ஸ்ரீ நாராயணீயம் – தஶகம் 68–ஸ்ரீ கோபிகா கீதம்–ஸ்ரீ கோபிகானாம் ஆஹ்லாத பிரகடனம் —

இந்த தசகம் முழுவதும் (ஸ்ரீ க்ருஷ்ணா) என்பதைச் சேர்த்தே சொல்ல வேண்டும்.
ஸ்ரீ பாகவதத்திலுள்ள கோபிகா கீதம் போல் பாட வேண்டும்.-அதே சந்தஸ்ஸில் இங்கும் உண்டு

தவ விலோகநாத்(க்ருஷ்ணா)கோபிகா ஜநா:
ப்ரமத ஸங்குலா: (க்ருஷ்ணா)பங்கஜேக்ஷண |
அம்ருத தாரயா(க்ருஷ்ணா) ஸம்ப்லுதா இவ
ஸ்திமிததாம் தது(க்ருஷ்ணா)ஸ்த்வத் புரோகதா: || 1||

தங்களை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற சந்தோஷத்தினால் திகைத்து நின்றனர்.
அமிர்த மழையால் நனைக்கப் பட்டவர்கள் போல் அசைவற்று நின்றனர்.

—————

ததநு காசந(க்ருஷ்ணா) த்வத் கராம்புஜம்
ஸபதி க்ருஹ்ணதீ(க்ருஷ்ணா) நிர்விஶங்கிதம் |
கநபயோதரே(க்ருஷ்ணா) ஸந்நிதாய ஸா
புலக ஸம்வ்ருதா(க்ருஷ்ணா) தஸ்துஷீ சிரம் || 2||

ஒரு கோபிகை, மயிர்க் கூச்சலுடன், உமது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள்.

———-

தவ விபோ(அ)பரா(க்ருஷ்ணா) கோமலம் புஜம்
நிஜ கலாந்தரே(க்ருஷ்ணா) பர்ய வேஷ்டயத் |
கல ஸமுத்கதம்(க்ருஷ்ணா) ப்ராண மாருதம்
ப்ரதி நிருந்ததீவ(க்ருஷ்ணா)அதி ஹர்ஷுலா || 3||

மற்றொருவள், உமது கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.

———

அபகத த்ரபா(க்ருஷ்ணா) காபி காமிநீ
தவ முகாம்புஜாத்(க்ருஷ்ணா) பூகசர்விதம் |
ப்ரதி க்ருஹய்ய தத்(க்ருஷ்ணா)வக்த்ர பங்கஜே
நிதததீ கதா(க்ருஷ்ணா) பூர்ணகாமதாம் || 4||

இன்னொரு கோபிகை, வெட்கத்தை விட்டு, உமது வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று,
அதை உண்டு, அனைத்தையும் அடைந்து விட்டதாய் நினைத்தாள்.

————–

விகருணோ வநே(க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம்
அபகதோ(அ)ஸி கா(க்ருஷ்ணா) த்வாமிஹ ஸ்ப்ருஶேத் |
இதி ஸரோஷயா(க்ருஷ்ணா) தாவதேகயா
ஸஜல லோசநம்(க்ருஷ்ணா) வீக்ஷிதோ பவாந் || 5||

இரக்கமில்லாமல் என்னைக் காட்டில் விட்டு விட்டுச் சென்ற உன்னை யாரும் தொடமாட்டார்கள் என்று
ஒரு கோபிகை கண்ணில் நீர் வழிய-ப்ரணய ரோஷத்துடன் -கோபத்துடன் கூறினாள்.

————

இதி முதா(அ)(அ)குலைர்(க்ருஷ்ணா)வல்லவீ ஜநை:
ஸமமுபாகதோ(க்ருஷ்ணா) யாமுநே தடே |
ம்ருது குசாம்பரை: (க்ருஷ்ணா)கல்பிதாஸநே
குஸ்ருணபாஸுரே(க்ருஷ்ணா) பர்யஶோபதா: || 6||

ஆனந்தப் பரவசர்களாகி அக் கோபியர்கள், யமுனைக் கரையில் தமது மேலாக்கினால்
ஆசனம் செய்தார்கள். தாங்களும் அதில் அமர்ந்தீர்கள்.

———

கதி விதா க்ருபா(க்ருஷ்ணா) கே(அ)பி ஸர்வதோ
த்ருத தயோதயா: (க்ருஷ்ணா)கேசிதாஶ்ரிதே |
கதிசிதீ த்ருஶா(க்ருஷ்ணா) மாத்ருஶேஷ்வபீதி
அபிஹிதோ பவாந்(க்ருஷ்ணா) வல்லவீ ஜநை: || 7||

கருணை எத்தனை விதம்? சிலர் அனைவரிடத்திலும், சிலர் தன்னை அண்டியவர்களிடத்திலும் கருணை காட்டுகிறார்கள்.
சிலர், வீடு வாசலை விட்டு அண்டியவர்களிடத்திலும்கூட கருணையற்று இருக்கிறார்கள் என்று உம்மைப் பார்த்து கோபியர் கூறினர்.

———-

அயி குமாரிகா(ராதே) நைவ ஶங்க்யதாம்
கடிநதா மயி(ராதே) ப்ரேமகாதரே |
மயி து சேதஸோ(ராதே) வோ(அ)நுவ்ருத்தயே
க்ருதமிதம் மயா(க்ருஷ்ணா)இத்யூசிவாந் பவாந் || 8||

பெண்களே! கல் நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து,
உங்களுடைய மனம் என்னையே நாட வேண்டும் என்று நான் மறைந்து சென்றேன் என்று அவர்களிடம் கூறினீர்கள்.

அன்பு நிலைத்து இருக்க செய்த செயல்
விஸ்லேஷ விரஹம் அறிய வேண்டுமே

———–

அயி நிஶம்யதாம்(ராதே) ஜீவ வல்லபா:
ப்ரிய தமோ ஜன: (ராதே) நேத்ருஶோ மம |
ததிஹ ரம்யதாம்(ராதே) ரம்யயாமிநீஷு
அநுபரோதமிதி(க்ருஷ்ணா)ஆலபோ விபோ || 9||

உயிரினும் மேலான கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது.
ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள் என்று கூறினீர்.

————

இதி கிராதிகம்(க்ருஷ்ணா) மோதமேதுரை:
வ்ரஜ வதூ ஜநை: (க்ருஷ்ணா)ஸாகமாரமந் |
கலித கௌதுகோ(க்ருஷ்ணா) ராஸ கேலநே
குரு புரீ பதே(க்ருஷ்ணா) பாஹி மாம் கதாத் || 10||

தங்கள் வார்த்தையால் மிகுந்த ஆனந்தம் அடைந்த கோபியர்களுடன் யமுனைக் கரையில் விளையாடினீர்கள்.
குருவாயூரப்பா! தாங்கள் என்னை நோய்க் கூட்டத்திலிருந்து காத்து அருள வேண்டும்.

—————–——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading