ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 24-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி திருவவதாரம்
ராஜோவாச
ப⁴க³வன் ஶ்ரோதுமிச்சா²மி ஹரேரத்³பு⁴தகர்மண꞉ .
அவதாரகதா²மாத்³யாம்ʼ மாயாமத்ஸ்யவிட³ம்ப³னம் .. 1..
யத³ர்த²மத³தா⁴த்³ரூபம்ʼ மாத்ஸ்யம்ʼ லோகஜுகு³ப்ஸிதம் .
தம꞉ப்ரக்ருʼதி து³ர்மர்ஷம்ʼ கர்மக்³ரஸ்த இவேஶ்வர꞉ .. 2..
ஏதன்னோ ப⁴க³வன் ஸர்வம்ʼ யதா²வத்³வக்துமர்ஹஸி .
உத்தம ஶ்லோகசரிதம்ʼ ஸர்வலோக ஸுகா²வஹம் .. 3..
ஸூத உவாச
இத்யுக்தோ விஷ்ணுராதேன ப⁴க³வான் பா³த³ராயணி꞉ .
உவாச சரிதம்ʼ விஷ்ணோர் மத்ஸ்ய ரூபேண யத்க்ருʼதம் .. 4..
ஶ்ரீஶுக உவாச
கோ³ விப்ர ஸுர ஸாதூ⁴னாம்ʼ ச²ந்த³ஸாமபி சேஶ்வர꞉ .
ரக்ஷாமிச்ச²ம்ʼ ஸ்தனூர்த⁴த்தே த⁴ர்மஸ்யார்த²ஸ்ய சைவ ஹி .. 5..
உச்சாவசேஷு பூ⁴தேஷு சரன் வாயுரிவேஶ்வர꞉ .
நோச்சாவசத்வம்ʼ ப⁴ஜதே நிர்கு³ணத்வாத்³ தி⁴யோ கு³ணை꞉ .. 6..
வாயு -எங்கும் நிறைந்து -துர்நாற்றம் ஒட்டாதது போல் -அகிலேஹேய ப்ரத்யநீக கல்யாணை ஏக ஸ்தானன் -திவ்யம் -அப்ராக்ருதம் -ஆதியம் சோதி யுருவை அங்கே வைத்து இங்கே பிறந்த
ஆஸீத³தீத கல்பாந்தே ப்³ராஹ்மோ நைமித்திகோ லய꞉ .
ஸமுத்³ரோபப்லுதாஸ் தத்ர லோகா பூ⁴ராத³யோ ந்ருʼப .. 7..
காலேநாக³தநித்³ரஸ்ய தா⁴து꞉ ஶிஶயிஷோர்ப³லீ .
முக²தோ நி꞉ஸ்ருʼதான் வேதா³ன் ஹயக்³ரீவோ (அ)ந்திகே (அ)ஹரத் .. 8..
ஹயக்ரீவன் காரணப்பெயர் குதிரை முகத்தான் –அசுரனுக்கு இதே பெயர் –
ஜ்ஞாத்வா தத்³தா³னவேந்த்³ரஸ்ய ஹயக்³ரீவஸ்ய சேஷ்டிதம் .
த³தா⁴ர ஶப²ரீரூபம்ʼ ப⁴க³வான் ஹரிரீஶ்வர꞉ .. 9..
ஶப²ரீரூபம்ʼ–மத்ஸ்ய மீன் ரூபம்-பிரார்த்தனை பண்ணாமலேயே தானே திருவவதரித்த திருவவதாரம்-இச்சா மீன-தேசிகர்-
தத்ர ராஜ ருʼஷி꞉ கஶ்சின்நாம்னா ஸத்ய வ்ரதோ மஹான் .
நாராயண பரோ(அ)தப்யத்தப꞉ ஸ ஸலிலாஶன꞉ .. 10..
மதுரை -க்ருதமாலா நதிக்கரையில் சத்யவ்ரதர் பாண்டிய அரசனுக்கு காட்சி-ஸ ஸலிலாஶன꞉தண்ணீர் மட்டுமே உண்டு தவம் இருந்து ராஜரிஷி யானவள் -முன்பு ராஜரிஷி -ஸூர்ய மகன் -விவஸ்வனனுக்கு பிள்ளை ஸ்ராத்தா தேவனே -வைவஸ்ஸ மனுவாக இப்பொழுது உள்ளான்
யோ(அ)ஸாவஸ்மின் மஹாகல்பே தனய꞉ ஸ விவஸ்வத꞉ .
ஶ்ராத்³த⁴தே³வ இதி க்²யாதோ மனுத்வே ஹரிணார்பித꞉ .. 11..
ஏகதா³ க்ருʼதமாலாயாம்ʼ குர்வதோ ஜலதர்பணம் .
தஸ்யாஞ்ஜல்யுத³கே காசிச்ச²ப²ர்யேகாப்⁴யபத்³யத .. 12..
ஸத்யவ்ரதோ(அ)ஞ்ஜலிக³தாம்ʼ ஸஹ தோயேன பா⁴ரத .
உத்ஸஸர்ஜ நதீ³தோயே ஶப²ரீம்ʼ த்³ரவிடே³ஶ்வர꞉ .. 13..
தமாஹ ஸாதி கருணம்ʼ மஹா காருணிகம்ʼ ந்ருʼபம் .
யாதோ³ப்⁴யோ ஜ்ஞாதிகா⁴திப்⁴யோ தீ³னாம்ʼ மாம்ʼ தீ³ன வத்ஸல .
கத²ம்ʼ விஸ்ருʼஜஸே ராஜன் பீ⁴தாமஸ்மின் ஸரிஜ்ஜலே .. 14..
தமாத்மனோ(அ)னுக்³ரஹார்த²ம்ʼ ப்ரீத்யா மத்ஸ்ய வபுர்த⁴ரம் .
அஜானன் ரக்ஷணார்தா²ய ஶப²ர்யா꞉ ஸ மனோ த³தே⁴ .. 15..
தஸ்யா தீ³னதரம்ʼ வாக்யமாஶ்ருத்ய ஸ மஹீபதி꞉ .
கலஶாப்ஸு நிதா⁴யைனாம்ʼ த³யாலுர்னின்ய ஆஶ்ரமம் .. 16..
ஸா து தத்ரைகராத்ரேண வர்த⁴மானா கமண்ட³லௌ .
அலப்³த்⁴வா(ஆ)த்மாவகாஶம்ʼ வா இத³மாஹ மஹீபதிம் .. 17..
நாஹம்ʼ கமண்ட³லாவஸ்மின் க்ருʼச்ச்²ரம்ʼ வஸ்துமிஹோத்ஸஹே .
கல்பயௌக꞉ ஸுவிபுலம்ʼ யத்ராஹம்ʼ நிவஸே ஸுக²ம் .. 18..
ஸ ஏனாம்ʼ தத ஆதா³ய ந்யதா⁴தௌ³த³ஞ்சனோத³கே .
தத்ர க்ஷிப்தா முஹூர்தேன ஹஸ்த த்ரய மவர்த⁴த .. 19..
ந ம ஏதத³லம்ʼ ராஜன் ஸுக²ம்ʼ வஸ்துமுத³ஞ்சனம் .
ப்ருʼது² தே³ஹி பத³ம்ʼ மஹ்யம்ʼ யத்த்வாஹம்ʼ ஶரணம்ʼ க³தா .. 20..
தத ஆதா³ய ஸா ராஜ்ஞா க்ஷிப்தா ராஜன் ஸரோவரே .
ததா³வ்ருʼத்யாத்மனா ஸோ(அ)யம்ʼ மஹா மீனோ(அ)ன்வவர்த⁴த .. 21..
நைதன்மே ஸ்வஸ்தயே ராஜன்னுத³கம்ʼ ஸலிலௌகஸ꞉ .
நிதே⁴ஹி ரக்ஷா யோகே³ன ஹ்ரதே³ மாமவிதா³ஸினி .. 22..
இத்யுக்த꞉ ஸோ(அ)நயன் மத்ஸ்யம்ʼ தத்ர தத்ராவிதா³ஸினி .
ஜலாஶயே(அ)ஸம்மிதம்ʼ தம்ʼ ஸமுத்³ரே ப்ராக்ஷிபஜ் ஜ²ஷம் .. 23..
க்ஷிப்யமாணஸ்தமாஹேத³மிஹ மாம்ʼ மகராத³ய꞉ .
அத³ந்த்யதிப³லா வீர மாம்ʼ நேஹோத்ஸ்ரஷ்டு மர்ஹஸி .. 24..
ஏவம்ʼ விமோஹிதஸ்தேன வத³தா வல்கு³பா⁴ரதீம் .
தமாஹ கோ ப⁴வானஸ்மான் மத்ஸ்ய ரூபேண மோஹயன் .. 25..
நைவம்ʼ வீர்யோ ஜல சரோ த்³ருʼஷ்டோ(அ)ஸ்மாபி⁴꞉ ஶ்ருதோ(அ)பி ச .
யோ ப⁴வான் யோஜன ஶதமஹ்நாபி⁴வ்யானஶே ஸர꞉ .. 26..(1-யோஜனை -10 மைல்)
நூனம்ʼ த்வம்ʼ ப⁴க³வான் ஸாக்ஷாத்³த⁴ரிர்நாராயணோ(அ)வ்யய꞉ .
அனுக்³ரஹாய பூ⁴தானாம்ʼ த⁴த்ஸே ரூபம்ʼ ஜலௌகஸாம் .. 27..
அக்னி பகவான் ஒளிந்து கொண்டதைக்காட்டிக்கொடுத்ததால் வலையால் பிடிக்கும் படி சாபம்-அக்னி சாபத்தால் நிந்திக்கப்பட்ட மீன்களை உஜ்ஜீவிக்கவே அவதாரம் -உண்மையாக இருந்தாலும் நன்மையைச் தராவிட்டால் சொல்லக்கூடாது -நன்மை செய்யும் உண்மை -உபதேசம் செய்யவேணும் அவதாரம் -பாண்டியர் கொடியில் வைத்ததே இதனால் தான் –
நமஸ்தே புருஷ ஶ்ரேஷ்ட² ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .
ப⁴க்தானாம்ʼ ந꞉ ப்ரபன்னானாம்ʼ முக்²யோ ஹ்யாத்மக³திர்விபோ⁴ .. 28..
ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .-generation operation destruction God
ஸர்வே லீலாவதாராஸ்தே பூ⁴தானாம்ʼ பூ⁴தி ஹேதவ꞉ .
ஜ்ஞாது மிச்சா²ம்யதோ³ ரூபம்ʼ யத³ர்த²ம்ʼ ப⁴வதா த்⁴ருʼதம் .. 29..
(அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-ஸ்ரீ தயா சதகம்-35)
பொய் சொன்னால் ஏழு ஜென்மங்கள் மீனாகப்பிறக்க வேண்டும் -தாயார் தூண்ட இவனை பெரிய மீனாக அவதரிக்க தூண்டி அவதாரம்-என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக-மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல் சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –
தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.-இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான். ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?)
ந தே(அ)ரவிந்தா³க்ஷ பதோ³பஸர்பணம்ʼ
ம்ருʼஷா ப⁴வேத் ஸர்வஸுஹ்ருʼத் ப்ரியாத்மன꞉ .
யதே²தரேஷாம்ʼ ப்ருʼத²கா³த்மனாம்ʼ ஸதாமதீ³த்³ருʼஶோ
யத்³வபுரத்³பு⁴தம்ʼ ஹி ந꞉ .. 30..
அ)ரவிந்தா³க்ஷ-பர ப்ரஹ்ம சிஹ்னம்-பங்கஜம் -சேற்றில் மலரும் செந்தாமரை அஜோபிசன் –பெருமை குன்றாமல் அவதாரம்-வழிபாடு எதுவும் வீணாகாதே
ஶ்ரீஶுக உவாச
இதி ப்³ருவாணம்ʼ ந்ருʼபதிம்ʼ ஜக³த்பதி꞉
ஸத்யவ்ரதம்ʼ மத்ஸ்யவபுர் யுக³க்ஷயே .
விஹர்து காம꞉ ப்ரலயார்ணவே(அ)ப்³ரவீ-
ச்சிகீர்ஷுரேகாந்த ஜனப்ரிய꞉ ப்ரியம் .. 31..
ஶ்ரீப⁴க³வானுவாச
ஸப்தமே(அ)த்³யதநாதூ³ர்த்⁴வ மஹன்யேத த³ரிந்த³ம .
நிமங்க்ஷ்யத் யப்யயாம் போ⁴தௌ⁴ த்ரைலோக்யம்ʼ பூ⁴ர்பு⁴வாதி³கம் .. 32..
த்ரிலோக்யாம்ʼ லீயமானாயாம்ʼ ஸம்ʼவர்தாம்ப⁴ஸி வை ததா³ .
உபஸ்தா²ஸ்யதி நௌ꞉ காசித்³ விஶாலா த்வாம்ʼ மயேரிதா .. 33..
த்வம்ʼ தாவதோ³ஷதீ⁴꞉ ஸர்வா பீ³ஜான் யுச்சாவசானி ச .
ஸப்தர்ஷிபி⁴꞉ பரிவ்ருʼத꞉ ஸர்வ ஸத்த்வோப ப்³ருʼம்ʼஹித꞉ .. 34..
ஆருஹ்ய ப்³ருʼஹதீம்ʼ நாவம்ʼ விசரிஷ்யஸ்யவிக்லவ꞉ .
ஏகார்ணவே நிராலோகே ருʼஷீணாமேவ வர்சஸா .. 35..
தோ³தூ⁴யமானாம்ʼ தாம்ʼ நாவம்ʼ ஸமீரேண ப³லீயஸா .
உபஸ்தி²தஸ்ய மே ஶ்ருʼங்கே³ நிப³த்⁴னீஹி மஹாஹினா .. 36..
அஹம்ʼ த்வாம்ருʼஷிபி⁴꞉ ஸாகம்ʼ ஸஹனாவமுத³ன்வதி .
விகர்ஷன் விசரிஷ்யாமி யாவத்³ப்³ராஹ்மீ நிஶா ப்ரபோ⁴ .. 37..
மதீ³யம்ʼ மஹிமானம்ʼ ச பரம்ʼ ப்³ரஹ்மேதி ஶப்³தி³தம் .
வேத்ஸ்யஸ்யனுக்³ருʼஹீதம்ʼ மே ஸம்ப்ரஶ்னைர்விவ்ருʼதம்ʼ ஹ்ருʼதி³ .. 38..
பிரளயத்தில் ஸூர்ய சந்திர நக்ஷத்திரங்கள் இல்லாவிட்டாலும் சப்த ரிஷிகள் ப்ரஹ்ம தேஜஸ் ஒளி கொண்டு பார்த்து-ப்ரசண்ட மாருத புயல் வருமே என்ன-1000 மைல் நீளம் மீன் இப்பொழுது -அதை விட -பெரிய மீனாக வரும் -ஒற்றைக்கொம்பு -வாசுகி கொண்டு படகைக்காட்டு -நான் வழி நடத்துவேன் -பிரளய காலம் -1000 சதுர்யுகமும் நான் உங்களைக் காப்பேன் -ஞான உணவு ஊட்டுவேன்-கேள்வி கேட்டு அறிந்து கொள்
இத்த²மாதி³ஶ்ய ராஜானம்ʼ ஹரிரந்தரதீ⁴யத .
ஸோ(அ)ன்வவைக்ஷத தம்ʼ காலம்ʼ யம்ʼ ஹ்ருʼஷீகேஶ ஆதி³ஶத் .. 39..
ஆஸ்தீர்ய த³ர்பா⁴ன் ப்ராக்கூலான் ராஜர்ஷி꞉ ப்ராகு³த³ங்முக²꞉ .
நிஷஸாத³ ஹரே꞉ பாதௌ³ சிந்தயன் மத்ஸ்ய ரூபிண꞉ .. 40..
சொல்லி மறைந்து போக -அந்த ஏழு நாள்களும் பார்த்த மத்ஸ்ய சூபியைத் த்யான பண்ணி -பெரிய மத்ஸ்ய ரூபியைத் தரிசிக்க காத்து இருந்தார்
தத꞉ ஸமுத்³ர உத்³வேல꞉ ஸர்வத꞉ ப்லாவயன் மஹீம் .
வர்த⁴மானோ மஹா மேகை⁴ர் வர்ஷத்³பி⁴꞉ ஸம த்³ருʼஶ்யத .. 41..
த்⁴யாயன் ப⁴க³வதா³ தே³ஶம்ʼ த³த்³ருʼஶே நாவமாக³தாம் .
தாமாருரோஹ விப்ரேந்த்³ரைராதா³ யௌஷதி⁴வீருத⁴꞉ .. 42..
தமூசுர்முனய꞉ ப்ரீதா ராஜன் த்⁴யாயஸ்வ கேஶவம் .
ஸ வை ந꞉ ஸங்கடா த³ஸ்மாத³விதா ஶம்ʼ விதா⁴ஸ்யதி .. 43..
ஸோ(அ)னு த்⁴யாதஸ் ததோ ராஜ்ஞா ப்ராது³ராஸீன் மஹார்ணவே .
ஏக ஶ்ருʼங்க³ த⁴ரோ மத்ஸ்யோ ஹைமோ நியுத யோஜன꞉ .. 44..
ஹைமோ நியுத யோஜன꞉-பொன்நிறம் 10 லக்ஷணம் மைல் நீளம்
ஸ கோ³ நா ஸம்ʼ கோ³ கோ³
நிப³த்⁴ய நாவம்ʼ தச்ச்²ருʼங்கே³ யதோ²க்தோ ஹரிணா புரா .
வரத்ரேணாஹினா துஷ்டஸ் துஷ்டாவ மது⁴ஸூத³னம் .. 45..
ராஜோவாச
அநாத்³யவித்³யோபஹ தாத்ம ஸம்ʼவித³ஸ் தன் மூல ஸம்ʼஸார பரிஶ்ரமாதுரா꞉ .
யத்³ருʼச்ச²யேஹோபஸ்ருʼதா யமாப்னுயுர் வி முக்திதோ³ ந꞉ பரமோ கு³ருர் ப⁴வான் .. 46..
ஸ்துதிக்கிறார் -அநாதி அவித்யை -பொய் நின்ற ஞானம் -அழுக்கு உடம்பில் உழன்று-யாதிருச்சியா ஸூஹ் ருதம் -நாமும் அறியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் தானே அறிந்து -என் பேரைச் சொன்னாய் -பிரதம குரு -பீதகவாடைப்பிரானார் -லஷ்மீ நாதன் ஞானப்பிரான்
ஜனோ(அ)பு³தோ⁴(அ)யம்ʼ நிஜகர்ம ப³ந்த⁴ன꞉ ஸுகே²ச்ச²யா கர்ம ஸமீஹதே(அ)ஸுக²ம் .
யத்ஸேவயா தாம்ʼ விது⁴னோத்ய ஸன்மதிம்ʼ க்³ரந்தி²ம்ʼ ஸ பி⁴ந்த்³யாத்³த்⁴ருʼத³யம்ʼ ஸ நோ கு³ரு꞉ .. 47..
யத்ஸேவயாக்³னேரிவ ருத்³ரரோத³னம்ʼ புமான் விஜஹ்யான்மலமாத்மனஸ்தம꞉ .
ப⁴ஜேத வர்ணம்ʼ நிஜமேஷ ஸோ(அ)வ்யயோ பூ⁴யாத்ஸ ஈஶ꞉ பரமோ கு³ரோர்கு³ரு꞉ .. 48..
சர்வஞ்ஞனே அஞ்ஞாராகிய நம்மை வழி நடத்த வேண்டும்
ந யத்ப்ரஸாதா³யுதபா⁴க³லேஶமன்யே ச தே³வா கு³ரவோ ஜனா꞉ ஸ்வயம் .
கர்தும்ʼ ஸமேதா꞉ ப்ரப⁴வந்தி பும்ʼஸ- ஸ்தமீஶ்வரம்ʼ த்வாம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 49..
அசக்ஷுரந்த⁴ஸ்ய யதா²க்³ரணீ꞉ க்ருʼதஸ்ததா² ஜனஸ்யாவிது³ஷோ(அ)பு³தோ⁴ கு³ரு꞉ .
த்வமர்கத்³ருʼக்ஸர்வத்³ருʼஶாம்ʼ ஸமீக்ஷணோ வ்ருʼதோ கு³ருர்ன꞉ ஸ்வக³திம்ʼ பு³பு⁴த்ஸதாம் .. 50..
ஜனோ ஜனஸ்யாதி³ஶதே(அ)ஸதீம்ʼ மதிம்ʼ யயா ப்ரபத்³யேத து³ரத்யயம்ʼ தம꞉ .
த்வம்ʼ த்வவ்யயம்ʼ ஜ்ஞானமமோக⁴மஞ்ஜஸா ப்ரபத்³யதே யேன ஜனோ நிஜம்ʼ பத³ம் .. 51..
த்வம்ʼ ஸர்வலோகஸ்ய ஸுஹ்ருʼத்ப்ரியேஶ்வரோ ஹ்யாத்மாகு³ருர்ஜ்ஞானமபீ⁴ஷ்டஸித்³தி⁴꞉
ததா²பி லோகோ ந ப⁴வந்தமந்த⁴தீ⁴-ர்ஜானாதி ஸந்தம்ʼ ஹ்ருʼதி³ ப³த்³த⁴காம꞉ .. 52..
தம்ʼ த்வாமஹம்ʼ தே³வவரம்ʼ வரேண்யம்ʼப்ரபத்³ய ஈஶம்ʼ ப்ரதிபோ³த⁴னாய .
சி²ந்த்⁴யர்த²தீ³பைர்ப⁴க³வன் வசோபி⁴-ர்க்³ரந்தீ²ன் ஹ்ருʼத³ய்யான் விவ்ருʼணு ஸ்வமோக꞉ .. 53..
(எட்டு ஸ்லோகங்கள் -நீயே குரு -ஞானக் கண் அளித்து -ஆசை இருப்பதைக் காட்ட வேண்டுமே –ஸ்ரீ மத்ஸயவதாரம் –
211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –
அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது=சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்)
ஶ்ரீஶுக உவாச
இத்யுக்த வந்தம்ʼ ந்ருʼபதிம்ʼ ப⁴க³வாநாதி³பூருஷ꞉ .
மத்ஸ்ய ரூபீ மஹாம் போ⁴தௌ⁴ விஹரம்ʼஸ்தத்த்வ மப்³ரவீத் .. 54..
புராண ஸம்ʼஹிதாம்ʼ தி³வ்யாம்ʼ ஸாங்க்²ய யோக³ க்ரியாவதீம் .
ஸத்ய வ்ரதஸ்ய ராஜர்ஷேராத்ம கு³ஹ் யமஶேஷத꞉ .. 55..
திவ்யமான மாத்ஸ்ய புராணம் -முதலில் சாங்க்ய -தத்வ உபதேசம் -26 தத்வங்கள்-அடுத்து -யோக -பக்தி யோகம் -யுஜ் -சேர்ந்து -த்யானம் -அடுத்து கிரியாவதம் -ஸ்வ வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனஸ் ஸூத்தி -பெற -1000 சதுர்யுகம் முழுவதும் உபதேசம்
அஶ்ரௌஷீத்³ருʼஷிபி⁴꞉ ஸாகமாத்ம தத்த்வ மஸம்ʼஶயம் .
நாவ்யாஸீனோ ப⁴க³வதா ப்ரோக்தம்ʼ ப்³ரஹ்ம ஸனாதனம் .. 56..
அதீத ப்ரலயாபாய உத்தி²தாய ஸ வேத⁴ஸே .
ஹத்வாஸுரம்ʼ ஹயக்³ரீவம்ʼ வேதா³ன் ப்ரத்யாஹரத்³த⁴ரி꞉ .. 57..
ஸ து ஸத்ய வ்ரதோ ராஜா ஜ்ஞான விஜ்ஞான ஸம்ʼயுத꞉ .
விஷ்ணோ꞉ ப்ரஸாதா³த் கல்பே (அ)ஸ்மின்னாஸீத்³ வைவஸ்வதோ மனு꞉ .. 58..
ஸத்ய வ்ரதஸ்ய ராஜர் ஷேர் மாயா மத்ஸ்யஸ்ய ஶார்ங்கி³ண꞉ .
ஸம்ʼவாத³ம்ʼ மஹதா³க்²யானம்ʼ ஶ்ருத்வா முச்யேத கில்பி³ஷாத் .. 59..
அவதாரோ ஹரேர்யோ (அ)யம்ʼ கீர்தயே த³ன்வஹம்ʼ நர꞉ .
ஸங்கல்பாஸ் தஸ்ய ஸித்⁴யந்தி ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 60..
ப்ரலயபயஸி தா⁴து꞉ ஸுப்த ஶக்தேர் முகே²ப்⁴ய꞉ ஶ்ருதி க³ணமபனீதம்ʼ ப்ரத்யுபாத³த்தஹத்வா
தி³திஜமகத²யத்³யோ ப்³ரஹ்ம ஸத்ய வ்ரதானாம்ʼதமஹ மகி²ல ஹேதும்ʼ ஜிஹ்ம மீனம்ʼ நதோ(அ)ஸ்மி .. 61..
இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹா புராணே வையாஸக்யா மஷ்டாத³ஶ ஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா மஷ்டம ஸ்கந்தே⁴ மத்ஸ்யாவதார சரிதானுவர்ணனம்ʼ
நாம சதுர் விம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 24..
.. இத்யஷ்டமஸ்கந்த⁴꞉ ஸமாப்த꞉ ..
———————————
பரீக்ஷித் பகவானின் ஆதி அவதாரமாகிய மத்ஸ்யாவதாரத்தைப் பற்றிக் கூறும்படி சுகரிடம் கேட்டான்.
சுகர் கூறியது.
பிரம்மாவின் இரவில் ஏற்படுவது நைமித்திக ப்ரளயம் . அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன் பிரம்மா துயிலுறும் போது
வேதங்களைக் கவர்ந்து சென்றுவிட்டான். பகவான் மத்ஸ்ய உருவெடுத்து அவனைக் கொன்று சமுத்திரத்தில்
ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை வெளிக்கொணர்ந்தார் . இதுதான் மத்ஸ்யாவதாரம்.
முன்னொரு காலத்தில் சத்ய வ்ரதன் என்ற அரசன் சித்தத்தை நாராயணனிடம் வைத்துத் நீரை மட்டும் உட்கொண்டு தவம் செய்து வந்தான்.
ஒருநாள் அவன் நதியில் அர்க்கியம் விடும்போது அந்த கையளவு நீரில் ஒரு சிறு மீன் இருக்கக் கண்டான்.
அதை நதியில் விட நினைக்கையில் அந்த மீன் தன்னை நதியில் விட்டால் பெரிய மீன்கள் விழுங்கிவிடும் என்று கூறியதால்
அதைத் தன் கமண்டலுவில் ஆஸ்ரமத்திற்கு எடுத்துச்சென்றான்.
அந்த சிறிய மீன் விரைவில் கமண்டலு கொள்ளாமல் வளர்ந்து தன்னை அதைவிட பெரிய இடத்தில் விடுமாறு கூறியது.
படிப்படியாக ஒன்றை விட ஒன்று பெரியதான நீர் நிலையத்தில் அதை சேர்க்க அது பெரியதாகிக் கொண்டே வந்தது.
கடைசியில் அதை சமுத்திரத்திற்கு எடுத்துப் போகையில் அந்த மீன் இங்கு தன்னைவிடப் பெரிய சுறாமீன் முதலை போன்றவைகள்
தன்னைத் தின்று விடும் எனக்கூற அப்போது சத்யவ்ரதன் வியப்புற்று மீன் வடிவில் தன்னை மயக்குவது யார் எனக் கேட்டான்.
சத்ய வ்ரதன் கூறியது.
“ஒரே நாளில் நூறு யோஜனை பரப்புள்ள ஏரியை நிறைத்த நீங்கள் நிச்சயமாக நான் வணங்கும் நாராயணனே .
இந்த அற்புத வடிவை எடுக்க க் காரணம் என்ன என்று கூறியருள வேண்டும்” என்றான்.
பகவான் அவனிடம் அன்றைய தினத்தில் இருந்து ஏழாவது நாள் பூமி பிரளய ஜலத்தில் முழுகப்போகிறது என்றும்,
அப்போது பெரிய ஓர் ஓடம் மத்ஸ்ய ரூபியான தன்னால் செலுத்தப்பட்டு அங்கு வரும் என்றும்,
அதில் சத்ய வரதன் எல்லாவிதமான ஔஷதிகளையும் விதைகளையும் எல்லாப் பிராணிகளையும் நிரப்பிக் கொண்டு
சப்த ரிஷிகளுடன் பயமின்றி சஞ்சரிப்பான் என்றும் ,
அப்போது அவனுடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை அளித்து பிரம்ம ஞானத்தை அருளுவதாகக் கூறினார்.
பகவானால் கூறப்பட்ட அந்தக் காலத்தில் பெரும் மேகங்கள் மழை பொழிய பூமி முழுகுவதைக் கண்டான்.
அப்போது பகவான் வாக்குப்படி ஒரு ஓடம் வர அதில அவர் சொன்னபடி எல்லா பொருள்களுடனும் சப்த ரிஷிகளுடனும் ஏறினான்.
அங்கு பகவான் மத்ஸ்ய ரூபத்தில் பொன் நிறமுடன் ஓர் லக்ஷம் யோசனை நீண்டு ஒற்றைக் கொம்புடன் காட்சியளிக்க
அவருடைய கொம்பில் அவரால் முன்னமே சொல்லப்பட்டவாறு ஓடத்தை வாசுகியை கயிறாகக் கொண்டு கட்டினான்.
பிறகு மகிழ்ச்சி பொங்க பகவானைத் ஸ்துதித்தான்.
“ தேவ ஸ்ரேஷ்டரும் உலகுக்கெல்லாம் நண்பரும் பிரியமானவரும் ஆத்மாவும் அறிவையும் இஷ்ட சித்தியையும் அளிப்பவரான
உம்மை குருடர்களைப் போல் உலக மக்கள் அறிந்து கொள்வதில்லை. ஈஸ்வரராகிய உம்மை அறிவின் விளக்கத்திற்காக சரண் அடைகிறேன்
ரஹஸ்யார்த்தங்களின் விளக்குப்போன்ற சொற்களால் இருதயத்தின் முடிச்சுகளை சேதித்து உமது உண்மையான
ஸ்வரூபத்தைக் காட்டியருள வேண்டும்,”இவ்வாறு கூறிய அரசனிடம் பகவான்
பிரளய ஜலத்தில் விளையாடியபடியே தத்துவத்தை உபதேசித்தார்.
அப்படிப்பட்ட மாயா மத்ஸ்ய ஸ்வரூபியான அவரை வணங்குவோமாக.
எட்டாவது ஸ்கந்தம் முடிவுற்றது
——————————
ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 32–ஸ்ரீ மத்ஸ்யாவதாரம் –
இத்துடன் ஸ்ரீ மத் பாகவதம் 8 ஸ்கந்தம் நிறைவு அடையும்
1-2-5-6-7-8- உபஜாதி மீட்டர் –
3-4-9 இந்திர வஜ்ரா
10 -உபேந்த்ர வஜ்ரா
———
புரா ஹயக்ரீவ மஹா ஸூரேண ஷஷ்டாந்தரான் தோத் யதகாண்ட கல்பே
நித்ரோந் முக ப்ரஹ்ம முகாத் ஹ்ருதேஷு வேதேஷ் வதித்ஸ கில மத்ஸ்ய ரூபம் –1-
ஆறாவது மன்வந்தரத்தின் முடிவிலே -நைமித்திக பிரளயம் ஏற்பட்டது -அப்போது தூங்கிக் கொண்டு இருந்த பிரமதேவனின்
முகத்தில் இருந்து ஹயக்ரீவன் என்ற அரசன் வேதங்களைத் திருடிச் சென்றான் –
அப்போது ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தியாக திரு அவதாரம் செய்ய விரும்பினீர்கள் அல்லவா –
வைவஸ்வர மன்வந்தரம் ஏழாவது இப்பொழுது
ஆகவே புரா -தொடங்கி இந்த ஸ்லோகம்-குதிரை முக அசுரன் என்பதால் ஹயக்ரீவன்
முகாத்-முகம் என்பது இங்கு வாயைக் குறிக்கும்
எழுதாக் கிளவி வேதம் -ஸ்ருதி -ஓதுவித்து ஓதுவதால் இந்தப் பெயர்-
———
ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதி பர்துர் நதீ ஜலே தர்பய தஸ்ததா நீம்
கராஞ்சலவ் சஞ்ஜ வலிதா க்ருதிஸ் த்வம் அத்ருஸ்யதா கஸ்சந பால மீந –2-
தமிழ் நாட்டில் கிருதமாலை என்ற நதியில் ஸத்ய வ்ரதன் என்ற அரசன்-(ராஜரிஷி-ஜடபரதர் அரசனாக இருந்து தவம் செய்தது போல் இவனும் )தர்ப்பணம் செய்து
கொண்டு இருக்கும் போது கூப்பிய அவனுடைய கைகளிலே தாங்கள் –பால மீந –மீன் குஞ்சாகத் தோன்றினீர்கள்
த்ரமிலா-த்ரமிடா -லகார டகார பேதம்
க்ருதமாலா என்பது வேறே கிளை நதி -வைகையே என்றுமே சொல்வர்
மீன் கொடி பாண்டியருக்கு இதனால் தான் -சத்யவ்ரதன் முதல் பாண்டிய மன்னன்
கராஞ்சலவ்-திருக்கைக்கள் அஞ்சலி முகமாக கூப்பிய போது
————-
க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நிந்யே அம்பு பாத்ரேண முனி ஸ்வ கேஹம்
ஸ்வல்பை ரஹோபி க்லஸீம் ச கூபம் வாபீம் சரஸ் சாந சிஷே விபோ த்வம் –3-
உடனே தங்களை நீரிலே விட்டான் -பயந்த உம்மைத் தன் –அம்பு பாத்ரேண-தீர்த்த பாத்திரத்தில் விட்டு –ஸ்வ கேஹம்-தன் வீட்டுக்குக் கொண்டு சென்றான்
எங்கும் நிறைந்தவனே -சில நாள்களுக்குள் தங்கள் தீர்த்த பாத்திரத்தையும் கிணற்றையும்
குளத்தையும் ஏரியையும் விட பெரிதாக வளர்ந்து விட்டீர்கள் –
அம்பு பாத்ரம் கமண்டலம் -குடம் -கலசம் -கிணறு கூபம் -குளம் வாபி -ஏரி -ஸரஸ் -இவற்றை விடக் கடந்து வளர்ந்தாயே
————
யோக ப்ரபாவாத் பவதா ஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முனிநா பயோதிம்
ப்ருஷ்டோ அமுநா கல்ப தித்ருஷு மேநம் ஸப்தாஹம் ஆஸ்வேதி வதன் நயாஸீ –4-
பிறகு தங்கள் கட்டளைப்படி ஸத்ய வ்ரதன் தன் யோக மகிமையால் (தபஸ் சக்தியால் இவன் உணர்ந்து கேட்க – நீர் ஆணை இட்ட படி )மீனான தங்களைக் கடலில் கொண்டு –பயோதிம்-சேர்த்தான்
அவன் பிரளயத்தைக் காண விரும்புகிறேன் என்று தங்கள் இடம் சொல்ல
ஏழு நாட்கள் பொறுத்து இரு என்று சொல்லி –நயாஸீ-மறைந்தீர்கள்
————
ப்ராப்தே த்வத் யுக்தே அஹநி வாரி தாரா பரிப்லுதே பூமி தலே முனீந்திர
சப்த ர்ஷிபி சார்தம் அபார வாரிண் யுத் கூர்ணமாந சரணம் யயவ் த்வாம் –5-
தங்கள் குறிப்பிட்ட –அஹநி-நாளும் வந்தது –வாரி தாரா-மழை பெய்து –பரிப்லுதே பூமி தலே-பூமி முழுவதும் நீரில் மூழ்கியது
ஸத்ய வ்ரதன் ஸப்த ரிஷிகளுடன் நீரில் சுழன்று கொண்டு தங்களைச் சரண் அடைந்தான் –
அபார வாரிண்-எல்லை காண முடியாத ப்ரளயக் கடலில்
———–
தராம் த்வத் ஆதேச கரீம் ஆவாப்தாம் நவ் ரூபிணீம் ஆருரு ஹுஸ் ததா தே
தத் கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூயஸ் த்வம் அம்புதேர் ஆவிரபூர் மஹீ யான் –6-
தங்களுடைய கட்டளைப் படியே தராம்-பூமி தோணியாக வந்தது -அவர்கள் அனைவரும்
தோணியில் ஏறினார்கள் -தோணி ஆடியதால் நடுங்கினார்கள்
அப்பொழுது தாங்களும் மறுபடியும் கடலில் இருந்து மிகப் பெரிய மீனாகத் தோன்றினீர்கள் –
———-
ஜஷாக்ருதம் யோஜன லக்ஷ தீர்க்காம் ததாம் உச்சைஸ் தர தேஜஸம் த்வாம்
நிரீஷ்ய துஷ்டா முனயஸ் த்வத் உக்த்யா த்வத் துங்க ஸ்ருங்கே தரணிம் பபந்து –7-
லக்ஷ யோஜனை (1 யோஜனை 10 mile )நீளம் உள்ள –ஜஷாக்ருதம்-மீன் உருவத்தில் மிகப் பிரகாசமாய் விளங்கினீர்கள் –
அதைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் தங்கள் சொல்படி அந்தத் தோணியை மிகப் பெரிய
தங்கள் கொம்பின் நுனியில் கட்டினார்கள் -(துங்க ஸ்ருங்கே-உயர்ந்த கொம்பிலே )
———–
ஆ க்ருஷ்ட நவ்கோ முனி மண்டலாய பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்
ஸமஸ்தூய மாநோ ந்ரு வரேண தேந ஞானம் பரம் ச உபதி சன்ன சாரீ –8-
ஆ க்ருஷ்ட நவ்கோ-படகை இழுத்துக் கொண்டு சென்றாய்
ஓடத்தை இழுத்துக் கொண்டு –முனி மண்டலாய-அவர்களுக்கு –பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்-உலகின் பல வேறு பிரிவுகளைக் காண்பித்தீர்கள் –
அரசனும் தங்களை –ஸமஸ்தூய மாந-ஸ்துதித்தான் -அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்தீர்கள் –
மாத்ஸ்ய புராணம் இவர் உபதேசித்தது
இப்பொழுது உள்ள மாத்ஸ்ய புராணத்தில் சில மாறு பாடுகள் உள்ளன
———-
கல்பாவதவ் ஸப்த முநீந் புரோவத் ப்ரஸ்தாப்ய ஸத்ய வ்ரத பூமிபம் தம்
வை வஸ்வ தாக்யம் மநு மாத தாந க்ரோதாத் ஹயக்ரீவம் அபி த்ருதோ அபூ –9-
கல்பாவதவ்-பிரளயத்தின் முடிவில் அந்த ரிஷிகளை-புரோவத்-முன்பு போலவே ஸப்த ரிஷிகளின் ஸ்தானத்தில் இருக்கச் செய்து -ஸத்ய வ்ரதனை வைவஸ்வத மனுவாக ஆக்கினீர்கள்
பிறகு மிகுந்த கோபத்துடன் ஹயக்ரீவன் என்ற அசுரனைத் தொடர்ந்து சென்றீர்கள் –
பிரளயம் ஆனபின்பு வேறே கல்பம் வரும் -விவஸ்வான் பிள்ளை என்பதால்-வை வஸ்வ-இந்தப் பெயர்
சாஷுச மன்வந்தரம் முந்திய ஆறாவது மன்வந்தரம்
மனு ஸ்ம்ருதி இந்த வைவஸ்ய மனு வழங்கியது
சரீர ஆத்ம பாவம் முதல் அத்யாயம் விளக்கும்
மேல் தர்மங்களை விளக்கும்
நாராயணன் உகப்புக்காக செய்யும் தர்மங்கள் என்பதால் முதலில் அவன் பெருமைகளை சொல்லும்
———–
ஸ்வ துங்க ஸ்ருங்க ஷத வக்ஷஸம் தம் நிபாத்ய தைத்யம் நிகமாத் க்ருஹீத்வா
விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந பிரபஞ்ச நாகார பதே ப்ரபாயா –10-
குருவாயூரப்பா தங்களுடைய மிகப் பெரிய கொம்பா-துங்க ஸ்ருங்க- அந்த அசுரனுடைய பிளந்து சாய்த்து(வேத ஞானம் ஹ்ருதயத்தில் தானே இருக்கும் -)
நிகமாத் க்ருஹீத்வா-வேதங்களை மீட்டு வந்து-விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந- பிரமன் இடம் கொடுத்து அருளிய தாங்கள் (பிரபஞ்ச நாகார-வாயு ஆகாரம்)-அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –
ப்ரம்மா ஜீவாத்மா
குதிரை அசுரன் ஐம் புலன்கள்
ஞானம் இழந்து இருக்க
சரண் அடைந்து
ஞான உபதேசம் பெறுகிறோம்பொய்களை மன்னிக்க பிராட்டி
பொய் சொன்னால் மீனாகப் பிறக்க வேண்டுமே
நீயே பிறந்து இவனை ரக்ஷிக்க பிரார்த்திக்க -அதனால் மத்ஸ்ய அவதாரம்
அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-தயா தசகம்–35-
என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —
நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக
மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல்
சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –
தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.
இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான்.
ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?
———————————
ஸ்ரீ மத்ஸயவதாரம் –
211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –
3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
அவதாரிகை
அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது
சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –
3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
211- குரூர் குரு தம–குரு தம குரு -பரமாச்சார்யன் –அனைவருக்கும் குரு இவரே
க்ருக்₃ரோருச்ச, இதி கு ப்ரத்யய ꞉ உகாரஶ் சாந்தாதே ₃ஸ ꞉ । தஸ்யைவ விஸேஷணம்
உணாதி ஸூத்ரம் –குரோர் உச்ச –-செய்வது என்ற பொருள் தருகின்ற –க்ரு -பேசுதல் என்ற பொருள் தருகின்ற க்ரு
ஆகிய இரண்டிலும் உள்ள உ என்ற ப்ரத்யயம்
கு₃ருதம꞉
ந ஸ்வதந்த்ர நாமத்வமஸ்ய ;குரு தம என்பது தனிச்சொல் அல்ல -குரு பதத்தை மேலும் விவரித்து உயர்ந்த குரு என்கிறது
ச பூர்வேஷாம் அபி குரு இதி ஹிரண்ய கர்ப்ப–இவனே பழைமையான குரு என்று ஹிரண்ய கரப்பன் கூறினான்
* பூஜ்யஶ்ச கு₃ருக₃ரீயான் இதி –ஸ்ரீ கீதை -11-43-
அனைவரையும் விட மேம்பட்ட பூஜிக்கத்தக்க குருவாக நீயே உள்ளாய்
கு இருள் ரு போக்கி -அஞ்ஞானம் போக்கி -இதற்கு அடை மொழி குரு தம
அறியாக் காலத்துள்ளே அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
பிதா மகராண ப்ரஹ்மனுக்கும் வேதங்கள் வெளிட்டு உபதேசித்து அருளினவன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -பெரியாழ்வார் -5-2-8-
மத்ஸ்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால்
ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –
குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———————
ஓம் குரவே நம:
ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்
ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)
ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்
குரு: பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
———
குருர் குருதம – ஆசான்களில் முதன்மையானவர்
ஸ்ரீ ஆதிசங்கரர் குருர் மற்றும் குருதமாவை இரண்டு வெவ்வேறு நாமங்களாகக் கருதுகிறார், ஆனால் ஸ்ரீ பராசர பட்டர் அவற்றை ஒரே நாமமாகக் கருதுகிறார். குருர் குருதமஹ். சுவாரஸ்யமாக, ஸ்ரீ பராசர பட்டர் ‘வாசஸ்பதி’ மற்றும் ‘உதாராதீ’ ஆகிய இரண்டு தனி நாமங்களாகக் கருதுகிறார், ஸ்ரீ ஆதி சங்கரர் அவற்றை ஒரு நாமமாகக் கருதுகிறார். இருப்பினும், ஒட்டுமொத்த பெயர் எண்ணிக்கையும் இதனால் பாதிக்கப்படவில்லை. ஸ்ரீ பராசர் பட்டர், மேலே குறிப்பிட்டுள்ளபடி, குருர் குருதமாவை ஒரே கூட்டுப் பெயராகக் கொண்டு, ‘குரு-தமா’ என்ற சொற்றொடரை குருவின் பெயரடையாக விளக்குகிறார், அதாவது, சிறந்த குரு. அனைத்து குருக்களின்.
குரு என்றால் ‘ஆன்மீக போதகர்’ மற்றும் தமா என்பது ஒரு உயர்ந்தது, அதாவது சிறந்தது. சமஸ்கிருதத்தில் வார்த்தையின் முடிவில் ‘தமா’ சேர்த்தால் அது உயர்ந்த பட்டம். எனவே குருதமா என்பது அனைத்து ஆசான்களிலும் உயர்ந்தது அல்லது முதன்மையானது.
ஸ்ரீஆதிசங்கரர் இதை இரண்டு நாமங்களாகக் கருதுகிறார், குரு மற்றும் குரு-தமம். அவர் நாம ‘குரு’வை இரண்டு வெவ்வேறு அர்த்தங்களில் விளக்குகிறார், ஒருவர் சிறந்த ஆசிரியர் என்றும் மற்றவர் உலகளாவிய தந்தை என்றும். அவர் கூறுகிறார் ‘சர்வ வித்யாநாம் உபதேஷ்த்ருத்வாத் சர்வேஷாம் ஜனகத்வாத் வா – அவர் அனைத்து அறிவுக்கும் சிறந்த ஆன்மீக ஆசிரியராக இருப்பதால் அவர் குரு என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் பிரபஞ்சத்தின் தந்தை அல்லது படைப்பாளர் என்பதால்.
‘விரிஞ்சயாதீனாம் அபி பிரம்மவித்யா ஸம்ப்ரதாயகத்வாத் குருதமாஹ் – பிரம்மனைப் பற்றிய அறிவை பிரம்மனுக்குத் தானே கற்பிக்கிறார்’ என்று அவர் இதை நியாயப்படுத்துகிறார். இந்த யோசனை ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் (6.18) பிரதிபலிக்கிறது, இது ‘யோ ப்ரம்ஹாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாங்க ப்ரஹிணோதி தஸ்மை– பிரம்மத்தை உண்டாக்கி அவருக்கு வேதத்தை வழங்கியவர்’ என்று கூறுகிறது.
இதே போன்று மஹா நாராயண உபநிஷத் (8.15) ‘குருஹ் கா இதி | குரு சாக்ஷாத்-ஆதிநாராயணா – இறுதி குரு ஸ்ரீ ஆதி நாராயணா’. குரு-சிஷ்ய பரம்பரையின் ஆரம்பம் நர மற்றும் நாராயணருடன் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
தர்மச் சக்கரத்தில், எழுத்தாளர் குரு-தமஹ் என்று கூறுகிறார், ஏனென்றால் அவர் எல்லாவற்றிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார், அவருடைய போதனைகளைப் பெற நாம் செய்ய வேண்டியது எல்லாம், அதற்காக நாம் ஏங்குவதுதான். உண்மையான அறிவை (ஞானத்தை) அடைவதற்காக முன்னேற அவரது அருளுக்கான தேடுதலே தேவை.
—————
212-தாம –
இருப்பிடம் – மநு என்கிற பக்தன் இடம் அனைத்தையும் தன் கொம்பில் கட்டி விட சொல்லி ரஷித்தவன்-மீனாய் வந்து உய்யக்கொண்டவன் –
ஸம்ஹார நஶ்வர சராசர பீ₃ஜ ஆதா₄ர நவ்கர்ண (படகு-நாவாய் முகுந்தன் )தா₄ரத்வேந ததா₃ஶ்ரயத்வாத்
தா₄ம । தா₄ஞ꞉
* ஸர்வதா₄துப்₄யோ மநிந், இதி மநிந் ப்ரத்யய ꞉ ॥
உணாதி ஸூத்ரம் –ஸர்வ தாதுப்ய —மனிந்-தாக்குவது என்ற பொருள் கொண்ட தா என்பது அனைத்து
வினைகளுடன் உள்ள போது அத்துடன் மதின் என்பது இணையும்
தாம +மன் +இன் =தாமன்
மீனாய் ஆமையுமாய்-2-1-10-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் -பெரிய திருமொழி -8-8-10-
தேவுடை மீனாய் ஆமையாய் -பெரியாழ்வார் -4-9-9-
முன்பு 62 த்ரி ககுத் தாம பார்த்தோம்
சராசரங்கள் அனைத்தையும் தாங்குபவர் -பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும்
கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –
ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————
ஓம் குருதமாய நம:
விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்
ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்
குருதம: பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
தம என்றால் ‘உயர்ந்த’ அல்லது ‘சிறந்த’ என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.
‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன் முதலில் நான்முகனைப் படைத்தாரோ…
இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
————
தாம – உறைவிடம்
தாம என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன:
- வசிக்கும் இடம்;
- உச்ச ஒளி; மற்றும்
- அனைத்து விரும்பிய பொருட்களின் உறைவிடம்.
தாம முதலில் ‘த்ரி-ககுட்-தாம‘ என்று நாம 62 ஆகத் தோன்றியது. அதே விளக்கங்கள் இங்கேயும் பொருந்தும். ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் இணைத்து மத்ஸ்ய அவதாரத்தைக் குறிப்பிடுகிறார். பிரளய வேளையில் அசையும் மற்றும் அசையாத அனைத்துப் பொருட்களின் விதைகளைச் சுமந்து கொண்டு படகைச் செலுத்தும் தலைவன் போல இருப்பதால், பகவான் தாமனாக இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ சங்கரர் நாமத்தை உச்ச முன்னணி ஒளியாக விளக்குகிறார். அவரது கருத்துப்படி, நாராயண ஸூக்தம் ‘நாராயண பரோ ஜோதிஹ் – நாராயணனே இறுதி ஒளி’ என்று கூறுவதால் இந்த அர்த்தம் பொருத்தமானது.
ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா தனது கீதா பாஷ்யத்தில் (அத்தியாயம் 10 வசனம் 12) பரம் ப்ரஹ்ம பரம் தாம என்று கூறுகிறார், தாம – தாம சப்தோ ஜோதிர்வாசனஹ் – பரம் ஜோதிஹ் என்ற வார்த்தைக்கு “உச்ச ஒளி” என்று பொருள் தருகிறார். தர்ம சக்கரத்தில் எழுத்தாளர் “உச்ச ஒளி” என்ற வார்த்தையை மேலும் விரிவாகக் கூறுகிறார். சூரியனிடமிருந்து வரும் ஒளியைக் கண் பார்க்கிறது. ஆனால் சூரியனின் ஒளியோ அல்லது கண்ணோ அல்டிமேட்டைப் பார்க்க முடியாது. அதற்கு பகவானின் அருள், உள்ளொளி என்னும் ஒளி வேண்டும். இதுவே மஹா விஷ்ணு, தாமா என்பது உச்ச ஒளி, வேறு எந்த ஒளியும் செய்ய முடியாததை வெளிப்படுத்தும். அவரை அடைய வேண்டும் என்ற தீவிர ஆசையின் கண்தான் இந்த ஒளியைக் காண முடியும், வேறு எந்தக் கண்ணாலும் பார்க்க முடியாது.
கொடுக்கப்பட்ட பிற விளக்கங்கள் அடங்கும்
- விரும்பிய பொருள்கள் அனைத்திற்கும் அவன் உறைவிடம்,
- அவர் ஆசைகள் அனைத்திற்கும் இருப்பிடம்,
- கர்மங்கள் முதலிய எல்லாவற்றுக்கும் அவனே இருப்பிடம்.
ஸ்வ அமி சின்மயாஆனந்தா, “உச்ச ஒளி” என்பதன் விளக்கத்திற்கு கூடுதலாக, அவர் இறுதி இலக்கு (தாமா அல்லது சிகரம்) என்பதால் அவர் தாமா என்று மாற்று விளக்கம் கொடுக்கிறார்.
தற்செயலாக, சார் தாம் பற்றிய குறிப்பு (அதாவது: ‘நான்கு வசிப்பிடங்கள்/இருக்கைகள்) என்பது இந்தியாவில் உள்ள நான்கு புனிதத் தலங்களின் பெயர்கள் ஆகும், அவை இந்துக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றன. அவை பத்ரிநாத், துவாரகா, ராமேஸ்வரம் மற்றும் ஜகன்னாத் புரி. ஒருவர் வாழும் காலத்தில் சார் தாம் தரிசனம் செய்வது இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
213-ஸத்ய
நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-(873)
மந்வாதி₃ஷு தத் கால ஸமாஶ்ரிதேஷு ஸத்ஸு ஸாது₄ரிதி
ஸத்ய ꞉ ॥
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7
தாஸ சத்யன் அடியவர்க்கு மெய்யன் திரு வஹீந்திர புரம்-பிரியம் மட்டும் செய்தால் பொய்யன்–ப்ரயோஜனாந்தர பரர்களும் வேண்டியதைத் தந்து அருளுபவர் -கோவிந்த ஸ்வாமி விரும்பியபடியே இங்கேயே இருந்து பின் வா என்று அருளினார் அன்றோ -ஹிதம் அருளி தன்னுடன் சேர்த்துக் கொள்ளுபவன் மெய்யன் –
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
——————
ஓம் தாம்னே நம:
தாம ஜ்யோதி: தாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்
‘நாராயண பரோ ஜ்யோதி:’(நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்
இதி மந்த்ர வர்ணாத் இந்த மந்திரத்தின் படி
தாம: பகவான் ‘ தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தாம என்றால் ஒளி மிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளி வடிவினராக இருப்பதால் பகவான் ‘தாம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.
ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால்
தாம: பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘பரம் ப்ரஹ்ம பரம் தாம‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.
இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———
சத்யா – நல்லது
இந்த நாமம் முன்பு நம 107 ஆக இருந்தது, மேலும் ஒரு முறை நம 873 ஆக நிகழும். இந்த நாமத்தின் பொருளின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- அவர் தூய உண்மை.
- அவர் பிராணன், பொருள் மற்றும் சூரியனால் ஆனது.
- அவர் உன்னத ஆன்மாக்கள் மீது நல்ல மனநிலை கொண்டவர்.
- கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அவர் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறார்.
ஸ்ரீ பராசர பட்டர் அந்த நேரத்தில் தனது உதவியை நாடிய மனு போன்ற சத்-புருஷர்களுக்கு நல்லவராக இருந்ததால் அவர் சத்யா என்று சுட்டிக்காட்டுகிறார்.
ஸ்ரீஆதிசங்கரர், ‘சத்யஸ்ய சத்யம்-அனைத்து உண்மைக்குப் பின்னும் உள்ள சத்தியம்’ என்று அனைத்தையும் சுருக்கமாகக் கூறுகிறார். சத்யா என்பது பாணினி சூத்திரம் 4.4.98 இன் அடிப்படையில் சத்தில் ‘சிறப்பாக’ இருப்பவர்.
ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் கிருஷ்ணரின் வார்த்தைகளில் ‘சத்’ என்பதன் வரையறைக்காக பகவத் கீதையை (அத்தியாயம் 17 வசனங்கள் 26 மற்றும் 27) குறிப்பிடுகிறார்.
ஸத் பாவே ஸாது பாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே |
ப்ரஷஸ்தே கர்மணி ததா சச்-சப்தஹ் பார்த்த உச்யதே || (17.26)
ய~ஜ்னே தபஸி தநே ச ஸ்திதிஹ் சதிதி கோச்யதே |
கர்ம சைவ ததார்த்தீயம் ஸதித்யேவ அபிதீயதே || (17.27)
‘சத்‘ என்ற சொல் இருப்பு, நன்மை, நல்ல செயல்கள், தியாகத்தில் உறுதிப்பாடு, துறவு, வரங்கள் அல்லது அத்தகைய நோக்கங்களுக்காகச் செய்யும் செயல்களைக் குறிக்கிறது. இவை அனைத்திலும் சிறந்தவர் அல்லது இந்த வழியில் செயல்படுபவர்களுக்கு சிறந்தவர் (அதாவது ஆதரவளிப்பவர்) சத்யா ஆவார்.
214-ஸத்ய பராக்கிரம
வஞ்சனை அற்ற ஆற்றல்
தேஷு ஸத்யோ(அ)கைதவ ꞉ பராக்ரமோ வ்ருத்திரஸ்யேதி
ஸத்ய பராக்ரம꞉
பொய் கலவாமல் -பொய் கலவாது மெய்கலந்தான் வெண்ணெய் இடமும் ஆழ்வார் இடமும்
தீய புந்திக் கஞ்சனை வஞ்சனை செய்தவன்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சன் -பெரிய திருமொழி -7-10-8-
அஹம் வேத்மி –மஹாத்மாநம் ராமம் சத்ய பராக்ரமம்
மெய்யன் மெய்ய மலையான் சங்கு ஏத்தும் கையன்
மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்திய வசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————
ஓம் ஸத்யாய நம:
ஸத்ய வசன உண்மைக் கூற்றுக்களாகவும்
தர்ம ரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால்
ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப் படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.
108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு மெய்யம் என்னும் திருத் தலத்தில், பகவான் ‘ஸத்ய மூர்த்தி’, ‘மெய்யன்’ என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.
‘தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி‘
வேதங்களிலும், உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.
இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும்
ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால்
ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)
ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.
இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———
ஓம் ஸத்யபராக்ரமாய நம:
ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத
பராக்ரமோ யஸ்ய ஸ:
வீரத்தை உடையவராதலால்
ஸத்ய பராக்ரம: பகவான் ‘ஸத்யபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் ‘ஸத்யபராக்ரம:’ (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——–
சத்ய-பராக்ரமா – தவறாத வீரம்
பராக்ரம் என்றால் வீரம். எனவே சத்திய பராக்கிரமம் உண்மையான வீரம் கொண்ட ஒன்றாகும். ஆதி சங்கரரின் வார்த்தைகளில், ‘சத்யஹ் அவிதாத: பராக்ரமோ யஸ்ய சஹ் – உண்மையான மற்றும் தடையற்ற வீரம்’.
ஸ்ரீ பராசர பட்டர், மத்ஸ்ய அவதாரத்தின் அடிப்படையில் நமஸ்ஸின் இந்த வரிசையின் விளக்கத்தைத் தொடர்கிறார், மனு மற்றும் பிறரிடம் துணிச்சலான செயல்களை பகவான் உண்மையாகச் செய்ததற்கான உதாரணத்தைக் கூறுகிறார். தர்மச் சக்கரத்தில் எழுத்தாளர் இரண்டு வகையான வீரம் இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார், ஒன்று ஸ்ரீ ராமனுடையது போன்ற மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றொன்று சக்தியை வெளிப்படுத்தவும் மற்றவர்களைக் காயப்படுத்தவும் பயன்படுகிறது. என்று அரக்கன் ராவணன். மஹா விஷ்ணுவை தியானிப்பது சரியான வகையான வீரத்தை வளர்க்கும் திறனை அளிக்கிறது.
215-நிமிஷ –
கண் மூடி -அநாஸ்ரிதரை கடாஷியாதவன்-நிமி வம்சம் சீதா பிராட்டி -காணாக் கண் இட்டு இருப்பது -வேறே -உயர்ந்த விஷயம்
தத்₃விரோதி₄ஷு நிமிஷதி – ந கடாக்ஷய தீதி
நிமிஷ꞉ ॥
சந்தமர் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன்
நின்றான் -பெரிய திரு மொழி -2-3-6-
நஷ்டம் பராக் தத் அலாபஸ் த்ரிலோகம் –ஸம்பத் அநயோதயம் -சதுஸ் ஸ்லோகி
சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும் ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-
சத்வ நிதானம் இருள் தரும் வென்னும்
ஜன்மம்
ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-
சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் –
அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———
ஓம் நிமிஶாய நம:
நிமிலிதே மூடியுள்ளன
யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள்
யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது
அதோ நிமிஶ: எனவே, பகவான் ‘நிமிஶ:’ (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் ‘நிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நிமிஷா – கண்களை மூடியவர்
ஆதி சங்கரரின் கூற்றுப்படி இதன் பொருள் ‘நிமீலிதே யதோ நேத்ரே யோகநித்ரா ரதஸ்ய அதோ நிமிஷா – அவரது கண்கள் யோகநித்ரா அல்லது யோக உறக்கத்தில் மூடப்பட்டிருக்கும், எனவே அவர் நிமிஷா’ என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ பராசர பட்டர் இதை ‘ந ஈக்ஷதே இதி நிமிஷாஹ்‘ என்று விளக்குகிறார். அவரை எதிர்ப்பவர்கள் மீதும் அல்லது அவரது பக்தர்கள் மீதும் அவருடைய அருள் பார்வை படுவதில்லை.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அவர் நிமிஷா (மூடிய கண்களுடன்) என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருக்குப் பார்க்க அவரது கண்கள் தேவையில்லை.
அவர் எங்கும், நம் ஒவ்வொருவரிடமும், எல்லா நேரத்திலும் இருப்பதால், கண்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதால், அவர் தனது மூடிய கண்களால் அனைத்தையும் பார்க்கிறார் என்று தர்ம சக்கரம் எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார்.
விஷ்ணுவின் யோக நித்ராவைப் பற்றி சிந்திப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த நிலையில் (பொதுவாக, நம் கண்கள் திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும், அவர்கள் அலைந்து திரிவார்கள்) உலக எண்ணங்கள்!).
216-அநிமிஷா –
மீன் பார்வையாலே முட்டைகளை வளரச் செய்யும்-கீழ் தன்மைகளை சொல்லி இங்கு அவதார திரு நாமம்
க ஏவம் ?
அநிமிஷ꞉ ;
ஸத்ஸு ந நிமிஷதி ஜாக₃ர்தீதி
அநிமிஷ꞉,
தி₃வ்ய மீந தநு꞉ ॥
ஆஸ்ரிதர்களை குளிரக் கடாஷித்து அருளி
மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-
சபரி -விதுரர் -ரிஷி பாதணிகளை பூதராக்கும் நெடு நோக்கு கொள்ளும்
கற்பார் ராமபிரானை அல்லால் -விதியைச் சொல்லி உத்தரம் வார்த்தை அறிபவர் சரம ஸ்லோகம் கீதாச்சார்யர்
சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில்
இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –
வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————
ஓம் அநிமிஶாய நம:
நித்ய எப்பொழுதும்
ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால்
அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் ‘அநிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் ‘விழிப்புடன் இருத்தல்’, ‘அறிவொளியோடு இருத்தல்’ என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.
மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும்
ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும்
அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.
மத்ஸ்யாவதார வரலாறு:
முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் ‘வைகை’ என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார்.
பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.
அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். ‘அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்’ கூறிவிட்டு மறைந்தார்.
அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார்.
முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார்.
இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.
———-
அனிமிஷா – எப்போதும் விழித்திருப்பவர்
ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை மத்ஸ்ய அல்லது வான மீன் அவதாரத்தின் அடிப்படையில் விளக்குகிறார். இந்த அவதாரத்தில், அவர் ஒருபோதும் தனது கண்களை மூடுவதில்லை மற்றும் அவரது பக்தர்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பார் (மீன்களுக்கு கண் இமைகள் இல்லை, எனவே அவற்றின் கண்களை மூடவே இல்லை).
ஸ்ரீ ஆதிசங்கரர் இரண்டு கூடுதல் விளக்கங்களைத் தருகிறார் – அவர் தனது ஞானத்தின் காரணமாக எப்போதும் விழித்திருக்கிறார், அல்லது அவர் ஆத்மா ஸ்வரூபம், மற்றும் ஆத்மா ஒருபோதும் தூங்குவதில்லை. ‘நித்ய ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் அனிமிஷா மத்ஸ்யரூபதாயா வா ஆத்மாரூபதாயா வா அனிமிஷா’ என்கிறார்.
“என் அமுதினைக் கண்ட கண்கள் மாதொன்றினைக் காணவே” என்ற அமலன்ஆதிபிரானில் திருப்பனாழ்வாரின் நிறைவுப் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருக்கோயிலில் இறைவனின் அழகை வர்ணிக்கும் போது ஆழ்வார் இதைப் பாடிய போது, அகக் கண்களுக்கும் பொருந்தும்.
இந்த நாமத்தை தியானிப்பவர் ஆன்மீக ரீதியில் எப்போதும் விழிப்புடன் இருப்பார் என்றும், கெட்ட எண்ணங்கள் மற்றும் உலக கவனச்சிதறல்கள் அவரது மனதில் நுழையாது என்றும் இந்த பெயரின் முக்கியத்துவத்தை தருகிறார் தர்ம சக்கரம் ஆசிரியர்.
217-ஸ்ரக்வீ
பரத்வ ஸூ சகமான மாலை அணிந்தவன் -வைரம் முத்து போன்ற ஐந்து வித வைஜயந்தி மாலை-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் வைஜயந்தி அம்ச அவதாரம்
திர்யக்த்வே (அ)பி பரத்வ ஸூசிநீ வைஜயந்தீ ஸ்ரக₃ரஸ்ய நித்ய யோகி₃நீதி
ஸ்ரக்₃வீ ।
* அஸ்மாயா மேகா₄ஸ்ரஜோ விநி꞉ இதி விநி
அஷ்டாத்யாயீ –அஸ் மாயா மேதா ஸ்ரஜஸ் விநி —
மாயா–மேதா –ஸ்ரத் என்பதுடன் சேர்ந்து இருத்தல் என்பதை உணர்த்தும் விநி என்பது உண்டாகும்
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட -நாச் -14-2-
திருத் துழாய் மாலையைச் சொல்லிற்றாகவுமாம்
தோளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடைய அம்மான் -1-9-7-
மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக -பஞ்ச பூத ஸூஷ்மங்கள் சேர்ந்ததான-வைஜயந்தி என்னும் வன மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் வன மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –
மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
————
ஓம் ஸ்ரக்விணே நம:
பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை)
வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ என்ற பெயருடைய
ஸ்ரஜம் மாலையை
நித்யம் என்றும் (எக்காலத்திலும்)
பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்)
ஸ்ரக்வீ பகவான் ‘ஸ்ரக்வீ” (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான ‘வைஜயந்தி’ என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் ‘ஸ்ரக்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தன்மாத்திரைகள் – இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).
நித்யம் – எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.
ஸ்ரக்வீ – மாலையால் அலங்கரிக்கப்பட்டவள் (வைஜயந்தி)
ஸ்ரக் என்ற சொல் மாலையைக் குறிக்கிறது. ஸ்ரக்வீ ஒரு மாலையால் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டவர். பாணினியின் அஷ்டாத்யாயி 5.2.121 படி – மாயா மேதா ஸ்ரஜோ விநிஹ் – ஸ்ரஜுக்குப் பின் வரும் ‘வின்’ என்ற இணைப்பு ‘உடன் இணைந்து’ என்பதைக் குறிக்கிறது. எனவே இங்கு பொருள் ‘எப்பொழுதும் மாலையால் அலங்கரிக்கப்பட்டவர் – ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் வைஜயந்தி மாலையைக் குறிக்கிறது.
பூத தன்மாத்ர ரூபம் வைஜயந்த்யாக்யம் ஸ்ரஜம் நித்யம் பிபாரதி இதி ஸ்ரக்வீ – தன்மாத்ரங்களின் ஐந்து அடிப்படை கூறுகளை (சுவை, பார்வை, ஒலி, வாசனை மற்றும் உணர்வு) குறிக்கும் வைஜயந்தி என்ற மாலையை எப்போதும் அணிந்திருப்பதால் அவர் ஸ்ரக்வீ என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி விஷ்ணு புராணத்தின் குறிப்பைக் கொடுக்கிறார் –
பஞ்ச ஸ்வரூப யா மாலா வைஜயந்தி கதா பிரிதா |
ச பூத ஹேது ஸங்காதா பூதா மாலா ச வை த்விஜா || (1.2.72)
ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டா என்பது ‘ஸ்ரிஜ்’ என்பதிலிருந்து தொடங்கும் அர்த்தம், ‘உருவாக்க அல்லது அமைக்க’. நட்சத்திரங்கள், சூரியன் முதலான படைப்புகள் அனைத்தும் அவனுடைய படைப்புகள் என்பதால், அவன் ஸ்ரக்வீ. ஒரு மாலையில், பல்வேறு வகையான பூக்கள் இருக்கலாம், ஆனால் அவை மாலையின் ஒரு பகுதியாக இருக்கும்போதே தங்கள் அடையாளத்தை இழக்கின்றன. மேலும், இந்த வெவ்வேறு படைப்புகள் அனைத்தும் ஸ்ராக்வீ அல்லது பகவான் விஷ்ணுவைப் போல ஒன்றாக உள்ளன. அல்லது, நம் சமுதாயத்தில் உள்ள ஒரு சிறந்த நபரின் கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம் போல, பகவான் இந்த தனித்துவமான மாலையால் அவரது இறைவனையும் மேன்மையையும் குறிக்கிறார்.
முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், வைரம் ஆகிய ஐந்து விலையுயர்ந்த ரத்தினங்களால் ஆனது வைஜயந்தி என்று பேராசிரியர் ஏ. சீனிவாச ராகவன் குறிப்பிடுகிறார்.
தர்ம சக்கரத்தில் உள்ள எழுத்தாளர், விஷ்ணுவின் சேவையில் நமது அனைத்து தனமாத்ரங்களையும் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் (ரங்கநாதருக்கு அது போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் தன்னை மலர் மாலையால் அலங்கரித்த ஆண்டாள் உதாரணத்தை கூறுகிறார்)
218-வாசஸ்பதி –
சொல்லுக்கு அதிபதி-மேலும் இந்த நாமம் வரும் –
ஸ ஏவ ஶ்ரீமந் மாத்ஸ்ய புராணேந வேத₃உப ப்₃ரும்ஹணாத்₃
வாஸ ஸ்பதி꞉ ।
ஷஷ்ட்₂யா அலுக்,
* ஷஷ்ட்₂யா ꞉ பதி புத்ர இத்யாதி₃ நா ஸத்வம் ॥
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்ல வல்லரே -திருச்சந்த -118-
மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர்-வாக்கு என்னும் சொல்லுக்கு அதிபதி -ஸ்ரீ பராசர பட்டர் –
வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————
ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:
வாசோ வித்யாயா ‘வாச’ என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும்
பதி: அவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்)
வாசஸ்பதி: ‘வாசஸ்பதி:’ என்று அழைக்கப்படுகிறார்
ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும்
புத்திரஸ்யேத்யுதாரதீ: அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார்
வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘வாச’ என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் ‘அறிவின் தலைவர்’ என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் ‘வாசஸ்பதி’, ‘உதாரதீ’ ஆகியவை இணைந்து ‘வாசஸ்பதிருதாரதீ’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.
———
வாசஸ்பதி – பேச்சின் இறைவன்
ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீமத் மத்ஸ்ய புராணத்தின் மூலம் வேத அறிவை எடுத்துரைத்ததால், அவர் வாசஸ்பதி என்று கூறுகிறார். மத்ஸ்ய புராணத்தில் உள்ள வெளிப்பாட்டின் சக்தியே வாச்சஸ்பதியின் குணத்தை வெளிப்படுத்துகிறது.
ஸ்ரீஆதிசங்கரர் இந்த நாமத்தையும், அடுத்த நாமத்தையும் – உதாரதிஹ், ஒரு நாமமாக விளக்குகிறார். அவர் விளக்குகிறார் ‘வாச்சோ வித்யாயாஹ் பதிஹ் வாசஸ்பதி; ஸர்வார்தவிஷயா தீஹ் புத்திஹ் அஸ்ய இதி உதாராதீஹ், வாசஸ்பதி ருதாராதீ இதி ஏகம் நாம – அவர் அனைத்து அறிவுக்கும் அதிபதி, அற்புதமான புத்திசாலி.’ இவ்வாறு இது பகவானின் இரண்டு தொடர்புடைய பண்புகளை இணைத்து ஒரு பெயர். ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் வித்யா அல்லது வேதத்தின் மாஸ்டர் என்பதைக் குறிக்க, வாசஸ்பதி என்ற சொல்லை விளக்குகிறார்.
219- உதார தீ
சிறந்த ஞானம் உடையவன் -சர்வஞ்ஞன் -எல்லையில் ஞானத்தன் -கம்பீர ஸ்வபாவன்-தயாளு ஞானவான்
ஏவம் ஸர்வ உப ஜீவ்ய ஸார்வஜ்ஞ்யாத்₃
உதா₃ரதீ₄꞉
ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-9-
ஞானக் கை தா காலக் கழிவு செய்யாமல்-
யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர் -ஸர்வஞ்ஞர் –ஸ்ரீ பராசர பட்டர் –
வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் –
வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் –
உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
உதார-தீஹ் – பரந்த அறிவைக் கொண்டவர்.
இங்கு ‘தீ’ என்றால் புத்தி அல்லது புத்தி. உதாரா என்றால் தாராளமான, உன்னதமான, புகழ்மிக்க, முதலியன. உதாராதீஹ் என்றால் தன் பக்தர்களிடம் தாராள மனப்பான்மை கொண்டவர், அல்லது எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் கைப்பற்றக்கூடிய புகழ்பெற்ற அல்லது அற்புதமான புத்திசாலித்தனம் கொண்டவர்.
ஸ்வாமி சின்மயாநந்தா, பகவான் தனது பக்தர்களின் இதயத்தின் பலவீனத்தைப் பாராட்டுவதற்குப் பெரிய மனதுடன் சகிப்புத்தன்மை கொண்டவர் என்றும், பொதுவாக பாவிகளிடம் மிகுந்த அனுதாபத்தையும் அளவற்ற கருணையையும் வெளிப்படுத்துகிறார் என்றும் விளக்கம் தருகிறார். கண்மூடித்தனமான மற்றும் சமரசமற்ற உடல் இயற்கையின் விதிகளைப் போலல்லாமல், நம்முடைய மீறல்களைக் கவனிக்க அவருக்கு போதுமான தந்தையின் கருணை உள்ளது.
211-குருர் குருதம-
மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால் ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –
குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————–
212-தாம –
பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும் கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –
ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————————-
213-சத்ய –
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————————————-
214-சத்ய பராக்ரம-
மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
————————————————————
உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்தியவசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————–
215-நிமிஷ –
சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் -அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
————————————————————————-
216-அநிமிஷ-
சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில் இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –
வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————–
217-ஸ்ரக்வீ-
மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக வைஜயந்தி மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –
மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————–
218-வாசஸ்பதி –
மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
——————————————————————
219-உதாரதீ –
யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் -வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் -உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-
———
‘குருதமோ குரு:’ என்றால் குருவுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் என்று பொருள். அவ்வாறு குருவுக்கெல்லாம் குருவாக விளங்கி
நடாதூர் அம்மாள் போன்ற குருமார்களை எல்லாம் உருவாக்கியபடியால், மத்ஸ்யாவதாரப் பெருமாள் ‘குருதமோ குரு:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 211-வது திருநாமம்.
“குருதமோ குரவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்வழிகாட்டும் சிறந்த
குருநாதர் அமையத் திருமால் அருள் புரிவார்.
ஊழிக் காலத்தில், பாருக்கெல்லாம் (அனைத்துலகுக்கும்) பாராக (இருப்பிடமாக) இருந்த படியால், மத்ஸ்ய மூர்த்தி ‘தாம’ என்றழைக்கப்படுகிறார்.
‘தாம’ என்றால் அனைவருக்கும் இருப்பிடமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 212-வது திருநாமம்.
“தாம்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் எப்போதும் புகலிடமாக இருந்து அவர்களைக் காத்தருள்வார்.
உயர்ந்த உண்மைகளையும் ரகசியங்களையும் அடியார்களுக்கு மத்ஸ்யபுராணம் மூலமாகவும்,
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மூலமாகவும் வெளியிட்ட மத்ஸ்ய மூர்த்தி, ‘ஸத்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்றால் அடியார்களிடத்தில் உண்மையாக இருப்பவர் – அதாவது, வெறும் உண்மையைச் சொல்லாமல்,
மிகச்சிறந்த நன்மை பயக்கும் உண்மையை வெளியிடுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 213-வது திருநாமம்.
“ஸத்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் எந்நாளும் வாய்மையிலிருந்து வழுவாதபடி திருமால் அருள்புரிவார்.
மெய்யடியார்களுக்குத் தனது வீர தீர பராக்கிரமங்களை நன்கு காட்டி அருளுவதால்,
மத்ஸ்யமூர்த்தி ‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்பது மெய்யடியார்களைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் தனது பராக்கிரமங்களை வெளிப்படுத்திக் காட்டும் திருமால்
‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 214-வது திருநாமம்.
“ஸத்யபராக்ரமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் தனது மேன்மைகளை நன்கு காட்டியருள்வார்.
வடமொழியில் ‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடிக் கொள்ளுதல் என்று பொருள்.
அறவழியில் வாழும் அடியார்களுக்கு மட்டும் கண் திறந்து அருள்புரிந்து விட்டு,
அறவழிக்குப் புறம்பாக வாழ்வோரைக் கண்ணால் பாராமல் கண்களை மூடிக் கொண்டதால்,
மத்ஸ்ய மூர்த்திக்கு ‘நிமிஷ:’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 215-வது திருநாமம்.
“நிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அறநெறியிலிருந்து வழுவாத படித் திருமால் காத்தருள்வார்.
“அடியார்களின் மேல் கண்களின் கடாட்சத்தை நன்கு பொழிவதற்கு நாமே மீனாகப் பிறப்பது தான் சிறந்த வழி!” என்று கருதிய திருமால்,
மத்ஸ்யாவதாரம் செய்து, பிரம்மா, மனு, சப்தரிஷிகள், சத்தியவிரத மன்னன் உள்ளிட்ட மெய்யடியார்களின் மீது
தனது அருட்பார்வையை நன்கு பொழிந்தார். ஒருநொடி கூட கண்களை இமைக்காமல் தொடர்ந்து அவர்களைக் கடாட்சித்தார்.
‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடுதல், அல்லது இமைத்தல்.
கண்களை இமைக்காது தொடர்ந்து அடியார்களைக் கடாட்சித்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘அநிமிஷ:’ கண்களை இமைக்காதவர்
என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர
நாமத்தின் 216-வது திருநாமம்.
“அநிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலின் அருட்பார்வை பரிபூரணமாகக் கிட்டும்.
மத்ஸ்ய மூர்த்தியைத் திருமாலின் அவதாரம் என்று சத்தியவிரதர் அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாகக் கழுத்தில்
வைஜயந்தி வனமாலையுடன் தோன்றியதால், மத்ஸ்யமூர்த்தி ‘ஸ்ரக்வீ’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘ஸ்ரக்’ என்றால் மாலை, ‘ஸ்ரக்வீ’ என்றால் மாலையை அணிந்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 217-வது திருநாமம்.
“ஸ்ரக்விணே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி, திருவரங்கத்தில் தசாவதார சந்நதியில் உள்ள
மத்ஸ்ய மூர்த்தியைத் தியானித்து வரும் அன்பர்களின் இல்லங்களில்,
விரைவில் மாலை மாற்றும் வைபவம் நடக்கும்படித் திருமால் அருள்புரிவார்.
‘வாக்’ என்றால் பேச்சு. ‘வாசஸ்பதி:’ என்றால் பேச்சுக்கு அதிபதி என்று பொருள்.
கூறுவதற்கரிதான பற்பல வேத ரகசியங்களை எல்லாம் மத்ஸ்யபுராணத்தில் விளக்கி அருளியதால்
மத்ஸ்யமூர்த்தி ‘வாசஸ்பதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 218-வது திருநாமம்.
“வாசஸ்பதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல பேச்சாற்றலைத் திருமால் அருள்வார்.
பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி
வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.
இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்?
அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.
பரந்த மனப்பான்மையை வடமொழி யில் ‘உதாரம்’ என்று சொல்வார்கள்.
‘உதாரதீ:’ என்றால் விசாலமான கருணை உள்ளத்தை உடையவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.“உதாரதியே நமஹ” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களின் மீது திருமால் தனது விசாலமான கருணையைப் பொழிவார்.
—————
ஸ்ரீ மத்ஸ்ய அவதார பரமான அருளிச் செயல்கள் –
அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –வேத பிரதமான ஹம்சமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும்- ஹிரண்ய நிரசன அர்த்தமான நரசிம்ஹமும் –இந்திர அபேஷித சம்விதானம் பண்ணும் வாமனனும்-மந்திர ஆதாரமான கூர்மமும் ஆனவனே -இத்தால் –-ஆஸ்ரித சம்ரஷித அர்த்தமாக -அசாதாரண திவ்ய விக்ரகத்தை அழிய மாறிக் கொண்டு – அவ்வவ தச குண அநு குணமாக -ரஷிக்கும் அவன் என்கை-உம்மைத் தொகை ஒவ்வொன்றுக்கும் -அந்த அந்த சேஷ்டிதங்கள் தனித்தனியே ஆகர்ஷணமாக இருப்பதால்–
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3 -3-7 –பூமி உத்தாரணம் பண்ணின வராஹமும் –மந்தர ஆதாரமான கூர்மமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும் ஆன-(நரசிம்ம வாதி அவதாரங்கள் இருக்க இம்மூன்றையும் ஒரு கோவையாக அருளிச் செய்தது ) இத்தால் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை அழிய மாறி – திர்யக் சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணி அருளின நீர்மையை சொல்லுகிறது-வராஹ அவதாரத்தை முற்படச் சொல்லிற்று -பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை எடுத்த அளவு அன்றிக்கே -சம்சார ஆர்ணவ மக்நரான சேதனரை உத்தரிப்பைக்காக
தத் அநுரூப உபாயங்களை உபதேசித்த ஏற்றத்தைப் பற்ற –-ஏனத் துருவாய் இடந்த பிரான் – ஞானப் பிரான்-(திரு விருத்தம் -99-) -என்றார் இறே ஆழ்வாரும்-திரு மங்கை ஆழ்வாரும் -ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் ( 2-7-)-என்ற அநந்தரம்-ஞானத்தின் ஒளி உருவை -என்றார் இறே-இவர் தாமும் –எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து-( 4-2 ) -என்று மேலே அருளி செய்கிறார் இறே-மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்-அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே-(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது–ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்-(திருவாய் -1-8-) என்பது-இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது-மீனோடு ஆமை கேழல் -(8 -10-10-)என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –-யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்-வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது-தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்—தேவுடைய-த்யோதமாந குணங்களை யுடையவனாய்
ஆபத் ரக்ஷகங்களுமான–(மீனமாய் )பிரளயத்தை வற்றுவித்து-வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வந்து உய்யக் கொண்ட மத்ஸ்ய அவதாரமாய்——-முடிப்பான் கோயில் அவ் வவதாரங்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இழக்க வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற கோயில் –
அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –35-ஜலத்தில் உள்ள மீனுமாகியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி-பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -எனவே மிக்கதாய் –
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் –-இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்–இப்படிப் பட்ட ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
கெண்டையும் குறளும் புள்ளும்* கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட திண் திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே. –4-5-6- ஸ்ரீ மத்ஸ்யமும் ஸ்ரீ வாமனனும் ஸ்ரீ அன்னமும் ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரசிம்ஹமும் ஸ்ரீ ஹயக்ரீவரும்–அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது (ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் இவர்களே செய்ய வல்லவர்கள் )
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு ஏறுகைக்காக-வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்-அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்-மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்-இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்-நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம் என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –
கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2—மிக்க ஜலமானது பூமியை அடையக் கொண்ட காலம் – கொழு விதமான-த்ருடமான கயலாய்-குல வரைக்கு மேலே போய் அண்ட பித்தி அளவும் செல்லத் துள்ளி ஸ்வைரமாக லீலா ரசம் அனுபவிக்கும் ஸ்வ தந்த்ரன் –
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே—6-8-2-மீனாய் பிரளயம் கொண்ட பூமியை ரஷித்த படி-மூழ்த்த நாள் –லோகத்தை பிரளயம் கொண்ட காலத்து –அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத் –அந்நீர் தானே -பாடி காப்பாரே களவு காணுமா போலே-
ஜகத்தை அடையக் கோக்க ஒரு மத்ஸ்யமாய் அத்தை தன்னுடைய செலுவிலே ஏக தேசத்திலே அடக்கினான் ஆய்த்து –கடல் கடைகைக்கு தேவர்களையும் அசுரர்களையும் கூட்டி-தானான மேன்மை குறையாதே நிற்க வேண்டிற்று – ஜகத்துக்காக வந்த பிரளயத்தை பரிகரிக்கிற இடத்தில்-அங்கன் ஒரு சகாயமும் இன்றிக்கே-தானும் தன்னைக் குறைய விட்டு நிற்கும் அளவிலே ஆய்த்து-ஓன்று செய்யும் இடத்தில் அநேகம் பேரைக் கூட்டி கொண்டு செய்யவும் வல்லனாய்-தனியேயும் செய்ய வல்லனுமாய் இருக்கும் பெருமானை – சர்வாதிகன் உடைய செயல் இறே –
பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –பூமியை சிருஷ்டித்து பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து-திரியவும்
பிரளயம் வர -வயிற்றிலே வைத்து – திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு-இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-கடலிலே அக் கடல் கண் செறி இட்டால் போலே(நெருக்கமாக வியாபித்து ஒரு லக்ஷம் யோஜனை-10 லக்ஷம் mile)
இருக்கிற வடிவை உடைய மத்ஸ்யமாய் –அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -(11-4-)-என்னக் கடவது இறே –கடலிலே நீர் குழம்பிச் சேறாம் படி இறே கொண்ட வடிவின் பெருமை –
அன்றிக்கே-ஜலசர ஜாதியுமான வடிவை உடைய ஆமையாய் –(தண்ணீரில் நீந்தும் -ஜலத்தில் பிறந்த இரண்டு உருவங்கள் என்றுமாம் )
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-தேவர்கள் எல்லை அளவும் செல்லக் கடல் வெள்ளம் பரந்த நாள் அத்தை அடைய தன்னுடைய ஒரு செலுவிலே அடக்க வல்ல மிடுக்கை உடைய மத்ஸ்யமாய் வந்து –வியந்துய்யக் கொண்ட –நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே-இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே-வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான் ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால் தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்-சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து ) அங்கனும் அன்றிக்கே –விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –தண் தாமரைக்கண்ணன் –
மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –ஆனா வுருவிலானா யவனை-சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –(சதைக ரூப ரூபாயா -ஸ்வரூபமும் உருவமும் மாறாதவை அன்று )-ஆனாத வுரு -கெடாத வுரு என்றபடி –
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி-ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்-2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்-4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்-8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம் 9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட ஆகாசமும் பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட -இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்-ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும் ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும் (ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த
ஜகத் காரண பூதனானவன் –(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் ) திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –
நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-நிலை கொள்ளலாவதொரு இடமும் இன்றிக்கே ஆழம் காலாய் இருக்கிற -என்னுதல் –
ஓர் இடத்திலே நில்லாதே அலைஞ்சு வருகிறது -என்னுதல்
இது கீழ் இது நடுவு இது மேல் -யென்று பரிச்சேதிக்க ஒண்ணாத மஹா பிரளயம் –லோகத்துக்கு ரஷகரான தேவர்கள் குடி இருப்பையும் கூட மேலிட –நாம் ரஷகராம் எல்லை கழிந்தது -யென்று தேவர்கள் கவிழ் தலை இட –-அன்றிக்கே –தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன – மேலாய் இருப்பதொரு இருப்பிடம் அற்று எங்களுக்கு ரஷகர் இல்லை யென்ன –நான் உளனாய் இருக்க நீங்கள் அஞ்ச வேணுமோ – நான் ரஷகனாய் இருக்கிறேன் – என்னும் படியான கிருபையாலே –ஷூபிதமாய் வருகிற கடல் குழம்பாம் படியாக தன் கீழ் வயிற்றிலே அலை எறியும் படியாகவும்-ஆகாசத்தில் ப்ரஹ்மாதிகள் குடி இருப்பிலே வீசும் படியாக தன் திரு முதுகிலே-மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை –சர்வாதிகனான சர்வேஸ்வரனை –அவன் அப்படி தன்னுருக் கொடுத்து-வேற்றுருக் கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் -( பக்தானாம் ப்ரஸாததே ) உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை-( இதுவே அரிய சேவை நமக்கு -இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ
ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-சர்வாதிகனான தானே இறே திர்யக் சஜாதீயன் ஆனான்-அவன் க்ரமத்திலே பிறக்கச் செய்தேயும் – அனுசந்தானத்தில் பதற்றத்தாலே ஏக காலத்திலே இரண்டு அவதாரம் போலே சொல்லுகிறார்-வடிவும் சொலவும் செயலும் ஜாதிக்கு அடுத்தவையாய் இருக்கை-இதுக்கு ஹேது என் என்னில்-என் பக்கல் தனக்கு உண்டான சங்காதிசயத்தாலே என்னுதல் என்னைக் குறித்து தான் பண்ணின அவதாரங்கள் சங்கம் என்கிற மஹா சங்க்யைக்குப் போரும் என்னில் என்னைக் குறித்து -தானாய தானவை -சங்கே -சங்கத்து அளவே அன்று இறே
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-வித்யா ப்ரவர்த்தகமான அவதாரங்கள்-அனுஷ்ட்ட்டே யதார்த்த ப்ரகாசகமான ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள்–அகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று-இப்படி செய்கின்றவன் தான் ஆர் என்னில்-ப்ரஹ்மாதிகளுக்கு ஆதி தேவர்களான நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் கிடீர் இப்படி தாழ நின்றான் என்கை –
இந்த்ராதிகளும் பூமியில் துர்க்கந்தாதிகள் பொறுக்க மாட்டாதே ஒரு யோஜனத்துக்கு அவ்வருகு இ றே நிற்பது –நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்-என்னை பிரயோஜ நான்தர பரதையை தவிர்த்தவன் –
நான் இழிந்து ஆடும் துறை என்றுமாம் –
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-ஞான ப்ரதானார்த்தமான ஜல சர சஜாதீயன் ஆனான் –தாரண அர்த்தமாக கூர்ம ரூபி யானான் -சடக்கென விரோதியைப் போக்குகைக்கு இரண்டு வடிவைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு ஆர்த்தி யானான் –சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுக்கைக்கு வராஹ ரூபத்தைக் கொண்டான் –மனுஷ்யர் நடையாடாத காட்டில் மிகவும் வர்த்திக்கும் வராஹம் –என் கார்யம் சமைந்த பின்பும் -சம்சாரத்தின் நின்றும் கால் வாங்கும் தனையும் -இவருக்கு என் வருகிறதோ என்று கொண்ட குதை மீண்டிலன் –
மேல் வரும் விரோதத்தை போக்குகைக்கு இன்னமும் கல்கியாக இருந்தான் -நான் தன்னைத் தப்புகைக்காக பிறந்த அளவும் போரும்-அவன் ரஷிக்கைக்காக பிறந்த பிறவி -நான் கர்மத்தால் பிறந்தவை அடங்க அனுக்ரஹத்தாலே பிறந்தான் –வர்ஷூகவலாகஹம் போலே இருக்கிறான் அத்தனை -வர்ஷித்தானாய் இருக்கிறிலன்-
மீனாமை கோலநெடு நரசிங்கமாகி நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு நாராயணாய நமவே (மகாபாரதம், சல்லிய பருவம். 1) என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.
————————————————
(ஸூந்தர பாஹு ஸ்தவம -மத்ஸ்ய அவதார பரமான ஸ்லோகமும் – ஓசையும் பொருளும் நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1–ஒட்டியே இருக்கும்
ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந
ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் ஸ்வ க்ருபயா
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீநதநு ரத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–92-
ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் –பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தால் நிரப்பட்ட தம் தாம் இருப்பிடங்களை உடையவர்களாய் –-அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவராய் –
தடுமாறினவர்களாய் – நாதன் அற்றவர்களாய் – புகலிடம் விரும்புவர்களான தேவர்களுக்குத் தஞ்சமாகக் கொண்டு
1-பரிபூரி தஸ்வ நிலய-2- அவசந் நவ தந-3-ப்ரமத் -4- அசரண்ய பூத -5-சரணார்த்தி-ஆகிய ஐந்தும் நாகிகளுக்கு விசேஷணங்கள்
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீந தநுர–இவற்றை ஸமஸ்த பதமாகக் கொள்ளவுமாம் –இடையில் உள்ள –
கலுஷீ க்ரியாட்ய கமன என்று விஸர்க்க அந்தமாக்கி -அதை ஒருபதமாகவும்
மேல் உள்ளதை ஒரு பதமாகவும் கொள்ளலாம் -பொருளிலும் கருத்திலும் வாசி இல்லை
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச-என்றதற்கான கருத்தை –
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை-என்றதற்கான கருத்தை –
ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா சலகுல ஏஷ மீநதநு-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதனுள்ளே சஞ்சரிப்பவரும் –முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்யவதாரப் பெருமாள்
அத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–இங்கே திருமாலிருஞ்சோலை மலை உறையும்
சுந்தரத் தோளராக சேவை சாதித்து அருளுகிறார் -என்கை –)
தேவோ ந ஸூபமாத நோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ் வநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-
யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –
தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தசதா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்
சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –
ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –
———————————————————————————–
நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-
கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –
நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –
சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பதி உமா பதி இந்திரா பதி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்
—————————————————————
இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-
தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்
இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –
இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://
இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.”
– (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)
ஸ்ரீ தசாவதார-ஸ்தோத்ரம் (கீதா-கோவிந்தத்திலிருந்து) ஜெயதேவ கோஸ்வாமி–இது ஒவ்வொன்றும் எட்டு வரிகள் கொண்ட வசனங்களில் எழுதப்பட்டிருப்பதால், இது அஷ்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது.(1)
பிரளய-பயோதி-ஜலே த்ரிதவான் அசி
வேதம் விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ரித-மின-சரீர ஜெய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! மீனாக உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! பேரழிவின் கொந்தளிப்பான கடலில் மூழ்கிய
வேதங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே ராட்சத மீன் வடிவில் படகாக எளிதாகச் செயல்பட்டாய் .(2)
வேதாந் உத்தாரதே ஜகந்தி வஹதே பூ-கோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே ஹலம் அத்ஸயந்துர்வதேக் உப்யம் நமঃ
ஓ பகவான் கிருஷ்ணரே, இந்தப் பத்து அவதாரங்களின் வடிவங்களில் தோன்றிய உமக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். மத்ஸ்ய வடிவில் நீ வேதங்களைக் காப்பாற்றுகிறாய், கூர்மமாக மந்தார மலையை உன் முதுகில் தாங்குகிறாய். வராஹாவாக நீ உன் தந்தத்தால் பூமியை உயர்த்துகிறாய், நரசிம்ம வடிவில் தைத்ய ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழிக்கிறீர்கள். வாமன வடிவில் தைத்ய மன்னன் பாலியிடம் மூன்றடி நிலம் மட்டும் கேட்டு ஏமாற்றி, உனது படிகளை விரிவுபடுத்தி முழு பிரபஞ்சத்தையும் அவனிடமிருந்து பறித்து விடுகிறாய். பரசுராமராக நீங்கள் தீய சத்திரியர்கள் அனைவரையும் கொன்று, ராமச்சந்திரனாக ராக்ஷச மன்னன் ராவணனை வெல்கிறீர்கள். பலராமன் வடிவில் நீங்கள் கலப்பையை ஏந்தி, துன்மார்க்கரை அடக்கி, யமுனை நதியை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். பகவான் புத்தராகிய நீங்கள் இவ்வுலகில் துன்புறும் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுகிறீர்கள், கலியுகத்தின் முடிவில் நீங்கள் கல்கியாக தோன்றி மிலேச்சர்களை [தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மனிதர்களை] திகைக்க வைக்கிறீர்கள். ஜெயதேவ கோஸ்வாமி அல்லது அனைத்து வைஷ்ணவ ஆச்சார்யர்களின் பஜனைகளுக்குத் திரும்பு .
” மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில் துன்னிய பரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும் மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர் வானாரின்ப மிங்குற வருதி.” (மும்மணிக்கோவை. 4)
[கேழல் – வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி – பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)
மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்க வுற்றனை.– (நவமணிமாலை. 2)
(மகரம் – மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் – இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் – இரணியகசிபு, மதலை – பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் – அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் – இராவணன் ; வரை – கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –