ஸ்ரீ ஸஹஸ்ர நாம ராமாயணம்.--“ஸ்ரீ ராமாவதாரத மென்றால் பட்டர் போர பக்ஷ பதித்திருப்பார்” என்று நம் ஆசார்ய கோஷ்டியில் ஸுப்ரஸித்தமாகையாலே ஸ்ரீராம பக்ஷபாதியான பட்டர் தம்முடைய ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் *ராமோ விராமோ விரத * இத்யாதி திரு நாமங்களுக்கு முன்னே ‘ பரர்த்தி பரம ஸ்பஷ்ட “ என்னுமிடத்தில் ” அத ம்ருத ஸஞ்ஜீவநம் ராம சரிதம் ” என்றருளிச் செய்துள்ளார். (பரர்த்தி } என்கிற திருநாமம் முதலாக ம்ருத ஸஞ்ஜீவினயான ராம கதை சொல்லப்படுகிறது என்றபடி. பரர்த்தி, பரம ஸ்பஷ்ட துஷ்டா புஷ்ட: சுபேக்ஷண ராம விராமக விரத மார்க்க நேய நய அநய?, வீர சக்தி மதாம் ச்ரேஷ்ட: தர்ம: தர்ம விதுத்தம:- வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண என்கிற 32 திரு நாமங்களும் ராம சரித்திரங்களைத் தெரிவிப்பன
ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –
வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42
ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-
வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44-
ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45-
391-பரர்த்தி:, 392. பரமேஸ்பஶ்ட:, 393. துஶ்ட:, 394. புஶ்ட:, 395. ஸுபேக்ஷண: ||396-ராம:, 397. விராம:, 398. விரத:, 399. மார்க:, 399. நேய:, 400. நய:, 401. அனய:|402-வீர:, 403. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 404. தர்ம:, 405. தர்மவிதுத்தம: ||406-வைகுண்ட:, 407. புருஶ:, 408. ப்ராண:, 409. ப்ராணத:, 410. ப்ரணவ:, 411. ப்ருது: |412-ஹிரண்யகர்ப்ப:, 413. ஶத்ருக்ன:, 414. வ்யாப்த:, 415. வாயு:, 416. அதோக்ஷஜ: ||417-ருது:, 418. ஸுதர்ஶன:, 419. கால:, 420. பரமேஶ்டீ, 421. பரிக்ரஹ:
பரர்த்தி: — உயர்வற உயர்நலம் கொண்டவர்; சகல கல்யாண குணங்களும் உடையவர்-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
பரம ஸ்பஷ்ட: — மஹா யோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
துஷ்ட: – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
புஷ்ட: — குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
சுபேக்ஷண: — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,-பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,-முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,-அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர் – மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ராம: — நித்திய ஆனந்தமாய், யோகிகள் எல்லையற்று ஈடுபடும் பரம்பொருள்; உத்தமமான தன் குணங்களாலும் திருமேனி அழகாலும்-அனைவரையும்- பக்தர்களின் மனத்தை மகிழ்விப்பவர் – ராமர்- குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்-நித்ய ஆனந்த ரூபியான தம்மிடம் யோகிகள் மகிழும் படி இருப்பவர் –
தம் இச்சையால் மிகவும் அழகிய திருமேனியைக் கைக் கொண்டவர்-ஸ்ரீ லஷ்மீ தேவியின் மணவாளர் -யோகிகள் மகிழும்படி இருப்பவர்
விராம: — யாரிடம் ஈடுபடுவதால், யாருடைய சரிதத்தைக் கேட்பதால் நம் உலகக் கவலைகள் முடிவுக்கு வருகிறதோ அந்தப் பரம புருஷர்-தான் செயல் படும் போது வரம் கொடுத்த தேவர்கள் -வரம் பெற்ற இராவணன் -கொடுக்கப் பட்ட சாகா வரம் ஆகிய அனைத்தும் ஓயுந்து போகும்படி செய்தவர்-பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-வரங்களை அளிக்கும் பிரம்மாதி தேவர்களும் -அந்த வரங்களும் -அவற்றைப் பெற்ற ராவணாதிகளும் தம்மிடம் ஓய்ந்து போகும்படி இருப்பவர்-அனைத்துப் பிராணிகளும் முடிவில் அடையும் இடமாய் இருப்பவர்-மேன்மை யுடைய லஷ்மியை உடையவர் -கோபிகைகள் பலரை யுடையவர் – பிரளயத்தில் ஜனங்களை முழுகச் செய்பவர்
விரத: — வைராக்கியம், தியாகமே உருவாய் இருப்பவர் -அரசில் பற்று இல்லாதவன்-ராஜ்யம் முதலியவற்றில் ஆசையற்று இருப்பவர் விஷய ஸூகங்களில் ஆசையில்லாதவர் தோஷங்கள் அற்றவர் -விரஜ -என்ற பாட பேதம்-
மார்க: — முக்திக்கான உன்னத வழியாக இருப்பவர்–பரத்வாஜர் முதலான முனிவர்களால் தேடப்படுபவன்(விராதோமார்க–ஒரே நாமமான போது -குற்றம் இல்லாத வழியைக் காட்டுபவர்)-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் -தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க திரு முகம் யுடையவர்
நேய: — வேதாந்த ஞானத்தால் முக்திக்கு வழிநடத்துபவர்-அன்பு கொண்ட ரிஷிகள் கட்டளை இடும்படி அடங்கி இருப்பவர்-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்-தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்-
நய: — -ரிஷிகளைக் கர்ப்பத்தைப் போலே பாதுகாப்பவர் –-வழிநடத்துபவரெனினும், பக்தியால் கட்டுண்டு பின் தொடர்பவர்(திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் திருவீதி எழுந்தருளும் போது வேதங்கள் பின்தொடர்வதையும்,-பெருமாள் திவ்யப் பிரபந்தத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் நினைவு கொள்ளலாம்)
அநய: — தம்மை வழிநடத்தத் தக்க தலைமை ஒரு போதும் இல்லாதவர்-பகைவர்களால் நடத்தப்பட முடியாதவர்
வீர: — அசுரர்கள் அஞ்சி நடுங்கும் பெருவீரர்-ராஷசர்களை அச்சத்தில் நடுங்க வைப்பவர் –
சக்திமதாம் ச்ரேஷ்ட: — ஆற்றலும், வீரமும் கொண்டோரில் சிறந்து ஒப்பாரில்லாதவர்-வலிமை மிக்க தேவர்களை விட சிறந்தவர் –
தர்ம: — சநாதன தர்மமாய்த் தாமே இருப்பவர்-தர்மத்தின் உருவானவர் -இவ்வுலக அவ்வுலக பேற்றைக் கொடுத்து ஜீவர்களை தாமே தாங்குபவர் –
தர்ம விதுத்தம: — தர்மம் சூக்ஷ்மமானது ஆகையாலே எது தர்மம் என்பதை அறிவதில் அவரே பிரமாணம் ஆனவர்-தர்மம் அறிந்தவர்கலான ரிஷிகளை விடச் சிறந்தவர் –
வைகுண்ட: — குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்-பக்தர்களை விலகாமல் தம்மிடம் சேர்த்துக் கொண்டவர் –தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான்-பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர்
புருஷ: — அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர்-பாவச் சுமையை எரிப்பவர் -சராசரங்களுக்கு முன் செல்பவர் –முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் -பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்-
ப்ராண: — மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர்-அனைவரையும் உய்விக்கும் மூச்சுக் காற்றானவர் –எல்லாவற்றையும் உய்விப்பவர் -ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர்-முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர்
ப்ராணத: — சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர் -உயிர் அளிப்பவர்-இராமன் வனம் சென்ற போது மரங்களும் வாடிப் போயின-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் -துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –
ப்ரணவ: — வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர்-அனைவரும் தம்மை வணங்கும் படி இருப்பவர் -தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் -நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்
ப்ருது: — எல்லையற்று விரியும் மஹிமையுடையவர்-பெரும் புகழாளர் –மிகவும் விரிந்த புகழை யுடையவர்-பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர்-பிரசித்தமாக இருப்பவர்
ஹிரண்யகர்ப: — திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர்-அவதாரங்களின் பிற்பட்டவர்களின் உள்ளங்களிலும் பொன் போலே வசிப்பவர் –பொன் புதையல் போன்றவன்–த்யேயம்-த்யான விஷயம் பின்னானார் வணங்கும் சோதி-மனத்துக்கு இனியாய் -சிந்தனைக்கு இனியானாய் இருந்து-உள்ளூவார் உள்ளத்து உளன் கண்டாய்-
சத்ருக்ந: — இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர்-தன்னை த்யாநிப்பவர்களின் தறி கெட்டோடும் புலன்களை பகுத்தறிவை அருளி அடக்குபவர் –
வ்யாப்த: — அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர்-பக்தர்கள் இடம் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் விரயமான அன்பு காட்டுபவர் –
வாயு; — காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர்-சபரி குஹன் பரத்வாஜர் போன்ற அன்பர்களின் இருப்பிடத்துக்கு தேடிச் செல்லும் காற்று போன்றவர் –
அதோக்ஷஜ: — ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர்-யாவரும் அனுபவித்து பயன்படுத்தினாலும் கடல் போன்று பெருமை குறையாதவர் –
ருது: — பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவர்; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவர்-பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் -பக்தர்களை வளர்க்கும் கிளர்ந்து வரும் குண வரிசைகளை உடையவர் -அணுகுபவன் – –
ஸுதர்சந: — தம்மைக் காண்பதாலேயே உயர்ந்த நன்மைகள் பெருகும்படி இருப்பவர்-தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன்-இராமனின் பெருமை அறியாதவரும் அவன் திரு மேனியைக் கண்டவுடன் ஈடுபடும் அழகு உடையவர்
கால: — காலம் என்ற வடிவில் அனைத்தையும் அளந்து அடக்குபவர்-அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன்-தன் நற்பண்புகளால் அனைவரையும் தம்மிடம் இழுத்துக் கொள்பவர்
பரமேஷ்டீ — பரமபதத்தைத் தம் உயர்ந்த ஸ்தானமாகக் கொண்டவர்-தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் -இராமாவதாரம் முடிந்த பின்பு திரும்பவும் வைகுந்தத்தில் இருப்பவர் –
பரிக்ரஹ: — தம்மோடு தொடர்பு கொண்ட அனைத்திற்கும் மோக்ஷம் தரும் இயல்பினர்-எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன்-இராமன் இவ்வுலகை விட்டு வைகுந்தம் சொல்லும் போது அயோத்தி மக்களையும் மரங்களையும் எங்கும் ஏற்றுக் கொண்டவர் –
———————————————————–
391-பரர்த்தி-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
பற்பல மங்கல குணங்கள் நிறைந்தவனாக ராமன் இருப்பதால், அவன் ‘பரர்த்தி:’ என்று அழைக்கப்படுகிறான்.‘பர’ என்றால் உயர்ந்த மங்கல குணங்கள் என்று பொருள். ‘ரித்தி:’ என்றால் நிறைந்திருத்தல்.-பர + ரித்தி = பரர்த்தி: என்றால் மிக உயர்ந்த மங்கல குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.-அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 391-வது திருநாமம்.
“பரர்த்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நற்குணங்களோடு விளங்கும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.
பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கியமான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குண பெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினா விடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹா ப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குண ஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங் கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பர ஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.
அத ம்ருத சஞ்சீவினம் ராம சரிதம் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -3-6-8-
தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -திருப்பாவை
நீ பற்று கண்ணன் -நான் விடேன் ராமன் -மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று தேவை இடாதார் –பாவனத்வம் சர்வ லோக த்வமேவ ரகு நந்தன -அகஸ்தியர் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -9-5-8-
ஆழ்வார் மற்ற அவதாரத்தில் தலை நீட்டுவது ப்ராப்யமாக –
தஞ்சமாக பற்றுவது சக்ரவர்த்தி திருமகனையே -ப்ராப்யமாக -போக்யத்தில் இவனுக்கு இவனே சமம்
மனத்துக்கு இனியான் -போக்யத்வம்
ராமாவதாரம் பக்ஷ பாதி -பட்டர் -தூது போகவில்லையே -இன்னார் தூதன் என்று நின்றான் –
இஷ்வாகு வம்சரை தூது போக விடுவார் இல்லை காண் -சிறியாத்தான் இடம் பட்டர்
பிறர் செழிப்பை தனக்கு வாழ்வாகக் கொள்பவன் ராமன் என்றுமாம் -பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனமாக இருப்பவர்- இத்யாதி -391-பரர்த்தி –
மேலான குண பூர்த்தி உள்ளவன்–விபீஷணனை அங்கீ கரித்த பின்பு க்ருதக்ருத்ய ததா ராம -விஜ்வர–ஸர்வ ஐஶ்வர்யாத₃பி பரா(அ)ஸ்ய கல்யாண கு₃ண ஸம் ருத்₃தி₄ரிதி–பரர்த்₃தி₄꞉ ।(பரனுடைய ருத்தியை அபர ருத்தி ஆக்கும் படி ராமனுக்கு ஐஸ்வர்யம்)–பராவஸ்த₂ஸ்யாபி ஹி ராமஸ்ய அவர ஸோமாதி₃ தே₃வ கு₃ணைகதே₃ஶ நித₃ர்ஶநம் க்ரியதே (ஒரு துளி சமமான சந்திரனுக்கு ஒப்பு சொல்லும்படி எளிமை நிறைந்தவன் )। யதா₂–விஷ்ணு நாம் சத்ருஸோ வீரயே சோமவத் ப்ரிய தர்சன–பால காண்டம் வீரியத்தில் இராமனுக்கு நிகரான தேவதை யாரும் இல்லை-ஆகவே அவனை விஷ்ணுவுக்கு நிகராக உரைத்தார்-ஏதத் தத் யுக்தம் அவ்யக்தம் அக்ஷரம் ப்ரஹ்ம சம்மிதம் தேவா நாம் ஹ்ருதயம் ஸுவ்ம்ய க்ருஹ்யம் ராம பரந்தப–யுத்த காண்டம்-இப்படியாக உரைத்த இராம தத்வம் என்பது யாராலும் எளிதில் அறிய இயலாதது ஆகும்-அது எந்தவிதமான தோஷமும் இல்லாத ஒன்றாகும்-ப்ரஹ்மத்துக்கு நிகரானதாகும் -தேவர்களின் இருதயத்தில் எப்போதும் இருப்பதாகும் எதிரிகளை வாட்டமுறச் செய்வதாகும்-பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –அயோத்யா காண்டம்-தசரதனனே உனது புத்திரனான இராமனிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பொருந்தி உள்ளன
ப₄க₃வதே இதி ஸ்வ மந்த்ர வர்ணாச்ச
பரமர்த்தி -பாட பேதம்–பரா மேலான-ருத்திர்விபூதிர் ‘ருத்தி’ அதாவது செல்வம்
அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மேலான செல்வம் உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- பரார்த்திஹ் – அவர் உச்ச வெளிப்பாடு
ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘பரா ரித்திஹ் விபூதிஹ் அஸ்ய இதி பரார்த்திஹ் – அவர் செழுமை அல்லது ஐசுவரியத்தின் உச்ச வெளிப்பாட்டைப் பெற்றுள்ளார்’ என்று விவரிக்கிறார். இங்கு குறிப்பிடப்படும் செழுமை என்பது தனிப்பட்ட பண்புகளையும் பொருள் செல்வத்தையும் குறிக்கிறது.
ரித்தி என்பது செழிப்பு மற்றும் சக்தியின் கலவையை குறிக்கிறது என்று சுவாமி சின்மயாநந்தா குறிப்பிடுகிறார். பகவானின் ரித்தி அல்லது விபூதி பற்றிய முழு விளக்கமும் பகவத் கீதையின் 10 ஆம் அத்தியாயத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, அங்கு கிருஷ்ணர் மலைகளுக்கு மத்தியில் இமயமலை, ஒளிரும் பொருட்களில் சூரியன், கடல் போன்ற அனைத்து உயிரினங்களின் உச்சியையும் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை விவரிக்கிறார். நீர் மற்றும் விலங்குகளில் சிங்கம். 40வது வசனத்தில், ‘நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீனாம் பரமதப – என் பெருவாழ்வின் வெளிப்பாடுகளுக்கு முடிவே இல்லை, நான் உங்களுக்கு ஒரு சிறிய மாதிரியைக் கொடுத்தேன்’ என்று கூறுகிறார்.
ஸ்ரீ வி.வி.ராமானுஜன், ராம அவதாரத்தில் இருப்பது போல், வேறு எந்த அவதாரத்திலும், மங்களகரமான குணங்களின் பரிபூரணத்தை நாம் காணவில்லை என்றால் அது மிகையாகாது என்று கருத்துரைக்கிறார். அவர் ஒரு கூடுதல் விளக்கம் தருகிறார்: ‘பரேஷாம் ரித்திரேவ ரித்திஹ் யஸ்ய – மற்றவர்களின் நிறைவைத் தன் சொந்தமாகக் கருதுபவர்’. விபீஷணனுக்கு முடிசூட்டப்பட்ட பிறகு, பகவான் ராமர் தனது வார்த்தையை நிறைவேற்றியதன் மூலம் மகிழ்ச்சியடைந்தார் – ‘கிருத கிருத்யஹ் ததா ராம’. ‘உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி– குடிமக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, தன் குழந்தையின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடையும் தந்தையைப் போல மகிழ்ச்சியாக உணர்கிறார்’ என்றும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.
ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் ராமாயணத்தில் இருந்து இந்த குணங்கள் சில விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. வால்மீகி முனிவர் 1.1.8 முதல் 1.1.18 வரை ஸ்லோகங்களில் இந்த குணங்களைப் பற்றிய ஒரு கவிதை விளக்கத்தை அளித்துள்ளார். கடைசி இரண்டு ஸ்லோகங்கள் இங்கே உதாரணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன:
சமுத்ரா இவ காம்பீர்யே தைரியேண ஹிமவாநிவ |
விஷ்ணுநா சத்ரிஷோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஷனஹ் ||
காலாக்னி-ஸத்ரிஷா க்ரோதே க்ஷமாயா ப்ரிதிவீ ஸமஹ் |
தனதேன ஸம்ஸ் த்யாகே ஸத்யே தர்ம இவாபரஹ் ||
இராமனுக்குப் பெருங்கடலின் மகத்துவம், ஹிமவானின் வீரம், விஷ்ணுவின் வலிமை, சந்திரனின் இனிய தோற்றம், பிரளய அக்னியின் கோபத்திற்கு ஒப்பான கோபம், பூமித் தாயின் பொறுமை, குபேரனின் தானம், தர்ம தேவதையின் உண்மை ஆகியவை உள்ளன.
பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கிய மான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குணபெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினாவிடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹாப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குணஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங்கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பரஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.
———–
392-பரம ஸ்பஷ்ட -தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
சிறந்த அடியார்களுக்கும் மகான்களுக்கும் தனது பெருமையைத் தெளிவாக உள்ளபடி காட்டுவதால், ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்பஷ்ட’ என்றால் தெளிவாக என்று பொருள். ‘பரம’ என்றால் மேன்மை.-தனது மேன்மையை ஸ்பஷ்டமாக தெளிவாக அடியார்களுக்குக் காட்டும் ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 392-வது திருநாமம்.“பரமஸ்பஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தெளிவான ஞானத்தோடு திகழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்
பரம ஸ்பஷ்ட: * ந சக்ஷஷா பச்யதி கச்சநைநம் * ந மாம்ஸ சக்ஷ ரபீவிக்ஷதே தம் * என்றேனும் கட்கண்ணால் காணாதவவ்வுரு * இத்யாதிப்படியே ஒருவர் கண்ணுக்கும் காணவொண்ணாதிருந்த வடிவத்தை அனைவரும் கண்டுகளிக்கும்படி மிகவும் ஸ்பஷ்டமாக்கிக் கொடுத்தவ னென்கை. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (10) ” ோதீயஸோபி ஹி ஜநஸ்ய க்ருதே க்ருதீ த்வம் அத்ராவதீர்ய நநு லோசந்கோசரோபூ ” என்றருளிச் செய்ததை இங்கே அநுஸந்திப்பது . பரம ஸ்பஷ்டா என்பதற்கு- பரமத்வம் ஸ்பஷ்டமாயிருக்கப் பெற்றவர் என்கிற பொருள் பட்டருடைய பாஷ்யத்தில் விளங்குமது. ‘பரத்துவத்தை யொளித்து வந்து அவதரித்திருக்கச் செய்தேயும் அது சிலர்க்கு ஸ்பஷ்டமாக விளங்கா நின்ற தென்பதை ஸ்ரீராமாயணத்தினாலறிகிறோம். பெருமாளுடைய வநவாஸ ப்ரஸங்கத்தில் கிலேசப்படா நின்ற கௌஸல்யாதேவியைத் தேற்றுகின்ற ஸுமித்திரை “ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய தைவதம் தேவதாநாஞ்ச” இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தைத் தான் ஸ்பஷ்டமாகக் கண்டறிந்து பேசுகிறாள். இராவணன்மாண்ட பிறகு ப்ரேத பூமியிலே வந்து புலம்புகின்ற மந்தோதரி *வயக்தமேஷ மஹாயோகீ பரம த்மா ஸநாதந, அநாதி மத்யநிதந தமஸ் பரமோ தாதா சங்கசக்ர கதாதர:.ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்யச் சாச்வதோ திருவ: மா நுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ் ஸத்ய பராக்ரம்:*இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தை அதிஸ்பஷ்டமாகக் கண்டு பேசுகிறாள். பம்பாதீரத்தில் முதன்முதலாகப் பெருமாளைக் காணவந்த திருவடி “ஆயதாச் ச ஸூவ்ருத்தாச் ச பாஸவ: பரிகோபமா, ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா.? *‘ என்று கேட்கிறார். இங்கு ஆயதெள ச ஸு வ்ருத்தெள சபா அ தே பரிகோபமௌ‘ என்று த்வி வசனமாக சுலோகம் கூடுமதாயிருக்க பஹு வசனமிட்டுச் சொன்னதுபற்றி கோவிந்தராஜர் எழுதுகிறார்.- ஹநுமதோ பக்தத்வேந் தஸ்ய சதுர்ப்புஜவேஷேண திருச்யோபவத்” என்று (அதாவது) திருவடி பரம பக்தராகையாலே அவர்க்கு நிஜ ரூபத்தைக்காட்டினாரென்றபடி . அன்றியும் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்தில் பெருமாள் தலையணையாக வைத்துக் கொண்ட பா வைவருணிக்கின்ற வான்மீகி முனிவர் “புஜை: பரமநாரி ம் அபிம்ருஷ்ட மநேகதா” என்கிறார். இங்கு பரமநாரிகளாகச் சொன்னது ஸ்ரீதேவீ பூதேவீ நீலாதேவிகளை யென்று வியாக்கியானம். ஆகவே வான்மீகி முனிவரும் பெருமாளுடைய பரத்வ வேஷத்தை ஸ்பஷ்டமாகக் கண்டவரென்று விளங்கும். ஆக இவ்வளவால் பெருமாளுடைய பரம ஸ்ஷ்டத்வம் நிரூபிதமாயிற்று.
பரம ஸ்பஷ்ட
வெளிக் காணும் மேன்மை உடையவன் -பரத்வம் தலை நீட்டிக் காட்டும்
கிஞ்ச பரம ஸ்பஷ்ட꞉,
ஸ்பஷ்ட ப்ரத்யக்ஷ த்₃ருஷ்ட ஸ்வ பாரம்ய꞉ । யதா
வ்யக்தமேஷ மஹா யோகோ பரமாத்மனா சநாதன–யுத்த காண்டம் மண்டோதரி
ராமன் மஹா யோகீ -பரமாத்மா -எப்போதும் உள்ளவன் –
ஆரானும் அல்லேன் அறிந்தேன் அவனை நான் –உமக்கு அறிய கூறுவேன் -கலியன் இந்த ஸ்லோக தமிழ் ஆக்கம்
தருணவ் சூர்ப்பணகை
அப்ரமேயஸ்ய -தாரை
ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய-அயோத்யா காண்டம்
ஸூரியனுக்கும் ப்ரகாஸம் அளிக்கும் ஸூர்யனாக உள்ளவன் இராமன்-சுமத்ரா தேவி கௌசல்யைக்கு சொல்லி சமாதானம் படுத்திகிறாள் –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -காகுத்தா
அஹம் வேத்மி ராமம் ஸத்ய பராக்ரமம் -விசுவாமித்திரர்
சமுத்திரம் அணை கட்டி -ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் -சபல சித்த குரங்கு முதலிகள் கொண்டு –
சடாயு மோக்ஷம் இக்கரையில் விபீஷண பட்டாபிஷேகம் -பரத்வம் ஸ்பஷ்டம்
- ஓம்பரமஸ்பஶ்டாயநம:
பரா மேலான
மா ஶோபா ‘மா’ அதாவது அழகு
அஸ்யேதி பரம: பகவான் ‘பரம:’
ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர்
அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர்
ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும்
ஸ்பஶ்ட: பகவான் ‘ஸ்பஶ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்
பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- பர்மாஸ்பஷ்டா – அவரது மகத்துவம் முற்றிலும் தெளிவாகத் தெரிகிறது
ஸ்பஷ்டா என்பது வெளிப்படையான அல்லது மிகவும் வெளிப்படையான ஒன்றைக் குறிக்கிறது. பரமா என்றால் உச்சம் என்பதுடன், லட்சுமி தேவியை (“பர மா”) தன்னுடன் வைத்திருப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த இரண்டு அர்த்தங்களையும் தனது பின்வரும் விளக்கத்தில் ‘பரமா ஷோபா அஸ்ய இதி அஸ்ய இதி பரமஹ, ஸர்வோத்க்ரிஷ்டா வா அனன்யாதீன சித்தித்வாத் ஸம்விதாத்மதாயா ஸ்பஷ்ட பரமஸ்பஷ்டஹ் – ஒட்டுமொத்தமாக உயர்ந்தவராக இருப்பதால் பரமனாக இருக்கிறார் அல்லது ஸ்பஷ்ட லக்ஷ்மி தேவியால் அலங்கரிக்கப்பட்டவராக இருக்கிறார். என்பது வெளிப்படையாகத் தெரிகிறது அல்லது அவர் அறிவு ஆளுமைப்படுத்தப்பட்டவர்.
ஸ்பஷ்ட (பிரத்யக்ஷா, த்ரிஷ்டா) பாரம்யஹ் பரம-ஸ்பஷ்டா – அவருடைய மகத்துவம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்ரீ பராசர பட்டர் ராமாயணத்தைக் குறிப்பிடுகிறார் – வ்யக்தமேஷ மஹா-யோகி பரமாத்மா சனாதன – (யுத்த காண்டம் – 114.4). போர்க்களத்தில் இராவணனை வதம் செய்த பிறகு ராமனைப் பார்த்த மண்டோதரியின் வார்த்தைகள் இவை. அதேபோல, தாரா (வாலியின் மனைவி) ராமரைக் கண்டவுடனேயே அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்து, மனித உருவில் கடவுளாகப் போற்றுகிறார் – ‘த்வம் அப்ரமேயஶ்ச துராஸதஷ்ச…..மனுஷ்ய தேஹாப்யுதம் விஹாய திவ்யேன தேஹாபிதாயேன யுக்தா’ (ராமாயணம் 4.324).
சுமித்ராவின் வார்த்தைகளில்: “சூர்யஸ்யாபி பவேத் சூர்யா” – அவர் சூரியனை விட பிரகாசமாக பிரகாசிக்கிறார், மேலும் அவர் சூரியனுக்கு பிரகாசத்தை அளிப்பவர். பகவான் ராமரின் மகத்துவத்தைப் பற்றிய மற்ற குறிப்புகள், அவர் “பும்ஸாம் த்ரிஷ்டி சித்தாபஹாரிணம்”, “ரூப சம்ஹானாநாம் லக்ஷ்மிம் தத்ரிஷுர் விஸ்மிதாகாரா”, முதலியன.
நாராயண சூக்தம் அவரை ‘நாராயண பரோ ஜோதிஹ் ஆத்மா நாராயணா பரஹ் – அவர் உச்ச ஒளி மற்றும் உயர்ந்த சுயம்’ என்று பிரகடனம் செய்கிறது.
இந்த வெளிப்படையான மகத்துவமே பரதனை ராஜ்யத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ராமரிடம் பக்தி கொள்ளச் செய்தது என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். ராமரின் வசீகரம், லக்ஷ்மணனை மறுபடி யோசிக்காமல் அவருடன் வரச் செய்தது, மேலும் அவர் 14 ஆண்டுகள் காட்டில் அவருக்கு சேவை செய்தார். ஹனுமான் ராமரைப் பார்த்த உடனேயே அவரிடம் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்தார். அவருடைய டிராவின் சக்தி அப்படித்தான் இருந்தது.
ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், ‘ஸ்பஷ்’ – பிணைத்தல் (ஸ்பஷதி – பத்னாதி) என்ற மூலச் சொல்லின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான விளக்கத்தைத் தருகிறார், மேலும் பரமஸ்பஷ்டத்திற்கு “எல்லாவற்றையும் சிறந்த முறையில் பிணைப்பவர்” என்று பொருள் தருகிறார். சிக்கலான மனித உடல், அதன் உள் சிக்கலான போதிலும் அதன் அழகான தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உதாரணம், உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஆதரவாக பின்வரும் மேற்கோள்களை வழங்குகிறார்: அஸ்ய ஸ்பஷோ ந நிமிஷாந்தி (ரிக் வேதம் 9.73.4), திவா ஸ்பஷா பிரசாரந்தி (அதர்வ வேதம் 4.16.4), முதலியன.
393-துஷ்ட -தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
தசரதன் மகனா’கத் திருமால் அவதரித்தது தான், எல்லா பக்தர்களும் அவரை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.எனவே தன்னை எப்போதும் ‘தசரதன் மகன்’ என்று சொல்லிக் கொள்வதிலே மகிழ்வாராம் ஸ்ரீராமன்-இப்படித் தசரதன் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மகிழ்வதால் ராமன் ‘துஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.‘துஷ்ட:’ என்றால் மகிழ்பவர் என்று பொருள். தசரதனின் மகனாகி, அதனால் எல்லோராலும் எளிதில் அணுகப்படக் கூடியவராய் ஆகி,மகிழ்ச்சி பெற்றதால், ராமனுக்கு ‘துஷ்ட:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 393-வது திருநாமம்.“துஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.
துக்க ஸம்வேதநாயைவ ராமே சைதந்ய மாஹிதம்”[உத்தரராமசரிதே.] என்று பெருமாள் தாமே சொன்னதாக பவபூதிகவி யெழுதுகிறார். இவற்றால் பெருமாளுடைய திருவுள்ளம் ஸந்தோஷமற்றிருக்கும் போலுமென்று நினைக்க இடமுள்ளது. உண்மை அப்படியில்லை. ஸம்ஸாரிகளின் ஸமுஜ் ஜீவனார்த்தமாக வந்து அவதரிக்கப் பெற்றோமிறே யென்று திருவுள்ள முகந்தே யிருப்பர்.முடி புனைந்து நாட்டையாளப் பாரித்திருக்கையில் சடை புனைந்து மரவுரி யுடுத்துக் காட்டுக்குச் செல்ல நியமனம் பெற்றபோது எவ்வளவோ துக்கமாகத் தானே யிருந்திருக்குமென்று பலர் நினைக்கக் கூடும். அப்போதும் பரம ஸந்தோஷத்தையே யாயிற்று பெருமாள் கொண்டது. ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய? ” என்றவரன்றோ பெருமாள். இவ்விடத்தில் கம்பருடைய வாக்கு மிக வற்புதமானது. ” இப்பொழு தெம்மனோரால் இயம்புதற்கெளிதோ? யாரும் செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு பின்பு வாசக முரைக்கக் கேட்ட, அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.” என்பது அவருடைய ஆச்சரியமான செய்யுள். வனவாஸக் கட்டளை பெறுவதற்கு முன்னே இராமபிரானுடைய திருமுக மண்டலம் தாமரை போன்றிருந்ததாம்; அக்கட்டளை பெற்றவாறே அத்திருமுகம் அப்போதலர்ந்த செந்தாமரையை வென்றிட்டதாம். கொடிய வனம் போக நேர்ந்ததே யென்று சிறிதும் சோகியாமல்,புண்ணிய புனல்களாடவும் புண்ணிய புருஷர்களைத் தொழவும் வாய்ப்பு கிடைத்தமைக்குப் பரம ஸந்தோஷ மெய்தினானென்கை. உத்ஸவேஷ ச ஸர்வேஷ பிதேவ பரிதுஷயதி * என்று பௌர ஜனங்கள் நேரில் கண்டு சொன்னபடியே தனது நாட்டிலுள்ளவர்களுக்கு நேரும் ஸந்தோஷத்தைத் தன்னுடைய ஸந்தோஷமாகக் கொண்டு மகிழ்பவன். ” அபிஷிச்ய விபீஷணம் விவர ப்ரமுமோத ஒற” என்கிற படியே அன்பர்களை ஸந்தோஷப்படுத்தித் தான் ஸந்தோஷாதிசய மடைபவன்-
———————–
393- துஷ்ட
பிறந்து படைத்த சம்பத் -மகிழ்ச்சி நிறைந்தவர் –பிரமுதோஹா-திவத்திலும் பசு நிரை மேய்த்து உகப்பு போல் இங்கும்
அதி₄ க்ருதாதி₄காராத் பரத்வாத₃பி அதிஶயேந ஸமஸ்த மநுஷ்யாத்₃யதி₄காரயோர்
தா₃ஶரதி₂ த்வ ஜக₃த் பாலந யோர் லாபா₄த் ப்ரீத꞉
துஷ்ட꞉ । யதா₂
பிதராம் ரோசயாமாச சதா தசரதன் ந்ருபம்–பால
தசரதனைத் தனது தந்தையாக ஏற்றதை எண்ணி மகிழ்ந்தான்
குலோசித மதி ஷாத்ரம் தர்மம் ஸ்வம் பஹு மந்யதே -அயோத்யா
தான் திரு அவதரித்த ஷத்ரிய குலத்துக்கு ஏற்ற ஸங்கல்பம் கொண்டவனாக அந்தக் குலத்தில் அதிக மதிப்புடன் இருந்தான்
ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் -யுத்த
நான் என்னை சாதாரண மனிதனாகவும் தசரதனின் புத்ரனாமாகவும் மட்டுமே எண்ணுகிறேன்
கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே மைதிலி தன் மணவாளா சனகன் திரு மருகா தாசரதி
தயரதன் குல முதலாய் –பெருமாள் திரு -8-
தசரதர் பெற்ற மரகத மணித்தடம்–மனுகுல மணீ பால –பட்டர் -ஒன்பது ராமர் சந்நிதி நம்பெருமாளைச் சேர்த்து திருவரங்கத்தில் –
———
- ஓம்துஶ்டாயநம:
பரமானந்தைக பேரின்பமே
ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால்
துஶ்ட: பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த திருநாமத்தின் ‘த’காரத்தை ‘து’ (அதாவது வடமொழியில் உள்ள முதல் ‘த’) என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்.
- துஷ்ட – மனநிறைவு கொண்டவன்
‘துஷ்’ என்றால் மனநிறைவுடன் இருப்பது மற்றும் தேவைகள் மற்றும் ஆசைகளிலிருந்து விடுபடுவது. ஸ்ரீ ஆதிசங்கரர் இந்தப் பெயரை ‘பரமானந்த ஸ்வரூபத் துஷ்டா – அவர் பரம ஆனந்தம் மற்றும் அவர் துஷ்டர்’ என்று விளக்குகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே தன்னுடன் இருக்கக்கூடிய ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்காமல், பகவான் தசரத மன்னனுக்கு மனிதனாகப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார், அதனால் அவர் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருந்தார். தேவர்கள் அவருடைய ராம அவதாரத்தில் அவர் முன் தோன்றி, அவரை பகவான் என்று போற்றியபோது, அவர் தன்னை ஒரு மனிதனாக, தசரதனின் மகனாகக் கருதுவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர்களிடம் கூறினார் –ஆத்மானம் மாநுஷம் மன்யே ராமம் தசரத் ஆத்மஜம். நாம் முன்பு பார்த்தது போல், அவர் தனது குடிமக்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது ஒரு சாதனை படைத்த குழந்தையின் தந்தையைப் போல மகிழ்ச்சியாக இருந்தார் – பிதேவ பரிதுஷ்யதி – விபீஷணனிடம் சொன்னதை மட்டும் நிறைவேற்றி, லங்காவின் அரசனாக முடிசூட்டுவதன் மூலம் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தவர் – பிரமுமோத ஹா.
ஸ்வாமி சின்மயாஆனந்தா அவர் துஷ்டர் என்று விளக்குகிறார் – சிறிய பிரசாதங்களாலும் மகிழ்ச்சி அடைபவர். அவர் நம்மை பகவத் கீதை அத்தியாயம் 9 வசனம் 26:
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதி |
ததாஹம் பக்த்யுபஹৃதம் அஷ்நாமி ப்ரயதாத்மனঃ ||
அன்பான பக்தியுடன் யார் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, தண்ணீரையோ சமர்பிக்கிறார்களோ, அந்தத் தூய உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.
பகவத் கீதை அத்தியாயம் 2 வசனம் 55, ‘ஆத்மனி ஏவாத்மனா துஷ்டா ஸ்திதா-ப்ரஜ்னஸ் டோடோச்யதே – தன்னில் மட்டுமே திருப்தி அடைகிறாரோ, அவர் உண்மையான ஞானம் பெற்றவர் அல்லது உண்மையான யோகி’ என்று கூறுவதன் மூலம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.
பிற உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஆளாகாததால் பகவான் துஷ்டர் என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இராமன் அரசனாக முடிசூட்டப்பட்டபோது உடனடி மகிழ்ச்சியை உணரவில்லை, 14 வருடங்கள் காட்டுக்குச் செல்லும்படி கேட்கப்பட்டபோது வருத்தப்படவில்லை.
துஷ்டனாகவோ அல்லது எப்போதும் திருப்தியாகவோ, நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தாலும், யோகியின் மனநிலையுடன் அவற்றுடன் இணைந்திருக்காமல் இருப்பதே பகவானை உணர்ந்து கொள்வதற்கான சரியான வழியை இந்த நாமம் விளக்குகிறது.
394-புஷ்ட -நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
புஷ்ட = கீழே துஷ்டஎன்கிற திருநாமத்தினால் சொன்ன ஸந்துஷ்டதையை நன்கு நிலைநாட்டுகின்றது இந்தத் திருநாமம். தான் அடையும் ஸந்தோஷம் வடிவிலே காணலாம்படி யிருப்பவன். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலே தெரியும்’ என்பராதலால் ஹ்ருதய தமான ஸந்தோஷத்தைத் திருமேனி கோட்சொல்லித்தரக் கடவதாயிருக்கும். வனவாஸக் கட்டளை ப்ராப்தமானது “வநவாஸோமஹோதய ” என்று சொன்னது க்ருத்ரிமமென்று நினைக்கவொண்ணாதபடி திருமேனி புகர்த்துக் காட்டுமென்கை. வனவாஸம் ப்ராப்தமாவது பரம ஸந்தோஷத்திற்கே ஹேதுவென்று சொன்னதைச் சிறிது சோதிக்குமளவில் அது அஹ்ருதயோக்தியே யொழிய ஸஹ்ருதயோக்தி யன்றென்று அறுதியிடலாமா யிருக்கும்.(எங்ஙனேயென்னில்) மேலே ஆரண்யகாண்டத்தில் ஸ்தாவியோகம் நேர்ந்தபோது துக்கபரவசராய்க் கதறுகின்ற பெருமாள் *ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸோ நஷ்டாஸ்தா ஹதோ த்விஜ : ஈத்ருசீயம் மமாலக்ஷ்மீ: நிர்தஹேதபி பாவகம் என்று சொல்லிப் புலம்புகிறார். ‘ஐயோ! ராஜ்யத்தை யிழந்தேனே! காட்டிலே வந்து வளிக்கவும் நேர்ந்ததே!’ என்று சொல்லுவது வநவாஸோ மஹோதய;, என்றதற்கு நேர்முரணல்லவா? வனவாஸக்கட்டளை ஸந்தோஷகரமா யிருந்தால் ‘ராஜ்யாத்ப்ரம்ச:’ என்றும் வநேவாஸ: என்றுஞ் சொல்ல வாயெழும்புமோ? ஈத்ரு இயம் மமஅலக்ஷ்ம் ‘ என்று ராஜ்ய ப்ரம்ச வனவாஸங்களை தெளர்ப்பாக்ய மாகவன்றோசொல்லுகிறார். இவை பொருந்தும்படி எங்ஙனேயென்று விசிகித்ஸை பண்ணுவார்கள்-இதற்கு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர்;*ராஜ்யநாசோபகர்ஷதி* வநவாஸோ மஹோதய:* என்று சொல்லிப் போந்தவற்றை இப்போது அனர்த்தமாகச் சொல்லுகிற தென்னென்னில்,ஆச்ரித ஸம்ச்லேஷத்துக்கும் ரிஷிகளை நோக்குகைக்கு மென்றிறே போந்தது; அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும் பெரியவுடையாரை யிழக்கையாலும் இவற்றுக்கு அடியானவையும் இப்போது அனர்த்தமாகத் தோற்றின்படி .”என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி. (இதைச் சிறிது விவரிக்கிறேன்) வனத்திற்குப் புறப்படும்போது எதனால் ஸந்தோஷமென்னில்: பிராட்டியோடு ஏகாந்தவாஸம் பண்ணப் பெறுவோம், பரம்பாகவதர்களோடே ஸஹவாஸம் பண்ணப்பெறுவோம் என்றிங்ஙனே பாரித்ததனால் ஸந்தோஷமுண்டாயிற்று. பாரித்தபடியே பேறு கிடைத்து வந்தது. வைதேஹி! ரமஸே கச்சித் சித்ரகூடேமயா ஸ என்று வாய் வெரும்படி பிராட்டியோடே கூடியிருந்து குளிரப்பெற்றது .இஹ வத்ஸ்யாமி ஸெளமித்ரே! ஸார்த்தமேதேந ப ா என்று ஐடாயு மஹாராஜருடைய சிறகின் தீழே யொதுங்கி வர்த்திக்கவும் பெற்றது.இந்த நிலைமையில் “ஹா ஹந்த ஹந்த நலிநீம் கஜ உஜ்ஜஹார” என்னும்படியாகப் பிராட்டியைப் பிரியவும் ஜடாயுமஹா ராஜரை அறவே யிழக்கவும் நேர்ந்தது. இந்த துக்கம் சொல்லுவித்த வார்த்தையன்றோ” ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ :” என்பது. இதனால்காட்டுக்குப் புறப்படும் போதே ஸந்தோஷமில்லாமல் வருந்தியே புறப்பட்டதாக எண்ணத்தகுமோ? பரம குதூஹலத்தோடு மஹோத்ஸவம் ஸேவிக்கத் திருவேங்கடமலை சென்றவர் அங்கு இடமும் சோறும் தண்ணீரும் பெறாமல் அப்பன் ஸேவையும் பெறாமல் வெய்யிலிலும் மழையிலும் பரிதபித்துக் கிடக்க நேர்ந்ததென்று கொள்வோம்; அப்போது’ஏதுக்கு வீட்டைவிட்டு இங்கே வந்து வருந்துகிறோம்!’ என்று தளர்ந்தால் இதனால் ஊரைவிட்டுப் புறப்படும்போதிருந்த குதூஹலத்தை இல்லைசெய்யவொண்ணுமோ? இலங்கை சென்ற திருவடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டவாறே “அநயாஹீந; ப்ரபு:, தாரயதி ஆத்மநோ தேஹம் ந சோகேந அவஸ்ததி’ என்று சொன்னது பெருமாளை கர்ஹிக்குமாபோலே யிருந்தாலும் (புஷ்ட ) என்னுமிந்தத் திருநாமத்தை வியாக்கியானம் பண்ணுமாபோலவே யிராநின்றது. வாடாமல் வதங்காமல் புஷ்டராகவே யிருக்கிறார் பெருமாள்’ என்று காட்டினபடியாகக் கொள்ளலாம். இல்லையாகில் ஜீவதி’ என்று மூன்றெழுத்தோடே முடிக்கலாமே; ”தாரயதி ஆத்மநோ தேஹம் ‘ என்ற விரிவு தேஹபுஷ்டியை அந்தரங்கமாகக் காட்டவே போலும்
394-புஷ்ட
நிரம்பியவன் –மகா குணங்களால்-விஸ்வம் ஆரம்பித்ததே கல்யாண குணங்களால் பூர்ணம் புஷ்டியாக இருப்பவன்
ஏவம் மஹா கு₃ணை ꞉ பரி பூர்ண꞉
புஷ்ட꞉ ।
* தமேவம் கு₃ண ஸம்பந்நம் இதி ॥ -பால
இப்படியாக கல்யாண குணங்கள் கொண்டவன்
குணங்களுக்கு இருப்பிடம் -நிகரில் புகழாய் இத்யாதி
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மாற்று இனிதோ நீ அருளும் வைகுண்டம்
இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்
பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
————-
- ஓம்புஶ்டாயநம:
ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும்
ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால்
புஶ்ட: பகவான் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
- புஷ்டா – உன்னத குணங்கள் நிறைந்தவன்
ஆதி சங்கரர் சொல்வது போல், ‘சர்வத்ர சம்பூர்ணத்வாத் புஷ்தா – அவர் எல்லா வகையிலும் பரிபூரணமானவர் அல்லது முழுமையானவர், எனவே அவர் புஷ்தா’ என்று அழைக்கப்படுகிறார். உபநிடதங்களால் விவரிக்கப்பட்டுள்ளபடி அவர் பூர்ணா அல்லது சரியானவர். ஒவ்வொரு பகுதியும் கூட சரியானது. ஒவ்வொரு அவதாரமும் அல்லது அவதாரமும் சமமாக சரியானவை. முழுமை என்பது உடல் வடிவம், உடல் வலிமை மற்றும் மன மற்றும் அறிவுசார் பண்புக்கூறுகள் அனைத்திற்கும் நீண்டுள்ளது.
ஸ்ரீ சத்யதேவோ வாசிஷ்டர் இந்த அர்த்தத்தை விரிவுபடுத்துகிறார், ஏனென்றால் அவர் புஷ்டா என்று பரிந்துரைக்கிறார், ஏனென்றால் அவர் தனது படைப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வழிகளைக் கிடைக்கச் செய்வதன் மூலம் அவற்றை நிறைவேற்றுகிறார் – புஷ்ணாதி இதி புஷ்டா.
—————–
395-சூபேஷண- மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
சுபேக்ஷண : =பெருமாளுடைய திருக்கண்ணழகிலே யீடுபட்டவர்கள் சக்ரவர்த்தியும் சபரியும் திருவடியுமாவர்கள். ‘என் வேள்வியைக்காக்க உன் பிள்ளையைப் போரவிடாய்’ என்று விச்வாமித்ர முனிவன் வேண்டினபோது *ஊந: ஷோடசவர்ஷோ மே ராமோ ராஜீவலோசந: * என்று விடையிறுத்த சக்ரவர்த்தியின் கருத்துகள் பலவுண்டு; அவற்றுள் ஒரு கருத்து இக்கண்ணழகனை விட்டுப் பிரிந்து எங்ஙனம் தரித்திருப்பேனென்கை: சபரி தன்னாசரமத்தேறப் போந்து பெருமாளைக் கண்டவாறே சக்ஷ ஷ தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்த ! * என்று அவருடையகண்ணழகிலே தான் ஈடு பட்டமையைத் தெரிவித்துக்கொண்டாள்.இவற்றுக்கெல்லாம் மேம்பட்டது திருவடியின் வார்த்தை. அதாகிறது] ரா ம: கமலபத்ராக்ஷஸ்ஸர்வஸத்வமநேரஹர *) திருவடியோடு ஸம்பாஷணை செய்யும் பிராட்டி “ யாநிராமஸ்ய சிஹநாநி.. தாநி பூயஸ் ஸமாசக்ஷ்வ ந மாம் சோக : ப்ரத யதி‘ என்றுபெருமாளுடைய அடையாளங்களைச் சொல்லும்படி கேட்டவாறே முந்துறமுன்னம்” ராம: கமல பத்ராக்ஷ: “ என்றான். அக்கண்ணழகு செய்யுமது என்? என்ன;
[ ஸர்வஸத்வமநோஹர: ] பிராணிகளென்று பேர்பெற்றாரெல்லாருடையவும் நெஞ்சைக்
கொள்ளை கொள்ளுமதாயிற்று அவ்வழகு என்கிறார் திருவடி. இங்கே விமர்சிக்கவேணும்; திருவடி பெருமாளுடைய கண்ணழகை ஓருபெரியநகரத்திலே கண்டாரல்.லர் .நிர் நமானதொரு வனத்திலே ஒரு மூலையிலே கண்டுவைத்து ‘ஸர்வஸத்வ
மநோஹர :, என்று எதுகொண்டு சொல்லிற்றென்று ஆராயவேணும். இங்கு நம்
பிள்ளை யருளிச் செய்வது, “திர்யக் ஜாதீயனாய்ப் பணையோடு பணைதத்தித் திரிகிற
என்னுடைய நெஞ்சையும் அபஹரித்ததே” என்று. இத்தால் பெருமாளுடைய
கண்ணழகு ஸர்வ ஸத்வமநோஹர மென்னுமிடம் கைமுதிக ந்யாஸித்தமென்கை. இதைக்கணிசித்தே கம்பர், அனுமன் இராமபிரானைக் காணும் போதே “ மஞ்செனத்திரண்ட கோலமேனிய!. மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளிரிரும்பனிக்குத் தேம்பாக், கஞ்சமொத்தலர்ந்த கண்ண!” என்று கூறினதாகப் பாடினர்.
(சுபேக்ஷண 🙂 இதற்கு பாஷ்யமருளிச்செய்யாநின்ற பட்டர் “ஸ்வகர்த்ருகம் ஸ்வகர்மகஞ் சி தர்சநம் அதிசுபம் அஸ்ய” என்பதோர் அர்த்தமு மருளிச்செய்கிறார். இராமனைப் பிறர் காண்பதும் இனிது, இராமன் பிறரைக் காண்பதும் இனிது என்றதாயிற்று. ஈக்ஷண சப்தமானது கண் என்கிற பொருளையும், காண்கையென்கிற பொருளையும் காட்ட வல்லது. கண் என்கிற பொருளைக்கொண்டு கீழே விவரணம் செய்தேன். இப் போது காண்கை யென்கிற பொருள்கொண்டு விவரிக்கிறேன். [*யச் ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி. நிந்திதஸ் ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே ] (ஸ்ரீ ரா. அயோ. 17-14 ) இராமனைக் காணாதவனும் இராமனால் காணப்படாதவனும் உலகில் நிந்திக்கப்பட்டவனாவன்; உலகத்தார் நிந்திப்பது கிடக்கட்டும்; தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளவேண்டியதுமாகும் என்றபடி. இதனால் இராமனைக் காண்பதுபோல இராமனால் காணப்பெறுவதும் புருஷார்த்தமென்று தேறுவதால் சுபேக்ஷண: என்பதற்கு இருவகைப் பொருளையும் பட்டர் திருவுள்ளம் பற்றினது சாலச் சிறக்கும். இந்த சுபேக்ஷண மஹார்த்த ப்ரஸ்தாவத்தில், அசோகவனத்தில் புலம்பாநின்ற பிராட்டி “ தம் பத்மதலபத்ராக்ஷம் ஸிம்ஹ விக்ராந்த காமிநம். தந்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதிநம்.” என்று சொன்ன விந்த சுலோகமும் சிந்தைசெய்யத் தக்கது. இதில் பத்மதளபத்ராக்ஷ மென்றுள்ளது. இங்கு பத்ம தளமென்றோ பத்மபத்ரமென்றோ ஒன்று சொன்னால் போதும்; ” பத்ரம் பலாசம் ச்சதனம் தளம் பர்ணம் ச்சத : புமாந்” என்ற அமரகோசத்தின்படி தளம் பத்ரம் என்பன பர்யாயமே யாதலால் தளபத்ராக்ஷ மென்று இரண்டையும் கூட்டிச் சொன்னது புநருக்தமாகாதோவென்று சிலர் சங்கிப்பதுண்டு. சங்கை யுக்தமானதே. இங்குப் பெரியார் கூறும் ஸமாதானம் சுவை மிக்கது. வடமொழியில் அக்ஷமென் கிற சொல்லுக்கு ” அக்ஷமிந்த்ரிய காயயோ:” என்கிற நிகண்டின்படி கண்ணென் றும் வடிவென்றும் இருபொருள்களுள்ளமை ப்ரஸித்தம். இரட்டுறமொழிதலென் னும் தமிழ் மரியாதையினால் பத்மதளபத்ராக்ஷ மென்றவிவ்விடத்தில் அக்ஷபதத்திற்கு இவ்விரண்டு பொருள்களையுங் கொண்டு ‘பத்மதளம்போன்று விசாலமான கண் ணழகுடையவர், பத்மபத்ரம் போன்ற [தாமரையிலை போல் பசுமையுள்ள ] திரு மேனியையுடையவரென்றதாகக் கொள்ளக்கடவது .நம்மாழ்வார் திருவாய்மொழி யில் * செக்கமலத்தலபோலுங் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத்திலை போலுந்திருமேனி * என்றருளிச்செய்தது மேலே விவரித்த பொருளைத் திருவுள்ளம் பற்றியே.
395-ஸூபேஷண-
சோபனமான பார்வை யுடையவர்-ஸூ ப–ஈஷண கண்கள் கடாக்ஷம் உள்ளவர்
முன்பு 346 பத்ம நிபேஷன –348-அரவிந்தாஷ
ஏவம் வித₄ஐஶ்வர்ய ஶீலாதிஶய பிஶுந (கோள் சொல்லிக் கொண்டு இருக்கும் )ஶீதல விஶால உதா₃ர தீ₃ர்க₄ ராஜீவ லோசந ꞉
ஶுபே₄க்ஷண꞉ । யதா
ஸூ ப்ரூஸ் ஆயத தாம்ராக்ஷ சாஷாத் விஷ்ணுரிவ ஸ்வயம் இதி ।
ஸ்வ கர்மகம் ஸ்வ கர்த்ரு கஞ்ச த₃ர்ஶநம் அதி ஶுப₄மஸ்யேதி வா ஶுபே₄க்ஷண –அயோத்யா
ராமன் அழகான புருவங்கள் -கண்கள் யுடையவன்
இதனாலே விஷ்ணு என்றும் கூறப்படுபவன்
தன்னுடைய தோற்றம் -தான் மற்றவர்களைக் காணும் போது உண்டாகும் மேன்மை ஆகியவற்றின் காரணமாகத்
தனது திரு உள்ளத்துக்கும் அவன் தானே மகிழ்வு ஏற்படுத்துவதால் ஸூப ஈஷண-எனப்படுகிறான்
யஸ் ச ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பஸ்யதி நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மா அப்யேநம்
விகர்ஹதே இதி -அயோத்யா –
யார் ஒருவன் இராமனைக் காண்பது இல்லையோ
யார் ஒருவனை இராமன் காண்பது இல்லையோ
அவன் அனைவராலும் ஒதுக்கப் படுகிறான் –
பூப்போலே செங்கண் -செங்கண் சிறு சிறிதே விழியாவோ -ஒரே பாசுரத்தில் -கண்களும் கடாக்ஷமும்
தான் காண்பதும் தன்னைக் காண்பதும்
செக்கமலத் தவர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே -9-7-3-
தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –
குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்
மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும்
ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்
தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
———-
- ஓம்ஸுபேக்ஷணாயநம:
ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் ‘ஈக்ஷணை’ அதாவது அருட்பார்வையானது
ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது
முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும்
போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது
ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது
பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது
ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது
ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது
அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது
ஸ ஸுபேக்ஷண: எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”
இத்யாதிஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
————-
- ஷுபேக்ஷனா – மங்களகரமான கண்களை உடையவர்
ஷுபா என்றால் மங்களகரமானது மற்றும் ஈக்ஷணம் என்றால் கண் பார்வை அல்லது பார்வை என்று பொருள், எனவே சுபேக்ஷனா என்பது யாருடைய பார்வை மங்களகரமானது, அதாவது பக்தரைப் பார்த்து தனது ஆசிகளைப் பொழிபவர்.
ஸ்ரீஆதிசங்கரர் இதை ஒரு விரிவான வர்ணனை மூலம் விளக்குகிறார்:
‘ஈக்ஷணம் தரிசனம் யஸ்ய ஶுபம் ஶுபகரம் முமுக்ஷூணாம் மோக்ஷதாம் போகார்த்தினாம் போகதாம் ஸர்வஸந்தேஹவிச்சேத காரணம் பாபிநாம் பாவனாம் ஹ்ருதயக்ரந்தேர் விச்சேதகாரம் ஸர்வக்ஷபங்கர்மணாம் ஸர்வக்ஷபங்கர்மணாம். அவனுடைய வெறும் பார்வையே மிகவும் மங்களகரமானது, அது எல்லா உயிர்களுக்கும் நல்வாழ்வை அளிக்கும்; அது ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு மோக்ஷத்தையும், அவர்களை விரும்புபவர்களுக்கு இன்பத்தையும், பாவங்களைச் சுத்தப்படுத்துகிறது, அனைத்து கர்மாக்களையும் எரிக்கிறது மற்றும் அனைத்து அறியாமையையும் நீக்குகிறது, எனவே அவர் சுபக்ஷணன் என்று அழைக்கப்படுகிறார், மங்களகரமான கண்களைக் கொண்டவர். இது இறைவனைக் காண்பதற்கும் இறைவனால் காணப்படுவதற்கும் பொருந்தும்.
முண்டக உபநிஷத்தின் (2.2.8) மேற்கோளையும் அவர் தருகிறார்:
பித்யதே ஹிருதய-கிரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஷாயா க்ஷீயந்தே
சாஸ்ய கர்மானி தஸ்மின் த்ரிஷ்டே பரவாரே
அவரது பார்வையில் இதயத்தின் முடிச்சுகள் அறுந்து, எல்லா கெட்ட கர்மாக்களும் அகற்றப்படுகின்றன. சுத்தப்படுத்தப்படுகிறது.
ஸ்ரீ பராசர பட்டர் நம்மை அயோத்தியா காண்டம் என்று குறிப்பிடுகிறார்:
யச்ச ராமம் ந பஷ்யேத் து யம் ச ராமோ ந பஷ்யதி |
நிந்திதஹ் ச வசேத் லோகே ஸ்வாத்மா’பி ஏனம் விகர்ஹதே ||(அயோத்தி 17.14)
ராமனைப் பார்க்காதவர் அல்லது ராமர் யாரைக் காணவில்லையோ, அந்த நபர் இந்த உலகில் கண்டிக்கப்படுகிறார், மேலும் அவரது சுயமும் அவரைக் கண்டிக்கிறது..
அனுமன் ராமரை சீதா தேவியிடம் விவரித்தார் “ராமஹ் கமலா பத்ராக்ஷ: ஸர்வ ஸத்த்வ மனோரதஹ் – அங்கு அவர் தனது கண்களின் மகத்துவத்தையும் அவரது கண்களால் பார்க்கப்படுவதையும் விவரிக்கிறார். சீதா, ஸ்ரீ ராமரை இவ்வாறு விவரிக்கிறாள் – தம் பத்ம தல பத்ராக்ஷம் .. தன்யா பஷ்யந்தி மே நாதம் – தாமரை போன்ற அழகான என் நாதரின் கண்களைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஈக்ஷனா என்ற சொல்லுக்கு சங்கல்பம் என்று பொருள். இந்த சங்கல்பம் ஒரு நல்ல முடிவு ஆனது, இதன் விளைவாக இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் ஏற்பட்டது. அவர் சுப ஈக்ஷனா அல்லது ஸம்கல்பத்தை உடையவர் என்பதால், அவர் சுபேக்ஷனா. இந்த விளக்கத்தை ஆதரிக்க ஸ்ரீ சாஸ்திரிகள் பின்வரும் ஸ்ருதிகளை வழங்குகிறார்கள்:
- ததைக்ஷதா பாஹு ஸ்யாம் ப்ரஜாயேதி (சாந்தோக்ய உபநிஷத் 6.2) – அவர் பலராகவும் உருவாக்கவும் விரும்பினார்;
- சேயம் தேவதைக்ஷதா ஹந்தஅஹமிம்ஹ திஸ்ரோ தேவதா அனேன ஜீவேன ஆத்மா’நுப்ரவிஸ்ய நமரூபே வ்யாகரவாணி (சாந்தோக்ய உபநிஷத் 6.3) – அந்த பகவான் பார்த்து, ‘உண்மையில், ஜீவா ஆன்மாவுடன் , நான் இந்த மூன்று கூறுகளை உருவாக்கி, பெயர்களையும் வடிவங்களையும் விரிவுபடுத்துகிறேன். ஒவ்வொரு தனிமத்தின் மும்மடங்கு தன்மையை நான் வெளிப்படுத்துவேன்.
- ஆத்மா வா இடமேக ஏவாக்ர அசித் நன்யத் கிஞ்சனா மிஸத் ச இக்சத லோகான் நு ஸ்ரீஜ இதி (ஐதரேய உபநிஷத் 1.1.1) – பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முன்பு அனைத்தும் அவருக்குள் இருந்தன, அனைத்தும் அவருக்குள் இருந்தன, அந்த நேரத்தில் எதுவும் தனித்தனியாக இல்லை. ஜீவாத்மாக்கள் (தனிப்பட்ட ஆன்மாக்கள், ததஸ்தா சக்தி) மற்றும் வெளிப்புற சக்தியான மாயா இன்னும் அவருக்குள் இருந்தது. அதனால் அந்த இறைவன் என் மூலம் அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்த விரும்பினான்;
- ச இக்ஷாசக்ரே, கஸ்மின்னஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி (பிரஷ்ண உபநிஷத் 6.3) – புருஷன் பிரதிபலித்தார்: “நான் எந்த வழியால் உடலை விட்டுப் பிரிந்து செல்வேன்? நான் எதன் மூலம் உடலில் தங்குவேன்?”
தர்ம சக்கரம் எழுத்தாளர், பகவான் அவர்கள் மீது விழுவதைப் பார்த்த மாத்திரத்தில் பயனடைந்த பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார். குஹா, ஹனுமான், ஷபரி மற்றும் விபீஷணன் ஆகியோர் ராமரின் தெய்வீக பார்வை மற்றும் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சிலரை குறிப்பிடலாம்.
———————–
ராம –யாவரும் மகிழும்படி இருப்பவன்–தான் விளையாடி ஆனந்தம் அடைபவர் என்றுமாம்-ரூப -குண -சேஷ்டிதங்களால் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-ம்யமத (அ)ஸ்மிந் ஸதா₃ ஸர்வைர் கு₃ண ரூப வஶீ க்ருதைரிதி–ராம꞉ (குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்)। யதா₂ரம்யதே அஸ்மின் சதா சர்வை குண ரூப வசீக்ருதை—-அயோத்யா -53-1-திருக் கல்யாண குணங்கள் — திருமேனியின் எழில் ஆகியவற்றால் பரவசம் அடைந்த அனைவருக்கும் எப்போதும் இராமனால் ஆனந்தம் கிட்டுகிறது –ராமோ ரம்யதாம் ஸ்ரேஷ்ட -அயோத்யா -53-1--மற்றவர்களை மகிழும்படி செய்வதில் சிறந்தவன் இராமன்-குணாபிராமம் ராமம் ச -சபா பர்வம் -58-42- சிறந்த குணங்கள் நிரம்பி உள்ளதால் அனைவரையும் மகிழும்படி செய்யும் இராமன்-ஸ்யாமோ யுவா லோஹிதாஷோ மாதங்கா நாம் இவ ரிஷப-மழை மேகம் போன்று நிறம் கொண்டவனும் -இளம் வயதில் உள்ளவனும்
தாமரை போன்ற அழகான கண்கள் கொண்டவனும்-யானைகளின் நடுவில் உள்ள ஆண் யானை போன்றவனுமான இராமன்–ததா சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்ஜநனை பிது குணைர் விருருசே ராமோ தீப்த ஸூர்ய இவாம் சுபிர் –அயோத்யா -1-33- தனது நாட்டு மக்களால் மிகவும் விரும்பப்படுபவனும்-தசரதனுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனும்
சிறந்த கல்யாண குணங்கள் கொண்டவனும் ஆகிய இராமன் தனது தேஜஸ் மூலம் ஸூர்யன் போன்று ஒளியுடன் நின்றான்-சரத் இந்தீவரத்விஷே அபி ராம சரீராயேதி ஸ்வ மந்த்ர லிங்கா₃ச்ச-இராமனின் திருமேனி சரத் காலத்தில் தோன்றிய நீலோத் பல மலர்கள் போன்று மனத்தைக் கவர்ந்ததாக இருந்தது –மனத்துக்கு இனியான்-தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –10-1-8-சேண சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்தி காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பி -6-6-9-
ஓம் ராமாய நம:—நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்-யோகினோ யோகிகளை-ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |–இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே || (பத்ம புராணம்)-எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் ‘ராம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஸ்வேச்சயா தன்னிச்சைப்படி- ரமணீயம் மிக அழகிய-வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்-தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, தன்னிச்சையால் தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே ‘ராமநாமத்தை’ உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் – கம்ப ராமாயணம்
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல்லெறும்பாதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே (திருவாய்மொழி 7.5.1)
ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் ஸ்ரீராம ராம ராமேதி ராமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே – இனிய முகம் கொண்டவர்! ராம நாமத்தை 3 முறை உச்சரித்தால், அது விஷ்ணுவின் 1000 நாமங்களைச் சொன்னதற்குச் சமம்.
தருணௌ ரூப ஸம்பன்னௌ சுகுமாரௌ – புண்டரீக விசாலக்ஷௌ – தாமரை போன்ற கண்களுடன் இனிமையான வடிவம் மற்றும் அழகான தோற்றம்.-‘ராமு-க்ரீதாயாம்’ (விளையாட்டுகளைக் குறிக்கும்) என்ற மூலச் சொல்லைக் குறிப்பிடுகின்றனர் – அவருடைய லீலாக்களால் இன்பம் பெறுபவர்’ அல்லது அவரது கிரீடத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்பவர் ராமர்.ராம நாமம் ‘தாரக மந்திரம்‘ அல்லது சம்சாரப் பெருங்கடலைக் கடந்து முக்தி அல்லது மோட்சத்தை அடைய பக்தர்களுக்கு உதவும் ஒன்று என்று அழைக்கப்படுகிறது. அஷ்டாக்ஷரி மற்றும் பஞ்சாக்ஷரி ஆகிய இரண்டு சக்தி வாய்ந்த மந்திரங்களின் கலவையாக ராம நாமம் கருதப்படுகிறது.-“ஓம் ந மோ ந ரா யா ந யா” என்ற அஷ்டக்ஷரி (8 எழுத்துக்கள்) மந்திரத்திலிருந்து ‘ர’ என்ற எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்டது –ம என்ற எழுத்து பஞ்சாக்ஷரி (5 எழுத்துக்கள்) மந்திரமான “ந ம சி வா ய” இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. அஷ்டாக்ஷரியில் இருந்து ”ர’‘ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் ‘ஓம் ந மோ ந யா ந யா‘ (விஷ்ணு வடிவம் இல்லாதது) ஆகிவிடும். இதேபோல், பஞ்சாக்ஷரியில் இருந்து மA’ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் “ந சி வா ய” (சிவன் வடிவம் இல்லாதது) ஆகிவிடும். எனவே ‘ராம’ நாமம் என்பது உயிர் கொடுக்கும் இரண்டு எழுத்துக்களின் (ஜீவாக்ஷரம்) கலவையாகும், எனவே இது ‘தாரக மந்திரம்‘ என்று கருதப்படுகிறது.
எப்பொழுதும் ஸ்ரீராமனைத் தியானிப்பதன் மூலம் அனுமன் தனது சக்தியைப் பெற்றார். வால்மீகி ராம நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் கொள்ளையனாக இருந்து தன்னை ஒரு துறவியாக மாற்றிக்கொண்டார் (உண்மையில், வால்மீகிக்கு ‘ராம’ என்று உச்சரிக்க முடியவில்லை என்றும், ‘மாரா மரா’ என்று தொடர்ந்து சொல்ல நாரத முனிவரால் அறிவுறுத்தப்பட்டதாகவும், வால்மீகி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஒரு கொள்ளையனாக!
ராம:- ரமதே’ இதி ராம: ரமு- ரீடாயாம் என்று தாதுவாகையாலே விளையாடுபவன் என்று பொருள்படும்.” த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி கர்மஸூத்ரோப பாதிதை ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஐந்துபி ‘ என்று நாரத முனிவர் கூறினபடியே, சிறுவர்கள் பந்துகளைக் கொண்டு விளையாடுமாபோலே எம்பெருமான் பிராணிகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். பந்தானது வெளுப்பு நூல் கருப்புநூல் சிவப்பு நூலாகிய மூன்றுநிற நூல்களாலே கட்டப்பட் டிருப்பது போல பிராணிகளும் ஸத்வரஜஸ்தமஸ்ஸுக்களாகிற மூன்று நிறமுள்ள குணங்களமைந் திருப்பர்கள். பந்தானது விஹாரகாலத்தில் மேலே போவதும் கீழே விழுவதுமா யிருப்பது போல, பிராணிகளும் ” தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யேமர்த்யலோகம் விசந்தி’ என்கிறபடியே மேலே போவதும் கீழே விழுவதுமாயிருப்பர்கள். இங்ஙனே விளையாடும் பரமபுருஷன் இராமனாகத் திருவவ
தரித்து “ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹு ரு தூந்” என்றுவான்மீபேசும்படி பிராட்டி யொருத்தியோடே விளையாடினான். “ ராமஸ் ஸ ஸீதயாஸார்த்தம் ” என்னாதே (ராமஸ்து) என்றது ஸாபிப்ராயம். (து) என்னு மவ்யயம் வ்யாவ்ருத்தியைச் சொல்லும். இதுவரையில் பெருமாள் பித்ரு சுச்ரூஷையிலும் தர்மப்ரவர்த்தனத்திலும் தேவதா ஸாமாராதனத்திலும் புகழ்படைத்திருந்தவர்-இப்போது பிராட்டியோடே சேர்ந்தவாறே வேறுபட்டார். சருங்கார கேளிகளிலே பரம ரஸிகரன்று புகழ்பெற்றபடியைச் சொல்லுகிறது.
அன்றியே, ராம்:- ராமதே என்பதற்கு உள்ளம் குளிரப் பெறுபவரென்பதும்
பொருளாகையாலே அப்பொருளைக் கொண்டு அநுபவிப்பதும் பாங்கு. அன்பர்
களோடு கலக்கப் பெற்றும் அன்பர்களின் காரியத்தைத் தலைக்கட்டியும் உள்ளம்
குளிருபவர் பெருமாள். குஹேந ஸஹிதோராம ராமன் குஹனோடு சேர்ந்தானென்று
இதற்குப் பொருளன்று; குஹேந ஸஹிதஸ் ஸந்ராம குஹனோடு சேர்ந்த பின்பு
ராமனானானென்றே ஆசாரியர்களருளிச் செய்வது. குஹனோடு சேர்ந்து உள்ளங்
குளிர்ந்தா னென்கை. மற்றோரிடமுங் காணலாம்; (க்ருத க்ருத்யஸ் ததா ராம
*அபிஷிச்ய சா லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம். கருதக்ருத்யாஸ் ததா ராம *
விபீஷணாழ் வானுக்கு முடிசூட்டித் தன் காரியம் தலைக்கட்டிற்றாக நினைத்து [ தா
ராம ] அப்போது தான் ரதியை யடைந்து ராமனாயின னென்கை. பெருமாள்
செய்தருளின ஒவ்வொரு காரியமும் அவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குளிரச்
செய்ய வல்லதே யாயிற்று. குஹஸுக்ரீவ மாருதி வி ஷணதிகள் பக்கலிலே
காட்டின அனுக்ரஹ விசேஷத்தினால் திருவுள்ளம் குளிர்ந்தது போல, தா காதா
கேயவிராத கரதூஷண ராவணதிகள் பக்கலிலே காட்டின நிக்ரஹத்தினாலும்
ஆசரித விரோதிகள் தொலையப் பெற்றோமென்று திருவுள்ளம் குளிர்ந்திருக்கக்
குறையில்லை. ஆக, ரமதே இது ராம ‘ என்கிற வ்யுத்பத்தியினால் ஸ்ரீராமாயணத்தில்
பல ப்ரகரணங்கள் ஸங்க்ருஹீதங்களாகும்.
அன்றியே ராம : ரமயதீதி ராம ‘ என்கிற வ்யுத்பத்தியும் பொருந்தும். தன்னைக் காண்பவர்களையும் தன் சரிதை கேட்பவர்களையும் மகிழ்விப்பவர் பெருமாள்.உலகத்தில் அதிகாரிகள் வெவ்வேறு பட்டிருப்பர்களாதலால் ஒரே குணத்தினால் எல்லாரையும் ஏக ரூபமாக மகிழ்விக்க முடியாது.” ஸத்யேந லோகந் யதி தீநாந்தாநேந ராகவ;. குரூந் சுச்ஷயா வீர தநுஷா யுதி சாத்ரவாந்.’ என்றாப்போலே ஒவ்வொருவர் பக்கலிலே ஒவ்வொரு குணத்தைச் செலுத்தி மகிழ்விப்பது ஸ்ரீ ராமாயண ப்ரஸித்தம். ஸௌசீல்யம் ௌலப்யம் ஸெளந்தர்யம் பொறுமை தயவு வாத்ஸல்யம் வீரம் என்றிவை முதலான பல திருக்குணங்கட்குக் கடலாயிருக்கின்ற பெருமாள் திருநாட்டிலே விலை செல்லகில்லாத திருக்குணங்களை விலை செல்லச் செய்வதற்காகவே இம்மண்ணுலகில் வந்து அவதரித்தபடியினால் அத்திருக்குணங்களிலே அவரவர்களை யீடுபடுத்தி மகிழ்விக்கச் சொல்ல வேணுமோ? குஹப்பெருமாளை ஸௌசீல்யத்தாலே மகிழ்வித்தான் ஸௌசீலய மென்பதும் சீலமென்பதும் பர்யாயம். தன் மேன்மை பாராதே தண்ணியரோடும் கலந்து பரிமாறுகை சீல குணத்தின் காரியம். இக்குணத்தினால் காரியங் கொண்டது தான் ஸ்ரீ ராமாயணத்தில் அதிகம். ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களாலே தண்டாகாரண்ய வாஸிகளான மஹர்ஷிகளை யீடுபடுத்தினது பெரியதன்று. காதும்மூக்குமறுப்புண்டு கதறி யழுதுகொண்டே சுரதூஷணாதிகளிடம் செல்லலுற்ற சூர்ப்பணகை” தருணெள ரூபஸம்பந்நௌ ஸுகுமாரெள… புண்டரீக விசாலாக்ஷெள சீரக்ருஷ்ணாஜிநாம்பரெள, கந்தர்வராஜ ப்ரதிமௌ பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதெள “என்று சொல்லிச் சொல்லிப் புலம்பும்படி செய்ததே சிறப்பு. இங்ஙனே ஓரோ குணங்களைக் கட்டி ஒவ்வொருவரையும் ரமிப்பித்தது பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
——————-
விராம –பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-ஓம் விராமாய நம:–விராமோ அவஸானம் ‘விராம’ என்றால் முடிவாக தங்கும் இடம் ப்ராணினாம் அஸ்மின் இதி -அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்-விராம: பகவான் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அவர் இறுதி ஓய்வெடுக்கும் இடம்–ந ஹி தஸ்மாத் மனஹ் கஷ்சித் சக்ஷுஷீ வா நரோத்தமான் | நரஹ் ஷக்நோத்யபாக்ரஷ்டும் அதிக்ராந்தே அபி ராகவே || ( 2.18.13)-ராமரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் மீது தங்கள் எண்ணங்களைச் செலுத்துபவர்கள் முயற்சித்தாலும் இந்த சங்கத்திலிருந்து வெளியேற முடியாது
ராமன் மற்றும் விரமா என்ற இரண்டு நாமங்களை ‘ரமந்தே அஸ்மின் இதி ராம, விரமாந்தி அஸ்மின் இதி விரமா – மக்கள் யாரை மகிழ்விக்கிறார்களோ, அவர் ராமர், மற்றும் யாரிடம் இறுதி சாந்தியைக் காண்கிறார்களோ, அவரே விரமா’ என்பதில் அழகாக விளக்குகிறார். ஆனந்தத்தின் மூலமும் ஆனந்தத்தின் முடிவுதான் – யத்ர ரமணாம் தத்ர ராமநாவாசனம். படைப்பாளி அவனே, படைப்பை முடிப்பவனும் அவனே.-தஸ்மிந் இடம் சம் ச விசைதி ஸர்வம் ச ஓம் ப்ரோதாஶ்ச விபு ப்ரஜாஸு (யஜுர் 32.8)-யோ மராயதி பிராணயதி யஸ்மாத் ப்ராணந்தி புவனாநி விஸ்வா (அதர்வா 13.3.3)-காலேனோதேதி ஸூர்யஹ் காலே நிவிசதே புனஹ் (அதர்வா 19.54.1)-யத்ராஅமிர்தம் ச மிருத்யுஷ்ச புருஷே’தி ஸமாஹிதே (அதர்வா 10.5.17)
விராம 1-ரமய திராம:’ என்கிறாப்போலே ‘விரமயதீதி விராம? என்றாகும்.
வீராமமாவது ஓய்வு: (1) பிறருடைய செளர்யவீர்ய பராக்ரமங்களை ஓயச் செய்பவர்
(2) பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர் என்று இருபொருள் கொள்ளலாம்.
முந்தின பொருளைப்பற்றி விசேஷமாக விவரணம் காட்ட வேண்டியதுண்டோ?
ப்ரஹ்மாஸ்வம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா, இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸுரநாயகோ வா த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்-என்ற திருவடியின் வார்த்தை யொன்றே போதும். பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர்-என்ற இரண்டாவது பொருளுக்குச் சேரச் சிலவிடங்களை யெடுத்துக்கா ட்டுதும். ஆரண்ய காண்டம் ஆறாவது ஸர்க்கத்தில், தண்டாகாரண்யவாளிகளான முனிவர்கள் அரக்கர்களினால் தங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களை இராமபிரானிடம் விஜ்ஞாபித்துச் சரணமடைந்தபோது இராமன் அம்முனிவர்களுக்கு அபயமளித்த வரலாறு வருணிக்கப்பட்டது. பிறகு ஒன்பதாவது ஸர்க்கத்தில் ஸ்தா பிராட்டி இராமபிரானை நோக்கித் தர்க்கித்துப்பேசினாள். (அதாவது) நீர் முனிவேடம் பூண்டு காட்டுக்கு வந்திருக்கிறீர்; புண்ணிய புனல்களாடிச் சுகமாக அயோத்திசென்று சேரவேண்டியது பிராப்தம். அப்படியிருக்க நீர் முனிவர் முன்னிலையில் பரஹிம்ஸை செய்வதாகப் பிரதிஞை செய்தது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. க்ஷத்ரியர்
களுக்கு இது தருமமானாலும் இப்போது நீர் க்ஷத்ரிய தருமத்தைக் காக்கவேண்டிய நிலைமையில் இல்லாதபடியாலும்,”தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவம் மேற்கொண்டு” காட்டுக்கு வந்திருப்பதாலும் ஆயுதங்களைக்கொண்டு செய்யுஞ்செயலை நீர் நெஞ்சாலும் நினைக்கவே தகாது ‘ உமக்குத் தெரியாததொன்றுமில்லை;உமக்கு நான் தருமம் உபதேசிக்க வந்ததாக நினைக்கவேண்டா; திருத்தம்பியாரோடும் ஆலோசித்து யுக்தமானபடி செய்யக்கடவீர்- என்றுரைத்தாள். இதைக் கேட்ட இராமன் (பத்தாவது ஸர்க்கத்தில்) அந்த ஸீதா பிராட்டியின் வாதத்தைஓயச் செய்திருப்பதைக் காணவேணும். அதில் ஸரமான விஷயம் இவ்வளவே.-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே! ஸலக்ஷ்மணாம், ந ஹி பரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத:* இத்யாதிகளைச் சொல்லி அவளுடைய வாதத்தை விராமமடையச் செய்தனனென்பது. வாலி ”அரக்கரோரழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?” என்றாப்போலே சில வாதங்களைச் செய்தபோது பெருமாள் அவன் வாயினாலேயே க்ஷமைவேண்டும்படி செய்து அவனை விராமமடையச் செய்ததும்
இங்ஙனே பலவுங் காண்க.
——————
நிஸர்க-ஸ்வா பாவிகமாக இயற்கையாக –விரத-ஆசை பற்று இல்லாமல்-அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது அம்மா-ராஜ்ய நாசம் இருள் கூட கூட ராம சந்த்ர ஒளி விஞ்சி இருந்ததே-நிஸர்க₃ நைரபேக்ஷ்யேண க்ருபணாத்₃ராஜ்யாதே ₃꞉–விரத꞉
பாராளும் படர் செல்வம் பரத தம்பிக்கே யருளி அரும் கானம் அடைந்தவன் -பெருமாள் திரு 8-5-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவிய யெம்மிராமன் எம்பெருமான் -பெருமாள் திரு -9-2-ஓம் விரதாய நம:—விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்-ரதமஸ்ய விஶயசேவாயாமிதி ‘ரதம்’ அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)-விரத: எனவே பகவான் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.-ந ச அஸ்ய மஹதீம் லக்ஷ்மீம் ராஜ்ய நாஷோ’பகர்ஷதி |
லோக-காந்தஸ்ய காண்டத்வம் ஷீதா ரஷ்மேரிவ க்ஷபா ||” (அயோத்தியா 19.32)அவர் ராஜ்யத்தை இழந்தபோது, குளிர்ச்சியான சந்திரனின் அழகை இரவினால் பறிக்க முடியாதது போல, அது அவரது சிறப்பை இழக்கவில்லை-தர்ம ஆபதேசாத் த்யஜாதஹ் ச ராஜ்யம் | மாம் ச அபி ஆரண்யம் நயதஹ பதாதீம் | ந ஆஸீத் வ்யதா யஸ்ய ந பீஹ் ந ஷோகஹ் | கச்சித் ச தைரியம் ஹ்ருதயே கரோதி” || (சுந்தர 36.29)சீதா பிராட்டியின் வார்த்தைகளில்: “ஸ்ரீராமன் தர்மத்தின் கீழ் ராஜ்யத்தைத் துறந்து, நான் கால் நடையாகச் செல்ல வேண்டிய காட்டிற்கு என்னை அழைத்துச் சென்றபோது, ராமனிடம் ஏமாற்றமோ, துக்கமோ, பயமோ இல்லை”.
விரஜோ-மார்கா என்று படிக்க வேண்டும், இதன் பொருள் அவர் குறையற்ற பாதையைக் காண்பிப்பவர்.-தன்னைப் பிரிந்திருந்தாலும் எல்லோரும் தேடும் பாதை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.-விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு —சரணம் அடைந்தவர்களுக்கு மோக்ஷம் அற்ற புருஷார்த்தங்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவன்
விரத = தம்முடைய ஸமீசீன வாதங்களாலே பிறருடைய வாதங்களை விராமமடையச் செய்யுமாற்றல் விராம; என்ற கீழ்த்திருநாமத்தில் அநுபவிக்கப்பட்டது.பிறருடைய ஸமீசீன வாதங்களாலே தாம் விராமமடைவதும் விதண்டாவாத வைதேசிகரான பெருமாள் பக்கலிலே காண்பதுண்டு. தாம் பிடித்ததே பிடிவாத மாக இராமல் “யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம்” என்று கொண்டு தம்முடைய வாதத்திற்கு விச்ராந்திக்கொள்பவர் பெருமாள். அல்லது, காரண விசேஷத்தாலே தாம் நிக்ரஹிக்கப் புகுந்தாலும், உடனே நன்மை கண்டு நிக்ரஹத்தில் நின்றும் விரக்தராகி அநுக்ரஹோந்முகராமவர் என்பதையுங் கொள்ளலாம். இவ்விரண்டையும் அடைவே விவரிக்கிறேன். அயோத்தியா காண்டம் இருபத்தாறாம் ஸர்க்கத்தில் இராமபிரான் தாய் தந்தையர் சொற்படி காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை ஸ்தா பிராட்டியிடங்கூறி அவளை நகரத்திலேயே வாழுமாறு திட்டம் செய்ய, (ஸர். 27) அதற்குபிராட்டி தன்னையும் உடனழைத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்க, (ஸர். 28) அவளுக்கு இராமன் காட்டின் கொடுமைகளைக்கூறி ‘நீ காட்டுக்கு வரவே தகாது;என்று வலிதாகத் தர்க்கித்தான். அதற்குமேல் பிராட்டி (29, 30 ஸர்க்கங்களில்) பிரணயாரோஷம் தலையெடுத்து “ராமா! உன்னிடத்தில் அழகு மட்டுமேயுள்ளது;அதைக்கண்டு அனைவரும் மயங்கிவிடுகிறார்கள்; உனக்கு ஆண்மையென்பது சிறிதுமில்லை; என்னொருத்தியைக் காக்க முடியாமல் என்னை நிறுத்தி நீ காட்டுக்குப் போனாயென்று என் தந்தையார் கேள்விப்பட்டாராகில் ‘ஹா! புருஷவேஷம் பூண்டுவந்த வொரு பெண்பிள்ளைக்கா என் மகளைக் கொடுத்தேன்! ‘ என்று மிகவும் மனம் நொந்து கொள்வர்; என்னைக் கட்டிலே காக்கமாட்டாத கா புருஷனா நீ? என்று இனைய பலவும் சொல்லித் தர்க்கிக்க, இராமன் தன்னுடைய பிடிவாதத்தில் நின்றும் விரதனாகி அவளையும் உடனழைத்துச் செல்ல இசைந்தனன்.
காரண விசேஷத்தாலே நிக்ரஹிக்கப்புகுந்து நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்த படியையும் இரண்டிடங்கொண்டு காட்டுவோம். கிஷ்கிந்தா காண்டத்தில் (ஸர்.30) ஸுக்ரீவ மஹாராஜர் வர்ஷாகாலத்திலே பெருமாள் ஒய்வு கொடுத்ததை வியாஜமாகக் கொண்டு விஷயபோகங்களிலே ஊன்றிக்கிடக்க. காலம்கடந்தும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாராமையைக்கண்ட பெருமாள் சீறிச்சிவந்து நிக்ரஹிக்கத் திருவுள்ளம்பற்றினபடியை இளையபெருமாள் முகமாகத் தெரிவிக்கவெண்ணி ” ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ” மா வாலிபதமந்வகா; ”« ஹநிஷ்யாமி ஸபாந்தவம் ” இத்யாதிகளைச் சொல்லி அச்சமுறுத்தினார். ஸுக்ரீவன் குடும்பத்தோடு மாண்டுவிட்டானின்று என்றே நினைக்கும்படியாயிருந்தது. இந்த பிரபலமான நிக்ரஹ ஸங்கல்பம் என்னாயிற்று? “ராம ஸுக்ரீவயோரைக்யம் தேவ்யேவம் ஸமஜாயத” என்று பிராட்டி பக்கலிலே திருவடி சொல்லும்படியாகவன்றோ ஆயிற்று” வாநராணாம் நராணாஞ்ச கதமா த் ஸமாகம்:?” என்று பிராட்டி திருவடியைக் கேட்டாள். பணைத்த்தித்திரிகிற குரங்கினங்களுக்கும் புருஷோத்தமர்களுக்கும் சேர்க்கையுண்டானபடி எங்ஙனேயென்று கேட்டாள். அதற்குத் திருவடி சொன்னது, வெறும் ஸமாகமமன்று; ராமனும் ஸுக்ரீவனும் ஏகதத்வமென்னும்படி யாகவன்றோ குழைந்தார்களென்று. ஆக, நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்தபடியாலே விரதனென்றது ஓக்கும். மற்றோரிடம் யுத்தகாண்டத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணமாகும்.”பா ம் புஜக போகாபமுபதாயாரி ஸுதந்: ‘ அஞ்ஜலிம் ப்ராங்
முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே:” என்னும்படி கடலரசனை வழிவேண்டி மூன்றுநாள் தரைக்கிடை கிடந்தார் பெருமாள். அவனோ முகங்காட்டிற்றிலன்;*சாபமாநய ஸௌமித்ரே சராம்ச்ச ஆசீவிஷோபமாந், ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா : * என்று பலவுஞ்சொல்லி உலகில் ஜலதத்வமே யில்லா தபடி செய்துவிடுகிறேனென்று சீற்றத்தினெல்லையில் நின்றார் பெருமாள்.பிறகு என்னாயிற்று? அக்கடலரசன் சிறிது ஆபிமுக்க்யம் காட்டினவாறே ஸமுத்ரராஜனே! இவ்வம்பு உனக்காகத் தொடுத்ததன்று; உன் பகைவர்மேலேவிடத் தொடுத்ததத்தனை ; உன் பகைவர்களைக் கட்டிக் கொடு’ என்று கூறி அவன் காட்டிக்கொடுத்த திருமகுல்யமென்கிற விடத்திலே அம்பைச் செலுத்தி அநுக்ரஹ சீலராகி நிக்ரஹத்தில் நின்றும் விரதராயினர். (யுத்தகாண்டம் ஸர்க்கம் 22காண்க… . மேலே ராவணனோடு முலமான யுத்தம் நடக்கும்பொழுது அவன்-சால சாபஞ்ச முமோச வீர:* என்னும்படி கமாண்டு நின்றவாறே ” கச்சஅநுஜாநாமி “ என்று சொல்லி விடை கொடுத்துப் போகவிட்டு அப்போது யுத்தத்தில் நின்றும் விரதரானார் பெருமாள்- என்பதும் இங்கு (விரத 🙂 என்னும் திருநாமத்தின் பொருளாகக் கொள்ளத்தகும்.
————————
மார்க்க-தேடப்படுபவன்-த₄ர்மாபதே ₃ஶாத் த் யஜதஶ்ச ராஜ்யம் மாம் சாப்ய ரண்யம் நயத꞉ பதா₃திம், இத்யாதி₃ । ப₄ரத்₃வாஜாதி₃முநிபி₄ர் மார்க₃யத இதி–மார்க₃꞉ ।-நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் உய்த்தனன்-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர்-விரஜோ மார்க₃ இதி பாடே ₂ விரஜா꞉ – அபாம்ஸுலோ நிர்தோ₃ஷஸ் தத்₃த₃ர்ஶிதோ மார்க₃ இதி –யா கதிர் யஜ்ஜ சீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி-(ஜடாயுவுக்கு மோக்ஷம் காட்டிய பெருமாள் ) யஜ்ஜ்ங்கள் இயற்றுவோரின் உயர்ந்த கதி ஐந்து அக்னியை வைத்து வழிபடுவோரின் கதி।-ஆவஹத் பரமாம் கதிம் –ஸூந்தர-17-8- ஜடாயு நீ நான் கூறும் பரம கதிஅடைவாயாக- யதா₂–ந ச அஸ்ய மஹதீம் லஷ்மீம் ராஜ்ய நாச அபகர்ஷதி லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீத ரஸ்மே இவ ஷபா–அயோத்யா -19-32-இராமனின் திருமுகத்தில் லஷ்மீ என்னும் சோபை அதிகமாகவே உள்ளது-ராஜ்யம் கை விட்டுப் போனாலும் அந்த சோபையை நீக்க இயலாது உலகிற்கு ஒளியை அளிக்க வல்லதும் -காண்பவர்களுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லதும் ஆகிய சந்திரனின் சோபையை இருள் எவ்வாறு நீக்க இயலும்-ச பிதுர் வசனம் ஸ்ரீ மாந் அபிஷேகாத் பரம் பிரியம்-வனவாஸம் செய்வதற்கு அனுமதி அளித்த தயரதன் சொற்கள் பட்டாபிஷேகம் என்பதைக் காட்டிலும் இராமனுக்கு மிகவும் பிரியமாக இருந்தன-தர்ம உபதேசாத் த்யஜதச்ச ராஜ்யம் மாம் சாப்யரண்யம் நயத பித்தாதிம் –ஸூந்தர-36-29– தர்மத்தின் வழியைக் கடைப்பிடிக்க எண்ணியவராக ராஜ்யத்தைத் துறந்து மென்மையான சரீரம் கொண்ட என்னை அடர்ந்த கானகத்தில் நடத்தியபடி வந்தார்-இதனால் எனக்கு வருத்தம் உண்டாகவில்லை
ஓம் மார்காய நம—யம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்-அம்ருதத்வாய கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ-யோகினோ முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்-ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்-மார்க: எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘நான்ய: பந்தா வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)-எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.
மார்க்க:= மார்க்யதே’ இதி மார்க்க; மார்க்கணமாவது தேடுதல். தேடப்படுகிறவர் என்றபடி. தேடுகிறவர் என்கிற பொருளும் பொருந்தும். தேடப்படுகிறவர் என்னும் பொருளை முன்னம் விவரிப்போம். வேதாந்தங்களிலே “ஸோந்வேஷ்ட ய :” என்றுஓதியுள்ளது. பகவான் தேடத் தகுந்தவன் என்றபடி. இந்தச் சுருதியையடியொற்றியே திருமங்கையாழ்வார் “நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன்” என்றும். ” நான்மறைகள் தேடியென்றுங் காணமாட்டாச் செல்வன்என்று மருளிச்செய்தார். உத்தர ஸ்ரீராமாயணத்திலே ‘சம்பூகவதம் என்றொரு
கெட்டம்.தவம்புரியத் தகாத ஜாதியிலே பிறந்தானொருவன் தண்டகார ணியத்திலே கொடுந்தவம் புரிய,அதனாலே அயோத்தியில் ஒரு அந்தணனுடைய குழந்தை இறந்துபோக, அந்த சூத்ரதபஸ்வியைக்கொன்றாலன்றி இந்த பிராமண சிசு உயிர்பெறாதென்றறிந்த பெருமாள் அவனை வதைக்கத் திருவுள்ளம்பற்றிக் கையுங்கத்தியுமாகத் தண்டகாரணியத்திற்கெழுந்தருளுகிறார். (பெருமாள் திரு மொழியில் செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டு என்றநுஸந்திககப்பட்ட கதை இது.) காடேறச் செல்லாநின்ற பெருமாள் ”சம்புகனென்கிற சூத்திரன் தம் புறானாமே; எங்கே எங்கே?”என்று கேட்டுக்கொண்டே அவனைத் தேடிக்கொண்டு செல்லுகின்றார்; சென்று அவனையணுகினபோது அவன் சொல்லுகிறான்* அந்வேஷ்டவ்யோ யதஸி புவைநர் லோசுநாதச் சாண்ய மாம் அந்விஷ்யந்…” [உத்தரராமசரிதே பவபூதி: என்றான். உலகர்களாலே தேடத்தக்கவனாக வேதங்களில் சொல்லப்படுகிற மஹாப்ரபுவே, நீ என்னைத் தேடிக்கொண்டு வந்தனையே, நான் எவ்வளவு பாக்யசாலி! என்றான்.இங்கு கர்த்தரியர்த்தம் கர்மணியர்த்தம் ஆகிய இரண்டு பொருளும் காணலாம். மாரீச மாயா ருகத்தை வதைத்து மீண்டபின் பாணசாலையில் பிராட்டியைக் காணாமல் அவளைத் தேடிக்கொண்டு திரிந்தது, தனுகபந்தனுடைய சொல்லின்படி சபரியையும் ஸுக்ரீவனையும் தேடிப்போந்தது என்னுமிவற்றையும் கொள்ளலாம். மார்க்க: என்பதற்கு வழியாயிருப்பவன், வழிகாட்டுபவன் என்கிற பொருள்களுங்கொள்ளலாம். வழியென்றாலும் நெறியென்றாலும் பரியாயம்.நம்மாழ்வார் பெரிய திரு வந்தாதியில் *நெறிகாட்டி நீக்குதியோ? என்கிற பாசுரத்தில் உபாயமென்னும் பொருளில் நெறியென்னுஞ் சொல்லைப் பிரயோகித்திருப்பதனால் மார்க்க; என்னும் வடசொல்லும் உபாயவாசகமாகக் குறையில்லை. முகுந்தமாலையில் “கரசரண ஸரோஜே காந்திமந் நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே,ஹரிஸரஸி விகாஸ்ய…” என்ற சுலோகத்தில் ‘அகாதமார்க்கே என்றவிடத்தில் மார்க்க சப்தம் உபாயார்த்தமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளது. ‘உபாயோபேயத்வே ததி தவ தத்வம் ந து குணௌ” என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டர் அருளிச்செய்தபடி எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகையாலே உபேய பூதனான தானே உபாயமுமாயிருக்கும்படியைச் சொல்லிற்றாகிறது. ராவண வதமான பிறகு பிரமன்வந்து செய்யும் துதியில் “சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: “ என்றதனால் மூதலிக்கப்பட்ட அர்த்தமேயன்றோ இது. இனி, வழிகாட்டுகிறவன் என்னும் பொருளுக்கு ஸமந்வயம் பெரியவுடையார் (ஐடாயு) பக்கலிலே காணலாம். *மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்* என்று சொல்லிச் சடாயுவுக்கு வைகுந்தத்தேற வழிகாட்டினவரன்றோ பெருமாள். * யா கதிர் யஜ்ஞ சீலாநாம் * இத்யாதியாகச் சொன்ன ராம வாக்யத்தில் (கதி 🙂 என்பதற்கு மார்க்க மென்பது தானே பொருள். பகவத் கீதையில் (8-86) *சுக்ல க்ருஷ்ணே கதீ ஸ்யேதே” என்றவிடத்தில் கதிசப்தார்த்தம் மார்க்கமேயன்றே.
————————
நேய-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்–ஸுஹ்ருதா₃ம் நியோகா₃ர்ஹத்வாத்
நேய꞉ (தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்)। யதா—ஆஞ்ஞாய அஹம் தபஸ்வி நாம் –ஆரண்ய – முனிவர்களே உங்கள் துன்பம் பற்றி இனி கூற வேண்டாம் -ஆணை இடுங்கள்-ஆவாசம் து அஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ காநேந -ஆரண்யம் –
இந்த தண்டகாரண்யத்திலே நான் தங்க வேண்டிய இடத்தை கூறுங்கோள்-அங்கேயே நான் தங்குகிறேன்-ஸூஹ்ருதாம் சர்வ க்ருஸ்ரேஷு யுக்தம் புத்திமதா சதா சமர்த்த நாபி சந்தேஷ்டும் ஸாஸ்வதீம் பூதிமிச்சதா –யுத்த-ஒருவன் மிகச் சிறந்த புத்தி உள்ளவனாகவும் -சிறந்த எண்ணம் கொண்டவனாயும் மற்றவர்களின் துன்பங்களை நீக்க வல்லவனாயும் இருக்கக் கூடும் அப்படிப்பட்டவன் தனது நண்பர்களுக்கு உண்டாக வல்ல துன்பங்களை தனது சாமர்த்தியத்தால் நீக்குவதே சிறந்தது மேலும் அவர்களின் துன்பங்களை நீக்கி ஐஸ்வர்யம் கிட்டும்படிச் செய்தால் மேலும் சிறப்பானது –யஐஸ்வ அபீப்சிதம் யஜ்ஜம் மயி ஸ்ரேயசி அவஸ்திதே நியுங்ஷ்வச அபி மாம் க்ருத்யே சர்வம் கர்த்தாஸ்மி தே வச–சபா பர்வம் -33-25- கிருஷ்ணன் தர்மர் இடம் நான் உங்களுக்கு நன்மைகளை செய்வேனாகவே உள்ளேன் ஆகவே நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யுங்கோள்-உங்களுக்கான உதவி தேவைப்படும் போது என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கோள் உங்கள் சொற்களைக் கேட்டு நான் அப்படியே செய்கிறேன்-அயமஸ்மி மஹா பாஹோ வ்ரூஹி யத் தே விவஷிதம் கரிஷ்யாமீஹ தத் சர்வ யத் த்வம் வஷ்யஸி பாரத –உத்யோக பர்வம் — நீண்ட புஜங்கள் கொண்டவனே -பாரத குலத்தில்வந்தவனே –
நீ எதனைச் செய்ய எண்ணுகிறாயோ அதனைச் செய்ய நான் தயாராக உள்ளேன்-உன்னுடைய கட்டளைகளை ஏற்கிறேன் தர்மர் கிருஷ்ணன் இடம்-வாயு ஸூநோ ஸூஹ்ருத்வேந பக்த்யா பரமயா ச ச சத்ரூணாம் அப்ரகம்பிய அபி லகுத்வம் அகமத் கபே –யுத்தகாண்டம்-லஷ்மணன் இராவணனால் அடி பட்டு விழுந்தவுடன் அவனை இராவணன் தூக்கிச் செல்ல முயன்றான் அவனால் இயல வில்லை ஆனால் அனுமனோ லஷ்மணன் மீது கொண்ட அன்பினால் ஒரு குழந்தையைத் தூக்குவது போன்று எளிதாக்கத் தூக்கிச் சென்றான் –கூன் உருவில் கொடும் தொழுததை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே சென்றவன் -பெருமாள் திரு -9-1–சிற்றவை பணியால் முடி துறந்தான் -பெரிய திரு மொழி -2-3-1–ஓம் நேயாய நம:–மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக-ஜீவ: ஜீவாத்மா-பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு-நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்-நேய: எனவே பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நேய = நாயகனென்னும் பொருளதான தேதாவென்னுஞ் சொல்லுக்கு எதிரான சொல் (நேய ) என்பது. கட்டளையிடுபவனை நேதா என்போம்; கட்டளை யிடப் பெறுபவனை (நே ) என்போம். ” யஸ்ய விச்வ உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா:”என்று வேதமோதியுள்ளபடியும், * ஆணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி (திருவாசிரியம்) என்று ஆழ்வாரருளிச் செய்தபடியும்* மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவனாகிய தான் ஸகலதேவர்களையும் கட்டளையிட்டுப் பணிகொள்ளத் தக்கவனாயிருந்து வைத்தும் பிறர் தன்னைக் கட்டளையிடும் படியாக வாயிற்று ஸ்ரீராமாவதாரம் செய்தருளிற்று. விச்வாமித்ர முனிவன் தான் ஒரு வேள்வி செய்வதாகத் தொடங்கி அதனை இடையூறின்றி நிறைவேற்றுதற் பொருட்டுத் தசரதமன்னவனிடம் வந்து இராமனைத் தருகவென்று இரந்தனன்.அதற்கு மன்னவன் உடன்படவில்லை. அரக்கார்களோடு போர்புரியத்தக்க பருவமின்றிக்கே மிக இளையவனான என் சிறுவனை நான் உம்மோடுகூட அனுப்பமாட்டேனென்றனன். அதற்கு முனிவன் மன்னவனை நோக்கி இவனது பெருமையை நீ அறிந்திலை; அறப்பெரியோனான இவனை மிகச் சிறியவனாக நீ நினைத்திருக்கிறா யத்தனை ; வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று வேதம் பேசின பெருமைவாய்ந்த மஹாபுருஷனன்றோ இவன்; இவனை உள்ளபடியே யானறிவேன்; நான் மட்டுமல்ல;இதோ உன்னெதிரில் வீற்றிருக்கின்ற நற்றவமாமுனிவர்களும் நன்கறிவர்கள் என்று இனைய பலவுஞ்சொல்லி ஸ்ரீராமலக்ஷ்மணர்களைக் கொண்டு சென்றான்.தந்தையாரிடம் இங்ஙனே முனிவன் பேசின பேச்சுக்களை யெல்லாம் ஏகாந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமபிரான் ‘சேஷபூதனாய்ப் பரதந்திரனாய்ப் பிறக்க வேணுமென்று ஆசைப்பட்டு வந்து பிறந்த நம்மைப் பரமாத்மாவென்று வெளி யிட்டுவிட்டாரே! இது நமது நினைவுக்குத் தகுதியன்றே; மேலும் இந்த விச்வாமித்திரர் இதுவரையில் எத்தனையோ அரியபெரிய வேள்விகளையும் தவங்களையும் இயற்றியிருக்கிறார்; அப்போது ஒருவரையும் துணைவேண்டினவரல்லரிவர்; இப்போது இவர் மிகச் சிறிதாகச்செய்ய நினைத்திருக்கிற ஆறு நாளைய வேள்விக்குத் துணை வேண்டிவந்தது வெறுமனல்ல; நம் தந்தையார் சதுரங்க பலத்தோடு தாம் வந்து அவலீலையாக வேள்வியைக் காத்துத் தருவதாகச் சொல்லவும் அதையும் மறுத்து நம்மையே வேண்டிக் கொணர்ந்த விம்முனிவர்க்கு ஏதோ விசேஷமான தொரு கருத்து இருக்க வேண்டும். நம்மை ஏவிக் காரியங்கொள்ள நினைத்தே (அதாவது நாம் ஆசைப்பட்ட சேஷத்வத்தை உலகமறியச் செய்யக் கருதியே) நம்மை வேண்டிக் கொணர்ந்தார் போலும்’ என்று மருமமறிந்துகொண்டு இராமன் அம் முனிவரிடம் கைகூப்பி ஒன்று விண்ணப்பஞ்செய்தான் – இமௌ ஸ்ம முதிசார்தூல!கிங்கரௌ ஸமுபஸ்திதௌ, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்” என்றான். இதன் பொருளாவது. முநிஸார்வபௌமரே! நானும் என் தம்பியான லக்ஷ்மணனும் உம்முடைய கட்டளைப்படி நடந்துகொள்ள வந்தவர்கள் ; எப்போதும் உமது அருகிலேயே யிருந்து நீர் நியமிக்கும் குற்றேவல்களைச் செய்ய நாங்களிருவரும் காத்திருக்கிறோம்; நீர் கூசாமல் எங்களுக்கு எவ்விதமான கட்டளையுமிடலாம்;உமக்கு என்ன பணிவிடை செய்யப் பெறுவோமென்று எதிர்பார்த்திருக்கிறோமென்பதாம். ஆக, ஆஜ்ஞாபகனான தான் ஆஜ்ஞாப்யனாகைக்கு ஆசைப்பட்டது தான் (நேய ) என்பதனால் தெரிவிக்கப்பட்டதாகிறது.
———————–
நய –நடத்துமவன் நயாமி பரமாம் கதிம்–தே ச ததா₂(அ)ஸ்மிந் நீயந்த இதி
நய꞉ । தே ஹ்யாஹு(கர்ப்பத்தில் வைத்துக் காப்பது போல்– அந்த ரிஷிகளையும் காப்பவர்)ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்யபூதா தபோதனா –ஆரண்ய-தவத்தை மட்டுமே பெரும் செல்வமாகக் கொண்ட ரிஷிகள் வயிற்றில் உள்ள சிசு போலே ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள்-பாண்டவானாம் பவாந் நாதோ பவந்தம் ச ஆஸ்ரிதா வயம் -சபா பர்வம்
பாண்டவர்களாகிய எங்களுக்கு நீயே ரக்ஷகன் -உன்னை அண்டிய எங்களை நீயே காக்க வேண்டும்-சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –நயாமி பரமாம் கதிம் -ஈர்த்து அழைத்துச் செல்பவன்(எல்லாவற்றையும் நடத்துபவர் -வழி-நடத்தப் படுபவர் -நடத்துபவர் ஆகிய மூன்று ரூபங்களில் அறியப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(மேலான இடத்திற்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் நயாய நம:–நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்-நய: பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-நேதா தலைவராய் இருந்து-மார்கோ வழியாகவும்-நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்-நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்-இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்-பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.-பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.
நய= அந்யாந் ஸர்வாந் ஸ்வயம் நயதீதி நய;. பிறருடைய கட்டளையைத்தான் எதிர்பார்த்து அப்படியே நடத்துகொள்வதாகக் கீழ்த்திருநாமம் காட்டிக்கொடுத்தது. பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் என்று ஓதப்படுகிற பகவானுக்கு அந்த நேயத்வம் [ஆஜ்ஞாப்யத்வம்] ஸ்வேச்சையினாலாயது; நிருபாதிகமாகவுள்ள தன்மையைச் சொல்லுமிடத்து ஸர்வநிர்வாஹகத்வமேயன்றோ அஸாதாரணமாகச் சொல்லுகிறது . இராமபிரான் தன்னைப்பற்றித் தன்வாக்காலே சொல்லிக்கொள்ளும்போது ஆத்மாநம் மாநுஷம் ம யேராமம் தசரதாத்ம ம் இத்யாதியாக எங்ஙனே சொல்லிக்கொண்டாலும், பிறர் சொல்லும்போது அவனுடைய பெருமையைப் பரக்கச் சொல்லியிருக்கவில்லையா? * சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: – ஜகத் ஸர்வம் சரீரம் தே.-இத்யாதி யாவன்றோ-பிரமன் சொல்லிவைத்தது. ஆகவே (நேய ) என்கிற கீழ்த்திருநாமத்திற்கு எதிர்த்தட்டான (நேதா) என்னுந் திருநாமத்தின் அர்த்தமே (நய ) என்பதிலுள்ளதென்று கொள்ளலாம். அன்றிக்கே, நயதீதி நய:-கொண்டு போகிறவன் என்றபடி.இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தான் ஒருவனாக எழுந்தருளவில்லையே; “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி* என்று ஸ்ரீகுலசேகரப் பெருமாளருளிச் செய்தபடியே சராசரங்களையுமன்றோ உடன் கொண்டு சென்றது (இதனைச் சிறிது விவரிப்போம்;) முனிவன் வேண்டத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னை* என்று குலசேகரர் பணித்தபடியே இளையபெருமாளை விட்டுப் பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் கிலேசமடைந்த இராமபிரான் ராஜ்யத்தைவிட்டு எழுந்தருளத்தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து ‘தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்று பிரார்த்திக்க. ஸ்ரீராமன் அவர்களது பத்திப்பெருங்காதலைக் கண்டு அப்படியே யாகட்டும்’ என்றருளிச்செய்து அனைவரையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பயணப்பட்ட வளவிலே. அந்நகரத்திலிருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து பெருமாளைப் பின் செல்ல,இங்ஙனம் பலரும் புடைசூழ பகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கெழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும் பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே மீட்சியில்லாததான ஸாந்தானிக மென்னும் உலகத்தையளித்தனரென்பது இதிஹாஸம். இங்ஙனே நயனம் பண்ணின படியைக் காட்டும் (நய 🙂 என்கிற திருநாமம். வராஹ சரமச்லோகத்தில் ”அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்று சொன்னவரேயன்றோ.
———————–
அநய –ப்ரதிகூலர் அணுக முடியாதவன்-ஸ ஏவ, அஸுஹ்ருத்₃பி₄ர்ந நயோ (அ)ஸ்யாஸீதி₃தி
அநய꞉ । யதா₂ ராவணேந ꞉விரோதிகளால் நடத்தப்பட முடியாதவர் –யுத்தத்தில் வெல்லப்பட முடியாதவர் என்பது -உலகிற்கு நன்மை செய்பவர் தம்மைத் தவிர வேறு எவரும் இல்லாதவர்-ஹிமவான் மந்தரோ மேரு த்ரை லோக்யம் வா சஹாமரை சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந சங்க்யே பரதானுஜ–யுத்த
இமயமலை மந்த்ர மலை மேரு மலை மூன்று உலகங்கள் போன்ற பலவற்றையும் தனது தோள்களால் தூக்கும் வலிமை பெற்ற ராவணனால் யுத்தத்தில் அடிபட்டுக் கிடந்த பரதனின் தம்பியான லஷ்மணனைத் தூக்க இயலவில்லை-யத்வா -அன்றிக்கே-அய ஸூபாவஹோ விதி -அய -ஸூபத்தைக் கொண்டு வரும் வஸ்து –அவனைத் தவிர வேறு யாராலும் ஸூபம் கொண்டு வர இயலாது -என்பதை –அநய -சொல்லும்-ஏதே வயம் சேர்வை சம்ருத்த காமா யேஷாமயம் நோ பவிதா ப்ரஸாஸ்தா –அயோத்யா அவன் நம்முடைய யஜமானனாகவும் ரக்ஷகனாகவும் உள்ளதால் நமது விருப்பங்கள் அனைத்தும் கைகூடும்படி உள்ளன –(தாம் யாவராலும் நடத்தப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –)(முக்கிய பிராணனை பூமிக்கு அனுப்பி வைப்பவர் -தாமே மிக உயர்ந்தவர் –தம்மை நடத்தும் மற்று ஒருவர் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அநயாய நம:—நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை-இதி அனய: எனவே பகவான் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.-‘ததேஜாதி தனைஜாதி’, அனேஜதேகம் மனஸோ ஜவீயோ (ஈசாவாஸ்ய உபநிஷத்)ஆரம் காமாயா ஹரயோவதன்விரே ஸ்திராய ஹிந்வன் ஹரயோ ஹரீ துரா (ரிக் வேதம் 10.96)-வசிஷ்ட முனிவர் உட்பட அனைவரும் அவரை ராஜ்யத்தை ஏற்கவும் ஆட்சி செய்யவும் அவரை வற்புறுத்த முயன்றனர், ஆனால் ராமர் தர்மத்தின் பாதையில் இருந்து விலகவில்லை, யாரும் அவரை வழிநடத்தாமல் அதை ஏற்றுக்கொண்டார்.-
அநய:=இதற்கு பாஷ்யத்தில் பட்டர் அருளிச்செய்திருக்கும் ரஸவத்தரமான பொருளை முன்னம் விவரிக்கிறேன். ” அய : சுபாவஹோ விதி:; ஸ: அஸ்மசத் அந்யோ
ஜகதாம் தாஸ்தி இதி அநய:” என்பது பகவத்குணதர்ப்பண ஸ்ரீஸூக்தி. அமரகோசத்தில் “அயர் சுபாவஹோ விதி:” என்னப்பட்டது. நன்மைபயக்கும் செயலுக்கு அயமென்று பெயர்; இராமனைக் காட்டிலும் நன்மை செய்வார் வேறுயாருமிலர்வன்பது தாற்பரியமாகத் தேறும். ஸ்தோத்ரரத்னத்தில் அநுத்தமம் பாத்ரமிதம்தயாயா : என்றவிடத்தில் ‘அநுத்தமம் என்பதற்குப்போல இங்கு ‘அநய?’ என்பதற்கும் பஞ்சமீ பஹுவ்ரீஹிஸமாஸம் பொருத்த முடையதேயாம். தீங்கிழைப்பவர்களுக்கும் நன்மை புரிவதையே தன்மையாகக் கொண்டவரன்றோ பெருமாள்.-*நஸ்மரத்யபகாராணம் சதம யாத்மவத்தயா, கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி என்றன்றோ அயோத்யாவாஸி ஜனங்கள் ராமகுணகீர்த்தநம் பண்ணிற்று.-மேலெடுத்த சுலோகத்தில் [கதஞ்சிதுபகாரேண] என்றதன் பொருளை ஆழ்ந்து அறியவேணும். பிறர் செய்வது உண்மையில் உபகாரமன்று; அவர்கள் செய்தது அபகாரமாகவேயிருந்தாலும் கதஞ்சித் உபகாரமாக ஆக்கிக்கொள்ளப் படுகின்றதென்கை.-இதனை ஸ்ரீவசனபூஷணத்தில் (4-1) “நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே. .தனக்கேற இடம் பெற்றவளவிலே என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள்விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாப்போலே சிலவற்றையேறிட்டு மடிமாங்காயிட்டு ..” இத்யாதி திவ்ய ஸூக்திகளாலறிக. இப்படியாக ஏறிட்டு அநுக்ரஹித்தது ராமாவதாரத்திலுண்டோவென்னில்; ஓரிடம் காட்டுவோம். ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் வாயஸரக்ஷணத்தை யருளிச்செய்யுமிடத்து “தாத் ருசோ வாயஸஸ்ய ப்ரணத இதிதயாலு: ‘ என்றருளிச்செய்தார். இங்கு “ப்ரணதஸ்யவாயஸஸ்ய தயாலு* என்னாதே[ப்ரணத இதி தயாலு ; என்றதன் உட் கருத்தையறிந்து ஸ்தோத்ர பாஷ்யத்தில் பணித்திருப்பது – தயார்த்ரபுத்த்யா ப்ரணதத்வேந பரிக் ருஹ்ய இத்யர்த்த: ‘ என்று. அதாவது, ப்ரணதியை யுத்தேசித்துக்காகம் வந்ததில்லை; எங்குந்திரிந்து செயல் மாண்டு புகலிடமற்று வந்துவிழுந்ததத்தனை. அந்த வீழ்ச்சி யையே ப்ர ணதியாகக்கொண்டு பெருமாள் காத்தருளினர் என்கை. விபீஷண அபயப்ரதாந ப்ரகணத்தில் “ந த்யஜேயம் கதஞ்ச “ என்றது இங்கு சிகரமாக நினைக்கத்தக்கது.
அதவா, அநய : என்பதற்கு ‘ந வித்யதே நய; யஸ்மிந்ஸ:’ என்று கொண்டு நயமில்லாதவர் என்கிற பொருளுங்கொள்ளலாம்.நயமாவது நீதி: இராமனை நீதி யற்றவரென்று சொல்லலாமோ கோபிகள் கண்ணனை நோக்கி “நீரிலே நின் றயர்க்கின்றேம் நீதியல்லாதன செய்தாய்” என்கிறார்கள். அப்படி இராகவனை நோக்கி யாரும் சொன்னதில்லையே; வாலி போல்வார் சொல்வது பரமார்த்தமாகக் கொள்ளத் தகுமோ? என்று சங்கை தோன்றும். அநியாயமான செய்கையைச் செய்பவரென்று பொருளன்று. நீதியாவது நியதி; இராமபிரானுடைய செயல் ஒரு நியதியிலே [வ்யவஸ்தையிலே] அடங்குமதன்று என்று தாற்பரியங் கொள்க. (இதன் விவரணம் கேண்மின்.) பரமபூஜ்யரான பரத்வாஜ மஹர்ஷியின் ஆச்ரமத்திலே அமுதுசெய்தாரென்று கேள்விப்படுமாபோல சபரி கையாலே அமுது செய்தருளினாரென்றுங் கேள்விப்படுகிறோம். விச்வாமித்ரமுனியை நாதராகக் கொண்டாரென்று கேள்விப்படுமாபோலே *ஸுக்ரீவம் நாதமிச்சதியென்றும்-ஸுக்ரீவம் சரணம் கத?* என்றும் கேள்விப்படுகிறோம். இப்படியாக ஒரு நியதி யில்லையாயிற்று ராமகாரியங்களில்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ‘ பகவதி பரத் வாஜே புக்திஸ் ததா சபரீகரே” இத்யாதி பணித்திருப்பதைக் கொண்டு ரஸிக ஹ்ருதயங்கமமாக நிர்வஹிக்கும்படி இது.
——————-
வீர –எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன்-சத்ருக்களால் கொண்டாடப்படும் வீரத்தைக் கொண்டவன்-வீர ஸூர பராக்கிரமம் -ஜெய ஜெய மஹா வீர-(தினகர –குல கமல திவாகரன் )–ரக்ஷஸாம் அதிப₄ய சலந ஹேதுத்வாத்₃வீர꞉ ।-அரக்கர்களை மிகவும் பயத்தினால் நடுங்கும்படி செய்பவர்
“அஜ க₃தி ஷேபணயோ ꞉”
* ஸ்பா₂யிதஞ்சிவஞ்சி, இத்யாதி₃நா ரக்
* அஜேர் வ்யக₄ஞபோ ꞉ இதி வீபா₄வ꞉। யதா₂–ப்ரஹ்ம தண்ட ப்ரகாசானாம் வித்யுத் சத்ருச வர்சஸாம் ஸ்மரன் ராகவ பாணானாம் திவ்யதே ராஷசேஸ்வர–யுத்த -60-3-
நான்முகனின் தண்டம் போன்றும் மின்னல் போன்றும் ஒளி உள்ளதுமான ராம பாணங்களை எண்ணிய மாத்திரத்திலேயே அசுரர்களின் அரசனான ராவணன் கலங்கினான்-மாதங்க இவ ஸிம்ஹேன கருடேநேவ பந்நக அபிபுத அபவத் ராஜா ராகவேணா மஹாத்மநா –யுத்த -60-2- ஸிம்ஹத்தைக் கண்ட யானை பயந்து ஓடுவது போன்றும் கருடனைக் கண்ட நாகம் பயந்து ஓடுவது போன்றும் மஹாத்மாவான இராமனைக் கண்ட இராவணன் அச்சம் கொண்டான்-வ்ருஷே வ்ருஷே ச பஸ்யாமி சீர க்ருஷ்ணாஜி தாம்பரம் க்ருஹீத தனுஷும் ராமம் பாஸ ஹஸ்தமிவ அந்தரங்கம் –ஆரண்ய -39-14--இராவணன் இடம் மாரீசன்-இங்கு காணப்படும் ஒவ்வொரு மரத்திலும் நான் மரவுரியும் கிருஷ்ணாஜினம் என்னும் மான் தோலும் அணிந்த இராமனைக் காண்கிறேன்
தனது கைகளில் வில்லுடன் கூடிய இராமனை நான் பாசக்கயிற்றுடன் நிற்கும் எமனாகவே காண்கிறேன் –அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச்சந்த -116-வேந்தர் பகை தடிந்த வீரன் -பெருமாள் திரு -10-3-பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை-வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்(மீண்டும் 664 வரும்)
‘விக்ரம சாலித்வாத் வீரஹ் – வீரம் மற்றும் வீரத்தால் வீரன்’ என்று விளக்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தனது கட்டளையை நிறைவேற்றத் தயாராக இருக்கும் தனது ஆயுதங்களை களைவதன் மூலம் பக்திமான்களுக்கு துன்பத்தைத் தருபவர்களை அழிக்கிறார். அவர் தனது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.வீர்ய என்பது எதிரிகளின் உள்ளத்தில் பயங்கரத்தை உண்டாக்கும் குணம்; சௌர்யா என்பது சூரா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது – எதிரிகளின் அணிகளுக்குள் ஒற்றைக் கையால் ஊடுருவி அழிவை ஏற்படுத்தும் திறன்; பராக்ராமன் என்பது எதிரிகளின் பக்கத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் திறன், அதே நேரத்தில் தன்னை சிறிது கூட காயப்படுத்தாது. –“யஸ்மாத் ஸ்வ மஹிம்னா ஸர்வான் லோகான் ஸர்வான் தேவான் ஸர்வான் ஆத்மநঃ ஸர்வாணி
பூதானி விரமதி விரமாயதி அஜஸ்த்ரம் ஸ்ரீஜதி விஸ்ரிஜதி வாஸயதி,
யதோ வீரகர்மண்ய ஸுদৃக்ஷோ த◌ேগাய யுக்தாயதே- நான் இது”.-அவரை எதிர்க்க முடியாது, வெல்ல முடியாது, அவருடைய திறமைகள் சுயமாகத் தெரியும் மற்றும் எப்போதும் அவரது எதிரிகளை தானாகவே அடக்குகிறது.
வீர = பகவானுடைய திருக்குணங்களில், வீர்யம், செளர்யம், பராக்ரமம் என மூன்று குணங்கள் சேர்த்து அநுஸந்திக்கப்படுவதுண்டு. இம்மூன்று சொற்களுக் கும் பொருளில் வாசியில்லைபோல் தோன்றினாலும் வாசியுண்டு.எதிரிகளின் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமை (1), அந்தச் சேனை யினுள்ளே ஒருவனாகவே புகுந்து எதிரிகளை அநாயாஸமாகக் கொன்று முடிக்கும் வல்லமை (2), அப்படிச் செய்யுமளவில் தனக்குச் சிறிதளவேனும் பங்கம் நேராத படி ஸகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சாரநிற்றல் (3), என்றிங்ஙனே மூன்று வகையான ஆற்றல்கள் பெரும் போர் வீரர்களுக்கு இருக்க வேண்டியவை யுண்டு. இம்மூன்றையுஞ் சொல்லும் சொற்களாக வீர்ய செளர்ய பராக்ரம சப்தங்களைக் கொள்ளலாம். இங்கு வீர: என்று வீர்யமொன்று மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும் மற்றை யிரண்டும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கன அல்லது உள்ள சொல்லிலேயே (அதாவது வீர: என்ற சொல்லிலேயே) அம்மூன்று பொருள்களையும் சேர அநுஸந்தானம் செய்யவுமாம். ஸ்ரீராமாயணத்திலும், மற்றும் இராமபிரானைப்பற்றிப் பேசும்பல நூல்களிலும் இராமனை வீரனென்றும் சூரனென்றும் ”பராக்ரமசாலியென்றும் பாராட்டிக்கூறுவது விசேஷமாகக் காணத்தக்கது. இராமனுக்கு மஹாவீரனென்றே ஒரு திருநாமமுண்டு. “ஐயஜய மஹாவீர!” என்றே ரகுவீரகத்யத்தின் தொடக்கம். வீரராகவனென்றே ஒரு திவ்யதேசத்தில் திருநாமம்பெற்று விளங்குகின்றமை ப்ரஸித்தம். பவபூதிமஹாகவி மஹாவீரசரிதமென்றே பெயரிட்டு நூலியற்றினான். ஆழ்வார்கள் இராமனது செயலைச் சொல்லி வீரனென்றே வாய் வெருவுவர்கள்; “இலங்கை மன்னனைந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க கூன்று சென்று கொன்று வென்றிகொண்ட வீரனே! ””மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை நீறு செய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனுர் என்றுமுள்ள (திருச்சந்த விருத்தம் பாசுரங்கள் காண்க. இவை யெல்லாவற்றிலுங்காட்டிலும் எதிரி கையாலே விடுதீட்டென்னுங் கணக்கிலே இராவணனே வியந்துபோற்றும் வீரியம் இராமனுக்குள்ளது. (வால்மீகி. யுத்த. 106-6] “சத்ரோ:ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்நீயஸ்ய விக்ரமை:” என்பது இராவணனுடைய மொழி. இராமனை ப்ரக்க்யாத வீர்யனென்று இராவணன் தன்வாயினால் போர்க்களத்திற் சொல்லுவதானது அந்த வீர்யத்தைத் தான் மிக நன்றாக வநுபவித்தத்னாலன்றோ! ‘விக்ரமை:ரஞ்ஜநீயஸ்ய” என்றும் அடுத்தபடியே சொல்லுகிறான். இங்ஙனே சொல்லும்படியாக இராமன் செய்தவீரச்செயல்கள் பலபல விருப்பினும் ஒன்றெடுத்துக் காட்டுவோ மிங்கு. யுத்த காண்டத்தில் தொண்ணூற்று நான்காம் ஸர்க்கம் காண்க. அங்கு மூலபலம் திரண்டவன்று இராமனுடைய அதிமாநுஷப் போர்வல்லமையைப்பேச வான்மீகி முனிவரும் தடுமாறுகின்றார். “ச்சிந்நம் பித்தம் சரைர் தக்கம் ப்ரபக்நம் சஸ்த்ரபீடிதம்.பலம் ராமேண தத்ருசுர் ந ராமம் சீக்ரகாரிணம்” என்று, இராமனால் பலவாறு தகர்ப்புண்ட அரக்கரது சேனைகளைக் கண்டார்களொழிய பம்பரமாகச் சுழல்கின்ற இராமனை ஒருவரும் காணமாட்டிற்றிலர் என்கிறார். மேலே *தே து ராமஸஹஸ்ராணி ரணே பச்யந்தி ராக்ஷஸா * என்று ஆயிரக்கணக்காண ஸ்ரீராமமூர்த்திகளைக் கண்டார்களென்கிறார்.உடனே புந; பச்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே என்று, அந்தப் போர்க்களத்தில் இராமனொருவனையே கண்டார்களென்கிறார் . இராமனைக் காணவேயில்லை யென்பது, ஆயிரக்கணக்காண ராமர்களைக் கண்டார்களென்பது, ஒரு ராமனையே கண்டார்களென்பது – ஆகவிப்படி ஒன்றோடொன்று சேராத வண்ணம் பேசும்படியாக வன்றோ பெருமாள் மிக விசித்திரமான போர்த்தொழில் நிகழ்த்திற்று.-திருவாய்மொழியில் (8-6-3) ஒருவரிருவரோர் மூவரென நின்று, உருவு கரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் என்ற பசுரத்திற்குப் பூருவாசாரியர்கள் பொருள் நிர்வஹித் திருக்கிறவிதம் இதர பண்டிதர்களின் புத்திக்குச் சிறிதும் எட்டமாட்டாதது. ஒருவரிருவரோர் மூவரென நின்றதும் உருவு கரந்ததும் எப்போதென்று தெரிந்து கொள்ளமுடியாதபடி ஆழ்வாருடைய பாசுரம் தோன்றியுள்ளது. இதற்குக் கீழ்ப்பாட்டு செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக் கெடவாளிபொழிந்த வொருவனே என்று முடிந்திருக்கிறது. மேற்பாட்டின் முன்னடிகட்குக் கீழ்ப்பாட்டின் பின்னடிகளோடு அந்வயமென்று கண்டு உரை செய்தருளியுள்ளார்கள். இங்குப்பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்- ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து-உருக்கெடவாளி பொழிந்தவொருவன் என்று கீழோடே அந்விதமாகக்கடவது.மூலபலம் சாம்படி அருளுகிறவன்று முந்துற ஒருவனாய்த்தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த்தோற்றி, வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூபக்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளிபொழிந்த வொருவனென்று அந்வயம். வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்குப் பிடிபடாதொழிகை” என்று. இதனால் இராமனது வீரம் வாசாமகோசர மென்றதாயிற்று.
———————–
ஶக்தி மதாம் ஸ்ரேஷ்ட-பரசுராமரை -வென்றவன் –ஶக்தி மதாம் ஸுராதீ₃நாம் அதிஶயேந ப்ரஶஸ்ய இதி ஶக்தி மதாம் ஶரேரஷ்ட₂꞉ (சக்தியுடைய தேவர்கள் முதலியோர்க்கும் சிறந்தவர் )। யதா₂(ஆ)ஹ பரஶு பரி கர்மா ராம꞉—அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரேஸ்வரம் –பால -76-17-மது என்னும் அரக்கனை அழித்த தேவனாகவே உன்னைக் காண்கிறேன் -பரசுராமனின் புகழ்ச்சி-கதம் தேவ கண ஸ்ரேஷ்ட நாத்மநம் அவபுத்யஸே –யுத்த -120-6-நான்முகன் ராமன் இடம் –உன் பெருமையை நீயே ஏன் தெரிந்து கொள்ள வில்லை-தேவாச் சா தைத்யாச் ச நிசாச ரேந்த்ர கந்தர்வ வித்யாதர நாகயஸா ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்தாதும் ந சக்தா சமரேஷு சர்வே –ஸூந்தர-51-44--அனுமன் இராவணனிடம்-அரக்கர்களின் அரசனே தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் வித்யாதரர்கள் நாகர்கள் யக்ஷர்கள் என்று யாராக இருந்தாலும் மூன்று உலகங்களுக்கும் நாயகனான இராமனை எதிர்த்து நிற்க இயலாது-சர்வான் லோகான் ச ஸம்ஹ்ருத்ய ஸம்ஹ்ருதான் ச சராசரான் புனரேவ ததா ஸ்ரஷ்டும் சக்தோ ராமோ மஹா சரை–ஸூந்தர-51-40- இராமனால் தனது பாணங்கள் மூலமாக அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த இந்த உலகில் உள்ள அனைத்தையும் அழித்து படைக்கவும் இயலும் –மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-முப்பத்து மூவருக்கு முன் சென்று கப்பம் தீர்ப்பவன் -தேவர்களுக்கும் தேவன் -தேவாதி தேவன் -நாராயண ஸ்ரீ மான்–ஓம்ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாயநம:–விக்ரமஶாலித்வாத் வீரமும், பராக்ரமும் நிறைந்த வராதலால்-வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான-விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்-ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்-ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பலம் பலாவதாம் சாஹம் – பகவத் கீதையில் (அத்தியாயம் 7 வசனம் 11)-நான் வலிமை மிக்கவர்களின் வலிமை’.
சக்திமதாம் ச்ரேஷ்ட = அபரிமித சக்தியுக்தனென்கை. இராமன் மஹாசக்திமானாயிருக்கும் போது இராவணனை ஒரு நொடிப்பொழுதில் கொன்றிருக்கலாமே அங்ஙனங்கொல்லாது வெகு ப்ரயாஸங்கள் பட்டதாகத் தெரிகிறதே. அஃது என்?என்று சிலர் கேட்கக்கூடும்.கேண்மின்; ” பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானை”<என்று ஆண்டாளும் “சதுரமாமதிள் சூழிலங்கைக் கிறைவன் தலைபத் துதிரவேரட்டி ஓர்வெங்கணையுத்தவன்” என்று திருப்பாணாழ்வாரு மருளிச்செய்தபடியே ராவண ஸம்ஹாரத்தைப் பெருமாள் அவலீலையாகவேதான் செய்தார். அதில் ஐயமொன்று மில்லை. எப்படியாவது ராவணன் உடன்பட்டுவழிபட்டு உஜ்ஜீவிக்கவும் ஜீவிக்கவும் ப்ராப்தமாமோ? ” என்கிற நசை பெருமாளுக்கு இருந்தமையினாலேயே அவனை ஸம்ஹரிப்பதில் காலதாமதம் செய்யப்பட்டதென்கிற தத்துவம் உணரத்தக்கது.இராவணனைக் காட்டிலும் பன்மடங்கு வலிமைமிக்கவனென்று ப்ரஸித்தி பெற்றிருந்த வாலியை அநாயாஸமாக முடித்தவர் பெருமாள். (ஸுந்தரகாண்டம் ஸர்.51 ச்லோ.11 திருவடி இராவணனுக்கு ஹிதோபதேசம் செய்கையில் *த்வயாவிஜ்ஞாதபூர்வச் ச வாலீ வாதரபுங்கவ:, ராமேண ஹதஸ் ஸங்க்யே சரேணைகேந வாநர: * என்று,அப்பா ராவணா! வாலியென்கிற வாநரேச்வரரை ஏற்கெனவே நீ அறிவாயன்றோ;அவர் இராமனால் ஒரே அம்பினால் முடிக்கப்பட்டார்காண்’ என்கிறார். அன்றியும் இராவணனைப் பலவாறு பங்கப்படுத்தியவன் கார்த்தவீரியார்ஜுனன்; அன்னவனைப் பரசுராமன் தனது கோடாலிப்படையினால் ஆயிரங்கைகளையும் வெட்டிக் கொன்றவன். அப்பரசுராமன் இராமபிரானிடம் பட்டபாடு தெரிந்ததே.இத்தகைய ஒப்புயர்வற்றை ஆற்றல்பெற்ற இராகவன் இராவணனைச் சங்கரிக்கச் சிரமப்படவேணுமோ? சிரமப்பட்டதாகக் கதையிலே கண்டால் ஸத்யஸங்கல்பனும் மஹாவீரனுமான இராமன் எதற்காக இப்படிச் சிரமப்பட்டாரென்று ஆராய ேண்டுமன்றோ சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரனிடஞ்சென்று செய்தியறிவித்துப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தையுண்டாக்க. அவன் பதினாலாயிரம் ஸேனாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமனோடு போர்புரியவனுப்ப, இராகவன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட, பிறகு கரந்தானே நேரில் வந்து எதிர்க்க-இராமன் “ அஸஹாயசூர! என்று ரகுவீரகத்யத்தில் விளிக்கும்படியாக லக்ஷ்மணனையும் துணைகொள்ளாமல் ஏகாகியாய் அவனது தலையை யறுத்திட்டதும் ப்ரஸித்தம். ‘சதுர்தச ஸஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமகர்மணம், ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி!” என்று வயிறு பிடித்த மஹரிஷிகளும் வியக்கும்படி அவலீலையாகவன்றோ நீறு செய்தது. அத்தகைய பேராற்றல்பெற்ற பெருவீரனுக்கு இராவணன் ஒரு பதார்த்தமோ? ஒரேயடியில் அவனைத் தொலைக்கமாட்டாமையில்லை; எவ்வகையினா லாவது அவன் அபிமுகனாக வருகிறானோவென்று பார்த்திருந்தாரத்தனை.
———————
தர்ம –தர்மமே வடிவு எடுத்தவன்–தர்ம ஸம் ஸ்தாபநார்த்தம் -விசேஷ தர்மமான தன்னை நிலை நாட்டவே அவதாரம் -ஸாஷாத் தர்மம் இவனே-அப்₄யுத₃ய நி꞉ஶ்ரேய ஸாப்₄யாம் ஸர்வஸ்ய ஸாக்ஷாத்₃ த₄ரணாத் த₄ர்ம꞉ ।செல்வத்தையும் மோஷத்தையும் கொடுத்து ஜீவர்களைத் தாமே நேரில் தாங்குபவர்-உணாதி பாதம் –அர்ஸ்தி ஸ்து ஸூஹுஸ் ருத்ருஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ ப்யோ மந் –அர்த்தி -ஸ்து -ஸூ -ஹு ஸ்ரு த்ரு ஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ போன்ற தாதுக்களைத் தொடர்ந்து-மந் -என்னும் ப்ரத்யயம் உண்டாகும் என்னும் ஸூத்ரத்துக்கு ஏற்ப த்ரு என்பதன் பின்னே மந் இணைந்து தர்ம என்று ஆனது-இது போன்றே ஸோம –507 திரு நாமங்களை உண்டான-தமேவ ப்ரஹ்ம ப்ரஹ்ம விதாம் வர –லோகாநாம் த்வாம் பரோ தர்ம —நான்முகன் இவனது கீர்த்தி -ப்ரஹ்ம வித்துக்களின் தலைவனே நீயே உயர்ந்த தர்மம் ஆகிறாய் என்றான்-தர்மாத்மா ஸத்ய சந்தச்ச ராமோ தாசாரதிர் யதி பவ்ருஷே ச அப்ரதி த்வந்த்வ சரைநம் ஜஹி ராவணிம்–யுத்த -120-14-
லஷ்மணன் -ஏ பாணமே -தசரதன் புத்திரனான இராமன் தர்மம் மிக்கவனாயும்
ஸத்யமே வடிவு எடுத்தவனாயும் ஈடில்லா பராக்ரமம் கொண்டவனாயும் இருப்பது உண்மை என்றால் நீ சென்று இராவணன் மகன் இந்திரஜித்தை அழிப்பாயாக –யே ச வேத வேதோ விப்ரா -யே ச அத்யாத்ம விதோ ஜனா -தே வதந்தி -மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்ம சனாதனம் –ஆரண்ய -88-25-வேதங்களை அறிந்த அந்தணர்கள் -ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் போன்ற பலரும் கிருஷ்ணனையே எப்போதும் நிலையான தர்மம் என்று கூறுகின்றனர்-புண்யா த்வாரவதீ தத்ர யத்ராஸ்தே மது ஸூதந –வன பர்வம் -88-24-
துவாரகை மிகவும் புண்ணியமானது ஏன் என்றால் அங்கு தான் மது என்ற அசுரனை கிருஷ்ணன் அழித்தான்-சாஷாத் தேவ புராண அசவ் ச ஹி தர்ம சனாதன –ஆரண்ய -88-24-
அவனே மிகவும் பழமையானவன் -அவனே தர்மமும் ஆவான்-சாஷாத் ராமாத் வி நிர்வ்ருத்த தர்மச்சாபி ஸ்ரியா ஸஹ –அயோத்யா -2-29-தர்மம் என்பது செல்வத்துடன் கூடியதாக்க இராமனையே அடைந்தது –கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
கண்ணன் தர்மம் அறியாக் குறும்பன் -நாச் 11-6-தார்மிகன் -செய்வது எல்லாம் தர்ம கார்யம்(எல்லாவற்றையும் தாங்குபவர் -எல்லாத் தர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(எல்லாவற்றையும் தாங்குபவர் -அடையப்படும் தர்மமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் தர்மாய நம:–ஸர்வ பூதானாம் அனைத்து உயிரினங்களையும்-தாரணாத் தாங்குவதால்-தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘அணுரேவ தர்ம:’இதி ஶ்ருதே -(அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.-தர்மைர் தர்மத்தாலே-ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-சஹஸ்ரநாமத்தின் பலஸ்ருதியில் நாம் ஆராயும் ‘ஆச்சாரப்ரபவோ தர்மா தர்மஸ்ய பிரபுர் அச்யுதஹ் – பண்பாட்டிலிருந்து தர்மம் பிறந்தது, அச்யுதா தர்மத்தின் இறைவன்-தாரயதி இதி தர்மா – தர்மத்தை ஆதரிக்கும், தாரயதே வா யேன ஜகத் இதி தர்மா – இந்த பிரபஞ்சம் யாரால் ஆதரிக்கப் படுகிறதோ அவர் தர்மா ஆவார்.“தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா, தர்ம ஏவ ஹதோ ஹந்தி” – தர்மம் அதைக் காப்பவர்களைக் காக்கிறது, அழிப்பவர்களை அழிக்கிறது
தர்ம = ஸ்ரீராமபிரானை ஸாக்ஷரத் தர்மமாகச் சொல்லியிருப்பது பலவிடங் களில். இராவணன் இலங்கையிலிருந்து பஞ்சவடிக்கு ஓடிவந்து ஸ்தாபஹாரத் திற்குமாரீசனைத் துணைவேண்டினபோது அவன் ராவணனுக்குப் பலவாறு ஹிதோப் தேசங்கள் செய்கிறான். அதனிடையில் (ஆரண்.37-13) *ராமோ விக்ரஹவாத் தர்ம:* என்றான். ‘கைகால் முளைத்து நடையாடும் தருமம் இராமன்’ என்று ஆஸுர ப்ரக்ருதியான மாரீசன் சொல்லுகிறான். ராவணவதானந்தரம் இலங்கையிலே வந்து துதிக்கின்ற தேவவர்க்கத்தில் பிரமன் *பவாந் நாராயணே தேவ: *என்றபின் *லோகா நாம் த்வம் பரோ தர்ம: * என்றான். கீதையில் “தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்ப வாமியுகேயுகே’ என்று தர்மஸ்தாபனத்திற்காகத் தான் அவதரிப்பதாகச் சொன்ன பரமபுருஷன் *ஸர்வதர்மாந்பரித்யஜ்ய* என்று ஸகல தருமங்களையும் விடும்படி சொன்னது கூடாது; விட்டுவிடு என்றதோடு நிற்காமல் “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று தன்னைப் பற்றச் சொல்லுகையாலே ஸாக்ஷாத் தர்மம் தானே யென்கிற தத்துவம் வெளியிடப்பட்டதாகிறதன்றோ. நாம் சிரமப்பட்டு ஸாத்திக்க வேண்டிய தர்மம் ஸாத்ய தர்மமெனப்படுகிறது. அங்ஙனன்றிக்கே எப்போதும் ஸித்தமாயிருக்கிற தர்மம் எம்பெருமான். ஸாத்யதர்மம் அபாய பஹுளமென்றும், ஸித்ததர்மம் நிரபாயமென்றும் அறியத்தக்கது. தசரதசக்ரவர்த்தி ஸ்ரீ ராம பிரானைப் பிள்ளையாகப் பெறப்பெற்றபாக்யசாலியாயிருந்தும் ஒரு தெளர்ப்பாக்ய முடையனாயினன். ஆஸர ப்ரக்ருதியான மாரீசனுக்குத் தெரிந்த தத்துவம் அந்தோ! அவனுக்குத் தெரியாமன்றோ போயிற்று. *ராமோ விக்ரஹவாந் தர்ம.* என்று அவன் சொன்னபடி வடிவெடுத்த ஸித்த தர்மமான இராமனோடு கூடினன்றோ வாழ்வதை விட்டு ஆபாஸ தர்மமான ஸத்ய வசனத்தைப் பற்றி நின்று இழந்தா அம்மன்னவன். முமு ப்படியில் ஸர்வதர்மாந் பரித்யஜ்ய * என்றவிடத் தில் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்குறுப்பு” என்றவிடத்து மணவாளமாமுனி களின் ஸ்ரீஸூக்திரத்னங்களை அநுபவிப்பது. க்ருஷ்ணாவதாரத்தில் ததி பாண்ட னுடைய கதையை அறியாதாரில்லை: தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி சொல்லி வந்த கண்ணனை மறைத்திட்டுவைத்து ‘உன்மகன் இங்கில்லை’ என்று பொய் ஸபரிகரமாக மோக்ஷம் பெற்றுப் போனான்; தசரதன் ஸத்யவாதியென்று
ஸாக்ஷாத் பேர்படைத்து நரக பாயாயமான ஸ்வர்க்கத்தையே பெற்று நின்றான். ராமனே தர்மமென்று அறியப் பெறாத்தனாலான தன்றோவிது.-பெருமாள் பிராட்டியோடு கூடியிருந்தகாலத்தில் செய்தவுபந்யாஸங்களில் சிறந்தவுபந்யாஸமாக வொன்றைத் திருவடியிடம் சொல்லுகிறாள் பிராட்டி-(ஸ ந்தர 38-41.) *ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம த்வத்த ஏவ மயர ச்ருத * என்று.ஆந்ரு சமஸ்யமாவது இரக்கம்; அதுதான் பரமதர்மமென்று பெருமாள் உபந்யளிப்பது வழக்கமாம். ‘கருணையே வடிவெடுத்தவன் காகுத்தன்‘ என்று ப்ரஸித்தம். தசாவதார ஸ்தோத்ரத்தில் இச்சாமீந விஹாரகச்சபேத்யாதி ச்லோகத்தில் ஒவ்வோரவதாரத்தையும் ஒவ்வொரு விசேஷணமிட்டுச் சொல்லிவருகையில் இராமனைக் கருணாகாகுத்ஸ்த! என்று கூறியிருப்பது குறிக்கொள்ளத்தக்கது. வாலிவதமான பிறகு *ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ மு ர்த்தம் விமநா பபூவ* என்னும்படி நின்ற பெருமாளைக் கருணாகாகுத்தனென்றுதானே சொல்லவேண்டும்,
—————–
தர்ம விதுத்தம –தர்மம் அறிந்தவரில் முதல்வன் –த₄ர்ம வித் ஸூ உ த்தமோ
த₄ர்ம விது₃த்தம꞉,–த₄ர்மஜ்ஞாநே வஸிஷ்ட₂ வாமதே₃வ மார்கண்டே ₃- யாதீ₃நாம் ஶிஷ்யோ (அ)ப் யுப ஜீவ்ய꞉ ।தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் வசிஷ்டர் வாம தேவர் மார்க்கண்டேயர் முதலியவர்களின் சிஷ்யராக இருந்தும் அவர்களுக்கும் தர்மம் தெளிவிப்பவர் –யதா ஸர்வதா அபிகத சத்தி சமுத்திர இவ ஸிந்துபி–பால -1-56-கடல் -நதிகளால் சூழப்பட்டும் அண்டப்பட்டும் உள்ளது போலே பெரியோர்களால் சூழப்பட்ட ராமன்-ராம சாஹரம்-தர்மஞ்ஞ ஸத்ய ஸந்தம்ச –பால -1-12--தர்மத்தை அறிந்தவன் -ஸத்யம் என்னும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவன்-வேத வித்பி ஸூ பூஜித –ஸூந்தர-35-14-வேதங்களை நன்கு அறிந்தவர்களால் எப்போதும் பூஜிக்கப் படுபவன்-யதாவத் ச அங்க வேத வித் –அயோத்யா –1-20-வேதங்களை அதன் ஆறு அங்கங்களுடன் அறிந்தவன்-த்வம் அப்ரமேயச் ச துராசதச் ச ஜிதேந்த்ரியச் ச உத்தம தார்மிகச் ச அக்ஷய்ய கீர்த்தீச் ச விஸேணச் ச ஷிதி ஷமாவான் ஷத ஷோபமாஷா –கிஷ்கிந்தா –24-31-தாரை இராமனிடம்-நீ எல்லையற்ற மேன்மை யுடையவன்
எதிரிகளால் நெருங்க இயலாதவன்-இந்திரியங்களை வென்றவன்-சிறந்த தர்மம் கொண்ட வீரன்-குறையாத புகழ் யுடையவன்-திறமை யுள்ளவன்-பூமி போன்று பொறுமை கொண்டவன்-இரத்தம் போன்று சிவந்த திருக் கண்கள் கொண்டவன் –ஓம்த ர்ம விதுத்தமாய நம:–ஶ்ருதய: ‘ஶ்ருதிகளான’ வேதங்களும்-ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்-யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ-ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே-ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள் உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் அவரது கட்டளையாக இருப்பதால் தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –)(தர்மம் அறிந்தவர்களில் மேலானவர் -தர்மமான தன்னை அறிந்தவர்களை உயர்ந்தவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-) ஸ்ருதிஸ்-ஸ்மிருதி மமைவாக்னியே (76.31).‘சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
16. தர்மவிதுத்தம்:. தர்மஜ்ஞர்களில் தலைவன் இராமபிரான் என்றவாறு. தர்
மத்தை நன்கறிந்தவனென்கை. ஆண்டாள் கண்ணபிரானுக்குத் *தருமமறியாக்
குறும்பனென்று பிருதுசாத்தினாள். அதற்குநேர்மாறாக இராமபிரான் தர்மஜ்ஞர்களில் தலைவனாயிருப்பன். பிராட்டி இராவணனுக்கு ஹிதமுபதேசித்தருளுங்காலத்தில்* விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ:* என்று பெருமாளை தர்மஜ்ஞரென்று கூறியிருப்பது ப்ரஸித்தம். அவள் திருவுள்ளம்பற்றின தருமம் இன்னதென்பதை அவள்தானேஅடுத்தபடியாகக் கூறுகின்றாள் *சரணாகத வத்ஸல:* என்பதனால், சரணாகதர்களிடத்திலே
அன்பு பூண்டிருப்பதுதான் பெருமாள் கடைப்பிடித்த தருமமென்றும் அதை அவர்
நன்கறிந்தவரென்றும் சொல்லிற்றாயிற்று. நன்கறிந்தவரென்றால் அறிந்திருப்பதுமட்டும் பொருளன்று. அறிவுக்குப் பயன் அனுட்டானமாதலால் அந்த தருமத்தைநன்கு அனுட்டிப்பவர் என்கிறவரையில் பொருளாகத் தேறும். ஸ்ரீராமாயணத்தில்சரணாகதி செய்தவர்கள் யார் யார்? அவரவர்களிடத்திலே பெருமாள் காட்டினவாத்ஸல்யம் எத்தகைத்து? என்று விமர்சிக்கவேண்டும். இதற்குமுன் சரணாகதியாவது என்? என்கிற விமர்சம் மிக முக்கியமானது. ஸாரமாகத் தெரிவிப்போமிங்கு.-சரணாகதியென்றாலும் ப்ரபத்தியென்றாலும் ஒன்றே.நூற்கொள்கையை ஆய்ந்து ஆழ்ந்துபார்க்குமளவில் ” பகவத் ப்ரவருத்திவிரோதி ஸ்வப்ரவருத்திநிவ்ருத்திதான் ரபத்தியாகத் தேறுகிறது” என்கிற பூர்வாசார்ய ஸித்தாந்தமே தஞ்சமாகும். கஜேந்த்ராழ்வான் ப்ரபந்தன், த்ரெளபதி ப்ரபந்மை என்கிறோம். இவர்கள் பக்கலிலே மேலே சொன்ன லணந்தான் ஸமந்விதமாகும். ‘கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே” என்னும்படியாக கஜேந்திராழ்வான் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்வதாக ஸ்வப்ரவ்ருத்திபரனாயிருக்கு மளவும் அவன் மீது பகவானுடைய கருணை ப்ரஸரிக்கவில்லை. அந்த ப்ரவருத்தி ஓய்ந்தவாறே அரை குலையத்தலைகுலைய ஓடிவரும்படியான பதற்றம் எம்பெருமானுக்கு உண்டாயிற்று த்ரெள
பதியினிடத்திலும் இத்தன்மையே பார்க்கலாம்.” இரு கையும் விட்டேனோ த்ரெளபதியைப் போல” என்னும்படியான நிலைமை அவளுக்கு உண்டான பின்புதான்அவள் ரக்ஷை பெற்றாள். தன்மானத்தைத் தானே காத்துக்கொள்வதாக முயன்றுதன் சேலையைத் தான் இறுகப்பிடித்துக் கொண்டிருந்த நிலைமையுண்டே அதுதான்பகவத் ப்ரவருத்தி விரோதியான ஸ்வப்ரவருத்தியாயிருந்தது. அது கழிந்தவுடனேயன்றோபுடவை சுரக்கும்படியான பகவத் க்ருபை தோன்றிற்று. இந்த மருமத்தைஸ்ரீராமாயணத்திலே காட்டுகிறேன் காண்மின்; காகம் சரணாகதி செய்ததாகச்சொல்லப்படுகிறது. அந்த சரணாகதியின் தன்மையை விமர்சித்துப் பார்த்தால்,மேலே விவரித்த ரீதிதான் தேறும். *ஸ தம் நிபதிதம் பூமெள * என்றபடி எங்கும்தரிப்பற்று வந்து நிலத்திலேவிழுந்தமை யுண்டே,அதுவே யன்றோ அவனுடைய சரணாகதியாக ஆசாரியர்களால் நிஷ்கர்ஷிக்கப்பட்டது. அவனுக்கும் ரக்ஷணம் நேர்ந்தது.காகத்தினுடையதான இந்நிலை ராவணனுக்குமுண்டு; பிரபலமான யுத்தம் நடைபெறுகிற காலத்திலே *யோ வஜ்ரபாதாசநி. சசால் சாபஞ்சமுமோச வீர:* என்னும்படியான நிலைமை ராவணனுக்கு உண்டாயிற்று. அப்போது பெருமாள்• கச்சாநுஜாதாமி-புறப்பட்டுப்போ, விடைதருகிறேன்” என்று சொல்லி விட்டருளின துண்டே, அது தத்கால ரக்ஷணத்தில் சேர்ந்ததேயாகும். ஆத்யந்திகரக்ஷணமே
பண்ணவேணுமென்கிற திருவுள்ளமும் பெருமாளுக்கு இருந்ததுண்டு; அவன் விதி
வசத்தாலே மீண்டும் யுத்தத்திலே மூண்டு பகவத் பரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்
ருத்தி நிஷ்டனாகித் தொலைந்து போனான். அவனுக்கும் ரஷணமே செய்தருளினார்
பெருமாள் என்பது ஸ்ரீ ராமாயணத்தில் அந்தரங்க பரமார்த்தம். அவனுக்கு சரம
ஸம்ஸ்காரம் பண்ணமாட்டேனென்று பிடிவாதமாயிருந்த விபீஷணாழ்வானை நிர்ப்
பந்தப் படுத்தி அது செய்யுமாறு கட்டளையிட்ட பெருமாள் ‘அவனுடைய தேஹத்திற்கு நன்மை செய்ய நினைத்த நமது நினைவு நிறைவேறாதொழிந்தாலும் அவனுடைய ஆத்மாவுக்காவது நன்மை செய்யப்பெற்றோமே!’ என்று மகிழ்ந்தபடியை
நினைப்பது.*மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம் ந: ப்ரயோஜநம், க்ரியதாமஸ்ய
ஸம்ஸ்கார: யதா ஹ்யேஷ ததா மம * என்கிற பெருமாளுடைய சுலோகத்திற்கு நம்பிள்ளையின் ரஸகனமான வியாக்கியானத்தை நமது அபூர்வ ராமாயணத்திலே
நாம் விசதீகரித்திருப்பது காண்க.
————————
வைகுண்ட –குடி -தடை -இத்தை போக்குபவன்-தடை போனால் தன்னிடம் சேர்வார்கள் -தானே நடக்கும்–ஸர்வேஷாம் ஸம்ஶ்லேஷயித்–வை குண்ட₂꞉ ।“குடி₂ க₃தி ப்ரதிகா₄தே ” । ஸ ச அத்ர ஸம்ஶ்லேஷ விகா₄த꞉ ।ஸ ச விக₃தோ யேஷாம் தே விகுண்டா₂:, தேஷாமேவ வைகுண்ட₂꞉ ।-தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் —மயா ஸம்ஸ்லேஷிதா பூமி அத்பி வ்யோம ச வாயுநா தேஜஸா சார்த்த வைகுண்டத்வம் ததோ மம –சாந்தி பர்வம் -343-50-பூமியானது நீருடனும் –ஆகாயம் காற்றினுடனும் –வாயு தேஜஸ்ஸுடனும் என்னால் கலக்கப் பட்டன
இதனால் வைகுண்டன் என்னும் பெயர் வந்தது-(பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் ‘வைகுண்டத்வம்’ இருக்கிறது.-ராமமேவ அநு பஸ்யந்தீ நாப்ய ஹிம்ஸன் பரஸ்பரம் ததஸ் நிதவ் பரஸ்பர நிர் வ்யபேஷா ஹி தத்ரத்யா யதா ஆஹு பவ்ர்ய பதீன் –அயோத்யா -48-5- இராமன் அயோத்தியில் இருந்த போது ஜனங்கள் ஒருவருக்கு ஒருவன் அன்யோன்யமாக இருந்தனர்-அவன் அயோத்தியை விட்டு அகன்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் விரும்பாதவர் ஆனார்கள்-ராகவம் வா அநு கச்சத்வம் அஸ்ருதிம் வா அபி கச்சதஇராமன் கானகம் நோக்கி புறப்பட்ட வுடன் அயோத்யையில் இருந்த பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் நீங்களும் இராமனைப் பின் தொடர்ந்து கானகம் செல்லுங்கோள்
அல்லது கைகேயியின் பெயர் கேட்க்காத இடம் செல்லுங்கோள் என்றனர்-வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்-இராமன் சென்ற பின் யானைப் பாகன்கள் அளித்த உணவை யானைகள் உண்ண வில்லை-பசுக்கள் தங்கள் கன்றுகளுக்கு பால் அளிக்க வில்லை-நஷ்டம் த்ருஷ்வான் நாப்ய நந்தத் விபுலம் வா தநா கமம்
புத்ரம் பிரதமஜம் லப்தவா ஜநநீ நாப்ய நந்ததா-அவர்கள் தங்கள் செல்வங்களை இழந்த போது வருந்த வில்லை-தனக்குப் பிறந்த முதல் குழந்தையைக் கூடப் பார்த்தும் எந்தத் தாயும் மகிழ வில்லை-ஸ்தந் யார்த்திந ஸூதா ஸ்த்ரீனாம் பர்த்தாரோ ப்ராதரஸ் ததா சர்வம் சர்வே பரித்யஜ்ய ராமமேவ அந்வ யுஸ் ததா-குழந்தைகள் தாய் விஷயத்திலும் -கணவன்மார்கள் மனைவி விஷயத்திலும் சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் விஷயத்திலும் அன்பு இல்லாதவர்கள் ஆயினர்-அனைத்தையும் துறந்தவர்களாக இராமனையே எண்ணியபடியே வருந்தியபடியே இருந்தனர் –தேவ தேவனை தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனை -3-6-2-வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமை செய்குந்தா -2-6-1—ஓம் வைகுண்டாய நம:—குண்டா கதே: ‘குண்டா’ என்றால் போக்கு-ப்ரதிஹதி: (அவற்றை) தடை செய்வது விகுண்டா ‘விகுண்டா’ எனப்படும்-விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால்-வைகுண்ட: பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவான பொழுது (அதன் தொடக்கத்தில்)விஶ்லிஶ்டானி -ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த-பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை-பரஸ்பரம் ஒன்றோடொன்று-ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து-தேஶாம் கதிம் அவற்றின் போக்கை-ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் ‘வைகுண்ட:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-விகதா குந்தா தஸ்யா கர்த்தா என்று விளக்குகிறார் – தடையின்றி விடப்பட்டால் தங்கள் சொந்த வழியில் செல்ல முனைபவர்களை ஒழுங்குபடுத்துபவர்- ஐந்தாவது மன்வந்திரத்தில் சுப்ரனுக்கும் விகுந்தனுக்கும் பிறந்ததால் பகவான் வைகுண்டன் என்று அழைக்கப்படுகிறார். பின்னர் அவர் லக்ஷ்மியை மணந்து, அவளது இன்பத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்கு இணங்கினார், மேலும் இந்த இடம் வைகுண்டம் என்று அழைக்கப்பட்டது. அவரே இந்த வைகுண்டம். இந்தக் கருத்தை விஷ்ணு புராணம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆதரிக்கிறது.
———–
407-புருஷ –தூய்மை அளிப்பவன்-ச யத் பூர்வ அஸ்மாத் சர்வ ஸ்மாத் பாப்மன ஒஷஸ் தஸ்மாத் புருஷ , இதி பரம பாவநத்வாத்-புருஷ꞉ — அனைத்து விதமான பாபங்களில் இருந்து விடுவிப்பவன் என்பதால் புருஷன் எனப்படுகிறான்-பரம பாவநன் என்பதாலும் புருஷன் எனப்படுகிறான்-முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –அகஸ்தியர் பாவன சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன–தவாஹம் சஷுஷா ஸுவ்மய பூதா ஸுவ்மயேந மாநந –சபரி வார்த்தை-உனது அழகான திருக் கண்களின் திருக் கடாக்ஷம் அடியாக நான் தூய்மை பெற்றேன் –ச ஹி ராம ஸர்வதா புருஷ இஷ்யதி-இராமனே அனைத்து விதத்தாலும் புருஷன் எனப்படுகிறான்-ராகவம் சோபயந்யேத ஷட் குணா புருஷோத்தமம்-அயோத்யா-புருஷர்களின் உயர்ந்தவனாகிய இராமனை கருணை இரக்கம் ஸாஸ்த்ரம் ஒழுக்கம் தமம் சமம் போன்ற ஆறு குணங்களும் அலங்கரிக்கின்றன-சார்ங்க தந்வா ஹ்ருஷீகேச புருஷ புருஷோத்தம–யுத்த
சார்ங்கம் என்னும் வில்லைக் கொண்டவன்-இந்திரியங்களை நியமிப்பவன்-புருஷன்
புருஷோத்தமன் –அமலன் விமலன் நிமலன் நின்மலன்-
ஓம் புருஶாய நம:–ஸர்வ ஸ்மாத் புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால்-ஸர்வ பாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும்-புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ யத்பூர்வோஸ்மாத் ஸர்வ ஸ்மாத் ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்mபுருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)-அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் ‘புருஶ’ என்றறியப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.-புரி ‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள்-ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்)புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-புருஷ – தூய்மையாக்குபவன் –புரு சநோதி இதி புருஷ – தாராளமாகக் கொடுப்பவர்-புரா அஸ்தி இதி புருஷஹ் – எதற்கும் முன் இருந்தவர்.-பூரயதி இதித் புதுஷா – எங்கும் இருப்பதை நிறைவு செய்து நிறைவு செய்பவர்.-சர்வபாபஸ்ய சாதனாத் – அவர் எல்லா பாவங்களையும் எரிக்கிறார்.-பரிஷயனாத் புருஷ – அவர் எல்லா உயிர்களின் உடலிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.
——————
417-ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின் உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன )யதா₂—கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7
வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ –பெரிய திருமொழி -1-10-9- –(ருது என்னும் காலச் சொல்லால் கூறப்படுபவர் —ஸ்ரீ சங்கரர்) –(மோஷத்திற்கு சாதனமாக இருப்பவர் -தம் ஸ்வரூபத்தை தாமே தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)
ஓம்ருதவேநம:–காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற-லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘ருது’ என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.உஷா தாஹே புரூன் ஸர்வான் ஓஷதி தஹதி இதி வா புருஷஹ் – அனைவரையும் மிஞ்சுபவர்.-பிபார்தி ப்ரணாதி பாலயதி பூரயதி இதி வா புருஷஹ் – ப்ரி பாலன பூரணாயோவிலிருந்து பாதுகாத்து போஷிப்பவன்-பூரா + குஷன் (புரா அக்ரகமனேயிலிருந்து புருஷா) – புரா அக்ரகமனேபுரதி அக்ரகாம்ஐ பவதி இதி வா புருஷஹ் – தலைவர் அல்லது முன்னணியில் இருப்பவர்.-பூர்வா அஸ்மாத் விஷ்வாத் தத் ஆதிகாரணத்வாத் இதி புருஷ – உலகத்தின் மூல காரணமானவன்.-புருணி புவனானி சம்ஹார சமயே ஸ்யதி அந்தம் நயதிதி புருஷா – பிரளய காலத்தில் உலகங்களை அவற்றின் முடிவுக்கு அழைத்துச் செல்பவர்.-
———–
408-பிராண –ஸர்வ ப்ராணநாத்–ப்ராண꞉-பிராணனாய் இருப்பவன்-எல்லாவற்றையும் உய்விப்பவர் – –என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5-சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–(முன்பே 57- 321 பார்த்தோம்-)என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொண்ட நாதனை–ஓம் ப்ராணாய நம:–ப்ராணிதி உயிர் வாழ்கிறார்-ஒத்தாய் எப்-பொருளுக்கும் உயிரை (திருவாய் மொழி 2.3.2)- எல்லா உயிர்களிலும் உயிர் சக்தி;க்ஷேத்ரக்ஞ ரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்)-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்-ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில்-சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார்-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)-மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).ப்ரணீதி க்ஷேத்ரஜ்ஞ ரூபேண இதி ப்ராணஹ் – வெளி உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு அல்லது உணர்வின் வடிவில் அவர் உடலை உயிர்ப்பிக்கிறார்.-பிராணாத்மனா சேஷ்டயான் இதி வா பிராணஹ் – உயிர் கொடுக்கும் காற்று அல்லது ஆக்ஸிஜன் வடிவில் உடலுக்கு இயக்கம் கொடுக்கிறார். ‘யத்-வை ப்ரணீதி ச பிராணஹ் – அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார், எனவே அவர் பிராணன்’ (சாண்டோக்ய உபநிஷத் 1.3) என்று குறிப்பிடுகிறார்.
————–
409-பிராணத-உயிர் அளிப்பவன் -–வெகு சிலருக்கு பிராணன் -அனைவருக்கும் பிராணன் அளிப்பவர் –உயிர் அளிப்பான்–ப்ரஸித்₃தா₄ந பி ப்ராணான் த₃தா₃தீதி ப்ராணத₃꞉ । அதோ ஹி தத்₃விரஹே-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-அகால பலிநோ வ்ருஷா -அபி வ்ருஷா பரிம் லாநா ச புஷ்ப அங்குர கோரகா –அயோத்யா-இராமன் கானகம் சென்றதும் அயோத்யையில் மலர்களுடன் கூடி இருந்த அனைத்து மரங்களும் அவனது பிரிவு தாளாமல் வாடின-பரிசுஷ்க பலாசாநி வநாந் யுபவ நாநி ச –அயோத்யா-கானகத்தில் இருந்த அனைத்து மரங்களும் காய்ந்த இலைகளும் இலைகள் இல்லாமலேயும் இருந்தன –உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
(முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –)ஓம் ப்ராணதாய நம:—கண்டயதி அழிக்கிறார்-ப்ராணினாம் உயிரினங்களின்-ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை)ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில்-ப்ராணத: எனவே பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ராணான் ததாதி இதி ப்ராணதா – உயிர் கொடுப்பவர்-ப்ராணான் த்யாதி இதி ப்ராணஹ் – மரணத்தின் போது உயிர் வாயுக்களை அகற்றுபவர்-பிராணன் தீபயதி – உயிர் காற்றுகளை சுத்திகரித்து பிரகாசமாக்குபவர்.-கண்டயாதி பிராணினாம் ப்ராணான் ப்ரளயாதிஷு இதி – இறுதிப் பிரளயத்தின் போது உயிரிலிருந்து உயிர்வாழிகளைத் தடுத்து நிறுத்துகிறார்’(சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –)(துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)
——
ப்ரணம –வணக்கத்துக்கு உரியவன்–ப்ரணா மயதீதி ஶ்ரௌத்யா நிருக்த்யா ஸ்வ கு₃ணைஶ் சராசரநாமநாத் ப்ரணம꞉ । யதா ஹ்ருதயாநி அமமந்தே ஜனஸ்ய குணவத்தயா –அயோத்யா–தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-இராமன் கானகம் சென்ற போது அயோத்யையில் இருந்த மக்களின் ஹிருத்யங்கள் மத்தினால் கடையப்பட்டது போன்று குழம்பின-ஓம் ப்ரணவாய நம:–ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால்-ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ஓம்’ என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ’-‘ஓம்’ என்று கூறி வணங்கவேண்டும்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-ப்ரணம்யதே வணங்கப்படுவதால்-இதி வா ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே’ –இதி ஸனத்குமாரவசனான்-அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்.-இது ஸனத்குமாரரின் கூற்றாகும்-பிரணவ – பிறரை வணங்கச் செய்பவன்–‘ப்ரணௌதி இதி பிரணவஹ் – ஓம்’ (பிரணவ மந்திரம்) என்ற சப்தத்துடன் பிறரை வணங்கச் செய்கிறார். அவர் ‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதி – எனவே ஓம் மூலம் அவரை வணங்குகிறார்-‘ப்ரணம்யதே இதி வா பிரணவஹ் – அவர் வழிபடத் தகுந்தவர் ஆதலால் அவர் பிரணவா’. அவர் சனத்குமாரனிடமிருந்து ஒரு மேற்கோளைத் தருகிறார், இது ‘ப்ரணமந்தி இஹ வை வேதாஹ் தஸ்மாத் ப்ரணவ உச்யதே – வேதங்களில் அவருக்கு சாஷ்டாங்கங்கள் செய்யப்பட்டுள்ளன’.(தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் – மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)
இலை துணை மற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை
————–
ப்ருது-பிரசித்தன் பெரும் புகழான் –த்வம் அக்ஷய கீர்த்திஸ் ச—யஶஸாபி விஸ்தீர்ண இதி
ப்ருது₂꞉ |“ப்ரத₂ ப்ரக்₂யாநே ”,* ப்ரதி₂ம்ரதி₃ப்₄ரஸ்ஜாம் ஸம் ப்ரஸாரணம் ஸலோபஶ்ச, இதி கு ப்ரத்யய꞉ ।–மிகவும் விரிந்த புகழை யுடையவர் –ப்ருது ஸ்ரீ பார்த்திவாத்மஜ –பால-தசரதனின் புத்திரனான இராமன் பெரும் புகழ் கொண்டவன்-ராமோ நாம ஜனை ஸ்ருத–பால-அவன் ராமன் என்று அனைவராலும் கொண்டாடப் படுபவன்-தேஷாம் அதியசா லோகே ராம –பால
அவர்களில் ராமன் பெரும் புகழுடன் விளங்கினான்-யசஸச்ச ஏக பாஜநம் -கிஷ்கிந்தா-புகழின் ஒரே இருப்பிடமாக இராமன் இருந்தான் -தாரை வாக்கியம்-நிகரில் புகழாய்(திருவாய் மொழி 6.10.10). இஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோ நாம ஜனை ஸ்ருத யசஸ் வீ ஜ்ஞாநாசம் பந்ந –(பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –)(பிரசித்தமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் ப்ருதவே நம:–ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்-விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால்-ப்ருது: பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது-‘பிரத் விஸ்தரே – பரவுவதற்கு, விரிவடைய’. மஹாவிஷ்ணுவின் விஸ்வரூபம் இரண்டு அர்த்தங்களிலும் பிருதுவின் உதாரணம் – அவரது விராட் ஸ்வரூபத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் அல்லது அவரது விராட் ஸ்வரூபத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவியவர்.-கிருஷ்ணராக தனது ஒன்பதாவது அவதாரத்தில், அவர் பிருத்வியின் தந்தையான பிருது மகாராஜாவின் வடிவத்தை எடுக்கிறார். இது ஸ்ரீமத் பாகவதம் 1. 3. 14 – ரிஷிபிர்-யாச்சிதோ பீஜே நவமம் பார்திவம் வபுஹ் – முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் பிருதுவின் வடிவத்தில் தோன்றினார்.-
————–
ஹிரண்ய கர்ப்ப –(கீழ் -71)அவதார அஸம கால வர்திநாம் அபி த்₄யாநாதி₃ந உப காரித்வ மாஹ—ஹிரண்ய க₃ர்ப₄꞉,—ஹித ரமணீ- யஸ்ய த்₄யாத்ரு ஹ்ருத₃யஸ்ய ஶுபா₄ஶ்ரயத்வேந
நிகீ₃ர்யத்வாத்₃ ஹிரண்ய நிதி₄ -ஸாம்யாத்₃வா।—மந்த்ர வர்ணத்தில் –த்யேயஸ் ஸ விஸ்வாத்மா–அவனே அனைத்து ஆத்மாவாகவும் த்யானிக்கத் தக்கவன்-தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால் உபகாரம் செய்வது கூறப்படுகிறது-ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:—ஹிரண்ய கர்ப்ப ஸம்பூதிகாரணம் ஹிரண்ய கர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான-ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது-யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ-ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார்-எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அவர் அழகான உறைவிடத்தில் இருப்பவர். பரம பதம்;-நிறைவு அல்லது மகிழ்ச்சியின் பொருளாக இருக்கும் அனைத்தையும் தோற்றுவிப்பவர்.-ஹிரண்ய என்பது தங்கத்தைக் குறிக்கிறது . இங்குள்ள ஒப்புமை என்னவென்றால், தங்கம் தூய்மையானது, கவர்ச்சியானது, பளபளப்பானது மற்றும் மிகவும் விரும்பத்தக்கது என்பது போல, பரம பதம் என்பது சுத்த-சத்வமாகும், எனவே ஹிரண்யத்தைக் குறிக்கிறது. பெரிய அனைத்தையும் உருவாக்குபவர் ஹிரண்ய-கர்ப்பன்-பூமியின் இதயத்தில் தங்கம் மறைந்திருப்பது போல, அவர் தனது பக்தர்களின் இதயங்களில் மறைந்துள்ளார். இந்த அர்த்தத்திலும் அவர் ஹிரண்யகர்ப்பரே. சிருஷ்டியின் அடிப்படையில் வைகுண்டத்தில் தொடங்கி ஹிரண்ய கர்பத்தில் முடிவடையும் நாமங்களின் இணைக்கப்பட்ட கணக்கை ஸ்ரீ சாஸ்திரி தருகிறார். தடைகளை நீக்கும் வைகுண்டமாகிய பகவான், தனது மகத்தான ஆற்றலுடன், பரம புருஷராகிய தனது நிலையிலிருந்து இறங்கி, வைகுண்டமாக இருப்பது போல் உடலில் புருஷ வடிவில் இந்த பிரபஞ்சத்தில் வசிக்க முடிவு செய்தார். பின்னர், பிரகிருதியை இயக்கும் பிராண சக்தியை உயிரினங்களை ஆதரிக்கும் வடிவமாக மாற்றினார், இதனால் பிராணதாவாக மாறினார். இதன் விளைவாக இந்த பிரபஞ்சம் ஏற்பட்டது, ஆகாஷா பூதங்களில் முதன்மையானது (தஸ்மாத்-வா ஏதஸ்மாத் ஆத்மானா ஆகாஷஸ் ஸம்பூதஹ்).முதலில் பிரணவத்தின் பெரும் ஒலி அதாவது ‘ஓம்’ விளைந்தது. இந்த ஆகாஷாவிலிருந்து, பின்னர் காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி போன்ற பிற பூதங்களின் விளைவாக அவர் பிரபஞ்சமாக (ப்ரிதுஹ்) விரிவடைந்தார். இந்த பிருதுஹ் இந்த பிரபஞ்சத்தின் தந்தை. இந்த பிருதுவின் மகள்தான் பிருத்வி. மொத்த (ஸ்தூல) வடிவத்திலிருந்து தொடங்கி, நுட்பமான (சூக்ஷ்மா) வடிவத்தை வழங்குவதன் மூலம், அவர் தனது படைப்புகளுக்கு ஹிரண்ய-கர்ப்பமாக பிராணமயம், மனோமயம் மற்றும் விஞ்ஞானமய கோஷங்களை வழங்கினார். இவ்வாறு, நாம வைகுண்டத்தில் தொடங்கி, நாம ஹிரண்ய-கர்ப்பம் வரை, சிருஷ்டி ரகசியம் படிப்படியாக விரிவடைகிறது.
————-
சத்ருக்ந –சத்ருக்களை முடிப்பவன் –விவேக ஶரைர் ஹந்தி-புலன்களை அடக்குபவன்-விஷ யேஷு விஷேபணாத் தேஷாம் ராவணவச் ச₂த்ரு மிந்த்₃ரிய வர்க₃ம் விவேக ஶரைர் ஹந்தி
ஶமயதீதி ஶத்ருக்₄ந । *அமநுஷ்ய கர்த்ருகே ச இதி டக், * க₃மஹந , இத்யாதி₃நோபதா₄லோப꞉
* ஹோ ஹந்தே ꞉, இதி குத்வம் ।-விஷயங்களில் ஈடுபடுவதால் ராவணன் போலப் பகைகளாக உள்ள இந்த்ரியங்களை விவேகம் என்னும் அம்பினால் அழிப்பவர்-தச இந்த்ரியனானாம் கோரம் யோ மநோ ரஜனீசரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகிநாம் தத் த்யாநே –ஈஸ்வர சம்ஹிதை-யோகிகளின் மனம் மற்றும் பத்து இந்திரியங்களை இராமன் எவ்விதம் இராவணனின் பத்துத் தலைகளை அழித்தானோ அதே போன்று விவேகம் என்பதன் மூலம் அழிக்கிறான்–காமம் (காமம்), க்ரோதா (கோபம்), மோகம் (மாயை), லோபா (பேராசை), மதம் (பெருமை), மாத்சார்யம் (பொறாமை), மனஸ் (மனம்), புத்தி (புத்தி), சித்தம் (விருப்பம்) மற்றும் அஹம்காரம் (அஹங்காரம்) அழிக்கிறான்)-வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -பெருமாள் திரு -10-2-மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10–பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டான் -பெரிய திரு மொழி -2-3-1-தேவர்களின் எதிரிகளை அழிப்பவர்-விரோதிகளை அழிப்பவர்-
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-
ஓம் ஶத்ருக்னாய நம:—த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின்-ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை-ஹந்தீதி கொல்வதால்-ஶத்ருக்ன: பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானுக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை-
——–
வ்யாப்த –நிரம்பியவன் –முக்₃த₄ வ்ருத்₃த₄ ப₄த்ரு ப்₄ருத்ய ஶத்ர மித்ராதி₃ஷு வாத்ஸல்ய -அவிஸேஷாத் வ்யாப்த꞉ । (தியானிப்பவர்களிடம்-இளையவன் முதியவன் தலைவன் அடிமை பகைவன் நண்பன் முதலிய வேறுபாடு இல்லாமல் ஒரே விதமான அன்பால் நிரம்பி இருப்பவர் –)யதா-பவ்ரான் ஸ்வ ஜனவத் நித்யம் குசலம் பரப்ருச்சதி புத்ரேஷ் வக்நிஷு தாரேஷு ப்ரேஷ்ய சிஷ்ய கணேஷு ச நிகிலேந ஆநு பூர்வ்யாச் ச பிதா புத்ரா நிவ ஓவ்ரசாந் –அயோத்யா —அயோத்யா நகர மக்கள் தசரதனிடம் உமது புத்திரனான இராமன் தனது உறவினர்களை விசாரிப்பது போன்று எங்கள் அனைவரையும் அன்புடன் விசாரிக்கிறான்
ஒரு தந்தை தனது புத்ரனைக் கவனித்துக் கொள்வது போன்று இராமன் இங்கு வாழ்கின்ற மக்களைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் அக்னி வேள்விகளைப் பற்றியும்
மனைவிமார்கள் வேலையாட்கள் பற்றியும் மாணவர்கள் பற்றியும் விசாரிக்கிறான்-ரிபூணாம் அபி வத்ஸல–யுத்த-சத்ருக்களிடம் கூட இராமன் அன்பு பூண்டவன்–ஓம் வ்யாப்தாய நம:–காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம்-ஸர்வ கார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்)வ்யாபனாத் பரவி இருப்பதால்-வ்யாப்த: பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.(பிரம்மா முதலிய தேவர்களுக்கு வேண்டியவர் -கருடனுக்கு வேண்டியவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)அவர் பொருள்களின் உலகிலும், கருத்துகளின் உலகிலும் எங்கும் நிறைந்தவர். நாராயண சூக்தம் சொல்வது போல் ‘அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் உள்ளேயும் வெளியேயும் வியாபித் திருக்கிறான்’.‘நீச்ச பூஜ்ய அவிஷேஷேன வியாபநாத் வியாப்த உச்யதே –
———————————
வாயு-செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி-பரகத ஸ்வீ காரம்-ஸ்வயமேவ தத்ர தத்ர தான் க₃ச்ச₂தீதி–வாயு꞉ ।* க்ருவாபாஜிமி இத்யாதி₃நோண் ।தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –சோபியகச்சத் மஹா தேஜா சபரீம் சத்ரு ஸூதந -பால-எதிரிகளை அழிக்கும் ராமன் சபரியின் இடத்துக்குச் சென்று பெருமை அளித்தான்-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா–பால பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றான்-குஹம் ஆஸாத்ய தர்மாத்மா–பால-குகனை மேன்மைப் படுத்தினான் –ஏழை ஏதலன் -வியாப்யம் – இன்னருள் சுரந்து வாயு-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி சென்று நின்று ஆழி தொட்டான் –(நல்ல மனத்தை உண்டாக்குபவர் —ஸ்ரீ சங்கரர் )(உயிரைத் தாங்கக் காரணமாக இருப்பவர் -வலிமை கொண்டவராய் சஞ்சரிப்பவர் -எல்லாவற்றையும் அறிபவர் –பரவுபவர் -விரும்பப் படுபவர் -எல்லாரும் இயங்கக் காரணமானவர் -உயர்ந்தவர் -சம்சாரத்தில் கட்டுபவர் –சம்சாரத்தில் இருந்து விடுவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் வாயவே நம:–வாதி கந்தம் கரோதீதி ‘வாதி’ அதாவது மணத்தை உண்டாக்குகிறார்-வாயு: எனவே பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)– வதி ஸர்வத்ர கதோ பவதி இதி வாயு – விஷ்ணு – இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் பரவியிருக்கிறார். இந்த உலகில் காற்று நுழையாத அல்லது இல்லாத இடமே இல்லை. இந்த நாமம் பகவானின் எங்கும் நிறைந்திருப்பதைக் குறிக்கிறது.-அவர் வெறும் ‘காற்று’ மட்டுமல்ல, ‘காற்று’க்குப் பின்னால் உள்ள உயிர் கொடுக்கும் சக்தி-வாயுரஸ்மை புண்யம் கந்தம் ஆவாஹதி – பகவான் வாயுவிற்கு அந்தர்யாமி-வாயுர்வை கௌதம தத்-சூத்திரம், வாயுநா வை கௌதமசூத்ரேணாயாம் ச லோகா பராஷ்ச லோகஹ் ஸர்வாணி ச பூதானி சந்த்ரிப்தானி பவந்தி (பிருஹதாரண்யகா 3.5.2) – இதன் பொருள் ‘வாயு இந்த உலகத்தை ஒரு மிருகத்தைப் போல ஒன்றாக வைத்திருக்கும் நூல்; இது இல்லாமல் உலகம் உடைந்த சரம் கொண்ட சங்கிலியைப் போல உடைந்து விடும்; பகவானே இந்த சக்தி.-யோ வாயௌ திஷ்டன்-வாயோரந்தரோ யாம் வாயுர்-ந வேத யஸ்ய வாயுஹ் ஷரீரம் யோ வாயும் அந்தரோ யமாயதி, ஏஷ தே ஆத்மாந்தர்யாம்யாமிரிதா (பிருஹதாரண்யகா 3. 7. 7. ) – காற்றில் வசிக்காதவர், காற்றில் யார் வசிக்கிறார் என்பதை அறிவார். காற்று, மற்றும் காற்றை உள்ளே இருந்து கட்டுப்படுத்துபவர், உள் ஆட்சியாளர், உங்கள் சொந்த அழியாத சுயம்.-வாயுர்வாவ ஸம்வர்கோயதா வா அக்னிருத்வாயதி, வாயுமேவாப்யேதி, யதா சூர்யோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதா சந்திரோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதாபா உச்சுஷ்யந்தி வாயுமேவாபியந்தி. சௌக்ரீவாயந்தி3. ) – சூரியன், சந்திரன், நெருப்பு மற்றும் நீர் அனைத்தும் வாயுவில் இணையும் போது மறைந்துவிடும்;-கிம் தத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் |வாதாத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் (தைத்திரீய 1. 8. 3) – பகவான் விஷ்ணு தனது விபூதி மூலம் வாயுவாக பூமியைத் தாங்குகிறார்.-உணவு, தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் வாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழ முடியாது. அதுபோல பகவானின் அருள் இல்லாமல் நாம் வாழ முடியாது. நாம் தேடாமலேயே வாயு நம்மிடம் வருகிறது; பகவானும் அவ்வாறே – அவர் தனது பக்தர்களைத் தேடி அவர்களைப் பின்தொடர்கிறார். வாயு எந்த வகையிலும் மக்களை வேறு படுத்துவதில்லை; அதனால் பகவான் எல்லாருடனும் சமமான மனப்பான்மையுடன் பழகுகிறார்.-இந்த பிரபஞ்சத்தின் இருப்பு மற்றும் உயிர்வாழ்வில் அதன் முக்கிய பங்கை கொண்ட வாயு பகவானுக்கு வாயு என பெயரிட காரணமாகும்.
——————-
அதோஷஜ--குறையாதவன் –யாவரும் அனுபவித்து உபயோகித்தாலும் அமுதக் கடல் போலே ஒரு காலும் வற்றிக் கீழே போகாமல் இருப்பவர் ––ஏவம் அம்ருத உத₃தி₄வத் ஸர்வைஸ் ஸதோ₃ப யுஜ்யமாநோ (அ)பி-அதோ ந ஷீயதே ஜாது யஸ்மாத் தஸ்மாத் அதோஷஜ –உத்யோக பர்வம்–எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் ‘–அதோஷஜன் -எனப்படுகிறான்-அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரோத்தமம் –பால –பரசுராமன் கூற்று–மது என்னும் அரக்கனை அழித்தவனே -தேவர்களின் தலைவனே –
நீ குறையாதவன் என்று அறிவேன்-அக்ஷய்ய கீர்த்திச்ச–கிஷ்கிந்தா –24-31-தாரை வார்த்தை-குறையாத கீர்த்தி கொண்டவனே –யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப -4-3-10-(மேல் உலகத்திற்கும் பூமிக்கும் இடையில் விராட் ரூபத்துடன் வியாபிப்பவர் –ஒரு போதும் தாழ்ந்து அழியாதவர் ஆதலின் அதோஷஜர் எனபது உத்யோகபர்வம் —ஸ்ரீ சங்கரர் –)(இந்த்ரியங்களை அடக்கிய வஸூ தேவர் முதலியோர்க்கு மகனாக திரு வவதரித்தவர் –அஷகுமாரனை வென்ற ஹனுமானால் தெரியப் படுத்தப் பெற்றவர் –தம்மைத் தாழ விட்டு அனைவருக்கும் காட்டியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அதோக்ஷஜாய நம—த்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது-ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது-தயோர் யஸ்மாத் அஜாயத மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால்-வைராஜ ரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில்-அதோக்ஷஜ: பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.அதோப்ருதே உள் முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது-ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில்-அக்ஷகணே இந்திரியங்களை-ஜாயத இதி வா தோன்றுகிறார்-அதோக்ஷஜ: எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜ—அதோ பூதே ஹ்யக்ஷகனே ப்ரத்யக்-ரூப-ப்ரவாஹிதே | ஜாயதே தஸ்ய வை ஞானம் தேன அதோக்ஷஜ உச்யதே ||–அதஹ் – ஜ்ஞாத்ரித்வபாவாத் ஹீனம், அக்ஷஜம் ஞானம் யஸ்ய ச அதோக்ஷஜா – எங்கும் எல்லாவற்றிலும் இருந்தாலும், கண்கள் போன்ற இந்திரியங்களால் அடையாளம் காண முடியாதவர். அவர் எங்கும் நிறைந்தவர்.-பாகவதத்தில் (4.17.6-7) அதோக்ஷஜா பற்றிய குறிப்பு உள்ளது – ‘பக்தாய மே அனுரக்தாய தவ ச அதோக்ஷஜஸ்ய ச வக்தும் அர்ஹஸி யஹ் அதுஹ்யாத் வைன்ய-ரூபேண காம் இமாம்’ – நான் எப்போதும் உனது பக்தனாகவும், இறைவனின் பக்தனாகவும் இருக்கிறேன். அதோக்ஷஜா என்று அறியப்படுகிறது. எனவே, ப்ருது மன்னனின் கதைகள் அனைத்தையும் கூறுங்கள், அவர் வேன மன்னனின் மகனின் வடிவத்தில், பசு வடிவ பூமியில் பால் கறந்தார்.
யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும்
ஏத்திலும் தன்னை எட்ட எட்ட எங்கே எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகி-திட்டிப்ப
யானும் எம்பெருமானையே ஏத்தினேன் யானுய்வானே
—————–
ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின்
உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன)யதா₂கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9–ஓம் ருதவே நம:–காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ர்கதி-பிரபனயோஹ்’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘போவது’. ர்ச்சதி இதி ர்துஹ் – ரிதுஹ் என்ற சொல் பருவங்கள் ஒன்றையொன்று தள்ளி இடையூறு இல்லாமல் புதியதாக வருவதைக் குறிக்கிறது.-வசந்தா, கிரீஷ்மா, வர்ஷா, ஷரத், ஹேமந்தா மற்றும் சிசிர ரிதுஹ். காலச் சுழற்சியில் இந்த ரிட்டஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக தடையின்றி நகர்வதை உள்ளடக்கியது. இந்த நாமம் பகவான் காலத்தின் வடிவில் இருப்பதையும், பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதையும் குறிக்கிறது.-ரிதுர்-ரிதுனா நுத்யமானா வின்னாதா அபிதாவா – ஒரு பருவம் மற்றொன்றை தூண்டிவிட்டு அதன் வருகையை உரத்த குரலில் அறிவிக்கிறது. இந்த நாமம், பகவான் காலத்தின் வடிவத்தில் இருக்கிறார், இது பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதைக் குறிக்கிறது -பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.-
—————–
418-ஸூ தர்சந –பார்வைக்கு இனியவன் -நல்ல மார்க்கம் காட்டி அருளுபவர் -அழகைக் காட்டி –ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைப்பவன்—கு₃ண ப்ரபா₄வாநபி₄ஜ்ஞாநாமபி த₃ர்ஶந மாத்ர மேவாஸ்ய ஸோப₄நமிதி ஸுத₃ர்ஶந꞉ ।குணங்களின் பெருமை அறியாதவர்களும் பார்த்தவுடன் நன்மை பெறும்படி அழகிய திருமேனியுடையவர் –சோமவத் பிரிய தர்சன –பால -1-18--சந்திரன் போன்று அழகான ரூபம் கொண்டவன்-சதைக பிரிய தர்சன –பால -1-16-எப்பொழுதும் மகிழ்ச்சியை அளிக்கும் திரு மேனி கொண்டவன்-சந்திர காந்தா நனம் ராமம் பிரிய தர்சனம் –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி–காண் பெரும் கோலத்து என் காகுத்த நம்பி -6-6-9-கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணி -ராகவனே –பெருமாள் திரு -8-2-நம்பியை தென் குறுங்குடி நின்ற -அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை – -என் சொல்லி மறப்பேன் –காதுகனாய் இருந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு-தருணவ் ரூப சம்பன்னவ்-சூர்ப்பணகை
ஓம் ஸுதர்ஶனாய நம:—ஶோபனம் மங்களமான-நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்க வல்லது-தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம்-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.ஶுபே மங்களகரமான-தர்ஶனே ஈக்ஷணே ‘தர்ஶனம்’ அதாவது திருக்கண்களை உடையவராதலால்-பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவான் தாமரை இதழ்களை போன்ற அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.–சுதர்ஷனா – அவரது தரிசனம் மோட்சத்திற்கு வழிவகுக்கிறது–ஷோபனம் நிர்வாண பலம் தரிசனம் ஞானம் அஸ்ய இதி சுதர்ஷனஹ் – யாருடைய மங்களகரமான பார்வை அல்லது அறிவு முக்தி அல்லது மோட்சத்திற்கு வழிவகுக்கும்’–சுபே தர்ஷனே ஈக்ஷணே பத்மபத்ராயதே அஸ்ய இதி சுதர்ஷனா – தாமரையின் இதழ்களை ஒத்த அழகிய கண்களை உடையவர்’.–ஸுகேன த்ரிஷ்யதே பக்தைரிதி சுதர்ஷனஹ் – அவர் பக்தர்களுக்கு எளிதில் புலப்படுகிறார், எனவே அவர் சுதர்ஷனா’.தாமரை இதழ் போல் நீண்டு அழகிய இரு கண்கள் யுடையவர் -பக்தர்களால் சுகமாகக் காணப்படுபவர் –தம்மைப் பற்றிய ஞானமானது மோஷ பலம் தருவதாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –
ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய்-ருஶ்யதே காட்சி அளிக்கிறார் பக்தைரிதி வா தனது அடியவர்களுக்கு-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை
தனது ‘நேத்ரா’ (கண்கள்) மூலம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தெளிவாகவும் முழுமையாகவும் பார்க்கவும் அறியவும் பகவானின் திறனைக் குறிக்கிறது என்று கவனிக்கிறார். மேலும், அவர் ஒவ்வொரு வடிவத்திலும் அந்தர்யாமியாக (உள்ளே) இருப்பதால், அவர் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் பார்க்கிறார்.-இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் தொடர்புபடுத்தி தற்போதைய நாமத்தை சுதர்சன சக்கரத்திற்கான தெய்வத்தைக் குறிப்பிடுவதாக -காலம் ஆறு பருவங்களின் வடிவில் இடையறாது சுழன்று கொண்டிருப்பது போல் ஆறு முனைகள் கொண்ட சுதர்சன சக்கரம் சக்தி வாய்ந்ததாகவும் இடையூறு இன்றியும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு பகவானே தேவதா.
————
419-கால-தன்னிடம் ஈர்ப்பவன் –ஏவம் பூ₄தைர் கு₃ணைர் ஆத்மநி சராசர ஸங்கலநாத்
கால꞉ ॥இப்படிப்பட்ட குண விசேஷங்களினால் சராசரங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -1-6-8-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாகுவேன்-ஓம் காலாய நம:கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்)-ஸர்வமிதி வா அனைத்தையும்-கால: எனவே, பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)—இதி பகவத்வசனாத் |இயங்குனவற்றில் காலம் நான்.-கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும் பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார்.-எல்லாவற்றையும் எண்ணுபவர் -ஸ்ருஷ்டியில் உள்ள எல்லாப்பொருள்களின் கணக்குகளையும் அறிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –அவரவர் தகுதிக்கு ஏற்ற சுகத்தை அழிப்பவர் -உலகைக் காலத்தினால் கட்டுப்படுத்துவதனாலும் பிரிப்பதனாலும் அறிவதனாலும் காலமாக இருப்பவர் -சுகத்தை முழுமையாக தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –காலா – அவர் எல்லா வற்றிற்கும் வரம்புகளை அமைக்கிறார்-இந்த நாமத்திற்கு பல அர்த்தங்கள் உள்ளன, அதாவது.-பிரளயம் அல்லது பிரளய காலத்தில்) அனைவரையும் தன் பக்கம் இழுப்பவன்;-அளந்து அனைத்திற்கும் வரம்பு நிர்ணயிப்பவர்;-அவர் தனது எதிரிகள் அனைவருக்கும் மரணம் அல்லது அழிவு;-எல்லோருடைய கர்மாவையும் அளந்து பலனைச் செய்பவன்.
–காலாய நம: நம என்பது ‘கால சம்க்யானே’ என்ற மூலத்திலிருந்து அளக்க அல்லது எண்ணுவதற்காக உருவானது.-காலோஸ்மி லோகக்ஷயக்ரித் ப்ரவ்ருத்தோ – காலத்தின் வடிவில் நான் உலக அழிவைக் கட்டுப்படுத்துகிறேன்’.-‘அநர்த-ப்ரேப்சுதாயா கணயாதாம் மத்யே காலா மிருத்யு அஹம் – துன்பங்கள் அல்லது பேரழிவுகளை ஏற்படுத்தும் விருப்பத்துடன் எண்ணுபவர்களில், நான் மரணத்தின் கடவுள்’.-சர்வேஷ்வரோ விஷ்ணுரேவ காலோ, யதோ ஹி ச கலயதி கணயதி ஸமஸ்த-ப்ராணி-கர்மாணி, ததனுகூல பல-பிரதாய.–காலோ ஹினாம பகவான் ஸ்வயம்புஹ் அனாதி மத்ய நிதானஹ் – பகவான் ஆரம்பம், நடு அல்லது முடிவு இல்லாத நேரமே.-ஸ ஸூக்ஷ்மாம் அபி காலம் ந லீயதே இதி காலாஹ் |–ஸம்கலயதி காலயதி வா பூதானி இதி காலா (சுஷ்ருத சூத்ரம் 6. 3).
——–
பரமேஷ்டீ-மிக உன்னதமான பரம பதத்தில் உள்ளவன்-அவதாரத்தில் செய்ய வேண்டியவற்றை முடித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளும் பெருமாள்-ஏவம் ராக்ஷஸ ம்ருக₃யயா (ராக்ஷஸர்களை வேட்டையாடி முடித்து )ஜக₃த்₃ரக்ஷணேந (குகன் சபரி விபீஷணாதிகளுக்கு ஸம்ஸ்லேஷ ரஸம் அளித்த பின்பு )சாத்ர விஹ்ருத்ய புந꞉ பரமே ஸ்தா₂நே திஷ்ட₂தீதி பரமேஷ்டீ₂ ।–* பரமே கித், இதீ நி ப்ரத்யய꞉,* அம்பா₃ம்ப₃ இத்யாதி₃நா ஷத்வம்*ஹல த₃ந்தாத் இதி ஸப்தம்யா அலுக் । யதா–விவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் மஹ அநுக –உத்தர -110-12- விஷ்ணு லோகத்துக்கு -தனது திவ்ய மங்கள விக்ரஹம் மற்றும் சரீர பூதங்களான அனைவருடன் அடைந்தான்-ஏவமேஷ மஹா பாஹு இஷ்வாகு குல வர்த்தன ராவணம் ச கணம் ஹத்வா திவம் ஆக்ரமிதா பிரபு –சபா பர்வம் -55-47-
நீண்ட திருக் கரங்களைக் கொண்டவனும் -இஷ்வாகு குலத்தின் நாயகனுமான இராமன்
இராவணன் கூட்டத்தை முடியுடன் அழித்து விட்டு மேலுலகம் சென்றான் –மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட விற்றிட்டுப் போய் விண் மிசைத் ததாமமே புக மேவிய சோதி -6-4-10-
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமமேவி சென்று இனிது வீற்றிருந்த அம்மான் -பெருமாள் திரு -10-10-பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –இப்படி அரக்கர்களை வேட்டையாடியும் உலகைக் காத்தும் விளையாடிய பின்பு உயர்ந்த ஸ்தானமான பரமபதத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ஓம் பரமேஶ்டினே நம:–பரமே ப்ரக்ருஶ்டே ‘பரம’ அதாவது உயர்ந்ததான-ஸ்வே மஹிம்னி தன்னுடைய (இயற்கையான) மகிமையால்-ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள்-ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும்-ஶீலமஸ்யேதி தன்மை யுடையவராதலால்-பரமேஶ்டி பகவான் ‘பரமேஶ்டி’ என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அங்கு இருப்பது அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).-‘பரமேஶ்டி விப்ராஜதே’ – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.-இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘பரமேஶ்டி’ என்று அழைக்கப்படுகிறார்).- உச்ச ஸ்தலத்தில் (வைகுந்தம்) வசிப்பவர்.-ஸ்ரீ வைகுந்தத்தில் வசிப்பவர்;-இதயத்தின் உச்ச குகையில் வசிப்பவர்.-‘பரமே ப்ரகரிஷ்டே ஸ்வே மஹிம்னி ஹ்ருதயகாஷே ஸ்தாதும் ஷீலம் அஸ்ய இதி பரமேஷ்தீ – அவர் தனது எல்லா மகிமையிலும் இதயத்தின் முதன்மையானவர், எனவே அவர் பரமேஷ்டி என்று அழைக்கப்படுகிறார்’ என்று விளக்குகிறார். வேத மந்திரம் கூறுகிறது ‘பரமேஷ்தீ விப்ரஜதே’ – பரம கடவுள் பிரகாசம் மற்றும் தாமரை வடிவ இதயத்தின் மத்தியில் வசிக்கிறார்.
பத்மகோஷ பிரதீகாஷம் ஹ்ருதயம் சாப்யதோமுகம் – தாமரை மலரின் தலைகீழ் மொட்டுக்கு ஒப்பிடக்கூடிய இதயத்தின் ஈதரில் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்;தஸ்ய மத்யே மஹாநாக்னி-ர்விஸ்வர்சி-ர்விஸ்வதோமுகஹ் – இதயத்தில் உள்ள அந்த இடத்தில் அக்கினியின் பெரும் ஜ்வாலை, அழியாத, அனைத்தையும் அறிந்த, நாக்குகள் எல்லா திசைகளிலும் விரிந்து, எல்லா இடங்களிலும் முகங்களைத் திருப்பிக் கொள்கிறது-தஸ்யாஹ் ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்திதா – அந்தச் சுடரின் நடுவில் பரமாத்மா வசிப்பவர்.-நாராயண ஸூக்தம்–கடோபநிஷத்தின் “பரமே வ்யோம்னி ப்ரதிஷ்டிதா” – இதயத்தின் உச்சமான குகையில் மையமாக இருப்பவர் மற்றும் அனுபவத்தைப் பெறக்கூடியவர்.
———————
421-பரிக்ரஹ –-சௌசீல்யமே ஸ்ரீ ராமாவதார முக்கிய குணம் –குணவான் இத்தையே –ஆஸ்ரித வாத்சல்யம் கண்ணனுக்கு –அஸ்ய ஸௌஶீல்யம் தத்த்வம் ॥–அத்ர தத்ர ச பரிதோ க்₃ரஹோ (அ)ஸ்யேதி—பரிக்₃ரஹ꞉,–ஸ்வ ஸம்ப₃ந்தி₄ பௌர ஜாநபதே₃ தத் ஸம்ப₃ந்தி₄நாம் தத்₃தே₃வதா தத் ஆராம தரு தூ₃ர்வாதே ₃ரபி பரமபத₃ ப்ராபணாத் -நகர மக்கள் தேச மக்கள் அவர்களுடைய சுற்றத்தார் அவர்களுடைய தேவதைகள் தோட்டத்தில் உள்ள மரம் புல்
முதலியவற்றையும் பரமபதம் சேரும்படி அங்கீ கரித்தவர்-யே ஹி பாகவதம் சேஷு அநு ராகின–சராசரங்களையும் கூட்டிச் சென்ற ஸுவ்லப்யம்-தரு தூ₃ர்வாதே-மரங்களையும் வேர்களுடனே-யாவற்றையும் தன்னுடன் சேர்த்து கொள்பவன்-தத்கால மக்களுக்கு பெருமாள் -அனைவருக்கும் ராமானுஜர்–புற்பா முதலா புல்லெரும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே -7-5-1-ஓம் பரிக்ரஹாய நம:—ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால்-பரிதோ எல்லாவிடங்களிலும்-க்ருஹ்யதே அடையப்படுகிறார்-ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஞாயதே இதி வா அறியப்படுகிறார்-பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ-பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும்-பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரிகிரஹா – அவர் அனைத்தையும் தன்னுள் உள்வாங்குகிறார்-அனைத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்பவர்;-ன்னிடம் அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் பற்றிக்கொள்ளப்பட்டவர்;-தன் பக்தர்களின் எந்தப் பிரசாதத்தையும் மனப்பூர்வமாக அளிக்கும் போது ஏற்றுக்கொள்பவர்;இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.
ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த நாமத்திற்கு மூன்று விதமான விளக்கங்களை தருகிறார். முதல் பொருள் ‘சரணார்த்திபிஹ் பரிதோ க்ரிஹ்யதே ஸர்வகதத்வாத் – அவரை அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் அவர் பற்றிக் கொள்ளப்படுகிறார்’. அவர் வழங்கிய இரண்டாவது பொருள் ‘பரிதோ ஜ்ஞாயதே – எல்லா அணுகுமுறைகளிலிருந்தும் அவரைத் தேடுவதன் மூலம் அவர் உணரப்படுகிறார்’. மூன்றாவது பொருள் ‘பத்ரபுஷ்பாதிகம் பக்தைஹ் அர்பிதம் பரிக்ரிஹ்ணாதி இதி பரிக்ரஹஹ் – அவர் தனது பக்தர்கள் செய்யும் மலர்கள் மற்றும் இலைகள் போன்ற எந்தவொரு பிரசாதத்தையும் ஏற்றுக்கொள்வதால் அவர் பரிக்ரஹர்’.-பத்ரம் புஷ்பம் ফலம் தோயம் யோ மே ভக்த்யா ப்ரயச்சதி–தத் அஹம் பக்தி-உபஹர்தம் அஸ்நாமி ப்ரயதாத்மனஹ் ||–9-25-அன்புடனும் பக்தியுடனும் எனக்கு ஒரு இலை, ஒரு பூ, பழம் ஒரு தண்ணீர் வழங்கினால், அந்தத் தூய்மையான உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.-சரணம் அடைபவர்களால் எல்லாவகைகளாலும் கொள்ளப் படுபவர் -பல வழிகளால் அறியப் பெறுபவர் –அடியவர் சமர்ப்பிக்கும் இலை பூ முதலியவற்றை ஏற்பவர் –ஸ்ரீ சங்கரர் –-பரிக்ரஹ – பரிதா ஸர்வதா கிரஹணம் – இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனது சக்தியின் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று விளக்கம் தருகிறார்.-பக்தர்களை அனுக்ரஹித்து ஏற்றுக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply