Archive for May, 2025

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–வியாக்யானம் –

May 15, 2025

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா
—ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஸ்ருத் யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்ல ஸத் பகவத் அங்க்ரி புராண பந்தும்
ஞானாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி
–ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த தனியன்

(வேதப் பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு -மலர வைக்கும் -இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் -தாமரை இணை அடிகள் -பழைய உறவினராய்,-திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
ஞானங்களுக்கு -அதி ராஜம் -பேரரசராய்,
அபய ப்ரத ராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான-பரம காருணிகம்-பெரியவாச்சான் பிள்ளையைப் போலவே
இவரும் ஞானாதி ராஜம் -பரம காருணிகர் என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபீஷ்டவ்தி ஸ்ரீ யம் தேவீம் அகிலாத்ம ஏக மாதரம்
விஷ்ணு பத்நீம் விஸாலாஷீம் யாமுனார்யோ மஹா மதி —

எல்லாமும் ஆத்மாக்களுக்கும் ஒரே தாயாய் -விஷ்ணு பத்நீயாய் -பரந்த திருக் கண்களை யுடையவளான ஸ்ரீ தேவியை மஹா புத்திமானான யாமுனாசார்யர் ஸ்துதிக்கிறார்-

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

(நான்காம் அத்தியாயத்தில்-நான்கு கீதா ஸ்லோகங்கள் -அவதார ரஹஸ்யங்கள் ஆறு அர்த்தங்கள்
2-45-2-48-சதுஸ் ஸ்லோகி -நான்கு ஸம்ஹிதைகள்
கோதா சதுஸ் ஸ்லோகி -ராமானுஜ சதுஸ் ஸ்லோகி-
மண்டோதரி சதுஸ் ஸ்லோகி
பல இருந்தாலும் பிரசித்தமானது ஆளவந்தார் அருளிச் செய்த இந்தப் பிரபந்தமே)

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று கொண்டு இச் சேதனனுக்கு ஸ்வரூப அநுரூபமாக உபகாரகராகிறார் -அகில ஜகன் மாதாவான பிராட்டியும் -அவ்வயயஸ் பிதாவான ஈஸ்வரனும் –அறியாதது அறிவித்த ஆச்சார்யனும் -அதிதி ஸப்த வாஸ்யனான அவனடியாரும் -என்று இந் நால்வர் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே உத்தேச்ய பிரதிபத்தி பண்ணி உஜ்ஜீவிக்கக் கடவன் என்றும் வேதாந்தங்களிலே வ்யாக்யாதமாக விதிக்கையாலே விசேஷஞ்ஞர் எல்லோரும் விரும்பி அனுஷ்ட்டிக்க வேண்டும்படி விசேஷ யர்த்தங்களாய் இறே இவ்வர்த்தங்கள் தான் இருப்பது –இந் நால்வர் பண்ணும் உபகாரமும் நவரத்ன மாலையிலே நன்றாகக் காணலாம் இறே –

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவரத்ன மாலை —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

(சரணாகதன் ஆனவன் –
1-தன்னையும் –
2-தனக்கு விரோதியான தேஹத்தையும் –
3- தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களையும் –
4-சம்சாரிகளையும் –
5- தேவதாந்தரங்களையும் –
6-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –
7- ஆச்சார்யர்களையும் –
8- பிராட்டியையும் –
9-ஈஸ்வரனையும் –
நினைத்து இருக்கும் படி எங்கனே என்னில் –

1- உடம்பில் வேறுபட்டு நித்யனாய் ஒருபடிப் பட்டு அணுவாய் –ஞானத்தையும் ஆனந்தத்தையும் வடிவாக யுடையனாய் ஜ்ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று நினைத்தால் சொல்லுதல் செய்ய மாட்டாதே -எம்பெருமானுக்கே உரியனாய் தன் கார்யத்துக்கு தான் கடவன் அன்றிக்கே -அவனையே பலமாக யுடையனாய் இருக்கும் என்று தன்னை நினைப்பான் –

2- தன்னை உள்ளபடி அறிய ஒட்டாதே விபரீத ஜ்ஞானத்தை ஜனிப்பித்து இருபத்து நாலு தத்துவங்களினுடைய திரளாய் அநித்யமாய் எப்போதும் ஒக்க பரிணமிக்கக் கடவதாய் ஒரு நாளும் ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே அநந்த துக்கங்களை விளைப்பிக்கக் கடவதாய் சப்தாதி விஷயங்களிலே மூட்டி நசிப்பிக்கும் என்று தன் தேஹத்தை நினைப்பான் –

3-ஆத்ம ஜ்ஞானத்தையும் பகவத் ஜ்ஞானத்தையும் பகவத் விஷயத்தில் ருசியையும் த்வரையையும் குலைத்து தேஹாத்மா அபிமானத்தையும் அஹங்கார மமகாரங்களையும் காம க்ரோதாதிகளையும் விளைப்பித்து பலபடியாலும் -அனர்த்தத்தை பண்ணுவார்கள் என்று தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களை நினைப்பான் —

4-பகவத் அனுபவத்துக்கும் பகவத் கைங்கர்யத்துக்கும் விரோதிகளாய் சம்சார வர்த்தகராய் இருப்பார்கள் என்று சம்சாரிகளை நினைப்பான் –

5-அஜ்ஞராய் அசக்தராய் எம்பெருமான் பக்கலிலே பிறந்து அவன் கொடுத்த பதங்களை யுடையராய் எதிரிட்டு துர்மாநிகளாய் தங்களைப் போர பொலிய நினைத்து நாட்டாரை பிரமிப்பித்து அனர்த்தத்தைப் பண்ணுவார் சிலர் என்று தேவதாந்தரங்களை நினைப்பான் —

6-பகவத் ஜ்ஞானத்துக்கும் இதர விஷய வைராக்யத்துக்கும் பகவத் பக்திக்கும் வர்த்தகராய் -உசாத் துணையாய் –பிராப்யத்துக்குஎல்லை நிலமாய் -இருப்பார்கள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைப்பான் –

7- தன் கடாஷத்தாலே என்னைத் திருத்தி சர்வேஸ்வரன் கைக் கொள்ளுகைக்கு யோக்யனாம் படி பண்ணி அவன் திருவடிகளிலே சேர்த்து அறியாதன அறிவித்து-திருவாய் -2-3-2- ஸ்வாமியாய் என்றும் ஒக்க அடிமை கொள்ளும் மஹோபகாரகன் -என்று ஆசார்யனை நினைப்பான்-

8- நம்முடைய சர்வ அபராதத்தையும் பொருப்பித்து ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் குலைத்து அவனுடைய காருண்ய வாத்சல்யாதி குணங்களைக் கிளப்பி நமக்கு புருஷகார பூதையாய் மாதாவாய் ஸ்வாமிநியாய் ப்ராப்யையாய்—இருக்கும் என்று பிராட்டியை நினைப்பான் –

9- சிருஷ்டி காலத்திலேயே சரீரத்தையும் இந்த்ரீயங்களையும் தந்து அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கி அத்வேஷத்தையும் ஆபிமுக்யதையும் சத் சங்கதி தொடக்கமான ஆத்ம குணங்களையும் பிறப்பித்து சதாசார்யனோடே சேர்த்து நம்முடைய சர்வ அபராதங்களையும் பொறுத்து சம்சார சம்பந்தத்தையும் கழித்து அர்ச்சிராதி மார்க்கத்தையும் -பரமபதத்தையும் -குண அனுபவத்தையும் தந்து யாவதாத்மா பாவி நித்ய கைங்கர்யம் கொள்ளும் ஸ்வாமி என்று சர்வேஸ்வரனை நினைப்பான் –

நவார்த்த ரத்ன மாலேயம் சத் பிர்தார்யா சதா ஹ்ருதி
பாத்தா யோ நா அதியசசா  தம் ஜகத் குரும் ஆஸ்ரயே —

ஸ்ரீ நவ ரத்ன மாலை  முற்றிற்று-)

இப்படிப்பட்ட உபகாரங்களை அனுசந்தித்து
சீதை என்பதோர் தெய்வம் -பெரிய திரு -10-2-5-
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் -இரண்டாம் திருவந்தாதி-57
தேவு மற்றறியேன் -கண்ணி -2-
குலதெய்வம் -பெரிய திரு -2-6-4-
என்று நால்வர் பக்கலிலும் தேவதா பிரதிபத்தியைப் பண்ணா நின்றார்கள் இறே

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-

ஆகையாலே ஸகல வேதாந்த வித் அக்ர கண்யராய்-ஆஸ்திக அக்ரேஸராய் -பரபஷ ப்ரதிஷேப ஸ்வ பக்ஷ ஸ்தாபகத்வத்தாலே ஆளவந்தார் என்றும் அகில லோக பிரஸித்தமான அபிமானத்தை யுடையரான யாமுனாச்சார்யர் தான் ஸதாச்சார்ய ஸ்ரேஷ்டரானமை தோற்ற
ஆசரதீத் யாசார்ய
ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத–என்கிறபடியே ஆதர அதிசயத்தாலும்
ஸ்வ அபிமான அந்தர்பூதமான அஸ்மதாதிகள் எல்லோரும் இவ்வர்த்தங்களை அனுஷ்டித்து ஆத்ம உஜ்ஜீவனத்திலே அத்யபி நிஷ்டராக வேணும் என்கிற தம்முடைய ஆகஸ்மிக கிருபையாலும் -உபகாரகரான இந்நால்வர் பக்கலிலும் தமக்குண்டான பிரதிபத்தி விசேஷத்தை க்ரந்தஸ்தமாக பிரகாசிப்போம் என்று திரு உள்ளம் பற்றி பிரதமத்திலே
மாத்ரு தேவோ பவ -என்று மஹா உபகாரகையாகச் சொல்லப்பட்ட பெரிய பிராட்டியாருடைய ஸ்வரூப குண விபூதிகளை அனுசந்தித்து அவ்வனுபவ ஜெனீத ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே தத் விஷய ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராகிறார் –
காந்தஸ்தே -இத்யாதியாலே

பித்ரு தேவோ பவ -என்று தொடங்கிச் சொல்லப்படும் மூவரிடத்தில் உண்டான விசேஷ பிரதிபத்தியை ஸ்தோத்ரம் ரத்னத்திலே வெளியிட்டு அருளினார் -எங்கனே என்னில் -பிரதமத்திலே
ஆச்சார்ய தேவோ பவ -என்று மஹா உபகாரகராகச் சொல்லப்பட்ட ஆச்சார்ய விசேஷத்தில் தமக்குண்டான பாவ பந்த விசேஷங்களை
நமோ அசிந்த்ய அத்புத-1- -என்றும்
தஸ்மை நம-2- -என்றும்
பூயோ நம -3- -என்றும்
ப்ரணமாமி நம -4- -என்றும் பிரகாசிப்பித்தார்

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.)

நிருபாதிக பிதாவான ஈஸ்வர விசேஷத்தில் தமக்குண்டான பிரதிபத்தி விசேஷத்தை
யன் மூர்த்நி மே -6- -என்று தொடங்கி பஹு பிரகாரமாக பிரகாசிப்பித்தார்

வருவிருந்தை -பெரியாழ்வார் -4-8-2-
விருந்தாகும் பெருந்தக்கோர் -பெரிய திருமொழி -6-6-10-
என்கையாலே அதிதி ஸப்த வாஸ்யரான ததீய விஷயத்தில் தமக்குண்டான விசேஷ பிரதிபத்தியை
த்வத் ஆஸ்ரிதாநாம் –என்றும்
தவ தாஸ்ய ஸூக ஏக சங்கிநாம் -என்றும்
ஸக்ருத் த்வதாகார -என்றும் வெளியிட்டார் இறே

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-ஶ்லோகம் 20 – ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி  யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே–6-6-10-

ஆனால் மாத்ரு தேவோ பவ -என்கிற பிராட்டிமார் வைபவம் அங்கு ப்ரதிபாதிக்க வில்லையே வென்னில்
கஸ் ஸ்ரீ ஸ்ரீய-என்றும்
தயா ஸஹாஸீநம் -என்றும்
ஸூசிப்பித்த மாத்ரம் இறே ஸ்தோத்ரத்தில் உள்ளது –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–


அப்படியாகில் இவ்வளவு போராதோ -இதுக்காக ஒரு பிரபந்தம் நேர வேண்டுவான் என் என்னில்
பேராளன் பேரோதும்
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்கிற
பாகவத அநுவர்த்தனமாகிற பரமப்ராப்ய லாபம் ஆச்சார்யனாலேயாய்-ஆச்சார்ய லாபம் ஈஸ்வரனாலேயாய் -ஈஸ்வர லாபம் பெரியபிராட்டியாராலே யாகையாலே
இந்நால்வரிலும் மஹா உபகாரிகையாய் இறே இவள் தான் இருப்பது –
ஆகை இறே மாத்ரு தேவோ பவ என்றும் பிரதமோபாத்தை யாயிற்று -இப்படி ஸர்வ வ்யாவ்ருத்த உபகார ஸீலை யாகையாலே ஸாமான்யமான ஆகாரேண ப்ரதிபாதித்த அளவன்றிக்கே தத் விசேஷமாக ஒரு பிரபந்தம் நேர வேணும் என்று நிர்ணயித்து விஷயத்திலே தமக்குண்டான பாவ பந்தம் எல்லாம் தோன்ற சதுஸ் ஸ்லோகியாலே உப ஸ்லோகிக்கிறார் –

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-

வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே

கர்ம பரதந்த்ரனான ப்ரம்மாவின் ப்ரஸாதத்தாலே
ஸோக ஸ்லோகத்வம் ஆகத -(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-என்கிறபடியே
சோக வேக ஜெனிதமான ஸ்லோகங்கள் போல் அன்றிக்கே ஸூ மங்கள ஆகாரையான இவள் ப்ரஸாதம் அடியாக வந்ததாகையாலே ஸூ ஸ்லோகங்களாய் இறே இஸ் ஸ்லோகங்கள் தான் இருப்பது -(ராஜ்ஜியம் துரந்து -வனவாசம் சென்று – சீதா நாஷ்டா- ஜடாயு இழந்த சோகங்கள் நிறைந்த ஸ்ரீ இராமாயண)
இனி அங்குப் போனாலும் –அஹம் ஸ்லோக க்ருத் -(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்)என்று உத்தம ராஜ கன்யையான இவள் விஷயமாக உத்தம ஸ்லோக ரஸநை பண்ணி உஜ்ஜீவிக்கை இறே உள்ளது
க்ருத்ஸ்னம் ஸீதாயஸ் சரிதம் மஹத் -என்று (காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத –விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –
ரகுவர சரிதம் -(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)என்று சொல்லப்படுவதாய் -கங்கா சம்பவாத் யஸத் கதா கீர்த்தனை வர்ணன முகத்தாலே –அதி விஸ்தாரமாய் -துர்ஜ்ஜேயமான ஸ்ரீ இராமாயணம் போல் அன்றிக்கே விசேஷண விசேஷ்ய உபய ப்ரதாநமான -திருமாலவன் கவி (திருவிருத்தம் -48)-(திரு விசேஷணம் மால் விசேஷ்ய -சமமாக அன்றோ அது) போலும் இன்றிக்கே -விசேஷண பரமேயா யிருக்கவும் அதி ஸங்க்ரஹ மாகையாலே துரவகாஹமான ஸ்ரீ ஸப்தம் போலும் இன்றிக்கே அநாக்ராதா வத்யமாய்(ஆக்ராத அநவத்யமாய்-குற்றத்தின் வாசனை கூட இல்லாமல்) -வைதக்த்ய வர்ண குண கும்பந (சிறந்த எழுத்துக்களின் வரிசைகளில் சேர்க்கை)கௌரவங்களாலே கண்டூல கர்ண குஹரராய்க் கொண்டு கர்ணாம்ருதமாகப் பானம் பண்ணலாம் படி பரம போக்யமாய் -ப்ரேம யுக்தருக்கு ஸ்வார்த்த ப்ரகாஸந சாதுர்யத்தை யுமுடைத்தான சதுஸ் ஸ்லோஹீ ஸூ க்ரஹமாய் இருக்கையாலே அகில பிரபந்த விலக்ஷணமாய் இருக்கும் –

பகவத் ஸ்தோத்ரம் பண்ணுவார்க்கு எல்லாம் ஸ்தோத்ர ரத்னம் முதலானாப் போலே -பிராட்டி விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணுவாருக்கு எல்லாம் இப்பிரபந்தம் மூல க்ரந்தமாகையாலே முக்யமாய் இருக்கும் -இவள் மூலமாக விறே எல்லாமே உண்டாவது -ஆகையிறே ஸ்தோத்ர சதுஸ் ஸ்லோகிகளை அடியொற்றி கத்ய த்ரயமும் ஸ்ரீ ஸ்துதி முதலான பஞ்ச ஸ்தவமும் ஸ்ரீ குண ரத்ன கோஸமும் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் முதலான திவ்யப்ரபந்தங்களும் அவதரித்தன-

ஆக இத்தால் மாத்ரு தேவோ பவ என்கிற வாக்யார்த்த விவரணமான ஸ்ரீ ஸூக்தார்த்தத்தை இஸ் ஸ்லோக ரூபேண வெளியிடுகிறார் –
அதில் பிரதம ஸ்லோகத்தால் –ஸ்ரீ யம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர்மா (அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் -)என்கிற வாக்யங்களாலும்
விஷ்ணோர் ஸ்ரீ – (நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்) என்கிற வாக்யங்களாலும்
ஸ்ரீ வத்ஸ வஷா (தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15-இந்த ராமபிரானே தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் -ஸர்வ தாரகனாய் -சங்கு சக்ர கதா தரனாய் -ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் எப்போதும் ஸ்ரீ தேவியுடனே கூடியவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையானவனான நாராயணன் )என்கிற தத் உப ப்ரும்ஹணங்களாலும்
ப்ரதிபாதிக்கிற தத் அசாதாரணமான திரு நாமத்தை ஸார்த்தமாக அனுசந்திக்கிறார் –

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

—————–

முதல் ஸ்லோகம் அவதாரிகை
ஸ்ரீஞ்ஸேவாயாம் -என்கிற தாதுவிலே நிஷ்பந்நமாகையாலே ஸேவா வாசியான ஸ்ரீ ஸப்தத்தில்
ஸ்ரயதி இதி ஸ்ரீ
ஸ்ரீயத இதி ஸ்ரீ

என்கிற கர்த்தரி கர்மணி வ்யுத்பதி த்வய சித்தங்களான பகவத் ஆஸ்ரயணத்தையும்
தத் தேதுகமான உபய விபூதி சேஷத்வத்தையும் உடையதாய்
அத்தாலே ஸ்ரீ என்று ஸர்வ உத்கர்ஷ ஹேதுவான திருநாமத்தையும் உடையையாய் ஞான ஸக்த்யாதி கல்யாண குண பரிபூர்ணையுமான உன்னைப் பரிமித ஞாந சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்கிறார் –

காந்தஸ் தே புருஷோத்தம பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
சத யிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்

வியாக்யானம்
காந்தஸ்தே புருஷோத்தம
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ (
ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன் )
பூர்ணம் புருஷேண(
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)
புருஷம் மஹாந்தம்(
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )
புருஷ ஏவேதம் ஸர்வம்
(புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் -கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )
ஸ யஸ்சாயம் புருஷே
-(ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே )
ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே-(யஸ் ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் -ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவம் ஸூ வர்ண -தஸ்ய யதா கப் யாஸம் புண்டரீக மேவ மஷிணீ–ஸூர்யனுக்கு நடுவில் ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப் பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூ வர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள )
மஹா புருஷ பூர்வ ஜ-
(ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேஸ மஹா புருஷ பூர்வ ஜ -செந்தாமரைக் கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகையெல்லாம் உண்டாக்கினவனே -இந்திரியங்கள் நியமிப்பவனே -கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்து உனக்கேயாக வேணும் -)
ஜாநாதி புருஷோத்தமம்-(
யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத -அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)
புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)
தம் விநா புருஷோத்தமம்-(
ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் –செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும் சமர்த்தனா யிருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறு ஒருவனும் காணப்படுகிறதில்லை)
உத்தம புருஷஸ் த்வன்ய-(த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.
யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும்,
உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.
)
க்ஷமஸ்வ புருஷோத்தம(உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக ))
புருடோத்தமனடி
-பெரியாழ்வார் -4-7-11
புருடோத்தமன் -4-7-2-
புருடோத்தமமே -4-2-1-
என்னும் இத்யாதி ப்ரமாண சதங்களாலே ஸகல சேதன அசேதன விலக்ஷணனான பறவை யேறு பரம்புருடன் -என்றவாறு -இத்திருநாமம் தான் த்ரிவித சித் அசித் ப்ருந்த வைலக்ஷண்யத்தை ஸாப்தமாகக் காட்டக் கடவது இறே
புருஷ என்றும் அசித் வ்யாவ்ருத்தரான பத்தரையும்
உத் புருஷ என்று தத் வ்யாவ்ருத்தரான முக்தரையும்
உத்தர புருஷ என்று அவர்களில் வ்யாவ்ருத்தரான நித்யரையும் சொல்லி
உத்தம புருஷ என்று தத் வ்யாவ்ருத்தனான ஈஸ்வரனைச் சொல்லிற்று இறே
ஹேய மூலமான அசித்தும்
ஹேய ஸஹிதரான பத்தரும்
ஹேய ரஹிதரான முக்தரும்
ஹேய ப்ராக் அபாவரான நித்யரும்
ஹேய நிவர்த்தகனுக்கு சத்ருஸர் அன்று இறே
ஸ்வரூப ஸ்வபாவ அந்யதா பாவ யுக்தங்களான சேதன அசேதனங்களைப் பற்ற தத் உபய அநந்யதா பாவ ரூப வைலக்ஷண்யத்தாலே தத் உபய விலக்ஷணன் என்று கொண்டு புருஷோத்தமன் என்கிறார்
யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அஷராதபி சோத்தம
அதோ அஸ்மி வேதே லோகே ச ப்ரதித புருஷோத்தம
என்னைக் கடவது இறே
த்வாவிமவ் இத்யாதி-

ஆக இப்படி ஸர்வ உத்க்ருஷ்டனாக ப்ரதிபாதிக்கப்படுகிற பரமபுருஷன் சர்வாதிகையாக ப்ரமாண ப்ரஸித்தையாய் இருக்கிற உனக்கு அநு ரூபனான பதி

அதவா
புருஷோத்தம தே காந்த
ஷணு தாநே
-என்று தாந வாசியாய்
புரு ஸநோ தீதி புருஷ -என்று அதிக தாதாவைச் சொல்லி -அவர்களில் உத்தமன் என்று மோஷாதி ஸகல பல ப்ரதன்
ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே பரம உதாரை என்றும் ப்ரஸித்தையான உனக்குப் பதி என்னவுமாம்

புருஷோத்தமஸ் தே காந்த
மங்களா நாஞ்ச மங்களம்
-என்று சொல்லப்படுகிறவன் -ஸகல மங்கள ஆஸ்பதத்வேந பிரஸித்தையான உனக்குப்பதி
புருஷோத்தமஸ் தே காந்த
நாரீணாம் உத்தமைக்குப் பதியாம்
போது புருஷோத்தமனாக வேணும் இறே -விஸ்வ பதியானல் யாயிற்று இவளுக்குப் பதி என்னாலாவது –
இவள் தான் லோக பர்த்தாவை இறே மம பர்த்தா என்று வரிப்பது(ஸ்ரீ ரெங்க நாதா என்னாதா -அரங்கமாளி என்னாளி -லோக பர்த்தா மம பர்த்தா -மூவர் அனுபவம்) -அல்லாதாரை நீசஸஸவத் என்றும் ஒரு நரியாக விறே எண்ணுவது –
புருஷோத்தமன் தே -என்கையாலே
ராகவ –துல்ய சீல வயோ வ்ருத்தாம் அர்ஹதி -என்னும் அர்த்தமும்
ஏதத் ப்ரதிகோட் யர்த்தம் –புருஷோத்தமஸ்ய த்வம் -என்று அஸி தேஷணா தம் அர்ஹதி -என்னும் அர்த்தமும் தோற்றுகிறது
உனக்கேற்கும் -திருவாய் -10-10-6-என்று இவள் அவனுக்கு சத்ருசையாய் இருக்குமா போலே அவனும் திருத்தக்க செல்வனாய் -நான்முகன் -62-இறே இருப்பது

புருஷோத்தமஸ் தே காந்த
லஷ்மீஸ் ச பத்ந்யவ்
-என்று பத்நீ ஸம்பந்தத்தாலே அவனுக்கு உத்கர்ஷம் சொன்னாப் போலே –புருஷோத்தமஸ் தே காந்த என்று பதி ஸம்பந்தத்தாலே இவளுக்கு உத்கர்ஷம் சொல்கிறார்
ஸ்ரீ யபதி என்று அவனுக்கு உத்கர்ஷம்
வரத வல்லபா என்று இறே இவளுக்கு உத்கர்ஷம்

தே காந்த புருஷோத்தம
உனக்குக் காந்தனான பின்பிறே அவன் புருஷோத்தமன் ஆயிற்று-
கஸ் ஸ்ரீ ஸ்ரீய என்ற பின்பிறே புருஷோத்தம க-என்றது
ஜெகன்நாதோ அபி நாராயணோ தந்யம் மந்யத ஈஷாணாத் (ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத் தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா –-ஸ்ரீ ஸ்தவம் 6-மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.-அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?) -என்று வேதாந்தங்கள் பரதத்வம் என்று நிர்ணயித்ததும் உன்னுடைய பாத சிஹ்னங்களை அவன் மார்பிலே கண்டபின்பிறே
ஸஹ தர்ம சாரிணியான இவளைப் பாணி க்ரஹணம் பண்ணின பின்பாயிற்று அவன் ஸ்ரீ மானுமாய் சர்வாதிகனுமாய் அநு ரூபாக்ஷனுமாய் முமுஷு உபாஸ்யனுமாய் யாய்த்து -ஆகையிறே
திரு நின்ற பக்கம் திறவிது -நான்முகன் -62-என்று ஸத்துக்கள் பரிக்ரஹித்து அல்லாதார் திருவில்லாத தேவராகையாலே நிஸ் ஸ்ரீ கராய் புருஷ அதமராய் விருபாஷராய் அனுபாஸ்யராய் யாயிற்று -ஆகையிறே –ஸ்ரீ நிவாஸ சப்தேந பாஸூ பதா திவ்ய தாஸ -என்று அருளிச் செய்ததும்
காணிலும் உருப்பொலார் -திருச்சந்த -69-
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் -54 என்று ஸத்துக்கள் பரித்யஜித்ததும் –

தே காந்த புருஷோத்தம
திருமகளார் தனிக்கேள்வன் பெருமையுடைய பிரானார்
-திருவாய் -1-6-9-என்று இவளுக்கு கேள்வனான பின்பிறே பெருமையுடைய பிரானாராயிற்று –
ஸ்ரீயா விஷ்ணுர் அஸூ ஸூபே -என்று இவள் தனக்கென்ன இட்டுப் பிறந்த தன்மையாகையாலே இறே அப்ரமேய தேஜஸ்ஸை யுடையனாய் அவன் விளங்கிற்று –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
திருமகள் தன்னோடும் திகழ்கின்ற
-10-6-9-என்னைக் கடவது இறே

புருஷோத்தம
புருஷாணாம் உத்தம
-என்ற ஷஷ்ட்டி விபக்தியாதல்
புருஷே ஷுத்தம -என்ற ஸப்தமீ விபக்தியாதல்
புருஷோத்தம-என்று ஸர்வேஸ்வராபேஷயா ப்ரஹ்மாதிகளுடைய அதமத்வம் ப்ரதிபாதிக்கையாலே தத் பத்னிகளில் காட்டிலும் இவளுடைய வ்யாவ்ருத்தியும் தோற்றுகிறது –
மலை மங்கையும் -நா மங்கையும் பூ மங்கைக்குப் போலியாக மாட்டார்கள் இறே நா பதியும் உமா பதியும் ரமா பதிக்கு உபமானமானவன் என்றிறே இவளுக்கு அவள் ஒப்பாவது –
ஆக இத்தால் தத் பத்நீத்வத்தாலும் நாரகோடி கடிதையாகையாலும் அவனை ஆஸ்ரயித்துத் தத் சேஷ பூதையாய் சத்தை பெற்று இருக்கும் -என்கிற கர்த்த்யர்த்தம் சொல்லப்பட்டது
மலர்மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10-
திருமகளும் செம்பொன் திருவடி யினிணை வருட -பெரிய திருமொழி -7-8-1-என்கிறபடியே அகிஞ்சித்க்கரனுக்கு சேஷத்வம் இல்லாமையாலே இவள் தான் கிஞ்சித்கரித்து ஸ்வரூப லாபமாய் இருப்பாள் ஒருத்தி இறே -அவதார தசையிலும் திருமங்கை போத்தந்தாள் -பெரியாழ்வார் -1-3-7-என்று கிஞ்சித்கரித்தாள் இறே

இனிமேல் -ஸர்வ லோக மாதாவாகையாலும் -ஸர்வ ஸ்வாமிநீ யாகையாலும் ஸகல சேதனருக்கும் ஆஸ்ரயிக்கப் படா நின்றாள் என்கிற கர்மணி வ்யுத்பத்தியில் ஸித்தமான உபய விபூதி சேஷத்வத்தை அருளிச் செய்கிறார் -பணி பதி -இத்யாதியால்
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினீ
ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதேச பரம் பதம்
என்னும் இத்யாதி ப்ரமாண சித்தங்களாய் இறே இவ் வ்யுத்பத்தி த்வயமும் இருப்பது –

ஆகில் உப ஜீவ்ய ப்ரமாண அநுஸாரேண வ்யுத்பத்தி த்வயத்தை அருளிச் செய்யாதே வ்யுத் க்ரமமாக அருளிச் செய்வான் என் என்னில் -கடகையான இவளுக்குச் சேதன ஈஸ்வரர் பக்கல் சம்பந்தம் அவிசிஷ்டமாய் இருந்ததே யாகிலும் -பித்ருத்வ ப்ரயுக்தமான ஹித ஸ்ரோதா வ்ருத்தியாலே கலங்கி ஸாபராதரான இச்சேதனரை நிக்ரஹிக்கத் தேடும் என்று-கிமேதந் நிர்த்தோஷ க -என்று உசித உபாயங்களாலே அவனை வசீகரித்து அனுக்ரஹ ஏக பரனாம்படி திருத்தும் போது தத் ஸம்பந்தம் அவஸ்ய அபேக்ஷிதமாகையாலும்
இனித்தான் பிராட்டியை ஆஸ்ரயிக்கிறது தத் சம்பந்தம் விஸிஷ்டை என்றாகையாலும் –புருஷோத்தமஸ் தே காந்த -என்று பிரதான்யேன கர்த்தயர்த்தத்தை அருளிச் செய்து -அநந்தரம் தத் ஸம்பந்த ஸ்தாப்யமான கர்மண் யர்த்தத்தை யருளிச் செய்கிறார்
மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ(பாஞ்சராத்ர ஸம்ஹிதை) -என்று இவ்வர்த்த கிரமத்தை ஸ்வயமேவ அருளிச் செய்தான் இறே
தேவ தேவ திவ்ய மஹிஷீம் அகில ஜெகன் மாதரம் -என்று பாஷ்யகாரரும் இவருடைய திவ்ய ஸூக்தியை உட்க்கொண்டு பகவத் ஸமாஸ்ரயணத்தை பிரதானமாக அருளிச் செய்தார் இறே
இனித்தான் பகவத் விஷயத்தைப் பற்றுகை -பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்டியாலே இறே -பிராட்டியைப் பற்றுமது பகவத் ஸம்பந்த விஸிஷ்டை என்று இறே -இங்கனம் அன்றிக்கே தத் ஸம்பந்த ரஹிதமாகப் பற்றுமன்று தலையும் செவியும் தரியுண்டு வைரூப்ய விநாசங்களே பலித்துவிடும் இறே -ஆகையால் இவ்வாகாரத்தைப் பற்ற இங்கனே அருளிச் செய்யக் குறை யில்லை –

ஆகில்–மச் சேஷ பூதா-என்று (மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரீயாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் )அருளிச் செய்தபடி பிராட்டியும் பகவத் சேஷ பூதையானால் சேஷ பூதர்கள் எல்லாரும் ஸர்வ சேஷிக்கு சேஷமாய் இருக்கை ஒழிய உபய விபூதியும் பிராட்டிக்கு சேஷமாய் இருக்கும் என்கைக்கு பிரமாணம் என் என்னில்
ஸர்வே ஹ்யாத்மாந –தாஸ பூதாஸ் -என்று உபய விபூதியும் பரமாத்ம சேஷமானால் -தத் பத்நியான இவளுக்கு அகில சேதனரும் சேஷ பூதர் என்னுமிடத்தில் ப்ரமாணந் வேஷணம் வேண்டா விறே -பர்த்தாவுக்கு சேஷமான க்ருஹ க்ஷேத்ர புத்ராதிகள் பார்யைக்கும் சேஷம் என்னுமிடம் லோக ஸித்தம் இறே -அவன் தான் உபய விபூதியையும் இவளுக்குப் படுக்கைப் பற்றாக்கி இறே வைப்பது
ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ-யஜுர் காட 3-3-என்று–(உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாயும் இருப்பவள் )
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாம் இஹ உபஹ்வயே ஸ்ரீ யம் -ஸ்ரீ ஸூக்தம் -9–
(ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கின்றேன் )
மகாரஸ்து தயோர் தாஸஸ்
-(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் -)என்று இவ்வர்த்தத்தில் பிரமாணங்களும் உண்டிறே
அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )என்றும்
ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -என்றும் இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்தான் இறே
திரு நாரணன் தொண்டர் -3-7-4-
திருமாலுக்கு உரிய தொண்டர் -6-9-11-திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -திருப்பல்லாண்டு -11-
திருமாற்கரவு -முதல் திருவந்தாதி -53-என்று
மிதுன சேஷத்வம் ஸர்வ அசாதாரணம் என்னும் இடத்தை தத்வ வித்துக்களான நம் ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள் இறே

ஆக இப்படி வேதங்களாலும் -வேதாந்த வேத்யனாலும் -மிக்க வேதியராலும் ப்ரதிபாதிக்கப்பட்ட உபய விபூதி சேஷித்வத்துக்கு பிரதிசம்பந்தி வக்தவ்யமாகையாலே உபய விபூதியில் உள்ளாரும் இவளுக்கு கிஞ்சித்கரித்து சேஷபூதரராய் இருக்கும்படியை பிரயோகிப்பதாகத் திரு உள்ளம் பற்றி-
அதில் பிரதமத்திலே நித்ய ஸூரிகளில் தலைவரான திருவனந்தாழ்வான் இவள் விஷயத்திலே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்று இருக்கும்படியை அருளிச் செய்கிறார் -பணி பதி –இத்யாதியாலே –

அதாவது
இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி யணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த-1-1–என்றும்
வாயோர் ஈரைஞ்சூறு -1-2-
மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாளரவின் சென்னி மணிக்குடுமி-பெரிய திருமடல் – -என்றும் சொல்லுகிறபடியே
மதுரவாறு-திருமாலை -35 -என்றும்
இன்பவாறு -திருக்குறுந்தாண்ட -2- என்றும்
சொல்லும்படி நிரதிசய போக்யமான பகவத் அனுபவத்துக்கு அனுபவ பரிவாஹ ரூபமாக வாயாரப் புகழுகைக்கு ஈடாகப் பலவாய்த்தலைகளை உடையனாய் –
அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து -சேஷ வ்ருத்தி பரரான அசேஷருக்கும் உபமான பூமியாய் –ஆங்கார வாரத்தில் படியே -நான்முகன் திரு -10-அஸ்தானே பய சங்கை பண்ணி அழல் உமிழ்ந்து அனவரத மங்களா சாஸன பரனாய் இருக்கையாலே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் -5-10-11-என்றும்
யதோசிதம் சேஷ -என்றும் திருநாமங்களை உடையனாய்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பல ஏக தாமாவாய்
உனக்குப் படுக்கையான முறையாலே –நாகணை மிசை நம்பிரான் -என்று எல்லாருக்கும் புருஷகார பூதனாய்
ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் ) என்றும் பர்யங்க வித்யையில் படியே தன் மடியிலே அடியிட்டு ஏறலாம்படி ஆஸனமாய் -அந்தரங்கனாய் -பகவத் ஸ்வரூப நிரூபக பூதையான உன்னைப்போல் நாகணை மிசை நம்பிரான் -என்று அவனுக்கு ஸர்வ ஸ்மாத் பரத்வ ஸூசகனாய்
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது )என்கிறபடியே அபரிச்சேத்ய ஸ்வரூப ரூப குண விபவதாதிகளை உடையவனுமான திருவனந்தாழ்வான் பள்ளி கொண்டு அருளினால் படுக்கையாய் இருந்தால் சிங்காசனமாய் இப்படி பஹு முகமாக அடிமை செய்து லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –

பணி பதி ஸப்தத்தாலே –ஸைத்ய மார்த்தவ ஸுரப்ய விசால உந்நதத்வாதியான பர்யங்க குணங்கள் பிரகடிதங்கள் ஆகிறன –பஞ்ச சயனம்-திருப்பாவை -19- என்னக் கடவது இறே

சய்யா ஆஸனம் -என்று த்வயத்தைச் சொன்னது -த்வயத்தில் படியே –திருமாற்கு அரவு –சென்றால் குடையாம் –முதல் திரு -53-
நிவாஸ சய்யா ஆஸந -என்று தொடங்கி இருவருமாக சேர்த்தியிலே அஹம் சர்வம் கரிஷ்யாமி -(பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன் -)என்று பண்ணும் ஸர்வ வித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம் –
யதா யதா ஹி கௌசல்யா – (கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன் -)என்றும் ஒரு அபலை அப்ராப்த விஷயத்தில் பலபடியாகப் பரிசர்யை பண்ணினாள் என்றால் ப்ரக்ருஷ்ட ஞான சக்திகளையுடைய இவன் ப்ராப்த விஷயத்தில் பல அடிமைகளும் செய்கை ப்ரதிபன்னம் இறே -இப்படி பரத்வத்தில் பல அடிமைகள் செய்யும் அளவன்றிக்கே -தேவத்வே தேவ தேஹேயம் (புநச் ச பத்மா ஸம்பூதா ஆதித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததாஸீத் தரணீ த்வியம் -அன்யேஷு ஸாவதாரேஷு விஷ்ணோர் ஏஷ அநபாயினீ -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -விஷ்ணோர் தேஹ அனுரூபாம் வை கரோத்யேஷா ஆத்மநஸ் தநும் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-9-143-144-145)பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் -கிருஷ்ண அவதாராத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் இருக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்திற்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்ளுகிறாள் -இப்பிராட்டி -)என்று அனுவர்த்தித்த இவளைப்போலே அவதாரம் தோறும் அடுத்த வடிவு கொண்டு இதுக்கென்று ஸ்ருஷ்டனாய் –ஸீதாம் உவாச -(ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் -)என்று இவள் புருஷகாரமாக இவள் சமஷத்திலே ஸ்வ அபேக்ஷித்ங்களைப் பேசி வைதேஹ்யா ஸஹ என்றும் இவள் சேர்த்தியிலே பாவஞ்ஞனாய் அஹம் ஸர்வம் என்றும் ஸர்வவித கைங்கர்யங்களையும் பிரார்த்தித்து அடிமை செய்யப்பெற்று
ப்ரகர்ஷயாமி யில் படியே உகப்பித்து உவந்து பணி செய்து -10-8-10-என்னும்படி ரமித்து லப்த ஸ்வரூபனாய் இருப்பான் ஒருவன் இறே
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -2-8-1-
தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே -பெரிய திரு -7-7-9-
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை -8-7-1-என்று
இருவருமாக சேர்த்தியிலே அடிமை செய்து வாழும்படியை ஆழ்வார்கள் அனுசந்தித்தார்கள் இறே
இவர் தாமும் ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநி என்றும் அருளிச் செய்தார் இறே
சேஷ போகே ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -(மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்
ஸ்ரீஸ்தநாபரணம் தேஜஸ் –உத் சங்கே அநந்த போகிந-(ஸ்ரீஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசம் ஆஸ்ரயே -சிந்தாமணி மிவோத் வாந்தமுத் சங்கே அநந்த போகிந –ஸ்ரீரெங்கராஜ ஸ்தவம் -1-8-திருவானந்தாழ்வான் மடியிலே கக்கப்பட்ட மாணிக்கம் போலும் பிராட்டியின் திருமுலைத் தடங்களுக்கு ஆபரணம் போலும் இருக்கும் ஸ்ரீ ரெங்கநாதனான தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன் ) -பட்டர் –

பணி பதி சய்யா ஆஸனம்
போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா
-(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)என்று இவளுக்கு அசாதாரணமாக ஆநைஸயநாதியான அடிமை செய்யும் படியை ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்திலே சொல்லிற்று இறே
ஸ்ரீ மதே -த்வயம் –என்கிறபடியே கைங்கர்யம் ஸித்திப்பதும் ரஸிப்பதும் கைங்கர்ய வர்த்தகையாய் பரம ப்ராப்யையான இவள் சேர்த்தியிலே யாகையாலே இவள் சேர்த்தியிலே அடிமை செய்கை இறே ஸ்வரூப ப்ராப்தம் -ஆகையிறே –திருமாலே நின்றே ஆட்ச்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான் என்றே – -8-3-8-என்று ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பிரார்த்தித்து அருளிற்று –
ஸ்ரீ நிவாஸே –பக்தி ரூபா பவது(அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் -)
ஸ்ரீய காந்தோ யஸ் தத் பாதாப்ஜே பரிசரண ஸக்தம் பவது மே
-(ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் -)என்று கைங்கர்ய உபகரணமான பக்தியையும் கைங்கர்யத்தையும் இவள் சந்நிதியிலே பிரார்த்தித்து அருளினார் இறே

அனந்தன் பாலும் கருடன் பாலும் -5-4-8-என்று இவனுக்கு அனந்தரம் வ்யாமோஹ விஷயமான பெரிய திருவடி இவள் விஷயத்திலே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறும் படியை அருளிச் செய்கிறார் மேல் –வேதாத்மா என்றும் தொடங்கி -ஆஸன பதம் காகாஷி நியாயத்தாலே மேலோடும் அன்வயித்து –வேதாத்மா விஹகேஸ்வர ஆஸனம் வாஹனம் -என்று யோஜித்துக் கொள்வது –

வேதாத்மா
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம
-என்கிற ஸுவ் பர்ண ஸ்ருத்யர்த்தத்தை விவஷித்து வேதாத்மா என்கிறார் –
த்ரயீ மய -என்றார் இறே இவர் தாமும்
வேதாத்மா
வேதா திஷ்டாத்ருதயா வேதாநாம் ஆத்மா
வேதா அதிஷ்டா த்ருதையினாலே வேதாநாம் ஆத்மா-
என்று தத் புருஷனாதல்
தத் விசிஷ்டத்வேந தத் சாமானாதி கரண்யத்தாலே வேத ஆத்மா யஸ்யேதி -என்று பஹு வ்ரீஹி யாதல் –
இத்தால் இவனுடைய ஸர்வஞ்ஞத்வம் ஸூசிதமாயிற்று -அம்ருத அஹராணாதிகளிலே இவனுடைய சக்தி மகத்துவம் ஸித்தம் இறே

(நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)

விஹகேஸ்வர
புள்ளரையன் புகழ் குழறும் –
பெரியாழ்வார் -4-9-5-என்கிறபடியே பக்ஷிராஜன் என்று ப்ரஸித்தனாய் இருப்பான் ஒருவன் இறே -இத்தால் –ஸத்யஸ் (ப்ருத்யஸ் )ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர-என்று ஸ்ரீ சாத்வாதிகளிலே (ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள் )ப்ராணாதி பஞ்சகாதிபதித்வேந அவஸ்திதனான இவனுடைய வ்யூஹ விசேஷத்தைச் சொல்லுகிறது -இவன் தான் நித்ய விபூதியிலே ஓடும் புள்ளேறி –1-8-1-என்று அடிமை செய்யும் அளவன்றிக்கே லீலா விபூதியிலும் கூடத் தொடர்ந்து நாக பாச விமோசனம் பண்ணுவது
அருளாழி புட்க்கடவீர் அவர் வீதி ஒருநாள்-1-4-6- –என்றும்
அசுரர் உயிர் எல்லாம் தகர்த்துண்டு உழலும் புட்ப்பாகன்–8-10-6- -என்றும் சொல்லுகிறபடி ஆஸ்ரித ரக்ஷணத்துக்கும் தத் விரோதி நிரஸனத்துக்கும் அனுகூலனாம் படி கிருபாசமுத்திரமாய் இருப்பானோ ஒருவன் இறே -ஏவம் வித வைபவனான பெரிய திருவடி எழுந்தருளி இருந்தால் ஸிம்ஹாஸனமுமாய் உலாவி அருளும் போது வாஹனமுமாய் கிஞ்சித்கரித்து லப்த ஸ்வரூபனாய் இருக்கும்

வாஹனம்
விஸ்லேஷ தசையில் வெஞ்சிறைப்புள் (1-4-1)-என்று வெறுக்கும்படியும் அஞ்சிறைப்புள் -(பெரிய திரு 9-2-8) என்றும் சம்ஸ்லேஷ தசையில் ஸ்லாகிக்கும்படியும் அத்தலைக்கு அந்தரங்க வாஹனமாய்
த்வத் அங்கரி சம்மர்த்த கிணாங்க ஸோபியாய் விஜய த்வஜமாயிருக்கிற விநதா தநயன்
ஊரும் புட்கொடியும் அஃதே
-10-2-3-
தாஸஸ் ஸஹா வாஹநம் ஆஸநம் த்வஜ -என்றும் சொல்லுகிற ஸர்வவித கைங்கர்யங்களிலும் அன்விதனாய் -சத்தை பெற்று இருக்கும் என்கிற அர்த்தத்தை ஆஸநம் வாஹநம் -என்கிற பத த்வயமும் பிரகாசிப்பிக்கிறது –
பொரு சிறைப்புள் உவந்தேறும் பூ மகளார் -1-9-3-
திருவிருந்த மார்வன் -நான்முகன் -92-
கருடன் மேற்கொண்ட-மூன்றாம் திரு -57-என்று சொல்லுகிறபடியே இவள் சேர்த்தியிலே இவர்கள் அடிமை செய்யும்படியை தர்சிப்பித்து அனுபவித்தார்கள் இறே -இத்தால் கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்) என்கிற ப்ரமாணார்த்தம் சொல்லப்பட்டது –

வேதாத்மா வாஹநம் -என்கையாலே
ஸ்வ குண அநு குணமாக ஸ்வ ஸ்வ தாமஸ வாஹனங்களையுடைய அதம தேவதா பார்யைகளில் இவளுக்கு உண்டான உத்கர்ஷம் தோற்றுகிறது –
பறவையேறு பரம் புருடா –5-4-2-என்கிறபடியே கருட வாஹனன் என்கை அவனுக்கு சர்வாதிகத்வ த்யோதகமானால் போலே இவளுக்கும் ஸர்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்குமிறே –
பணி பதி சய்யா ஆஸனம் வாஹனம் வேதாத்மா -என்கையாலே அன்யோன்யம் விருத்த ஜாதியரையும் யுகபத் அவிருத்தமாக அடிமை கொள்ளுகிற அகடித கடநா ஸாமர்த்யம் தோற்றுகிறது
புட் கொடியாய் தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே -பெரிய திரு -7-7-9-என்று சர்வாதிகத்வ லக்ஷணங்கள் மூன்றையும் சேர்த்து அனுபவித்தால் போலே -இவரும் காந்தஸ்தே –இத்யாதியாலே விஷ்ணு பத்நீத்வ சேஷ ஸாயித்வ கருட வாஹனத்வங்களை யுகபத் ஏவ அருளிச் செய்தாராயிற்று –

ஆக இப்படி அகில ஸூரி பரி ப்ருடரான சேஷ பெரிய திருவடி யுடைய சேஷத்வம் சொன்ன போதே சேஷாஸநர் முதலான அசேஷ சேஷ வர்க்கத்தினுடைய சேஷத்வமும் கைமுதிக நியாய ஸித்தம் இறே
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா
ஹதா கில கிலேசமலை
-என்கிற ஸ்லோக த்வயத்தாலும் அகில ஸூரி வர்க்கங்களும் அகில ஜெகன் மாதாவான இவள் திறத்தில் அடிமை செய்யும் படியை இவர் தாமே அருளிச் செய்தார் இறே –
ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே
தந் யாஸ்தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே –
இனித்தான் திருமகள் என்று இறே குற்றேவல் செய்வது-
சேஷ சேஷாஸநாதி ஸர்வம் பரிஜனம் பகவதஸ் தத்ததவஸ்தோசித பரிசர்யாயா மாஜ்ஞாப நந்த்யா -என்று இவருடைய ஆஜ்ஞ அனு வர்த்தந பரராய் இறே அசேஷ பரிஜனமும் இருப்பது –

அவன் தான்
ஸஹ பத்ந்யா -(கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் -)என்று பத்நீ ஸஹிதனாய் ப்ராப்த விஷய பரிசர்யை பண்ணும் என்கையாலும் -ப்ரஹ்மாதிகள் ஸதயிதராய்க் கொண்டு தாஸ தாஸீ கணமாய் இருப்பர்கள் என்றும் மேலே சொல்லுகையாலும் இவர்களும் ஸ பத்நீகராய்க்கொண்டு விஷ்ணு பத்னிக்கு அடிமையாய் இருப்பர்கள் என்னுமிடம் ஸித்தம் இறே -இவர்கள் தான் அஞ்சலி விஸோகைகளோடும் காந்தி வாருணிகளோடும் ருத்ர அநு கீர்த்திகளோடும் ஸூத்ரவதியோடும் ஸூதர்சன பத்னி விஜய பத்னியோடும் கூட ஸ குடும்பமாக இறே ஜகத் குடும்பியான ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வது-ஆகையிறே –பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –என்று அருளிச் செய்தது -இவர்கள் தான் பாகவத ஸத்கார தசையிலும் –பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவி -பூசித்து நல்குவது தம் தேவியரோடே சேர விறே

இனி இவர்களிலும் இவர்கள் மஹிஷிகள் -தேவ தேவ திவ்ய மஹிஷிக்கு அந்தரங்க பரிசாரகைகளாய் இருக்கும்படியை –ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் -என்றும்
தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே

இனி பூமி நீளைகளும் இவளுக்கு சேஷ பூதராய் ஸேவித்து இருப்பர்கள் -ஸ்ரீ ஸஹாய உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித-(வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் ஸேவிக்கப்பட்டு விளங்குகிறாள் – )என்றது இறே
மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே
உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)என்று இவளுக்குப் பதச் சாயை போலே பரதந்த்ரர்களாய் இருப்பர்கள் என்றும்
புஷ்பாங்க ராகங்களோ பாதி போக உபகரணங்களாய் -ஸ்தந பாஹு த்ருஷ்டிகள் போலே அவயவ பூதராய் இறே அல்லாத மஹிஷீ வர்க்கங்கள் இருப்பது என்றும் பட்டர் அருளிச் செய்து அருளினார் இறே
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர் -திருவுரு -3-என்னைக் கடவது இறே

ஆகவே பூமி நீளைகள் முதலான மஹிஷிகளும் திருவடி திருவனந்தாழ்வான் முதலான ஸூரி வர்க்கமும் கரை கண்டோர் -திருவாய் -8-3-10-என்கிற முக்தரும் இவளுக்கு சேஷபூதர் என்று சொல்லுகையாலே நித்ய விபூதி யடங்க இவளுக்கு சேஷமாய் இருக்கும் என்னுமிடம் தர்சிக்கப்பட்டது -அநந்தரம் லீலை விபூதியில் அடங்க இவளுக்கு சேஷமாய் இருக்கும் என்னுமிடத்தை அருளிச் செய்ய உபக்ரமித்து -அதில் பிரதமம் லீலா விபூதி காரணமான மூலப்பிரக்ருதி இவளுக்கு சேஷமாய் இருக்கும்படியைத் தர்சிப்பித்து அருளுகிறார் -யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ஜெகன் மோஹிநீ மாயா தே யவனிகா

அநாதி அஞ்ஞானத்தாலே ஜகத்தை மோஹிப்பிக்கக் கடவதாய் -விசித்திர கார்யகராண உபகரணமாகையாலே மாயா ஸப்த வாஸ்யையாய் இருக்கிற மூலப்பிரக்ருதி ஸுந்தர்ய லாவண்ய யவ்வநாத் அநந்த குண கண விஸிஷ்டமான உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹமும் தத் ஆதாரமான திவ்யாத்ம ஸ்வரூபமும் பிரதிகூலர் த்ருஷ்டி கோசாரமாகாமல் மறைக்கைக்குத் திரையாய் இருக்கும் -திரையாவது-அந்தர் வர்த்தி பதார்த்தங்களை பஹிச்சரருக்குத் தெரியாதபடி திரோதானம் பண்ணுவதாய் -ஸூக்ல கிருஷ்ண ரக்த தந்துக்களால் சமைக்கப்பட்டு நாநா வர்ணங்களாலே விசித்ரையாய் அத்யாச்சர்ய விசிஷ்டையாய் இருபத்தொன்று -இதுவும் திவ்ய தம்பதிகளுடைய தியாத்ம ஸ்வரூபத்தையும் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் திவ்ய அவயவங்களையும் அநாஸ்ரிதருக்குக் கோசரியாதபடி அஞ்ஞானத்தை விளைத்துத் திரோதாயகமான திரஸ்கரணியாய் இருக்கையாலும்
லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம்(அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான் -) –என்கிறபடியே குணத்ரய விஸிஷ்ட விசித்திர கர்ம ஸூத்ரத்தாலே கட்டுப்பட்டு விசித்திர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே ஆச்சர்ய தமையாய் இருக்கையாலும் திரையாக நிரூபிக்கிறார் –

ஜகன் மோஹிநீ
பரமாத்மா விஷயமாகவும் பிரத்யாகாத்ம விஷயமாகவும் ஸ்வ விஷயமாகவும் அந்யதா ஞான விபரீத ஞானங்களைப் பிறப்பித்து -அத்தாலே ஜகத்தை மோஹிப்பிக்கையாலே -ஜகன் மோஹிநீ-என்கிறார் –பரமாத்மாவின் இடத்தில் அந்யதா ஞானம் விபரீத ஞானங்களைப் பிறப்பிக்கையாவது -ஸ்ரீ யபதியாய் -நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாண குண விஸிஷ்டனாய் -உபய விபூதியில் நிர்வாஹகனாய் இருக்கிற புருஷோத்தமனை -நிர்விசேஷ சிந் மாத்ர வஸ்து -என்று மாயாவாதம் சொல்லுதல் -சித் அசித் ஈஸ்வரர்கள் மூன்றும் ஏகத்ரவ்ய பரிணாமம் -என்று பேதாபேதம் சொல்லுதல் -கர்ம அனுஷ்டானத்துக்குச் சேதனன் உண்டாகில் பல பிரதானத்துக்குக் கர்மம் உண்டாகில் இனி ஈஸ்வரன் ஏதுக்கு -என்று தத் ஸத் பாவத்தை இசையாது ஒழிதல் -ஏவமாதிகளான புத்திகளைப் பிறப்பிக்கை –
பிரத்யாகாத்மாவின் இடத்தில் அந்யதா ஞானம் விபரீத ஞானங்களைப் பிறப்பிக்கை யாவது அநாத்மன் யாத்ம புத்திர்யா -(அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் -)-என்கிறபடியே தேஹமே ஆத்மா என்னுதல் -இந்திரியாதிகளை ஆத்மா என்னுதல் -தேஹ பரிணாமம் என்னுதல் -அந்ய சேஷம் என்னுதல் -ஸ்வ தந்த்ரம் என்னுதல் -ஏவமாதியான விப்ரதிபத்திகளை விளைக்கை –ஸ்வ விஷயமாக விபரீத தீயை விளைக்கை யாவது -ஸ்வ கார்யமான ஸப்தாதிகளிலே போக்யத்வ புத்தியைக் பிறப்பிக்கை -இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம்மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –

மாயா ஸப்தத்தாலே
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம்-ஸ்வே -4-10 –
(ப்ரக்ருதியை ஆச்சார்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மஹேஸ்வரன் என்றும் அறியக் கடவன்) –என்கிறபடியே மூலப் பிரக்ருதியைச் சொல்கிறது -இது தான் மாயை யாகையாலே இறே ஜகன் மோஹினியாயிற்று –அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ )என்னைக் கடவது இறே -அஞ்ஞான ஹேதுவாய் இறே இதுதான் இருப்பது –
ஆக இப்படி மாயா ஸப்த வாஸ்யையாய் -ஜகன் மோஹினியான மூலப்ப்ரக்ருதி யவனிகா ரூபேண கிஞ்சித்கரித்து சேஷமாய் இருக்கும் என்றதாயிற்று -யவனிகையாகில் அந்தரவர்த்திகளோடு பஹிச் சாரரோடு வாசியற த்ருஷ்ட்டி பிரசரண விரோதத்தாலே அந்யோன்ய அவலோகந ரோதினியாய் இறே இருப்பது -அப்படியே பிரக்ருதியை யவனிகையாக நிரூபிக்கும் போது பிராட்டிக்கும் கர்ம வஸ்யத்வமும் அத்தாலே பகவன் மாயா திரோஹித ஞானத்வமும் அங்கீ கரித்ததாய் விடுமிறே -ஆகையால் இது சேரும்படி என் என்னில்-தச் சேஷபூதையாய் -தந் நியாம்யையாய் -தத் அதீன வியாபாரத்தையுமுடைத்தான ப்ரக்ருதி ஸ்வாமினியாய் நியாமகையுமாய் இருக்கிற இவளுடைய ஸர்வ விஷய த்ருஷ்ட்டி திரோதானம் பண்ண மாட்டாது இறே
மாயயா ஸந் நிருத்த -என்று கொண்டு கர்ம வஸ்யையாக விறே மாயா திரோஹித ஸ்வ ப்ரகாஸையாய் இருப்பது -ஈஸ்வரனைப் போலே அகர்ம வஸ்யையான இவளுக்குத் திரோதானம் கூடாது இறே -ஆகையாலே பிரதிகூலருக்கும் தத் ஸ்வரூப ரூபாதிகள் யாதாவாகத் தோற்றாதபடி திரோதானம் பண்ணுமத்தைப் பற்றத் திரஸ்கரணியாக ரூபித்தவித்தால் ஒரு விரோதமில்லை

ஆக-கீழ் நித்யவிபூதியிலுள்ளார் இவளுக்கு சேஷபூதராய் இருக்கும்படியை தர்சிப்பித்து அருளி -லீலா விபூதி காரணமான மூலப்ப்ரக்ருதி யினுடைய சேஷத்வத்தை அருளிச் செய்து -ததாராப்த அண்டாந்தர் வர்த்திகளாய் தாத்ருஸ ப்ரக்ருதி மோஹிதராய் -கர்ம வஸ்யருமான ப்ரஹ்மாதிகள் ஸ பத்நீகராய்க் கொண்டு இவளுக்கு அடிமையாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் மேல் -ப்ரஹ்ம ஈஸாதீத்யால்

திரை வளைத்து இருக்க வேண்டும்படி லோக விலக்ஷணரான திவ்ய தம்பதிகளைச் சொல்லி ஜாக்ரதஸ் ஸ்வ பதச்ச -என்று கொண்டு திரைக்குள்ளொடு புறம்போடு வாசியற உடலாய் மன்னி வழுவிலா அடிமை செய்து வாழும் அந்தரங்கரைச் சொல்லி
திரை தன்னைச் சொல்லி-திரைக்குப் புறம்பு நின்று ஸேவித்து இருக்கும் அவர்களைச் சொல்லுகிறது –
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் இறே
நீறாடி தான் காண மாட்டாத
கார் செறிந்த கண்டத்தான் எண் கணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி
-என்று அருளிச் செய்தார்கள இறே ஸர்வஞ்ஞரான ஆழ்வார்கள் –
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நாட்டம் ஆயிரத்தானும் தாந்தாம் கற்ற பெற்றியால் வணங்கும் அத்தனை போக்கி கரையருகே நின்று கூப்பிடுகிறவர்கள் கரை காண மாட்டார்கள் இறே –சிவற்கும் திசை முகற்கும் தாம் அறியலாமோ –என்னக் கடவது இறே

ப்ரஹ்ம ஈஸ இத்யாதி
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
–(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் – )என்கிறபடியே திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநே பிறக்கையாலே உனக்குப் புத்ரனான ப்ரஹ்மா தஜ்ஜ்யேஷ்ட புத்ரனாகையாலே உனக்குப் பவ்த்ரனான ருத்ரன் –
ஆதி ஸப்தத்தாலே –ஸேந்தர (ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா )-தளிரொளி இமையவர் தலைவன் -நின்ற சசிபதியை -வெண் பகட்டில் ஒருவன் -என்று இவர்களோடே ஸஹ படிக்கும் படியான நிலைமையுடைய இந்த்ரனையும் –இந்த்ரனுள்ளிட்ட தேவர் குழாத்தையும் சொல்லுகிறது –
ஆக இப்படி விபூத ஸ்ரேஷ்டரான ப்ரஹ்ம ருத்ரர்கள் முதலான தேவதா ஸமூஹம் உனக்கும் தாஸ கணமாய் -தத் பத்னிகளான ஸரஸ்வதீ ருத்ராணீ இந்த்ராணீ ப்ரக்ருதிகளும் தத் தாஸீ பூதரான அப்சரஸ் ஸமூஹங்களும் உனக்கும் தாஸீ கணமாய் தாஸ கிருத்யத்திலே அந வரத அந்வயத்தை உடையராய்க் கொண்டு ஸத்தை பெற்று இருப்பர்கள் -இத்தால் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் –சேலேய் கண்ணார் பலர் சூழ ஸேவித்து இருக்கும்படியைச் சொல்லிற்று ஆயிற்று –

திருமாலைக் கை தொழுவர் –
ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத்
-(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான் )என்றும்
யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் -) என்றும் சொல்லுகிறபடியே காரணத்வ நிபந்தநோத் கர்ஷ தர்சனத்தாலே ஈஸ்வரத்வ சங்காஸ் பதரான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு தச்சங்கா ஆநஸ்பதரான இந்த்ராதிகளோடு வாசியற ஸர்வரும் இவளுக்கு தாஸ பூதர் என்று தோற்றுகைக்காக -ஸூர வ்ரஜ -என்கிறார் -இங்கனே யாகில் (ஸ்ருஷ்ட்டி ஸம்ஹார )ஜகத் காரண பூதராக ப்ரமாண ப்ரஸித்தராய் இருக்கிற இவர்கள் இம்மிதுனத்துக்கு இனமினமாக வழிபாடு செய்வார்கள் என்று சொல்லுகை கீழ்ச் சொல்லுகிற ப்ரமாணங்களுக்கு விருத்தமன்றோ என்னில் -கீழ்ச் சொன்ன ஹிரண்யகர்ப்ப ருத்ர ஸப்தங்கள் யோகத்தாலும் அபர்யவஸாந வ்ருத்தியாலும் நாராயணனை ப்ரதிபாதிக்கிறன வாகையாலே விரோதமில்லை –

ஆகையிறே -ந ப்ரஹ்மா நேஸாந -என்று (ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான் )இவர்களை ஸம்ஹாரியராகச் சொல்லி
அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் )
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயத –
த்ரி யஷச் ஸூல பாணி புருஷோ அஜாயத
-என்று இவர்களை ஸ்ருஜ்யராகச் சொல்லிற்று -ஆகையிறே -ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -என்று நாராயணனே ஸகல ஜகத் காரண பூதன் -என்று உபநிஷத்துக்கள் ஓதிற்று –
நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மூவுலகும் படைத்த யுக்தி மாயக்கடவுள் மா முதலடியே -என்றும்
நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான் -என்றும் இவ்வர்த்தத்தை த்ரமிட உபநிஷத்து தர்சிப்பித்தது இறே
ஹஸ்யோதரே ஹர விரிஞ்சி முகஸ் ப்ரபஞ்ச -என்றும்
விபர் நாபீ பத்மோ விதி சிவ நிதாநம் –என்றும் (த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது)ஆழ்வார்களை அடியொற்றின ஆச்சார்யர்களும் இப்படி தர்சிப்பித்தார்கள் இறே –

இப்படி உபய உபநிஷத் ப்ரஸித்தமான ஜகத் காரணத்வத்திலே -ஸ்திர சர ரசநா தாரதம்யத்திலே ப்ரமாணமான ப்ரூ பங்கத்தையுடையளாய் -ஸ்வர்க்க துர்க்கதியாதிகளைப் பண்ணும் போது ஸ்வ இங்கித பராதீனனாயக் கொண்டு ஸர்வத்தையும் பண்ணும்படி தத் வல்லபையாய் -அவனுடைய -சித் அசித் விதாந வ்யாஸனத்தை ஸார்த்த மாக்குமவளாய் -தத் பத்னியாகையாலே ஸர்வ லோகத்துக்கும் மாதாவாய் -அவன் பிதாவாகையாலே ஸர்வருக்கும் பிதா மாதாக்கள் –மாதவ என்னும்படி (ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள் )திருமால் இறே -ஆகையிறே -திசைமுகனார் தங்களப்பன் -பெரிய திருமொழி -2-2-7–என்றும் –நான்முகற்குத் தந்தை காண்- -11-5-2- என்றும் ப்ரஹ்மாதிகளுக்கும் பிதா வென்றும் –பித்ரு தேவோ பவ -என்கிறபடியே -ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்-நான்முகன் -96- -என்றும் –பரதேவதை யாகவும் அருளிச் செய்தது -இவர்கள் தாங்களும் எந்தை எமக்கு அருள் என நின்றும்-பெரிய திரு மொழி -4-1-4 -என்று பித்ருத்வத்தை அனுசந்தித்து —எம்மை — நின்னுள்ளே தோன்றிய இறைவா –திருவாய் -2-2-10-என்று பித்ருத்வ ப்ரயுக்தமான சேஷ சேஷி பாவ ஸம்பந்தத்தை உணரந்து –இறையாதல் அறிந்து ஏத்திக் கந்த மலர் கொண்டு தொழுது -மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் -அந்தியம் போதிலே திருவந்திக் காப்பிட்டு -சிற்றம் சிறுகாலையிலே வந்து திருப்பள்ளி உணர்த்தி -அலங்கலம் தொடையல் கொண்டு -மா நிதி கபிலை முதலான படி மெய்க்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டு -என்று சொல்லும்படி ஆராத உபகரணங்களை எல்லாம் ஏந்திக்கொண்டு அடியிணை பணிந்து -வண்ணச் சிறு தொட்டில் வரக்காட்டுவது
இடைவிரவிக் கோத்த உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ விடு தருவது
எழிலுடைக் கிண் கிணி தந்துவனாய் நிற்பது –
சங்கின் வலம்புரியும் அங்கைச் சரி வளையும் போத்தருவது
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு தொழுவது
ஓதக்கடலின் ஒளி முத்தின் ஆரமும் சாதிப்பவளமும் சந்தச் சரிவளையும் விடு தருவது
ஆகவிப்படி நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமால்
-பெரியாழ்வார் -4-1-5-என்கிறபடியே இவர்கள் எல்லாரும் சேஷ சேஷி பாவ முறையாலே ஸ்ரீயப்பதிக்கு அடிமை செய்து -என் திரு மார்வன் தன்னை -திருவாய் -7-6-7-என்று தொடங்கி அருளிச் செய்த படியே இவர்கள் தங்கள் மஹிஷிகளோடே விசிஷ்டத்துக்குப் பிரகாரமாய் இருக்கையாலே இருவருக்கும் சேஷபூதராய் இருக்கும்படியைத் திரு உள்ளம் பற்றி-ப்ரஹ்ம ஈஸாதி ஸூர விரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண -என்கிறார் –

தாஸீ கண -லோகத்திலே வனஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்ய ஹேதுவான பரிபூர்த்தியை யுடைய பாரதியைப் பாத சேடியாயுடையவளாயிறே -மலைமகளுக்குத் தலைமகளான கலைமகள் மலர் மகளுக்கு மனை யடிமை என்றபோதே மற்றுள்ளார் அடிமை என்னுமிடம் சொல்ல வேண்டா விறே
த்ரய ஏவாதநா ராஜன் பார்யா -என்கிற நியாயத்தாலே ப்ரஹ்மாதிகள் சேஷபூதர் என்றபோதே தத் பத்னிகளுக்கும் சேஷத்வம் ஸித்தமாய் இருக்க-ஸதயித -என்று விசேஷித்து அருளுவான் என் என்னில் -ப்ரஹ்மாதிகள் பக்கல் சிலருக்கு ஈஸ்வரத்வ சங்கா பிராந்தியாலே தத் பத்நிகள் பக்கலிலும் லஷ்மி யம்சம் பிராந்தி உண்டாய் இருக்குமிறே -தந் நிராகரண அர்த்தம் ஸதயித –என்று விசேஷித்து அருளுகிறார் -அவர்கள் பக்கல் ஈஸ்வரத்வ சங்கா நிராகரண ஸ்ருத்யாதிகளாலே தத் பத்நிகள் பக்கல் லஷ்மி யம்ச வாதமும் நிராக்ருதமிறே என்னில் -தாத்பர்யத்தாலே ஸித்திப்பதிலும் சப்ததஸ் சொல்லுகை மிகவும் ஸ்பஷ்டமாய் இருக்குமிறே -அது தோன்ற இப்படி அருளிச் செய்யக் குறையில்லை -ஆக இப்படி பிரதானரான ப்ரஹ்மாதிகள் இவளுக்கு சேஷபூதரானால் இவ்வருகு உள்ளார் சேஷபூதர் என்னுமிடம் கிம்புநர் நியாய ஸித்தம் இறே –ஆக உபய விபூதியில் இவளுக்கு சேஷமென்று தர்சிப்பித்தாராயிற்று –

இப்படி காந்தஸ்தே புருஷோத்தம-என்று கர்த்ரு அர்த்தத்தையும்
பணி பதி —– தாஸீ கண -என்று கர்மண் யர்த்தத்தையும் உடையவளா கையாலே ஸ்ரீ என்றும் உனக்குத் திருநாம என்கிறார் –ஸ்ரீரித்யேவ ச நாம தே -இத்யாதியாலே
ஸ்ரீயத இதி ஸ்ரீ –என்றும்
ஸ்ரயத இதி ஸ்ரீ –-என்றும் சொல்லுகிற வ்யுத்பத்தி த்வயார்த்தமும் உண்டானாலிறே ஸ்ரீ ஸப்தம் ஸார்த்தமாவது -அன்றிக்கே கீழ்ச் சொன்ன விஷ்ணு பத்நித்வத்துக்கும் உபய விபூதியில் சேஷித்வத்துக்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தேட வேணுமோ -ஸர்வ சேஷித்வ வாசகமாய் உனக்கு அசாதாரணமான திரு நாமமே போதாதோ -என்கிறார் ஆகவுமாம் –
ஸ்ரீ ரித்யேவ ச நாம தே பகவதி –
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண -என்றும்
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் -என்றும்
பொங்கு புணரி -பெரிய திருமொழி -6-10-9-என்றும் அர்த்தத்தைச் சொல்லிப் பின்பு ஸப்தத்தைச் சொன்னால் போலே
இங்கும் ஸ்ரீ ஸப்தார்த்தத்தை முந்துற அருளிச் செய்து -அநந்தரம் ஸ்ரீ ஸப்தத்தை அருளிச் செய்கிறார் –ஸ்ரீரிதி -என்று
தேவோ நாம ஸஹஸ்ரவாந் -என்று பேராயிரம் கொண்டதோர் பீடுடையனானாலும் நாராயணன் என்றும் அவனுக்கு நிரூபகமானாப் போலே –லஷ்மீ என்றும் தொடங்கி அநேகம் திருநாமங்கள் உண்டே யாகிலும் இவளுக்கு அசாதாரண நிரூபக ஸ்ரீ என்கிற திருநாமமாகையாலே –ஸ்ரீரித்யேவ ச நாம தே -என்கிறார் –ஸர்வாதிக வஸ்துவுக்கு வாசக ஸப்தம் இது வல்லதில்லாமையாலே -ஸ்ரீரித்யேவ-என்று அவதரிக்கிறார் –

ஸ்ரீங் ஸேவாயாம் -ஸ்ரு விஸ்தாரே -ஸ்ரு-ஹிம்ஸாயாம் -ஸ்ரு-ஸ்ரவணே -இத்யாதி தாது பேதத்தாலே ஸ்ரீ ஸப்தத்துக்கு அநேக அர்த்தங்கள் உண்டாயிறே இருப்பது (தொண்டு செய்தல் -குணங்களைப் பெருக்குதல் -பாபங்களை ஹிம்ஸித்து-தொல்லை செய்தல் -காதால் கேட்பது )-அவ்வர்த்த பேதங்களைப் பற்ற நிருக்தி பேதங்கள் உண்டாய் இருக்குமிறே -ஆகையாலே –ஸ்ரீ யத இதி ஸ்ரீ -ஸ்ருணாதீதி -ஸ்ரீ -ஸ்ருணோதீதி -ஸ்ரீ -ஸ்ராவயதீதி -ஸ்ரீ -இத்யாதி நிருத்திகள் இவ்விடத்திலே விவஷிதங்கள் –
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் – ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் -ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் -ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -என்று இவைகள் தான் ப்ரமாண ப்ரஸித்தங்களாய் இறே இருப்பது -அகில சேதனருக்கும் ஆஸ்ரயணீயையாய் -தான் அவனை ஆஸ்ரயித்து லப்த ஸ்வரூபையாய் -ஆஸ்ரித தோஷங்களை ஹிம்ஸித்து -அத்வேஷாதி குணங்களை விஸ்தரிப்பித்து -ஆஸீததைன்ய யுக்திகளை ஸ்ரவித்து -இவர்களை அங்கீ கரிக்கைக்கு அனுகுணமான வசனங்களை அவனை ஸ்ரவிப்பிக்கை முதலான ஆகாரங்கள் புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேக்ஷிதங்கள் வாகையாலே இந்நிருக்திகள் எல்லாவற்றையும் ஸ்ரீ ஸப்தத்துக்கு அர்த்தமாக ஆச்சார்யர்கள் அனுசந்திப்பார்கள் –

இப்படி கீழ்ச் சொன்ன ஆகாரங்களாலே அவனுக்கும் பூஜ்யையாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –பகவதி -என்று –தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா ஸமந்வித -என்று பகவச் சப்தம் பூஜ்ய வாசியாய் -அகில சேதனருக்கும் பூஜ்யனான அவன் தனக்கும் பூஜ்யையாய் இருக்கும் என்றபடி –பகவந் நாராயணனுக்கு பூஜ்யையாகையாலே இறே -பகவதீம் என்றும் அருளிச் செய்தது -ஆகையிறே –நன் மார்பின் மேலும் -என்று அர்ச்சிக்கிறது -இப்படி ஸ்வரூபத்தாலும் குணத்தாலுமாயிருக்கும் ஞான ஸக்த்யாதி குணங்களையுடையளாய் ஹேய குண ரஹிதையுமாய் இருக்கையாலே –பகவதி -என்கிறார் –
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் – முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம் சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும் பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது – பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன – அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் – கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன)ஹேய குண ராஹித்ய ஸத் குண ஸாஹித்யங்கள் இரண்டும் பகவச் ஸப்த வாஸ்யங்களாய் இறே இருப்பது -ஆகையிறே -ஷண்ணாம் பக இதீரணா -என்று பகவச் ஸப்தத்துக்கு ஞாநாதி குணங்கள் அர்த்தமாகவும் -அந் -என்கிற பதத்துக்கு ஹேய குண ராஹித்யம் அர்த்தமாகவும் பட்டர் வியாக்யானம் செய்தருளிற்று -அந் -என்கிறது நஞர்த்தமாய் இருக்கிறது எங்கனே என்னில் -ந என்கிறவிடத்தில் ந் அ என்ற பிரிவு உண்டாய் அதிலே ந் என்கிறது ப்ரக்ருதியாய் அ என்கிறது ஸூக முக உச்சாரணமாய் இறே இருப்பது -இவ்விடத்தில் அந் என்று முன் பின்னாய் பின் முன்னாய் இருக்கிறது -சாந்தஸ பிரயோகம் இருக்கும்படி -இவ்விடத்தில் -பஸ்யக -காஸ்யபோ பவதி என்றாப் போலே -என்று இறே அருளிச் செய்தது -ஆகையாலே ஹேய குண ராஹித்ய ஸத் குண ஸாஹித்யங்கள் பகவச் சப்த வாஸ்யங்கள் என்னத் தட்டில்லை

இவ்விடத்தில் ஹேயமாவது -ஆஸ்ரித தோஷ குண ஹானிகள் பார்த்து அவர்களை உபேஷிக்கை –தத் ராஹித்யமாவது -அவையிரண்டும் அடுகுவளமாக அங்கீ கரிக்கை -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகளை அபராதமே பற்றாசாக அங்கீகரித்து ரக்ஷித்தாள் இறே –த்ராஹி த்ராஹி -(நாதனான பகவானை நோக்கி த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-)என்ற அண்டஜ அதமனையும் -காகாசூரனையும் அங்கீகரித்துத் திருவடிகளிலே தலையாக ரஷித்ததும் உண்டு இறே –குணங்களாவன ஞான சக்த்யாதிகள் –தத் ஸாஹித்யமாவது -அவை ஸ்வ ரக்ஷண ஹேதுவாய் தன் பக்கலிலே சுவறி விடுகை யன்றிக்கே பர ரக்ஷணத்துக்கு உறுப்பாகப் புற வெள்ளமிடும்படி ஸம்பன்னமாய் இருக்கை -இவற்றை ஸ்வ ரக்ஷணத்துக்கு உறுப்பாக்காமல் –தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் – (ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும் -) என்றிருந்து–ஸீதோ பவ -என்றும்(யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தப யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹநூமத-ஸூந்தர -53-29-எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு -ஏக பத்நீத்வ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக -) பவேயம் சரணம் ஹி வ -என்றும் (ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்)என்றும் பர ரக்ஷணத்துக்கு உறுப்பாக்கினாள் இறே -இவற்றை குணம் என்னாலாவது -பரார்த்தமான போதிறே -ஆகையிறே –குணகணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே –சகலம் ஸம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த (பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63- சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான
சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்-)-என்று அருளிச் செய்தது –இவன் குணங்களுக்கு வ்யாவர்த்யர் தத் வ்யதிரிக்தர் -இவள் குணங்களுக்கு வ்யாவர்த்யன் அவன் -அவன் குணங்கள் பும்ஸ்த்வ ப்ரயுக்தமான ஸ்வா தந்தர்ய விசிஷ்டமாய் பித்ருத்வ ப்ரயுக்தமான ஹித ஸ்ரோதோ வ்ருத்தியாலே கலங்கின போதுண்டான பிரதாபத்தாலே துராசதமாய் -அத ஏவ புருஷகார சாபேக்ஷமாயிருக்கும் –ஆகையிறே இவள் குணங்களாலே தத் கோஷ்ட்டி லகுதரை யாயிற்று –

ஆக இப்படிப் பாபமே பச்சையாக அங்கீகரிக்கைக்கு ஹேதுவாய் பரார்த்த ஏக வேஷமான ஞான சக்த்யாதி கல்யாண குண பூர்த்தியைப் பகவச்சப்தம் சொல்லுகிறது –ஞானாதி ஷட் குண மயா –என்றும்(ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள் -)என்றும்-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை) -என்னக் கடவது இறே –ஸ திசது பகவாந சேஷ பும்ஸாம் -(இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக -)-என்றும் –ஸ்மார்த்தவ்யோ பகவான் -(மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்)என்றும் –மோததே பகவான் – (அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்) என்றும்-பகவன் நாராயண -என்றும் அவனை நிர்த்தேசித்தாப் போலே தத் துல்ய சீலையான இவளை வ்யவஹரிப்பதும் பகவதீ என்று இறே -இந்தப்பூர்த்தி தான் கீழ் –புருஷோத்தமன் என்று சொன்ன பூர்த்திக்கு அடியாயிறே இருப்பது –பகவன் நாராயண -த்வயம் -என்றிறே அவன் பூர்த்திக்கு அடியுடைமை –ஸ்வதஸ் ஸ்ரீ –-இத்யாதி –

(ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)

இப்படிப்பட்ட அதிசய சாலியான உன்னை யதாவத்தாக ஸ்தோத்ரம் பண்ணப்போமோ -என்கிறார் –த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று –த்வாம் -உக்தத்ப்ரக்ரியையாலே விஷ்ணு பத்னியாய் தத் இதர ஸர்வ ஸ்வாமிநியாய் -தத் அனுரூப அசாதாரணமான நாம நிர்திஷ்டையாய் -பகவத் விலக்ஷண ஞான சக்த்யாதி கல்யாண குண பூஷிதையாய் -இவ்வாகாரங்களினாலே ஸகல உபநிஷத் ப்ரஸித்தையான உன்னை –த்வாம் வயம் கதம் ப்ரூம-ப்ரஹ்ம பாவனைக நிஷ்டரான ஸநகாதிகளுக்கும் உபய பாவநா நிஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம ப்ரதிபாதகங்களான வேதங்களுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத ப்ரபாவத்தை யுடைய உன்னைப் பரிமித ஞான சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்கிறார் –
ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-) -என்றும்
ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் – )-என்றும் –உத்பாஹுஸ் த்வாம் உபநிஷதஸாவாஹ நைகா நியந்த்ரீம் -என்னைக் கடவது இறே

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க


நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் திருமால் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9- என்றும் –மா மலராள் வார் சடையான் என்றும் இவர்கட்க்கு எண்ணத்தானாமோ –மூன்றாம் திரு -97-என்றும் ப்ரஹ்மாதிகளும் இவளுடைய வைபவத்தை ஸ்தோத்ரம் பண்ண அஸமர்த்தர் -என்று அருளிச் செய்தார்கள் இறே -மேலே மேலே புருஷர்களைக் கல்பித்து உத்ப்ரேஷித்த அளவிலும் ஓரொரு குணங்களை அவதி காண ஒண்ணாமையாலே யதோ வாசே நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந -(எந்த ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்படமாட்டான் )–என்று வேதங்களும் நிவ்ருத்தமாம்படி நிரவதிகமான ஆனந்தத்துக்கும் ஹேதுபூதையாய் -சுலகித பகவத் வைஸ்வாரூப்ய அனுபாவையுமான இவளுடைய பிரபாவம் பரிச்சேதிக்க ஒண்ணாது என்னுமிடம் சொல்ல வேண்டாவிறே –

வயம்-என்று ஆத்மநி பஹு வசனம் –என்னுடை யாருயிரார் என்னுமா போலே ஷேப உக்தியாகவுமாம் –மஹ்யம் நமோ அஸ்து கலயே -என்று தம்மைக் கர்ஹித்துக் கொண்டார் இறே –
ஸ்தோதும் கே வயமித்யதச்ச ஜக்ருஹு ப்ராஞ்சோ விரிஞ்சாதய -என்னக் கடவது இறே
யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்) அதவா
வயம் -மஹார்ண வாந்தர் நிமஞ்ஜதோராணு குலாசலயோ கோ விசேஷ-என்கிறபடியே வேதங்களுக்கும் சதுர்முகப் பிரமுகருக்கும் –அபி மே ஜென்மம் சதுர்முகாத்மநா என்றும் அவர்களைத் த்ருணீ கரித்திருக்கிற தமக்கும் அந்யோன்யம் தாரதம்யம் உண்டேயாகிலும் இவளுடைய மஹிமார்ணவத்திலே மக்நராமிடத்தில் ஒரு வைஷம்யம் இல்லாமையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு வயம் என்கிறார் ஆகவுமாம் –மாதங்கச்ச மஹான் இத்யாதி -கீழ் உக்தரானவர்களோடு ஒருவராய்ப் பரிச்சேதிக்க மாட்டாமை அன்றிக்கே எல்லாரும் கூடி ஏக கண்டராய்ப் பேசினாலும் மேல் எல்லை காண ஒண்ணாது என்று வயம் என்கிறாராதல் –
த்வாம் வயம் -அவன் எவ்விடத்தான் யான் யார் -என்னுமா போலே -ஸ்தோத்ர ஸ்தோதவ்ய கத யுத்க்ர்ஷ அபகர்ஷங்களுடைய எல்லை நிலத்தை ஸூஸிப்பைக்காக த்வாம் வயம் -என்கிறார் –(திருவல்லவாழ் கோனாரை அடியேன் என்னுமா போல் )அவரை நாம் –அவ்வண்ணத்தவர் என்னுமத்தனை என்றால் போலே -த்வாம் வயம் கதம் ப்ரூம -என்கிறார் –

ஆக இத்தால் -பகவத் விலக்ஷண ஞான ஸக்த்யாதி கல்யாண குண பூர்ணையாய் -குணங்களுக்கு வாசகமாய் -ஸர்வ உத்கர்ஷ ப்ரகாசகமான திருநாமத்தை யுடையையாய் சதயிதரான ப்ரஹ்மாதிகளை தாஸ தாஸீ கணமாக உடையயாய் -அண்ட காரணமான மூலப்பிரக்ருதி நிர்வாஹகையாய் -விஷ்ணு பத்நீ என்கிற மேன்மையை யுடையயாய்-இவ்வாகாரங்களாலே ஸ்ருதி ஸ்ம்ருதி ப்ரமாண ப்ரஸித்தையாய் இருக்கிற உன்னைப் பரிமித ஞான சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்று பிராட்டியுடைய பெருமையைத் தர்சிப்பியா நின்று கொண்டு –ஸ்துமஹே வயம் நிமிதி தம் ந சக்னுமே -என்றால் போலே ஸ்தோத்ரா ஷேப புரஸ் ஸரமாக ஸ்தோத்ர அந்நிவ்ருத்தராகிறார் -இஸ் ஸ்லோகத்தால் கடவல்லி யுபநிஷத் ஸித்தமான த்வயத்தில் ஸ்ரீ ஸப்தத்தை ஸார்த்தமாக அனுசந்தித்து அருளினார் யாயிற்று –

அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும
–ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

—————

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே தாந்தே தயாந்தே விதன்–2-

லோகைகேஸ்வரி -லோகத்துக்கு ஒரே ஈஸ்வரியாய் இருப்பவளே
லோக நாத தயிதே-லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு பிரிய மஹிஷியாய் இருப்பவளே(பந்தார் விரலி-விபூதியையும் விபூதிமானையும் அணைத்துக் கொண்டு )
தாந்தே-கருணா கல்பவல்லியே
யஸ் யாஸ்தே -எந்த உன்னுடைய
நிரவதிம்-அளவற்றதும்
ஸ்வத நித்யாநுகூலம் –இயற்கையாகவே பகவானுக்கு எப்போதும் அனுகூலமாய் இருப்பதுமான
மஹிமாநம் -பெருமையை
பிரபு த்வத் வல்லபோ அபி -ஈஸ்வரனான உன்னுடைய வல்லவனும்
ஆத்மந இவ -தன்னுடைய பெருமையைப் போலே
இயத்தயா-இவ்வளவு என்று
மாதும் ந அலம் -அளவிட்டு அறிய மாட்டானோ
தாம் த்வாம் -அப்படிப்பட்ட உன்னை
தாஸ இதி -தாசன் என்றும்
ப்ரபன்ன இதி ச -சரண் அடைந்தவன் என்றும்
தே த யாம் விதன் அஹம் -உன்னுடைய கருணையை அறியும் நான்
நிர்ப்பய–பயம் அற்றவனாய்
ஸ்தோஷ்யாம் –ஸ்துதிக்கிறேன்

அவதாரிகை -(ஸ்தோத்ரம் பாடமாட்டேன் என்றும் இருந்த ஆளவந்தார் -போர் புரியமாட்டேன் என்ற அர்ஜுனன் போல்-அது ஷத்ரிய கர்மயோகம் -இது இவருக்கே வைதிக கர்மயோகம் )
ஜ்யேஷ்டானாகையாலே ராஜ்ய தாரங்களைப் பறி கொடுத்துச் சரணமடைந்த ஸூக்ரீவனைப் போலே -ஜ்யேஷ்ட புத்ரன் கையிலே அவை இரண்டையும் –பொய்ச் சூதில் தோற்க்கையாலே -பொறை யுடை மன்னரான பாண்டவர் தம்முடைய பாஞ்சாலியை -மறுக்கி வல் வலைப்படுத்துகைக்கு -அரசர் தம் அரசற்கு இளையவனான துச்சாதனன் அவ்வணியிழையைச் சென்று என் தமக்கு உரிமை செய் என்று சுரி குழலையும் துகிலையும் பற்றி வர வீர்க்க -கிருஷ்ணயையும் கோ கிரஹண ப்ராப்த்தையாய்க் கொண்டு -அஸூத்தையாய் ஏக வஸ்த்ரையான என்னை குருக்களுடைய முன்னே நயிப்பிக்கை அந்யாயம் காண் -என்று கூப்பிடச் செய்தேயும் கலை தலைகளைக் கைவிடாமையாலே -கைவிடும்படி ஸம் ப்ராப்தமான மஹா ஆபத்திலே –ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – )
எங்குற்றாய் எம்பெருமான்
-இவ்வவஸ்த்தையை ஆபன்னையாய் அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -உன்னுடைய ஆஸ்ரித ரக்ஷண த்வரை எங்கே போயிற்று -சங்கு சக்ர கதா பாணே –இத்யாதி -ரக்ஷண பரிகரங்களான சங்கு சக்ராதிகளைத் தரித்துக் கொண்டு -இங்கே அடுத்து அணித்தாக வந்து நின்று ஆஸ்ரிதரை நழுவ விடாதவனுமாய்-இடக்கை வலக்கை அறியாத அஞ்ஞருக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸர்வ ஸூ லபனாய் ஆபன்னரானாருடைய ஆர்த்தியை ஹரிக்கும்படி அலர்ந்த செந்தாமரைப் பூப் போலே இருக்கிற திருக்கண்களை யுடையையாய் இருக்கிறவனே –சரணாகதையான என்னை ரக்ஷிக்க வேணும் என்று ஆக்ரந்திக்கும் படி அபிமான பங்கமாகப் பரிபவிக்க அதற்காக அவர்கள் தங்குமூராகப் புக்கைந்து வேண்டிப் பெறக் கொடாமையாலே ஊரொன்று வேண்டிலும் -கத்தக் கதித்துக் கிடந்த பெரும் செல்வம் ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாதே தன் குடி கெடும்படி தானே மண்ணாள்வானான கொத்துத் தலைவன் -ஸூஸ்யக்ரமும் ( குண்டூசியும் கூட )கொடேன் என்றும் தள்ளி விடுகையாலே ஒன்றும் பெறாத உரோடத்தாலே -பார் ஒன்றிப் பாரதம் கை செய்தும் ஸ்தான ப்ரஷ்டராய்த் தளர்ந்து பறி கொடுத்த ராஜ்யத்தை பிராபிக்கைக்கு -பற்றலர் வீயக்கோல் கையிலே கொண்டு பார்த்தன் செல்வத்தேர் ஏறு சாரதியாய் -கழல்கள் சலங்கைக் கலந்து எங்கும் ஆரவாரிப்ப கையும் மாக்கோலும் பிடித்த கடிவாளக்கயிறும் விரித்த தலையுமாய்க் கொண்டு விநயம் தோற்ற முன்னின்றானை அர்ஜுனனும் ஹே கிருஷ்ண என்றழைத்து உபய ஸேனா மத்யத்திலே ரதத்தை ஸ்தாபி என்று பாரித்துக் கொண்டு தர்ம ஷேத்ரத்திலே(தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள் -) -சினப்போரிலே -யுயுத்ஸவ -என்னும்படி உத்யுக்தனாய் -இத்தைக்கொண்டு மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலருமாய்க் கொண்டு -பாரித்து எழுந்த படை மன்னனான அந்தகன் சிறுவனைக் கண்ட இந்திரன் சிறுவனும் -அஸ்தானே ஸ்நேஹ காருண்ய தர்ம அதர்மபி யாகுலனாய் பந்துக்கள் பக்கல் வத பீதியாலே -கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு -ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை )என்றும் ந காங்ஷே விஜயம் கிருஷ்ண- ந ச ராஜ்யம் ஸுகாநி ச-1-32–என்று கொண்டு -விஸ்ருஜ்ய சைரம் சாபம் (ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்)-என்னும்படி போர்ப்படைகளையும் விட்டு ந யோத்ஸ்யாமி (ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான் )என்று யுத்தாந் நிவ்ருத்தனானபடியைக் கண்டு -மாம் -என்று (ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66)தன் ஸுலப்யத்தைக் காட்டி -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி (நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.)யுத்தே ப்ரவர்த்திப்பித்த கிருஷ்ணனைப் போலே- விஸ்மார்ய தஸ்யாத்மகம் -என்கிறபடியே (சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?) பிராட்டி விஷயத்திலே அநாதி காலம் இழந்த அனுபவ பரீவாஹ ரூப வாசிக கைங்கர்யமாகிற ஸ்தோத்ரத்திலே பாரித்துக் கொண்டு உத்யுக்தராய் விஷய வைலஷண்யத்தைப் பார்த்தவாறே -வேதங்களாலும் வைதிக புருஷர்களாலும் எல்லை காண ஒண்ணாதபடி அபரிச்சேதயமாய் இருக்கையாலும் -தத் வைலக்ஷண்ய அனுரூப ஸ்தோத்ர கரண ஹேதுவான ஞான சக்திகள் தமக்கு இல்லாமையாலும் -ஸ்தோத்ர ஸ்தோதவ்ய கத உத் கர்ஷ அப கர்ஷங்களுடைய ஸீமா பூமியை அனுசந்தித்து இப்படிப் பூர்ண விஷயத்தைப் புல்லியரான நாம் பேசில் -மாசூணாதே -மழுங்காதே –என்கிறபடியே அவத்யத்தை விளைப்பதில் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை இழந்து கடந்து நிற்கையே கர்த்தவ்யம் என்று கருதி -அழுக்கு உடம்புடன் எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் பாவியேன் பிழைத்தவாறு என்றும் அஞ்சினேற்கு –என்கிறபடியே பீத பீதராய்த் தம்மை கர்ஹித்துக் கொண்டு த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று கொண்டு ஸ்தோத்ராந் நிவ்ருத்தரான இவரை

பெரிய பிராட்டியார் நமக்கு மேன்மை ஸ்வரூபமானவோபாதி நீர்மையும் ஸ்வரூபம் காணும் -ஆனபின்பு பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவாய்க் காணும் நாம் இருப்பது -விசேஷித்து மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலும் –கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் (கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவ பரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப் பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்த வார்த்தைகளே யாகும் )-என்கிற நியாயத்தாலும்-இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே –என்கிறபடியே உம்முடைய மழலைச் சொல் போக்யமாகக் காணும் இருப்பது -என்று இவருடைய வாக் வ்ருத்தி ரூப ஸ்தோத்ரத்தாலே ஸ்தோத்ர கரண விரோதியான அவித்யாதிகள் நசித்து ஸ்தோத்ர கரண ஹேதுவான ஞானம் சக்த்யாதிகள் உண்டாய் நிர்ப்பயராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராம்படி –அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினார் –என்கிறபடியே அபய ப்ரதாந பூர்வகமாக -மயர்வற மதிநலம் அருளினன் –என்கிறபடியே இவர் பக்கலிலே கருணா கடாக்ஷத்தைப் பண்ண பூ வளரும் திருமகளால் அருள் பெற்று நிவ்ருத்த விரோதிகராய் ப்ராப்தமான பரபக்த்யாதிகளை உடையராய்க் கொண்டு தத் ஸ்வரூப ரூபா -குண விசேஷங்களை விசதமாக சாஷாத்காரித்து அனுபவ பரிவாஹ ரூபமான வாசிக கைங்கர்யத்திலே ப்ரவ்ருத்தராகிறார்

கீழ் பரத்வ அனுசந்தானத்தாலே பயப்பட்டு நிவ்ருத்தரானார் -இங்கு கீழ் ஸ்தோத்ர ஆரம்ப அபேஷ சம்பந்த ஞானம் பூர்வகமாக சரணம் புகுந்து ஹேதுவாகச் சொன்ன ஸ்தோதவ்ய குண உத்கர்ஷத்தை த்ருடீ கரியா நின்று கொண்டு ததுபசித ஸுலப்ய விசேஷ அனுசந்தானத்தாலே பயம் சமித்து ஸமாஹிதராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராகிறார் -என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே -என்கிறபடி விஷய வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலும் -ஸ்வ தோஷ அனுசந்தானத்தாலும் ஸ்தோதாக்களுக்கு ஒரு பயம் ஜனிக்கும் -அந்தப்பயம் ஸுலப்யாதி குண அனுசந்தானத்தாலே சமிக்கவும் கண்டோம் இறே -துரந்தஸ்யாநாதே -என்று தொடங்கி ஸ்வ தோஷ அனுசந்தானத்தாலே பயப்பட்டு –தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்று பகவத் குண அனுசந்தானத்தாலே அப்யங்கதானார் இறே –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –) -என்னக் கடவது இறே

(போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.–89-)

இனித்தான் ஸ்தோத்ர இச்சை உண்டானாலும் -ஸ்தோது மீஹாமஹே யுக்தாம் பாவய பாரதீம் (ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம் பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம் லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் -ஸ்ரீ ஸ்தவம் –2-பெரிய பிராட்டியாரே –எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை –அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் –உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் –பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு ––நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும் -இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று-கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு –இலக்காகக் கடவோம்)-என்றும் ஸூக்திம் ஸமக்ரயது நஸ் (ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ: ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை: வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம் கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–குணரத்னகோசம் 7–ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.-ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.-அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும். இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை, இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும். இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்)என்றும் சொல்லுகிறபடியே விஷய வைலக்ஷண்ய அனுகுணமாக அநாக்ராதாவத்யமாய் அநிமிஷ நிஷேவ்யமான ஸப்த சந்தர்ப்ப ஹேதுவான ஸம்யக் ஞான பகுதிகள் பெரிய பிராட்டியாருடைய கருணா கடாக்ஷத்தாலே அல்லது ஸித்தியாது இறே-யம் த்வம் தேவி நிரீக்ஷஸே –ஸ புத்திமான் (ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )-என்னக் கடவது இறே -ஆகையால் ஸ்வ விஷய ஸ்தோத்ரத்திலே பாரித்துக் கொண்டு ப்ரவ்ருத்தரானபடியையும் -விஷய வைலக்ஷண்ய அனுரூப ஸ்தோத்ர கரண ஞான சக்திகள் தமக்கு இல்லாமையால் ஸ்தோத்ராந் நிவ்ருத்தரானபடியையும் கண்டு இவர் பண்ணுகிற ஸ்தோத்ர ஸ்ரவண கௌதுகத்தாலே யதா ஸ்தோத்ரம் பண்ண வல்லராம்படி இவர் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி யருள -அத்தை அறிந்து காருண்ய ரூபையான இவள் கருணைக்கு இலக்காய் -தாது பிரஸாதான் மஹிமாந மீஸம் தமக்ரதும் பஸ்யதி வீத சோகா(அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்) -என்றால் போலே தாந்தே மயி தே தயாம் விதந்தே மஹிமாநம் நிர்ப்பயஸ் ஸ்தோஷ்யாமி -என்று கொண்டு விஷயத்தை மாறுபாடுருவப் பேசுகிறேன் என்றும் ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் —

இப்படிப் பெரிய பிராட்டியாருடைய ப்ரஸாதம் பெற்றாராகில் இவர் இப்போது விசேஷமாக அறிந்து பேசுகிறது என் என்னில் -கீழ் வேதங்களும் ப்ரஹ்மாதிகளும் பேச நிலமல்ல என்றார் -இங்கு எங்களுக்கும் மணாளனாய் ப்ரஹ்மாதிகளுக்கும் ஜனகனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ சக்தியாய் இருக்கிற ஸர்வேஸ்வரனுக்கும் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாது என்கிறார் –யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு-நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத-என்று -இதுவாய்த்து இவர் பிராட்டி ப்ரஸாதத்தாலே பெற்ற விசேஷம் -இவ்விசேஷ கடாக்ஷம் இல்லாதவர்-இவள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறியாமல் பகவத் அந்தரங்க விசேஷணத்வ த்யோதகமான அர்த்தமாக –பகவத் சத்தை-அஹந்தை -பிரபை -இச்சை -சக்தி -வித்யை என்றும் -ப்ரக்ருதே புருஷாச் ச அந்நியஸ் த்ருதீயோ நைவ வித்யதே —என்கிறபடியே ஸ்ரீ ஸ்ரீ சர்களுடைய ப்ரக்ருதி புருஷ ரூப விபக்த விபூதி விசேஷ அபிமானத்வ த்யோதகமாக மூலப்ப்ரக்ருதிரீஸாநி -என்றும் -சொல்லுகிறவற்றைக் கொண்டு- ஸ்வரூபத்தை அசேதனமாக ப்ரமிப்பது -கர்ம வஸ்யை என்பது -ஸர்வாதி (ஸத்தாதி)விசிஷ்ட பகவான் தானே ஸ்ரீ என்பது ஸ்திரி ரூப நித்ய விக்ரஹாந்தர விசிஷ்டனான அவனே இவள் என்பது -தைத்ய மோஹனார்த்தமாகப் பெண்ணாக அமுதூட்டின வடிவு போலே ஸ்வயமேவ போகார்த்தமாகப் பரிக்ரஹித்த காதாசித்க காந்த விக்ரஹ விசிஷ்டனானவனே ஸ்ரீ என்பதாய்க் கொண்டு இப்புடைகளிலே பகவத் ஐக்யம் சொல்லுவது -அநித்யை என்பதாய்க் கொண்டு அநர்த்தப்படுவர்கள் -ஆஹுந் வேதா ந மாநம் -இத்யாதி

(யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –)

ஆஹு: வேத ந அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது)

இவர் அங்கன் அன்றிக்கே திவ்ய சஷுஸ்ஸைப் பெற்றவராகையாலே தத் ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறிந்து –பரம சேதனை என்றும் –அகர்ம வஸ்யை என்றும் ப்ரக்ருதியாதி வ்ருத்தை என்றும் –பகவத் ஸ்வரூப பின்னை என்றும் நித்யை என்றும் தத் அந்தர் அபிமதை என்றும் ஸர்வ உத் க்ருஷ்டை என்றும் சர்வேஸ்வரனாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத மஹிமாவை யுடையவள் என்றும் நிர்ணயித்து அனுபவிக்கிறார்

மநஸி விலஸதாஷ்ணா பக்தி சிந்தாஞ்சநேந ஸ்ருதி ஸ்ரஸி நீகூடம் லஷ்மி தே வீக்ஷமாணா -நிதிமிவ மஹிமாநம் புஞ்சதேயே அபி தன்யா ந நு பகவதி தைவீம் ஸம் பதம் தே அபி ஜாதா —
பகவதி -ஸகல கல்யாண குண சம்பன்னையாய் இருக்கிற
ஹே லஷ்மி -வாரீர் பெரிய பிராட்டியாரே
தந்யா -தனம் ப்ராப்தா தன்யா –என்கிறபடியே தேவரீர் கடாக்ஷ விஷயத்வ ரூப பாக்யத்தை உடையவர்களாய் இருக்கிற
யே அபி -யாதொரு புருஷர்கள் -யே அபி-என்கிற இத்தால் அவர்களுடைய அதிசயம் வாசா மகோசரம் என்று ஸூசிதம்
பக்தி சித்தாஞ்சநேந -உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் அநிதர ஸாதாரண ப்ராவண்யமாகிற கூடாரத்த ப்ரகாசக சித்தாஞ்சன விசேஷம் போலே இரா நின்றும் –
மநஸி விலஸதா -அத ஏவ ஹிருதயத்திலே ப்ரகாசியா நின்றுள்ள

அக்ஷணா -திருஷ்ட்டியாலே -ஞானக் கண்ணாலே என்றபடி
ஸ்ருதி ஸ்ரஸி -உபநிஷத்துக்களிலே -ஜாத்யேக வசனம் -ஸ்ருதி ஸ்ரஸ்ஸூ என்றபடி
நி கூடம் -அத்யந்த வேத ரஹஸ்யமாகையாலே மறைக்கப்படா நின்றுள்ள
தே மஹிமாநம் -உன்னுடைய ஸ்வரூபாதி ஐஸ்வர்யத்தை
நிதிமிவ வீக்ஷமாணாஸ் ஸந்த – ஆபத்துக்கு உறு துணையாம் சேம வைப்புப் போலே சாஷாத் கரியா நின்று கொண்டு
புஞ்சதே-அனுபவிக்கிறார்களோ
தே புருஷா தைவீம் ஸம் பதம் -அவர்கள் மோக்ஷ ஹேதுபூத மாய் தேவ சம்பந்த த்யோதமான குணங்களை யுடையவர்

திருவுக்கும் திருவாகிய என்றும் –ஸ்ரீ ஸ்ரீய என்றும் –அகலகில்லேன் என்றும் -நீ தண்ணீர் தண்ணீர் என்னும்படியான அந்தப் பகவத் விக்ரஹமாகிற ஐஸ்வர்யத்தை அபி சாஷாத்காரித்து அபிஜாதா தநு -அனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் அன்றோ –அபிமுகீ க்ருத்ய ஜாதா –உத் பன்னா பவந்தீதிஷே –என்னக் கடவது இறே

தே -என்று யுஷ்மச் ஸப்த சம்போதாதைகளாலே சேதனத்வமும் ப்ரஹ்மேஸாதி -இத்யாதியாலே கர்ம வஸ்ய தாதாம்யா பாவமும் –மாயா தே யவனிகா -என்று ப்ரக்ருதேர் அந்யதவமும்-காந்தஸ்தே புருஷோத்தம-என்று வ்யதிகரணத்தாலே -பகவத் ஸ்வரூப பின்னத்வமும் -ஸர்வாணி ரூபாணி காட உப கூடாநி -என்று நித்யத்வமும் –லோக நாத தயிதே -என்று பகவத் அபிமதத்வமும் –லோக ஏக ஈஸ்வரி -என்று ஸர்வ உத் க்ருஷ்டதையும் –ப்ரபுர் மாதுர் ந அலம் -என்று அபரிச்சேத்யத்வமும் -இவரால் ப்ரதிபாதிக்கப் பட்டது இறே –
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ் -என்றும் விஷ்ணு பத்னீ (அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்) -என்றும் பர்த்ரு பத்னிகளுடைய ஸ்வரூப பேதமும் –பத்ம ப்ரியா (பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 –பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்) என்றும் தொடங்கி பரம சேதனத்வமும் –பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ (ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்) -என்று பிராக்ருதேர் அந்யத்வ அகர்ம வஸ்யத்வ பகவத் அபிமதத்வாதிகளும் –நித்யைவைஷா -என்று நித்யத்வமும் –ஸர்வ உத் க்ருஷ்டா ஸர்வ மயீ (ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்)-என்று உத் க்ருஷ்டதையும் –வாசஸ் பரம ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந் நியதஸ் ஸ்ரீயம்(வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்) -என்று அபரிச்சேத்யத்வமும் ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தங்களாய் இறே இருப்பது –தேவி ஸ்ருதிம் பகவதீம் (தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ: த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10–தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர். இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் – இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.)-என்று பட்டரும் அருளிச் செய்தார் இறே -ஏதாத்ருஸ ப்ரமாண ப்ரஸித்தி தோற்ற -யஸ்யாஸ்தே –என்கிறார் –

தே -என்று கீழ்ச் சொன்ன ஆகாரங்கள் எல்லாம் நிறம் பெறும்படி அதி விலக்ஷணமாய் -தத் ஆஸ்ரயமான அசாதாரண ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் –உணர் முழு நலம் –என்கிறபடியே கட்டடங்க விஞ்ஞான கநமாய் பிரஞ்ஞானகநமாய் -பகவத் ஸ்வரூபம் போலே –ஞான ஆனந்த மய (-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோஅசேதன பரமாத்மா இருவராலும் வேறுபட்ட ஆத்மா என்றபடி–) -என்கிறபடி ஞான ஆனந்த பிராஸுர்யத்தையுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் -ஆழ்வார் யவன் -அவன் என்று பகவத் ஸ்வரூபத்தை யத் தச் ஸப்தங்களாலே அனுபவித்தால் போலே -இவரும் பிராட்டியுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தை –யஸ்யாஸ்தே -என்று யத் தச் ஸப்தங்களாலே நிர்த்தேசித்து அனுபவிக்கிறார் –
தே -படர்க்கையாக அன்றிக்கே முன்னிலையாக அருளிச் செய்கையாலே இவர் பண்ணுகிற ஸ்தோத்ர ஸ்ரவணத்திலே தனக்குண்டான கௌதுகம் தோன்ற முன்னே வந்து முகம் காட்டி சாஷாத் கரிப்பித்தபடியும் தோற்றுகிறது -குருகைக் காவலப்பன் யோகத்தில் –எங்கும் பக்கம் நோக்கறியாதே அனுபவிக்கிற ஸர்வேஸ்வரன் அவ்வனுபவத்தை விட்டு இவர் பக்கலிலே வ்யாமோஹம் பண்ணினபடி கண்டால் மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய விசிஷ்டையாய் -ஸர்வ ஸூலபையான இவள் இவரை விஷயீ கரிக்கச் சொல்ல வேணுமோ -இவர் தான் –நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு —என்கிறபடியே இருவருடையவும் அருள் கொண்டாடும் அடியவராய்த்து -அவ்விஷயீ காரம் இவர் அளவில் அன்றிக்கே இவ்வம்சத்தார் எல்லாருக்கும் நைசர்க்கம் இறே
மஹிமாநம் -கீழ் காந்தஸ்தே என்றும் தொடங்கிச் சொன்ன உபய விபூதி சேஷித்வ ரூபமான மஹிமாவை
மஹிமாநம் -ஸர்வேஸ்வரனுக்கு அத்யந்த அனுரூபங்களுமாய் இருக்கிற ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் குணாதி வைலக்ஷண்யத்தையும் அனுசந்தித்துத் திரள மஹிமாநம் என்கிறார் –
தே மஹிமாநம்-என்கையாலே -மஹிமாநம் ஈசம் -என்கிற மஹிமாவில் வ்யாவ்ருத்தி தோற்றுகிறது -இது அவனையும் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணுமது இறே
த்வத் வல்லப -ந ஜீவேயம் ஷணமபி (சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்)-என்று இறையும் அகலகில்லாத உன்னுடைய உள் மானம் புற மானமாய் அனுபவித்து அந்தரங்கனாய் அத்யந்த அபிமதனாய் இருக்கிறவன் –
ப்ரபு -யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் (யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்)-என்று ஸர்வத்தையும் ஏக காலத்திலேயே சாஷாத்கரிக்க வல்ல ஸாமர்த்யத்தை யுடையவன் -அதவா உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடையவன் –

இயத்தயா மாதும் நாலம் -இப்படி உனக்கும் வல்லபனாய் -பிரபுவாய் இருக்கிறவனும் இவ்வளவென்று பரிச்சேதிக்க மாட்டான் –
த்வத் வல்லபஸ்தே மஹிமாநம் மாதும் நாலம் –
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு
-என்றும் தான் முயங்கும் –(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்-தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு ——100-)என்கிறபடியே குமிழ் நீருண்டு கண்ணாஞ்சுழலை இடுமது ஒழிய பரிச்சேதிக்க சக்தனோ
தே மஹிமாநம் இயத்தயா மாதும் -சமர்த்தோ த்ருஸ்யதே கச்சித் (ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –) -என்று அதி ஸமர்த்தன் என்னா அபரிச்சேத்ய வஸ்துவைப் பரிச்சேதிக்கலாமோ -பரிச்சேதிக்கிறோம் என்றும் இத்தைப் பரிச்சேதிக்க இழிந்தானாகில் அசமர்த்தனாய் விடுமத்தனை –
தே மஹிமாநம் மாதும் நாலம் –
தன் மஹிமாவைத் தான் அளவிட்டு அறிய மாட்டாதவன் தன் ஸ்வரூப வைலஷண்ய யுக்தமான உன்னுடைய மஹிமாவை அறிய வல்லனோ –
மஹிமாநம் மாதும் நாலம் –
ஸ்வ ஸ்வரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதித்து அறியாதவன் உன்னுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ -ரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ -குண வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ-எத்தைத் தான் இவன் பரிச்சேதிப்பது -தர்மியான ஸ்வரூப வைலக்ஷண்யம் சத்தயா தாரகமாகையாலே –ந ஜீவேயம் ஷணமபி -என்னப் பண்ணும் -ரூப வைலக்ஷண்யம் தஞ்சேயம் அஸி தேஷணா –என்கிறபடியே ததோ அப்யதிகமாய் இருக்கும் -குண வைலக்ஷண்யம் தத் குணங்களை லகூ கரிக்கும்படி யாயிருக்கும் (லுகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -சரணம் சொல்லாத ராக்ஷஸிகளையும் ரஷித்த குணம் அன்றோ )-
இயத்தயா மாதும் நாலம்
அபரிச்சேத்யம் அத்தனை என்றும் அளவிடுமல்லால் இவ்வளவு என்றும் பரிச்சேதிக்க மாட்டான்

இவ்வர்த்தத்தை த்ருஷ்டாந்த முகேந த்ருடீ கரிக்கிறார் –ஆத்மந இவ –என்று –ஆத்மநோ மஹிமாநமிவ தே மஹிமாநமியத்தயா மாதும் நாலம்தனக்கும் தன் தன்மை அறிவரியானை என்கிறபடியே தாம் தம் பெருமை அறியாதாப் போலே உன்னுடைய மஹிமாவை இவ்வளவு என்று அறிய மாட்டான் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஓரொன்றே அபரிச்சேத்யம் இறே -ஆனந்த குணத்தைப் பரிச்சேதிக்க இழிந்த வேதங்கள் பட்டது படுமத்தனை -உன்னுடைய பெருமையைப் பேச இழிந்த இவனும் -அவனுடைய யதோ வாசோ நிவர்த்தந்தே (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1- எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –) -என்கிறதுக்கு விஷயம் இதுவாய்த்து –ஆத்மந இவ என்றும் தே மஹிமாநம் என்றும் அருளிச் செய்கையாலே பிராட்டிக்கு அனுரூபங்களான அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் சேர்த்து அனுபவித்தமை தோற்றுகிறது -பாஷ்யகாரரும் -பகவந் நாராயண -என்றும் –அபிமத அனுரூப ஸ்வரூப ரூப குண -என்றும் இருவருடையவும் ஸ்வரூபாதிகளைச் சேர்த்து அனுபவித்து அருளினார் இறே
த்வத் வல்லபோ அபி -என்கிற அபி ஸப்தம் சமுச்சய அர்த்தமாய் கீழ்ச் சொன்ன ப்ரஹ்மாதிகளோடே இவனையும் சமுச்சயித்து -நுண் உணர்வில் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் -என்றும் எல்லையில் ஞானத்தன் –என்கிறபடியே அதி ஸூஷ்ம ஞானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனான ஈஸ்வரனும் க்ருத சங்கேதராய்ப் பேசிலும் உன்னுடைய மஹிமாவைப் பரிச்சேதிக்க மாட்டார்கள் என்கை -அல்ப ஞானம் சக்திகரான ப்ரஹ்மாதிகளோடே அதிசயித ஞான சக்திகனான ஈஸ்வரனை சமுச்சியிக்கலாமோ -என்னில் -இவர்களுக்கு அந்யோன்யம் ஞான தாரதம்யம் உண்டேயாகிலும் இவளுடைய மஹிமார்ணவத்திலே மக்நராம் இடத்தில் ஒரு விசேஷம் இல்லாமையால் இங்கனே யோஜிக்கத் தட்டில்லை -பர்வத பரமாணுக்களுக்கு அணுத்வ மஹத்வ ரூபேண அந்யோன்யம் வாசியுண்டே யாகிலும் மஹார்ணவத்திலே மக்னங்களாம் இடத்திலே தன்னில் ஒரு வாசியில்லை இறே –
அதவா -அபி ஸப்தம் அதிசயத்திலேயாய் –யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் (யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10–எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —) –என்றும் –பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே (பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6–இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –) -என்கிற குணங்களை சமுச்சயித்து -ஆத்மா இவ தே –என்கிறபடியே ஸர்வஞ்ஞனாய் ஸர்வ சக்திகனுமாய் இருக்கிறவனும் என்னவுமாம் -அங்கனும் அன்றிக்கே –த்வத் வல்ல பச்ச ந ப்ரபு த்வஞ்ச -என்று சமுச்சயித்து உனக்கு வல்லபனான அவனும் அவனுக்கு வல்லபையான நீயும் க்ருத சங்கேதராய்ப் பரிச்சேதிக்கப் பார்த்தாலும் பரிச்சேதிக்கப் போகாது -என்கை –

இப்படி லோக விலக்ஷண ஞான சக்திகரான இருவரும் பரிச்சேதிக்க மாட்டார்கள் என்கை -இவர்களுடைய ஸர்வஞ்ஞதைக்குச் சேருமோ என்னில் -அபரிச்சேதய வஸ்துவை அளவிடுகிறேன் என்கை அஞ்ஞதைக்கு எல்லை நிலமாய் இருக்கும் -ஆகையால் இப்படிச் சொல்லக் குறையில்லை -இவ்வர்த்தத்தைத் தத்வ வித் அக்ரேஸரான ஆழ்வான் –தேவி த்வன் மஹிமா வதிர் ந ஹரிணா நாபி த்வயா ஞாயதே -என்று தொடங்கி ஸ்பஷ்டமாக ப்ரதிபாதித்து அருளினார் இறே

தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே
 –ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ)

இப்படி ஸர்வஞ்ஞராய் ஸர்வ சக்திகராய் இருக்கிற இருவருக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாமைக்கு ஹேதுவேன் -என்ன -அருளிச் செய்கிறார் –நிரவதிம் –என்று -இது தான் ஹேது கர்ப்ப விசேஷணமாய் அவதி ரஹிதமாகையாலே ஒருவருக்கும் பரிச்சேதிக்கப் போகாது என்கை -இத்தால் அபரிச்சின்ன வஸ்துவைப் பரிச்சேதிக்க மாட்டாமை ஸர்வஞ்ஞத்வத்துக்கு பஞ்சகம் என்றதாயிற்று –
இப்படி அவனுடைய மஹிமாவானது ஆஸ்ரிதற்கு அனுபவ யோக்யமாய் -ப்ராப்ய அந்தர் கதத்வ ஞாபகமாய் சேஷி சேஷ பூதர் இருவருக்கும் அனுகூலமாய் (அனுபவமும் ப்ரீதியும் கைங்கர்யமும் பிராப்திகளே -அனுபவ ஜெனித ப்ரீதிகாரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் )-எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருக்கும் என்கிறார் –நித்ய அனுகூலம் ஸ்வதஸ் -என்று
ஸ்வதஸ் நித்ய அனுகூலமாய் இருக்கையாவது -தன்னதொரு ஸ்வ பாவத்தாலே நிலா தென்றல் சந்தனம் போலே எப்போதும் சேதன ஈஸ்வரர் இருவர்களுக்கும் அனுகூலமாய் இருக்கை –
த்வாம் -கீழ் ப்ரதிபாதிக்கப்பட்ட பரத்வத்தாலே வந்த ப்ரஸித்தியை உடைய உன்னை -இப்படி ஸ்தோத்ரம் தான் இவருக்கு (இருவருக்கும்)ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அத்தலையில் நிறைவையும் இத்தலையில் குறைவையும் பார்த்துப் பிற்காலிக்க வேண்டாதபடியான சம்பந்தம் உண்டாகையாலே தாஸ இத்யஹம் நிர்ப்பய ஸ்தோஷ்யாமி -என்கிறார் –

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்தார் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனைப் பாடிப் பறை கொள்ளுகைக்காக -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று சம்பந்தத்தை முன்னிட்டால் போலே இவரும் பிராட்டியுடைய உத் கர்ஷத்தையும் தம்முடைய நிகர்ஷத்தையும் பார்த்துக் கதம் ப்ரூம -என்று பிற்காலித்தவர் -தத் அவிநா பாவ ஸம்பந்த அனுசந்தானத்தாலே ஸமாஹிதராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவர்த்திக்கக் குறையில்லை –பணி பதி என்று தொடங்கி த்வத் தாஸ தாஸீ கண –என்று உபயவிபூதியில் உள்ளாரும் இவளுக்கு சேஷபூதர் என்று சொல்லுகையாலே தம்முடைய சேஷத்வமும் அர்த்தாத் ஸித்தமாய் இருக்க இங்கு விசேஷித்து அருளிச் செய்வான் என் என்னில் ஆஷே பத ப்ராப்தமாகையைப் ஆபிதாமுகம் முக்யமாகையாலே தாஸோஹம் -என்கிறார் –அரங்கமாளி என்னாளி விண்ணாளி -என்றும் ஸ்ரீ ரங்க நாத மம நாத(ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே) என்றும் விசேஷித்து அனுசந்தித்தார்கள் -அங்கு ஸ்வரூபம் சொல்லிற்று -இங்கு ஸ்தோத்ர கரண யோக்யதைக்காகச் சொல்லுகிறது என்னவுமாம்

த்வதீய ஹேதுவை அருளிச் செய்கிறார் –ப்ரபந்ந -என்று -த்வாம் ப்ரபந்நோ காம் நிர்ப்பய ஸ்தோஷ்யாமி -அசரண்ய சரண்யையான உன்னை (பற்றிலார் பற்ற நின்ற என்றபடி )அநந்ய சரணனான நான் சரணம் புகுந்தேன் -என்னுடைய பூர்வ அபராதங்களையும் உன்னுடைய பூர்த்தியையும் அனுசந்தித்து அப்பூர்த்திக்கு அனுரூப ஸ்தோத்ர கரண காரண ஞான சக்த்யாதி அனுசந்தானத்தாலே நிர்ப்பயனாய் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் –பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் –-என்கிறபடியே உன்னுடைய ஆஸ்ரித விரோதி நிரசன அனுசந்தானத்தாலே என்னுடைய பூர்வ அபராதங்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை -ஆர்த்த அபராதைகளாய் வதார்ஹராய் இருப்பாரையும் ந கஸ்சின் ந அபராத்யதி (பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44- வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –)என்றும் மறுதலைத்து மன்றாடி ரக்ஷிப்பது -அவர்கள் பயம் சமிக்கும் படி பவேயம் சரணம் ஹி வ -என்று உன்னுடைய அபய பிரதானத்தினுடைய நீர்மையை அனுசந்தித்தால் உன்னுடைய பூர்த்திக்கு அஞ்ச வேண்டியதில்லை -ஆர்த்த அபராதைகளாய் வதார் ஹராய் இருப்பாரையும் மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலே த்வத் கருணா நிரீஷண ஸூதா என்னும்படியான உன்னுடைய கடாக்ஷ ப்ரபாவத்தையும் அனுசந்தித்தால் என்னுடைய அஞ்ஞான அசக்திகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை-

த்வாம் ப்ரபந்ந அஹம் நிர்ப்பய –உபயாந்தரங்களைப் பற்றினால் இறே –வர்த்ததே மே மஹத் பயம் –(காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –)என்னும்படி பயப்பட வேண்டுவது –
த்வாம் ப்ரபந்ந அஹம் நிர்ப்பய —
உபாய பூதனான ஈஸ்வரனைப் பற்றினேனோ –வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க -(நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-)என்னும்படி அவனுடைய ஸ்வா தந்தர்யத்தை நினைத்து அஞ்சுகைக்கு -பாபமே பச்சையாக அங்கீ கரித்து -பரதந்த்ர ஏக வேஷையாய் -பர்த்தாவான அவனையும் –த்ராஹி த்ராஹீ தீ என்று கடிப்பிக்க வல்ல ஸுலப்யத்தையுமுடைய உன்னைப் பற்றின எனக்கு உபாய விஷயமாகக் கர்தவ்ய அம்சம் ஒன்றும் இல்லாமையாலே உபேய பூதையான உன் விஷயத்திலே –அஹம் ஸ்லோக க்ருத் -என்று அனுபவ பரிவாஹ ரூபமான ஸ்லோக ரசனையைப் பண்ணி ஸ்துதிக்கிறேன் என்கிறார்
த்வாம் ப்ரபந்ந -என்கையாலே தாம் பத்ம நேமிம் சரணம் அஹம் ப்ரபத்யே -(சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்)என்கிற ஸூக்த்தார்த்தத்தை அனுஷ்டித்தமை தோற்றுகிறது – இத்தை அடியொற்றி இறே பாஷ்யகாரரும் –ப்ரபத்யே -என்று பற்றிற்று –

ஆக இப்படி ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராய்க் கொண்டு ஸ்ருதிச் சாயையாலே ஸ்தோத்ரம் பண்ணுகிறார் –
லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -(அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —)என்று –
இப்பத த்வயத்தாலும் அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ –என்கிற ஸ்ருதி அர்த்தம் ஸூசிதமாயிற்று
லோக ஏக ஈஸ்வர-லோக்யத இதி லோக -என்கிற பிரகிரியையாலே ப்ரமாண சித்தங்களான த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் அத்விதீய நிர்வாஹகன் -ஈஸ்வர ஸப்தம் ஸ்ருதியாதிகளிலே ப்ரதிபாதிக்கிற ஸர்வ சேஷித்வத்தையும் காட்டுகிறது –
பதிம் விஸ்வஸ்ய -(பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11–உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்)என்று ஸர்வ சேஷித்வத்தையும்
யாஸ் பாஸ்ஸ மஹேஸ்வர -(யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24- வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –)என்று யோ லோகத்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர என்னும் ஸர்வ நியந்த்ருத்வத்தையும் நாராயண அனுவாகங்களிலே ப்ரதிபாதித்தது இறே -இப்படி ஸர்வ நியாந்தாவானவனுக்கு வேறொரு நியந்தா வில்லை என்னுமத்தை -ஆத்மேஸ்வரம் -என்றும் நாதனை ஞாலம் விழுங்கும நாதனை என்றும் ப்ரதிபாதித்தது இறே(வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற-நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –திரு விருத்தம் 79)
லோக ஏக ஈஸ்வர என்றவிடத்திலே ஏக சப்தத்தாலே –ஏகஸ் ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ -(–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்) -என்றும்ஷராத்மாநா வீஸதே தேவ ஏக – (க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்)என்றும் ஏக ஸாஸ்தா ந த்வீதீயோ அஸ்தி கச்சித் -(ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்)என்றும் இத்யாதி ப்ரமாணங்களிலே ஸர்வ நியந்த்ருத்வம் இவனுக்கு ஐகாந்திகமாகச் சொல்லுகையாலே அத்விதீய நிர்வாஹகத்வம் சொல்லுகிறது -இப்படி அத்விதீய ஸர்வ நிர்வாஹகன் பத்னியாகையாலே லோக ஏக ஈஸ்வரி -என்கிறார் -இத்தால் –ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ –என்றும்
விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -(விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்)என்கிற ஸ்ருத்யர்த்தம் ஸூசிதம்
அதவா
லோக
ஸப்தத்தாலே லோக சித்தனான லோக நாதனையும் சொல்லி தத்வத்ரய நிர்வாஹிகை -என்னவுமாம்
பும் ப்ரதாநேஸ்வக்ரேஸ்வரீம் -(ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்)என்னக் கடவது இறே –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற விடத்தில் ஸர்வ சப்தத்துக்கு ஸங்கோசம் இல்லாமையாலும் கர்மணி வ்யுத்பத்தியில் கர்த்ரு சங்கோச ராஹித்யத்தாலும் ஈஸ்வர ஈஸ்வரி என்னத் தட்டில்லை -அவன் பரம ப்ரணயி யாகையாலே இவளுக்கு நியாம்யனாய் ப்ருகுடி படனாய் இறே இருப்பது –யஸ்யா வீஷ்ய -ஜெகன்நாதோ அபி இத்யாதி –

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா -ஸ்ரீ ஸ்தவம்–1-

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).இப்படிப்பட்ட பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!

ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா -ஸ்ரீ ஸ்தவம்–6-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.-அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?-இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்றபல தன்மைகள் நித்யமாக உள்ளன.

இப்படி ஸர்வ நிர்வாஹகனான ஸர்வேஸ்வரனும் நியாம்யனாகைக்கு ஹேது வென் என்ன ததத் யந்தர் அபிமதையாகையாலே என்கிறார் –லோக நாத தயிதே -என்று –சக்ரத்தான் –தண் துழாய்த் தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –என்கிறபடியே(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண் தேனமரும் பூ மேல் திரு ——100-)என்கிறபடியே ஸர்வ நியந்தாவாய் ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரனும் அதி வ்யாமுக்தனாய் நியாம்யனாம்படி தத் வல்லபையாய் இருக்குமவன் என்கை -(ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்)
அதவா
லோக ஏக ஈஸ்வரி
என்கிற லோக நியந்த்ருத்வத்துக்கு ஹேது லோக நாத தயிதை யாகையாலே என்னவுமாம் –
லோக நாத தயிதே -ராமஸ்ய தயிதா பார்யா -(ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீதை)என்னக் கடவது இறே -ஸ அபராத சேதனரை அபராத அனுகுணமாக தண்டிக்கும் நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனோடே கடிப்பித்து ரஷிப்பிக்கும் இவளுக்கு இதம் ப்ரதமமில்லாத ஈஸேஸி தவ்ய ஸம்பந்தமும் -தத் பத்நீத்வ ஸம்பந்தமும் ப்ரதானமாகையாலே –லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -என்று உபய ஸம்பந்தத்தையும் அருளிச் செய்கிறார் –இவள் தாயாய் -என்று தொடங்கி -அவனுக்குப் பத்னியாய் -என்று ஸம்பந்த த்வயத்தையும் அருளிச் செய்தார் இறே அபியுக்த அக்ரேஸரான பிள்ளை லோகாச்சார்யாரும் –

(இவள் தாயாய் இவன் க்லேசம் பொறுக்க மாட்டாதே -அவனுக்கு பத்நியாய்-இனிய விஷயமாய் இருக்கையாலே கண் அழிவற்ற புருஷகாரம்–ஸ்ரீ முமுஷுப்படிசூரணை -128-அவன் தன்னை வைலஷண்யத்தை கண்டு பிச்சேறி தன் சொல் வழி நடக்கும் படி அபிமத விஷயமாய் இருக்கையாலே -கண் அழி வற்ற புருஷகாரம்-என்கை-)

ஸ்தோத்ரத்தில் ப்ரவ்ருத்தராவது -பரத்வ அனுசந்தானத்தாலே நிவ்ருத்தராவது -தாஸன் என்பது -ப்ரபன்னன் என்பது -ஸம்பந்தத்தை முன்னிடுவது -தத் வசீகரண ஸாதனமான ஸுலப்யத்தைச் சொல்வதாய்க்கொண்டு ஸ்தோத்ரத்திலே உத்யுக்தரானாலும் -ஸ்தோத்ர விரோதியான அவித்யாதிகள் நசித்து ஸ்தோத்ர கரண சாதன ஞான பக்திகள் உண்டான போதிறே ஸ்தோத்ர ப்ரவ்ருத்தி ஸபலமாவது -ஆனபின்பு அவை இரண்டுமே இல்லையென்று நிவ்ருத்தரான நீர் இப்போது ப்ரவர்த்திகைக்கு ஹேது வென் என்ன-என்னுடைய அவித்யாதி நிவர்த்தகமாய் ஞான பூர்த்தி ப்ரதமுமான ப்ரஸாத விசேஷத்தை என் பக்கலிலே பண்ணி அருளுகையாலே உன்னுடைய தயா ப்ரபாவத்தை அறிந்து பய ரஹிதனாய் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்கிறார் –தாந்தே தயாம் தே விதந் -என்று –

(தாந்தே -இரண்டு அர்த்தங்கள் – சம்போதானம் என்றும் -தாந்தி உள்ள புருஷர்களிடத்தில் கடாஷிக்கிறீர் என்றுமாம்)

இப்படி இவ்விசேஷ கடாக்ஷம் இல்லாத போது கீழ் நிவ்ருத்தரான இவர் உடனே ஸ்தோத்ரத்திலே ப்ரவர்த்திக்கக் கூடாது இறே –த்வாம் ஸ்தோதுமபி நேஸாநாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா –என்று தத் ப்ரஸாதத்தை ஒழிய ஸ்தோத்ரம் பண்ண ஷமரன்று என்றது இறே(ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –) -ஆன பின்பு இவர் ஸ்தோத்ரம் பண்ண வல்லராம்படி இவருக்கே விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினாள் என்கிற இவ்விசேஷம் ஸித்திக்கைக்காக தாந்தே மயி -என்று கூட்டிக் கொள்வது –
தாந்தே மயி-க்ருபோத்தம்பக தீநாவஸ்தா விஸிஷ்டனாய் ப்ரபன்னனான என் விஷயத்திலே –
அதவா -தாந்தே –என்று ஸம்புத்தி யாகவுமாம் -கருணாம்ருத ஸம் வர்த்திதையான கற்பகக் கொடியே –லஷ்மீ கல்பக வல்லீ -லஷ்மீ கல்ப லதா -மலர் வைகு கொடி -இன்னிள வஞ்சிக்கொடி -ஒருவல்லித் தாமரையாள் –என்கிறபடியே கனக கமலத்தில் உண்டான கல்பக லதை போலே –லோக நாதனான தெய்வ வந்து துதைந்த வென் பெண்மை -என்னலாம் படி தத் ஸம்ஸ்லேஷத்தாலே துவண்ட வடிவை யுடையவளே –

படி புல்கு மடி  யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி
புல்கு  தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே —8-7-8-

மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று   நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே  ——–78
மின்னாய் இளவேய்   இரண்டாய்    இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே-பெரிய திருமடல் 

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்-அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை-ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,-திருவல்லிக் கேணியான் சென்று.

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-


தே –மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய விசிஷ்டையான உன்னுடைய
தே தயாம் என்றும் பகவத் கிருபையை வ்யாவர்த்திக்கிறார் -பகவத் காருண்யத்திலும் அதிசயித்து இறே காருண்ய ரூபையான இவள் கருணை இருப்பது –

(லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே
–ஸ்ரீ லஷ்மீ தந்திரம்)

தே தயாம் -வதார்ஹ காகாசூர விபீஷணாதிகளை -சரண உக்திகள் கைம்முதலாக ரஷித்த காகுத்ஸனுடைய கோஷ்ட்டியையும் (கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாராமல் -வம்ச ஏற்றத்தாலேயே இப்பத பிரயோகம் )-ஆர்த்த அபராதைகளான ராக்ஷஸிகளைச் சித்ரவதம் பண்ணத் தேடின சொல் மிறுங்கனான பவனாத்மஜன் பக்கல் –பாபாநாம் வா ஸூபாநாம் வா —என்னும் –ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநாம் குர்வந்தீ நாம் பராஞ்ஞயா –(ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38- வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –)என்று மறுத்து மன்றாடி ரஷித்த உன்னுடைய தயா வைபவத்தாலே லகூ கரிக்கும்படி யன்றோ கருணா சகியான ஷாந்தியின் பிரபாவம் இருப்பது -இப்படி பகவத் காருண்ய ஷாந்திகளிலும் அதிசயிதமான பிராட்டியினுடைய கருணா சகியான ஆகஸ்மிக ஷாந்தியை –ஸாந்த்ர மஹா கஸ –கஸ் ஸூகயது -(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா-ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத: ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50–பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்) என்று பட்டர் பிரார்த்தித்து அருளினார் இறே -இன்னமும் க்ருபயா பர்யபாலயத் –(ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35–பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்)என்று பலிபுக்கான காகத்தை ரக்ஷித்த கிருபைக்கும் அடி –த்ராஹி தராஹீதீ பர்த்தாரம் உவாச தயயா விபும் –என்னும் (த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-)என்னும் உன் தயை இறே
தயாம் —ஸ்வார்த்த நிரபேஷா பரதுக்க அஸஹிஷ்ணுதா தயா – (-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –)என்கிற லஷண லஷிதையான க்ருபை –மர்ஷயாமீஹ துர்ப்பலா (தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41- அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-) என்ற உன் பக்கலிலே அனுஷ்டான சேஷமாய் அன்றோ இருப்பது –

விதந் -இப்படி ஸமாப்யதிக ரஹிதையாய் -ஸர்வ லோக ப்ரஸித்தையாய் -த்வத் தயை ஏக தாரகனாய் தயநீயனான என்னை விஷயீ கரித்த உன் தயா ப்ரபாவத்தை அறியா நின்று கொண்டு –தாந்தே புருஷே தே தயாம் விதந் -என்று ஸாமான்யமாக யோஜிக்கவுமாம் -அப்போதும் அந்த நியாயம் தமக்கும் ஒக்கும் இறே -இப்படி சாமான்யேன வரும் அந்வயத்திலும் விசேஷ அந்வயத்துக்கு விசேஷ பிரயோஜனம் உண்டு

(தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –)

(தீனர்கள் இடமும் மட்டுமே தயை என்பதை விட திருவடியை அடைந்த பிரபன்னனிடம் பொழிந்த தயைக்கு விசேஷம் உண்டே-பிரஹலாதன் கூப்பிட்ட குரலுக்கும் கஜேந்திரன் கூப்பிட்ட குரலுக்கும் வந்து ரஷித்ததும் திரௌபதிக்கு உதவினதும் விசேஷம் அன்றோ)

லோகைகேஸ்வரி– லோக நாத தயிதே-யஸ் யாஸ்தே –நிரவதிம -ஸ்வதோ -நித்ய அனுகூலம் -மஹிமாநம் -பிரபுஸ் -த்வத் வல்லபோ அபி-ஆத்மந இவ-இயத்தயா- மாதும் -நாலம் -தாம் த்வாம் அஹம் -தாஸ இதி ப்ரபன்ன இதி-ச -தாந்தே மயி தே தயாம் விதன்-நிர்ப்பய-ஸ்தோஷ்யாம் -இத் அந்வயம்

———————————————-

அவதாரிகை -பிரதம ஸ்லோகத்தாலே பெரிய பிராட்டியாருடைய ஸர்வ உத்கர்க்ஷ ப்ரகாசகமான பரத்வத்தை அனுசந்தித்து –அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்றால் போலே ஸர்வ உத் க்ருஷ்ட விஷயத்தை ஸர்வ அபக்ருஷ்டனான நான் ஸ்தோத்ரம் பண்ணுகையாவது என் -என்று பீதராய் –த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று நிவ்ருத்தரானார் –
த்வதீய ஸ்லோகத்தாலே நிவ்ருத்தரான தம்முடைய ஸ்தோத்ர ஸ்ரவண கௌதுகத்தாலே ஸ்தோத்ர விரோதிகள் நசித்து ஸ்தோத்ர கரண காரண ஞானாதிகள் உண்டாம்படி கடாஷித்து தயையைப் பண்ண -அத்தை அறிந்து -சம்பந்த ஞான பூர்வகமாக சரணம் புகுந்து -கீழ் ஸ்தோத்ர ஆரம்பாஷேப ஹேதுவாகச் சொன்ன ஸ்தோத்தவ்யகத உத்கர்ஷத்தை முகாந்தரேண த்ருடீ கரியா நின்று கொண்டு தத் உபச் லிஷ்ட ஸுலப்ய விசேஷத்தை அனுசந்தித்து ஸ்தோத்ரு கத தயநீய தசானுரூப ஹேதுவாலே ஸ்துத்யாரம்ப ஸமாதானம் பண்ணினார் -இப்படி ஸ்தோத்ர ஆரம்பாஷேப சமாதானே வ்யாஜேன பிராட்டியினுடைய பரத்வ ஸுலப்யங்களை அனுசந்தித்து -ஸ்தோத்ரத்திலே உபக்ரமித்து -தத் ஸர்வ சமாஸ்ரயணீயத்வ க்யாபன அர்த்தமாக ஸகல புருஷார்த்த ப்ரதத்வத்தை உதாஹரண ஸஹிதமாக உபபாதிக்கிறார் -இதில் -ஈஷத்வத் -இத்யாதியாலே –

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3-

தத் அலாபதஸ்–அந்தக் கடாக்ஷம் இல்லாமையால்
ப்ராக் நஷ்டம் -முன் நஸித்துக் கிடந்ததான
த்ரி புவனம்-மூவுலகும்
சம்ப்ரதி–இப்போது
ஈஷத் -சிறிது போது
த்வத் கருணா நிரீஷணஸூதா சந்து ஷணாத் –உன்னுடைய கருணா கடாக்ஷமாகிற அம்ருத வர்ஷத்தினாலே
அநந்தோ தயம்-அளவற்ற பெருமையை உடைத்தாகும் படி
ரஷ்யதே-காப்பாற்றப்படுகிறது
ந்ருணாம்-மானிடர்களுக்கு
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ-ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் இவைகளில்
ஸ்ரேயோ -மேன்மையானது-(அத்வா -மூன்று பாதைகளில்)
அரவிந்த லோசன மன காந்தா -தாமரைக் கண்ணனின் மனத்துக்கு இனியவளான ஸ்ரீ தேவியின்
பிரசாதாத் ருததே–அருள் இல்லாமல்
ந ஹி சம்பாவ்யதே -ஏற்படாதது அன்றோ

(த்ரி புவனம் -மூலப்பிரக்ருதி விகாரம் இல்லாதது -மற்ற விகாரமாயும் மற்றவற்றை பிறப்பிப்பதாயும் –மஹான் -அஹங்காரம் -இத்யாதி பிருத்வி -மற்றவற்றைப் படைக்காமல் -எல்லாம் –க்ருத க்ருதாக்ருத அக்ருத-நித்ய விபூதி இல்லாமல் அனைத்தும் லீலா விபூதியையும் சொன்னவாறு –
அநந்த உதயம் -முன்பு பிரளயத்தில் நசித்துக் கிடந்தோம் என்ற எண்ணமே இல்லாமல் –ஒழிவில் காலம் எல்லாமே -முன்பு இழந்தவற்றையும் மறக்கும்படி கைங்கர்யம் போல் –த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத்-)

தாந்தே மயி தே தயாம் விதந் அஹம் நிர்ப்பயஸ் ஸ்தோஷ்யாமி -என்று நாம் உம்மைக் கடாஷித்தோமாகவும் -அத்தாலே உம்முடைய அபிமதம் சித்தித்தாகவும் சொன்னீர் -லோகத்திலே சேதநருக்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களுக்கு ஹேதுக்கள் அவ்வவருடைய புண்ய பாபங்களாய் யன்றோ இருப்பது -ஆயிருக்க உம்முடைய அபிமதம் நம்முடைய கடாக்ஷத்தாலே சித்தித்தது என்னுமிடம் நம் பக்கலிலே ஆதார அதிசயத்தாலே சொன்ன வித்தனை இறே -என்ன -நான் ஒரு விஷயத்திலே பக்ஷபாதத்தாலே சொல்லுகிறேன் அல்லேன் -வஸ்து ஸ்திதியை ஆராய்ந்து பார்த்தவிடத்தில் த்ரி க்ஷணா அவஸ்தாயியாய் -நசித்துப் போகிற புண்ய பாபங்கள் மூர்த்தீ கரித்திருந்து பலப்ரதமாகிறன வல்ல விறே -புண்யா புண்யா ஈஸ்வர ப்ரீதி கோபவ் – (-புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்)-என்கிறபடியே-துன்ப வின்ப வினைகளுக்கு (துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்-உயர நின்றது ஓர் சோதி யாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந் தான் தனை அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினைஅச்சு தன் தனைத்-தயர தற்கு மகன் தனை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.-3-6-8-)_நிர்வாஹகனான ஈஸ்வரனுடைய ப்ரிய அப்ரியங்கள் அபிமத அநபிமத ஸித்திகளுக்கு ஹேதுக்கள் -அவனுடைய கோப ப்ரசாதங்களுக்கும் அடி உன்னுடைய கடாக்ஷ ததபர்வங்களாகையாலே ஸகல சேதனருடைய அநர்த்தாப்யுதயங்களுக்கு ஹேது -உன்னுடைய கருணா கடாக்ஷ லாப அலாபங்களாய் இருக்கும் -ஆன பின்பு என்னுடைய அபிமத ஸித்திக்கே யன்றிக்கே –ஸகல சேதனருக்கும் ஐஸ்வர்யாதிகளால் ஸ்ரேயஸ்ஸூ உன்னுடைய ப்ரஸாதத்தாலே அல்லது சம்பவியாதிறே என்று தத் புருஷார்த்த பிரதத்வத்தை ஸ தாஹரணமாகப் ப்ரதிபாதிக்கிறார் -ஈஷத் இத்யாதி ஸ்லோகத்தாலே-

பிராட்டியினுடைய அனுக்ரஹ ஏக தேசம் அநந்த அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அநந்தாப்யுதய ஸித்திக்கும் நிதானம் என்கிற விசேஷ த்யோதனார்த்தமாக ஈஷத் -என்கிறார் –த்வத் ப்ரஸாத லவம் விநா –என்றது இறே –த்வச் ஸப்தத்தாலே –ப்ரணிபாத பிரசன்னையாய் -ஷிப்ர ப்ரஸாதினியாம் படியான அசாதாரண ஸ்வ பாவம் ஸூசிக்கப்படுகிறது –இத்தால் நிக்ரஹ அனுக்ரஹ ஸ்வ பாவனான ஈஸ்வரனில் வ்யாவ்ருத்தமான அனுக்ரஹ ஏக ஸ்வபாவத்வம் சொல்லப்பட்டது –பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாபப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ சம்பந்நா ஸா தேவீ மே ப்ரஸீதது –(மங்கள ஸம்ஹிதை தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –)என்றும்
அனுக்ரஹ பராம் ருத்திம் அநகாம் ஹரி வல்லபாம் -நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோத சம்பவாம் –என்றும் (-ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம் அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –)என்றும் அனுக்ரஹ ஏக ஸ்வபாவத்வம் சொல்லப்பட்டது இறே

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத்-உன்னுடைய அநிஷ்ட நிவர்த்தன இஷ்ட ப்ராபண அனுகுணமான கருணையை ஹேதுவான யுடைத்தான கடாக்ஷ லேஸ அம்ருத உத்ரேகத்தாலே –
கருணா நிரீஷணம் -கருணா ஹேதுக நிரீஷணம் -கருணயா விஷயீ கரணம் நிரீஷண ஸப்தத்தாலே உபகரிக்கிறதாகவுமாம் -கருணா ப்ரேரிதமாய் இறே நிரீக்ஷணம் உண்டாவது –காருண்ய மாருதா நீதை (த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை: காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்—ஸ்லோகம் 8:–காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.)-என்றது இறே –நிரீக்ஷண ஸூதா சந்துஷணாத் -த்வதீஷண ஸூதா ஸிந்து வீசி விஷேபஸீகரை –(சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை: காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8-இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்)என்கிறபடியே.–கடாக்ஷ அம்ருத த்ருஷ்டிகளாலே என்கை -ஏவம் பூத கடாக்ஷம் தான் சகலாத்ம ஸஞ்ஜீவனமாய் இருக்கையாலே ஸூதையாக நிரூபிக்கிறார் -ஸூதையாலுண்டான ஸம்யக் உல்லாஸத்தாலே -கடாக்ஷ நிஷேபத்தாலே என்கை –
ரஷ்யதே -உபத்ரவ ரஹிதமாக ஸ்தாபிப்பப்படுகிறது –
ப்ராக் -உன்னுடைய உபேஷா காலத்திலே
தத் அலாப -உன்னுடைய நிரீக்ஷணா லாபத்தால் அல்லது உன்னுடைய கோபத்தால் அன்றிறே –கஸ் குப்யேத் வாநரோத்தம –எந்தத் சொல் மினுங்கனுக்கும் உபதேசிக்கிற உனக்கும் கோபமுண்டாக ஸம்பாவனை இல்லை இறே -நஷ்டம் -விநஷ்ட ப்ராயமான –
த்ரிபுவனம் -இத்தால் த்ரைலோக்ய அந்தர் வர்த்தியான ஸகல ஜனங்களையும் உப லஷிக்கிறது –மஞ்சா க்ரோஸந்தி இதிவத்
ஸம் ப்ரதி -உன்னுடைய கடாக்ஷ வீஷாக்ஷண லஷ்யமான தசையிலே –
அநந்தோதயம் யதா பவதி -பூர்வ காலத்திலும் அதிசயித அப் யுதயமாம் படி -ரஷ்யதே -ப்ராக் தத் அலாபதோ நஷ்டம் த்ரிபுவனம் ஸம் ப்ரதி ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷணாத் அநந்தோதயம் ரஷ்யதே –

துர்வாஸ சாபத்தாலே நிஸ்ஸ்ரீகமாம்படி புவன த்ரயத்தையும் பரித்யஜித்து பயோததியிலே பிராட்டி எழுந்தருளின போது தத் கடாக்ஷ அபாவத்தாலே அசன்னேவ என்னும்படி நஷ்டமான த்ரிபுவனம் -பின்பு –ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -(ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–மைத்ரேயர் பராசர மகரிஷியிடம் கேட்க )என்றும் –செழும் கடலமுதினில் பிறந்த அவளும் -பெரிய திரு மொழி -2-7-1-என்னும்படி அமுதில் வரும் பெண்ணமுதாய் அவதரித்து (அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்-கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே விண்ணவர் அமுது உண அமுதில் வரும்-பெண் அமுது உண்ட எம் பெருமானே-ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே)-திவ்ய மால்யாம் பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா -பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வஷஸ் ஸ்தலம் ஹரே – (-வி பு -1-9-105-திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –)-என்கிறபடியே(லஷ்மீ கல்யாண ப்ரக்ரியை) ஸ்நாதையாய் மஹார்ஹ வஸநையாய் சித்ர மால்ய அநு லேபையாய்க் கொண்டு -திகழ்கின்ற திருமார்பில் சேர்ந்து -பெரிய திரு மொழி -2-7-1-என்றும் அகலகில்லேன் இறையும் -6-10-10-என்று திருக் கலந்து சம்ச்லேஷித்த அநந்தரம் -உன்னுடைய காருண்ய ஸீதல கடாக்ஷ ஸூதா வர்ஷத்தாலே வழிய வார்க்க-அநந்தரம் அத்தாலே சத்தை பெற்று ஸம்ருத்தியான படியை இஸ் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –
த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவன த்ரயம் -விநஷ்ட ப்ராயம் அபவத் த்வயேதா நீம் சமேதிதம் -(விபு -1-9-123- தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது )என்று இவ்வர்த்தம் இந்த்ரனாலே சொல்லப்பட்டது இறே -இப்படி அந்வய வ்யதிரேகங்களாலே ப்ரஹ்ம இந்திரனின் ப்ரப்ருதி சேதனருடைய ஐஸ்வர்யம் பிராட்டியினுடைய கடாஷாதீனம் என்னுமிடம் தர்சிக்கப்பட்டது –
ப்ரஹமாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முந யச்ச தபோதநா -ஏதந்தே த்வத் பதச்சாயம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி – (காஸ்யபீயம்-கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –)என்னக் கடவது இறே-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் -இத்யாதி(யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம் ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத் தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–29–யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள் உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும்-(ஆளவந்தாரும் கஸ் ஸ்ரீ இத்யாதி ) தேவரீரை அன்றோ-திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் )

அதவா –ஈஷத் த்வதித்யாதி -ப்ருதிவ்யப்ஸூ லீயதே -இத்யாரப்ய -என்றும் –ஆபஸ் பரே தேவ ஏகி பவதி –என்றும் –ந ப்ரஹ்மா நே ஸாந -என்றும் -ஆஸீ திதம் தமோ பூதம் அபிரஞ்ஞாதம் அலக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஞ்ஜேயம் ப்ரஸூப்த்தமிவ ஸர்வதா -(ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8-இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –)என்றும் ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றுமோர் யாதுமில்லா அன்று-என்றும் இத்யாதிப்படியே ஸர்வ ஸம்ஹார காலத்திலே உன்னுடைய கடாக்ஷ அம்ருத வ்ருஷ்ட் யலாபத்தாலே அசன்னேவ என்னும்படி நாம ரூப விபாக அநர்ஹமாய் நஷ்டமான த்ரிபுவனமானது-அப ஏவ ஸஸர்ஜாதவ் -தத் ஸ்ருஷ்ட்வா –-(ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது )என்று சொல்லுகிற ஸ்ருஷ்ட்டி காலத்திலே –நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -ஸர்வே நிமேஷ ஜஜ்ஜிரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர-அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி ப்ரமாண ப்ரகாரேண அண்டங்களினுடையவும் தத் அந்தர்வர்த்தி தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர்வித பூதங்களுடையவும் ஸ்ருஷ்ட் யுன்முகனாய்க் கொண்டு –ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –தேஜ ஐஷத -ஆப ஐஷந்த -என்று(ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)-அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –) என்று ஸ்ருஷ்டிக்கு கடவனாய் பார்த்து அருளின போது –யத் ப்ரூபங்கா ப்ரமாணம் ஸ்திர சர ரஸநா தாரதம்யே முராரே –ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸனம் ஹரே அங்கீ காரி பிராலோகைஸ் ஸார்த்த யந்த்யை –உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ நிர்வாஹ கோரகித கடாக்ஷ லீலாம் –அஸேஷ ஜெகதாம் சர்க்க உபசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் –என்று தொடங்கி –யஸ்யா வீஷ்யா முகம் ததிங்கித பராதீனோ விதத்தே அகிலம் —(யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே: வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன. ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும். இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் – ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது. அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)இத்யாதி ப்ரமாண ப்ரகரேண உன்னுடைய ப்ருகுடி படனாய் -த்வத் இங்கித பராதீனனாய்க் கொண்டு சமஸ்த சித் அசித் விதானம் பண்ணுகிற அவனுடைய அந்தக்கடாக்ஷ அனுகுணமாகக் கருணா அம்ருத கடாக்ஷ நிக்ஷேபங்களை நீ பண்ணுகையாலே யன்றோ நாம ரூப விபாக அர்ஹமாய்க் கொண்டு ரக்ஷிக்கப்படுகிறது -ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் -ஸம் ப்ரத்யனந்தோ தயம் யதா பவதி ததா ரஷ்யதே

(ப்ருகுடி படனாய்-புருவ அசைப்பைக்கு பராதீனனாய் -அவன் கடாக்ஷத்துக்கு அனுகுணமாய் -பொருத்தமாய் -அன்றோ தேவரீர் கடாக்ஷம்)

ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரதி ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் நந்தோ தயம் ரஷ்யதே-எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் —என்கிறபடியே கடும் கோடையில் கமர் பிளந்து உலர்ந்து போந்த பயிரானது நினைவற மேகமேறி வர்ஷித்தால் சத்தை பெற்றுத் தரித்து பலபர்யந்தமாப் போலே –மழைக்கண் மடந்தையான நீ குளிரக்கடாஷிக்கையாலே யன்றோ முன்பு நஷ்டமான ஜகத்து இப்போது மஹீ மஹீ தர ஜலதி ரூபமாய் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர்வித தேஹ பிரவேச சதுரரான ஆத்மாக்களை யுடைத்தாய் -போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண அபி வ்ருத்தமாய்த்து என்று அப்யய (ஸம்ஸார )பூர்விகையான ஸ்ருஷ்டியிலே இவளுக்கு அந்வயம் சொல்லவுமாம் -இப்படி ஜகத் காரணத்வத்தில் இவளுக்கு அந்வயமுண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான் அருளிச் செய்த வார்த்தையை இவ்விடத்தில் அனுசந்திப்பது -அதாவது -இவ்வர்த்ததில் ஸந்தேஹமுண்டோ –ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி ப்ரஜாஸ் சோத்பாதயி தவ்யா -(தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் )என்று பிரமாணம் சொல்லுகையாலே ஸஹ தர்ம சாரிணியான இவளுக்கும் அந்வயமுண்டு என்று அருளிச் செய்தது –

யுக்தார்த்த ஸமர்த்தன வ்யாஜத்தாலே ஸகல புருஷார்த்தங்களும் தத் ப்ரஸாத அதீனமாய் இருக்கும் என்கிறார் –ஸ்ரேய-இத்யாதியாலே -யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே–ந்ருணாம்-சம்ஸ்ருத் -யஷர -வைஷ்ணவாத் வஸூ-ஸ்ரேய-கர்ஹிசித் ந சம்பாவ்யதே ஹி –
அரவிந்த லோசன -தஸ்ய யதா கப் யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -என்று கம்பீராம்பஸ் ஸமுத்பூதமாய் -ஸூம்ப்ருஷ்ட நாளமாய் -ரவிகர விகசிதமுமான புண்டரீக தளம் போலே அமலாயதேஷணன் இறே அவன்(அமல ஆயத-மிகப்பெரிய அமலங்களாக விழிக்கும் கரியவாகி புடை பெயர்ந்து அப்பெரியவாய திருக்கண்கள்) –ஏதத் துல்ய சீலையான அஸி தேஷ்ணை இறே இவள் -த்வத் ப்ரஸாதாத்ருதே –என்ன வமைந்து இருக்க -இவ்விசேஷணம் என் என்னில் –ஜிதந்தே -தாமரைக் கண்ணனை -என்று உபய விபூதியையும் எழுத்து வாங்குகிற அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனையும் வசீகரிக்க வல்ல வாலப்ய ப்ரஸித்தி தோற்ற விசேஷிக்கிறார் -இத்தால் சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்வதந்த்ரனான அவனும் இவள் ப்ரஸாத பாத்ரமானார்க்கு ஒழியக் கார்யம் செய்யான் என்னுமிடம் தோற்றுகிறது

(ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –)

(ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1--செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் )

(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —யாதிருச்சா ஸூஹ்ருதம்-விஷ்ணோர் கடாக்ஷம்-அத்வேஷம்-ஆபி முக்யம்-சாத்விக சம்பாஷணம்ஆச்சார்ய பிராப்தி )

அரவிந்த லோசந மந காந்தா -என்கையாலே -விஷ்ணோர் கடாக்ஷம் -யம் பஸ்யேன் மது ஸூதந –(விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73 பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –)என்று சொல்லுகிற அவனுடைய ஸுஹார்த்த ப்ரகாசகமான கடாக்ஷமும் ஏதத் அதீனம் என்னுமிடம் சித்தமிறே – மந காந்தா -ததத்யந்த அபிமதை -என்றபடி -கீழ் காந்தஸ்தே என்றும் இங்கு மந காந்தா -என்றும் சொல்லுகையாலே பரஸ்பர அனுகூலதயா ஸர்வ அபிமத பிரதத்வத்திலே உபயருக்குமுள்ள ஸுஹ்ருத ஸாம ரஸ்யம் ஸ்பஷ்டமாயிற்று –அஸ்யா தேவ்யா -இத்யாதி ப்ரஸாதாத் –(அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52–தேவிவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது)தயா விசேஷத்தாலே – காந்தா ப்ரஸாதாத் -ப்ரஸாத பரமவ் -என்று (ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21–மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –)என்றுசொல்லுகிற அவனுடைய ப்ரஸாதத்துக்கும் அடியான ப்ரஸாதத்தாலே -மழைக்கண் மடந்தை யாகையாலே அவனுடைய குளிர்ந்த அருளும் வெந்நீர் என்னலாம் படி அதி சீதளமாய் இறே சீதள ஸ்வ பாவயையான இவள் தயை இருப்பது -ருதே -அனுக்ரஹ ஏக ஸ்வ பாவையான இவளுக்கு ஓரிடத்திலும் நிக்ரஹம் சம்பவியாமையாலே தன் நிவ்ருத்தி ரூப ப்ரஸாதா யோகத்தால் ஒழிய என்கை -தயா விசேஷ ரூப ப்ரஸாதத்தால் ஒழிய -என்றபடி –

ஸம்ஸ்ருத் யஷர வைஷ்ணவ அத்வஸூ -பாரிசேஷ்ய ப்ரமாணத்தாலும் புருஷார்த்த சமபி வ்யாஹாரத்தாலும் –ஸம்ஸ்ருதி -ஸப்தம் ஐஸ்வர்ய பரம் –ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா –என்று விஸதீ கரித்து அருளினார் இறே (பட்டர்)-ஆனால் ஐஸ்வர்யத்தை ஸம்ஸ்ருதி சப்தத்தால் அருளிச் செய்வான் என் என்னில் –கொள் என்றும் கிளர்ந்து எழுந்த பெரும்செல்வம் நெருப்பாக –என்று சொல்லுகிறபடியே ஐஸ்வர்யம் அல்லல் எனத் தோற்றி எரி தீயில் சுடும்படியான வைராக்யத்தாலே –இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யானும் வேண்டேன் –பெற்றாலும் ஆதரியேன் -வானாளும் செல்வமும் இம்மண்ணரசும் யான் வேண்டேன் – -என்று ஐஹ லௌகிகமான ஐஸ்வர்யத்தையும் -பார லௌகிகமான ஐஸ்வர்யத்தையும் பரித்யஜித்து –மா ஸ்ம பூத் -என்று(தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே | இதராவஸதேஷு மா ஸ்ம பூத் அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 55 –
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.) இருக்கும் ஸ்வ அபிப்ராயத்தாலும் -அநர்த்தாக்யம் என்னும்படி அநர்த்தாவஹம் ஆகையாலும் -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டமாகையாலும் –தனம் ப்ராப்ய மாத்யன் உச்சைர் ந மாம் ஸ்மரேத்அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத் -அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை) என்கிறபடி மத ஹேதுவாய் -பகவத் ஸ்மரண விரோதியாய் -இவ்வாகாரங்களினாலே ஸம்ஸாரம் அவத்யகரமாய் இருக்கையாலும் –ஸம் ஸ்ருதி சப்தத்தாலே ஐஸ்வர்யத்தை அருளிச் செய்கிறார் –அக்ஷர ஸப்தத்தாலே ஆத்ம அனுபவத்தைச் சொல்லுகிறது –வைஷ்ணவாத்வ ஸப்தத்தாலே –ஸோ அத்வந பாரமாப்நோதி -என்கிற கதி விசேஷ த்வாரா பகவத் ப்ராப்தியை லஷிக்கிறது -இவற்றில்

(விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9--எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –)

இவற்றில் ஸ்ரேயஸ் ஸ்ரேஷ்ட தம ஸூகம் –என்றும் அவற்றைத் தரும் ஸூஹ்ருத விசேஷமுமாகவுமாம்(புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை)

ந்ரூணாம் -அகில ஷேத்ரஞ்ஞருக்கு எல்லாம் என்றபடி –ந ஸம் பாவ்யதே -ந ஸித்யதி -என்றபடி ––மூன்றுக்கும் பிரமாணங்கள்-மூன்றிலும் திருவின் பிரசாதம் ஸ்பஷ்டம் -திரு மா மகள் தன்னருளால் உலகில் தேர் மன்னராய் –என்றும் –செடியாராக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமால் -என்றும் –திருமகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –என்றும் அருளிச் செய்தபடியே ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாப ரூப புருஷார்த்தங்கள் எல்லாம் பெரிய பிராட்டியாருடைய ப்ரஸாதத்தால் அல்லது பெற அரிதாகையாலே –ஸம் ஸ்ருத் யக்ஷர வைஷ்ணவாத் வஸூ ஸ்ரேய ப்ரஸாஸாத்ருதே நிரூணாம் ந ஸம் பாவ்யதே ஹி -என்கிறார் –பத்ம யோநி ரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் -திவ்யம் ச அஷ்ட குண ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -என்றும்(-ப்ரஹ்ம புராணம் நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்)என்றும்(
ப்ரஹ்மாதீநாம் யதா யத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் –தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ யபதே – (-ப்ரஹ்ம புராணம் ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்)என்று ப்ரஹ்ம ஐஸ்வர்யத்தோடு ப்ரஹ்ம ஜனகனான ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யத்தோடு வாசியற தத் ப்ரஸாத அதீனமாயிருக்கும் படியைப் ப்ரதிபாதித்தது இறே –ஆ குக்ராம நியாமகாத் -என்றும் ஏகோ முக்தாத பத்ர ப்ரஸல மணி கணாத் காரி -என்றும் –ஐஸ்வர்யம் அக்ஷரம் கதிம் -என்றும் பட்டரும் இவ்வர்த்தத்தை ப்ரகடீ கரித்து அருளினார் இறே

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

-ப்ரஸாதாத்ருதே ஸ்ரேயோ ந ஸம் பாவ்யதே -என்கையாலே -அவனுடைய ஸகல பல ப்ரதத்வமும் -ஏதத் அதீனம் என்னுமிடம் தோற்றுகிறது –அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி -யஸ்யா வீஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம் -(ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா –1-எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய் –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ-அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்–இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ –அந்தப் பெரிய பிராட்டியார் –நன்மையை அளிக்கக் கடவள்)என்று ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளும் புருஷார்த்த ஸ்ருஷ்டியும் ததிங்கித பராதீனமானால் புருஷார்த்த ப்ரதத்வம் தத் அதீனம் என்று சொல்ல வேண்டா விறே -ஹி -ஸப்தம் ஸ்ரீ ஸூக்த்தாதி ப்ரஸித்த பரம் -இவளுடைய ப்ரஸாதமும் -பிரபாவமும் -இந்த்ராதிகள் பிரபாவம்-ப்ரஸாதம் போலே கால பேத பேத்யமாய் இருக்கும் அது –ஸத்ய ஸங்கல்ப அதீன ப்ரபாவமாகையாலே இது ஏக ரூபமாய் இருக்கும் என்றபடி –

நநு -அம்ருதஸ்யைஷ ஸேது -(-முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்) என்றும்-ஸ ப்ரீதோ அலம்பலாய -(த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்)என்றும் –பலமத உப பத்தே – (-ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்) என்றும்-மோக்ஷ மிச்சேஜ் ஜநார்த்தநாத் – (ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்) இத்யாதி பிரமாணங்கள் மோக்ஷ பிரதத்வத்தை முகுந்தனுக்கே அசாதாரணமாக ப்ரதிபாதியா நிற்க (மு கு த சரண்ய முகுந்தத்வம்-மு மோக்ஷம் கு லீலா விபூதி த தருபவள் -உத்பலா வதகே -)-இங்கே பிராட்டிக்கு மோக்ஷ உபாயத்வம் சொல்லுகை ஸ்வ இதர சமஸ்த ஸஹாயா நபேஷ உபாயத்வத்துக்குச் சேருமோ வென்னில் -இவள் புருஷகாரமானால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் -என்கிற நிச்சய நிபந்தனமாகப் பரம்பரயா மோக்ஷ பிரதத்வம் சொன்ன இத்தால் தந்நிரபேஷ உபாயத்வ விரோதம் பிரசங்கியாது இறே –உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் –என்று உபாயத்வம் ஸ்வதஸ் ஸித்தமானாலும் இவள் புருஷீ கரியாத விடத்தில் அது காரியகரமாகாது இறே -அந்வய வ்யதிரேகங்களாலே தலை பெற்றாரும் தலை அறுப்புண்டாருமயிறே இருப்பது –

உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்
–2-87-

ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

(சரண வரண காலத்தில் ஷமிஷ்யாமி –இவளால் தலை யெடுக்குமாம் கல்யாண குணங்கள்- மாம் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள் –கார்ய காலம் -அநிஷ்ட நிவாரகம் இஷ்ட பிராப்தி-ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்கள் அஹம் -இதற்கு புருஷகாரம் வேண்டாமே-ஞானம் சக்த்யாதி குணங்களைத் தடுக்க ஸ்வா தந்தர்யம் பிரதிபந்தகமில்லையே – -பின்பு கைங்கர்யம் ஒன்றை பத்தாக்கித் தர வேண்டும்)

அதில் புருஷகார ஸாபேஷத்வம் உபாய நைரபேஷ்ய பஞ்சகமாகாதோ -என்னில் -ஸ்வீ கார தசையில் ஸ்வீ கர்த்தவ்ய ஸா பேஷமானவோபாதி புருஷகார ஸா பேஷமானாலும் பல ப்ரதான தசையில் பல பிரதத்வ ஹேதுவான ஞான சக்த்யாதிகளால் பூர்ணனாகையாலே உபய நிரபேஷமாகக் கார்யம் செய்ய வல்லனாகையாலே புருஷகார சாபேஷத்வம் உபாய நைரபேஷ்ய பஞ்சகமாகாது இறே -இத்தால் கார்ய காலத்தில் ஸா பேஷத்வம் நிரபேஷத்வ பஞ்சகமாகாது என்றதாயிற்று -ஆகையிறே உபாய ஸ்வீ காரத்தில் புருஷ ஸா பேஷமுமாய் புருஷகார ஸா பேஷமுமாய் இருக்கும் -கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் என்றும் ஆச்சார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாச்சார்யாரும் அருளிச் செய்தது – புருஷகார சாபேஷம் என்னில் -உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹானி  வாராதோ -என்கிற சங்கையில்-அருளிச் செய்கிறார் -உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –-கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –சூரணை -268–அதாவது-சகாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் -ஸ்வீகர்த்தாவான புருஷனையும் – ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் -அபேஷித்து இருக்கும் – ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி  பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற -கார்ய காலத்தில் – புருஷனும் -புருஷ காரமும் -ஆகிற உபயததையும் அபேஷியாதே-தானே செய்து தலைக் கட்டும் -என்கை – கார்ய காலத்தில் ஸஹ காரி சபேஷம் உண்டாகில் இறே உபயத்தினுடைய நைர பேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து –நிரபேஷமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகாரத்தில்– -ஸ்வீ கர்த்தாவும்- ஸ்வீ கரிப்பிக்கும் அவளும் வேணுமே – ஸ்வீ கர்த்தா இல்லை என்றால் ஸ்வீ காரமும் இல்லையே – புருஷகாரம் இல்லை என்னில் அதிகாரம் இல்லை ஸ்வீகார அநந்தரம் -கார்ய பல -காலத்தில் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி சமயத்தில் இருவரையும் எதிர் பார்க்காமல் தானே செய்யுமே-ஆக நைர பேஷ்யத்துக்கு பங்கம் இல்லையே –சரணமாகும் தன தான் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–சரம ஸ்லோகம் -ஏக சப்தம் -இரண்டு பக்ஷங்கள் –என்னை தவிர வேறே ஒன்றுமே உபாயம் இல்லை ஸ் வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது – இதே போல் ஆத்மாவை பரமாத்மா அழிக்க முடியுமா -சக்தி இருந்தாலும் சத்ய சங்கல்பனாகையாலே அழிக்க மாட்டான் -இங்கும் கார்யம் செய்ய வல்லவன் -புருஷனை எதிர்பார்ப்பது போல் புருஷகாரத்தையும் எதிர்பார்க்கிறான்) லஷ்ம்யா ஸஹ ரக்ஷக- (லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14- காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-)என்கிறவிடத்தில் இவளுக்கும் உபாய அந்வயம் சொல்லிற்றிறே யென்னில் -அங்கும் அப்ரதானார்த்தே திருதீயை யாகையாலே அப்ரதான ரக்ஷணமான புருஷகார பாவம் சொல்லுகிறது – உபாய வரண ப்ரதிபாதகமான பூர்வ வாக்கியத்திலே வாத்சல்யாதிவத் ஞான சக்த்யாதிவத் -விக்ரஹ வத் இவளையும் உபாய விசேஷணமாகச் சொல்லுகையாலே இவளுக்கு குணாதிவத் உபாயத்வம் சித்தமிறே யென்னில் -வாத்சல்யாதிகள் ஆஸ்ரயண ஸுவ் கர்ய ஆபாதங்களாகவும் ஞான சக்த்யாதிகள் ஆஸ்ரித கார்ய ஆபாதங்களாகவும் விக்ரஹம் ஸூபாஸ்ரயமாகவும் உபயோகிக்குமவை யாகையாலே இவற்றுக்குத் தத் அனுவிதாயித்வ மாத்ரமே இறே உள்ளது -இப்படியே இவளும் தத் அனுவிதாயியாய் இருக்கையாலே புருஷகார பாவமே இவளுக்கு நியதமாய் இருக்கும் என்று இறே த்வயத்திலும் நிர்ணயித்தது -கிஞ்ச குணாதிகளுக்கு உபாயத்வ யுண்டாகிலும் இவளுக்கு புருஷகார பாவம் நியதமாய் இருக்கும் என்றிறே ஆச்சார்யர்கள் நிர்வஹித்தது -ஆகையால் இவளுக்குப் புருஷகார பாவமே அங்கீ கார்யம் என்றதாயிற்று

(நார-குணங்கள் -சரணம் விக்ரஹம் -ஸ்ரீ பிராட்டிக்கு சம்பந்தம் -இவை மூன்றும் விசேஷணங்கள் -அவர தத்துவத்தில் நின்றும் வ்யாவ்ருத்தி -பூர்வ வாக்கியத்திலே வாத்சல்யாதிவத் ஞான சக்த்யாதிவத் -விக்ரஹ வத் இவளையும் உபாய விசேஷணமாகச் சொல்லுகையாலே-என்றவாறு -வாத்சல்யாதி -கல்யாண குணங்கள் -உபாயத்தில் அன்வயம் உண்டே-என்னில்-தத் அனுவிதாயித்வ மாத்ரமே இறே உள்ளது-அனு பின்தொடர்தல் –அப்ரதானம் -கௌனம் இவை என்றவாறு)

லஷ்மீ குணாதிகளுக்கு விசேஷணத்வம் அவிசிஷ்டமாய் இருக்க குணங்களுக்கு உபாயத்வம் அங்கீ கரித்துப் பிராட்டிக்கு புருஷகாரத்வம் அங்கீ கரிக்கைக்கு ஹேது என் என்னில் -குணங்கள் கார்ய உபயோகிகளாகையாலும் இவளுக்கு கார்ய உபயோகித்வம் இல்லாமையாலும் குணங்களுக்கு உபாயத்வமும் இவளுக்குப் புருஷகாரத்வமும் அங்கீ கரிக்கத் தட்டில்லை –

நநு பிராட்டிக்கு உபாயத்வ கொள்ளில் உபாய நைர பேஷ்யம் ஸித்தியாதோபாதி குணங்களுக்கு உபாயத்வம் கொள்ளில் தந் நைர பேஷ்ய ஹாநி வாராதோ என்னில் -குணங்கள் ப்ருதக் புத்தி ப்ரவர்த்தகம் அல்லாமையாலே குண த்வாரா குணி கார்யம் செய்கை நைர பேஷ்ய பஞ்சகம் அன்று-த்ரவ்யத்வேந பிராட்டிக்கு ப்ருதக் புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதை யுண்டாகையாலே தத் உபாயத்வே உபாய நைர பேஷ்யம் ஜீவியாது இறே -ஆகையிறே உபாயா அனுஷ்டான ப்ரகாசகமான பூர்வ வாக்கியத்தில் சித்ரகுமாநய-என்கிற விடத்தில் போலே பிராட்டிக்கு உப லக்ஷணத்வமும் உபேய பிரார்த்தனா ப்ரகாசகமான உத்தர வாக்கியத்தில் தண்டிநமாநய என்கிறவிடத்தில் போலே விசேஷணத்வமும் நிர்ணயித்து அனுசந்தித்ததும் – இரண்டு இடத்திலும் ஸப்தம் ஒத்து இருக்கையாலே ஏக பிரகாரமாக உபயத்ர நிர்வாஹம் பண்ண ப்ராப்தமாயிருக்க ஏகத்ர உபலக்ஷணத்வமும் அந்யத்ர விசேஷணத்வமும் என்று இப்படி விபஜிக்கிறதுக்கு கமணிகை என் -என்னில் வாக்ய த்வயத்திலும் விசேஷ்ய ப்ரதிபாத்ய ஸப்தங்கள் சமானமாய் இருக்கச் செய்தேயும் -அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் சித்யாதர்த்த நிர்ணய -என்கிற நியாயத்தாலே (அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –)பூர்வ வாக்யம் உபாய பிரகரணமாகையாலே வாத்சல்யாதி குண விசிஷ்டன் உபாயம் என்றும் -உபேய பிரகரணமான உத்தர வாக்கியத்தில் ஸர்வ சேஷியான வஸ்துவே உபேயம் என்றும் -விபஜித்து அர்த்த நிர்ணயம் பண்ணினால் போலே -விசேஷண ப்ரதிபாதக ஸப்தங்கள் உபயத்ர சமானமாய் இருந்ததே யாகிலும் உபாய பிரகரணத்தில் பகவத் உபாயத்வ நைர பேஷ்ய ஸித்திக்காக பிராட்டிக்கு உபாயத்வ அநங்கீகாரேண புருஷகாரத்வம் கொள்ளுகை உசிதமாகையாலும் உபேய ப்ரகரணத்தில் மிதுன விஷய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமாகையாலும் பிராட்டிக்கு விசேஷணத்வம் கொள்ளுகை உசிதமாகையாலும் -ஆகிற இவ்வர்த்த ஸ்வாரஸ்யத்தைப் பற்ற இப்படி விபஜிக்கத் தட்டில்லை

(ஸ்ரீ மத் பூர்வ வாக்கியத்தில் உபலக்ஷணம் என்றும் ஸ்ரீ மதே உத்தர வாக்கியத்தில் விசேஷணமாகவும் அர்த்தம் கொள்கிறோம் -பிரகரணத்துக்குச் சேர–அர்த்தம் –பிரகரணம் -இடத்துக்குப் பொருத்தமாகப் பொருள் கொள்ளுவது -லிங்கம் அடையாளம் -உசிதமாக பொருள் கொள்ள வேண்டுமே-வாத்சல்யாதி குண விசிஷ்டன்-ஸர்வ சேஷியான வஸ்து-விபஜித்து அர்த்த நிர்ணயம் பண்ணினால் போலே–மாலுக்கு இரண்டு விதமாகக் கொண்டது போல் திருவுக்கும் இரண்டு விதமாகக் கொள்வதில் தப்பில்லையே)

உபலக்ஷணமாவது -உப லஷ்யாத் பஹிர்ப்பூதமாய் உப லஷ்ய ப்ரதீத் யுபாயமான தர்ம விசேஷம் -சாகாயாம் சந்த்ர-இத்யாதி -பிதாவுக்கு ஹித பரத்வம் அசாதாரணமாய் ப்ரிய பரத்வம் இருவருக்கும் அவிசிஷ்டமாய் இருக்கை லோக ஸித்தம் இறே -மாதாவுக்கு ப்ரஜா ஹித பரத்வம் பாரதந்தர்ய பஞ்சகம் இறே –
கிஞ்ச -சரணம் என்றும் ஏகவசன பிரயோகம் பண்ணினால் உப லக்ஷணமாய் விசேஷணத்துக்கும் உபாய அந்வயம் சம்பவித்தது விடும் என்றும் தத் வ்யாவ்ருத்யர்த்தம் இறே த்வி வசன ப்ரயோகம் பண்ணுகிறது -த்வி வசனம் மற்ற ஒன்றையும் ஸஹியாது இறே -விசேஷ்ய ப்ராதான்யத சொன்ன த்வி வசனம் பத்னீ விசேஷணத்துக்கும் அவிசிஷ்டம் என்னில் -அப்போதும் ப்ரதான்யம் விசேஷ்யத்துக்கேயாய் விசேஷணத்துக்கு அப்ராதான்யமாகையாலே அப்ரதான உபாயமான புருஷகார பாவமே ஸித்தித்து விடுமிறே (தண்டு வைத்த புருஷன் -நாநாவித பசுக்களுடன் கூடிய கோவிந்தன் -உபலக்ஷணம் பஹிர் பூதம் -சரணாகா பஹு வசனம் -நான்கு திருவடிகளைச் சொல்லவில்லையே -சரணம் என்றும் ஏக வசனமும் சொல்லவில்லையேயே -சரணவ்-இரண்டு திருவடி இணைகள் -)-இருவரும் ப்ரத்யேக யுபாயம் என்னுமது லஷ்மீ விசிஷ்டம் உபாயம் என்கிறதோடு சேராது -விசிஷ்டம் உபாயம் என்று அங்கீ கரித்து இவளுக்கும் பல பிரதத்வம் சொல்லும் போது ஈஸ்வரனுக்குப் பல ப்ரதான ஹேதுவான ஞான சக்த்யாதிகள் இன்றியிலே ஒழிய வேணும் -ஞான சக்த்யாதிகள் உண்டு என்னில் அப்போது ஏததுபாய பாவ நிரபேஷமாக ஸ்வயமேவ பல ப்ரத க்ஷமன் இறே -பலப்ரதான ஹேதுவான ஞான சக்த்யாதிகள் உண்டாக்குகிறாள் என்னில் -குணங்கள் வந்தேறியாய் ஸ்வாபாவிகங்கள் இன்றியிலே ஒழியும் -ஸ்வா தந்தர்யதிரோஹிதங்களான வாத்சல்யாதிகளை பிரகாசிப்பிக்கிறாப் போலே திரோஹித ஞானம் சக்திகளை பிரகாசிப்பிக்கிறாள் என்னில் -அவற்றுக்கு ஸ்வாதந்தர்யம் போலே இவற்றுக்கு ஒரு திரோதாயக குணமில்லை -உண்டு என்னில் -ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களை செய் -திருவாய் -3-10-8-என்கிறபடியே ஞானம் கொண்டு சோம்பாதே நிரந்தர ஸ்ருஷ்ட்டி பண்ணக்கூடாது இறே -யேந கேந பிரகாரேண உபாய அந்வயம் சொல்லில் -சீதோ பவ -(யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக) என்ன வல்ல திவ்ய சக்தி உண்டாயிருக்க ஸ்வ பாரதந்தர்ய ஹானி வாராமல் அந்தராத்மா ச மே ஸூத்த – (ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-வானரத் தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –) என்று ஸ்வ ரக்ஷணே ஸ்வ ப்ரவ்ருத்தி யாகிற அஸூத்தி இத்தலையில் இல்லை என்றும் -தஸ்மிம்ச் ச பஹவோ குணா என்றும் உபாய பூர்த்திக்கு அடியான குணபூர்த்தி அத்தலைக்கே உள்ளது என்றும் தர்சிப்பித்து ஸ்வ ப்ராப்திக்கும் தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று ஸ்வ ஸ்வரூப அனுரூப பாரதந்தர்ய அனுசந்தானமாக தந்நிரபேஷ உபாயத்வத்தைப் பார்த்திருக்கும்படியான இவள் பரி ஸூத்த ப்ரக்ருதிக்கு அது சேராது இறே

நநு -ஸ்ரீயப்பதியே உபாயம் என்றும் அங்கீ கரிக்க வேண்டுமாகையாலே நிரூப்ய ஸ்வரூபத்துக்குச் சொன்ன உபாயத்வம் நிரூபக ஸ்வரூபத்துக்கும் -யத்யபி ஸச் சித்த -(யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்-சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –) என்கிற நியாயத்தாலே அநிவர்த்யமாய்க் கொண்டு தன்னடையே வாராதோ என்னில் ஸ்வரூப நிரூபகத்வேந நிரூப்ய நிரூபகங்களுக்கு அவர்ஜனீய ஸம்பந்தம் உண்டேயாகிலும் உபாய வரண தசையில் ஸ்வரூப நிரூபகங்களான ஞான ஆனந்தங்கள் உபயோகம் இல்லாமையாலே நிரூபக மாத்ரமாய் நிற்கிறாப் போலே பகவத் ஸ்வரூப நிரூபகமான லஷ்மீ ஸ்வரூபமும் காரணத்வ தசையில் போலே உபாய தசையில் தன்னால் கொள்வ தொரு பிரயோஜனம் இல்லாமையாலே தத் ஸ்வரூப நிரூபக மாத்திரத்திலே அன்வயித்து தத் அசாதாரண உபாயத்வத்தில் அந்வயியாமல் இருக்கையாலே நிரூபகமான ஏதத் ஸ்வரூபத்துக்கு உபாயத்வம் வாராது இறே –
கிஞ்ச -உபாய விசேஷணமான குண விக்ரஹங்களுக்கு சவுகர்ய ஆபாகத் வேனவும் கார்ய ஆபாகத் வேனவும் ஸூபாஸ்ரயத் வேனவும் கார்ய பேதம் உண்டாகிறாப் போலே -தத் விசேஷண பூதையான பிராட்டிக்கும் உபாய தசையில் உபாயத்வ ரஹிதமாகப் புருஷகாரத்வ ரூப காரியபேதம் உண்டாகத் தட்டில்லை–லஷ்மீ பர்த்துர் தாஸ தாஸஸ்ய தாஸ – (புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்-உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –)என்றும் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் – சேஷத்வ ஸ்வரூபத்துக்கும் -(விருத்திக்கு பிரமாணம் மேல் )–ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே ஜகத் பதி இத்யாதி என்றும் -திருமாலே நின்றே ஆட்ச்செய்ய -(8-3-)-என்கிறபடியே -என்கிறபடியே ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய தசையில் கைங்கர்யத்துக்கும் மிதுனமே பிரதிசம்பந்தியாக வேண்டினவோபாதி உபாய அனுரூபமான உபாய தசையிலும் அவஸ்ய அபேக்ஷிதமான உபாய பிரதிசம்பந்தித்வத்தில் ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சஹாயா அந பேஷமான உபாயத்தினுடைய மாம் ஏகம் என்கிற நைரபேஷ்ய பஞ்சகமான உபாயத்வத்தில் அந்வயமற்று தத் அவிரோதமாகப புருஷகாரத்வ ரூப ப்ரதி சம்பந்தித்வத்திலே இவளுக்கு அன்வயமாகக் கடவது –

(சேஷத்வம் -பக்தபக்தர்களுக்கும் -கைங்கர்யமும் அடியார் அடியாருக்கும் -கொண்டு உபாயத்வ ஒன்றுக்கும் மாம் ஏகம் -என்று ஸஹாயாந்தர நிரபேஷமாக கொள்ள வேண்டும் -கத்யத்தில் பிராட்டியை முதலில் பற்றியதும் மோக்ஷத்துக்கு அன்று- அவனே உபாயம் என்ற உறுதி மாறாமல் இருக்கவே தானே-உபாய உபாயமாக புருஷகாரம் பண்ணுபவள் என்றவாறு)

நநு –ஸ்வா யம்புவே ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் -ஷிப்ர ப்ரஸாதி நீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -(எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-)என்றும் வைஷ்ணவே –ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –(-வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –) என்றும்-ப்ராஹ்மே –ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரி ஸோஷிணீ –பவ பங்காப ஹரிணீ பர நிர்வாணதாயிநீ – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23-உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –)என்றும் -இத்யாதி பிரமாணங்கள் இவளுடைய உபாய பாவத்தைச் சொல்லிற்றே யாகிலும் அவை சரண்யனுடைய இச்சானுவிதாயித்வ ஸூ சகங்களாகக் கடவது -இதுக்கு நியாமகம் என் என்னில் –லஷ்மீ புருஷ காரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ -ஏதஸ் யாச் ச விஸேஷோ அயம் நிகமாந்தேஷு சப்த்யதே -என்றும்
லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா –நான்யதா லக்ஷணம் பவேத்- (ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள்-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –- –மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –)என்றும் -புருஷகாரத்வத்தையே லக்ஷணமாகச் சொல்லி அந்யதா லக்ஷணம் இல்லையென்று உபாயத்வத்தை நிஷேதித்தது இறே -அந் வயத்திலும் வ்யதிரேகம் அர்த்த தார்ட்யத்துக்கு உறுப்பாகையாலே -இதுவே பிரபல ப்ரமாண ப்ரஸித்தமாகையாலும் பகவத் அபிமதமாகையாலும் பிராட்டிக்கு அத்யந்த அபிமதமாகையாலும் ஸம்ப்ரதாய ஸித்தமாகையாலும் ஏதத் அனுகுணமாக அவற்றைத் யோஜிக்கத் தட்டில்லை -தத் அநனுகுணமாக இவற்றை யோஜிக்குமிடத்தில் பிரபல ப்ரமாண விரோதமும் -பகவத் அநபிமதத்வமும் லஷ்மி அநபிமதத்வமும் சம்பிரதாய விரோதமும் ஸம்பவிக்கும் -ஆகையாலே ஸகல ப்ரமாண ப்ரமாத்ரு பரிக்ருஹீதமான புருஷகார பாவமே சார அசார விவேக சதுரர்க்குப் பரிக்ராஹ்யம் என்றதாயிற்று–தர்மஞ்ஞமைய ப்ரமாணம் வேதாச் ச -(ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் )-யத் தாசாரதி ஸ்ரேஷ்ட -(யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந: ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.)-மேலையார் செய்வனகள் வேண்டுவன –என்னக் கடவது இறே
ஆக-இஸ் ஸ்லோகத்தாலே பெரிய பிராட்டியார் ஸ்வ கருணா கடாக்ஷ லேசத்தாலே ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸகல புருஷார்த்தங்களையும் ப்ரஸாதித்து அருளுவார் -ஸகல புருஷார்த்த விலக்ஷண மோக்ஷத்தை தத் அசாதாரண உபாய பூதனாய் ஸ்வ வஸ வர்த்தியாய் ஸ்வ அபாங்க இங்கித பராதீனனான ஈஸ்வரனைக் கொண்டு கொடுப்பித்து அருளுவர் -ஆனபின்பு புருஷார்த்தங்களோடு -விலக்ஷண புருஷார்த்தத்தோடு விசேஷமற ஸகல ஸ்ரேயஸ்ஸூம் தத் ப்ரஸாதத்தாலே அல்லது சம்பவியாது என்னுமிடத்தை ஸ்த்திரீ கரித்து அருளினார் ஆய்த்து -ஸ்ரீ ஸாத்வதத்திலே அவனுக்கு மோக்ஷ பிரதத்வமும் தேவிக்கு ஐஸ்வர்ய பிரதத்வமும் விபஜித்து ஸ்வயமேவ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் இறே

தாமரைக் கை அவனது செந்தாமரைக் கை இவளது –

————-

அவதாரிகை
த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –
(ஸூந்தர -55-26-பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப் பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —)என்கிற ப்ரமாண அனுஸாரேண –காந்தஸ்தே புருஷோத்தம-என்று கர்த்தரி யர்த்தத்தையும்(ஸ்ராயதே -தான் பற்றுவதையும் )-பணி பதி என்று தொடங்கிக் கர்மண் யர்த்தத்தையும் (மற்றவர்கள் இவளைப் பற்றுவதையும் )அனுசந்தித்து -ஆக -இப்படி உபய விபூதியில் உள்ளாருக்கும் ஆஸ்ரயணீயையாய் -உபய விபூதி நாதனை ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கையாலே ஸ்ரீ என்றும் அசாதாரணமான திருநாமத்தை உடையையாய் -அவனுக்கும் பூஜ்யையாம் படியான குண பூர்த்தியை யுடைய உன்னை ஞான சக்த்யாதி குண ஹீனனான நான் ஸ்தோத்ரம் பண்ணுவது எங்கனே என்று பீத பீதராய் ஸ்தோத்ராந் நிவ்ருத்தரானார் பிரதம ஸ்லோகத்திலே

இப்படி நிவ்ருத்தரான படியைக்கண்டு இவர் பண்ணுகிற ஸ்தோத்ரத்தை ஸ்ரவித்து -ஸ்ரவிப்பித்தால் அன்றோ ஸ்ருணோதீதி -ஸ்ரீ -ஸ்ராவயதீதி —ஸ்ரீ -என்கிற நிருக்த் யநுரூப அசாதாரண நாமம் நமக்கு நிலை நிற்பது -ஆனபின்பு இவர் யதா ஸ்தோத்ரம் பண்ண வல்லராம் படி கடாஷிப்போம் என்று கணிசித்து -இவர் பக்கலிலே கருணா கடாக்ஷத்தைப் பண்ண -இதொரு தயா விசேஷம் இருந்தபடி என் என்று தத் ஸுலப்ய அனுசந்தானத்தாலே ஸமாஹிதராய் ஸம்பந்த ஞான பூர்வகமாக சரணம் புகுந்து -கீழ் ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்று சொன்ன வ்யுத்பத்தி த்வயார்த்தமும் –அஸ்ய ஈஸாநா -இத்யாதி வேதாந்த ஸித்தம் என்னுமிடத்தை லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -என்று ஸூசிப்பியா நின்று கொண்டு ஸமாஹிதராய் பயமும் சமித்து ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தரானார் த்வதீய ஸ்லோகத்திலே –

இப்படி ஆக்ஷேப சமாதான வ்யாஜேந ப்ரவ்ருத்தமான ஸ்லோக த்வயத்தாலும் -தத் பரத்வ ஸுலப்யங்களை அனுசந்தித்து -திருவடிகளை ஆஸ்ரயித்தாருக்குத் தத் கடாக்ஷ லேசத்தாலே ஸகல புருஷார்த்தங்களும் ஸம்பவிக்கும் -அது இல்லாதாருக்கு ஒரு ஸ்ரேயஸ்ஸூம் சித்தியாது (ஸ்ருணாதி -சகல அநிஷ்டங்களையும் போக்கி அருளி –ஸ்ரீநாதி -சகல இஷ்டங்களையும் அளித்து அருளுகிறாள்)என்று கொண்டு பிராட்டியினுடைய ஸர்வ சமாஸ்ரயணீயத்வ க்யாபந அர்த்தமாக ஸகல புருஷார்த்த பிரதத்வத்தை அருளிச் செய்தார் த்ருதீய ஸ்லோகத்தாலே

ஆக இப்படி ஸ்லோக த்ரயத்தாலும் ப்ரக்ருதியான ஸ்ரீ சப்தார்த்தை அருளிச் செய்து -அநந்தரம் ப்ரத்யயமான மதுப்பின் அர்த்தத்தை அருளிச் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி பகவத் ஸ்வரூப ரூப குணாதிகளிலே தத் ஸஹ தர்ம சாரிணியான இவளுடைய ஸ்வரூபாதிகளுக்கு யுண்டான அயோக வ்யச்சேதத்தை அநுஸந்தியா நின்று கொண்டு -லஷ்ம்யா ஸஹ –ரக்ஷக -ஸ்ரீ யா ஸார்த்தம் —என்கிறபடியே உபய விபூதிக்கும் நித்ய ரக்ஷகமாய் நித்ய ப்ராப்யமான நித்ய யோகத்தை அனுபவித்து நிரஸ்த சமஸ்த பிரதிபந்தகராய் ப்ராப்த பரிபூர்ண மநோ ரதராய் –திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –என்கிறபடியே ஸ்ரீயப்பதியினுடைய நிர்ஹேதுக கிருபையாலே நிரதிசய ஆனந்தத்தை பிராபித்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டுகிறார் -துரீய ஸ்லோகத்தாலே –

(லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸோ திவ்யோ காருண்ய ரூபயா ரக்ஷக சர்வ சித்தாந்தே வேதாந்ததே அபி ச ..-இங்கு நித்ய ரக்ஷகமாயும் வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி:-அங்கு அனுபவ தசையில் மட்டுமே தானே -ஆகவே நித்ய ப்ராப்யமான நித்ய யோகத்துக்கு இரண்டு பிரமாணங்கள் காட்டி அருளிச் செய்கிறார்)

(மேல் நாராயண சப்தார்த்தங்களை ஸ்தோத்ர ரத்னத்தில் அருளிச் செய்கிறார்)

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்
யான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி தான்
யாஹூ ஸ் வைர நுரூப ரூபா விபவைர் காடோப கூடாநி தே(அநந்த -பாடபேதம் )–4-

சாந்த –ஷடூர்மிகள் அற்றதாய்
ஆநந்த -ஆனந்த மயமாய்(அநந்த -பாடபேதம் -த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் )
பரமம்–தனக்கு மேலானது அற்றதாய்
ப்ரஹ்ம–பெரியதாய் இருப்பதாலும் -பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதாய் இருக்கும்
ஹரே யத் ரூபம் -ஹரியினுடைய யாதொரு ஸ்வரூபம் உண்டோ
ததோ அபி-அதைக் காட்டிலும்
தத் ப்ரியதரம்-அந்த பகவானுக்கு மிகவும் பிரியமாய் இருப்பதும்
மூர்த்தம்-கண்ணால் காணக் கூடியதும்
ப்ரஹ்ம -ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதும்
யத் யத்புதம்-மிகவும் அத்புதமானதுமான
ரூபம் யத் -யாதொரு ரூபம் உண்டோ
யதா ஸூ கம் விஹரதோ –இஷ்டப்படி விளையாடும் எம்பெருமானுக்கு
யன்யானி ரூபாணி யாநி –மற்றும் யாவை சில ரூபங்கள் உண்டோ
தாநி சர்வாணி -அந்த ரூபங்கள் எல்லாம்
தே -உனக்கு
ஸ்வைர் அநுரூப ரூப விபவைர்-அசாதாரணங்களாய் தகுந்தவையாய் இருக்கும் திவ்ய ரூபங்களால்
காடோப கூடாநி ஆஹூ-நன்றாக ஆலிங்கனம் செய்யப்பட்டவை என்று பிரமாணங்கள் சொல்லுகின்றன

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம்-என்கிற இவ்வளவாலே திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் –சாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் -மஹா விபூதி ஸம் ஸ்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம் -(ல த-17-5- ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ ) என்கிற திவ்யாத்ம ஸ்வரூப நிர்ணாயக பிரமாணத்தை உட்க்கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது –
சாந்தேதி -சாந்தியாவது -அசநாயா அபிபிபாஸே ச சோக மோஹௌ ஜராம்ருதீ ஷடூர் மிபிர் விஸூத்தா -(பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது) என்ற ஸ்ருதி ஸித்த ஷடூர்மி ரஹிதமாய் -அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜன்மபிவர்ஜித சக்யதே வக்தும் யஸ் சதாஸ் ஸ்தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-(குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்) என்ற புராண ரத்ன யுக்த பிரகாரத்தாலே ஷட்பாவ விகார ரஹிதமுமாய் இருக்கை -இத்தால் அகில ஹேய ப்ரத்ய நீகமாய் இருக்கும் திவ்யாத்ம ஸ்வரூபம் என்றதாயிற்று -1-ஸ்வயம் ஹேய ரஹிதமாய் இருக்கை யன்றிக்கே 2-ஹேய பிரதிபடமுமாய் -3ஸ்வ ஆஸ்ரித ஹேய நிவர்த்தகமுமாய் இறே இருப்பது (துயரறு சுடரடி -துயர் அறுப்பவர் என்றும் தமது துயரை அறுப்பவர் என்றும் போல் )-ஹேய ப்ரத்ய நீகம் சொன்ன இப் பதத்தாலே கல்யாணைக தாநத்வமும் அர்த்ததா சித்தமாயிற்று –ஹேய ப்ரத்ய நீகம் புக்கவிடத்தே கல்யாணைக தாநத்வமும் புகும் என்று இறே அருளிச் செய்தது –அருகலிலாய பெருஞ்சீர் -திருவாய் -1-9-3-என்கிறபடியே (அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்-தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-)அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந என்று உபய லிங்க விஸிஷ்ட வஸ்துவை அனுபவித்து அருளினார் இறே பாஷ்யகாரர் –ஈஸ்வரன் அகில ஹேய ப்ரத்ய நீக அநந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -என்று தத் திவ்ய ஸூக்தியைப் பின்சென்று அனுபவித்து அருளினார் இறே பிள்ளை லோகாச்சார்யரும் – சாந்தானந்தம் சிதாநந்தம் -என்று முக்த கண்டமாகச் சொன்ன லஷண த்வயத்தில் இங்கு ஒன்றை ஓன்று லஷிக்கிறது -இத்தால் அபஹத பாப்மா விஜர-என்று தொடங்கி ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப-என்ற ப்ரமாண அர்த்தம் சொல்லிற்று (-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1- எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –)-

அநந்த பதத்தாலே –த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் என்றபடி -அதாவது விபுத்வாத் தேசதஸ் பரிச்சேத ரஹிதமாய் -நித்யத்வாத் காலதஸ் பரிச்சேத ரஹிதமாய் -ஸமஸ்த வஸ்து பிரகாரித்வாத் ஸ்வ சத்ருஸ வாஸ்து பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் –என்றபடி –

அதவா –சாந்த ஆனந்த என்ற பாடமாய் –ஞான ஆனந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–(எந்தப் பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது – )என்கிறபடியே ஆனந்த மயனாய் இருக்கும் என்னவுமாம் –உணர் முழு நலம் -என்னக் கடவது இறே –முழு உணர்வும் முழு நலமுமாய் யதா சைந்தவகந என்னுமாப் போலே விஞ்ஞான கனமுமாய் பிரஞ்ஞான கனமுமாய் இறே ஸ்வரூபம் இருப்பது -இத்தால் ஸ்வ அனுபவ தசையில் ப்ரகாசமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கும் என்கை –

(ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –)

சாந்தாநந்த -என்று ஸ்வரூப நிரூபகங்களான ஞான ஆனந்த அமலத் வாதிகளைச் சொன்ன வித்தால் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞான சக்த்யாதி அஸங்க்யேய கல்யாணம் குண கணங்களும் யுக்த பிராயங்கள் -ஸ்வரூப அனுபந்திகளாய் இறே இவை இருப்பன-சஹஸ்ராக்ஷ-ஸர்வஞ்ஞ-சஹஸ்ர சீர்ஷா புருஷ -பரா அஸ்ய சக்தி -இத்யாதி ப்ரமாண சித்தமிறே

மஹா விபூதி-மஹத்துக்களாய் ஸூத்த அஸூத்தங்களான விபூதி த்வயத்தை யுடைத்தாய் -அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட -திருவிருத்தம் -33–அங்காதும் சோராமே ஆள்கின்ற-நாச்சியார் -11-3-பாதோ அஸ்ய விச்வா பூதாநி -த்ரி பாதாஸ்யா அம்ருதம் திவி —(ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3- இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –)என்கிறபடியே உபய விபூதி யோகமும் சொல்லுகிறது –

பரமம் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று நிரூபமாகையாலே ஸர்வ உத்க்ருஷ்டமாய்

யத் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –(ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –) ஆனந்தோ ப்ரஹ்ம — (தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்) ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்ய்ஜாநாத் – (தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்) நிஷ்களங்கோ நிரஞ்சன் -(நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2–களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –)ந தத் சமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஓத்தார் மிக்கார் இலையாய -2-3-2-
சம்ஜாயதே (ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் – எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –) இத்யாதி-மனன் உணர்வளவிலன் -இத்யாதி ப்ரமாண ஸித்தியை -யச் -சப்தம் ஸூ சிப்பிக்கிறது

ப்ரஹ்ம -ப்ருஹத்த்வாத் ப்ரும்ஹணத்வாச் ச ப்ரஹ்ம இத்யபிதீயதே – (பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –) என்று நிரதிசய ப்ருஹத்வ ப்ரும்ஹணத்வம் யுக்தமாய் இத்தால் ஸ்வரூப விபுத்வம் சொல்லுகிறது
ரூபம் -ஸ்வரூபம்
ஆக அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக தானமாய் த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் -விபூதி த்வய நிர்வாஹகமுமாய் நிருபமுமாய் விபுபாய் ஸகல உபநிஷத் பிரஸித்தமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவித்தாராய்த்து
சாந்த-என்கையாலே அவிகாராய ஸூத்தாயா –(அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1- விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –) என்கிற பத த்வய அர்த்தமும் அநந்த பதத்தாலே நித்யாய என்கிற பதார்த்தமும் பரம் ரூபம் என்கையாலே பரமாத்மநே என்கிற பதார்த்தமும் மேலே ரூபம் என்கையாலே சதைக ரூப ரூபாய என்கிற பதார்த்தமும் ஹரேர் ப்ரஹ்ம என்கையாலே விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -என்கிற பதார்த்தமும் ஸ்பஷ்டமாயிற்று –

ஹரே -ஹரிர் ஹரதி பாபாநீ — (ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்-கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –)என்கிறபடியே ஸ்வ ஆஸ்ரிதருடைய ஸ்வ ப்ராப்தி பிரதிபந்தக ஸகல பாப நிவர்த்தகனானவனுடைய

(அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல் அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-ஆர்த்தி ஹரத்வமே பத்தாம்பத்தின் அனுபவம் )


அதவா -ஹரே -தேவ தேவோ ஹரி பிதா –
– (த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126– தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –)என்கிறபடியே ஸகல சேதனருக்கும் ஸாஷாத் பிதாவானவனுடைய -என்றாகவுமாம் –பித்ரு மாத்ரு ஸூதா (பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்)-இத்யாதி-நாம ஸஹஸ்ரவான் — (ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்-முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் )என்கிறபடியே ஆயிரம் பேருடைய பிரானாயிருக்கவும் இவ்விடத்தில் ஹரி என்ற திரு நாமத்தை அருளிச் செய்ததுக்குக் கருத்து என் என்னில் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகப் பற்றின ப்ரீதி அதிசயத்தாலே –அவாவறச் சூழ் அரியை –என்றால் போலே ஸ்வ அனுபவ ஸகல பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வ அபேக்ஷிதமான இருவருமான சேர்த்தியை யதா மநோ ரதம் அபிநிவேசம் தீர அனுபவித்து படியை ஸ்பஷ்டமாக்குகைக்காக ஹரி என்ற திருநாமத்தை அருளிச் செய்கிறார் –ஸர்வ அபேக்ஷித ப்ரதானான ஸர்வேஸ்வரனை -என்று இறே அருளிச் செய்தது – ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணம் ஏவ ச -ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் தரிரி தீர்யதே (ஹர்யஷ்டகம் -பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –)என்கிறபடியே –நெற்றில் மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் ஒற்றைக்கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி -பெரிய திரு-11-6-3-என்றும் தம பரே தேவ ஏகீ பவதி —என்கிறபடியே தன் ஸங்கல்பத்தில் ஏகி பவிக்கும்படியான ஸர்வ என்றும் (ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14–எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –)என்றும் ஹர்த்ருத்வத்தையும் -அசேஷாணாம் ஹி பூதாநாம் ப்ரபவோ ஹரியஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜா தபவஜ் ஜகத் –-என்கிறபடியே அப்யய பூர்வகமான ஜகத் காரணத்வத்தையும் ப்ரதிபாதிக்கிற இத்திருநாமத்தை அருளிச் செய்கையாலே நாராயண சப்தார்த்தத்தை விவஷித்து அருளிச் செய்தார் என்னுமிடம் தோற்றுகிறது – நராஜ்ஜாதாநி தத்தவாநி –ஆபோ நாரா இதி ப்ரோக்தா — (-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7–நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –)என்கிறபடியே ஜகத் காரணத்வ வாசகமாய் இறே நாராயண ஸப்தம் தான் இருப்பது -அந்த ஜகத் காரணத்வந்தான் –ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான் —என்கிறபடியே (ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –)(ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8-இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்)அப்யய பூர்வகமாய் இருக்குமிறே -அந்த அப்யய பூர்வகமான ஜகத் காரணத்வத்தை இத்திரு நாமம் பிரதிபாதிக்கையாலே நாராயண பத பர்யாயம் என்னுமிடம் சித்தமிறே -ஆகையாலிறே –விஸ்வம் நாராயணம் ஹரிம் -(-தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே ) என்றும் –அற்புதன் நாராயணன் அரி –என்றும் வேதாந்த த்வயத்திலும் நாராயண பதத்வ பர்யாயமாக ஹரி ஸப்தத்தை அருளிச் செய்தார் இறே

(ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-
ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.)

(-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.)

(அஷ்ட ஸ்லோகியில் உபாய பாவத்தையும் பிராப்ய பிரார்த்தனையும் ஹரி ஸப்தத்தாலே அருளிச் செய்துள்ளார் -அன்றோ த்வயத்தில் பூர்வ உபாய வாக்கியங்களில் நாராயண பதத்துக்கு ஸத்ருசமாக அன்றோ ஹரி பதமும் உள்ளது)

அநந்தரம் கீழ் அனுபூதமாய் அமூர்த்தமுமான ஸ்வரூபத்துக்கு ஆஸ்ரயமாய் -மூர்த்தமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவிக்கிறார் -மூர்த்தம் ப்ரஹ்ம –என்று தொடங்கி யதத்யத்புதம் -என்னுமளவாக –மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்-
மூர்த்தம்
-ஸ்பர்ச ரூபாதி குணங்களோடே கூடி பரமபத பர்யங்காதி தேச பரிச்சின்ன விக்ரஹமாய் இருக்கை (தானே ஸங்கல்பித்து பரத்வாதி பஞ்ச பிரகாரங்களில் அளவுக்கு உட்பட்ட தன்மையில் மூர்த்தமாக தன்னைக்காட்டி அருளுகிறவன் -தமர் உகந்த திருமேனி இத்யாதி – )-
மூர்த்தம் -சக்தய பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷதாக்யயா — (பாஞ்சராத்ரம்-பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை )என்கிறபடியே-பஞ்ச உபநிஷத்துக்களாவன –பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி —என்கிறபடியே பரமேஷ்டி புருஷ விஸ்வ நிவ்ருத்தி ஸர்வ ஸம்ஜ்ஜிகங்களான அப்ராக்ருத பூத பஞ்சகங்கள் -ஏவம்வித பஞ்ச உபநிஷத்துக்கள் தான் ஸப்தாதி பஞ்ச குண விஸிஷ்டங்களாய் இருக்கையாலே- பரமேஷ்டீ ஸ்ம்ருதச் சப்தே ஸ்பர்ஸே து புருஷா ஸ்ம்ருத-விஸ்வாத்ம தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்யாத்மா ரஸே ஸ்ம்ருத ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருத- (பாஞ்சராத்ரம்-பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –)என்கிறபடியே பரமேஷ்ட்யாதி சம்ஜ்ஜிகங்களான பூத பஞ்சகமும் -ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்த சம்ஜ்ஜிக பஞ்ச குணத்வேந ப்ரமாண ப்ரஸித்தங்களாய் இருக்குமிறே -ஆகையாலே ஏதாத்ருஸ பஞ்சகுண காஸ் ஆகாசாத் யப்ராக்ருத பூத பஞ்சகமாய் இருக்கையாலே மூர்த்தம் –என்கிறார் –

இச்சேதனன் கர்ம அனுகுணமாகப் பரிக்ரஹிக்கும் தேஹமாகிலிறே –மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் –பெரிய திரு-1-9-6-என்றும் மஞ்சு சேர் வான் ஏரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கை -பெரிய திரு -9-7-8-என்கிறபடியே பிராகிருத பஞ்ச பூத மயமாய் இருப்பது -இங்கன் இன்றிக்கே –பஞ்சை தாச் சக்த்ய ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந -அசேஷ ஜகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா – (பாஞ்சராத்ரம்-இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –) என்று-பகவச் சக்தித்வேந ஸமஸ்த கார்ய பதார்த்த ஆதாரங்களாய்க் கொண்டு பரமபதத்திலே ஏதத் விக்ரஹமாயும் ததீய விக்ரஹங்களாயும் விமான மண்டப கோபுர ப்ரஸாதாதி ரூபேணவும் பரிணமிக்கிற அப்ராக்ருத பூத பஞ்சகமாய் இறே இருப்பது -ஆகையாலேயிறே -ந தஸ்ய பிராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி சம்பவா – (வராஹ பு -34-40-அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –)- ந பூத சங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந – (-சாந்தி -206-60- இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –) என்றும்-பஞ்ச சக்தி மயோ தேவ-– (பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்) ப்ராக்ருதத்வ நிஷேத பூர்வகமாக அப்ராக்ருதத்வத்தை ப்ரதிபாதிக்கிறது -இப்படி அப்ராக்ருதமாகையாலே ஸூத்த ஸத்வ மயமுமாயிறே விக்ரஹம் இருப்பது -ரஜஸ் தமஸ்ஸுக்கள் கலசாதே ஸூத்தி யோகத்தால் -கேவல ஸத்வமாய் –ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகம் -(ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-) என்றும்-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாச கமநா மயம் – (தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகமநாமயம்-ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக –ஸ்ரீ கீதை 15-6-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-ந வேதாந்தாத் சாஸ்திரம்- ந மது மதநாத் சாத்விக பதம்- ந சத்வாத் ஆரோக்யம் ந புத பஜனாத் போத ஜனகம் ந முக்தே ஸுக்யம் ந த்வய வஸனாத் ஷேம கரம் -தேசிகன் இங்கும் ஸத்வ குணம் ஒன்றே ஆராக்யம் அளிக்கும் என்கிறார் அன்றோ )என்றும் அதி ப்ரகாசக வஸ்துவாகையாலே ஞான ஆனந்த மய சேதன தத் குண திரோதாயக த்ரிகுணாத்மக ப்ராக்ருத சரீரம் போல் அன்றிக்கே ஸ்வ வைலக்ஷண்யத்தாலே ஸ்வ அந்தர் கத சாமீகர(தங்கம் ) ப்ரகாசக மாணிக்ய மஞ்ஜூஷை போலே (மாலே மணி வண்ணா -ஸுலப்ய குணங்கள் வெளிப்பட்டு காட்டுமாப் போல்)ஸ்வாந்தஸ் ஸ்தித திவ்யாத்ம ஸ்வரூப தத் குண கண ஸம்யக் ப்ரகாஸந சாதுர்ய ஸஹிதமுமாய் இருக்கும் -இப்படி அப்ராக்ருதமாய் ஸூத்த ஸத்வாத்மகமாய் இருந்ததே யாகிலும் -ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் -(ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்-அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —)இத்யாதிப்படியே சரண கமல கர கமல நயன அரவிந்த வக்த்ர அரவிந்த ப்ரமுக திவ்ய அவயவ சங்காத்மகமாய் இருக்கையாலே -யத்ர தூமஸ் தத்ர அக்னி – (தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-) இதிவத்-அநித்யத்வ வ்யாப்த ஸ அவயத்வ ஹேதுவாலே அநித்யத்வ வ்யாப்ய ஸ அவயத்வ ப்ரயுக்த ப்ராக்ருத சரீரவத் அநித்யத்வம் ப்ரசங்கிக்குமே என்னில் -ந ப்ரஸங்க ஸர்வத்ர அநித்யத்வே ஸ அவயவத்வம் ஹேதுவாக மாட்டாது -பின்னை ஏது என்றால் அவயவ ஆராப்தமே அநித்யத்வே ஹேதுவாகக் கடவது -இங்கன் அன்றாகில் ஹஸ்த பாதாத் யவயவ ஸம் யுக்தனான சேதனனுக்கும் அநித்யத்வம் பிரசங்கிக்கும் -ஆகையால் திவ்ய விக்ரஹத்துக்கு அவயவ ஆராப்தத்வே பிரமாணம் இல்லாமையாலும் -ஸதா பஸ்யந்தி ஸூரயா –பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஜ்ஞாநேந – (தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-என்றும்–பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –)இத்யாத் யுப ப்ரும்ஹணங்களாலே நித்யத்வேந ப்ரதீதங்களாகையாலும் விக்ரஹ நித்யத்வம் சித்தமிறே

(அவயவ ஆராப்தத்வமே அநித்யத்வே ஹேதுவாகக் கடவது –உண்டாகி இருந்தால் தானே அநித்யத்வம் வரும் -ஜீவாத்மா அவயவங்களுடன் கூடிய இருந்தாலும் ஆத்மா நித்யம் தானே -உருவானது உண்டானது என்றால் அநித்தியம் வரும் –கூடியே இருந்தால் அநித்தியம் வராதே –)

(அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5-
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.-மேல் விபவ -அவதாரங்களில் உருவான அவயவங்கள் -பரிணாமமுடன் இருப்பதால் அநித்யமாக இருக்குமோ என்னில் இல்லை என்கிறார் –கர்ம வஸ்யன் அல்லவே -இச்சா க்ருஹீதம் அன்றோ என்றும் மேல் விளக்கி அருளுகிறார்)

இங்கனேயாகிலும் இது தான் அநந்த அவதார கந்தமாகையாலே இந்த விக்ரஹத்தினின்றும் ஸாது பரித்ராண அர்த்தமாக –பஹுதா விஜாயதே -பஹுநி -பிறப்பில் பல் பிறவிப்பெருமான் -என்னும்படி யுகே யுகே ஸம்பவிக்கிற பாஹு திவ்ய ஜென்மங்கள் தோறும் அஸங்க்யாதங்களான அபிமதோரு தேஹங்கள் யுண்டாகையாலே உபசயாத்மக ப்ராக்ருத தேஹம் போலே ஸதத விகார ஆஸ்பதமாய் இருக்குமோ என்னில் –யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச (எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –)-சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்தி பெற்றியோய் –என்கிறபடியே கர்ம அனுகுண விகார ரஹிதமாகவும் -சம்பவாம் யாத்ம மாயயா -(அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6–ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்)-தேவரீர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் —தேவைரர்த்திதோ ஐஜ்ஜே -(ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7--கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –) என்றுஇச்சா க்ருஹீதமாகவும் சொல்லுகையாலே ஏக ரூபமாயும் இருக்கும் -கர்மக்ருத விகாரம் தோஷாயவும் இச்சா க்ருஹீத விகாரம் குணாயவுமாகையாலே ஏகரூபமாக இருக்கத் தட்டில்லை -அநேக விக்ரஹம் பரிக்ரஹிக்கச் செய்தேயும் சதைக ரூப ரூபாய-என்றதிறே-

கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -என்று ப்ரஸ்னம் பண்ண –யதாத்மகோ பகவான் -என்று உத்தரம் யுக்தமான வனந்தரம் கிமாத்மகோ பகவான் -என்று ப்ரஸ்னம் பண்ண –ஞானாத் மகோ பகவான் என்றும் அஜடத்வ அபிப்ராயேண ஞானத்தவ மஹத்வம் உத்தரமாகச் சொல்லுகையாலே (-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்)ஞானாத்மகமான பகவத் ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாய் –வித்யுல்லேகேவ பாஸ்வரா -(லதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி)நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி -திருவாய் -6-10-1-என்றும் ஒண் சுடர்க்கற்றையை -திருவாய் -1-7-4-என்றும் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் –(தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67–சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –) இத்யாதி ப்ரமாண பிரகாரேண நிரவதிக தேஜோ ரூபமுமாய் இருக்கும் – பகவத் விக்ரஹமும் நித்ய முக்தர் விக்ரஹங்களும் பஞ்ச உபநிஷண் மயமாகையாலே யுக்த விசேஷண விஸிஷ்டத்வம் அவிஷ்டமாய் ஏக ஜாதீய த்ரவ்யமாய் இருந்ததே யாகிலும் ஏக ஜாதீய த்ரவ்யாத்மக மனித்யுமணி மஹோ மத்யே கத்யோத காந்திவத் ஸாவதிக தேஜோ ரூப ததீயா விக்ரஹத்தை கதியோதகல்பம் என்னலாம்படி நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கை -(மணி ஸூர்யன் ஒளிக்கு முன் மின்மினி போல் அவன் அருளாலே பெற்ற முக்த நித்யர்களின் திருமேனி ஒளி அவனது திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ்ஸுக்கு ஒவ்வாததாய் அன்றோ இருக்கும் )-ஏதத் விஷயம் -இனி அவ்வளவன்றிக்கே நிரவதிக சவுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வநாத் யநந்த குண கண சமவேதமாய் -ஸ்புரத் கிரீட –ஸ்வ உசித விசித்ர -இத்யாதி யுக்த பிரகிரியா –ஸ்புரத் கிரீட மகுடாத் யசங்க்யேய திவ்ய பூஷண பூஷிதமாய் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அந்விதங்களான சங்க சக்ர கத அஸி ஸார்ங்காத் யசங்க்யேய திவ்யாயுத ஸோபிதமாய் –
(ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்
– (ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம் கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –)-என்கிறபடியே ஸகல தாப ஹரமாய் –அளவில்லா சிற்றின்பம் யவை ஒழிந்தேன் -4-9-10-என்னலாம் படி சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் யோகி த்யேயமாய் ஸூபாஸ்ரயமுமாய் இருக்கிற விக்ரஹ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து -மூர்த்தம் ப்ரஹ்ம -என்கிறார் –
இதில் சவுந்தர்யாமாவது -சர்வதா அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஏகைக அவயமே அபூர்வவத் விஸ்மயகர அநேக போக பரம்பரா ஜனக அத்யந்த சக்தியாலே -ஸதா பஸ்யந்தி -பண்ணுகிற ஸூரிகளை நிரதிசய காந்தி சாகர ஸ்வ தரங்க தாடன தரள சித்த வ்ருத்திகராம் படி தத்த்ருஷ்ட்டி நிமஞ்ஞந ஷமமான திவ்ய அவயவ ஸூஷுமை -சவுந்தர்ய ஸாகரத்திலே ஆழங்கால் பட்டுக் கரையேற மாட்டாதே –அரும்பினை அலரை -பெரிய திரு -7-10-1-என்னலாம் படியான யவ்வநாத் முகீ பூத ஸூகுமார தநு -(க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50 யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –)-என்றதறே

ஸுகந்தியமாவது -தெருவெல்லாம் காவி கமழ் -திருவாய் -9-6-1-என்கிறபடியே த்ரிபாத் விபூதி யடைய –வாஸம் செய் -10-10-2-என்னுமா போலே ஸ்வ காந்தியாலே வாசிதமாம்படி சர்வதோதிக்கமாகப் புறப்பட்டு ப்ரவஹிக்கிற நாநாவித திவ்ய கந்தம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸசாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-என்னக் கடவது இறே-

ஸுகுமார்யாமாவது -புஷ்ப ஹாஸ இதி நாம துஹாநம் ஸுகுமார்யமதி வாங்மனசம் ந
–என்கிறபடியே பேசப் பிசகும்படியாய் திவ்ய மஹிஷிகள் வடிக்கோல வாள் நெடும் கண்களாலே அடுத்தடுத்துப் பார்க்கிற பார்வையிலும் தாந்தி ஸீலமாய் –மலர்மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10- என்கிறபடியே கூசித் தொட வேண்டும்படியான புஷ்ப ஹாசாக்யமாய் இருக்கிற அத்யந்த மார்த்தவம்

ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று )

(வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82–)

(மென்மையான அடி இல்லாமல் மென்மை என்றே சொல்லலாம்படி –புஷ்ப ஹாசாக்யமாய் இருக்கிற அத்யந்த மார்த்தவம்-மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்.)

லாவண்யமாவது -ஏகைகஸ்மிந் பரம வயவே அநந்த சவுந்தர்ய மக்நம் ஸர்வம் த்ரஷ்யே கதமிதி முதா மாமதா மந்த சஷுஸ் -த்வாம் ஸுப்ராத்ர வ்யதிகரகரம் ரங்க ராஜ அங்ககாநாம் தல் லாவண்யம் பரிணமயிதா விஸ்வ பாரீண வ்ருத்தி –என்கிறபடியே ஒரோ அவயவங்களின் மேலே அநந்த சவுந்தர்யத்திலே முழுகினதாகக் கொண்டு சவுந்தர்ய ஸாகரத்திலே ஆழங்கால் பட்டுக் கரையேற மாட்டாதே தடுமாறுகிற நித்ய முக்தர் திருக்கண்களை –முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ –என்கிறபடியே திவ்ய அவயவங்களுக்கு அந்யோன்யமுண்டான ஸுப்ராத்ரத்தாலே தத் வ்யதிகரத்தைப் பண்ணா நின்று கொண்டு -ஸர்வ பாரீண வ்ருத்தியாய் ஸர்வ அவயவங்களையும் கரை கண்டு அனுபவித்துக் கரையேற்றவற்றாய் அத்தாலே லாவண்யமாகிற மரக்கலம் என்று சொல்லலாம்படியாய் ஸுந்தர்ய சாகர நிமக்நருக்கு நாவம் போலே தாரகமாய் ஆபாத சூடம் அவிரதமாய் ப்ரவஹிக்கிற நிரவதிக காந்தி சாகர கல்லோல மாலை போலே விளங்குகிற ஸமுதாய ஸூஷுமை
ஹே மந்த -அல்ப லாவண்யம் என்று ஓன்று உண்டு என்றும் அறியாத சஷுஸ்ஸு -கண்ணே –ஏகமேகம் ஏகைகம் தஸ்மிந் -ஓரொன்றான அவயவத்தில் -பரம் -அதன் மேலே –அநந்தம் ஸுந்தர்யம் தஸ்மிந் மக்நம் ஸத் -அபரிச்சின்னமான சவுந்தர்யத்தில் முழுகினதாய்க் கொண்டு –ஸர்வம் -மற்று எல்லா அவயவ சவுந்தர்யத்தையும் கதம் -எங்கனே –த்ரஷ்யே -அனுபவிக்கப் போகிறேன் –இதி -என்று -முதா -வ்யர்த்தமாக -மா மதா -மா மந்த -விசாரம் மா குரு -சங்கியாதே கொள் –யத என்றும் அத்யாஹாரம் -யாதொரு காரணத்தாலே –ரங்கராஜ அங்காநாம் -பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களுக்கு -(ஸுப்ராதுர்பாவ-ஸுப்ராத்ரம் -தஸ்ய வ்யதிகரம் கரோதீதி தத்) -ஒன்றுக்கொன்று நல்ல ப்ராதாவாய் இருக்கையினுடைய -ஸுகட்யத்தினுடைய -சம்பந்தத்தைப் பண்ணா நின்றுள்ள -(வ்யதிகர )சாங்கத்யம்-தத் கரோதீதி ததோக்தம் ஸுஹார்த்தம் இத்யர்த்த -(தத் )ஸர்வ விலக்ஷணமான (லாவண்யம் )சமுதாய சோபையானது அன்றிக்கே -தஸ்ய லாவண்யம் -என்றாய் பெரிய பெருமாளுடைய லாவண்யம் என்றபடியாகவுமாம் (த்வயம் )ஸர்வத்தையும் அனுபுபூஷிக்கிற உன்னை -(விஸ்வஸ்மிந் பாரீணா வ்ருத்தி யஸ்ய தத் )ஸர்வ அவயவத்திலும் அக்கரைப்பட்ட அனுபவத்தை உடைத்தானதாக (பரிணமயிதா )பண்ணப் போகிறது -விஸ்வேஷு ஸர்வேஷ்வயவேஷு –பராங்கதா -வ்ருத்தி -அநுபவோ யஸ்ய தத் ததோக்தம் -பரிணமயிதா-பரிணதம் கர்த்தா ல்யுட்

யவ்வனமாவது -யுவா குமார (யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் –யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –)என்கிறபடியே கௌமார அவஸ்தையில் கழிவான தசையாய் யவ்வன அவஸ்தா ப்ராதுர்ப்பாவமாய் இருக்கை –க்வ யவ்வநோந் முகீ பூத ஸூகுமார தனுர் ஹரி -என்றது இறே -ஏதாத்ருஸ ஸ்திதியே நிலை நிற்கையாலே நித்ய யவ்வனமாய் இருக்கும் – ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக அஸங்க்யாத திவ்ய விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி ஸைஸவாத் யவஸ்தா பன்னனாகிலும் இந்த யவ்வன அவஸ்தை குலையாமையால் அன்றோ –உன்னையும் ஓக்கலையில் கொண்டுதமில் மருவி உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழ-என்று ஸைஸவ அவஸ்தையிலே யவ்வனம் கண்டு அனுபவித்தது –

ஆக ஏதாத்ருஸ அஸங்க்யேய கல்யாண குண விஸிஷ்டதையால் உண்டான திவ்ய விக்ரஹ வைலக்ஷண்யத்தை மூர்த்தம் என்று தொடங்கி அனுபவிக்கிறார் -ப்ரஹ்ம ஸப்தத்தாலே விக்ரஹத்தினுடைய அதி மஹத்த்வமும் -ஸ்வ ஆஸ்ரித அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வக விஞ்ஞான விகாஸகத்வமும் விவஷிதம் -இதற்கு மூர்த்தம் ப்ரஹ்ம -என்றிறே திரு நாமம் –(ததோபி தத் ப்ரியதரம் )ஆனந்த மய ஸ்வரூபத்திலும் ஆனந்தாவஹ தத் அசங்க்யாத குணங்களிலும் அதிசயித சவுந்தர்யாதி குண யோகத்தாலே நிரதிசய ஆனந்தாவஹமாய் -அத ஏவ-நிரவதிக ப்ரீதி விஷயமாய் இருக்கை – இச்சா க்ருஹீதா அபிமதோரு தேஹ -(ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் ) என்னக் கடவது இறே-(தத் பிரியதாம் )தஸ்ய ப்ரியதாம் என்னுதல் -தத் என்றும் வ்யஸ்தமாக்கி யத் தத் என்றும் யோஜிக்கவுமாம் -அப்போது –புருஷம் க்ருஷ்ண பிங்களம் -ஸர்வ யஞ்ஞ மயம் வபு -த்யேயஸ் ஸதா -கிரீட குண்டல தரம் -(புருஷம் க்ருஷ்ண பிங்களம் தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம் ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்-)இத்யாதி விக்ரஹ வைலக்ஷண்ய ப்ரதிபாதக ப்ரமாண பிரதிஸித்தி அதிசயத்தை த்யோதிப்பிக்கிறது -(ரூபம் ) இங்கே ரூப ஸப்தம் விக்ரஹ பரம் -யச்சப்தம் -ஏகரூபத்வ நித்யத்வ நிரவத்யத்வ அசிந்த்யத்வ ப்ரகாசக ப்ரமாண ப்ரஸித்தி பரம் -(அத்யத்புதம் )ஸ்வ சன்னிவேச பூர்வோக்த சவுந்தர்யாத் அநந்த குண யோகங்களாலே -அபி நவரஸ ஜனகமாய் அதி விஸ்மயா வஹமாய் இருக்கை –இவ்விடத்திலே –ஸ்வ அபித அனுரூப ஏக ரூப–விக்ரஹ -என்கிற சூர்ணிகா த்வய ப்ரதிபாதித விக்ரஹ வைலக்ஷண்யம் எல்லாமே அனுசந்தேயம்
இத்தால் ஸ்வரூப தத் குணாத்யந்த அபிமதமாய் -அதி விஸ்மயா வாஹமாய் -ஸ்ருதி ஸ்ம்ருதியாதி பிரசித்தமான ஸ ஆலம்பன யோக விஷயா அசாதாரண விக்ரஹத்தை ஸூபாஸ்ராயமாக அனுபவித்தாராய்த்து –யோகி த்யேயம் இறே -(ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது)
மேல் இந்த விக்ரஹத்தின் நின்றும் ஆஸ்ரித அர்த்தமாகப் பரிக்ரஹித்த வ்யூஹ விபவ அந்தர்யாமி ரூபங்களை அனுபவிக்கிறார் –யான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி – யதா ஸூ கம் விஹரதோ-அன்யானி யாநி ரூபாணி சந்தி தாநி சர்வாணி-என்று ஸம்பந்தம் -(யாநி )இவ்விடத்தில் யச் சப்தம் –ஜென்ம கர்ம ச மே திவ்யம் – (ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத– த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான்) என்கிறஅவதார ரஹஸ்ய ப்ரகாசக ப்ரமாண ப்ரஸித்தியை ஸூ சிப்பிக்கிறது –யாநி என்கிற பஹு வசனம் –அஜாயமாநோ பஹுதா விஜாயதே –பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5-பஹுநி ரூபாணி -ஸதஸோ அத ஸஹஸ்ரஸ –(ஸ்ரீ பகவாநுவாச-பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ– நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷-ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –) இத்யாதிகளில் சொல்லுகிற அவதார அசங்க்யாதத்வத்தை ஸூசிப்பிக்கிறது -(அன்யானி ) பரரூபத்தினின்றும் ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்கு பிறக்கையாலே தத் சன்னிவேச வர்ணாதிகளைப் போலே வைலக்ஷண்ய விசிஷ்டங்களாய் இருக்கை –அந்நிய –என்கிறாப் போலே அன்யானி என்கையாலே வ்யாவ்ருத்தியும் தோற்றுகிறது –

(யதா ஸூகம் )மனுஷ்ய சஜாதீயனாய் அவதரித்த தசையிலும் ஸ்வா பாவிக ஸூகாதி நிவ்ருத்தி என்ன துக்க பாக்த்வம் என்ன இவை இன்றிக்கே கேவலம் ஸூகமாய் இருக்குமாதொரு படி -(ஸூ கம் யதா பவதி ததா )க்ரியா விசேஷணமான அவ்யயம் (விஹரத) என்கிற இத்தால் அவதார ரூபங்கள் இச்சா க்ருஹீதங்கள் என்னுமிடமும் —வீட்டைப் பண்ணி விளையாடும் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -கிரீடதோ பலகஸ்யேவ ) (க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –) என்கிறபடியே க்ரீடார்த்தங்களாய் இருக்கும் என்னுமிடம் கர்ப்பிதம் -ஆகையால் இவனுடைய சரீர க்ரஹணம் கர்ம க்ருதமின்றிக்கே -கேவலம் தர்ம த்ராணார்த்த மாயிருக்கும் என்கை -(நா காரணாத் ) (நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –)இத்யாதி-(ஸர்வாணி தாநி )கீழ்ச் சொன்ன இத்தால் ஸ்வரூப ரூபாதிகளில் அத்யல்பமாகிலும் பெரிய பிராட்டியாராலே அநந்விதமாய் இருப்பதில்லை என்னுமிடத்தை த்யோதிப்பைக்காக ஸர்வாணி தாநி என்கிறார் -(ஸர்வாணி ரூபாணி )என்றாப் போலே இருக்கிறதாய்த்து (தைஸ் ஸ்வைரநுரூப ரூப விபவை )உன்னுடைய அசாதாரணங்களான அனுரூப ரூப விபவங்களாலே -அனுரூபங்களான ரூப ஸம்பத்துக்களாலே என்கை –
அதவா ரூபங்களாகிற விபவங்களாலே என்னவுமாம் -இவ்விடத்தில் ரூப ஸப்தம் –பகவன் நாராயண அபிமத அனுரூபங்களான ஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொல்லுகிறது -(யதா ஸூகம் விஹரதோ ஹரேஸ் ஸர்வாணி ரூபாணி தைஸ்தைரனுரூப ரூப விபவைர் காடோப கூடா நீத்யாஹு )த்வத் அபிமத அனுரூபங்களான தத் ஸ்வரூப ரூப குணாதிகள் -தத் அபிமத தத் ஸ்வரூபாத் யநுரூபங்களான உன்னுடைய ரூபாதிகளிலே யதா க்ரமம் த்ருட ஸம்பந்தங்களாய் இருக்கும் என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் -வசிஷ்ட பராசர பாரஸர்யாதிகளான பரமரிஷிகள் சொல்லுவார்கள்

அனுரூபமாய் இருக்கையாவது -ரத்ன காஞ்சன நியாயத்தாலே ஸ்வ ஸம்பந்திக்கு ஸோப அதிசய ஹேதுவாய் இருக்கை -(காடோப கூடாநி ) வியோக அநர்ஹங்களாய் இருக்கும் என்கை -இறையும் அகலகில்லேன் -என்று இருக்க-அவன் ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்க- இருவர் ஸ்வரூபாதிகளும் வியோகித்து இருக்க விரகுண்டோ –விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி -ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் -திருவிருந்த மார்பன் -என்றும் -திரு மெய்யுறைகின்ற -என்றும் -தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவும் –இத்யாதி ப்ரமாண ப்ரவர்த்தகரான தத்வ தர்சிகள் இந்நித்ய யோகத்தைச் சொன்னார்கள் –

(தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15-இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –)

இத்தால் (1)சாபராத சேதனர் ஸ்வ அபராதத்தை நினைத்து அஞ்சி அகலாமல் ருசி பிறந்த போதே ஆஸ்ரயிக்கலாம் படி புருஷகார பூதையான இவள் சந்நிதி அவஸ்யம் வேண்டுகையாலும் -(2)பிராப்தி தசையில் சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் கலந்தாப் போலே நிரதிசய போக்யார்த்தமாகவும் –(3)வைதேஹ்யா ஸஹ –என்கிறபடி இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறையாகையாலும்(4) அடிமை தான் ஸித்திப்பதும் ரசிப்பதும் சேர்த்தியிலே யாகையாலும் இப்படி உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற –இங்கும் அங்கும் திருமாலன்றி இன்புற விரகில்லாமையாலே -எழில் மலர் மாதரும் தானுமாய்க் கொண்டு இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருக்கிற நித்ய யோகத்தை அனுசந்தித்து அருளினாராய்த்து –

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே
.–7-9-11-

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–
7-10-1-

மதுப் யர்த்த ப்ரதிபாதகமான இஸ் ஸ்லோகத்தாலும் பிரதம ஸ்லோகத்தாலும் நாராயண ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம் -எங்கனே என்னில் –சாந்தாநந்த –என்று தொடங்கி திவ்யாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலே அயன ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம்-குண குணிகள் அப்ருதக் ஸித்தங்களாகையாலே குணியான ஸ்வரூபத்தைச் சொன்ன இது தந் நிரூபக குணங்களான ஞான ஆனந்த அமலத்வாதிகளுக்கும் -நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞான சக்த்யாதிகளுக்கும் சவுகர்ய ஆபாதகங்களான வாத்சல்ய ஸுசீல்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –மூர்த்தம் –ரூபம் -என்று தொடங்கிச் சொன்ன திவ்ய விக்ரஹம் -தத் குணங்களான காந்தி ஸுகுமார்யாதிகளுக்கும் ததாதேயமான திவ்ய பூஷணங்களுக்கும் ஆபரண கோடியிலே அந்விதமான திவ்ய ஆயுதங்களும் உப லக்ஷணம் -தே -என்று பெரிய பிராட்டியாரைச் சொன்னது பூமிப் பிராட்டி தொடக்கமான மற்றை நாச்சிமாருக்கும் உப லக்ஷணம் -பணி பதி என்று நித்ய ஸூரிகளைச் சொன்னது சத்ர சாமராதிகள் தொடங்கி பரமாகாசத்துக்கும் உப லக்ஷணம் -மாயா -என்று பிரக்ருதியைச் சொன்னது பத்தாத்மாக்களுக்கும் கால மஹதாதி விகாரங்களுக்கும் உப லக்ஷணம் –ப்ரஹ்மேஸாதி -என்று அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களைச் சொன்னபோதே அண்டமும் ஸித்தம் இறே –ஆக நார ஸப்தார்த்தமும் சங்க்ருஹீதம்விக்ரஹத்தைச் சொன்ன போதே சரண ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம் -உபாய உபேயங்களுக்கு அவிசிஷ்டமான நித்ய யோகத்தைச் சொல்லுகையாலே உபாய ஸ்வீ காரமும் உபேய பிரார்த்தனையும் யுக்த ப்ராயம் -அதவா ஸ்லோக த்ரயத்தாலே பூர்வ வாக்யார்த்தத்தையும் துரீய ஸ்லோகத்தாலே உத்தர வாக்யார்த்தத்தையும் அனுசந்திக்கவுமாம் –

நநு -இஸ் ஸ்லோகத்தில் இருவருடையவும் நித்யயோகம் சொல்லுகிறதாகில் –பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய-தஸ்ய அநபாயிநீ சக்திர் தேவீ தத் தர்ம தர்மிணீ — (-பாஞ்சராத்ரம் –நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –)என்றும்-விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ-என்றாப் போலே திரள ஒரு பாசுரம் இட்டு அருளிச் செய்யாமல் -பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகள் -லஷ்மீ ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே யதாக்ரமம் கடாச்லிஷ்டங்களாய் இருக்கும் என்றும் இப்படி விபஜித்து அருளிச் செய்வான் என் என்னில் -(1)த்வயத்தில் பிரதம பதத்தில் விசேஷ்ய பரமான நாராயண பதத்தில் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ப்ரதிபாதிக்கையாலும் -(2)தத் விசேஷண பரமான ஸ்ரீ சப்தத்தில் பிராட்டியினுடைய ஸ்வரூப ரூப குணாதிகளை ப்ரதிபாதிக்கையாலும் (3)உபயருடையவும் ஸ்வரூபாதிகளுக்கு உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை மதுப்பு ப்ரதிபாதிக்கையாலும் மதுப்பர்த்த ப்ரகாசகமான இஸ் ஸ்லோகத்தாலே புருஷகார உபாயங்களுடைய ஸ்வரூபாதிகளுக்கு அந்யோன்யம் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை விஸ்தரேண அருளிச் செய்யக் குறையில்லை –

(ஸ்ரீ தாதர்த்தம் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டும்
ஸ்ரீ மத் நாராயண ஸ்வரூப ரூப சரணம் -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டும்
ஆகவே பிரித்து அவிநா பாவ ஸம்பந்தத்தை விஸ்தரேண அருளிச் செய்யக் குறையில்லை -)

இப்படி பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே பிராட்டிக்கு உண்டான அவிநா பாவ சம்பந்தத்தை வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பி அனுசந்தித்தார்கள் –தேவ ஜூஷ்டாம் -என்றும் –ஸ்ரீமன் நாராயண -என்றும் -தத் ஸ்வரூபாதிகளோடே ஏதத் அவிநா பாவ சம்பந்தத்தை வேதாந்தங்கள் விரும்பிற்றன –அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ -ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருத -அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி -அஹமர்த்தம் விநா அஹந்தயா நிராதாரா ந ஸித்த்யதி –(-லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது) இத்யாதிகளாலே பகவத் ஸ்வரூப அவிநாபாவ ஸம்பந்தம் ஸ்பஷ்டமாயிற்று –கா சா அந்யா த்வாம்ருதே தேவி -ஸர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -(வி பு -1-9-122-ஹே தேவி கதையைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்) என்றும் -ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே —இத்யாதிகளாலே விக்ரஹ அந்வயம் விசதமாய்த்து –



ராஜ ராஜோ அகிலஸ் யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர -காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குணாஸாலிந -தயிதா அஹம் ஸதா தேவீ ஞான ஆனந்த மயீ ஸதா -அநவத்யா அநவத்யாங்கீ நித்யம் தத் தர்ம தர்மிணீ
— (-லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் )இத்யாதிகளாலே குண அவிநா பாவம் கோஷிக்கப்பட்டது –



வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே -(-சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –) என்றும்-தத்ர திவ்ய வபு ஸ்ரீ மான் தேவ தேவோ ஜனார்த்தன -ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன (அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –)-என்றும் வைகுண்டே து பரே லோகே ஸ்ரீஸஹாயோ ஜனார்த்தன
– (-உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –)இத்யாதிகளாலே விபூதி அந்வயம் விஸ்தரிக்கப்பட்டது –



ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன – (நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –)என்றும் -தேவத்வே தேவதேஹயம் மனுஷ்யத்தவே ச மானுஷீ –ராகவத்வே அபவத் ஸீதா -(புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145-பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –) என்றும்–வ்யூஹேஷு சைவ ஸர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ-ததா வ்யூஹீ பவத் யேஷா மம சைவ அநபாயிநீ
-(-பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –) இத்யாதிகளாலே வ்யூஹ விபவா அவிநா பாவம் வ்யாக்யாதம் யாயிற்று –



தைஸ்தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சாரங்கிண–கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அனுகாமிநீ –
(லஷ்மீ தந்த்ரம் -17-4-அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்) இத்யாதிகளாலே ஐஸ்வர்ய அந்வயம் ஆதரிக்கப்பட்டது – இப்படி பிரத்யேகமாக ப்ரதிபாதிக்கை யன்றிக்கே –குணைர் விவாஸை ரூபைச் ச ஸ்வாத்மநா வா ஆத்ம நீஸ்வரம் -நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -(பாஞ்சராத்ரம் குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –)என்று ஸகல அவிநா பாவ சம்பந்தமும் ஸங்க்ரஹிக்கப்பட்டது இறே

(ஸ்வரூப ரூப குண விபூதி ஐஸ்வர்ய வ்யூஹ விபவ -அந்தர்யாமித்வம்-அர்ச்சா -ஸகல அவிநா பாவ சம்பந்தங்களுக்கும் பிரமாணம் காட்டி அருளி மேல் இவற்றுக்கு அருளிச் செயல்களையும்-ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளையும் – அருளிச் செய்கிறார்)

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்1-3-1- தன்னோடும் பிரிவிலாத திருமகள்- -இத்யாதிகளாலே ஸ்வரூப அவிநாபாவ சம்பந்தமும் –என் திருமகள் சேர் மார்பனே -7-2-9– திருமார்வினில் சேர் திருமாலே-9-4-1- – -அலர்மேல் மங்கை யுறை மார்பா -6-10-10- திருமகளும் கூறாளும் தனி யுடம்பன் -4-8-1- ரூப அவிநாபாவ சம்பந்தமும்-நிகரில் புகழாய் -மிகும் திருமால் சீர்க்கடலை -பெரிய திருவந்தாதி -69-என்று குண அவிநாபாவ சம்பந்தமும்-திருமால் வைகுந்தம் -10-7-8-என்றும் விபூதி யந்தர்பாவமும் -திருமால் கடல் -மாதவா கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-1-5-5- –சீ மாதவன் கோவிந்தன் -8-2-7–திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-1–வேங்கடத்தென் திருமால்-நாச்சியார் -8-1– -என்று வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார அவிநாபாவமும்–பூம்பாவை யாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே -2-8-1-அல்லி மலர் மகள் போக மயக்குகளாகியும் நிற்க்கும் அம்மான் –3-10-8-எல்லா கருமங்களை செய் -என்று ஜகத் ஸ்ருஷ்ட்டி யுந் முகாத் யந்தர்பாவமும் ஆழ்வார்களாலும் அனுசந்திக்கப்பட்டது இறே

இவர்களை அடி ஒற்றின ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான பட்டரும் –ஸ்வரூபம் ஸ்வா தந்தர்யம் பகவத இதம் சந்த்ரவதனே -த்வதாஸ்லேஷோத் கர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே -த்வமாசீர் மாதஸ் ஸ்ரீ கமி துரிதமித் தந்த்வலிபவைஸ் தத் அந்தர்பவாத் த்வாம் ந ப்ருதகபி தத்தே ஸ்ருதிரபிர- (சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!) என்று ஸ்வரூப அவிநா பாவ ஸம்பந்தமும் – அநு கலதநு காண்டாலிங்க நாரம்ப ஸூம்பத் – (ஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3-ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.)என்று ரூப ஸம்பந்தமும் – ப்ரஸகந பல ஜ்யோதிர் ஞாநைஸ்வரீ விஜய ப்ரதா ப்ரணத வரண ப்ரேம ஷேமங்கரத்வ புரஸ் ஸரா -அபி பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரிதீந்திரே -தவ பகவதச் சைதே ஸாதாரணா குண ராசய –(ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்; அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?) -அன்யே அபி யவ்வன முகா யுவயோஸ் சமாநா ஸ்ரீ ரெங்க மங்கள விஜ் ரும்பண வைஜயந்தி -தஸ்மிம்ஸ்தவ த்வயி ச தஸ்ய பரஸ்பரேண ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வ தந்தே -என்றும் (ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!)என்றும் -யுத்வத் வாதவ் துல்யே அப்ய பர வஸதாஸத்ருஸம்ந –(யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந் த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34–ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம், ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.)என்றும் இத்யாதிகளாலே குண அவிநா பாவமும் – தத்ர ஸ்ரக் ஸ்பர்ஸ கந்தம் ஸ்புரதுபரி பணா ரத்ன ரோஸிர் விதாநம் விஸ்தீர்ய அநந்த போகம் -(தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம் விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம் தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை: அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–25-இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான். அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான். அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள். இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?)என்று விபூதி யந்தர் பாவமும்- ததிமாதம் மத்நதஸ் ஸ்ராந்தி ஸாந்த்யை –ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ – (ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:-பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ: ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49- -பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?) என்று வ்யூஹ அந்தர் பாவமும்- யதி மநுஜதி ரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தோநுஜநுநுரூபா தேவி நாவா தரிஷ்யா -அஸரஸமபவிஷ்யன் நர்ம நாதஸ்ய மாதர் தரதளதரவிந்தோ தந்தகாந்தாய தாஷி – (தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய். அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால், அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?)-என்றும் அநுஜநுரநுரூப ரூப சேஷ்டா ந யதி ஸமாகம மிந்த்ரா அகரிஷ்யத் -அசரஸமதாவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவமாகரிஷ்யத ரங்கராஜ நர்ம – (பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே- புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்)என்று விபவ அந்தர் பாவமும் – ஸ்ரீ ஸ்தநா பரணம் தேஜஸ் ஸ்ரீ ரங்கேசயம் – (ஆஸ்ரயே சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8- ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-)என்று அர்ச்சாவதார அந்தர் பாவமும் ஸ்ரீயை ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸனம் ஹரே -என்றும் யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -(யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே: வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4– இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ, ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன. ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும். இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் – ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது. அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)என்றும் அநு சிகினி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் –(பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம் வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந் அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44- ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே – பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –)என்று ஜகத் வியாபார அந்தர் பாவமும் ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் இறே- ஆத்மந்யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சேத் யாகாரைஸ்தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வாதயந்த்யாத்தரூபா தூரீ குர்யான்நஹி மதுரதாதுக்த ஸிந்தோஸ் தரங்காத் – (பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –)என்று பிராட்டிக்கு உண்டான பகவத் ஸ்வ ரூபாத் யவிநா பாவ ஸம்பந்தத்தை அபி யுக்தர்களும் அனுசந்தித்தார்கள் இறே –
ஆக இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலும் -அவற்றை அடி ஒற்றின ஆழ்வார்கள் திவ்ய ப்ரபந்தங்களாலும் ப்ரதிபாதிக்கிற திவ்ய தம்பதிகளுடைய ஸ்வரூபாதிகளுக்கு அந்யோன்யம் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை இஸ் ஸ்லோகத்தால் அருளிச் செய்தாராய்த்து –

(அபிமத அனுரூப -இவள் அணுவாய் இருக்க விபுவான அவனுக்கு அனுரூபமத்வமும் அதிசய ஆகாரமுடையவள் என்று ஸ்தோத்ரம் பண்ணவும் எவ்வாறு பொருந்தும் என்பதை அடுத்து விளக்கி அருளுகிறார்)

இப்படி இருவருக்கும் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை அருளிச் செய்கிறவிடத்தில் ப்ரதமத விபுவான பகவத் ஸ்வரூபத்தோடே லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அனுரூப ஸ்வரூப ஸம்பந்தம் சொல்லுமளவில் -பிராட்டிக்கும் ஸ்வரூபத விபுத்வம் அங்கீ கரிக்க வேணும் -ஸ்வரூப விபுத்வம் அங்கீ கரித்தாலிறே பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசய ஆகாரேண ஸ்துதியும் ஸித்திப்பது

பத்நிக்கி பதி ஸ்வரூப அனுரூப்யா அவஸ்யம்பாவித்வத்தை ஸ்ருதியும் ஸூசிப்பித்தது இறே -விஷ்ணுவுக்குப் பத்னியாம்போது வ்யாபன லீலையாக வேணும் –பகவன் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூப-என்று பகவத் ஸ்வரூப அனுரூபத்வத்தை பாஷ்யகாரரும் பிரதமத்திலே ஸாதித்து அருளினார் இறே -இப்படி ப்ரமாண ஸித்தமுமாய் -ப்ரமாத்ரு ஸித்தமுமாய் -யுக்தி யுக்தமுமான விபுத்வத்தை அங்கீ கரியாமல் அணுத்துவத்தை அங்கீ கரிக்கும்போது பகவத்வ ரூப ஏகதேச வ்யாப்தியே இறே சித்திப்பது -அது ஸகல சேதன சமானமாகையாலே பிராட்டிக்கு ஓர் அதிசயித்த ஸ்தோத்ரம் ஸித்தியாது –அனுரூப ரூப விபவை -என்கிற பதத்துக்கும் பகவத் ஸ்வரூபாதிகளும் அல்ப தேசமாகிலும் இவளால் அநந்விதமாய் இருபத்தொரு இடமில்லை என்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிற ஸர்வாணி என்கிற பதத்துக்கும் வையர்த்தமும் வரும் -அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விகாஸக சக்தியால் விபுபாய் இருக்கும் என்னில் -அப்போது சாமான ந்யாயத்தாலே ஸகல ஆத்மாக்களுக்கும் ஸ்வரூப விகார அங்கீ காரத்திலே தோஷமின்றிக்கே ஒழியும் -ஆத்ம நிர்வாகரத்வ ப்ரதிபாதிதமான ப்ரமாணங்களுக்கும் விரோதமாம் – ஆகில் ஞான வ்யாப்தியைச் சொல்லுகிறது என்னில் –வாலாக்ர ஸத பாகஸ்ய -என்று தொடங்கி –ஸ சாநந்த்யாய கல்பதே –(வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –)என்று முக்தாத்மாக்களுக்கும் ஞான வ்யாப்தி யுண்டாகையாலே இங்கு ஒரு அதிசயமும் அனுரூபத்வமும் ஸித்தியாது -இவர்களைப் போலே ப்ரத்வம்ச அபாவம் மாத்திரமே இன்றிக்கே ப்ராக் அபாவத்தைப் பற்றச் சொல்லுகையாலே அதிசயமும் அனுரூபத்வமும் ஸித்திக்கிறது என்னில் -அது நித்யருக்கும் உண்டாகையாலே அவை இரண்டுமே ஸித்தியாது -கிஞ்ச அனுரூபத்வ உக்தியாலே அதிசய ஸ்துதி ஸித்திக்கிறது என்னில் அந்த அனுரூபத்துவமாவது -அணுத்துவத்தில் வைஷம்யம் உண்டானாலும் ஸ்வ தந்த்ர சேஷியைக் குறித்து சேஷத்வ பாரதந்தர்யங்களாலே அதிசயாவஹத்வம் என்னில் அதுவும் ஸகல சேதன அசேதன சமானமாகையாலே விசேஷம் ஸித்தியாது – கிஞ்ச –யதா ஸர்வதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -த்வயதைத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –-இத்யாதிகளிலே ஸ்வரூபதோ விபுத்வம் ப்ரஸித்தமாய் இருக்க தத் அங்கீ காரேண அணுத்துவ அங்கீகாரமும் ப்ரமாண விரோதமும் பிரசங்கிக்கும் – ஆக அனுரூபத்வ சித்திக்காகவும் -அதிசயித ஸ்துதி ஸித்திக்காகவும் ப்ரமாண வையர்த்த நிவ்ருத்தி யர்த்தமாகவும் பிராட்டிக்கு ஸ்வரூப விபுத்வம் அவர்ஜனீயமாகையாலே அவஸ்யம் அங்கீ கார்யமிறே என்னில்

(விபு சர்வ மூர்த்தவ த்ரவ்யம் சம்யோகம் -அளவுக்கு உட்பட்ட வடிவுடன் உள்ள பொருள்களை ஸ்பர்சிப்பது -ப்ரஹ்மம் விபு -முக்தர்களின் தர்மபூத ஞானமும் விபு -கண்ணுக்கு பட வேண்டிய அவஸ்யம் இல்லை –பிராட்டி அணு என்றால் ஜீவாத்மா கோஷ்ட்டியில் சேர்க்க வேண்டி வரும் -விபு என்றால் ஈஸ்வர கோஷ்ட்டியில் சேர்க்க வேண்டி வரும் -அவன் ஸர்வகதா போல் இவளும் -விஷ்ணு புராணம் –யதா ஸர்வகதா விஷ்ணு என்கிறது –பிராட்டியின் ஸ்வரூபம் நன்றாக அறிய மேல் விளக்கி அருளுகிறார் -)

(ஸ்வரூபத்தால் அணுவாக இருந்தாலும் அகடி கடநா சக்தியால் -அவனது சங்கல்பத்தால் வந்த சக்தி -ரூபத்தால் விபு –விக்ரஹ வியாப்தி -இத்தை ஏற்றுக்கொண்டால் தான் அனைத்து வாக்யங்களுக்கும் பொருந்த படி அருளிச் செய்ய முடியும்)

மைவம் (மா ஏவம் இப்படியாக இல்லை )லஷ்மீ ஸ்வரூபத்தை நிரூபிக்கும் அளவில் ஸ்வரூப விபுத்வம் கூடாது -எங்கனே என்னில் –போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஷராத்மாநாவீஸதே தேவ ஏக -இத்யாதி வேதாந்த ஸித்தமான அர்த்தங்கள் நம் தர்சனத்துக்கும் உண்டிறே – (ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –) (க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –) இவற்றில் அசித் தத்வ அந்தர் பூதையோ -ஜீவதத்வ அந்தர் பூதையோ -ஈஸ்வர தத்வ அந்தர் பூதையோ -தத்வ த்ரய அதிரிக்தையோ -என்று விகல்பித்து நிரூபிக்கும் அளவில் அசித்து ஞான சூன்யமாகையாலும் இவள் ஞாத்ருத்வ விசிஷ்டை யாகையாலும் -ஞாத்வ அஞ்ஞத்வ விரோத பிரசங்கத்தாலே அசித் தத்வ அந்தர் பாவம் கூடாது -ஈஸ்வர த்வித்வ பிரசங்கத்தாலும் –ஈஸதே தேவ ஏக -என்கிற ஏகத்வ ஸ்ருதியோடும் –ந தத் ஸமஸ்ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –)என்கிற சமாதிக தரித்ரத்வ ப்ரகாசாக ஸ்ருதியோடும் விரோதம் பிரசங்கிக்கையாலும் ஈஸ்வர அந்தர் பாவம் கூடாது -பகவத் ஐக்யம் சொல்லில் பத்நீத்வ பரமான ஸ்ருதியோடும் பேத பரமான ஸ்ருதியோடும் விரோதம் பிரசங்கிக்கும் -ஐக்ய பரங்களான ஸ்ருதிகள் அத்யந்த பாரதந்தர்யத்தாலே அவிநா பாவ நிபந்தனங்கள் -பேத ப்ரதிபாதங்கள் ஸ்வரூப பேத பரங்கள் -கிஞ்ச ஈஸ்வர த்வித்வத்தில் அந்யோன்யம் ஆஞ்ஞா வ்யாகாதத்தாலே அநீச்வரத்வமும் பிரசங்கிக்கும் -அதிரிக்த தத்வத்தில் ப்ரமாணம் இல்லாமையால் தத்வ த்ர்ய அதி ரிக்தை என்னக் கூடாது –இனி பாரி சேஷ்யாத் ஜீவ தத்வ அந்தர் பூதை என்னுமிடம் ஸித்தம்

ஆனபின்பு –ஏஷோ அணுர் ஆத்மா -த்ரசரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மிகோடி விபூஷிதா -என்று (-முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்-என்றும்-ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்த ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்)ஆத்மாக்களுக்கு அணுத்துவத்தை லக்ஷணமாகச் சொல்லுகையாலும் ஜீவ சமஷ்டி வாசகமான மகாரத்தில் –மாங்–மாநே -என்கிற தாதுவாலே (மதி ஹர்ஷே –ஆனந்தமுடையவன் என்றும் மந ஞாநே அவபோதநே –ஞானமயன் ஞானமுடையவன் என்றும் தாதுக்கள் உண்டே)ஆத்மாக்கள் அணு பரிமாணர் என்று சொல்லுகையாலும் ஜீவ தத்வ அந்தர் பூதையான இவளுக்கும் அணுத்துவம் அவர்ஜனீயமாகையாலே ஸ்வரூப விபுத்வம் சேராது -கிஞ்ச ஜீவ தத்வ அந்தர் பாவத்தை அங்கீ கரித்து அணுத்துவ அநங்கீகாரேண -அணுத்வஸ்ய ஏதத் வ்யதிரிக்த ஜீவ விஷயத்வேன விபுத்வம் ஏதத் விஷயம் (அணுத்துவமே தத் வ்யதிரிக்த ஜீவவிஷயம் ஜீவத்வே அபி விபுத்வம் ஏதத் விஷயம் )என்னில் -அப்போது ஜீவத்வம் அணுத்துவ வ்யாப்தமாகையாலே (வ்யாப்தமாகாமையாலே)ஜீவ லக்ஷணத்துக்கு அவ்யாப்தி தோஷம் பிரசங்கிக்கும் –விபுத்வே சதி சேதனத்வம் –என்கிற ஈஸ்வர லக்ஷணத்துக்கு அதி வ்யாப்தியும் பிரசங்கிக்கும் (அசேதனமாகவும் விபுவாகவும் முக்தர்களின் தர்மபூத ஞானமும் அங்குள்ள காலதத்வமும்)-ஜீவ அணுத்துவ ப்ரதி பாதிகையான ஸ்ருதியோடும் விரோதிக்கும் -ஆகையிறே ஸ ச அனந்த்யாய கல்பதே -என்கிற (வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –)இடத்திலும் முக்தருக்கும் ஸ்வரூப விபுத்வம் சொல்லாமல் ஞான வியாப்தியை ப்ரதிபாதிக்கிறது -இவ்வர்த்தம் ப்ரதீப தாவேச – (ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ)இத்யாதி ஸூத்ரத்திலே ப்ரதிபாதித்தது இறே

நநு முக்தருக்கு ஜீவத்வ ஸாம்யத்தாலே அவர்ஜனீயமான அணுத்துவத்துக்கு பாதக பிரமாணம் இல்லாமையாலும் -தத் அனுக்ராஹக ப்ரமாண ஸத்பாவத்தாலும் அணுத்துவம் அங்கீகரிக்கலாம் -பிராட்டிக்கு ஜீவத்வ சாம்ய யாகாரத்தாலே ப்ராப்தமான அணுத்துவத்துக்கு தத் வியாபக ப்ரமாணம் பாதகமாகையாலே அணுத்துவம் கூடாதிறே என்னில் -மைவம் -தத் விபுத்வ பிரமாணங்கள் ஸ்வரூப விபுத்வ பரங்கள் அன்றிக்கே விக்ரஹ வ்யாப்தி ப்ரதிபாதங்களாகையாலே தத் அணுத்துவ பாதகங்கள் அல்லவிறே என்கை -நநு யதா பிரமாணம் தத் விபுத்வ அங்கீகாரத்தில் பாதகம் இல்லாமல் இருக்கவும் பிரமாணங்களுக்கு அந்யார்த்தம் கல்பிக்கை யுக்தமில்லாமையாலே தத் விபுத்வ பிரமாணங்கள் தத் அணுத்தவே பாதகங்கள் இறே என்னில் விபு த்வய அசம்பவமே இவ்விடத்தில் பாதகம் ஆகையால் அணுத்துவம் அவர்ஜனீயம் என்கை –

நநு காலாதிகளுக்கு விபுத்வம் உண்டாயிருக்கவும் ஈஸ்வர த்வித்வம் வராதாப் போலே லஷ்மீ விபுத்வத்திலும் ஈஸ்வர த்வித்வம் பிரசங்கியாமையாலே அது விரோதம் அன்றே என்னில் -காலாதிகளுக்கு விபுத்வம் உண்டாய் இருக்கவும் ஈஸ்வர த்விதம் வராதாப் போலே என்கிற த்ருஷ்டாந்தம் சேராது -எங்கனே என்னில் சைதன்ய அநாதார்த்தவே சதி விபுத்வம் -என்கிறது இறே லக்ஷணம் -சைதன்ய ஆதாரத்வே சதி விபுத்வம் -ஈஸ்வர லக்ஷண மாகையாலே சைதன்ய விசிஷ்டையான இவளுக்கு விபுத்வம் கொள்ளில் ஈஸ்வர த்வித்வம் பிரசங்கிக்கையாலே இவளுக்கு அணுத்துவமே அசாதாரண லக்ஷணம் என்னத் தட்டில்லை

நநு –யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர -உத்தம புருஷஸ் த்வந்ய-என்று ஸர்வ வ்யாபகத்வத்தாலும் ஸர்வ நியந்த்ருத்வத்தாலும் (வியாபித்து தாங்கி-நியந்த்ருத்வ- ஸ்வாமியாய் -மூன்றும் சேர்ந்த புருஷோத்தமன் -15 அத்யாயம் -)ஈஸ்வரனுக்கு ஜீவ அநந்யத்வம் சாதித்தாப் போலே –யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் –இத்யாதி (வ்யாபகத்வ நியந்த்ருத்வ-இரண்டுக்கும் பிரமாணங்கள்)பிரமாண சித்தங்களான ஸர்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வங்களாலே பிராட்டிக்கு ஜீவஜாத் யநந்தர்பாவம் சாதிக்கலாமிறே -எங்கனே என்னில் –நேய மாத்ம ஜாத் யந்தர்ப்பூதா –குத–ஸர்வ வ்யாபகத்வாத் ஸர்வ நியந்த்ருத்வாத் யதா ஈஸ்வர ததா சேயம் தஸ்மாத் ததேதி –என்று பஞ்ச அவயமான அனுமானத்தாலே (நேய மாத்ம ஜாத் யந்தர்ப்பூதா –(ப்ரதிஜ்ஜை )-குத–ஸர்வ வ்யாபகத்வாத் ஸர்வ நியந்த்ருத்வாத் (இரண்டு ஹேதுக்கள் )யதா ஈஸ்வர (உதாஹரணம் )ததா சேயம் (உப நயனம் )தஸ்மாத் ததேதி(நிகமனம் )ஆத்ம தத்வ அநந்யத்வம் சாதித்து -அத ஏவ தஜ் ஜாதீயத்வா கதாணுத்வம் நிவ்ருத்தமாகையாலும் ஸ்ரீ யப்பதியே ஸர்வ வியாபக வஸ்து -என்று அங்கீகரிக்க வேண்டுகையாலும் நிரூப்ய நிரூபக அவிநா பாவ சம்பந்தம் நிபந்தனமாக நிரூப்ய ஸ்வரூபத்துக்கு உண்டான விபுத்வம் தந் நிரூபக ஸ்வரூபத்துக்கும் அவர்ஜனீயமாகக் கொண்டு தன்னடையே வருகையாலும் இவளுக்கு ஸ்வரூபதோ விபுத்வம் நியாயத ப்ராப்தமாகையாலும் அணுத்வ பக்ஷம் அயதார்த்தமிறே என்னில்

(ஆனால் அவனைப்போல் இவள் ஸர்வ நியாந்தா அல்லவே -அவனுக்கு ஸ்வரூப வ்யாப்தி உண்டு -இரண்டும் இவள் இடத்தில் இல்லையே -த்ருஷ்டாந்தம் எடுக்கக்கூடாதே)

மைவம் -இவ்விடத்தில் த்ருஷ்டாந்த யுக்த தார்ஷ்டாந்திகங்கள் ஸத்ருசங்கள் அன்றிறே -ஸ்வரூப விபத்வத்தாலும் ஸர்வ நியந்த்ருத் வத்தாலும் இறே ஸர்வேஸ்வரனுக்கு ஜீவ அந்யத்வத்தை ஸாதித்தது -தார்ஷ்டாந்தகத்தில் அந்த ஹேதுத்வம் இல்லை இறே -எங்கனே என்னில் -பிராட்டிக்கு ஆத்மஜாத் யநந்தர்பாவ சாதகங்களாகச் சொன்ன ஹேது த்வயத்தில் -பிரதம ஹேது விக்ரஹ வியாப்தி விஷயமாகையாலே ஸ்வரூப அஸித்தம் -அங்கு விக்ரஹ வ்யாப்தியைச் சொல்லுகிறது என்கைக்கு த்யோதகம் என் என்னில் -ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவான் -என்று செழும் கடல் அமுதினில் பிறந்தாள்-– (ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்)-என்றும் ப்ருகு பந்தியான க்யாதியினிடத்தில் பிறந்தாள் என்றும் பராசர பகவான் உபதேசிக்கக் கேட்ட மைத்ரேய பகவான் நித்யையான லஷ்மிக்கு உத்பத்திமத்வம் உண்டானால் நித்யத்வம் கூடும்படி எங்கனே என்று ப்ரஸ்நம் பண்ண -அதுக்கு உத்தரமாக -நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ -யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -என்று உபதேசித்தான் -அது எங்கனே என்னில் –நித்யாநாம் நித்யனாய் -அவ்யய பிதாவான ஸர்வேஸ்வரன் ஸாது பரித்ராண அர்த்தமாக ஸர்வ ஜாதியிலும் அவதரித்து -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -முதல் திரு -44 என்றும் உமர் உகந்துகந்த உருவம் நின்னிருவம் -திருவாய் -8-1-4-என்கிறபடியே ஆஸ்ரிதர் உகந்த அவ்வோ திருமேனிகளாலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் யாதொருபடி ஸந்நிஹிதனாகிறான் -அப்படியே நித்யையாய் ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்கு ஸம்பத் ரூபையாய் அநபாயினியாய் இருக்கிற இவளும் மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலே அவதரித்து தத் ரூப அனு ரூபங்களான அவ்வோ ரூப விசேஷங்களாலே ஸர்வத்ர சந் நிஹைதையாய் இருக்கும் -ஆகையால் உத்பத்திமத்வம் நித்யத்வ பஞ்சகம் அன்று-கர்மக்ருத உத்பத்தியாகில் இறே தோஷாயவாவது -அனுக்ரஹ அர்த்தமான அவதாரம் குணயவாம் இத்தனை -என்று பிரதி வசனம் பண்ணுகையாலே ஸர்வ வ்யாபித்துவ வசனம் அர்த்தாந்தர விஷயம் -இவ்வளவு அன்றிக்கே –புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா – (புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145-பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –)இத்யாதிகளாலே மேலும் இந்த விக்ரஹ வியாப்தியே ப்ரதிபாதிக்கப்பட்டது இறே சவும்ய அசவ்ம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயை தத் தேவி பூரிதம் –( -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –) என்று மேலே விவரிக்கையாலே த்வயை தத் விஷ்ணு நா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் (த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –)என்கிறதும் விக்ரஹ வ்யாப்தி விஷயம் – ஆகையாலே இவளுக்கு ஸ்வரூப வ்யாப்தி பரிஹாரேண விக்ரஹ வ்யாப்தியே உள்ளது என்றும் நீர்ணீதமாய்த்து

(யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்-என்கிற விஷ்ணு புராண வசனத்துக்குத் விஷ்ணு எப்படி வியாபிக்கிறாரோ அப்படியே இவளும் வியாபிக்கிறாள் என்று கொள்ளாமல் -வியாபிக்கிற விஷ்ணு எத்தகையவனோ அத்தகையவளே இவள் -வியாப்தியைத் தொடாமல் அர்த்தம் சொல்லலாம் அன்றோ -யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்- எங்கள் ஆழ்வான் வியாக்யானம் -பகவான் விபுத்வேன ஸர்வ கதா வியாபகன் -அவனுடைய சக்தியாலேயே இவள் அணுவாக இருந்தாலும் எங்கும் எல்லாம் அவன் இருக்கிறானோ அங்கு எல்லாம் இவளும் வியாபிக்கிறாள் -ஸர்வ கதனான விஷ்ணு எந்தத்தன்மையானோ இவளும் அந்த ஸ்வ பாவங்களுடன் இருக்கிறாள் -சர்வகதராயும் கல்யாண குணங்கள் இவை பொது )

கிஞ்ச -இருவருக்கும் ஸ்வரூப வ்யாப்தியைச் சொல்லில் –தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம் -அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -(மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –)என்ற விபூதி விபாக விரோதம் பிரசங்கிக்கும் – த்விதீய ஹேதுவான ஸர்வ நியந்த்ருத்வம் பாகர் அஸித்தமாகையாலே சாத்ய சாதக சத்தேது வன்று -எங்கனே என்னில் ஸகல புருஷ நியந்த்ருத்வத்தை இறே அங்கு புருஷ தத்வ அந்யத்வ சாதகமாகச் சொல்லிற்று -அந்த ஸர்வ நியந்த்ருத்வம் இவளுக்குக் கூடாது இறே –ஏகோந நியந்த்ருத்வம் இறே இவளுக்கு உள்ளது – அது தன்னிலும் அந்தப்பிரவிஸ்ய நியந்த்ருத்வம் இல்லை இறே – தாவன் மாத்ரத்தாலே ஆத்மஜாத் யநந்தர்ப்பாவம் கொள்ளும் போது சர்வருக்கும் அபும்ஸ்தவம் பிரசங்கிக்கும் -ஸ்வ சரீர மாத்ரத்துக்கும் அநீசனாய் இருப்பான் ஒருவன் இல்லை இறே (பகவான் லஷ்மி ச ஆஸ்துமா ஜாதியில் சேர மாட்டார்கள் -அநு பிரவேசம் பண்ணியோ பண்ணாமலோ ஒரு சிலரை நியமிக்கிறார்கள் -என்னில் -சர்வ வியாபகம் -விக்ரஹ வியாபகம் குறைத்து -அந்தர் பிரவேசமும் இல்லாமல் -சர்வரையும் குறைத்து ஒரு சிலரை -என்று குறைத்தால் -ஜீவர்களும் அந்தரப்ரவேசம் இல்லாமல் ஒரு சிலரை நியமிப்பது; ஜீவன் ஜாதியில் பெற மாட்டார்கள் என்றும் வருமே )- ஆக இப்படி ஆத்ம தத்வ அந்யத்வ ஸாதகங்களான ஹேது த்வயமும் அசித்தங்களாகையாலும் நிரூப்ய நிரூபகங்களுக்கு அவிநா பாவம் உண்டாகிலும் லஷ்மீ ஸ்வரூப நிரூபித பகவத் ஸ்வரூபத்துக்கே வியாப்தி சொல்லுகையாலே ஜீவ தத்வ அந்தர் பூதையாய் தஜ்ஜாதீயத்வேந ப்ராப்தமான அணுத்துவத்தை ஸ்வரூபமாக உடைய இவளுக்கு ஸ்வரூபதோ விபுவான ஈஸ்வரனைப் போலே ஸ்வரூப வியாப்தி இல்லை என்று நிர்ணயிக்கப்பட்டது –

ஆகில் யத் ப்ரஹ்ம ரூபம் தத்தே அனுரூப ரூப விபவைர் காடோப கூடாநி -என்று ஸர்வ வியாபக ஸ்வரூபத்தோடே தந் நிரூபக பூதையான லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அவிநா பாவ சம்பந்தம் சொல்லுகையாலே சன்னியோக விஸிஷ்ட நியாய ஸித்தமான (சன்னியோக விஸிஷ்ட நியாயம் -சேர்க்கை விதிக்கப்பட்டதால் இருவருக்கும் இல்லை என்ற இருவருக்கும் உண்டு என்ற சொல்ல வேண்டுமே )ஸ்வரூப விபுத்வம் இவ்விடத்தில் சேரும்படி எங்கனே என்னில் -இப்படி அனுபபத்யமாந அர்த்த தர்சனத்தாலே உபபத்யமாந அர்த்தாந்தரத்தைக் கல்ப்பிக்கை யாகிற அர்த்தாப்பத்தி ப்ரமாண ஸித்தமமான அகடிதகடநா ஸக்தியாலே அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விபுவான ஈஸ்வர ஸ்வரூபத்தோடே பரிசமாப்ய வியாபித்து இருக்கையை இவ்விடத்தில் சொல்லுகையாலே விரோதமில்லை – எங்கனே என்னில் -மஹதோ மஹீயான்(அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்) என்னும்படி அதி மஹத்துவமான ஈஸ்வரன் அணோரணீயான் -என்கிறபடியே அணீயாநாம் அணீயனாயக் கொண்டு அணு வியக்திகள் தோறும் அசங்குசிதமாக நிரங்குச ஐஸ்வர்யத்தோடே தன்னுடைய அகடிதகடநா சக்தியால் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே தத் ஸ்வரூப நிரூபக பூதையான இவளும் அணுவாய் இருக்கவும் நிரூப்ய வஸ்து வியாபித்து நிற்கும் இடம் எங்கும் ஈஸ்வரீம் என்று சுருதி ப்ரஸித்தமான தன்னுடைய அகடிதகடநா சக்தியாலே வியாபித்து விபூவாய் இருக்கை இவ்விடத்தில் விவஷிதமாகையாலே விரோதமில்லை இறே – ஆகையாலே ஸ்வரூபதோ விபுவான ஈஸ்வர தத்வ வ்யாவ்ருத்தியும் கேவலம் குணதோ விபுவான ஆத்ம தத்வ வ்யாவ்ருத்தியும் சைதன்ய அநாதாரமான அசித் தத்வ வ்யாவ்ருத்தியும் -பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசயித ஸ்தோத்ரமும் ஸித்திக்கும் இறே

(ஆகாசம் -குடாகாசம் -ஆகாசத்தில் ஒரு பகுதி தானே -அணுவுக்குள் விபுவான இவன் முழுவதுமாக பரிசமாப்ய வர்த்திக்கும் -ப்ரஹ்மத்தின் ஒரு பகுதி இல்லை ஜாதிவத் வியாபித்து இருக்குமாப் போலே-இவள் ஈஸ்வர சேதன அசேதன வ்யாவ்ருத்திக்குக் காரணங்களையும் அருளிச் செய்கிறார் -)

அனுரூப்யமாவது –ஈசேதே தேவ ஏக –ஈச்வரஸ் ஸர்வ பூதாநாம் (எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்)என்கிற தத் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக அஸ்யே ஸாநா –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் என்னும்படி இருக்கை இறே உசிதம் -அதவா -அவனுடைய சத்தை ஏதத் அதீனையாய் இவளுடைய சத்தை தத் அதீனையாய் இருக்கை அந்யோன்ய அனுரூபத்துவமாகவுமாம் -எல்லாப்படியாலும் உனக்கேற்கும் –10-10-6- என்னும்படி துல்ய சீலையாய் இருக்கை இறே அனுரூப்யமாவது –

(அவனுடைய சத்தை ஏதத் அதீனையாய் இவளுடைய சத்தை தத் அதீனையாய் இருக்கை -இன்றியமையாமை -உண்டே -மாயா சீதா -விருத்தாந்தம்)

நநு விபுவான சர்வேஸ்வரன் அகடிகடநா சாமர்த்தியத்தாலே அணு ஸ்வரூபனாய் கொண்டு அணு வியக்திகள் தோறும் ஜாதிவத் வியாபித்து இருக்குமாப் போலே -இவளும் அணுவாய் இருக்கவும் அகடிகடநா சக்தியாலே விபுவாய்க் கொண்டு வியாபித்து இருக்கும் என்கிறவிடத்தில் த்ருஷ்டாந்தம் கூடாது -எங்கனே என்னில் -விபுவான ஈஸ்வரனுக்கு உபாத் யவச்சேத மாத்ரத்தாலே இறே அணுத்வ விபுத்வங்கள் சொல்லுகிறன-ஸ்வரூபதஸ் அணுத்துவம் சொல்ல ஒண்ணாது இறே -அகடிகடநா சக்தியாலே அணுத்துவ மஹத்வ ரூப விருத்த சமுச்சயம் கூடும் என்னில் அப்போது ஸர்வ அத்வைத பேதாபேத பக்ஷங்களும் அங்கீகார்யங்களாம் இறே -ஆகையாலே பிரதிவஸ்து பூர்ணத்வமாவது -ஓரொரு உபாத் யவசின்ன ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தியை யுடைத்தாய் இருக்கை -இங்கன் அன்றிக்கே அந்தர் வியாப்தியை ஸ்வரூப சாமாப்ய வியாப்தி என்று அங்கீகரிக்கும் போது பஹிர் வியாப்தி சேராது -கிஞ்ச -நிரவயமான ஆத்மாவுக்கு ஷட் பாவ ராஹித்யத்தாலே உள்ளென்றும் புறம்பென்றும் ஒரு வ்யவஹாரம் கூடாமையாலே அந்தர் வ்யாப்தியே அங்கீகார்யம் -ஆகையாலே பகவத் அந்தர் வியாப்தி த்ருஷ்டாந்த பலத்தாலே லஷ்மீ விபுத்வம் அஸாத்யம்

கிஞ்ச -ஸ்வரூப வியாப்தியும் விக்ரஹ வியாப்தியும் இன்றிக்கே அகடிகடநா சக்தியாலே அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விபுவோடே வியாபித்து இருக்கும் என்னில் ஸ்வரூப விகாரித்வம் அங்கீகரித்ததாய் விடும் -அப்போது ஆத்ம நிர்விகாரத்வ ப்ரதிபாதிக பிரமாணங்களுக்கு விரோதம் பிரசங்கிக்கும் -ஆனபின்பு லஷ்மீ ஸ்வரூப விபுத்வமே அங்கீகார்யம் -ஜீவத்வே அபி விபுத்வ அங்கீகாரத்திலும் அணுத்வே ஸதி சேதனத்வம் என்கிற ஜீவ லக்ஷணத்துக்கு அவ்யாப்த்யதி வ்யாப்தி தோஷ பரிஹார அர்த்தமாக அணு சேதனத்வம் ஏதத் வ்யதிரிக்த ஜீவ விஷயம் -பரதந்த்ர சேதனத்வம் ஏதல் லக்ஷணம் என்றும் ஸ்வ தந்த்ர சேதனத்வம் ஈஸ்வர லக்ஷணம் என்றும் லஷண பேதம் கல்பிக்கலாம் இறே -அன்றிக்கே ஜீவ லக்ஷணத்தில் அணு ஸப்தம் பரிச்சின்ன மாத்ர பரமாய்-பகவத் பராதீனையான இவள் விஷயத்தில் ஸ்வதந்த்ர குண பரிச்சேதன வர்த்திக்கிறதாகவுமாம் -அதாவது -ஸ்வரூபதோ நிரதிசயத்வே யபி பாரதந்தர்யாதி யோகத்தாலே குணதஸ்ஸ அதிசய யுக்தையாய் இருக்கும் என்றபடி -இத்தால் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் ஸ அதிசயரான சேதனரில் வ்யாவ்ருத்தியும் -தத் உபயதோ நிரதிசயனான ஈஸ்வரனில் வ்யாவ்ருத்தியும் -ஸித்திக்கும் இறே -ஆகையால் ஜீவ தத்வ அந்தர் பாவத்திலும் ஸ்வரூபதோ விபுவாகையாலே பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசயேந ஸ்துதியும் சித்திக்கையாலே அணுத்துவம் அநங்கீகார்யம் இறே என்னில்–மைவம் -சர்வேஸ்வரன் அணு த்ரவ்யங்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக்கும் என்னுமிடம் கூடாதாகில் -அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித–அந்தப் ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜனாநாம் -யஸ் ஆத்மாநமந்தரோ யமயதி -என்று (யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்)(அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான்)(யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22- எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் )என்று அந்தர் வியாப்தியைச் சொல்லுகிற பிரமாணங்களுக்கு வையர்த்தமும் -பரந்த தண் பரவையுள் நீர் தொறும் –கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் –பரந்த அண்டமிது எனக் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே -என்கிற திவ்ய ஸூக்தியோடும் விரோதிக்கும் -வியாப்பிய வியாபகங்களான ஜீவ ஈஸ்வர ஸ்வரூபங்கள் ஞான மயங்களாகையாலே தேஜோ த்ரவ்யங்களாய் அதிஸ்வச் சங்களாய்க் கொண்டு ப்ரதிகாதா பாவத்தாலே அந்யோன்யம் அந்தப் பிரவேசிக்கை மிகவும் உபபன்னமாகையாலே ஜாதி வியக்தி தோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமா போல பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்று ஸ்ருதி ஸித்தமான அகடிகடநா சக்தியாலே வியாப்ருத வஸ்துக்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக்கக் குறையில்லை இறே -இப்படி ஸ்ருதி ஸித்தமாய் யுக்தி யுக்தமுமான அந்தர் வியாப்தி பஹிர் வியாப்திக்கு விரோதமாகாமையாலும் விருத்த சமுச்சய பக்ஷங்களில் விருத்த சமுச்சய நிபந்தனமாக ஈஸ்வரனுடைய அகடிகடநா சக்தியைக் கொள்ளாமையாலே பரபஷத்தின்படி ஆகாமையால் அது தத் பிரதிபந்தி யல்லாமையாலும் விபு ஸ்வரூபன் அகடிகடநா சக்தியாலே அணுக்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக் கிறாப் போலே பிராட்டியும் அணு ஸ்வரூபையாய் இருக்கவும் அகடிகடநா சக்தியாலே விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கையாகிற விபுத்வம் இஸ் ஸ்லோகத்தில் விவஷிதமாகையாலே விரோதமில்லை –

(ஸ்ருதி ஸித்தமாய் யுக்தி யுக்தமுமான அந்தர் வியாப்தி பஹிர் வியாப்திக்கு விரோதமாகாமையாலும்-என்றது ஞான த்ரவ்யம் தேஜோ விஷயம் தடுக்காது -கீழே சொல்லி -ஜாதியானது வ்யக்தி தோறும் முழுவதும் வர்த்திக்குமே -அகடி கடநா சாமர்த்தியத்தாலே முழுவதும் வர்த்திக்கலாம் -இவ்வாறு இரண்டையும் கொள்ளும் போது பிரதிபந்தகங்கள் சொல்ல முடியாது என்றபடி -)

கிஞ்ச –ஏக மேவ அத்விதீயம் — (ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –)என்கிறபடியே ஜகத்துக்கு த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே யாகையாலே –ப்ரக்ருதிச்ச ப்ரதிஞ்ஞாத் த்ருஷ்டாந்த அநுப ரோதாத் – (ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-)என்கிற ஸூத்ர பிரகாரத்திலே உபாதான காரணமாய்க் கொண்டு ப்ரஹ்மம் ஜகத்தாகப் பரிணமிக்கும் போது தன்னுடைய சக்தியாலே ஸ்வரூபத்துக்கு விகாரம் வாராமல் பரிணமிக்குமா போலே -இவளும் அணுவாய் இருக்கவும் -அகடிகடநா சக்தியாலே தன் ஸ்வரூபத்துக்கு விகாரம் வாராமல் விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கக் குறை இல்லாமையாலும் -லஷ்ய வர்க்கத்துக்கு எல்லாம் ஏறுகிற லக்ஷணத்தை விட்டு லஷ்ய விபாகம் பண்ணி லஷண பேதம் கல்பிக்கை யுக்தம் அல்லாமையாலும் -ஜீவ விஷயத்தில் அணு ஸப்தம் -ஜ்யாயா நந்தரிஷாத் – (ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3- ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –)என்கிற மஹத்வ பிரதி கோடியான அணுத்துவத்தைச் சொல்லுகையாலே வாலாக்ரே–இத்யாதிப்படியே ஸூஷ்ம பரிணாமத்தைச் சொல்லுமத்தனை அல்லது பரிச்சின்ன மாத்ரபரம் அல்லாமையாலும் ஜீவ தத்வ அந்தர் பூதையாய் -தஜ் ஜாதீயத்வேந ஆகதமான அணுத்துவத்தை ஸ்வரூபமாக யுடைய இவள் தம்முடைய அகடிகடநா சக்தியாலே ஸ்வ விகார ரஹிதமாக விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கும்படியை இஸ் ஸ்லோகத்தாலே வியாக்யானம் பண்ணி யருளினாராய்த்து –

அதவா -விக்ரஹ வியாப்தியை (மட்டுமே)இஸ் ஸ்லோகத்திலே ப்ரதிபாதிக்கிறது என்றும் அருளிச் செய்வர் -ஆகில் –யத் ப்ரஹ்ம ரூபம் -என்று ப்ரதமம் ஸ்வரூபத்தைச் சொல்லுவான் என் என்னில் –மூர்த்தம் ப்ரஹ்ம -என்று சொல்லுகிற திவ்ய விக்ரஹம் திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் ப்ரியதரமாய் இருக்கும்படியை பிரகாசிப்பிக்கைக்காக முந்துற முன்னமே ஸ்வரூபத்தை ப்ரதிபாதித்தது அத்தனை என்றும் யோஜித்துக் கொள்வது -இந்த யோஜனையில் –ஹரேச் சாந்தாநந்த மஹா விபூதியில் பரமம் ப்ரஹ்ம யத் ஸ்வரூபம் ததோ அபி தத் ப்ரியதரம் அத்யத்புதம் மூர்த்தம் ப்ரஹ்ம யத் ரூபம் -யத் விக்ரஹம் அஸ்தி தச்ச யதா ஸூகம் விஹரதோ ஹரேரந்யாநி யாநி ஸர்வாணி ரூபாணி சந்தி தாநி ச தைஸ்தைர் அனுரூப ரூபா விபவை –விக்ரஹ விபவை -காடோப கூடா நி –ஸ்லிஷ்ட பரிஷ்வங்காந் யாஹூ -இத் யன்வய

பிரதம யோஜனையில் -ஹரேச் சாந்தாநந்த மஹா விபூதி-பரமம் ப்ரஹ்ம யத் ரூப மஸ்தி தச்ச ததோபி ப்ரியதரம் அத்யத்புதம் மூர்த்தம் ப்ரஹ்ம யத் ரூபமஸ்தி தச்ச யதா ஸூகம் விஹரதோ ஹரேரந்யாநி யாநி ஸர்வாணி ரூபாணி சந்தி தாநிச தைஸ்தைரநு ரூப ரூப விபவை –ஸ்வரூபாதி விபவை காடோப கூடாந்யாஹு -என்று ஸ்வரூபாதிகளை பிரத்யேகமாக சம்பந்தித்து யோஜித்துக் கொள்வது –

ஆக இஸ் ஸ்லோகத்தாலே–யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -என்று தொடங்கி –தத் விஜிஜ்ஞாஸஸ்வ –என்றும் (யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே-யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி-தத் விஜிஜ்ஞாஸஸ்வ-தத் ப்ரஹ்மே தி -தைத்ரியம் பிருகுவல்லி -எதனிடமிருந்தது இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ -உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ -பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக – )-தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -)ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத–(சாந்தோக்யம் -3 -14-1)அந்த ப்ரஹ்மத்தினிடம் இருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் -இவையெல்லாம் ப்ரஹ்மம் அன்றோ என்றும் சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் )என்றும் –காரணந்து த்யேய (அதர்வசிகை )(காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது )-என்றும் –அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாசா -1-1-1-(கர்மவிசாரத்தின் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது )-என்றும் -ஜன்மாத்யஸ்ய யத-1-1-2 (இவ்வுலகிலன் பிறப்பு முதலியவை எத்தனிடமிருந்தோ –அதுவே ப்ரஹ்மம் )என்றும் –த்யேயோ நாராயணஸ் ஸதா -(ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) என்றும் த்யேயஸ் ஸதா -என்றும் -சொல்லுகிற ப்ரமாண பிரகாரத்திலே

பகவத் த்யேயத்வ ஹேதுவான ஜகத் காரணத்வத்தை ப்ரதிபாதிக்கிற நாராயண ஸப்த பர்யாயமாய் பூர்வ வாக்கியத்தில் படியே -ஸ்வீ க்ருத உபாயனுக்கு ப்ராப்தி பிரதிபந்தக ஸகல பாப நிவர்த்தந கத்வ ஹேதுகமாய் -ஸ்வ இதர ஸமஸ்த ஸஹாயாந பேஷ உபாயத்வ ப்ரகாசகமாய்–

உத்தர வாக்கியத்தில் படியே ப்ரார்த்திதப்ராயனுக்குப் பரம ப்ராப்யமான அனுபவ கைங்கர்யாதிகளில் ஸ்வ போக்த்ருத்வாதி ரூப விரோதி நிவ்ருத்திக்கும் வாசகமாய் இருக்கிற ஹரி ஸப்தத்தை ப்ரயோகித்து -தத் வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய ஸ்வரூபாதிகள் -புருஷகார ஏக லக்ஷணையாய் -ப்ராப்ய ஏக வேஷையாய் -கைங்கர்ய பிரதி சம்பந்திநியுமாய் -தத் வர்த்தகையுமான பிராட்டியினுடைய ஸ்வரூபாதிகளாலே காடாச் லிஷ்டங்களாய் இருக்கும் என்றும் திவ்ய தம்பதிகளுடைய நித்ய யோகத்தை அருளிச் செய்கையாலே-

ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )-என்கிற ப்ரமாண ப்ராகாரத்திலே வாக்ய த்வ யுக்த உபாய உபேயங்களை விசதீகரித்து அருளினார் என்னுமிடம் வ்யக்தமாகிறது –

விஸ்வம் நாராயணம் ஹரிம் -என்று ஸ்ருதியும் நாராயண ஸப்தத்தோடு ஹரி ஸப்தத்தை ஸஹ படித்தது இறே –வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால் ) -என்று ஜகத் காரணத்வ வாசகமான நாராயண ஸப்தத்தோடு ஹரி ஸப்தத்தை பிரயோகித்தது -தத் வாஸ்யனோடே லஷ்மீ ஸம்பந்தத்தையும் அனுசந்தித்து உபாய வரணம் பண்ணி –நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் ) -என்று ஸ்வ போக்த்ருத்வாதி விரோதி நிவர்த்தகனாய் ஆர்த்தி ஹரனாகையாலே ஹரி ஸப்தம வாஸ்யனாய் -ஸர்வ சேஷியுமான நாராயணனும் -ஸர்வ ஸ்வாமிநியுமான பெரியபிராட்டியாருமான நித்ய யோகத்தை ப்ரதிபாதித்து அனுபவ கைங்கர்யாதிகளை பிரார்த்தித்தார்கள் இறே பரம வைதிகரும் –கதிர் கம்யச்சாசவ் ஹரி -என்னக் கடவது இறே (அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-இதுதான் பகவான் ஹரி என்கிறபடியே உபாய பூர்த்தியையும் உபேய பூர்த்தியையும் உடைத்தான திருநாமம் இறே

—————

ஆக-சதுஸ் ஸ்லோகியாலே -ஹ்ரீச் ச தே லஷ்மீச் ச பத்ன்யவ் –விஷ்ணு பத்னீ -விஷ்ணோர் ஸ்ரீ -தேவ தேவ திவ்ய மஹிஷீம் –இத்யாதி ப்ரமாண ஸித்தமான விஷ்ணு பத்நீத்வத்தையும்
அஸ்ய ஈஸாநா ஜகத–ஈஸாநா தேவீ புவநஸ்ய -ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற ப்ரமாண ப்ரதிபாத்யமான உபய விபூதி சேஷித்வத்தையும் உடையளாய் –
தாம் பத்ம நேமிம் சரணமஹம் ப்ரபத்யே –என்கிறபடியே அசரண்ய சரண்யையாய் (பற்றிலார் பற்ற நின்றவன்)-
உதாரம் –என்கிறபடியே ஸகல புருஷார்த்த பிரதையாய்
சமன்வய அவிரோத சாதன பல விஷயமான சாரீரிக ஸாஸ்த்ர சதுர் அத்யாயீ சமதிகதனான
ஸர்வேஸ்வரனுக்கு
ஸர்வ பிரகார அபிமத அனுரூப ஸ்வரூப ரூப குணாதிகளை யுடையளாய்க் கொண்டு
தத் ஸ்வரூபாத் யவிநா பூதையாய் இருக்கையாலே
தேவ ஜூஷ்டாம் (சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்)என்கிற தந் நித்ய யோகத்தையும் உடையளாய் இருந்துள்ள பெரிய பிராட்டியாருடைய வைபவத்தை பஹு முகமாகப் பேசி அனுபவித்து
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் மாத்ரு தேவோ பவ -என்கிற வேதாந்த வாக்யார்த்தத்தை ஸ்வ ஆஸ்ரிதரான அஸ்மதாதிகளும் -அறிந்து -அனுசந்தித்து -உஜ்ஜீவிக்கும் படி உபகரித்து அருளினாராய்த்து –

(மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று கொண்டு இச் சேதனனுக்கு ஸ்வரூப அநுரூபமாக உபகாரகராகிறார் -1-அகில ஜகன் மாதாவான பிராட்டியும் -2-அவ்வயயஸ் பிதாவான ஈஸ்வரனும் -3-அறியாதது அறிவித்த ஆச்சார்யனும் -4-அதிதி ஸப்த வாஸ்யனான அவனடியாரும் –என்று இந் நால்வர் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே உத்தேச்ய பிரதிபத்தி பண்ணி உஜ்ஜீவிக்கக் கடவன் என்றும் வேதாந்தங்களிலே வ்யாக்யாதமாக விதிக்கையாலே விசேஷஞ்ஞர் எல்லோரும் விரும்பி அனுஷ்ட்டிக்க வேண்டும்படி விசேஷ யர்த்தங்களாய் இறே இவ்வர்த்தங்கள் தான் இருப்பது)

ஸ்தோத்ர-சதுஸ் ஸ்லோகீ -இரண்டிலும் -நாலும் உண்டேயாகிலும் ஒன்றுக்கு பிரதம வாக்யத்திலே நோக்கு -ஒன்றுக்கு த்வதீய வாக்யத்திலே நோக்கு -ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ (யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்-அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யாமுந முனிவரை ஸ்துதிக்கிறேன்)என்று கொண்டு துர்க்ரஹமான வேதாந்தார்த்தங்களை ஸூக்ரஹ ஸ்வாதுக்களாம் படி ஸ்தோத்ரமாகப் பண்ணி யருளினார் என்கையாலும் இப்பிரபந்தங்களில் ப்ரதிபாதிக்கிற அர்த்தங்களை நிரூபித்துப் பார்த்தால் அவ்வர்த்தங்களாயே இருக்கையாலும் இந்நாலு வாக்யத்தையும் இவற்றுக்கு வாக்யார்த்தமாக யோஜிக்கலாம் இறே

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை

யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே
—ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன்–யாருடைய திருவடித் தாமரைகளை சேர்த்து சமர்ப்பிக்கப்பட்ட ப்ரணாமமானது -துர்லபமான பெரிய பதங்களையும் அளித்து அதற்கும் மேலான -தன்னில் மேம்பட்ட -கைவல்யமும் முக்தி தானே -ஆகவே இங்கு பரமமான ஸ்ரீ வைகுண்டம் ப்ராப்தியையும் அருளும் -அப்படிப்பட்ட ஸ்ரீ மஹா லஷ்மியை வணங்குகிறேன்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக்கண்ணபுர மஹிமை–ஸ்ரீ சௌரி ராஜ ஸ்தவம்-

May 14, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல், சன்னாநல்லுõர் அருகே நான்கு கிலோமீட்டார் தொலைவில் திருக்கண்ணபுரம் உள்ளது. வடக்கே திருமலைராயன் ஆறும், தெற்கே வெட்டாறும் ஓடிக் குளிர்விக்க இடையே கிழக்கு மேற்காக அமைந்துள்ளது இந்த ஊர். ஊர் சிறப்பு! பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. கம்பீர கோபுரம்! 95அடி உயரமும் 7 நிலைகளையும் கொண்டு கம்பீரமாய்க் காட்சி தருகிறது. ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவரை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள். சௌரிராஜப் பெருமாள்: திருக்கண்ணபுரக் கோயில் உற்சவருக்கு ‘சௌரிராஜ பெருமாள்‘ என்று பெயர். 

பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம்செய்ய இறையிலியாக நிலங்களை மான்யமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர். கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உத்சவருக்கணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார். மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உத்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான். அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறினை உணர்ந்தான். திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சௌரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உத்சவருக்கு தலையலங்காரம் சௌரிமுடியுடன் தான், பெயரும் சௌரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று. நடையழகு! *இராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் இராமனைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு இராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதனை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சன்னிதி உள்ளது. இராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது. சக்கரத்தின் பெருமை! *அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம். முனையதரையன் பொங்கல் வந்த கதை… *முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று. அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று. ஆழ்வார்கள் பாடிப்பரவிய தலம் : தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் இராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார். கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்திற்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து, ‘கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார். தந்தை பாடி மகிழ்ந்த அதே கண்ணபுரப் பெருமாளை மகள் கோதை நாச்சியாரும் ’நாச்சியார் திருமொழி’யில் கூடலிழைத்துப் பார்த்துப் பாடுகிறாள். தான் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதைக் கூடலிழைத்துப் பார்க்கும் வழக்கம் உண்டு. கோதையும் தான் கண்ணனை மணத்தல் சாத்தியமா என்றறிய ‘காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர் வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன் ஒட்டாரவந்து என்கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் நீகூடிடுகூடலே‘ என்று பாடுகின்றாள். திருக்கண்ணபுரத்தைப் போற்றி அதிக எண்ணிக்கையில் பாசுரங்கள் பாடியிருப்பவர் திருமங்கை ஆழ்வார்.100க்கும் மேற்பட்ட பாசுரங்கள் இவர் பாடியவை. நம்மாழ்வாரும் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பூலோக வைகுந்தம் ! திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது. திருவிழாக்கள்: 15 கி.மீ.தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாள்களில் திருமஞ்சனமும் உத்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உத்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சௌரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. துயர் துடைக்கும் ஊர்! ‘பாதம்நாளும் பணியத்தணியும்பிணி ஏதம்சாரா எனக்கேலல் இனியென்குறை? வேதநாவர்விரும்பும் திருக்கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே “இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே” திருவாய்மொழி 9-10-10 (3665) திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன

ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பு அன்று மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். சரியாய் நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது. விரைந்துமோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார். வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால் இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

 மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம் உத்பாலவதாக விமானம் காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு.-விமான தரிசனம் செய்ய முடியாத கோயில்! விமான தரிசனம் சுவாமியை தரிசனம் செய்த பலன்களைத் தரக்கூடியது. கோயில்களில் கருவறைக்கு மேல் இருக்கும் விமானத்தை சுவாமியின் வடிவமாகவே கருதுவர். ஆனால் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தை தரிசனம் செய்ய முடியாது. உத்பலாவதகம் எனப்படும் இவ்விமானத்தில் மகரிஷிகள் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இவ்விமானத்தை தரிசனம் செய்ய முடியாத வகையில் சுற்றிலும் உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது

ராமபக்தரான விபீஷணருக்கு தனிசன்னதி உள்ளது. மனித அவதாரமாக வந்த மகாவிஷ்ணுவிற்கு சேவை செய்த விபீஷணர், அவரது தெய்வ நடையைக் காண வேண்டுமென அவரிடம் வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே நடந்து காட்டினார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் விபீஷணருக்கு, விஷ்ணு நடையழகு காட்டும் நிகழ்ச்சி ஒவ்வொரு அமாவாசையன்றும் நடக்கிறது. சுவாமியின் நடையழகை தரிசிப்போரின் பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1. முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள் இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

2. சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள். 75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர்.

3. இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும், அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

4. நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர் கேட்க, கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.

5. தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம். இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

6. கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும்.

7. இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது. கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம். இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க, இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும்.

8. சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான். அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க, பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி, மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார். கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க, சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க, சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன. அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும் இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு. பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும்.

9. வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான். அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்யயாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன் இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று, தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும்.

11. இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார். அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

12. இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார். இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

13. விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தையழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும் இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும்.

14. இப்பெருமாளைப் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களிலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களிலும், ஆண்டாள் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

15. 108 திவ்ய தேசங்களில் “கீழைவீடு” என்று குறிக்கப்படுவது இத்தலம்தான்.

16. இங்கே ஸ்ரீமணவாள மாமுனிகள் ஓராண்டு காலம் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தருளினார்.

ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து... செங்கமலக்காவிலுள்ள சீராரிளங்கோதை அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு என்னுள்ளம் நோய் தீர மருந்துண்டோ சொல் தோழீ என்ன உண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள் தென்னன்குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும் சுக்கைத் திகழத் தட்டி ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடி கட்டி பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து திருவேங்கடமென்னும் விறகை முறித்து வைத்து ஓம் நம: என்னும் உமியைத் தூவி திருநீர்மலை யென்னும் நெருப்பை மூட்டி திருமாமணிக்கூடத்தில் இறக்கி வைத்து திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து அமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந் நோய் தீருமம்மா ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ : இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்? இது ஊரில் இல்லாத மருந்து உல்கோர் அறியாத மருந்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து நாராயணனே நமக்கே பறை தருவானென்று பாடிப்பறை கொள்ளும் மருந்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் மருந்து செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து எருதுக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள் பகரும் மருந்து அணியனார் செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து தாயே தந்தையென்றும் தாரமே கிளை யென்றும் நோயில்பட வொட்டாத மருந்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்து உன்னுள்ளம் நோய் தீர்வதற்கு இதுவேஉகந்த மருந்தம்மா காளமேக புலவரும் திருக்கண்ணபுரமும் கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கன மழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவ பக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், ‘எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்‘ என்றனர். காளமேகம் பார்த்தான். ‘சரி, உங்கள் பெருமாளைத் தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ…‘ என்று சொல்லி ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்‘ என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, ‘என்ன சொன்னேன்.? என் கடவுப்ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: ‘கண்ண புர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்‘ என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து ‘அதெப்படி?‘ என்றார்கள். ‘ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொலையாதே‘ என்று புதிரை விடுவித்தான். ’சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?’ என்று விளக்கம் சொன்னான். கண்ண புர மாலே …..கடவுளிலும் நீ அதிகம் உன்னை விட நான் …..அதிகம்- ஒன்று கேள் உன் பிறப்போ பத்தாம் …..உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என் பிறப்போ …..எண்ணத் தொலயாதே. கண்ண புர கோயில் கதவடைத்து… கண்ணபுரம் கோயில் கதவு அடைத்துத் தாழ் போட்டார் மண்ணை உண்டார் வெண்ணெய் உண்ட மாயனார் என்னும் சிரக்கப் புரை ஏந்திச் செங்காட்டில் ஈசர் இரக்கப் புறப்பட்டார் என்று. திருக்கண்ணபுரம் சவுரி நாராயணப் பெருமாள் பிறந்த நாள் இதுவாம் எனப் பாடியது: உத்திரத்துக்கு ஓர் நாள் உரோகணிக்குப் பத்தாம் நாள் சித்திரைக்கு நேரே சிறந்த நாள் – எத்திசையும் கார்ஆரும் பூஞ்சோலைக் கன்னபுரம் வாழ் சவுரி நார யணன்பிறந்த நாள்.- திருக்கண்ணபுரமும் வடுவூர் சிலை அழகும் திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள்.திருவாரூர் – தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல் வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர். இதில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத் தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ? பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்த சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை, ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார். அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார். அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள். அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள். இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார். ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள். இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும் தலை ஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர் ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி, தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளை யிடுகிறார். திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார். சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார். அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார். சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார். இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள். மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார். அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது. (இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்). சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி இவற்றைக் கொண்டு மேற் சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது. இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார். இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்: இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு நின்று வரிலதுவும் நீயறிவை – வென்றி முனையா கலவி முயங்கியவா றெல்லாம் நினையாயோ நெஞ்சத்து நீ. *

திருக்கண்ணபுரத்தின் சிறப்பை கூறும் பாடல்கள்: பாடல் 1: கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும் என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் .. முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும் முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும் தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும் மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும் கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான் செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான் சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான் சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான். கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர வேறோர் வலைச்சி வலை வீசிட நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும் கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் … * கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன். திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன். வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன் எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன். கண்ணபுரம்… நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன் நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன் உத்பலாவதக விமானத்தை நினைப்பேன் உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன். கண்ணபுரம்… கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன் கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன். பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன் பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன். கண்ணபுரம்.. எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன். ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன். கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன். கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்

    திருக்கண்ணபுரம் பண்டித ரத்நம் உபய வேதாந்த வித்வான் டி.எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி(சிரோமணி) அருளிய ஸ்ரீசௌரிராஜஸ்தவத்தின் பகுதி ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாதகேசம்

    உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்! சௌரிராஜ மஹம் வந்தே ஸதா- ஸர்வாங்க-ஸீந்தரம்!! பத்மா-பயோதர-தடீ- பாடீர- த்ரவ- ரஞ்ஜிதம்! பாது ஸ்ரீசௌரிராஜக்யம் ஜ்யோதி: பத்ம- விலோசநம்!

    1-திருமேனி ப்ரபுல்ல- முக- பங்கஜம் ஸ்மித- விகாஸி- தந்த ப்ரபம் விகாஸ-நயநோஜ்வலம் விகஸித-ப்ரவாளாதரம்! ஸமுந்நத- சதுர்புஜம் வித்ருத-சங்க-சக்ரம் மஹ: ஸஹஸ்ர- தபந-ப்ரபம் சௌரி-ஸ்ஜ்ஞம் ஹ்ருதி!! அலர்ந்த முகமாகிற தாமரை, புன்முறுவலால் விளங்குகின்ற பற்களின் காந்தி, மலர்ந்த கண்களின் ஒளி, பவளுமும் தோற்கும்படியான அதரம், எடுப்பான நான்கு தோள்கள், தரித்துள்ள சங்குச்சக்கரம், ஆயிரம் சூர்யர்களின் ஒளி இவை வாய்ந்த, சசௌரி என்ற பெயருடையதான சோதி என் மனத்தில் விளங்குக.

    2-யாவர்க்கும் அரியன் தண்டகாதி- யோகி-ப்ருந்த- வந்திதாங்க்ரி-பங்கஜம் பஞ்சபாண- பீதயேவ பத்மயாச்ரிதோரஸம்! ஸ்ரீபராங்குசாதி- பஞ்ச-ஸீரிபிஸ் ஸமீடிதம் பாவயேய சௌரி மத்ய க்ருஷ்ணபத்த நாதிபம்!! தண்டகரிஷி முதலிய முனிவர்களது கணங்களால் வணங்கப்படும் திருவடித் தாமரைகளை உடையவனும், மன்மதனால் அஞ்சுபவன் போல லட்சுமிதேவி தன் உறைவாகக்கொண்ட திருமார்பை உடையவனும், நம்மாழ்வார் முதலிய ஐந்து ஆழ்வார்களால் துதிக்கப்பட்டவனும், திருக்கண்ணபுரத்திற்கு அதிபனுமான ஸ்ரீசௌரிராஜனை இப்போது மனத்தால் நினைப்போமாக.

    3-திருமேனி அழகு, ஒளி நீரத்ந-மய-பூதராக் ருதிஸ் த்வம் ஸஹஸ்ரகர-பாஸீரார்சிஷா! ப்ராஜஸே பவி-வரேண பாநுமாந் நீலவர்ண இவ ஸாநுமாந் புவி!! பெருமானே! நீ நீலக்கல் மயமான மலையின் உருவை உடையவன். ஆயிரம் கிரணங்கள் வாய்ந்த சூர்யன் போலே ஒளிச் சுடரை உடைய சிறந்த கதாயுதத்தை உடையவனாய், சூர்யனோடு கூடிய கருநிறமுடைய மலைபோலே நீ இவ்வுளகில் விளங்குகிறாய்.

    4-திவ்யாயுதங்களால் திருமேனி மேலும் விளங்குதல் நீலாத்ரி-ச்ருங்க- விஹரத்-தபநேந்து- முக்யைர் ஜ்யோதிர்கøணைரிவ தநுஸ் தவ பூஷணைர் ஹி! ரம்யை:கிரிட-வர- குண்டல- சுந்தரஹார- ஸ்ரீகௌஸ்துபாதிபி ரஹோ ப்ரவிபாதி தீப்தா!! நீலபர்வதத்தின் கொடுமுடியில் உலாவுகின்ற சந்த்ர, சூர்யர்கள் முக்கியமாக வாய்ந்த நட்சத்திரங்களின் திரள் போலே அழகியவான கிரீடம், சிறந்த குண்டலங்களை,சந்தரஹாரம், ஸ்ரீகௌஸ்துபம் முதலான ஆபரணங்களாலே உனது திருமேனி ஒளிர்ந்து விளங்குகிறது. ஆச்சர்யம்!

    5-திருவடிகள் யத்பாத-பத்ம-யுசுளம் ம்ருதுலம் ஹி தேவ்ய: பத்மா-தரா-வஸீஸீதாஸ் ஸதயம் ஸகோதா: ஸம்வாஹயந்தி ஸீகுமாரதரை:கரைஸ் தத் சௌரே! விதாத்ரு- விநதம் மம சேதஸி ஸ்யாத்!! ஸ்ரீதேவி, பூமிதேவி, வஸீவின் திருமகளான பத்மிநி இவர்கள் ஆண்டாளுடன் மிகவும் ஸீகுமாரமான தங்களது கரங்களாலே தயையுடன் மிருதுவான உனது திருவடிகள் இரண்டையும் பிடிக்கின்றனர். ஸ்ரீசௌரிராஜனே! ப்ரஹ்மாவால் வணங்கப்படும் அப்படிப்பட்ட அந்த இரண்டு திருவடிகளும் எனது மனத்துள்ளே உறைக.

    6-திருவடிகள் யத்-பாத-பல்லவ மிதம் தவ காம- தப்தா கோப்யோ ததுஸ் ஸ்தந-யுகே விஜஹீச் ச தாபம்! சௌரே! விதாய மம மூர்த்தநி தந் துராபம் ஸம்ஸார தாப மபநோதய மாமகீநம்!! காமத்தால் தாபங் கொண்ட கோபிமார்கள் உனது பாதங்களாகிய தளிரைத் தம் ஸ்தனங்களில் தரித்துத் தமது தாபம் நீங்கினர். சௌரிராஜனே! கிடைத்தற்கு அரிதான அந்தப் பாதங்களாகிய தளிரை நீ எனது தலையில் வைத்து எனது ஸம்ஸார தாபத்தை நீக்கி அருளவேணும்.

    7-திருவடிகள் யத்-க்ஷாள நாம்பு-பரிபூத-சிராச் சிவோபூத் யத்வந்தநம் விதி-சிவேந்த்ர-துராப மாஹூ:! யச்சிஹ்நிதாநி ஹி சிராம்ஸி ஸதர் ப்ரபந்நா வாஞ்சந்த்யமீ பதயுகம் தவ தந் நதாஸ்ம:!! உனது திருவடிகளை விளக்கிய தீர்த்தத்தினால் சிவன் புனிதமான சிரத்தையுடையவனாவன்,(இத்) திருவடிகளை வணங்குதல் என்பது பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களுக்கும் பெறற்கு அரிது எனக் கூறுகின்றனர். உன்னையே சரணாகாக பற்றிய ப்ரபந்நர்கள் தம் சிரங்கள் இத்திருவடிகளாலே அலங்கரிக்கப்பட விரும்புகின்றனர். அப்படிப்பட்ட திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

    8.திருப்பாதுகைகள் சௌரே!(அ)வநம் யே (அ)குருதாம் தரித்ர்யா வதே(அ)டதஸ் தே கில பாதுகே த்வே! ஸீவர்ண-ரத்நாதி-விபூஷிதே தே சுபே சிரச்சேகரதா முபேதாம்!! ஸ்ரீசௌரிராஜனே! நீ (இராமபிரானால்) வனத்தில் சஞ்சாரம் செய்தபோது உனது பாதுகைகள் இரண்டும் பூமியை ரக்ஷித்தன. தங்கத்தாலும் ரத்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவை இரண்டும் என் தலைக்கு அலங்காரமாகுக.

    9.பாதபத்ம பீடம் சௌரே!! ஸீகந்தித்வ-ம்ருதுத்வ-முக்யைர் குணைர் ஜிதம் த்வத்-பதயோர் யுகேந! தத்தே கிமப்ஜம், பதபத்ம-பீடீ- மிஷேண தே பாத-யுகம் துராபம்!! ஸ்ரீசௌரிராஜனே! நறுமணம், மென்மை முதலிய பண்புகளால் உன் திருவடிகள் இரண்டாலும் ஜயிக்கப்பட்ட தாமரைமலர், (உனது) பாதபீடம் என்ற வியாஜத்தாலே (கிடைத்தற்கரிய) உன் திருவடிகள் இரண்டையும் சுமக்கின்றவா என்ன?

    10-திருவடிகளின் சோதி யத்வாத்ர சௌரே! பவத:பதாப்யா மதோ விஸாரீ மஹதாம் ஹி ராசி:! புல்லாரவிந்தாக்ருதி-பாக் கிலாயம் ஸ்புடாப்ஜ-பீடத்வ முபைதி நுõநம்!! ஸ்ரீசௌரிராஜனே! அன்றியும் பூஜ்யனான உனது திருவடிகளினின்றும் கீழே பரருவுகின்ற இந்தச் சோதியின் பிழம்பு, அலர்ந்த தாமரையின் வடிவம்போல மலர்ந்த அந்த பத்மபீடமாயிருத்தலைப் பெற்றுள்ளது; நிச்சயம்!

    11-திருவடி நகங்கள் சௌரே! தவ ப்ரபத-சும்பி-நகார்த்த-சந்த்ர- ஸம்சீதிதாயி நகரேப்ய இஹ ப்ரவ்ருத்தா:1 ஜ்யோத்ஸ்நாஸ் தரிவிக்ரம-பத-ப்ரதம-ஸ்ருதாநாம் கங்காம்பஸாம் சரதியம் ரசயந்தி ஹந்த!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவடிகளின் நுனியில் உள்ள விரல்களில் விளங்குவனவும் புதிய அஷ்டமி சந்த்ர்களோ என்ற சந்தேகத்தை உண்டுபண்ணும்வனவுமான நகங்களிலிருந்து வெளிவருகிறது சந்திரிகையாகிய ஒளி: இங்கு திரிவிக்ரமானாகிய பெருமானது திருவடிகளினின்றும் முதலில் பெருகிய கங்கா ஜலத்தின் வெள்ளமோ எனகிற எண்ணத்தை (எங்களுக்கு) இது விளைவிக்கின்றது. ஆச்சரியம்!

    12-திருத்தொடைகள் சௌரே தலேஹ ஜங்க்கே மந்மத துõணீர-யுகள-கர்வமுஷீ ஊர்வோர் யுகளி சேயம் ரம்பாஸ்தம்பாதி-கம்பீரா!! ஸ்ரீசௌரிராஜனே (இங்கு) உனது முழந்தாள்கள் இரண்டும் மன்மதனது அம்புறாப்பையின் கர்வத்தைக்கவர வல்லன. உனது தொடைகள் இரண்டும் வாழைமரத்தின் சிறப்பை ஒத்தன.

    13-அரை (கடி), இடை தே ச்ரோணீ-பலக மேதத் காங்கம் புளிநம் திரஸ்குருதே! அவலக்நம் சாபிக்ருசம் சௌரே! ஸ்மாரயதி நோ டக்காம்!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இந்தக் கடிதடம் இரண்டும் கங்கையின் மணற்குன்றுகளை அவமதிக்கின்றன; உனது மெலிந்த உள்ளடங்கிய இடை எங்களுக்கு உடுக்கையை நினைவூட்டுகின்றது.

    14-இடது திருக்கை வாமோரு- விந்யஸ்த-கரோ ஹி சௌரே! ஸத்வம் ஜநாநாம் ஸ்வபதாச்ரிதாநாம்! ஸம்ஸார வாராம்நிதி ருருதக்ந இதீவ ஸந்தர்சயவஸிஹ தேவ!! தேவனாகிய சௌரிராஜனே! இடது தொடையில் வைக்கபப்பட்டுள்ள உனது இடது திருக்கை உனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும் ஜனங்களுக்கு, ஸம்ஸாரமாகிய கடல் தொடையளவே ஆகும். (அஞ்சவேண்டா) என்று நீ அறீவிக்கிறாய் போலும்.

    15-வலது திருக்கை நநு வதாந்யதமஸ்ய பலேர் மகே த்ரிபுவந-ஸ்வ-வசீகரணோத்யதாம்! ப்ரகடயம் ஸ்தவ வாமநதாம் விபோ ப்ரஸ்ருத-தக்ஷிண-ஹஸ்த இஹாஸி கிம்?!! பெருமானே! மிகச்சிறந்த கொடைவள்ளலாகிய மகாபலியின் யாகத்தில் மூன்று உலகங்களையும் ஸ்வாதீனமாக வாங்கிக்கொள்ள முயன்ற உனது வாமனத் தன்மையை வெளியிடுபவனாய் நீ இங்கு நீட்டிய(குவிந்த விரல்களோடுகூடிய) வலது திருக்கை உடையவனாய் இருக்கிறாயா, என்ன?

    16-வலது திருக்கை உபாயநம் பக்த-ஜநாதிஸ்ருஷ்டம் க்ரஹீது முத்யுக்த இவேஹ சௌரே! வாமேதரம் ஹஸ்த மிஹ ப்ரஸார்ய த்வம் ப்ராஜஸே பக்த-ஜநாநுகம்பீ!! ஸ்ரீசௌரிராஜனே! பக்த ஜனங்களால் கொடுக்கப்படும் காணிக்கைளை வாங்கிக் கொள்வதை விரும்புவன்போல் வலது திருக்கையைக்குவித்த விரல்கள் உடையதாய் நீட்டி, நீ பக்த ஜனங்களிடம் தயவுடையவனாய் இங்கு விளங்குகிறாய்.

    17-வலது திருக்கை ஆதாது-காம இவ யத் ப்ரஸ்ருதே ஸ்வஹதம் வாமேதரம் வஹஸி தத் வஸீபுத்ர்யவேக்ஷ்ய! அந்யாம் கிமேஷ பரிணேஷ்யதி மாத்ருசீமித்- யாசங்கயேவ ஸவிதம் ந ஜஹாதி ஸா தே!! ஸ்ரீசௌரிராஜனே!(கொடுப்பதை) பெற்றுக்கொள்ள விரும்புவதுபோல் நீ உனது வலது திருக்கரத்தை நீட்டிக் குவிந்த விரல்களுடன் விளங்குகிறாய். அதை வஸீவின் திருமகளான பத்மிநிதேவி நன்கு பார்த்து, ‘நம்போன்ற வேறொரு பெண்ணை இவர் மணந்துகொள்ளப்போகிறாரா?’ என்ற சங்கையால் உனது ஸமீபத்தை ஒருபொழுதும் விட்டு அகல்வதில்லை போலும்?

    18-திருநாபி தவத்-திவ்ய-ஸீந்தர-வபு:ப்ரபவஸ்து சௌரே! காந்த்யா சர:கலு தநௌ தவ மயத்தேவே! ஸ்ங்கோச மேத்ய விஸரந் கிமு ஸப்ரமோய மேதீதி ஹந்த திய மாதநுதே சத்ய நாப்யா!! ஸ்ரீசௌரிராஜனே! உனது அழகிய திருமேனியிலிருந்து உண்டாகும் காந்தியின் வெள்ளம், ஒடுங்கிய உனது இடையில் குறுகியப் பாய்வதாய்க்கொண்டு உனது திருக்கொப்பூழின் சுழியோடு கூடியதாய் விளங்குகிறதோ என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது; ஆச்சரியம்.

    19-திருநாபி மலர் த்வத் வாம-தக்ஷிண-த்ருசோர் ஹி விலோகநேந தந்நாபி-பங்கஜ மீகார்த்த-விகாஸ மேத்ய! தத்வா பயஸ் ஸ்வ-சிசவே த்ருஹிணாய சங்கோ லக்ஷ்ம்யா விஸ்ருஷ்ட இதி ஹந்த தியம் தநோதி!! ஸ்ரீசௌரிராஜனே! உனது இடக்கை,வலக்கண் இவற்றின் பார்வையாலே, உலகிற்குக் காரணம் எனப் புகழ் பெற்ற உனது திருக்கொப்பூழின் தாமரை பாதி மலர்ந்தும் பாதிமூடியும் உள்ள நிலையில் உள்ளது. ஸ்ரீலக்ஷ்மிதேவி தன் குழந்தையாகிய பிரம்மனுக்குப் பால் ஊட்டிக் கீழே வைத்த பாலாடைச் சங்குதானோ இது என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றது. ஆச்சரியம். சந்தர ஸூர்யென ச நேத்ரே என்பது குறிப்பு.

    20-திருநாபி மலர் த்வதீய- நேத்ரத்வ முபேயிவத்ப்யாம் ஸமம் நிசா-நாத- திநேச்வராப்யாம்! த்வந்-நாபி-பத்மம் லபதே விகாஸ- ஸங்கோச-தௌஸ்த்யம் ஸததம்ஹி சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! சந்த்ரஸூர்யர்கள் இருவரும் உனக்குக் கண்களாய் விளங்குவதைப் பெற்றுள்ளனர். அவர்களால் ஒருங்கே பார்க்கப்படும் உனது திருக்கொப்பூழ் தாமரையானது எப்போதும் மலர்வதும் குவிவதுமாய் ஒரு நிலை பெறாது விளங்குகின்றது; இதனால் துஸ்திதி ஒருநிலை பெறாமை பெற்றுள்ளது.

    21-திருவயிறு த்வயா நிகீர்ணம் ப்ரளயேப்யண்ட ஜாதம் த்ருத்வாபி லோயம் க்ருசதா முபேத:! குக்ஷிர் கிமண்டாநி பஹூநி பூயோ தர்த்தும் ச வாங்சத்யவநாய தேஷாம்!! ஸ்ரீசௌரிராஜனே! பிரளய காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட அண்டங்களின் கணங்கள் பலவற்றை உள்ளே தரித்துக் கொண்டிருந்தாலும் வற்றுதலை அடைந்து விளங்கும் இந்த உன் திருவயிறு, மீண்டும் பல அண்டங்களை விழுங்கி உள்ளே தரித்துக்கொள்ள விரும்புகிறதா, என்ன?

    22-அரை வடம் உபகுக்ஷிதடே கலிதா ரசநா- நவ-கிங்கிணிகா-ததி ரத்ர புந:! கிமிஹாண்ட- ததிர் கிரணே ஸ்கலிதா லபநா திதி நோ திய மாத நுதே!! ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவயிற்றின் கீழ்பாகத்தில் அணிந்துள்ள அரை வடத்தின் புதிய சிறு சதங்கைகளின் திரள், நீ அண்டங்களை விழுங்கியபோது முன்புறத்தில் முகத்திலிருந்து சிதறி விழுந்த அண்டங்களின் திரளோ என்ற எண்ணத்தை இங்கு நமக்கு விளைவிக்கின்றது.

    23-திருவரை கௌசேய-புஷ்பித-கடிம் பரிவேஷ்ட்ய பட்ட பந்தேந சித்ர-பரிகர்ம-பரிஷக்குருதே ந! தஸ்மிந் நிகாய கலு நந்தக மஞ்ஜநாத்ரிர் பாபாஸி கைரிகவிசித்ர இவாத்ய சௌரே!! ஸ்ரீசௌரிராஜனே! பட்டு உடுத்தி, அதனாலே பூத்தாற்போன்ற உனது திருவரையில் இறுகக்கட்டிச் சுற்றி நன்கு அலங்கரிப்பது பட்டுக் கச்சு, அதில் நாந்தகம் என்ற கத்தியைச் சொருகிக் கொண்டு நிற்கும் நீ, நீலத்தடவரை ஒன்று (தன்னிடமுள்ள) மனச்சிலை முதலிய பல நிறங்கள் வாய்ந்த தாதுப் பொருட்களால் விளங்குவதுபோல் பிரகாசிக்கிறாய்!

    24-திருக்கைகள் ஹந்த! கல்பக-தரோஸ் ஸமுதீர்ணாஸ் ஸ்பீததா முபகதா:கிமு சாகா:! இத்யமீ பரிக- தைர்க்யம்- ஜூஷஸ் த்வத் பாஹவோ விரசயந்தி தியம் ந:!! உழல்தடிபோல் மிகவும் நீண்ட உன் கைகள் கற்பகத் தருவினின்றும் மேலே எழுந்தவையும், செழிப்பை உடையவுமான அதன் கிளைகளோ என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றன; ஆச்சரியம்.

    25-திருமார்பில் பிராட்டி ரம்ய- மோக-சிலாதல-பாஸ்வத்- வக்ஷஸீஹ கமலா கநகப்ரபா! கௌஸ்துபேந மணிநா கிமு ரக்தா பாஸதே ப்ரியதமா இவ சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அழகிய இந்திர நீலக் கல் மயமான கற்பாறைபோல் விளங்குகின்றது உனது திருமார்பு. அதில் வீற்றிருக்கிறாள் பொன்னிறமான லட்சுமிதேவி. உன் திருமார்பிலுள்ள கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தால் அவள் சிவப்புடையவளாய் (ஆசையுடையவளாய்) உனது பிரியத்திற்கு விஷயமாக விளங்குகிறாளா, என்ன?

    26-திருமார்பில் பிராட்டி கமலாலயா ஹி கலிதாவஸதா ருசிரம் கடவாட- ஸீத்ருடம் விபுலம்! ந ஜஹாதி ஜாத்வபி யதீய முரஸ் ஸஹி சௌரி ரத்ர லஸதீ ஹ புர:!! தாமரை வாழ்விடமாகக் கொண்ட லட்சுமீதேவி, கதவுபோல் மிகத் திண்ணியதும் விசாலமுமான ஸ்ரீசௌரிராஜனது திருமார்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதை ஒருபோதும் விடுவதில்லை. அந்த ஸ்ரீசௌரிராஜன் திருவுறை மார்பனாக நமக்கு எதிரில் விளங்குகிறான்.

    27-ஸ்ரீகௌஸ்துபம் வக்ஷஸீஹ விபுலே தவ சௌரே! கௌஸ்துபம் மணிவரம் ருசி- தீப்ரம் த்வம் பிபர்ஷி கமலா-ப்ரியகாமஸ் ஸோதரம் பரிஸரே கிம முஷ்யா:? ஸ்ரீசௌரிராஜனே! நீ லட்சுமி தேவியின் விருப்பத்தைச் செய்வதில் ஆசையுடையவனாகி,மிகவும் அகலமான உன்திருமார்பில், அவளுக்கு ஸஹோதரத்தன்மை பெற்றதும், காந்தியால் ஜ்வலிப்பதுமான கௌஸ்துபம் என்னும் சிறந்த இரத்தினத்தை அங்கு அவளுடைய பக்கத்திலேயே (அமையும்படி) தரித்துக்கொண்டிருக்கிறாயா,என்ன?

    28-திருமார்பில் முத்துவடங்கள் நீல-சிலாதல-பாஸ்வர- வக்ஷஸ்- ஸங்கி-மநோஹர=மௌக்திக-ஹாரா:! தே ஹி விபாந்தி கிரேர் நிபதந்த்யஸ் ஸித-சிசிரா இவ நிர்சர-தாரா:!! கறுப்பான மணிப்பாறைபோல் விளங்கும் உன்திருமார்பில் சாத்தப்பட்டுள்ள அழகிய முத்துவடங்கள் மலையினின்றும் கீழே விழுவதும் வெளுத்தும் குளிர்ந்துமிருக்கிற மலையருவியின் தாரைகள் போல ஒளிர்கின்றன.

    29-திருப்பூணுல் த்வத்-காந்தி-பூர-ப்ரஹதா நிவ்ருத்தா: அபீஹ ச தே பக்த- த்ருசஸ்து சௌரே த்வத்-யஜ்ஞஸூத்ரந் த்வவலம்ய தேந பவந்தி வக்த்ரேந்த்வலோக-த்ருப்தா:!1 ஸ்ரீசௌரிராஜனே! உனது பக்தர்களின் கண்கள் உன்திருமேனியின் காந்தி வெள்ளத்தாலே தள்ளுண்டு திரும்பிய போதிலும், உனது யஜ்ஞோபவீதமாகிய ஸூத்ரத்தைப் பற்றிக்கொண்டு, மீண்டும் மேலே சென்று உனது சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து, அதனால் திருப்தி பெற்றனவாக ஆகின்றன.

    30-வனமாலை ஆப்ரபதீநா தே வநமாலா சித்ர-ஸீமா த்வத்-கண்ட முபேதா! கல்பக-துல்யம் த்வாம் விததாநா கஸ்ய மநோ நாகர்ஷதி சௌரே?!! ஸ்ரீசௌரிராஜனே! நுனிக்கால் வரையில் தொங்குவதும், பல நிறமலர்கள் வாய்ந்ததும் உனது திருக்கழுத்தை அடைந்ததுமான வனமாலை, கல்பக தருவோடு சாம்யம் உள்ளவனாக உன்னைச் செய்துகொண்டு விளங்குகின்றது. அது எவருடைய மனத்தைத்தான் கவர்வதில்லை.

    31-பாஞ்ச சந்நியம் சௌரே! சிரோதிரேஷா ஸமுந்நதா த்வத்-த்ருதம் சங்கம்! பரிஹஸதீவாக்ருத்யா கம்பீரேணாபி கோஷேண!! ஸ்ரீசௌரிராஜனே! உயர்ந்து எடுப்பான உனது திருக்கழுத்து, உன்னாலே கையில் தரிக்கப்படும் பாஞ்சசந்நியம் என்ற சங்கின் வடிவாலும் கம்பீரமான ஒலியாலும் அந்தப் பாஞ்சசந்நியத்தை பரிஹாசஞ் செய்வதுபோல் இருக்கிறது.

    32-சக்ராயுதம் த்வத்-ஸம்ச்ரிதாநாம் ஹ்யவநே விலம்பம் த்வம் ஹாதுகாம: கிமு தேவ! சௌரே! பஞ்சாயுதீ மாபரணைர் விகல்ப்யாம் கரைர் பிபர்ஷீஹ ஸதா விநேதா!! தேவனே! சௌரிராஜனே! ரக்ஷகனாகிய நீ உன்னைப் பற்றியவர்களது ரக்ஷணத்தில் கால விளம்பத்தை நீக்க விருப்பமுள்ளவனாகி, ஆபரணங்கள் என்று கருதுமாறு அழகுடைய சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களையும் உனது திருக்கரங்களில் எப்போதும் ஏந்துகிறாயா, என்ன?

    33.ப்ரயோக சக்கரம் ஸம்ஹ்ருதே சபி ஸகணே விகடாக்ஷே தாநவே ச்ரித-விரோதி-நிவ்ருத்தைய! ஹேதிராஜ மிஹ தீப்தி-விதீப்த- முத்யதம் னஹஸி க்ருஷ்ணபுரேச!! திருக்கண்ணபுரத்தரசே! விகடாக்ஷன் என்ற அசுரன் தனது பரிவாரங்களோடு முன்பு உன்னாலே கொல்லப்பட்டான். எனினும் நீ எப்போதும் சக்கரத்தைப் பிரயோகநிலையில் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய். ஆயுதங்களுக்கு அரசாய், காந்தியால் ஜ்வலிக்கும் அந்தச் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்பது உன்னை அண்டியவர்களது விரோதிகளை அகற்றும் பொருட்டே.

    34-பாஞ்சசந்நியம் ஸ்வாதிதாதர-ஸீதா-மதுரிம்ணச் ச்லாகநாதய தவ க்ருஷ்ணபுரீச! ஸவ்ய-கர்ண-நிகடம் ஸமவாப் ய சங்க ஏவ லஸதீவ கராப்ஜே!! திருக்கண்ணபுரத்தரசே! இந்தச் சங்கு, தன்னால் சுவைக்கப்பட்ட உனது அதர அமுத இனிமையை உன்னிடம் தெரிவிப்பதற்கே. உனது இடக் காதின் பக்கத்தில் வந்தடைந்து, தாமரை போன்ற உனது இடக்கரத்தில் விளங்குகின்றது போலும்.

    35-திருவதரம் குந்த-துல்ய தர-சுப்ர-ரோசிஷஸ் த்வத்ஸ்மிதாதஹஹ! பக்தகோசராத்! பக்வ-பிம்ப-பல-துல்ய-ரக்திமா பாடலீ பவதி தேசதர: புந:!! பழுத்த கோவைக் கனிபோல் நல்ல சிவப்புடைய உனது திருவதரம் (கீழுதடு), பாடல வர்ணமாகின்றது(வெளுப்பும் சிவப்பும் கலந்ததாக). இது உனது புன்முறுவலால், குந்தமலர்கள் போல் வெளுத்த பற்களின் காந்தி உடையதாய் இதனால் பக்தர்களை விஷயமாக்கிக் கொள்வது(அதாவது அவர்களது மனத்தைக் கவர்வது) இந்தப் புன்முறுவல்

    36.புன்முறுவல் த்வத்-ஸ்மிதே ஹ்யதர-ரக்த- ருசைதே குந்த-குட்மல-நிபாஸ் தவ தந்தா:! பீஜபூர-பல பீஜ-ஸமாநா பாந்தி ரம்ய-ருசய: கலு சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! குருக்கத்தி அரும்புபோலே வெளுப்பானவை உன் பற்கள். நீ புன்முறுவல் செய்யும்போது உன் அதரத்தின் சிவப்பால் இப்பற்கள், மாதுளம்பழத்தின் விதைகளைப்போல் அழகிய காந்தியை உடையவனாவாய் விளங்குகின்றன.

    37-திருச்செவிகள் ஸகுண்டலே தே ச்ரவஸீ கபோல மூலே சமலே தர்பண-துல்ய- சோபே! ஸபுஷ்ப-கல்ப-த்ரும- பல்லவாப்யாம் ஸமே விபாத: ப்ரதிபிம்ப்யமாநே!! கண்ணாடி போன்ற சோபை உடைய உனது நிர்மலமான கன்னத்தில் கீழ்பாகத்தில் குண்டலங்கள் அணிந்த உன் திருச்செவிகள் பிரதிபலிக்கின்றன. மலர்களோடு கூடிய கற்பகத் தருவின் தளிர்களுக்குச் சமமாக இவை பிரகாசிக்கின்றன.

    38-திருக்கண்கள் சபர-ஸ்புரிதாபிபாவுகே ஹ்யருணாபாங்க-விலோசநே தவ! மம பாபததேர் நிபர்ஹணம் குகுதாம் த்ருஷ்டி-ஸீதாபிவர்ஷணாத்!! உனது திருக்கண்கள் கெண்டையின் துடிப்பை அவமதிப்பன. செவ்வரி ஓடிய கடைப்பகுதி உடையன. இவை கடாக்ஷமாகிற அம்ருதத்தைப் பொழிவதால் எனது பாவக் குவியலை நாசஞ் செய்யட்டும்.

    39-திருப்புருவங்கள் அநீகபஸ் தே கலு கார்யஜாதம் யதீய-சேஷ்டாபி ரிஹா வகத்ய! தநோதி தே காம-சராஸ-கர்வ- முஷௌ ப்ருவௌமே லஸதாம் ஹ்ருதப்ஜே!! உனது புருவங்களின் நெறிப்பாலே உனது காரியங்கள் யாவற்றையும் சேனை முதலியார் அறிந்து முடிக்கின்றார். அப்புருவங்கள் மன்மதனுடைய வில்லின் கர்வத்தை நீக்குவன; இவை எனது மனமான தாமரை மலரில் அமர்ந்து விளங்கட்டும்.

    40-திருநெற்றி தவாஷ்டமீ- சந்த்ர- நிபோ லலாடஸ் ஸ்வநிஸ் ஸ்ருதை: காந்தி சரைஸ் ஸீதாபி:! தாபத்ரயீ தாபித ஜீவ- வர்கா- நாந்யாயந் ஹந்த! திநோதி சௌரே!1 ஸ்ரீசௌரிராஜனே! அஷ்டமி சந்திரனுக்கு நிகரான திருநெற்றியிலிருந்து வெளிவருகின்றது காந்தியின் ப்ரவாஹங்களகிற அம்ருதம். தாபத்ரயத்தாலே வாட்டப்படும் ஜீவராசிகளை இந்த அம்ருதம் போஷித்துக் களிக்கச் செய்கிறது.

    41-திலகம் புவிசந்த்ர-கோடி ஸத்ருசம் ருசிரம் தவ தேவ! திவ்ய வதநம் விமலம்! இஹ துஷ்ட-த்ருஷ்டி-விஷயம் ந பவே திதி கிம் பிபர்ஷி திலகம் த்வஸிதம்!! தேவனே! இப்புவியில் கோடி சந்திரர்களுக்கு நிகரானதும், அழகியதும், களங்கமற்றதுமான உனது திவ்ய முகத்தில் நெற்றியில் கறுத்த நிறமுள்ள திலகத்தை தரித்திருக்கிறாய். பொல்லாங்கு படைத்த கண்களால் த்ருஷ்டி தோஷம் வாராமைக்காககஇதை தரித்திருக்கிறாயா, என்ன?

    42-திருமுக மண்டலம் பாலம் கலு சந்த்ரம் த்வாந்தம் பரிபூய காடம் புவி கீர்ணம் சௌரே! லபநம் தே! பூர்ணம் த்விஜராஜம் மத்வா கிமு பீத்யா பூத்வா தவ கைச்யம் நந்தும் ஸமுபைதி!! ஸ்ரீசௌரிராஜனே! இளம்பிறைச் சந்திரனை அவமதித்து பூமியில் எங்கும் அடர்ந்து பரந்துள்ள இருட்டானது, உனது திருமுக மண்டலத்தைப் பூர்ணசந்திரனாக மதித்து, பயத்தினால், உனது கேச சமுகமாக மாறி (அந்த முகத்தை) வணங்க வந்துள்ளதா, என்ன?

    43-திவ்யபீடம் அநேக- கோட்யண்ட-மஹாதிபத்ய ஸம்ஸூசகேநார்யமகோடி- பாஸா! ஸர்வாங்க-ஸௌந்தர்ய-பவம் ஹி தேஜஸ் ஸஞ்சாத்யதே தே முகுடேந சௌரே! ஸ்ரீசௌரிராஜனே! அநேக கோடி அண்டங்களுக்கும் நீ பெரிய அதிபன் என்பதை குறிப்பாகக் காட்டுகின்றது உனது கிரீடம். அது கோடி சூர்யர்களின் காந்தி வாய்ந்தது. உனது திருமேனியின் அங்கங்கள் எல்லாவற்றின் அழகால் உண்டாகும் ஒளியானது, இந்தக் கிரீடத்தால் முட்டாக்கிடப்படுகிறது(மூடப்படுகிறது).

    44-திருக்குழல் சௌரே! கநீபுத-தமிஸ்ர- ஸம்ஜ்ஞ- கார்ப்பாஸிகா-புஞ்ஜ-விநிர்காத யே! தே ஸம்யதாஸ் தந்தவ ஏவ நுõநம் த்ம்மில்லதாம் ப்ராப்ய லஸந்தி பச்சாத்!! ஸ்ரீசௌரிராஜனே! அடர்ந்த இருளென்னும் பஞ்சுப்பட்டையிலிருந்து வெளிவந்த நுõல்கள் எவையோ, கறுத்துத்திரண்ட அந்த நுõல்களே துõக்கிக் கட்டப்பட்டவையாகித் தலைக்கொண்டையாய் உன் பின்புறத்தில் துலங்குகின்றன.

    ஸ்ரீமத்- க்ருஷ்ணபுரீ சாநா- நயநாநந்த-தாயிநே- உத்பலாவதகேசாய சௌரிராஜாய மங்களம்!! *

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ கண்ணபுரநாயகி ஸமேத ஸுவ்ரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஶ்ரீபாடலாத்ரி நரசிம்மா்!-ஸ்ரீ சிங்க பெருமாள் கோயில்”-ஸ்ரீருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்-ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்-

    May 13, 2025

    “நாளை என்பதில்லை நரசிம்மனிடம்” என்பது வைணவத்தின் விழுதான ஶ்ரீமத் நிகமாந்த மஹா தேசிகரின் திருவாக்காகும். தனது பக்தன் குழந்தை பிரகலாதனைக் காப்பாற்ற ஒரு நொடியில் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இதனால் தான் நாளை என்றில்லாமல் அந்தக் கணமே நம்மை துன்பங்களிலிருந்து காத்து இரட்சிக்கும் கலியுக வரதராக விளங்குகின்றாா் ஶ்ரீநரசிம்ம மூா்த்தி.

    நரசிம்ம பெருமான் திருஅவதாரம் நிகழ்ந்த இடம் “சிங்கவேள் குன்றம்” என்று ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட “அஹோபிலம்” என்றாலும் பல திருத்தலங்களில் ஶ்ரீநரசிம்ம பெருமான் யோக முத்திரையுடன் யோக நரசிம்மராகவும் தன் தேவி ஶ்ரீமஹாலக்ஷ்மியுடன் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மராகவும் இரண்யனை வதம் செய்த கோலத்தில் ஶ்ரீ உக்ர நரசிம்ம ராகவும் தன் கோபம் தணிந்து சாந்த நரசிம்மராகவும் புகழ் பெற்ற பல திருத்தலங்களில் திருக்காட்சி தருகின்றாா்.

    இத்திருத்தலங்களின் வரிசையில் செங்கற்பட்டு மாவட்டம் “சிங்கபெருமாள் கோயில்” என்னும் புராதனமான பல்லவா்காலக் குடவரைக் கோயிலில் “ஶ்ரீபாடலாத்ரி நரசிம்மா்” என்ற திருநாமத்துடன் மிகச் சிறந்த வரப்பிரசாதியாக அருள்பாலிக்கின்றாா் பிரகலாத வரதன்.

    ஶ்ரீநரசிம்மா் இத்தலத்தில் வலது திருப்பாதத்தை மடித்தும் இடது திருப்பாதத்தை தொங்க விட்ட நிலையிலும் “அா்த்த பத்மாசனத் திருக்கோலத்தில்” திருக்காட்சி தருகின்றாா். நரசிம்மரின் இத்திருக் கோலம் மிக அரிதான திருக்காட்சியாகும். நான்கு திருக்கரங்களுடன் மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும் கீழ் இரு திருக்கரங்களில் ஒரு திருக்கரத்தில் அபய முத்திரை காட்டியும் ஒரு கரத்தை தொடை மீது வைத்தும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் காட்சி தரும் எம்பெருமானின் திருக்காட்சியைப் பாா்த்து மெய் சிலிா்த்து விடுகிறோம்.

    ஶ்ரீநரசிம்மா் இத்தலத்தில் “த்ரிநேத்ரதாரியாக” (நெற்றிக் கண்ணுடன்) மூன்று திருவிழிகளுடன் காட்சி தருவது சிறப்பாகும்.

    தீப ஆராதனையின் போது எம்பெரு மானது திருமண்ணை சற்றே உயா்த்தி இந்த நெற்றிக் கண்ணை பக்தா்களுக்கு காண்பிக்கிறாா் அா்ச்சகா். மூலவா் குடைவரைக் கோயிலின் மேல் அழகான விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விமானத்திற்கு “பிரணவ கோடி விமானம்” என்பது திருநாமமாகும்.

    இத்தலத்தின் உற்சவராக ஶ்ரீதேவி ஶ்ரீபூமிதேவி சமேத ஶ்ரீபிரகலாத வரதா் அருள்பாலிக்கின்றாா்.

    மேலும் மூலவரான இக்கோயில் எம்பெருமானின் திருநாமத்தைக் கொண்டே இத்தலத்திற்கு “சிங்க பெருமாள் கோயில்” என்ற திருநாமம் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

    எம்பெருமானின் வலது புறத்தில் தனிக்கருவறையில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் இத்தலத்தின் தாயாரான “ஶ்ரீஅஹோபிலவல்லி” அருள்பாலிக்கின்றாா். கருணை வெள்ளம் பெருகும் திருமுகவதனத்துடன் தாயாா் சேவை சாதிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்! தாயாா் தமது இரு திருக்கரங்களிலும் மலா்ந்த தாமரையுடன் தன்னை நாடி வரும் குழந்தைகளான தன் பக்தா்களுக்கு உடனடியாக அபயமளிக்கும் அபயவரத ஹஸ்த திருக்கோலத்தில், உதடுகளில் தவழும் புன்னகையுடன் அணி மணியாபரணங்கள் தரித்து சேவை.

    சாதிக்கும் பாங்கினைக் கண்டவுடன் நம் துன்பங்கள் அனைத்தும் நீங்கி விட்டதைப் போன்ற பரவசம் ஏற்படுவதை உணரமுடிகின்றது. தன் பதியான நரசிம்மருக்கு சற்றும் குறையாத வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள் அஹோபிலவல்லித் தாயாா். தாயாரின் கருவறை மீதும் மிக அழகான விமானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.சூடிக் கொடுத்த சுடா்க் கொடியாள் ஶ்ரீஆண்டாள் நாச்சியாருக்கும் இத்தலத்தில தனி சந்நிதி உள்ளது. ஆண்டாள் சந்நிதியும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் அமைந்துள்ளது.-ஆழ்வாா்கள் மூலவா் மற்றும் உற்சவா் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனா். ஶ்ரீமத் ராமானுஜா், மணவாள மாமுனிகள், விஷ்வக்சேனா் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் இத்தலத்தில் உள்ளன.

    “ஜாபாலி” என்னும் மகரிஷி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவனின் மீது அளவில்லாத பக்தி கொண்டவா். இந்த பரம பக்தா் பெருமானை, இரண்யனை வதம் செய்த கோலத்தில் நரசிம்ம மூா்த்தியாக தரிசனம் காணவேண்டி கடும்தவம் மேற்கொண்டாா்.-இம்மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் ஒரு நாள் அந்திப் பொழுதில் பிரதோஷ வேளையில் அவருக்குத் திருக்காட்சி தந்து அருளி னாா். ஜாபாலி மகரிஷியின் வேண்டுதலை ஏற்று “பாடலாத்ரி நரசிம்மராக” இத்தலத்தில் அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் தம்மை நாடி வரும் பக்தா்களுக்கு இன்றும் அளவில்லாத அருள்மழை பொழிந்து வருகின்றாா் எம்பெருமான்.“பாடலம்” என்றால் சிவப்பு. “அத்ரி” என்றால் மலை. இத்தலத்தில் கோபக்கனலுடன் இரண்யனை வதம் செய்த கோலத்தில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்திற்கு “பாடலாத்ரி” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

    “அத்ரி” மலை என வழங்கப்படும் இம்மலையை பெளா்ணமி நாட்களில் கிரிவலம் வந்து நரசிம்ம பெருமானை வழிபடுகின்றனா்.-மாா்கழி மற்றும் தை மாதங்களில் நரசிம்ம மூா்த்தியின் திருவடியிலும் புனிதமான ரத சப்தமி நாளில் நரசிம்மரின் திருமேனியிலும் சூரிய ஒளி படுவது சிறப்பான நிகழ்வாகும். பெருமானை சூரியன் தனது ஒளிக் கதிா்களால் பூஜிக்கும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா். இந்த சூரிய பூஜை நடக்கும்போது எம்பெருமானைத் தரிசிப்பது அன்பா்களின் பல தோஷங்களைப் போக்கவல்லது என்று தொிவிக்கின்றனா்.-ஜாபாலி மகரிஷிக்கு பிரதோஷ வேளையில் எம்பெருமான் திருக்காட்சி கொடுத்ததால் இத்தலத்தில் பிரதோஷ நாளில் எம்பெருமானுக்கு சிறப்புத் திருமஞ்ஜனம் நடைபெறுகின்றது.-திருப்பதி என்றால் “லட்டு” பிரசாதம். ஶ்ரீரங்கம் என்றால் புளியோதரை. இது போல சிங்கபெருமாள் கோயில் என்றால் பெரும்பாலான பக்தா்களுக்கு நினைவுக்கு வருவது சுவையான “மிளகு தோசை” யாகும். இந்த மிளகு தோசைக்கு இட்லிப் பொடியுடன் சுத்தமான நல்லெண் ணெய் கலந்து கொடுக்கின்றனா். இந்த தோசையை குழந்தைகள் முதல் பெரியவா் வரை விரும்பி உண்பதால் இக்கோயிலை “தோசைப் பெருமாள் கோயில்” என்றே சிறுவர்கள் குறிப்பிடுகின்றனா். இந்த மிளகு தோசையை ருசிப்பதற்காகவே குழந்தைகள் இக்கோயிலுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருகின்றனா்.

    சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பெளா்ணமி, நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜா் ஜெயந்தி, வைகாசி விசாகம், வைகாசியில் சுவாதி நட்சத்திர நாளுக்கு முன் வரும் வெள்ளிக்கிழமைகளில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆடிமாதம் ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்காா்த்திகை தீப விழா, தை மாதம் மகர சங்கராந்தி யன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் ஐந்து நாள் தெப்போற்சவம் ஆகிய விழாக்கள் இத்தலத்தின் முக்கியமான திருவிழாக்களாகும்.

    திருக்கோயிலின் பின்புறம் உள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்த விருட்சமாகும். திருமணம் நடைபெறவும், குழந்தைப் பேறு ஏற்படவும், கல்வியில் சிறந்து விளங்கவும், நல்ல வேலை கிடைக்கவும் இந்த மரத்திற்கு சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும்.

    இத்தலத்தின் தல விருட்சம் பாரிஜாத மரமாகும். புண்ணிய தீா்த்தம் “சுத்த புஷ்கரணி” என்று வழங்கப்படுகின்றது.

    பாடலாத்ரி நரசிம்மா் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் திருப்பவித்ரோற்சவம் நடைபெறுகின் றது. திருக்கோயில்களில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வத் திருமேனிகளின் சக்தியைப் பாதுகாப்பதற்காக வைகானஸ மற்றும் பாஞ்சராத்ர ஆகமங்களில் விதிக் கப்பட்டுள்ள முறையே இந்த திருப் பவித்ரோற்சவ வைபவம்.-திருக்கோயில்களின் பூஜை ஆரா தனை வழி முறைகளில் பல காரணங் களால் நாம் அறிந்தோ, அறியாமலோ சில தவறுகள் ஏற்பட்டுவிடும். கோயிலுக்கு வரும் பக்தா்களின் தூய்மை குறைவதனாலும் திருக்கோயிலின் தெய்வீக சக்தி பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இதற்குப் பரிகாரம் செய்வதால் திருக்கோயிலின் தெய்வீக சாந்நித்யம் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.-இதற்காக விசேஷமாக யாக சாலைகள் அமைத்து அக்னி தேவன் மூலமாக பல பொருட்கள் வேதமந்திரங்களுடன் குண்டத்தில் அா்ப்பணிக்கப்படுகின்றன. திருப் பவித்ரோற்சவத்தின் கடைசி நாள் அன்று பல பொருட்களை சுத்தமான பசு நெய்யுடன் சோ்த்து அக்னியில் சமா்ப்பிக்கப்படுகின்றது. இந்த மந்திரப் பிரயோக முறைக்குப் “பூா்ணாஹுதி” என்று பெயா். இந்தப் பூா்ணாஹுதியைப் பக்தா்கள் தரிசிப்பதால் கொடிய பாவங்களும் நீங்கி விடும்.-பூா்ணாஹுதி முடிந்தவுடன் யாகத்தில் வைக்கப்பட்ட வேத மந்திரங்களால் பூஜிக்கப்பட்ட பிரதான “சோம கும்பம்” என்ற கலச நீா் கா்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியிருக்கும் மூல மூா்த்தியின் விக்கிரகத் திருமேனியில் சோ்க்கப்படுகிறது. இதன் மூலம் கருவறையிலுள்ள விக்ரக மற்றும் சிலாத் திருமேனிகளின் சாந்நித்யம் பாதுகாக்கப்படுகின்றது.

    பொதுவாக ஶ்ரீநரசிம்ம மூா்த்தியின் வழிபாடு கடன் தொல்லைகளிலிருந்து நம்மை விடுவிக்கும். இத்தலத்தில் புதன் அல்லது சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி பெருமானை வணங்கிய பிறகு நரசிம்மரின் கீழ்க்கண்ட “ருண விமோசன ஸ்தோத்திரத்தை” படித்து வந்தால் உடன் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

    ஸ்ரீருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்

    தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பவம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

    யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞிதம்
    அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்

    ————

    ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்

    தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
    கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
    ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

    வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

    ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

    யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ம ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-


    சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-8-(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

    May 12, 2025

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

    10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

    (வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
    ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
    க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
    ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
    -ஶ்லோகம் 18 –)

    நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
    1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
    2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
    3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
    4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
    5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
    6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
    7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
    8) இனிமையானவன்
    9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
    10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
    11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
    12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

    உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
    ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
    கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
    ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
    ||-ஶ்லோகம் 19 –

    வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

    1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
    ஸங்கதி
    – முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
    உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

    விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

    (ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

    ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

    பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

    பரமாத்மாவே தஹராகாஸம்
    ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
    :-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

    (கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

    தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

    தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

    (மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

    கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
    பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

    கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
    பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

    நாம் அறியாத செல்வம்
    தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

    (உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறா)

    றி2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
    க₃தி சப்₃தா₃ப்₄யாம்
    – “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
    ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
    க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
    (தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
    “எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
    இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
    2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
    சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
    லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

    உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
    3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
    அஸ்ய-
    இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
    த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
    அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

    இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
    ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
    அதாவது
    “இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

    4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
    தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
    சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
    ஸமுத்பத்₃யந்தே )
    அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

    ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
    இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
    5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
    இதர பராமர்சாத் ஸ:
    -பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
    இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
    அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

    பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
    ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
    ) அதாவது
    “இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
    தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
    இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
    அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

    ————–

    1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

    (அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
    நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
    I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

    ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
    1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
    6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
    உத்தராத் சேத்
    – “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
    ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
    ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

    முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
    ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
    ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
    உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
    அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
    7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
    இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
    8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

    அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
    இதி சேத் – என்று கேட்டால்
    தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
    9-அநுக்ருதே : தஸ்ய ச –
    தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
    அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
    என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
    10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.
    ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

    ॥ அஷ்டமோঽத்⁴யாய: ॥
    அத² யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
    த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத³ந்தஸ்தத³ந்வேஷ்டவ்யம்
    தத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ॥ 8.1.1॥

    தகர அதிகரணம் / பிரஜாபதி வித்யை –இதில்
    ஹிருதய கமலம் தலை கீழ் பிடிக்கப்பட்ட தாமரை -ஹ்ருதய கமலம் கோலம் உண்டே –
    அதற்குள் உள்ளதை உபாசிப்பாய் -கல்யாண குணங்களை -தேடி உபாசிப்பாய்
    தகர -சிறிய இடைவெளி –

    தம் சேத்³ப்³ரூயுர்யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
    த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶ: கிம் தத³த்ர வித்³யதே யத³ந்வேஷ்டவ்யம்
    யத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்³ரூயாத் ॥ 8.1.2॥

    உள்ளே இருப்பதே ஆதாரம் -ஆகாசம் இடம் கொடுக்கும் -ப்ரஹ்மம் தானே இடமாக ஆகாசமாக இருக்கும்

    யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோঽந்தர்ஹ்ருʼத³ய அகாஶ
    உபே⁴ அஸ்மிந்த்³யாவாப்ருʼதி²வீ அந்தரேவ ஸமாஹிதே
    உபா⁴வக்³நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
    வித்³யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம்
    தத³ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 8.1.3॥

    தம் சேத்³ப்³ரூயுரஸ்மிꣳஶ்சேதி³த³ம் ப்³ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ
    ஸர்வாணி ச பூ⁴தாநி ஸர்வே ச காமா யதை³தஜ்ஜரா வாப்நோதி
    ப்ரத்⁴வꣳஸதே வா கிம் ததோঽதிஶிஷ்யத இதி ॥ 8.1.4॥

    ஸ ப்³ரூயாத்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே⁴நாஸ்ய ஹந்யத
    ஏதத்ஸத்யம் ப்³ரஹ்மபுரமஸ்மிகாமா: ஸமாஹிதா: ஏஷ
    ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்போ யதா² ஹ்யேவேஹ
    ப்ரஜா அந்வாவிஶந்தி யதா²நுஶாஸநம் யம் யமந்தமபி⁴காமா
    ப⁴வந்தி யம் ஜநபத³ம் யம் க்ஷேத்ரபா⁴க³ம் தம் தமேவோபஜீவந்தி
    ॥ 8.1.5॥

    அறிந்தவன் அஷ்ட குணங்களில் சாம்யா பத்தி -நீர் பூத்த நெருப்பு போலே இங்கு -ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
    பாபம் தீண்டாமல் -மூப்பு இல்லாமல் –மரணம் இல்லாமல் -சோகம் இல்லாமல் -பசி இல்லாமல் –
    தாகம் இல்லாமல் -நல்ல விருப்பங்கள் கொண்டு -செயல்களை முடிக்கும் சக்தன் -ஆகிய எட்டும்

    தத்³யதே²ஹ கர்மஜிதோ லோக: க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ
    லோக: க்ஷீயதே தத்³ய இஹாத்மாநமநுவித்³ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச
    ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ
    ப⁴வத்யத² ய இஹாத்மாநமநிவுத்³ய வ்ரஜந்த்யேதꣳஶ்ச
    ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
    ॥ 8.1.6॥

    ॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

    —————————————

    காண்டம்1

    இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

    ஸ யதி³ பித்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய பிதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந பித்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.1॥

    அத² யதி³ மாத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய மாதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந மாத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.2॥

    அத² யதி³ ப்⁴ராத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ப்⁴ராதர:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ப்⁴ராத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.3॥॥

    அத² யதி³ ஸ்வஸ்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்வஸார:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்வஸ்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.4॥

    அத² யதி³ ஸகி²லோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸகா²ய:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸகி²லோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.5॥

    முக்த ஜீவன் -ஆனந்தத்தில் தாரதம்யம் இல்லை -பித்ரு லோகம் போகும் சக்தியும் உண்டு –
    சங்கல்பத்தாலே அனைத்தும்
    ஸ்ருஷ்டிக்கும் சக்தி உண்டு -ஆனால் ஸ்ருஷ்டிக்க மாட்டான் -அனைத்தும் அவனாகவே பார்ப்பதால்

    அத² யதி³ க³ந்த⁴மால்யலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
    க³ந்த⁴மால்யே ஸமுத்திஷ்ட²தஸ்தேந க³ந்த⁴மால்யலோகேந ஸம்பந்நோ
    மஹீயதே ॥ 8.2.6॥

    அத² யத்³யந்நபாநலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்யாந்நபாநே
    ஸமுத்திஷ்ட²தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.7॥

    அத² யதி³ கீ³தவாதி³த்ரலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
    கீ³தவாதி³த்ரே ஸமுத்திஷ்ட²தஸ்தேந கீ³தவாதி³த்ரலோகேந ஸம்பந்நோ
    மஹீயதே ॥ 8.2.8॥

    அத² யதி³ ஸ்த்ரீலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்த்ரிய:
    ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்த்ரீலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.9॥

    யம் யமந்தமபி⁴காமோ ப⁴வதி யம் காமம் காமயதே ஸோঽஸ்ய
    ஸங்கல்பாதே³வ ஸமுத்திஷ்ட²தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.10॥

    ஹ்ருதி அயம் ஹிருதயத்தில் அமர்ந்து உள்ளான் -அடைந்து உள்ளான் -ஹிருதயம் –

    ॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்2

    இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

    ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாத்து. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.

    உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

    உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    அவைகள் 1.       பாவமற்றது, 2.       வயதற்றது, 3.      மரணமற்றது, 4.       துயரமற்றது, 5.      பசியற்றது, 6.       தாகமற்றது, 7.       நிறைவேறுகின்ற ஆசை,8.       நிறைவேறுகின்ற சங்கல்பம்

    ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் (இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம், ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

    இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிரான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

    யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

    சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

    த இமே ஸத்யா: காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தேஷாꣳ ஸத்யாநாꣳ
    ஸதாமந்ருʼதமபிதா⁴நம் யோ யோ ஹ்யஸ்யேத: ப்ரைதி ந தமிஹ
    த³ர்ஶநாய லப⁴தே ॥ 8.3.1॥

    அத² யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி³ச்ச²ந்ந
    லப⁴தே ஸர்வம் தத³த்ர க³த்வா விந்த³தேঽத்ர ஹ்யஸ்யைதே ஸத்யா:
    காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தத்³யதா²பி ஹிரண்யநிதி⁴ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா
    உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே³யுரேவமேவேமா: ஸர்வா: ப்ரஜா
    அஹரஹர்க³ச்ச²ந்த்ய ஏதம் ப்³ரஹ்மலோகம் ந விந்த³ந்த்யந்ருʼதேந ஹி
    ப்ரத்யூடா:⁴ ॥ 8.3.2॥

    ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருʼதி³ தஸ்யைததே³வ நிருக்தꣳ ஹ்ருʼத்³யயமிதி
    தஸ்மாத்³த்⁴ருʼத³யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.3॥

    அத² ய ஏஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
    ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யத ஏஷ ஆத்மேதி
    ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய
    ப்³ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 8.3.4॥

    தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி
    தத்³யத்ஸத்தத³ம்ருʼதமத² யத்தி தந்மர்த்யமத² யத்³யம் தேநோபே⁴
    யச்ச²தி யத³நேநோபே⁴ யச்ச²தி தஸ்மாத்³யமஹரஹர்வா
    ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.5॥

    ॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

    ———

    காண்டம்-3

    ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:

    நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

    இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை.அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை, மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடபட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.

    ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)

    ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால் அவனுடைய அந்த புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

    ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)

    ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

    ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்

    அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு

    பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக

    உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து

    ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே

    அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)

    அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

    சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்

    சத்யம் – உண்மை பேசுதல்

    சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்

    சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

    இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

    சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

    இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

    அத² ய ஆத்மா ஸ ஸேதுர்த்⁴ருʼதிரேஷாம் லோகாநாமஸம்பே⁴தா³ய
    நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருʼத்யுர்ந ஶோகோ ந
    ஸுக்ருʼதம் ந து³ஷ்க்ருʼதꣳ ஸர்வே பாப்மாநோঽதோ
    நிவர்தந்தேঽபஹதபாப்மா ஹ்யேஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.1॥

    தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த:⁴ ஸந்நநந்தோ⁴ ப⁴வதி
    வித்³த:⁴ ஸந்நவித்³தோ⁴ ப⁴வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப⁴வதி
    தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி⁴நிஷ்பத்³யதே
    ஸக்ருʼத்³விபா⁴தோ ஹ்யேவைஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.2॥

    தத்³ய ஏவைதம் ப்³ரஹ்மலோகம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி
    தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ
    ப⁴வதி ॥ 8.4.3॥

    சத் தி யம் அடக்கி ஆள்பவன் சித்தியும் அசித்தையும்
    ப்ரஹ்மம் சேது -அங்கே கூட்டி செல்பவன்
    இரண்டையும் கலக்காமல் பாதுகாப்பவன் –
    ப்ரஹ்மசர்யம் -ப்ரஹ்மத்தை நோக்கி போவதில் உள்ள தடைகளை வெட்டி –
    அவன் இடம் கூட்டிப்போவர்கள் உடன் தொடர்பு -சம்சாரிகள் இடம் பற்று அற்று

    ॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

    ————

    காண்டம்4

    அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

    ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

    இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

    இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர். 

    சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

    இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

    அத² யத்³யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
    ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த³தேঽத² யதி³ஷ்டமித்யாசக்ஷதே
    ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த³தே
    ॥ 8.5.1॥

    அத² யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
    ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த³தேঽத² யந்மௌநமித்யாசக்ஷதே
    ப்³ரஹ்மசர்யமேவ தப்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்³ய மநுதே ‘॥ 8.5.2॥

    அத² யத³நாஶகாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ ததே³ஷ
    ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³தேঽத²
    யத³ரண்யாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத³ரஶ்ச ஹ வை
    ண்யஶ்சார்ணவௌ ப்³ரஹ்மலோகே த்ருʼதீயஸ்யாமிதோ தி³வி ததை³ரம்
    மதீ³யꣳ ஸரஸ்தத³ஶ்வத்த:² ஸோமஸவநஸ்தத³பராஜிதா
    பூர்ப்³ரஹ்மண: ப்ரபு⁴விமிதꣳ ஹிரண்மயம் ॥ 8.5.3॥

    தத்³ய ஏவைதவரம் ச ண்யம் சார்ணவௌ ப்³ரஹ்மலோகே
    ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ
    ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி ॥ 8.5.4॥

    ॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்5

    பிரம்மசர்ய சாதனையின் பெருமை

    •        குருவுக்கு சேவை செய்தல்
    •          வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
    •          குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
    •          எளிமையான வாழ்க்கை வாழ்தல்
    •          சிற்றின்பத்தை துறத்தல்

    இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

    யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்

    இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்

    ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.

    மௌனம்       – இதனால் அடையும் பலன்

    அநாஸகாயனம் – உபவாசம்

    அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

    இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

    பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.

    அத² யா ஏதா ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தா: பிங்க³லஸ்யாணிம்நஸ்திஷ்ட²ந்தி
    ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி³த்ய:
    பிங்க³ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித:
    ॥ 8.6.1॥

    அபராஜிதா அவித்யை ஸ்ரீ வைகுண்டம் -ப்ரஹ்ம லோகம்
    சூர்ய கிரணங்கள் மூலம் போகிறான் –

    தத்³யதா² மஹாபத² ஆதத உபௌ⁴ க்³ராமௌ க³ச்ச²தீமம் சாமும்
    சைவமேவைதா ஆதி³த்யஸ்ய ரஶ்மய உபௌ⁴ லோகௌ க³ச்ச²ந்தீமம் சாமும்
    சாமுஷ்மாதா³தி³த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ³ஷு ஸ்ருʼப்தா
    ஆப்⁴யோ நாடீ³ப்⁴ய: ப்ரதாயந்தே தேঽமுஷ்மிந்நாதி³த்யே ஸ்ருʼப்தா:
    ॥ 8.6.2॥

    தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த்: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு
    ததா³ நாடீ³ஷு ஸ்ருʼப்தோ ப⁴வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருʼஶதி
    தேஜஸா ஹி ததா³ ஸம்பந்நோ ப⁴வதி ॥ 8.6.3॥

    அத² யத்ரைதத³ப³லிமாநம் நீதோ ப⁴வதி தமபி⁴த ஆஸீநா
    ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ
    யாவத³ஸ்மாச்ச²ரீராத³நுத்க்ராந்தோ ப⁴வதி தாவஜ்ஜாநாதி
    ॥ 8.6.4॥

    அத² யத்ரைதத³ஸ்மாச்ச²ரீராது³த்க்ராமத்யதை²தைரேவ
    ரஶ்மிபி⁴ரூர்த்⁴வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்³வா மீயதே
    ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா³தி³த்யம் க³ச்ச²த்யேதத்³வை க²லு
    லோகத்³வாரம் விது³ஷாம் ப்ரபத³நம் நிரோதோ⁴ঽவிது³ஷாம் ॥ 8.6.5॥

    ததே³ஷ ஶ்லோக: । ஶதம் சைகா ச ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தாஸாம்
    மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ருʼதைகா । தயோர்த்⁴வமாயந்நம்ருʼதத்வமேதி
    விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்த்யுத்க்ரமணே ப⁴வந்தி ॥ 8.6.6॥

    ॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்6

    சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

    நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  sUriyaninசூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

    இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்கு அகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

    நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

    ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
    ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
    ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
    ப்ரஜாபதிருவாச ॥ 8.7.1॥

    பிரத்யாகாத்மா வித்யை — பிரஜாபதி வித்யை –நாம் என்கிற ஆத்மாவை பற்றி -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
    ப்ரஹ்மாவுக்கு சரீரம் சேஷம் பிரகாரம்
    விரோசனன் அசுரர் அரசன் -இந்திரன் தேவ அரசன் -இருவருக்கும் அறிய ஆசை கொண்டு

    தத்³தோ⁴ப⁴யே தே³வாஸுரா அநுபு³பு³தி⁴ரே தே ஹோசுர்ஹந்த
    தமாத்மாநமந்வேச்சா²மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச
    லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்³ரோ ஹைவ
    தே³வாநாமபி⁴ப்ரவவ்ராஜ விரோசநோঽஸுராணாம் தௌ
    ஹாஸம்விதா³நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்³மது:
    ॥ 8.7.2॥

    தௌ ஹ த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்³ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ
    ப்ரஜாபதிருவாச கிமிச்ச²ந்தாவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய
    ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
    விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
    ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச
    காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ப⁴க³வதோ வசோ
    வேத³யந்தே தமிச்ச²ந்தாவவாஸ்தமிதி ॥ 8.7.3॥

    தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத
    ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேத்யத² யோঽயம்
    ப⁴க³வோঽப்ஸு பரிக்²யாயதே யஶ்சாயமாத³ர்ஶே கதம ஏஷ
    இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்²யாயத இதி ஹோவாச
    ॥ 8.7.4॥

    -32-வருஷம் ப்ரஹ்மசர்யம் இருந்து அதிகாரம் சம்பாதித்து கொண்டு வர சொல்ல
    கண்ணுக்குள்ளே இருப்பவனே ஆத்மா அஷி புருஷன்
    அம்ருதம் -அபயம் -தூக்கமே இல்லாமல் நிரதிசய சோக ரூபம் -வலக்கண்ணில் உள்ளான்

    ॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்-‍7 (பிரஜாபதி வித்யா)

             ஞானி என்பவர் யார்?

             எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?

             ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?

             எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?

             ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

    ஸ்லோகம்-1

    மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

           ஆத்ம ஸ்வரூபம்

           ஞானத்தை அடையும் வழி

           ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

    ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

    அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது

    விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது

    விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது

    விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது

    விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது

    அபிபாக – தாகமுமில்லை.

    எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.

    இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்

    1. அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

    2. விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

    ஸ்லோகம்-2

    வித்யாkk க்ரகணம், வித்யா சம்பிரதான, விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

    இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

    இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

    பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

    கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாஸம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

    கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

    குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

    சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார். கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?

    பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

    உத³ஶராவ ஆத்மாநமவேக்ஷ்ய யதா³த்மநோ ந விஜாநீத²ஸ்தந்மே
    ப்ரப்³ரூதமிதி தௌ ஹோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே தௌ ஹ
    ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி தௌ ஹோசது:
    ஸர்வமேவேத³மாவாம் ப⁴க³வ ஆத்மாநம் பஶ்யாவ ஆ லோமப்⁴ய: ஆ
    நகே²ப்⁴ய: ப்ரதிரூபமிதி ॥ 8.8.1॥

    பிம்பம் பார்த்து -எத்தை பார்க்கிறாயா ஆத்மா -உடம்பு செய்வதையே பிம்பம் செய்ய –

    தௌ ஹ ப்ரஜாபதிருவாச ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ
    பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷேதா²மிதி தௌ ஹ ஸாத்⁴வலங்க்ருʼதௌ
    ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே
    தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி ॥ 8.8.2॥

    அசுரன் தேகமே ஆத்மா என்று தப்பாக புரிந்து -செல்ல -அசுரத்தன்மை வளர்ந்து –

    தௌ ஹோசதுர்யதை²வேத³மாவாம் ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
    பரிஷ்க்ருʼதௌ ஸ்வ ஏவமேவேமௌ ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
    பரிஷ்க்ருʼதாவித்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
    தௌ ஹ ஶாந்தஹ்ருʼத³யௌ ப்ரவவ்ரஜது: ॥ 8.8.3॥

    தௌ ஹாந்வீக்ஷ்ய ப்ரஜாபதிருவாசாநுபலப்⁴யாத்மாநமநநுவித்³ய
    வ்ரஜதோ யதர ஏதது³பநிஷதோ³ ப⁴விஷ்யந்தி தே³வா வாஸுரா வா தே
    பராப⁴விஷ்யந்தீதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய ஏவ
    விரோசநோঽஸுராஞ்ஜகா³ம தேப்⁴யோ ஹைதாமுபநிஷத³ம்
    ப்ரோவாசாத்மைவேஹ மஹய்ய ஆத்மா பரிசர்ய ஆத்மாநமேவேஹ
    மஹயந்நாத்மாநம் பரிசரந்நுபௌ⁴ லோகாவவாப்நோதீமம் சாமும் சேதி
    ॥ 8.8.4॥

    தஸ்மாத³ப்யத்³யேஹாத³தா³நமஶ்ரத்³த³தா⁴நமயஜமாநமாஹுராஸுரோ
    ப³தேத்யஸுராணாꣳ ஹ்யேஷோபநிஷத்ப்ரேதஸ்ய ஶரீரம் பி⁴க்ஷயா
    வஸநேநாலங்காரேணேதி ஸꣳஸ்குர்வந்த்யேதேந ஹ்யமும் லோகம்
    ஜேஷ்யந்தோ மந்யந்தே ॥ 8.8.5॥

    ॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

    ———————

    காண்டம்-‍8

    தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

    குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

    இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

    அனுபலப்யா – சரியாக புரிந்து கொள்ளாமல்

    ப்ரோவாசா – உபதேசம் செய்தல்

    பரிசர்ய – காக்கப்படவேண்டும்- to take care of

    இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

    விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

    இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

    அத² ஹேந்த்³ரோঽப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ யதை²வ
    க²ல்வயமஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
    ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
    ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம: பரிவ்ருʼக்ணே
    பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி
    நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.1॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: ஸார்த⁴ம் விரோசநேந
    கிமிச்ச²ந்புநராக³ம இதி ஸ ஹோவாச யதை²வ க²ல்வயம்
    ப⁴க³வோঽஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
    ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
    ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம:
    பரிவ்ருʼக்ணே பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ
    நஶ்யதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.2॥

    இந்திரன் -ஆத்மா தேகம் வாசி சங்கை -வந்து திரும்பி வந்து சமித் பாணியாக —
    மீண்டும் -32-வருஷம்
    ஸ்வப்னத்தில் உன்னை பார்த்தாய் அது தான் ஆத்மா என்று சொல்ல –
    கெட்டுப்போகாது உடம்பைக்காட்டி -அவனுக்கு வந்த சங்கை தீர்த்து –

    ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
    ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
    ॥ 8.9.3॥

    ॥ இதி நவம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்-‍9

    ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

    குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்

    தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்

    தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்

    நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.

    ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

    மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்க கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

    குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

    ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

    இந்திரனின் விசாரங்கள்:

    இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

    தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.

    தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)

    தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.

    நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

    இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

    குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

    ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி
    ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
    ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ
    தத்³யத்³யபீத³ꣳ ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴ ஸ ப⁴வதி யதி³
    ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி ॥ 8.10.1॥

    ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
    விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.10.2॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம
    இதி ஸ ஹோவாச தத்³யத்³யபீத³ம் ப⁴க³வ: ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴
    ஸ ப⁴வதி யதி³ ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி
    ॥ 8.10.3॥

    ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
    விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
    ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
    ॥ 8.10.4॥

    அதையும் பாம்பு கடிக்க -சங்கை –மேலும் -32–வருஷம்
    ஆழ்ந்த நிலை உறக்கம் -தான் ஆத்மா
    நான் தெரியாதே மேலும் சங்கை -5- வருஷம்
    ஆக -101-வருஷம் இருந்து ஆத்மாவை அறிந்தான் இந்திரன் –

    ॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

    ——————

    காண்டம்-‍10

    எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது. 

    குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரன்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.  

    தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் – ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.

    தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞசபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

    இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

    ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை.

    ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

    குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

    தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ
    ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
    ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ நாஹ
    க²ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி
    நோ ஏவேமாநி பூ⁴தாநி விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர
    போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.11.1॥

    ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
    மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம இதி
    ஸ ஹோவாச நாஹ க²ல்வயம் ப⁴க³வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம்
    ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ⁴தாநி
    விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி
    ॥ 8.11.2॥

    ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
    பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்³வஸாபராணி
    பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ
    தாந்யேகஶதꣳ ஸம்பேது³ரேதத்தத்³யதா³ஹுரேகஶதꣳ ஹ வை வர்ஷாணி
    மக⁴வாந்ப்ரஜாபதௌ ப்³ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 8.11.3॥

    ॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

    —————

    காண்டம்-‍11

    எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

    காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மஹா வாக்கியமாகும்.

    இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

    அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

    இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

    உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

    மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
    தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
    ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
    ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந
    ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ 8.12.1॥

    அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
    தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
    ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।

    ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
    ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
    ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
    ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
    ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
    ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥

    அத² யத்ரைததா³காஶமநுவிஷண்ணம் சக்ஷு: ஸ சாக்ஷுஷ:
    புருஷோ த³ர்ஶநாய சக்ஷுரத² யோ வேதே³த³ம் ஜிக்⁴ராணீதி ஸ ஆத்மா
    க³ந்தா⁴ய க்⁴ராணமத² யோ வேதே³த³மபி⁴வ்யாஹராணீதி ஸ
    ஆத்மாபி⁴வ்யாஹாராய வாக³த² யோ வேதே³த³ꣳ ஶ்ருʼணவாநீதி
    ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 8.12.4॥

    பார்க்கிறான் கண்ணால் அல்ல -அனைத்தும் சங்கல்பத்தால் -சங்கல்ப ரூப ஞானம்

    அத² யோ வேதே³த³ம் மந்வாநீதி ஸாத்மா மநோঽஸ்ய தை³வம் சக்ஷு:
    ஸ வா ஏஷ ஏதேந தை³வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே
    ய ஏதே ப்³ரஹ்மலோகே ॥ 8.12.5॥

    தம் வா ஏதம் தே³வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வே ச
    லோகா ஆத்தா: ஸர்வே ச காமா: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
    ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
    ப்ர்ஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 8.12.6॥

    தேகம் ஸ்வப்னம் ஆழ் நிலை-எதுவும் இல்லை -உடம்பில் விட்டு கிளம்பினவன் தான் ஆத்மா
    செயற்கை கர்மாவால் சிக்கி உள்ளான்

    ॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

    ————

    காண்டம்-‍12

    சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

    இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது இவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

    சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்யம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொருக்ஷணமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

    ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

    ஆத்ம-சரீர சம்பந்தம்:

    இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.

    1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாஸ ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.

    2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

    3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு போல்.

    சரீர அபிமான பலன்:

    சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

    தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

    நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காத்து என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

    இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?

    சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

    கேள்வி-1

    ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக் இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?

    பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள் சம்சாரப்பிரியம், ஞானியின்பிரியம். சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

    கேள்வி-2

    ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?

    குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

    வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.

    அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

    ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

    விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்

    ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்ம்ம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

    அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

    ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது, இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    [ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

    இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்-ஆத்மா. இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

    கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிவது ஆத்மா நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

    ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்

    மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

    யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

    பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

    ஶ்யாமாச்ச²ப³லம் ப்ரபத்³யே ஶப³லாச்ச்²யாமம் ப்ரபத்³யேঽஶ்வ
    இவ ரோமாணி விதூ⁴ய பாபம் சந்த்³ர இவ ராஹோர்முகா²த்ப்ரமுச்ய
    தூ⁴த்வா ஶரீரமக்ருʼதம் க்ருʼதாத்மா
    ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்ப⁴வாமீத்யபி⁴ஸம்ப⁴வாமீதி ॥ 8.13.1॥

    ॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥
    ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
    தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
    யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
    யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
    ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
    மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

    கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

    ॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

    ———————

    காண்டம்-‍13 (பிரார்த்தனை)

    ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

    காண்டம்-‍14

    ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
    தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
    யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
    யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
    ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
    மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

    கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

    ॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

    ————————

    இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

    ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரன்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

    ததை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதயை உவாச ப்ரஜாபதிர்மநவே மநு:
    ப்ரஜாப்⁴ய: ஆசார்யகுலாத்³வேத³மதீ⁴த்ய யதா²விதா⁴நம் கு³ரோ:
    கர்மாதிஶேஷேணாபி⁴ஸமாவ்ருʼத்ய குடும்பே³ ஶுசௌ தே³ஶே
    ஸ்வாத்⁴யாயமதீ⁴யாநோ த⁴ர்மிகாந்வித³த⁴தா³த்மநி ஸர்வைந்த்³ரியாணி
    ஸம்ப்ரதிஷ்டா²ப்யாஹிꣳஸந்ஸர்வ பூ⁴தாந்யந்யத்ர தீர்தே²ப்⁴ய:
    ஸ க²ல்வேவம் வர்தயந்யாவதா³யுஷம் ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்பத்³யதே
    ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 8.15.1॥

    ॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥
    ॥ இதி அஷ்டமோঽத்⁴யாய: ॥

    ——————————————-

    காண்டம்-‍15

    பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். விசார ஞானம், எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

    1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்

    2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்

    3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.

    4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.

    5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

    6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டபடுத்தக் கூடாது.

    ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

    ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
    ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
    ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
    நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து ।
    ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
    மயி ஸந்து தே மயி ஸந்து ॥

    ॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

    ॥ இதி சா²ந்தோ³க்³யோঽபநிஷத்³ ॥

    ஓம் தத் ஸத்

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-ஸ்ரீ பகவத் சங்கர பாதாள் ஸ்வாமிகள்-

    May 12, 2025

    ஸ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்
    முதல் இரண்டு ஸ்லோகங்கள் சரணாகதி
    3-ராம நாம பெருமை –
    4-7 திருமேனி த்யானம்
    8-15- நமஸ்காரம் -உள்ளத்தில் கோயிலே கொள்ள பிரார்த்தனை
    16-20 தனிப் பெருமை-அசாதாரண மஹாத்ம்யம்
    21-28-பக்தி வளர்க்க பிரார்த்தனை -திருவடி போல் அனுக்ரஹிக்க வேண்டுதல்
    29-பலன்

    1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்
    குணாதாரமாதாரஹீநம் வரேண்யம்
    மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
    சுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே

    மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்றமைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன்.

    2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
    ஸுகாதார மாகாரசூன்யம் ஸுமான்யம்
    மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்
    நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே

    ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர், எங்கும் வியாபித்த மங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன்.

    3.யதாவர்ணயத் கர்ணமூலேsந்த காலே
    சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
    ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
    பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம்

    காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரக ப்ரஹம ரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.

    4.மஹாரத்னபீடே சுபே கல்பமூலே
    ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
    ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
    ஸதா ராமசந்த்ரம் பஜேsஹம் பஜேsஹம்

    கல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.

    5.க்வணத்ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம்
    லஸன் மேகலா சாருபீதாம்பராட்யம் மஹாரத்ன ஹாரோல்லஸத்கௌஸ்பாங்கம்
    நதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம்

    ஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ!

    6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்
    ஸமுத்யத்பதங்கேந்து கோடிப்ரகாசம்
    நமத்ப்ரஹ்மருத்ராதிகோடீரரத்ன
    ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம்

    செவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர், உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர், பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீடரத்ன ப்ரபைபால் நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளையுடையவர் அப்பெருமான்.

    7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதிபக்தான்
    ஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம்
    பஜேsஹம் பஜேsஹம் ஸதா ராமசந்த்ரம்
    த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே

    தன் எதிரில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன். அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.

    8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய
    ப்ரசண்டப்ரகோபை: படை: பீஷயேத்மாம்
    ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
    ஸதாபத்ப்ரணாசம் ஸகோண்ட பாணம்

    என்னருகில் யமன் வந்து கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது, ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனது ஸ்வயரூபத்தைக் காட்டி யருள்வா யல்லவா?

    9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
    ஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே
    யதோsபூத் அமேயம் வியத்வாயுதேஜோ
    ஜலோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச

    ராம! எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம், உன்னை யன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன். உம்மிடருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசர ப்ரபஞ்சம் தோன்றி யுள்ளது!

    10.நம:ஸச்சிதானந்தரூபாய தஸ்மை
    தமோ தேவதேவாய ராமாய துப்யம்
    நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்
    நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம்

    ஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம், தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான, வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.

    11.நமோ பக்தியுக்தாணுரக்தாய துப்யம்
    நம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம்
    நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்
    நம: ஸுந்தராயேந்திராவல்லபாய

    பக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம். புண்யம் ஒன்றால் மட்டுமேயடைய முடிந்த உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அறியதக்க ஆதிபுருஷரான உமக்கு நமஸ்காரம். லக்ஷ்தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.

    12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத
    நமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே
    நமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே
    நமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே

    உலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம். உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும், அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும், உலகத்தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.

    13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச
    ப்ரபோக ப்ரயோகப்ரமாண ப்ரண
    மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்
    விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்யஸித்யை

    உலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி அறிந்துள்ள உமக்கு, ஹேராம! நமஸ்காரம். நல்ல ஞானம் பெறுவதற்கு என்மனம் உன்திருவடிசேவையை மேற்கொண்டுள்ளது.

    14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு-
    ப்ரஸாதாத் U சைதன்ய மாதத்த ராம
    நரஸ்த்வத் பதத்வந்த்வ ஸேவாவிதானாத்
    ஸுசைதன்யமேதீதி கிம்சித்ரமத்ர

    ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றால். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது?

    15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
    நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர
    பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
    லபந்தே: க்ருதாந்தம் நபச்யந்த்யதோsந்தே

    உனது விசித்ரமான சரித்ரம் மிகப் புண்யம் வாய்ந்தது. ஹேராம! அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும், போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும் ஸம்ஸாரத்தை முடித்து விட்டு அதன் பின் யமனைக் காணவே மாட்டார்.

    16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்
    நரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம்
    ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம்
    மனோவாக கம்யம் பரம் தாம ராம

    ஹேராம! எந்த ஒரு மனிதர், தேவர் தலைவனாயும் ஸத் வடிவமாயும், சித் ஆனந்த ஸ்வரூபியாயும், மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ அவர் புண்யமானவர், மதிக்கத் தக்கவர்; எனக்கு சரணடையத் தகுந்தவர்.

    17.ப்ரசண்ட் ப்ரதாபப்ரபாவாபிபூத-
    ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர
    பலம் தே கதம் வர்ண்யதேsதீவ பால்யே
    யதோsகண்டி சண்டீச கோதண்டதண்ட:

    ஹே ப்ரபா! ராம சந்த்ர! கடிய ப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப் பகைவரை வீழ்த்தியவரே! உமது பலம் வர்ணிக்க முடியாதது; ஏனெனில் சிறு வயதிலேயே மகேச்வரன் வில்லை ஓடித்தீரே!

    18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம்
    ஸரித் துர்க மத்யஸ்தரக்ஷே£கணேசம்
    பவந்தம் விநா ராம! ரோ நரோவா
    sஸுரோ வாsமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்

    ஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத் தலைவனான கொடிய ராவனனை பிள்ளை யுடனும், நண்பர்களுடனும் ஜயிக்க வல்லவர் உம்மைத் தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்?

    19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
    ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
    பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
    ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்

    எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேறாகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.

    20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
    ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்
    பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:
    பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ

    சாதுக்களைக் களிக்கச் தெய்யும் ஆனந்தப் பெருக்கின் வேர் போலிருக்கின்ற ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன். உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்பட மாட்டேன்.

    21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை:
    அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை :
    அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:
    அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

    ஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகுபெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத, ரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத, ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.

    22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை :
    அபக்தாஞ்ஜனேயாதி த்த்வப்ரகாசை :
    அமந்தாரமூலை ரமந்தாரமாலை :
    அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

    ராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்தஆஞ்ஜயர் முதலிய தத்வப்ரகாசகரில்லாத, மந்தாரமரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத, ராமர் எனப்பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.

    23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை :
    அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை:
    அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை:
    அராமாபிதேயை ரலம் தைவதைர்ந :

    ஸமுத்ரராஜாவிடம் கோபங்கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத, புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.

    24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
    கராகே முராரேsஸுராரே பரேதி
    லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்
    ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ

    ஹே ஹரே ராம! ஸீதாபதே! ராவணனின் பகாவனே! கரனை யழித்தவனே! முராரே! அஸுரர்களை வீழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக் கொண்டு காலம் கழிக்கும் இந்த அடியேனை அனைவரையும் உறவு கொண்டாடும் ஹே ராம நன்கு கவனி, கவனி!

    25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய
    நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய
    நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய
    நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர

    ஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே! எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே ! வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர! உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

    26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்யப்ரதாப
    ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால
    ப்ரஸீத ப்ரஸீத ப்ரபன்னானுகம்பின்
    ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர

    கோரப்ரதாபம் வாய்ந்த ஹேராம! எனக்கு அருள்செய். கொடியபகைவரை அழித்த ஹேராம! எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே! எனக்கு அருள்செய். ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.

    27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
    முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்
    படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே
    ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:

    எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.

    ஸ்ரீ ராமபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

    ———

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பகவத் சங்கர பாதாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ கீதா ஸ்லோகங்களும் தமிழ் பாசுரங்களும்- முதல் ஷட்கம்-அமைதியும் ஆனந்தமும்-ஸ்ரீ கிருஷ்ணாத்மாநந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்-

    May 12, 2025

    அமைதியும் ஆனந்தமும் -பாகம் -1 – ஜீவாத்ம விசாரணை
    1-அர்ஜுனனிடம் துக்கத்தின் வெளிப்பாடு-அர்ஜுன விஷாத யோகம் -47 பாடல்கள்
    2-தத்துவ ஞானத்தைப் பெறுதல்- ஸாங்கிய நயாகம் -72 பாடல்கள்
    3-செயலை செயல் யோகமாக்குதல்—கர்ம யோகம் –43 பாடல்கள்
    4-அறிவால் செயலை விலக்கி அறிதல்-ஞான கர்ம ஸந்ந்யாஸ யோகம் –42 பாடல்கள்
    5-செயல் துறவு-ஸந்ந்யாஸ யோகம் — 29 பாடல்கள்
    6-தியானத்தில் தெளிவு-தியான யோகம் – 47 பாடல்கள்

    —————-

    1. தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
      மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய

    த்ருதராஷ்ட்ர உவாச-திருதராஷ்டிரன் சொல்லுகிறான்,
    தர்ம ஷேத்ரே குரு ஷேத்ரே-அற நிலமாகிய குரு நிலத்தில்,
    ஸமவேதா-ஒன்று கூடி,
    யுயுத்ஸவ-போர்செய்ய விரும்பித் திரண்ட,
    மாமகா-நம்மவர்களும்,
    பாண்டவா-பாண்டவரும்,
    கிம் அகுர்வத-என்ன செய்தனர்?

    திருதராஷ்டிரன் புகன்றான்”
    தர்ம பூமியாம் குரு பூமியில் ஒன்று கூடி யுத்தம் விரும்பியே |
    என்னவர்களும் அவ்வைவரும் என் செய்தனர் ஸஞ்ஜயா ||

    ———–

    2. ஸஞ்ஜய உவாச
    த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
    ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்

    ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்,
    ததா துர்யோதந-அப்போது துர்யோதனன்;
    வ்யூடம் பாண்டவாநீகம்-அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை,
    த்ருஷ்ட்வா-பார்த்துவிட்டு,
    ஆசார்யம் உபஸங்கம்ய-துரோணனிடம் போய்,
    வசனம் அப்ரவீத்-வார்த்தைகளை சொல்லலாயினன்.

    சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:

    “சஞ்ஜயன் புகன்றான்”
    ராஜா துரியோதனன் அச் சமயம் ஐவர் படை அணி வகுப்புக் கண்டதும் |
    ஆச்சார்யர் துரோணரையே அணுகி வாய் மொழிந்தா னிவ்வார்த்தையினை ||

    —————

    3. பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
    வயூடாம் த்ருபத புத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா

    ஆசார்ய தவ ஸிஷ்யேண-ஆசார்யரே! உன்னுடைய சீடனான,
    தீமதா- நிபுணனான,
    த்ருபத புத்ரேண-துருபதன் மகனால்,
    வ்யூடாம் பாண்டு புத்ராணாம்-வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின்,
    ஏதாம் மஹதீம் சமூம்-இந்த பெரிய படையை, பஸ்ய-பார்.

    குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்.

    ஆச்சார்ய நர! உம் புத்திமான் சிஷ்யன்; துருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன் |
    அணி வகுத்த பாண்டு புத்திரர்கள் தம் மா பெரும் சேனையைப் பாரும் ||

    ————-

    4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி
    யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத​:

    அத்ர-இங்கு,
    மஹேஷ்வாஸா-பெரிய வில்லாளிகளும்,
    யுதி-போரில்,
    பீமார்ஜுநஸமா-வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய,
    ஸூரா-சூரர்,
    யுயுதாந-யுயுதானன்,
    த்ருபத-மகாரதனாகிய துருபதன்.

    இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

    காணீர்!இப் படை சூரர் வில்லாளிகள் பீமார்ஜுனனுக்குச் சமமாமவர் |
    போரில் சாத்யகியாம் யுயுதானனும் விராட தேசத்தரசன் துருபதனுமாம் ॥

    ————

    5. த்ருஷ்டகேதுஸ்சேகிதாந​: காஸிராஜஸ்ச வீர்யவாந்
    புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ​:

    த்ருஷ்டகேது-திருஷ்ட கேது,
    சேகிதாந-சேகிதானன்,
    வீர்யவாந் காஸிராஜ-வீரியமுடைய காசி ராஜன்,
    புரூஜித் -புரூஜித்,
    குந்திபோஜ-குந்தி போஜன்,
    நரபுங்கவ ஸைப்ய-மனிதரேறாகிய சைவியன்.

    திருஷ்ட கேது சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;

    த்ருஷ்ட கேதுவும் சேகிதானனும் வீர்யவான் காசி ராஜனும் |
    புருஜித்தும் குந்தி போஜனும் மா மனிதன் சைப்ய னிருப்பதும் காணீர் ||

    ———————

    6. யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்
    ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா​:

    விக்ராந்த-வலிமை மிக்க,
    யுதாமந்யு-யுதாமந்யு,
    வீர்யவாந் உத்தமௌஜா-வீரன் உத்தமௌஜா,
    ஸௌபத்ர-சுபத்திரை மகன்,
    த்ரௌபதேயா-திரௌபதி மக்கள்,
    ஸர்வ ஏவ மஹாரதா-எல்லோருமே மகாரதர்.

    வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.

    பேராற்றல் பெற்ற யுதாமன்யுவும் வல்லமை யுடை உத்ததமௌஜஸும் |
    சுபத்ரையின் மகன் அபிமன்யுவும் திரௌபதியின் ஐம் புதல்வரும் மஹா ரதர்களே ||

    ——————–

    7. அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
    நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே

    த்விஜோத்தம்-இருபிறப்பாளரில் மேம்பட்டவனே,
    அஸ்மாகம்-நம்முள்ளே,
    யே விஸிஷ்டா-எவர் விசேஷமாக இருக்கின்றனரோ,
    தாந்-அவர்களை,
    நிபோத-தெரிந்து கொள்,
    மம ஸைந்யஸ்ய-எனது படையின்,
    யே நாயகா-எவர் நாயகர்களோ,
    தாந்-அவர்களை,
    ஸம்ஜ்ஞார்தம்-கவனத்திற்காக,
    ப்ரவீமி-சொல்லுகிறேன்.

    இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள்.
    இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.

    அந்தண உத்தம நர! நம்மில் சிறந்தோ ரவர்களையும் நீ ரறிந்து கொள்ளும் |
    என்னுடைய சேனையின் நாயகர்கள் கூறுகேன் அவர்களை அறியும் பொருட்டே
    ||

    ———————

    8. பவாந் பீஷ்மஸ்யுச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய​:
    அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத:

    பவாந்-நீ,
    பீஷ்ம: கர்ண: க்ருப-பீஷ்மன், கர்ணன், கிருபன்,
    ஸமிதிஞ்ஜய-பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய,
    ததா ஏவ-அதே போல,
    அஸ்வத்தாமா விகர்ண, ஸௌமதத்தி-அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்.

    நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய
    கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;

    தாங்களும் பீஷ்மரும் கர்ணனும் வெற்றியே வடிவான க்ருபரும் |
    அங்ஙனமே அஶ்வத்தாம விகர்ணனும் ஸோம தத்தன் மகன் பூரிஸ்ரவஶுமுளரே ||

    ———–

    9. அந்யே ச பஹவ​: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா​:
    நாநாஸஸ்த்ரப்ரஹரணா​: ஸர்வே யுத்தவிஸாரதா​:

    அந்யே ச-இன்னும் வேறு,
    பஹவ: ஸூரா-பல சூரர்,
    மதர்தே -என் பொருட்டு,
    த்யக்தஜீவிதா-வாழ்க்கையைத் துறந்தோர்,
    ஸர்வே-எல்லோருமே,
    நாநாஸஸ்த்ரப்ரஹரணா-பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்,
    யுத்வவிஸாரதா-போரில் நிபுணர்.

    எண்ணிலா ஆயுத மம்புகள் கூடி பலப் பல சூரர்க தளல்லாம் |
    யுத்தத்தில் சிறந்தே உளர் என் பொருட்டு உயிர் துறக்கவே ||

    ————

    10. அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
    பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்

    பீஷ்மாபிரக்ஷிதம்-பீஷ்மனால் காக்கப்படும்,
    அஸ்மாகம் பலம்-நமது படை,
    அபார்யாப்தம்-(கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை,
    பீமாபிரக்ஷிதம்-வீமனால் காக்கப்படும்,
    ஏதேஷாம் பலம்-இவர்களுடையை படையோ,
    பர்யாப்தம்-நிறைந்திருக்கிறது

    (எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை.
    வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.

    இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்;
    பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.

    ———–

    11. அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா​:
    பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த​: ஸர்வ ஏவ ஹி

    ஸர்வேஷு அயநேஷு-எல்லா இடங்களிலும்,
    யதாபாகம் அவிஸ்ததா-வகுப்புகளின்படி நின்றுகொண்டு,
    பவந்த: ஸர்வ-நீங்களனைவரும்,
    பீஷ்மம் ஏவ-பீஷ்மனையே,
    அபிரக்ஷந்து-காக்கக் கடவீர்.

    நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.

    பீஷ்மர் காக்கும் நம் சேனை அளவில் அடங்காது விரிந்துளது |
    பீமனால் காக்கப்படு மச்சேனை அளவில் அடங்கியே யுள்ளது ||

    ———-

    12. தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குருவ்ருத்த​: பிதாமஹ​:
    ஸிம்ஹநாதம் விநத்யோச்சை​: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்

    குருவ்ருத்த-கௌரவரில் மூத்தவராகிய,
    ப்ரதாபவாந் பிதாமஹ-கீர்த்திமிக்க பாட்டன்,
    தஸ்ய-அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்),
    ஹர்ஷம் ஸஞ்ஜநயந்-மகிழ்ச்சி விளைவிக்குமாறு,
    உச்சை: ஸிம்ஹநாதம்-உயர்ந்த குரலில் சிங்கநாதம்,
    விநத்ய-புரிந்து,
    ஸங்கம் தத்மௌ-சங்கை ஊதினான்

    (அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்தி மிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை ஊதினான்.

    வல்லவன் கௌரவ முதல்வன் பாட்டன் பீஷ்ம பிதா மகன் |
    உற்சாகமூட்டவே அவன் பொருட்டு உரக்க ஊதினான் சிம்ம நாதம்தனை ||

    ———–

    13. தத​: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா​:
    ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோ பவத்

    தத-அப்பால்,
    ஸங்கா ச பேர்ய: ச-சங்குகளும், பேரிகைகளும்,
    பணவ ஆநக கோமுகா-தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
    ஸஹஸா-திடீரென,
    அப்யஹந்யந்த-ஒலித்தன,
    ஸ: ஸயுப்த-அந்த ஓசை,
    துமுல-பயங்கரமாக,
    அபவத்-இருந்தது.

    அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும்,
    திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.(இது கௌரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.)

    பின்பு தொடர்ந்த பல நாதங்கள் சங்கு பேரிகை தம்பட்டைகளும் |
    பறையுடன் ஒலி மிகுந்த கொம்புகளுமே ஒருங்கே சேர்ந்து முழங்கினவே ||

    ———-

    14. தத​: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
    மாதவ​: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது​:

    தத-பின்பு,
    ஸ்வேதை: ஹயை: யுக்தே-வெள்ளை குதிரைகள் பூட்டிய,
    மஹதி ஸ்யந்தநே-பெருந் தேரில்,
    ஸ்திதௌ மாதவ: பாண்டவ-நின்ற மாதவனும் பார்த்தனும்,
    திவ்யௌ ஸங்கௌ-தெய்வீகமான சங்குகளை,
    ப்ரதத்மது-ஊதினர்.

    பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை ஊதினர்.

    பிறகு வெண் குதிரைகளுள்ள மேலாம் தேரில் வீற்றிருந்த மாதவ அர்ஜுனரும் |
    தத்தம் தெய்வீகம் மிகு சங்குகளையே உடன் எடுத்து உரக்க ஊதினரே ||

    ————–

    15. பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய​:
    பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர​:

    ஹ்ருஷீகேஸ: பாஜ்ஜந்யம்-கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை,
    நஞ்ஜய: தேவதத்தம்-அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை,
    பௌணட்ரம் மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர-பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன்,
    தத்மௌ-ஊதினான்.

    கண்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.

    ஊதினான் ஹ்ருஷீகேசன் பாஞ்சஜன்யம் ஊதினான் தனஞ்சயன் தேவதத்தம் |
    ஊதினான் பெரு வினை யாற்றும் பீமசேனன் ஊதினனே பௌண்ட்ர மஹா சங்கம் தனையே ||

    வ்ருகோதர = ஓனாய் வயிற்றோன்; பெரு வினை யாற்றும் திறன்

    —————-

    16. அநந்த விஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​:
    நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ

    அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர​-அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன்,
    நகுல​: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ-சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்

    குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும்,
    நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.

    குந்தியின் மகன் தர்ம ராஜன் ஊதினனே அநந்த விஜயம் தனை |
    ஊதினரே ஸுகோஷ மணி புஷ்பகம் தனை முறையே நகுல சக தேவருமே ||

    17. காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ​: ஸிகண்டீ ச மஹாரத​:
    த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித​:

    பரமேஷ்வாஸ: காஸ்ய: ச-வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும்,
    மஹாரத: ஸிகண்டீ ச-மகாரதனாகிய சிகண்டியும்,
    த்ருஷ்டத்யும்ந விராட: ச-திருஷ்டத்யும்னனும் விராடனும்,
    அபராஜித: ஸாத்யகிஸ்ச-வெல்லப்படாத ஸாத்தியகியும்.

    வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,

    சீர்மிகு வில்லாளி காசிராஜன் மஹாரதி த்ருஷ்டத்யும்ன சிகண்டியும் |
    அங்ஙனமே விராட தேசத்தரசனும் வெல்ல வியலா சாத்யகியு மூதினரே ||

    ————-

    18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ​: ப்ருதிவீபதே
    ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு​: ஸங்காந் தத்மு​: ப்ருதக் ப்ருதக்

    த்ருபதோ த்ரௌபதேயா: ச-துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும்,
    மஹாபாஹு: ஸௌபத்ர-பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்,
    ஸர்வஸ-எல்லோரும்,
    ப்ருதிவீபதே-பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்),
    ப்ருதக் ப்ருதக்-தனித்தனியாக,
    ஸங்காந் தத்மு-சங்குகளை ஒலித்தனர்.

    துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும்
    தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே!

    புவியாளும் வேந்தனே ! மன்னா! துருபதனும் த்ரௌபதியின் ஐம் புதல்வரும் |
    பெரும் தோளோன் சுபத்தர மகனும் ஊதினரே தத்தம் சங்குகளை எப்புறமும் ஓலிக்கவே ॥

    ————–

    19. ஸ கோ÷ஷா தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
    நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்

    ஸ: துமுல: கோஷ-அந்த பயங்கர ஓசை,
    நப: ப்ருதிவீம் ச-ஆகாயத்தையும் பூமியையும்,
    வ்யநுநாதயந்-ஒலிக்கச் செய்து,
    தார்தராஷ்ட்ரணாம்-திருதராஷ்டிரக் கூட்டத்தாரின்,
    ஹ்ருதயாநி-நெஞ்சுகளை,
    வ்யதாரயத்-பிளந்தது.

    அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய்,
    திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.

    அப்போரொலிப் பெரு முழக்கம் விண் புவிக்கும் இடை ஒலிக்க |
    கௌரவரின் உள்ளம் தன்னில் சீறிப் புகுந்துப் பிளந்தது காணும் ||

    —————

    20. அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ​:
    ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ​:

    அத-அப்பால்,
    கபித்வஜ: பாண்டவ-குரங்குக் கொடியர்த்த பார்த்தன்,
    வ்யவஸ்திதாந் தார்தராஷ்ட்ராந்-எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை,
    த்ருஷ்ட்வா-நோக்கி,
    ததா ஸஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே-அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது,
    தநு: உத்யம்ய-வில்லையேந்திக் கொண்டு.

    அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.-தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்.

    புவியாளும் மன்னா! குரங்குக் கொடியோன் போர் துவங்கிய தார்த்தராஷ்டிரர் தமை நோக்கி| அம்புகள் விண்ணிலே பாயுமுன்னே || இருஷீகேசரிட மிவ்வார்த்தை தனைப் புகன்றான் |

    ————

    அர்ஜுன உவாச

    21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே
    ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத

    ஹ்ருஷீகேஸம் இதம் வாக்யம்-கண்ணனிடம் இந்த வார்த்தைகளை,
    ஹ-சொல்கிறான்,
    மஹீபதே-ராஜனே!,
    அச்யுத-ஹே அச்சுதா,
    மே ரதம்-என்னுடைய ரதத்தை,
    உபயௌ:ஸேநயோ-இரண்டு படைகளின்,
    மத்யே-நடுவே,
    ஸ்தாபய-நிறுத்துக

    அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)

    1. யாவதேதாந்நிரீஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்
      கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே

    அஸ்மிந் ரணஸமுத்யமே-இந்தப் போர்த் தொடக்கத்தில்,
    மயா கை: ஸஹ யோத்வவ்யம்-என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ
    யோத்துகாமாந் அவஸ்திதாந் ஏதாந்-சமரை விரும்பி நிற்கும் இவர்களை,
    யாவத்-எவ்வளவு நேரம்,
    அஹம் நிரீஷே அஹம் -நான் பார்க்கிறேன்

    சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும்.
    இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஓஅச்சுதா! இவ்விரு சேனை யிடையே எம் தேரை எதிர் நிறுத்து வீரே ||
    என்னுடன் போர் விரும்பி நிற்கும் | இக் கூட்டம் தனை நான் காணவே ||

    ————–

    23. யோத்ஸ்யமாநாநவே÷க்ஷஹம் ய ஏதேத்ர ஸமாகதா​:
    தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ​:

    துர்புத்தே: தார்தராஷ்ட்ரஸ்ய-கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு,
    யுத்தே ப்ரியசிகீர்ஷவ-போரில் நன்மை செய்யும் வண்ணம்,
    யே-எவர்,
    ஏதே-இந்த அரசர்கள்,
    அத்ர ஸமாகதா: இங்கே வந்துள்ளனர்,
    யோத்ஸ்யமாநாந்-போர் செய்ய திரண்டு நிற்பவர்களை,
    அஹம் அவே÷க்ஷ-நான் காண வேண்டும்

    “கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.

    இவ்விதம் துஷ்ட புத்தி யுடன் நிற்கும் அந்தகன் மகன் துரியோதனன் தம் |
    பிரியம் விரும்பியுளோர் தமையும் களம் புகுந்தோரையும் காணவே ||

    ————-

    24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேஸேந பாரத
    ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம்

    பாரத-(கேளாய்) பரத நாட்டரசே,
    குடாகேஸேயுந-அர்ஜுனனால்,
    ஏவம் உக்த-இவ்வாறு சொன்னவற்றை கேட்டு,
    ஹ்ருஷீகேஸயு-கண்ணன்,
    உபயோ: ஸேநயோ-இரண்டு படைகளுக்கும்,
    மத்யே-நடுவில்,
    ரதோயுத்தமம்-மேன்மை கொண்ட அத்தேரை,
    ஸ்தாயுபயித்வா-நிறுத்தி.

    சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

    சஞ்ஜயன் புகன்றான்”
    பரத குலத்தோன்றலே ! த்ருதராஷ்டிரரே ! இவ்விதம் பகர் குடாகேசன் சொல் கேட்ட |
    ஹ்ருஷீகேசர் உத்தமமாம் தேரை இரு சேனைக்கிடை நிறுத்தியே |

    ———————

    25. பீஷ்மத்ரோணப்ரமுகத​: ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம உவாச பார்த்த பஸ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி

    பீஷ்மத்ரோணப்ரமுகத-பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக,
    ஸர்வேஷாம் மஹீக்ஷிதாம்-எல்லா அரசர்களுக்கு முன்,
    இதி உவாச-இவ்வாறு சொன்னான்,
    ஸமவேதாந்-கூடி இருக்கும்,
    ஏதாந் குருந்-கௌரவரை, பஸ்ய-பார்

    பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு,“பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.

    வழிநடாத்தும் பீஷ்மரும் த்ரோணரும் மற்றுமுள வேந்தர்களின் முன்னிருத்தியே |
    ஒருங்கே கூடியுள்ள இக் கௌரவர் தமைப்- பார்த்தனே ! “தீர்க்கமாய்க் காண் ”என்றார்||

    ——–

    26. தத்ராபஸ்யத் ஸ்திதாந் பார்த​: பித்ரூநத பிதாமஹாந்
    ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூந் புத்ராந்பௌத்ராந் ஸகீம்ஸ்ததா

    அத பார்த-இதற்கு பின் அர்ஜுனன்,
    தத்ர ஸ்திதாந்-அங்கே நிற்கும்,
    பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந்-தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனாரும் குருக்களும் மாமன்மார்களும்,
    ப்ராத்ருந் புத்ராந் பௌத்ராந்-சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும்,
    ததா-அதே போல,
    ஸகீந்-நண்பர்களும்,
    அபஸ்யத்-பார்த்தான்

    அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும்,
    அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.

    பார்த்தன்! பார்த்தானிரு சேனையினரை பாட்டன்- ஆச்சார்யர்- அம்மான் களையும் |
    சகோதர புத்திர பேரர்களையும் அவ்விதமே அனைத்துத் தோழர்களையும்.||

    —————

    27. ஸ்வஸுராந்ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி
    தாந்ஸமீ÷க்ஷய ஸ கௌந்தேய​: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்

    ஸேநயோ: உபயோ: அபி-இரண்டு படைகளிலும்,
    ஸ்வஸுராந்-மாமன்மாரும்,
    ஸுஹ்ருத ச-நண்பர்களும்,
    ஸர்வாந் பந்தூந்-உறவினரெல்லாரும்,
    அவஸ்திதாந்-நிற்பவர்களை,
    ஸமீக்ஷ்ய-நன்றாக பார்த்து,
    கௌந்தேய​-அர்ஜுனன்

    அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:

    மாமனார்கள், நல்உள்ள முள்ளோரையும் ஒன்று கூடி நிற்கு முறவுகளையும் |
    உற்று நோக்கி உள்ளம் வருந்தியே மிகு விரக்கமுடன் குந்தி மகன் கூறினானே ॥

    28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்
    த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்

    ஸ: கௌந்தேய-அந்த அர்ஜுனன்,
    பரயா க்ருபயா அவிஷ்ட-மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக,
    விஷீதந்-துயரடைந்து,
    இதம் அப்ரவீத்-இவ்வாறு சொல்லுகிறான்
    க்ருஷ்ண-ஹே கிருஷ்ணா,
    யுயுத்ஸும்-போர் செய்ய விருப்பத்துடன்,
    ஸமுபஸ்திதம்-நிற்கிற,
    இமம் ஸ்வஜநம் த்ருஷ்ட்வா-இந்த சுற்றத்தார்களை கண்டு.

    அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,

    29. ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸுஷ்யதி
    வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே

    மம காத்ராணி ஸீதந்தி-என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன,
    முகம் பரிஸுஷ்யதி-வாய் உலர்கிறது,
    மே ஸரீரே வேபது-என்னுடைய உடலில் நடுக்கம்
    ரோமஹர்ஷ: ஜாயதே-மயிர் சிலிர்ப்பு அடைகிறது.

    என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஓ கிருஷ்ணா வென்றே கூவி! | யுத்தம் விரும்பிக்களம் புகுந்து நிற்கும்
    உறவுகளை யான் உற்று நோக்கிடில் |
    அங்கமெலாம் தளர்ந்து நாவறள்கின்றதே உடல் நடுங்கி மயிர்க்கூச் செறிகின்றதே ||

    ———–

    30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே
    ந ச ஸக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந​:

    ஹஸ்தாத் காண்டீவம் ஸ்ரம்ஸதே-கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது,
    த்வக் ச ஏவ பரிதஹ்தே-உடலிலும் எரிச்சல் உண்டாகிறது,
    மந: ப்ரமதி இவ-மனம் குழம்புவது போல,
    அவஸ்தாதும் ந ஸக்நோமி-நிற்கவும் முடியவில்லை.

    காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது.-என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.

    காண்டீவம் கையினின்றும் நழுவுகிறதே சர்மமெல்லாம் பற்றி எரிகின்றதே |
    நிற்பதற்கும் சக்தி யற்றவனானேனே என் மனம் குழம்புவது போலுள்ளதே ||[சர்மம்
    – த்வக் – உடலின் மேல் தோல் ]

    ————

    31. நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ
    ந ச ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே

    விபரீதாநி நிமித்தாநி ச பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன்,
    ஆஹவே-போரிலே,
    ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று,
    ஸ்ரேய: ச-நன்மையும்,
    ந அநுபஸ்யாமி-தோன்றவில்லை.

    கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில்
    எனக்கு நன்மை தோன்றவில்லை.

    ஓ கேசவா! கெடுதல்கள் அளிக்கும் சகுனங்க ளனைத்தும் காண்கின்றேன் |
    உறவினர் தமை நாம் கொல்லுவதால் மேன்மை ஏதும் காண்கிறேனில்லை ॥

    1. ந காங்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
      கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா

    விஜயம் ராஜ்யம் ச ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும்,
    கோவிந்த -ஹே கோவிந்தா,
    ந காங்ஷே-விரும்புகிலேன்,
    ஜீவிதேந ராஜ்யேந:
    போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ
    கிம்-என்ன

    கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன்-கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்?
    உயிர் வாழ்க்கையாலேனுமாவ தென்னே?

    ஹே கிருஷ் ணா! வெற்றியையும் விரும்பவில்லை ராஜ்யம் தனையும் விரும்பவில்லை |
    சுகங்களையும் யான் விரும்பவில்லை கோவிந்தா! ராஜ போகத்தால் நமக்கென் பயன்? ||

    ———

    33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகாநி ச
    த இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச

    யேஷாம் அர்தே-எவருக்காக,
    ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம்,
    ந: காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ,
    தே இமே-அந்த இவர்களே,
    யுவே-யுத்தத்தில்,
    ப்ராணாந்-உயிர்களை,
    த்யக்த்வா-இழந்தவராய்,
    இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.

    யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.

    யாவர்க்காக நாம் சுக போகங்களை வேண்டி விரும்பத் தக்கதாயிற்றோ |
    அவர்களோ செல்வமுயிராசையும் துறந்து போர்க் களத்தில் கூடிநிற்கக் காணீர்||

    34. ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா​:
    மாதுலா​: ஸ்வஸுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்திநஸ்ததா

    ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள்,
    ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள்,
    பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.

    குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும்,
    பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்

    அனைத்து ஆசார்யர்களும் தந்தை தனயரும் அவ்வாறே பாட்டன் அம்மான் மார்களும் |
    மைத்துன மாமனார்களும் பேரன் களனைவரும் உறவினருடன் கூடி யிருக்கக் காணீர்||

    ———-

    35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
    அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே

    மதுஸூதந-மதுசூதனா,
    க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும்
    த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும்,
    ஏதாந் ஹந்தும் ந இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை,
    மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).

    மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
    மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.

    ஓ மதுஸூதனா! என்னைக் கொன்றாலும் மூவுலக ராஜ்யத்தின் ஆசையாலும் |
    கொல்லேன் இவர்களை நானொரு பொழுதும் கொல்வேனோ இப் புவியின் பொருட்டு ||

    ———–

    36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்தந
    பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​:

    ஜநார்தந-ஜனார்தனா,
    தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று,
    ந: கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது,
    ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால்,
    அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.

    ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை யடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.

    ஓ ஜனார்தனா!
    திருதாஷ்டிர மைந்தர்கள் தம் உயிர்-நீக்கினால் மகிழ்ச்சி யுண்டோ நமக்கு |
    இப் பஞ்சமா பாதகர் தமைக் கொன்றால் பாவம் அன்றோ நம்மைச் சாரும் ||[ ஆததாயிந =
    பஞ்ச மகா பாதகர்]

    ———-

    37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
    ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந​: ஸ்யாம மாதவ

    மாதவ-ஹே மாதவா,
    தஸ்மாத்-இதிலிருந்து,
    ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை,
    ஹந்தும் வயம் ந அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர்,
    ஹி-ஏனெனில்,
    ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின்,
    கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?

    ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது.
    மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?

    ஆம்! நம்உறவினர் துரியோதனாதிகளை நாம் கொல்லுதல் தக்கதன்றே |
    ஓ மாதவா! உறவினர்களுயிர் போக்கி சுகத்தை யெப்படிக் காண்போம் ||

    ————-

    38. யத்யப்யேதே ந பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ​:
    குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்

    லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து,
    ஏதே-இவர்கள்
    குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம்,
    மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும்,
    ந பஸ்யந்தி-காண்கிலர்,
    யத்யபி-இருந்தும்,

    அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும்
    நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

    பேராசையால் கவர்ந்த இவர் மனம் குல நாச தோஷத்தை யறியுமோ ? |
    மித்ர த்ரோக பாவம் தனை உணருமோ அவர்கள் தீமையை யுணரா விடினும்.. ||

    ——————

    39. கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி​: பாபாதஸ்மாந்நிவர்திதும்
    குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந

    ஜநார்தந-ஜனார்தனா,
    குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம்
    ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி​-நம்மால்
    பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக,
    கதம் ந ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?

    ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?

    ஓ ஜனார்தனா! குலநாச தோஷங்களைத் தெளிவுற நன்றாயறியும் நாம் |
    இப் பாவச் செயல் விடுத்து விலகிட ஏன் முயலுதல் செ(ய்)யக் கூடாது? ||

    ———-

    40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா​: ஸநாதநா​:
    தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

    குலக்ஷயே-குல நாசத்தினால்,
    ஸநாதநா​-தொன்று தொட்டு வருகின்ற,
    குல தர்மா​-குல தர்மங்கள்,
    ப்ரணஸ்யந்தி-அழிகின்றன,
    தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில்,
    க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும்,
    அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.

    குல நாசத்தால் என்றுமுள்ள குல தர்மங்கள் அழிகின்றன.-தர்மம் அழிவதனால் குல முழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?

    குல நஷ்ட மெய்திடில் என்றுமுள குல தர்மங்கள் அழிவது திண்ணம் |
    தர்மம் அழிந்தால் குலமனைத்திலு மதர்மம் வெகுவாய்ப் பரவுமே ||

    ——–

    41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய​:
    ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​:

    அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால்,
    க்ருஷ்ண-கண்ணா,
    குலஸ்த்ரிய​-குலப் பெண்கள்,
    ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள்,
    துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால்,
    வர்ணஸங்கர​: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது,
    வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!

    கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள்.
    விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

    கிருஷ்ணா! அதர்மம் மிகப் பெருகிடில் குலப் பெண்கள் நன்னலம் இழப்பர்|
    பெண் கள் அந்நலம் இழக்கில் வர்ணக் கலப்பும் தோன்றும் வ்ருஷ்ணி குலத்தோனே ! ||

    ————-

    42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
    பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா​:

    ஸங்கர-குழப்பத்தால்,
    குலஸ்ய ச-குலத்தையும்,
    குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும்,
    நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது),
    பிண்ட, தகக்ரியா​: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி,
    ஏஷாம் பிதர:
    ஹி-இவர்களுடைய முன்னோர்களும்,
    பதந்தி-வீழ்வர்.

    அக் குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது.
    இவர்களுடைய பிதிருக்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

    குல நாச கருமவர் குலமும் வர்ணக் கலப்பால் நரகம் அடைவரே |
    இவர் முன்னோர் பிண்ட நீர்க் கடனற்றே நிச்சயம் வீழ்ச்சி அடைவார்களே ||

    ———–

    43. தோஷைரேதை​: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை​:
    உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா​: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா​:

    குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின்,
    ஏதை: வர்ணஸங்கரகாரகை​:
    தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால்,
    ஸாஸ்வதா​-என்றும் உள்ள,
    ஜாதி தர்மா​: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள்,
    உத்ஸாத்யந்தே-அழிகின்றன.

    வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக் குற்றங்களால் ஜாதி தர்மங்களும்
    தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

    குலநாசகர் செயும் இவ் வர்ணக் கலப்பு எனுமிந்த தோஷங்களா லென்றும் |
    சாச்வத ஜாதி குல தர்மங்களும் நிச்சயம் அழிவில் அழுந்துமே ||

    ———–

    44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
    நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

    உத்ஸந்ந குல தர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள்,
    மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு,
    அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம்,
    வதி-ஏற்படுகிறது,
    இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.

    ஜநார்த்தனா! குல தர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

    ஜனார்தனா! குல தர்மத்தை யிழந்த மனிதர்கள் தாம் நரகத்தில் |
    நெடிது வாழும் நிலை யடைவர் என்று கேட்டிருக்கிறோம் நாம் ||

    ————–

    45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
    யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா​:

    அஹோ-அந்தோ,
    பத-பாவம்,
    வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம்,
    வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம்,
    யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு,
    ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல,
    உத்யதா​-முனைந்து விட்டோம்,

    அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

    அந்தோ பெரும் பாவம் செய விழைந்தோம் அன்றோ நாமே |
    ராஜீயசுக ஆசையாலே கொல்லவே முனைந்தோமோ உறவினர்கள் தமையே ||

    ————

    46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய​:
    தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்

    அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி,
    அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல்,
    மாம்-என்னை,
    ஸஸ்த்ரபாணய​-ஆயுதம் தாங்கிய,
    தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார்,
    யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும்,
    தத் மே-அதில் எனக்கு, ÷
    க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.

    கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார்
    ஆயுத பாணிகளாய்ப் போரில் மடித்து விடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்-இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

    ஆயுதமின்றி எதிர்த்துப் போரிடா எனை ஆயுதம் தாங்கியே துரியோதனாதிகள் |
    இப் போர்க் களத்தில் கொன்றாலும் அது வெனக்கு நன்மை பயப்பதாகுமே ||

    ———

    ஸஞ்ஜய உவாச

    47. ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
    விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:

    ஸங்க்யே-போர்க்களத்தில்,
    ஸோக ஸம்விக்ந மாநஸ​-சோகத்தினால் கலங்கிய மனத்துடன்,
    அர்ஜுந​: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி,
    ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும்,
    விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு,
    ரதோபஸ்த-தேர்த்தட்டில்,
    உபாவிஸத்-உட்கார்ந்தான்.

    சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

    சஞ்ஜயன் புகன்றான்’
    சோகம் தாக்கிய மனதுடை அர்ஜுனன் போர்க் களத்தி லிவ்விதம் பகன்றே |
    வில்லம்புகளைக் கீழ் எறிந்தே தேர்த் தட்டில் அமர்ந்தனனே ||

    ———————————-

    அத² த்³விதீய அத்⁴யாய: ।-இரண்டாம் அத்தியாயம் -ஸாங் க்²ய யோக³: । “தத்துவ ஞானத்தைப் பெறுதல் ”

    ஸஞ்ஜய உவாச

    1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம்
    விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:

    ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான்
    ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய்
    அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன்
    விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை)
    மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்

    அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய
    அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:

    சஞ்ஜயன் புகன்றான்”
    இவ்வித மிரக்கம் மேலோங்கி கண்களில் கண்ணீர் ததும்பி வழிய I
    சோகமே வடிவான அர்ஜுனனிடம் மதுசூதனன் இவ் வார்த்தை தனைப் பகர்ந்தனனே II

    ஸ்ரீ பகவாநுவாச

    2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
    அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந

    ஸ்ரீ பகவான் உவாச-
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    அர்ஜுந!-அர்ஜுனா
    விஷமே-தகாத சமயத்தில்
    குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது
    அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது
    அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது
    அகீர்திகரம்-புகழையும் தராதது

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

    ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    ஹே அர்ஜுனா! தகாத சமயந் தனில் இம் மோஹம் வந்ததன் காரணமென் சொல் I
    இச் செயல் சான்றோர் தவிர்த்ததன்றோ உனக்கிது ஸ்வர்க்கமும் புகழுமளிக்காதே II

    ———

    3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
    க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

    க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே
    ஏதத் ந உபபத்யதே-இது பொருத்தமன்று
    க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து
    உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே.

    பார்த்தா பேடித் தன்மை யடையாதே! இது நினக்குப் பொருந்தாது.
    இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

    ஓ பார்த்தனே ! பேடித்தன்மையை அடையாதே உனக்கித் தன்மை பொருத்தமன்றே I
    “இழிந்த இவ் வுள்ளத் தளர்ச்சியினையே விடுத்து போருக்கெழுந்திடு” பரந்தப! II

    —–

    அர்ஜுந உவாச

    4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந
    இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்
    அஹம் ஸங்க்யே-நான் போரில்
    கதம் இஷுபி:-எவ்வாறு அம்புகளால்
    பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை
    ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன்
    அரிஸூதந-பகைவர்களை அழிப்பவனே

    அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஓமதுஸூதனா! இப் போர்களம் தனில் நான் பெரியோராம் பீஷ்ம துரோணர்களை I
    அரிஸூதனா! பூஜைக்குரிய இவர்களை அம்புகளாலே எவ்விதம் எதிர்ப்பேன் II

    ———

    5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ் ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
    ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்

    மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல்
    இஹ லோகே-இவ்வுலகத்தில்
    பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து
    போக்தும் ஸ்ரேய:-உண்பதும் நன்று
    ஹி-ஏனெனில்
    அர்த காமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று
    இஹ-உலகில்
    புஞ்ஜீய-துய்க்கும்
    போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்

    பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சை யெடுத்துண்பதும் நன்று.
    பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்தில் (ரத்தத்தில்) கலந்தனவாம்.

    மேன்மை பொருந்தின ஆச்சார்யர்களைக் கொல்லாமல் இவ் வுலகிலே
    மேன்மை தருமே பிச்சையால் கிட்டும் உணவையும் கூட உண்பதாலே I
    குருமார்களைக் கொன்ற பின் இப் புவியில் அனுபவிக்கப் போகிறேன்
    இரத்தம் கலந்த செல்வமும்; ஆசைக்குரிய வஸ்து போகங்களையே
    II

    ———

    6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
    யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ் தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:

    ந:-நமக்கு
    கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை
    யத்வா ஜயேம-இவர்களை வெல்லுதல்
    யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல்
    ந வித்ம:-விளங்கவில்லை
    யாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்ற பின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ
    தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார்
    ப்ரமுகே அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள்

    மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மை யென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.

    நமக்கு இவ்விரண்டில் எது சிறந்த தென்றறியோம்
    நாமோ ! இவர்களோ ! வெல்வோம் என்பது மறியோம் I
    எவர்களைக் கொன்ற பின் வாழ விரும்ப வில்லையோ
    அத் துரியோதனாதிகளே எதிர்த்து நிற்கின்றனர் நம் முன்னே II

    ————-

    1. கார்பண்யதோஷோபஹத ஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூடசேதா:
      யச்ச்ரேய: ஸ்யாந் நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்

    கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
    தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்
    த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன்
    யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது
    தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுக
    அஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன்
    த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக

    சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்,யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

    கோழைத்தன மோங்கிச் சீரழிந்த மன முடையோனாகி தர்மத்தில்
    குழம்பிய மனதால் தங்களிடம் வினவுகின்றேன் ஏதெனக்கு I
    நிலையான மேன்மை யளித்திடுமோ அதைப் புகல்வீர்; உம் சீடன் நான்
    எனக்கு பதேசித்துக் காப்பீர், தங்களை சரணடைகின்றேனே II

    ————

    8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத் யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம்
    அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்

    ஹி-ஏனெனில்
    பூமௌ-பூமியில்
    அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான
    ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும்
    யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை
    உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம்
    அபநுத்யாத்-போக்கடிக்கும்
    ந ப்ரபஸ்யாமி-காணவில்லை

    பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர் மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.

    பூமியில் எதிரிகளற்ற தன தான்யங்கள் மிகு ராஜ்யமும்
    தேவர்களுக் கரசனாய் இருக்கும் நிலை யடையப் பெறினும் I
    எனது இப் புலன் களையெலாம் வாட்டுகின்ற சோகந் தனை
    போக்குமென அதனை நான் ஒரு பொழுதும் காண்கிறேனிலேன் II

    ——–

    ஸஞ்ஜய உவாச

    9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப:
    ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ

    ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான்
    பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே!
    குடாகேஸ: ஹ்ருஷீகேஸம்
    ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி
    ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன் என்று கோவிந்தனிடம் சொல்லி
    தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான்.

    சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசு நிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று வாய் புதைத்திருந்தான்.

    “சஞ்ஜயன் புகன்றான்”
    எதிரிகளை வாட்டுபவனான குடாகேசன் புலன்களின் அதிபதியாம் ஹ்ருஷீகேசரிடம்
    இவ்விதம் கூறியே போர் புரியேன் என்றுரைத்து மௌனமாகி விட்டான் II

    —-

    10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத
    ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:

    பாரத-பாரதா
    உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே
    விஷீதந்தம்- துயருற்று இருக்கும்
    தம்-அவனிடம் (அர்ஜுனன்)
    ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து
    இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான்.

    பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ் வசனமுரைக்கிறான்:

    பரத வம்சத்தரசே ! புலன்களின் அதிபதி இருசேனை நடுவிருக்கும் துயரோன்- I
    அர்ஜுனனை நோக்கியே , புன் சிரிப்பு மேலிட வாய் மலர்ந்தாரே இவ் வார்த்ததகளை II[ ஹ்ருஷீகேஶ
    : = புலன்களின் அதிபதி ]

    ———

    11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே
    கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா:

    ஸ்ரீ பகவான் சொல்கிறான்

    த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார்
    அந்வஸோச:-வருந்துகிறாய்
    ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று
    பாஷஸே-பேசுகிறாய்
    கதாஸூந்-இறந்தார்க்கேனும்
    அகதாஸூந்-இருந்தார்க்கேனும்
    பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள் வருந்துவது இல்லை

    துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்!
    இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    துக்கப்படத் தகாதவர்க்கு துக்கிக்கிறாய் பண்டிதர்கள் போல் பகருகின்றாய்நீ I
    உயிர் பிரிந்தும் பிரியாத வர்களுக்காக ஞானிகள் இருப்பர் வருத்தமின்றியே II

    ——–

    12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
    ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்

    ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
    ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
    அத: பரம்-இனி மேலும்,
    வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்

    இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

    இவ்விதம் நானில்லாம லிருந்ததென்பது இல்லை ; நீ யுமிவ்வரசர்களும் இல்லாமல் I
    இருந்ததில்லை ஒரு பொழுதும்; நாமெலாம் இனியுமில்லாமற் போவதென் பதில்லையே II

    ——–

    13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
    ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி

    யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு,
    அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
    கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும்,
    மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
    தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.

    ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

    எவ்விதம் ஜீவனுக்கு இளமையும் வாலிபமும்
    முதுமையும் இவ் வுடலில் தோன்றுவது போல் I
    அவ்விதம் வேறுடலெடுப்பதுவு மமைகிறதே
    அறிவாளி யிக் கூற்றில் மயங்குவதில்லையே II

    ———

    14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
    ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத

    கௌந்தேய-குந்தியின் மகனே,
    ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும்,
    மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள்,
    ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை
    அநித்யா:-அநித்யமானவை
    பாரத – தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

    குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

    புலன்களின் போக விஷயச் சேர்க்கை தருமே குளிர் வெப்பம் சுக துக்கங்களையே I
    நிலை யில்லா இவை தோன்றி மறைபவையே அவை தமைப் பொறுத்திடு பரத குலத்தோனே II

    ———-

    15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
    ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே

    ஹி-ஏனெனில்,
    புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே,
    ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென,
    யம் தீரம் புருஷம்-எந்த தீர புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ,
    ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.

    யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான்,
    அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.

    சிறந்தோனே புனிதர்களில்! எத்தீரன் சுக துக்கங்களைச் சமமாய்க் கருதுவானோ I
    அவனைக் கலங்கச் செய்யா இவ் விருமைகள் அவன் தகுதியுற்றான் மாேஷத்திற்கே II

    ———

    16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
    உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:

    அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை,
    ஸத: அபாவ ந வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை,
    அநயோ உபயோ அபி அந்த:-இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம்
    தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள் உணர்வார்.

    இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது.
    உண்மை யறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

    இல்லாததற்கு இருப்பு என்பதில்லையே இருப்பதற்கு இல்லாமை யென்ப தில்லையே I
    இருப்பதில்லாமை இவ் விரு தத்துவம் தனையே இறை ஞானிகள் இவ்விதம் கண்டறிந்தனரே II[ தத்த்வ த³ர்ஶிபி
    = இறை ஞானிகள் = ஆத்ம ஞானிகள் =
    தனை யுணர்ந்தவர்கள் ]

    ———-

    17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்
    விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி

    அவிநாஸி து-அழிவற்றது தான் என்று,
    தத் வித்தி:-அதை அறிந்து கொள்.
    யேந இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும்,
    ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
    அஸ்ய அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு,
    விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது.

    இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது;
    இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.

    அழிவற்றதென்று அதை யறிந்து கொள்வாய் அனைத்தும் எதனால் வியாபிக்கப் பட்டுளதோ I
    அந்த அழிவில்லாததற்கு ஆங்கழிவை ஆக்குவதற்கு எவர்க்கு மாற்றலில்லையே II

    ———-

    18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
    அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத

    அநாஸிந:-அழிவற்றான்,
    அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான்,
    நித்யஸ்ய-நித்தியன்,
    ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள்,
    அந்தவந்த உக்தா:-அழியக் கூடியவையாக என்பர்,
    தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய்.

    ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள்
    இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

    அறிதற் கரிதான ஜீவன் முடிவில்லா நித்யமாம் அதனுடை இவ் வுடலங்கள் அனைத்தும் I
    அழியக் கூடியவை யென்று கூறப்பட்டுளது ஆதலால் பரத குலத்தோனே ! போர் புரிவாயாக
    II[ இவ்வுடலங்கள் = இந்த சரீரங்கள் = ஶரீரிண: ]

    ———-

    19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்
    உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே

    ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை),
    ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ,
    ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ,
    தௌ உபௌ-அந்த இருவருமே,
    ந விஜாநீத:-அறியாதவர்கள்,
    அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை,
    ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை.

    இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;

    எவனிதைக் கொல்பவனாக அறிகின்றானோ எவனிதைக் கொல்லப்பட்டதா யறிகின்றானோ I
    இவ் வுண்மை அறியாதோரிவ் விருவரே இவ் வாத்மா கொல்வதும் கொல்லப்படுவது மில்லையே II

    ————-

    20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
    நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
    அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ
    ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே

    அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும்,
    ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை,
    பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை,
    அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன்,
    ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

    எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை-இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

    இவ்வாத்மா ஒரு போதும் பிறப்பது மிறப்பது மில்லையே இருந்து விட்டு மீண்டு மில்லாமல் போவதென்பதுமில்லையே I
    இவ்வாத்மா பிறவாத, நித்யமான, மாறாத, பழமை யானதுமாம் மிவ் வாத்மாவுக் கழிதவன்ப தில்லையே இவ்வுடலழியும் இடத்தும்
    II[ இருந்துவிட்டு = ஒரு காலத்தில் இருந்து விட்டு = பூத்வா ]

    ——–

    21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்
    கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்

    பார்த-பார்த்தா!
    ஏநம்-இந்த பொருள் (ஆத்மா),
    அவ்யயம்-மாறாதது,
    நாஸிநம்-அழிவற்றது,
    நித்யம்-என்றும் உளது,
    அஜம்-பிறப்பற்றது,
    ய: புருஷ: வேத-எந்த மனிதன் உணர்கிறானோ,
    ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?

    இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?

    பார்த்தனே ! இவ்வாத்மா அழிவற்றது என்றுமுளது பிறவாதது மாறுதலற்றதென்று I
    எவனொருவ னறிகின்றானோ அம் மனிதன் எவ்வாறெவரைக் கொல்வான் கொல்விப்பான் II

    ——-

    22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
    நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
    ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந்
    யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ

    யதா நர:-எப்படி மனிதன்,
    ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு
    நவாநி க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ,
    ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து,
    அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு புதியதை அடைகிறான்.

    நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல,ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.

    எவ்விதம் மனிதன் நைந்த தன் துணிகளைக் களைந்து விட்டு வேறு புதுப்புது ஆடைகளை அணிந்து கொள்கிறானோ I
    அவ்விதம் ஜீவன் பழைய நைந்த விவ் வுடல்களை விட்டு வேறு புதுப் புது உடல்களை அணிந்து கொள்கின்றானே II

    ——

    23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
    ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத:

    ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை,
    ஏநம் பாவக: ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை,
    ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர் நினைப்பதில்லை,
    மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை.

    இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.

    இவ்வாத்மாவை ஆயுதம் வெட்டுவதில்லை இவ்வாத்மாவை நெருப்பும் எரிப்பதில்லை I
    இவ்வாத்மாவை நீரும் நனைப்பதில்லை இவ்வாத்மாவை , காற்றும் உலர்த்துவதில்லையே II

    ——-

    24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
    நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:

    அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன்,
    அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட முடியாதவன்,
    அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன்,
    அஸோஷ்ய:-உலர்த்தப் படமுடியாதவன்,
    நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன்,
    ஸ்தாணு அசல:-உறுதி உடையவன்; அசையாதவன்
    ஸநாதந:-என்றும் இருப்பான்.

    பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்;
    எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.

    இவ்வாத்மா வெட்ட எரிக்கவியலாது இவ்வாத்மா நனைக்க உலர்த்த வியலாது I
    இவ்வாத்மா நித்யமாய் எங்குமுளதியங்காது இவ்வாத்மா எக் காலமும் நகராதிருப்பதுவே II

    ——

    25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே
    தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி

    அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன்,
    அயம் அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன்,
    அயம் அவிகார்ய:-மாறுதல் இல்லாதவன்,
    உச்யதே-என்று கூறப் படுகிறது,
    தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை இவ்வாறு அறிந்து கொண்டு
    அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு.

    தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப!
    ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”

    இவ்வாத்மா புலன்களுக்குப் புலப்படாது இவ்வாத்மா மனதிற்கு அகப்படாது I
    இவ்வாத்மா மாறுதலற்றதெனப் பகர்வரே இவ்விதமறிந்து வருத்தம் தவிர்ப்பாயே II

    ——–

    26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
    ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி

    அத ச த்வம்-ஆயினும்,
    ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது
    எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால்,
    மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே,
    ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது.

    அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால்,
    அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.

    இவ்வாத்மாவை எப்பொழுதும் பிறப்பதும் இறப்பதும் என்றே நீ கருதிடினும் I
    இங்ஙனமே யாயினும் பெருந்தோளா! இவ்விதம் வருத்தமுறுதல் சரியன்றே II

    ——–

    27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
    தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

    ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில்,
    ம்ருதஸ்ய ச ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில்,
    தஸ்மாத் அபரிஹார்யே அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக,
    த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ துயரப் படுவது தகாது.

    பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில்,
    இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.

    ஏனெனில் பிறந்தவனுக்கிறப்பு நிச்சயம் இறந்தவனுக்குப் பிறப்பும் நிச்சயமே I
    ஆதலால் தவிர்க்க வியலா இவ் விஷயமதில் நீ வருத்தப்படுவதற்கு அருகதை யன்றே II

    ———

    28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத
    அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா

    பாரத-பாரதா!
    பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை,
    அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை,
    வ்யக்தமத்யாநி-நடுநிலைமை தெளிவுடையது,
    தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ?

    பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது;
    இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?

    உயிரெலாம் தோன்றுமுன் தென் படாதிருந்தன அவை யிறந்த பின் தென்படாது போகின்றனவே I
    அவ் வுயிர்கள் இடையில் மட்டுமே தோன்றுபவை இவ் விஷயத்தில் வருத்தமேன் பரத குலத்தோனே ! II

    ——-

    29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந
    மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய:
    ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி
    ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித்

    கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன்,
    ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான்,
    ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான்,
    ஆஸ்சர்யவத் அந்ய ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான்,
    கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்.

    இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”

    யாரோ ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்க் காண்கிறான் வேறு ஒரு மகான் இவ்வாத்மாவை ஆச்சர்யமாய்ச் சொல்கிறான் I
    மற்றொருவனோ இவ் வாத்மாவை ஆச்சர்யமாய்க் கேட்கின்றான் யாரொருவனும் இவ்வாத்மாவை அறிவதில்லை கேட்பினுமே II[ஆஶ் சர்யவத்
    = அதிசயம் மற்றும் ஆச்சர்யமாய் = அதிசயம் போல் ]

    ———

    30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
    தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி

    பாரத-பாரதா,
    அயம் தேஹீ-இந்த ஆத்மா,
    ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும்,
    நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன்,
    தஸ்மாத் ஸர்வாணி பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும்,
    த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ வருந்துதல் தகாது.

    பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன்.
    ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!

    பரதகுலத்தோனே ! உடல்களனைத் திலுமுள இவ் வாத்மாவை ஒரு போதும் கொல்ல வியலாதே I
    ஆதலால் அனைத்துயிர்களின் பொருட்டும் நீ வருத்த முறுதலென்பது சரியன்றே II

    ——-

    31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
    தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே

    ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும்,
    விகம்பிதும் ந அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது,
    க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத் அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும்
    ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு நன்மை இல்லை.

    ஸ்வ தர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.

    அவ்விதம் தன்தர்மமென்றே நோக்கினும் பயங்கொள உனக்குத் தகுதியன்றே I
    அரசனுக்கு தர்மமாம் போரைக் காட்டினும் மேன்மை தகு கடமை வேறில்லையே II

    ——–

    32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்
    ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம்

    பார்த-பார்த்தா,
    யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும்,
    அபாவ்ருதம் ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில்,
    ஈத்ருஸம் யுத்தம்-இத்தகைய போர்
    ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.

    தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது.
    இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!

    பரந்தப! சொர்க்க வாயில் வடிவிலே திறந்துளது இத்தகை தர்ம யுத்தம் I
    தற்செயலாய் வாய்த்திருக்கும் வாய்ப்பீது பாக்யமுடை வேந்தர்களே டைவர் காண் II[ ஸுகின
    : = பாக்யவந்த = பாக்யத்தை உடைய ]

    ——-

    33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
    தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி

    அத-அன்றி,
    இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை,
    த்வம் ந கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால்,
    தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று,
    பாபம் அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய்

    அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும்,
    கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.

    ஆதலால் தர்மத்துடனி ணைந்துள இப் போர் தனைச் செய்யாதிருப்பாயேல் I
    அச் சமயம் பாவத்தைப் பெற்றிடுவாய் இழப்பாய் செய் கடமையையும் புகழையும் II

    ——-

    34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம்
    ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே

    பூதாநி ச-உலகத்தாரும்,
    தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய,
    அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள்,
    ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன்
    அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அப கீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

    உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும்
    அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

    மேலுமே உலகத்தோர் உனைப்பற்றிப்- பேசுவரே அழியா இழிச் சொல் கூறி I
    பேரோடும் புகழோடு மிருந்தவனுக்கு மரணத்தினும் கொடிதே இவ்விழிச் சொல் II

    ———

    35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
    யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்

    ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து,
    லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ,
    மஹாரதா: த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை,
    பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக,
    மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.

    நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.

    பயத்தினால் போர் விடுத்துப் புறம் போனாயென்றே யுனைக் கருதுவர் பெருந் தேராளிகள் I
    யாவர் முன் மதிப்புயர் வோடிருந்தனையோ அவர் முன் நிச்சயம் சிறுமை யடைவாயே நீ II

    ———

    36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:
    நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்

    தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார்,
    தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப் பழிப்பார்கள்,
    பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல,
    வதிஷ்யந் -சொல்லுவார்கள்,
    தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது

    உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?

    உன் எதிரிகள் உன் திறமை தனை இகழ்ந்தே சொல்லத்தகா பல சொற்களைச் சொல்வாரே I
    அதனினும் மிக்கதோர் துன்பந் தனையே அளிக்க வல்லது வேறேதும் உண்டோ ? II

    ———

    37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
    தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:

    ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய்,
    ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய்,
    தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி மைந்தனே,
    க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு

    கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.

    கொலை யுண்டால் சொர்கமதை யடைவாய் வெற்றி கண்டால் பூமி தனை யனுபவிப்பாய் I
    கௌந்தேயா! ஆதலால் எழுந்திடுவாய் போர் புரியவே நிச்சயம் செய்தவனாய் II

    ——-

    38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
    ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி

    ஸுக – து:கே-இன்பம், துன்பம்,
    லாப – அலாப= பேறு, இழவு,
    ஜய அஜயௌ-வெற்றி, தோல்வி,
    ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு,
    ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக,
    ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்.

    இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு,
    நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.

    இன்ப துன்ப லாப நஷ்டந்தனையும் வெற்றித் தோல்வியும் சமமாயெதிர் கொள்வாய் I
    அதன் பின் தயாராய் யுத்தம் செய்வாய் இவ்விதம் நீ செய்திடில் பாவமடையாய் II

    ——–

    39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
    புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி

    பார்த-பார்த்தா,
    ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு,
    ஸாங்க்யே அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன்,
    து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள்,
    யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன் கர்மபந்தம்
    ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

    இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள்-இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

    ஞானயோக விஷயத்தில் இவ்வறிவையே பகர்ந்தேன் உனக்குப் பார்த்தனே
    கர்மயோக விஷயத்தி லினிக் கேளிதை கர்மபந்தமதை எவ்வறிவுடன் விலக்கிடுவாயோ II

    ——

    40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
    ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்

    இஹ-இதில் (கர்ம யோகத்தில்),
    அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை,
    ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை,
    அஸ்ய தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும்,
    மஹதோ பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

    இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும்-அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

    இதில் முயற்சி வீணாகவில்லையே எதிர் வினைகளு மிதிலில்லையே I
    இந்த தர்மத்தின் சிறிதளவுமே பெரும் பயத்திலிருந்து காத்திடுமே II

    ——-

    41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
    பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்

    குருநந்தந-குருகுலத் தோன்றலே!
    இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது,
    அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின்
    புத்தய:-புத்திகள்,
    பஹுஸாகா-பல கிளைப்பட்டது,
    அநந்தா: ச-முடிவற்றது,

    குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
    உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.

    குரு நந்தனா! இங்கு நிச்சய வடிவாம் புத்தியோ ஒன்று தானுள்ளது I
    நிச்சயம் அற்றோருடைய புத்திகளோ பல கிளை கொண்டும் முடி வற்றதாயுளதே II

    ———-

    1. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
      வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:

    பார்த-பார்த்தா!
    வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்,
    புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்,
    ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழை யென்கிறார்கள்.

    வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்.-தமது கொள்கை ஓழிய மற்றது பிழை யென்கிறார்கள்.

    பார்த்தனே ! தெளிவிலோர் மனமகிழ்ந்து வேத கர்ம பலன் புகழ்களைப் பாடியே I
    அலங்காரச் சொல் கூறி சொர்கமே முடிந்த முடிவாம் வேறில்லை என்பரே II

    ———

    43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
    க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி

    காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள்,
    ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
    ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்,
    போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்,
    க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.

    இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.

    போகத்தில் மனம் மூழ்கி வுயர் சொர்கம் மேலானதென்றே எண்ணி வுயர் பதவியும் I
    போகமும் பெற வேண்டி யுயர் பிறவியும் போதல் கருதி விசேஷச் செயல் செய்வராம் II

    ———-

    44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
    வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே

    தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு,
    போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்,
    வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி,
    ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.

    இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலை பெறாது.

    செல்வ போகப் பற்றும் மிகவுடையோன் அப்பேச்சிலே மனதையு மிழந்தோன் I
    தெளிவில்லா அறிவையு முடையோன் புத்தியுமே பரம் நிலை நிற்பதில்லையே II

    ——–

    45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
    நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்

    வேதா-வேதங்கள்,
    த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
    நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
    நிர்த்வந்த்வ-இருமைகளற்று,
    நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
    நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
    ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

    மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக-இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

    ஆகமங்க ளறிவிக்கும் முக் குண விஷயமாய் அக் குண சாதனமதில் பற்றற்றிருப்பாய் I
    இருமை கடந்தே சத்துவத்தில் நிலைப்பாய் ஈட்டிக் காத்தல் துறந்தும் தன் மயமாவாய் II

    ——

    46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
    தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:

    ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில்,
    யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது,
    ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதங்களினாலும்,
    விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு,
    தாவாந்-அவ்வளவு தான் (பயன்).

    எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது;
    அன்ன பொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.

    எங்குமே நீர் விரிந்து இருக்கையிலே சிறிய நீர் நிலை யென்பதும் பயனுளதோ I
    வேதப் பொருளு ணர்ந்த விற்பனருக்கோ வேத கர்மங்களின் பயனு மம்மட்டே II

    ——–

    47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
    மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி

    தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
    கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
    கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
    தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
    ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.

    தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.

    உனக்கதிகாரம் செயல் செய்தலில் மட்டுமே உனக்கதிகாரம் பயனில் வேண்டாமே I
    கர்ம பலன் நிர்ணயம் நீ செய்யாதே கர்மம் செய்தலில் பற்றற்றும் நீ இராதே

    ——-

    48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
    ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே

    தநஞ்ஜய-அர்ஜுனா!
    யோகஸ்த:-யோகத்தில் நின்று,
    ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி,
    ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு,
    கர்மாணி குரு-தொழில்களைச் செய்க,
    ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும்.

    தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு
    தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.

    தனஞ்ஜயா! பற்றனைத்தும் விலக்கியே அடைந்த, அடையாததில் சமநிலை யெய்தியே I
    யோகத்தி லமர்ந்தே செய் கர்மத்தையே யோகமென்பது மனதின் சம நிலையே II

    ————

    49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
    புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:

    தநஞ்ஜய-தனஞ்ஜயா!
    புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்,
    தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது,
    புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை
    பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.

    தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.

    தனஞ்ஜயா! இப் புத்தி யோகத்தினும் மிகத் தாழ்ந்த தல்லவோ இக் கர்மம் I
    அடைவாயே தஞ்சம் சம புத்தியில், அற்பமாம் பலன் கருதியே செய்கர்மம்
    II[க்ருபணா = அற்பமாம் = வரை யறுக்கப் பட்டது ]

    ——

    50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
    தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்

    புத்தியுக்த:-புத்தியுடையவன்,
    ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை,
    உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான்,
    தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு,
    யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).

    புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான்.
    ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.

    சம புத்தி உடையோன் இவ் வுலகில் விடுகின்றான் புண்ய பாவ மிரண்டையும் I
    சமத்துவமாம் யோக நிலை மேற் கொண்டே திறமையுடன் செய்கடமை யோகமதே II

    ———-

    51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
    ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்

    ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்,
    பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து,
    ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி,
    அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.

    புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி,
    ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.

    சமபுத்தி கூடி ஞானியர் ஞானமடைந்திட்டு கர்ம வினையாம் பலனைத் துறந்திட்டு I
    பிறவியெனும் பந்தம் அறுத்திட்டு பிணி யற்ற பரம்நிலை அடைந்திட்டனரே II

    ——–

    52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
    ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச

    யதா தே புத்தி-எப்போது உனது புத்தி,
    மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை,
    வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ,
    ததா-அப்போது,
    ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும்,
    நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது.

    உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.

    எக்காலம் உன்னுடைய புத்தியே மோஹமெனும் சேற்றினைக் கடந்திடுமோ I
    அக் காலம் நீ கேட்டது பற்றியுமே கேட்க வுளதிலுமே நீ வைராக்யம் அடைவாய் II

    ———

    53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
    ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி

    ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய்,
    தே புத்தி-உனது புத்தி,
    மாதௌ-சமாதி நிலையில்,
    நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது,
    யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின்,
    ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.

    உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில்
    அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.

    பற்பல வேத வாக்யங்களால் கலங்கியஉம் புத்தி எப்பொழுது அசையாமலே I
    ஆத்மனிலே உறுதியாய் நிலை நிற்குமோ அப்பொழுதிலே அடைவாய் யோகத்தையே II

    ———–

    அர்ஜுந உவாச

    54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
    ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    கேஸவ-கேசவா!
    ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
    ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
    கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
    கிம் ஆஸீத-எப்படியிருப்பான்?
    கிம் வ்ரஜேத-எதனையடைவான்?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?

    “அர்ஜுனன் புகன்றான்”
    உறுதியான நிலைத்த அறிவுடையோன் ஆத்மனில் தெளிந்த ஞானமுடையோன் I
    இலக்கண மெதுவோ கேசவரே !அவன் பேசுவது மமர்வதும் நடப்பது மெங்ஙனம் II

    ———-

    ஸ்ரீ பகவாநுவாச

    55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
    ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே

    ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    பார்த-அர்ஜுனா!
    மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும்,
    ப்ரஜஹாதி-துறக்கிறான்,
    யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
    ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
    ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பார்த்தனே ! எப்பொழுதிலே மனதிலே எழும் ஆசைகள னைத்தும் விலக்கியே நிற்கிறானோ Iதன்னிலே தனைக் கண்டு திருப்தி காண் பானோ அப்பொழுது நிலைத்த ஞான முடையோன் என்பரே II

    ———

    56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
    வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே

    து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய்,
    ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய்,
    வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
    முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.

    துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”

    துக்கங்களில் கலங்கிடா மனதுடனும் சுகங்களில் ஏங்குதலைத் தவிர்த்தவனும் I
    விருப்பு பய கோபம் நீங்கி யுள்ளவனாம் அம் முனியை நிலைத்த அறி வுடையோன் என்பர்II

    ———–

    57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
    நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    ய:-எவன்,
    ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும்,
    ப்ராப்ய-அடைந்து,
    ந அபிநந், ததி -மகிழ்வதில்லை,
    ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை,
    ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ,
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும்
    பகைப்பதுமின்றி யிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    யாரொருவ னனைத்திலும் பற்றின்றியும் அவ் வவ் வின்ப துன்ப மடைந்ததனில் I
    மகிழ்வும் வெறுப்பும் கொள்வதில்ளையோஅவனுடை ஞானம் நிலை யானதாம்
    II

    ———–

    58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
    இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும்,
    ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல்,
    அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை,
    யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்)
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.

    எப்பொழுதங் கங்களைப் யெப்புறத்தினின்றும் உள்ளிழுக்கு மாமைபோல், புலன் களை எல்லாம் I
    புலப் பொருட் களினின்று முள்ளிழுப்பானோ அவனுடை ஞானம் உறுதி பெற்றதாமே II

    ——–

    59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
    ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே

    நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து,
    விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன,
    ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை,
    அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும்,
    ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

    தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

    புலப் பொருட்களைத் தவிர்த்த மனிதன் தன், அவை நீங்கியும், ரஸமாம் பற்று விலகாதே I
    உயர் ஆன்மாவை யறிந்த வவனுக்கே அந்த ரஸப் பற்று முழுதும் விலகிடுமே II

    ——-

    60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
    இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:

    கௌந்தேய-குந்தியின் மகனே,
    ஹி-ஆனால்,
    யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
    புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட,
    ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள்,
    ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.

    குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

    குந்திமகனே ! ஏனெனில் முயற்சி யுடைய புத்திமானான மனிதனின் மனத்தையும் I
    கொந்தளிப் பியல்புடைப் புலன்கள் பலமாக விழுத்துச் செல்கின்றனவே II

    ———

    61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
    வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி,
    மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு,
    யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய்,
    யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ,
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

    அவை யனைத்தையும் தன் வயமாக்கிய விவேகி குவிந்த மனதுடன் எனை லக்ஷியமாய் அமர்வன் I
    எவனுடைப் புலன்கள் வசப்பட்டிருக்குமோ அவனுடை யறிவு தான் நிலை யானதாகுமே II

    ———–

    62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
    ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே

    பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது,
    தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது,
    ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது,
    காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

    மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

    புலப்பொருட்களையே சிந்திக்கும் மனிதனுக்கு அவ் விஷயங்களிலே பற்றும் படர்ந்தது I
    பற்றுதலினாலே ஆசையும் அலர்ந்தது ஆசையினாலே கோபமும் தோன்றியது II

    ——–

    63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
    ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி

    க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது,
    ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல்,
    ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம்,
    புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான்.

    சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்;
    புத்தி நாசத்தால் அழிகிறான்.

    கோபத்தினாலே மயக்கமும் மலர்ந்தது மயக்கத்தினாலே நினைவிழத்தல் வந்தது I
    நினைவிழத்தலாலே மதி நாசமும் ஏற்பட்டது மதி நாசத்தாநல மனிதன் மடிகின்றானே II

    ————–

    64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
    ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி

    விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்),
    ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி,
    ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
    விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு,
    ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.

    விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.

    மாறாக! அடங்கிய மனதுடையோன் விருப்பு வெறுப்பற்ற தன் வயமுடையோன் I
    புலன் களைப் புலப் பொருட்களில் செலுத்தினும் தெளிந்த மனவமைதியை அடைகின்றான் II

    ———–

    65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
    ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே

    ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்,
    ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி:
    உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது,
    ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன்,
    புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது

    சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.

    மனவமைதி தோன்றிடில் இவனுடைய துக்கங்க ளனைத்தும் அழிவடையுமே I
    ஏனெனில், தெளிவாம் மனமுடைய ஞானியினறிவு விரைவில் நிலை நிற்குமே II

    ———–

    66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
    ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்

    அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு,
    புத்தி நாஸ்தி-புத்தியில்லை,
    அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை,
    அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை,
    அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?

    யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோ பாவனை இல்லை.
    மனோ பாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தி யில்லாதவனுக்கு இன்பமேது?

    மனமடங்கா தோனுக்குப் புத்தியில்லை மனமடங்கா தோனுக்குத் தியானமில்லை I
    தியானமில்லா தோனுக்கமைதி யில்லை அமைதியில்லா தோனுக்கு ஸுகமெங்கே ? II

    ———

    67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
    ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி

    ஹி-ஏனெனில்,
    அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல்,
    சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
    யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ,
    தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.

    இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம் மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவது போல் அறிவை மோதுகிறது.

    காரணம் அலையும் புலன்கள் பின்னே எம் மனம் சென் றலையுமோ அங்ஙனமே I
    காற்றினால் நீரிலலையும் படகு போலே அம் மனம் அவனறிவையும லையச் செயுமே II

    ——

    68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
    இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா

    மஹாபாஹோ-பெருந்தோளாய்,
    தஸ்மாத்-ஆகையால்,
    யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள்,
    இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
    நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ,
    தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.

    ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலை கொண்டது.

    ஆகையால் பெருந்தோள் படைத்தவனே !எவருடை புலன்கள் புலப் பொருளிலிருந்தே I
    முற்றிலும் அடங்கிய நிலை யிலுள்ளதோ அவருடை ஞானம் நிலை நின்றிருக்குமே II

    ———-

    69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
    யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:

    ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்,
    தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்,
    யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ,
    பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.

    எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்.
    மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.

    எல்லா வுயிர் களுக்குமெது விருளோ வதிலே விழிப்புடனி ருப்பான் மன மடங்கியோன் I
    எதில் உயிரினங்கள் விழித் திருக்குமோ அதில் இருளிலி ருப்பான் தனை யறிந்த முனி II

    70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
    தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ

    யத்வத்-எவ்விதம்,
    ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்,
    ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
    தத்வத்-அதே விதமாக,
    யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ),
    ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
    காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

    கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

    எங்கும் நிரம்பித்ததும்பி அசைவற்று நிலை நிற்கும் கடலை யடைந்து நதிகள் தந்நிலை இழக்கின்றனவோ I
    அவ் விதம் தனை யறிந்தோனைப் பொருட்கள் சென்றடையினும் அவனமைதி மாறாதாம், போக விரும்பி அதை யடையானாம் II

    ———

    71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
    நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி

    ய: புமாந்-எந்த மனிதன்,
    ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
    நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான்,
    நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான்,
    ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.

    இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.

    எம் மனிதன் ஆசைகளனைத்தும் துறந்து நானெனது என்பதனைத்தும் இழந்து I
    ஏங்குதல் சிறிதுமின்றி உலாவிடுவானோ அவன் அடைகின்றானே அமைதியை

    ———

    72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
    ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி

    பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி,
    ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை,
    அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும்
    அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு,
    ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-ப்ரஹ்ம நிர்வாண மெய்துகிறான்.

    பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை.
    இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

    ஓபார்த்தனே !
    இதுவன்றோ பிரம்மத்தை யடைந்தோன் நிலை இந்நிலை யடைந்த பின் மோகமென்பதில்லை I
    அந்திமக் காலத்திலும் அதில் நிலைத்தே திரும்பி வாரா முக்தி நிலை யடைகின்றானே II

    ———–

    ஸ்ரீ பகவத்கீதை –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்–செயலை செயல் யோகமாக்குதல்

    அர்ஜுன உவாச

    1. ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
    தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஸவ

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    ஜநார்தந-ஜநார்த்தனா,
    கர்மண: புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது,
    தே மதா சேத்-நின் கொள்கையாயின்,
    தத் கோரே கர்மணி-இந்தக் கொடிய செய்கையில்,
    மாம் கிம் நியோஜயஸி கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

    “அர்ஜுனன் புகன்றான்”
    ஜனார்த்தனா! ஞானம் கர்மத்தினும் மேலாமென்பது உம்முடை கருத்தானால் |
    அவ் வமயம் கேசவா! எனை யேன் கொடியதான வினையதில் ஏவுகின்றீர்||

    2. வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
    ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்

    வ்யாமிஸ்ரேண இவ வாக்யேந-குழம்பியது போன்ற பேச்சினால்,
    மே புத்திம் மோஹயஸி இவ-என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல!
    யேந அஹம் ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை தருமென்பதை,
    தத் ஏகம் நிஸ்சித்ய வத-அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்

    குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை
    தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.

    முரண்பாடுளது போன்ற சொற்களாலென் புத்தியைத் தாம் மயக்குவது போலுள்ளது |
    நானெதனால் உயர் நலம் பெறுவேனோ அதிலொன்றை நிச்சயித்துப் பகர வேண் டுமே ||

    ———-

    ஸ்ரீ பகவாநுவாச

    3. லோகேऽஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
    ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்

    ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
    லோகே மயா-இவ்வுலகில் என்னால்,
    த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை,
    புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது,
    ஸாங்க்யாநாம் ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால்,
    யோகிநாம் கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டு வித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பாவமற்றவனே ! ஆதியிலென்னா லிப் புவியில் தத்வ விசாரம் செய்வோனுக்கு ஞான யோகமாம் I
    செயல்களைச் செய்வோனுக்கு கர்ம யோகமாம், இவ் விரு வாழ்க்கை முறை பகரப் பட்டதாம் II

    ——–

    4. ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புரு÷ஷாऽஸ்நுதே
    ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி

    புருஷ: கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால்,
    நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற நிலை அடைவதில்லை,
    ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
    ஸித்திம் ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,

    தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை.
    துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

    மனிதன் செயல்களைத் துவங்காததால் செயலற்ற முக்திநிலை அடை வதில்லையே I
    செயல்களை மட்டுமே துறப்பதனால் செயலில்லா நிறை நிலை எய்துவதில்லையே II

    ———–

    5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
    கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:

    ஹி கஸ்சித் ஜாது க்ஷணம் அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும்,
    அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை,
    ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும் குணங்களே,
    ஸர்வ: அவஸ:-எல்லா உயிர்களையும் தன் வசமின்றி,
    கர்ம கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.

    எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.

    யாரும் கணப் பொழுதேனும் செயலில் ஈடுபடா திருப்பதில்லையே ஏனெனில் I
    இயல்பான குணங்களினாலே யெல்லோரும் தன் வயமின்றிச் செயலிலீடு படுகிறார்களே II


    6. கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
    இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே

    ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா,
    கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக் கொண்டு,
    இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை,
    மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ,
    ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப் படுகிறான்.

    கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.

    எவன் செயல் புலன்களையே நன்கடக்கியும் மனதால் புலப்பொருட்களையே நினைந்தும் I
    மனம் கலங்கி யிருக்கின்றானோ அவனைப் பொய் யொழுக்கமுடை யோனென்றே பகர்வர் II

    ———

    7. யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
    கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே

    து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா,
    ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
    நியம்ய அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல்,
    கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ,
    ஸ விஸிஷ்யதே-அவன் சிறந்தவன்.

    அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

    அர்ஜுனா, அவ்விதமின்றி யெவன் தன் புலன்களை மனத்தினால் நன்கடக்கியும் I
    பற்றற்றும் செயல் புலன்கள் மூலமாய் செயல் யோகத்தைத் துவங்குமவன் சிறந்தோன் II

    ——-

    8. நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
    ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:

    நியதம் கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்,
    ஹி அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ,
    அகர்மண:-தொழிலின்றி,
    தே ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப் பேணுதல் கூட,
    ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.

    விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கில்லாமல் போய் விடும்.

    விதிக்கப்பட்டுள செயல்களை நீ செய்வாய் செயல் செய்யாமை யினும் செய்தல் சிறந்ததாம் I
    மேலுமெவ்விதச் செயலையும் செய்யாதோன் உடலைப் பேணுத லென்பது மியலாது போகுமே II

    ———–

    9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந:
    ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர

    யஜ்ஞார்தாத் கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது,
    அந்யத்ர அயம் லோக கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது,
    கௌந்தேய முக்தஸங்க:-குந்தி மகனே, பற்றைக் களைந்து,
    ததர்தம் கர்ம ஸமாசர-அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.

    வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது-ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.

    வேள்விச் செயல் தவிரப் பிற செயல்களால் இம் மனித உலகம் பந்தப் படுகின்றதே I
    குந்திமகனே ! பற்றின்றிச் செயல்களையே வேள்வியின் பொருட்டு நன்கியற்றுவாயே II

    ———-

    10. ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
    அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்

    புரா-முன்பு,
    ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து,
    உவாச-சொல்லினான்,
    அநேந ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள்,
    ஏஷ: வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களை யெல்லாம் தருவதாக ஆகட்டும்.

    முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க் குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

    ஆதியில் பிரம்ம தேவன் வேள்வியுடன் உலகோரைத் தோற்றுவித்து வேள்வியினால் I
    வளமடைவீர்! ஈதுங்களுக்கு இஷ்டமானதை வழங்கிடும் காமதேனுவா கட்டுமென்றார் II

    ———–

    11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
    பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத

    அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்,
    தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்,
    பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால்,
    பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை,
    அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.

    இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
    (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

    இதன் மூலம் தேவர்களைப் போஷியுங்கள் அவர்களும் உங்கதளப் போஷிக்கட்டும் I
    இவ்விதம் ஒருவரை யொருவர் பேணுதலால் உயர்வான நன்மையை யெய்துவீர்களாம் II

    ——–

    12. இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
    தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:

    யஜ்ஞபாவிதா: தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்,
    வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம்,
    ஹி தாஸ்யந்தே-தருவர்,
    தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு,
    ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன்,
    ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.

    வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”

    வேள்வியால் பேணப்பட்ட அத் தேவர்களுங்களுக்குப் பிடித்த போகங்களை நிச்சய- I
    மளிப்பர்; அவர்களளித்தவைகளை மீண்டு மளிக்காது தானே யுண்ணுவோன் கள்வனாம் II

    ————-

    3. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
    புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்

    யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்,
    ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்,
    யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்,
    தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.

    வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்.
    தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.

    வேள்வியி லெஞ்சியதை யுண்ணும் சான்றோர் எல்லாப் பாவங்களி லிருந்தும் விடுபடுகின்றனர்I
    ஆனாலெவர்கள் தமக்காகவே சமைக்கும் அத்தீச் செயலோர் பாவத்தையே உண் கின்றனர்II

    —————

    14. அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
    யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:

    பூதாநி அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன,
    பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால் உணவு தோன்றுகிறது,
    பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை வேள்வியால் ஆகிறது,
    யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.

    அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது.
    மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.

    உணவினின்று உயிரினங்க ளுருவாகின்றன-மழையினின்று உணவுகள் உண்டாகின் றன I
    வேள்வியினின்று மழைகள் பொழிகின்றன வேள்வியோ செயல்களிலிருந்து விளைகின்றதே II

    ——–

    15. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
    தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்

    கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்,
    ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது,
    தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்,
    நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

    செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது.
    ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

    வேதத்திலிருந்து செயல்களு திக்கின்றன வேதமோ அழியாப் பிரஹ்ம்மனிடமு திக்கின்றன- I
    வென் றறிக; ஆதலாதலெங்குமுள்ள வேதமோ வேள்வியில் நித்யமாம் நிலை நிற்கின்றதே II

    ————

    16. ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
    அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி

    பார்த ய: இஹ-பார்த்தா எவன் இவ்வுலகில்,
    ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை,
    ந அநுவர்தயதி-பின்பற்றி ஒழுகாதவனாக,
    இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ,
    ஸ: அகாயு:-அவன் பாப வாழ்க்கையுடையான்,
    மோகம் ஜீவதி-(அவன்) வாழ்க்கை விழலேயாம்.

    இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கை யுடையான்;புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

    அர்ஜுனா! யாவனிங்கு இவ் விதமாய்ச் சுழலும் படைப்புச் சக்கரம் பின் பற்றானோ I
    பாவ வாழ்வும், புலனின் பத்திலுமவன் திளைத்தே வீண் வாழ்வு வாழ்கின்றானே II

    ———

    17. யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:
    ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே

    து ய: மாநவ:-ஆனால் எந்த மனிதன்,
    ஆத்மரதி ஏவ ச-தன்னிலேதான் இன்புறுவான்,
    ஆத்மத்ருப்த ச-தன்னிலேதான் திருப்தியடைவான்,
    ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத்-தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில்,
    தஸ்ய கார்யம் ந வித்யதே-அவனுக்குத் தொழிலில்லை.

    தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.

    ஆனாலாத்மாவிலே திளைத்திருக்கும் மனிதன் ஆத்மாவிலேயே திருப்தி யுடனி ருப்பவனாய் I
    ஆத்மாவிலேயே சந்தோஷமுள்ள வனாயிருக்கும் அவனுக்குச் செய்ய வேண்டிய தே துமில்லையே II

    ———

    18. நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந
    ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:

    தஸ்ய இஹ க்ருதேந-அவனுக்குச் செய்கையில்,
    கஸ்சந அர்த ந-யாதொரு பயனுமில்லை.
    அக்ருதேந: ஏவ ந-செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை,
    ச ஸர்வபூதேஷு-எந்த உயிரிலும்,
    அஸ்ய அர்த வ்யபாஸ்ரய:-அவனுக்கு எவ்வித பயனும்,
    கஸ்சித் ந-சிறிது கூட இல்லை.

    அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை;எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.

    இப்புவியிலிருக்கும் இஞ்ஞானிக்கு செயலைச் செய்தும், செய்யாததாலும் பலநேதுமில்லை I
    இன்னும் இவனுக்கு எவ் வுயிர்களிடத்தும் பயன் நாடிச் சார்ந்திருக்க வேண்டுவதில்லையே II

    ———-

    19. தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
    அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:

    தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி,
    கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை,
    ஸமாசர-செய்து கொண்டிரு,
    ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல்,
    கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்,
    பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.

    ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு.
    பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

    ஆதலால் நீ பற்றின்றிச் செய்ய வேண் டிய செயல்களை எப்பொழுதும் நன்கியற்றுவாய் I
    ஏனெனில் பற்றற்று செயல்களைச் செய்யும் மனிதன் பரம நிலை எய்துகின்றான் II

    ——-

    20. கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
    லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி

    ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும்,
    கர்மணா ஏவ-செய்கையாலேயே,
    ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்,
    லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும்,
    அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.

    ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும்
    நீ தொழில் புரிதல் தகும்.

    ஏனெனில் கடமைகளின் மூலம் முக்தியையும் ஜனகன் முதலானோர்கள் அடைந்தனரே I
    நீ யுமுலகை நல் வழிப் படுத்த வேண்டியே கடமையைச் செய்வதற்குரிய வனாகின்றாய் II

    —–

    21. யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:
    ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே

    ஸ்ரேஷ்ட யத் யத் ஆசரதி-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ,
    இதர ஜந: தத் தத் ஏவ-மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்),
    ஸ யத் ப்ரமாணம் குருதே-அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ,
    லோக தத் அநுவர்ததே-உலகத்தார் அதையே தொடருகிறார்கள்.

    எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

    மேலோன் எதை யதைக் கடைப் பிடிக்கின் றானோ உலகோர் அதை யதையே யனுசரிக்கின்றனரே I
    அவனெதைப் பிரமாணமாய்க் கொள்கின்றானோ அதனையே உலகமும் பின்பற்றுகின்றதே II

    ——-

    22. ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந
    நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி

    பார்த-பார்த்தா,
    மே-எனக்கு,
    த்ரிஷு லோகேஷு-மூன்றுலகத்திலும்,
    கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி-யாதொரு கடமையுமில்லை,
    அவாப்தவ்யம் அவாப்தம் ச ந-பெற்றிராத பேறுமில்லை,
    கர்மணி ஏவ வர்தே-தொழிலிலேதான் இயங்குகிறேன்.

    பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.

    அர்ஜுனா! மூவுலகிலும் எனக்குச் செய்ய வேண்டிய தேதுமில்லையே ! இனியுமே பெற- I
    வேண்டியதும் வேண்டாததும் ஏதுமில்லை இருப்பினும் செயலில் நான் ஈடுபடுகின்றேனே II

    ——-

    23. யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:
    மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

    ஹி பார்த-ஏனெனில் பார்த்தா!
    ஜாது அஹம் அதந்த்ரித:-ஒருக்கால் நான் சோம்பலில்லாமல்
    யதி கர்மணி ந வர்தேயம்-எப்போதும் தொழில் கொண்டிராவிடின்,
    ஸர்வஸ: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே-எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா,
    எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    பார்த்தனே ! ஏனெனில் எப்பொழுதும் நான் சோம்பலின்றிச் செயல்களி லீடுபடாவிடில் I
    என் பாதயையே யுதாரணமாய் மனிதர்கள் என்றுமே எவ் விதத்திலும் பின் பற்றுவரே II

    ——-

    24. உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
    ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:

    அஹம் கர்ம ந குர்யாம் சேத்-நான் தொழில் செய்யாவிட்டால்,
    இமே லோகா: உத்ஸீதேயு-இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்,
    ஸங்கரஸ்ய கர்தா-குழப்பத்தை ஆக்கியோன்,
    இமா: ப்ரஜா:-இந்த மக்களை,
    உபஹந்யாம் ஸ்யாம்-கொல்வோன் ஆவேன்.

    நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்;
    குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.

    செயல்களை யான் செய்யா திருப்பேனாகில் இப் புவன மனைத்தும் அழிந்து போகும் I
    மேலும் நான் குலக் குழப்பம் செய்தவனாவேன் இம் மக்களனைவரையும் அழித்தவனாவேன் II

    —–

    25. ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
    குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம்

    பாரத-பாரதா,
    அவித்வாம்ஸ: கர்மணி ஸக்தா:-அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய்,
    யதா குர்வந்தி-எப்படித் தொழில் செய்கிறார்களோ,
    ததா வித்வாம்ஸ: அஸக்த:-அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி,
    லோக ஸங்க்ரஹம் சிகீர்ஷு-உலக நன்மையை நாடி,
    குர்யாத்-தொழில் செய்ய வேண்டும்.

    பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.

    பரத குலத்தோனே ! செயல் பற்றி னா லெவ்விதம் அறிவிலோர் செயல்களைச் செய்வாரோ அவ் விதம்
    அறிவுளோர் உலக நன்மையைக் கருதியே பற்றற்றுச் செயல்களைச் செய்ய வேண்டுமே II

    ———–

    26. ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
    ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்

    யுக்த: வித்வாந்-அறிவுடையோன்,
    கர்மஸங்கிநாம் அஜ்ஞாநாம்-தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு,
    புத்திபேதம் ந ஜநயேத்-புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
    ஸர்வகர்மாணி ஸமாசரந்-எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி,
    ஜோஷயேத்-(அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்.

    அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது.-அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.

    செயலில் பற்றுள்ள அறிவிலோர் புத்தியிலே ஞானியவன் குழப்பமுண்டு பண்ணலாகாதே I
    நன்றாகத் தானும் செயல்களை நன்கியற்றியே அவர்களையும் செயலிலீடுபடச் செய வேண்டுமே II

    ——–

    27. ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
    அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே

    ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
    கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
    அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
    கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

    எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
    அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

    எவ் வகையிலும் பிரகிருதியின் குணங்களால் செயல்களனைத்தும் செய்யப் படுகின்றன I
    அகங்காரத்தால் மனம் மயங்கி யிருப்போன் செய்பவன் நான் என்றெண்ணி யிருக்கின்றானே II

    ————

    28. தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:
    குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே

    து மஹாபாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
    குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
    தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
    குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
    இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.

    குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், குணங்கள்
    குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.

    ஆனால், பெருந்தோளா!குணங் களுமவை தம் செயல்களின் தத்துவத்ததயு முணர்ந்தோன் I
    குணத் தோன்றல் குண வடிவாம் பொருட்களில் செல்கின்றன வென்றே பற்றற்றிருப்பான் II

    ————–

    29. ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு
    தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்

    ப்ரக்ருதே: குணஸம்மூடா:-இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள்,
    குணகர்மஸு ஸஜ்ஜந்தே-குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்,
    தாந் அக்ருத்ஸ்நவித:-அந்த முற்றும் அறிந்திராத,
    மந்தாந் ந விசாலயேத்-சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது.

    இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்.சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.

    பிரகிருதி குணங்களால் நன்கு மயங்கியோர் குணக் கர்மங்களில் பற்று வைக்கிறார்கள் I
    முற்றுமறியா அம் மந்த புத்தி யுடையோரை முற்றுமறிந்தோன் கலங்கச் செய்யலாகாதே II

    ————–

    30. மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா
    நிராஸீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:

    அத்யாத்மசேதஸா:-என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக,
    ஸர்வாணி கர்மாணி-எல்லாச் செய்கைகளையும்,
    மயி ஸந்ந்யஸ்ய-என்னில் அர்ப்பணம் செய்து விட்டு,
    விகதஜ்வர:-மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்,
    நிராஸீ நிர்மம:
    பூத்வா-ஆசை நீங்கி, எனது என்பது அற்று,
    யுத்யஸ்வ-போர் செய்.

    எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.

    ஆத்மனில் வைத்த மனதுட னிருந்திடு எல்லாச் செயல்களையு மென்னிடமளித்திடுI
    எதிர்பார்ப் பெனதென்றெண் ணங்கதளந்திடு மனக் கொந் தளிப்பின்றிப் போ
    ர் புரிந்திடு II

    ————-

    31. யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:
    ஸ்ரத்தாவந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி:

    யே மாநவா: அநஸூயந்த:-எந்த மனிதர் பொறாமையின்றி,
    ஸ்ரத்தாவந்த:-சிரத்தையுடையோராய்,
    மே இதம் மதம்-என்னுடைய இந்த கொள்கையை,
    நித்யம் அநுதிஷ்டந்தி-எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ,
    தே அபி கர்மபி: முச்யந்தே-அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

    என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப்
    பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

    எம் மனிதர்கள் சிரத்தை யுடன் கூடி நின்று என்னுடை கொள்கையைக் குறை காணாமல் I
    இவ் வுபதேசத்தின் படி வாழுமவர்களும் செயல்களினால் விடுபடு கின் றார்களே II

    ——–

    32. யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
    ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:

    து யே அப்யஸூயந்த:-யாவர் பொறாமையால்,
    மே எதத் மதம் ந அநுதிஷ்டந்தி-என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ,
    தாந் அசேதஸ:-அந்த மூடர்களை,
    ஸர்வஜ்ஞாந விமூடாந்-முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும்,
    நஷ்டாந் வித்தி-நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

    என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ,
    எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.

    எவர்கள் யான் கூறிய இவ் வுபதேசத்தைக் கடைப் பிடியாது குறை கண்டும் வாழ்ந்திடில் |
    எவ்வறிவிலும் குழப்பமுடை அவர்களை விவேகமிலாது நஷ்டமடைந் தோனாயறிதி ||

    ————

    33. ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
    ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி

    பூதாநி ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
    ஜ்ஞாந்வாந் அபி-ஞானமுடையவன் கூட,
    ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே,
    சேஷ்டதே-நடக்கிறான்,
    நிக்ரஹ: கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?

    ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான்.
    உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.

    ஞானத்தை யுடையோனும் தன்னுடைய இயல்பு சார்ந்தே இயங்குகின்றான் எல்லா I
    உயிர்களு மியல்பையே அனுசரிக்கின்றன இதைத் தடுப்பதாலாகப் போவதென்ன? II

    ———

    34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
    தயோர்ந வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ

    இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில்,
    ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன,
    தயோ: வஸம் ந ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது,
    ஹி தௌ அஸ்ய பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்.

    இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
    இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.

    ஒவ்வொரு புலன்களின் விஷயத்திலும் விருப்பும் வெறுப்பும் அமைந்துள்ளன I
    அவைகளினிடத்தில் வசப்படலாகாது ஏனெனில் அவை இவனுக்கு விரோதிகளாம் II

    ——–

    35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
    ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:

    ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்,
    விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது,
    ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம்,
    பரதர்ம: பயாவஹ:-பரதர்மம் பயத்துக்கிடமானது.

    நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.

    திறமையோடு செயும் பிறர் தர்மந் தன்னிலும் குணங்களற்ற தன் தர்மம் மீலானதாம் I
    மரணமும் தன் தர்மத்தில் மேன்மையாம் பிறர் தர்மமோ அபாயத்தை யளித்திடுமாம் II

    ————

    அர்ஜுந உவாச

    36. அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:
    அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
    அத அயம் பூருஷ:-பின் இந்த மனிதன்,
    அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும்,
    பலாத் நியோஜித: இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல்,
    கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?

    அர்ஜுனன் புகன்றான்”
    வ்ருஷ்ணி குலத்தோனே! இனி யிம் மனிதன் விருப்ப மில்லாமலி ருக்கும் பொழுதும் I
    பலமாகத் தள்ளி விடப் பட்டவன் போலே எதனால் ஏவப்பட்டுப் பாவம் செய்கிறான்? II

    ————–

    ஸ்ரீ பகவாநுவாச

    37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
    மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்

    ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான்,
    ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
    ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும்,
    மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம்,
    யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

    பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது;பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

    ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    இதுவே வேட்கையும் இதுவே கோபமுமாம் இவையோ ரஜோ குணத்தில் தோன்றியவையாம் I
    இங்கே யிதை அனைத்தையும் விழுங்குமெனவும் இதை மஹா பாவியுமாய் எதிரியுமா யறிவாயே II

    ————–

    38. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
    யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்

    யதா தூமேந வஹ்நி- எப்படி புகையினால் தீயும்,
    மலேந ஆதர்ஸ: ச-அழுக்கால் கண்ணாடியும்,
    ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ,
    யதா உல்பேந கர்ப ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ,
    ததா தேந இதம் ஆவ்ருதம்-அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

    புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும்
    இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

    எங்ஙனம் நெருப்பைப் புகை சூழ்ந்துளதோ கண்ணாடி அழுக்கினால் மறைக்கப் பட்டுளதோ I
    கருவை கருப்பை எவ்விதம் மூடியுளதோ அவ்விதம் அதனாலிது மறைக்கப் பட்டுளதே II

    ———

    39. ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
    காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச

    ச கௌந்தேய-மேலும் குந்தியின் மகனே,
    துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும்,
    காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும்,
    ஜ்ஞாநிந: நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை,
    ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

    குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

    ஞானிகளுக் கெப்பொழுதும் பகையதுவாய் எளிதினில் நிறைவினை யடையாததுமாய் I
    குந்திமகனே ! வேட்கை யெனுமித் தீயினால் ஞானம் மூடி மறைக்கப்பட் டுளது காண் II

    ———-

    40. இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
    ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்

    இந்த்ரியாணி மந: புத்தி-இந்திரியங்களும், மனமும், புத்தியும்,
    அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர்,
    ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து,
    தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.

    பொருள் : இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர்.
    இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.

    இந்திரியங்களும் மனமும் புத்தியும் இவைகளே இதனுடைய இருப்பிடமாம் I
    இவைகளின் வழியாக ஞானத்தை மறைத்து இது உடல் உடையோனை மயக்குகின்றதே II

    ————

    41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
    பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்

    தஸ்மாத் பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே,
    ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
    ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய,
    ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

    பொருள் : ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.

    பரத குலக் காளையே ! ஆகையால் ஆதியில் நீ புலன்களை யெலாம் நன்றாய் வசப்படுத்தி I
    ஞான விஞ்ஞான மிவைகளை யழித்திடும் இப் பாவியை நிச்சயம் விலக்கி விடு II

    —————

    42. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
    மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:

    இந்த்ரியாணி பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன என்பர்,
    இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும் மனம் மேல்,
    மநஸ: து பரா புத்தி-மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்,
    புத்தே: பரத து ஸ:-புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

    பொருள் : இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்;
    மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

    புலன்களை தேகத்திலும் மேலாய்ச் சொல்வர் புலன்களைக் காட்டிலும் மேலானதாம் மனம் I
    மனதினும் மேலானதாம் புத்தி யென்பர் புத்தியைக் காட்டிலும் மேலானவன்-
    அவன் II

    43. ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
    ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்

    ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம் புத்திக்கு மேலான,
    புத்த்வா-பொருளை (ஆத்மாவை) உணர்ந்து,
    ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு,
    துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம்,
    ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

    இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

    பெருந்தோளாய்! இங்ஙனம் புத்தியினும் மேலாம் பரத்தை யறிந்து, நன்கடக்கியே I
    மனதை மனதால், எளிதினில் வெல்லவியலா ஆசை வடிவாம் பகைவனை அழிப்பாய் நீயே ! II

    ———

    ஸ்ரீ பகவத்கீதை — நான்காம் அத்தியாயம் –ஞான கர்ம ஸந்யாஸ யோகம்–அறிவால் செயலை விலக்கி அறிதல் ”

    ஸ்ரீ பகவாநுவாச

    1. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்
    விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்ரவீத்

    ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    இமம் அவ்யயம் யோகம்-இந்த அழிவற்ற யோகத்தை,
    அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்-நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
    விவஸ்வாந் மநவே ப்ராஹ-விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான்,
    மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்-மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    இந்த அழிவில்லா யோகத்தை யான் ஆதித்யனுக்குப் பகர்ந்தேன் |
    ஆதித்யன் மனுவுக்குப் புகன்றார் மனு இஷ் வாகுவுக்குக் கற்பித்தாரே ||

    ——–

    2. ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
    ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப

    பரந்தப-எதிரிகளை எரிப்பவனே !
    ஏவம் பரம்பராப்ராப்தம்-இவ்விதம் வழிவழியாக வந்த
    இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்,
    ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகுகாலமாக,
    ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.

    இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர்.
    பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.

    இவ்வாறு பரம்பரையாய் வழங்கப்பட்ட இதனை இராஜரிஷிகள றிந்திருந்தனர் I
    எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா!அந்த யோகமானது காலப் போக்கில் மறைந்த
    தே II

    ————

    3. ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதந:
    பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்

    மே பக்த: ஸகா ச அஸி-என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய்,
    இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக:-ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை,
    அத்ய மயா தே ப்ரோக்த:-இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது,
    ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம்-ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது.

    அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்,
    நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.

    என் பக்தனும் தோழனுமாய் யுள்ளாய் ஆதலால் அத் தொன்மையான அதே யோகம் I
    இத்தினம் என்னாலுனக்கு இயம்பப் பட்டது ஏனெனில் இது மேலான இரஹஸ்யமாம் II

    ———

    அர்ஜுந உவாச

    4. அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
    கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    பவத: ஜந்ம அபரம்-உன் பிறப்பு பிந்தியது
    விவஸ்வத: ஜந்ம பரம்-விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது,
    த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி-நீ இதை ஆதியில் சொன்னவனென்று,
    ஏதத் கதம் விஜாநீயாம்-நான் தெரிந்துகொள்வதெப்படி?

    அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது.
    நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?

    “அர்ஜுனன் புகன்றான்”
    உம்முடையப் பிறப்பென்பது பிந்தியது கதிரவனின் பிறப்பென் பது முந்தியது I
    ஆதியில் தாங்கள் தான் உபதேசித்தீர்கள் என்பதை யான் எங்ஙன மறியலாகும் II

    ஸ்ரீபகவாநுவாச

    5. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
    தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    பரந்தப அர்ஜுந-அர்ஜுனா,
    மே தவ ச-எனக்கும் உனக்கும்,
    பஹூநி ஜந்மாநி வ்யதீதாநி-பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன,
    தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த-அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்,
    அஹம் வேத-நான் அறிவேன்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
    உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    எனக்கும் உனக்கும் அர்ஜுனா! பலப்பல பிறவிகள் கடந்து போயின I
    எதிரிகளை வாட்டுபவனே ! அவை யெலாம் நன்கறிவேன் நான், நீயோ வறிய மாட்டாய் II

    ——–

    6. அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
    ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா

    அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
    பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
    ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
    ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.

    ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

    பிறப்பற்றவன் நான் அழியாதிருப்பினும் உயிர்களுக் கெல்லாம் ஈசனாயிருப்பினும் I
    என்னுடைய பிரகிருதியை வசப் படுத்தியே என்னுடைய மாயையால் அவதரிக்கின்றேனே II

    ————-

    7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
    அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்

    பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது,
    தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய்,
    அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ,
    ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

    பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ,
    அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

    பரதவம் சத்தோனே ! எப்பொழுதெலாம் தர்மத்திற்கு நலிவு ஏற்படுகின்றதோ I
    அதர்மத்திற்கு எழுச்சியும் ஏற்படுகின்றதோ அப்பொழுது எனை யான் தோற்று விக்கின்றேனே II

    —————

    8. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
    தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே

    ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும்,
    துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும்,
    தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும்,
    யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

    நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும்
    நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

    ஸந் மார்கத்தோரைக் காக்கும் பொருட்டும் தீயன செய்வோரை விலக்கும் பொருட்டும் I
    தர்மம் தனை நிலை நாட்டும் பொருட்டும் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் நான் II

    ———-

    9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
    த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந

    அர்ஜுந!-அர்ஜுனா!
    மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
    ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
    ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
    புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
    மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

    எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

    அர்ஜுனா!இவ்விதம் என்னுடைய தெய்வீகப் பிறப்பையும் செயலையும் உள்ளவாறெவன் I
    அறிகின்றானோ , அவனுடலை விட்ட பின் மீண்டும் பிறவாது எனையே அடைகிறான் |
    |

    ———–

    10. வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
    பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:

    வீத ராக பய க்ரோதா- விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய்,
    மந்மயா:-என் மயமாய்,
    மாம் உபாஸ்ரிதா:-என்னை அடைக்கலம் புகுந்து,
    பஹவ: ஜ்ஞாநதபஸா பூதா-ஞானத்தவத்தால் தூய்மை பெற்று,
    மத்பாவம் ஆகதா: பஹவ:-என்னியல்பு எய்தினோர் பலர்.

    விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத் தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்

    ஆசை யச்சம் சினம் நீக்கி யோரெலாம் என் மயமாய் யெனைத் தஞ்ச மடைந்நதாரெலாம் I
    ஞான தபஸால் தூய்மை யடைந்தோராய்ப் பலர் என்னுடை இயல்பையே அடைகிறார்கள் II

    11. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
    மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:

    பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
    தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
    மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
    மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
    பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

    எவர்கள் எனை எப்படி வழிபடுகின்றனரோ அவர்களுக்கு நானவ்விதமே அருளுகின்றேன் I
    பார்த்தனே ! மக்கள் எல்லா விதங்களிலும் என்னுடை வழியையே பின் பற்றுகின்றனரே ॥

    ———–

    12. காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
    க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா

    இஹ மாநுஷே லோகே-இந்த மனிதவுலகத்தில்,
    கர்மணாம் ஸித்திம் காக்ஷந், த:-தொழில்களில் வெற்றியை விரும்புவோர்,
    தேவதா: யஜந்தே-தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்,
    ஹி கர்மஜா ஸித்தி:-தொழிலினின்றும் வெற்றி,
    க்ஷிப்ரம் பவதி-விரைவில் விளைவதன்றோ!

    தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்.
    மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!

    வினைகளின் பலன்களை விரும்புவர்கள் தேவதைகளை இவ்வுலகில் பூஜிக்கின் றனர் I
    ஏனெனில் கர்மத்திலுதிக்கும் பலன்கள் விரைவில் வருகின்றனவே மனித வுலகில் II

    ————-

    13. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
    தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்

    குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
    சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
    தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
    அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
    அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

    குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
    செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.

    நான்கு வர்ணங்களு மென்னால் குணத்திற்கும் செயல்களுக்கு மேற்பப் படைக்கப் பட்டன I
    அவைகளைச் செய்தவனாயினும் செய்யாதவனாய் மாற்றமில்லா தவனாயுமெனை அறிவாயாக! II

    ———–

    14. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
    இதி மாம் யோऽபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே

    மே கர்மபலே ந ஸ்ப்ருஹா-எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லைல,
    மாம் கர்மாணி ந லிம்பந்தி-என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை,
    ய: இதி மாம், அபிஜாநாதி-இங்ஙனம் என்னை யறிவோன்,
    ஸ: கர்மபி: ந பத்யதே-கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

    என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை.
    இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.

    என்னைச் செயல்கள் தீண்டுவதில்லை எனக்குச் செயல் பலனிலே ஆசை யில்லை I
    என்றெனை எவன் நன்கு அறிகின்றனோ செயல் பலன் களாலவன் கட்டுண்ணான் II

    ———

    15. ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷúபி:
    குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்

    பூர்வை: முமுக்ஷúபி: அபி-முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும்,
    ஏவம் ஜ்ஞாத்வா-இதையுணர்ந்து,
    கர்ம க்ருதம்-தொழிலே செய்தனர்,
    தஸ்மாத் த்வம்-அதனால் நீயும்,
    பூர்வை: பூர்வதரம் க்ருதம்-முன்னோர்கள் முன்பு செய்தபடி,
    கர்ம ஏவ குரு-தொழிலையே செய்யக் கடவாய்.

    முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர்.
    ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.

    இவ்விதமறிந்து முக்தியில் நாட்டமுடைய முன்னோர்களாலும் செயல்கள் செயப்பட்டன I
    ஆதலால் நீயும் முன்னாளில் முன்னோர்கள் செய்து வந்த அச் செயல்களையே
    செய்வாயாக II

    ————-

    16. கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:
    தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்

    கிம் கர்ம கிம அகர்ம இதி-எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில்,
    கவய: அபி அத்ர மோஹிதா:-ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள்,
    யத் ஜ்ஞாத்வா-எதை தெரிந்து கொள்வதால்,
    அஸுபாத் மோக்ஷ்யஸே-தீங்கினின்றும் விடுபடுவாய்,
    தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி-அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்.

    எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்க மெய்துகிறார்கள்.-ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.

    செயலெது செயலின்மை யெதுவென்று மேதாவிகளும் மதி மயங்கியே யுள்ளனர்I
    எதை யறிந்து துக்கத்தினின்று விடுபடுவாயோ அச் செயல் பற்றி யுனக்குப் பகர்வேன் கேள் II

    ————-

    17. கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
    அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:

    கர்மண: அபி-தொழிலின் இயல்பும்,
    போத்தவ்யம்-தெரிய வேண்டும்,
    அகர்மண: ச போத்தவ்யம்-தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும்,
    விகர்மண: ச போத்தவ்யம்-தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்,
    ஹி கர்மண: கதி: கஹநா-ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது.

    தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்;
    தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.

    செயல்களைப் பற்றியு மறிய வேண்டும் செயல் தவிர்த்தல் பற்றியு மறிய வேண் டும் I
    செய்யாதிருத்தல் பற்றியு மறிய வேண்டும் செயலினியல்பு அறிதற்கு அரிதானதாம் II

    ———-

    18. கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய:
    ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்

    கர்மணி அகர்ம-செய்கையில் செயலின்மையும்,
    ச அகர்மணி கர்ம-செயலின்மையில் செய்கையும்,
    ய: பஸ்யேத்-எவன் காணுகிறானோ,
    ஸ மநுஷ்யேஷு புத்திமாந்-அவனே மனிதரில் அறிவுடையோன்,
    ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்-அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்).

    செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ,
    அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.

    யாரொருவன் செய்தலில் செயலின்மையையும் செய்யாதிருத்தலில் செயலையும் காண் கிறானோ I
    மனிதருள் புத்திமானும் யோகியுமாமவன் செய வேண்டிய தெல்லாம் செய்து முடித்தோனாம் II

    ———-

    19. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
    ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:

    யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:-எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம்,
    காம ஸங்கல்ப வர்ஜிதா:-விருப்ப நினைவு தவிர்ந்தனவோ,
    ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம்-எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ,
    தம் புதா:-அவனை ஞானிகள்,
    பண்டிதம் ஆஹு:-அறிவுடையோன் என்கிறார்கள்.

    எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.

    எவருடைய செயல் தொடக்கமு மவாவும் பலனைச் சார்ந்த நோக்கமு மின்றியும் I
    ஞானத் தீயால் எரிக்கப் பட்டதாயுளதோ அறிவாளிகள், அவரை ஞானி யென்பரே II

    ———–

    20. த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:
    கர்மண்யபிப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:

    கர்ம பலா ஸங்கம் த்யக்த்வா-கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக,
    நித்யத்ருப்த: நிராஸ்ரய:-திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக,
    ஸ: கர்மணி அபிப்ரவ்ருத்த: அபி-அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட,
    கிஞ்சித் ஏவ ந கரோதி-சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்).

    கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும்
    சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.

    செயல் பலனிலே ஆழ் பற்றை விட்டு என்றும் செயலில் திருப்தனாய் எதையுமே சாராது I
    செயலில் ஈடு பட்டிருந்த பொழுதிலும் செயலெதையும் செய்வதில்லை யவன் II

    21. நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:
    ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்

    யதசித்தாத்மா-சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி,
    த்யக்த ஸர்வ பரிக்ரஹ:-எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,
    நிராஸீ-ஆசையற்றவனாய்,
    கேவலம் ஸாரீரம் கர்ம குர்வந்-வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும்,
    கில்பிஷம் ந ஆப்நோதி-பாவத்தையடைய மாட்டான்.

    பொருள் : ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து,வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.

    எதிர்பார்ப்பற்ற, மனதையும் உடலையும் நன்கடக்கி அனைத்துடைமை களைத் துறந்தும் I
    செயல்களை உடலைப் பேணுதற்கு மட்டுமே செய்பவன், பாவத்தை அடைவதில்லையே II

    —————–

    22. யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
    ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே

    யத்ருச்சா லாப ஸந்துஷ்ட-தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக,
    விமத்ஸர:-பொறாமையற்றவனாக,
    த்வந்த்வ அதீத:-இருமைகளைக் கடந்தவனாக,
    ஸித்தௌ அஸித்தௌ ச ஸம:-வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்,
    க்ருத்வாபி ந நிபத்யதே-தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

    தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமை யற்றவனாய் –வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.

    தானாகக் கிடைத்ததில் மகிழ்வுடையோன் பொறாமை யற்றவ னிருமைகளைக் கடந்தவன் I
    வெற்றி தோல்வியில் சமமா யுள்ளவன் செயலைச் செய்யினும் பந்தப் படுவதில்லை II

    23. கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:
    யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே

    கதஸங்கஸ்ய-உலகப் பற்றை ஒழித்து,
    முக்தஸ்ய-உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
    ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:-ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன்,
    யஜ்ஞாய ஆசரத:-வேள்வியெனக் கருதித் தொழில் புரிவான்,
    ஸமக்ரம் கர்ம ப்ரவிலீயதே-கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.

    பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான்,
    வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது

    பற்றிலனாய் முக்தனாய் ஞானமதில் நிலை பெற்ற மனத்தினை யுடையோனாய் I
    இறைவனுக்காகச் செயலில் ஈடுபடுமவனின் எல்லாச் செயல்களும் கரைந்து விடுகிறதே II

    ———————–

    24. ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
    ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா

    அர்பணம் ப்ரஹ்ம-வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான்,
    ஹவி: ப்ரஹ்ம-ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான்,
    ப்ரஹ்மாக்நௌ ஹுதம்-பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான்,
    ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா தேந-பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால், கந்தவ்யம் ப்ரஹ்ம ஏவ-அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்.

    பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.

    அர்ப்பணக் கருவியும் ஹவிஸும் பிரம்மன் அர்ப்பணிக்கிறதா மக்னியில் பிரம்மன் I
    அப்பிரம்மச் செயலில் மனம் குவிந்துள்ள அவனால் அடையப் படுவதும் பிரம்மனே II

    ————–

    25. தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
    ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி

    அபரே யோகிந:-சில யோகிகள்,
    தைவம் யஜ்ஞம் ஏவ-தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே,
    பர்யுபாஸதே-வழிபடுகிறார்கள்,
    அபரே ப்ரஹ்மாக்நௌ-வேறு சிலர் பிரம்மத் தீயில்,
    யஜ்ஞேந ஏவ யஜ்ஞம்-வேள்வியையே ஆகுதி செய்து,
    உபஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

    சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள்.
    வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.

    மற்ற யோகிகள் தேவதைகளை யெலாம் வேள்வியால் பூஜிக்கின்றனர், இன்னும் I
    வேறு சிலர் பிரம்மத் தீயில் ஆத்மாவை ஆத்மாவினாலேயே வேள்வி செய்கின் றனர்II

    ————–

    26. ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
    ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி

    அந்யே ஸ்ரோத்ராதீநீ இந்த்ரியாணி-வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை,
    ஸம்யமாக்நிஷு, ஜுஹ்வதி-அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள்,
    அந்யே ஸப்தாதீந் விஷயாந்- வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை,
    இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி-இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்.

    வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.

    செவி முதலிய புலன் களை வேள்வியாய்ச் சிலர் அடக்கு தலெனுமக்னியி லிடுகிறார்கள் I
    மற்றையோர் ஒலி முதலாய் விஷயங்களை வேள்வியாய்ப் புலனக்னியி லிடுகிறார்கள் II

    ————-

    27. ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
    ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே

    அபரே ஸர்வாணீ இந்த்ரியகர்மாணி-வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும்,
    ப்ராணகர்மாணி ச-உயிர்ச்செயல்களையும்,
    ஜ்ஞாநதீபிதே-ஞானத்தால் ஒளிபெற்ற,
    ஆத்ம ஸம்யம யோகாக்நௌ-தன்னாட்சியென்ற யோகத் தீயில்,
    ஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.

    வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா
    இந்திரியச் செயல்களையும் உயிர்ச் செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.

    மேலும் சிலர் ஞானக் கர்மப் புலன்களின் செயல்களை , விவேகத்தால் பிரகாசிக்கும் I
    ஆத்மாவினில் மனதை யடக் குதலெனும் யோகத் தீயில் வேள்வியாய்ச் செய்கின் றனர் II

    ————–

    28. த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
    ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா:

    அபரே த்ரவ்யயஜ்ஞா-வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்,
    தபோயஜ்ஞா-தவத்தால் வேட்போர்,
    ததா யோகயஜ்ஞா ச-அதே போல யோகத்தால் வேட்போர்
    ஸம்ஸிதவ்ரதா: யதய:-அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்,
    ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞா-சிலர் ஞானத்தால் வேட்போர்.

    விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.

    சிலர் பொருட்களைத் தானமெனும் வேள்வியாகவும், தவ யோகங் களையும், வேதமோதுதல்-ஞான I
    விசாரத்தையும் வேள்வி யாய்ச் செயும்,விடா முயற்சிதீர் மானமுடையோரென அநேகராம் II

    ———–

    29. அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே
    ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:

    அபரே ப்ராணாயாமபராயணா:-வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய்,
    ப்ராணஅபாநகதீ, ருத்த்வா-பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
    அபாநே ப்ராணம், ப்ராணே அபாநம்-அபான வாயுவில் பிராண வாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும்,
    ஜுஹ்வதி-ஆகுதி பண்ணுகிறார்கள்.

    இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.

    மற்று சிலர் அபான வாயுவில் பிராணனையும் பிராணனிலபா னனையும் வேள்வியாய்ச் செய்வர்I
    பிராணாபானப் போக்கினை அடக்கியே சிலர் பிராணா யாமத்திலேயே கருத்தூன் றியுளர் II

    ———–

    30. அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி
    ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:

    அபரே நியதாஹாரா:-வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி,
    ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி-உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்,
    ஏதே ஸர்வே அபி-இவ்வனைவரும்
    யஜ்ஞவிதோ-வேள்வி நெறியுணர்ந்து,
    யஜ்ஞக்ஷபிதகல்மஷா:-வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

    வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்.
    இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.

    வேறு சிலர் உணவில் நியம முடையோராய் பிராணனைப் பிராணனில் வேள்வி யாய்ச் செய்வர்I
    வேள்வியறிந்து செய்யுமிவர் களனைவரும் வேள்வியாலே பாவத்ததப் போக்கி யவர்களாம் II

    ————

    31. யஜ்ஞஸிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்
    நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம

    குருஸத்தம-குரு குலத்தாரில் சிறந்தோய்,
    யஜ்ஞஸிஷ்ட அம்ருதபுஜ:-வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர்,
    ஸநாதநம் யாந்தி ப்ரஹ்ம-என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்,
    யஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி-வேள்வி செய்யாதோருக் கிவ்வுலகமில்லை,
    அந்ய: குத:-வேறு (பர உலகம்) ஏது?

    வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்.
    வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?

    32. ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
    கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே

    ஏவம் பஹுவிதா யஜ்ஞா-இங்ஙனம் பலவித வேள்விகள்,
    ப்ரஹ்மண: முகே-வேதங்களின் வாயிலாக,
    விததா-விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன,
    தாந் ஸர்வாந் கர்மஜாந்-அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன,
    வித்தி-என்று உணர். ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே-இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

    பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
    அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.

    இங்ஙனம் பலவகையான வேள்வி யெலாம் வேதத்தின் வாயிலாய் விளம்பப் பட்டுள்ளன I
    அவையாவும் செயலில் தோன்றி யவைகள் எனவறி இவ்விதம் நீ யறிந்துப் பின் முக்தி யடைவாயே II

    33. ஸ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப
    ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே

    பரந்தப பார்த-பரந்தப அர்ஜுனா!
    த்ரவ்யமயாத் யஜ்ஞாத்-திரவியத்தைக் கொண்டு செய்யப்படும்,
    ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்ரேயாந்-ஞானவேள்வி சிறந்தது,
    அகிலம் கர்ம: ஸர்வம் -கர்மமெல்லாம்,
    ஜ்ஞாநே பரிஸமாப்யதே-ஞானத்தில் முடிவு பெறுகிறது.

    பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.

    பரந்தப! பொருள் கொண்டு செயும் வேள்வியினும் ஞானத்தால் செயும் வேள்வி மிக வுயர்ந்தது I
    பார்த்தனே ! எல்லாச் செயலும் மீதமின்றியே ஞானத்தில் முழு முடிவை அடைகின்றனவே II

    34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
    உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:

    ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்,
    தத் வித்தி-அதனை அறிந்துகொள்,
    தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள்,
    தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

    அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்து கொள்.
    உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.

    வீழ்ந்து வணங்கியே பணிவிடை செய்தும் உண்மை யறியவே கேள்விகள் கேட்டும் I
    அதனை யறிவோமாக;கற்று ணர்ந்த ஆத்ம ஞானிகள் ஞானத்தை உபதேசிப்பரே II

    ———-

    35. யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
    யேந பூதாந்யஸேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி

    யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்து கொண்ட பின்னர்,
    பாண்டவ புந: ஏவம் மோஹம்-பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம்,
    ந யாஸ்யஸி-அடைய மாட்டாயோ,
    யேந பூதாநி அஸேஷாணி-இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி,
    ஆத்மநி அதோ மயி த்ரக்ஷ்யஸி-நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.

    அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய்.
    இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

    பாண்டவா! எதை யறிந்த பின் மோஹத்தை மீண்டுமடைய மாட்டாயோ எதனால் I
    அனைத்து உயிர்களையுமே உன்னிடத்தும் என்னிடத்தும் காண்பாயோ அதை யறிவாய் II

    ————-

    36. அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
    ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி

    ஸர்வேப்ய: பாபேப்ய: அபி-பாவிகளெல்லாரைக் காட்டிலும்,
    பாபக்ருத்தம: அஸி சேத்-நீ அதிகப் பாவியாக இருந்தாலும்,
    ஜ்ஞாநப்லவேந ஏவ-ஞானத்தோணியால்,
    ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி-அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்.

    பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தை யெல்லாம்
    ஞானத் தோணியால் கடந்து செல்வாய்.

    பாவஞ் செய்தோ ரெல்லோரை நோக்கினும் பெரும்பாவம் செய்தவனாய் நீ யிருப்பினும் I
    ஆத்ம ஞானமென்னும் படகிலேறி எளிதில் பாவமங்களனைத்தையும் கடந்திடுவாய் நீ II

    ————

    37. யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந
    ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா

    அர்ஜுந-அர்ஜுனா!
    யதா ஸமித்த அக்நி-நன்கு கொளுத்துண்ட தீ,
    ஏதாம்ஸி பஸ்மஸாத் குருதே-விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ,
    ததா ஜ்ஞாநாக்நி:-அதே போல ஞானத் தீ,
    ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே-எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

    நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா,
    ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.

    அர்ஜுனா! சுடர் விட்டெரியும் நெருப்பானது எவ்விதம் விறகுகளை நீறாகச் செய்யுமோ I
    அவ்விதம் ஞானமெனுமக் கனலானது அனைத்துச் செயல்களையும் நீறாக்குமே II

    ————

    38. ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே
    தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி

    இஹ ஜ்ஞாநேந ஸத்ருஸம்-இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல்,
    பவித்ரம் ஹி ந வித்யதே-தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை,
    தத் காலேந யோகஸம்ஸித்த:-தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன்,
    ஸ்வயம் ஆத்மநி விந்ததி-தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்.

    ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.

    இவ்வுலகில் தூய்மை தனைத் தருதலில் ஞானத்துக் கொப்பானதே துமில்லையே I
    செயல்யோக மதில் நிறைவடைந்தோனதை காலப் போக்கில் தன்னகத் தடைகின்றான் II

    ————

    39. ஸ்ரத்தாவாம்லூல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
    ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி

    ஸம்யதேந்த்ரிய:-இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக,
    தத்பர: ஸ்ரத்தாவாந்-சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன்,
    ஜ்ஞாநம் லபதே-ஞானத்தையடைகிறான்,
    ஜ்ஞாநம் லப்த்வா-ஞானத்தையடைந்த பின்,
    அசிரேண பராம் ஸாந்திம் அதிகச்சதி-விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.

    பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்

    சிரத்ததயும் முக்தியும் மேலாயுடையோன் புலன் களை யடக்கியோன் ஞானமடைகிறான் I
    ஞானமதனை யடைந்தபி னவன் மேலாம் அமைதியினைத் தாமதமின்றி யடைகின் றான் II

    ———-

    40. அஜ்ஞஸ்சாஸ்ரத்ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி
    நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந:

    அஜ்ஞ ச ஸ்ரத்ததாந் ச-அறிவும் சிரத்தையுமின்றி,
    ஸம்ஸயாத்மா விநஸ்யதி-ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்,
    ஸம்ஸயாத்மந: அயம் லோக: ந அஸ்தி-ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை,
    பர: ந ஸுகம் ச ந-மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

    அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்.
    ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.

    அறிவிலியும் நம்பிக்கை யில்லோனும் ஐயமுறு பவனுமழிவை யடைகின்றான் I
    சந்தேக முறுமவனுக்கிவ் வுலகும் அவ்வுல குமில்லை ,சுகமுமில்லையே II

    41. யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஸயம்
    ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய

    தனஞ்ஜயா!-அர்ஜுனா,
    யோக ஸந்ந்யஸ்த கர்மாணம்-யோகத்தால் செய்கைகளைத் துறந்து,
    ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்ஸயம்-ஞானத்தால் ஐயத்தை அறுத்து,
    ஆத்மவந்தம்-தன்னைத் தான் ஆள்வோனை,
    கர்மாணி ந நிபத்நந்தி-கட்டுப்படுத்த மாட்டா.

    யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.

    யோகத்தினால் செயல்களைத் துறந்தவனை மெய்யறிவினால் ஐயங்களை யகற்றியவனை I
    தன்னாத்ம சொரூபத்தி லிருக்குமவனை தனஞ்ஜயா! செயல்கள் தீண்டுவதில்லை II

    ———-

    42. தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:
    சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத

    தஸ்மாத் பாரத-ஆகவே பாரதா,
    ஹ்ருத்ஸ்தம்-நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்,
    அஜ்ஞாநஸம்பூதம் ஆத்மந: ஏநம் ஸம்ஸயம்-அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை,
    ஜ்ஞாந அஸிநா: சித்த்வா-ஞானவாளால் அறுத்து,
    யோகம் ஆதிஷ்ட: உத்திஷ்ட-யோக நிலைகொள், எழுந்து நில்.

    அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.

    ஆதலால் நீ யறியாமை யாலுதித்திருக்கும் அகஉள்ளத் திலுள இவ்வான்ம சந்தேகத்தை I
    மெய்ஞான மெனும் வாளினால் வெட்டி வீழ்த்தி யோகம் தனைக் கைக் கொள் பாரதா!எழுந்திரு II

    ——

    ஸ்ரீ பகவத்கீதை — ஐந்தாம் அத்தியாயம் — ஸந்யாஸ யோகம்–“செயல் துறவு”

    அர்ஜுந உவாச

    1. ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி
    யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்

    அர்ஜுந உவாச க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான், கண்ணா !
    கர்மணாம்-செய்கைகளின்
    ஸந்ந்யாஸம் புந: யோகம் ச ஸம்ஸஸி-துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய்,
    ஏதயோ: யத் ஏகம்-இவ்விரண்டில் எதுவொன்று,
    ஸ்ரேய: ஸுநிஸ்சிதம்-சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி,
    தத் மே ப்ரூஹி-என்னிடம் சொல்!

    அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்;
    பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.

    “அர்ஜுனன் புகன்றான்”
    கிருஷ்ணா! தாங்கள் செயல் துறத்தலையும் செயல் யோகத்தையும் புகழ்கின்றீர்கள் |
    ஏதெனக்கு இவ் விரண்டினில் மேலானதோ அஃதொன்றை நிச்சயித்துப் பகர வேண்டுமே ||

    ஸ்ரீபகவாநுவாச

    2. ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகராவுபௌ
    தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    ஸந்ந்யாஸ: கர்மயோக உபௌ ச-துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும்,
    நி:ஸ்ரேயஸகரௌ-உயர்ந்த நலத்தைத் தருவன,
    து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக-இவற்றின் கர்ம துறவைக் காட்டிலும் கர்ம யோகம்,
    விஸிஷ்யதே-மேம்பட்டது.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    செயலைத் துறத்தலும் செயல் யோகமும் இவ்விரண்டும் மேன்மை அளிப்பவையே I
    ஆனாலவைகளில் செயலைத் துறத்தலினும் செயலைச் செய்தலென்பது மேலானதே —
    ஸம்ந்யாஸ = ஸாங்க்ய யோகம் / செயல்துறவு / ஞான யோகம் / சன்யாஸ வாழ்க்கை ; –கர்மயோகம் / செயல் யோகம் / க்ருஹஸ்த பாதை / இல்வாழ்க்கை

    ————

    3. ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
    நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே

    மஹாபாஹோ!-பெருந்தோளாய்! ய:
    ந த்வேஷ்டி-எவன் வெறுப்பு இல்லாமலும்,
    ந காங்க்ஷதி-விரும்புதலும் இல்லாமலும்,
    ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய:-அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன்,
    ஹி நிர்த்வந்த்வ:-இருமை நீங்கி,
    ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே-எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

    பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய்.
    பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.

    பெருந்தோளா! விருப்பும் வெறுப்பு மற்றோன் என்றும் துறவி யென் றறியத் தக்கவன் I
    ஏனெனில் இருமைகளை விட்டொழித்தவன் எளிதில் தளைகளிலிருந்து விடுபடுகிறானே II

    ————–

    4. ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
    ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்

    ஸாங்க்யயோகௌ-(மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும்,
    ப்ருதக்-வெவ்வேறென்று,
    பாலா: ப்ரவதந்தி பண்டிதா: ந-அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்,
    ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தித:-யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன்,
    உபயோ: பலம் விந்ததே-இரண்டின் பயனையும் எய்துகிறான்.

    சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார்.-இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

    செயல் துறவையும், செயல் யோகத்தையும் பாலர்கள் வேறாய்ப் பகர்வர், பண்டிதரோ I
    அவ்விதமில்லை , இவற்றுள் ஒன்றினில் நிலைத்தோனிரண்டின் பலனைப் பெறுகிறானே II

    5. யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே
    ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஸ்யதி ஸ பஸ்யதி

    ஸாங்க்யை: யத் ஸ்தாநம் ப்ராப்யதே-சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ,
    தத் யோகை: அபி கம்யதே-அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள்,
    ய: ஸாங்க்யம் யோகம் ச ஏகம் பஸ்யதி-எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ,
    ஸ ச பஸ்யதி-அவனே காட்சியுடையோன்.

    சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.

    எந்நிலை யடைவரோ செயல் துறந்தோர் அந் நிலை யடைவரே செயல் யோகத்தார் I
    எவன் யோகம் ஸாங்க்ய மிரண் டிதனயும் ஒன்றாய்க் காணுமவன் அவனே காணுமவன் II

    —————

    6. ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:
    யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி

    து மஹாபாஹோ-ஆனால் பெருந் தோளாய்,
    அயோகத: ஸந்ந்யாஸ: ஆப்தும் து:கம்-யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்,
    யோக யுக்த: முநி: ப்ரஹ்ம-யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை,
    நசிரேண அதிகச்சதி-விரைவில் அடைகிறான்.

    பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம்.
    யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.

    பெருந் தோளாய்! செயல் யோக மின்றித் துறவை அடைவதரிதாமா னாலிறை தியானத்துடன் I
    கூடியே முயற்சி செய்யும் முனி வனானவன் தாமதமின்றியே பிரம்மத்தை யடைகின்றான் II

    ————–

    7. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
    ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே

    விஜிதாத்மா-தன்னைத் தான் வென்றோன்,
    ஜிதேந்த்ரிய:-இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,
    விஸுத்தாத்மா-தூய்மையுற்றோன்,
    ஸர்வ பூதாத்ம பூதாத்மா-எல்லா உயிர்களுந் தானே யானவன்,
    யோகயுக்த: குர்வந் அபி-அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும்,
    ந லிப்யதே-அதில் ஒட்டுவதில்லை.

    யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன்,-எல்லா உயிர்களுந் தானே யானவன் அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.

    செயல் யோகம் கூடி மனந் தெளிந்தோன் உடல் புலன் எல்லாம் நன் கடக்கியே I
    அதனத் துயிர்களைத் தன் னாத்மாவாய்க்- காணுபவன் செயல் செய்யினுமது தீண்டாதே I

    —————-

    8. நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
    பஸ்யஞ்ச்ருண்வந்ஸ்ப்ருஸஞ்ஜிக்ரந்நஸ்நங்கச்சந்ஸ்வபந்ஸ்வஸந்

    பஸ்யந்-காண்கினும்,
    ச்ருண்வந்-கேட்கினும்,
    ஸ்ப்ருஸந்-தீண்டினும்,
    ஜிக்ரந்-மோப்பினும்,
    அஸ்நந்-உண்பினும்,
    கச்சந்-நடப்பினும்
    ஸ்வபந்-, உறங்கினும்,
    ஸ்வஸந்-உயிர்ப்பினும்
    தத்த்வவித் யுக்த:-உண்மை அறிந்த யோகி,
    கிஞ்சித் ஏவ ந கரோமி-நான் எதனையும் செய்வதில்லை,
    இதி மந்யேத-என்று நினைக்க வேண்டும்.

    உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான்.
    காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,

    தத்துவம் தனை யறிந்த யோகியவன் பார்த்தல் கேட்டல் தொடுதல் பேசுதல் I
    முகர்த லுண்ணுத லுறங்குதல் செயினும் சுவாசித்தல் போதல் விட லெடுத்தலும் II

    ————–

    9. ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி
    இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்

    ப்ரலபந்-புலம்பினும்,
    விஸ்ருஜந்-விடினும்,
    க்ருஹ்ணந்-வாங்கினும்,
    உந்மிஷந்-இமைகளைத் திறப்பினும்,
    நிமிஷந் அபி-மூடினும் இந்த்ரியாணி,
    இந்த்ரியார்தேஷு-இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில்,
    வர்தந்தே இதி தாரயந்-செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு,
    (நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்).

    புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.

    கண் திறந்து மூடுமிவை களைச் செயினும் புலன்கள் புலபொருட் களிலுள்ளன I
    எனத் தெளிந்து நானெதனையும் செய்வதில்லை

    —————–

    10. ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
    லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா

    ய: கர்மாணி ப்ரஹ்மணி ஆதாய-எவன் செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு,
    ஸங்கம் த்யக்த்வா, கரோதி-பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ,
    அம்பஸா பத்ம பத்ரம் இவ-நீரில் தாமரையிலை போல்,
    ஸ: பாபேந ந லிப்யதே-அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

    செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.

    எவனிறை வனிடமர்ப்பித் துச் செயல்களைப் பற்றின்றியே செய்கின் றானோ வவன் I
    பாவத்தினால் பற்றுதலற் றிருப்பான் தாமரை யிலைத் தண்ணீர் போன்றே I

    11. காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
    யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்தயே

    யோகிந: ஸங்கம் த்யக்த்வா-யோகிகள் பற்றுதலைக் களைந்து,
    ஆத்மஸுத்தயே-ஆத்ம சுத்தியின் பொருட்டாக,
    காயேந மநஸா புத்த்யா-உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
    கேவலை: இந்த்ரியை: அபி-வெறுமே இந்திரியங்களாலும்,
    கர்ம குர்வந்தி-தொழில் செய்வார்.

    யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும்,
    புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.

    செயல் யோகிகள் பற்றினை விடுத்தே மனத் தூய்மைப் பொருட்டு வெறும்- I
    உடலாலும் மனத்தாலும் புத்தியாலும் புலனினாலும் மட்டுமே செயல்புரிவரே II

    ————

    12. யுக்த: கர்மபலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்
    அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

    யுக்த: கர்மபலம் த்யக்த்வா-யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து,
    நைஷ்டிகீம் ஸாந்திமாப்நோதி-நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்,
    அயுக்த: காமகாரேண-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப்,
    பலே ஸக்த:-பயனிலே பற்றுதல் கொண்டு,
    நிபத்யதே-தளைப்படுகிறான்.

    யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான்.-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.

    யோகியானவன் செயல் பலனைத் துறந்து நிஷ்டையா லுதிக்குமமைதி யுடையோனாம் I
    செயல் யோக மற்றானோ ஆசை யுந்துதலால் பலனில் பற்று வைத்தே கட்டுறுகிறான் II

    13. ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ
    நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்

    வஸீ தேஹீ-தன்னை வசங்கொண்ட ஆத்மா,
    ந குர்வந் ந காரயந் ஏவ-எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி,
    நவத்வாரே புரே-ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில்,
    ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய-எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து,
    ஸுகம் ஆஸ்தே-இன்புற்றிருக்கிறான்.

    தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.

    புலன் மன மிவைகளை வசப் படுத்திய தேஹீ விவேகத்தால் செயலை யெலாம் விலக்கியே I
    ஏதும் செய்யாதும் செய்விக்காது மொன்பது வாயிலுடைய நகரில் சுகமாயி ருக்கின்றானே II

    ———-

    14. ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
    ந கர்ம பல ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே

    கர்த்ருத்வம்-செயலின் கர்த்தா என்னும் தன்மை,
    கர்மாணி-கர்மங்கள்,
    கர்ம பல ஸம்யோகம்-செய்கைப் பயன் பெறுதல்,
    ப்ரபு: லோகஸ்ய ந ஸ்ருஜதி-(இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை,
    து ஸ்வபாவ: ப்ரவர்ததே-ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.

    செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள்
    மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.

    பரமாத்மா எவர்க்கும் செயல்களையும் செய்பவனென் பதையுமுண்டு பண் ணுவதில்லை I
    செயல் பலனி னிணைப்பையும் செய்வதில்லையே சுபாவம் அனைத்தையும் செய்விக்கின்றதே II

    ————-

    15. நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
    அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:

    பாபம் ஸுக்ருதம் ச-பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று,
    கஸ்யசித் ந ஆதத்தே-எவனையும் கடவுள் ஏற்பதில்லை,
    அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம்-அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது,
    தேந ஜந்தவ: முஹ்யந்தி-அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

    எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை.
    அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.

    எங்குமுள்ள ஆத்மா எவருடைய பாவ புண் ணியங்களையும் ஏற்பதில்லையே I
    அறிவு அறி யாமையால் மறை பட்டுளதே ஆதலால் மனிதர்கள் மயங்குகின்றனரே II.

    ————-

    16. ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந:
    தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்

    து ஏஷாம் தத் அஜ்ஞாநம்-ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம்,
    ஆத்மந: ஜ்ஞாநேந நாஸிதம்-ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ,
    தேஷாம் ஜ்ஞாநம் ஆதித்யவத் -அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்,
    தத்பரம் ப்ரகாஸயதி-பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

    அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.

    ஆனால், எவர்களுடைய அவ்வறியாமை ஆத்ம அறிவினால ழிக்கப்பட்டுளதோ I
    அவர் தம் ஞானம் கதிரவன் போல் அப் பரம் பொருளை விளங்கச் செய்கிறதே II

    ——–

    17. தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:
    கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:

    தத்புத்தய: ததாத்மாந: தந்நிஷ்டா: தத்பராயணா:-பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
    ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:-ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய்,
    அபுநராவ்ருத்திம் கச்சந்தி-மீளாப் பதமடைகிறார்கள்.

    பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
    தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.

    அதில் புத்தியுளோரதுவே தாமாயிருப்போர் அதிலே நிலை பெற்றவரா யதையே மேலாம் I
    அடைக்கலமா யடைந்து, ஞானத்தால் பாவம் அழித்தோர் திரும்பி வாரா நிலை யடைவரே II

    ————-

    18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
    ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:

    வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட,
    ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும்,
    பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

    கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.

    கல்வி யடக்கமுடைய அந்தணரிடத்தும்பசு யானை யிடத்தும் நாயினிடத்தும் I
    நாயைச் சமைத்துண்போனிடத்தும் ஞானியர் சம திருஷ்டி யுடனிருப்பரே II

    19. இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:
    நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:

    ஏஷாம் மந: ஸாம்யே ஸ்திதம்-எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ,
    தை: இஹ ஏவ ஸர்க: ஜித:-இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்,
    ஹி ப்ரஹ்ம நிர்தோஷம் ஸமம்-ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலை யுற்றது,
    தஸ்மாத் தே ப்ரஹ்மணி ஸ்திதா:-ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

    மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர்.
    பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.

    எவர் மனம் சமத்தில் நிலைத்துள்ளதோ அவர்களால் பிறப்பும் வெல்லப் பட்டதாம் I
    ஏனெனில் குற்றமிலா சமமாம் பிரம்மம் ஆதலாலவர் பிரம்மனில் நிலையாயுளரே II

    ————–

    20. ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்
    ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித:

    ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத்-விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும்,
    அப்ரியம் ப்ராப்ய ச ந உத்விஜேத்-பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்,
    ஸ்திரபுத்தி: அஸம்மூட: ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி,
    ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:-பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

    விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்ம ஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.

    பிரம்மத்தை யறிந்தோன் அதில் நிலை பெற்று மயக்கமில்லா உறுதியான புத்தி யுடையோன் I
    பிரியமானதை யடைந்து மகிழ்வதுமில்லை பிரியமற்றதை யடைந்து வருந்துவதுமி[ல்]லையே II

    21. பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
    ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே

    பாஹ்ய ஸ்பர்ஸேஷு-புறத் தீண்டுதல்களில்,
    அஸக்தாத்மா ஆத்மநி-பற்றற்ற சாதகன் உள்ளத்தில்,
    யத் ஸுகம் விந்ததி-எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்,
    ப்ரஹ்ம யோக யுக்தாத்மா-(அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி,
    ஸ: அக்ஷயம் ஸுகம் அஸ்நுதே-அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்.

    புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன்
    பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.

    புறப் பொருட் களில் மனம் பற்றாதோன் ஆத்மாவிட முள்ள சுகத்தை யடைகிறான் I
    பிரம்ம சமாதியில் நிலைத்த வறிவுடையோன் அழிவில்லா ஆனந்தம் அனுபவிக்கின்றான் II

    ——–

    22. யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
    ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:

    ஸம்ஸ்பர்ஸஜா யே போகா:-புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ,
    தே ஹி து:கயோநய: ஏவ-அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும்,
    ஆதி அந்தவந்த:-தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை),
    கௌந்தேய-குந்தி மகனே,
    புத: தேஷு ந ரமதே-அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

    புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும்.
    அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.

    புலப் பொருட் களைத் தீண்டு வதாலுதித்த இன்பங்களே துக்கத்திற்குக் காரணமாம் I
    துவக்கமும் முடிவுமுள்ள வவைகளில் கௌந்நதயா! ஞானியர் களின்புறுவ தில்லையே ॥

    ———-

    23. ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத்
    காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர
    :

    ய: இஹ ஏவ-எவன் இவ்வுலகத்திலேயே,
    ஸரீரவிமோக்ஷணாத் ப்ராக்-சரீரம் நீங்குமுன்னர்,
    காம க்ரோத உத்பவம்-விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும்,
    வேகம் ஸோடும் ஸக்நோதி-எழுச்சியை பொறுக்க வல்லானோ,
    ஸ நர: யுக்த:-அந்த மனிதன் யோகி,
    ஸ ஸுகீ-அவன் இன்பமுடையோன்.

    சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.

    இப்பிறவியில் உடலை விடும் முன்பே ஆசை கோபம் இவை தம் மால் தோன்றும் I
    வேகமதைத் தாங்க வல்லோனே யோகியாம் அவனே மகிழ்ச்சி யுடைய மனிதனாம் II

    ————

    24. யோऽந்த:ஸுகோ’ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:
    ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி

    ய: ஏவ அந்த:ஸுக-எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக,
    அந்தராராம:-உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
    ததா ய: அந்தர்ஜ்யோதி:-அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ,
    ஸ: ப்ரஹ்மபூத:-அவன் தானே பிரம்மமாய்,
    ப்ரஹ்மநிர்வாணம் அதிகச்சதி-பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய்,
    உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

    எவன் தன்னிலே இன்பம் துய்த்தும் தன்னிலே களிப் படைந்து மவ்விதம் I
    எவன் உட்ப்ர காசமுளனோ அவ்யோகி பிரம்ம மாயறிந்து பேரானந்தமடைகிறானே II

    ———————-

    25. லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:
    சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:

    சிந்நத்வைதா-இருமைகளை வெட்டிவிட்டு,
    ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி,
    யதாத்மாந:-எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ,
    ருஷய: க்ஷீணகல்மஷா:-(அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து,
    ப்ரஹ்மநிர்வாணம் லபந்தே-பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.

    பாவங்களைக் களைந்தும் ஐயங்களை யகற்றியும் புலனடக்க முடையோராய் I
    உயிரனைத்தின் நன்மையில் மகிழ்வுடை ரிஷிகள் முக்தியினை யடைகின்றார்களே II

    ————

    26. காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்
    அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்

    காமக்ரோதவியுக்தாநாம்-விருப்பமும் சினமும் தவிர்த்து,
    யதசேதஸாம் விதிதாத்மநாம்-சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய,
    யதீநாம் அபித:-முனிகளுக்கு நாற்புறமும்,
    ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே-பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

    விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய
    முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

    ஆசை கோபத் தினின்றும் விடுபட்டோரும், ஆத்மாவினை அறிந்தவர்களும்,மனத்தை I
    அடக்கியோரு மான,சந்யாஸிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் முக்தியுள்ளதே II

    27. ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ்
    சக்ஷúஸ்சைவாந்தரே ப்ருவோ:
    ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா
    நாஸாப்யந்தரசாரிணௌ

    பாஹ்யாந் ஸ்பர்ஸாந் பஹி ஏவ க்ருத்வா-புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி,
    சக்ஷú: ப்ருவோ: அந்தரே-புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி,
    நாஸாப்யந்தர சாரிணௌ-மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்,
    ஸமௌ க்ருத்வா ச-சமமாகச் செய்துகொண்டு.

    புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே
    இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;

    28. யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:
    விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:

    யதேந்த்ரிய: மந: புத்தி:-புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி,
    விகத: இச்சா பய க்ரோத:-விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து,
    மோக்ஷ பராயண:-மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற,
    ய: முநி: ஸ: ஸதா முக்த ஏவ-அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்.

    புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு
    விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி. (27-28)

    வெளியிலுள்ள பொருட்களை வெளியே வைத்தும் கண் களைப் புருவங்களிடை யிருத்தியும் I
    மூக்கிலியங் கும் பிராண அபானங்களை நன்கு சமன் செய்து புலன் மனபுத்தி- II
    இவை தமை நன் கடக்கியே முக்தியினை மேலாமிலக் காய்க் கருதியே , பயமச்சமும் I
    விருப்பும் விலக்கிய வனான அந்த முனிவனவன் எப்பொழுதும் முக்தன் தானே II

    ———–

    29. போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
    ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி

    மாம் யஜ்ஞதபஸாம் போக்தாரம்-என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும்,
    ஸர்வலோகமஹேஸ்வரம்-உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும்,
    ஸர்வபூதாநாம் ஸுஹ்ருதம்-எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும்,
    ஜ்ஞாத்வா ஸாந்திம் ருச்சதி-என்று அறிபவன் அமைதி அடைகிறான்.

    வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
    எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.

    யாக தவம் இவைகளை அனுபவிப்பனாக அனைத்துல கங்களுக்குமீஶ் வரனாக I
    அனைத்துயிர்களுக்கும் நண்பனாக எனை அறியுமவன் சாந்தியை அடைகின்றான் II

    ————

    ஸ்ரீ பகவத்கீதை –ஆறாம் அத்தியாயம் — தியான யோகம்–தியானத்தில் தெளிவு”

    ஆசைகளாகிய நீரலைகள், மலர்களாகிய வாசனைகள், பட்டாம் பூச்சி போல் சுற்றித் திரியும் மனம், இவற்றை -விழிப்புணர்வாய் தியானித்தல்

    ஸ்ரீபகவாநுவாச

    1. அநாஸ்ரித​: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய​:
    ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய​:

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    ய: கர்மபலம் அநாஸ்ரித​:-எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி,
    கார்யம் கர்ம கரோதி-செய்யத்தக்கது செய்கிறானோ,
    ஸ ஸந்ந்யாஸீ யோகீ ச-அவன் சந்யாசியும் யோகியும் ஆவான்,
    ச நிரக்நி ந-மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான்,
    அக்ரிய​: ச ந-செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    எவன் செயல் பலனைச் சாராம லிருந்து செய்ய வேண்டிய செயலைச் செய்பவனோ |
    அவன் சந்யாஸியும் யோகி யுமாவான், அக்னி கர்மமும் செயலையும் விட்டவனாகான் ||

    ———–

    2. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ
    ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந

    பாண்டவ-பாண்டவா! யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு-எதனை சந்நியாச மென்கிறார்களோ,
    யோகம் தம் வித்தி-அதுவே யோகமென்று அறி,
    ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப:-ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத,
    கஸ்சந யோகீ ந பவதி-எவனும் யோகியாக மாட்டான்.

    பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி.
    தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

    பாண்டவனே ! எதை சன்யாஸமென்று பகர்வரோ அதை யோகமென்று அறிதி I
    ஏனென் றால் ஸங்கல்பத்தை விடாத எவனும் யோகியாய் ஆக மாட்டான் II

    ——————-

    3. ஆருருஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே
    யோகாரூடஸ்ய தஸ்யைவ ஸம​: காரணமுச்யதே

    யோகம் ஆருருஷோ முநே-யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு,
    கர்ம காரணம் உச்யதே-தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது,
    தஸ்ய யோகாரூடஸ்ய-அந்நிலையில் ஏறியபின்
    ஸம​: ஏவ காரணம் உச்யதே-சாந்தம் கருவியாகிறது.

    யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது.
    அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

    தியான யோகமதில் முன்னேற விரும்பும் முனிக்குச் செயல் சாதனமாய்ச் சொலப் பட்டது I
    தியான யோகமதில் முன்னேறி யவனுக்கே செயலின்மை சாதனமாய்ச் சொலப்பட்டது II

    —————-

    4. யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
    ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே

    யதா இந்த்ரியார்தேஷு ந அநுஷஜ்ஜதே-எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ,
    கர்மஸு ஹி ந-கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ,
    ததா ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ-அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன்,
    யோகாரூட உச்யதே-யோகாரூடன் என்று கூறப் படுகிறான்.

    ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் யோக நிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான்.

    எப்பொழுது புலப் பொருட்கள னைத்திலும் செயல்களிலும் பற்றுக் கொள்வ தில்லையோ I
    அப் பொழுது எல்லா சங்கல்பங் களையும் துறந்த யோகியை யோக நிலை யுற்றவரென்பர் II

    —————

    5. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்
    ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந​:

    ஆத்மாநம் ஆத்மாநா உத்தரேத்-தன்னைத் தான் உயர்த்திக் கொள்க,
    ஆத்மாநம் ந அவஸாதயேத்-தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா,
    ஹி ஆத்மா ஏவ ஆத்மந: பந்து-தனக்குத்தானே நண்பன்,
    ஆத்மா ஏவ ஆத்மந​: ரிபு:-தனக்குத்தானே பகைவன்.

    தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா;
    தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.

    தன்னைத் தானே உயர்த்திக் கொள்வானாக தன்னைத் தாழ்த்திக் கொளாதி ருப்பானாக I
    ஏனென்றால் தனக்குத்தானே நண்பனும் தனக்குத் தானே பகைவனு மாவானவன் I

    —————

    6. பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித​:
    அநாத்மநஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்

    ஏன ஆத்மநா ஆத்மா ஜித​:-எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ,
    தஸ்ய ஆத்மநா-அந்த ஜீவாத்மாவிற்கு,
    ஆத்மா ஏவ பந்து-தனக்குத் தானே நண்பன்,
    து அநாத்மந:-ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன்,
    ஆத்மா ஏவ ஸத்ருவத்-தனக்குத் தான் பகைவனைப் போல,
    ஸத்ருத்வே வர்தேத-பகைமையாக செயல்படுவான்.

    தன்னைத் தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்;
    தன்னைத் தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.

    எவ்வாத்மா வினாலாத்மா வெல்லப் பட்டதோ அவ் வாத்மா அவனுடை யாத்மா வுக்கு நண்பன் I
    ஆனாலாத்மாவை வெல்லாதவ னுக்கவனே எதிரியைப் போலே பகை யுடனிருப்பானே II

    ——————–

    7. ஜிதாத்மந​: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித​:
    ஸீதோஷ்ணஸுகது​:கேஷு ததா மாநாபமாநயோ​:

    ஸீதோஷ்ண ஸுகது​:கேஷு-சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
    மாந அபமாநயோ​:-மானாபிமானங்களிலும்,
    ப்ரஸாந்தஸ்ய-சமநிலைப்பட்ட,
    ஜிதாத்மந​:-தன்னை வென்ற மனிதனிடத்தில்,
    பரமாத்மா ஸமாஹித​:-பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.

    தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும்,
    மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

    தன்னை வென்று மனம் தெளிந்தோனுக்குச் சீதோஷ்ண சுக துக்கத் திலுமவ்விதமே I
    மான அவமானத் திலும் சித்த மொரு முகமாகிப் பரமாத்மாவில் நிலைத்திருக்குமே II

    ————-

    8. ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய​:
    யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந​:

    ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா-எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ,
    கூடஸ்த:-எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ,
    விஜிதேந்த்ரிய​:-புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ,
    ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந​:-ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்று போலே காணும்,
    யோகீ யுக்த: இதி உச்யதே-அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

    ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று,ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

    அறிவில் அனுபவ அறிவில் மனநிறைவும் மாறுதலில்லா தோன் புலன் களையு மொருங்கிணைத்தோன், கல் மண் பொன் னிவை தமைக் காணுமிடத்தும் யோகி சமமாயிருப்பா னென்பர் II

    ———–

    9. ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு
    ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஸிஷ்யதே

    ஸுஹ்ருத் மித்ர உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு-அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார்,
    ஸாதுஷு பாபேஷு ச அபி-சாதுக்கள், பாவிகளிடம் கூட,
    ஸமபுத்தி-எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன்,
    விஸிஷ்யதே-மேலோனாவான்.

    ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர்
    எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.

    நல்லுள்ளமுடையோன் நண்பன் பகைவன் உதாஸீனனும் நடுவு நிற்போனுறவினன் வெறுப்புக்கு ரியோன் சாது பாவிகளிடமும் சம புத்தி யுடையோன் சிறந்தோனாவான் II

    10. யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித​:
    ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ​:

    யத சித்தாத்மா நிராஸீ-உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
    அபரிக்ரஹ​:-ஏற்பது நீக்கிய
    யோகீ ஏகாகீ-யோகி தனியனாக,
    ரஹஸி ஸ்தித​:-மறைவிடத்தில் இருந்துகொண்டு,
    ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத-எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

    மறை விடத்தில் இருந்து கொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து,
    ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

    யோகி தனிமையில் தனியாய் இருந்தும், ஆசைகளும் பொருட்களும் இன்றியும், I
    தன்னடக்க முடையோனாய் எப்பொழுதும் தியானத்தில் தானீடுபட வேண்டும் II

    ———-

    11. ஸுசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந​:
    நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோத்தரம்

    ஸுசௌ தேஸே-சுத்தமான இடத்தில்,
    சைல அஜிந குஸ உத்தரம்-துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது,
    ந அத்யுச்ச்ரிதம் ந அதிநீசம்-அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும்,
    ஆத்மந​: ஸ்திரம் ஆஸநம்-தனக்கோர் உறுதியான ஆசனம்,
    ப்ரதிஷ்டாப்ய-அமைத்துக் கொண்டு.

    சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,

    தூய்மையான அசையாததான இடத்தில் தர்பை தோல் மேல் பருத்தித் துணியாலான
    தனக்காகவே ஆன ஆசனத்தை மிகவும் தாழ்வுமின்றி, உயரமுமின்றியே அமைத்து

    ——–

    12. தத்ரைகாக்ரம் மந​: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா​:
    உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஸுத்தயே

    தத்ர ஆஸநே உபவிஸ்ய-அந்த ஆசனத்தில் அமர்ந்து,
    யதசித்த இந்த்ரிய க்ரி, ய:-உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
    மந​: ஏகாக்ரம் க்ருத்வா-மனதை ஒருமுகமாக்கி,
    ஆத்மவிஸுத்தயே-ஆத்மா நன்கு தூய்மையடையும்படி,
    யோக யுஞ்ஜ்யாத்-யோகத்திலே பொருந்தக் கடவான்.

    அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி,
    ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

    ஆங்காசனத் தமர்ந்து மனதை நன்- கொருமுனைப் படுத்தியே புலன் மனச்- I
    செயல்களை யடக்கியே மனத்தின் தூய்மை கருதி தியானம் பழக வேண்டும் II

    ———–

    13. ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர​:
    ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஸஸ்சாநவலோகயந்

    காய ஸிரோ க்ரீவம் ஸமம்-உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக,
    ச அசலம் தாரயந்-அசைவின்றி வைத்துக்கொண்டு,
    திஸ: அநவலோகயந்-திசைகளை நோக்காமல்,
    ஸ்வம் நாஸிகாக்ரம்-தன்னுடைய மூக்கு நுனியை,
    ஸம்ப்ரேக்ஷ்ய-பார்த்துக் கொண்டு.

    உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு,
    உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

    உடல்தலைக் கழுத்திவை தமை நேராயும் அசையாமலே யிருத்தி யுறுதியுடனும் I
    தன்னுடைய மூக்கின் நுனியைக் கண்டும் திசைகளைக் காணாமல் அமர வேண்டுமே II

    ————

    14. ப்ரஸாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:
    மந​: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர​:

    ப்ரஸாந்தாத்மா விகதபீ-நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி,
    ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:-பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு,
    மந​: ஸம்யம்ய-மனதை வசப்படுத்தி,
    மச்சித்த: மத்பர​:-என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு,
    யுக்த: ஆஸீத-யோகத்திலிருக்கக் கடவான்.

    நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

    மனவமைதி பயமற்றோன் பிரம்மச்சாரியும் விரதமுளோனும் மனதை வசமாக்கியோனும் I
    மனமொருநிலைப் பட்டும்,என்பால் சித்தமும் எனையே யிலக்கா யமர வேண்டும் தியானத்திலே II

    —————-

    15. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ​:
    ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி

    நியதமாநஸ​:-மனதைக் கட்டுப்படுத்தி,
    யோகீ ஏவம்-யோகி இவ்விதம்,
    ஆத்மாநம் ஸதா யுஞ்ஜந்-ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு,
    மத்ஸம்ஸ்தாம் நிர்வாணபரமாம்-என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள,
    ஸாந்திம் அதிகச்சதி-ஆறுதலை அடைவான்.

    இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி,
    என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

    இவ்விதம் கணப்பொழுதும் தன் மனதை தியானத்தி லிருத்தியே ,மன மடங்கிய I
    யோகியவன் என்னிடமுள்ள முக்தியில் முற்றுப் பெறும் சாந்தியை யடைகின்றான் II

    ———-

    16. நாத்யஸ்நதஸ்து யோகோऽஸ்தி ந சைகாந்தமநஸ்நத​:
    ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந

    அர்ஜுந!-அர்ஜுனா!
    அத்யஸ்நத து யோக: ந அஸ்தி-மிகைபட உண்போனுக்கு யோகமில்லை,
    அநஸ்நத​: ச ஏகாந்தம் ந-உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது,
    ந ச அதிஸ்வப்நஸீலஸ்ய-மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை,
    ஜாக்ரத: ஏவ ந-மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

    மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது.
    மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

    அர்ஜுனா! மிக உண்போனுக்கு யோகமில்லை அறவே யுண்ணாதோனுக்கு மஃதில்லையே I
    அதிக முறங்குவோனுக்குத் தியானமில்லை அதிகமாய் விழித்திருப் போனுக்குமில்லையே II

    ———–

    17. யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு
    யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து​:கஹா

    யுக்த ஆஹார விஹாரஸ்ய- ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
    கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய-வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
    ஸ்வப்ந அவபோதஸ்ய யுக்த-உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
    து​:கஹா யோக: பவதி-துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

    ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

    உண்பதிலு முலாவுவதிலு மிதமாயிருப்போரும் கடமையை அளவுடன் செய்பவருக்கும் I
    விழிப்பு முறக்கமுமள விலுள்ளோருக்கும் யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறதே II

    ————-

    18. யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே
    நி​:ஸ்ப்ருஹ​: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா

    விநியதம் சித்தம்-தன்வசப் பட்டுள்ள உள்ளம்,
    யதா ஆத்மநி ஏவ-எப்பொழுது தனதுள்ளேயே,
    அவதிஷ்டதே-நிலைபெற்றிருகிறதோ,
    ததா ஸர்வகாமேப்ய: நி​:ஸ்ப்ருஹ​:-அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன்,
    யுக்த: இதி உச்யதே-யோக முற்றான் எனப் படுவான்.

    உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும்
    வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.

    நன்றா யடக்கிய சித்தம் எப்பொழுது ஆத்மாவிலே நிலைத்துளதோ , அப்பொழுது I
    அனைத்துப் பொருட் களினின்றும் பற்று நீங்கியோன் தியானம் கூடியவனாவான் II

    ———-

    19. யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
    யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந​:

    நிவாதஸ்த: தீப:-காற்றில்லாத இடத்தில் விளக்கு,
    யதா ந இங்கதே-எப்படி அசையாமல் இருக்குமோ,
    ஸா உபமா-அதே உவமை,
    ஆத்மந: யோகம் யுஞ்ஜத: யோகிந:-ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய,
    யதசித்தஸ்ய ஸ்ம்ருதா-வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது.

    சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில்
    அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.

    எவ்விதம் காற்றில்லா விடத்திலே யுள்ளதீபமானது அசையாமலி ருக்குமோ I
    அவ்விதம் மனமடங்கி ஆத்ம தியானம்- பழகும் யோகிக்கு உவமையாய் எண் ணுவர் II

    ————–

    20. யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா
    யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி

    யோகஸேவயா-யோகப் பயிற்சியினால்,
    நிருத்தம் சித்தம்-கட்டுண்ட சித்தம்,
    யத்ர உபரமதே-எங்கு ஆறுதல் எய்துமோ,
    ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்யந்-எங்கு ஆத்மாவினால் ஆத்மாவை யறிந்து,
    ஆத்மநி ஏவ துஷ்யதி-ஆத்மாவில் மகிழ்ச்சி யடைகிறானோ.

    எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால்
    ஆத்மாவை யறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ

    எப்பொழுது யோகப் பயிற்சி யிலடங்கிய மனமானது ஆத்மாவிலேயே நிலை நிற்கிறதோ I
    அப்பொழுது மேலும் தன்னில் தன்னைக் கண்டு தன்னிலேயே மகிழவடைந்திருக்கின்றானே II

    ——–

    21. ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்
    வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத​:

    அதீந்த்ரியம்-புலன்களைக் கடந்து நிற்பதும்,
    புத்திக்ராஹ்யம்-புத்தியால் தீண்டத்தக்கதும்,
    யத் ஆத்யந்திகம் ஸுகம்-எந்த முடிவற்ற பேரின்பத்தை,
    தத் யத்ர வேத்தி-அதை எங்கு காண்பானோ,
    யத்ர ஸ்தித-எங்கு நிலைபெறுவதால்,
    தத்த்வத​: ந ஏவ சலதி-இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ.

    புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

    ———-

    22. யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத​:
    யஸ்மிந்ஸ்திதோ ந து​:கேந குருணாபி விசால்யதே

    யம் லாபம் லப்த்வா-எதனை யெய்தியபின்,
    தத: அபரம் அதிகம் ந மந்யதே ச-அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
    யஸ்மிந் ஸ்தித:-எங்கு நிலை பெறுவதால்,
    குருணா து​:கேந அபி-பெரிய துக்கத்தாலும்,
    ந விசால்யதே-சலிப்பெய்த மாட்டானோ.

    எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ,
    எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

    மேலுமெதை யடைந்த பின் வேறு லாபத்தை அதிக மென்று எண்ணுவதில்லையோ ,எதில்- I
    நிலைத்து நின் றவன் மிகப் பெரியதான துக்கத்தாலு மசைக்கப் படுவதில்லையோ

    23. தம் வித்யாத்து​:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்
    ஸ நிஸ்சயேந யோக்தவ்யோ யோகோऽநிர்விண்ணசேதஸா

    து​:க ஸம்யோக வியோகம்-துன்பத்துடன் கலத்தலை விடுதலை,
    தம் யோகஸம்ஜ்ஞிதம்-அந்நிலையே யோக நிலையென்று,
    வித்யாத்-உணர்,
    ஸ யோக:-அந்த யோகத்தை,
    அநிர்விண்ணசேதஸா-உள்ளத்தில் ஏக்கமின்றி,
    நிஸ்சயேந யோக்தவ்ய:-உறுதியுடன் பற்றி நிற்கக் கடவன்.

    அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர்.
    உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவன்.

    துக்கத்தின் சேர்க்கை யிலிருந்து பிரிதல் யோகமென்று சொல்லப்ப டுவதாயறிக I
    தளர்விலா சித்தத்துடனும் உறுதியான மனதுடனும் அவ்யோகத்தைப் பயில வேண்டும் II

    ———-

    24. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸேஷத​:
    மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத​:

    ஸங்கல்பப்ரபவாந்-சங்கல்பத்தினின்றும் எழும்,
    ஸர்வாந் காமாந் அஸேஷத​: த்யக்த்வா-எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு,
    மநஸா இந்த்ரியக்ராமம் ஸமந்தத​: ஏவ விநியம்ய-மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி.

    சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு,
    எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,

    சங்கல்பத் தினின்று தோன்றிய ஆசை களனைத்தையும் மிச்சமில்லாமல் துறந்தும் I
    மனத்தினால் புலக் கூட்டத்தை யெல்லாம-னைத் துப்பக் கத்தினின்றும் நன் கடக்கிப்

    25. ஸநை​: ஸநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா
    ஆத்மஸம்ஸ்தம் மந​: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்

    ஸநை​: ஸநை: உபரமேத்- மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து,
    த்ருதி க்ருஹீதயா புத்த்யா-துணிந்த மதியுடன்,
    மந​: ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா-மனதை ஆத்மாவில் நிறுத்தி,
    கிஞ்சித் அபி ந சிந்தயேத்-எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவன்.

    துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்;
    எதற்கும் கவலை யுறாதிருக்கக் கடவன்.

    பகுத்தறிவுடன் கூடிய புத்தியினால் மனதை யாத்மாவில் நிலை நிற்கச் செய்து I
    மெது மெதுவா யொடுங்கச் செய்ய வேண்டும், வேறெதையுமே சிந்திக்கா திருந்தவாறே II

    ———

    26. யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம்
    ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத்

    யத: யத:-எங்கெங்கே,
    எதத் அஸ்திரம்-இந்த நிலையில்லாத,
    சஞ்சலம் மந: நிஸ்சரதி -சஞ்சலமான மனம் அலைகிறதோ,
    தத: தத: நியம்ய-அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி,
    ஆத்மநி ஏவ வஸம் நயேத்-ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

    எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக்
    கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

    மனமானது யுறுதி யற்று மெக் காரணத்தினால் எதனெதனி டத்திலேய வைகின்றதோ I
    அதனதனி டத்திலிருந்த ழைத்து வந்து ஆத்மாவினி டத்திலே யிருக்கச் செய்வாயாக II

    ————

    27. ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்
    உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்

    ஹி ப்ரஸாந்தமநஸம்-ஏனெனில் மனம் சாந்தமாக,
    அகல்மஷம் ஸாந்தரஜஸம்-மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி,
    ப்ரஹ்ம பூதம்-பிரம்மமேயாகிய,
    ஏநம் யோகிநம்-இந்த யோகிக்கு,
    உத்தமம் ஸுகம் உபைதி-மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

    மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு
    மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

    ஆழ்அமைதி யுள்ள மன முடையோனும் ரஜோ குண வேகம் தணிந்து பாவ தோஷங்- I
    களற்றவனும் பிரம்மமாய்த் தனை யறியும் இந்த யோகியை உத்தம சுகம் சேர்கின்றதே II

    ———-

    28. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ​:
    ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே

    விகதகல்மஷ​:-குற்றங்களைப் போக்கி,
    ஏவம் ஸதா ஆத்மாநம் யுஞ்ஜந்-இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
    ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஸம்-(அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய,
    அத்யந்தம் ஸுகம்-மிக உயர்ந்த இன்பத்தை,
    ஸுகேந ஸுகம் அஸ்நுதே-எளிதில் துய்க்கிறான்.

    குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின்,
    அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.

    இவ்விதமே யெப்போதும் தன்னை யிணைத்துக் கொண் டவப் பாவங்களற்ற யோகியானவன் I
    பிரம்மத்தி லொன்று படுவதால் தோன்றும் அளவற்ற ஆனந்தத்தை யடைகின் றானே II

    —————

    29. ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி
    ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந​:

    யோகயுக்தாத்மா-யோகத்தில் கலந்தவன்,
    ஸர்வத்ர ஸமதர்ஸந​:-எங்கும் சமப் பார்வை யுடையவனாய்,
    ஸர்வபூதாநி ஆத்மாநம்-எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும்,
    ஆத்மநி ச ஸர்வபூதாநி-தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும், ஈக்ஷதே-காணுகிறான்.

    யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

    ஆத்ம யோகத்தில் மனமொடுங்கியவனும் எல்லாவற்றிலும் சமநோக்குடனிருப்போனும் I
    தன்னிலே அசையு மசையாவனைத் துயிர்களையும் மேலும் தன்னை யெல்லா வுயிர்களிலும் காண்கிறான் II

    —————-

    30. யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி
    தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி

    ய: ஸர்வத்ர மாம் பஸ்யதி-எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ,
    ஸர்வம் ச மயி பஸ்யதி-எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ,
    தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி-அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை,
    ஸ ச மே ந ப்ரணஸ்யதி-எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை.

    எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

    31. ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித​:
    ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே

    ய: ஏகத்வம் ஆஸ்தித-எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக,
    ஸர்வபூதஸ்திதம்-எல்லா உயிர்களிடத்திலுமுள்ள,
    மாம் பஜதி-என்னைத் தொழுவோன்,
    ஸ யோகீ:-அந்த யோகி
    ஸர்வதா வர்தமாந அபி-யாங்கணும் சென்றபோதிலும்,
    மயி வர்ததே-என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.

    ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்ற போதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

    எவன் அதனத்துயிர்களிலு முறையும் என்னை ஒன்றே யென எண்ணி நிலை நின்று I
    எனையே தொழுகின்றானோ அந்த யோகீயானவன் எப்பாங்கி லிருப்பினு மென்னிடத்தே யுளன் II

    —————-

    32. ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோऽர்ஜுந
    ஸுகம் வா யதி வா து​:கம் ஸ யோகீ பரமோ மத​:

    அர்ஜுந ய:-அர்ஜுனா! எந்த யோகி,
    யதி ஸுகம் வா து​:கம் வா-இன்பமாயினும், துன்பமாயினும்,
    ஸர்வத்ர ஆத்ம ஒளபம்யேந-எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே,
    ஸமம் பஸ்யதி-சமமாக பார்க்கிறானோ,
    ஸ: பரம யோகீ மத​:-அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

    இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

    எவன் தன்னை உவமையா யெண் ணி, அர்ஜுனா! எப்பொழுதும் சுகத்தையும் துக்கத்தையும் I
    அனைத்திலும் சமமாய்க் காண்கின்றானோ அந்த யோகி மேலோனெனக் கருதப்படுகிறான் II

    ————

    அர்ஜுந உவாச

    33. யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த​: ஸாம்யேந மதுஸூதந
    ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    மதுஸூதந!-மதுசூதனா,
    அயம் யோக ஸாம்யேந-இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று,
    ய: த்வயா ப்ரோக்த​:-எது உங்களால் சொல்லப் பட்டதோ,
    ஏதஸ்ய ஸ்திராம் ஸ்திதிம்-அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை,
    சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்யாமி-எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை.

    அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.

    “அர்ஜுனன் புகன்றான்”
    மதுசூதனா! சமமாய்க் காணுதலெனும் இந்த யோகம் உம்மால் உபதேசிக்கப்பட்ட- I
    இதற்கு நிலையாயுள்ள இருப்பை யான் மனச் சஞ்சலத்தினால் காண்கிறேனில்லை I

    ———

    34. சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
    தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்

    ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா!
    மந​: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது,
    ப்ரமாதி-தவறும் இயல்பினது,
    பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது,
    தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்,
    ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.

    கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

    கிருஷ்ணா! மனமலையும் தன்மை யானதன்றோ கலக்கமும்,வலிமையும் திண்மையு மானதன்றோ ? I
    அதனை யடக்குதல் காற்றை அடக்குவது- போல் கடின மானதென நானெண் ணுகிறேன் II

    ஸ்ரீ பகவாநுவாச

    35. அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
    அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    மஹாபாஹோ-பெருந் தோளாய்,
    அஸம்ஸயம் மந: சலம்-ஐயமின்றி மனம் சலனமுடையதுதான்,
    துர்நிக்ரஹம் து-கட்டுதற்கரியது தான்,
    கௌந்தேய! அப்யாஸேந வைராக்யேண ச-குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும்,
    க்ருஹ்யதே-வசப் படுத்தப் படுகிறது.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

    ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பெருந்தோளா! ஐயமில்லை மனதின் தன்மை அடக்குதற் கரிது மலைவதும் தான் I
    குந்திமகனே ! தொடர் பயிற்சியாலும் வைராக்யத்தாலு மடக்கவியலுமே II

    —————

    36. அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி​:
    வஸ்யாத்மநா து யததா ஸக்யோऽவாப்துமுபாயத​:

    அஸம்யத ஆத்மநா-தன்னைக் கட்டாதவன்,
    யோக: துஷ்ப்ராப-யோக மெய்துதல் அரிது,
    து வஸ்ய ஆத்மநா யததா உபாயத​:- தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும்,
    அவாப்தும் ஸக்ய:-யோகத்தை அடைவதும் சாத்தியமானது,
    இதி மே மதி​:-என்று நான் கருதுகிறேன்.

    தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன்.
    தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.

    மனதை யடக்காதவனால் யோகமடைய வியலாது என்பதென் கருத்து,மற்றும் I
    மனதை யடக்கியவன் உபாயத்தாலும் முயற்சி செய்வதாலு மடைய வியலுமே II

    —————-

    அர்ஜுந உவாச

    37. அயதி​: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ​:
    அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி

    அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
    ஸ்ரத்தயா உபேத:-யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும்,
    அயதி​: யோகாத் சலிதமாநஸ​:- தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவி, யவன்
    யோக ஸம்ஸித்திம் அப்ராப்ய-யோகத்தில் தோற்றுப் போய்,
    காம் கதிம் கச்சதி க்ருஷ்ண!-என்ன கதியடைகிறான் கண்ணா!

    அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

    “அர்ஜுனன் புகன்றான்”
    கிருஷ்ணா! சிரத்தை யுடையோனாயினும் முயற்சி யிலாதவனால் யோகத்தினின்றும் I
    நழுவிய மனமுடையோன் யோகம் முழுமை பெறாமல் எக் கதியினை அடைகின்றான் II

    ————–

    38. கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நஸ்யதி
    அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண​: பதி

    மஹாபாஹோ ப்ரஹ்மண​:-பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற,
    பதி விமூடோ-மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி,
    அப்ரதிஷ்ட:-உறுதியற்றவனாக,
    உபய விப்ரஷ்ட-இரண்டுங் கெட்டவனாக,
    சிந்ந அப்ரம் இவ-உடைந்த மேகம்போல்,
    கச்சித் ந நஸ்யதி-அழிந்து போக மாட்டானா?

    ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ?
    பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

    பெருந்தோளாய் பிரம்மப் பாதையில் மதி மயங்கியவன், நிலை பெறாது இரண்டு- I
    பாதையிலிருந்தும் வழுவியே சிதறுண்ட மேகம் போலல்லவா அழிவடைகின்றான் II

    —————

    39. ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத​:
    த்வதந்ய​: ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே

    க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸயம்-கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை,
    அஸேஷத​: சேத்தும் அர்ஹஸி-மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன்,
    ஹி அஸ்ய ஸம்ஸயஸ்ய சேத்தா-ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர்,
    த்வத் அந்ய​: உபபத்யதே-நின்னையன்றி வேறெவருமிலர்.

    கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி
    இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

    ஹே கிருஷ்ணா! எனதிந்த ஐயத்தை யறவே விலக்கு வதற்குத் தகுதியானவர் நீரே I
    தங்களைக் காட்டிலும் இவ் ஐயத்தை நீக்குபவர் நிச்சயமாய் வேறு ஓருவரில்லையே II

    ———–

    ஸ்ரீபகவாநுவாச

    40. பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே
    ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி

    ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
    பார்த-பார்த்தா,
    தஸ்ய இஹ விநாஸ ந வித்ய,தே-அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை,
    அமுத்ர ஏவ ந-மேலுலகத்திலும் இல்லை,
    தாத-பிரியமானவனே (மகனே!),
    ஹி கல்யாணக்ருத்-ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக,
    கஸ்சித் துர்கதிம் ந கச்சதி-எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

    “ஸ்ரீபகவான் பகர்ந்தார்”
    பார்த்தனே ! அவனுக்கு இம்மையிலும் அழிவில்லை , அழிவில்லையே மறுமையிலும் I
    மகனே !நன்மையைச் செய்பவரெவரும் அடையார் துன்ப கதியை நிச்சயமாய் II

    ———-

    41. ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ​: ஸமா​:
    ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே

    யோகப்ரஷ்ட:-யோகத்தில் தவறியவன்,
    புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய-புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி,
    ஸாஸ்வதீ​: ஸமா​: ஊஷித்வா-அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து,
    ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே-தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
    அபிஜாயதே-பிறக்கிறான்.

    யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு
    கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

    யோகத்தினின்று வழுவியவன் புண்ணியம் செய்தோருலகங்களை யடைந்து நெடிது காலம்- I
    வாழ்ந்த பின், ஆசாரமுடன் கூடிய செல்வர்களி னில்லத்திலே பிறக்கின்றான் II

    ———-

    42. அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்
    ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம்

    அதவா தீமதாம் யோகிநாம்-அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின்,
    குலே ஏவ பவதி-குலத்திலேயே பிறக்கிறான்,
    ஈத்ருஸம் யத் எதத் ஜன்ம-இதுபோன்ற பிறவியெய்துதல்
    ஹி லோகே துர்லபதரம்-ஐயமின்றி மிகவும் அரிது.

    அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான்.
    இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.

    அல்லதிவன் அறிவாளிகளாம் யோகிகளி னில்லத்தில் பிறக்கின்றான், இவ்விதமான I
    பிறப்பானது எதுவோ ,அது உலகத்தில் நிச்சயம் அடைவதற் கரிதானதாகுமே II

    ———-

    43. தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
    யததே ச ததோ பூய​: ஸம்ஸித்தௌ குருநந்தந

    தத்ர தம் பௌர்வதேஹிகம்-அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய,
    புத்தி ஸம்யோகம்-புத்தியைப் பெறுகிறான்,
    குருநந்தந-குருநந்தனா, தத: பூய​: ஸம்ஸித்தௌ-அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு,
    யததே-முயற்சி செய்கிறான்.

    அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால்
    அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.

    குரு நந்தனா! முற்பிறவி தேகத்திலடைந்த யோக புத்தியை இப்பிறவியி லடைகின் றான் I
    மேலுமே அதை விட அதிகமாய் முயற்சியைச் செய்கிறான் யோக புத்தி முழுமை பெறவே II

    ———

    44. பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோऽபி ஸ​:
    ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஸப்தப்ரஹ்மாதிவர்ததே

    ஸ: அவஸ:-அவன் தன் வசமின்றியும்,
    தேந பூர்வாப்யாஸேந ஏவ ஹ்ரியதே-பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான்,
    யோகஸ்ய ஜிஜ்ஞாஸு அபி-யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட,
    ஸப்த ப்ரஹ்ம-ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து,
    அதிவர்ததே-செல்லுகிறான்.

    பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.

    அவன் தன் முயற்சியின்றியே முற்பிறவி அப்யாஸத் தாலிழுக்கப் படுகின் றானே I
    யோக தத்துவ மறிய முயல்பவனும் கூட வேத கர்ம பாகத்தைக் கடக்கின்றானே II

    ———-

    45. ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஸுத்தகில்பிஷ​:
    அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்

    ஸம்ஸுத்த கில்பிஷ​:-பாவம் நீங்கியவனாய்,
    து ப்ரயத்நாத் யதமாந-முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும்,
    யோகீ அநேகஜந்ம ஸம்ஸித்த:-யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
    தத: பராம் கதிம் யாதி-அக்கணமே பரகதியை அடைகிறான்.

    பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின்
    வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.

    ஆனால் முழு முயற்சி யுடைய யோகியோ பாவங்கள் நீங்கிப் புனிதனாயாகியே I
    பல பிறவிகளில் பக்கு வமடைந்தே அதனால் மேலாம் கதியை யடைகின்றானே
    II

    ———

    46. தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிக​:
    கர்மிப்யஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந

    யோகீ தபஸ்விப்ய: அதிக​:- யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன்,
    ஜ்ஞாநிப்ய: அபி அதிக​: மத:-ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்,
    ச கர்மிப்ய: யோகீ அதிக​:-கர்மிகளிலும் அவன் சிறந்தோன்,
    தஸ்மாத் யோகீ பவ அர்ஜுந!-ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

    தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

    தவமுடை யோரினும் யோகீ மேலானவன் வேதமறிந் தோரினும் யோகீ மேலானவன் I
    செயல் புரிவோரினும் யோகீ மேலானவனே ஆதலால் யோகீ யாவாய் நீ அர்ஜுனா! II

    ——–

    47. யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
    ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​:

    ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ,
    மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்,
    மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ,
    ஸ: மே யுக்ததம மத​:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

    மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

    எவன் முழு நம்பிக்கை யுடனும்,சித்தம் என் பால் லயித்துமுள்ளோன் தியானத்தால்- I
    என்னைத் தொழுகின்றானோ ,அவன் யோகிகளில் எல்லாம் சிறந்தோன் என்பதென் கருத்து II

    —————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –