ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
மித்ர பாவேந –சரணாகத ரக்ஷணம் -விரதம் கொண்டு -கைவிட மாட்டேன் இருப்பதாக பெருமாள் சித்தாந்தம்-நயாமி பரமாம் கதிம்-அஹம் ஸ்மராமி –வராகப்பெருமாள் சித்தாந்தம்-பக்தி பிரபத்தியால் முக்தி இரண்டையும் தாண்டி -பூர்வ பக்ஷம் ஆக்கி -அவன் திருவடிகளே கதி –ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -சரணாகதியாகப் பற்றியதும் உபாயம் ஆகாது -என்கிறார்
இதுவே ஆழ்வார் சித்தாந்தம் –-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -நிர்ஹேதுக கிருபை-அவன் இரக்கம் உபாயம்-அவன் இனிமை புருஷார்த்தம்-கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடை -திருவாய் மொழியிலும் சரம அருளிச் செயல் இங்கே போல்-தேவப் பெருமாள் இமையோர் தலைவா அமரர்கள் அதிபதி உபக்ரமம் அவன் சொன்னதை இவன் நடத்திக் காட்டியதால் இரண்டும் இவ்வாறு –யத்ர -மதிர் மம –சஞ்சயன் மதம் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –மதுரகவி ஸித்தாந்தம்-செஞ்சொல் கவிகாள் -10-7-இதன் விவரணம்-இங்கு ஈனச் சொல் -நைச்சியம் பாவித்து அருளிச் செய்கிறார்—ஞானப்பிரானை அல்லால் -மற்று ஒன்றைக் காணாவே-பழிச்சொல் என்று பாராமல் காதலை வெளிப்படுத்தியவாறு –ஸர்வ சக்தன்-ஸர்வஞ்ஞன் தானே -அசக்த அஞ்ஞானரான நமக்கு எல்லாம் நல்ல ரக்ஷகன்-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனே அறிவு ஒன்றும் இல்லாத நமக்கு ரக்ஷகன்–ஞானப்பிரான் -சத்தையை இருப்பத்தைச் சொல்ல வில்லை-இவர் ஒருவரையே பற்ற வேண்டும் என்றும் சொல்ல வில்லை-உபாயாந்தரம் போல் நாம் பற்றும் பற்றுதலும் உபாயம் இல்லை என்பதை தான் இங்கு அருளிச் செய்கிறார் –-ஞானப்பிரான் தான் உண்டு என்னாமல் -அல்லால் இல்லை -நான் கண்ட நல்லது -உறுதிபட அருளிச் செய்கிறார்-யார் புகல் இடம்-யாருக்குப் புகல் இடம்–ஸூ குமாரனான பரதன் எப்பாடு படுவானோ இந்த குளிரில் -இளைய பெருமாள் சொல்ல
பெருமாள் அயோத்யைக்குத் திரும்ப யத்தனிக்க-கைகேயி பற்றி பேசி மாற்றியது போல் மதுரகவி பிரக்ருதிகள் ஆழ்வாரை மாற்றி இப்படிப் பேச வைத்து தமது சித்தாந்தத்தை அருளிச் செய்விக்கிறார்கள்
அவதாரிகை-பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-
உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை – அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யா காண்டம் -8 7-9 – —ரசவாதம் கீழ்ப் போமாம் போலே
ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப் படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது –-சக்கரவர்த்தி துஞ்சினான் –
பெருமாள் பொகட்டுப் போனார் –-நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று- உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது – நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே –என்றும் –
அபி வ்ருஷா -என்கிறபடிக்கே-படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட நோவோன்றாய் இருக்கச் செய்தே –
பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் –பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை (பரத்வத்தையும் ஸுலப்யத்தையும் )பிரசங்கித்து சிதிலராவார் –அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று – சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே – பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-
மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க —அந்த பெண் பிள்ளையின் பர்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக –மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –-இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் -(இவரே நஞ்சீயர் பட்டர் இடம் சேர்த்து வைத்தார் -தீர்த்த வாசி ப்ராஹ்மணர் இவ்வாறு திருமழிசை தாசர் ஆனார்)
நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் –அர்த்தாத் -யாத்ருசிகமாக -அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக (திருமழிசை தாசரும் நஞ்சீயருமாக )திருவாய் மொழி ஓதா நிற்க –(கந்தாடை )ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க-புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –நீங்கள் கோயில் கூழைத் தனம் (நியதி இல்லா அனுபவம் )-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ (பட்டர்)பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -(எம்பெருமானார் பற்றிய வ்ருத்தாந்தம் )
இரவு (பால்)அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் –முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் (உத்தரீயம் )கொண்டு பரிமாற-
வேண்டுபடியாய் ஆயிற்று கண்ண நீர் வெள்ளமிட்ட படி -(வடுக நம்பி இப்படி ஆவாராம் )பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாராய் – அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –அப்படியே செய்து கொடு போந்தார்களாய் – இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து – இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –
கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே
புகும் போதிலே தாழ்த்து புக –ஏன் நீ வேகினாயீ -என்ன – ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானாய் –இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள –
பிறந்தவாறு -என்றானாய் –அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன –ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் –நீ கேட்ட படி என்-அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி –அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் வாழ்வாரும் ஒருவரே – இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் –இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –என்ன பரம சேதனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிற போதே –உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன – ஆகில் அத்தைக் கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே – இப் பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்-ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன-பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவனே அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும் அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை-அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை-இது என் ஸித்தாந்தம் என்கிறார் –
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —
ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளை யுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானை யன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.
செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97–தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய் திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக-இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க நம் சொலவைப் பரிபாலிப்பதே-இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற- செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –
ஈனச் சொல் ஆயினுமாக –சிலர் ருசி உண்டாய் கேளா நிற்க -நான் சொல்லாது இருக்க மாட்டேன் –சர்வேஸ்வரன் முந்துற அர்ஜுனனுடைய சோகத்தை காண்கையாலே-ரஹஸ்யத்தை சொல்லிக் கொடு நின்று –பின்பு மூலையில் கிடந்ததை முற்றத்தில் இட்டோம் -என்று பதண் பதண் என்றான் இறே –இவர் அதை முற்படவே அருளிச் செய்து கொள்கிறார் –ஈனச் சொல் ஆகிறது –அஹிதமான சொல்லு –
அஹிதமாகை யாவது -பிரயோஜன சூன்யமாகை –-அதாவது-ஸ்வரூபத்துக்கு அநநு ரூபத்தை சொல்லுதல் –அசக்ய கிரியையைச் சொல்லுதல் செய்கை –தன் பரத்தை ஒரு சர்வ சக்தி தலையிலே ஏறிடுகையிலே எழுகிறது (உத்யோகிக்கிறது )ஆகையாலே –அசக்ய கிரியை அல்ல –தன் பாரதந்த்ரதோடே சேர்ந்தது ஆகையாலே இது தான் ஸ்வரூபத்தோடு சேருமதாய் இருக்கும் –தன்னுடைய அஞ்ஞான அசக்திகளால் வரும் –ஜ்ஞான வைகல்யமும்(தாழ்ச்சி -குறைவு )சக்தி வைகல்யமும் -வராதிறே ஒரு சர்வ சக்தியை பற்றுகையாலே –எறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –என்று சக்தியைச் சொல்கிறது – ஞானப் பிரான் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –ஆயினுமாக –ஆகியுமாக என்னாதே –ஈனச் சொல்லாயினும் நன்றாக என்று நைசயம் சொல்லாதே ஆயினும் –-ஆக என்கையாலே – அவன் அருளிச் செய்ததுக்கு நால்வர் இருவர் உண்டானவோபாதி இதுக்கும் சிலர் உண்டாகிலும் உண்டாக – அவர்கள் ஆதரிக்க்கவுமாம் தவிரவுமாம் நான் சொல்லித் தவிரேன் –இவற்றின் அனர்த்தைக் கண்டு இவற்றை நல் வழி போக்கி பரிகரிக்க வேண்டும் அன்றோ –ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே –நீர் தாம் இப்படி -பூவுக்கிட்டோம் போலவும் என்று சொல்லுகிறது தான் ஏது என்ன –எறி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று –என் தான் -அவனையே பற்ற வேண்டுகிறது என் என்ன –இவை யாபன்னமான வன்று -பரார்தமாகத் தன்னைப் பேணாதே
ரஷிப்பான் ஒருவனைப் பற்ற வேண்டாமோ –இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –(ஆபத்து வந்த பிரளயத்தில் ரஷித்தவன் ஹேது-ப்ரதிஜ்ஜை -இவனை அல்லால் வேறே நல்லது அல்ல)ஹேதுவாகிறது தான் என் என்ன –எறி திரை வையம் –கடல் சூழ்ந்த பூமியை பிரளயம் கொள்ள –பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே –ரஷ்யத்துக்காக தன்னைப் பாராதே-அழிய மாறுவான் -என்கை –இடந்த -இத்தால்-சர்வ சக்தி -என்னுமிடத்தைச் சொல்லுகிறது —பிரான் –சக்தியே அன்றிக்கே இவற்றை ரஷிக்கைக்கு ஈடான பிராப்தியும் அவன் கையதே என்கிறது –ஸ்வாமி என்கிறது –இவற்றின் உடைய ரஷண உபாய ஜ்ஞானமும் –அதுக்கு ஈடான சக்தியும் பிராப்தியும் உள்ளது அவன் பக்கலிலே என்கை –இவனுடைய அஞ்ஞான அசக்திகளாலும் அவனையே பற்ற வேணும் –இனி உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே – உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஆக –குறைவாளர்க்கோ அவனைப் பற்ற அடுப்பது என்ன–இரும் கற்பகம் இத்யாதி –-இங்கே ஒரு ஸூஹ்ருதத்தைப் பண்ணி அதுக்கு பலமாக ஸ்வர்க்கத்திலே போய்
கல்பக வ்ருஷம் அபேஷித சம்விதானம் பண்ண இருப்பார்க்கும் அவன் வேணும் –ஸ்வ கர்ம பலன் அனுபவிக்கிறான் ஆகில்-அவன் என் என்னில் –இவன் பண்ணின கிரியை இங்கே நசியா நின்றது இறே –இவன் கர்மத்தையும் அளந்து – இவன் தன்னையும் அளந்து பலம் கொடுப்பான் ஓர் ஈஸ்வரன் வேணும் இறே –கிரியை நசித்தால்-நின்று பலம் கொடுக்கைக்கு கிரியா சக்தி என்றாதல் –அபூர்வம் என்றாதல் –ஒன்றைக் கொள்ளா நின்றார்கள் இறே –இனி ஓன்று கற்பிக்கும் இடத்தில் ஒரு பரம சேதனனைக் கற்பிக்க அமையாதோ –மற்ற எல்லா யவர்க்கும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி –அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கும் அவன் வேணும் –அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே –எல்லா யவர்க்கும் –தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே –ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும்- சம்விதானம் பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்–ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத் தலையில் உண்டான அறிவு அசத் சமம் என்கை –என் தான் ஜ்ஞானத்தால் அன்றோ மோஷம் –பேற்றுக்கு இத் தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –உண்டாகவுமாம்-இல்லையாகவுமாம் –அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது —ஞானான் மோக்ஷம் -உபநிஷத் சொல்லுமே என்னில்
நமது ஞானத்துக்கு -அவனே மோக்ஷ உபாயம் -என்று அறிய வேண்டுமே —அப்ரதிஷேதத்துக்கு-விலக்காமை -அத்வேஷமே வேண்டும்-அவன் ஞானத்துக்கு மட்டுமே மோக்ஷ உபாதத்வம்-ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலை த்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்–பேற்றுக்கு அடியான ஜ்ஞானம் அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –ஞானப் பிரானை –
தன்னை சூழ்த்திக் கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –தனக்குத் தான் தேடும் நன்மை கழுத்துக்கட்டியாகுமே–பர ரஷண உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று —அல்லால் இல்லை –ப்ரஹ்லாதன் போல் )அவன் உளன் என்கை யல்ல –ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹ ஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே –
வழி கெட நடந்தோமா -என்று நாஸ்திகரும் கூட அங்கீகரிக்கிற அளவன்றே இவர்கள் சொல்லுகிறது –எங்கும் உளன் கண்ணன் என்று அன்றோ இங்கு உள்ளானா என்பதுக்கு பதில்–ஈஸ்வர தத்வம் ஓன்று உண்டோ என்று கேட்டால் தத்வ த்ரயங்களும் உண்டே என்று அன்றோ பதில் சொல்லுவார்கள்
ஆஸ்திகரும் அங்கீ கரிக்கும் படி அன்றோ பதில்–ப்ரஹ்மம் சத்யம் ஆத்மா மித்யா -ஜீவனே ப்ரஹ்மம் அத்வைதி –ஈஸ்வரன் என்றாலே ஈஸ்வரனும் ஈஸிதவ்யனும் வேணுமே-அப்பா என்றால் பிள்ளையும் இருக்க வேண்டுமே-பெருமாளை மட்டும் சொல்லும் சொல் இல்லையே-திருவேங்கடமுடையான் என்றாலே திருவேங்கடமும் வேணுமே-கேசவன் என்றாலே கேசம் உள்ளவன் -க ஈசன் -இருவருக்கும் நியந்தா அன்றோ-ஸோஸ்நுதே –ஸஹ ப்ரஹ்மணா –கூட இருந்து அனுபவிக்கிறான்-ஆதிப் பரனோடு ஒன்றாம் என்ற வாதம் பொய்யாக்கி அல்லல் தவிர்த்த ராமானுஜன் அன்றோ–உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -களைவாய் துன்பம் –களையாது ஒழிவாய் -களை கண் மற்றிலேன்-அவனை ஒழிந்த தானும்-தான் பரிக்கிரஹிக்கிற உபாயங்களும் அடைய கழுத்துக் கட்டி என்கை –
ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச் செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் –திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-
இவ் விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து
நம்பி இவ் வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைர பேஷயத்தை அருளிச் செய்தார் இறே –அல்லால் இல்லை என்பது இதுவே—ஈஸ்வரனை ஒழிந்த தன் ஸ்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம் அருளிச் செய்கிறார் –இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும்
தான் பரிக்கிரஹித்த உபாயங்களுமே இறே சஹ காரியாக உள்ளது –அவற்றைத் தவிர்க்கிறது –விடுவித்து பற்றுவித்து அருளும் அவனே உபாயம்-பக்தி தன்னையும் பகவானையும் உபாயமாக ஏற்கும் –பகவான் தான் உபாயம் ஏற்பான் –சரணாகதி தான் உபாயம் என்பதையும் ஏற்காதே-நான் கண்ட –
கைப் பறியாக பறித்ததாய்-புண்ய பாபங்கள் கலந்து இருக்கையாலே –புண்யம் தலையெடுத்த போதாக வெளிச் செறித்து –அல்லாது போது கலங்கி இருக்கிற ஜ்ஞானத்தைக் கொண்டு –பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே-பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது-தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார்--கைப்பறியாய் பறித்ததாய் –ஸ்வ யத்னத்தால் சாதிக்கப்பட்ட -இத்தால் ருஷிகளை சொல்லுகிறது –-அத்தை இத்தை -பரத்வத்தையும் சௌலப்யம் இரண்டையும்-கோயில் கூழை -நியதி இல்லாதா வியாபாரம் -கோயில் பரிசாரகம் செய்யும் வியாபாரம்-வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் -அமுது செய்த அடையாளம் –பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் –
அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் –தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில்—இங்கும் அங்கும் ஞானப்பிரானை அல்லார் இல்லை நான் கண்ட நல்லதுவே-ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே –நமக்காக அஹம் ஸ்மராமி- நயாமி பரமாம் கதிம் –அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -காஞ்சி தேவப்பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று -இதன் அடிப்படையிலே –பட்டர் -கௌசிக புராணத்தில் மற்ற அவதாரங்களை விட வராஹ அவதார ஏற்றம்-ரஹஸ்ய சிந்தாமணி -தேசிகன் வராஹ சரம ஸ்லோக வியாக்யானம்-
ஆழ்வார் திரு உள்ள உறுதியை வெளியிட்டு அருளுகிறார்-எல்லாயவர்க்கும் -பறவை விலங்காதி/ அல்லாதவர்க்கும் -நித்ய ஸூ ரிகளுக்கும்-மற்று எல்லாயவர்க்கும் – நிஹினமான மநுஷ்யர்களுக்கும் என்றுமாம்-ஞானப்பிரானே நம்மை சம்சார பிரளயத்தில் இருந்தும் உத்தாரணம் செய்து அருளுவான் –முன்பு பிரளய வெள்ளத்தில் மூழ்கிப் போன பூமியை உத்தரணஞ் செய்து நிலை நிறுத்திய மஹோபகாரகனையே நான் ஸம்ஸாரப் பெருங்கடலினின்று என்னை வீடேற்றுதற்குத் தஞ்சமாக நினைத்திருப்பேனென்று ஆழ்வார் தம்முடைய திருவுள்ளவுறுதியை அன்பர்க்கு வெளியிடுகிறார். இப்போது நான் வெளியிடுகிற என்னுடைய ஸித்தாந்தம் அறம்பொருளின்பங்களையே தஞ்சமாக நினைத்து தேஹாத்மாபிமாநங் கொண்டு பகவத் விஷயத்தில் விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் இகழும்படியான இழிந்த சொல்லாயினும் ஆகுக; என்னுடைய உறுதியை வெளியிட்டே தீரவேனென்கிறார் முந்துற முன்னம் ஈனச்சொல்லாயினுமாக என்றதனால். குழந்தை கிணற்றில் விழுந்தவாறே உடன் குதித்து அதனை யெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளங் கொண்டவாறே உடன் குதித்து அதனையெடுக்கும் தாய்போலப் பூமியைப் பிரளயங்கொண்டவாறே முழுகியெடுத்து மஹேபாகாரனையன்றி மற்றொருவனையும் அடைக்கலம் புகமாட்டேனெற்றாயிற்று.-ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷனை எம்பெருமான் மஹாவராஹ ரூபியாகத் திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற குத்தியெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளினன் என்பது ஏனத்துருவாய கதை. இப்பொழுது நடக்கிற ச்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பரம்மபலபத்தைப் பற்றிய பிரளத்தின்
இறதியில் பிரளயப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமியைத் திருமால் மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹ ரூபங்கொண்டருளிக் கோட்டு நுனியாலே பூமியை எடுத்து வந்தனனென்றும் அதுபற்றி இக்கலபத்துக்கு வராஹகலபமென்றே பெயராயிற்றென்றும் புரானவரலாறு உண்டு.-எல்லாயவர்க்கு என்றதில் விலங்கு பறவை முதலிய பலவகைப் பிறப்புகளையும் அடக்குவர்.-அன்றியே, ‘அல்லாதவர்க்கும்’ என்பதற்கு எம்ªபேருமானை விட்டு பிரிந்து தரியாதபடியாகவுள்ள நித்ய ஸூரிகளுக்கும் என்றம் உரைத்தலுமுண்டு.-கிளவித்துறை வகையில் இப்பாட்டைத் தலைவன் பக்கலில் தனக்குள்ள அன்புறுதியைத் தலைவி தோழிக்குக் கூறுதலாகக் கொள்ளலாம்.
ஸர்வேச்வரனாகிய நாயகனை கலந்து பிரிந்த (பராங்குச) நாயகி, தான் அவன் விஷயத்திற் கொண்ட காதலின்- காண்க.-துறந்து தோழிக்கு எடுத்துக்கூறிய தென்க. இதுவும் தலைவி தோழிக்கு அறிந்தொடு நிறற்றலின்பாற்படும்.-தனது களவொழுக்கத்தைப் புலப்படுத்துதலால் உண்டாகும் பழி தூற்றுக்குத்தான் பயன்படாமை தோன்ற ‘ஈனச் சொல்லாயினுமாக’ என்றாள் என்று கொள்க.-‘எல்லாயவர்’ என்பதில் ‘எல்லாம்’ – பகுதி; மகரம் கெட்டது; ய்- எழுத்துப் பேறு. அ- சாரியை; வ்- சந்தி; அர்- விகுதி.–ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீவராஹப்பெருமாளுக்கு ஞானப்பிரானென்று திருநாமம் வழங்கும்.
ஈனச் சொல்லாயினுமாக-நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக-அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு-ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்-எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்-நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்-இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்-அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய–செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்–(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)அல்லாதவர்க்கும்–அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்–மற்று எல்லா யவர்க்கும்-இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்-ஞானப் பிரானை யல்லால் இல்லை–ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை–நான் கண்ட நல்லதுவே –நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
தாத்பர்யம்-இதில் மதுரகவி ப்ரக்ருதிகள் -அந்தரங்கர்-இவர் பகவத் விஷயத்தில் ஈடுபட்டு மோஹித்து இருப்பதை அறிந்து-பிரசுத்துதமான கிருஷ்ண அவதிகாரத்திலும் மோஹிப்பார் என்று அறிந்து
இனி இவர் ஸ்திதியை விஸ்வசிக்க முடியாது-நம்மைப் பார்க்க வைப்போம்-பிரிவாற்றாமை குறைக்க இதுவே வழி-சரம ஸ்லோகம் கீதாச்சார்யன் உபதேசித்தான் போல் -அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு அருளிச் செய்தது போல்-ஆழ்வாரும் -நமக்காக தான் கண்ட நல்லதை -அந்தரங்கரை வியாஜமாகக் கொண்டு –லோக உஜ்ஜீவன அர்த்தமாக தம்முடைய பரம சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –இதுக்கு மேல் வேறே ஒன்றும் இல்லையே -ஆகவே இதுவே பரமமான -ஸித்தாந்தம்
ஞானப்பிரான் சன்னதி-நீராஞ்சனம் தேங்காய் மூடியில் -ஞான தீபம் தூண்ட -காயத்ரி ஜபம் பிரார்த்திப்பதும் இதுவே-மற்றவை தன்னடையே கிட்டும்-நாம் உபதேசிக்கும் இது சம்சாரிகளுக்கு ருசிக்காமல் இருந்தாலும் –சொல்லி அல்லது தரிக்க மாட்டாமல் -அனுபவம் உந்த அன்றோ அருளிச் செய்கிறார்-ஆழ்வார் வார்த்தை ஈனச் சொல் ஆகாதே-சில மஹான்கள் சிலர் உண்டாக இருப்பதால் சொல்கிறேன்-சம்சாரிகளுக்கும் காலாந்தரத்தில் ஆவது ருசி பிறக்கலாம் அன்றோ -உஜ்ஜீவன ஹேது -ஹிதத்துக்காக அருளிச் செய்கிறார்-பரம காருணிகர் அன்றோ ஆழ்வார்-காது கொடுத்தாலே போதும்
ஸ்ரவணம் கீர்த்தனம் –ஆத்ம சமர்ப்பணம் செல்வத்துள் எல்லாம் தலை -செவிச் செல்வம் தானே
நான் சொல்வது ஸூ லப அனுஷ்டானமாகவும் -இனிமையாகவும் இருக்கும்-மருந்தாகவும் விருந்தாகவும் ஸ்வரூப அனுரூபமாகவும் இருக்கும் –-அது ஏது என்னில் ஸ்ரீ யபதியாய் பராத்பரன்
தனது மேன்மையும் பாராதே இவர்கள் பிரார்த்தனையும் எதிர்பாராமல் தானே வந்து மஹா அவதாரமாய் -உத்தரித்து அருளிய மஹா உபகாரகன்-நம் அனைவரையும் ரக்ஷித்து அருளியவன்
புண்யங்கள் செய்து கற்பக வருஷம் இடம் அபீஷ்டம் பெற்று வாழும் தேவர்களுக்கும் அதன் மூலம் -அந்தராத்மாவாக இவன் தானே-தண்ணீர் ரசமாகவே நான் இருக்கிறேன் ஸூர்யனில் ஒளியாயும் இருந்து தேவர்களைக் காப்பவன் அவன்-அல்லாதவர் -கர்ம சம்பந்த ஸூந்யராய் -வைபவம் மிக்க நித்ய ஸூரிகளுக்கும் தனது திரு மேனியை அனுபவிப்பித்து தரிக்க வைப்பவனும் இவனே மற்ற எல்லாருக்கும் -சம்சாரிகள் -மனுஷ்ய பசு பஷாதிகள்;-ஸர்வவித அபீஷ்டங்களையும் கொடுத்து ரக்ஷிப்பவன் அவனே-சர்வஞ்ஞனாய் -ஞானப்பிரான்-சர்வ சக்தனாய் -இடந்து-அவாப்த ஸமஸ்த காமனாய் நிரங்குச ஸ்வதந்த்ரனாய் நிருபாதிக சர்வ ஸ்வாமியாய் அவனை ஒழிய அல்ப சக்தர் அல்ப ஞானம் உள்ளவர் -சம்சாரிகளுக்கும் -கர்மாதீனர் -இவர்களுக்கும் ப்ரஹ்மாதிகள் ரக்ஷகர் ஆகார்
உபாயாந்தரங்களின் தாழ்ச்சி -ஜடப்பொருள் மோக்ஷம் தராதே-நஸ்வரமாய் -சேதனர் ப்ரத்யயனனம் பண்ணி சாதிக்க வேண்டுமே-கர்ம ஞான பக்தி -பரிபக்குவம் இல்லா தவர்களுக்கு -வேதம் முக்குண சம்சாரிகளுக்கும் உபதேசிக்கும்-நமது நிலைக்குத் தக்க அனுஷ்டானம் வேண்டுமே – நதியில் இருந்து கைக்குத் தக்க நீரைப் பருக வேண்டுமே –-இவ்வர்த்தத்தை உலகை வஞ்சிக்கவோ ஆச்சார்ய பீடம் வகுக்கவோ புகழுக்காகவோ கியாதி லாப பூஜா -லாபத்துக்காக சொல்ல வில்லை –-நான் -பெருமையை வியாக்யாதா விவரிக்கிறார்-ஸம்ஸார -பங்க நிமக்நாராய் -சகல சேதன உத்தாரண ஏக பரனாய் -வராஹ மூர்த்தியை ஈடுபட்டு பகவத் கடாக்ஷத்தால் -அந்தக்கரண மலம் இல்லாமல் தத் பிரசாத லப்த தத்வ யாதாத்ம்ய அவபோதம் பெற்று அனுபவ ஜெனி பிரேமம் உள் அடங்காமல் வெளி வந்த சொல்லால் இந்த உபதேசம் இது உங்கள் நன்மைக்காக இந்த மஹா அர்த்தத்தை உபதேசிக்கிறேன் என்கிறார் –
10-7-செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்-ப்ரவேஸம்-
விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில்-பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே-
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்-
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே-
அவன் செய்கிற காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்-
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்யத்துக்காக என்று இருந்தோம்-
அதாவது இப்பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே-நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய்-சரீர சபலனாய் – இருந்தான்-கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –
நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
உம் உயிர் வீடுடையான் -உயிரையும் வீடான சரீரத்தையும் உடையான் -ஆத்மாவை வீடான சரீரமாக உடையான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-
இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு-இவனுடைய காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்-
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது-
அப்படிச் செய்யும் போது இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்-நித்ய மண்டலம் அன்றோ -சரீரமும் நித்தியமாக இருந்து விடுமே –
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை-இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-
பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்-
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்-என்றும்-
மும்முறை விரும்புவதும் மும்முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்-
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-
என்னிடத்தில் செலுத்தும் காதல் பெருக்கே அன்றோ-நான் இதனை விரும்பவில்லை
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய விருப்பத்தை விடாதவாறு-நம் விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்
இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல் களை உடையதாய் -விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஒரே தன்மையதாய்-வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை வெறுத்து அருள வேண்டும் -என்றார்-
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன் விட மாட்டாதவனாய் இருந்தான் –
இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால்கட்டினை-அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து-
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும்-என்று சரணம் புக்கார் –பிரார்தனாமதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென்மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு நாமும் இதனை வருந்தியாவது வெறுப்போம் -என்று பார்த்தான் –
இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவானாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –
ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -திருவாய் மொழியிலே தொடங்கின ஈஸ்வர பாரதந்த்ர்யத்தை முடித்து-
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-எல்லா பொருள்களுக்கும் தலைவனான -சர்வேஸ்வரன்-
தனக்கு இவ் உடம்பில் விருப்பம் செல்லா நிற்கச் செய்தே-
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள்-இழிந்து நான் பட்டதுவே அமையும்-என்று மிகுந்த பிரீதியாலே-
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-
நீராடப் போதுவீர்–அனுபவம் அடியார்கள் முன்னிட்டே -இனியது தனி அருந்தேல் -கரீஷ்மா காலத்தில் மடுவில் -செல்வார் துணை தேட்டம் -மூன்றும்
கல்யாண குணாம்ருத சாகரம் -அன்றோ இவன் -பரத்வம் கணுக்கால் அளவு -ஸுலப்யம் இடுப்பு -வாத்சல்யம் நெஞ்சு -ஸுசீல்யம் முழுகப் பண்ணும்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா சீதா பிராட்டி கூட்டி அன்றோ பெருமாள் இழிந்தார் –
கவி பாட சரீரம் வேண்டுமே -ஸுசீல்யத்தில் இழியாமல் இருக்க உபதேசிக்கிறார் –
ஏழாம் திருவாய் மொழியில் கீழ் இவர்க்குப் பரமபதத்தைக் கொடுக்கையில் யுத்யோகித்த சர்வேஸ்வரன்
இவர் முடியில் திருவடிகளை வைத்துத் திரு உள்ளத்திலே பூர்ணமாகப் புகுந்து இருந்து –
விரை குழுவு நாறும் துளவம் மெய்ந்நின்று கமழும்என்னும்படி
திருமேனி முழுக்கத் திருத்துழாய் பரிமளமாம்படியாக இவருடைய சரீரத்தோடு அந்த கரணத்தோடு
மற்றும் உள்ள அவயவங்களோடு வாசியற அத்யபி நிவிஷ்டனாய்
ஆதரிக்கிறபடியைக் கண்டு இவ்வாதார அதிசயத்துக்கு ஹேது வான அவனுடைய
ஆச்ரித விஷயமான அபி நிவேசத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
ஆஸ்ரித தேகத்தில் ஆதாரத்தையும்
அதில் அத்யந்த அபி நிவேசத்தையும்
ரசிகத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரிதார்த்த திவ்ய தேச வாசத்தையும்
சர்வ பிரகார சம்ச்லேஷத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேதுத்வத்தையும்
அபேக்ஷ அபராதீனத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான சர்வேஸ்வரன் யுடைய ஆதார அதிசயம் இருந்த படியால் நாம் இனி யாம் உறாமை -என்று
உபேக்ஷித்த தேஹாதிகளையும் விளம்பமறக் கொண்டு போவாரைப் போலே இரா நின்றது –
அஸ்த்திரமாய் தோஷ பூயிஷ்ட்ட்மாகையாலே அ புருஷார்த்தமாய் அனுபவ விரோதி யாகையாலே
இருக்கிற இத்தை நம் பக்கல் ஆதரத்தாலே விரும்பா நின்றான் –
இத்தை அறிவித்தும் நாம் அவனை அர்த்தித்தும்-விடுவித்துக் கொள்ளுவோம் என்று
தெற்கில் திருமலையில் அவனை அபேக்ஷிக்க அதுக்காக அவன் நிவர்த்திப்பிக்கையிலே உத்யுக்தனாம் படியைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் –
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் –பிரயோஜனம் இல்லாத செவ்வையை யுடைத்தாய்- ஸ்வயம் ப்ரயோஜன ரூபமான சொற்களாலே கவிபாட வல்லவர்கள்
பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது –என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –அவன் கையில் உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் அகப்படாதபடி காத்துக் கொண்டு வாசிகமான அடிமை செய்யப் பாருங்கோள் –அநந்ய ப்ரயோஜனராய் இழிவார்க்கு ஆத்மாத்மீயங்கள் அவனாலே அபஹ்ருதமாய் அவர்ஜனீயம் என்று கருத்து –ஆள் செய்கையாவது கவி பாடுதல் -என்று இருக்கும்-புகழும் நல் ஒருவன் -என்கிற திருவாய் மொழியில் தம்வாசனையாலே–
உயிர் காத்து ஆட்செய்மின் –-உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள்-நீங்கள் உளராய்க் கவி பாட வேண்டுமே-
இத்தலை உண்டானால் அன்றோ அத்தலைக்கு மங்களா சாசனம் செய்யலாவது-
ஆட் செய்மின் -என்கிறார் -கவி பாடுதல் வாக்கினால் செய்யப்படும் அடிமை ஆதலாலே-
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மா மாயன் -9-6-7-அன்றோ –கவி பாட கொள்ளும் வியாஜ்யம் -என்றவாறு –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து மற்றைப் படியேயாய்-இருக்கும் பலிப்பது–அடிமை பண்ணி -பாது காத்துக் கொள்ளுங்கோள்-
ஆழம் காலிலே இழிந்து அமிழ்வார் அவ் விடத்தே கொண்டைக் கோல் நாட்டுமாறு போலே-
கொண்டைகோல் நாட்டுகிறார் ஆழ்வார் -என்று சிற்றாள் கொண்டான் -பணிப்பர்-
இவ்விடம் பரப்புத் துறை-இவ்விடம் மடு-என்று-நிலவர் எல்லை குறிக்குமாறு போலே-
உடையவர் —உயிர் காத்து ஆட்செய்மின்–இன்னார் உயிர் என்னாமையாலே
அவன் உயிரைக் காத்து ஆள் செய்யுங்கோள் -என்று அருளிச் செய்தது -என்றது
அவன் மேல் விழ தாங்கள் இறாய்க்கையாவது அவன் இழத்தலே அன்றோ-அவன் உயிரைக் காத்தலைச் செய்யுங்கோள் -என்றபடி-அயோக்யதா அனுசந்தானத்தாலே அகன்றால் -சேராமல் அவன் இல்லை நீங்களும் இல்லை –என்னை அழித்துக் கொள்வேன் -திரு மங்கை ஆழ்வார் திரு நெடும் தாண்டகம் -பெருமாளை அழிக்க திட்டம்-ரகஸ்யம் புரிந்து கொண்டான் -தன்னைக் காட்டினான்
நினைதொறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும் -9-6-2-என்றும்-
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -என்றும்-
சீலம் முதலான குணங்களில் புண்பட்டு அன்றோ இவர் இருப்பது –உங்களை இழத்தற்கு வேண்டிய காரித்தைச் செய்யாதே-அவனுடைய இறைமைத் தன்மையிலே -நியந்த்ருத்வம் -ஐஸ்வர்யம் –இழிந்து கவி பாடப் பாருங்கோள்-
பஸ்யமே யோக ஐஸ்வர்யம் -விஸ்வ ரூபம் காட்டி -ஐஸ்வர்யம் என்றாலே நியந்த்ருத்வம் —
சீல குணத்திலே இழிய நினையீதீர்கோள் –
என்னை உபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகை என்னும் வ்யாஜத்தினாலே என்னுள்ளே புகுந்து கலந்து –இன்னபடி செய்து அருளினான் -என்று அயர்வறும் அமரர்க்கும் அறிய நிலம் அல்லாத தொரு படி-என் நெஞ்சையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி தானேயாம்படி-மாள புஜித்து பரிபூர்ணன் ஆனான் என்கிறார் –
வஞ்சக் கள்வன் மா மாயன் -இத்தலையில் அடிமையை நிலை நிறுத்துவாரைப் போலே புகுந்து-தான் அதனை எறட்டுக் கொண்டு-தலைவனாம் தன்மையை இத்தலையிலே வைத்து-தலைமேல் கொள்வான் -ஆயிற்று –களவு தன்னை களவு காணும் ஆயிற்று – -சேஷத்வம் திருடினான் -கள்வா -ஆத்மபஹாரம் –பிள்ளை பெருமாள் ஐயங்கார்-சேஷித்வம் பட்டம் கொடுத்து இதுவே சேஷத்வம் என்று காட்டிய கள்வன்-எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் என்பர் –மா மாயன்-அப்படி அறியச் செய்தேயும் தப்ப ஒண்ணாத படியான-ஆச்சர்யமான செயல்களையும் குணங்களையும் உடையவன் –மையல் ஏற்றி மயக்க உன் முகம் தான் மாய மந்த்ரம் தாம் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-
மாயக் கவியாய் –ஆழ்வீர் உம்மைக் கொண்டு உலகத்தில் நடையாடாத-சில கவிகளைப் பாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றோம்-அப்படிச் செய்வோம் -என்று ஆயிற்றுப் புகுந்தது
கவி என்று ஒரு காரணத்தை இட்டுக் கொண்டு வந்தான்-காதலி இருக்கும் இடத்தில் -தண்ணீர் -என்று புகுமாறே போலே –
வந்து-வந்தவனும் தானே ஆயிற்று –நான் தான் இருந்த இடத்தே சென்று-
என்னை இட்டு சில கவிகள் பாடுவித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லச் செய்கை அன்றிக்கே-
தானே வந்தான் –அடையத் தகுந்தவனான தானே ஆயிற்று வந்தான்-இதுவன்றோ சீலம் ஆவது –அபி கம்யனாக தான் இருக்க அபிசரித்தான்–
வந்த இடத்தில் அவன் உமக்கு நலிவாக செய்தது என் என்னில் –
என் நெஞ்சும் உயிரும் –நெஞ்சினைக் கூறியது உடலுக்கு உப லஷணம்-உயிர் -ஆத்மா-
வரும் பொழுது நான் இருந்தேன் வந்த பின்பு என்னைக் காண்கின்றிலேன்-
உள் கலந்து –
ஒரு நீராகக் கலந்து –சரீரத்தோடு ஆத்மாவோடு வாசி அற அனுபவிக்கிறான் –
நின்றார் அறியா வண்ணம் –
இச் செயலுக்குத் தலைவரான பிராட்டி திரு வநந்த ஆழ்வான்-திருவடி முதலானார்க்கும் அறிய முடியாதபடி-ஆயிற்று என்னோடு கலந்தது –
இப்படிப் பட்ட காதலோடு கூடிய செயல்களில் நிற்பார் அவர்களே அன்றோ –
அவர்களுக்கும் தெரியாதபடி –ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -9-6-9- என்னுமாறு போலே –
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு –
சரீரம் வேறு உயிர் வேறு என்று நினைத்திலன் -எனக்கு மயர்வற மதி நலம் அருளினவன் -–தேஹாத்ம விவேகம் அறிந்திலன் –
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான் -9-6-5-என்னுமாறு போலே சரீரத்தையும் உயிரையும் ஒரு சேர அனுபவித்தான் –சேதனனுடைய போக்த்ருத்வமும் அசத் சமமாம் படி தானே போக்தாவாய்ப்-பெறாப் பேறு பெற்று-இப்பொழுது தான் – அவாப்த ஸமஸ்த காமனானான்
தானே யாகி –தம்மை காண்கின்றிலர் காணும்-இருவருமாக அனுபவிப்பாரைப் போலே புகுந்து அனுபவிக்கிறவன் தானே யானான்-மற்று ஒன்றைக் காணா -காண்பனவும் -உரைப்பனவும் மற்று ஒன்றி கண்ணனையே கண்ட –திருப் பாண் ஆழ்வார்-தன்னையும் -தன் இருப்பிடம் – பலம் -சொல்லாமல் —
என்னை முற்றப் பருகினான் -9-6-10-என்னுமாறு போலே-இத்தலை இனிய பொருளாய் அற்றதாயிற்று-இத்தலை ஒரு அறிவுடைப் பொருள் என்று தோற்றாதபடி ஆயிற்று செயல் செய்தபடி –பிறருக்கு உறுப்பாய் இருக்குமது ஒழிய-தனக்கு என ஒரு தகுதி இல்லாத அறிவில்லாப் பொருளைப் போன்று செய்தான்-தனக்கேயாக -2-9-4- என்றபடியே கொண்டான்-
இனிய பொருள்களிலும் ஸ்வரூப பேதங்கள் -உண்டாகா நின்றதன்றோ- சந்தனம் மலர் போலே-அவை போன்றதே விட்டது அறிவுடைப் பொருளும்-
சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-பைந்தொடி மடந்தயரைக் கொண்டு-ஷட்குண ரசாந்தமாக்கி -ஆசார்ய ஹிருதயம் –
தானேயாகி-
ஈர் அரசு தவிர்த்தான் என்பார் -தானேயாகி -என்கிறார்-
இத்தலையை புள் கவ்வப் பண்ணி -செருக்கு அற்றவனாக்கி –தானே தலைவனாய் நின்றான் -என்றபடி-
நிறைந்தானே –அவாப்த சமஸ்த காமன் -எனபது இது காறும் பெயர் மாத்ரமேயாய்-இவரைப் பெற்ற பின்பாயிற்று நிறைந்தவன் ஆயிற்று-இங்கனே இருப்பது அன்றோ சீலமாவது -என்றது-பெரியவன் சிறியவன் இடத்தில் கலக்கும் இடத்தில்-தன் பெருமையும் அவன் சிறுமையும் தோற்றாத படி-புரை அறக் கலக்கை அன்றோ –
அபிஷிஸ்ய ஸ லங்காயாம் ராஷஸேந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85 -என்னுமாறு போலே-
என் நெஞ்சையும் உயிரையும் உள்ளே புக்கு கலந்து அவற்றைப் புஜித்து-என் அபிமானத்தைப் போக்கித் தானே எனக்கு அபிமானியாய் அத்தாலே பூர்ணனானவன் –
————-
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2-
தானே ஆகி நிறைந்து –ஏவகாரம்-இருவரும் சேர்ந்து செயல் செய்யப் புகுந்து-தானே பெற்றானாய் இரா நின்றான் –தான் போக்தா –
தானே யான் என்பான் ஆகி –யானே என்பான் தானாகி –-எல்லார் இடத்திலும் நிற்கும் நிலை ஒழிய-இவருடைய திரு மேனியில் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
நான் என்ற பெயர் அளவேயாய் நிற்கிற நான் -தான் என்னலாம் படி ஆனேன்-
சேஷ பூதன்-என்றவன் சேஷி ஆனேன் -என்றவாறு -அப்ருதக் சித்த விசேஷம் தெரிந்து தானே அவன்-
அஹங்காரத்தால் இல்லை -கடல் ஞாலம் செயதேனும் யானே போலே –
தம்மைத் தடவிப் பார்த்த இடத்தில் காண்கின்றிலர் –அவன் தலையிலே சுமக்க காண்கிற இத்தனை –
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே--சர்வ ரச -என்கிற பொதுவான நிலை அன்றிக்கே-எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே –கொடியேன் பருகு இன்னமுதே -என்கிறபடி-
தன்னைத் தானே துதித்து -என்கிற இடத்தில் தம்மைக் கண்டிலர்-
இங்குத் தாம் உளராகவும்-தமக்கு இனியதாகவும் தோன்றிற்று-
தாம் பாடின கவி கேட்டு -அவன் இனியனாய் இருக்கும் இருப்பு-தமக்கு இனியதாய் இருக்கிறபடி –உபாய பாவத்தில் அந்வயம் இல்லை -உபேயம் -அனுபவத்தில் அந்வயம் உண்டே —
திருமால் இரும் சோலைக் கோனே -யாகி-இரண்டு உலகங்களையும் உடையவனாய் இருந்ததால் வந்த ஏற்றத்துக்கும் அவ்வருகே-
ஓர் ஏற்றம் போலே ஆயிற்று திருமலையை உடையனாய் இருக்கையால் வந்த ஏற்றமும் –
இவரைப் பெற்ற பின்பே காக்கும் தன்மை நிறைந்த தாயிற்று-திருமலையில் வந்து ஆழ்வாரைப் பெற்ற பின்பாய்த்து சேஷித்வம் பூர்ணம் யாய்த்து –
இல்லையாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்போடு-திருமலையில் நிலையோடு வாசி அற்று போமோ அன்றோ –
நின்று ஒழிந்தான் –இங்கு நின்ற பின்பு ஆயிற்றுப் பரகு பரகு-வியாகுலம் -அற்றது-க்ருதகிருத்யனாய் இரா நின்றான் –என்னை முற்றும் உயிர் உண்டே –என் உயிரை முற்றும் உண்டே-எங்கும் பரந்து இருக்கிற தான்-அணு அளவிதான ஆத்மாவினை நுகர்தல்-தனக்கு ஏற்றமாம் படி ஆயிற்று இத்தலையான படி –அவன் தன் அபிப்ராயத்தாலே மதித்து இருந்தபடி –தம்மோடு கலந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைக் கண்டு இனியராய் அனுபவிக்கிறார் –
என்னைப் பெறுகையாலே சர்வேஸ்வரனாய் –என்னை உபகரணமாகக் கொண்டு -தன்னைத் தானே ஸ்துதித்து -எனக்கு நிரதிசய போக்யனாய் -என்னைப் பெற்ற பின்பு திருமலைக்கு நாதனும் ஆனான் –என்னை முற்றும் உயிர் உண்டே–என்னுயிரை ஓன்று ஒழியாமே அனுபவித்து –
————-
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-
என் மாய ஆக்கை –என்னுடைய உயிரை அனுபவித்து அவ்வளவிலே தான் தவிருவானாய் இருந்தானோ-மங்க ஒட்டு என்னும் அளவும் அவன் இதனை விட மாட்டாமையாலே உள்ளே புகுரா நின்றான் –இதனுள் புக்கு –புகுந்து என்னாதே புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இறே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இறே மேல் விழா நின்றான் –
என்னை முற்றும் தானேயாய் –இப்படி உயிர் உடலோடு வாசி அற எங்கும் புக்குப் பரந்து இருக்கையாலே -தானே -என்ன தட்டு இல்லை-காரண கார்ய பாவ்யம் ஆகையாலே-
இவர் -நான் -என்னும் அதனையும் கொண்டான்-இவர் – எனது -என்னும் அதனையும் கொண்டான்-ஈஸ்வரனுக்கும் கூட விளாக்குலை கொண்டு -கபளீ கரித்து-அனுபவிக்க ஒண்ணாத படி ஆனார் ஆயிற்று -என்னுதல்-
சகல பிரகாரங்களை -ஞானம் ஆனந்தம் சேஷத்வம் குணங்கள் போன்றவை முற்றவும் என்றபடி –
திசை கூப்பிச் சேர்ந்த யான் –ஒரு திக்குப் பட அன்றோ இவர் விரும்புவது என்றது –அவனை உகந்து அவ்வழியாலே அவன் விரும்பின தேசத்தை உகந்து-அதனோடு சம்பந்தம்
உடைய திக்கினை உகந்து-இப்படி அவனோடு சம்பந்தம் உடைய சம்பந்திகள் அளவும் உகக்கும்படி கை கழியப் போந்த நான் -என்றபடி –
அவன் தான் இவரை உகந்து-இவருடைய சம்பந்தம் உடைய உடம்பினை விரும்புவது போலே ஆயிற்று-என் எண் தான் ஆனானே -1-9-7-என்றார் அன்றோ அடியிலே –
என் கொல் அம்மான் திருவருளே –அம்மான் திருவருள் என் கொல் –இவர் திறத்தில் எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போலே எதனைச் செய்தோம் என்று இரா நின்றான் ஆயிற்று-
இன்னம் போவேனே கொலோ –என் கொல் அம்மான் திருவருளே–இனி எனக்கு ஒரு கந்தவ்ய பூமி யுண்டோ -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –விடில் செய்வது என் என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
சரமாவதி சேஷம் ஆகையால் -தன்னை விட பிரசங்கம் இல்லை -விடில் என் செய்வது -என்று அதிசங்கை பண்ணினான் அன்பினால் என்கை-
அன்றிக்கே அவனை விரும்பி –அவன் உகந்த தேசத்தை விரும்பி –அத்தோடு சேர்ந்த திக்கை விரும்பும் படி சேஷத்வத்தின் நிலையிலே நிறுத்தினவன்–இதில் காட்டில் வேறு சில ப்ராப்யங்கள் யுண்டாய் அவற்றை உபகரிக்கப் பாரிப்பாரைப் போலே இரா நின்றது -எனக்கு ஒன்றும் செய்திலேனாய் பரகு பரகு என்கிற இதுக்கு அவதி என்னோ -விஷயம் இன்றியே இருக்க பிரமிக்கவும் ஆமாகாதே-
———–
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-
தம்முடைய திருமேனியைக் காட்டிலும்-தம்மோடு கலந்து பழகுவதற்கு-
தக்க நிலம் என்று திருமலையில் அவன் வைத்து இருக்கும்-காதல் பெருக்கினை -அருளிச் செய்கிறார்-
நன்கு என் உடலம் கை விடான்-சர்வேஸ்வரன் தன்னைக் கேட்டார்க்கு சொல்லுகிற வார்த்தை இருக்கிறபடி –அத்தை ஆழ்வார் அனுவாதம் செய்கிறார் என்றபடி –
ஆழ்வாரை -நமக்குத் தந்த திருமேனி அன்றோ -என்னா நின்றான் ஆயிற்று –ததீயத்வ ஆகாரத்தால் லீலா விபூதியை உத்தேச்யம் என்று ஆழ்வார் சொல்வது போலே -ஆழ்வார் சம்பந்தத்தால் சரீரமும் அவனுக்கு உத்தேச்யமானது –
ஞாலத்தூடே நடந்து உழக்கி –எத்தனை காலம் உண்டு அவன் இப் பேறு பெருகைக்கு உழன்று திரிகின்றது –எல்லார்க்கும் பொதுவானவனுடைய செயல் எல்லாம் எனக்கு எனக்கு என்று-சொல்லலாம் அன்றோ அடியார் ஆனார்க்கு –இந்திரனுக்கு இழந்த அரசினைப் பெற்றேன் என்னவுமாய்-மகா பலிக்கு -வள்ளல் என்னும் பெயர் பெற்றேன் -என்னவுமாம்சிலருக்கு பொன் பயந்தேன் என்னவுமாய்-மாலாகிப் பொன் பயந்தேன் மன்னன் சரிதைக்கே -திருமங்கை
இவருக்கு எனக்காகச் செய்தான் -என்னவுமாய் இருக்கிறது காணும் –
உவந்த உள்ளதனாய் -கொடையாளி -மகாபலி -இந்திரன் ராஜ்யம் பெற்று உகந்து-ரிஷிகள் காணப் பெற்றோம்-அடியார் கார்யம் செய்தோம் அவன் உகக்க -திருவடி பெறப் பெற்றோம் ஆழ்வார்கள் உகந்து -ஒரே கல்லில் ஐந்து மாங்காய்-சத்யம் விதானம் நிஜ ப்ருத்ய – நரசிம்மன் -அவதாரம் -மெய்ப்படுத்த- பிரகலாதன் வார்த்தை
-ப்ரஹ்மா – வேதங்கள் -ஹிரண்யகசிபு காட்டி -ரிஷிகள் இந்த உருவம் சேவிக்க –
திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான் -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கில் திக்கில் ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள திருமலையில் வந்து நின்றான் –
நங்கள் குன்றம் கை விடான்-ஆழ்வார் திரு மேனியை பிராப்யமாகவும் நினைத்திரா நின்றான் என்றது-உத்தேச்யம் ஆழ்வார் திருமேனியாய்-அது பெறுகைக்கு ஆயிற்று திரு மலையில் நிலை -என்றபடி –
நண்ணா அசுரர் நலியவே-திவ்ய மங்கள விக்ரகம் இல்லை திருக் கல்யாண குணங்கள் இல்லை என்று பிதற்றும் அசுரக் கூட்டங்கள்-
திருமால் இரும்சோலையில் எம்பெருமான் நின்ற நிலை கண்டவாறே தொலைந்தன –
அப்படியே இவன் ஆழ்வார் திருமேனியில் காதல் இப்படி பட்டது என்று அறிந்தவாறே ஆழ்வார் குறைகளை எண்ணுகிற அசுரக் கூட்டம் தொலைந்தன –
————-
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-
எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –திருவாய் மொழியை தவிர வேறு ஒரு செல்வம் வேண்டா-என்று இதுவே நினைந்து பேர் உவகையராம் தன்மையர் ஆகையால் –நல் முனிவர் –
நன்கு என் உடலம் கைவிடான் -என்னும்-அளவு அன்றிக்கே என் வார்த்தை அளவிலே களியா நின்றான் -இதில் பேசப் படுகிற பரம்பொருளின் உடைய அவதாரம் போலே ஆயிற்று-துதிப் பாடலாகிய இதனுடைய அவதாரமும் –தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -9-4-9-என்னக் கடவது அன்றோ–இந்த திருவாய் மொழியே அவர்களுக்கு தாரகம் –
யானாய்த் தன்னைத் தான் பாடி –தந்தையானவன் மகனுக்கு பசுவினை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே தான் மீள நீர்-ஏற்றுப் பசுவினைப் பெறுமாறு போலே
மகனுக்கு சொற்களைக் கற்பித்து அவன் சொல்லக் கேட்டு தந்தை இனியர் ஆமாறு போலே –தான் பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடு ஒத்துப் போம்-பண்டே பரமன் பனித்த -10-4-9-என்று இவர் அங்கீ கரிக்கையாலே அந்த ஸ்ரீ கீதை தானும் வீறு பெற்றது அன்றோ –
நம்பி திரு வழுதி நாடு தாசர் -அருள் கொண்டாடும் -என்கிற பாட்டிலே
ஸ்ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால்-
பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டமையாலே-புறத் திண்ணையிலே கிட -என்பார்கள்
திருவாய் மொழியைக் கற்றான் ஒரு விண்ணப்பம் செய்வான் என்றால் சர்வேஸ்வரன் அகப்பட புறப்பட்டு-எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து-அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பார்கள் -என்றாராம் –
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை –அவாக்ய அநாதர -என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இறே-இக்கவிகள் ஆகிற அம்ருதத்தைப் பருகிக் களித்து அம்ருத பானம் பண்ணின வண்டுகள் போலே தென்னா தெனா வென்று திருமலையில் நின்று பாடி அருளா நின்றான் என்கிறார் –
திரு மால் இரும் சோலையானே-தாம் பாடின கவிகளின் இனிமையை நினைந்தார் –இவை தாம் அடியாக பிறந்தன என்று சொல்லலாய் இருந்தன அல்ல –
இதற்கு அடி என்ன -என்று பார்த்தார் –அவன் தன் நெஞ்சினில் புகுந்து இருந்து பாடுவித்தானாய் இருந்தது-இவரைப் பாடுவித்த முக்கோட்டை-தொலை வில்லி மங்கலமும் இவரது முக்கோட்டை –
———–
திருமால் இரும் சோலையானேயாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-
செழு மூஉலகும் தன்-ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்–கட்டளைப் பட்ட தரை லோக்யத்தையும் அத்விதீயமாக சிறிதான வயிற்றிலே வைத்து -கல்பம் தோறும் கல்பம் தோறும் தலையாக ரக்ஷிக்கும் -பிரளய ஆபத்தில் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய தனக்கு செல்லாத படியாய் இருக்கை –மா -விபரீத லஷணை-
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே –
பிரமன் சிவன் முதலான தேவர்கள் காணப் பெறாமையாலே-எல்லை இல்லாத பக்தியை உடையராய்-திருவடிகளை அடைவு கெட ஏத்த-
அவர்களுக்கு முகம் தோற்றாமே கடக்க நின்று-அருள் செய்கின்ற சர்வேஸ்வரன்-
எனக்கு கண்களுக்கு இலக்காம்படி-திருமலையிலே வந்து நின்று-என்னை அடிமை கொள்ளுகையில் எனக்குப் பெரும் பித்தனாய் என்னைப் பிரிகிறிலன் என்கிறார் —என்னை ஆளுமால் –என்னை அடிமை கொள்ளுகைக்காக பிச்சுத் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –ப்ரஹ்மாதிகள் பராத் பரன்– என்று அறியாதவர் பிரதிமாஸு அப்ரபுத்தி ஞானம் மலராதவர்களுக்கும் விக்ரக ரூபம்-யோகிகளுக்கு ஹிருதயம் சேவை –வேத வித்துக்களுக்கு அக்னியில் சேவை -ஸுலப்யம் அறிந்தவர் தானே இவனை உணர முடியும் –
————
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-
மருள்கள் கடியும் மணி மலை –பேற்றினை அடைவதற்கு தடைகளாக உள்ளவற்றை-அடையப் போக்கும் தேசம் ஆயிற்று-
அன்றிக்கே-
திருமலையை ஒழிந்தது ஒன்றே பெறத் தக்க பேறு-என்று பிறக்கும் புத்தியைத் தவிர்த்து தருமாயிற்று-நிரதிசய புருஷார்த்தமான திருமலை –திரு மாலிருஞ்சோலையே – -என்னலுமாம்-
அது தான் என் என்னில் –
திருமால் இரும் சோலை மலையே –ஸ்வயம் புருஷார்த்தம் திருமலை -என்றதாயிற்று –இம் மலையே தான் நாம் அடையத் தக்க பேறு-என்று திரு மலையைக் கொண்டாடுகிறார்-இதுவே பிராப்தம் என்று –மருள் ஒழி மடநெஞ்சே என்றவர் தாமே திரியட்டும் இதுவே பேறு என்கிறாரே-
———–
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
இரண்டு திருமலைகளிலும்-பரத்வத்திலும்-வியூகத்திலும்-பண்ணும் விருப்பம் முழுவதினையும்-இவர் திருமேனி ஒன்றிலும் பண்ணா நின்றான் –உயிரே -மனமே -வாக்கே -கருமமே-என்பவற்றில் உள்ள ஏகாரத்தாலே-அவற்றிலும் முறையால் அன்றியே
கண நேரமும் இடை விடாதே-சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு நில்லா நின்றான்-கரணங்கள் -காரியம் -கர்த்தா -மூன்றையும் சொல்லி -ஒன்றில் நின்றும் ஒன்றில்- கால் வாங்கிப் போய்-அனுபவிக்கின்றிலன் -என்றபடி –
தலையே உடலே உயிரே மனமே வாக்கே கருமமே -ஒவ் ஒன்றிலும் -ஒரு மா நொடியும் பிரியான் –இரண்டு திருமலையை சொன்னது உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் –
என் ஊழி முதல்வன் ஒருவனே –என் இடத்தில் காதலை உடையவன் ஆகைக்காக-காலத்தாலே அறியப் படுகின்ற எல்லா பொருள்களுக்கும்-காரணமான ஒப்பற்றவன் –
அழிவு காலத்தில் -சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும்-தன்னை ஒழிய செல்லாதவாறு போலே ஆயிற்று-
இவர் திருமேனி ஒழிய தான் செல்லாத படி இருக்கிறபடி –பிரணயித்தவத்துக்கு தாரணம் என்றவாறு –கார்ய காரண உபய அவஸ்தா சித் அசித்துக்கள் யுடைய சத்தை தன் அதீனமாம் படி இருக்கிறவன் -தன்னுடைய சத்தை என் சரீர அதீனமாம் படி இரா நின்றான் -இவனும் ஒருவனாய் இருக்கிறானே –
————-
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-
பிரளய ஆபத்துக்களில் இவற்றுக்குத் தன்னை ஒழிய-நிலைத்து இருத்தல்-இல்லாதாவாறு போலே – தான் இவரை ஒழியில்- தரிக்க மாட்டானாய் இரா நின்றான் –
வாழி மனமே கை விடேல் –மனமே நான் சொல்லுகிற இந்நன்மை உனக்கு மாறாதிடுக-
அவன் இப்படி நம் பக்கலிலே மேல் விழுந்து விரும்புகையாகிற-நன்மைக்கு எல்லாம் காரணம் -திருமலை -ஆயிற்று –
இதனை ஒருகாலும் கை விட நினையாதே காண் -என்கிறார் -தம் திரு உள்ளத்தைப் பார்த்து –அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து –ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாய் இருக்கும் –திருமால் இரும் சோலை தானே ஆழ்வார் திருமேனி -நீயும் அதனை ஒருகாலும் விடாதே காண் -என்றான் –பிரானே அங்கன் ஒண்ணாது -இதனைத் தவிர வேண்டும் -என்று நிர்பந்திக்கிறார் –
உடலும் உயிரும் மங்க ஓட்டே –உடலும் உயிரும் மங்கும்படி இசைய வேண்டும் –ஒட்டு -இசைதல் –இது அத் திருமலையைப் போன்று பற்றத் தகுந்தது ஓன்று அன்று –சாலவும் விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –உமக்கு வைராக்யம் வந்தது போலே எனக்கு ராகம் வந்தது -என்றான் –
இதனை மங்க இசைய வேண்டும் –மங்க ஒட்டு -என்கையாலே-ஆழ்வார் அவன் இசைவாலே தான் இத்தனை காலம் இருந்தார் -கர்ம சேஷத்தால் அல்ல -அவனது இச்சையால் தானே –ஆழ்வார் இங்கே எழுந்து அருளி இருந்த இருப்பு பிராரப்த கர்மத்தால் அன்று -பகவத் இச்சையாலே தானே -என்கிறது –நன்கு என்னுடலம் கை விடான் –என்றார் இறே –
————-
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே –திருமலையில் நின்று சேஷித்வம் காட்டி அருளிய நீ பேற்றினையும் தந்து அருள வேண்டும் -என்றபடி –
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அவ்விடத்தை விட்டு-நீ திருமலையில் வந்து முற்பாடனாய் நிற்கிறது–நான் சொன்னபடி கார்யம் செய்வதற்காக அன்றோ –
நீ நினைத்தபடி செய்யப் பார்த்தாய் ஆகில் பின்னை அவ் இருப்பிலே என்னை அழைத்துக் கொள்ளாயோ- திருமலையிலே வந்து நின்று என்னுடைய சேஷத்வத்தையும்-உன்னுடைய சேஷித்வத்தையும்-எனக்கு அறிவித்தவனே –
மங்க ஒட்டு உன் மா மாயை-வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும் –
இது விடத்தக்கது இது கொள்ளத் தக்கது என்னும் வேறுபாட்டினை நாம் அறியகில்லோம்-
அறிந்த நீர் விடத் தக்கது என்பதனை எனக்கு இன்னது என்று சொல்லிக் காணீர் -நான் கழித்து தர -என்றான்-சேதனன் கர்மத்தால் ப்ரக்ருதி யாத்மா விவேகம் பண்ண மாட்டாதாப் போலே இவர் பக்கல் வியாமோஹம் அவன் பிரகிருதி யாத்மா விவேகம் பண்ண ஓட்டுகிறது இல்லை – ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –
அது போலும் அன்றிக்கே -இது நிலை நிற்குமது அன்றோ–சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –
—————-
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்-பின்னைப் பெற்றதாய் இருக்கத் தட்டில்லையே –தானே தானே ஆனானைத் –ஆத்மாவிலும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களிலும்-எனக்கு உண்டான ஆசையைத் தவிர்த்து-
தானே அபிமானத்துக்கு விஷயம் ஆனவனை-
அன்றிக்கே
மகத்து முதலானவற்றின் உருவமான இச் சரீரத்தினை-ஒழித்து அருள வேண்டும் என்று சொன்ன இப்பத்தும்
அன்றிக்கே
மான் ஆங்காரத்து இவை பத்து -என்பதற்கு-பெரிய செருக்கோடு சொன்ன இப்பத்தும் -என்னுதல் –
பராங்குச ப்ருங்க ராஜம் -வண்டுகள் தேனை குடிக்கும் -ஆழ்வார் உடைய கமலப் பாதங்களில் தேனை அருந்தும் எம்பெருமானார் –
இத் தலையில் இரக்கும் தன்மை ஒழிய தானே-இரப்பாளனுமாய்-இதனை விரும்புகின்றவனும் தானே ஆனான் -என்னுதல் –
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானும் தானே ஆனான் என்றவாறு –
திருமால் இரும் சோலை மலைக்கே–திருமலையே உத்தேச்யமாகச் சொல்லிற்று -அழகரைச் சொன்னவிடம் ஆநு ஷங்கிகம் —கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-
திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும் சொன்னார்கள் அன்றோ –திருவேங்கடமுடையானாகவும் ஆவேன் என்றவாறு –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –