மாண்டூக்ய உபநிஷத் – ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-1

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

 

முகவுரை
வேதம் என்பது ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணமாக கருதப்படுகின்றது.  இது இரண்டு விதமான ஞானத்தை கொடுக்கின்றது.  அவைகள்
1. கர்மத்தை, தர்மத்தைப் பற்றிய ஞானம்,
2. பிரம்ம ஞானம்
ஆகியவைகளாகும்.

கர்மஞானம்:
கர்மமானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. காயிகம்- உடலினால் செய்யப்படுவது,
  2. வாசகம்- வாக்கினால் செய்யப்படுவது,
  3. மானஸம் – மனதினால் செய்யப்படுவது.  மனதினால் செய்யப்படும் செயலானது உபாஸனை, தியானம் ஆகியவைகளாகும்.

கர்மத்தை வேதமானது ஒரு சாதனமாக கூறுகின்றது.  சில கர்மங்களை செய்ய வேண்டுமென்றும், சில கர்மங்களை செய்யக்கூடாதென்றும் அறிவுறுத்துகின்றது.  இதனால் அடையும் பலன்கள் என்ன என்று கேள்வியெழும்போது நேரிடையான பலன் பாவ-புண்ணியங்களாகும். புண்ணியத்தால் சுகத்தை அனுபவிப்பான் அல்லது சுகத்தைக் கொடுக்கின்ற சூழ்நிலைகள், உடல் கிடைக்கின்றது.   பாதுகாப்பையும்,  மகிழ்ச்சியை அனுபவிக்கும்  நிலையை ஏற்படுத்துகின்றது.  வாழும்போது மட்டுமல்ல இறந்த பிறகும் வேறு நல்ல உலகத்தையடைந்து மகிழ்ந்து இருக்கின்றான்.

இதே புண்ணியத்திற்கு வேறு சில பலனைக் கொடுக்கும் தகுதியும் உண்டு.  சிலருக்கு போகத்தினால் தன்னை திருப்திபடுத்த முடியாது எனவே இவைகள் மீது வைராக்கியம் எற்படுகின்றது. தர்மவழியில் வாழ்ந்து வந்தாலும் அதனால் விளையும் புண்ணியத்தினால் வரும் போகத்தை விரும்புவதில்லை.  இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு புண்ணியம் உதவுகின்றது.  கர்மத்தை யோகமாக செய்யும்போது மனதில் தூய்மையேற்பட்டு இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு உதவுகின்றது.  ஒரு சிறிய வாயுவானது தீயை வளர்வதற்கும், அதை அழிப்பதற்கும்  உதவுவது போல புண்ணியம் கொடுக்கும் போகத்தை அனுபவித்தால்,  விவேக,  வைராக்கியம் மறைந்து விடும். ஆனால் அனுபவிக்காமல் விட்டுவிட்டால் அது முழு மனநிறைவை அடைவதற்கும், சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கும் குருவை நாடி பிரம்ம ஞானத்தை அடையவும் முயற்சியை மேற்கொள்ள வைக்கும்.  வேதாந்த உபதேசத்தை பெற குருவை அணுகுவான்.

 கர்மத்தை உபதேசிக்கும் வேதாந்தத்தின் முதற்பகுதி கர்ம காண்டம் என்றும், ஆத்ம ஞானத்தை உபதேசிக்கும் கடைசிப்பகுதி ஞான காண்டம் என்றும் கூறப்படுகின்றது.  கர்ம காண்டத்தின் மூலம் விவேக, வைராக்கியம், முமுக்‌ஷுத்வம் அடைந்தவுடன் அதனுடைய வேலை முடிந்து விடுகின்றது.

பிரம்ம ஞானம்:
வேதத்தின் ஞான காண்டம் பிரம்ம ஞானத்தை அடைய உபதேசிக்கிறது.  பிரம்மம் என்பது என்றும் இருக்கின்ற பூரணமான ஒரு தத்துவம்.  இந்த உபதேசத்தை குருவின் மூலமாக கேட்டறிந்து பிரம்மஞானத்தை அடைந்து விடவேண்டு.ம்.  இதுவரை அறிவைத்தான் அடைந்து இருக்கின்றான்.  பிரம்மத்தை அறிவதும்,  அடைவதும் ஒரே சமயத்தில் நடக்கின்றது..  பிரம்மன் எங்கும் இருப்பதால் அதை அடைய தேவை இல்லை.  அதுவே நான்தான் என்று அறிந்தாலே போதும்.

பிரம்ம ஞானத்தை எப்படி அடைய முடியும் என்று வினவினால் அதை அடைய உதவும் பிரமாணத்தின் மூலமாகத்தான் அடைய முடியும் என்பதே பதிலாகும்.  எந்த ஒன்றை அறிய வேண்டுமானாலும் அதை அறிய உதவுகின்ற கருவியை பயன்படுத்த வேண்டும்.  ஒரு பொருளை பார்க்க வேண்டுமானால் கண்ணைத்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல பரம்பொருளை அறிவதற்கு அதை உபதேசிக்கக்கூடிய பிரமாணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அந்த பிரமாணம் வேதாந்தம்தான்.  இதை உபநிஷத் என்றும் அழைப்பர்.  இது ஒரு சப்த பிரமாணம்.

சப்த பிரமானம்:
சப்தம் இருவகையாக இருக்கின்றது. அவைகள்
1. த்வனி – ஒலி வடிவமாக இருத்தல்,
2. அர்த்தமுள்ள வாக்கியத்தை உச்சரிக்கும் சப்தமாக இருப்பது.

சப்தமானது அர்த்தத்தை கொடுத்தால் அதற்கு சப்த பிரமாணம்.  இந்த பிரமாணத்தை லௌகீக சப்தபிரமாணம்,  வைதீக சப்த பிரமாணம் என்று இதை இருவகையாக கூறுவர்.  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பேசுகின்ற வார்த்தைகளால் அடைய உதவும் சப்த பிரமாணங்கள். லௌகீக சப்தபிரமாணமாகும்.  வேதத்தின் சப்த பிரமாணத்தின் மூலமாக அடைகின்ற சப்த பிரமாணமானது வைதீக சப்த பிரமாணகும். இதன் மூலமாகவும் அறிவானது அடையப்படுகின்றது.   இந்த அறிவே பிரம்ம ஞானம்.  இந்த சப்த பிரமாணம் எந்த இடத்தில் நமக்கு துணைப்புரியும் என்று விசாரம் செய்யப்படுகின்றது.;  ஒரு வாக்கியத்தை உச்சரித்து அடையும் அறிவுக்கு சப்த பிரமாணம்.  தெரிந்த விஷயத்தில்தன் இந்த  பிரமாணத்தினுடைய பயன் அடையப்படும்.  உதாரணமாக ராமன் காட்டிற்கு சென்றார்.  இந்த வாக்கியத்திலுள்ள அனைத்து சொற்களினுடைய அர்த்தம் நமக்கு தெரிந்திருப்பதால் அந்த வாக்கியம் நமக்கு அறிவை கொடுக்கின்றது.  நமக்கு புரியாத மொழியிலுள்ள வாக்கியத்தை உச்சரிப்பதால் எந்த அறிவும் நமக்கு ஏற்படாது. எனவே சப்த பிரமாணம் தெரிந்த விஷயத்தைத்தான் புரிய வைக்கும்.  இதை வேறு பிரமாணத்தினாலும் சரிபார்த்து கொள்ள முடியும்.  சப்தமானது செயல்பட காரணங்களாக இருப்பவைகளை ஐந்து விதமாக பிரித்திருக்கின்றனர். அவைகள்

  1. திரவியம்  – அனுபவிக்கப்படுகின்ற பொருள்
  2. குணம்       – அந்தப்பொருளின் தன்மை, நிறம் போன்றவை
  3. செயல்      – அது செயல்படும் விதம்
  4. ஜாதி          –  பொதுவான பிரிவு
  5. சம்பந்தம் – ஏதாவது ஒரு உறவை கொண்டிருப்பது.

ஆகியவைகளாகும். சப்தத்தினால் ஒன்றை விவரிக்க வேண்டுமென்றால் மேலே கூறப்பட்டுள்ள ஐந்தில் ஒன்றாவது அதற்கு இருக்க வேண்டும்.

  1.      திரவியம்– நம் அனுபவத்தில் பார்க்கப்படும் பொருள். புலன்களால் அனுபவிக்கப்படுகின்ற ஒரு பொருள் அல்லது விஷயமாக இருக்க வேண்டும்.
  2. குணம் – திரவியத்தினுடைய நிறம், உருவத்தின் அளவு போன்ற தன்மைகளை கூறுதல்.  உதாரணமாக நீலமலர், சிறிய பானை.
  3.      க்ரியா – திரவியத்தின் செயல்பாட்டை குறிப்பது. (உ-ம்) கையை ஆட்டிக்கொண்டு பேசுபவர், அவன் சமையல்காரன், காரோட்டி
  4.      ஜாதி – பிரிவு, மனிதன், விலங்கு
  5.      சம்பந்தம்– பொருள்களுக்குமிடையே உள்ள உறவுமுறை, உறவை சொல்லி ஒன்றை புரியவைத்தல்.  (உ-ம்) பசுவை போல, அவருடைய மகன்

சப்த பிரமாணம் எப்படி பிரம்மத்தை விளக்க முடியும் என்று கேள்வியெழும்போது இதை விளக்குவதற்கு சப்தபிரமாணம் மூன்று வகையான நெருக்கடியை சந்திக்கின்றது.  அவைகள்

  1. சாதகனுக்கு பிரம்மத்தைப்பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது, தெரியாத விஷயமாக இருப்பது
  2. சப்த பிரமாணம் அறிவைக் கொடுக்க வேண்டுமென்றால் மேற்கூறிய ஐந்து நிபந்தனைகளுக்குட்பட்ட ஏதாவது ஒரு வகையை பிரம்மம் சார்ந்திருக்க வேண்டும். பிரம்மன் திரவியமில்லை,  குணங்களற்றது, செயலற்றது,  ஒன்றாக இருப்பதால் எந்த பிரிவும் இதற்கு கிடையாது, எதனோடும் உறவற்றது.  எனவே சப்த பிரமாணத்தினால் பிரம்மத்தை விளக்குவதில் இந்த நெருக்கடிக்குள்ளாகின்றது.  பிரமேயம் என்பது வரையறுக்கப்பட்டதாக இருக்கும்.
  3. சப்த பிரமானம் பிரம்மத்தை விளக்கிவிட்டால் அது பிரமேயமாகி விடும். அபூர்ணமாகி விடும்.  அப்படி விளக்க முடியாவிட்டால் அதை பிரமாணமாக கூற முடியாது,

இந்த நெருக்கடியை உபநிஷத் எப்படி சமாளிக்கின்றது என்பது விளக்கப்படுகின்றது;.

  1. பிரம்மன் தெரியாததாகவும் இருக்கின்றது அதேசமயம் தெரிந்ததாகவும் இருக்கின்றது.  உதாரணமாக பத்தாவது மனிதனை தேடிக்கொண்டிருப்பதால் அந்த பத்தாவது மனிதன் தெரியாதவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.  கயிற்றில் தோன்றும் பாம்பில் கயிறானது தெரிந்தும் தெரியாததாக இருக்கின்றது. அதேபோல இந்த பிரம்மமானது ஆத்மாவாக நான் என்று குறிப்பிடப்படுகின்றது.  இந்த விஷயத்தின் நான் என்ற சப்தம் ஆத்மாவை அறியாமல், உடலை அறிகின்றது.  சப்த பிரமாணத்தினால் தவறாக புரிந்ததை நீக்கி தெரிந்ததை விளக்குகின்றது
  2. பிரம்மன் சப்த பிரமாணம் செயல்படக்கூடிய ஐந்து நிபந்தனைகளைத்தாண்டி இருக்கின்றது.  இந்த பிரமாணம் பிரம்மத்தை நேரிடையாக விளக்கவில்லை. விருத்தி என்பது ஒரு விஷயத்தை பற்றிய அறிவை கொடுக்கும் ஒரு வழியாகும்.  இது இரண்டு வகையாக இருக்கின்றது. 1. அபிதா விருத்தி – படிக்கும் வாக்கியத்திலிருந்து நேரிடையாக அடையும் அறிவு (உ-ம்) நீர் கொண்டு வா, 2. லக்‌ஷணா விருத்தி – வாக்கியமானது மறைமுகமாக அறிவை கொடுப்பது.   (உ-ம்) கிரிக்கெட் விளையாட இந்தியா இலங்கை செல்கிறது. இந்த வாக்கியத்தில் இந்தியா என்பது இந்திய கிரிக்கெட் அணியை குறிக்கின்றது.  இங்கு நேரிடையாக பொருள் கொள்ளாமல், அதற்கு சம்பந்தபட்ட சரியான பொருளை எடுத்துக் கொள்கிறோம்.  வாச்யார்த்தம் என்பது வாக்கியம் நேரிடையாக பொருளைக் கொடுப்பது.  இது எங்கு செயல்படவில்லையோ அந்த இடத்தில் லட்சியார்தத்தை பயன்படுத்தி பொருளை புரிந்து கொள்ளலாம். இந்த லட்சியார்த்தம் மூன்று வகையாக இருக்கின்றது.  அவைகள்
  3. ஜகல் லக்‌ஷணம்– கங்கையில் கிராமம் இருக்கின்றது என்ற வாக்கியத்தை படிக்கும் போது கங்கை என்ற சொல்லை விட்டு விட்டு கங்கை கரையை எடுத்துக் கொண்டு பொருள் புரிந்து கொள்கின்றோம்.
  4. அஜகல் லக்‌ஷணம்– சிவப்பு ஒடுகின்றது என்ற வாக்கியத்தில் குதிரை என்ற சொல்லை சேர்த்துக் கொண்டு சிவப்பு குதிரை ஒடுகின்றது என்று புரிந்து கொள்கின்றோம்
  5. ஜகலஜகல் லக்‌ஷணம்(அ) பாகத்யாக லக்‌ஷணம். – ஐந்து வயதில் பார்த்த ஒருவரை 20 வயதில் பார்க்கும் போது அவன் தான் இவன் என்று கூறும் போது வயதை விட்டுவிட்டு உடலை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்கின்றோம்.

உபநிஷத் பிரம்மத்தை விளக்குவதற்கு லட்சியார்தத்தைதான் பயன்படுத்துகின்றது. உபநிஷத் நம்மைப்பார்த்து “நீ அதுவாக இருக்கிறாய்” என்று சொல்லும்போது இதில் நீ என்பது ஜீவாத்மாவையும், அது என்பது பரமாத்மாவையும் என்று சொல்கின்றது. இதில் ஜீவனிடத்தில் உள்ள மூன்று சரீரங்களை நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சுத்த சைதன்யத்தை எடுத்துக்கொண்டு, ஈஸ்வரனிடத்தில் உள்ள மூன்று பிரபஞ்சங்களையும் நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சைதன்யத்தை எடுத்துக் கொண்டு ஐக்கியத்தை நிலை நாட்டுகின்றது. இங்கு லட்சியார்தத்தின் மூலமாகத்தான் விளக்குகின்றது.

  1. பிரம்மன் சப்த பிரமாணத்தால் விளக்கப்பட்டு விட்டால் அது பிரமேயமாகி விடும்.  அது வரையறைக்குட்பட்ட பொருளாகி விடும், அநித்யமான வஸ்துவாகி விடும். உபநிஷத் நீ பிரம்மத்தை இது என்று தெரிந்து கொள் என்று சொல்லவில்லை, அதாவது பிரமேயமாக சொல்லவில்லை ஆனால் பிரமாதாவாக சொல்கின்றது.  அறியப்படும் பொருளாக உபதேசிக்கவில்லை. பிரமாதா என்று சொன்னாலும் அதுவும் வரையறைக்கு உட்பட்டதாகின்றது.  அதனால் பிரமாதாவும் இல்லை என்று நிஷேதம் செய்கின்றது.  இதனால் பிரம்மன் அறிவு ஸ்வரூபம் என்றும்,  அறியப்படும் பொருளில்லை என்று சொல்லும்போது அறிபவனும் இல்லையென்று ஆகின்றது,  பிறகு அறிவு ஸ்வரூபம் மட்டும் எஞ்சியிருக்கின்றது,  இதுவே பிரம்மன் என்று புரிய வைக்கின்றது.

உபநிஷத் முகவுரை:
இந்த உபநிஷத் அதர்வன வேதத்தைச் சார்ந்தது. இதற்கு மாண்டூக்ய உபநிஷத் என்று பெயர்.  இது பன்னிரண்டு மந்திரங்களைக் கொண்டது. ஆனால் கௌடபாதர் (ஆதிசங்கரரின் குருவான கோவிந்தபாதருடைய குரு) இதற்கு ஸ்லோக வடிவில் விளக்கத்தை எழுதியிருக்கின்றார்.  225 ஸ்லோகங்களில் நான்கு அத்தியாயமாக பிரித்து விளக்கம் எழுதியிருக்கின்றார்.

அத்தியாயம்-01 ஆகம பிரகரணம் – ஆகமம் என்பதற்கு வேதம் என்ற வேறு பெயரும் உண்டு.  இது பரம்பரையாக சொல்லபட்டு வந்திருக்கின்றது. உபநிஷத் மந்திரமும் அதன் விளக்கமும் சேர்ந்து வரும் 29 ஸ்லோகங்களை கொண்டது.

அத்தியாயம்-02 வைத்திய பிரகரணம் – இதில் இந்த பிரபஞ்சம் பொய் என்று நிலை நாட்டுகின்றார்.

அத்தியாயம்-03 அத்வைத பிரகரணம் – பிரம்மன் ஒன்றுதான் என்பதை நிலை நாட்டுகின்றார்.

அத்தியாயம்-04 அலாதிசாந்தி பிரகரணம் – அத்வைதத்திற்கு எதிராக உள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவைகளை நிராகரிக்கின்றார்.  பிரம்மன் சத்யம், ஜகத் மித்யா என்று நிலை நாட்டுகின்றார்.

சாந்தி பாடம்:

மிக உயர்ந்த ஒன்றை அடைய முயற்சிக்கும்போது மிக அதிகமான தடைகள் வரும் இந்த தடைகள் விலகுவதற்கு சாந்தி பாடங்கள் படிக்கப்படுவதுண்டு.  யாருமே மற்றவர்கள் சுதந்திரமாக இருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.  நம்மைச் சார்ந்து இருப்பவர்கள் நம்மை விட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தேவர்களுக்கு மனிதன் ஒருவன் ஞானம் அடைந்து விட்டால் அவனிடமிருந்து வரும் பலன் நின்று விடும்.  இந்திரியங்களுக்கு ஞானம் வந்தவுடன் போகத்தை அனுபவிக்கும் விஷயங்கள் கிடைக்காது எனவே அவைகள் தடைகளை ஏற்படுத்தும்.  எனவே தடைகள் நம்மிடமேயிருந்து வரும்.

  • தேவர்களே நல்லதையே, வேதாந்தத்தையே எங்கள் காதுகளால் கேட்போமாக, எவைகள் எல்லாம் எங்கள் காதுகளினால் கேட்கப்படுகின்றதோ அவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.
  • கண்களினால் நல்லதையே பார்ப்போமாக.
  • இவைகளிரண்டும் நல்ல ஆரோக்கியமான உறுதியான மனதை அடைவதற்கு வேண்டுகிறார்கள்.  நம்முடைய மனதிற்கு இந்திரியங்கள் வழியாக எதைக் கொடுக்கின்றோமோ அதைப்பொறுத்துதான் அதனுடைய நிலையும் அமையும், அதாவது அது அமைதியுடனும், சஞ்சலமின்றியும் உறுதியுடனும் இருக்கும் வகையில் விஷயங்கள் இருக்க வேண்டும்.
  • கர்மேந்திரியங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
  • நாங்கள் உங்களை போற்றிக்கொண்டு இருப்பவர்களாக இருக்க வேண்டும்.  வேத மந்திரங்களால் ஸ்துதி செய்து கொண்டிருக்க வேண்டும். உறுதியான உடலுடன் இருக்க வேண்டும்.  பிராரப்தத்தை மீறி துர்மரணம் ஏற்படக்கூடாது
  • இறைவனால் கொடுக்கப்பட்ட முழு ஆயுளுடன் வாழ்வோமாக. இங்கே சிஷ்யர்கள் ஸ்தூல, சூட்சும சரீரத்தின் ஆரோக்கியத்தை வேண்டுகிறார்கள்.  உடலும் மனமும் எடுத்துக் கொண்ட இலட்சியத்தை அடைவதற்கு உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்.
  • ஓங்கி உயர்ந்த புகழுடைய இந்திரதேவன் சிஷ்யர்களான எங்களுக்கு மங்கலத்தை வழங்கட்டும்.
  • அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு மங்கலத்தை கொடுக்கட்டும்
  • தடையின்றி வானில் பறக்கின்ற கருடபகவான் போல தடையின்றி எங்கள் இலட்சியத்தை அடைவதற்கு அருள் புரியட்டும்.
  • புத்திக்கு அதிஷ்டான தேவதையாக இருக்கின்ற பிருகஸ்பதி எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும், புத்திக் கூர்மையை கொடுக்கட்டும்.

ஸ்லோகம் – 1

விசாரம்:

இதில் ஓங்கார விசாரம் செய்யப்படும் என்று உறுதிக் கூறுகின்றது.  வேதாந்தத்தின் ஸாரம் பிரம்ம ஸத்யம், ஜகத் மித்யா என்பதேயாகும்.  பிரம்மத்தை தவிர வேறொன்றுமில்லை இதுவே அத்வைதமாக இருக்கின்றது.  நாம் த்வைதத்தை அனுபவிக்கக் காரணம் என்ன என்று வினவினால் நம்முடைய அறியாமையினால் தான் தவறுதலாக இருமையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது பதிலாகும். வஸ்து ஒன்று பார்வை இரண்டு விதமாக இருக்கின்றது. ஞானியின் பார்வையில் பிரம்மம் மட்டும்தான் தெரிகின்றது,  அக்ஞானியின் பார்வையில் இருமை தெரிகின்றது.  இந்த உலகம் தெரிகின்றது. இதில் எது உண்மையானது?

  1. பிரம்மனை மட்டும் பார்ப்பதால் அவன் அடைவது முழு மனநிறைவு.  ஜகத்தை மட்டும்பார்ப்பதால் பயமும், துயரமும் அனுபவிக்கின்றோம், சம்சாரத்தை அனுபவிக்கின்றோம்.
  2. எது நீக்கப்படுகின்றதோ அது பொய்யான பார்வை, எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் உண்மையான பார்வை. க யிற்றில் பாம்பை ஒருவர் பார்க்கின்றார், வேறு ஒருவர் கயிற்றை மட்டும் பார்க்கிறார்.  அறிவினால் பாம்பை பொய் என்று நீக்கிவிட்டால் அங்கு கயிறு மட்டும் தெரியும். அதுபோல ஆத்ம ஞானம் வந்தவுடன் பார்த்து கொண்டிருக்கும் ஜகத் பொய்யென்று உணர்ந்து, பிரம்மனே உண்மையென்று அறிகின்றான்
  3. அறியாமையில் இருக்கும்போது பிரம்மத்தை பார்க்கின்றானா இல்லையா என்று வினவினால் இரண்டு பார்வையும் இருக்கின்றது.  அறியாமையில் பூரண ஞானத்தோடு ஜகத்தை பார்க்காததால் அது இருப்பதாக உணர்கின்றோம்.
  4. தவறான ஞானத்திலிருந்து சரியான ஞானத்திற்கு எப்படி செல்ல முடியும்.  பாம்பிடம் இருந்துதான் விசாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.  எதை தவறாக பார்த்து கொண்டு இருக்கின்றோமோ அதை விசாரம் செய்தால் உண்மையானதை அறிந்து கொள்ளலாம். இயற்கை நியதிப்படி அதிஷ்டானம் இல்லாமல் தவறு நடக்காது.  அதாவது கயிறு இல்லாமல் பாம்பை பார்க்க முடியாது. அதிஷ்டானமும், அத்யாஸமும் பிரிக்க முடியாது.  இந்த நியதிப்படி ஜகத் என்ற பிராந்தி திருஷ்டிக்கு ஆதாரமாக பிரம்மன் இருக்கின்றது.  எனவே நமது விசாரத்தை ஜகத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.  பானையை பார்க்கும்போது களிமண்ணைத்தான் பார்க்கின்றோம். ஆனால் நாம் நாம-ரூபங்களைத்தான் உண்மையென்று பார்க்கின்றோம்.  ஜகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பிரம்மத்தை அறிவதற்கு இந்த ஜகத்தை விசாரம் செய்தால்தான் பிரம்ம சத்யம் என்ற அறிவை அடைய முடியும்.  ஓங்கார விசாரத்தினால் பிரம்மத்தை அறிய முடியும் என்று கூறுவதன் மூலம் ஒங்காரம் ஜகத்தை குறிக்கின்றது. இதிலிருந்து ஜகத்தும், ஓங்காரமும் ஒன்று என்று புரிந்து கொள்ளலாம்.

ஓங்காரமே ஜகத் என்று எவ்வாறு கூறப்படுகின்றது?
இந்த ஜகத்தை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கலாம்.
1. பதார்த்த பிரபஞ்சம்,
2. பத பிரபஞ்சம்.
பதார்த்த பிரபஞ்சம் என்பது பார்க்கும் அனைத்து பொருட்களையும் இது குறிக்கின்றது.   ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.  இந்த உலகத்தில் எவ்வளவு பொருட்களிருக்கின்றதோ அவ்வளவு பெயர்கள் (பதங்கள்) இருக்கும்.  பதத்துக்கும் பதார்தத்துக்கும் உள்ள சம்பந்தம் நாம-நாமி சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.   அபிதான (நாம) – அபிதேயம்(நாமி) என்றும் அழைக்கப்படுகின்றது.  ஆனால் வெவ்வேறாக இருக்கின்றது.  நெருப்பு என்று சொன்னால் வாயை சுட்டு விடாது.

இரண்டும் ஒன்றுதான் என்று நிச்சயிக்க போகின்றோம். பதார்த்த பிரபஞ்சம் என்பது இல்லை வெறும் பதம் மட்டும்தான் இருக்கின்றது என்று நிரூபிக்கப் போகின்றோம். (உ-ம்) ஒரு கிலோ தங்கத்தில் 20 விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன.  முதலில் தங்கம் என்ற சொல் மட்டும் இருந்தது. அதிலிருந்து 20 ஆபரணங்கள் செய்த பிறகு 20 நாமங்கள் வந்து விட்டன, 20 பதார்த்தங்கள் வந்து விட்டன. தங்கத்தில் 20 நாமங்களும், 20 உருவங்களும் கொடுக்கப்பட்டன.  ஒரு பதார்த்தமான தங்கமானது நாம-ரூபங்களுடன் சேர்ந்து காட்சியளிக்கும் போது  20  பதங்களும், 20 பதார்த்தங்களும் இருந்தாலும் அவைகள் இரண்டும் ஒன்றுதான்.  காரியமாக இருக்கும் பொருட்கள் அனைத்தும் நாம-ரூபங்களுக்கு வேறல்ல ஒன்றுதான் என்ற ஐக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  காரியமான பதார்த்தம் பதத்திற்கு வேறில்லை.  காரணத்திலிருந்து படைக்கப்பட்டது வெறும் பெயர் மட்டும்தான்.  ஒரு பொருளை காரியம் என்று நிரூபித்து விட்டால் அப்போது காரியம் வெறும் பதம்தான் என்று நிரூபிக்கபட்டதாகிறது.  இந்த ஜகத் பிரம்மத்திடமிருந்து தோன்றியது என்று உபநிஷத் ஜகத்தை அறிமுகப்படுத்துகின்றது; இந்த ஜகத் காரியம் என்று சொல்வதால் இது பத-பிரபஞ்சமாகவும்,  பதார்த்த-பிரபஞ்சமாகவும் இருக்கின்றது. இந்த ஜகத்திலுள்ள அனைத்தும் வெறும் பதங்கள்தான் என்று நிரூபிக்கபட்டுவிட்டது.

பதபிரபஞ்சம்:
எல்லா பதங்களுக்கும் உபாதானமாக இருப்பது ‘அ’ என்ற சப்தம்.  இதுவே மற்ற சப்தங்களுக்கு மூலமாக இருக்கின்றது.  ‘ம்’ என்ற சப்தம் எல்லா சப்தங்களுக்கும் முடிவாக காரணமாகின்றது.  ‘உ’ என்ற சப்தம் எல்லா சப்தங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்த மூன்று சப்தங்களும் சேர்ந்து ஓம் என்று உருவாகின்றன.  இது பதபிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருப்பதால் ஓம் என்ற சொல்லும் அனைத்து பத பிரபஞ்சங்களும் ஒன்றுதான்.  இதுவே ஓம் என்ற சொல் பதார்த்த பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகின்றது.  பதார்த்த பிரபஞ்சமே ஜகத் என்று குறிப்பதால் ஓங்கார விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம். ஓம் என்ற சொல்லும் ஜகத் என்ற சொல்லும் ஒன்றுதான்.  எனவே ஓங்கார விசாரத்தினாலும் பிரம்மத்தையே அடையலாம்.

மந்திர விளக்கம்:
ஓம் என்கின்ற இந்த எழுத்து (அழியாத பிரம்மன்)  நம்மால் பார்க்கப்படுகின்ற இவைகள் அனைத்தும் (பதார்த்த பிரபஞ்சம்)  ஓங்காரத்தினுடைய விளக்கம் ஆரம்பிக்கபடுகின்றது. ஓம் என்ற சொல் தியானம், விசாரம் என்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தபடுகின்றது.  விசாரம் செய்வதன் மூலம் பிரம்மத்தை நாம் அடைகின்றோம்.  ஒங்காரம் பிரம்மத்திற்கு அருகில் இருக்கிறது.  பிரபஞ்சத்தை அடைய உதவும் தெளிவான முழுமையான விசாரம்.

கடந்த காலத்தில் இருந்த அனைத்தும், இப்பொழுது இருக்கின்ற அனைத்தும் இனி வரப் போகின்ற அனைத்தும் ஓம் என்ற எழுத்து மட்டும்தான்.  எந்தவொன்று மூன்று காலத்திற்கும் வேறாக இருக்கின்றதோ, கடந்து இருக்கின்றதோ (இது மாயையை குறிக்கின்றது)  அதுவும் ஓங்காரம்தான்.  மாயையிலிருந்து தோன்றியது காலமும், தேசமும், ஈஸ்வரன்தான் ஓங்காரம்.  ஓம் என்பது காரண காரிய பிரபஞ்சங்களை குறிக்கின்ற தத்துவம்.

ஸ்லோகம்2
இது பதார்த்த பிரதானமாக கொண்ட மந்திரம்.  பதார்த்தம் என்பது வெறும் உருவம்.  இது அருவமான பிரம்மத்தில் ஏற்றி வைத்து விசாரம் செய்யப்படுகின்றது.  பதமும், பதார்த்தமும் ஒன்றுதான் என்ற ஐக்கியத்தை விசாரம் செய்து உறுதி செய்யப்பட்டதால் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு பிரம்மத்தை அடையலாம்.  நாமமும், உருவமும் பிரிக்க முடியாதது. வட்ட வடிவமான வளையல் என்ற பெயருடைய தங்க நகையை வேறொரு உருவமாக மாற்றி அமைத்தால், வளையல் என்ற சப்தம் மறைந்து விடுகின்றது.  வேறொரு நாம ரூபம் தோன்றி விடுகின்றது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பதால் இதிலிருந்து ஏதாவது ஒன்றை பிரம்மத்தில் ஒடுக்கி விட்டால் போதும் நாம் நிர்குண பிரம்மத்தை அடைந்து விடலாம். இந்த ஸ்லோகத்தில் அனைத்து பதங்களும் பதார்தத்தில் ஒடுக்கப்படுகின்றது).

ஆத்மாவும் ஜகத்தும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்துகின்றது.  எனவே ஜகத்தை விசாரம் செய்வது ஆத்மாவை விசாரம் செய்வதற்கு சமமாகும்.  இவைகள் அனைத்தும் பிரம்மன் என்றும்,  பிரம்மனும் ஆத்மாவும் ஒன்று என்று சொன்னால்,  ஆத்மாவே அனைத்தும் என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்லோகத்தில் மூன்று விதமான கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்
1. ஸர்வம் ஹ்யேதத் பிரஹ்ம
2. அயம் ஆத்மா பிரஹ்ம
3. ஸோ அயமாத்மா சதுஷ்பாத்

  1. ஸர்வம் ஹி ஏதத் பிரஹ்ம– அனைத்தும் உண்மையில் இந்த பிரம்மனே.  அனைத்தும் என்பது காரண, காரிய பிரபஞ்சம் இரண்டையும் குறிக்கின்றது.  முதல் ஸ்லோகத்தில் கூறிய ஸர்வம் என்ன சொல்கின்றதோ அதையே இங்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாக்கியம் ஜகத்தும், பிரம்மனும் ஒன்று என்று கூறுகின்றது.  ஜகத்தானது இந்த பிரம்மத்திடம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.   களிமண்ணால் செய்யப்பட்ட விதவிதமான பானைகள் உண்மையில் வெறும் நாம-ரூபங்களோ. ஆனால் இவைகள் களிமண்ணின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. அதுபோல இந்த நாம-ரூபமான ஜகத் பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  மாயைக்கும், அதிலிருந்து வெளிவந்த அனைத்துக்கும் பிரம்மமே ஆதாரமாக இருக்கிறது.  பிரம்மன் காரண காரிய பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
  2. அயம் ஆத்மா பிரஹ்மன்– இந்த ஆத்மாதான் பிரம்மன்.  முதல் பகுதியில் கூறப்பட்ட அந்த பிரம்மன்தான் இந்த ஆத்மாவாக இருக்கின்றது.  இது ஒரு மகாவாக்கியம்.  இங்கு ஆத்மா என்பது ‘நான்’ என்ற சொல்லினுடைய உண்மையான பொருள்.  இந்த என்ற சொல் ஜீவனை சுட்டிக்காட்டி சொல்வதாக இருக்கின்றது.  நானே இந்த பிரம்மனாக இருக்கின்றேன்.  நானே இவைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன்.  ரிக் வேதத்திலுள்ள அய்த்தரேய உபநிஷத்தில் “பிரக்ஞானம் பிரம்ம” என்பதும், யஜூர் வேதத்திலுள்ள ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் “அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற வாக்கியமும், சாம வேதத்திலுள்ள சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள :”தத்துவமஸி” என்ற வாக்கியமும் அதர்வன வேதத்திலுள்ள மாண்டுக்ய உபநிஷத்தில் உள்ள  “அயம் ஆத்மா பிரஹ்ம” என்ற வாக்கியமும் மகாவாக்கியங்களாகும்.   இந்த நான்கு வாக்கியங்கள் மட்டுமல்ல எவ்வளவு உபநிஷத்துக்கள் உள்ளனவோ அவ்வளவு மகாவாக்கியங்கள் உள்ளது.  பிரதிக்ஞா மகாவாக்கியம் என்பது உபநிஷத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் வாக்கியம்.  பிறகு அதை விசாரம் செய்து நிரூபிக்கின்றது.
  3. ஸோ அயமாத்மா சதுஷ்டாத்:  இதில் ஆத்மாவைப்பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.  எப்பொழுதெல்லாம் நான் என்று சொல்லுகிறோமோ அப்போது நாம் எதைக் குறிக்கின்றோம் என்றால் ஆத்மாவோடு சேர்த்து அனாத்மாவான மூன்று சரீரங்களைத்தான்.  அதாவது பிரம்மனோடு ஜகத்தையும் சேர்த்து புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  உண்மையில் ஆத்மாவையும் அனாத்மாவையும் பிரித்து புரிந்து கொள்ள வேண்டும்.  எனவே இவையிரண்டையும் சேர்த்து விசாரம் செய்ய வேண்டும்.  நாம் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றோமோ அதிலிருந்துதான் உபநிஷத் விசாரத்தை ஆரம்பிக்கின்றது.

ஆத்மாஅனாத்மா விசாரம்:

ஸஹ அயம் ஆத்மா – அந்த இந்த ஆத்மா.  இதில் அந்த என்ற சொல் பிரம்மத்தை குறிக்கின்றது.  பிரம்மனே இந்த ஆத்மா என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

சதுஷ்பாத் – நான்கு பாதங்களுடன் (பகுதிகளை) கூடியது.  அறியாமையில் ஜீவன் ஆத்மாவை எப்படி தவறாக புரிந்து கொண்டிருக்கின்றானோ அதன் அடிப்படையில் நான்கு பாதங்களாக உபநிஷத் பிரித்துள்ளது.  இதில் மூன்று பாதங்கள் ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத், நான்காவது அதிஷ்டானமாக இருக்கின்ற ஆத்மா.  விவகாரத்திற்கு நம்முடைய வசதிக்காக ஒன்றை நாம் பிரிக்கின்றோம். அதுபோல பிரிக்க முடியாத ஆத்மாவை நான்காக பிரித்து விசாரம் செய்யப்படுகின்றது.

ஸ்லோகம் – 3
அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்ம விசாரம் செய்யப்படுகின்றது.  ஆத்மாவை நான்காக பிரித்து,. அதில் முதல் பாதம் இதில் கூறப்படுகின்றது. அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்மாவின் முதல் மூன்று பாதங்களை விளக்குகிறது.  நான்காவது பாதத்தில் அதை விசாரம் செய்கின்றது.  இந்த ஜகத்தை மூன்று அவஸ்தைகளுக்குள் அடக்கப்படுகிறது எனவே அவஸ்தாத்ரய விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றாகின்றது.  நான்காவது பாதம் மூன்று அவஸ்தைகளுக்கும், ஜகத்துக்கும் அதிஷ்டானமாக எது இருக்கின்றதோ அதை பற்றிய விசாரம்.

ஜகத்தானது காரண பிரபஞ்சம்,  சூட்சும பிரபஞ்சம்,  ஸ்தூல பிரபஞ்சம் என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.  உலகத்தில் நாம் பார்த்து அனுபவிக்கும் பிரபஞ்சம் ஸ்தூல பிரபஞ்சம்.  இது சூட்சும பிரபஞ்சத்திலிருந்து தோன்றியிருக்கின்றது;  காரண பிரபஞ்சம் மாயையை குறிக்கின்றது. ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் பிரபஞ்சம் என்றும் அழைக்கப்படுகின்றது ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்கப்படுகின்றது.  நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது அனுபவிக்கும் பிரபஞ்சமே ஸ்தூல பிரபஞ்சம்.  கனவில் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்தும் சூட்சுமாக இருக்கிறது எனவே அதை சூட்சும பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் பிரபஞ்சம் காரண பிரபஞ்சம்

ஆத்மாவுக்குத்தான் இந்த விழிப்பு நிலை என்று கூறப்படுகின்றது.  ஆத்மா அப்பொழுது தன்னுடைய அபிமானத்தை ஸ்தூல சரீரத்தில் வைக்கும்போது விழிப்பு நிலையில் இருக்கின்றது.  விழிப்பு பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது. சூட்சும சரீரத்தில் அபிமானிக்கும் போது சூட்சும பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது; காரண சரீரத்தில் அபிமானிக்கும்போது காரண பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது.  நான்தான் இந்த ஆத்மா என்று புரிந்து கொண்டு இந்த விசாரத்தை செய்ய வேண்டும்.

ஜாக்ரத் பிரபஞ்சம் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்
1. அனுபவிப்பவன்,
2. அனுபவிக்க உதவும் கருவி,
3. அனுபவிக்கப்படும் பொருள்.
ஆகியவைகளாகும்.

ஜாக்ரத் பிரமேயம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள், ஜாக்ரத் பிரமாணம் ஞானேந்திரியங்கள்,  ஜாக்ரத் பிரமாதா என்பவன்,  மனதில் பிரதிபலிக்கும் ஆத்மாவுடன் (சிதாபாசம்) கூடிய மனம்.  ஆத்மாவும், ஜாக்ரத் பிரமாதாவும், ஞானேந்திரியங்களான பிரமாணமும் சேர்ந்து விஸ்வன் என்று அழைக்கப்படுகின்றது.  ஆத்மாவையும், அனைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் சேர்ந்து விராட் என்று அழைக்கப்படுகின்றது.  இந்த விஸ்வன், விராட் என்ற இரண்டிலும் ஆத்மா என்பது பொதுவாக இருக்கின்றது.  விஸ்வன் தனிப்பட்ட ஜீவனையும், விராட் சமஷ்டி சரீரத்தைக் குறிக்கின்றது.  விஸ்வன் மூன்று சரீரத்திலும் அபிமானம் வைத்திருப்பதால்  அவ்வாறு அழைக்கப்படுகிறது.  ஆத்மாவில் முதல் பாதத்தில் விஸ்வன்,  விராட் என்ற இரண்டை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகின்றது.  விஸ்வனை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு விஸ்வனுக்கு ஒரு ஆத்மா என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டும் எனவே இரண்டும் சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

அவஸ்தாத்ரய விசாரம்,  த்வம் பத விசாரத்திற்காக உதவுகின்றது.  இது ஆத்ம ஸ்வரூபத்தை அறிய உதவுகின்றது.  ஆனால் இந்த உபநிஷத்தில் இந்த விசாரம் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை புரிந்து கொள்ள பயன்படுத்தபடுகின்றது.  இந்த விசாரத்தில் மூன்று சரீரத்திற்கு அப்பாற்பட்டதும்,  மூன்று பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டதுமான பிரம்ம தத்துவத்தை எடுத்துக் காட்டப்படுகின்றது

ஜாக்ரத் ஸ்தானஹ:
விஸ்வனும், விராட்டும் ஜாக்ரத் அவஸ்தையே இருப்பிடமாகக் கொண்டது.  ஆத்மா. ஸ்தூல சரீரத்தை உபாதியாக கொண்டது.  ஆத்மா என்பது இறுதியான பொருள்.  இது ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது.  ஒரு உடலை எடுத்துக்கொண்டு ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது அதற்கு விஸ்வன் என்றும்,  ஸ்தூல பிரபஞ்சத்தை அபிமானிக்கும்போது அதுவே விராட் என்றும் அழைக்கப்படுகிறது.

3ஹிஷ்ப்ரக்ஞஹ:
இது விஸ்வனைக் குறிக்கின்றது, வெளி விஷயமான அறிவை உடையவன் என்ற அர்தத்தைக் கொண்டது. ஆத்மா  வெளியே உள்ள விஷயங்களை அறிந்தவனாக இருக்கின்றது.  இங்கு வெளியே என்பது ஸ்தூல சரீரத்திற்கு வெளியே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலுள்ள எண்ணங்களைத்தான் நாம் பார்க்கின்றோம், அனுபவிக்கின்றோம்.  உண்மையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயங்களை, உலகத்தை அனுபவிக்கவில்லை.  எனவே உலகம் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு அனுபவங்களை ஜீவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆகவே சைதன்யம் எப்பொழுதும் உள்ளே இருந்து கொண்டு மனதில் உள்ள விருத்திகள் மூலமாக அனுபவத்தை உண்டாக்குகின்றது..  எந்தவொரு எண்ணமானது வெளி விஷயங்களிலிருந்து உண்டானதோ அதை பிரகாசப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.  விராட்டிற்கு இந்த நிலை ஏற்படாது. ஏனென்றால் அனைத்து ஸ்தூல சரீரங்களும் ஒன்றேதான் ஸ்தூல பிரபஞ்சம் முழுவதும் அவரது சரீரம்.

ஏகோனவிம்ஷதிமுக: (ஏகம் + ஊனம் + விம்ஷதி + முக)
இருபதில் ஒன்று குறைந்த(பத்தொன்பது ) துவாரங்களை உடையது இந்த ஆத்மா.  அவைகள் ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள்,  சித்தம்,  மனம்,  புத்தி,  அகங்காரம் ஆகியவைகளாகும். இவைகள் சூட்சும சரீரத்தின் அங்கங்களாகும்.  இவைகளின் வழியாக வெளி விஷயங்களை எண்ணங்களாக மாற்றி பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது.   உண்மையில் ஞானேந்திரியங்களின் வழியாகத்தான் எண்ணங்கள் தோன்றுகின்றன.  மற்றவைகள் இந்த இந்திரியங்களுக்கு உதவியாக இருப்பதால் இவைகளையும்  துவாரங்களாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்தூல பு4க்3: ஸ்தூலமான பொருட்களை அனுபவிப்பவன், உலகத்தை அனுபவிப்பவன்.

நான் (ஆத்மா) வெளி விஷயங்களை பத்தொன்பது துவாரங்களின் வழியாக அனுபவிக்கின்றேன்.  இந்த நிலையில் அறிவும் வெளியே இருப்பதை அறிய வைக்கின்றது.  எந்தவொரு சைதன்ய ஸ்வரூபம் அனைத்து ஸ்தூல ஜீவ சரீரங்களையும் நான் என்று அபிமானிக்கின்றதோ அதற்கு விராட் என்று பெயர்.  எனவே அவருக்கு சம்சாரம் என்பதே கிடையாது.  இந்த விராட்டை மனித உருவமாக கற்பணை செய்து அதற்கு ஏழு அங்கங்கள் ( ஸப்தாங்கஹ ) இருப்பதாக கூறப்படுகின்றது.  அதாவது அனைத்து ஸ்தூல பிரபஞ்சத்தையே விராட்டின் உடலாக கற்பனை செய்யபடுகின்றது.  விராட்டின் ஏழு அங்கங்களானது,

  1. தலை        – சொர்க்க லோகம்
  2. கண்கள்    – சூரியன்
  3. வாய்         – அக்னி
  4. பிராணன்    –  வாயு
  5. மூத்ரஸ்தானம் – கடல் ( Kidney Bladder )
  6. மத்ய உடல்       – ஆகாசம்
  7. கால்கள்             – நிலம்

வைஸ்வாநரன்:  இது விராட்டை குறிக்கின்றது.  விராட்டை தியானம் செய்வதற்கு அக்னியை ஆலம்பனமாக கொண்டிருக்கின்றோம்.  அனைத்து மனிதர்களையும் விதவிதமாக இழுத்துக் கொண்டு செல்கின்றான்.  அவரவர் கர்ம பலனுக்கேற்ப அந்தந்த சூழ்நிலைக்கு கொண்டு செல்பவர்.  ஜீவர்களின் பாவ-புண்ணியத்திற்கேற்ப கர்ம பலனை கொடுப்பவர்.  அவர் சர்வேஸ்வரனாகவும் இருப்பதால் இது சாத்தியமாகின்றது. இவர் உலகமாகவும்,  மனிதர்களாகவும் இருக்கின்றார். அதாவது அனைத்துமாக இருக்கின்றார். அனைத்து ஜீவராசிகளில் சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறார்.

பிரதம பாதஹ:  இதுதான் ஆத்மாவினுடைய முதல் பாதம். விஸ்வம்-விராட் சேர்ந்த தத்துவம்.  நாம் நம்முடைய ஸ்தூல சரீரத்தை அபிமானத்தை விட்டுவிடும் போது இந்த ஸ்தூல பிரபஞ்சத்தையே விலக்கி விடுகின்றோம்.

ஸ்லோகம் – 4
ஆத்மாவினுடைய இரண்டாம் பாதம் இதில் விளக்கப்படுகின்றது.  கனவு-பிரபஞ்சம்: கனவு-பிரமாதா, கனவு-பிரமானம், கனவு-பிரமேயம்.  கனவு உலகத்தை அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் விஷயம்.  ஆத்மாவோடு சூட்சும பிரமாதா சேர்ந்தால் அதற்கு தைஜசன் என்று பெயர்.  ஆத்மாவோடு சமஷ்டி கனவு பிரபஞ்சம் சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்தால் அதற்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.

ஸ்வப்ன ஸ்தானஹ – இது தைஜசனையும் ஹிரண்யகர்ப்பனையும் குறிக்கின்றது.  தைஜசன் சூட்சும சரீரத்தை உபாதியாக கொண்டது.  ஹிரண்யகர்ப்பன் அனைத்து சூட்சும சரீரத்தையும் உபாதியாக கொண்டது.
அந்த ப்ரக்ஞஹ: ஜென்ம-ஜென்மாந்திரமாக அனுபவிக்கப்பட்ட ஸம்ஸ்காரங்கள் அந்தக்கரணத்தில் இருக்கின்றது.  அவைகள்தான் கனவு பிரபஞ்சத்தை தோற்றுவிக்கின்றது அதைத்தான் அனுபவிக்கின்றோம்.  கனவுலகிலும் இந்திரியங்கள் படைக்கப்படுகின்றன இவைகள் மூலம்தான் நம்மால் கனவுலகத்தை அனுபவிக்க முடியும்.  கனவில் தோன்றிய பொருட்கள், எண்ணங்களால் உற்பத்தியாகவில்லை. உள்ளேயிருக்கின்ற ஸம்ஸ்காரத்தினால் தோற்றுவிக்கப்பட்டு அறிவை அடைவதால் அதற்கு அந்தபிரக்ஞன் என்று கூறப்படுகின்றது.
ஸப்தாங்கஹ: ஏழு அங்கங்களையுடைய ஹிரண்யகர்ப்பன், சூட்சும சரீரங்களை அங்கங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏ கோனவிம்ஷதிமுக: கனவுலக விஷயங்களை அனுபவிக்க 19 இந்திரியங்கள் உடையதாக இருக்கின்றது.
ப்ரவிவிதபுக்சூட்சுமமான விஷயத்தை அனுபவிப்பவன். (பிரவி விக்தம் – வேறொன்று)
தைஜஸஹ – ஞானத்தை பிரதானமாக உடையவன் – சூட்சும சரீரத்தின் அபிமானமுள்ள ஆத்மாவிற்கு இந்த பெயர்.  இது ஆத்மாவின் இரண்டாவது பாதமாகும்.  ஆத்ம ஜோதியின் உதவியால் கனவுலகிலுள்ள பொருட்களெல்லாம் பார்க்கப்படுகின்றது.   அதே ஆத்மஜோதியின் உதவியால்தான் விழிப்பு நிலை பிரபஞ்ச பொருட்களையும் நாம் பார்க்கின்றோம்.

ஸ்லோகம் – 5
ஆத்மாவில் மூன்றாவது பாதம் இதில் விளக்கப்பட்டுள்ளது. இதில் வியஷ்டியை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்லப்படுகின்றது.  காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது அனுபவிக்கின்ற ஆழ்ந்த உறக்க நிலையை சுஷூப்தி அவஸ்தா என்று அழைக்கப்படுகின்றது.   இதிலும் ஆத்மா சாட்சியாக இருக்கின்றது.

ஆத்மாவும் காரண பிரபஞ்சம் சேர்ந்து பிராக்ஞன் என்று அழைக்கப்படுகின்றது.  வெளி பிரபஞ்சமும், சூட்சும பிரபஞ்சமும் இல்லாமலிருந்தால்தான் ஆழ்ந்த உறக்கம்.  அதனோடு ஆத்மாவை பற்றி அறியாமையும் சேர்ந்து இருக்கும்.
ஆத்ம அக்ஞானம் + வெளி உலகத்தை அனுபவித்தல்   = ஜாக்ரத் அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + சூட்சும உலகத்தை அனுபவித்தல்  = ஸ்வப்ன அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + எந்த பிரபஞ்சமும் இல்லாத நிலை = சுஷுப்தி அவஸ்தா

இதில் ஆழ்ந்த உறக்கத்தின் லட்சணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.  எந்த காலத்தில், எந்த இடத்தில் உறங்கிக்கொண்டிருந்தாலும் இந்திரியங்களை தனக்குள் ஒடுக்கியிருப்பவன். எந்த ஒன்றிலும் ஆசை கொள்வதில்லை.  ஆசை வயப்படுத்துகின்ற ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்கள் எதிலும் ஆசை கொள்வதில்லை.  இதில் ஜாக்ரத் அவஸ்தை நிஷேதம் செய்யப்பட்டு விட்டது.  எந்தவிதமான கனவும் பார்ப்பதில்லை. அதுதான் சுஷுப்தி அவஸ்தை.  இது காரண சரீரத்தை உபாதியாக கொண்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் ஸ்தூல, சூட்சும பிரபஞ்சம் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது.   இதேபோல இந்த இரண்டு சமஷ்டி பிரபஞ்சங்களும் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது.  இந்த அவஸ்தையில் இருமைகளை இழக்காமல் ஒன்றாகிவிட்டிருக்கும்.  இவைகள் அந்தந்த அவஸ்தையை அனுபவிக்கும்போது வெளிப்பட்டுவிடும்.  இந்த காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும் ஆத்மாவை ஒன்றாக இருப்பவன் என்று அழைக்கப்படுகின்றது.

ஜாக்ரத் அவஸ்தையில் ஸ்தூல பொருட்கள், விருத்திகளாக இருக்கின்றன. கனவு  அவஸ்தைல் எவ்வளவு பொருட்கள் தோன்றுகின்றனவோ அவ்வளவு எண்ணங்கள் இருக்கின்றன.  இந்த இரண்டு ஞானங்களும் உறக்கத்தில் குவிந்து இருக்கின்றன.  நிர்விசேஷ ஞானங்களாகிவிட்டன.   உதாரணமாக அறையில் உள்ள பொருட்கள் இருளில் ஒன்றாகி விடுகின்றது.  வெளிச்சம் வந்ததும் அவைகள் தத்தம் நிலைக்கு வந்து விடுகின்றன.  அதுபோல காரண சரீரத்தில் இருக்கின்ற இருள் போன்ற அக்ஞானம் இருப்பதால் எல்லா பிரபஞ்சங்களும் மறைக்கப்பட்டு விட்டன.

ஆனந்தமய: இந்த நிலையில் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது. காரண அவஸ்தையில் மனம் ஒடுங்கியிருப்பதால் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது.  மற்ற இருநிலைகளிலும் மனம் இரு பிரபஞ்சங்களில் உள்ள விஷயங்களில் சென்று விடுகின்றது.

ஹி ஆனந்தபுக் – பிராக்ஞன் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
சேதோமுகஹ – ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளின் வாசல்.
விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் கனவு நிலைக்கு செல்வான்.  அதேபோல கனவு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் விழிப்பு நிலைக்கு வருவான்.  இதிலிருந்து ஆழ்ந்த உறக்கம் இரு அவஸ்தகளுக்கும் வாசலாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

ப்ராக்ஞன்: – இந்த ப்ராக்ஞன் அறியாமையில் இருக்கின்றான். காரண நிலையில் சமஷ்டி-வியஷ்டி பேதத்தை சொல்ல முடியாது.  இரண்டும் ஒன்றாக இருக்கின்றது.  எனவே ஈஸ்வரனாகவே கருதப்படுகின்றான்.   உதாரணமாக இருள் சூழ்ந்த வனத்தில் சமஷ்டி-வியஷ்டி என்ற வேறுபாடே கிடையாது.  எல்லா தனி மரங்களும் இருளால் மறைக்கப்பட்டுள்ளதால்,  வியஷ்டியும் சமஷ்டியும் ஒன்றாகின்றது.  பிராக்ஞன் பிரம்மத்தில் ஒடுங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது.  எனவே இந்த நிலையில்தான் அவனை எல்லாம் அறிந்தவன் என்று கூறப்படுகின்றது.

த்ருதீய பாதம் – இதுதான் ஆத்மாவின் மூன்றாம் பாதம்.  எதனால் ஒரு இடத்தை அடைவதற்கு உதவுகின்றதோ அதற்கு பாதம் என்று பெயர்.

ஸ்லோகம் – 6
இதில் ஈஸ்வரனின் லக்‌ஷணம் கூறப்படுகிறது. காரண பிரபஞ்சத்தில் வேறுபாடு தெரியாத நிலையானது  விதைக்குள் இருக்கும் மரத்தின் முழு உருவம் தெரியாத நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ள உதவுகின்றது.

ஏஷ ஸர்வேஷ்வரஹ – இந்த பிராக்ஞன்தான் அனைத்து உலகங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான்.
ஏஷ ஸர்வக்ஞஹ – அனைத்தையும் அறிபவர்.
ஏஷ அந்தர்யாமி – உள்ளேயிருந்து கொண்டு அனைத்தையும் கட்டுபடுத்துபவர்,  அனைத்தையும் வியாபித்திருப்பவர், அனைத்துக்கும் இருத்தல் என்ற நிலையை கொடுப்பவர்.
ஏஷ ஸர்வஸ்ய யோனிஹி – அனைத்திற்கும் உபாதான காரணமாக இருப்பவர்.
ப்ரபவ அப்யயஹ ஹி பூதானாம் – எல்லா ஜீவராசிகளுடைய பிறப்பு-இறப்பிற்கும் காரணமாக இருப்பவர்.

எது உற்பத்திக்கும், இருப்புக்கும் (ஸ்திதி), அழிவுக்கும் காரணமாக இருக்கின்றதோ, அதுவே உபாதான காரணமாக இருக்கின்றது.  நிமித்த காரணம் வெறும் உற்பத்திக்கு மட்டும் காரணமாக இருக்கின்றது.

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-2

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

கௌடபாதரின் விளக்கம்:

மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களை கௌடபாதர் விளக்கி கூறியிருக்கின்றார்.  மூன்று ஸ்லோகங்களின் விளக்கம் ஐந்து ஸ்லோகங்களில் விளக்கியிருக்கின்றார்.

ஆத்மாவின் அபிமானம் ஸ்தூல சரீரத்தில் இருக்கும்போது அதற்கு விஸ்வன் என்றும் வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவனாக இருப்பவர்(பஹூ பிராக்ஞன் ) என்றும் அழைக்கப்படுகின்றார்.  எங்கும் வியாபித்திருப்பவர் விராட் (விபுஹூ).   சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்திருக்கும் போது ஆத்மாவை தைஜஸன் என்று அழைக்கப்படுகிறார்.  இவர்  மனதிற்குள் உள்ள சூட்சுமமான விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவர். ஜாக்ரத்-ஸ்வப்னம் இவற்றில் வருகின்ற ஞானங்கள் அனைத்தும் ஒன்றாக குவிந்து இருப்பதை கன-பிரக்ஞன் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு பிராக்ஞன் எல்லாவிதமான பொருட்களுக்கு நிர்விசேஷமாக இருந்து கொண்டு இருப்பவன்.   இந்த மூன்றும் ஒன்றுதான் ஆனால் மூன்றாக கருதப்படுகின்றது,  பிரித்து பேசப்பட்டிருக்கின்றது.  விவேகிகள் இவ்வாறு உபதேசம் செய்வதற்காக பிரித்து இருக்கின்றார்கள்.
காரிகை1

ஏக ஏவ த்ரிதா ஸ்ம்ருதஹ (விசாரம்)

கேள்வி:  மூன்று அனுபவங்களை அனுபவிக்கின்ற என்னை எப்படி ஒருவன் என்று கூற முடியும்?

பதில்      ஒரே மீன் இரண்டு குளத்தில் தாவி, தாவி இருப்பதைப் போல. அருகருகே இருக்கும் இரண்டு குளத்தில் ஒரு சமயத்தில் ஒரு குளத்திலிருக்கும், பிறகு அருகே உள்ள வேறொரு குளத்திற்கு தாவி அதிலேயும் இருப்பதை போல, ஒருவனேதான் இந்த மூன்று அனுபவங்களையும் அனுபவிக்கின்றான் என்பதை புரிந்து கொள்ளலாம்.  இந்த அனுபவங்கள் வரிசையாக இருப்பதனாலும் இது சாத்தியமாகின்றது.  ஒரு ஜீவன் மூன்று அவஸ்தைகளை சேர்ந்து அனுபவிப்பதில்லை.  அதனாலும் ஒருவனேதான் இந்த மூன்று நிலைகளையும் கிரமமாக அனுபவிக்கின்றான்.  பறவைகள் ஆகாசத்திலே கொஞ்சநேரம் பறந்து விட்டு களைத்த பிறகு தன் கூட்டிற்கு வந்து ஓய்வு எடுக்கின்றது.  அதைப்போல ஜீவன் ஜாக்ரத் அவஸ்தையில் விஷயங்களை அனுபவித்து விட்டு, ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்று ஓய்வெடுக்கின்றான்.  எனவே ஒருவனேதான் மூன்று நிலைகளிலும் விஷயங்களை மாறி மாறி அனுபவிக்கின்றான் என்று நிரூபிக்கப்படுகின்றது  இதிலிருந்து ஜீவன் ஒருவனாக மட்டும் இருக்கின்றான்,  அதேசமயம் மூன்று நிலைகளிலும் வேறுபட்டவனாகவும் இருக்கின்றான்.   அவஸ்தைகள் வந்து செல்வதால் அதிலிருந்து வேறுபட்டவன் என்று சங்கரர் கூறுகின்றார்.

இதைத் தவிர வேறு இரண்டு கருத்துக்களையும் சங்கரர் கூறுகின்றார். அவைகள்
1.  சுத்தமானவனாக இருக்கின்றான்,
2.  அஸங்கமாக இருக்கின்றான்.
என்பதாகும்.

சுத்தமானவன்

அவஸ்தையில் அனுபவிக்கின்ற விஷயங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான்.  உதாரணமாக கனவில் ஏதாவது ஒரு பாவத்தை செய்தால் அவன் விழிப்பு நிலைக்கு வரும் போது அந்த பாவ பலனை அனுபவிக்க மாட்டான்.  அதேப்போல விழிப்பு நிலை அனுபவத்தால் கனவு நிலையில் பாதிக்கமாட்டான்.  விழிப்பு நிலையில் உள்ள பணக்காரனின் செல்வங்கள் கனவுலகில் பயன்படாது.  இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது அந்தந்த அவஸ்தையில் அனுபவிக்கும் தர்ம-அதர்மங்கள் அந்தந்த அவஸ்தையை சேர்ந்தது. எனவே அசுத்தங்கள் அவஸ்தையை சார்ந்தது, அனுபவிப்பனாக உள்ள ஜீவனை சார்ந்ததல்ல. ஆகவே அவன் சுத்தமானவன்.

அஸங்கத்வம்
மூன்று அவஸ்தைகளிலும் இருக்கின்ற ஆத்மாவுக்கு எந்தவிதமான ஒட்டுதலும் இல்லை.   கயிற்றில் தெரியும் பாம்பிலிருந்து கயிறானது எந்த சங்கமும் இல்லாதது.   ஏனென்றால் பாம்பானது அதன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  அதே போல மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதால் இது அஸங்கம் என்று புரிந்து கொள்ளலாம்.  ஆத்மா பார்ப்பவனாக மட்டும் இருப்பதால் பார்க்கப்படும் பொருட்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது.

காரிகை2
இதில் இரண்டு விதமாக விளக்கப்படுகின்றது.

  1. மூன்று அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன்தான் என்று நிலை நாட்டப்படுகின்றது.  இங்கு ஜாக்ரத் அவஸ்தையிலே விஸ்வனையும், தைஜஸனையும்,  பிராக்ஞனையும் பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.  இந்திரியங்கள் வழியாக வெளி விஷயத்தை அனுபவிக்கும்போது அது விஸ்வன் என்று அறிந்திருக்கின்றோம். மூன்று விதமாக தெரிகின்ற ஜீவனுக்கு இருப்பிடம் ஸ்தூல சரீரத்தில் இருக்கின்றது.  விழிப்பு நிலையில் உள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம், நம் மனதிலுள்ள சித்தம்,  வாஸனாமயமான மனம்தான் தைஜஸனின் இருப்பிடம்,, மனதினுடைய இருப்பிடம் ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம்தான்.  அதுவே பிராக்ஞனின் இருப்பிடம்.  வலது கண் வழியாக உலகத்தை அனுபவிக்கும்போது விஸ்வனாக இருக்கின்றான். பார்த்தப்பொருளை பற்றி மனதில் நினைத்துப்பார்க்கும்போது தைஜஸனாக இருக்கின்றான்.  தியானகாலத்தில் மனம் அமைதியாக வைத்திருக்கும்போது பிராக்ஞனாக இருக்கின்றான்  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது மூன்று அவஸ்தைகளிலும் ஒருவன்தான் என்பதாகும்.
  2. வியஷ்டி-சமஷ்டி ஐக்கியத்தை புரிந்து கொள்ளாதபோது இதைக்குறித்து உபாஸனை செய்ய வேண்டும்.  அவ்வாறு விஸ்வனையும், விராட்டையும் ஒன்று என்று புரிந்து கொள்ள முடியாவிட்டால் வலது கண்ணில் விராட்டை தியானிக்க வேண்டும். தைஜஸன் ஹிரண்யகர்ப்பன் ஐக்கியத்தை மனதில் ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.  அதே போன்று பிராக்ஞன்– அந்தர்யாமி ஐக்கியத்தை ஹ்ருதயத்தை ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.

 

தர்ஷண சக்‌ஷூ முகம் விஸ்வஹ – திறந்த நிலையிலுள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம்.  இங்கு கண்ணை மட்டும் சொல்லப்படுவதற்கு காரணம் அதிகமான ஞானம் கண் மூலமாகத்தான் அடைகின்றோம்.  பொதுவாக ஞானேந்திரியங்களின் வழியாக அறிவை அடைகின்றோம்.  வலதுகண் அதிக சக்தியை உடையது.
மனஸி அந்தஸ்து தைஜஸ: – ஆழ்ந்த மனதுக்குள்ளே இருக்கின்ற வாஸனாமய சித்தம்தான் தைஜஸனுடைய இருப்பிடம்.
ஆகாஷே ச ஹ்ருதி பிராக்ஞஹ: – நமது ஸ்தூல ஹ்ருதயத்திற்குள்ளே இருக்கின்ற ஆகாசம்தான் பிராக்ஞனுடைய இருப்பிடம்.
த்ரிதா தேஷே வ்யவஸ்திதஹ இவ்வாறு நம் தேகத்தில் மூன்று இடத்தில் மூன்று பேரும் அமர்ந்திருக்கின்றனர்.

இந்த விளக்கத்திலிருந்து ஒருவன்தான் அந்தந்த அவஸ்தைகளை அனுபவிக்கும்போது அதற்குரிய பெயரில் அழைக்கப்படுகின்றான் என்பதை அறிய முடிகிறது.
காரிகை3

விஸ்வனும், தைஜஸனும், கர்த்தாகவும், போக்தாவாகவும் இருக்கின்றார்கள். பிராக்ஞன் போக்தாவாக மட்டும் இருக்கின்றான்.
விஸ்வஹி ஸ்தூல புக் நித்யம் – விஸ்வன் எப்பொழுதும் ஸ்தூல பிரபஞ்சத்தையே அனுபவிப்பான்.
தைஜஸ பிரவிவிக்த புக் – தைஜஸன் சூட்சும பிரபஞ்சத்தையே அனுபவிக்கின்றான்.
பிராக்ஞன் ஆனந்தத்தை மட்டும் அனுபவிக்கின்றான்.  அனுபவிக்கப்படும் நிலை மூன்று விதமாக இருக்கின்றதை அறிந்து கொள்ள வேண்டும்.
காரிகை4
மூன்று விதமான சுகமானது பேசப்படுகின்றது.  விஸ்வனுக்கு ஸ்தூல பிரபஞ்சமானது சுக-துக்கத்தை கொடுக்கின்றது.  சூட்சும பிரபஞ்சமானது தைஜஸனுக்கு சுக, துக்கத்தைக் கொடுக்கின்றது.  ஆனந்தமானது பிராக்ஞனுக்கு திருப்தியை கொடுக்கின்றது. இவ்விதத்தில் சுகமானது மூன்று விதத்தில் அறிந்து கொள்ளுங்கள்
காரிகை5
1.   போக்தாவானவன் மூன்றாக இருந்தாலும் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஒன்றுதான்.
2.   இந்த மூன்று அவஸ்தைகளை மட்டும் தெரிந்து கொள்வதால் அடையும் பலன்.

த்ரிஷு தா4மஸு யத்போ4ஜ்யம் ப்ரகீர்திதஹ – மூன்று அவஸ்தைகளில் எந்த விஷயங்கள் அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றதோ, அவைகள்  அனைத்தும் ஒன்றுதான் என்று உபநிஷத்தினால சொல்லப்படுகின்றது.  ஸ்தூல, சூட்சும விஷயங்களிலிருந்தும் ஆனந்தம்  அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றது)
யஹ போக்தா –  யாரொருவன் மூன்று நிலைகளிலும் போக்தாவாக இருக்கின்றான்

வேத ஏதத் உபயம் யஸ்து – இவ்வாறு இந்த இரண்டையும் அறிகின்றானோ, அதாவது அனுபவிக்கப்படும் பொருள் வேறு, அனுபவிப்பவன் வேறு என்று யார் அறிகின்றானோ
ஸஹ புஞ்ஜானஹ ந லிப்யதே – அவன் மூன்று அவஸ்தைகளினால் எந்தப்பாதிப்பும் அடைய மாட்டான். அவனுக்கு ஓரளவு மன அமைதியுடன் இருப்பான்.  இது வேதாந்த சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு உதவி செய்யும்.

காரிகை6

ஈஸ்வரன் இதில் நன்கு விளக்கப்படுகின்றது.  யோனி என்பது உபாதான காரணத்தையும்,  சர்வக்ஞன்,  சர்வேஸ்வரன் என்பது நிமித்த காரணத்தையும், காரியமாக ஜகத்தையும் விளக்குகின்றது.

  • காரணத்திலிருந்து காரியம் தோன்றுகிறது
  • காரியத்திற்கு முன் காரணம் இருந்தது.
  • காரியம் தோன்றுவதற்கு முன் அது காரணத்தில் இருந்ததா, இல்லையா என்ற விசாரம் செய்யப்படுகின்றது. யோக சாஸ்திரமும், ஸாங்கிய சாஸ்திரமும் காரியமானது காரணத்தில் இருந்தது என்ற ஸத்காரிய வாதம், பரிணாம வாதம் மூலம் உறுதிபடுத்துகின்றார்கள்.  நையாய, வைசேஸிக வாதிகள் காரியமானது காரணத்தில் இல்லை என்று அஸத் காரியவாதம், ஆரம்பவாதம் மூலம் உறுதியாக கூறுகிறார்கள்

காரியமானது காரணத்திலிருந்து கொண்டு பிறகு வெளித்தோற்றத்திற்கு வருகின்றது.   காரணத்தில் காரியமானது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கின்றது.

ப்ரபவ ஸர்வபாவானாம் ஸதாம் இதி வினிஸ்சய:

அனைத்து விஷயங்களின், விஷயிகளின் தோற்றம் முதலில் இருந்து கொண்டுதான் பிறகு தோன்றியிருக்கின்றது.  இது சாஸ்திரத்தினால் தெளிவாக நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.  போக்தாவும் தோன்றியுள்ளது, போஜ்யமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  ஈஸ்வரனுடைய மாயா தத்துவத்திலிருந்து தோன்றியுள்ளது. பிரம்ம தத்துவத்திலிருந்து அறிவு தத்துவமாக இருக்கின்ற ஜீவன்கள் தோன்றியிருக்கின்றது.

ஸர்வம் ஜனயதி ப்ராணஹ – அனைத்து ஜடபிரபஞ்சங்களை தோற்றுவிக்கின்றார்,  மாயையை பிரதானமாக கொண்டவர் ஈஸ்வரன்.  அவர் தன்னிடத்திலுள்ள ஜட அம்சத்தையே உலகமாக படைத்திருக்கின்றார்.  இந்த கருத்து ஈஸாவாஸ்ய இதம் ஸர்வம் என்ற உபநிஷத் வாக்கியம் குறிக்கின்றது.
சேதோம் ஸூன்புருஷ ப்ருதக் – சைதன்ய பிரதானமான ஈஸ்வரனை புருஷன் என்று குறிப்பிடுகின்றார்.  சிதாபாசனுடன் கூடிய ஜீவர்களை தோற்றுவிக்கின்றார்.  ஈஸ்வரன் சைதன்ய அம்சத்தைக் கொண்டு ஜீவர்களை தோற்றுவித்தார்.  இவ்வாறு ஜட தத்துவம், அறிவு தத்துவம் என்ற தனித்தனியாக படைத்திருக்கின்றார்.

காரிகை7
அன்யே மன்யந்தே – சிலர் நினைக்கின்றார்கள்.
ஸ்ருஷ்டி சிந்தகாஹா – ஸ்ருஷ்டியை பற்றி சிந்தித்து முடிவுக்கு வர விரும்புபவர்கள்,
விபூதிம் ப்ரஸவம் – ஸ்ருஷ்டியை ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யமாக நினைக்கின்றார்கள்.   ஈஸ்வரன் தன்னுடைய பெருமையை, சக்தியை வெளிப்படுத்துவதற்காக ஸ்ருஷ்டியை தோற்றுவித்தார்.  இந்தக் கருத்தையுடையவர்கள் அவர் வெறும் நிமித்தக்காரணம் என்று நம்புகின்றவர்கள்
அன்யே ஸ்ருஷ்டி விகல்பிதா – சிலரால் இந்த ஸ்ருஷ்டியை இவ்வாறு மனதினால் சிந்திக்கின்றார்கள்.
ஸ்வப்ன மாயா ஸ ரூபே இதி – கனவில் வரும் மாயை தோற்றங்கள் போல இந்திரஜால வித்தையில் தோன்றுபவைகள் என்று கூறுகின்றார்கள். இந்த உலகம் இருக்கின்றது விவகாரத்திற்காக மட்டும் இதனை வியவகார ஸ்ருஷ்டி என்றும் கூறுவர்.  கனவுலகமானது   நான் பார்ப்பதினால் அது இருப்பதாக தோன்றுகின்றது.  இதையே பிராதிபாஸிக பிரபஞ்சம் என்று கூறுவர்,  த்ருஷ்டி ஸ்ருஷ்டி என்றும் அழைப்பர்.

காரிகை8
இச்சா மாத்திரம் ப்ரபோ ஸ்ருஷ்டி – பகவானுடைய விருப்பத்தினால்தான் இந்த ஸ்ருஷ்டி தோன்றியது
இதி ஸ்ருஷ்டௌ வினிஸ்சிதா – இந்த ஸ்ருஷ்டி விஷயத்தில் இவ்வாறு சிலர் நிச்சயமான கருத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள்.
கால் சிந்தகா – காலத்தை கணிப்பவர்கள், ஜோதிடத்தில் முக்கியம் கொடுப்பவர்கள், காலம் தான் இந்த ஸ்ருஷ்டியை தோற்றுவித்திருக்கின்றது என்று சொல்கிறார்கள்.
காலாதி ப்ரஸுதிம் பூதானாம் மன்யந்தே – காலத்திலிருந்துதான் எல்லா ஜீவராசிகளும் தோன்றியிருக்கின்றது என்று கருதுகின்றார்கள்.
காரிகை9
போகார்தம் ஸ்ருஷ்டிஹி அன்யே – சிலர் போகத்திற்காக ஸ்ருஷ்டி தோற்றுவிக்கப்பட்டது.
க்ரீடா சிந்தகா – சிலர் விளையாட்டிற்காக படைத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.
ஆப்த காமஸ்ய – எல்லா ஆசைகளும் அடையப்பட்டுவிட்டது அல்லது ஒரு ஆசையும் இல்லாத நிலை.
கா ஸப்ருஹா – எதற்கு ஆசை வரும், எப்படி ஆசை வரும், போகமும் தேவைப்பட்டது
தேவஸ்ய – ஈஸ்வரனுக்கு
அயம் – இந்த ஸ்ருஷ்டியானது
ஸ்வபாவஹ மாயா நிர்மிதா – அநாதியான மாயாயிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது.

ஸ்லோகம் – 7
ஏற்கனவே தெரிந்ததை திரும்பவும் சொல்வதை அனுவாதம் என்று கூறப்படுகின்றது.   என்னைப்பற்றித்தான் சாஸ்திரம் எனக்கு தெரிந்ததைத்தான் இதுவரை சொல்லியிருக்கிறது.   இந்த மந்திரத்தில் என்னைப்பற்றி எனக்குத் தெரியாததையும் சொல்கின்றது.  இதில் ஆத்மாவின் நான்காவது பாதத்தை சொல்கிறது.  இதை பிரமான வாக்கியம் என்றும் கூறலாம்.  நமக்கு தெரியாததை உபதேசிக்கும் வாக்கியத்திற்கு பிரமான வாக்கியம் என்று பெயர்.  இந்த நான்காவது பகுதியை நேரிடையாக விளக்க முடியாத காரணத்தினால் வேறு விதமாக உபதேசிக்கின்றது.  நான்காவது பாதத்திற்கு துரியம் என்று பெயர். அதுவும் நான்தான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
துரியம் என்றால் என்ன?

முதலில் துரியம் என்பது எவைகளெல்லாம் இல்லை என்று பார்க்கப்படுகின்றது.  எந்தவிதமான உபாதிகளுக்கும் சம்பந்தம் இல்லாதது துரியன்.  இங்கு உபாதி என்பது சரீரத்தைக் குறிக்கின்றது.   எந்த அவஸ்தகளையும் அனுபவிக்காதவன் துரியன்.  சமாதி அவஸ்தையில் இருப்பதும் துரியமல்ல.  சமாதி என்பது தியானத்தின் பலனாக வருவது தான்.  ஜாக்ரத் அவஸ்தையில்தான் சமாதியை அடைய முடியும்.  சமாதி நிலையில் எல்லா விஷயங்களும் மனதில் ஒடுங்கி அமைதியுடன் இருக்கின்றது.  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையை முயற்சி செய்து ஜாக்ரத் அவஸ்தையில் அடைவதுதான் சமாதி.

தங்க வளையலும், தங்கமும் ஒன்று என்று சொல்லும்போது வளையல் அழிந்தாலும் தங்கம் இருக்கும்.  அதே சமயம் இரண்டும் வெவ்வேறு என்று சொல்லும்போது இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.  இந்த இரண்டில் ஒன்று சத்யமாகவும், இன்னொன்று மித்யாவாகவும் இருக்கின்றது.  எனவே இந்த இரண்டில் ஒற்றுமையையும் சொல்ல முடியாது,  வேற்றுமையையும் சொல்ல முடியாது.  சத்யமான தங்கத்துடன் ஒரு நாம-ரூபத்தை ஏற்றி வைக்கும்போது ஒரு தோற்றம் உருவாகின்றது.  வளையலில் சத்யமும், மித்யாவும் கலந்து இருக்கின்றது.   இதில் உள்ள மித்யாவான நாம-ரூபத்தை மனதளவில் நீக்கினால் தங்கம் தெரிகின்றது.  எனவே தங்கம் வளையலுக்கு ஆதாரமாகவும் ஆனால் வளையலுக்கு அப்பாற்பட்டும் இருக்கின்றது.

துரியம் என்பதை சைதன்யம் என்று எடுத்துக்கொண்டால் விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் என்பது துரியம் + நாமரூபங்கள்.   நாம-ரூபத்தை சார்ந்தில்லாமல் இருக்கும் சைதனயம்தான் துரியம்.  இது மூன்று உடல்களுக்கும் ஆதாரமாகவும், மூன்று அவஸ்தைகளுக்குள்ளும் இருக்கின்றது. ஆனால் அதற்கப்பாற்பட்டும் இருக்கின்றது.  ஜாக்ரத் பிரபஞ்சம் இல்லாத விஸ்வன் துரியம், கனவு பிரபஞ்சம் இல்லாத தைஜஸன் துரியம்தான்,  காரண பிரபஞ்சம் இல்லாத பிராக்ஞன் துரியனும் ஒன்றுதான்.  இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யா, வெறும் நாம-ரூபங்கள் மட்டும்தான் என்று அறியப்படுகின்றது.  துரியம் என்பது ஞான ஸ்வரூபம், சித் ஸ்வரூபம்.

துரியம் + ஸ்தூல சரீரம் =  விஸ்வன் –  ஸ்தூல சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + சூட்சும சரீரம் =  தைஜஸன் –  சூட்சும சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + காரன சரீரம் =   பிராக்ஞன் –  காரண சரீரம் என்கின்ற நாம-ரூபம்

விஸ்வனிடத்தில் உள்ள உபாதியான ஸ்தூல சரீரத்தை நீக்கி விட்டால் துரியம் மட்டும்தான் இருக்கும்.  தைஜஸனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும். அதேபோல பிராக்ஞனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும்.
எப்படி இந்த உபாதிகள் நீக்கப்படுகின்றன?
எப்படி இந்த உபாதிகள் வந்தது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  நாம-ரூபங்கள் துரியத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது,  வெறும் தோற்றமாகத்தான் இருக்கின்றது என்ற அறிவே நாம-ரூபங்களை நீக்கி விடுகின்றது.  வெறும் துரியம் மட்டும்தான் இருக்கும்.  இதுதான் துரியத்தை அடையும் வழி. ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் அதற்கு ஆதாரமாக இருப்பதை ஒன்றும் செய்ய முடியாது.  எனவே துரியம் எல்லா நிலைகளிலும் ஒன்றாக இருக்கின்றது. எந்த அவஸ்தைகளோடும், சரீரங்களோடும் ஒட்டாமல் இருக்கின்றது.

துரியம் என்ற ஆத்மாவிடம் நாம-ரூபங்கள் இல்லாமல் எப்படி புரிந்து கொள்வது?  புரிந்து கொள்ள மூன்று அவஸ்தகளுக்குப்பாற்பட்டு வேறொரு அவஸ்தை தேவையா?  வேறொரு அவஸ்தை தேவையில்லை. ஒரு அவஸ்தை மட்டும் போதும் அதைப் புரிந்துக் கொள்ளலாம்.

ஆழ்ந்த உறக்கத்திலும் கனவிலும் நம்மால் துரியனை புரிந்து கொள்ள முடியாது.  நாம் விஸ்வனாக இருந்து கொண்டுதான் துரியனை புரிந்து கொள்ள முடியும்.  விஸ்வனாக இருந்து கொண்டுதான் நாம் விஸ்வனும் அல்ல, தைஜஸனும் அல்ல பிராக்ஞனும் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவை சாஸ்திரம், குரு மூலம்தான் அடைய முடியும்.  நீ விஸ்வன் அல்ல துரியம் மட்டும்தான் என்று நாம-ரூபங்களை நீக்கி உபதேசிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு சாஸ்திரம் துணைக்கொண்டுதான் குருமுகமாக துரியத்தை புரிந்து கொள்ள முடியும்.
சாஸ்திரம் இருவிதத்தில் ஆத்ம ஞானத்தை உபதேசிக்கின்றது. அவைகள்

  1. விதிமுகம் – நேரிடையாக உபதேசித்தல் அதாவது தத் த்வம் அஸி – நீ பிரம்மனாக இருக்கின்றாய்,
  2. நிஷேதமுகம் – நேரிடையாக சொல்லாமல் ஆத்மாவை தவிர மற்ற அனைத்தையும் நீக்கி புரிய வைக்கின்றது.  நீ வெளி விஷயத்தை பார்ப்பவன் அல்ல என்று நீக்குகின்றது.  இல்லாததை இருப்பது போல் நினைத்துக் கொண்டிருப்பதைத்தான் நீக்குகின்றது.  இதன் உபகருத்து அவைகளுக்கு அதிஷ்டானமாக இருப்பதைக் காட்டுவதற்கு இந்த முறையை உபதேசிக்கிறது.

மந்திர விளக்கம்:-
ந பஹிஷ் ப்ரக்ஞம் – துரியம் என்பது வெளி விஷயங்களை அனுபவிப்பவனும் அல்ல,  பார்ப்பவனும் அல்ல.  அதாவது வெளிவிஷயங்களைப் பார்க்கும் அறிவாக இல்லை. விஸ்வன் அல்ல.  துரியம் விஸ்வனுக்குள்ளும் இருக்கின்றது.  ஆனால் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் இருக்கின்ற ஆத்மாவை துரியமாக விளக்க உபநிஷத் விரும்புகின்றது.  இந்த வார்த்தையின் தாத்பர்யம் என்ன என்று பார்க்க வேண்டும்.  விஸ்வன் – மூன்று சரீரங்களை உபாதியாகக் கொண்ட ஆத்மாவைத்தான் குறிக்கின்றது.   விஸ்வன் இல்லை என்ற வாக்கியம் மூன்று சரீரங்களான உபாதிகள் இல்லை என்று சொல்ல விரும்புகின்றது.  உபாதிகளை நீக்குவதற்கு காரணம், அவைகள் தோன்றி மறையும் தன்மையுடையதாக இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் என்றும் மாறாமல் இருக்கும் சைதன்யத்தை நீக்க முடியாது.
ந அந்த பிரக்ஞம்     துரியம் என்பது உள்முகமாக இருக்கின்ற மனதிற்குள் விஷயங்களை அனுபவிப்பனும் அல்ல.

ந உபயத பிரக்ஞம்    துரியம் என்பது விழிப்பு நிலையில் அனுபவிக்கும் கனவு விஷயங்களும் அல்ல.

ந ப்ரக்ஞான கனம்    துரியம் என்பது ப்ராக்ஞனும் அல்ல.

ந ப்ரக்ஞம் ந ஸர்வத ப்ரக்ஞம் – மூன்று அவஸ்தைகளையும், ஒரே நேரத்தில் அனுபவிப்பவனும் அல்ல.  சமஷ்டி ப்ரக்ஞம் விராட், ஹிரண்யகர்ப்பன் இவர்களும் துரியம் அல்ல.

ந அப்ரக்ஞம்        துரியம் வெறும் ஜடமல்ல, அறிவற்றதல்ல, அது அறிவுஸ்வரூபம் துரியம் என்பது அறிபவனும் அல்ல, அறியப்படும் பொருளும் அல்ல, ஜடமும் அல்ல.  அது அறிவு ஸ்வரூபம்.

அதிருஷ்டம்        அனுபவிக்கப்படுவது அல்ல, பார்க்கப்படுவதல்ல. இந்த சொல் ஐந்து ஞானேந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதாகவும், கிரகிக்க முடியாததாகவும் இருக்கின்றது.  அதாவது குணங்களற்றது.

அவ்யவஹார்யம்  விவகாரத்திற்கு அப்பாற்பட்டது ( ஹானம், உபாதான ரஹிதம் ).  விவகாரம், செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஹானம் என்றால் தவிர்த்தல், நீக்குதல், விலக்குதல்.  உபாதானம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல், சேர்த்தல்.  நாம் செய்யும் செயல்கள் இந்த இரண்டு வகையாகத்தான் இருக்கும்.

அக்ராஹ்யம்       கர்மேந்திரியங்களினால் கிரகிக்கப்படாதது.

அலக்ஷணம்      அனுமானத்தினால் அறிய முடியாதது

அசிந்தியம்         எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டது. எண்ணங்களினால் அறிய முடியாதது. மனதிலிருக்கும் உணர்வுகள் அல்ல.

அவ்யபதேஷ்யம்   வாக்கினால் விளக்க முடியாதது.  சப்த பிரமானத்தினாலும் விளக்க முடியாது.

ஏகாத்ம பிரத்யயஸாரம் – ஆத்மா ஒன்றுதான் என்ற எண்ணம்.

ப்ரத்யயஹ         மனதில் தோன்றும் எண்ணங்கள்.

எண்ணங்களே நான்,  இது என்று இருவகையாக இருக்கின்றது.  அவைகள்

  1. அஹம் ப்ரத்யயம் – என்னைப்பற்றி நினைக்கும் போது நான் என்ற எண்ணங்கள் .
  2. இதம் ப்ரத்யயம்   – வெளி விஷயங்களைப் பற்றிய எண்ணங்கள்.

எவ்வளவு அஹம் ப்ரத்யயம் வந்தாலும் நான் என்ற ஒன்றுதான் இருக்கும்.

ஸாரம் :

  1. அதிஷ்டானம், ஆதாரம், மூலம்– நான் என்ற எண்ணத்திற்கு ஆதாரமாக இருப்பது துரியம்.  2. பிரமானம் – ஏகாத்ம ப்ரத்யயமே துரியத்தை அறிவதற்கு பிரமானமாக இருக்கின்றது.

ப்ரபஞ்சோபஷமம்:

ப்ரபஞ்சம் – இந்த உலகம்.

உபஸ்ஸமம் – இல்லாமை, நிவிர்த்தி (அபாவம்).

துரியம் என்பது உலகம் இல்லாத இடத்தில் இருப்பது,  இது உலகம் மித்யா என்று புரிய வைக்கின்றது.  துரியத்தில் உலகம் என்பதே இல்லை. எப்படி கயிறானது பாம்பாக இல்லாமல் இருக்கின்றதோ அதுபோல இந்த துரியத்தில் இந்த பிரபஞ்சமில்லை. இந்த சொல்லின் அர்த்தம் இந்த பிரபஞ்சத்தையே நீக்கி விடுகின்றது.
சாஸ்திரம் இரண்டு தவறுகளை இருப்பதாக கூறுகின்றது. அவைகள் ஸோபாதிக பிரமா,  நிருபாதீக ப்ரமா ஆகும்.
ஸோபாதிக ப்ரமா – ஸ்படிகத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள சிவப்பு மலரின் நிறம் ஸ்படிகத்தில் பிரதிபலிப்பதால் அது சிவப்பாக இருப்பது போல காட்சியளிக்கின்றது.   இயற்கையில் ஸ்படிகம் தூய்மையாக இருந்து கொண்டு சிவப்பாக காட்சியளிக்கின்றது.  இந்த பிரமைக்கு ஸோபாதிக ப்ரமா என்று பெயர். இங்கு மலருக்கு உபாதி என்றும், ஸ்படிகத்தை உபஹிதம் என்று அழைக்கப்படுகின்றது.  இந்த உதாரணத்தில் ஸ்படிகம், மலரும் உண்மை,  ஸ்படிகத்தில் தோன்று மலரின் நிறம் பொய்யானது. ஸ்படிகம் பிரம்மத்திற்கு உதாரணமாகவும்,  பிரபஞ்சம் மலருக்கு உதாரணமாக எடுத்துக்கொண்டால் இரண்டும் ஸத்யமாக இருக்கின்றது.  ஆனால் பிரபஞ்சத்தின் குணங்கள் பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ரது.  எனவே இந்த குணங்களை நீக்கி இரண்டையும் தனித்தனியாக ஸத்யமாக புரிந்து கொள்வதுதான் தாத்பர்யம்.
நிருபாதிக ப்ரமா – கடலின் நிறம் நீலமாக தெரிகின்றது.  ஆனால் உண்மையில் அது நிறமற்றது.   உண்மையில் ஆகாசத்தின் நிறத்தை இது பிரதிபலிப்பதால் இவ்வாறாக தெரிகின்றது.  நிறமற்ற ஆகாசத்தில் தெரியும் நீலவானமும் பொய் இந்த பிரபஞ்சம் என்கின்ற உபாதியே பொய் என்று இந்த உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்.  பிரம்மத்தில் தெரிவதாக அறியப்படும் பிரபஞ்சத்தின் குணங்களும் பொய், பிரபஞ்சமும் பொய் என்று புரிந்து கொள்ளலாம்.   உண்மையாக இல்லை ஆனால் பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை வேறொன்றிற்கு தருவதாக புரிந்து கொண்டால்,  ஏற்றி வைக்கப்பட்டு இருக்கும் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

வேறொரு உதாரணம் கனவு பிரபஞ்சம்.  இதில் நான் என்பது உபஹிதம், கனவு பிரபஞ்சம் என்பது உபாதி.  கனவுலகை அனுபவிப்பதால் இந்த ஆத்மாவை தைஜசன் என்று அழைக்கப்படுகின்றது.  இங்கு கனவு பிரபஞ்சம் பொய்யானது ஆனால் இது பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கின்றது.  இந்த தவறுக்கு நிருபாதிக ப்ரமா என்று பெயர்.  இந்த தவறை வைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.  இதிலிருந்து மூன்று பிரபஞ்சங்களும் இல்லாமல் இருப்பது ஆத்மாவாகும். பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யாவாகும்.  இது இருப்பதாக தெரிந்து கொண்டு இருக்கின்றது.  இருப்பதைத்தான் இல்லை என்று சொல்ல முடியும் இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.
ஶாந்தம்    – அமைதி ஸ்வரூபம், துரியத்தின் ஸ்வரூப லக்ஷணம்

ஸிவம்     – ஆனந்தம், மங்கலம், துயரமற்ற நிலை

அத்வைதம் – இரண்டற்றது, இருமைகளற்றது.

ஸ்ருஷ்டி காலத்திலும் பிரளய காலத்திலும், த்வைதமாக தெரிந்து கொண்டிருந்தாலும் அது இருமைகளற்றதாக இருக்கின்றது.  அறியாமை என்ற இருளினால், மோகத்தினால் பார்க்கப்படும் எல்லாம் மறைக்கப்படுவதனால் வருவது உறக்கம்.  ஞானத்தினால் மறைக்கப்படாமல் பார்க்கப்படுவது ஆத்மா,  அதுவே துரியம்.

சதுர்தம் மன்யந்தே   நான்காவது பாதமாக சொல்லப்பட்ட ஆத்மா போல கருதப்படுகின்றது என்று சொல்வதனால் அது இல்லை என்று மறைமுகமாக கூறப்படுகின்றது.

ஸஹ ஆத்மா         இதுவரை சொன்னதுதான் ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸஹ விக்ஞேயஹ   இதைத்தான் அறிந்து கொள்ளக்கூடியது.  ஆத்மாவை மேற்கூறியவாறு அறிந்து கொள்ள வேண்டும்.

விக்ஞேயஹ          இப்படிபட்ட ஆத்மா அடைவதுதான் பரம ப்ருஷார்த்தம்.  இதுதான் நம்மால் அடையப்பட வேண்டிய பரம லட்சியமாகும்.

காரிகை10
துரிய ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தை இங்கே கூறுகின்றார்.  ஆத்மா துயரமில்லாதது. துரியத்திடம் துக்கமும் இலை,  துயரத்தினுடைய விதையும் இல்லை.
நிவ்ருதே ஸர்வ துக்கானாம் – துரியனிடத்தில் விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் அனுபவிக்கும் அனைத்து துயரங்களும் நீங்குகிறது.

ஈஷானஹ பிரபு – துயரங்களை நீக்குவதில் தலைவனாக இருக்கின்றது என்று கூறுகிறார்.

துரியத்தை அறிந்து கொண்டால் அது சுகத்திற்கு காரணமாக இருக்கின்றது,  அறியவில்லை என்றால் அதுவே துயரத்திற்கு காரணமாக இருக்கின்றது.

அவ்யயஹ – அழிவற்றது – தன்னிடத்திருந்து வருவது, வெளியிலிருந்து வருவது என்ற இந்த இரண்டு நிலைகளிலும் அழிவை அடையாதது.  அவயவங்கள் இல்லாததால் உள்ளிருந்து அழிவு இல்லை.  பிரபஞ்சம் மித்யா என்பதால் வெளியிலிருந்தும் அழிவு ஏற்படாது.
அத்வைத ஸர்வபா4வானாம் – பலவிதமான உள்ள அனைத்துக்குள்ளும்  ( விஸ்வன்,  தைஜஸன்,  பிராக்ஞன்)  ஒன்றாக இருக்கின்றது.  பல ஆபரணங்களில் தங்கம் என்பது ஒன்றாக இருக்கின்றது போல இருக்கின்றது..

தேவ – அறிவு ஸ்வரூபம் – ஏகாத்ம ப்ரத்யயத்வாத்
துர்யஹ – துரியம், நான்காவது பாதமான இது மேற்கூறிய தன்மைகளை உடையதாக இருக்கின்றது.
விபு4 – விதவிதமாக எதிலிருந்து தோன்றியதோ அதை இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  விஸ்வன், தைஜசன், பிராக்ஞன் தோன்றியதை எடுத்துக் கொள்ள வேண்டும். (உ-ம்) விதவிதமான ஆபரணங்களுக்கு விபுவாக இருப்பது தங்கம்,  இது அனைத்திலும் வியாபித்து இருக்கின்றது.
ஸ்ம்ருத – இவ்விதம் துரியத்தின் லட்சணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.
காரிகை-11
துரிய தத்துவத்தை நிச்சயம் செய்ய விசாரம் செய்யப்படுகின்றது.  இந்த மந்திரத்தில் காரணம் என்பது அறியாமையையும், காரியம் என்பது அத்யாஸத்தையும் குறிப்பிடுகின்றது.  எந்த இடத்திலெல்லாம் காரியம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரணம் இருந்தே தீர வேண்டும்.  எங்கேயெல்லாம் காரணம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரியம் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.  அதேபோல எங்கேயெல்லாம் அறியாமை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அத்யாஸம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கே எல்லாம் அத்யாஸம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அறியாமையும் இருக்கும்.
பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் இருக்கின்றது.  விஸ்வன்,  தைஜஸனிடத்தில் இரண்டும் இருக்கின்றது.  அந்த விஸ்வனும், தைஜஸனும் காரியத்தினாலும், காரணத்தினாலும் பந்தப்பட்டவர்களாக சந்தேகமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.  காரியம்-அனாத்மா,  அத்யாஸம், காரணம் – துரியனை பற்றிய அறியாமை.  பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் தான் இருக்கின்றது.  எந்த அனாத்மாவையும் ஏற்றி வைக்கவில்லை.  துரியத்திடம் இந்த இரண்டும் இல்லை.
காரிகை12
பிராக்ஞனாக இருக்கும் போது பிரபஞ்சத்தையும் அறிவதில்லை.  தன்னையும் அறிவதில்லை.   மற்ற இரண்டு அவஸ்தைகளிலும் இரண்டையும் அறிகின்றான்.
பிராக்ஞன் ந ஆத்மானாம் ஸம்வேத்தி – தன்னை அறியவில்லை
பிராக்ஞன் ந ப்ராஞ்ஶ்ச – மற்ற பொருட்களையும் அறியவில்லை.
ந ஸத்யம் – சத்தியமான துரியத்தையும் அறியவில்லை
ந அபி அந்ருதம் – இந்த பொய்யான ஜகத்தையும் அறியவில்லை
ச கிஞ்சன ஸம்வேத்தி – எதையும் அறிவதில்லை.
இவைகள் அனைத்தும் அறியாமல் இருக்கும்படி பிராக்ஞன் அறியாமையினால் பிணைக்கப்பட்டிருக்கின்றான்
தத் துரியம் ஸர்வ த்3ருக் ஸதா – அந்த துரியம் எப்பொழுதும் எல்லாவற்றையும் அறிகின்றான்.
ஸர்வ த்3ருக் – அனைத்தையும் பார்ப்பவன், அக்ஞானத்தையும் பிரகாசப்படுத்துகின்றான்.
ஸதா ஸர்வம் ச் த்ருக் ச – அது அனைத்துமாக இருக்கின்றது, அதுவே அறிபவனாகவும் இருக்கின்றது.   இதுவே அனைத்துமாக இருப்பதால் அதைத்தவிர வேறெதுவும் இல்லாததால் அதை எதுவும் பந்தப்படுத்துவதில்லை
காரிகை13
உப4யோ – இருவருக்கும் உள்ள
துல்யம் – ஒற்றுமை
அத்வைத கிரகணம் – இருமையை அனுபவிக்காமலிருத்தல்
ப்ராக்ஞ துர்ய யஹ – அவைகள் பிராக்ஞன், துரியன்
இவைகளுக்குமிடையே உள்ள வேற்றுமை
பீஜநித்ராயுத பிராக்ஞ – பிராக்ஞன் ஆத்ம அக்ஞான உறக்கத்துடன் கூடியவன்
பீஜ நித்ரா – வித விதமான இருமைகளுக்கு காரணமாக இருக்கின்ற ஆழ்ந்த உறக்கம்
ஸா ச துரியே ந வித்யதே – பீஜ ரூபமான அக்ஞானம் துரியனிடத்தில் கிடையாது;
துரியம் என்பது ஆத்ம தத்துவம் அல்லது ஞானியை குறிக்கும்.

காரிகை14
காரியம் – ஜாக்ரத்; ஸ்வப்னம்

காரணம் – நித்3ரா
அத்யௌ – முதலிரண்டு
ஸ்வப்ன நித்ராயுதாவாத்யௌ – விஸ்வனும் தைஜஸனும் கனவு,  விழிப்புநிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பிராக்ஞ து அஸவப்னம் நித்ரா – பிராக்ஞனிட்த்தில் ஸ்வப்னமும்,  ஜாக்ரத்தும் கிடையாது,  உறக்கத்தில் மட்டும் இருக்கின்றான்.
ந நித்ராம் நைவ ச ஸ்வப்னம் துரியே – துரியம் ஸ்வப்னத்தையும், உறக்கத்தையும் உடையவனாக இல்லை.
நிஶ்சிதா ந பஷ்யந்தி –  ஆத்ம ஞானத்தை அடைந்தவர்கள் தன்னிடத்தில் அவைகளை நிச்சயமாக பார்ப்பதில்லை.                   –
காரிகை15
அன்யதா க்ருஹ்ணத ஸ்வப்னஹ – துரியத்தை தவறாக புரிந்து கொண்டவனுக்கு கனவு தோன்றுகின்றது.  கயிற்றை பார்த்தல் க்ரஹணம், கயிற்றில் பாம்பை பார்த்தல் அன்யதா க்ருஹணம், கயிற்றையே பார்க்காதிருத்தல் – அக்ரஹணம்.  துரியத்தை புரிந்து கொள்ளாமல், துரியமாக வேறொன்றை புரிந்து கொள்ளுதலே அன்யதா க்ரஹணம். இந்த நிலையில் கனவு தோன்றுகின்றது.

நித்ரா தத்வம் அஜானதஹ – துரியத்தை கிரகிக்காதவனுக்கு, பிராக்ஞனுக்கு உறக்கம் தோன்றுகின்றது. பிராக்ஞன் துரியத்தையும் புரிந்து கொள்ளவில்லை, அதன் மீது எதையும் அத்யாஸம் செய்யாத நிலைதான் உறக்கம்.
விபர்யாஸே தயோ க்ஷீணே – அந்த இருவரிடத்திலும் உள்ள தவறானது நீங்கும்போது
துரியம் பத3மஶ்னுதே – துரீயம் அடையப்படுகிறது.
இருவர் என்பது ஸவப்னம் (விஸ்வன், தைஜஸன்), பிராக்ஞன். விஸ்வ, தைஜஸனிடத்தில் அன்யதா க்ரஹணம், அக்ரஹணம் என்கின்ற இரண்டு தவறுகள் நடக்கின்றது. பிராக்ஞனிடத்தில் அக்ரஹணம் மட்டும் தான் இருக்கிறது.

காரிகை16
இதில் துரிய பிராப்தி விளக்கப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளிலும் ஜீவன் உறங்கிக் கொண்டு இருக்கின்றான், அறியாமையுடன் இருக்கின்றான். எப்பொழுதும் ஜீவன் மாயையினால் உறங்கிக் கொண்டு இருக்கின்றான்,  அதாவது ஆத்ம தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் சம்சாரத்தில் இருக்கின்றான்.  அனாதி என்ற சொல் பிரம்மத்தை குறிக்கும்போது தோற்றமில்லாதது என்று பொருள்படும், மாயையை குறிக்கும்போது அது முதலில் தோன்றிய காலத்தை குறிக்கும்.
இந்த ஜீவன் எப்பொழுது விழித்துக் கொள்கின்றானோ, குரு-சாஸ்திரத்தின் துணைக் கொண்டு அக்ஞானம் நீங்கப்பெற்று ஞானத்தை அடைகின்றானோ அப்பொழுது அவன் பிறப்பற்றதும்,  அக்ஞானத்தை நீக்குவதும், பிரபஞ்சங்கள் மித்யா என்று அறியவைப்பதுமான என்றும் ஒன்றாக இருக்கும் அத்வைதத்தை அறிகின்றான்.
காரிகை17
பிரபஞ்சோ யதிவித்4யேத – ஒருவேளை பிரபஞ்சம் இருந்திருந்தால்
நிவர்தேத ந ஸம்ஶய: – அது சந்தேகமில்லாமல் போயிருக்கும்
மாயாமாத்ரமிதம் த்வைதம் – மாயா ஜாலத்தினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதாக இந்த பிரபஞ்சம் இருக்கின்றது.  மாயாஜாலம் என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் வித்தையாகும்.  இந்த பிரபஞ்சம் வெறும் தோற்றம் அது உண்மையில் இல்லை.  ஆனால் அத்வைதம் உண்மையில் இறுதியாக இருக்கின்றது.
காரியம் இரண்டு விதமாக இருக்கின்றது.
1.  காரண அதீத காரியம் – காரணத்தை சார்ந்திருப்பது – தயிர் காரியம், அது பாலை சார்ந்திருக்கின்றது.
2.  கல்பித காரியம் – கயிற்றில் தெரியும் பாம்பு காரியமாக இருக்கின்றது, இது நமது மனதினால் மட்டும் கற்பணை செய்யப்பட்ட பொய்யான காரியம்.
பிரம்ம-ஜகத் காரண-காரியம் இரண்டாவது வகையை சார்ந்தது.
காரிகை18
ஜீவன் பிரம்மத்தின் மீது ஜகத்தை ஏற்றி வைக்கும் தவறை செய்யலாம்,  ஆனால் வேதம் இந்த தவறை செய்யாது. இருந்த போதிலும் கர்ம காண்டத்தில் உள்ள மந்திரங்களில் விதவிதமான த்வைதங்கள் பேசப்பட்டிருக்கின்றது.  எனவே சாஸ்திரம் எவ்வாறு இந்த தவறை செய்ய முடியும்?  குரு-சிஷ்யன் என்று எப்படி இருமையை உபதேசிக்கின்றது?  என்று கேள்வி எழுகின்றது.

அதற்கு பதிலானது சாஸ்திரம் தெரிந்தே இந்த இருமைகளை உபதேசிக்கின்றது, உண்மையை புரிய வைப்பதற்காக முதலில் இருமையை ஏற்றுக்கொள்கிறது இதை அத்யாரோபம் என்று அழைப்பர்.  பிறகு அபவாதம் என்ற முறையில் ஏற்றி வைத்ததெல்லாம் நீக்கிவிடும்.   இருமையை தெரியாமல் பார்ப்பது அத்யாஸம், தெரிந்தே பார்ப்பது அத்யாரோபம்.   அத்யாரோபத்தை பிறகு அபவாதம் மூலம் நீக்கப்பட்டு உண்மையை எடுத்துக் காட்டும்.

யதிகேனசித் கல்பிதஹ விகல்பத வினிவர்தேத– ஒருவேளை யாராவது இந்த இருமைகளை கற்பணை செய்திருந்தால் அவைகள் சென்றிருக்கலாம்.
உபதேஶாதயம் வாதோ ஞாதே த்வைதம் வ வித்யதே – சாஸ்திரம் உண்மை அறிவை புரிய வைப்பதற்காகவும், உணர்த்துவதற்காகவும் முதலில் இருமைகளை பற்றி பேசுகின்றது.   உண்மையை உணர்ந்தபின் அவைகள் இல்லை என்பது அறியப்பட்டுவிடும்.
—-ooo000ooo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-3

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

ஸ்லோகம் – 8
காரியம் என்பது நாம ரூபத்துடன் கூடிய அதிஷ்டானம்.  நாம என்பது பதம், ரூபம் என்பது பதார்த்தம், பத பிரபஞ்சமும், பதார்த்த பிரபஞ்சமும் ஒன்றுதான் என்று நிரூபிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் நாமமும்-ரூபமும் ஒன்றுதான் நிலைநாட்டப்பட்டது. . நாமத்தை சொல்லும் போது அதன் ரூபத்தில் இதை ஒடுக்குகின்றோம்.  ஓங்கார விசாரம் பதத்தை பிரதானமாக கொண்ட அனைத்து பிரபஞ்சத்தை பற்றிய விசாரம்.  அனைத்து பதங்களும் ‘ஓம்’ என்ற சொல்லோடு ஐக்கியப்படுத்தப்படுகின்றது.  நம் கண்முன்னே இருக்கும் ஜகத்தை இதிலுள்ள பதார்த்தங்கள் அனைத்தும் பதங்களில் ஒடுக்கப்பட்டுள்ளது.  அனைத்து பதங்களுக்கும்  ‘ உபாதான காரணமாக இருக்கின்றது.  மற்ற சப்தங்கள் இதை ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  அவைகளை  ‘  என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.  பின்பு அனைத்து சப்தங்களும் ‘ம் என்ற சப்தத்தில் லயமடைகின்றது.  இதன் அடிப்படையில் பார்த்தால் ஓம் என்பது ஜகத்தைக் குறிக்கின்றது.  ஓம் என்ற சொல் ஜகத்தைக் குறித்தால் அதற்கு அதிஷ்டானமான பிரம்மமும் இதனுடன் இருக்கின்றது.
ஸஹ அயம் ஆத்மா – நம்மால் விசாரம் செய்யப்பட்ட இந்த ஆத்மா, அனாத்மாதான் ஓம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது.  ஓங்காரம் இரண்டு ஸ்வரூபமாக இருக்கின்றது.  அவைகள்

  1. ஓம் என்ற சொல் ஒரு எழுத்தாக எடுத்துக் கொள்கின்றோம்.
  2. அ, உ, ம் என்று மூன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மாத்திரை என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும் கால அளவு, அமாத்திரம் என்பது சப்தமற்ற நிலை.  அத்யக்ஷரம், அதிமாத்ரம் இவைகள் ஓங்காரத்தை விளக்குகின்றது.  அத்யக்ஷரம் என்பது ஒரு எழுத்தாக இருக்கின்ற ஓங்காரம்.  இதுவே ஆத்மா,  அதிமாத்ரம் என்பது நான்கு மாத்திரைகளாக தனித்தனிப்பாகங்களாக இருக்கின்ற ஓங்காரம்.  இதுவும் ஆத்மா.  இதேபோல ஆத்மாவை மூன்றாகவும், நான்கு பாகங்களாகவும் நம்மால் பார்க்கப்பட்டது.  இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு ஆத்மா அத்யக்ஷரம் என்ற ஓரெழுத்து ஓங்காரத்தை குறிக்கின்றது.  நான்கு பாதங்களுடைய ஆத்மா நான்கு மாத்திரைகளுடைய ஓங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.  ஆத்மாவின் நான்கு பாகங்கள் எந்த வரிசையில் இருக்கின்றதோ அதே வரிசையில் நான்கு மாத்திரைகள சேர்த்து பார்க்க வேண்டும். முதல் பாதம் – அகாரம், இரண்டாவது பாதம் – உகாரம், மூன்றாவது பாதம் – மகாரம்,  நான்காவது பாதம் – அமாத்திரம்.

பாதாஹா மாத்ராஹா –  ஆத்மாவின் நான்கு பாதங்களே நான்கு மாத்திரைகள்.
மாத்ரா ச பாதாஹ – ஓங்காரத்தின் நான்கு மாத்திரைகளும் நான்கு பாதங்கள்
இவ்வாறூ கூறுவதன் காரணம் அந்த வரிசைப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அகாரஉகாரமகார இதி – அ, உ, ம் என்ற மாத்திரைகள்.
ஸ்லோகம்09

இதில் முதல் மாத்திரையும், ஆத்மாவின் முதல் பாதமும் ஒன்று என்று கூறப்படுகின்றது.  இதனாl இரண்டு பலன் கிடைக்கின்றது. avaikaL,

  1. ஓங்காரத்தினுடைய விசாரம்,
  2. நான்காவது மாத்திரையான அமாத்ராவை அறிவது.

ஓங்காரத்திலுள்ள ‘அ’ என்ற எழுத்து ஜாக்ரத் பிரபஞ்சத்தை ஒடுக்கியிருக்கிறது.  ‘உ’ என்ற எழுத்து கனவு பிரபஞ்சத்தை ஒடுக்கி இருக்கின்றது.  ‘ம்’ என்ற எழுத்து ஆழ்நிலை உறக்கdதிலுள்ள சப்த பீஜத்தை குறிக்கின்றது.  இதில் அகாரத்தை ஆலம்பனமாகக் கொண்டு வைஷ்வாநரனை தேவதையாக சொல்கின்றது.  இந்த இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, இப்படி தியானிப்பதால் அடையும் பலன் கூறப்படுகிறது. இந்த பலன் இருவகையானது. அவைகள்,

  1. நிஷ்காம பலன்– சித்தஸுத்தி அடையலாம்.
  2. சகாம பலன்.

ஆகியவைகளாகும்.

ஜாகரித ஸ்தானஹ வைஷ்வாநரன் – விழிப்பு நிலையை இருப்பிடமாக கொண்ட விராட்  என்கின்ற வைஷ்வாநரன்
அகாரஹ பிரதமா மாத்ரா – இவர்தான் ஒங்காரத்தின் முதல் மாத்திரையான அகாரமாக இருக்கின்றார். இது வைஷ்வாநரனை தியானிப்பதற்கு ஆலம்பனம் என்று கூறுகின்றது.
ஆப்தே – ( வியாபித்து இருத்தல் ), வியாபித்து இருக்கின்ற காரணத்தால்
ஆதிமத்வா – ( முதலில் இருப்பது ), முதலில் இருக்கின்ற காரணத்தால்

இந்த இரண்டு காரணத்தினால் வைஷ்வாநரனும், அகாரமும் ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். இவையிரண்டும் சமமாக கருதப்படுகின்றது.

  • எது உபாதான காரணமாக இருக்கின்றதோ அதுதான் எல்லா காரியங்களிலும் வியாபித்திருக்கும்.  அனைத்து சொற்களுக்கும் உபாதான காரணமாக இருப்பதால் அதற்கு வியாபித்திருக்கும் குணம் இருக்கின்றது.  எழுத்துக்களில் முதலில் இருப்பது அதேபோல வைஷ்வாநரன் என்கின்ற ஈஸ்வரன் ஸ்தூல பிரபஞ்ச முழுவதையும் வியாபித்திருக்கின்றார். எனவே இவருக்கும் வியாபித்திருக்கும் குணம் இருக்கிறது.
  • லய கிரமத்தில் எது கடைசியாக தோன்றியதோ அதுதான் முதலில் அபவாதம் செய்வோம்.  எனவே விராட்தான் இந்த வகையில் முதலில் இருப்பவர்.

சகாம பலன்
ஆப்னோதி ஹ வை ஸர்வான் காமான் – ஆசைப்படுகின்ற அனைத்து பொருட்களையும் அடைந்து விடுவான்.  எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன.
ஆதிஷ பவதி – எல்லா விஷயத்திலும் முதன்மையாக இருப்பான்.
யஹ ஏவம் வேத3 – எவனொருவன் இங்கு சொல்லியபடி இந்த உபாஸனையை செய்கின்றானோ அவன் மேலே கூறிய பலன்களை அடைகின்றான்.

ஸ்லோகம்10
ஸ்வப்ன ஸ்தானஹ தைஜஸஹ – கனவு நிலையை உடைய ஆத்மாவாகிய தைஜஸனாகவும்,  சூட்சும பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக உள்ள ஹிரண்யகர்ப்பனையும் இதில் குறிப்பிடப்படுகின்றது.
உகாரே த்வீதியா மாத்ர – ஓம் என்ற சொல்லிலுள்ள இரண்டாவது மாத்திரை உகாரம், இது ஹிரண்யகர்ப்பனோடு ஒப்பிடப்படுகின்றது. உகாரத்தை ஆலம்பனமாக கொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
உத்கர்ஷாத் – மேலானதாக இருக்கின்றதால், உயர்ந்ததாக இருப்பதனால். இதில் ஹிரண்யகர்ப்பன் விராட்டை விட உயர்ந்தவர், ஏனென்றால் விராட் அவரிடம்தான் ஒடுங்குகின்றார்.  அதேபோல உகாரமும் அனைத்து சப்தங்களுக்குள்ளும் உயர்ந்ததாக இருக்கின்றது.  ஏனென்றால் எல்லா சப்தங்களையும் குறிக்கின்றதாக இருக்கின்றது, இந்த காரணத்தால் இரண்டும் (ஹிரண்யகர்ப்பன், உகாரம்) சமமாக கருதப்படுகின்றது.
உப4யத்வாத் – இடையில் இருத்தல்,  ஹிரண்யகர்ப்பன் விராட்டிற்கும், அந்தர்யாமிக்கும் இடையில் இருக்கின்றார்.   உகாரம் அகாரத்திற்கும், மகாரத்திற்கும் இடையில் இருக்கின்றது.   இந்த காரணத்தாலும் இரண்டும் சமமாக கருதப்படுகின்றது.

உத்கர்ஷதி ஹ வை ஞான ஸந்ததிம் – அறிவுள்ள பரம்பரையை வளர்ப்பான்.
ஸமானஹ ச பவதி – நண்பர்களையும், பகைவனையும் சமமாக நோக்கும் மனதை அடைவான்.
ந அஸ்ய அப்ரஹ்மவித் குலே பவதி – இந்த உபாஸகனுடைய குருகுல பரம்பரையில் பிரம்ம ஞானத்தை அடையாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
யஹ ஏவம் வேத3 – யார் இந்த மாதிரி உபாஸிக்கின்றார்களோ அவர்கள் மேலே கூறப்பட்ட பலன்களை அடைவார்கள்.

ஸ்லோகம்11
ஸுஷுப்த ஸ்தானஹ ப்ராக்ஞஹ மகார த்ருதீயா மாத்ரா – ஆழ்நிலை உறக்கத்தில் உள்ள வியஷ்டியில் ஆத்மா பிராக்ஞன், சமஷ்டியில் அந்தர்யாமி,  இவரை ஓம் என்ற சொல்லில் உள்ள மூன்றாவது மாத்திரையான மகாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.

மிதேஹ (அளக்கும் பாத்திரம்) – நெல் முதலிய தானியங்களை அளக்க உதவும் அளவுப்பாத்திரம்.  மகாரம் அளக்கும் குணத்தை உடையது, பிராக்ஞனும் அளக்கும் குணம் உடையவன். அளக்கும் கருவியானது தானியங்களை உள்வாங்கி பிறகு வெளியே விட்டு விடுகின்றது.  அதுபோல பிராக்ஞனும் ஒரு வாயிலாக இருக்கின்றான். விழிப்பு நிலையில் இருந்து இந்த வாயிலாகத்தான் கனவு நிலைக்கு செல்வோம், பிறகு கனவு நிலையிலிருந்து இந்த வாயில்வழியேதான் விழிப்பு நிலைக்கு வருவோம்.  பிராக்ஞன் விஸ்வனையும்,  தைஜஸனையும் உள்வாங்கி வெளியே விடுகின்றான். அதேபோல அகாரமும், உகாரமும் ஓம் என்ற சொல்லி முடிக்கும்போது மகாரத்தில் ஒடுங்குகின்றன. மீண்டும் ஓம் என்று சொல்லும் போது அதிலிருந்துதான் வெளியே வருவது போல இருக்கின்றது.  இந்த குணம் இரண்டிலும் ஒன்றாக இருக்கின்றது.
அபிதேஹ – லயம் ஸ்தானமாக இருக்கின்ற காரணத்தினால், அந்தர்யாமியானவன் விராட்டும்,  ஹிரண்யகர்ப்பனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார். அதேபோல பிராக்ஞனிடம்   விஸ்வனும், தைஜஸனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார்.   அகாரமும், உகாரமும் மகாரத்தில் ஒடுங்குவதற்கு இருப்பிடமாக இருக்கின்றது.

இந்த இரண்டு காரணத்தினால் மகாரத்தை ஆலம்பனமாக கொண்டு அந்தர்யாமியை தியானம் செய்ய வேண்டும்.
மினோதி ஹ வா இதம் ஸர்வம் –  இவைகள் அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டவன்,  உலகத்தை சரியாக புரிந்து கொள்ளும் திறமையை உடையவனாக இருப்பான்.
அபீதிஸ்ச ப4வதி –  மேலும் இறந்த பிறகு மீண்டும் பிறக்காமல் பிரகிருதியில் மாயையுடன் லயத்தில் இருப்பான். அடுத்த ஸ்ருஷ்டியின்போதுதான் பிறப்பான்
யஹ ஏவம் வேத3 – இவ்வாறு யாரொருவன் உபாஸிக்கின்றானோ அவனடையும் பலன்கள் மேலே கூறப்பட்டுள்ளன.

காரிகை19
விஸ்வஸ்ய அத்வ்விவக்ஷ்யாம் – விஸ்வனை, வைஷ்வாநரனை அகாரம் என்ற சப்தமாக பாவிக்கும் போது
மாத்ரா ஸம்ப்ரதிபத்தௌ –  முதல் மாத்திரையை ஆத்மாவின் முதல் பாதமாக புரிந்து கொண்டு ஒப்பிடும்போது
ஆதி சாமான்யம் உத்கடம்– அகாரத்திற்கும் – விஸ்வ-வைஷ்வாநரனுக்கும் முதலாக இருக்கும் நிலை ஒற்றுமையாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
ஆப்தி சாமான்யம் ஏவ ச ஸ்யாத் – வியாபித்தல் என்ற ஒற்றுமையும் தெளிவாக தெரிகிறது.

காரிகை-20
தைஜஸ்ய உத்வ விக்ஞானே – தைஜஸன், ஹிரண்யகர்ப்பன் உகாரமாக இருக்கின்றதால்
மாத்ரா ஸம்ப்ராபத்தௌ – இரண்டாவது மாத்திரையை, இரண்டாவது பாதத்திற்கு சமமாக எடுத்துக் கொள்ளும்போது
உத்க்ர்ஷம் த்ருஷ்யதே ஸ்பூடம் – உகாரமும், ஹிரண்யகர்ப்பனும் உயர்ந்ததாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
உபயத்வம் ததாவிதம் – இரண்டும் இடையில் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது.
இந்த இரண்டு காரணங்களினால் இரண்டுமே ஒன்றாக கருதப்படுகின்றது.

காரிகை21
மகார பாவே ப்ராக்ஞஸ்ய – பிராக்ஞனை மகாரமாக பாவிக்கும்போது
மாத்ர ஸம்ப்ரதிபத்தௌ – மூன்றாவது மாத்திரையும், மூன்றாவது பாதமும் ஒன்றேன பார்க்கும்போது
மானஸா மான்ய உத்கடம் – தானியங்களை அளக்கும் பாத்திரம் போல இரண்டும் இருப்பது தெளிவாக தெரிகின்றது’
லய ஸாமான்யமேவ  –  இரண்டும் மற்ற இரண்டிற்கும் லயமடைவதற்கான இருப்பிடமாக இருக்கின்றது.

காரிகை22
த்ரிஷு தாமஸு – மூன்று அவஸ்தைகளிலும்
யத் துல்யம் ஸாமான்யம் வேதி நிஸ்சிதஹ – சரியான ஒற்றுமையை எவனொருவன் நிச்சயமாக அறிகின்றானோ
ஸஹ பூஜ்யஹ – அவன் வணங்கதக்கவன்
ஸர்வ பூதானாம் வந்த்யதே – எல்லா ஜீவராசிகளாலும் வணங்கதக்கவன்
மஹா முனிஹி – அவரே ஒரு பெரிய முனிவராக இருக்கின்றார்.

காரிகை23
அகாரஹ விஸ்வம் நயதே –  அகாரமானது உபாஸகனை இறந்த பிறகு வைஷ்வாநரனிடம் சென்று சேர்ந்து விடும்.
உகார ச அபி தைஜஸம் – உகாரமானது உபாஸகனை இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனிடம் கொண்டு சேர்க்கின்றது
மகாரஹ புன பிராக்ஞன் –  மகாரமானது அவனை இறந்த பிறகு அந்தர்யாமியிடம் கொண்டு சேர்க்கின்றது
ந அமாத்ரே வித்யதே கதி – ஓங்காரத்தின் நான்காவது மாத்திரையான அமாத்ரத்தில் எதாவது ஓரிடத்தில் கொண்டு சேர்க்கும் நிலை கிடையாது.
ஸ்லோகம்12

ஓங்காரத்தின் நான்காவது மாத்திரை (அமாத்திரை) மாத்திரயற்றதாகும், இதையும் ஆத்மாவின் நான்காவது பாதமாகிய துரீயத்தையும் சமpபடுத்திப் பார்க்கப்படுகிறது.  அமாத்ரா என்பது அசப்தத்தை குறிக்கின்றது.  இந்த அசப்தம் ( வாக்கினாலும், மனதினாலும் ) என்பது அமைதி இதை துரீயத்துடன் ஒப்பிடப்படுகின்றது.  எல்லா சப்தங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றது அசப்தம்.  எல்லா சப்தங்களும் ஒடுங்குவதற்கும், தோன்றுவதற்கும் காரணமாக இருப்பது இந்த அசப்தம்.  இவ்வாறு அசப்தம் அதிஷ்டானமாக இருப்பது போல துரீயமும் அதிஷ்டனாமாக இருக்கின்றது.  அமாத்ரம் நான்காவது மாத்திரையல்ல, ஆனால் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.  வாயால் பேசினாலும், மனதில் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தாலும் அது சப்தமாகத்தான் கருதப்படுகின்றது.  இந்த இரண்டு விதத்திலும் அமைதியாக இருப்பதைத்தான் அசப்தம் என்று கூறப்படுகின்றது.  இதை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்,

  1. வந்து செல்வது,
  2. அபாவமாக இருப்பது ( இல்லாத தன்மை )
  3. இருமை ஸ்வரூபம் சப்தத்திற்கு விரோதமாக இருக்கின்றது.

இவைகள் அமாத்ரா என்ற சொல்லுக்கு பொருளாகக் கூறவில்லை.  எது சப்தத்தையும்,  அசப்தத்தையும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதோ அதுவே அசப்த ரூபம்,  இதுவே அமாத்ராவை குறிக்கின்றது.   சப்தத்திற்கும், அசப்தத்திற்கும் சாட்சியாக இருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமே அமாத்ராவின் உண்மையான அர்த்தமாகும்.  எவ்வளவு சப்தங்கள் இருந்தாலும் அதனால் நான் பாதிக்கப்படாமல் அசப்தமாக இருக்கின்றேன்.
சப்தத்திற்கு மூன்று நிலைகள் உண்டு. அவைகள்,

  1. ஸ்தூல அவஸ்தை, இதை கலா என்று அழைக்கப்படுகின்றது,  இது வாக்கு என்கின்ற கர்மேந்திரியத்தால் உருவாக்கப்படுவது.
  2. சூட்சும அவஸ்தை, இதை நாதம் என்ற சொல்வதுண்டு,  நாம் சொல்ல நினைக்கின்ற சொல்லின் விருத்தியே (எண்ணங்கள்), மனதில் எழும் எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும், அதற்கு காரணம் அவரவர்களிடத்தே உள்ள ஸம்ஸ்காரங்கள் வெவ்வேறாக இருப்பதுதான்.
  3. காரண அவஸ்தை இதை பிந்து என்றும் சொல்லப்படுகின்றது.

காஷ்ட மௌனம் என்பது வாயால் பேசாதிருத்தல், மனதில் எதையும் சிந்திக்காதிருத்தல்,  சூட்சுமமான அமைதி மனதில் இருக்கும். இந்த நிலையில் காரண அவஸ்தையில் இருக்கின்றோம், அறியாமையில்தான் இருக்கின்றோம்.  அமைதியான மனதினைக் கொண்டு நான் சைதன்ய ஸ்வரூபம், என்றுமே அசப்த ஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும். இதனால் வெளியிலுள்ள சப்தத்தினாலும், அசப்தத்தினாலும் பாதிக்கப்படாமல் இருக்கின்றோம்.  இதுவே மோட்சத்தை அடைந்த நிலை.   நான் சப்தம்-அசப்தம் இவைகளை பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சி ஸ்வரூபம், அசப்த ஸ்வரூபம்.  வாக்கினாலும், மனதினாலும் மௌனமாக இருப்பதை முயற்சியால் அடைந்தாலும், அவைகளுக்கு பீஜமான காரண அவஸ்தையில் இருக்கின்றதால்,  மீண்டும் சிறிது நாள் கழித்து அமைதியிலிருந்து வெளிவந்தவுடன் சப்தம் போடத் தொடங்கி விடும்.  ஏனென்றால் மீண்டும் இந்திரியங்களில் அபிமானம் இருந்து கொண்டிருக்கின்றது.

மந்திர விளக்கம்:
அமாத்ரவா சதுர்த4 – ஓங்காரத்தின் அமாத்ர ஸ்வரூபம், ஆத்மாவின் நான்காவது பாதமான துரீயமாக இருக்கின்றது.
ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம் அக்ஷரமாக இருக்கின்றது.  லட்சியார்த்தமாக அமாத்ர ஸ்வரூபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.  துரீயனானது விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவர்களுக்குள்ளும் இருக்கின்றது, தனியாக வெளியேயும் இருக்கின்றது;  அதேபோல அமாத்ரமான அசப்தம் அனைத்து சப்தங்களுக்கு ஆதாரமாகவும் இருக்கின்றது, அதற்கு அப்பாலும் இருக்கின்றது.  இதிலிருந்து இரண்டும் (துரீயன், அமாத்ரா) சமமாக கருத முடிகின்றது.

அவ்யவஹார்யஹ – விவகாரத்திற்கு விஷயமாக இல்லை, எந்த செயல்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது.  வாக்கும், அர்த்தமும் நாசமடைந்த நிலை.
பிரபஞ்சோபஶமம் – சப்த ரூபமான பிரபஞ்சத்தின் ஆதாரம்.  சப்தம் இல்லாத இடம்.
ஶிவஹ – அனர்த்தம்
அபாவஹ – துக்கம் இல்லாதது, மங்கலமானது,  ஆனந்த ஸ்வரூபமானது
அத்வைதஹ – இருமையற்றது.  பிரபஞ்சங்கள் இல்லாமல் போய்விட்டதால் இந்த நிலை.
ஏவம் ஒங்காரஹ ஆத்மா ஏவ – இவ்விதம் ஓங்காரம் ஆத்மாதான் என்று விளக்கப்பட்டு இருக்கின்றது.
ஆத்மனா ஆத்மானம் ஸம்விஶதி – தன்னால் தன்னை அடைகின்றான்
யஹ ஏவம் வேத – எவனொருவன் இவ்விதம் அறிகின்றானோ அவன் தன்னையே அடைகின்றான்.

காரிகை-24
இதில் நிதித்யாஸனம் என்ற சாதனத்தைப் பற்றி கூறுகின்றார்.
ஓங்காரம் பாதஶோ வித்யாத் – ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
பாதா மாத்ரா ந ஸம்ஶயஹ – ஆத்மாவின் பாதங்கள்தான் மாத்திரைகளாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள வேண்டும்.
ஓங்காரம் பாதஶோ ஞாத்வா –  ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக அறிந்த பிறகு
ந கிஞ்சித் அபி சிந்தயேத் – வேறெதையும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.  எதையும் நினைக்கக்கூடாது என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று குறிப்பிடபடுகின்றது.  த்ருஷ்ட பலன், அத்ருஷ்ட பலன் எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாது.  அடைந்த இந்த அறிவிலே நிலைத்து நிற்க வேண்டும்.

காரிகை-25
யுஞ்ஜித ப்ரணவே சேதஹ – ப்ரணவ தத்துவத்தில் நம்முடைய மனதை பொருத்த வேண்டும்.  அனாத்மா விஷயங்களில் விழுந்து இருக்கும் மனதை ப்ரணவ தத்துவத்தில் நிறுத்தி பழக வேண்டும்.
ப்ரணவோ ப்ரஹ்ம – ப்ரணவம்தான் பிரம்மன், ப்ரணவம் என்பது ஓங்காரத்தை குறிக்கின்றது
நிர்பயம் – பயமற்ற ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மன்
ப்ரணவே நித்ய யுக்தஸ்ய – ப்ரணவத்தில் எப்பொழுதும் மனதை பொருத்தியிருப்பவனுக்கு
ந பயம் வித்யதே க்வசித் – எதைக்குறித்தும் பயம் கொள்வதில்லை.

உலகத்திலுள்ள எதுவும் நமக்கு அபயத்தைக் கொடுக்காது.  பிரம்மன் ஒன்றுதான் நிர்பய ஸ்வரூபமாக இருக்கின்றது.  அதை அடைவதினால்தான் அபயத்தை அடைய முடியும்.  நானே பிரம்மன் என்று உணர்வதுதான் பிரம்மத்தை அடைதல் என்று கூறுகிறோம்.  யாக்ஞவல்கியர் ஜனகரை பார்த்து நீ அபயத்தை அடைந்து விட்டாய் என்று ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் கூறுவது அவர் பிரம்மனை அடைந்து விட்டார் என்பதை குறிக்கின்றது.

காரிகை-26
ப்ரணவ – எதனால் (ஓங்காரம்) பிரம்மமானது நன்கு புகழப்படுகின்றதோ அதுவே ப்ரணவம்.  ஓங்காரம் சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.   தியானதிற்குரியதாக இருப்பது சகுண பிரம்மத்தை குறிக்கும்.  ஞானத்தை அடைவதற்கு உதவியாக இருப்பது நிர்குண பிரம்மத்தை குறிக்கும்.

ப்ரணவோ ஹி அபரம் ப்ரஹ்ம – ப்ரணவம் அபரமான பிரம்மத்தை குறிக்கின்றது.  அபரம் என்பது மாயையுடன் கூடிய ஈஸ்வரன்.
ப்ரணவ ச பர ஸ்ம்ருதஹ –  பிரணவம் பர பிரம்மத்தையும் குறிக்கின்றது என்று உபநிஷத்தின் மூலம் நினைத்துப்பார்க்கலாம்.
அபூர்வஹ – காரணமற்றது, அதற்கு காரணம் கிடையாது.
அனந்தரம் – அதற்குள்ளே ஒன்றும் கிடையாது
அபாஹ்யஹ – அதற்கு வெளியேயும் ஒன்றும் கிடையாது
அனபரஹ – அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை.
ப்ரணவஹ அவ்யயஹ – ப்ரணவத்தோடு ஒப்பிடுகின்ற பிரம்மமானது அழிவற்றது
காரிகை-27
ஸர்வஸ்ய ப்ரணவ ஹி ஆதி – அனைத்திற்கும் காரணமாக முதலில் இருப்பவர் ப்ரணவம்
மத்யம் அந்தம் ததைவ ச – இடையிலேயும், முடிவிலேயும் காரணமாக இருப்பது ப்ரணவம்
ஏவம் ஹி ப்ரணவம் ஞாத்வா – இவ்விதம் ப்ரணவத்தை அறிந்து கொண்டால்
வ்யஶ்னுதே தத் அனந்தரம் – அதை அப்போதே அடைகின்றான். (அறிதலே அடைதல்)

இவ்விதம் ப்ரணவத்தை அறிந்து கொண்டால், அதை அப்போதே அடைகின்றான்.  அதாவது பிரம்மத்தை அறிந்தவுடனேயே அதை அடைந்தவனாகின்றான்.  அடையப்படும் பிரம்ம ஞானம் பலனை கொடுக்க வேறெதனுடைய உதவியும் அதற்கு தேவையில்லை.  மற்ற அறிவுகள் எதை அடைந்தாலும் அவை பலனைக் கொடுக்க ஏதாவது ஒன்றின் உதவி தேவை.  உதாரணமாக யோகாசனம் எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவே பலனை கொடுக்காது, அதை தினமும் பயிற்சி செய்தால்தான் பலன் கிடைக்கும்.  பிரம்ம ஞானத்தை அடைவதற்கு இரண்டு முக்கியமான உதவிகள் தேவை.  ஞானத்தை அடைவதற்கு உதவும் பிரமாணம், அதை அடைவதற்குரிய தகுதிகள் இவையிரண்டும் இருந்தால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்.  சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதி அடைபவன்  பிரமாதா,  பிரமாணமானது வேதாந்தமும், குருவும்.

காரிகை-28
ஓங்கார லட்சணமும், அதன் பலனும் கூறப்படுகின்றது.  ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் கூறப்படுகின்றது.
ப்ரணவம் ஹி ஈஸ்வரன் வித்யாதி –  ப்ரணவத்தை ஈஸ்வரனாக உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதம் – எல்லா ஜீவராசிகளின் மனதிலும் சாட்சியாக இருப்பதாகவும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ வ்யாபினம் ஓங்காரம் – ஓங்காரமே அனைத்தையும் வியாபித்திருக்கின்றது
தீரஹ மத்வா ச ஶோசதி – விவேகியானவன் இதை அறிந்திருப்பதால் துயரத்தை அடைவதில்லை.
ஞானத்தின் பலனானது துக்க நிவிருத்தி, பய நிவிருத்தி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

காரிகை-29
அமாத்ரஹ – ஓங்காரம் அமாத்திரைகளற்றதாக இருக்கின்றது.  இது அசப்த ஸ்வரூபமாகவும்,  ஸத்யமாகவும் இருக்கின்றது.
அனந்த மாத்ரஹ – எண்ணிக்கையற்ற மாத்திரைகளை உடைய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.  அதாவது அனைத்து சப்தங்களின் ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. இது மித்யா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
த்வைதஸ்ய உபஶமஹ – இந்த ஓங்காரம் இருமைகள் இல்லாத இடமாக இருக்கின்றது.  த்வைதங்கள் லயமடைகின்ற ஸ்தானமாக இருக்கின்றது.  அனைத்து சப்தங்களும் ஒடுங்குகின்ற இடமாகவும் இருக்கின்றது.
ஶிவஹ – மங்கலமாகவும் இருக்கின்றது, அசப்தமாக இருப்பதே மங்கலம்.
ஓங்கார விதிதோயேன – யாரால் ஓங்காரத்தை இவ்விதம் அறிந்திருக்கின்றாரோ
ஸஹ முனிஹி – அவரே முனிவர்
ந இதர ஜனஹ – மற்றவர்களெல்லாம் முனிவர்களல்ல.

இத்துடன் கௌடபாதரின் ஆத்ம பிரகரணம் முடிவடைகின்றது.
உபநிஷத் சுருக்கம்
மந்திரம்1
ஓம் என்ற அக்‌ஷரம் அனைத்துமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  அனைத்தும் ஓம் என்று சொல்லப்பட்டதால் அதைப்பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது.  ஸர்வம் என்பதை காரிய பிரபஞ்சம், காரண பிரபஞ்சம் ( மாயா ) என்று விளக்கப்பட்டது.  ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம்தான் ஸர்வம் என்று குறிப்பிடுகின்றது.  காரிய-காரண ரூபமாக இருத்தல், லட்சியார்த்தம் அதற்கு அதிஷ்டானமாக இருக்கும் நிலையை குறிக்கின்றது.
மந்திரம்2
ஆத்மாவே இவைகள் அனைத்தும் என்று சொல்லப்பட்டு அதைப் பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது.  மகாவாக்கியம் பிரதிக்ஞா ரூபத்தில் வந்திருக்கின்றது. அயம் ஆத்மா பிரம்ம – இந்த ஆத்மாதான் பிரம்மமாகவே இருக்கின்றது.  இந்த ஆத்மா நான்கு விதமாக பிரித்து விசாரம் செய்யப்பட்டுள்ளது.

மந்திரம்3-6
இவைகளில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. இதில் அவஸ்தா த்ரய விவேகம் என்ற முறையில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. மூன்று அவஸ்தைகளை அனுபவிக்கின்ற ஆத்மா மூன்று பாதங்களாக உடையது.  நான்காவது பாதமாக துரீயம் என்று அறிமுகப்படுத்தியுள்ளது.   முதல் பாதம் சைதன்யம் ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரம் இவைகள் சேர்ந்தது, இரண்டாவது பாதம் சைதன்யம் சூட்சும பிரபஞ்சம், சூட்சும சரீரம் இவைகள் மூன்றும் சேர்ந்தது, மூன்றாவது பாதமானது சைதன்யம், காரண சரீரம், காரண பிரபஞ்சம் இவை மூன்றும் சேர்ந்தது என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.  நான் என்பது எப்போதும் ஆத்மாவையே குறிக்கின்றது.  நான் ஸ்தூல சரீரத்தின் துணைக்கொண்டு ஸ்தூல பிரபஞ்சத்தை விழிப்பு நிலையிலே அனுபவித்துக் கொண்டிருப்பவன். அதேபோல கனவு, உறக்கம் இவைகளிலும் இருக்கின்றேன்.  காரண அவஸ்தையில் அறியாமையும் இருக்கின்றது, சுகமும் இருக்கின்றது.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது சைதன்யம் என்று ஒன்றுதான் மூன்று நிலைகளிலும் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது.  அனாத்மா இரண்டாக பிரிக்கப்படுகின்றது.  ஸ்தூல சரீரமும், ஸ்தூல பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களினால் உருவாக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.  ஸ்தூல சரீரத்தின் நான் என்ற அபிமானம் வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று பிரிக்கப்படுகின்றது. ஸ்தூல சரீரம் – அனுபவிப்பவன், ஸ்தூல பிரபஞ்சம் – அனுபவிக்கப்படும் பொருளாக கூறப்பட்டது.   சைதன்யத்தின் உபாதியாக இருக்கும் அனாத்மா அனுபவிப்பவன்  (விஸ்வன்,  தைஜஸன்,  பிராக்ஞன்) என்ற நிலையும், அனுபவிக்கப்படும் பொருளாக ஸ்தூல, சூட்சும பிரபஞ்சங்கள் என்ற நிலையும் இருப்பதால், அனாத்மா இரண்டாக இருப்பது போல் தோன்றுகிறது.

மந்திரம்-7
காரண பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமாக இருக்கின்ற ஈஸ்வர தத்துவம் விவரிக்கப்பட்டது.   சமஷ்டியில் வைஷ்வாநரன், ஹிரண்யகர்ப்பன், அந்தர்யாமி என்று ஒப்பிடப்பட்டது.  விஸ்வனாகிய அனாத்மாவை நான் என்று தவறாக ஏற்றி வைத்திருப்பதால் விஸ்வனாக இருக்கின்றாய், அதேபோல தைஜஸனுக்கும், பிராக்ஞனுக்கும் பொருந்தும்.  எனவே இந்த அனாத்மாவை நீக்கிவிட்டால் சைதன்ய தத்துவமாக இருக்கின்றாய். மூன்று நிலைகளில் சைதன்யத்தின் மீது எவைகளெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டதோ அவைகள் எல்லாம் நீக்கி, நீ ஆத்ம ஸ்வரூபம்தான் என்று உரைக்கின்றது.  மூன்று சரீரங்களை நீக்கிவிட்டது.   நீ வெளி விஷயங்களை அனுபவிப்பவன் அல்ல என்று சுட்டிக்காட்டி அவைகளை நீக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றது.
ஸ்தூல சரீரம் பார்க்கின்றதாகவும், பார்க்கப்படுபவதாகவும் இருக்கின்றது.  அதனால் இது நீயல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. ஆத்மா பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படுபவனும் அல்ல என்று புரிந்து கொள்ள என்று வலியுறுத்துகின்றது.  எனவே உன்னை அத்வைத சைதன்ய ஸ்வரூபம் என்று அறிந்து கொள் என்று உபதேசிக்கின்றது.

பிரபஞ்சோஶமம் – இந்த அனாத்மாக்கள் எல்லாமே மித்யா, இல்லாதவைகளை தன்மீது ஏற்றி வைத்திருக்கின்றோம் என்று கூறி நம்மை தெளிய வைக்கின்றது.  அனாத்மாக்கள் இருப்பது போல தோற்றமளித்துக் கொண்டிருப்பவைகள்.  இந்த ஆத்மாவை இப்படி அறியப்பட வேண்டும்.
மந்திரம்-8    (ஓங்கார விசாரம்)
ஒங்கார விசாரமும், ஆத்மா விசாரமும் ஒன்றுதான்.  நமது பார்வையில் உள்ள வேறுபாட்டின் காரணமாக வேறு விதத்தில் ஓங்கார விசாரம் என்ற முறையில் செய்யப்படுகின்றது.   உலகத்தை சப்தமாக உருவகப்படுத்தி நாமத்தை பிரதானமாகக் கொண்டு இவைகளுக்கு அதிஷ்டானமாக இருக்கின்ற  ஆத்மா உணர்த்தப்படுகின்றது.  ஓம் என்பது சப்த ரூபம், இது அ, உ, ம என்று பிரித்து மூன்று சரீர, பிரபஞ்சங்களுக்கு ஒப்பிட்டு, ஆத்மாவின் மூன்று பாதங்களுக்கும் ஒப்பிட்டு நான்காவதாக அமாத்ரா, அசப்தமாக கூறி அதை துரீயத்திற்கு ஒப்பிட்டு விளக்கி ஆத்மாவுடன் சமப்படுத்தப்பட்டது. ஆத்மா அசப்த ஸ்வரூபம் என்று விளக்கப்பட்டது.
காரிகை சுருக்கம்

  • மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருப்பது ஆத்மா ஒன்றுதான்
  • வியஷ்டி,சமஷ்டி உபாஸனைக்காக விஸ்வ, தைஜஸன் இருப்பிடத்தைப் பற்றி பேசப்பட்டது
  • விஸ்வனும், தைஜசனும் கர்த்தாவாகவும், போக்தாவாகவுமாக இருக்கின்றார்கள், ஆனால் பிராக்ஞன் போக்தாவாக மட்டும் இருக்கின்றான்.
  • இந்த மூன்றையும் தெரிந்து கொண்டாலே அதிக சுகங்களை அடையலாம்.
  • துரீயமானது துயரங்களற்றது, சம்சாரம் இல்லாத இடம் என்று கூறினார்.
  • விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவைகளை ஒன்றையொன்று ஒப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டது
  • காரியம் – அத்யாஸம் – ஏற்றி வைக்கப்பட்டது, காரணம் – அக்ஞானம். விஸ்வனும், தைஜஸனும் காரண-காரியத்துடன் இருக்கின்றார்கள். ஆனால் பிராக்ஞன் காரணத்துடன் மட்டும் இருக்கின்றார்.  துரியம் இரண்டுமே இல்லாதவன்.  அன்யதா கிரகணம் – வேறு விதமாக புரிந்து கொள்வது, அகிரகணம் – புரிந்து கொள்ளாதிருத்தல்
  • துரீயத்தை அறிவினால்தான் அடையமுடியும் என்று கூறினார்
  • பிரபஞ்சம் மித்யா என்றும் விளக்கப்பட்ட்து
  • உபநிஷத் உபதேசத்திற்காகத்தான் இருமைகளை பயன்படுத்தி இருக்கின்றது.  குரு-சிஷ்யன், ஜகத் என்ற இருமைகள்.
  • நிதித்யாஸனம் என்ற சாதனத்தையும் கூறியுள்ளார்.
  • ஆத்மாவின் நான்கு பாதங்களையும், நான்கு மாத்திரைகளாக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், வேறெதையும் நினைக்க கூடாது
  • பிரம்மன் நிர்பயமாக இருப்பது, எனவே நாம் அதை அடைந்தால் அபயத்தை அடைவோம் என்றும் கூறப்பட்டது
  • அமாத்ர அனந்தமாத்ர – சப்தமும், அசப்தமும் ஒங்காரம்
  • இருமைகள் இல்லாதன் நிலை ஶிவம், ஶாந்தம்
  • இதையறிந்தவந்தான் முனிவன் என்றும் கூறினார்.

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி4

காரிகை – 2வது அத்தியாயம் (வைதத்ய பிரகரணம்)

பிரபஞ்சோபஶமம் – பிரபஞ்சம்(ஜகத்) + உபஶம(இல்லாமை) – பிரபஞ்சம் இல்லாத இடம் அதுவே துரீயம் ,பிரம்மம், ஆத்மா.  இரண்டு விதமான இல்லாமை அபாவம் இருக்கின்றது.  அவைகள்,

  1. நீரில் உப்பைபோட்டு கலந்து விட்டால் உப்பின் இருப்பு தெரியாது,வெளித்தோற்றத்திற்கு வராத நிலைக்கு சென்று விட்டது..
  2. கயிற்றில் தெரிந்த பாம்பு இல்லாமை அடைந்து விட்ட நிலை.

அத்வைதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பிரபஞ்சம் பிரம்மத்திலே மறைந்து இருக்கின்றது என்று பொருள் சொல்கிறார்கள்.  ஆனால் அத்வைதிகள் பிரபஞ்சம் உண்மையில் இல்லை ஆனால் இருப்பது போல தோன்றி  கொண்டிருக்கின்றது, இந்த நிலையே மித்யா என்று கூறுகிறார்கள். பிரபஞ்சம் மித்யா என்ற உபதேசம் நமது அனுபவத்திற்கு எதிராக இருப்பது போல சந்தேகம் வருகின்றது.  எதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் சாஸ்திரம் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

  1.     பிரத்யக்ஷம் எப்போதும் உண்மையைதான் காட்டுகின்றது என்ற நியதி கிடையாது.உதாரணமாக கானல் நீர், பூமி தட்டையாக இருப்பது போல் தோன்றுவது.  இது போல இந்த உலகமும் பொய் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  2.     பிரத்யக்ஷ பிரமாணத்தால் எப்போதும் ஒரு பொருள் சத்யமா அல்லது மித்யாவா என்று சொல்ல முடியாது. கண் கானல் நீரை பார்க்கின்றது, அது உண்மையா, பொய்யா என்று சொல்வது கிடையாது.  புத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றது.  இதேபோல நம் அனுபவம் உலகம் சத்யமா, மித்யாவா என்று சொன்னது கிடையாது. நம் அறிவினால்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

நம் அனுபவம் உலகத்தின் இருப்பைத்தான் காட்டுகின்றது.  ஆனால் அது உண்மையா, பொய்யா என்று உறுதி செய்யாது.  புத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றது.  இந்த அத்தியாயத்தில் கௌடபாதர் அனுமானம் என்ற பிரமாணத்தை ஜகத் மித்யா வைத்து சாஸ்திரம் சொல்கின்ற உண்மையை என்று நிலை நாட்டுகின்றார்.  அனுமானத்தை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். அவைகள்,

  1. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாம்,சாஸ்திரத்தின் துணையில்லாமல் தர்க்கத்தை உபயோகித்தல்-ஸ்வதந்திர தர்க்கத்தை பயன்படுத்தலாம்.
  2. சாஸ்திர பிரதானமாக கொண்டு பயன்படுத்துகின்ற அனுமானம்.

இந்த இரண்டாவது வகை அனுமானத்தை கௌடபாதர் கையாண்டு விளக்குகின்றார்.

அனுமான விசாரம் (யூகம் – Inference )

அனுமானம் என்பது பிரத்யக்‌ஷ பிரமாணம் பயன்படாத போது அறிவை அடைய பயன்படுத்தும் ஒருவகையான முறை. இந்த பிரமாணம் பிரத்யக்‌ஷ பிரமாணத்தின் துணைக் கொண்டுதான் செயல்படும்.  பிரத்யக்‌ஷத்தினால் அறியாததை அனுமானத்தினாலும் அறிய முடியாது.  மலையில் பகல்நேரத்தில் புகையை பார்த்தால் அந்த இடத்தில் நெருப்பு இருக்கின்றது என்ற கூறுவோம். இந்த அறிவையடைய நம் கண்ணை பயன்படுத்தவில்லை.  இது பிரத்யக்ஷ த்தினால் வரவில்லை.  இந்த அறிவை அடைவதற்கு உதவிய பிரமாணம்  அனுமானம். இதில் ஐந்து தத்துவங்கள் இருக்கின்றது.  அவைகள்,

  1. பக்ஷம்        – மலையை குறிக்கின்றது.
  2. ஸாத்யம்     – நெருப்பு (வன்னி, அக்னி)
  3. ஹேது        – புகை (தூமஹ)
  4. வ்யாப்தி      – எங்கெல்லாம் புகையுண்டோ அங்கெல்லாம் நெருப்பு இருக்கும்     என்கின்ற உண்மை
  5. த்ருஷ்டாந்தம் – சமையலறை, யாகசாலை

 

  1. பக்ஷம் – இதன் லட்சணம் எங்கு சாத்தியம் சந்தேகிக்கப்படுகின்றதோ அந்த இடத்திற்கு  பக்ஷம் என்று பெயர். (உ-ம்) நெருப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடம் மலை
  2. சாத்தியம் – எது என்று நிச்சயிக்கபட வேண்டிய விஷயம், ஸாதனீயம், நிரூபிக்கப்பட வேண்டியது
  3. ஹேது – ஒன்றை (சாத்தியத்தை) அறிய உதவும் சாதனம் , கரணம், லிங்கம் (புகை)
  4. வியாப்தி – ஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் இடையே உள்ள பிரியாத, இணைந்திருக்கின்ற சம்பந்தம் – ஹேது ஸாத்ய ஸாஹச்சர்ய நியமஹ.  (உ-ம்) புகையும், நெருப்பும் எப்போதும் சேர்ந்தே இருக்கும்.  எப்போதெல்லாம் ஒன்று இருக்கின்றதோ அப்போதெல்லாம் இணைந்திருக்கின்ற மற்றொன்றும் சேர்ந்திருக்கும்.  எங்கேயெல்லாம் புகையிருக்கின்றதோ அங்கேயெல்லாம் புகை இல்லாமையும் இருக்கலாம். எனவே ஹேதுவுடன் இணைந்திருக்கும் சத்யம்
  5. திருஷ்டாந்தம் – உதாராணம் – அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்.

அனுமானம் என்பதும் அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கின்றது.  மேலே கூறப்பட்ட ஐந்தின் துணைக்கொண்டு அடையப்படும் அறிவானது அனுமானத்தினால் அடைந்த அறிவாகின்றது.  அனுமானம் என்பது வியாப்தியுடன் கூடிய ஹேதுவை பக்ஷத்தில் பார்ப்பது அனுமானத்தை சொல்லும் முறை: பக்ஷம், ஸாத்யம், ஹேது, த்ருஷ்டாந்தம், வியாப்தி
மலையில் நெருப்பு இருக்கின்றது புகை இருப்பதனால் யாகசாலையை போல, எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பான ஸாத்யம் இருக்கும்.

அனுமான வாக்கியம்1
உடல் அழிவுக்கு உட்பட்டது அது காரியமாக இருக்கின்ற காரணத்தினால் பானையை போல.
இந்த உதாரணத்தில்,
பக்ஷம் – உடல்; ஸாத்யம் – அழியக்கூடியது; ஹேது – காரியம் (உருவாக்கப்பட்டதால்)
த்ருஷ்டாந்தம் – பானையப்போல;
வியாப்தி – எதுவெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அதுவெல்லாம் அழியக்கூடியது
வியாப்தி ஞானத்துடன் ஹேதுவைப் பக்ஷத்தில் பார்த்தால்தான் ஸாத்யம் புரிய வரும்.
ஜகத் (பக்ஷம்) மித்யா (ஸாத்யம்) என்பதை அனுமானத்தின் துணைக்கொண்டு நிலைநாட்ட வேண்டும். ஹேது பார்க்கப்படுவதனால், அனுபவிக்கப்படுவதனால், த்ருஷ்டாந்தம் – கனவு பிரபஞ்சத்தைப் போல

காரிகை1ஹேது1
இதில் ஸ்வப்னம் மித்யா என்று நிரூபித்தல்.  த்ருஷ்டாந்தத்திலிருந்து வியாப்தி ஞானம் நமக்கு ஏற்படும்.  யாகசாலையில் நாம் புகையுடன் கூடிய நெருப்பை பார்க்கின்றோம்.  இதை வைத்துத்தான் எங்கேயெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி ஞானத்தை உறுதி செய்கின்றோம்,  எனவே திருஷ்டாந்தத்திற்கு இன்னொரு பெயர் வியாப்தி பூமி என்று உண்டு.  அனுமானத்தின் மூலம் அடையும் அறிவிற்கு திருஷ்டாந்த ஸித்தி முக்கியம்,

வைதத்யம் ஸர்வபாவானாம் ஸ்வப்ன ஆஹு மனீஷிணஹ – கனவில் காணும் அனைத்துப் பொருட்களும் மித்யா என்று அறிவாளிகள், பிரமாணத்தை நன்கு உபயோகிப்பவர்கள்  சொல்கிறார்கள். இது பக்ஷம்.
பாவானாம் அந்த ஸ்தானாத் ஸம்வ்ருதத்வேன ஹேதுனா – கனவில் காணும் அனைத்து பொருட்களும் நமக்குள்ளே இருப்பதனாலும், அந்த இடம் சிறிய இடமாக இருக்கின்ற காரணத்தினால், இது ஹேதுவாக இருக்கின்றது.

காரிகை2 ஹேது-2
அதீ3ர்க4த்வாத் காலஸ்ய – காலம் குறைவாக இருக்கின்ற காரணத்தால்
3த்வா தே3ஶான்ன வ பஶ்யதி – வேறு இடத்திற்கு சென்று (கனவில் பார்க்கும் இடத்திற்கு)
கனவை பார்ப்பதில்லை
இதுவரை அனுமான முறையில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிலை நாட்டினார்.  இனி அனுபவத்திலே இது மித்யா என்று புரிய வைக்கின்றார்.
ஸர்வ பிரதிபு3த்3த4ஹ – விழித்துக் கொண்ட அனைவரும்
தஸ்மின் தேஶே ந வித்யதே – அந்த நேரத்தில் அங்கு இருப்பதில்லை.
எந்த இடத்தில் இருப்பதாக கனவு காண்கின்றோமோ விழித்தவுடன் அந்த இடத்தில் நாம் இருப்பதில்லை. எனவே இதன் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை3
இதில் ஸ்ருதி பிரமாணத்தில் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கின்றார்.
அபாவாத் ரதாதினாம் ஸ்ருயதெ ந்யாயபூர்வகம் – கனவில் தோன்றும் ரதம் போன்றவைகள் இல்லாததை யுக்திமூலமாக, நியாயமாக ஸ்ருதியானது நிரூபிக்கின்றது.
வைதத்யம் தேன வை ப்ராப்தம் – பொய்யாக இருக்கின்ற நிலையானது தர்க்கத்தின் மூலமாகவும், இதுவரை செய்த விசாரம் மூலமாகவும் அடையப்பட்ட்து.
ப்ரகாஶிதம் – உபநிஷத்தின் மூலமும் இதை அறிய முடிந்தது.

கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் அனுமானம், அனுபவம் இவைகள் மூலமாக பொய்யென்று அறிந்தோம்.  உபநிஷத் மூலமும் இந்த அறிவை அடைந்தோம். இவ்வாறு சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

காரிகை4
பக்‌ஷம் – ஜாக்ரத் பிரபஞ்சம்; ஸாத்யம் – மித்யா; த்ருஷ்டாந்தம் – கனவு பிரபஞ்சம்
யதா தத்ர ததா4 ஸ்வப்னே – கனவில் எப்படியோ அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும்
கனவில் பார்க்கப்படும் பொருட்கள் எப்படி பொய்யாக இருக்கின்றதோ, அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும் தோன்றும் பொருட்களும் பொய்யாக இருக்கின்றது.
தஸ்மாத் பேதானாம் ஜாகரிதே ஸ்ம்ருதம் – ஆகவே பொருட்களுடைய பொய்யான நிலை ஜாக்ரத் அவஸ்தையிலும் நிலை நாட்டப்பட்டது.
அந்த ஸ்தானாத் – பொருட்கள் உள்ளே இருக்கின்றது என்ற விஷயமும்
ஸம்வ்ருத த்வேன – ஆனால் குறைவான இடம் இருக்கின்றது என்ற விஷயமும்
பித்யதே – வேறுபடுகின்றன.
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களுக்கு போதுமான இடம் இருக்கின்றது.  ஆனால் கனவில் குறைவான இடம் இருக்கின்றது என்ற வேற்றுமையும் புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை5
ப்ரஸித்தே4னைவ ஹேதுனா – பிரசித்தமான காரணத்தினால் பார்க்கப்படுவதானால்
வியாப்தி – எங்கேயெல்லாம் பார்க்கப்படுவது இருக்கின்றதோ அங்கேயெல்லாம் மித்யாவாக இருக்கின்றது.
ஸ்வப்ன ஜாக்ரத் ஸ்தானே ஹி ஏகம் – கனவு நிலையும், ஜாக்ரத் நிலையும் இரண்டும் ஒன்றுதான் என்று
ஆஹூ மனீஷனஹ – அறிவாளிகள் சொல்கின்றார்கள்.
பே4தானாம் ஹி சமத்வேன – இரண்டு நிலைகளில் உள்ள பொருட்களின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதனால்
இந்த இரண்டு நிலையில் உள்ள பொருட்கள் பார்க்கப்படுவதால் இரண்டும் ஒரே தன்மையை அடைகின்றது. அதனால் இரண்டும் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் விழிப்பு நிலை பிரபஞ்சமும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை6
ஜாக்ரத் பிரபஞ்சம் மித்யா என்பதற்கு இரண்டாவது ஹேது சொல்லப்படுகின்றது.
பார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்று தெளிவாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.  அழியாத ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது.  எவையெல்லாம் பார்க்கப்படுகின்றதோ அவைகள் மாற்றத்திற்கும், அழிவிற்கும் உட்பட்டதாக இருக்கின்றது.  இவைகள் முதலில் இல்லாமல் இருந்து பின்பு இருப்புக்கு வந்து பின்பு மீண்டும் இல்லாத நிலைக்கு சென்று விடுகின்றது.
ஹேது – ஆதி-அந்த வடிவம் – தோற்றமும் முடிவும் இருப்பதனால், தோன்றி மறையும் தன்மை உடையதனால், அநித்யமாக இருப்பதால், தற்காலிகமாக இருக்கின்றதோ அதுவே பார்க்கப்படுவதாகவும் இருக்கின்றது.  இதையே மித்யா என்றழைக்கப்படுகின்றது.
ஆதாவந்தே யத் ந அஸ்தி – தோன்றுவதற்கு முன்னும், அழிவிற்கு பின்னும் எந்த ஒரு பொருள் இல்லையோ
வர்த்தமானே அபி தத் ததா4 – அந்தப் பொருள் தோன்றிக்கொண்டிருக்கும்போதும், தோன்றிய பின்னரும், அழிவிற்கு பின்பும் கூட இல்லாத நிலையில்தான் இருக்கின்றது.
விததை2ஹி ஸத்ருஷா ஸந்தஹ அவிததா2 இவ லக்‌ஷிதா – நம்மால் அனுபவிக்கப்படும் பொருட்கள் மித்யாவாக இருந்த போதும் உண்மையாக தோன்றுவது போல அறியாமையில் உள்ளவர்களால் கருதப்படுகின்றது

காரிகை7

பூ.ப1 – எது பலனைக் கொடுக்கின்றதோ அவைகள் ஸத்யம், பலனைக் கொடுக்காதவைகள் எல்லாம் மித்யா.  உதாரணம் கானல் நீர் மித்யா, கனவில் காணும் பொருட்கள் அனைத்தும் மித்யா.  ஆனால் விழிப்பு நிலை பொருட்களுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றது, பலனும் இருப்பதால் அவைகள் ஸத்யம்

பதில்  விழிப்பு நிலை பொருட்கள் கனவில் பயன் தராது.  கனவில் காணும் பொருட்கள் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லை.  ஜாக்ரத் அவஸ்தையில் நன்கு சாப்பிட்ட ஒருவன் கனவில் பசியோடு இருப்பதாக காண்கிறான்.  அதனால் பயனைக் கொடுப்பது மித்யாவல்ல என்று கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறான கருத்து என்று அறிந்து கொள்ள வேண்டும்.  கனவில் காணும் பொருட்களும், ஜாக்ரத் அவஸ்தையில் காணும் பொருட்களூம் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது ஆனால் மற்ற அவஸ்தையில் பயன்படவில்லை. அதனால் அவைகள் பயனை அளித்தாலும் மித்யாதான்.

பூ.ப2   ஜாக்ரத் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அந்த அவஸ்தையில் பயனுடையதாக இருக்கின்றது.  ஏன் இதை கனவு நிலைக்கு எடுத்து செல்கிறீர்கள்?

பதில்  ஸ்வப்ன பிரபஞ்சத்தில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று நீ கூறுவதற்கு ஜாக்ரத் அவஸ்தையை எடுத்துக் கொள்கின்றாய்.  ஆனால் அவைகள் அந்த பிரபஞ்சத்தில் பயன்படுகின்றது.  அதேபோல நாங்கள் கனவு பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டு ஜாக்ரத் அவஸ்தை பொருட்கள் பயனளிக்காது என்று கூறுகிறோம்.  எனவே உனது கொள்கையின்படி ஜாக்ரத் பொருட்கள் பயன்படவில்லை அதனால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்.  உன்னுடைய முதல் ஹேது கனவில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று சொன்னதும் தவறு. அவைகள் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது, வேறு அவஸ்தையில் பயனற்றதாகவும் இருக்கின்றது.

தேஷாம் ஸப்ரயோஜனதா – அவைகளுடைய (ஜாக்ரத்தில் அனுபவிக்கின்ற பொருட்கள்)
பயனளிக்கக்கூடியது என்ற தன்மை
ஸ்வப்னே விப்ரதிபத்யதே – கனவில் வேறுபடுகின்றது, பயனற்றதாக இருக்கின்றது.
தஸ்மாத் ஆத்யந்தவத்த்வேன.- ஆகவே ஆதியும், அந்தமும் கூடியதான ஹேதுவினால்
மித்யா ஏவ கலு தே ஸ்ம்ருதா – அவைகள் மித்யாதான் என்று கருதப்படுகின்றது.

காரிகை8

பூ.ப1   இந்த உதாரணம் சரியாக பொருந்தவில்லை.  ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யாவல்ல.  நம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்கள்தான் கனவில் வருகின்றன.  ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவங்கள் ஸம்ஸ்காரங்களாக நம் மனதில் பதிந்திருக்கின்றன.  இவைகளின் உதவியால் ஒரு உலகத்தை படைத்து அனுபவிக்கின்றோம்.  எனவே இந்த ஸம்ஸ்காரத்தை ஆதாரமாக கனவு பிரபஞ்சம் இருப்பதால் அவைகள் மித்யா என்று சொல்கிறீர்கள்.  ஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்காத, பார்க்காத பொருட்களும், புதிய பொருட்களும் கனவில் தோன்றுகின்றன. இவைகள் ஸம்ஸ்காரத்திலிருந்து உருவானதில்லையே! எனவே அவைகள் ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்.  எனவே கனவு பிரபஞ்சம் மித்யா என்ற உதாரணம் சரியல்ல.

பதில்  இந்த ஜென்மத்திலேயோ அல்லது முற்பிறவியில் ஜாக்ரத் அவஸ்தையில் பார்த்திருப்பாய், அல்லது இந்த ஜென்மத்தில் பார்த்ததையே மறந்திருப்பாய். எனவே கனவில் காண்பது அனைத்தும் அபூர்வ தரிசனமே கிடையாது. ஸம்ஸ்காரத்தில் இருந்துதான் அவைகள் உருவாக முடியும்.

பூ.ப    இப்படி சொல்வதனால் கனவு பிரபஞ்சம் மித்யா என்று சொல்வது சரியாக இருக்கும். ஆனால் இந்த ஹேது ஜாக்ரத் பிரபஞ்சத்தில் பார்ப்பவைகள் அனைத்தும் வாஸனையில் இருந்து வராததாலும், நாம் முன்பு பார்க்காததாலும் அவைகள் ஸத்யம் மித்யாவல்ல.

பதில்  கனவில் அபூர்வமான பொருட்களை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.  அப்படியிருந்தும் அவைகளும் மித்யாதான்.  ஒரு மலரை பத்து ஜீவராசிகள் பார்க்கின்றன ஆனால் அந்த மலர் ஒவ்வொரு ஜீவராசிக்கும் விதவிதமாக காட்சி அளிக்கும்.  ஒரு பொருள் நமக்கு எப்படி தெரிகின்றதோ அப்படி தெரிவதற்கு காரணம் நாம் அப்படி பார்ப்பதாலா அல்லது மலர் அப்படி தெரிகின்றதா?  மலர் தோற்றம் பார்க்கும் கண்களைப் பொறுத்திருக்கின்றது. அதேமாதிரி இந்த உலகம் நம் பார்வைக்கு இது மாதிரி காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.  உண்மையில் உலகம் எப்படி இருக்கும் என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாது. நாம் நம் கண்ணுக்கு தோன்றுவதை வைத்துத்தான் சொல்கின்றோம். ஒரே பொருள் விதவிதமாக புதியதாக தெரிவதற்கு காரணம் அது ஸத்யமாக இருப்பதால் அல்ல.  அபூர்வ தர்ஷனத்திற்கு காரணம் ஸத்ய-மித்யாவல்ல, பார்ப்பவனுடைய இந்திரியங்களின் தர்மம்.  நம்மால் அனுபவிக்கப்படுகின்ற விஷயங்களின் நம்முடைய பிரமாணங்களான இந்திரியங்களை சார்ந்திருக்கின்றது.  பிரமேயமானது பிரமாணத்தை சார்ந்துதான் இருக்கின்றது.  ஒரு பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்க்கும் கண்ணை பொறுத்திருக்கின்றது.  பிரமாணம் -பிரமாதவை சார்ந்திருக்கின்றது. பிரமாதா ஆத்மாவை சார்ந்திருக்கின்றான்.  எது சுதந்திரமாக இருக்கின்றதோ அது ஸத்யம், எது பரதந்திரமாக (ஒன்றை சார்ந்திருக்கின்றதோ) அது மித்யா.  இதன் அடிப்படையில் நம்மால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் நம்முடைய கண்ணை சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

அபூர்வம் ஸ்தானி தர்மஹ – புதியதாக பார்க்கும் பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்ப்பவனுடைய இந்திரியங்கள், உபாதிகள்தான் காரணம்
யதா4 ஸ்வர்க நிவாஸினாம் – சொர்க்கத்தில் வசிப்பவர்களைப் போல
சொர்க்கத்தில் வசிப்பவர்கள் நாம் பார்க்காத பொருட்களைப் பார்க்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுடைய உபாதிகள் நம்முடைய உபாதிகளை விட வேறாக இருப்பதினால்.
இந்திரியங்களைப் பொறுத்துதான் இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றன.  நம் மனம் பக்குவமடைவதை பொறுத்து இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றது. நாம் எப்படி இந்த உலகத்தை விளக்குகின்றோமோ, விமர்சிக்கின்றோமோ அதுதான் நம்முடைய குணம்.  இந்த உலகம் ஈஸ்வரனாகவே காட்சியளிக்க வேண்டும். நம் மனம் பக்குவமடைந்திருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.

தானயம் ப்ரேக்ஷதே கத்வா – இந்த ஜீவன் கனவு பிரபஞ்சத்திற்குள் சென்று அங்குள்ள அபூர்வ காட்சிகளை பார்க்கின்றான்.
தான் – கனவில் தோன்றுகின்ற புதிய பொருட்கள், காட்சிகள்
அயம் – கனவை பார்ப்பவன், தைஜஸன்
ப்ரேக்ஷதே –  பார்க்கின்றான்
4த்வா – கனவு நிலைக்கு சென்று
யதா4 ஏவ ஹி – எப்படி இந்த ஜாக்ரத் அவஸ்தையில் இருப்பவன்
ஸுஶிக்ஷித – மனிதன் ( நன்கு உபதேசம் செய்யப்பட்டவன்)
வேறு பொருட்களைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு எங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற அறிவை அடைந்தவன், அந்த இடத்திற்கு சென்று பார்ப்பதை போல விழிப்பு நிலையில் இருப்பவன் கனவு பொருட்களை பார்க்க வேண்டுமானால் அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும்.

காரிகை9

பூ.ப3  எல்லோராலும் பொதுவாக அனுபவிக்கப்படுவது சத்யம்.  ஒருவன் மனதினுள்ளே அனுபவிப்பதெல்லாம் மித்யா.  இதன் அடிப்படையில் கனவில் பார்ப்பதெல்லாம் மனதிலிருந்து தோற்றுவிக்கபட்டது எனவே அவைகள் மித்யா.  ஆனால் வெளியே ஜாக்ரத் அவஸ்தையில் நமக்கு வெளியே அனுபவிப்பதெல்லாம் உண்மையானதே

பதில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று ஒத்துக்கொண்டால். கனவில் பிரபஞ்சத்திலும் உள்ளே வெளியே என்ற அனுபவம் இருக்கின்றது. அது மித்யா என்றும் கூறுகின்றாய். அதே நிலைதான் ஜாக்ரத் அவஸ்தையிலும் உள்ளே-வெளியே என்ற நியமம் இருப்பதனால் இவைகளும் மித்யாவாகத்தானே இருக்க வேண்டும்.  விஸ்வனாக இருந்து கொண்டு தைஜஸன் காண்பதெல்லாம் மித்யா நீ சாட்சியாக இருந்து கொண்டு விஸ்வனைப் பார்த்தால் அவன் காண்பதெல்லாம் மித்யா.

ஸ்வப்ன வ்ருத்தாவபி – கனவு நிலையிலும் கூட
அந்தஹ சேதஸா கல்மிஷம் – உள்ளே மனதில் கற்பனை செய்யப்பட்டதும்
த்வந்த து அஸத் – பொய்யாக இருக்கின்றது
பஹிஹி சேதே க்3ருஹீதம் ஸத் – கனவுக்கு வெளியே மனதினால் அனுபவிக்கப்பட்ட து உண்மையானது
புத்தியினால் கனவிற்கு வெளியே அனுபவிக்கப்படும் விஷயங்கள் உண்மையானது.  ஏனென்றால் வெளியே பார்க்கும் சிங்கம் பயமுறுத்துகின்றது. இவ்வாறு இருக்கும் கனவு பிரபஞ்சத்தை பொய்யென்று ஒத்துக் கொள்கின்றாய்
ஏதத் த்ருஷ்டம் வைதத்2யம் – உள்ளே-வெளியே என்பது கனவிலும் அனுபவிப்பது விழிப்பு நிலையில் பொய்யென்று நன்கு தெரிகின்றது.

சாட்சியாக நான் அனுபவிப்பவனும் அல்ல, ஜகத் அனுபவிக்கப்படும் பொருளும் அல்ல என்று உணர்ந்தவன்தான் ஞானத்தை அடைந்தவன்.

காரிகை10
விழிப்பு நிலையிலும் உள்ளே மனதினால் பார்க்கப்படுவது பொய்யாக இருக்கின்றது.  வெளியே புத்தியினால் அனுபவிக்கப்படுவது உண்மையாக தெரிந்தாலும், யுக்தியினால் பொய்யென்று நினைப்பது சரிதான்.

காரிகை11

பூ.ப4   மித்யா என்று ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், அதற்கு அதிஷ்டானமாக ஒன்று இருக்க வேண்டும், அதை பார்ப்பவன் ஒருவன் இருந்தாக வேண்டும்.  ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பிரமாதா, பிரமாணம், பிரமேயம் மித்யா என்று சொல்வதால் ஜாக்ரத் பிரபஞ்சத்தை பார்ப்பவன் யார். இவைகள் உருவாகுவதற்கு ஆதாரமாக இருப்பது எது என்று கேள்வி கேட்கும்போது சூன்யத்தில்தான் வந்து முடியும்.

கனவு நிலை, விழிப்பு நிலை என்ற இரு அவஸ்தைகளிலும் இருக்கின்ற பொருட்கள் அனைத்து பொய்யென்று எடுத்துக் கொண்டால், இந்த பொருட்களை யார்தான் பார்ப்பார்கள் அல்லது அறிவார்கள், யார்தான் இந்த பொருட்களை படைப்பார்கள்.

காரிகை12

பதில் அறிவு ஸ்வரூபமான ஆத்மா அனைத்தையும் இருப்பது போல தோற்றுவித்து இருக்கின்றது.  தன்னையே தன்னிடத்திலே கற்பனை செய்திருக்கின்றது.  இவைகளனைத்தும் தன்னுடைய மாயையினால் செய்திருக்கின்றது. அதுவே அனைத்தையும் அறிகின்றது.  இது வேதாந்தத்தால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

காரிகை13
ஆத்மாவில் எல்லா ஸ்ருஷ்டிகள் எந்த வரிசையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இதில் விளக்கப்பட்டிருக்கின்றது.  முதலில் சூட்சுமமான ஸ்ருஷ்டிகள், பிறகு ஸ்தூலமான பிரபஞ்சம்.

ஆத்மாவானது சூட்சுமமான பிரபஞ்சத்தை முதலில் படைத்தது.  இது மாயையின் துணைக் கொண்டு படைக்கப்பட்டது.  பிரபுவாக (ஈஸ்வரன்) மாறிய ஆத்மா, மாயையை மனமாக கொண்டு இருக்கின்றது.  மனதிற்குள் இருக்கின்ற சூட்சுமமான வஸ்துக்களை ஈஸ்வரன் படைக்கின்றார். நம் சித்தத்தினுள்ளேயிருந்து படைக்கப்படுவது கனவு பிரபஞ்சம்.  ஸ்தூல பிரபஞ்சம் பிறகு படைக்கப்பட்டது.  ஆத்மா மாயையில் அபிமானம் வைக்கும்போது வெளிமுகமாக செயல்படுகின்றார்.  இந்த நிலையிலும் அசம்சாரியாக இருக்கின்றார்.  மாயையிடம் ஆவரணம், விக்ஷேபம் என்கின்ற இரண்டு சக்திகள் இருக்கின்றது. இந்த கிரமத்தில் ஸ்ருஷ்டியானது ஈஸ்வரனால் கற்பனையாக படைக்கப்பட்டது.
காரிகை14

பூ.ப5   கனவு மித்யா என்பது சரி, ஆனால் ஜாக்ரத் மித்யாவல்ல.  கனவில் காணும் பொருட்களின் இருப்பு கனவு கண்டுகொண்டிருக்கும் காலம் வரைதான்.  ஆகவே மித்யா.  ஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் நாம் பார்க்கின்ற பொருட்கள் அப்படியே இருக்கின்றன, தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.  எனவே இது சத்யம்.  சித்த காலம் என்பது ஒரு கனவு காணும் காலம்.  ஜாக்ரத் அவஸ்தையில் இரண்டு காலங்கள் உண்டு.  அவைகள் அனுபவித்த காலம், அனுபவிக்கின்ற காலம். எந்த பொருளுக்கும் இரண்டு காலங்களில் இருக்கின்றதோ அவை தொடர்ந்து இருக்கின்றது என்று நிரூபிக்கின்றது.

பிரத்யபிக்ஞா – ஏற்கனவே பார்த்த ஒன்றை மீண்டும் பார்த்தல்.  ஜாக்ரத் பிரபஞ்சம் பிரதிய பிக்ஞாவிற்கு விஷயமாக இருப்பதால் அது மித்யாவல்ல. இந்த உலகம் தொடர்ந்து இருக்கின்றது எனவே அது சத்யம்.

பதில்-1 கனவிலும் பிரத்யபிக்ஞா இருக்கின்றது.  கனவில் நாம் ஒருவர் வீட்டிற்கு சென்று ஒருவரை பார்க்கின்றோம்.  அவரிடம் காபி வேண்டும் என்று கேட்டு அவர் கொண்டு வந்து கொடுக்கும்போது அந்த நேரத்தில் பிரத்யபிக்ஞா இருக்கின்றது.  அதை நீ மித்யா என்று ஒத்துக் கொள்வதால் ஜாக்ரத் அவஸ்தையில் பிரத்யபிக்ஞா இருந்தாலும், இல்லாவிட்டாலும் மித்யாதான்.  பிரத்யபிக்ஞாவிற்கு ஒரு விருத்தி இடைவெளி போதும் ஒருநாள் இடைவெளி வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பதில்-2 கனவுக்கு பிராதிபாஸிக சத்யம், விழிப்பு நிலைக்கு வ்யவஹாரிக சத்யம் என்று விழிப்பு நிலை பொருட்களுக்கு அதிக சத்யத்வம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் முழுமையான சத்யம் கிடையாது.

சித்த காலஹ – கனவில் தோன்றும் பொருட்கள் இருக்கும் காலம், மனதிலிருக்கின்ற எண்ணங்கள் தோன்றி மறையும் காலம்
யே அந்தஹ – மனதுக்குள் பார்க்கும் பொருட்கள்
த்வய கலஹ யே பஹிஹி – ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பொருட்களுக்கு இரண்டு காலங்கள் ( அனுபவித்தது, அனுபவித்ததையே அனுபவிக்கின்ற காலம்)
கல்பிதா ஏவ தே ஸர்வே – இரண்டும் கற்பனைதான்
விஶேஷ ந அன்ய ஹேதுகஹ – பிரத்யபிக்ஞா என்ற விசேஷமானது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது என்பது சத்யத்தை நிர்ணியிக்கின்ற காரணமாக இல்லை.

கனவு பிரபஞ்சம் அதைக் காண்பவனால் அவை தெரிகின்றது. ஜாக்ரத் நிலையில் நாம் பார்ப்பதால் அவை இருக்கின்றதா அல்லது அவை இருப்பதால் நாம் பார்க்கின்றோமா என்று கேட்டால் இருப்பதால்தான் நாம் பார்க்கின்றோம். அதற்கு இருத்தல் அதிகமாக இருக்கின்றது.  வியாவஹாரிக சத்யம் என்று இதற்குப் பெயர், இதுவும் மித்யாதான்.  பார்க்கப்படுவது அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் இருப்பதால் அவைகள் மித்யா.  சாஸ்திரப்படி கனவு பிரபஞ்சம், ஜாக்ரத் பிரபஞ்சம் இரண்டுமே ஒன்றுதான்.  இது உத்தம அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.
காரிகை15

பூ.ப6   எது தெளிவாக தெரிகின்றதோ அது சத்யம், தெளிவற்றதாக இருக்கின்றதோ அது மித்யா.

பதில்  கனவு காணும்போது அவைகள் தெளிவாக தெரிகின்றது.  ஆனால் அவைகள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கும்போது தெளிவற்றதாக இருக்கின்றது.  கனவில் காணும் பொருட்களை பார்ப்பதற்கு தேவையான இந்திரியங்கள் மனதால் உருவாக்கப்பட்டவை அதனால் கனவு பொருட்கள் தெளிவாக தெரியவில்லை. ஜாக்ரத் அவஸ்தையில் இந்திரியங்கள் இயற்கையாக இருக்கின்றதால் பொருட்கள் தெளிவாக தெரிகின்றது.  எனவே சத்ய-மித்யாவினால் இவ்வாறு தெளிவாகவும், தெளிவற்றதாகவும் தெரியவில்லை.

தெளிவாக தெரியாத பொருட்கள் நமக்குள்ளே இருக்கின்றது.  வெளியே இருக்கும் பொருட்கள் தெளிவாக தெரிகின்றது.  அவைகள் அனைத்தும் கற்பனையான காட்சிகள்தான்.  இந்த வேறுபாடு இந்திரியங்களின் வேற்றுமையினால் ஏற்படுகின்றது

காரிகை16
இந்த பிரபஞ்சம், போக்தாவின் அடிப்படையில் போக்தா, போக்யம் என்று இரண்டு விதமாக படைக்கப்பட்டிருக்கிறது. அவைகள் அனுபவிப்பவன்(ஜீவன்), அனுபவிக்கப்படும் பொருள்(ஜகத்)

முதலில் ஜீவன் படைக்கப்படுகின்றான். பிறகு அனுபவிக்கப்படும் விதவிதமான பொருட்கள் படைக்கப்பட்டன.  ஜீவன் என்ற ஆத்மதத்துவத்தின் மீது சூட்சும சரீரம் படைக்கப்படுகின்றது. வெளியே இருப்பது உலகம், உள்ளேயிருக்கும் உலகம் மனதில் இருக்கும் உணர்வுகள். இவ்வாறு இரண்டு விதமான உலகங்கள் படைக்கப்பட்டன. இந்த இரண்டு உலகங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. மனம் நாம் இருக்கின்ற சூழ்நிலைகளை பொறுத்து இருக்கின்றது.  அதேப்போன்று நாம் இருக்கும் சூழ்நிலை நம் மனதை பொறுத்திருக்கின்றது.  எப்படிபட்ட அறிவு ஒருவனுக்கு இருக்கின்றதோ அதற்கேற்றவாறு சிந்திப்பான்.  எந்தவிதமான சிந்தனைகள் இருக்கின்றதோ, எந்தவிதமான ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றதோ அதற்கேற்ற வெளிசூழ்நிலையை நோக்கி செல்வோம்.  ஒருவனுக்கு எப்படிபட்ட அறிவு ஏற்படுகின்றதோ, அது வெளி விஷயங்களை அனுபவிப்பதனால் ஏற்படுகின்றது.  அதற்கேற்றபடியான ஸம்ஸ்காரங்கள் அவன் மனதில் பதிவாகின்றது. இதேமாதிரி ஸம்ஸ்காரத்திற்கேற்றவாறு வெளி சூழ்நிலைகள் அமைகின்றது.  இவ்வாறு இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றது.  இந்த உலகத்தை ஒருவன் எப்படி பார்க்கின்றானோ அதிலிருந்து அவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காரிகை17

மங்கலான வெளிச்சத்தில் கயிறானது பாம்பு, நீர்க்கோடு, பூமியின் வெடிப்பு என்று பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது, அதனால் இத் கயிறு என்று நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோமோ  அதுபோல ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்து கொண்டு அதன் உண்மை தன்மையை அறியாமையினால் நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோம்.

காரிகை18
எவ்வாறு இது கயிறு என்று நிச்சயம் செய்யும்போது அதில் காணப்பட்ட கற்பனை தோற்றங்கள் சென்று விடுகின்றன கயிறு மட்டும் அத்வைதமாக எஞ்சி இருக்கின்றது. அவ்வாறு ஆத்ம விஷயத்தில் அத்வைதத்தை அடைய வேண்டும்,

காரிகை19
என்ன காரணத்தினால் ஆத்மா மீது இத்தனை வகையான கற்பனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கும்போது அது மாயையினால்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். மாயையின் சக்தியினால் ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாயைதான் அனைத்து விகல்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஆத்மாவினுடைய இந்த மாயையினால் ஆத்மாவே மோகத்திற்குட்பட்டு இருக்கின்றது, சம்சாரியாக காட்சியளிக்கின்றது.

காரிகை20
ஈஸ்வரனை அறிபவர்கள் அவரை ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றார்கள். இவர்கள் ஹிரண்யகர்ப்ப உபாஸகர்கள்.  இங்கே நிமித்த காரணமாக மட்டும் இருக்கின்ற ஈஸ்வரனை அறிபவர்கள். நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு இவைகளை ஸத்யம் என்று நினைப்பவர்கள், குணங்களை அறிந்தவர்கள் குணங்களையும்,  ஆத்மா, அவித்யா, சிவன் என்ற மூன்று தத்துவங்களை அறிந்த சைவ சித்தாந்தகளும் ஆத்மாவை இவ்வாறாகவே கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காரிகை21
நான்கு பாதங்களான விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன், துரீயன் இவைகளை அறியாதவர்கள், நாம் அனுபவிக்கின்ற பொருட்கள்தான், விஷயங்கள்தான் ஸத்யம் அவைகள்தான் அதிஷ்டானம் என்று நினைக்கிறார்கள், பூர், புவ, ஸ்வ என்ற மூன்று உலகங்கள்தான் ஸத்யம் என்று நினைக்கிறார்கள், மேலும் தேவர்கள்தான் ( இந்திரன், வாயு, அக்னி ) ஸத்யம் என்று நினைக்கிறார்கள்

காரிகை22
வேதங்களை ஓதுபவர்கள் அதையே ஆத்மா என்று நினைக்கின்றனர்.  இவர்கள் ஓதும் மந்திரத்தின் பொருள் தெரியாமல் உச்சரிப்பவர்கள்.  யாகங்களை செய்பவர்கள் அவைகள்தான் ஆத்மா என்று கூறுகிறார்கள்.  போக்தாவான ஆத்மாதான் அனைத்தும் என்று கூறுகின்றனர்.  அனுபவிக்கப்படுகின்றவைகளே ஆத்மா என்றும் சிலர் சொல்லுகின்றார்கள்.

காரிகை23
அணுவைப் போன்று சூட்சுமமாக இருப்பது ஆத்மா, ஸ்தூல உடல்தான் ஆத்மாவாக
இருக்கின்றது. சிவன், விஷ்ணு, பிரஹ்மா இவர்களில் ஒருவர்தான் ஆத்மா, சூன்யமே

ஆத்மாவாக இருக்கின்றது. இவ்வாறாக ஆத்மாவை சொல்கிறார்கள்.

காரிகை24
காலம்தான் ஆத்மா என்ற கொள்கையுடைவர்கள், திசைகள் (ஆகாசம்) ஆத்மா என்றும், வாதங்கள்தான் ஆத்மாவென்றும், பதினான்கு லோகங்கள்தான் ஸத்யம் அதிஷ்டானம் என்றும் சிலர் ஆத்மாவை சொல்கிறார்கள்

காரிகை25
மனம்தான் ஆத்மா என்றும், புத்திதான் ஆத்மா என்றும், வெளியே பொருட்கள் எதுவும் கிடையாது, மனதில்தான் எல்லாம் இருக்கின்றது.  தர்ம-அதர்ம விதிகள்தான் ஸத்யம்.

காரிகை26
25  தத்துவங்கள்தான் ஸத்யம் என்று ஸாங்க்யர்கள் கூறுகிறார்கள்.  26 தத்துவங்கள்தான் ஸத்யம் என்று யோகமதவாதிகள் கூறுகிறார்கள்.  31 தத்துவங்கள்தான் ஸத்யம் என்றும், கணக்கிலடங்கா தத்துவங்கள்தான் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

காரிகை27
உலகத்தை நன்றாக அனுபவிப்பதுதான் ஸத்யம் என்றும், நான்கு ஆசிரமங்களின் நெறிகள் ஸத்யம் என்றும், மூன்று பால்களை உடைய சப்தங்களின் தத்துவம்தான் ஸத்யம் என்றும், சிலர் பர-அபர பிரம்மன் என்று இரண்டு தத்துவம்தான் ஸத்யம் என்று கூறுகிறார்கள்.

காரிகை28
ஸ்ருஷ்டிதான் உண்மையான தத்துவம் என்றும், லயம்தான் உண்மையான தத்துவம் என்றூம், இருத்தல்தான் உண்மையான தத்துவம் என்றும் வெவ்வேறாக கற்பனையான கருத்துக்கள் ஆத்மாவை பற்றி எல்லா காலத்திலும் இருக்கின்றது.

காரிகை29
எந்த சிஷ்யனுக்கு குருவானவர் எந்த ஒன்றை உண்மையென்று காட்டுகின்றாரோ, அதைதான் அவன் பார்ப்பான், பிறகு அதை பிடித்துக் கொள்வான்.  அது அவனை காப்பாற்றுகின்றது, வேறொரு தவறான கருத்துக்கு செல்ல மாட்டான். குரு சொன்ன கருத்தே சிஷ்யனாகவே மாறி விட்டது.  சிஷ்யன் குரு சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு மனதில் புரிந்து கொண்டான்.  அந்த தத்துவம் அவனிடம் உறுதியாக மனதில் பதிந்து விட்டது.  அவனிடம் இரண்டற கலந்து விடுகின்றது.  இதிலிருந்து குருவிடம் சிஷ்யன் வைக்க வேண்டிய சிரத்தையை அறிந்து கொள்ள வேண்டும்.

காரிகை30
இந்த ஆத்மாவானது அதனிடமிருந்து வேறுபடாத பொருட்களாக இருந்தாலும், வேறுபடுவது போல கருதப்படுகின்றது, அறியாமையில் இருப்பவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது. உதாரணமாக பாம்பு, பூமியில் வெடிப்பாக தோன்றும் இவைகள் கயிற்றுக்கு வேறாக இல்லை, ஆனால் வேறுபட்ட மாதிரி தெரிகின்றது.  அதுபோல ஆத்மாவின் மீது ஏற்றி வைத்து அனுபவிப்பதெல்லாம் வேறுபட்டதாக இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள் அறியாமையில் இருப்பவர்களால் இவைகளனைத்தும் வேறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.  இந்த விதத்தில் எவனொருவன் சரியாக ஸ்ருதி, யுக்தி மூலமாக அறிகின்றானோ அவன் வேதத்தின் முழு உபதேசத்தை அறிந்தவனாக ஆகின்றான்.  அவன் வேதாந்தத்தின் பொருளை சந்தேகமில்லாமல் அறிகின்றான்.  வேதத்தின் ஞான காண்டம் உபதேசிக்கின்ற மோட்சத்தை, பிரம்மத்தை அடைகின்றான்.

ஞான காண்டம் – வஸ்து பரம் – ஞானத்தை போதிக்கின்றது
கர்ம காண்டம் – இந்த ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்துகிறது.
இந்த ஞானத்தை அடைவதனால் ஒருவன் முழு மன நிறைவை அடைகின்றான்.  இனி அறிவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிறைவை அடைகின்றான்.

காரிகை31
இதில் ஸ்ருதி நிச்சயித்த ஜகத் மித்யா என்பதைத்தான் நாம் அனுமானத்தின் மூலமாக நிச்சயித்தோம்.  இந்த உபநிஷத்தின் முடிவை மேலும் நம் புத்தியில் உறுதியாக்க செய்யும் யுக்திக்கு ஸ்ருதி ஸம்மத யுக்தி என்று கூறுவர்.
உதாரணமாக:-
நேஹ நானா அஸ்தி கிஞ்சன – இங்கு ஆத்மாவை தவிர வேறொன்றுமில்லை,
நது தத் த்வீதியம் அஸ்து -இங்கு இருமைகள் கிடையாது.
இந்திரஹ புருரூபஹ மாயாபிஹி – ஈஸ்வரன் மாயையினால் இருமைகளை தோற்றுவித்திருக்கின்றார்.

கனவு பிரபஞ்சத்தை இந்திர ஜாலத்துடன் ஒப்பிட்டு அதை  மித்யா என்று உறுதி செய்தோம்.  கந்தர்வ நகரமும், பொய்யாக பார்க்கப்படுகின்றது என்று பேசப்பட்டது என்று உறுதி செய்தோம்.  அவ்விதம் இந்த உலகம் நம்மால் பார்க்கப்படுகின்றது. அது போல இந்த ஜகத்தும் மித்யா என்று உறுதி செய்தோம். வேதாந்தத்தின் மூலமாக ஞானம் அடைந்த ஞானிகளால் ஜகத்தானது இவ்விதம் பார்க்கப்படுகின்றது.  இவ்விதம் ஜகத் மித்யா என்று ஸ்ருதி மூலமாகவும், யுக்தி மூலமாகவும் உறுதி செய்யப்படுகின்றது.

காரிகை32 (***)
இறப்பு, பிரளயம், லயம் என்பது இல்லை.  பிறப்பு என்பதும் இல்லை. சம்சாரி என்பவன் யாரும் இல்லை, பந்தப்பட்டவனாகவும் யாருமில்லை.  சாதகனும் இல்லை, முயற்சி செய்பவன் யாருமில்லை. முமுக்ஷு என்பவனும் கிடையாது, மோட்சத்தை அடைய விரும்புவனும் இல்லை, முக்தனும் உண்மையில் கிடையாது. இருமைகள் என்பது எதுவும் கிடையாது என்று குறிப்பிடுகின்றார்.  அனைத்து வைதீக, லௌகீக விவகாரங்கள் எதுவும் கிடையாது.  அப்படி ஏதாவது இருக்கிறது என்று நினைத்தால் அறியாமையில் இருக்கின்றோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பிறப்பும், இறப்பும் உண்மையில் நடக்கவில்லை. எனவே துயரம் என்பது வருவதற்கு வாய்ப்பே இல்லையென்றாகிறது.  நம்மை பந்தப்படுத்துவதற்கு எந்தவித காரணமும் இல்லை.  துயரம் இருந்தால்தானே அதை நீக்குவதற்கு ஏதாவது ஸாதனத்தை உபயோகிக்க வேண்டும்.  ஆனால் துயரமே இல்லையென்றாகி விட்டபிறகு ஸாதகனும் இருக்க மாட்டான்.  மேலும் இவைகள் இல்லை ஆதலால் முமுக்ஷுவும் இல்லை, முக்தனும் இல்லை.  இதுதான் அடிப்படையான உண்மை. உத்பத்தி இல்லை என்று சொல்வதற்கு காரணம் இருமை இல்லாததினால் (த்வைத அபாவத் உத்பத்தி அபாவத்).

சங்கரரின் த்வைதம் மித்யா என்ற கூற்றின் விளக்கம்:

  •       மன அதீனவாத்– மனதை சார்ந்து அவைகள் இருப்பதனால் இருமை மித்யா.  பொதுவாக எந்தவொன்று மற்றொன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யா.  நிழல் நிஜத்தின் மித்யா.  இதன் அடிப்படையில் பார்க்கும்போது பார்க்கின்றவைகள் மித்யா என்று தெளிவாகின்றது.  மனம் விழித்திருக்கும்போதுதான் இந்த ஜகத் தோன்றி கொண்டிருக்கின்றது.  அது உறங்கிவிட்டால் ஜகத் மறைந்து விடுகின்றது.  மனம் சாட்சி சைதன்யமான ஆத்மாவை சார்ந்திருக்கின்றது.  எனவே மனமும் மித்யா என்று தெரிகின்றது. ஆகவே இந்த ஜகத் உண்மையில் இல்லை.
  •       இந்த பிரபஞ்சத்தை சாதன-சாத்தியம் என்று இருவகையாக பிரித்துவிடலாம். ஒருவன் சாதன, சாத்தியம் என்று எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்று உணர்ந்து விட்ட நிலையில் அவன் முக்தனாக இருப்பான்.  அவனுக்குத்தான் இந்த பிரபஞ்சம் மித்யாவாகி விட்டது. இந்த தத்துவத்தை புரிய வைப்பதற்காக கௌடபாதர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இவைகள் நமக்கு சத்தியமாக தெரியும் வரையில் அவைகள் மித்யா என்று கூறமுடியாது.
  •       மூன்றுவிதமான உண்மைகள் உண்டு. அவைகள்

பிரதிபாஸிகம் – எது ஒன்றை மட்டும் சார்ந்திருக்கின்றதோ அவைகள் பிராதிபாஸிக உண்மையாகும், (உ-ம்) கனவு அதை அனுபவிக்கும் ஒருவனை சார்ந்திருக்கின்றது, கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிற்றை சார்ந்திருக்கின்றது

வியாவஹாரிக – அனைவரையும் சார்ந்திருப்பதாக இருந்தால் அவைகள் வியாவஹாரிக சத்தியம் என்று அழைக்கப்படும். (உ-ம்) ஜாக்ரத் பிரபஞ்சம். இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உண்மைகள்,

பாரமார்த்திகம் – சுதந்திரமாக இருத்தல், எதையும் சாராமல் தனித்து இருந்து கொண்டு இருத்தல்.  நீ இருக்கின்றாயா என்று கேட்டால், நான் இருக்கின்றேன் என்று சொல்லும் போது எந்த பிரமாணத்தையும் நாம் உபயோக்கிக்கவில்லை.  அந்த நான் என்கின்ற ஆத்மா ஒன்றுதான் பாரமார்த்திக சத்யம். ஒரு பொய் தெரிவதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், அந்த ஆதாரம்தான் பாரமார்த்திக சத்யம்.  இந்த பொய்யான ஜகத் மெய்யான ஆத்மாவை நிரூபிக்கின்றது.

காரிகை33
அஸத் பிஹி பா4வைஹி – இல்லாத  பிரபஞ்சத்தினால்
அயம் கல்பிதஹ – இந்த ஆத்மாவானது கற்பனை செய்யப்பட்டிருகின்றது.
அத்வையேன – இரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
இந்த ஆத்மாவானது இந்த உலகத்துக்கு ஆதாரமாகவும், இரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
பாவாஹ அபி – பொய்யான இந்த பொருட்கள்
அத்வையேன ஏவ – ஆத்மாவிடத்தில் அத்வைதமாக இருக்கின்றது
தஸ்மாத் அத்வயதா ஶிவா – அந்த பரம்பொருளே மங்கலம், முடிவானது, பயமற்ற நிலை

பூ.பக்ஷம் – த்வைதம், அத்வைதம் இரண்டும் உண்மையென்று வைத்து கொள்ளலாம்.  ஆத்மா சாமான்யமாகவும், விசேஷமாகவும் இருக்கின்றதாக வைத்துக் கொள்ளலாம்.
பதில் – அப்படி இருக்க முடியாது.  விசேஷமானவைகள் மித்யா, சாமான்யவைகளும் மித்யா

காரிகை34
ந ஆத்ம பாவேன நான இதம் – நமக்கு தெரிகின்ற இருமையானது ஆத்மாவுடன் சேர்ந்து இல்லை.
ச ஸ்வேன அபி ச கதஞ்சன – எந்த விதத்திலும் அது தனித்தும், சுதந்திரமாகவும் இல்லை.
ந ப்ருதக் – ஆத்மாவுக்கு வேறாகவும்
ந அப்ருதக் – ஆத்மாவுக்கு வேறில்லாதவாகவும் இருமைகளை சொல்ல முடியாது
எதை விளக்க முடியாதோ அது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதி தத்விதஹ விதுஹு– உணமையை அறிந்தவர்கள்தான் இவ்வாறு புரிந்து கொள்வார்கள்.

காரிகை35
வீத ராக பய க்ரோதம் – ஆசை, பயம், க்ரோதம் இப்படிபட்ட குணங்கள் நீங்கியிருப்பவர்களால்தான் மேலே சொன்ன கருத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த குணங்களை நீங்கிய அந்தக்கரணத்தினால் தகுதி அடைந்தவர்கள்தான் இந்த கருத்தை புரிந்து கொள்ள முடியும்.
ராகம் – நம்மால் விருப்பமானது என்று நினைக்கப்பட்ட பொருளை பார்க்கும்போது வருவது
பயம் – விரும்பிய ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைக்கும்போதும், அடைந்த ஒன்று நம்மை விட்டு சென்று விடுமோ என்ற நிலையில் வரும் உணர்ச்சி
க்ரோதம் – நாம் ஆசைப்பட்ட பொருளை அடைய தடையாக இருப்பவர்கள் மீது வரும் உணர்ச்சி.
முனிபிஹி – முனிவர்களால், உபநிஷத்தை மனனம் செய்பவர்களால்
வேதபாரகை4ஹி – வேதத்தை கற்றுணர்ந்தவர்கள், உபநிஷத்தை சிரவணம் செய்பவர்களால்
நிவிகல்பஹ அயம் த்ருஷ்ட – பூரணமான இந்த ஆத்மாவை அவர்களால் பார்க்கப்படுகின்றது
ப்ரபஞ்ச உபஶமஹ – இந்த ஜகத் மித்யா என்றும் பார்க்கப்படுகின்றது.
அத்வயஹ – இரண்டற்ற ஆத்மா பார்க்கப்படுகின்றது.

காரிகை36
தஸ்மாத் ஏவம் விதித்வா ஏனம் – ஆகவே இங்கு கூறியபடி ஆத்மாவை சரியாக இவ்விதம் அறிந்து
அத்வைதே யோஜயேத் ஸ்ம்ருதிம் – நம்முடைய மனதை அத்வைத தத்துவத்தில் நிறுத்த வேண்டும்
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் மித்யா என்பது மனதில் உறுதியாக இருக்க வேண்டும்.  புத்தியில் பதிந்த அத்வைத தத்துவத்தை மனதிற்குள் கொண்டுவர வேண்டும்.
அத்வைதம் ஸம் அனுப்ராப்ய – அத்வைத தத்துவத்தை நன்கு உணர்ந்தவனாக, அடைந்தவனாக நிதித்யாஸனத்திற்கு பிறகு பலனை அடைந்தவனாக
ஜடவத் லோகம் அசரேத் – ஒரு ஜடம் போன்று இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிரு.
ஜடம் போன்று என்பது அறியாமையில் இருக்கின்றதை போன்று என்று குறிப்பிடுகின்றார்.

காரிகை37
நிதித்யாஸனம் செய்து முடித்த பிறகு இதுவரை பயன்படுத்திய சாதனங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும்.  பிராரப்தத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனாக இருக்க வேண்டும்.  பிரம்ம ஞான நிஷ்டை அடைந்தவன்
நிஸ்துதிஹி – அனைத்து பிரார்த்தனைகளையும் விட்டுவிட வேண்டும்
நிர்நமஸ்காரஹ – யாரையும் வணங்கத்தேவையில்லை, யாகங்கள், பூஜைகள் செய்ய தேவையில்லை
நிஹ்ஸ்வதாகார ஏவ ச – மேலும் கர்மங்களையும் செய்ய வேண்டாம்
யதிஹ – இந்த முக்தன்
யாத்ருச்சிகோ பவேத் – எது கிடைக்கின்றதோ அதில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றான்

காரிகை38
பிரமாத – கவனக்குறைவு,
அப்பிரமாத – கவனக்குறைவாக இருக்கக்கூடாது
தத்வம் ஆத்யாத்மிகம் த்ருஷ்ட்வா – ஜீவனுக்குள் இருக்கின்ற உண்மையான ஆத்மாவை உணர்ந்து
தத்வம் த்ருஷ்டா து பாஹ்யதஹ – வெளியே இருக்கின்ற பிரம்மத்தை அறிந்து உணர்ந்து
தத்வீபூதஹ – அந்த தத்துவ ஸ்வரூபமாகவே மாறியவனாக
ததா3ராமஹ – அதிலேயே மகிழ்ந்திருப்பவனாக
தத்வாதி அப்ரச்யுதஹ பவேத் – அதிலிருந்து கவனக்குறைவால் வீழ்ந்துவிடாதவனாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 

அத்தியாயத்தின் சுருக்கம்

ஜகத் மித்யா என்று நிலைநாட்டுவதற்கு பிரதானமாக அனுமானம் பயன்படுத்தபட்டது.  இதை நிச்சயம் செய்வதற்கு கனவு பிரபஞ்சம் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டது.  ஜகத் மித்யா என்பதை நிரூபிக்க இரண்டு ஹேது கொடுக்கப்பட்டது.  பார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்றும், ஆதியும்-அந்தமும் உடையவை எல்லாம் மித்யா என்பது அவைகள். ஆறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்ட து.

  •       எவையெல்லாம் பயனுடையதோ அவைகள்தான் சத்யம் என்று எடுத்துக் கொள்ளவும் என்ற கேள்விக்கு,கனவில் காணும் பொருட்கள் கனவிலும் பயனளிக்கின்றது, கனவு மித்யா என்று நீயே ஒத்துக் கொள்வதால், விழிப்பு நிலையிலுள்ள பொருட்களும் மித்யா என்று உறுதியாகின்றது.
  •       கனவில் நாம் புதியதாக பொருட்களைப் பார்க்கின்றோம் எனவே அது ஸத்யம். எவை எல்லாம் புதியதாக தெரிகின்றதோ அவைகள் பார்ப்பவனின் தர்மத்தை பொறுத்திருப்பதால் எனவே இந்த கேள்வியும் சரியல்ல
  •       எவைகள் வெளியே இருக்கின்றதோ அவைகள் ஸத்யம்,உள்ளே தெரிந்தால் மித்யா என்று சொன்னால், உள்ளே, வெளியே என்ற நிலை கனவிலும் இருப்பதால் இந்த வாதமும் சரியல்ல
  •       எல்லாமே மித்யா என்று கூறினால்,சூன்யவாதம் வந்து விடுமே என்று கேட்டால், வேதாந்தம் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக ஆத்மா இருக்கின்றது என்று கூறியிருப்பதால், இந்த சூன்யவாதமும் சரியல்ல
  •       கனவில் காணும் அனைத்துப் பொருட்களும் நாம் பார்க்கும் காலத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஜாக்ரத் நிலையில் முதலில் ஒன்றை பார்க்கின்றோம், கொஞ்ச நாள் கழித்து அதையே பார்ப்பதால் அதன் தொடர்ச்சி இருப்பதால் அவைகள் சத்யம் என்று சொன்னால் கனவிலும் இந்த நிலை இருக்கின்றது என்பதுதான் பதில்.
  •       கனவில் பொருட்கள் தெளிவாக தெரியவில்லை எனவே மித்யா,ஜாக்ரத் அவஸ்தையில் தெளிவாக இருக்கின்றது எனவே ஸத்யம் என்று சொன்னால், தெளிவு-தெளிவற்றது என்ற பேதங்கள் பயன்படுத்தும் இந்திரியங்களின் சக்தியை பொறுத்திருக்கின்றது என்பதுதான் பதிலாக இருக்கின்றது.

 16-18  ஸ்ருஷ்டியின் கிரமம் சொல்லப்பட்ட்து.  அக்ஞானத்தை நீக்க ஆத்ம ஞானம்தான் சாதனம்.

19-28  ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட விதவிதமான கற்பனைகள் சொல்லப்பட்டது

29     மித்யா ஞானம் – தவறான அறிவு. 1. இந்த தவறான அறிவு மற்ற தவறான அறிவிலிருந்து காப்பாற்றுகின்றது. 2. உண்மையான அறிவு, ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தடையாக இருப்பது மட்டுமில்லாமல், சம்சாரத்திலேயே வைத்திருக்கும்.

30     ஸம்யக் ஞானத்தின் பலன் – சரியான அறிவு – மோட்சத்தைக் கொடுக்கும், சந்தேகமின்றி வேதாந்தத்தை அறிகின்றான்.  மனநிறைவை அடைகின்றான்

31     ஸ்ருதியே ஜகத் மித்யா என்று அறிந்து கொள்வதற்கு மூலமாக இருக்கின்றது.

32-34   உபஶம்ஹார – எதுவும் இல்லை என்றுக்கூறி ஆத்மா ஒன்றுதான் ஸத்யம் என்று சொல்லப்பட்ட து.

35-38  இந்த ஞானத்தை அடைவதற்கு எந்த சாதனத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை விவரித்திருக்கின்றார். அதிகாரித்வம், சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்ற சாதனங்களை கூறியிருக்கின்றார். ஞான நிஷ்டன் எப்படி வாழ்வான் என்பதை கூறியிருக்கின்றார்.  நான் ஞானி என்று யாரிடமும் காட்டிக் கொள்ளக்கூடாது.  ஞானம் அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி5

அத்தியாயம் 3 (அத்வைத பிரகரணம்)

முகவுரை
ஆத்மா காரணமாகவும் இல்லை என்று கூறுகிறார்.
 காரிகை1
இருமையை விலக்குதல். உபாஸகன், உபாஸக தேவதை(பிரம்மன்) என்கின்ற இந்த த்வைதம் நீக்கப்படுகின்றது.  உபாஸனையின் பலன் மனம் ஒருமுகப்படுத்தப்படும்.  சித்த ஏகாக்ரகத்திற்காக இந்த த்வைதத்தை நிந்தனை செய்யவில்லை.  இது மோட்சத்தை அடைவதற்கு ஒரு படியாக கருதப்படுகின்றது.
 பூ.பக்ஷம் பரம்பொருள் இரண்டு தன்மைகளுடன் இருக்கின்றது.  1. காரண ரூபம், பிறப்பற்றது (அஜம்), 2. இதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பரம்பொருளே பிரபஞ்சமாக பரிணாமத்துடன் இருக்கிறது. பிறப்புடைய பரம்பொருள் இப்போது தோன்றிய பிரம்ம ஸ்வரூபத்துக்குள் இருக்கின்றன.  இதுவே சம்சாரம் இதிலிருந்து விடுபட்டு அஜாத பிரம்மத்தை அடைய வேண்டும்.  அதற்காக அந்த பிரம்மத்தை உபாஸனை செய்து அதை அடைய வேண்டும்.  இதுதான் மோட்சம்.  என்னுடைய உண்மையான ஸ்வரூபம் அஜாத பிரம்மம். அதை அடைய உபாஸனை மூலம் ஜாத பிரம்மத்திலிருந்து விடுபட வேண்டும். ஒருவன் எதை குறித்து தியானிக்கின்றானோ அந்த ஸ்வரூபமாக மாறி விடுகின்றான்.  மீமாம்ஸயில் இது ஏற்றுக் கொள்ளபட்ட நியாயம்.

உபாஸான ஆஸ்ரிதோ த4ர்மஹ – உபாஸகர்கள் உபாஸனையை சார்ந்திருக்கின்றான், உபாஸனையை சாதனமாக எடுத்துக்கொண்டவன், பரம புருஷார்த்த்த்தை அடைவதற்கான சாதனமாக உபாஸனை செய்பவர்கள்.
ஜாதே பிரஹ்மணி வர்த்தே – பிறந்த பிரம்மனிடத்தில் இருக்கின்றான். தோன்றிய இந்த உலகமாக இருக்கின்ற பிரம்மத்திடம் அபிமானமுடையவனாக இருக்கின்றான்.
ப்ராக் உத்பத்தேஹே – இந்த தோன்றுவதற்கு முன்பு
ஸர்வம் அஜம் – அனைத்தும் பிறப்பற்றதாக இருந்தது, பிறவாத பிரம்மனாக இருந்தது.
நான் உபாஸனையில் மூலமாக பிறவாத பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் த்வைத புத்தியுடன் இருக்கின்றார்கள்.
தேன– ஆகவே; இப்படிபட்ட பொய்யான அறிவை கொண்டிருக்கும்
அஸௌ – இந்த உபாஸகன்
க்ருபணஹ ஸ்ம்ருத – பரிதாபத்திற்குரியவனாக கருதப்படுகின்றான்.
கார்பண்யம் – பரிதாபத்துக்குரிய தன்மையுடன் இருப்பது, மனநிறைவின்மையுடன் இருப்பது

காரிகை2
அதஹ – ஆகவே, என்ன காரணத்தினால் தோன்றிய இந்த உலகத்தின் மீது அபிமானத்துடன் இருப்பவன், பரிதாபத்துக்குரியவனாக இருக்கின்றான் என்பதை
வக்ஷ்யாமி – நான் சொல்லப்போகிறேன்.
அகார்பண்யம் – பிரம்மம் கார்பண்யமற்றது, சம்சாரமற்றது
அஜாதி – பிறப்பற்றது
ஸமதாம் கதம் – பூரணமாக இருப்பது, நிர்குண ஸ்வரூபமாக இருப்பது.

அஜாதியின் விசாரம்:

பிரம்மன் பிறப்பற்றது என்று நிலை நாட்டப்படுகின்றது.  அஜாத வாதம் இங்கு பயன்படுத்தப்படுகிறது.  பிரம்மன் அத்வைதம் என்றூ நிரூபிப்பதற்கு இரண்டு தன்மைகள் இருக்கின்றது என்று நிலை நாட்ட வேண்டும். அவைகள்,

  1. அகாரணம் பிரஹ்ம– பிரம்மத்திற்கு காரணம் எதுவும் இல்லை, அது தானாகவே இருக்கின்றது, எதிலிருந்தும் தோன்றவில்லை.  எந்த பிரம்மத்திற்கு பிறப்பில்லையோ அதற்கு அஜாதி என்று பெயர்.
  2. எந்த பிரம்மனிடமிருந்து எதுவும் தோன்றவில்லையோ அது அஜாதி என்றழைக்கப்படும்.

பிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று நிரூபித்து விட்டால் இந்த த்வைதம் நீங்கி பிரஹ்மன் அத்வைதம் என்று உறுதியாகி விடும்.  அதுதான் இந்த அத்யாயத்தில் செய்யப்படுகின்றது.  பிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லையென்றால் தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், அதன் இருப்பு இல்லையென்றும் அனுபவம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.  ஸ்ருஷ்டியின் இருப்பை நீக்கினால் அதை எப்படி அனுபவிக்க முடியும்.  கயிற்றில் தோன்றும் பாம்பு இருக்கின்றது, அதையும் அனுபவிக்கின்றோம்.  உண்மையில் பாம்பு இல்லை, அதேபோல ஸ்ருஷ்டியும் இல்லை ஆனால் அனுபவிக்கின்றோம். இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.

யதா கிஞ்சித் ந ஜாயதே – எவ்விதத்தில் எதுவும் தோன்றவில்லையோ அது விளக்கப்படுகின்றது.
ஜாயமானம் – தோன்றியது போல தெரிந்து கொண்டிருக்கும் அனைத்தும்
ஸமந்ததஹ – நம்மை சுற்றி எல்லாவிடத்திலும்
‘நம்மை சுற்றி எல்லாவிடத்திலும் தோன்றியது போல தெரிந்துக் கொண்டிருக்கும் அனைத்தும் எவ்விதத்திலும் தோன்றவில்லை என்பதை விளக்கப்படுகின்றது.

காரிகை3
தோன்றியது போல் காட்சியளித்துக் கொண்டிருப்பதை, போக்த்ரு பிரபஞ்சம் என்றும், போக்யம் ப்ரபஞ்சம் என்றும் இரண்டாக பிரிக்கப்படுகின்றது.  ஜீவன் போக்த்ருவாகவும், உலகம் போக்யமாக இருக்கின்றது.
பக்ஷம் – ஜீவன்
சாத்தியம் – தோன்றவில்லை
ஹேது – பிரம்மத்திடமிருந்து வேறாக இல்லாத காரணத்தினால்
த்ருஷ்டாந்தம் – ஆகாசம். இது ஒன்றுதான்.  இதற்கு சிறியது, பெரியது என்ற குணங்கள் கிடையாது. விதவிதமான சிறியதும், பெரியதுமான பானைகள் இருக்கின்றன.  எல்லா பானைகளுக்குள்ளும் ஆகாசம் இருந்தாலும் அதனுடைய கொள்ளளவு வைத்து சிறிய ஆகாசம், பெரிய ஆகாசம் என்று தோன்றுகிறது.  பானை தோன்றியதும்தான் அது சிறியதாகவும், பெரியதாகவும் நம் அனுபவத்திற்கு வருகின்றது.  ஆனால் உண்மையில் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது. பானைகளுக்கு வெளியே இருக்கும் ஆகாசம் மகாகாசம் என்று அழைக்கப்படுகின்றது.

முழுமையான ஒன்றாக இருக்கும் ஆகாசம்  – பிரம்மன்

                                பானைகள்  – ஜீவன்

           பானைக்குள் இருக்கும் ஆகாசம்  – ஜீவனுக்குள் இருக்கும் ஆத்மா.

பானைக்குள் ஆகாசம் எப்படி தோன்றியதோ அதுபோல ஜீவன் தோன்றிய போது அதற்குள் பிரம்ம சைதன்யம் இருப்பதாக தோன்றுகிறது.


ஆகாஶ கடாகாஶை இவ உதிதஹ – மகாகாசமானது பானைக்குள் இருக்கின்ற ஆகாசமாக தோன்றியது போல் இருக்கின்றது.
ஆத்மா ஹி ஜீவைஹி – பரமாத்மாவானது ஜீவர்களுக்குள் தோன்றியது போல் இருக்கின்றது.
க3டாத்வத்     – பானைகளைப்போல் ஆகாசம் காட்சியளிக்கின்றது.
சங்கா4தைஹி – ஸ்தூல சூட்சும சரீரங்களாக பரமாத்மா காட்சியளிக்கின்றது.
ஜாதாவ்        – பிறப்பைப்பற்றிய விஷயத்தில்
ஏதத் நிதர்ஶனம்– இதுதான் உதாரணத்தில் விளக்குகின்றது

இங்கு பானைகள் ஜீவர்களையும், ஆகாசமானது பரமாத்வையும் குறிக்கின்றது.  பானைதான் தோன்றியுள்ளது ஆகாசமல்ல அதுபோல ஜீவர்கள்தான் தோன்றியிருக்கின்றார்கள் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலை உலகமாக எடுத்துக் கொண்டு அது இல்லை என்று நிரூபித்துவிட்டால் இந்த உலகமும் இல்லை என்று நிரூபணமாகி விடும்.  இதற்கு முதலில் பானை தோன்றவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.  காரணம் + நாமரூபம் = காரியம் என்ற நியதி இருக்கின்றது.  காரணம் காரியத்திற்கு வேறாக இல்லை.  காரியத்தை ஒரு பொருளாக கருதமுடியாது. களிமண்ணில் சில பானைகள் செய்யப்பட்டுள்ளன.  இவைகளனைத்திலும் களிமண்தான் இருக்கின்றது, ஆனால் அதனுடன் நாம, ரூபங்கள் வந்துள்ளது.

ஆத்மா தன்னுடைய மாயா சக்தியினால் ஆகாசத்தை தோற்றுவித்தது.  ஸ்ருஷ்டி கிரமப்படி ஆகாசம் முதலில் தோன்றியது எனவே இது கடைசியில் தோன்றிய ஜடமான ப்ருதிவிக்கு காரணமாக இருக்கின்றது. இதிலிருந்து காரியமான ப்ருதிவி இல்லை அதனால் ஜடமான களிமண்ணும் இங்கு கிடையாது என்று நிரூபணமாகின்றது. ப்ருதிவி ஆகாசத்திலிருந்து வேறாக இல்லாததால், ஆகாசமே பானையாக காட்சியளிக்கின்றது.  இதைப்போல பரமாத்மாவிலிருந்துதான் மாயையின் சக்தியினால் இந்த சரீரங்கள் தோன்றியுள்ளது  உண்மையில் சரீரங்களும் கிடையாது, ஆத்மாவே இவ்வாறு காட்சி அளிக்கின்றது. நாம-ரூபமே மாயை என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆத்மாதான் ஜகத்தாக காட்சியளிக்கின்றது.

காரிகை4
ஜீவன் இறப்பதில்லை என்பதுதான் இதில் சொல்லப்படுகின்றது.
4டாதிஷு ப்ரலீனேஷு – பானை போன்ற உபாதிகள் அழிவை அடையும்போது
கடகாஶ ஆதயஹ      – பானைக்குள் இருக்கின்ற ஆகாசம்
யதா ஆகாஶே          – மகாகாசத்திற்குள்
ஸம்ப்ரலீயந்தே         – எப்படி அவைகள் ஒன்றாகி விடுகின்றதோ
தத்வத்                  – இதை போல
ஜீவா இஹா ஆத்மனி   – ஜீவர்கள் இந்த பரமாத்மாவிடம் ஒடுங்குகின்றார்கள்
சரீரங்கள் அழியும் போது அதற்குள் இருக்கின்ற ஆத்மா பரமாத்வோடு ஒன்றாகி விடுகின்றது.  இதிலிருந்து ஜீவன் தோன்றவுமில்லை, அழியவுமில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை5
பரமாத்மாவே எல்லா ஜீவர்களிடம் இருக்கின்றார். ஆனாலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் விதவிதமான அனுபவங்கள் இருக்கின்றதே? என்ற சந்தேகம் எழுகின்றது.  வெவ்வேறு இடங்கள், விதவிதமாக அனுபவிக்கின்றோமா?. உதாரணமாக அசுத்தமான பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும், சுத்தமாக இருக்கும் பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும் இருப்பதாகவும் காண்கின்றோம்.  இது உபாதிகளின் குணத்தை ஆகாசத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  அதேபோல சரீரத்தில்தான் சுக-துக்கங்கள் இருக்கின்றது, ஆத்மாவுக்கு கிடையாது.

யதா ஏகாஸ்மின் கடாகாஶே – எவ்வாறு ஒன்றாக இருக்கின்ற பானைக்குள் இருக்கும் ஆகாசம்
ரஜஸ் தூமாதிபிஹி – அழுக்கும், புகைகள் போன்றவை உள்ள பானைக்குள்
யுதே – சம்பந்தப்பட்டிருந்தாலும்
ந ஸர்வே ஸம்ப்ரயுஜயந்தே – எல்லா ஆகாசத்திலும் இதே சம்பந்தம் இருக்கும் என்று சொல்ல மாட்டோம்.  ஏனென்றால் அழுக்கு, புகை இவைகளெல்லாம் பானையை சேர்ந்தது.  எனவே அவைகளுக்கும் ஆகாசத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதை போல
தத்வத் – இதுபோல,
ஜீவா – ஜீவர்களின்
ஸுகாதிவி – சுக-துக்கங்கள் ஜீவனைச் சேர்ந்தது
ஜீவர்களிடத்தில் உள்ள சுக-துக்கங்களை ஆத்மா பிரகாசப்படுத்துகின்றது.  ஆனால் எந்தவித சம்பந்தம் இல்லாததாகவும் இருக்கின்றது.

காரிகை6

பூ.பக்ஷம்  அனுமான பிரமானத்தின் மூலமாக ஜீவர்களிடையே பேதம் இருக்கின்றது என்று நிரூபிக்க முடியும்..  பக்ஷம் – ஜீவன்; ஸாத்யம் – ஜீவன் – ஈஸ்வரன் வெவ்வேறானவர்கள்..  ஹேது – வேறுபாட்டை உடைய ( ரூப, காரிய ஸமாக்யா வஸாத், நாம்-ரூப-கர்ம பேதா4த் ) இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ள வேறுபாடு பெயர், உருவம், குணங்கள் பயன்பாடு இவைகளினால் வேறுபட்டிருப்பதால் அவைகள் வெவ்வேறு என்று கூறமுடிகின்றது. அதேபோல இரண்டு ஜீவர்களை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்றும் வெவ்வேறாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது.  எனவே அவர்களுகிடையே வேறுபாடு தெரிகின்றது.  ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே இந்த மூன்று வேறுபாடுகளும் தெரிகின்றது. எனவே இருவரும் வெவ்வேறானவர்கள், அத்வைதம் என்பதே கிடையாது.

பதில்     ஆகாசம் அது எங்கு இருக்கின்றதோ அதற்கேற்ற பெயரோடு அழைக்கப்படுகின்றது.  உதாரணமாக பானக்குள் இருக்கும் ஆகாசம், அறைக்குள் இருக்கும் ஆகாசம் இவைகளுக்குள் பெயர்கள் வேறுபட்டிருந்தாலும் அது ஆகாசம் என்ற ஒன்றைத்தான் குறிக்கின்றது.  விதவிதமான  அளவுடன் கூடிய பானைகளுக்குள் இருக்கும் ஆகாசமானது சிறிய, பெரிய ஆகாசம் என்று வெவ்வேறு குணங்களையுடையது போல் தோன்றுகின்றது.  இருந்தாலும் ஆகாசம் ஒன்றாகத்தான் இருக்கின்றது. என்று ஏற்றுக்கொள்கின்றோம்.  அதேபோன்று படிக்கும் அறையிலுள்ள ஆகாசம், படுக்கையறையிலுள்ள ஆகாசம் என்று விதவிதமான பயன்பாடுடைய ஆகாசமாக இருந்தாலும், ஆகாசம் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்கிறோம்.  இதிலிருந்து நாம-ரூப-கர்ம வேறுபாடுகள் இருந்தாலும் ஆகாசம் ஒன்றாக இருக்கின்றது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதால், பூர்வபக்ஷியினுடைய உதாரணம் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டது.  அதனுடைய உபாதிகளின் வேறுபாடு ஆகாசத்திற்கு வந்து விட்டது.  இதேபோல ஜீவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அவைகள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல, அவைகள் சரீரங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், அவைகள்  ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.  இந்த நியதியை ஜீவ-ஈஸ்வரனக்குமிடையே ஒப்பிட்டு பார்த்தால் வேறுபாடில்லை என்று புரிந்து கொள்ளலாம்.


ரூப காரிய ஸமாக்யாஸ்ச     ஆகாசத்திற்கு உருவம், குணங்கள், செயல்கள், பயன்பாடு, பெயர் ஆகியவைகள்
பி4த்யந்தே தத்ர தத்ர வை     அந்தந்த இடத்திற்கேற்ப வேறுபாடுடன் இருக்கின்றது
ஆகாஶஸ்ய ந பேதஹ         ஆகாசத்தினிடத்தில் இந்த வேறுபாடுகள் இல்லை.
த த்வத் ஜீவேஷூ நிர்ணயஹ  அதுபோல ஜீவர்கள் விஷயத்தில் இதை நிச்சயம் பண்ண வேண்டும்.
ஜீவர்களிடத்தே உள்ள வேறுபாடுகள் அந்தந்த உடலையும், மனதையும் சேர்ந்தது.  அதற்குள் இருக்கும் ஆத்மாவுக்குமிடையே எந்த வேறுபாடும் கிடையாது.  இது ஜீவ-ஈஸ்வரன் இருவருக்கும் இடையேயும் ஒப்பிட்டு பார்த்து அபேத புத்தியை அடைய வேண்டும்.

காரிகை7

பூ.பக்ஷம்  பரமாத்மா ஜீவாத்மாவின் பிறப்பிற்கு காரணமாக இருக்கின்றது

பதில்     காரண-கார்ய சம்பந்தம், அவயவ-அவயவி சம்பந்தம்.  இருபொருட்களுக்குமிடையே உள்ள சம்பந்தம் இவ்வாறு இரண்டு விதமாக இருக்கின்றது.  ஸ்தூல உடல் காரணம், அன்னம் காரணம், காரணத்திலிருந்து சில மாற்றங்களுடன் உருவாகுவது காரியம்.  அவயவம் – உறுப்புக்கள், அவயவி – உறுப்புக்களை உடையவன். இங்கே அவயவி மனித உடல்; அவயவம் – கை-கால்கள் போன்ற உறுப்புக்கள்.


கடாகஶ ந ஆகாஶஸ்ய – பானைக்குள் இருக்கின்ற ஆகாசமும், வெளியே உள்ள மகாகாசமும்
ந விகார அவயவஹ யதா – எப்படி அதனுடைய விகாரமும் இல்லை, அவயவமும் இல்லையோ
ததா – அதுபோல
நைவாத்மனஹ ஜீவா ந விகார அவயவஹ ஸதா – ஜீவாத்மா, பரமாத்மாவினுடைய மாற்றமும் இல்லை, உறுப்பும் அல்ல. ஸ்ருஷ்டி தோன்றிக் கொண்டிருந்தாலும், பிரளய காலத்திலும் எந்தவிதமான வேற்றுமைகளும் இல்லை.
எனவே ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமுமில்லை.  அவைகள் இரண்டும் ஒன்றே என்ற காரணத்தினால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை8
அறியாமையினால் சரீரத்தின் தன்மைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றோம். அறியாமைக்கு காரணம் சொல்ல முடியாது.  எனவே அதை அநாதி என்று கூறப்படுகின்றது. அநாதி என்றால் அதனுடைய தோற்றத்தை சொல்ல முடியாது. ஆனால் ஞானம் வந்தவுடன் அது சென்று விடும், மீண்டும் வராது.

யதா ககணம் மலைஹி மலினம் – எவ்வாறு ஆகாசம் அசுத்தங்களுடன் சேர்ந்து அசுத்தமாக தோன்றுகின்றது.
பாலானாம் – சிறுவர்களுக்கு, அறியாமையில் உள்ளவர்களுக்கு,அறிவு வளர்ச்சியற்றவர்களுக்கு
ஆத்மா அபி மலினஹ மலைஹி – அசுத்தங்களுடன் சேர்ந்து ஆத்மாவும் அசுத்தமாக தோன்றுகிறது
அபுத்தானம் – அறியாமையிலுள்ளவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது.

காரிகை9
மரணே சம்ப4வே ச ஏவ – மரண விஷயத்திலும், பிறக்கின்ற விஷயத்திலும் ஆகாசத்தை  துணை கொண்டு மரணமும் இல்லை, பிறப்பும் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கதி ஆகமன அபி – செல்லுதல், திரும்பி வருதல் விஷயத்திலும் கூட இதே மாதிரி இல்லையென்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ ஸரீரேஷு ஸ்திதௌ – எல்லா உடல்களுக்குள்ளும் ஆத்மா இருக்கின்றது என்பதையும் இதேமாதிரி புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகாஶேன அவிலக்ஷண – ஆகாச உதாரணத்தில் எப்படி இருக்கின்றதோ அதேபோல ஆத்மா விஷயத்திலும் வேறுபடுவதில்லை.

இப்படி இருக்கும்போது ஆகாசம்தான் பரமாத்மாவாக தோன்றுகின்றது என்று சந்தேகம் வரும். இவையிரண்டுக்கும் இடையே வேற்றுமைகள் உண்டு. அவைகள்,

  1. ஆகாசம் ஜடமானது,பரமாத்மா அறிவு ஸ்வரூபமானது,
  2. பரமாத்மாவிலிருந்துதான் ஆகாசம் தோன்றியது.
  3. ஆகாசத்திற்கு சப்தம் என்ற குணம் இருக்கின்றது,பரமாத்மா நிர்குணமானது,
  4. பரமாத்மா சஜாதீய,விஜாதீய, ஸ்வகத பேதம் என்ற மூன்று விதமான வேற்றுமைகளும் அற்றது. 

இதிலிருந்து ஆகாசம் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

காரிகை10
இதில் சரீரமும் தோன்றவில்லை என்று கூறப்பட்டிருக்கின்றது.  இங்கு சரீரம் என்பதை ஜகத்தாக எடுத்துக் கொள்ளலாம்.  சூட்சுமமான ஆகாசமே ஸ்தூலமான பானையாக மாறியிருக்கின்றது. எனவே பானை என்று ஒன்று இல்லை.  விஸ்வனாக இருக்கின்ற நாம் நித்திரை என்ற சக்தியின் துணைக் கொண்டு கனவுலக பிரபஞ்சத்தை படைக்கின்றோம். வெவ்வேறு பொருட்களையும் படைக்கின்றோம், அனுபவிக்கின்றோம்.  உண்மையில் கனவில் தோன்றும் உடல்களும், உலகமும் மித்யா என்று உணர்ந்துள்ளோம்.  இதேபோன்றுதான் இந்த ஸ்தூல பிரபஞ்சமும், உடல்களும் உண்மையில் இல்லை.

ஸர்வே ஸங்காதா ஸ்வப்னவத் – உடல்கள் எல்லாம் கனவில் தோன்றும் உடல்களைப்போல
ஆத்மா மாயா விஸர்ஜிதா – ஆத்மாவில் இருக்கின்ற மாயையினால் தோற்றுவிக்கப்பட்டது, கற்பனை செய்யப்பட்டுள்ளது.
 கேள்வி உடல் பொய்யென்று சொல்லிவிட்டால், பிரம்ம, விஷ்ணு, சிவன், தேவதைகளின் உடல்களும் பொய்யானதா? அவர்களின் உடல்கள் உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும்.

பதில்    எந்த உடலாக இருந்தாலும் சரி, அவைகள் எல்லாமே மித்யாதான்.  தேவதைகளின் உடல்கள் பூஜிக்க தகுந்ததாக இருந்தாலும் அவைகளும் மித்யாதான்.


ஆதி4க்யே – பூஜைக்குரிய உடல்களாக இருந்தாலும்
ஸர்வ ஸாம்யே வா – மற்ற அனைத்து சாதாரண உடல்களாக இருந்தாலும்
ந உபபத்தி ஹி வித்யதே – அவைகள் சத்யமா, மித்யாவா என்று உறுதி செய்வதற்கு உடலின் சிறப்பு தன்மை காரணமாக இல்லை.

காரிகை11
ரஸாதய ஹி யே கோஶா – அன்னமய கோசத்திலிருந்து ஆரம்பித்து மீதியுள்ள நான்கு கோசங்களும்
வ்யாக்யாதா தைத்திரியகே – தைத்திரிய உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது
தேஷாம் ஆத்மா – இந்த ஐந்து கோசங்களுக்குள்ளும் இருக்கும்
ஜீவாஹ பரஹ – ஜீவாத்மாவே பரமாத்மா என்று விளக்கப்பட்டுள்ளது.
கம் யதா4 ஸம்ப்ரகாஶிதஹ – எப்படி ஆகாசத்தை வைத்து விளக்கபட்டதோ அதேமாதிரி விளக்கப்பட்டு உள்ளது.
இதிலிருந்து ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால ஜீவன் தோன்றவில்லை என்று நிலை நாட்டப்பட்டுள்ளது.

காரிகை12
இதில் ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராஹ்மன பகுதியில் கூறப்பட்ட வாக்கியத்தை மேற்கோள் காட்டி ஜீவன் பிறக்கவில்லை என்று நிலை நாட்டுகின்றார்.

படைக்கப்பட்ட அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எவைகள் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றதோ அவைகளனைத்தும் மித்யா என்று கூறப்பட்டிருக்கின்றது.  இதன் அடிப்படையில் படைக்கப்பட்ட அனைத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

  • இந்த ஜகத்தானது ஜீவர்களுக்கு போக்யமாக இருக்கின்றது என்று கூறுகின்றது.  இப்படிபட்ட உலகம் தோன்றுவதற்கு காரணம் ஜீவர்கள்தான்.  ஆகவே உலகம் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது
  • இந்த உலகத்திற்கு எல்லா ஜீவராசிகளும் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது என்று கூறி உலகத்தை காரணமாக காட்டுகின்றது
  • ஸ்ருஷ்டி மூன்றாக பிரிக்கப்பட்டது. 1. அதிபூதம் – ஸ்தூல சரீரங்கள், 2. அதிதெய்வம் – தேவதைகள், 3. அத்யாத்மம் – சரீரத்திலுள்ள இந்திரியங்கள் (உ-ம் 1. சூரியன், 2. சூரிய தேவதை, 3. கண்)
  • ஜீவனும் ஜகத்தும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவனும் தேவதைகளும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவர்களும் தமக்குள் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கின்றார்கள்
  • இவ்வாறு அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா.


த்வையோ த்வையோ மதுக்ஞானே – பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராமனத்தில் இரண்டிரண்டாக ஸ்ருஷ்டியை எடுத்துக்கொண்டு அவைகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று கூறியுள்ளது.
பரம் ப்ரஹ்ம ப்ரகாஶிதம் – பரமாத்மாவாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமஷ்டி, வியஷ்டி இரண்டுமே ஒரே பிரம்மமாக இருக்கின்றது.  எனவே ஜீவன் தோன்றவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
ப்ருதிவ்யாம் உதரே – வெளியே தெரிகின்ற மகாகாசத்திலும், வயிற்றுக்குள் இருக்கின்ற ஆகாசமும்
யதா ஆகாஶஹ ப்ரகாஶிதஹ  – எப்படி ஆகாசம் ஒன்று என்று விளக்கப்பட்டதோ அவ்வாறே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 

காரிகை13

ஆறுவிதமான குறிப்புக்களைக் கொண்டு உபநிஷத்தின் மையக்கருத்தை நிச்சயிக்கலாம். அவைகள்

  1. ஆரம்பத்திலும், முடிவிலும் சொல்லப்படும் கருத்து
  2. திரும்ப திரும்ப கூறும் விஷயம்
  3. பலனை தருவதாக கூறப்படும் விஷயம்
  4. அனுபவத்திற்கு விரோதமாக இருக்கும் கருத்து
  5. அந்த கருத்தை புகழ்ந்திருக்க வேண்டும்
  6. அந்த கருத்து மட்டும் குறிப்பாக, விசேஷமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்


ஜீவாத்மனோ – ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும்
அனன்யத்வம் –  ஒன்றாக இருக்கும் தன்மை
அபேதேன – மகாவாக்கியங்களால் ( வேறாக இல்லாத தன்மை )
ப்ரஶஸ்யதே –  புகழப்பட்டிருக்கின்றது
யச்ச நானாத்வம் நிந்தயதே – எந்த காரணத்தினால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நிந்தனை செய்யப்பட்டிருக்கின்றதோ
த த் ஏவம் ஹி ஸமஞ்ஜஸம் – அந்த காரணத்தினால் இந்த உபதேசமானது, அத்வைதமானது சரியானது.

காரிகை14
உபநிஷத்தில் அத்வைதம்தான் மையக்கருத்து என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலாக இந்த காரிகை அமைந்திருக்கின்றது.

முதலில் கேட்ட வாக்கியத்தில் முக்கியமானது அதற்கடுத்த வாக்கியத்தைப் பொறுத்து அமைகின்றது. உதாரணமாக சிங்கம் போல் இருக்கின்றான்.. அவன் மிகவும் தைரியசாலி.  இந்த வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தின் பொருள்படி முதல் வாக்கியத்தில் கூறப்பட்ட சிங்கம் என்ற சொல் இரண்டாவது வாக்கியத்தில் கூறப்பட்டவனை குறிக்கின்றது.

ஜீவாத்மனோ ப்ருதக்த்வம் – ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமிடையே உள்ள வேற்றுமைகள்
ப்ராக்4 உத்பத்தே ப்ரகீர்திதம் – அறிவை கொடுக்கின்ற ஞானகாண்டத்திற்கு முன்னே காட்டப்பட்டது, உபதேசிக்கப்பட்டது.
தத் கௌனம் – அந்த வேற்றுமையானது முக்கியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
பவிஷ்யத் வ்ருத்த்யா – வரப்போகின்ற ஒன்றின் அடிப்படையில்
முக்யத்வம் ந ஹி யுஜ்யதே – அந்த வேற்றுமைகள் உள்ள வாக்கியத்திற்கு முக்கியத்துவம் கிடையாது
 

காரிகை15 ***

பூ.பக்ஷி ஸ்ருஷ்டி இருக்கின்ற காலத்தில் த்வைதம் இருக்கட்டும், பிரளய காலத்தில் அத்வைதம்தான் இருக்கின்றது.  ஸ்ருஷ்டி முக்கியமில்லையென்றால் எதற்கு உபநிஷத் அதைப்பற்றி பேசுகின்றது.

பதில்    எல்லா உபநிஷத்துகளிலும் ஸ்ருஷ்டியை ஒரே மாதிரியாக சொல்லவில்லை. ஏனென்றால் அது முக்கியமானதாக கருதவில்லை.


ம்ருத்லோக விஸ்புலிங்காத்யை– களிமண், உலோகம், தீப்பொறிகள் இவைகளை உதாரணமாக கொண்டு
யா ஸ்ருஷ்டி அன்யதா ச உதி3தா – எந்த ஸ்ருஷ்டியானது விதவிதமாக, வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டதோ, உபதேசிக்கப்பட்டதோ
யஹ உபாய அவதாராய – இவைகள் உபாயத்திற்காக ஐக்கிய புத்தியை நிச்சயம் செய்வதற்காக, அத்வைதத்தை உறுதிபடுத்துவதற்கான வழி இவைகள்
பேதஹ கதஞ்சன நாஸ்தி – வேற்றுமைகள் எந்தவிதத்திலும் இல்லை.
 

பூ.பக்ஷி இந்த ஸ்ருஷ்டி எப்படி அத்வைத நிச்சயத்திற்கு மார்க்கமாக எடுத்துக் கொள்ள முடியும்?

பதில்    ஸ்ருஷ்டியை விளக்கினால்தான் அதன் காரணத்தை தெரிந்து கொள்ள முடியும்.  விதவிதமான ஸ்ருஷ்டிகள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் தோன்றியுள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்.  பிறகு தோன்றியவைகள் எல்லாமே அந்த ஒன்றுதான் என்று கூறினால் அந்த ஒன்றுதான் ஸத்யம் என்றும், ஸ்ருஷ்டி மித்யா என்று நன்றாக புரிந்து கொள்ள முடியும்.  ஸ்ருஷ்டியானது அதன் மித்யாத்வத்தை புரிய வைப்பதற்காகவும், காரண-காரிய ஐக்கிய ஞானத்தை புரிய வைப்பதற்காகவும் உபதேசிக்கப்படுகின்றது.

 காரிகை16

பூ.பக்ஷி வேதம் உபாஸனையை உபதேசிப்பதால் த்வைதத்தை தானே உபதேசிக்கின்றது?

பதில்    மோட்சத்தை அடைய விரும்பும் ஸாதகர்களை மூன்று விதமாக பிரிக்கப்படுகின்றது.  அவைகள் 1. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், 2. இடைநிலையில் உள்ளவர்கள், 3. உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் இவர்களின் அடிப்படையில் உபநிஷத் விதவிதமாக உபதேசிக்கின்றது.


ஆஸ்ரமாஹ த்ரிவிதாஹா – ஸாதகர்கள் (மோட்சத்தை அடைய முயற்சிப்பவர்கள்0 மூன்று விதமாக இருக்கின்றார்கள்.
ஹீன மத்யம் உத்க்ருஷ்ட த்ருஷ்டயஹ – ஆரம்ப நிலை, இடைநிலை, உயர்நிலை
ஹீன த்ருஷ்டி        – சகுண பிரம்மத்தை உபாஸிப்பவர்கள் (ஜகத் மித்யா என்று உணராதவர்கள்)
மத்யம் த்ருஷ்டி       – காரண பிரம்மனை – ஈஸ்வரனை உபாஸிப்பவர்கள்
உத்க்ருஷ்ட த்ருஷ்டி   – நிர்குண பிரம்மத்தை நிதித்யாஸனம் செய்பவர்கள்
 

  • ஆரம்ப நிலை சாதகர்களுக்கு உபாஸனைகளை விதவிதமாக கூறியிருப்பது,, அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காகத்தான். இந்த த்வைத உபாஸனைகளை தெரிந்தே உபதேசிக்கின்றது
  • இடைநிலை சாதகன் – காரண பிரம்மனை (ஈஸ்வரனை) உபாஸிப்பவர்கள்.  இவர்களுக்கு காரியங்கள் மித்யா என்றும் இவைகளுக்கு காரணம் ஈஸ்வரன் என்று உபாஸிப்பவர்கள்
  • உயர்நிலை சாதகன் – ஜகத் மித்யா என்று தெளிவாக உணர்ந்தவன்.  அடைந்த பிரம்ம ஞானத்தையே நிலைத்து நிற்பதற்கு நிதித்யாஸனம் என்ற உபாஸனை செய்பவன்.


தத3க்தம் அனுகம்பயா இயம் உபாஸனா உபதிஷ்டா – இந்த அதிகாரிகளுக்கு கருணையினால் இந்த உபாஸனை கர்மங்களையும் உபதேசிக்கப்பட்டது

காரிகை17
சம்சாரத்தை நீக்காத எந்த உபதேசமும் சரியானதல்ல. த்வைதிகளிடம் சம்சாரம் இருப்பதால் அவர்கள் சாஸ்திரத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

ஸ்வஸித்தா4ந்த வ்யவஸ்தாஸு – த்வைதிகளின் முடிவான கருத்தின் அடிப்படையில் அவர்கள் கொண்டுள்ள சாஸ்திர அறிவு சாஸ்திரத்தை புரிந்து கொண்டுள்ள முறையான விஷயத்தில்
த்வைதினஹ த்ருடம் நிஸ்சிதா – இருமைதான் ஸத்யம் என்ற கொள்கையுடையவர்கள், அதில் திடமான முடிவையுடையவர்களாக இருக்கின்றார்கள். (நிஸ்சிதா – அபிநிவேஷம் – [ முரட்டு பிடிவாதத்துடன் இருப்பவர்கள் ]
பரஸ்பரம் விருத்4யந்தே – ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கின்றார்கள்
நைஹி அயம் ந விருத்4யதே – த்வைதிகளுடன் அத்வைதிகள் பகைமை கொள்வதில்லை.
 

காரிகை18

அத்வைதிகள் ஏன் த்வைதிகளிடன் பகைமை கொள்வதில்லை, வெறுப்பதில்லை என்பதை இந்த காரிகையில் விளக்குகின்றார்.

  • த்வைதத்தை ஒரு படியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம், சாத்தியமாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அத்வைதத்திற்கு செல்லும் படியில் நிற்கின்ற காரணத்தினால் அவர்களை வெறுப்பதில்லை.
  • அத்வைதத்தில் எல்லாமே மித்யா என்ற அறிவு திடமாக இருப்பதால் அவனுக்கு யாருமே விரோதிகள் இல்லை.  அத்வைதமும் மித்யா என்று நினைக்கின்றார்கள். நான் அத்வைதி என்றும் நினைப்பதில்லை.
  • அத்வைதியினிடத்தில் ராக-துவேஷம் என்பது கிடையாது அதனாலும் த்வைதிகள் மீது வெறுப்பு கொள்வதில்லை.
  • த்வைதமானது அத்வைதத்தினுடைய காரியமாக இருக்கின்றது.  இது கௌடபாதரின் கருத்து.


அத்வைதம் பரமார்த்தஹ – அத்வைதம்தான் மூலகாரணம், அதிஷ்டானம்
த்வைத த த்பே4த உச்யதே – த்வைதமானது அத்வைதத்தினுடைய காரியம்தான், மாற்றம்தான் என்று சொல்லப்படுகின்றது
தேஷாம் உப4யதாம் த்வைதம் – த்வைதிகளுக்கு இரண்டு விதத்திலும் த்வைதம்தான் ஸத்யமாக இருக்கின்றது.  இரண்டு விதம் என்பது படியாகவும், முடிவாகவும் இருக்கின்றது.
தேன அயம் ந விருத்4யதே – இந்த காரணத்தினால் அத்வைதிகள் அவர்களிடம் விரோதம் கொள்வதில்லை.

காரிகை19
ஏதத் அஜம் மாயயா பித்3யதே – பிறப்பற்ற இந்த அத்வைத தத்துவம், மாயையினால் இரண்டாக தெரிகின்றது.
ந அன்யதா கதஞ்சன – இதை தவிர்த்து வேறெந்த விதத்திலும் வேறுபடுவதில்லை.
தத்வதஹ பித்4யமானே ஹி – உண்மையாகவே வேறுபட்டிருந்தால்
அம்ருதம் மர்த்யதாம் வ்ரஜேத் – மரணமற்ற பிரம்மன் மரணமடையும் நிலையை அடைந்து விடும்.

காரிகை20
அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹ – எதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்
அஜாத அம்ருத பா4வ – பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்
மர்த்யதாம் கதம் ஏஷ்யத் – எப்படி மரணத்தை அடையும்?

பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.
 

காரிகை21

அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்.  ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.


ந பவதி அம்ருதம் மர்தியம்  – அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது
மர்த்யம் அம்ருதம் த்தா4     – அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.
ப்ரக்ருதே அன்யதா பா4வஹ – ஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது
கதஞ்சித் ந ப4விஷ்யதி       – எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.
 

காரிகை22

  1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹ– மோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்
  2. ப்ரதிக்ஞா ஹானி– முதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்

யஸ்ய – இந்த கருத்துப்படி
ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹ – இயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.
கச்சதி மர்த்யதாம் – மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.
தஸ்ய – இப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )
க்ருதகேன அம்ருதஹ – மரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்
கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதி – எப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.
இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.

காரிகை23
உபநிஷத்தில் விதவிதமான ஸ்ருஷ்டியை பற்றி பேசப்பட்டிருக்கின்றது.  ஆனால் அந்த இடத்திலேயே ஏன் அவைகள் மித்யா என்று சொல்லவில்லை?
அந்த இடத்திலேயே ஸத்யம் என்றும் சொல்லவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆகவே ஸ்ருஷ்டியை பற்றி பேசும் வாக்கியங்களை மித்யா என்றும் சொல்லவில்லை, ஸத்யம் என்றும் சொல்லவில்லை.  எனவே அந்த வாக்கியங்களை நன்கு விசாரம் செய்துதான் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஸ்ருஜ்யமானே ஸ்ருதி ஸமாஹா – படைப்பைப் பற்றி பேசும் வாக்கியங்களில் உபநிஷத் சமமாகவே இருக்கின்றது.
பூததஹ வா ஆபூததஹ – ஸத்யமாக இருக்கின்றதா, பொய்யாக இருக்கின்றதா என்ற விஷயத்தில்
யத் – எப்படிபட்ட படைப்பு
யுக்தியுக்தம் நிஸ்சிதம் – யுக்திக்கு பொருந்தியதாக எதை நிச்சயம் செய்திருக்கின்றதோ
தத் பவதி ந இதரத – அதுதான் சரியானதாக இருக்கின்றது, மற்றவைகள் அல்ல.

காரிகை24
நேஹ நாநா” இதி ஆம்நாயாத் – “நேஹ நாநா” என்று ஒரு உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
நேஹ நாநா – இந்த ஆத்ம விஷயத்தில் எந்த வேற்றுமையும் இல்லை.  ஜகத் இல்லை என்று புரிய வைக்கின்றது.
இந்திர மாயாபிஹி – இந்த வாக்கியாம் பிருஹதாரண்ய உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் இந்த ஜகத்தானது இந்திர ஜாலத்தில் தோன்றுகின்ற பொருட்கள் போல மாயையினால் பிரம்மமானது பொய்யாக பலவிதமான ரூபங்களாக காட்சியளிக்கின்றது
அஜாயமானஹ பஹூதா – என்று புருஷ ஸுக்தம் உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது.  பிரம்மன் பிறக்காமல் இருந்து கொண்டு விதவிதமாக தோன்றி கொண்டிருக்கின்றது.
மாயயா ஜாயதே து ஸஹ – இந்த பிரபஞ்சமானது பொய்யாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

உபநிஷத்தில் ஆரம்பத்தில் ஸ்ருஷ்டியை சொல்வதை அத்யாரோபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவைகளை அபவாதம் செய்து நீக்கிவிடும்.

காரிகை25
இதில் உபநிஷத் காரண-காரிய நிஷேதம் செய்வதை மேற்கோள்காட்டி விளக்கப்படுகின்றது.  காரண-காரிய நிஷேதம் ஸ்ருஷ்டியை நீக்குகின்றது.

ஈஸா உ.நி- 12-14 மந்திரங்களை எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  அதில் ஸம்பூதி உபாஸனம் (ஹிரண்யகர்ப்ப உபாஸனம்), அஸம்பூதி உபாஸனை (வெளித்தோற்றத்திற்கு வராத தத்துவத்தை உபாஸித்தல்) சொல்லப்படுகின்றது.

ஸம்பூதே – ஹிரண்யகர்ப்பனை
அபவாதாத் – நீக்கிய காரணத்தால், உண்மையான பொருளல்ல என்று
ஸம்பவ – படைக்கப்பட்டது, காரியமானது
ப்ரதிஷித்4யதே – நீக்கப்படுகின்றது
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது தோன்றியவைகளெல்லாம் உபநிஷத்தால் நீக்கப்பட்டிருக்கின்றது.

ப்ருஹதாரண்யஹ உ.நி 3.9.28
“கோன்வேனம் ஜனயேத்”
கஹ ஏனம் ஜனயேத்– யார்தான் இந்த ஆத்மாவை தோற்றுவிப்பார்கள்.
இதி காரணம் ப்ரதிஷித்யதே – இவ்வாறு காரணமும் நீக்கப்படுகின்றது.

காரிகை26
ப்ரு.உநி – 3.9.26 மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றது.
“ஸ ஏஷ நேதி நேதி” இதுவல்ல
பிரபஞ்சம் – மூர்த்த-அமூர்த்தம் என்று அறிமுகப்படுத்தி பிறகு அவைகள் இல்லை என்று ஒவ்வொன்றாக நீக்குகின்றது. அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா, சரீரத்திற்குள் இருக்கின்ற ஆத்மா இதுவல்ல இதுவல்ல என்று நிஷேதம் செய்கின்றது.
வ்யாக்யாதம் ஸர்வம் நிஹ்ன்னுதே – முன்னே விவரிக்கபட்ட அனைத்தும் நீக்குகின்றது (நேதி, நேதி என்று சொல்வதன் மூலம் )
யத: – என்ற காரணத்தினால் இவ்வாறு நீக்குகின்றதோ அதனால் அனைத்தும் மித்யா, உண்மையல்ல.
ஹேதுனா அக்ராஹ்ய பாவேன – எந்த காரணத்தால் விட்டுவிடுதல் என்ற நோக்கத்துடன்
எவையெல்லாம் அறிமுகப்படுத்தினோமோ அவைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நிஷேதம் செய்கின்றது.
அஜம் ப்ராகஶதே – பிறப்பற்ற ஆத்மாதான் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

காரிகை27
ஸத ஹி – ஸத் வஸ்துவிடமிருந்து; ஸத் ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மனிடமிருந்து
மாயயா ஜன்ம யுஜ்யதே – பொய்யாக தோன்றுதல் என்பது சரியானது.
பிரம்மத்திடமிருந்து பொய்யாக ஸ்ருஷ்டி வந்தது என்பது சரியானதாக இருக்கும்.  இது நிமித்த காரணம்
ந து தத்வதஹ – உண்மையாகவே பிறப்பு என்பது தவறானது.

இன்னொரு பொருள்: பிரம்மத்தினுடைய தோற்றம் பொய்யானது என்பது சரியாகும், உண்மையாக தோன்றியது என்பது தவறானது.

## பொய்யான இந்த ஸ்ருஷ்டியிலிருந்து ஸத் ஸ்வரூபமான பிரம்மம் காட்டிக் கொடுக்கப்படுகின்றது ##
 

யஸ்ய த்த்வதஹ ஜாயதே, தஸ்ய ஜாதம் ஹி ஜாயதே – எவருடைய கருத்துப்படி உண்மையாக தோன்றியுள்ளதோ அந்த கருத்துப்படி தோன்றியதே தோன்றுகின்றது.

 

  1. பிறவாத பிரம்மத்திடமிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக்கொண்டால் இதில் வியாகாத தோஷம் இருக்கின்றது. கண் தெரிகின்ற ஒருவன் நான் குருடன் என்று சொல்வது போல பிறவாத என்பது இல்லாத ஒன்றிலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்?
  2. பிறந்த ஒன்றிலிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக் கொண்டால் இதிலும் ஒரு குறை இருக்கின்றது. அனவஸ்தா தோஷம் முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிடமிருந்து முட்டை வந்ததா என்பது போல எதிலிருந்து பிறந்தது என்று கேட்டால் அது வேறொன்றிலிருந்து பிறந்தது என்று இப்படியே போய்க்கொண்டிருக்கும் எனவே இது சரியான கருத்தல்ல.  இதிலிருந்து தோன்றி கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யாவாகத்தான் இருக்க முடியும் என்று உறுதியாக புரிந்து கொள்ள முடியும்.


காரிகை28
பொய் கூட உண்மையிலிருந்துதான் வரமுடியும்.  பொய்யிலிருந்து பொய் வர முடியாது.  பொய்யாக காட்சியளிக்கும் இந்த ஜகத் உண்மையான பிரம்மத்தை காட்டிக் கொடுத்து கொண்டிருக்கின்றது.

அஸதஹ மாயயா ஜன்ம தத்வதஹ ஜன்ம ந ஏவ யுஜ்யதே – இல்லாமையிலிருந்து பொய்யான தோற்றமும், உண்மையான தோற்றமும் உருவாகும் என்பது இருக்க முடியாது
வந்த்4யா புத்ர ந த்த்வேன, மாய யா வா அபி ந ஜாயதே – மலடியின் மகன் உண்மையாகவோ, பொய்யாகவோ பிறப்பதில்லை.


காரிகை29
கனவில் தோன்றும் பிரபஞ்சம் எப்படியோ அதேபோல விழிப்புநிலை பிரபஞ்சம் பொய்யானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யதா ஸ்வப்னே த்வயாபாஸம் – எவ்வாறு கனவில் தோன்றும் இருமை தோற்றங்கள்
ஸ்பந்ததே மாய யா மனஹ – மனமானது பொய்யாக இவைகளை தோற்றுவிக்கின்றது
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் ஸ்பந்த்தே மாய்யா மனஹ – அவ்வாறு விழிப்பு நிலையில், இருமை தோற்றங்களை மனமானது பொய்யாக காட்டிக் கொண்டிருக்கின்றது. இங்கே சமஷ்டி மனதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரிகை30
அத்வயம் ச மனஹ த்வயாபாஸம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹ – மனம் ஒன்றுதான் ஆனால் கனவில் பலவிதமாக தோன்றிக் கொண்டிருக்கின்றது, இதில் சந்தேகமில்லை.
ததா – அவ்வாறு’
ஜாக்ரத் அத்வயம் ச த்வயாபாஸம் ச ஸம்ஶயஹ – விழிப்பு நிலையில் ஒன்றான மனமானது பலவிதமாக  காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது, இதிலும் சந்தேகமில்லை.

இத்துடன் அஜாதவாதம் முடிவடைகிறது.  இனி வரப்போகின்ற காரிகைகளில் நிதித்யாசனம் என்ற சாதனத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது

நிதித்யாசன விசாரம்:-
நம் மனதில் அனுபவிக்கும் நிறைவின்மையே சம்சாரம் எனப்படும். இந்த நிறைவின்மையின் வெளிப்பாடு விதவிதமான தீய உணர்ச்சிகளான காம, க்ரோதம் போன்றவைகள்தான். பகவான் கிருஷ்ணர் தன்னிடத்திலே திருப்தியுடையவன்தான் ஸ்திதப்ரக்ஞன் என்று கீதையில் கூறி இருக்கின்றார்.

நம்முடைய இந்த மனநிறைவின்மைக்கு காரணமாக இருப்பது எது?  யோகிகள் இந்த உலகமே காரணமாக இருக்கின்றது என்று கூறுகின்றனர்.  இருமையை பார்த்து கொண்டிருக்கும் போதுதான் மனநிறைவின்மையை அனுபவிக்கின்றோம். உலகத்தை மறந்தால் துயரங்கள் சென்று விடுகின்றது. கனவு பிரபஞ்சமும், ஜாக்ரத் பிரபஞ்சமும் தான் துயரத்திற்கு காரணங்கள்.  இந்த உலகத்தை நம்மால் நீக்க முடியாது ஆனால் மனதை உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் மன அமைதியடையலாம் என்று அவர்கள் முடிவுக்கு வந்தார்கள். சித்த விருத்தி நிரோதஹ –மனோநாசம் மோட்சக் காரணம் என்று முடிவுக்கு வந்தார்கள்.

வேதாந்திகள் இந்த உலகம் துக்கம் ஸ்வரூபமுடையதல்ல ஏனென்றால் ஜீவன் முக்தனும் இந்த உலகத்தில்தான் இருக்கின்றான் அவனுக்கு சுக-துக்கங்களை கொடுப்பதில்லை.  எனவே சுக-துக்கங்கள் ஜகத்தின் ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ளலாம்.  யோகிகள் மனமே துக்க ஸ்வரூபம் என்று கூறுகிறார்கள். அதே மனதில்தான் சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.  எனவே மனமே சம்சார ஸ்வரூபமல்ல.  ஞானிக்கும் இந்த மனம் இருக்கின்றது அது நிறைவுடன் இருக்கின்றது.  இதிலிருந்து மனம் துக்க ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

வேதாந்தியின் சித்தாந்தம்:-
ஜகத்தும், மனமும் நமக்கு துயரத்தை கொடுத்து கொண்டிருக்கின்றது.  பிறக்கும் போது இந்த மனம் ஆத்மதத்துவத்தை அறியாமல் இருக்கின்றது.  இந்த ஜகத்தைப்பற்றிய அறியாமையுடன் இருக்கின்றது.  நம்மைப்பற்றிய அறியாமையோடு பிறந்திருக்கின்றோம்.  பிரம்ம ஞானம் இல்லாத காரணத்தால் சரீரத்தையும், சரீரங்கள் அனைத்தையும் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இப்படிபட்ட மனதுடன் ஜகத்தோடு சம்பந்தம் வைக்கும்போது சம்சாரத்தை அனுபவிக்க நேரிடுகின்றது.

ஈஸ்வர ஸ்ருஷ்டி இந்த ஜகத். அதே போன்று ஜீவர்களும் ஸ்ருஷ்டியை செய்திருக்கின்றார்கள்.  ஈஸ்வர ஸ்ருஷ்டியான மனிதனை ஜீவர்கள் தந்தையாகவும், மகனாகவும், சகோதரனாகவும் ஸ்ருஷ்டித்திருக்கிறார்கள். ஈஸ்வர ஸ்ருஷ்டி நமக்கு துயரத்தை கொடுக்காது.  ஆனால் ஜீவ ஸ்ருஷ்டிகள்தான் துயரத்தை கொடுக்கின்றது. இந்த ஜீவ ஸ்ருஷ்டியை உருவாக்கியது நம்முடைய மனம்தான்.  இந்த உலகத்தின் மீது அறியாமையோடு அத்யாஸம் செய்து துயரத்திற்கு காரணமாக இருப்பது மனம். எனவே மனதிலிருக்கும் அறியாமையையும், அத்யாஸத்தையும் நீக்கினாலே போதும். இத்துடன் மனதிலிருக்கும் ஸம்ஸ்காரத்தையும் நாசம் செய்ய வேண்டும். அப்போதுதான் மனம் என்றும் நிறைவுடன் இருக்கும்.

சம்சாரம் என்பது மனநிறைவின்மையும், பயமும்தான். த்வைத ரூபமாக இருக்கும் ஜகத்தான் இதற்கு காரணம். இருமையை நீக்கினால் சம்சாரம் தானாக சென்று விடும்.  இருமையாக தோன்றிக் கொண்டிருக்கும் ஜகத்தை அனுபவிப்பது மனம்தான்.  மனதை நாசம் செய்தால்தான் த்வைத ஜகத்தை நீக்க முடியும், சம்சாரமும் நீக்கப்படும்  இது சரியான கருத்தல்ல.  மனதின் ஸ்வரூபம் சம்சாரம் அல்ல.  ஆனால் காலம் காலமாக சம்சாரத்தை மனம் அனுபவித்துக் கொண்டு வருவதால் அவை அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.  அறியாமையுடனும், அத்யாஸத்துடனும் இருக்கின்ற மனம் பார்க்கின்ற உலகத்திற்கு ராக-துவேஷம், பயம் போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கின்றது.  ஆனால் அறியாமையும் அத்யாஸமும் நீங்கப்பெற்ற மனம் ஜகத்தினால் எந்த சம்சாரத்தையும் அனுபவிப்பதில்லை. இங்கே மனம் அழியவில்லை ஆனால் அத்யாஸமும், அறியாமையும் நீங்கி விடுகின்றது.

காரிகை31
மனோத்ருஷ்யம் – மனதினால் பார்க்கப்படுவது
இதம் த்வைதம் – இந்த இருமைகளான ஜகத்தும் அனைத்து படைப்புக்களும்
யத் கிஞ்சித் ஸசராசரம் – எவைகளெல்லாம், அசைந்து கொண்டும், அசையாமலும் இருக்கின்றதோ,  அவைகளைனைத்தும்
மனஸஹ ஹி அமனீபா4வே – மனதினுடைய நாசம் ஏற்படும் போது
த்வைதம் ந ஏவ உபலப்யதே – இருமைகள் அனுபவிக்கப்படுதில்லை, அறியப்படுவதில்லை, சம்சாரம் நீங்கப்பெறும்
** அமனீபா4வ – மனம் இல்லாத தன்மையை அடையும் போது
 

காரிகை32

இதில் அமனீபா4வ – மனமற்ற நிலையை விளக்கப்படுகின்றது. மூன்று விதத்தில் மனமற்ற நிலை ஏற்படுகின்றது. அவைகள்,

  1. ஆழ்ந்த உறக்கத்தில்,
  2. நிர்விகல்ப சமாதியில்,
  3. பா4த ரூப அபா4வஹ– இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதினால் அடையப்படுவது.  வைராக்கியத்தினாலும், விவேகத்தினாலும் ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்,


த்வைத ரூபமான இந்த உலகத்தினுடைய ஸ்வரூபம் பார்க்கப்படுதல் ( அறிவுடனும், சம்பந்தத்துடனும்), விஷயத்வம்.  பச்சிளங்குழந்தைக்கு இந்த உலகம் வெறும் பார்க்கப்படுவதாக மட்டும் இருக்கின்றது.  நமக்கு வேண்டாதவர் கண்ணில்பட்டால் அவர் விஷயமாக இருக்கின்றார். மூன்றாவதாக ஸத்யத்வமாகவும் இருக்கின்றது.  அதாவது இந்த உலகம் நிலையானது, எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்ற தன்மையுடையது. இப்படிபட்ட உலகத்தை அறியாமையில் இருக்கின்ற மனம் அனுபவிக்கின்றது.  ஞானத்துடன் கூடிய மனதிற்கு வெறும் த்ருஷ்யமாக மட்டும்தான் இருக்கும்.  எனவே ஜகத் நாசம் என்பது அதிலுள்ள விஷயத்வமும், சத்யத்வமும் நாசம் அடைவதைதான் குறிக்கின்றது.  இதனால் அதனோடு சம்பந்தபட்ட மனமும் இல்லாத நிலையை அடைகின்றது.  உலகத்திலுள்ள எதுவுமே எனக்கு சுகத்தையோ, துக்கத்தையோ கொடுக்காது என்ற உறுதியான அறிவைக் கொடுக்கின்றது ஆத்ம ஞானம்.  இது வெறும் தோற்றம்தான், சத்யமல்ல என்று நினைத்துக் கொண்டிருக்க வைக்கும்.

த்ருஷ்யத்வம் என்பது ஐம்புலன்களுக்கு ஜகத் அனுபவமாக இருப்பது.  கானல் நீரின் தன்மை தெரியாத போது மூன்று விதமாக தெரிந்தவுடன் வெறும் த்ருஷ்யத்வம்தான் இருக்கும். அதேபோல இந்த ஜகத்தை வெறும் தோற்றம் என்று த்ருஷ்யத்துடன் பார்க்கப்படுவதே மனமற்ற நிலையாகும். இதுவே அமனீபாவம் என்றும், த்வைத அபாவத் என்று அழைக்கப்படுகின்றது.

ஆத்ம ஸத்யம் – ஆத்மாவே உண்மையானது, நிலையானது, மற்றவைகள் எல்லாம் மித்யா
அனுபோதேன – என்ற அறிவினால் (சாஸ்திரம்-குரு மூலமாக அடைந்த அறிவினால்)
யதா – எப்பொழுது மனமானது
ச ஸங்கல்பயதே – சங்கல்பத்தை மேற்கொள்ளாமல் இருக்கின்றதோ
ததா3 அமனஸ்தாம் – அப்போது மனமற்ற நிலையை அடைகின்றது, அமைதியுடன் இருக்கின்றது.
க்ராஹ்ய அபா4வே – விஷயமாக எதையும் எடுத்துக்கொள்ளாத போது, தன்னுடன்  சம்பந்தப்படுத்தி கொள்ளாத போது,
தத்3 அக்ரஹம் –  மனமும் கிரகிக்காத நிலையை அடைகின்றது. புலன்கள் விஷயங்களுடன் சம்பந்தப்பட்டாலும், மனம் சம்பந்தப்படாத நிலையில் இருக்கும்.

காரிகை33
இதில் ஆத்மஞான நிலையையும், மூன்றுவிதமான த்வைதம் இல்லாத நிலையும் விளக்கப்படுகின்றது.
அகல்பகம் – பிளவுபடாத ( அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் பொருள்0
அஜம் ஞானம் – பிறப்பற்ற ஆத்மஞானம்
ஞேய அபின்னம் – அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடாதது,
பிரஹ்மஞேயம் அஜம், நித்யம் – பரம் பொருளை அறியக்கூடிய பொருளாக கொண்ட ஆத்மஞானம்  பிறப்பற்றதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது,
அஜேன அஜம் – பிறவாத பிரம்மத்தை, பிறவாத ஆத்மஞானத்தால்
விபுத்யதே – அடைகின்றான், அறிகின்றான்

ப்ரசக்ஷதே – என்று கூறுகிறார்கள்.  பிரம்மத்தை அடைந்தவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்

துரிய ஆத்மாவில் இந்த மூன்றும் (விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன்) ஒன்றாக இருக்கின்றது.  இதைத்தவிர மற்ற அறிவில் இந்த மூன்றும் தனித்தனியாக இருக்கும்.

காரிகை34
நிக்ருஹீதஸ்ய மனஸஹ – ஒழுங்குபடுத்தப்பட்ட மனதையுடைய
நிர்விகல்பஸ்ய தீ4மதஹ – ஆத்ம ஞானத்தை அடைந்த மனதையுடைய
ஸஹ ப்ரசாரஹ விக்ஞேய – தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸுஷுப்தெ அன்யஹ – ஆழ்ந்த உறக்கத்தில் வேறுவிதமான தன்மை உடையது மனம்
ந தத் ஸமஹ – ஞானநிஷ்டையுடையவனின் மனம், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மனதிற்கு இணையானதல்ல.
 

ப்ரசாரஹ என்ற சொல்லின் விளக்கம்:

ஆத்ம ஞானம் அடைந்த மனம் எப்படியிருக்கும் என்பதை விசாரம் செய்யப்படுகின்றது.  காரில் இருக்கும்  பின்னால் வரும் வண்டிகளை பார்க்க உதவும் கண்ணாடியை 1. பின்பக்கம் வரும் வண்டிகளை பார்க்கவும், 2. ஒரு பொருளாக பார்ப்பதற்கு, 3. தன்னுருவையே பார்ப்பதற்கு என்று  மூன்று வகையாக பயன்படுத்துகின்றோம்.  இதேபோல மனமும் மூன்று நிலைகளாக செயல்படுகின்றது. அவைகள்

  1. பிற விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும்
  2. தியானத்தின்போது ஒரு பொருளாகவும்’
  3. அக்ஞானத்தின் போது மனமே நாமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்.


இந்த மூன்று நிலைகளிலும் மனமானது இன்ப-துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஆத்ம ஞானியின் மனம் செயலற்றதாக இருக்கும். ஏனென்றால் அவன் தன்னை பிரம்மனாகவே உணர்ந்திருக்கின்றான், அவனுக்கு தன்னுடைய மனதுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவனாக இருக்கின்றான்.


காரிகை35
லீயதே ஹி ஸுஷுப்தே தத் – ஆழ்ந்த உறக்கத்தில் மனமானது ஒடுங்கியிருக்கின்றது, உறங்கிக் கொண்டிருக்கின்றது
நிக்ருஹீதம் ந லீயதே – ஞானத்தினால் ஒடுக்கப்பட்ட மனமானது உறங்கவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் மனம் அறியாமை என்ற இருளினால் மூடப்பட்டிருக்கின்றது, பிரம்மத்தினிடம் இருந்து கொண்டிருக்கும்
ததேவ நிர்பயம் ப்ரஹ்ம – ஞானியின் இந்த மனமே பயமற்ற பிரம்மன்தான்.  பிரம்மத்தை அறிந்தவன், உணர்ந்தவன் பிரம்மனாகவே இருக்கின்றான்.
ஸமந்ததஹ ஞான ஆலோகம் – ஞான என்கின்ற ஒளி வியாபித்து இருக்கின்றது

காரிகை36
அஜம் – பிறப்பற்றது ( நான் பிறப்பற்றவன் ) – ஸ்தூல சரீரம் அற்றவன்
அநித்ரம் – உறக்கமற்றது ( நான் உறக்கமற்றவன் ) – அறியாமை நீங்கப் பெற்றது
அஸ்வப்னம் – கனவுகளில்லாதது,
அவித்யா காரிய ரஹிதம் – விக்க்ஷேபமில்லாதவன்
அநாமகம் அரூபகம் – இந்த நாம ரூபமுடைய ஜகத்தும் இல்லை
ஸக்ருத்விபாதம் – எப்பொழுதும் ஒளிவீசுகின்ற தத்துவம்
ஸர்வக்ஞம் – அனைத்தையும் அறிந்தவன், அனைத்துமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. தனக்கு வேறாக எதுவும் இல்லாதது.
ந உபசார கத2ஞ்சன – ஞான நிஷ்டை அடைந்தவனுக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.

காரிகை37
இதில் ஞானியினுடைய லக்ஷணம் கூறப்படுகின்றது
ஸர்வ அபிலாபவிகதஹ – இந்திரியங்கள் எதுவும் இல்லாதது.
அபிலாபஹ – வாக்கு கரணம்;
விகதஹ – இல்லாதது.
அக்ஞானிக்கு எல்லா இந்திரியங்களிடம் அபிமானம் வைத்திருப்பதால் அதற்கு வரும் இன்ப-துன்பங்கள் அவனை பாதிக்கின்றது.  ஞான நிஷ்டை அடைந்த ஜீவன் முக்தன் எதிலும் அபிமானமற்றவனாக இருப்பதால் எதனாலும் பாதிப்பதில்லை.
ஸர்வ சிந்தா ஸமுத்தி2தஹ – அந்தக்கரணமும் இல்லாதவனாக இருக்கின்றான்.
ஸுப்ரஶாந்தஹ – எப்பொழுதும் முழுமையான அமைதி வடிவுடையவன்
ஸக்ருத் ஜோதிஹி – எப்பொழுதும் ஒளி வீசிக்கொண்டிருப்பவன்.  அறிவு ஸ்வரூபமாக இருப்பவன்
ஸமாதி4ஹி – ஜீவனும், ஜீவனுடைய உபாதிகளும் எதில் வேற்றுமையின்றி கலந்திருக்கின்றதோ அதுவே பிரஹ்ம நிலை
அசலஹ – மாற்றமற்றவன்; மாற்றங்கள் எதுவுமில்லாதவன்
அபயஹ – பயமற்றவன்

காரிகை38
ஞானிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எதுவுமில்லை. அது ஏனென்று இதில் விளக்கப்படுகின்றது.  நம்முடைய செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதலாவது எதையாவது அடைதல், சேர்த்து கொள்ளுதல், எடுத்துக் கொள்ளூதல், இரண்டாவது விலக்குதல், நீக்குதல்.  இந்த இரண்டில் ஒன்றில்தான் நாம் செய்யும் அனைத்து செயல்களும் அடங்கி இருக்கின்றது.  நம்முடைய அபிமானம் இந்திரியங்கள், அந்தக்கரணத்தில் இருக்கும்வரை நம்மை செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். ஞானிக்கு இவைகளிடத்தில் உள்ள அபிமானம் நீங்கப்பெற்றவனாக இருக்கின்றான்.  பிரம்மனாகவே இருக்கின்றான்.  எனவே செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாத நிலையில் இருப்பான்.  பிரம்மனிடத்தில் எதையும் சேர்க்கவும் தேவையில்லை, நீக்கவும் தேவையில்லை.  எனவே பிரம்மனாகவே இருக்கும் அவன் செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாதவனாக இருக்கின்றான்.

க்ரஹ ந த்த்ர ந உத்ஸர்கஹ – அந்த பிரம்மனிட்த்தில் எதையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது.  அதனால் பிரம்மனாக தன்னை உணர்ந்த ஞானிக்கு செயல்கள் எதுவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
சந்தா யத்ர ந வித்யதே – மனம் அதிலுள்ள எண்ணங்கள் எதுவும் பிரம்மனிடத்தில் இல்லை
ஆத்ம ஸம்ஸ்தம் த்தா ஞானம் – பிரம்ம ஞான நிஷ்டையில் இருக்கும் ஞானியின் அறிவு ஆத்மவிடத்திலே, தன்னிடத்திலே ஒடுங்கியிருக்கும்.
அஜாதி ஸமதாம் கதம் – பிறப்பற்ற நிலையை அடைந்து விட்டான்.

காரிகை39
அஸ்பர்ஶயோகஹ வை நாம – ஆத்ம ஞானத்திற்கு, பிரம்மத்திற்கு அஸ்பர்ஶயோகம் என்று பெயரிடப்படுகின்றது
யோகஹ – ஆத்ம ஞானம், ஜீவனை பிரம்மனாக ஐக்கியப்படுத்தும் ஞானம்
அஸ்பர்ஶ – சம்பந்தமற்றது,
அஸங்கஹ – எதனோடும் ஒட்டாதது
ஞானியை எதனோடும் சம்பந்தப்படுத்தும் சக்தி எதற்கும் கிடையாது. அவன் எங்கிருந்தாலும் எதனோடும் சம்பந்தப்படாமல் அஸங்கனாக இருப்பான்.  பாரிவிராஜன் என்கின்ற சந்நியாஸி மூன்று இரவுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கி இருக்க கூடாது. இது சந்நியாஸியாக இருப்பவனுக்கு இருக்கின்ற முக்கியமான நியமம்.  இது ஞான நிஷ்டையடைந்த பிறகு இந்த நியமம் அவனுக்கு கிடையாது.
துர்தர்ஶஹ – மிகவும் கடினம்
ஸர்வயோகிபிஹி – எல்லா யோகிகளும், சாதகர்களும் இந்த ஞானத்தை அடைந்து நிலை பெறுவது
யோகினோ பிப்யதி அஸ்மாத் – இந்த ஆத்ம ஞானத்தின் சம்பந்தமற்ற நிலையை கண்டு யோகிகள் பயப்படுகிறார்கள்
அபயே பயதர்ஶினஹ – பயமற்ற நிலையை தரும் ஞானத்தைக் கண்டு பயப்படுகின்றார்கள். பயமற்ற பிரம்மனிடத்தில் பயத்தை பார்க்கின்றார்கள்.

காரிகை40
ஞானப்பலனை அடைவதற்கு மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம் என்று கூறப்படுகின்றது.  மேலும் இத அடைவதற்கு வேறு மார்க்கம் இல்லை.
மனோ நிக்ரஹம் – மனத்தூய்மை, நுண்ணியமனம், மன ஒருமுகப்பாடு இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் மனதினால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்
மனஸஹ நிக்ரஹ ஆயத்தம் – மனதினுடைய கட்டுப்பாட்டை சார்ந்திருக்கின்றது ஆத்ம ஞானமும் அதில் நிலை பெறுவதும்
ஸர்வயோகினாம் – எல்லா ஸாதகர்களுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு யாருக்கும் கிடையாது.

ஞானத்தின் பலன்கள்:
அபயம் – பயமற்ற நிலை;
துக்க க்ஷயம் – துயரமற்ற நிலை
ப்ரபோ3த4ச – ஸ்திதப்ரக்ஞன் – அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்கும் நிலை
அபி அக்ஷய ஶாந்தஹ ஏவ ச – மேலும் என்றும் அழியாத மன அமைதியும் கூட இவைகள் அனைத்தும் மனோநிக்ரஹத்தினால் அடையப்படுகின்ற பலன்கள்.

காரிகை41
மனோ நிக்ரஹத்தை அடைய முக்கிய நிபந்தனை சொல்லப்படுகின்றது.  விடாமுயற்சியினால்  இதை அடைய முடியும்.  இந்த முயற்சியில் அடையும் பலன் இறுதியில்தான் கிடைக்கும்.  எனவே மனம் தளராமல் இடையில் விட்டுவிடாமல் தொடர்ந்து பலன் அடையும் வரை முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.

யத்வத் உத்தே உத்ஸேக – எவ்விதம் கடல் நீரை வற்றிபோக செய்ய முயற்சி செய்கின்றதோ
குஶ அக்ரேன ஏக பிந்துகா – சிறிய புல்லினுடைய நுனியில் ஒரு துளி கடல் நீரை கொண்டு வந்து நிலத்தில் விட்டு, கடல் நீரை வற்ற வைக்கும் முயற்சியை
பவேத் அபரிகே2தஹ – இடைவிடாத முயற்சி செய்யப்பட்டதோ
த த்வத் – அதுபோல இடைவிடாத முயற்சியினால்
மனஸஹ நிக்ரஹ பவேத் – மனக்கட்டுப்பாட்டை அடைய முடியும்
 

காரிகை42

மனதை கட்டுபடுத்தும் முயற்சிக்கு, தியானத்திற்கு தடையாக வருபவைகளை நீக்குவதைத்தான் நாம் விடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்.  யோக சாஸ்திரத்தில் நான்கு வகையான தடைகள் கூறப்பட்டிருக்கின்றது.  அவைகள்

  1. விக்ஷேபம்,
  2. லயம்,
  3. கஷாயம்,
  4. ரஸாஸ்வாதஹ.

இந்த காரிகையில் இரண்டு தடைகளை பற்றி கூறுகின்றது.

  1. விக்ஷேபம்– மன சஞ்சலம் – நாம் எதை மறக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதுதான் திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கும்.  இரண்டு விதத்தில் இந்த விக்ஷேபம் வரும். அவைகள்
  2.    காமக்ருதஹ – காமத்தினால் வரும் விக்‌ஷேபம்.  ஒரு பொருளை அனுபவிப்பதற்கு முன்னாலே அதன் மீது இருக்கும் ஆசை மனதை அலைகழிக்கும். 
  3.    போக க்ருதஹ – நாம் அனுபவித்ததையே சிந்தித்து கொண்டிருத்தல், வாஸனா ரூபமாக இருந்து கொண்டு மனதை அலைகழிக்கும்.

உபாயேன நிக்ருணீயாத் விக்ஷிப்தம் காம போ4கயோ – சொல்ல போகின்ற விஷயத்தை சரியான முயற்சியுடன் செய்து காமத்தினாலும், போகத்தினாலும் விக்‌ஷேபம் அடைந்த மனதை கட்டுபடுத்தி அமைதியடைய செய்ய வேண்டும்.

  1. லயம்:சோம்பல், உறக்கம், விருப்பமற்ற நிலை

ஸுப்ரஸன்னம் லயே – சோம்பலினாலும், உறக்கத்தினாலும் மனம் அமைதியடைந்து விடும். இதையும் விடாமுயற்சியுடன் சரியான வழியில் முயற்சி செய்து நீக்க வேண்டும்.

யதா காமோ லயஸ்ததா2 – எவ்விதம் ஆசையானது நமக்கு துயரத்திற்கு காரணமாக இருக்கின்றதோ அவ்விதமும் லயம் துயரத்திற்கு காரணமாகின்றது.

 

காரிகை43
இதில் விக்‌ஷேபம் என்ற தடையை நீக்குவதற்கான வழி சொல்லப்படுகிறது. வைராக்கியமும்,  ஞானமும் வழிகளாக சொல்லப்படுகின்றது. உலகத்திலுள்ள பொருட்களின் மீதுள்ள பற்று, மற்றவர்களிடமிருந்து, எதையாவது எதிர்ப்பார்த்தல் ஆகியவைகளிலிருந்து வைராக்கியம் அடைய வேண்டும். இதை எப்படி அடைய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

துக்கம் ஸர்வம் – உலகத்திலுள்ள அனைத்தும் துயரமானது, துயரத்தைக் கொடுக்கக்கூடியது
அனுஸ்ம்ருத்ய – இதை திரும்ப திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்று சுகத்தைக் கொடுக்க கூடிய பொருள் வேறொரு காலத்தில் துயரத்தை கொடுப்பதாக இருக்கும் என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.  இதிலிருந்து எந்த பொருளுக்கும் நிரந்தரமாக சுகத்தை கொடுக்கும் சக்தி கிடையாது என்று புரிந்து கொள்ளலாம்
காம போ4கா4த நிவர்தயேத் – ஆசைகளை அனுபவிப்பதிலிருந்து நம்மை விலக்கி கொள்ள வேண்டும்
இதேப்போன்று பொருட்களின் நிலையற்ற தன்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.  சுகத்தைக் கொடுக்கின்ற பொருட்களுக்கு அடிமையாகி விடுவோம், நம்முடைய சுதந்திரத்தை பறித்து விடும். எவ்வளவு அனுபவிக்கின்றோமோ அதேயளவு துயரத்தையும் அனுபவிக்க நேரிடும்.

காம-போகாத் விசாரம்
காமம்       – ஆசைபட்ட விஷயத்திலிருந்தும்
போ4கா3த்    – அனுபவிக்கபட்டு கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும்
காம போகாத் – ஆசையினால் தூண்டபட்டு அனுபவிக்க நினைக்கும் விஷயத்திலிருந்தும் நம்மை நீக்கி கொள்ள வேண்டும்.
எந்தப்பொருள் மீது நமக்கு பற்றில்லையோ அதிலிருந்து நமக்கு எந்த துயரமும் வராது.  வைராக்கியத்தை அடைந்தாலும் மனது விக்‌ஷேபத்தை அடையலாம்.  இதை நீக்குவதற்கு ஞான அப்யாஸத்தினால் பார்க்கும் எல்லாமே ஈஸ்வரம் ஸ்வரூபம், பிரஹ்ம ஸ்வரூபம் என்று நினைத்து பழக வேண்டும்.
அஜம் ஸர்வம் – அனைத்தும் பிறப்பற்ற பிரஹ்ம ஸ்வரூபமே என்று
அனுஸ்ம்ருத்ய – மீண்டும், மீண்டும் நினைத்து பார்க்க பழக வேண்டும்
ஜாதம் ந ஏவ பஷ்யதி – பொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும் உலகத்தை அவன் நிலையென்று பார்ப்பதில்லை, ஏனென்றால் அது ஈஸ்வர ஸ்வரூபமாக அவனுக்கு தெரிந்து கொண்டிருக்கும்.
 

காரிகை44

லயே ஸம்போ4தயே சித்தம் – மனதை உறக்கம் வரும் நேரத்தில் எழுப்ப வேண்டும். தியானம் செய்யும் போது நான்கு தடைகள் வரும். அவைகள் நித்ரா சேஷஹ, அஜீரம், பஹூஅஸனம், ஸ்ரமஹ.

  1. நித்ரா சேஷஹ – தேவையான அளவு உறக்கத்தை இல்லாமல் தியானத்தை செய்தல்
  2. அஜீரம் – உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் இந்த நிலை
  3. பஹூ அஸனம் – அதிக அளவு சாப்பிட்டாலும் இந்த நிலை
  4. ஸ்ரமஹ – அதிகமாக உழைத்து விட்டும் தியானம் செய்யக்கூடாது

சங்கரரின் 5வது காரணம் – விருப்பமின்றி தியானம் செய்ய அமரும் போதும் தடை வரும்
விக்ஷிப்தம் ஶமயேத் புனஹ – மீண்டும் மனது விக்‌ஷேபத்தை அடைந்தால் அதை மேற்கூறியவாறு ஒழுங்குபடுத்த வேண்டும்.
 

மனமானது எப்பொழுதும் இரண்டு நிலைகளில் இருந்து கொண்டிருக்கும். அவைகள்

  1. விருப்பு-வெறுப்புக்களுடன் வாஸனா ரூபமாக ஸம்ஸ்காரமாக இருந்து கொண்டு இருக்கும்
  2. நாமிருக்கும் சூழ்நிலைகளுக்கேற்றவாறும் இருக்கும்


மனமானது வாஸனா ரூபமாக இருக்கும் ராக-துவேஷத்துடன் சம்பந்தப்பட்டு ஒருவிதமான மந்த நிலைக்கு வந்திருக்கும்போது விக்‌ஷேபமும், லயமும் இருக்காது ஆனால் எதையும் செய்ய விருப்பமில்லாமல் மந்தமாக இருக்கும்.  எதனால் மனம் இப்படி இருக்கிறது என்றும் நம்மால் அறிய முடியாது. இந்த நிலையையே கஷாயம் என்று கூறப்படுகின்றது. இது மூன்றாவது தடையாக இருக்கிறது. 


ராக பிரதிபந்தம் – வாஸனா ரூபமாக இருந்து கொண்டிருக்கும் ராக-துவேஷங்களின் பிடியில் மனம் கட்டுண்டு இருக்கும் நிலை.
ஸகஷாயம் – மனதானது கஷாயம் என்ற நிலையில் இருக்கும் போது

விஜானீயாத் – அந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

  • இந்த நிலையையே சமாதி, சரியான தியானம் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.  ஏனென்றால் இந்த நிலையில் நாம் எதையும் செய்யாமல் மந்தமாக இருப்பதால் இவ்வாறு நினைக்க தோன்றும்.
  • இந்த நிலையிலிருந்து வெளிவர முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனமானது அதுவாக வெளிவரும் வரை பொறுமையாக இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

ஸமப்ராப்தம் ந சாலயேத் – இந்த மூன்று தடைகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியடைந்தால் அந்த நிலையில் உறுதியாக இருக்கும்வரை வைத்து பழக வேண்டும்.

காரிகை45
நான்காவது தடையான ரஸா ஆஸ்வாதஹ ( சுகத்தை அனுபவித்தல்). தியானத்தில் கிடைக்கும் சுகத்தையே அனுபவிப்பதையே தடையாக கூறப்படுகின்றது.  இந்த தடையை மேற்கூறிய மூன்று தடைகளிலிருந்தும் விடுபட்டவனால்தான் அனுபவிக்க நேரிடும்.  தியானத்தில் மூன்று தடைகளை நீக்கிய ஒருவனுக்கு நான் பிரம்மன் என்ற அறிவோடு அமைதியாக இருப்பான்.  இந்த நிலையில் மனம் ஒருமுகப்பட்டு இருக்கும்.  இதுவே மனதிற்கு அமைதியை, சுகத்தை, ஆனந்தத்தை கொடுக்கும்.  இந்த சுகத்தையே ரஸம் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதை மனது அனுபவிக்க ஆரம்பித்து விட்டால் அதுவே தியானத்திற்கு தடையாக இருக்கும்.

நானே ஆனந்த ஸ்வரூபம், நான் ஆனந்தத்துடன் இருப்பதற்கு வேறெதுவும் தேவையில்லை என்ற ஞானத்துடன் தியானத்திலே இருக்கும். மனம் ஒருமுகப்பட்டு ஆனந்தம் ஏற்படும் போது அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் ஸ்வரூபமான நிலையிலிருந்து போக்தாவாக மாறி விடுகின்றோம்.  தியானத்தின் குறிக்கோளை அடையும் முற்சியில் இருந்து விலகி விடுகின்றோம்.

ந ஆஸ்வாதயேத் ஸுகம் தத்ர  – தியான நேரத்தில் வரும் சுகத்தை அனுபவிக்க கூடாது.
நிஸங்கஹ பவேத் – அந்த சுகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ப்ரக்ஞயா – விவேகத்தினால், அறிவின் துணைக் கொண்டு இந்த சுகமும் நிலையற்றது, தற்காலிகமானது என்ற அறிவுடன்

இத்துடன் தியானத்திற்கு வரும் தடைகளையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் சொல்லி முடித்து விட்டார்.

நிஸ்சலம் நிஸ்சரத் சித்தம் – அமைதியை அடைந்து அசைவற்றிருக்கும் மனமானது வெளியே சென்றால், சஞ்சலமடைந்தால்
ப்ரயத்தனதஹ – விடாமுயற்சியுடன், சரியான முயற்சியுடன்
ஏகி குர்யாத் – மீண்டும் ஒருமுகப்படுத்த வேண்டும்.

காரிகை46
இதில் மனதில் அமைதியான ஸ்வரூபம் சொல்லப்படுகின்றது.
யத ந லீயதே சித்தம் – எப்பொழுது மனமானது உறங்கவில்லையோ, லயம் என்ற தடையற்ற நிலையில் இருக்கும்போது, கஷாய தடையும் நீங்கி இருக்கும் நிலையில்
ந விக்‌ஷிப்யதே புனஹ – எந்தவித சஞ்சலமில்லாமல் இருக்கும் நிலையில், அமைதியான சுகத்தையும் அனுபவிக்காத நிலையில் இருக்கும்போது
அனிங்கனம் – அசைவற்று இருக்கின்ற மனம், ( தீபத்தின் சுடர் காற்றில்லாத இடத்தில் எவ்வாறு அசைவற்று இருக்குமோ அதுபோல இருக்கும் மனது )
அனாபாஸம் – எந்த விஷயத்தோடும் சம்பந்தப்படாமல் இருக்கும்
ததா தத் – அப்பொழுது அந்த மனமானது
நிஷ்பன்னம் பிரஹ்ம – பிரம்ம ரூபமாக இருக்கின்றது
 

காரிகை47
இதில் நிதித்யாஸன சாதனத்தையும், அதில் வெற்றியடைந்த சாதகன் எப்படி இருப்பான் என்றும் கூறப்படுகின்றது
உத்தமம் சுகம் – மேலான சுகம், பேரின்பம்
ஸ்வஸ்தம் – தன்னிடத்திலே இருத்தல் (இந்த நிலையில் அனுபவிக்கும் சுகமே மேலானது)
ஶாந்தம் – அமைதி, துயரமற்ற நிலை, அனைத்து துயரங்களும் சென்றுவிட்ட நிலை
ஸ நிர்வாணம் – மோக்ஷ ஸ்வருபமானது, மோட்ச நிலை
அகத்யம் – வாயால் சொல்ல முடியாத சுகத்தை அனுபவித்தல், இந்த சுகத்தை அனுபவிப்பவர்களால்தான் உணர முடியும்.
அஜம் – பிறவாத பிரஹ்ம சுகமானது இந்த நிலை
அஜேன ஞேயன அபின்னம் – பிறப்பற்றதும், அறியத்தக்கதுமான பரம்பொருளுடன் வேறுபடாத நிலை
ஸர்வக்ஞம் (ஸர்வம் ச ஞம் ச ) – அறிவுமாகவும், அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை
பரிசக்ஷதே – பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.
 

காரிகை48
ஏதத் தது உத்தமம் ஸத்யம் – இதுவரையில் விளக்கப்பட்ட பிரம்மமானது மேலான ஸத்யமாக இருக்கின்றது
கஸ்சித் ஜீவஹ ந ஜாயதே– எந்தவொரு ஜீவனும் பிறக்கவில்லை
ஸம்பவஹ அஸ்ய ந வித்யதே – இந்த ஜீவனுக்கு காரணம் இல்லை
யத்ர கிஞ்சித் ந ஜாயதே – எதனிடத்தில் எதுவும் பிறக்கவில்லையோ அதுதான் உத்தமமான ஸத்யம்
பிரம்மன் எதற்கும் உபாதான, நிமித்த காரணமாக இல்லை, அதேபோல அதற்கு எதுவும் உபாதான, நிமித்த காரணமாகவும் இல்லை.

 

நிதித்யாஸனம்:

  • அமனீபாவஹ – மனதை மனமற்றதாக மாற்றுதல், இதனால் சம்சாரம் விலகிவிடும்
  • ஞானத்தினால் அமனீபாவம் – இந்த மனமற்ற தன்மையை ஆத்மஞானத்தினால்தான் அடைய முடியும்
  • உறக்கம், சமாதி இவைகளுக்கும், அமனீபாவத்திற்கும் உள்ள வேற்றுமை
  • ஞானியின் ஸ்வருபமும், பிரம்மத்தினுடைய ஸ்வரூபமும் ஒன்றே
  • ஞானத்தை அடைந்த நிலைபெற்ற ஞானிக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை
  • அஸ்பர்ஷ யோகஹ என்ற பெயரால் பிரம்மம் அழைக்கப்பட்டது
  • விடாமுயற்சி தேவை, நான்கு தடைகளும் அதை நீக்கும் வழிகளையும் விளக்கப்பட்டது
  • மோட்சத்தை அடைந்த ஞானியின் மனநிலை

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி6

4வது பிரகரணம் – அலாதி ஶாந்தி – மனன கிரந்தம்

 அலாதம் – தீப்பந்தம்

அலாத ஶாந்தம்  – தீப்பந்தம் செயல்படாமல் இருந்து விட்டால் அதிலிருந்து எந்த உருவங்களையும் தோற்றுவிக்க முடியாது

ஜகத்தின் மித்யாத்வத்தை மீண்டும் இதில் விளக்கப்படுகின்றது.  மற்ற பிரகரணத்தில் செய்யப்பட்ட அத்வைத ஸித்தி இதிலும் வேறு முறையில் செய்யப்படுகின்றது.  த்வைதிகளின் கருத்துக்களை நீக்கி அதன்மூலம் இது நிச்சயிக்கப்படுகின்றது.

மூன்றுவித அறிவினால் அடைந்த அறிவில் உறுதியாக இருக்க முடியும். அவைகள்

  1. எது சரி, எது தவறு என்ற அறிவு
  2. எதனால் இது சரியான அறிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும்
  3. எப்படி இது தவறு என்ற அறிவு

 சிரவணத்தினால் எது சரி (அத்வைதம்) எது தவறு (த்வைதம்) என்ற அறிவு வரும். இதற்கு சிரத்தை மிகவும் அவசியம்.  எந்தவொரு அறிவுக்கும் இரண்டு தடைகள் வருவதுண்டு.  அவைகள் சம்ஸ2யஹ (சந்தேகம்), விபர்யயஹ ( விபரீத பாவனை – ஸம்ஸ்காரங்கள்)

  • சந்தேகத்தை நீக்குவதற்கு மனனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.  சந்தேகமற்ற அறிவு திடமானதாக இருக்கும்.
  • விபரீத பாவனையை நீக்குவதற்கு நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.  அவிவாதம் – தேவையில்லாத வாதம், வாதத்தினால் எந்த அறிவையும் கொடுக்க முடியாது
  • அறிவுடையவனுக்கு வாதிபயம் இருந்து கொண்டிருக்கும், இந்த பயத்தை மனனம் மூலம் போக்கி விட முடியும்
  • மனனம் மூலம் தவறான கருத்துடையவர்களை திருத்த வேண்டும் என்ற உந்துதல் இருக்காது
  • யாரிடமும் வாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது.

 காரிகை1

எந்த ஞான ரூபமான ஈஸ்வரன் எங்கும் வியாபித்திருக்கின்ற ஆகாசத்தை போல உள்ள ஞானத்தினால் ஜீவர்களை அறிகின்றாரோ, அறிய வேண்டியவைகளை சரியான அறிவினால், அறிய உதவுவது ஆத்மஞானம் ஒன்றுதான் இருக்கின்றது என்று புரிய வைக்கின்றார்.  அந்த ஈஸ்வரனை மேலான இரண்டு கால்களையுடைய மனிதர்களுக்குள் உத்தமனாக இருக்கின்றவர் (புருஷோத்தமன் என்பதே இவ்வாறாக அழைக்கப்படுகின்றது ) அவரை வணங்குகின்றேன்

 ஞானரூபமான நாராயணன் ஞானரூபமான ஜீவனை அறிந்திருக்கின்றார்.  ஜீவனை தனக்கு வேறாக கருதாமல் தன் ஸ்வரூபமே அவர்கள் என்று அறிகின்றார்.  அந்த நாராயணனை மனிதர்களில் உத்தமரான புருஷோத்தமனை வணங்குகின்றேன்.

 காரிகை2

இந்த காரிகையில் அத்வைத நாமத்தை நமஸ்கரிக்கின்றார்.

அஸ்பர்ஷ யோகம் என்ற பெயருடைய ஆத்ம ஞானம்.  இது அனைத்து ஜீவர்களுக்கும் சுகத்தை கொடுப்பது, ஞான யோகம் என்கின்ற சாதனத்தை பயன்படுத்தும்போதும் சுகமாக இருக்கும், அதனால் கிடைக்கும் பலனும் சுகமான இருக்கும்.  உதாரணமாக சாப்பிடும் போதும் சுகம், பசி அடங்கியது சுகமாக இருக்கும்.  எவைகளெல்லாம் சுகத்தை கொடுக்கின்றதோ அவைகளெல்லம் நன்மையைக் கொடுக்காது.  ஆனால் ஆத்மஞானம் சுகத்தையும், நன்மையையும் கொடுக்கும். இது விவாதத்திற்கு அப்பாற்பட்டது, வாதத்தினால் அடைய முடியாது.  எதற்கும் முரண்படாதது, எதனுடன் விரோதம் கொள்ளாது. சாஸ்திரம் மூலமாக குரு-சிஷ்ய பரம்பரையாக உபதேசிக்கப்படுகின்றதுமான இதை வணங்குகின்றேன்.

 காரிகை3

ஸத்காரிய வாதம் – இருப்பது தோன்றியதா? 

அஸத்காரிய வாதம் – இல்லாதது தோன்றியதா?

 இருப்பதினுடைய பிறப்பை கொள்கையாக உடையவர்கள், விரும்புபவர்கள் இருக்கின்றார்கள்

சிலர்தான் இவ்வாறு சொல்கின்றார்கள் அவர்களை சாங்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.  வேறு சில அறிவுடையவர்கள், இல்லாததிலிருந்து தோன்றுகின்றது என்று சொல்கிறார்கள்.  இவ்வாறு ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 காரிகை4

அஸத்கார்யவாதி சொல்கின்றான், எந்தவொன்றும் ஏற்கனவே இருக்கின்ற நிலையிலிருந்து பிறக்காது. ஏற்கனவே அது இருப்பதனாலேயே அது பிறப்பதில்லை, உதாரணமாக பிரம்மன்.  இல்லாததிற்கு பிறப்பு என்பது கிடையாது என்று ஸத்காரியவாதி வாதிடுகின்றான்.  அது இல்லாமல் இருக்கின்ற காரணத்தினாலே பிறப்பு என்பது ஒன்று நிகழாது உதாரணமாக முயல்கொம்பு போல என்று வாதிக்கின்றான்.  மேற்கண்டவாறு விவாதித்து கொண்டிருப்பவர்கள் இருமைவாதிகள், த்வைதிகள் அவர்களுக்கே தெரியாமல் பிறப்பற்ற தத்துவத்தைத்தான் நிலை நாட்டுகின்றார்கள்.

 காரிகை5

இருமைவாதிகளின் வாதத்தினால் நிரூபிக்கபட்ட எதுவும் தோன்றவில்லை என்ற முடிவை அத்வைதிகளான நாம் சரியென்று ஏற்றுக் கொள்கின்றோம்.  அவர்களுடன் வாதம் செய்யமாட்டோம். மேலும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், எதுவும் பிறக்கவில்லை என்பதை வாதத்தினால் நிலை நாட்ட முடியாது.

 காரிகை6

அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹ – எதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்

அஜாத அம்ருத பா4வ – பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்

மர்த்யதாம் கதம் ஏஷ்யத் – எப்படி மரணத்தை அடையும்?

 பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.

 காரிகை7

அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்.  ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.

 ந பவதி அம்ருதம் மர்தியம்  – அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது

மர்த்யம் அம்ருதம் த்தா4     – அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.

ப்ரக்ருதே அன்யதா பா4வஹ – ஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது

கதஞ்சித் ந ப4விஷ்யதி       – எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.

 காரிகை8

  1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹ– மோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்
  2. ப்ரதிக்ஞா ஹானி– முதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்

யஸ்ய – இந்த கருத்துப்படி

ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹ – இயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.

கச்சதி மர்த்யதாம் – மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.

தஸ்ய – இப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )

க்ருதகேன அம்ருதஹ – மரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்

கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதி – எப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.

இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.

 காரிகை9

பிரக்ருதியின் குணத்தை இதில் கூறுகின்றார்

ஸாம்ஸித்3தி4ஹி – என்றுமுள்ளது, அடையப்படாதது.  சில யோகிகள் பிறக்கும்போது சில சக்திகளுடன் பிறந்திருப்பார்கள்.  அதை அவர்கள் எந்த முயற்சி செய்தும் அடையவில்லை.  அது அவர்களுடைய சுபாவமாக இருக்கும் அதற்குதான் ஸாம்ஸித்தி என்று பெயர்.

ஸ்வாபவிகி – எப்பொழுதும் ஒன்றோடு இயற்கையிலே இருந்து கொண்டுவருவது.  உதாரணமாக நெருப்பிடம் இருக்கும் சுடும் தன்மை எப்பொழுதும் அதனோடு இருந்து கொண்டிருப்பது போல

ஸ்ஹஜா – சேர்ந்தே இருப்பது ( பறவைகளிடத்தில் இருக்கும் பறக்கும் சக்தி )

அக்ருதா – செய்யப்படாதது (உ-ம்) நீரானது பள்ளத்தை நோக்கி ஒடுவது போல

சயா – இப்படி இருக்கும் எந்தவொன்று

ப்ரக்ருதி இதி விஞேய – ப்ரகிருதி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

யா ஸ்வபாவம் ந ஜஹாதி – இதன் அந்த தன்மை மாறாமல் என்றுமிருக்கும்

 காரிகை10

ஜீவர்கள் உண்மையில் ஸ்வரூபமாக வயோதிகம், மரணம் போன்ற எதுவும் இல்லாதவர்கள், அதாவது சம்சாரம் அற்றவர்கள்.  ஆனால் வயோதிகமும், மரணமும் இருப்பதாக நினைக்கின்றார்கள்.  அந்த தவறான எண்ணத்தினால் வீழ்ச்சி அடைந்து சம்சாரத்தை அனுபவிக்கின்றார்கள்.

காரிகை11

  1. இல்லாததிலிருந்து தோன்றியது இந்த ஸ்ருஷ்டி என்பது அஸத்காரியவாதம்
  2. நான்கு காரணங்களைக்கூறி இது தவறு என்று நிரூபிக்கப்படுகின்றது. அவைகள்,

2.1.   ஸ்ருதி பிரமாண அபாவாத் – வேதாந்த பிரமாணம் இதற்கு கிடையாது.  அஸத்திலிருந்து எப்படி ஸத் தோன்ற முடியும்.

2.2.   நம் உடல் ஆறுவித மாறுதல்களை அடையக்கூடியது அவைகள் அஸத்-இருத்தல், ஜாயதே-பிறத்தல், வர்ததே-வளர்தல், விகாரஹ-மாறுகின்றது, தேய்கின்றது, விநஷ்யதி-அழியக்கூடியது  பா4வ விகாரங்கள் இருக்கின்ற ஒன்றினுடைய விகாரங்கள் பிறத்தல் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது

2.3.   இலக்கணத்தில் அடிப்படையிலும் நீக்கப்படுகின்றது.  இலக்கணத்தில் உள்ள வினைச்சொல் கர்த்தாவோடு சேர்ந்துதான் பொருள் கொடுக்கும்.  எனவே செயலுக்கு கர்த்தா கட்டாயம் தேவை.  பிறந்தது என்ற வினைச்சொல் கர்த்தாவை சொல்ல வேண்டும்.  கர்த்தா என்பது இல்லாதது என்று சொல்ல முடியாது, இருப்பதைத்தான் சொல்ல முடியும்

2.4.   வ்யாகாத தோஷம் – முரண்பாடாக பேசுவது. இல்லாதது, இருக்கின்றது

இந்த நான்கு காரணங்களால் அஸத்காரிய வாதம் நீக்கப்படுகின்றது

 ஸத்காரியவாத விளக்கம்:

  • இருப்பதுதான் பிறக்கின்றது.. ஏற்கனவே இருப்பது ஏன் பிறக்க வேண்டும். என்ற கேள்விக்கு இருத்தல் என்பது இரண்டு விதத்தில் இருக்கும்.  அவைகள் வெளித்தோற்றத்திற்கு வராதது, வெளித்தோற்றத்திற்கு வந்தது.  இதனால் இது சாத்தியமாகின்றது
  • தோன்றிய உலகமான இந்த காரியம், அவ்யக்தமாக காரணத்தில் இருந்தது
  • வெளித்தோற்றத்திற்கு வந்ததைதான் பிறக்கின்றது என்று கூறுகின்றோம்.
  • இது பரிணாம வாதத்தோடு ஒத்துப்போகின்றது
  • காரண காரியம் இரண்டும் ஒன்றுதான், ஆனால் இரண்டு அவஸ்தைகள் உண்டு.

 அத்வைதியின் ஸத்காரியவாத பார்வை

  • எல்லா நிலைகளிலும் இதை நீக்கவில்லை, சிலவற்றைத்தான் ஏற்றுக்கொள்கின்றோம்.
  • ஜகத்-மாயா இரண்டுக்குமிடையே உள்ள சம்பந்தம் ஸத்காரிய வாதத்தை ஒத்து இருக்கின்றது
  • காரியமான இந்த உலகம் மூன்றுவிதமான குணங்களை உடையது.  சத்வ, ரஜஸ், தமஸ் என்கின்ற இந்த மூன்று குணங்கள் மாயையில் உண்டு.  ஏனென்றால் காரியத்தில் எவ்வளவு குணங்கள் உண்டோ அதே அளவுதான் காரணத்திலிருக்கும் என்பது நியதி
  • ஜகத்துக்குள்ளே காரண-காரியம் என்ற நியதியை பார்க்கின்றோம். அதுவும் ஸத்காரியத்தை ஒத்துதான் இருக்கின்றது.
  • மாயை பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது.  எனவே இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்ற கேள்விக்கு அஜாதி வாதத்தை முன்வைக்கின்றோம்.
  • பிரம்மம்-மாயை என்கின்ற விஷயத்தில் ஸத்காரிய வாதத்தை பயன்படுத்தினால், பிரம்மமே பரிணாமத்தை, மாற்றத்தை அடைந்து மாயையாக மாறிவிடும் நிலை ஏற்படும்.  இது பிரம்மத்தின் உண்மையான ஸ்வரூபத்திற்கு முரணாக உள்ளதால் இது சரியாக இருக்காது. எனவே இந்த சம்பந்தம் விவர்த்த சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.  எந்தவொன்று தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல், தன் மீது வேறொன்றை தோற்றுவிக்கின்றதோ அதற்கு விவர்த்த வாதம் என்று பெயர். கயிற்றில் தோன்றும் பாம்பு இதற்கு உதாரணமாக இருக்கின்றது.  எனவே பிரம்மம் விவர்த்த காரணமாக இருக்கின்றது.  எது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை மித்யா என்று சொல்கின்றோம்.  மாயையிலிருந்து தோன்றிய அனைத்தும் மித்யாவாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.
  • ஸாங்கிய மதத்தின் கொள்கை
  • ஜகத் என்பது படைக்கபட்டது
  • படைக்கப்பட்ட ஜகத் சத்யம்,தோன்றி கொண்டிருக்கின்ற இந்த உலகம் உண்மை
  • காரணம் என்பது ஒரு பிரதானம்
  • பிரதானத்திற்கு இரண்டு தன்மைகள் உண்டு. 1.பிறப்பற்றது, 2. நித்யம்
  • காரிய-காரணமும் ஒன்றுதான்,ஆனால் அவஸ்தா பேதங்கள் உண்டு.

 காரிகையின் விளக்கம்:

எவர்களுடைய (சாங்கியர்கள்) மதக்கொள்கைப்படி காரணமே காரியமாக இருக்கின்றதோ அப்படிபட்ட கொள்கையின்படி காரணமானது பிறந்ததாக இருக்கின்றது.  இது அந்த கொள்கைக்கே முரண்பாடாக இருக்கின்றது.  காரியம் பிறந்தது என்றும், காரியமும் காரணமும் ஒன்று என்று சொன்னால் காரணமும் பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும்.  அப்படிபட்ட பிறக்கின்ற காரணம் (பிரதானம்) எப்படி பிறப்பற்றது என்று சொல்கின்றாய்? இது பிறப்பற்றதாகத்தான் இருக்க முடியும்.  அந்த மாற்றத்தை அடைகின்ற பிரதானம் எப்படி நிலையானதாக இருக்க முடியும், இருக்க முடியாது.

 

  • ஸத்காரிய வாதத்தில் காரணம் மாற்றத்தை அடையலாம்
  • எது மாற்றத்தை அடைகின்றதோ அது பிறப்பற்றது என்று கூறமுடியாது
  • அது நித்யம் என்றும் சொல்ல முடியாது.

 

காரிகை12

காரணத்திலிருந்து ஒருவேளை காரியம் வேறுபடாமல் இருந்தால், காரியமானது பிறப்பற்றதாகி விடும். ஒருவேளை பிறக்கின்ற காரியத்திலிருந்து காரணம் வேறுபடவில்லையென்றால் உன்னுடைய காரணம் எப்படி பிறப்பற்றதாகும், நித்யமாக இருக்கும்.

 

காரிகை13

காரண-காரிய வாதத்திற்கு மூன்று நிலைகள் இருக்கலாம். அவைகள்

  1. காரணம் பிறப்பற்றது – காரியம் பிறப்பற்றது
  2. காரணம் பிறப்பற்றது – காரியம் பிறப்பது
  3. காரணம் பிறப்பது – காரியமும் பிறப்பது

முதல் நிலையில் உள்ளது இயலாத காரியம். இரண்டாவதும் தவறு என்று நீக்கப்படுகின்றது. மூன்றாவதிற்கு இதன் மூலகாரணம் அடையவே முடியாது என்று நீக்கப்படுகின்றது.

 ஸாங்கியர்களின் கொள்கைப்படி பிறப்பற்ற காரணத்திலிருந்து இந்த உலகம் தோன்றுவதாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு எந்தவித பிரமாணமும் இதை உறுதிசெய்வதற்கு இல்லை.  பிறக்கின்ற காரணத்திலிருந்து காரியம் பிறக்கின்றது.  இதை தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்.  மூலகாரணத்தை அடையவே முடியாது.

 காரிகை14

கேள்வி      கர்மபலன்கள் – சரீரம்- காரண-காரியமாகத்தான் இருக்கின்றது.  இந்த சரீரம் தோன்றுவதற்கு காரணம் கர்மபலன்கள்தான். சரீரத்திலிருந்து பாவ-புண்ணியங்கள் தோன்றியது. சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு கூறப்படுகிறது. இந்த கர்ம சரீரம் அநாதியாக இருக்கின்றது.  இந்த இரண்டின் அடிப்படையில்தான் தோன்றியிருக்கும் பிரபஞ்சம் சத்யமானது.  எந்த இரண்டு பொருளுக்குமிடையே காரண-காரியம் என்ற சம்பந்தமே இருக்க முடியாது என்பது சித்தாந்தம்.

 

பதில்   கர்ம-சரீரம், காரண-காரிய சம்பந்தம் அநாதி என்று நிலை நாட்ட முடியாது.  எவர்களுடைய கருத்துப்படி கர்மத்திற்கு (கர்ம பலன்கள்) காரணம் உடல்தான் என்றும், சரீரத்திற்கு காரணம் கர்மபலன்கள் என்றும் இருக்கின்றதனால், கர்மத்திற்கும், உடலுக்கும் அநாதி என்று எப்படி அவர்களால் கூறமுடியும்..  எனவே உடலும், கர்மமும் அநாதியல்ல அவைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உடலிலிருந்து கர்மபலனும் கர்மபலனிலிருந்து உடலும் தோன்றிக் கொண்டிருப்பதால் அநாதி என்று சொல்ல முடியாது.

 

காரிகை15

கர்மத்திற்கு காரணம் உடலாகவும், உடலுக்கு காரணமாக அதே கர்மபலன்கள் இருக்கின்றது என்ற கருத்துக்கு மகனிடமிருந்து தந்தை பிறந்தார் என்ற நிலை ஏற்படும்

 

காரிகை16

கர்மத்திற்கும் சரீரத்திற்கும் அல்லது காரண-காரியமானது சம்பவிக்க வேண்டுமென்றால் ஸ்ருஷ்டி கிரமமானது உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.  ஒருவேளை இந்த கிரமத்தை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டும் சேர்ந்தே தோன்றியது என்று சொன்னால் இந்த இரண்டிற்கும் காரண-காரிய இருக்கின்றது. மாட்டின் இரண்டு கொம்புகள் சேர்ந்து ஒன்றாக தோன்றுவது போல

 

காரிகை17

பலாது உத்பத்யமானஹ ஸன் – இப்பொழுது இருக்கின்ற சரீரத்திலிருந்து,  வரப்போகின்ற கர்மம் என்ற இப்போது இல்லாமலிருக்கின்ற நிலையிலிருந்து

தே ஹேது ந ப்ரஸித்4யதி – உன்னுடைய கர்மம் இன்னும் தோன்றவில்லை

அப்ரஸித்3த4ஹ கர்த ஹேது – தோற்றத்திற்கு வராத கர்மபலன்

கத4ம் பலம் உத்பாயிஷ்யதி – எப்படி சரீரத்தை தோற்றுவிக்கும்.

 

காரிகை18

ஒருவேளை உடலிலிருந்து கர்மத்தினுடைய தோற்றம், கர்மத்திலிருந்து உடலின் தோற்றம் இந்த மாதிரி கொள்கையிருந்தால் இரண்டில் எது முதலில் தோன்றியது.  எந்த கர்மத்தினுடைய இருத்தலை முன்னிட்டு சரீரத்தின் தோற்றத்தை நீ கூறமுடியும் அல்லது எந்த உடலினுடைய இருத்தலை வைத்து கர்மத்தின் தோற்றத்தை சொல்ல முடியும்.

 

காரிகை19

உனக்கு பதில் சொல்வதற்கு சக்தி இல்லை.  போதுமான அறிவில்லாததால் இந்த நிலை.  மாற்றி மாற்றி பேசுகின்றாய்.  மீண்டும் மீண்டும் இதற்கு இவ்விதம் இருக்கின்ற காரணத்தால் எல்லாநிலைகளிலும் அறிவாளியான உங்களால் பிறப்பற்ற தத்துவமானது விளக்கப்பட்டுள்ளது

 

காரிகை20

விதை-செடி உதாரணம் எப்பொழுதும் சந்தேகத்திற்குரியது. நிச்சயம் செய்யப்பட வேண்டியதாக இருக்கின்றது.  மூலகாரணத்தை முடிவு செய்யப்பட முடியாது. நிச்சயம் செய்ய முடியாத உதாரணத்தை காரணத்தை நிரூபிக்க வேண்டிய விஷயத்தில் பயன்படுத்தக்கூடாது.  இந்த பீஜாந்திர உதாரணம் உன்னுடைய கொள்கைக்கு பொருந்தி வராது.

 

காரிகை21

இது முன்னே வந்தது, இது பின்னே வந்தது.  இந்த அறிவே அஜாத வாதமானது அரைகுறை ஞானத்தை நிரூபிக்கின்றது.  காரண-காரிய இந்த இரண்டை பற்றிய ஞானம் இருந்தால் இந்த சம்பந்தத்தை சொல்லக் கூடாது.

 

காரிகை22

மூலகாரணம் தெரியாமலே இந்த உலகம் காரியம் என்று சொல்கிறார்கள்.  பிறக்கின்ற காரியத்திற்கு முன் இருப்பது காரணம் அறியப்படவில்லை என்று எப்படி நீ சொல்ல முடியும்.

தன்னிடத்திலிருந்து ஒன்றை தோற்றுவிக்க முடியுமா? தனக்கு வேறாக உள்ள ஒன்றிலிருந்து தோன்ற முடியுமா?  இரண்டிலுமிருந்தும் தோன்ற முடியுமா? எந்த பொருளும் தோன்ற முடியாது, பிறக்காது. இருத்தல், இல்லாதது, இருந்தும் இல்லாததும் இவை மூன்றிலிருந்தும் எந்த பொருளும் தோன்றாது, பிறக்காது.  இருப்பது பிறக்காது, இல்லாததலிருந்து எதுவும் தோன்ற முடியாது.  இருப்பதும் இல்லாததும் சேர்ந்து எதையும் தோற்றுவிக்க முடியாது.

 

காரிகை23

காரணமானது பிறக்கவில்லை, தோன்றவில்லை, இல்லாததினால் மித்யாவை குறிக்கின்றது. என்றும் இருப்பதையும், எப்பொழுதும் இல்லாததும் குறிக்கின்றது.  காரணத்தினுடைய தன்மையாக காரியம் இருப்பதால் காரியமும் தோன்றவில்லை.  எனவே யாருடைய கருத்துப்படி காரணம் என்பது இல்லையோ அவருடைய கருத்துப்படி பிறப்பும் இல்லை என்ற கருத்து நிலை நாட்டபடுகின்றது.

 

காரிகை24

புத்த மதத்தில் உள்ள நான்கு பிரிவுகளின் விளக்கம்:

  1. ஹீனயானம் – வெளியே உள்ள உலகம் உண்மையாக இருக்கின்றது

1.1.   வைபாஸிகம் – வெளியே உள்ள பொருட்கள் பிரத்யக்‌ஷ பிரமாணத்தினால் அறியப்படுகின்றது

1.2.   சௌத்ரந்திகம் – வெளியே உள்ள பொருட்கள் அனுமான பிரமாணத்தினல் அறியப்படுகின்றது

  1. மஹாயானம் – வெளியே உள்ள பொருட்கள் உண்மையில் கிடையாது.

2.1.   யோகாச்சாரஹ –  இவர்களே ஷணிகவிக்ஞானவாதிகள் – வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நம்முள்ளே இருக்கும் சைதன்யம், விக்ஞானம் உண்மையானது.  அந்த விக்ஞானத்தின் ஸ்வரூபம் ஷணிகம். அது ஒவ்வொரு நொடிக்கும் அது மறைந்து தோன்றுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் நதியில் பார்த்துக் கொண்டிருக்கும் நீர் மாறிக் கொண்டே இருக்கின்ரது.  இந்த விக்ஞானம் உருவத்துடன் கூடியது.  மனதில் தோன்றும் மாறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் உருவத்துடன் கூடியதாக இருக்கின்றது.

2.2.   ஸூன்யவாதி – பிரமாணம், பிரமாதா, பிரமேயம் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.  வெளியே உள்ள பொருட்கள் இல்லையென்று சொல்லும்போது மற்ற இரண்டும் சேர்ந்து இல்லாது போவதால் ஒன்றுமே இல்லாத நிலை ஏற்படுகின்றது.  கற்பூரம் எவ்வாறு எரிந்து முடிந்ததும் ஒன்றுமே இல்லாததாக போகின்றதோ அதுபோல என்று கூறுகிறார்கள்.

 

இந்த காரிகையில் ஹீனயான மதவாதிகளின் கொள்கையை கூறப்பட்டிருக்கின்றது.

ஹேது1: விருத்திக்கு விஷயம் இருந்தாக வேண்டும், என்ற நியமித்தினால்

ஹேது2: விதவிதமான சுக-துக்கங்களை அனுபவிப்பதனால் வெளியே உள்ள விஷயங்கள் சத்யமாக இருந்தாக வேண்டும்,

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் அன்யதா த்வயனாசஶதஹ – மனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்.  இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

ஸங்க்லேஷேயஸ்ய உபலப்தே – துயரங்கள் முதலிய அனுபவங்கள் இருப்பதாலும் வெளியே இருக்கும் பதார்த்தங்களும் சத்யமாகத்தான் இருக்க வேண்டும்,

பரதந்த்ரம் – வேறு மதங்களால் ( ஹீனயான மதத்தினரால் கருதப்படுகின்ற)

அஸ்திதா மதா – வெளியே பொருட்கள் இருக்கின்றது என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

 

காரிகை25

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் இஷ்யதே – எண்ணத்திற்கு, மனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்.  இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

யுக்தி தர்ஷனாத் – ஓரளவு அறிவை பயன்படுத்தி இதை தெரிந்து கொள்ளலாம்.

நிமித்தஸ்ய அநிமித்தத்வம் இஷ்யதே – அந்த விஷயங்களே வெளி விஷயங்களுக்கு இல்லாத தன்மை என்ற கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

பூத தர்ஶனாத் – உண்மையின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் பானையில் தோற்றதின் அடிப்படையில் எவ்வளவு பானை இருக்கின்றதோ அத்தனை எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் களிமண் என்ற வஸ்துவின் அடிப்படையில் ஒரு விஷயம்தான் பல விஷயங்களாக இருக்கின்றது.  எனவே எண்ணங்களுக்கு விஷயங்களே இல்லை என்று நிரூபணமாகின்றது.  அதேப்போன்று கனவில் பார்க்கும் விஷயங்கள் உண்மையில் இல்லை ஆனால் எண்ணங்கள் மட்டும்தான் இருக்கின்றது.

 

காரிகை26

பூ.பக்ஷி அறியப்பட வேண்டிய விஷயம் இல்லையென்றால் அறிவும் இருக்காது.  அறிவானது பொருளை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பதில்:   விக்ஞானம் (ஷனிக விக்ஞானிகளின் சைதன்யம்) வெளிப்பொருட்களை தொடுவதில்லை.  வெளி விஷயங்கள் போன்று தோன்றுவதையும் தொடுவதில்லை.  எந்த காரணத்தினால் வெளிவிஷயங்கள் கிடையாதோ, பொய்யான வெளி விஷயங்கள் கிடையாதோ, தெரிகின்ற அனைத்தும் சைதன்யத்தில் இருந்து வேறாக எதுவும் கிடையாது.  கனவில் பார்க்கப்படும் பொருட்கள் இருந்தாலும் பார்ப்பவனை தவிர வேறெதுவுமில்லை.

 

காரிகை27

பூ.பக்ஷி கனவில் பார்க்கும் பொருட்கள் கயிற்றில் பார்க்கும் பாம்பை போல பொய்யானவை.  கனவில் தோன்றும் பொருட்கள் விழிப்பு நிலையில் அனுபவித்த பொருட்களின் பொய்யான தோற்றங்கள்.  இதிலிருந்து உண்மையான பொருட்கள் அனுபவித்ததனால்தான் பொய்யாக அவைகள் தெரிகின்றது இல்லையென்றால் அவ்வாறு தோன்ற முடியாது. விழிப்பு நிலை பொருட்களும் பொய்யென்று சொன்னால் அதற்கு அதிஷ்டானமாக அதைப்போல் உண்மையான பொருட்கள் எங்கேயோ இருக்க வேண்டும்.

பதில்    இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.  ஆனால் இதற்கு விதிவிலக்கும் இருக்கின்றது.  ஒரு பொய்யிக்குபின் பொய்யும் இருக்கலாம்.  உதாரணமாக இருளில் நடந்து செல்லும்போது வழிகாட்டி மரத்தை பேய் என்று நினைத்து பயந்துவிடுவது.  இந்த பயத்திற்கு மூலகாரணமான பேயும் பொய்யான ஒன்றாக இருக்கின்றது.  எனவே ஜாக்ரத் விஷயங்கள் பொய்யாக இருக்கின்றது அவற்றிற்கு மூலகாரணம் பொய்யான பொருட்களும் இருக்கலாம்.

 

காரிகையின் விளக்கம்:  சைதன்யத்திடம் தவறுதல் என்பது கிடையாது.  உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ பார்த்திருப்பதால்தான் தவறு நேரிட முடியும்.  உதாரணமாக குருடனுக்கு இந்த உலகத்தை சரியாக, தவறாக பார்க்கின்றான் என்ற கருத்துக்கே இடமில்லை.

நிமித்தம் ச ந ஸதா3 சித்தம் ஸம்ஸ்ப்ருஶதி – சைதன்யம் பொருட்களை எப்பொழுதும் தொட்டதில்லை, தொடுவதுமில்லை.

அதவசு த்ரிஷு – மூன்று காலங்களிலும்

அனிமித்தஹ விபர்யாஸஹ – தவறு நேரிடுவதற்கு பொருட்களே கிடையாது

கதம் தஸ்ய ப4விஷ்யதி – அதற்கு எப்படி தவறுதல் ஏற்படும்?

 

காரிகை28

தஸ்மாத் – ஆகவே

ந ஜாயதே சித்தம் – சைதன்யம் பிறக்கவில்லை, பிறப்பதுமில்லை

சித்த த்ருஷ்யம் ந ஜாயதே – சைதன்யத்தினால் அனுபவிக்கும் பொருட்களும் பிறக்கவில்லை; அதாவது வெளியே உள்ள பொருட்களும் தோன்றவில்லை. அவைகள் உண்மையில் தோன்றவில்லை. இருப்பது போல காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது.  எனவே அவைகளை மித்யா என்ற வேதாந்தம் கூறுகின்றது.  ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கின்றது என்றாலும், ஒன்றைப்போல் வேறொன்று இருக்கின்றது என்றாலும்.  இவைகளை வேறொன்று பார்த்துக் கொண்டிருக்கும்.  அதுதான் என்றும் மாறாமல் நித்யமாக இருக்கின்ற சைதன்யம்.  நீங்கள் சொல்கின்ற சைதன்ய லட்சணம் எண்ணங்களைத்தான் குறிக்கின்றது. சைதன்யம்தான் பிறந்து, இறக்கின்றது, மீண்டும் பிறக்கின்றது என்று சொல்வது எண்ணங்களைத்தான் குறிக்கின்றது.

 

தஸ்ய பஶ்யந்தி யே ஜாதிம் – க்ஷணிக விக்ஞானிகளில் குறிப்பிடுகின்ற சைதன்யத்தின் பிறப்பைப் பார்க்கின்றார்களோ

கே வை பஶ்யந்தி பதம் – அவர்கள் மார்க்கத்தைதான் ஆகாசத்தில் பார்க்கின்றார்கள்.  அதாவது ஆகாசத்தில் பறந்து செல்லும் பறவைகள் சென்ற அடையாளத்தை பார்க்கின்றார்கள். உண்மையில் இது சாத்தியமில்லை.  வெறும் கற்பனையில்தான் இவ்வாறு நினைக்க முடியும்.  அதேபோல பிறப்பற்ற சைதன்யத்திடம் பிறப்பை பார்ப்பவன் வெறும் கற்பனையாகத்தான் இவ்வாறு சொல்ல முடியும்.

 

காரிகை29

அஜாதம் ஜாயதே யஸ்மாத் – எதனால் பிறப்பற்ற சைதன்யம் பிறக்கின்றது என்று சொல்பவர்களால் கருதப்பட்டு வருகின்றதோ

தத அஜாதி ப்ரக்ருதி – அதனால் பிறப்பற்றது என்பது அதன் ஸ்வருபம்

ப்ரக்ருதி அன்யதா பாவ – ஒரு பொருளின் ஸ்வரூபம் மாற்றமடைதல்

ஸ கதஞ்சன பவிஷ்யதி – ஒருபொழுதும் நடைபெறாது.

 

காரிகை30

பந்தமும் மோக்ஷமும் மித்யா என்று விளக்கப்படுகின்றது.

விசாரம்:

பந்தமும், மோக்ஷமும் ஸத்யம் என்று சொல்வதால் இரண்டு வகையான தோஷங்கள் வரும்.

  1. ஸம்சார அநிவிருத்தி – சம்சாரம் நீங்காது இருத்தல்
  2. மோட்சம் நிவிருத்தி பிரசங்கஹ – மோட்சம் நீங்காதிருத்தல்

 

இந்த குறைகள் நீங்க வேண்டுமென்றால் இந்த இரண்டையும் மித்யா என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் கிரமம் சொல்ல வேண்டும்.  எது முதல், எது இரண்டாவது என்ற வரிசை சொல்ல வேண்டும், சம்சாரம் முதலில் வந்தது, மோட்சம் பிறகு வந்தது என்ற கிரமத்தைத்தான் சொல்ல முடியும்.  இந்த சம்சாரம் காரணத்திற்குட்பட்டு வந்ததா அல்லது எந்த காரணமில்லாமல் வந்ததா?  எந்தவொன்றிற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.  எனவே சம்சாரத்திற்கு காரணம் இருந்தாக வேண்டும்,  காரணமில்லாமல் எதுவும் நடக்காது.

எவையெல்லாம் காரணத்தினால் வந்திருக்கின்றதோ அவைகளெல்லாம் அதனுடைய ஸ்வரூபம் அல்ல.  சூடான நீர் எப்படி சுடுகின்றது என்றால் நெருப்பினால் சூடேற்றப்பட்ட பிறகுதான் அதில் உஷ்ணம் வருகின்றது.  எனவே உஷ்ணம் என்பது நீரின் ஸ்வரூபம் அல்ல என்று தெரிகின்றது.  ஜீவனிடம் இருக்கும் பந்தமானது காரணத்தால் வந்திருந்தால் பந்தம் என்பது அவனுடைய ஸ்வரூபம் அல்ல, பந்தம் சத்யமில்லாததாகி விடும்.  இதற்கு பந்தம் என்பது அநாதி என்று வாதம் செய்தால், அநாதியான பந்தம் நீங்கினால் மோட்சம் கிடைக்கின்றது.  எனவே மோட்சம் தோன்றுகின்றது என்ற நிலை ஏற்படும்.  இப்படி சொல்வதால் ஒரு குறை வரும்.  அநாதியாக இருக்கும் ஒன்றிற்கு அழிவே வராது. எனவே சம்சாரம் நீங்காது.  மோட்சம் தோன்றுகிறது என்று சொல்வதால் மோட்சம் அழிந்து விடும்.

 

அனாதே அந்தவத்வம் ச ஸம்ஸாரஸ்ய ந ஸேத்ஸ்யதி – அநாதி காலமாக சம்சாரத்திற்கு முடிவு என்பது ஏற்படாது.

அனந்ததா ச அதிமதஹ மோக்‌ஷஸ்ய ந பவிஷ்யதி – தோற்றத்தை உடைய மோட்சத்திற்கு என்றும் இருத்தல் என்பது நடைபெறாது

எனவே இரண்டும் மித்யாவாகத்தான் இருக்க முடியும்.  சம்சாரம் என்பது மித்யா என்ற அறிவே மோட்சத்தைக் கொடுக்கும்.

 

காரிகை31

ஆதாவந்தே ச யது நாஸ்தி – தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாதது

வர்தமானெ அபி தத் ததா  – இப்பொழுதும் இல்லை.

விததைஹி ஸ்த்ருஶாஹா – பொய்யான பொருட்களுக்கு சமமாக

அவித்தா இவ லக்ஷிதாஹ – அக்ஞானிகளால் உண்மையாக இருப்பது போல

கருதப்படுகின்றது

இங்கு பந்தம், மோட்சம் இல்லாததென்று நிரூபிக்கப்படுகின்றது. பந்தத்திற்கு முடிவும், மோட்சத்திற்கு தோற்றம் இருப்பதால் அவைகள் உண்மையாக இல்லை.  ஆனால் பொய்யாக இருப்பது போல் தோற்றமளிக்கின்றது.

 

காரிகை32

பூ.பக்ஷி கனவில் அனுபவிக்கபடும், பார்க்கப்படும் பொருட்கள் நமக்கு பயன்படுவதில்லை. பயனை கொடுப்பது ஸத்யம், பயனைக் கொடுக்காதது மித்யா என்று எடுத்துக் கொள்ளலாம்

பதில்    கனவில் பொருட்கள் கனவுநிலையில் பயன்படுகிறது.  ஆனால் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லை.  அதேபோல விழிப்பு நிலையில் உள்ள பொருட்கள் கனவு நிலையில் பயன்படுவதில்லை.  எனவே பொருளின் பயன்பாட்டை வைத்து ஸத்யம்-மித்யாவை நிரூபிக்க முடியாது.

பூ.பக்ஷி  மோட்சம் அனுபவிப்பதற்குரிய விஷயமாக இருக்கின்றது. அதேபோல பந்தம் துக்கம் என்ற பலனை உடையது, மோட்சத்தினால் சுகம் என்ற பலனை அடைகின்றோம். எனவே அவைகள் மித்யா என்று எப்படி சொல்ல முடியும்.

பதில்    பந்தமும், மோட்சமும் பலனைக்கொடுத்தாலும் அவைகள் ஸத்யமல்ல.

 

ஸப்ரயோஜனதா தேஷாம் ஸ்வப்னே விப்ரதிபத்யதே – ஜாக்ரத் நிலையில் உள்ள பொருட்கள் பயனை உடையது என்ற தன்மை கனவு நிலையில் முரண்பாடாக இருக்கின்றது. அவைகள் பயன்படவில்லை.

தஸ்மாத் ஆத்யந்தவத்த்வே மித்யைவ கலு தே ஸ்ம்ருதா – ஆகவே எந்த பொருளுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றதோ அவைகள் மித்யாவாக கருதப்படுகின்றது.

 

காரிகை33

கனவை உதாரணமாக கொண்டு சைதன்யத்திற்கு விஷயமேதுமில்லை என்றும், அது மட்டும் தான் இருக்கின்றது என்றும் விளக்கபடுகின்றது.  த்ருக்-த்ருஷ்யம் என்ற விசாரத்தில் இறுதியாக த்ருஷ்யம் என்பது கிடையாது. த்ருக்தான் த்ருஷ்யமாக காட்சியளிக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் பார்ப்பவனை தவிர வேறில்லை. இவனே அனைத்துமாக தெரிந்து கொண்டிருக்கின்றான்.  விழித்தவுடன் அவைகள் அவன் சித்தத்தில் ஒடுங்கி விடுகின்றன.  அதேபோலதான் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களும் பார்ப்பவனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஸர்வே தர்மா ஸ்ம்ருஷா ஸ்வப்னே – கனவில் இருக்கின்ற எல்லா பொருட்களும் பொய்யானவை (மித்யா)

காயஸ்ய அந்தஹ நிதர்ஶனாத் – ஸ்தூல ஸரீரத்திற்குள்ளே பார்க்கப்படுவதனால்

ஸம்வ்ருதே அஸ்மின் ப்ரதேஶே வை – குறுகிய இந்த உடலுக்குள்

பூதானாம் தர்ஶனம் குதஹ – விதவிதமான ஜீவராசிகளின் தோற்றம் எப்படி காட்சியளிக்க முடியும். எனவே இவைகள் அனைத்தும் மித்யா.

 

காரிகை34

பூ.பக்ஷம்  கனவில் பார்க்கும் பொருட்களை நாம் நம் உடலுக்குள் பார்க்கவில்லை ஆனால் அவைகள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்திருக்கலாம் அல்லவா?

பதில்     இது சாத்தியமில்லை. தேவையான காலம் இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லை.  மேலும் கனவில் எங்கு சென்றிருந்தாலும், எழுந்திருக்கும்போது எங்கு கனவு கொண்டு இருந்தோமோ அங்கேதான் இருக்கின்றோம்.

 

ந யுக்தம் தர்ஶனம் கத்வா – கனவில் வேறொரு இடத்திற்கு சென்று பொருட்களை பார்ப்பது சாத்தியமில்லை, பொருந்தாது.

காலஸ்ய அனியமாத் கதௌ – பயணம் மேற்கொள்வதற்கு தேவையான காலம் குறைவாக இருப்பதனால்

பிரதிபுத்தஶ்ச வை ஸர்வஹ – விழித்துக்கொண்ட அனைவரும்

தஸ்மின் தேஶே ந ப்ரபத்யதே – கனவு நடந்த இடத்தில் இருப்பதில்லை.

 

காரிகை35

மித்ராத்யைஹி ஸஹ ஸம்மந்த்ரய – அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்

ஸம்பூத்தோ ந ப்ரபத்யதே – விழித்ததும் அவர்களை அவன் பார்ப்பதில்லை.

க்ருஹீதம் ச அபி யத் கிஞ்சித் – எந்தப்பொருட்களையாவது கனவில் வாங்கியிருந்தால்

பிரதிபுத்த ந பஶ்யதி – விழித்ததும் அவைகள் அவனிடம் இருப்பதில்லை.

 

காரிகை36

ஸ்வப்னே ச அவஸ்துகஹ காயஹ – கனவில் காணும் உடல்கள் உண்மையல்ல

ப்ருதக் அன்யஸ்ய தர்ஶனாத் – அதற்கு வேறான ஜாக்ரத் உடல்களை பார்க்கின்றோம்.

யதா காயஹ ஸதா ஸர்வம் – எப்படி கனவு பொருட்களோ அப்படித்தான் அனைத்தும்

சித்தம் த்ருஶ்யம் அவஸ்துகம் – சைதன்யத்தினால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் உண்மையல்ல சைதன்யம் மட்டும்தான் உண்மையானது.

 

காரிகை37

பூ.பக்ஷம் காரணம் ஸத்யம், காரியம் மித்யா என்று கூறப்பட்டது.  பானையில் காரணமாக இருக்கும் களிமண் ஸத்யம், பானை மித்யா. ஸ்வப்ன பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது ஜாக்ரத் பிரபஞ்சம். எனவே ஜாக்ரத் காரணமாக இருப்பதால் அவை ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்.

பதில்     ஜாக்ரத் பிரபஞ்சம் காரணமாக இருப்பினும் அது மித்யாதான். உதாரணமாக துணிக்கு காரணம் நூல், அது துணிக்குத்தான் ஸத்யமாக இருக்கின்றது ஆனால் அதே நூல் பஞ்சிற்கு காரியமாக இருப்பதால் அது மித்யாவாகின்றது.  எனவே ஒன்று மூலகாரணமாக இருந்தால் அது ஸத்யமாக இருக்கும்.,  இடைப்பட்ட காரணமாக இருந்தால் அது மித்யா.  அதுபோல ஸ்வப்னத்திற்கு காரணமாக இருக்கும் ஜகத் ஸ்வப்னத்துக்கு ஸத்யம் ஆனால் அதுவே பிரம்மத்திற்கு காரியமாக இருப்பதால் மித்யாவாகும்.

 

தத் தேது ஸ்வப்ன இஷ்யதி – ஜாக்ரத் பிரபஞ்சத்தை காரணமாக கொண்டது ஸ்வப்ன பிரபஞ்சம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது

ஜாகரிதவத் க்ருஹணாத் – ஜாக்ரத் பிரபஞ்சத்தை போல கனவானது அனுபவிக்குப்படுவதால்

தத் தேத்வாத் – கனவுக்கு மட்டும் காரணமாக இருப்பதனால்

தஸ்யைவ – கனவுக்கு மட்டும்

ஸத் ஜாக்ரதிம் இஷ்யதே – ஜாக்ரத் சத்யம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.  இதிலிருந்து அறிந்து கொள்வது ஜாக்ரத் எல்லாவற்றிற்கும் காரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பிரம்மத்திற்கு இது காரியமாக இருக்கின்றது என்று உபநிஷத் கூறுவதால் அது மித்யாவாகின்றது.  பிரம்மத்தின் பார்வையில் இது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை38

ஜாக்ரத் பிரபஞ்சம் கனவு பிரபஞ்சத்திற்கு காரணமே இல்லை என்று நிலை நாட்டப்படுகிறது. எந்த இரண்டிற்கும் காரண-காரிய சம்பந்தம் சத்யமானதல்ல என்று நிலை நாட்டப்பட்டது.

உத்பாதஸ்ய – பிறப்பிற்கு, தோற்றத்திற்கு

அப்ரஸித்த4த்வாத்3 – நிலைநாட்டபடாத காரணத்தினால், ஜாக்ரத் சத்யம் அல்ல

அஜம் ஸர்வம் உதா3ஹ்ருதம்– அனைத்தும் பிறப்பற்ற பிரம்ம தத்துவம் என்று விளக்கப்பட்டது.

பூதாத் அபூதஸ்ய சம்பவஹ – இருப்பதிலிருந்து இல்லாததனுடைய தோற்றமானது

கதஞ்சன ந அஸ்தி – எந்த விதத்திலும் நடக்காது

 

காரிகை39

பூ.பக்ஷி ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்கிறீர்கள், பிறகு காரணம் இல்லை என்றும் சொல்கிறீர்கள், இதில் எது சரி?

பதில்    ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்லும்போது அதை மித்யாவான காரணம் என்றுதான் சொல்கின்றோம்.  காரணம் இல்லை என்று சொல்லும்போது அது பிரம்மனுக்கு காரியமாக இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

 

அஸத் ஜாக்ரிதே திருஷ்டவாத் – ஜாக்ரத் அவஸ்தையில் பொய்யான பொருட்களை பார்த்து

ஸ்வப்னே பஷ்யதி தன்மயஹ – இந்த பொய்யான பொருட்களையே அதன் ஸ்வரூபமாக கனவில் பார்க்கின்றோம்.

இதிலிருந்து பொய்யான ஜாக்ரத் பிரபஞ்சத்தை கனவிலும் பார்க்கின்றோம் என்று தெரிய வருகின்றது.

 

.பூ.பக்ஷி பொய்யான கனவு பிரபஞ்சத்தை ஏன் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கவில்லை?

பதில்    அதுபோல நாம் அனுபவிப்பதில்லை. கனவு பிரபஞ்சத்தை பிராதிபாஸிக சத்யம் என்றும் ஜாக்ரத் பிரபஞ்சத்தை வியாவஹாரிக சத்யம் என்று ஸத்தா பேதத்தை விளக்கி இருக்கின்றோம்.

 

அஸத் ஸ்வப்னே அபி த்ருஷ்ட்வா ச – பொய்யானதை கனவில் பார்த்தாலும் கூட

ப்ரதிபுத்தோ4 ந பஷ்யதி – வித்துவான்கள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்ப்பதில்லை.

 

காரிகை40

எந்த விதத்திலும் எந்த பதார்த்தத்திற்கும் காரண-காரிய சம்பந்தத்தை நிலை நாட்ட முடியாது.

இந்த காரிகையில் நான்கு விதமான காரண-காரிய சம்பந்தத்தை கூறுகின்றார். இவைகள் சாத்தியமில்லை என்று அறிய முடிகின்றது.

  1. அஸத் காரணம் – அஸத் காரியம் – முயல் கொம்பிலிருந்து ஆகாய தாமரை தோன்றியது
  2. அஸத் காரணம் – ஸத் காரியம் – இதுவும் சம்பவிக்காது.  இல்லாத களிமண்ணிலிருந்து பானைகள் தோன்ற முடியாது.
  3. ஸத் காரணம் – ஸத் காரியம் – ஸத் காரிய வாதத்தில் நீக்கிய விசாரத்தில் இது நடக்காது என்று நிரூபிக்கபட்டது. களிமண் இருக்கின்றது, களிமண்ணை எடுத்துவிட்டால் காரியமான பானைகள் அங்கு இருக்காது.
  4. ஸத் காரணம் – அஸத் காரியம் – இது சம்பவிக்காது.  பிரம்மன் ஸத்யம் காரணம் – காரியமான ஜகத் மித்யா.

பிரம்மன் எதற்கும் காரணமல்ல ஏனென்றால் அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று உபநிஷத் கூறியுள்ளது.

 

நாஸ்தி அஸத்தே4துகம் அஸத் – இல்லாததை காரணமாக கொண்ட இல்லாத ரூபமான காரியம் சம்பவிக்காது.

ததா4 அஸத்தே4துகம் ஸத் – அதேபோல இல்லாத காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் சம்பவிக்காது.

ஸத் ச ஸத்தே4துகம் நாஸ்தி – இருக்கின்ற காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் தோன்ற முடியாது

ஸத்தே4துகம் அஸத்தே4ஹ – இருக்கின்ற காரணம் – இல்லாத காரியம் சம்பவிக்காது;

மேலே கூறப்பட்ட கருத்துக்களிலிருந்து காரண-காரிய சம்பவம் என்பதே நடக்காது என்று அறிந்து கொள்ளலாம்.

 

காரிகை41

விபர்யாத் – அத்யாஸம் – காட்சிபிழை;

அசிந்தியான் – சிந்திக்கவே முடியாத பொருட்கள்

விபர்யாஸாத் யதா4 ஜாக்ரத் அசிந்தியான் –  எவ்வாறு விழிப்பு நிலையில் தவறுதலினால் பொய்யான (மித்யா) பொருட்களை ( கானல் நீர், கயிற்றில் தோன்றும் பாம்பு)

பூதவத் ஸ்ப்ருஷேத் – உண்மையாக இருப்பது போல அனுபவிக்கிறார்களோ

ததா ஸ்வப்னே விபர்யாஸாத் – அதுபோல கனவிலும் தவறுதலினால்

தர்மான் தத்ர ஏவ பஷ்யதி – கனவுப்பொருட்களை கனவில் மட்டும் உண்மையாக இருப்பது போல பார்க்கின்றான்.

 

காரிகை42

இந்த உலகம் தோன்றியது விதம், ஸ்ருஷ்டியை சொல்வதற்கு என்ன காரணம் என்று விளக்கப்படுகின்றது.

 

நம்முடைய இந்திரியங்களின் மூலமாக அடையும் அனுபவங்களை உறுதியாக நம் மனம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.  பிரத்யக்‌ஷ பிரமானத்தின் மூலமாக அறிவை அடைந்து கொண்டிருப்பதை மனம் ஏற்று பழகியிருப்பதால் உபநிஷத் ஆத்ம ஞானத்தை நேரிடையாக உபதேசிக்காமல் முதலில் பழகிய விஷயமான இந்த ஜகத்தை உபதேசித்து பிறகு அதை நீக்கி ஞானத்தைக் கொடுக்கின்றது.  பிரத்யக்‌ஷ பிரமாணத்தில் உள்ள சிரத்தையை எடுத்து உபநிஷத் பிரமாணத்தில் வைத்தால்தான் ஆத்ம ஞானம் புரிய ஆரம்பிக்கும்.  புத்தியின் ஸ்வரூபமே ஒரு தோஷமாக இருக்கின்றது.  ஒன்று நமக்கு புரியவில்லையென்றால் நாம் குழப்பத்தில் இருப்போம்.  புரிந்து விட்டால் அது அமைதியாகி விடும்.  எனவே காரண காரிய சம்பந்தத்தை சார்ந்திருப்பதாக புத்தி படைக்கப்பட்டிருக்கின்றது.  இந்த உலகம் ஒரு நியதியுடன் இயங்கி கொண்டிருக்கிறது எனவே புத்தி அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இருக்கின்றது.  கனவு பிரபஞ்சத்தில் எந்தவித நியதியும் இல்லாததால் அதை புத்தி ஏற்றுக் கொள்ளவில்லை.

 

உபலம்பா4த் – பிரத்யக்‌ஷ பிரமாணத்தினால் அடையும் அனுபவத்தினால்

ஸமாசாராத் – முறையாக, நியதியுடன் உலகம் இயங்கி கொண்டிருப்பதை அனுபவிப்பதனால், காரண காரிய சம்பந்தத்துடன் இந்த ஜகத் இருப்பதை புத்தி அறிந்து கொண்டததால்தான்

அஸ்தி வஸ்து வாதினாம் – இந்த உலகம் இருக்கின்றது என்று கருதுபவர்களுக்கு

ஜாதிஸ்து தேஸி2தா – ஸ்ருஷ்டி உபதேசிக்கப்படுகின்றது

புத்தைஹி – ஞானிகளால்

ஸதா அஜாதே ஸ்த்ரஸதாம் – எப்பொழுதும் அத்வைதத்தை கண்டு பயந்து கொண்டு இருப்பவர்களுக்கு

பிரம்மன் ஒன்றுதான் என்று சொல்வதனால் நான் அழிந்து விடுவேன் என்ற பயத்தினால்; ஸ்ருஷ்டியை இல்லையென்று சொல்வதில்லை.

 

காரிகை43

அஜாதேஸ்த்ரஸதாம் தேஷாம் – அவர்கள் பிறப்பற்ற வாதத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

உபலம்பாத் யே வியந்தி – அனுபவிக்கப்படுவதால் தவறான முடிவை, உலகம் இருக்கின்றது வாதம் செய்கின்றார்கள் பிறப்பற்ற பிரம்மத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

ஜாதி தோஷ ந ஸேத்ஸ்யண்டி – பிறப்பை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குறைகளால் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது, பாதிப்பும் ஏற்பட்து.

தோஷோ அபி அல்பஹ பவிஷ்யதி – அப்படி இருக்கும் குறைகள் மிகக்குறைவாக இருக்கும்.

 

காரிகை44

பூ.பக்ஷி உபலம்பம் (அனுபவிப்பதால்), ஸமாசாரதி (நியதியுடன் இயங்குவதால்) இந்த இரண்டு காரணங்களால் இந்த ஜகத் உண்மையாக இருக்கின்றது.

பதில்    இந்த காரணங்கள் பொய்யான வஸ்துக்களுக்கும் பொருந்தும். எனவே ஜகத் பொய்யானது.  பொய்யான மாயாஜாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட யானையும் நியதியுடன் இயங்குகிறது. எனவே இந்தக்காரணங்கள் சத்யத்துவத்தை நிலை நாட்ட முடியாது.

 

உபலம்பாத் ஸமாசாராத் – அனுபவிப்பதனால், முறையாக செயல்படுவதாலும்

மாயாஹஸ்தி யதா2 உச்யதே – எப்படி மாயாஜாலத்தில் தோற்றுவிக்கும் பொய்யான யானை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

உபலம்பாத, ஸமாசாராத் அஸ்தி வஸ்து உச்யதே – மேற்சொன்ன விதமாக இந்த உலகத்தில் உள்ள இருக்கின்ற பொருட்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றது.

 

காரிகை45

ஜாத்யாபாஸம் – பொய்யான தோற்றம்

சலாபாஸம் – அசைவது போன்ற தோற்றம்

ததேவ ச – அவ்விதமே

வஸ்துவாபாஸம் – உலகத்தில் உள்ள பொருட்களின் தோற்றம்

அஜ அசைல, அவஸ்துத்வம் – பிறக்காத, அசைவற்ற நிர்குண ஸ்வரூபம்

வஸ்து – எது குணத்தையுடையதோ அதை திரவியம் என்று சொல்லக்கூடாது.

விக்ஞானம் – சைதன்யத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.

ஸா2ந்தம் – அனைத்து தோற்றங்களூம் ஒடுங்கிய நிலை

அத்வயம் – இரண்டற்றது

 

காரிகை46

ஏவம் ந ஜாயதே சித்தம் – இவ்வாறு (மேலே சொல்லிய கருத்துப்படி) சைதன்யம் பிறப்பதில்லை.

ஏவம் தர்மாஹா அஜாஹ ஸ்ம்ருதா – இவ்வாறு ஜீவர்கள் பிறப்பற்றவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஏவம் ஏவ விஜானந்தஹ ந பதந்தி விபர்யதே– இவ்விதமாகவே அறிபவர்கள் சம்சாரத்தில் வீழ்வதில்லை.

 

காரிகை47

தீப்பந்தத்தை சுழற்றி விதவிதமான உருவங்களை உருவாக்குவார்கள். இந்த அலாதத்தை சைதன்யத்திற்கும்; தோற்றுவிக்கப்படுக் தோற்றங்களை ஜகத்திற்கும் ஒப்பிட்டு ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகின்றது.  ஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளும்போது ஜகத் உண்மையாக இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றது.  அலாதத்தினுடைய அசைவற்ற தன்மை சாந்தி என்றும் அதை அத்வைதத்திற்கும் ஒப்பிடுகின்றார்.

 

யதா அலாதஸ்பந்திதம் – எவ்வாறு தீப்பந்தத்தின் அசைவு

ரிஜுவக்ராதிகாபாஸம் – நேர்கோடு, வளைந்த கோடுகள் முதலிய உருவத்தை தோற்றுவிக்கின்றதோ

ததா விக்ஞான ஸ்பந்தி தம் – அவ்விதம் சைதன்யத்தின் அசைவு, ஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது

க்ரஹண, க்ராஹகா ஆபாஸம் – அனுபவிக்கப்படும் பொருட்கள், அனுபவிப்பவன் என்ற விஷயங்களை பொய்யாக தோற்றுவிக்கப்படுகின்றது.

 

  • தீப்பந்தம் ஒன்று அதிலிருந்து தோற்றுவிக்கப்படும் உருவங்கள் பலவாக இருப்பது போல அத்வைதமே த்வைதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது
  • அலாதத்திற்கும் விதவிதமான தோற்றத்திற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது
  • தோற்றுவிக்கப்பட்ட வடிவங்கள் தீப்பந்தத்தை சார்ந்திருப்பதால் அது மித்யா.
  • இந்திரியங்கள் எந்த ஒரு பொருளையும் முழுமையாக கிரகிக்காது. கண்கள் உருவத்தை மட்டும்தான் பார்க்கின்றது.  தீப்பந்தத்தால் உருவாக்கப்படும் வடிவங்கள் மறைவதால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் மறைந்து விடும்.  எனவே இந்த ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை48

அஸ்பந்தமானம் அலாதம் – அசைவற்ற தீப்பந்தம்

அனாபாஸம் அஜம் யதா – அந்த நிலையில் எந்தவிதமான வடிவங்களும் தோன்றவில்லை

ததா அஸ்பந்தமானம் விக்ஞானம் – அவ்விதம் சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளாத போது

அனாபாஸம் அஜம் – அதிலிருந்து எதுவும் தோன்றவில்லையென்று புரிந்து கொள்ள முடியும்.

சமாதி நிலையை அத்வைத அனுபவமாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கத்திலும் இதை அனுபவிக்கின்றோம். இந்த நிலையில் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இருமைகள் இல்லை.

 

காரிகை49

அலாதே ஸ்பந்தமானே வை – தீப்பந்தம் அசைந்து கொண்டிருக்கின்ற போது

ஆபாஸா ஹ – விதவிதமான உருவங்கள்

ந அன்யதோபூவஹ – வேறிடத்திலிருந்து வரவில்லை

ந ததஹ அன்யத்ர நிஸ்பந்தாத் – தீப்பந்தம் அசையாமலிருக்கும்போது அதிலிருந்து அவைகள் வேறிடத்திற்கு செல்லவில்லை

ந அலாதம் ப்ரவிஸந்தி தே – அந்த வடிவங்கள் அசைவற்ற தீப்பந்தத்திற்குள்ளும் செல்லவில்லை

 

காரிகை50

அலாதத்திலிருந்து எந்த காரணத்தினால் விதவிதமான வடிவங்கள் தோன்றவில்லை என்று இதில் விளக்குகின்றார்.

ந நிர்கதா அலாதாத் தே – அந்த விதவிதமான உருவங்கள் தீப்பந்தத்திலிருந்து உருவாகவில்லை, தோன்றவில்லை

த்ரவ்யத்வ அபாவ யோகதஹ – ஒரு பொருளாக இருக்கின்ற தன்மையில்லாதது இருப்பதினால் இதற்கு பிறப்பே என்பது இருப்பதில்லை. நாம ரூபங்களுக்கும், அதிஷ்டானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தத்தையும் சொல்ல  முடியாது.

விக்ஞானே அபி ததை2வ ஸ்புர – இப்படியேதான் சைதன்ய விஷயத்திலும் இருக்கின்றது

ஆபாஸஸ்ய அவிஸே2ஸ2தஹ – இந்த தோற்றங்களில் வேற்றுமை இல்லை.  தீப்பந்தத்திலிருந்து தோன்றிய உருவங்களும் தெரிகின்றது, இந்த ஜகத்தும் தெரிகின்றது.  இது தோற்றங்களில், தோன்றும் பொருட்களில் வேற்றுமையில்லை என்று கூறியிருக்கின்றார்.  விதவிதமான உருவங்கள் அலாதத்தை சார்ந்து இருப்பதைபோல, இந்த ஜகத்தும் பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-7

காரிகை-51
விக்ஞானேன ஸ்பந்தமானே வை – சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது
ந ஆபாஸஹ அன்யதோ பு4வஹ – இந்த ஜகத் வேறிடத்திலிருந்து வந்து தோன்றி கொண்டிருக்கவில்லை.
ந ததா அனயத்ர நிஸ்பந்தாத் – சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த ஜகத்தும் வேறிடத்திற்கு செல்வதில்லை
ந விக்ஞானம் விஸா2ந்தி தே – இந்த ஜகத் சைதன்யத்திற்குள்ளும் செல்லவில்லை.
மோட்சம் அடைந்ததும், பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டதும் இந்த ஜகத் தோன்றி கொண்டுதான் இருக்கும், வேறெங்கும் செல்லாது. பிரம்மத்திற்கு உள்ளேயும் செல்லாது.  சூரியன் உதயத்தையும், நீலவானத்தையும் பார்க்கின்றோம். இந்த இரண்டு தோற்றமும் உண்மையானது இல்லை என்ற அறிவுடன் அதை பார்த்து கொண்டிருக்கின்றோம். அது போல ஜகத்தின் மித்யாத்வத்தை புரிந்து கொண்டவுடன் அது தோன்றி கொண்டிருந்தாலும் அது நமக்கு வெறும் காட்சிதான்.

காரிகை-52
ந நிர்கதாத் தே விக்ஞானாத் – இந்த உலகத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
த்ரவியத்வ அபா4வாத் யோகதஹ – இவைகளுக்கு பொருளாக இருக்கும் தன்மை இல்லாத காரணத்தினால்

ஜகத் மித்யா என்று கூறுவதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகின்றது.  அவைகள்

  1. த்ரவியத்வ அபாவாத் – பொருளுக்குரிய தன்மை இல்லாத காரணத்தினால், பானை மித்யாவாக இருப்பது போல இதுவும் நாம ரூபம்
  2. காரிய காரண அபாவாத் – தோன்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்தக் காரணமும் சொல்ல முடியாததினால், காரண-காரிய சம்பந்தத்தை சொல்ல முடியாததினால்
  3. தே ஸதா ஏவ யதஹ அசிந்தியாஹா – அவைகளை எல்லா காலத்திலும் மனதிலேயும் சிந்திக்க முடியாது, வாயால் விளக்க முடியாது

காரிகை-53
ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கு காரணமாகலாம். பொருளுக்கும் நாம-ரூபங்களுக்கும் காரண-காரிய சம்பந்தம் சொல்ல முடியாது.  பல பொருட்கள் அவயங்கள் ஒன்று சேர்ந்து புதிய பொருளாக வடிவெடுக்கலாம்.  இதில் காரண-காரிய பாவத்தை சொல்லி விடலாம்.

அன்யத் த்ரவியம் அன்யத் த்ரவ்யஸ்ய ஸ்யாத் ச ஏவ ஹி – ஒரு பொருள் வேறொரு பொருளுக்கு காரிய-காரணமாக இருக்கலாம்.
தர்மானாம் த்ரவியத்வம் ந உப்பத்யதே – ஜீவர்களுக்கு ஒரு அவயமாக இருக்கும் தன்மை சம்பவிக்காது, கிடையாது
அன்யாவஹ ந உபபத்யதே – சைதன்யத்திற்கு வேறாக இருக்கும் தன்மையும் கிடையாது
எனவே சைதன்யம் மட்டும்தான் ஸத்யம், இந்த ஜகத் வெறும் காட்சிப்பொருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை-54
ஏவம் ந சித்தஜா தர்மா – ஜீவர்கள், பிரபஞ்சம் இவைகள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
சித்தம் வா அபி ந தர்மஜம் – பிரபஞ்சத்திலிருந்து சைதன்யமும் தோன்றவில்லை
ஏவம் ஹேதுபல அஜாதி பிரவிஸ2ந்தி மணீஷிணஹ – இவ்விதம் காரணமும் காரியமும் தோன்றவில்லை என்று ஞானிகள் நிச்சயித்திருக்கின்றார்கள்

காரிகை-55
யாவத் ஹேதுபல ஆவேஸ2 – எதுவரை புத்தியில் இருக்கின்ற காரண-காரிய விஷயத்தினுடைய உறுதியான எண்ணம் இருக்கின்றதோ
தாவத் ஹேதுபல உத்பவஹ – அதுவரை காரிய-காரண பா4வம் இருந்து கொண்டு இருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2 – இந்த காரண காரிய உறுதியான எண்ணம் நம் புத்தியிலிருந்து நீங்கும்போது
நாஸ்தி ஹேதுபல உத்பவ – காரண-காரிய தோற்றமானது இருக்காது

காரிகை-56
யாவத் ஹேதுபல ஆவேஸ2 – எதுவரை காரண-காரிய பா4வம் இருக்கின்றதோ
தாவத் ஸம்சார ஆயதஹ – அதுவரை சம்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2 – காரண காரிய புத்தியானது நீங்கும்போது
ஸம்சாரம் ந பிரபத்யதே – சம்சாரத்தை நீங்கியவனாக இருப்பான்.
காரிகை-57

  1. புத்தியில் இருக்கும் காரண காரிய அறிவு அக்ஞானத்தினால் வந்ததாகும்.
  2. அறியாமையில் நாம் செய்கின்ற விவகாரத்தினால் இந்த எண்ணம் உறுதியாக நிற்கின்றது. ஸம்விருத்தி- விவகாரம்; அறியாமை, அறியாமையிலிருந்து தோன்றுகின்ற விவகாரம்

ஸம்வ்ருத்தியா ஜாயதே ஸர்வம் – விவகாரத்தினால் அனைத்தும் தோன்றியிருக்கின்றது
ஶாஶ்வதம் நாஸ்தி தேன வை – அதனால் இவைகள் நிலையாக இருப்பதில்லை
ஸத்பாவேன ஹி அஜம் ஸர்வம் – அனைத்தும் பிரம்மஸ்வரூபமாக பார்த்தால் அவைகள் பிறக்காதவைகள்’
உச்சேதஹ தேன நாஸ்தி வை  – அதுவென்று இல்லை

இந்த உலகத்தை நாம ரூபமாக பார்த்தால் அவைகள் நிலையாக இருப்பதில்லை.  நாம ரூபங்கள் சார்ந்திருக்கும் காரணமாக இருத்தல் என்ற நிலையில் ஸத் ஸ்வரூபமாக பார்த்தால் அதற்கு அழிவில்லை.

காரிகை-58
யே தர்மாஹா இதி ஜாயந்தே – எந்த அனாத்மாக்கள் இவ்விதம் மேலே சொல்லியபடி அறியாமையினால் தோன்றியுள்ளனவோ
தே தத்வத் ந ஜாயந்தே – அவைகள் உண்மையாக தோன்றவில்லை
தேஷாம் ஜனம் மாயை உபமம் – இவைகள் தோற்றத்திற்கு மாயாஜாலம்தான் காரணம்
ஸா ச மாயா ந வித்யதே – அந்த மாயை உண்மையிலே இல்லாதது

காரிகை-59
யதா மாயாமயாதி பீஜாதி ஜாயதே – எவ்விதம் மாயமான விதை தோன்றியதோ
தன்மய அங்ரே – அதிலிருந்து மாயமான தளிராக வெளிவந்தது
நா அசௌ நித்யா – அது நிலையானதல்ல
ந சோச்சேதி – அதை அழிக்க முடியாது
தத்வத் தர்மேஷு – அதுபோல எல்லா அனாத்மாக்களிலும்
யோஜனா – இந்த உதாரணத்தை ஒப்பிட்டு புரிந்து கொள்ளுங்கள்

காரிகை-60
அனிர்வசனீயம் – வாயால் விளக்கமுடியாது, வாக்கால் விளக்க முடியாது
அபிதா – சொல்லுதல்
ஶாஶ்வதம் – என்றுமுள்ளது;
அஶா2ஶ்வதம் – நிலையற்றது, அழிவற்றது

ந அஜேஷு ஸர்வ தர்மேஷு – பிறக்காத அனைத்து பொருட்களிடத்தில் அவைகள் பயனற்றவை என்று விளக்க முடியாது
பிறக்கவேயில்லாத அனைத்து தத்துவங்களுக்கும் நிலையான,  நிலையற்றவை என்று சொல்லுதல் தேவையற்றது. பிரம்மன், அஸத், மித்யா இவைகள் பிறக்கவேயில்லை எனவே அவைகள் நிலையானவையா,  நிலையற்றவையா என்று சொல்ல தேவையில்லை.

யத்ர வர்ணா: ந வர்தந்தே – எந்த இடத்தில் சொற்கள், எழுத்துக்கள் செயல்படாமல் போகின்றதோ
தத்ர விவேகஹ ந உச்யதே – அந்த இடத்தில் வேறுபடுத்துதல் சம்பவிக்காது
எங்கேயெல்லாம் சொற்கள் பயன்படாமல் போகின்றதோ அங்கேயெல்லாம் எந்த லட்சணமும் சொல்ல முடியாது, பிரித்து பார்த்தல் என்ற செயலே நடைபெறாது.

காரிகை-61
சித்தம் சலதி மாயயா – மனதினால் பொய்யாக தோற்றுவிக்கபட்டதும்,  நித்ரா என்ற மாயா  சக்தியினால்
யதா ஸ்வப்னே த்வயாபாஸம் – எவ்விதம் கனவில் தோன்றுகின்ற இருமைகள்
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் – அவ்விதம் விழிப்பு நிலையில் பொய்யாக காட்சியளிக்கின்ற இருமைகள்
சித்தம் சலதி மாயயா – ஸமஷ்டி மனதினால் மாயையின் துணைக்கொண்டு தோற்றுவிக்கப்பட்டது.
எனவே இதிலிருந்து பிரம்மன் அத்வைதம் என்று அறிந்து கொள்ள முடியும்

காரிகை-62
அத்வயம் ச த்3வயாபாஸம் – இரண்டற்றதை இருமைகளாக
சித்தம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹ – மனமானது கனவை தோற்றுவிக்கின்றது, இதில் நமக்கு சந்தேகமில்லை.
ததா அத்வயம் சித்தம் – அதுபோல இரண்டற்ற சமஷ்டி மனமானது
த்3வயாபாஸம் ந ஸம்ஶ்யஹ – இங்கேயிருக்கின்ற இருமைகளானது தோற்றுவிக்கப்பட்டது, இதிலும் சந்தேகமில்லை

காரிகை-63
கனவில் பார்ப்பவைகள் மனதிற்கு வேறாக இல்லை.  அதுபோல மனமானது பார்ப்பவனிடம் இருந்து வேறாக இல்லை.
ஸ்வப்னே த்3ருக் – கனவை பார்ப்பவனிடத்தில் இருக்கும் மனம்.
கனவில் பார்க்கும் பொருட்களனைத்தும் மனதிற்கு வேறாக இல்லை.  நம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்களே கனவு விஷயங்களாக தெரிகின்றது.  எனவே கனவு விஷயங்கள் அனைத்தும் மனதில் ஒடுங்குகின்றது.  அந்த மனம் சைதன்யத்திற்குள் ஒடுங்குகின்றது.

ஸ்வப்னே த்ருக் – கனவை பார்க்கின்ற சைதன்யம்
ஸ்வப்னே பிரசரன் – அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொண்டு
திக்ஷு வை தஸ2ஸு ஸ்திதான் – பத்து திசைகளிலும் இருக்கின்ற
அண்டஜான்ஸ்வேதஜான் – முடையிலிருந்து பிறந்தவைகள்,  வியர்வையிலிருந்து பிறந்தவைகள்
வா அபி ஜீவான் ஸதா பஷ்யதி – இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.

காரிகை-64
கனவை பார்ப்பவனுடைய மனதினால் பார்க்கப்படுகின்ற அனைத்து பொருட்களைக் காட்டிலும் மனம் வேறாக இல்லை.  அதுபோல கனவை பார்ப்பவனால் பார்க்கப்படுகின்றது. இந்த கனவை பார்ப்பவனுடைய மனமானது மனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.  மனதை பார்க்கும் போது அதிலிருந்து விடுபடுகின்றோம்.  சப்தத்திலிருந்து விடுதலையடைய அதையே கவனிக்க வேண்டும், இந்த நிலையில் அந்த சப்தம் நம்மை தொந்தரவு செய்யாது.

காரிகை-65
ஜாக்ரத் நிலையில் பார்க்கும் விஷயங்களனைத்தும் ஈஸ்வரனுடைய மனம்தான் தோற்றுவித்திருக்கிறது. விழிப்பு நிலையில் இருந்து கொண்டு அந்த நிலையை பார்ப்பவனான விஸ்வன். பத்து திசைகளிலும் இருக்கின்ற முடையிலிருந்து பிறந்தவைகள், வியர்வையிலிருந்து பிறந்தவைகள் இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.

காரிகை-66
ஜாக்ரத் அவஸ்தையில் மனதால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் அதைப் பார்க்கின்ற மனதிற்கு வேறானதல்ல.  அதுபோல அந்த மனதை பார்க்கின்ற சைதன்யத்திற்கு வேறானதாக மனம் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

காரிகை-67
மனதையும் அதனால் பார்க்கப்படும் விஷயங்களுடைய தன்மையை கிடையாது.  வெளியே இருக்கும் பானை நம் மனதில் இருக்கும் பானை விருத்தியை சார்ந்திருக்கின்றது.  அதே சமயம் பானை விருத்தியும், ஜட பானையை சார்ந்து இருக்கின்றது.  த்ருஶ்யமும்,  விருத்தியும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. திருஶ்யமும், சித்தமும், வெளியே இருக்கின்ற விஷயங்களும், மனதில் இருக்கின்ற எண்ணங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றது.  அவைகள் இருக்கின்றதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லப்படுகின்றது.  இவைகளிரண்டிற்கும் எந்தவித குணங்களும் கிடையாது.

பிரம்மத்தை நேரிடையாக விளக்கமுடியாது, அதேபோல சூன்யத்தையும் விளக்க தேவை இல்லை. இருத்தல், இல்லாமை என்ற லட்சணத்தைக் கொண்ட மித்யாவையும் வார்த்தைகளால் விளக்க முடியாது.  ஒன்றின் அறிவால் மற்றொன்று அறியப்படுகின்றது.  விஷயத்தை அறிய விருத்தி தேவைப்படுகின்றது.  அதுபோல விருத்தியை அறிய விஷயம் தேவைப்படுகிறது.

காரிகை-68
எவ்வாறு கனவில் தோன்றும் மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிறகு கனவு முடிந்ததும் மறைந்தும் விடுகின்றார்கள். அதேபோல விழிப்பு நிலையிலுள்ள மனிதர்களும் பிறக்கின்றார்கள், பிறகு இறக்கின்றார்கள். கனவு மனிதர்கள் எப்படி பொய்யோ, அப்படியே விழிப்புநிலை மனிதர்களும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை-69 & 70

எவ்வாறு இந்திரஜாலத்தினால் தோற்றுவிக்கப்பட்டவைகள் தோன்றி மறைந்து விடுகின்றது. அதேபோல ஜாகரத் ஜீவர்களும் தோன்றி மறைந்து விடுகின்றார்கள். எவ்வாறு மந்திரங்களாலும், மூலிகைகளாலும் சில உயிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றது, பிறகு மறைந்துவிடுகின்றது.  அதுபோலதான் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவர்களின் நிலை.

காரிகை-71
எந்த ஜீவனும் பிறப்பதில்லை அவனுக்கு பிறப்பதற்கு காரணம் இல்லை.  இதுதான் உத்தமமான உண்மை. இந்த உலகத்தில் எதுவும் தோன்றவில்லை. ஜகத்தே தோன்றவில்லை,  பிரம்மனிடத்திலிருந்து எதுவுமே தோன்றவில்லை

காரிகை-72
சைதன்யமே போக்தாவாகவும், போக்கியமாகவும் இருக்கின்றது.  சிதாபாஸமாக உள்ள வஸ்து போக்தா,  சிதாபாஸம் இல்லாத வஸ்து போக்கியம், அனுபவிக்கப்படும் பொருள்.
சைதன்யத்தை தவறாக புரிந்து கொண்டால்தான் இந்த இருமைகள் தெரிந்து கொண்டிருக்கும்.  இது அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருட்கள் என்று தோன்றி கொண்டிருக்கும். சைதன்யம் என்றும் எந்த விஷயமுமற்றதாக இருக்கின்றது.  அதனால் இது எதனோடும் சங்கமற்றது என்று சொல்லப்படுகின்றது.

காரிகை-73

பூ.பக்ஷி   சைதன்யம் நிரவயம் அல்ல;  விஷயம் இருக்கின்றது.

பதில்       அக்ஞானியிடத்து இருக்கும் த்வைதம் ஸத்யமாக இருக்கின்றது.  ஞானியிடத்து இருக்கும் த்வைதம் ஸத்யமில்லாதது, உபதேசத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

யஹ அஸ்தி – எந்த இருமைகள் இருக்கின்றதோ ( சாஸ்திரம், குரு, சிஷ்யன் )
கல்பித ஸம்வ்ருத்யா – அவைகள் கற்பனை செய்யப்பட்டு, உபதேசம் செய்வதற்காக இருக்கின்றது
பரமார்தேன நாஸ்த்யசௌ – அந்த இருமைகள் பாரமார்த்திக த்ருஷ்டியில் இல்லை
பரதந்திர அபி ஸம்வ்ருத்யா ஸ்யாத்– மற்ற அக்ஞானிகளின் கொள்கை அடிப்படையில் இருமைகள் இருக்கின்றது
நாஸ்தி பரமார்த்தஹ – ஆனால் உண்மையில் இல்லை, பாரமார்த்திக த்ருஷ்டியின் அடிப்படையில் இல்லை.

காரிகை-74
அஜஹ கல்பிதா ஸம்வ்ருத்யா–  ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் கற்பனையான லக்ஷணம், உபதேசம் செய்வதற்காகவும், ஆத்மாவை தவறாக புரிந்து கொண்டிருக்கின்ற அறிவை நீக்குவதற்காகத்தான் இவ்வாறு கூறப்படுகிறது.  ஆகவே பிறப்பற்றது என்பது ஆத்மாவின் ஸ்வரூபமல்ல.
பரமார்தேன ந அபி அஜஹ – உண்மையில் ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் தவறு
பரதந்திர –  மற்ற மதத்தை சார்ந்தவர்கள்
அபிநிஷ்பத்ய ஸம்வ்ருத்யா – அடைந்த பொய்யான முடிவினால், கருத்துப்படி
ஸஹ து ஜாயதே – ஆத்மா பிறக்கின்றது.

காரிகை-75
அபூத அபிநிவேஶஹ அஸ்தி – ஆசை உச்சநிலைக்கு சென்று விடும் நிலைக்கு அவிநிவேஶம் என்று பொருள்.  இந்த அபிநிவேஶம் இல்லாததான த்வைதத்தில் உறுதியாக அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்படுதல், இருத்தல்
த்வயம் த த்ர ந வித்யதே –  ஆத்மாவிடத்தில் இருமை கிடையாது.
த்3வயாபா4வம் ஸஹ புத்தவா ஏவ – இருமையினால் இல்லாமையை ஒருவன் அறிந்துதான்
நிர்நிமித்தஹ ந ஜாயதே – ( சம்சாரம் பிறப்பதற்கு காரணம் இல்லாததால் ), எந்த தேவையும் இல்லாமல் இருப்பதால் அவன் பிறப்பதில்லை

காரிகை-76
நிர்நிமித்தம் என்ற சொல்லின் பொருள் விளக்கப்படுகின்றது.
யதா3 ந ஹேதுன் லப4தே – ஒருவன் எப்பொழுது காரணங்களை பார்க்கவில்லையோ
உத்தமஅத4மத்4யமான் – புண்ணிய, பாவ இவைகளின் சேர்க்கை
ஒருவன் எப்பொழுது காரணங்களையும், பாவ-புண்ணியங்களையும் பார்க்கவில்லையோ,
அப்பொழுது பிறப்பற்ற சைதன்யத்தை அடைகின்றான்.  காரணங்கள் இல்லையென்றால் காரியங்கள் எப்படி தோன்றும், தோன்றாது.

காரிகை-77
ஹேது அபாவம் விளக்கப்படுகின்றது.  ஆத்மாவிடம் காரணம் இல்லாத தன்மை வந்து போவதா அல்லது அதன் ஸ்வரூபமா என்று கேட்டால் அது இல்லை என்று உணர்ந்து விட்டால் திரும்பவும் வராது.  ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே காரணமற்றது.  வாழ்க்கையில் எது அடைந்தாலும் அதை மீண்டும் இழந்துவிடலாம்.  ஆனால் ஆத்மாவை அடைந்துவிட்டால் அதை இழக்க மாட்டோம்.

அநிமித்தஸ்ய சித்தஸ்ய – பிறப்பற்ற சைதன்யத்திற்கு, காரணமற்ற தன்மையுதைய ஆத்மாவுக்கு
யா அனுபத்தி – எந்தவொன்றிற்கு தோன்றாத தன்மை, எதையும் தோற்றுவிக்காத தன்மை
ஸமா அத்வயா – என்றுமுடையது, நிலையானது, எப்பொழுதும் இருப்பது, பூரணமானது
அஜாதஸ்ய ஏவ ஸர்வஸ்ய – பிறக்காமலிருக்கின்றதும், அனைத்துமாகவும் தெரிந்து கொண்டிருக்கின்றதும்
தத் சித்தம் த்ருஶ்யம் ஹி யதஹ – சைதன்யத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்ட இவைகள் அனைத்தும் காரணமற்ற சைதன்யம்தான்.

காரிகை-78
புத்வா அநிமித்ததாம் ஸத்யாம் – காரணமில்லாத தன்மையை உண்மையானது என்று அறிந்து
ஹேதுன் ப்ருதக் ந ஆப்னுவன் – எந்தவொரு காரணத்தையும் பிரம்மத்திற்கு வேறாக பார்க்காமலிருந்தால்
பதம் அஶ்னுதே – அந்த நிலையையே அடைகின்றான்.
வீத ஶோகம் – சோகத்திலிருந்து விடுதலையை அடைகின்றான்
ததா அகாமம் அபயம் –  அதேபோல ஆசையற்ற, பயமற்ற நிலையை அடைகின்றான்.

காரிகை-79
அபூத அபிநிவேஶாத் – இல்லாத விஷயத்தில் உச்சநிலை ஆசையானது
தத் ஸத்ருஶே ப்ரவர்ததே – நம்முடைய மனம் எதை பார்க்கின்றதோ அதை அடைய செயலில் ஈடுபடுகின்றது
வஸ்து அபாவம் – பொருட்கள் எதுவும் இல்லை
பு3த்3வா ஏவ – அறிந்து கொண்ட பின்புதான்
நிஸங்கம் – விடுபட்டவனாக, அபிநிவேஶத்திலிருந்து விடுபட்டவனாக
வினிவர்ததே – இருமையிலிருந்து திரும்பி விடுகின்றான்.

காரிகை-80
அபயத்தை அடைந்தவனின் நிலை, யாருக்கு இந்த நிலை கிடைக்கின்றது,  பிரம்ம ஸ்வரூபம் இவைகள் இதில் விளக்கப்படுகின்றது
ததா – அப்போது, ஞான நிஷ்ட நிலையில்
ஸ்திதிநிஸ்சல – அவனுடைய மனம் சஞ்சலமில்லாமல் இருக்கும். எதனாலும் பாதிக்கப்படாத மனமாக இருக்கும்.
நிவ்ருத்தஸ்ய அப்ரவ்ருத்தஸ்ய – எல்லாவற்றிலிருந்து, எல்லா பொறுப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டவனாக இருக்கும்.  இது ஜீவன்முக்தி நிலையாகும். எதிலும் மனம் செல்லாமல் இருக்கும் நிலையை உடையவன். இவன் நிவிருத்தி,  ப்ரவிருத்தி இவைகளைக் கடந்த நிலையில் இருக்கின்றான்.  சாதாரண அவஸ்தையில் நிவிருத்தியில் இருக்கின்ற ப்ரவ்ருத்திகளை விட்டுவிட்டவன்

ஸஹ விஷய ஹி புத்தானாம் – ஞானத்தை அடைந்தவர்களுக்கு இந்த நிலைதான் விஷயமாக இருக்கும்.
தத் ஸாம்யம் அஜம் அத்வயம் – அந்த பிரம்மமானது சமமாகவும், என்றும் ஒரே நிலையிலும், பிறப்பற்றதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது.

காரிகை-81
இந்த ஆத்மா பிறப்பற்றது, ஸ்தூல சரீரமற்றது, காரண சரீரமற்றது, சூட்சும சரீரமற்றது, கனவுகளற்றது, தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது, என்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது.  இவையெல்லாம் அதனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றது.

காரிகை-82
பிரம்மமானது எப்பொழுதும் மிக எளிதில் மறைக்கப்பட்டுவிடும், பிரம்மத்தை மறைத்திருக்கும் திரையை நீக்குவது மிகவும் கடினம். இது கயிற்றை பாம்பினால் மறைக்கப்படுவது போல பிரம்மத்தின் மீது இந்த பிரபஞ்சம் தோன்றிக்கொண்டு மறைத்துக் கொண்டிருக்கின்றது.  ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் ஆசையுடன் சத்தியமாக கிரகிக்கும்போது, உணரும் போது பிரம்மம் மறைக்கப்படுகின்றது.  அத்யாஸம்தான் அதிஷ்டானத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது.  மேலும் பிராரப்த வசத்தினாலும் அடைந்த ஞானத்திலிருந்து விலகி சம்சாரத்தில் விழுந்து விடலாம்.

காரிகை-83
இந்த பிரம்மமானது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாது, சாஸ்திரத்தை நன்கு படித்த பண்டிதர்களுக்கும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இது இருக்கின்றதென்று சிலரும், இல்லையென்று பலரும் கூறுகின்றார்கள்.  இருப்பது சரீரம்தான், ஜடமான வஸ்துக்குள் அது இல்லவே இல்லை என்றும் கூறுகிறார்கள். இது அசைவது போலவும் இருக்கின்றது, அசையாதது போலவும் இருக்கின்றது.  இவ்வாறு குழந்தைகளுக்கு பொம்மைகளை மறைத்து வைத்திருப்பது போல பிரம்மமானது மறைக்கப்பட்டிருக்கின்றது.

காரிகை-84
மேற்கூறிய கருத்துக்களை பிடித்துக் கொள்வதினால் எப்பொழுதும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆத்ம தத்துவம் இப்படிபட்ட கருத்துக்களோடு சம்பந்தபடாமல் இருக்கின்றது.  இப்படி எவரால் பார்க்கப்படுகின்றதோ, அவர் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவராக இருக்கிறார்.

காரிகை-85
ப்ராப்ய ஸர்வக்ஞதாம் க்ருத்ஸ்னாம் – அனைத்தையும் முழுமையாக அறிகின்ற தன்மையை அடைந்தவன், சந்தேகமில்லாமல் பிரம்ம ஞானத்தை அடைந்தவனாகின்றான்.
ப்ராஹ்மண்யம் – பிரம்மனாக இருக்கின்ற தன்மை, பிரஹ்ம ஞான நிஷ்டை அடைந்த நிலை
பதம் அத்3வயம் – இந்த நிலையே இரண்டற்றது, அதை அடைந்து
அனாபன்னம் ஆதி மத்ய அந்தம் – துவக்கம், இடைநிலை, முடிவு இவைகளுக்கு அப்பாற்பட்ட பிரஹ்ம நிலை.
கிம் அதஹ பரம் ஈஹதே –  இந்த ஞானநிஷ்டை அடைந்த பிறகு எதனைக் கண்டு ஆசைப் படுவான், எந்த செயலை செய்ய தூண்டப்படுவான், அவனுக்கு செயல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

காரிகை-86****
விப்ராணம் ஏஷ வினயஹஶமஹ தமஹ – ஞானநிஷ்டர்களிடம் பணிவு இருக்கும், பிரம்மனிடத்தில் ஒடுங்கியிருத்தல், பிரம்மனாகவே இருத்தல், முழுமையான மன அமைதி இருக்கும், புலன்களும் அவன் வசத்தில் இருக்கும்.
ப்ரக்ருதஹ உச்யதே – இவைகள் அவர்களுக்கு சுபாவமாகி இருக்கும்.
ப்ரக்ருதி தாந்தத்வாத் – இயற்கையாகவே ஒடுங்கியிருக்கின்ற காரணத்தினால்
ஏவம் வித்வாஞ்ஶமம் வ்ரஜேத் – இவ்வாறு முழுமையான மனநிறைவை, அமைதியை ஞானி அடைந்து விட்டான்.

காரிகை-87
ஸ்வஸ்து ஸோபலம்பம் – வியாவகார பொருட்களும், அனுபவத்துடன் கூடிய விஷயங்களும்
த்3வயம் லௌகிகம் இஷ்யதே – ஜாக்ரத் அவஸ்தை என்று கருதப்படுகிறது
அவஸ்து ஸோலம்பம் – பொருட்கள் இல்லை ஆனால் அனுபவம் மட்டும் இருக்கின்ற
ஶுத்தம் லௌகிகம் இஸ்யதே – ஸ்வப்ன அவஸ்தை என்று கூறப்படுகிறது

காரிகை-88
லோகாத்தரம் – ஆழ்ந்த உறக்க நிலை
அவஸ்து – பொருட்கள் கிடையாது
அனுபலம்பம் ச – அனுபவமும் கிடையாது; பொருட்களை அனுபவிக்கும் நிலையும் இல்லை,
இதி ஸ்ம்ருதம் – என்று கருதப்படுகின்றது.
ஞானம் – மனோ விருத்தி ஞானம்; மூன்று நிலையை அனுபவிப்பவன் (பிரமாதா)
ஞேயம் – இவர்கள் அனுபவிக்கும் விஷயங்கள் (பிரமேயம்)
விக்ஞேயம் – இந்த அவஸ்தைகளுக்குள்ளும் பொதுவாக இருக்கின்ற துரீயம்.  இதுவே அறியத்தக்கது; அறியப்படவேண்டியது.
பூத்தைஹி ஸதா – என்று ஞானிகளால் எப்பொழுதும்
ப்ரகீர்த்தம் – பேசப்படுகின்றது.

காரிகை-89
ஞானே ச த்ரிவிதே4 ஞேயே – முன்றுவிதமான ஞானங்களும், மூன்றுவிதமான அறியப்படும் பொருட்களும்
மூன்று அவஸ்தைகளிலும் தனித்தனியாக மூன்றுவிதமன அறிவு வருகின்றது; ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தத்தை அனுபவித்தேன் என்ற அறிவு ஏற்படுகின்றது. மூன்று அவஸ்தைகளில் உள்ள பொருட்கள் மூன்றுவிதமான அறியப்படும் பொருட்கள் கனவு, ஜாக்ரத் அவஸ்தையில் பொருட்கள், ஆழ்ந்த உறக்கத்தில் அக்ஞானமும், ஆனந்தமும் இருக்கின்றன.
க்ரமேன விதி3தே – முறையாக அறியப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளும் தனித்தனியாக அனுபவிக்கப்படுகின்றது.  ஆனால் மூன்று நிலைகளிலும் தொடர்ந்து இருப்பது துரீயம் என்றழைக்கப்படும் ஆத்ம தத்துவம்.  இதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மஹாதி4யஹ – மேலான அறிவுடையவனுக்கு
ஸ்வயம் – அவன் தானாக
ஸர்வக்ஞதா ப4வதி – அனைத்துமாக இருக்கின்ற நிலையை அடைகின்றான்; எல்லாவற்றையும் அறியக்கூடிய நிலையை அடைகின்றான்
ஸர்வத்ர இஹ – இங்கேயே இப்போதே அந்த நிலையை அடைகின்றான்

காரிகை-90
மோட்சத்தை அடைய விரும்புபவன் முதலில் நீக்க வேண்டியதை நீக்கிட வேண்டும். அறியத்தக்கதையும் அறிந்திட வேண்டும், அடையத்தக்கதையும் அடைந்திட வேண்டும், விலக்கத்தக்கதுமான விஷயங்களை விலக்கிட வேண்டும்
நீக்க வேண்டியது        வேண்டியவைகளானது தீய எண்ணங்கள், தீய குணங்கள், விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் என்பதில் உள்ள அபிமானம்.

அறியத்தக்கது           துரீயம், பரமார்த்த தத்துவம், ஜீவ-பிரஹ்ம ஐக்கியம்.

அடையத்தக்கது         நற்குணங்கள்,சாதன-சதுஷ்டய சம்பத்தி, சிரவண-மனன-நிதித்யாஸனம்

எரிக்க வேண்டியவைகள் ஆசைகளை நம்மை பந்தப்படுத்தாத அளவுக்கு எரித்தல்; தர்மத்திற்குட்பட்ட ஆசைகள், பலனை கொடுக்காத அளவுக்கு வறுக்கப்பட்டு விட்டது.  ஆசைகள் இருந்தாலும் அதை அடையவில்லையென்றாலும் பாத்திக்கப்படாமல் இருத்தல்.

இந்த நான்கில் மூன்று மித்யா, அறியத்தக்கதான பிரம்மன் ஒன்றுதான் சத்யம் இதை அடைவதற்கு மற்ற மூன்றும் சாதனமாக இருந்து பின் சென்று விடுகின்றது.

காரிகை-91
சுபாவமாக அனைத்து ஜீவர்களும் பிறப்பற்றவர்கள், என்றுமுள்ளவர்கள் என்று அறிய வேண்டும், ஆகாசத்தைப்போல ஸ்வருபத்திலே தூய்மையாக இருக்கின்றார்கள். இருமைகள் என்பது இவர்களிடையே கிடையாது. கால, தேசம், வஸ்து ஆகியவைகளில் எந்த விதத்திலும், வேற்றுமையற்றவர்கள்.

காரிகை-92
ஸர்வே தர்மா ப்ரக்ருதியா ஏவ ஆதிபுத்தா4 – எல்லா ஜீவர்களுக்கும் இயற்கையிலே எப்பொழுதும் பிரம்மன் அறியப்பட்டதாகவே இருக்கின்றது
நிஸ்சிதாஹா – இவ்வாறு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்வயம் ப்ரகாசமாகவே இருக்கின்றது
யஸ்ய ஏவம் பவதி க்ஷாந்தி – இவ்வாறு அறிந்து கொண்டால் மன அமைதி ஏற்படும், மன நிறைவை அடைந்து விடுவான்.
ஸஹ அம்ருதத்வாய கல்பதே – அவன் மரணமற்ற பெருவாழ்வுக்கு தகுதி அடைகின்றான்

காரிகை-93
ஸர்வே த4ர்மாஹா – அனைத்து ஜீவர்களும்
ஆதி ஸா2ந்தாஹா – எப்பொழுதும் பூரண ஆனந்த ரூபமாக இருப்பவர்கள், முழுமையான மனநிறைவுடன் இருப்பவர்கள். இது அடையப்படுவதில்லை அறியப்படுவது.
அனுபன்னாஹா – பிறப்பற்றவர்களாக
ப்ரக்ருதயா – இயற்கையிலே, சுபாவமாக
ஸுநிர்வ்ருதா – சம்சாரமற்றவர்கள், எதனோடும் சம்பந்தப்படாதவர்கள், என்றென்றும் தன்னிடத்திலே இருப்பவர்கள்
ஸமாபின்னஹ – தனக்குள்ளே எந்த வேறுபாடுமற்றவர்கள்
அஜம் – பிறப்பற்றவர்கள்
ஸாம்யம்விஶாரதம் – எந்தவித வேறுபாடும் அற்றதாகவும், தூய்மையாகவும் இருக்கின்றார்கள்.
இந்த தன்மைகள் அனைத்தும் ஆத்மாவின் ஸ்வரூபத்தையே குறிக்கின்றது.

காரிகை-94
வைஶாரத்யம் ந அஸ்தி – தூய்மை கிடையாது
பேதே விசரதாம் ஸதா – எப்பொழுதும் வேற்றுமையை காண்பவர்களுக்கு, இருமையை உணர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மனத்தூய்மை என்பதே இருக்காது.
பே4தநிம்னாஹா – பொய்யான வேற்றுமையில் மூழ்கியிருப்பவர்கள்; ஸ்ருஷ்டியில் மூழ்கி இருப்பவர்கள்
ப்ருதக்வாதா– வேற்றுமைகள் உண்மையென்று திடமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள்
தஸ்மாத் தே க்ருபணாஹா ஸ்ம்ருதாஹா– இப்படி அவர்கள் இருப்பதனால் பரிதாபத்திற்கு உரியவர்களாக கருதப்படுகிறார்கள்.

காரிகை-95
அஜே ஸாம்யே து – பிறப்பற்ற, பேதமற்ற தத்துவத்தில்
யே கேசித் ஸு நிஸ்சிதாஹா பவிஷ்யந்தி – எந்த சிலர் அதை திடமாக உறுதி செய்தவர்களாக இருக்கின்றார்களோ
தே ஹி லோகே மஹாஞானாஹா – அவர்கள் இந்த உலகத்திலிருக்கும் மேலான ஞானத்தை உடையவர்களாகவும், மகான்களாகவும் இருக்கின்றார்கள்
தத் லோகந காஹதே – இதை உலகம் புரிந்து கொள்வதில்லை
ஞானிகளால் அறியப்பட்ட ஆத்ம தத்துவத்தை, ஞானிகளின் வாழ்க்கை முறையையும் உலகம் புரிந்து கொள்ளாது.

காரிகை-96
அஜேஷூ தர்மேஷு – பிறப்பற்ற ஜீவர்களிட்த்தில் இருக்கின்ற ஞானம், அறிவு ஸ்வரூபம்
அஜம் – பிறப்பற்றது;
அஸங்கிராந்தம் – எதனோடும் சம்பந்தப்படாதது.
யதோ ந க்ரமதே ஞானம் – எந்த காரணத்தால் ஞானம் எதனோடும் சம்பந்தம் வைப்பதில்லையோ, அதனால்
அஸங்கம் தேன கீர்த்திம் – இந்த அறிவு எதனோடும் சம்பந்தப்பட்டதில்லை கூறப்படுகின்றது.

காரிகை-97
ஆத்மா அஸங்கம் என்பதை அத்வைதத்தில் மட்டும்தான் நிலை நாட்ட முடியும்.
அணுமாத்ரே அபி வைத4ர்மே – அணுவை விட சிறிய வேற்றுமை தோன்றினாலும்
அவிபஸ்2சதி – அக்ஞானிகளுக்கு
அஸங்கதா ஸதா நாஸ்தி – எப்பொழுதும் ஆத்மா அஸங்கமற்றது என்பது கிடையாது
கிமுதா ஆவரணச்யுதிஹி – எப்படி அறியாமை அழியும், மறைந்து விடும்.

காரிகை-98
ஸர்வே தர்மாஹா – அனைத்து ஜீவர்கள் உண்மையில்
அலப்3தா4 ஆவரணா – அறியாமையால் மறைக்கப்படாதவர்கள்
ப்ரக்ருதி நிர்மலாஹா – சுபாவமாகவே தூய்மை ஸ்வரூபமானவர்கள்
ஆதௌ பு3த்தாஹா – ஆரம்பித்தலே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்
ததா முக்தா – அதுபோல ஜீவர்கள் என்றுமே முக்தியடைந்தவர்கள்தான்
புத்யந்த இதி நாயகா – ஞானிகள் விவகாரத்தில் நாங்கள் அறிகின்றோம்.

காரிகை-99
தாயினஹ – மேன்மைக்குரிய, பூஜைக்குரிய, எங்கும் வியாபித்துள்ள
புத்தஸ்ய ஞானம் – வணக்கத்துக்குரிய ஞானிகளினுடைய ஞானம்
தர்மேஷு – எந்த பொருட்களிடத்தும்
ந ஹி க்ரமதே – சம்பந்தபடுவதில்லை
ததா ஸர்வே தர்மாஹா – அதுபோலவே அனைத்து ஜீவர்களும்
ஏதத் ஞானம் – இந்த ஆத்ம தத்துவம்
புத்தேன ந பா4ஷிதம் – புத்தியினால் விளக்கப்படவில்லை

காரிகை-100
துர்தர்ஷம் – புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது
அதிகம்பீரம் – மிக கம்பீரமாக இருப்பது எனவே இதில் நுழைவதற்கு மிக கடினம்
அஜம் ஸாம்யம் – பிறப்பற்றது, பேதமற்றது
விஶாரதம் –  பரிசுத்தமானது
புத்3த்4வா பத3ம் – இந்த தத்துவத்தை அறிந்து
அனானாத்வம் –  வேற்றுமைகளற்ற, இருமைகளற்ற, அத்வைதம்
நமஸ்குர்மோ யதா பலம் –  இப்படிபட்ட ஆத்ம தத்துவத்தை வணங்குகிறோம்.
எதை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அதனுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்,
எவர்களை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அவர்களுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்.

இந்த உபநிஷத்தில் ஆகம, ப்ரபஞ்சோஸம, வைதத்யம், அத்வைதம் என்று அழைக்கப்படுகின்ற நான்கு பிரகரணங்கள் உள்ளன.
அமனீபாவம் – நிதித்யாஸனம்,
அஸ்பர்ஸயோகம் – ஞானயோகம் – இது எதனோடும் சம்பந்தப்படாத நிலைக்கு நம்மை வைத்து கொள்ளுதல்
தொகுப்புரை

மந்திரம்-1  ஓம் என்ற எழுத்தின் துணைக்கொண்டு ஆத்ம தத்துவம் விளக்கப்பட்டிருக்கின்றது. காரிய ரூபமாக இருக்கின்ற பிரபஞ்சம், காரண ரூபமாக இருக்கின்ற மாயை இவைகளை கடந்து இருக்கின்ற பிரஹ்ம ஸ்வரூபத்தை விளக்குகின்றது. எனவே இதைப்பற்றிய விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது.  ஓங்காரம் இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடப்படுகின்றது.  இந்த பிரபஞ்சமே வெறும் நாம ரூபங்களே, காரியங்கள் அனைத்தும் நாம-ரூபங்களே. எல்லா ருபங்களிலும் நாமத்தில் அடக்கி வெறும் நாமம் மட்டும் என்றும் கூறிவிடலாம் அல்லது நாமங்களை ரூபத்தில் ஒடுக்கி விடலாம்.  அனைத்து உருவங்களும் சப்தத்திற்குள் அடங்கி விடுகின்றது.  சப்த ரூபமான இந்த பிரபஞ்சம் அதற்கு காரணமாக இருக்கின்ற ஒங்காரமே என்று கூறப்படுகின்றது.

 

மந்திரம்-2  ஆத்ம விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. ஆத்ம-பிரம்ம ஐக்கியம் விளக்கப்படுகின்றது.  ஆத்மாவே அனைத்துமாக இருக்கின்றது. எனவே இதை விசாரம் செய்து அடைந்திட வேண்டும். நான் என்பதே ஆத்மா என்று குறிப்பிடப்படுகின்றது.  எனவே இந்த நான் என்ற சொல் விசாரம் செய்யப்படுகின்றது.  நாம் இந்த சொல்லின் பொருளை எப்படி புரிந்து கொண்டுள்ளோமோ அதிலிருந்து விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. இயற்கையாக இந்த ஸ்தூல உடலை, மனதை நாம் நான் என்று குறிப்பிடுகின்றோம். இவையிரண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். எனவே மூன்று சரீரத்தையே நான் என்று குறிப்பிடுகின்றோம். இந்த மூன்றையும் அறிகின்ற நான்காவதாக ஒரு அறிவு தத்துவம் மறைந்திருக்கின்றது.  நான் என்ற சொல்லின் உண்மையான, சரியான பொருளை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  அதை முதலில் ஆத்ம-அனாத்மா என்று முதலில் பிரிக்க வேண்டும். நான் என்ற சொல்லில் நான்-இல்லாததும் (அனாத்மா) கலந்திருக்கின்றது. அதை பிரித்து அவைகள் பொய்யானவை என்று நிரூபித்து நீக்க வேண்டும். இதை அவஸ்தாத்ரய விவேகம் என்ற முறையில் அனாத்மாவை ஆத்மாவிலிருந்து பிரித்து அவைகள் மித்யா என்று நீக்கி ஆத்மாவை மட்டும் உணர வேண்டும்.  ஜாக்ரத், கனவு, சுஷுப்தி என்ற மூன்று அனுபவங்களிலிருந்து எந்தவிதமான அறிவை அடைய வேண்டும் என்று விளக்குவதே இந்த அவஸ்தாத்ரய முறை.  அனுபவமே அறிவை கொடுக்காது, ஆனால் அதை ஆராய்ச்சி செய்து அடைந்தாக வேண்டும். சந்தேகமே வராத அளவுக்கு இந்த அறிவு புத்தியை அடைய வேண்டும்.           எப்பொழுது நாம் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைக்கின்றோமோ அப்பொழுது ஜாக்ரத் அவஸ்தையை அனுபவிக்கின்றோம். சூட்சும சரீரம் வரை அபிமானம் வைக்கும் போது கனவு நிலையையும், காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும் போது சுஷுப்தி நிலையையும் அனுபவிக்கின்றோம்.  இந்த மூன்று நிலைகளின் மூலம் நாம் அடைய வேண்டிய அறிவானது,  இந்த அனுபவங்களில் அனுபவிக்கும் பொருட்களிலிருந்து நான் வேறுபட்டவன் என்பதாகும்.  இதை அனுபவிக்கின்ற சேதனமாக ஒன்று மூன்று நிலைகளிலும் தொடர்ந்து மாறாமல் இருக்கின்றது, ஆனால்  பொருட்கள் மாறுகின்றது

  • நான் ஒருவனாக இருந்து கொண்டு மூன்று நிலைகளிலுள்ளதை அனுபவித்துக் கொண்டு இருப்பவன்
  • நான் தொடர்ந்து, ஒருவனாகவும், மாறாதவனாகவும் இருக்கின்றேன்.
  • எது மாறுகின்றதோ அது அநித்யம், மாறாமல் இருப்பது நித்யம்
  • இந்த அறிவு ஸ்வரூபமான சேதனத்தின் மீது இரண்டு அத்யாஸங்கள் ஏற்றி வைக்கப்படுகின்றன.
  • அனுபவிக்கப்படும் பொருட்களின் தன்மைகளை அனுபவிப்பவன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  ஸ்தூல சரீரத்தின் தன்மைகளை ஆத்மாவில் ஏற்றி வைத்து அதுவே நான் என்று அறிந்து கொண்டிருக்கின்றோம்.  கண்ணாடியில் இருக்கும் பிம்பத்தையே நான் என்று நினைத்து கொண்டு இருப்பதைப் போல சிதாபாசத்தையும் நான் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றொம். புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மாவான சிதாபாசமானது அறிதல் என்ற செயலை செய்து கொண்டிருக்கின்றது.
  • உன்னுடைய உண்மையான ஸ்வரூபமானது எந்தவொரு பொருளுமல்ல, எதையும் அனுபவிப்பவனான சிதாபாஸமும் நீ அல்ல என்று நீக்குகின்றது

மந்திரம்-3   இதில் ஜாக்ரத் அவஸ்தை விளக்கப்படுகிறது.  இதில் பார்க்கப்படும் பொருட்கள் உடலுக்கு வெளியே இருக்கின்றது.  ஸ்தூல பிரபஞ்சத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  அதுவும் நீக்கப்படுகின்றது. இதை அனுபவிப்பவன் பெயர் விஸ்வன்.

மந்திரம்-4   சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவு பிரபஞ்சத்தை நாம் அனுபவிக்கின்றோம்.  சமஷ்டியில் இதை ஹிரண்யகர்ப்பன் என்றும், வியஷ்டியில் இதை அனுபவிப்பவனை தைஜஸன் என்று அழைக்கப்படுகின்றது.

மந்திரம்-5   காரண சரீர அபிமானத்தால் ஆழ்ந்த உறக்கம் அனுபவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஜீவனை பிராக்ஞன் என்று அழைக்கப்படுகின்றது.

மந்திரம்-6   சமஷ்டியான அந்தர்யாமி-ஈஸ்வரன் இதில் விளக்கப்படுகின்றது.  இதிலிருந்து நாம் நான் என்று குறிப்பிடுவது ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மந்திரம்-7   நம்முடைய சிதாபாசமும் நீக்கப்படுகின்றது.  நிலைக்கண்ணாடியில் தெரியும் நம் உருவ பிம்பத்தை நான் என்று நினைத்துக் கொள்வதைப்போல புத்தியில் பிரதிபலிக்கும் சேதனமான சிதாபாசத்தை ஆத்மா என்று புரிந்து கொள்ளாதே.  ஆத்மா அறிவும் அல்ல, ஜடமும் அல்ல அறிவு ஸ்வரூபம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இது அவ்விவகாரம், அதிருஷ்யம், அலக்ஷணம், அசிந்தியம் என்ற குணங்களை உடையதாக இருக்கின்றது.  அனாத்மா மித்யா என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மந்திரம்-8   ஓங்காரம் விசாரம் செய்யப்படுகின்றது.  ஓங்காரத்தில் உள்ள அகாரம் ஜாக்ரத் அவஸ்தை அனுபவிக்கும் விஸ்வனையும், உகாரமானது கனவு பிரபஞ்சத்தை அனுபவிக்கும் தைஜஸனையும், மகாரமானது பிராக்ஞனையும் குறிக்கின்றது என்று ஒப்பிட்டு ஒங்காரமானது விளக்கப்படுகின்றது.

மந்திரம்-12 மந்திரம்-7ன் சாரமே இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.  அசப்தமே ஆத்மாவாக இருக்கின்றது என்று புரிய வைக்கின்றது. இது நாம் அனுபவிக்கின்ற சப்தமற்ற நிலையான அசப்தத்தை குறிக்கவில்லை. இங்கு குறிப்பிடும் அசப்தமானது எது சப்தத்தையும், அசப்தத்தையும் உணர்த்துகின்றதோ அதுவே என்று சொல்லப்படுகின்றது. இது அசப்த ஸ்வரூபம், அமாத்ர ஸ்வரூபம்.

 

ஓம் ஸத் தத்

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading