Archive for March, 2026

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -70 -வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –பிறவித் துயரற -1-7-

March 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் – பிறவித் துயரற -1-7- நிரதிசய போக்யத்வம் ஆராதனைக்கு இனியவன்–இதிலும் துழாய் இனியது-திருத்துழாய் முடிந்த அவன் -இரான் எனில் -அதிலும்–மூன்று அர்த்தங்கள்–1-திருத்துழாய் ஆசைப்பட்ட எனக்கு -கிடையாதபடியாலே வண்ணம் பசலை நோய் இப்படி மாறிக் கொண்டு இருக்க – 2-இரவு நெடுகி துன்பம் கொடுக்க – 3-இப்பொழுது மாலை மாறி இரவு வரப் போகிறது இது அநேகம் கல்பங்களாகி என்னாய் ஆகுமோ – )

அவதாரிகை –-ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால்
உண்டான-த்வரையாலே – காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –

இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும் விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே வந்த ஆர்த்தியை இரவின் நெடுமைக்கு இரங்கின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு ––அவதாரிகை -ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும் என்னும் அபேக்ஷையால் உண்டான த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள–அவதாரிகை-இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப் பாசுரத்தில்

வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
— 70-தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு —7–ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும் உள்ளது தேவையாய் இருக்கும் அன்று-ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன-ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும் ரசிக்கும் விஷயம் ஆகையாலே அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற பிறவித் துயரில் -அர்த்தத்தை பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்–இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு- குணைர் விருருசே ராம-என்னும்படி நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று நெஞ்சே சீக்ர கதியாகச் சென்று பற்று – முந்துற்ற நெஞ்சாய் அங்கே  பற்றும் படி ஓடு-

வளைவாய் திருச் சக்கரத்து –வளைத்த வாயை உடைய திருச் சக்கரம் -என்னுதல்-அன்றிக்கே –
வளை -ஸ்ரீ பாஞ்ச   ஜன்யமாய் –வாயை உடைய திரு ஆழியை உடையவன் என்னுதல்–தமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதாதர -என்னக் கடவது -இறே (மண்டோதரி பெருமாளது அடையாளம் சொல்லும் ஸ்லோகம் )-எங்கள் வானவனார் முடி மேல் –த்ரிபாத் விபூதி யடைய திவ்ய ஆயுதங்களும் – சாத்தின மாலைகளும் – ஆன இவ் அழகே யாம்படி  இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய – திரு அபிஷேகத்தில்  உண்டான தொடை வாய்ப்புள்ள –அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே –தளை என்று தொடையாய் –வாய் –வாய்ப்பை உடைய – தொடை வாய்ப்புள்ள திருத் துழாய்–வண்ணம் பயலை விளைவான்–நறுங்கண்ணி தண் அம் துழாய்க்கு – செவ்வியை உடைய மாலையான திருத் துழாய்க்கு வண்ணம் இத்யாதி –அம் மாலையை ஆசைப்பட்டு -பெறாமையாலே நிறமானது பயலை யாம்படி-விவர்ணமாம் படியாக–மிக வந்து இத்யாதி – முந்துற ஒரு ராத்திரி –ஒரு நாளாய் பெருகிற்று –
அது போய் ஒரு மாசமாய் – அது போய் ஒரு வத்சரமாய் – அது போய் ஒரு கல்பமாய் -பெருகும் படி ஒழிய
என்னை நலிகைக்காக வந்து புகுந்து ஒரு ராத்திரி அநேகம் ஊழிகளாக நின்றது –மிக வந்து – ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல் – அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே – இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-

இருள் இன்று என்னை அடியோடு முடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நீடிக்கிறதே
வளைவாய்த் திருச் சக்கரத்து-வட்டமான நுனியை யுடைய திருச் சக்கரம் என்றும் -சங்கையும் கூர்மையான சக்கரமும் என்றுமாம்-ஸர்வேஸ்வரத்வத்துக்கு ஸூ சகமம் -அடிமை கொள்ள -சம்பந்தமும் உடைய -உபய விபூதி நாயகன் -அலங்காரமும் உடைய சர்வேஸ்வரனை அனுபவிக்க பெறாமையாலே தன்மை குலையும் படி காலம் வரையறை இல்லாமல் வளர்கின்றதே –

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்-வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய் எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின-தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு-வண்ணம் பயலை விளைவான்-ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு ராத்ரி மிக்கு நாளாயும் மாஸமாயும் ஆண்டாயும் ஊழியாயும் வந்து ஒழிய–எம்மைஉளைவான் புகுந்து-எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி-இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-இந்த ஒரு ராத்ரியானது ஆயிரம் கல்பம் ஆகா நின்றன-ஆயிரம் என்றது-அநந்தம் என்றதாகவுமாம் –இத்தால்-வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும் விபூதியையும்
பூஷணத்தையும் ஒப்பனையையும் யுடைய ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை–வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாக-விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — காலமானது அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –வியாக்யானம்-வளைவாய்த் திருச் சக்கரத்து-வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்–அன்றிக்கே-வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே–எங்கள் வானவனார் முடிமேல்-த்ரிபாத் விபூதியை யுடையராய் திவ்ய ஆயுதங்களும் சாத்தின மாலைகளுமான அழகேயாய் இருக்கிறவர் ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான-தளைவாய்-தொடை வாய்ப்புள்ள அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே–நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு-செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு–வண்ணம் பயலை விளைவான்–அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக விவரணமாம் படியாக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று-அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று-அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று–அது நிற்க-அத்தைக் கடக்க நிறுத்தி இது ஒரு ராத்ரி இருந்தபடி என் அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது–எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது அநேகம் ஊழிகளாய் இரா நின்றன-மிக வந்து–ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே இது ஒரு ராத்ரி இருந்தபடி என்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம்–வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்-வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய் எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக–மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க-ஒரு நாழிகையே வந்து நாளாயும் திங்களாயும் ஆண்டாயும் ஊழியாயும் மிகவும் வளர்ந்து நிற்குமே–எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே–ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது எங்கனே நான் தரிக்கும் படி –

ஸ்வா பதேசம்–இத்தால் –பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21- அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும் என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

ஸ்வாபதேசம்-இத்தால்-பதி சம்மா நிதா சீதா –என்று அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை- ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே -பெற வேணும் என்று ஆசைப்பட்டு – பெறாமையாலே காலம்- செல்ல அரிதான படி சொல்லிற்று –ஒரு கங்குல் –வளைவாய் திருச் சக்கரத்து எங்கள் வானவனார்
முடி மேல் தளைவாய் தண் அம் துழாய்க்கு
வண்ணம் பயலை விளைவான் மிக வந்து-
நாளாய் திங்களாய் ஆண்டாய் ஊழியாய் வர்த்திக்கிற மாத்ரம் அன்றிக்கே – எம்மை உளைவான் புகுந்து ஊழிகள் ஆயிரமாகா-நின்றது
– என்று அந்வயம் –தளை –கட்டாய் —வாய் -வாய்ப்பாய் –தொடை வாய்த்து இருக்கை–என்னை உபேஷித்து என் உடம்பை விவர்ணமாம் படி செய்து –-தான் தன திருக்கையில் இற்று இருக்கிற திரு ஆழியினால் தன்னுடைய பரம பதத்தை விளங்கச் செய்து –
அவ் விபூதி எங்கும்-தான் சூடிய திருத் துழாய் பரிமளம்  கமழும் படி  தூரமாக வீற்று இருந்தான் –
என் எளிமை அறிந்து-இந்த இரவானது இப்படி நீண்டு அநந்த கல்பங்களாக பரிணமிக்க தொடங்கிற்று இதைக் கடந்து-நாம் ஜீவிக்க வழி என் -என்று சோகிக்கிறாள்  –

தாத்பர்யம்-இதில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஸ்வஸிப்பித்த அளவிலும் அஷமத்தால் -கால விளம்பம் பொறுக்காமல் நலிய கார் காலத்தில் வருவதாகச் சொல்லிப் போந்தான்-அதுவும் வந்து அவனும் வாராமல் நலிய இப்பொழுது இரவும் வந்து குளிர்ந்த திருத்துழாய் மேல் ஆசைப்பட்டு பெறாமல்
பயலை நோய் திரு மேனி எங்கும் பரவ அவன் ஸ்ரீ வைகுண்டத்தில் -எட்டா நிலத்தில் -தூரமாக வீற்று இருந்து அங்கு உள்ளார் அதன் பரிமளம் அனுபவிக்க இப்பொழுது எனது எளிமையையும் தனிமையையும் அறிந்து நலிய இரவு வந்து பரிணமிக்கும் காலம் போல் இல்லாமல் அளவுக்கு உட்பட்ட காலம் இல்லாமல் அளவு இல்லாத அநேக கல்பங்களாய் பரிணமிக்கத் தொடங்க இத்தைக் கடந்து நாம் ஜீவிப்பது எங்கனே என்கிறாள்

1-7-பிறவித் துயர் பிரவேசம் 

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போகரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்-இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே . 

ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும் 

ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில் அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து
ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –3-பர தசையிலும் அவதாரம்
அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும் 5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் -7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
-8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல
பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே 
–1-7-1-

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து-அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்-அறவனை – அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’என்கிறார்;
ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே அவன் வேண்டுகின்றான் என்றபடி.
‘எங்களுக்கு நீ வேண்டா; ஷூத்ர பிரயோஜனம் -சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும் அதனைக் கொடுத்து விடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார்.

அந்தணன்-என்று . சாணிச் சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை;
இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை.-ஆழிப் படை அந்தணனை-கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்.
‘மறவியை இன்றி’ என்று, அவர் தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின்,
இவர்க்குக் கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது; 
‘சக்கரத்து அண்ணலே’ என்றால் பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’ 
ஸ்ரீ திருமங்கை மன்னனும், ‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!’ என்று உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர்.
‘பிள்ளாய், நல்லதை மறக்கப் பண்ணா நிற்க இவ் விஷயம், தீயதை மறவாது ஒழிவதே!

மறவியை -மறப்பை -மறப்பு இன்றிக்கே-மறவாதே மனத்து வைப்பாரே-
உபாசன பரமானால் -சுடர் விளக்கம் குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது – அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந் நிலை குறையாதே நிற்பதே! இவ் வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.

————–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே 
–1-7-2-

ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.-அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், பிராபகத்வம் கூறிய படி.

எங்கள் ஆயர் கொழுந்தே-ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,  எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி,
எங்கள் கொழுந்தே-– அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,-வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும், அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார் என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடை மொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே, ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார்,  ‘ஆயர் கொழுந்தே’ என்கிறார்

———–

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
1-7-3-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்ப டவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும்-அவரால் புடை உண்ணும்-‘-மத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து,-ஆஸ்ரிதர் ஸ்பர்சமுள்ள பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத்
தலைக் கட்ட மாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப் பிரானை’ என்கிறார்.என் மாணிக்கச் சோதியை-
அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடை யுண்ட மாணிக்கம் போன்று,
திரு மேனி புகர் பெற்று வருகிறபடி.என் சோதியை-அப் புகரைத் தனக்கு முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’என்கிறார்.மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 
‘இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமே யாதலின்,’ -அபேக்ஷித்தபடியே -விரும்பியவாறே பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச் செய்கிறார்.-தூய வமுதைப்அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது

———-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ 
–1-7-4-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விடேன் என்கிறார் –

என் மனத்தே மன்னினான் தன்னை – இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து- ஸ்தாவரப் பிரதிஷ்டையாக இருந்தவனை,-என் மனத்தே-புறம்பேயும் -ஒரு கந்தவ்ய பூமி -சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான்-உயர் வினையே தரும் – -ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான்-தரும்-தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான்
ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’என்கிறார்.-காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’,  ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’,  ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’-என பத்தியை மேன்மேலும் தந்து கொண்டே இருக்கின்றான்-ஒண் சுடர்க் கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இரா நின்றான்’ என்கிறார்.-என் இசைவினை – ‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி  என் இசைவு தானாய்ப் புகுந்தவனை.

என் சொல்லி யான் விடுவேன் – 
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

———–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
 –1-7-5–

‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்

இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.-மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?
ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.-உய்யக்கொண்டு விட்டிலன்;-மேல் மேல் எனக் கொள்ளா நின்றான் ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.-உடையவன் ஆகையாலே செய்தான்-திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பேற்றுக்கு-யத்னம் – முயற்சி செய்தவர் யார்?’ 

விடவே செய்து விழிக்கும்–அவர்கள் தூது விடும்படியைச் செய்து விழிக்கின்ற.
இனி, இதற்குத் ‘தூது செய் கண்கள்’ என்கிறபடியே, தான் தூது விடுகையாகிற செயலைச் செய்து விழிக்கின்ற’ என்று கூறலுமாம்.-தவாஸ்மி–தாஸோ அஸ்மி -என்றால் போலே சொல்லுகை – இனி, ‘விடருடைய செயல்களைச் செய்து’ என்று பொருள் கூறலும் ஓன்று.விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம் -விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்-விடவே செய்து விழிக்கை -ச விலாசமாக நோக்குகை –

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
 –1-7-6-

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே -தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும்-என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்-பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.-பெரு நிலம் கீண்டவன்-சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்.-ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான்-மரா மரம் எய்த மாயவன் –இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-பின்னை யான் ஒட்டுவேனோ-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.
இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்  பணிப்பர். தொங்குகை-திரிதல்.

————-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே
–1-7-7–

நான் நெகிழ்த்துக் கொடு போக்கிலும் அவன் இசையால் -என்கிறார் –ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று -ப்ரதிஜ்ஜை -சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், 
தான் ஒட்டி’ என்கிறார்.என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். -‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

————-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே 
–1-7-8-

அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.-‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’

——

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ
 –1-7-9-

சர்வ பிரகாரத்தாலும் அவனை ஸம்ஸ்லேஷித்த -ஏக த்ரவ்யம் — என்னலாம்படியான இவ் வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும், ‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –.-அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ என்னக் காரணம் யாது?’ எனின், இவ்வுலகில் உள்ளார்க்கும் நித்திய ஸூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும், இவர்கட்கு இச்சை இல்லாமையாலே, யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்குமளவே செய்கிறான் ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் .

————–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே 
–1-7-10–

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு –அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது-இரண்டாம் பாட்டு –அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –பொருவல்லன் – ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை-அன்றியே பொரு என்று பொருத்தமாய் -அநன்யரைச் சேர வல்லன் என்றுமாம் –

————-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே 
–-1-7-11-

அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

உடைந்து ஓடுவிக்கும்-இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், 
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு-கற்பார் இராம பிரானை -7-5-

March 7, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

கால மயக்கு-தோழி சந்த்யா காலம் இல்லை-மாலையும் வந்தது -இரவும் வரும் -பெருந் துக்கம் வர
சர்வ ரக்ஷகன் வந்துவிடுவான்-கார் எருதுவும் சிகப்பு எருதுவும் சண்டை போடுகின்றன என்கிறாள்
ப்ராத காலம் சாயங்காலம் -அதுக்கு ஒரு காலம் இதுக்கு ஒரு காலம்-அற்பமான இருள் அதிகமான சுடர் ப்ராத காலம்-அற்பமான சுடர் அதிகமான இருள் சாயம் சந்த்யா-அருளால் விட மாட்டார் -வருந்தாதே -சமாதானம் படுத்துகிறாள் கற்பார் இராம பிரானை -7-5-இதன் விவரணம்-சராசரம் முற்றும் நற்பாலுக்கு உய்த்தவன் அன்றோ-மோக்ஷ பிரதன்-ரக்ஷகத்துக்கு சீமா பூமி தானே நாட்டை அளித்து ஷேம கரன்
சிசுபாலனுக்கும் ரக்ஷகன் அன்றோ-நன்மைப்புனல் பண்ணி -நான்முகனைப் பண்ணி -பாட்டுத்தொறும் ரக்ஷகத்வம் உண்டே –

அவதாரிகை –அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய –அநந்தரம்-போகயோக்யமான காலமாய் இருக்க அவன் வந்து தோன்றாமையால் தலை மகள் ஆற்றாளாக –இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன காண் -என்றுகாலம் மயக்கி அவளைத் தரிப்பிக்கிறாளாய்  -இருக்கிறது –

இப்படி ஆஸ்வாஸ கரரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள் இவ் வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை--அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே தலைமகள் நோவு பட-இத்தைக் கண்ட தோழியானவள் ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
– -69 –மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா
 –65-கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

காரேற் றிருள்–இருளாகிற கார் ஏறானது- கறுத்த வ்ருஷபம்  ஆனது –செகிலேற்றின சுடருக்கு உளைந்து –ஆதித்யனாகிற சிவந்த ரிஷபத்தினுடைய கிரணங்களுக்கு தோற்றுப் போய் சுரமடைந்தது (தளர்ந்து மங்கிப்போனது )- வெல்வான்போரேற்று எதிர்ந்தது–அது -நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடக்கும் இத்தனையோ –நாமும் ஒருகால் மேலிட வேணும் -என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது – இருள் தான் வெல்ல வேணும் என்று மாலை இட்டுக் கொண்டு வந்தது போலே காணும் –(சாடு -மாலைப் பொழுது ஏறிட்டுக் கொண்டு-உறுதி தீக்ஷை மாலை சாத்தி வந்தது ) புன் தலைமாலை – புல்லிதான தலையை உடைத்தான சந்த்யை யானது –(சிறிய பொழுது -ஆழ்வாருக்கு துன்பம் தருவது ஆகவே புல்லியது ) நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யையினுடைய உபக்கிரமம் இத்தனை – சந்த்யை யானது அல்ல காண் இது –புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் –1-அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ –2-இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக –அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை வைக்குமவன் அன்றோ —3-இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் உன்னை விடுமோ –4-தாமஸ பிரகிருதிகள்  ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை விட்டு இருக்குமோ –(தமோ குணம் இரவு -தமஸ் குணவான் மஹா பலி ) -காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-
உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ –5-மண்ணுக்குப் பதறி இரந்தவன் பெண் ஒரு தலை யானால் ஆறி  இருக்குமோ –6-வாரேற்றி இள  முலையாய் -என்னும் அளவுக்கு – காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்- உன்  முலை மேலே காலை வையாது ஒழியுமோ –

புவனி இத்யாதி –பூமிப் பரப்படைய நீரேற்று அளந்து கொண்டு  –எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்-பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –அருளா விடுமே – சத்வம் உடையாருக்கு தன்னை அழிய மாறுமவன் சுத்த சத்வமேயான   உன் விஷயத்தில் கை வாங்கி இருக்குமோ-அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான  அருளும் உன் பக்கம் கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்று இள முலையாய் –
வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடையவளே – வார் தரித்தல்-தான் தரித்தல் செய்ய வேண்டும்படியான முலைகளை நீ தரிக்க விட்டிட்டு இருக்குமோ –இள முலையாய் –பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் – வாராலே தரிக்க வேண்டும்படியாய் காணும் முலைகள் இருப்பது –
ஷாம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்னுமா போலே – விஷயத்தை காட்டு காட்டு -என்று
கிளருகிற இள முலைகள் –வருந்தேல் உன் வளைத்-திறமே –உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா –வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக வருந்தில் வருந்து – அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று – அதற்கு மங்களாசாசனம் பண்ணு –(அதுக்கு வருந்தி பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் இது தானே நமது கையில் அகப்பட்டு
பல்லாண்டு பாடி ரக்ஷிக்க வேண்டும் என்றபடி )

இத்தால்-அவனுடைய குண ஞானத்தாலும் – அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும் தரிப்பித்த படியைச் சொல்லிற்று கீழ் –இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது – அவனாகில் ரஷகனாய் – இத்தலையாகில் ரஷ்யகமாய் -இருக்கும் இறே –ஓங்காரம் பார்த்தே தரிக்கலாம்–தர்மி இருவரும் ஸ்வரூபம் சொல்லும் பிரமாணம் பிரணவம்
அவனாகில் ரக்ஷகன் அவ ரஷணே தாது இத்தலை ரஷ்யம்–வருந்தேன் உன் வளைத் திறமே -மாஸூச -என்கிறாள் – அஹம் த்வா இரண்டு தர்மி சப்தங்கள் -என்று (ப்ராப்தனாய் சக்தனாய் ரக்ஷகனாய் இத்யாதி-அஹம் அசக்தனாய் இத்யாதி -த்வா ) இருவருடையவும் சொல்லி வைத்து இறே – மாஸூச -என்றது –செல்வான்-ஜெயிக்கைக்காக –நெடிய பிரான் என்கையாலே ரஷகமும் –வாரேற்ற இள முலை-என்கையாலே ரஷ்யகமும் -தோற்றுகிறது-

இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது –
பிரத்யஷ்யமான சந்த்யையை- ருஷபங்கள்  என்று சொல்லுகிறது என் என்ன –
புன் தலை மாலை ஆகையாலே -புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –
வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல்
-என்று அந்வயம்

மாலை பொழுதில் தோழி தலைவிக்கு -இருள் ஆகிய கறுத்த எருதும் ஸூ ரியன் ஆகிய சிவந்த எருதும் பொருகின்றன- காலையில் பகலுக்குத் தோற்ற இருள் இப்பொழுது வெல்லும் பொருட்டு வந்து மேலிடத்து என்கிறார்-இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரிபுவனம் த்வயா ஸ்ம்ரத்பரிய தத் வைரம் அத்ய தைரேவா மிர்ஜித்த-மண்டோதரி ராவணனுக்கு இந்திரியங்கள் சமயம் பார்த்து ராவணனை நலிய வந்தன என்றால் போலே-காவலில் புலனை வைத்து -என்ற பாசுரத்தில் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் அருளிச் செய்தார்-புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்–நீரேற்று தாரேற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல் சீரற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம் பொன் முடி காரேற்ற மேனி அரங்கன் கையும் கழலும் ஓக்க நீர் ஏற்றன வண் திருக் குறளாகி நிமிர்ந்த அன்றே -திருவரங்கத்து மாலை -33—நெடிய பிரான் -ஓங்கி உலகு அளந்த பராத் பரன் பூமிப் பரப்படைய நீரேற்றுஅளந்து கொண்டு –-புவனி எல்லாம்-நீரேற்று அளந்த நெடிய பிரான் -அருளாவிடுமே -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –
அருளா விடுமே –பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான அருளும் -உன் பக்கம்-கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –வாரேற்றி இள முலையாய்-இப்படிப் பட்ட அழகையும் இளமையையும் விட்டு இருப்பானோ-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து-கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து–வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே-இதுக்கு வன்மையாவது-பிரிந்தாரை நலிகை–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன் பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ-வாரேற்றி இள முலையாய் -வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே–ஏற்றுகை -முடிகை–வருந்தேல் உன் வளைத் திறமே-உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று கிலேசிக்க வேண்டுவது இல்லை-அவன் அருளும் என்றதாயிற்று –இத்தால்–காரேற் றிருள் -என்று (மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு ) பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து-செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே கழிந்தமை சொல்லி —வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று–வாரேற்றி இள முலையாய் –என்கையாலே இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி–வருந்தேல் உன் வளைத் திறமே -என்று-இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில் பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா–சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-காரேற் றிருள்-இருளான கார் ஏறானது கறுத்த வ்ருஷபமானது-செகிலேற்றின சுடருக்கு உளைந்து-ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது–வெல்வான் போரேற்று எதிர்ந்தது-நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ-நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து-போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது–புன் தலைமாலை-புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது-ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது-நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய (இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது ) ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை ஸந்த்யை தான் அல்லது காண் இது

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம-காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை-இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப் போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது–மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய–புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ-கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே-உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்–உன்வளைத் திறமே வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

ஸ்வா பதேசம் –முன்பு உள்ள அஞ்ஞானம் -பக்தி ரூபா பன்ன செவ்விய ஞானத்தால் கழிந்தது என்றும்
உரிய காலத்தில் அனுபவிக்கப் பெறாமையால் அருள பெற்ற மதி நலமும் அழிந்து மோஹாந்தகாரம் மேலிட்டது என்றும்-வாரேற்றி இள முலையாய்-அடக்கவும் மறைக்கவும் அரிதான பக்தி விசேஷம்
வருந்தேல் உன் வளைத் திறமே -இப்படிப் பட்ட பக்தி வெள்ளம் உடைய நீர் உமது அடிமைத் திறம் குலையும் என்று வருந்த வேண்டா –

தாத்பர்யம்--கீழ் சொன்ன கொன்றை மலர் விருத்தாந்தத்துக்கு மேல் மாலையும் வர -அவனும் வாராமல் இருளும் வரத் தொடங்க-ஸந்த்யா காலத்துக்கு வருந்த அவரை ஆஸ்வாஸப்படுத்த பார்ஸ்வத்ஸர் பாசுரத்தை தலைவியை சமாதானப்படுத்தும் தோழி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–இவை இரண்டு ரிஷபங்கள் –இருள் கறுத்த எருது -ஒளி சிவந்த எருது – இரண்டு எருதுகளும் போர் புரியும் காலம் இது
முன் ஜெயிக்கப்பட்டு தனக்கும் ஒரு காலம் வரும் என்று கருவி இருந்து மூலையில் ஒழிந்து இருந்து சமயம் வந்ததும் ஆக்ரோஷமாக சண்டை போட யத்தனிக்கிறது-ஆஸ்ரித அநாஸ்ரித பேதம் இல்லாமல் அவர்கள் தலையில் தனது திருவடி வைத்து ரஷித்த அவனுக்கு அபிமதை யாகவும் அவனாலேயே ரஷிக்கப்பட வேண்டிய உன்னை ரஷியாமல் – உனது கை வளையல்களை கழல விட மாட்டான் –
சோகப்படாதே என்கிறாள்

7-5-கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களை அனுபவித்தார்;
அவை தாம் அடியார்களின் பொருட்டே அன்றோ இருப்பன? ‘அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் புறம்பு உண்டான விஷயங்களிலே வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்?
அப்படி இருக்கிறவன் தான் பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற் குவியல் புதைந்து கிடக்க,
அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

ஆழ்வான் ஒருகால், இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?

மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.– முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

‘காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோட்டியிலே போகை அன்றோ அரிது?
‘மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’-என்பது, பாரதம், உத்யோகபர். 95.( விதுரர் வாக்கியம் )

‘பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
‘பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத கோட்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
‘இராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
‘அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?பெரிய திருமொழி, 2. 2 : 3.

மீனோடு –முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் –
மற்றவை தான் இல்லையோ -ஸ்ரீ ராமாவதார சிறப்பால் தானாய் என்கிறார்
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனுக்காக -குலசேகர பெருமாள் பெருமாளுக்காக -மனத்திற்கு இனியன் என்றாள் ஆண்டாள்
பாரார்த்தியம் ஸ்வம் பராஸ்மி காகுஸ்த –
கண்ணன் பக்தராக்கி தான் பிரிந்து சென்று திரும்பாமல் -வேறே வேறே இடங்களுக்கு தானே செல்வான்
ராமனோ அனைவரையும் கூட்டிச் சென்றான்
ஸ்ரீ ராம ராம ராமேதி -ஸஹஸ்ர நாம சாரமே இது ஒன்றே

அஞ்சாம் திருவாய்மொழியில்-கீழ் -அநேக வித விஜய அபதானங்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய
அதிசயித சக்தி யோகத்தை அனுசந்தித்து விரோதி நிரசன சமர்த்தன் அவனே என்று அறுதி இட்டவர் –
அவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை வெளியிடுகைக்காக -ஸ்வ அபிமான அந்த பாவ மாத்ரத்தாலே
அவனுடைய அதிசயித புருஷார்த்த பிரதத்வத்தையும்
அநிஷ்ட நிவ்ருத்தி யுக்தமான ரேஷன் பிரகாரத்தையும்
சிசுபால மோக்ஷத்தையும்
ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
ஸ்ரீ வராஹ வ்ருத்தாந்தத்தையும்
ஆஸ்ரித அர்த்தமான ஆர்த்தித்தவ சாமர்த்யத்தையும்
மார்க்கண்டேய ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான ஹிரண்ய நிரசனத்தையும்
பாண்டவ விரோதி பஞ்சனத்தையும்
சம்சார நிவர்த்தகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம்வித ஸ்வ பாவனாய் அதிசயித சீல ப்ரகாசகமான அவதார வைலக்ஷண்யத்தை யுடைய சர்வேஸ்வரனை ஒழிய
அநிஷ்ட நிவ்ருத்தி அர்த்தமாகவும் இஷ்ட பிராப்தி அர்த்தமாகவும் ஆஸ்ரயணீயர் வேறொருவர் இல்லை என்னும் இடம்
சர்வ ஸம்ப்ரதிபன்னம் என்று அருளிச் செய்கிறார் –

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.
–7-5-1

கற்பார் –ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப்போதைக்கு இனியது’ என்றாதல்
‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று;
‘இராம பிரான்’ என்கையாலே-அவை இரண்டும் (பிரியமும் ஹிதமும் )இவ் விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.-இராமன்’ என்கிற இதனால், புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
‘பிரான்’ என்கிற இதனால், அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும்படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ஆனந்திக்கச் செய்கிற தன்மையும் பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.

கற்பார் இராம பிரானை – கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
‘மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
-ராக ப்ராப்தம் ஸ்வயம் ஏவ ப்ரவர்த்திக்குமே -ஆசையாலே செய்யப் படுவதாகில் தானாகவே செல்லும் அன்றோ’-ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.

மற்றும்’ என்றதனால், வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை வேறுபடுத்துகிறார் அல்லர். பஜனீய -வணங்கக் கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்துவத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.

பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;-பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை

புல் பா முதலா – பா என்பது, பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
‘பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது,-பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
பா பதார்த்த வாசகம் -படர்ந்த புல்-இதனால், ‘புல் முதலாகத் தாவரம் முடிவாக’ என்றபடி. புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்;-வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.-தாவரங்களில் தாழ்ந்தது புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு;-இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.-‘ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.-இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.-காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.-முற்றவும்’ என்று முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற சொல் உண்டாகையாலே.-ஸாகல்ய வசனம் உண்டாகையாலே
இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது, ‘பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.-‘திருவயோத்யையினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ சாதனம்-நில மிதியே இராம பத்தியை விளைக்கும்’ –அயோத்தியில் வாழும்- வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,-அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.என்றும், சொல்லுகிறபடியே,
‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,

நற்பாலுக்கு உய்த்தனன் –நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
தன் சேர்க்கையாலே சுகத்தை யுடையவர்களாகவும் தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.

இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேடத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க வல்லவனுக்கு
இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணியுடைத்து அன்றோ?

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் – அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக
அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கை யடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து, தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப்
பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

(கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம்
மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்-பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே -பூமா –-இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா )-

—————

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே
.–7-5-2-

மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை நோக்க, முதற்பாசுரத்திற் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.-நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே வாழ்தல்.-நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –‘பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.-நாரணற்கு –-வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,-அடியார்களுக்காகத் தன்னை ஆக்கி வைக்கயும்,-அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,-அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
அடியார்கட்கு வத்சலனாய் இருக்கையும்,-அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும் ஆகிய இவை-எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?-ஆள் அன்றி ஆவரோ –-மேற்பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது; இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது; ‘கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.-ஜெனித்தவர் ஜன்ப பலன் இன்றி இருப்பாரோ –

நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,-அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே,-கடலுக்கு அக்கரையிலே உயிரும் இக்கரையிலே உடலுமாம்படியான ஜானகியின் பிரிவு என்ன,-பெரிய வுடையார் சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,-அதற்கு மேலே, செய்ந்நன்றி அறியாத மனிதர்கட்காக.-நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து – யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற இராவணன் முதலான கண்டகரை,-அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று,-இலங்கையின் வாசலிலே வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க் கொண்டு எழுந்தருளி நிற்க,-

நடந்தமை கேட்டுமே.-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றும் சொல்லுகிற பிரயாண வ்ருத்தாந்தத்தை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளின்றி ஆவரோ –

சப்தம் போன்ற விஷயங்களில் பிரவணராய் சர்வேஸ்வரன் என்ற தத்வம் உண்டு என்று கேட்டார் வாய் கேட்டு இருந்து தான் வந்து அவதரித்து அழகு குணங்களால் வசீகரித்து
தன்னால் அல்லால் செல்லாமை -பிறப்பித்து பின்பு பொகட்டுப் போவது படு கொலை போலே –இதில் ஸ்ரீ வைகுந்தம் -தன்னுடன் கூட கொடு போய் ரஷித்த குணத்துக்கு ஆள் ஆகாமல் இருப்பாரோ –

————-

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே 
.–7-5-3-

பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டிற் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று; பொருளின் உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.-நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே?-கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ? அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது; அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

அந்த அவதாரத்தினை நினைத்த போது ‘தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்த போது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,-ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ?

‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று ஆழ்வார்களும் இருடிகளும் எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
‘அதற்கும் கரணங்கிளன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’ என்று
அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.

ஆளவந்தார், ‘சிசுபாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம், திரு முன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,-அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,-‘தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,-தன் பக்கல் அபராதம் செய்த சிசுபாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.-

————-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.
–7-5-4-

தன்மை அறிபவர் தாம் –‘ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’-உலகத்திற்குக் காரணமாக வுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’-கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?-நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் -என்கையாலே -சேதன அசேதனங்களை உண்டாக்குவானும் இவனே -அவனாலே வந்த ஸ்ருஷ்டியும் இவனதே -அவை உபகரணம் மாத்திரமே -உபகாரணமாம் இடத்தில் அசேதனத்தோபாதி சேதனனும் –விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.-

——————-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.
–7-5-5-

தன்பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட-பெரிய பூமியைத் தன் எயிற்றிலே நீல மணி போலே கொண்ட; -ஸ்வேத வராஹம் – தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து-நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;-தான் கொண்ட–முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே,-தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி வேண்டிக் கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.-கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி. அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது;(விக்ரஹம் சீர்மையும் குணத்தின் சீர்மையும் )-அது தான் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கையாலே திருவுரு என்கிறார் இவர் –கோலா வராகம் ஒன்றாய் -பன்றியாம் தேசு -பரமபத நிலையனான தேஜஸ் ஸூ க்கும் அவ்வருகு ஒரு தேஜஸ் ஸூ இ றே

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ, பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே
.–7-5-6-

ஈட்டம் கொள் தேவர்கள் –கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே,
தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ?
இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் பொகட்டு.-எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள்.-ஈட்டம் – திரள்.-சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – மணியக்காரர் -கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம் பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே,
‘எல்லாரும் நம் பக்கல் வர வேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ-செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி.

பொற் கை – பொலிவு எய்தின கை;-‘அழகிய கை’ என்றபடி. -கொடுத்து வளர்ந்த கை;-செய்த கூத்துகள் கண்டுமே –அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு,
மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப் பேச்சுக்களும்-சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச் செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

———————-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே
.–7-5-7-

தாய் தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட,
அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல,
அதனைக் கேட்டத் தாய் தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக் கொள்ளுகிறேன்,’ என்று-இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக் கொண்டு, ஒரு நாளிலே வந்தவாறே
தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,

‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல் காண் என் காரியமும்:-அருகில் மாலையைப் பாராதே-என் தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி,
‘ஆனாலும் நெடு நாள் பச்சை இட்டு என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ?-உனக்கு ஒரு பற்றுக் கோடு காட்டக் காணாய்!’ என்று, சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும் சொல்லிக் கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச் சென்றான்.

செருக்கனான சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல்,-ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக் கொள்ளுமாறு போலே கைக் கொண்டு என்னுதல்.-தன்னொடும் கொண்டு–இவன் வந்த காரியத்தை முடித்து, பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து.-உடன் சென்றது உணர்ந்தும் – ஒரு ‘கள்வன் கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திருமொழியில் பிராட்டியைக் கொடு போமாறு போலே கொடு போனான் காணும்.

நெடுநாள் தேவதாந்த்ர பஜனம் பண்ணினவன் மறந்தும் புறம் தொழா மாந்தரான சாத்விக புருஷகாரம் ஆவது ஆதல் -பிராட்டி புருஷகாரமாவது ஆதல் அன்றிக்கே தாமஸ தேவதையை புருஷகாரமாக கொண்டு வர -புறம் தொழா தவகம் படி சீற -அவர்களையும் பொருந்த விட்டு -மேன் மேலே ரஷித்த நீர்மைக்குப் போருமோ கீழ் சொன்ன குணங்கள் என்கிறது –

——————

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே
.-7-5-8-

மல்லல் அரி உருவாய்--மல்லல்-பெருமை.-‘மஹா விஷ்ணும்’ என்கிறபடியே,‘உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’-இரணியன் குளம்படியாம்படியாகப் பெரிய வடிவைக் கொண்டு. அன்றிக்கே,-மல்லல் என்று செல்வமாய்,-அதனால், இலட்சுமி நரசிம்மமாய்’ என்னலுமாம்

ஒருவன் புருஷகாரமாகக் கொடு வர அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, உத்தம அங்கம் -முகம் ஒரு வடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்-

—————-

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ
.–7-5-9-

உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?-பார்த்த சாரதி -நின்ற திருக் கோலம் -அங்கே நடந்தும் தேர் ஒட்டியும் –-பாண்டவ தூதன் நடந்தாலும் இன்று இருந்த திருக் கோலம் – உபதேசத்தால் சேவித்தும் பிரயோஜனம் பெறுவோம்-நடந்த நல் வார்த்தை அறிந்தும் –
தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.

‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் ஸ்வாதந்திரியம் கிடக்கச் செய்தே செய்தவை அன்றோ?-தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு? தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி,
பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே-ஈடு -கவசம் – எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.-

———–

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே
.–7-5-10-

மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச் செய்தே செய்தவை அன்றோ?-அவை போன்றது அன்றி,-சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.

வார்த்தை அறிபவர் – மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ? வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?
‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது?
மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.- கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்

மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ- அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லா நின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?-ரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து- பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.-அவன் செய்யும் சேமத்தை எண்ணி –பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணி விடுகை. ‘-இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல்.
இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும் அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’ இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை.

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ? மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று;-இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?-மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப் போலே இதிற் சொல்லுகிற குணம்.-மேற் கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?-

————-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.
–7-5-11-

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு--பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு, பின்னர்-நாட்டார் செயல்களைக் கண்டாதல், போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.-நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள்.-போலி வார்த்தைகளாவன: உபாய பல்குத்துவம் – சாதனம் சிறிதாய் இருத்தல்,-உத்தேஸ்ய துர்லபத்துவம் – பேறு கிடைத்தற்கு அரியதாய் இருத்தல்,
ஸ்வ கிருத தோஷ பூயஸ்த்வம்-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள் பலவாக இருத்தல் என்னுமிவை.

தெளிவுற்ற கண்ணனை-இவன் தெளிய மாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை

தெளிவுற்ற ஆயிரம் – மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே

‘மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில்
வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்ப ஸ்ருதர்
கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’
 என்பது, ஆசார்ய ஹ்ருதயம், –71

பாமரு மூவுலகத்துள்ளே –-‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’ என்றபடி.
அவ் வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக் கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான இங்கே இருந்தே யுடையராவர்;
‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்:
குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய் இருப்பர்.
பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக் குறைந்து நிற்கிறது.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் -கொண்ட பெண்டிர் -9-1-

March 6, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இது கால மயக்கு–கொன்றை மலர் பூக்கும் பொழுது வருவதாகச் சொல்லி-அவையும் பூக்க
தோழி -இவை மொட்டு விடத் தொடங்கிற்று -பூக்க வில்லை–இரண்டையும் சொல்லி -ஏமாற்றாமல் –
வருவதுக்கும் ஸூசகமாக மொட்டு விட்டது என்றும் சொல்ல வேண்டுமே –-கார்த்தனவே-சினத்தன
மலர்ந்தே ஓழிந்தில-முழுவதாக மலரவில்லை –கொண்ட பெண்டிர் –
9-1-இதன் விவரணம்
பர உபதேசத்தில் ப்ரவ்ருத்தர் ஆகிறார் -நம்பிள்ளை-சகலவித பந்துவும் அவனே-வீடு சொன்னால் ஒரு கொண்ட -நான்கும் விரோதி ஸ்வரூபம்-அவன் வரவில்லை -விரோதி போக்கி தோழி ஆற்றுகிறாள் இதில்-மற்று ஓன்று இல்லை -சுருங்கச் சொன்னோம்- மானிடத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்-மலர்ந்தே ஒழிந்தில-கார்த்தனவே -இதுவே சுருக்கமாக இங்கே சொல்லி
ஆழ்வாரைக் கூட்டிப் போகும் காலம் அணித்தாயிற்று-உபதேசம் இன்னும் பண்ண வேண்டுமே -இதுவே காலமயக்கு
–சம்சார வெறுப்புடன் ஆழ்வார் இருக்க-பாட்டுத் தோறும் வடமதுரைப் பிறந்தான்
ஆஹதோ மதுரா புரம்
-ஆனானப்பட்ட அவனே பிறக்க நீர் இருந்தால் என்ன-உம்மைக் கூட்டிப் போகவே பிறந்தான் என்றுமாம்-அதே போல் இங்கும் பூக்கவில்லை கார்த்தனவே

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால் பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க-யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகள் கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய் அக்காலமும் வந்து அவையும் பூக்கவும் அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர அத்தைக் கண்ட தோழி அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –காலம் தாமும் இளையது என்று ஆற்றின தோழி பாசுரத்தாலே தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
– 68-கால மயக்கு காலம் இளையது என்றல் –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு 
–81-தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு – அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –பஹூ முகமாக சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது 

மலர்ந்தே ஒழிந்தில –அக் காலம் அல்ல காண் -என்னாமே தோழி –  கெடுவாய்-இவை இங்கனே மலரா நிற்க அல்ல காண் -என்னும்படி எங்கனே -என்ன –மலர உபக்ரமித்த-இத்தனை காண் – மலர்ந்து சமைந்தது இல்லை காண் –மாலை இத்யாதி –மாலைகளாகவும் – அம் மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே –சுருளவும் இறே யவை தான் பூப்பது – கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் –தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –
தண்டுற நாற்றிக் கார்த்தன -என்னுதல் –தழைப் பந்தலாக பணைகள் தோறும் கண்கள் தோறும் நாற்றி –புலந்தோய் –புலம் –இந்திரியங்களாய்-தோய்கை-அபஹரிக்கையாய் –(புலந்தோய்-புலன்கள்-அபகரிக்கும் -பூமியில் படராமல் இரண்டும் உண்டே )புலம் -பூமியாய் –தோய்கை-ஸ்பர்சிக்கையாய் –
தரையிலே வந்து தோயும்படி -என்னுதல்-பொரு கடல் இத்யாதி –அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ –அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ –
ஆவது அழிவது ஒரு விபூதியும் –அழியக் கூடாததொரு விபூதியுமாய் இறே இருப்பது –அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை –-முதலிலே அழிகைக்கு சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை -பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட பூமியை தாவி அளந்து கொண்டு – அச் செயலாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் –தனது வைகுந்த மன்னாய் –உனக்கு ஸ்வரூப ஞானம் இன்றிக்கே ஒழியுமோ –-அவனதான நித்ய விபூதியோடு  ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ –அவ் விபூதியை விடில் அன்றோ உன்னை விடுவது – உன்னை தளர விட்டு இருக்குமோ-ஆண்டு தோறும் அங்கு சென்று-நம் சடகோபனைத் தந்து அருளாய் என்ன கொடுத்து அருளுகிறானே-கலந்தார் -உன் ஸ்வ ரூபத்தை அறியாது ஒழிந்தால் –அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ –உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் -உன்னை விட்டு இருக்குமோ –கலந்தார் -என்றே-காணும் அவனுக்கு நிரூபகம் –ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும்-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -விமல சரம தேகம் அன்றோ-ஸ்வரூபம் இங்கு ஆழ்வார் ரூபம் நிலம் தாவிய எம்பெருமானே கலந்தார் – வேறே பெயர் இல்லாமல் இதுவே ஸ்வரூப நிரூபகம்வா வெதிர் கொண்டு – வாசி யறியாத ஸ்த்தாவரங்களும் கூட –
அகால பலி நோ வ்ருஷா -என்று அவன் வர உத்யோக்கிகிற   படியைக் கண்டு(இவையும் உத்யோகித்து )அலராமல் நிற்க –நீ தளரும் இத்தனையோ –வன் கொன்றைகள் – அவன் வரில்  அலரக் கடவதாய் -இல்லையாகில் தவிருமதாய் –இப்படி அவன் வரவோடு தப்பாதான கொன்றைகள் –இவை பூத்தால் அவன் வந்திகிடுவான்-பூக்க வில்லையே-அதனால் வன் கொன்றைகள் குயிலே நீ கூவினால் அவன் வந்திடுவான் போல்கார்த்தன –சினைத்தன –கருவடைந்தால்-ஒரு நிறம் உண்டு இறே இடுவது -அத்தை சொல்லிற்றாதல் –அன்றியே-கார்காலத்தைக் காட்டி நின்றன -என்றது ஆதல் –பொருகடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் – வன் கொன்றைகள் கலந்தார் வர வெதிர் கொண்டு கார்த்தன – மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில –-அன்றிக்கே கார்த்து மலர்ந்தே ஒழிந்தில  -என்னுதல் –

கார்காலம் வந்தது அன்று -அவன் வருகையை முன்னிட்டு மகிழ்ந்து கொன்றை மலர்கள் அரும்பின –
கலந்து பிரிந்த தலைமகன் கொன்றை போக்கும் காலத்திலேயே வருவேன் என்று சொல்லிப் போக –
அக்காலமும் வந்து அவையும் போகச் செய்தே-அவன் வாராமையாலே தலைமகள் தளர அத்தைக்கு கண்ட தோழியானவள் – அக்காலம் அல்ல என்ன ஒண்ணாத படி-அவை முடிகிக் கொடு நிற்கையாலே இவை பூக்க உத்யோகிக்கின்றன அத்தனை -பூத்துச் சமைந்து இல்லை காண்-ஆன பின்பு அவனும் வந்தான் அத்தனை -நீ அஞ்சாதே கொள் என்று ஆசிவசிப்பிக்கிறாள்-அக்காலம் அல்ல காண்
என்னும் தோழி கெடுவாய் இவை இங்கனம் மலரா நிற்க அல்ல காண் என்னும் படி எங்கனே என்ன மலர உபக்ரமித்த அத்தனை காண் -மலர்ந்து சமைந்து இல்லை காண் -என்கிறாள்–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்–அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால் – தழைப் பந்தர் தண்டுற நாற்றி -என்கிறார் இத்தைக் கண்ட கண்கள் வேறு எங்கும் போகாது என்பதை –புலந்தோய் தழை- புலம் -நிலம் -தரையிலே வந்து தோயும்படி கவிந்து செழித்து உள்ள தழை என்றுமாம்–வைகுந்த மன்னாய்-எம்பெருமானுக்கு உரியவள் -உன்னைப் பிரிந்து அவன் ஆற்றான்-கலந்தார்-பிரிந்தார் என்னாமல் -கலந்தார் என்றது உன்னை கலந்து உன் தன்மை அறிந்தவர் உன்னை விட்டு இருக்க மாட்டார் என்றபடி-வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-வாசி அறியாத ஸ்தாவரங்கள் கூட வர இருப்பதைக் கண்டு அலரா நிற்க நீ தளர வேண்டுமோ –தாம் மலர்ந்தால் இவள் கலங்குவாள் என்று அறிந்தும் மலர்ந்த வன் கொன்றைகள்
கார்த்தன -கருக் கொண்டன -அரும்பின் நிலையை ஒழிய மலரின் நிலையை அடைய வில்லையே –
கார் காலத்தை காட்டா நின்றன என்றுமாம் –எம்பெருமானுக்கு உரியவரே-உம்மை ஆட் கொள்ளாது ஒழியான் –அவன் வரவை ஸூசிப்பிக்கும் காலம் தோன்றா நின்றது-வரும் காலம் இன்னும் அணுகிற்றிலை என்று கூறி ஆற்றிய படி –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி –கொன்றைகளானவை மாலையாகவும் மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே கொம்புகள் சிக்கனைத் தூக்கி மலர்ந்தே வியானவில்லை–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய–பொரு கடல்-செறிந்த கடல் என்னவுமாம்–தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே-அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான ஸ்வ பாவத்தை யுடையவளே–(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே-நித்யம் நிரதிசய போக்யம் -கீழ் அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழ்பவர் அன்றோ )கலந்தார் வர வெதிர் கொண்டு-தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி-வன் கொன்றைகள்-நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத வன்மையை யுடைய கொன்றைகள்–கார்த்தனவே –-கருவடைந்து அரும்பின இத்தனை-மலர்ந்தன வில்லை என்றதாயிற்று-வன் கொன்றை என்று அரும்பின சிக்கனவைச் சொல்லி மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )-இத்தால் விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே (கொன்றைப் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு உஸாத் துணையாக ஆசைப்பட்டவர் விளம்ப அஷமதையாலே சிதிலராக ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது–இதில் வன் கொன்றை -என்கையாலே ஸ்த்தாவர பிராயராய் அஞ்ஞரான சரீரிகளுடைய தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )-புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் ) வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே ) யுண்டான போக்ய வஸ்துக்களை ஸூசித்தப்படி-தண்டுற நாற்றி -என்கையாலே (கிளையில் பொருந்தி ) இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி (கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )-மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே-கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில் அதிசயித்தது இல்லை என்றபடி-அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது-பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடிகார்த்தனவே -என்கையாலே ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே தூக்கின அளவே காண்
மலர்ந்தே ஒழிந்தில-மலர உபக்ரமித்தனை-இன்னும் மலர்ந்தது இல்லை-அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே-உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள் கார்த்திக் கொண்டே நின்றன காண்–கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ-அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-ஸ்வாபதேசம்-இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் இக்கலையை அவகாஹித்த படியாலும் போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

ஸ்வா பதேசம் –
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் – இத் தலையை அவன் அவஹாகித்த படியாலும்-
போக யோக்யமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை   சொல்லுகிறது –தழைப் பந்தல் தண்டுற நாற்றி -தழை
-செறிந்த  –பந்தல் -பந்தலாக –தண்டு -சாகைகளிலே –உற –சிக்கென -நாற்றி -நாலா நின்று கொண்டு -என்று சப்தார்த்தம் –
சினைத்தல் -கர்ப்பமாதல்-மொட்டாதல்-மகாத்மாவின் விரஹ அஸஹத்வம் வளத்தின் களத்திலே கூடு பூரிக்கும் –திரு மூழிக் களத்திலே காட்டி அருளிய திருக்குணம்

தாத்பர்யம்–சர்வேஸ்வரன் குறித்த காலத்திலேயே வராததால் நோவு பட்ட தலைவியைத் தோழி காலத்தை மயக்கி சமாதானப்படுத்தும் பாசுரம்-பார்ஸ்வஸ்த்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்
கிலேசிக்கும் ஆழ்வாரை சமாதானப்படுத்த கிறார்கள்
ஓ சஹி நாயகன் குறித்த காலம் இன்னம் வர வில்லை-பூக்கள் மாலையாகவும் பூமி எங்கும் படர்ந்து இருக்கும் காலத்தில் அன்றோ வருவதாகச் சொல்லிப் போந்தான்-அவன் உன்னைக்கான உத்யோகிக்க
இவையும் பூக்கள் அலர்ந்து உத்யோகிக்கின்றன அத்தனையே -இவரை சமாதானம் பண்ண இத்தனையும் பண்ண வேண்டுமே
உபய விபூதி நாதன் ஒரு கால விசேஷத்தில் இங்கே வந்து அவதரித்து போல் அல்லாமல் நித்ய ஸ்ரீ வைகுண்டம் போல் அவனது போக்யத்தை நித்தியமாக வளர்க்கும் படி அன்றோ உம்முடைய போக்யதை
உம்முடைய சம்ஸ்லேஷமே தாரகம்-என்று -இருப்பவன் அன்றோ அவனும்-உன்னை விட்டு க்ஷண காலமும் பிரிந்து இருக்க வல்லன் அல்லனே -அவன் வரவைக் கண்டு இவையும் பூக்க ஆரம்பிக்கின்றன-அண்ணல் வந்தான் -ஆரியன் வந்தான் என்று திருவடி-பரதனுக்கு சமாதானம் சொன்னதுக்காக அவன் வரவில்லை-அதே போல் அரும்பிக்கத் தொடங்கிற்று-இவை பூத்து சமையும் அளவில் வந்தே தீருவான் கவலைப்படாதே என்று சமாதானம் பண்ணுகிறார்கள்

9-1-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்-ப்ரவேஸம்-

ஒன்பதாம் பத்து -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது-பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அளிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்-தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே-தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என்-என்று ஐயம் கொள்ள
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார்-இந்த ஒன்பதாம் பத்தில் –

————————————————————————————————-

கொண்ட பெண்டிர் -பிரவேசம் –

மேல் திருவாய் மொழியிலே
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலை எல்லையாக உடைய-தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை
யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே-காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்-பாகவதரை விரும்பினாராய் நின்றார் –
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் திருவாய்மொழி கேட்டதும்-ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்-என்று ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –
இப்படிப் பட்ட -பாகவதர்களுக்கு அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் எல்லையை நமக்குத் தந்த-
அவனே இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி-வருகிற நல்லெண்ணம் -ஆகும்-என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து-அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான உவகையாலே-மக்களைக் குறித்து
நீங்கள் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து-இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி-
உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று-பரோபதேசத்திலே மூளுகிறார்

சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ-கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே-நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும் தமப்பன் அவனே ஆயிற்று –
தனக்கு நலத்தை கூறிய விபீடணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர-அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று
புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -பெருமாள் –
பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ பிரகலாதனுக்கு
மகாராஜர் தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே-ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன்
மற்றைய பதங்கட்கு முன்பு கூறியது போன்று கொள்க –பயிலும் சுடர் ஒளி -நம்பனை பாசுர வியாக்கினத்தில் கண்டு கொள்வது -என்றவாறு –

த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
அர்ஜுனன் என் கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது-என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே போகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –
இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –

ஒன்பதாம் பத்தில்
கீழ் ஏழாம் பத்திலும் எட்டாம் பத்திலும் விரோதி ஸ்வரூபத்தையும் -தந் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்து –
மேல் இரண்டு பாத்தாலும் பிராப்தி பலாவாப்தியை அருளிச் செய்வதாக –
இப்பத்திலே பல ஸ்வரூபத்தை நிரூபிப்பதாகக் கொண்டு
பல பூதனான ஈஸ்வரனுடைய நிருபாதிகதையையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா நித்ய பிரார்த்யத்வத்தையும்
நிரதிசய போக்ய சீலாதி குண யோகத்தையும்
நித்ய அபூர்வ யோக்யதையையும்
ஸ்மரண தசையில் சைத்தில்ய ஜனகமான போக்கிய குணவத்தையும்
ஸ்ம்ருதிஸைதில்யம் யுடையாரை புஜிம்பிக்கையில் உண்டான பிரதம உத்யோத்தையும்
அத்தயதரணீய கடக கமயத்வத்தையும்
பத்னீ பரிஜன பூர்த்தியையும்
அல்ப கால விளம்பத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும்
பத்தி காரிதமான கைங்கர்ய பிரதி சம்பந்தத்வத்தையும்
அருளிச் செய்து அவனுடைய பல ரூபத்தை அருளிச் செய்து அருளுகிறார்

முதல் இரண்டு பத்தாலே நிரூபித்த ப்ராப்ய ஸ்வரூபத்தினுடைய ப்ரயோஜன ரூபத்வம் இங்கே நிரூபிக்கப் படுகிறது –

முதல் திருவாய் மொழியிலே ததீய சேஷத்வ போக்யதா பிரதிபத்தி பிறக்கும் படி ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்த பின்பு –
அந்த ததீய சேஷத்வ போக்யதா மூலமான தத் போக்யதையை அனுசந்தித்து –
அவனுடைய சர்வ பிரகார பலத்தவத்துக்கு உபபாதகமான சர்வவித அந்வயத்துக்கு ப்ரகாசகமான
ஆபத் ஸகத்வத்தையும்
அவிஸ்வாச நிராசகத்வத்தையும்
அநிஷ்ட நிரசன கிருபா யோகத்தையும்
அவதார ப்ரயுக்த குணோத்தரத்தையையும்
அநிஷ்டயத்வம்சகத்வம் அடியான அபிமத நீயதையையும்
கீர்த்த நீய குணவத்ததையும்
சிந்தா மாத்திரை ஸூலபத்வத்தையும்
உஜ்ஜீவன ஹேதுத்துவத்தையும்
போக்கிய விக்ரஹ விசிஷ்டதையையும்
பூ பார நிராசகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பந்துவானவன் -அல்லாதார் உபாதி நிபந்தனபந்துக்கள் –
ஆதலால் அவர்களை விட்டு நிருபாதிக பந்துவானவான இவனை நோக்கி உஜ்ஜீவியுங்கோள் -என்று
தாம் அறுதியிட்டு அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுகிறார் –

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்று பிரபன்ன பவித்ராணாம் -பிரபந்தத்தில் சொன்னோம் –

கீழ் அனுகூலமாகக் கொண்ட -இங்கு எல்லாமாகக் கொண்ட பெண்டிர்-ஆச்சார்யனும் பரம் பொருளும் செல்வமும் முதலானவைகள் எல்லாம்-இவளே ஆக கொண்ட –பத்னியே ஸர்வம் என்று கொண்ட -தான் மட்டும் தன் மனத்திலே உறவாக நினைத்து இருக்கும் மனைவி-பொருள் முதலான காரணங்களாலே கொள்ளப் பட்ட மனைவி-தஞ்சமாக நெஞ்சிலே கொண்ட மனைவி -என்னுதல் –கொண்ட -என்பதனை மக்கள் முதலாயினாருக்கும் கூட்டிப் பொருள் கோடலுமாம்-

காதல் மற்று யாதும் இல்லை –
பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்

மற்று -எனபது-காணாத போதைக் காட்டுமோ -எனின் கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –

எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –
பிரளயம் தோன்றிய நிலையில் காப்பதற்கு சாதனமும் இல்லை-வேண்டுகோளும் இல்லை அன்றோ
பாது காப்பதற்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் அன்றோ வேண்டுவது-அப்போது விலக்குகைக்கு ஒரு சாதனம் இல்லையே

பிரான் –
உபகார சீலன் ஆனவன் –

தொண்டரோமாய் உய்யல் அல்லால் –இல்லை கண்டீர் துணையே–விதி முகத்தால் அன்றிக்கே-மறை முகத்தாலும் இவ் வர்த்தத்தை அறுதி இடுகிறார்-ஆபத்துக்கு வேறு ஒரு பற்றுக் கோடு உண்டாய் இருக்க-இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன்-அவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் இல்லை யாகில் இல்லையாம் இத்தனை –அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –

————

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

உபகாரகரைப் போலே இருந்து -தம் தம் காரியங்களையே-தலைக் கட்ட நினைக்கும் நம்பத் தகாதவர்களை ஒழிய-
காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைக்குமவனாய்-விஸ்வாச ஜனகனுமாய்-யுபகரிக்குமவனை-ஆபத்திற்கு துணைவன் ஆனவனைப் பற்றுமது அன்றிப் பயன் இல்லை –என்கிறார் –

துணையும் சார்வும் –துணையாகை யாவது –துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-சார்வு ஆகையாவது –
போக்கடி அற்ற நிலையில் தாங்களே புகலிடம் ஆதல் 

புணை என்று உய்யப் போகல் அல்லால் – இட வேண்டுவது ஒரு பச்சை இல்லை –ஒரு வார்த்தை மாத்ரம் அமையும் –
என் கார்யம் உனக்கே பொறுப்பு -என்ற ஒரு வார்த்தையே அவனுக்கு நேர வேண்டுவது –

இல்லை கண்டீர் பொருளே –புறம்பு ஒருவரைப் பற்றினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றது –
புறம்பே சிலரை பற்றுகையிலே துக்கப்பட சிலர் உண்டு அத்தனை-பயன் தரத் தக்கது ஓன்று இல்லை -என்றபடி –

—–

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

அவனை ஒழிந்தவர்கள்-பயன் உள்ள போது -பந்துக்களாய் கொண்டாடுவார்கள் –
ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள் –ஆன பின்பு-அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே
சம்பந்தமோ இயல்பாகவே அமைந்ததே இருந்தது –காரணம் இல்லாமலே ஆபத்துக்கு துணைவனாய் இருக்கிற-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவருளுக்கு பாத்திரம் ஆகுங்கோள்–அவனை ஒழிய காப்பவர் வேறு இல்லை –என்கிறார் –தன் அருள் கொள்வாரை -உதாரர் -என்னும் அவன் அன்றோ அவன் –

அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் –இவன் இடம் -கை நீட்டி பெற்றால் அவனே வள்ளல் ஆகிறான்-கொடுக்கத் தொடங்கும் பொழுதே சாம்யா பத்தி அருளுகிறானே –

—————-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

சிலரை ஆபத்துக்கு துணை ஆவார் என்று செல்வம் முதலியவற்றைக் கொடுத்து பல நாள் அடைந்தாலும்-
ஆபத்து வந்தவாறே கண்ணற்று பாராமுகம் செய்வார்கள்-
ஆதலால் ஒருவித காரணமும் இல்லாமல் வந்து அவதரித்து-ஆபத்துக்கு துணை ஆனவனே பற்றத் தக்கவன் -என்கிறார்-வடமதுரைப் பிறந்தவன் -நாம் ஆஸ்ரயியாது இருக்க நமக்கு உதவுகையே தன் பேறாக வந்து பிறந்தவன் –சௌசீல்யம் சௌலப்யம் முதலான கல்யாண குணங்களே நமக்கு புகலிடம் என்று பிழைத்து போகல் ஒழிய-இல்லை கண்டீர் சதிரே –

இல்லை கண்டீர் சதிரே –நெற்றி பெருத்து-பிரயாசை செய்து – பயன் ஒன்றும் இன்றிக்கே-இருக்கும் என்னுமது இளிம்பு அன்றோ-சதிராவது -அநாயாசேன பலம் பெறலாம் பிரவிருத்தி-அல்ப யத்னத்தாலே பஹு பலம் பெறுமது -சதிர் -பஹு யத்னத்தை பண்ணி பல வேளையில் ஒன்றும் இன்றிக்கே ஒழிகை -இளிம்பு —
நெற்றி சிறியதாய் பயன் கனக்கப் பெறுமது அன்றோ சதிராவது- இங்கு நெற்றி –நம -என்றல்-பயன் –சமன் கொள் வீடு -அன்றோ –

———

சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர் கொள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி-மற்று ஒன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்த உபாயம் -சூர்ணிகை –227-

தன்னைப் பெறா விடில் தரிக்க மாட்டாதபடி சிநேகத்தை உடையவர்களான-பெண்களாலே ஆபத்து வந்த காலத்திலே இகழப் படுவர்
ஆன பின்பு-ஒரே தன்மையான சிநேகத்தை உடைய இறைவனைப் பற்றுவது ஒழிய-சுகம் வேறு இல்லை -என்கிறார்

எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் – எதிர்முகமாதலை உடைய அடியாராய் உய்யுமது ஒழிய-அவனுக்கு நான் செய்ய வேண்டுவது இது
அவன் தானே மேலே விழா நின்றால்-முகத்தை மாறா வைக்காது ஒழிகையே வேண்டுவது-உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ
அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –

———

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

எல்லை இல்லாத பேரின்பம் ஆகிற பேற்றினை உணராமல்-முன்புள்ளார் பலர் முடிந்து போனார்கள் –
ஆதலால் அப்படியே நீங்களும் அழிந்து போகாமல்-அடியார்கட்காக அவதரித்து பாதுகாக்கும் அவனையே பற்று-உய்யுங்கோள்-
அதனை ஒழிய ஆத்மாவுக்கு நன்மை இல்லை -என்கிறார்-
பிராப்தம் -நித்யம் -பேரின்பம் -சோபாதிகம்-உண்மை இது அன்றோ –

உள்ளது நினையாதே – உண்டான பேற்றினை நினையாமல் -என்றது
இன்ப மயமாய்-என்றும் உள்ளதாய்-இருப்பது பகவத் விஷயம் என்று நினையாமல் -என்றபடி –
அன்றிக்கே
உண்டான இல்லாமையை நினையாமல் -என்று மேலே கூட்டலுமாம் –இல்லாமை தானே உள்ளது உலகத்தில் -இது அன்றோ பிரத்யக்ஷம் –

மல்லை மூதூர் வடமதுரைப் – நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-முன்பே துருவன் தவம் செய்த மதுவனமாகவும்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்-ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் -மூதூர் -என்கிறார் –
அயோத்யா மதுரா -ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –
அயோத்யா -மதுரா – மாயா -அவந்திகா (-உஜ்ஜைனி- ) காசி -காஞ்சி — -த்வாராகா –முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள் –

———-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

பகவானைப் பற்றுதல் மிக மிக எளியது-இனிமை வாய்ந்தது-என்று அருளிச் செய்கிறார்

மற்று ஓன்று இல்லை – இதனோடு ஒக்க வேறு எண்ண லாவது இல்லை -என்னுதல்
அன்றிக்கே
இப்போது இதனை சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றைச் சொல்லுகிறான்-என்று இருக்க வேண்டா -என்னுதல்-
ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரதி பத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –

சிற்ற வேண்டா –வருந்த வேண்டா-சிற்றுதல் -சிதறுலதாய்-பரக்க வேண்டா -என்கை-வேறு ஒரு செய்கை வேண்டா -என்றபடி –

சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-வார்த்தைகள் வேண்டா-நினைப்பே அமையும்-கண்டீர் கோள் -என்றது
அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்

எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் –வந்து பிறப்பதற்கு முன்பே-பெற்றத்து ஆயன் போலே காணும்
வந்து அவதரிப்பதாக நினைப்பட்டதில் புரை அற்று இருக்கிறபடி-
அடியார்கட்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயன் -என்னுதல்
அடியார்கட்காக பசு மேய்க்கும் ஆயன் ஆவானாக வடமதுரை பிறந்தான் -என்னுதல் –

சர்வ உபாய -அதிகமத்வ-பிரதிபத்தி விஷயத்துவ –விச்வாஸ நீயமான– ஸூ லபத்வ -சர்வாதிகாரத்தவ
அநாயாஸத்வ -யுக்தி நிரபேஷ ரூபமாக -இருப்பது அன்றோ

வைகல் வாழ்தல் கண்டீர் குணமே –
கற்பது ஒரு காலாய்-ஒரு தடவையாய்-பின்பு வாழ்ச்சி நித்தியமாய்-இருக்கும் ஆயிற்று-இதுவே பிராப்தம் –
ஏவகாரத்தால் -இது ஒன்றுமே குணம்-இது ஒழிந்தன அடையத் தக்கன அல்ல -என்கிறார் –

———–

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-

அவதாரத்துக்கு காரணத்தை சொல்லி-பாது காப்பவனாக அவனையே பற்றுமது ஒழிய
வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக் கோடு இல்லை-என்கிறார் –

மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சர்யப் படத் தக்கவனாய்-இருந்துள்ள இறைவனுடைய-குணங்களுக்கு தோற்றவர்களாய் –
ப்ரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்றிக்கே ஏத்தி-அதனாலே போது போக்குவதலைச் செய்வதாக-
அறுதி இட்டுள்ள நன்மையை உடையவர்கள் -சீரியர்கள் -என்றது –
வேறு பயன்களைக் கருதாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்றபடி –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும்-போது போக்குமவர்கள் –நான் முகன் திருவந்தாதி -63-என்றவாறு –
இந்த மாயவன் அடி பரவுகையை சூது சதுரங்களை போன்று-காலத்தை கழிப்பதற்கு வழியாக
கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள் -என்று-பட்டர் அருளிச் செய்வர் –போக ரூபமாக உள்ளுவர்கள் என்றபடி –

——

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-

இவனை ஒழிய வேறு ஒன்றனை ரட்ஷகம் என்று பற்றினவர்கள்-பண்டு நின்ற நிலையும் கெட்டு அழிந்து போவார்கள் –
ஆனபின்பு -இவன் அல்லது சரண் இல்லை -என்கிறார்-
அன்றிக்கே
கைவல்யம் ஆகிற பேற்றினைச் சொல்லுகிறார் -என்னாலும் ஆம் –

மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த –
கம்சன் வாழ்கிறானாய் -அலங்காரமாக கட்டின கொடியை-கிருஷ்ணன் உடைய அவதாரத்துக்கு என்றே நினைத்து இருக்கிறார் ஆயிற்று இவர்
சிசுபாலன் திரு மணத்துக்கு உடலாக செய்த சடங்குகள் அடங்க தனக்கு-உடலாக செய்ததாக நினைத்து கைப் பிடித்தான் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணன் –

——-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

சேஷத்வம் முதல் நிலை -அடுத்து அநந்யார்ஹத்வம் -நமஸ் உகாரார்த்தம்-சொல்லி -பாகவத சேஷத்வம் -மூன்றாவது நிலை –
சர்வவித பந்து நாராயணன் -என்பதை இதில் சொல்லி -பந்து கிருத்யம் கைங்கர்யம் -ஆய -அர்த்தம் –
8-8 பகவத் சேஷத்வம் யானும் தானாய் ஒழிந்தானே
8-9-அநந்யார்ஹத்வம் -குட்ட நாட்டுத் திருப்புலியூர் – மாயப்பிரானுக்கு வாழ்க்கை பட்டு
8-10- நெடுமாற்கு அடியார் -பாகவத சேஷத்வ பர்யந்தம் –
9-1-சோபாதிக பந்துக்களை விட்டு -அசாதாரண பந்து வடமதுரை பிறந்தவனே -நாராயண சப்தா ர்த்தம்
எண்ணிடையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொடங்கி -ஆபத் சஹத்வம் -ஒன்பதாம் பத்து தாத்பர்யம் –
கணை ஒன்றினால் ஏழு மரங்கள் எய்தவன் –
வட மதுரை பிறந்தான் -8 தடவை சொல்லி -அஷ்டாக்ஷர மந்த்ரார்த்தம் சொல்லி –
9-2- கைங்கர்யம் அடுத்த பத்தில் -குடி குடி ஆட் செய்ய -ஆய -பிரார்த்தனையாயாம் சதுர்த்தி –
ஐம்பது பாசுரங்களால் ஐந்து அர்த்தங்களும் -திருமந்த்ரார்த்தம் சாதித்தார் –

தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைப் பற்றுமினோ –என்கிறார்

தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக –
நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் -பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க –
மண்ணின் பாரம் நீக்குதற்கே-வடமதுரைப் பிறந்தான்-தத்விரோதிகளை – பூ பாரத்தை நீக்கி -நாக பர்யங்கம் விட்டு -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி

—————

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

8-10 வாசனை மாறாமல் -பலன் -பாகவத உத்தமர்களுக்கு சேஷ பூதர்-இந்த திருவாயமொழி கற்றவர்களுக்கு சேஷ பூதர் தாம் என்கிறார் –

இவர்க்கு இப்படி இந்த துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –தாது சேர் தோள் கண்ணனை-அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -67-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ –நங்கள் வரி வளை -8-2-

March 4, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தலைவி பிரிவு ஆற்றாமை வருந்தும் நிலையைக் கண்டு இரங்கிப் பேசும் செவிலித்தாய் பாசுரம்-நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே-8-2-1-வளையல் களைந்து போல்-சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த் தளர்ந்தேன்,
வேங்கட வாணனை வேண்டிச் சென்று-அதே போல் இங்கும் உள்ளதே-வட மாருதம் -வடக்கில் இருந்து வருவது-சரத்காலம் வடமாருதம் -ஐப்பசி கார்த்திகை-வடக்கு நோக்கி போகும் தென்றல் காற்று அதுக்கு முன் உள்ள ருது-தென் மேற்கு வட கிழக்கு காற்றுக்கள்-

அவதாரிகை –கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்டதிருத் தாயார்- பாதகங்களின் பெருமையையும் –இவள் ஆர்த்தவத்தையும் அனுசந்தித்து – என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள் –(மானஸ அனுபவம் கிடைத்து பாஹ்ய அனுபவம் கிட்டாமையால் தளர்ந்து )

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–இப் பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று அருளிச் செய்த படியே
இவ் வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்mஇந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய் இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே
–47–பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்
—60-ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
–சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார் அது சேஷித்வ உத்தியோகம் இது சேஷத்வ உத்தியோகம் –அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்–நெஞ்சே வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்-

திரிகின்றது வட மாருதம் –வாடையானது -மத்தகஜம் ஆளை கணிசித்து உலாவுமா போலே உலாவா நின்றது –(சஞ்சரிக்கின்றது முதல் இரண்டு நிர்வாஹங்கள்-மாறாட்டம் -மூன்றாவது நிர்வாஹம் )
நாயகனுடைய தண்ணளி யற்ற சமயம் பார்த்து நலிவதாக திரியா நின்றது –
அன்றிக்கே –-வாடை யாவது குளிரக் கடவது இறே –அந்த சைத்தியத்தை மாறாடி சுடா நின்றது –திங்கள் இத்யாதி –இதனுடைய ஸ்வ பாவம் அந்யதாபவித்தவாறே –நாம் தான் பேசாது இருக்கிறது என் –
என்று சந்தரன் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான் –வெம் தீ-நெருப்பும் காற்றும் கூடிற்று காணும் –நெருப்பு சுடுமா  போல் அன்று இறே நீர் கொதித்தால்  சுடுவது –முகந்து சொரிகின்றது –
அங்கு குறைவற்று கிடக்கிறது – வாடையோபாதியும் சந்த்ரனோபாதியும் பிரிந்தார்க்கு
பாதகமாவன சில உண்டு இறே –ஒரு கடலோசை  -அன்றில் -தென்றல் -விடை மணி ஓசை குழல் இசை -குயில் -என்றாப் போலே – இவற்றிலே ஓன்று புத்திஸ்தமானத்தை-அதுவும் அது – அதினுடைய பாதகத்வத்தில் உறைப்பு -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அதுவும்  அப்படியே -என்கிறாள் –
(பேதை பாலகன் அதாகும் போல் )-அன்றிக்கே –-திரிகின்றது என்றது-(சஞ்சரிக்கின்றது என்ற பொருளில்-அதுவும் அது -அவ்வாடையும் சந்த்ரனோபாதி நெருப்பை முகந்து சொரியா நின்றது -என்கை —

கண்ணன் இத்யாதி –புறம்பே சிலர் பாதகராக நின்றார்கள் என்று சொல்ல வேணுமோ –
நங்கை-நம் கை – பட்டவை நலிகிறபடி கண்டால் -அவதரித்து ஸூலபனான இது தான்
காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 –ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் )-தண்ணம் துழாய் -இத்யாதி –அவையானால் கொண்டு இட்டவை இறே – ஸ்வாபாவிகமான நிறமும் வேறுபடா நின்றது –தண்ணம் துழாய் -இத்யாதி—பதி சம்மாநிதா –அயோத்யா காண்டம் –18-21 –
கணவரால் நல்ல செய்தி கூறப் பட்ட சீதை என்று- அவன் தோளின் மாலையை வாங்கி -இட்டுக் கொண்டு ஆடும்படி நினைத்து ஆயிற்று – உடம்பு வெளுக்கிறது –வண்ணம் இத்யாதி – ஸ்வாபாவிகமான நிறமானது பயலையாய்க் கொண்டு உடம்பு அடைய பரவா நின்றது –என்னாம் கொல் இத்யாதி –ஒரு வாடையும் வை வர்ணயமும் வேண்டாதபடி –ம்ருது ஸ்வபாவையாய் இருக்கிற இவளுக்கு –அதுக்கு மேலே இவையும் ஆனால் என்னாய் விளையக் கடவதோ –(க்ஷண விரஹ அஸஹிஷ்ணுத்வம் )

தலைவன் தன் ஆற்றாமைக்கு காரணம் சொல்லும் பாசுரம் – உத்தம லக்ஷணம் ஆகிற ரேகைகள் செம்மையால் செங்கழு நீரையும் -கரு நிறத்தால் நீலோத்பத மலரையும் கூர்மையாலும் வருத்துவதாலும் ஒளியால் வேலாயுதம் போன்றதும் -குளிர்ச்சியால் வடிவாலும் கயல் மீனையும்
மருட்சி முதலியவற்றால் மான் விழி போன்ற பல வற்றுக்கும் கூட ஒப்பு சொல்ல முடியாத திருக் கண்கள்
என்னை வென்று வருத்தி உயிர் நிலையில் நலிகின்றன-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று –சிவப்பாலே செங்கழு நீரையும் நைல்யத்தாலே நெய்தலையும் கூர்மையாலும் ஒளியாலும் வேலையும் குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்-மற்றும்-கண்ணுக்கு ஒப்பான வாள் அம்பு வடி மான் விழி முதலான பலவற்றையும் வென்று–அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே பலவற்றையும் வென்று என்னவுமாம்–ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு–நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல இவற்றினுடைய கோலுதலின் பரப்பு–அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்-விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்–பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே-இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்--கோவிந்தன்-வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ-பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்–வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்–இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )கண்களாய துணை மலரே-கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை–இவற்றுக்கு -என்று-அத்யாஹரித்து-ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று அந்வயம்

இத்தால்–காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே–ஆழ்வாருடைய ஞானமானது ராக ஹேதுவான ரஜஸ்ஸையும் கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும் லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே-முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )-இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி-தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே-இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும் பாரதந்தர்யமும் (பேடை) ஸூசிதமாயிற்று–அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று-அலர் மேல் மங்கையைச் சொல்லி அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )-கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்–ஆஸ்ரிதற்கும் துணையான விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம் –காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று-கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்-விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால் எல்லாம் கூட ஒப்பாகவற்றோ-மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது–விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே-பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை–இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு-சிவப்பாலே செங்கழுநீரை வென்று கருமையாலே நெய்தலை வென்று ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று-மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று–ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு–தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன–ஆவியின் தன்மை அளவுள்ள–இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன-இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்–அசுரைச் செற்ற மா வியம்புள் வல்ல மாதவன்–அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய் விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய் இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்-மாதவன் -கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்-கோவிந்தன் -அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்–வேங்கடம் சேர்-அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி திருமலையிலே வந்து ஸூலபனானவன்–தூவியம் பேடை யன்னாள்-கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான தூவியம் பேடை யுண்டு அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை-அத்தோடு ஒத்து உள்ளவள்–அன்றிக்கே-தூவியம் பேடை -என்று பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய் அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்–கருட வாஹனன்–ஸ்ரீ லஷ்மீ பதி என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில் ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை–கண்களாய துணை மலரே–கண் என்கிற வியபதேசத்தாலே ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று–கண்களாய துணை மலரின் பாரிப்பு காவியும் என்று தொடங்கி ஆவியின் அளவுள்ள பாரிப்பு என்று அந்வயம்இத்தால் திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும் கறுப்பாலே நெய்தலையும் தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும் ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும் மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்-அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர் கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும் திருவேங்கடம் சேர்ந்தவனும் அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய் தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய கண்களாய துணை மலரே–ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே–என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு-என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத பலவிதரண உத்ஸாஹம் உள்ளது–ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில் கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

ஸ்வாபதேசம் –-ஆழ்வார் ஞான விளக்கம் -ஆழ்வார் -துஷ்ட நிக்ரஹ சீலத்திலும்-கருடாவாஹன ரூபத்திலும் -உத்தம பிரமாண ப்ரதிபாத்யனுமாய் புருஷகார பூதையான பிராட்டிக்கு வசப்பட்டவனும் – ஆத்மாக்களை பரிபாலனம் செய்து அருளும் அவனது வாஸஸ் ஸ்தானம் திரு மலையில் ஆழ்வார் ஈடுபட்டமை –வேங்கடம் சேர்-இடை விடாமல் நினைந்து கொண்டே இருப்பவர் என்றவாறு
தூவியம் பேடை யன்னாள்-சுத்த ஸ்வ பாவமும் -அர்ச்சிராதி கதி கூட்டிச் செல்ல சாதனம் உடைமையும் பார தந்தர்யமும் சொன்ன படி-வேங்கடம் சேர்-தூவியம் பேடை-அலர் மேல் மங்கை தாயாருக்கு ஒப்பு உடையவள் என்றுமாம்-கண்களாய துணை மலரே-தமக்கும் தம் அடியார்க்கும் துணை யாகும் ஞான வகைகள் காவியை வென்றது என்றது ரஜஸ் குணங்களை அகற்றி என்றபடி-நீலத்தை வென்றது தமஸ் அகற்றி வேலை வென்றது என்றது சத்வ குணத்தை கடந்து – கயலை வென்றது முக்குணங்கள் ஜட பொருள்களை வென்று சஞ்சலத் தன்மை இல்லாமை என்றபடி-இப்படி பட்ட ஞான விசேஷம் எம்மை வென்றதில் அதிசயம் இல்லையேவியப்புள் என்றது -வியம்புள்-என்று மெலித்தது –

ஸ்வாபதேசம்–இத்தால் ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும்
இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள் ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்- இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

தாத்பர்யம்–பகவத் அலாபத்தால் தளர்ந்த தசையில் பாதகமான லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
நொந்த ஆழ்வார் தசையைக் கண்டு–பார்ஸ்வத்தார் திருத் தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
நாயகன் பிரிந்த சமயம் பார்த்து வந்த மாந்த மாருதம் பூர்ண சந்திரன் போன்றவை இவளை மேலும் நலிய வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில் அபி நிவேசத்தாலே இவள் அங்கே- பரமபதம் சென்று-நித்ய அனுபவம் பெற்று ஆனந்திக்க ஆசைப்பட்டு இருக்க இவற்றின் நலிவாலே இவள் காலம் என்னவாய் ஆகுமோ என்று வெறுத்துப் பேசும் பாசுரமாய்ச் செல்லுகிறது –

6-10-உலகம் உண்ட பெருவாயா! -ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்;
இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார்.
மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது;
இத் திருவாய்மொழியில் உபேயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக் கடவது.
மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரம ஸ்லோகம் போலே –
இரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், அது சக்தி யோகத்தாலே வருமது அன்றோ;
வெவ்வேறு நிலைகளைப் பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக் கடவன.

கோல திரு மா மகள் -தடம் தாமரைகட்கே -பிராப்ய வேஷம் –
பிராபக வேஷம் -அகலகில்லேன் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
சரணாகதனுக்கு பிராப்ய பிராபகங்கள் அவனே -பக்தனுக்கு பக்தி உபாயம் –
காப்பானே -கீழில்–பிராபகத்வம் -இங்கு நால் தோள் அமுது -பிரபாயத்வம் -இரண்டிலும் இரண்டு உண்டே -பிரதானம் –
பிரதான குணங்கள் திவ்ய தேசம் காட்டி நாயனார் அருளிச் செய்தது போலே -வாத்சல்யம் திருவேங்கடத்தில் –

பிராப்ய பிரதானம் திரு மந்த்ரம் –பிராபக பிரதானம் சரம ஸ்லோகம் –
பாலே மருந்துமாகவும் விருந்தாகவும் -உபாயம் உபேயம் -தன்மை மாற்றாதே -பிரதானம் சொல்வது எங்கனே –
சக்தி யோகம் -பாலுக்கு மருந்தாகும் சக்தி உண்டு –மருந்து பால் ஆகாதே -அவன் எப்போதும் அனுபவிக்க தக்க பிராப்யம் தான்
வேற வழி இல்லாமல் அவனை உபாயம் -கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
நம்முடைய -வரண தசை –பிராப்தி தசை -இரண்டும் -அவஸ்தா பேதம் -ஒன்று முடிந்து அடுத்து ஒன்று வருமே –
அதனால் இரண்டும் இரண்டாகவே இருக்கக் கடவது -என்றவாறு

கீழே ஸங்க்ரஹ சங்கதி
இனி விஸ்தார சங்கதி அருளிச் செய்கிறார்

மிகப் பெரிய துன்பத்தோடே பரம பதத்திலே கேட்கும்படி கூப்பிடச் செய்தேயும் சர்வ ரக்ஷகனானவன் வந்து
முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள் கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய்
உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் –
ஸ்ரீ யபதி — அவாப்த ஸமஸ்த காமன்– உபய உக்தன் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
“நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும்
பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”
‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -என்கிறபடியே,
நித்திய ஸூரிகட்குக் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய சர்வேஸ்வரன், பலரும் நம்மை இழக்க
நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து
அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்;

அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்க வேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து
திருமலையிலே நாய்ச்சியாருடனே கூட நின்றருளினான்;
அதிகாரி நியதி, கால நியதி, அங்க நியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே
அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே,
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறு கதி இல்லாமையை விண்ணப்பம் செய்து
சரணம் புக்குத் தம்முடைய-அத்யாவசாயத்தை – எண்ணத்தை அறிவிக்கிறார்.

மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே
‘தர்மி புக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்;
இங்கு அது தன்னையே வாய் விடுகிறார்.
மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே.
திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், –
அகாரம் உகாரம் நார சப்தங்கள் ஸ்ரீ சம்பந்தம் சொல்லும் சப்தங்கள்
வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அது போலே இத் திருவாய்மொழி.

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”–என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.

1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.
2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.
3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு
விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம்
உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –
(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

அவனை ஆஸ்ரயிக்கும் அளவே -இழந்தது பெறுவதும் –
ஆர்த்தன்-வாஞ்சா -ஐஸ்வர்ய காமன் ஆசை -அர்த்தாத்தி -அபிராப்தி விஷய சாபல்யம் —
மோஹம்-அஜ்ஞ்ஞானம் -ததா சுகம் இஹ லோக சுகம் -விரோதிகள் -தொலைந்து -அபேக்ஷிதங்கள் பெறுவர் –
அனைத்துக்கும் தம் இடம் வரச் சொல்லி -திட்டம் -அழகு குணம் பார்த்து என்றாவது ஒரு நாள் வைராக்யம் பெற்று
பகவல் லாபார்த்தி ஆவார்கள் -கதி த்ரயத்வ மூலத்வாத்

இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று,
எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

இனித் தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும் வேணும்;
தான் அதிகாரியாகவும் வேணும்.
நற் குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அது தானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணா நின்றோம் அன்றோ.
இங்ஙனே இருக்கச் செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம்
கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம்.

இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –

“மயர்வற மதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக் கொண்டு புறப்படுவார் வேணும்.
(எப்படியாவது கார்யம் செய்விக்கத் தேடுவார்களே -அச்சம் கொடுத்து ஆகிலும் காரியமே மடல் எடுப்பது )
செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடி யுடையார்க்குக் கார்ய கரம் ஆகாதே அன்றோ.
பெருமாள் போல்வார் இடம் இல்லாமல் ஆழ்வார் போல்வார் இடமே சரணாகதிக்கு பலம் கிட்டும் -என்றபடி
வேறே இடம் போகாமல் அவன் இடமே கார்யம் நிர்பந்தித்தாகிலும் அச்சம் கொடுத்தாவது கார்யம் கொள்வார் வேணும் –
ஸூ பிரவ்ருத்தியில் ஈடு படாமல் பர ப்ரவ்ருத்தி எதிர்பார்த்து -நான் பண்ண மாட்டேன் -உன்னை பண்ண வைப்பேன் என்றாரே

“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –

கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார்.

அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆராவமுதே -அரங்கமேய அந்தணன் –
ஸ்வாமி புஷ்கரணி தடே -மந்தி பாய் –வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –அரங்கத்து அரவிந் அணையான்
விண்ணவர் கோன்-விரையார் பொழில் வேங்கடவன் -நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஆகாதோ மதுராம் புரிம்
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு இடம் இருக்க -இப்படி மூன்று ஸ்தானங்கள்
இரட்டைக் குழந்தை தாய் -விண்ணோர் மண்ணோர்-அனுபவிக்க திருமலை
ரிக்வேதம் -பத்து புராணங்கள் பேசும் -ரிஷபாசசலம்-
வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி -சேஷாசலம் வேங்கடாசலம் -நான்கு யுகங்களாக காத்து இருந்த திருமலை
வேங்கடேச சம ஸ்தானம் நாஸ்தி கிஞ்சித் – ந பூதோ ந பவிஷ்யதி -வேங்கடேச இதிஹாச மாலை அனந்தாழ்வான் பணித்தது –
கரவீர புரம்-ப்ரஹ்மா பசு ருத்ரன் கன்று –
வேங்கடேசன்-மாட்டை அடித்ததால் சபிக்க -பிசாசாக -அடுத்த பிறவி ஆகாச ராஜன் -மகள் பத்மாவதி -தம்பி தொண்டைமான் சக்கரவர்த்தி
வேகவதி தானே பத்மாவதி தேவி -நாராயண புரம் -ஆகாச ராஜன் பிரார்தித்த படி -புரட்டாசி ஸ்ரவணம்-ஏகாந்தமாக சேவை –
கல்லும் கனை கடலும் -விண் மேல் இருப்பாய் மலர் சேர்ப்பாய் –திருச் சுகவனூர் -திருச்சானூர் மருவி -சுகாச்சார்யார்
ஓன்று அத்விதீயம் இரண்டு வாக்கியம் மூன்று கண்டங்கள்-
நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்த பஞ்சகம் -ஆறு பாதங்கள் -ஏழு சமுத்திரம் போலே –
அஷ்டாஷர விவரணம்- நவ ரசம் சாந்தி கொடுக்கும் த்வயம் –
பாட்டுத் தோறும் திருவடி பிரஸ்தாபம் பதிகத்தில் –
கைங்கர்ய பிரார்த்தனை ஒழி வில் காலம் எல்லாம்
இதில் சரணாகதி
த்வயம் இரண்டு வாக்யத்துக்கும் இவை இரண்டும் –
குரு பரம்பரா பூர்வகமாக த்வயம் ஸதா அனுசந்தேயம் –சந்ததஸ் ஸ்புரிதா சதம் -நம் பூர்வர்களுக்கு

பத்தாம் திருவாய் மொழியில் -கீழ் -தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தாலே புருஷார்த்த வைலக்ஷண்ய நிபந்தமான ஆர்த்தி
பிறந்து கூப்பிட்டவர் -பல சித்திக்கு சரணையானவன் திருவடிகளை ஒழிய உபாயம் இல்லை -என்று அறுதி இட்டு
சரண்யத்வ பிரகாசகமான அகில ஜகத் ரக்ஷண ஆகாரத்தையும்
அசேஷ விரோதி நிவர்த்தனத்தில் அத்யுஜ்ஜ்வல பரிகர யோகத்தையும்
ரூப குண சாரஸ்யத்தால் யுண்டான ஊத்துங்க அநு பாவ்யதையையும்
ஜகத் விரோதிகளுக்கு தீங்கு விலைக்கும் ஸ்ரீ மத்தையையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான அ நாயாச வியாபாரத்தையும்
அதிசயித ஞானர்க்கும் ஆராத்யனாம்படியையும்
சர்வ சாதாரண சாரஸ்ய அதிசயத்தையும்
சர்வ ரோதரான ஈஸ்வர அபிமானிகளுக்கும் சதா ஆஸ்ரயணீயனாம் படியையும்
அதிசயித போக்யமான அவயவ சோபையையும்
ஆஸ்ரயணீயத்வ ஆகாரத்தையும்
அனுசந்தித்து -இப்படி சரண்யனான திருவேங்கடமுடையான் விஷயமாக
ச க்ரம சமக்ர சரணாகதியைப் பண்ணித் தலைக் கட்டுகிறார்-

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே
.–6-10-1-

1-பிரளய ஆபத்தில் -விரஹ ஆபத்து -லோகமாக -ஒருவனை -ஆர்த்தி அறியாதார் -ஆர்த்தி அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ
2-அர்த்தித்தவம் இல்லா உலகம் -ஆசைப் பட்டாரை-ரஷிக்கலாகாதோ -அர்த்தித்தவம் ஆசா கார்யம்
3-வயிற்றில் வைத்து -வடிவு காட்டி ரஷிக்கலாகாதோ
4-அபி நிவேசத்தால் ரக்ஷித்தாய்- நான் அபி நிவேசித்தால் ரஷிக்கலாகாதோ
5-வாயாலேயே ரக்ஷிக்க வேண்டுமோ -வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
6-அபரியந்த குணங்களை அழிய மாறியோ ரஷிக்க வேண்டும் -அவற்றை அனுபவிப்பித்து ரஷிக்கலாகாதோ
7-உறவு அறியா லோகம் -உறவு அறிந்த என்னை -ரஷிக்கலாகாதோ
8-வடிவில் வாசி அறியாத உலகம் -அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ -பெருமை உணராத லோகம்
9-வியதி ரேகத்தால் தரிக்கும் லோகம் -வாழ மாட்டேன் என்று இருக்கும் என்னை ரஷிக்கலாகாதோ
10–ஸுலப்ய ஞானம் இல்லா லோகம் -அன்ய சேஷம் -அன்ய கதி ரஷிக்கலாகாதோ -பிரயோஜனாந்தர பரர்களை ரக்ஷித்தாயே
11-பிரிய நினைப்பார் -எழுவார் -வைகல் தொழுவார் வழுவா வகை நினைந்து -கூட இருப்பாரை ரஷிக்கலாகாதோ
12–மகா வியாபாரம் செய்து ரஷிக்க -மாஸூச சொல்லி ரஷிக்கலாகாதோ
13-ஏக பிரளயம் -பஹு நாம் அனுக்ரகம் நியாயம் -என் பிரளயம் மோசம் –
14-அசேதனம் -உலகம் -உண்டது முக்கியமா உலகத்தாரை ரக்ஷித்தார்-அசேதனம் போலே அன்றோ கிடந்தார்கள்

ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ?
பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ?
அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ?
( உலகத்தார் உலகம் போல் அசேதனமாக இருந்தார்களே )
சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
ஜலப் பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ?
பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
‘சரணம் புகாதாரை ரக்ஷிக்க வேண்டும் என்கிற நியதி உண்டோ! சரணம் புக்காரை ரக்ஷிக்கலாகாதோ?

பெரு வாயா – பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது,-அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி.-உலப்பு இல் கீர்த்தி அம்மானே – இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையது கொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்;-இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஆர்ஜித்த -ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது.-பொழில் ஏழும் காவல் பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம்,-இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியை யுடைய சர்வேஸ்வரனே!-ஸ்வரூபம் ஒழிய குணங்களுக்கு அன்றோ இவர் தோற்றது-நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி – பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி-த்த சுத்துவமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்,
நெய் திணுங்கினாற்போலே உள்ளும் புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.-நெடியாய் –மேலே கூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு எல்லை காண ஒண்ணாதபடி யாயிருக்கை.-நெடியாய்-“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.-அடியேன் ஆருயிரே–-வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னை விட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே!-“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க-இதனைக் -அடியேன் ஆருயிரே-கூட்டக் கடவது.

இவ்வளவும் வர, அவனுடைய ஸ்வரூபம் சொன்னார்; இனி, தம் ஸ்வரூபம் சொல்லுகிறார்:-குல தொல் அடியேன் – குலமாகப் பழையதான அடியேன்.-எந்தை தந்தை –முன்பே அருளி –
இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்;-தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் –உன பாதம் கூடுமாறு கூறாய் –-ஸ்வரூபம் இதுவான பின்பு, ஸ்வரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய்.-அடியவன் உன்னைக் கூட என்னுமது ‘உன பாதம் கூட’ என்பதே அன்றோ.-இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி.
பெறுமாறு சொல்லாமல் கூடுவதை -சா யுஜ்யம் -யுஜ் -தாது -சேர்ந்து குண அனுபவம் –-கூறாய் –-உனக்கு ஒரு சொல்;-எனக்கு ஸ்வரூப லாபம் கண்டாய்.-அவன் ஒரு வார்த்தை அருளிச் செய்ய, தளப்பம்-அலைச்சல் – தீரும் அன்றோ-இவர்க்கு. “மாஸூச: – துக்கப்படாதே” என்ன வேணும்.-

—————–

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே
.–6-10-2-

அவன் அருள் மறுத்த போதும் இங்குத்தை அருள் மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.-அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை.-திரு நேமி -அழகு அனுகூலர்களுக்காக -கூர்மை பிரதி கூலர்களுக்கு-திரு நேமி வலவா –-நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!-தெய்வக் கோமானே –அயர்வறும் அமர்கள் அதிபதி கண்டீர்.
அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ உள்ளது;
இரு துண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ.-இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே.-அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும்.-அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும்.
அங்குள்ளார்க்குக் கை மேலே ஜீவனமாயிருக்கும்;-இங்குள்ளார்க்கு விரோதியைப் போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது. அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;இவர்களுக்கு அது இல்லையே.-ஸூய பிரயத்தனம் இங்கு –

சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே –-சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப் போலே மலரா நிற்கும்.
எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது;-நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது.

ஆறா அன்பில் அடியேன் –-இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி.-சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது.-மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. ஊற்றுடைத்தே.-கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ.-உன் அடி சேர் வண்ணம் அருளாயே – உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்.-நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! என் அன்புக்கு இரை இடப் பாராய்-நீ வந்து திரு மலையிலே அவசர பிரதீஷனாய் இருக்க -உன்னைப் பெற வேணும் என்னும் ருசி எனக்கு உண்டாய் இருக்க நான் கூப்பிடுகை மிகை அன்றோ –

———–

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.
–6-10-3-

வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞான லாபத்தைப் பண்ணித் தந்த உனக்கு,
பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? -என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ

மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான
திருவருளின் மிகுதி இருக்கிறபடி-இமையோர் அதிபதியாயிருந்து வைத்து வண்ணமருள் கொள் அணி மேக வண்ணனாய் மாய அம்மானாய்த் தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க் கொண்டு, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே -உன் அடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாய் – கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்!-உன் திருவடிகளை அடையும்படி வேறு கதி இல்லாத எனக்கு
ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருள வேண்டும்.-உன்னடி அன்றோ?
உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.-

அடியேற்கு ஆ ஆ என்னாயே.–அடியோமுக்கு -முறை அறிந்த எங்களுக்கு -ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி அருள வேணும் –வடிவு அது -குண சேஷ்டிதங்கள் அவை -ரஸ்யத்தை அது -மேன்மை அது -ஸுலப்யம் அது -இப்படிப்பட்ட உன்னோடு உண்டான முறையை அறிவித்தால் ஆறி இருக்கலாமோ-

————–

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.
–6-10-4-

நஞ்சீயரை, நம்பிள்ளை ஒரு நாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;-நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,-“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச் செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப் போலே’ என்றது,-“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி,-“தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று சொல்லுவாரைப் போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச் செய்யும் போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்’ என்று அருளிச் செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனே காண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார் காண்” என்று அருளிச் செய்தார்.-ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம்-

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,-‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன,-செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து
ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹா பாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு–
திருப்பள்ளி யறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் -விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்

ஆ ஆ என்னாது –ஈஸ்வரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;-நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கை வாங்க அமையும்” என்று அருளிச் செய்தார்.-பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர்.

திருமாமகள் கேள்வா –-விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது.-அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ-உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ?புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ?-அருவினையேன் 
அவன் தடைகளைப் போக்க வல்லனாயிருப்பது,-எனக்கு ஆசை கரை புரண்டு இருப்பது,
திருவடிகள் எல்லை இல்லாத இனிய பொருளாக இருப்பது;-இங்ஙனே இருக்கச் செய்தே,
கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன்.-
பொருந்துமாறு புணராயே –
அசோக வனத்திலே இருந்த பிராட்டியைப் போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது;-புணராய் –உன்னைக் கிட்டும் வழி கல்பிக்க வேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்ய வேணும் என்னுதல்.

————–

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே
.–6-10-5-

ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே!-அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

திணர் ஆர் சார்ங்கம் –-தன் வளைவிலே-மிடுக்கிலே – விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை.-உன பாதம் – அந்த வளைவுக்கு -மிடுக்கிலே -அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது.-சார்ங்கத்தில் அகப்படுவார் பிரதி கூலர் அடியில் அகப்படுவார் அநு கூலர் –-ஏழு ரிஷிகள் கன்னிகைகள் குல பர்வதங்கள் சமுத்திரங்கள் நடுங்கினவே-சேர்வது அடியேன் எந்நாளே –-கையில் வில் இருக்க இழக்க வேண்டா விரோதி உண்டு என்று;-இனி உன்னைப் பெறும் நாளையாகிலும் சொல்ல வேணும். கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம் where there is will there is way

————

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?
–6-10-6-

 இங்குள்ளார் அங்கே சென்று அடிமை செய்ய ஆசைப்படுமாறு போலே காணும்,
அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி.-மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் 
மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யா நிற்பர்கள்.
அன்றியே,-மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம்.
வழிபடுதலாவது,-வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக் கொண்டு அடைந்து வணங்குதல்.-நித்திய ஸூரிகளான போது, கைங்கரியமாகக் கொள்க.
பிரமன் முதலான தேவர்களான போது, உபாசனமாகக் கொள்க-மேலே அவர்களை சொல்லுகையாலே ப்ரஹ்மாதிகளை சொல்கிறது உசிதம் அன்று –.-மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –-குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;-நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப் பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.-ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.-எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –

————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடுபுள் ளுடையானே! கோலக் கனிவாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர்மருந்தே! திரு வேங்கடத்தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேனே
.–6-10-7-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! – தேவஜாதிகளுடைய உப்புச் சாறு போலன்று;
ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று;-வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று.-அநந்ய ப்ரயோஜனமாய் -நித்தியமாய் -அத்விதீயமாய் இருக்கை-அமர்கின்ற -அர்ச்சை-மேவி -மற்றவற்றை த்யஜித்து-செடியார் வினைகள் தீர் மருந்தே-அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.-

திருவேங்கடத்து எம்பெருமானே – அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி.

1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடு புள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர் மருந்தாய், 4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய்,
6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.

1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தைச் சொல்லி –4–ஸுலப்யம் சொல்லி –5-அழகைச் சொல்லி-6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது

பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கின்றதே,-என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “
‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே
இருக்கும் திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

உன பாதம் காண நோலாது ஆற்றேன்–அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப் பாயாத படியானேனோ?’ என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.உன் திருவடிகளைக் கிட்டுக்கைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணாதே அனுஷ்ட்டித்து பலம் தாழ்த்தாரைப் போலே கூப்பிடா நின்றேன் –

————

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே
–6-10-8-

எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளும் சபரிகரமாக வந்து தங்கள் ஆகிஞ்சன்யத்தை ஆவிஷ்கரித்து அன்றோ தங்கள் தங்கள் அபேக்ஷிதங்களைப் பெற்று போவது – 

மாலாய் மயக்கி –-“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும்,-அன்றிக்கே,-மாலாம்படி மயக்கிக் கொண்டு வர வேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்;-ஸம்ஸலேஷிக்கும் படி வர வேண்டும் -நீ வ்யாமோகத்துடன் வர வேண்டும் –-வ்யாமோஹம் என்னிடம் உண்டாக்கிக் கொண்டு வர வேண்டும் –அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய்,-கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக் கொண்டு
வந்தாற் போலே எனக்காகவும் ஒரு வரத்து வர வேணும் என்கிறார்;
“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3.-மாலே செய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத் தலைக்கு-வியாமோகத்தை விளைக்குமவனை.-மாலாய் – கிருஷ்ணனாய்.-
பித்தே வடிவாக உள்ள குண பூர்ணன் -மாலாக்கி சாம்யா பத்தி அளிப்பான்-

————–

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே
.–6-10-9-

போக்கியமும் குறைவற்று, அவன் தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க,
கிட்டி அநுபவிக்கப் பெறாது ஒழிவதே–எனதுயிரே!-புண்டரீகாக்ஷமாய் சதுர்புஜமுமாயிற்று இவர் பிராணன் இருப்பது-அந்தோ -ஆற்றாமையும் அபேக்ஷையும் எனக்கே பரமாவதே
அடியேன் -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்தர்யத்தை யுடைய நான்-அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே –-என் ஸ்வரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்தி பண்ணாய்.-காணா நிற்கச் செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.-நிரதிசய போக்யமான உன் திருவடிகளை க்ஷண காலமும் அகல ஷமன் ஆகிறிலேன்-

————-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
.–6-10-10-

தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப் பாசுரங்களாலும் சரண்யனான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லிச் சரண் புகுகிறார்.
மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். -அசரண்ய சரண்யன் என்பதால் சொல்லி-
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார். -புனருக்தி தோஷம் இல்லை –
பேற்றுக்கு உடல் -வெறுமை ஸ்வரூபம் -இரண்டும் பிரபத்திக்கு பரிகரம்–
வெறுமையும் ஸ்வரூபமும் -ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் – பிரபதிக்கு பரிகாரம் அன்றோ

அலர்மேல்மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
(போக்யத்வம் மார்த்வம் வாலப்யம் மூன்றும் கீழே பார்த்தோம் இதுக்கு )
“அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,(பிரிய மாட்டாள்)
“உறை மார்பா” என்கையாலே, நித்திய யோகமும்,
(பிரியாமல் இருப்பதும் நித்ய யோகமும் கொஞ்சம் வாசி –
கோயிலே கதி என்றால் -கோயில் சாத்தின பின்பு -இருக்க முடியாதே –
சரணாகதி பலித்தே தீரும் -பிராட்டி இருந்தால் தான் பலிக்கும் –
எப்பொழுதும் பண்ணலாம் என்றால் நித்ய யோகம் இருக்க வேண்டுமே )

“நிகரில் புகழாய்”என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண”என்ற சொல்லின் பொருளும்,
(வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஸுசீல்யம் ஸுலப்யம் )
“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
“உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,
“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.
இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.

இனி த்வயத்தை விட இங்கு ஏற்றம்
அதில் அர்த்தத்தால் போதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின் பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.-
பிரபத்யே -ஆர்த்தமாக அங்கு –
அடியேன் -த்வயத்துக்கு அடையாளம் சொல்லும் ஸ்லோகத்தில் உண்டே -லக்ஷணம் ஸ்லோகம் –
அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –
(த்வயத்துக்கு லக்ஷணம் சொல்லும் இந்த வாக்கியத்தில் இருப்பதால் இது இங்கு தானாகேவே சொல்லவில்லை -)

ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச் செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன,
அஷட் கரணமாக சொல்ல வேண்டுமே -மூன்றாம் ஆள் கேட்க்க கூடாதே —
நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க,
அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து
துவயத்தை அருளிச் செய்கையில் அருளிச் செய்த வார்த்தை” என்று சீயர் அருளிச் செய்வர்.

“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க
“அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க,
இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ;
அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலை கொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே.
அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.”
போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ;
(கையில் வில் நழுவி போக்கற்று நின்ற நிலையே சரணாகதி தானே )
இங்ஙனே இருக்கச் செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே.
இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி;
இவன் செய்த குறைகளைத் தான் காணாக் கண் இட்டிருக்கை அன்றிக்கே,
தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ.

ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில் அவனோடு ஒப்புச் சொல்லி,
முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது.
தொட்டாரைத்தொட்டு “குற்றம் செய்யாதார் யாவர்” என்னக் கடவ இவள்,

இதில் உபாயத் தன்மை சொல்லச் செய்தே,
உபேய விஷயமும் ஸூசகமுமாயிருக்கிறது.
அதாகிறபடி எங்ஙனே? என்னில்,
இருவருமான சேர்த்தியிலே அன்றோ ஒருவன் அடிமை செய்வது;
அச் சேர்த்தி தன்னையே அன்றோ உபாயமாகப் பற்றுகிறதும். இத்தால் சொல்லிற்றாகிறது, நித்தியப் பிராப்யத்வம் அன்றோ.
நித்யாபூர்வ விஷயமன்றோ நித்தியப் பிராப்யமாக வல்லது.
அகலகில்லேன் இறையும் என்று-இது அகன்று இருந்து சொல்லுகிற வார்த்தை அன்று.

இவள் அவனுடைய ஸ்வாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும்,
அவன் இவளுடைய மிருதுத் தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரை கட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது. -காஷாய வஸ்த்திரத்தை உடுத்து இரப்பதற்குப் புகுகிறேன் என்று கூறி வளைக்கலாம்படி என்றபடி.-இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விட ஒண்ணாது என்கிறார்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் –

திருவேங்கடத்தானே –
அதற்கு முடிந்த பொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குண யோகமும், சேஷித்வமும், விசேஷ கடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும் இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலை பெற்றிருக்கின்றான்
என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. –
அந்தர்யாமித்வ ஸுலப்யம் -சதா சன்னிஹித ஆகாரம் அர்ச்சையிலும் உண்டே
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.

மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரன் சொரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் சொல்லி
சரணாகதியின் பிரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால்.
சரண்யன் ஸ்வரூபமாவது,
நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.
அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே
பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும்.
வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை.
ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில்
உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும்.

அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்திய ஸூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன்
முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க் கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே
ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத ஸ்வபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக் காரணங்களான ஞானம் சக்தி முதலான
எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

அதிகாரி ஸ்வரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பிய ருசியும் ஸ்வரூபப் பிரகாசமும் என்கிற இவையே யன்றோ.
திர்யக்குகளுக்கு இப்படி அடைதல் கூடுமோ? என்னில், ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவானை ஆராதனை செய்தானாகத்
துறைச் சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே;

ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;-புருஷகார சாபேஷமாயும் -அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –

உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது
விக்கிரஹம் ஆகையாலே என்க.

முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
“அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும்
கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.

பிராட்டியாலே பேறு சொல்லும் த்வயம் –
சரீரத்தால் பேறு வேதம் —
ஆத்மாவால் பேறு திருமந்திரம் –
ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் சொல்லும்

திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –பாத ரேகை போல் அமர்ந்து புகுந்தார்
மந்த்ர ராஜா திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -சாம்யாபத்தி கொடுக்கும் –
கிழிச் சீரை போல் தனம் –
உதடு துடித்துக் கொண்டே இருக்குமே
ராஜ குமாரர் கற்பூர நிகரம் போல் த்வயம் நமது பூர்வர்களுக்கு
கூரத்தாழ்வானனுக்கு சரம விமல திருமேனியில் த்வயம் ஓத உடையவர் கட்டளை –

———————

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே
.–6-10-11-

அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.-“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.

பெரிய வானுள் நிலாவுவரே –
“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம் புக
வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.

நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து
இப்பத்துங் கற்றார்பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
‘இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.

பஞ்ச ஸம்ஸ்காரமும் ஞான அனுஷ்டானங்கள் வேண்டாவோ -இப்பத்தில் அந்வயமே போதுமோ -என்னில் – வேணும் –இவை அந்தர் பூதங்கள்-ஆழ்வார் சம்பந்தம் என்று சொல்லும் பொழுதே-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்-ஆராவமுதே–5-8-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

புண்டரீகாக்ஷன் கண்ணிலே அன்றோ ஈடுபட வேண்டும் என்று பாங்கன் சொல்ல
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –-கீழே 57 பாசுரம் ஐந்தே துறை பார்த்தோம்
ஆராவமுதே இதன் விவரணம்-மலர்க்கண் வளர்கின்றான் அங்கும் உண்டே
நீர் பஞ்ச பூதங்கள் நல்லது செய்ய அந்தர்யாமியான அவன் நம்மைத் துன்புறுத்துவதே -என்று உள்ளுறைப் பொருள்-1-வைகுந்தம் போல் போக்யம்-2-எனக்கு உயிர்-3-யோகிகளால் என்ன அரியன
மூன்று விஷயங்கள் ஆழ்வாரது கண்கள்-

அவதாரிகை-தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும் தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-

கீழே புலக்குண்டல புண்டரீகத்த -பாசுரம் போலே இதுவும் -நாயகி உடைய கண் அழகில் ஈடுபட்டமை
தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினவிய பாங்கனைக் குறித்து உற்று உரைத்த பாசுரம் –

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர் நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை-தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன் தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
– -66–தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் 
—48–ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விடத்திலும் அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே ஆஸ்ரித ரஷண தீஷிதனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –-எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது என்று ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸ்ரீ ஆராவமுதாழ்வார்-திருவடிகளிலே செல்லவே நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில் அவர் எழுந்து இருத்தல்-இருத்தல்-உலாவி அருளுதல்-இன் சொல்லுச் சொல்லுதல்-குளிர நோக்குதல்-அரவணைத்தல்–செய்து அருளக் காணாமையாலே -ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்–நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு குலையாது ஒழியப் பெற்றோமே என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற ஸ்ரீ ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்–இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி

உண்ணாது இத்யாதி –பிராக்ருத போகங்களால் தரியாதாராய் –பிரக்ருதி-ப்ராக்ருதங்கள்-த்யாஜ்யம் -என்னும் புத்தியை உடையராய் –அவ் வாத்மா வஸ்து தான் ஸ்வதந்த்ரம் -என்று இருக்கை யன்றிக்கே –
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக -ஈஸ்வர ஜ்ஞானத்தை உடையராய் –இது அவனுக்கு பிரகாரம் -என்று இருக்கும்படி –பரம யோகம் கை வந்துள்ள அவர்களுக்கும் –எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் –அவர்களும் இக் கண்ணுக்கு இலக்கானாராகில் அவர்களுக்கும் ஆஸ்ரயமான பரத்வம் தன்னையும் காற்கடை கொண்டு –இத்தையே அது அது -என்று எண்ணும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாய் உள்ளன –(கரையேற்றுவனுக்கும் அறு நான்கும் உபதேசித்த ஞானம் அன்றோ ஆழ்வாரது )-எரி நீர் வளி வான் மண்ணாகியகாரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம்  உப லஷணம்-
அக்நி-நீர் -காற்று -ஆகாசம் -பூமி -இவை அடைய தனக்கு விபூதியாக உடையவன் –எம்பெருமான் –
அவனுடைய விபூதி யோகம் தமக்கு பேறாய் இருக்கிறபடி –   அவனுடைய குணங்களோபாதி  
விபூதி யோகமும் தமக்கு உத்தேயமாய் இருக்கிறபடி –தனது வைகுந்த மன்னாள் –0மானாதி போல்
(மஹா நவமி சோலை போல் லீலா விபூதி போல் )ஆவது அழிவதாம் விபூதி போல் அன்றிக்கே –
ஒரு நாளும் அழியாததாய் –அவனுக்கு அசாதாரணமாய் –அந்தரங்கமாய் இருக்கும் நித்ய விபூதி உடன் ஒத்து இருக்கிறவள் –கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே –அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே –பிரதான அவயவகமாய் –என் பக்கலிலே வந்தவாறே – அசேத்யமாய் –அதாஹ்யமாய் – அழியாதாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் –பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் –
கண்ணுக்கு விஷயமாய் நின்று பாதகம் ஆகா நின்றன –அரு வினையேன் –ரஷகம் ஆனவையே
பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் –உயிரான காவிகளே –அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் –(நிரூபித்தவாறே ) என் பக்கலிலே வந்தவாறே உயிராய் – இவை தான் நிரூபித்த வாறே
வடிவு சில காவிகளாய் இரா நின்றன –உயிரான காவிகளே –உயிர் தான்-கொண்டு நின்று பாதகம் ஆகுமா –

வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்-கண்ணாய் -பரம பதம் போல் பேர் இன்பம் வடிவு எடுத்த தலைவியின் கண் –யோகியர்க்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-யோகம் கை வந்த பரம யோகிகளுக்கும் சிந்தனைக்கு உரியன-அவர்கள் பரம் பொருளை சிந்தனை மாற்றி இவள் கண் அழகையே சிந்தனை செய்வார்கள்-அருவினையேன் உயிராயின-பிரிந்து ஆற்றாமையும் துடிக்கும் அரு வினையேன் -உயிர் போலே தரிக்க முடியாமல் பண்ணுமே –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும் அதி நித்தரையும் யோக விரோதியாம் என்று துறந்து-யுக்தாஹார விஹாரராய்-யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு நிரந்தர த்யான தத் பரரான ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு நிரந்தர அனுபாவ்யமாய் மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்(ஆழ்வாரது கண்கள் )–எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் ) ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும் தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய–தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்-அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்–அருவினையேன் உயிராயின–நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு–அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின–காவிகளே— ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே காவி என்னாலானவை--கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-என்று அந்வயம்–இத்தால் ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய் ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்ம வஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய் அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய் இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்-எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்–அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில் தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன-எரி நீர் வளி வான் மண்ணாகிய-காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்-அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்-வெம்பெருமான்–அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி–தனது வைகுந்த மன்னாள்-மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே ஒரு நாளும் அழியாததாய் அவனுக்கு அஸாதரணமாய் அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்–கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே–அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே பிரதான அவயவமாய் என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய் பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன–அறு வினையேன்-ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் 

ஸ்வாபதேசம் –ஆழ்வார் ஞானத்தின் சிறப்பை பாகவதர்கள் அன்பர்களுக்கு சொல்லும் பாசுரம் –
பரமபதம் போலே அழிவற்ற -அனுபவிக்கத் தக்க ஞானம் –எங்களுக்கு மட்டும் இல்லை நிறைந்த அனுபவம் செய்யும் நித்ய ஸூரிகளுக்கும்-இன்பம் பயக்குமதாய்-யாவரும் மகிழ்ந்து சிரஸ் மேல் வைத்து கொண்டாடும் படியான ஞான வகைகளை காவி மலர்கள் என்கிறது –

ஸ்வா பதேசம்-இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும் பாகவதர்களுக்கு –தேவு மற்று அறியேன் -என்னும் படி இறே இருப்பது –
அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே –அதுக்கு அடியான பகவத் விஷயத்தை அநாதரித்து –இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம்  தலை நிரம்பின படியை சொல்கிறது –சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே –
அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகமாட்டானே

தாத்பர்யம்-ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீரியில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்-நாயகி நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-தோழன் இந்த அளவில் இவளின் கண் அழகில் உனக்கு ஈடுபாடு கூடாது என்ன அதற்கு மறுத்து தலைவன் பேசுகிறான்-செங்கழு நீர் போல் குளிர்ந்து மணமுடைய-கண் -ஆழ்வாரது ஞானம் –இத்தைக் கொண்டே-எனக்கு பிராண தாரகம் போல் நல் ஜீவனாய் -உள்ளதே-ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர் போல் அபரிச்சின்ன போக்யம் உள்ள கண்கள் இவற்றில் ஈடுபட்டது நான் மட்டும் அல்ல–நித்ய ஸூரிகளும் ––அன்ன பானாதிகளை விட்டு சம்சாரம் த்யாஜ்யம் ஸ்ரீயப்பதியே உத்தேச்யம் என்று இருக்கும் மஹா யோகிகளுக்கும் இக்கண்ணைக் கண்டதும் வேறே ஒன்றில் கண் வைக்க இயலாதே இந்தக் கண்ணை நித்தியமாக அனுபவிக்கப் பெறாத பாக்யம் இழந்தேன் என்று வருந்துவதாகச் செல்லும் பாசுரம் –

5-8-ஆரா அமுதே! ப்ரவேஸம்

ஸ்ரீ நாதமுனிகள் திருவவதாரம் -823–ஸ்ரீ கீதாச்சார்யன் தானே மனுவுக்கு அருளிச் செய்ததை மீண்டும் வெளியிட்டால் போலே அன்றோ –
திராவிட ஸ்ருதி தர்சகாய நம-திரு நாமம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வாருக்கு -அகதிகளுக்கு ஒரே சரண் அன்றோ இவன் –
மகர சங்கராந்தி–ஸ்ரீ கோமள வல்லித் தாயார் – பொற்றாமரை -தேரோடு இற ங்கி திருக் கல்யாணம் –
ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார் -ஸ்ரீ திரு மழிசை பிரான்
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அழியாமல் இருக்க ஆராவமுதம் -சரீரம் அழியாமல் இருக்கவே அமுதம் -உப்புச் சாறு –

ஸ்ரீ சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து
அநந்ய கதியாக-வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்;
இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க;
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே,
“இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல்,-ஆகிஞ்சன்யம் கீழே –
மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் -அநந்ய கதித்வம் இதில் –
என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
தரித்த இது தான் திருக் குடந்தை யளவும் கால் நடை தந்து போகைக்கு உடலாயிற்று.

“ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
இங்கே, ‘வேறு ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல்’ என்றிருக்கையாலே,
“ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச் செய்த மூன்று யோசனைகளையும் தவிர,
(உபாயம் ப்ராப்யம் -க்ருஹம் –
இரண்டுமே உபாயம்
சபதம் இட்டு சொன்னது -மூன்றும் )
இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று தோற்றுகிறது. அதாவது,
எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது.
“நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது;
“நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது;
ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும்.
ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது, வேறு இரக்ஷகரில்லாமை.

தரித்த இது தான் திருக் குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று.
என் தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டா தொழியவும் அங்கு ஏறப் போக வேண்டுவான் என்? என்னில்,
வஸ்து ஐக்கியம் உண்டே -பிரபத்தி ஒரு தடவை தானே பண்ண வேண்டும் -விசுவாசம் குலையாதோ என்னில் –
‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா,
நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே;
“அடியார்களுக்காக எழுந்தருளி யிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக் கட்டாமை இல்லை,
‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதி யிடப்பட்டதா யிருக்குமே அன்றோ,
ஆன பின்பு, இங்குச் செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்;
(ராஜா ஆசன பேதத்தாலே கார்யம் செய்யுமா போல் )
ஸ்ரீ ரெங்கம் போன்ற இடங்களில் சரண் அடைந்த கலியன் திருக் குருங்குடியிலே பேறு பெற்றாரே –

இனித் தான், ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல.
‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ;
ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததே யாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும்,
நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று ஸ்ரீ திருக் குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, ஸ்ரீ பரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒரு புண்பாடும்,
தாயைக் கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்”
என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க் கொண்டு;
(ஆழ்வார் ப்ரவ்ருத்திகளை உபாயாந்தரம் என்று சங்கை கொள்வானோ என்ற புண்பாடும்
அன்னை ஊரார் என் சொல்வார் என்ற பயமும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று சொல்லிக் கொள்பவர் அன்றோ ஆழ்வாரும் )
நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

அம்பு எய்வார் படை திரட்டிக் கொண்டு போமாறு போல, திரு வயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில்
தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால்
மீளாமை இல்லை என்று பார்த்து “இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர்,
பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே,
இவன் செல்ல;

ஸ்ரீ பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவு படாமல் நடத்தா நின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே
இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே;

இவர் அடைந்த இடத்தில் திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல்,
திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல், அணைத்தல் செய்யக் கண்டிலர்.
“அந்த ஸ்ரீ கிருஷ்ணன், என்னை அக்ரூரனே! என்று அருளிச் செய்வர்” என்றாற்போலே
பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ;
(அக்ரூரரும் யாதவ வம்சம் )
அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய்,
இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து,
(ஆரா அமுதம்-போக்யதை -செந்தாமரைக் கண்ணன் -ஸுந்தர்யம்
உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ -போர நொந்து )
பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறா விட்டால்
அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு,
இன்னம் எத்தனைத் திரு வாசல் தட்டித் திரியக் கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக் கட்டுகிறார்.
(அநந்ய கதி ஞானம் உடையவர் அன்றோ -இவன் நித்ய சந்நிதி உள்ள வேறே திவ்ய தேசங்களைச் சொன்னவாறு )

எட்டாம் திருவாய் மொழியில் கீழ் -ஸ்ரீ வானமா மலை திருவடிகளில் அனுபவத்தை அபேக்ஷித்து அவன் தம் திருவடிகளில்
உபாய பாவத்தையும் பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய் பின்பும் அனுபவம் சித்திக்கக் காணாமையாலே அவசன்னரான இவருக்கு
ஆராவமுத ஆழ்வார் தம் வடிவு அழகை பிரகாசிப்பிக்க -அங்கே தம் அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்து
ஆராவமுதாழ்வாருடைய நிருபாதிக சம்பந்தத்தையும்
சம்பந்த கார்யமான அவதார உஜ்ஜ்வல்யத்தையம்
அவரை ஒழியத் தம்மை அந்நிய நிரபேஷராக்கின படியையும்
அவருடைய அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான நிரதிசய போக்யத்தையும்
போக்யதா பிரகாசகமான விக்ரஹ வை லக்ஷண்யத்தையும்
விபரீதமே பலிக்கிலும் விடாதபடியான தம்முடைய அநந்ய கதித்வத்தை பிரகாசிப்பித்த படியையும்
அனுமதியையும் பிறப்பித்து அனுபவிப்பிக்கும் ஆகாரத்தையும்
ஆந்திர அனுபவ விஷயமான அதிசயித சாரஸ்யத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகார விசிஷ்டரானவர் ஆலோக அலாபாதிகளாலே நம்மை அனுபவித்திலரே என்று
ஸூத்தி சாஷாத்கார ஸந்நிஹிதரான அவர் தம்மையே நோக்கி அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிட்டு
எல்லா அவஸ்தையிலும் முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளே யல்லது உபாயம் இல்லை என்று பிரதிபத்தி பண்ணித் தலைக் கட்டுகிறார் –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
–5-8-1-

முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன;-அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி-ஆரா அமுதே--சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக் கூடியதாய், பிரஹ்மசரியம் முதலான வற்றினின்றும் நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும்.-தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.-ஆரா அமுதே – இத் திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச் சொல்லே ஆயிற்று.

வட தேசத்திலே லோக சாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன,
அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன,
நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

அடியேன் –-மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.-இளைய பெருமாள் -“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே குணங்கள் தானே ஈர்க்கும்-

நான்’ என்று இருக்கக்கூடிய இவர் தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ;-அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி.-சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து
அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. –
ஞானியை விக்ரகத்துடன் ஆராதிக்கும் -திருமேனி ஆத்மா தத்வம் ஆனதே –சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை தவிர்ந்து அன்பு தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இரா நின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.–கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ ‘உருக்குகின்ற’-அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி.-தேசமான அணிகலனும் இவர் கை கூப்புச் செய்கையே அன்றோ.

நெடுமாலே’-எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு-அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.-மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன்-அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம்-பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது-என்னில் முன்னம் பாரித்து தான் முற்றப் பருகினான் –-

சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் – மிக்க கனத்தை யுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக் கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு-கைங்கர்யம் செய்வாரைப் போலே அசையா நிற்கும்.-சீர் – கனமும், அழகும்-ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடி யாகிற சீர்மை-எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என நிகழ் காலத்தாற் கூறுகிறார்.–நித்ய ஸூரிகளாய் வந்த சீர்மை

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.-‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.
கிடந்தாய் கண்டேன் –-“சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன்,-நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல், அணைத்தல் செய்யப் பெற்றிலேன் என்றபடி

எம்மானே--இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ –
வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –என்கிறார் –

—————

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?
–5-8-2-

எம்மானே! என் நான் செய்கேன் –-உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார்.-நீயே உன் காரியத்தைச் செய்து தலைக் கட்டிக் கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ.-பரதந்த்ரன் அடியேன் அன்றோ -ஸ்வா தந்த்ரன் அல்லன்-சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்.- சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-

என்னை ஆள்வானே –காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என் வழியே யாக்கி என்னைக் கை விட்டாயோ. என்றது,-அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி, குண ஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி.

எம் மா உருவும் ஆவாய் –-எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே-எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே!-பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.-வேண்டுமாற்றால் – “தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல்.-அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்;
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.
அன்றிக்கே,-‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு-“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அடியார்களைக் காக்கும் பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல்.
எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி;

கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார்-“வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.
இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும்,
இவன் கர்மங்கள் அவன் காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லா நிற்கும்.-இனி, அவனுக்குக் கர்மம் என்னப் பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு.-இவனுக்கு இவன் தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே.-இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன் பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும்.-எழில் ஏறே ––பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை.-கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ.பட்டி மேய்ந்த ஓர் காரேறு – என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பை யுடையவனாயிருக்கும்.-ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்-அஹம்வோ பாந்தவோ ஜாதோ-சூழ்த்துக் – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

என் நான் செய்கேனே –-இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என் செய்கேன்? திருக் குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன,
இத் தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! –-தெய்வ வண்டு அன்றோ
‘இக் கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய்.
‘இவை ஒழிய -திருக் கண்கள் கடாஷம் ஒழிய -மது பானம் செய்யோம்’ என்கை யன்றோ
இவர்க்கு இங்ஙன் பட வேண்டுகிறது.
இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும்.-அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.

—————–

என்னான்  செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக் கடவதாக நினைத்திருக்கிறாயோ?-என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக
நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-“என் நான் செய்கேன்’-என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி 

‘யாரே களை கண்’ என்றதனால்,-அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ?
ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள்-என் காரியம் செய்யவோ? -நெறி காட்டி நீக்குதியோ

என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –-என்னை அறியாயோ!
பிறரை அறியாயோ!-உன்னை அறியாயோ-என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.-ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய, முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை- இம் மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன 

உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –-உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே. பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்-காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே
ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.

‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,-‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.

கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்–இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள்-அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ.

உன தாள் பிடித்தே செலக் காணே--உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும்.-காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும்.‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதிகுலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது,-ருசியில் வந்தால் பரபக்தியை யுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில்,-பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.-

————————-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
–5-8-4-

எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் -“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், அதனாலே அழகினை விவக்ஷித்து, வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக் கொள்ளக் கூடியவனே!-அழகைக் கொண்டே நாதன் ஆனவன் –மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும்.-செல்வந்தர் என்றபடி-அப்போது, இவனே எல்லா உலகங்களுக்கும் சேஷி-ர்வாஹகனாய் –ஒப்பற்றவனான –சர்வேச்வரன்

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்--நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,-உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவா நின்றாய்,-கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது.-உன்னைக் காண்பான் நான்-
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக் குடந்தையில் திருக் கண் வளர்ந்தருளுகிற உன்னை,-மிக்க காதலையுடைய நான், அத்தலை இத் தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவா நின்றேன்.-உன்னைக் காண்பான் நான்-
காண்கிறவன் நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி.-உன்னை –-மேலே கூறிய –ஆராவமுதே –மூர்த்தி –இரண்டு இனிமையும் உண்டே –

உன்னை’ என்னா நிற்கச் செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில்,
‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, –கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி.
விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே.-ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.-இனிமையையுடைய உன்னை-ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து” என்று ஆண்டான் அருளிச் செய்வர்.
அன்றிக்கே,-வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்
“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16.-இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.-சபலர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,-விரக்தர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.

—————-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.
–5-8-5-

அழுவன் –-குழந்தைகள் செய்வதனையும் செய்யா நின்றேன்.-“மற்றவள் தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ-.தொழுவன் –
வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்“அஞ்சலி: பரமா முத்ராஆடிக் காண்பன் – இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் -பசியர்-ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்.-என் பட்டால் பெறலாம்’ என்று அறியாரே. —–பாடி அலற்றுவன் – காதலால் வழிந்த சொல் பாட்டாய், அது தானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை.

தழு வல் வினையால் –-இப்படிப் பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ -‘உடன் வந்தியான-வர்த்தியான- வல்வினை.-என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே.-பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே.
வாராயோ என்றார்க்கு-சென்றேன் என் வல் வினையால் –போலே –சத்ருக்னன் அநக போலே –

செந்தாமரைக் கண்ணா
1-கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு-ஆர்த்தருக்கு- இடாதாரைப் போலே.
2-வேறு முகத்தாலே -சம்பந்தத்தாலே -என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை,
3-என் ஜீவனம் ஒருமுகம் -ஒரு லஷ்யம்-செய்து கிடக்கிற தன்றோ.

தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய்,-ஸ்வரூபம் – ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி.-வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரிய சிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-தேக யாத்ரை கர்மாதீனம் -ஆத்மா யாத்ரை கிருபாதீனம் –த்ருஷ்டம் அத்ருஷ்டம் இரண்டுக்கும் நமக்கு பொறுப்பு இல்லையே-கைங்கர்யத்திலே நாம் கண் வைக்க வேண்டும் –

——————–

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே
.–5-8-8-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் – நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;-அறிவிப்பே அமையும் –என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை-களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ?-பரிகரம் இல்லை என்னப் போமோ;-நேமிப்படையாய்-இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ?-தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் –தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே-வளைவாய்-உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? ‘’ –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ

குடந்தைக் கிடந்தாய் மா மாயா – சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது -ஸூ லபன் அன்று என்ன ஒண்ணாது -ருசியுதபாதகன் அன்று என்ன ஒண்ணாது-திருக் குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ. நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.-இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை – அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணி அருளவேண்டும்.-அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.-

———

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–
5-8-9-

என்னை இசைவித்து – நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து.-இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு.–தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சினை வஞ்சித்து -எதிர் சூழல் புக்கு -ஒருவனை வளைக்க ஊரை வளைப்பாரைப் போலே –-உன் தாள் இணைக்கீழ் இருத்தும் – நித்தியஸூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே!-சாக்கியம் கற்றோம் -இத்யாதி -பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை.
நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதி அடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி-அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது.-அசைவு இல் அமரர் தலைவா –குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தை யுடையவர்கள்-ஆதிப் பெரு மூர்த்தி--இவ் வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே!-மூர்த்தி – ஐஸ்வர்யம் உடைய ஸ்வாமி.

அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் – உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய்.-வருத்தம் அறுதலாவது, கண்களால் காண முடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம் தீர்தல்.-அன்றிக்கே, அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல்.
அன்றிக்கே, அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல்.
ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே,-மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி
கிடந்தாய் காண வாராய் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும்.
செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, -புருஷ ரத்னங்கள் ––‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார் புருஷ ரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.-

——————

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–
5-8-10-

வாராஅருவாய்--வாராத அருவாய். என்றது, புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி.-நம் சம்ப்ரதாயம் -அரூபமும் ஒரு வகை ரூபம் தானே -சர்வசக்தன்-அருவாய் வரும் என் மாயா –மறந்து பிழைக்க ஒண்ணாதபடி அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தை யுடையவனே!-அரு என்று ஆத்மாவாய், அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.
மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவனே! 

உன்னை அநுபவிப்பதற்குத் தடையாக வுள்ள கருமங்களைப் போக்குவித்து,
‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே!-“தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி
என்னை அடிமை கொண்டாய்-திருக்குடந்தை ஊராய் –-என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,-நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.-நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்ட வேண்டும்படி யாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே-பர வ்யூஹ விபவங்களை-வ்யாவர்த்திக்கிறது ––உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.-அடியேன் – யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.-இன்னம் உழல்வேனோ--என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக் கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக் கடவேன் –

——————

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.
–5-8-11-

திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற
ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு,-மரங்களும் இரங்கும் வகை இங்கு; இனி, நாம் இரங்குகிற இது தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு;-ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லாரை-இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள்–மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–தங்கள் மௌக்த்யம் தீர்ந்து பாவ வ்ருத்தியுடன் சொல்ல வல்லவர்கள்-மான் போலே இருக்கிற நோக்கையுடைய மதிமுக மடந்தையரான திவ்ய அப்சரஸ் ஸூக்களுக்கு- ப்ரஹ்ம அலங்கார முகத்தாலே கமநீயராம்படி ஆதரிக்கப்படுவர்கள்
மானேய் நோக்கியர்க்குக் காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆதரணீயர் என்று த்ருஷ்டாந்த அபிப்ராயமாகவும் சொல்லுவர்–அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில், முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.-உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. ““தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னா நின்றதே அன்றோ.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று -நோற்ற நோன்பு -5-7-

March 1, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இதுவும் அடுத்த பாசுரமும் கிளவித் தலைவனின் பேச்சு-தலைவியின் கண் அழகு ஸ்லாகித்து பேசும் பாசுரம் இது-அடுத்து இதில் இவ்வளவு ஈடு பாடு கூடாது என்று கழன்று பாங்கன் பேச-அத்தை மறுத்துப் பேசுவது -ஆழ்வாரது ஞானத்தின் சீர்மையைச் சொன்னபடி-நல்லார் நவில் குருகூரான் அன்றோஇந்த இரண்டுக்கும் நோற்ற நோன்பிலேன் ஆகிஞ்சன்யம் சொல்லும் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -ஆறு எனக்கு நின் பாதமே சரணம் அநந்ய கதித்வம் சொல்லும் ஆராவமுது விவரணம் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –பதிகங்களும் அடுத்து அடுத்து உள்ளன –ஆழ்வார் ஞானம் –அவன் திருவடியே சரணம் என்று இருந்தும் நமக்கு உபதேசித்தும் அருளிச் செய்த -பாசுரங்கள் இவை-இதுவே புகல் இப் பாசுரம் -வேறே கிஞ்சித்தும் இல்லை-இத்தை விட்டால் வேறே இல்லை அடுத்த பாசுரம் –ஓரோ கருமம் உற்று -உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகில்லேன் செய்த வேள்வியர் -அங்கு போல்-காதுடன் உசாவி -போதயந்த பரஸ்பரம் -சாஸ்திரம் கேட்டு ஞானி காதுகள் தானே பேசித்தான் ஞானம் வளரும் –செவி அளவு நீண்டு என்றுமாம் –1-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று-உள்ள கண்கள்–2-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி -உள்ள கண்கள்–3-உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் உள்ள கண்கள்–4-உற்றமுறாதும் மிளிர்ந்து உள்ள கண்கள் -யெம்மை உண்கின்றவே -என்றவாறு-

அவதாரிகை தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள்  தனக்கு பாதகமானபடியை
பாங்கனுக்குச் சொல்லுகிறான் –தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –
ஆழ்வாருடைய ஞான வைபவத்தில் ஈடுபட்ட அன்பர் பாசுரத்தை நாயகியின் நோக்கில் அகப்பட்டு உரைத்த நாயகன் பேச்சாலே அருளிச் செய்கிறார்

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்-கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு-(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்-உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல்)இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே ) அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை–தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன் ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை-வண்ணம் சிவத்தில் அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன் அவன் நோக்கின் வாசியை-செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் இதில்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
–65 –தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –

நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை (இது) என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது
—-47–அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும் ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செய்கிறோம் என்று ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய-(சிலேடை -பாட்டுக்கு அடி -திருவடி) வேறு ஒரு உபாயம் இல்லை -என்று சம்சாரி சம்ரஷண அர்த்தமாக ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ்ரீ வர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற-நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –அவ்விடத்தில்- அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்

கற்றுப் பிணை மலர் –கன்றான மான் –முக்தமான மானுடைய கண் –மலர்க் கண் –மலர் போல் இருக்கிற கண் என்னுதல் –விகசிதமான கண் என்னுதல் –குலம் வென்று –அஜ் ஜாதியாக வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்றுஒரோ கார்யத்திலே உற்று –அதிலே நெருங்கி –அதை செவியொடு உசாவி –சர்வ விஷயமாக ஓர் இடத்திலும் பற்று இன்றிக்கே இராமே –ஒன்றிலே துணிந்து –அதிலே நெருக்கி –அத்தை தேசிகரோடே-போத யந்த பரஸ்பரம் -பண்ணுவாரைப் போலே- இவனையே ச விஷயமாக (விசேஷமாக )கடாஷிப்பது –இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதா-இருந்தபடி –யான் நோக்கும் காலைநிலை நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் (திருக்குறள்) -என்கிறபடியே –உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்சர்வ ரஷகனாவன் திருவடிகளில் இருந்து –அவன் எல்லைக்குள்ளே இருந்ததாயிற்று பாதகம் ஆகிறது –உற்றாம் உறாது மிளிர்ந்த –உற்றும் உறாதும் மிளிர்ந்த மாறுபாடுருவும்படி இவனை நோக்குவது –அந் நோக்கிலே பரவசனாய் –இவன் பார்த்தவாறே அந் நோக்கை மாற வைப்பதாக கொண்டு மிளிரா நின்றுள்ள –கண்ணா யெம்மை உண்கின்றவே –கண் என்கிற வ்யபதேசத்தாலே –ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது –இணைக் கூற்றங்கள் கொலோ அறியேன் -ஆழ்வார் அருளிச் செய்தது போல்-

ஸ்வா பதேசம்-இத்தால்–ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது – கற்றுப் பிணை மலர்க் கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது (அறியாத பிள்ளைகள் போல் ) ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால்
பிரபத்தியை சொன்னபடி இறே-இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ – கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் –அதில் கர்த்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது –இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே –சாதனத்தில் அன்வயியாதே- ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே-பிரார்த்தனா மதி சரணாகதி–அறிவும் வேணும்-பற்றினதுவும் உபாயம் இல்லை என்ற அறிவும் வேண்டுமே-அவன் திருவடியே -இசைவித்து அவன் தாளிணைக் கீழ் இருத்துமவன் -ஸ்வீ காரத்தில் உபாய புத்தியுயைத் தவிர்ந்த ஞானம் -ஆழ்வாரது – இது தானே குலமாக வென்ற ஞானம் ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ கண்ணா இத்யாதி –சொன்ன படியை உடையராய் இருக்கிற(ஞானிகள் அனைவருடைய ஞானங்களையும் விழுங்கிய ஞானம் தானே ஆழ்வாரது )
இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று இருப்பதாய் – ஒரோ கருமமும் உற்றுப் பயின்று – செவியொடு உசாவினால் போல் இருப்பதாய் – உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் இருந்து – உற்றும் உறாத மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்ற – என்று அந்வயம் –

தலைவியின் நோக்கில் ஈடுபட்ட தலைவன் பாசுரம் –கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று —இளைய மான் பேடை நோக்கும் நோக்கத்தினும் இவள் நோக்கம் அழகியதாய் உள்ளதே-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்தில் பொருந்திய காமத் குறிப்பு வெளியாம்பாடி அன்போடு நோக்கியும் தான் நோக்கும் பொழுது அவள் நாணத்தால் எதிர் நோக்காது வேறு ஒரு வஸ்துவை பார்ப்பவள் போலே வேறு இடத்தில் செலுத்தியும்
இப்படி பல கால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண் பார்வை காதல் அளவும் செல்லுதல் –
தான் கருத்தூன்றியதொரு கார்யத்தைப் பற்றி காதை யடுத்து வினவி-அதனோடு ஆராய்தல் போலும் –
நாயகியின் கண்கள் காது அளவும் நீண்டு விலக்ஷணமாக இருப்பதை வெளியிட்ட வாறு –உற்றமுறாதும் மிளிர்ந்த –குறிப்பு நோக்கை அனுகூலமாகவும் புறம்பு நோக்குவதை பிரதிகூலமாகவும் கொண்டு –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்யெம்மை உண்கின்றவே-சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் விபூதியின் கண் தமக்கு இந்த நலிவு உண்டாவதே –உண்கின்றன -என்னை வசப் படுத்து கின்றன -நலிகின்றன –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று–ஒரோ கரும முற்றுப் பயின்று-தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே-பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்–செவியொடு உசாவி-மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும் நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த ஈஸ்வரனுடைய திருவடிகளிலே–உற்றமுறாதும்-உற்றும் உறாதும்-கிட்டினார் கண் போலேயும் கிட்டாதார் கண் போலேயும்–அதாவது உகப்பும் செல்லாமையும் தோற்றி இருக்கை-நாயகனைக் கண்ட உகப்பும் இவனை ஒழியச் செல்லாமையும் தோற்றும்படி பார்வையிலே அறியலாய் இருக்கை–மிளிர்ந்த கண்ணாய்-உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி கண் என்று பேராய்-எம்மை உண்கின்றவே-நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள் கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று-

இத்தால்–கற்றுப் பிணை -இத்யாதியாலே–இவ்வாழ்வாருடைய ஞானம் ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி-ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே -ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும் ஸ்வரூப விரோதிகளிலும் புருஷார்த்த விரோதிகளிலும் சாதன விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி–செவியொடு உசாவி –என்கையாலே இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது-மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று–எம்மை யுண்கின்றனவே -என்கையாலே-இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம் கற்றுப் பிணை-கன்றான மான் முக்தமான மானினுடைய-மலர் கண்ணின்-மலர் போலே இருக்கிற கண் என்னுதல்-விகஸிதமான கண் என்னுதல்-குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி-ஒரோ கார்யத்திலே யுற்று அதிலே நெருங்கி அத்தைச் செவியோடே உசாவி ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே ஒன்றிலே துணிந்து அதிலே நெருங்கி அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது–உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்-மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது-அந்நோக்கிலே பரவசனாய் இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்–எம்மை உண்கின்றவே-கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது–இத்தால் ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறதுஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால் ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது–பின்னை ஞான கார்யம் அன்றோ –கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில் அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது-இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே-செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
-சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்–ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்-தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய் ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்-செவியொடு உசாவி-அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்–உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும் அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய–உற்றமுறாதும்-கிட்டின அவளாயும் கிட்டாத அவளாயும்–மிளிர்ந்த கண்ணாய்-கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்–எம்மை-என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு–உண்கின்றவே-எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

ஸ்வாபதேசம் –-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று–சம்சாரமாகிய காட்டில் -பேதமையுள்ள மிருகம் போலே ஐம்புல வழியில் பரவும் ஞான சாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமான ஆழ்வார் ஞானம்
ஒரோகரும-முற்றுப் பயின்று-ஆழ்வார் ஞானம் அவன் ஸ்வரூபாதி களில் பொருந்தி உன்று ஆராய்ந்து நிலை பெற்ற ஞானம் செவியொடு உசாவி –செவி -சுருதி -ஆழ்வார் ஞானம் மறைகளு உடன் ஓத்தே இருக்கும் என்றபடி –உலகமெல்லாம்-முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்-உற்றமுறாதும் எண்ணம் புகுந்து -மானஸ அனுபவம் உற்றது –கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே-பூர்ண அனுபவம் இல்லாத -உறாத -இரண்டையும் காட்டிய படி-மிளிர்ந்த கண்ணா -எல்லா நிலையிலும் ஆழ்வார் ஞானம் குவியாது விசாலித்து உள்ளபடி யெம்மை உண்கின்றவே -இப்படிப் பட்ட ஆழ்வார் ஞானம் தம்மை வசப்படுத்திய படி –

தாத்பர்யம்–ஆழ்வாருடைய ஞான வைபவம் -சொல்லும் பாசுரம் நாயகி பேச்சால் அருளிச் செய்கிறார்
இரண்டு கண்கள் என்னை ஈடுபடுத்தி -வேறே எங்கும் செல்ல வேண்டாத படி ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்–மான் பேடைகள் சேர்ந்தாலும் -குலத்தையே வெல்லும் பிரபன்ன ஜன கூடத்ஸ்தர் அன்றோ-அதி ஸூந்தரமாய் சாமான்யம் இல்லாமல் -விலக்ஷணமான கண்கள் நான் வேறே இடம் பார்க்க என்னையே பார்க்கும் நம்பினான் –மடவாரையும் முன் எல்லாம் செம் பொன் மாடத் திருக் கோயில் – திருடப் போனேன் பயன் ஒன்றும் இல்லாமல் பாங்கும் இல்லாமல் இருக்க என்னைத் திருத்திப் பணி காய்ந்து அருளினாரே –நான் திருந்திய பின்பு-இங்கு இல்லாமல் -தன்னுடைச் சோதி புறப்பட்டு போனார்–செவியுடன் ஆலோசித்து -செவியாலேயே ஸ்ருதி சொல்வதைக் கேட்டு நிச்சயித்து-ஆழ்வார் நினைவால் இவர் தமக்கு சிஷ்யன் அல்லர் -தான் ஆச்சார்யர் உடைய ஸஹ சிஷ்யரே என்று திரு உள்ளம் கொண்டவர் அன்றோ -இத்தை அறிய உசாவி ஆலோசித்து-செவி அளவும் நின்று உலாவும் உலகம் அளந்த அவனது திருவடிகள் போல் ரக்ஷகனாய் இல்லாமல் என்னைப் பாதிக்கின்றனவே–மத் பாபமே-ஆழ்வார் -அனுபவம் பகவத் அனுபவத்துக்கும் மேலே அன்றோ-ததீய சேஷத்வ பாரதந்தர்யம் சரம பர்வ நிஷ்டை பெறாமல்-ஆழ்வாரது திருக்கண்கள் துன்பம் கொடுக்கின்றனவே -என்று வருந்திச் சொல்லும் பாசுரம் –

5-7-நோற்ற நோன்பிலேன்-ப்ரவேஸம்

மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தார்;
அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்?
தன் பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன்
நம் பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது;
அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’ என்றது,
ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட தியானம் பக்தி யாகையாலே,
இது உபாயமாகவேணும் என்றிருந்தானாகவேணும் என்றபடி.–
பிரசக்தி -தஸ்ய பிரதி நிஷேதம் -இருந்தால் தானே சொல்ல வேண்டும் –

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.-
“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான
அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை
முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே,
இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற
வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

நோற்ற நோன்பு -நாலிலும் சரணாகதி -ரகஸ்ய த்வயம் படி-திருமந்தரம் -சரம ஸ்லோகம்
-5-7 முதல் 6-10 நாராயணா –சராணாகதி பூர்வாக கல்யாண குணங்கள் அனுபவம்
6-10- வாக்ய த்வயம் பிரக்ரியை படி சரணாகதி –
ஸ்ரீ வைகுண்ட இருப்பு போலே -சேவை -அமர்ந்த திருக் கோலம் -கூந்தல் –கேள்வன் -வைகுண்ட நாதன் -ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்
தோத்தாத்ரி -தெற்கு கோடி வடக்குக் கோடி அமர்ந்த திருக் கோலம் -பத்ரி விசால் -நாராயணன் –
நடுவில் நின்றது -திருவேங்கடம்-ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் -கிடந்தது ஸ்ரீ ரெங்கம் மட்டுமே
நாச்சியார் அனுக்ரகம் -பொன்னடிக்கால் ஜீயர் -பெண்ணாகப் பாவித்து -கனுப்பொடிக்கு
இன்றும் ஸ்வாமி திருமடத்துக்கு -உத்சவம் கண்டு அனுபவிக்கிறார் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் -சூர்ணிகை -163-

நீசர்களை ரக்ஷிக்க அன்றோ இங்கே வீற்று இருந்து அருளுகிறார் -ரஷ்ய
ரஷக அபேக்ஷையும் இருக்க அடியேன் இழக்கவோ

ஏழாம் திருவாய் மொழியில் -கீழில்- திருவாய் மொழியில் அநுகாரம் ப்ராப்தியோடு தலைக் கட்ட மாட்டாமையாலே
ஆர்த்தியே அதிசயித்து பாவனையால் வந்த அநு கார்த்தாலே அல்பம் ஆஸ்வஸ்தராய் ப்ரசோகம் பிறந்து
இவ்வளவில் தன்னை லபிக்கைக்குத் தானே உபாயமான இவன் முகம் காட்டாது ஒழிந்தது நம்முடைய அநுகார
அர்த்தமான பாவனையை உபாசனமாக நினைத்து
அதனுடைய சரம தசையில் வருகிறோம் என்று என்று விளம்பித்தானாக அதி சங்கை பண்ணி
நம் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்க அவன் ஆபி முக்கியம் பண்ணும் என்று அறுதியிட்டு
ஆகிஞ்சனரும் ஆசைப்படும்படியான அவனுடைய ஆச்ரித சம்ச்லேஷ ஸ்வ பாவத்தையும்
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித பரத்வ பிரகாசகங்களான அசாதாரண ஆகாரங்களையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண பிரகாரத்தையும்
ஆஸ்ரித விரோதிகளை அந்தரப்பேதம் பண்ணும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித உபகாரத்தால் வந்த உஜ்ஜ்வல்யத்தையும்
அகில சத்தா ஹேதுத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி அவன் இட்ட வழக்கு என்னும் அத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தால் வரும் விசேஷ உஜ்ஜ்வல்யத்தையும்
விரோதி நிவர்த்தகமான உபாய ப்ரகாஸகத்வத்தையும்
அநு சந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன்னை பிராபிக்கைக்கு ஹேது வான உபாயாந்தரங்களில் அகிஞ்சனாய்
ஆர்த்தனான எனக்கு உன் திருவடிகளே உபாயமாக அபகரித்த இதற்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவேன் என்று அலமரும்படி
தமக்குப் பிறந்த ஆசுவாச விசேஷத்தை ஸ்ரீ வர மங்கையிலே ஆசன்னமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வானமா மலையை நோக்கி விண்ணப்பம் செய்கிறார் –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே
.—5-7-1-

என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை,-“நோற்ற நோன்பிலேன்”–இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு;-“ஆற்றகிற்கின்றிலேன்–பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்;-சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த”--ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன்,மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ -பக்தியுடையேனல்லேன்-‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன-சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது-க்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார்.‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.

அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.-ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,-அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால்-அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில்,-ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால்
பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும், “ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே,
பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,-“உபய பரிகர்மித ஸ்வ அந்தஸ்ய ஏகாந்திக ஆத்யந்திக பக்தியோ கைகலப்ய:”-என்பது, — ஏகாந்திக அத்யந்திக -அவனைப் பற்றியே இடைவிடாமல் ஆத்ம சித்தி “சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆன பின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ
சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
“ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித: தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”-இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை.–புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.-கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே-புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு – சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது

உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை.-ஆனால், நீர் இந்நாள் வரை ஆறி இருந்தீரே? என்ன,-இனி--உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,-உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?-ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –-ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?-இனி –-என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.-ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.-அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?

உன்னை விட்டு-நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது.
அன்றிக்கே,-உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம்.-ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் – உன்னுடைய ஸ்வரூப ஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை.-“அங்ஙனம் அழைத்துக் கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு.
கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.

உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ?
நீ பரம போகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்திய வாசம் செய்யும் தேசம். பரம பதத்தையும் மறக்கச் செய்யும் தேசம்-வீற்றிருந்த--‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டா நின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே,-தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை (அங்கே சிறை இருப்பு போலே அவாக்ய அநாதர )– அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரான அங்கே வீற்றிருந்த எந்தாய்! -பரம பதத்திலே நெடுங்கை நீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ.-அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் –-காக்கும் பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன்.-உனக்கு மிகையான போது அல்லேனாய் ஆகி விடுவேன்-இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே.
பால் குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன்-ஸ்வரூபம் பெற்று அடிமை செய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.–ப்ரீதி உன் பக்கலிலே யானால் இழவும் உன் பக்கலிலே யாக வேண்டாவோ –

—————-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே
.–5-7-2-

“நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை,
இத் திருப்பாசுரத்தில் “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் –அங்குற்றேன் அல்லேன் – முக்தர் இந்தச் சம்சாரத்திலே – -உலாவினாற் போன்று சித்த சாதனனாய்த் -பேறு நிச்சயம் என்று உணர்ந்து -திரிகிறேன் அல்லேன்.-இங்குற்றேன் அல்லேன் –-இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்.-உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.-உன்னை மறந்து,“அவர் தரும் கலவியே கருதி”அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் -‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.- ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.

அங்குற்றேன் அல்லேன் – நித்திய சூரிகளோடு கூட அங்கே இருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன்.-இங்ஙனே ஆனால்,-பக்தி பாரவச்யத்தால் -நிரதிசய பக்தியால் – நீ வந்து முகங்காட்டுமளவும்-நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். -( எங்குற்றேனும் அல்லேன்-உம்மைத்தொகை )-பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு வகையர்;-அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார்
உன்னைக் காணும் அவாவில் -நிரதிசய பக்தியால் -வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் –
“காலாழும்”(பெரிய திருவந்.) என்றபடியே, பக்தி பாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன்-சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று ஆறியிருக்கப் பொறுமை யுடையவனல்லேன் –

ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளி வைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது-அதற்குப் பிற்பட்டதே? என்ன,
அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ-சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?

சங்கு சக்கரத்தாய் –-பரிகரம் இல்லையே? என்ன, ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது -1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது?

தமியேனுக்கு – 1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –
அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ
இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு--2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு.-தமியேன்–3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை.

அருளாயே –-என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ,-அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.-ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.-

————-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே
 –5-7-3-

கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங் நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை-சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி-என்கிறபடி பலம் உம்ம தான பின்பு சாதனத்திலும் அந்வயம் வேண்டாவோ என்ன இவ்வளவும் வர இதுக்கு முன்பே நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த பின்பு நீயே செய்து அருள வேணும்-

———–

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?
–5-7-4-

கேவலம் கிருபையாலே தாழ்ந்த தலையிலே நின்றாயே –-ஐவர்க்காய் –-அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ள வைத்தபடி.–மாயப்போர் தேர்ப்பாகு–எந்தாய் –-எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி.

பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு?
‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு உதவி செய்தாயில்லையோ? –அம்மானே –‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.

அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள்.
அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று,-‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில், சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான்.-சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-இவனும் அவர்களிலே ஒருவனாய் ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி.—வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை எங்கு எய்தக் கூவுவன் – நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது,-இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும்-

———-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!
–5-7-5-

அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே –நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே.
எனக்கு--வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:
” -ஸ்ரீ கீதை, 9: 34-
“என்னை வணங்குவாய்” என்றால்,உபாயாந்தர பக்தி யோகம் விதித்தால் – பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.-இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ,-ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச் செய்கிறார் மேல்:

எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –-அடியர் அல்லாதார் பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப் புக்கதோ இப்போது.-அங்கு புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தை குலைத்தீர் -இங்கு நீயே உபாய அத்யவசாய ஸ்ரத்தை குலைக்கப் பார்க்கிறீர் –கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து -தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி,-வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணினபடி

அம்மானே– சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச் செய்தது அடியார்களுக்காக அன்றோ?-உன்னை ஒழிய -ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ.
உன்னை ஒழிய -‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது.
“ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” -திருவாசிரியம், 7.-என்றாரே அன்றோ இவர்.
அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று,
சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் –-அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய்.——-அது நானும் கண்டேன் –-ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன,
இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்;-அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு,-அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி.-திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய் நிலை.-வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

————–

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே.
–5-7-6-

வாக்ய சேஷத்தால் சொல்லப்பட்ட கைங்கர்யத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.—-ஏனமாய் நிலம் கீண்ட – ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது.-காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.-சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.-என் அப்பனே-பிரளயத்தாற் கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?-கோலம் கொள்ள வேண்டுமோ?-(முகம் – வேறொரு பிரகாரமும்,-வராகத்தினது முகமும். கோலம் – வராகமும், அலங்காரமும்.)

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே –-தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று-ரக்ஷகமே- ஆராய்ந்து போருவது.
இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.
நித்ய ஸூரிகள் உடன் இருக்கும் பொழுதும் இவர் நினைவே அவனுக்கு-மணி மாணிக்கச் சுடரே –உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து,-இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்திய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –-சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் —-இரண்டு வித தேஜஸ் உண்டே –அப்ரமேயம் சீதயா உண்டே-ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –

அடியேன் தொழ வந்தருளே –சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற படி கண்டேன்-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்ற வேண்டும்.-நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும்-என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும்-நடந்து ஓர் இடத்தில் நின்றால் இளைப்பாற சிசிரோபசாரம் பண்ண வேண்டும் –

—————-

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே
.–5-7-7-

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, –சுரத்தாலே அறியும் பொருள் உண்டே –
“பட்டர், ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்;
ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப் பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச் செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, – சந்நிதியில் உபன்யாச உபயுக்தமாக திருப் பாசுரம் கேட்டு அருளுவாராம் –
இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்துஅநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார்
இவை சில ஈரச் சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச் செய்தார்;
நஞ்சீயர், இவ் வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.

உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன் தான் போக வேண்டியவனாக இருக்க,
அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ.
‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. -நெஞ்சு உருகி தாழ்ந்த குரலில் —
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே பாடுவராம்.

நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால்-திரவிய குணங்கள் போலே சேர்ந்தான்-அப்ருதக் சித்தம்- என்பதனைத் தெரிவித்தபடி.-திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.-நித்திய ஸூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் 

ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.-இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.-

வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை.-பிராப்பிய விரோதியாதல் பிராபக விரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லா நிற்கும்.
காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக் கட்டுவது.-சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்-அடியேனை அகற்றேலே – ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை,
‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கை விட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக் கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய்.
’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்க மாட்டாமை சொல்லுகிற வார்த்தை.
விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும்.-இறுக்கி அணைக்க கை நெகிழ அத்தையும் பொறுக்க மாட்டாமல் சொல்லும் வார்த்தை அன்றோ –-இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த் தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.-வர வேணும் என்கிற நிலையும் போய் அகற்றாது ஒழிய வேணும் என்கிறார்

————

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!
–5-7-8-

உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே-என்னை அகற்றினாய் அல்லையோ -உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்த-மாய வல் லைம் புலன்கள் –நமக்கே பழியாய் வந்து விளையப் புகா நின்றது’ என்று நீர்மை யுடையார் காரியம் செய்து தலைக் கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.-

————–

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே
.–5-7-9-

கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார்.-பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.-ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக் கொண்டவனே!-நப்பின்னை பிராட்டிக்கு சர்வ ஸ் வதானம் பண்ணின நிரதிசய போக்யமான வடிவை எனக்குத் தந்தவனே –மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்

தெள்ளியார் – தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.-இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ-அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினை யுடையவர்கள்- நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள்-மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.-என்றிருக்குமவர்கள்-

எனக்கு உய்யுமாறு அருளாய் அறச்சென்றற்றது கண்டாய்,– ஏஹி பஸ்யாமி சரீராணி போலே -விரஹ தாபம் தின்ற இவர் திருமேனியைக் காட்டுகிறார்-உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். -கைங்கரியம் என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு.-விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,-இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!
–5-7-10-

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் 
1–உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர்.-ஆறு – வழி. வழி – உபாயம்.
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2.
“இப் பொய்கைக்கு”என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.– என்னக் கடவதன்றோ.
சரண் – க்ருஹமாய் அத்தால் உபேயம்.-சரண் –வீடு -புகலிடம் -பிராப்யம்-ரக்ஷிதா அர்த்தங்கள்-ஆறு உபாயம் -நின் பாதங்களே உபாய உபேயம் என்றவாறு –
ஏவகாரம்-சரண் ஆகிற நின் பாதமே எனக்கு ஆறு –
கரு முகைப் பூ மாலை சும்மாடு போலே -புருஷார்த்தமாக அனுபவிப்பதை புகல் இல்லாமல் உபாயம் ஆக்குகிறோம்

2-அன்றிக்கே. “இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்வர்.-ஆறு – உபாயம். -நெடுமாற்கு அடிமை -ஒழிவில் காலம் எல்லாம் தானே உபேயம் –
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.
“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;-இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.-ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு ஆறு தருமிடத்தில், நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று சொற்களைக் கூட்டிக் கோடல் தகும்.

நின் பாதமே’ என்ற ஏகாரத்தாலே–மாம் ஏகம் – ஏக பதத்தை நினைக்கிறது. -இத்தால் ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் தவிர்க்கிறது –ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, இராஜ மகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.

3-“சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி-நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.-நின் பாதமே -உன் திருவடிகளில் ஆணை இட்டு சொல்கிறேன் -எனது ஆவியும் உனதே -என்கிறார் என்றபடி –

4-ரஷித்தா-அர்த்தம் அடுத்த பாட்டில் –மேலே அருளிச் செய்வார் –

நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!– திருத் துழாய் மாலை சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் – பரிமளிதமாய்-தர்ச நீயமான திருத் துழாய் -நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவனே – தேசம் அது –போக்யம் அது -குறைவற்றவர்கள் சாபேஷராய் இருக்கிறார் -நான் எங்கனே யுபகரிக்கும் படி-நீ குறைவாளன் ஆதல் -நான் அகிஞ்சனன் இன்றிக்கே ஒழிதல்-நீ உபகரியாது ஒழிதல் -நான் சேதனன் இன்றிக்கே ஒழிதல் செய்யப் பெற்றதோ-

—————–

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.
–5-7-11-

குருகூர்ச் சடகோபன் –-ஸ்ரீகீதையில் வேறுபாடு.-தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது–வேதம் பர தசை போலே -அவதாரம் போலே திரு வாய் மொழி-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,-வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய ஸூரிகளுக்கு அமுதாவர்.-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –