Archive for November, 2022

ஸ்ரீ பெரிய மொழி -1-10–கண்ணார் கடல் சூழ்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 20, 2022

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

பதவுரை

கண் ஆர் கடல் சூழ்

விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன்

லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க

திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம்

அம்புகளை
செல உய்த்தாய்

செலுத்தினவனே!
விண்ணோர் தொழும்

(பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற
வேங்கடம் மாமலை

திருமலையிலே
மேய அண்ணா

எழுந்தருளி யிருக்கிற பெருமானே!
அடியேன் இடரை களையாய்

என் துன்பங்களை நீக்கியருள வேணும்.

மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;

அவனும் இவனும் ஒருவனேயென்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்காகவென்க.

இராவணனாலே குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்களெல்லாரும் களித்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமானே! இவ்விருள் தருமாஞாலத்தில் இருப்பு-பெருந்துக்கம் என்றுணர்ந்த என்னுடைய இவ்விடரைப் போக்கியருளாய் என்கிறார்.

கண்ஆர்கடல் = வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்படி யான (அழகிய) கடல் என்று முரைக்கலாம்.

————–

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
இலங்கை பதிக்கு

லங்காபுரிக்கு
இறை ஆய

அரசர்களாயிருந்த
அரக்கரவர்

(மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள

கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக
கொடி

(தனக்கு) த்வஜமான
புள்

பெரிய திருவடியை
திரித்தாய்

ஸஞ்சரிப்பித்தவனே!,
விலங்கல் குடுமி

(மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய
திருவேங்கடம்

திருமலையிலே
மேய

மேவியிருப்பவனாய்
துளபம்

திருத்துழாயினாலாகிய
அலங்கல்

மாலையை
முடியாய்

திருமுடியிலே அணிந்துள்ளவனே!
அருளாய்

(அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும்.

புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.

உத்தர ஸ்ரீராமாயணத்தில் ஏழாவது ஸர்க்கத்தில் மாலி முதலிய அரக்கர்களை முடித்தவரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது, கண்டு கொள்க. மாலியானவன் முதலில் பெரிய திருவடியை கதையாலே அடித்துத் துரத்திவிட்டானென்றும், பிறகு பெருமாள் அளவற்ற சீற்றங்கொண்டு அப்பெரிய திருவடியின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களத்திலே யெழுந்தருளித் திருவாழியைப் பிரயோகித்து வெற்றி பெற்றனன் என்று முணர்க. ‘இலங்கைப்பதிக்கென்று இறையாய ” என்ற பாடமும் பொருந்தும்.

குலம் மாள என்னாமல் ” குலம் கெட்டு மாள ” என்றதனால், பல அரக்கர்கள் மூலைக்கொருவராகச் சிதறி ஓடினார்களென்பதும் பலர் மாண்டொழிந்தனர் என்பதும் விளங்கும்.

விலங்கல் குடுமி = ”சேணுயர் வேங்கடம்” என்றாற் போலே திருமலையின் உயர்த்தியைச் சொல்லுகிறது இந்த விசேஷணம், வானத்தின்மீது ஸஞ்சரிக்கின்ற ஸுர்ய சந்திரர்கள் விலகிப்போகவேண்டும்படியான சிகரத்தையுடைய திருமலை என்கை. விலங்கல் என்று மலைக்கும் பேருண்டாகையாலே, குடுமி – சிகரத்தையுடைய, திருவேங்கடம் விலங்கல் – திருவேங்கடமலையிலே என்றும் உரைக்கலாமாயினும் அதுசிறவாது.

அலங்கல் துளபமுடியாய் அருளாய் = ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்கென்றே தனி மாலையிட்டிருக்கிற உனக்கு என்னுடைய விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய காரியமன்று; அருள் செய்ய வேண்டுமத்தனையென்கை –

——————-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

பதவுரை

நீர் ஆர் கடலும்

நீர் நிரம்பியிருக்கிற கடலையும்
நிலனும்

பூமியையும்
முழுது

மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி)
உண்டு

அமுது செய்து
ஏர்

அழகியதும்
இள

இளையதுமான
ஆலந்தளிர் மேல்

ஆலந்தளிரின் மேலே
துயில்

திருக்கண்வளர்ந்தருளின
எந்தாய்

ஸ்வாமியே!,
சீர் ஆர்

சிறப்புப் பொருந்திய
திருவேங்கடம் மா மலை மேய

திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
ஆரா அமுதே

ஆராவமுதமான எம்பெருமானே!
அடியேற்கு அருளாய்

அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.

மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;

பிரளய காலத்திலே கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்திட்டு இளையதொரு ஆலந்தளிரின் மேலே திருக்கண்வளர்ந்தருளின அகடி தகடநா ஸமர்த்தனான உனக்கு அரிதான காரியமும் உண்டோ ?

எல்லாம் எளிதேகாண் என்பார் போல வடதள சாயி விருத்தாந்தத்தை ப்ரஸ்தாவிக்கிறார்.

அந்த சக்தி விசேஷ மெல்லாந் தோற்றத் திருமலையிலே ஸேவைஸாதிக்கின்ற என் ஆராவமுதமே! அருள் புரியாய் என்கிறார் –

————

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

பதவுரை

உறி மேல்

உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த
நறு நெய்

நல்ல நெய்யை
அமுது ஆக உண்டாய்

அமுதமாகக் கொண்டு புஜித்தவனே!
குறள் ஆய்

வாமநனாகி
நிலம்

பூமியை
ஈர் அடியாலே

இரண்டடியாலே
கொண்டாய்

அளந்து கொண்டவனே!
விண் தோய் சிகரம்

பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய
திருவேங்கடம் மேய

திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
அண்டா

தேவாதி தேவனே!
அடியேனுக்கு அருள் புரியாய்

அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.

திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார்.

திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்துவைத்த நெய் முதலிய கவ்யங்களை அமுது செய்தாயென்று சொன்ன முகத்தால் ஸௌலப்ய குணத்தையும், குறளாகி மாவலியிடத்துச் சென்று நீரேற்றுப் பெற்று ஈரடியாலே உலகளந்தாயென்று சொன்ன முகத்தாலே பரத்வத்தையும் பேசினாராயிற்று.

திருவேங்கடமலை பூமண்டலத்திலே உள்ளதாகையாலே நம்போன்ற மனிசர்கள் சென்று ஸேவிப்பதற்குப் பாங்காயிருப்பது போல, * விண்தோய் சிகரத் திருவேங்கடமாகையாலே நித்யஸூரிகள் வந்து ஸேவிப்பதற்கும் பாங்காயிருக்கும்.

ஆனதுபற்றியே “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும்

“மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச்செய்தது.

நித்யஸூரிகள் பரத்வத்திலே ஸர்வகாலமும் பழகினவர்களாகையாலே ஸௌலப்யத்தைக் காண விரும்பி வருவர்கள்; மனிசர்கள் பரத்வத்தைக்காண விரும்பிச் செல்லுவர்கள்; இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினாராயிற்று.

        ”திருவேங்கடம் மேய அண்டா என்ற விளியும் இங்கே பொருத்தமாக அமைந்தது. அண்டன் என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர்.

”உறி மேல் நறுநெய் அமுதாக உண்ட அண்டா” என்று யோஜித்து, இடையனே! என்னுதல்;

“குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா” என்று யோஜித்து, ‘தேவனே!- பரம புருஷனே!’ என்னுதல்.

இரண்டு யோஜநையாலும் பரத்வ ஸௌலப்யங்கள் விளியிலும் விளங்கினபடி.

—————

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

பதவுரை

தூணாயதனூடு

வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே
அரி ஆய்

நரஸிம்ஹமாகி
வந்து தோன்றி

திருவவதரித்து,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்

(தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!
சேண் ஆர்

மிக்க உயர்த்தி பொருந்திய
திரு வேங்கடம் மா மலை மேய

திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும்
கோள் நாகம் அணைபாய்

மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே!
எனை

அடியேனை
நீயே குறிக்கொள்

நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும்.

பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.

“தூணூடு அரியாய் வந்து தோன்றி” என்னுமளவே போதுமாயிருக்க, தூணாயதனூடு = தூணாயிருக்கிற வஸ்துவினுள்ளே’ என்று சொல்லுகைக்குக் கருத்து என்னென்னில்; ‘முன்பே நரஸிம்ஹத்தை உள்ளே அடக்கி வைத்துக் கட்டின கம்பமிது’ என்று சொல்லவொண்ணாதபடி வெறும் தூணானவதனுள்ளே என்பதாம்.

அரி-சிங்கம், பேணா அவுணன் – ஸர்வேச்வரனை மதியாத இரணியன் என்றும், பாகவத சிகாமணியான ப்ரஹ்லாதனை மதியாத இரணியன் என்றும் உரைக்கலாம்.

        சேண் = அகலம், ஆகாசம், உயர்ச்சி, தூரம், நீளம். கோள்நாகணையாய்! கோள் – மிடுக்கு; திருவனந்தாழ்வானுக்கு மிடுக்காவது – சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்” என்றபடி பலவகையடிமைகளுக்கும் உரிய வடிவங்களைக் கொள்ளுதற்குப் பாங்கானசக்தி.

குறிக்கொள் – ஓரடியானுமுளனென்று திருவுள்ளத்தில் வைத்திரு என்றபடி. திருவனந்தாழ்வானைப் போலே என்னையும் அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாய் என்பது உள்ளுறை.

————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

பதவுரை

மன்னா

நிலைத்திராத
இ மனிசப் பிறவியை

இந்த மநுஷ்யஜன்மத்தை
நீக்கி

போக்கடித்து
தன் ஆக்கி

தனக்கு ஆளாக்கிக்கொண்டு
தன் இன் அருள் செய்யும்

தனது பரமகிருபையைச் செய்கின்ற
தலைவன்

ஸ்வாமியும்,
மின் ஆர் முகில் சேர்

மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற
திருவேங்கடம்

திருமலையிலே
மேய

எழுந்தருளியிருக்கிற
என் ஆனை

எனது ஆனை போன்றவனுமான
என் அப்பன்

எம்பெருமான்
என் நெஞ்சில் உளானே

எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான்

கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது.

”அடியேனிடரைக்களை யாயே” என்றும் “அடியேற்கருளாயே” என்றும் “அடியேனுக்கருள் புரியாயே” என்றும் “குறிக்கொள் எனை நீயே ” என்றும் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் அடியார்களைத் தேடித் திரிகிற நான் இங்ஙனே பிரார்த்திக்கிற உம்மை உபேக்ஷித்திருப்பேனோ?’ என்று சொல்லி ஆழ்வார் திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்;

அதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அநுபவிக்கிறார். எம்பெருமான் தமது நெஞ்சிலே வந்து புகுந்தவாறே தாம் ஸம்ஸாரத்தில் நின்றும் விலகிவிட்ட தாகவே நினைத்துப் பேசுகிறார்.

        மன்னா என்பது மனிசப்பிறவிக்கு அடைமொழி. ”மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்” என்றபடி மின்னலைக்காட்டிலும் அஸ்திரமான இந்த மானிடப்பிறவியில் நின்றும் என்னை நீக்கித்தன்னையே யொக்க அருள் செய்யுமெம் பெருமான் என்னெஞ்சிலே வந்து புகுந்துநிற்கிறான் காண்மின் – என்கிறார்.

         தன்னாக்கி = தன்னைப்போலே என்னையும் மலர்ந்த ஞானாநந்தங்களையுடையவனாக்கி என்றாவது, தனக்கு சேஷமாக்கி என்றாவது உரைக்கலாம்.

மின்னார் முகில்சேர் = பெருமாளும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்திக்கு உவமையிட்ட படி-

—————-

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

பதவுரை

மான் ஏய் மட நோக்கி திறத்து

மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக,
எதிர் வந்த

செருக்குடன் வந்த
ஆன் விடை ஏழ் செற்ற

ஏழு ரிஷபங்களைக் கொன்ற
அணி வரை தோளா

அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே
தேனே

தேன்போல் போக்யனானவனே!
திருவேங்கடம் மா மலை மேய கோனே

திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே!
என் மனம்

என்னுடைய நெஞ்சை
குடிகொண்டு

இருப்பிடமாகக்கொண்டு
இருந்தாய்

நிலைபெற்றிரா நின்றாய்.

அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார்.

மானினுடைய நோக்குப்போன்ற நோக்கையுடையளான நப்பின்னைப்பிராட்டியை மணந்துகொள்வதற்காக அவளுடைய தந்தையின் கட்டளைப்படி ஏழு ரிஷபங்களையும் கொன்றொழித்த பெருமிடக்கனே!; அன்று அவளுக்கு எவ்வளவு போக்யமாயிருந்தாயோ, எனக்கும் அவ்வளவு போக்யமாயிருப்பவனே! திருவேங்கடமுடையானே! அந்த நப்பின்னைப்பிராட்டியையும் கூட்டிக் கொண்டு என் மனத்தே வந்து குடி கொண்டிருக்கின்றாயே! இப்படியும் ஒரு திருவருளுண்டோ? என்றாராயிற்று.

எதிர் வந்த ஆனேழ்விடைகளை மானேய்மட நோக்கி திறத்துச் செற்ற அணிவரைத் தோளா! என்று அந்வயிப்பது–

———–

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

பதவுரை

சேயன்

(பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும்
அணியன்

(பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும்
என சிந்தையுள் நின்ற மாயன்

என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும்,
வேய் விண்டு

மூங்கில்களானவை பிளவுபட்டு
ஒளி வெண்தரளங்கள்

பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும்
வாள்மணி

ஒளியுள்ள ரத்னங்களையும்
உதிர்

உதிர்க்குமிடமான
வேங்கடம் மா மலை மேய

திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆயன்

ஸ்ரீக்ருஷ்ணனுடைய
அடி அல்லது

திருவடிகளையொழிய
மற்று

வேறொன்றையும்
அறியேன்

அறியமாட்டேன்.

இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப்பிராட்டியோடுங்கூட வந்து புகுந்தானானபின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார்.

எம்பெருமான் சிலர்க்குச் சேயன், சிலர்க்கு அணியன்; சேயனென்றால் தூரத்திலிருப்பவனென்கை; அணியனென்றால் ஸமீபத்திலிருப்பவனென்கை.தன்னை உகவாதார்க்கு அவன் எட்டாதவன்; தன்னை உகந்தார்க்கு அவன் கையாளாயிருப்பவன். துரியோதநாதியர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக்காணலாம்.

சிறிது பக்தியுடையார்க்கும் அவன் அணியன் என்பதை என்னைக்கொண்டேயறியலாமென்பவர் போல என் சிந்தையுள் நின்றமாயன் என்கிறார். என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து நித்யவாஸம்பண்ணுகிற ஆச்சரிய சீலன் அணியனென்பது சொல்லவேணுமோ வென்கை.

        மணிவாளொளிவெண்தரளங்கள் வேய்விண்டுதிர் என்பது திருவேங்கட மலைக்கு விசேஷணம்.

யானைகளின் கும்பஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் உண்டாவதாக நூல்கள் கூறும்.

வேய்களானவை விண்டு விரிந்து, வாள் (ஒளி) பொருந்திய மணிகளையும், ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய தரளங்(முத்து)க்களையும் உதிர்க்குமிடமான திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸர்வஸுலபனுடைய திருவடிகளைத் தவிர வேறொன்றுமறியேன்.

தரளம் – முத்து ; வடசொல்.

—————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

பதவுரை

நந்தாத

ஒருகாலும் அணையாத
கொழு சுடரே

சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!
எங்கள் நம்பீ

எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!
சிந்தாமணியே

நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!
திருவேங்கடம் மேய எந்தாய்

திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே!
வந்தாய்

என்பக்கல் வந்தாய்;
என் மனம் புகுந்தாய்

எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்;
மன்னி நின்றாய்

உள்ளேயே பொருந்தி நின்றாய்;
இனி

இனிமேல்
யான்

அடியேன்
உன்னை என்றும் விடேன்

உன்னை ஒருநாளும் விடமாட்டேன்.

தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.

        வந்தாய் – பரமபதம், திருப்பாற்கடல் முதலான அஸாதாரண ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய்.

என்மனம்புகுந்தாய் – வந்தவிடத்திலும் ஜ்ஞாநாநுஷ்டாநங்ளிற்சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடியோடாமல் நாயினேனுடைய மனத்தைத் தேடிப்பிடித்து வந்து புகுந்தாய்.

மன்னிநின்றாய் – ‘இனிய இடங்களிலே நாம் சுகமாக இருப்பதைவிட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப் பட்டுக்கிடப்பானேன்’ என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்கப்பாராமல், ‘இதனில் சிறந்த ஸ்தாநம் வேறொன்று நமக்கில்லை’ என்று கொண்டு என்னெஞ்சிலேயே ஸ்திரப்ரதிஷ்டையாக இருந்துவிட்டாய்.

அப்ராக்ருதனான நீ மிகவும் ஹேயமான என்னெஞ்சிலே வந்து புகுந்ததனாலே உன்னுடைய தேஜஸ்ஸுக்கு எள்ளளவும் குறையில்லை; முன்னிலும் தேஜஸ்ஸு விஞ்சுகின்றது என்பார் நந்தாத கொழுஞ்சுடரேஎன விளிக்கின்றார். நந்துதல் – கெடுதல் ; கந்தாத – கெடாத.

        சிந்தாமணியே!= காமதேநு, கல்பவ்ருக்ஷம் முதலானவை போலே நினைத்த மாத்திரத்தில் அபீஷ்டங்களையெல்லாம் தரக்கூடிய ஒரு மணிக்குச் சிந்தாமணியென்று பெயர்; அதுபோலே ஸர்வாபீஷ்டங்களையும் அளிப்பவனே! என்றபடி.

இப்படிப்பட்டவுன்னை இனி நான் ஒரு நொடிப்பொழுதும்விட்டுப் பிரியமாட்டேனென்று தமக்குப் பரபக்தி வாய்ந்தபடியைப் பேசினாராயிற்று.

—————-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

பதவுரை

வில்லார் மலி

வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற
வேங்கடம் மாமலை

திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே
மேய

எழுந்தருளியிருப்பவனும்
மல் ஆர் திரள் தோள்

மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும்
மணிவண்ணன்

நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான
அம்மானை

எம்பெருமானைக் குறித்து,
கல் ஆர் திரள் தோள்

மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான
கலியன்

திருமங்கைமன்னன்
சொன்ன

அருளிச்செய்த
மாலை

இச்சொல்மாலையை
வல்லாரவர் தாம்

ஓதவல்லவர்கள்
வானவர் ஆகுவர்

நித்யஸூரிகளாகப் பெறுவர்கள்.

திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.

பரமபதத்திலும் நித்யஸூரிகள் அஸ்தாநே பயத்தைச் சங்கித்துப் பரியும்போது, திருமலையிலே ஸ்ரீகுஹப்பெருமாள் போன்ற வேடர்கள் அஸுரராக்ஷஸமயமான இந்நிலத்திலே எந்த வேளையிலே யாரால் என்ன தீங்கு எம்பெருமானுக்கு நேர்ந்துவிடுமோ’ என்று அதிசங்கைபண்ணி எப்போதும் ஏறிட்ட வில்லுங்கையுமாய் இருப்பர்களாகையாலே, அதனை உவந்து ஆழ்வார் அருளிச்செய்கிறாமென்க,

பெரியாழ்வார்-    “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா” என்று எம்பெருமானுடைய அளவற்ற சக்திவிசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும் அதிசங்கையின் மிகுதியாலே “பல்லாண்டு பல்லாண்டு” என்றாப்போலே,

இவரும் * மல்லார்திரடோள் மணிவண்ணனென்று அறிந்து வைத்தும் அதிசங்கையினால் மங்களாசாஸநத்திலே நிஷ்டையுடையராயிருப்பர் என்பது இப்பாட்டில் அறியத்தக்கது.

இப்பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே யென்று நினைக்க வேண்டா; ” மங்களாசாஸந பரர்கள் திருமலையிலே உள்ளார்” என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுகையிலே அந்வயிக்கும்.

திருவேங்கடமுடையானைத் திருமங்கையாழ்வார் கவிபாடின இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் நித்யஸுரிகளைப்போலே நித்யகைங்கரியம் பண்ணிக்கொண்டு வாழப்பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

———————

அடிவரவு :- கண் இலங்கை நீர் உண்டாய் தூணாய் மன்னா மானேய் சேயன் வந்தாய் வில் வானவர்.

————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-9—தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 20, 2022

அவதாரிகை :-

கீழ்த் திருமொழியில், பாசுரந்தோறும் “திருவேங்கடமடை நெஞ்சமே! – திருவேங்கடமடை நெஞ்சமே!” என்று சொல்லித் திருமலையை ஆச்ரயிக்குமாறு தம் திருவுள்ளத்தைத் தூண்டினார். அதுவும் அப்படியே இசைய, “யானுமென்னெஞ்சமிசைந் தொழிந்தோம்” என்றாற்போலே இருவரும் கூடித் திருவேங்கடமுடையானை அநுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தனர்.

ஸர்வஸ்வாமியாய் ஸர்வவிதபந்துவான திருமால் இங்கே நித்யவாஸம் செய்தருளுகிறபடியாலே நம்முடைய அபேக்ஷிதங்களெல்லாம் இங்கே பெறலாமென்று மிகுந்த பாரிப்புடனே வந்தார் ஆழ்வார்.

இப்படி வந்த ஆழ்வாரை எதிர்கொண்டழைத்தல் அணைத்தல் மதுரமாகவொரு வார்த்தை சொல்லுதல் குசலப்ரச்நம் பண்ணுதல் கைங்கரியத்திலே ஏவுதல் ஒன்றுஞ்செய்திலன் திருமலையப்பன்.

அதனால் ஆழ்வார் மிகவுந் திருவுள்ளம் நொந்து ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் நமக்கு வகுத்தநாதனாய் பிராட்டியை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதானாயிருக்குமிப்பெருமான் இப்போது நம்மை உபேக்ஷித்திருப்பதற்குக் காரணம் நம்முடைய கனத்த பாவங்களேயாகவேணும்; மஹாபாபியான இவனை நாம் கடாக்ஷிக்கலாகாதென்று திருவுள்ளம்பற்றியிருக்கிறான் போலும்’ என்று நிச்சயித்து, அப்பெருமான் திருவுள்ளத்திலே இரக்கம் பிறக்கும்படி பாசுரம் பேசுகிறார்.

பந்துக்களல்லாதாரை பந்துக்களாக நினைத்தும், போக்யமல்லாத விஷயங்களை போக்யமாகக் கொண்டும், ஜீவஹிம்ஸைகளை அளவறப்பண்ணியும், இன்னமும் பலவகைப்பாவங்களைச் செய்தும் காலம் கழித்தேனாகிலும், இப்போது உன்னை விட்டுத் தரிக்கமாட்டாத அன்பு பிறந்ததனால் அநுதாபத்துடனே இவ்விடம் வந்து சேர்ந்தேன்;

இனி என்னுடைய முன்னைத் தீவினைகளைப்பார்த்துக் கைவிடலாகாது; நீயோ ஸர்வரக்ஷகன்; நானோ அநாதன் அநந்யகதி; என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்குப் பிராட்டியும் – அகலகில்லேனிறையுமென்று திருமார்பிலே உறையாநின்றாள்;

ஆனபின்பு என் அபராதங்களைப் பொறுத்தருளி அடியேனைக் கைக்கொண்டருளவேணுமென்று பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திருவடிகளிலேவிழுந்து சரணம்புகுகிறார்.

ஒன்பதாம் பாட்டிலே “மாயனே எங்கள் மாதவனே!” என்று பிராட்டி ஸம்பந்தம் ப்ரஸ்துதமாயிருக்கையாலே புருஷகாரம் முன்னாகச் சரணம் புகுகிறாரென்பது விளங்குமிறே.

——-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

பதவுரை

வேய் ஏய்

மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
பூ பொழில் சூழ்

பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
விரை ஆர்

பரிமளம் விஞ்சியிருக்கிற
திருவேங்கடவா

திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே!
தாயே என்றும் தந்தையே என்றும் தாரமேஎன்றும் கிளையே என்றும் மக்களே என்றும்

தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு
நோய் பட்டு ஒழிந்தேன்

அநர்த்தப்பட்டுப் போனவனும்
நாயேன்

நாய் போலே மிக்க நீசனுமான அடியேன்
உன்னை காண்பது ஓர் ஆசையினால்

(அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால்
வந்து அடைந்தேன்

உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்;
என்னை

சரணாகதனான என்னை
நல்கி

கிருபை செய்து
ஆள் கொண்டருள்

அடிமை கொண்டருளவேணும்.

1.“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே”

2. “தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” என்கிறபடியே

உன்னையே ஸகலவிதபந்துக்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாதே தாயேயென்றும் தந்தையேயென்றும் தாரமேயென்றும் கிளையேயென்றும் மக்களேயென்றும் ஆபாஸமான புத்ரமித்ராதிகளிடத்திலே ஆசைவைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன்;

அவர்களுக்கு என்னை ரக்ஷிக்க சக்தியுண்டாகிலன்றோ அவர்களால் நான் வாழ்வேன்; உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக்கெட்டேன் என்றபடி.

“இப்படி ஆபாஸபந்துக்களை நம்பினபடி யாலன்றோ நமக்குக் கஷ்டங்கள் நேர்ந்தன; நிருபாதிகபந்துவான எம்பெருமானைப்பற்றினோமாகில் ஒரு குறையுமிராதே” என்று இன்று நல்ல புத்தியுண்டாயிற்று.

பரமபோக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டுத் திருவடிகளிலே விழுகின்றேன்; அடியேனுடைய முன்னைத்தீவினைகளைக் கணிசியாமல் சரணாகதன் என்பதையே குறிக்கொண்டு பர​மகிருபையுடன் அடிமை கொண்டருள வேணும் என்று பிரார்த்தித்தாராயிற்று.

நாயேன்=நாய் போலே நீசன் என்று நைச்யாநுஸந்தாநம்பண்ணுகிறபடி.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளையருளிச்செயல் பாரீர்-; “(நாயேன்.) நான் செய்து கொண்டபடியைப் பார்த்தால் பிறர்க்குமாகேன், தேவரீர்க்குமாகேன். புறம்போக்கில் கல்லையிட்டெறிவர்கள். உள்ளே புதரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டிவரும்.”

ராஜபுத்ரர்கள் நாய்களையே மேல் விழுந்து விரும்புமா போலே ராஜாதிராஜனான நீயும் என்னை மேல் விழுந்து விரும்பவேணுமென்பது உள்ளுறை…

———

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

பதவுரை

தேன்ஏய்

வண்டுகள் நிறைந்த
பூ பொழில் சூழ்

பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
திருவேங்கடம் மா மலை

திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற
என் ஆனாய்

ஆனை போன்ற எம்பெருமானே!
மா நிலத்து

இப்பெரிய பூமண்டலத்திலே
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு

மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு,
நாநாவித நரகம் புகும் பாவம்

பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை
நானே செய்தேன்

நானொருவனே செய்து வைத்தேன்;

(ஆகிலும் இன்று அநுதாபம் பிறந்தமையாலே)

வந்து அடைந்தேன்

உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்;

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்;

போக்யமல்லாத துர்விஷயங்களை போக்யமென்று கொண்டிருந்த குற்றங்களைப் பொறுத்தருள வேணுமென்று சரணம் புகுகிறாரிதில்.

நெஞ்சு நஞ்சாயிருக்கச் செய்தேயும் வெளிநோக்கை வெகு அழகாகச் செய்து ஆண்பிள்ளைகளை ஆகர்ஷிக்கின்ற பெண்களின் கண்வலையிலே அகப்பட்டு, அந்த மாதர்களை ஆராதிப்பதே பரம ப்ரயோஜநமென்றுகொண்டு, அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவமுஞ் செய்து தீர்த்தேன்;

‘உள்ள நரகங்கள் போராது, இன்னமும் பல நரகங்களைப் படைக்க வேணும்’ என்னும்படி எண்ணிறந்த பாவங்களைச் செய்தேன்.

‘போக்யமல்லாத விஷயங்களிலே ப்ரமித்து ஈடுபட்டு அநர்த்தங்களை விளைத்துக்கொண்டோமே!’ என்று அநுதாபம் தோன்றியதனால், பரமபோக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மைபெறுவோமென்று நன்மதி உண்டாகி, போக்யதைக்கு எல்லை நிலமாகவுள்ள திருமலையிலே எழுந்தருளியிருக்குமிருப்பிலே வந்து சரணம் புகுந்தேன்;

பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டருளவேணுமென்று பிரார்த்திதாராயிற்று.

நானே நாநாவிதநரகம் புகும்பாவஞ் செய்தேன் = சேதந​வர்க்கங்களுக்குத் தொகையில்லாதாப்போலவே ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள நரகங்களுக்கும் தொகையில்லை; சிலசில சேதநர்கள் சிலசில நரகங்களிலே சென்று வேதனைப்படுவர்கள் என்றிருந்தாலும், உள்ள நரகங்களெல்லாம் என்னொருவனுக்கே போராதென்னும்படி எல்லையற்ற பாவங்களைச் செய்தேனென்று சொல்லிக்கொள்ளுகிறார்.

“ஈச்வரனுக்கு ஜகந்நிர்வாஹம் நடக்கவேண்டில் வேறே சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேணும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல்.

நாநா விதநரகம் = வடமொழித் தொடர்.

என்ஆனாய் = ‘ஆனை’ என்பது விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே! என்றபடி.

“தென்னானாய் வடவானாப் குடபாலானாய் குணபாலமதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலும் அருளிச் செய்வர்.

“என்னானை என்னப்பனெம்பெருமான்” என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

1. யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வவஸ்து போலவேயிருந்து பரமாநந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே” என்னும்படியிருத்தலால் ஆனையாகச் சொல்லப்படுவன்.

2. ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப்பற்றியே ஏறவேண்டுவதுபோல, எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டுதலாலும் ஆனையென்கிறது.

3. ஆனையானது தன்னைக்கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.

4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரமபவித்திரனாயிருக்கக் செய்தேயும்* பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்புமுடைய நம்போல்வாரோடே சேரத் திருவுள்ளமாயிருப்பன் வாத்ஸல்யத்தாலே.

5. யானையைப் பிடிக்கவேண்டில் பெண்யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.

6. பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் யானை; எம்பெருமானும் 1. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.

7. யானையின் பாஷை யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பிபோல்வார்க்கே தெரியும்; பேரருளாளனோடே பேசுமவரிரே நம்பிகள்.

8. யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் 1. “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும் 2. “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றுஞ் சொல்லுகிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு ஸர்வாத்மநா விதேயனிறே.

9. யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்* அலம்புரிந்த நெடுந்தடக் கையனிறே.

10. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிர மெறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமானமுது செய்து சேஷித்த ப்ரஸாதத்தாலே பலகோடி பக்தவர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோமிறே.

11. யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை உணர்த்தி உதவுகின்றானிறே.

12. யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளுங்கையில்லையிறே.

13. பாகனுக்கு ஜீவநங்கள் ஸம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க…

————-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

பதவுரை

குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா

மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
குறிக்கோள் ஒன்று இலாமையினால்

விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே
இரந்தார்க்கு

யாசித்தவர்களுக்கு
இனிது ஆக

மதுரமாக
என்றேனும்

ஒருநாளும்
உரைத்து அறியேன்

பதில் சொல்லி அறியேன்;
பல் உயிரை

பல பிராணிகளை
கொன்றேன்

கொலைசெய்து முடித்தேன்;
அன்றே

அந்த க்ஷணத்திலேயே
வந்து அடைந்தேன்

உன்னை வந்து பற்றினேன்;

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார்.

குறிக்கோள் ஒன்றிலாமையினால் பல்லுயிரைக் கொன்றேன் = குறிக்கோளாவது நம்பிக்கை; தேஹத்திற்காட்டிலும் வேறான ஆத்மா உண்டென்றும் தெய்வமுண்டென்றும் சாஸ்த்ரமுண்டென்றும் புண்யபாபங்களுண்டென்றும், பாபப்பலன்களை அநுபவிக்க நரகமுண்டென்றும் இவையொன்றிலும் நம்பிக்கையில்லாதவனாகையால், இவ்வளவென்று கணக்கிடமுடியாதபடி எல்லையில்லாத ஜீவராசிகளைக் கொலை செய்தேன்;

உகந்த பெண்களை திருப்தி செய்விப்பதற்குப் பொருளீட்டுவதற்காக வழிமறித்துப் பிராணிகளைக் கொன்றேனாகிலும், பிறகு கூடியிருந்து குலாவும்போது ‘தேஹி’ என்று ஒரு கவளமிரந்தவர்களுக்கு ஒருநாளாகிலும் ஐயமிட்டிருப்பேனோ, அதுவுமில்லை;

இடாவிடினும் “அப்பா! இப்போது கையில் ஒன்றுமில்லை; மற்றொரு போது வந்தால் பார்ப்போம்” என்று தேனொழுக வார்த்தையாவது சொல்லிவிடலாமே, அதுவும் செய்திலேன்.

“இந்த பாவியினிடம் வந்து யாசித்தோமே!” என்று வாழ்நாளுள்ள வரையிலும் அவர்கள் நெஞ்சு புண்பட்டிருக்கும்படி மிகவும் திரஸ்காரமான வார்த்தைகளைச் சொல்லி வெருட்டினே னென்கை.

இப்படி பலபாவங்கள் செய்து போந்தேனாகிலும் சரணம் புகுந்துவிட்டேனாகையால் அடியேனைக் குளிரநோக்கி அடிமை கொள்ள வேணுமென்றாராயிற்று.

“இன்று வந்தடைந்தேன்” என்னாதே “அன்றே வந்தடைந்தேன்” என்றருளிச் செய்த ஸ்வாரஸ்யம் விளங்குமாறு பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானித்தருளுமழகு பாரீர்; (அன்றே.) அநுதாப​ம் பிறந்தாதல் ப்ராயச்சித்தம் பண்ணியாதல் வருகையன்றிக்கே, கொன்ற கைகழுவாதே உதிரக்கை கழுவாதே வந்து சரணம்புகுந்தேன்., (உதிரக்கை – கொலைசெய்ததனால் ரத்தமயமான கை.)

————-

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

பதவுரை

நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா

பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே!
எத்தனை குலமும்

எல்லாக்குலங்களிலும்
பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன்

பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும்
நலம் ஒன்றும் இலேன்

ஒருவகை நன்மையுமில்லாதவனும்
நல்லது ஓர் அறமும் செய்திலேன்

நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும்
அலந்தேன்

பல கஷ்டங்களை அநுபவித்த வனுமான அடியேன்
வந்து அடைந்தேன்

உன்னை வந்து பற்றினேன்;

அடியேனை ஆட்கொண்டருள்-.

அநுலோமப் பிறவிகளென்றும் பிரதிலோமப் பிறவிகளென்றும் சாஸ்த்ரங்களில் எத்தனை விதமான ஸங்கர ஜன்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களிலும் பிறப்பதுமிறப்பதும் செய்தாயிற்று.

இன்னமும் பிறவிகள் பிறக்க வேண்டும்படியான கரும சேஷமிருந்தாலும் பிறப்பதற்கு சக்தியில்லாதபடி மிகவும் மெலிந்துபோனேன்.

இப்படிப் பலபல யோனிகளிற் பிறந்து வருகிற நாளிலே நடுவே ஒரு ஸுக்ருதமாகிலும் செய்ததுண்டோவென்னில் அஜ்ஞாதம் யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகம் – ஒன்றிலும் அந்வயமுடையேனல்லேன்.

அஜ்ஞாத ஸுக்ருதமாவது இது ஒரு நல்ல காரியமென்று தனக்கும் தெரியாமல் நேரும் ஸுக்ருதம்; ஒரு பசுவைக் கொலைசெய்யத் துரத்திக்கொண்டுபோம்போது அப்பசு ஒரு பகவத்சந்நிதியை வலஞ்செய்து கொண்டுபோக, அதை பின் தொடர்ந்துபோமவனுக்கு பகவதாலேயே ப்ரதக்ஷிணமாகிற ஸுக்ருதம் தனக்குத் தெரியாமலே நேருவதுண்டிறே.

யாத்ருச்சிகஸுக்ருதமாவது-தான் எதிர்பாராமலிருக்கச் செய்தே பார்த்ததாக நேரும் ஸுக்ருதம். பகவத்பாகவதர்களை ஸேவிக்க வேணுமென்கிற எண்ணமில்லாமல் கொள்ளைகொல்லப் போமிடத்தில் பகவத் பாகவத ஸேவையும் கிடைப்பதுண்டிறே.

ப்ராஸங்கிகஸுக்ருதமாவது-வேறோரு காரியத்தைச் செய்யும்பொழுது இதுவுங்க்கூட இருக்கட்டும் என்று செய்யுமது. வெங்காயச் செடிக்குத் தண்ணீரிறைக்கும்போது, “தாஹித்தவர்களும் இந்த நீரைப்பருகிக் களைப்பாறுக” என்றெண்ணி இறைப்பதுண்டிறே.

இப்படிப்பட்ட ஸுக்ருதங்களொன்றிலும் அந்வயமுடையனல்லேனாயினும் “இனி நமக்கு ஒரு பாபமும் செய்ய சக்தியில்லை; இளைத்துத் திருவடிகளிலே வந்து விழுந்து விட்டேன்: பழைய குற்றங்களைப் பாராமல் அடியேனை அடிமை கொண்டருள வேணுமென்றாராயிற்று.”

நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார் என்றதன் கருத்து:- மேகங்கள் கழுத்தளவும் நீரைப்பருகி, நீர்க்கனத்தாலே கால்வாங்கிப் போகமாட்டாமல் நகர்ந்து நகர்ந்து துளித்துத் துளித்துக்கொண்டு ஸஞ்சரித்த அடையாளம் வழிகளிலே விளங்காநின்றதென்கை

———————————————–

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

பதவுரை

செப்பு ஆர் திண் வரை சூழ்

அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட
திரு வேங்கடம் மா மலை

திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற
என் அப்பா

என் அப்பனே
துப்பா

ஸர்வசக்தனே!
எப்பாவம் பலவும் இவையே செய்து

பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி
இளைத்தொழிந்தேன்

துக்கப்பட்டவனாய்
நின் அடியே

உனது திருவடிகளை
தொடர்ந்து

அநுஸரித்து
ஏத்தவும்

துதிக்கவும்
கிற்கின்றிலேன்

சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-.

அடியேனை ஆள் கொண்டருள்-.

அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன்.

பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம்! என்ன செய்தோம்!!’ என்று வருத்தத்தால் குன்றிப் போனேன்.

கைசலியாமல் பாவங்களைச் செய்ததனாலுண்டான இளைப்பு எப்படிப்பட்டதென்றால், நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத அசக்தியாயிற்றுக்காண்.

ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேனாகையால் அடியேனை அடிமை கொண்டருளவேணும்.

துப்பன்-ரக்ஷிப்பதற்குப் பாங்கான சக்தியையுடையவன்.

செப்பார் திண்வரை சூழ் = ஆபரணம் முதலியவற்றை ரக்ஷிக்கும்படியான ஸம்புடத்திற்குச் செப்பு என்று பேராகையாலே, லக்ஷிதலக்ஷணையாலே, “செப்பு ஆர்-அரணாகப் போரும்படியான” என்றுரைக்கக் குறையில்லை.

———————————————-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

பதவுரை

விண் ஆர் நீள் சிகரம்

ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும்
விரை ஆர்

பரிமளம் மிக்கதுமான
திருவேங்கடவா

திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
அண்ணா

ஸ்வாமிந்!,
மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்

பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும்
புண் ஆர்

புண்கள் நிறைந்ததுமான
ஆக்கை தன்னுள்

சரீரத்திலே (அகப்பட்டுக் கொண்டு)
புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்

கதறியழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன்

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது.

1. “தீண்டாவழும்பும் செந்நீரும் சீயு நரம்பும் செறிதசையும், வேண்டாநாற்றமிகுமுடல்” என்றபடி புண்கள் நிறைந்து கிடக்குமிது.

இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன்; இனி ஒரு சரீரத்தையும் பரிக்ரஹிக்க சக்தியில்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி உன் திருவடிவாரத்திலே வந்துவிழுந்தேன், அடிமை கொண்டருளவேணும்-என்றாராயிற்று.

—————-

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

பதவுரை

கரி சேர்

யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும்
பூ பொழில் சூழ்

அழகிய சோலைகளாலே சூழப்பட்டும்
கனம் மா மலை வேங்கடவா

திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே!
அரியே

ஹரியே!
பாலகன் ஆய்

சிறியேனாயிருந்தபோது
தெரியேன்

அறிவில்லாதவனாய்
பல தீமைகள்

பல பாவங்களை
செய்தும் இட்டேன்

செய்து தீர்த்தேன்;
பெரியேன் ஆயின பின்

யௌவன பருவ மடைந்த பின்பு
பிறர்க்கே உழைத்து

விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு
ஏழை ஆனேன்

சதிர்கெட்டுப்போனேன்;

(இப்படிப்பட்ட அடியேன்)

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

“கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும்

“தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா” என்றும்

இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லியிருப்பதற்கு எதிர்த்தட்டாக நான் இளம்பிராயத்திலே அவிவேகியாய்ப் பல தப்புக்காரியங்களைச் செய்துவிட்டேன்;

பிறகு யௌவனம் வந்து முகங்காட்டினவாறே, எந்த வஸ்துவைக்கண்டாலும் ‘இது அவளுக்காகும், இது அவளுக்காகும்’ என்றே கொண்டு பலவற்றையும் மாதர்க்காகத்தேடித்திரிந்து அலைந்து சதிர்கேடனானேன்;

போன காலமெல்லாம்பழுதேபோனாலும், இனியாகிலும் ப்ராப்தவிஷயத்திலே தொண்டு பூண்டமுதமுண்ணப்பெறலாமென்று திருவடிகளின் கீழே வந்து சேர்ந்தேன், ஆட்கொண்டருள வேணும் என்றாராயிற்று.

முதலடியை இரண்டு வாக்கியமாகவும் உரைக்கலாம்; பாலகனாய் தெரியேன் – சில நாள் மிக்க இளம்பருவமாய் யுக்தாயுக்தங்களறியாதே கிடந்தேன். பல தீமைகள் செய்துமிட்டேன் – (சிறிது அறிவு உண்டான பின்பு) தோன்றினபடிபலதீமைகள் செய்து திரிந்தேன் என்கை.

அரியே! – ஹரி என்ற வடசொல் அரியெனத்திரிந்தது. என்னுடைய பாவங்களை யெல்லாம் ஹரிப்பவனே! என்றும், சிங்கம் போல் ஒருவராலும் அடர்க்கவொண்ணாதவனே! என்றும் உரைக்கலாம். (ஹரி – சிங்கம்)

—————

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

பதவுரை

கோல் தேன் பாய்ந்து ஒழுகும்

கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற
குளிர் சோலை சூழ் வேங்கடவா

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே!
எம்பெருமான்

அஸ்மத் ஸ்வாமியே!,
பல் பிறவி நோற்றேன்

எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன்.
உன்னை காண்பது ஓர் ஆசையினால்

உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே
இப்பிறப்பே ஏற்றேன்

இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன்.
இடர்உற்றனன்

(இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்;

(இனி பிறவிகள் நேராமைக்காக)

வந்து அடைந்தேன்-.

அடியேனை ஆள் கொண்டருள்-.

நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம்.

இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டேவரச் செய்தே யாத்ருச்சிக ஸுக்ருத விசேஷத்தாலே உன்னைக் காணவேணுமென்று ஆசைபிறந்தது இப்பிறவியில்;

அதனால், இதற்குக்கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாதென்று நெஞ்சில் பட்டது.

இதுவரையில் நடந்தவற்றையும் இனி நடக்கப் போகிறவற்றையும் நினைத்து ஸஹிக்கமாட்டாமல் உன் திருவடிகளை வந்து பணிந்தேன்,

அடியேனை ஆட்கொண்டருளவேணும்-என்றாராயிற்று.

“உன்னைக் காண்பதோராசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று அந்வயித்து, “உன்னை ஸேவிக்கவேணுமென்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கப் பெற்றிலேன்; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாய்ப்போயிற்றேயென்று இடருற்றேன்” – என்றும் உரைப்பர்.

இதனிலும் முன்ன முரைத்த பொருளே சிறக்கும்

————-

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

பதவுரை

மாயனே

ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
எங்கள் மாதவனே

எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா

மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே!
பற்று ஒன்றும் இலேன்

ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய்
பாவமே செய்து பாவி ஆனேன்

பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்
மற்று ஒன்று அறியேன்

ஒரு உபாயமுமறியாதவனான அடியேன்
அற்றேன்

உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

உன்னுடைய ஸம்பந்தத்தை               அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை.

ஆத்மாவுக்கு ஞானமும் ஆநந்தமும் நிரூபகமாயினும் என் வரையில் பாபமே நிரூபகமாம்படி பாவங்களையே செய்து பாபிஷ்டனானேன்;

உன்னைப் பெறுதற்குறுப்பான உபாய விஷயத்தில் எள்ளளவும் ஞானமில்லை;

நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரக்ஷிக்கவல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாக இரா நின்றாய்;

உனது குளிர்ந்த திருவுள்ளத்திலே என்னைப்போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒருகால் சீற்றம்பிறந்தாலும் பொறுப்பித்து ரக்ஷிப்பிக்கவல்ல பெரிய பிராட்டியாரும் * அகலகில்லேனிறையுமென்று திருமார்விலே உறையா நின்றாள்.

இப்படியிருக்குமிருப்பிலே நான் வந்து சரணம் புகுந்தேனான பின்பு இனி நான் இழப்பதுண்டோ?

“பற்றிலார் பற்ற நின்றானே!” என்றபடி ஆதாரமற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக்கூடிய நீயே அடியேனை ஆட்கொண்டருளவேணுமென்று பிரார்த்தித்தாராயிற்று.

பாவமே செய்து பாவியானேன் = “‘பாவமே செய்தேன்” என்றாவது, “பாவி யானேன்” என்றாவது இரண்டத்தொன்று சொன்னால் போராதோ?” பாவமே செய்து பாவியானேன்” என்ன வேண்டுவதென்? என்னில்; கேளீர்; –

பாவஞ் செய்து புண்யாத்மாவாக ஆவதுமுண்டு; புண்யஞ்செய்து பாபிஷ்டனாக ஆவது முண்டு;

தசரதசக்ரவர்த்தி அஸத்யவசநமாகிற பாவத்துக்கு அஞ்சி, சொன்ன வண்ணம் செய்கையாகிற புண்யத்தைப் பண்ணிவைத்தும், ஸாக்ஷாத்வடிவெடுத்து வந்த புண்யமான இராமபிரானை இழந்து ஆபாஸதர்மத்தில் நிலைநின்றானென்ற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமாகவே ஆயிற்று; பரமபதப்ராப்திக்கு அநர்ஹனாய்விட்டானிறே.

“சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்” என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலன் உள்ள தனையும் பாவமே செய்து போந்தாலும் முடிவில் நல்ல பேறுபெற்றனனாதலால் அவனுடைய பாவமெல்லாம் புண்யமாகவே ஆயிற்று.

ஆகவிப்படி பாவஞ்செய்து புண்யசாலியாவதும், புண்யஞ் செய்துபாபிஷ்டனாவதும் உண்டாயினும், நான் பாவமே செய்து பாவியானேன் -(அதாவது) தசரதனைப் போலே புண்யத்தைச் செய்து பாவியானவனல்லேன், சிசுபாலனைப்போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனுமல்லேன்; செய்ததும் பாவம்; ஆனதும் பாபிஷ்டனாக – என்கை.

முதலடியிலும் இரண்டாமடியிலும், ஏல்- அசைச்சொற்கள்.

இப்பாட்டில் மாதவனே! என்கையாலே பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுந்தமை விளங்கும். (மா – பிராட்டிக்கு, தவன் – நாயகன்

———————

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

பதவுரை

ஏழ் உலகுக்கு

எல்லா வுலகங்களுக்கும்
கண் ஆய்

கண் போன்றவனும்
உயிர் ஆய

உயிர் போன்றவனும்
எம்

எமக்காக
கார் வண்ணணை

மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும்
விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம்

நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே
வேதியதனை

வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன்

திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
பண் ஆர் பாடல் பத்தும்

பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும்
பயில்வார்க்கு

ஓதுமவர்களுக்கு
பாவங்கள் இல்லை

பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம்.

“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி

ஏழுலகத்தவர்க்கும் கண்போன்றவனும் உயிர்போன்றவனுமான திருவேங்கடமுடையானைக் குறித்துத் திருமங்கைமன்னனருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் பறந்தோடுமென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

————-

அடிவரவு:- தாய் மான் கொன்றேன் குலம் எப்பாவம் மண் தெரியேன்நோற்றேன் பற்றேல் கண்ணாய் கண்.

————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-8–கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 20, 2022

அவதாரிகை 

கீழ்த் திருமொழியில், “நின்ற செந்தீமொண்டு சூறை நீள் விசும்பூடிரிய” என்றும்,

“தேய்த்த தீயால் விண் சிவக்கும்” என்றும்

“கனைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்றும்

சிங்கவேள் குன்றத்தின் நில வெம்மையை அநுஸந்தித்துப் பேசின ஆழ்வாரை நோக்கி

எம்பெருமான் “ஆழ்வீர்! ‘தெய்வமல்லால் செல்ல வொண்ணா’ என்றும்

“சென்று காண்டற் கரிய கோயில்’ என்றும் சொல்லிக்கொண்டு சிங்கவேள் குன்றத்திலே ஏன் துவளுகிறீர்?

“தெழிகுரலருவித் திருவேங்கடம்”

“சிந்து மகிழுந் திருவேங்கடம் (தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடம்”,

“மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாழ்வரே ” என்று நெஞ்சு குளிரப் பேசும்படியான

திருவேங்கடமா மலையிலே நாம் அனைவர்க்கும் எளிதாக ஸேவை ஸாதிக்கிறோம், அங்கே வந்து தொழுது ஆநந்தமடைவீர்’ என்றருளிச் செய்ய

அங்கே போய் அநுபவிக்கத் தொடங்குகிறார்.

இத்திருமொழியும் இதற்கு மேலுள்ள மூன்று திருமொழி களும் ஆக நாற்பது பாசுரங்கள் திருவேங்கட மலை விஷயமானவை.

தமிழ்ப் பாஷை நடையாடுகிறவிடத்திற்கு எல்லையாயிருக்குமிறே இத் திருமலை.

———–

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-

பதவுரை

கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த

பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த
கோவலன்

கோபால க்ருஷ்ணனாய்
எம்பிரான்

அஸ்மத்ஸ்வாமியாய்
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட

சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற
தாமரை கண்ணினன்

புண்டரீகாக்ஷனாய்,
பொங்கு புள்ளினை வாய் பிளந்த

செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த
புராணர்தம் இடம்

புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கு மிடமாயும்
பொங்கு நீர்

நீர்வளமுடையதாய்
செம் கயல் திளைக்கும்

சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற
சுனை

சுனைகளையுடையதாயுமிருக்கிற
திருவேங்கடம்

திருமலையை
நெஞ்சமே அடை

நெஞ்சே! நீ அடைந்திடு.

கொங்கலர்ந்த மலர்க்குருந்த மொசித்த கோவலனாய் எம்பிரானாய் சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினனாய் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணனான எம்பெருமானது இருப்பிடமாகிய பொங்கு நீர் செங்கயல் திளைக்குஞ்சுனைத் திருவேங்கடத்தை நெஞ்சமே! அடை என்கிறார்.

குருந்தமொசித்தவரலாறு:- கிருஷ்ணனைக் கொல்லும் பொருட்டுக் கம்ஸனால் ஏவப்பட்ட பல அசுரர்களில் ஒருவன் அக்கண்ணபிரான் மலர் கொய்தற் பொருட்டு விரும்பியேறும் பூத்த குருந்த மாமொன்றில் பிரவேசித்து, அப்பெருமான் வந்து தன் மீது ஏறும்போது தான் முறிந்து வீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக் கருதியிருந்தபோது, மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன் வலிமை கொண்டு முறித்து அழித்தனனென்பதாம்.

குருந்தமரமே குந்தமரமென்றும் சொல்லப்படும். விபவாவதாரத்தில் விரோதிகளை ஒழித்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் விரோதிகளை ஒழிக்க வல்லன் என்று காட்டுகிறார் இதனால்,

கோவலன் = ‘கோபாலம்’ என்ற வடசொல் கோவல னெனத்திரிந்தது.

இனி கோ-பசுக்களை மேய்ப்பதில், வலன்-வல்லன், ஸமர்த்தன் என்றும் உரைப்பர் சிலர்.

சங்குதங்கு தடங்கடல் துயில் கொண்ட = சங்கு என்று ஸாதாரணமான சங்குகளைச் சொல்லவுமாம், சங்கநிதி பத்மநிதி முதலிய நிதிகளைச் சொல்லவுமாம்.

சங்குகளையுடைய விசாலமான திருப்பாற்கடலிலே சயனித்திருக்கின்ற புண்டரீகாக்ஷன் “***”= “ஏஷ நாராயணச் ஸ்ரீமாந் ஹீரார்ணவ நிகேதா: நாகபர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரீம்” என்றபடி திருப்பாற்கடல் நாதனே கண்ணபிரானாக வந்து அவதரித்தான்,

அவனே திருவேங்கட முடையானாகவும் வந்து ஸேவைஸாதிக்கிறான் என்று ஐக்கியம் காட்டுகிறபடி.

புள்ளினைவாய்பிளந்த வரலாறு:- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவி லொருத்திமகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான் மீது கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரஸ் ரன் கொக்கின் உருவங் கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றி கிழித்திட்டனன் என்பதாம்.

புராணர் என்றது பழையவர் என்றபடி. இப்படி விரோதிகளை யொழிப்பது இன்று நேற்று அல்ல; பழையகாலமே பிடித்து இப்படியே செய்து போருகிறவர் என்பது கருத்து.

அப்படிப்பட்ட பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் பரமபோக்யமான திருமலை; அவ்விடத்துச் சென்று சேர் நெஞ்சே! என்றாராயிற்று

—————–

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

பதவுரை

வன் பேய்

கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள்
இரங்க

கதறும்படியாக
முலை

(அவளது) முலையை
பிள்ளை ஆய்

சிறு குழந்தையாயிருக்கச் செய்தே
உயிர்

உயிருடன்
உண்ட

உறிஞ்சி அமுதுசெய்த
எந்தை பிரான்

ஸ்ரீக்ருஷ்ணபகவான்
பள்ளி ஆவது

பள்ளி கொள்ளுமிடமாவது
பாற்கடல் அரங்கம்

திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்;
அவன்

அப்பெருமான்
பெருகும் இடம்

வளருகிற இடமாயும்,
தெள்ளியார்

தெளிந்த ஞானிகள்,
வெள்ளியான் கரியான் மணி நிறம் வண்ணன் என்று எண்ணி

(கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு
நாள் தொறும்

ஒவ்வொரு நாளும்
வணங்கும்

வணங்கப்பெற்றதாயு முள்ள
திருவேங்கடம் மலை

திருமலையை
நெஞ்சே அடை

மனமே! ஆச்ரயி.

கம்ஸனால் ஏவப்பட்டு முலை கொடுக் கிற வியாஜத்தாலே ஸ்ரீ க்ருஷ்ண சிசுவை முடித்திடவேணுமென்று முலையிலே விஷம் தடவிக்கொண்டு தாய்போல வந்த பூதனையென்னும் பேய்ச்சியானவள் கதறும்படியாக அவளுடைய முலையையும் உயிரையும் உறிஞ்சியுண்ட பெருமான், பிரமன் முதலியோர்க்கு முகங்கொடுப்பதற்காகப் பள்ளி கொண்டருளுமிடம் திருப்பாற்கடல்;

அவ்வளவு தூரம் சென்று கிட்டமாட்டாத ஸம்ஸாரிகளுக்கும் முகம்கொடுப்பதற்காகப் பள்ளிகொண்டருளுமிடம் திருவரங்கம் பெரியகோயில்.

(பூதனையை முடித்தது தொட்டில் பருவமாக இருந்த ஸமயத்திலாதலால் உட்காரவும் நிற்கவும் மாட்டாமல் சயனமேயான அந்த நிலைமையைத் திருப்பாற் கடலிலும் திருவரங்கத்திலும் ஸேவிக்கலா மென்கை.

அதற்குப் பிறகு, நிற்கக் கற்ற நிலைமை திருவேங்கடமலையிலே காணத்தக்கதா பிராநின்றது என்கிறார் – அவன் பெருகுமிடம் திருவேங்கடம்மலை என்று.

பெருகுதலாவது – முன்னின்ற நிலைமையிற்காட்டிலும் அபிவிருத்தி பெறுதல்; சயன நிலைமையிற்காட்டிலும் பெருக்கமடைகிற நிலைமை – தரையில் காலூன்றி நிற்கும் நிலைமையாதலால் இங்கே பெருகுமிடம் என்றது நிற்குமிட மென்றபடி.

“தொட்டிற்பிள்ளை பேயுயிருண்டபின்பு நிற்கக் கற்றது திருமலையிவேயென்று கருத்து” என்றார் அரும்பதவுரைகாரரும்.

        அந்தத் திருமலை எப்படிப்பட்டதென்னில்; நாள்தோறும் தெள்ளியார் வந்து வணங்கும்படியானது. தெள்ளியார் என்றது வேறொரு பலன்களை விரும்பாத ஸ்வரூபத் தெளிவுடைய பரமைகாந்திகளைச் சொன்னபடி. அவர்கள் எவ்விதமாக தியானித்துக்கொண்டு வணங்குகின்றன ரென்றால்,

பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம் போலுநீர்மை( திருச்சந்த விருத்தம் 44.)இத்யாதியிற் சொல்லுகிறபடியே – கிருதயுகத்தில் வெளுத்த நிறத்தையுடையனாய், கலியுகத்தில் கறுத்த நிறத்தையுடையனாய் த்வாபரயுகத்தில் ச்யாமமான நிறத்தையுடையனா யிருப்பவன் என்று இவ்வடிவுகளை அநுஸந்தித்துக்கொண்டு வந்து வணங்குகின்றனராம்.

அப்படி அவர்கள் வந்து வணங்குதற்கிடமான திருமலையை நெஞ்சே! அடைந்திடு என்றாராயிற்று.

————–

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

பதவுரை

நின்ற

பேராமல் நின்று கொண்டிருந்த
மா மருது

பெரிய மருதமரங்களிரண்டும்
இற்று வீழ

முறிந்து விழும்படியாக
நடந்த

நடைகற்ற
நின்மலன்

நிர்மலனும்,
நேமியான்

திருவாழியை யுடையவனும்,
என்றும்

எப்போதும்
வானவர்

நித்யஸூரிகள்
கை தொழும்

ஸேவிக்கப்பெற்ற
தாமரை அடி இணை எம்பிரான்

இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும்,
கன்றி

(இந்திரன்) கோபங்கொண்டு
மாரி

மழையை
பொழிந்திட

பெய்வித்தவளவிலே
ஆ நிரைக்கு

பசுக்கூட்டங்களுக்கு
இடர்நீக்குவான்

துன்பம் தொலைப்பதற்காக
சென்று

போய்
குன்றம் எடுத்தவன்

கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற

திருவேங்கடம் நெஞ்சமே! அடை-.

சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.

கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த யசோதை கிருஷ்ணனைத் திரு வயிற்றில் கயிற்றினால் கட்டி ஒருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வாலை இழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே எழுந்தருளியபொழுது

அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில், முன் நாரதர் சாபத்தால் அம்ம ரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர்.

இந்த குபேரபுத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில் பல அப்ஸரஸ் ஸ்த்ரீகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரீடை செய்துகொண்டி ருக்கையில் நாரதமாமுனிவர் அங்கு எழுந்தருள, மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு ஆடை யெடுத்து உடுத்து நீங்க,

இந்த மைந்தர் மாத்திரம் மதுபான மயக்கத்தினால் வஸ்த்ரமில்லாமலேயிருக்க, நாரதர் கண்டு கோபங்கொண்டு “மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்” என்று சபிக்க,

உடனே அவர்கள் வணங்கி வேண்டிக் கொண்டதற்கு இரங்கி நெடுங்காலஞ் சென்ற பின்பு “திருமால் உங்களருகே நெருங்குஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னைய வடிவம் பெற்று மீள்வீர்” என்று சாபவிடை கூறிப் போயினர்.

இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில் கம்ஸனால் ஏவப்பட்ட இரண்டு அஸுரர்களும் ஆவேசித்துக் கிடந்தனர் என்று கொள்ளல் வேண்டும்;

“ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை” என்றும்,

“பொய்ம்மாய மருதான வசுரரை” என்றும் பெரியாழ்வாரருளிச் செய்திருத்தலால்.

குன்றமெடுத்தவரலாறு வருமாறு:- கண்ணபிரானுடைய அதிமாநுஷ சீல வ்ருத்தவேஷங்களைக் கண்டு ஆயர்களனைவரும் இவனே நம் குலக்கொழுந்து; இவன் கட்டளைப்படியே நாம் நடக்க வேண்டும்’ என்று நிச்சயித்திருந்தனர்; இங்ஙனமிருக்கையில் சரத்காலம் வந்தது;

அப்போது இடையர்கள் வருஷந் தோறும் நடத்துவதுபோல் வழக்கப்படி இந்திரனுக்குப் பூஜை செய்யப் பற்பல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜாதிரவ்யங்களுமாகிய இவற்றைச் சேகரிப்பதைக் கண்டு

கிருஷ்ணன் “ஓ பெரியோர்களே! நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கிறோமோ அதற்கே பூஜை செய்வது தகுதி; இக்கோவர்த்தநகிரியே பசுக்களுக்குப் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்றுகின்றது; இந்திரனால் நமக்கு என்ன பயனுண்டு? ஒன்றுமில்லை; ஆகையால் நீங்கள் இப்பூசனையனைத்தையும் இம்மலைக்கே இடுங்கள்” என்ன,

இடையர்கள் இதைக் கேட்டு அங்ஙனமே செய்ய,

கண்ணபிரான் தானே ஒரு தேவதா ரூபங்கொண்டு அவற்றை முற்றும் அமுது செய்தருள,

அவ்விந்திரன் மிக்க கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை ஏவி, கண்ணன் விரும்பி மேய்க்கிற இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழு நாள் இடைவிடாது பெய்வித்தபொழுது,

கண்ணபிரான் கோவர்த்தன மலையை யெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா வுயிர்களையுங் காத்தருளினன்.

மருதமரங்கள் இற்று முறிந்து விழும்படி நடைகற்றவனும், அப்போது தன்மேல் சிறிதும் தோஷம் தட்டாதபடி தான் குறையொன்றுமின்றிக்கே விளங்கினவனும், திருவாழியைக் கையிலேயுடையவனும், எப்போதும் நித்யஸூரிகள் வந்து தொழப்பெற்ற திருவடித்தாமரைகளை யுடையவனும், இந்திரன் பசிக் கோபங்கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆநிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப்பொழுதிலே போக்குவதற்காகக் கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான பெருமானுடைய திருவேங்கடமலையை நெஞ்சமே! அடைந்திடு என்றாராயிற்று.

———————

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
பார்த்தற்கு ஆய்

அர்ஜூநனுக்காக
பாரதம்

பாரத யுத்தத்திலே
கை செய்திட்டு

கையும் அணியும் வகுத்து
வென்ற

வெற்றிபெற்ற
பரம் சுடர்

பரஞ்சோதியானவனும்,
அங்கு ஆயர்தம் பாடியில்

அங்கே திருவாய்ப் பாடியிலே
குரவை கோத்து பிணைந்த

ராஸக்ரீடை செய்தருளின
எம் கோவலன்

நமது கோபாலனும்,
ஏத்துவார்தம்

தன்னைத் துதிப்பவர்களுடைய
மனத்து

நெஞ்சிலே
உள்ளான்

வஸிப்பவனும்
இடவெந்தை

திருவிடவெந்தையிலே
மேவிய

பொருந்திய
எம்பிரான்

அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும்
தீர்த்தம் நீர் தட சோலை சூழ்

புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான

திருவேங்கடம் நெஞ்சமே! அடை

பாண்டவர்களுக்காகப் பாரதயுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி ஆச்ரிதர்களுக்காகக் காரியஞ் செய்யப்பெற்றதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், இடைச்சிகளோடு ராஸக்ரீடை யென்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதே யிருப்பவனும், இடவெந்தை யென்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமானுடைய தாய், பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திரு வேங்கட மலையைச் சென்று சேர் மனமே!

கண்ணபிரான், பாண்டவர் துர்யோதநாதியர் என்ற இருவகுப்பினரையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதநாதியரிடம் தூதாகச் சென்று பாண்டவர்க ளும் நீங்களும் பகைமை கொள்ள வேண்டா; ராஜ்யத்தில் இருவர்க்கும் பாக முண்டு; ஆதலால் ஸமபாகமாகப் பிரித்துக்கொண்டு ஸமாதாநமாக அரசாட்சி செய்து வாழுங்கள்’ என்று பலபடியாக அருளிச் செய்ய,

அந்தச் சொல்லுக்குச் சிறிதும் ஸம்மதியாமல் ‘பராக்ரமமிருந்தால் போர் செய்து ஜயித்துக்கொள்ளட்டும்; இந்தப் பூமி வீரர்க்கே உரியது’ என்று மிக்க செருக்குத் தோற்றச் சொல்லவே, தான் பாண்டவபக்ஷபாதியாயிருந்து எதிரிகளைத் தோற்பித்தன னென்க.

பாரதம்கை செய்திடுதலாவது – பாரதயுத்தத்திலே அணிவகுத்தல் முதலிய வேண்டிய ஸஹாயங்களைச் செய்தல்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்ரீ பாகவதம் முதலியவற்றில் ராஸக்ரீடை எனப் படுவது தமிழில் குரவைக் கூத்து’ எனப்படும்;

“அங்கநாமங்கநா மந்தரே மாதவ மாதவம் மாதவஞ் சாந்தரே ணாங்கரா ” என்றபடி ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணபிரானாகப் பல உருவெடுத்துக் கை கோத்தாடும் கூத்து.

———————-

வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

பதவுரை

வண் கையான்

விசேஷமாக தானஞ்செய்கிற கையையுடையவனாய்
அவுணர்க்கு நாயகன்

அசுரர்கட்குத் தலைவனான மாவலியினது
வேள்வியில்

யாக பூமியிலே
மாணி ஆய் சென்று

பிரமசாரி வேஷத்துடன் எழுந்தருளி
கையால்

தனது திருக்கையாலே
மண் இரந்தான்

பூமியை யாசித்தவனும்
மராமரம் ஏழும்

ஏழு மராமரங்களையும்
எய்த

துளைபடுத்தின
வலத்தினான்

வலிவையுடையவனும்
எண் கையான்

அஷ்ட புஜங்களையுடையவனும்
இமயத்து உள்ளான்

இமயமலையின் கண் (திருப்பிரிதியிலே) எழுந்தருளியிருப்பவனும்
இரு சோலை

திருமாலிருஞ் சோலையிலே
மேவிய

பொருந்திய
எம்பிரான்

ஸ்வாமியும்
திண் கை மா

திடமான துதிக்கையையுடைய கஜேந்திரனது
துயர்

துன்பத்தை
தீர்த்தவன்

போக்கினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற

திருவேங்கடம் நெஞ்சமே! அடை.—

வேண்டினார்க்கு வேண்டின படியே தானஞ் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாகபூமியிலே வாமநப்பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தாவென்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கையுண்டாவதற்காக ஸப்த ஸாலவ்ருக்ஷங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், ஆச்ரிதரக்ஷணார்த்தமாகத் திவ்யாயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக்கைகளையுடையவனும், (அல்லது) கச்சிமாநகரி லுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே அஷ்டபுஜனாக ஸேவை ஸாதிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதியென்னும் திருப்பதியிலே யெழுந் தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே!

[மராமரமேழுமெய்த வலத்தினான்.] ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ்செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை ஒருயோஜனை தூரம் தூக்கி யெறிந்ததையுங் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனை வெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல, அது கேட்ட லக்ஷ்மணன் உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ன, ஸுக்ரீவன் ‘இராமபிரான் நீறு பூத்த நெருப்புப்போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது; ஏழு மராமரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இரு நூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’ என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்குமாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டைவிரலினால் இலேசாய்த் தூக்கிப்பத்துயோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கி யெறிந்தான்; இப்போது உலர்ந்து போன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மராமரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டு அம்பறாத்தூணியை அடைந்தது. (மராமரம் – ஆச்சாமரம்.) .

—————-

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

பதவுரை

பண்டு

முன்னொருகால்,
எண் திசைகளும்

எட்டுத் திக்குகளையும்
ஏழ் உலகமும்

ஸப்த லோகங்களையும்
வாங்கி

(பிரளயம் கொள்ளாதபடி) எடுத்து
பொன் வயிற்றில்

(தனது) அழகிய திருவயிற்றிலே
பெய்து

இட்டுவைத்து
ஓர் ஆல் இலை

ஒரு ஆலந்தளிரிலே
பள்ளி கொண்டவன்

சயனித்தருளினவனும்
பால் மதிக்கு

வெளுத்த சந்திரனுக்கு
இடர்

க்ஷயரோகமாகிற துக்கத்தை
தீர்த்தவன்

போக்கினவனும்,
ஒள் எயிற்றோடு

ஒளிபொருந்திய கோரப் பற்களோடு கூடி
திண் திறல் அரி ஆயவன்

மிக்க வலிவுடைய நரசிங்கமூர்த்தியாகத் தோன்றினவனாய்
ஒண் திறல் அவுணன்

மஹா பலசாலியான இரணியாசுரனுடைய
உரத்து

மார்விலே
உகிர்

(திருக்கை) நகங்களை
வைத்தவன்

வைத்து அழுத்தினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற

திருவேங்கடம் நெஞ்சமே! அடை-.

உலகங்களெல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாதபடி அவற்றைத் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கி ஓராலந்தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி யருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருவவதரித்து, தன் வலிவோடு ஒத்தவலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை யூன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே!

எண் திசைகளும் = கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்ற நான்கு திசைகளும், வடகிழக்கு தென்கிழக்கு வடமேற்கு தென்மேற்கு என்கிற நான்கு திசைமூலைகளும் சேர்ந்து எண்டிசைகள் என வழங்கப்படும்.

நமது விசிஷ்டாத்வைத வித்தாந்தத்தில் திக்கு என்று தனியே ஒரு பதார்த்தம் ஒப்புக்கொள்வதில்லை.

இங்கே திசைகளைத் திருவயிற்றில் பெய்ததாகச் சொன்னது அவ்வவ்விடங்களிலுள்ள பொருள்களைச் சொன்னபடி. …

————

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

பதவுரை

பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான்

பூமி ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும்
ஆயிரம் பேரும் பேச நின்ற

ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதி பாதிக்கப்படா நிற்பவனும்
பிறப்பு இலி

(கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
பெருகும் இடம்

வளருகிற இடமானதும்,-
நீள் விசும்பிடை

பெரிய ஆகாசத்தினின்றும்
காரும் வார் பனி

மழைநீரும் மிக்க பனித்துளியும்
சோரும்

பெய்யப்பெற்றதும்
மாமுகில் தோய்தர

(மேலுள்ள) காள மேகங்கள் வந்து படியும்படியாக
சேரும்

பொருத்தமான
வார்

உயரவோங்கியிருக்கிற
பொழில்

சோலைகளாலே
சூழ்

சூழப்பெற்றதும்
எழில்

அழகியதுமான

திருவேங்கடம் நெஞ்சமே! அடை-.

பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் என்று சொன்னது-ஸகல லோகங்களும் தானிட்ட வழக்கா யிருக்குமவன் என்றபடி.

அப்படிப்பட்டவனும் ஸஹஸ்ர நாமங்களால் துதிக்கப்படுபவனும் கருமங்களுக்கு வசப்படா தவனுமான எம் பெருமான் தன்னுடைய பெருமை யெல்லாம் தோற்ற எழுந்தருளியிருக்குமிடம் திருவேங்கடம்;

அஃது எப்படிப்பட்டதென்றால்; ஆகாசத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது; மேகங்கள் வந்து படியும்படியான (மேக மண்டலம் வரையில் ஓங்கின) உயர்த்தியையுடைய சோலைகளாலே சூழப்பட்டது.

அதனைச் சென்று சேர் நெஞ்சே!

——————

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-

பதவுரை

அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற

ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும்
அமரர் கோன்

நித்ய ஸூரிகட்குத் தலைவனும்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன்

பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன் அவன்

நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும்,
நீள் இதணம் தொறும்

உயர்ந்த பரண்கள் தோறும்
கொம்பின் அன்ன இடை

வஞ்சிக் கொம்போடு ஒத்த (நுண்ணிய) இடுப்பையுடைய
மட குற மாதர்

மடமை தங்கிய குறப்பெண்கள்
செம்புனம் அவை காவல் கொள்

செவ்விய வயல்களைக் காவல் செய்து கொண்டிருக்கப் பெற்றதுமான

திருவேங்கடம் நெஞ்சமே! அடை-.

கீழ்ப்பாட்டில் “பாரு நீரெரி காற்றினோடு ஆகாயமுமிவையாயினான்” என்ற முதலடியிற் சொன்ன அர்த்தமே இப்பாட்டிலும் முதலடியிற் சொல்லப்படுகிறது. அம்பரம் – ஆகாயம்; தற்சம வடசொல். பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதஸ்வ ரூபியானவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே!.

        அஃது எப்படிப்பட்டதென்னில்; கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும் செம்புனமவை காவல்கொள்ளப்பெற்றது. குறத்திகள் மலைகளிலே வாஸஞ் செய்பவர்கள்; புனங்காத்தல் அவர்களது தொழிலாகும்; (அதாவது- பட்டிமேய வொண்ணாதபடி நிலங்களைக் காப்பாற்றுதல்.) உயரமான பரண்களை அமைத்துக்கொண்டு அவற்றிலே கிடந்து காப்பர்கள்; இதனை ஸ்வபாவோக்தியாக இங்கு அருளிச் செய்தாராயிற்று. ‘இதணம்’ என்றும் ‘ இதண் ‘ என்றும் காவற்பரணுக்குப் பெயர். …

——————

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

பதவுரை

பேசும்

எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும்
இன்

போக்யமுமான
திரு நாமம் எட்டு எழுத்தும்

திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை
சொல்லி நின்று

அநுஸந்தித்து
பின்னரும்

மேன்மேலும்
பேசுவார் தம்மை

(அதனையே) அநுஸந்திப்பவர்களை
உய்யவாங்கி

உஜ்ஜீவிக்கச்செய்து
பிறப்பு அறுக்கும் பிரான் இடம்

(அவர்களது) ஸம்ஸாரத்தைத் தொலைக்கு மெம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமானதும்,
வாசம் மா மலர் நாறும்

மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற
வார் பொழில்

விசாலமான சோலைகளாலே
சூழ்தரும்

சூழப்பட்டதும்,
உலகுக்கு எல்லாம்

எல்லா வுலகங்களுக்கும்
தேசம் ஆய் திகழும்

திலகம்போன்று விளங்குவதுமான
திருவேங்கடம் மலை

திருமலையை
நெஞ்சமே அடை

மனமே! அடைந்திடு.

இத்திருமொழியில் கீழ்ப்பாசுரங்க ளெல்லாவற்றிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலொன்றே யுள்ளது; பரோபதேசமென்பது இல்லை. இப்பாசுரம் “பேசுமின் திருநாம மெட்டெழுத்தும் ” என்று தொடங்கப்படுகிறது. பேசுமின் என்றால், ‘சொல்லுங்கள்’ ‘ என்று பொருள்படுகையாலே முன்னடிகளிரண்டும் பரோபதேசமென்றும் பின்னடிகளிரண்டும் ஸ்வாத்மோத்போதநமென்றும் கொள்க.

இப்பக்ஷத்தில், அந்வயிக்க வேண்டுவது எங்ஙனே யென்னில்; ”திருநாம மெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் பேசுமின்’ என்று முன்னடிகளை அந்வயிப்பது.

திருவஷ்டாக்ஷரத்தை அநுஸந்தித்து, ஒருகால் அநுஸந்தித்தாயிற்றென்று த்ருப்திபெற்று ஓய்ந்துவிடாமல் மேன்மேலும் அத்திருமந்திரத்தையே பேசிக் கொண்டிருப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து, அவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தைப் போக்கித் திருநாட்டிலே நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யமளிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடத்தை, முமுக்ஷக்களே! நீங்களெல்லாரும் சொல்லுங்கள்;

”திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே”(திருவிருத்தம் – 59) என்னும் படியாக நீங்களெல்லாரும் ‘திருவேங்கடம் திருவேங்கடம் ‘ என்று சொல்லுங்கள் – என்றபடி.

”திருநாமமெட்டெழுத்தும் பேசுமின்; சொல்லி நின்று பின்னரும், பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் பேசுமின்” என்று – பேசுமினென்ற வினைமுற்றை இரண்டிடத்தில் அந்வயித்து உரைப்பதுமுண்டு.

இங்ஙனே பரோபதேசமாக யோஜிப்பது தவிர மற்றொருவகையாகவும் யோஜிப்பதுண்டு;

பேசுமின் என்று வினைமுற்றாகக் கொள்ளாமல், “பேசும்- இன்” என்று பிரித்து இவ்விரண்டு பாதங்களையும் திருநாமமெட்டெழுத்தும் என்பதற்கு விசேஷணமாக்கி, பேசும் – எல்லாரும் பேசுகைக்கு உரியதாய், இன் – பரமபோக்யமான, திருவஷ்டாக்ஷரத்தைச் சொல்லி நின்று பின்னையும் பேசுமவர்களை உஜ்ஜீவிப்பிக்கவல்ல எம்பெருமானுக்கு இருப்பிடமானதும், மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற பரந்தபொழில்களாலே சூழப்பட்டதும், உலகுக்கெல்லாம் திலகமாக விளங்குவதுமான திருவேங்கட மலையைச் சென்று சேர்மனமே! என்று ஏகவாக்கியமாக உரைப்பதாம்.

இவ்விடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வியாக்கியானத்தில் – “(பேசுமினித்யாதி.) ஓர் அதிகார ஸம்பத்தி வேண்டாவிறே பெற்ற தாய் பேர் சொல்லுவார்க்கு அப்படியே இடர்வந்தபோது எல்லாருமொக்கச் சொல்லிக்கொடு போரக்கடவதான இனிய திருநாமமான எட்டெழுத்தையும் சொல்லி நின்று,” என்றருளிச் செய்யப்பட்டுள்ள ஸ்ரீஸூக்திகள் நோக்கத்தக்கன.

‘ஓம் நமோ நாராயணாய” என்கிற ஆநுர்பூர்வியையுடைய திருவஷ்டாக்ஷரம் ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்யர்களான த்ரைவர்ணிகர்களோடு சூத்ரர்களோடு ஸ்த்ரீகளோடு வாசியற முமுக்ஷுத்வம்முடையாரனைவர்க்கும் அதிகரிக்க அர்ஹமானதென்னுமிடம் வேதவேதாந்த வேதாங்கங்களிலும் அவற்றை அநுஸரித்த பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளிலும் இவையித்தனைக்கும் மூலமான சிஷ்டாநுஷ்டாந பரம்பரையிலும் ஸுவ்யக்தமாயிருக்கச் செய்தேயும், நெடுநாளாகவே சிலர் இதில் விப்ரதிபத்திகொண்டு கிடப்பர்கள்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்குரிய பஞ்ச ஸம்ஸ்காரத்திலே முதலில் திருவிலச்சினையிட்டுப் பிறகு திருமண்காப்பு சாத்தி அதன் பிறகு தாஸ்ய நாமமிட்டுப் பிறகு நான்காவது ஸம்ஸ்காரமாக மந்த்ரோபதேசம் செய்யுமிடத்து ஸ்த்ரீகளுக்கும் சூத்ரர்களுக்கும் பிரணவமென்கிற ஓங்காரத்தைச் சேர்த்து மந்த்ரோபதேசம் செய்வது பொல்லாங்கு என்று ப்ரமித்திருப்பார் பலர்

“அம் நமோ நாராயணாய” என்று உபதேசிக்கவும், சாஸ்த்ரோக்கரீதியிலே “ஓம் நமோ நாராயணாய” என்று உபதேசிப்பவர்களை நூல்வரம்பு கடந்தவர்களாகச் சொல்லி தூஷிக்கவுங் காண்கிறோம்.

இப் பிரணவாதிகார விஷயத்திலே பூருவர்களில் சிலர் ஸ்வல்பமாக எழுதி வைத்தார்கள். நவீநர்களில் பலர் இதனைப் பெருக்கடித்து வாதப்ரதிவாத ரூபங்களான சில நூல்களையும் அவதரிப்பித்தார்கள். ஸ்வரூபோஜ்ஜீவநத்திற்கு முக்கியமான இவ்விஷயத்தில் பூர்வ பக்ஷிகளைப்போலவே ஸித்தாந்திகளில் நவீநர்களும் சில உண்மைப் பொருள்களைத் தெளிவுறாதும் வெளியிடாதும் போந்ததன் பயனாக, இதனைப் பற்றிய கலக்கங்கள் கனக்கவுண்டாகி, சில ஞானிகள் திறத்திலும் ஸம்சயவிபர்யயவுணர்ச்சிகள் மலிந்து ஸத்ஸம்பரதாயக்ஷோபம் விளையக்காண்கையாலே, இவ்விஷயத்தில் பிறர்சொல்லும் அவப்பொருள்களையெல்லாம் அகற்றி சாஸ்த்ரீயமாகவும் ஸாரமாகவுமுள்ள நற்பொருள்களை ஈண்டு நல்குவது இவ்விருள் தருமா ஞாலத்திற்கு அணிவிளக்காவதோர் மஹோபகாரமெனக்கொண்டு இங்கே சில பரமார்த்தங்களைப் பகர்வோம்

  1. ப்ராஹ்மண க்ஷத்ரியவைச்யர்களென்கிற த்ரைவர்ணிகர்கள் தவிர மற்றையோர்க்கு வேதவாக்கியங்களை உச்சரிக்க அதிகாரம் சாஸ்த்ரங்களில் மறுக்கப்பட்டிருப்பதால் ஸகல வேதஸாரமாகிய ப்ரணவத்தை ஸ்த்ரீ சூத்ரர்கள் வாயால் சொல்லவும் உபதேசம் பெறவும் அதிகாரமற்றவர்கள் என்று பூர்வபக்ஷிகள் கூறுவர். இங்ஙனாகில், ‘நமோ நாராயணாய” என்கிற மந்த்ரசேஷமும் வேத வாக்கியமே; மந்த்ராத்தமென்கிற த்வயமும் வேத வாக்கியமே; ஸர்வதர்மாந் இத்யாதி சரமச்லோகமும் பஞ்சமவேதமென்றும் கீதோபநிஷத்தென்றும் ப்ரஸித்தமானதில் சேர்ந்ததாகையாலே அதுவும் வேதவாக்கியமே ; வாக்ய குரு பரம்பரையில் முதல் மூன்று வாக்கியங்களும் வேதமே. இவற்றை மாத்திரம் ஸ்த்ரீ சூத்ரர்கள் எங்ஙனே அதிகரிக்கலாமென்று கேள்விவரின், வைதிகங்களென்றும் தாந்த்ரிகங்களென்றும் மந்திரங்களையும் கருமங்களையும் இருவகையாகப் பிரித்து, பிரணவத்தோடு கூடியவை வைதிகங்களென்றும், அஃதில்லாதவை தாந்தரிகங்களென்றும், சூத்ராதிகளுக்குத் தாந்த்ரிகமே உரியதென்றும் பகவச் சாஸ்த்ராதிகளில் சொல்லியிருக்கையாலே ப்ரணவ மொழிந்த மந்தர சேஷாதிகளை ஸ்த்ரீ சூத்ரர்கள் அதிகரிக்கக் குறையில்லை என்கிறார்கள்.
  2. இவ்வர்த்தத்திற்கு ஆதாரமாகச் சொல்லும் ப்ரமாணங்களாவன : “***” என்றும் உள்ள வசநங்களாம். இவற்றின் உண்மைப் பொருளை மேலேயுரைப்போம். பூர்வபக்ஷிகள் கொண்டபடியே பொருளாகில் “ப்ரணவம் த்ரைவர்ணிகாதிகாரம்” என்ற தங்கள் இசைவுக்கும் விரோதம் விளைந்ததாகும். ஏனெனில், “தாந்த்ரிகம் வைச்ய சூத்ராணாம்” என்று த்ரைவர்ணிகர்களான வைச்யர்களையும் சூத்ரர்களோடே சேர்த்து, ப்ரணவவிரஹிதமான தாந்திரிகத்திலேயே அவர்கட்கும் அதிகாரமாகச் சொல்லிற்றிறே. அங்ஙனிருந்தும் வைச்யர்களுக்கும் ப்ரணவாதிகாரமில்லையென்று பூர்வபக்ஷிகள் மறுக்காதொழிவதற்கு மூல மறிகின்றிலோம்.
  3. அது நிற்க . வைதிகம் ப்ராஹ்மணாநாம் து” இத்யாதியாக மேலெடுத்த வசநத்தின் பொருள் யாதெனில், தெளியச் சொல்லுவோம் கேண்மின்; எந்த மந்திரத்தை ஜபிக்க வேணுமானாலும் ஆதியிலும் அந்தத்திலும் ப்ரணவங்களைச் சேர்த்து ஜபிக்க வேணுமென்று விதிக்கப்பட்டுளது. ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையில் மூன்றாமதிகாரத்தில் உதாஹரித்தருளின “***” இத்யாதி வசநமும் இப்பொருளதே. “***” இத்யாதி ச்ருதியாலும், “***” என்ற மநுஸ்ம்ருதி (2-74.) வசநத்தாலும் ஸாமாந்யமாகவே வேதத்துக்கு ஆதியந்தங்களில் பிரணவஸம்யோஜநம் விஹிதம். இதனையடியொற்றியே இதர மத்ரஜபங்களிலும் இந்த ப்ரக்ரியை ஸ்பஷ்டமாக விதிக்கப்பட்டது “***” என்று யோகயாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதியிலும், “***” என்று போதாயந ஸுத்ரத்திலும், “***” என்ற வருத்தமநுவசநத்திலும் காயத்ரீஜப விஷயத்திலே இங்ஙனே சொல்லிற்று. இப்படி வேதத்துக்கும் வைதிக மந்த்ரத்துக்கும் ஸாமாந்யமாக விதிக்கப்பட்ட பூர்வோத்தர ப்ரணவ ஸம்யோஜநம் திருவஷ்டாக்ஷரத்திற்கும் அபேக்ஷிதம் ; “***” என்றதிறே,
  4. ஸ்ரீபகவத்கீதையிலும் பதினேழாமத்யாயத்திலே, “***” (24) என்ற ச்லோகத்தால் – யஜ்ஞாதிகார்யங்களின் தொடக்கத்தில் ப்ரணவோச்சாரணம் ஆவச்யகமென்று காட்டப்பட்டது. கர்மாங்கமான இப்படிப்பட்ட ப்ரணவோச்சாரணத்தில் த்ரைவர்ணிகரல்லாதார்க்கு அதிகாரமில்லையென்பதும் த்ரைவர்ணிகர்கட்கு மாத்திரம் இப்படிப்பட்ட கர்மாங்கப்ரணவஸம்யோஜகம் அபேதமென்பதும் சாஸ்த்ரஸித்தம். ஆனதுபற்றியே, “***” இத்யாதி வசநமும், “***” இத்யாதி வசநங்களும் “***” என்ற வசநமும் அவதரித்தன.
  5. இவற்றில் மந்த்ரத்திற்கு அவயவமாகவுள்ள ப்ரணவம் சூத்ராதிகளுக்கு ஆகாதென்று மறுக்கப்படவில்லை. பின்னை எந்த ப்ரணவம் மறுக்கப்படுகின்ற தென்னில்; ஏற்கனவே ப்ரணவத்தோடு சேர்ந்தோ, அல்லது இயற்கையாக ப்ரணவ ஸம்பந்தமில்லாமலோ ப்ரஸித்தமாகவுள்ள எல்லா மந்த்ரங்களினுடையவும் ஜபாதிக்காலங்களில் அவற்றுக்குப் பூர்வோத்தரங்களிலே சேர்த்துக் கொள்ளப்படவேணுமென்று விதிக்கப்பட்ட அபூர்வமான ப்ரணவம் யாதொன்றுண்டு, அதுதான் மறுக்கப்படுகின்றது. “அஷ்டாக்ஷரச்சைவ மந்த்ரோ த்வாத சாக்ஷர ஏவச, ஷடக்ஷரச்சைவ மந்த்ரோவிஷ்ணோரமிததேஜஸ: ஏதே மந்த்ரா: ப்ரதாநாஸ்து வைதிகா: ப்ரணவைர் யுதா:” என்று பூர்வபக்ஷிகள் உயிர்நிலையாக எடுத்தாளும் வசநத்தில், அஷ்டாக்ஷரோமந்தர:” என்றும் ”தவாதசாக்ஷரோமந்த்ர:” என்றும் , “ஷடக்ஷரோமந்த்ர:” என்றும் ஒவ்வொரு மந்த்ரத்தையும் அக்ஷரஸங்க்யையையிட்டே நிர்த்தேசித்துவிட்டு, “இவை ப்ரணவத்தோடே கூடினால் வைதிகம், கூடாவிட்டால் தாந்திரிகம்” என்று சொல்லியிருப்பதானது, அபூர்வப்ரணவத்தை உத்தேசித்தா, அவயவபூதப்ரணவத்தையே உத்தேசித்தா? என்று விசக்ஷணர் தாம் விமர்சிக்க வேண்டும். நாராயண மந்த்ரமும் வாஸுதேவ மந்த்ரமும் விஷ்ணுமந்த்ரமும் ப்ரணவயுக்தமா யிருந்தால் வைதிகம், தத்வியுக்தமாயிருந்தால் தாந்திரிகம்’ என்று சொல்லியிருந்தாலாவது அவயவப்ரணவத்தை யுத்தேசித்துச் சொல்லுகிற தென்னலாம். அங்ஙன் சொல்லவில்லை. ஒரு பூரண சரீரத்தில் கைகாலை ஒடிப்பது போல் பூர்ண மந்த்ரத்தில் அவயவைகதேசத்தை மறுக்கும் படியாகவோ மாற்றும்படியாகவோ எந்த சாஸ்த்ரமேனும் விதிக்குமோ?
  6. அன்றியும், “நஸ்வரப்ரணவோங்காரி நாப்யந் யவிதயஸ்ததா” என்ற வச நத்தில், ஸ்வரம் கூடாது, ப்ரணவம் கூடாது, அங்கங்கள் கூடாது, மற்ற எந்த விதிகளும் கூடாது’ என்று கூடாதவற்றை விலக்கி மந்தரமாத்ரம் கூடும் என்று கூறினதின் கருத்தை ஆழ்ந்து ஆராயவேணும். திருமந்தர சரீரத்தைச் சொல்லு மிடமெங்கும் “***” “***” “****” இத்யாதிகளாலே ப்ரணவஸஹிதமாகவே சொல்லப்பட்டது. ஆகவே மந்த்ரமாத்ரம் என்றது ஸ்வாவயவபூத ப்ரணவமும் சேர்ந்த அஷ்டாக்ஷரத்தைச் சொன்ன படியேயன்றி அதனை யொழித்துரைத்தபடியன்று; அங்ஙனாகில் “மந்த்ரசே ஷோக்திரிஷ்யதே” என்றே சொல்லப்பட்டிருக்கும். மந்த்ரத்திற்குப் புறம்பாய் அபூர்வமாயுள்ள ப்ரணவத்தைக் கூட்டியுரைப்பதே வைதிகத்வ ஹேது வென்னுமிடம் கீழ் உதாஹரித்த கீதாவசநாதிகளால் நன்கு விளங்கும். இப்படி கொள்ளாதபோது “ஸர்வேஷாம் தாந்திரிகம் துவா” என்றதற்கு அர்த்தமே யில்லையாகும். மந்த்ராவயவபூதப்ரணவமு மொழிந்ததே தாந்த்ரிகமென்று பூர்வபக்ஷிகள் பேசுகிறபடி பொருளாகில், தரைவர்ணிகர்களுக்குக்கூட தாந்தரிகமே யிருக்கலாம்’ என்று இசைகிற வசநத்திற்கு ஸாமஞ்ஜஸ்யமில்லையிறே. பிரணவத்தை ஒருகாலும் விட்டுப் பிரியாத அந்தணர்கட்கு அடியோடு ப்ரணவத்தை ஒழித்து மந்த்ராநுஸந்தாநமும் கர்மாநுஷ்டாநங்களும் செய்யலா மென்று சாஸ்தரம் கனவிலும் கருதுமோ? கீழ் நாம் விவரித்தபடியே ‘அபூர்வ பரணவ ஸம்யோஜநமே வைதிகத்வஹேது’ என்னும் பொருளை இசையில் இவ்வநுபத்தி இடம் பெறாது. அபூர்வப்ரணவத்தையும் சேர்த்துக் காரியம் கொள்ளுபவர்களும், அவயவபூதப்ரணவமாத்ரத்தோடே காரியம் கொள்ளுபவர்களுமான இருவகை த்ரைவர்ணிகாதிகாரிகளும் ப்ரத்யக்ஷ லக்ஷயமாயிருப்பதால், “வைதிகம் ப்ராஹ்மணாநாம்து” என்றது முந்தின அதிகாரிகள் பக்கலிலும், “ஸர்வேஷாம் தாந்திரிகம் து வா” என்றது பிந்தின அதிகாரிகள் பக்கலிலும் இடம் பெறுதலால் சாஸ்த்ரதாத்பர்யம் ஸங்கதமாகும். மாதாந்த ரஸ்தர்கள் சொல்லும் சிவபஞ்சாக்ஷரி முதலானவற்றில் ப்ரணவமொழிந்தவளவுக்கே மந்த்ரத்வமுள்ளதென்றும், அங்ஙனன்றிக்கே வைஷ்ணவங்களான வ்யாபகமந்திரங்களில் ப்ரணவ விசிஷ்டத்துக்கே மந்த்ரத்வமுள்ளதென்றும் ஏற்றமாகச் சொல்லிப் போருவதற்கெல்லாம் முரண்படுமாறு, மந்த்ரத மாத்ரோக்திரிஷ்யதே என்பதற்கு அவயவபூதப்ரணவவிரஹிதாம்சம் பொருளென்பார் “***”𑌶𑍋𑌪 நீயர்களாமத்தனை.
  7. பாத்மோத்தரகண்டம் முதலானவற்றில் திருவஷ்டாக்ஷரப்ரசம்ஸை பண்ணுமிடங்களிலே, “இம்மந்திரத்தில் ஸ்வபாவமாகவே ப்ரணவம் சேர்ந் திருப்பதால் ப்ரணவமேறிடவேண்டிய மற்ற பகவந் மந்த்ரங்களிற்காட்டில் இது சிறந்தது’ என்று சொல்லப்பட்டதேயன்றி, ப்ரணவரஹிதமான விதற்கு மந்த் ரத்வம் எங்கும் சொல்லப்படவில்லை. இன்னமும் இங்குச் சொல்லவேண்டு மவற்றை மேலே சொல்லுவோம்.
  8. ‘நஸ்வர” என்ற வசநத்திலும் ப்ரணவமாத்ரத்தை நிஷேதியாமல் ஸ்வராதிகள் பலவற்றையும் நிஷேதித்தமையால் இந்த நிஷேதம் எக்கருத்தினா லாயது? என்று விமர்சிக்க வேண்டும். சாஸ்த்ரமானது அப்ரஸக்த ப்ரதிஷேதம் பண்ணமாட்டாதிறே. திருமந்திரத்தை ஸ்வரத்துடனும் அங்கங்களுடனும் ரிஷிச்சந்தோ தேவதாஸங்கீர்த்தநாதிகளாகிற இதர விதிகளுடனும் உச்சரிக்க வேண்டிய ப்ரஸக்தி எப்போது உண்டாகுமோ அப்போது அந்த ஸ்தலவிசே ஷத்தை நோக்கின நிஷேதம் இது என்று அல்பஜ்ஞனும் அநாயாளமாக அறி யக்கூடியது. திருவிலச்சினை சாத்தும் போது மந்த்ரோபதேசம் செய்பவர் களும் ஸாதாரணமாக இஷ்டமான போது திருமந்திரத்தை உச்சரிப்பவர்களும், ‘ஸ்வரம் – அங்கம் – இதர விதிகள்’ என்னுமிவற்றை நெஞ்சிலும் நினைப்பதில்லை. ஜபம் முதலிய சில காலவிசேஷங்களில் மாத்திரம் ஸ்வராங்க விதிகளை அநுஸரிக்க வேண்டிய நோக்கம் நேருகின்றது. அப்படிப்பட்ட காலவிசேஷங்களில்தான் தனிப்பட அபூர்வ ப்ரணவமும் விதிபலத்தால் சேர்க்க வேண்டியதாகிறது. அந்த ப்ரணவத்தையே சூத்ராதிவர்ஜநீயமாக சாஸ்த்ரம் சொல்லுகிறதென்னு மிடம் ப்ரகாணத்தம்.
  9. முன்பின் ப்ரகரணங்களைப் பாராமலேப்ரமாண வசநங்களுக்கு ஸஹலா தாந்தோன்றிப் பொருள் சொல்லுமவர்கள் – “*** ” என்று விகிகாப்ரகரணத்திலுள்ள வசநத்தைக் கேட்டுவைத்த ஒரு மருத்துவன் கண்ணோயுடன் வந்த வொரு ராஜகுமாரனுக்கு அங்ஙனே காதையறுத்து அபாநத்திலே சூடுபோட்டுப் பட்ட பாடு படுவார்களென்று ஞானப்பிரான் வார்த்தை.
  10. ”நஸ்வர ப்ரணவோங்காநி” என்றதற்கு அவ்யவஹித பூர்வத்தி லுள்ள வசந்த்தையும் ரஹஸ்யத்ரயலாரத்திலே ஸாத்யோபாய சோதநாதிகா ரத்திலே தேசிகன் உதாஹரித்தருளினர்; அதாவது – “***”ஐதவி. இதில் ஜப: என்றதையும் ப்ரக்ருத்யைவ என்றதையும் வித்வான்கள் குறிக்கொள்ள வேணும். ஜபப்ரகரணவசநமென்பது வித்தமானவோபாதி, அந்த ஜபந்தன்னிலும் அவயவபூதப்ரணவவிசிஷ்ட மந்த்ரா நுஸந்தாநத்திற்கு நிஷேதமில்லை யென்பதும் “ப்ரக்ருத்யைவ” என்பதனால் விளக்கப்பட்டதாம். ப்ரக்ருத்யைவ என்றது – அதிகப்படியான அம்சங்களின்றியே மந்த்ரமாகவுள்ள வளவு என்றபடி அதாவது “ஓம் நமோ நாராயணாய ” என்னுமளவாம். அஷ்டாக்ஷரத்தின் ப்ரக் ரதி இதுவிறே, “***” என்றால், பசுவின் பால் சர்க்கரைக் கலப்பின்றியே க்ஷீரமான தன்மையிலேயே இனிது என்று பொருள் படுவது போல இங்கும், அஷ்டாக்ஷரமான தன்மையினால் மாத்திரம்’ என்று பொருள் பட்டிரா நின்றது.
  11. இதற்குப் பூர்வபக்ஷிகள் உரையிடும் போது, ப்ரக்ருத்யைவ – ப்ரக்ருதியினால் மாத்திரம், அதாவது- நான்காம் வேற்றுமையில்லாமல்” என்று பொருள் வரைந்துள்ளார். இது ஒரு விசித்திரமான வ்யுத்பத்திபோலும். ‘நமோநாராயணேத்யுக்த்வா சவபாக புநராகமத்” என்ற வராஹபுராண வசந்த் தைக்கண்டதேசிகன், நம்பாடுவான் “நமோநாராயண ” என்றவளவே சொன்ன தாகத் திருவுள்ளம் பற்றி அத்ரைவர்ணிகர்களுக்கு அவ்வளவில் தான் அதிகார முள்ளதென்று கொண்டு “திருமந்த்ரமாகிற எட்டுக்கண்ணான கரும்பிலே வேர்ப் பற்றும் தலையாடையும் கழிந்தால் நடுவுள்ள அம்சம் ஸர்வோபஜீவ்யமாகிறாப் போலே” என்றும், “இது ப்ரணவ சதுர்த்திகளை யொழிந்தபோது ஸர்வாதிகாரம்” என்றும் ரஹஸ்யத்ரயஸாரத்திலும் ஸாரஸாரத்திலும் அருளிச்செய்த தில் பரிசயம் பண்ணிப்போந்த வாஸநையாலே இவர்களிப்படி உரைக்க நேர்ந்ததுபோலும்.
  12. கைசிக மாஹாத்ம்யத்தில் ”நமோநாராயணேத்யுக்த்வா” என்ற வசநமிருப்பது உண்மையே. வ்யாபக மந்த்ரங்களில் ப்ரதாநமான திருமந்த்ரத்தைச் சொன்னானென்பதைக் காட்ட வேண்டுவதே அங்கு விவக்ஷிதமாகையால் அதில் ஏகதேசமான அம்சத்தையிட்டுக் காட்டினான் மஹர்ஷி. “***” என்றவிடத்து ஸ்தோத்ர பாஷ்யத்தில், “***” என்றெடுத்துக் காட்டியருளின் நியாயத்தின்படி “***” என்று ரிஷி சொன்ன தாகவேயாகும். இவ்விஷயத்தை விவேகிகட்குப் பரிபூர்ண த்ருப்தியுண்டாம் படி விவரித்துக்காட்டுவோம்.
  13. நம்பாடுவானுக்கு ப்ரணவ சதுர்த்திகளை உச்சரிக்க அதிகாரமில்லாமை யினாலே ‘நமோ நாராயண’ என்றவளவே அவன் சொன்னான் என்று நினைப்பவர்கள், இவனிலும் தண்ணியனான கண்டாகர்ணபிசாசனுடைய வ்ருத்தாந் தத்தை ஹரிவம்சத்தில் விஷ்ணுபர்வத்தில் நூற்றிருபத்தினான்காமத்யாயத்திலே காணக்கடவர்கள். “***” என்று அவன் தன் வாயால் சொன்னதாக அங்கே ஸ்பஷ்டமாகவுள்ளது. அதற்கு மேலும் “ ***” என்று தொடங்கி “***” இத்யாதியாலே பரணவோச்சாரணம் பண்ணிற்றாகவும் சொல்லிற்று. இந்த கண்டாகர்ணன் ச்வபசனிற்காட்டிலும் அத்யந்த நிக்ருஷ்டனென்பதும், செந்நாய்களை மேய்க்கும் பரமஹீநசண்டாள ஜாதியிற் பிறந்தவனென்பதும் அந்த அத்யாயத்திலேயே ஸ்பஷ்டோக்தமாயிருப்பதைக் காணலாம். ஜாதியாலும் நடத்தைகளாலும் இவனிலுந் தண்ணியனில்லை யென்னப்பட்ட இவன் ஸப்ரணவமந்த்ரோச் சாரணம் பண்ணினானென்று ப்ரமாணவித்தமாயிருக்கும்போது இவனில் சிறந்த ப்ரஹ்மரக்ஷஸ்ஸாலே ஆச்ரயிக்கப்பெற்ற பெருமை வாய்ந்தவனும் பரம்பவித்திரனுமான நம்பாடுவான் ப்ரணவ விரஹிதமாக உச்சரித்தானென்று இதனை ஒரு விஷயமாகச் சொல்ல வருமவர்கள் விலக்ஷண ஞானிகளேயாவர்.
  14. நம்பாடுவான் உச்சரித்தது மூலமந்த்ரமாகில், பூர்வபக்ஷிகள் சொல்லுகிறபடி அவ்வளவு அம்சமே ஸர்வாதிகாரமாகில், “இது தான் ப்ரணவசதுர்த்திகளை யொழிந்தபோது ஸர்வாதிகாரமாம்’ என்ற மஹானுடைய வாக்கியமும் பரிபாலயமாகில், இவர்களுடைய ஸ்த்ரீ சூத்ர சிஷ்யோபதேச பாம்பரையிலே ‘நமோ நாராயண’ என்றவளவே உபதிஷ்டமாக வரவேணுமேயன்றி, வேறோ ரெழுத்தை முன்னே கூட்டிக்கொண்டும் விலக்கப்பட்ட சதுர்த்தியை விலக்காமலும் உபதேசித்து வருவது சாஸ்த்ரீயமாகுமோ? அம் என்று கூட்டிக் கொள்வதற்கு ஏதோ ஒரு வழி இவர்கள் காட்டக்கூடுமாயினும் சதுர்த்தியை விலக்காமைக்கு ஹேது சொல்லப்போகாதிறே. கரும்பிலே வேர்ப்பற்றைவிடத் தலை யாடையைக் கழிக்க வேண்டியதிறே முக்கியம். அதனையும் கழிக்கும்படி வசநங்களுக்குப் பொருள் கூறிவிட்டுக் கழியாததென்னோ? ப்ரமாணாந்தரத்தாலே சதுர்த்தி ப்ராப்தமாகிறதென்னில்; ப்ரணவத்திற்கு மாத்திரம் அங்கனே ப்ராப்தி உண்டாகக் கூடாதென்று சாபமோ? “***” இத்யாதி.
  15. ‘நமோநாராயணேத்யுக்த்வா ” என்ற வசனத்திற்கு இவர்கள் இங்ஙனே அர்த்த சிக்ஷை பண்ணும்போது , 1. “நானும் சொன்னேன் நமருமுரைமின் நமோ நாராயணமே” என்ற திருமங்கை மன்னனருளிச்செயலைக்கொண்டு “நமோ நாராயணம்” என்று இரண்டாம் வேற்றுமையீற்றதாகவே கலியன் திருமந்த்ரா நுஸந்தாநம் செய்தருளினார்; அவர் தாம் “நமருமுரைமின்” என்கையாலே அவருடைய ஸம்பந்தம் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்கட்கெல்லாம் அப்படியே த்விதீயாந்தமாகவே உரைப்பதே ஒக்கும்; வேர்ப்பற்றும் தலையாடையுங் கழித்தால் போராது; இரண்டாம் வேற்றுமை யுருபையும் ஏற்றிச் சொல்லவேணும்; நமரும் என்ற பதஸ்வாரஸ்யத்தால் * கலியனுரை குடிகொண்ட கருத்துடைய த்ரைவர்ணிகர்களுக்கும் இதுவே சரணம் – என்று சொல்ல வேண்டியதும் ப்ராப்தமேயாம். இல்லையாகில் ஆழ்வார் நியமந்த்தை அதிலங்கித்தபடியாமிறே. அன்றியும், பெரியாழ்வார். வாயினால் “நமோ நாரணாவென்று” என்றருளிச் செய்கையாலே ப்ராஹ்மணோத்தமரான இவருடைய ஸ்ரீஸூக்தியே அந்தணர்க்கு உபஜீவ்யமென்றுகொண்டு, அந்தணர்களனை வரும் “நமோ நாரணா” என்று பஞ்சாக்ஷரீமாத்ரம் சொல்லலா மெயன்றி, மற்றொரு படியுஞ் சொல்லலாகாது என்னும் உபந்யாஸமும் இனி ஆமோதிக்க அர்ஹமேயாம். உள்ள அக்ஷரங்களை மீறிப் பொருள் கொள்ள வொண்ணாதிறே. திருப்பல்லாண்டில் நாலாம்பாட்டிலே “நமோநாராயணாயவென்று” என்கிறார்; பதினோராம் பாட்டில் “நமோ நாராயணாவென்று ” என்கிறார்; இன்னபடி வக்தவ்யமென்பது ஆழ்வார் தமக்கே நிஷ்க்ருஷ்டமாகவில்லையே என்கிற சில செருக்கருடைய குத்ஸித வாதமும் இனி வெற்றிபெற்றதேயாம்.

ப்ரமாணைகசரணராய் அநுஷ்டிக்குமிவர்கள், ப்ரணவத்தை விட்டொழிக்கும்படி விதித்த சாஸ்த்ரத்தின்படி அதனை விட்டொழித்தும், அந்த ஸ்தாநத்திலே அம் என்று கூட்டிக்கொள்ளும்படி விதித்ததாகத் தாங்கள் பொருள் கொள்ளப்பெற்ற வசந்த்தின்படி அம் என்று கூட்டிக்கொண்டும் உபதேசிப்பது போல, சதுர்த்தியையும் விட்டொழிக்கும்படி விதித்ததாகத் தாங்களே காட்டிக்கொள்ளுகிற வசந்த்தையும் சிரமேற்கொண்டு அதன்படியே சதுர்த்தியை யும் விட்டு நீக்கி “அந்நமோநாராயண!” என்றிங்கனே உபதேசித்து வருவாராயின் சாஸ்த்ராநுவர்த்தகம் நன்கு தேறுவது போல அர்த்த ஸாமஞ்ஜஸ்யமும் அழகிதாகத் தேறும். எங்ஙனேயென்னில்; “***” என்று பராசரஸம்ஹிதையில் மூன்றாமத்யாயத்தில் – ப்ரணவத்தை முன்னிட்டு உச்சரிப்பது முமுக்ஷக்களுக்கென்றும், அம் என்கிற பீஜாக்ஷரத்தை முன்னிட்டு உச்சரிப்பது அந்நார்த்திகளுக்கென்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கையாலே, அதன்படியே “அந்நமோ” என்கிறவர்கள் நாராயண என்று ஸம்போதநமாகச் சொன்னாலிறே பொருள் பொருந்துவது. சதுர்த்தி அந்வயிக்கமாட்டாதிறே.

  1. விவேகிகாள்! “***” என்றபடி திருவஷ்டாக்ஷரம் சொல்லுகைக்கு ச்ரத்தாமாத்ரமே அதிகாரஸம்பத்து; அஃது உள்ளாரனைவரும் தூர்ய கோஷங்களுடன் “ஓம் நமோ நாராயணாய” என்று ஓதலாம்; இதற்கு எந்த வசநமும் அபவாதமாகப் புகாது. ஆகையால் “அஷ்டாக்ஷரஜபஸ் ஸ்த்ரீணாம் ப்ரக்ருத்யைவ விதீயதே” என்ற வசநத்திலுள்ள ‘ப்ரக்ருத்யைவ’ என்பதற்குப் பிறர் பகரும் பொருளைச் செவியேற்கவும் வேண்டா; அதுவே பொருளென்னில்; நமஸ்ஸிலுங்கூட ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு அதிகாரமில்லை யென்றிசைய வேண்டிவரும். ஏனென்னில், அவர்கள் சொல்லுகிறபடி “ந ஸ்வர ப்ரணவம்” என்றதனாலே ஓங்காரம் தன் ளுண்டது; ப்ரக்ருத்யா’ என்றதனாலே சதுர்த்தி தள்ளுண்டது; ஏவகாரத்தாலே நமபதம் தள்ளுண்டது. இனி சேஷித்தது நாராயண’ என்னுமளவே யிறே; இது தன்னிலும் “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் ! எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே” என்ற ஆழ்வாரருளிச்செயலை ப்ரவர்த்திப்பித்தால், ரகரத்தின் மேலுள்ள நெடிலும் யகரமும் தள்ளுண்டு போய், “பஞ்ச பாண்டவர்கள் எனக்குத் தெரியாதா கட்டிற்கால் போலே” என்ற கதையாய் மூன்றெழுத்தே அஷ்டாக்ஷர மஹாமந்த்ரஸ்தாநத்திலே வந்துநிற்குமாய்த்து.
  2. ஆனபின்பு “நஸ்வர” ப்ரணவ:” இத்யாதிகளிலுள்ள ப்ரணவநிஷே தம் ஜபாதிமையப்ராப்தமான அபூர்வப்ரணவபரமே யென்னுமிடம் நிர்விவாதம். “ஸர்வஸ் ஸப்ரணவோ ஜப்யம் ” என்று தேசிகனுதாஹரித்த வசநத்தினால் – அவயவத்வேந் ப்ரணவஸஹிதமாகவோ தத்ரஹிதமாகவோவுள்ள ஸ்கலமந்தரங்களுக்கும் ஜபஸமயத்தில் ஜபாதிசயஸித்திக்காக அபூர்வப்ரணவஸம்யோஜநம் விதிக்கப்படாநின்றதிறே. ஸ்ரீநாரதீய அஷ்டாக்ஷர ப்ரஹ்மவித்யையிலும் “நஸ்வரம:” இத்யாதிக்கு முன்னே இந்த அபூர்வப்ரணவ ஸம்யோஜநவிதியும் கையிலங்கு நெல்லிக்கனியாகக் காணவுரியதே.
  3. “***”, இந்த ஆபூர்வப்ரணவமில்லாமல் மந்திர ஜபம் கூடாதென்று நிர்ப்பந்தரூபமான விதி கிடையாது. மந்த்ரசரீரமுள்ளபடியே கொண்டு ஜபிக்கவுங்கூடும். அதில் ப்ரத்யவாயம் சொல்லிற்றில்லை. ‘ஸப்ரணவ ஜபத்தில் ஏற்றமுண்டு; அதிற்காட்டில் அப்ரணவஜபம் ஊனமானது’ என்னு மத்தனையே சாஸ்த்ர தாத்பர்யவிஷயம். ப்ரயோஜநார்த்திகளுக்கே அந்த நிர்ப்பந்தமுள்ளது. இதற்கு மேல் ஒன்று சொல்லக்கூடும் – ஜபாதிசயத்திக்காக ப்ரணவம் சேர்த்துக்கொள்ள விதித்தது உண்மையே; ஆனால், இயற்கையாகவே ப்ரணவம் கூடியுள்ள மந்திரங்களிலே இந்த விதி இடம்பெற ப்ராப்தியில்லை; அடியோடு ப்ரணவ ஸம்பந்தமற்ற மந்திரங்களில் மாத்திரமே இந்த விதி இடம் பெறவுரியது – என்னலாம். இஃது அவிசாரிதரமணீயம்; ஸர்வஸ் ஸப்ரணவோ ஜப்ய:” என்ற விதிவசநம் அஷ்டாக்ஷரப்ரஹ்மவித்யையிலேயன்றோ உள்ளது. அவிசேஷேண ப்ரயுக்தமான ஸர்வசப்தத்தை ஸங்கோசிப்பிக்கவல்ல ப்ரமாணம் ஈஷத்துமில்லையே. அன்றியும், அர்த்தத்தின் பூர்த்திக்காக மந்த்ராவயவமாக அமைந்துள்ள ப்ரணவத்திற்காட்டில் ஜபாதிசயஸம்பா தநார்த்தமாகத் தனியே வரும் ப்ரணவம் விநப்ரயோஜனமுடையதாக சாஸ்த்ர ஸித்தமாகையாலே இதனால் அது சரிதார்த்தமாகுமென்னப் போகாது. மந்த்ரங்களுடைய ஆதியில் மாத்திரமன்றிக்கே அந்தத்திலும் ப்ரணவத்தைச் சேர்க்கவேணுமென்றும், அதுதன்னிலும் முகப்பில் பல ப்ரணவங்களைச் சேர்க்க வேணுமென்றும் விதிக்கிற சாஸ்த்ரங்களையும் நோக்கவேணும். “***” முடிவான அக்ஷரம் ஓம் என்றே யிருக்கச் செய்தேயும் வேதஸமாபநாங்கமாக உச்சரிக்க வேண்டிய ப்ரணவமும் இதனால் சரிதார்த்தமாயிற்றென்று சொல்லுவாருண்டோ? தனிப் படவும் ஓமென்று சொல்லாதாருண்டோ?
  4. ஸ்ரீ ஸாத்வதஸம்ஹிதையின் த்விதீய பரிச்சேதத்தில் – “*** ” என்று நான்கு ப்ரணவங்கள் விதிக்கப்படுகின்றன. மேற்குறித்த ஸம்ஹிதையின் ஆறாவது பரிச்சேதத்தில், “வஹு நா வவழ வ தெரு வாரிணா உநதான வக்ஷால காலாணெ-ந் உணவாக) தகெந்த.” என்ற வசந்த்தாலும், அவ்விடத்திலேயே மேலே “”***” என்ற வசந்த்தாலும் – இயற்கையாகவே ப்ரணவத்தோடு கூடிய அஷ்டாக்ஷரத்வாதசாக்ஷரங்களுக்கே ஆதியந்தங்களில் ப்ரணவங்கள் சேர்க்கும் படியாகவும் முன்னே நான்கு ப்ரணவங்களைச் சேர்க்கும்படியாகவும் ஸ்பஷ்டமாக விதிக்கப்பட்டது. மேற்குறித்த வசநங்களில் “***” என்ற ஸ்தாநத்திலே “***” என்று அச்சுப்பிரதிகளிற் பாடங் காண்கிகிறது. இதுதன்னிலும் அதிஷ்டமொன்றுமில்லை. நான்காகிலென்? இரண்டாகிலென்? ஸப்ரணவமந்திரங்களிலும் அபூர்வப்ரணவஸம்யோஜநம் விஹித மென்னுமிடம் வித்தமிறே.
  5. சாண்டில்ய விசிஷ்ட பரமதர்ம சாஸ்த்ரம், இதிஹாஸஸமுச்சயம் , லஷ் மீதந்தரம் முதலானவை பலவற்றிலும் இங்கனே சொல்லப்பட்டன பாஸ்ஸஹ ஸ்ரமுண்டு விரிப்பிற்பெருகும். திருவஷ்டாக்ஷரத்திலுள்ள ஒவ்வோரக்ஷரத்தை யுங்கொண்டு ஹோமபூஜாதிகள் பண்ணும்போது அதில் முதலக்ஷரமான ப்ரண வத்திற்கும் ஆதியந்தங்களில் வேறொரு ப்ரணவத்தைச் சேர்த்தே விநியோகம் சாஸ்த்ரத்தாலும் அநுஷ்டாநத்தாலும் வித்தம். ஆகையாலே திருவஷ்டா க்ஷரம் இயற்கையாகவே ஸப்ரணவமாயிருந்தாலும் ஜபாதிசயவித்திக்காக சாஸ்த்ரபலத்தாலே அபூர்வப்ரணவ ஸம்யோஜநத்தை அபேக்ஷித்தேயிருக்கும். அந்த ப்ரணவமேயாய்த்து வைதிகப்ரணவம்; நஸ்வர ப்ரணவம்’ இத்யாதி களால் நிஷேதிக்கப்படுவது அதுவே; சேஷஸம்ஹிதை, பௌஷ்கர ஸம்ஹிதை முதலானவற்றிலும் இங்கனே ஸ்த்ரீசூத்ராதிகளுக்கு ப்ரணவநிஷேதம் செய்யப் பட்டுள்ளது; எந்த ப்ரணவம் நிஷேதிக்கப்படுகிறதென்பதும் அவை தன்னி லேயே ஸவ்யக்தமாக உபபாதிக்கப்பட்டுள்ளது. அதனை அடியொற்றியே இங்கு நாம் விவரித்ததும்.
  6. காகம் உருச்சொல்லாநின்றவொரு சிஷ்யனை நோக்கி குருவானவர் கடைசி பஞ்சாதியை ஒக்காணம் பண்ணி முடித்துவிடாதே’ என விதித்தால் இந்த விதியின் கருத்து எதுவாகும்? அந்தப் பஞ்சாதியில் இயற்கையாகவே அவயவமாகி அவஸாநத்திலே உள்ள ஓம் என்பதைச் சொல்லாதே யென்று விதிப்பதோ குருவுக்குத் தாத்பர்யம்?, “ப்ரஹ்மண: ப்ரணவம் குர்யாத் ஆதாவந் தேச ஸர்வதா ” என்ற விதிபலப்ராப்தமான தனிப்பட்ட ப்ரணவோச்சார ணத்தை நிஷேதிக்கிறார் ஒரு கார்யார்த்தமாக – என்றிறே கொள்ளக்கடவது “***”.
  7. ஸ்ரீபௌஷ்கரஸம்ஹிதையிலே இந்த உபபாதகங்கள் பண்ணித்தலைக் கட்டினபின், வ்யாபகமந்த்ரங்கள் மூன்றிலும் நான்கு வர்ணத்தார்க்கும் மந்த்ர சரீரத்திலே துல்யமான அதிகாரமுண்டென்னுமிடம், “***” இத்யாதி சலோகங்களால் விளக்கப்பட்டது. இதில் பக்தாநாம்” என்றவிசேஷணமும் “நாங்யயாஜிநாம்” என்றவி சேஷணமுமே குறிக்கொள்ள வேண்டியவை. மந்த்ரோச்சாரணத்திற்கு இன்றியமையாத அதிகார ஸம்பத்து இவ்வளவே. இந்த ஸம்பத்து இல்லையாகில் த்ரைவர்ணிகத்வமும் அப்ரயோஜக மென்பதே ஸகல சாஸ்த்ரதாத்பர்யம். இது மஹாபாரதத்திலும் வ்யக்தமென்னு மிடத்தை மேலே விரித்துரைப்போம்.
  8. மந்தரத்திற்கு அவயவமான ப்ரணவத்தில் ஸ்த்ரீ சூத்ராதிகளுக்கு அதி காரமில்லையென்று ப்ரமிக்குமவர்கள் ”***” என்றபதத்தை ஸ்வாநுகூலமாக நயிப்பிக்கவேண்டி , ப்ரணவ மொழிந்த மந்த்ரசேஷத்திற்கும் மந்த்ரத்வமுண்டென்றும், ப்ரணவ ஸாஹித்யத் தால் விளையக்கூடிய பலன் அஃதொழிந்த அம்சத்தாலும் நன்கு வித்திக்கக் கூடியதேயென்றும் கருதி “***” என்ற வசநத்தை மேற்கோளாகக் காட்டுவர். இதுவும் ஒரு விலக்ஷண ப்ரமமேயாம். “***” என்றது ப்ரணவவிசிஷ்ட மந்த்ரபரமேயொழிய மந்தர சேஷமாத்ர பரமன்று. ஏகதேசக்ரஹணமுகத்தாலே முழுதும் க்ரஹித்தவாறாகிற ப்ரக்ரியை ஸகலசாஸ்த்ரங்களிலுமுள்ளது; மந்த்ர சாஸ்த்ரங்களிலோ விசேஷமாகவுள்ளது. ரஹஸ்யதமமான மந்திரங்களின் ஆங்பூர்வியை மிடறு விட்டு மொழிதல் வேண்டாவென்று பலவிடங்களில் மறைத்துச் சொல்லிப்போரு வதைக் காணாநின்றோமிறே. “நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்” என்று திருமங்கையாழ்வார் ஒரு கால் சொன்னாற்போலே ஒன்பதின் காற் சொன்னது திருவஷ்டாக்ஷரவிஷய மென்றிறே ஆசார்யர்களனைவரும் ஒருமிட றாக நிர்வஹிப்பது. தேசிகனும் “திருவஷ்டாக்ஷரம் ஸகல பலப்ரதமென்னு” மிடம் குலந்தருமென்கிற பாட்டிலே வ்யக்ய்தம்” என்றருளிச் செய்தார். இப்படி யருளிச்செய்த ஆசார்யர்களின் திருவுள்ளத்தை நோக்குங்கால், ஏகதேச கீர்த் தநமும் பூர்ண கீர்த்தநபர்யாயமென்றி றே விளங்குவது.
  9. “***” என்றும், “***” என்றும் ரஹஸ்யத்ரய ஸாரமூலமந்த்ராதிகாரத்தில் உதாஹரித்த வச நங்களைக் கொண்டும் தெளிவு பெறலாம். புண்டரீகன் நமோ நாராயணாய என்று அஷ்டாக்ஷரத்தை ஜபித்தானென்னும்போது ப்ரணவத்தைக்கூட்டியே யிறே நிர்வஹிக்க வேண்டும். “***” என்றவிடத்திலும் ப்ரணவ மொழிந்த மந்தரம் விவவிதமாக ரஸக்தியில்லா மையாலே இதுவும் ஸம்பூர்ணமந்தரசரீரோபலக்ஷகமென்ன வேண்டிற்று. “சூத காவிஷணா” என்ற சுலோகத்தில் ஸங்கீர்த்ய நாராயணசப்தமாத்ரம்” என்றதையும் திருமந்தர பாயாயமாகச் சில ஆசார்யர்கள் யோஜிக்கக் காண்கி றோம். இப்படியிருக்க, “நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்தஸாதக ” என்றது பூரண மந்தர பரமன்றென்றும் மந்த்ர சேஷமாத்ரபரமென்றும் கூசாதே கூறுமவர்கள் ப்ரமாணகதி அறியாதாராமித்தனை.
  10. ” *** ” என்ற மநுஸ்ம்ருதி (11-265) வசந்த்தாலும் மற்றும் பல ப்ரமாணங்களாலும் ப்ரணவம் அத்யந்த ரஹஸ்ய மந்தாமென்று சொல்லப்படுகையாலே அவரலையாக அதனை வெளியிடலாகா தென்ற கருத்தினால் பலவிடங்களில் மறைத்திருப்பது கொண்டே ப்ரணவ மொழிந்தவளவுக்கும் மந்த்ரத்வ பூர்த்தியுண்டென்று சொல்லப் பார்ப்பவர்களுக்கு ஒரு சாஸ்த்ரமும் அநுகூலமாக நிற்காது.
  11. கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!, எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே” என்ற அருளிச்செயலில் நாரணமென்றவளவையே கொண்டு திருக்குருகைப் பிரான் பிள்ளான் ஆறாயிரப்படியில் “எம்பெருமான் திருவடிகளைப் பெறவேணுமென்றிருப்பார்! திருமந்த்ரத்தையே சொல்லுங்கோள்” என்று வியாக்கியானம் செய்தருளுகிறார். ஆறாயிரப்படிக்கு உரையிட்ட ஸாக்ஷாத்ஸ்வாமியும் “திருமந்திரத்தை யென்றது – ஸாக்ஷாத்மூலமந்தரத்தையே சொன்னபடி” என்றும் விவரித்தருளினர். பதினெண்ணாயிரமிட்ட பரகால ஸ்வாமியும் “இது அஷ்டாக்ஷரத்தைக் காட்டும்” என்றுரைத்தார். இங்கனே பல்லாயிரமெடுத்துக் காட்டவல்லோம். சில காரணங்களைக்கருதித் திருவஷ்டா க்ஷரஸ்தாநத்திலே நாரணம் என்றார் என்று ஆசார்யர்கள் நிர்வஹித்த கணக்கிலே மந்தரசேஷமாத்ரோக்தி ஸ்தலங்களும் எளிதாக நிர்வஹிக்கலாயிருக்க, க்ருஹீத க்ராஹிகளாய்ப் பேசுமவர்களைப்பற்ற வருந்த வேண்டுமத்தனை.
  12. விஷ்ணுகாயத்ரியில் நாராயணாய இத்யாதிபதங்கள் அந்தந்தத் திருநாமங்களோடு இயைந்த பரிபூர்ண மந்த்ர சரீரத்துக்கு எப்படி உபலக்ஷணமோ, அப்படியே இவைகளும். ஆனது பற்றியே நாராயண நாமமாத்ரப்ரஸங்கமுள்ள விடங்களையும் திருவஷ்டாக்ஷரமஹா மந்த்ரத்தின் பெருமை பேசுகையிலே சொருகாநின்றார்கள் தேசிகப்ரப்ருதிகள். நாராயணபதத்தில் சில அக்ஷரங்கள் குறைந்து கிடக்குமிடங்களையும் நம பதமும் சதுர்த்தியுமில்லாதவிடங்களையுங் கூட திருவஷ்டாக்ஷரக்ராஹகமாக ஆசார்யர்கள் அருளிச்செய்யாநிற்கும்போது ப்ரணவமாத்ர விஹீதமாயுள்ள விடங்களுக்கு இது கைமுத்யந்யாயவித்தமாம். ப்ரணவம் ரஹஸ்யதமம் என்பது பற்றி அதனை விசிஷ்ய மறைத்திடுதல் உண்டு.
  13. இப்படி ரஹஸ்ய தமமானதை சூத்ராதிகளுக்கு உபதேசிக்க வடுக்குமோ வென்னில்; ரஹஸ்யம் ரஹஸ்யமென்று சொல்லப்படுவதெல்லாம் அஸுயை யுள்ளவர்களும் ச்ரத்தையற்றவர்களும் வழிப்போக்கர்களுமான அஸத்துக்களுக்குச் செவிப்படாவண்ணம் மறைத்திடவேணுமென்பதேயன்றி ஆஸ்திகர்களாய் ‘ஸத்புத்திஸ் ஸாதுஸேவீ” என்ற தேசிகஸூக்திப்படியே குணசாலிகளாயமைந்த ஸச்சிஷ்யர்களுக்கும் ஒளித்திடவேணு மென்றதன்று. ஆனது பற்றியே “***” திருவஷ்டாக்ஷரத்தைப் பற்றுகைக்கு நெஞ்சுகனிந்திருக்கையொன்றே காரணம் என்றது. இங்ஙனல்லவாகில் ரஹஸ்யதமங்களான ஸகல மந்த்ரங்களிற்காட்டிலும் மிகச் சிறந்ததான மந்த்ரரத்தமென்னும் த்வயத்தையே முந்துற முன்னம் ஸ்த்ரீ சூத்ராதிகளுக்கு மறைத்திட வேண்டிற்றாம். உபதேசத்திற்கு யோக்யர்களாமவரனைவரும் யதோக்தமான திருமந்திரத்தின் உபதேசம் பெறவும் உரியரேயாவர்.
  14. ஸப்தாக்ஷரத்திற்கே மந்த்ரத்வபூர்த்தியுண்டென்று கொள்ளில், பீஜாக்ஷரத்தைக்கூட்டி அஷ்டாக்ஷரமாக்கித் தாங்கள் உபதேசித்து வருவது வீண் ப்ரயாஸமேயாம் இதற்குச் சிலர் சொல்லுவர்கள்:- சாஸ்த்ரம் காட்டின வழியே செய்யக்கடவோமாகையால் “***” என்று இங்ஙனே சாஸ்த்ரம் விதிக்கையாலே விதிபரதந்த்ரர்களாய் அம்பீஜத் தைக்கூட்டிச் சொல்லுகிறோமத்தனை போக்கித் தாந்தோன்றிகளாய்ச் செய்கிறோமல்லோம் என்பர்கள்,
  15. உதாஹரித்த ப்ரமாணத்தின் பொருளை உள்ளபடி உணராதே கலங்கி நிற்குமவர்களின் கலக்கத்தைப் போக்கித் தெளிவு பெறுத்துவோம் கேண்மின். “தத்ரோத்தராயணஸ்யாதி” என்ற நாரதீய வசந்த்திற்குப் பூர்வபக்ஷிகள் பகரும் பொருளாவது – ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு ப்ரணவம் வர்ஜநீயமாகிறபடியாலே ஓரெழுத்துக் குறைவதனால் எட்டெழுத்து தேறவில்லையே யென்னில், அம்பி ஜத்தைக் கூட்டிக்கொண்டால் அஷ்டாக்ஷரமாய் விடுகிறது என்றாம். இங்ஙனே பொருளாகில், பூர்வ மீமாம்ஸையில் முதலத்யாயத்தில் மூன்றாம் பாதத்தில் இரண்டாவதான சருதிப்ராபல்யாதிகரணயாயத்தின் படி இந்த வசகமே அப்ர மாணமென்றொழிக்க வேண்டிற்றாகும். “***” என்று வேதத்திலே இதுவன்றோ அஷ்டாக்ஷரம்’ என்று ஆநுபூர்வியைக்காட்டி ப்ரவித்தவந்நீர்த்தேசம் பண்ணியிருக்க, அதற்கு முரண் படுமாறு வேறுவகையாக அஷ்டாக்ஷரத்வம் சொல்லுகிற ஸ்ம்ருதி எங்கனே ப்ரமாணமாகும். “*** ” என்ற ப்ரத்யக்ஷ ச்ருதிக்கு விருத்தமான “***” மீமாம்ஸையில். அந்த ந்யாயத்தாலே, வேதவிருத்தமான “***” என்ற ஸ்ம்ருதி வசநமும் வேதவிருத்தமென்னுங் காரணத்தாலேயே அப்ரமாணமாயொழியத் தட்டுண்டோ?
  16. இனி அஷ்டகா திஸ்ம்ருதிகளிற்போலே மூலவேதத்தை அநுமா நிக்கிறோமென்னவுமொண்ணாது. ப்ரத்யக்ஷச்ருதிக்கு விரோதமிலலாதவிடத்தி லன்றோ மூலவேதாநுமாநமென்பது. வேதந்தானும் பரஸ்பர விருத்தமாக ஓதி வைக்குமோ?
  17. தரைவர்ணிகர்களுக்கு இவ்வகையான அஷ்டாக்ஷரம், மற்றையோர்க்கு அவ்வகையான அஷ்டாக்ஷரம்’ என்று அதிகாரிபேதத்தாலே இரண்டுபடியாக ஓதிவைக்குமளவில், இது பரஸ்பரவிருத்தமென்னப்போமோ? என்னில்; ஸ்த்ரீ சூத்ராதிகளுக்கு ப்ரணவத்தில் அதிகாரமில்லையென்று வேதபுருஷன் நெஞ்சிலும் நினையாதிருக்க, வாதத அதிகாரமுண்டென்றே ஓதியிருக்க, இந்த அப்ரஸக்த ப்ரஸஞ்ஜநங்கள் ஏதுக்கு? ஆனால், ப்ரணவத்தில் ஸ்த்ரீ சூத்ரர்களுக்கும் அதிகாரம் அக்ஷதமென்று வேதபுருஷன் ஓதினானென்பது உன் னால் ஸாதிக்கப்போமோ? என்று கேட்பீர்கள்; கேண்மின்; இந்திரஞாலமன்று; அப்படிக்கு மெய்யே வேதம் காட்டுகிறோம் காண்மின்.
  18. தைத்திரீய யஜுர்ப்ராஹ்மணத்தில் இரண்டாவது அஷ்டகத்தில் எட்டாம் ப்ரசநத்தில் “கஹவேலி வயஜோ தலை” என்ற எட்டாவது அதுவாகத்தில், “***” என்று ஓதப்பட்டது. இதில் “ஏகாக்ஷராம்” என்றது ப்ரணவபரமென்றும், தவிபதாம் என்றது ‘நமோ நாராய ணாய’ என்ற மந்த்ர சேஷபரமென்றும், ஷட்பதாம் என்றது. த்வயபாமென்றும் ரஹஸ்யத்ரய மீமாம்ஸா பாஷ்யாதிகளிலே வியாக்கியானிக்கப்பட்டது. வேறு ஸம்ப்ரதாயஸ்தருடைய வியாக்கியானம் நமக்கு அநாதரணீயமென்பீர்களென்று ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார வ்யாக்க்யா நமான லாரப்ரகாசிகையிலும் மூலகந்தராதி காரத்திலே இது மேற்கோளாக ஆதரிக்கப்பட்டது. இந்த வேதவாக்கியத்திற்கு வித்யாரண்ய பாஷ்யத்திலே அர்த்தபேதம் காணப்படினும் ப்ரக்ருதத்தில் விக்ஷிதமான வளவுக்கு ஹாநியில்லை; ஏகாக்ஷராம் என்றதற்கு ப்ரணவருபாம் என்றே பாஷ்யமிட்டார்.
  19. மேலும் வித்யாரண்ய பாஷ்யபரீக்ஷணந்தானும் அந்பேக்ஷிதம். “*** ***” இத்யாதி வேதவாக்கியங்களுக்கு நாமெல்லாரும் கூடிப் பொருள் செய்யும் போது வேத பாஷ்யங்களைக் கணிசிக்கின்றிலோமிறே. நிற்க
  20. ஏகாக்ஷரமாயும் தவிபதமாயும் ஷட்பதமாயுமுள்ள வாக்கு, தேவர்கள் கந்தர்வர்கள் மநுஷ்யர்கள் என்ற அனைவர்க்கும் உபவ்யமாகைக்குரிய ஸ்வரூப யோக்யதையுண்டு என்று வேதபுருஷன் விளம்பியிருக்க, இந்த ப்ரத்யக்ஷ ச்ருதிக்கும் விருத்தமாக ஒரு மூலவேதத்தை அநுமாநிக்கிறோமென்பதும், வாந திவிரவாய மான ஸ்ம்ருதிக்கு ப்ராமாண்யம் கொள்வதும் சாஸ்த்ரஜ்ஞகோஷ்டீபஹிஷ்டம்.
  21. இந்த வேதவாக்கியத்தில் தேவகந்தர்வ மநுஷ்யர்களை மாத்திரம் சொல்லி நிற்காமல் பசுக்களையும் சொல்லி வைத்திருக்கையாலே பசுக்களுக்கு இந்த யோக்யதை ஸம்பாவிதமாம் போது மநுஷ்யஸாமாந்யத்துக்கும் இது உப பந்தமாகலாம் என்று சிலர் க்ஷேபிக்க நினைப்பர்கள், “***” என்றது – “நவாம்” என்று ஆளவந்தாரும் “***” என்று மண வாளமாமுனிகளும் அருளிச்செய்தபடி ஆஹார நித்ராபயமைதுநாதிகளாலே பசுபராயரான மநுஷ்யர்களும் என்றபடி. இப்படிப்பட்ட அறிவிலிகளும் திருமந்தர, மந்தரரத்தங்களைக் கொண்டு உஜ்ஜீவிக்கவுரியார் என்று ஓதிவைத்ததா மாகையாலே குறையொன்றுமில்லை. மற்றும் பல ஸமாதாந்வழிகளுமுண்டு. “அறுகால் வரிவண்டுகளாயிர நாமஞ் சொல்லிச், சிறுகாலைப் பாடும் தென் திருமாலிருஞ்சோலையே ” இத்யாதி. நிற்க.
  22. “வஸ்துதஸ்து, தத்ரோத்தராயணஸ்யாதி” என்ற ப்ரக்ருத ச்லோகத்திற்கு உண்மையான பொருளில் சருதிவிரோதலேசமும் இல்லாமையாலே அதன் ப்ராமாண்யத்திற்குக் கொத்தை யொன்றுமில்லை. எங்ஙனேயென்னில்; திருவஷ்டாக்ஷரத்திற்கு அம் பீஜமென்றும், அதனால் இத்திருமந்திரம் நன்றாகக் கார்யகரமாகிறதென்றும் இவ்வளவே இந்தசலோகத்தினால் சொல்லப்படு கின்றதேயன்றி, இவர்கள் சொல்லுகிறபடி, ப்ரணவஸ்தாநத்திலே அம்பி ஜத்தை நிவேசித்தால் அக்ஷரஸங்க்யை பொருந்திவிடும் என்று ஒருகாலும் சொல்லப்படாது.
  23. இதனை நன்கு விளக்கியும் காட்டுவோம். “தத்ரோத்தராயணஸ்யாதிர் பிந்துமாந் விஷ்ணுரந்தது” என்ற பூர்வார்த்தத்திற்கு இவர்கள் இரண்டு மூன்று வகையாகப் பொருள் கூறுகின்றனர்; அவற்றில் எமக்கு ஈஷத்தும் வைமத்ய மில்லை. அஸ்து. பின்னடிகளின் பொருளிலே மாழாந்தொழிந்தனர். முன்னடிகளால் ஸாதிக்கப்பட்ட அம் என்பதானது, அஷ்டாக்ஷரஸ்ய பீஜம் ஸ்யாத் = ஓம் நமோநாராயணாய ” என்கிற மூலமந்த்ரத்திற்கு பீஜாக்ஷரமாகும். தேந அஷ்டா கூரதா பவேத் = “***” ; அஷ்டாக்ஷரத் தினுடைய ஸ்வபாவம் என்றபடி ”***” இத்யாதிகளால் இம்மந்திரத்திற்குச் சொன்ன ஸர்வோத்தமத்வமும் “குலந்தரும் செல்வந்தந்திடும்” இத்யாதிகளாற் சொன்ன ஸகலபலப்ரதத்வமும் எல்லாம் இந்த அம்பீஜ ஸம்யோக சக்திப்ரயுக்தம் என்று பிஜஸம் மேளநத்திற்குள்ள மேன்மையைச் சொல்ல வேண்டி அவதரித்த வசநம் இது. சாஸ்த்ரங்களில் திருமந்திரத்திற்கு அம்பீஜம் சிலவிடங்களிலும் ஓம்பிஜம் சிலவிடங்களிலுமாக விகல்பித்துச்சொல் லப்பட்டுள்ளது. அம்பீஜத்தைச் சொல்லுகிற திங்கு,
  24. ”ஓம் நமோ நாராயணாய ” என்கிற மந்த்ர சரீரத்திற்கு முன்னமோ “ஓம் நமோ நாராயணாய ” என்று அபூர்வப்ரணவத்தோடுங்கூடிய மந்த்ரத்திற்கு முன்னமோ இந்த பீஜாக்ஷரத்தைச் சேர்க்கும்படி விதித்திருக்கிறதே யன்றி ப்ரணவமொழிந்த ஸப்தாக்ஷரிக்கு முன்னே சேர்க்கவேணுமென்று விதிக்கவில்லை. “பீஜம் அஷ்டாக்ஷரஸ்ய ஸ்யாத்” என்றிறே வசநம் வாயில் வருவது. இங்குள்ள அஷ்டாக்ஷரஸ்ய’ என்பதற்கு ஸப்தாக்ஷரபரத்வஸ்தாபநம் பண்ண வழிதேடப்பார்ப்பதே இனி உந்தமக்குக் கடமையாகும். ஸப்தாக்ஷ ரத்திற்கு அஷ்டாக்ஷரத்வ ஸமர்த்தநம் பண்ணுகிறதென்று மேற்கொண்ட வச நத்திலே, அஷ்டாக்ஷர பதத்திற்கு ஸப்தாக்ஷர பரத்வஸமர்த்தநம் பண்ண நேர்ந்தது “***”.
  25. இப்படிப்பட்ட பீஜத்துடன் சேர்த்து உச்சரித்தால் அஷ்டாக்ஷரம் அஷ்டாக்ஷரமாகும்’ என்றது அத்ய ராமஸ்ய ராமத்வம் பச்யந்து ஹரியூதபா” என்று இராமபிரான் சொன்னது போலே. ‘வாநரமுதலிகாள் ! ராமனுடைய ராமத்வத்தை இன்று பாருங்கோள் ‘ என்றது ராமனுடைய கார்ய சக்தியை இன்று காண்மின் என்றபடியேயன்றி, இதற்குமுன் இராமனுக்கு ஏதோவொரு அவயவம் குறைந்து போயிருந்து அதனை இப்போது நிறைத்துக்கொள்ளுகிற தாகச் சொல்வதன்றிறே. அதுபோலவே இங்கும் அஷ்டாக்ஷரதா பவேத் என் றது தன்னுடைய கார்யகரத்வம் பொலிய நிற்கும் என்றபடி. இங்ஙனே பொரு என்றாகில் ” அஷ்டாக்ஷரஸ்ய அஷ்டாக்ஷரதாபவேத் ” என்றது ஜாவாதி வாக்யார்த்தம் போலே அஸம்பத்தப்ரலாபமேயாம். உத்தேச்ய விதேயங்கள் என்னவென்று வினவினால் மறுமாற்ற முரைக்கத் தடுமாறி நிற்பீர்கள். ஔபசாரி கப்ரயோகமென்று நிர்வஹிக்கப் பார்ப்பதெல்லாம் * சுவடிவமிதா கவொ உகரொதிக்கு துல்யயோக க்ஷேமமாமத்தனை. ” பீஜம் ஸப்தாக்ஷரஸ்ய ஸ்யாத்” என்றோ, மந்த்ர சேஷஸ்ய பீஜம் ஸ்யாத்” என்றோ வசந்சைலி இருந்ததாகில் பூர்வபக்ஷிகள் சொல்லும் பொருளன்றி வேறொரு பொருளும் பிரமனாலும் பேசவொண்ணாது. ‘ அஷ்டாக்ஷரஸ்ய பீஜம்ஸ்யாத்” என்றும், ”அஷ்டாக்ஷரஸ்ய அஷ்டாக்ஷரதா ஸ்யாத்” என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிராநிற்க ப்ரமாதத் தாலே ஏறிடும் பொருள் ப்ராமாணிகர்க்கு ருசிக்கமாட்டாதிறே.
  26. “***” என்ற வேதவாக்கியமும் நோக்கத்தக்கது. இந்த ச்ருதியில் ஸ்வரப்ரக்ரியைக்குச் சோ, ”ச்ரத்தயா, அதேவ, தேவத்வம்’ என்றே பதவிபாகம் பண்ண வேண்டுமாயினும், பட்டபாஸ்கரர் வித்யாரண்பர் முதலான வேதபாஷ்யகாரர்களும் நம்முன்னோர்களில் சிலரும் தசோபநிஷத்பாஷ்யகாரரும் அதேவ: என்று பிரியாமல் தேவ ‘ என்றே பிரித்து உரைத்திருக்கக் காண்கையாலே ” ஹோஜநொ யெந் தல வநா” என்றபடி அதனையே அடியொற்றிப் பேசுவோம். “தேவ: ச்ரத்தயா தேவத்வம் அச்நுதே” என்றதற்கு – அஸாதாரணங்களான ஸகல கல்யாண குணங்களாலும் எப்போதும் விளங்காநின்ற பெருமான் பிராட்டியினால் தான் அப்படிப்பட்ட பெருமையைப் பெறுகின்றான் என்றே பொருள் கொள்ளுகிறோம். இங்க னமே, இவ்விடத்திலும் பீஜாக்ஷரத்தின் சேர்க்கையாலே திருவஷ்டாக்ஷரத்தின் பெருமை பொலிகின்றது என்பதே ஸர்வப்ரகாரங்களாலும் பொருந்தும் பொரு ளாம். மற்றைப் பொருள் கனவிலும் பொருந்தாது. பொருந்திற்றென்றால் கீழ் நிவரித்தபடி விரோதாதிகரணயாயத்தாலே இந்த வசந்த்திற்கே அப்ரா மாண்யம் நிலைகின்றதாம். “***” என்னவுமொண்ணாது. பூர்வபக்ஷிகள் திறத்திலேயே வசநவிரோதங்கள் வலி தாக நிற்கையாலே.
  27. இங்ஙனே பீஜஸம் மேளநத்தினால் தான் திருமந்திரம் கார்யகரமாகின்ற தென்று விக்ஷித்தால் திருமந்த்ர சரீரத்திற்கு இயற்கையாகப் பெருமை யொன்றுமில்லையென்றதாகத் தேறுமே, இது பரஸ்ஸஹஸ்ரப்ரமாண விருத்த மன்றோ என்று கேட்பவர்கள் பரிஹாஸ்யரேயாவர். இந்த வசநமானது , பீஜா க்ஷரத்தைச் சேர்த்து ஜபிப்பதில் விரைவில் பலன் கிடைக்குமென்றும் கனத்த பேறு கிடைக்குமென்றும் சொல்லி வாகாகர்களை வாரொவாம் பண்ணு கின்றதத்தனை போக்கி, திருமந்த்ரத்தின் இதர நிரபேக்ஷமான சக்திவிசேஷத்தை இல்லை செய்வதில் நோக்குடையதன்று. “***” (என்னை விட்டால் உனக்கு வேறொரு தயநீயன் கிடைக்கமாட்டான் என்று எம் பெருமானை நோக்கி ஆளவந்தார் அருளிச் செய்தது – தாம் அத்யந்தம் தயநீயர் என்பதைக் காட்டுவதிலே நோக்குடையதேயன்றி வேறொன்றில் நோக்குடைத் தன்றிறே. திருவுக்குந் திருவாகிய செல்வனான தேவாதிதேவன் பிராட்டியினால் தான் தேவனாகிறானென்றதும் பிராட்டியின் வைபவத்தை ப்ரசம்ஸிப்பதில் நோக்குடையதேயன்றி பகவத்வைபவத்தைக் குறைப்பதில் நோக்குடைய தன் றிறே. “அப்ரமேயம் ஹிதத் தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா” இத்யாதிகளுக்கும் இங்ஙனேயிறே நிர்வாஹம் . ஸ்வரூபப்ரயுக்தமாய் நிருபாதிகமான அப்ரமேயத்வத்தை இல்லை செய்வதன்றிறே. இவ்வோ கணக்கிலே, “தேநாஷ்டாக்ஷரதா பவேத்’ என்று பீஜப்ரசம்ஸை பண்ணினவிடம் திருமந்த்ர வைபவத்தைக் குறைத்ததாகாது. ஆகையாலே இங்கு நாம் கூறின பொருளே பொருள்.
  28. வஸ்துஸ்திதி இங்ஙனேயிருக்கச் செய்தேயும் விபரீதார்த்த ப்ரமத்தாலே சிலமஹான்களும் மாறுபடவுரைத்தது தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்த தெல்லாம் ஸாதிக்கவல்லோமென்ற கட்டளைக்குச் சேருமென்பர் திருவாழ்மார் பன். “***” என்று ஆளவந்தாரும், “*** ” என்று ஆழ்வானும் அருளிச்செய்தபடிக்கு இணங்குமென்றார் அடிய வர்க்குமெய்யனார் . ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ப்ரபாவவ்யவஸ்தாதிகாரத்திலே “என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தாரென்பர்” போலும் என்றவிடத்தில் போலுமென்று சொல்லுகையாலே இது வஸ்துவருத்தியில் நன்றன்றென்னுமிடம் ஸுசிதம்” என்னும் வர்கள் திறத்திலே இங்கனே சொல்ல வேண்டிற்றுண்டிறே. ”பின் தொடர்ந்தோடியோர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும் “***” விளங்காயெறிந்தாய் போலும்”,“வாரிவளைத் துண்டிருந்தான் போலும்”, “மரமேறியிருந்தாய் போலும் ” ”நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் ” எந்தை பெருமானார் மருவிநின்ற வூர் போலும்’ இத்யாதிகளான பல்லாயிரமிடங்களிலே, போலுமென்றதை இசைநிறையாகக் கண்டு வைத்தும், வடமொழியில் “***” “***” இத்யாதிகளில் இவசப்தம் போல இதுவும் தமிழில் ஒருவகை வாக்யாலங்கார மென்றறிந்துவைத்தும் விபரீதார்த்த வர்ணநம்பண்ணினது அபிரிவேசவசத்தா லிறே. இவ்விடத்திலே சொல்ல வேண்டுமவை ஸம்ப்ரதாய வித்தாஞ்ஜநத்திலே பரக்கச் சொல்லிவைத்தோம்.
  29. ”தேநாஷ்டாக்ஷரதா பவேத்” என்பதற்குத் தாங்கள் பகரும் பொருளே பொருளென்று ஸாதிக்க வேண்டில், அந்த ச்லோகத்திற்குக் கீழே சில கைச்சரக்குகள் சேர்த்துக்கொண்டால், அதாவது – ஸ்த்ரீ சூத்ராதிகள் ப்ரணவத்தை விலக்க வேண்டில் ஏழக்ஷாந்தானே உள்ளது, அஷ்டாக்ஷரமாகவில்லையே’ என்று சங்கிப்பதாக ஒரு ச்லோகம் கல்பித்து நுழைத்து அதற்குப் பரிஹாரமாக தத்ரோத்தராயணஸ்யாதி: ” என்ற இந்த சலோகம் பிறந்ததென்று அமைத்துக் கொண்டால் ஒருவாறு ஸாதிக்கலாகும். இங்ஙனமே சிலர் கல்பிக்க வொருப்பட்டதாகவும் கேட்டிருக்கிறோம். “***” வாயில் உள்ளிதின்று முறுநோய் ஒழிந்தில ‘ என்றாற்போலே – அங்கனே கல்பித்தாலும் அஷ்டாக்ஷரஸ்ய’ என்று இந்த ச்லோகத்திலே உள்ளதற்கு அஸாமஞ்ஜஸ்யம் அபரிஹார்யமேயாகும்.
  30. அன்றியும், “தத்ரோத்தராயணஸ்யாதி” என்ற ச்லோகத்திற்குப் பூர்வ பக்ஷிகளின் கொள்கைப்படியே பொருள் கொள்வோமென்றே வைத்துக்கொண்டு திருவஷ்டாக்ஷரத்திற்கு ப்ரணவப்ரதிச்சந்தமாக அம் என்று கூட்டிக்கொண்டு

அஷ்டாக்ஷரத்வம் ஸமர்த்தித்துவிட்டாலும், விஷ்ணுஷடக்ஷரீமந்த்ரத்திலும் வாஸ் தேவத்வாதசாக்ஷரீ மந்த்ரத்திலும் ஸ்த்ரீ சூத்ரர்கள் ப்ரணவத்தை விட் டொழித்தால் அதன் ஸ்தாநத்திலே வேறு எந்த அக்ஷரத்தைக்கூட்டி ஷடக்ஷரத்வாதிகளை உபபந்தமாகச் செய்யவேணுமென்று கேள்விவரின் மௌ மொழிய மறுமாற்றமில்லையாம். திருவஷ்டாக்ஷரத்திற்கு “தத்ரோத்தராயணஸ் யாதி” என்ற சலோகம் அவதரித்தது போல அந்த மந்திரங்களுக்கும் அக்ஷர பூர்த்தி ஸமர்த்தந் சலோகங்கள் அவதரித்திருக்க வேணுமிறே. அவற்றை யெடுத்துக் காட்ட வல்லாருண்யோ? அன்றி, அந்த மந்திரங்களில் ப்ரண வத்தை வர்ஜிக்க வேண்டா என்றாவது இயம்புவாருண்டோ? கடல் போன்ற சாஸ்த்ரங்களில் ஏதேனுமொரு மூலையிலே அதற்கான வசனங்களும் கிடக்கு மென்று ஸாஹஸமாகச் சொல்லிவிடுதல் ப்ராமாணிகர்க்குப் பணியன்று. அல்லது, ப்ரணவப்ரதிச் சந்தமாக வேறோரெழுத்தைச் சேர்க்காமலும் பரண் வத்தைச் சேர்க்காமலும் “நமோ விஷ்ணவே” என்கிற பஞ்சாக்ஷரியையும் “நமோ பகவதே வாஸ் தேவாய ” என்கிற ஏகாதசாக்ஷரியையும் அநுஸந்திப்பதே ஸ்ரீ சூத்ரர்கட்கு ப்ராப்தம் என்றாவது, முதலில் அந்த மந்திரங்களில் அவர்கட்கு அதிகார ப்ரஸக்திதானே இல்லையென்றாவது சொல்லிவிடப்பார்க்க வேணும். அங்ஙனாகில், கீழ் எடுத்துக்காட்டிய ஸ்ரீபௌஷ்கர ஸம்ஹிதாவசநங் கட்கு ஜலாஞ்ஜலியாமத்தனை. ஆகையாலே, “தத்ரோத்தராயணஸ்யாதி” இத்யாதி வசந்த்திற்கு நாமுரைத்த பொருளே நற்பொருளென்று சிக்கனக் கொள்ளீர்.

  1. ஆரியர்காள்! ப்ரபந்நஜக கூடஸ்தரான நம்மாழ்வார் தொடங்கி நாத யாமுநயதிவர லோகாசார்யாதி பரம்பரையாய்ப் போருகின்ற ஸதாசார்ய பரம்பரையில், மந்தரா நு ஸந்தாநத்தில் ஸ்த்ரீசூத்ரர்கட்கு ப்ரணவம் கூடா தென்றும், அதற்கு பரதிச்சந்தமாக வேறோரெழுத்தைக் கூட்டிக்கொள்ள வேணுமென்றும் இங்கனொத்த குத்ஸித வாதங்கள் அணுமாத்ரமும் ஆவிர்ப்ப வித்ததில்லை. ஸந்நிஹித காலத்தில் மந்த்ரஸாலவட்ட வேதாந்தாசார்ய நதிகள் சிலர் தோன்றி ஸ்வச்சந்தமாகச் சில க்ரந்தங்களை யெழுதிவைத்து அநுஷ்டாநங்களையும் ஸ்வைரமாக மாறுபடுத்தி வைத்தது போலே இடையிலே தோன்றிய சிலர் உபாயத்தைக் கல்பித்து அதற்கேற்ற ஆசாரத்தையும் ஆரம் பித்தார்கள். ஸம்ப்ரதிபந்நரான ஆசார்யர்கள் இவ்விஷயந்தன்னை நெஞ்சிலும் நினைத்திலர். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தங்கள் தங்கள் திருவடிகளை ஆச் ரயித்த முமுக்ஷக்களனைவர்க்கும் ஏகரூபமான மந்த்ரசரீரத்தை உபதேசித் தருளினார்களேயன்றி இங்கனே விச்வாமித்ர ஸ்ருஷ்டியை நெஞ்சிலிட்டெண் ணினாருமில்லை. ”நின் திருவெட்டெழுத்தும் கற்று’ என்றும் “எட்டெழுத்து மோதுவார்கள்” என்றும் ஆழ்வார்கள் பலவிடங்களில் அருளிச் செய்வதும் வேதவேதாங்கங்களில் ப்ரஸித்தமான திருமந்திர சரீரமேயன்றி வேறன்று.
  2. திருக்கண்ணபுரத் தெம்பெருமான் பக்கல் திருமந்த்ரோபதேசம் பெற்ற திருமங்கை மன்னன் அந்நமோநாராயணாய’ என்று பெற்றாரென்னில் நா வேம் . ப்ராஹ்மணோத்தமரான ஸ்ரீமதுரகவிகட்கு நம்பாழ்வாருபதேசித்தது அந்நமோ நாராயணாயவென்னில் * இதனில் மிக்கோரயர்வுண்டே?
  3. ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார மூலமந்த்ராதிகாரத்தில் “நாமஞ் சொல்லில் நமோநாராயணமே” என்ற கலியன் பாசுரத்தை உதாஹரித்த விடத்திலே ஸாராஸ்வாதி வியாக்கியானத்தில் திருமங்கையாழ்வார் வர்ணாந்தரமான படியாலே ஸப்ரனவமான இம்மந்திரத்துக்கு அந்திகாரியானபடியாலே ” என்று தொடங்கிச் சில வாக்கியங்களாலே ப்ரணவ சதுர்த்திகளை யொழித்தே திரு மங்கையாழ்வார் நம்மாழ்வார் போல்வார்க்குத் திருமந்த்ரம் ப்ராப்தமாயிற் றென்று கை கூசாதே எழுதி வைத்தார்கள். இது தனக்கு நிதாநமேதென்னில்; ப்ரபாவவ்யவஸ்தாதிகாரத்திலே “ஆழ்வார்கள் வருத்தாந்தங்களையுமாராய்ந்தால் ஸ்வஜாதிநியமத்தைக் கடந்தமையில்லை” என்று தூப்புலம்மான் வரைந்து வைத்ததே யென்ன வேண்டும். நம்மாழ்வார், தேவுமற்றறியாத மதுரகவிகட்கு உபதேசித்ததும் ப்ரணவ வர்ஜமேயென்று இவர்களது கொள்கை போலும்.
  4. மதுரகவிகட்கு மந்த்ரோபதேசம் ஆழ்வார் பக்கலில் ப்ராப்த மாயிற்றில்லை யென்றும், ப்ராஹ்மணர்க்கு மந்த்ரோபதேசம் பண்ண ஆழ் வார் அதிகாரி யல்லரென்றும், மதுரகவிகள் மந்த்ரோபதேசம் பெறுதற்கு மாத்திரம் வேறொரு ஸ்வஜாதீயரைத் தேடியோடினாராயிருக்க வேணுமென்றும் விளங்கவுரைக்கவிரும்பிய வேதாந்ததேசிகன் அந்த ப்ரபாவ வ்யவ ஸ்தாதிகாரத்திலேயே “வித்யாமந்தராதிகளுடைய க்ரஹணம் ப்ராஹ்மணாதி விஷயத்திலேயாக வேணுமென்னுமிடம் “***” என் நெழுதிவைத்தார். இதனால் தேறிற்றென்னென்னில்; “அன்பர்க்கேயவதரிக்கு மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு, துன்பற்ற மதுர கவி தோன்றக்காட்டுந் தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே” என்று இவர்தாம் பேசின் பாசுரத்திற்பகர்ந்த தொல்வழியாவது- வாக்குண்டான், நல் வழி, நன்னெறி, நளவெண்பா, இலக்கணச் சுருக்கம் முதலிய தமிழ் நூல்கள் பயில்வதற்காகக்கொண்ட உபாத்யாய வித்யார்த்திபாவமேயொழிய மற்றைப் படியான ஆசார்ய சிஷ்ய பாவமன்றென்று நன்கு விளக்கப்பட்டதாயிற்று. “விதுராதிகளிலும் உத்க்ருஷ்ட ப்ரபாவரான ஆழ்வார்களுடைய வருத்தாந்த விசேஷங்களை நம் அதுஷ்டாநத்துக்கு த்ருஷ்டாந்தமாக்கலாகாது” என்றவளவோடே நின்றிருந்தாராகில் இனிதாயிருக்கும். பாரத்வாஜ ஸம்ஹிதையில் யாஸோய தேச பரமான முதலத்யாயத்தில் “ந ஜாது மந்த்ரா நாரீந சூத்ரோ நாந்தரோத் பவ” என்று தொடங்கி ”நார்ஹந்த்யாசார்யதாம் க்வசித்” என்று ஸ்த்ரீசூத் ரர்கட்கு மந்த்ரோபதேசகதர-த்வரூபமான ஆசார்யத்வம்பண்ண ஒருகாலும் யோக்யதையில்லையென்று முதலில் ஸாமாந்யமாக நிஷேதித்து, உடனே ”கிமப்யத்ராபிஜாயந்தே யோகிநஸ் ஸர்வயோநிஷா – ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம்சிந்த்யம் குலாதிகம்” என்று விசேஷமாகவுரைத்ததையெடுத்துக்காட்டி உபஸம் ஹரித்திருந்தால் சாலவுமினிதாம். அங்கனன் றிக்கே “***” இத்யாதிகளை எழுதிவைக்கையாலே பின்புள்ள வ்யாகக்யாதாக்களும் ஆழ்வார்கள் திறத்திலே யதாசக்தி கிஞ்சித்கரித்து நின்றார்கள். இப்படிப்பட்ட அஸமஞ்ஜஸ வாக்யார்த் தங்களை அநுவதிப்பதுதானும் “***” என்று ஸங்கல்பஸூர்யோதயத்திற் கூறிய கணக்கிலே நமக்கு அவத்யாவஹமென்று ஒதுங்கப்ராப்தம்.
  5. ஆக இதுகாறும் “நஸ்வர ப்ரணவோங்காநி’ என்ற வசந்த்திற்கு உண் மைப் பொருளைப் பற்றி நின்று பூர்வபக்ஷங்களைப் பரிஹாரித்து வந்தோம். இனி, அந்த வசநம் ப்ரணவஸாமாந்யத்தை நிஷேதிக்க வந்ததாகக் கொண்டு மந்த்ர மாத்ரோக்திரிஷ்யதே” என்றதற்கு “மந்த்ரசேஷோக் திரிஷ்யதே” என்று பொருள் கூறுகின்ற பூர்வபக்ஷிகளின் ஸரணியை இசைந்தாலும் ஹாநியொன்று மில்லை யென்பதை விளக்கி யுரைக்கப்புகுவோம்.
  6. ஸாமாந்ய விசேஷயாயமென்பது ஸகல சாஸ்த்ரங்களிலும் ஆளப் பெற்றது. ஜீவஹிம்ஸை மஹாபாபமென்று ஸாமாயமாக மறுக்கப்பட்டிருக்கச் செய்தேயும் அக்நீஷோமீய பசுவிசஸநம் விசேஷ விதிப்ராப்தமா யிராநின்றது. “வாஷாமா நா நமாதவ ” என்ற ஸாமாந்ய நிஷேதமானது “ஹரிகீர்த்திம் விநைவாந்யத் ” என்ற விசேஷ வசந்த்தாலே தள்ளுண்டது. “***” என்று த்ரமிடோப நிஷத்தாத்பர்ய ரத்நாவளியிலும் சொல்லலாயிற்று. இங்கனொத்த உதாஹரணங்கள் பரஸ்ஸஹஸ்ரமுண்டு. அப்படியே, ” நஸ்வர: ப்ரணவ,” என்ற இந்நிஷேதமும் அவைஷ்ணவ ஸ்த்ரீ சூத்ரர்களை இலக்காகக் கொண்டதாகக் குறையில்லை.
  7. ஸாமாந்ய நிஷேதம் சாஸ்த்ரஸித்தமானாப் போலவே விசேஷ விதியும் சாஸ்த்ரஸித்தமாக வேணுமேயென்னில் ; அது தனக்கும் குறையில்லை. பராசர ஸம்ஹிதையில் மூன்றாமத்யாயத்தில் வைஷ்ணவ ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு விசேஷ விதி யுரைக்கு மடைவிலே ”ஸதா ப்ரணவஸம்யுக்தம் மூலமந்திரம் த்வயாதிகம் – வேதஸ்வராதிவர்ஜம் ஸ்யாத் சூத்ராணாம் மந்த்ரஜாபநே” (104) என்றும், “ஸதா தாந்திரிகமந்தரஸ் ஸ்யாத் வேதஸ்வரவிவர்ஜித : – மூலாதிஸர்வமந்தராணாம் விதிரேஷ ஸதா பவேத் -……. ஸதா ப்ரபந்த சூத்ராணாம் ஸர்வேஷாம் மோக்ஷகாங் க்ஷிணாம் – மத்ஸாயுஜ்யாதிஸித்த்யர்த்தம் தவிஜதர்மோக்தவத் பவேத்.” (107) என்றும் முமுக்ஷக்களான ப்ரபந்த சூத்ரர்களுக்கு வேதஸ்வரத்தை மாத்திரம் விட்டொழித்து ப்ரணவஸஹிதம் கூடுமென்று சொல்லிற்று. பூர்வபக்ஷஸ்ஜாதீயர்கள் ஆந்தரலிபியில் அச்சிடுவித்த பராசரஸம்ஹிதையிலும் இவ்வசநங்கள் காணலாம். பக்கம் – ககூ)
  8. இந்த ஸம்ஹிதை ப்ரமாணமாகில் இது தன்னிலே ”***” என்று விதவாவபதம் விதித்திருப்பது க்ராஹ்யமாக வேண்டாவோவென்னில்; இந்த விசாரம் இங்கு வேண்டா; அதைப் பற்றித் தனியே பேசுவோம்.
  9. வ்யோம ஸம்ஹிதை முதலிய மற்றும் பல ஸம்ஹிதைகளிலும் முமுக்ஷ ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு ப்ரணவஸ் ஹிதமந்த்ராநுஸந்தாநம் அநுமதமா யிருக்கையாலும் வி சேஷவிதியாலே ஸாமாந்யநிஷேதம் அந்யபரமாகிறதென்று தெளியக்கடவர்கள். இதனையே மற்றும் பல ப்ரமாணங்களைக் கொண்டும் நிலை நாட்டு வோங் காண்மின்.
  10. த்ரைவர்ணிகரிலும் உபநயநம் செய்யப்பெறாத பாலிசர்கள் சூத்ரதுல் யர்களென்றும், இரண்டாம் பிறவி பெற்றபின்னரே வைதிகத்திற்கு அதிகாரம் பெறுகிறார்களென்றும் ஸர்வஸம்மதம். உத்தாநபாதனுடைய மகனான தருவன் அது பநீதனாயிருக்கும்போது ஏதோ ரோஷத்தாலே தவஞ்செய்ய விரும்பி அர ணியம் நோக்கிச் சென்றவிடத்து ஸப்தர்ஷிகள் ஸந்தித்து அவனுக்கு நன்மை யுபதேசிக்கும் போது ப்ரணவத்தோடு கூடின வாஸ தேவத்வாதசாக்ஷரியை உப தேசித்தார்களென்னுமிடம் ஸ்ரீவிஷ்ணு புராணத்திலே முதல் அம்மத்தில் பதி பேனராமத்யாயத்தின் முடிவில் ஸ்பஷ்டமாக விளங்காநிற்கும். “ஓம் நமோ வாஸுதேவாய ” என்பது அவ்விடத்து ஆநுபூர்வியாகும். அவன் அநுபந்தன் என்னுமிடம் அவ்விடத்திலேயே “***” (84.) என்ற மஹர்ஷிகளின் வாக்கியத்தால் விளங்கும். இப்படிப்பட்ட சிறுவனுக்கு ஸப்ரணவமந்த்ரத்தை உபதேசித்தவர்கள் ஸாமாந்ய ரல்லர்; ஸாக்ஷாத் ஸப்தர்ஷிகள்; பூர்வபக்ஷிகள் பகரும் நிஷேத சாஸ்த்ரங்களை அவர்கள் அறியாதாரல்லர்.
  11. இவ்விடத்தில் குறிக்கொள்ளத்தக்க விஷயமொன்றுண்டு,”ஓம் நமோ வாஸ் தேவாய ” என்று கீழுதாஹரித்த ஸ்ரீவிஷ்ணுபுராண ச்லோகத்தின் வியாக்கியானத்திலே எங்களாழ்வான் ” ***” என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் நன்கு நோக்கத்தக்கவை. “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய” என்று பன்னிரண்டு திருவெழுத்துக்களையும் மூலத்தில் சொல்லாமல் சில அக்ஷரங்கள் (அதாவது, பகவதே என்ற பதம்) மறைக்கப்பட்டிருந்தாலும் தருவனுக்கு த்வாதசாக்ஷரியை உபதேசித்ததாகப் புராணாந்தரங்களில் ஸ்பஷ்டமாயிருக்கையாலே இங்குள்ளது பூர்ண மந்த்ரத்திற்கு உபலக்ஷணம். ரஹஸ்ய மாய் உபதேசிக்கவுரிய மந்த்ரமாகையாலே பூர்ணமான மந்த்ரசரீரத்தை இங்கு ஓதாமல் மறைத்திருக்கிறது – என்றாய்த்து எங்களாழ்வானருளிச் செய்திருப் பது. ஆகையாலே, உபநயநம் பெறாத பாலிசனுக்கு ப்ரணவஸஹிதமான மந்த்ரத்தை உபதேசித்ததற்கு இது ப்ரமாணமாமளவன் றிக்கே, ”நமோ நாராய ணேத்யுக்த்வா சவபாக புநராகமத்” இத்யாதி ஸ்தலங்களில் மந்திரத்தின் ஏக தேசம் நிர்த்திஷ்டமாயிருந்தாலும் அது பூர்ணமந்த்ரத்துக்கே உபலக்ஷண மென்று கீழ் நாம் உபபாதித்தவற்றுக்கும் அவ்யாஹதமான ப்ரமாணமாகா நின்றது. ஸ்ரீ விஷ்ணு புராணத்திலுள்ள ப்ரக்ருத சுலோகத்தை நம் தூப்பு லம்மான் கடாக்ஷத்திருப்பரேல் “பெரியதொரு மாம்பழத்திலே நடுவுள்ள அம்சம் த்யாஜ்யமாய் மற்றது உபஜீவ்யமாகிறாப்போலே த்வாதசாக்ஷரி யிலும் நடுவுள்ள அம்சம் கழிந்தால் ஸர்வோபஜீவ்யமா மென்னுமிடம் ஓம் நமோவாஸ் தேவாய’ என்னும் தருவோபதேச ப்ரகரணஸ்த வசந்த் தாலே ஸித்தம்’ என்று திருவாய்மலர்ந்தருளியிருப்பர். திருமந்திரத்திற்கு எட்டுக்கண்ணான கரும்பு த்ருஷ்டாந்தமாகக் கிடைத்தாற்போலே த்வாத சாக்ஷரிக்கு மாம்பழம் தருஷ்டாந்தமாகக் கிடைக்கலாமிறே. அதில் உள் ளுள்ள கொட்டை த்யாஜ்யமாகிறாப்போலே இதிலும் உள்ளுள்ள பகவதே’ என்னும் பதம் தயாஜ்யமென்னலாமிறே. யதாப்ரமாண வாதிகளாகையாலே உள்ளதை மீறி உரைக்கவொண்ணதிறே. திருமந்திரத்தில் சதுர்த்தியை விட் டொழிக்கும்படி வசநலேசமும் க்வாசித்காநுஷ்டானமும் இல்லாதிருக்கச் செய்தே “நமோநாராயணேத்யுக்த்வா” என்றதையும் “நாலாயிலுண்டே நமோ நாரணாவென்று” என்றதையுமே கொண்டு சதுர்த்தியை நிஷேதிக்குமிவர்கள் “ஓம் நமோ வாஸ்தேவாய” என்றப்ரக்ருத வசநத்தையுங்கொண்டு, பகவதே என்னும் பதமொழிந்தவளவே ஸாவாதிகாரம் என்று சொல்லி வைத்திருப்பரேல், ஹாஹா ! ஸ்வாமி என்ன ஸூக்ஷமார்த்தம் சிக்ஷிக்கிறார்’ என்று அகங் குழைந்து குலாவுவார் பலருண்டாவரிறே. அதுநிற்க. த்ருவன் அநுபந்தனா யிருக்கும் நிலைமையிலே ப்ரணவஸஹித மந்த்ரோபதேசம் பெறக் காண்கையாலே ப்ரணவ நிஷேதமுள்ள விடம் அச்ரத்தாளு விஷயமென்றொதுங்கும். “ச்ரத்தைவ காரணம் பும்ஸாமஷ்டாக்ஷரபரிக்ரஹே.”
  12. இன்னமும் , ப்ருஹதாரண்ய கோபநிஷத்தில் நான்காமத்யாயத்தில் நான்காம் ப்ராஹ்மணத்தில், யாஜ்ஞவல்க்யர் தம் மனைவியான மைத்ரேயிக்கு மோக்ஷோபாயமான ப்ரஹ்மோபாஸநத்தைப் பாக்கவுபதேசிக்கக் காணாநின் றோம். யோகயாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதியிலே நாழி யென்பவளுக்கு யோகோப தேச பூர்வகமாக ப்ரணவம் முதலியவற்றை உபதேசிக்கக் காணாநின்றோம். ப்ரஹ் லாதனென்னும் அநுபந்தனான அசுரச் சிறுவன் “ஓம் நமோ வாஸுதேவாய தஸ்மை பகவதே ஸதா ” என்றும் “ஓம் நமோ விஷ்ணவேதஸ்மை ” என்றும் ப்ரணவஸஹித மந்தரங்களைச் சொன்னானாக ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே (க-உக – எ அ , அசு) ஸ்பஷ்டமாகக் காணாநின்றோம். கபிலர் தேவஹூதிக்கு ஸாங்க பக்தியோ கோபதேசம் பண்ணிற்றும், பார்வதிக்கு ருத்ரன் ஸப்ரன்வாஷ்டாக்ஷ ரோபதேசம் பண்ணிற்றும் ஸ்ரீ பாகவத பாத்மபுராணாதிகளில் ப்ரஸித்தமாகக் காணாநின்றோம். உத்தரராம் சரித நாடகத்திலே (2-3) ” “***” என்று-ஆக்ரேயியென்பா ளொரு பெண்பெண்டாட்டி சொல்லுமாறு காணா நின்றோம்.
  13. இந்த ஏட்டுக்கதைகளெல்லாம் இக்காலத்து வ்யக்திகள் விஷயத்திலே த்ருஷ்டாந்தமாகைக்கு அவகாசமரிதென்று ஏகோந்தியிலே க்ஷேபிக்கவுங் கூடும். நம்பாடுவான்கலியன் முதலானோர்ப்ரணவ சதுர்த்திகளைவிட்டார்களென் பதற்குமாத்திரமே எட்டுக்கதைகள் அவலம்பமாயிடுக . மற்றவற்றுக்கு அவற்றை உதாஹரிக்கலாகாதென்றே இசைந்திடுவோம். தரைவாணிகர்களும் அநுபநீத ரான பாலிசர்களுக்கு அக்ஷராப்யாஸத்திலே ப்ரணவத்தைக் கற்பிக்க எங்குங் காணா நின்றோம். மற்றும் சொல்லுகோம் கேண்மின்.
  14. ஸ்த்ரீகள் வேதங்களை வாயாற் சொல்லவும் காதால் கேட்கவுமாகாது என்று ஸாமாந்யமாக நிஷேதமிருக்கச் செய்தேயும் சில ப்ரகரணங்களில் விசேஷ விதி பலத்தாலே சில வைதிக மந்திரங்களை வாய் திறந்து உச்சரிக்கும்படியாவதை அதுஷ்டாநத்திலும் காணாநின்றோம். “***” ப்ரயோகசந்தரிகா என்னக்கடவதிறே. அன்றி யும், ப்ரதிபத்திகாமத்தில் ஸ்த்ரீகளுக்குக் காத்ருத்வம் ப்ராப்தமானால் அக்கிர தாநமந்த்ரத்தை ஸாக்ஷாத்தாக வாயாற் சொல்லுவித்துளம் ஸ்கரிப்பிக்கக்காணா நின்றோம். இங்ஙனே பல, இவ்விடங்களில் ஸ்த்ரீகளுக்கு வேதோச்சாரண நிஷே தம் அபவதிக்கப்படவில்லையா? ஸ்த்ரீசூத்ரர்களின் செவியிலே வேதாக்ஷரம் விழுந்தால் ஈயத்தையும் அரக்கையுமுருக்கிச் செவியிலே யூற்றி நிரப்பவேணு மென்ற – சாஸ்த்ரமெல்லாம் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ச்ரயம் பெற்ற ஸத்வயக்திகள் திறத்திலே பயன்படுகின்றனவோ ச்ரோத்ரியக்ருஹிணிகள் காதிலே அநவரதம் வேதமேயிறே விழாநிற்கும். “தஸ்மாத் சூத்ரஸமீபே நாத்யேதவ்யம் ” என்றதும் அவைஷ்ணவசூத்ர விஷயமாக ஒதுக்கப்படவில்லையா ? “***”(ஆபஸ்தம்பர்.) என்னப்பட்ட விலக்ஷண சூத்ரர்கள் விவக்ஷிதரல்லரிறே.
  15. “நமோஹரிகேசாய” என்கிற வேதவாக்கியத்தையெடுத்து அப்பயதீக்ஷி தர் சிஷ்யர்களுக்கு அர்த்தப்ரவசநம் பண்ணும் போது “ஹரி – – ஈசாய ” என்று பிரித்து, ஹரி – நாராயணனுக்கும், க – பிரமனுக்கும், நசாய – தலைவனான சிவனுக்கு, நமஸ்காரம் என்று சிவபாரம்ய பரமாகப் பொருள் கூற , இதனைக் கேட்ட அவரது தாயார் பையலே! பக்கத்தகத்துத் திண்ணையிலே பதபாடமோதக் கேளாய் என்ன, ‘ஹரிகேசாயேதி ஹரி – கேசாய ” என்று ஒதக் கேட்டு, “அந்தோ ! தப்பச் சொன்னேன்; செம்பட்ட மயிருடையான் என்கிறது” என்றாராம். [** இவ்விஷயம் கௌதம தர்மஸூத்ரத்தில் பன்னிரண்டாமத்யாயத்திலுள்ளது. மூலத்தில் “அதஹாஸ்ய” என்று சூத்ரனைமாத்திரம் எடுத்திருந்தாலும் இது ஸ்த்ரீகளுக்கு முபலக்ஷணமென்று வியாக்கியாதாக்களால் விளக்கப்பட்டது.] தீக்ஷிதர் முதலில் சொன்ன சிவபாரம்யப்பொருள் வேத புருஷனுக்கு விவஸீத மாகில், ”ஹரிகேசாயேதி ஹரிக-ஈசாய” என்று ஓதலா குமென்பது இங்கே விஷயம். அது கிடக்க. பரமவிஷ்ணு பக்தையான தீக்ஷித மாதாவின் பக்கலிலே “***” என்ற ஸாமாந்யசாஸ்த்ரம் இடம்பெற்றதில்லை யென்றுணர்வீராக.
  16. இன்னமுமொன்று கேளீர்; ஸச்சரித்ரரக்ஷையில் ஊர்த்வபுண்ட்ரதாரண விதிப்ரகரணத்தில், பஸ்மதாரணத்தையும் திர்யக்புண்ட்ரத்தையும் விதிக் கற சில வசநங்களை யெடுத்துக் காட்டுமிடத்திலே அவை சூத்ரர்களுக்கேயன்றி மற்ற ப்ராஹ்மணாதிகளுக்கு அல்லவென்று ஒதுக்கி, அது தன்னிலும், வைஷ்ணவசூத்ர வ்யதிரிக்த விஷயமேயாகக் கடவது என்றும் தேசிகன் ஸ்தாபிக்கக் காண்கிறோம். “ “***” என்ற நாரதீய வசநத்தையும் “ஊர்த்வபுண்ட்ரம் துகர்த்தவ்யம் சூத்ரைர் பூத்யா ஸதோயயா” என்ற பாரமேஷ்ட்ய ஸம்ஹிதா வசநத்தையும், “சூத்ரஸ்யைவ த்ரிபுண்ட்ரகம்” என்ற ப்ரஹ்மராத்ர வசநத்தையும் மற்றும் பல வசநங்களையும் உதாஹரித்த தேசிகன், பஸ்மதாரணமும் திர்யக்புண்டரமும் சூத்ரர்களுக்கே யொழிய த்வி ஜாதிகளுக்கன்று என்று முந்துற ஸமர்த்தித்து, பிறகு , ”தஸ்மாந்மாம் ப்ராப்து மிச்சத்பிர் வைஷ்ணவைர் விமலாசயை – ஊர்த்வபுண்ட்ரமிதம் தார்யம் ஸத்யஸ் ஸம்ஸார மோசநம் .” இத்யாதி வசநங்களில் “வைஷ்ணவை” என்றிருப்பதைக்கொண்டு, சூத்ரர்களுக்கும் வைஷ்ணவத்வமுண்டாகில் அந்தணர்களோ டொக்கவே புண்ட்ரஸந்நிவேசமாகக் கடவதென்று ஸமர்த்தித்த ந்யாயம் திருமந்த்ர விஷயத்திலும் அவ்யாஹத ஸஞ்சாரமாம். கீழுதாஹரித்த பராசர ஸம்ஹிதா வசநாதிகள் இதனை வற்புறுத்தும். அந்த ஸம்ஹிதா வசநத்தைப் பூர்வபக்ஷிகள் ப்ரப்தமென்றே கொள்வார்களாகில், அதனை யாம் மறுப்போ மல்லோம். அங்ஙனே உடன்படுவோம். உபயஸம்ப்ரதிபந்தப்ரமாணங்களுக்கு துர்ப்பிக்ஷமில்லையே. அங்ஙனே பல சொன்னோம், பலவும் சொல்வோம்.
  17. ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரத்தில் வேதவாக்கியங்களை அல்பமும் உதாஹ ரிப்பதில்லையென்னுமிடம் ஸர்வஸம்மதம். குருபரம்பராஸாரத்தில் யஸ்யதேவே பராபக்திர் யதா தேவே ததா குரௌ ” என்று உதாஹரிக்க வேண்டுமிடத்திலும் அது ச்ருதியென்று விட்டு, அதன் பொருளை மாத்திரம் ”பகவத்விஷயத்திற் போலே குரு விஷயத்திலும் பரையான பக்தியுடையவனுக்கு அபேக்ஷிதார்த் தங்களெல்லாம் ப்ரகாசிக்கும் ” என்று அருளிச்செய்கிறார். இஃது இப்படி யிருக்க, மேல் அபராத பரிஹாரா திகாரத்திலே இச்லோகங்களில் ப்ராஹ்மண சப்தம் விஷ்ணும் க்ராந்தம் வாஸுதேவம் விஜாநந் விப்ரோ விப்ரத்வம் கச் சதே தத்வதர்சீ’ என்கிற ப்ரக்ரியையாலே விசேஷ விஷயம் ” என்றருளிச்செய் கிறார். இங்கு உதாஹரிக்கப்பட்ட விஷ்ணும் க்ராந்தமித்யாதி ப்ரமாணம் எவ்விடத்ததென்று ஆராய்வோம். வேதார்த் தஸங்க்ரஹத்தில் “***” என்கிற சுருதியை வியாக்கியானிக்குமிடத்திலே அதன் கீழ் சுருத ப்ரகாசிகாகாரருடைய தாத்பர்யதீபிகையில் “***” என் றருளிச் செய்திருக்கையாலே இது அதர்வண வேதவாக்கியமென்று விளங்காநின்றது . பஞ்சவிஜயங்களிலும் மற்றும் அனந்தாழ்வான் வாதார்த்தங்களிலும் இங்ஙனேயுள்ளது. நூற்றெட்டு உபநிஷத்துக்களுள் ஒன்றான சாட்யாய நோய் நிஷத்திலும் இஃது உள்ளது. ஆகவே இது வேதவாக்கியமன்றென்று மறுக்க வொண்ணாது. வேதவாக்கிய முதா ஹரிப்பதில்லையென்கிறப்பதிஜ்ஞைக்கு விஷய மான ரஹஸ்யத்திலே இந்த வேதவாக்கியத்தை உதாஹரித்ததேசிகனுடைய திரு வுள்ளம் ஏதென் ஆராயவேண்டும். ஸர்வஜ்ஞரானார்க்கு இது வேதவாக்கிய மென்று தெரிந்ததில்லை யென்னப்போகாது இனிச் சொல்ல வேண்டிற்றென் னென்னில் ; இந்த வசநம் வேதத்திலிருப்பது போலவே மஹாபாரதத்திலும் வரக்காண்கையாலே, வைதிகமென்கிற ஆகாரத்தாலே இது அநுபாதேயமாயி னும், பௌராணிகம் ஐதிஹாவிகம் இத்யாத்யாகாரத்தாலே உபாதேயமாகக் குறையில்லை என்று திருவுள்ளம்பற்றினாரென்ன வேண்டுமத்தனை போக்கி வேறொன்றும் சொல்லப்போகாதிறே. இக்கணக்கில் தானே ப்ரணவமும் வைதிக மென்னுமாகாரத்தாலே அநுபாதேயமெனினும் மற்றைப்படியாலே அநுஸந் தேயமாகக்குறையில்லை யென்றுணர்க. “***”.
  18. பொதுவாகவே ஸகல மந்த்ரங்கட்கும், விசிஷ்ய திருமந்திரத்திற்கும் சப்தசக்தியினால் காரியம் செய்யவல்லமையென்றும் அர்த்த சக்தியினால் காரி யம் செய்யவல்லமையென்றும் இருவகைத்தன்மைகளுண்டு. அவற்றுள் ஜபஹோ மாதி முகத்தாலே காரியஞ்செய்கையாகிற முதல் தன்மை உபாஸநாதிகாரி விஷ யத்திலே விலைச் செல்லும். அநந்யார் ஹசேஷத்வாதி ரூபமான ஸ்வரூபவுண்மை யைத் தெளிவிக்கும் வழியாலே தககொவாய் தாயவவாயாவமான நிவ்ருத்திமார்க்கத்தை ப்ரவர்த்திப்பிக்கும் முகத்தாலே காரியஞ்செய்கையாகிற இரண்டாவது தன்மை ப்ரபத்தயதிகாரி விஷயத்திலே விலைச் செல்லும். ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு உபாஸநாதிகாரமில்லாமையாலே, ஜபஹோமாதி முகத்தாலே காரியங்கொள்ளுகையாகிற முதல் தன்மையில் அதிகாரம் இல்லை. அவர்கட்கு ப்ரபத்தயதிகாரமுண்டாகையாலே அர்த்த சக்தியினால் காரியங்கொள்ளுகையா கிற இரண்டாவதில் அதிகாரம் இடையூறற்றதே . இவ்வர்த்தந்தன்னையே “நஸ் வர ப்ரணவோங்காநி” இத்யாதி சாஸ்த்ரம் சொல்லவற்று. இதில், உபாஸந்த் திற்கு உபயுக்தமான ஜபஹோமாதிகளின் அநுஷ்டாநத்திற்கு அதிசயத்தை விளைக்கவல்ல அபூர்வ ப்ரணவஸம்யோஜத்திலும் ஸ்வாம் முதலிய அங்ககலா பங்களிலும் அதிகாரமில்லாமையைத் தெரிவிக்கின்ற முதலிரண்டு பாதங்களால் சப்தசக்தியினால் காரியங்கொள்ளுகையிலே அதிகாரமில்லாமை காட்டப்பட்டது. மேலே “மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே ” என்ற நான்காமடியால், ப்ரபத்திக்கு உபயுக்தமான ஸ்வரூபயாதாத்மியப் பொருளை அநுஸந்திப்பதற்கு உரிய “ஓம் நமோ நாராயணாய” என்கிற மந்த்ரசரீரமாத்திரத்தில் அதிகாரத்தை இசையும் முகத்தாலே, அர்த்த சக்தியினால் காரியங்கொள்ளுகையிலே அதிகாரமுள் ளமை காட்டப்பட்டது. பாலிசர்களுக்கு அக்ஷராப்யாஸ காலத்தில் ப்ரணவ யுக்தமான அஷ்டாஷ்ரசரீரத்திலே எப்படி அதிகாரம் அநுமதிக்கப்பட்டதோ நிஷாதஸ்தபதிக்கு ஒரு யாக விசேஷத்திற்கு இன்றியமையாத வேதபாக மாத் திரத்திலே அதிகாரம் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அப்படியே ஸ்த்ரீசூத்ரர் களுக்கும் அதாவது – ஸ்வரூபயாதாதமியஜ்ஞாநத்தினாலேயே புருஷார்த்தம் பெறக்கூடிய முமுக்ஷ க்களான ஸ்த்ரீ சூத்ரர்களுக்கும் ப்ரணவயுக்தமான திரு வஷ்டாக்ஷர சரீரமாத்தத்தில் அதிகாரம் அநுமதமென்பதே சாஸ்த்ரதாத் பர்யம்.
  19. பூர்வ மீமாம்ஸையில் ஆறாவது அத்யாயத்தில் முதல் பாதத்தில் [51, 52. ஸூத்ரங்களால்] நிஷாதஸ்தபதிந்யாயம் கூதமாயிராநின்றது. அத்ரைவாணி கனான நிஷாதனுக்கு ரௌத்ரயாகத்தில் அதிகாரம் வேதத்தில் அனுமதிக்கப்பட் டுள்ளது . வேதோச்சாரணமின்றியாகம் பண்ணமுடியாதே, அத்ரைவர்ணிகனுக்கு வேதாதிகாரமில்லையே, எங்ஙனே அவன் ரௌத்ரயாகம் பண்ணக்கூடும்? என்று சங்கித்துக்கொண்டு “***” என்று மீமாம்ஸகர்கள் ஸ்தாபித்து வைத்தார்கள். அதற்கு முன்னே ரயகாராயிகாராயிகாணமும் நோக்கத்தக்கது. ஒரு ஸங்கீர்ணஜாதீயன் ரதகாரனெனப்படுவான்; வைச்யஸ்த்ரீயிடத்தில் க்ஷத்ரியனுக்குப் பிறந்தவன் மாஹிஷ்யன் ; சூத்ரஸ்த்ரீயிடத் தில் வைச்யனுக்குப் பிறந்தவள் கரணி; அந்த கரணியினிடத்தில் மாஹிஷ்ய னுக்குப் பிறந்தவன் ரதகாரன் இவன் சூத்ரனல்லாவிடினும் வேதத்துக்கு அந்தி காரிஜாதியென்று பாட்ட தீபிகையில் சொல்லப்பட்டது. இப்படிப்பட்டவனுக்கு விதிபலத்தாலே வேதாதிகாரம் ப்ராப்தமாயிற்றென்று அவ்வதிகரணத்தா லுணர்க. இதனையே ரதகாரங்யாயமென்று உதாஹரிப்பர்கள். ஆக, இந்த நியாயங்களாலே முமுக்ஷஸ்த்ரீ சூத்ரர்களுக்கு விதி பலத்தாலே ப்ரணவோய் தேசம் பண்ண ப்ராப்தம் ‘ஸ்த்ரீ சூத்ரர்கள் ப்ரணவோபதேசத்திற்கு அதி காரிகளாகில் ஸகல வேதங்களுக்கும் அதிகாரிகளாகக் குறையென்?’ என்கிற சோத்யமும் இதனால் பரிஹரிக்கப்பட்டதாம். ‘வசநாத் ப்ரவ்ருத்தில், வசநாந் நிவ்ருத்தி” இறே.
  20. கீழ்க்காட்டிய மீமாம்ஸாந்யாயங்களை மந்த்ரரத்த விஷயத்தில் நடாதா ரம்மாள் பாபந்தபாரிஜாதத்திலே அதிதேசம் பண்ணியிருக்கவங் காண்கிறோம். பூர்வமீமாம்ஸையில் ஆறாவது அத்யாயத்தில் பதின்மூன்றாவதான நிஷாதஸ்தபத் யதி கரணம் நோக்கத்தக்கது. எங்ஙனேயென்னில்; ப்ரபத்தி வாசகமான மந்தரரத்தம் சுவை ச்ருதியிலுள்ளது. வேதவாக்கியமான விதை த்ரைவர்ணிகால்லாத சூத்ராதிகளும் சொல்லலா மென்று சாஸ்த்ரங்களில் சொல்லியிருப்பதால் வேதவாக்கியமாயினும் இது ஸர் வாதிகாரமாகக் குறையில்லை. சூத்ராதிகளுக்கு வேதத்தில் அதிகாரமில்லை யென்று மறுத்த சாஸ்த்ரமே வேதைகதேசத்தில் அதிகாரமுண் டென்று இசை யுமோவென்னில், இங்கனே பலவிடமுண்டு; ரதகாராதிகளுக்கு வைதிகமான கமலாயா நாழிகளிலும், பத்திக்கு ஆஜ்யா வேக்ஷணாதி மந்தரங்களிலும் அதிகாரம் ப்ரமாண வித்தமானாப்போலே மந்தரரத்தத்திலும் அது ப்ரமாண வித்த மாகிறது” என்று ஸ்பஷ்டமாக அருளிச்செய்தார். “***” என்ற அம்மாள் சலோகங்களை ப்ரபந்த பாரி ஜாதத்தில் அதிகாரபத்ததியிற் காண்க.
  21. சாஸ்த்ரங்களில் திருமந்த்ரம் கயிக் தாயிகாரமென்று சிலவிடங்களி லும் ஸர்வாதிகாரமென்று சிலவிடங்களிலும் சொல்லியிருப்பதன் கருத்து இத்த னையே காணும் , சப்தசக்தியினால் காரியங்கொள்ளுமளவில் அதிக்ருதாதிகாரம்; அர்த்தசக்கியினால் காரியங்கொள்ளுமளவில் ஸர்வாதிகாரம் என்றபடி.
  22. இங்கொன்று நோக்குமின்; ப்ரணவமொழிந்த மந்தரசேஷத்தில் ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு அதிகாரம் பூர்வபக்ஷிகட்கும் ஸம்மதம். ப்ரணவ மாத்ரத்திலிறே விப்ரதிபத்தியுள்ளது. இங்கே வினவுகின்கிறாம் – ப்ரணவ ப்ரதிபாதயமான அர்த்த ஸ்வரூபத்திலே அதிகாரமில்லையென்றா? ஓம் என்று உச்சரிப்பதில் அதி காரமில்லையென்றா? அர்த்த விசிஷ்ட ப்ரணவோச்சாரணத்தில் அதிகாரமில்லை யென்றா எங்ஙனே விவக்ஷிதம்? அர்த்தஸ்வரூபத்தில் அதிகாரமில்லையென்று பூர்வபக்ஷிகளும் சொல்லிற்றிலர்; ஓமென்று உச்சரிப்பதில் அதிகாரமில்லை யென்றும் சொல்லிற்றிலர். பரமபத ஸோபாரத்தில் நிர்வேத பர்வத்தில் “நீ பகவத்கிங்கான் என்றால் ஓமென்றிசையாதே” என்றருளிச் செய்யப்பட்டுள் ளது தேசிகனால். இந்த ஓமுக்கு அங்கீகாரம் அர்த்தமாயினும் ஓமென்கிற ஆது பூர்வியை உச்சரிப்பதில் அனைவர்க்குமதிகாரமுண்டென்னுமிடம் அப்ரதி ஹதம். அஃதில்லையென்னில் வருவோம் போவோம் ‘ இத்யாதி சப்தங்களை யுச்சரிப்பதும் அயுக்தமென்ன வேண்டி வரும். ஆகவே, ஓமென்கிற ஆநுபூர்வி யில் அதிகாரமுண்டென்றும் ப்ரணவார்த்தத்திலும் அதிகாரமுண்டென்றும் இசைந்துவைத்து, இனி இவ்விடத்தில் ப்ரணவத்திற்கு எது அர்த்தமோ அந்த அர்த்தத்துடன் கூடியதாக ப்ரணவத்தை உச்சரித்தல் கூடாதென்று சொல்லு மத்தனையிறே சேஷித்து நிற்பது. ஒரேவகையான சப்தத்தில் இன்ன அர்த் தம் விவக்ஷிதமாம் போது அதிகாரமுண்டென்றும் இன்ன அர்த்தம் விவக்ஷிதமாம் அதிகாரமில்லையென்றும் நியமிப்பார்க்கு ப்ரமாண ஸஹகாரமில்லையிறே. ஆனால் , ஸ்த்ரீ சூத்ரர்களுக்கு ப்ரணவத்தில் அதிகாரமில்லையென்று சாஸ்த்ரம் நிஷேதித்துக் கிடக்கும் போது நாமென் செய்வோம் என்று பழம்பாட்டையே பாடக்கூடும். அப்படிப்பட்ட நிவேதசாஸ்த்ரம் “***” இத்யாதி ஸஹோதரமென்பதை நியுணமாகநிரூபித்தோமிறே.
  23. *அன்ன புகழ் முடும்பையண்ணலுலகாசிரியனருளிச்செய்த பரந்த படியிலே “இதுதான் ஸர்வாதிகாரம் ; ப்ரணவார்த்தத்துக்கு எல்லாருமதிகாரிகள். இடறினவன் அம்மேயென்னுமாபோலே இது சொல்லுகைக்கு எல்லாரும் யோக்யர் ; ப்ராயச்சித்தாபோக்ஷையில்லை” (உபோத்காதத்திலே) என்ற ஸ்ரீஸுக்திகளைக் கண்டார் சிலர் இதில் , ப்ரணவத்துக்கு எல்லாருமதிகாரிகள் என்னாதே ப்ரணவார்த்தத்துக்கு எல்லாருமதிகாரிகள் என்றருளிச் செய்கையாலே, ப்ரணவம் த்ரைவர்ணிகாதிகாரமென்னுமிடம் ஸ்பஷ்டமாகிறதிறே யென்பர்கள். * கதிராயிரமிரவிகலந்தெரியா நிற்கச் செய்தே சங்கு பீதகம்’ என்னுமவர்க ளிறே அவர்கள். தெளியச் சொல்லுவோம் கேண்மின் – அவ்விடத்தில் இதுதான் ஸர்வாதிகாரம் ‘ என்றிராநின்றது. இதுதான்’ என்றதற்கு விஷயம் எது? என்று நோக்க வேணும். கீழும் மேலும் திருவஷ்டாக்ஷர ப்ரசம் ஸையே நடந்து போருகையாலே அதுவே இங்கு விஷயம். ”இதுதான் சொல்லும் க்ரமமொழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெடநில்லாது” என்கிற கீழ்வாக்கியத்திலும், “இதுதான் ஸகல பலப்ரதம் ” என்கிற மேல்வாக்கியத்தி லும் இதுதான், இதுதான்’ என்று சுட்டிக் காட்டுவது திருவஷ்டாக்ஷரத்தையே யன்றி ஏகதேசத்தையன்றென்பது கீழும் மேலும் காண்பார்க்கு விசதம். “நாமமாயிரமேத்தநின்ற நாராயணா” “நாமம் பலவுமுடை நாரண நம்பி” என்ற அருளிச்செயல்களைக் கீழே உதாஹரிக்கையாலே இது நாராயண’ என் கிற ஏகதேச மாத்ர பரம் என்றாய்த்துச் சிலர் ப்ரமிப்பது. அங்கனன்றுகிடீர் . நாராயண நாமமாதரம் ப்ரஸ்துதமாகவுள்ள பாசுரங்களையும் பெரிய திருமந்த் ரத்தின் பாசம் ஸாபரமாகவே தேசிகனுள்ளிட்ட நம் ஆசார்யர்கள் ஆங்காங்கு யோஜிக்கக் காண்கையாலே நாராயண நாமப்ரஸ்தாவமுள்ள பாசுரங்களை உதா ஹரிப்பது திருமந்திரத்தை நோக்கியே யொழிய தாவநமாத்ர விவக்ஷயா அன்று. ரஹஸ்யத்ரயஸார மூலமந்தராதிகாரத்தில் “இதுதன்னையே ஸ்வரவ்யஞ்ஜந் பேதத்தாலே எட்டுத் திருவக்ஷரமாக பாவிக்கத் திருமந்திரத்தோடொக்கு மென்று புராணாந்தரோக்தம் ” என்றருளிச் செய்தது ஒருபுறமிருக்கச் செய்தே யும், நாராயண சப்தமாத்ர நிர்த்தேசத்தை உபலக்ஷணவியயா திருமந்த்ர பரமாகக் கொள்வதொரு புடையிலே, பரந்தபடியிலும் ப்ரக்ருதஸ்தலத்தில் ”நாராயணா – நாரண நம்பீ!” இத்யாதி பாசுரங்களை உதாஹரித்தா ரென்னு மிடம் அவ்விடத்து ப்ரகரணத்தாலும், மற்றும் முமுக்ஷப்படி முதலிய ரஹஸ் யங்களின் சைலியாலும் ஸவ்யக்தம். ஆகையாலே இதுதான் ஸர்வாதிகாரம் என்ற பரந்தபடி ஸ்ரீஸுக்தி திருவஷ்டாக்ஷரத்தின் ஸர்வாதிகாரத்வத்தையே சொல்லுகிறது.
  24. ஆகில், “ப்ரண வார்த்தத்துக்கு எல்லாரும் அதிகாரிகள்” என்கிற அடுத்த வாக்கியம் ஸமந்விதமாகிறபடி எங்ஙனேயென்னில் ; ஒரு குறையுமில்லை; ப்ரணவத்தின் அர்த்தமாவது அநந்யார்ஹசேஷத்வம்; அதற்கு அனைவரும் அதிகாரிகளாகையாலே, அவ்வர்த்தந்தன்னையே பாதிபாதிக்கிற திருமந்திரத்துக் கும் எல்லாரும் அதிகாரிகளாவர் – என்று கீழ்வாக்கியத்திற்கு உப்பாதகமாக அவதரித்த வாக்யமிறே இது. இடறினவன் அம்மேயென்னுமாபோலே இது சொல்லுகைக்கு எல்லாரும் யோக்யர் ” என்ற அடுத்த வாக்கியமும் இதனையே ஸத்ருஷ்டாந்தமாக நிகமிக்கிறது. இது சொல்லுகைக்கு – திருமந்திரம் சொல் லுகைக்கு என்றபடி. ”பேசுமின் திருநாமமெட்டெழுத்தும் ” என்ற ப்ரக்ருத பாசுரத்தின் வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளை, “ஓரதிகார ஸம்பத்தி வேண்டாவிறே பெற்ற தாய் பேர் சொல்லுவார்க்கு அப்படியே இடர் வந்த போது எல்லாருமொக்கச் சொல்லிக்கொடு போரக்கடவதான இனிய திருநாம மான எட்டெழுத்தையும் ” என்றருளிச் செய்தது கொண்டும் தெளியலாம். பேசிற்றே பேசும் வணக்கணரிறே இவர்கள்.
  25. “ப்ரணவார்த்தத்துக்கு எல்லாருமதிகாரிகள்” என்றதனால் அர்த்தத்துக்கே ஸர்வாதிகாரத்வமுள்ளது; ப்ரணவத்துக்கு அது இல்லை என்றதாகு மென்று ஒருகாலுங் கொள்ளப்போகாது. ரஹஸ்யத்ரய ஸாரத்தில் சாஸ்த்ரீய நியமநாதிகாரத்தில் – ”இவனுக்கு இங்கிருந்தநாள் பண்ணலாம் கைங்கர்ய மஞ் சுண்டு; அவையாவன :- பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் , அதுக்கு யோக்யதை யில்லையாகில் அருளிச் செயலைக் கேட்டு ப்ரவர்த்திப்பித்தல், அதுக்கு யோக்யதை யில்லையாகில் உகந்தருளின திவ்யதேசங்களுக்கு அமுதுபடி சாத் துப்படி திருவிளக்குத் திருமாலைகளை யுண்டாக்குதல் ; அதுக்கு யோக்யதை யில்லையாகில் த்வயத்தினுடைய அர்த்தாநுஸந்தாநம் பண்ணுதல் ; அதுக்கு யோக் யதை யில்லையாகில் என்னுடையவனென்று அபிமானிப்பானொரு ஸ்ரீவைஷ்ண வனுடைய அபிமாநத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம்” என்றருளிச் செய்கிறார் ; இதில் பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல்’ என்று முத லிலே அருளிச்செய்து, அதற்கு மேல் அருளிச்செயலைக் கேட்டு ப்ரவர்த்திய பித்தல்’ என்றருளிச் செய்கையாலே’ அருளிச் செயலைக் கற்க அதிகாரமில்லை; கேட்கவே அதிகாரமுண்டு என்று அர்த்த சிக்ஷை பண்ணக்கூடுமோ? அதற்கும் மேலே “த்வயத்தினுடைய அர்த்தாநுஸந்தாநம் பண்ணுதல்” என்கையாலே, த்வயார்த்தத்தில் அதிகாரமுண்டேயொழிய த்வயத்தில் அதிகாரமில்லையென்ப தாகப் பொருள் கொள்ளக்கூடுமோ? அவை கூடுமாகில் இதுவும் கூடுமெனக் கொள்ளீர்.
  26. இன்னமும், “ப்ரணவார்த்தத்துக்கு எல்லாருமதிகாரிகள்” என்றத்னாலே ப்ரணவத்தில் இதரர்களுக்கு அந்திகாரம் விளங்குகிறதென்றும், ” இது தான் ஸர்வாதிகாரம் ” என்றதனாலே நாராயணபத மாத்ரத்தில் அதிகாரம் விளங் குகிறதென்றும் பூர்வபக்ஷிகளின் கருத்தின்படியே கொள்வோமாகில், மற்ற நம பதத்தின் அதிகாரத்தைப்பற்றியும் சதுர்த்தியின் அதிகாரத்தைப் பற்றியும் ஒன்றும் சொல்லிற்றிலராகையாலே குறையாகும். திருவஷ்டாக்ஷரத்தை விவ ரிக்கத் தொடங்கினவர் ப்ரணவத்தையும் நாராயணபதத்தையும் பற்றி மாத் திரம் அதிகாரவிஷய மருளிச் செய்துவிட்டால் மிகுந்தவற்றுக்கு என்ன கதி? மயங்கவைத்தலென்னும் குற்றத்திற்குக் கொள்கலமாக உலகாசிரியர் உரைத்தருளார். பெண்ணுக்கும் பேதையர்க்குங்கூடப் பயன்படுமாறு அருளிச்செய்த முமுக்ஷுப்படியில் இவ்விஷயம் ப்ரஸ்தாவிக்கப்படவுமில்லை. பிள்ளை யுலகாசிரியர்க்கு ப்ரணவாதிகாரவிஷயத்தில் வேறான திருவுள்ளமிருக்குமாகில் அது முமுக்ஷப்படியில் விரிந்திருக்கும். ப்ரணவப்ரதிச்சந்தமாகச் சேர்த் துக்கொள்ள வேண்டியதாகப் பூர்வபக்ஷிகள் சொல்லுகிற அக்ஷரத்தைப் பற்றியும் ப்ரஸ்தாவியாதிருக்க ப்ராப்தியில்லை. இதுதான் எட்டுத் திருவக்ஷரமாய் மூன்று பதமாய்’ என்றே பலகாலுமருளிச்செய்து போருமவர் அதற்கு முரணாக வேறொருபடியை விவக்ஷித்தாராகில் அதனை விரித்துரையாதொழி வரோ? முமுக்ஷுவுக்கறியவேண்டும் ரஹஸ்யம் மூன்று” என்று தொடங்குகையாலே முமுக்ஷுத்வமுடையாரெல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்று முதலடியிலே ஸ்பஷ்டமாக்கி வைத்தாராயிற்று.
  27. மற்றொன்றும் ஸூக்ஷ்மமாகக் குறிக்கொள்ள வேண்டிற்றுண்டு, – பக வந்மந்தரங்கள் தான் அநேகங்கள்; அவைதான் வ்யாபகங்களென்றும் அவ்யாபகங்களென்றுமிரண்டுவர்க்கம். அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் சரேஷ்டங்கள். இவை மூன்றிலும் வைத்துக்கொண்டு பெரிய திருமந்தரம் ப்ரதாநம்.” என்றருளிச்செய்து “இத்தை வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆசார்யர் களும் விரும்பினார்கள்” என்கிறாருலகாசிரியர் ; தேசிகனும் இங்கனே யருளிச் செய்கிறார். இதனால் வேதங்கள் விரும்பின திருமந்த்ர சரீரமும் ஆழ்வார்கள் விரும்பின திருமந்திர சரீரமும் துல்யமென்பது நன்கு விளங்கும். நாராயண நாம மாத்ரத்துக்கே இந்த துல்யத்வோக்தி என்னவொண்ணாது; உதாஹரண ப்ரமாணங்களில், நாரணாவென்றும், நாராயணாவென்றும், நாராயணாயவென்றும், நமோ நாராயணாயவென்றும் இப்படி பலவாறிருந்தாலும் திருவஷ்டாக்ஷரத்தில் நோக்கு என்னுமிடம் திண்ணம் நாரணமே ” என்றவிடத்துப் பிள்ளானுரையி னால் விளங்குமிறே. ஆகையாலே வேதமுகந்த திருமந்தரமே ஆழ்வார்களுகந் தது ; ஆழ்வார்களுகந்ததே ஸ்ரீவைஷ்ணவர்களனைவருமுகந்தது. வேதவிருத்த மான ப்ரகாரங்கள் அவைஷ்ணவர்கட்கு உபஜீவ்யமாம். ஆழ்வார்களு மாசார் யர்களும் பரிபூர்ண மந்த்ர சரீரத்தைத் தம் தம் ப்ரபந்தங்களிலே வ்யக்தமாக வெளியிடாதது பொவமென்னுமத்தாலத்தனை. இது கீழே காட்டிய ஸ்ரீ விஷ்ணுபுராண வியாக்யாந ஸுக்தியாலும் விசதம்.
  28. ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த நிகமப்படியிலே “திருமந்திரம் எட்டுத் திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும்; எங்கனே யென்னில், ஓம் என்றும் நம என்றும் நாராயணாய என்றும்” என்று ஸுவ்யக்தமாகவே அருளிச்செய் யப்பட்டது.
  29. ஆசார்ய ஹ்ருதயத்திலும் மனமுடையீரென்கிற ச்ரத்தையே அமைந்த மர்மஸ்பர்சிக்கு நானும் நமருமென் னும்படி ஸர்வருமதிகாரிகள்” என்றருளிச் செய்யப்பட்டது. இதில் மர்மஸ்பர்சியென்றது திருமந்திரத்தை ச்ரத்தையுடையாரெல்லாரும் திருவஷ்டாக்ஷரத்துக்கு அதிகாரிகள் என்றதா யிற்று.
  30. ஆசார்ய ஹ்ருதயந்தன்னிலேயே உத்கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி” என்றவிடத்தில் வியாக்கியான மருளாநின்ற மணவாள மாமுனிகள் ”ஓம் என்று ஸம்ஹிதாகாரேண வெடுத்தால் அதிக்ருதாதிகாரமா மென்று” என்றருளிச் செய்திருப்பதைக் கண்ட சிலர் ப்ரணவத்துக்கு ஸர்வாதிகாரத்வ மில்லையென்பது இங்கே விளங்கிற்று’ என்பர்கள். நொறலாரைவயவமான உத்கீதப்ரணவவிஷயமாக அங்கருளிச் செய்தது உண்மையே. அந்த உத்கீதப்ர ணவமும் ஸர்வாதிகாரமென்று சொல்லவருவாரில்லை. ஸ்வாவயவபூத ப்ரணவ விசிஷ்ட மந்திரம் ஸர்வாதிகாரமென்றவளவாலே ப்ரணவஸாமாந்யமும் ஸர்வாதி காரமென்றதாகுமோ? மந்த்ரபஹிர்ப்பூதமான அபூர்வப்ரணவங்கள் அதிக்ரு தாதிகாரமென்று கீழே வரைந்தோமிறே, நிஷாதஸ்தபதிந்யாயாதிகளாலே அது தனக்கும் ஸ்த்ரீசூத்ராதிகாரம் சொல்லிவிடலாமே யென்னில் ; இது சாஸ்த்ர மர் யாதை யறியாதார் பேச்சு . ” ***” ” பேசுமின் திருநாமமெட்டெழுத்தும் ” “***” (முகுந்தமாலை) இத் யாதிப்ரமாணங்களாலே ப்ராப்தமான ப்ரணவத்தின் அதிகாரத்தை முமுக்ஷ ஸாமாந்ய விஷயமாக ஸ்தாபிக்க மீமாம்ஸாந்யாயம் உபகாரகமாகிறதென்றால், அஸித்தமான அந்யஸ்தலங்களிலும் இங்கனே ஆயிடுகவென்று ஆபாதநம் பண்ணுவது அவிவேக பலமிறே. ந்யாயஸஞ்சாரமென்பது வசநாவிருத்த விஷயங்களிலேயாம்.
  31. ஸ்ரீவசந்பூஷணத்தில் நிஷித்த கர்மநிரூபணப்ரகரணத்தில் வர்ணாச்ரம விபரீதமான உபசாரமும்” என்றவிடத்திலே ” த்ரைவர்ணிகார்ஹமான வைதிக் மந்த்ரங்களாலே சதுர்த்த வர்ணரானவர்கள் ஆராதித்தல் வர்ண விபரீதமான உபசாரம் ” என்று மணவாள மாமுனிகள் வியாக்கியானித்திருக்கையாலே வைதிக மந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தை அத்ரைவர்ணிகர் அநுஸந்தித்தல் நிஷித்த மென்று நிரூபிதமாயிற்றென்பர் சிலர். நிஷேத சாஸ்த்ரமெல்லாம் விஹிதவ்ய திரிக்தவிஷயத்திலே ஸா வகாசம் என்னுமிடமறியாதே யதாச்ருதக்ராஹிகளாய் குசோத்யம் பண்ணுவார்க்கு என் சொல்லவல்லோம். அதற்குக் கீழ் வாக்யத் திலே ” அக்ருத்யகாணமாவது பரஹிம்ஸை ” என்றருளிச் செய்தவிடத்திலே நஹிம் ஸ்யாத் ஸர்வாபூதாநி ‘ என்கிற விதியை அதிக்ரமித்துப் பண்ணும் பராணிபீடை பாபம்” என்றிறே மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸுக்தி யுள்ளது. இது “அக்நீஷோமீயம் பசுமாலபேத ” என்ற விதிபலப்ராப்தமான யஜ்ஞபசு ஹிம்ஸையையும் பாபமென்னவற்றோ விசேஷவிதியைவிலக்கியன்றோ ஸாமாந்ய நிஷேதம் இடம்பெறும். இங்ஙனமே, சதுர்த்தவர்ணஸ்தர்கள் தங் களுக்கு ப்ராப்தமல்லாத வைதிக மந்த்ரங்களாலே ஆராதித்தல் நிஷித்தமென்றதத் தனை போக்கி விதிப்ராப்தங்களைக் கொண்டு பண்ணுமாராதநத்தையும் நிஷித்த மென்றதன்று. அப்படியாகில் வைதிகமான த்வயமந்த்ரத்தைக் கொண்டுபண்ணு மாராதநமும் பாபமென்ன வேண்டிவரும்.
  32. வார்த்தமாலையில் முப்பத்தொன்பதாம் வார்த்தையைக்கண்டு சிலர் ப்ரமிப்பர்கள். அதாவது – ஸ்த்ரீ சூத்ராதிகளுக்குத் திருமந்தர படத்தில் அதிகார மில்லை; அர்த்தத்திலே அதிகாரமுள்ளது என்று நம்பிள்ளை அருளிச் செய்ய, திருக்குருகூர்தாஸர் அத்ருப்தரைப் போலேயிருந்தவாறே, இவர்க்குப் புரு ஷார்த்த வித்திக் குறுப்பான அர்த்தத்தில் அதிகாரமுண்டாகில் அப்ரயோஜக மான வாரத்தில் அதிகாரமில்லையென் றவித்தால் இவர்க்கு வரும்தென்? என் றருளிச் செய்தார்” என்றிருக்கிறது. இதனால் ப்ரணவம் அதிக்ருதாதிகார மென்று விளங்குகின்றதாம். இந்த வார்த்தையில் ப்ரணவத்தைப்பற்றின பேச்சே யில்லை. திருமந்திரசப்தமேயுள்ளது. எட்டெழுத்தையும் பற்றின பேச்சாயிரா நின்றது. திருமந்திரத்திற்கு சப்தசக்தியினால் கார்யகரத்வமென்றும் அர்த்த சக்தியினால் கார்யகாதவமென்றும் இரண்டு தன்மைகளுள்ளனவாகவும், முந்தினது தரைவாணிகமாத்ராதிகாரமாகவும் கீழே விரித்துரைத்தோம். அவ்வர்த் தமே இந்த வார்த்தையில் அடங்கியுள்ளது. ஸ்ரீ சூத்ரர்கள் திருமந்தரத்தைக்கொண்டு அர்த்த சக்தியினால் காரியங்கொள்ளலாமேயொழிய சப்த சக்தி யினால் காரியங் கொள்ளலாகாது என்றதத்தனை. இவ்வார்த்தையில் ப்ரணவ மாத்ரப்ரஸ்தாவமோ இல்லை. உள்ளது திருமந்திர சப்தம். அது அஷ்டாக்ஷர பரமென்பதை அவ்விடத்திலேயே மேல் அர்த்த விவரணத்தினால் நன்குணர்க. ப்ரணவத்துக்கும் மந்தரத்வமுண்டேயாகிலும் திருமந்த்ரமென்பது திருவெட் டெழுத்தையிறே. ஸ்த்ரீ சூத்ரர்களுக்கும் திருமந்திர ஜபத்திலே அதிகாரமுண் டாகிலும், சப்த சக்தியினால் காரியங்கொள்ள வரியார்க்கு எப்படிப்பட்ட ஜபக்ர மம் சாஸ்த்ரோக்தமென்று கீழே நாம் விவரித்தோமோ, அப்படிப்பட்ட கரமத் தில் இவர்களுக்கு அதிகாரமில்லை யென்பதே இவ்வார்த்தையில் விக்ஷிதம்.
  33. வார்த்தாமாலையில் ப்ரணவத்தைப் பற்றியே பேசியிருப்பதாக வைத்துக் கொண்டாலும் வருவதொரு ஹாநியில்லைகிடீர் . அதில் ஊடே பல கைச்சரக்கு கள் சொருகப்பெற்று அருந்விதோக்தி முதலியவை ஏறிக்கிடக்கையாலே முத்ரித புஸ்தகத்தில் பூர்ணப்ராமாண்யம் கொள்வதற்கில்லையென்று விரொவாஸிதர் பணிப்பர். ஆயினும் ஈண்டு உதாஹரித்த அம்சத்தில் அவத்யலே சமு மில்லையென்பது அருவத்யமிறே,
  34. மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வத்தில் (118-14.] “தஸ்மாத் ஸப்ரண வம்சூத்ரோ மந்நாமாநி ந கீர்த்தயேத்” என்றுள்ள வசநத்தைக் கொண்டு போராடு வர் சிலர். இதுவும் அந்த வசந்த்தின் வரலாற்றை வரியடைவே வாசித்தறியாதா ருடைய ப்ரஸங்கமாம்.
  35. உதாஹரித்த வசநம் நூற்றுப்பதினெட்டாமத்யாயத்திலே உள்ளது. அதற்குக் கீழே இரண்டு அத்யாயங்களை வாசித்தால் விஷயம் விளங்கும். தர்ம புத்திரர் கண்ணபிரானை நோக்கி “கீத்ருசா ப்ராஹ்மணா புண்யா பாவசுத்தா ஸ் ஸுரேச்வர!” (116-1.) சிறந்த பிராமணர்கள் யாவர்? என்று கேட்க, ”க்ஷாந்தம் தாந்தம் ஜிதக்ரோதம் ஜிதாத்மாநம் ஜிதேந்த்ரியம் – தமகர்யம் ப்ராஹ் மணம் மந்யே சேஷா: சூத்ரா இதி ஸ்ம்ருதா.” = ஆத்ம குணங்களில் சிறந்தவர் களே ப்ராம்மணர்கள், அல்லாதார் சூத்ரர்கள் ‘ என்றும், சண்டாளம்பி வருத் தஸ்தம் தம் தேவா ப்ராஹ்மணம் விதும்” = இழிகுலத்தவனேலும் நல்லொழுக்க முடையனேல் அவனே ப்ராம்மணன் ‘ என்றும், இங்கனே பலச்லோகங்கள் சொல்லி ஜாதியில் சரக்கறுத்து குணங்களே முக்கியமென்று கண்ணபிரான் அருளிச்செய்து வந்தான். மீண்டும் தர்மபுத்ரர் “கீத்ருசாநாம் து சூத்ராணாம் நாநுக்ருஹ்ணாஸி சார்ச்சகம்? (117-1.) “எப்படிப்பட்ட சூத்ரர்களுடைய ஆராதனையைத் திருவுள்ளம்பற்றமாட்டாய்? சூத்ரராவார் யாவர்?’ என்று கேட்க; கண்ணபிரான் ஜாதிசூத்ரனைப்பற்றி அணுமாத்ரமும் பேசாமல், எந்த அந்தணன் பன்னிரண்டாண்டு கிணற்றில் நீராடி வருகிறானோ, அவன் அவ்வுட் லோடே சூத்ரனாய் விடுகிறான் ; எவன் அரசனையடுத்தே வயிறு வளர்க்கிறானோ அவன் மிக்க வேதியனாயினும் சூத்ரனாய் விடுகிறான் , ” என்றிங்ஙனே பல சொல்லி வந்து எனக்கு ராக்ஷஸர்களிடத்தில் அச்சமில்லை, அஸரர்களிடத்திலும் அச்ச மில்லை; சூத்ரனுடைய வாயில் நின்றும் வேதம் வந்தால் அதுவே எனக்கு பய ஹேது; ஆகையாலே சூத்ரன் ப்ரணவத்தோடே நாமஸங்கீர்த்தநம் பண்ண லாகாது’ என்று தலைக்கட்டியருளினான். ஆகவே இங்குள்ள சூத்ரசப்தம் “அமரவோரங்கமாறும் ” என்ற திருமாலைப் பாசுரத்திற் சொல்லுகிற கட்டளை யிலே நிலை குலைந்த அந்தணரைச் சொல்லுகிறதேயன்றி வேறில்லை. “***” என்கிற ப்ரஸித்தவசநம் அவ்விடத்திலேயிறே உள்ளது. ”தஸ்மாத் ஸப்ரணவம் சூத்ர” இத்யாதி வசநமும் “ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா’ என்ற வசமும் ஒரே அத்யாயத்திலுள்ளதா யிருக்கச் செய்தேயும் அஸ்தாநே கலங்குவாருண்டோ? “தஸ்மாத் ஸப்ரணவம் சூத்ரம்’ என்ற விடத்திலுள்ள சூத்ரபதம் அவிலக்ஷணவ்யக்திபரமென்று அநா யாஸமாக அறுதியிடலாயிருக்க, மருண்டு நிற்பதென்னோ ?
  36. “ப்ராஹ்மணாமம் தேவதா’ ‘ப்ராஹ்மணேப்யோ நமோ நித்யம்” இத்யாதி ஸ்தலங்களில் ஸாமாந்யமாகவுள்ள ப்ராஹ்மணசப்தம் “விஷ்ணுபக்திவிஹீ நஸ்து யதிச்ச ச்வபசாதமம்” இத்யாதிகளில் புலையரினும் கேடாக இழித்துரைக் கப்பட்ட ப்ராஹ்மணாப்பாஉர்களைத் தவிர்த்து “ஸ்விப்ரேந்தரோ முரி ஸ்ரீமாந் ஸ யதிஸ்ஸச பண்டித” என்று சிறப்பித்துரைக்கப்பட்ட ப்ராஹ்மணர்களையே குறிப்பது போல, ” தஸ்மாத் ஸப்ரணவம் சூத்ர ” என்ற விவ்விடத்தில் ஸாமாந்ய மாகவுள்ள சூத்ரசப்தமும் “ந சூத்ரா பகவத்பக்தா: விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா” என்று சிறப்பித்துரைக்கப்பட்ட விசேஷாதிகாரிகளைத் தவிர்த்து “ஸர்வ வர்ணேஷ தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜநார்த்தரே ” என்று இழிக்கப்பட்ட காம சூத்ரர்களையே குறிக்கவல்லதென்னுமிடம் நிஸ்ஸம்சயவிபர்யயம்.
  37. “***” “***” இத்யாதி ஸ்தலங்களிலுள்ள சூத்ரசப்தத்துக்கும் இங்ஙனே தானோ நிர்வாஹமென்பீர்; அவற்றை ஸாமாந்ய நிஷேதமாக்கவல்ல விசேஷ விதிசாஸ்த்ர முண்டாகில் அவற்றுக்குமிங்ஙனே தான் நிர்வாஹமென்னப் பொருந்தும்.
  38. இவ்விஷயத்திலே பன்னியுரைக்க வேண்டியவை பாரதத்தினும் பெரியன் வுண்டாயினும் ஸாராம்சங்களைச் சுருங்கச் சொன்னோம். அஸூயையற்ற அறிவுடையார் இவ்வளவிலே தெளிய ப்ராப்தம். கவிதார்க்கிக கேஸரி , வாதி கேஸரி முதலானார்க்கு இவ்விஷயத்தில் விப்ரதிபத்தி உண்டாயிருந்த மாத்திரத்தினால் சாஸ்த்ரார்த்தம் விபரீதமாய்விடாது. விவேகிகள் உற்று நோக்கினால் ஸர்வாபிப் ராய ஸாமாஸ்யமும் இதில் ஸமந்விதமாகலாம். எங்கனே யென்னில்; ” திருமந்த் ரம் ப்ரணவசதுர்த்திகளையொழிந்தபோது ஸர்வாதிகாரம் ” என்று தேசிகன் திரு வுள்ளம் பற்றுகிறார். சதுர்த்தியை ஒழிக்கவேணுமென்பதற்கு சருங்கக்ராஹிகயா ஒரு ப்ரமாணமும் காட்டிற்றிலர். ‘நமோ நாராயணேத்யுக்த்வா சவபாக புநராக மத்” என்ற நிர்த்தேசமாத்ரத்தையே கொண்டு ஸாதிக்கிறார். அஸ்து; இரண்டு அம்சங்களை வர்ஜிக்கும்படி அவர் விதித்திருக்க, அர்வாசீநர்கள் சதுர்த்தீவர்ஜ நத்தை நெஞ்சிலும் நினையாதே ப்ரணவவர்ஜநமொன்றிலே போர்புரியா நின்றார் கள். துல்யமாக நிஷேதித்த விரண்டிலே ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகைக்கு நியாமகமேதென்று வினவில் , “சதுர்த்தியை விடவேணுமென்றது ஸ்த்ரீ சூத்ரர்களை நோக்கியன்று; பஞ்சமஜாதீயர்களை நோக்கியாமத்தனை” என்று பலர் கூறுவர்; இங்ஙனே விபஜித்துச் சொல்லுகைக்கு நிதாநமொன்று மின்றியே யிருந்தாலும் ***ஹீதிலாஷணம் பண்ணாநின்றார்கள்; பண்ணுக; இப்புடையிலேதானே, ப்ரணவத்தை யொழிக்கச் சொன்னதும் விலக்ஷண வைஷ்ணவ முமுக்ஷ- சூத்ரர்களை நோக்கியன்றென்று கொள்ளப்ராய்தம். ஒன்றுக்குக் கொண்டவழி மற்றொன்றுக்கும் உறுப்பாவதிறே அழகு . இங்ஙனே கொள்ளில் ஸர்வம் ஸமஞ் ஜஸமாகுமிறே.
  39. இவ்விடத்திலே சிங்கப்பிரான் பணித்துப் போருவதொரு பரமார்த்த முண்டு; ஓ மென்கிற ஆநுபூர்வியை (அங்கீகாரம் முதலிய வேறு பொருள்களில்) உச்சரிக்க அனைவர்க்கும் அதிகாரமுண்டென்றும் ப்ரணவார்த்தத்தை அநுஸந்திக்கையும் ஸர்வாதிகாரமென்றும், ஆனால் தயா விவக்ஷயா ஓமென்று உச்சரிக்கக் கூடாதென்றும் சொல்லுகிற பூர்வபக்ஷிகளின் சொல்வை அங்ஙனமே தழிஇக் கொள்வோம். “ஓம் நமோ நாராயணாய ” என்று ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ சூத்ரர்கள் அநுஸந்திப்பதில் முதலெழுத்தான ஓமென்பது வைதிகப்ரக்ரியையாகவன் றிக்கே லௌகிக ப்ரக்ரியையாலே ஆ- உ- ம -என்ற மூன்றெழுத்துகளின் கூட்டாவு. ஆ என்றது. – ஆழ்வார் திருவடிகளே சரணம் என்றபடி. உ என்றது உடையவர் திருவடிகளே சரணம் என்றபடி. ம என்றது மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம் என்றபடி. ஸத்ஸம்ப்ரதாயத்துறையிலே படிந்தவர்கள் ஆழ்வாரெம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்’ என்று உரையாமல் ஒன்றிலும் ப்ரவர்த்திக்கக் காண்பதில்லையாகையாலும், குரு பரம்பராவந்த பூர்வகமாக மந்த்ராநுஸந்தாநம் பண்ண சாஸ்த்ரவிதிதானுமுண்டாகையாலும், ஆழ்வா ருடையவர் மணவாளமாமுனிகளைத் தொழுவதான பொருளை விவுத்து ஓமென்ற நுஸந்தித்துப் பின்னை நமோநாராயணாய வென்கிறார்களென்று கொள் ளக் கடவது – என்றாம். இதுவுமொரு யோஜநையாயிருக்கத் தகுமாயினும், ஸர்வ ஜாதீய முமுக்ஷ ஸாதாரணமான ரஹஸ்ய நூல்களிலே லோக தேசிகன் நிக மாந்த தேசிகனுள்ளிட்ட ஆசார்யர்களனைவரும் ஒருமிடறாக ‘அ-உ-ம்’ என்று பிரித்து ப்ரணவார்த்தத்தையே வியாக்கியானித்திருக்கையாலும், வ்யஸ்தபதத் தில் அதிகாரமிசைந்தபோதே ஸமஸ்தபதத்தில் திகாரமும் தன்னடையே இசைந்ததாக ப்ராப்தமாகையாலும், ஜாதியில் வாசியுண்டேலும் முமுக்ஷ தவத்தில் வாசியற்றாரனைவர்க்கும் ஆதுபூர்வியாலும் அர்த்தத்தாலும் ஏகரூபமான திரு மந்த்ரசரீரமே உபாதேயமாகக்குறையில்லை யென்கிற கலையறக்கற்ற எழில்மதி யோருடைய ஸித்தாந்தமே ஸர்வசாஸ்த்ரஸாரஜ்ஞ ஸ்ப்ருஹணீயமாம்.

————

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-

பதவுரை

செம் கயல்

(இளமையாலே) சிவந்த மீன்கள்
திளைக்கும்

களித்து விளையாடப் பெற்ற
சுனை

நீர் நிலைகளையுடைய
திரு வேங்கடத்து

திருமலையிலே
உறை

நித்யவாஸம் பண்ணா நின்ற
செல்வனை

திருமாலைக் குறித்து,
மங்கையர் தலைவன் கலிகன்றி

திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
வண் தமிழ்

அழகிய தமிழினாலாகிய
செம் சொல் மாலைகள்

சிறந்த சொல் மாலையை
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள்

‘இது பலன்தருமோ, தராதோ’ என்கிற ஸந்தேஹமில்லாமல் (விச்வாஸத்துடனே) அப்யஸித்து அநுஸந்திக்க வல்லவர்கள்
வங்கம் மா கடல் வையம்

கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமண்டலத்திலுள்ளார்க்கு
தஞ்சம் அது ஆகவே காவலர் ஆகி

புகலிடமாய்க்கொண்டு அவர்களுக்கு ரக்ஷகராகி (இப்படி லீலாவிபூதியை நிர்வஹித்த பின்பு)
வான் உலகு ஆள்வர்

பரமபதத்தையும் ஆளப் பெறுவர்கள்.

யௌவனபருவத்திற்குத் தகுதி யாகச் சிவந்த நிறத்தையுடைய கயல்களானவை ஒன்றோடொன்று களித்து விளையாடப்பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய் தருள்கின்ற பெருமானைக்குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச்செய்த இச்சொல்மாலையைத் தரித்துச் சொல்லவல்லவர்கள் இவ்விபூதியிலுள்ள வளவும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னை நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

        சங்கையின்றித் தரித்துரைக்கவல்லார்கள் = ‘இத்தமிழ்ப்பாசுரங்களுக்கு இவ்வளவு வைபவமுண்டோ?’ என்று ஸந்தேஹப்படாமல் பூர்ண விச்வாஸத் துடனே ஓதவல்லவர்கள் என்றபடி.

शंका (శంకా) (சங்கா) என்ற வடசொல் சங்கை யெனத் திரிந்தது. இனி, “சங்கையின்றி வானுலகாள்வரே” என இயைத்து, இதிற் சொன்ன பலன் நிஸ்ஸம்சயமாகக் கைகூடும் என்ற தாகவுங் கொள்ளலாம்.

”தஞ்சமதாகவே” என்றவிடத்து तथ्यम् (తథ్యం) (தத்த்யம்) என்ற வடசொல் தஞ்ச மென மருவிற்றென்று கொண்டு, தஞ்சமதாகவே – உண்மையாகவே என்று பொருள் கொள்ளுதலுமாம்.

‘வித்யா’ என்ற வடசொல் விஞ்சை என மருவு வது போல, தத்த்யம் என்ற வடசொல்லும் தஞ்ச மென்றாகலாமிறே-

—————–

அடிவரவு:- கொங்கு பள்ளி நின்ற பார்த்தற்கு வண்கையான் எண் திசைகள் பார் அம்பரம் பேசுமின் செங்கயல் தாய்.

————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-7–அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 20, 2022

அவதாரிகை

கீழ்த் திருமொழியில், தாம் செய்த பலபல பாவங்களை யெடுத்துரைத்து, அந்தோ! இப்படி கணக்கில்லாத பாவங்களைச் செய்துவிட்டேனே!; யமலோகத்திலே யமபடர்களால் நேரக்கூடிய கொடுமைகளை நினைக் குங்கால் அளவற்ற அச்சமும் நடுக்கமும் உண்டாகின்றதே!’ என்று பலவாறாகச் சொல்லித் தம்முடைய அநுதாபந் தோற்றக் கதறினார்.

அப்படி கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நம்முடைய பக்தனான ப்ரஹ்லாதன் உமக்குத் தெரியுமே ; யமகிங்கரர்களாலும் செய்யமுடியாத துன்பங்களை அவனுக்கு அவனுடைய தகப்பனான ஹிரண்யகசிபு என்பவன் செய்வித்தானென்பதும் உமக்குத் தெரியுமே. அப்படி பல்வகைத் துன்பங்களுக்கு ஆளான அந்த ப்ரஹ்லாதனை நாம் ரக்ஷிக்க வேண்டி ஆச்சரியமான ஒரு அவதாரம் செய்ததும் உமக்குத் தெரியுமே.

அந்த நரஸிம்ஹாவதாரம் பிற்பட்டவர்களுக்குப் பயன் படாமற் போயிற்றேயென்று வயிறெரியவும் வேண்டாதபடி நாம் சிங்கவேள் குன்றமென்னும் விலக்ஷணமான திவ்ய தேசத்திலே நித்யஸந்நிதியும் பண்ணி வைத்திருக்கிறோமே. ஆச்ரிதர்களின் விஷயத்தில் நாம் இவ்வளவு பரிந்து காரியஞ் செய்வோம் என்பது உமக்குத் தெரியாதோ ? ஏன் நீர் வருந்துகின்றீர்?” என்றருளிச் செய்ய,

ஆழ்வாரும் பரமஸந்தோஷமடைந்து அந்த நரஸிம்ஹாவதாரத்தையும் அந்த திவ்யதேசத்தையும் அநுபவித்து இனியராகிறார் இத்திரு மொழியில்.

கீழ்த்திருமொழியில் ஒன்பதாம் பாட்டிலே ‘தேனுடைக் கமலத்திரு வினுக்கரசே!” என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுச் சரணாகதி செய்தது போலவே இத்திருமொழியிலும் ஒன்பதாம் பாட்டில் “அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன்” என்று லக்ஷ்மீஸம்பந்தத்தை முன்னிட்டே அநுபவிக்கிறார்.

இத்திருமொழியில் எட்டாம்பாட்டுவரையில் ஒவ்வொருபாட்டிலும் முன் னடிகளில் நரஸிம்ஹாவதார வ்ருத்தாந்தமும் பின்னடிகளில் சிங்கவேள் குன்றத்தின் நிலைமையும் வருணிக்கப்படுகின்றன.

இத்திருப்பதியின் திருநாமம் அஹோ பிலம் என வழங்கப்படும். இது வடநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. ‘சிங்க வேள் குன்றம்’ என்றும் ‘சிங்கவேழ்குன்றம்’ என்றும் இதனை வழங்குவதுண்டு. சிங்கம் – நரஸிம்ஹ ஸ்வரூபியாய், வேள் – யாவராலும் விரும்பப்படுகின்ற கட்டழகுடையவரான பெருமான் எழுந்தருளிய, குன்றம் – திருமலை எனவும்; நரஸிம்ஹமூர்த்தி யெழுந்தருளியிருக்கின்ற ஏழு குன்றங்களையுடைய தலம் எனவும் பொருள் படுமாறு காண்க.

இத்தலம், சிங்கம் புலி முதலிய பயங்கரமான விலங்குகள் ஸஞ்சரிக்கப்பெற்ற, கல்லும் புதரும் முள்ளும் முரடுமான கொடிய அரணியமாக இப்போது இருப்பது போலவே ஆழ்வார்காலத்திலும் இருந்த தென்பது இத்திருமொழியில் வர்ணனைகளால் நன்கு விளங்கும்.

இப்படிப்பட்ட பயங்கரமான துஷ்ட மிருகங்களும் கொடிய வேடர் முத லானவர்களும் அத்தலத்தின்கண் இருப்பதும்- மங்களாசாஸநபரர்களான நம் ஆழ்வார்களுக்கு ஒருவகையான ஆநந்தத்திற்கு ஹேதுவாகின்றது போலும் ;

எல்லாரும் எளிதாக வந்து அணுகக்கூடிய தேசமாயிருந்தால் ஆஸுரப்ரக்ருதிகளும் பலர் வந்து எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு இழைக்கக்கூடுமேயென்கிற அச்சத்திற்கு அவகாசமில்லாமல் ‘தெய்வம ல்லால் செல்ல வொண்ணா” என்னும்படி கஹநமாயிருப்பது மங்களாசாஸநருசியுடையார்க்கு மகிழ்ச்சியேயிறே.

—————–

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

பதவுரை

அங்கு

(‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய்

அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க

இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம்

அவனது உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
போழ்ந்த

இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம்

பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி

(சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு

பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால்

பக்தியினாலே
அடி கீழ்

(பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு

ஸமர்ப்பித்து
இறைஞ்சும்

ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம்

அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.

கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.

பக்தசிரோமணியான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை ஸஹிக்கமுடியாமையினாலே எம்பெருமான் அளவற்ற சீற்றங்கொண்டு பயங்கரமான வொரு திருவுருவத்தை ஏறிட்டுக்கொண்டான்; அந்தச் சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியனளவில் மாத்திரமே உண்டானாலும், அளவு மீறியிருந்ததனால் ‘உலகங்கட்கெல்லாம் இப்போதே உபஸம்ஹாரம் விளைந்திடுமோ!’ என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி யிருந்தது பற்றி அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் என்றார்.

இவ்விடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க:- ”நரஸிம்ஹமாயிற்றுத்தான் ஜகத்ரக்ஷணத்துக்காகவிறே; அங்கனேயிருக்கச் செய்தேயும் விளைவதறியாமையாலே ஜகத்தாக நடுங்கிற்றாயிற்று. இது எவ்வளவாயத் தலைக்கட்டுகிறதோ! என்றிருந்ததாயிற்று.”

இனி, அங்கண்ஞால மஞ்ச என்பதற்கு – இரணியனுடைய ஒப்பற்ற தோள் வலியைக் கண்டு உலகமெல்லாம் அஞ்சிக்கிடந்த காலத்திலே என்று பொருளு ரைப்பாருமுளர்.

அங்கு என்றது-

“எங்குமுளன் கண்ணனென்ற மகனைக்காய்ந்து, இங் கில்லையாலென்று இரணியன் தூண் புடைப்ப, அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் ” (திருவாய்மொழி 2-8-9.)என்றபடியே இரணியன் எந்த இடத்தில் எம்பெருமானில்லை யென்று தட்டினானோ அந்த இடத்திலேயே என்றபடி.

” அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க வுருவாய் ” -(பெரியாழ்வார் திருமொழி 1-6-9.)

அவுணன் பொங்க = அசுரர்கட்கு அவுணர் என்று பெயர். இங்கு ஹிரண் யாஸுரனைச் சொல்லுகிறது. இவன் அன்று வரையில் தனக்கு விரோதியாகத் தன் முன்னே வந்து தோற்றின ஒருவனையும் கண்டறியாமல் அன்றுதான் புதிதாக நரசிங்கமூர்த்தியாகிய எதிரியைக்கண்டபடியால் கண்டகாட்சியிலே கொதிப்படைந்தனனாம்.

அப்படி அவன் கொதிப்படைந்தவளவிலே அவனது ஆகத்தை (மார்வை) தீக்ஷ்ணமான திருநகங்களாலே கிழித்தெறிந்தனன் எம்பெருமான். பொங்க என்பதை ஆகத்துக்கு அடைமொழியாக்கி, அவுணனுடைய அகன்ற மார்பை என்றுரைப்பர் சிலர்.  

போழ்ந்த புனிதன் = புனிதனென்றால் பரிசுத்தன் என்றபடி. இரணியனது மார்பைப் பிளந்ததனால் என்ன பரிசுத்தி உண்டாயிற்று என்று கேட்கக்கூடும்; ஜகத்தைஸ்ருஷ்டித்தல் முதலிய தொழில்களில் பிரமன் முதலானவர்களை ஏவிக் காரியம் நடத்திவிடுவது போல் ப்ரஹ்லாதனை ரக்ஷிப்பதிலும் ஒரு தேவதையை ஏவிவிடாமல் தானே நேராக வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்தமையே இங்குப் பரிசுத்தியெனக்கொள்க.

இப்படி பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால், சிங்கவேள் குன்றமென்னும் திருப்பதியாம். அஃது எப்படிப்பட்ட தென்னில் ; சிங்கம் யானை முதலிய பிரபல ஜந்துக்கள் திரியுமிடம் அது என்பதைக் காட்டுகிறார் பின்னடிகளில்.

பகவானுடைய ஸந்நிதாநமஹிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத்பக்தி மிக்கிருக்கின்றன வென்கிறார். சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்குகின்றனவாம்.

यदन्नः पुरुषो भवति तदन्नास्तस्य  देवता  யதந்நபுருஷோபவதி ததந்நாஸ் தஸ்ய தேவதா” [ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 103-30.] (எந்தெந்த உயிர்கட்கு எது எது ஆஹாரமோ, அந்தந்த உயிர்கள் அந்த ஆஹாரத்தைக் கொண்டு தம் தேவதைகளை ஆராதிக்கும்) என்பது சாஸ்த்ரமாதலால் யானைகளின் அவயவங்களை ஆஹாரமாகவுடைய சிங்கங்களும் யானைத்தந்தங்களைக் கொண்டு பகவதாராதநம் நடத்துகின்றனவென்க.

ஆளி என்று சிங்கத்துக்கும் யாளிக்கும் பெயர் ; இங்கே சிங்கத்தைச் சொல் லுகிறது.

செங்கண் = (இங்கே வியாக்கியான ஸ்ரீஸுக்தி) “இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே யிருக்கச் செய்தேயும் பகவத் பக்தி ஒரு படிப்பட்டுச் செல்லுமாயிற்று; சீற்றம் விக்ருதியாய் பகவத் பக்தி ப்ரக்ருதியாயிருக்கு மாயிற்று.”

—————–

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-

பதவுரை

அலைத்த பேழ்வாய்

(சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு

ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர்

ஒப்பற்றதாய்
கோள்

மிடுக்கையுடையதான
அரி ஆய்

நரஸிம்ஹமாய்க்கொண்டு
கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த

ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த
கூர் உகிராளன் இடம்

கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான்  எழுந்தருளியிருக்கு மிடமாவது:-
மலைத்த

(வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட
செல் சாத்து

வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே
எறிந்த

(பிரதியாகச்) செய்யப்பட்ட
பூசல்

சண்டையிலே
வல் துடி வாய் கடுப்ப

கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய,
சிலை கை வேடர்

வில்லைக் கையிலேயுடைய வேடருடைய
தெழிப்பு

ஆரவாரமானது
அறாத

எப்போதும் மாறாத

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.

அவ்விடத்தின் நிலைமையைப் பேசுகிறார் பின்னடிகளில்; தீர்த்தயாத்திரையாகப் பலர் அங்குச் செல்லுகின்றனராம்; அவர்களை அவ்விடத்து வேடர்கள் வந்து தகைந்து சண்டை செய்வர்கள்; பரஸ்பரம் பெருஞ்சண்டை நடக்கும்; அந்தச் சண்டையிலே வேடர்களின் பறையோசையும் வில்லோசையும் இடை விடாது இருந்து கொண்டேயிருக்கும். இதுவே அத்தலத்தின் நிலைமை-என்கிறார். உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டுமிறே.

மலைத்த செல்சாத்து = மலைத்தலாவது ஆக்கிரமித்தல்; வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட என்றாவது, வேடர்களை எதிரிட்டு ஆக்கிரமித்த என்றாவது பொருள் கொள்ளலாம். வேடர்கள் வந்து பொருகிறபோது தாங்கள் வெறுமனிரார்களே , தாங்களும் ப்ரதியுத்தம் செய்வர்களே, அதைச் சொல்லுகிற தென்னலாம்.

(செல் சாத்து.) வடமொழியில் ஸார்த்தம் என்ற பதம் ஸமூஹ மென்னும் பொருளது; அப்பதமே இங்கே சாத்து என விகாரப்பட்டிருக்கின்றது. செல்கின்ற சாத்து எனவே யாத்திரை செய்பவர்களின் கூட்டம் என்று பொருள் கிடைத்தது.

பூசல் என்றபதத்திற்கு யுத்தம் என்றும், பெரிய கோஷம் போடுதல் என்றும்  பொருளுண்டு. இரண்டு பொருளும் இங்குக் கொள்ளலாம்.

வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட  வழிப்போக்கர்கள் போடும் கூசலானது பெரிய பறையடித்தாற்போல ஒலிக்கின்றது என்றும் வேடர்கள் வழிப்போக்கர்களை மறித்துச் செய்கிற சண்டையிலே வேடர்களுடைய பறைகள் கர்ண கடூரமாக ஒலிக்கின்றன என்றும் கருத்தாகலாம்

————-

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-

பதவுரை

ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு

(வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய்
ஓர் கோள் அரி ஆய்

ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன்

இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம்

வளர்ந்த உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த

கிழித்தெறிந்த
அம்மானது இடம்

ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:-
ஓய்ந்த மாவும்

(கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும்
உடைந்த குன்றும்

உடைந்துபோன சிறு மலைகளும்
அன்றியும்

இன்னமும்
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது

இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர
இல்லா

வேறொன்றுமில்லாத

சிங்கவேள்குன்றம்-.

வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.

“நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறி கொள் சிறைவண் டிசைபாடும்” ( பெரிய திருமொழி 5-1-1.)என்றும்,

“வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை, கொண்டல்மீதணவுஞ்சோலை குயிலினங் கூவுஞ்சோலை” ( திருமாலை. 14.)என்றும்

வருணிக்கத் தக்க நிலைமையோ அவ்விடத்தது என்றால்; இல்லை, அந்த ஸந்நிவேசம் வேறுவகையானது என்கிறார் .

ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்குமங்கும் ஓடியலைந்து ஓய்ந்து நிற்கக் காணலாம்; உடைந்து கிடக்கும் கற்பாறைகளைக் காணலாம்; இன்னமும் சில காணவேண்டுமானால், மூங்கில்கள் நெருப்புப்பற்றி யெரிந்து குறைக் கொள்ளியாயிருக்குமாற்றை விசேஷமாகக் காணலாம்; இவை யொழிய வேறொன்றும் காண்பதற்கில்லையாம் அங்கு. இவையெல்லாம் இவ்வாழ்வார்க்கு வண்டின முரலுஞ் சோலை போலே தோற்றுகின்றன வென்பர் பெரியவாச்சான் பிள்ளை.

“அது விதுவுது என்ன லாவனவல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்” ((3) திருவாய்மொழி 5-10-2.)என்றபடி எம்பெருமானுடைய சரித்திரம் எதுவாயிருந்தாலும் எல்லாம் ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வது போல், அப்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவைகளும் எதுவா யிருந்தாலும் அவ்விடத்தவை’ என்கிற காரணத்தினால் எல்லாம் இவர்க்கு உத்தேச்யம் என்பது அறியத்தக்கது.

“பிறர்க்குக் குற்றமாய்த் தோற்றுமவையும் உபாதேயமாய்த் தோற்றுகையிறே ஒரு விஷயத்தை உகக்கையாகிறது” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியுங் காண்க.

ஓய்ந்தமாவும் என்பதற்கு – நிலத்தின் வெப்பத்தினால் பட்டுப்போன மா மரங்களும் என்றும் பொருள் கொள்ளலாம்.   

—————-

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-

பதவுரை

எவ்வம் வெம்வேல்

துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய்
ஏதலன்

பாகவத விரோதியான
பொன் பெயரோன்

இரணியனுடைய
இன் உயிரை

இனிமையான பிரானணை
வவ்வி

அபஹரித்து
ஆகம்

(அவனுடைய) சரீரத்தை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த அம்மானது இடம்

கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
கவ்வும் நாயும்

(கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும்
கழுகும்

கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்)
உச்சிப் போ தொடு கால் சுழன்று

கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா

தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட  முடியாததான

சிங்கவேள்குன்றம்-.

கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.

வேற்று மனிசரைக் கண்டபோதே வந்து துடைகளிலே கவ்விக் கடிக்கிற நாய்களும், அப்படி கடிக்கப்பட்டு மாண்டொழிந்த பிணங்களைக் கவ்வுகின்ற கழுகுகளும் ஆங்கு மிகுதியாகக் காணப்படுமாம்.

செடி மரமொன்று மில்லாமையினாலே நிழலென்பது காணவே முடியாது; உச்சிவேளையில் எப்படிப் பட்ட வெய்யில் காயுமோ, அதுவே எப்போதும் காய்கின்றது; சுழல்காற்றுகள் சுழன்றபடியே யிராநின்றன.

இப்படி யிருக்கையினாலே ஸாமாந்யரான மனிசர் அங்குச் சென்று கிட்டுதல் அரிது; மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்லுதற்கு உரியர்; இங்ஙனே கஹநமான தலமாயிற்று இது.

எவ்வும் என்றும் எவ்வம் என்றும் பாடபேதம். பொன் பெயரோன் = ஹிரண்யம் என்ற வடசொல் பொன் என்னும் பொருளுடையதாதலால் ஹிரண்யாஸுரனைப் பொன்பெயரோனென்பது.

ஏதலன் என்று சத்ருவுக் குப் பெயர்; ஸர்வபூதஸுஹ்ருத்தான எம்பெருமானுக்கு இவன் நேரே சத்ரு வல்லனாகிலும் பாகவதசிரோமணியான ப்ரஹ்லாதாழ்வானுக்கு சத்ருவான முறைமையாலே பகவானுக்கும் சத்ருவாயினன்.

ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாக நினைத்துப் பேசுமவனிறே எம்பெருமான்.

”ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்து இன்னுயிரை வவ்வினான்” என்று – மார்வைப் பிளந்தது முன்னமும் உயிரைக் கவர்ந்தது அதன்பின்புமாகச் சொல்ல வேண்டியிருக்க இங்கு மாறாடிச் சொன்னது- இரணியன் நரசிங்க மூர்த்தியைக் கண்ட க்ஷணத்திலேயே செத்த பிணமாக ஆய்விட்டானென்ற கருத்தைக் காட்டு தற்கென்க.

”கவ்வுநாயுங் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்.

உச்சிப்போது என்று ஸுர்யனையே சொல்லுகிறதாகக் கொண்டு, நாய்களும் கழுகுகளுங்கூட அவ்விடத்தில் நடக்கும்போது தரையின் வெப்பம் பொறுக்க முடியாமல் கால் தடுமாறி திண்டாடுகின்றன; அப்படியே ஸுர்யனும் அவ்விடத்திலே வந்தால் அவனுக்கும் இதுவே கதி; தன்னுடைய தாபத்தைத் தானே பொறுக்கமாட்டாமல் அவனும் கால் தடுமாறிப் பரிதபிப்பன் என்றவாறுமாம்.

இத்திருப்பதியிற் சென்று ஸேவிக்க விருப்பமுடையரான இவ்வாழ்வார் “தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்று அருமை தோன்ற அருளிச்செய்யலாமோ? எனில்; நரஸிம்ஹமூர்த்தியின் அழகைக்கண்டு அஸூயைப் படுவதற்கும் அவனுக்கு ஏதேனும் அவத்யத்தை விளைப்பதற்கும் உறுப்பாக ஆஸுரப்ரக்ருதிகள் அங்குச் செல்லமுடியாது; எம்பெருமானுடைய ஸம்ருத்தியைக் கண்டு உகந்து பல்லாண்டு பாடவல்ல ஆழ்வார் போல்வார்க்குத்தான் அவ்விடம் அணுகக் கூடியது என்ற கருத்துத் தோன்ற அருளிச் செய்கிறா ரென்க

—————-

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-

பதவுரை

மென்ற பேழ்வாய்

(சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு

வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர்

ஒப்பற்றதாய்
கோள்

மிடுக்கையுடையதான
அரி ஆய்

நரசிங்கமாகி
பொன்றஅவுணன்

(தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய
ஆகம்

உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
போழ்ந்த

பிளந்திட்ட
புனிதன் இடம்

பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
சூறை

சுழல்காற்றானது
நின்ற செம் தீ மொண்டு

குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு
நீள் விசும்பூடு இரிய

விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே
சென்று காண்டற்கு அரிய கோயில்

கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.

”அவுணன் பொன்றவாகம்” என்ற விடத்திற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம். நரசிங்கத்தைக் கண்டவுடனே இரணியன் பொன்ற – முடிந்து போக, முடிந்தபிறகு அந்தப் பிணத்தைக் கிழித்துப்போட்டான் என்னலாம் இது அதிசயோக்தி. அன்றி, அவுணன் பொன்றும்படியாக (முடியும் படியாக) அவனது உடலைக் கிழித்தானென்னவுமாம்.

சூறை — சூறாவளிக்காற்று எனப்படும். அக்காற்று செந்தீயை மொண்டு கொண்டு ஆகாயத்திலே ஓடுகின்றதாம்.

“நீள் விசும்பூடு எரி” என்றும் பாட மருளிச்செய்வர். ஆகாயத்திலே போய் ஜ்வலிக்க என்றபடி.

சென்று காண்டற்கரிய கோயில் என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸுக்தி காண்க. “இப்படி யிருக்கையாலே ஒருவர்க்கும் சென்று காண்கைக்கு அரிதா யிருக்குமாயிற்று. பரமபதம்போலே இந்நிலத்துக்கும் நாம் பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டராகிறார்” என்று –

—————–

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–

பதவுரை

எரிந்த

(சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண்

பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு

விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது

இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று

என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர்

தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட

அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த

எழுந்தருளியிருந்த
அம்மானது இடம்

ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை

புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று

நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய்

பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும்

காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.

அஃது எப்படிப்பட்ட இடமென்னில்; மூங்கில் புதர்களினின்றும் புலிகள் பெருவழியிலே வந்து சேர்ந்து “இங்கு யானைகள் நடமாடின அடையாள முண்டோ?” என்று பார்க்கின்றனவாம். யானைகளை யடித்துத் தின்பதற்காக அவை உலாவின இடங்களைத் தேடித் திரிகின்ற புலிகள் நிறைந்ததாம் அத் தலம்.

—————-

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-

பதவுரை

முனைத்த சீற்றம்

மிக்க கோபமானது
போய்

வளர்ந்து சென்று
விண் சுட

ஆகாயத்தைக் கொளுத்தவும்
மூ உலகும்பிறவும்

மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்
அனைத்தும்

எல்லாம்
அஞ்ச

பயப்படவும்

ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்:-

கனைத்த தீயும்

ஒலி செய்கின்ற நெருப்பும்
கல்லும்

(அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும்
அல்லா வில் உடை வேடரும் ஆய்

உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே
தினை தனையும் செல்ல ஒண்ணா

க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான

சிங்கவேள்குன்றம்-

நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி  மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.

அவ்விடம் எப்படிப்பட்டது?; எரிகிறபோதுண்டான வெடுவெடென்கிற ஓசையையுடைத்தான நெருப்பும், அந்த நெருப்பிலே வைக்கோல் போர்போலே வேகின்ற கல்லுகளும், இவற்றிற்காட்டிலும் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும் அங்கு நிறைந்திருப்பதனாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது. –

“உகவாதார்க்குக் கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டிக்கண்ணெச்சில் பட வொண்ணாதபடி யிருந்த தேசமாயிற்று” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸுக்தி இங்கு நோக்கத் தக்கது.

தினைத்தனையும் = தினை என்று ஒரு சிறிய தானியத்திற்குப் பெயர் ; அவ்வளவும் என்றது – ஸ்வல்பகாலமும் என்றபடி.

“எட்டனைப்போது” (திருநெடுந்தாண்டகம் – 11) என்ற விடத்து எள் என்ற தானியத்தை யெடுத்துக்காட்டின தொக்கும் இது–

————

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

பதவுரை

நான் முகனும் ஈசனும் ஆய்

பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு
நா தழும்ப

நாக்குத் தடிக்கும்படி
முறையால் ஏத்த

கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண

ஓர் ஆள் அரி ஆய்இருந்த அம்மானது இடம்-.

காய்த்த

காய்கள் நிறைந்த
வாகை

வாகை மரங்களினுடைய
நெற்று

நெற்றுகளானவை
ஒலிப்ப

சப்திக்க,
கல் அதர்

கல்வழிகளிலேயுண்டான
வேய் கழை

குழல் மூங்கிற் செடிகள்
போய்

ஆகாசத்தை அளாவிப்போய்
தேய்த்த

(மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான
தீயால்

நெருப்பினால்
விண் சிவக்கும்

ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற

சிங்கவேள்குன்றம்-.

நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.

அஃது எப்படிப்பட்டது? – காய்கள் காய்த்துத் தொங்கப் பெற்ற வாகை மரங்களின் நெற்றுக்களானவை காற்றடித்துக் கலகலென் றொலிக்கின்றனவாம் சில விடங்களில். மற்றுஞ் சில விடங்களிலோ வென்னில்; ஆகாசத்தளவும் ஓங்கி வளர்கின்ற மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து நெருப்புப்பற்றி யெரிந்து விண்ணுலகத்தையும் சிவக்கடிக்கின்றனவாம்.

நாத்தழும்ப என்றதனால் இடைவிடாது அநவரதமும் துதிக்கின்றமை தோன்றும். முறையால் ஏத்த என்பதற்கு மாறிமாறித் துதிக்க என்றும் பொருள் கொள்ளலாம். ஒருசந்தை நான்முகனும் மற்றொரு சந்தை சிவனுமாக இப்படியே மாறிமாறி ஏத்துகின்றமையைச் சொன்ன படி.

நெற்று – உலர்ந்த பழம். அதர் – வழி. வேய் + கழை = வேய்ங்கழை

——–

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!
நல்லை

நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான்

நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற

பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம்

ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
நெல்லி

நெல்லி மரங்கள்
மல்கி

நிறைந்து

(கற்களினுள்ளே வேரோட்டத்தினால்)

கல் உடைப்ப

பாறைகளை உடைக்கவும்
புல் இலை ஆர்த்து

பனையோலைகள் ஒலிசெய்யவும்
அதர் வாய்

வழிகளிலே
சில்லி

சுவர்க்கோழிகளையுடைய
சில் என்று ஒல் அறாத

சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற
சிங்கவேள் குன்றம்

சிங்கவேள்குன்றத்தை
நாம்தொழுதும்

நாம் ஸேவிப்போம்.

கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;

அந்த அருமை ஆஸுரப்ரக்ருதிகளான பகவத் விரோதிகளுக்கேயொழிய, உகந்திருக்கும் அடியவர்களுக்கு அன்றே. அதனை இப்பாட்டில் வெளியிடுகிறார்.

பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக்கொண்டு நாம் அஞ்சாமல் சிங்கவேள் குன்றத்திலே சென்று தொழுவோம் நெஞ்சமே! என்கிறார் .

அல்லிமாதரான பிராட்டியோடே அணைந்திருப்பதனாலே நரசிங்க மூர்த்தியின் கோபாக்நிக்கு நாம் அஞ்சவேண்டியதில்லையென்றும்,

அவன் தான் நம்முடை நம்பெருமானாகையாலே அந்நிலத்தின் கொடுமைக்கும் அஞ்ச வேண்டிய தில்லையென்றும் குறிப்பிட்டபடி.

நம்பெருமான் என்றாலே போதுமாயிருக்க “நம்முடை நம்பெருமான்” என்றது அடியார் திறத்தில் அவன் மிகவும் விதே யனாயிருக்கும்படியைக் காட்டும்.

அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன் என்ற சொல் நயத்தால்-பிராட் டியை அணைக்கும் போது எம்பெருமானுக்கு ஸந்தோஷ மிகுதியினால் தழுவுதற்கு உறுப்பான தோள்கள் ஸஹஸ்ர முகமாக வளர்கின்றமை விளங்கும்.

“இவளணைத்தால் இவளைக் கட்டிக்கொள்ள ஆயிரம் தோள் உண்டாமாயிற்று” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

”தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேருதவிக்கைம்மாறாத், தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறவிலை செய்தனன்” (திருவாய்மொழி 8-1-10.)என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினத்தாலுண்டான ஸந்தோஷத்தினால்

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணை மலர்க் கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” (திருவாய்மொழி 8-1-10.) என்னும்படி யானால் பிராட்டியின் சேர்த்தியினால் உண்டாகக் கூடிய உடல் பூரிப்பு சொல்ல வேணுமோ ?

(நெல்லி மல்கி இத்யாதி.) நெல்லி மரங்களானவை கல்லிடைகளிலே முளைத்து வளர்ந்து கல்லிடைகளிலே வேரோடுகையாலே அந்த வேர்கள் பருத்துப் பாறைகளைப் பேர்க்கின்றனவாம்.

பெரியவாச்சான் பிள்ளையும் ”நெல்லி மரங்கள் வேரோடிக் கற்களையுடையப் பண்ணும்” என்றே அருளிச் செய்கிறார்;

இங்கே சிலர் சொல்லும் பொருளாவது – நெல்லி மரங்களிலிருந்து இற்றுவிழுகின்ற நெல்லிக்காய்கள் பாறைகளின் மீது விழுந்து கற்களையுடைக்கின்றன என்பதாம். அப்போது, நெல்லி என்றது ஆகுபெயரால் நெல்லிக்காய்களைச் சொல்லவேண்டும்.

புல்லிலை யார்த்து = மூங்கிலிலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். பனை யோலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். ஆர்த்தல் – ஒலித்தல்.

சில்லி சில்லென்றொல்லறாத = வடமொழியில் சுவர்க்கோழிக்கு ‘ஜில்லிகா’ என்று பெயர்; அச்சொல்லே இங்குச் சில்லி யென்று கிடக்கிறது. “நல்லை நெஞ்சே ” (நல்ல நெஞ்சே)” என்பன பாட பேதங்கள்

————-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

பதவுரை

செம்கண் ஆளி

சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்
இட்டு

(தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து
இறைஞ்சும்

வணங்குமிடமான
சிங்க வேழ் குன்று உடைய

சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்
எங்கள் ஈசன்

ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்
எம் பிரானை

நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,
இரு தமிழ் நூல் புலவன்

பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்
மங்கை ஆளன்

திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்
மன்னு தொல்சீர்

நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்
வண்டு அறைதார்

வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்
செம் கை ஆளன்

மிக்க உதாரரான
கலியன்

ஆழ்வாரருளிச்செய்த
செம் சொல் மாலை

செவ்விய இச்சொல் மாலையை
வல்லவர்

ஓதவல்லவர்கள்
தீது இலர்

தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.

வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

செங்கணாளியிட்டிறைஞ்சும் என்றவிடத்து –नवं शवमिदं पुण्यं वेदपारगमच्युत | यज्ञ्शीलं महाप्राज्ञं ब्राह्मणं शिवमुत्तमम् || நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத – யஜ்ஞ்சீலம் மஹா ப்ராஜ்ஞம் ப்ராஹ்மணம் சிவ முத்தமம் என்ற கண்டாகர்ணனுடைய வசனம் நினைக்கத்தகும். அவன், தனக்கு உண வாகிய பிணங்களை எம்பெருமானுக்கு நிவேதநஞ் செய்து உண்டது போல, சிங்கங்க ளும் செய்கிறபடி.

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-6–வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார்— ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

பதவுரை

விளங்கனி முனிந்தாய்

விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே!
வஞ்சனேன் அடியேன் 

நெஞ்சினில் பிரியா வானவா

வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே!
தானவர்க்கு என்றும் நஞ்சனே

அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்!-;

நீதி அல்லாதன

அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும்

(முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும்

(பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும்

(பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார்

முடிந்தவர்கள்
செல்லும்

அடையத்தக்க
தொல் நெறி

நரகமார்க்கத்தை
கேட்டே

(கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே
துளங்கினேன்

நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-.

மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.

சிலர் பாவஞ் செய்யவேணுமென்று முன்னாடி நெஞ்சால் நினையாமலும் வாயால் சொல்லாமலுமிருந்தாலும் திடீரென்று விதிவசமாகப் பாவஞ்செய்து விட நேருவதுண்டு; அப்படிப்பட்டவர்களுடைய பாவங்கள் பொறுமைக்கு விஷயமாகவுங்கூடும்;

அங்ஙனன்றிக்கே, ‘நாம் கட்டாயம் பாவஞ் செய்ய வேணும் ‘ என்று நெடுநாளாகவே நெஞ்சில் பாரித்துக் கொண்டு அதை அடிக்கடி வாயாலுஞ் சொல்லிக் கொண்டிருந்து அப்படியே செய்கையிலும் செய்து தீர்ப்பவர்களுடைய பாவங்கள் அநுபவித்தே தீரவேண்டியவையாகையால் நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் செய்தும் ” என்றார்.

இங்ஙனே செய்து செத்தவர்கள் செல்லுகிற தொன்னெறியாவது நரகமார்க்கம். தொல் நெறி = அநாதியான வழி; பகவத்கீதையில் எட்டாவது அத்யாயத்தில் “శుక్లకృష్ణగతీ హ్యేతే జగతళ్ళాశ్వతే మ | ఏకయా యాతనావృత్తి మన్యయావర్తతే పునః” = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யேதே ஜகதச் சாச்வதே மதே-ஏகயா யாத்யநாவ்ருத்தி மந்யயாவர்த்ததே புந:” (சுக்லகதியென்கிற அர்ச்சிராதிமார்க்கமும் க்ருஷ்ண கதியென்கிற தூமாதிமார்க்கமும் உலகத்திற்கு சாச்வதமாய் ஏற்பட்டவைகள் ; இவற்றுள் சுக்லகதியாற் சென்றவன் மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்பி வருகிறதில்லை ; க்ருஷ்ணகதியாற் செல்லுமவன் திரும்பிவிடுகிறான்) என்னும் போது அர்ச்சிராதிமார்க்கம் போலவே தூமாதி மார்க்கமும் நித்தியம் என்றமை யால் இங்குத் தொன்னெறி என்றது பொருந்துமென்க.

சாச்வதம் என்கிற விஷயத்தில் இரண்டு மார்க்கங்களும் ஒத்திருந்தாலும் அர்ச்சிராதிமார்க்கம் பெரும் பாலும் புல்மூடிக்கிடக்கும்; தூமாதிமார்க்கம் இடையறாத ஆட்களையுடைத்தாய் வழி தேய்ந்திருக்குமென்று வாசி காண்க.

விளங்கனி முனிந்த வரலாறு வருமாறு :- கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய் கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்து கொல்வதாக எண்ணிவந்து நிற்க, அஃதறிந்த க்ருஷ்ணபகவான், அவ்வாறே தன்னைக கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு வந்த வத்ஸாஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின் மேலெறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்தனரென்பதாம்.

” அடியேன் “ என்று கபடமாக ஒருவார்த்தை சொன்னாலும் அதை மெய் யன்போடு சொன்ன சொல்லாகத் திருவுள்ளம்பற்றி நெஞ்சை விட்டு அகலாது நெஞ்சிலேயே குடிகொண்டிருப்பன் என்கிற ஸௌசீல்ய குணத்தைப் பேசுகிறார் வஞ்சனேனடியேன் னெஞ்சினில் பிரியாவானவா என்று.

இப்படிப்பட்ட ஸௌசீல்யம் பிரதிகூலர் பக்கலிலும் இருக்குமாகில் அர்த்தமாகுமே; அப் படியில்லை என்கிறார் தானவர்க்கு என்றும் நஞ்சனே! என்று

———–

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

பதவுரை

குறுங்குடி

திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற
நெடு கடல் வண்ணா

பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்-;

கலியார்

கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று

“இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல்

என் மேலே
ஐவர் ஏவினார்

பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு

அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)
நான்

அடியேன்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்

குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்;

(அதுதானெப்படிச் செய்தீரென்னில;)

என் நாவினால்

எனது நாவினாலே
பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு

நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு
உன் பாதமே பரவி

உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து
பணிந்து

கீழே விழுந்து

உன் திருவடிவந்து  அடைந்தேன்-;

(ஆதலால் கலியை வென்றேனென்றபடி.)

கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ;

நான் இத்தனை நாளும் இருந்தபடியே இருந்தேனாகில் அவற்றால் மிகவும் துன்பப்பட்டிருப்பேன்;

தைவாதீநமாக நான் பழைய நிலைமையில் நின்றும் நீங்கி உன் திருவடிகளில் புஷ்பங்களை ஸமர்ப்பித்தும் நமஸ்காரம் செய்தும் தோத்திரங்கள் பண்ணியும் வருகிறேனாகையால் இந்திரியங்களின் செங்கோன்மை என்னிடம் செல்லவொண்ணாதபடி தடுத்துவிட்டேன்;

கலி புருஷனுடைய கட்டளை பாறிப்பறந்து போயிற்று; அந்தக்கலி புருஷன் இனி இவ்வுலகில் வாழ்வதற்கே வழியில்லை – என்று திருவுள்ளமுவந்து அருளிச் செய்கிறாராயிற்று.

கலியார் = பெருமைப்படுத்திச் சொல்லுகிற வார்த்தையன்று; கோவமும் பகையும் இழிவுந்தோற்றச் சொல்லுகிறபடி. ”வினையார் ” என்று பாவங்களைச் சொல்வது போல. நலிக = வியங்கோள் வினைமுற்று.

“எங்ஙனே வாழுமாறு என்பதற்கு இனி நான் எப்படி வாழ்வேன்’ என்று ஆழ்வார் இந்திரியங்களுக்கோ கலிபுருஷனுக்கோ அஞ்சி நடுங்கிச் சொல்லுகிறதாகப் பொருள் கூறுவர் சிலர் ; அது பிரகரணத்திற்குச் சேராது.

“கோவினார் செய்யுங் கொடுமையை மடித்தேன்” என்று உடனே அருளிச் செய்கிறாராகையாலே, தாம் அஞ்சின தாகப் பொருள் கொள்ள வொண்ணாது. அந்தக் கலி புருஷன் இனி வாழ்வதற்கு வழி யுண்டோ ? என்பதாகவே கொள்க

——————-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

பதவுரை

தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே

தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய்

அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்!-;

ஊன்

மாமிசத்தை
இடை சுவர் வைத்து

நடுநடுவே சுவராக வைத்து
என்பு

எலும்புகளை
தூண் நாட்டி

கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து

மயிர்களை மேலே மூடி
ஒன்பது வாசல் தான் உடை

நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை

குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது

விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்

உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன்

(இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.

தம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில்.

சரீரத்தை ஒரு குடிசையாக உருவகப்படுத்துகின்றார். குடிசையில் இடையிடையே சுவர்கள் வைக்கப்பட்டிருக்கும்; இவ்வுடலில் மாம்ஸபிண்டங்கள் சுவர்போலிருக்கின்றன; குடிசையில் தூண்கள் நாட்டப்பட்டிருக்கும்; இதில் எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன. குடிசையில் பல வாசல்களுண்டு;

உடலிலும் நவத்வாரங்கள் ப்ரத்யக்ஷமே. குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால் மூடப்பட்டிருக்கும்; இதுவும் உரோமங்களால் மூடப்பட்டிராநின்றது.

ஆக இவ்வகைகளாலே ஒரு குடிசை யென்னலாம்படி யிராநின்றதிறே இவ்வுடல்; குடிசையிலே நாம் வாழ்வதுபோல் இவ்வுடலில் ஆத்மா வாழ்கின்றான்; இவ்வுடலைவிட்டு ஆத்மா வெளிக்கிளம்புங்காலமே மரணமெனப்படும்.

அப்படி மரணம் நேர்ந்தபிறகு இவ்வாத்மா போய்ச் சேரவேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே – என்கிற அத்யவஸாயம் தமக்கு இருக்கிறபடியை முன்னடிகளால் அருளிச் செய்தாராயிற்று.

யமபடர்கள் வந்து என்னைப்பற்றியிழுத்துக் கொண்டு போய்ப் பலவகையான ஹிம்ஸைகளைச் செய்வதற்கு உறுப்பான பாவங்களை நான் வேண்டியபடி செய்து வைத்திருந்தாலும், இன்று தேனுடைக்கமலத்திரு வாகிய பெரியபிராட்டியாரை முன்னிட்டு உன்னைச் சரணமடையும்படியான பாக்கியம் எனக்கு நேர்ந்ததனால் இனி நான் யமபுரம் சென்று வருந்த வேண்டிய ப்ரஸக்தியில்லை;

உன் திருவடிகளையே கிட்டி ஆநந்திக்க வழி ஏற்பட்டுவிட்டது என்று தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டாரென்றுணர்க.

“நானுடைத் தவத்தால்”என்றது என்னுடைத்தவத்தால் என்றபடி.

இவருடைய தவமாவது என்ன? என்றால், எம்பெருமானுடைய திருவருளையே தம்முடைய தவமாகச் சொல்லிக்கொள்வர்கள் ஆழ்வார்கள்.

உன்னருளாலே உன்னடி வந்து பணிந்தேனென்றபடி.

————–

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

பதவுரை

ஏதம் வந்து அணுகா வண்ணம்

“துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை
நாம் எண்ணி

நாம் எண்ணியிருப்போமாகில்
தொழுதும் எழு மின் என்று

(நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி

(தேவர்களெல்லாரையுங்கூட்டிக்கொண்டு)

இமையோர் நாதன் வந்து

தேவேந்திரன் வந்து
இறைஞ்சும்

ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை

நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து

தியானம் செய்து
காதல் மிகுந்த

பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற
கலியன்

திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்மாலை

அருளிச் செய்த இச்சொல் மாலையை
கற்று வல்லுநர்கள் தாம்

அப்யஸித்துத் தேறினவர்கள்
ஓதம்நீர் வையகம்

கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை
வெண் குடை கீழ் ஆண்டு

வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு
உம்பரும் ஆகுவர்

நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள்.

இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;

ஸேவித்தோமாகில் நம் முடைய ஏதங்களெல்லாம் ஓடிப்போய்விடும்’ என்று சொல்லி எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து ஸேவித்திருக்குமிடமாம் நைமிசாரணியம்.

அவ்விடத்தில் அரண்ய ரூபியாக ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திரு மங்கையாழ்வாரருளிச் செய்த இச்சொல்மாலையை ஓதவல்லவர்கள், இவ்வுலகத்து அநுபவங்களில் விருப்பமுண்டாகில் அவற்றை உண்டுகளித்தபின் நித்ய ஸூரிகளின் கோஷ்டியிலும் சென்று சேர்ந்து நித்யாநந்தம் அநுபவிக்கப்பெறுவர்கள் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

———–

அடிவரவு:- வாணிலா சிலம்பு சூதினை வம்பு இடும்பையால் கோடிய நெஞ்சினால் ஏவினார் ஊன் ஏதம் அங்கண்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-5–கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-4–ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-3–முற்ற மூத்துக் கோல் துணையா— ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-2—வாலி மா வலத்தொருவன துடல்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 18, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-1—வாடினேன் வாடி– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 18, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-