ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இது கால மயக்கு–கொன்றை மலர் பூக்கும் பொழுது வருவதாகச் சொல்லி-அவையும் பூக்க
தோழி -இவை மொட்டு விடத் தொடங்கிற்று -பூக்க வில்லை–இரண்டையும் சொல்லி -ஏமாற்றாமல் –
வருவதுக்கும் ஸூசகமாக மொட்டு விட்டது என்றும் சொல்ல வேண்டுமே –-கார்த்தனவே-சினத்தன
மலர்ந்தே ஓழிந்தில-முழுவதாக மலரவில்லை –கொண்ட பெண்டிர் –9-1-இதன் விவரணம்
பர உபதேசத்தில் ப்ரவ்ருத்தர் ஆகிறார் -நம்பிள்ளை-சகலவித பந்துவும் அவனே-வீடு சொன்னால் ஒரு கொண்ட -நான்கும் விரோதி ஸ்வரூபம்-அவன் வரவில்லை -விரோதி போக்கி தோழி ஆற்றுகிறாள் இதில்-மற்று ஓன்று இல்லை -சுருங்கச் சொன்னோம்- மானிடத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்-மலர்ந்தே ஒழிந்தில-கார்த்தனவே -இதுவே சுருக்கமாக இங்கே சொல்லி
ஆழ்வாரைக் கூட்டிப் போகும் காலம் அணித்தாயிற்று-உபதேசம் இன்னும் பண்ண வேண்டுமே -இதுவே காலமயக்கு–சம்சார வெறுப்புடன் ஆழ்வார் இருக்க-பாட்டுத் தோறும் வடமதுரைப் பிறந்தான்
ஆஹதோ மதுரா புரம்-ஆனானப்பட்ட அவனே பிறக்க நீர் இருந்தால் என்ன-உம்மைக் கூட்டிப் போகவே பிறந்தான் என்றுமாம்-அதே போல் இங்கும் பூக்கவில்லை கார்த்தனவே
இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால் பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க-யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகள் கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய் அக்காலமும் வந்து அவையும் பூக்கவும் அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர அத்தைக் கண்ட தோழி அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –காலம் தாமும் இளையது என்று ஆற்றின தோழி பாசுரத்தாலே தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்
மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு – அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –பஹூ முகமாக சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது
மலர்ந்தே ஒழிந்தில –அக் காலம் அல்ல காண் -என்னாமே தோழி – கெடுவாய்-இவை இங்கனே மலரா நிற்க அல்ல காண் -என்னும்படி எங்கனே -என்ன –மலர உபக்ரமித்த-இத்தனை காண் – மலர்ந்து சமைந்தது இல்லை காண் –மாலை இத்யாதி –மாலைகளாகவும் – அம் மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே –சுருளவும் இறே யவை தான் பூப்பது – கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் –தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –
தண்டுற நாற்றிக் கார்த்தன -என்னுதல் –தழைப் பந்தலாக பணைகள் தோறும் கண்கள் தோறும் நாற்றி –புலந்தோய் –புலம் –இந்திரியங்களாய்-தோய்கை-அபஹரிக்கையாய் –(புலந்தோய்-புலன்கள்-அபகரிக்கும் -பூமியில் படராமல் இரண்டும் உண்டே )புலம் -பூமியாய் –தோய்கை-ஸ்பர்சிக்கையாய் –
தரையிலே வந்து தோயும்படி -என்னுதல்-பொரு கடல் இத்யாதி –அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ –அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ –
ஆவது அழிவது ஒரு விபூதியும் –அழியக் கூடாததொரு விபூதியுமாய் இறே இருப்பது –அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை –-முதலிலே அழிகைக்கு சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை -பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட பூமியை தாவி அளந்து கொண்டு – அச் செயலாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் –தனது வைகுந்த மன்னாய் –உனக்கு ஸ்வரூப ஞானம் இன்றிக்கே ஒழியுமோ –-அவனதான நித்ய விபூதியோடு ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ –அவ் விபூதியை விடில் அன்றோ உன்னை விடுவது – உன்னை தளர விட்டு இருக்குமோ-ஆண்டு தோறும் அங்கு சென்று-நம் சடகோபனைத் தந்து அருளாய் என்ன கொடுத்து அருளுகிறானே-கலந்தார் -உன் ஸ்வ ரூபத்தை அறியாது ஒழிந்தால் –அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ –உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் -உன்னை விட்டு இருக்குமோ –கலந்தார் -என்றே-காணும் அவனுக்கு நிரூபகம் –ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும்-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -விமல சரம தேகம் அன்றோ-ஸ்வரூபம் இங்கு ஆழ்வார் ரூபம் நிலம் தாவிய எம்பெருமானே கலந்தார் – வேறே பெயர் இல்லாமல் இதுவே ஸ்வரூப நிரூபகம்—வா வெதிர் கொண்டு – வாசி யறியாத ஸ்த்தாவரங்களும் கூட –
அகால பலி நோ வ்ருஷா -என்று அவன் வர உத்யோக்கிகிற படியைக் கண்டு(இவையும் உத்யோகித்து )அலராமல் நிற்க –நீ தளரும் இத்தனையோ –வன் கொன்றைகள் – அவன் வரில் அலரக் கடவதாய் -இல்லையாகில் தவிருமதாய் –இப்படி அவன் வரவோடு தப்பாதான கொன்றைகள் –இவை பூத்தால் அவன் வந்திகிடுவான்-பூக்க வில்லையே-அதனால் வன் கொன்றைகள் குயிலே நீ கூவினால் அவன் வந்திடுவான் போல்–கார்த்தன –சினைத்தன –கருவடைந்தால்-ஒரு நிறம் உண்டு இறே இடுவது -அத்தை சொல்லிற்றாதல் –அன்றியே-கார்காலத்தைக் காட்டி நின்றன -என்றது ஆதல் –பொருகடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் – வன் கொன்றைகள் கலந்தார் வர வெதிர் கொண்டு கார்த்தன – மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில –-அன்றிக்கே கார்த்து மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –
கார்காலம் வந்தது அன்று -அவன் வருகையை முன்னிட்டு மகிழ்ந்து கொன்றை மலர்கள் அரும்பின –
கலந்து பிரிந்த தலைமகன் கொன்றை போக்கும் காலத்திலேயே வருவேன் என்று சொல்லிப் போக –
அக்காலமும் வந்து அவையும் போகச் செய்தே-அவன் வாராமையாலே தலைமகள் தளர அத்தைக்கு கண்ட தோழியானவள் – அக்காலம் அல்ல என்ன ஒண்ணாத படி-அவை முடிகிக் கொடு நிற்கையாலே இவை பூக்க உத்யோகிக்கின்றன அத்தனை -பூத்துச் சமைந்து இல்லை காண்-ஆன பின்பு அவனும் வந்தான் அத்தனை -நீ அஞ்சாதே கொள் என்று ஆசிவசிப்பிக்கிறாள்-அக்காலம் அல்ல காண்
என்னும் தோழி கெடுவாய் இவை இங்கனம் மலரா நிற்க அல்ல காண் என்னும் படி எங்கனே என்ன மலர உபக்ரமித்த அத்தனை காண் -மலர்ந்து சமைந்து இல்லை காண் -என்கிறாள்–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்–அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால் – தழைப் பந்தர் தண்டுற நாற்றி -என்கிறார் இத்தைக் கண்ட கண்கள் வேறு எங்கும் போகாது என்பதை –புலந்தோய் தழை- புலம் -நிலம் -தரையிலே வந்து தோயும்படி கவிந்து செழித்து உள்ள தழை என்றுமாம்–வைகுந்த மன்னாய்-எம்பெருமானுக்கு உரியவள் -உன்னைப் பிரிந்து அவன் ஆற்றான்-கலந்தார்-பிரிந்தார் என்னாமல் -கலந்தார் என்றது உன்னை கலந்து உன் தன்மை அறிந்தவர் உன்னை விட்டு இருக்க மாட்டார் என்றபடி-வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-வாசி அறியாத ஸ்தாவரங்கள் கூட வர இருப்பதைக் கண்டு அலரா நிற்க நீ தளர வேண்டுமோ –தாம் மலர்ந்தால் இவள் கலங்குவாள் என்று அறிந்தும் மலர்ந்த வன் கொன்றைகள்
கார்த்தன -கருக் கொண்டன -அரும்பின் நிலையை ஒழிய மலரின் நிலையை அடைய வில்லையே –
கார் காலத்தை காட்டா நின்றன என்றுமாம் –எம்பெருமானுக்கு உரியவரே-உம்மை ஆட் கொள்ளாது ஒழியான் –அவன் வரவை ஸூசிப்பிக்கும் காலம் தோன்றா நின்றது-வரும் காலம் இன்னும் அணுகிற்றிலை என்று கூறி ஆற்றிய படி –
மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி –கொன்றைகளானவை மாலையாகவும் மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே கொம்புகள் சிக்கனைத் தூக்கி மலர்ந்தே வியானவில்லை–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய–பொரு கடல்-செறிந்த கடல் என்னவுமாம்–தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே-அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான ஸ்வ பாவத்தை யுடையவளே–(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே-நித்யம் நிரதிசய போக்யம் -கீழ் அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழ்பவர் அன்றோ )கலந்தார் வர வெதிர் கொண்டு-தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி-வன் கொன்றைகள்-நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத வன்மையை யுடைய கொன்றைகள்–கார்த்தனவே –-கருவடைந்து அரும்பின இத்தனை-மலர்ந்தன வில்லை என்றதாயிற்று-வன் கொன்றை என்று அரும்பின சிக்கனவைச் சொல்லி மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )-இத்தால் விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே (கொன்றைப் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு உஸாத் துணையாக ஆசைப்பட்டவர் விளம்ப அஷமதையாலே சிதிலராக ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது–இதில் வன் கொன்றை -என்கையாலே ஸ்த்தாவர பிராயராய் அஞ்ஞரான சரீரிகளுடைய தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )-புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் ) வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே ) யுண்டான போக்ய வஸ்துக்களை ஸூசித்தப்படி-தண்டுற நாற்றி -என்கையாலே (கிளையில் பொருந்தி ) இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி (கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )-மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே-கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில் அதிசயித்தது இல்லை என்றபடி-அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது-பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடி—கார்த்தனவே -என்கையாலே ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே தூக்கின அளவே காண்—மலர்ந்தே ஒழிந்தில-மலர உபக்ரமித்தனை-இன்னும் மலர்ந்தது இல்லை-அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்–பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே-அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே-உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள் கார்த்திக் கொண்டே நின்றன காண்–கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ-அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-ஸ்வாபதேசம்-இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் இக்கலையை அவகாஹித்த படியாலும் போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது
ஸ்வா பதேசம் –
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் – இத் தலையை அவன் அவஹாகித்த படியாலும்-
போக யோக்யமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை சொல்லுகிறது –தழைப் பந்தல் தண்டுற நாற்றி -தழை -செறிந்த –பந்தல் -பந்தலாக –தண்டு -சாகைகளிலே –உற –சிக்கென -நாற்றி -நாலா நின்று கொண்டு -என்று சப்தார்த்தம் –
சினைத்தல் -கர்ப்பமாதல்-மொட்டாதல்-மகாத்மாவின் விரஹ அஸஹத்வம் வளத்தின் களத்திலே கூடு பூரிக்கும் –திரு மூழிக் களத்திலே காட்டி அருளிய திருக்குணம்–
தாத்பர்யம்–சர்வேஸ்வரன் குறித்த காலத்திலேயே வராததால் நோவு பட்ட தலைவியைத் தோழி காலத்தை மயக்கி சமாதானப்படுத்தும் பாசுரம்-பார்ஸ்வஸ்த்தில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்
கிலேசிக்கும் ஆழ்வாரை சமாதானப்படுத்த கிறார்கள்
ஓ சஹி நாயகன் குறித்த காலம் இன்னம் வர வில்லை-பூக்கள் மாலையாகவும் பூமி எங்கும் படர்ந்து இருக்கும் காலத்தில் அன்றோ வருவதாகச் சொல்லிப் போந்தான்-அவன் உன்னைக்கான உத்யோகிக்க
இவையும் பூக்கள் அலர்ந்து உத்யோகிக்கின்றன அத்தனையே -இவரை சமாதானம் பண்ண இத்தனையும் பண்ண வேண்டுமே
உபய விபூதி நாதன் ஒரு கால விசேஷத்தில் இங்கே வந்து அவதரித்து போல் அல்லாமல் நித்ய ஸ்ரீ வைகுண்டம் போல் அவனது போக்யத்தை நித்தியமாக வளர்க்கும் படி அன்றோ உம்முடைய போக்யதை
உம்முடைய சம்ஸ்லேஷமே தாரகம்-என்று -இருப்பவன் அன்றோ அவனும்-உன்னை விட்டு க்ஷண காலமும் பிரிந்து இருக்க வல்லன் அல்லனே -அவன் வரவைக் கண்டு இவையும் பூக்க ஆரம்பிக்கின்றன-அண்ணல் வந்தான் -ஆரியன் வந்தான் என்று திருவடி-பரதனுக்கு சமாதானம் சொன்னதுக்காக அவன் வரவில்லை-அதே போல் அரும்பிக்கத் தொடங்கிற்று-இவை பூத்து சமையும் அளவில் வந்தே தீருவான் கவலைப்படாதே என்று சமாதானம் பண்ணுகிறார்கள்—
9-1-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்-ப்ரவேஸம்-
ஒன்பதாம் பத்து -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது-பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அளிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்-தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே-தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்-நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என்-என்று ஐயம் கொள்ள
நான் நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்-உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார்-இந்த ஒன்பதாம் பத்தில் –
————————————————————————————————-
கொண்ட பெண்டிர் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலை எல்லையாக உடைய-தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை
யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே-காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்-பாகவதரை விரும்பினாராய் நின்றார் –
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் திருவாய்மொழி கேட்டதும்-ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்-என்று ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –
இப்படிப் பட்ட -பாகவதர்களுக்கு அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் எல்லையை நமக்குத் தந்த-
அவனே இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி-வருகிற நல்லெண்ணம் -ஆகும்-என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து-அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான உவகையாலே-மக்களைக் குறித்து
நீங்கள் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து-இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி-
உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று-பரோபதேசத்திலே மூளுகிறார்
சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ-கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே-நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும் தமப்பன் அவனே ஆயிற்று –
தனக்கு நலத்தை கூறிய விபீடணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர-அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று
புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -பெருமாள் –
பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ பிரகலாதனுக்கு
மகாராஜர் தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே-ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன்
மற்றைய பதங்கட்கு முன்பு கூறியது போன்று கொள்க –பயிலும் சுடர் ஒளி -நம்பனை பாசுர வியாக்கினத்தில் கண்டு கொள்வது -என்றவாறு –
த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
அர்ஜுனன் என் கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது-என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே போகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –
இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –
ஒன்பதாம் பத்தில்
கீழ் ஏழாம் பத்திலும் எட்டாம் பத்திலும் விரோதி ஸ்வரூபத்தையும் -தந் நிவ்ருத்தி பிரகாரத்தையும் அருளிச் செய்து –
மேல் இரண்டு பாத்தாலும் பிராப்தி பலாவாப்தியை அருளிச் செய்வதாக –
இப்பத்திலே பல ஸ்வரூபத்தை நிரூபிப்பதாகக் கொண்டு
பல பூதனான ஈஸ்வரனுடைய நிருபாதிகதையையும்
கைங்கர்ய பிரதி சம்பந்தி தயா நித்ய பிரார்த்யத்வத்தையும்
நிரதிசய போக்ய சீலாதி குண யோகத்தையும்
நித்ய அபூர்வ யோக்யதையையும்
ஸ்மரண தசையில் சைத்தில்ய ஜனகமான போக்கிய குணவத்தையும்
ஸ்ம்ருதிஸைதில்யம் யுடையாரை புஜிம்பிக்கையில் உண்டான பிரதம உத்யோத்தையும்
அத்தயதரணீய கடக கமயத்வத்தையும்
பத்னீ பரிஜன பூர்த்தியையும்
அல்ப கால விளம்பத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும்
பத்தி காரிதமான கைங்கர்ய பிரதி சம்பந்தத்வத்தையும்
அருளிச் செய்து அவனுடைய பல ரூபத்தை அருளிச் செய்து அருளுகிறார்
முதல் இரண்டு பத்தாலே நிரூபித்த ப்ராப்ய ஸ்வரூபத்தினுடைய ப்ரயோஜன ரூபத்வம் இங்கே நிரூபிக்கப் படுகிறது –
முதல் திருவாய் மொழியிலே ததீய சேஷத்வ போக்யதா பிரதிபத்தி பிறக்கும் படி ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்த பின்பு –
அந்த ததீய சேஷத்வ போக்யதா மூலமான தத் போக்யதையை அனுசந்தித்து –
அவனுடைய சர்வ பிரகார பலத்தவத்துக்கு உபபாதகமான சர்வவித அந்வயத்துக்கு ப்ரகாசகமான
ஆபத் ஸகத்வத்தையும்
அவிஸ்வாச நிராசகத்வத்தையும்
அநிஷ்ட நிரசன கிருபா யோகத்தையும்
அவதார ப்ரயுக்த குணோத்தரத்தையையும்
அநிஷ்டயத்வம்சகத்வம் அடியான அபிமத நீயதையையும்
கீர்த்த நீய குணவத்ததையும்
சிந்தா மாத்திரை ஸூலபத்வத்தையும்
உஜ்ஜீவன ஹேதுத்துவத்தையும்
போக்கிய விக்ரஹ விசிஷ்டதையையும்
பூ பார நிராசகத்வத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பந்துவானவன் -அல்லாதார் உபாதி நிபந்தனபந்துக்கள் –
ஆதலால் அவர்களை விட்டு நிருபாதிக பந்துவானவான இவனை நோக்கி உஜ்ஜீவியுங்கோள் -என்று
தாம் அறுதியிட்டு அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுகிறார் –
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-
ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்று பிரபன்ன பவித்ராணாம் -பிரபந்தத்தில் சொன்னோம் –
கீழ் அனுகூலமாகக் கொண்ட -இங்கு எல்லாமாகக் கொண்ட பெண்டிர்-ஆச்சார்யனும் பரம் பொருளும் செல்வமும் முதலானவைகள் எல்லாம்-இவளே ஆக கொண்ட –பத்னியே ஸர்வம் என்று கொண்ட -தான் மட்டும் தன் மனத்திலே உறவாக நினைத்து இருக்கும் மனைவி-பொருள் முதலான காரணங்களாலே கொள்ளப் பட்ட மனைவி-தஞ்சமாக நெஞ்சிலே கொண்ட மனைவி -என்னுதல் –கொண்ட -என்பதனை மக்கள் முதலாயினாருக்கும் கூட்டிப் பொருள் கோடலுமாம்-
காதல் மற்று யாதும் இல்லை –
பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்
மற்று -எனபது-காணாத போதைக் காட்டுமோ -எனின் கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –
பிரளயம் தோன்றிய நிலையில் காப்பதற்கு சாதனமும் இல்லை-வேண்டுகோளும் இல்லை அன்றோ
பாது காப்பதற்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் அன்றோ வேண்டுவது-அப்போது விலக்குகைக்கு ஒரு சாதனம் இல்லையே
பிரான் –
உபகார சீலன் ஆனவன் –
தொண்டரோமாய் உய்யல் அல்லால் –இல்லை கண்டீர் துணையே–விதி முகத்தால் அன்றிக்கே-மறை முகத்தாலும் இவ் வர்த்தத்தை அறுதி இடுகிறார்-ஆபத்துக்கு வேறு ஒரு பற்றுக் கோடு உண்டாய் இருக்க-இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன்-அவனைப் பற்றி ஸ்வரூபம் பெறுதல் இல்லை யாகில் இல்லையாம் இத்தனை –அந்வயத்தாலே சாதித்து வ்யதிரேகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
————
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே-9-1-2-
உபகாரகரைப் போலே இருந்து -தம் தம் காரியங்களையே-தலைக் கட்ட நினைக்கும் நம்பத் தகாதவர்களை ஒழிய-
காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைக்குமவனாய்-விஸ்வாச ஜனகனுமாய்-யுபகரிக்குமவனை-ஆபத்திற்கு துணைவன் ஆனவனைப் பற்றுமது அன்றிப் பயன் இல்லை –என்கிறார் –
துணையும் சார்வும் –துணையாகை யாவது –துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே-சார்வு ஆகையாவது –
போக்கடி அற்ற நிலையில் தாங்களே புகலிடம் ஆதல்
புணை என்று உய்யப் போகல் அல்லால் – இட வேண்டுவது ஒரு பச்சை இல்லை –ஒரு வார்த்தை மாத்ரம் அமையும் –
என் கார்யம் உனக்கே பொறுப்பு -என்ற ஒரு வார்த்தையே அவனுக்கு நேர வேண்டுவது –
இல்லை கண்டீர் பொருளே –புறம்பு ஒருவரைப் பற்றினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றது –
புறம்பே சிலரை பற்றுகையிலே துக்கப்பட சிலர் உண்டு அத்தனை-பயன் தரத் தக்கது ஓன்று இல்லை -என்றபடி –
—–
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-
அவனை ஒழிந்தவர்கள்-பயன் உள்ள போது -பந்துக்களாய் கொண்டாடுவார்கள் –
ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள் –ஆன பின்பு-அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே
சம்பந்தமோ இயல்பாகவே அமைந்ததே இருந்தது –காரணம் இல்லாமலே ஆபத்துக்கு துணைவனாய் இருக்கிற-ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவருளுக்கு பாத்திரம் ஆகுங்கோள்–அவனை ஒழிய காப்பவர் வேறு இல்லை –என்கிறார் –தன் அருள் கொள்வாரை -உதாரர் -என்னும் அவன் அன்றோ அவன் –
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் –இவன் இடம் -கை நீட்டி பெற்றால் அவனே வள்ளல் ஆகிறான்-கொடுக்கத் தொடங்கும் பொழுதே சாம்யா பத்தி அருளுகிறானே –
—————-
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–9-1-4-
சிலரை ஆபத்துக்கு துணை ஆவார் என்று செல்வம் முதலியவற்றைக் கொடுத்து பல நாள் அடைந்தாலும்-
ஆபத்து வந்தவாறே கண்ணற்று பாராமுகம் செய்வார்கள்-
ஆதலால் ஒருவித காரணமும் இல்லாமல் வந்து அவதரித்து-ஆபத்துக்கு துணை ஆனவனே பற்றத் தக்கவன் -என்கிறார்-வடமதுரைப் பிறந்தவன் -நாம் ஆஸ்ரயியாது இருக்க நமக்கு உதவுகையே தன் பேறாக வந்து பிறந்தவன் –சௌசீல்யம் சௌலப்யம் முதலான கல்யாண குணங்களே நமக்கு புகலிடம் என்று பிழைத்து போகல் ஒழிய-இல்லை கண்டீர் சதிரே –
இல்லை கண்டீர் சதிரே –நெற்றி பெருத்து-பிரயாசை செய்து – பயன் ஒன்றும் இன்றிக்கே-இருக்கும் என்னுமது இளிம்பு அன்றோ-சதிராவது -அநாயாசேன பலம் பெறலாம் பிரவிருத்தி-அல்ப யத்னத்தாலே பஹு பலம் பெறுமது -சதிர் -பஹு யத்னத்தை பண்ணி பல வேளையில் ஒன்றும் இன்றிக்கே ஒழிகை -இளிம்பு —
நெற்றி சிறியதாய் பயன் கனக்கப் பெறுமது அன்றோ சதிராவது- இங்கு நெற்றி –நம -என்றல்-பயன் –சமன் கொள் வீடு -அன்றோ –
———
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர் கொள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-
இம் மட உலகர் கண்ட தோடு பட்ட அபாந்தவ அரஷக அபோக்ய அஸூக அனுபாய பிரதி சம்பத்தியைக் காட்டி-மற்று ஒன்று கண்ணன் அல்லால் என்கிற வைகல் வாழ்தலான சித்த உபாயம் -சூர்ணிகை –227-
தன்னைப் பெறா விடில் தரிக்க மாட்டாதபடி சிநேகத்தை உடையவர்களான-பெண்களாலே ஆபத்து வந்த காலத்திலே இகழப் படுவர்
ஆன பின்பு-ஒரே தன்மையான சிநேகத்தை உடைய இறைவனைப் பற்றுவது ஒழிய-சுகம் வேறு இல்லை -என்கிறார்
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் – எதிர்முகமாதலை உடைய அடியாராய் உய்யுமது ஒழிய-அவனுக்கு நான் செய்ய வேண்டுவது இது
அவன் தானே மேலே விழா நின்றால்-முகத்தை மாறா வைக்காது ஒழிகையே வேண்டுவது-உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ
அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்-ஆன பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –
———
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-
எல்லை இல்லாத பேரின்பம் ஆகிற பேற்றினை உணராமல்-முன்புள்ளார் பலர் முடிந்து போனார்கள் –
ஆதலால் அப்படியே நீங்களும் அழிந்து போகாமல்-அடியார்கட்காக அவதரித்து பாதுகாக்கும் அவனையே பற்று-உய்யுங்கோள்-
அதனை ஒழிய ஆத்மாவுக்கு நன்மை இல்லை -என்கிறார்-
பிராப்தம் -நித்யம் -பேரின்பம் -சோபாதிகம்-உண்மை இது அன்றோ –
உள்ளது நினையாதே – உண்டான பேற்றினை நினையாமல் -என்றது
இன்ப மயமாய்-என்றும் உள்ளதாய்-இருப்பது பகவத் விஷயம் என்று நினையாமல் -என்றபடி –
அன்றிக்கே
உண்டான இல்லாமையை நினையாமல் -என்று மேலே கூட்டலுமாம் –இல்லாமை தானே உள்ளது உலகத்தில் -இது அன்றோ பிரத்யக்ஷம் –
மல்லை மூதூர் வடமதுரைப் – நிறைவை உடையதாய்-அவனுக்கு என்றும் ஒக்க கலவிருக்கையாய் போருகிற-சித்தாஸ்ரமமாய்
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்தும்-முன்பே துருவன் தவம் செய்த மதுவனமாகவும்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்தும்-ஸ்ரீ கிருஷ்ணன் வந்து அவதரித்ததும்-
இப்படி பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகிற-தேசம் ஆதலால் -மல்லை-என்கிறார்
மல்லை -நிறைவு-பழையதாய் வருகிற ஊர் ஆதலின் -மூதூர் -என்கிறார் –
அயோத்யா மதுரா -ஆழ்வார் இங்கேயே இருக்கிறாய் போலே ஆழ்ந்து அனுபவிக்கிறார் –
அயோத்யா -மதுரா – மாயா -அவந்திகா (-உஜ்ஜைனி- ) காசி -காஞ்சி — -த்வாராகா –முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள் –
———-
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-
பகவானைப் பற்றுதல் மிக மிக எளியது-இனிமை வாய்ந்தது-என்று அருளிச் செய்கிறார்
மற்று ஓன்று இல்லை – இதனோடு ஒக்க வேறு எண்ண லாவது இல்லை -என்னுதல்
அன்றிக்கே
இப்போது இதனை சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றைச் சொல்லுகிறான்-என்று இருக்க வேண்டா -என்னுதல்-
ஒரே மருந்து ஒரு வைத்தியர் -ஒரே ரகஸ்யம் – த்வய மந்த்ரம் -பிரதி பத்தி பட இத்துடன் எண்ண வேறு ஒன்றும் இல்லையே –
சிற்ற வேண்டா –வருந்த வேண்டா-சிற்றுதல் -சிதறுலதாய்-பரக்க வேண்டா -என்கை-வேறு ஒரு செய்கை வேண்டா -என்றபடி –
சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-வார்த்தைகள் வேண்டா-நினைப்பே அமையும்-கண்டீர் கோள் -என்றது
அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்–
எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் –வந்து பிறப்பதற்கு முன்பே-பெற்றத்து ஆயன் போலே காணும்
வந்து அவதரிப்பதாக நினைப்பட்டதில் புரை அற்று இருக்கிறபடி-
அடியார்கட்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயன் -என்னுதல்
அடியார்கட்காக பசு மேய்க்கும் ஆயன் ஆவானாக வடமதுரை பிறந்தான் -என்னுதல் –
சர்வ உபாய -அதிகமத்வ-பிரதிபத்தி விஷயத்துவ –விச்வாஸ நீயமான– ஸூ லபத்வ -சர்வாதிகாரத்தவ
அநாயாஸத்வ -யுக்தி நிரபேஷ ரூபமாக -இருப்பது அன்றோ
வைகல் வாழ்தல் கண்டீர் குணமே –
கற்பது ஒரு காலாய்-ஒரு தடவையாய்-பின்பு வாழ்ச்சி நித்தியமாய்-இருக்கும் ஆயிற்று-இதுவே பிராப்தம் –
ஏவகாரத்தால் -இது ஒன்றுமே குணம்-இது ஒழிந்தன அடையத் தக்கன அல்ல -என்கிறார் –
———–
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8-
அவதாரத்துக்கு காரணத்தை சொல்லி-பாது காப்பவனாக அவனையே பற்றுமது ஒழிய
வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக் கோடு இல்லை-என்கிறார் –
மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சர்யப் படத் தக்கவனாய்-இருந்துள்ள இறைவனுடைய-குணங்களுக்கு தோற்றவர்களாய் –
ப்ரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்றிக்கே ஏத்தி-அதனாலே போது போக்குவதலைச் செய்வதாக-
அறுதி இட்டுள்ள நன்மையை உடையவர்கள் -சீரியர்கள் -என்றது –
வேறு பயன்களைக் கருதாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்றபடி –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும்-போது போக்குமவர்கள் –நான் முகன் திருவந்தாதி -63-என்றவாறு –
இந்த மாயவன் அடி பரவுகையை சூது சதுரங்களை போன்று-காலத்தை கழிப்பதற்கு வழியாக
கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள் -என்று-பட்டர் அருளிச் செய்வர் –போக ரூபமாக உள்ளுவர்கள் என்றபடி –
——
யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-
இவனை ஒழிய வேறு ஒன்றனை ரட்ஷகம் என்று பற்றினவர்கள்-பண்டு நின்ற நிலையும் கெட்டு அழிந்து போவார்கள் –
ஆனபின்பு -இவன் அல்லது சரண் இல்லை -என்கிறார்-
அன்றிக்கே
கைவல்யம் ஆகிற பேற்றினைச் சொல்லுகிறார் -என்னாலும் ஆம் –
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த –
கம்சன் வாழ்கிறானாய் -அலங்காரமாக கட்டின கொடியை-கிருஷ்ணன் உடைய அவதாரத்துக்கு என்றே நினைத்து இருக்கிறார் ஆயிற்று இவர்
சிசுபாலன் திரு மணத்துக்கு உடலாக செய்த சடங்குகள் அடங்க தனக்கு-உடலாக செய்ததாக நினைத்து கைப் பிடித்தான் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணன் –
——-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-
சேஷத்வம் முதல் நிலை -அடுத்து அநந்யார்ஹத்வம் -நமஸ் உகாரார்த்தம்-சொல்லி -பாகவத சேஷத்வம் -மூன்றாவது நிலை –
சர்வவித பந்து நாராயணன் -என்பதை இதில் சொல்லி -பந்து கிருத்யம் கைங்கர்யம் -ஆய -அர்த்தம் –
8-8 பகவத் சேஷத்வம் யானும் தானாய் ஒழிந்தானே
8-9-அநந்யார்ஹத்வம் -குட்ட நாட்டுத் திருப்புலியூர் – மாயப்பிரானுக்கு வாழ்க்கை பட்டு
8-10- நெடுமாற்கு அடியார் -பாகவத சேஷத்வ பர்யந்தம் –
9-1-சோபாதிக பந்துக்களை விட்டு -அசாதாரண பந்து வடமதுரை பிறந்தவனே -நாராயண சப்தா ர்த்தம்
எண்ணிடையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொடங்கி -ஆபத் சஹத்வம் -ஒன்பதாம் பத்து தாத்பர்யம் –
கணை ஒன்றினால் ஏழு மரங்கள் எய்தவன் –
வட மதுரை பிறந்தான் -8 தடவை சொல்லி -அஷ்டாக்ஷர மந்த்ரார்த்தம் சொல்லி –
9-2- கைங்கர்யம் அடுத்த பத்தில் -குடி குடி ஆட் செய்ய -ஆய -பிரார்த்தனையாயாம் சதுர்த்தி –
ஐம்பது பாசுரங்களால் ஐந்து அர்த்தங்களும் -திருமந்த்ரார்த்தம் சாதித்தார் –
தானே புகலிடம் -என்னும் உண்மையை-நிலை நிறுத்துவதற்காக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளைப் பற்றுமினோ –என்கிறார்
தானே உபாயம் உபேயம் நிலை நிறுத்த ஸ்தாபிக்க அவதரித்து -பூ பாரம் நீக்கி -இது வந்த இடத்தில் செய்த -தர்ம சமஸ்தானம் அர்த்தமாக –
நீங்கள் நினைத்து இருப்பதை திருத்தமாக அவன் இடம் சமர்ப்பியுங்கோள் -பலம் எதிர்பார்க்காமல் –கர்மம் செய்து -சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாப்பரணம் அஸ்து-
உபாய உபேய பாவம் நிலை நிறுத்தப் பட்டு நிற்க –
மண்ணின் பாரம் நீக்குதற்கே-வடமதுரைப் பிறந்தான்-தத்விரோதிகளை – பூ பாரத்தை நீக்கி -நாக பர்யங்கம் விட்டு -ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி
—————
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-
8-10 வாசனை மாறாமல் -பலன் -பாகவத உத்தமர்களுக்கு சேஷ பூதர்-இந்த திருவாயமொழி கற்றவர்களுக்கு சேஷ பூதர் தாம் என்கிறார் –
இவர்க்கு இப்படி இந்த துணிவைக் கடுத்தார் ஆர் -எனின்
வேறு ஒருவர் உளரோ –தாது சேர் தோள் கண்ணனை-அவனுடைய தோளும் தோள் மாலையும் அன்றோ
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply