சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்
வேதாந்தத்தின் லக்ஷணம் எதுவென்றால் உபநிஷத்தான். உபநிஷத் என்றால் பிரம்மஞானம். உபநிஷத்தான் பிரம்ம ஞானத்தை அடைவதற்கு சரியான பிரமாணம்(கருவி).
காண்டம்–1
ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தத்ஜலான் (சிருஷ்டி, ஸ்திதி, லயம்)
இதி சாந்தஹ உபாஸிதஹ
பிரம்ம தத்துவத்தையும், ஆத்ம தத்துவத்தையும் (ஆதேஷம்) பற்றி குருவிடம் கேட்டாயா? எந்த ஒன்றை அறிந்தால் எல்லாமும் அறிந்துக் கொள்ள முடியுமோ அதை அடைந்தாயா? என்று அருணி, தம் மகன் ஸ்வேதகேதுவிடம் கேட்டார்.
ஒரு விஷயம் புத்தியில் நிலை பெற வேண்டுமென்றால் கீழே கொடுத்துள்ள நான்கு படிகளைத் தாண்டித்தான் வர வேண்டும்.
- ஸம்ஸயஹ – சந்தேகம்
- ஸம்பாவனா – இருக்கலாம்
- நிஸ்சயஹ – சரிதான், நிச்சயமானதுதான்
- நிஷ்டா – சரியென்பதிலே நிலைபெறுதல்
இதற்கு உதாரணமாக 4,5,6 ஸ்லோகங்கள்.
காரண-காரிய தத்துவத்தில் காரணத்தையறிந்தால் எல்லா காரியங்களும் அறிந்ததாகும். (விக்ஞாதேன – அறியபட்டால்) காரணமும் காரியமும் வேறாக இல்லாத காரணத்தினால் காரணத்தை அறிவதன் மூலம் எல்லா காரியத்தையும் அறிந்து கொள்ளலாம். காரியமும், காரணமும் வேறல்ல என்பது உண்மையானால் விவகாரத்தில் ஏன் வேறு வேறாக உபயோகிக்கிறோம்? காரணம் என்கின்ற தத்துவத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை (விகாரம்) செய்வதால் அதன் விளைவாக அது காரியமாக உருவாகிறது. (உ-ம்) ஒரு களிமண் துண்டானது விதவிதமான பாத்திரங்களை செய்ய உதவுகிறது.
எனவே காரணம்+விகாரம் = காரியம். விகாரத்தின் மூலம் பலவிதமான பெயர்கள் வந்து விட்டது. இந்த பெயர்கள் (நாமம்) வாக்கிலிருந்து தோன்றுகிறது. எனவே விகாரமே பெயர் (நாமம்) என்றாகிறது. அதனால் காரணம் + நாமம் = காரியம். காரணத்துடன் சில சொற்கள் இணைவதன் மூலம் காரியங்கள் உண்டாகின்றது.
விகாரஹ = நாமதேயம் – வாக்கிலிருந்து தோன்றிய பெயரே மாற்றமடைகிறது. வாக்கினுடைய வெளிப்பாடு, வாக்கிலிருந்து உருவாகிய பெயர்தான் மாற்றம் என்றாகிறது, இது காரணத்துடன் சேரும்போது பல காரியங்களாக வெளிப்படுகிறது.
ம்ருதிகா இத ஏவ சத்யம் – களிமண் மட்டும்தான் சத்யம். காரியத்துக்குள் காரணமும், நாமதேயமும் (ரூபம்) இருக்கிறது. இதில் காரணம் சத்யமாக இருக்கிறது. ஆனால் நாம் விவகாரத்தில் நாம ரூபத்தில் ஸத்யத்தை ஏற்றி வைத்திருக்கிறோம். நாமதேயம் அஸத்யமாக இருக்கிறது.
காண்டம்–2– << ஸத்-வித்யா >>
சூத்ர வாக்கியம்:
ஸதே3வ ஸோம்ய இத3ம் அக்3ரஹ ஆஸீத்3 ஏகம் ஏவ அத்விதீயம் |
காரியத்தை காரணமாக பார்க்கும்போது அது சத்யம், இதை நாம் நாமரூபமாக பார்க்கும்போது மித்யா. ஜகத்-ஒரு காரியம்- இது ஸத் பிரம்மமாக இருந்தது, இப்பவும் ஸத்தாகத்தான் இருக்கிறது ஆனால் நாமரூபத்துடன் இருக்கிறது. நாமரூபம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அதனுடைய இருப்பு என்ன? நிலையானதா, நிலையற்றதா, வெறும் தோற்றமா?.
எது ஒன்றை சார்ந்து இருக்கிறதோ அது மித்யா. நாமரூபம் வெளித்தோற்றதிற்கு வராத நிலை மாயா. ஸத் என்பதுடன் நாம ரூபங்களை சேர்த்தவுடன் உலகமாக தெரிகிறது. களிமண்ணுடன் நாமரூபங்கள் சேர்க்கும்போது பானைகளாக தோற்றமளிக்கிறது. நாமரூபங்கள் வெளியே இருந்து வருவதில்லை. அவைகள் வெளிதோற்றத்திற்கு வராமல் காரணத்துக்குள்ளே இருக்கிறது.
மாயா – அவ்யக்தம் – வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபம்
வ்யக்த – ஸ்ருஷ்டி – வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபம்
- ஸத்தை மட்டும் பார்க்கும் நிலை – நிர்குண பிரம்மம்
- ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபத்தையும் சேர்த்து பார்த்தல் – சகுண பிரம்மம் – மாயா
- ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபத்தையும் சேர்த்து பார்ப்பது – உலகம்
ஸவிசேஷம் – நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அஸ்தி மாத்திரமே
ஸத் மட்டும் உள்ள லட்சணங்கள்
- நிர்விசேஷம் – குணங்களற்றது
- ஸர்வகதம் – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது, எல்லா இடத்திலும் ஊடுருவி இருக்கிறது
- நிரஞ்சனம் – தூய்மையானது (நாம ரூபம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் தூய்மையாகவே இருக்கும்)
- நிர் அவயவம் – அவயவங்களற்றது, பிளவுகளற்றது, பகுதிகளற்றது.
சாஸ்திரம் மூன்று விதமான வேற்றுமைகளை செல்கிறது.
- ஸ்வகதபேதம் – தனக்குள்ளே இருக்கிற வேற்றுமை, மரம் ஒன்றுதான் ஆனால் அதற்குள்ளே விதவிதமான பகுதிகள் இருக்கிறது.
- ஸஜாதீய பேதம் – தன்னுடைய ஜாதிக்குள்ளே வேற்றுமை இருத்தல், மரம் என்ற ஒரே ஜாதி, ஆனால் விதவிதமான மரங்கள் இருத்தல்
- விஜாதீய பேதம் – முற்றிலும் வேறுபட்டது, மரம், விலங்கு, மனிதன்
இந்த மூன்று வேற்றுமைகளும் பிரம்மத்தில் கிடையாது. இது ஒன்றாகவே இருப்பதால் முதல் பேதம் கிடையாது, இது தவிர வேறொன்று கிடையாது என்பதால், அதனுடைய வேறு ஜாதி கிடையாது.
அத்விதீயம் – இரண்டற்றது.
மித்யா – இல்லாதது ஆனால் இருப்பதுபோல் காட்சியளிக்கிறது.
இல்லாததிலிருந்து இருத்தல் வராது, இல்லாததும் வராது, எனவே இருப்பது போல் தெரிவதெல்லாம் மித்யா. எனவே இவைகளெல்லாம் தோன்றுவதற்குமுன் ஸத்தாகவே இருந்தது, அது ஏகம் ஏவம் அத்விதீயம்.
விக்ஞேயம் – ஞான யோக்யம் – இந்த உலகில் நாம் அறிவதற்கு யோக்யமானது – ஸத் (பிரஹ்மம்), மற்றதெல்லாம் மித்யாதான். அபரா வித்யா என்ற அனைத்தும் அவித்யாதான் என்று அறிவது (அயதார்த்தம்). புத்தியில் வருகிற அமைதிதான் மோட்சம், மனதில் வருகிற அமைதி சோக நிவிருத்தி. இந்த பிரதிக்ஞை (ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்) காரண, காரிய விசாரத்தின் மூலம் அடையலாம்..
காரண, காரிய விசாரம்:
- காரணம் என்கிற தன்மை ஒரு வஸ்துவிற்கு கொடுக்கப்படுகிறது.
- காரியங்கள் தோன்றுகின்றன (ஸ்ருஷ்டி)
- காரண காரியங்களை ஐக்கியபடுத்துதல் என்ற அறிவை புகட்டுதல்
- காரியம் என்பது ஒன்றில்லை என்று நிச்சயப்படுத்துதல்
- காரணமும் கிடையாது
ஸ்ருஷ்டி (படைப்பு)
ஸ்ருஷ்டி என்பது மித்யா என்று நிரூபித்தல்.
சகுண பிரம்மனான ஈஸ்வரன், ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க ஆலோசனை செய்யும்போது மாயா வந்து சேர்ந்து கொள்கிறது. நான் பலவாக ஆவேனாக, நான் என்னை பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று ஈஸ்வரன் நினைத்தார். ஸத் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறது.
அது அக்னியாக பிறப்பெடுக்கிறது, அக்னியானது நீராக பிறப்பெடுக்கிறது.
காண்டம்–3
ஸ்தூல சரீரங்கள் மூன்று வகையாக தோன்றுகிறது. அவைகள் ஒன்று முட்டையில் இருந்து (பறவை, பாம்பு மற்றும் பல), இரண்டவாது கர்ப்பத்திலிருந்து (மனிதன், விலங்குகள்), மூன்றாவது பூமியிலிருந்து (மரம், செடி, கொடிகள் மற்றும் பல). இந்த சூட்சும பூதங்களுடன் சித் ஸ்வரூபமாக (அறிவு ஸ்வரூபமாக) இதற்குள் நுழைவேன், பிறகு நாமரூபங்களை தோற்றுவிப்பேனாக என்று ஆலோசனை செய்தது. இவ்வாறாக ஜீவன் பல நாமரூபங்களுடன் தோன்றியது. அவைகளுடன் மூன்று தன்மைகளையும் சேர்த்துகொண்டது. பிறகு ஸ்தூல பூதமாக மாறுகிறது,
.
காண்டம்–4
எப்படி ஒரு ஸ்தூல பூதத்துக்குள் மற்ற ஸ்தூல பூதங்கள் சேர்ந்துள்ளன.
அபவாதம்– நீக்குதல் (நாம ரூபங்களை நீக்குதல்)
அத்யாரூப அபவாத நியாயம்- ஒரு வஸ்துவானது பலவாக தோன்ற வேண்டும். (உ-ம்) பருத்தியிலிருந்து நூல், துணி என்ற பலவாக தோற்றமெடுத்துள்ளது. உண்மையில் எல்லா நாம ரூபத்திலும் இருப்பாக இருப்பது பருத்திதான்.
அபவாதங்கள்
- பார்க்கின்ற ஸ்தூல விஷயங்கள் அனைத்தும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் இருக்கின்ற பஞ்ச சூட்சும பூதங்களையும் நீக்க வேண்டும்
- பிருத்வியை நீரிலும், நீரை நெருப்பிலும், நெருப்பை காற்றிலும், காற்றை ஆகாசத்திலும் ஒடுக்க வேண்டும்.
- கடைசியாக ஆகாசத்தை பிரம்மத்தில் ஒடுக்க வேண்டும்.
- ஸ்தூல அக்னியானது மூன்று சூட்சுமமான பூதங்களுடைய சேர்க்கை என்பதால் அதுவே மித்யா. ஸ்தூல அக்னியில் உள்ள மூன்று சூட்சுமமான பூதங்கள் மூன்று நிறங்களால் குறிக்கப்படுகிறது
- சிவப்பு நிறம் – அக்னி; வெண்மை நிறம் – நீருக்கும்; கருமை நிறம் – நிலத்துக்கும்; உவமையாக்கப்படுகிறது.
- அக்னியில் தோன்றும் மூன்று நிறங்களானது மூன்று சூட்சுமமான பூதங்கள். இவைகளெல்லாம் வெறும் நாம ரூபங்களே அதாவது வெறும் வார்த்தைகள்தான். ஆகவே ஸத்யமாக இருப்பது மூன்று சூட்சுமமான பூதங்கள்தான்.
- எனவே ஸ்தூல அக்னியானது அறிவினால் நீக்கப்படுகிறது. இவ்விதமாக மற்ற ஸ்தூல பூதங்களையும் நீக்கி விட வேண்டும்.
இந்த மூன்று பூதங்களே திரிவிதகரணம் மூலமாக ஜீவனை அடைந்து ஸ்தூல சரீரத்தை அடைவதைப்பற்றி இனி விளக்கப்படுகிறது.
காண்டம்–5 (ஸ்தூல, சூட்சும சரீரத்தைப்பற்றி)
- மாயையானது மூன்று குண வடிவானது. இதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் என ஐந்து பூதங்கள் தோன்றியது. இந்த ஐந்து பூதங்களிலும் மூன்று குணமும் இருக்கிறது.
- சூட்சுமமான பூதங்களிடமிருந்து சத்துவகுணமான மனம் போன்ற ஞானேந்திரியங்கள், ரஜோ குணமான பிராண தத்துவம், தமோ குணமான ஸ்தூல சரீரங்கள் தோன்றுகின்றன.
- நாம் உண்ணும் உணவும் மூன்று வகையாக உள்ளது. ஸ்தூலமானவைகள் மலமாக வெளியே போகிறது, இடையில் உடல் தசைகளாகிறது, சூட்சும நிலை மனதுக்கு போகிறது, அதன் போக்கை மாற்றுகிறது. இது பிருத்வி தத்துவத்தை உணர்த்துகிறது.
- நாம் நீரை அருந்தும் பொழுது அது மூன்று பாகமாக பிரிகின்றது. அந்த நீரிலிலுள்ள ஸ்தூலமானது சிறுநீராக வெளியேறுகிறது. மத்தியமாக இருக்கும் பாகமானது ரத்தமாக மாற்றப்படுகிறது. சூட்சுமமான பாகமானது பிராணனாக மாறுகிறது.
- நெய், வெண்ணெய், எண்ணெய் – அக்னி வகையறாவாக கூறப்படுகிறது.
ஸ்தூலமான பாகம் – எலும்புக்கு சக்தியாகிறது
இடைப்பகுதியானது – எலும்புக்குள் உள்ளே திரவம், மஜ்ஜையாகிறது
சூட்சும பாகமானது – நாம் பேசும் சக்தியாகிறது.
காண்டம்–6
தயிரிலுள்ள சூட்சும பாகம், கடையும்போது வெண்ணெயாக வெளிப்படுகிறது. அதேபோல திட உணவு சாப்பிட்ட பிறகு அதை உடலிலிருக்கும் வெப்பமானது வாயுவின் உதவியுடன் ஜீரணித்து அதிலிருக்கும் சூட்சுமமான பகுதியை மனதுக்கு அனுப்புகிறது, இதனால மனமானது சக்தியை பெறுகிறது. அதேமாதிரி குடிக்கும் நீரிலிருந்து சூட்சுமமான பகுதியானது வெளிப்பட்டு பிராணனுக்கு செல்கிறது. சாப்பிடும் உஷ்ணமான பொருட்களிலிருக்கும் சூட்சுமமான பகுதியானது நாம் பேசும் பேச்சாக வெளிப்படுகிறது. அடுத்த பகுதியில் உணவானது எப்படி மனதுக்குள் செல்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது.
காண்டம்–7
- மனிதர்கள் பதினாறு வகையான சக்திகளை கொண்டவர்கள். அதாவது மனதுக்கு இந்த சக்திகள் உள்ளன. அவைகள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் போன்றவை. பதினைந்து நாட்களுக்கு உணவும் எதுவும் உட்கொள்ளாமல், வெறும் நீரை மட்டும் அருந்த வேண்டும் என்று தந்தையான குரு மகனுக்கு கட்டளையிட்டார். நீரானது பிராணனுக்கு அத்தியாவசியமானது அது உடலை உயிரோடு வைத்துக்கொண்டிருக்கும்.
- விரதம் முடித்து வந்த ஸ்வேதகேது, நான் தாங்கள் சொல்லியபடி விரதத்தை முடித்து விட்டேன், இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். “நீ இப்போது மூன்று வேதங்களையும் சொல்.”என்று குரு கூறினார். அதைக்கேட்டு அதிர்ந்த ஸ்வேதகேது, “என்னிடத்தில் இப்போது சக்தி எதுவும் இல்லை, அதனால் ஒன்றும் சொல்ல முடியாது” என்று பதிலளித்தான்.
- கொழுந்து விட்டு எரியும் தீயில் எது போட்டாலும் பஸ்பமாகி விடும், ஆனால் சிறிய நெருப்பினால் அதைவிட பெரிய பொருட்களை எரிக்க முடியாது. அதுபோல உன்னுடைய பதினாறு சக்திகளெல்லாம் அடங்கிப் போய் ஒரு சக்திதான் இருக்கிறது, அதை வைத்துக் கொண்டு உன்னால் வேதங்களையெல்லாம் சொல்ல முடியாது
- இப்போது சென்று சாப்பிட்டு வா, அப்போது உனக்கு நான் சொன்னதெல்லாம் புரியும் என்று கூறினார். உணவை உண்டு விட்டு வந்து அவர் கேட்ட எல்லா வேதங்களை சொன்னான்.
- சிறிய நெருப்பை பெரிதாக்கினால், அதில் எதைப்போட்டாலும் எரித்து விடும். அதுபோல் உன்னிடமிருந்த ஒரு சக்தியை வைத்து உணவை உண்ட பின் உனக்கு எல்லா சக்திகளும் திரும்ப வந்ததால்தான் உன்னால் வேதங்களை தெளிவாக சொல்ல முடிந்தது.
- இதிலிருந்து அன்னமானது மனம் செயல்படுவதற்கு அவசியமாகிறது என்று நிரூபிக்கப்படுகிறது
- இதிலிருந்து நீரானது பிராணமயம், அக்னியானது வாக்குமயம் என்பதும் அவனுக்கு புரிந்து விட்டது.
காண்டம்–8(ஆத்ம விசாரம்)
த்ருக்-திருஷ்ய விவேகம், பஞ்சகோச விவேகம், அவஸ்தாத்திரய விவேகம், தேகத்திரியா விவேகம் இவைகளெல்லாம் ஆத்ம விசாரத்திற்கு உதவும். ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக ஆத்ம தத்துவம் விசாரம் செய்யப்படுகிறது.
- ஒரு ஜீவன் ஆழ்ந்து உறங்கும்போது காரண சரீரத்திற்கு சென்றுள்ளான் என்று அறிந்து கொள்ள வேண்டும். கனவு உறக்கத்திலிருக்கும்போது சூட்சும சரீரத்திற்கு சென்றுள்ளான். அதாவது ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவனுக்கு பிரம்ம பிராப்தி கிடைக்கிறது, தன் ஸ்வரூபத்திலே நிலைபெறுகிறான். இதிலிருந்து பிரம்மமும், ஜீவனும் ஒன்றே என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது. காரண சரீரத்தை அடைவதை பிரம்மத்தை அடைகிறான் என்று எப்படி சொல்ல முடியும். பிரம்மம் சம்சாரமற்றது, ஆழ்ந்த உறக்கத்திலும் சம்சாரம் கிடையாது, எனவே இது பிரம்மத்தை அடைந்ததற்கு ஒப்பாகும். உதாரணமாக நிழலில் நிற்கிறேன் என்று கூறினாலும் அவன் நிலத்தில்தான் நிற்கிறான், அதேபோல காரண சரீரத்தை அடைகிறான் என்பது அதனை சார்ந்திருக்கும் பிரம்மத்தைதான் அடைகிறான். ஒரு பொருள் காரணத்தில் இருக்கும்பொழுது அதை இல்லையென்றுதான் சொல்லுவோம். (உ-ம்) களிமண் இருக்கும்போது பானை இல்லை என்கின்றோம்
- பறவையை கயிற்றால் நடுக்கடலில் போய்க்கொண்டிருக்கும் கப்பலிலுள்ள ஒரு தூணில் கட்டுகிறோம். பறவை பறந்து போக பல தடவை முயற்சி செய்து, பிறகு துவண்டு போய் மீண்டும் கட்டப்பட்ட இடத்திற்கே வந்து அமர்ந்து கொள்ளும். அதேபோல ஜீவன் விழிப்பு நிலையிலும், கனவிலும் மனதைக்கொண்டு இன்பமான, துன்பமான அனுபவங்களை தன் விருப்பத்தாலும், அறியாமையினாலும் அடைகிறான். பின்பு எதிலும் அமைதியை அடையாமல் திரும்பவும் பிராணனிடமே வந்து விடுகிறான். எங்கு சென்றாலும் அமைதியை பெற முடியாது, தன்னிடத்திலேயேதான் நிரந்தரமான அமைதியை அடையலாம், அடையமுடியும். ஏனென்றால் அது பிராணனால் கட்டப்பட்டிருக்கிறது. பிராண பந்தனம் – ஜீவன் பிரம்மத்தை சார்ந்து இருப்பவன். ஆஸ்ரயம் – கட்டுபடுதல், ஜீவன் விழிப்பு நிலையில், ஸ்வப்னத்தில் அமைதியற்று இருக்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமானவுடன் அமைதியாக இருக்கிறான்.
- ஜீவனுடைய ஆத்மா – பிரம்மஸ்வரூபம், அஸனாய – பசி, பிபாஷா – தாகம்; பசிக்கு அன்னம் காரியம், தண்ணீர் காரணம், தாகத்துக்கு தண்ணீர் காரியம், அக்னி காரணம். பசிக்கும்போது நாம் உண்ணும் உணவானது நீர் தத்துவமானது, ஸ்தூலமான உணவை திரவமாக்கி உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது. தாகமானது அக்னியான நீரை வாயுவாக்கி விடுவதால் தாகம் மீண்டும் எடுக்கிறது. எனவே அக்னி காரணம் என்று உறுதிபடுத்துகிறது.
- ஸ்தூல சரீரத்திற்கு மூல காரணம் அன்னம்தான், இதைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது. இவ்வாறாக இந்த அனைத்து படைப்புக்களும் ஸத்தை மூலமாக கொண்டுள்ளது. ஸத்மூலாஹ-ஸத் மூலமாக உள்ளது; ஸத்தாயதனஹ– ஸத்தைச் சார்ந்துள்ளது; ஸத் ப்ரிதிஷ்டா-ஸத்தில் லயம் அடைகிறது.
- இந்த ஸ்லோகத்தில் நீர் காரியம், தேஜஸ் காரணம். ஜீவன் குடிக்கும் நீரை, உஷ்ணமானது எடுத்துக்கொண்து ரத்தம் போன்ற திரவ பொருளாக மாற்றி விடுவதால் அவனுக்கு நீர் குடிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்படுகிறது. எனவே அக்னியானது “உதானன்” என்று அழைக்கப்படுகிறது.
- உயிர் போகும் நிலையிலுள்ள மனிதனுடைய பேச்சானது மனதில் ஒடுங்குகிறது. மனமானது பிராணனில் ஒடுங்குகிறது. பிராணன் தேஜஸில் ஒடுங்குகிறது, தேஜஸானது ஸத் பிரம்மத்தோடு ஒடுங்குகிறது.
- சூட்சுமமான இவையனைத்தும் ஸத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதுவே உண்மையாகும், அதுவே ஆத்மாவாகும். அதுவே நீயாக இருக்கிறாய். அனிமா: சூட்சுமம் எந்தக்காரணத்தினால் ஸத்தை சூட்சுமம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு நான்கு காரணங்கள் உண்டு. அவைகள்
- நிர்குணவாத – நிர்குணமாக இருப்பதனால் குணங்கள் குறைய குறைய சூட்சுமாகிக் கொண்டே போகும்.
- அவ்யக்தவாத – வெளித்தோற்றத்திற்கு வராததால்
- ஆத்மத்வாத், அவிஷயத்வாத் – இந்த ஸத் நானாக இருப்பதால், அல்லது விஷயமாக இல்லாததால்
- காரணவாத் – அனைத்திற்கும் காரணமாக இருப்பதால்
ஸத்தில் ஸ்வரூபம் – அனந்தம், இது பெரிதுமில்லை, சிறியதுமில்லை.
ஐதாத்மியம்– இதையே சாரமாக கொண்டுள்ளது. அதாவது எல்லா ஸ்ருஷ்டிகளும் ஸத்தையே சாரமாக கொண்டுள்ளது. உதாரணமாக எல்லா தங்க நகைகளுக்கும் தங்கமே ஆதாரமாக இருப்பதைப்போல. தங்கம் இல்லாமல் ஆபரணமில்லை, ஆனால் ஆபரணமில்லாமல் தங்கம் மட்டும் இருக்கும். இவ்வாறாக பிரம்மம் சத்யம், மற்றதெல்லாம் மித்யா என்றறியலாம்.
ஸத்யம், இதற்கு இரண்டு லக்ஷணங்கள் உண்டு. ஒன்று அபாத்யம்- நீக்க முடியாதது (ஞானத்தால்), அபாவத் த்ரய சூன்யம்- மூன்று விதமான இல்லாமை அற்றது. மூன்று காலங்களிலும் இருப்பது – நித்யம் என்று பொருள்.
ஆத்மா என்பது சைதன்ய ஸ்வரூபம்; ஸத் – சித் ஸ்வரூபம், ஸத் சித்தாகத்தான் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஜடமாக இருக்கும். எதுவெல்லாம் ஜடமாக இருக்கிறதோ அதுவெல்லாம் த்ருஷயம் (பார்க்கப்படுவது). எதையாவது சார்ந்திருக்கும், இவையெல்லாம் மித்யாவின் லட்சணமாக இருப்பதால், ஸத் மித்யாவாகி விடும். எனவே ஸத்தானது சித்தாகத்தான் இருந்தாக வேண்டும். இது அறிவு ஸ்வரூபம், சைதன்யம். இந்த சைதன்யத்தை நீக்க முடியாது என்று நிரூபிக்க வேண்டும். சைதன்யம்தான் எல்லா-வற்றையும் நீக்க முடியும், இதை எதனாலும் நீக்க முடியாது. எனவே ஸத்தை நீக்க முடியாததாக இருப்பதால், இது ஸத்தாக இருக்கிறது.
த்வம் – இதுவரை விளக்கப்பட்ட ஸத்துதான் அஹம் என்று புரிந்து கொள்ள வேண்டும். நான் என்று சொல்லும்போது என்ன தோன்றுகிறது? ஏதோ ஒரு அறிவை உணர்த்துகிறது. என்னுடையது, இருக்கிறது என்பதை பார்க்கிறேன் என்று அறிவினால் நீக்கினால் பின்பு ஸத் மட்டும்தான் இருக்கும் அதுதான் நான் என்று தெளிவடைய வேண்டும். இந்த உடல், மனம், புத்தி எல்லாமே த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) என்று உணர வேண்டும்.
இந்த ஞானத்தின் பலன் ஜீவன் முக்தி அடைதல், அனைத்துவிதமான சம்சார நிவிருத்தி. மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி அமைதியடையலாம்.
பிரயோஜன விசாரம்
நான் ஸத்தாக இருக்கிறேன் என்ற அறிவை அடைவதால் என்ன பயன்?
பிரம்மஞானத்தால் புதியதாக ஒன்றும் அடையப்படுவதில்லை. ஆனால் ஏதோவொன்று நம்மை விட்டு போய் விடுகிறது. அவை இரண்டாக இருக்கிறது. ஒன்று கர்த்ருத்வம் மற்றொன்று போக்த்ருத்வம்.
வார்த்தைகள்தான் சம்சாரம், ஏனெனில் வெவ்வேறு வகையில் இந்த வார்த்தைகள் நம்மை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் தத்வமஸி என்ற வார்த்தை இவ்வகையில் கட்டுபடுத்திக் கொண்டிருக்கும் தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கின்றது. நான் எந்தப்பொருளோடும் சங்கமற்றவனாக இருக்கிறேன் என்ற அறிவை அடைகிறோம். மற்ற வாக்கியங்கள் நம்மை கர்த்தாவாகவோ அல்லது போக்தாவாகவோ ஆக்கிவிடும். நான் பிறரது ஆணைக்கு கட்டுபட்டவன், மாற்றத்திற்கும், அழிவுக்கும் உட்பட்டவன் என்பதிலிருந்து விடுதலை பெற்று விடுவோம்.
பூர்வபக்ஷ விசாரம்
- அதத்வமஸி – நீ ஸத்தாக இல்லை என்றும் பொருட்கொண்டால், நான் பிரம்மம் இல்லையென்று எனக்குத் தெரிகிறது. அதனால் இது உபதேசமாகாது. நான் ஏற்கனவே சம்சாரி என்று அறிந்துள்ளேன் அதனால் திரும்பவும் நீ சம்சாரி இல்லையென்று வேதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை
- தத் த்வம் அஸி– அதனுடையதாக நீ இருக்கிறாய். அந்த ஈஸ்வரனுடைய அங்கமாக நீ இருக்கிறாய் என்று சொல்வதால், அங்கம், அங்கி என்ற பந்தம் வந்து விடுகிறது. எனவே ஈஸ்வரன் எல்லா சம்சாரிகளையெல்லாம் அங்கமாக வைத்திருக்கிறார் என்றாகி விடும்.
சூரியனும், யாகத்தில் உள்ள கம்பும் ஒன்றுதான் என்று உபாஸிக்க வேண்டும். மனதையும், பிரம்மமாக பாவித்து உபாஸிக்க வேண்டும். உபசாரஹ: நீ அங்கமாக இருக்கிறாய், ஏனெனில் இரண்டுக்கும் சமமான குணமாக இருப்பதால் இப்படி சொல்லலாம். அதேபோல ஈஸ்வரனுக்கும், ஜீவனுக்கும் சில சமமான குணங்கள் இருப்பதால் நீ அதுவாக இருக்கிறாய். இந்த உபசாரத்தில் பந்த நிவிருத்தம் கிடைக்காது
- ஸ்துதி வாக்யம் – வேதத்தில் சில இடங்களில் நீ இந்திரனாக இருக்கிறாய் என்று புகழாரம் சூட்டுவது போல் இருக்கிறது இந்த வாக்கியம்
பதில்: இது உபாஸன பிரக்ரணம் அல்ல, இது ஞான பிரக்ரணம். அதாவது நமக்கு தெரியாத அறிவு நான் பிரம்மமாக இருக்கிறேன் என்று தெரியபடுத்துகிறது.
காண்டம்–9
ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமாதி விடுகிறோம் என்று ஜீவர்களால் எதனால் அறிய முடியவில்லை? அந்த அக்ஞானத்திற்கு என்ன காரணம்?
தேனியானது விதவிதமான மலர்களிலிருந்து தேனைக்கொண்டு வந்து தேன்கூட்டில் சேர்க்கிறது. அப்படி சேர்ந்துள்ள தேனில் எந்த மலரிலிருந்து கொண்டு வந்த தேன் எந்த பகுதியில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. அதுபோல ஜீவர்கள் பிரம்மத்தோடு சேரும்போது அவர்களது தனித்தன்மையை இழந்து விடுவதால் எங்கிருந்து நான் இங்கு வந்தேன் என்ற அறிவு ஏற்படாது.
அவன் எப்படி திரும்பவும் அதே தனித்தன்மையோடு விழித்தெழுகிறேன் என்றால், அவனுடைய கர்மவசத்தாலும், ஆத்ம அக்ஞானத்தாலும் இது சாத்தியமாகிறது.
காண்டம்–10
நான் பிரம்மத்திலிருந்து வந்தவுடன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தவுடன், ஏன் என்னால் பிரம்மத்திலிருந்து வந்தேன் என்று தெரியவில்லை?
பிரம்மத்தை அடையும்போது நம் தனித்தன்மையை இழந்து விடுவதால், நம்மால் சொல்ல முடியவில்லை. (உ-ம்) நதிகள் கடல்நீரால்தான் மழையாகி உருவாகின்றன். ஆனால் அவைகள் திரும்பவும் கடலிலே கலந்து விட்ட பிறகு அதனதன் தனித் தன்மையை இழந்து விடுகின்றது.
காண்டம்–11
உயிருள்ள மரத்தை எங்கு வெட்டினால், வெட்டிய இடத்திலிருந்து நீர் வருகின்றது. ஆனால் வெட்டி காய்ந்து கீழே இருக்கும் கிளையை மீண்டும் வெட்டினால், நீர் வருவதில்லை. ஜீவனுக்கு இநத சரீரம் அவன் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவிப்பதற்கும், உலக போதங்களை அனுபவித்து பாவ புண்ணியங்களை தீர்ப்பதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் இந்த உடலையே ஜீவனாக பார்க்கிறோம். ஜீவன் இந்த உடலில் இருக்கும்வரை உயிருடன் இருக்கிறது அது வெளியேறியதும் உடல் ஜடமாகி விடுகிறது.
ஜீவன் என்பவன் யார்? மூன்று தத்துவத்தின் சேர்க்கையாக இருப்பவன் ஜீவன். அவைகள் அறிவு ஸ்வரூபம் (ஸத்-சித், சுத்த சைதன்யம்), சூட்சும சரீரம் (மனம்), சிதாபாசம் (மனதில் பிரதிபலிக்கும் ஸத்). எப்போது ஜீவன் இந்த உடலில் இருக்கிற அபிமானத்தை எடுத்து விடுகிறதோ அப்போது மரணம் சம்பவிக்கின்றது. எனவே உபநிஷத் கூறுகிறது, இந்த சரீரம் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, எனவே இந்த உடல் மரணத்தால் அழிந்தாலும் நீ அழிவதில்லை. மரமானது வெட்டிய கிளையிலிருந்து அபிமானத்தை எடுத்து விடுவதால் அது காய்ந்து போய் விடுகிறது. எனவே மரத்திலுள்ள காய்ந்த கிளைகளிலிருந்து அதிலிருக்கும் ஜீவன் தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அந்த கிளை அந்த நிலையிலிருக்கிறது. முழு மரமும் காய்ந்து போயிருந்தால், ஜீவன் அந்த மரத்திலிருந்தே தன் அபிமானத்தை எடுத்து விட்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அதுபோல ஜீவன் உடலிலிருந்து முழுவதுமாக தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அது மரணமடைகிறது.
காண்டம்–12
காரணத்திலுள்ள குணங்கள்தான் காரியத்தில் இருக்கும் என்பது விதி, ஆனால் நிஷ்கலம், நிர்குணமாக உள்ள பிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்சம் விதவிதமான குணங்களுடன் இருப்பது ஏன்? சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான உலகம் எப்படி வந்தது?
ஆல்மரத்தின் பழத்தை உடைத்து பார்த்தால், அதில் சிறிய சிறிய விதைகள் இருக்கும். அந்த விதையை உடைத்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஒன்றுமே இல்லாத விதையிலிருந்து எப்படி இவ்வளவு பெரிய ஆலமரம் வந்ததோ, அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான பிரபஞ்சம் தோன்றியது. விதையில் இல்லாத குணங்களை மரத்தில் பார்க்கிறோம். காரியத்தில் இருக்கும் குணங்கள் காரணத்தில் இருந்தும், வெளித்தோற்றதிற்கு வராமலிருக்கலாம். அதாவது எப்படி ஆலமரம் விதையிலிருந்து வளர்ந்து பெரிய மரமாக வளர்ந்திருக்கிறதோ அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து வெளிவந்த ஸ்தூலமான பிரபஞ்சத்தில் தோன்றும் குணங்கள் வெளித்தோற்றத்திற்கு வராமல் இருந்து இருக்கிறது. அதைத்தான் மாயை என்று அழைக்கிறோம். மாயைக்கும் இந்த உலகத்திற்கும் சம்பந்தம் ஆலமர விதைக்கும், ஆலமரத்திற்குமிடையே உள்ள சம்பந்தம் போன்றதுதான். பிரம்மத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள சம்பந்தம் கயிற்றுக்கும் அதில் தோன்றிய பாம்புக்கும் உள்ள சம்பந்தம் போன்றது. எனவே ஒன்று எதனைச் சார்ந்திருக்கிறதோ அது மித்யா என்று அறியலாம்
காண்டம்–13
ஒரு பொருள் இருந்தால் அது நமக்கு தெரியவரும். ஒரு பொருள் தெரியவில்லை, அதே சமயம் அது இல்லை என்று உறுதி செய்கின்ற மாதிரி ஏதாவது ஒரு பிரமாணம் இருந்தால் அதை உபயோகித்து உறுதி செய்ய வேண்டும். ஒரு பொருள் தெரியவில்லை என்ற ஒரு பிரமாணத்தை வைத்து சொல்லிவிடக்கூடாது, வேறொரு பிரமாணத்தையும் உபயோகித்து முடிவுக்கு வரவேண்டும்.
உதாரணமாக நீரில் கரைக்கும் முன் கண் என்ற பிரமாணத்தின் மூலம் தெரிந்த உப்பானது, அதை நீரில் கரைத்ததும் கண் மூலம் அதன் இருப்பை அறிய முடியாது, அதனால் இந்த அந்த ஒரு பிரமாணத்தை வைத்து உப்பு நீரில் இல்லை என்று முடிவுக்கு வரக்கூடாது, சுவையறியக்கூடிய மற்றொரு பிரமாணமான நாக்கை கொண்டு நீரை சுவைத்துப் பார்த்தால் உப்பின் இருப்பை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஸத்தானது எங்கும் உள்ளது அதை சரியான பிரமாணத்தில் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும். இதை புலன்களால் அறிய முடியாது வேறொரு பிரமாணம் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும்.
காண்டம்–14
ஸத்தை அறிவதற்கு வேதாந்த சாஸ்திரமும், அதை உபதேசிக்கும் குருவுமே சரியான பிரமாணமாகும்.
காந்தார தேசத்திலிருந்து ஒருவனை திருடர்கள் கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிட்டார்கள். அவன் கூக்குரலிட்டு உதவிக்கு யாராவது வாருங்கள் என்று அழைத்தான். யாரோ வருவது போலிருந்ததால் திருடர்கள் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். அவன் போட்ட சத்தத்தைக் கேட்டு வந்த ஒருவர், அவனுடைய கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து, அவன் போக வேண்டிய தேசத்தின் வழியையும் கூறினார். அவனும் அவர் காட்டிய வழியிலே சென்று தன் நாட்டை அடைந்தான்.
அடர்ந்த காடு – சம்சாரம்
திருடன் – பாவ, புண்ணியங்கள்
கட்டியிழுத்துவரப்பட்டவன் – ஜீவாத்மா
கண் கட்டை அவிழ்த்து விடுபவர் – குரு
காந்தாரம் – அவன் சொந்த ஊர் – பிரம்ம ஸ்வரூபம்
ஒரு ஜீவனை பிரம்மத்திலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டு வந்து இந்த ஸ்தூல சரீரத்திலுள்ளே விட்டு விட்டார்கள். ஜீவன் தான் பிரம்மம் என்றுணராமல் தேகம் என்ற அபிமானத்துடன் இருக்கிறான். இந்தக் கதையில் கண்ணை துணியால் கட்டியிருப்பது, விவேகமானது மோகத்தால் (அவித்யாவால்) மூடப்பட்டிருப்பதை குறிக்கிறது. மோகம் என்பது எது நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் விஷயத்தை சுகமானது என்று நினைத்து அதில் ஈடுபட வைக்குமோ அதுதான் மோகம் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒருவனை சொந்த ஊரிலிருந்து கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிடுவது, ஜீவனை மோகத்தால் விவேகத்தை மறைத்து பிரம்மத்திலிருந்து (சொந்த ஸ்வரூபத்திலிருந்து) பிரித்தெடுத்துக்கொண்டு வந்து விடப்பட்டிருப்பது போன்றதாகும். கண் கட்டை அவிழ்த்து விடுபவர் குருவுக்கு ஒப்பிடப்படுகிறது. குருவானவர் மோகத்தை நீக்கி இது ஸத் இது அஸத் என்ற அறிவை கொடுக்கிறார். சொந்த ஊருக்கு செல்லும் வழியை கூறுவது சம, தம, வைராக்கியம் போன்ற தகுதிகளை போதிப்பதற்கு ஒப்பிடலாம்.
பிரவிருத்தி வழி என்பது உள்ளத்திலுள்ள ஆசைகளையெல்லாம் வெறும் அறிவினால் நீக்க முடியாமல் இருக்கும் நிலையில் இருந்தால் அதை தர்ம வழியில் அதை அனுபவித்தால், விரைவில் சித்தமானது தூய்மையடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.
நிவிருத்தி வழி என்பது ஸம, தம, வைராக்யம் போன்ற தகுதிகளை அடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.
கதையில் வந்த மனிதன் இன்னொருவர் காட்டிய வழியிலே சென்று தன் சொந்த ஊரை அடைந்தான். அதேமாதிரி குரு உபதேசத்தைக் கொண்டு நிவிருத்தி மார்க்கத்திலே சென்று ஞானத்தை அடைய வேண்டும்.
அக்ஷம் – கண்;
அபிநதம் – கட்டப்பட்ட;
விஸ்ருஜேதி – விட்டுவிட்டான்
பிரத்மாயீத – சத்தம் போடுகிறான்;
பண்டிதன் – உபதேசத்தை பெற்றவன் (சரியான லட்சியத்தை அடையும் பாதையை தெரிந்து கொண்டவன்)
மேதாவி – உபதேசம் செய்ததை மனதில் பதிய வைத்துக் கொண்டவன்
ஆசார்யவான்- குருவை அடைந்தவன், பிரம்ம ஞானத்தை அடைகிறான்
வேதாந்தம் என்பது அத்யாரோப அபவாதம் என்கின்ற முறையில் ஞானத்தை உபதேசிக்கும்.
அத்யாரோபம் – த்வைதத்தை ஸத்யம் என்ற பாவனையோடு ஏற்றுக் கொள்ளுதல்
அபவாதம்- நீக்குதல்; (எதையெல்லாம் ஸத்யம் என்று ஏற்றுக்கொண்டாரோ, சிஷ்யனுடைய மனதில் ஏராளமான விஷயங்கள் ஒத்துக் கொண்டு விவகாரம் செய்து கொண்டிருப்பது, அதையெல்லாம் ஒவ்வொன்றாக நீக்கி சரியான அறிவை கொடுத்தல்)
ஞானத்தின் பலன்
குருவையடைந்த சிஷயன் அவரது உபதேச்த்தின் மூலமாக பெறும் ஞானத்தின் பலனை அடகிறான். இது ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
விதேஹ முக்தி: ஸரீரத்திலிருந்து பிரிந்த ஜீவன் மீண்டும் பிறவாத நிலை
ஜீவன் முக்தி: ஞானம் அடைந்த பின் மீண்டும் பிறவாத நிலை. ஞானம் அடைந்த பின்னர் அவன் எதற்காகவும் காத்துக்கொண்டிருக்க மாட்டான். ஆனால் மரணத்திற்காக மட்டும்தான் காத்துக்கொண்டிருப்பான். அதுவரை அவன் ஜீவன் முக்தி நிலையிலே இருப்பான். அதாவது மரணத்தில் விருப்பமில்லாதவன் அதே சமயம் வாழ்வதிலும், விருப்பமில்லாதவன். மனநிறைவுடன் நாட்களை கழித்துக்கொண்டிருப்பான். மரணத்திற்கு பின்னர் அவன் பிரம்மத்தில் ஐக்கியமாகிறான்.
காண்டம்–15
ஞானியின் மரணத்திற்கும், அக்ஞானியின் மரணத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் ஞானியானவன் மரணத்திற்குப்பின் பிறப்பதில்லை, அக்ஞானி மரணத்திற்குப்பின் அவனது பாவ புண்ணியத்திற்கேற்ப மீண்டும் பிறப்பான். மரணப்படுக்கையில் இருப்பவனைச் சுற்றி உறவினர்கள் என்னைத் தெரிகிறதா என்று கேட்பார்கள், அவனும் தெரிகிறது என்பான். பேச்சானது மனதில் ஒடுங்கும், மனதானது பிராணனில் ஒடுங்கும், பிராணன் உஷ்ணத்தில் ஒடுங்கும், உஷ்ணமானது பிரம்மத்தில் ஒடுங்கும்.
காண்டம்–16
அந்தக்காலத்தில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டவனிடமிருந்து உண்மையை வரவழைக்க ஒரு சூடான கம்பியை பிடிக்க சொல்லுவார்கள். அவன் உண்மையான திருடனாக இருந்தால் அவன் கையானது கம்பியிலுள்ள சூட்டினால் புண்ணாகி விடும், அவன் நிரபராதியாக இருந்தால், அவனுடைய கைக்கு ஒன்றும் நேராது. அதுபோல பிரம்மத்தை அறிந்தவன் உலகபோகங்களில் கட்டுபடாதவன், துயரத்தை அனுபவிக்காமல் என்றென்றும் அமைதியாக ஆனந்தமாக இருப்பான். ஆனால் அக்ஞானியானவன் இந்த சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டிருப்பான். அதனால் இன்ப துன்பத்தை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருந்து. பிறகு இறந்ததும் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி மீண்டும் பிறப்பெடுப்பான்.
—–0000—–
சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-
பூம வித்யா
இந்த அத்தியாயத்தில் சொல்லப்படும் கருத்துக்களின் சாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
- சாகா சந்திர நியாயம்: மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி பிறகு தெரிய வைக்கும் உத்தி
- ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு பிரம்மத்தை உணர வைத்தல்
- பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம் மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
- நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
- குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது
காண்டம்–1
பகுதி 1-15 பிரம்ம பிராப்தி ஸோபானம் – பிரம்மத்தை அடைவதற்கு உதவும் பதினைந்து படிகள் கூறப்படுகிறது.
பகுதி 16-22 அதிகாரத்துவ குணங்கள்
பகுதி 23-26 பூம வித்யா பற்றிய விளக்கம்
- நாரதர் சனத்குமார் என்கின்ற குருவை அடைந்து, “பகவானே ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள்”, என்று வேண்டிக்கேட்டார்.சனத்குமாரரும் அதற்கு இசைந்து, “முதலில் நீ எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறாயென்று எனக்கு சொல், நான் அவையெல்லாம் தவிர்த்து அதற்கு மேலானதையெல்லாம் உபதேசிக்கிறேன்” என்று கூறினார்.
- நாரதர் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கூறத்தொடங்கினார். எனக்கு நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இலக்கணம், கணிதசாஸ்திரம், சகுண அறிவு, தர்க்கம், நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், சொல் இலக்கணம், வேதத்தை புரிந்து கொள்ளக்கூடிய அங்கங்கள், ஜோதிடம் மற்றும் ஆய கலைகள் அறுபத்திநான்கு ஆகியவைகளெல்லாம் தெரியும் என்று முடித்தார்
- இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தான் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் ஆத்ம ஞானத்தை இன்னும் அடையாதவனாக இருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகளின் மூலமாக ஆத்மாவை அறிந்தவன் எல்லா துயரங்களையும் வென்றவன். நான் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன். என்னை இந்த துயரத்திலிருந்து காப்பாற்றுவீர்களாக என்று நாரதர் வேண்டினார்.
சனத்குமாரர் கூறத்தொடங்கினார்,”நீ எதையெல்லாம் அறிந்து வைத்து இருக்கிறாயோ அவையெல்லாம் வெறும் வார்த்தைகள்தான், சப்தங்கள்தான்.
ஆத்ம ஸ்துதி – இந்த ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதல் வேண்டும். நம்மிடம் இருக்கின்ற அறிவினால் எல்லா துயரங்களையும் நிரந்தரமாக போக்கி ஆனந்தத்தை தர இயலாது என்று மனதார அறிய வேண்டும். இவ்வாறே நாரதரின் மனநிலை இருந்தது. குருவிடம் செல்லும் போது நம்மிடையே உள்ள அறிவை எல்லாம் நீக்கி விட்டு செல்ல வேண்டும். ஒருவன் ஒரு பிறவியில் ஒரு விஷயத்தில்தான் நிஷ்டையடைய முடியும்.
ஆத்மாவை அறிந்தவன் துயரத்தை அனுபவிப்பதில்லை. அக்ஞானம்தான் சோகத்திற்கு காரணம், தன்னை அறியாததுதான் அக்ஞானம் என்று கூறப்படுகிறது. சோகம் என்பது எதிலும் நிறைவின்மை, அடைய வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைத்தல். ஆத்மாவை அறிந்தவன் இந்த நிறைவின்மையை நீக்கி விடுகிறான்
- நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்ய வேண்டும். நாமத்தின் தாத்பர்யம் அது ஒரு சப்தம், அது அர்த்தத்தை கொடுக்கிறது, விவகாரத்திற்குட்பட்டது. விகாரம் என்பது காரியம், காரியம் மித்யா. நாரதரின் அறிவெல்லாம் வெறும் சப்தமே.
- யார் நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்கள் இரண்டு விதமான பலன்களை அடைவார்கள். ஒன்று நிஷ்காம உபாஸனை இது அடுத்த படிக்கு எடுத்துச் செல்லும் அதுதான் முமுக்ஷுத்வம். இரண்டாவது சகாம உபாஸனை – இது யார் பிரம்மத்தை நாமமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்களுக்கு எந்த அளவுக்கு செய்தார்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.
நாரதர் – நாமத்தை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு – இருக்கிறது
நாரதர் – அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு – செய்கிறேன்
பூ4ய – பெரியது;
ஸத்யம் உத்கிருஷ் – தத்துவம் மேலானது;
பிரம்மன ஸாமீப்யம் – பிரம்மத்திற்கு அருகில்
காண்டம்–2
- நாமத்தை விட பெரியதாக இருப்பது வாக்கு (பேச்சு). வாக்கினால்தான் எநத அறிவையும் அடைய முடியும். இதன்மூலம்தான் இன்ப துன்பங்களை அடைய முடியும். நாம் அடையும் அறிவானது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
- வேத, இதிகாச, புராணங்களிலிருந்து அறிவை அடைதல்
- பஞ்ச பூதங்களைப்பற்றிய அறிவை அடைதல்
- தேவ, மனித, விலங்குகள், பறவைகள், மரச்செடி, கொடிகள், புழு மற்றும் பூச்சிகள் பற்றிய அறிவை அடைதல்
- தர்ம-அதர்மம், உண்மை-பொய், இன்ப-துன்பம் ஆகியவற்றின் அறிவை அடைதல்
வாக்கு இல்லாமலிருந்தால் இவைகளையெல்லாம் நம்மால் அடைந்திருக்க முடியாது. வாக்குதான் இவையனைத்தையும் பற்றிய அறிவை கொடுக்கிறது. எனவே வாக்கை பிரம்மமாக உபாஸனை செய்வாயாக என்று குரு கூறினார். இதனால் அடைகின்ற சகாம பலனானது எதையும் சாராதிருக்கும் சக்தியை அடைவதாகும்.
நாரதர் – வாக்கை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு – இருக்கிறது
நாரதர் – அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு – செய்கிறேன்
காண்டம்–3
வாக்கை காட்டிலும் மேலானது மனம்தான். இதனுடைய லட்சணம் சங்கல்ப, விகல்பம் உடையது. மனதில் அதை பேசலாம், இதை செய்யலாம் போன்ற விருப்பங்கள் இவைகள் வந்துகொண்டே இருக்கும்.. இவைகள் நான்கு நிலைகளாக இருக்கலாம். அவைகள்,
- ஆசையாக மட்டும் இருத்தல்
- சிந்தனையை மட்டும் தூண்டி விட்டுவிட்டு அப்படியே அடங்கி விடுதல்
- வாக்கிலே வெளிபடுதல்
- செயலிலே வெளிப்படுதல்
போன்றவைகளாகும்.
நமது உள்ளங்கையில் இரண்டு சிறிய பழங்கள் வைத்திருக்க முடிகிறதென்றால் அந்தளவுக்கு உள்ளங்கையில் இடமானது என்று அறியமுடிகிறது. அதுபோல மனமானது அதிகமாக வியாபித்திருப்பதால், வாக்கையும், நாமத்தையும் மனமானது அனுபவிக்கிறது.
- ஒருவன் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பேன் என்று இச்சைக்கொண்டு அதை செய்து கொண்டிருப்பான்.
- சிலர் அகர்த்தவாகவும், அபோக்தாவாகவும் உள்ள நான் இந்த இச்சா மனதினால் கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருந்துகொண்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன்.
- ஒவ்வொருவருடைய மனதில் எந்த உலகத்தை அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளதோ அதை இந்த இச்சா காரணமாக அடைந்தே தீருவோம். இங்கே இச்சை சாதனம், நாம் எதை அடைந்தோமோ அது சாத்தியமாக இருக்கிறது.
- நாம் எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோமோ அது ஒரு காலத்தில் நம்மால் ஆசைபடப்பட்டதாகும்.
சகாம பலன் எவ்வளவு தீவிரமாக உபாஸிக்கிறோமோ அவ்வளவு தூரம் வியாபிக்க முடியும். அதனால் விரும்பியதை அடையலாம்.
நிஷ்காம பலன் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
காண்டம்–4
மனதை விட பெரியது சங்கல்பம். இப்படி செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று பார்க்கின்ற சக்தியுடைய மனதிலுள்ள எண்ணம். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்க்கும் சக்தி. இதன் அடிப்படையில்தான் கிரமமாக பிரவிருத்தியில் ஈடுபடுவோம். எனவே எது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை சங்கல்பம் செய்து விட வேண்டும். இதை வைத்துத்தான் மனதானது செயலில் இறங்கும்.
உபசாரம் – கற்பனை செய்து விளக்குதல்
இந்த உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற சங்கல்பத்தினால்தான் அவைகள் அப்படி தோன்றுகின்றன. மழை நான் இப்படித்தான் நீராக பொழிவேன் என்ற சங்கல்பத்தினால் அது அவ்வாறாக பெய்து கொண்டிருக்கிறது. அதேபோல பஞ்சபூதங்கள் அவைகளது சங்கல்பத்தினால்தான் அந்தந்த குணங்களைப் பெற்று தோற்றமளிக்கிறது.
எல்லோருக்கும் அறிந்தோ, அறியாமலோ அவர்கள் செய்த சங்கல்பத்தினால்தான் அவர்கள் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. எனவே நாம் உயர்ந்த தர்ம வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் முதலில் சங்கல்பத்தை செய்தாக வேண்டும். பிறகு எல்லாமே கிரமமாக நிறைவேற்றப்பட்டு நினைத்த மாதிரி வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளலாம்.
சகாம பலன் இப்படி சங்கல்பத்தை பிரம்மம் என்று எண்ணி தியானித்தால், நாம் சங்கல்பம் செய்ததை அடைந்தே தீருவோம்.
காண்டம்–5
சங்கல்பத்தை விட பெரியது சித்தம். சித்தம் என்றால் சரியாக புரிந்து கொள்ளுதல் (Understanding the environments and things). நமக்கு துன்பம் வருவது நாம் சரியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளாததே காரணமாகும்
- அந்த நேரத்தில் அமைந்த சூழ்நிலைக்கேற்றவாறு விஷயங்களை புரிந்து கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொள்ளுதல்
- அதீதம், அனாகம விஷய பிரயோஜன நிரூபணஹ.. கடந்தது, வரப்போவது இவைகளின் பயனை உணரும் சக்தி.
ஒருவன் பலநூல்களைக் கற்று வித்வானாக இருந்தாலும், தாம் கற்றதின் சாராம்சத்தை அறியாதவராகவும், அதை சூழ்நிலைக்கேற்றவாறு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இயலாவிட்டால் அவன் கற்றதினால் ஒன்றும் பயனில்லை. ஒருவன் கற்றது சிறியதாக இருந்தாலும் அதை சரியாக புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கும் திறனிருந்தால் அவனை வித்வானாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
சகாம பலன் இப்படி சித்தத்தை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நிலையான பயமற்ற, சித்தத்தை நன்கு புரிந்து கொண்டும் அப்படியே வாழ்ந்து கொண்டும் இருப்பவர்கள் உலகத்தை அடைவார்கள்.
காண்டம்–6
சித்தத்தை விட மேலானது தியானம். தியானம் என்பது உற்று நோக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்துதல். ஒருவன் சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த மன அமைதி தியானத்தினால்தான் கிடைக்கும். நம் மனதில் அமைதி இருக்கும்போது பார்க்கும் பொருட்களெல்லாம் அமைதியாக இருப்பது போல் தோற்றமளிக்கும்.
Contemplate means Think intently and at length, as for reflection of certain Duties mentioned in the Scriptures. This is what is called concentration. The greatness of contemplation is actually is seen in its results.
பதவி, பொன், பொருளால் புகழுடன் விளங்குபவர்கள் அனுபவிக்கும் இன்பமானது, தியானத்தின் மூலம் அடைகின்ற பலனில் சிறு துளிதான் என்று உபநிஷத் தியானத்தின் பெருமையை உபதேசிக்கிறது.
தியானம் செய்யாதவர்கள் கலகத்தில் ஈடுபடுவார்கள், சண்டை போடுபவர்களாக இருப்பார்கள், மற்றவர்களை குறைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களிடம் இருக்கும் குறையை அறிவது ஞானம், ஆனால் அதைப் பற்றியே பேசி மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள், பொய் கூறி ஏமாற்றுபவர்களாக அல்லது மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். எனவே தியானத்தை பிரம்மம் என்று தியானிக்க வேண்டும்.
சகாம பலன் இப்படி தியானிப்பவர்கள் அடையும் பலன், அவர்கள் அறிவும், ஞானமும் உள்ள உலகத்தை அனுபவிப்பார்கள். ஞானம் என்பது வேதங்கள் உபதேசிக்கும் தத்துவ ஞானம்.
காண்டம்–7
தியானத்தை காட்டிலும் மேலானது விக்ஞானம்.
விக்ஞானம்: தியானம் போன்றவற்றை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்ற ஞானம். பிறகு அதனால் கிடைக்கும் பலன், கிடைக்காத பலன், எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்ற அறிவும் இருக்க வேண்டும்.
எந்த சாதனையை உபயோகிக்க வேண்டுமென்றாலும், முதலில் அதை சரியாக உபயோகிக்கும் முறையைப் பற்றிய அறிவை அடைந்த பின்னர்தான் அதை உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இந்த ஞானத்தை அடைந்தவர்கள் அடையும் பலனானது என்னவென்றால், அறிவும், வேத ஞானமும் உடைய மனிதர்கள் வாழும் இடத்தில் வசிப்பார்கள்.
காண்டம்–8
பரிசரன் – சேவை
உபஸத்த – குருவுக்கு பிரியமானவன்
விக்ஞானத்திற்கு மேலானது சக்திதான்.
தேகம்பலத்தோடு இருந்தால்தான் உலக விவகாரங்களில் ஈடுபட முடியும். மனோபலம் நம்மை தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. புத்திபலம் சூட்சும விஷயங்களை புரிந்துக்கொள்ள உதவுகிறது. எவையெல்லாம் விக்ஞானத்தை அடைவதற்கு உதவி புரிகின்றதோ அவையெல்லாம் இந்திரியபலம். எல்லா பலத்தையும் உடைய ஒருவன் நூறு அறிவுடையவர்களை பயமுறுத்தும் சக்தியுடையவர்களாக இருப்பான். தேகம் பலத்தோடு இருந்தால்தான், குருவைத்தேடி அவரிருக்கும் இடத்தை அடைந்து பணிவிடை செய்ய முடியும். குருவுக்கு சேவை செய்வது மூலம் தன்னுடைய பணிவை உணர்த்துவதன் மூலம் அவருடைய பிரியமான சிஷ்யனாகிறான்.
குரு உபதேசிக்கும்போது முழு கவனத்துடன் கேட்க வேண்டும். இப்படி கவனத்துடன் கேட்டவற்றை சிந்தித்துப்பார்த்து அதில் நிலைப்பட வேண்டும்.
மந்தா குருவின் வார்த்தையை மீண்டும் மீண்டும் சிந்தித்தல்
போத்தா சரியாக புரிந்து கொண்டவனாகிறான், மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் அறிவை அடைகிறான்.
கர்த்தா இவ்விதம் அறிந்த அறிவின் மூலம் அதனை செயல்படுத்த தொடங்குவான்.
விக்ஞாதா செயல் மூலம் பலனை அடைகிறான்.
இவையெல்லாம் கிரமமாக செய்வதற்கு சக்தி வேண்டும்.
காண்டம்–9
உணவே சக்தியைக்காட்டிலும் மேலானது. இது எல்லாவகையான சக்திக்கும் காரணமாக இருக்கிறது. இது பிருத்வி பூதத்தை குறிப்பாக உணர்த்துகிறது. பத்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் உயிரோடு இருக்கும் ஒருவனால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, எதையும் புரிந்துக்கொள்ளும் சக்தியை இழந்திருப்பான். ஆனால் உணவை உண்டபின் அவனுக்கு இழந்த சக்தியெல்லாம் திருமப அடைந்தவனாகிறான். உணவையே பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல உணவும், நீர் வகைகள் உள்ள உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
காண்டம்–10
உணவைக் காட்டிலும் மேலானது நீராகும்.
இது நீர் தத்துவத்தை குறிக்கும். மேலும் நீரானது உணவுக் கிடைப்பதற்கு காரணமாகிறது. இது உலகத்திலுள்ள அனைத்துனுடைய தோற்றம் உருவாவதற்கு காரணமாகவும் இருக்கிறது. இப்படிபட்ட நீரை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
காண்டம்–11
நீரைக் காட்டிலும் மேலானது நெருப்பாகும். இது நீருக்கு காரணமாக இருக்கிறது. இது வாயுவை சூடாக்குவதால் மக்கள் காற்று மண்டலம் சூடாக இருப்பதாக உணர்ந்து இன்று மழை வரலாம் என்று கூறுவர். மேலும் இடி, மின்னல் உருவாகி மழை வருவதற்கு காரணமாகிறது. இப்படிப்பட்ட சக்தியை உடைய அக்னியை பிரம்மமாக உபாஸனை செய்தால், அவர்கள் தேஜஸான உடலைப்பெற்று, தேஜஸான உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
காண்டம்–12
அக்னியைக் காட்டிலும் மேலானது ஆகாயம். மற்ற நான்கு பூதங்களும் இதிலிருந்துதான் தோன்றியுள்ளது. சூரியனும், சந்திரனும் ஆகாசத்தில்தான் காட்சியளிக்கிறது. ஆகாசத்தின் இருப்பினால்தான் நாம் பேசுவது பிறரால் கேட்க முடிகிறது. நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கும், உயிரினங்கள் தோன்றி மறைவதற்கும் காரணமாக இருப்பதும் இதுவேதான். எனவே ஆகாசத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது மிகவும் பெரிய இடத்தையும், ஒளியுடன் கூடியதும், எந்த குறைகளும் இல்லாத உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
காண்டம்–13
ஞாபகசக்தி ஆகாசத்தை காட்டிலும் மேலானது.
நம்மைச்சுற்றி நமக்கு நன்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் நினைவு இல்லையென்றால் அவர்களிடம் உரையாட முடியாது, யாரென்றும் அறியவும் முடியாது, சிந்திக்க முடியாது. ஆனால் ஞாபகசக்தி வந்துவிட்டால் எல்லாமும் நன்றாக தெரியவரும்.
எனவே ஞாபகசக்தியை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.
காண்டம்–14
ஆசையானது ஞாபகசக்தியை காட்டிலும் மேலானது. ஆசையின் தூண்டுதலால்தான் எதுவும் நம் நினைவுக்கு வரும். பிறகு அதை நிறைவேற்ற செயலில் இறங்குவோம். அதன் பலனை அடைவோம். ஆசையினால்தான் எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றது.
எனவே ஆசையைப் பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.
காண்டம்–15
ஆசையை காட்டிலும் மேலானது பிராணன். ஹிரண்யகர்ப்பன், அனைத்து சூட்சும பூதங்களுக்கு ஆதாரமாக இருக்கிறார். இவரே ஸர்வாத்மாவாக இருக்கிறார். விராட் அனைத்து ஸ்தூல ஆதாரமாக இருக்கிறார். இந்த உலகிலுள்ள ஜீவர்கள் அனைவரும் ஹிரண்யகர்ப்பனாகவே பாவிக்கப்படுகிறது. (உ-ம்) மாதா, பிதா, சகோதரன், போன்றவர்கள் எல்லாமே ஒன்றுதான்.
பெரியவர்களை மரியாதையின்றி பேசுவது அவர்களை கொன்று விடுவதற்கு சமமாக கருதப்படும். இப்படிப்பட்டவர்களை சான்றோர்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் இறந்து விட்ட தாய், தந்தை இவர்களின் உடலை தீயிலிட்டு கொளுத்தினால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் பிராணனானது உடலை விட்டு சென்று விட்டதால் இறந்த உடலுக்கு அந்த மரியாதை கொடுக்காவிட்டால் குறையேதும் இல்லை.
பார்த்தல், பிறகு சிந்தித்தல் அதனால் நிச்சயம் செய்யப்படுவது, அனைத்து அனாத்மா விஷயங்களை தாண்டி பேசுபவன் அதிவாதி என்று அழைக்கப்படுவான். யாராவது அதிவாதியைப் பார்த்து, “நீங்கள் உங்கள் நிலையிலிருந்து எங்கள் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும்”, என்று கேட்டால், நான் இந்த நிலையிலிருந்துதான் பேசுவேன் என்று பதிலளிக்க வேண்டும்.
காண்டம்–16
முமுக்ஷுத்வம் தீவிரமாகி விட்டால்தான் அது செயலுக்கு வருகிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொறுத்துக்கொள்ளுதல், எவ்வளவு தடைகள் வந்தாலும் முயற்சி செய்து அதை நீக்கி முன்னேறுதல், இதற்காக தியாகங்களை செய்தல் போன்றவை பரபிரம்மத்தை அடைவதில் உள்ள தீவிரத்தை காட்டுகிறது. யார் பிரம்மத்தை அறிந்து பேசுகிறாரோ அவரை அதிவாதி என்று அழைப்பர். பிரம்மத்தை அடைவதுதான் முடிவான இலட்சியமாக கொண்டிருக்க வேண்டும்.
காண்டம்–17
விஞ்ஞானத்தை அடைய முயற்சி செய்யவேண்டும். விஞ்ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவாகும். அதை அறிந்தவனால்தான் சத்தியத்தைப்பற்றி பேச முடியும். இதை அடைவது எப்படி? அதற்குரிய சாதனம் என்ன? என்று கேட்டால், விசாரம்தான் ஞானத்தை அடைய உதவும் சாதனம். ஏன் விசாரம் தேவை? எதை, எப்பொழுது விசாரம் செய்ய வேண்டும்?
காண்டம்–18
விசாரத்தின் தேவை:
நான் சம்சாரியா, அசம்சாரியா என்று சந்தேகம் வந்தால் நம் அனுபவத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். வேதம் ஜீவர்களை பூரணமானவர்கள், அழிவற்றவர்கள் என்று உரைக்கிறது. அதே வேதம் கர்ம காண்டத்தில் சம்சாரி என்ற பாவனையில் சில இடங்களில் போதிக்கிறது. இதைத்தான் விசாரம் செய்தறிய வேண்டும். நான் என்னை யார் என்று நினைக்கிறேன். நம் அனுபவம் நம்மை சம்சாரி என்று உணர்த்துகிறது. எனவே இரண்டு பிரமாணங்கள் இரண்டு விதமான அர்த்தத்தை கொடுக்கும்போது விசாரம் அவசியமாகிறது.
எதை விசாரம் செய்வது:
வாச்யார்த்த விசாரம்: வாக்கியத்தின் அர்த்தத்தை விசாரம் செய்தல். எந்த அடிப்படையில் உபதேசம் செய்கிறது என்று வேதாந்த வாக்கியத்தை விசாரம் செய்ய வேண்டும். விசாரம் செய்யாமல் ஒருவனுக்கு அறிவு கிடைக்காது. புத்தியிலுள்ள தமஸானது செய்யவிடாது, புத்திக்கூர்மை விசாரம் செய்ய உதவும். ஆனால் அதை செயல்படுத்த மனதானது தமஸாக இருக்கக்கூடாது
காண்டம்–19
விசாரம் செய்வதற்கு சாதனம் என்ன?
அது சிரத்தை என்கின்ற குணமாகும். சிரத்தையானது வேதாந்த வாக்கியத்திலும், குரு வார்த்தையிலும் நம்பிக்கை வைத்தல். இதுதான் பயனை அடைவதற்கு முன் அதைத் தரக்கூடிய செயலை செய்ய வைக்கும். ஞானம் வந்தவுடன் சிரத்தையின் அவசியம் முடிந்து விடுகிறது. எனவே சிரத்தையுடன் இருக்க வேண்டும். ஒருவன் வேதாந்த குரு வார்த்தையின் மீது சிரத்தையுடன் இருக்கும்போதுதான் ஞானமடைய விசாரம் செய்து கொண்டிருப்பான். சிரத்தையில்லாதவன் விசாரத்தில் ஈடுபடமாட்டான். எனவே சிரத்தைத்தான் நம்மால் அடையப்பட வேண்டும்.
காண்டம்–20
இந்த சிரத்தையை வளர்த்துக்கொள்ள நிஷ்டா என்ற சாதனம் தேவை. குருவுக்கு செய்யும் சேவையில் சிரத்தை வரும். ஞானத்தை பலனை அடைந்தவரை நாடினால் சிரத்தை தானாக வரும். பிரம்ம நிஷ்டை உள்ள குருவையடைய வேண்டும். அவர் ஸ்ரோத்ரனாகவும் இருக்க வேண்டும். அதனால் அப்படிப்பட்ட குருவினுடைய அருகில் செல்ல சேவை (நிஷ்டா) உதவுகிறது. இந்த சேவை மூலம் பணிவு என்ற குணம் வந்து விடுகிறது. இதனால் விக்ஞானமய கோசத்திலிருந்து விடுபட முடியும். எந்தவித பலனும் எதிர்ப்பார்க்காமல், மனம் கோணாமல் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது சிரத்தை வந்து விடுகிறது. சேவை செய்யாதவர்களுக்கு சிரத்தை வராது.
காண்டம்–21
க்ரிதி:- சமஹ(மனக்கட்டுப்பாடு), தமஹ(இந்திரியக்கட்டுப்பாடு)
சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது மனக்கட்டுப்பாடும், இந்திரியக்கட்டுப்பாடும் தேவை.
காண்டம்–22
ஒருவன் எந்தவிதமான காரியத்தில் ஈடுபட்டாலும், அதில் சுகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் ஈடுபடுவான். யோகியும் சுகத்தை நாடித்தான் ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான்.
மனக்கட்டுப்பாடு, இந்திரியக்கட்டுப்பாட்டினால் அடையும் இன்பம் நூறு மடங்கு இருக்கும். எனவே இந்தவகையான இன்பத்தினைத்தான் நாட வேண்டும்.
காண்டம்–23
பூமா, மஹத் – பரபிரம்மம், நிரதிஷ்யம் – முழுமையானது, பூர்ணம் – நிறைந்தது.
எது பூமாவோ அதுதான் சுகம். சுகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று ஆபாஸ சுகம், மற்றொன்று சுபாவமாக உள்ளது. (உ-ம்) காபியில் இருக்கும் இனிப்பு ஆபாஸ சுகம், ஆனால் அதில் இருக்கும் சர்க்கரையில் இருக்கும் இனிப்பானது சுபாவமானது, இயற்கையானது.
நாம் அனுபவிக்கும் சுகமானது, அனுபவிக்கும் விஷயத்தினுடைய சுபாவமானதல்ல. அல்பமான அனைத்து விஷயங்களில் அனுபவிக்கும் சுகத்தை நாம் அடைய விரும்புகிறோம், சுகத்தை பார்க்கிறோம். உண்மையில் அந்த சுகமானது திருப்தியைக் கொடுக்காமல் மேலும் அதைவிட மேலான சுகத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டி விடுகிறது. எனவே இதையெல்லாம் தவிர்த்து பூமாவைத்தான் நாட வேண்டும் அதுதான் சுகத்தின் இருப்பிடம். பூமாவை அடைந்தால் நீ சுகத்தை அடைவாய். அனாத்மாவில் சுபாவ சுகம் இருக்கிறதென்றால் அதை எல்லோருக்கும் சுக புத்தியை உண்டு செய்யும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எனவே அதில் தெரியும் சுகம் வெறும் தோற்றமாகும். உதாரணமாக சிலருக்கு சுகம் கொடுக்கும் விஷயமே மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கும்.
காண்டம்–24 —நான் என்ற சொல்லில் ஆத்மாவும், அனாத்மாவும் சேர்ந்து குறிக்கிறது. இங்கே அனாத்மாவை மட்டும் நீக்கி விட்டால் ஆத்மா தானாகவே புரிந்துவிடும். ஆத்மாவைப் பற்றி அனுபவம் இருக்கிறது ஆனால் அறிவில்லை.
யத்ர – எதனிடத்தில்;
அன்யத் – வேறொன்றை;
ந பஷ்யதி – பார்க்கவில்லையோ; அதுவே பூமாவாகும்.
ஒருவன் அதாவது எதனிடத்தில் ஒன்றை ஒன்றினால் பார்ப்பது இல்லையோ அல்லது வேறொன்றை அறிவதில்லையோ அதுவே பூமாவாகும்.
யத்ர நான்ய பஷ்யதி, நான்ய விஜானாதி, நான்ய ஸ்னோதி, தத்ர பூமா.
- நாம ரூபங்கள் நிஷேதம் செய்யப்படுகிறது
- எல்லா இந்திரியங்களின் விஷயங்களும் நிஷேதம் செய்யப்படுகிறது
- பூமா என்பது தெரிவதில்லை, உணரப்படவேண்டியது.
- அறிபவனொருவன் (சிதாபாசன்) இந்திரியங்களை பயன்படுத்தி விஷயங்களை அறிந்துக்கொண்டிருக்கிறான்.
- சிதாபாசன், அந்தக்கரணம், பிரபஞ்சம் இவையெல்லாம் எதில் ஒடுங்குகிறதோ அதுவே சைதன்யம்
- பார்ப்பவன் பார்க்கும்பொருள், பார்க்க உதவும் கருவி இவையெல்லாம் நீக்கி விட்டால் பிறகு உணரப்படுவது பரப்பிரம்மம்
- எது காட்சி மாதிரி தோன்றிக்கொண்டிருக்கிறதோ அதைத்தான் நீக்க முடியும்.
பிரம்ம லக்ஷணங்கள்:-
- பிரம்மஸ்வரூபம் – விவகாரத்திற்குள் வருவதில்லை. நாம் அனுபவிக்கின்ற பிரபஞ்சம் மித்யா, இதுதான் விவகாரத்திற்கு வருகிறது. இவை ஞான விவகாரம், கர்ம விவகாரம் என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
- நிர்விகல்பம் – பேதமற்றது – பிரம்மத்தில் பேதமற்றது.
- விகல்பம் – பேதம்
- ஞான விவகாரத்திற்கு தேவையான விகல்பம். அறிபவன்(பிரமாதா), பிரமாணம் (கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்). இந்த மூன்றும் இருந்தால்தான் ஞானம் ஏற்படும்.
- கர்ம விவகாரத்திற்கு தேவையான விகல்பம். கர்த்தா, கரணம் கர்ம (பொருள்)
காரக பேதங்கள் : கர்ம விவகாரத்தில் இருக்கும் பேதங்கள் நிர்விகல்பம் என்றால் ஞானபேதமும் இல்லாதது, கர்மபேதமும் இல்லாதது
நிர்விகல்ப விசாரம்
ஆழ்ந்த தூக்கத்திலும், மயக்கமடைந்த நிலையிலும் யோகிகளின் சமாதி நிலையிலும் . வேறொன்றையும் பார்ப்பதில்லை அறிவதுமில்லை. இது பிரம்ம லட்சணைக்கு பொருந்தி இருந்தாலும் இது அநித்யமாக இருப்பதாலும், காலவரையறைக்குட்பட்டதாலும் இது பிரம்ம லக்ஷணையில் சேராது.
அவஸ்தை (காலவரையறைக்குட்பட்ட அனுபவம்) என்பது வேறொரு அவஸ்தையால் நீக்கப்படும் ஆனால் ஸ்வரூபம் என்பது நிலையானது, நித்தியமானது இதுவே பூமா என்றழைக்கப்படுகிறது.
சவிகல்ப அவஸ்தை, நிர்விகல்ப அவஸ்தை இந்த இரு அவஸ்தைகளுக்கும் இடையே நிலையாக இருப்பது நிர்விகல்பமாக இருப்பது பூமா என்ற பிரம்மம். இப்படி நிர்விகல்ப ஸ்வரூபமாக இருப்பது நான் என்று உணர்ந்து விட்டால் பிரம்மஞானியாகி விடுவோம்.
சவிகல்ப அவஸ்தை ஒரு லட்சியமில்லை, சாத்தியமுமில்லை சம்சாரத்திலிருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கிற நிலை, திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடும். இது ஒரு சாதனையுமில்லை, சாத்தியமுமில்லை. ஆனால் சவிகல்ப அவஸ்தை நிர்விகல்ப ஸ்வரூபத்தை அடைவதற்கு சாதனையாக கொள்ளலாம்.
சில பொருட்கள் அனுபவத்தில் இருந்தாலும் அறிவில்லையென்றால் அதையறிய முடியாது. உதாரணமாக பத்தாவது மனிதனை தேடும் ஒருவன், தன்னை விட்டு விட்டு மற்ற ஒன்பது பேர்களை எண்ணி, பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்று கவலைப்படும்போது வேறொருவன் அவனை பார்த்து நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று கூறியவுடன் அவன் தன்னை உணர்ந்து கொண்டது போல. ஜாக்ர அவஸ்தையில் இருந்துதான் ஞானத்தை அடைய வேண்டும். இந்த ஞானம் நிர்விகல்ப ஸ்வரூபம் (சாத்தியம்) இதை நிச்சயம் செய்பவர்தான் முமுக்க்ஷு.
கர்ம கர்த்துரு தோஷம்: அறிபவனும் அறியப்படும் பொருளும் எப்போதும் நடக்காது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தெரியும் போதும், அதை அனைத்தப்பிறகு எதுவும் தெரியாத இருந்தாலும் அது அப்படியேதான் இருக்கும். எவன் ஒன்றை பார்க்கிறானோ, கேட்கிறானோ, அறிகிறானோ அது அனாத்மா, மாயை, சவிகல்ப நிலை.
காரணம்-1 பூமாவை அம்ருதம் என்று சொல்வதால் அது நித்யமானது
காரணம்-2 சவிகல்ப அவஸ்தை நிகழ்காலத்தில் அனுபவிப்பது. அதேமாதிரி பூமாவும் இருந்துக்கொண்டிருக்கும். உதாரணமாக, கயிற்றில் பாம்பு பார்ப்பது போல இரண்டும் ஒரே காலத்தில் நிகழ்வது.
வேறொன்றில்லை, பார்க்கவில்லை, கேட்கவில்லை, அறியவில்லை என்ற வார்த்தைகள் அதை மட்டும் பார்க்கிறோம் என்று பொருள் கொள்ளலாம் அதே போல வேறொன்று இருக்கிறது ஆனால் இப்பொழுது அது தெரியவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இதிலிருந்து பார்ப்பவன், கேட்பவன் என்ற த்வைதம் தெரிகிறது.
1. கர்ம கர்த்திரு தோஷத்தின்படி பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் எப்பொழுதும் ஒன்றாக இருக்காது
2. அவித்யை அடிப்படையிலே இந்த மாதிரி சொல்லியிருக்கிறது. பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விஷயங்களை நீக்குகிறோம்.
அறியாமை இருக்கும்வரை த்வைதம் தெரிந்து கொண்டேயிருக்கும். அக்ஞானம் இருக்கும் வரை இந்த உலகம் தெரிந்து கொண்டேயிருக்கும். ஞானம் வந்தபின் கயிற்றில் தோன்றிய பாம்பு மறைவதைப்போல மறைந்து விடும்.
ஸ்ருஷ்டி – நாமரூப வெளிப்பாடு
பிரளயம் – நாமரூப ஒடுங்குதல்
நிஷேதம் – நாமரூபம் ஒன்றுமில்லை என்று நீக்குவது
விஜானாதி – மனம் கிரகிக்கக்கூடிய விஷயங்கள், அனுபவமாக ஏற்படுதல்
மனதினால் அடையமுடியாது என்றால், ஒரு பொருளாக அடைய முடியாது. மனதினால் அறிவது என்றால், சவிகல்ப அவஸ்தையை சாதனமாக கொண்டு அறிவது. கனவில் பார்க்கும் விஷயங்கள், பொருட்கள் எல்லாம், அனுபவிக்கும் விஷயங்கள் யாவும் நான்தான். கனவு முடிந்ததும் அவைகள் மறைந்து விடுகிறது, ஆனால் நான் மட்டும் இருக்கிறேன். இது கானல் நீரை பற்றிய அறிவு வந்ததும், அதைப்பார்த்தாலும் அதை அனுபவிக்கக் கூடியதல்ல என்று உதாசீனபடுத்துகிறோம்.
த்வைதம் நீக்கம் என்பது சம்சாரம் அழிவதைக் குறிக்கிறது, மோட்சத்தை அடைவதை காட்டுகிறது. எது அல்பமோ அது அழிவடையக் கூடியது. பூமாவோ நித்யமானது.
நாரதர்: அந்த பூமா எதில் இருக்கிறது? எது தாங்கிக்கொண்டிருக்கிறது? எதை சார்ந்திருக்கிறது? அதற்கு எது அதிஷ்டானமாக இருக்கிறது?
சனத்: இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. அதன் சக்தியிலே அது இருக்கின்றது.
நாரதர்: அது எப்படி ஒரு பொருளுக்கு ஆதாரமாக அதுவாகவே இருக்க முடியும்?
சனத்: அதற்கு ஆதாரமாக எதுவும் இல்லை.
ஒரு புத்தகம் இருக்கிறது, அதை கிழித்து விட்டால் புத்தகம் போய் விடுகிறது குப்பை என்று அழைக்கப்படுகிறது. அதை எரித்து விட்டால் குப்பை என்ற நாமரூபம் போய் சாம்பல் என்றாகிறது. இங்கு இருத்தல் எல்லா நிலையிலும் இருக்கிறது. எனவே இருத்தல் என்பது சுதந்திரமாக இருக்கிறது எதையும் சார்ந்து இல்லை என்று தெளிவாகிறது.
பூமா என்பது அத்வைதம் என்று நிலைநாட்டப்பட்டது. இனி அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒருவனுடைய புகழும் பெருமையும் பணத்தால் அல்லது இருக்கும் பதவியால் வந்தவையாக இருக்கும். இதிலிருந்து ஒருவன் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கிறான்.
காண்டம்–25 —பரபிரம்ம லக்ஷணம் / பிரயோஜனம்
ஒரு பொருள் பூரணமாக உள்ளது என்று உறுதி செய்ய வேண்டுமென்றால் அதற்கு இணையாக வேறொன்று இருக்கக்கூடாது
பூமாவுக்கு வேறுபட்டதாக இரண்டு தத்துவங்கள் தோன்றிக்கொண்டிருக்கிறது. ஜகத்தும், ஜீவனும் வேறாக (விலக்ஷணம்) இருப்பதாக நினைக்கிறோம். ஜகத்தானது ஜடமாக பூமாவுக்கு வேறாக தோன்றுகிறது. ஜீவன் அறிவு ஸ்வரூபம் இது பூமா போன்றதாக உள்ளது. இது இரண்டும் இல்லையென்று நிரூபிக்க வேண்டும். காரிய காரண தத்துவத்தை பயன்படுத்தி நீக்கப்படும். ஜீவனிடத்திலுள்ள மூன்று சரீரங்கள் ஜகத்துடன் சேர்த்து விட்டு அறிவையும், பிரம்ம ஸ்வரூபத்துடன் ஐக்கியப்படுத்திட வேண்டும்.
ஜகத்தை நிஷேதம் செய்யும் இரண்டாவது உபாயம்
ஒரு சொற்றொடரில் உள்ள எல்லா சொற்களும் பொருளைக் குறிக்கிறது. வாக்யம் எப்பொழுதும் த்வைதத்தை போதிக்கிறது. ஆனால் சில வாக்கியங்கள் ஒரே பொருளை மட்டும் குறிக்கலாம். உதாரணமாக தயாள குணமுள்ள, தசரத புதல்வன், மனித அவதாரம், தர்மத்தை ரக்ஷிக்கும் ராமபிரான். இந்த வாக்கியத்தில் உள்ள எல்லா சொற்களும் ஒரே பொருளான ராமரை மட்டும் குறிக்கிறது. இதற்கு சாமான அதிகரணம் என்று பெயர். எனவே ஒரு வாக்கியம் சாமானதிகரண்யமாக இருப்பதால் அது இருமையைக் குறிக்காது.
1. ஐக்கிய சாமானாதி கரணம் – ஒரு சொல்லிலுள்ள இரண்டு சொற்களை ஐக்கியப்படுத்தி ஒன்றை சமானப்படுத்துதல், உதாரணமாக தத்துவம்-அஸி, மொட்டையுடன் இப்போது காட்சியளிக்கும் இவர், முன்பு தாடி மீசையுடன் இருந்தார்.
2. பாதாய சாமானாதி கரணம் – தூணில் தெரிந்த திருடன் என்ற வாக்கியத்தில், திருடன் என்ற சொல்லின் பொருள் நீங்கி தூண் மட்டும் நான் இருக்கிறேன் என்பதைக்காட்டுகிறது. அதுபோல ஜகத்தானது பிரம்மம்தான், என்ற சொற்றொடரில் ஜகத்தானது நீக்கப்பட்டு பிரம்மத்திடம் மட்டும் பொருள் கொள்கிறது.
அதிகரணம்: ஒரு சொல் எந்தப்பொருளை குறிக்கிறதோ அதற்கு அதிகரணம் என்று பெயர். (உ-ம்) புத்தகம் – இந்தச்சொல் புத்தகத்தை மட்டும் குறிக்கிறது.
சாமானதிகரணம்: ஒரு சொற்றொடரில் உள்ள எல்லாச் சொற்களும் அதற்குரிய அதிகரணத்தை குறிப்பதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஸ ஏவ இத3ம் ஸர்வம் – ப்3ரஹ்ம ஏவ ஸர்வம் கர்ம:
மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மையில், அதன் உருவத்தை பார்க்கும்போது மரம் மறைந்து விடுகிறது. மரத்தை பார்க்கும்போது யானை உருவம் மறைந்துவிடும். அதேபோல பிரம்மத்தின்மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத்தை நீக்கி பிரம்மத்தை மட்டும் பார்க்க வேண்டும். அதுவே இவையனைத்துமாக இருக்கிறது.
அஹம் ஏவ இத3ம் ஸர்வம் – நானே இவையனைத்துமாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நான் என்பது ஆத்மாவை குறிக்கிறது.
ஆத்மா ஏவ இத3ம் ஸர்வம்– ஆத்மா மட்டும்தான் எங்கும் வியாபித்திருக்கிறது
ஆத்மாவிடமிருந்து வேறுபடாத விஷயம்தான் நான். பார்க்கிறதெல்லாம் நான்தான் “அது” என்பதை “நான்” என்று அழைக்கக் காரணம் அனாத்மாவை ஆத்மாவோடு சேர்த்துப்பார்ப்பதால்தான். இங்கு அனாத்மாவை நீக்கி ஆத்மாவை நான்தான் என்று உணர வேண்டும். நான் என்பதை அழித்துவிட வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். இவ்வாறு பிரம்மமே நான் என்று அறிந்தவுடன் அதன் உண்மை ஸ்வரூபத்தை அடைகிறோம். இதுவே மோட்சத்தை அடைதல் என்று கூறுகிறோம். எந்த ஜீவன் இவ்விதமாக அறிகிறானோ (சிரவணம்), இவ்விதமாக சிந்திக்கின்றானோ (மனனம்), பிறகு அந்தச் சிந்தனையில் நிலைபெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறானோ(நிதித்யாஸனம்) அவன் இந்த மாதிரியான பலனை அடைகிறான். இதுதான் ஜீவன்முக்தி நிலை. நம் ஆனந்தத்திற்கு வெளியே உள்ள பொருட்களை நாடுதல், நமக்கு நாமே சில நிபந்தனைகளை போட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்பத்தை நாடுகிறோம், தேடுகிறோம்.
ஆத்ம மிதுனஹ – தன் ஆனந்தத்தை, பற்றை தேடுதல்
ஆத்மானந்தஹ – ஆனந்தம் தன்னிடத்திலேதான்
ஸ்வராட் – தனக்குத்தானே ராஜாவாக இருக்கிறான்.
ஜீவன் முக்தன் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்கிறான். உயிர் வாழ்வதற்கு பிறவற்றை சார்ந்திருக்க வேண்டும். அதாவது அன்னம், நீர், வாயு போன்றவற்றின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், தன்னிடத்தில் ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்லை. எல்லா உலகத்திலும் தன் விருப்பப்படி வாழலாம். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. உலகத்திலுள்ள எல்லா பொருட்களின் மீது ஆசையில்லாமன் இருக்கிறான்.
அக்ஞானியின் நிலை:
யார் இந்த அறிவை அடையாமல் இருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்கிறார்கள். இவர்கள் அழியக்கூடிய உலகத்தில் அழியக்கூடிய உடலைப்பெற்று வாழ்வார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். அதாவது ஆசைவசப்பட்டு துன்பத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.
காண்டம்–26
இவ்விதம் படிப்படியாக தாண்டி ஞானத்தையடைந்த ஞானியானவனுக்கு இந்தப்படிகள் எல்லாம் அவன் மீது ஏற்றி வைத்துப்பார்க்கப்பட்டதுதான். எல்லாமே என்னிடமிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது. அனைத்து ஸ்ருஷ்டியும், லயமும் என்னிடத்தில் இருந்துதான் வந்தது, ஒடுங்குகிறது.
பார்ப்பவன் பார்ப்பதில்லை – ஆத்மாவை பார்ப்பவன், மரணத்தைப் பார்ப்பதில்லை. நோயை பார்ப்பதில்லை, துயரத்தை பார்ப்பதில்லை. இவன் எல்லாவற்றையும் தானாக பார்ப்பான், எல்லாவிதத்திலும் தன்னையே அடைகிறான்.
மனதுக்கு இந்திரியங்கள் மூலம் நல்ல விஷயங்களை கொடுத்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வெற்றியடையலம்.
—-0000—-
சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6–(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)
காண்டம்–1
இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம் உள்ளது, அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாசிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இந்த தியானத்தை விடாமுயற்சியுடன் செய்து ஞானயோக அதிகாரத்துவத்தை வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரமமுக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.
பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம். அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது. அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.
காண்டம்–2
இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?
ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது. ஆகாசம் பிளவுபடாதது. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேபோலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசமும். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.
உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?
உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவைகள்
- பாவமற்றது
- வயதற்றது
- மரணமற்றது
- துயரமற்றது
- பசியற்றது
- தாகமற்றது
- நிறைவேறுகின்ற ஆசை
- நிறைவேறுகின்ற சங்கல்பம்
ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாகுவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் செய்வோம். அதாவது இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பதாகும். ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது. இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியானத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்
இந்த உலகத்தில் நாம் அடையும் அனைத்தும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிறான். ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.
யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.
சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை. ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.
காண்டம்–3
ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:
நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.
இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை. மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராததற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடப்பட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.
அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை,
ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)
ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவனுடைய அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனுடைய புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.
ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)
ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.
ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்
அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு
பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக
உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து
ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே
அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)
அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.
சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்
சத்யம் – உண்மை பேசுதல்
சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்
சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்
இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக, நித்தியமானதாக இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.
சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.
இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.
காண்டம்–4
அபஹதபாப்மா – பாபமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு
ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இந்த சொல்லுக்கு நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.
இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.
இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர்.
சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள். ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்
இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.
காண்டம்–5
பிரம்மசர்ய சாதனையின் பெருமை
· குருவுக்கு சேவை செய்தல்
· வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
· குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
· எளிமையான வாழ்க்கை வாழ்தல்
· சிற்றின்பத்தை துறத்தல்
இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்
யக்ஞம் – இறைவனை வழிபடுதல்
இஷ்டம் – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்
ஸத்ராயண – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.
மௌனம் – இதனால் அடையும் பலன்
அநாஸகாயனம் – உபவாசம்
அரண்யாயனம் – வனத்தில் வாழ்தல்
இந்த ஆறு சாதனங்களின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்
பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை தரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது. யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான நகரத்தில் வசிக்கலாம்.
காண்டம்–6
சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.
நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது. சூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவிதமான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.
இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான். அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்காகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.
நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.
காண்டம்–7 (பிரஜாபதி வித்யா)
- ஞானி என்பவர் யார்?
- எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?
- ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?
- எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?
- ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?
ஸ்லோகம்-1
மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
- ஆத்ம ஸ்வரூபம்
- ஞானத்தை அடையும் வழி
- ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்
ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.
அபஹதபாப்மா ஆத்மா காரண சரீரமற்றது
விஜரஹ ஸ்தூல சரீரமற்றது
விம்ருத்யு மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது
விஷோகஹ துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது
விஜிதாத்ய பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது
அபிபாக தாகமுமில்லை.
எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.
இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்
- அன்வேஷனம் – ஞானத்3வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் சாதனங்கள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.
- விஜிக்ஞாஸிதவ்ய– தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.
ஸ்லோகம்-2
வித்யா க்ரகணம், வித்யா சம்பிரதானம், விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.
இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.
இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.
பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்
கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாசம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.
கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.
குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.
சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார்.
கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?
பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.
காண்டம்–8
தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.
குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.
அனுபலப்4யா – சரியாக புரிந்து கொள்ளாமல்
ப்ரோவாசா – உபதேசம் செய்தல்
பரிசர்ய – காக்கப்படவேண்டும்
இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.
விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.
இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.
காண்டம்–9
ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.
குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்
தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்
தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்
நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.
ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.
மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்கக்கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.
குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.
ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்
இந்திரனின் விசாரங்கள்:
இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.
தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.
தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)
தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.
நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.
இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.
குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.
காண்டம்–10
எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது.
குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.
தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன், ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.
தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞ்சபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞ்ச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.
இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.
ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.
குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.
காண்டம்–11
எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.
காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மகாவாக்கியமாகும்.
இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.
அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”
இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.
உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.
காண்டம்–12
சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.
இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது ஆகியவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.
சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்கியம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொரு க்ஷணமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.
ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்
ஆத்ம-சரீர சம்பந்தம்:
இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று அர்த்தங்களை சங்ராச்சாரியார் கூறியிருக்கிறார்.
- ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாச ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.
- ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.
- ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு.
சரீர அபிமான பலன்:
சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.
தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.
நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.
இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?
சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.
கேள்வி-1
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?
பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள்
1.சம்சாரப்பிரியம்,
2.ஞானியின்பிரியம்.
சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.
கேள்வி-2
ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?
குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.
வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.
அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.
ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.
விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்
ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்மம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.
அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.
ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது,
இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு முழுப்பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
[ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]
இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்(ஆத்மா). இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.
கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிகிறது ஆத்மா. நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…
ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்
மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.
யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.
பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.
காண்டம்–13 (பிரார்த்தனை)
ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.
காண்டம்–14
இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.
ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரண்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.
காண்டம்–15
பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.
- ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்
- முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்
- சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.
- இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.
- அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
- எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டப்படுத்தக் கூடாது.
ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
ஓம் தத் ஸத்
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply