Archive for the ‘ஆர்த்தி பிரபந்தம்’ Category

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -தனியன் /அவதாரிகை – /பாசுரம் 1-4–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 19, 2014

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் – திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ஸ்ரவணம்) அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம் ஆசார்யன்: சடகோபாசார்யர்

ஸ்ரீசடாரி குரோர் திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மது வ்ரதம் | ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||–ஸ்ரீ  பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

அருளிச் செய்தவை: தனியன் வ்யாக்யானங்கள், ராமானுஜ திவ்ய சரிதை, யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், மாமுனிகளின் அநேக ஸ்ரீஸுக்திகளுக்கு வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கு வ்யாக்யானங்கள், மாமுனிகளின் வாழித்திருநாமம் – “செய்ய தாமரை தாழிணை”க்கு வ்யாக்யானம், ஸ்ரீ வைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் ஆகியவை.

ஸ்ரீ காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்) கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.

இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்) ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு கௌரவத்தை கோவிலில் பெற்று வருகிறார்கள்.

மேலும் இவர் பெரிய பண்டிதரும் வரலாற்றாசிரியரும் ஆவார். இவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லையாயினும் நம்முடைய ஸம்ப்ரதாயத்திற்கு இவர் அளித்துள்ள பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

இவர் திவ்யதேசங்களுக்கு செய்த உபகாரங்களை சில கல்வெட்டுகளில் காணலாம். திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர் என்று அழைக்கப்பட்ட குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது). ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில் கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப் பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது. திவ்ய ப்ரபந்தங்களின் பெரும்பாலான தனியன்களுக்கு இவர் வ்யாக்யான உரை அருளிச் செய்துள்ளார். இந்த வ்யாக்யான உரையானது தனிப்பட்ட ப்ரபந்தங்களின் முக்கியமான அம்சங்களை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் அந்தந்த திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த ஆழ்வாரின் மனநிலையை உணர்ந்து எழுதப்பட்டவையாகும்.

இவர் அருளிச்செய்த ராமாநுஜார்ய திவ்ய சரிதையில், எம்பெருமானாரின் வாழ்க்கை வரலாறு மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.-இந்த கிரந்தத்தில் எம்பெருமானாரின் பல்வேறு யாத்திரைகள், அவருடைய சிஷ்யர்களுடன் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நன்றாகக் காட்டப்பட்டுள்ளன.

மேலும் யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்.

ராமாநுஜார்ய திவ்ய சரிதையிலும் யதீந்திர ப்ரவண ப்ரபாவத்திலும் அதிகம் தமிழ் பாசுரங்கள் நிறைந்திருப்பதிலிருந்து தமிழ் மொழியில் இவருக்கு உள்ள ஞானம் தெரிய வருகிறது.

ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கும் இவர் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

விளாஞ்சோலைப் பிள்ளையின் ஸப்த காதைக்கு இவர் மிகவும் அற்புதமான வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.-ஸப்த காதை பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்திரத்ரத்தின் ஸாராம்சத்தை (ஆசார்ய நிஷ்டை) வெளிக்கொணர்ந்து காண்பிக்கும் நூலாகத் திகழ்கிறது.

மாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியான உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி மற்றும் ஆர்த்தி ப்ரபந்தம் ஆகியவற்றிற்கு விரிவான வ்யாக்யானங்கள் அருளிச் செய்துள்ளார்.

இவர் எம்பெருமானார் தரிசனத்திற்கு (நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான விதிமுறைகளை, கோட்பாடுகளை) ஸ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் என்கின்ற மிகவும் அற்புதமான உரைநடை கிரந்தத்தை அருளிச் செய்துள்ளார். இந்த கிரந்தத்தில் நிறைய ப்ரமாணங்களை மேற்கோள் காட்டுவதிலிருந்து பிள்ளை லோகம் ஜீயருக்கு சாஸ்திரத்தில் உள்ள ஆழ்ந்த ஞானத்தை உணர்ந்து கொள்ளலாம்.

பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளுக்கு மிகவும் விரிவான வ்யாக்யானங்களை அருளிச் செய்தது, எம்பெருமானார் மற்றும் மணவாள மாமுனிகளின் சிறப்பு மிக்க வாழ்க்கையை ஆவணம் செய்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு பெரும் தொண்டு புரிந்துள்ளார். நாமும் இது போல் எம்பெருமானார் மற்றும் மாமுனிகளிடம் அன்புடையவராய் இருக்க இவரது திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.

————–

லோகாச்சார்ய முநிம் வந்தே தீ சமாதி குணார்ணவம்
தம் சடாரி குரோச சிஷ்யம் ஆர்த்தி வ்யாக்யாம் கரோதிய

தீ சமாதி-ஞானம் புலன் அடக்கம் முதலியவை -ஆத்ம குணம் கைவந்தால் ஆச்சார்யர் கைபுகுவார்

ஆர்த்தி வ்யாக்யாம் வர வர முனேர் ஆர்த்த பந்தோர் மநோஞ்ஞாம்
லோகாச்சார்யோ முநிர் அக்ருத சல்லோகம் ஆஹ்லாத
ஆச்சார்யாணாம் சடரிபு க்ருதேர் ரர்த்த நிர்வாஹ சக்தௌ
ப்ராசாம் பச்சாத் புவி ஸூமதயோ யம் வதந்தி பிரகல்பம்

ஆர்த்த பந்தோர் மநோஞ்ஞாம்-ஆர்த்தி எடுத்தவர்களில் தலைவரான -மனதை வசீகரிக்கும் பிரபந்தம் என்றும் வியாக்யானம் என்றும்
சல்லோகம் -ஸத் லோகத்தில் உள்ளவர்கள்
ஆஹ்லாத-ஆனந்தம் அடையச் செய்தார்
ப்ராசாம் ஆச்சார்யாணாம்-முன்புள்ள பூர்வாச்சார்யார்
பச்சாத்-பின்புள்ள பிள்ளை லோகாச்சார்யார்
புவி ஸூமதயோ வதந்தி பிரகல்பம்–பின்புள்ள மதி படைத்தவர் கொண்டாடுகிறார்களோ
யம்-இவரே ஆர்த்தி பிரபந்த வியாக்யானம் செய்து அருளினார்
திருவாய் மொழி சாரமே ஸ்ரீ மதே ராமானுஜர்ய நம -சரம பார்வை கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -இத்தை அறிந்தவர்

காந்தோ பயந்தரு யமிநோ ஜகதார்யா யோகீ
வ்யாக்யாத் க்ருபா ரச நிதி கருதிம் ஆர்த்த்ய பிக்யாம்
யம் பூதலே நிகம சீர்ஷே வியதோ வதந்தி
காந்தோ பயந்தரு யமிநோ வதாரம் த்வீதீயம்

க்ருபா ரச நிதி காந்தோ பயந்தரு யமிநோ–மா முனிகள் இரண்டாம் அவதாரம் ஜகதார்யா யோகீ-பிள்ளை லோகம் ஜீயர் என்று கொண்டாடுகிறார்கள்-பார்த்த சாரதி- யதீந்த்ரரே -யதீந்த்ர பிரவணர் -இவரே பிள்ளை லோகம் ஜீயர்

————

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்
தான் பரம பத்தி தலை யெடுத்து மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்
மணவாள மா முனிவன் வந்து–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் –மகரந்தத்தை ஸ்ரவியா நின்ற புஷ்ப மாலையைத் தரித்த
எதிராசன் சேவடி மேல்-எம்பெருமாருடைய சிவந்த திருவடித் தாமரைகளின் விஷயமாக
தான் பரம பத்தி தலை யெடுத்து -தனக்கு பரம பக்தி தலையெடுப்பதினாலே
மாந்தர்க்கு உணவாக -அஞ்ஞருக்கு அறிவு விளையும்படியாக போக்யமாக
ஆர்த்தியுடன் -ப்ரீதி புரஸ்சரமான துக்கத்துடன்
ஒண் தமிழ்கள் செய்தான்-போக்யமான திராவிட வாக்யங்களைக் கூட்டி ஆர்த்தி பிரபந்தம் என்கிற இந்தப் பிரபந்தத்தை அருளிச் செய்தார்

ராமானுஜர் திருநாட்டுக்கு எழுந்து அருளிய பின்பு(1017-1137) -234-ஸம்வத்சரங்கள் கழிந்து -1371-திருவவதாரம் -73-வருஷம் –ஆர்த்தி இருந்ததால் 80 வருஷங்கள் இல்லாமல் திருநாட்டுக்கு எழுந்து அருளினார்

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் ஆழ்வார்
யதீந்த்ர பிரவணமே வடிவு கொண்ட யதீந்த்ர பிரவணர்
போல் ஆர்த்தி மிக்கு வடிந்த சொற்களே ஆர்த்தி பிரபந்தம் ஆனது

—————————————————-

வம்பவிழ் தார் வண்மை மணவாள மா முனிகள்
அம் புவியில் கால் பொருந்தா வார்த்தியினால் -உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள்
நண்ணி யுரைத்தார் நமக்கு-

வம்பவிழ் -அப்போது அலர்ந்த-வம்பு மணம் -புதுமை
தார் –புஷ்ப மாலையாலே அலங்கரிக்கப் பட்ட
வண்மை -ஓவ்தார்ய சீலரான
மணவாள மா முனிகள்-பெரிய ஜீயர்
அம் புவியில் -அழகிய பூமியில்
கால் பொருந்தா வார்த்தியினால் –திருவடிகள் பொருந்தாத துக்கத்தினால்
உம்பர் தொழும்-நித்ய ஸூரிகளாலே ஸேவிக்கப் படுகிற
விண்ணுலகில் செல்ல -பரமபதத்துக்கு எழுந்து அருளும் பொருட்டு
விரைந்து –த்வரைப்பட்டு
எதிராசன் பதங்கள்-எம்பெருமானாருடைய திருவடிகளை
நண்ணி யுரைத்தார் நமக்கு—அத்யவசித்து அஸ்மதாதிகளுக்கு அருளிச் செய்து அருளினார் —

தேன் பயிலும் தாரான் எதிராசன்-கீழ் அவர் மாலை–வம்பவிழ் தார் வண்மை மணவாள மா முனிகள்-இங்கு இவர் மாலை

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்
பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்
அறுக்கும் வினையிலும்--ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே
வம்பவிழும் தாரான் -என்றும்
தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று

————————————————————————–

அவதாரிகை

ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் திருமால் அடியார்கள் என்று ததேக நிரூபணீயரான தன் அடியார்க்கு ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பது பிராப்ய ருசியைப் பிறப்பித்து அருளிய பின்பு ஆயிற்று —

அந்த பிராப்ய ருசி தான்
பக்தி -பர பக்தி -பர ஞான -பரம பக்தி ரூபாயாய் இறே பரிணமிப்பது –
அப்படிப் பட்ட பக்தியை இறே ஆழ்வாருக்கு திரு மேனியோடு உண்டாக்கி அங்கீ கரித்தது –

(ஞாந தர்சன பிராப்தி -முதல் ஆழ்வார்கள் –
இத்தால் –பகவத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கராம் படியான பரபக்தி -ஞான அவஸ்தையாகவும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசத தமமாக சாஷாத் கரிக்கிற பர ஞானம் -தர்சன அவஸ்தையாகவும் –
அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்க பெறா விடில் முடியும் படியான பரம பக்தி -ப்ராப்ய அவஸ்தையாகவும் -சொல்லப் படும்)

அத்தைப் பற்ற
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும் அருளிச் செய்தார் –

அது தான் இவர் சம்பந்தம் அடியாக
எல்லாருக்கும் பிராப்திக்கு முன்னே சித்திக்கும் படியாய் இருக்கும்

(உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு–1–)

(ஸ்வீக்ருத சித்த சாதனர் இத்தை சாத்தியமாக இரக்க பிராப்திக்கு முன்னே சித்திக்கும்-சூரணை-100–இரக்க- போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு உபகரணம் -)

தத் சித்யர்த்தமாக
பகவன் பக்தி மபிப்ரயச்சமே -(ஸ்தோத்ர ரத்னம்)என்றும்
பர பக்தி உக்தம் மாம் குருஷ்வ -(கத்ய த்ரயம்)என்றும் இறே ஆச்சார்யர்கள் அர்த்தித்து அருளிற்று –

அப்படி ஸ்வ அபி லஷிதத்தை அர்த்தித்து பெற்று க்ருதார்த்தராய்
கரை கண்டோர் -என்று முக்தராய் சொல்லப்படுகிற
ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பரகாலாதிகளோடு ஒரு கோவையாக எழுந்து அருளி இருப்பாராய்
பின்பும் ருசி உடையோர்க்கு எல்லாம் ஆஸ்ரயணீயர் ஆகைக்காக
ஸ்வ அவதார ஸ்தலாதிகளிலும் அர்ச்சா ரூபியாய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை எப்படி என்னை அங்குத்தைக்கு அனந்யார்ஹராம்படி
அறவிலை செய்து கொடுத்து–
தத் விஷய ப்ராவண்யத்தையும் ஜனிப்பித்து அருளினாரோ

தாமும் அப்படியே நிரவதிக வ்யாமோஹத்தை யுடையராய்
ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -என்னுமா போலே
ஸ்ரீ யதீந்திர பிரவணர்-என்று-
ததேக நிரூபணீயராம் படியான ஸ்ரீ ஜீயரும்

பாலே போல் சீரில் பழித்து ஒழிந்தேன் (பெரிய திருவந்தாதி)-என்றும்
நையும் மனமும் உன் குணங்களை உன்னி (ராமானுஜ திருவந்தாதி-102)-என்றும்
அவருடைய கல்யாண குணங்களிலே பரிபக்குவ ஸ்வ பாவராய்–
அத்தாலே பிராப்த சேஷியாய்
சரம பர்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை-மெய் கொள் காண வேணும் -என்கிற அபி நிவேச அதிசயத்தால் மெய் வெளுத்து
தத் கார்யமான பிராப்தி தசையை பிராப்தராய்
இப்படி கரை புரண்ட ஆற்றாமையை யுடையராய் இருக்கிற தாம்
ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே
தமக்குப் பிறந்த பரம பக்தி தசையைப் பேசி அனுபவித்து அருளுகிற முகத்தாலே
சரம பர்வ நிஷ்டராய் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
பிராவண்யத்தை யுடையராய் இருக்கும் சரம அதிகாரிகள் எல்லாருக்கும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி
இப் பிரபந்த முகேன அவற்றை வெளி இட்டு அருளுகிறார்

(பெரிய திருநாளைக்கு பின் ஆழ்வாருக்கு வீடுடை திருமஞ்சனம்
மாதுளம் பழ மாலை சாத்தி
தங்கப்பட்டயம் -மா முனிகள் ஏற்படுத்திய முறைப்படியே அங்கு நடக்கிறது)

பக்தி எல்லாம் தங்கியது என்ன (108)-என்னும்படி இறே இவருக்கு
ஸ்ரீ எதிராசன் சேவடி மேல் தான் பரம பத்தி தலை எடுத்தது

பரமாபத மாபன்ன -என்னும்படியும்
முடிந்த அவா -என்னும்படியும்-சொல்லும் படியான பரம பக்தியை (ஆர்த்தியை )பிராப்தராய்
அந்த தசையைப் பேசின பாசுரம் ஆகையாலே
ஆர்த்தி -என்று இதுக்கு நிரூபக திரு நாமமே இருப்பது

(பரமாபத மாபன்ன-முதலையால் வந்த ஆபத்து -இரண்டு தாடை -ஜனன மரணம் -)

ஆர்த்தி தான்  1-சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
2-பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்
பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
1-முந்நீர் ஞாலத்திலும்
2-அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

(முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-)

(அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்—88-)

அத்தைப் பற்றி இறே
1-வம்பவிழும் தாரான் -என்றும்
2-தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று 

(1-அம் புவியில் கால் பொருந்தா வார்த்தியினால்

2-எதிராசன் சேவடி மேல் தான் பரம பத்தி தலை யெடுத்து மாந்தர்க்கு உணவாக ஆர்த்தியுடன்)

அப்படியே இவர்க்கும் ஆகார த்வயம் நடவா நின்றதே யாகிலும்
அதில் அனுபவ அலாபத்தால் உண்டான ஆர்த்தி இறே பிரசுர்யேண இப் பிரபந்தத்தில் நடந்து செல்கிறது -பிராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும்

(பிராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிட்டு பற்ற வேண்டும்
பிரபத்தி தசையில் புருஷகாரம் முன்னிட்டு பற்ற வேண்டும்
கோவிந்த ஸ்வாமிக்கு இருந்து அனுபவித்து வா என்ற வ்ருத்தாந்தம்)

இவர் தாம்
சம காலத்தில் போல் ஸ்ரீ ஆழ்வான் முதலான அனைத்து முதலிகளோடே
தழுவி முழுசி பரிமாறி ராமாநுஜ (அம்போஜ )பதாம்போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அன்வயித்து வாழ வேணும் என்று மநோ ரதித்தவர்க்கு
அது மானச அனுபவ மாத்ரமாய்
அதீத காலம் ஆகையாலே பிரத்யஷ யோக்கியம் அன்றிக்கே ஒழிகையாலும்

இனி
இவர் தேச விசேஷத்திலே நித்ய கைங்கர்ய நிரதராய் இருக்கிற படியை அனுசந்தித்து
அவர் விஷயத்திலே தாமும் அப்படியே வழு விலா அடிமை செய்து வாழ வேணும் என்று
அவர் திருவடிகளிலே இத்தை பிரார்த்தித்து அருளுகிறார் –

ஆகை இறே –
வடுக நம்பி தன்னிலையை என் தனக்கு நீ தந்து எதிராசா
எந்நாளும் உந்தனக்கே ஆட்கொள்ளு உகந்து -என்று அருளிச் செய்து அருளிற்று – 

(உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா! எந் நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து–11-)

அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
ஸ்ரீ இளைய பெருமாள் நிலை ஸ்ரீ எம்பெருமானாரது
சத்ருக்னோ நித்ய சத்ருக்ன -என்று
பேசும்படியான அவர் நிலை யாய்த்து இவரது

இனி –
ஆ முதல்வன் -என்னும்படி
அவதார விசேஷமாய் இருந்துள்ள வ்யக்தி விசேஷங்கள்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து உய்ந்த ஸ்ரீ ஆழ்வாரும்
அந்த ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்த ஸ்ரீ எம்பெருமானாரும்
அவர் திருவடிகளிலே அநந்ய சரண்யரான ஸ்ரீ ஜீயருமாய் -இறே உள்ளது-

(ஆ முதல்வன் என்று அபிமானம்
பெருமாள் -ஆழ்வார்களை
ஆளவந்தார் எம்பெருமானாரை
எம்பெருமானார் -மா முனிகள்
பராங்குச பரகால யதிவராதிகள் -கோவையாகவே சொல்லி அனுபவிக்கிறோம்)

இப்படி இவர்களோடு ஒரு கோவையான வைபவத்தை யுடைய இவர்
ஸ்ரீ ஆழ்வாருடையவும் ஸ்ரீ உடையவருடையவும் வைபவத்தை
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி யாலும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலையாலும்
ஸ்ரீ யதிராஜ விம்சதியாலும் -அருளிச் செய்து-

அதிலும் தம் அபி நிவேசம் எல்லாம் தோற்ற –
பராங்குச பாத பத்தம் -என்றும்
சடகோபன் தேன் மலர் தாட்கே ஏய்ந்து இனிய பாதகமாம் எந்தை இராமானுசன் -என்றும்
முடிந்த நிலமாகச் சொல்லப்படுகிற சரம பர்வமே  ப்ராப்யத்தில் சரமாவதி என்று
இச் சரம அர்த்தத்தை
சரம காலத்தில்
சரம பிரபந்த ரூபேண இதிலே யாய்த்து வெளி இட்டு அருளிற்று –

அதில்
ஸ்ரீ யதிராஜ விம்சதி
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று தொடங்கி
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா -என்று தலைக் கட்டுகையாலே
பிராபக பரமாய் இருக்கும் –

(ப்ராப்யமான கைங்கர்ய பிரார்த்தனைகள் பலவும் இங்கு இருந்தாலும் பிராகமான உபக்ரம உபஸம்ஹார பாசுரங்கள் பிரமாணம் -)

இங்கு -வாழி எதிராசா -என்று தொடங்கி
இந்த அரங்கத்து இனிது இரு நீ -என்று தலைக் கட்டுகையாலே
இது பிராப்ய பரமாய் இருக்கும்

(இரக்கம் உபாயம்  -இனிமை உபேயம் இச்சை அதிகாரி ஸ்வரூபம்)

(ஆர்த்தி துடிப்பாய் இருக்க -கைங்கர்ய பிரார்த்தனை ப்ராப்யம் ஆவது என் என்னில் இவை திரு உள்ளத்திலே படவே ஆர்த்தி பிறந்து வளர்ந்தது
ஆர்த்தி வளர்த்து அருளவே திருவாய்மொழி முழுவதும் -ஆர்த்தி ஹரத்வம் -அவா அற பத்தாம் பத்து –
திருவட்டாறு -மருள் ஒளி நீ மட நெஞ்சே -கீழே திருவாறன் விளையில் பரம பதமும் வேண்டாம் என்று இருந்தாலும் ஸம்ஸாரத்தில் இருக்கவே நித்தியமாக இருக்காதே -அது இருப்பது நித்ய விபூதியில் மட்டும் தானே)

பிராப்யத்வ அனுசந்தான பரமாய் இருக்கும் உத்தர வாக்கியம்
அதில் தாத்பர்யமாய் இருக்கும் இது –
பிராப்யத்தில் முடிந்த நிலம் இறே ததீய கைங்கர்யம்

இனி அந்த கைங்கர்ய வேஷத்தை
ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து அறிய வேண்டும் அத்தனை இறே உள்ளது

இவருக்கு இப் பிரபந்தத்தில் ஓடுகிற தசை தான் அநேக பாவ வ்ருத்திகளை யுடைத்தாய்
இது தான் ஒரு சந்தஸ்ஸில் அடங்காமல்-பல சந்தஸ்ஸூக்களிலும்
அவற்றை அருளிச் செய்கிறார் –

—————————————————–

இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து, எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தைக் கருதி, அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற (ஈன்ற பாட பேதம்)ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

(நீசர்களைத் தேடிய குறை அவருக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேனான அடியேனைக் கிட்டி அருளிய பின்பு இருவருக்கும் பயனான பின்பு இனி என் குறை)

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் –(நாரணன் தமரைக் கண்டு உகந்து-பொலிக –கடல் வண்ணன் பூதங்கள் அங்கும் ததீய பர்யந்தம்)

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத் யதி பலோ ராமோ லஷ்மணச் ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேண அபி பாலித-(ஸூந்தர காண்டம்)என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1-

வாழி எதிராசன் -எம்பெருமானாருக்கு மங்களம்
வாழி எதிராசன்-எம்பெருமானாருக்கு மங்களம்
வாழி எதிராசன் -எம்பெருமானாருக்கு மங்களம்
என -இப்படி மூன்று பிரகாரமாக அநுசந்தித்து
வாழ்த்துவார் -மங்களா ஸாஸனம் பண்ணுகிறவர்கள் எவர்களோ
வாழி என வாழ்த்துவார் -அவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறவர்கள் எவர்களோ
வாழி என வாழ்த்துவார் -அவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறவர்கள் எவர்களோ
அவர்களுடைய
தாளிணையில்-உபய திருவடிகளிலே
தாழ்த்துவார் -ப்ரணதி செய்யும் அவர்கள் எவர்களோ
அவர்கள்
விண்ணோர் தலை -நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹக பூதராவார்கள்-விண்ணுளாரிலும் சீரியர்

சாந்தி சாந்தி சாந்தி-பொலிக பொலிக பொலிக
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -அன்பன்-அன்பன் தன்னை அடைந்தவர்கள்-அன்பன் தன்னை அடைந்தவர்களுக்கு எல்லாம் அன்பன் சடகோபர்-சடகோபருக்கு அன்பன் மதுரகவி
தொண்டர் தொண்டன் தொண்டன் தொண்டன் தொண்டன்-த்ரயங்கள் போல் இங்கும்
வாழி எதிராசன்-வாழி எதிராசன்-வாழி எதிராசன்-
வாழ்த்துவார்-வாழி என வாழ்த்துவார்-வாழி என வாழ்த்துவார்

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும் அநந்யராய்
(அன்பராய்) அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக (மனஸ் -வாக் -காயம் -என்றுமாம்)மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார்
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார்
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –

தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே -(இணை அடி -துணை அடி-வேறு நிகர் அற்ற -ப்ராப்யத்துக்கு ஸத்ருசமான ப்ராபகம்)

தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –

விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –

(நிர் விக்ந பரிஹார அர்த்தமாக மங்களா சாசனம்-நம -ஜிதந்தே -போற்றி -பல்லாண்டு -வாழி –அனைத்துமே மங்களா ஸாஸன சொற்கள்-
பெயர்ச்சொற்கள் -பொது சொற்கள் -அவர் அது -ராமானுஜர் -யதிராசர்
வினைச்சொற்கள் –
இடைச்சொற்கள் -தனித்து பொருள் அல்ல -கீழ் உள்ளவற்றை சார்ந்தே பொருள் -வாழி யதிராசன் -அவற்றை இடமாகக் கொண்டு பொருள்
உரிச்சொற்கள் -வரும் இடத்தைப் பொறுத்து பொருள் -ஹந்த -ஆனந்தத்துக்கும் வெறுப்புக்கும் ஒரே சொல்
நடந்தாய் வாழி காவேரி -இரண்டு பக்கமும் சார்ந்து பொருள் கொடுக்கும் -)

——————————————————

அவதாரிகை –

அடியிலே–தொழுது எழு மனனே -என்று அனுசந்தித்த ஸ்ரீ ஆழ்வார்
பஜன ஆலம்பனமான திரு நாமத்தை
இரண்டாம் திருவாய் மொழியிலே – வண் புகழ் நாரணன் -என்று வெளியிட்டால் போலே

இவரும்-இப் பாட்டில் அத்தோடு விகல்பிக்கலாம்படியான
ஸ்ரீ இராமானுசன் -என்கிற திரு நாமத்தை வெளி இடா நின்று கொண்டு

கீழில் பாட்டில்-
அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை
இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை
எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

இராமானுசாய நம வென்று சிந்தித்து
இரா மானுசரோடு இறைப் போழ்து -இரா மாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு—2-

இராமானுசாய –இராமாநுசர் பொருட்டு
நம வென்று –நமஸ் என்று
சிந்தித்து இரா -அனுசந்தித்து இராதா
மானுசரோடு -மநுஷ்யரோடு
இறைப் போழ்து -ஷணம் காலமும்
இரா மாறு–இரா வண்ணம் -ஸஹ வாஸம் செய்யா வண்ணம்
சிந்திப்பார் -சிந்திக்கிறவர்களுடைய
தாளிணையில் சேர்ந்திருப்பார் –உபய திருவடிகளில்
சேர்ந்து இருக்குமவர்களுடைய
தாளிணையை-உபய திருவடித் தாமரைகளை
வந்திப்பார் –வணங்குமவர்கள்
விண்ணோர்கள் -நித்ய ஸூரிகளுக்கு
வாழ்வு-நித்ய ஸம்பத் ஆவார்கள்

இராமானுஜாய நம என்று
சர்வ காலத்திலும்-இம் மந்த்ரத்தை மனனம் பண்ணி இருக்கை பிராப்தமாய் இருக்க

இப்படி சதா ஜப்யமான இத்தைச் செய்யாதே
நித்ய ஜீவனத்தை இட்டு சத்தை அன்றிக்கே அசத்துக்களாய்
பஸூ ப்ராயரான மனுஷ்யர்கள் ப்ரதிகூலர் ஆகையாலே
அவர்களுடைய சஹ வாசமும் துஸ் சஹமுமாய்
அவர்களுடன் ஷண காலமும் வசியாத பிரகாரம் சிந்தித்து இருக்கும்
அனுகூலர் ஆனவர்களுடைய திருவடிகளே
தங்களுக்கு அபாஸ்ரயமாக ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய திருவடிகளில்
ஸ்துத்ய அபிவாதனம் பண்ணுமவர்கள்
அரும் பேறு வானத்தவர்க்கு -என்னும்படியே
நித்ய ஸூரிகளுக்கு நித்ய சம்பத் ஆவார்கள்-

(ஸஹ வாஸமோ -ஸஹ பாஷணமோ -ஸஹ போஜனமோ கூடாது –
ஸம்ஸாரிகள்–நாஸ்திகர் -பிரதம பர்வ நிஷ்டர் -ஆகியவரைக் கழிக்கிறார்
இங்கு முமுஷு -சரம நிஷ்டர் -ரஹஸ்ய த்ரய ஞானம் கை வந்தவர்கள்-அனைவரும் உடையவர் திருவடிகளே உய்ய ஒரே வழி -என்று விஸ்வாஸத்துடன் இருக்க வேண்டும் என்று உபதேசித்துப் போந்தார்களே-இராமாநுஜாயா நம -நித்யமாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்)

(கபட நாடக ஸூத்ர காரி -அவன் -அகற்ற மாய வல் வலைகளை விரித்து இருப்பான் -பந்த மோக்ஷ இரண்டுக்கும் காரணம்
பவிஷ்யகார ஆச்சார்யரைக் காட்டி -நமக்கு எல்லாம் இந்தப் பிறவியிலே பேறு அவர் சம்பந்தம் கொண்டே அன்றோ -)

(நாம் புபுஷுக்களுடன் ஸம்பந்தம் தவிர்க்க வேண்டும்
ஆளவந்தார் பெரிய பெருமாளை ஸேவிக்கப் போக -அங்கு ஐஸ்வர்யார்த்தி ஒருத்தி இருக்க -வெளியிலே காத்து இருந்த பின்பு ஸேவித்த வ்ருத்தாந்தம்
கிட்டமும் வேட்டு வேளாணும் போல்
ஈஸ்வரனும் -இவர்களும் அவர்களுடன் ஒத்த ஸாம்யா பத்தியை தரவல்லவர்கள்

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு——-69-

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு ——–70-

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஏற்றம் உணர்ந்து இருக்க வேண்டுமே

——————————————-

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலும்
வாழி -என்றும்
நம -என்றும்
அத் தலையில் அதிசயங்களை உப பாதித்துக் கொண்டு

இனி
இப் பாட்டு தொடங்கி –
மேல் எல்லாம் ஸ்வ அபேஷிதங்களை விண்ணப்பம் செய்கிறார் –

இதில்
அடியேனுக்கு சர்வவித பந்துவும்–தேவரீராய் இருக்க
ஏதன் நிஷ்டைக்கு விரோதியான இத் தேஹத்தை சேதித்து அருளாததற்கு ஹேது ஏது-என்கிறார்-

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம்
என் தனக்கு நீயே எதிராசா -இந்த நிலைக்கு
ஏராத இவ் வுடலை இன்றே அறுத்தருள
பாராதது என்னோ பகர்—-3-

தந்தை -பிதாவும்
நல் தாய் -வாத்சல்யத்தை யுடைய அன்னையும்
தாரம் -மனைவியும்
தனயர் -புதல்வரும்
பெரும் செல்வம்-மஹத் ஐஸ்வர்யமும்
என் தனக்கு -அஸ்மதாதிகளுக்கு
நீயே எதிராசா -யதீந்த்ரரே தேவரீரே ஆகின்றீர்
இந்த நிலைக்கு -இவ்வாறான நிஷ்டைக்கு
ஏராத இவ் வுடலை -சேராத இந்த சரீரத்தை
இன்றே -இப்போதே
அறுத்தருள-சேதித்து கிருபை செய்ய
பாராதது கடாஷியாதது
என்னோ பகர்-யாது காரணமோ உரை செய்து அருள வேண்டும்

எதிகளுக்கு நாதரானவரே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரேஎன்றும்
த்வமேவ மாதாச -இத்யாதி யாலும் -சொல்லுகிறபடியே
ஹித பரனான பிதாவும்
பிரிய பரையான மாதாவும்
போக்யையான ஸ்திரீயும்
நிரய நிஸ்தாகரான புத்ரரும்
மற்றும் சகலவித புருஷார்த்த சாதனமான மஹத் ஐஸ்வர்யமும்
எல்லாம்
தேவர்க்கு ஸ்ரீ யபதியான பெரிய பெருமாளே ஆகிறாப் போலே –
மாதா பிதா யுவதயா -இத்யாதிப் படியே அடியேனுக்கு இவை எல்லாம் தேவரீரே –

(மாத்ரு தேவா பவ -தெய்வத்தை மாதாவாகக் கொள்ள வேண்டும் என்பதே இதன் தாத்பர்யம்

(உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – 19-ராமானுஜருக்கு எல்லாம் திருவாய் மொழியே )

வஸ்து ஸ்திதி இதுவாய் இருக்க
இந் நிஷ்டைக்கு அனுரூபம் இன்றியே விரோதியாய் இருக்கிற இந்த தேஹத்தை
காலாந்தரே கழிக்கிறோம் என்னாமல்
விபரீத அஞ்ஞான ஜனகம் ஆகையாலே இத்தைக் கழிக்க வேணும் என்று அபேஷிக்கிற
இந்த திவசத்திலே(இன்றே -ஞானம் வந்த இன்றே) தானே சேதித்து அருள திரு உள்ளத்தாலே போக்கடி காணாது
இருக்கிறதுக்கு ஹேது ஏது
அத்தை சர்வஞ்ஞரான தேவரே அருளிச் செய்ய வேணும்
அது வருத்தமாய் இருந்ததோ அதுக்கும் ஒருகால் சிந்தனை செய்யும் அத்தனை அன்றோ உள்ளது –

நல் -என்கிற இத்தை எல்லாத்திலும் கூட்டிக் கொள்ளவுமாம்

(மரணமால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -பொதுவாக அது –
அடியேனுக்கு மரணமாக்கிப் பண்ணி அருள வேணும் என்கிறார்)

(அப்போது ஒரு சிந்தை செய்தே தானே வேண்டுவது
இவள் திறத்து என் சிந்தித்தாய்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு)

(தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –) 

(அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்-
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்-பின்னை உறவினருக்கு உரிய கார்யங்களைச் செய்யாது இருக்க முடியாது அன்றோ –-ஆதலால் ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த-உறவினனான சர்வேஸ்வரன் திருக் கண் வளர்ந்து அருளுகிற திருப் புளிங்குடியிலே- எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –)

(பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்–92-)

—————————————-

அவதாரிகை –

கீழே விரோதியாக அருளிச் செய்த தேஹம் தன்னையே
ஆத்மாவுக்கு சிறைக் கூடமாக அனுசந்தித்து –
தத் விமோசகரும் அவரே என்று அவர் பக்கலிலே அத்தை ப்ரார்தித்து அருளுகிறார் –

(எம்மா வீட்டில் ஞப்தி -ப்ராப்ய நிஷ்கர்ஷம் -வஸ்து நிர்ணயம் செய்த பின்பு ப்ரார்த்தனை ஒழிவில் காலம் -பின்பு புகழும் கைங்கர்யம் செய்தாரே
ஞப்தி பல முக்தி -முக்தி பல விரக்தி -வேண்டுமே)

(சிறை புகுந்தவள் ஏற்றம்
நீ பிறந்தும் நாமும் பிறக்க வேண்டுமே
வேண்டித்தேவர் இரக்க பிறந்ததும்
தந்தை கால் விலங்கு அற அன்றோ நீயும் இந்த சிறையில் பிறந்தது
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் -இதுவே ரக்ஷணம்)

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யான் ஏகி
அந்தமில் பேரின்பத்துக்கு ஆளாகுவேன்-அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரம் காண் உனக்கு உணர்ந்து பார் –4-

இந்த உடல் -இந்த சரீரமாகிற
சிறை –காரா க்ருஹத்தை
விட்டு –நீத்து
எப்பொழுது யான் –எப்போது அடியேன்
ஏகி–அர்ச்சிராதி மார்க்கத்தாலே சென்று
அந்தமில் பேரின்பத்துக்கு ஆளாகுவேன்-முடிவில்லாத மஹா ஆனந்தத்துக்குள் ஆவேன்
அந்தோ — ஐயோ
இரங்காய் -கிருபை செய்து அருளீர்
எதிராசா -எதி குல ஸார்வ பவ்மரே
என்னை இனி உய்க்கை-அடியேனை இனி மேல் ரக்ஷிப்பது
பரம் காண் உனக்கு உணர்ந்து பார் –தேவரீருக்குப் பரம் அன்றோ -ஆலோசித்துப் பார்த்து அருளீர்

(ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேணுமே -இதுவே இனி இன்று
புருஷனையும் புருஷகாரத்தையும் சாபேஷமாக இருக்கும்)

இதம் சரீரம் என்னும்படி பராகர்த்தமாய்(பராக் அர்த்தம் -இதம் என்று பார்க்கும் படி -பிரத்யத் அர்த்தங்கள் ஜீவ பரமாத்மா)
இந்த உடல் சிறை -என்று ஆத்மாவுக்கு காரா க்ருஹம் போலே
பந்தகமாய் இருக்கிற தேக பந்தம் முக்தமாய்
எப்போது தான் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு ஒரு கோவையாய்
நிரதிசய ஆனந்த ஜனகமானவர்கள் பரிஷத் அந்தர் பாவத்தை யுடையனாய்
சம்சார வெக்காயம் தட்டாதபடியாகக் கடவேன் – 

(சரீரேச -பய ஜனகம்
உத்க்ருஷ்ட மாக பிரமம் – ஸ்வரூப ஞானம் வந்த பின்பும் மேல் ஒரு அபாயம் -ப்ராஹ்மண ஜம்பம் கிடைத்ததால் -கர்வம் -ஆரூட பதிதம்)

ஐயோ –
எதிகளுக்கு நாதரான நீர்
அகதிகளுக்கும் இரங்கி அருள வேண்டாவோ

ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -ஷிபாமி -என்று கை விட்டவரை
சிறையான அடியேனை
இனி உஜ்ஜீவிப்பித்து ரஷிக்கை
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் அவதரித்த தேவர்க்கே பரம் காணும்
இவ் வர்த்தத்தை திரு உள்ளம் பற்றிப் பார்த்து அருளீர் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்