மூலவர் -ஆண்டளக்கும் ஐயன் -/ புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -அழகிய மணவாளன் -ஸ்ரீ ரெங்கம் போலவே –
தாயார் -ஸ்ரீ ரங்க நாயகி –பார்க்கவி என்றும் திரு நாமம்
விமானம் -ப்ரணவாரா விமானம்
தீர்த்தம் -ஸூ ர்ய புஷ்கரிணி
ஸ்தல வ்ருக்ஷம்–பாடலை வ்ருக்ஷம்
மங்களா சாசனம் –திரு மங்கை ஆழ்வார் –
அரங்கன் கழியனுடன் விளையாடிய வரலாறு ஓலைப்பாடி -ஓலையில் கணக்கு எழுதிவைத்த இடம் – விஜயமங்கலம் வெற்றி நடை போட்ட ஸ்தவம் -திரும்பூர் திரும்பிப் பார்த்த இடம் -மாஞ்சேரி மாஞ்சு போனாராம் -அந்த ஸ்தவம் -மரக்கால் கைவைத்துக்கொடுத்த ஸ்தலம் வைகாவூர் -மரக்காலுடன் சயனம் ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -என்னை மனம் கவர்ந்த ஈசனை -வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -காமதேனு உடன் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் கர்ப்ப க்ருஹத்துக்குள்ளேயே எழுந்து அருளி சேவை சாதிக்கும் திவ்ய தேசம் இதுவே
ஆ -பசு -காம தேனு -இந்த ஷேத்ரத்தில் தவம் பெற்று சிறந்த கதி பெற்றதால் -ஆதனூர் -பெயர்
திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய கடனுக்கு இப்பெருமாள் செல்வம் அளந்து கொடுத்து
கணக்கும் எழுதிய படியால் -மரக்கால் ஓலைச் சுவடி யுடன் எழுந்து அருளி இருக்கிறார் –
மண்ணை அளந்து கொள்ளக் கொடுக்க -சரியாக வேலை செய்தால் தங்கமாக தெரியும் -இல்லை என்றால் மண்ணாக தெரியும்
கணக்கும் வைக்க எழுத்து கோல்
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -அரசனாக ஆண்டு அன்னம் அளக்கும் -அளிக்கும் -ரக்ஷகன் –
பெருமாள் தலைக்குக் கீழ் ஒரு மரக்கால் படியை வைத்து இருக்கிறார்
அக்னி பகவானுக்கும் தன் சாபம் தீராத தவம் புரிந்த க்ஷேத்ரம் -கொள்ளிடம் காவேரி நடுவில் சேவை இங்கும் –
இந்திரனும் ஸ்ரீ மஹா லஷ்மி மாலையை மரியாதை குறைவுடன் நடத்திய சாபம்–துர்வாசர் பிருகு சாபம் -இரண்டும் சொல்வர்
இங்கே தவம் இருந்து தாயாரின் அருளை பெற்று தீர பெற்றான் –
ஸ்வாமி மலையில் இருந்து 3 கி மி தூரம் –
மூலவர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ அழகிய மணவாளன்
தாயார் ஸ்ரீ ரங்கநாயகி, ஸ்ரீ பார்கவி, ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி, ஸ்ரீ கமல வாசினி
தீர்த்தம் ஸ்ரீ சூர்ய புஷ்கரணி
விமானம் ஸ்ரீ பிரணவ விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ஆண்டளக்குமையன் ஸ்வாமிநே நமஹ
—————
அன்னவனை ஆதனூராண்டாளக்கு மையனை நென்னலை யின்றினை நாளையை நீர்மலை மேல் –பெரிய திருமடல் – 130-
என்னை மனங்கவர்ந்த ஈசனை – வானவர்தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”– பெரிய திருமடல் 126 – 129
இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது.
இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்றுவிடலாம்.
ஆவாகிய காமதேனு மகாவிஷ்ணுவிடம் சரணடைய வேண்டுமென்று இத்திருத்தலத்தில் தவமிருந்து அது சித்தித்தது. காமதேனு தவமிருந்ததால்
ஆ+தன்+ஊர் ஆதனூராயிற்று. இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா
ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது.
இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக்
கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டுமன்றி அவனையும்
பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.
எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன்
சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக கருதப்படுகிறது.
ஆதிரங்கேச்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
ப்ருகு, அக்னி, காமதேனுப்யோ தத்தாபீதம் தயாந்திரம்
விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் ஸு ர்ய
புஷ்கர்னி திரே சேஷஸ்யோபரி ஸாயிநம்-
மூலவர்-ஆண்டளுக்கும் ஐயன், தலையின் கீழ் மரக்காலும் இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன், கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட திருக்கோலம்.
தாயார்- பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி.
உற்சவர்– அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)
விமானம்– ப்ரணவ விமானம்
வ்ருட்சம்– புன்னை, பாடலி
தீர்த்தம்– சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
காட்சி கண்டவர்கள்–காமதேனு, ப்ருகுமுனிவர், அக்னி பகவான், திருமங்கையாழ்வார்.
இத்தலத்தில் காமதேனுவுக்கும், காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு.
ஸ்ரீரங்கத்திற்கு இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுதல் போன்று இத்தலத்திற்கும் 2 கல் தொலைவில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும்
ஓடுகிறது.–ஒரு காலத்தில் திருவரங்கம்போன்று இங்கும் 7 மதில்கள் இருந்ததாகவும் பிற்காலத்தே காலவெள்ளத்தே அழிந்துபட்டது என்றும் அறிய முடிகிறது.திருவரங்கம் கர்ப்பகிருகத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு தங்கத் தூண்களை மணத்தூன் என்றும் சொல்வார்கள். இதேபோன்று ஆதனூரிலும் எம் பெருமானின் கர்ப்பகிருஹத்திற்குள் இத்தூண்கள் உண்டு
மிகச் சிறப்புற்று விளங்கிய இக்கோவிலின் பழைய அமைப்பு பூமிக்கு அடியில் புதைந்துவிட அச்சமயம்-காஷ்மீர் தேசத்து ராஜாவின் புதல்விக்கு (பேய்) பிர்ம்மராட்சஸு பிடித்து, எவ்வளவு பாடுபட்டும் அதைத் தீர்க்க முடியாது அம்மன்னன் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கனவில் தோன்றிய இப்பெருமான் இக் கோவிலை செப்பனிடுமாறு தெரிவிக்க, அவன் பரிவாரங்களுடன் வந்து தங்கி
இப்போதுள்ள மாதிரியை ஒத்துக்கட்டி முடிக்க அவன் மகளைப் பிடித்திருந்த பிர்ம்மராட்சஸு ம் ஒழிந்தது
திருமுழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே என்பது ஐதீஹம்.
என்னை மனங்கவர்ந்த ஈசனையென்று திருமங்கை தனது
மங்களாசாசனத்தை இப்பெருமானுக்காக ஆரம்பிக்கிறார்.
என்னை மனங்கவர்ந்த என்று சொல்லி நம்மாழ்வார் திருமுழிக்களத்து எம்பெருமானுக்காக எடுத்தாண்ட
முழிக்களத்து வளத்தின் என்பதை இவர்-மூழிக்களத்து விளக்கினையென்று மங்களாசாசித்தார்.
மூழிக்களத்தின் வளமாவது – ஸம்பத்து- இங்கு ஆண்டளக்கும் ஐயன் என்பதே ஸம்பத்திற்கு அடையாளமன்றோ
மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்
திருமங்கையாழ்வார் அரங்கநாதனுக்கு திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சமயங்கையில் இருந்த பொருள் எல்லாம் தீர்ந்துவிட
கைங்கர்யத்திற்குப் பணம் இல்லையே என்று பெருமானிடம் வேண்ட-கொள்ளிடக்கரைக்குவா பணந்தருகிறேன் என்று சொல்ல
அவ்விதமே வந்து நிற்க, எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி, மரக்கால் சகிதிமாய் ஒரு வணிகரைப் போன்று வர,
இவரைக் கண்ட திருமங்கை, யாரென்று வினவ, அதற்கு அந்த வணிகர் உம்பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளனே அனுப்பிவைத்தான் என்று சொல்ல,
சரி, அப்படியானால் சுவாமி, காலியான மரக்காலுடன்
வந்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கந்த வணிகர் இந்த மரக்காலைக் கையில் எடுத்து
வேண்டிய பொருளை மனதில் தியானித்து எம்பெருமானே சரண் என்று 3 தடவை சொன்னால் அப்பொருள் சித்திக்கும் என்று சொன்னார்.
அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும் என்று கூறினார்.
அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்ட வணிகர் ஒரு நிபந்தனை விதித்தார். அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவே காட்சி தரும்
என்று கூறி அளந்து போட பெரும் பாலானோர்க்கு மணலாகவே தெரிய, இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர,
வணிகர் மெல்ல நகர, திருமங்கை
பின்தொடர, இவருக்கு காட்சியளிக்க நினைத்த எம்பெருமான் மிகவிரைவாகச் செல்ல
திருமங்கை தமது குதிரையிலேறி பின் தொடர்ந்தார்.
இவ்விதம் ஓடிவந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை, எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம்.
அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும்
கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது திரும்பிப் பார்த்த ஊர் திரும்பூர் எனவும்,
திருமங்கையாழ்வார் விரட்டிக்கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர்(மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும்,
மரக்காலுக்குள் கை வைத்த ஊர்-வைகாவூர், என்றும்-புகுந்தது பூங்குடி என்றும்,-அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர்.
இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது. “ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமாணத்தின் பேரில் ப்ரணவ விமானத்தில் வாசுதேவன்
உள்ளான். இவன் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம் உண்டாகும். இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம்.
இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீஇராமபிரான் இங்கே வந்து எனது சகாயான் இங்கு வந்தாரா என்றுகேட்டுத் தனது திருவடியை வைத்துவிட்டுச் சென்றதாகவும், வரலாறு. இந்த
அஞ்சநேயருக்கு “வீரசுதர்சன ஆஞ்சநேயர்” என்பது பெயர். ஸ்ரீராமன் திருவடியும், ஸ்ரீஆஞ்சநேயரும் இப்போது இங்கு உளர். சிறந்த
வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் இந்த ஆஞ்சநேயர்.
இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது என்னார் அமலன்
ஆதனூர் எந்தை அடியார் –9-
அமலன்
ஆதனூர் எந்தை
அடியார் —பக்தர்கள் -இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் –
மடவார் மயக்கின் மயங்கார்
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்-ஸ்வர்க்க லோகமும் விரும்பார்
நான் எனது என்னார் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அருளுகிறார் –
காமதேனுக்கு பிரத்யஷம் -என்பதால் திரு ஆதனூர் -திரு நாமம் –
————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply