில் சுபகீர்த்தி ரத்விதீயாஸ்யாத் என்பதில் த்விதீயாஸ்பூர்த்தி காண்க.)
288-(ஸ்யாதிஹ வரவரயோகீ த்ருதீயா -மணவாள மாமுனிகளின் யாதொரு கருணையின் கனத்தினால் உள்ளே மூன்றாவது கண் (ஞானக்கண்) விகளிக்குமோ, அப்படிப்பட்ட கருணையை அவர் எஞ்ஞான்றும் என் பக்கலிலேயே செய்தருளவேணும்.
289 (திமிரம் நிரஸிதுமவநெள .) சதுர்த்தீ- இவ்வுலகின் கண் அகவிருளை அகற்றுவதற்காக ஸமய விசேஷங்களில் வந்து திருவவதரிக்கின்ற திருவனந்தாழ்வானுடைய நான்காவது மூர்த்தியான மணவாளமாமுனிகளை எஞ்ஞான்றும் வழுத்துவோம்.
290ஏதத்ப்ரபஞ்சமீச 🙂 – பஞ்சமி -இந்தப்ரபஞ்சத்தை ஸர்வேச்வரனென்று பேர்படைத்த எம்பெருமான் ரக்ஷித்தருள்கிறானென்பது உண்மையன்று; வஸ்து ஸ்திதியில் மணவாளமாமுனிகள்தாமே தமது திவ்ய க்திகளினால் உலகையெல்லாம் காத்தருள்கின்றார்.
291- (க்ஷித்யாம் வதந்தி போக்யம் – ஷஷ்டீ-இந்நிலவுலகில் பஞ்சாம்ருதமென்கிற போக்ய வஸ்து இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; அஃதிருக்கட்டும்;மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்தியானது ஆறாவதான அம்ருத தாரை யென்பது திண்ணம்.
292- (தமிதேந்த்ரியா : ப்ரஸித்தா:. ஸப்த மீ- ஜிதேந்த்ரியர்களென்று பேர் பெற்ற ஸப்தரிஷிகளும் கருப்புவில் மலர்க்கணைக்காமவேளுக்கு இலக்கானவர்களே ; மணவாளமாமுனிகளொருவரே விரக்தமு நிஸார்வபௌமர்.
293- (யஸ்யாஷ்டமீந்துஸந்கிப)-அஷ்டமி அஷ்டமீ சந்திரன் போன்ற தமது திருநெற்றியில் விளங்கும் ஊர்த்வபுண்ட்ர ரேகையே நெடுநாளாக ஸகல திவ்ய தேசத் தெம்பெருமான்களும் உகந்து அணிந்து கொள்வதென்னும்படியான மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.
294-(கீர்வாணவாசி ஸததம்)- நவமீ-ஸம்ஸ்க்ருதபாஷையில் இங்ஙனேபுதிது புதிதான ஸ்துதிகளை விண்ணப்பஞ் செய்து கொண்டு மணவாளமாமுனிகளுக்குத் தொண்டுபூண்டமுதமுண்பவனாக வா க்கடவேன்.
295(சய்ாமபி சேதிஹ தசமீம்) – தசமி- அடியேன் மாளுமோரிடத்திலும் எனது நெஞ்சம் மணவாளமாமுனிகளின் சிந்தனையையிழவாமலிருக்கவேணும்
296- ( துஷ்யந் விவேகரேகாத். ஏகாதசி வடமொழிவேதத்தைப் பூர்த்தியாக ஓதினவர்களுக்கு அ தி அத்யாயிகளென்று பெயர் வழங்கும்; அந்தப்பெயர் பெறுவதனால்மட்டும் பயனில்லை; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளில் வல்லமை பெற்றுவிட்டால் ஸர்வஜ்ஞதை யுண்டாகும்.
ஸாதாரணத் திருமூலமலர்-ஸாதாரணவாண்டு ஐப்பசித் திருமூலதன்னாள்.-3-11-1970
புண்யாபபோஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாயச, ஸ்ரீமாந் ஆவிரபூத்பூமெள ராமாநுஜ திவாகர ” என்றபடி எம்டெருமானாராகிற விலக்ஷண ஸ் ர்யன் இவ்வுலகில் திருவவதரித்து “கடலளவாய திசை யெட்டினுள்ளுங் கலியிருளே, மிடைதரு காலத்திராமானுசன் – மிக்க நான் மறையின் சுடரொளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை யுடையவன்
நாரணனென்று அறிவாரில்லை யுற்றுணர்ந்தே” என்ற அமுதனாரருளிச்செயலின்படியே மஹோபகாரம் செய்தருளும்படியாயிற்று. “தற்கச்சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும், நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும்மாண்டனர் நீணிலத்தே. பொற்கற்பகம் எம்மிராமானுசமுனி போந்த
பின்னே’ என்கிறபடியே ஸம்ஸ்க்ருத வேத பாஸ்குத்ருஷ்டிகளையெல்லாம் தம் ஒக்தி சரங்களாலே நிரஸித்தருளி,”வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும், ஈன்ற முதல் தாய் சடகோபன். மொய்ம்பால் வளர்த்த இதத்தாய்
இராமாநுசன்” என்னும்படியாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் ப்ரவர்த்திப்பித் தருளி, திவ்யதேசங்களையும் உத்தரிப்பித்து ஒருவாறு அவதார க்ருத்யத்தைத் தலைக்கட்டிக்கொண்டு சுடரொளிச் சோதிக்கு எழுந்தருளினபின், சிலகாலம் கடந்தபிறகு, அவ்வவதாரத்தில் சிதைந்தொழிந்த ஸம்ஸ்க்ருத வேத பாஹ்யகுத்ருஷ்டிகள் தாமே மீண்டும்
த்ராவிட வேத பாஹ்ய குத்ருஷ்டிகளாக ஜனித்து இவ்வுலகை நலியஅந்தஎம்பெருமானார் தாமே மீண்டும் வைகுந்தநாதனுடைய திருவாணையினால் இந்நிலவுலகில் திருவவதரித்து மணவாள மாமுனிகளென்கிறதிருநாமத்துடனே விளங்கி, முன்னவதாரத்திற் செய்த ளின மஹோபகாரங்களிற் காட்டிலும் பன்மடங்கு அதிசயித்தசேமங்களைச் செய்தருளி
இவ்விருள் தருமா ஞாலத்தைத் தெருள் தருமா ஞாலமாகத் திருத்திப்பணிகொண்டார். அவ்வாசார்ய சிகாமணியின் எண்ணில் பல் குணங்களைக் கூறுதற்கு அவர் தம்முடைய நிஜரூபமான ஆதிசேஷனும்அசக்தன் என்கிறவிது அதிசயோக்தியன்று
மதுரேண ஸமாபயேத் என்பது நியாயமாதலால் மாதுர்யமே வடிவெடுத்த மாமுனிகளோடு பூர்வாசார்ய பரம்பரையை எம்பெருமான் ஸமாபநம் செய்தது மிகப்பொருந்தும். மதுரம்
என்கிற வடசொல்லானது, ‘மகாரத்தை முன்னே யுடையது’ என்னும் பொருளையு முடைத்தாதலால் மகாராதியான திருநாமமணிந்த மணவாளமாமுனிகளோடே ஸமாபநம் செய்தருளின பகவான் ஸுஸமர்த்தனே.-*மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிற லயோத்தியெம்மரசாயும் கோவலனாய் வெண்ணெ யுண்டவாயனாயு முள்ள அழகிய மணவாளனான திருக்கோலத்தில், ஆசார்யத்வபூர்த்தி யுள்ள மணவாள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யவருத்தியை வஹிந்து க்ருதார்த்தனானான். இத்தகைய ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த மாமுனிகளின் வைபவம் ஸ்ரீ வைஷ்ணவஉலகுக்கெல்லாம் ஜீவாது-திருவனந்தாழ்வான் நல்லார் நவில் குருகூரெங்கிற ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடைய பிரான் தா ஸரண்ணர்என்கிறமஹாசா யனை-பிதரம்ரோசயாமாஸ என்கிற கணக்கிலே தந்தையாக வுகந்து அவருடைய திருக்குமாரராய் (கலியுகாதி
நாலாயிரத்து நானூற்றெழுபத்திரண்டாவதான ) ஸாதாரண வருடத்தில்
ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்திரத்தில் அந்தத் திருநகரியில் திருவவதரித்தருளினான்.
-இங்ஙனே உலகுக்கெல்லாம் ஓருயிராகத் திருவவதரித்தருளின திவ்யமூர்த்திக்கு ஸ்ரீரங்கநாதனுடைய திருநாமத்தைச் சாத்த விரும்பிய பெரியார் ‘அழகிய மணவாளன்’ என்று திருப்பெயரிட்டனர். அழகிய மணவாள நாயனார் என்று சிறப்புத்திருநாமமாக வழங்கி வந்தது.
அருகேயிருந்த முதலிகள்,
“வல்லார்கள்வாழ்த்துங்குருகேசர் தம்மை மனத்துவைத்துச்
சொல்லாரவாழ்த்தும் மணவாளநாயனார் தொண்டர்குழாம்
எல்லாந்தழைக்க எதிராசவிம்சதியின்றளித்தோன்
புல்லாரவிந்தத்திருத்தாளிரண்டையும் போற்றுநெஞ்சே’-என்ற பாசுரத்தை விஜ்ஞாபித்தனர்.
அழகிய மணவாள் நாயனார் இங்ஙனே ஆசார்ய பரதந்திரராய் வாழ்ந்தருளாநிற்க, கூரார்ணவத்தில் சந்திரன் போலே ஒரு திருக்குமாரர் திருவவதரித்தார். அவர்க்கு இராமாநுசப்பிள்ளை என்று திருநாமமிடும்படி ஆசார்ய நியமனத்தையடியொற்றி நாயனார் நியமித்தருளினார்.-அப்ரதிம சிஷ்ய ஸம்பத்தோடே வாழ்ந்தருளாநின்ற திருவாய்மொழிப்பிள்ளை திருமேனி தளர்ந்து திருநாட்டுக் கெழுந்தருளுகையிலே விருப்பமுடையராய்
“உத்தமனேயுலகாரியனே! மற்றெப்பாரையில்லா
வித்தகனே நல்லவேதியனே! வண்முடும்பைமன்னா
சுத்தநன்ஞானியர் நற்றுணையே சுத்தசத்துவனே!
எத்தனை காலமிருந்துழல்வே னிவ்வுடம்புகொண்டே.”என்று அநுஸந்தித்துக் கொண்டிருக்க, ஒருநாள் கனவிலே பிள்ளை லோகாசாரியர் ஸேவை ஸாதித்தருளி ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் “என்று பணிக்க, பிள்னையும் தேறியெழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிக்கொண்டு முதலிக ளெல்லாரையும் வரவழைத்து “இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” ‘வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே,நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே!‘ என்ற பாசுரங்களைப் பரக்க வுபந்யஸித்தருளி, ‘முதலிகாள்! இன்று எம்பெருமான் நம்மை ஆசாரியன் திருவடிவாரத்திற்கு அழைத்துக் கொள்வதாகத் திருவுள்ளம் பற்றியிரா நின்றான்; இனி நீங்க னை வரும் நம் அழகிய மணவாள நாயனாரை (மாமுனிகளை)ஸாமாந்யமாக ரதிபத்தி பண்ணியிராமல் நம்மிராமானுசனுடைய அபராவதாரமே யிவர் என்று ப்ரதிபத்தி பண்ணி`இவருடைய அபிமானத்திலே யொதுங்கி வாழ்வீராக” என்று நியமித்தருளி, நாயனாரையும் ஆசார்யபீடத்திலே எழுந்தருளச்செய்து, “வாரீர்குலக்கொழுந்தே! * ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸ தா, ஸீதா பர்த்தார மாஸாத்ய ராமம் தசரதாத்மஜம் என்று ஜநக சக்ரவர்த்தி பாரித்தாப் போலே நானும் உம்மை அண்டை கொண்டு கனக்கப் பாரியா நின்றேன்-நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநம் உம்மாலே பரம விலக்ஷணமான-பெருமையையும்புகழையும் ப்ராப்தமாகக்கடவது; *ச்ரேயாம்ஸி ஸர்வாண்
ய ஜக்முஷஸ் தே என்றாப்போலே ஒன்றிலுங் குறையில்லாத வுமக்கு இனி நாம் ஆசாஸிக்கவேண்டுவதொன்றில்லை. என் உள்ளத்திலே கிடந்த குறையைப் பண்டே உமக்குப் பேசிநின்றேன்; அக்குறைதீரஇன்றுகாறும் நீர் நடந்துவந்ததுபோலவே இனியும் நம் பூர்வசார்ய திவ்யாக்ரந்த ரவசநாநுபவங்களே போதுபோக்காக இருந்து வரக்கடவீர்; நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஒருமிடறாக மண்டியிருந்து தர்சந நிர்வாஹம் செய்தருளினவிடம் திருவரங்கம் பெரியகோவிலாதலால் நீரும் அவ்விடத்தேறச்சென்று முந்தின அவதாரத்திற் போலவே அறுசமயச்செடிய தனை யடியறுத்துச் செறுகலியைச் சிறிது மறத் தீர்த்துவிட்டுத் தென்னரங்கர் செல்லமுற்றுந் திருத்திவைத்து மறை யதனிற்பொருளனைத்தும் வாய்மொழிந்து மாறனுரை செய்ததமிழ்மறை வளர்த்து இந்த லீலாவிபூதியை நித்யவிபூதியாகவே ஆக்கிக்கொண்டு போரக்கடவீர்” என்று நாயனாரை நோக்கி நியமித்தருளி, அநந்தரம்ஸந்நிதிக்கெழுந்தருளிப் பொலிந்துநின்ற பிரானையும் ஆழ்வாரையும்மங்களாசாஸநம் செய்தருளி முதலிகளெல்லாரையும் நாயனார் திருக்
கையிலேகாட்டிக்கொடுத்துத் திருமாளிகையேற வெழுந்தருளிப் பிள்ளையுலகாசிரியர் திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டே திருநாட்டுக்கெழுந்தருளினார். நாயனார் தொடக்கமான முதலிகளெல்லரும்அவர்க்குத் திருவத்யயநாந்தமான சரம கைங்கர்யங்களைப் பெருக்கநடத்தினார்கள் .
வானமாமலையிலே மஹாஜ்ஞாநாதிகராயெழுந்தருளியிருந்த அழகிய வரதர் பரம விரக்தியினாலே ஆச்ரமஸ்வீகாரஞ் செய்து ஸ்ரீராமாநுஜஜீயர் என்று திருநாமம் பெற்று நாயனார்திருவடிகட்கு நிழலுமடிதாறும் போலே மிகவுமணுக்கராய் வந்து சேர்ந்து
வாழ்ந்தார். இவர்க்குப் பொன்னடிக்கால்ஜியர் என்றும் திருநாமம் வழங்கிவந்தது.-“ஸ்ரீமாந் ஸ்ரீபாஷ்யகாரோஸௌ பூதலே புநருத்தித:,
இதி நீச்சித்ய ஸந்துஷ்ய ப்ராவண்ய மதுலம் ததே.”-என்கிறபடியே நாயனாரை எம்பெருமானாருடைய புநரவதாரமாகவே அறுதியிட்டுப் பரிஜந பரிபர்பரிச்சத புரஸ்கார விசேஷங்களுடனே ஸந்நிதியில் மங்களாசாஸநம் நடைபெறுமாறு ஸம்விதாநம் செய்து வைத்தார்.-பலபல பரிவாரங்களுடன் ஸந்நிதி மங்களாசாஸனத்திற்கு எழுந்தருளின நாயனார் முந்துறமுன்ளம் எம்பெருமானார் ஸந்நிதியிலே விடைகொண்டு ஸேவித்து உடையவர் திருக்கோலத்திலே மிகவும் ஈடுபட்டு,
“இவ்வுலகந் தன்னி லெதீராசர் கொண்டருளும்
எவ்வுயிரும் யான்சென்றிறைஞ்சினக்கால் அவ்வுருவம்
எல்லா மினிதேனு மீவ்வரங்கத் திற்போல
நில்லாதென் னெஞ்சில் நிறைந்து--என்கிற பாசுரத்தை அங்கு விண்ணப்பஞ்செய்து, பிறகு ஸபரிவாரரான பெரிய பெருமாளை அடைவே மங்களாசாஸனஞ் செய்து திருமாலை அமலனாதிபிரான் முதலான திவ்யப்ரபந்தங்களையும் ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலானஸ்தோத்ரங்களையும் அநுஸந்தித்துக்கொண்டு நம்பெருமாள் திருமுன்பேநிற்க, பெருமாளும் நாயனாரைக் குளிரக் கடாக்ஷித்தருளி நமக்காவாரை நாமே தேடிக்கொண்டோம்; நம்முடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் இன்றே குறையற்ற தாய்த்து” என்றருளிச் செய்து ஸகல வரிசைகளும் ப்ரஸாதித்தருள், நாயனாரும் பெற்று க்ருதார்த்தராய், பெரியார்க் காட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு” என்று அண்ணனார் விஷயத்திலும் பட்டர் விஷயத்திலும் க்குதஜ்ஞதாநுஸந்தாநம் பண்ணிப் பேருவகையோடே திருமாளிகைக் கெழுந்தருளினார்.
விடுதியாகப் பல பாசுரங்கள்-”இதுவோ பெரும்பூதூர் இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத் தீர்த்தார்-இதுவோதான்
தேங்கும் பொருநல் திருநகரிக்கொப்பான
ஒங்கு புகழுடைய வூர்.”
எந்தை யெதிராசர் எம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில் வந்தோமோ-சிந்தை
மருளோ தெருளோ மகிழ்மாலை மார்வ
னருனோ விப்பேற்றுக் கடி.”–இத்யாதிகள்.
ஸ்ரீ யதோக்தகாரி யெம் பெருமான்ஸந்நிதியிலே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து ஸ்ரீபாஷ்ய பரவசநம் செய்தருளினார். (இதுபற்றியே திருவெஃகாவில் மணவாள
மாமுனிகள் வியாக்கியான முத்திரையோடு ஸேவை ஸாதித்தருளும்படி யென்று பெரியார் பணிப்பது.)”செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்” என்கிற திருமங்கை யாழ்வாரருளிச் செயலுக்கு முக்கிய இலக்காக விளங்கினவர் கடல்சூழ்ந்த இம்மண்ணுலகில் இந்த வ்யக்திவிசேஷ மொன்றே யென்னத் தட்டில்லை.
அக்காலத்தில், ஸ்வாமிக்கு ஜ்ஞாதிகள் பலரிருந்தமையால் அடிக்கடி ஆசௌச ப்ரஸங்கம் நேர்ந்து கரந்த காலக்ஷேபத்திற்கும் பெருமாளுடைய மங்களாசாஸனத்திற்கும் இடையூறு விளைந்துவந்தது கண்டு கருஹஸ்தாச்ரமத்திலே வெறுப்புண்டாகி உத்தமாச்ரமஸ்வீகாரம் செய்தருளத் திருவுள்ளமாய், அப்போது கோயிலிலே ஸ்ரீசடகோபஜீயரென்றுப்ரஸித்தராய் ஞானமனுட்டான மிவை நன்றாகவே யுடையராயிருந்த மஹநீயர் பக்கலிலே துரீயாச்ரமம் ஸ்வீகரித்து நம்பெருமாளைமங்களாசாஸனம் செய்யச்சென்று நின்றவளவிலே, பெருமாளும்இவரை ஆதரித்தருளித் தம்முடைய திருநாமத்தையே இவர்க்கு
ப்ரஸாதித்தருளி [அழகிய மணவாள மாமுனிகள் என்றிட்டு] ஸகல மரியாதைச் சிறப்புகளையும் * யாவச்சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்ககேஸுகமாஸ்வ *
-என்று எம்பெருமானார்க்குப் போலே நியமனம் தந்தருளி,பல்லவராயன் மடத்தையும் ஸ்வாமிக்குப் ப்ரஸாதித்து அனைத்துக் கொத்துப்பரிகரங்களுடனே போகவிட்டருள, அழகிய மணவாள மாமுனிகளானநாயனார் பெருமாளுடைய திருவருள் நிரம்பிய நியமனத்தைச் சிரஸாவஹித்து மடமேற எழுந்தருளி அழகிய மணவாளனுடைய அருட்பெருக்குக்கு அதிமாத்ரம் உகந்து போந்தார்.
மாமுனிகள்சாடூக்தியாக “நீர் ப்ரதிவாதிபயங்கரர்; நாம் ஸாது; எங்ஙனே கூடுவது?”
என்று புன்முறுவலோடேயருளிச்செய்ய, உடனே அண்ணன் ஐயோவென்று அலமந்து தெண்டன் ஸமர்ப்பித்து, * ப்ரஸித்த: பரகோஷ்டீஷபரவாதி பயங்கர, ஸ்ரீவைஷ்ணவாநசம் கோஷ்டீ தத்தால இதி விச்ருத:என்று விண்ணப்பம் செய்து, ‘இத் திருவடி ஸம்பந்தமல்லது பாவியேனுக்கு உய்வுபாயம் மற்றொன்றில்லை’ என்று கண்ணீர் பெருக நின்று-ப்ரார்த்திக்க, மாமுனிகளும் இவருடைய ஆத்மகுண ஸம்பத்திக்குஅதிசயித்து இவருடைய பிரார்த்தனைக்குத் திருவுள்ள முகந்து ஸக்குடும்பரான விவர்க்குப்பஞ்ச ஸம்ஸ்காரங்களை ப்ரஸாதித்தருளி, ஸ்ரீவைஷ்ணவதாஸன் என்று விலணமான தாஸ்ய நாமத்தையும ரசாரப்படுத்தியருள அண்ணன் க்ருதார்த்தராய்,
“போதச்சிவத்து பரிமளம்வீசிப் புதுக்கணித்த சீதக்கமலத்தை நீரேறவோட்டிச் சிறந்தடியேன் ஏதத்தைமாற்று மணவாளயோகி யினிமைதரும்|
பாதக்கமலங்கள் கண்டேனெனக்குப் பயமில்லையே“-என்று விண்ணப்பஞ்செய்து இப்பாசுரத்தையே முதலாகக்கொண்ட அமலனாதிபிரான்’ என்கிற பிரபந்தத்தை விஜ்ஞாபித்து அன்றுமுதல் மாமுனிகளின் திருவடிகட்கு அந்தரங்கராய் வர்த்தித்து ஸகல திவ்ய ப்ரபந்த ரஹஸ்ய வயாக்யானங்களையும்அதிகரித்துக்கொண்டு க்ருதார்த்தராயிருந்தார்
அர்த்த விசேஷங்களைக் கேட்டுஉவந்தார். அப்போது மாமுனிகளின் ஸர்வதோமுகமான வைதுஷ்யவிசேஷத்தைக் கண்டு விஸ்மயஸ்திமிதரான ஜநந்யாசார்யர்
“பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்
தாதார் மகிழ்மார்பன் தானிவனோ? – தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மாமுனிவன்
எந்தையிவர் மூவரிலும் யார்?-என்கிற வெண்பாவை யருளிச்செய்து மாமுனிகளை விலக்ஷணாவதார வ்யக்தி விசேஷமாக எங்கும் ப்ரஸித்தப்படுத்திப் போந்தார்.
அழகிய மணவாளன் நாலைந்து பிராயம் வாய்ந்த அர்ச்சக குமாரனான கோலம்பூண்டு கனவேகமாசுக் கோஷ்டியிடையிலே வந்து, அவரவர்கள் விலக்கினதையும் ல யம் பண்ணாமே புகுந்து கைகூப்பி நின்று]-ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம், யதீந்த்ர பரவணம் வந்தே ரம்யஜாமாதரம் மு ம் * என்கிற தனியனை விண்ணப்பஞ்செய்து மறைய, இவ்வதிசயத்தை நோக்கி அனைவரும் வியந்தனர்.
சரீராத்மபாவத்திற்கு ப்ரதான திதந்த்ர மென்று பெயரிடப்பட்டிருக்கின்றது.-சரீராத்மபாவ ஜ்ஞானமே வேதாந்திகளுக்குத் தலையானதென்றுதேறிற்று. இதை வேதாந்தத் திறவுகோல் என்று கொள்க.-சேதநனைப் பெறுவதுதான் ஸர்வேச்வரனுக்குப் பேறு’ என்று நிஷ்கர்ஷிப்பதுண்டே,இதுதான் ரஹஸ்யார்த்த நிர்வாஹத்திற்கு திறவுகோலாம்.-எம்பெருமானுடைய ருபை ஸஹேதுகமா? நிர்ஹேதுகமா? ப்ரபத்தி உபாயமா?அதிகாரி விசேஷணமா? இத்யாதி விசாரங்களைத் தனிப்படச் செய்ய வேண்டிய ஆவச்யகதையில்லை; “சேதநனைப் பெறுவது ஈச்வரனுக்குத் தான் புருஷார்த்தம்” என்று நிராபாதமாகத் தேறிவிட்டால் பகவத்க்ருபா நிர்ஹேதுகத்வமும் ப்ரபத்யநுபாயத்வமும் மற்றும் தன்னடையே தேறிற்றாகும். இம்மூன்று விஷயங்களிலும் ஸ்ரீலோகாசார்யாதிகளின் ஸித்தாந்தம் வேறென்றும் ஸ்ரீமத் வேதந்ததேசிகனுடைய ஹித்தாந்தம் வேறென்றும் இக்காலத்து ஒருவகுப்பினர் ( இரண்டொரு நூற்றாண்டாக)ப்ரசாரம் செய்யத் தலைப்பட்டனர். இஃது உண்மைக்கு மிகவும் மாறானது, அடியேனுடைய நூல்களில் நவீனர்களென்று பெயரிடப் பெற்றவர்களின் கொள்கையாம் இவை. இவற்றை தேசிகனுடைய சித்தாந்தமாகக் கூறுவதற்கு அணுமாத்ரமும் அவகாசமில்லை.
“கர்மஸ்வநாதிவிஷமேஷ ஸமோ தயாலு ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண , ஸ்வப்ராப்தயே தநுப் தாம் த்வரஸே முகுந்த! ஸ்வாபாவிகம் தவ ஸுஹ்ருத்தமிதம் க்ருணந்தி.“-சரணாகதி தீ பிகை-11-எம்பெருமான் தனது ஸஹஜ ஸெளஹார்த்த குணத்தினால் தான் சரணாகதியில் ஆபிமுக்க்யத்தை விளைவித்தருளுகிறானென்பதை
சுலோகத்தின் முடிவில் காட்டியருளினர். “ சோபநம் ஹ்ருத் யஸ்ய ஸ- ஹ்ருத்” என்று வ்யுத்பத்தியென்பதை வயுத்பந்தர் உணர்வர் சோபநாசம்ஸியான ஹ்ருதயத்தை யுடையவன் எம்பெருமான்.-தேசிகன் பரமபதஸோபானத்திலே நன்கு காட்டியிருக்கிறார். அதில் ஆரம்பத்திலேயே எழுதியுள்ள வாக்கியங்கள் இவை:-
“அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும்விடாதே அனுபவிக்க ப்ராப்தரான க்ஷேத்ரஜ்ஞர் அநாத்யவித்யாகர்மாதி ரவாஹத்திலொழுகிக் கரையேற விரகற்று அலமருகின்றபடியைக் கண்டருளின பரமகாருணிகனான பரமசேஷிதானே ஞானக்கைகொடுத்து இவர்களையெடுக்க இடம்பார்த்து அஜ்ஞாத யாத்ருச்சிகஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்திமூல ஸுக்ருத விசேஷங்களைவயாஜமாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம்பண்ணி அத்வேஷ ஆபிமுக்க்ய ஸாவிக ஸம்பாஷணதிகளை யுண்டாக்கி” இத்யாதிகள்.இவை கிடக்க; ரகருதச்லோகத்தில் ஸ்வேநைவ கலப்தம் அபதேசம்அவேமாண: * என்றதை ஆழ்ந்து நோக்கவேண்டாம்; மேலெழபிபிநோக்கினாலும் போதும். பதத்தின்மேல் பொருள் என்ன,ஸ்வேநைவ -தானாகவே, கல்ப்தம் -கல்பித்துக்கொண்ட, அபதேசம்-வ்யா ஜவிசேஷத்தை, அவேக்ஷமாண கடாக்ஷித்தவனாய்.-
ஸ்ரீ வசனபூஷணத்தில்-
“என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக்கொடுத்தாய்என்றாப்போலே சிலவற்றைஏறிட்டு மடிமாங்காயிட்டு… … ஜன்மபரம்பரைகள் தோறும்யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவிசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்றுபத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்“-என்கிறஸ்ரீஸூக்தி ரத்னங்களை ஸந்தத் சிந்தனை பண்ணியே யென்பதில் ஐயுறவேண்டா. மேலே யெடுத்துக் காட்டிய வசனபூஷண ஸ்ரீஸூக்திகளில் காணும் பொருள்*ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண-என்கிற இந்த சலோகத்தில் கண்ணாடியிற்போல் அப்படியே பிரதி பலிக்க வில்லையா?
இதற்கு மேலும் நோக்கவேணும். ஸ்வப்ராப்தயே த ப்ருதாம்-த்வரஸே முருந்த! * என்பது மூன்றாவது பாதம். இதில் த்வரஸே என்கிற க்ரியாபதம் பேறு யாருடையதென்பதை நிஸ்ஸந்தேஹ விபரியமாகக் கரட்டித்தரவில்லையா? இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகிரு. என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மொழிபெயர்த்தவத்தனையேயோ? சாஸ்த்ரார்த்தத்தைச் சந்தித்து உள்ளமுருகியன்றோஉரைத்திருக்கிறார்.-சுமாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து தொலையட்டுமிவன் என்று கைவாங்கிய யிராதே, கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ ! என்றுஇவன் கதறுவது அற்பமென்னும்படி ‘கூடி வாழுங்காலமின்னுங் குறுகாதோ ? என்று அவன் பதறியிருப்பது பெருங்கடல் போன்றது என்கிற தத்துவத் தையன்றோத்வரஸே என்பதனால் தெள்ளிதாக உணர்த்தியிருக்கின்றார் தேசிகன்-உபநிஷத்தானது, ரஸோ வை ஸ:,ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி என்றது. இதில் [அயம் லப்த்வா] என்று லாபத்தைசேதநகதமாக ஓதியிருக்கச் செய்தேயும், ஸ்வாமி பாயகாரர் அநா ருத்திஸ்த்ர ஸ்ரீபாஷ்யத்தில் ” பரம புருஷ: ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீஸு க்தியானது ஸாம்பரதாயிக தத்வார்த்தங்களுக்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினது போலன்றோவுள்ளது-ெய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித்தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்று சொல்லியுள்ள ஸ்வாமி இத்தகைய விஷயத்தையன்றோ முக்கியமாக நெஞ்சிற்கொண்டது. வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணி லென்றுஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத், தானென்னைமுற்றப் பருகினான் என்கிற திருவாய்மொழிப் பாசுரமன்றோ நமது
ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஜீவாதுவாயிருந்தது.-ந ச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞா நம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி”–வேதாந்தா சார்யஸம்ஜ்ஞாம் அவஹித பஹுவித்ஸார்த்தம் அந்வர்த்தயாமி என்ற தேசிகன் இவ்வர்த்த தத்வத்தை யுணர்ந்தும் உணர்த்தியும் அந்வார்த்த ஸம்ஜ்ஞராகி இருக்கிறார்.
அஹமந்நம் அஹமந்நம் அஹமந்தம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக ஓதுவதனால்- என்னில் முன்னம்பாரித்து விடாய்த்திருக்கிற எம்பெருமானுடைய பசியைத் தீர்க்க அவனுக்கு நான் அன்னமாகிறேனென்றதாயிற்று. எம்பெருமானுக்கு மட்டுமன்றே விடாய்;சேத னுன இவனுக்கும் விடாயுண்டே; அவனுடைய விடாயைமுன்னம் தீர்த்தபிறகு தன்விடாயும் தீரப்பெறுகையை .அஹமந்நாதஅஹமந்நாத: அஹமந்நாத என்கிற அனுஸந்தான முணர்த்துகிறது.இங்ஙனே இரண்டு வாக்கியங்களினால் சொல்லப்பட்ட அர்த்தத்தைஅஹமந்நம் அந்நமதந்தம் அத்மி என்கிற மூன்றாவது வாக்கியம் நன்கு விவரிக்கின்றது.-நான் முந்துற முன்னம் எம்பெருமானுக்கு அன்னமாகியிருந்து, என்னையநுபவித்து மகிழ்கிற அவனை நானுமநுபவித்து மகிழ்கிறேன் என்பதாம்.படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே* என்கிற குலசேகரப்பெருமாள் பாசுரத்தில் & படியாய்க்கிடந்து * என்பதனால் அசேதநவ்ருத்தியை முன்னம் அபேக்ஷித்து, பின்னை உன்பவளவாய் காண்பேனே* என்று சேதனவருத்தியும் அபேக்ஷிக்கப்பட்டது. இத்
தலையை வி நியோகங்கொண்ட எம்பெருமானுக்கு விளையும் உகப்பைக்கண்டு உகப்பதுதவிர வேறு பயனில்லை சேதனனுடைய ஆனந்தித்வத்திற்கு- என்று நம் ஆசாரியர்களனைவரும் பணிக்கும்படி.
ப்ரபத்தி இன்னதென்பதைக் காட்டும் வசனம் யாவருமறிந்தது; த்வமேவ உபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி, சரணாகத்திரித்யுக்தா * என்பது. நீயே உபாயமாயிருக்க வேணுமென்கைதான் ப்ரபத்தி-என்னாநிற்க, ப்ரபத்தியும் உபாயமென்றால் இதற்கு ஏதேனும் அர்த்தமுண்டோ?-கீதார்த்த ஸங்க்ரஹத்தில்-நிஜகர்மாதி பாத்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவா காரித , உபாயதாம் பரித்யஜ்ய யஸ்யேத் தேவே து தாம் அபீ என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிவைத்தார்.-(ரக்ஷாயாம்] முக்தவ்யாபாரந்யாயேந ஸ்வயம்
ஸ்வாதுத்லாத் ணிகஸ்ய காலாந்தரபாவி பலஸாதநத்வ அநுப்பத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வவ்யாபாரே மோக்ஷோபாயதாபுத்திரபி ஸ்யாத் இதி பாவ , அத: தைஸ்தைராராதிதோ பகவாநேவ ஸர்வத்ர உபாய?” என்று கல்வெட்டாக எழுதியிருக்கிறார். இங்கு”முக்தவ்யாபாரந்யாயோ என்றெழுதியிருக்கிற இதுதான் இவ்விஷயத்தில் ஜீவநாடியானது.-கேவலம் பலாநுபவத்தில் ஊன்றின க்தனுக்கு ஸாதநாநுஷ்டான
ரூபமான செயல் லவலேசமுமில்லை, அது அபேக்ஷிதமுமன்று; ஆனாலும்
முக்தன் வாளாவிருப்பதில்லை. செய்வனவெல்லாம் ஸ்வயம் போக்ய மாகக்கொண்டு செய்கிறான். பரமைகாந்திகளான முமுக்ஷக்களின் வியாபாரங்களும் அப்படிப்பட்டவையே யென்று நிரூபித்திருக்கிறார்.
தேசிகனுக்கு வழிகாட்டியாக ரஹஸ்யக்ரந்தங்கள் பணித்தவர். “ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷிபலம்’ என்றருளிச்செய்ததை நிதியாகக் கொண்டே தேசிகன் கத்யபத்யங்களை அபரிமிதமாக எழுதிவைத்துள்ளார். அவற்றில் தலையானது உபாயஸ் ஸ்வப்ராப்தேருபநிஷததீதஸ்
ஸ பகவாந் ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ரபதந் நிதித்யாஸநகதீ, ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருதபரிபாகேந மஹதா நிதாநாம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண என்கிற (தேசிகனுடைய சலோகரத்னம்.-இதில் “நிதாநாளம் தத்ராபி ஸ்வயம் அகிலநிர்மாணநிபுண ” என்ற நான்காவதுபாதமானது “ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணினக்ரு பலம்’ என்கிற ஸ்ரீலோகாசார்ய திவ்ய ஸக்தியின் ப்ரதிச்சந்த ென்பதில் ஐயமுண்டோ? ஸ்வப்ராபதேஸ்ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண: சருதெள*இத்யாதிகளும் அபரிமிதம். “எம்பெருமானை அடிபணிகின்றவர்களாகச் சொல்லப்படுமவர்கள் உண்மையில்தாமாக அடிபணிகின்றார்களல்லர் ; பின்னையோவென்னில், புழுகுறித்தது எழுத்தாமாப்போலே யத்தனை” என்கிற நம்பிள்ளை ஸூக்தியைப் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களிலேகண்ட தேசிகன்| அதை ச்லோகபத்தமாக்கினார்; சகுணக்ஷதலிபிக்ரமாத் உபநிபாதிம் பாதி நா * என்று; இதைத்தான் குணாக்ஷரந்யாயமென்பது. இந்தகணக்கிலே தேறுகிற நம்முடையபகவதுபஸர்ப்பணத்தை உபாயமாகக் கொள்ளலாகாதென்று நிலையிட்டிருப்பவர் தேசிகன். நியாஸத்திலகத்தில் மத்வய்யேகஸ்மிந்நபி விஜஹதோ முக்தவத் ஸாதநத்வம் ஸுரயோ மே ஸ்வதந்தாம் என்று, எம்பெருமானைக்கூட உபாயமென்ன ஸஹியாத நித்ய முக்தகல்பர்களான மஹான்கள் திறத்திலே எனக்கு ப்ராவண்யாதிசயமுள்ளதாகக் கூறியிருக்கிறார்.
வரத! தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாந்-என்று ஆழ்வானருளிச் செய்ததை யடியொற்றி தேசிகனும் ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வேந நிர்ப்பரம், ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நயஸ்யதி மாம் ஸ்வயம் * என்று ந்யாஸ்தச
கத்தில் சொன்னார். இதில் ஸ்வசப்தத்தை எத்தனை தடவை ப்ரயோகித்திருக்கிறாரென்று எண்ணிப் பார்க்கவேணும். இதில் பூர்வார்த்த மிருக்கட்டும். உத்தரார்த்தத்தைஉற்று நோக்கவேணும். “ஸ்வதத்தயா தியா” என்னலாமே எளிதாக “ஸ்வதத்த ஸ்வதியா” என்று
சொல்லியிருப்பதை நோக்குவாரில்லையே.. மருவித்தொழும் மனமே தந்தாய் என்றார் ஆழ்வார். முன்னங்கொடுத்த மனம் தொழுமனமன் றிக்கே அழும்மனமா யிருந்தபடியால் அதைத் தவிர்த்து, தொழுகைக் காகப்புதியதொருமனம் தந்தருளினம் எம்பெருமான் அவ்வருளிச் செயலை யடியொற்றிதேசிகன் பேசியிருக்க, இந்தச் சுவடறியாதார்க்கு
என் சொல்லுவது? ஊமையரோடு செவிடர்வார்த்தை.-நியாயஸித்தாஞ்ஜனத்தில் இயம் கேவல லஷ்மீசோபாயத்வ சுரத்யயாத்மிகா* என்றதையும், உடனே ஸ்வஹேதுக்வதியம் ருந்தே என்றதையும் கிம் புநஸ் ஸஹகாரிணாம் என்றதையும் தனித்தனியே ஆழ்ந்து பார்க்க வேண்டாவா ? ப்ரபத்தி யென்கிற வஸ்துதேறும்போதே தன்னிடத்தில் உபாயத்வத்தை அணுவளவும் ஸஹியாமலே தேறுவத னால் ஸ்வஹேதுத்வதியம் ருந்தே என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியுள்ளதன்றோ?
மாமேகம் சரணம் வரஜ என்று விதிக்கப்பட்டிருக் கின்ற ப்ரபத்திக்கு எப்படி உபாயத்வம் இல்லாமற் போகுமென்றும் சிலர் சங்கிப்பதுண்டு; இந்த சங்கையை நியாஸதிலகத்தில்தேசிகனே வேரற அரிந்து பொகட்டிருக்கிறார்; எங்ஙனேயென்னில்;-ஹேதுர் வைதே விமர்சேபஜநவத் இதரத், கிந்து அநுஷ்டாநகாலே வேத்யஸ் த்வத்ரூப
பேதோ விவித இஹ ஸதூபாயதா அந்யாநபேக்ஷாசு என்று கையிலங்குநெல்லிக் கனியாகக்காட்டியிருக்கிறார் தத்துவத்தை. இதன் கருத்துயாதெனில்; ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் பக்திபோலே இதுவும் உபாயமென்று சொல்லக் கூடியதாயிருந்தாலும் இங்கு அங்ஙனே கொள்வதற்கிடமில்லை; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெரு மானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதாயிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்திவித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் [அதாவது, பிறி தொன்றை எதிர்பாராத உபாயத்வம் வேத்யாகாரமாக இருக்கையாலே என்கை.
முப்பது வாக்யங்கள்கொண்ட ரஹஸ்ய ரத்நாவளியில் நான்காவது வாக்கியம்- ஸர்வஸ்வாமி நியாய் ஸர்வேசவரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதி
சயத்தாலும் புருஷகாரமாக்கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள். இவளைப் புருஷகாரமாக்கவேண்டுகிறது ஈச்வரன் தண்ட தரனாகையாலே” என்று பணித்தார். இதன் விவரணமான ரஹஸ்ய ரந்நாவலி ஹ் தயத்தில் “இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்‘ என்றதற்கு- ” பவேயம் சரணம்ஹி வ என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷஹேதுவாகிறாளென்றபடி” என்று விவரணம் காட்டினார்தாமே. ரக்ஷகத்வமும் ரக்ஷாஹேதுத்வமும் பர்யாயமன்று ;ஈச்வரனை ராஹேதுவென்று யாரும் சொல்லுவதில்லையே. ரக்ஷாஹேதுத்வமேபிராட்டிக்குப் பொருந்துமென்று காட்டினாராயிற்று..
சோழநாட்டில் கண்டியூரையும் தஞ்சைமாமணிக் கோயிலையும் தென்கலையாக ஸேவித்தவர்கள் நாளைக்கும்பல்லாயிரவர் உளர். அடியேனும் பலகால் ஸேவித்தவன். இவைவடகலையாக மாறினது அறுபது வருஷங்களுக்கு மேல் இராது.
திருக்குடந்தை திருவயிந்திரபுரம் திருவெவ்வுளூர் முதலிய திருப்பதிகள்மாறுபட்டு 80, 85 ஆண்டுகட்கு மேலே ஆய்விட்டதென்று வடகலையார்களே சொல்லுகிறார்கள். எப்படியானாலும் கி.பி.பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்படி தேவாலயங்களில்திருமண்காப்பு மாறுபட ஆரம்பித்ததென்பது அனேக ஆதாரங்களால்
ஊர்ஜிதமான விஷயம்.
—————-
ஸ்ரீராமாநுஜன்-277-விரோதிஹ்ருத் ஐப்பசியில் திருமூலம்-24-10-71
நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயமானது ஆழ்வார்களாலும்
ஆசாரியர்களாலும் பெருமைபெற்றுப் பொலிகின்றது. இவ்வாழ்வாராசார்ய பரம்
பரையானது பொய்(கை யாழ்வார் தொடங்கிப் பொய்யிலாத மணவாளமாமுனிக
ளோடு தலைக்கட்டுகின்றது.
அஷ்டத்திக்கஜாசார்யர்களின் அஷ்டப் பிரபந்தங்களும் தமிழில்தோன்றியுள்ளன. எறும்பியப்பா வென்னுமாசிரியர் வடமொழியில் வரவரமுநி சதகமொன்றேயன்றி வரவரமுநி காவியம் வரவரமுநி சம்பூ வரவரமுநி கர்ணாம்ருதம் அம்ருதத்வநி இத்யாதிகளான பல துதிநூல்களையும் பணித்துள்ளார்.-ப்ரஹ்ம ஸத்ரத்திற்குப் பல வியாக்கியானங்களிட்டவர் ரஹஸ்யப்பொருள் விளக்கமாக ஒரு நூலும் பணித்திலர்.அது அவர்க்குப் பெரிய குறையேயாம். அக்குறையைத் தீர்த்துக்கொள்வதற்காகவே அவர்தாமே மாமுனி களாகத் திருக்கோலம் பூண்டார். இவ்வவதாரத்தில் செய்தருளின காரியங்களே
மிகமிகப் புகழத்தக்கவையாயின. ஆனதுபற்றியே இவ்வவதாரத் தனியன் வாழி களுக்கே நாடு நகரமும் நன்கறிந்த பெருமை விளைந்து அது சந்திர ஸூரியர்களுள்ள வரையில் விளங்குமதாயிற்று.-உடையவரை ஸூர்யனாகவும் மாமுனிகளைச் சந்திரனாகவும் அறுதியிடலாம். ஆனால் ஆகாசத்திலுள்ள சந்திரனுக்குக் கலைகள் குறைவதும் ஏறுவதுமாகவேயிருக்கும். மாதத்தில் ஒருநாள்தான் ஸகலகலாபரிபூர்ணனாகச்சந்திரனைப் பார்க்கமுடியும். ஸ்ரீமத்வரவரமுநி சந்திரனுக்கு எப்போதும் ஸகலகலாபரி பூர்ணஸ்திதியொழிய வேறில்லை. அந்தசந்திரனுக்குக் களங்க ஸம்பந்தமுள்ளது ப்ரஸித்தம்.சாஸ்த்ர ஸித்தமுமானது.-ஸ்ரீமத் வரவரமுனிசந்திரனுக்கு எவ்விதமான களங்கப்ரஸக்தியுமில்லை.
விசதவாக் சிகாகணியென்கிற விருது மாமுனிகளொருவர்க்கே அஸாதாரணம். கூறினது கூறல், மயங்கவைத்தல், நலிந்து பொருள்கொள்வைத்தல், இன்னது சொல்லிற்றென்று தெரியாதபடி பேசிவைத்தல்,பிறர்மனம்நோவப் பேசுதல், வீணாக வளர்த்துதல், முன்னோர் மொழிந்த மொழிகளுக்கு மாறாகப் பேசுதல் முன்பின் முரண்படப் பேசுதல்,நிந்தா பரிஹாஸங்களை நிரப்புதல் முதலிய குற்றங்குறைகளை இதர ஆசிரியர்களின் நூல்களில் பார்க்க இயலும்.
நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக வெம்மைத் தனித்தழைத்து நீமாறன் செந்தமிழ்வேதத்தின் செம்பொருளை நாளுமிங்கே வந்துரை யென்றேவுவதே வாய்ந்து” என்று நைச்சியமாய் அநுஸந்தித்து மறுநாள் தொடங்கி ஓராண்டளவும் பகவத் விஷய பிரவசனம் நடத்திவந்தார், அவ்வாண்டில் ஸகல உத்ஸவங்களும் நிறுத்தப்பட்டன-பிறகு ஸமாப்தி தினத்தில் ஸ்ரீரங்கநாதன் ஒரு சிறு குமாரனாய்த் திருவோலக்கத்திலே வந்து நின்று,”ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்,யதீத்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்.”என்கிற திவ்ய பத்யத்தைக் கைகூப்பி நின்று விஜ்ஞாபித்தனனாக இதிஹாஸம் ப்ரஸித்தமாகவுள்ளது.-இத்தனியனில் சொற்கள் அமைந்திருக்கிற அமைப்பை
ஆராயுமிடத்தில் இது தெய்வவாக்கேயன்றி மானிட வாக்காக இருக்கமுடியாதென்
பதை ப்ராமாணிகர்கள் எளிதில் உணரலாம்.இராமபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் கண்ணபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் சில வியக்திகளிடத்தில் ஆச்ரயித்து, அவ்விடங்களில் திருவுள்ளத்திற்கு திருப்தியில்லாமலே முடிந்திருக்கிறது. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறைகண்டு வெறுப்புடனிருக்க நேர்ந்தது. அந்த வெறுப்பெல்லாந்தீர இப்போது மணவாளமாமுனிகளை ஆச்ரயித்து “ஸதாசார்ய லக்ஷணபூர்த்தியுள்ளஇவரை ஆச்ரயிக்கப் பெற்றோமே!” என்று மகிழ்ச்சிகொண்டமை இந்த ச்லோகத்தில் ஒவ்வொரு விசேஷணத்தினாலும் ஸ்புடமாகக் காட்டப்பட்டிருப்பதை நிரூபிக்கிறோங்காண்மின் :–
ஸ்ரீசைலேசதயாபாத்ரம் என்பது முதல் விசேஷணம். ராமாவதாரத்தில்சைலேசதயா பாத்ரமானவொரு வ்யக்தியை வணங்கிக் கெட்டேன்; இப்போதுஸ்ரீசைலேசதயாபாத்ரமான வ்யக்திவிசேஷத்தை வணங்கி வாழ்கிறேன் என்கிறது. ராமாவதாரத்தில் வணங்கப்பட்ட சைலேசதயாபாத்ரமான வ்யக்தி யாரென்னில்; ஸு க்ரீவன். சைலமாவது ரிச்யமூக பர்வதம். அதற்கு ஈசர்- மதங்கமுனிவர். அவருடைய தயைக்குப் பாத்ரபூதன் ஸுக்ரீவன் என்பது ஸ்ரீராமாயணம் கிஷ்கிந்த-காண்டத்தில் பதினோராவது ஸர்க்கத்திலுள்ள கதையினால் ஸ்பஷ்டம். ஆயிரம் பலங்கொண்டவனான துந்துபியென்னுமரக்கன் எருமைக்காடா வடிவமெடுத் துக் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைச் சண்டைக்கழைக்க, இருவர்க்கும் பிரபலமான போர் நடந்து வாலியினால் துந்துபியின் சரீரம் முழுதும் மடியும்படிபிசையப்பட்டு அவ்வரக்கன்யோசனைமரணமடைந்து தரையில்விழ, வாலி அவனுடையவுடலை ஒரு தூரம் போய் விழும்படி வீசியெறிய, அப்போது அவனது வாயிலிருந்து ரத்தத்துளிகள் காற்றினால் தள்ளுண்டு [சைலேசரான ] மதங்கமாமுனிவரின்
ஞானத்ருஷ்டியினால்ஆச்ரமத்தில்போய்விழ, அதைக்கண்ட அம்முனிவர் மிகுந்த சீற்றங்கொண்டு தன் இங்ஙனம் தீச்செயல் செய்தவன் வாலியென்றுணர்ந்து “பரிசுத்தமான எனது ஆச்ரமத்தை இவ்விதம் அபரிசுத்தமாக்கினவன் யாவனோ அவனும் அவனன்பர்களும் இவ்வாச்ரம பரிஸரங்களில் வந்தால் உடனே மரண மடையக் கடவர்கள்” என்று சாபமிட்டு அச்சாபம் நடத்தைக்கு வருவதற்கு ஒரு நாள்கெடு கொடுத்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவ்வனத்திலுள்ள [வாலி யைச்சேர்ந்த வானரர்களெல்லாரும் ஓடிச்சென்றனர். சாபபயத்தினால் வாலி அவ்விடம் வருவதற்கில்லாதபடியாயிற்று. அவனுடைய ஸம்பந்தமற்றவனான ஸுக்ரீவன்மாத்திரம் தனது அன்பர்களுடன் அவ்வாசரமத்தில் வாழ்ந்து வந்தன னாதலால் அவன் சைலேச தயாபாத்ரமாயினன். ” ஸு க்ரீவம் சரணம் கத என்கிற படியே அவனை வணங்கியிருந்த இராமன் பிறகு அவனோடே மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டது. அவ்விஷயம் கிஷ்கிந்தாகாண்டம் முப்பதாவது ர்க்கத்தில் விளங்கியதே. அதாவது-மாரிகாலம் முடிந்தபின்பும் ஸுக்ரீவன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு வராமற்போகவே பெருமாள் இளையோனை நோக்கி’லஷ்மணா! இன்னமும் சுக்ரீவன் என்னை அடியோடு மறந்துவாளாகிடக்கின்றனன்காண்; செய்ந்நன்றிமறந்த காதகனன்றோ சுக்ரீவன்; நீ உடனே அவனிடஞ்சென்று நான் சொன்னதாகச் சொல்லு; செய்ந்நன்றிமறந்த பாபிஷ்டன் புருஷர்களில் கடையான வன் அவன் மரணமடைந்தால் அவனது உடலை மாமிசந்தின்னும் ஜந்துக்களும் தின்னமாட்டா . லஷ்மணா; என் பராக்ரமத்தைச் சுக்ரீவன் நன்றாக அறிந்திருந்தும் சிறிதும் அச்சமில்லாமல் கிடக்கிறானே; வாலி சென்றவழி அவனுக்கும் திறந்திருக் கிறதென்று அவனிடம் கூறு. அவனை உற்றாருறவினரோடும் யமபுரமனுப்பச் சித்தமாயிருக்கிறேனென்று தெரிவி’ என்று கூறியிருப்பதேயாம். ” ஸு க்ரீவம் நாத மிச்சதி” என்றும் ” ஸுக்ரீவம் சரணம் கத ” என்றும் ஈடுபட்டவிடத்திலே இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டதனால், முன்புசைலேச தயாபாத்ர பூதனானவொரு வனை வணங்கி வருந்தின குறைதீர இப்போது ஸ்ரீசைலேச தயாபாத்ர பூதரை வணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று. திருமலையாழ்வாரென்கிற திருவாய் மொழிப்பிள்ளையின் இன்னருளுக்கு இலக்கான மாமுனிகளை வணங்குகின்றே னென்கை.
இனி இரண்டாவது விசேஷணம் தீபக்த்யாதி குனார்ணவம். ஸ்ரீராமனாக அவதரித்திருந்த அக்காலத்திலே ஸுக்ரீவன் காலிலே குனிந்ததுபோலவே லவணார்ணவத்தின் காலிலும் குனிந்தமை யுத்தகாண்ட ப்ரஸித்தம். “ஸமுத்ரம் ராகவோராஜா சரணம் கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின்படி லவணார் ணவத்தை நோக்கிச் சரணகதி பண்ணியிருந்து அங்கும் மநஸ்தாபம் மிகுந்தது. அக்கடலரசன் முகங்காட்டிற்றிலனாக, மிகவும் சீறிச் சிவந்து “சாபமாநய ஸௌமித்ரே!…..ஸாகரம் சோஷயிஷ்யாமி – லக்ஷ்மணா! வில்லையும் கொடிய அம்புகளையும் கொண்டுவா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன் என்று கூறி நிக்ரஹத்தி லேயன்றோ துணிந்து நின்றது. சரணாகதி பண்ணினவிடத்திலே இது தகுமோ ?-அப்படியான குறைதீர அந்த லவணார்ணவத்தைவிட்டு தீபக்த்யாதி குணார்ண வத்தை அடிபணிந்து வாழப்பார்க்கிறபடி. ஞானபக்தி விரக்திகளுக்குக் கடலானமாமுனிகளை வணங்குகின்றேனென்கை.)
இனி மூள்றாவது விசேஷணம் யதிந்த்ரப்ரவணம்.இப்போது ஸ்ரீரங்க நாதனாயிருக்கின்ற பெருமானே”மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்” என்கிறபடியே திருவேங்கடமுடையானாகவும் நின்ற நிலையிலே எம்பெருமானார்க்கு [ஸ்ரீராமாநுஜர்க்கு]சிஷ்யனாயினன். “அப்பனுக்குச் சங்காழியளித்தருளும் பெருமாள்” என்று போற்றப்படுகின்றஸ்ரீராமா நுஜரிடம் திருமலையப்பன் திருவாழி திருச்சங்கு பெற்றதனால் அந்த ய ந்த்ரரிடத்தில் சிஷ்யவருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம். ஆனால் அங்கு மநஸ்தாபமொன்றும் நேரவில்லையானாலும் இராம ச நூற்றந்தாதியில் ‘தன்னையுற்றாட்செய்யுந் தன்மையினார்” என்கிற பாட்டைத் திருச்செவி சாத்தினபின்பு “ய ந்த்ரரிடத் திலே சிஷ்யவருத்தி செய்வதிற்காட்டிலும் யதீந்த்ரப்ரவணரானார் திறத்திலே சிஷ்ய வருத்தி செய்வதுதான் சிறந்ததென்று தோன்றி விட்டது. அந்தப் பாசுரத்தில், தன்னையுற்றாட் செய்வதிற்காட்டிலும் தன்னையுற்றாட் செய்யுந் தன்மையினோர் மன்னுதாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்வாரே சிறந்தவரென்று எம்பெருமானார் திருவுள்ளம்பற்றியதாக வெளியிடப்பட்டுள்ள தன்றோ. அதனால் யதீந்த்ரப்ரவணரை யிறைஞ்சுகின்றே னென்கிறதாயிற்று.மணவாளமா முனிகளுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திருநாமம் சிறப்பாகக் கிடைத்ததென்றுணர்க.
இனிச்லோகத்தின் ஸமாப்தி . வந்தேரம்யஜாமாதரம் முனீம் + இராமனாயும் கண்ணனாயுமவதரித்த இரண்டவதாரங்களிலும் இரண்டு முனிகளிடத்திலே சிஷ்யவருத்தி செய்திருந்தானெம்பெருமான். ராமாவதாரத்தில் விச்வாமித்ர முனிவன் பக்கலிலும் க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபனி ழனிவன் பக்கலிலும் சிஷ்ய வருத்திசெய்திருந்து அவ்விருவரிடத்திலும் வெறுப்பேயாயிற்று எம்பெருமானுக்கு. எங்ஙனேயென்னில், விச்வாமித்திரர் ஸ்ரீராமலக்ஷ்மணர்களுடன் மிதிலையில் ஜனக சக்ரவர்த்தியினது வேள்விச் சாலையில் புகுந்தபின் கௌதம புத்திரரும் ஜநக புரோஹிதருமான சதாநந்தர் [பாலகாண்டம் 51 – ஆம் ஸர்க்கம் முதலாக ] விச்வா மித்ரருடைய பழைய கதைகளைச் சொல்லத்தொடங்கி அவர் ரஜோகுண தமோ குணங்களுக்கு வசப்பட்டுச் செய்த செயல்களை யெல்லாம் சொல்லிவர, அதெல்லாம் கேட்ட இராமன் இப்படிப்பட்ட வொருவரையா நாம் ஆசாரியனாகக் கொண்டோம்!என்று வெறுத்திருக்க நேர்ந்தது. கிருஷ்ணாவதாரத்தில் அவந்திகாபுரியில் வாழ்ந்துவந்த ஸாத்தீப நிமுனிவரிடத்தில் அறுபத்துநான்கு கலைகளையும் பயின்ற கண்ணபிரான் “ஆசார்யாய ப்ரீயம்தநமாஹ்ருத்ய” என்ற உபநிஷத்தின் கட்டளையிலே குருதக்ஷிணை ஸமர்ப்பிக்கின்றவளவிலே அம்முனிவர் “மாதவத்தோன் புத்திரன்போய்மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்“என்கிறபடியே என்றைக்கோ பிரபாஸ தீர்த்தத்தில் விழுந்து மாண்டுபோன மகனைமீட்டுத்தரவேணுமென்று வேண்ட அப்படியே கொடுத்தனன். கண்ணபிரானைஸாஷாத் நாராயணமூர்த்தியென்று அறியாதவனல்லன் அந்தஸாந்தீப நிமுனிவன்.அறிந்துவைத்தும் மோக்ஷபுருஷார்த்தத்தை விரும்பாதே மகனை மீட்டுத்தருகையாகிற க்ஷத்ர புருஷார்த்தத்தை விரும்பினபடியால் அவன் பக்கலிலும் வெறுப்பேயாயிருந்தது. இப்படி வெறுப்புக்கு இலக்ான இரண்டு முனிகளையும்விட்டு
ஸமஸ்த கல்யாண குணக்கடலாய் விரக்தாக்ரேஸரரான ரம்யஜாமா ருமுனியைவணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று.
ியாக்கியான மருளிச்செய்வதில் மாமுனிகளின் திறமை ஒப்புயர்வற்றது. ஒத்ரம் போன்ற ஸ்ரீ லோகாசார்ய திவ்ய க்திகளுக்கு அவதாரிகையிடுகிற அழகும், மூலத்திற்கு அர்த்தமருளிச் செய்கிற வைகரியும்,ஆங்காங்குஅர்த்தங்களைப் பிண்டீகரித்து நிகமித்தருளுகிற சைலியும், மதாந்தரங்களைக் கண்டித்தெழுதினாலும்கூட ஒருவருடைய மனமும் நோகாதபடிக்கும் வீணான தூஷணபரிஹாஸங்கள் சிறிதும் புகாதபடிக்கும் எந்த இடத்தை யெடுத்தாலும் சாஸ்த்ரார்த்தமே கைகொள்கனியாம் படிக்கும் ஸ்கல சாஸ்த்ரஸாகர பாரங்கதர் இவரொருவரே’ என்றுதிண்ணமாக எண்ணும்படிக்கும் மயங்கவைத்தல் முதலிய குற்றங்களுக்குச் சிறிதுமிடமில்லாதபடிக்கும் ஸூக்திகளருளிச் செய்தவர் மாமுனிகளொருவரே யென்பதை எத்தனை தடவை சொன்னாலும் எழுதினாலும் புநருக்தி துஷ்டமாகாது.-மாமுனிகளின் வியாக்கியானங்களை ஸேவிக்குமளவில் மாருதியைநோக்கி இராமபிரானருளிய வாசகமே நினைவுக்குவருகிறது. நாந்ருகவேத வி தஸ்ய நாயஜ ர்வேத்தாரிண , நாஸாமவேதவிதுஷா சக்யமேவம் ப்ரபாஷிதும் நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம் அநேநபஹதா சருதம் இத்யாதி. இல்லாத வுலகத்தெங்கும் என்கிற கம்பர்
நம்மாழ்வார் தம்முடைய பெருமையைத் திருவாய்மொழியில் “துவளில்மாமணி மாடம்” ”உண்ணுஞ்சோறு பருகுநீர் “ முதலான பதிகங்களில் தாமேவெளியிட்டுக் கொண்டவாறு போல், மாமுனிகள் தாமும் ஆர்த்திப்பிரபந்தத்தில்ஒரு பாசுரத்தினால் தமது பெருமையைத் தாமே அருளிச் செய்யும்படியாயிற்று-நம்போல்வார்நிச்சலும் அநுஸந்தித்து உய்வதற்காக. அந்தப்பாசுரம் கேண்மின்:-
தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்ருேம்
தேவனுறை தீடுப்பதியே யிருப்பாகப் பெற்ருேம்*
மன்னியசீர் மாறன் கலையுணவாகப் பெற்நேம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றேம்*
முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்நேம்
முழுது நமக்கவை பொழுதுபோக்காகப் பெற்ருேம்
பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற்பெற்றேம்
பிறர்மினுக்கம் பொருமையிலாப் பெருமையும் பெற்ருேமே.
உலகில் பேசுவதெல்லாம் பேச்சல்ல, எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.-பட்டர் ஸ்ரீ குணரத்நகோசத்தில் “அநாக்ராதாவத்யம் பஹுருணபரீ ” என்றுஆரம்பித்து ஐந்து விசேஷணங்களிட்டுச்சிறப்பித்த வாக்வி ஸிதம் மாமுனிகளுடையதேயாகும் “பதாநாம் ஸௌப்ராத்ராத் அ மிஷ ஷேவ்யம் சரவணயோ:” என்று அந்தச்லோகத்தில் பட்டர் பணித்த அதிசயம் மாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் தவிரவேறெங்கும் காணக் கிடைக்காது. சொல்லமைப்பென்பதொன்றுண்டே அதுமற்றையோருடைய வியாக்கியானங்களில் ஸாதாரணமாகவேயிருக்கும். மணவாளமாமுனிகளின் வியாக்கியானங்களில் அது ஆச்சரியம் அற்புதம் அந்யாத்ருசம் என்றே சொல்லத்தக்கதாக விளங்கும். இதைத் தெரிந்து கொள்வது எல்லார்க்கும் எளிதன்று. முராரி யென்கிறவொரு மஹாகவி “அப்திர் லங்கீத ஏவ வானரபடை கீந்த்வஸ்ய கம்பீரதாம் ஆபாதால மநபீவரதநுர் ஜாநாதி மந்தாசல ‘‘ என்கிறான். வானமுதலிகள் கடலைக் கடந்துவிட்டார்களானாலும் மேலெழச் சென்ற வவர்களுக்குக்
கடலின் ஆழம் சிறிதும் தெரியாதென்றும் மந்தரமலை யொன்றே அதனை அறியவல்லதென்றும் இந்தச்லோகத்தில் கூறப்பட்டிருப்பதுபோல, ஸாரஸ்வதஸரத்தை
உட்புகுந்து மர்மஸ்பர்சிபாக உணரப்பெற்றவர் கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குள்மணவாளமா முனிகளொருவரேயென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பர் அவருடைய திவ்ய ஸ்ரீஸக்திகளில் நன்கு ஆழ்ந்தவர்கள்.
அ யையினாலும் த்வேஷத்தினாலும் பலர் அவருடைய ஸக்தியமுதக்கடலில் அவகாஹிக்கப்புகுவதில்லை. அவகாஹிக்கும் பாக்யம் பெற்றவர்களிலும்
பலர் ‘மணிப்ரவாள ஸ்ரீஸூக்திதானே’ என்று ஸமான்யமாக நினைத்து மேலெழப்
பார்த்துச் செல்வர்கள்.”தேநாவலோக்ய கருதித பரிபஞ்ஜதே நம்” என்று பட்டர்
அருளிச்செய்தபடி அனுபவபாகிய பரிபாகசாலிகள் யாரோசில ஸுக்ருதிகளேயாவர் .
மாமுனிகளின் திவ்யகரந்தங்களுக்குள் தத்வத்ய வியாக்கியான
மொன்றைஸேவிக்குங்கால்- : கலசாஸ்த்ரங்களிலும் ஸ்ரீபாஷ்ய ஸதா நிதியிலும்
ஆழ அவகாஹித்தமஹாஜ்ஞான நிதி மாமுனிகளல்லது வேறு எவருமில்லை” என்று
சபதமிட்டுரைக்கலாம். ஞானம் என்பது வேறு, வ்யுத்பத்தி என்பது வேறு.அந்த
வ்யுத்பத்தியானது ஸகலதந்த்ரங்களிலும் மணவாளமாமுனிகளுக்கு மிகவும் அதி
சயிக்கத்தக்கது. இதை நிரூபிக்க அவருடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளில் பலபல
விடங்களுண்டு; பலகால் பரக்க நிருபித்துமிருக்கிறோம்.
மணவாள் மாமுனிகளை எம்பெருமானாருடைய அபராவதார மென்று
அஷ்டதிக்கஜாசாரயர்க னைவரும் ஸாக்ஷாதநுபவத்தினால் நிர்ணயித்துப் பல
பாசுரங்களும் ச்லோகங்களும் பணித்துள்ளார்கள். அவை ஜகத் ப்ரஸித்தமா
னவை. அவ்வளவு ப்ரஸித்தமல்லாமல் வித்வத் கோஷ்டியில்மட்டும் பரஸித்தமான
தொரு விஷயம் இங்கு விஜ்ஞாபிக்கப்படுகிறது . திருநாராயணபுரத்தில் மண்டயம்
அனந்தாழ்வாரென்று ஸுப்ரஸித்தரான மஹா வித்வான் எழுந்தருளியிருந்தார்.
மை ர் அனந்தாழ்வானென்றும் அவர் வழங்கப்படுவதுண்டு. வேதாந்த வாதாவளி
யென்று ஜகத்ப்ரஸித்தமான மஹா கரந்தரத்னங்களை யருளிச்செய்தவர் இவரே.
இவர் ஜீவித்திருந்த காலம் மிகவும் ஸமீபமானதே. (அதாவது சென்ற நூற்றாண்
டில் எழுந்தருளியிருந்தவர்.) இவருடைய சிஷ்யர்களை ஸேவித்திருக்கிறேன்.
இவருடைய சதுச் சாஸ்த்ரபாண்டித்யப்ரபாவங்களைக் கொண்டாடாதவர்களில்லை.
அவரிடத்தில் ஸாமாந்ய சாஸ்த்ரங்கள் பயின்ற வித்வான்களின் சிஷ்யர்கள் (பல
மதஸ்தர்கள்] கன்னட நாட்டில் ப்ரஸித்திபெற்று விளங்குகிறார்கள். இம்மஹாவித்
வான் மை ர் பரகாலமடத்தில் ஆஸ்தானவித்வானாக அமர்த்தப்பட்டிருந்தார்
அங்கு இதர ஸம்ரதாயஸ்தர்களான பல வித்வான்களிடையே இவரொருவரே
ஸ்ரீமத் வரவரமுநி ஸம்ப்ரதாயஸ்தராக விளங்கிவந்தார்.இவரையும் தம் ஸம்ப்ரதா
யஸ்தராக்கிக் கொள்ளவேணுமென்று அந்த ஸ்ரீ பரகால மடாதிபதி ஸ்வாமிக்குத்
தோன்றி அந்த அவாவை அடிக்கடி தெரிவித்துவர, இவர் அதற்கு இடங்கொடாது
வந்தார். கடைசியாக, விசேஷ த்ர யோபபத்திகளையும் ஜாகீர் ஜமீன்களையும்
கொடுப்பதாகச் சொல்லி நிர்ப்பந்திக்கவே இவரும் சிறிது இசைவுகாட்டியிருந்தார்.
நாளை காலைமுதல் திருமண் காப்பை மாற்றிக்கொள்வது’ என்று ஒருநாள் இவர்
எண்ணியிருக்கையில் அன்றிரவு கனவிலே எம்பெருமானார் ஆதிசேஷ ரூபேண
இவர்க்கு ஸேவைஸாதித்து உடனே மணவாளமாமுனிகளான திருக்கோலத்துட
னும் ஸேவைஸாதித்து நாமே அவர், அவரே நாம்’ என்று சொல்லி மறைந்தருளி
னார். இவரும் துயில் விழித்தெழுந்து எம்பெருமானாருடைய கருணைத் திறத்திற்கு
மிகவும் வியந்து தாம் எண்ணியிருந்த எண்ணத்திற்காக மிகவும் அநுதபித்து, காலை
யனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு சலோகத்தையெழுதி அந்த மடாதிபதி
ஸ்வாமி ஸன்னிதியீலே ஸமர்ப்பித்தார். அந்த ச்லோகமாவது:-
சேஷ ஸ்ரீமாந் நிகமமகுடீயுக்மரக்ஷாப்ரவ்ருத்த ஸ்ரீமத்ராமாவரஜமுந்தாம் ரம்யஜாமாத்ருதாஞ் ச,-வீந்தத் திருப்யத்விமத படலீபாடநோத்தாம ஸூக்தி. பூயாத் பவ்யப்ரத்தமஹிமா ச்ரேயஸே பூயஸே ந | -என்பது.-அந்த ஸமயத்தில் அந்த அனந்தாழ்வான்ஸ்வாமி ந்யாய பாஸ்கரமென்கிற
மஹா கரந்தமெழுதிக்கொண்டிருந்தார் அதில் இரண்டாவது பரிச்சேதமெழுதி
வருகையில் இந்த மஹா நுக்ரஹம் நேர்ந்தபடியினால் அந்த மஹாக்ரந்தத்தோடு
கூடவே இவ்வநுக்ரஹ விசேஷமும் சாசவதமாக உலகில் விளங்கவேணுமென்றுகருதி மேலே குறித்தச்லோகத்தை அந்தக்ரந்தத்தில் இரண்டாவது பரிச்சேதத்தில் விந்யாஸம் செய்தருளித் தாமே அச்சிட்டு வெளியிட்டார். இந்த சுலோகத்தின்கருத்தாவது- உபய வேதாந்தங்களையும் காத்தருளவேணுமென்று திருவுள்ளங்கொண்ட திருவனந்தாழ்வான் எம்பெருமானாராகத் திருவவதரித்து ஸம்ஸ்க்ருத வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும், மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்து த்ராவிட வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும் இப்படி உபயவேதாந்த ப்ரதிஷ்டாபனம்செய்து பெருமைபெற்றனன்.-அத்திருவனந்தாழ்வான் நமக்கு ஸகலவிதநன்மைகளும் அளித்தருளவேணுமென்பதாம்.
மாமுனிகளருளிச்செய்த நூற்றந்தாதியின் பெருமையை விளக்கி இவ்
வநுபவத்தைத் தலைக்கட்டுகிறேன். உலகில் தோன்றியுள்ள அந்தாதி வெண்பா
நூல்களில் நிகரற்றது திருவாய்மொழிநூற்றந்தாதியொன்றேயாம். ஆசிரியர்களருளிய
எந்த நூலை யெடுத்துக்கொண்டாலும் இது நிகரற்றது” ‘இஃது ஒப்பற்றது’ என்றே
சொல்லும்படியாயிருக்கும். அப்படிச்சொல்லுவதன்று இது. இதன் சிறப்பையாவரு
மிசையும்படி நன்கு நிரூபிக்கிறேன் கேண்மின். திருவாய்மொழியாயிரமும்
அந்தாதியே; இயற்பாவில் எட்டு திவ்வியப் பிரபந்தங்கள் அந்தாதிய ;கண்ணி
நுண் சிறுத்தாம்பு அந்தாதியே; பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தம்தம்
திருமொழிகளில் ஒவ்வொரு பதிகம் அந்தாதி பாடியுள்ளார்கள். கிம் பஹ நா?
உலகில் பல்லாயிரம் அந்தாதிப் பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவை யெல்லா
வற்றினுடையவும் ப்ரக்ரியை எப்படிப்பட்டதென்றால் செய்யுளைத் தொடங்க)
வேண்டியது நூலாசிரியர்களின் தம்தம் இஷ்டத்தைப் பொறுத்தது.செய்யுளை
முடிக்கவேண்டியதும் தங்கள் தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. தங்களிஷ்டப்
படி முடித்தசீரையோ சொல்லையோ எழுத்தையோதொட்டுக்கொண்டு மேற்பாட்டு
ஆரம்பம் செய்வதென்பதொன்றே அந்தாதி பாடுகிறவர்களனைவருங்கொண்ட
நியதியாகும். (உதாரணம்) பொய்கையாழ்வார் * வையம் தகளியா * என்று
தொடங்கினார். (வையம்) என்று ஆரம்பம்செய்தது அவரிஷ்டமே கடையடியை
இடராழி நீங்குகவே யென்று” என்று முடித்தார். இதுவும் அவரிஷ்டமே.
“‘இடராழி நீங்குகவேயிங்கு’ என்றாலும் கேள்வியில்லை. அந்தாதி பாடுவார்
வெண்பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ முடிக்குஞ்சொல்லை அவரவர்களிஷ்
டப்படி பாடலாம், பாடியிருக்கிறார்கள் என்பது நிர்விவாதம். இனி மணவாள
மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியின் அமைப்பைப்பற்றிக் கேண்மீன்;
நம்மாழ்வார் “உயர்வற” என்று திருவாய்மொழி தொடங்கினபடியால் அதற்குக்
கட்டுப்பட்டு உயர்வே பரன்படியை என்று தம்முடைய அந்தாதியைத் தொடங்கினார். (திருவாய்மொழியில்) அடுத்த பதிகம் (வீடுமின் முற்றவும்) என்று தொடங்குவதால் (மாமுனிகள் தம்முடைய அந்தாதி) அத்தோடும் சேரும்படி”வேராகவே விளையும் வீடு” என்று (வீடு) என்பதையே கடைச் சீராகவைத்துப் பாசுரத்தைமுடித்தார், அதற்கு மேற்பாட்டைத் தம் இஷ்டப்படி தொடங்காமல்தமது நூலுக்கும் அந்தாதியடைவு குலையாதபடிக்கு (வீடுசெய்து) என்றே தொடங் கினார். நூறுபாட்டும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டே அவதரித்துள்ளன .செய்யுளுக்குரிய மோனையின்பமும் எதுகையின்பமுங்கூட தம்மிஷ்டத்தைப் பொறுத்ததல்லவென்பதை உற்றுநோக்கவேணும் . (வீடு) என்றதற்கு மோனை சேரும்படி (வேராகவே) என்னவேண்டிற்று. (வேராக)என்றதற்கு எதுகை சேரும்படி முன்னடியில் (வாராமல்) என்னவேண்டிற்று. இவ்வளவோடுங்கூட ஒவ்வொரு பதிகத்தின் ஸரத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் அடக்கவேண் டிற்று பாட்டுத்தோறும் நம்மாழ்வார் திருநாமமும்தவறாது வரவேண்டியதாயிற்று. இத்தனை நிர்ப்பந்தங்களைக்கொண்டு பாடின அந்தாதி நூல்இஃதொன்றுதவிர மாநிலத்தில் வேறொன்று கிடையாது.
யந்மூலமாச்வயுஜமாஸ்யவதாரமூலம் காந்தோபயந்த்ருயமிந கருணைகஸிந்தோ ,ஆ தஸத்ஸு கணிதஸ்ய மமாபி(ஸத்தாமூலம் ததேவ ஜகதப்யுதயைகமூலம்.
மன்னுயிர்காளிங்கே மணவாளமாமுனிவன் பொன்னடியாஞ்செங்கமலப் போதுகளை – உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் கரத்தாலே தீண்டல் கடன்.
ஸ்ரீமதே ரம்யஜாமாத்ருமுநீந்த்ராய மஹாத்மநே, ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்.
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –