நரகன் அபகரித்து வைத்திருந்த பதினாறாயிரம் கன்னியர்; துவாரகையில் அமைந்திருந்த கிருஷ்ணனின சபைக்கு வருகை தந்து, நரகனை அழிக்க வேண்டிய இந்திரன்; கிருஷ்ணனுடன் சென்ற சத்யபாமா; முரு, நிசுந்தன், ஹயக்ரீவன் ஆகியோரைக் கொன்ற கிருஷ்ணன்; நரகாசுரனுடன் போர்; நரகன் கொல்லப்பட்டதும், குண்டலங்களைத் தந்த பூமாதேவி.–
ஜநமேஜய உவாச
ப்ரத்யேத்ய த்³வாரகாம் விஷ்ணுர்ஹதே ருக்மிணி வீர்யவாந் |
அகரோத்³யந்மஹாபா³ஹுஸ்தந்மே வத³ மஹாமுநே ||2-63-1
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, ருக்மியை அழித்துவிட்டு துவாரகைக்கு வந்த பிறகு என்ன செய்தான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.
வைஶம்பாயந உவாச
ஸ தை꞉ பரிவ்ருத꞉ ஶ்ரீமாந்புரீம் யாத³வநந்த³ந꞉ |
த்³வாரகாம் ப⁴க³வாந்விஷ்ணு꞉ ப்ரத்யவைக்ஷத வீர்யவாந் ||2-63-2
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அழகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், தாமரைக் கண்களைக் கொண்டவனும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான விஷ்ணு, அவர்களால் {யாதவர்களால்} சூழப்பட்டவனாகத் துவாரகையை நோக்கித் தன் மனத்தைத் திருப்பினான்.
ப்ரத்யபத்³யத ரத்நாநி விவிதா⁴நி வஸூநி ச |
யதா²ர்ஹம் புண்த³ரீகாக்ஷோ நைர்ருதாந்ப்ரத்யவாரயத் ||2-63-3
தத்ர விக்⁴நம் சரந்தி ஸ்ம தை³தேயா꞉ ஸஹ தா³நவை꞉ |
தாஞ்ஜகா⁴ந மஹாபா³ஹுர்வரத்³ருப்தாந்மஹாஸுராந் ||2-63-4
அவன் அடைந்த பல்வேறு செல்வங்களையும், ரத்தினங்களையும் ராட்சசர்களின் {நைருதர்களின்} மூலம் தன் வீட்டுக்குக் கொண்டு வரச் செய்தான். வரங்களை அடைந்த தானவ, தைத்திய பேரசுரர்களும் அந்நேரத்தில் பல தடைகளை ஏற்படுத்தினர்; ஆனால் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மாதவன் {கிருஷ்ணன்} அவர்கள் அனைவரையும் அழித்தான்.(3,4)
விக்⁴நம் சாஸ்யாகரோத்தத்ர நரகோ நாம தா³நவ꞉ |
த்ராஸந꞉ ஸர்வதே³வாநாம் தே³வராஜரிபுர்மஹாந் ||2-63-5
ஓ! மன்னா, மாதவன் துவாரகையில் வாழ்ந்து வந்த போது, தேவர்களின் மன்னனுடைய {இந்திரனின்} பெரும் பகைவனும், தேவர்களுக்குப் பயங்கரனுமான தானவன் நரகன் அவனது வழியில் பல தடைகளை ஏற்படுத்தினான்
ஸ ப³பௌ⁴ மூர்திலிங்க³ஸ்த²꞉ ஸர்வதே³வாதி⁴பா³தி⁴தா |
தே³வதாநாம்ருஷீணாம் ச ப்ரதீபமகரோத்ததா³ ||2-63-6
மூர்த்திலிங்கத்தில்[“லிங்க ரூபமுடைய க்ருஹத்தில் எல்லாத் தேவர்களையும் மிகத் துன்புறுத்தும் அந்நரகாஸுரன், அப்போது தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தொல்லை செய்தான்”] வசித்துத் தேவர்கள் அனைவரையும் ஒடுக்கிவந்த அந்தத் தானவன், எப்போதும் தேவர்களையும், ரிஷிகளையும் எதிர்த்து வந்தான்.
த்வஷ்டுர்து³ஹிதரம் பௌ⁴ம꞉ கஶேருமக³மத்ததா³ |
க³ஜரூபேண ஜக்³ராஹ ருசிராங்கீ³ம் சதுர்த³ஶீம் ||2-63-7
யானையின் வடிவை ஏற்ற அந்தப் பௌமன் {நரகாசுரன்}, துவஷ்டாவின்[துவஷ்டா என்பது பொதுவாகத் தேவதச்சனான விஷ்வகர்மனைக் குறிக்கும்] மகளும், அழகிய அங்கங்களைக் கொண்டவளுமான கசேரு, பதினான்கு வயதை அடைந்த போது அபகரித்துச் சென்றான்.
ப்ரமத்²ய தாம் வராரோஹாம் நரகோ வாக்யமப்³ரவீத் |
நஷ்டஶோகப⁴யோ மோஹாத்ப்ராக்³ஜ்யோதிஷபதிஸ்ததா³ ||2-63-8
ஜோதிஷத் தலைவன் {பிராக்ஜோதிஷ மன்னன் நரகன்}, அழகிய கன்னியரில் சிறந்தவளான அவளை அபகரித்துச் சென்று, கவலையும், அச்சமும் இல்லாதவனாகச் செருக்குடன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.
யாநி தே³வமநுஷ்யேஷு ரத்நாநி விவிதா⁴நி ச |
பி³ப⁴ர்தி ச மஹீ க்ருத்ஸ்நா ஸாக³ரேஷு ச யத்³வஸு ||2-63-9
அவன், “தேவர்களிடமும், மனிதர்களிடமும் இருக்கும் அனைத்து வகை ரத்தினங்களையும், பூமியில் ஒளிர்பவையும், மொத்தப் பெருங்கடலில் உள்ளவையுமான செல்வங்கள் அனைத்தையும்
அத்³யப்ரப்⁴ருதி தாநீஹ ஸஹிதா꞉ ஸர்வநைர்ருதா꞉ |
மமைவோபாஹரிஷ்யந்தி தை³த்யாஶ்ச ஸஹ தா³நவை꞉ ||2-63-10
தைத்திய, தானவர்களுடன் கூடிய அசுரர்கள் அனைவரும் இன்று முதல் எனக்கு (காணிக்கையாக) அளிக்கட்டும்” என்றான்.
ஏவமுத்தமரத்நாநி வஸ்த்ராணி விவிதா⁴நி ச |
ஸ ஜஹார ததா³ பௌ⁴மஸ்தச்ச நாதி⁴சகார ஸ꞉ ||2-63-11
இவ்வகையில் அந்தப் பௌமன் (நரகன்) சிறந்த ரத்தினங்களையும், பல்வேறு வகைத் துணிமணிகளையும் அடைந்தான். ஆனால் அவன் அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தான்-
க³ந்த⁴ர்வாணாம் ச யா꞉ கந்யா ஜஹார நரகோ ப³லீ |
யாஶ்ச தே³வமநுஷ்யாணம் ஸப்த சாப்ஸரஸாம் க³ணா꞉ ||2-63-12
பலம்வாய்ந்தவனான அந்த நரகன், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோரிடம் உள்ள கன்னிகையர் அனைவரையும், ஏழு வகை அப்சரஸ்களையும் கவர்ந்து சென்றான்.
சதுர்த³ஶ ஸஹஸ்ராணி ஏகவிம்ஶச்ச²தாநி ச |
ஏகவேணீத⁴ரா꞉ ஸர்வா꞉ ஸதீமார்க³மநுவ்ரதா꞉ ||2-63-13
இவ்வாறு ஒற்றைப் பின்னலுடன் கூடிய {கன்யா விரதம் பேணும்} தூய்மையான கன்னிகையர் பதினாறாயிரத்து நூறு {16100} பேர் {அவனிடம்} கொண்டு வரப்பட்டனர்
வைஶம்பாயந உவாச
தாஸாம் புரவரம் பௌ⁴மோ(அ)காரயந்மணிபர்வதம் |
அலகாயாமதீ³நாத்மா முரோ꞉ ஸ்வவிஷயம் ப்ரதி ||2-63-14
பலம்வாய்ந்தவனான பௌமன் {நரகன்}, தைத்தியனான முரனின் ஆட்சிப்பகுதிக்கு அருகில் அளகையில் {அளகாபுரியில்} உள்ள மணி மலையில் {மணிபர்வதத்தில்} அவர்களுக்காக {அந்தக் கன்னிகையருக்காக} ஒரு வீட்டை அமைத்தான்
தாஶ்ச ப்ராக்³ஜ்யோதிஷபதிம் முரோஶ்சைவ த³ஶாத்மஜா꞉ |
நைர்ருதாஶ்ச யதா² முக்²யா꞉ பாலயந்த உபாஸதே |
ஸ ஏஷ தமஸ꞉ பாரே வரத்³ருப்தோ மஹாஸுர꞉ |2-63-15
அங்கே முரனின் பத்து மகன்களும், அந்தக் கன்னியரும், முன்னணி ராட்சசர்கள் பிறரும் பிராக்ஜோதிஷ மன்னனின் ஆணையை ஏற்று அவனைத் துதித்து வந்தனர். ஓ! மன்னா பேரசுரனும், வரம்பெற்றவனுமான அந்த நரகன் நீலக் கடற்கரையில் வாழ்ந்து வந்தான்
ந சாஸுரக³ணை꞉ ஸர்வை꞉ ஸஹிதை꞉ கர்ம தத்புரா |
க்ருதபூர்வம் ததா³ கோ⁴ரம் யத³கார்ஷீந்மஹாஸுர꞉ ||2-63-16
அசுரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரண்டாலும் கூட இந்தப் பேரசுரன் செய்த பயங்கரச் செயல்களைச் செய்ய முடியாது.
அதி³திம் த⁴ர்ஷயாமாஸ குண்ட³லார்தே² மஹாஸுர꞉ |
யம் மஹீ ஸுஷுவே தே³வீ யஸ்ய ப்ராக்³ஜ்யோதிஷம் புரம் ||2-63-17
ஓ! ஜனமேஜயா, பூமாதேவிக்குப் பிறந்தவனும், பிராக்ஜோதிஷத்தைத் தலைநகராகக் கொண்டவனுமான அந்தப் பேரசுரன் நரகன், {தேவர்களின் அன்னையான} அதிதியின் காது குண்டலங்களை அடைவதற்காக அவளையும் ஒடுக்கினான்.
த்³வாரபாலாஶ்ச சத்வாரஸ்தஸ்யாஸந்யுத்³த⁴து³ர்மதா³꞉ |
ஹயக்³ரீவோ நிஸுந்த³ஶ்ச வீர꞉ பஞ்சநத³ஸ்ததா² ||2-63-18
அவன், போரில் பயங்கரர்களும், ஹயக்ரீவன், நிசுந்தன், வீரன், பஞ்சநதன் என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வாயில்காப்போர் நால்வரை கொண்டிருந்தான்.
முரு꞉ புத்ரஸஹஸரைஶ்ச வரத³த்தோ(அ)ஸுரோ மஹாந் |
ஆதே³வயாநமாவ்ருத்ய பந்தா²நம் ஸமுபஸ்தி²த꞉ |
வித்ராஸந꞉ ஸுக்ருதிநாம் விரூபை ராக்ஷஸை꞉ ஸஹ ||2-63-19
அந்தப் பேரசுரனும், முரனும், அவனது ஆயிரம் மகன்களும் வரங்களைப் பெற்றவர்களாக இருந்தனர். வடிவப்பழுது கொண்டவர்களான ராட்சசர்கள், தேவர்களின் பாதையில் தடையை ஏற்படுத்தியும், நற்செயல்களைச் செய்வோரை அச்சுறுத்தியும் வந்தனர்.
தத்³வதா⁴ர்த²ம் மஹாபா³ஹு꞉ ஶங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் |
ஜாதோ வ்ருஷ்ணிஷு தே³வக்யாம் வஸுதே³வாஜ்ஜநார்த³ந꞉ ||2-63-20
அவனை {நரகாசுரனை} அழிப்பதற்காகவே வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை ஏந்தியவனுமான ஜனார்த்தனன், வசுதேவன் மூலம் தேவகியிடம் பிறந்தான்
தஸ்யாத² புருஷேந்த்³ரஸ்ய லோகப்ரதி²ததேஜஸ꞉ |
நிவாஸோ த்³வாரகா தே³வைருபாயாது³பபாதி³தா ||2-63-21
தேவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, பெரும்புருஷனும், பூமியில் ஆற்றலுக்காக நன்கறியப்பட்டவனுமான மாதவன் வசிப்பதற்காகத் துவாரகா நகரத்தைத் தேர்ந்தெடுத்தனர்
அதீவ ஹி புரீ ரம்யா த்³வாரகா வாஸவக்ஷயாத் |
மஹார்ணவபரிக்ஶிப்தா பஞ்சபர்வதஶோபி⁴தா ||2-63-22
பெருங்கடலால் சூழப்பட்டதும், ஐந்து மலைகளால் அழகூட்டப்பட்டதுமான அந்தத் துவாராவதி நகரம், அழகில் இந்திரனின் நகரைவிட {அமராவதியைவிட} சிறந்திருந்தது
தஸ்யாம் தே³வபுராபா⁴யாம் ஸபா⁴ காஞ்சநதோரணா |
ஸா தா³ஶார்ஹீதி விக்²யாதா யோஜநாயாமவிஸ்த்ருதா ||2-63-23
தத்ர வ்ருஷ்ண்யந்த⁴கா꞉ ஸர்வே ராமக்ருஷ்ணபுரோக³மா꞉ |
லோகயாத்ராமிமாம் க்ருத்ஸ்நாம் பரிரக்ஷந்த ஆஸதே ||2-63-24
தேவர்களின் சபாமண்டபத்திற்கு ஒப்பானதும், ஒரு யோஜனை அளவு கொண்டதும், தங்கத்தாலான பெரும் வாயில்களைக் கொண்டதுமான அந்நகரின் சபாமண்டபம் தாசார்ஹம் {தாசார்ஹீ} என்ற பெயரில் கொண்டாடப்பட்டது; ராமகிருஷ்ணர்களின் தலைமையிலான விருஷ்ணி, அந்தகக் குல முன்னணி உறுப்பினர்கள் அங்கே நாள்தோறும் தங்கள் பணிகளைச் செய்து வந்தனர்.(23,24)
தத்ராஸீநேஷு ஸவஷு கதா³சித்³ப⁴ரதர்ஷப⁴ |
தி³வ்யக³ந்தோ⁴ வவௌ வாயு꞉ புஷ்பவர்ஷம் பபாத ஹ ||2-63-25
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, ஒரு காலத்தில் யாதவர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, தெய்வீக மணங்கமழும் தென்றல் அங்கே வீசியது, மலர்மாரியும் அங்கே பொழிந்தது.
தத꞉ கிலகிலாஶப்³த³꞉ ப்ரபா⁴ஜாலாபி⁴ஸம்வ்ருத꞉ |
முஹூர்தமந்தரிக்ஷே(அ)பூ⁴த்ததோ பூ⁴மௌ ப்ரதிஷ்டி²த꞉ ||2-63-26
மத்⁴யே து தேஜஸஸ்தஸ்ய பாண்டு³ரம் க³ஜமாஸ்தி²த꞉ |
வ்ருதோ தே³வக³ணை꞉ ஸர்வைர்வாஸவ꞉ ஸமத்³ருஶய்த ||2-63-27
ஒரு கணத்தில் ஒளி வலையால் மறைக்கப்பட்ட பேரொலி வானத்தில் கேட்டது. அந்த ஒளிக்குள் தேவர்கள் சூழ வெள்ளை யானையில் அமர்ந்திருக்கும் வாசவன் {இந்திரன்} தென்பட்டான்.(26,27)
ரமக்ருஷ்ணௌ ச ராஜா ஸ வ்ருஷ்ண்யந்த⁴கக³ணை꞉ ஸஹ |
ப்ரத்யுத்³யயுர்மஹாத்மநம் பூஜயந்த꞉ ஸுரேஶ்வரம் ||2-63-28
ராமன் {பலராமன்}, கிருஷ்ணன், மன்னன் உக்ரசேனன் ஆகியோரும் முன்னணி யாதவர்கள் பிறரும் வெளியே சென்று தேவர்களின் மன்னனை வரவேற்றனர்.
ஸோ(அ)வதீர்ய க³ஜாத்தூர்ணம் பரிஷ்வஜ்ய ஜநார்த³நம் |
ஸஸ்வஜே ப³லதே³வம் ச தம் ச ராஜாநமாஹுகம் ||2-63-29
அதன் பிறகு அந்த யானைகளின் தலைவனிடம் {ஐராவதத்தில்} இருந்து விரைவாக இறங்கி வந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்}, ஜனார்த்தனனையும், பலதேவனையும், மன்னன் ஆஹுகனையும் {உக்ரசேனனையும்} ஆரத்தழுவிய பிறகு,
வ்ருஷ்நீநந்யாந்ஸஸ்வஜே ச யதா²காலம் யதா²வய꞉ |
பூஜிதோ ராமக்ருஷ்ணாப்⁴யாமாவிவேஶ ஸ தாம் ஸபா⁴ம் ||2-63-30
வயதுக்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில் பிற யாதவர்களையும் தழுவினான். அதன்பிறகு ராமகிருஷ்ணர்களால் துதிக்கப்பட்ட அவன் அந்த மகத்தான சபா மண்டபத்திற்குள் நுழைந்தான்.
தத்ராஸீநோ(அ)ப்⁴யலங்க்ருத்வா ஸபா⁴ம் தாமமரேஶ்வர꞉ |
அர்கா⁴தி³ஸமுதா³சாரம் ப்ரத்யக்³ருஹ்ணாத்³யதா²விதி⁴ ||2-63-31
தேவர்களின் மன்னன் அங்கே அமர்ந்து, அதைப் புகழ்ந்து, அர்க்கியத்தையும், விருந்தோம்பலுக்கான பிற பொருட்களையும் முறையாக ஏற்றுக் கொண்டான்.
வைஶம்பாயந உவாச
அதோ²வாச மஹாதேஜா வாஸவோ வாஸவாநுஜம் |
ஸாந்த்வபூர்வம் கரேணாஸ்ய ஸம்ஸ்ப்ருஶ்ய வத³நம் ஶுப⁴ம் ||2-63-32
அப்போது பெருஞ்சக்திவாய்ந்த வாசவன் {இந்திரன்}, தன் தம்பியின் (கிருஷ்ணனின்) மங்கல முகத்தைத் தன் கரங்களால் தீண்டிப் பின்வரும் தெளிவான சொற்களைச் சொன்னான்.
தே³வகீநந்த³ந வச꞉ ஶ்ருணு மே மது⁴ஸூத³ந |
யேந த்வாபி⁴க³தோ(அ)ஸ்ம்யத்³ய கார்யேணாமித்ரகர்ஶந ||2-63-33
{இந்திரன்}, “ஓ! தேவகியின் மகனே, ஓ! மதுசூதனா, ஓ! பகைவரைக் கொல்பவனே, நான் வந்த காரணத்தைக் கேட்பாயாக.
நைர்ருதோ நரகோ நாம ப்³ரஹ்மணோ வரத³ர்பித꞉ |
அதி³த்யா꞉ குண்ட³லே மோஹாஜ்ஜஹார தி³திநந்த³ந꞉ ||2-63-34
பேரசுரன் நரகன், பிரம்மனால் தனக்கு அளிக்கப்பட்ட வரத்தால் செருக்கடைந்த மூடத்தனத்தில், அதிதியின் காது குண்டலங்களைக் களவாடினான்.
தே³வாநாம் விப்ரியே நித்யம்ருஷீணாம் ச ஸ வர்ததே |
தம் ச தே³வாந்தரம் ப்ரேக்ஷ்ய ஜஹி த்வம் பாபபூருஷம் ||2-63-35
எப்போதும் தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் பகையாகச் செயல்பட்டு வரும் அவன், சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். எனவே நீ அந்தப் பாவியைக் கொல்வாயாக.
அயம் த்வாம் க³ருட³ஸ்தத்ர ப்ராபயிஷ்யதி காமக³꞉ |
காமவீர்யோ(அ)திதேஜஸ்வீ வைநதேயோ(அ)ந்தரிக்ஷக³꞉ ||2-63-36
வினதையின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், எப்போதும் வானத்தில் திரிபவனுமான இந்தக் கருடன் உன்னை அங்கே கொண்டு செல்வான்.
அவத்⁴ய꞉ ஸர்வபூ⁴தாநாம் பௌ⁴ம꞉ ஸ நரகோ(அ)ஸுர꞉ |
நிஷூத³யித்வா தம் பாபம் க்ஷிப்ரமாக³ந்துமர்ஹஸி ||2-63-37
ஓ! உபேந்திரா, பூமியின் மகனான நரகன் எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாவான். நீ அந்தப் பாவியை உடனே கொன்று திரும்புவாயாக” என்றான்.
இத்யுக்த꞉ புண்ட³ரீகாக்ஷோ தே³வராஜேந கேஶவ꞉ |
ப்ரதிஜஜ்ஞே மஹாபா³ஹுர்நரகஸ்ய நிப³ர்ஹணே ||2-63-38
தேவர்களின் மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரைக் கண்ணனுமான கேசவன், நரகனைக் கொல்வதாக உறுதியளித்தான்
தத꞉ ஸஹைவ ஶக்ரேண ஶங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் |
ப்ரதஸ்தே² க³ருடே³நாத² ஸத்யபா⁴மாஸஹாயவாந் ||2-63-39
அவன், தன் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சத்யபாமாவுடன் சேர்ந்து கருடனின் முதுகில் அமர்ந்து கொண்டு சக்ரனுடன் விரைவாகப் புறப்பட்டுச் சென்றான்[“பூமாதேவியின் ஒப்புதலுடன் மட்டுமே நரகனின் மரணம் நேர முடியும். எனவே பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவின் ஒப்புதலுடன் மட்டுமே நரகனைக் கொல்ல முடியும்-ஹரிவம்சத்தின் தென்பாடத்தில் சத்யபாமாவுக்கும், நரகனுக்கும் இடையில் நடந்த போர் ஒரு முழு அத்தியாயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது”)
க்ரமேண ஸப்தஸ்கந்தா⁴ந்ஸ மருதாம் ஸஹவாஸவ꞉ |
பஶ்யதாம் யது³ஸிம்ஹாநாமூர்த்⁴வமாசக்ரமே ப³லீ ||2-63-40
அந்தக் கேசவன், முன்னணி யதுக்களின் கண்களுக்கு முன்பாகவே பெருஞ்சக்திவாய்ந்த கருடனின் துணையுடன், காற்று தேவர்களின் ஏழு பகுதிகளையும் {ஸப்த மருத்துகளின் இடங்களையும்} கடந்து உயர எழுந்தான்.
வாரணேந்த்³ரக³த꞉ ஶக்ரோ க³ருட³ஸ்தோ² ஜநார்த³ந꞉ |
விதூ³ரத்வாத்ப்ரகாஶேதே ஸூர்யாசந்த்³ரமஸாவிவ ||2-63-41
யானைகளின் தலைவன் மீது அமர்ந்திருந்த தேவர்களின் மன்னனும், கருடனின் மீது அமர்ந்திருந்த ஜனார்த்தனனும், {அவர்கள் சென்ற} தொலைவின் காரணமாகச் சூரியனையும், சந்திரனையும் போலத் தோன்றினர்.
அந்தரிக்ஷே ச க³ந்த⁴ர்வைரப்ஸரோபி⁴ஶ்ச கேஶவ꞉ |
ஸ்தூயமாநோ(அ)த² ஶக்ரஶ்ச க்ரமேணாந்தரதீ⁴யத ||2-63-42
அப்போது வானத்தில் அவர்களது மகிமைகளைப் பாடிக் கொண்டிருந்த கந்தர்வர்களும், அப்சரஸ்களும் மெதுவாக மறைந்தனர்.
ஸமாதா⁴யேதிகர்தவ்யம் வாஸவோ விபு³தா⁴தி⁴ப꞉ |
ஸ்வமேவ ப⁴வநம் ப்ராயாத்க்ருஷ்ண꞉ ப்ராக்³ஜ்யோதிஷம் ப்ரதி ||2-63-43
பிறகு கிருஷ்ணன் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய தேவர்களின் மன்னன் {இந்திரன்} தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றதும், அவன் {கிருஷ்ணன்} பிராக்ஜோதிஷ நகரத்திற்குச் சென்றான்.
பக்ஷாநிலஹதோ வாயு꞉ ப்ரதிலோமம் வவௌ ததா³ |
ததோ பீ⁴மரவா மேகா⁴ ப³ப்⁴ரமுர்க³க³நேசரா꞉ ||2-63-44
அப்போது கருடனின் சிறகடிப்பால் காற்று முரண்திசையில் வீசியது, பயங்கர ஒலியெழுப்பும் மேகங்களால் பறவைகள் அஞ்சின
க்ஷநேந ஸமநுப்ராப்தௌ த்³விஜேநாகாஶகே³ந வை |
தூ³ராதே³வ ச தாந்த்³ருஷ்ட்வா ப்ரயயௌ யத்ர தே ஸ்தி²தா꞉ ||2-63-45
வானுலாவும் அந்தப் பறவையின் உதவியால் தான் விரும்பிய இடத்தை விரைவில் அடைந்த மாதவன், தொலைவிலிருந்தே வாயில் காப்போர் எங்கிருக்கின்றனர் என்பதைக் கண்டு அங்கே சென்றான்.
அபஶ்யத்³த்³வாரி தத்ரஸ்தா²ம் ஹஸ்த்யஶ்வரத²வாஹிநீம் |
க்ஷுராந்தாந்மௌரவாந்பாஶாந்ஷட்ஸஹஸ்ராந்த³த³ர்ஶ ஹ ||2-63-46
மணி மலையின் வாயிலை அடைந்த அவன், யானைகளையும், குதிரைகளையும், தேர்வீரர்களையும், கத்தி போன்று கூரிய ஆறாயிரம் சுருக்குக் கயிறுகளையும் {இரு முனைகளிலும் கத்திகள் தொங்கும் ஆறாயிரம் மௌரவப் பாசங்களையும் கண்டான்}
வைஶம்பாயந உவாச
க³ருட³ஸ்யோபரி ஶ்ரீமாஞ்ச²ங்க²சக்ரக³தா³த⁴ர꞉ |
பி³ப்⁴ரந்நீலாம்பு³தா³காரம் பீதவாஸாஶ்சதுர்பு⁴ஜ꞉ ||2-63-47
வநமாலாகுலோரஸ்க꞉ ஶ்ரீவத்ஸாங்கிதபூ⁴ஷண꞉ |
கிரீடமூர்த்³தா⁴ ஸூர்யாப⁴꞉ ஸவித்³யுதி³வ சந்த்³ரமா꞉ ||2-63-48
அழகனும், {கருடன் மீதிருந்தவனும்}, நாற்கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை ஏந்தியவனும், கழுத்தில் காட்டு மலர்மாலை சூடியவனும், மார்பில் ஸ்ரீவத்ஸமெனும் சந்திரன் போன்ற மாயக்குறியைத் தாங்கியவனும், மின்னலின் துணையுடன் கூடிய சூரியனையோ, சந்தினையோ போன்ற பிரகாசமுடைய மகுடந்தரித்தவனும், நீலக் கடல் போலத் தெரிந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனுமான கிருஷ்ணனைக் கண்டும்,(47,48)
ஜ்யாம் விகூஜந்மஹாஶப்³த³꞉ ஶ்ரூயதே(அ)ஶநிநி꞉ஸ்வந꞉ |
ஜ்ஞாத்வா ச தா³நவ꞉ ஸர்வம் ஸ்வயம் விஷ்ணுரிஹாக³த꞉ ||2-63-49
வஜ்ரத்தின் இடிக்கு ஒப்பான அவனது வில்லின் நாணொலியைக் கேட்டும் வந்திருப்பவன் விஷ்ணு என்பதைத் தானவர்கள் புரிந்து கொண்டனர்
க்ரோதா⁴த்³த்³விகு³ணரக்தாக்ஷோ முரு꞉ காலாந்தகோபம꞉ |
அப்⁴யதா⁴வத வேகே³ந ஶக்திம் க்³ருஹ்ய மஹாஸுர꞉ ||2-63-50
காலனுக்கு ஒப்பானவனும், வைரத்தாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான பேரசுரன் முரு, தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அவனை {கிருஷ்ணனை} நோக்கி விரைந்து சென்று அவன் மீது அந்தப் பேராயுதத்தை ஏவினான்
சிக்ஷேப ஸுமஹாஶக்திம் வஜ்ரகாஞ்சநபூ⁴ஷிதாம் |
தாமாபதந்தீம் ஶக்தீம் து மஹோல்காம் ஜ்வலிதாமிவ ||2-63-51
எரிகொள்ளியைப் போலத் தன்னை நோக்கி வரும் அந்தச் சக்தி ஆயுதத்தைக் கண்ட வாசுதேவன், பொன் இறகுகளைக் கொண்ட தன் கணைகளை எடுத்தான்.
ஸமாத⁴த்த ஶரம் சைகம் ருக்மபுங்க²ம் ஜநார்த³ந꞉ |
த்³விதா⁴ச்சி²நத்க்ஷுரப்ரேண வாஸுதே³வ꞉ ஸ வீர்யவாந் ||2-63-52
பெருஞ்சக்திவாய்ந்தவனான வாசுதேவன், மின்னலைப் போல் எரிந்து கொண்டிருந்த அந்தக் கணையை ஏவியபோது அஃது அந்தச் சக்தி ஆயுதத்தை இரண்டாக அறுத்தது.
ஶக்திம் சிச்சே²த³ தத்ராஸௌ வித்³யுத்புஞ்ஜ இவ ஜ்வலந் |
புநஶ்ச க்ரோத⁴ரக்தாக்ஷோ முருர்க்³ருஹ்ய மஹாக³தா³ம் ||2-63-53
அந்தச் சக்தி ஆயுதம் வெட்டப்பட்ட போது கோபத்தில் கண்கள் சிவந்த முரு, பெரும் கதாயுதம் ஒன்றை எடுத்து, தேவர்களின் மன்னன் வஜ்ரத்தை ஏவுவதைப் போல அதை ஏவினான்
இந்த்³ராஶநிரிவேந்த்³ரேண விக்ருஷ்ட இவ நி꞉ஸ்வந꞉ |
ஆகர்ணமுக்தம் சிக்ஷேப அர்த⁴சந்த்³ரம் ஸுரோத்தம꞉ ||2-63-54
மத்⁴யதே³ஶே து சிச்சே²த³ க³தா³ம் தாம் ருக்மபூ⁴ஷிதாம் |
புநஶ்சிச்சே²த³ ப⁴ல்லேந தா³நவஸ்ய ஶிரோ ரணே ||2-63-55
தேவர்களில் முதன்மையான கேசவன், பிறைவடிவம் கொண்ட தன் ஆயுதத்தை {அர்த்தச்சந்திர பாணத்தைக்} காது வரை இழுத்துப் பொன்னாலான அந்தக் கதாயுதத்தின் நடுப்பகுதியில் வெட்டினான். அதன் பிறகு ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தத் தானவனின் {முருவின்} தலையைக் கொய்தான்.(54,55)
ஸஞ்சி²த்³ய பாஶாண்ஸர்வாம்ஸ்தந்முரும் ஹத்வா ஸபா³ந்த⁴வம் |
ஸோ(அ)க்³ர்யாந்ரக்ஷோக³ணாந்ஹத்வா நரகஸ்ய மஹாப³லாந் ||2-63-56
அந்தத் தேவகி மகன் {கிருஷ்ணன்}, இவ்வாறு முருவையும், அவனது நண்பர்களையும் கொன்று, அவனது சுருக்குக் கயிறுகளையும் {பாசங்களையும்} அறுத்துப் பெருஞ்சக்திவாய்ந்த நரகனின் ராட்சசப் படைவீரர்களையும் கொன்றான்.
ஶிலாஸங்கா⁴நதிக்ரம்ய ப⁴க³வாந்தே³வகீஸுத꞉ |
அபஶ்யத்³தா³நவம் ஸைந்யம் நிஸுந்த³ம் ச மஹாப³லம் ||2-63-57
அவன் அந்த மலையைக் கடந்ததும், நிசுந்தனையும், திதியின் மகனான ஹயக்ரீவனையும், பல்வேறு வழிகளில் போரிடவல்ல பிற வீரர்களையும் கொண்ட தானவப் படையைக் கண்டான்
ஹயக்³ரீவம் ச தி³திஜம் ததா²ந்யாம்ஶ்சித்ரயோதி⁴ந꞉ |
ரோத⁴யாமாஸ தந்மார்க³ம் ஸ்வஸைந்யேந மஹாப³ல꞉ ||2-63-58
அதன் பிறகு, பெருஞ்சக்தி வாய்ந்தவனான நிசுந்தன், வேகமாகத் தன் தேரில் ஏறி, பொன்னாலான தெய்வீகக் கவசத்தை அணிந்து கொண்டு, தன் படையின் மூலம் கேசவனின் பாதையில் தடையை ஏற்படுத்தினான்
நிஸுந்தோ³ ப³லிநாம் ஶ்ரேஷ்டோ² ரத²மாருஹ்ய ஸத்வரம் |
ஜக்³ராஹ கார்முகம் தி³வ்யம் ஹேமப்ருஷ்ட²ம் து³ராஸத³ம் ||2-63-59
அதன் பிறகு அவன் {நிசுந்தன்}, {கார்முகம் என்ற தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு}, கேசியையும், மதுவையும் கொன்றவவனை {கேசவனை/ மதுசூதனனை} பத்துக் கணைகளால் துளைத்தான்.
விவ்யாத⁴ த³ஶபி⁴ர்பா³ணைர்நிஸுந்தோ³ மது⁴ஸூத³நம் |
கேஶவஶ்சாபி ஸப்தத்யா விவ்யாத⁴ நிஶிதை꞉ ஶரை꞉ ||2-63-60
அவனோ {கிருஷ்ணனோ} சிறகு படைத்த எழுபது கணைகளால் அந்தத் தானவனைப் பதிலுக்குத் தாக்கி, அவனது கணை தன்னை நெருங்கும் முன்பே வானத்தில் அதை அறுத்தான்
அப்ராப்தாம்ஶ்சாந்தரிக்ஷே தாஞ்ச²ராம்ஶ்சிச்சே²த³ மாத⁴வ꞉ |
தே ஸர்வே ஸைநிகா꞉ க்ருஷ்ணம் ஸமந்தாத்பர்யவாரயந் ||2-63-61
அப்போது கேசவனை அவனது {நிசுந்தனின்} படை முற்றிலும் சூழ்ந்து கொண்டது. தேவர்களில் முதன்மையான ஜனார்த்தனன் அவனது கணை வலையால் மறைக்கப்பட்டிருந்தாலும்,
ஶரஜாலேந மஹதா சா²த்³யமாந꞉ ஸுரோத்தம꞉ |
த்³ருஷ்ட்வா தாந்தா³நவாந்ஸர்வாந்ஸக்ரோதோ⁴ மது⁴ஸூத³ந꞉ ||2-63-62
ததோ தி³வ்யேந சாஸ்த்ரேந பார்ஜந்யேந ஜநார்த³ந꞉ |
மஹதா ஶரவர்ஷேண வாரயாமாஸ தத்³ப³லம் ||2-63-63
அந்தத் தானவர்களைக் கண்டு பெருஞ்சீற்றமடைந்து, மேகம்போன்ற ஆயுதங்களையும், கணைகள் பிறவற்றையும் மழையாகப் பொழிந்து அந்தத் தானவப்படையை எதிர்த்தான்.(62,63)
பஞ்சபஞ்சஶரைஸ்தேஷு ஏகைகேந ச தாந்ப³ஹூண் |
பார்ஜந்யஸ்ய ப்ரபா⁴வேண ஸர்வாந்மர்மஸ்வதாட³யத் ||2-63-64
து³த்³ருவுர்ப⁴யஸம்த்ரஸ்தா ப⁴க்³நாஸ்தே தா³நவா ரணே |
ஸ்வஸைந்யம் வித்³ருதம் த்³ருஷ்ட்வா நிஶ்சக்ராம புநர்ம்ருதே⁴ ||2-63-65
அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து ஐந்து கணைகளால் தாக்கி, அவர்களின் முக்கியப் பகுதிகளை மேகம் போன்ற ஆயுதங்களால் துளைத்தான். அப்போது அந்தத் தானவப் படை அச்சத்தால் நிறைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடியது. இவ்வாறு தன் படை தப்பி ஓடுவதைக் கண்ட அவன் {நிசுந்தன்} மீண்டும் போரிட்டான்.(64,65)
விஸ்ருஜச்ச²ரவர்ஷாணி சா²த³யாமாஸ கேஶவம் |
ந விபா⁴தி ரணே ஸூர்யோ நாபி வ்யோம தி³ஶோ த³ஶ ||2-63-66
அவன் கணைமாரியால் கேசவனை மறைத்தான். அப்போது சூரியனோ, வானமோ, பத்துத் திக்குகளோ புலப்படவில்லை.
ஶரை꞉ ஸஞ்சா²த³யாமாஸ நிஸுந்தோ³ க³ருட³த்⁴வஜம் |
ஸாவித்ரம் நாம தி³வ்யாஸ்த்ரம் ஜக்³ராஹ புருஷோத்தம꞉ ||2-63-67
அதன்பிறகு புருஷர்களில் முதன்மையான ஹரி, சாவித்ரம் என்ற பெயர் கொண்ட தெய்வீக ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் அவனது கணைகளை வெட்டி வீழ்த்தினான்.
தேந பா³ணேந தாந்பா³ணம்ஶ்சிச்சே²த³ ஸமரே ஹரி꞉ |
பா³ணைர்பா³ணாம்ஶ்ச ஸம்ச்சி²த்³ய தஸ்ய க்ருஷ்ணோ மஹாப³ல꞉ ||2-63-68
ச²த்ரமேகேந பா³ணேந ரதே²ஷாம் ச த்ரிபி⁴꞉ ஶரை꞉ |
புநஶ்சிச்சே²த³ தாநஶ்வாம்ஶ்சதுர்பி⁴ஶ்சதுர꞉ ஶரை꞉ ||2-63-69
பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், தன் கணைகளால் தானவர்களின் கணைகளை வெட்டி, ஒரு கணையால் அவனது {நிசுந்தனின்} குடையையும், மூன்றால் அவனது தேரின் அச்சையும் வெட்டி வீழ்த்தினான். மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளை அழித்து,(68,69)
ஸாரதி²ம் பஞ்சபி⁴ர்பா³ணாஇர்த்⁴வஜமேகேந சிச்சி²தே³ ||
ஶரைகேந வபு꞉ க்ருஷ்ண꞉ ஸுதீக்ஷ்ணேந ஶிதேந வை ||2-63-70
ஶிரஶ்சிச்சே²த³ ப⁴ல்லேந நிஸுந்த³ஸ்ய ஸுரோத்தம꞉ |
ய꞉ ஸஹஸ்ரஸமாஸ்த்வேக꞉ ஸர்வாந்தே³வாநயோத⁴யத் ||2-63-71
ஐந்தால் அவனது சாரதியைக் கொன்று, ஒன்றால் அவனது கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். தேவர்களில் முதன்மையான கிருஷ்ணன், பழங்காலத்தில் தேவர்கள் ஆயிரம் வருடங்கள் போரிட்டும் வெல்லப்படமுடியாத அந்த நிசுந்தனின் தலையைக் கூர் முனை கொண்ட பல்லத்தால் அறுத்தான்.(70,71)
நிஸுந்த³ம் பதிதம் த்³ருஷ்ட்வா ஹயக்³ரீவ꞉ ப்ரதாபவாந் |
ஶிலாம் ப்ரக்³ருஹ்ய மஹதீம் தோலயாமாஸ தா³நவ꞉ ||2-63-72
மலையைப் போன்ற பிரகாசம் கொண்ட ஹயக்ரீவன், அசுரர்களில் முதன்மையான நிசுந்தன் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்டு, பெரும்பாறை ஒன்றை எடுத்து பெருவிசையுடன் அதை எறிந்தான்.(71,72)
ஆவித்⁴ய ஸஹஸாமுஞ்சச்சி²லாம் ஶைலஸமாம் ப்ரபு⁴꞉ |
க்³ருஹீத்வா தி³வ்யபார்ஜந்யமஸ்த்ரமஸ்த்ரவிதா³ம் வர꞉ ||2-63-73
ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களில் முதன்மையான விஷ்ணு, மேகம்போன்ற தன் தெய்வீக ஆயுதத்தை {பார்ஜன்யாயுதத்தை} எடுத்து அந்தப் பாறையை ஏழு துண்டுகளாக நொறுக்கினான்
தி³வ்யாஸ்த்ரேண ஶிலாம் விஷ்ணு꞉ ஸப்ததா⁴க்ருத தேஜஸா |
தத்³விதா³ர்ய மஹச்சாஶ்ம பாதயாமாஸ பூ⁴தலே ||2-63-74
அந்தக் கற்கள் பூமியில் விழுந்தன. ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, சாரங்க வில்லில் இருந்து ஏவப்பட்ட பல்வேறு வண்ணங்களிலான பெருங்கணைகளால், தேவாசுரப் போரைப் போன்று பல்வேறு ஆயுதங்கள் நிறைந்த பயங்கரப் போர் அங்கே நேரிட்டது.
ததஸ்தை꞉ ஶார்ங்க³நிர்முக்தைர்நாநாவர்ணைர்மஹாஶரை꞉ |
யதா² தே³வாஸுரம் யுத்³த⁴மப⁴வத்³ப⁴ரதர்ஷப⁴ |
நாநாப்ரஹரணாகீர்ணம் ததா² கோ⁴ரமவர்தத ||2-63-75
தத꞉ ஶார்ங்க³விநிர்முக்தைர்நாநாவர்ணைர்மஹாஶரை꞉ |
க³ருட³ஸ்தோ² மஹாபா³ஹுர்நிஜகா⁴ந மஹாஸுராந் ||2-63-76
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் இவ்வாறு கருடன் மீது அமர்ந்து கொண்டு அசுரர்களை அழிக்கத் தொடங்கினான்;(75,76)
மஹாலாங்க³லநிர்பி⁴ந்நா꞉ ஶங்க²ஶக்திநிபாதிதா꞉ |
விநேஶுர்தா³நவா꞉ ஸர்வே ஸமாஸாத்³ய ஜநார்த³நம் ||2-63-77
நாராயணனை அணுகிய தானவர்கள் அனைவரும் பெரும் கலப்பையால் தாக்கப்பட்டு, கணைகளாலும், வாள்களாலும் கொல்லப்பட்டனர்.
கேசிச்சக்ராக்³நிநிர்த³க்³தா⁴ தா³நவா꞉ பேதுரம்ப³ராத் |
ஸம்நிகர்ஷக³தா꞉ கேசித்³க³தாஸுவிக்ருதாநநா꞉ ||2-63-78
சிலர், {சுதர்சனச்} சக்கரத்தின் நெருப்பால் எரிக்கப்பட்டு வானில் இருந்து விழுந்தனர், சிலர் அருகில் நெருங்கி கடும் முகத்துடன் தங்கள் ஆவியை {உயிரை} விட்டனர்.
அஸ்ருஜச்ச²ரவர்ஷாணி வ்ருஷ்டிமந்த இவாம்பு³தா³꞉ |
விக்ருதாங்கா³ஸுரா꞉ ஸர்வே க்ருஷ்ணபா³ணப்ரபீடி³தா꞉ ||2-63-79
பல வழிகளில் போரிடவல்ல சில அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டாலும், நீர்த்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்
ஶோணிதாக்தா꞉ ஸ்ம த்³ருஶ்யந்தே புஷ்பிதா இவ கிம்ஶுகா꞉ |
வ்யத்³ரவந்த ஸுவித்ரஸ்தா ப⁴க்³நாஸ்த்ராஹ்ஸ்சித்ரயோதி⁴ந꞉ ||2-63-80
மலர்ந்த கின்சுக மரங்களைப் போல மேனியில் குருதி பூசப்பட்ட அவர்கள் தங்கள் நொறுங்கிய ஆயுதங்களுடன் அச்சத்தால் நிறைந்து ஓட்டம் பிடித்தனர்.
புநஶ்ச க்ரோத⁴ரக்தாக்ஷோ வாயுவேகே³ந தா³நவ꞉ |
த³ஶவ்யாமோச்ச்²ரிதம் வ்ருக்ஷம் ஸமாருஹ்ய வநஸ்பதிம் ||2-63-81
இதனால் கோபத்தில் கண்கள் சிவந்து வெந்த தானவன் ஹயக்ரீவன், காற்றின் வேகத்துடன் கூடியவனாகப் பத்துப் பாகம் உயர்ந்த {அறுபது அடி உயரம் கொண்ட வனஸ்பதி [பாதிரி]} மரத்தைப் பிடுங்கினான்.
வ்ருக்ஷமுத்பாட்ய வேகே³ந ப்ரதிக்³ருஹ்யாப்⁴யதா⁴வத |
சிக்ஷேப ஸ மஹாவ்ருக்ஷம் ஶிக்ஷயா ஸுக⁴நாக்ருதி꞉ ||2-63-82
வ்ருக்ஷவேகா³நிலோத்³பூ⁴த꞉ ஶுஶ்ருவே ஸுமஹாஸ்வந꞉ |
தத꞉ ஶரஸஹஸ்ரேண யதமாநோ ஜநார்த³ந꞉ ||2-63-83
மேகவண்ணம் கொண்ட ஹயக்ரீவன், அம்மரத்தை வேரோடு பிடுங்கி விரைந்து சென்று, தன் பயிற்சியின் விளைவால் அந்த மரம் காற்றில் கடந்து செல்லும் போது ஏற்படும் பேரொலி அனைவராலும் கேட்கப்படும் வகையில் அதை எறிந்தான். ஜனார்த்தனன் ஓராயிரம் கணைகளால் அம்மரத்தைப் பல துண்டுகளால் வெட்டி,(82,83)
நைகதா⁴ தம் ப்ரசிச்சே²த³ சித்ரப⁴க்திநிபா⁴க்ருதிம் |
புநஶ்சைகேந பா³ணேந ஹயக்³ரீவஸ்ய சோரஸி ||2-63-84
ஒரு கணையால் ஹயக்ரீவனின் மார்பில் தாக்கினான். நெருப்பு போல எரிந்த அந்தக் கணை
விவ்யாத⁴ ஸ்தநயோர்மத்⁴யே ஸாயகோ ஜ்வலநப்ரப⁴꞉ |
விவேஶ ஸோ(அ)பி வேகே³ந ஹ்ருத³ம் பி⁴த்த்வா விநிர்க³த꞉ ||2-63-85
பெரும் வேகத்துடன் அந்தத் தானவனின் மார்புக்குள் நுழைந்து, அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தபடியே வெளியே வந்தது
தம் ஜகா⁴ந மஹாகோ⁴ரம் ஹயக்³ரீவம் மஹாப³லம் |
அபாரதேஜா து³ர்த்³த⁴ர்ஷ꞉ ஸ வை யாத³வநநத³ந꞉ ||2-63-86
பயங்கரனும், அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான ஏற்கனவே தேவர்களுடன் ஓராயிரம் வருடம் தனிமையில் போரிட்டவனும், தடுக்கப்பட முடியாதவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஹயக்ரீவனை ஜனார்த்தனன் கொன்றான்.
மத்⁴யே லோஹிதக³ங்க³ஸ்ய ப⁴க³வாந்தே³வகீஸுத꞉ |
ஔத³காயாம் விரூபாக்ஷம் பாப்மாநம் புருஷோத்தம꞉ ||2-63-87
அஷ்டௌ ஶதஸஹஸ்ராணி தா³நவாநாம் பரம்தப꞉ |
நிஹத்ய புருஷவ்யாக்⁴ர꞉ ப்ராக்³ஜ்யோதிஷமுபாத்³ரவத் ||2-63-88
புருஷர்களில் முதன்மையானவனும், பகைவரைக் கொல்பவனும், தலைவனுமான அந்தத் தேவகியின் மகன் கிருஷ்ணன், கடும் முகம் கொண்டவனும், கொடியவனுமான ஹயக்ரீவனை, லோஹிதங்க மாகாணத்தில் மதில்களால் சூழப்பட்ட ஒரு நகரத்தில் இவ்வாறு கொன்றுவிட்டு, எட்டு லட்சம் {800000} தானவர்களையும் கொன்றுவிட்டு பிராக்ஜோதிஷ நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(87,88)
ஹத்வா பஞ்சநத³ம் நாம நரகஸ்ய மஹாஸுரம் |
தத꞉ ப்ராக்³ஜ்யோதிஷம் நாம தீ³ப்யமாநமிவ ஶ்ரியா ||2-63-89
பெருஞ்சக்தி கொண்ட கேசவன், ஒளிர்ந்து கொண்டிருந்த பிராக்ஜோதிஷ நகரத்திற்குள் நுழைந்து,
புரமாஸாத³யாமாஸ யுத்³த⁴ம் தத்ராப⁴வந்மஹத் |
தத꞉ ப்ராத்⁴மாபயச்ச²ங்க²ம் பாஞ்சஜந்யம் மஹாப³ல꞉ ||2-63-90
ஶுஶ்ருவே ஸுமஹாஶப்³த³꞉ ஸம்வர்தநிநதோ³ யதா² |
ஶ்ரூயதே த்ரிஷு லோகேஷு பீ⁴மக³ம்பீ⁴ரநி꞉ஸ்வந꞉ |
தம் ஶ்ருத்வா நரகஶ்சாஸீத்க்ரோத⁴ஸம்ரக்தலோசந꞉ ||2-63-91
பல போர்களைச் செய்து, நரகனின் தொண்டனான பேரசுரன் பஞ்சனனைக் கொன்று, தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். மேக முழக்கத்தையும், சுழலையும் போன்ற பயங்கரமான அந்த முழக்கம், மூவுலகம் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வொலியைக் கேட்ட வீரன் நரகனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.(90,91)
லோஹசக்ராஷ்டஸம்யுக்தம் த்ரிநல்வப்ரதிமம் ரத²ம் |
ரத்நகாஞ்சநசித்ராட்⁴யம் வேதி³காபோ⁴க³விஸ்தரம் ||2-63-92
தன்னுடைய தெய்வீகத் தேரில் ஏறிக் கொண்ட அவன் {நரகாசுரன்}, மாலை நேரச் சூரியனைப் போல ஒளிர்ந்தான். இரும்பாலான எட்டுச் சக்கரங்களைக் கொண்ட அது {அந்தத் தேர்} பொன் வண்ணத்தாலும், சிவப்பு வண்ணத்தாலும் பூசப்பட்டதாகவும், அகன்ற இருக்கைகளைக் கொண்டதாகவும்,
வஜ்ரத்⁴வஜேந மஹதா காஞ்சநேந விராஜிதம் |
ஹேமத³ண்ட³பதாகாட்⁴யம் வைதூ³ர்யமணிகூப³ரம் ||2-63-93
தங்கக் கொடிமரத்தில் தங்கக் கொடிகளையும், முக்கோணக் கொடிகளையும் கொண்டதாகவும் இருந்தது. வைரங்களாலும் {வைடூரியங்களாலும்}, முத்துக்களாலும் அமைந்த அச்சைக் கொண்டதாகவும்,
யுக்தமஶ்வஸஹஸ்ரேண ரத²ம் பரரதா²ருஜம் |
லோஹஜாலைஶ்ச ஸஞ்ச²ந்நம் சித்ரப⁴க்திவிராஜிதம் ||2-63-94
ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படுவதாகவும், இரும்பு வலையால் மறைக்கப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் நிறைந்ததாகவும, பொன்னாலானதாகவும் இருந்தது
ரத²மத்⁴யக³தோ வீர꞉ ஸஸந்த்⁴ய இவ பா⁴ஸ்கர꞉ |
நாநாப்ரஹரணாகீர்ணம் ரத²ம் ஹேமபரிஷ்க்ருதம் ||2-63-95
வஜ்ரம் ரதோ²ரச்ச²த³மிந்து³வர்ணம்
வ்யாநத்³த⁴முக்தாமலதுல்யதேஜா꞉ |
கிரீடமூர்த்³தா⁴ர்கஹுதாஶநாப⁴꞉
கர்நௌ ததா² குண்ட³லயோர்ஜ்வலந்தௌ ||2-63-96
அந்நேரத்தில் நரகனின் முகம் எரிகொள்ளியைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது. வெண்மையானதும், சந்திரனைப் போன்றதுமான மார்புக் கவசத்துடன் அவன் அழகாகத் தெரிந்தான். சூரியனைப் போன்ற ஒளிமிக்க மகுடம் அவனது தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. காது குண்டலங்களால் அவனது காதுகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(95,96)
தூ⁴ம்ரவர்ணா மஹாகாயா ரக்தாக்ஷா விக்ருதாநநா꞉ |
நாநாகவசிந꞉ ஸர்வே தை³த்யதா³நவராக்ஷஸா꞉ ||2-63-97
கடும் முகமும், பழுப்பு வண்ணம் கொண்டவர்களும், பேருடல் படைத்தவர்களுமான தைத்தியர்களும், தானவர்களும், பல்வேறு கவசங்களைத் தரித்துக் கொண்டு ராட்சசர்களுடன் சேர்ந்து வெளிப்பட்டனர்;
க²ட்³க³சர்மத⁴ரா꞉ கேசித்கேசித்தூர்ணத⁴நுர்ப்⁴ருத꞉ |
ஶக்திஹஸ்தாஸ்ததா² கேசிச்சூ²லஹஸ்தாஸ்ததா²பரே ||2-63-98
அவர்களில் சிலர் வாள்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், சிலர் கணைகளையும், அம்பறாத்தூணிகளையும் கொண்டிருந்தனர், சிலர் சக்திகளையும், சிலர் ஈட்டிகளையும் {சூலங்களையும்} கொண்டிருந்தனர்.
க³ஜவாஜிரதௌ²கை⁴ஶ்ச காலயந்தஶ்ச மேதி³நீம் |
நிர்யயுர்நக³ராத்ஸர்வே ஸுஸந்நத்³தா⁴꞉ ப்ரஹாரிண꞉ ||2-63-99
நல்ல உடற்கட்டைப் பெற்றவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமான அந்த வீரர்கள், யானைகளையும், குதிரைகளையும் செலுத்திக் கொண்டு, பூமி அதிர அந்த நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.
வ்ருதோ தை³த்யக³ணை꞉ ஸார்த⁴ம் நரக꞉ காலஸம்நிப⁴꞉ |
பே⁴ரீஶங்க²ம்ருத³ங்கா³நாம் பணவாநாம் ஸஹஸ்ரஶ꞉ ||2-63-100
காலனைப் போன்றவனான நரகன், தைத்தியர்கள் சூழ வந்த போது, ஆயிரக்கணக்கான பேரிகள், சங்குகள், மிருதங்கங்கள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலிகள் மேக முழக்கத்திற்கு ஒப்பாக அனைத்துப் பக்கங்களிலும் கேட்டது.
வாத்³யமாநாநி ஶுஶ்ராவ ஜீமூதநிநதோ³பம꞉ |
யத꞉ க்ருஷ்ணஸ்ததோ க³த்வா ஸர்வே தே விக்ருதாநநா꞉ ||2-63-101
பரிவார்ய க³ருத்மந்தம் ஸர்வே(அ)யுத்⁴யந்த ஸங்க³தா꞉ |
மஹதா சா²த³யாமாஸு꞉ ஶரவர்ஷேண ஸைநிகா꞉ ||2-63-102
கடும் முகம் கொண்ட அந்த வீரர்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து கிருஷ்ணன் காத்திருந்த இடத்திற்குச் சென்று அவனோடு போர்புரியத் தொடங்கினர். அந்தப் படைவீரர்கள் தங்கள் கணைமாரியால் வாசுதேவனை மறைத்தனர்.(101,102)
ஶக்திஶூலக³தா³ப்ராஸாம்ஸ்தோமராந்ஸாயகாந்ப³ஹூந் |
ஆகாஶம் சா²த³யாமாஸுர்விமுஞ்சந்த꞉ ஸஹஸ்ரஶ꞉ ||2-63-103
அவர்கள், ஆயிரக்கணக்கான சக்திகளையும், கதாயுதங்களையும், வேல்களையும், கணைகளையும் ஏவி ஆகாயத்தை மறைத்தனர்.
க்ருஷ்ண꞉ க்ருஷ்ணோம்பு³தா³கார꞉ ஶார்ங்க³ம் க்³ருஹ்ய த⁴நுஸ்தத꞉ |
விஸ்பா²ர்ய ஸுமஹச்சாபம் த⁴நுர்ஜலத³நி꞉ஸ்வநம் ||2-63-104
கருநீல மேகம் போலத் தெரிந்த ஜனார்த்தனன், மேக முழக்கத்தைப் போல நாணொலி எழுப்பும் தன் சாரங்க வில்லை அப்படியும், இப்படியும் அசைத்து,
வ்யஸ்ருஜச்ச²ரவர்ஷாணி தா³நவாநாம் ஜநார்த³ந꞉ |
ஶரவர்ஷேண தத்ஸைந்யம் வ்யத்³ரவத்து மஹாஹவாத் ||2-63-105
தானவர்கள் மீது கணைமாரியைப் பொழியத் தொடங்கினான். பெருஞ்சக்தி வாய்ந்த அந்தப் படைவீரர்கள் இதன் காரணமாகப் பெரிதும் தாக்கப்பட்டனர்.
தத்³யுத்³த⁴மப⁴வத்³கோ⁴ரம் கோ⁴ரரூபேண ரக்ஷஸா |
ப⁴க்³நவ்யூஹாஶ்ச தே ஸர்வே க்ருஷ்ணபா³ணப்ரபீடி³தா꞉ ||2-63-106
இவ்வாறே அந்த இடத்தில் அவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, கடுந்தோற்றம் கொண்ட ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது; கிருஷ்ணனின் கணைகளால் காயமடைந்த தானவர்கள் முறியடிக்கப்பட்டனர்.
கேசிச்சி²ந்நபு⁴ஜாஶ்சைவ ச்சி²ந்நக்³ரீவாஶிராநநா꞉ |
கேசிச்சக்ரத்³விதா⁴ச்சி²ந்நா꞉ கேசித்³பா³ணார்தி³தோரஸ꞉ ||2-63-107
சில தானவர்களின் கைகள் நொறுங்கியிருந்தன; சிலரின் தலையிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது; சிலர் சக்கரத்தால் இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்தனர்; மேலும் சிலர் கணைகளால் மார்பில் காயமடைந்திருந்தனர்.
கேசித்³த்³விதா⁴க்ருதா꞉ ஶக்த்யா க³ஜாஶ்வரத²வாஹநா꞉ |
கேசித்கௌமோத³கீபி⁴ந்நா꞉ கேசிச்சக்ரவிதா³ரிதா꞉ ||2-63-108
தேர்வீரர்களிலும், யானை மாவுத்தர்களிலும், குதிரைப்படையினரிலும் சிலர் இரண்டாக வெட்டப்பட்டிருந்தனர், சிலர் கணைகளாலும், வேல்களாலும் காயமடைந்திருந்தனர்.
ஏவம் விமதி²தா ஸர்வா நராஶ்வரத²வாஹிநீ |
தத்ராஸீந்நரகேணாஸ்ய யுத்³த⁴ம் பரமதா³ருணம் ||2-63-109
இவ்வாறே யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும் கொண்டிருந்த அந்த மொத்தப் படையும் முழுமையாக நொறுங்கியிருந்தது. அப்போது அவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நரகனுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நேரிட்டது
யத்ஸமாநேந வக்ஷ்யாமி தந்மே நிக³த³த꞉ ஶ்ருணு |
த்ராஸந꞉ ஸுரஸங்கா⁴நாம் நரக꞉ புருஷோத்தமம் ||2-63-110
யோத⁴யாமாஸ தேஜஸ்வீ மது⁴வந்மது⁴ஸூத³நம் |
க்ரோத⁴ரக்தாந்தநயநோ நரகோ க⁴நஸம்நிப⁴꞉ ||2-63-111
நான் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக. தேவர்களுக்குப் பயங்கரனும், பேராற்றல் வாய்ந்தவனுமான நரகன், புருஷர்களில் முதன்மையான மதுசூதனனுடன் அந்த மதுவைப் போலவே போரிட்டான். காலனைப் போன்ற அந்த வீர நரகன், அந்தப் போரில் சிவந்த கண்களுடன்(110,11)
ஜக்³ராஹ கார்முகம் வீர꞉ ஶக்ரசாபமிவோச்ச்²ரிதம் |
ததா²ர்ககிரணப்ரக்²யம் பா³ணம் ஜக்³ராஹ கேஶவ꞉ ||2-63-112
சக்ரனின் வில்லுக்கு ஒப்பான {கார்முகம் என்றழைக்கப்பட்ட} பெரும் வில்லை எடுத்த போது, சூரியனின் கடுங் கதிரைப் போன்ற ஒரு கணையை எடுத்துக் கொண்ட கேசவன்,
தி³வ்யேநாஸ்த்ரேண ஸமரே பூரயாமாஸ தம் ரத²ம் |
உத்தமாஸ்த்ரம் மஹாபாதம் முமோச நரகோ ப³லீ ||2-63-113
தெய்வீக ஆயுதங்களால் அவனது தேரை நிரப்பினான். பெருஞ்சக்திவாய்ந்த நரகன் பெரும் ஆயுதம் {மஹாபாதம்} ஒன்றை எடுத்துக் கொண்டு
வஜ்ரவிஸ்பூ²ர்ஜிதாகாரமாயாந்தம் வீக்ஷ்ய கேஶவ꞉ |
சிச்சே²தா³ஸ்த்ரம் மஹாபா⁴க³ஶ்சக்ரேண மது⁴ஸூத³ந꞉ ||2-63-114
போர்வெறி கொண்டவனும், மின்னலைப் போன்று பிரகாசிக்கும் முகத்தைக் கொண்டவனும், மதுசூதனனுமான அந்தப் பெரும் ஜனார்த்தனனை எதிர்கொண்டபோது, அவன் தன்னுடைய சக்கரத்தால் அந்த ஆயுதத்தை வெட்டி,
வ்யஹநத்ஸ ரத²ம் சாஸ்ய ஶரைகேண ஜநார்த³ந꞉ |
ஸரத²ம் ஸத்⁴வஜம் ஸாஶ்வம் ஜகா⁴ந த³ஶபி⁴꞉ ஶரரை꞉ ||2-63-115
கணை ஒன்றால் அவனுடைய தேரோட்டியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான். பிறகு அந்த மதுசூதனன் பத்துக் கணைகளால் குதிரைகளுடன் கூடிய தேரையும், கொடிமரங்களையும் அழித்து,
தநுத்ரம் சைவ சிச்சே²த³ ஶரேண மது⁴ஸூத³ந꞉ |
ததோ விமுக்தகவச꞉ ஸர்பஸ்யேவ தநுர்யதா² ||2-63-116
மற்றொரு கணையால் அவனது கவசத்தையும் அறுத்தான். குதிரைகள் கொல்லப்பட்டு, சட்டை இழந்த பாம்பைப் போலக் கவசமும் அறுக்கப்பட்ட அந்த வீர தானவன் நரகன்,
ஹதாஶ்வோ(அ)பி ரணே வீரோ விதநுத்ரஶ்ச தா³நவ꞉ |
ஜக்³ராஹ விமலஜ்வாலம் லோஹபா⁴ரார்பிதம் த்³ருட⁴ம் ||2-63-117
மின்னலைப் போன்ற பிரகாசமிக்க இரும்பு ஈட்டியை {சூலத்தைத்} திடீரென எடுத்து, அதைச் சுழற்றி வீசினான்.
ஆவித்⁴ய ஸஹஸா முக்தம் ஶூலமிந்த்³ராஶநிப்ரப⁴ம் |
ததா³பதத்ஸ ஸம்ப்ரேக்ஷ்ய ஶூலம் ஹேமபரிஷ்க்ருதம் ||2-63-118
அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணன், பொன்னால் மறைக்கப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வருவதைக் கண்டு கத்தி வடிவம் கொண்ட தன்னுடைய ஆயுதத்தால் {க்ஷுரப்ரத்தால்} அதை இரண்டாக வெட்டி வீழ்த்தினான்
த்³விதா⁴ சி²ந்நம் க்ஷுரப்ரேண க்ருஷ்ணேநாத்³பு⁴தகர்மணா |
தத்³யுத்³த⁴மப⁴வத்³கோ⁴ரம் கோ⁴ரரூபேண ரக்ஷஸா ||2-63-119
இவ்வாறே பெருஞ்சக்திவாய்ந்தவனும், கடும் முகம் கொண்ட ராட்சசனுமான நரகனுடன் மிகச் சிறந்த ஆயுதங்கள் நிறைந்த பயங்கரப் போர் நடந்தது.
ஶஸ்த்ரபாதமஹாகா⁴தம் நரகேந மஹாத்மநா |
முஹூர்தம் யோத⁴யாமாஸ நரகம் மது⁴ஸூத³ந꞉ ||2-63-120
நரகனுடன் போரிட்டுக் கொண்டிருந்த பயங்கரனான ஜனார்த்தனன், ஒரே கணத்தில் தன் பிரகாசமிக்கச் சக்கரத்தால் அவனை {நரகாசுரனை} இரண்டாக வகுந்தான்.
அதோ²க்³ரசக்ரஶ்சக்ரேண ப்ரதீ³ப்தேநாகரோத்³த்³விதா⁴ |
சக்ரத்³விதா⁴க்ருதம் தஸ்ய ஶரீரமபதத்³பு⁴வி ||2-63-121
விப⁴க்தம் குலிஶேநைவ கி³ரே꞉ ஶ்ருங்க³ம் த்³விதா⁴க்ருதம் |
க்ருஷ்ணமாஸாத்³ய தே³வேஶம் ஜகா³மாஸ்தமிவாம்ஶுமாந் ||2-63-122
சக்கரத்தால் இரண்டாக வெட்டப்பட்ட அவனது உடல், இடியால் தகர்க்கப்பட்ட மலையைப் போலப் பூமியில் இரண்டாக விழுந்தது. கிருஷ்ணனைப் போன்ற கருமேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(121,122)
சக்ரோத்க்ருந்திதகா³த்ரோ(அ)ஸௌ தா³நவ꞉ பதிதோ ரணே |
வஜ்ரப்ரஹாரநிர்பி⁴ந்நம் யதா² கை³ரிகபர்வதம் ||2-63-123
சக்கரத்தால் வெட்டப்பட்ட அவனது தலை, வஜ்ரத்தால் தகர்க்கப்பட்ட தாது மலையைப் போலப் போர்க்களத்தில் தோன்றியது[நரகாசுரனைக் கொல்லும் இந்தப் பகுதி மஹாபாரதம் வனபர்வம் அத்யாயம் 141ல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ].
பூ⁴மிஸ்து பதிதம் புத்ரம் நிரீக்ஷ்யாதா³ய குண்ட³லே |
உபாதிஷ்ட²த கோ³விந்த³ம் வசநம் சேத³மப்³ரவீத் ||2-63-124
த³த்தஸ்த்வயைவ கோ³விந்த³ த்வயைவ விநிபாதித꞉ |
யதே²ச்ச²ஸி ததா² க்ரீட³ பா³ல꞉ க்ரீட³நகைரிவ ||2-63-125
இமே தே குண்ட³லே தே³வ ப்ரஜாஸ்தஸ்யாநுபாலய ||2-63-126
தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்ட பூமி {பூமாதேவி}, காது குண்டலங்கள் இரண்டுடன் கோவிந்தனிடம் வந்து, “ஓ! கோவிந்தா, பொம்மைகளுடன் விளையாடும் சிறுவனைப் போல விளையாடுகிறீர். நீர் கொடுத்தவனை உமது கையால் நீரே கொன்றுவிட்டீர். எனினும், ஓ! தலைவா, நீர் நரகனைக் கொல்வதற்குக் காரணமான இந்தக் குண்டலங்களை ஏற்றுக் கொண்டு அவனது பிள்ளைகளைக் காப்பீராக” என்றாள் {பூமாதேவி}” என்றார் {வைசம்பாயனர்}.
இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே Vஇஷ்ணுபர்வணி
நரகவதே⁴ த்ரிஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-