ததஸ் ச வ்ருந்தா வனதோ அதி தூரதோ
வனம் கதஸ் த்வம் கலு கோப கோகுலை
ஹ்ருதந்தரே பக்த தரத் விஜ அங்கநா
கதம்பக அநுக்ரஹண ஆக்ரஹம் வஹன் —1–வம்சத்தம் பா வகை -அனைத்து ஸ்லோகங்களும்
ததஸ் ச-அதற்குப் பின்பு -வஸ்தாபரணம் பண்ணிய பின்பு-பக்த விலோசனத்துக்கு போய் அநுக்ரஹித்த
ஒரு முறை தங்கள் இடத்தில் பக்தி கொண்ட பிராமணப் பெண்களை ஆசீர்வதிக்கும்
நோக்கத்துடன் தாங்கள் ஸ்ரீ ப்ருந்தா வனத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள காட்டுக்கு
பசுக்களுடனும் இடைச் சிறுவர்களுடனும் சென்றீர்கள் –
————
ததோ நிரீஷ்ய அசரணே வநாந்தரே
கிசோர லோகம் ஷுதிதம் த்ருஷாகுலம்
அதூரதோ யஜ்ஞ பரான் த்விஜான் ப்ரதி
வ்யஸர்ஐயோ தீதிவி யாசநாய தான் –2-
அசரணே-நிழலே இல்லாத
மனித நடமாட்டம் அற்ற அக் காட்டிலே சிறுவர்களும் பசுக்களும் ஷுதிதம்-பசியாலும் த்ருஷாகுலம்-தாகத்தாலும் வாடினர் –
அதைக் கண்ட தாங்கள் அருகே யாகம் செய்து கொண்டு இருக்கும் அந்தணர்கள் இடம்
உணவு கேட்கச் சொல்லி அச் சிறுவர்களை அனுப்பினீர்கள் –
————
கதேஷ் வதோதேஷ் வபிதாய தே அபிதாம்
குமாரகேஷ் வோதந யாசிஷு ப்ரபோ
ஸ்ருதி ஸ்திரா அப்யபி நின்யு ரஸ்ருதிம்
ந கிஞ்சி தூசுஸ் ச மஹீஸூ ரோத்தமா –-3-
அவர்கள் அந்தணர்கள் இடம் தம் பெயரைக் கூறி யாசித்தார்கள் – வேதம் அறிந்த அந்த
அந்தணர்கள் காது கேட்க்காதவர்கள் போல் பேசாது இருந்தார்கள் –
மஹீஸூ ரோத்தமா-பூ ஸூரர் -நிலத் தேவர்களில் உத்தமர்-மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் -வார்த்தையும் பேசாமல்
———–
அநாதராத் கிந்நதியோ ஹி பாலகா
சமா யயுர் யுக்தமிதம் ஹி யஜ் வஸூ
சிராத் அபக்தா கலு தே மஹீ ஸூரா
கதம் ஹி பக்தம் த்வயி தை ஸமர்ப்யதே —4-
அபக்தா-வேதம் அறிந்து வேதத்தின் சுவப்பயனை அறியாமல்
பக்தம் -உணவு -சிலேடை
உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி திரும்பி வந்தார்கள் -உண்மையான பக்தி இல்லாத
அந்தணர்கள் எவ்வாறு தங்களுக்கு உணவைத் தர முன் வருவார்கள் –
———-
நிவேத யத்வம் க்ருஹிணீ ஜநாய மாம்
திசேயுர் அன்னம் கருணா குலா இமா
இதி ஸ்மிதார்த்ரம் பவதேரிதா கதா
ஸ்தே தாரகா தார ஜனம் யயாசிரே –5-
அந்தணர்கள் மனைவியர் இடம் நான் வந்து இருப்பதாகக் கூறி உணவு கேளுங்கோள் –
இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள் என்று சிறுவர்கள் இடம் கூறினீர்கள் –
குழந்தைகளும் அந்தப் பெண்கள் இடம் உணவு கேட்டனர் –
————–
க்ருஹீத நாம்நி த்வயி ஸம் பிரம ஆகுலாஸ்
சதுர் விதம் போஜ்ய ரஸம் ப்ர க்ருஹ்யதா
சிரம் த்ருத த்வத் ப்ர விலோகந ஆக்ரஹா
ஸ்வ கைர் நிருத்தா அபி தூர்ண மாயயு –6-
சதுர் விதம்-பஷ்யம் போக்யம் லேகியம்-சோஷ்யம் – கடித்து -மென்னு – நக்கி -உறிஞ்சி உண்ணும் நான்கு விதம்
தங்கள் பெயரைக் கேட்டவுடன் நெடு நாட்களாகத் தங்களைக் காண விரும்பிய
அப் பெண்கள் ஆவலுடன் தங்களைக் காண வேணும் என்று
நான்கு விதமான அன்னங்களை எடுத்துக் கொண்டு வந்தார்கள் –
ஸ்வ கைர் நிருத்தா அபி-அவர்கள் கணவன்மார் தடுத்தும் கூட –தூர்ண மாயயு-வேகமாக தங்கள் இடம் வந்தார்கள் –
———–
வி லோல பிஞ்சம் சிகுரே கபோலயோ
ஸ முல்ல சத் குண்டலம் ஆர்த்ர மீஷிதே
நிதாய பாஹும் ஸூஹ்ரு தம்ச ஸீமநி
ஸ்திதம் பவந்தம் சம லோக யந்ததா –7-
தலையில் மயில் பீலி உடனும் ஒளி வீசும் குண்டலங்களுடனும் கருணை பொழியும் கடாக்ஷங்களுடனும்
ஸூஹ்ரு தம்ச ஸீமநி-நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு இருக்கும் தாங்களை அப் பெண்கள் கண்டார்கள் –
————
ததா ச காசித் த்வத் உபாகம் உத்யதா
க்ருஹீத ஹஸ்தா தயிதேந யஜ்ஜ்வன
ததைவ சஞ்சின்த்ய பவந்தம் அஞ்ஜ சா
விவேச கைவல்ய மஹோ க்ருதின் யசவ் –8-
அவர்களில் ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவன் தடுத்ததால் வர முடியவில்லை
அவள் அங்கேயே தங்களைத் த்யானம் செய்து தங்களுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள் –
என்ன ஆச்சர்யம் –
கச்ச விஷம் புஞ்சவ -போய் விஷம் சாப்பிடும் -போல் இங்கு கைவல்யம் சரீர விமோகம் -சரீரத்தைத் தானே பிடித்தான் -ஆகவே மோக்ஷம் போனாள் என்பதே கைமுதிக நியாயார்த்தம்
தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப்போல் -திருக்கோளூர் அம்மாள் வார்த்தை
———–
ஆதாய போஜ்ய அந்ய அனுக்ருஹ்யதா புன
ஸ்தவத் அங்க சங்க ஸ்ப்ருஹ யோஜ்ஐதீர் க்ருஹம்
விலோக்ய யஜ்ஞாய விஸர் ஜயந்நி மா
ஸ் சகர்த பர்த்ரு நபி தாஸ்வ கர்ஹாணான்–9-
அந்தணப் பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹித்தீர் -உம்முடைய சேவையை
விரும்பிய அவர்களை யாகத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டு
அவர்கள் கணவர்களை அவர்கள் இடம் அன்புடன் இருக்கச் செய்தீர் –
சபரி விதுரர் ரிஷி பத்நிகளை பூதராக்கிய புண்டரீகாக்ஷனின் நெடு நோக்கு
கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து-
நானே சென்று முறை கெடப் பற்றினேன் ஆகாமே பாருங்கோள்
என் செல்லாமை பரிஹரிக்கைக்கா அன்றிக்கே அவன் செல்லாமை பரிஹரிக்க போனேனாம் படி பண்ணப் பாருங்கோள் –
வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு
அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்
அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –
இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –
பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –
பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று
நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே
பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-
நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –
பத்தம் -சமைத்த சோறு —
விலோசனம் -பார்வை-
(பிரசாதம் எதிர் பார்த்து இருக்கும் -என்றே சப்தார்த்தம் )
சோறு பார்த்து இருந்த இடமாய்த்து-
சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி
———–
நிரூப்ய தோஷம் நிஜம் அங்கநா ஐநே
விலோக்ய பக்திம் ச புனர் விசாரிபி
ப்ரபுத்த தத் த்வைஸ் த்வம் அபிஷ்டுதோத் விஜைர்
மருத் புராதீச நிருந்தி மே கதான் -10-
அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து– தம் தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து
தங்களை ஸ்துதித்தனர்
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் —
பக்தி -ஸ்ரத்தா -பெண் பால் ஸம்ஸ்க்ருதம் -ஆண்டாளுக்கு பெண்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமல் விஞ்சின பக்தி –
————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply