ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -59–திருக் குழல் ஓசை வர்ணனை -திரு வேணு கானம்-

முதல் ஒன்பது ஸ்லோகங்களும் ரஸோத்ததா மீட்டரிலும் நிகமன ஸ்லோகம் ஸாலினி மீட்டரிலும் அமைந்த தசகம்

த்வத் வபுர் நவ கலாய கோமலம் ப்ரேம தோஹநம் அசேஷ மோஹநம்
ப்ரஹ்ம தத்துவ பர சின் முதாத்மகம் வீஷ்ய சம்முமுஹுர் அந்வஹம் ஸ்த்ரிய –1-

காயாம்பூ போன்ற நிறமுள்ள தங்கள் திருமேனி அனைவரையும் ஆநந்திக்கச் செய்தது –
தங்களது நிரதிசய ஞான ஆனந்த ப்ரஹ்ம திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கோபிமார்கள்மிகுந்த மோஹத்தை அடைந்தனர் –

அந்வஹம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன் அன்றோ

———————–

மன்மத உன்மதித மானசா க்ரமாத் த்வத் விலோக நரதாஸ் ததஸ் தத
கோபிகாஸ் தவ ந சேஹிரே ஹரே காநந உபகதி மப்யஹர் முகே –2-

தாங்களைக் காண்பதிலேயே விருப்பம் கொண்ட கோபிமார் மன்மதனால் தாக்கப்பட்ட
மனதை உடையவர்களாய் இருந்தார்கள் –
ஆகையால் காலையில் காட்டுக்கு மாடுகளை மேய்க்கப் கூடச் செல்லவில்லை –

அழகையே மத்தாக காதலைக் கடைந்து-ஹரே-உள்ளம் கவர் கள்வன்

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -மாடு மேய்க்கப் போக வேண்டாம் கண்ணா

————–

நிர்கதே பவதி தத்த த்ருஷ்டயஸ் த்வத் கதேந மனசா ம்ருகேஷணா
வேணு நாதம் உப கர்ண்ய தூரதஸ் த்வத் விலாஸ கதயா அபி ரேமிரே –3–

தங்கள் மாடு மேய்க்கச் சென்ற போது தாங்கள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் –
தங்கள் திரு வடிவை மனதில் வைத்து வெகு தூரத்தில் இருந்து கேட்க்கும்
தங்கள் குழல் ஓசையைக் கேட்டு மகிழ்ந்தனர் –
தங்கள் விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளை பேசியே ஆனந்தித்தனர் –

நந்த கிராமம் -தவழ்ந்த பின்பு இடம் பெயர்ந்தார்கள் -இங்கு இருந்து தான் மதுரைக்கு போனான்
கோகுலம்-முதலில் கண்ணபிரான் வந்த இடம் – –
பிருந்தாவனம் -மாடு மேய்க்கப் போன இடம்
தத்த த்ருஷ்டயஸ் த்வத் கதேந மனசா ம்ருகேஷணா-மான் போன்றவர் கண்களும் உள்ளமும் உன் பின்னே வர-உடலை விட்டு உயிர் பிரிவதைத் தாங்களே பார்த்தார்கள் -நீ மாடு மேய்க்கப் போன போது-ராமர் விசுவாமித்திரர் உடன் செல்லும் பொழுது சக்ரவர்த்தி பார்த்தது போல்

ஆச்சார்யர் மூலமே அவனை அறியலாம் -புல்லாங்குழல் -அதே போல் -உபதேசம் கேட்டு அவன் அனுபவம் போல் வேணு நாதம் கேட்டு அவன் அனுபவம் கிட்டும்

————-

காந நாந்தம் இதவான் பவாநபி ஸ்நிக்த பாத பதலே மநோரமே
வ்யத்யயா கலித பாதம் ஆஸ்தித ப்ரத்யு பூரயத வேணு நாலிகாம் –4–

கானகம் சென்ற உடன் அழகு நிரம்பிய மரத்தடியில் திருவடிகளை மாற்றி நின்று
திருப் புல்லாங்குழலை ஊதினீர்கள் –

—————–

மார பாண துதகேசரீ குலம் நிர்விகார பஸூ பக்ஷி மண்டலம்
த்ரா வணம் ச த்ருஷதாமபி ப்ரபோ தாவகம் வ்யஜநி வேணு கூஜிதம் –5-

தங்கள் திருக் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது –
பசுக்கள் பறவைகள் முதலியவை செயல் அற்று நின்றன –
கற்களையும் உருகச் செய்தது –

————-

வேணு ரந்தர தரல அங்குலீதலம் தால சஞ்சலித பாத பல்லவம்
தத் ஸ்திதம் தவ பரோக்ஷம் அப்யஹோ சம் விசிந்த்ய முமுஹுர் வ்ரஜாங்கநா –6–

கோபிகைகள் தொலைவில் இருந்தாலும் திருக் குழலின் மீது விளையாடும் தங்கள் விரல்களையும்
தாளம் இடும் தங்கள் திருப் பாதங்களையும் நினைத்து மெய் மறந்தனர் –

————–

நிர் விசங்க பவத் அங்க தர்ஸிநீ கேசரீ கக ம்ருகாந் பஸூ நபி
த்வத் பத பிரணயி காநநம் சதா தன்ய தன்யமிதி நன்வ மாநயன் –7-

தங்களைப் பார்க்கும் தேவப் பெண்டிரையும் மிருகங்களையும் பசுக்களையும் தங்கள்
சம்பந்தம் பெற்ற கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபிமார் எண்ணினார்கள்

—————

ஆபி பேயம்  அதராம்ருதம் கதா வேணு புக்த ரஸ சேஷம் ஏகதா
தூரதோ பத க்ருதம் துரா சயேத் யாகுலா முஹு ரிமா சமா முஹன் –8-

திருப் புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமோ –
வெகு தூரத்தில் உள்ள கிடைக்காத இதைப் பற்றிய ஆசையே போதும் என்று ஏங்கித் தவித்தனர் –

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-

————-

ப்ரத்யஹம் ச புநர் இத்தம் அங்கநாஸ் சித்த யோநி ஜெனிதா தனுக்ரஹாத்
பத்த ராக விவசாஸ் த்வயி ப்ரபோ நித்யமாபுர் இஹ க்ருத்ய மூடதாம் –9–

இவ்வாறு தினமும் –சித்த யோநி-மன்மதனால் கோபிகைகள் மனம் கலக்கம் உற்றது – தங்கள் இடம் வைத்த
அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள் –

——-

ராகஸ் தாவஜ் ஜாயதே ஹி ஸ்வபாவாந்
மோக்ஷ உபாயோ யத்நதஸ் யாந்த வா ஸ்யாத்
தாஸாம் த்வேகம் தத் த்வயம் லப்த மாஸீத்
பாக்யம் பாக்யம் பாஹி மாம் மாருதேச –10-

உலகில் எல்லாருக்கும் இயற்கையாவே ஆசை உண்டாகிறது -முயற்சியினால் மோக்ஷம்
உண்டாகலாம் அல்லது உண்டாகாமல் இருக்கலாம்
ஆனால் கோபிகைகளுக்கு இவ் விரண்டும் ஒன்றாகவே கிடைத்து விட்டது –
என்னே பாக்யம் -ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading