Archive for January, 2023

ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -ஒன்பதாம்-அத்யாயம் –ஸ்ரீ லஷ்மி கல்யாண வைபோகம்

January 24, 2023

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஸ்ரீ விஷ்ணு புராண முதல் -அம்சம் -ஒன்பதாம்-அத்யாயம் -சமுத்திர மதனமும் ஸ்ரீ மஹா லஷ்மி திருவவதாரமும் –

வியாசர் அருளிய பூரணமாய் இருந்தாலும் -பராசரர் மைத்ரேயருக்கு அருளிச் செய்த புராண ரத்னம் 

ப்ராசீனமான விஷ்ணு சித்தீயம் -எங்கள் ஆழ்வான் -ஆறாயிரப்படி அமைந்த நூலுக்கு -நூலுக்கு நாலாயிரப்படி வியாக்யானம் 
ஆறு அம்சங்கள் -அமைந்தது - 
முதல் அத்யாயம் 8-9 அத்தியாயங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -ஒன்பதாம்-அத்யாயம் --ஸ்ரீ லஷ்மி கல்யாணம் முதல் அம்சம் -

புராண ரத்னம் -என்பர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தை
பராசரர் -முனி ரத்னம் என்பர்
சந்தர்சயன் நிரமிமீத புராண ரத்னம் தஸ்மை நமோ முனிவராய பராசராய -ஆளவந்தார் கொண்டாடுகிறார் ஸ்தோத்ர ரத்னத்தில்

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 4 –

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஸ்ரீ பராசர உவாச –

இதம் ச ச்ருணு மைத்ரேய யத் ப்ருஷ்டோ அஹமிஹ த்வயா
ஸ்ரீ சம்பந்தம் மயாப்யேதச் ஸ்ருதம் ஆசீன் மரீசித –1-8-35-

நீ விரும்பும் ஸ்ரீ மஹா லஷ்மி திருவவதாரத்தை நான் மரீசி மா முனிவர் இடம் கேட்டு அறிந்த படி சொல்கிறேன் -கேட்பாயாக –
துர்வாச மா முனி வித்யாதர மங்கை கொடுத்த வாசனை மிக்க மலர் பெற்று -அத்தை சூடி இந்தரனுக்கு கொடுக்க –

மஹா பிரசாதம் வாயாலே கொண்டாடி
நமஸ்காரம் செய்து பெற்று
மகிழ்ந்து
தலைக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டும்
இப்படிச் செய்யாமல் இந்திரன் -ஐராவத யானைக்கு கொடுக்க -யானை மிதிக்க -சாபம் கொடுத்தார்

அகல்மஷம் -கல்மஷம் இல்லாத துர்வாசர் -திருந்த வேண்டும் என்று கொடுத்த சாபம்
கௌதமர் வசிஷ்டர் இவர்கள் இடம் அபசாரம் பட்டு மன்னித்து விட்டார்கள் -அது போல் இல்லாமல் -துர்வாசர்

மயா தத்தாம் இமாம் மாலாம் மஸ்மான் ந பஹூ மனயசே
த்ரைலோக்ய ஸ்ரீ அதோ மூட வி நாசம் உபயாஸ் யதி–1-9-14-

ப்ரோச்யதே பரமேசோ ஹி யா ஸூ ததோ அப்யுபா சாரத
ப்ரசீத்து ச நோ விஷ்ணுர் ஆத்மா யா சர்வ தேஹி நாம் —1-9-46-

காட்சி கொடுக்க ஸ்ரீ விஷ்ணு இடம் தேவர்கள் பிரார்த்திக்க

ய காரணம் ச கார்யம் ச காரணச்யாபி காரணம்
கார்யஸ் யாபய ச ய கார்யம் ப்ரசீதது ச நோ ஹரி –1-9-47-

எவன் காரணமாயும் காரியமாயும் காரணத்துக்கு காரியமாயும் காரியத்துக்கு காரியமாயும் இருக்கும் ஸ்ரீ விஷ்ணு காட்சி கொடுக்கட்டும்

கார்ய கார்யச்ய யத் கார்யம் தத் கார்யச்யாபி ய ஸ்வயம்
தத் கார்ய கார்ய பூதோ யஸ்த தச்ச ப்ரணதா ஸ்ம தம் –1-9-48-

காரணம் காரணச்யாபி தஸ்ய காரண காரணம்
தத் காரணா நாம் ஹேதும் தம் ப்ரணதா ஸ்ம பரேச்வரம்–1-9-49-

போக்தாரம் போகய பூதம் ச ஸ்ரஷ்டாரம் ஸ்ருஜ்யமேவச
கார்ய கர்த்ரு ஸ்வரூபம் தம் ப்ரணதா ஸ்ம பரம் பதம் -1-9-50-

வி ஸூ த்த போதவன் நித்யம் அசம் அஷயம் அவ்யயம்
அவயகதம் அவிகாரம் யத் தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-51-

ந ஸ்தூலம் ந ச ஸூ ஷ்மம் யன் ந விசேஷண கோசரம்
தத் பதம் பரமம் விஷ்ணோ ப்ரணமாம சதா அமலம் –1-9-52-

யஸ்ய ஆயுத ஆயுத அம்ச அம்சே விஸ்வ சக்திர் ஐயம் ஸ்திதா
பர ப்ரஹ்ம ஸ்வரூபம் யத் பிரணாமாம்ச்தம் அவ்யயம் -1-9-53-

யத் யோகின ச்தோத்யுக்த்த்தா புண்ய பாப ஷேய அஷயம்
பச்யந்தி பிரணவே சிந்த்யம் தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-54-

யன் ந தேவ ந முனயோ ந சாஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமேசச்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-55–

சக்த்யோ யஸ்ய தேவஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகா
பவந்த்யபூத பூர்வச்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-56–

சர்வ ஈச சர்வ பூத ஆத்மன் சர்வ சர்வ ஆஸ்ரய அச்யுத
ப்ரசீத விஷ்ணோ பக்தாநாம் வ்ரஜ நோ திருஷ்டி கோசரம் –1-9-57-

இங்கனம் பிரமன் தேவர்களுடன் ஸ்துதி பிரார்த்திக்க ஸ்ரீ மகா விஷ்ணு பிரசன்னாகி அருளி –
நமோ நமோ அவிசேஷ ஸ்த்வம் தவம் ப்ரஹ்மா தவம் பினாகத்ருக்
இந்த்ரஸ் தவம் அக்னி பவனோ வருண சவிதா யம -1-9-69-

கடல் கடைய காம தேனு –வாருணி மோகினி தேவி -பாரிஜாதம் -அப்சரஸ் ஸ்திரீகள் சந்தரன் -ஆலகால விஷம்
-பகவான் தன்வந்தரி -ஸ்ரீ மஹாலஷ்மி தோன்ற

நாராயண அவதாரம் -அம்ருத கலசம் கமண்டலம் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-

அமுதினில் வரும் பெண்ணமுதம் உண்ட -அதனாலே -ஒப்பிலி யப்பன்

தாமரை மலரில் தாமரைக் கண்கள் -தாமரை மொட்டு ஹஸ்தம் -பத்மாலய இத்யாதி

ஸ்ரீ ஸூக்தம் கொண்டு தேவர்கள் ஸ்துதிக்க
திக்யஜம் திவ்ய நதிகள் நீர் கொண்டு திரு அபிஷேகம் செய்தனவே -கஜ லஷ்மி திருக்கோலம் நாம் இன்றும் சேவிக்கிறோம்

திவ்ய மால்ய அம்பர தரா ஸ்னாதா பூஷண பூஷிதா
பச்யதாம் சர்வே தேவானாம் யவௌ -வஷஸ் தலம் ஹரே –1-9-105-

பட்டாபிஷகம் -சமுத்திர ராஜன் மாலையைக் கொடுக்க மாலை சாத்தியதாக விஷ்ணு புராணம் சொல்லும்

பெண்கள் கோஷ்ட்டியில் பெண்ணுக்கு வெட்கம் இருக்காதே-வைஜயந்தி மாலைக்கு பிராட்டிக்கு டோலையாக -ஆனதே –

பிராட்டி கடாக்ஷிக்க தேவர்கள் இழந்த செல்வம் பெற வித்து –
அம்ருத கலசம் அசுரர்கள் பறித்து செல்ல
ஸ்த்ரீ ரூபமாக -மயக்கி வாங்கி தேவர்களுக்கு கொடுத்தாள்
பாகவதம் ராகு கேது –
இங்கு அத்தை சொல்லாமல் சுருக்கமாக இங்கு லஷ்மீ வைபோகம் சொல்லவே வந்தது

இந்திர க்ருத ஸ்ரீ லஷ்மீ ஸ்தோத்ர ஸ்லோகம் -17-ஸ்லோகங்கள் –
நமாமி சர்வ லோகாநாம் ஜநநீ–தர்மபூத ஞானத்தை ஊட்டி வளர்ப்பவள்-ஞானப்பால் கொடுப்பவள் -என்றவாறு –
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் தாய் அன்றோ -ஆத்மா நித்யம் அன்றோ
அப்தி சம்பவாம்–பாற் கடலில் தோன்றி –
ஸ்ரீ யம்-பிராட்டியை -ஆறு வ்யுத்பத்தி உண்டே
உன்னித்ர பத்மாக்ஷிம் விஷ்ணு வக்ஷஸ்த்தலாம்
ஸ்ரீ ஸ்தவம் இதை ஒட்டியே தேசிகன்

பத்மாலயாம் -இருப்பிடம் -தாமரையில் -மார்த்வம்
பத்ம கராம் –திருக்கைகளில் தாமரை -அவனுக்கோ திவ்ய ஆயுதங்கள் தண்டிக்கவும் வேண்டுமே -நித்யம் அஞ்ஞாதே நிக்ரஹம்
பத்ம பத்ம நிபேஷனாம் -திருக் கண்களும் -தாமரை -துல்ய சீல வாயோ வ்ருத்தம் –
தாமரைக் கண்கள் பரம புருஷ லக்ஷணம் -பிராட்டியை சதா பஸ்யந்தி என்பதால் –

வந்தே பத்ம முகிம் திரு முகமும் தாமரை
தேவி -விளையாட்டுக்கு துணை -லோகமே லீலாவத்–பந்தார் விரலி -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன் ஒரு கையிலும்
பத்ம நாப பிரியாம் அஹம் —

த்வம் சித்தி -வெற்றிகளும் விஜய லஷ்மி
த்வம் ஸ்வதா -சக்தியும் நீயே வீர லஷ்மி ஸ்ரத்தையா தேவம் தேவயா அஸ்நுதே-
அப்ரமேயம் தத் தேஜா யஸ்ய யா ஜனகாத்மஜா — மாரீசனை விதைத்து -ராமாயணம் வளர்த்து –
த்வம் ஸ்வாஹா -உள் உணர்வும் இவளே தண்டிக்க வரும் பொழுது -பஞ்ச சரம் -மன்மத பானமாக மயக்கி-
அனுக்ரஹிக்க வரும் பொழுது பாரிஜாதம் போன்ற ஐந்தாகி வர்த்திப்பவள்
த்வம் ஸூதா பெண்ணமுது
த்வம் லோக பாவனை
த்வம் சந்த்யா ராத்ரி பிரபா –காலங்கள் உனது அதீனம்
த்வம் பூதாஹி தன லஷ்மி
நேதா
ஸ்ரத்தா -நம்பிக்கை -நாச்சியார் வஞ்சுளவல்லி தாயார்
த்வம் ஸரஸ்வதீ –ஞானம் லஷ்மீ வனஸ்பதி ப்ருஹஸ்பதி -பகவதி தாசீ -தேவ தேவ மஹிஷி

யஜ்ஜா வித்யை
மஹா வித்யை
குஹ்ய வித்யை
ஆத்ம வித்யை

இந்த்ரன் இழந்தவற்றை பெற்று 17 ஸ்லோகங்களால் ஸ்துதி செய்ய -இத்தை நம் பூர்வர்கள் நித்ய அனுசந்தானம்

இந்திரனே ஜீவாத்மா -ஈஸ்வரோஹம் அபிமானித்து -பகவத் பாகவத ஆச்சார்ய அபிமானம் -இழந்து இருக்க
ஆச்சார்யர் கடாக்ஷம் உபதேசம் பெற்று -கைப்பிடித்து -இவனுக்காக ஸ்தோத்ரம் செய்ய
உள்ளமே பாற் கடல் -கை அளவு மனாஸ் கடல் அளவு மனஸு
வேத சாஸ்த்ரங்களே மத்து
புத்தி கயிறு intellect -அறிவு பூர்வகம்
நல்ல கெட்ட எண்ணங்களே தேவ அசுரர்
கூர்ம அவதாரம் -ஸாஸ்த்ரம் நிலைத்து நிற்கும்படி பண்ணுகிறான்
நல்லதும் தீயதும் வெளிப்படும்
ஹால ஹால விஷம் -தீய குணம் பாதிக்காமல் காத்து
அழியாத செல்வம் அம்ருதம் -அறிவு -ஞானம் -கனிந்து பக்தி
தீய எண்ணம் திருட முயல -மோஹினி போல் திரு மேனி அழகால் தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து அருளி
சேர்த்தியில் பக்தியில் ஈடுபட்டு -லஷ்மீ கல்யாணம் -அம்ருதம் போகம் பருகி -மோக்ஷ சாம்ராஜ்யம் பெறுகிறோம் –

இந்திர உவாச
நமச்யே சர்வ லோகானாம் ஜனனீம் அப்ஜ சம்பவாம்
ஸ்ரியம் உந் நிதர பத்மாஷீம் விஷ்ணு வஷஸ் ஸ்தல ஸ்திதாம் —1-19-117-

பத்மாலயாம் பத்மகராம் பத்மபத்ர நிபேஷணாம்
வந்தே பத்ம முகீம் தேவீம் பத்ம நாப ப்ரியாமஹம் –1-9-118-

த்வம் சித்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸூ தா த்வம் லோக பாவனீ]
சாந்த்தா ராத்திரி பிரபா பூதிர்மேதா ஸ்ரத்தா சரஸ்வதீ–1-9-119-

யக்ஜ்ஞ வித்யா மஹா வித்யா குஹ்ய வித்யா ச சோபனே
ஆத்ம வித்யா ச தேவி தவம் விமுக்தி பலதாயினி –1-9-120-

ஆன்வீஷிகீ த்ரியிவர்த்தா தண்ட நீதிச் த்வமேவ ச
சௌம்ய சௌம்யர் ஜகத் ரூபைஸ் த்வயைத் தத் தேவி பூரிதம் –1-9-121-

கா த்வன்ய த்வாம்ருதே தேவி சர்வ யக்ஞமயம் வபு
அதா யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாம்ருத –1-9-122-

த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவனத்ரயம்
வி நஷ்ட ப்ராயமபவத் த்வதே தா நீம் சமேதிதம் –1-9-123-

தாரா புத்ராஸ் ததாகார ஸூஹ்ருத் தான்ய தநாதிகம்
பவத் ஏதன் மஹா பாகோ நித்யம் த்வத் வீஷணா ந்ரூணாம் –1-9-124-

சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபஷ ஷய ஸூ கம்
தேவி த்வத் அத்ருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம் –1-9-125-

தவம் மாதா சர்வ லோகானாம் தேவ தேவோ ஹரி பிதா
த்வயை தத் விஷ்ணுனா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –1-9-126

மா ந கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் பரிச்சதம்
மா சரீரம் களத்ரம் ச த்யஜேதா சர்வ பாவினி –1-9-127-

மா புத்ரான்மா ஸூ ஹ்ருத்வர்க்கம் மா பஸூன்மா விபூஷணம்
த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வஷச்தல ஆலயே–1-9-128-

சத்வேன சத்ய சௌசாப்யாம் ததா சீலாதிபிர் குணை
த்யஜ்யந்தே தே நரா சத்ய சந்த்யத்தா யே த்வயாமலே –1-9-129-

த்வயா விலோகிதா சத்ய சீலாத் யௌர் அகிலைர் குணை
குலைஸ் வர்யைச்ச யுஜ்யந்தே புருஷா நிர்குணா அபி –1-9-130-

ச ஸ்லாக்ய ச குணீ தன்ய ச குலீனா ச புத்திமான்
ச ஸூ ர ச ச விக்ராந்தோ யஸ்த்வயா தேவி வீஷித–1-9-131-

சதௌ வைகுண்யம் ஆயாந்தி சீலாத்யா சகலா குணா
பராங்முகீ ஜகத்தாத்ரீ யஸ்ய தவம் விஷ்ணு வல்லபே –1-9-132-

ந தே வர்ணயிதம் சக்தா குணாஞ் ஜிஹ்வாபி வேதச
ப்ரசீத தேவி பத்மாஷி மாசாம்ஸ்த்யாஜீ கதாசன –1-9-133-

இந்த ஸ்துதி சொல்வார் இடம் பிராட்டி நீங்காமல் இருந்து கடாக்ஷித்து அருள்கிறாள்

கஸ்யப பிரஜாபதி அதிதி -வாமனன் திருவவதரித்த பொழுது இவள் பதுமை
பரசுராமனுக்கு -தரணி
ஸ்ரீ தசரத சக்ரவர்த்தி -ஸ்ரீ சீதா பிராட்டி
ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ ருக்மிணி பிராட்டி –

இதி சகல விபூத்யவாப்தி ஹேது ஸ்துதிரியம் இந்திர முகோத் கதா ஹி லஷ்ம்யா
அநு தினம் இஹ பட்யதேநருபிர்யைர் வசதி நே தேஷு கதாசித் அபய லஷ்மீ–

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தனா
அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீ ஸ் தத் சகாயி நீ
ராகவத்யே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா சகாயி நீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர்
தேஹானுரூபாம் வை கரோத்யேஷாத் மனச் தானும் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-140–142–143-

ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தில் பாதுகையாக ஸ்ரீ மகா லஷ்மி திருவவதரித்தாள்
இன்றும் மாலோல நரசிம்ஹன் திருவடிகளில் ஒரே பாதுகை தான் உண்டு
அநுரூப ரூப விபவை-விஷ்ணோ தேக அனுரூபாம்
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு -பிராப்ய தசையிலும் உபாய தசையிலும் மிதுனம் உண்டே
சம்ஸ்ரித்த ரஷணம்-சஹ தர்ம சாரிணி -சஹ தர்ம சரீ தவ
ஆகாரத் த்ரய சம்பன்னாம் -காரணமாம் உயிராகி அனைத்தும் காக்கும் கருணை முகில் கமலை உடன் இலங்குமாறும்-தேசிகன்

அஜ்ஞ்ஞாத நிக்ரஹை
நான் முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம் இடம் தோன்றினான்
ஆயின் என் உயிர் நானே மாய்ப்பன் பின்பு வாழ்வு உகப்பன் என்னில்
அன்னவர்க்கு அடியேன் அல்லேன் என்றான் அறிவில் மிக்கான் -கம்பர்

இதைக் கேட்டதும் மைத்ரேயர், முனிவரே! அமிருதமதன காலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியானவள் திருப்பாற்கடலில்
அவதரித்தாள் என்பது உலகம் அறிந்ததாயிற்றே!
அப்படியிருக்க பிருகு முனிவரின் மகளாக ஸ்ரீதேவி பிறந்தாள் என்பது எவ்விதம் பொருந்தும்? என்று கேட்டார்.
அதற்குப் பராசரர் கூறலானார்; மைத்ரேயரே!
உலக மாதாவான பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானை விட்டுப் பிரியாதவளாய், நித்யையாக இருப்பவள்
அவளுக்கு பிறவிகள் இல்லை. ஆயினும் எம்பெருமானைப் போலவே, அவளும் அவதரிப்பதும் மறைவதுமாக இருப்பாள்.
எம்பெருமானைப் போலவே, ஸ்ரீதேவிப் பிராட்டியும், சகல கலியாண குணங்களோடு விளங்குவாள்.
சகல பூதங்களுக்கும் தாயும் தந்தையுமான அந்தத் திவ்வியத் தம்பதிகளுடைய விபூதி வைபவத்தைக் கூறுகிறேன், கேளும்.

சொல்லுக்குப் பொருள் அந்தப் பெருமாள். அந்தப் பொருளைத் தெரிவிக்கும் சொல் இந்தப் பிராட்டி;
நீதி இவள்; அந்த நீதியின் உபாயமான நயம் அவன் இவள் புத்தி; அந்தப் புத்தியாலாகும் போதம் அவன்.
தருமம் அந்த ஸ்ரீமந்நாராயணன்; அந்தத் தருமத்திற்குச் சாதகமான சத்கிரியை ஸ்ரீதேவி;
படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப்படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப் படைப்புச் சக்தி ஸ்ரீதேவி;
இவன் பூமி; இந்தப் பூமியை தரிப்பவன் விஷ்ணு; அந்தப் பகவான் சந்தோஷம்; அதை உண்டாக்கும் சந்துஷ்டி ஸ்ரீதேவி;
இச்சை என்பது ஸ்ரீதேவி; காமம் என்பது பகவான்; யக்ஞம் ஜகந்நாதன். தக்ஷிணை ஜகன்மாதா! புரோடாசம் சனார்த்தனன்;
ஆச்சியாகுதியானது கமலை. பிராக்கு வம்சம் என்பது மதுசூதனன்; பத்தினிச் சாலை என்பது ஸ்ரீதேவி யூபஸ் தம்பம் ஸ்ரீஹரி;
யாகவயனம் ஸ்ரீலக்ஷ்மி! எம்பெருமான்-தர்ப்பை: பிராட்டியே சமித்து! சாமவேதம்-பகவான்; அதில் சேர்ந்த உத்கீதி என்பது லக்ஷ்மி!
வாசுதேவன் அக்னி; இந்திரையானவள் சுவாகா தேவி.

ஸ்ரீவிஷ்ணு பகவானே சங்கரன்; ஸ்ரீ மகாலக்ஷ்மியே கவுரி. கேசவனே சூரியன்; அவனது பிரபையே கமலை!
விஷ்ணுதேவன் பிதுர்தேவதா சொரூபி; ஜகன் மாதாவோ ஆகாயம் அதி விஸ்தாரமான அதன் பரப்பே விஷ்ணு
அந்த ஸ்ரீயப்பதியே சந்திரன். அந்தச் சந்திரனின் காந்தியாகிய நிலவே ஸ்ரீதேவி! சர்வாக்தனான ஸ்ரீஹரியே வாயு;
அந்தச் சந்திரனின் காந்தியாகியே நிலவே ஸ்ரீதேவி! சர்வக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தக் காற்றின் செய்கையே திருமகள்!
சமுத்திரம் கோவிந்தன்; அந்தச் சமுத்திரத்தின் அலை முதலான விகிருதியெல்லாம் ஸ்ரீதேவி! மதுசூதனனே தேவேந்திரன்;
இந்திரையே இந்திராணி சக்கரதரனான பகவானே யமன்; கமலாயையே யமபத்தினியான தூமார்னே!
ஸ்ரீதரனே குபேரன்; ஸ்ரீதேவியே அந்தக் குபேரனின் பெருஞ்செல்வம்! விஷ்ணுவே வருணன் லக்ஷ்மியே வருணனின் பத்தினியான கவுரி!
கோவிந்தனே தேவ சேனாதிபதியான கந்தன்; இந்திரையே தேவசேனை! கதாதரனே பிடிப்பு; அதற்கு காரணமான சக்தியே ஸ்ரீதேவி!
நிமிஷம் நாராயணன் காஷ்டை லக்ஷ்மி! முகூர்த்தம்-வாசுதேவன் அந்த முகூர்த்தத்தின் அவயவமான கலை ஸ்ரீ லோகமாதா!
திருவிளக்கு-சர்வேசுவரன்; அதன் காந்தி-லோகநாயகி! ஸ்ரீ மகாவிஷ்ணு விருட்சம்; ஸ்ரீதேவி கொடி!
சக்கரதரன் பகல் ஸ்ரீகாந்தை இரவு! விஷ்ணுவே மணமகன்; ஸ்ரீதேவியே மணமகள்! பகவான் நதி! சொரூபன்;
ஸ்ரீதேவி நதி சொரூபை நாராயணன் லோபம்; லக்ஷ்மியே ஆசை! கோவிந்தன் ராகம்; ஸ்ரீதேவியே அதன் காரணமாகிய காதல்!
மைத்ரேயரே! இப்படி அநேக வாக்கியங்களைச் சொல்லிப் பயன் என்ன?
அந்தத் திவ்விய தம்பதிகளின் விபூதியைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள்.
தேவதைகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் திரியக்குகளிலும், மற்றுமுண்டான பொருட்களிலும் உள்ள
ஆண் தன்மையான பெயரையுடையனவெல்லாம் ஸ்ரீஹரியே;
பெண் லிங்கமான பெயருடையனவெல்லாம் ஸ்ரீதேவியே; என்று நினைப்பீராக!
இவ்விருவரினும் வேறான வஸ்து ஒன்றும் இல்லை. எல்லாம் அவர்களில் வியாபிக்கப்பட்டு அவர்களது விபூதியாகவே இருக்கின்றன!

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்
பராசரர் மேலும் தொடர்ந்து கூறலானார்;
மைத்திரேயரே!
நீர் அறிந்து கொள்ள விரும்பிய பிராட்டியாரின் திருவவதார சரித்திரத்தை,
நான் முன்பு மரீசி மாமுனிவரிடம் கேட்டறிந்தபடிக் கூறுகிறேன், கேளும்.
ருத்திரருடைய அம்சமான மிகவுங்கோபமுள்ள துர்வாச மஹாமுனிவர், பூமண்டலமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு சமயம், மனிதர்கள் எளிதில் அடைய முடியாத வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது,
அங்கே ஒரு வித்தியாதர மங்கை தென்பட்டாள்.
அவளது கையில் பரிமள மிகுந்த ஒரு மலர் மாலை இருப்பதைத் துர்வாச முனிவர் கண்டார்.
அவர் அந்த மங்கையை நோக்கி, பெண்ணே! இந்தப் பரிமளம் மிகுந்த மலர் மாலையை என்னிடம் கொடுப்பாயாக என்று யாசித்தார்.
அந்த மாலையை வித்தியாதர மங்கை அவரிடம் பக்தியோடு கொடுத்தாள்.

அந்த மலர் மாலையை துர்வாசர் தமது தலையிலே சுற்றிக்கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வழியிலே தேவேந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்தான்,
அவனை துர்வாசர் கண்டதும் தமது சிரசில் சுற்றியிருந்த மலர் மாலையை அவிழ்த்து
யானையின் மீது அமர்ந்திருக்கும் இந்திரன் மீது விட்டெறிந்தார்.
இந்திரன் அந்த மலர் மாலையை பிடித்து, ஐராவத யானையின் மத்தகங்கள் மீது போட்டான்.
அதனால் அந்த யானை மதங்கொண்டு, அந்தப் பூமாலையை தன் துதிக்கையால் எடுத்து, முகந்து பார்த்துத் தரையில் எறிந்தது.

அதைக் கண்டதும் துர்வாசருக்கு மிகவும் கோபம் பொங்கியது. அவர் இந்திரனை நோக்கி,
அடா, வாசவா! ஸ்ரீ ஐசுவரிய கர்வத்தால் ஸ்ரீமகாலக்ஷ்மியின் வாசஸ்தலமான மலர்மாலையை அங்கீகரிக்காமற் போனாய்.
சிரசில் நான் சூடிய மாலையை நீ மதிக்காமல் தரையில் எறிந்துவிட்டாய்.
ஆகையால் உன்னுடைய ஐசுவரியங்கள் சீக்கிரம் நாசம் அடையக்கடவது!
என்னை அவமதித்த காரணத்தால் உன் உலகம் மகாலட்சுமியின் வாசம் ஒழிந்து துர்த்தசை அடையக் கடவது என்று சபித்தார்.

பிறகு இந்திரன் வெகு பரபரப்புடன் தன் யானையிலிருந்து இறங்கி, துர்வாச முனிவரின் பாதங்களில் வீழ்ந்து,
தன்னை மன்னிக்கும்படி கெஞ்சினான். அப்படியவன் வேண்டிக்கொண்டும், துர்வாசரின் கோபம் அடங்கவில்லை.

தேவேந்திரா! தயையுடைய இதயமற்றவன் நான்! என்னிடம் மன்னிக்கும் சுபாவம் இல்லை.
உனக்கு உட்பட்டுப் பின் பாட்டு பாடும் முனிவர்கள் வேறே இருக்கிறார்கள்! நான் துர்வாசன்! மற்ற முனிவர்களைவிட மாறுபட்டவன்!
கவுதமர் முதலியவர்கள், நீ முன்பு செய்த துரோகத்திற்காக உன்னைச் சபித்துப் பிறகு
உன்னுடைய விநயத்தின் காரணமாக உனக்கு தயவுசெய்தார்கள். அதுபோலவே என்னையும் நினைத்து விட்டாய்!
நான் அப்படிப்பட்டவனல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்கள் உன்னைச் சிறப்பாகத் துதிப்பதாலேயே உனக்கு இவ்வளவு இறுமாப்பு!
அதனால் தான் என்னை நீ அவமதித்தாய். குற்றஞ்செய்தால் தண்டிப்பது தான், நீதியே ஒழிய மன்னிப்பது என் வழக்கமல்ல!
நீ ஏன் பயந்தவனை போலக் கபட நாடகம் ஆடுகிறாய்? வந்த வழியே செல்! என்று சொல்லி விட்டுத் துர்வாச முனிவர் சென்று விட்டார்.

இந்திரனும் தன் யானையின் மீது ஏறித் தேவலோகம் சென்று விட்டான்.
கேளும் மைத்ரேயரே! அன்று முதல் மூன்று உலகங்களும் லட்சுமி கடாக்ஷமற்று, தாவரங்களுங்கூட க்ஷீணித்தன.
அன்று முதல் யாகாதி கர்மங்களும் நன்றாக நடைபெறவில்லை. தவமுனிவர்கள் நன்றாகத் தவஞ்செய்யவில்லை.
தான தருமங்களில் மக்கள் கவனஞ் செலுத்தவில்லை. மக்களிடையே சத்துவகுணம் நலிந்து லோபம் மிகுந்தது.
அற்ப விஷயத்திலும் பேராசை மிகுந்தது. அது ஏனென்றால், சத்துவகுணம் எங்கே இருக்குமோ,
அங்கே தான் திருமகள் வாசம் செய்வாள்.
சத்வகுணமும் லட்சுமி கடாட்சத்தையே அனுசரித்திருக்கும் லட்சுமி கடாட்ச மற்றவர்களிடம் சத்துவ குணமும் இராது
இந்தப்படியே திரிலோகங்களும் லட்சுமி கடாட்சம் குறைந்தவனாய் மிகவும் துர்தசையடைந்ததால்,
அரக்கர் கூட்டத்தினர் தேவர்களுக்கு தீங்கிழைக்கலானார்கள்.

அதனால் லோபாதி துர்க்குணங்களுடையவர்களாகவும், லட்சுமி கடாட்சமில்லாதவர்களாகவும்
பலமும் சத்துவமும் இல்லாமலும் இருந்த அசுரர்கள் துள்ளியெழுந்து தேவர்களுடன் போர் செய்யத் துவங்கினர்.
தேவர்கள் தோற்று, பிருமதேவனைச் சரணடைந்தார்கள்.
தேவேந்திரன் தனக்கு அசுரர்களால் ஏற்பட்டுள்ள துர்த்தசையைக் கூறினான். அதைக்கேட்டதும் பிருமதேவன்,
தேவர்களே! பராபரங்கள் என்று சொல்லப்படும் உயர்ந்தவைகளுக்கும், தாழ்ந்தனவற்றிற்கும் ஈசுவரனும்
அசுரரையெல்லாம் நாசஞ்செய்ய வல்லவனும் உற்பத்தி, ஸ்திதி, லயங்களுக்குக் காரணமானவனும்
தனக்கு ஒரு காரணமின்றிதானே சுதந்தரமாக இருப்பவனும், பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவனும்
ஒருவராலும் வெல்ல முடியாதவனும், முடிவற்றவனும் பிரகிருதி புருஷாக்களிடம் உட்புகுந்து காரியங்களைச் செய்பவனும்,
தனது திருவடிகளையடைந்தவரின் துன்பங்களை நீக்க வல்லவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணமடையுங்கள்.
அவர் உங்களுக்கு ஷேமத்தைச் செய்தருளுவார்! என்று சொல்லி,

அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு திருப்பாற்கடலின் வடகரையிற்சென்று ஸ்ரீயப்பதியை உத்தேசித்துத்
தேவர்களுடன் துதி செய்யலானார். சர்வமயனும், சர்வ ஈசனும், முடிவற்றவனும் பிறப்பில்லாதவனும்;
சுருங்கல் முதலியவையற்றவனும் உலக ஆதாரனும் தனக்கு வேறு ஆதாரமற்றவனும்; அப்பிரமேயனும்;
பேதிக்க முடியாதவனும் சூட்சுமத்திலும் அதிசூட்சுமமானவனும் ஸ்தூலங்களில் அதிஸ்தூலமானவனும் ஆகிய
ஸ்ரீமந் நாராயணனுக்குத் தண்டனிடுகிறேன்!
அடியேன் முதலான சகல பிரபஞ்சமும் எவனிடமிருந்து தோன்றியதோ; எவனிடம் இருக்கின்றதோ;
எவனிடம் லயமாகுமோ; சர்வ பூதங்களும் எவனுடைய சரீரமோ எந்தத் தேவன் மேலானவர்களுக்கும் மேலானவனோ;
எவன் இருபத்து நான்கு தத்துவங்களுக்கும் பரனான புருஷனுக்கும் மேற்பட்டவன் என்று பரமான்மா என்னும்
மோட்சத்தை அபேட்சிக்கிற யோகிகளால் மோட்சத்துக்காக நினைக்கப்படுகிறானோ எவனிடத்தில்
பிராகிருதமான சத்துவாதி குணங்களில்லையோ, தூய்மையான சகல வஸ்துக்களுக்கும் மிகவும் தூயவனான
அந்த ஆதிபுருஷன் அடியவரான எங்களுக்குப் பிரத்தியட்சமாக வேண்டும்.
கலை; காஷ்டை; நிமிஷம் முதலிய கால சூத்திரத்திற்குக் கோசரமான இடத்தில் பிராட்டி,
திவ்விய மங்கள விக்கிர சமபரி ஜனம் முதலான விபூதிகள் இல்லையோ அப்படிப்பட்ட ஸ்ரீஹரி, எங்களுக்குப் பிரசன்னமாவானாக!

எவன் பரமேசுவரனாயும் அஜனுமாக இருந்தும் எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் முக்தியடைந்த ஆன்மாவாக
உபசார வழக்காகச் சொல்லப்படுகிறானோ, அந்த ஸ்ரீமந்நாராயணனானவன் எங்களுக்குப் பிரசன்னமாவானாக!
எவன் காரணமாகவும், காரியமாகவும், காரணத்திற்குக் காரியமாகவும், காரியத்திற்குக் காரியமாகவும் இருக்கிறானோ,
அவன் பிரசன்னமாவானாக! பிரகிருதியின் காரியமான மகத்தின் காரியமான அகங்காரம் எது உண்டோ,
அதன் காரியமான தன் மாத்திரைகளும் உண்டல்லாவா? அவற்றின் காரியமான பஞ்ச மகாபூதங்கள் உண்டல்லவா?
அவற்றின் காரியமான பிரம்மாண்டத்தின் காரியமாக இருக்கிற பிரம்மனும், அவனிடத்தில் உண்டான தட்சாதிகளும் ஆகிய
இந்த லோகப் பிரவாகம் எல்லாம் எவன் தானேயாக இருக்கிறானோ, அத்தகைய எம்பெருமானை நாங்கள் சரணடைகிறோம்!

எவன் சப்தம் முதலிய சகல போக்கியங்களையும் அனுபவிப்பவனாகவும், சப்தம் முதலிய அனுபவப் பொருளாகவும்,
சகலப் பிரபஞ்சங்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவாகவும், சிருஷ்டி காரியமாகவும், சர்வ சரீரகனாவும் இருக்கிறானோ
அப்படிப்பட்ட கர்த்தனை நாங்கள் வணங்குகிறோம்! விசுத்த ஞானமயமும் அஜமும் அட்சரமும் அவ்யயமும் அவ்யக்தமுமாய்த்
தூலமும் சூட்சுமமுமல்லாமல், சகல விசேஷண வர்ச்சினமாக இருக்கிற அந்த பரமாத்மாவான விஷ்ணு சொரூபத்தை வணங்குகிறோம்!
பரப்பிரும்ம சொரூபனான அந்தப் புருஷோத்தமனுடைய பதினாயிரத்தில் பதினாயிரம் அம்சமான ஏகதேசமான அம்சத்தில்,
சகல பிரபஞ்ச சக்தியும் இருக்கிறதோ, அந்த அவ்யனுக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்?

எப்போதும் தியானத்தில் இருக்கிற யோகிகள் தங்களுடைய பாவ புண்ணிய ரூபமான கர்மங்கள் நசித்தவுடன்
எந்தச் சொரூபத்தைப் பிரணவப் பொருளாகக் காண்கின்றனரோ,
எந்த சொரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் நானும் சங்கரனும் அறியமாட்டாமோ,
தனக்கு முன்பு யாரும் இன்றி தானே யாவற்றுக்கும் முன்னாக இருக்கிற எந்தத் தேவனுடைய சக்திகள்
பிரம்ம விஷ்ணு சிவாத்துமகங்களாகி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்யுமோ அந்த
ஸ்ரீமகாவிஷ்ணுவினுடைய சொரூபத்திற்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்.

சர்வேசுவரா! சர்வபூத சொரூபா! அச்சுதா! ஸ்ரீவிஷ்ணுபகவானே! உனது திருவடித்தாமரையை நம்பியிருக்கும்
அடியோர்களுடைய கண்களுக்கு எதிரே பிரசன்னமாவீராக! என்று சதுர்முகப் பிருமதேவன் துதித்தார்
மற்ற தேவர்களும் எம்பெருமானைத் தெண்டனிட்டு, தேவதேவ! எங்கள் முன் பிரசன்னமாகிச் சேவை சாதித்தருள வேண்டும்!
எம்பெருமானே ! இரண்யகர்ப்பனும் ருத்திரனும் உன்னுடைய பரமசொரூபத்தை மெய்யாக அறியமாட்டார்கள்.
ஜகத்நிவாசனாய் எங்கும் நிறைந்தவனான உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! என்று துதி செய்தார்கள்.
அதைக்கண்ட பிருகஸ்பதி முதலான தேவரிஷிகளும் துதி செய்வாராயினர்.

ஆதியாயும், யக்ஞ புருஷனாயும், சகல யக்கியங்களால் ஆராதிக்கத் தக்கவனாயும், பூர்விகர்களுக்குப் பூர்விகனாவும்,
ஜகத்தை சிருஷ்டிக்கிற பரமேஷ்டிக்குத் தந்தையாயும், இன்னபடி என்று
சிறப்பிக்கப்படக்கூடாதவனாயும் இருக்கிற ஸ்ரீயப்பதிக்குத் தெண்டன் இடுகிறோம்.
ஆறுகுண சம்பன்னனே! முற்பட்டவைகளுக்கும் பிற்பட்டவைகளுக்கும் அதிபதியானவனே! பாக்கிய சொரூபியே!
அழிவற்றவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளைச் சரணமாகப் பற்றிய அடியேங்கள்மீது கிருபை கொண்டு சேவை சாதிப்பாயாக!
எம்முன் இந்தப் பிரமதேவனும், ஏகாதச ருத்திரர்களுடன் இந்த மகாதேவனும், துவாதச ஆதித்தர்களுடன்
இந்தப் பூஷாவும், திரேதாக்கினிகளோடு இந்த அக்கினியும் அசுவினி தேவதைகளும் வசுக்களும் மருத்துகளும்,
விசுவ தேவதைகளும், சாத்தியரும்; மற்றுமுள்ள தேவகணங்களுடன் இந்தத் தேவேந்திரனும்
அசுர சேனைகளால் ஜெயிக்கப்பட்டு உன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றித் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைக் கண்ணோக்கம் காட்டி அருள்செய்ய வேண்டும் பரமாத்மா! என்று தேவரிஷிகள் துதித்தார்கள்.

அப்போது எம்பெருமானான ஸ்ரீமகாவிஷ்ணு சக்கராதி லட்சணங்களுடன் அத்தேவ கணங்களுக்குப்
பிரத்தியட்சமாகி சேவை தந்து அருளினார். இவ்விதம் திருவாழித் திருச்சங்குடன் திவ்விய மங்கள விக்கிரகாதிகளையுடையவராய்,
தேஜோராவியாய்ச் சேவை சாதித்த எம்பெருமானைச் சதுர்முகப் பிருமாவும் மற்ற தேவர்களும் சேவித்து
ஆனந்தத்தால் கண்கள் மலர்ந்து, அதிசயத்தால் அடிக்கடி கீழே விழுந்து வணங்கி எம்பிரானைத் துதிக்கலானார்கள்.

சுவாமி! அநந்தமான தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமின்றி சமமான அனுக்கிரகம் செய்பவன் நீ!
பிரமனும் ருத்திரமூர்த்தியும் இந்திரனும் அக்கினியும் வாயுவும் வருணனும் ஆதித்தனும் யமனும் வசுக்களும் மருத்துக்களும்
விசுவதேவர்களும் மற்றும் இங்கு வந்திருக்கிற சகல தேவர்களும் நீயே! ஏனெனில் நீயே அனைவரிடமும் இருந்து நடத்துகிறாய்,
ஆத்மாவுக்குக் கரணங்கள் போல எல்லோரும் உனக்குச் சேஷபூதராக இருக்கிறார்கள்.
அன்றியும் உன்னுடைய ஆராதனையான யாகங்களும் சகலவேத மூலமான பிரணவமும் நீ!
இவ்விதமான சகல ஆராதனைகளையும் ஏற்று மனமிரங்கிக் காப்பவனும் நீ! எல்லாவற்றையும் அறிபவனும் நீயே!
எல்லாவற்றாலும் அறியப்படுவதும் நீயே! உன்னிடமே அகிலப்பிரபஞ்சமும் நிற்கின்றது.
அடியேங்கள் அசுரர்களால் ஜயிக்கப்பட்டு மிகவும் விசனமடைந்து, சர்வலோக கரணியனான உன்னைச் சரணமடைந்தோம்.
சகல பாபநாசகரனான உன்னைச் சரணமடையுமளவு தான் புருஷனுக்கு உபத்திரவமும் விஷயா பிலாஷையும்
மோகமும் துக்கமும் உண்டாகியிருக்கும். தயா சமுத்திரனே! சரணாககரான எங்கள் முன் பிரசன்னமாக வேண்டும்,
என்று கைகூப்பித் தொழுதார்கள். அப்போது சர்வக்ஞனான எம்பெருமான் முகம் மலர்ந்து அனுக்கிரகம் புரிந்து அருள்புரியலானார்.

தேவதைகளே! எனது தேஜஸ் சிறப்பினால் உங்களுடைய பல, சத்துவ, தேஜோ தைரியங்களை
அபிவிருத்தியடையச் செய்கிறேன். அசுர தைத்தியர்களோடு நீங்கள் ஓர் உடன்பாடு செய்து கொண்டு
திருப்பாற்கடலில் சகல அவுஷதிகளையும் போட்டு, மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கடையும் கயிறாகவும் செய்து கொண்டு
அமிர்தத்தை அடையவேண்டிக் கடையுங்கள்.
அதனால் உண்டாகும் பயனை நாம் இரு தரத்தாரும் சரியாகப் பங்கிட்டுக் கொள்வோமென்று அந்த தைத்திரியர்களிடம் பேசி,
அவர்களை உங்கள் வசம் செய்து கொள்ளுங்கள். இவ்விதமாக, நீங்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது
உண்டாகும் அமிர்தத்தை நீங்கள் பானஞ்செய்து நீங்களே மகா பலசாலிகளாகி அமரர்களாவீர்கள்!
நான் அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காதவாறு செய்கிறேன்.
இந்தச் செயலில் உங்களுக்கு வேண்டிய சகாயங்களைச் செய்கிறேன் என்று மகாவிஷ்ணு கூறினார்.

அதைக் கேட்டு தேவர்கள் மகிழ்ந்து, சுவாமியின் சன்னதியிலிருந்து விடைபெற்றுச் சென்று,
தங்களுடைய விரோதிகளான அசுரர்களோடு சாம உபாயத்தினால் சமாதானம் செய்து கொண்டு,
அமிர்தம் கடைவதில் ஒன்றுபட்டார்கள். இருதரப்பினரும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைவதில் முனைந்தார்கள்.
சகல மூலிகைகளையும் கொண்டு வந்து, சரத்கால மேகத்தைப் போல மிகவும் வெண்மையாக இருக்கும்.
திருப்பாற்கடலில் போட்டு, மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு,
அதிக உற்சாகத்தோடு கடையத் துவங்கினார்கள். அப்பொழுது எம்பெருமானான விஷ்ணு ஒரு தந்திரம் செய்து,
வாசுகி சர்ப்பத்தின் வாலைத் தேவர்கள் பிடிக்கும்படியும் அசுரர்கள் அதன் தலையைப் பிடிக்கும்படியும் செய்தார்.
அதன் விளைவாக வலுவும் பராக்கிரமங்களும் மிக்க அசுரர்கள் விஷாக்கினிச் சுவாலையுடன் கூடிய
வாசுகி என்ற பாம்பின் பெருமூச்சுக் காற்றினால் தேஜசு குறைந்து, பலவீனர்களானார்கள்.
அந்தக் கொடிய பாம்பின் சுவாச வேகத்தினால் மேகங்கள் அடித்துத் தள்ளப்பட்டு அதன் வால் பக்கமாகச் சேர்ந்த
அம்மேகங்கள் பெருமழை பொழியவே, தேவர்கள் அம்மழைத் திவலைகளால் களைப்பு நீங்கிச் சுகமடைந்தார்கள்.

அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலின் மையத்தில் மகா கூர்மரூபந்தரித்து, (ஆமை உருவம் தரித்து)
மந்திர மலைக்கு ஆதாரமாக இருந்து அதைச் சுழலச் செய்யச் சாதகமாக இருந்தார்.
மேலும் வேறொரு திருமேனியுடன் அசுரர்களின் பக்கத்திலே நின்று சங்கு, சக்கராதி திவ்விய ஆயுதங்களைத் தரித்து
வாசுகியின் வாலையும், தலையையும் பிடித்து இடமும் வலமுமாக இழுத்துக் கடைந்தார்.
அதுமட்டுமல்ல, அவர் மிகவும் பெரியதான ஒரு திவ்விய உருவமெடுத்து, அந்த மந்த மலையின், மேற்புறத்தை ஆக்கிரமித்து,
அதைப் பலப்படுத்தியருளினார். பின்னர் விஷ்ணுபகவான், தேவரும், அசுரரும் அறியமாட்டாத அதிரகசியமான
வேறொரு சொரூபத்தால் தேவர்களுக்கும் தைரியவுற்சாகங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார்.
இவ்விதமாக ஸ்ரீயப்பதியின் சகாயத்தைக் கொண்டு, தேவர்களும் அசுரர்களும் கடைந்த திருப்பாற்கடலிலிருந்து
சகல தேவர்களாலும் பூஜிக்கத்தக்க காமதேனு உற்பத்தியாயிற்று. அதை கண்ட அசுரரும் தேவரும் மகிழ்ந்தனர்.

பின்னர் சித்தர்களும் மோகத்தால் கலக்கமுற்று அதிசயிக்க சகலலோக மோகினியான வாருணிதேவி,
மோனமயக்கத்தால் சுழலும் கண்களுடன் தோன்றினாள். மீண்டும் மந்திரமலையால் கடையப்பட்ட
திருப்பாற்கடலிலிருந்து அபூர்வமான திவ்வியப் பரிமள சுகந்தத்துடன் பாரிஜாத விருட்சம் தோன்றியது.
அதன்பிறகு ஜகன்மோகன ரூபலாவண்யமுள்ள அற்புதமான அப்சரஸ்திரீகளும்,
குளிர்ச்சியடைய கிரணங்களைக் கொண்ட சந்திரனும் தோன்றினர். அந்தச் சந்திரனை ருத்திரமூர்த்தி எடுத்துக்கொண்டார்.
பிறகு பாற்கடலில் உற்பவமான ஆலகால விஷத்தைச் சிவபெருமானும் நாகேந்திரர்களும் கிரகித்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு, பகவதம்சமான தன்வந்திரி என்ற தேவன் வெண்மையான ஆடைகளையும், மலர் மாலைகளையும் அணிந்து,
அமிர்தம் நிறைந்த கமண்டலத்தைக் கையிலே ஏந்திய வண்ணம், அந்தத் திருப்பாற்கடலிலிருந்து உதயமானான்.
அமிர்த கலசத்தோடு தோன்றிய அந்தத் தேவனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மனக்களைப்பு நீங்கி மகிழ்ந்தார்கள்.

பிறகு அதியற்புதமாகவும், அபூர்வமாகவும், திவ்வியப் பிரகாசச் சிறப்போடும் மலர்ந்த செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டும்,
தாமரை மலர்களைத் திருக்கரங்களில் தரித்து கொண்டும், மகாலட்சுமி வடிவமான ஜகன்மாதாவான பெரிய பிராட்டியார்
திருவவதாரஞ் செய்வதைக் கண்டு, முனிவர்களெல்லாம் மகிழ்ந்து ஸ்ரீசூக்தங்களைக் கொண்டு துதித்தார்கள்.
அப்போது பிராட்டியின் சன்னதியில் விசுவாவசு முதலிய கந்தருவர்கள் கீதங்களைப் பாடினார்கள்.
கிருதாகி முதலிய அப்சரசுகள் நடனமாடினார்கள். கங்கை முதலிய மகாநதிகள் தங்கள் தூய நன்னீரைக் கொண்டு,
பிராட்டியின் திருமஞ்சனத்திற்குச் சேவை செய்தன. திக்கு கஜங்கள் நவரத்தின கசிதமான பொற்கலசங்களில்
அந்த நத நீரை எடுத்து, பிராட்டிக்குத் திருமாலையொன்றைத் தாயாருக்குச் சமர்ப்பித்து விசுவகர்மன் ர
த்தினாபரணங்களைத் தாயாரின் திருமேனியிலே சாற்றினான். இவ்விதமாக அவரவர் செய்த கைங்கரியங்களைத்
திருவுள்ளம் பற்றிப் பிராட்டியார் திருமஞ்சனம் செய்தருளி, திருவாபரணம் திருமாலை முதலியவற்றைச் சாற்றிக்கொண்டு,
மூவரும் தேவரும் பார்த்திருக்க விஷ்ணுபெருமானின் திருமார்பில் எழுந்தருளினாள்.

பிறகு பெரிய பிராட்டியார் அகங்குளிர்ந்து கடாட்சித்ததால் தேவர்கள் மகிழ்ந்தார்கள்.
அசுரர்களோ பெருமானிடத்தில் பக்தியற்றவர்களாக இருந்ததால் பிராட்டியாரின் கடாட்சத்தை இழந்து தீன ஸ்திதியை அடைந்தார்கள்.
இப்படியிருக்கும்போது அசுரர்களான தைத்திரியர்கள், தன்வந்திரியின் கரத்திலிருந்த அமிர்த கலசத்தைப்
பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீமந்நாராயணன் ஜகன்மோகனகரமான மங்கையுருவமெடுத்து,
அசுரர்களை மயக்கியிழுத்து, வஞ்சித்து அமிர்தம் அவ்வசுரர்களுக்கு எட்டாதபடி செய்து அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தார்.
இவ்விதம் பகவத்கிருபையினால் கிடைத்த அந்த அமிருதத்தைத் தேவர்கள் அருந்தியதால் பலம் பெற்று விளங்கினார்கள்.
அதைக்கண்டு கோபங்கொண்ட அசுரர் தைத்ய தானவர்கள் பலவித ஆயுதங்களை ஏந்தித் தேவர்களுடன் போர் புரிந்தார்கள்.
அமிர்தபானஞ்செய்த அமரர்களோ, அசுரர்களுடன் தைரியமாகப் போரிட்டு, அவர்களைப் பாதாளத்திற்குத் துரத்தினார்கள்.
பிறகு தேவேந்திரனும் தேவர்களும் ஸ்ரீயப்பதியை வணங்கி விடைபெற்று தேவலோகம் சென்று
சுகபோகங்களை இடையூறின் அனுபவித்து வரலானார்கள்.

முனிவரே! அப்போது சூரியன் பிரகாசமான கிரணங்களுடன் தன் வழியில் மாறாமல் சஞ்சரித்து வந்தான்.
மற்றுமுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தம் வழியில் மாறாமல் சஞ்சரித்தன. அக்கினியும் வலஞ்சுழித்தது.
சகல ஜனங்களும் தரும சிந்தையுடையவராய்ச் சுகமாக வாழ்ந்தார்கள். இவ்விதம் மூன்று உலகங்களும் லக்ஷ்மிகடாட்சம் பெற்றன.
இப்படியிருக்குங் காலத்தில் தேவேந்திரன் தன் பதவியை அடைந்து மகாலட்சுமியான பிராட்டியைத் துதித்துத் தோத்திரம் செய்யலானான்.
சகல உலகத்திற்கும் தாயாராய், திருப்பாற்கடலில் திருவவதாரம் செய்தவளாய், மலர்ந்த தாமரையைப் போன்ற திருக்கண்களுடையவளாய்,
திருமாலின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்.
தாமரை மலரில் வீற்றிருந்து, தாமரை மலரைத் திருக்கையில் தரித்து, தாமரை மலர் போன்ற திருவிழிகளுடன்
தாமரை மலரையொத்த திருமுக மண்டலமுள்ளவளும், உந்தித் தாமரை பூத்தவனின் திருவுள்ளத்திற்கு
உகந்தவளுமான ஸ்ரீதேவியைச் சேவிக்கிறேன்! உலகங்களைத் தூய்மை செய்து அருள்கின்ற தாயே,
சித்தியும் சுவாகையும் சுதையும் சொதையும் சந்தியும் ராத்திரியும் பிரபையும் மேதையும் சிரத்தையும் சரஸ்வதியும் எல்லாம் நீயே!
சகலமங்கள சொரூபிணியான தாயே! யக்ஞவித்தை என்கின்ற கர்ம மீமாம்சையும், மகாவித்தையென்கின்ற
இந்திர ஜாலவித்தையும் குஹ்ய வித்தை என்கின்ற வேதாந்த வித்தையும் நீயே!
தர்க்க வித்தையும், வேத வித்தையும் கிருஷிகோரக்ஷண வாணிப வித்தையும், தண்டநீதி வித்தையும் நீயே!
இவ்விதம் சாந்தங்களாகவும் அசாந்தங்களாகவும் இருக்கிற உருவங்களைக் கொண்டு மூன்று உலகங்களையும் நீயே நிறைந்திருக்கிறாய்.
தாயே! சகல யக்ஞ சொரூபனாகவும், மகா யோகிகளுக்கும் தியானித்து அறியத்தக்க தேவதேவனுமான கதாதரனின்
திருமேனியில் உன்னைத் தவிர வேறு யார்தான் வீற்றிருக்க முடியும்? உலகமாதாவே!
உன் கடாட்சத்தை இழந்த போது மூன்று உலகங்களும் நாசமடைந்தவை போலாகித் திரும்பவும்
உனது கடாட்சத்தைப் பெற்றதால் சவுபாக்கியங்களைப் பெற்றன. தாயே! கருணை நிறைந்த
உனது கடாட்ச வீட்சண்யத்தாலே பிராணிகளுக்கு
பாரியா, புத்திர, பந்து, மித்திர, கிருக, ÷க்ஷத்திர, தன வாகனாதிகள் எப்பொழுதுமே உண்டாகின்றன.

எம்பெருமாட்டியே! உன் கடாட்சம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் அதிகாரமும் சத்துரு வெற்றியும் சுகமும் கிடைப்பது அரிதல்ல.
பிராட்டியே! சகல பிரபஞ்சத்துக்கும் நீயே அன்னை! தேவதேவனான நாராயணனே தந்தை! தாயே!
நீங்கள் இருவரும் சேர்ந்தே சராசர ஸ்வரூபமான இந்த பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கிறீர்கள்.
ஸ்ரீவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தாயே! அடியேங்களது புத்திர, மித்திர வர்க்கங்களையும் பசுக்களையும்,
பூஷணங்களையும் ஒருநாளும் பிரியாது இருந்தருள வேண்டும். யாவற்றையும் தூய்மையாக்கவல்ல தாயே;
எங்களுடைய தனகோசத்தையும் தொழுவத்தையும், இல்லங்களையும், உடலையும், களத்திரத்தையும்,
ஒருநாளும் பிரியாமல் இருந்தருள வேண்டும். நிர்மலையான தாயே! உன் கடாட்சம் தூரமானால்
மக்கள் சவுசீல மகாகுணங்களும் தன தானியமும் இல்லாமற் போவார்கள்.
குணக்குறையுடையோராலும் உன் கடாட்சம் பெற்றவர்கள். எல்லா சவுபாக்கியங்களையும் பெற்றுப் பிரபுக்களாக வாழ்வார்கள்.

ஸ்ரீவிஷ்ணு வல்லபையான தாயே! உன் கருணைக்குப் பாத்திரமானவனே குணவான்; புண்ணியவான்; புத்திமான். சூரன்,
பராக்கிரமசாலியாவான்! ஜகத்தையெல்லாம் வளர்க்கும் தாயே! நீ வெறுத்தால், ஒருவனுடைய வாய்மை, சமதர்மம்
முதலிய சற்குணங்களும் துர்க்குணங்களாகி விடும். உனது திருக்கல்யாண குணங்களை
நான்முகப் பிரமனாலும் துதிக்க இயலாதே அப்படியிருக்க அடியேன் எப்படிப் புகழ்வேன்?
ஆயினும் தாயே கருணை கூர்ந்து எம்மை விட்டுவிடாமல் காத்தருள வேண்டும் என்று தேவேந்திரன் துதித்தான்.
அப்பொழுது, எங்கும் நிறைந்தவளான ஸ்ரீதேவிப்பிராட்டியார் திருவுள்ளம் உவந்து புரந்தரன் முன்பு தோன்றி,
தேவேந்திரா! நீ செய்த வழிபாட்டில் நான் மகிழ்ந்து உனக்கு வரமளிக்க வந்தேன்.
உனக்கு வேண்டிய வரங்களைக் கேள் என்று அருளிச்செய்தாள். தேவேந்திரன் உடனே ஸ்ரீதேவியை வணங்கித் தாயே,
நீ திரிலோகத்திலும் இடைவிடாமல் எழுந்தருளியிருக்க வேண்டும். எவனருகிலும் இந்தத் தோத்திரத்தினால் உன்னைத் துதித்தால்
அவனை நீ ஒருநாளும் கைவிடாமல் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று இரண்டு வரங்களைக் கொடுத்தருளும்படி வேண்டினான்.
அவன் வேண்டிய பிரார்த்தனையை ஸ்ரீதேவிப்பிராட்டியார் ஏற்றுக்கொண்டு, அமரேந்திரா!
நீ விரும்பிய வண்ணம் ஆட்சிபுரியும் உனது உலகத்தை விட்டு நான் நீங்குவதில்லை.
எவன் தினந்தோறும் காலை மாலைகளில் இந்த ஸ்ரீ தோத்திரத்தால் என்னைத் துதிக்கிறானோ,
அவனுக்கு நான் அருள்புரிகிறேன்! என்று இரண்டு வரங்களைத் தந்தருளினாள்.

மைத்ரேயரே!
பூர்வத்தில் ஸ்ரீதேவி, பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையினிடத்தில் அவதரித்தாள் என்று சொன்னேனல்லவா?
பிறகு அமிர்தங்கடைந்த காலத்தில், திருப்பாற்கடலிலும் அவதரித்தாள். இதுமட்டுமல்ல,
உலகநாதரான ஜனார்த்தனன் எப்போதெப்போது உலகங்களில் அவதரிப்பானோ, அப்போதைக்கப்போது ஸ்ரீதேவியும் அவனுடன்கூட,
அந்த அவதாரப் பயன்பெற, அவதாரம் செய்து அருள்வாள்.
முன்பு ஸ்ரீமந்நாராயணன் அதிதியின் குமாரனாக அவதரித்தபோது ஸ்ரீதேவிப்பிராட்டியார் பதுமை என்ற திருப்பெயரோடு அவதரித்தாள்.
விஷ்ணு, பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாக அவதரித்தாள்,
அவன் சக்கரவர்த்தித் திருமகன் ராமனாக அவதரித்தபோது இவள் சீதா பிராட்டியாக அவதரித்தாள்.
அந்த எம்பெருமான் கண்ணனாக அவதாரம் செய்த போது இவள் ருக்மணியாக அவதரித்தாள்.
இதுபோலவே மற்றைய அவதாரங்களிலேயும் இப்பிராட்டி, பெருமாளை விட்டு பிரியாமல் கூடவே அவதரித்துக் கொண்டிருப்பாள்.
எம்பெருமான் தேவதா சொரூபத்தோடு அவதரித்தால் ஸ்ரீதேவியும் அதற்கேற்ற தெய்வத் திருமேனியுடன் அவதரிப்பாள்.
மனுஷ்ய சொரூபத்தோடு பெருமாள் அவதரித்தால் தேவியும் மனுஷ்ய ரூபத்தோடு அவதரிப்பாள்.

மைத்திரேயரே!
ஸ்ரீமகாலக்ஷ்மியின் இந்த திருவவதாரத்தை எந்த மனிதன் பக்தியுடன் பாராயணம் செய்கிறானோ,
எவன் பக்தியோடு கேட்கிறானோ, அவனுடைய இல்லத்தில் பெரிய பிராட்டியாரான ஸ்ரீதேவி என்றும் பிரியாமல் எழுந்தருளியிருப்பாள்.
எந்தக் கிருஹங்களிலே இந்த ஸ்ரீதேவியின் சரித்திரம் தினந்தோறும் படிக்கப்படுகிறதோ,
அந்தக் கிருகங்களில் கலகத்திற்கு ஆதாரமான வறுமை இராது. ஸ்ரீதேவி, முன்பு பிருகு முனிவரின் புத்திரியாகிப்
பின்னர் மீண்டும் திருப்பாற்கடலில் அவதாரஞ்செய்த விதத்தை உமக்கு அறிவித்தேன். சகல ஐசுவரிய காரணமாக,
இந்திரனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை யாராகிலும் தினந்தோறும் பக்தியுடன் படிப்பார்களானால்
அவர்கள் ஒருக்காலும் அசுபத்தை அடையமாட்டார்கள். சர்வாபீஷ்டங்களும் நிறைவேறி அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள்

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவேங்கட யாத்திரை சிந்தனம் , அக்ரூரர் கோகுலம் செல்லுதல் சிந்தனம் -அர்ச்சிராதி கதி சிந்தனம் -போவான் போகின்றாரை—

January 23, 2023

போவான் போகின்றாரை’ என்ற இந்தச் சொற்றொடரை நாம் கூர்ந்து கவனித்திருக்க மாட்டோம்.

’போவான் போகின்றாரை’ என்பது போகிற அனுபவத்துக்காகவே போகிறவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

ஆச்சார்ய பெருமக்கள் திருவேங்கட யாத்திரை, அக்ரூரர் கோகுலம் செல்லுதல், வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடுவர்.

கோவிந்தா என்ற நாமத்தில் திருப்பதி போகும் அனுபவம் இருக்கிறது. அந்த நாமத்தைச் சொன்னாலே அனைத்தும் கிட்டும்.

கோ என்பது பத்து அவதாரங்களையும் குறிக்கும். வேதம் என்று பொருள் தருவதால் வேதத்தை மீட்ட மத்ஸ்யாவதாரம் நினைவுக்கு வரும்.

பர்வதம் என்று பொருள் தருவதால் அதை தூக்கிய கூர்மாவதாரம் நினைவுக்கு வரும்

பூமி என்று பொருள் தருவதால் பூமியை உத்தாரணம் செய்த வராக அவதாரம் நினைவுக்கு வரும்.

நரசிம்மனை கோவிந்தா என்று வணங்குவது வழக்கம்.

பூமிக்கடியில் மூன்றடி மண் கேட்டதால் வாமன அவதாரம் நினைவுக்கு வரும்.

பூமி முழுதும் சுற்றிய பரசுராமனும் கோவிந்தன் தான்.

ஆயுதம் என்று பொருள் தருவதால், 50 வித அஸ்திர சாஸ்திரங்களை விச்வாமித்திரரிடம் இருந்து பெற்ற ராமாவதாரம் நினைவுக்கு வரும்.

பூமியை கலப்பையால் இழுத்த பலராமனுக்கு கோவிந்தன் என்ற பெயர் உண்டு.

பசு என்று பொருள் தருவதால் பசுக்களைக் காத்த கிருஷ்ணனும் கோவிந்தன் என்றே அழைக்கப்படுகிறான்.

“கோவிந்தன்” என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்..
1. மத்ஸ்யாவதாரத்தில் “கோ” எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால்,
“கோவிந்தன்” என்கிற திருநாமம், மத்ஸ்யாவதாரத்துக்குப் பொருந்துகிறது..
2. கூர்மாவதாரத்தில் “கோ” எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே!..
.
3. வராக அவதாரத்தில் “கோ” எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்..
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய “கோ”வை (“கோ” என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே!..
5. “கோ” எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்..
6. “கோ” எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது..
7. “கோ” எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தனே!…
8. “கோ” எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்..
9. “கோ” எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை..
10. “கோ” எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட, நாளைய தினம் அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்!…

இப்படி அனைத்து அவதாரங்களையும் உள்ளடக்கியவனாக வேங்கடவன் (கோவிந்தன்) இருக்கிறான்.

ஸ்ரீ வேங்கடமே அர்ச்சா பிரதானம் -கந்தம் -இவனுடன் அர்ச்சா திவ்ய மங்கள ஸ்வாமிகள் அனைவருக்குமே ஸாம்யம் சொல்லலாமே
ஆராவமுதன் உடன் சாம்யம் திருக்குடந்தை ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் சாதித்தது –

1-ஸப்த பிரியவ் –சேஷாத்ரி –வே ங்கடாத்ரி -ஆழ்வார் எழுவரால் மங்களா சாசனம் ஆராவமுதன் -திரு எழு கூற்று இருக்கை சந்தஸ் ரிஷிகள் காண்டம் மோக்ஷம்
2-நிகமவ் பிரியவ் -உபய வேதங்களும் சொல்லுமே -ஸ்ரீ நிவாஸனும் ருக் வேதமும் –
அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஸத்வ கிரி வேத வெற்பு

கண்ணன் அடி இணை எமக்குக் காட்டும் வெற்பு
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே

வைதிக விமானம் -தேர் வடிவ கர்ப்ப க்ரஹம் -குதிரையும் யானையும் இழுக்கும் –
ஸாகா -யானை நடை போல் ஸம்ஹிதா குதிரை போல் வேகமாக சேவிப்பார்கள்
அந்தணர் -பரமா வேத கோஷம் ஒலிக்கும் திருக்குடந்தை
3- பிருகு பிரியவ் -ஸாத்விக குணம் பரீஷை -ஹேம ரிஷியாக இவரே பிறந்து -பாதாள ஸ்ரீ நிவாஸன் -மேட்டு ஸ்ரீ நிவாஸன் -கோமள வல்லி திருக்கல்யாணம்
4- சிவ பிரியவ் -கபிலேஸ்வரன் -யதா சம்பு அழகை அனுபவித்து -குமார தாரா கார்த்திகேயன் தபஸ் -வேல் கொடுத்த –
கும்பேஸ்வரர் பின் -சூழ்ந்து சூழ்ந்து அனுபவம் இங்கும் -குடமூக்கு -நாகேஸ்வரர் பல வடிவங்கள் கொண்டு
5-பிரியவ் சடாரே -த்வயம் பூர்வ உத்தர -இங்கு -ஆழ்வார் தீர்த்தம் தெளி குரல் அருவி -கைங்கர்யம் செய்ய அழைக்கும்
முதல் திவ்ய தேசம் -கண்ணாவான்–வேங்கட வெற்பனே
ஆராவமுதே-யாருக்கு என்று சொல்லாமல் -தன்னோடு பிறரோடு வாசி அற தனக்கே – -அனைவருக்கும் -ஆராவமுத ஆழ்வார் -சீரார் செந்நெல் -சாத்துப்படி -கவரி வீசும் –
6-தேவர்களுக்கு பிரியவ் -மண்ணோர் விண்ணோர்க்கும் -மண்ணவரும் விண்ணவரும் விரும்பும் வெற்பு -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன்
அமுதினிலும் ஆற்ற கில்லான் -33 கோடி தேவரும் சூழ்ந்து கருவறையில்
7-பாதாதி கேசாந்தம் ஸ்தோத்ரம் ஆதி சங்கரர் -அபர்யாத அம்ருதம் த்யான சோபனம் பெற்றார்கள்
8- இரண்டு லஷ்மி-திரு மார்பில் -மடலில் திருவடி வருடிய
9-நாராயணனுக்கு அனுக்ரஹம் -நாராயணாத்ரி -ரிஷி தபஸ் செய்த இடம் -லஷ்மி நாராயணன் பக்தர் -ராஜ கோபுரம் கட்டி -அந்திம ஸம்ஸ்காரம் -ஐப்பசி அமாவாசை அன்று ஸ்ரார்த்தம் 12 மணிக்கு தீபாவளி சந்நிதி சாத்தி –
10- வராஹ ஷேத்ரங்கள் இரண்டும் -வராஹ குளம் கும்பகோணத்தில் உண்டு
11-படி ஏறியே போக வேண்டும் -3500 படிகள் -9 படிகள் இங்கு -வாழ்க்கைப்படிகள் -பரமபத சோபனம் -விவேகம் -நிர்வேதம் -விரக்தி -பீதி -பிரசாத ஹேது -சரணாகதி ஐந்தும் நாம் செய்ய
உதக்ரமணம் அர்ச்சிராதி -விராஜா நதி கடந்து -ஸ்ரீ வைகுண்ட பிராப்தி –
12-வைகுண்ட வாசவ் -கலியுக வைகுண்டம்-ஏதானும் ஆவேனே – -பூ லோக வைகுண்டம் ஸ்ரீ ரெங்கம் போல் கும்பகோணம்
பரமபத வாசல் இல்லை –
ஷேத்ரமே புண்யம் -திருமலையே புண்யம்
13-கருணையால் புகழ் -தயா சதகம் -அப்ரமேயம் ப்ரமேயம் கடந்து உள்ளவன் கண்ணுக்கு காட்சி –
14-சார்ங்க ராஜர்கள் -இருவரும் -சாரங்கீ விருஷாத்ரி தயா சதகம் -பாபங்களை பிக்க அருள் அம்புகள் -மூலவரும் சார்ங்க பாணி -த்யான ஸ்லோகம் -சயானம் –
15-வேங்கடேசவ் –பாபங்களைக் போக்கி அருளி -இருவரும் -தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் -ஆழ்வார் வேம் கடம் ஈசன் -தமிழ்
16-இவற்றைக் காட்டிய உபகாரம் இருவருக்குமே சேரும்

———————

கோவிந்தா என்று அழைத்தாலே மனதளவில் திருமலைக்கு யாத்திரை செல்லலாம். அக்ரூரர் போல கோகுலம் போகலாம். வைகுண்டம் செல்லும் மார்க்கமும் புலப்படும்…

குப்ஜா அவரைத் தன்னுடனேயே தங்கும்படி அவள் வற்புறுத்தினாள். அது தன்னால் இயலாதென்ற கிருஷ்ணர், தன்னை மதுராபுரிக்கு கம்சன் உத்தரவின் பேரில் அழைத்து வந்த அக்ரூரனின் இல்லத்துக்கு புறப்பட்டார்.

அக்ரூரர் மிகச்சிறந்த ராஜதந்திரி. கிருஷ்ணரின் மகாபக்தர். அவர், கிருஷ்ணரை தகுந்த முறையில் வரவேற்று அவரது பாதத்தை கழுவி தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். அவரது பாதத்தை தன் மடியில் தூக்கி வைத்து வருடினார். கண்ணீர் மல்க அவரைப் பிரார்த்தித்தார். கம்சனையும் அவனது கொடிய நண்பர்களையும் கொன்றதற்காக நன்றி கூறினார். அக்ரூரரை மிக முக்கிய காரியம் நாடியும் கிருஷ்ணர் பார்க்க வந்திருந்தார்.

கிருஷ்ணரின் மைத்துனர்களான பாண்டவர்கள். ஹஸ்தினாபுரத்தில் வசித்து வந்தனர். ஹஸ்தினாபுரம் என்றால் யானைகள் நிறைந்த இடம். யானைகள் கட்டிக் காக்க நிறைய செல்வம் வேண்டும். அந்தளவுக்கு செல்வம் படைத்த பூமி அது. பாண்டவர்களுக்கு எதிராக அவர்களது பெரியப்பா திருதராஷ்டிரனின் மக்களான கவுரவர்கள் செயல்பட்டு வந்தனர்.

அவர்கள் பாண்டவர்களின் பூமியை அபகரித்திருந்தனர். இதுபற்றி விசாரித்து, திருதராஷ்டடரனுக்கு நல்லறிவு புகட்ட தகுதியானவர் அக்ரூரர் என்பதை உணர்ந்திருந்தார் கிருஷ்ணர். மேலும் அவர் பாண்டவர்களின் தாய் குந்திக்கும் உறவினர். அதை அக்ரூரரிடம் எடுத்துச் சொன்னார். அவரது கட்டளையை ஏற்ற அக்ரூரர் சில நாட்களிலேயே ஹஸ்தினாபுரம் புறப்பட்டு விட்டார். திருதராஷ்டிரனின் சகோதரர் விதுரர் நியாயத்துக்கு கட்டுபட்டவர்.

அவர் மூலமாக, ஹஸ்தினாபுரத்தில் நடக்கு விஷயங்களை அறிந்து கொண்டார். அக்ரூரர் அதனால் தான் நியாயத்தைப் பேசும் விதுரரைத் தொடர்பு கொண்டார். பின்னர் குந்தியை சந்தித்து நடந்த விஷயங்களை அறிந்தார். திருதராஷ்டிரன் பிள்ளைப்பாசத்தால், பாண்டவர்களைக் கொல்ல திட்டமிடுவதை உறுதி செய்தி பின்னரே திருதராஷ்டிரனிடம் சென்று அறிவுரை வழங்கினார்.

அவன் செய்வது நியாயமல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார். அப்போது திருதராஷ்டிரன் தன் தவறை உணர்ந்திருப்பதை ஒப்புக் கொண்டான். ஆனாலும் அவன் அவரிடம், அக்ரூரரே ! உமது போதனைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை நானறிவேன். ஆனாலும், ஒருவனுக்கு மரணம் என விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் யார் அறிவுரை சொன்னாலும் அதனால் பயனில்லாமல் போய்விடும்.

அந்த அறிவுரைகள் அமுதம் என்று தெரிந்தாலும் அதை அவன் ஏற்க மாட்டான். உமது அறிவுரைகளை நான் ஏற்காதது கூட அந்த கடவுளின் சித்தம் தான். ஏனெனில், கடவுளின் சித்தத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. அது நம் இருவருக்கும் பொருந்தும். அறிவுரை சொல்பவனும், பெறுபவனும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. பூமியில் பாவிகளைக் குறைக்க யது வம்சத்தில் பரமாத்மா தோன்றியுள்ளதை நான் அணிந்திருந்தும் என்னால் ஏதும் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன், என்றான்.

திருதராஷ்டிரன் நிர்ப்பந்தத்தின் பிடியில் இருக்கிறான் என்பதை அக்ரூரர் அறிந்து கொண்டார். திருதராஷ்டிரனும் தன் பிள்ளைகளைக் காவு கொடுப்பதற்கென்றே நிர்ப்பந்தத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அக்ரூரர் மதுராவுக்கு திரும்பி, கிருஷ்ண பலராமரிடம் விஷயத்தைச் சொன்னார்.

போரைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக பலவகையில் போராடி வெற்றி ஈட்டிக் கொடுத்தார். இந்த போர்க்களத்திலே கீதை என்னும் வாழ்க்கையின் யதார்த்த நிலையை உணர்த்தும் அருமருந்தையும் தந்தார்.

கம்சன் கண்ணனுக்குச் செய்த இன்னல்கள் பல. ஒவ்வொரு முறையும் அவனுக்குத் தோல்வி தான். கம்சன் மேலும் ஒரு திட்டம் தீட்டினான். அவனிடம் பணிபுரியும் அக்ரூரரை அழைத்து ( 10.37.38) “தனுர்யாகத்தைக் காணக் கண்ணையும் பலராமனையும் மதுராவிற்கு விரைவில் அழைத்து வாருங்கள்!” என்று ஒரு சதி திட்டம் தீட்டுகிறான்.

மிக்க அறிவு படைத்த அக்ரூரர் ( 10.38.1 ) கண்ணனை அழைத்து வர ரதத்தில் கோகுலம் செல்கிறார். அவர் செல்லும் வழியில் ( ஜருகண்டி, ஜருகண்டியில் தப்பித்து பெருமாள் சேவிக்க வேண்டும் என்பது போல் ) அவர் தாமரைக் கண்ணனிடம்  அன்புமயமான பக்தியில் மூழ்கி  அவனை நினைத்துக்கொள்கிறார்.

நான் என்ன புண்ணியம் செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ! சான்றோர்களுக்கு ஏதாவது தானம் கொடுத்தேனா ? ஏன் என்றால் இன்று கேசவனைக் காணப் போகிறேன் !

கீழ் ஜாதியில் பிறந்த எனக்கு வேதம் ஓதும் வாய்ப்பு கிடைக்காத போதும், மகான்கள் கொண்டாடும் பகவானின் தரிசனம் எளிதில் கிடைக்க போகிறதே!  யோகிகள் தியானிக்கும் அவன் திருவடிகளை வணங்கி என் பிறவிப் பயனை அடையப் போகிறேன்.

கம்சன் என்ற கொடியவன் இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறான். அவன் திருவடியை வணங்கி, என் அறியாமை இருளை கடக்க போகிறேன்.

அவனுடைய திருவடிகளைப் பிரம்மா, சிவன் முதலிய தேவர்களும், திருமகளும் முனிவர்களும், பக்தர்களும் பூஜித்துள்ளார்கள். கோபர்களுடன் மாடு மேய்க்கக் காட்டில் சுற்றி, கோபிகளின் ஸ்பரிசம் பட்ட அந்தத் திருவடியை நான் காணப் போகிறேன்.

வெளியே கொடிய கம்சனின் தூதுவன் ஆனால் உள்ளே கண்ணனின் அடிமை என் எண்ணத்தைக் கண்ணன் புரிந்துகொள்வான். என்னைப் பார்த்தவுடன் ‘அக்ரூரரே!” என்று கூப்பிடும் அந்த நேரத்துக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படி வழிநெடுக கண்ணனைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே மனத்தால் முன்பே கோகுலம் வந்தடைந்த அக்ரூரர் உடலால் இப்போது வந்து சேர்ந்தார்!

அங்கே கீழே கண்ணனின் திருவடி சுவடுகளைக் கண்டதும் அவருக்கு மகிழ்ச்சி பொங்க, பரபரப்பு மிகுந்து, அன்பால் உடல் புல்லரிக்க, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, இவை பகவான் கண்ணனின் திருவடித்துகள்கள் அன்றோ! என்று அதன் மேல் விழுந்து புரண்டார்.

அங்கே கண்ணன் அவரை வரவேற்று “அன்புக்குரிய ஐயனே! வழிப் பயணம் நன்கு அமைந்ததா ?” என்று விசாரித்தான்.

அக்ரூரர் வந்த விஷயதை சொல்லி கண்ணையும் பலராமனையும் அழைத்துக் கொண்டு மதுராவிற்கு புறப்பட்டார். வழியில் யமுனையை அடைந்து, கைக்கால்களை சுத்தம் செய்து, தெளிந்த நீரில் நீராடினார். அடிக்கடி கண்ணனும் பலராமனும் பத்திரமாக இருக்கிறார்களா என்று அஞ்சி ரதத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டார்.

அப்படி பயந்துகொண்டு  நீரினுள் முழுகியபோது, அங்கே தண்ணீருக்குள் கண்ணணையும் பலராமனையும் கண்டார். அந்த காட்சி  ( 10.39.46) தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது போல

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்

என்று அவனுடைய திருவடியைத் தலைவணங்கித் துதித்துக்கொண்டு இருக்க, ஆயிரம் தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் படுக்கையில் தெளிந்த முகம், அழகிய புன்சிரிப்பு, கருணைப் பார்வை, அழகிய புருவங்கள் என்று திருப்பாணாழ்வார் ’காட்டவே கண்ட’ சேவையை அக்ரூரர் சேவித்து கோதுகலமாக (குதூகலமாக) அவன் ஸ்வரூபத்தைக் கண்டு பரமானந்தத்தை அடைந்தார்.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் என்பதற்கு ஓர் அர்த்தம்  ’எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயப்படுபவர்களான ஆழ்வார்களுக்கு ஒரே வாரிசு ஆண்டாள்’ என்பதைப் போல அக்ரூரர் பயந்தார்!

அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், அவன் ஆவாவென்று ஆராய்ந்து அருள் புரிவான்!

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -72—ஸ்ரீ அக்ரூர ஆகமனம்–

கம்ஸோ அத நாரத கிரா வ்ரஜ வாஸி நம் த்வாமா
கர்ண்ய தீர்ண ஹ்ருதய ஸ ஹி காந்தி நேயம்
ஆஸூய கார் முக மகச்ச லதோ பவந்த
மா நேது மேந மஹி நோத ஹி நாத ஸாயின் –1–

பாம்பணை மேல். பள்ளி கொண்ட குருவாயூரப்பா! தாங்கள் கோகுலத்தில் வசித்து வருவதாக
ஸ்ரீநாரதர் கூறக் கேட்ட கம்ஸன் (தனது முயற்சி வீணானது கண்டு) மனம் நொந்து தனுர்யாகம்’ என்னும்
ஒரு காரணத்தைக் காட்டித் தங்களை அழைத்து வர எண்ணி,
காந்தினி என்பவரின் மகனான அக்ரூரை அனுப்பினான்.

அக்ரூர ஏஷ பவதம் க்ரி பரஸ் சிராய
த்வத் தர்சநா ஷ மமநா ஷிதி பால பீத்யா
தஸ்யாஜ்ஞ யைவ புன ரீஷிதுமுத்ய தஸ்த்வா
மா நந்த பார மதி பூரி தரம் ப பார –2-

அந்த அக்ரூரர் தங்கள் திருவடிகளையே சரணமாகப் பற்றி வெகுகாலமாகவே தங்களைக் காண
வேண்டுமென்ற விருப்பமுடையவராயினும், அரசனான கம்ஸனிடம் கொண்ட பயத்தினால்
தங்களைக் காணலாம் என்று மனதிலும் நினைக்க முடியாது தவித்தவர். அத்தகைய அவர்
இப்பொழுது அதே அரசனுடைய கட்டளையால் தங்களை தரிசனம் செய்ய ஆவல் கொண்டு
மனதில் ஆனந்தத்தின் பூரிப்பை அடைந்தார்.

ஸோ அயம் ரதேந ஸூ க்ருதீ பவதோ நிவாஸம்
கச்சன் மநோ ரத கணாம் ஸ் த்வயி தார்ய மாணான்
ஆஸ்வாத யன் முஹுரா பாய பயே ந தைவம்
ஸம் ப்ராரதயன் பதி ந கிஞ்சிதபி வ்யஜா நாத் –3-

பெரும் பேறு படைத்த அந்த அக்ரூரர் தேரில் ஏறிக் கொண்டு தங்கள் இருப்பிடமான – கோகுலத்தை
நோக்கிச் செல்கையில், தங்களைப் பற்றியே பற்பல சிந்தனைகளில் மூழ்கி அவற்றை சுவைத்துக் கொண்டே
(வழியில் கம்ஸனால் அதற்கு ஏதாவது) தடங்கல் — வந்துவிடுமோ என்று பயந்து இஷ்ட தெய்வங்களை
வேண்டிக் கொண்டு (செல்கையில்) வழியில் – எங்கு என்ன நடக்கிறது என்று எதையுமே உணராது சென்றார்-

த்ரஷ்யாமி வேத சத கீத கதிம் புமாம் ஸம்
ஸ்ப்ரஷ்யாமி கிம்ஸ் விதபி நாம பரிஷ் வஜேயம்
கிம் வஹ்யதே ச கலு மாம் க்வ நு வீக்ஷித ஸ்யா
தித்தம் நி நாய ச பவ ன் மயமேவ மார்கம் –4-

“அடைய வேண்டிய பரமபுருஷன் ஸ்ரீபகவானே என்று வேதங்களால் நூற்றுக்கணக்கான இடங்களில்
கொண்டாடப்படுகின்ற ஸ்ரீகிருஷ்ணனை நான் காண்பேனா? நான் தொடுவேனா? –
இறுகத் தழுவிக் கொள்வேனா? அவர் என்னிடம் அக்ரூரரே’ என்றழைத்துப் பேசுவாரா?
எங்கு சென்றால் அவரைக் காணலாம்?” என்றிவ்வாறு பலபடியாக நினைத்து,
தங்கள் நினைவாகவே அக்ரூரர் வழியைக் கடந்தார்.

பூய க்ரமாத பிவி சந் பவதம் கிரி பூதம்
வ்ருந்தா வனம் ஹர விரிஞ்ச ஸூ ராபி வந்த்யம்
ஆனந்த மக் ந இவ லக் ந இவ ப்ரமோஹே
கிம் கிம் தசாந்தர மவாப ந பங்கஜா ஷை –5-

தங்கள் திருவடிகள் படிந்ததால் மிகப் புனிதமானதும், பரமசிவன், பிரம்மா மற்றும் தேவர்களால்
வணங்கத் தக்கதுமான பிருந்தாவனத்தில் புகுந்ததும் ஆனந்தக் கடலில் மூழ்கினாற் போலும்
மோகத்தில் ஆழ்ந்தாற் போலும் வர்ணிக்க முடியாதவாறு என்னென்ன நிலையைத்தான் அடைந்தாரோ?

பஸ்யன் நவந்தத பவத் விஹ்ருதிஸ் தலா நி
பாம் ஸூஷ் வ வேஷ்டத பவச் சரணாங்கி தே ஷு
கிம் ப்ரூ மஹே பஹு ஜ நா ஹி ததாபி ஜாதா
ஏவம் து பக்தி தரலா விரலா பரமாத்ம ன் –6-

பரமாத்மா, ஸ்ரீ குருவாயூரப்பா! தாங்கள் விளையாடிய இடங்களைக் கண்டதும் வீழ்ந்து வணங்கினார்.
தங்கள் திருவடி இலச்சினை பட்டுள்ள புழுதிகளில் விழுந்து புரண்டார். நாங்கள் என்னதான் சொல்வோம்?
தாங்கள் திரு வவதாரம் செய்திருந்த அச்சமயத்தில் எத்தனையோ பல பெரியோர்கள் தோன்றி யிருந்தும்,
(அக்ரூரரைப் போல) இப்படி பக்தியின் பரவசத்தில் மூழ்கியவர்கள் மிகமிகக் குறைவே.

சாயம் ச கோப பவ நா நி பவச் சரித்ர
கீதாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸயா நாநி
பஸ்யன் ப்ரமோத சரிதேவ கிலோஹ்ய மாநோ
கச்சன் பவத் பவ ந ஸந்நிதி மன்வயா ஸீத் –7-

தங்களது திருவிளையாடல்களை விளக்கும் பாடல்களை கோபர்கள் தங்கள் இல்லங்களில் பாட,
அது அக்ரூரருக்கு அமுதினும் இனிமையாகக் காதுகளில் பரவி நிற்க, அவ்வமுதம் தவழ்ந்து வரும்
கோபர்களின் வீடுகளைக் கண்டு கொண்டே, அச்செவி யமுதப் பெருக்கினால் உந்தித் தள்ளப் பட்டாற்
போன்று மெதுவாக நடந்து மாலையில் தங்களது திருமாளிகை முன் வந்தடைந்தார். –

தாவத் ததர்ச பஸூதோஹ விலோக லோலம்
பக்தோத்த மாகதி மிவ ப்ரதி பால யந்தம்
பூமன் பவந்த மய மக்ர ஜவந்த மந்தர்
ப்ரஹ்ம அநு பூதி ரஸ ஸிந்து மிவோத்வ மந்தம் –8-

எங்கும் நிறைந்து விளங்கும் குருவாயூரப்பா! பசுக்கள் பால் கறத்தலைப் பார்ப்பதில் மகிழ்ச்சி
கொண்டவராகவும், ஓர் உத்தம பக்தனின் வருகையை எதிர் நோக்கி நிற்பவர் போன்றும்
அண்ணனான பலராமனோடு கூட நின்று கொண்டிருப்பவரும், உள்ளம் நிறைந்து அனுபவிக்கப்
பெறும் பிரும்மானந்த அமுதக் கடலை (பக்தனுக்காக) வெளியிலே மடை திறந்து விடுபவர் போன்றும்
உள்ள தங்களை. இந்த அக்ரூரர் கண்டார்.

சா யந்த நா ப்லவ விசேஷ விவிக்த காத் ரவ்
த்வவ் பீத நீல ருசிராம் பர லோப நீ யவ்
நாதி ப்ரபஞ்ச த்ருதி பூஷண சாரு வேஷவ்
மந்த ஸ்மிதார்த்ர வதனவ் ச யுவாம் ததர்ச -9-

மாலையில் நீராடித் தூய்மையான திருமேனியுடன் கண் கவரும் அழகிய மஞ்சள் பட்டும், நீலப்பட்டும்
உடுத்திக் கவர்ச்சியாக, உலகியல் போன்று அதிகமான அணி கலன்கள் அணியாத அதனால்
மிக அழகாக விளங்கும் வேடத்துடன் குளிர்ந்த புன்முறுவல் பூத்த முகத்துடன்
உள்ள உங்களிருவரையும் அவர் தரிசித்தார்.

தூராத் ரதாத் சம வருஹ்ய நமந்த மேந
முக்தாப்ய பக்த குல மௌலி மதோப கூஹன்
ஹர்ஷான் மிதாக்ஷர கிரா குசலாநு யோகீ
பாணிம் ப்ரக்ருஹ்ய சபலோ அத க்ருஹம் நினேத –10-

தொலைவிலிருந்தே (தங்களைக் கண்டதும்) தேரைவிட்டு இறங்கி வணங்கிக் கொண்டே வருகிற
பக்த சிரேஷ்டரான அக்ரூரரை, வாரி எடுத்துத் தழுவிக் கொண்டு. மகிழ்ச்சிப் பெருக்கினால்
பேசத் திறனற்று தழுதழுத்த குரலுடன் ‘க்ஷேமம்’ விசாரித்துவிட்டு, பலராமனோடு கூட
அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள்.

நந்தேந சாக மமிதாத ரமர்ச யித்வா
தம் யாதவம் தது திதாம் நிசமய்ய வார்தாம்
கோபே ஷு பூ பதி நிதேச கதாம் நிவேத்ய
நாநா கதாபிரிஹ தேந நிஸாம நை ஷீ –11-

அங்கு ஸ்ரீநந்தகோபருடன் சேர்ந்து யதுகுலத் தோன்றலான அக்ரூரரை முறைப்படி – வரவேற்று உபசரித்து,
அவர் கூறிய செய்தி கேட்டு, அந்த அரச கட்டளையை கோபர்கள் அனைவருக்கும் தெரிவித்தீர்கள்.
பின் அவரோடு பற்பல கதைகளைப் பேசிக் கொண்டே அவ்விரவைக் கழித்தீர்கள்.

சந்த்ரா க்ருஹே கிமுத சந்த்ர பகா க்ருஹே நு
ராதா க்ருஹே நு பவநே கிமு மைத்ர விந்தே
தூர்தோ விலம்பத இதி ப்ரமதா பிருச்சை
ரசாங்கிதோ நிசி மருத் புர நாத பாயா –12-

இன்று ஸ்ரீ கிருஷ்ணன் சந்திரை சந்த்ர பாகை ராதை அல்லது மித்ரா விந்தையின் வீட்டில்
தங்கி இருக்கிறான் என்று கோபிகள் தங்களை சந்தேகித்தார்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

—————–

பாகவத புராணத்தில் அக்ரூரரின் பிருந்தாவன யாத்திரையும், மண்ணுலக வாழ்வில் திருவேங்கட யாத்திரையும், ஆன்மிக வாழ்கையில் ஆன்மா வைகுந்தம் நோக்கிச் செல்லும் “அர்ச்சிராதி கதி” என்ற புனித யாத்திரையும் மிகப் புகழ்பெற்றவை. நம்மாழ்வாரும் இராமனுசரும் செய்துள்ள பேருதவியால் பரமபதப் பயணத்தின் இனிமையையும் பரமபதத்தின் உயர்வையும் வேதங்களில் அர்ச்சிராதி மார்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது.-

உயிர் உடலை விட்டுப் பிரிகின்ற போது ஏற்படும் பொறுக்கமுடியாத துன்பங்களுக்கு மாற்றாக எம்பெருமான் தோன்றி அருள்வதையும் வழியில் பல உலகங்களையும் தாண்டிச் செல்லும் போது ஏற்படும் இன்ப அநுபவங்களையும் நித்ய சூரிகளும் பிராட்டியுடன் எம்பெருமானும் மகிழந்து வரவேற்று அருள்வதையும் விளக்குகிறார், ஆழ்வார்.

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அதாவது;

ஜீவாத்மா என்ற முமுக்ஷீ – மோஷத்தில் விருப்பமுடையவன் உடலைத்துறந்து, பரமபதம் புறப்படுவதைப் பார்த்து, மேகங்கள் மகிழச்சியால் இசைக்கருவிகள் போன்று முழங்கின. கடல்கள், அலைகளாகிய கைகளை வீசி ஆராவரம் செய்தன.

வைகுந்தம் செல்பவனை அழைத்துச் செல்லும் ஆதி வாஹிகர்கள், தமது கைகளால் தொழுது, வரவேற்றனர். அங்கு வாழும் ரிஷிகள் மலர்மாரி பொழிந்து, தமது மௌன நிலையையும் கடந்து, வாய்த்திறந்து “இங்கே எழுந்தருளுக” என்று கூறி வரவேற்றனர், வைகுந்தம் செல்பவர், ஆங்காங்கே தங்கிச் செல்லும் பொருட்டு, தங்கும் இடங்கள் அமைத்தனர். கின்னரர் முதலியோர், இனிய இசைப்பாடல்கள் பாடினர். வேதங்களில் வல்லவர்கள் தாம் செய்த யாகங்களின் பலன்களை, வைகுந்தம் செல்பவர்களுக்குப் பரிசாக அருள்கின்றனர் குளிர்ந்த அருட்பார்வையுடன் கூடிய பென்கள், இவர்களை அருளுடன் பார்த்து வாழ்த்தினார். மருதர் வசுக்கள் முதலியோர், இவர்களைப்பின் தொடர்ந்து தோத்திரங்கள் சொல்லிக்கொண்டே வர பகவானின் வியூக நிலையிலும் விபவ அவதாரங்களிலும், விருப்பம் கொண்டு இருப்பதோடு நின்றுவிடாமல், அர்ச்சாவதாரத்திற்கு, எம்பெருமானின் எளிமையில் ஈடுபட்ட சிறப்பை நினைத்து, இவர்களைப் போற்றுகிறார்களாம். அர்ச்சாவதாரத்திற்கு அதிலும் மற்ற திவ்ய தேசங்களுக்குத்கிடைக்காமல், திருக்குடந்தைக்கு மடடும் கிடைத்த தனிச் சிறப்பே இது. பயணம் தொடர்கிறது. பரமபதத்தில் எம்பெருமான் விளங்கும் திருக்கோயிலின் கோபுர வாசலில் நித்யசூரிகள் வரவேற்கின்றனர்.

பரமபதத்தில், எம்பெருமானுக்கும், நித்திய சூரிகளுக்கும் ஒரே வகையான வடிவம் இருக்குமாதலால், எம்பெருமானுக்கு க்ரீடம் உண்டு. (எம்பெருமான்) ரக்ஷகத்துவத்துக்கு (அடியார்களை காக்கும் தொழிலில்) முடி சூடி இருக்கும் இவர்கள் அடிமை செய்கைக்கு (கைங்கர்யம் புரிவதற்கு) முடி சூடி இருப்பார்கள் என்று இருவருக்கும் வேறுபாடு தோன்றும் முறையில் வைணவ மரபிற்கு ஏற்ப நயமாக உரை உள்ளது.

வைகுந்தம் செல்வோர் இவ்வாறு “கொடி அணி நெடுமதி்ள் கோபுரம் குறுகினர்” என்றபடி கோபுரத்தை அடைந்தனர். இவர்களை வரவேற்கும் பரமபதநாதனை, “வடிவுடை மாதவன்” என்கிறார் ஆழ்வார். புதிய பேரழகு வாய்ந்த எம்பெருமான் என்பது பொருள் வைகுந்தத்துக்கு வருபவரைக் கண்டவுடன், எம்பெருமான் புதிய பேரழகோடு விளங்குகிறானாம்

திரு வாசல் காக்கும் முதலிகள் என்று கூறப்படும் துவாரபாலகர் வரவேற்றனர். கைப்பிடித்து அழைத்துச் சென்று, பணி செய்யத்தக்க முறையில் தங்கள் கையில் அதன் அடையாளமாக வைத்திருந்த பிரம்பை, வந்தவர் கையில் கொடுப்பார்களாம்.

சமுத்ரஜலம் ஆறு உற்பத்தியாகும் மலையைச் சேர்ந்தாற்போன்று, உலகவாழ்வில் அல்லற்பட்டவர்கள், பரமபதத்தை அடைந்ததைக் கண்டு அவர்கள் வியந்தனர். வேதம் வல்லவர் வைகுந்தத்திற்கு வந்தவரின் திருப்பாதங்களைப் புனித நீரால் கழுவினால். இவர்கள் வருகையால் முகம் மலரப்பெற்ற வைகுந்தப் பெண்டிதர், வைகுந்தம் செல்வோர்க்குச் செல்வம் போன்ற திருவடி நிலைகளையும், மணம் மிகுந்த வண்ணப்பொடிகளையும் கைகளில் ஏந்தி, தாம் செய்த புண்ணியத்தின் பயனாகத் தான் இவர்கள் வந்துள்ளதாகக் கருதி மகிழ்ந்தனர்.

இவ்வாறான வரவேற்பைப் பெற்று, எம்பெருமாள் விளங்கும். திருமாமணி மண்டபத்தில், அந்தமில் பேரின்பத்து அடியரோடும், எம்பெருமானோடும், கூடி இருந்து குளிர்ந்தார்கள் என்ற இனிய விளக்கத்தை நாம் திருவாய் மொழியில், நம்மாழ்வாரின் அருளிச் செயலாகக் காணும் போது, வியப்பால் மகிழ்ச்சி வருகிறது.

ஸ்ரீ ராமானுஜர், பரமபதம் பற்றியும் எம்பெருமானைப் பற்றியும், அப்பெருமானை எப்போதும் தம் விழிகளால் பருகிவாழும் நித்ய சூரிகளைப், பற்றியும் வேதவாய் மொழிகொண்டு விளக்கி இருக்கும், “வேதாந்த சங்கிரகம்” என்கிற க்ரந்தத்தில் சொல்கிறார்.

பரப்ரஹ்மம் என்று கூறப்பெறுவது ஸ்ரீ மந்நாராயணன் ஒருவனே, இவனுடைய வடிவம் ‘பல பலவே சோதி வடிவு” என்றபடி அளவற்றது. மாசு இல்லாதது. இப்பெருமானிடம் ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் போன்ற எண்ணற்ற குணங்கள் இப்பெருமானைத் தவிர உள்ள, சேதந அசேதநப் பொருள்கள் இப்பெருமானின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படுகின்றன. இவைகள் நிறைந்த “விபூதி” என்று ,வழங்கப்படும்.

பெருமானுக்கு திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் திவ்ய தேவிமார்கள் திவ்ய பரிஜனங்கள் திவ்ய வடிவம் முதலியவை யாராலும் செய்யப்படாமல் (அப்ராக்ருதம்) எம்பெருமானைப் போன்றே உண்மைப் பொருள்களாக நிலைத்த பொருள்களாக உள்ளன.

எம்பெருமானின் முதன்மையான தேவி பெரிய பிராட்டியாக திருமகள் பூமிதேவியாகிய நிலமகளும் ஒரு தேவி நெருங்கியப் பணி செய்வோர் (பரிஜனங்கள்) எண்ணற்றவர் பணிவிடை செய்வதற்கு உதவியாக அளவற்ற கருவிகள் உண்டு இத்தகைய எம்பெருமானின் இருப்பிடம் வைகுண்டம் இதனை நித்ய விபூதி பரமபதம் என்று கூறுவர். இத்தகைய ) வைகுந்தத்தில் எம்பெருமானை எப்போதும் இடைவிடாமல் சேவித்துக் கொண்டிருக்கும் நித்திய சூரிகள் உண்டு இவை எல்லாமே எம்பெருமானைப் போன்றே என்றும் அழியாத உண்மைப் பொருள்கள். இத்தகைய செய்திகள் எல்லாவற்றையும் ஸ்ரீ இராமானுஜர் விவரமாக அருளியுள்ளார்.

பிரளய காலத்தில் மற்றவை எல்லாம் அழிய எம்பெருமான் ஒருவன் மட்டுமே விளங்குவது போல் அப்பெருமானின் தேவியர் பரிஜனங்கள் அணிகள் ஆயுதங்கள் நித்ய விபூதி நித்ய சூரிகள் ஆகிய அனைவரும் அழியாமல் நிலைத்து வாழ்பவர் என்பது ஸ்ரீ இராமானுஜர் அருளிய சிறந்த விளக்கமாகும். இக்கருத்துகளை விளக்கவந்த இதிகாஸ புராணத்தொடர்களையும் வியாஸரிஷி அருளிய ப்ரஹ்ம ஸீத்ரத்தையும் எடுத்துக்காட்டி ஸ்ரீ இராமானுஜர் விளக்கியுள்ளார்.

பரமபதத்தின் இத்தகைய நிலையைத் தான் கம்பரும் பரமபதம் கால இல்லாதது நிலையானது சுருக்கமோ பெருக்கமோ இல்லாதது சத்வ குணம் மாறாதது ஐந்து பூதங்களும் அழிந்தாலும் தான் அழியாது இருப்பது என்கிறார்.

“சிறு காலை இலா நிலையோ திரியா குறுகா நெடுகா குணம் வேறுபாடா
உறுகால் கிளர் பூதம் எலாம் உகினும் மறுகா நெறி”

ஜீவாத்மாவின் குறிக்கோள் பரமபதத்தை அடைவதே என்பதை வேதங்களும், உபநிஷத்துக்களும் சொல்லி வழிகளையும் சொல்கின்றன.

இவ்வுலகில் பாற்கடலையும், பரம பதத்தையும் நம் மானிடக் கண்களால் காண முடியாது. என்பதை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி திருவரங்கத்துமாலை இவற்றில் சொல்லியுள்ளார்.

“ஒத்து அமரர் ஏத்தும், ஒளிவிசும்பும் (வைகுந்தம்) பாற்கடலும் இத்தலத்தில் காண்பரிய” தேவர்களில் கூடப் பலர், இதுவரை, வைகுந்தம் கண்டது இல்லை என்றும், அப்படிச் சென்றவர் கூடத் திரும்பவும் அங்கிருந்து வந்தது இல்லை “வான் நாடரில் சிலர், சென்று, கண்டார் இல்லை, மற்று அதனில் போனாரில் மீளப் புவியில் வந்தார் இல்லை”

ஸ்ரீமத் வைகுண்ட தாம்நி ப்ரதித விரஜயாலங் க்ருதே திவ்ய லோகே,,
நித்யே நந்தாங்க யுக்தே ச்ருதிசிகர நுதே வ்யோமயாநேச லக்ஷ்ம்யா
ஆஸீநம் சாதிசேஷே கலசபவதிசம் வீக்ஷமாணம் ஸீரேட்யம்,
கம்பீரோ தாரபாவம் ஸகலஸீரவரம் வாஸிதேவம் ப்ரபத்யே–( ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சம்–தியானச்லோகம்)

இடர் உடையேன், சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே தொடரும்
கருவையாகும், தம் பிறவிக்கட்டு அறுத்த மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சிலர்.”

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஒப்பிலியப்பனுக்கு பங்குனி பிரம்மோற்சவம்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள்

January 23, 2023

ஸ்ரீ வஸூ மதி இடம் பிரார்த்தித்து வ காரம் நீ வைத்துக் கொண்டு-வா என்று அடியேனை அழைத்து அருளி
சேஷமான -ஸூ மதி- எனக்கு அருளி உன்னைப் பாட அருள வேண்டும்

சுத்த ஆனந்த விமானம் இங்கு தான்
அநந்தன் -தனக்கும் திருமலைக்கும் இருந்தாலும் ஸ்ரீ தேவிக்கு இல்லையே
நிகண்டு படி அநந்த -பூமி தேவிக்குத் தான்
ஆகவே அவனே இங்கு வந்து அந்த குறையும் நீங்கப் பெற்றான்
ஆகவே இவனே அவனுக்கும் அண்ணா ஆனான்

மார்க்கண்டேயர் -பெருமாள் ஸம்வாதம்
கஸ் த்வம் –புராண புருஷ -புரா அபி நவி -கிழவன் -பெரிய பெருமாள் -நாமம் கிம் -தத்தே து -அதுவே -ஆளும் கிழவன் பேரும் கிழவன் -பிதா மஹானுக்கும் பிதா இவன் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —மூன்றாம் திருவந்தாதி–61-

நிஷ் துலா -ஒப்பில்லா கல்யாணம் இங்கு-ஐப்பசி திருவோணத்தில் திருக் கல்யாணம் உத்சவம் –

——–

“தபஸ்யே பால்குனே மாஸே ஏகாதச்யாம் திதௌ முனே
புண்யே ச்ரவண நக்ஷத்ரே முஹூர்த்தே அபிஜித் ஆஹ்வயே
ஆஜகாம வஹாயோகீ ஸாக்ஷாத் நாராயணோ ஹரி:
ஸ தேவ: ஸ்ரீநிவாஸாக்யோ பூமிதேவ்யா: பதி: விபு:
வஸுந்தரா விவாஹார்த்தம் லோகாநுக்ரஹ காம்யயா”- என்கிறது ஒப்பிலியப்பனின் தல புராணம்.

இதன் பொருள்: “பங்குனி மாதம் ஏகாதசி திதியில், திருவோண  நட்சத்திரத்தில் அபிஜித் முகூர்த்தத்தில், திருவிண்ணகரம் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் திருத்தலத்தில், பூமி தேவியை மணந்து கொள்வதற்காகவும், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அனைத்து வரங்களும் அருட்வதற்காகவும் நிவாசன் என்ற பெயரோடு திருமால் அவதாரம் செய்தார்!”

எனவே வருடந்தோறும் பங்குனி மாதத் திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, கும்பகோணத்துக்கு 5 கி.மீ. கிழக்கில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவோணத்துக்கு ஒன்பது நாள் முன் தொடங்கும் இந்த உற்சவம், பங்குனி திருவோணத்தன்று நிறைவடையும்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஒப்பிலியப்பனுக்கும் பூமிதேவித் தாயாருக்கும் புறப்பாடு நடைபெறும். அந்தப் புறப்பாடுகளுக்கான பின்னணிகளை ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் வசுமதி சதகம் என்னும் காவியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றை  அவரது ஸ்லோகங்களோடு இணைத்து இக்கட்டுரையில் காண்போம்:

1. முதல் நாள் – இந்திர விமானம்:

“ஐந்த்ரம் விமானம் அதிருஹ்ய ஸமுஜ்ஜ்வலந்தீம்
இந்த்ரேண ஸர்வ ஜகதாம் தயிதேன ஸாகம்
இந்த்ராதி தேவ வினுதாம் அவலோக்ய மாத:
இந்த்ரப்ரியா இதி பவதீம் நிஜகாத வேத:”

பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் ஒப்பிலியப்பனோடு இந்திர விமானத்தில் பூமி தேவி காட்சி தருகிறாள். இதற்கான காரணம் என்ன? அனைத்துலகுக்கும் இந்திரனாகத் (தலைவனாக) திகழும் திருமாலுக்கு மனைவியாக பூமிதேவி இருக்கிறாள். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பெருமாளையும் பூமிதேவியையும் வந்து பணிகிறார்கள். வேதமும் பூமிதேவியை ‘இந்திரப் பிரியா’ என்று அழைக்கிறது. இந்தக் கருத்துகளை நமக்கு உணர்த்தவே பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் இந்திர விமான வாகனத்தில் தன் கணவனோடு பூமிதேவி வலம் வருகிறாள்.

2. இரண்டாம் நாள் – சந்திரப்பிரபை வாகனம்:

“ஓஷதீச ப்ரபா வாஹ மத்யக: ஸூன பூஷித:
நிஷ்கலங்கம் யசோ தத்தே ஸுவம்ச கர பங்கஜ:”

இரண்டாம் நாள் மாலை பெருமாளும் தாயாரும் சந்திரப் பிரபை வாகனத்தில் வலம் வருவார்கள். சந்திரனில் சில களங்கங்கள் தெரிகின்றன அல்லவா? ஆங்கிலத்தில் அவற்றை ‘craters’ என்று சொல்வார்கள். வெண்ணிலவைக் களங்கமற்றதாக ஆக்க நினைத்த ஒப்பிலியப்பன், அதையே தனக்கு வாகனமாக்கி அதன் நடுவே பூமிதேவியோடு எழுந்தருளினார். அதனால் சந்திரன் களங்கமில்லாததாக ஆனது! தூய்மை பெற்றது!

3. மூன்றாம் நாள் – சேஷ வாகனம்:

“த்வாம் யோ வஹேத பஹவ: கில தம் வஹந்தி
தத்ர ப்ரமாணம் இஹ மே புஜகாதிபோஸௌ
யஸ்த்வாம் நிஜேன சிரஸா வினதோ ததான:
ஸர்வை: அமீபி: அதுனா த்ரியதே மஹே தே”

யார் ஒருவர் பூமிதேவியைத் தலையால் தாங்குகிறாரோ, அவரை மக்கள் அனைவரும் தலையால் தூக்கிக் கொண்டாடுவார்களாம். அதற்குச் சான்றாகத் தான், உலகத்தைப் (பூமிதேவியை) பாதாளத்தில் இருந்தபடி தலையாலே தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை உற்சவத்தின் மூன்றாம் திருநாளன்று பலர் தூக்கிக் கொண்டாடுகிறார்களாம். அந்த ஆதிசேஷன் மேல் மூன்றாம் நாள் மாலையில் பூமிதேவியும் ஒப்பிலியப்பனும் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

4. நான்காம் நாள் – கருட,ஹம்ச வாகனங்கள்:

“த்விஜேஷு ஹம்ஸோ பவதீம் ததாதி
த்விஜேஷு ய: குண்டலினாம் நிஹந்தா
நாதம் த்வதீயம் யுவயோ: ப்ரதீதம்
ஸ்புடம் ஹி லோகே ப்ருது தாரதம்யம்”

நான்காம் திருநாளன்று மாலையில் பெருமாள் கருட வாகனத்திலும் பூமிதேவி அன்ன வாகனத்திலும் (ஹம்ச வாகனத்திலும்) புறப்பாடு கண்டருளுவார்கள். பரமஹம்சர்கள் என்று போற்றப்படும் ஞானியர்கள் பூமிதேவியை எப்போதும் தம் உள்ளத்தில் தாங்குகிறார்கள் என்பதை உணர்த்தவே, அந்தப் பரமஹம்சர்களுக்குப் பிரதிநிதியான ஹம்சத்தின் மேல் பூமிதேவி புறப்பாடு கண்டருளுகிறாள். அடியார்களின் துன்பத்தை அழிப்பவராகத் திருமால் திகழ்வதால், பாம்புகளை அழிக்கும் கருடனின் மேல் அவர் புறப்பாடு கண்டருளுகிறார். இப்படித் தாயார் ஹம்ச வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டருளுவதில் இருந்து இருவரின் தன்மைகளையும் நாம் அறிய முடிகிறது.

5. ஐந்தாம் நாள் – ஹநூமந்த,கமல வாகனங்கள்:

“லங்கா புர்யாம் கில ஆஸீத் அதிகமலம் அலம் ஸ்வாமினீ யா ஸதீனாம்
தஸ்யா மாதா ஹி ஸேயம் ஸ்வயம் இதி ஹநுமான் தர்சயதி ஆதரேண”

ஐந்தாம் திருநாளன்று பெருமாள் ஹநூமந்த வாகனத்திலும், பூமிதேவி கமல (தாமரை) வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். இலங்கையில் பூமிதேவியின் மகளான சீதையை ஆஞ்ஜநேயர் முதன்முதலில் கண்ட போது, கலைந்த கூந்தலோடும், கிழிந்த ஆடையோடும், மெலிந்த மேனியோடும், வாடிய முகத்தோடும், கண்ணீரில் தோய்ந்த கண்களோடும் அவள் இருப்பதைக் கண்டு அவர் மிகவும் வருந்தினாராம்.

அந்தக் குறை தீரும் படியாக, பட்டாபிஷேகக் கோலத்தில் ஆஞ்ஜநேயருக்குக் காட்சி தர விழைந்தாளாம் பூமிதேவி. அதனால் தான் ஐந்தாம் திருநாளன்று பெருமாள் அனுமனின் மேல் (ஹநூமந்த வாகனத்தில்) உலா வருகையில், பூமிதேவி தாமரையின் மேல் (கமல வாகனத்தில்) பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் காட்சி தந்து அனுமனை மகிழ்விக்கிறாளாம்.

6. ஆறாம் நாள் – யானை வாகனம்:

“ராஜதே கஜவரே விராஜதே
ராஜ ராஜ நத பாத பங்கஜே
நாயகோ கஜ கதி: ஸுஹம்ஸகா:
த்வம் து ஹம்ஸ கமனேதி ஸாம்ப்ரதம்”

ஆறாம் திருநாள் மாலையில் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் யானை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். யானையைப் போன்ற நடையை உடைய திருமால் யானை வாகனத்தில் வருவதில் வியப்பில்லை. ஆனால் அன்னம் போல் நடக்கும் அன்னை பூமிதேவியும் ஏன் யானை வாகனத்தில் உலா வருகிறாள்? வில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்த பூமிதேவி, திருமால் வந்து தன்னை மணந்து கொள்வதாகக் கனவு கண்டாள். அதில்,

“அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!”

என்று, யானையில் திருமாலோடு சேர்ந்து எழுந்தருள விழைந்தாள். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே பூமிதேவி பெருமாளோடு சேர்ந்து யானை வாகனத்தில் எழுந்தருளிப் புறப்பாடு கண்டருளுகிறாள்.

7. ஏழாம் நாள் – சூர்ணாபிஷேகம், புன்னை மர வாகனம், தோளுக்கு இனியான்:

“ஆந்தோலிகாந்த: அவனீ ரமணம் யுவானம்
ஆஸாத்ய ஸாது திஷணா ஸமயம் ச ஸாயம்
த்ருஷ்ட்வா ரதிம் கலயிதும் க்ருத கௌதுகேயம்
தத்ர க்ஷமேதி பவதீம் அவலோக்ய த்ருத்யா”

ஏழாம் திருநாள் பொன்மாலைப் பொழுதில், பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் சூர்ணாபிஷேகம் நடைபெறும். வடநாட்டில் நடைபெறும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப் பொடிகளை மக்கள் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்வதைக் காண்கிறோம். அதற்கெல்லாம் வித்திட்டது வண்ணப் பொடியால் இறைவனுக்குச் செய்யும் அபிஷேகமான சூர்ணாபிஷேகம். அந்த சூர்ணாபிஷேகம் நிறைவடைந்தவாறே, பூமிதேவியோடு இளங்குமரனாய்த் தோளுக்கு இனியானில் பெருமாள் புறப்பாடு கண்டருளும் அழகைக் காண்கையில், அடியார்களின் மனம் ஒரு பெண்ணின் நிலைக்கு மாறி இறைவன் மேல் காதல் கொள்கிறது.

“புந்நாகம் அம்ப புருஷே புரத: அதிரூடே
ஸந்நாகம் அம்ஸ மதுரே பவதீ ததாதி
கிந்நாம தேன ஸஹ வாஹனதா கதா ஸ்யாத்
யந்நாம கோப வனிதாஸு ததா க்ஷமாவான்”

அதன் பின் ஏழாம் திருநாள் இரவில் பெருமாள் புன்னை மர வாகனத்திலும், தாயார் தோளுக்கு இனியானிலும் புறப்பாடு கண்டருள்வார்கள். கோபிகைகளின் ஆடைகளை அபகரித்துக் கொண்டு புன்னை மரத்தின் மீதேறிக் கண்ணன் அமர்ந்த வரலாற்றை நாம் அறிவோம் அல்லவா? அதை நினைவூட்டவே புன்னை மர வாகனத்தில் பெருமாள் வருகிறார்.

புன்னை மரத்தில் அமர்ந்திருந்த கண்ணன், சாஸ்திர விதிகளை மீறி ஆடையின்றி நீராடிய கோபிகைகளைத் தண்டிக்காமல் அவர்களிடம் பொறுமையையும் கருணையையும் காட்டினான் அல்லவா? அதை உணர்த்தவே புன்னை மரத்தில் செல்லும் பெருமாளைப் பின் தொடர்ந்து, பொறுமை, கருணை இவற்றின் வடிவாய்  இருக்கும் பூமிதேவி தோளுக்கு இனியானில் செல்கிறாள்.

8. எட்டாம் நாள் – குதிரை வாகனம், தோளுக்கு இனியான்:

“ஸுபக துரக வாஹே நாயகே அஸ்மின் த்வதீயே
த்வம் அஸி நனு புரஸ்தாம் அம்ஸ ரம்யே நிவிஷ்டா
துரக முக தவ ஏதத் யுஜ்யதே யுஜ்யதே அதோ
துரக வதன பேத்து: ச இதி மந்த ஸ்மிதாஸ்யா”

எட்டாம் நாள் மாலையில் பெருமாள் குதிரைவாகனத்திலும் பூமிதேவி தோளுக்கு இனியானிலும் காட்சி தருவது வழக்கம். “குதிரை முகத்தோடு ஹயக்ரீவராக அவதரித்த நீங்கள் குதிரை வாகனத்தில் வருவது பொருத்தமாகவே உள்ளது!” என்று பெருமாளைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டருளுகிறாள் பூமிதேவி.

9. ஒன்பதாம் நாள் – திருத்தேரோட்டம்:

“ரதஸ்யாந்த: ஸ்தாயாம் த்வயி ஜனனி பவ்யே தவ பதேயயௌ தஸ்யாம் வீத்யாம் ரத இதி லஸன் வர்தத இதி”

நிறைவு நாளான பங்குனி திருவோணத்தன்று காலை திருத்தேரில் பெருமாளும் பூமிதேவியும் எழுந்தருளும் போது, “இறைவன் நம்மைத் தேடி நம் வீதிக்கு வந்துள்ளாரே!” எனப் பரவசப்பட்டு பக்தகோடிகள் பேசும் வார்த்தைகளைக் கேட்டுப் பெருமாளும் பூமிதேவியும் ஆனந்தம் கொள்கிறார்கள்.

10. காலை பல்லக்குப் புறப்பாடு:

“ஆந்தோலிகாஸு பவதீம் ஜனதா வஹந்தீ
சாகாச பத்தன கதாம் தரணீம் ஸ்மரந்தீ
ஆனந்தம் அம்ப நியதம் ஹ்ருதயே பஜந்தீ
சாரோஹயந்தீ அத ச பாதி அவரோஹயந்தீ”

உற்சவத்தின் இரண்டாம் திருநாள் தொடங்கி எட்டாம் நாள் வரை காலையில் பெருமாளும் தாயாரும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளுவார்கள். மண்மடந்தையான பூமிதேவி, விண்ணகரம் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் கோவில் கொண்டிருக்கிறாள் அல்லவா? இது (அதாவது விண்ணகரத்தில் மண்மடந்தை குடியிருப்பது) விண்ணிலே மண் குடி இருப்பது போல் உள்ளதாம்! விண்ணிலே மண் குடியிருப்பதைக் காட்ட, மண்மடந்தையான பூமிதேவியைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து விண்ணை நோக்கி உயர்த்திப் பிடிக்கிறார்களாம். பெருமாளோடு பூமிதேவி பல்லக்கில் வலம் வந்தபின், மண்மடந்தை மண்ணில் இருப்பதே பொருத்தம் என்று கருதி பல்லக்கைக் கீழே இறக்கி வைக்கிறார்களாம்.

“டோலாயமானம் கோவிந்தம் மஞ்சஸ்தம் மதுஸூதனம்
ரதஸ்தம் கேசவம் த்ருஷ்ட்வா புனர்ஜன்ம ந வித்யதே”

– என்ற ஸ்லோகம் பிரம்மோற்சவக் காலத்தில் திருமகளையும் திருமாலையும் தரிசிப்போர் மறுபிறவி இல்லாத பேரானந்தமாகிய முக்தியை அடைவார்கள் என்று சொல்கிறது.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சிறப்பு —

January 22, 2023

ஸ்ரீ  வைகுண்ட ஏகாதசி சிறப்பு —

வரமும் வாழ்வும் அருளும் #வைகுண்ட_ஏகாதசி

கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.

தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.
என்கின்றன ஞான நூல்கள்.

ஆமாம் ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது ‘மோட்ச ஏகாதசி’. இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர் களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள்.

அசுரர்களுக்கு அருளிய ஏகாதசி!

ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள்.

அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ”பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்” என்றார்.

கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ”நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்” என்றார்கள்.

ஸ்வாமி சிரித்தார். ”அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்” என்றார்.

அசுரர்கள் திகைத்தார்கள். ”ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்” என வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ”தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கள வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.

”ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!” என்று வேண்டினார்கள்.

”அப்படியே ஆகும்!” என அருள் புரிந்தார் அச்சுதன். ‘வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.

எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.

முன்னோருக்கும் அருளும் ஏகாதசி

கம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சி. ஆனால், மன்னருக்கு?

ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

”உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, ‘மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று வேண்டினார் மன்னர்.

”மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!” என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.

மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்:

”வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். ‘இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.’

”நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!” என்று சொன்னார் பர்வதர்.

வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்கி வருகிறோம். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

———–

இந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.

கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், “எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்’ என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்பர்.

———–

ஏகாதசி விரத நியதிகள்

தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

ஏகாதசிகள் – 25

உற்பத்தி ஏகாதசி,
மோட்ச ஏகாதசி,
ஸபலா ஏகாதசி,
புத்ரதா ஏகாதசி,
ஷட்திலா ஏகாதசி,
ஜயா ஏகாதசி,
விஜயா ஏகாதசி,
ஆமலகி ஏகாதசி,
பாப மோசனிகா ஏகாதசி,
காமதா ஏகாதசி,
வரூதிநி ஏகாதசி,
மோகினி ஏகாதசி,
அபரா ஏகாதசி,
நிர்ஜலா ஏகாதசி,
யோகினி ஏகாதசி,
சயினி ஏகாதசி,
காமிகா ஏகாதசி,
புத்ர(ஜா)தா ஏகாதசி,
அஜா ஏகாதசி,
பத்மநாபா ஏகாதசி,
இந்திரா ஏகாதசி,
பாபாங்குசா ஏகாதசி,
ரமா ஏகாதசி,
ப்ரபோதினி ஏகாதசி,
கமலா ஏகாதசி ஆகியவையே 25 ஏகாதசிகளாகும்.

————

இதற்கு ஏன் “அத்யயன உற்சவம்“ என்று பெயர் வந்தது..?

“அத்யயனம்“ என்றால் சொல்லுதல் என்று பொருள்..! “அனத்யயனம்“ என்றால் சொல்லாமலிருத்தல்..!
பாஞ்சராத்ர ஆகமம், பல உற்சவங்களை, அததற்குரிய காலத்தில் செய்யச் சொல்கின்றது..!
ஆகமம், தனுர் மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தொடங்கி வேதங்கள் ஓதி பகவானை வழிபடச் சொல்கின்றது.
இவ்விதம் செய்யப்படும் இந்த உற்சவத்திற்கு “மோக்ஷோத்ஸவம்“ என்று பெயர்.
அதில் மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று ஆரம்பித்து, பத்து நாட்கள், “வேத அத்யயனம்“ செய்யச் சொல்கின்றது..!
ஆகமத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பான உறசவம் இது..!
இது போன்று சயனத்திற்கு ஏன் ஊடல் குறித்துக் கூட ஒரு உற்சவத்தினைப் பரிந்துரைக்கின்றது..!
இந்த ஊடல் உற்சவம்தான் பங்குனி மாத பிருமமோற்சவத்தில் மட்டையடி உற்சவமாக நடைபெறுகின்றது..!
மார்கழி (தனுர்) மாதம் மிகச் சிறப்பு வாய்ந்தது. உத்ராயண புண்ய காலம் என்பது தேவர்களுக்கு ஒரு பகற் பொழுது..!
தேவர்களின் பகற் பொழுதின் விடியற்காலம் என்பது மார்கழி மாதம் ஆகும்..!
பகவான் கண்ணன் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி“ என்று சொல்கின்றான்..!

வைகுந்த வாசல் – வடக்குப்புறம் அமைந்திருப்பது ஏன்..?

“உத்ரம்“ என்ற வடமொழி சொல் வடக்குத் திக்கைக் குறிக்கும்.
இந்த “உத்ரம்“ என்ற பதத்திற்கு “ஸ்ரேஷ்டம்” (உன்னதமானது) என்ற பொருளுண்டு.
“உத்தராயண புண்ய காலம்” உன்னதமான காலம் என்றழைக்கப்படுகின்றது.
மிக உன்னதமான இந்த வடக்குத் திக்கு மோக்ஷ வாசலான வைகுந்தவாசல் அமையக் காரணமாயிற்று.

வைகுந்த வாசல் – சிறப்பு..!

( வைகுண்ட ஏகாதசி -பரமபத வாசல் –
பிரமன் ஸ்ருஷ்ட்டி -மது கைடபர் -மிருதுவானவனுக்கு மது -அவனுக்கு கடினம் கைடபர் -இருவரும் -வேதம் அபகரித்து —
ஹயக்ரீவர் அவதாரம் -பல வருஷம் சண்டை -மின்னல் பார்த்து
ஐ மின்னல் துர்க்கா தேவி -தேவி பாகவத புராணம் கதை -பீஜா மந்த்ரம் -நாங்கள் சங்கல்பம் செய்தால் தான் மரணம் -வரம் பெற்றார்கள்
அஹங்கரித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்டார்கள் –
சாக சங்கல்பம் செய்யும் வரம் கேட்கச் சொல்லி அவர்களும்-கேட்டு -அழிக்க –
அவர்களுக்கும் மோஷம்-வடக்கு வாசல் வழியாக மார்கழி சுக்ல பஷ ஏகாதசி கூட்டிப் போனார்கள் –
கும்பகோணம் -ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை பாஞ்சராத்ர ஆகமம் -ஸ்ரீ கேள்வி பெருமாள் பதில் -அதிலும் இந்த வரலாறு
கும்பகோணம் ஸ்ரீ வைகுண்டம் ஆகவே தனியாக வைகுண்ட வாசல் இல்லை
பதினோரு இந்திரியங்கள் பாபம் பிராயச்சித்தம் ஏகாதசி –
மார்கழி உகந்த மாதம் -அதில் இது வருவதால் ஸ்ரேஷ்டம்- )

வேதத்தினை அபகரித்துச் சென்ற மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை திருமால் அழித்தார்.
திருமாலின் கையினால் மோஷம் பெற்ற அவர்கள் வைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டினர்.
திருமாலின் கருணையினால், அவர்கள் சுக்லபக்ஷ ஏகாதசி யன்று வைகுந்த விண்ணகரத்தின் வடக்கு வாயிலின்
மூலமாக மோக் ஷலோகம் சென்றனர். அப்போது அவர்கள், மார்கழி சுக்ல ஏகாதசி யன்று, திருக் கோயில்களிலுள்ள
சுவர்க்க வாசல் வழியே எழுந்தருளும் பெருமாளைத் தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோக்ஷம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க,
பெருமாளும் இசைந்து ஆசி வழங்கினார். அதன் படியே இந்த வாசலானது முக்தி தரும் வாசலாயிற்று..

எப்போது திருவாய்மொழித் திருநாளாக மாறியது..?

இந்த வேத அதயயன உற்சவமானது, திருமங்கையாழ்வார் காலம் வரையில் வேதத்திற்கு ஏற்பட்ட உற்சவமாகத் தான் நடந்து வந்தது..!
திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரின் திருவாய்மொழி உற்சவமாக, சுக்லபட்ச ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள்,
இந்த உற்சவத்தினை அரங்கனருளுால் மாற்றியமைத்தார்..!,
திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து ஒரு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைத் தினத்தன்று,
அரங்கனிடத்து விசேஷமாக பிரார்த்திக்கின்றார் திருமங்கை மன்னன்…!

அரங்கனிடத்துத் திருமங்கையாழ்வார் யாசித்தது மூன்று வரங்கள் தாம்..!

1) புத்த விஹாரங்களில் உள்ள தங்கத்தினை ஸ்ரீரங்கம் விமானத்திற்காகக் கொள்ளை யடித்தப்போது நிறைய
புத்த பிட்சுக்களும் புத்த மதத்தினரும் பலியானர். இவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்கவேண்டும் என்று யாசித்தார்..!

2) திருமங்கைமன்னன் படித்துறையில் (இது வடதிருக் காவேரி கொள்ளிடம் அருகேயுள்ளது..)
பிரேத சம்ஸ்காரம் ஆனவர்களுக்கு வைகுண்ட பிராப்தி வேண்டும் என்றார்..!

3)ஆழ்வார்கள் அருளிச்செயலுக்கு ஏற்றம் தரும் வகையிலும், நம்மாழ்வாரின் மோட்ச வைபவம் சிறப்பாக நடைந்தேற வேண்டியும்,
அத்யயன உற்சவத்திற்கு அரங்கன் அனுமதியளிக்க வேண்டும் எனவும் வேண்டினார்.

ஆழ்வார் வேண்டி அரங்கன் என்ன மறுக்கவா போகிறார்…?

மனப்பூர்வமாக சம்மதித்தார் அரங்கன்..!

ஆழ்வார்களுக்கு ஏற்றம் தரும் “அத்யயன உற்சவம்“ ஆரம்பமானது..!

தமிழ் மறை உற்சவமாக மாற்றி யமைத்தார்..! அதனுடன் கூட வேதம் ஓதுதலும் நடந்து வருகின்றது..!

நாதமுனிகள் காலத்தில் எப்படி நடந்தது..? உற்சவங்கள் எப்படி மாற்றப்பட்டன..,?

வெகுகாலம் வரை ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஸ்ரீரங்கம் கோயில் பரிஜனங்களோடு, வேத பாராயணம், திவ்ய பிரபந்தத்தோடு,
நம்மாழ்வார் எழுந்தருளுவார்..! அந்த சமயம், சில முக்ய கைங்கர்ய பரர்களைத் தவிர, யாருமில்லாததால்,
வேத பாராயணம் போன்ற கைங்கர்யங்கள் நடைபெறவியலாததால், கைசிக ஏகாதசி தொடங்கி,
நம்மாழ்வார் இங்கு எழுந்தருளும் காலம் வரை “அனத்யயன” காலம் ஆனது..!
இந்த ஸம்பிரதாயங்களை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இம்மாதிரி பல நிகழ்வுகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தில் நடைமுறையிலிருந்து வருகின்றது..!

நாதமுனிகள் காலத்தில், நாதமுனிகள் இவ்வைபவத்தினை, பகல் பத்து, இராப்பத்து, என இரண்டாக பிரித்து,
பகல் பத்தில் நம்மாழ்வார் தவிர்த்த இதர ஆழ்வார்களின் பாசுரங்களை “திருமொழித் திருநாளா”கவும்,
இராப்பத்தினை “திருவாய்மொழி”த் திருநாளாகவும், தம் மருமகன்களான மேல அகத்தாழ்வார்,
கீழை அகத்தவார்களுக்கு இயல், இசை, நாடகமாக, திவ்யபிரபந்தங்களுக்கு மெருகூட்டி, திறம்பட போதித்து
அரையர் ஸேவைக்கு ஆதாரமானார்..!
அன்றுந்தொட்டு இன்று வரை இவ்வைபவம் சிறப்புற, வேதம் தமிழ் செய்த மாறனுக்கு பொலிவு தரும் வைபவமாக
“நம்மாழ்வார் மோட்ச“த்துடன் இனிதே தொடர்ந்து நடந்து வருகின்றது..!

எம்பெருமானாரின் விடாய் தீர்த்த உற்சவம்….!

தாம் ஜீவித்திருக்கும் வரை, தமது தீராத ஒர் ஆசையினை, எ்ம்பெருமானாருக்கு, அவருக்குப் பின் வந்த தரிசன ப்ரவர்த்தகர்கள்,
அவரது அர்ச்சா திருமேனியுடன் இருககும் போது பூர்த்தி செய்துள்ளார்கள்..! ஆம்..! திருக்கச்சி நம்பிக்கு பிரஸாதம் அமுது செய்தபின்,
எம்பெருமானார், அவரது சேஷத்தினை பிரஸாதம் கண்டுருளுவார்..!
ஜீவிதத்துடன் இருந்தபோது உள்ள உள்ளக்கிடக்கையினை, ஏக்கத்தினை, அவர் அர்ச்சா திருமேனியுடனிருக்கும் போது தீர்த்து வைத்துள்ளார்கள்..!

வேறு சில விசேஷங்கள்..!

இந்த உற்சவத்தின் போது நம்பெருமாளே ஒரு பக்தன் எவ்விதம் மோக்ஷ உலகம் செல்கிறான் என்பதனை காண்பிக்கின்றார்..!

இந்த ஆத்மா முக்தி பெறும் போது, வைகுண்டத்தில் “விரஜா நதி” எனும் நதிக்கரையினை அடைகின்றது.
விரஜா நதியினில் அந்த ஆத்மா திவ்யமான ஒளி பொருந்திய தேஜோ மயமாகின்றது.
தேவர்கள் எதிர் கொண்டழைத்து வைகுந்தம் அழைத்துச் செல்கின்றனர்..!

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மூல ஸ்தானத்தினை விட்டு புறப்படுகையில் போர்வை சாற்றிக் கொண்டு கிளம்புவார்.
மூன்றாம் பிராகாரத்தில் அமைந்துள்ள “விரஜா நதி“க்கு ஒப்பான “விரஜாநதி” மண்டபத்தினை அடைந்தபோது,
அங்கு வேதகோஷங்கள் நடைபெறும். இது தேவர்கள், அந்த முக்திபெற்ற ஆத்மாவினை எதிர்கொண்டழைப்பதற்கு ஒப்பாகும்.
சற்று தள்ள வைகுந்த வாசல் முன்பு, அரங்கன் தம் போர்வையினைக் களைந்து, ஒளி பொருந்திய திருவாபரணங்களை,
தம் மேல் சாற்றிக் கொண்டு தேஜோ மயமாய், மிக்கக் காந்தியுடன் சேவை சாதித்தருளுவார்.
இது விரஜா நதியில் தீர்த்தமாடிய அந்த ஆத்மா தேஜோமயமாய் விளங்குவதற்கு ஒப்பாகும்…!

இவ்விதம் அரங்கன் பெருங்கருணையுடன், தாமே ஒரு சேதனனாகயிருப்பது, தம் பக்தன் எப்படி மோக்ஷம் பெறுகின்றான்
என்பதனை தாமே நிகழ்த்திக் காட்டுகின்றார்.

நாச்சியார் திருக்கோலம், நம்பெருமாளின் வேடுபறி, நம்பெருமாள் கைத்தல சேவை, நம்மாழ்வார் கைத்தல சேவை,
நம்மாழ்வார் மோக்ஷம் ஆகிய உற்சவங்கள் அவசியம் கண்டு, உள்வாங்கி, நாம் உணர்ந்து, உய்ய வேண்டிய ஒரு அற்புத உற்சவம்,
இந்த அத்யயன உற்சவம்..!

இவ்வைபவத்தில் அரங்கனுக்கு, ஆழ்வார் மீதும் அவர்கள் பாடிய தீந்தமிழ் பாசுர்ங்கள் மீதும் கொண்ட பாசம் அபரிமிதமானது..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவம்தான் நெடிய உற்சவம்..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவ காலத்தில், அரங்கன் தம்மை அலங்கரித்துக் கொள்வதிலும்,
ஆழ்வார் பின்னே அலைந்து திரிவதிலும் அதிக நாட்டமுடையவனாக உள்ளான்..!
இந்த உற்சவத்தில் அவனது தேஜஸ், காந்தி, கீர்த்தி, தயை மிக மிக அதிகம்..!

சூரிய குல வம்ச அரசர்கள் (கட்வாங்கன், இஷ்வாகு, தசரதன், ராமன்) போன்றவர்களும்,
சந்திர குல வம்ச அரசர்கள் (சந்தனு) போன்றவர்களும் வணங்கி உய்வடைந்தனர்..!
இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சூரியனுக்குரிய நவரத்னமாகிய ரத்னாங்கியை நம்பெருமாள் அணிந்தும்,
சந்திரனுக்குரிய நவரத்னமாகிய, நல்முத்த்ங்கியைப் பெரிய பெருமாள் அணிந்தும்,
எளியவராகிய நாமும் உய்யும் வண்ணம், வைகுண்ட ஏகாதசியன்று சேவை சாதித்தருளுகின்றார்..!

எல்லா பெரிய ரக்ஷா பந்தன உற்சவத்தின் போதும், ஏழாம் திருநாள் தாயார் ஸந்நிதி எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளிச் செல்வார்..!
ஆனால் இந்த இருபது நாள் உற்சவத்தில் ஒரு நாள் கூட தாயார் ஸந்நிதி பக்கம் திரும்பமாட்டார்..!
ஆழ்வார்களையும், அரையர் கொண்டாட்டத்தினையும் ரசிப்பதில், அவன் அதில் லயித்து கிடப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு..!

இந்த மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்றுதான், தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.
இன்றுதான் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம் செய்த நாள் – கீதா ஜெயந்தி.

வைகுந்த ஏகாதசி நிர்ணயம் செய்வது எப்படி?

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் ஏகாதசி விரதத்தினைப் பற்றி பல புராணங்கள்,
சாஸ்திரங்களிலிருந்து தமது “ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்“ என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.
அவரது திருவடிகளை மனதினால் வணங்கி, வைகுண்ட ஏகாதசி சம்பந்தமான சில செய்திகளைக் காண்போம்.

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் கேசவனை ஆராதித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
பிரும்மஹத்தி தோஷம் கூட விலகும் – பாத்ம புராணம்-

இப்போது ஏகாதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல ஏற்படுகின்றன. இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..!

கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே.
பஞ்சகவ்யம் பவித்ரமாயினும் நாய் முகர்ந்தால் அசுத்தமே.
அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும்.
தசமி கலந்த ஏகாதசி அஸூர ப்ரீதி – ப்ருஹன் நாராயணீயம் –

தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது. – பாத்ம புராணம்-

தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளை விளைவிக்கும் – ப்ரம்ம வைவர்த்தம்-
உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியினை விட்டு விட வேண்டும் -கருட புராணம்-

ஆக எக்காரணம் கொண்டும் ஏகாதசியன்று தசமி திதி கலக்கக்கூடாது.
சூர்யோதயத்திற்கு முன்பு வரும் பிரும்ஹமுகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது.
(சூர்யோதயம் முன்பு நான்கு நாழிகைகள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) பிரும்ஹமுகூர்த்தக் காலம்).

————-

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.

————-

ஸ்ரீ சாரங்க பாணி திருக்கோயிலில் பரமபத வாசல் இல்லை
இவரே நேராக ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்து ஸ்ரீ கோமள வல்லித் தாயாரைத் திருமணம் கொண்டார்
இவரை சென்று சேவித்தால் ஸ்ரீ வைகுண்டம் கிட்டும்

இதே போல் காஞ்சி ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்
ஸ்ரீ பெரும் பூதூர் ஆதி கேசவப் பெருமாள் பாஷ்யகாரர் திருக்கோயிலில் இல்லை
அன்று பெருமாளும் உடையவரும் பூதக்கால் திரு மாண்டத்துக்கு எழுந்து இருந்து சேவை சாதிப்பார்கள்

திருக்கண்ணபுரம் சவுரி ராஜ்ப பெருமாள் திருக்கோயில்

திரு வெள்ளறை புண்டரீகாக்ஷபெருமாள் திருக்கோயில்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ திருவேங்கட நாதர் அருளிய  கீதாசாரத் தாலாட்டு–விளக்கம்: ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

January 22, 2023

ஸ்ரீ  கீதாசாரத் தாலாட்டு–நூலாக்கம்: ஸ்ரீ  திருவேங்கடநாதர்–விளக்கம்: ஸ்ரீ ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ–

 

    தமிழர்கள் அனைவரும் அறிந்தது தாலாட்டு. ஒரு தமிழ்த்தாய் கண்ணன் சொன்ன கீதையை, கண்ணனையே குழந்தையாக்கி தாலாட்டாகப் பாடுகிறாள். அதுவே கீதாச்சாரத் தாலாட்டு.

கீதை இறுதிக்காலத்தில் படிப்பது அல்ல; இருக்கும் காலத்தில் படிக்க வேண்டியது. ஏனெனில், கீதை வாழ்க்கையைக் கவலையின்றி வாழச் சொல்லித்தருகிறது, நம்மை நாம் ஆளச் சொல்லித்தருகிறது, மரணத்திலிருந்து மீளச் சொல்லித்தருகிறது, பிறவி‌ கடைத்தேறச் சொல்லித்தருகிறது.

உலகம் விழிக்கப் பாடிய பாடலைப், பாடினவனை உறங்கச் செய்யப் பாடிய பாடலிது!

படைத்தவன் சொன்ன வழி படித்தவன் நடந்தால் படைத்தவனுக்குப் பாரில் என்ன வேலை?

பாற்கடலில் தான் பாடியதையே கேட்டுப் பள்ளி கொள்ளவேண்டியது தானே!

கண்ணன் கேட்டுத் துயிலும் அத்தாலாட்டை, நாமும் கேட்டுக் கவலையின்றி பள்ளி கொள்வோம்

பரந்தாமன் போல்,சோகம் விட்டு யோக நித்திரையில்!

முகவுரை

தொண்டை நாட்டில் மாதை எனப்படும் திருவாமாத்தூர் என்னும் ஊரின் மன்னனாக விளங்கியவர் இந்நூலாசிரியரான திருவேங்கடநாதர்.இவருக்கு இரு புதல்விகள் இருந்தனர். இவர்களுள் ஒருத்திக்கு மகப்பேறு வாய்க்கப் பெறாமையால் மனம் வருந்தி ஏங்கித் தவித்தாள். அன்பு மகளின் ஏக்கம் காணச் சகியாத திருவேங்கடநாதர், அழகிய கண்ணன் பொம்மை ஒன்றைக் கொடுத்து கிருஷ்ணனையே குழந்தையாக பாவிக்கும்படி கூறினார். அதை தாலாட்டும் பொருட்டு பகவத்கீதையின் ஞான யோகத்தின் ஸாரத்தைத்   தாலாட்டுப் பாடல்களாக ஆக்கிக்கொடுத்தார். அம்மாது, தந்தையின் அருள் வாக்கின்படி பாலகிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி வர சில ஆண்டுகளில் புத்திரப் பேறு வாய்த்தது என்பது வரலாறு.

இக்கீதாசாரத்தாலாட்டு அர்ஜுனனின் ஸந்தேஹத்திற்கு, கிருஷ்ண பரமாத்மா ஸமாதானம் கூறும்விதமாக அமைந்துள்ளது. பந்த மோட்சங்களின் இயல்பு பற்றியும், ஒரு சிலர் ஞானிகளாகவும், ஒரு சிலர் அஞ்ஞானிகளாகவும்  இருப்பது எதனால் என்பது பற்றியும், ஜடம் ஆன உடல் எவ்வாறு கர்மத்தைச் செய்யும், அக்கர்மபலனை எவ்வாறு அனுபவிக்கும் என்பது பற்றியும், ஆன பல ஐயங்கள் குறித்து, மிக ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் கூறுகின்றது. சாமானியரும் ஆத்ம தத்துவத்தை உணருமாறு  எளிதாகக் கூறுவது, இந்நூல்.

சிறப்புப் பாயிரம்

மாதையர் கோன் வேத நவில் வாய் வேங் கடநாதன்

காதை யுறப் பார்த்தனுக்குக் கண்ணனருள் – கீதைக்

கருத்துயர் தாலாட்டாகக் கட்டுரைத்தான் யாரும்

கருத்துயர் தீர்ந்(து) எய்தக் கதி.

திருவாமாத்தூர் என்னும் ஊரின் தலைவனாக வாழ்ந்த, வேதம் பயின்ற வேங்கடநாதன் என்பவர், அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் விரிவாக அருளிய பகவத்கீதையின் உயர்ந்த கருத்துக்களை, அனைவரும் கொடிய பிறவித் துன்பம்  நீங்கி மோக்ஷ கதியை அடையவேண்டும் என்பதற்காக, எளிய தாலாட்டுப் பாடலாக அமைத்துள்ளார்.

இறைவணக்கம்

ஐ வகைப் பொருளும் நான்கு கரணமும் குணங்கள் மூன்றும்

செய் வினை இரண்டும் ஒன்றி யாவரும் திகைப்ப நின்ற

பொய் யிருள் அகல ஞானப் பொருட்கதிர் விரித்த புத்தேள்

கைவளராழிச் செங்கட் கண்ணனைக் கருத்துள் வைப்பாம்.

ஒலி முதலான விஷயங்கள் ஐந்து, காது முதலான அறிவுக் கருவிகள் ஐந்து, வாய் முதலான செயற்கருவிகள் ஐந்து, பிராணன் முதலான வாயுக்கள் ஐந்து என ஐந்து ஐந்து பிரிவுகளான பொருள்களையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு விதமான அகக் கரணங்களையும், சத்துவம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றுவித குணங்களையும், நல்வினை, தீவினை என இருவிதமான செயல்களையும் பற்றிக்கொண்டு, அனைவரும் மயங்கி நிற்கச் செய்யும் மாயையாகிய அஜ்ஞான இருளகல, தத்துவ ஞானம் ஆகிய ஒளிக்கதிர்களைப் பரவச் செய்த தெய்வமான சங்கு, சக்கரம் தாங்கிய திருக்கரங்களையும் சிவந்த விழிகளையும் உடைய ஞானசூரியன் ஆகிய ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைத்து தியானிக்கின்றோம்.

பாடல் : 1

சீராரும் பரமார்த்த தெரிசனத்தை அருள் செய்யப்

பேராரும் தேசிகனாய்ப் பெருமானே வந்தவரோ.

எங்கள் பெருமானே, ஆத்மாவாகிய பரம்பொருளை அர்ஜுனன் காணுமாறு உபதேசித்து அருள, குருமூர்த்தியாக எழுந்தருளி வந்தவர் நீர் தானோ!

உலகம், உயிர், இறைவன், ஆகிய மூன்றின் தத்துவங்களையும் அர்ஜுனன் வாயிலாக எல்லா மனிதர்களுக்கும் உபதேசிக்க வேண்டும் என்று குருவாக பகவானே எழுந்தருளி இருக்கின்றார்.

பாடல் 2:

திருத் தேரில் சாரதியாய்ச் சேர்ந்திருந்தும் கீதையினால்

அருச்சுனனுக்கு மெய்ஞ்ஞான மனைத்தும் உரை செய்தவரோ!

சிறந்ததொரு தேரில் பாகனாய் இருந்தும், கீதா உபதேசமாய் அருச்சுனனுக்கு மெய்ப்பொருள் முழுவதையும் உரைத்தருளியவர்  நீர்தானோ!

குரு உயரமான இருக்கையிலிருந்து உபதேசிப்பதும் சிஷ்யன் கீழே இருந்து கேட்பதும் மரபு. மேலும், வேறு எந்தத் தொழிலும் இல்லாமல், அமைதியான தனிமையான இடத்தில் கற்பிப்பது வழக்கம். தேரில் அர்ஜுனன் எஜமானனாக உயரே இருக்க, கிருஷ்ணன் கீழே தேரோட்டியாக இருந்தவர். இடமோ யுத்தகளம்.அப்படி இருந்தும் அர்ஜுனனுக்கு ஆத்ம தத்துவத்தை பெருங்கருணையோடு உபதேசித்து அருளினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்.

பாடல் 3:

செஞ்சமரில் பந்து சனம் சேதமுறும் என்றிறங்கி

அஞ்சிய பார்த்தன் பயமாங் ககற்ற வரு ளால் நோக்கி..

    “அறப்போரில், (தர்மத்திற்கான யுத்தத்தில்)  போரிட வந்திருக்கின்ற உறவினர்கள் அனைவரும் மரணம் அடைவார்களே”, என்று இரக்கம் கொண்டு அச்சமடைந்த அர்ஜுனனது பயத்தை, அப் போர்க்களத்திலேயே நீக்கக் (கருதிய பகவான்) கருணையுடன் பார்த்து.. (உபதேசிக்கத் தொடங்கினார்.)

    உறவினர்களையும் குருமார்களையும் கொல்வதினால் பாபம் வரும், அவர்கள் இறப்பதினால் குலதர்மம் கெடும், சமூகஒழுக்கம் கெடும். இவை ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு மறுமையில் நரகம் கிடைக்கும்; இம்மையிலோ, அதனால் கிடைக்கும் ராஜ்ஜியம் ரத்தம் தோய்ந்ததாக இருக்கும், என்றெல்லாம் சிந்தித்து அர்ஜுனன் பயத்தையும் மனக்கலக்கத்தையும் அடைந்தான். யுத்தம் செய்ய சக்தி அற்றவனாக தேர்த்தட்டில் அமர்ந்தான். தன் மனக்குழப்பம் நீங்க, அறிவு தெளிவுபெற வழிகாட்டுமாறு பகவானிடம் சரண் அடைந்தான். இவ்வாறு குழப்பத்தை அடைந்திருந்த அர்ஜுனனுக்கு, புன்னகையுடன் (” சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி, அறத்தின்படி அவரவர் கடமையைச் செய்பவர் உயர்கதி அடைவார்,” என்று அர்ஜுனன் நிமித்தமாக அனைவருக்கும் சொல்ல விரும்பிய பகவான்) கீதையை அருளிச் செய்கின்றார்.

பாடல் 4:

சுற்றமறில் சோகமெனச் சொல்லினை கற்றறிந்தவன் போல்

கற்றுணர்ந்த பேரதனால் கலங்கார் காண் என்றவரோ.

    கற்றறிந்தவன்போல்,உறவினர் அழிந்துபோனால் துன்பம் – பாபம் – கவலை வருமென்று சொன்னாய், கற்று (மெய்ப்பொருள்) உணந்தவர்கள் மரணத்தைக் குறித்து மனங்கலங்கமாட்டார்கள் என்று அருளியவர் நீர் தானோ!

    அறத்தைக் காப்பது அரசனின் கடமை; சொந்த விருப்பு வெறுப்புகளை அதில் நுழைப்பது அறிவீனம். (சொந்த விருப்பு வெறுப்புகளால் பற்றுக் கொண்டு தன் கடமை தவறுதல் பாபம் என்று அறியாமை). கடமை தவறுதல் பாவம். உறவினர்களே தர்மத்திற்கு விரோதமாக, எதிரிகளாக இருந்தால் அவர்களை விலக்குதல் பாபம் ஆகாது என்பது அறிவுடையவர்‌ கருத்து.

மேலும், “உடல் விதியின்படி அழியக்கூடியது, ஆத்மா அழிவில்லாதது; அனைவரும் அழிவற்ற ஆத்மாக்கள்”, என்று கற்றவர்கள் உடலின் அழிவைக் குறித்து வருந்த மாட்டார்கள்.

பாடல் 5: அர்ஜுனனின் கேள்வி

கலங்காரோ இறப்புவரில் கற்றுணர்ந்த பேரேனும்

மலங்காமல் நானிருக்கும் வகை யுரையும் என வினவ..

    கற்றறிந்தவர்கள் மரணம் வந்தாலும் மனம் கலங்க மாட்டார்கள் என்றால், நானும் சோகத்தால் மயங்காமல் இருக்கும் வழியை அருளுங்கள் என்று (அர்ஜுனன்) கேட்க.

பாடல் 6: பிறப்பும் இறப்பும் இல்லை

நீயு நானும் புவி மேல் நிருபர்களும் மெய் யுணர்வால்

ஆயுங்கால் பிறந்திறப்பது ஆர்க்குமிலை என்றவரோ!

    உண்மையை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நீயும் நானும் இந்த பூமியிலுள்ள அரசர்களும் மற்ற யாவரும் பிறப்பதும் இறப்பதும்  இல்லை என்று அருளியவர் நீர் தானோ!

பாடல் 7: பிறவி யாருக்கு?

ஈங்கெ வர்க்கும் பிறந்திறப்பது இல்லை யென்றீர் இவ் வுலகில்

நீங்குபவம் யாருக்கிதனை நிச்சயமாகச் சொல்லுமென…

பொருள் :

    இங்கு எவர்க்கும் பிறப்பு, இறப்பு இல்லை என்று சொன்னீர், (எனில்) இந்த உலகத்தில் இறத்தல் பிறத்தல் யாருக்கு என்றிதனை உறுதியாகச் சொல்லுங்கள் என (அர்ஜுனன் கேட்க..)

பாடல் 8: என்றுமுள்ள ஆத்மா நீ

இத் தரையில் பிறந்திறப்பது எடுத்த வுடற் கடுத்த பொறி

நித்தியமாகிய ஆன்மா நின் சொரூபம் என்றவரோ!

    இந்த பூமியில் பிறந்து இறப்பது (கர்மபலனை  அனுபவிப்பதற்காக ஜீவன்) எடுத்த உடம்புக்கு பொருந்திய இயற்கையாகும். நித்தியமான ஆத்மாவே உன்னுடைய சொரூபம் என்று அருளிச் செய்தவர் நீர்தானோ!

    சூக்ஷ்ம உடலோடு கூடிய ஜீவன், தன் புண்ணிய பாபத்தை அனுபவிப்பதற்காக ஸ்தூல உடலை எடுக்கின்றான். அத்தூல உடலுக்குத்தான் பிறப்பும் இறப்பும்; இரு உடல்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஆத்மாவே மெய்ப் பொருள். ஆத்மா மேல் கற்பிக்கப்பட்ட தாற்காலிகமான தோற்றமே உடல், தங்கத்தின் மேல் நகைகள் போல. பிறப்பு இறப்பு இல்லாத நித்தியமான ஆத்மாவே நமது யதார்த்த சொரூபம்.

பாடல் 9: நான் யார்?

அங்கம் உயிர் இந்தி(ரி)ய நான் அன்றி வேறு எனைக்  காணேன்

இங்கு யான் வேறுண்டேல் எனக் கரியப் புகலுமென..

    உடல், பிராணன், ஞான, கர்மப் பொறிகள் இவையே நான் என்பதன்றி, வேறு ‘நானைக்’ காண வில்லை. இவ்வுடல் (முதலானவற்றை விட) வேறான ‘நான்’ உண்டு என்றால், அதனை இங்கு நான் அறியும்படி விளக்க வேண்டும் என்று (அர்ஜுனன்) கேட்க..

பொறிகள் = கருவிகள்.

அறிவுப் பொறிகள் (5)= மெய், வாய், கண், மூக்கு, செவி.

செயல் பொறிகள் (5) = கைகள், கால்கள், வாய், மல, ஜல உறுப்புகள்.

பாடல் 10: அறிபவனே நீ!

மெய் யுயிர் இந்தி(ரி)யங்கள் அல்லால் வேறறியேன் என்றவனைப்

பைய அவை யால் அறியப் படானும் நீ என்றவரோ!

    உடல், பிராணன், பொறிகள் இவை அல்லாமல் வேறு அறியேன் என்று அறிந்தவனும், புலன்களால் அறியப்படாதவனும் நீ என்றவரும் நீர்தானோ !

    எந்த அறிவைக் கொண்டு உடல், மனம், பிராணன் இவற்றை நீ அறிகின்றாயோ அந்த அறிவே நீ. கண் முதலான கருவிகளால் ஒரு பொழுதும் புறப் பொருளாக அறியப்பட முடியாதது அது. அப்படி எந்த ஒரு – அறிவு – சைதன்யம் – உயிர் – ஆத்மா – உடலிற்கு வேறாக இருக்கின்றதோ அதுவே உனது (நமது) உண்மையான நான். உடலுக்கு ஆதாரமாக இருப்பது அது. எது இருப்பதனால் உடல் இருக்கின்றதோ எது இல்லையென்றால் உடல் இருக்காதோ, அதுவே ஆத்மா. அதுவே உண்மையில் நான் என்று கருதப்பட வேண்டியது, அறியப்பட வேண்டியது. அது உடலிற்கு வேறான தனித்த சொந்தமான இருப்புடையது. அறிவே வடிவமானது அது.

பாடல் 11: பிறப்பு எதனால்?

தேகம் வேறாகில் அதைச் சேர்ந்தது இவண் ஏதெனவே

சோகமே விளை கருமத் தொடர்ச்சியினால் என்றவரோ!

    “ஆத்மா உடலிற்கு வேரானதென்றால் அது உலை அடைந்தது எதனால் ?” என்று அர்ஜுனன் கேட்க, “துன்பத்தைக் கொடுக்கின்ற வினைப் பயனின் விளைவால்”  என்று அருளியவர் நீர் தானோ!

பாடல் 12: முதல் வினைப் பயன் எப்படி?

தேகம் எடா முன் கருமச் செயல் வருமாறு ஏதெனவே

ஏகமா மரமும் வித்தும் எனும் முறை போல் என்றவரோ!

    உடல் எடுப்பதற்கு முன் முதல் வினைப் பயன் எப்படி வந்தது? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றாகிய மரமும் விதையும் எனும் முறை போல (முதலும் முடிவுமின்றி தொடரும் வட்டச் சுழற்சி) என்று அருளியவர் நீரோ! (ஜீவன் அனாதி என்பது கருத்து)

பாடல் 13: கர்மம் யார் செய்வது?

காயமும் தானும் பிரிதேல் கன்மம் எவர் செய்ததென

தீய உடற் கலதுகன்மச்  செயல் தனக்கே தென்றவரோ!

 உடலும் ஆத்மாவும் வேறு வேறானால் கர்மம் யார் செய்ததென அர்ஜுனன் கேட்க, கர்மச் செயல் கொடிய தேகத்திற்கே அல்லாமல் தனக்கு(ஆத்மாவுக்கு) ஏது? (இல்லை) என்றருளியவர் நீர் தானோ!

பாடல் 14: கர்மபலனை அனுபவிப்பது யார்?

படர் கருமம் உடல் செய்யில் பலம் உறுவது ஆர்க்கெனவே

அடர் பலமும் உடற்கேயாம் அறிவார்க்கே தென்றவரோ!

    பற்பல விதமாக விரிந்து இருக்கின்ற கர்மங்களை உடல் செய்யுமானால் கர்மங்களின் பயன் – புண்ணிய பாவங்கள் – வந்து சேர்வது யார்க்கென அர்ஜுனன் வினவ, இடைவெளி யில்லாமல் மாறிமாறி வருகின்ற பலன்களும் உடலுக்கே ஆகும், அதை அறிபவர்க்கு ஏது? (சாட்சியாயிருக்கு ஆத்மாவுக்கு இல்லை) என்று அருளியவர் நீர்தானோ!

    தூல உடம்பையே நானென்று  அபிமானம் கொள்கின்ற ஸூக்ஷ்ம உடலிலிருக்கின்ற அகங்காரமாகிய ஜீவனே, கர்மங்களைச் செய்கிறான். பிறகு கர்ம பலனை அனுபவிப்பவனும் அவனே.

ஆத்மா இரண்டிற்கும் சாட்சியாக இருக்கின்றது.

பாடல் 15: சொர்க்கநரகம் அனுபவம் யாருக்கு?

வெய்ய வினை உடற்கென்றால் மெய்யிங்கே விழ ஆன்மா

ஐயமற நரக சொர்க்கம் அனுபவிப்பது ஏதெனவே.

    கொடிய வினைப் பயனானது உடலுக்குத் தானென்றால், உடலானது இங்கே பூமியிலேயே (மரண காலத்தில்) விழுந்து விட, ஆன்மாவானது சந்தேகமின்றி நரக, சொர்க்கங்களை அனுபவிப்பது எதனால் என்று அர்ஜுனன் கேட்க!

பாடல் 16: அனுபவிப்பது உண்மை இல்லை

அனுபவமே இலையது வீண் ஆரோபித நிகழ்த்தில்

தனு கரணச் செயல் தனதாய்ச் சார்வது போல் என்றவரோ!

    ஆன்மாவிற்கு சொர்க்க நரகங்களில் அனுபவமே இல்லை. அவ்வாறு இருப்பதாக நினைப்பது பற்றிக் கூறினால், உடல் மற்றும் கை முதலான கருவிகளின் செய்கைகளைத் தன்னுடைய – ஆத்மாவுடைய –  செயலாகக் கருதுவது போலத், தவறான கற்பிதமாகும் என்று அருளியவர் நீர்தானோ!

    ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சென்ற சூக்ஷ்ம உடலே சொர்க்க, நரகங்களை அனுபவிக்கின்றது. ஆத்மா எங்கும் வியாபித்து ஆகாயம் போல் இருப்பது. ஆத்மா தூல, சூக்கும உடல்களுக்கு ஆதாரமாக இருப்பது, இரண்டிற்கும் வேறாக, இருப்பது. ஆத்மாவின் மேல் மாயையினால் உடல்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. கற்பிதமான உடலையே தான் என்றும் அவற்றின் செயல்களை தன்னுடையது என்றும் நினைக்கின்ற ஜீவன், சொர்க்கம் முதலானவைகளையும் “நானே அனுபவிக்கின்றேன்” என்று கருதுகிறான். இது அறியாமை அன்றி உண்மை இல்லை.

பாடல் 17: உடலை நானென நினைப்பதேன் ?

மற்றுடலின் செய்கை தன் மேல் வரு மயக்கம் ஏதெனவே

முற்றுணர்வொன் றில்லாத மோக மென்று சொன்னவரோ!

    ஆத்மாவிற்கு வேறாயுள்ள உடம்பினது செயல்கள் ஆத்மாவாகிய தன்னிடத்தில் வரும் மயக்கத்திற்கு காரணம் என்ன வென்று அர்ஜுனன் கேட்க, பூரண ஆத்ம ஞானம் இல்லாத அஜ்ஞானமே காரணமென்று கூறி யருளிய பகவான் நீர் தானோ!

பாடல்18: அறிவு யாருக்கு?

அறிவு தேகம் தனக்கோ ஆன்மாவிற்கோ எனவே

பிரிவு செயில் அசித்து உடலம் பிரம்மம் அறிவு என்றவரோ!

    அறியும் தன்மை உடலுக்கு உள்ளதா? ஆத்மாவுக்கு உள்ளதா? என அர்ஜுனன் கேட்க,  உடம்பையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, உடம்பு ஜடம் என்றும், பிரம்மம்(ஆத்மா) அறிவு வடிவம் என்றும் அருளியவர் நீர்தானோ!

பாடல் 19: ஜடமான உடல் செயல்படுவது எப்படி?

தேகம் அசித்தாகில் இந்தச் செயல் வருவதே தெனவே

ஏக பரஞ்சோதியின் முன் இருக்கையினால் என்ற வரோ!

    உடம்பு ஜடமானால் இந்த செயல் வருவது எப்படி ? என்று அர்ஜுனன் கேட்க, ஒன்றாகவும் மேலாகவும் உள்ள சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாவின் முன்னிலையில் இருப்பதனால்  உடம்பிற்கு இயங்கும் சக்தி வருகின்றது என்று அருளிய பகவான் நீர்தானோ!

 உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது ஆகவே ஜடமானது, ஆத்மா ஸ்வயம் சைதன்யமானது. ஆத்மாவினுடைய சம்பந்தத்தினாலேயே உடலானது இருப்பையும் இயக்கத்தையும் பெறுகின்றது.

பாடல் 20: அதெப்படி எனில்…

இருக்கினும் அசேதனத்திற்கு இச் செயல் உண்டோ எனவே

உருக்குப் படா காந்தம் முன்னில் ஊசி நிகர் என்ற வரோ!

    சேதனத்தின் முன்னிலையில் இருந்தாலும் ஜடமான உடம்பிற்கு செய்கை எப்படி வரும்? என்று அர்ஜுனன் கேட்க, நெருப்பினால் உருக்கப் படாத காந்தத்தின் முன்னிலையில் ஊசியானது அசைவது போலும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 21: சுகதுக்கம் யாருக்கு?

சொன்ன செயல் உடற்கானால் சுக துக்கம் யார்க்கெனவே

அன்ன சுக துக்கமுந்தான் அவ் வுடற்கே என்றவரோ!

மேற்சொல்லிய செய்கையானது தேகத்திற்கு என்று சொன்னால் இன்பத் துன்பங்கள் அனுபவிப்பது யார்?, என்று விஜயன் கேட்க, அந்த இன்ப துன்பங்களும் உடலுக்கே என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 22: ஜடமான உடலுக்கு எப்படி?

 சேதனமாம் ஆத்மாவைச் சேராத துக்க சுகம்

ஓது சடமாம் உடலை உற்றிடுமோ சொல்லுமென..

    சைதன்ய வடிவமாகிய ஆத்மாவைச் சேராத துன்ப இன்பங்கள், ஜடம் என்று சொல்லப்பட்ட உடலை எப்படிச் சேரும் சொல்லுங்கள் என.. (அர்ஜுனன் கேட்க)

பாடல் 23: இன்ப துன்பம் மனதுக்கு 

பூதம் ஐந்தோடு ஐந்து உயிர்கள் புலன்கள் பத்து மனம் முதல் நான்கு

ஈது இரு மெய் இதில் மனத்துக்கு இன்ப துன்பம் என்றவரோ!

    ஆகாய முதல் ஐந்து பூதங்களும், பிராணன் முதலான ஐந்து வாயுக்களும், ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்களான புலன்கள் பத்தும், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற அகக் கரணங்கள் நான்கும் (24 தத்துவங்கள்) ஆகிய இவை இரண்டு சரீரங்கள் ஆகும். இவற்றுள் மனம் என்ற ஓர் தத்துவமே இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 24: இருவுடல்களுக்கும் காரணம் எது?

இந்த இருவகைத் தனுவிற்கு ஏது ஏது என வினவ

முந்தைய காரணம் அதனால் மூன்றுதனு என்றவரோ!

    இப்பொழுது கூறிய இரண்டு வகையான உடல்களுக்கும் காரணம் எது என்று அர்ஜுனன் கேட்க, இவ் விரண்டு சரீரங்களுக்கும் முதன்மையாய் உள்ள காரணம் அஜ்ஞானம். அதனால் (அந்த காரண சரீரம் ஒன்று இருத்தலால்) மூன்று சரீரங்கள் என்றவரோ!

    பூதங்கள் ஐந்தும் ஒன்றோடு ஒன்று கலந்து தோன்றியது ஸ்தூல சரீரம்(பருவுடல்), கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, பிராணன் 5, அகக்கரணங்கள் 4, ஆக 19 தத்துவங்கள் சேர்ந்தது சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்). அவித்யா காரணசரீரம். இம்மூன்றும் சேர்ந்ததே ஜீவசரீரம். இவற்றுள் மனத்தில் ஆத்மசைதந்யம் பிரதிபிம்பிக்க ஜடமான உடல்கள் சேதனத்தன்மையைப் பெறுகின்றன.

பாடல் 25: மனமும் ஜடம் அல்லவா ?

மனம் அறியும் துக்க சுக வரவென்றீர் அம் மனமும்

வினவில் அசேதனம் அலவோ விரித்தெனக்கு விளம்பும் என.

    வரும் இன்பத் துன்பங்களை மனம் அறிகிறது என்று சொன்னீர் அந்த மனமும் ஆராய்ந்து பார்க்குமிடத்து (மற்ற தத்துவங்கள் போல) ஜடமானது அல்லவா! அப்படிப்பட்ட மனம் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் விதத்தை எனக்கு விளங்கும்படியாக அருளுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 26: ஆன்ம ஸம்பந்தத்தினால்

அம் மனத்தில் ஆன்மா அபேதம் போல் தோன்றுதலால்

விம்மு துக்க சுகத்தை மனம் மேவும் என்று சொன்னவரோ!

    (ஜடமான) அம்மனத்தில் ஆத்மாவானது பிரதிபலித்து வேறுபாடு இல்லாதது போலத் தோன்றுவதால், கலக்கத்தை தருகின்ற துக்கத்தையும் சுகத்தையும் மனமானது அடைகின்றது என்று சொன்ன பகவான் நீர்தானோ!

    ஜடமான மனம் ஆத்மாவின் சம்பந்தத்தினால் சேதனத்துவத்தைப் பெறுகின்றது. தான் அடைந்த சேதனத்துவத்தை உடலுக்குக் கொடுப்பதோடு, உடம்பின் மேல் அபிமானம் கொண்டு, உடம்பையே தான் என்று கருதுவதால், உடம்பின் சுகதுக்கங்களையும் தன்னுடையதாகக் கருதுகின்றது. கண்ணாடியில் ஏற்படுகின்ற பிரதிபிம்பம் அந்த கண்ணாடியைத் தானாகக் கருதி, கண்ணாடியின் நன்மை தீமைகளை தன்னுடையதாகக் கருதுவதுபோன்றது இது.  (அந்த பிரதிபிம்பத்திற்குக் காரணமான நிஜமுகம் கண்ணாடிக்கு வெளியே கண்ணாடிக்கு வேறாக இருக்கின்றது. கண்ணாடியில் ஏற்படும் அழுக்குகள் நிஜ முகத்தை ஒருபொழுதும் பாதிப்பது இல்லை என்பதே விவேகம். இது பின்னர் விவரிக்கப்படும்.)

பாடல் 27: ஆத்மா துக்கப்படுவது ஏன்?

அந்த மனோ துக்கசுகம் அதனிடத்து நில்லாமல்

வந்திலங்கும் ஆன்மாவை மருவிய தென் சொல்லுமென.

    அந்த மனதிற்குரிய இன்ப துன்பங்கள் அதனிடத்திலேயே நின்று விடாமல், அறிவு வடிவாக விளங்குகின்ற ஆத்மாவை வந்து சேர்ந்தது எப்படி என்று சொல்லும் என பகவானை அர்ஜுனன் கேட்க.

பாடல் 28: மனதின் ஸம்பந்தத்தினால்

வெய்ய கனலின் சூடு மேல் வைத்த சட்டியினூடு

உய்யப் புனலூடு வந்தங்கு ஒன்றுதல் போலென்றவரோ!

   கொடிய நெருப்பினிடத்துள்ள வெப்பமானது மேலே வைத்துள்ள சட்டியின் வழியே அதில் ஊற்றி வைத்துள்ள நீரினிடத்தில் வந்து சேர்வதைப் போல, (மனத்திலுள்ள இன்ப துன்பங்கள் அம்மனத்தோடுள்ள ஆத்மாவை) பொருந்தியது என்றவரோ!

பாடல் 29: சித்தும் சடமும் எப்படிச் சேரும்?

சித்தாகும் ஆன்மாவும் ஜடமாகும் சித்தமும் தான்

ஒத்தாங்கு இரண்டும் ஒன்றாய் உற்ற வகை சாற்றுமென.

அறிவு வடிவமாகும் ஆத்மாவும்  ஜடமான மனமும் வேறுபாடு இல்லாதது போல இரண்டும் ஒன்றாய் சேர்ந்த விதத்தை உரைத்தருளும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 30: நெருப்பும் இரும்பும் போல

வல்லிரும்பு கனலுடனே மருவியது போல் மனமும்,

ஒல்லையில் ஆன்மாவுடனே உற்றது காண் என்றவரோ!

    வலிமையான இரும்பு நெருப்புடனே சேர்ந்து (ஒளிபெற்றிருப்பது) போல, மனமும் அனாதியான ஆத்மாவுடனே சேர்ந்து சேதனத்துவம் பெற்றிருக்கின்றது. இதனை அறிவாயாக என்று அருளியவர் நீர்தானோ!

பாடல் 31: ஆத்மா மனதுடன் சேர்ந்தது உண்மையா?

உற்றது எதனால் எனவே உள்ளம் அவிவேகமுறப்

பற்றியதன் மேலுமதன் பண்பு வந்தது என்றவரோ!

   மனதின் தர்மங்களான இன்ப துன்பங்கள்  ஆன்மாவிற்கு இருப்பதாகத் தோன்றுவது எதனால்? என்று அர்ஜுனன் கேட்க,  மனதானது விவேகம் செய்யாமையால் ஆத்மாவாகிய தன்னிடத்தில் மனதின் பண்புகள் தெரிகின்றன என்று அருளிய பகவான் நீர்தானோ!

    நெருப்பு ஒளிபொருந்தியது, குறிப்பிட்ட வடிவம் அற்றது.   இரும்பு வடிவம் உடையது, ஒளியற்றது. இரண்டும் வேறுவேறானவை. ஆனால் நெருப்பும் இரும்பும் சேரும் பொழுது நெருப்பு வடிவம் உடையது போலவும், இரும்பு பிரகாசம் உடையது போலவும் இரண்டின் தன்மைகளும் ஒன்றாகி ஒரே பொருளாகத் தெரிகின்றது. அதுபோல சேதனமான ஆத்மாவும் அவிவேகம் உள்ள மனதும் ஒன்று சேரும் பொழுது, மனது சேதனத் தன்மை உடையதாகவும், ஆத்மா துன்பத்தை அடைந்ததாகவும் இரண்டும் ஒன்றாகித் தெரிகின்றது.

பாடல் 32: இன்ப துன்பங்கள் ஆத்மாவுக்கு இல்லை!

அடுத்த குணம் போமோ பின் ஆன்மாவை விட்டெனவே

எடுத்த செம்பூ நிறம் படிகத்து ஏறுதல் போல் என்றவரோ!

    ஆத்மாவை அடைந்துள்ள இன்ப துன்பங்கள் நீங்கிப் போகுமா? என்று விஜயன் கேட்க, சிவந்த நிறமுடைய பூவின் நிறம் அருகிலுள்ள ஸ்படிக கல்லில் ஏறி தோன்றுவது போல் என்றவரோ!

    சிவந்த பூவும் ஸ்படிக லிங்கமும் அருகருகே இருக்கும் பொழுது வெண்மையான ஸ்படிக லிங்கம் சிவப்பு நிறத்தை அடைந்தது போலத் தோன்றும். அதுபோல, மனதையும் ஆத்மாவையும் பிரித்து ஆராய்ந்து பார்க்காத பொழுது, ஆத்மா மனதின் இன்ப துன்பத்தை அடைந்து விட்டதாகத் தோன்றுகின்றது. ஆனால் ஸ்படிகமும் ஆத்மாவும் எப்பொழுதும் தன் சொரூபத்திலிருந்து மாற வில்லை என்பதே உண்மை. அதை ஆராய்ந்து அறிந்து கொள்வதே விவேகம் – ஞானம்.

பாடல் 33: ஆசைகள் தோன்றுவது எதனால்?

சுத்த படிகம் போல் சொரூபமாய்த் தானிருக்க

மெத்தவும் ஆசாமலினம் மேவியதென் சொல்லுமென.

தூய்மையான ஸ்படிகம் போல சச்சிதானந்த சொரூபமாய்த் தான்(ஆத்மா) இருக்க மிகுந்த ஆசையாகிய அழுக்கானது தன்னிடத்தில் வந்தது எப்படி ? என்று சொல்லும் என அர்ஜுனன் கேட்க.

பாடல் 34: வாசனையால் வந்தது!

அனாதியாம் வாசனையால் அடைந்தது ஆசாமலினம்

மனோ பந்தம் இருக்கின் முக்தி வாராது என்று உரைத்தவரோ!

    ஆசையானது அனாதியான வாஸனையால் வந்திருப்பது. அதுவே மனதிற்கு பந்தமாம். அது இருக்கும் வரை முக்தியானது ஏற்படாது, என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 35: பந்தம் எது? முக்தி எது?

பந்தமெது முக்தியெது பகுத்துரைக்க வேண்டும் எந்தன்

சிந்தை தெளியவென்று திருத்தாளினை வணங்க.

    பந்தம் என்பது என்ன? முக்தி என்பது என்ன? என்று எனது மனமானது தெளிவாக அறியும்படி, (அவற்றின் இலக்கணங்களை) வேறு பிரித்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டு (பகவானின்) திருவடிகளை வணங்க..

பாடல் 36: பந்தம் இது, முக்தி இது!

தேகாதி தான் எனவே சேர் அபிமானம் பந்தம்

ஆகாத மானம் விடில் அரிய முத்தி என்றவரோ!

    உடல் முதலானவைகள் நான் என்பதாக இருக்கின்ற அபிமானமே – பற்றுதலே – பந்தமாகும். ஆகாத துன்பத்தைத் தருகின்ற அபிமானத்தை விட்டு விட்டால் அதுவே கிடைத்தற்கு அரிதான முக்தி என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 37: அபிமானம் வந்ததெப்படி?

அபிமானம் வருவகையும் ஆங்கது தான் தீர் வகையும்

தபியாமல் நானறியத் தயவாகக் கூறுமென!

    உடல் நானென்ற அபிமானம் வந்து சேருகின்ற வழியையும், அந்தத் தவறான அபிமானம் நீங்குவதற்குரிய வழியையும் இந்த அபிமானத்தால் துன்பம் அடையாமல், (உண்மையை) நான் தெரிந்து கொள்ளக் கருணையோடு வழி கூறுமென அர்ஜுனன் கேட்க..

பாடல் 38: அறியாமையால் வந்ததிது!

மறந்திடும் அஞ்ஞானத்தால் மானம் வந்தது அஜ்ஞானம்

இறந்து விடின் மானமும் போமென்ன உரை செய்தவரோ!

    தனது ஆத்ம வடிவத்தை மறந்த (மறைத்த) அஜ்ஞானத்தினால் அபிமானம் வந்தது. அந்த அஜ்ஞானம் அழிந்து விட்டால் (அதன் காரியமான) உடல் பற்றும் அழிந்து விடும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 39: அறியாமை வருவதும் போவதும் எப்படி?

அந்தமுறை அஜ்ஞானம் அணுகுவதும் போவதுவும்

சந்தயமில்லாது அறியத் தயவாகக் கூறுமென.

    என் ஸ்வரூபத்தை மறைக்கும் விதமாக அஜ்ஞானமானது வந்து சேர்வதும், அழிந்து போவதும் எப்படி என்று ஐயம் இல்லாமல் நான் அறிந்து கொள்ளும்படி கருணையுடன் கூறி அருளுங்கள் என அர்ஜுனன் கேட்க..

பாடல் 40: மெய்யறிவால் போகும்!

அஜ்ஞானம் வந்தது அனாதியது சொல்வதல்ல

மெய் ஞானத்தாலே விடுமென் றுரைத்தவரோ!

    அஜ்ஞானம் ஒரு காரணத்தால் வந்தது என்று சொல்வதற்கில்லை, அது அனாதி யானது. மெய்ப் பொருளைப் பற்றிய மெய் ஞானத்தால் அது நீங்கும் என்று உரைத்தருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 41: சூரியன் முன் இருள் வருமா?

இரவி யெதிர் அடுத்து வந்த இருட்போல அஜ்ஞானம்

வர விதியோ ஜோதி தன் பால் வந்த வகை ஏதெனவே!

    சூரியனின் எதிரில் நெருங்கி வந்த இருள் போல, ஞான சூரியன் ஆகிய என்னிடத்தில் (ஆத்மாவிடத்தில்) அஜ்ஞானமானது வருவதற்கு இயலுமோ? வந்த வகை எப்படி யென்று சொல்லுமென (அர்ஜுனன் கேட்க).

பாடல் 42: ஆனந்த சாகரம் நீ

அந்த அறிவு வந்தால் அஜ்ஞானம் இல்லை அப்பால்

சந்நதமும் ஆனந்த சாகரம் நீ என்றவரோ!

    (இந்த உடல் முதலானவைகளை விட வேறாகிய) ஞானப் பிரகாச வடிவம் நான் என்னும் ஞானம் உனக்கு வந்து விட்டால் அஜ்ஞானமானது உன்னிடத்தில் இல்லாததே ஆகும். அந்த ஞானம் தோன்றிய பிறகு எப்பொழுதும் நீ ஆனந்தக் கடலாய் இருப்பாய் என்று அருளிய பகவான் நீர் தானோ!

    சூரியன் வரும் வரையே இருள் இருக்கும். சூரியன் தோன்றியவுடன் இருள் மறைந்துவிடுவது போல, நான் ஆத்மா என்று அறியாத வரையே அஜ்ஞானம். நான் சச்சிதானந்த ஆத்மா என்று அறிந்து கொண்ட பிறகு அஜ்ஞானம் இல்லை.

பாடல் 43: துக்க சுகம் தீராதது ஏன்?

வேதாந்தத்தால் குருவால் மெய் ஞானம் வந்தவுடன்

தீதான துக்க சுகம் தீராதது ஏதெனவே!

    வேதாந்த நூல்களை கேட்டலாலும் குருவின் உபதேசத்தாலும் மெய் யறிவு வந்தவுடனேயே கொடியதான துன்ப இன்பங்கள் ஒழியாதது எதனால் என்று அர்ஜுனன் கேட்க..

    வேதாந்தம் எனப்படுகின்ற உபநிஷத் முதலான தத்துவ நூல்களை குருமுகமாக கேட்பதன் வாயிலாகவே ஆத்ம ஞானமானது உண்டாகும். அப்படிக் கேட்கின்ற பொழுது புரிந்தாலும், அதனுடைய பலனை அனுபவிக்க முடியாமல் இருப்பது எதனால்? என்பது கேள்வி.

பாடல் 44: அபரோக்ஷ ஞானத்தாலே நீங்கும்!

பற்றறுமோ துக்க சுகம் பரோக்ஷ ஞானத்தாலே

அற்றமாம் அவ் விரண்டும் அபரோக்ஷத்தாலே என்றவரோ!

    பரோக்ஷ ஞானத்தினால் துன்ப இன்பங்கள் வந்து சேருதல் நின்று போய் விடாது, அவ் விரண்டும் அபரோக்ஷ ஞானத்தாலேயே நீங்கும் என்றருளிய பகவான் நீர்தானோ!

    கேள்வி ஞானம் விஷய அறிவாக மட்டும் இருக்கின்ற பொழுது அது பலனைத் தருவது இல்லை. எவ்விதமான தடைகளும் இன்றித் தன்னறிவாக அது புரிந்து கொள்ளப்படுகின்ற பொழுதுதான் பலனைத் தரும்.

பாடல் 45 : பரோக்ஷம் எது ? அபரோக்ஷம் எது ?

பரோக்ஷம் அபரோக்ஷமெது பகுத்துரைக்க வேண்டும் என் தன்

திரோதமாம் புத்தி நன்றாய்த் தெளியும் படிக்கெனவே.

    பரோக் ஷஞானம் என்பது யாது? அபரோக் ஷஞானம் என்பது யாது?  அறியாமையால் மறைக்கப் பட்டுள்ள என்னுடைய அறிவுவானது நன்றாகத் தெளியும்படி பிரித்து கூற வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 46: பரோக்ஷம் இது, அபரோக்ஷம் இது !

பகர்ந்த சத்த ஞானம் பரோக்ஷம் அனுபவத்தான்

அகம் பிரம்மம் எனும் ஞானம் அபரோக்ஷம் என்றவரோ!

    வேதாந்த நூல்களாலும் குருவாலும் சொல்லப்பட்ட ஆத்மா, ப்ரஹ்மம் போன்ற சப்தங்களின் (சொற்களின்) பொருளறிவு பரோக்ஷ ஞானம் ஆகும். தத்துவமசி, அகம் பிரம்மாஸ்மி போன்ற மகா வாக்கியங்களின் விசாரத்தால் (ஆராய்ச்சியால்) உண்டாகும் “நான் பிரம்மமாக இருக்கிறேன்” என்னும் அநுபவ உணர்வு அபரோக்ஷ ஞானம் என்று அருளிய பகவான் நீர் தானோ!

உடலுக்கு வேறாக ஆத்மா இருக்கின்றது என்றும், உலகத்திற்கு வேறாக பிரம்மம் (கடவுள்) இருக்கின்றது என்றும் அறிந்து கொள்வது பரோக்ஷ ஞானம். பிரம்மமே ஆத்மாவாக இருக்கின்றது, ஆத்மாவே நான் என்று அறிந்து கொள்வது அபரோக்ஷ ஞானம்.

பாடல் 47: உடற் பற்று போகாதது ஏன்?

தான் பிரம்மம் என்றறிந்தும் தனுவைத் தான் என்ற புத்தி,

ஏன் போகவில்லை அதை எனக்கறியப் புகலுமென.

    நான் பிரம்மம் என்று அறிந்த பிறகும் உடல் முதலானவைகளை நான் என்று எண்ணும் (தவறான) அறிவு ஏன் நீங்கவில்லை, அது நீங்குவதற்கான காரணத்தை நன்கறியுமாறு தாங்கள் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 48: பயிற்சியினால் நீங்கும்

கேள்வியினால் மனனத்தால் கிளர்ந்த யோகங்களினால்

ஆள் பிரம்மத்து அனுபவம் வந்து அது தீரும் என்றவரோ!

குரு வாயிலாக வேதாந்த நூல்களைக் கேட்பதனாலும், அவற்றின் பொருளைச் சிந்தித்து ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதனாலும், தெளிவாக அறிந்து கொண்ட அந்தத் தத்துவஞானத்திலேயே மனதைத் தொடர்ந்து நிறுத்துவதனாலும் நான் பிரம்மம் என்ற ஞானமானது  மனதில் உறுதிப் படும் பொழுது, பழைய வாஸனையான உடல் நானென்பது நீங்கும்.

பாடல் 49: நான் ஞான வடிவம் ஆக முடியுமா?

ஆதியாம் சித் சொரூபம் ஆகாத தானினிமேல்

சோதி மனனாதியினால் சொரூபமாமோ எனவே!

    முதலில் சித் சொரூபமாக இல்லாத ஆத்மா இனி மேல் கேள்வி, மனனம் முதலானவைகளால் சித் ஸ்வரூபமாக ஆகுமா? என அர்ஜுனன் கேட்க..

பாடல் 50: எப்போதும் ஞான வடிவு தான் நீ

எப்போதும் சின் மயம்  தானெனல் மறந்து தேடுவது

செப்புமிடற்று அணி யிருக்கத் தேடுதல் போல் என்றவரோ.

    எக் காலத்திலும் தான் சித் சொரூபம் தான் என்பதை மறந்து, அதை அடைய வேண்டும் என்று தேடுவது, கழுத்திலேயே நகை இருக்கும் பொழுது அதை மறந்து புறத்தே தேடுதல் போல் என்றவரோ!

பாடல் 51: நான் நானாவேனா?

தேடிய பின் தேக புத்தி தீர்ந்து போய் சித் சொரூபம்

கூடுவனோ யான் என் குறை தீரச் சொல்லுமென.

    கேள்வி, மனனங்களால் (நான் யார்? என்று) ஆராய்ந்த பின்பு, உடல் நான் என்னும் தவறான அறிவு நீங்கிப் போய், அவற்றை அறியும் அறிவே நான் என்று அதை அடைவனோ என் ஐயம் தீர உபதேசியுங்கள் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 52: நானாயிருப்பதில் ஐயமென்ன?

வந்த வுடல் வேறாயும் வாசனையால் தானெனலால்

சந்தயம் என் தன் சொரூபம் தானாதற்கு என்றவரோ!

    வினைப் பயனால் வந்த உடல், தனக்கு வேறாக இருந்தாலும் உடலை நானென்று வாழ்ந்த பழைய வாசனையால், இப்பொழுதும் தான் எனவே தோன்றுகின்றது. வாசனையை நீக்கி, உடலை அறிகின்ற ஆத்மாவே தன் சொரூபம் என்று தானாக நிற்பதில் ஐயம் என்ன?

பாடல் 53: உடல் மயக்கம் நீங்குவது எப்படி?

தனுவைத் தான் எனும் பிரமை சத்த ஞானத்தில் அறாது

அனுபவ மெய்ஞ் ஞானத்தால் அறும் வகை ஏது உரையுமென.

    உடலை நான் என்று நினைக்கும் மயக்கமானது சாஸ்திர விசாரணையால் உண்டான பரோக் ஷஞானத்தால் நீங்காமல், உண்மை அனுபவம் ஆகிய அபரோக்ஷ ஞானத்தால் நீங்குகின்ற விதம் எப்படி சொல்லுங்கள் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 54: ஐயமின்றிய அறிவொளியினால் தொலையும்

விளக்கு விளக்கு எனுமதனால் வெய்ய இருள் போய் விடுமோ

துளக்கமிலா விளக்கேற்றில் தொலையுமிருள் என்றவரோ!

    விளக்கு விளக்கு என்று சொல்வதினால் மட்டும் கொடிய இருள் நீங்கி விடுமோ? (நீங்காது). அசைவின்றிய விளக்கேற்றினால் இருளானது நீங்கிப் போகும் (அதுபோல, பிரம்மம் இருக்கின்றது என்ற பரோக்ஷ ஞானத்தினால் மட்டும் தேகம் நான் என்ற அறிவு நீங்காது. அந்த ப்ரம்மமே அறிவு வடிவாக எப்பொழுதும் ஆத்மாவாக(நானாக) விளங்கிக் கொண்டிருக்கிறது என்ற அபரோக்ஷ ஞானத்தினால் தான் உடல் அபிமானமானது நீங்கும்) என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 55: அஞ்ஞானம் எப்போது நீங்கும்?

நெடுங்காலம் ஆன்மாவை நீங்காத அஞ்ஞானம்

விடுங்காலம் எந்நாளோ மெய்ஞ் ஞானத்தால் என்றவரோ!

    அனாதி காலமாய் ஆத்மாவை மறைத்து இருக்கின்ற அஞ்ஞானமானது ஆத்மாவை விட்டு நீங்குவது எப்பொழுது ? என்று அர்ஜுனன் கேட்க, ஆத்மாவைப் பற்றிய மெய்ஞ் ஞானத்தினால் அது விலகும் என்று உபதேசித்து அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 56: மெய்ஞ்ஞானத்தால் நீங்கும்!

அந்தகாரம் குகையில் ஆயிரம் நாள் இருந்தாலும்

செந் தீபம் கண்டவுடன் தீர்வது போல் என்றவரோ!

    இருளானது ஒரு குகையில் பல்லாயிரம் நாட்கள் இருந்தாலும், பிரகாசமான ஒரு விளக்கை ஏற்றியவுடன் மறைந்து போய் விடுவது போல, (அனாதிகாலமாய் ஆத்மாவை மறைத்திருக்கும் அஜ்ஞானமானது சாஸ்திர விசாரத்தால் ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடன் மறைந்து போய் விடும்) என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 59: கர்மம் ஞான ஸாதனமாவது எப்படி?

அஜ்ஞான இருள் துரக்க அறியாத நல்ல கன்மம்

மெய் ஞானம் தனைப்பலிக்கும் விதம் எவ்வாறு என வினவ.

    அஜ்ஞானமாகிய இருளை நீக்குவதற்கு இயலாத நல்ல செய்கையானது, மெய் ஞானத்தை தோற்றுவிக்கும் செயலை எவ்வாறு செய்ய முடியுமென அர்ஜுனன் கேட்க.

பாடல் 60: கர்மம் இரு விதம்

கருமம் இரு வகையாம் காமியம் நிட் காமியமென்று

இரு வகையில் நிட் காமமேது காண் என்றவரோ!

    கர்மமானது காம்யம் என்றும் நிஷ் காம்யம் என்றும் இரு வகையாகும். அவற்றுள் நிஷ்காம்ய கர்மம் (மனத்தூய்மையை கொடுப்பதன் வாயிலாக) ஞானம் தோன்றுவதற்கு காரணமாகுமென அறிவாயாக, என்றருளிய பகவான் நீர்தானோ!

    பந்தத்தை தோற்றுவிக்கின்ற புண்ணிய பாப செய்கைகள் மோட்சத்தை அடைவதற்கு எப்படிக் காரணமாகின்றன? என்று கேட்டால், கர்மம் காம்யம், நிஷ்காம்யம் என்று இரண்டு விதமாக இருக்கின்றது. கர்ம பலனை விரும்பி செயல்களைச் செய்தல் காம்யம். அது பந்த காரணம். கர்ம பலனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடமையைச் செய்தல் நிஷ் காம்யம். இறைவனுக்கு செய்யும் தொண்டுணர்வோடு பலனை எதிர்பாராமல் நமது கடமைகளைச் செய்கின்ற பொழுது அது மனத் தூய்மை என்ற உயர்ந்த பலனைக் கொடுக்கும். அது ஆத்ம ஞானத்தை பெறுவதற்கான தகுதி ஆகும். ஆகவே இது மோஷகாரணம்.

(அனைத்து அறன் மனத்துக் கண் மாசிலன் ஆதல். -திருக்குறள் 34)

பாடல் 61: துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

கருமமே காரணமாய்க் கட்டுரைத்தீர் இவ் வுலகை

ஒருவும் வகையை எனக்கு  ஓதென்று அடி பணிய.

    பிறவி வருவதற்கும், பிறவியிலிருந்து விடுபடுவதற்கும் கருமமே சாதனமாக விரித்துரைத்தீர்கள். இவ்வுலகத் துன்பங்களிலிருந்து நான் விலகுகின்ற விதத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று (அர்ஜுனன் பகவானுடைய) திருவடிகளைப் பணிந்து வினவ..

    ஸகாமமாக செய்யும் கர்மம் பிறவி வருவதற்கும் நிஷ்காமமாக (கர்மயோகம்) செய்யும் கர்மம் பிறவியிலிருருந்து விடுபடுவதற்கும் காரணமாக இருக்கின்றது. எவ்விதமாக கர்மத்தைச் செய்தாலும் துன்பம் வருகின்றது. துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி என்பது கேள்வி.

பாடல் 62: இவ்வுலகம் உண்மையல்ல!

இந்திர சாலம் போல இவ்வுலகை நம்மிடத்தில்

தந்திரமாய்த் தோற்றுவித்தோம் சத்தியம் அல என்றவரோ!

    மாய வித்தையினால்  செய்யப்பட்ட பொருட்களைப்போல இந்த உலகை நாம் நம்மிடத்தில் மாயத் தோற்றமாகத் தோற்றுவித்து இருக்கின்றோம். இது உண்மை இல்லை என அருளிய பகவான் நீர்தானோ!

    மாய வித்தை செய்பவனால் தோற்றுவிக்கப்பட்ட பொருள்களை, அவை வெறும் தோற்ற மாத்திரம் உண்மையில் இல்லை என்று புரிந்து கொள்ளுதலே அவற்றை விலக்குதல் ஆகும். அதை போல உலகம் இறைவனின் மாயா சக்தியினால் தோற்ற மாத்திரமாக படைக்கப் பட்டிருக்கிறது, ஆகவே, நிரந்தரமான உண்மை யில்லை என்று புரிந்து கொள்வதே உலகத்திலிருந்து வரும் துன்பங்களிலிருந்து விலகும் வழி ஆகும்.

பாடல் 63: பொய்யானது எப்படி தோன்றும்?

மித்தையெனும் சகத்து நின்பால் விளங்குமோ என வினவ

சுத்தி தனிலே ரசதம் தோன்றுதல் போல் என்றவரோ!

    பொய்யான உலகம், உண்மையான உன்னிடத்தில் தோன்றுமோ? என்று அர்ஜுனன் கேட்க, சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல என்று அருளிய பகவான் நீர் தானோ!

  இல்லாத ஒரு பொருள், இருக்கின்ற ஒன்றின்மேல் இருப்பதுபோல தோன்றுவதற்கு மித்யா என்று பெயர். மணல் வெளியில் இருக்கின்ற சிப்பியின் மேல் சூரிய ஒளிபட்டு வெள்ளி காசு கிடப்பது போலத் தோன்றுகின்றது. அதுபோல, ஒரே உண்மைப் பொருளான பிரம்மத்தின் மேல் மாயையினால் உலகம் இருப்பது போலத் தெரிகின்றது.

பாடல் 64: முன் இருந்ததா இவ் வுலகம்?

அயல் வெள்ளி சுத்தியின் மேல் ஆரோபிதம் கூடும்

இயல் உள்ள சகமும் முன் வேறு இருந்ததும் உண்டெனவே!

    வேறாக தனியே இருக்கும் வெள்ளியானது சிப்பியில் கற்பிதமாகத் தோன்றுகிறது. காரண காரிய ரூபமாக உள்ள இந்த உலகமும் காண்பதற்கு முன் வேறாகத் தனியே இருந்ததும் உண்டா? என அர்ஜுனன் கேட்க.

பாடல் 65: இல்லாததுவும் தோன்றும்!

மன மயக்கம் பிடிக்கில் இல்லா வத்துவும் தோன் றிடும் அதுவோ

கனவில் விண்ணில் தான் பறக்கக் கண்டது போல் என்றவரோ!

    மன மயக்கம் ஏற்படுகின்ற பொழுது இல்லாத பொருளும் கூட இருப்பதாகத் தோன்றும். அது எது போல என்றால், கனவில் ஆகாயத்தில் தான் பறப்பதாக காண்பது போல, என்றருளிய அருளிய பகவான் நீர் தானோ!

    உலகம் பிரம்மத்தின் மேல் கற்பிக்கப்பட்டுள்ளது என்றால், முன்னில்லாத உலகம் கற்பனை மாத்திரமாகத் தோன்ற முடியுமா? என்பது கேள்வி. மாயையினால், மனத்தினால் எதையும் (இல்லாததையும்) கற்பனை பண்ண முடியும் என்பது பதில்.

பாடல் 66: உலகம் விளங்குவது எதனால்?

கனவு போல் பிரபஞ்சம் என்றீர் கண் விழித்தால் கனவு பொய்யாம்

வினவு சகம் தினமும் மெய்யா விளங்குவது என் சொல்லுமென. 

கனவு போல உலகத் தோற்றம் பொய்யானது என்று சொன்னீர்கள். விழித்தவுடன் கனவு மறைந்து விடுகிறது. காணப் படுகின்ற உலகமோ எப்பொழுதும் விளங்குவது ஏன்? என்று அர்ஜுனன் வினவ.

பாடல் 67: மெய்யறிவு வந்தால் மறைந்துவிடும்

மெய்யாக விளங்குவது மெய்ஞானம் வருமளவும்

பொய்யாம்பின் கனவு அது போல்  போதம் வரில் என்றவரோ!

    உலகம் உண்மையான விளங்குவது மெய்யறிவு வரும் வரைதான். மெய் ஞானம் வரும்பொழுது கனவு போல உலகமும் பொய்யாய் மறைந்து விடும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 68: ஞானிகளுக்கும் உலகம் தெரிவது எதனால்?

முன்பு கண்ட கனவு பொய்யாம் முழி சாக்ரம் போல என்றீர்

பின்பு முக்தித் தசை அடைந்தும் பிரபஞ்சம் நிற்ப தேதெனவே.

முன்பு உறக்கத்தில் கண்ட கனவு போல, விழிப்பு நிலையில் தோன்றுகின்ற உலகமும் பொய் என்று சொன்னீர். ஆனால் முக்திநிலை அடைந்த பிறகும் உலகமானது (கனவைப் போல விழித்தவுடன் மறைந்து விடாமல்) தோன்றுவது எதனால் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 69: தோற்றத்தில் இருந்தாலும் பயன்படாது

தெரிந்தவர்க்குத் தோற்றுவது தெத்த படம் போல்வதல்லால்

பரந்த சகம் காரியத்தில் பயன்படாது என்றவரோ!

    மெய்ப் பொருளை அறிந்தவருக்கு உலகம் தோன்றுவது, எரிந்த துணியானது தோன்றுவது போல் அல்லாமல், விரிந்த இந்த உலகமானது விவகாரத்திற்கு பயன்படாது என்று அருளிய பகவான் நீர்தானோ!

    மடித்து வைக்கப்பட்ட துணி நெருப்பில் எரிந்து போனாலும் அப்படியே இருப்பது போல் தோன்றுகின்றது. ஆனால் அது முன்பு போல விவகாரத்திற்குப் பயன்படாது. அதுபோல் ஆத்ம ஞானத்திற்குப்பிறகு உலகம் தோற்றத்தில் இருந்தாலும் ஞானிக்கு அது பயன்படுவது இல்லை. சுகத்தையும் துக்கத்தையும் தருவதாக இருப்பதில்லை.

பாடல் 70: அஜ்ஞான காரியம் உடனே போகாதது ஏன் ?

கர்ம வினை அஜ்ஞானம் கடந்துமதன் காரியம்

புன்மை உறு மெய்யுடனே போகாதது ஏதெனவே.

(ஞானத்தால்) அஜ்ஞானத்தைக் கடந்த பிறகும் அஜ்ஞான காரியமான உடலானது, அஜ்ஞானத்தோடு நீங்கிப் போகாதது எதனால் என்று அர்ஜுனன் கேட்க…

பாடல் 71: சிறிது காலம் இருக்கும்!

வெட்டவிழும் மரம்பசந்து விளங்குதல் போல் சிலகாலம்

நட்டகன்மம் மாய்ந்து மங்கம் நடத்திடுங்காண் என்றவரோ!

    வெட்டிய உடன் கீழே விழுந்த மரமானது சிறிது காலத்திற்கு பசுமையாகவே தோன்றுவது போல, தான் முன்பு செய்த கர்மம் அழிந்து போனாலும் அதன் காரியமாகிய உடல் சிறிது காலம் இயங்கிக் கொண்டிருக்கும் என்று நீ அறிவாயாக என்று அருளிய பகவான் நீர் தானோ!

    வினைகளுக்குக் காரணமான அஜ்ஞானம் ஞானத்தினால் அழிந்து போன பிறகும், தற்போது உள்ள இந்த உடல் தோன்றுவதற்கு காரணமான பிராரத்த வினை மட்டும் அனுபவித்துத்தான் தீரும். ஆகவே, அது இருக்கும் வரை உடலானது இருந்து போகும்.

பாடல் 72: ஆத்மா பலவா?

சென்மம் போய் முக்தியினை சேரச் சிலர் இருக்கத், தொன்மை ஆன்மா பலவோ சொரூபம் பகரும் என.

    முக்தி அடைந்து சிலர் பிறவி விட்டுப் போய்விட, சிலர் பிறவியுடன் இங்கிருப்பதனால், அனாதியான ஆத்மா அநேகமா?  இதன் உண்மையைச் சொல்லும் என்று அர்ஜுனன் கேட்க..

பாடல் 73: ஆன்மா ஒருவனே!

பிரம்மமென்றும் ஈசனென்றும் பெருகு பல ஜீவனென்றும்

உரை மயக்கம் அலது ஆன்மா ஒருவனே என்றவரோ!

    நிர் குண பிரம்மம் என்றும் ஸகுண ஈஸ்வரன் என்றும் பல ஜீவன்கள் என்றும் சொல்வது (அறியாமையினால் ஏற்பட்ட) தவறான அறிவே யல்லாமல் ஆத்மா ஒன்று தான் என்பதே உண்மை என்று அருளிய பகவான் நீர் தானோ!

    ஒன்றேயான இரண்டற்ற நிர்குண பிரம்மமே, ஸகுண ஈஸ்வரனாகவும் அறியாமையோடு கூடிய பல ஜீவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

பாடல் 74: பலவாய் தோன்றுவது எதனால்?

ஏகம்தான் ஆன்மா எனும் வகையே மெய்யானால்

ஆகந்தோறும் பலவாய் அமர்ந்ததுமென்னோ சொல்லுமென!

    ஒன்றுதான் ஆத்மா என்பது உண்மையானால் உடல் தோறும் பலவாக ‘நான்’ என்று இருப்பது எதனாலோ?, சொல்லும் என அர்ஜுனன் கேட்க

பாடல் 75: தோன்றுவது பிரதிபிம்பம்

பலகடத்தில் பானு பிம்பம் தோன்றுதல் போல்

தொலைவில் புத்தி தொறும் ஆன்மா தோன்றுதல் காண் என்றவரோ!

    சூரியனின் பிரதி பிம்பமானது பல குடங்களில் உள்ள நீரில் தோன்றுவது போல, முக்தி அடையும்வரை அழிவில்லாமல் இருக்கக்கூடிய மனதில் ஆத்மாவின் பிரதி பிம்பம் தோன்றுகின்றது, அறிவாயாக! என்று அருளிய பகவான் நீர்தானோ!

    சூரியன் ஒன்றுதான். அதன் பிரதிபிம்பம் பல நீர்நிலைகளில் பலவாகத் தோன்றுவது போல, ஆத்மா ஒன்றுதான், அதனுடைய பிரதிபிம்பம் பல மனங்களில் பலவாகத் தோன்றுகின்றது.

பாடல் 76: முக்தி யாருக்கு?

ஆதித்தன் போலான்மா அளவில்புத்தி தொறும்தோன்றில்

சாதிக்கும் முத்தி எவர்தமக்கு அதனைச் சாற்றும் என,

    சூரியன் போல ஆத்மா மனம்தோறும் எண்ணற்ற பிரதி பிம்பமாகத் தோன்றுகின்றது என்றால்,  முக்தி அடைவது யார் ?  அதனைச் சொல்லும் என அர்ஜுனன் வினவ.

பாடல் 77: பந்தமும் முக்தியும் மனதிற்கே!

பந்தம் முக்தி தானுமந்தப் பரந்த புத்தி தனக்கே யாம்

அந்த பிம்பம் தனக்கிலை யென்று அறிவு வரச் சொன்னவரோ.

    பந்தமும் முக்தியும் (விஷயங்களை நோக்கி) விரிந்த மனதிற்குத் தான். அந்த பிரதி பிம்பங்களுக்கு மூலமான  ஆத்மாவாகிய தனக்கு (பந்தமும் முக்தியும்) இல்லை, என்று அர்ஜுனனுக்கு அறிவு ஏற்படும்படி உபதேசித்த பகவான் நீர்தானோ!

    உடலும் மனமும் ஜடமானவை. மனதில் சைதன்யமான ஆத்மாவின் பிரதிபிம்பம் ஏற்பட மனது சேதனத்தன்மை பெறுகின்றது. (சூரிய ஒளிபட்ட கண்ணாடி பிரகாசத்தை அடைவதுபோல) உயிர் பெற்ற மனமானது, ‘உடலை நான்’ என்று நினைக்கின்றபொழுது பந்தத்தையும் ‘ஆத்மா நான்’ என்றறிகின்றபோது முக்தியையும் அடைகிறது. ஆத்மா இரண்டிற்கும் சாக்ஷி மாத்திரமாக இருக்கின்றது. அது பந்தத்தையும் அடைவதில்லை, முக்தியையும் அடைவது இல்லை.

பாடல் 78: பலஜீவன்கள் எதனால்?

பரமேகம் ஆயுமதில் பல சீவர் ஏதெனவே

ஒரு கடலில் பல குமிழி உதிப்பது போல் என்றவரோ!

    பரமாத்மா ஒன்றாக இருந்தாலும் அதனிடத்தில் பல ஜீவர்கள் தோன்றுவது எப்படி? என அர்ஜுனன் வினவ, ஒரு கடலில் பல நீர்க் குமிழிகள் (காற்றினால்) தோன்றுவது போல, (மாயையினால் பல ஜீவர்கள் தோன்றுகின்றனர்) என்றருளிய பகவான் நீதானோ!

பாடல் 79: பேரின்பம் எப்படித் தோன்றும்?

சீவனது தானென்றும் சேரும் பிரம்மமென்றும்

ஆவதுவோ பேரின்பம் ஆங்கதெனக்கு ஓதுமென!

தான் ஜீவன் என்றும் பிரம்மம் அடையத் தக்கது என்றும் இருந்து, பின்னர் ஜீவன் பிரம்மமாக ஆவதுதான் பேரின்பம் என்று சிலர் சொல்வது பற்றி எனக்கு அருளுங்களென அர்ஜுனன் கேட்க,

பாடல் 80: ஒன்றே, இரண்டிலை!

ஏகம் பிரம்மம் இரண்டிலை நீ வேறுமல

சோகமுறும் பேதம் அறில் தோன்றுமின்பம் என்றவரோ!

    பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றுதான், இரண்டு இல்லை, நீ பிரம்மத்திற்கு வேறானவன் இல்லை. துன்பத்தைக் கொடுக்கும் வேறு எனும் தவறான அறிவை விட்டுவிட்டால் பேரின்பமானது தோன்றும் என்று அருளிய பகவான் நீர்தானோ!

    பிம்பம் ஒன்றுதான் உண்மைப் பொருள், பிரதி பிம்பம் தோற்ற மாத்திரம். உடலிலும் மனதிலும் தோன்றி யிருக்கும் தற்காலிகமான உயிர்த் தன்மையை உடலோடு இணைத்து, அந்த உடலும் மனமுமே நான் என்று கருதியது அறியாமை. உடலும் மனமும் தானே இயங்கக் கூடியவையல்ல, உடலுக்கு வேறான ஆத்மாவின் சம்பந்தத்தினாலேயே இவை இயக்கம் பெற்றிருக்கின்றன. இதுவரை உடலிலிருந்த நான் என்ற அகங்காரம் வெறும் பிரதிபிம்பம் மாத்திரமே. அதனுடைய உண்மை ஆத்மா. ஆகவே, பிரதிபிம்பம் நானல்ல உண்மையான ஆத்மாவே நான், ஆத்மாவே ப்ரஹ்மம் என்ற ஞானம்  வருகின்ற பொழுது பேரின்பம் தோன்றும். ஆகவே, பிரதிபிம்பம்(ஜீவன்) பிம்பத்தை(பிரம்மத்தை) அடைகின்றது என்பதில்லை; பிரதிபிம்பம் உண்மை இல்லை என்று விடுத்து, பிரம்மமே உண்மை  என்றிருக்கின்ற அத்வைத நிலையே பேரின்பத்தை தரும்.

பாடல் 81: சித் மாத்திரமாக இருக்க முடியுமா?

சீவ பேதம் போமோ சித்தொன்றாமோ எனவே

ஆவல் மனம் அறும் சுழுத்தி அவத்தையில்பார் என்றவரோ!

    ” ஜீவன் நான் (வேறு ப்ரம்மம் வேறு) என்ற அறிவானது நீங்கி இருக்க முடியுமா? ஒன்றேயான சித் மாத்திரமாக நிற்க இயலுமா?” என்று அர்ஜுனன் வினவ, (விழிப்பு நிலையில் விஷயங்களில்) ஆவல் கொண்டு அலைகின்ற மனமானது, ஆழ்ந்த உறக்க நிலையில் (சிதான்மா மாத்திரமாக) இருப்பதைப் பார்ப்பாயா!

    மனதை ஆத்ம தத்துவத்தில் லயமாக்கினால் உறக்கத்தில் போல விழிப்பு நிலையிலும் சிதான்மா மாத்திரமாக இருக்க முடியும் என்பது கருத்து. தூங்காமல் தூங்குவது என்று இதுவே சொல்லப் படுகின்றது.

பாடல் 82:  பூத மயத் தோற்றம் ஏன்?

பேதமல இவ் வுலகம் பிரம்ம மயம் என்றறிந்தும்

பூத மய மாய்த் தோற்றல் போகாதது ஏதெனவே!

    இந்த உலகம் பிரம்மத்திற்கு வேறானதல்ல, பிரம்ம ஸ்வரூபமே என்றறிந்த பின்னரும், பஞ்சபூத வடிவமாகத் தோன்றுதல் மறைந்து போகாது எதனால்? என அர்ஜுனன் கேட்க,

பாடல் 83: கானல் நீர் போல் தெரிகிறது!

கானலை நீரென்றோடிக் கண்டவர்க்குத் தீர்ந்த பின்னும்

வானுலவு நீராகி வயங்குதல் போல் என்றவரோ!

    கானல் தோற்றத்தை நீரென்று கருதி அருகில் சென்று பார்த்தவருக்கு, அது நீரில்லை என்று தெரிந்த பின்னரும், காட்சியில் வானிலிருந்து பொழிந்த மழைநீராகவே தோன்றுவது போல, என்றருளிய பகவான் நீர்தானோ!

    கானல்நீர் உண்மையில்லை என்றறிந்த பின்னும் அங்கு நீர் இருப்பது போல தோற்றம் தெரியத்தான் செய்கின்றது. அறிவில் இல்லை; தோற்றத்தில் இருக்கின்றது. அதைப் போல உலகமும் உண்மையில்லை என்றறிந்த பின்னும் தோற்றத்தில் இருக்கின்றது. (பிரம்மமயமே என்று அறிவில் இருக்கின்றது, தோற்றத்தில் பஞ்சபூத மயமாய் தெரிகின்றது. சூரியன் தோன்றுவதும் இல்லை, மறைவதும் இல்லை என்பது அறிவு, ஆனால் அனுபவத்தில் தோற்றமும் மறைவும் தெரிகிறது.)

பாடல் 84: மூன்றாயிருத்தல் வேறுபாடில்லையா?

அறிவானும் நல்லறிவும் அறியப் படும் பொருளும்

பிறிவாய் மூன் றாயிருத்தல் பேதமலவோ வெனவே.

    அறிபவனும், நல்ல அறிவும், அறியப்படும் பொருளும் பிரிந்து மூன்றாக இருத்தல் வேறுபாடு இல்லையா? என அர்ஜுனன் கேட்க,

    அறிவு, அறியப்படும் பொருள், அறிவு இந்த மூன்றிற்கும் திரிபுடி என்று பெயர். மூவகை வேறுபாடுகள். ஆத்மாவுக்கு வேறாக ஒன்றுமில்லை என்றால் இவ்வேறுபாடுகள் அனுபவத்தில் இருக்கின்றனவே, என்பது கேள்வி.

பாடல் 85: தோன்றினாலும் உண்மையில்லை!

சொப்பனத்தில் தனித்தொருவன் தோற்றம் வேறு இல்லை யங்கே

கற்பனையாம் பொருளறிவு காண்பவன்போல் என்றவரோ!

    தனியே ஒருவன் உறங்கும்பொழுது கனவில் காணப்படும்பொருள், அறிவு, காண்பவன் மூன்றும் வேறுவேறாகத் தோன்றுவது போலக் கண்டாலும், அவை மனதிற்கு வேறாக இல்லை. (நனவிலும் இம்மூன்றும் வேறுவேறாகத் தோன்றினாலும் உண்மையில் ஆத்மாவிற்கு வேறாக இல்லை) என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 86: பேதங்களை மறப்பது எப்படி?

கற்பனையாம் பேதங்கள் காணாமல் போம் வகையை

விற்பனமாய் நானறிய விளம்புமெனவே வணங்க,

    கற்பனையான இந்த வேறுபாடுகள் தெரியாமல் மறைந்து போகும் முறையை நான் நன்றாக அறிந்து கொள்ளும்படி சொல்லி யருள வேண்டுமென்று அர்ஜுனன் வணங்கிக் கேட்க,

பாடல் 87: யோகத்தால் பேதம் நீங்கும்

துரியமாம் யோகத்தால் தூய மனம் லயமானால்

அரிய மூ வகை விகற்பம் அழியுமென்று சொன்னவரோ.

   நிதித்யாஸனமாகிய தியான யோகப் பயிற்சியினால் துரியமான ஆத்ம தத்துவத்தில் (விருப்பு வெறுப்புகளற்ற) தூய்மையான மனம் லயமானால் இம் மூவகை வேறுபாடுகளும் அழிந்து போகுமென்று அருளிய பகவான் நீர்தானோ!

    நிதித்யாஸனம் என்பது சிரவணத்தில் ஐயமின்றி அறிந்த ஆத்மதத்துவத்தை, தனிமையில் அமர்ந்து இடைவிடாமல் சிந்தித்தல்.

பாடல் 88: ஆத்மா தெரியாததேன்?

சிறந்திருக்கும் ஆன்மாவும் செகமெல்லாம் நிறைந்திருந்தும்

மறைந்தெனக்குத் தோன்றாத வகை யேது சொல்லுமென,

    சச்சிதானந்த வடிவமாய் சிறப்புடன் விளங்கும் ஆத்மா, உலகமெங்கும் பரவியிருந்தாலும் எனது மனதிற்கு இதுநாள்வரை விளங்காமலிருந்த காரணம் என்ன? சொல்லுங்கள் என்று அர்ஜுனன் வினவ,

பாடல் 89: உலகம் மறைத்திருக்கிறது!

சத்துச்சித்தா னந்தம் தாம் மூன்றும் அதனுடனே

ஒத்துற்று நாம உருவம் சகமாகி,

    சச்சிதானந்தம் ஆத்மாவின் சொரூப இலக்கணமாகும். இந்த மூன்றுடனே பெயரும் வடிவமும் சேர்ந்து உலகமாகி (இருக்கின்றது.)

பாடல் 90: நாம ரூபம் மறையத் தெரியும்!

இருக்கையினில் தோன்றாது இவை மூன்றும் பிரமமென

மரிக்கில் வரும் பின்னிரண்டு மரிசகமென்று உரைத்தவரோ!

    (நாமரூபங்களோடு) இருக்கையில் சச்சிதானந்தம் மூன்றும் பிரம்மம் என்று தெரியாது. அழிகின்ற உலகமானது நாமரூபம் மாத்திரம் (என்று குரு வாயிலாக வேதாந்த நூல்களைச்) சிந்தித்து நீக்குகின்றபொழுது தெரியும், என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 91: ஆத்மா அறியப்படும் பொருள் ஆகுமா?

அறிந்து கொள் ஞானத்தாலே ஆன்மாவை என்றுரைத்தீர்

சிறந்தொளிரும் ஆன்மாவும் திருசியமாமோ எனவே.

    ஞானத்தினாலே ஆத்மாவை அறிந்து கொள் என்று சொன்னீர் எங்கும் வியாபித்து அறிவாய் ஒளிரும் ஆத்மாவும் அறியப்படும் பொருள் ஆகுமா? என்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 92: அஜ்ஞானம் விலக ஆத்மா தானே விளங்கும்!

முந்திய ஞானத்தாலே முதிருமஞ்ஞானம் துறக்கில்

சிந்தையில் ஆன்மாச்சுயமாய்த் திகழுமென்று சொன்னவரே.

    முதன்மையான ஆத்மஞானத்தினால் அனாதி காலமாயுள்ள அஜ்ஞானத்தை நீக்கினால், தானே ஒளிரும்  ஆத்மாவானது மனதில் விளங்கும் என்றருளிய பகவான் நீர் தானோ!

பாடல் 93 : முக்தி சுகம் எப்படி இருக்கும்?

இனியமுத்திச் சுகமிருப்பது எப்படி யென்றே வினவ

அனுபவத்திலறி விடயானந்தம் போலென்றவரோ !

இனிமையான முக்தி இன்பமானது எப்படி இருக்கும்? என்று அர்ஜுனன் வினவ, விஷயானந்தம் போல அனுபவத்தில் அறிந்துகொள், என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 94 : மனோ லயம் தான் முக்தியா?

மன லயம் வந்தவரலது மற்றிலரோ முக்தரென

சனகனை போல் சீவன் முக்தர் தாமுமுளர் எனறவரோ!

    மனம் ஒடுங்கி யோகத்தில் இருப்பவர் அல்லாது வேறு யாரும் ஜீவன்முக்தராக இல்லையா ? என அர்ஜுனன் வினவ, ஜனக மஹாராஜனைப் போல (உலக விவகாரம் செய்கின்ற) ஜீவன் முக்தர்களும் உலகில் உள்ளனர் என்ற அருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 95 : ஜீவன் முக்தர் லக்ஷணம் யாது?

ஜீவன் முக்தி அடைந்தோர்கள் செயலுமவர் தம் குணமும்

நா வுரைக்கும் வாசகமும் நானறியச் சொல்லுமென.

    ஜீவன் முக்தி அடைந்தவர்களுடைய செயல்களும், அவர்களுடைய நற் குணங்களும், அவர்கள் பேசுகின்ற வார்த்தைகளும் நான் அறிந்து கொள்ளும்படி உபதேசித்தருள வேண்டும் என்று அர்ஜுனன் கேட்க.

பாடல் 96 : அனைத்தும் உடலுக்கு என்றிருப்பார்?

வரும் கருவு பிறப்பினொடு வளர்தல் பருத்தல் குறைதல்

ஒருங்கலும் மெய்க்கு என்றதனைப் ஒறுத்திருப்பார் என்றவரோ!

    வினைப் பயனுக்கு ஏற்ப வரும் கர்ப்பத்தில் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், அழிதல் என்னும் ஆறு மாறுபாடுகளும் உடலுக்கே என்று அதனைப் பற்றாது விலகியிருப்பார் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 97: செயல்கள் அனைத்தும் கரண தர்மங்கள்!

பார்ப்பதுவும் கேட்பதுவும் பகர்வதுவும் செல்வதுவும்

ஏர்ப்பதுவும் கரண தன்மம் எனப் புகல்வார் என்றவரோ!

    பார்த்தலும் கேட்டலும் பேசுவதும் நடப்பதும் வாங்குவதுமான அனைத்தும் ஞான, கர்ம இந்திரியங்களின் செயல்கள் என்று சொல்லுவார் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 98: உணர்ச்சிகள் எல்லாம் மனதின் தர்மங்கள்!

பசி தாகம் உயிர்க்கெனவே பயந்துக்கம் சுகங்காமம்

வசிகோபம் மதிக்கெனவே மகிழ்ந்திருப்பார் என்றவரோ!

பசியும் தாகமும் பிராணனுக்கென்றும், பயம், துக்கம், சுகம், காமம், குற்றமுடைய கோபம் போன்றவை மனதிற்கென்றும், (ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை என்று) எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பார் ஜீவன் முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 99: தாமரை இலை நீர் போல் வாழ்வர்!

வீடும் தாரமும் உறவும் மேவியென்றும் இருந்தாலும்

நீடுந்தாமரை இலை நீர் நிகராவார் என்றவரோ!

    வீடும் மனைவியும் மற்ற உறவுகளும் சேர்ந்து இருந்தாலும் தாமரை இலையில் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் பற்றற்று வாழ்வர் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 100: புளியம்பழமும் ஓடும் போல் வாழ்வர்!

பற்றிடும் காயமும் தானும் பன்னாள் ஒன்றாயினும்

பினுற்ற புளியம் பழமும் ஓடுமொப்பார் என்றவரோ!

    அஞ்ஞான காலத்தில் தானென்று பற்றிடும் உடலும், ஆத்மாவாகிய தானும் பலகாலம் ஒன்றாக சேர்ந்திருந்தாலும், ஞானமடைந்த பின்னர், புளியம்பழமும் அதன் ஓடும் போல பந்தமில்லாமல் வாழ்வர் ஜீவன்முக்தர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 101: ஒட்டாமல் வாழ்வர்!

கூறும் உலகியற்கையுடன் கூடினும் மெய்ஞானம் வந்தோர்

சேறும்பிள்ளைப் பூச்சியும்போல் திரிவர்காண் என்றவரோ!

    மெய்ஞ்ஞானம் உள்ள ஜீவன்முக்தர், பெரியோர்கள் கூறுகின்ற உலக வழக்கத்துடனே சேர்ந்து வாழ்ந்தாலும், சேற்றில் திரிகின்ற பிள்ளைப்பூச்சி போல் ஒட்டாமல் வாழ்வர் என்றருளிய பகவான் நீர்தானோ!

பாடல் 102: கலங்காமல் வாழ்வர்!

ததியூடு கடைந்த வெண்ணெய் தான் மோரில் கிடப்பது போல்

மதியோடு கூடினும் பின் மயங்கார் காண் என்றவரோ.

    தயிரைக் கடைந்து வந்த வெண்ணெய், மோரின் மேல் கலத்தல் இன்றி இருப்பது போல, (ஆத்மா அநாத்ம விவேகம் செய்து ஆத்மாவைப் பிரித்தறிந்த பின்னர், பிராரப்தம் இருக்கும்வரை) மனதோடுகூடி காரியங்களைச் செய்யினும், மனதைத் தான் என்று மயங்க மாட்டார் ஜீவன் முக்தரென அறிந்து கொள்வாயாக, என்றருளிய பகவான் நீர்தானோ‌!

பாடல் 103: புண்ணியரே கண் வளரீர்!

அருச்சுனன் தன் பொருட்டாக அனைவருக்கும் ஞானம் வரப்

பொருந்திய தேசிக வடிவாம் புண்ணியரே கண் வளரீர்!

    அர்ஜுனனின் நிமித்தமாக அனைத்து முமுக்ஷுக்களுக்கும் மெய்ஞ் ஞானம் உண்டாகும் விதமாக (உபநிஷத் தத்துவத்தை) உபதேசிக்க  குரு வடிவாக வந்த புண்ணியரே துயில்வீராக!

பாடல் 104: பேரொளியே கண்வளரீர்!

ஆயர்குல மாதரளவுலோ ரைப் புணர்ந்தும்

தூய பதி னாறு ஆயிரவருடன் தோய்ந்து இருந்தும்,

இடையர் குலப் பெண்கள் பலரோடு சேர்ந்திருந்தும், தூய்மையான பதினாறாயிரம் ராஜகுல மங்கையரோடு கலந்திருந்தும்,

பாடல் :105

பரம முனிவர் முன்னே பரிச்சித்தைத் தீண்டியன்று

பிரம சரி யம் செலுத்தும் பேரொளியே கண் வளரீர்.

    அந்நாளில் (உயிரற்ற குழந்தையாய் இருந்த) பரீக்ஷித்தை, மேலான முனிவர்கள் முன்னிலையில், “நான் நித்ய பிரம்மச்சாரி” என்று சொல்லித் தொட்டு உயிர்கொடுத்த சைதன்ய ஸ்வரூப ஜோதியே கண்ணுறங்கு!

    பகவான் லீலையாய் பல பெண்களோடு இருந்தாலும் ஆத்ம தத்துவத்தை ஒரு நாளும் மறவாமல் இருந்ததே பிரம்மச்சர்யம். உலக விவகாரங்கள் எப்படி இருந்தாலும் ஆத்மா நிர்விகாரம் என்று மனதில் மாறுபடாமல் இருப்பதே முக்திநிலை என்பதை உணர்த்துவதே தாத்பரியம்.

பாடல் 106: கேட்டோர் முக்தி பெறுவர்!

ஆதி மூ லம் விசயற்(கு) ஆதி மறை யின்பொருளை

ஓதி உணர்த்திய இவ் வுண்மையினைக் – காதலுற்றுக்

கற்றோரும் கேட்டோரும் காசினியில் வாழ்ந்து முக்தி

பெற்றோர்கள் முத்தர் பெறும் பேறு!

    அனைத்திற்கும் முதற் பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா  பழமையான வேதத்தின் பொருளை அர்ஜுனனுக்கு உபதேசித்து உணர்த்திய இந்த மெய்ப் பொருள் உண்மையினை, ஆவலுடன் குரு வாயிலாகக் கற்பவர்களும் கேட்பவர்களும், உலகத்தில் ஜீவன் முக்தர்களாய் வாழ்ந்து, முக்தி பெற்றோர்கள் பெரும் பேரான விதேக கைவல்யம் பெறுவார்கள்.

ஸ்ரீ  திருவேங்கட நாதர் அருளிய  ஸ்ரீ  கீதாசாரத் தாலாட்டு முற்றிற்று

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

தமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு–முனைவர் மு.பழனியப்பன்

January 22, 2023

பக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக  உயிர்க்கான நிறைநிலையான பிறவாமையை அடைவது, அறிவுக்கான நிறைநிலையான ஞானத்தை அடைவது என்பன குறிக்கோள்களாக விளங்குகின்றன. தமிழகத்திலும், கேரளத்திலும் கிருஷ்ண பக்தி என்பது கலை சார்ந்த நிலையில் வளர்ந்து வருகிறது. குழந்தையாகக் கண்ணனைப் பாவித்து அவனது ஆடல்களை, ஆட்டுவிப்புகளைப் புகழ்வது, அவனைச் சரணடைவது என்பன கிருஷ்ண பக்தி நூல்களின் பொதுப்பண்புகளாக விளங்குகின்றன.

கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தியாளர் பூந்தானம் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரின் குடும்பப் பெயர் பூந்தானம் என்பதாகும். அதுவே இவர் பெயராகவும் ஆகிவிட்டது. இவர் ஓரளவிற்கு கற்றவர். வேதப்பயிற்சி, இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகளை ஓரளவு பெற்றவர். இவர் எழுதிய மலையாள மொழி சார்ந்த வேதாந்த நூல் ‘‘ஞானப்பானா” என்பதாகும். ஞானத்தைப் பற்றிய பானா (பானை) என்ற கவிவடிவத்தில் எழுதப்பெற்ற நூல் இதுவாகும். இது பூந்தானத்தின் மகன் மறைவின்போது ஏற்பட்ட பற்றற்ற தன்மையின் காரணமாகப் பாடப்பெற்ற நெடும்பாடல் ஆகும். இது முன்னூற்று ஐம்பத்தாறு அடிகளை உடையது. ‘‘உலக வாழ்வு அர்த்தமற்றது. கலிகாலத்தில் மக்கள் இறைசிந்தனையைப் பெருக்கிக்கொள்ளவேண்டும். விஷ்ணு நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும். எவரும் கர்மபலனை அடைந்தே தீரவேண்டும்” போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கிறது. வேதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பனுவல் எழுதப்பெற்றுள்ளது. இந்நூல் மலையாள மொழி சார்ந்தது. அதிகம் வடமொழி கலப்பில்லாத பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் நடை சார்ந்த பனுவலாக இது விளங்குகிறது. பல பாடல்கள் பகுதிகள் தமிழாகவே உள்ளன.

தமிழகத்தில் தோன்றிய வேதாந்த நூல்களுள் ஒன்று கீதாசாரத் தாலாட்டு என்பதாகும். திருவேங்கடநாதர் என்ற தொண்டை நாட்டு மன்னர் எழுதிய நூல் இதுவாகும். தன் மகளுக்குக் குழந்தை பிறக்கவேண்டி இத்தாலாட்டைப் பாடித் தந்ததாகவும். இத்தாலட்டைப் பாடி இவரின் மகள் குழந்தை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நூலும் கர்ம பலன், அதனை அனுபவிக்கும் தன்மை, அதனின்று மீளும் தன்மை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. இது நூற்றி மூன்று கண்ணிகளை உடையது. மொத்தம் இருநூற்று ஆறு அடிகளைக் கொண்டது. தமிழ்க்கவிதை வடிவில் எழுதப்பெற்றுள்ள இந்நூல் பகவத்கீதையின் கருத்துகளை எடுத்துரைப்பதாக உள்ளது. அர்ச்சுணன் எழுப்பும் வினாக்களுக்கு விடை பகரும் நிலையில் கிருஷ்ணர் சொன்ன பதில்களாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.

இவ்விரு நூல்களில் காணப்படும் கருத்துகளை ஒப்பாய்ந்து உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

கீதையே அடிநாதம்

பூந்தானம் எழுதிய ஞானப்பானாவிற்கும், திருவேங்கடநாதர் எழுதிய கீதாச்சாரத்தாலாட்டிற்கும் அடிப்படையாக அமைவது பகவத் கீதையேயாகும். பூந்தானம் ‘‘கீதையும் வேதங்களும் பரந்தாமன் புகழைப் பாடினால் மட்டுமே முக்தி” என்று உரைக்கின்றன (ஞானப்பானா 60) என்று பாடுகிறார்.

‘‘திருத்தேரில் சாரதியாய்ச் சேர்ந்து இருந்தும் கீதையினால்

அருச்சுனற்கு மெய்ஞ்ஞானம் அனைத்தும் உரை செய்தவரோ

செஞ்சமரில் பந்துசனம் சேதம்வரும் என்று இரங்கி

அஞ்சினவன் பயம் தீர்த்தே அமர்செய்யச் சொன்னவரோ’’

(கீதாச்சாரத் தாலாட்டு- 2,3)

என்று திருவேங்கடநாதர் பாடுகிறார். இருவரும் கீதையின் கருத்துகளை உள்வாங்கித் தன் நூல்களைப் படைத்துள்ளனர் என்பது இதன்வழி தெரியவருகிறது.

இறைவன் திருநாமம்

இறைவன் திருநாமமே முக்தி தரும்  என்பதை இரு கவிஞர்களும் காட்டியுள்ளனர்.

பூந்தானம் பல இடங்களில் இறை நாமங்களைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்.

‘‘குருநாதன் துண செய்க சந்ததததம்

திருநாமங்கள் நாவின்மேல் எப்போதும்

பிரியாதே இருக்கணும் நம்முடே

நரஜன்மம் சப்கால மாக்கிடுவன்” (ஞானப்பானா- 1)

என்றும்

‘‘கிருஷ்ணா, கிருஷ்ணா, முகுந்தா, ஜனார்த்தனா

கிருஷ்ணா, கோவிந்தா, ராமா என்னின்ஜினெ

திருநாம சங்கீர்த்தனம் எண்ணியே”  (ஞானப்பானா-28)

என்றும்

இறைவன் நாமத்தை எண்ணிக்கொண்டே இருக்கிறார் பூந்தானம். குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை வணங்குவது, பகவத் விஷயங்களைச் சொற்பொழிவாற்றுவது என்று தன் வாழ்வை இறைமயமாக ஆக்கிக் கொண்டவர் பூந்தானம்.

இறைவனைக் குருவாகக் காண்கிறார் பூந்தானம். திருவேங்கடநாதரும் அதே நிலையைப் பாடுகிறார்.

‘‘சீர் ஆரும் பரமார்த்த தெரிசனத்தை அருள் செய்யப்

பேர்ஆரும் தேசிகனாய்ப்  பெருமாளே வந்தவரோ” (கீதாச்சாரத் தாலட்டு- 1)

இறைவன் தேசிகனாய் அதாவது ஆசிரியனாய் வந்து அருச்சுணருக்குப் பரமார்த்த தரிசனத்தைத் தந்து அருளினார்  என்பதை மேற்காணும் பாடலடிகள் காட்டுகின்றன.

எந்நேரமும் குருநாதன் துணை அருள் செய்யட்டும் என்னும் பூந்தானத்தின் வாக்கும், இறைவனே குருவாக வந்து காட்சி தருவான் என்ற திருவேங்கடநாதர் கூற்றும் இவ்வகையில் ஒன்றிணைகின்றன.

ஆசை மனம்

மனதில் ஏராளமாக ஆசைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவே நிகழ்காலத்தில் நிறைவேறுகின்றன. பல ஆசைகள் முடிவு பெறாமலே, அடையப் பெறாமலே தொக்கி நிற்கின்றன.

ஆசையின் அளவினைப் பற்றி ஞானப்பானா பின்வருமாறு பாடுகிறது.

‘‘பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்

சதமாகில் சகாஸ்கரம் மதி என்னும்

ஆயிரம் பணம் கையில் உன்கும்போல்

ஆயுதமகில் ஆச்சர்யம் என்னுதம்

ஆசையுள்ள பாசம் மதிஞ்சன்னு” (ஞானப்பானா- 38)

ஆசை என்ற கயிறு உள்ளத்தைக் கட்டி வைத்திருக்கிறது. பத்து கிடைத்தால் நூறு கிடைக்குமா என்று எண்ணுகிறது. நூறு கிடைத்தால் ஆயிரம் வந்தால் போதும் என்கிறது. ஆயிரம் வந்தால் அதைவிட அதிகமாக எண்ணுகிறது. இதுவே மனதின் இயல்பாக உள்ளது என்று பூந்தானம் மனவாசையின் அளவை அளக்கிறார்.

இதனைத் திருவேங்கடநாதர், ஆசை என்னும் களங்கம் உள்ளத்தை அழுக்காக்குகிறது என்கிறார்.

‘‘சுத்தபடிகம் போல் சொரூபமாய்த் தான் இருக்க

மெத்தவும் ஆசாமலினம் மேவியது என் சொல்லும் என”

(கீதாச்சாரத்தாலாட்டு- 33)

கலங்கமில்லாத பளிங்கு போல் உள்ள மனத்தை ஆசை என்னும் அழுக்கு பற்றுவது ஏன் என்று அருச்சுணன் கிருஷ்ணரிடம் வினவுகிறான்.

அதற்குக் கிருஷ்ணர்  பின்வருமாறு பதிலுரைக்கிறார்.

‘‘ அநாதியாம் வாசனையால் அடைந்தது ஆசாமலினம்

மனோபந்தம் இருக்கில் முத்தி வாராது என்று உரைத்தவாரே”

(கீதாச்சாரத்தாலாட்டு, – 34)

தொன்று தொட்டு வரும் பழைய கருமங்களின் வாசனையால் ஆசையாகிய களங்கத்தை ஆன்மா பெற்றது. மனதில் ஆசை, பாசம், இன்பம், துன்பம் இருக்குமானால் வீடுபேறு கிடைக்காது என்பது கிருஷ்ணரின் பதில்.

இவற்றின் வழியாக தமிழ் மொழி நூலான கீதாச்சாரத் தாலாட்டும், மலையான மொழிநூலான ‘ஞானப்பானா“ வும் ஆசையின் அளவையும் அதன் இழிவையும் காட்டியுள்ளன. இது ஒப்பிடத்தக்க ஒரு பகுதியாகும்.

உலக உயிர்கள் பிறப்பு

உலகில் பல பிறவிகள் பிறக்கின்றன. அவற்றின் அளவு, தன்மை சொல்ல இயலாத அளவு பெருமை வாய்ந்தது.

‘‘இந்திரஜாலம்போல இவ்வுலகை நம்மிடத்தில்

தந்திரமாத் தோற்றுவித்தோம் சத்தியம் அல என்றவாரோ”

(கீதாச்சாரத்தாலாட்டு, 60)

இந்திர ஜால வித்தை போல இவ்வுலகம் கிருஷ்ணரால் தோற்றுவிக்கப்பெற்றது. ஆனால் இது பொய்யானது. மாயை மிக்கது என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறது கீதாச்சாரத்தாலாட்டு.

உலக உயிர்கள் பற்றியும் பாரத கண்டம் பற்றியும் சிறப்புடன் பல இடங்களில் குறிக்கிறது ஞானப்பானா.

‘‘எத்தனை ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஐன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மரங்களில் நின்னிடும்

எத்தனை ஜன்மம் மரித்து நடன்னதும்

எத்தனை ஜன்மம் பரன்னு நடன்னதும்

எத்தனை ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்

மரத்திய ஜனதில் மும்பே கழிஞ்சதும்” (ஞானப்பானா- 32)

என்று மலம், ஜலம், மண், மரம், பறவை, விலங்கு, பசு போன்றனவாய் முற்காலத்தில் பிறந்து இளைத்தோம் என்கிறார் பூந்தானம்.

மேலும் பாரத கண்டத்தை அவர் நலமான பூமி என்று விவரிக்கிறார். இதனில் பிறப்பதால் சாதாரண மனிதன் புனித ஆன்மாவாக ஏற்றம் பெறுகிறான் என்கிறார்.

‘‘ ………மற்றுள்ள லோகங்கள்

மற்ற பதிமூன்று லோகங்கள்

பதின் மூன்றிலுள்ள ஜனங்கள்

மற்று தீவுகள் ஆறில் உள்ளோரும்

மற்று கண்டங்களில் உள்ளோரும்

மற்று மூனு யுகங்களில் உள்ளோரும்

முக்தி தங்களுக்குச் சாத்யம் அல்லாயாகையால்

கலிகாலத்தில பரத கண்டத்தில்

கலிதடராம் கை வணங்கினு”(ஞானப் பானா – 29)

என்ற பகுதியில் பரதகண்டம் பற்றிப் பூந்தாம் குறிப்பிடுகிறார். உலகங்கள் பதினான்கு என்பது உலக வழக்கு. அவற்றில் பூமி ஆகிய இவ்வொன்று நீங்கினால் பதிமூன்று உலகங்கள். மொத்தத் தீவுகள் ஏழு. அதில் இதனை விடுத்தால் மற்றவை ஆறு. யுகங்கள் நான்கு. அவற்றில் இக்கலியுகம் நீங்கினால் மற்றவை மூன்று யுகங்கள். இந்நிலைப்பாட்டில் பரத கண்டத்தில் உயிர்கள் மட்டுமே ஞானத்தை, இறைபாதத்தை அடைய வழி தெரிந்தவர்கள். ஆகவே இக்காலம் நன்று. இவ்வுலகம் நன்று. இதனில் முக்தி வழி தேடுவோம் என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறார் பூந்தானம்.

கருமம் பற்றிய கருத்துகள்

இந்தப் பூமியில் பிறப்பும் இறப்பும் உயிர்கள் செய்த முன்பிறவி செயல்களால் ஏற்படுகின்றன என்பதை இரு நூல்களும் ஏற்கின்றன. திருவேங்கடநாதர்

‘‘இத்தரையில் பிறந்து இறப்பது எடுத்த உடற்கு அடுத்த பொறி

நித்தியம் ஆகிய ஆன்மா நின் சொரூபம் என்றவாரோ”

(கீதாச்சாரத் தாலாட்டு- 8)

உயிர்கள் முன் பிறவிச் செயலின்படி இத்தரையில் பிறப்பது இறப்பது ஆகியன நடக்கின்றன என்கிறார் திருவேங்கடநாதர்.

கீழ் மேலன்ஜினி மண்டுன்ன ஜீவன்மார்

பூமியினாத்ரே நீடுன்னு கர்மங்கள் (ஞானப்பானா- 18)

என்று இரு பக்தியாளர்களும் முன்வினைக் கரமங்களே இப்பிறவிக்கு உயிர்களை ஆளாக்கியது என்கின்றனர்.

இருவரில் பூந்தானம் மனிதப் பிறவியே மகத்தான பிறவி. இப்பிறவி பிறந்தால் மட்டுமே முக்தி அடைய இயலும். குறிப்பாக இந்தக் கலிகாலத்தில், பதினான்கு உலகங்களில் இந்த உலகு மட்டுமே மோட்சத்திற்கு வழிகாட்டும் உலகம் என்கிறார்.

” யுகம் நாலிலும் நல்ல கலியுகம்

சுகமே தானே முக்தி வருதுவன்” ( ஞானப்பானா- 27)

என்று இக்காலத்தை ஞானத்தின் காலமாகக் காட்டி நம்பிக்கை அளிக்கிறார் பூந்தானம்.

குழந்தை மையம்

ஞானப்பானா, கீதாச்சாரத்தாலாட்டு இரண்டுமே குழந்தைகளை மையமிட்டவை. ஞானப்பானா பூந்தானம் அவர்களால் அவரின் மகன் இறந்த நேரத்தில் பாடப்பட்ட சோகராகம். பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்திய பூந்தானம்  குருவாயூரப்பனை வேண்டி மகன் பெறுகிறார். அம்மகனுக்கு முதல் சோறூட்டல் நிகழ்ச்சி மிகப் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. பலரும் கூடுகின்றனர். குழந்தை ஓர் அறையின் மூலையில் படுத்துகிடக்கிறது. இக்குழந்தை படுத்துக் கிடப்பது தெரியாமல் யாரோ அதன் மீது பெருத்த துணிக்குவியலைப் போட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக அக்குழந்தை மூச்சு திணறி இறக்கிறது. இதனால் சோகம் அடைகிறார் பூந்தானம். அவர் குருவாயூரப்பனை வேண்டிய இப்பிறவி சுகமெல்லாம் பெருமானை அடைவதே என்று சரண் புகுகிறார். இதன் காரணமாக குருவாயுரப்பனே ‘நானே உன் குழந்தை எங்கே உன் மடி” என்று இறங்கி வந்ததாகச் செவிவழிக்கதை கேரளத்தில் விளங்கிவருகிறது. இவ்வகையில் ஞானப்பானா படைக்கப்பெற்றுள்ளது.

திருவேங்கடநாதருக்கு இரு பெண்பிள்ளைகள். ஒரு பெண்ணிற்குக் குழந்தை பிறக்க மற்றொருத்தி குழந்தை இன்றித் தவித்தாள். அவளிடம் ஒரு கண்ணன் உருவைத் தந்தார் திருவேங்கடநாதர். பின்பு அவளுக்காக கண்ணன் மீது ஒரு தாலாட்டைப் பாடினார். அவ்வாறு பாடப்பெற்ற பாடல் கீதாச்சாரத்தாலாட்டு. இத்தாலாட்டினைப் பாடி அப்பெண்மகள் மகன் பெற்றாள் என்பது செவிவழிக்கதை.

குழந்தை கிருஷ்ணனை மையப்படுத்தி குழந்தை கருதி பாடப்பட்ட பாடல்கள் இவையிரண்டும். இப்பொதுமை இந்நூல்களில் பரக்கக் காணப்படுகிறது.

‘‘உன்னிக் கிருஷ்ணன் மனசில் களிக்கும்பால்

உன்னிகள் மது வேணுமோ மக்களே

மித்ரங்கள் நமக்கேத்ரா சிவ சிவா

விஷ்ணுபக்தன் மாரிலே புவனத்தில்” (ஞானப்பானா- 51)

என்று குழந்தை வரம் வேண்டுவோர்க்கு ஆறுதல் தருகிறது ஞானப்பானா.

‘‘அருச்சுனன்தன் பொருட்டாக அனைவருக்கும் ஞானம்வரப்

பொருந்தியதே சிகவடிவாம் புண்ணியரே கண் வளரீர்

பரமமுனிவர் முன்னே பரிச்சித்தைத் தீண்டி அன்று

பிரமசரியம் செலுத்தும் பேர்ஒளியே கண்வளரீர்” (கீதாச்சாரத்தாலாட்டு 103)

என்று தாலட்டு வடிவில் கண்ணனைத் தூங்க வைக்கிறது கீதாச்சாரத் தாலாட்டு . இவ்வாறு கண்ணன் என்னும் குழந்தையை இரு பக்தி நூல்களும் நம்பி அவனடி தொழுகின்றன.

மெய்மை தேடிப் புகுவோம்

இரு  பக்தியாளர்களும் மாயை நீங்கி மெய்மை நோக்கிப் பயணிப்போம் என்ற கொள்கை உடையவர்களாக உள்ளனர்.

‘‘கூடியல்லோ பிறக்குன்னா நீரதும்

கூடியல்லோ மரிக்குன்னா நீரதும்

மத்தியே இங்ஙனே கன்னுன்னா நீரது

மட்சரிக்குன்னது என்தின்னு விர்தா?” ( பூந்தானம், 49)

என்று பிறப்பின் இறப்பின் தனிமையைச் சுட்டுகிறது ஞானப்பானா. நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் கூடிப் பிறக்கவில்லை. ஒன்றாய்க் கூடி இறக்கவும் முடியாது. ஒவ்வொருவரும் இறப்பினைத் தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மத்தியில் நாம் இணைந்திருக்கிறோம். ஏன் மற்றவர்களோடு தேவையின்றிப் போட்டிபோடுகிறீர்கள் என்று மெய்ம்மை நாடுகிறது ஞானப்பானா.

‘‘நீர்போலே போலே உள்ளொரு தேகத்தில்…..

நீர்த்துப் போகும் அதினி பறையாவு” (ஞானப்பானா 35)

என்று மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இறைசிந்தனை அந்தக் குமிழிக்குள் இல்லாமல் போகுமானல் எந்நேரமும் வாழ்க்கை என்னும் நீர்க்குமிழி உடையலாம் என்று பூந்தானம் குறிப்பிடுகிறார்.

இதே உவமையை கீதாச்சாரத்தாலாட்டிலும் காண முடிகிறது.

‘‘ பரம் ஏகம் ஆயும் அதில் பல சீவர் ஏது எனவே

ஒரு கடலில் பல குமிழி உதிப்பதுபோல் என்றவாரோ”

(கீதாச்சாரத்தாலட்டு, 77)

கடலில் காற்றால் பல நீர்க்குமிழிகள் ஏற்படுவதுபோல் பல சீவன்கள் தோன்றுகின்றன என்று இருவரும் மனித வாழ்விற்கு உவமையாக நீர்க்குமிழியைக் கையாண்டுள்ளனர்.

கிடைத்த மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக மாற்றாமல் மனித குலம் அழிகிறதே என்ற மிகவும் வருத்தப்படுகிறார் பூந்தானம்.

‘வித்யா கொண்டு அறியந்தது அறியாதே

வித்வான் எண்டு நடிக்கன்னு சிலர்

குங்குமந்திந்தி வாசம் அறியாதே

குங்குமம் சுமக்கும் கழுதை’ (ஞானப்பானா 43)

என்று மனிதவாழ்வின் இயல்வினைச் சுட்டுகிறானர் பூந்தானம். பூந்தானம் தன் காலத்தவரான நாராயண பட்டாத்திரியிடம் தன் ஞானப்பானாவைக் காட்டி அதனைத் திருத்தம் செய்து தரக் கூறுகிறார். ஆனால் அப்பண்டிதர் பூந்தானம் சரியான கல்வியறிவு அற்றவர் என்பது கருதி அவரைப் புறக்கணிக்கிறார். இது பூந்தானத்தின் மனதில் பெருத்த வருத்தத்தை அளிக்கிறது.

நாராயண பட்டாத்திரி இதே நேரத்தில் நாரயணீயம் என்ற நூலை எழுதி வந்தார். பூந்தானத்தைப் புறக்கணித்த அன்று அவர் நாராயணீயம் சொல்லச் சொல்ல ஒரு சிறுவன் அதனை எழுதிக் கொண்டிருந்தான். அன்றைய முதல் பாடல் முடிந்ததும் ஒரு தவறு உள்ளது என்று அச்சிறுவன் சுட்டிக்காட்டினான். இரண்டாம் பாடல் எழுதிய போது இரண்டு தவறுகள் உள்ளன என்றான் அச்சிறுவன். அவற்றைத் திருத்த முற்பட்டார் பண்டிதர். இவ்வாறு பத்துப் பாடல்கள்தான் அன்று எழுதப்பட்டது. அப்பாடல் ஒவ்வொன்றிலும் அப்பாடல் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் தவறுகள் எழுந்தன. இதன் புதிரை அறிந்து வந்த சிறுவன் குருவாயூரப்பன் என்று எண்ணி அவனிடம் மன்னிப்பு வேண்டி பூந்தானத்தின் பக்திச் சிறப்பை ஏற்றார் பண்டிதர்.

இதன் காரணமாகவே வித்வான் என்று நடிக்கிறார்கள் சிலர் என்று எழுதுகிறார் பூந்தானம்.

மேலும் மனித வாழ்வில் எவ்வளவு நாள் அறிவின்றி இழந்தோம் என்ற கணக்கையும் தருகிறார் பூந்தானம்.

‘‘பத்துமாதம் வயித்தில் கழிஞ்சுபோயி

பத்து பதிரெண்டு உன்னியாய் ஆட்டம் போயி

தன்னிதான்  அறியாதி கழிஞ்சுன்னு” (ஞானப்பானா 33)

என்ற கால விரயம் கவிதையாய் பூந்தானம் வழி வெளிப்படுகிறது. இவ்வாறு இவ்விரு நூல்களும் மெய்ஞ்ஞானம் தேடிப் பயணிக்கின்றன.

பூந்தானம் நாள் என்று மலையாள கும்ப மாதத்தில், அசுவதி நட்சத்திரத்தில் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஞானப்பானா ஓதப்பெறும். மேலும் பூந்தானம் பிறந்த வீட்டில் ஐந்துநாள் இலக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட நாள் ஞானப்பானாவில் பூந்தானத்தால் சுட்டப்பெறுவதால் இந்நாள் பூந்தான நாளாகக் கொண்டாடப்பெறுகிறது.

கீதாச்சாரத்தாலாட்டு கோவிலூர் வேதாந்த மடத்து நூல்களுள் ஒன்றாக இன்றும் பயிலப்பெற்று வருகிறது. வேதாந்த விளக்கங்களை அறிய முற்படும் தொடக்க நிலையாளர்களுக்கு இந்நூல் முதன்முதலாக சொல்லித்தரப்படும். பதினாறு வேதாந்த நூல்களை ஒருங்கிணைத்து வேதாந்த பாடங்கள் கோவிலூர் முத்துராமலிங்கரால் அமைக்கப்பெற்றன.

இவ்வகையில் இவ்விரு நூல்களும் தற்காலத்தில் பக்தி இலக்கியங்களாக இருமொழிகளிலும் அமைந்து விளங்கி வருகின்றன. இப்பிறவி கொண்டு முக்தி அடையும் வேதாந்தநிலையை இவ்விரு நூல்களும் காட்டுகின்றன.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ஸ்வாமி பூந்தானம் அருளிச் செய்த -ஸ்ரீ ஞானப்பான –

January 22, 2023

இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது.

இது ஞான ஊற்று என்பதுதான். ஊற்று என்பதால் இது பானம்-அள்ளிப் பருக வேண்டிய பானம்-ஞான பானம்  மொத்தம் 91 கிருதிகள் இருந்தன

தன்னுடைய மகன் மரணத்தின் சோகத்தைத் தாங்க முடியாமல் குருவாயூரப்பனையே தன் மகனாக நினைச்சுப் பாடியதுதான் இந்த ஞானப்பானம்.

பூந்தானம் நம்பூதிரி சிறந்த பக்தர். படிப்பறிவு இல்லாதவர். பக்தியுடன் இறைவன் பெயரில் தா மனதிற்குத் தோன்றியபடி மலையாளத்தில் சிறு சிறு கவிதைகள் எழுதுவார். ஒரு சமயம் அவர் கண்ணனைப் பற்றிய பாடல்களை எழுதி, மேல்பத்தூர் நாராயண பட்டத்திரியிடம் கொடுத்து, தயவு செய்து இதில் தவறு ஏதும் இருந்தால் திருத்தித் தாருங்கள் என்று சொன்னார். நாராயண பட்டத்திரி தான் சிறந்த அறிவாளியென்ற கர்வத்தில், “இதில் நிறைய இலக்கணப் பிழை இருக்கிறது, படிப்பறிவு இல்லாதவன் எழுதுவது போல் இருக்கிறது” என்று ஏளனமாகக் கூறினார். பூந்தானம் மிகுந்த வருத்தத்துடன் சென்று விட்டார். அவர் மனம் கலங்கியது. அவர் வருத்தத்தை குருவாயூரப்பனால் சகிக்க முடியவில்லை. நாராயண நம்பூதிரியின் ரோகத்தின் உபத்திரவத்தை அதிகப்படுத்தினார். ரோகத்தின் அவஸ்தையில் அவர் அலறினார்.

அடுத்த நாள் நாராயண பட்டத்திரியின் வீட்டிற்கு ஒரு அழகிய இளைஞன் வந்தான். நீங்கள் இயற்றிய நாராயணீயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன், படியுங்கள் என்று சொன்னான். பட்டதிரியும் மகிழ்ச்சியுடன் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கப் படிக்க, பல இடங்களில் பிழை இருக்கிறது என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டே வந்தான். பட்டத்திரி, “இத்தனை தவறுகளைச் சொல்லும் நீ யார்?” என்று கேட்டார். உடனே அந்த இளைஞன் மறைந்தான். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு அங்கே குருவாயூரப்பன் காட்சி அளித்தார். மேலும், “நாராயண நம்பூதிரியின் பக்தியை விட பூந்தானத்தின் பக்தியின் மேல் எனக்கு விருப்பம் அதிகம், அவரது பாடல்களில் இலக்கணம் இல்லாவிட்டாலும் பக்தி இருக்கிறது, பூந்தானத்திடம் மன்னிப்பு கேள், உன்னுடைய ரோகத்தின் உபத்திரவம் குறையும்” என்று கூறி மறைந்தார்.

உடனே நாராயண பட்டத்திரி, தன்னுடைய வித்யா கர்வத்தை எண்ணி வெட்கி, பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவரால் தனக்கு அப்பனின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்து அவருக்குத் தன் மோதிரத்தையும் பரிசாக அளித்தார். “நமது இந்த நட்பின் அடையாளமாக இந்த மோதிரம் எப்போதும் உங்கள் விரலிலேயே இருக்கவேண்டும்,அந்தக் குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டாலொழிய வேறொருவருக்கும் தரக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டார். அதனால்தான் அந்த மோதிரத்தைக் கொள்ளையர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும், மாங்காட்டச்சனிடம் அதைத் தரவும் தயங்கினார் பூந்தானம்.  கண்ணனுக்கு பூந்தானம் நம்பூதிரியும், நாராயண பட்டத்திரியும் இரு கண்களைப் போன்றவர்கள் என்பது  இதிலிருந்து விளங்குகிறது. பின்னாளில் “ஞானப்பான” என்ற சிறந்த காவியத்தையும் பூந்தானம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது 360 வரிகளைக் கொண்டது. மலையாளத்து பகவத் கீதை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.

46,660 பேர் கூடி இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.

அவர் எழுதிய காப்பியங்கள்:

  • ஞானப் பானா
  • பாஷாகர்ணமிருதம்
  • ஆஞ்சனா ஸ்ரீதரா கிருஷ்ணா
  • அம்பாடி பைதல்
  • ஹரி ஸ்தோத்ரம்
  • ஸப்த ஸ்வர கீர்த்தனம்
  • கான ஸங்கம்
  • நீயத்ரே கோவிந்தா
  • மூலதத்வம்
  • மாயா வாமனம்( தமிழ்)
  • குரு ஸ்துதி
  • த்வாதச நாம கீர்த்தனம்
  • தச அவதார ஸ்தோத்ரம்
  • வாஸுதேவ ஸ்துதி (தமிழ்)
  • அஷ்டாக்ஷர கீர்த்தனம்

மேற்கூறியவை உட்பட ஏறக்குறைய 60 காவியங்கள் பூந்தானம் இயற்றியுள்ளார்.

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும் ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

இந்த வரிகளில் பூந்தானம் இரண்டு பதங்களை கையாண்டு நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறார். ‘மூன்றும் ஒன்றில் அடங்கிவிடுகிறது; அப்பொழுது எதுவுமே இல்லாமல் ஆகிவிடுகிறது’ எங்கிறார் பூந்தானம்.

எந்த மூன்று? எந்த ஒன்று?

ஒன்று என்பது பரமாத்மனைக்குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன்

நமது வேத உபனிஷத்துக்கள் நிறைய ‘மூன்றுகள்’ குறிப்பிட்டுள்ளது.

  • பரமாத்மா ( நிர்குணபிரம்மம், ஸகுண பிரம்மம்), பிரகிருதி( மஹா மாயா, யோக மாயா, லோக மாயா),ஜீவாத்மா
  • மும்மூர்த்திகள்
  • முப்பெரும் தேவிகள்
  • சிருஷ்டி, பாலனம், சம் ஹாரம்
  • பிரகிருதியின் முக்குணங்கள்
  • ஜீவாத்மாவின் அவஸ்தாத்ரயம்
  • ஞாதா, ஞேயம், ஞானம்
  • பூதம், நிகழ்காலம், வருங்காலம்

————————-

பாடல்

கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் –

கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் – அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் – போன ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் – தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் – நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் – புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை – என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே – ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் – எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழை மடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் – என்ன செளக்கியமோ என்று கேட்கும் – அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ – மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் – அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்

பனம் என்பது மலையாளத்தில் ஒரு வித தனிப்பட்ட ராகம். நம் ஊர் காவடி சிந்து, நொண்டிச்சிந்து மாதிரி. அந்த ராகத்தில் வார்த்தைகளை நிரப்பி பூந்தானம் எழுதிய காவியம். அவரே பாடியது. ஞானம் தானே அறிவின் முதிர்ச்சி. ஞானப்பனம் பக்தி, ஞானத்தின் ஒரு அற்புத கலவை. சிலர் பான என்பது ஒரு மண் சட்டி பானையை குறிக்கிறது. ஞானம் நிரம்பிய பானை என்பார்கள். உருண்டையாக இருந்தால் லட்டு, வில்லையாக இருந்தால் மைசூர்பாக். மொத்தத்தில் கடலைமாவு சர்க்கரை கலவை தானே.-மலையாள பகவத் கீதை என்றே பெயர் பெற்றது இந்த ஞானப்பானம்.

”பக்தி ஒன்பது வகை. ஸ்ரவணம் (கேட்பது), கீர்த்தனம் (பாடுவது, தனியாகவோ சேர்ந்தோ), விஷ்ணு ஸ்மரணம் (சதா விஷ்ணுவை நினைப்பது, அதை தான் அவர் எப்போதும் செயகிறார்), பாதசேவனம் ( திருவடி தொழல் ), அர்ச்சனம் (நாமங்களால் போற்றுவது) வந்தனம் (பூஜை வழிபாடு) தாஸ்யம் (தன்னை சேவகனாக அர்பணிப்பது) சக்யம் (நண்பனாக பகவானோடு பழகுவது), ஆத்மநிவேதனம் (உள்ளம் உடல் இரண்டோ டும் சரணடைவது). இதில் ரொம்ப சுலபமானது கேட்பது பாடுவது.
பூந்தானம் நாள் என்று மலையாள கும்ப மாதத்தில், அசுவதி நட்சத்திரத்தில் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஞானப்பானா ஓதப்பெறும். மேலும் பூந்தானம் பிறந்த வீட்டில் ஐந்துநாள் இலக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேல் குறிப்பிட்ட நாள் ஞானப்பானாவில் பூந்தானத்தால் சுட்டப்பெறுவதால் இந்நாள் பூந்தான நாளாகக் கொண்டாடப்பெறுகிறது.
————-

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

குருநாதன் துணசெய்க ஸந்னதம்

திருநாமங்ஙள் நாவின் மேல் எப்பொழும்

பிரியாதெயிரிக்கேணம்  நம்முடே

நரஜன்மம் ஸபல மாயிடுவான்      (2)

குரு நாதன் துணை செய்யட்டும்
சந்ததம் திரு நாமங்கள் நாவின் மேல் எப்பொழுதும் பிரியாதே இருக்க அருளட்டும்
நமது நர ஜென்மம் ஸபலமாக்கி அருளட்டும் –

திருநாமங்கள் நாவிலிருந்து என்றும் எப்போதும் பிரியாமல் இருக்க நமது மானிடப் பிறவி சாபல்ய மடைய குருநாதன் துணை செய்யட்டும்

——–

கால லீலா–

இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா

இனி நாளேயும்  எந்தென்னறிஞ்ஞிலா

இன்னீக்கண்ட தடிக்கு  வினாசவும்

இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா     (3)

நேற்று வரை என்ன நடக்கும் என்றறியவில்லை

இனி நாளைக்கும் என்னவென்று தெரியவில்லை

இன்றிருக்கும் இவ்வுடலுக்கு அழிவும் இன்ன

நேரத்தில் மரணம் என்றும் அறிவதில்லை

சாஸ்வதமில்லாத இந்த காற்றடைத்த பை பொய்யாக மாறலாமே. ஏதோ ஒரு காரணத்தால் தான் பகவான் நமக்கு முற்பிறவி ஞாபகமோ அடுத்த பிறவி பற்றி ஏதாவதோ தெரியாமல் வைத்திருக்கிறான். நாம் வாழும்வரை நமது இப்போது நடக்கும் வாழ்க்கை பிரச்னையே பெரிய மலைபோல் இருக்கிறதே…” என்கிறார் பூந்தானம். ஒரு நல்ல யோசனை. இப்போது இருக்கிற நேரத்தில் கிருஷ்ணனை கெட்டியாக பிடித்துக்கொள்வோம். அவனிருக்க பயமேன்?

கண்டுகண்டங்ஙிருக்கும் ஜனங்ஙளே

கண்டில்லேன்னு வருத்துன்னதும் பவான்

ரெண்டு நாலு தினம் கொண்டொருத்தனே

தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்     (4)

பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைக் காண முடியாமல் செய்வதும் பகவான் ஓரிரு தினங்களில் ஒருவனைப் பல்லக்கிலேற்றி மன்னனாக்குவதும்  பகவான்

மாளிக முகளேறிய மன்னண்டெ தோளில்

மாறாப்பு கேற்றுன்னதும் பவான் (5-1)

மாடமாளிகை மேல் அமர்ந்திருக்கும்  மன்னனின் தோளில் அழுக்கு மூட்டை ஏற்றுவதும் பகவான் கண்டறிவோர் சிலர் கண்டாலும் அறியாதோர் சிலர்

கண்டுகண்டங்கிரிக்கும் ஜனங்களெ

                                    கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்

                                    ரண்டுநாலு தினம் கொண்டொருத்தனெ

                                    தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்

                                    மாளிகமுகளிலேறிய மன்னன்றெ

                                    தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்–5-1

“ நாம் தினமும் பார்த்துக் கொண்டேயிருக்கின்ற மனிதர்களை, காணாமல் பண்ணுவதும் அந்த பகவான் தான்;இரண்டு நாலு நாட்களில்  நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒருவனை பாடை மேல் படுக்கவைத்து எடுத்துச் செல்ல வைப்பதும் அந்த பகவான் தான்; மாடமாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்ற மன்னனை தோளில் துண்டு போட்டுக்கொண்டு தெருவில் நடக்க வைப்பதும் அந்த பகவான் தான்.”

——-

அதிகார பேதம்

கண்டால் ஒட்டறியுன்னு சிலரிது

கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே      (5-2)

கண்டதொன்னுமே ஸத்தியமில்லென்னது

மும்பே கண்டங்ஙறியுன்னிது சிலர்

மனுஜாதியில்த் தன்னெ பலவிதம்

மனஸ்ஸினு விசேஷமுண்டோர்க்கணம்   (6)

காண்பதேதும் நிஜமல்லஎனக் கண்டறிவோர் சிலர் மானிட ஜாதியில்  இவ்வாறு பலரும் பலவிதம் மனசுக்கு  ஓரோர் குணம் என்பதும் அறிந்திருத்தல் நலமே

பலர்க்கும் அறியேணமென்னிட்டல்லோ

பலஜாதி பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்

கர்மத்தில் அதிகாரி ஜனங்ஙள்கு

கர்ம சாஸ்த்ரங்ஙளுண்டு பலவிதம்       (7)

பலரும் அறிய வேண்டும் என்றுதானே பல வர்ண தர்மங்களைச் சொல்கின்றன சாத்திரங்கள் அவரவர் வர்ண பேதங்கள்  அனுசரித்துபாவிக்கும் மக்களுக்கு கர்ம சாத்திரங்கள் பலவுண்டு பலவிதம்

ஸாங்க்ய ஸாஸ்த்ரங்ஙகள் யோகங்ஙளென்னிவ

சங்க்யயில்லது நில்க்கட்டே ஸர்வவும்  (8-1)

———-

தத்வ விசாரம்

சுழந்நீடுன்ன ஸம்ஸார சக்ரத்தில்

உழன்னீடும் நமுக்கறிஞ்ஞீடுவான்          (8-2)

சாங்கிய சாத்திரங்கள் யோகங்கள் ஆகியவை கணக்கில் அடங்காது இருக்கட்டும் ஒரு புறம் அனைத்தும்சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரத்தில் சுழலும் நம் போன்றோர்  அறிந்து கொள்ள

அறிவுள்ள மஹத்துக்களுக்குண்டொரு

பரமார்த்தம் அருள் செய்திரிக்குன்னு

எளிதாயிட்டு முக்தி  லபிப்பானாய்

செவி தன்னிது கேள்ப்பின் எல்லாவரும்         (9)

ஞானிகளான மகான்கள்  பரம் பொருள் ஒன்றே என்றறிந்து அருளிச் செய்துள்ளனர் எளிதாய் முக்தி கிடைக்க செவி கொடுத்துக் கேட்பீரே அனைவரும்

நம்மெ ஒக்கேயும்  பந்திச்ச  சாதனம்

கர்மம் என்னறியேண்டது முன்பினால்

முன்னில் இக்கண்ட  விஸ்வம்  அசேஷவும்

ஒன்னாய் உள்ளொரு ஜோதிஸ்வரூபமாய்       (10)

நம் அனைவரையும் கட்டி இருப்பது கர்மமே என்றறிய வேண்டும் முன்னால் நாம் காணும் அகிலமெல்லாம் ஒன்றேயான ஒரு ஜோதிஸ்வரூபமே

தோற்றம் என்றால் மறைவு என்பது சொல்லாமல் தெரிவது. உண்டானது எல்லாமே இல்லாததாகிவிடும். நடுவில் சில காலம் மாயையால் சாஸ்வதமாக நிலைத்த்திருப்பது போன்ற பொய் எண்ணத்தை வளர்க்கும். எல்லாமே ஒருநாள் ஜோதி ஸ்வரூபத்தில் கலக்கும். ஆக்கம் அழிவில் நிறைவுறும். அதை தான் மஹா பிரளயம் என்போம். ஒன்று என்றும் அழியாமல் சிறிய தீபமாய் நம்முள் என்றும் இருந்து மற்ற பிறவிகளிலும் நம்மோது தொடரும் அது ஒன்றே சாஸ்வதம். அதுவே ஆத்ம தீபம். சாக்ஷியானது. ஏதோடும் இணையாமல் சேர்ந்து இருப்பது. ஒன்றே பலவாக தோன்றுவது

ஒன்னும் சென்னங்கு தன்னொடு பற்றாதே ஓன்னிலும் சென்னு தானும் வலையாதே
ஒன்னொன்னாயி நினய்க்கும் ஜனங்களுக்கு ஒன்னு கொண்டு அறிவாகுன்ன வஸ்துவாய்
ஒன்னிலும் அறியாத்த ஜனங்களுக்கு ஒன்னு கொண்டும் திரியாத்த வஸ்துவாய்
ஒன்னு போலே ஒண்ணு இல்லாத உள்ளத்தில் ஒன்னாய் உள்ள ஒரு ஜீவ ஸ்வரூபமாய்
ஒன்னிலும் ஒரு பந்தம் இல்லாததாய் நின்னவன் தன்னே விஸ்வம் சமச்சு போலே
மூணும் ஒன்னில் அடங்குன்னு பின்னேயும் ஒன்னும் இல்லைபோல் விஸ்வ மன்னேரத்த

ந தத்ர சூர்யோ பாதி, ந சந்த்ரதாரகம் நேம வித்துதோ பாந்தி குதோயமக்னி தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி

அங்கே சூரியனுமில்லை நிலவுமில்லை நக்ஷத்திரங்களுமில்லை.மின்னலும் வருவதில்லை.ஆனால் ஒளிமயமாக இருக்கிறது.எப்படி? பிரபஞ்சத்திலுள்ள எல்லாம் பிரமனுடைய ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றது.அங்கு அது மட்டும் தான் ஒளி உமிழ்கிறது;”

பிரம்ம சூத்திரம் ஒன்றாம் அத்தியாயத்தில் இரண்டாவது சூத்திரத்திலேயே பிரம்மன் என்றால் என்ன விளக்கப்பட்டுள்ளது.

————————————-

கர்மம்
ஒன்னு கொண்டு சமச்சொரு விஸ்வத்தில் மூன்னாய் இட்டுள்ள கர்மங்கள் ஓக்கேயும்
புண்ய கர்மங்கள் பாப கர்மங்களும் புண்ய பாபங்கள் மிஸ்ரமாம் கர்மவும்
மூன்னு ஜாதி நிரூ பிச்சு காணும் போன் மூன்னு கொண்டும் தனக்குன்னு ஜீவனே
பொன்னின் சங்கல ஒன்னி பறஞ்சதில் ஒன்னு இரும்பு கொண்டு அன்னத்தேற பேதங்கள்
இரண்டினாலும் எடுத்துக் பணி செய்த சங்கல யல்லோ மிஸ்ரமாம் கர்மாவும்

மூன்னுஜாதி நிரூபிச்சு காணூம்போள்

                                                     மூன்னுகொண்டும் தளைக்குன்னு ஜீவனெ

                                                     பொன்னின்சங்கலையொன்னிப்பறஞ்சதி

                                                     லொன்னிரும்புகொண்டதனெனத்ரபேதங்கள்

                        ரண்டுனாலுமெடுத்து பணிசெய்த

                         சங்கலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்

கர்மங்கள் எதுவாக இருந்தாலும் அவை நம்மை இகலோகத்துடன் பந்திக்கிறது. நாம் பந்தத்திலிருந்து விடுபட முடிவதில்லை.கட்டிப் போடுகின்ற சங்கிலியின் தரத்தில் தான் வேறுபாடு என்கிறர் பூந்தானம்.புண்ணியகர்மங்கள் செய்யும்பொழுது நாம் நல்லது செய்தோம் என்ற திருப்தி ஏற்பட்டு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ‘நான்’ செய்தேன் என்ற ‘அகந்தை’ ஒளிந்திருக்கிறது பாபார்மங்கள் செய்பவர்களும் நாம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தோம் என்ற மமதையில் மிதக்கிறார்கள். ரஜோகர்மத்தை அடிப்படையாகக் கொண்ட புண்ணிய –பாப கர்மங்களின் பின்னாலும் ‘ மமதாகாரம்’ செயல்படுகிறது.இந்த செயல்கள் எதுவும் ஆத்மா செய்யாததால் ‘நான்; செய்தேன் என்ற மமதாகாரம் வரும்பொழுது அந்த ‘நான்’ ‘நானல்ல’.அது ‘தனுவான நானென்ற எண்ணத்திலிருந்து உதித்த நானாக இருக்கிறது..ஆகவே இந்த கர்மங்கள் நம்மை பௌதிக உடலுடன் பிணைத்து ‘புனரபி மரணம் ,புனரபி ஜனனம்’ என்ற சக்கரச் சுழற்சியில் சிக்க வைக்கிறது.

ஆகவே பூந்தானம் ஒரு சங்கிலி தங்கத்தால் செய்த்தென்றல் இன்னொன்று இரும்பினால் செய்தது; மற்றொன்று உலோகங்களின் கலவையில் செய்தது.எங்கிறார். நிதரிசனமான உண்மை நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பது தான். கிளிக்கு தங்க கூண்டானால் என்ன? இரும்பு கூண்டானால் என்ன? கூண்டு கூண்டு  தான்.கர்மங்கள் பந்தமே-பந்தனமே.

பிரம்மா வாதியாய் ஈச்ச எரும்போளம் கர்ம பந்தன்மார் அன்னது அறிஞ்சாலும்
புவனங்கள் ஸ்ருஷ்டிக்க என்னது புவனாந்த்ய பிரளயம் கழி வோளம்
கர்ம பாசத்தே லம் கிக்க என்னது பிரம்மா வென்னும் எளுதல்ல நிர்ணயம்
திக் பாலன் மாரும் அவ்வண்ணம் ஓரொரு திக்கு தோறும் தளச்சு கிடக்கின்னு
அல்ப கர்மிகளாகிய நாம் எல்லாம் அல்ப காலம் கொண்டோர் ஒரு ஜந்துக்கள்
கர்ப்ப பாத்திரத்தில் புக்கும் புறப்பெட்டும் கர்மம் கொண்டு களிக்குன்னது இங்கனே

——————–

ஜீவ கதி
நரகத்தில் கிடக்குன்ன ஜீவன் போய் துரிதங்களோடு ஒடுங்கி மனஸ்ஸின்டே
பரிபாகவும் வன்னு க்ரமத்தாலே நர ஜாதியில் வன்னு பிறந்திட்டு
ஸூஹ்ருதம் செய்து மேல் போட்டு போயவர் ஸ்வர்க்கத்து இங்கலிருன்னு சுகிக்கின்னு
ஸூஹ்ருதங்களும் ஓக்க ஒடுங்கும் போள் பரிபாகவும் எள்ளோளும் இல்லவர்
பரிச்சோடம் அங்கு இருன்னிட்டு பூமியில் ஜாதராய் துரிதம் செய்து சத்தவர்
வன்னொர துரிதத்தின் பலமாயி பின்னே போய் நரகங்களில் வீழு என்ன
ஸூர லோகத்தில் நின்னஒரு ஜீவன் போய் நர லோகே மஹீ ஸூ ரனாகு என்ன
சண்ட கர்மங்கள் செய்தவன் சாகும் போள் சண்டால குலத்திங்கள் பிறக்குன்னு
அசுரன் மார் சூரன் மார் ஆயிடு என் அமரன் மார் மரங்கள் ஆயிடு என்னு
அஜம் சத்து கஜமாய் பிறக்கு என்னு கஜம் சத்தங்க ஜவுமாய் ஆயிடு என்னு
நரி சத்து நரனாய் பிறக்குன்னு நாறி சத்துடனோர் அரியாய் போகுன்னு
க்ருப கூடாதே பீடிப்பிச்சீடுன்ன ந்ருபன் சத்து கிருமியாய் பிறக்குன்னு
ஈச்ச சத்தொரு பூச்சையாயீடு என்ன ஈஸ்வரன் டே விலாசங்கள் இங்கனே
கீழ் மேல் இங்கனே மண்டுன்ன ஜீவன் மார் பூமி யீன்னத்ற நேடுன்னு ஜீவன் மார்
அங்கனே செய்து நேடி மரிச்சுட னன்ய லோகங்களோர் என்னில்
சென்னிரு என்னு புஜிக்கின்னு ஜீவன் மார் தங்கள் செய்த ஒரு கர்மங்கள் தன் பலம்
ஒடுங்கிடும் அது ஒட்டு நாள் செல்லும் போன் உடனே வன்னு நேடுன்னு பின்னேயும்

தன்டே தன்டே க்ருஹத்திங்கள் நின்னுடன் கொண்டு போன்ன தனம் கொண்டு நாம் எல்லாம்
மற்று எங்கானும் ஒரேடேத்தி ருன்னிட்டு விட்டுடு என்னு பறயும் கணக்கினே

————–

பாரத மஹிமா

கர்மங்களுக்கு விளை பூமியாகிய ஜென்ம தேசம் இப்பூமி அறிஞ்ஞாலும்
கர்ம நாஸம் வருத்தேனம் எங்கிலும் செம்மே மட்டெங்கும் சாதிய நிர்ணயம்
பக்தன் மாருக்கும் முமுஷு ஜனங்களுக்கும் சக்தராகிய விஷயீ ஜனங்களுக்கும்
இச்சி சீடுன்ன டொக்க கொடுத்திடும் விஸ்வ மாதாவு பூமி சிவ சிவ
விஸ்வ நாதன் டே மூல ப்ரக்ருதி தான் ப்ரத்ய ஷேண விள்ங்குன்னு பூமியாய்
அவனீ தல பாலனத்தின் அல்லோ அவதாரங்களும் பல தோற்கும் போள்
அது கொண்டு விசேஷிச்சும் பூ லோகம் பதிநாலிலும் உத்தமம் என்னல்லோ
வேத வாதிகளாய முனிகளும் வேதவும் பஹு மானிச்சு சொல்லென்னு
லவணாம்புதி மத்யே விளங்குன்ன ஜம்பூத்தீவு ஒரு யோஜனை லக்ஷவும்
ஸப்த த்வீபுகள் உண்டதில் எத்தறயும் உத்தமமாம் என்னு வாழ்த்துன்னு பின்னேயும்
பூ பத்மத்தின்னு கர்ணிகையாய் இட்டு பூதரேந்த்ரநதி லல்லோ நில்குன்னு
இதில் ஒன்பது கண்டங்கள் உண்டல்லோ அதிலும் உத்தமம் பாரத பூ தலம்
சம்ம மதராய மா முனி ஸ்ரேஷ்டன் மார் கர்ம க்ஷேத்ரம் என்னல்லோ பற யுன்னு
கர்ம பீஜ மதீன்னு முனக்கேண்டு ப்ரஹ்ம லோகத்தி ரிக்குன்ன வர்களுக்கும்
கர்ம பீஜம் வரட்டி கலஞ்சுடன் ஜென்ம நாஸம் வருத்தேனும் எங்கிலும்
பாரத மாய கண்ட மொழிஞ்சுள்ள பாரில் எங்கும் எளுதல்ல நிர்ணயம்
அத்ற முக்கியமாய் உள்ளதொரு பாரதம் இதி பிரதேசம் என்னெல்லாரும் ஓர்க் கணம்

—————–

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

——————-

கலிகால மஹிமா

இப்பிறவி பிறந்தால் மட்டுமே முக்தி அடைய இயலும். குறிப்பாக இந்தக் கலிகாலத்தில், பதினான்கு உலகங்களில் இந்த உலகு மட்டுமே மோட்சத்திற்கு வழிகாட்டும் உலகம் என்கிறார்.

” யுகம் நாலிலும் நல்ல கலியுகம்

சுகமே தானே முக்தி வருதுவன்” ( ஞானப்பானா- 27)

என்று இக்காலத்தை ஞானத்தின் காலமாகக் காட்டி நம்பிக்கை அளிக்கிறார் பூந்தானம்.

யுகம் நாலிலும் நல்லூ கலியுகம் சுகமேதன்னெ முக்தி வருத்துவான்

கிருஷ்ண கிருஷ்ண முகுந்த ஜனார்த்தன கிருஷ்ண கோவிந்த ராம என்னிங்கனெ

திருநாம ஸங்கீர்த்தன மென்னியே மற்றில்லேதுமே யத்ன மறிஞ்ஞாலும்

அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்

மற்ற பதிமூன்று லோகங்கள்

பதின் மூன்றிலுள்ள ஜனங்கள்

மற்று தீவுகள் ஆறில் உள்ளோரும்

மற்று கண்டங்களில் உள்ளோரும்

மற்று மூனு யுகங்களில் உள்ளோரும்

முக்தி தங்களுக்குச் சாத்யம் அல்லாயாகையால்

கலிகாலத்தில பரத கண்டத்தில்

கலிதடராம் கை வணங்கீடு என்ன ”(ஞானப் பானா – 29)

என்ற பகுதியில் பரதகண்டம் பற்றிப் பூந்தாம் குறிப்பிடுகிறார். உலகங்கள் பதினான்கு என்பது உலக வழக்கு. அவற்றில் பூமி ஆகிய இவ்வொன்று நீங்கினால் பதிமூன்று உலகங்கள். மொத்தத் தீவுகள் ஏழு. அதில் இதனை விடுத்தால் மற்றவை ஆறு. யுகங்கள் நான்கு. அவற்றில் இக்கலியுகம் நீங்கினால் மற்றவை மூன்று யுகங்கள். இந்நிலைப்பாட்டில் பரத கண்டத்தில் உயிர்கள் மட்டுமே ஞானத்தை, இறைபாதத்தை அடைய வழி தெரிந்தவர்கள். ஆகவே இக்காலம் நன்று. இவ்வுலகம் நன்று. இதனில் முக்தி வழி தேடுவோம் என்று உலக இயல்பினை எடுத்துரைக்கிறார் பூந்தானம்.

அதில் வன்னொரு புல்லாய் இட்டு எங்கிலும் இது காலம் ஜனிச்சு கொண்டீடுவான்
யோக்யத வருந்தீடுவான் தக்கொரு பாக்யம் போராதே போய் அல்லோ தெய்வமே
பாரத கண்டத்து இங்கண் பிறந்த ஒரு மானுஷிற்கும் கலிக்கும் நமஸ்காரம்
என்னெல்லாம் புகழ்ந்தீடு என்னு மற்றுள்ளோர் என்னது என்தின்னு நாம் பறைஞ்ஜீடுன்னு

அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்

இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

————-

என் திண்டே குறவு

காலம் இன்னம் கலி யுகம் அல்லயோ பாரதமி பிரதேசமும் அல்லயோ
நம்மள் எல்லாரும் நான்மாரும் அல்லயோ செம்மே நன்னாய் நிரூபிப்பன் எல்லாரும்
ஹரி நாமங்கள் இல்லாத போகயோ நரகங்களில் பேடி குறகயோ
நாவு கூடாத ஜென்மம் அது ஆகாயோ நமக்கு இன்னி விநாசம் இல்லாய் கயோ
கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே சுட்டுக் தின்னுன்னு ஜென்மம் பழுதே நாம்

———–

துர்லபமாய மனுஷ்ய ஜென்மம்

‘‘எத்தனை ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஐன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்

எத்தனை ஜன்மம் மரங்களில் நின்னிடும்

எத்தனை ஜன்மம் மரித்து நடன்னதும்

எத்தனை ஜன்மம் பரன்னு நடன்னதும்

எத்தனை ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்

மரத்திய ஜனதில் மும்பே கழிஞ்சதும்” (ஞானப்பானா- 32)

என்று மலம், ஜலம், மண், மரம், பறவை, விலங்கு, பசு போன்றனவாய் முற்காலத்தில் பிறந்து இளைத்தோம் என்கிறார் பூந்தானம்.

எத்தனையெத்தனை ஜன்மத்திற்குப் பின் இந்த மனித ஜன்மம் கிடைத்திருக்கிறது? எண்ணற்ற புண்ணிய கர்மங்களின் பலனாக இந்த மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது.எத்தனையோ ஜன்மங்கள் புழுவாகவும் பூச்சியாகவும், புல்லாகவும் மரமாகவும் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து உழன்றபிறகு மனித ஜன்மம் கிடைத்துள்ளது.ணிரிலும் நிலத்திலும் வாழ்ந்து இறந்தும் பிறந்தும் பல ஜன்மங்கள் கழிந்து மனித ஜன்ம்ம் கிடைத்துள்ளது

இந்த மனித ஜன்மத்திற்கு முன் பசுவாகவும் மற்ற மிருகங்களாகவும் பிறந்தோம் இறந்தோம்.பிறகு தான் மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

மேலும் மனித வாழ்வில் எவ்வளவு நாள் அறிவின்றி இழந்தோம் என்ற கணக்கையும் தருகிறார் பூந்தானம்.

‘‘எத்ரெயும் பணி பெற்று இங்கு மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் வீணது அறிஞ்சாலும்

பத்துமாதம் வயித்தில் கழிஞ்சுபோயி

பத்து பதிரெண்டு உன்னியாய் ஆட்டம் போயி

தன்னிதான்  அறியாதி கழிஞ்சுன்னு” (ஞானப்பானா 33)

என்ற கால விரயம் கவிதையாய் பூந்தானம் வழி வெளிப்படுகிறது.

பத்து மாதம் தாயின் கர்பத்தில் இருந்தோம்; பிறந்தபின் பத்து பன்னீரெண்டு வருடங்கள் ஒன்றும் தெரியாத பால்ய பருவத்தில் –விவேகம் உதிக்காத நிலையில் எது சத்தியம்; எது நசுவரம்; எது நித்தியம் என்று அறியாத நிலையில் ‘ நான்” என்ற அகம்பாவத்துடன் இந்த உலகில் வாழ்ந்து விடுகிறோம்.

இத்ர காலம் இருக்கும் இனி என்னும் ஸத்யமோ நமக்கு ஏதும் ஒன்னில்லல்லோ

‘‘நீர்போலே போலே உள்ளொரு தேகத்தில்…..

நீர்த்துப் போகும் அதினி பறையாவு” (ஞானப்பானா 35)

என்று மனித வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இறைசிந்தனை அந்தக் குமிழிக்குள் இல்லாமல் போகுமானல் எந்நேரமும் வாழ்க்கை என்னும் நீர்க்குமிழி உடையலாம் என்று பூந்தானம் குறிப்பிடுகிறார்

நீர்ப்போள போலெ உள்ளொரு தேஹத்தில்

வீர்ப்பு மாத்ரம் உண்டு இங்ஙனெ காணுன்னு

ஒர்த்து அறியாதே பாடு பெடுன்னேரம்

நேர்த்து பொகுமதென்னே பறயாவூ

அத்ர மாத்ரம் இரிக்குன்ன நேரத்து

கீர்த்தி சீடுன்னதில்ல திருநாமம்

In the body which is like a water bubble,–We see it filled up always,
And when we put efforts without thought,–We can tell that this bubble will only burst.-In this very limited time,-We should be Chanting the Divine Names of Lord

அப்படிப்பட்ட அனித்தியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நேரமாவது பகவன் சொல்லுகின்றோமா? இல்லையே இப்படி நமது கிடைப்பதற்கரிய வாழ்வை வீணாக்கலாமா ?பூன்தானம் அங்கலைக்கிறாற்.

————–

ஸம்ஸார வர்ணனை

ஸ்தானமானங்கள் சொல்லி கலஹிச்சு நாணம் கெட்டு நடக்குன்னுது சிலர்
மத மஞ்சரம் சிந்திச்சு சிந்திச்சு மதி கெட்டு நடக்குன்னிது சிலர்
சஞ்ச லாஷிமார் வீடுகளில் புக்கு குஞ்சிராமனா யாடுன்னுது சிலர்
கோலகங்களில் சேவகராய் இட்டு கோலம் கெட்டி ஜெலியுன்னிது சிலர்
சாந்தி செய்து புலர்த்துவனாய் இட்டு ஸந்த்யா யோலம் நடக்குன்னுது சிலர்
கொஞ்சி கொண்டு வளர்த்த ஒரு பைகலே கஞ்சிக்கு இல்லான்னு வில் குன்னிது சிலர்
அம்மக்கும் புனர் அச்சனும் பார்யைக்கும் உன்மான் போலும் கொடுக்கின்னல்ல சிலர்
அக்னி சாஷியாய் ஒரு பத்னியே ஸ்வப்னத்தில் போலும் காணுன்னுல்ல சில
சத்துக்கள் கண்டு சிஷித்து சொல்லும் போல் சத்ருவே போல் க்ருதிக்கினு சிலர்
வந்திதன்மாரே காணுன்ன நேரத்து நிந்தி சத்ரே பற யுன்னிது சிலர்
காண்க நம்முட ஸம்ஸாரம் கொண்டத்ரே விஸ்வமீ வண்ணம் நில்பு என்னும் சிலர்
ப்ராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு பிரம்மாவும் என்னிக் கொக்காய் என்னும் சிலர்
அர்த்தாசக்கு விருது விளிப்பான் அக்னி ஹோத்ராதி செய்யுன்னுதி சிலர்
ஸ்வர்ணன்கள் நவ ரத்னங்களே கொண்டும் எண்ணம் கூடாதே வில்கின்னுது சிலர்
மத்தேபம் கொண்டு கச்ச வடம் செய்தும் உத்தம துரம் கங்களது கொண்டும்
அத்தரயுமல்ல கப்பல் வெப்பிச்சிட்டு மெத்ர நேடுன்னி தர்த்ரம் சிவ சிவ
வ்ருத்தியும் கெட்டு தூர்த்தராய் எப்பொழுதும் அர்த்தத்தே கொதிச்செத்ர நசிக்குன்னு
அர்த்தமெத்ர வளரே யுண்டாயாலும் த்ருப்தியாகா மனசின் ஒரு காலம்

‘‘பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்

சதமாகில் சகாஸ்கரம் மதி என்னும்

ஆயிரம் பணம் கையில் உன்கும்போல்

ஆயுதமகில் ஆச்சர்யம் என்னுதம்

ஆசையுள்ள பாசம் மதிஞ்சன்னு” (ஞானப்பானா- 38)

ஆசை என்ற கயிறு உள்ளத்தைக் கட்டி வைத்திருக்கிறது. பத்து கிடைத்தால் நூறு கிடைக்குமா என்று எண்ணுகிறது. நூறு கிடைத்தால் ஆயிரம் வந்தால் போதும் என்கிறது. ஆயிரம் வந்தால் அதைவிட அதிகமாக எண்ணுகிறது. இதுவே மனதின் இயல்பாக உள்ளது என்று பூந்தானம் மனவாசையின் அளவை அளக்கிறார்.

வேர் விடாதே கரேறுன்னு மேல்குமேல்
சத்துக்கள் சென்னிலர் அன்னாலாய அர்த்தத்தில் ஸ்வல்ப மாத்ரம் கொடா சில துஷ்டன் மார்
சத்து பன்னேரம் வஸ்திரம் அது போலும் எத்திடா கொண்டு போவான் ஒருத்தருக்கும்
பச்சாதாபம் ஓர் எள்ளளவும் இல்லாத விச்வாஸ பாதகத்தே கருதுன்னு
வித்திலாஸ பற்றுக ஹேதுவாய் சத்யத்தே த்யஜிக்குன்னு சில ரஹோ
சத்யம் என்னது ப்ரஹ்மம் அது தன்னே ஸத்யம் என்னு கருதுன்னு சத்துக்கள்

கிடைத்த மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக மாற்றாமல் மனித குலம் அழிகிறதே என்ற மிகவும் வருத்தப்படுகிறார் பூந்தானம்.

‘வித்யா கொண்டு அறியந்தது அறியாதே

வித்வான் எண்டு நடிக்கன்னு சிலர்

குங்குமந்திந்தி வாசம் அறியாதே

குங்குமம் சுமக்கும் கழுதை’ (ஞானப்பானா 43)

என்று மனிதவாழ்வின் இயல்வினைச் சுட்டுகிறானர்

—————

வைராக்யம்

எண்ணி எண்ணி குறை யுன்னி தாயுசும் மண்டி மண்டி சுரேறுன்னும் மோஹவும்
வன்னு வோணம் கழிஞ்சு விஷு என்னும் வன்னில் எல்லோ திருவாதிர என்னும்
கும்ப மாசத்தில் ஆகுன்னு நம்முட ஜென்ம நக்ஷத்ரம் அஸ்வதி நாள் என்னும்
ஸ்ரார்த்தம் உண்டகோ விருச்சிக மாசத்தில் ஸத்ய என்னும் எழுதல் இனி என்னும்
உன்னி உண்டாயி வேல் பிச்சத்தில் ஒரு உன்னி உண்டாயி கண்டா ஊஞ்ஞான் என்னும்
கோணிக்கல் தன்னேல் யன்ன நிலமினி காண மன்னன் எடுப்பிக்க அரிது என்னும்
இத்தம் ஒரோன்னு சிந்திச் சிரிக்கும் போல் சத்து போகுன்னு பாவம் சிவ சிவ
எந்த நித்ர பரஞ்சு விசேஷிச்சும் சிந்திச் சீடு வினாவோலம் எல்லாரும்
கர்மத்தின் டே வலிப்பவும் ஓரோரோ ஜென்மங்கள் பலதும் கழிஞ்சு என்னதும்

காலம் இன்னு கலி யுக மாயதும் பாரத கண்டத்தின் டே வலிப்பதும்
அதில் வன்னு பிறன்னதும் எத்தனை நாள் பழுதே தன்னே போய ப்ரகாரமும்
ஆயுஸ்ஸிண்டே ப்ரமாணம் இல்லாததும் ஆராக்யத்தோடே இருக்குன்ன அவஸ்தையும்
இன்னு நாம சங்கீர்த்தனம் கொண்டு உடன் வன்னு கூடும் புருஷார்த்தம் என்னதுவும்
இனி யுள்ள நரக பயங்களும் இன்னும் வேண்டும் நிரூபணம் ஓக்கேயும்
எந்தினு வ்ருத காலம் களயுன்னு வைகுண்டத்தின்னு போய் கொல்வின் எல்லாரும்
கூடி யல்ல பிறக்குன்ன நேரத்துக்கு கூடி யல்ல மரிக்குன்ன நேரத்தும்
மத்யே இங்கனே காணுன்ன நேரத்து மத்சரிக்குன்னது எந்தினு நாம் வ்ருத
அர்த்தமோ புருஷார்த்தம் இருக்கவே அர்த்தித்து என்ன கொதிக்குன்னது எந்து நாம்
மத்யான்னர்க்க ப்ரகாஸம் இரிக்கவே கத்யோதத்தையோ மானிச்சு கொள்ளெண்டு

காலமின்னு கலியுக மல்லயோ

பாரத மிப்ப்ரதேசவு மல்லயோ

நம்மளெல்லாம் நரன்மாரு மல்லயோ

செம்மே நன்னாய் நிரூபிப்பினெல்லாரும்

ஹரி நாமங்ஙளில்லாதெ போகயோ

நரகங்ஙளில் பேடி குறகயோ

நாவு கூடாதெ ஜன்ம அதாகயோ

நமுக்கின்னி வினாச மில்லாய்கயோ

கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே

சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதே நாம்

Are we not living in Kali Yuga, in the land of Bharat?-Have we not got a human life?
Is there scarcity for the Names of the Lord?–Are we born without a tongue to chant them?
Have we no fear of the sufferings in hell?–Have we no thought about our end?
Have we any assurance of our next birth?–But, alas! We are wasting our life without concern!!!

‘‘கூடியல்லோ பிறக்குன்னா நீரதும்

கூடியல்லோ மரிக்குன்னா நீரதும்

மத்தியே இங்ஙனே கன்னுன்னா நீரது

மட்சரிக்குன்னது என்தின்னு விர்தா?” ( பூந்தானம், 49)

என்று பிறப்பின் இறப்பின் தனிமையைச் சுட்டுகிறது ஞானப்பானா. நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் கூடிப் பிறக்கவில்லை. ஒன்றாய்க் கூடி இறக்கவும் முடியாது. ஒவ்வொருவரும் இறப்பினைத் தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மத்தியில் நாம் இணைந்திருக்கிறோம். ஏன் மற்றவர்களோடு தேவையின்றிப் போட்டிபோடுகிறீர்கள் என்று மெய்ம்மை நாடுகிறது ஞானப்பானா.

‘உன்னிக் கிருஷ்ணன் மனசில் களிக்கும்பால்

உன்னிகள் மது வேணுமோ மக்களே

மித்ரங்கள் நமக்கேத்ரா சிவ சிவா

விஷ்ணுபக்தன் மாரிலே புவனத்தில்” (ஞானப்பானா- 51)

என்று குழந்தை வரம் வேண்டுவோர்க்கு ஆறுதல் தருகிறது ஞானப்பானா.

————–

நாம ஜபம்

சக்தி கூடாதே நாமங்கள் எப்பொழுதும் பக்தி பூண்டு ஜபிக்கணும் நம்மூடே
ஸித்த காலம் கழி வோள மீ வண்ணம் ஸ்ரத்தை யோடே வஸிக்கே ண மேவரும்
காணா குன்ன சராசர ஜீவியே நாணம் கை விட்டு கூப்பி ஸ்துதிக்கணும்
ஹரி ஷாஸ்ரு பரி ப்ளூதனாயிட்டு பருஷாதிக ளோக்கெ ஸஹிச்சுடன்
ஸஜ் ஜனங்களே காணுன்ன நேரத்து லஜ்ஜ கூடாதே வீணு நமிக்கணும்
பக்தி தன்னில் மூழ்கி சமஜ்ஜுடன் மத்தன போலெ ந்ருத்தம் குதிக்கணம்
பாரில் இங்கனே ஸஞ்சரி சீடும் போல் ப்ராரப்தங்கள் அசேஷம் ஒழிஞ்சிடும்
விதிச்சீடுன்ன கர்மம் ஒடுங்கவும் போல் பதிசீடுன்ன தேஹம் ஒரே டத்து
கொதிச் சிடுன்ன ப்ரஹ்மத்தே கண்டிட்டு குதிச்சீடுன்ன ஜீவனும் அப்போளே
ஸக்தி வேரிட்டு ஸஞ்சரி சீடும் போல் பாத்ரமாயில்ல என்னது கொண்டேதும்
பரிதாபம் மனஸ்ஸில் முழு கேண்ட திரு நாமத்தின் மஹாத்ம்யம் கேட்டாலும்
ஜாதி பார்க்கிலோ ரந்த்யஜனாகிலும் வேதவாதி மஹீ ஸூ ரனாகிலும்
நாவு கூடாதே ஜாதன் மாராகிலும் மூகரே அங்கு ஒழிச்சுள்ள மானுஷர்

எண்ணமற்ற திருநாமம் உள்ளதில்

ஒன்னு மாத்ரம் ஒரிக்கல் ஒரு தினம்

ஸ்வஸ்தன் ஆயிட்டு இருக்கும் போழெங்கிலும்

ஸ்வப்னத்தில் தான் அறியாதெ எங்கிலும்

மற்றொன்னாயி பரிஹஸிச்செங்கிலும்

மற்றொருத்தர்க்கு வேண்டியென்னாகிலும்

ஏது திக்கிலிருக்கிலும் தன்னுடே

நாவு கொண்டிது சொல்லி என்னாகிலும்

அதுமல்லொரு நேரம் ஒரு தினம்

செவி கொண்டிது கேட்டு என்னாகிலும்

ஜன்ம சாபல்யம் அப்போழே வன்னு போய்

ப்ரம்ம ஸாயுஜ்யம் கிட்டீடும் என்னேல்லோ

God’s Names are numerous;–And if any one of those Names,–At least once a day, while sitting quiet at a place,–Or unawares in a dream while sleeping,–Or mocking as something else, or to satisfy some one else;–You utter with your tongue or just hear with your ears,–At that very moment, your life is fulfilled;–And you reach the Supreme abode of Brahman.

ஸ்ரீதர் ஆச்சார்யன் தானும் பரஞ்ஞிது

பாதராயணன் தானும் அருள் செய்து

கீதயும் பரஞ்ஞீடுன்னதிங்ஙனெ

வேதவும் பஹுமாநிச்சு சொல்லுன்னு

அமோதம் பூண்டு சொல்லுவின் நாமங்ஙள்

ஆனந்தம் பூண்டு ப்ரஹ்ம்மத்தில் சேருவான்

மதியுண்டெங்கிலொக்க மதியிது

திருநாமத்தின் மாஹாத்யமாமிது

பிழையாகிலும் பிழ கேடென்னாகிலும்

திருவுள்ளம் அருள்க பகவானே

And so say Sreedhara the great scholar,–And sage Veda Vyasa who wrote the puranas.–Even Bagavad Geetha says the same,–And also so say the Vedas with respect.–So sing God’s holy names easily–And with joy become one with God.–For those aiming at salvation this book is sufficient,–For it sings about greatness of God’s holy names.–With errors or without errors.–Please grant me your grace , Oh my God

பூந்தானம் ‘‘கீதையும் வேதங்களும் பரந்தாமன் புகழைப் பாடினால் மட்டுமே முக்தி” என்று உரைக்கின்றன (ஞானப்பானா 60) என்று பாடுகிறார்.

கிருஷ்ண கிருஷ்ணா முகுந்த ஜநார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்யுத அநந்த கோவிந்த மாதவா
ஸச்சிதானந்த நாராயணா ஹரே

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ  பூந்தானம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்ம பெருமாள் ஸ்துதி–ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை–

January 21, 2023

ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி ஸ்லோகம்

ஜிதந்தே_மஹா ஸ்தம்ப_ஸம்பூத_விஷ்ணோ!
ஜிதந்தே_ஜகத் ரக்ஷணார்தாவார
ஜிதந்தே_ ஹரே_பாடலாத்ரௌ_நிவாஸின்
ஜிதந்தே_ ந்ருஸிம்ஹ_ப்ரஸீத_ப்ரஸீத
நமஸ்தே_ஜகந்நாத_விஷ்ணோ_முராரே
நமஸ்தே_ந்ருஸிம்ம_அச்யுதாநந்த_தேவ
நமஸ்தே_க்ருபாலோ_சக்ரபாணே
நமஸ்தம்ப_ஸம்பூத_திவ்யாவதார
பரப்ரஹ்மரூபம்_ப்ரபுத்தாட்டஹாஸம்
கரப்ரௌல_சக்ரம்ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம்_த்ரிநேத்ரம்_ஹரிம்பாடலாத்ரௌ
சான்மேக_காத்ரம்_ந்ருஸிம்ஹம்_பஜாம்
கிரி ஜந்ருஹரிமீசம்_கர்விதாராதிவஜ்ரம்
பரம புருஷமாத்யம்_பாடலாத்ரௌ_ப்ரஸன்னம்
அபய_வரத_ஹஸ்தம்_சங்க சக்ரே ததாநம்சரண_மிஹபஜாம்_சாச்வதம்
நாரஸிம்ஹம்_ஸ்ரீந்ருஸிம்ஹ_மஹா ஸிம்ஹ_திவ்யசிம்ஹ!
கிரிஸம்பவ_தேவேச_ரக்ஷமாம்_சரணா கதம்

ஸ்ரீ_நரசிம்மர்_காயத்ரி
ஓம்_வஜ்ர_நகாய_வித்மஹே !!!
தீக்ஷ்ண_தம்ஷ்ட்ராய_தீமஹி !!!
தந்நோ_நரசிம்ஹப்_ப்ரசோதயாத் !!!

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்மர்_திருவடிகளே__சரணம்
————–

லஷ்மி நரஸிம்ஹ சரணம் ப்ராத்யே🌹
🌹ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை 🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🔥ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாத ரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.🌹
🔥இஷ்டார்த்த ப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ர ஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வா பாஹூ நரசிம்ஹ.🌹
🔥எல்லா ரூப நரசிம்ஹ
ஐஸ்வர்ய ப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.🌹
🔥அம்பர வாஸ நரசிம்ஹ
காம ஜனக நரசிம்ஹ
கிரீட தாரி நரசிம்ஹ
ககபதி வாஸன நரசிம்ஹ.🌹
🔥கதா தரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதர வாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.🌹
🔥கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர் புஜனே நரசிம்ஹ
சதுரா யுத்தர நரசிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப நரசிம்ஹ.🌹
🔥தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ர தாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.🌹
🔥துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞான ப்ரதனே நரசிம்ஹ
நர கிரி ரூப நரசிம்ஹ.🌹
🔥நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாக ரூப நரசிம்ஹ
நாம கிரீஷ நரசிம்ஹ.🌹
🔥பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாக தாரி நரசிம்ஹ.🌹
🔥புராண புருஷ நரசிம்ஹ
பவ பய ஹரண நரசிம்ஹ
பக்த ஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.🌹
🔥பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்த ரக்ஷக நரசிம்ஹ
முநி ஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருக ரூப தாரி நரசிம்ஹ.🌹
🔥யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கி புரிஷ நரசிம்ஹ.🌹
🔥சாந்த மூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்க தாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்தி புருஷ நரசிம்ஹ.🌹
🔥சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரி நாராயண நரசிம்ஹ
க்ஷேம காரி நரசிம்ஹ.🌹
🔥ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெய சுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ..🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🌹ஸ்ரீ லஷ்மி நரசிம்மயே நமஹ 🌹
————

ஸ்ரீஅனுமன் ஸ்துதி

வீதாகில விஷயேச்சசம் ஜாதானந்தா
ஸ்ரூபுல கமத்யச்சம் ஸீதா பதித தூதாத்யம்
வாதாத் மஜ மத்ய பாவயே ஹ்ருதயம்
அனைத்து விஷயங்களும் அறிந்தவரே பக்தனின் ஆனந்த கண்ணீர் கண்டு உணர்ச்சி வசப்படுபவரே தூய மனம் படைத்தவரே ராமதூதர்களில் முதல்வரே தியானிக்கத் தக்கவரே வாயுகுமாரரே ஆஞ்சநேயரே உம்மை மனதில் இருததி தியானிக்கிறேன்.
—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ கோதா சதுச்லோகீ –

January 21, 2023

ஸ்ரீ கோதா சதுச்லோகீ – சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியாரின் பெருமைகளைச் சொல்லும் நான்கு ஸ்லோகங்கள் – ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச்செய்தது.

திருமலை அனந்தாழ்வான் விஷயமாக திருவேங்கடமுடையான் தானே அருளிச் செய்த தனியன்கள்:

1) அகிலாத்ம குணா வாஸம் அஜ்ஞாந திமிராபஹம்|

ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஆத்மாவுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.

2) ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹ த்வயம்|

ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்ய மஹம் பஜே||

ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித் தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

முதலியாண்டான் மற்ற திவ்ய தேசங்களில் -திருவேங்கடத்தில் மட்டும் அனந்தாழ்வான் சாதிப்பார்

தனியன்

“சக்ரே கோதா சதுச் லோகீம் யோ வேதார்த்த பிர கர்ப்பிதம்

ஸ்ரீ வேங்கடேச சத் பக்தம் தம் நந்த குரும் பஜே”️

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட கோதா சதுச் லோகீ ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தவரும், 
திருவேங்கடமுடையானின் பரம பக்தருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன்.
--------------

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை |
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா ஸூப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 1

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்யஸ்  த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்திரம் -போலே

நிஸ் சம உத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கச விலுலிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

மாலைக் கட்டிய மாலை -மாலையாலே மாலாக்கிய கோதை

ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகள் –ஸூபகயா-செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸூப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாம் அபாங்கை–
இத் தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்

வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்திகளை – திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகளை – அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகளை அருளியவள் ஸ்ரீ ஆண்டாள். இவை உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம். ஈடு இணையற்ற வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் இந்த ஸ்ரீ ஸூக்திகளை கேட்டு இவ்வுலகத்தார் சுப்ரபாதமாக கேட்டு துயில் துறந்து விழித்து எழுகிறார்கள். ஆண்டாள் குழல்களில் சூடிக் களைந்ததால் பூச்சரங்கள் கண்ணனை பிச்சேற்ற வல்லவை, கோதை சூடி களைந்ததால் ரத்னா ஹாரமாக கொள்கிறான். ‘கோதா’ என்றால் ‘மாலை’. ஆண்டாளே மாலை, அதாவது ‘மாலை’ மாலை கட்டினாள். ‘திருமாலைக்’ கட்டினாள், – தன் வார்த்தையால். கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள், திருப்பாவையாக! இத்தகு அகில ஜகன் மாதாவுடைய குளிர்ந்த கடாக்ஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்!

எந்த நாச்சியாருடைய இணையற்ற உயர்ந்த அருளிச்செயல்கள் வேதங்களின் தலையான பாகமான உபநிஷத்தின் ஆபரணங்களாக ஆகிறதோ, எந்த நாச்சியாருடைய காதலன் (எம்பெருமான்) அவள் குழலில் சூடிக் களைந்த மாலையில் மிகவும் ஆசை யுடையவனாய் உள்ளானோ, எந்த நாச்சியாருடைய, வேதம் போன்ற மங்களமான திரு வாக்கினால் உலகம் நல் விடிவு பெற்றதாக ஆகிறதோ, அப்படிப்பட்ட லோக மாதாவான ஆண்டாள் நாச்சியார் அடியேனைத் தமது திருக் கண் நோக்கமாகிற அமுத மழையாலே நனைத்தருள வேணும்.

————–

மாதா சேத் துலஸீ பிதா யதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர  ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா யதி |
ஜ்ஞாதாரஸ் தனயாஸ் த்வதுக்தி ஸரஸ ஸ்தந்யேந: ஸம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வ மந்ய ஸூலபா சாதாரணா ஸ்ரீ ரஸி”||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 2-

மாதா சேத் துலஸீ
த்வ மாதா துளஸீ

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான்  –மே ஸூதா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || கோதா ஸ்துதி -(1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || கோதா ஸ்துதி(10)

ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.
அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து ,
அவனுக்கு அணிவித்த பிறகு தான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள்  வாழியே –

ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதாரஸ்-
ஞானம் -அறிவு -ஜ்ஞாதா-அறிபவன் -தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள்  –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்-வாய் சொல் அமுதத்தையே தாய்ப் பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸ்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு   என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த  நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீயை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

 “கேசவ பிரியையான துளசி தேவி மாதா நந்தவனத்தில் ஆழ்வார் திரு மகளாராய் – வேயர் பயந்த விளக்காய் ஸ்ரீ விஷ்ணு சித்த குலத்தில் அவதரித்தீர்! நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்ற உம்முடைய ஆசையை நிறை வேற்றி வைத்தாரன்றோ எதிராசர்!”
“பிரிய தமன் அதாவது பிரியமானவன், அரங்கத்து அரவின் அணை அம்மான், ஸ்ரீ ரெங்க நாதன் மூடு பல்லக்கில் எழுந்து அருள, கேசவ நம்பியை கைப்பிடித்தாயே. பிரிய தமன் உன் புக்ககத்திலே குடி புகுந்தார்,” (பெரியாழ்வாருடைய அகம் தான் இன்று ஆண்டாள் சந்நிதி. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம்! ) “ஆண்டாளே உம்முடைய வாய் சொல் அமுதத்தை – வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவையை, இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த ஜ்ஞானவான்கள் இருக்க, ‘போய பிழை புகுதருவான்’ என்று சொல்லி மற்றவர்க்கும் கிட்டி உய்யும்படி எளிதான, சாதாரணமான புகலாய் இருக்கிறீர்! “
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரே! தேவரீருக்குத் திருத்தாயார் யாரென்னில் துளசிச்செடி. தேவரீருக்குத் திருத்தகப்பனார் யாரென்னில் பரமபாகவதோத்தமரான ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். தேவரீருக்குத் திருத்தமையனார் யாரென்னில் யதிராஜரான ஸ்வாமி ராமாநுஜர். தேவரீருடைய ப்ராணநாதன் யாரென்னில் திருவரங்கநாதன். தேவரீருடைய குழந்தைகள் யாரென்னில், தேவரீருடைய அமுதவாய்மொழிகளான முலைப்பாலைப் பருகி வளர்க்கப்பட்ட ஞானவான்கள். தேவரீருடைய அமுதவாய்மொழிகளை அறியாத சாமான்யர்களுக்கெல்லாம் தேவரீர் எப்படி அடையத்தகுந்த புகலாக இருக்கிறீர்?
——————

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணா ஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்-
தன் காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட

ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

பாசி தூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் –2-8-7-

ஸ்வஸ்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப் பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப் பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –

உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய  ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப்   பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ ரஹஸ்ய சிகாமணி —

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் –

இடம் பெற்றார் எல்லாம் என் உடலாய் நிற்க
இடர்ப் பிறப்பு ஒன்றும் இவை இல்லா என்னை அன்பால்
அடம் ( திடம் ) பற்றாம் இவன் என்று நினைத்தான் யாவன்
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தான் தாரூம் -( கட்டை ) உபலமும் (கல்லும் ) போலே கிடக்க நானே
உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என் தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற
எம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த உரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் இருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஓளி சுற்றும் பரப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே

மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலையென்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம்

ஸ்வஸ்த்தம் சித்தம் ஸூகமபி வபுஸ் தாது சாம்யம் ச க்ருத்வா
ஸ்வாத் மாநம் ச ஸ்ம்ருதி பத மஜம் விஸ்வ ரூபம் விதந்வந்
காலே ப்ராப்தே கரண விலயாத் காஷ்ட்ட பாஷாண கல்பாந்
நாத போத்ரீ நயது க்ருபயா நாதித ஸ்வம் பதம் ந –

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵 ️
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!

—————

ஆகூதஸ்ய பரிஷ்க்ரியாம் அனுமபாம் ஆஸேசனம் சக்ஷுஷோ:
ஆனந்தஸ்ய பரம்பராம் அனுகுணாம் ஆராம சைலேசிது: |
தத்தோர் மத்ய கிரீட கோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யா மோத ஸமேதித ஆத்ம விபவாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 4 

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தஸ்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர் மத்ய க்ரீட கோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூக ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

விளக்கம்:

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய பகவானுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள் ஸ்ரீ ஆண்டாள். தனது அழகு அலங்காரங்களால் கண்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பவள். திருமங்கை தங்கிய சீர் மார்வன் தாம் விரும்பி, நாள் தோறும் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திருமுடியிலே தரித்து ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி, இவ்வாறு பகவானை பிச்சேற்றி மகிழச் செய்யும் பெருமையுடைய ஸ்ரீ கோதா பிராட்டியை நாம் ஸ்துதி செய்து வணங்குவோமாக!

திருவேங்கடமலையிலும், திருமாலிருஞ்சோலை மலையிலும் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய அபிப்ராயம் நிறைந்த செயலுக்கு மிகவும் அழகூட்டுமவளாயும், சேவிக்கும் அடியவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை உண்டு பண்ணுமவளாயும், அவனுக்கு எல்லாவிதத்திலும் தக்கவளாய், நிரந்தர ஆனந்தவெள்ளமூட்டும்படி அவனது திருமார்பிலும், திருமுடியிலும் அணியும் தான் சூடிக்களைந்த குங்குமம், பூமாலை ஆகியவற்றின் மணத்தினால் பெருகும் வைபவத்தை உடையவளாய், உதாரவாக்காளரான ஆண்டாள் நாச்சியாரைப் போற்றுகிறோம்!

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந் மௌளி மால்ய பர ஸம் பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜ மிவாதததி த்வதீயாந்யா
கேகராணி பஹுமாந விலோகிதாநி || .கோதா ஸ்துதி -20–போக ரஸாந் -கண்ணின் கடாக்ஷ குளிர்ச்சியால் அலங்காரம்

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது,
நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,தந்யமாயிற்று மேலும்,
நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து,
அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்) மாலைபோல் அமைந்துள்ளது.
தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்;
ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில்,
நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

தையொரு திங்களும் தரைவிளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*
உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்*
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கைவேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! 1

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்

இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

———————–

ஸ்ரீ ஆண்டாள் மங்கள ஸ்லோகங்கள் ☘

🌸 ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (1)

🌸 மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (2)

🌸 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே |

நந்த நந்தன ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம் || (3)

🌸 கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான நோத்பவாம் |

பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் || (4)

—————–
“கோவிந்தன்” என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்..
1. மத்ஸ்யாவதாரத்தில் “கோ” எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால்,
“கோவிந்தன்” என்கிற திருநாமம், மத்ஸ்யாவதாரத்துக்குப் பொருந்துகிறது..
2. கூர்மாவதாரத்தில் “கோ” எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே!..
.
3. வராக அவதாரத்தில் “கோ” எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்..
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய “கோ”வை (“கோ” என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே!..
5. “கோ” எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்..
6. “கோ” எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது..
7. “கோ” எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தனே!…
8. “கோ” எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்..
9. “கோ” எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை..
10. “கோ” எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட, நாளைய தினம் அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்!…
————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாவை நோன்பும் தை நீராடலும் –ஸ்ரீ மதி ஜெயஸ்ரீ சாரநாதன்–ஸ்ரீ சங்கத் தமிழ் மாலை —

January 20, 2023

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்

ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம் ஸ்வஸ்மை ப்ரஸூநார்பணம் |

ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மநிசம் ஸ்ரீதன்வி நவ்யே புரே

ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தனயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵 ️
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!

—————————

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்

—————-

மார்கழியும் திருப்பாவையும் நமக்கு நினைவூட்டுவது பாவை நோன்பென்னும் பண்டைய வழக்கம். மார்கழி மாதம் பாவை நோன்புக்குப் பெயர் பெற்றது. தைந் நீராடல் என்பதும் பிரசித்தி பெற்ற ஒன்று. மார்கழியிலும் நீராட்டம் உண்டு. இந்தச் செய்திகளை எல்லாம் அரைகுறையாகக் கேட்டுள்ளோம். இவை குறித்த இலக்கியச் செய்திகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரை.

பாவை நோன்பின் முக்கிய அம்சமே இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, சில்லிடும் ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும். சற்று யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தேவையா என்று தோன்றும். இளம் சிறுமியரை பகல் நேரத்தில் விளையாட அனுப்பக் கூடாதா? விடியலுக்கு முன்னால் எழுப்பி, குளிரில் ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் ஆற்றங்கரைக்கு அனுப்பி, ஆற்றில் இறங்கிக் குளிக்கச் சொல்வது நல்லதா என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இந்தப் பாவை நோன்பில் பொதிந்துள்ள சில கருத்துகள், பொதுநலத்தையும், அக வாழ்வின் நன்மையையும் இணைத்து, மக்கள் சமூகத்தின் ஒரு முக்கியக் கடமையாகவே பாவை நோன்பினைக் காட்டுகின்றன.

அக வாழ்வு என்னும் பொழுது, மனம் நிறைந்த வாழ்க்கையை, கண் நிறைந்த கணவனுடன் இப்பிறப்பு மட்டுமில்லாமல், அடுத்த பிறவியிலும் வாழ வேண்டும் என்னும் வேண்டுதல் செய்யப்படுகிறது.

பொது நலம் என்னும் பொழுது, வரப்போகும் மாரிக்காலம் தப்பாமல் மழை கொடுக்க வேண்டுமெனில் மார்கழி மாதம் ஆற்றங்கரையில் நோன்பிருக்க வேண்டும். மாதம் முப்பது நாள்களும் செய்யும் இந்த நோன்பினை பெரியவர்கள் செய்தாலும்கூட, சில குறிப்பட்ட விதங்களில் இளம் சிறுமியர் செய்வதே பலனளிக்கும் வண்ணம் இருக்கும். இது எப்படி என்று பார்பதற்குமுன், இந்த வழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கக் கூடும் என்று பார்ப்போம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, பிங்கலந்தை நிகண்டு, சூத்திரம் 1369 இவ்வாறு கூறுகிறது:

பேணும் சிறப்பின் பெண் மகவாயின் …..
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும்.

ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பருவத்தில் உள்ள சிறுமியர் பனி நீர் தோய்ந்து, பாவை ஆடி, ஐங்கணைக் கிழவன் எனப்படும் ஐந்து பாணங்களை உடைய காம தேவனுக்கு ஆர்வமோடு நோன்பு நோற்பர் என்பது இதன் பொருள்.

இதுவே தமிழ் மரபென்றால், வட நாட்டில் மார்கழி மாதத்தில், யமுனை ஆற்றங்கரையில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைக் குறித்து பாவை செய்து, நோன்பு நோற்பர் என்னும் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. இங்கே காமதேவன், அங்கே கார்த்யாயினி. ஆனால் குறிக்கோள் ஒன்றே. கண்ணன் போல, திருமால் போல, மனம் கவர் கணவனை அடைதல் என்பதாகும்.

இதைச் செய்யும் பருவம், கணவன் என்பதும் திருமணம் என்பதும் என்னவென்றே அறியாத சிறார்ப் பருவம்! அப்பருவத்தில் எதற்கு இப்படி ஒரு நோன்பு என்று நோக்கினால், அங்கேதான் புலப்படுகிறது, ஒரு பொதுநலம்.

வசிஷ்டர், காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம் அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து-  மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.

மூவகையில் கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின் சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும் இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது. மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும் இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள் அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது, முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால் மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம் தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர் போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின் பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம் தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்- காட்டி.

மூன்றாவது வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான் அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து, மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல் இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள் ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.

தற்சமயம் மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ் முன்னோர்.

பாவை நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும் சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப் பெறவே, சைய மலையின் கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார்.

பாவை நோன்பு செய்யும் முறை

மார்கழி மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும் மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரை தோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, அதே ஆதிரை நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள், ஓரை ஆகியவற்றின் அடிப்படையில், மாரிக் காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர். பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும் மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள பொதுநலக் கருத்து.

இந்தக் கருத்தினை திருப்பாவையிலும் காணலாம்.

“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள். அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால் மாதம் மூன்று முறை மழை பொழியும்.

அது மட்டுமல்ல, அடுத்த பாசுரத்தில் (‘ஆழி மழைக் கண்ணா’), மாரிக்காலத்தில் இருண்டு திரண்டு மேகங்கள் மழை பொழிவதைக் குறிப்பிட்டு, “வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்” என்று மார்கழி நீராட்டத்திற்கும், மழைக் காலத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறாள். ஆக, பாவை நோன்பின் முதல் நோக்கம், பொதுநலம் அல்லது நாட்டு நலம் என்னும் மழை வளம் வேண்டுதல்.

இந்த நோன்பை விவரிக்கையில், பரிபாடல் 11-இல் நல்லந்துவனார் இவ்வாறு கூறுகிறார்.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல்
அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
உறை சிறை வேதியர் நெறி நிமிர்
நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

கதிரவன் அதிகம் காயாத, குளிர்ந்த கடை மாரியையுடைய மார்கழித் திங்களில், சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் முழுமை பெற்ற அந்தப் பௌர்ணமி நன்னாளில், விரி நூல் அந்தணர் விழவு தொடங்குவர். முப்புரி நூலை உடைய அந்தணர் (அந்தணர் என்றால் வேதாந்தத்தை அணவினவர் என்பது நச்சினார்க்கினியர் கருத்து) இறைவனுக்கு பலிப் பொருள் (நைவேத்தியப் பொருள்) பெய்த பொற்கலங்களை ஏந்தி நிற்க, “வெப்பமடையாமல் இந்நில உலகம் குளிர்வதாக!” என்று வாழ்த்தி, “அம்பாவாடல்” என்னும்படி, அம்பா என்று சொல்லப்படும் தாயோடு, இளம் கன்னியர் ஆற்றினில் நீராடி வர, அவர்களுக்கு, ‘முனித் துறை முதல்வியர்’ எனப்படும், சடங்குகள் அறிந்த முதிய பார்ப்பனப் பெண்டிர் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க, நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள், குளிர்ந்த ஆற்று நீரில் குளித்தமையாலும், குளிர் தாளாததாலும், உடுத்தின ஈரத் துணியுடனே இருப்பதாலும், அந்தக் குளிர் தணியும் வண்ணம், ஹோமத் தீயின் அருகே வந்து, தங்கள் ஈரத்துணியைக் காட்டி உலர்த்தும் வண்ணம் இருப்பர். அந்தத் துணியிலிருந்து கிளம்பும் நீராவியானது, வைகை ஆற்றுக்குத் தரும் அவிப் பொருள் போன்று இருக்கும். ‘வையை! நினக்கு மடை வாய்த்தன்று’ என்று , கன்னியர் ஈரத் துணியில் கிளம்பும் நீராவியே வைகை உண்ணும் ஹவிஸ் என்னும் ஹோமப் பொருள் என்று புலவர் கூறுகிறார்.

அடுத்து ஒரு முக்கியக் குறிப்பைத் தருகிறார்.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இவ்வாறு ஹோமமும், நோன்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மறுபுறம், இளம் பெண்கள் நடனம் ஆடுவர். இங்கே சிறுவர்கள் பற்றியும் புலவர் குறிப்பு தருகிறார். மையோலை பிடித்து கவி பாடும் மழ புலவர் என்றால் முதன் முதலாக ஓலைச் சுவடி பிடித்து பாடம் பயில ஆரம்பிக்கும் சிறுவர் என்பது பொருள். அவர்கள் படிக்கும் பாடலுக்கு மாறாக, அந்தப் பெண்கள் பொய்யாடல் ஆடுவர் என்கிறார். பூசையின் பகுதியாக, அந்தக் குளிரிலும், அபிநயம் பிடித்து அவர் ஆடுவர். அது பொய்யாடல் என்கிறார். கள்ளமில்லாப் பருவத்தினராக இருப்பதால், அந்தப் பாடல்களுக்குக் காமக் குறிப்பின்றி ஆடுதல் ‘பொய்யாடல்’ எனப்படும் என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். இதன் மூலம் அந்தப் பாடல்களில் காதல் ரசம் அல்லது, நல்ல கணவனை விரும்பும் விழைவு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் கள்ளமிலா அந்தச் சிறுமியர் அபிநயித்தபோது, அது வைகைக்கு வைக்கும் ஒரு விண்ணப்பம் ஆகிறது.

அது என்ன விண்ணப்பம் என்றால், நீரின் கண் ஆடியும், தீயின் கண் (ஹோமத் தீ) நின்றும், பொறியையும், புலனையும் அடக்கி இந்தச் சிறுமியர் ஆடுவது, இவர்தம் முன் பிறப்புகளிலும், இவ்வாறு ஆடினமையின் காரணமாகவோ? இந்தப் பேறுக்குரிய காரணத்தை நீயே சொல்வாய் வைகை நதியே- இவ்வாறு கூடியிருப்போர் நினைப்பர், கேட்பர். புலவரும் கேட்கிறார்.

“தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?” என்னும் இந்த வரிகளின் மூலம், தைந் நீராடுதல் என்பது, ‘தவத்தை நீராடுதல்’ என்னும் சொற்களின் சேர்க்கையே என்று தெரிகிறது. இந்த வரிகள் சொல்லப்படும் காலமும் இடமும், மார்கழி மாதத்து பாவை நோன்பு ஆரம்பிக்கும் முதல் நாள். தை மாதம் இன்னும் வரவில்லை. ஆனால் மார்கழி மாதத்து பாவை நோன்பின் நீராட்டத்தையே, தைந் நீராடல் என்று புலவர் கூறுகிறார். பொதுநலம் கொண்ட பாவை நோன்பில் பிணைக்கப்பட்டுள்ள அக நலம் காட்டும் பகுதி இது.

சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து, நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து, இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். ‘தவமும் தவமுடையார்க்காகும்’ என்பது முதுமொழி. ஒருவர் வழி வழியாக தவம் மேற்கொண்டிருந்தால்தான், இப்பிறப்பிலும், தவத்தை மேற்கொள்வர். ஆகவே அந்தச் சிறுமியரும் முன்னரே இருந்த தவத்தைப் பற்றியே இன்று, வைகையே, உன் முன்னரும் தவத்தை ஆகும் பேறு பெற்றனரோ, நீ கூறு என்கிறார் புலவர்.

தை என்றால் பிணைத்தல் அல்லது தைத்தல் என்பது பொருள். தைந் நீராடல் என்பது, பிறவி தோறும் கடைபிடித்த தவத்தை, இப்பிறவியிலும் பிணைக்கும் ஒரு நீராடல், எனவே அதை ‘தவத் தைந் நீராடல்” என்கிறார் புலவர். மார்கழிப் பாவை நோன்பே தைந் நீராட்டமும் ஆகும் என்பது இதன் மூலம் புலனாகிறது.

அந்தப் பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்பர் அங்குக் கூடியுள்ள மகளிர். காட்டாற்று வெள்ளமெனப் பெருகி வந்த ஆற்று நீர், மார்கழி மாதம் தெளிந்து, முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும். அதுவே தக்க நீர். எதற்குத் தக்கது என்றால், தங்கள் மன விருப்பங்களையும், தவத்தையும் அந்த நீரிடம் கூறும்பொழுது, கண்ணாடி போல் தெளிந்த அந்நீர் அவற்றைத் தைத்துக் கொள்ளும். அதுவே ‘தைந் நீர்’. தெளிந்து இருக்கும் அந்நீர், அந்த மகளிரின் தவத்தை அப்படியே வாங்கிகொண்டு, நிறைவேற்றிக் கொடுக்கும்.

அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை அடுத்த வரிகளில், புலவர் கூறுகிறார். இங்கேதான் அக வாழ்வின் வேண்டுதல்களைப் பொது நலம் கொண்ட பாவை நோன்புடன் தைக்கும் அருமையான கருத்துகள் புலனாகின்றன.

‘ “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,
‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,
‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்

“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர், கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”

இப்படி வேண்டிக் கொண்டு, பரிபாடல் இசைத்துப் பாடி இறுதியாக அவர் வேண்டுவது இது.

முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே!

“நாங்கள் முன்பிறப்பில் செய்த தவத்தாலே, இப்பிறவியில் நின்பால் இத் தைந் நீராடலாகிய தவத்தைப் பெற்றோம். அத்தவத்தினை யாவரும் விரும்பத்தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் நாங்கள் பெறுவோமாக,” என்று பிறவி தோறும் தொடரும் தவமாக, இந்த வேண்டுதல் நடப்பதே பாவை நோன்பின் அகத் திறமும், தைந் நீராடலின் மகத்துவமும் ஆகும்.

இந்த வர்ணனைகள் பாவை நோன்பின் முதல் நாளான மார்கழி பௌர்ணமியன்று நடப்பவை. அதன் பின்னரும் என்ன ஆயிற்று, எவ்வளவு நாட்கள் இந்த நோன்பு தொடர்ந்தது என்று பார்க்கும் முன், இந்நோன்பில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

பிள்ளைப்பருவத்தின் ஐந்து முதல் ஒன்பது வரையிலான வயதுச் சிறுமியர் செய்வது என்று கூறப்படும் இந்தப் பாவை நோன்பில், முது பெண்டிர் கலந்து கொண்டு, மற்றவர்களுக்கு செய்யும்முறை சொல்லிக் கொடுக்கின்றனர். கன்னிப்பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதே பாடலில் ஓரிடத்தில், பாவை ஆடிய கன்னிப் பெண்ணைக் கண்டு மயங்கின இளமகனைப் பற்றிய விவரங்கள் வருகின்றன. கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டும் இள மங்கையர் கலந்து கொள்கின்றனர். ஆக, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் அனைவரும் இந்த நோன்பை மேற்கொண்டுள்ளனர். வருடம் தோறும் செய்திருக்கின்றனர்.

ஹோமம் செய்யும் ஆண் மக்கள் அங்கே இருக்கின்றனர். பெண்கள் பாடுவதையும், ஆடுவதையும் வேடிக்கை பார்க்கும், இளம் பருவ ஆண்கள் அங்கே நீராடித் திரிந்து கொண்டிருக்கின்றனர். நோன்பில் கலந்து கொண்டவர்கள் என்று சொல்லத்தக்க வகையில், இளம் சிறுவரும் அங்கே இருந்துள்ளனர். அவர்கள் பாடிய பாடலுக்கு மாறாக, சிறுமியர் அபிநயித்துள்ளனர் என்று புலவர் கூறுகிறார்.

மறுநாள் முதல், ஆற்றங்கரைக் காட்சியாக இந்தச் சிறுவரும், சிறுமியரும் ஆற்றில் நீராடி, சிறுமியர் பாவை சமைக்க, அவர்களோடு சேர்ந்து சிறுவர்களும் விளையாடுவர். இந்த வர்ணனையை புற நானூறு 243 -இல் காணலாம்.

தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர், தான் போகும் வழியில், ஆற்றங்கரையில் பாவைப் படிமங்கள் செய்யும் சிறுமியரையும், அவர்களோடு கைகோத்து, நீரிலும், மணலிலும் குதித்து, கள்ளமில்லாமல் விளையாடும் சிறுவர்களையும் பார்த்து, அவர்களைபோன்ற இளமைக்காலம் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்.

“திணிமணல் செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை”

என்னும் இவ்வரிகளில் சிறுவர்- சிறுமியர் ஒன்றாகப் பாவை ஆடி விளையாடியமை தெரிகிறது.

“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து”

என்னும் புறநானூறு 11-இன் மூலம் இள மங்கையரும் மணலில் பாவை செய்து, மலர் சொரிந்து வழிபட்டனர் என்று தெரிகிறது.

நோன்பின் காலம்

ஆண்டாள் கூறும் முறைப்படி, மார்கழி முழுவதும், ஆற்றங்கரையில் நோன்பிருக்கப்பட்டது. அது தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்திருக்கின்றது. பங்குனி நாள் வரை என்று நாச்சியார் திருமொழியில், இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மழைத் தொடர்பு வகையில் பார்த்தால், மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் இருக்கும் மூன்று வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலையைப் பொருத்தே, ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை உட்பட நான்கு மாதங்களிலும் மழை இருக்கும். மார்கழி தொடங்கி நான்கு மாதங்களிலும், என்றெல்லாம் மூவகைச் சூழ்நிலைகள் நன்றாக இருந்தனவோ, அன்றிலிருந்து 195ஆம் நாள் நல்ல மழை பொழியும். இதன் அடிப்படையில், பங்குனி வரை நோன்பு தொடர்ந்திருக்க வேண்டும்.

நாச்சியார் திருமொழி அடிப்படையில் நோக்கும் போது, மார்கழியில், மணலில் பாவை சமைத்தாலும், தையில் சிற்றில் இழைத்தலும் இருந்திருக்கக்கூடும். திருக்கூடல் போன்ற பிற மணல் விளையாட்டுகளையும், சிறுமியர் பிற மாதங்களில் விளையாடியிருக்கின்றனர்.

திருக்கூடல் என்பது, மணலில் வட்டமாக வரைந்து, கையை எடுக்காமல் அப்படியே அந்த வட்டத்தின் உட்புறம் சுழிகள் பல வரைய வேண்டும். பிறகு, இரண்டிரண்டாக சுழிகளை என்ன வேண்டும். கடைசியில் இரட்டைபடையில் கூடினால், நினைத்தது நடக்கும். ஒற்றைப்படையில் கூடினால், நினைத்தது நடக்காது. ஆண்டாள் நினைத்தது, நாராயணனே தன்னிடம் வரவேண்டும், தன்னை மணம் புரிய வேண்டும் என்பது. நோன்பின் தொடர்ச்சியான இந்த விளையாட்டுகளிலும், வரப்போகும் கணவனைப்பற்றியே வேண்டுதல்கள் இருந்திருக்கின்றன.

அதன் ‘க்ளைமாக்ஸ்’ பங்குனித் திருநாள்! அதுதான் பங்குனி உத்திரம் என்னும், பங்குனி மாதப் பௌர்ணமி. அன்றுதான் காமன் பண்டிகை. காதலர்களை காமதேவன் சேர்த்து வைத்த நாள். அன்றுதான், யார் காரணமாக காமதேவன் மலர்க்கணை தொடுத்து, அதனால் சிவனால் எரிக்கப்பட்டு, அனங்கன் என்று ‘உருவம் இல்லாதவன்’ என்னும் பெயர் பெற்றானோ, அந்தப் பார்வதி, பரம சிவனை மணந்த நாள். அதுவே, ராமன் சீதையை மணந்த நாள். பாற்கடலில் ஸ்ரீதேவி தோன்றிய நாள், அது மட்டுமல்ல, அந்த நாராயணனையே மணந்த நாள். அரங்கநகர் பெருமான், தாயாரை மணந்த நாளும் அதுவே. அந்தப் பங்குனி உத்திரப் பெரு விழா ஸ்ரீரங்கத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்றது என்று அக நானுறும் பறை சாற்றும் திருநாள். அன்றுதான் ஆண்டாளும், அரங்கனை மணந்தாள். அந்நாளே சேர்த்தி – திருமணப் பிணைப்பில் சேர்த்து வைக்கும் நாள் எனப்படுகிறது.

பாவை நோன்பின் ஒரு பகுதியாக காமதேவனைத் தொழுவர். பரிபாடலில் மங்கையர் தெரிவிக்கும் விருப்பங்களைப் பார்த்தால், கணவன் அன்பு குறையாமல், தம்மை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்னும் காமதேவன் அருளும் வரங்களே. சிவனை நோக்கியே மலர்க்கணை தொடுத்தவன் காமதேவன் என்னும் மன்மதன். அவன் தமக்கும் அருள் புரிய வேண்டும். தாம் விரும்பும் மணவாளனை அடைய உதவ வேண்டும். அடைத்த கணவன் என்றும் அன்புடனும், பிரியாமலும் இருக்க வேண்டும் என்பது பாவையாடும் பெண்டிர் விருப்பம். இதை ஆண்டாளும் தெரிவிப்பதை நாச்சியார் திருமொழியில் காணலாம்.

marriage4ஹோலிப் பண்டிகையன்று கொண்டாடப்படும், பங்குனி உத்திரமே பாவை நோன்பின் முடிவு நாள். திருமணப் பருவத்தில் இருக்கும் கன்னியர் மார்கழியில் இந்த நோன்பை ஆரம்பிக்க, அடுத்த மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு வரன் அமைந்து, பங்குனி உத்திரத்திற்குள் மண வாழ்கை அமைய முன்னேற்பாடுகள் நடந்து விடும். இதைத்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர் நம் முன்னோர்.

பாவை உருவம்

மணலில் பாவை என்னும் பொம்மை செய்வர் என்று பார்த்தோம். அது என்ன பொம்மை என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைப் பாவையாக வடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தமிழ் மண்ணில் என்ன செய்திருப்பார் என்று ஆராய்வோம்.

வெளிப்படையாகத் தெரிவது, பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம். பாவைப் பாட்டு என்பது முன்பு இருந்தது என்று தொல்காப்பிய உரையில் காணப்படுகிறது. அதுபோல பாவைக் கூத்து அல்லது பாவை ஆட்டம் என்பதும், பதினோரு கூத்து வகைகளுள் ஒன்று. இதை ஆடியவள் செய்யோள் என்னும் செந்நிறம் கொண்ட திருமகள். அவளுக்குக் கொல்லிப் பாவை என்று பெயர் உண்டு. போருக்கு வந்த அசுரர்கள் மோகித்து, மெலிந்து விழும்படி அவள் புனைத்து கொண்ட உருவம், கொல்லி மலையின் மேற்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதை காண்போர் அப்பொழுதே மோகிப்பர் என்று சொல்லப்படுகிறது. மோகத்தைத் தரும் காமதேவன் போல, இவள் பாவை உருவமே மோகத்தைத் தரும். எனவே இவள் உருவைப் பாவையாக அமைத்திருக்கலாம்.

முன்னிக்கடலை” என்னும் திருவெம்பாவையிலும், சக்தியின் உருவாக வருணிக்கப்பட்டு, மழை பொழிதலுடன் பாவை நோன்பு சொல்லப்படுகிறது. எனவே, பராசக்தி என்னும் பெண் தெய்வத்தையே வடித்திருக்கலாம்.

ஆனால் சிலப்பதிகாரத்தில் வஞ்சின மாலையில், புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்டிரில் ஒருவராக ஒரு இளம் பெண் வடித்த பாவை பற்றிய குறிப்பு வருகிறது. பொன்னிக் கரையில் மணல் பாவை அமைக்கிறாள் அந்தப் பெண். அதுவே அவள் கணவனாகும் என்று மற்ற பெண்கள் சொல்லுகின்றனர். பிறகு அவர்கள் எல்லோரும் வீடு திரும்பிய பின்னரும், அந்தப் பெண் மட்டும் அங்கிருந்து அகலவே இல்லை. அந்தப் பாவையே தன் கணவன் என்று அவள் அந்த இடத்திலேயே இருக்கிறாள். அப்பொழுது ஆற்று நீர் கரை புரண்டு மணலில் பாய்கிறது. ஆனால் அவள் வடித்த பாவையை மட்டும் அழிக்காமல், அதைச் சுற்றிக் கொண்டு போகிறது. தான் வடித்த பாவை தன் கணவன்தான் என்று அவள் இருந்தமை அவள் பத்தினித்தனத்துக்குச் சாட்சி என்று சொல்லப்படுகிறது.

இங்கே இரண்டு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று, இப்படிப்பட்ட உருவம் கொண்டவன்தான் தன் கணவனாக வரவேண்டும் என்று அவ்வுருவைப் பாவையாக அமைக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.

மற்றொன்று, அந்த உருவம் கொண்டவனே அவள் கணவனாவான் என்று மெய்ப்பிப்பது போல ஆற்று நீரும் நடந்து கொண்டிருக்கின்றது. இது பிறவி தோறும் பாவை நோன்பு நோற்பதனால் ஏற்படும் பயனைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. இப்பிறவியில் இனி வரப்போகும் கணவன், முன் பிறவியிலும், இவளுக்குக் கணவனாக இருந்திருக்கின்றான். இவளது ஆழ் மனதில் பதிந்துள்ள அவன் உருவத்தையே பாவை நோன்பின்போது, மணலில் பாவையாக வடித்துள்ளாள். அவள் கணவன் அவனே என்று அவள் உறுதியாக அவ்விடத்திலேயே இருந்ததை, அவள் நோன்பினை ஏற்றுக்கொண்ட ஆற்று நீர், ஆமோதிக்கும் வண்ணம் அந்தப் பாவையை சிதைக்காமல் சென்றது. அவள் கணவன் யார் என்பதை அவளது பல பிறவிகளிலும், அந்த ஆற்றங்கரையில் அவள் நோன்பிருந்தமையால், ஆற்று நீர் தெரிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாறாக, சிறுமியர் வடித்த பாவையை, வைகை நீர் சிதைத்தது. அதனால் அவர் அழுவர் என்னும் வருணனையும் பரிபாடல் -7 இல் வருகிறது. தாங்கள் வடித்த பாவை சிதைந்து விட்டதே என்னும் துக்கம் இருக்கலாம். அல்லது, மேற்கூறிய வகையில் தன் கணவன் உருவம் என்று சமைத்த உருவம் சிதைந்ததே என்றும் அழுதிருக்கலாம்.

இந்த வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின் அவதாரங்களாகவோ அல்லது வேங்கடம், மாலிரும் சோலை போன்ற பதிகளில் உள்ள திருமால் உருவமாகவோ இருந்திருக்கலாம்.

பின்னாளில் பாவை நோன்பு

பாவை நோன்பு விவரிக்கும் பரிபாடல், அப்பாடல் எழுதப்பட்ட காலத்தைக் கணிக்கும் விதமாக கோள்களின் நிலையைக் கூறுகிறது. நான் தேடின வரையில் கி.மு. 1042, ஆவணி மாதம் இருந்த கோள் நிலை அதை ஒட்டி வருகிறது. பரிபாடல்கள் முதல் சங்கக் காலத்திலிருந்தே பாடப்பட்டு வந்திருக்கின்றன. பிறவி தோறும் பெண்டிர் பாவை நோன்பு நோற்றமை பற்றிக் கூறவே இந்நோன்பும், அது பற்றி விளக்கும் இப்பாடலும் மிகப் பழமை வாய்ந்தவையாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம்.

பிற்கால வழக்கிலும் இந்நோன்பு இருந்திருக்குமா என்று தேடினால், சிலப்பதிகாரத்தில் இதை ஒத்த ஒரு நோன்பு சொல்லப்படுகிறது. கணவனைப் பிரிந்து வாடும் கண்ணகியைப் பார்த்து, பார்ப்பனப் பெண்ணான அவள் தோழி தேவந்தியும் வருந்துகிறாள். தீய கனவு கண்டு வருந்தும் கண்ணகியிடம், கணவனைப் பிரியாமல் இருக்கச் செய்யும் நோன்பினை முன்பிறவியில் கண்ணகி செய்திருக்க மாட்டாள். அதனால்தான் இத்துன்பம் வந்திருக்கிறது. இருந்தாலும், இப்பிறவியில், அந்த நோன்பைச் செய்ய காவிரி நதியானது கடலில் சங்கமிக்கும் புகார்த் துறையில், சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு துறைகளில் நீராடி, காமதேவனைத் தொழுதால் இப்பிறவியிலும் கணவனைப் பிரியாது இருக்கலாம். மறு பிறவியிலும் போக பூமியில் பிறந்து கணவனைப் பிரியாது இருக்கலாம் என்கிறாள். ஆனால் கண்ணகி தங்களுக்கு அது வழக்கம் இல்லை என்கிறாள்.

(கனாத்திறம் உரைத்த காதை)
கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்’

பாண்டிய நாட்டில் வைகை நதி தைந் நீராக – தக்கதாக இருந்தது போல, சோழ நாட்டில், காவிரி ஆறு இருந்திருக்கின்றது. சோம குண்டம் என்பது சந்திரன் துறை. சந்திரனும், சூரியனும் ஒருவரை ஒருவர் பார்க்கும் மார்கழித் திருவாதிரையில் பாவை நோன்பு ஆரம்பித்தார்போல, இவை இரண்டும் எதிர்நோக்கும் துறைகளாக இருந்திருக்கலாம். அங்கே நீராடி, காமதேவனைத் தொழுதல், பாவை நோன்புக்கு இணையாக இருக்கிறது.

பின்னால், கோவலனுடன், கண்ணகியும் மதுரை புறப்பட்ட போது, இதே சங்கமத் துறைக்கு வருவது சொல்லப்படுகிறது. ஆனால், காமதேவனைத் தொழும் நேரமல்ல அது. அவ்விடத்தில் மணிவண்ணன் கோட்டத்தை வலம்வந்து, பயணத்தைத் தொடர்கின்றனர். மணிவண்ணன் என்பது திருமால். காமதேவன் திருமாலின் மைந்தன். சங்கமிருந்து காமதேவன் தொழுது, அருகில் திருமாலை வணங்கிச் செல்லும் வழக்கம், அந்நோன்பு நோற்றாரிடை இருந்திருக்க வேண்டும். அந்தணர்கள் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும். பாவை நோன்பிலும், அந்தணப் பெண் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுப்பாள் என்று வருகிறது. சிலம்பிலும், அந்த நோன்பைப் பற்றிக் கூறுபவள் ஒரு அந்தணப் பெண்.

சிலப்பதிகாரம் காலத்திற்குப் பிற்பட்டு, ஆண்டாள் காலத்திலும் இந்த வழக்கம் இருந்திருக்கலாம். கண்ணனை அவள் அடைய விரும்பவே, தான் இருக்கும் இடமே ஆயர்பாடி என்று அவள் உருவகித்து, திருப்பாவை அமையும் களம் ஆயர்பாடி எனப் பாடியிருக்கலாம்.

‘அங்கண் மா ஞாலத்து’ எனத் தொடங்கும் பாசுரத்தில், அரசர்களும் ‘சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்’ என்று சொல்வதன் மூலம், புகாரின் கண் உள்ள சங்கத் துறையைக் கோடிக் காட்டியிருக்கலாம். சோம குண்டம், சூரிய குண்டம் போல, அந்தப் பாடலில் ‘திங்களும், ஆதித்யனும்’ பற்றிய குறிப்பும் வருகிறது.

பாண்டிய, சோழ நாட்டில் மட்டுமல்ல, சேர நாட்டிலும் இந்த வழக்கம் இருந்திருக்கின்றது என்று கோபால பணிக்கர் என்பவர் எழுதிய புத்தகம் கூறுகிறது.

தமிழ் கூறும் உலகம் என்று மட்டுமல்லாமல், யமுனைக் கரையிலும், இந்த நோன்பு செய்யப்பட்டது என்பதால், இது, மழையை நம்பி இருக்கும் எல்லா இடங்களிலும் பொதுநலம் கருதி, ஆன்மிகமும் இணைத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக்குக் காரணன் இந்திரன். மழையை நம்பி இருக்கும் நிலங்களில் அவனுக்குப் பெயர் உண்டு. பாகவதத்தில் வரும் ஒரு குறிப்பில், இமயமலைப் பகுதியில் யாரும் இந்திரனை நம்பி இல்லை. ஊற்று நீரும், பனி உருகிய நீருமே அவர்களுக்குப் போதும் என்று வருகிறது. அந்த இமயப் பகுதியில் சேடி நாட்டைச் சேர்ந்த புது மணத் தம்பதியர், காமன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, புகார் நகரில் இந்திர விழா காணப் புறப்பட்டனர் என்று சிலப்பதிகாரம் கூறிகிறது.

பங்குனி உத்திரத்தில் வரும் காமன் பண்டிகை இமயத்தில் பிரசித்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை – அது பார்வதியின் பிறந்தகமாக இருக்கவே. தென் கோடியிலும் காமன் பண்டிகை, வட கோடியிலும் காமன் பண்டிகை. மனமொத்த மண வாழ்க்கையை விரும்பும் மக்கள், பாரதத்தில் எங்கிருந்தாலும், காமதேவனைக் குறித்து ஏதேனும் தவமோ நோன்போ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திர விழா என்பது மழையை எதிர் நோக்கி வாழும் தமிழ் பூமியில் நடந்திருக்கின்றது.

இந்திரனுக்கும் சேடி நாட்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இந்திரக் கொடியை நாராயணனிடமிருந்து இந்திரன் பெற்றுக் கொள்கிறான். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடியை சேடி நாட்டவரிடம் இந்திரன் கொடுத்ததாக வராஹா மிஹிரர் கூறுகிறார். அந்த இந்திரனுக்கு எடுக்கப்படும் விழவு என்பதால், சேடி நாட்டு தம்பதியர் புகார் வருவதற்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

மாறுபாடு உடையது என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒன்றே மதம், ஒரே வித வழக்கம் என்று இந்த பாரதப் பெரு நிலம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு இவையெல்லாமே சாட்சி.

தெய்வம் என்பதே இல்லை என்பதுதான் பகுத்தறிவு என்று கூறும் இன்றைய தமிழர் வாழும் இந்நாட்டில், இயற்கையும், மானுடமும் ஒத்து வாழ்ந்த இயல்பினைக் காட்டுவது பாவை நோன்பாகும். இயற்கையைப் பேணுங்கள், இயற்கை உங்களைப் பேணும் என்னும் உயரிய கருத்தின் அடிப்படையில் அமைந்தது இந்நோன்பு. அறிவியலும், ஆன்மிகமும் கலந்த பண்பாட்டினைப் பேசுவதுதான் இந்நோன்பு. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ‘தங்களுக்கு வழக்கம் இல்லை’ என்று கூறிய கண்ணகியே, தெய்வமான பிறகு, இளங்கோ அடிகளிடம் சொன்னாளே அதை மறவாமல் இருக்க வேண்டும்..

“தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்:
….தானம் செய்மின்: தவம் பல தாங்குமின்.”

கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!

இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்

—————

ஸ்ரீ சங்கத் தமிழ் மாலை —

ஸ்ரீ மத் பாகவதம் -10-22-காத்யாயினீ விரதம் பற்றிச் சொல்லும்

ஹே மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா சேருர் ஹவிஷ்யம் புர்ஜானா காத்யாயனி யர்ச்சன விரதம்

ஹேமந்தருவின் முதல் மாதத்தில் நந்தனுடைய ஆயர்பாடியில் உள்ள கன்னிகைகள் ஹவிஸ்ஸை
உணவாகக் கொண்டு காத்யாயினியைப் பூஜிக்கும் விரதத்தை அனுஷ்ட்டித்தார்கள்

ஆப் லுத் யாம்ப ஸி காளிந்த்யா ஜலாந்தே சோதயேருணே க்ருத்வா ப்ரதி க்ருதம் தேவீம் ஆனர்ச ந்ருப ஸை கதிம்

அருணோதயத்தில் யமுனை நதியில் நீராடி நீரின் கிட்டே மணலினால் தேவியின் உருவத்தைச் சமைத்து அர்ச்சித்தார்கள்

கந்தர் மால்யை ஸூரபி பிர் பலி பிர் தூப தீபகை உச்சா வசைது சோபஹார ப்ரவாள பல தண்டு லை

மணமுள்ள புஷ்ப சந்தனங்களால் அர்ச்சித்தும் தூப தீபங்கள் காட்டியும் பலிகள் உபகாரங்களாய்
சிவந்த பழங்களும் ரிஷிகளும் கொடுத்தார்கள்

காத்யாயனி மஹா மாயா மஹா யோகின் யதீஸ்வரி நந்த கோப ஸூதம் தேவி பதம் மே குருதே நம

அவர்கள் செய்த ஸ்தோத்ரம் -மஹா மாயையான ஸ்வரூபமாயும் மஹா யோகினியாயும்
எல்லாவற்றுக்கும் மேலான காத்யாயினி தேவியே உனக்கு நமஸ்காரங்கள் -நந்தகோபன் குமரனை எனக்குப் பதியாகச் செய்து அருள்

இதி மந்த்ரம் ஜபந்த்யஸ்தா பூஜாம் சக்ரு குமாரிகா ஏவம் மாஸம் வ்ரதம் சேரு குமார்ய க்ருஷ்ண சேதஸ

இந்த மந்த்ரத்தை ஜெபிப்பவர்களாய் கன்னிகைகள் பூஜை செய்தார்கள் –
இவ்விதம் கிருஷனையே மனதில் உடையவர்களாக பூஜை செய்தார்கள்
ஒரு மாதம் விரதம் அனுஷ்ட்டித்தார்கள்

பத்ர காளீம் ஸமானர்சு பூயான் நந்த ஸூத ப்பகு யுஷஸ் யுத்தாய கோத்ரை ஸ்வைரஸ் யோன்யா பத்த பாஹவஸ்

நந்தகோப குமரன் பதியாக வேண்டும் என்று பத்ரகாளியை ஆராதித்தார்கள்-

தினம் தோறும் யமுனையில் நீராடப் போகும் பொழுது கிருஷ்ண நாமத்தை உரத்த குரலில் பாடிக் கொண்டும்
ஒருவரை ஒருவர் கை கோர்த்துக் கொண்டும் சென்றார்கள் –

கதி -அயன -என்ற இரண்டு பதங்களால் மோக்ஷ மார்க்கங்கள் எவை என்று விசாரிக்கும் கத்யயனர் ரிஷி குலம்

தவத்தைந் நீராடல் என்று நீராட்டம் தபஸ்ஸாகவே பரிபாடல் சொல்லும்
தாய் அருகா நின்று தவத்தைந் நீராடல்
அம்பா வாடலின் ஆய் தொடிக் கன்னியர்

பேணும் சிறப்பில் பெண் மகவாயின் மூன்றாம் ஆண்டில் குழ மணை மொழிதலும்
ஐங்கணைக் கிழவனை ஆர்வமோடு போற்றுதலும் பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் பிங்கலந்த நிகண்டில் -1369-

ஐங்கணைக் கிழவனை-மன்மதனை கால் பிடித்தாள் அன்றோ கேசவ நம்பியைக் கால் பிடிக்க

பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.
இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன,
அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது.
மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.
அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலை பெற்றது போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல்.
காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். திவாகர நிகண்டைக் காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல்.

இந்த நீராட்டம் -ஆதிரைத் திரு நாளாக மலையாளத்தில் -திருவாதிரைக்கு ஒரு வாரம் முன்பு தொடங்கி
பெண்டிர் கூட்டமாகச் சென்று நீராடி திருவாதிரை அன்று புதிய ஆடை ஆபரணங்கள் சூடி
விசேஷ பாயாசம் கூடாரை வெல்லும் சீர் -போல் கொண்டாடுகிறார்கள் –

பத்ம புராணத்தில் ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்
மார்கழி சுக்ல பக்ஷ நவமி தொடங்கி ஏழு நாள்கள் பவ்ர்ணமி வரை
ஸ்ரீ மத் பாகவதம் சப்தாகம் பாராயணம் ஸ்ரேஷ்டம் என்கிறது

ஸ்ரீ மத் பாகவதத்தில் காத்யாயினி விரதம் அனுஷ்ட்டித்து வஸ்த்ர சோரம் நடந்து பின்பு கோவிந்தா பட்டாபிஷேகம் செய்தால் போல் இங்கும் உண்டே

————-

மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல் -ஸ்ரீ வராஹ நாயனார் விதைத்த வித்தே கோல் தேடி எழும் கொழுந்தாக ஆண்டாள்

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம் உத்3போ3த்யத்4ய க்ருஷ்ணம்
பாரார்த்ய2ம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்3த4ம் அத்4யாபயந்தீ |
ஸ்வோச்சிஶ்ட்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத் க்ருத்ய பு4ங்க்தே
கோ3தா3 தஸ்யை நம இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய: ||–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம்–மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் -பாசுரக் கருத்தும்(மாரி -ஆண்டாள் கூந்தல் -மலை -ஸ்தனம் -முழைஞ்சு குகை -ஹ்ருதய குஹரம்-ஹார்த்த விக்ரஹம் -யஸீதை இளம் ஸிம்ஹம் -ந்ருஸிம்ஹ குட்டி )
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேலும் வைத்துக் கிடந்த மலர் மார்பா -பாசுரக் கருத்தும்
ஆஸ்ரிதர்களுடைய வளர்ந்து -பருத்து -உயர்ந்து -நிமிர்ந்து நிற்கும் பக்தியே மலை -முலை

இவன் தூக்கமே-பரமனின் பையத்துயில் -எழுப்புவது -விசேஷ பக்திக்கு பரவசனாகி இருப்பவனை எழுத்து அத்வேஷ மாத்திரம் உள்ளோர்க்கும்
அருளி ஸூ முகனாகி அவர்கள் பக்தியையும் வளர்க்கத் தூண்டுவதே ஆகும்

அத்4யாபயந்தீ |-நினைவூட்டுகிறேன் -ஞாபயே ந சிஷயே -கண்டிக்கிறேன் இல்லை

இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய-இதம் இதம் பூய பூய -நான்கு தடவை -ஸ்லோகத்தில் உள்ள (நீளா-க்ருஷ்ணம்-ஶ்ருதி ஶத ஶிரஸ்-கோ3தா3)நான்கு தத்துவங்களையும் வணங்குகிறேன்

————

ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்தவை

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

அன்ன வயல் -சரீரத்தை வளர்க்கும் நெல் வளரும் இடம் -நினைவுகள் முளைத்து எழுந்து வளரும் மனம்
அன்னம் -சாரப் பொருளை விவேகிக்கும்
மார்கழி நீராட்ட நோன்பு -பகவத் ப்ரீதி யர்த்தம் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஸ்ரேயஸை அருளும் ப்ரஹ்ம வித்யை –
இதில் பகவத் அர்ப்பணம் ஆனால் தான் வேத வித்யை ஆகும் என்பதால் அரங்கற்கு இன்னிசையால் கொடுத்தாள்

பூ மாலை -நற் சித்தம் -ஸூ மனஸ்ஸூ
சூடிக் கொடுத்த பூ மாலையில் -பூமிக்கு உரிய மணங்கள் -க்ராண இந்திரிய இன்ப ஹேது
பாடிக் கொடுத்த பா மாலையில் வேத மணம் கமழும் -ஞான அனுஷ்டான அபி விருத்திக்கும் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஆத்ம ஸூ கத்துக்கும் ஹேது

———–

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! * தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *
நாம் கடவா வண்ணமே நல்கு

சுடர் கொடியே –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
வெளிச்சம் இல்லா விடில் சூர்யன் வெறும் தோசைக் கல்லு தானே

தொல் பாவை
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் -பரிபாடல்

————–

பாவைப் பிரபந்தம் ஒரு முத்தமிழ் நூல் வகை. எப்படியெனில் வெண்பாவுக்குரிய வெண்தளை கொண்டு எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவாகப் பாடப்படுகிறது.

—————-

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.–1-இப் பாசுரம் பர அவதார அனுபவம்

ஹார்த்த விக்ரஹத்தையே பாவ -என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 7 திருநாமம்
மதி நிறைந்த அளவைக்காட்ட -ஆல் -கார்த்திகை நக்ஷத்ரம்
சுக்ல பக்ஷ த்ரயோதசை -13 கலைகள் நிறைந்த சந்திரன் ஸூசிதம்
இரவில் 26 நாழிகை வெளிச்சம் -மீதி உள்ள 4 நாழிகை அடுத்த நாள் உஷஸ் காலம் என்பதால் வெளிச்சம் –
திரயோதசி சதுர்த்தி பவ்ர்ணமி -மூன்று நாள்களுக்குமாக 30 பாசுரங்கள் –
சீர் -வைதிக ஸ்ரீ ஆத்ம உத்கர்ஷம் அடைய ஸ்ரீ -பகவத் ப்ரீதி யர்த்தமாக இந்த நோன்பு

நேரே நடக்கும் செங்கோல் வளைந்து கொடுங்கோல்
யசோதா பிராட்டிக்கு உபாஸனா தெய்வம் நரஸிம்ஹன் -ஆகவே இவன் இளம் சிங்கம்
ஏல் ஓர் எம்பாவாய் -உணர்ந்து ஏற்றுக் கொள்வாய் -என்று கார்த்த விக்ரஹத்துக்கு அர்ப்பணம்
நீராடுதல் -பகவத் ஆஞ்ஞா ரூபம் படி -வகுத்து வைத்த நீர்மை யாகிற அனுஷ்டானம் –
ஸூத்தாந்த ஸித்தாந்தி -அந்தப்புர-மறந்தும் புறம் தொழா தவர்கள் –

ஆய்ப்பாடியை” இந்த இருள் தருமாஞாலமாயும், எம்பெருமானின் கல்யாண குணங்களை அறிந்தும், அறியாத சிறுவர்கள் போன்றவர்களாய் “சீர்மல்கும் செல்வச்சிறுமீர்காள்” எனவும் உருவகப்படுத்தியுள்ளார். இவர்கள் ஆத்ம குணங்களும் நிறைந்தவர்களாகையால், இந்த நன்னாளில் சிறந்த “ப்ரபத்தி உபாயம்” அனுஷ்டிக்க அழைப்பதுவே “நீராடப் போதுவீர்…. நேரிழையீர்” என்பதாகும்.
கூர்மையான வேல் போன்ற ஸங்கல்பம் உடையவனும், நம் பாபங்களை அழிக்க வல்லவனும், நித்ய யுவாவுமாயுள்ள இவனே க்ருஷ்ணாவதாரம் செய்துள்ள ஸர்வேஶ்வரன். ப்ரபத்தி செய்த நமக்கே மோக்ஷானந்தத்தைத் தருவான் என்பதை
“ஏரார்ந்த….பறை தருவான்” என்றவரிகளால் சொல்கிறாள்.
கண்ணபிரான் கர்ம, ஞான, பக்தியோகம் செய்ய முடியாது கலங்கிய அர்ச்சுனனுக்குக் கடைசியாகக் காட்டிய ஶரணாகதி மார்க்கத்தை,
ஆண்டாள் இந்த முதல் பாசுரத்தாலே காட்டியுள்ளாள்.

———–

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.–2-இப்பாசுரம் வ்யூஹ அவதார அனுபவம்

வையம் -மிக உயர்ந்த வண்டி -சொல் பொருள் -அனைத்து ஆத்மாக்களுக்கு உரிய ப்ரஹ்ம வித்யை இதுவே
பூணி இன்றி பொறியின் இயங்கும் மானமே வையம் -பெரும் காதை
மாடு குதிரை பூட்டாமல் இந்த்ரியங்களால் இயங்கும் உயர்ந்த வண்டி
பையத்துயின்ற -காளிதாசன் ஸ்வ பதோ ஜாக ரூகஸ்ய -உன்னைப் போல் விழித்துக் கொண்டே தூங்குபவன் இல்லையே –
ஐயம் -விதி வழி கொடுத்தல்
பிச்சை -இஷ்டப்படி கொடுத்தல்
நாட் காலே -பொழுது புலரும் வேளை -நாள் கால் வைத்திடும் நேரம்

வராஹ அவதாரத்தில் எம்பெருமான் சொல்ல வந்த அவதாரமே ஆண்டாள்.
க்ருஷ்ணானுபவத்துக்கு தேஹாலங்காரம் வேண்டாம். ஆத்மாலங்காரம்தான் முக்யம். பொறுமை, புலனடக்கம், காமமின்மை ஆகியன ஆத்மாவின் ஆபரணங்கள். உய்யும் வழி ஶரணாகதி அதனை அடைய ஆறு அங்கங்கள் என்பதனை “உய்யுமாறு” என்கிற பதம் காட்டுகிறது.
தர்மத்தையே நினை, பாடு, பேசு, அனுமதி கேள், பார் என்கிறது இப்பாசுரம்.
இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு ஆசார்யனுக்ரஹமும், எம்பெருமானின் கடாக்ஷமும் கிடைத்து மோக்ஷம் கிடைக்கும்.

“நாமும் நம்பாவைக்கு….பாடி”—
நமக்காக ஏற்பட்ட ஶரணாகதி என்ற நோன்பைச் செய்யவும், அதற்கு வேண்டிய சடங்குகளைச் செவியால் கேட்டும், அனுஷ்டித்தும் பயன் பெறுவீர்களாக. த்வயமந்த்ரத்தின்
த்யான ஶ்லோகத்தின்படி அவனை வணங்கி அம்மந்த்ரத்தைச் சொல்லி ப்ரபத்தி செய்தல்வேண்டும்.

“நெய் உண்ணோம்……தீக்குறளை ஓதோம்”—-காம விகாரங்களைத் தரும் பொருட்களை உண்ணாமலும், காம்ய கர்மாக்களை விலக்கியும் சரீர அலங்காரங்களைத் தவிர்த்தும் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்தும், பர ஹிம்சை, நிஷித்த கர்மா பாகவத அபசாரம் இவைகளைச் செய்யாமல், வாக்காலே தவிர்க்க
வேண்டியவைகளைத் தவிர்த்து செயல் படவேண்டும்.
“ஐயமும்….காட்டி..” ஆசார்ய உபகாரம், பாகவத கைங்கர்யம்
முடிந்த வரை செய்து உய்யும் வகை நினைந்து சந்தோஷிக்க கற்க வேண்டும்.

———-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.-3-இப்பாசுரம் விபவ – அவதார அனுபவம்

முதல் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு -உலகளந்த-உலகு அளவு கோலாக அவனை அளந்து –தனது சிறுமையையும் அவனது பெருமையையும் உணர்ந்ததே
பரத்வத்துக்கும் வ்யூஹத்துக்கும் மேல் உயர்ந்த விபவம் அன்றோ

அர்ஜுந உவாச–
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா–ஜகத் ப்ரஹ்ருஷ்யத் யநுரஜ்யதே ச.–
ரக்ஷாம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி–ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்த ஸங்கா—৷৷11.36৷৷

அர்ஜுனன் கூறுகிறான் -இந்திரியங்களை நியமிக்கும் தலைவனே -உன்னுடைய புகழைக் கண்டு இப்போரைக் காண
வந்து இருக்கும் தேவர் கந்தர்வர் முதலிய உலகு அனைத்தும் உன்னை மிகவும் உகக்கின்றது -ஈடுபடவும் செய்கின்றது –
அரக்கர்கள் பயந்தவர்களாய் எல்லாத் திக்குகளிலும் ஓடுகிறார்கள் –
சித்தர் கூட்டங்கள் அனைவரும் வணங்கவும் செய்கின்றார்கள் -இவை அனைத்தும் பொருத்தமே

ஓங்கு பெரும் செந்நெல் -அவனது அருளால் இவர்கள் நெஞ்சில் பக்தி பெருகி
ஊடு கயல் உகள -அவன் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் இவர்கள் மனத்தில் ஓடி ஒளி வீச
குவளைப் போது -மலராத மனஸ்ஸூ
பொறி வந்து -சங்கு சக்கரங்கள் ஒற்றிக் கொண்ட ஆச்சார்யர்கள்
கண் படுப்ப -சிஷ்யர்கள் மனஸ் மலரும் அவகாஸம் பார்த்து இருக்கும் ஆச்சார்யர்கள் –
இவர்களையே வள்ளல் பசுக்கள் என்கிறாள்
ஞானம் அனுஷ்டானம் நிறைந்து -கிருபை சுரந்து -அர்த்த ஞானம் அருளி -இவர்களுக்காக தானே பிரபத்தி பண்ணி
அபிமானத்தால் பாதார விந்தங்களிலே சேர்த்துக் கொள்ளுமவர்கள்
மோக்ஷ பர்யந்தமாக அருளும் செல்வமே நீங்காத செல்வம்
சிஷ்யன் கார்யம் இவர்கள் அருளிச் செய்வதை வாங்கும் பாத்திரமாக இருப்பதே –

பரக்கும் புகழ் வரும் பைம் பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கின்றவர்க்கு இவை ஈந்தால் அறம் உளது என்று இயம்பார்
கரக்கும் கருத்துடைத் தேசிகர் கன்று என நம்மை எண்ணிச்
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே –ஸ்ரீ அமிருதாசுவாதினி -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-14-

இப் பாடலில் பக்தன் எப்படி இருத்தல் வேண்டும் என்னும் வரையறை விதிக்கப்படுகிறது. கழனியில் தலை சாய்ந்து நிற்கும் கதிர்போலப் பக்தன் அடக்கத்துடன் தலைக்கனமின்றி இருக்க வேண்டும். அக் கழனியின் தண்ணீரில் வாழும் கயல் மீன்களைப் போல் (அறியாமை, தீவிரம் நீங்கிய) விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கரு நெய்தல் மலர் போல இல்லறத்திலிருப்பினும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க வேண்டும்.

அஷ்டாக்ஷரமாகிய திருநாமம் பாடினால் அவனுகந்து நம்மை ஏற்பான். கட்டிப் பொன் போல எம்பெருமான் பணிப் பொன் போன்றது அவன் நாமம். நாமத்தை தரிக்கவும் பாடவும் முடியும் அனன்ய சேஷத்வம், அனன்ய உபாயத்வம், அனன்ய போக்யத்வம் என்ற மும் மழையால் ஆத்மா பலம் பெறுகிறது செந் நெல் உயர்வது போல். கயல்கள உழல்வது எம்பெருமான் பெறும் கைங்கர்யம்.
வாங்கக் குடம் நிறைக்கும் பெரும் பசுக்கள் போல ஆசார்யர்கள் வள்ளண்மையால் நமக்கு அளிக்கும் ஞானம் சொல்லப்படுகிறது. நீங்காத செல்வம் என்பது எம்பெருமானுடனே சேர்ந்து நாம் அனுபவிக்கும் அந்த மிலா பேரின்பம்.
“ஓங்கி உலகளந்த……தீங்கின்றி”-
த்ரிவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்த க்ருஷ்ணனுடைய “யத் ப்ரபத்திம் விநா ஸர்வைர்யஸ்ய மாயா துரத்யயா
தனஞ்ஜய ரதோத்தம்ஸம் தத் ப்ரபத்யே பரம் மஹ:”
—என்ற தனியனின் அர்த்தத்தை (அவன் விரித்த வலையில் சிக்கி நாம் அல்லல்படுகிறோம். அம் மாயத் திரை விலக, அர்ஜூனன் தேர் தட்டில் ப்ரகாசமாக ஒளிரும் பரம் பொருளாகிய க்ருஷ்ணனை சரண் புகுகிறேன்) நினைத்து ஶரணாகதி ரஹஸ்யத்தைப் பலரும் அறியும் வகையில் உபதேசித்து அனுஷ்டித்தால் அனன்ய சேஷத்வம் முதலான தீங்கின்றி இருப்பர்.

—————-

ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.—4-அந்தர்யாமி -பரமான பாசுரம் –

முதல் மூன்றும் பர வ்யூஹ விபவ -வாழ்த்துப் பாசுரங்கள்
அடுத்து வான் சிறப்பு பாசுரம் -மேகமே நாராயணன் -அந்தர்யாமி -பரமான பாசுரம் –
வலம்புரி போல் நின்று அதிர்ந்து-என்பதையே விவரித்து
மேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியம் -26-
ஊழி முதல்வன் –ஊழியான் முதல்வன் -ஸம்ஹார கர்த்தா -ஸ்ருஷ்ட்டி கர்த்தா இரண்டும் இவனே

மழையே இறைக் கருணையாவது பாடலின் சிறப்பு. மேகம் கடல் நீரை உண்டு எடுத்துக் கொள்வதைப் போல இறைவன் பக்தியை எடுத்துக்
கொள்கிறான். எங்கும் பரந்து செயல்படும் சக்தியாகிறான். மின்னலின் ஒளிர்வும் இடியின் முழக்கமும் போலத்
தப்பாது தெரிய வரும் வடிவம் கொள்கிறான். தனது கருணையைப் பக்தனுக்கு மட்டுமன்றி உலகுக்கே
பொழிகிறான். இப்படியாக இறைக் கருணையின் அளப்பற்ற பெருமையை பக்தன் தவறாது உணர்கிறான்.

மேகங்கள் உப்பு நீரை மதுரமாக்கித்
தருவது போல் ஆசார்யன் வேதார்த்ங்களை நமக்களித்து ஞானம் பெறச் செய்கிறார்.
ப்ரத்யுபகாரம் எதிர் பார்க்காத மழை போல் ஆசார்யனும் எந்த லாபமும் எதிர்பார்ப்பதில்லை.
மேகங்கள் போல ஆசார்யனும் சஞ்சாரம் செய்து ஞான மழை பொழிகின்றார்.
மழை மேகம் மின்னுவது போல ஆசார்யன் ஞானத்தால் ப்ரகாசிக்கிறார். சங்க முழக்கம் போல தம் கருத்தை ஸ்தாபிக்க ஆசார்யனும் சிம்ஹ கர்ஜனை செய்கிறார்.
மேகம் வர்ஷிக்கும் மழை போல் ஆசார்யனும் வாதங்களை வர்ஷித்து எம்பெருமானை ஸ்தாபிக்கிறார்.

————

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.–5-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –

தூய பெருநீர் யமுனைத் துறைவனை–உபாயாந்தரங்கள் -பக்தி -பிரபத்தி -இவற்றிலும் வ்யாவ்ருத்தமான ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
அணி விளக்கு -ஸம்ஸார ஆரணவத்துக்கு கலங்கரை விளக்கு –
அக்கரை சேர போதம் -நாவாய் -நயாமி பரமம் கதிம் –
மனம் மொழி செயல்கள் -பெரிய திருமொழி -1-6-7 தொடக்கி மூன்று பாசுரங்களால்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

எம்பெருமானின் எல்லா அவதாரங்களையும் ஆண்டாள் குறிப்பிடுகிறாள் இப்பாசுரத்தில்.
  • மாயன் —பரரூபம்
  • மதுரை மைந்தன் —விபவம் (திருப்பாற்கடல்)
  • துறைவனை —வ்யூகம்
  • விளக்கு —அந்தர்யாமி 
  • தாமோதரன் —அர்ச்சை
தூய பெருநீர் என்பது விரஜையைக் குறிக்கும்.
தேவகி, யசோதை என் இரு தாய்மார்கள் அவனுக்கு.
அது போல காயத்ரி, அஷ்டாக்ஷரம் என்ற இரு மந்த்ரங்களும் நமக்குத் தாய்க்கு ஒப்பானவை. இதன் பொருளை பகவான் நரநாரண அவதாரம் செய்து விளக்குகிறான். பக்தி என்ற கயிற்றுக்கு கட்டுப்படுபவன் எம்பெருமான். அவனைச் சரணாகதி செய்தோமாகில் சஞ்சித பாபங்களும், புத்தி பூர்வமாய் பின்னால் செய்யும் பாபங்களும் பொசுங்கி விடும்.

———-

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–6-

ப்ரஹ்ம முஹுர்த்தே உத்தாய -ஸூர்ய உதயத்துக்கு முந்திய 2 ஹோரை 5 நாழிகைப் பொழுது தான் ப்ரஹ்ம முஹூர்த்தம்

மெய், மனம், ஆன்மா என்ற மூன்றையும் எழுப்பும் விதத்தில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது என்று கொள்ளலாம்.

ஹம்ஸாவதாரம் எடுத்த பகவானும், அவனருள் பெற்ற ஆசார்யர்களும் ஸத்வ குணம் பெற்ற சங்கைப் போல ப்ரணவத்தின் அர்த்த விசேஷங்களை நமக்கு உபதேசிப்பது கேட்க வில்லையா என்கிறாள்.
அவித்யை என்ற பூதனையை அழித்து, சரீரமாகிய வண்டியை
கெட்ட வழிகளில் ஈடுபடாமல் நல்வழிப் படுத்துவோர் ஆசார்யர்கள். இவர்கள் ஸம்ஸார போகத்தில் ஆசைப்படாது ப்ரபத்தி மார்க்கத்தில் சேதனர்களை சேர்த்து ஹரி என்ற பேரொலி எழுப்பி அவனுள்ளம் குளிரச் செய்து நம்மை அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி உபகாரம் செய்கிறார்கள்.

——

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.-7-

கிளியும் பூவையும் பேசும் பறவைகள்
பூவை -நாகணை வாய்ப்புள் –நார்த்தம் பிள்ளை -கறுப்பும் மஞ்சளு மான இறக்கைகள் -குருவிகளைக் காட்டும் பெரியவை
கீசு -க ஈசு -ஈஸாவாஸ்ய உபநிஷத் ஸித்தமானவன் -எவன் என்று பக்ஷிகள் கேட்க ஹரி என்று ரிஷிகள் பதில் –

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையாய் வைக்கப் படும் -அலகை -பேய்
காசு -பொன்னாலான அணிகலன்
பிறப்பு -சிப்பிகளில் தானாக விளையும் முத்து -கடலில் விளையும் பவளம் பொருள்கள் –
மலை சுரங்கம் இவற்றில் உள்ள ரத்னம் வைரம் கோமோதகம் போல்வன

ஆனைச் சாத்தன் என்ற பறவை கரிக்குருவி என்றும் செம்போத்து என்றும் பலவாகக் கூறுவார்கள். கரிக்குருவி கதிரவன் எழும் காலையிலும் கதிரவன் மறையும் மாலையிலும் ஜிவ்வென்று மேலெழும்பிச் செங்குத்தாகக் கீழே பாய்ந்து வானத்தின் குறுக்கே பறந்து மீண்டும் மெலெழும்பிப்
பறக்கும் இயல்புடையது. மேலேறும் போது சீச்சென்ற குரல் உயர்ந்தொலித்துக் கீழே விழும் போது மெல்ல மறைந்து பறக்கும் போது இல்லாமல் போய் மீண்டும் ஒலித்துக் குறைந்து தேயும். எனவே இந்தப் பாடல் குறிப்பது கரிக் குருவியைத் தான் என்பது தெளிவு. எனினும் கரிக் குருவி காலையில் பறப்பதில்லை. மாலையில் மட்டுமே பறக்கும் என்றும் சொல்வார்கள். அதுவன்றியும் கரிக் குருவிக்குத் தமிழில் கஞ்சனம் என்றே பெயர் என்பதையும் சுட்டிக் காட்டுவார்கள். செம்போத்து என்று சொல்வாரும் உண்டு. ஆனால் செம்போத்து கீசு கீசென்று ஒலி
எழுப்புவதில்லை. பொதுவாகக் காலை நேரத்துப் பறவைகளின் ஒருமித்த ஒலிகளின் சங்கமம் என்று கொள்வது
பொருத்தமாக இருக்கும். ஆயினும் ஆனைச் சாத்தன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் அப்படிக் கொள்வதும்
சரியெனத் தெரியவில்லை.

வ்ரஜபாஷையில் கன்ஹா என்பதை நாம் கண்ணன் என்கிறோம். கிச்சா என்பதை கீசு கீசு என்று பறவைகள் சப்திப்பதாய்க் கொள்ளப்படுகிறது.
“கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா” “காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி” என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பறவைகள் எம்பெருமான் பேர் சொல்லும் அழகைக் காட்டுகிறாள்.
கேசவன், நாராயணன் எனப்பாடி பகவதானுபவம் செய்ய எழுந்து வரும்படி தலைவியை அழைக்கிறார்கள்.
ஆனைச்சாத்தம் கலந்து பேசுதல் என்பதன் மூலம் காலக்ஷேப கோஷ்டியில் சேர அழைக்கிறாள். இதிகாஸ புராணங்கள் இந்த உரையாடல்களை கீழ்க் கண்டபடி இப் பாசுரத்தில் ஸ்லாகிக்கின்றன.
க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதம், ஸுகர் பரீக்ஷித் ஸம்வாதம், உத்தவர் விதுரர் ஸம்வாதம், மைத்ரேயர் விதுரர் ஸம்வாதம் ஆகியன ப்ரஸித்தமானவை.
காசு என்பது த்வயமந்த்ரமாகவும்
பிறப்பு என்பது திருமந்த்ரமாயும் கொள்ளப்படுகின்றன. இரண்டும் ஆசார்யர்கள் நமக்களிக்கும் ஆபரணங்கள்.
அவர்கள் ஞானப் பிறப்பையளித்து பகவானுடன் நம்மைச் சேர்த்து வைக்கிறார்கள் இந்த காசும் பிறப்பும் கடைந்தெடுத்து அளிப்பனவே இதிகாச புராணங்களும், ப்ரபந்தங்களும். ஆக இந்த பகவதனுபவம் பெற நாயகியை தோழிகள் எழுப்புகின்றனர்.
ஞானம், அனுஷ்டானம் என்ற இரு இறக்கைகளைக் கொண்டு ஆசார்யர்கள் சேதனனை உய்விக்கச் செய்யும் மந்த்ரோபதேசங்கள், பதவாக்யார்த்தங்கள் திருமாளிகை தோறும் ஒலிப்பதே “கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து பேசின பேச்சு” என்பது.
உபநிஷத்துடன் பகவத் விஷயமும் சேர்ந்து கமழ்வது “வாஸ நறுங்குழல் ஆய்ச்சியர் கூந்தல் மணம் போல”.
புத்தி என்ற மத்தினால் த்வயமாகிய தயிரைக் கடைந்து நாராயணனாகிய வெண்ணெயை எடுத்து மோக்ஷ வழி காட்டுகின்றார்
ஆசார்யன். இத்தகைய ஸப்தங்களைக் கேட்டும் இன்னும் உறங்குகிறாயே! க்ருஷ்ணானுபவத்தால் தேஜஸ்வியாகிய நீ எங்களது அஞானத்தையும் போக்க எழுந்துவா. நாராயணன், மூர்த்தி, கேசவனைப் பாடலாம் என்கிறார்கள் தோழிகள்.

———

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–8-

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் போல் புல் விட்ட தளிரை -விடு என்னும் பகுதி அடியாக வீடு -சிறு வீடு -என்கிறாள்

ஸம்ஸாரம் என்ற இருட்டிலிருந்து ஸத்வ குணம் மேலோங்கிய ஶரணாகதனுக்கு விடியல் கிடைக்கிறதை “கீழ்வானம் வெள்ளென்று” என்பது குறிக்கிறது.
எருமையின் மெத்தனம் போல மெதுவாக மோக்ஷம் வேண்டும் பக்தி யோகத்தை “எருமை சிறுவீடு” எனக் காட்டுகிறார்.
பக்தி யோகம் செய்யப் போகிறவர்களைத் தடுத்து
ஆசார்யனிடம் ஶரணாகதி செய்ய அனுப்புகிறாள் – “போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்று.
மா வாய் பிளந்தானை என்பதில் அஹங்காரத்தை அழிக்கிறான் என்கிறார்.
காமம் க்ரோதம் என்ற இரு மல்லர்களை அழித்து கண்ணனிடம் ஆசை ஏற்படச் செய்கிறார் ஆசார்யன்.
இத்தகைய ப்ரம்ஹ தத்வத்தை நமக்களிக்கும் ஆசார்யன் தேவாதி தேவன். அவர் தனியன்களை ஸ்மரித்து அவரை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறாள் ஆண்டாள்.

————–

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.–9-

ஊமையோ -மௌன விரதம் -செவிடோ -ப்ரத்யாஹாரம் -ஸ்ரோத்ரிய இந்திரிய அடக்கம் —
அனந்தலோ –
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்,
புயல் மே ம் போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக் கீழ்,
சயமே யடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான் பெற்ற துறுமோ பாவி யேனுக்கே?—போல்

ஜகத் ஶ்ருஷ்டிகர்த்தாவாகிய எம்பெருமான் மிக்க ஸௌலப்யத்துடன் இந்த ஆய்ப்பாடியில் வந்து பிறந்துள்ளான்.

அவனே “மாமாயன்” அவனுக்கு சுப்ரபாதம் பாட வாருங்கள். “லோகபந்துர், லோகநாதோ, மாதவோ, பக்த வத்ஸல:” என்ற ஸஹஸ்ர நாம வரிகளை ஆண்டாள் பிடிக்கிறாள்.

கண் படைத்த பயன் கண்ணனைத் காண, நா படைத்த பயன் அவன் நாமங்களைச் சொல்ல, காது படைத்த பயன் அவன் புகழ் கேட்க என்பதனை உணர்த்துகிறாள்.
“சிறையிருந்து ஏற்றம் பெற்றாள் ஸீதாபிராட்டி” என்றால் “சிறையில் பிறந்து ஏற்றம் பெற்றவன் இந்த மா மாயன்”.
ஶரணாகதி செய்தவன் ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் விட்டு விடுவதால் பயமும் , பரமும் தொலைந்தவனாய் மார்பில் கை வைத்து தூங்குகிறான்.
ஆசார்யன் தந்தையைப் போல் தன் சிஷ்யனுக்கு எம்பெருமான் பற்றிய ஞானத்தை ப்ரகாசிக்கச் செய்கிறான். அந்த ஞானம் பெற்றதால் சிஷ்யன் துயிலணை மேல் கண்வளர அவனை எழுப்புகிறார்.
ஒரு ஜீவன் தன் தனயனுக்கு பிறவி தந்து, ப்ரும்ஹோபதேசம் செய்து, அன்னமளித்து மூன்று முறை தந்தையாகிறார்.
ஆசார்யன் என்பவர் ஞானமளித்து, பயத்தை நீக்கி இரண்டு முறை தந்தையாகிறார்.
ஆக 2 தந்தைகள் ஒருவனுக்கு. உபதேசம் பெற்று
த்வயமர்த்தானுஸந்தானம் செய்யும் த்யான நிலையே “ஊமையோ அன்றிப் செவிடோ” என்பது.

———

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.–10-

ஆழ்வார்களின் இலக்கியத்தில் மிக அதிகமாகப் பேசப்படுவது கண்ணன் அவதாரம்தான் .–முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பாடல்களிலேயே பேசப்படும் அவதாரங்களின் எண்ணிக்கை பின் வருமாறு அமைந்துள்ளது.

கண்ணன் = 60, வாமனன் = 51, நரசிம்மன் = 19, ராமன் = 15, வராகம் = 12, கூர்மம் = 1.

நாற்றத்துழாய் நாச்சியாருக்குச் சொல்லும் கதைகள் பல.
“நீலார்  தண்ணந்துழாய் கொண்டு என்நெறிமென் குழல் மேல் சூட்டீரே” என்கிறாள். கண்ணன் வரவை எதிர்நோக்கி பதட்டத்துடனிருந்த ருக்மிணி பிராட்டியின் மனதுக்கு ஶாந்தி அளித்தது க்ருஷ்ணன் சூடி வந்த துளசி கந்தமே.
பெரிய மாலையானால் –  “தோளிணைமேலும்” 
சிறிய மாலையானால் – “சுடர்முடிமேலும்”
உதிரியாயிருப்பின் –“தாளிணைமேலும்” புணர்ந்த தண்ணந்துழாய் அம்மான் என்கிறார் நம்மாழ்வார்.

“மாற்றமும் தாராரோ” என்பதில் மதுரகவிக்கு அருளியது சொல்லப்படுகிறது.
நான்காம் வர்ணத்தில் பிறந்த நம்மாழ்வார் முதல் வர்ணத்தில் பிறந்த மதுர கவிக்கு ஆசார்யனாகிறார்.
“அத்தை தின்று அங்கே கிடக்கும்” – என்று முன்முதலாக மதுர கவிக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.

—–

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.–11-

இந்தப் பாடல் முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரைக் குறிப்பதாகச்
சம்பிரதாய விளக்கங்கள் காண்கின்றன. முதலாழ்வார்கள் மூவரும் ஓரிடத்தில் நிலையாகத் தங்காதவர்களாக
எங்கும் திரிந்து யோகியராக இருந்தவர்கள். தமது பாடல்கள் வழியாக அறியாமையையும் இறைத் தொடர்பு உணர்வு இல்லாமையையும் நீக்க எங்கும் திரிந்தவர்கள் இந்த ஆழ்வார்கள். அதனாலேயே எங்கும் தேடிப் போய் ஆணவத்தை அடக்கியதாகக் கூறுவது இவர்களுக்கு மிகவும்
பொருத்தமாக அமைகிறது. இம் மூவரும் பெண் வழியாகப் பிறந்தவர்களாக அன்றிப் பொய்கையிலிருந்தும்
பூவிலிருந்தும் கிணற்றிலிருந்தும் தோன்றி வந்தவர்கள் என்பதால் எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். தவிரவும்
எந்த வித உலகப் பந்தத்தோடும் தம்மைப் பிணைத்துக் கொள்ளாதவர்கள். துறப்பதென்பது கூட இவர்களைப்
பொறுத்த அளவில் எந்தப் பொருளுமில்லாதது. ஏனென்றால் ஏதாவது இருந்தால்தானே அதைத் துறக்க முடியும்?
எனவே குற்றமொன்றில்லாதவர்கள் என்ற விளக்கம் முதலாழ்வார்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

இப்பாசுரம் நம்மாழ்வாரைக் குறிப்பதாயுள்ளது. நாஸ்திக வாதிகளை வாதமிட்டு ஓடச் செய்யும் பராங்குசன். “செற்றார் திறலழிய சென்று செறுச் செய்யும்” என்பதால் பிறந்தது முதல் அழாது, பேசாது புளியம் பொந்தில் இருந்ததால் “குற்றமொன்றில்லாதவர்”.
அழகில் சிறந்த இந்த ஆழ்வார் மீது எம்பெருமானே மையல் கொண்டாராம். ஆழ்வார் மேல் கொண்ட ஈடுபாடு, அவரைத் திருமேனியுடனேயே வைகுந்தம் அழைத்துச் செல்லத் துணிந்ததிலிருந்து வெளிப்படுகிறது.
(திருவாய்மொழி 7-2-10)
“முகில் வண்ணன் அடி அடைய”,
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன”
“முகில் வண்ண வானத்து இமையவர்” என்ற வரிகளை ஆண்டாள் இதில் பொருத்திக் காட்டுகிறாள். நாயகி ரூபத்தில் கொண்டையுடன் கூடிய ஆழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹமே “செல்வ பெண்டாட்டி” என்பதில் தெரிகிறது.
க்ருஷ்ணன் தன் கரங்களாலேயே கறவைக் கணங்களைத் தான் ஒருவனாக அடங்க கறக்கிறான்.
ஈவிலாத தீவினைகளால் பலகோடி ஜீவராசிகளைப் பிறப்பித்து நிர்வகிக்கிறான் இந்த பசுக் கணங்கள் போல. பகைவன் இருப்பிடம் சென்று வென்று தன் திறலைக் காட்டுபவன் எம்பெருமான். தன் மேல் கர்மாதீனமான பாபங்கள் ஒட்டாதவாறு பல அவதாரங்களை செய்வதால் அவன் தோஷமற்றவன்.

——–

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.–12-

தானாகப் பெருகிப் பாயும் பால் இறைவனின் கருணை என்பார்கள். அருச்சுனன் கேட்காத போதும் கீதையில் கண்ணன் தானாக முன்வந்து உபதேசம் அளித்ததை நினைவில் கொள்ளவேண்டும்.

“திருமாலிருஞ்சோலை என்றேன் திருமால் என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”–என்பது போல தன்னையே தரும் கற்பகம் எம்பெருமான் என்பது “கனைத்து” என்ற சொல் உணர்த்துகிறது.
நற் செல்வன் என்பதால் பாகவத கைங்கர்யம் கொள்ளப்படுகிறது.
பரதன், ஶத்ருக்னன், லக்ஷ்மணன்,‌ விபீஷணன் ஆகியோர் கைங்கர்ய செல்வர்களாகிறார்கள். ராவண பாணம் ஹனுமானைத் தாக்கியதால் சினம் கொண்டான் ராமன். ஸீதா பிராட்டியைப் பிரிந்து வருந்தி அவள் மனத்துக்கினியானாகினான்.
ஆசார்யன் தனியன்களை தான் ஸேவித்து சிஷ்யர்களையும் ஸேவிக்கச் செய்வது “கனைத்து” என்ற பதம் உணர்த்துகிறது.
“பனித்தலை” என்பதன் மூலம் வேதங்களின் சிரோ பூஷணமாகிய உபநிஷத்துக்களையும்,
“நனைத்தில்லம் சேறாக்கும்” என்பதால் பால் பெருக்கெடுத்தோடுமாப்போல அதனை பகவத் விஷயத்துடன் கலந்து சிஷ்யர்களுக்கு அளிப்பது கூறப்படுகிறது.
“நற் செல்வன்” என்பவன் க்ருஷணானுபவமும், அவனது தங்கை மனத்துகினியானாகிய ராமானுபவம் செய்பவர்கள்.
கன்று நான்கு காம்பு மூலம் சுரப்பது போல் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு நான்கு விதமாக விஷயங்களை சாதிக்கின்றனர்‌.

  1. கருணையுடன் தானாகவே உகந்து உபதேசித்தல்
  2. தான் பெற்ற ப்ரும்ஹானுபவத்தை பகிர்தல்
  3. சிஷ்யன் ப்ரார்த்திப்பதைச்சொல்வது.
  4. பரமத நிரஸனம் செய்து நம் ஸம்ப்ரதாயத்தின் மேன்மை சொல்வது.
நற்செல்வன் தங்காய் என்பதற்கு “ஞானச்செல்வனாகிய ஆசார்யன்
தன் சிஷ்யனுககு பதம்படா நெஞ்சைச் சேறாக்க வல்ல சில
ஈரச் சொற்களைச் சில தார்மிகர்கள் வைத்துப் போந்தார்களே”
 என்று ஈடு வ்யாக்யானம் காட்டுகிறது.

——–

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.–13-

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் -பயிரில்
களை போல் அசுரரைக் காய்ந்தான் தன் கையில்
வளை போல் எம்மாசிரியர் வாக்கு –ஸ்ரீ அமிருத ரஞ்சனி –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர்-5–

போதரிக் கண்ணினாய் என்கிறார்கள். செவ்வரி ஓடிய அழகிய கண்கள். உணர்வின் முகிழ்வாய்த் தெரியும் கண்கள்.

அரி என்றால் மான். துள்ளித் திரியும் மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவள் என்றும் பொருள் காணலாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் மான்.
பாவையின் கண்கள் குவளை மலர்களைப் போலும் மானின் விழிகளைப் போலும் அழகாக இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்.

போது என்றால் மலர்: அரி என்றால் வண்டு என்றும் பொருள்.
மலரில் கிடக்கும் வண்டைப் போலக் கண்மணி சுழல்கிறதாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் போட்டி என்றும் பொருள்.
அழகில் மலருக்குப் போட்டியாகும் கண்கள் என்றும் சொல்லாம்.

புள்ளின்வாய் கீண்டானை என்பது கொக்கு போல் கபடமான (சிறிய மீன்களை விட்டு பெரிய மீனைப் பிடிக்கக் காத்திருக்கும் கபடம்) செயல்களைச் செய்பவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்ற கருத்தை அறிவிக்கிறது.
பொல்லா அரக்கன் ராவணன். சாது அரக்கன் விபீஷணன். ராமனால் ஸஹோதரனாய் பாவிக்கப் பட்டவன்.
கிள்ளிக் களைந்தான் எனில் ராமன் நகத்தால் கிள்ளி எறிவதுபோல பாணத்தால் அநாயசமாய் செய்தான் என்பதாகும்.
“அத்திர அரக்கன் முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்”-என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
எம்பெருமான் ராவணன், பகாசுரன் ஆகியோரை அழித்து தம்மை நமக்கு அளித்த படியால் “கீர்த்தி” என்கிறாள் ஆண்டாள்.
ராம க்ருஷ்ணாவதாரங்களை முடித்துக்கொண்டு சென்ற
பின்பும் “திருவணை (ராம சேது), கீதை” இரண்டையும் நாம் உய்ய விட்டுச்சென்ற பரம உபகாரத்தைப் புகழ்ந்து பாட அழைக்கிறாள்.
ராவண குடும்பமே ராமனின் குணானுபவத்தில் மூழ்கிப் புகழ்ந்தது. ராவணன் ராமனின் வீரத்தைப் புகழ்ந்தான். கும்பகர்ணன் சௌர்யத்தில் ஈடுபட்டான். விபீஷணன் ஸௌஸீல்யத்தை ஸ்லாகித்தான். ஸுரப்பனகா அவன் ஸௌந்தர்யத்தில் மயங்கினாள்.

“பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்”—ப்ரபத்திக்கு அதிகாரிகளான எல்லாரும் ஆத்ம ஞானம் பெற ஆசார்யர்கள் காலக்ஷேபம் சொல்லுமிடம் சேர்ந்தனர் என்பதாகும்.

“வெள்ளி—–உறங்கிற்று”—ஞானம் பிறந்து அஞானம் அழிந்தது.
“குள்ள குளிர…..கள்ளம் தவிர்ந்து”—மோக்ஷத்தை அடைய விரும்பாதவளாய், ஸம்ஸாரத்தில் தூங்குகிறாயே! நல்ல ஞானம் பெற்று ஆத்மாபஹரத்தை விட்டு பகவதனுபவம் பெறுவாயாக என்பது உள்ளார்த்தம்.

—————

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.–14-

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து என்னும் சொற்றொடரால், உணர்வின் மிகுதியால்
உதடுகள் துடிப்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கூடலை எதிர்பார்த்து உதடுகள் மெல்லப் பிளப்பதைக் காட்சியாக்குகிறது. கடவுளோடு இணைந்து விடுவதில் உள்ள இன்பம் சிறப்பாக வெளிப் படுத்தப் படுகிறது.

இறைவனிடம் கூடல் கைகூடாத போது உள்ளம் சாம்பிப் போய் முகம் கூம்பிவிடுமே. அதையே, “ஆம்பல் வாய் கூம்பின காண்” என்றாள் ஆண்டாள். இப் பாடலின் முதலிரண்டு அடிகள் இறைவனுடன் கூடும் இன்பத்தையும் இன்னும் போய் அவனிடம் போய்ச் சேர்ந்தாக வில்லையே என்ற ஏக்கத்தையும் சேர்த்துக் குறிக்கிறது.

சிவப்பும் வெள்ளையும் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். சிவப்பு மலர்கள், வெள்ளை மலர்கள் – காவி உடை, வெண்பற்கள் – வெள்ளைச் சங்கு, தீயெனச் சிவந்து ஒளிரும் சக்கரம் என்று இப்படி வெள்ளையும் சிவப்பும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பிப் பாடல் முழுவதும் வரக் கடைசியில் இரண்டும் இணைவதைப் பாருங்கள். வெண் தாமரையில் செவ்வரிகள் போலக் கண்கள் கூர்ந்து நோக்க, வெண்மை தன் பரிசுத்தத்தால் இறைவனைக் குறித்தால் சிவப்பு தாயாரின் நிறத்தைக் குறிக்கிறது

சேதனர்களின் ஹ்ருதயத்தில் ஞானம் மலர்ந்து, அஞானம் நீங்குவதை “செங்கழுநீர். …கூம்பினகாண்” என்று கூறுகிறார்.
முதன் முதலில் சிறிய திருவடி ராமனைப் பார்க்கும் போதே அவர் பரமாத்மா எனத் தெரிந்து கொண்டாராம். அதுபோல உள்ளே உறங்குபவள் ஞானம் உள்ளவளாயும், நா வன்மை உடையவளாயும் இருக்கிறாள்.
பேயாழ்வார் எம்பெருமானை மங்களாஸாசனம் செய்யும் போது நாபிக் கமலத்தில் ப்ரும்ஹா வீற்றிருப்பதை பார்க்கிறார்.

அக்கமலம் மலர்ந்து மூடுவதை அவனது திறந்து மூடிய கண்களின் நோக்கால் நிகழ்வது என உணர்ந்தாராம்.

“எங்களை முன்னம்……எழுந்திராய்”…வெகுகாலமாய் ஸம்ஸாரத்தில் தூங்கும் எங்களுக்கு குணபூர்ணரான நீ ஞானம் போதித்து அனுக்ரஹிக்க வேணும் என்கிறாள். தேவதாந்த்ர வ்யாவர்த்தகமாக அடையாளங்களைப் பெற்ற பகவானை உபதேசித்தருள வேண்டுகிறாள்.

—-

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.–15-

ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம் கூறும் இப்பாசுரம் “இளங்கிளியே” என்று திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது. இவ்வாழ்வார் வளர்த்த கிளி ஸ்வாமி தேஶிகன். தன்னை ஒரு கூண்டுக் கிளியாக எண்ணியே அச்சுத ஶதகம் பாடினார் ஸ்வாமி.
பாகவதர்களின் பேச்சு ரஸமானதாயிருக்கும் என்பது “வல்லை உன் கட்டுரைகள்” என்பதன் பொருளாகிறது. தி‌ருமங்கையாழ்வார் நான்கு கவிகளில் (ஆசு கவி, சரள கவி, மதுர கவி, சித்ர கவி) வல்லவர் திரு எழுகூற்றிருக்கை (ரத பந்தம்) சித்ரகவிக்கு உதாரணம்.
“வல்லானை…..பாடு”—-யானை போல பலமான நம் இந்த்ரியங்களை அடக்க வல்லவனும் மோக்ஷ விரோதிகளையும் அழித்து,
நம்மிடம் உள்ள மாயயைத் தன் வசமாக்குபவனும் ஆகிய பகவானை துதிக்க வருவாய் என்று கூப்பிடுகின்றனர்.

———

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.–16-

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –நான்முகன் -81-

நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாந சக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து
கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து
விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.

தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாயக்
கருணை யம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான் -கம்பர் அடைக்கலப் படலம் -47-நேய நிலைக் கதவம்

கண்ணன் உள்ளே உறங்குவதால் நந்தகோபன் மாளிகையைக் கண்ணும் கருத்துமாய் காவல் காக்கின்றனர்.

நித்யசூரிகள் ஶ்ரீ வைகுண்டத்தைக் காக்குமாப்போல ஶ்ரீரங்கத்தைப் பஞ்சாயுதங்களும் காக்கின்றன என்கிறார் குலசேகராழ்வார்.

“உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே சங்கே*
அறவெறிநாந்தக வாளே 
அழகிய சார்ங்கமே தண்டே” – என்கிறார் பெரியாழ்வார்.
“புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா: ப்ரபோ*
ததைவ குமுதாதயோ நகர கோபுர 
த்வாரபா:”—என்று அபீதிஸ்தவத்தில் ஸ்வாமி தேஶிகன், நித்யசூரிகள், கோபுரம் காப்போர், வாயில் காப்போர் எல்லோரும் விழித்திருந்து இந்த பூமியயையும் ஶ்ரீரங்கத்தையும் காப்பாற்றுங்கள் என்கிறார்.
கைங்கர்யபரர்களை அவர்களது கைங்கர்யத்தையொட்டி அழைக்கும் வழக்கம் ஆண்டாள் காலத்திருந்தது என்பது “கோயில் காப்பான், வாயில்காப்பான்” என்றழைப்பதிலிருந்து புரிகிறது. இதனையே எம்பெருமானார் கோயில் கைங்கர்யங்களில் பின்பற்றினார்.
“கொடிதோன்றும் தோரண வாயில்காப்பான்” என்பதில் ஆசாராயர்களிடம் நம்மைக் கொண்டு சேர்ப்பவரை உபாஸிப்பதாய்க் காட்டுகிறாள் ஆண்டாள். ராமாவதாரத்தில்
ஶ்ரீராமனை மகரிஷிகள் அனுபவிக்கக் கேட்டதை “நென்னலே வாய் நேர்ந்தான்” எனக் குறிப்பிடுகிறாள் க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாக. விபீஷணனின் நல்ல உள்ளத்தை அறிந்து அனுமன் ராமனிடம் அழைத்துச் சென்றது போல உண்மையான பக்தி கொண்ட எங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேணும் என்கிறாள்.நேராக பகவானை உபாஸிக்காமல் ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு செல்ல வேணும் என்கிறாள் ஆண்டாள்.
(நேராக பகவானை அடைய நினைத்த ஸூர்ப்பநகாவின் மூக்கும் காதும் அறுபட்டது) என்பது திருக்குடந்தை ஆண்டவன் நிர்வாகம்.
குருடன் மற்றொருவர் உதவியுடன் செல்வது, நொண்டி படகோட்டி உதவியுடன் அக்கரை சேர்வது, ராஜாவைப் பார்க்காமலேயே ராஜ ஸேவகர்களின் குடும்பம் ராஜ போகம் அனுபவிப்பது போல ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு அரங்கனை அடைய முடியும் என்கிறார் ஸ்வாமிதேஶிகன் (ந்யாஸ திலகம் – 21)
க்ருஷ்ணன் இருக்க நந்தகோபனை நாயகன் என விளிக்கக் காரணம் ஶ்ரீவைகுண்டத்தில் பொறுப்புக்கள் அனைத்தும் விஷ்வக்ஸேனர் கையிலிருப்பது போல இங்கே நந்தகோபனிடம் ஒப்படைத்திருப்பதைக் குறிக்கிறது. ராமன் பிறந்தது த்ரேதாயுகம் தர்மத்திற்குக் குறைவில்லை. ராமனோ மஹா வீரன். அண்டை நாட்டு ராஜாக்கள் அவனுள் அடக்கம். தந்தை தஶரதனோ பேரரசன். அதனால் அவனுக்குக் காவல் வேண்டாம் ஆனால் க்ருஷ்ணனோ கலி யுகத்தின் தோளைத் தொட்ட த்வாபர யுகத் தில் பிறந்ததால் அதர்மம் மிகுதி. தந்தையோ புல்லை மிதிக்க யோசிக்கும் ஸாத்வீகன். மகனோ இடைப்பிள்ளை. எடுப்பார் கைப்பிள்ளை. கம்ச பயத்தோடு சுற்றியிருந்த அரசர்களும் பகைவர்கள். அதனால் காவல் அதிகம் நந்தன் மாளிகைக்கு.
நாயகானாகிய ஆசார்யன் கோயில் காப்பானாக ப்ரணவத்தையும், அஷ்டாக்ஷரத்தையும் உபதேசிக்கும் பொருட்டு, வாயில் போன்ற “நம:” ஶப்தத்தின் பொருளைச் சொல்லி நம்மைத் தயார் செய்கிறார். ஜீவன் ஸ்வதந்த்ரனல்லன். அகிஞ்சனன் என் உணர்த்தி மோக்ஷவாயிலைத் திறக்க உதவுபவராக ஆசார்யனை “மணிக் கதவம்” என்பதன் மூலம் உணர்த்துகிறாள் ஆண்டாள்.

———-

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.–17-

ஊனில் உயிரினில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேன் -மூன்றைச் சொல்லி
அன்பு ஆர்வம் இடு திரி இன்புருகு சிந்தை -மூன்றும் போல்
நந்தகோபன் யசோதை நம்பி மூத்த பிரான் இங்கும்

அசுரபயத்தைவிட, தோழிப் பெண்களிடமிருந்து க்ருஷ்ணன் பத்ரமாகக் காப்பாற்றப் படுகிறான். க்ருஷ்ணனின் பேரன் அநிருத்தனை மஞ்சத்துடன் கடத்தியவர்களாயிற்றே இப்பெண்கள்!தஶரதன் போல ராமனை அனுபவிக்க விடாத லோபியல்ல இந்த நந்த கோபர். பரம உதாரனாகிய இவர் க்ருஷ்ணனை அனைவரும் அனுபவிக்க அளிப்பவராதலால் முதலில் அவரை எழுப்புகின்றனர்.
க்ருஷ்ண ஸ்பர்சம் பட்டதால் கோகுலமே புனிதமாகியது. த்ரௌபதிக்கு வஸ்த்ர தானம் செய்த க்ருஷ்ணன் கோகுலம் பசுக்களுக்கு நீர் தானம் செய்தான்.
 
“அம்பரமே தண்ணீரே” மாடு மேய்த்துக் கொண்டிருந்த க்ருஷ்ணன், தோழர்களுக்கேற்பட்ட பசியை ரிஷி பத்னிகள் யாகத்துகுச் செய்த ப்ரசாதத்தை கொண்டு போக்கினான்.
இது “சோறே அறம் செய்யும்” சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்று எம்பெருமானுக்கு சேவை செய்பவராயிற்றே பலராமனாகிய ஆதிசேஷன். மரவடியாக இருக்கும் (பாதுகை) பலராமனை “செம்பொற்கழலடிச்செல்வன்” என்கிறாள்.
அம்பரமாய், (ஆகாசம்) நீராய், உணவாய் இருக்கும் க்ருஷ்ணனை எங்களிடம் தரவேண்டும் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
ஶரீரத்தை வஸ்த்ரம் மறைத்து வ்யக்தியைக்காண்பிப்பது போல
எம்பெருமான் இந்த ப்ரபஞ்சத்தை யோகிகளின் உணர்வுகளிலிருந்து மறைக்கிறான் என்பது ஸ்வாபதேசம்.
தத்வ, ஹித புருஷார்த்தங்களை பலன் எதிர்பாராது உபதேசிக்கும் ஆசார்யனாக நந்த கோபலாரைச் சொல்கிறாள். இத்தகைய ஞானத்தைக் தரும் மந்த்ரங்களின் ப்ரதானமாக இருக்கும் நிலை யசோதைக்கு. அடுத்து ஸர்வ வ்யாபியான எம்பெருமான் க்ருபையைக் கோருகிறார். அடுத்து அவன் சம்பந்தப்பட்ட பாகவத கைங்கர்யத்தை யாசித்து ஆக எல்லோரும் அனுக்ரஹப்பீர்களாக என்று வேண்டுகிறாள்.

———

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–18-

புருஷாகாரம் செய்யும் பிராட்டி அருகே இருந்ததால் காகாசுரன் உயிர் பிழைத்தான். ராவணன் எம்பெருமான் கோபத்துக்கு ஆளானான். நம் குறைகளைப் பிராட்டி கேட்டு, பெருமானையும் கேட்கச் செய்வதால் அவளை முன்னிட்டுக் கொண்டே பகவானிடம் செல்ல வேண்டும்.
ஶரணாகதி என்று வந்த ஜீவனின் குற்றங்களுக்கேற்ப தண்டனை
அளிக்க முன்வரும் பகவானிடம் பரிந்துரை செய்து பிராட்டி ஶரணாகதனுக்கு மோக்ஷமும், அல்லாதவர்களுக்கு தண்டனையும் அளித்தால் லோக நிர்வாகம் பாதிக்காது என்று அவனுக்கே உபதேசம் செய்பவள்.

இத்தனை சிறப்பான குணங்களையுடையவள் நப்பின்னை.
க்ருஷ்ணனை மகனாயடைந்த நந்தகோபனுக்கு வஸுதேவர் யானைகளையும், வஸுதேவர்ருக்கு வேண்டிய பசுக்களை நந்தகோபரும் அளிப்பார்களாம்.

ஸீதை தன்னை தஶரதனின் மருமகள் என அறிமுகப் படுத்திக் கொள்கிறாள் ஹனுமனிடம். அதுபோல நப்பின்னை தன்னை நந்தகோபன் மருமகள் எனச்சொல்கிறாள். ஒருகையில் பந்தும், மற்றோர் கையில் கண்ணனையும் பிடித்துக் கொண்டு உறங்குகிறாள்.

நித்ய விபூதி, லீலா விபூதி என இரண்டையும் நிர்வகிக்கும் செல்வாக்கு உடையவள். ராமானுஜர் இந்த பாசுரத்தைப்பாடி பிக்ஷை கேட்டு கதவைத் தட்ட, வந்து திறந்த அத் துழாயை (பெரிய நம்பியின் திருக் குமாரத்தி) ஆண்டாளாக நினைத்து மயங்கி வீழ்ந்ததாக வரலாறு.

உபய விபூதியை நிர்வகிக்கும் யானை போன்றவனும், வீணாகாத ஸங்கல்பம் என்னும் நலத்தைப் பெற்றவரும் ஆகிய எம்பெருமானின் ஜேஷ்ட மகிஷியே! கேசவனை அடையத் தடையாயுள்ள பாபத்தை நீக்குபவள் இவளே!
ஸாரமான தானியங்களை மட்டும் கொத்தும் கோழிகள் போல (ஸார க்ராஹிகள்) எம்பெருமானிருக்குமிடம் சென்று ப்ரபத்தி செய்யும் பாகவதோத்தமர்களைக் குறிக்கிறது. (ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களாக கொக்கு போல் இருப்பான், கோழி போல் இருப்பான், உப்பைப் போலிருப்பான், உம்மைப் போலிருப்பான் என்பது ப்ரஸித்தம்)
வேதாந்த சாகைகள் மாதவிப் பந்தல் எனவும் அதில் கூறும் ஶ்ரீய: பதியின் பெருமையை உறைக்கும் வால்மீகி, ஸுகர் போன்றவர்களை குயில்கள் எனவும் உருவகப் படுத்தப் பட்டுளது.
பந்து போன்ற எங்களை லீலோபகரணமாக்கி விளையாடும் எம்பெருமானுக்கு நாங்கள் போகோபகரணமாக வேணும். அதற்கு பிராட்டியின் வளை யோசை துணையாயிருந்து சீற்றத்தைத் தணிக்க வேணும் என்பது உட்பொருள்.

——–

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.–19-

பிராட்டியும், பெருமானும் மோக்ஷமளிப்பதில் அவரவர் அடியவர்களை விட்டுக் கொடுப்பதில்லை. நப்பின்னை வீரமங்கை என்பதால் கோட்டுக்கால் கட்டில். ருக்மிணி ராஜபத்னியாகையால் தங்கக் கட்டில்.சத்யபாமா அழகி என்பதால் வெள்ளிக்கட்டில் அமைத்திருந்தனராம். மோக்ஷமடைந்து முக்தன்

ஶ்ரீவைகுண்டம் சேர்ந்து திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷ பர்யங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருமடியில் சென்றமர்கின்றான். அப்படிச் செல்லும்  போது ஆதிஸேஷனைத் துகைத்துக் கொண்டு ஏறுவானாம். இதனையே “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி” – என்கிறாள்.

மைத்தடங்கண்ணியான நீ உன் மணாளானுடனிருக்கிறாய். க்ருஷ்ணனைப் பிரிந்த ஒரு கணம் ஒருயுகமாயுள்ளது. எங்களை இன்னும் காக்க வைப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர் தோழிகள். ராவணவதம் முடிந்து ஸீதா பிராட்டியைக்காண வந்த ஹனுமான் ராக்ஷஸிகளை நசுக்கி விடுவாதகக் கூற அவர்களுக்குப் பரிந்து பேசிய பிராட்டி யைப் போல நீயும் எங்களுக்காக இரங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் தோழிகள்.

ஸ்திரமான ஸம்ப்ரதாய ப்ரதியே “குத்து விளக்கு” என்பதாம். ஒரு ஆசார்யனிடமிருந்து இன்னொரு ஆசார்யன் வருவதை வழிவழியாக வரும் தீபம் குறிக்கிறது. அஞானத்தைப் போக்கும் ஞான தீபம் இது. நிரபாய ஸம்ப்ரதாய பரம்பரையே இந்த குத்து விளக்கு.
விளக்கு ப்ரகாசத்தால் தன்னையும் காட்டி பிறவற்றையும் காட்டுமாப்போல நப்பின்னையே! நீ உன் க்ருபையைத் தந்து, கண்ணனையும் காட்டித் தர வேணும் என்கின்றனர்.
நான்கு வேதங்களையும் கால்களாய் கொண்ட கோட்டுக்கால் கட்டில் சுமக்கும் திவ்ய தம்பதிகளை அடைவதற்கு முன் அந்த பர்யங்கத்தில் வீழ்கினறனர். குத்து விளக்கின் 5 முகங்கள் போல எம்பெருமானின் ஐந்து நிலைகள், பஞ்ச இந்த்ரியங்கள், அர்த்த பஞ்சகம் முதலியன ஆசார்ய உபதேசத்தால் அறியப்படுகின்றன.
ப்ரளய காலத்தில் அசித்தைப்போலக் கிடக்கும் ஜீவன்களுக்காக இரங்கி மோக்ஷம் வரையில் இவைகளை அழைத்துச்செல்லும் விசாலமான மனமுடையவனே “மலர்மார்பா” என்பதாம்.
இப் பாசுரம் பட்டர் உகந்த பாசுரம் என்பர்.

———

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.–20-

முப்பத்து மூவர்…அமரர்க்கு”— எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருக்கும் எம்பெருமான் நாமளிக்கும் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் மிடுக்குடையவன்.

செப்பமுடையாய்–தேர்த்தட்டிலும், கடற்கரையிலும் சொன்னபடி அடைக்கலம் அடைந்தவர்களை ரக்ஷிக்கும் ஆர்ஜவம் உடையவன்!

திறலுடையாய்—தடைகளை நீக்கி நிர்வகிக்கும் திறலுடையவன்.

செற்றார்க்கு—–விமலா – ஆஶ்ரித விரோதிகளிடத்தில் துன்பம் உண்டாக்கப் பண்ணுவது எம்பெருமானுக்குக் குற்றமாகாது. ஜயத்ரதனைக் கொல்லும் பொருட்டு சூர்யனை மறைத்துப் பகலை இரவாக்ககினான் பரமன். பாரத யுத்தத்தில் ஆயுதம் எடுக்கா விடினும், ஒவ்வொரு முறையும் தேரோட்டியாக சாட்டையை சொடுக்கும் போதும் பல எதிரிகள் வீழ்ந்தனர் என்பதை “பற்றலர் வீயக் கோல் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்றானை”–என்கிறார் கலியன்.

கண்ணன், அர்ஜுனன் தேர்தட்டில் ஏறியவுடனேயே கௌரவ பத்னிகளின் திருமாங்கல்யம் ஒரே சமயத்தில் அசைந்தனவாம்
பாஞ்சாலியின் துயிலுரிந்த வருத்தத்தை அந்த நூறு பத்னிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தானாம்.

“பாண்டவர் தம்முடைய மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை” எனகிறார் பெரியாழ்வார்.

ஆசார்ய வைபவத்தை இப் பாசுரம் அழகாய்க் காட்டுகிறது. ஸ்த்ரீகளுக்கு மூன்று விஷயங்கள் அழகைத் தருவது போல ஆசார்யன் மூன்று விஷயங்களை சிஷ்யனுக்குத் தெரியப் படுத்துகிறார்.
  • சிறு மருங்குல் போல அஷ்டாக்ஷரத்தில் பிராட்டி இருப்பது தெரியாது.
  • மென்முலை யொத்த த்வயத்தில் லக்ஷ்மீ ஸ்பஷ்டமாகத் தெரிகிறாள் சைதன்யஸ்தன்ய தாயினியாக எப்போதும் ரக்ஷிப்பதால்.

இவை யிரண்டையும் ப்ரபன்னனுக்கு ஆசார்யன் திருவாக்கால் (செவ்வாய்) சொல்லித் தெளிய வைக்கிறார் சரம ஶ்லோகமாக.

———–

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.–21-

உகவாதார் அம்புக்குத் தோற்பர்கள். நாங்கள் தோற்றோம் உன் குணத்துக்கே!” — என்று வந்துள்ளனர் தோழியர். பிராட்டி பகவானுக்கு எல்லா விதத்திலும் ஈடானவள். ஆயினும் பகவானுக்கு அடங்கி பாகவதர்களுடன் சேர்ந்து தொண்டு செய்பவளாக தன்னை ஆக்கிக் கொள்கிறாள். தனக்கு மேம்பட்டவர் எவருமில்லாத எம்பெருமானுக்கு விபவத்தில் “நந்த கோபனுடைய மகன்” என்பதில் அளவற்ற சந்தோஷமாம்.
ராவண வதம் முடிந்து வந்த ராமனைத் துதித்த ப்ரம்ஹா, சிவனிடம், “நான் தஶரதன் புத்ரன்”–என்று சொல்லி மகிழ்ந்து, இப்படிச் சொல்வதையே நான் பெரிதாக மதிக்கிறேன் என்றான். நம்மில் ஒருவனாக வந்த இந்த மகன் நம்மைக் கைவிடமாட்டான் என்பது இதன் பொருள்.
“ஊற்றமுடையாய் ……தோற்றமாய் நின்ற சுடரே” என்கிறாள் ஆண்டாள். “சமாதானம் பேசப்போகிறாயா” என்ற த்ரௌபதியிடம், “நான் உன் கோவிந்தா என்ற கதறலுக்குக் கடன் பட்டுள்ளேன். கவலைப்படாதே என்று சொல்லிச் சென்றான் யுத்தத்தை ஆரம்பிக்க, ஆஶ்ருத பாதபக்ஷனாகிய எம்பெருமான்.
ஶ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் கல்யாணகுணங்கள்  சுடர்விடாது.
ஆனால் ப்ருக்ருதி மண்டலத்தில் அவன் பிறக்க பிறக்க சுடர்விட்டு ப்ரகாசிக்கிறது அவனது குணங்கள் என்று உபநிஷத்துக்கள் கொண்டாடுகின்றன.
“ஆற்றாது….போற்றியாம் வந்தோம்” என்பதற்கு “அகங்காரம் மமகாரம் ஒழிந்து உன்னைப் புகழ்ந்து, உன்னடிபணிந்து, எங்கள் இயலாமையை உணர்ந்து வந்துள்ளோம்” என்பது பொருள்.
“ஏற்ற கலங்கள் ….பசுக்கள்” ஸத்பாத்ரங்களான சீடர்களுக்கு பக்ஷபாதமின்றி ஞானமாகிய பாலை மிகுந்தளிக்கும் ஸதாசார்யன் என்பதாகும்.
“ஆற்றப் படைத்தான்…….துயிலெழாய்”…. இத்தகைய ஆசார்யர்களுக்கு புத்ரனாயிருப்பவனாகிய எம்பெருமான் ஸம்ப்ரதாயம் வளர பாஞ்சராத்ரம் போன்ற ஆகமங்களை உபதேசித்து, விபவாதாரங்களைச் செய்து விளங்கினாய் .
இத்தகைய பெருமையுடைய நீ எங்கள் கைங்கர்யத்தை ஏற்க வேணும் என்கிறார்கள்.

——–

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.–22-

ஐம்புலன்களுடன் கூடிய அழகிய சரீரத்திலிருக்கும் ஜீவராசிகள்
நானே ஸ்வதந்த்ரன் என்பன போன்ற அபிமானங்களை விட்டு ஶ்ரீ வைகுண்டத்தில் உன் பர்யங்கத்தின் கீழ் கூடியிருக்கும் நித்ய முக்தர்களின் கூட்டம் போல நாங்களும் முக்தானுபவம் பெற ஶரணாகதி செய்ய வந்துள்ளோம். எங்கள் பாபத்தைப் பார்த்து கண்களைச் சிறுச்சிறிதே மூடி விழித்தால் உன் பரிபூர்ண கடாக்ஷம் எம்மேல் பட்டு எங்களது ஸஞ்சித, ப்ராரப்த பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
“அபிமான பங்கம்” என்பதற்கு ராமாயணத்திலிருந்து உதாரணம் ஒன்று. ராவண வதம் முடிந்தபின் மந்தோதரி புலம்புகிறாள் இப்படி. “தானவ அரசனான மயன் என் தந்தை. ராக்ஷஸ அரசன் என் கணவன்‌. இந்த்ரனையே ஜெயித்தவன் என் புத்ரன் இந்த்ரஜித். சூர்யனின் ஒளியோ, வெப்பமோ இந்த ராஜ்யத்தில் விழுந்ததில்லை. அப்ஸரஸ்ர ஸ்த்ரீகள் குடையும், சாமரமும் ஏந்தி வருவர் ராவணன் பின்னால். ஆனால் ராவணன் வீழ்ந்ததும் என் இந்த கர்வமும் அழிந்தது. சூர்ய ஒளி இலங்கையில் விழுந்தது. வட்டமிடும் கழுகுகளின் நிழல் ராவணன் மீது விழுந்தது குடை பிடிப்பது போல” என்கிறாள்.
ஶ்ரீரங்கநாதன் புறப்பாட்டிற்குச் செல்லும் போது பாதுகைகளை அணிந்து, ஸயன சமயத்தில் களைவான். திரும்ப காலை எழுந்ததும் அவர் முதலில் கடாக்ஷிக்கும் பாதுகைகள் போல கண்ணா நீ எங்களைக் கடாக்ஷிக்க வேணும் என்கின்றனர் கோபியர்.
ஶரணாகதனின் தோஷத்தைப் பார்க்காத வாத்ஸல்யம் மிக்க திருக்கண் மலராலும், பாபத்தைக் கண்டு தண்டிக்கத் தோன்றும் மற்றொரு சற்றே மூடிய கண்ணாலும் சிறுச் சிறிதாய் எங்களை விழித்துப் பார்த்து எங்கள் பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
அகல்யா சாபம் தீர்த்த ராம பாத தூளிகள் போல, உன் திருவடித் துகள்பட்டு எங்கள் சாபம் தீர வேண்டும் கண்ணா என்கின்றனர் கோபியர்.

——–

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–23-

இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சிறப்பை ஆண்டாள் காட்டுகிறாள். பாற்கடலில் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் பர்யங்கம் என்ற குகையில் பிராட்டியுடன் மன்னி யோகநித்ரை செய்யும் எம்பெருமான் முன்னே பூபாரம் தாங்க முடியாத பூமிதேவி கம்சன், சிசுபாலன் முதலியோரால் உண்டான கஷ்டம் நீங்க வேண்டும் என வேண்டியபடியால் ஸங்கல்ப ஞானத்தைப் பெற்றான் (அறிவுற்று தீவிழித்து) எழுந்த எம்பெருமான் தன் திருமேனியிலிருந்து, கருப்பு, வெண்மைநிற கேஸத்தையும் எடுத்து வீசியதை “வேரிமயிர் பொங்க” என்கிறாள்.

வாஸனை யுடைய இக் கேஸத்தை விடுவித்து, அழகிய தேக உறுப்புக்களை பெற்று ஆதிஸேஷனையும் உதறி, ஆலஸ்யத்தை நீக்கி உடனே அவதாரம் செய்து முழங்கினான் தேவகி வஸுதேவர் மகனாய் வந்துதித்தான்.
பொற்கொல்லன் மெழுகில் ஒட்டிய பொன்னைப்போல ஞானமில்லாத இப்ருக்ருதியில் ஞானமுள்ள ஜீவன் ஒட்டியிருப்பதைக் கண்டு அறிவுற்றுத் தீவிழித்து கரண களேபரங்களுடன், முக் குணங்களையும் அளித்து மூரி நிமிர்ந்து ஶ்ருஷ்டி செய்து ஸ்தூலத்தில் ஸூக்ஷ்மமாயுள்ளான்.
இப் பாசுரம் அஹோபிலத்தில் எழுந்தருளியுள்ள ந்ருஸிம்ஹனைப் பற்றியது என்றும் சொல்வர். அஹோபில மலையில் மன்னிக்கிடந்த மாலோலன் இக் கலியுக ஜனங்கள் நற்கதி பெறும் பொருட்டு பரிவாரங்களுடன் வெளியே வந்து ஸஞ்சாரமாக பல
க்ராமங்களையும், நகரங்களையும் அடைந்து மக்களை தன் வசமாக்கினான் அழகிய சிங்கர்கள் மூலமாக என்பது வ்ருத்தாந்தம்.
மாரி மாறாத தண்ணம்மலையாம் திருமலையிலிருந்து, ஹஸ்தி கிரி சென்று, ஹயக்ரீவ, கருட கடாக்ஷம் பெற்று, நடாதூர் அம்மாள், அப்புள்ளார் அருள் பெருக்கால் அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்து, அரங்கம் சேர்ந்து, சீரிய சிங்கமென வாதியரை விரட்டி, கவிதார்க்கிக ஸிம்ஹமாகி, க்ரந்தங்கள் பலவற்றை நம் ஸம்ப்ரதாயம் உய்ய, நமக்காக அருளியுள்ளார் நம் ஸ்வாமி தேஶிகன்.
ஆக நம்பெருமாளின் “கதியே” நமக்கு “கதி” என்றார்.
இவனது நடையழகாகிய “ஸஞ்சாரம்” ஸேவித்தால் நமக்கு
“ஸஞ்சாரம்” (பிறப்பு/இறப்பு) இருக்காது என்பது திண்ணம்.

———

அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.–24-

அன்று மகாபலி தர இயலாத மூன்றடியை நான் தருகிறேன் என்கிறாள் ஆண்டாள்
  1. ஓங்கி உலகளந்த
  2. அம்பரம் ஊடறுத்து
  3. அன்றிவ்வுலகமளந்தாய் – என
இரண்டு அடிகளால் மகாபலியின் மமகாரத்தையும், மூன்றாம் அடியால் அவனது அகங்காரத்தை அவன் தலையில் வைத்தும் அழித்தான். ஆக ஜீவர்களாகிய நாம் அவன் திருவடியில் தலையை சேர்க்க வேண்டும். அவன் முன்னே தலை குனிந்தால் வாழ்வில் நிமிரலாம் என்பது தத்துவம்.
தண்டகாரண்யத்தில் ராக்ஷஸர்களால் தங்களுக்கேற்பட்டு வரும் கஷ்டங்கள் தீர ராமபிரான் வரவை எதிர்பார்த்திருந்த ரிஷிகள் அவனைப் பார்த்தவுடன் அவனது அழகில் மயங்கி தம் கஷ்டங்களை மறந்து பல்லாண்டு பாடினர். கருடாரூடனாகிய எம்பெருமானைக் கண்டதும் பெரியாழ்வார் பல்லாண்டு பாடினார்.
“அன்றிவ்வுலகம்……அடிபோற்றி” ஸ்ருஷ்டிகாலத்தில் இந்த எல்லா உலகங்களையும் படைத்த உன் திருவடிகளில் ஶரணாகதி செய்து போற்றுகிறோம்.

“இலங்கைசெற்றாய்…போற்றி”— அவ்வுலகங்களில் விபவமாயும், அந்தர்யாமியாயும், ஆசார்யராயும் அவதரித்து மனதை விவேகம் மூலம் அழிக்கும் திறலைப்போற்றுகிறோம்.“சகடம் உதைத்தாய்….போற்றி”– ஜீவன்களின் கர்மாவாகிய வண்டியை அழிக்கும் உன் கீர்த்தியைப் போற்றுகிறோம்.

“கன்று…..கழல் போற்றி“—கன்று போல் விரும்பக் கூடிய புண்ய பாபங்ஙளை அழிக்கவல்ல உன் வீரத்தைப் போற்றுகிறோம்.

“குன்று…குணம்போற்றி”….சிகரம் போன்ற வைகுண்ட லோகத்தில்
ஏக சக்ராதிபதியாக வெண் கொற்றக் குடையுடன் வீற்றிருக்கும் உன் குணத்தைப் போற்றுகிறோம்.

வென்று…வேல் போற்றி”…. மோக்ஷ விரோதிகளாக தடைகளை அழிக்கும் வேல் போன்ற உன் ஸங்கல்பத்தைப் போற்றுகிறோம்.

“என்றென்றும்…..இரங்கேலோரெம்பாவாய்”—-இவ்விதமாக உன் திருக் கல்யாண குணங்களைப் பாடி பரம பதத்தில் கைங்கர்யம் கொள்வதற்கு வேண்டி வந்துள்ளோம். அருள் புரிவாயாக. என்பது உட்பொருள்.

வானரங்களைக் கொண்டு ராவணனை வென்றான் எம்பெருமான். “இக்கரை” யிலிருந்து “அக்கரை” சேர்க்கும் “அக்கரை”அவனுக்கு மட்டுமே உண்டு.

———

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–25-

ஸம்ஸாரம் என்பது ஓர் இரவு. இதில் வாழும் நமக்கு இரண்டு தாய்கள். நம்மைப் பிறப்பிக்கும் தாய். இவள் நம் உடலைத் தான் உண்டுபண்ணுகிறாள். ஆனால் ஆத்மாவை அதைப் பற்றிய அறிவை உண்டு பண்ணும் தாய் “காயத்ரீ மந்த்ரம்” என்னும் தாய். இவளையே “ஒருத்தி” என்கிறாள் ஆண்டாள். இவள் மூலமாக மற்றொரு பிறப்பு உண்டாகிறது .
அதனைத்தரும் தாய் “மூலமந்த்ரம்”. இதன் மூலம் எம்பெருமானுக்கு அடிமை என்ற ஞானம் பெற்று பரமைகாந்தி ஆகிறான் ஜீவன்.
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து ஶரணாகதி என்னும் உபாயத்தை அனுஷ்டித்து பிறவி நோய் தீர்க்கச் செய்கிறார் ஆசார்யன்.

“தரிக்கிலானாகி….நெடுமாலே”–
ஆனால் மனத்தாலும், வாக்காலும், உடலாலும் செய்யும் பாபங்கள்
“கம்சன்” போன்றவை. அவற்றின் பலனைத் தரிக்க இயலாது தவிக்கிறோம்.
இந்த மோக்ஷ விரோதியாகிய பாபங்களை உன் கருணையால் அழித்து உன் கைங்கர்யத்தில் எங்களைச் சேர்த்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்கின்றனர் பாவையர்.

———-

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.–26-

மாலே! மணிவண்ணா! பக்த வ்யாமோஹம் உள்ளவன் எம்பெருமான். அதனால் மாலே என்கிறாள்‌.
“சமுத்ரத்தின் அக்கரையிலிருந்து கூப்பிட்ட உனக்கு ஆதிமூலமே என்றலறிய யானையைக் காக்க ஓடிவந்தது போல ஓடிவந்து ரக்ஷித்திருக்க வேணும்” என்று கூறி விபீஷணனைக் கண்களால் பருகினாராம். அத்தனை ஆஶ்ருத வாஞ்சை!
திருக்காட்கரை அப்பனாகிய வாமன மூர்த்தி நம்மாழ்வாருக்குத் தர்ஶனம் தரச் சென்றபோது, அவரைத் தன் கண்களால் பருகி ஹ்ருதயத்திலிட்டாராம் ஆழ்வார்.
காட்கரை அப்பனும் கண்களை மலர்த்தி உள்வாங்கினார் ஆழ்வாரை!

“மேலயார் செய்வனகள்”–பெரியோர்கள் அனுஷ்டித்த படியால் நாங்களும் அனுஷ்டிக்கிறோம். தர்மம் அறிந்த பெரியோர்களின் அனுஷ்டானமே ப்ரமாணம். அதில் பலனும் ப்ரசித்தி எற நோன்பைப் பற்றிச் சொல்கின்றனர்.

அடுத்து நோன்புக்கு வேண்டிய உபகரணங்களைக் கேட்கின்றனர்.
“ஞாலத்தை எல்லாம்….கொடியே விதானமே”–அனுஷ்டானம் ப்ரபத்தி என்னும்போது, அதற்கான அங்கங்கள் உபகரணங்களாகின்றன.
த்ருவனைப் பேசவைத்து ஞானமளித்தது இந்த பாஞ்ச ஜன்யமே. க்ருஷ்ணன் செய்த சங்கநாதத்தைக் கேட்டு ருக்மிணி பிராட்டி கண்ணன் அருகே வந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தாளாம். “ருக்மிணி பிராட்டிக்குக் கேட்ட சங்கொலியும்,
ஸீதா பிராட்டிக்குக் கேட்ட சார்ங்க ஒலியும் போல் எனக்கு எப்போது கேட்கும்” என்கிறாள் நப்பின்னை.
சங்க நாதம் போன்றது ஆசார்ய ஸூக்திகள்.
பல்லாண்டு பாடும் ஆழ்வார் ஸூக்திகள்.
பறை கொட்டுவது போல் வாத க்ரந்தங்கள் குத்ருஷ்டிகளை மாய்க்க.
கோல விளக்கு போன்ற சாத்வீக ஞானம்.
பக்தி என்பதன் மூலம் யார் என்பதைக் காட்டும் கொடி.
அகங்காரம் நீங்கிய வைராக்யம் விதானம்.
இப்படியான உபாய அனுஷ்டானம் ஆனந்தம் தரவல்லது என்பதனை ஆண்டாள் காட்டுகின்றாள்.

————-

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–27-

யுத்தம் செய்த அழகால் ராவணனை வென்றான். கூடமாட்டேன் என்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் ஆகியோரையும் வென்றான்.
கூடமாட்டேன் என்ற ஆழ்வார்கள் முன்னின்று வென்று பாடவைத்தான், வாத்ஸல்யத்தால் வென்றான்.
தன்னுடன் கூடியவரை வெல்ல மாட்டேன் என்பான். பரசுராமனளித்த வில்லை வாங்கிய ராமபிரானை வணங்கிய பரசுராமனின் புண்ணியங்களை எடுத்த அஸ்த்ரத்தால் அழிக்கிறார். சமுத்ர ராஜனிடமும் இதே நிலை தோல்விதான். புல் ப்ரும்ஹாஸ்த்ரமாகியது முதலில். காகாசுரன் ஶரணாகதி செய்த பின் அதற்கு தோற்ற எம்பெருமானின் கருணை ப்ரும்ஹாஸ்த்ரத்தை புல்லாக்கியது.
ராம பட்டாபிஷேகம் நடந்தபின் உலகமே புகழும் வண்ணம் ஹனுமனுக்குத் தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அளிக்கிறாள் ஸீதை. “நாங்கள் எம்மிலிருந்தொட்டிய  கச்சங்கம் நானும் அவனும் அறிதும்” என்கிறாள் ஆண்டாள்.
அதுபோன்ற சம்மானம் வேண்டும் எனக் கேட்கிறார் ஆண்டாள்.. ஹனுமனிடம் ராமனளித்த மோதிர அடையாளமும், பிராட்டி அளித்த சூடாமணியும் இருவருக்கும் சொல்லிய கதைகள் பல. தபஸ்வினி அனுசூயா தன் ஆபரணங்களை அனைத்தையும் ஸீதாபிராட்டிக்குப் பூட்டி அழகு பார்த்து ராமபிரான் முன்பு நிறுத்துகிறாராம்.
“கோவிந்தா” என்ற நாமம் சுரந்த புடவையால் த்ரௌபதியின் மானஸம்ரக்ஷணம் நடந்தது.
  • ஸத்கர்மாக்களைச் செய்ய மாட்டேன் என்றும் கூடாரை வெல்பவர்ஙள் ஆசார்யர்கள்.
  • சூடகம் என்பது கைகூப்புச்செய்கை.
  • தோள்வளை என்பது சங் கு சக்ரப் பொறி.
  • தோடு, செவிப்பூ என்பன ஆசார்யன் சொல்லும் த்வய மந்த்ரம்.
  • பாடகம் என்பன சிஷ்யன் செய்யவேண்டிய அனுஷ்டானங்கள்.
  • த்வாதச புண்ட்ரம், அணியும் கச்சம் முதலியன பிற அணிகலன்களாகின்றன.
  • மூடநெய்பெய்த பால் சோறு போல பரம போக்யமான க்ருஷ்ணானுபவத்தைப் பெறுகிறான் ஶரணாகதி செய்த சேதனன் என்பது உட்பொருள்.

———–

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.–28-

வானரங்களுடன் கலந்து பழகிய ராமபிரான் இங்கு மாடுகளுடன் கலந்து நிற்கிறான். “இறைவா” என்றழைத்து அவனது ஸ்வாமித்துவத்தைக் காட்டுகிறாள். க்ருத க்ருத்யனான
ப்ரபன்னனுடைய குறைகளைக் தான் ஏற்றுக்கொண்டு, தன்னிறைவை அவர்களுக்கு அளித்து, ரக்ஷணப் பொறுப்பை ஏற்பதால் “குறையொன்றுமில்லாஎம்த கோவிந்தா” என்கிறாள். இதனையே “தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும் அமைவுடைய அருளாளர் அடியிணைகள் அடைந்தேனே”
என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

எம்பெருமானுக்கும், ஜீவனுக்கும் உள்ள ஆத்ம பந்தம் என்றும் அழியாது என்பதை “உன்னோடுறவேல் .. ‌..ஒழியாது” என்கிறாள்.

  • இந்த ஸம்ஸாரத்தில் ஜீவர்கள் ஸத்கர்மங்கள் செய்வது துர்லபம் என்பதை முதலடி காட்டுகிறது.
  • எம்பெருமான் விஷயமான ஞானமின்றி அலைகிறது என்பது 2ம் அடி.
  • இப்படி பசுப்ராயராக இருக்கும் ஜீவன்களை கடைத்தேற்ற எம்பெருமான் நினைத்து இறங்குவது அவர்களின் புண்ய விசேஷத்தால் என்பது 3ம் அடியின் கருத்து.
  • இப்படி எம்பெருமான் அவதரித்தாலும், அனாதி காலமாய் அவனுக்கும் நமக்கும் இருக்கும் சேஷத்வம் நீங்குவதில்லை என்பது 4ம் அடி தரும் கருத்து.
  • இது ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம். பகவானை நினையாவிடினும் அவன் சேஷி என்பதில் ஐயமில்லை, என்பது 5ம்அடி.
  • ஸர்வேஶ்வரனாகிய ஸ்வாமியிடம் எப்படி நடக்க வேணும் என்ற சேஷத்வ ஞானமற்றவர்களாயுள்ளனர் ஜீவர்கள் என்பது 6ம்அடி.
  • எம்பெருமான் என்ற உணர்வின்றி ஸ்வதர்மங்களை விடுத்து செய்த கார்யங்களால் நீ கோபிக்காது பொறுத்து க்ஷமிக்க வேணும். எங்களைத் திருத்திப் பணி கொள்ளவேணும் உன் கருணையால் என்பது கடைசி இரு அடிகளின் கருத்து.

———-

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.–29-

ப்ரபத்தி க்ஷண காலத்தில் அனுஷ்டிக்கப்படும் ஸாத்யோபாயம். “சிற்றஞ்சிறுகாலே” என்பது இந்த ப்ரபத்தியை நாள் கடத்தாது நல்லமன, தேக ஸ்திதி இருக்கும்போது அனுஷ்டிக்க வேண்டியதைக் குறிப்பது.
ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம்
ஆகிய மூன்று தளங்களைக் கொண்டது இந்த ப்ரபத்தி சாஸ்த்ரம் என்பதை ஆண்டாள் காட்டுகிறாள் இந்தப் பாசுரத்தில். இப்படி அனுஷ்டித்துப் பெறும் கைங்கர்யத் தைச் செய்யும்போது
உண்டாகும் உகப்பை உனக்கே அர்ப்பணிப்போம் என்பதை,
“மற்றை நம்….மாற்று” என்ற வரிகாட்டுகிறது. இதனை அனுஷ்டிக்க நமக்கு வழிகாட்டும் ஆசார்யனின் பொற்றாமரைக் திருவடிகளை பற்றி போற்றவேணும்.
ஆசார்யன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாய விஷயங்களை ஊட்டிச் செய்யும் கார்யத்தை, “பெற்றம் மேய்த்துண்ணும்” என்ற வரிதெரிவிக்கிறது.
ஆசார்யனுக்கு சிஷ்யன் செய்யும் கைங்கர்யங்களை, “குற்றேவல் எங்களை” என்ற வரிகாட்டுகிறது.
மற்றும் ஒரு விளக்கம்.

  1. ப்ராப்யத்தில் த்வரை (சிற்றம் சிறுகாலே வந்துன்னை)
  2. சாத்யத்தில் சாதனை புத்தி (போற்றும் பொருள் கேளாய்)
  3. சபலமாம்படி அபேக்ஷித்தல்/நிர்பந்தித்து கேட்டல் (குற்றேவல் எங்களைக் கொள்ளாமல்)
  4. ப்ரயோசனாந்த்ர வைமுக்யம். வர்ணாஶ்ரம தர்ம வ்ருத்திக்காக ஆசை (இற்றை பறை கொள்வான்)
  5. விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனை (ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல்)
  6. பல ப்ரார்த்தனை (மற்றை நம் காமங்கள் மாற்று)

30 பாசுர மங்களும் தினம் ஸேவிக்காவிடினும், இந்த ஒரு பாசுரத்தையாவது தினம் ஸேவித்து உய்யும் வழி பெறவேணும் என்பது பராசரபட்டரின் கருத்து.

———–

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.–30-

இழை -இழைதல் -நடந்து கொள்ளுதல் -ப்ரபந்ந நிஷ்டை -அபய பிரதானம் பெற்றவர்கள் -ந்யாஸ வித்யை ஸர்வ உப ஜீவ்யம்

நமக்குப் பறைதரும் நாராயணனை!
பாற்கடலில் பையத்துயின்ற பரமனை!
ஓங்கி உலகளந்த உத்தமனை!
பத்மநாபனை!
மாயனை!
ஹரியை!
கேசவனை!
தேவாதி தேவனை!
வைகுந்தனை!
அருங்கலத் தை!
முகில் வண்ணனை!
மனத்துக்கினியானை!
புள்ளின் வாய் கீண்டானை!
பங்கயக்கண்ணனை!
வல்லானை!
மணிவண்ணனை!
குல விளக்கை!
ஓடாத தோள்வலியனை!
மலர் மார்பனை!
விமலனை!
சுடரை!
அபிமானனை!
பூவைப்பூவண்ணனை!
குன்றைக்குடையாக்கினானை!
நெடுமாலை!
கோல விளக்கை!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை!
குறையொன்றுமில்லாத கோவிந்தனை!
அன்று காண் கோவிந்தனை!
செல்வத்திருமாலை!

சேதனர்களாகிய நாமனைவரும் கரணத்ரயம் படைத்ததன் பயனாக உள்ளத்திருத்தி, வாயினால் பாடி, செவியால் கேட்டு அனுபவித்து மகிழ்வோம்!

ஆக இப்படி எம்பெருமானின் இணையில்லா திருநாமங்களைக் கொண்டு தொடுத்த பாமாலையை அனுதினமும் அனுஸந்தித்து ஆண்டாளின் அருளுக்குப் பாத்ரமாவோமாக.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –