அவதாரிகை —
ஆபத் சகன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் –என்கிறார் –
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக ஷீராப்தியில் கண் வளர்ந்து
யவரும் யாவையும் எல்லாப் பொருளும் -சேதன அசேதனங்கள் -விபாகம் அற -சமஸ்த பதார்த்தங்கள்
கவர்வின்றித் -இடித்துக் கொள்ளாமல் -மிச்சம் இல்லாமல் -சோர்வு இல்லாமல்
தன்னுள் ஒடுங்க நின்ற பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி -பரவும் -ஞானம் தேஜஸ் -பிரபையாக கொண்ட -ஸ்வாமி
சங்கல்பத்தாலே சிருஷ்டித்து -கிரஹித்து கொள்வான் -லயம் -முன் நிலை அடைவதே -அழியாத நித்ய வஸ்துக்கள் –
அவர் எம்-நமக்கு —ஆழியம் பள்ளியாரே -ஷீராப்தி நாதன் -போக்யனாய்- கண் வளர்ந்து அருளுகிறார்
ஆகவே அவரே சர்வேஸ்வரன் -என்றதாயிற்று –
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
சேதன வர்க்கத்தையும் -அசேதன வர்க்கத்தையும் -இப்படி இரண்டு வகையாகச் சொன்னவற்றைக் கூட்டி -இப்படி இருக்கிற
சகல பதார்த்தங்களும் பிரளய ஆபத்தில் தன் வயிற்றிலே சேரும்படியான போது
கவர்வின்றித்
கவர்கையாவது -க்ரஹிக்கை-அதாவது ஹிம்சையாய் -ஒருவரை ஒருவர் நெருக்காத படி
திருவயிற்றுள் கவர் வின்றி -வெளியில் விடுபடாமல் -என்றுமாம் –
தன்னுள் ஒடுங்க நின்ற
தத் பஸ்யமஹம் சர்வம் தஸ்ய குஷௌ மகாதமன -என்னக் கடவது இறே
13 வருஷங்களும் ரிஷிகள் இடம் தர்ம உபதேசம் பெற்றார்களே பாண்டவர்கள்
பிரத்வி பதே -அரசே –என்று விளித்து -மார்கண்டேயர் -பெற்ற சேவையை சொல்லி -தன்னையும் சேர்த்து பார்த்து -கண்ணாடி அறை சேவை போலே –
பர்யங்கே -பாலம் பஸ்யாமி–நீ யார் கேட்க -விரலை வைத்து ஸ்ரீ யபதி -காட்டி –
தன்னுள் -தன் சங்கல்ப ஏக தேசத்திலே என்னவுமாம்-
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
இவர்கள் ரஷிக்கைக்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை உடையனாய் -இப்படி ரஷிக்கப் பெற்றவிடம் தன் பேறு என்று
தோற்றும்படி இருக்கிற திவ்ய விக்ரஹத்தை உடையரான
அவர் எம் ஆழியம் பள்ளியாரே —
தாம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக் கொண்டு-எம்- எங்களுடைய ரஷண அர்த்தமாக வந்த
ஏகார்ணவத்தை அழகிய படுக்கையை உடையரானார்
பயலும் பள்ளியும் பாழியும் படுக்கை -நிகண்டு –இப்படி ஆபத்சகனாய் அணியனாகையாலே இவனே ஈஸ்வரன் என்கிறார் –
——————————————————————————————-
அவதாரிகை –
அகடி கடநா சாமர்த்த்யத்தாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7-
அகடி கடநா சாமர்த்தியம் -சேராததை சேர்த்து -ஆலிலை தளிரில் -பரத்வம் துரவபோதம் -அறிய முடியாததே–அளவிட்டு தெரிந்து கொள்ள முடியாதே
பள்ளி யாலிலை-ஆலிலையை பள்ளியாய்-கொண்டவனாய்
யேழுலகும் கொள்ளும் வள்ளல் -திரு வயிற்றுக்குள் வைத்து உதாரன்
வல் வயிற்றுப் பெருமான் -திடமான –
அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே -தர்ம ஷேத்ரம் சொல்லி -இவனே பல அதர்மங்கள் செய்த மாயம் -தர்மம் காக்க செய்த செயல்கள்
அவருடைய மானச வியாபாரம் -உள்ளுள்ளார் அறிவார் -மனசில் அறிவார் யார் -யாரும் இல்லை -பிரிநிலை ஏகாரம்-
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
பள்ளி -படுக்கை -பவனாய் இருப்பதொரு ஆலந்தளிர் -இப்பொழுதே உத்பத்தியாய் இருக்கும்-
யாலிலை யேழுலகும் கொள்ளும் -இப்படுக்கையிலே சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்துக் கண் வளரும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
வள்ளல் -புக்க லோகங்களுக்கு அவ்வருகே இன்னம் கொண்டு வா -என்னும்படி இடமுடைத்தாய் இருக்கை –
கரியவாய –நீண்ட அப்பெரியவாய கண்கள் -ஜகம் முழுவதும் மூலையில் அடங்கும் படி -பார்த்த பார்வையிலே பிராட்டியார் பெருமிதம் அடைய –
ரஷ்ய வர்க்கம் குறைவாய் ரஷண பாரிப்பு மிக்கு இருக்குமே-
புநர் உக்தி தோஷம் உண்டோ -சங்கை -கீழ் ஆபத் சகத்வம் -கவர்வின்றி தன்னுள் ஒடுங்க -இங்கே அகடிகடநா சாமர்த்தியம் -மேலும் ஒரு சங்கை பரிகரம் –
அவாந்தர பிரளயம் மூன்று லோகம் தானே -பிராக்ருத பிரளயம் -ஷீராப்தியே இல்லையே-ரஷணத்தில் உண்டான ஈஸ்வரன் உடைய பாரிப்பைச் சொல்லுகிறது -ஏழு உலகம்-த்ரை லோக்யம் -பூமி கீழ் -மேல் உள்ளவை -மகா பலி மூன்று -ஏழு லோகத்தை அளந்தால் போலே-
வல் வயிற்றுப் பெருமான் -உட்புக்க பதார்த்தங்களுக்கு பய பிரசங்கம் இன்றியே ஒழியும்படி மிடுக்கை உடைத்தாய் இருக்கை
இவ் வேழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் -பெரிய திருமொழி -11-5-2-
பெருமான் –
இப்படி ரஷிக்க வேண்டிற்று உடையவனாகை
அவனுடைய உள்ளுளாய கள்ளமாய மனக் கருத்தை உள்ளுள்ளார் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே
யார் அறிவார்-
நீர் அறிந்து சொன்னீரே -என்ன- மார்க்கண்டேயரும் கண்ட அம்சம் மட்டுமே அறிந்து சொன்னார் –கண்டது ஒன்றைச் சொன்ன வித்தனை போக்கி-
உள்ளுள் -இன்னம் உள்ளே உள்ளே உண்டாய்
கள்ளமாய் -ஒருவருக்கும் தெரியாதபடியாய்
மாயமாய்- ஜ்ஞாதாம்சம் ஆச்சர்யமாய் இருக்கிற அவனுடைய மனக்கருத்து -மநோ வியாபாரத்தை ஒருவரால் அறியலாய் இருந்ததோ
மனக்கருத்தே தெரியாமல் மாயம் என்று அறிவான் எப்படி -துளி கண்டது மாயமாக இருப்பதால்
அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட -ஆழ்வார் அனுக்ரக லப்த ஞானம் -தெரிந்த அம்சம் அத்புதமாய் இருப்பதால்-
——————————————————————————–
அவதாரிகை –
சிருஷ்டியும் பாலநமும் ஸ்வ அதீனமாக உடையானாகையாலே இவனே ஈஸ்வரன் -என்கிறார் –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-
சர்வ பிரகார ரஷகன் அவனே -காக்கும் பிரான் கண்ண பிரானே
கருத்தில் -சங்கல்பத்தாலே
தேவும் எல்லாப் பொருளும் -சகல
வருத்தித்த மாயப்பிரானை யன்றி -வர்த்திப்பித்த -வளர்த்த -சத்தை பெற்று அபி வ்ருத்தி அடைய -ஈஸ்வரனை
சிருஷ்டித்து –
யாரே மூவுலகும் திண்ணிலை-திருத்தி-அநிஷ்டம் தொலைந்து திண்ணியதாக நிலை யுடைத்தாம் படி திருத்தி
தன்னுள் இருத்திக் -தன்னுள்ளே வைத்து அருளி
காக்கும் இயல்வினரே-ரஷித்து -இருவரும் இவரே -சம்ஹாரம் சேர்த்து அடுத்த பாசுரம் –
முதலாம் திரு உருவம் மூ என்பார்-ஒன்றே முதல் என்பர் -பேச நின்ற பிரமனுக்கும் சிவனுக்கும் -ஆபாத ப்ரதீதி
இருத்திக் காக்கும் இயல்வினரே-வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே –வருத்தித்த -உண்டாக்கி -காக்கும் -பாலனம்
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
தன்னுடைய சங்கல்ப்பத்தில் தேவ ஜாதியையும் மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் வர்த்திப்பித்த -உண்டாக்கின -சிருஷ்டித்த
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை யன்றி
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள் இருத்திக் காக்கும் –
மூன்று லோகங்களையும் திண்ணிதான ஸ்திதியை யுடைத்தாம் படியாக திருத்தி —திருத்தி லோக மரியாதைகளை ஏற்படுத்தி -சத்தை உண்டாக்கி
வாக் /மனஸ் /காய அபசாரங்கள் அடியாக பிறவிகள் –
தம்முள் இருத்தி
அவ்வோ பதார்த்தங்களுக்கு அனுரூபமான ரஷணங்களையும் திரு உள்ளத்தே வைத்துக் காக்கும்
நஹி பாலன சாமர்த்தியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-19–என்கிறபடியே ரஷணத்தைப் பண்ணும்
இயல்வினரே —
இத்தை இயல்வாக வுடையவர் –
ஸ்வபாவமாக யுடையவர் ஆர் –
மாயப்பிரானை அன்றி காக்கும் இயல்வினர் ஆர் -என்று அந்வயம்
——————————————————————————————–
அவதாரிகை —
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீநமாம்படி இருக்கையாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார் –
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-
ஜகத் உத்பத்தி சம்ஹாரங்களும் ரஷணத்தோ பாதி அவன் அதீனம்
காக்கும் இயல்வினன்-ரஷணம் -இவனுக்கு ஸ்வபாவிகம் –
கண்ண பெருமான் -கிருஷ்ணனா -சுலபனான -சர்வேஸ்வரன்
சேர்க்கை செய்து-சம்ஹாரம் -நாம ரூப விபாவ ரஹிதமாய் தம பர தேவி ஏகி பவதி -லயம் -கீழே கபளீகரம் —
மைத்ரேயர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் முதலில் -கேட்க -பராசரர் இடம் -ப்ரஹ்மா –ஏகே அநேக சூஷ்ம ஸ்தூல -நம-இதே இதே என்று சோம்பல் இல்லாமல் சொல்லி அருளி -சேர்த்தார் -ஒன்றாக வில்லை -இரண்டுமே இருக்குமே -அப்ருதக் சித்த விசேஷணம்-தம -ஏகி பவத் –சொல்லி -தத்வ த்ரயம் என்பதால் –தமஸ் மூல பிரகிருதி அவன் இடம் சேர்ந்ததும் இதை கபளீகரம் இல்லையே -நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றி என்றபடி –
தன்னுந்தி யுள்ளே –வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான்- தெய்வ வுலகுகளே-வாசச் ஸ்தானங்கள் உடன் சிருஷ்டித்து –
திருநாபி -சத்ய லோகம் கொடுத்து -பிள்ளைக்கு தனி லோகமும் கொடுத்த –உந்தி யுள்ளே வாய்த்த திசை முகன் -என்றுமாம்
வாய்த்த -சமர்த்தனான –
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
ந சம்பதாம் சமாஹாரே -என்கிறபடியே பாலன கர்மத்தை ஸ்வபாவமாக உடையவன் –
ரஷண அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த சர்வேஸ்வரன் -ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகதோ மதுராம் புரம் —
சேர்க்கை செய்து
சம்ஹார காலம் வந்தவாறே கார்ய ரூப பிரபஞ்சம் அடைய தன் பக்கலிலே சேர்க்கையாகிற செயலைச் செய்து –
தன்னுந்தி யுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே –
தன்னுடைய திரு நாபீ கமலத்திலே -தான் ஒரு கால் ஸ்ருஷ்டி என்று விட்டால் பின்பு தன்னையும் கேட்க வேண்டாதபடி
ஸ்ருஷ்டி ஷமனான சதுர்முகன் இந்திரன் மற்றும் உண்டானே தேவர்களோடு கூட இவர்களுக்கு இருப்பிடமான
லோகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான் –தன் உந்தியுள்ளே ஆக்கினான் –
————————————————————————————
அவதாரிகை –
இவ்வளவும் வர நான் பிரதிபாதித்த பரத்வத்தை நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்து இருக்கிறவர்கள்-மேல் எழுத்தைக் கொண்டு விஸ்வசியுங்கோள் என்கிறார்-
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10-
சர்வ ஸ்மாத் பரன் -அவன் -அனைவராலும் வணங்கப்படும் படியால் சர்வேஸ்வரன் இவனே –
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் -ரிஷபம் தர்ம பிரதிநிதி -கலி -சூத்திர புருஷன்
-மாடுக்கு ஒரே கால் -பரிஷித் -எருது -தர்ம தேவதை பசு பூமி சத்யம் தானம் இத்யாதி நான்கு கால்களில் ஒன்றே கலியுகத்தில்-
கர்மவச்யரான ருத்ரன் –
புள்ளூர்தி -வாகனமாக உடையவனது -வேதாத்மா -விஹகேச்வர -வேதாந்த வேத்ய பரதெய்வம் -இவனே -வேதாந்த பிரதிபாத்யன்
கழல் பணிந்து
கள்வா-கிருத்ரிமனே -அவதார முகத்தாலே தனது ஆதிக்யம் மறைத்து
எம்மையும் ஏழுலகும் நின் னுள்ளே தோற்றிய இறைவ -சங்கல்பத்துக்குள் -என்று ஏத்துவரே-ஸ்துதித்து-
கேசவாதி நாமங்களை நன்றாக சொன்னதால் -வரம் கேட்க -இந்த விருத்தாந்தம்
கள்வா –
சர்வேஸ்வரன் பக்கலில் வந்து வரம் கொள்ளுகிற இடத்தில் தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தர வேணும் -நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி
என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்று போக வேணும் என்று ஆர்த்திக்க -அப்படியே செய்கிறோம் என்று விட்டு -ருக்மிணிப் பிராட்டிக்கு
ஒரு பிள்ளை வேணும் என்று சென்று –நமோ கண்டாய கர்ணாயா -என்னுமா போலே ஏத்த அவனும் -உமயா சார்த்தமீசாநா-என்கிறபடியே
புறப்பட்டு -நீ கறுப்புடுத்து தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இத்தை நாட்டார் மெய் என்று இருப்பார்களோ கள்வா -என்பர்கள்
தன் ஸ்வா தந்த்ர்யத்தை மறைத்து பர தந்த்ரனாய் நிற்கை இறே களவாகிறது
உமா -மலைமகள் -ஹிமாசலம் பெண் இலை மட்டும் உண்டு இளைத்து -உ மா இப்படி செய்யாதே அபர்ணா -இலை கூட சாப்பிடாத
ராஜ தர்பார் -கருப்புடுத்து சோதித்தல் -அந்தர்யாமி -நாயனார் -இங்கே விபவம்
கைலாச யாத்ரையிலே நமோ கண்டாய கர்ணாய நம கடகடாயச –என்று ஸ்தோத்ரம் பண்ணின படியே கேட்ட பிராமணன்
-இதுக்கு முன்பு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானாவாறே மீன் துடிக்கிற படி பாராய் -என்றான் நாத்தழும்ப நான்முகனும்
ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-என்கிறபடியே ஸ்தோத்ரம் பண்ணி நாத்தழும்பு பட்டுக் கிடக்கிறது அன்றே –
இவன் தாழ நின்ற நிலையும் ஸ்தோத்ரம் பண்ணின நிலையும் –களவு -என்னும் இடத்தை உபபாதிக்கிறது மேல்
கொள்வன் நான்– மாவலி –மூவடி என்றானே
என்னை வகித்து என்னிடம் வரம் வாங்கிக் கொள்ள வேணும் –வகித்தது மேகமாய் –என்று வருளிச் செய்வார் –
நூறு வருஷம் மேகமாய் இருந்து –மேகமாய் வகித்தான் திருமால் காண் சாழலே -திரு வாசகத்தில் சாழல் பாசுரம் –
அகிர்த்ரும சேஷ்டிதம்-சொக்கட்டான் -காசி ராஜ்யம் -புண்டரக வாஸூ தேவன் -சீமாலிகன் –உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் –
காசி ராஜன் கோபித்து படை எடுத்த வர -நிராதாரத்துடன் -சக்கராயுதம் கொண்டு எரித்து -அவன் இடமே வரம்கேட்ட சேஷ்டிதம் என்னே –
பிஞ்சுத் திருவடியால் தாத்தா பெறக் குழந்தை காலை தலையில் அடித்து கொண்டது போலே -பாரதந்த்ரம் -உனது ஸ்வதந்த்ர்யத்தால் செய்த செயல்
எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய –
நீ இவற்றை மனைகிற-படைக்கிற-போது -எங்களையும் மனைந்து பின்னை யன்றோ திர்யக் ஜாதிகளை உண்டாக்கிற்று
இறைவ என்று
இறைவா என்னா நிற்பார்கள்
இங்கனே சொல்லுகிறவர்கள் தான் ஆர் என்னில்
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
ராஜ சேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே இவர்களும் தாம்தாம்
அடையாளங்கள் உடன் ஆயிற்று வந்து சேவிப்பது
இரவியர் மணி நெடும் தேரோடும் –இத்யாதி
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பிலே புகப் பெறாமையாலே திருப் பாற் கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்
இவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காக திருவடி திருத் தோளிலே ஏறிப் புறப்படும் ஆட்டத்து வெளியிலே -வையாளி வெளியே –
ஆனைக்காலிலே துகை யுண்ணா நிற்பார்கள் –
————————————————————————————-
அவதாரிகை
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்களுக்கு தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈச்வரத்வ புத்தி பண்ணுகை யாகிற ஊனம் இல்லை -என்கிறார்
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-
பலமாக சர்வ பிரகார வைகல்யத்தை அருளிச் செய்கிறார்
ஏத்த வேழுலகும் – ஏத்தும் இதே விளை நீராக
வேழுலகும் கொண்ட-அளந்து கொண்ட கோலக் கூத்தனை -வல்லார் ஆடுவது போலே -வடிவு அழகு -அநாயாசேன-அளந்த
குருகூர்ச் சடகோபன் சொல் வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன் -லோகத்துக்கு அலப்ய லாபம்
சொல் வாய்த்த -சொல்லாலே வாய்ந்த திருவாய்மொழி
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே-உடன்பட்டு -அர்த்தத்துடன் -ஸ்துதி ரூபமாக -ஊனம் குறைவுகள் இல்லை
த்ரிதேவதா சாம்யம் என்னும் ஊனம் இல்லை –
ஏத்த வேழுலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூராணாம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்கிறபடியே ஏத்த –
மங்களங்களை வளர்த்துக் கொடுக்க -அனைவரும் -ஸ்துதிதிக்க-
அந்த ஹர்ஷத்தாலே சகல லோகங்களையும் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
கோலக் கூத்தனை –
திரு வுலகு அளந்து அருளின போது வல்லார் ஆடினால் போலே யாயிற்று இருப்பது
அப்போதை வடிவு அழகை அனுபவிக்குமது ஒழிய இந்திரனைப் போலே ராஜ்ய ஸ்ரத்தை இல்லையே இவர்க்கு
வங்கக் கடல் கடைந்த கேசவனை மாதவனை -ஆண்டாள் மட்டுமே கேசத்தின் அழகைக் கண்டாள் –
குருகூர்ச் சடகோபன் சொல்
ஆப்திக்கு இன்னார் சொல்லிற்று என்னக் கடவது இறே
சடகோபன்
வேதாந்தத்தில் காட்டில் ஆழ்வார் பக்கலிலே பிறந்த ஆபிஜாத்யம் –லோக விக்ராந்த சரனௌ -வேதம் தான் தோன்றி போலே இல்லையே
வாய்ந்த வாயிரத்துள் –
இத்தனை போது இவர் பிரதிபாதித்த பர வஸ்து நேர் பட்டால் போலே யாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி -ஸ்தாபித்ததாயிற்று-
வாச்யத்தில் காட்டில் வாசகம் நேர்பட்ட படி என்றுமாம்
அதாவது விஷயத்தை உள்ளபடி பேச வற்றாய் இருக்கை
இவை பத்துடன் ஏத்த வல்லார்க்கு
இத் திருவாய் மொழியை சஹ்ருதயமாக ஏத்த வல்லவர்களுக்கு
இல்லையோ ரூனமே —
இவ்வாத்மாவுக்கு ஊனமாவது அபர தேவதைகள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தி பண்ணுகையும்-பரதேவதை பக்கலிலே பரதவ புத்தி பண்ணாமையும்
இப்படி வரக் கடவதான ஊனம் இது கற்றார்க்கு இல்லை –
முதல் பாட்டில் -மேல் பரக்க அருளிச் செய்கிற இத் திருவாய் மொழியின் அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டு முதல் –துக்க நிவர்த்தகன் ஆகையாலும்
சீலவான் ஆகையாலும்
ஸூகுமாரன் ஆகையாலும்
புண்டரீகாஷன் ஆகையாலும்
ஆபத்சகன் ஆகையாலும் அகடிதகடநா சமர்த்தன் ஆகையாலும்
ஸ்ருஷ்டி ஸ்திதிகளைப் பண்ணுகையாலும்
சம்சாரம் ஆகிற செயலைச் செய்கையாலும்
ஈஸ்வர அபிமாநிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்தோத்ராதி களாலும்
இப்படி பஹூ பிரகாரங்களாலே -அவனுடைய பரத்வத்தை அருளிச் செய்து இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –
————————————————————————————————-
——————————————————————-
திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 12-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-
திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் ——————12-
ஊனம் இல்லை -அங்கு -/ ஊன் இல்லை இங்கு -பிறவியே இல்லை நம்மாழ்வார் கழல் பிடித்தால் –
———————————————————————
திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்
ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே
ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே
—————————————————————–
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –
1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்
2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்
3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –
4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்
5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்
6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்
7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்
8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்
9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்
10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை
வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –
———–
அவதாரிகை –
ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே
அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்
இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை
இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை –
திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
——————————————————————————
வியாக்யானம்-
திண்ணிதா மாறன் –
கீழே
மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் -2-1-10-
என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -2-1-11–என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை-அருளிச் செய்த ஆழ்வார் -என்னுதல் –
திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை
நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த –
திருமால் பரத்வத்தை
அவதாரத்தே நண்ணி
நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியை யாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே
பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம் படி நன்றாக அருளிச் செய்த
-அன்றிக்கே –
திருமால் பரத்வத்தை தாம் நண்ணி
அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-
நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகை யாவது –
இப்படி அவதாரே பரத்வத்தை
ஸூஸ்பஷ்டமாம்படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து
அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி –புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர்
என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்–பேதைக் குழவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா– கமலா பத்ராஷஸ் –சர்வ சத்வ மநோஹரா-என்றும்–படி எடுத்து உரைக்கும் படி யன்றே அவன் படி -மூவாறு மாசம் மோகித்து –
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று –முலை மேல் சோர்கின்றாளே -கல் எடுத்தது பெரியது இல்லை சொல் என்று –
லாவண்யம் சௌந்தர்யம் -இரண்டையும் சுருங்கச் சொல்லி –
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி
பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து
பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –
வண்ணம் அறிந்து -அற்றார்கள்யாவர் –
அற்றுத் தீர்ந்து
அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –
அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்
அவ்விடத்திலே அப்படியே
அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-
————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply