இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4
இனி யார் புகுவார் எழு நரக வாசல் – நாலாயி:2168/1
என் பாக்கியத்தால் இனி – நாலாயி:2215/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/4
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் – நாலாயி:2364/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் – நாலாயி:2364/2
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/4
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் – நாலாயி:2477/1
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் -இடை கழிக்கு உள்ளும் புறமும் காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -) காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )-இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே – சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே-திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்-திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –கீழே இருவரையும் கூறி–நின்றாய் -ஆள -என்று சொல்லுகிறது
சாயையைத் தனித்து பேச வேண்டாமை –ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி இப்போது இப்படி நின்றான் -என்னுதல்இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்-இனி -என்கையாலே-அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –-இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப்
பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –
இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நா வலஞ்சூழ் நாடு —87-எழு வகைப் பட்டு இருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார்-இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் உண்டோ
ஒருவன் –சர்வ பாபேப்யோ மொஷயிஷ்யாமி –என்று நிற்கச் செய்தே –அன்றிக்கே
எழுகிற நரக வாசல் உண்டு -எல்லாரும் போய்ப் புகுகிற நரக வாசல் -என்னுதல்
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அற்று -என்கை –முனியாது –யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை என்கிறது – எங்கள் பதத்துக்கு அழிவு சொல்லுவதே என்று பொடியாதே முனிந்தார்கள் ஆகில் யமபடர் கன்றும் விளவும் பட்டது படும் இத்தனை –மூரித்தாள் கோமின் – பெரும் தாளைப் பூட்டுங்கோள்- -இனிப் புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்-அதுக்கடி இன்னம் ஒரு கால் திறக்கும் என்னும்படி இருக்கில் இறே எளிதாகக் கோர்க்க வேண்டுவது –இவ் வாழ்வாருடைய பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2- இருக்கிற படி இப்பாசுரம்-
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—34-புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -மிகவும் செறிந்த ஸ்நேஹத்தை யுடையேனாய்க் கொண்டு சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என் பாக்கியத்தால் இனி–—
தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –
திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –அர்ஜூனனுக்கு மாமேகம் என்று உன்னால் சாதிக்கப்படும் அசேதனமான க்ரியா கலாபங்களை விட்டு பரம சேதனனாய் -உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணுகிற சித்த ஸ்வரூபனான என்னையே பற்று -என்றான் – அது ஒருவனுக்கு ஒரு காலத்திலே என்னாத படி சர்வர்க்கும் சர்வ காலத்திலும் – மாமேகம் -என்று இருக்கிறவர் -பெரிய பெருமாள் –மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும் –பர வியூஹ விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள் பக்கலிலே கண்ணழிவு சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் – அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை-அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது அறிவதாக இழிந்து அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே அறிவதாக இழியாதது நன்று இறே -அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –தன்னாலும் அறியப் போகாது –இவனாலும் அறியப் போகாது-தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று ஒரு குறை இல்லையே என்னில் – அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது – அவனுடைய உண்மை யறியப் போகாது –வைலஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது-இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும் இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –லௌகிகர் படியிலும் காண விரகற்று-அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன் கிட்ட மாட்டேன் –
இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83–இனியவன் மாயன் என வுரைப்பரேலும்-பிரமாணங்கள் ஸூ லபன் என்று சொல்லுகிற அவனை
நாட்டார் அரியன் என்று சொன்னார்களே யாகிலும் –இப்போது அவன் ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்களே யாகிலும் – வர்த்தமான தசையில் பிரகிருதி சம்பந்தித்து மம மாயா துரத்யயா-கீதை -7-13-என்னும்படி காண வரியன் ஆகிலும் –இனியவன் காண்பரியனேலும்-நிரதிசய போக்யனாய் யுள்ளவன் தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்-அன்றிக்கே-சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு–சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று தோன்றாதபடி பூமியை அபஹரித்து நெஞ்சுக்கு இனியனாய் தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –விண் கடந்த பைங்கழலான் –ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து-சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையவன் – அன்றிக்கே-அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –இனி உள்ளத்தின் உள்ளே உளன் –இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்-புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே-இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச் சொன்ன அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –இனி -என்று -இப்போது -என்றபடி –அன்றிக்கே-இனியவன் என்று ஒரே சொல்லாய் அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –
இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை-அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே-அப்படியே நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்-இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று பேர்த்திடுகிறார்-இங்கனே இருக்கை எனக்கு ஸ்வரூபம் -என்றுமாம் – –
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து-விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-இத்தால் –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு விரோதியான அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படிபரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை நடுங்கித்
தம் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும்-அருளிச் செய்தார் ஆய்த்து-
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை – அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து- அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –
நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் -இது -ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-நெறி-ஒழுக்கல்-கதி–அதாவது ப்ராப்யம்–இராமானுசன்
-எம்பெருமானார் –என்னைக் காத்தனனே -லோகத்தில் ஞாநாதிகரை ரஷித்தது ஆச்சர்யமாய் இராது -பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் -இது என்ன அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது -எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –இனி-அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48-எனக்கு-ஸ்வரூப லாபமாய் -தேவரீருக்கு குண லாபமாய் -இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம் வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ-உன் அருள் -ராமன் சீதா அருள்களில் வாசி -அநாதி காலம் ராஷஷிகளாக திரிந்து உள்ளோம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராக மூழ்கி உள்ளோம் -புன்மை இலோர் -நித்யர்களை சொல்லிற்று –நாம் பழுதே-யகலும் பொருள் என் -அமுதனார் தம்மையும் நம்மையும் –சேர்த்து அருளிச் செய்கிறார் – தம்மையும் உடையவரையும் என்றுமாம்-நாம் க்ர்த்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ -கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்ட கடவதாகையாலும் -பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும் -நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனே–உலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது .ஆகையால் எம்பெருமானரே–தேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி –
இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62-அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ளமகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் .–இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்.கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து-கூரத் ஆழ்வான் திருவடிகளைப் பற்றி – இன்று இருவினைப் பாசம் கழற்றி -இருந்தேன்-இன்று யான் இறையும் வருந்தேன் இனி -இப்போது நான் ஷண மாத்ரமானாலும் சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் –அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ –என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன் -என்று இயைக்க-யான் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக .
சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81-பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி -இருக்கும் -பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்-சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று பெறுவித்து அருளினவரே ! இப்படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .-பெரிய பெருமாள் உடைய திருவடிகளில் சக்தனாய் -அந்த கர்வத்தாலே ததீயர் உடைய ப்ரபாபவத்தை அறியப் பெறாதே -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பவர் பக்கல் சேராது ஒழிந்த எனக்கு அத்தை இன்று லபித்தது அருளின தேவரீர் உடைய அப்ரதிம பிரபாவதியான கிருபைக்கு –ஆராய்ந்து பார்க்கில் – ஒருவரும் சத்ர்சர் இல்லை-பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல் நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம்
பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து அந்த ஆஸ்ரயணம் விடாதேநிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து -அவர்கள் பின்னே திரிந்து -உழன்று –அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி -அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ சோகங்களாலே -இனி சிதிலன் ஆகேன் –தத்வ ஹித புருஷார்த்தங்களை சூவ்யக்தமாக பிரகாசிக்கும் சாஸ்த்ரங்களைஅதிகரித்து இருக்குமவர்கள் -தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று –பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ளஎம்பெருமானாரை அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் மனசை நிதி பெற்றால் போலே-லபித்தது இருக்குமவர்கள் -யாவர் சிலர் –அவர்கள் குல சரண கோத்ரங்கள் ஏதேனுமாக வமையும் –அவர்கள் நம்மை இவ்வாத்மா உள்ளளவும் ஒருபடிப்பட அடிமை கொள்ளும் மகானுபாவர் –ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி -முன்னம் -நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -கலியன்-நான் கண்டு கொண்டேன் ராமானுசா என்னும் நாமம் -என்கிறார்-நையேன் இனி -எம்பெருமானார் விஷயீ-காரத்தை பெற்ற பின் இப்படி செய்து சிதிலன் ஆகேன் -இது காறும் நைந்தது போதும் .இனி மேல் உழன்று ஓடி நிலை குலையும் நிலையே எனக்கு ஏற்படாது -அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –-இது நானாக தேடிக் கொண்ட கேடு-இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே –-98 –தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் -பிரகிருதி வச்யருக்கு சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ – அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே – அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –யுக்தி மாத்திரமே அமையும்-அவன் ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஸ்வதந்த்ரம் கொடுப்பான் –இவர் பாரதந்த்ரர் -நமக்கு பாரதந்தர்யம் கொடுத்து நம்மை தன் வசத்தே சேர்த்து கொள்கிறார் –அவன் நம் கர்மம் பார்ப்பான் இவர் தம் கிருபை ஒன்றையே பார்ப்பார்-எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து- தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற அடியோங்களை –அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார்–எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்-நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார்–எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறே–ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம் –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது -தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி–
போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100-மற்றொன்றை கொடுத்தருளிற்றாகிலும் -அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு-கீழே இழியாதாப் போலே ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க மாட்டாது –-தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் – இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் -வேறே காட்டி மயக்கிடாமல் இதிலே ஸ்திரமாக நிற்கும் படி -பண்ணி அருள வேணும்--பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -நெறி காட்டி நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே-தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின் தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து . –இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே -இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி-மோகிப்பிக்க வேண்டா –மயக்கம் -மோகம் –பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி – என்று சொல்லுகிறார் காணும் –உனது அடிப் போதில் என்னவே அமைந்து இருக்க -நின் பால் -என்று மிகை படக் கூறியது-மற்றவர் பால் போதராது -நின்பாலே போந்து அமர்ந்திடலை வலி வுறுத்துவதால்-மற்றவருக்கு உரியர் ஆகாமை காட்டிற்று–அதுவே ஈந்திட வேண்டும் என்பதனால் எம்பெருமானாரே இன்பம் தரும் உபாயம் என்பது பெற்றோம்-உண்டு அமர்ந்திடப் போனது தானாகவோ அன்றிப் பிறர் மூலமாகவோ அல்லாமல்-எம்பெருமானாராலேயே அதனைப் பெற வேண்டி இருத்தலின் அவரன்றி வேறு உபாயம் இன்மை-தோற்றுகிறது .–இதுவன்றி ஒன்றும் மாந்த கில்லாது -என்று வெளிப்படையாகவே எம்பெருமானார் அன்றி வேறு போக்கியம்-இல்லாமை சொல்லப் படுகிறது ..இப்படி ஆகார த்ரயமும் -சொல்லிற்று ஆயிற்று –
——————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –