Archive for April, 2023

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ அயோத்தியா காண்டம் .

April 8, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக் குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

இளங்கோவும்

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து

வனம் போய்ப் புக்கு

காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

சித்திர கூடத்து இருப்ப,

தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

————-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்

இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர  நியாயத்தாலே-

————-

கொடிய கைகேயி வரம் வேண்ட

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல

———

கொடியவள் வாய் கடிய சொற் கேட்டு

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –

அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –

பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து

கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –

அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்

சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –

இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –

அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –

அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட

அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –

இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –

உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு

—————-

மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்

தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –

பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே

ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்

கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –

குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன

உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன

எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன

அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன

——

இரு நிலத்தை வேண்டாது

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

——-

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய  
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்–ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்

———–

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

———

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து அங்கங்கள் அழகு மாறி

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

———-

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா –கானமரும் கல் லதர் போய்க் காடுறைந்தான்   –
ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே –
நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து –
திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  –
தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய
விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக
காட்டிலே
முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும்
பாலை நிலத்தின் வெம்மைக்கும்
பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம்
இவளேயாய்ப் போனார் –

(காடுறைய வைதேஹி இன் துணையாகப் போவான் என் என்ன
அவளும் அவனது ரக்ஷணத்தை ஸ்தூணா நிஹனநம் நியாயத்தால் திருடி கரிக்கிறாளே

பின்பு -பாபா நாம் -என்கிற பிராட்டி
காட்டிலே வர்த்திக்கிற நாளிலே ஆயுதம் வேண்டா
நீர் சா யுதராய் திரியப் புக்கவாறே நிழல் மரமாய்த் தோற்றுவீர்-
ஆர்த்தராய் சரண்யன் தேட்டமாய் திரிகிறவர்கள் உம்மை -நிழல் மரம் -என்று ஒதுங்குவார்கள் –
சரணாகதரை கை விடாமை உமக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் ஆகையாலே ராஷசரை அழியச் செய்வீர்
அது தான் சத்தைக்கு கைம் முதலாக நினைத்து இருக்கும் உம்முடைய சத்தையும் அழியும் படி தலைக் கட்ட அடுக்கும் –
ஆன பின்பு காட்டில் வர்த்திக்கும் நாள் இத்தனையும் ஆயுதத்தைப் பொகட்டு
கண்டார் இரங்கும்படி தாபஸ வேஷத்தோடு திரிய அமையாதோ -என்று
அவள் பிரஜைகள் உடைய ரஷணத்தில்  நிற்கிறவர்
(ஊற்றத்தின் எல்லையில் இருப்பதை அறியவே சீதாபிராட்டி வார்த்தை )

அப்யஹம் த்வாம் வா –
அசாதாரணராய்
தங்களோடு அனந்யராய்
இருப்பாரை வைத்தோ -தந்தாமை விடுவார் விடுவது –
உண்டாம் அன்று ஒக்க உண்டாய்
இல்லையாம் அன்று ஒக்க இல்லையாம்படி அன்றோ இருப்பது –

(சீதா உன்னையே விட்டாலும் அதுக்கும் மேலே -லஷ்மணன் -அவனையும் விட்டாலும் —
தன்னையே -விட்டாலும் ப்ரதிஜ்ஜை விட மாட்டேன் -சொன்ன சொல்லையே தம் தம்மை -என்கிறார் -)

நது-
நான் தொடங்கின வற்றில் தவிர மாட்டாதது ஈது ஒன்றுமே
அது தன்னில் சாயுதராய் ஸ்வ ரஷணத்தில் அயோக்யதை உடையராய் இருக்கை அன்றிக்கே
நம்மைப் பார்த்து இருக்கும் பிராமணரை ரஷிக்கிறோம் என்று சொல்லி வைத்து தவிர மாட்டோம் –

———–

இளங்கோவும்

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———-

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படி ஆனாலும் நந்தகம் ஸ்ரீ சார்ங்கம் -கொண்டு –
இளைய பெருமாளை போலே மற்று வேறு ஒருவர் இல்லை -உன் பெருமைக்கு இரண்டாவது ஆள் கூடாதோ
அடியேனுக்கு அருள் செய்து கூவிப் பணி கொள்ள வேண்டும்

வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

—————

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் –கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி

———–

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து வனம் போய்ப் புக்கு

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி உண்டு

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும்
வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி
நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான்
காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

————

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப் பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

————-

சித்திர கூடத்து இருப்ப,

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

———–

தயரதன் தான்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

————–

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ!

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

———————

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

———–

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

————

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-
ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் –
குதிரைகளை விட்டு
அநந்தரம்
தேர்களாலே அலங்கரித்து –
இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு
இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து
இலங்கையை அழியச் செய்த
தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் –
(ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———–

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —

———-

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-
கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து
தத் கத சித்தனாய் இருந்து –
ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம்
தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் –
பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –

தன்னுடைய ஆற்றாமை தோற்ற
பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து
ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் –
என்னும் இடத்தை அறிவித்து –

பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து –
தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து-
தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –

பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே
உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ–
நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை –
என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –

திரு உள்ளக் கருத்து இது –
ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு
அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் –
தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும்
ஹேதுவானது தான் ஏது-என்ன

இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து
பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே
இத்தை பலகாலும் அருளிச் செய்து –
ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே –
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –

பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது

வான் பணையம் -என்கையாலே
மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது

வான் -என்று
வலியதால் –
பெருமை யாதல் –

——–

குவலயமும் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி 

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

—————

விடை கொடுத்துத்

———

திருவுடை திசைக் கருமம் திருந்தப்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு உடைய திசைக் கருமம் திருத்தி –
செரு -என்று யுத்தம்
செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது

இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே
தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை
இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் )
ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –

ராவணன் வந்து –
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –
அது நிமித்தமாக

கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் -என்று சங்கல்பித்து –
அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு –
அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து –
அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –

பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு
கடலை அணை செய்து –
மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே
அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து –
இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை

——–

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ராமாயணம் பற்றிய முத்துக்கள் முப்பது–தொகுப்பு: ஸ்ரீ எஸ்.கோகுலாச்சாரி

April 8, 2023

முத்துக்கள் முப்பது

பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீராமாயணமும், மகாபாரதமும்.
ஸ்ரீராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள்.
காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு தான் இராமாயணம்.
ஒரு அட்சரத்திற்கு ஆயிரம் ஸ்லோகங்கள் வீதம் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்டது ஸ்ரீராமாயணம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.
ஆத்மாவை பரமாத்மாவிடம் சரணடையச் செய்துவிட்டால் அதற்குப் பிறகு அவனுக்கு எவ்விதமான துன்பங்களும் கிடையாது.
அந்த ஆத்மாவுக்கு அடைக்கலமாக பெருமானே விளங்குவார் என்பதுதான் வேத நூல்களின் சாரமான கருத்து.
அந்தக் கருத்து எல்லோருக்கும்  புரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்ரீராமாயணம் இயற்றப்பட்டது.
ஸ்ரீராமாயணத்தை, ‘‘சரணாகதி சாஸ்திரம்” என்று தான் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

1. தாயிற் சிறந்த கோயில் இல்லை

வேத இதிகாசங்களில் அடிப்படையான கருத்து ‘‘அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்” என்பதுதான்.
இது இந்திய நாட்டிற்கே உரிய அடிப்படையான விஷயம்.
மாதா, பிதா,  குரு, தெய்வம் என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்,
வடமொழியில் மாத்ரு  தேவோ பவ; பித்ரு தேவோ பவ ;ஆச்சார்ய தேவோ பவ ; என்று வருகிறது.
தைத்ரிய உபநிஷத்தின் உயிர் வாக்கியம் இது.
இந்த தர்மத்தின் முதல் சொல் மாதா தான்  தெய்வம் என்பது.
தாயில் சிறந்த கோயில் இல்லை என்ற வாக்கியத்தின் படி நடந்தவன் ஸ்ரீராமன்.

2. பகவானைப் பெற்றெடுத்த கோசலை

ஸ்ரீராமபிரான் கோசலையின் மணிவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து,
இந்த புண்ணிய பூமியிலே, சித்திரை மாதம், வளர்பிறை நவமி நன்னாளில் அவதரித்தான்.
எல்லா நற்குணங்களையும் தன்னிடத்திலே பெற்றவள்  கௌசல்யா தேவி.
வேதங்களால் அறிவதற்கு அருமையானவனும், கருமேகம் போன்ற நிறமும் மின்னலைப் போன்ற ஒளியும் படைத்த  பகவானை,
எல்லா உலகங்களும் இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறும்படியாக இந்த உலகத்தில் பெற்றெடுத்தாள் என்று பாடுகிறார்.

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை

3. தெய்வத்தை பயந்த தெய்வம்

இதில் “திறன் கொள் கோசலை” என்கின்ற வார்த்தை மிக முக்கியமானது.
ஒரு குழந்தையைப்  பெற வேண்டுமானால் அதற்கான திடமான ஆரோக் கியமும் பலமும் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும்
ஒரே ஒரு சாதாரண குழந்தையைப்  பெறுவதற்கு இத்தனை திடகாத்திரம் தேவை என்று சொன் னால்,
உலகத்தை எல்லாம் தன்னுடைய உடலாகக்  கொண்ட  எம் பெருமானைப்  பெற்றெடுப்பதற்கு எத்தனை திடகாத்திரம் வேண்டும்.
கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய  மூன்று தாய்மார்களில்  இந்த   திடம் கோசலைக்கு இருந்ததால்
பகவான் கோசலையின் மணி வயிற்றை தான் பிறப்பதற்கு ஏற்ற கருவறையாகத் தேர்ந்தெடுத்தார்.
பகவானைப் பெற்றெடுத்த கருவறையாக திருவயிரை உடையவள் என்பதால் தேவர்கள் அனைவரும்
கோசலையை தெய்வத்தை பயந்த தெய்வமாகப் போற்றினர்.

4. முதல்வனைப் பெற்றவள்

குகனிடம் கோசலையை அறிமுகப்படுத்தும் போது பரதன் சொல்வான்.  ‘
‘எல்லாஉலகங்களையும் யார் படைத்தவனோ, அப்படிப்  படைத்தவனையே தன் வயிற்றின் மூலம்
படைத்த பெருமை உடையவள் கோசலை”

சுற்றத் தார், தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.

5. கோசலை பெயர் சொல்லி ராமனுக்குத் தாலாட்டு

கண்ணனுக்கு தாலாட்டு பாடல் உண்டு.
ஆனால் இராமனுக்கு இல்லையே என்ற குறையைத்  தீர்த்து வைத்தவர் குலசேகர ஆழ்வார்.

மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

என்று ராமனின் திருத்தாயாரான கோசலையின் பெருமையைக்  கூறி
திருக் கண்ணபுரம் பதிகத்தின்  தாலாட்டைத் தொடங்குகிறார்.

6. கோசலையின் பெயரோடு சுப்ரபாதம்

தாலாட்டு பாடிய குழந்தையை திரும்பவும் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்ப வேண்டும்.
திருப்பள்ளி எழுச்சிக்கு சுப்ரபாதம் என்று பெயர்
அந்த சுப்ரபாதமும் கோசலையின் பெயரில்தான் தொடங்குகிறது என்பது
கோசலைக்கும்  ராமனுக்கும் உள்ள தாய் மகன்  பிணைப்பை, பக்தி உலகம் எவ்வாறு போற்றுகிறது என்பதைக்  காட்டுகிறது.
திருப்பள்ளி எழுச்சியின் முதல் வார்த்தையே கௌசல்யா சுப்ரஜா என்று தான் ஆரம்பிக்கிறது.

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

இன்றைக்கு பல்வேறு திருக் கோயில்களிலும் சுப்ரபாதங்கள் இசைக்கப் படுகிறது.
அந்த சுப்ரபாதங்களின் முதல் ஸ்லோகம் பெரும்பாலும் இந்த ஸ்லோகமாகவே இருக்கும்.
“இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன்.
ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை (கௌசல்யா) எத்தனை அரிய பேற்றினை பெற்றவள்.

7. கோசலை ஒரு சிறந்த தாய்

இறைவனே மகனாக அவதரித்தாலும் கூட, தாயின் கடமையாகிய தர்ம உபதேசத்தை செய்து கொண்டே
இருக்க வேண்டும் என்று உலகத் தாய்மார்களுக்கு காட்டியவள் கோசலை.
ராமன் காட்டுக்கு புறப்படும் போது அவள் ஒரு வார்த்தையை சொல்லுகின்றாள்.

யம் பாலயஸி தர்மம் த்வம் திருத்யா சநியமேன ச |
ஸவை ராகவசார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

“நீ தர்மத்தின் வழியில் நின்று, சத்தியத்தைக்  காப்பதற்காக இந்தக்  காரியத்தை செய்கிறாய்.
மிகுந்த மகிழ்ச்சி. நீ எந்த தர்மத்தை காப்பாற்றுகிறாயோ, அந்த தர்மம் உன்னை காப்பாற்றும்
(தர்மஸ்த்வாம் அபிரக்ஷது) என்று ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றாள்.

பட்டத்தைத் துறந்து, தன்னுடைய மகன் காட்டுக்குச் செல்கின்றானே என்ற வேதனை ஒருபுறம் இருந்தாலும் கூட,
அதனை வெளிக் காட்டாது ஆசீர்வதித்து அனுப்புகின்ற உறுதியான தாயின் கடமைக்கு அடையாளமாக
இங்கே கோசலையைப் பார்க்கிறோம்.

8.எல்லோருக்கும் நல்ல உறவு

ராமாயணத்தில் ராமனை நேசித்த அடுத்த தாய் சுமித்திரை.
ஸு என்றால் நல்ல , மங்கலகரமான என்று பொருள்.
மித்ரா என்றால் உறவு.
ஸு மித்ரா என்றால்  நல்ல உறவு என்று பொருள்.
யாரிடமும் பகைமை பாராட்டாத உயர்ந்த உள்ளம் கொண்டவள்.
கோசலையாவது தன்னுடைய மகன் காட்டுக்குப் போகிறானே என்று கொஞ்சம் தயங்கினாள்.
அந்த தயக்கத்தை அவளுடைய பேச்சிலிருந்து பார்க்கலாம்.
ஆனால் தசரதன் கைகேயிக்கு அளித்த வரங்களின்படி இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றபோது
எவ்வித சலனமும் இன்றித் தனது மகனான இலக்குமணன் இராமனுடன் கூடச் செல்வதை விரும்பியவள் சுமித்திரை.

9. ராமனிடம் கொண்ட அன்பு

இரண்டு அற்புதமான பாடல்கள்.
ஆகாதது அன்றால் உனக்கு -அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை – என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள்.

அந்தக் காடு தான் உனக்கு அயோத்தி.
ராமனே தசரத மன்னன்.
சீதையே உன்னுடைய தாய்.
இவ்வாறு எண்ணிக் கொண்டு ராமருடன் செல்.
இனி இங்கே ஒரு நொடி நிற்பதும் தாமதிப்பதும் குற்றம் என்று சொல்லி
தன்னுடைய மகனை அனுப்புகிறாள் என்று சொன்னால்
ராமனிடம் சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்பது விளங்கும்.

10. மனதில் தைத்த வாளை அகற்றினான்  

அடுத்த பாடலிலே சொல்வது நம் மனதை உருக்கும். கண்ணீர் வரும்.

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின்ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள்.

மகனே, நீ ராமன் பின்னே செல்.
தம்பி என்னும் தகுதியானல்ல. ஒரு அடிமையாய் சொல்.
அவன் அயோத்திக்கு திரும்பி வந்தால் நீயும் அவனுடன் வா.
அப்படி அவன் வரவில்லை என்று சொன்னால் அவனுக்கு முன்னர் நீ இறந்து போ”
இதன் மூலம் ராமனிடத்திலே சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்று தெரியும்.
ராமனும் அத்தகைய அன்பு உடையவன் தான்.
ராமன் காட்டுக்கு போவதை நினைத்து சோர்ந்து சுமித்திரை கீழே விழுகின்ற பொழுது அவளைத் தாங்கி,
அவளுடைய மனதை அரித்து கொண்டிருக்கும் துக்கம் என்னும் வாளை ஆறுதல் கூறி ராமன் அகற்றினான்.

‘‘சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்” என்பது கம்ப சித்திரம்.

11. இராமனும் கைகேயியும்

மூன்றாவது தாய் கைகேயி.
அது என்னவோ தெரியவில்லை,
எல்லோருமே கைகேயியை கொடுமைக் காரியாகவே சித்தரிக்கின்றனர்.
கைகேயி இல்லா விட்டால் ராமாயணம் ஏது?.
அவதார நோக்கம் எப்படி நிறைவேறும்?
ராமனை வளர்த்தவள் கைகேயி.
மந்தரை ராமனுக்கு மணி மகுடம் என்று சொன்னவுடன் கோசலையை விட, தசரதனை விட,
மிகவும் சந்தோஷப்பட்டவள் கைகேயி.
தன் மகன் வேறு; கோசலை மகன் வேறு என்ற வேற்றுமை கைகேயிக்கு இல்லை என்பதை
“வேற்றுமை உற்றிலள்” என்று கம்பன் சுட்டிக் காட்டுவார்.
மந்தரை சொன்னதற்காக தன்னுடைய முத்து மாலையைப் பரிசாகத்  தந்தவள் அவள்.

12. ராமன் தான் என் கண்மணி

கைகேயி ராமன் மீது கொண்ட அன்பையும்,
அவனுக்கு மகுடம் என்றவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சியையும்,
வால்மீகியை விடவும், கம்பனை விடவும், ரசித்து ரசித்துச் சொன்னவர் அருணாச்சல கவிராயர்.
தன்னிடம் கோள் சொன்ன மந்தரையிடம்,
‘‘பாமரத்தனமாக ஏன் பேசுகிறாய்?
அவன் தான் பட்டத்துக்கு உரியவன்” என்று எடுத்துச் சொல்லி,
காரணத்தை அடுக்குவாள்.

பாமரமே,  உனக்கு என்னடி பேச்சு?
பழம் நழுவி பாலில் விழுந்தால் போல் ஆச்சு
பரசுராம கர்வம் தீர்த்தவன் ‘‘டி”
அவன் நம்மையெல்லாம் காத்தவன் ‘‘டி”
பட்டம் கட்ட ஏற்ற வன் “டி”
நாலு பேரில் மூத்தவன் ‘‘டி” அவன் தான் என் கண்மணி

என்று தன்னுடைய கண்ணின் மணியாக ராமனைச் சொல்வாள்.

13. அன்று அலர்ந்த செந்தாமரை

பெற்ற தாய் கோசலையை விட, வளர்த்த தாய் கைகேயியிடம் பெரு மதிப்பும் அன்பும் கொண்டிருந்தான்.
கடைசிவரை தன்னை காட்டுக்கு அனுப்பியவள் என்று கைகேயியை வெறுக்கவே இல்லை.
மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயி, ராமனை காட்டுக்கு அனுப்புவதற்காக அழைக்கிறாள் .
தான் சொன்னால் கேட்பானோ மாட்டானோ என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது.
அதனால் இது அரச கட்டளை என்று சொல்ல,
ராமன் புரிந்து கொண்டு, சிரித்துக் கொண்டே சொல்லுகின்றான்.

மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

தாயின் கட்டளையை ஏற்ற போது அவன் முகம் அன்று அலர்ந்த  செந்தாமரை போல மலர்ந்தது என்று கம்பன் காட்டுவான்.

14. இராமன் முதலில் வணங்கியது யாரை?

வன வாசம் முடிந்து திரும்ப அயோத்திக்கு வந்தவுடன் அவனுடைய மூன்று அன்னையர்களும் நிற்கும் பொழுது
ராமன் முதலில் வணங்கியது கோசலையை அல்ல, கைகேயியைத் தான்.
“கைகையன் தனையை முந்தக் காலூறப் பணிந்து” என்பது கம்பன் பாட்டு.
தன்னுடைய தந்தை கைகேயியின் உறவை ‘‘நீ எனக்கு மனைவியும் அல்ல. பரதன் எனக்கு மகனும் அல்ல’’ என்று
சூளுரைத்து துறந்ததை அறிந்தான் ராமன்,
போர் முடிவில் ஆசி வழங்க வந்த தசரதன் இராமனிடம் ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கும் பொழுது,
இராமன் “தந்தையே, நீ கொடியவள் என்று கைவிட்ட, எனக்கு தெய்வம் போன்ற கைகேயியையும்
அவளுடைய மகனான பரதனை தாயும் தம்பியுமாக நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்”
தீயள்  என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும்
தம்பியும் ஆம் வரம் தருக எனத்  தாழ்ந்தான்” என்பது கம்ப சித்திரம்.

15. மாற்றுத் தாய், ஈற்றுத் தாய், கூற்றுத்தாய்

பெரியாழ்வார் இராமனுடைய மூன்று தாய்மார்களையும் பெயரைச் சொல்லி அழைக்காமல்
மாற்றுத்தாய்,
ஈற்றுத்தாய்,
கூற்றுத்தாய் என்ற மூன்று சொற்களால்
குறிப்பிடும் நயம் அற்புதமானது.

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து  எம்பிரான்! என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக்  கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற.

இதில் மாற்றுத்தாய் என்பது பெற்ற தாய்க்கு மாறான இராமனை வளர்த்த கைகேயியைக் குறிக்கும்.
ஈற்றுத்தாய் என்பது ஈன்ற தாயான கோசலையைக் குறிக்கும்.
அவள் தானே பெற்றவள்.
மகனே வனம் போகாதே என்று தடுக்கிறாள். அழுகிறாள்.
கூற்றுத் தாய் என்பது சுமித்திரையைக் குறிக்கும்.
அவள் இரண்டு கூறு பாயாசங்களை பெற்று இலக்குவனையும் சத்துருக் கணையும் ஈன்றவள்.
இதை இன்னொரு விதமாகவும் சொல்வார்கள்.
மாற்றுத்தாய் என்பது சுமித்திரையைக்  குறிப்பதாகவும்,
கூற்றுத் தாய் என்பது தசரதனுக்கு எமனாக
அதாவது கூற்றுவனாக வந்த கைகேயியைக்  குறிப்பதாகவும் ஒரு பொருள் உண்டு.

16. சக்கரவர்த்தி திருமகன்

ஒரு தந்தையும் தனயனும் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற தர்ம முறை
தசரதன் ராமன் இருவரிடத்திலும் வெளிப்படும்.
உலகுக்கெல்லாம் தந்தையான பகவான், தனக்கு ஒரு தந்தையைத்  தேர்ந்தெடுக்கும் பொழுது,
இஷ்வாகு  குலத்திலே தசரதனைத் தேர்ந்தெடுத்தான் என்பதிலிருந்து தசரதனின் சிறப்பு தெரியவரும்.
பத்து திசைகளையும் வென்று, நிர்வகித்து, சக்கரவர்த்தி என்கின்ற பெருமையுடன் காத்தவன் தசரதன்.
இராமன் மகனாகப்  பிறந்த பிறகு இராமனை கண் போல் பாதுகாப்பதன் மூலம்,
இந்த உலகத்தைப் பாதுகாக்கலாம் என்று நினைத்தவன்.
வைணவ மரபில் இராமனை அழைக்கும் பொழுது இராமன் என்று அழைக்க மாட்டார்கள்.
சக்கரவர்த்தி திருமகன் என்றுதான் அழைப்பார்கள்.

17. ஏன் கைகேயியிடம் அதிக அன்பு?

தசரதன் தனக்குரிய மூன்று மகிஷிகளில் கைகேயியின் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான்.
அவள் இளைய மனைவி.
குமாரர்களில் இராமன் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான்.
குமாரர்களில் இராமன் மூத்தவன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பரதனைப்  பெற்றெடுத்த கைகேயி, கோசலை பெற்றெடுத்த இராமனிடம் தான் மிக அதிகமான அன்பைக் கொண்டிருந்தாள்.
இராமனை வளர்த்தவள் அவள்.

அதனால் இராமன் பெரும்பாலும் கைகேயின் இல்லத்திலேயே இருப்பான்.
கைகேயியின் இல்லத்தில் இராமன் இருப்பதால் தசரதனும் கைகேயின் இல்லத்தில் இருப்பான்.
தசரதன், கைகேயி பெற்று வளர்த்த மகன்(உனைப்பயந்த கைகேசி) ராமன் என்றே சொல்வதை கவனிக்கலாம்.
இராமன் மீது தன்னைப் போலவே அதிக பாசம் வைத்திருந்த கைகேயின் மீது
இயல்பாகவே தசரதனின் அன்பு அதிகரித்திருந்தது.
அதுவே தசரதனின் முடிவுக்கு காரணமானது.

18. ராமனுக்காக உயிர் துறந்தவன்

வைணவ மரபில் ஞான பாவத்தை விட பிரேம பாவத்தை அதிகம் கொண்டாடுவார்கள்.
பிரேம பாவம் அதிகரிக்கும் பொழுது, வந்திருப்பவன் பரம்பொருள் (மஹாவிஷ்ணு) என்ற நினைவு கூட போய்விடும்.
மகன் என்ற வாஞ்சை தான் மிஞ்சி நிற்கும்.
அதுதான் தசரதனிடம் இருந்தது.
தசரதன் ராமனிடம் ஆழங்கால் பட்டிருந்தான்.
அதனால் ராமனிடம் சேர்ந்திருக்கும் பொழுது அவனுக்கு மகிழ்ச்சி.

ராமனைப் பிரிந்தால்  வருத்தம்.
இன்னும் ஒரு படி மேலே போய் இராமனுடைய பிரிவைத்  தாங்க முடியாமல் தன்னுடைய உயிரையே இழந்தான் தசரதன்.
‘‘இராமன் காடாளப்  போனான்;
தசரதன் வான் ஆளப் போனான்” என்று சொல்வார்கள்.
பெற்று வளர்த்த தாய்மார்களுக்கு இல்லாத அசாதாரணமான   பரிவு தசரதனுக்கு இருந்தது.

19. நன் மகன் ராமன்

குலசேகர ஆழ்வார் இராமனை நன்மகன் என்று அழைக்கிறார்
.‘‘நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே”என்பது பாசுர வரி.
நன்மகன் என்ற சொல்லுக்கு உரை விளக்கம் தந்த ஆசாரியர்கள்,
‘‘ஒரு மகனுக்குரிய எல்லா குணங்களையும் உடையவன். தந்தையின் சொல் கேட்டு நடப்பவன்.  அவனே நன்மகன்”
(புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி
தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க.)என்று விளக்கம் அளித்தார்கள்.

20. இராமன் வேறு; என் உயிர் வேறு அல்ல

இராமனை ஒரு கணம் பிரிந்திருந்தாலும் உயிர் தரிக்க மாட்டான் தசரதன்.
அதனால் தான் முதன் முதலில் விசுவாமித்திரன் தன்னோடு காட்டுக்கு
இராமனை அனுப்ப வேண்டும் என்று கேட்ட பொழுது, துடித்தான்.
பார்வை இல்லாத ஒருவன் பார்வை வந்து, உடனடியாக, அந்தக்  கண் பார்வையை பறி கொடுத்தால்
எத்தனை துன்பம் அடைவானோ அத்தனை துன்பத்தை அடைந்ததாக (கண்ணிலான் பெற்றிழந்தான்) கம்பன் காட்டுகின்றார்.

அதைப் போலவே திருமணம் முடிந்து மிதிலையில் இருந்து அயோத்திக்கு திரும்புகின்ற பொழுது
பரசுராமன் சண்டைக்கு வந்து நிற்கின்றார்.
அவரிடத்திலே இராமனுக்காக சரணாகதி புகுகின்றார் தசரதன்.
‘‘சிவனும், பிரமனும், திருமாலும் உன் வீரத்துக்கு ஒரு பொருளாக மாட்டார்கள்.
அப்படி இருக்க அற்ப மானிடர் உனக்கு ஒரு பொருள் அல்லவே.

இந்த இராமனும் எனது பிராணனும் இனி உன் அடைக்கலப்  பொருட்கள்”

சிவனும் அயன்  அரியும் அலர்; சிறு மானுடர் பொருளோ
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான்
‘‘எனது உயிர் வேறு ராமன் வேறு இல்லை.
இரண்டும் ஒன்று தான் ”என்பதை சொல்லாமல் சொல்லுகின்றான் தசரதன்.

21. உடனே இராமனை அழைத்து வா

வால்மீகி ராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் இல்லாத ஒரு அற்புதமான காட்சியை குலசேகர ஆழ்வார் சித்தரிக்கிறார்.
ஸ்ரீராமனை பார்க்காமல் தசரதனால் ஒரு நொடி கூட இருக்க முடியாது.
அரசவைக்குச் சென்றாலும் நினைவெல்லாம் ராமன் மீதுதான் இருக்கும்.
அரசவைக் காரியங்களைக்  கவனிக்கும் பொழுதே ராமன் மீது நினைவு வந்துவிடும்.
உடனே சுமந்திரனை அழைத்து இராமனை அழைத்து வரும்படி கட்டளை யிடுவான்.

அப்பொழுது இராமன் ஓடி வருவான்.
ஓடி வரும் பொழுது அப்படியே வைத்த கண் வாங்காது அவனைப்  பார்த்துக் கொண்டிருப்பான்.
அவன் மடி மீது அமர்ந்து, ‘‘கூப்பிட்டீர்களா, என்ன காரணம்” என்று கேட்டவுடன், ‘
‘ஒன்றும் இல்லை; நீ போகலாம்” என்பான்.
உடனே இராமன் இறங்கி ஓடுவான்.

22. முன்னழகும் பின்னழகும்

கண் மறையும் வரை இராமனைப்  பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒரு சில நிமிடங்கள் தான். மறுபடியும் இராமனைப்  பார்க்க முடியவில்லை என்கிற தவிப்பு வர,
சுமந்திரனைக் கூப்பிட்டு மறுபடியும் இராமனை அழைத்து வரும் படி கட்டளை இடுவான்.
இப்படி இராமன் வருவதும் போவதும் என அந்த நாளே  போய்விடும்.
இராமன் ஓடி வரும் பொழுது அவனுடைய முன்னழகையும் அவன் திரும்பி ஓடும்பொழுது
அவனுடைய பின்னழகையும் ரசிக்கக் கூடிய  ரசிகனாக தசரதன் இருந்தான்.
அப்படி ரசிப்பதில் தான் அவனுடைய உயிர் இருந்தது என்பதைக் காட்டும் உருக்கமான பாசுரம்.

வா போகு வா இன்னம் வந்தொரு கால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலு மெழில் தோளி தன் பொருட்டா விடையோன் றன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல் வினையேன் மனமுருக்கும் மகனே இன்று
நீ போக என்னெஞ்ச மிரு பிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

இந்தப்  பாசுரத்தின் கடைசி வரியை ஒருமுறை படித்துப்  பாருங்கள்.
‘‘என்னைப் பிரிந்து நீ காட்டுக்கு போகிறாய் என்று கேட்டவுடன்,
என்னுடைய நெஞ்சம் இரண்டு கூறாகப்  பிளந்துப் போயிருக்க வேண்டும்.
அப்படி போகவில்லை என்றால் என் நெஞ்சம் எத்தனை வலிமை?” என்பது போல அமைந்த பாசுரம்.

23. மயங்கி விழுந்த இராமன்

இராமன் தசரதன் மீது கொண்டிருந்த அன்பு, தசரதன் ராமன் மீது கொண்டிருந்த அன்புக்கு சற்றும் குறைந்தது அல்ல.
எத்தனைத் துன்பம் வந்தாலும் தந்தையின் சத்தியம் காப்பாற்றப்பட வேண்டும்,
அதுதான் ஒரு தனயனுக்கு தலையாய கடமை என்பதில் உறுதியாக இருந்தவன் இராமன்.
தசரதன் இறந்த பொழுது, ‘‘வாய்மைக்கு இனி யார் உளர் ?”என்று கம்பன் கேட்கின்றான்.
காட்டில் வசிக்கும்போது பரதன் வருகின்றான்.
தன்னுடைய தந்தை தசரதன் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டதும்,
‘‘வெந்த புண்ணில் நுழைந்த வேல் போல, வார்த்தை செவியில் நுழைவதற்கு முன்னாலே,
கண்ணும் மனமும் காற்றாடியை போல் கழன்று விழ, மயங்கி தரையில் விழுந்தான் ராமன்.

இதை இப்படிச்  சொன்னால் சரிதான்.
ஆனால் கம்பன் ஒரு படி மேலே போய், விண் ணுலகத்துக்கு அப்பால் உள்ள பரமபதத்துக்கு  உரியவனான இராமன்,
தசரதனின் மரணத்தைக்  கேட்டு தரையில் விழுந்தான் என்று சொல்வதில் இருந்து,
இராமன் தசரதன் மீது கொண்ட அளவற்ற அன்பு தெரிகிறது.

விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்
புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம்
கண்ணொடு  மனம் சுழல் கறங்கு போல் ஆய்
மண்ணினை விழுந்தனன் வானின் உம்பரான்

24. பெயர் சூட்டிய குரு

தசரதனுக்கும் இராமனுக்கும் குருவான வசிஷ்டர் பிரம்மனின் புதல்வர்.
புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர்.
பிள்ளை இல்லாத தன்னுடைய குறையை தசரதன் குரு வசிஷ்டரிடம் சொல்லிப் புலம்பிய பொழுது
சாட்சாத் அந்தப்  பெருமானே, தசரதனுக்குப் பிள்ளையாகப்  பிறக்கப் போகின்றான் என்கின்ற தேவ ரகசியத்தை
அறிந்து புத்ர காமேஷ்டி யாகத்தைச் செய்யச் சொல்லுகின்றார் வசிஷ்டர்.
புத்திர காமேஷ்டி யாகம் மூலம் திருமாலே தசரதனுக்குப் பிள்ளையாக அவதரிக்கிறார்.
அப்படி அவதரித்த பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டியவர் வசிஷ்டர்.

கரா மலைய தளர் கைக்கரி எய்த்தே
அரா அணையில் துயில்வோய்  என அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப் பொருளுக்கே
இராமன் எனப்  பெயர் ஈந்தனன் அன்றே

குரு என்ற நிலையை மீறி, இராமனிடத்திலே ஆழமான அன்பை வைத்திருந்தார் வசிஷ்டர்.
அதைப்போல குலகுரு வசிஷ்டர் என்ன சொன்னாலும் தட்டாமல் நிறைவேற்றும் ஒரு சீடனாக
இராமன் திகழ்ந்தான் என்பதை இராமாயணம் முழுக்கக்  காணலாம்.

25. விஸ்வாமித்திரர்
‘‘நான் அறிவேன்”

இராமாயணத்திலே எம்பெருமானாகிய இராமன் இரண்டு ஆச்சாரியார்களை பெற்றான்.
ஒருவர் வசிஷ்டர் என்று பார்த்தோம்.
அவர் குல குரு.
இன்னொருவர் விசுவாமித்திர மகரிஷி.
விஸ்வம் என்றால் உலகம்.
மித்ரன் என்றால் நண்பன்.
இந்த உலகுக்கு நண்பன் என்கிற பொருள் கொண்ட பெயரை உடையவர் விசுவாமித்திரர்.
விசுவாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் ஒரு காலத்தில் பகை இருந்தது.

எப்படி கருடனும் பாம்பும் ஒன்றுக்கொன்று பகையாக இருந்தாலும், பகவானிடத்திலே இணைந்து இருக்கிறதோ,
அப்படி வசிஷ்டரும் விசுவாமித்திரரும் இராமருடைய விஷயத்திலே ஒன்றாகவே இணைந்து
செயல் படுவதை இராமாயணத்தில் காணலாம்.
பரம்பொருள் ராமனாக வந்து அவதரித் திருக்கிறான் என்பது வசிஷ்டருக்குத் தெரிந்தாலும்
அவர் ரகசியத்தை  வெளியே சொல்லவில்லை.
ஆனால் விசுவாமித்திரர் சபையில் போட்டு உடைத்து விடுகிறார்.
” தசரதா! நீ சாதாரண பிள்ளை என்று நினைக்கக்கூடிய இராமன் பரம்பொருள் என்பதை நான் அறிவேன்.
வசிஷ்டர் போன்ற ரிஷிகளும் அறிவார்கள்.

அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம்
வசிஷ் டோபி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்திதா:’

இந்த இடத்தில் வால்மீகியின் இந்த  ஸ்லோகத்தை எடுத்து பெரியவாச்சான் பிள்ளை பற்பல அர்த்தங்களை கொட்டித்  தீர்க்கிறார்.

26. பிராட்டி பெருமாளை சேர்த்து வைத்தவர்

பரம்பொருள் இராமனாக வந்து  அவதரித்து விட்டான்.
பிராட்டி சீதையாக அவதரித்து விட்டாள்.
இந்த இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய கைங் கரியத்தைச் செய்தவர் விசுவாமித்திரர்.
அது மட்டும் இல்லை
இராமனுக்கு முதன் முதலில் ஸூப்ரபாதம் பாடியவரும் அவர் தான்.
இராமன் விசுவா மித்திரரை   தனது குரு என்கிற நிலையை என்றும் மறந்ததில்லை.
விசுவாமித்திரர் வேள்வியை இராமன் காத்து முடித்தவுடன்.
‘‘இந்த உலகத்தை முழுக்க படைத்து காக்கும் பரம்பொருளான நீ இன்று
என்னுடைய கேள்வியை காப்பாற்றிக்  கொடுத்தாய்” என்று ஒரு வார்த்தையைச் (அவன் பரம்பொருள்) சொல்லிப்  பாராட்டுகிறார்.
”என்ன பணியை நான் செய்ய வேண்டும்?” என்று குருவைக்  கேட்பது சீடனின் கடமை.
அதை இராமன் மிக அழகாகச்  செய்கிறான். ‘
‘குருவே  சொன்ன கடமை நிறைவேறிவிட்டது அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? என்று
கேட்கும் பொழுது விசுவாமித்திரன் இராம அவதாரத்தின் நோக்கத்தை ஸூஷ்மமாக சொல்லிக் காட்டுகின்றார்.
அந்தப் பாடல் இது.

அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர்
விரியும் வார் புனல் மருதம் சூழ்  மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்

‘‘பெரிய காரியம் உள, அவை முடிப்பது பின்னர்
” இராவண வதம் போன்ற பெரிய காரியங்கள் பின்னால் உண்டு.
இப்போதைக்கு மிதிலை போவோம் என்ற வரியில் உள்ள அர்த்தத்தைக் கவனிக்க வேண்டும்.

27. இராமாயணமும் மகாபாரதமும்

இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
அதை ஒரு திரைப்படப் பாடலிலே கவியரசு கண்ணதாசன் மிக மிக அற்புதமாகச் சொல்லுவார்.
பாகப் பிரிவினை என்ற படத்தில் எழுதப்பட்ட அந்தப் பாடலின் பல்லவி இது.

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை  வளர்ப்பதனாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்ந்தால் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதைச்  சொல்ல வந்த காப்பியம் இராமாயணம்.
வேற்றுமையை வளர்த்தால் எப்படி மக்கள் அழிவார்கள் என்பதை குருஷேத்திரப் போர் மூலம் காட்டிய காப்பியம் மகாபாரதம்.
18 அக்குரோணியும் அழிந்து விஞ்சியர்கள் எத்தனை பேர்?
மனித சமூகம் அறிய வேண்டிய செய்தி அல்லவா இந்தியாவின் இரண்டு இதிகாசங்கள் தரும் செய்தி.

28. மூன்று தம்பியர்

இராமனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர்.
லட்சுமணன், பரதன், சத்ருக்கணன்.
பரம்பொருள் இராமனாக அவதரித்தான்.
அவனுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் இருந்து பணி புரியும் இறைத்தொண்டனாக லட்சுமணன் இருந்தான்.
சீதையைப் பிரிந்து பல மாதங்கள் சகித்துக் கொண்டிருந்த இராமன்,
லட்சுமணனைப் பிரிந்த பிறகு, ஒரு நொடியும் தாமதிக்காது தன்னுடைய சோதிக்குத்  திரும்பினான்.
‘‘இமைப்பில நயனன்” (ஒரு நொடியும் தூங்காதவன்) என்று லட்சுமணனை கொண்டாடுவார்கள்.
கைங்கர்ய ஸ்ரீமான் என்றும்,
இளையபெருமாள் என்றும்
லட்சுமணனை வைணவ உலகம் போற்றும்.

இராமனிடத்திலே பரதன்  கொண்ட அன்புக்கு  ஈடாகச் வேறு ஒருவரைச்  சொல்லவே முடியாது.
இராமனுடைய தாய் கோசலை பரதனைப்  பற்றி சொல்லும் பொழுது
‘‘ராமா உன்னை விட மும் மடங்கு நல்லவன்” என்று சொல்வதில் இருந்து
பரதனின் பெருமையைப்  புரிந்து கொள்ளலாம்.
‘‘படியில் குணத்து பரத நம்பி” என்று பரதனின் பெருமையை ஆழ்வார்கள் பாடுவார்கள்.

29. ஒரே பாட்டுக்காரன்

கடைசி தம்பி சத்துருக்கனன்.
பரம பாகவதனான பரதன் கூடவே இருந்தவன்.
பாகவத நிஷ்டை என்று சத்ருக்கனாழ்வாரை வைணவ மரபு போற்றும்.
ராமன் சொன்ன பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது.
இராமன் வருவதில் தாமதம்.
‘‘தம்பி சத்ருக்கனா, நீ இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்.
நான் உயிரை விடப் போகிறேன்” என்று பரதன் கூறினான்.
சத்ருக்கனன் துடித்துப் போனான்.
‘‘இந்த அரசை விட்டு, காட்டை ஆள போனான் ஒருவன். (இராமன்)
அவனுக்குத்  தொண்டு செய்ய அவன் பின்னால் போனான் ஒரு தம்பி (இளைய பெருமாள்).
அண்ணன் வர தாமதம் ஆகி விட்டது என்று உயிரை விடத் துணிந்தான்  ஒரு தம்பி (பரதன்).
இவர்களுக்கு இடையில், இந்த அரசை ஏற்று நடத்த நான் ஒரு தம்பி, நன்றாக இருக்கிறது கதை”

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; ‘‘போனவன் தான் வரும் அவதி போயிற்று’’ என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா!

30. ஸ்ரீராம நவமியின் நோக்கம் இதுதான்

இராமாயணம் முழுக்க
அன்பு தான்.
அடைக்கலம் தான்.
தொண்டு தான்.
தூய்மை தான்.
வேடனாகிய குகனை தம்பியாக ஏற்றுக் கொண்ட இராமன்
வானரமாகிய சுக்ரீவனையும்,
அரக்கனாகிய வீடணனையும்
சகோதரனாகவே ஏற்றுக் கொள்ளுகின்றான் என்றால்
உலக சகோதரத்தை ஓங்கிச் சொல்லும் உன்னதமான இதிகாசம் இராமாயணம்.
‘‘நடத்தையில் நின்று உயர் நாயகன்”என்று இராமனின் பெருமையை பலத்த குரலில் பேசும் காவியம்
என்பதால்தான் பாரத நாட்டின் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் சிறப்பு பெறாது,
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்த பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும்
இராமாயணம் போற்றப்படுகிறது.

இராமன் வணங்கப் படுகிறான்.
நம்மாழ்வார் ஒரே வரியிலேயே சொல்லிவிட்டார்.
‘‘கற்பார் இராமபிரானை அல்லால்  மற்றும் கற்பரோ?” என்று பாடினார்.
ஸ்ரீராம நவமி நன்னாள் எப்படிக் கொண்டாடுவது என்றால்,

1. இராமனுடைய குணங்களை நெஞ்சில் ஏற்றி போற்ற வேண்டும்.

2. பரம்பொருளாகிய ஸ்ரீராமனிடம் அடைக்கலம் புகுந்து நம் வாழ்வை ஏற்றிக் கொள்ள  வேண்டும்.

இந்த இரண்டும் தான் முக்கியம் என்பதை உணர்ந்து இந்த ஸ்ரீராம நவமியைக் கொண்டாடுவோம்.

————————–————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பேயாழ்வாரும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-அன்யாப தேச–திருத்தாயார் பாசுரம் —

April 7, 2023

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –

அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை   போய்
பகவத்  விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு  பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள்  –

—————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

—————————————————————————————

வியாக்யானம் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக  யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –

வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –

வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-

கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –

சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-

மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே   நீராட வென்று   நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய  சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –

மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –

மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –

நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –

அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-

ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –

ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்

அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –

இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –

பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்

பாடும் –
பாடுங்கோள்-

சூடும் –
சூடுங்கோள்-

புகும் –
புகுங்கோள்-

—————————————————

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

——————————————————

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்

இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –

பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

—————————————————————

செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்

(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–

பதவுரை

வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை

மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –

வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்

நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்

கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)

(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)

அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்

—————————————————————

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன் துழாய்‌
கற்பென்று சூடும்‌ கருங் குழல் மேல்‌ – மற்பொன்ற
நீண்ட தோள்‌ மால் கிடந்த நீள் கடல்‌ நீராடுவான்‌
பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) வியன் துழாய்‌ – வியக்கத்தக்க துளசி;

மற்பொன்ற – மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான;
மால்‌ – திருமால்‌;
நீள் கடல்‌ -திருப்பாற்கடல்‌.

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ அமைந்துள்ளது.
இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌.
என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌.
தனது கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக் கொள்கிறாள்‌.
மல்லர்கள்‌ அழியும்படியான நீண்ட தோள்களை யுடைய திருமால்‌ பள்ளி கொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே
நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌.
இப் பாசரத்தில்‌
‘கற்பென்று” பாதி வ்ரத்யத்தையும்‌,
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌,

‘என்‌ மகள்‌’ என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌.
மற்பொன்ற: மல்லர்களை யழித்த;
கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌,
கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, முஷ்டிகன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌.
பூண்ட நாள்‌ எல்லாம்‌: பூண்ட – பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌’ என்கிறபடியே,
“விடிந்த விடிவுகள்‌ தோறும்‌’ என்று பொருள் பட்டது.
எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌:
அவனுடைய திரு நாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திருக் கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திவ்ய சேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌,
வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌,
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌,
௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌
என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌.
இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு:
அதாவது –
தாமான தன்மையை (ஆண்மையை/ விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ எனப்படும்‌).
இப்படி அனுபவிக்கும்‌ இடத்தில்‌ தாய்ப் பாசுரம்‌, தோழிப் பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு.
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌.
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீ பாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை.

ஸ்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள்‌ அருளி செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌.
ஆயினும்‌ இப் பாசுரம்‌ ஒன்று தாய் வார்த்தையாகச்‌ செல்லுகிறது.
பேயாழ்வாராகிய பெண் பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது.
“என்னுடைய மகளானவள்‌” என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக் கொள்ள வேண்டும்‌.
இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌
இங்ஙனே தாய்ப் பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌,
“என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌
இவ் வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌
இப் பாசுரத்திற்கு வேறு வகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌.
எங்ஙனே எனில்‌:
”பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினை முற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு,
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌;
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே
சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச்‌ சூடுங்கள்‌;
நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌” என்பதாக.
இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌:
‘*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ அந்யாபதேசமின்றிக்கே யிருக்க
இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌…
திருமலையைப்‌ பாடுங்கோள்‌… திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌…
விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌” என்று.
திருவேங்கடத்தின்‌ புகழைப் பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌,
நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு …

——————————–

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ – கற்கின்ற
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40),

வீடு – மோட்சம்‌;
நூல் வலை – வேதங்களாகிய வலை;
நூலாட்டி – வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி;
கேள்வனார்‌ – கணவர்‌, இங்கே திருமால்‌.

மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌;
இதன்‌ பலனாகவே மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌…
“*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ எத்தகையது!” என்று
நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌!
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌
திருவடிகளாகிய வலையில்‌ அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌.
“மலை’ என்று வருகிற பெயர்களை யெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து
‘பசு மலை, குருவி மலை’ என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே,
என்னையும்‌ அறியாமல்‌ ‘திருவேங்கடமலை’ என்று என்‌ வாயில்‌ வந்துவிட்டது
இவ் வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌
கணக்கு செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து.
நின்று நினைக்கின்றேன்‌: நாம்‌ புத்தி பூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌,
எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டு
இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை.
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌,
ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌.
எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே என்னை
அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு.

எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, –
நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி.
வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி
ஆராய்ந்தபோது, எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று…
சரணாகதரைக்‌ காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி)
அந்நூல்களே * எதற்கென்று கேள்வனை (ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌.
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று,
அதனால்‌ அதை எனக்கு வீடாக்கினான்‌.
அதே மோட்சத் தானம்‌.
இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌).
இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ வாய்த்தது என்றபடி.
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோ ரூப முக்கரணங்களின்‌
வியாபாரங்கள்‌ (செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -நான்முகன் மடியில் குழவியாய் ராவணன் தலைகளை எண்ணிக் காட்டிய வ்ருத்தாந்தம் —

April 7, 2023

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு-
நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான்-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —முதல்  திருவந்தாதி–45-

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

——————————

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி-தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

————————————————————

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———–

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –