ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -66–ஸ்ரீ கோபீ ஜன ஆஹ்லாதனம் –

உபயாதா நாம் ஸூத்ருசாம் குஸூமாயுத பாண பாத விவசா நாம்
அபி வாஞ்சிதம் விதாதும் க்ருத மதிரபிதா ஜகாத வாம மிவ –1-

குஸூமாயுத-மலர்க் கணை -மன்மதன்

தங்கள் அருகே நின்ற கோபிமார்கள் மயங்கி நின்றார்கள் –
அவர்கள் விருப்பத்தைப் பற்றித் தெரிந்து இருந்தும் –வாம மிவ-நேர் மாறாகப் பேசினீர்கள் –

————-

ககந கதம் முனி நிவஹம் ஸ்ரா வயிதும் ஐகித குல வதூ தர்மம்
தர்ம்யம் கலு தே வசனம் கர்ம துநோ நிர்மலஸ்ய விஸ்வாஸ்யம் –2-

வானத்தில் கூடி இருக்கும் முனிவர்களும் -உலக மக்களும் கேட்பதற்காக –குல வதூ தர்மம்-குடும்பப் பெண்களின்
தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு எடுத்துக் கூறினீர்கள் –
தர்மம் நிறைந்த அச் சொற்களைக் கடைப் பிடிக்க வேண்டும் –
உம்முடைய செய்கைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது –நிர்மலஸ்ய–நீ எந்தச் செயல்கள் செய்தாலும் நிர்மலமாகுமே-அனைவரும் சரீர பூதர்களே

—————

ஆகர்ண்ய தே பிரதீ பாம் வாணீம் ஏணீ த்ருஸ பரம் தீநா
மா மா கருணா ஸிந்தோ பரி த்யஜேத் யதி சிரம் விலே புஸ்தா –3-

ஏணீ த்ருஸ–மான் போன்ற மருட்சி கொண்ட கண்கள் கொண்ட

நேர் மாறான தங்கள் வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர் –
கருணைக் கடலே அடியோங்களைப் புறக் கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள் –

————-

தாஸாம் ருதிதைர் லபிதை கருணா குல மாநஸோ முராரே த்வம்
தாபிஸ் சமம் ப்ரவ்ருத்தோ யமுனா புலி நேஷு காம ரபி ரந்தும் –-4-

அனுபவ உறுதி உள்ளதா சோதித்துப் பார்த்தான் முன்பு

முரனைக் கொன்றவன் அவர்கள் புலம்பிக் கொண்டு அழுவதைப் பார்த்த தாங்கள்
கருணை கொண்டீர்கள் –
யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினீர்கள் –

———-

சந்த்ர கரஸ் யந்த லஸத் ஸூந்தர யமுநா தடாந்த வீதீஷு
கோபீ ஜன உ த்தரீயைர் ஆபாதித ஸம்ஸ்தரோ ந்யஷீ தஸ் த்வம் –5-

நில ஒளி வீசும் யமுனைக் கரையில் மணல் குன்றுகளில் கோபிகள் மேல் ஆடையினால்
தங்களுக்கு ஆசனம் அமைத்தார்கள் -அதில் தங்கள் அமர்ந்தீர்கள் –

———

ஸூ மதுர நர்மாலபநை கர ஸம் க்ரஹணைஸ் ச சும்ப நோல்லாஸை
காட ஆலிங்கந சங்கைஸ் த்வம் அங்கநா லோகம் ஆகுலீ சக்ருஷே –6-

கைகளைப் பிடித்தும் முத்தம் இட்டும் கட்டி அணைத்தும் இனிமையைப் பேசியும்
அந்த கோபிகைகள் மனங்களை மயக்கி அவர்களை மகிழ்வித்தீர்கள் –

————

வாஸோ ஹரண திநே யத் வாஸோ ஹரணம் ப்ரதி ஸ்ருதம் தாஸாம்
ததபி விபோ ரஸ விவஸ ஸ்வாந்தாநாம் காந்த ஸூப்ருவாம் அத தா –7-

முன்பு ஆடைகளைக் கவர்ந்த போது தங்கள் கொடுத்த வாக்கின் படி தங்கள் செய்கையால்
மனம் கலங்கிய அந்தப் பெண்களின் ஆடைகளை மீண்டும் கவர்ந்தீர்கள் –

———

கந்த லித கர்ம லேஸம் குந்த ம்ருது ஸ்மேர வக்த்ர பாதோஜம்
நந்த ஸூத த்வாம் த்ரி ஜகத் ஸூந்தரம் உப கூஹ்ய நந்திதா பாலா –8-

நந்தனின் புத்திரனே குந்த மலர் போல் மந்தஹாசம் செய்தீர் -தாமரை போன்ற தங்கள் திரு முகம்
சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து இருந்தது – மூ உலகிலும் அழகு வாய்ந்த தங்களை
அப் பெண்கள் உப கூஹ்ய-ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் –புவந ஸூ ந்தரன் இவனே

————

விரஹேஷ் வங்கார மய ஸ்ருங்கார மயஸ் ச சங்கமே ஹி த்வம்
நிதார மங்கா ரமயஸ் தத்ர புனஸ் சங்கமே அபி சித்ரமிதம் –9-

தங்களைப் பிரியும் போது நெருப்பைப் போல் தாபம் அளிப்பவராயும் – சேரும் போது
ஸ்ருங்காரமாகவும் இருப்பீர்கள்
ஆனால் இப்போதோ சேர்க்கையிலும் அளவில்லாத ஆனந்தம் அளிப்பவராய் இருக்கிறீர்கள் -ஆச்சர்யம் –

அங்காரா மயம் கொள்ளிக் கட்டை

நிதார மங்கா ரமயஸ்-நிதாரம் அங்க அரமயஸ்–இயற்கையாகவே இருக்க கோபிகள் சங்கத்தால் ஆனந்தம் சொல்ல வேண்டுமோ

——–

ராதா துங்க பயோதர சாது பரீ ரம்ப லோலு பாத்மா நம்
ஆராதயே பவந்தம் பவன புராதீச சமய சகல கதான் –10-

உயர்ந்த கொங்கைகளை யுடைய ராதையைத் தழுவ எண்ணம் கொண்ட தங்களையே தொழுகிறேன்
அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பன்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading