Archive for June, 2016

பகவத் விஷயம் காலஷேபம் -146- திருவாய்மொழி – -7-2-6…7-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 26, 2016

‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னும்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-

அநந்தரம் ஆஸ்ரித சம் ரக்ஷணார்த்தமாக திவ்ய ஆயுத பூர்த்தியை யுடையையாய் இருக்கச் செய்தே
இவளை இப்படி அலற்றும்படி பண்ணின நீ இவள் அளவில் நான் செய்யக் கடவ படி அருளிச் செய்ய வேணும் என்கிறாள் –

கீழே ஐந்தாம் பாசுரத்தில் மையல் செய்த பெருமானே இவள் திறத்து அருளாய் என்று கொண்டு பொருள் கொள்ள வேணும்

‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;-உன்னுடைய பவ்யத்தையாலே என்னை
மையல் கொள்ளப் பண்ணி நெஞ்சை அபஹரித்தவனே என்னும் -மையல் கொள்ளுகைக்குப் பண்ணின
நிரவதிக ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனே என்னும்–ரிஷிகளுக்கு மாயம் -இவளுக்கு மா மாயம்
இவள் திருவடியே வாசஸ் ஸ்தானம் என்று அருளிச் செய்வான் –பவ்யத்தை உக்தியால்
மையல் செய்து என்று பிச்சரைப் போலே பாவித்துக் காட்டி என்றுமாம் –
‘செய்யவாய் மணியே!’ என்னும்’–பவ்யதா ப்ரகாசகமான உக்தியாலே ஸ்ப்புரிக்கிற சிவந்த அதர சோபையை
யுடையாய்க் கொண்டு மணி போலே முடிந்து ஆளலாம்படி ஸூலபனானவனே என்னும்

நைவளமும் –இதே ரீதியில் -பாடி -நம்மை நோக்கா -இறையே நயங்கள் செய்யும் அளவில் –
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் -போலே
இது அன்றோ எழில் ஆலி என்றானே -பவ்யதா பிரகாசகம் -மணி போலே முடிந்து ஆளலாம் படி சுலபன்-

தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;–உன்னைக் கிட்டி என் பரிதாபம் தீருகைக்கு ஈடாகக் குளிர்ந்த நீர் சூழ்ந்த
கோயிலிலே ஸந்நிஹிதனானவனே என்னும்
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;–விரோதி விஷயத்தில் வெம்மையே வடிவான
ஸ்ரீ பஞ்சாயுதங்களை ப்ரணதரஷா விளம்பம் பெறாதாரைப் போலே எப்போதும் ஏந்தி இருந்து –
அவ்வழகை ஸூரிகளுக்கு அனுபவிப்பித்து அவர்கள் சத்தா ஹேது பூதனானவனே என்னும்
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–உன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிகிற பணத்தை
யுடையனாய் ஜாதி ப்ரயுக்தமான குளிர்த்தி நாற்றத்தாலே நிரதிசய போக்யமான திருவனந்த ஆழ்வானை
படுக்கையாக யுடையவனே -நீ படுக்கை பொருந்திக் கிடக்கத் தறைப் பட்டுக் கிடந்து அலற்றுகிற இவள் திறத்து –
இவளை இப்படி காண வைத்த பாபத்தை யுடைய நான் செய்யும் பிரகாரம் அருளிச் செய்ய வேணும் –
நீ அநாதரித்த அளவில் என்னால் செய்யலாவது ஒரு பரிஹாரம் உண்டாக்க உன்னாலும் சொல்ல முடியாது என்று கருத்து –

இங்கு சேஷ சாயித்தவம் சொல்ல வில்லை -திரு விருத்தம் –62 அரவணை மேல் பள்ளி கொண்டாய் –
இந்த பதிகம் முழுவதிலும் –கானம் கூட்டி -ருக் பரிணமித்து சாமம்
பைகொள் பாம் பணையாய்–தாயார் வார்த்தை -இவளது விளிச் சொல் -என்னும் -இல்லை -மகள் வார்த்தையாக -5-8-சரணாகதி த்வயம் போலே
இல்லை பார்த்தோம் நான்கும் -அங்கே பிரியா அடிமை என்னைக் கொண்டாய் திருமாலே -பிராப்ய பரமான வார்த்தை -என்பதால் –

ஜாதி பிரதியுக்தமான -மென்மை குளிர்த்தி நாற்றம் -வெளுத்து நிரதிசய போக்யமான –
படுக்கை உறங்குமா -ஊம்பியும் நீயும் உறங்கேல் -இவள் திறத்து -இது பொருந்துமோ -இவள் துடித்து இருக்கும் பொழுது

‘மயக்கத்தைச் செய்து என்னுடைய மனத்தைக் கொள்ளை கொண்டவனே!’ என்பாள்; ‘மாமாயனே!’ என்பாள்;
‘சிவந்த திருவதரத்தையுடைய மாணிக்கமே!’ என்பாள்; குளிர்ந்ததண்ணீர் சூழ்ந்த திருவரங்கத்தில் உள்ளவனே!’ என்பாள்;
‘வெம்மை பொருந்திய வாள், தண்டு, சங்கு, சக்கரம், வில் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்திருக்கின்ற விண்ணோர் முதல்வனே!’ என்பாள்;
படத்தைக் கொண்டுள்ள ஆதிசேடனைப் படுக்கையாக வுடையவரே! இவள் விஷயத்தில் திருவருள் புரிகின்றீர் இலீர்;
அது பாவியேனுடைய செயலிடத்தது’ என்கிறாள். என்றது, ‘இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை;
இருவருமான சேர்த்தி பெற இருக்கிற என் பாபமன்றோ இதற்குக் காரணம்?’ என்றபடியாம்.: மூன்றாம் அடியில், பஞ்சாயுதங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

‘இவள் இவ்வளவு ஆபத்தை அடைந்தவளாயிருக்க, இவள் துயரத்தைத் தீர்த்து
அருளாதொழிகைக்குக் காரணம் என்னுடைய பாபமே’ என்கிறாள்.
(பன்னீராயிரம் வேறே அர்த்தம் பார்த்தோம் -)

மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும்-
உணர்த்தி உண்டாகில் நெஞ்சு இழவாள் காணும்.

எதிரிகளுக்குடைய அநவதானம் பார்த்து இருந்து -பகைவர்களுடைய சமயம் பார்த்து
இருந்து அவர்களைக் கோட்டை கொள்ளுவாரைப் போலே.

டலைத் தரை கண்டான் என்னமாறு போலே இருத்தலின், ‘என்னை’ என்கிறது.
புழுகூற்றிச் சட்டம் பொகடுவாரைப் போலே இருத்தலின், ‘மனம் கவர்ந்தான்’ என்கிறது.
அத்வேஷம் -தொடங்கி -உபகார பரம்பரைகள் -பலவும் செய்து –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை பொகட்டு போவது போலே
கொன்று கிழிச்சீரை அறுப்பாரைப் போலே இருத்தலின்,

‘மையல் செய்து மனம் கவர்ந்தான்’என்கிறது.-
சாராம்சம் மனசை அபகரித்து -பிராந்தி விளைவித்து இரண்டுக்கும் இரண்டு த்ருஷ்டாந்தங்கள்

மா மாயனே என்னும்-
மையல் செய்த பிரகாரங்கள், என்றது,‘கலக்கிற சமயத்தில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்த
பரிமாற்றங்காணும் இவள் மனத்தில் பட்டுக் கிடக்கிறது’ என்றபடி.
‘இயல்பாயுள்ள மேன்மை போன்றதன்றே, காதலால் தாழ நின்ற நிலை’
கலவிக் காலத்தில் ஆச்சரியமான செயல்களை யுடையவனே!’ என்னும்.

செய்ய வாய்-
இதுவும் அந்த மாயங்களிலே ஒன்று.
தைரியக் குறைவு உண்டாய் ‘நான் உன் சரக்கு அன்றோ?’ என்று
சொல்லுகிற போதை அதரத்தில் பழுப்பு இருக்கிறபடி.
‘அழகிய முறுவலை யுடைய முகத் தாமரையைத் தரித்தவனை’ என்னக் கடவதன்றோ? –
அங்கே அவாக்ய அநாதரா –

மணியே-
புஷ்பம் மலருகிற போது எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறக்குமாறு போலே,
புன் முறுவல் செய்யும் போது வடிவிலே எங்கும் ஒக்க ஒரு செவ்வி பிறந்தபடி.

தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்-
புன்முறுவலில் உண்டாகும் குளிர்த்தியைப் போலாயிற்று ஊரில் குளிர்த்தியும்.
அகவாயில் குளிர்த்தி போலே யாயிற்று இவ் வாயில் குளிர்த்தியும்.–வாய் இடம் வாசல்
‘ஸவிலாஸ -முக பங்கஜம் ஸ்மிதாதாரம் ’ என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17:21.( அக்ரூரர் வார்த்தை )

வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்-
திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே
காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை?
முன்னே கை கண்டு வைக்கிறவை அன்றோ?
காணவே பகைவர்கள் மண்ணுண்ணும்படியான திவ்ய ஆயுதங்களைத் தரித்திருக்கிற நீ
என் விரோதிகளைப் போக்கி முகங்காட்டாது ஒழிவதே!

விண்ணோர் முதல் என்னும்-
திவ்விய ஆயுதங்களினுடைய சேர்த்தியால் வந்த அழகினைக் காட்டி நடத்த,
அதுவே ஜீவனம் ஆயிற்று அந்நாடு கிடப்பது.
இல்லையாகில், அங்கே வினை உண்டாகத் தரித்திருக்கிறான் அன்றோ?

பை கொள் பாம்பு அணையாய் –
புன்சிரிப்போடு. திவ்ய ஆயுதங்களோடு, நித்திய விபூதியை யுடையனாயிருக்கிற இருப்போடு,
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினதோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாக இருக்கிறபடி.

பகவானுடைய திருமேனியின் ஸ்பரிசத்தால் உண்டான உவகையாலே மலரந்த படங்களை யுடையனான
திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவரே!
தனிப் படுக்கையிலே சாய்வதே நீர், இவள் தரைக் கிடை கிடக்க?

இவள் திறத்து அருளாய் –
படுக்கையில் சேர்த்தி பெறா விட்டால், உலகத்தாருக்குச் செய்யும் அருளும் இன்றிக்கே ஒழிய வேணுமோ?

இவள் திறத்து –
பாடோடிக் -துக்கப்பட்டு -கிடக்கிற இவள் திறத்து.

அருளாய் –
அருள் கொள்வார் தேட்டமான நீர்,
அருள் பெறில் ஜீவிக்கும் இவளை இப்படித் தரைக் கிடை கிடக்க விட்டு வைப்பதே!

பாவியேன் –
நீர் அருளாதவர் அல்லீர்;
இவள் அது பெறா விடில் ஜீவிப்பாள் அல்லள்;
இதற்கு அடி நான் செய்த பாபம் அன்றோ?
‘என் பாபமே இந்த விஷயத்தில் காரணம் ஆயிற்று’ என்னமாறு போலே,

செயற்பாலது –
என்னுடைய செயலிடத்தது (கர்மம் காரணமாக ) அருளாமைக்கு அடி; என்றது,
‘இவள் பக்கலிலும் குறை இல்லை; உம்முடைய பக்கலிலும் குறை இல்லை;
இருவருமான சேர்த்தியைக் காண இருக்கிற என் பாபம் அன்றோ இதற்குக் காரணம்?’ என்றபடி.
இதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘என் பாபமே’ என்று தொடங்கி.

‘மத்பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்’-என்பது, ஸ்ரீராமா, அயோத். இது, ஸ்ரீபரதாழ்வான் கூற்று.

‘கொன்றேனான் என் தந்தையை மற்றுள் கொலைவாயால்
ஒன்றோ கானத் தண்ணலை உய்த்தேன் உலகாள்வான்
நின்றேன் என்றால் நின் பிழை யுண்டோ பழி உண்டோ?
என்றே னுந்தான் என் புகழ் மாயு மிடமுண்டோ?’-என்பது, கம்பராமாயணம்.

நிரதிசய வ்யாமோஹன் -மா மாயன் -அருளாதது உம் குறை இல்லை –
இவள் மயங்கி இருக்க -தப்பு இவளது இல்லை -பிராவண்யம் மிக்கு
பாவியேன் -மத்பாபம் காரணம்

———————————————————————————————————————-

‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

நிறைய விளிச் சொற்கள் -ஏழும் மகளது-திருத் தாயார் -இவள் திறத்து என் செய்ய இருக்கிறாய் போலே -வார்த்தை இல்லையே இதில்
அன்றிக்கே முதல் இரண்டு வார்த்தைகள் திருத் தாயார் சம்போதானம் –இபடி இருக்கிறாள் தன் மகள் இப்படி என்று அறிவிக்கிறான் என்று -நிர்வாகம் –

அநந்தரம் -ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான அரணவை சாயித்வாதி குணங்களை யுடையவன்
ஸ்வ பாவங்களைச் சொல்லி கிலேசியா நின்றாள் என்கிறாள் –

என்னுடையக் கோமளக் கொழுந்தே.–என்னுடைய மிருது ஸ்வ பாவமான லதாக்ரம் போலே மெல்லியளாய் இருக்கிற இவள்
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!–இடம் தோறும் இடம் தோறும் அநாஸ் ரித விஷயத்தில் துன்பங்களையும்
ஆஸ்ரிதர் இடத்திலே இன்பங்களையும் உண்டாக்கினவனாய்
பற்றிலார் பற்ற நின்றானே!–எத்தனையேனும் அபராதிகளாயும் புறம்பு பற்று அற்றாரான ஜெயந்தன் போல்வாரும் பற்றும்படி
அசரண்ய சரண்யனாய் நிற்பானாய்
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;–ஆஸ்ரிதருடைய பிராப்தி காலம் நீ இட்ட
வழக்காம்படி மாச ருதுவத்சராதி பரிவ்ருத்தியை யுடைத்தான கால சக்கரத்துக்கு நிர்வாஹகனாய்க் கொண்டு
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே கடலிலே ஒரு கடல் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுமவனாய்
ஷீரார்ணவ நிகேதனான அந்த ஆகாரத்தை விட்டு ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்தவனே என்னும்
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’-என்னும் -அதுக்கும் பிற்பட்டாருக்காக சேல்களை யுடைத்தான
குளிர்ந்த புனல் சூழ்ந்த கோயிலிலே ஸந்நிஹிதனானவனே என்னும்
’என் தீர்த்தனே!’ என்னும்;–அந்த ஸுலப்யத்தாலே நான் அவகாஹிக்கைக்கு துறையானவனே என்னும்
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்–இவ் வார்த்த த்வனியில் வரக் காணாமையாலே தர்ச நீயமாய்
பெருத்து குளிர்ந்த கண்ணானது நீர் விஞ்சும்படி நிர் வ்யாபாரையாய் இருக்கும்
இப்பாட்டு திருத் தாயார் வார்த்தையான முன்னிலை இல்லாமையால் அவள் தன்னுடைய உட்க்கொண்டு இரங்குதல்–
அன்றியே
கடல் வண்ணா என்னும் அளவும் தாய் வார்த்தையான நாயகன் முன்னிலையாய்
கண்ணனே என்று தொடங்கி நாயகி பாசுரத்தைச் சொன்னாள் ஆகவுமாம்-

‘என்னுடைய அழகிய கொழுந்து போன்ற பெண்ணானவள், ‘பகுதிப்பட்ட துன்பங்களையும் இன்பங்களையும் படைத்தவனே!’ என்பாள்;
‘ பற்று இல்லாத பரம ஞானிகள் பற்றும்படி நின்றவனே!’ என்பாள்; ‘கால சக்கரத்தையுடைவனே!’ என்பாள்;
‘திருப்பாற்கடலை இடமாகக் கொண்ட கடல் வண்ணனே!’ என்பாள்; ‘கண்ணனே!’ என்பாள்; ‘சேல் மீன்கள் தங்கியிருக்கின்ற
குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!’ என்பாள்; ‘என்னுடைய தீர்த்தனே!’ என்பாள்;
அழகிய பெரிய குளிர்ந்த கண்களில் நீர் மிகும்படி இருப்பாள்,’ என்கிறாள்.
பால் – பகுதி; இடமுமாம், தீர்த்தன் – பரிசுத்தான்; பாவத்தைத் தீர்க்கின்றவனுமாம். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ எனபது தொல்காப்பியம்.
கோமளம் – மிருதுத் தன்மையுமாம்.

‘அவர் அவர்களுடைய அளவுகளை நினைந்து, பொறுக்கும் அளவுகளிலே அன்றோ சுக துக்கங்களைச் சுமத்துவது?
இப்படி என்னைப் படுத்தலாமோ?’ என்னா நின்றாள் என்கிறாள்.
(ஆகவே பேச்சு மகள் வார்த்தை -கேட்டு தாயார் துன்பத்தை அறிவிக்கிறாள் )

அன்றிக்கே

அறடியார்களை வாழ்விக்கையும் அடியார் அல்லாதாரை நலிகையும் அன்றிக்கே,
இப்போது விபரீதமாயிற்றோ உம்முடைய படி என்கிறாள்’ என்று பிள்ளான் பணிக்கும்.
பால -முறை என்றும் இடம் என்றும் இரண்டு நிர்வாகங்கள் –
அன்றிக்கே,
‘இக் கோமளக் கொழுந்துக்குக் கைம் முதல் ஒன்றுமில்லாதார் பற்றினால் பாதுகாக்கக் கடவ
நீர்மையை யுடையவன் சந்நிதியிலே இவை எல்லாம் பட வேண்டுகிறது,
என்னுடைய சம்பந்தம் என்று எண்ணுகிறாள்’ என்னுதல்.

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
இடம் அறிந்து சுக துக்கங்களைப் படைத்தவனே! ‘பால்’ என்றது, இடம் என்றபடி
அப்பால் இப்பால் என்றால், அவ்விடம் இவ்விடம் என்றபடியன்றோ?
பாலவாக – அந்த இடத்தே அந்த இடத்தேயாக.
உம்மைப் பிரிந்தார் எல்லாருமனுபவிக்கும் துக்கத்தை இவள் ஒருத்தியுமே அனுபவிக்கப் பார்த்தால் இவளால் பொறுக்கப் போமோ?

அன்றிக்கே,
அடியார்கள் வாழவும் அடியார் அல்லதார் கெடும்படியாகவுமன்றோநீ செய்து வைத்தது?
பால் – முறை. பண்டு கட்டின மரியாதையும் இவளுக்கு இல்லையோ?
‘செய்குந் தாவருந் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தன் அன்றோ? திருவாய். 2. 6 : 1.
‘பால்’ என்பதற்கு, பாகம், இயைபு, இடம், நியாயம் என்பன பொருளாம்.
‘தங்கள் தங்களால் பொறுக்க ஒண்ணாதனவற்றைத் தாங்கள் தாங்களே ஏறிட்டுக் கொள்ளும்
போது நம்மால் செய்யலாவது உண்டோ? நம் பக்கல் குறை இல்லை;
பேறு தங்கள் தங்களதானால் தாங்களும் சில செய்ய வேணும் என்று அவனுக்குக் கருத்தாக,
அதற்கு விடை அருளிச் செய்கிறாள் மேல்:

பற்றிலார் பற்ற நின்றானே –
‘ஒரு கைம்முதல் இல்லாதார்க்காக அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
இந்தக் கிடை நித்திய ஸூரிகளுக்காகவோ? உம்முடைய பக்கல் பற்று அறுத்துக் கொண்ட
ஜயந்தன் போல்வார்க்கும் பற்றாய் இருக்குமவர் அன்றோ நீர்!’
‘அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்’ என்றே அன்றோ கூறுகிறது ஸ்ரீராமாயணம்?
‘தமேவ ஸரணம் கத;’ என்பது, ஸ்ரீராமா, சுந். 38:34

‘அது உண்டானலும் அதற்கு ஒரு காலம் உண்டே?’ என்ன,
கால சக்கரத்தாய் –
‘அந்தக் கால சக்கரம் நீ இட்ட வழக்கன்றோ?
அடியானுக்காகப் பகலை இரவாக்கினவன் அன்றோ?
அன்றிக்கே,
தடைகள் உண்டே?’ என்ன, ‘
தடைகளுக்குக் கூற்றுவனான திருவாழி அன்றோ நீ தரித்திருக்கிறது?’ என்னுதல்.-காலம் -கூற்று
‘பரிகரம் உண்டானாலும் நான் சேய்மையில் இருப்பவன் அன்றோ?’ என்ன,
‘அங்ஙனம் சொல்ல ஒண்ணாதே?’ என்கிறாள் மேல்:
(கால -காலம் என்றும் மிருத்யு என்றும் )

கடல் இடங்கொண்ட கடல் வண்ணா –
‘நீ எங்களைக் காலம் பார்த்தன்றோ கிட்டக் கிடக்கிறது?
((கிட்ட -அருகில் என்றும் கிட்டும்படி என்றும் )-தான் ஏற நாள் பார்த்து இருக்குமே )
ஒரு கடல் ஒரு கடலிலே சாய்ந்தாற்போலே அணித்தாகத் திருப்பாற்கடலிலே சாய்ந்திருக்கிறாய் அன்றோ?’
‘ஆயின், அங்கே வரலாகாதோ?’ என்ன,
அவ்வலையலைக் கேட்க மாட்டாத -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி அலைவலை –
ஆயர்கட்கும் ஆய்ச்சியர்கட்குமாகக் கிருஷ்ணனாய் வந்து உதவினாய் அன்றோ?’ என்கிறாள் மேல்:
அலவலை-கௌதம புத்திரர் -யாகம் பண்ண -த்ருதர் செந்நாய் கண்டு -ஓடி கிணற்றில் விழ ஏகதர் தவிதர்-
கிணற்றில் உள்ளவை கொண்டு -சுவர்க்கம் லோகம் வரை போகும் தொனி-அலவலை தேவர்கள் கேட்ட கதை –
ஹவுஸ் வாங்க வந்த கதை -மகா பாரதம் சல்ய பர்வம் கதை –

கண்ணனே என்னும்
–‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷிரார்ணவ நிகேதந:
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகதோ மதுராம் புரீம்’-என்பது, பாரதம். ஹரி வம்ஸம், 113:62
‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலைத் தனக்கு முன்னே சென்று அவதரிக்கும்படி போக விட்டு
மதுரை என்ற நகரத்திற்கு எழுந்தருளினார் அன்றோ?’ என்கிறபடியே,
அந்தக் கிடையை விட்டு இடையிலே வந்து உதவினாய் அன்றோ? அது தப்பிற்றே?’ என்ன,
‘அந்த அவதாரம் பரத்துவம் என்னும்படி அன்றோ கோயிலிலே வந்து சாய்ந்தருளிற்று?’ என்கிறாள் மேல்:

சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் –
‘தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்றவர் அன்றோ?’ என்றது,
‘ ‘ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ’ என்பது,
ஸ்ரீராமா. அயோத். 53:31.-தண்ணீரில் சஞ்சரிக்கின்ற மீன் முதலான பொருள்கள்
தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ இவள் உம்மைப் பிரிந்து தரிக்க வல்லளாவது?’ என்றபடி.
‘அந்த ஊரில் வசிக்கிற உமக்குத் தக்கதாமோ இவளுக்கு முகங்காட்டாது ஒழிகிற இடம்?’

என் தீர்த்தனே என்னும் – –
பாவனத்வமும்
ஸுலப்யமும் –
‘நீ உபேக்ஷித்தாலும் உன்னை ஒழிய எனக்குச் சொல்லாதபடி செய்தவனே!’ என்கிறாள் என்னுதல்,
அன்றிக்கே,
‘நான் இழிந்தாடும் துறை’ என்னுதல்.

கோலம் மா மலர்க் கண் பனிமல்க இருக்கும் –
காட்சிக்கு இனியானவாய்ப் பரந்து. ஸ்ரம ஹரமான கண்கள் நீர் மல்க இரா நின்றாள்.
கண்ணும் கண்ண நீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே!
இக் கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே!

என்னுடையக் கோமளக் கொழுந்து –
கலக்கப் பொறாத மிருதுத் தன்மையை யுடைவள் பிரியப் பொறுக்குமோ?
‘தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து
பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச் செய்வர் சீயர்.

கொழுந்து –
கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே.
‘நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே,
‘பதி ஸம்யோக ஸூலபம் வய;’என்பது, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.

இப் பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து,
‘பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று
தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்

————————————————————————————-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-

அநந்தரம் -உன்னுடைய அதி மானுஷ சேஷ்டிதத்திலே அகப்பட்டு மேன்மேல் என
க்லிஷ்டையாகிற இவளுக்கு என் செய்வேன் -என்கிறாள் –

கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’–நித்ய ஸூரிகளுக்கு ஸீரோ பூதனானவன் என்னும்
குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;–அந்த மென்மையோடே கூட ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திரு அவதரித்து
மலையை அநாயாசேன ஏந்தி பசுக்களை ரஷித்த அதி மானுஷ சேஷ்டிதத்தை யுடையவனே என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;– அந்த ரக்ஷணம் தன் அளவிலே பலியாமையாலே பக்தி பரவசரைப் போலே
அஞ்சலி பந்தம் பண்ணா நிற்கும்
இரண்டுமே பலியாமையாலே அதாஹ்யமான ஆத்ம வஸ்து தக்தமாம் படி வெவ்விதாக மூச்சு விடும்
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;-இப்படி ஆர்த்தை ஆக்கின ஸ்யாமள விக்ரஹத்தை யுடையவனே என்னும்
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;-இக்குரலைக் கேட்டு வரக் கூடும் என்று மேலே
தலை எடுத்து பார்த்து இமையாதே இருக்கும்
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;–எந்தப் பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன் என்னும்
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?– தர்ச நீயமாய் பெருத்த புனல் சூழ்ந்த கோயிலிலே ஸந்நிஹிதனானவனே
என்னுடைய லஷ்மீ சமானையான இவளுக்கு எத்தைச் செய்வேன்
ஆர்த்திக்கு அடியான ப்ரேமத்தை அளவுபடுத்துவேனோ
வாராத உன்னை வரப் பண்ணுவேனோ
இரண்டுமே முடியாது இறே என்று கருத்து –

‘நித்திய ஸூரிகளுக்குக் கொழுந்து போன்றவனே!’ என்பாள்; ‘மலையைக் தூக்கிப் பிடித்துப் பசுக்கூட்டங்களைக் காத்தவனே!’ என்பாள்;
அழுவாள்; தொழுவாள்; உயிரும் வேகும்படியாக வெப்பத்தோடு மூச்சு விடுவாள்; ‘அஞ்சன வண்ணனே!’ என்பாள்;‘
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அர செய்திய மன்னரும் வந்தாரே’என்பது, கம்பராமா. குகப்படலம்.
எழுந்து நின்று மேல் நோக்கிக் கண்களை இமைக்காதவளாகி இருப்பாள்; ‘எந்த வகையால் உன்னைக் காண்பேன்?’ என்பாள்;
செழுந்தடம் புனல் சூழ்ந்த திருவரங்கத்தாய்! என் திருமகள் விஷயமாக என்செய்வேன் நான்’ என்கிறாள்.

‘இவளுக்கு மேன்மேலென வருகிற நோவுகள் தீர்க்கைக்கு நான் செய்வது என்?’ என்கிறாள்.

வானவர்கட்குக் கொழுந்து என்னும் –
‘நித்திய ஸூரிகளுக்கும் தலையானவனே!’ என்னும்.
அன்றிக்கே,
அவர்கள் வேராகத் தான் கொழுந்தானவன் என்னுதல். –
அவர்களால் லப்த சத்தாவானே –

குன்று ஏந்திக் குளிர்மழை -கோ நிரை-காத்தவன் என்னும் –
‘வேறு உலகத்தில் பரிமாற்றம் தேட வேணுமோ?
பசுக்களுக்கும் பசுவின் தன்மையரான ஆயர்கட்கும் உதவினவன் அன்றோ?

கோ நிரை
பசுக்கூட்டம்
பசு பிராயரான இடையர்கள்

மேன்மை இல்லாமல் இழக்கிறேனோ,
நீர்மை இல்லாமை இழக்கிறனோ?’ என்னும்.

அழும் –
மலையைத் தரித்து ஒரு மழையைத் தடுத்த நீர். இந்த மழையைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றது,
‘பல விதமாக இடைவிடாமல் துக்கங்களாகிய மழையைப் பெய்கிற என்கிற இதனைத் தடுத்தல் ஆகாதோ?’ என்றபடி.

பஹூதா ஸந்தத துக்க வர்ஷிணி’-என்பது, ஸ்தோத்திர ரத்நம், 49.

‘இந்திரன், சோனை மாரி விலக்கி விட்டவர்
சொரி கண் மாரி விலக்கிலார்’-என்பது, திருவரங்கக் கலம்பகம்.

அழும் –
‘பாலர் செய்யுமதனையும் செய்யும்’ என்னுதல்.
ஸ்னேகத்தை யுடையவர்கள் செய்யுமதனையும் என்னுதல்.

தொழும் –
‘புகல் அற்றார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
‘வேதாந்த ஞானமுடையார் செய்வதைச் செய்யும்’ என்னுதல்.
உபாசகர் -அஞ்சலி பரமாம் முத்ரா வேதாந்தி அபராதர் –

தொழும்-
பிரபன்னர்
யோக நிஷ்டன் –

ஆவி அனல வெவ்வுயிர்க்கும் –
தொழுதவுடனே வரக் காணாமையாலே, ‘பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது’ என்று,
எரிக்க முடியாத ஆத்துமாவானது நெருப்பு மயமாம்படி ‘நீண்ட வெம்மையான மூச்சை விட்டும்’
தீர்க்கம் உஷ்ணஞ்க நிஸ்வஸ்ய’-என்பது, ஸ்ரீராமா. யுத். 117:6.-என்கிறபடியே, நெடுமூச்சு எறியும்.

அஞ்சன வண்ணனே என்னும் –
‘நெருப்பிலே நீரைச் சொரிந்தாற்போலே அக்குளிர்ந்த வடிவைக் கொண்ட வந்து தோற்றவல்லையே!’ என்னும்.
மேகஸ்யாமம் -மேகம்போல் கருநிறத்தனை’ என்னும் வடிவே அன்றோ?
‘மேக ஸ்யாமம் மஹா பாஹூ’ என்பது, ஸ்ரீராமா. அயோத். 83:8.
கைகேயி வார்த்தையால் பிறந்த தாபமுடைய ஆறுங்கண்டீர்
அவ்வடிவழகிலே விழிக்கப் பெற்றோமாகில்’ என்றார்களே அன்றோ? )அயோத்யா ஜனங்கள் பஹு வசனம் )

எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் –
வடிவினை நினைத்தாவாறே தரித்து எழுந்திருந்து வருவதற்குத் தகுதியுள்ள திக்கினைப் பார்த்து,
முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காண வேணும்’ என்று இமை கொட்டாதே பார்த்துக் கொண்டிருக்கும்

எங்ஙனே நோக்குகேன் என்னும் –
தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே, ‘பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளும்’ என்று புரிந்து பாரா நிற்கும்.
அன்றிக்கே,
வடிவினை நினைத்தவாறே தளர்த்தியிலே எழுந்திருந்து,
ஆனைக்கு உதவினாற்போலே வரக்கூடும் என்று மேல் நோக்கிப் பார்த்து ‘முதலில் புறப்படும் இடமே தொடங்கிக் காணவேணும்’ என்று
இமை கொட்டாதே இருக்கும் என்னலுமாம்.
அன்றிக்கே
பின்னையும் தோற்றக் காணாமையாலே, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’ என்னும் என்னுதல்.

செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் –
அழகியதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாகவுடையவனே!
இப்படிச் சிரமத்தைப் போக்கக்கூடிய தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது இவள் வரவு பார்த்தன்றோ?
அத்தலை இத்தலை ஆயிற்றோ? -கோரமாதவம் செய்தனன் கொல் –

என் செய்கேன் –
‘செய்ய வேண்டுவன அனைத்தையும் தானே செய்தாள், நான் இனிச் செய்வது என்?
அன்றிக்கே,
வேறு உபாயங்களால் சாதித்துக் கொள்ளத் தக்கதோ உம்முடைய தரிசனம்?’ என்னுதல்.

என் திருமகட்கே –
இவளை இழக்கலாமோ உமக்கு? உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்றமன்றோ அவளது?
உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவள் அல்லளோ இவள்?
சாக்ஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் அன்றோ இவளை!

—————————————————————————————–

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

அநந்தரம் ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா நாயகனான உன் பிரணயித்வ அதிசயத்திலே அகப்பட்ட இவளுக்குக்
கார்யம் தலைக் கட்ட இருக்கிறபடி அறிகிலேன் -என்கிறாள் –
தன்னிடம் தப்பாதே என்று இருக்கும் இவள் -அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாலாள்-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;–எனக்கு ஸ்வாமிநியான ஸ்ரீ லஷ்மீ யானவள் தனக்கு அபிமத
ஸ்தானமாகச் சேர்ந்த திரு மார்பை யுடையவனே -என்னும்
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;–அச் சேர்த்தி அழகோடு எனக்குத் தாரகமான பிராணனாய்க் கொண்டு
என் நெஞ்சிலே இருந்தவன் என்னும்
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;–நீல வரை இரண்டு பிறை கவ்வி என்கிற கணக்கிலே
திரு வடிவுக்கு பரபாகமான உன்னுடைய திரு எயிற்றாலே பிரளயத்தில் முழுகி அண்ட கபாலத்தை நின்றும் இடந்து எடுத்து
உனக்கு அபிமதையாகக் கொண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு சத்ருச நாயகனே என்னும்
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;–ருஷபங்களை சுல்கமாக நியமித்த அன்று
இடி போலே பயாவஹ த்வனியான ருஷபங்கள் ஏழையும் அபிமத விஷய கண்ட ஆஸ்லேஷம் போலே அநாயாசேன தழுவி
நிதி எடுத்துக் கொண்டால் போலே ஸ்வீ கரித்த சத்ருச கோப குலத்திலே பிறந்த நப்பின்னைப் பிராட்டிக்கு
ப்ரீதியே வடிவு கொண்ட பாவனானவனே என்னும்
இப்படி அவர்கள் பக்கலிலே உன் பிரணயித்தவத்தை பிரகாசிப்பித்தால் போலே இவளுக்கும் உதவுக்கைக்காக
செல்வம் -செல்வம் விளையும் பூமி –செல்வம் அனுபவிக்கும் இவள் -ஸ்ரீ யபதி வேதாந்தம் கோஷிக்கும் -போஷிப்பவள் பூமா தேவி
யுத்த உத்தர உத்க்ருஷ்டம்
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே!–கட்டளைப்பட்ட ஸ்ரீ ரெங்க திவ்ய க்ஷேத்ரத்தை வாசல் ஸ்தானமாக அங்கீ கரித்தவனே
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–இவளுக்கு ஆர்த்தி பர்யவசான பிரகாரம் அறிகின்றிலேன்
ஆர்த்தி முடியுமா-சம்ச்லேஷம் ஆகுமா — -ஆர்த்தியாலே இவள் முடிவாளா -விஸ்லேஷம் தொடர்ந்து இவள் முடிவாளோ

அன்றுரு ஏழும்–உரும் என்றும் பாடமாம் –

‘என் திருமகள் சேர்ந்திருக்கின்ற மார்பையுடையவனே!’ என்பாள்; ‘என்னுடைய உயிரே!’ என்பாள்; ‘உன்னுடைய அழகிய
தந்தத்தினாலே இடந்து எடுத்து உன் காதலுக்குரியவளாகக்கொண்ட பூமிப்பிராட்டிக்குக் கணவனே!’ என்பாள்;
‘கிருஷ்ணாவதாரத்தில் அஞ்சத்தக்க இடபங்கள் ஏழனையும் தழுவி உன் காதலுக்கு உரியவளாகக் கொண்ட
நப்பின்னை பிராட்டிக்கு அன்பனே!’ என்பாள்; அழகிய திருவரங்கத்தைக் கோயிலாகக் கொண்டவனே! இவளுடைய துயரத்திற்கு முடிவு அறிகின்றிலேன்.
எயிறு – கோரப்பல், உரு – அச்சம்; அது இங்கு அச்சத்தை உண்டாக்குகின்ற இடபங்களுக்கு ஆயிற்று. தென் – தெற்குத் திசையுமாம்.

‘இவள் துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்,’ என்கிறாள்.

என் திருமகள் சேர் மார்பனே என்னும் –
‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.

‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.

அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான்.

பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,’ –
மாதர் லஷ்மி -என்று வேண்டிக் கொண்டார்,

‘சேர் மார்பன்’ என்பது,
நிகழ்கால வினைத் தொகையாலே இரஹஸ்யத்தில் நித்திய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது,
‘அவள் ஒரு கணம் பிரிய இருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி.

புராண ஸ்லோக அர்த்த உபன்யாச யுக்தமாக -புராணிகர்-புரோகிதர் -கட்டியம் -சேவிக்க -அருளிச் செயல் சந்தை -சேர்த்து
மூலம் கேட்க்கைக்காக இயல் -சப்தம் -தாம் அமுது செய்யா நிற்க -அவர் சொல்ல கேட்டு –
‘பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது
செய்யா நிற்கச் செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.

இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

நின் திரு எயிற்றார் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் –
‘காதலிமார்கட்குக் காரியம் செய்யும் போது உன்னை அழிய மாறியன்றோ காரியம் செய்வது?
ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறலாவது, -அவள் விபூதியைத் தன் முகத்தால் நோக்கினால் அன்றோ
‘நின் திரு எயிறு’ என்னும் இத்தனை அழகுக்கு?

இடந்து நீ கொண்ட –
நீ இடந்து கொண்ட ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவனே!

அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் –
‘ஒரு நாள் உதவின நீ. இன்று உதவினால் ஆகாதோ?’
அன்றிக்கே,
நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல்.
ஒன்று இரண்டு அன்றிக்கே இருக்கிற இடபங்கள் ஏழனையும் தழுவி.
அவள் திருமுலைத் தடத்தை அணைத்தாற்போலே இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே.

உருவென்பது –
இடி. ‘இடிபோலே பயங்கரமான குரலை யுடைய ஏறு’ என்னுதல்.
அன்றிக்கே,
உருவென்று மிடுக்காய், மிடுக்குத் தான் வடிவு கொண்டாற்போலே என்னுதல்.
‘உருவுட்கு’ என்பது உரிச்சொல்.

நீ கொண்ட –
நீ கைக் கொண்ட.

ஆய்மகள் அன்பனே என்னும் –
‘என்னைக் கைவிட்டு என் ஸ்வாமிநிகள் பக்கலிலே எங்ஙனே முகம் பெற இருக்கிறாய்?’ என்னும்.

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே –
தெற்குத் திசைக்குச் சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வசிக்குமிடமாக வுடையவனே!
‘எருது ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகங்காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ?
அவதாரங்கள் போல அன்றியே நித்திய வாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ?
‘தன்னுடைய மேலான இடத்தை அடைந்தான்’ என்ன வேண்டாதபடி கோயில் கொண்டானாயிற்று.
மண்ணின் பாரம் நீக்கி –மோஹம் இத்வா ஜகத் சர்வம் -‘கத: ஸ்வம் ஸ்த்தாநம் உத்தமம்’-என்பது பாரதம்.

தெளிகிலேன் –
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே-அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது?
அது மாட்டுகின்றிலேன்.
‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டான பரியந்தமாக்கிக் கொண்டு நீ கிடந்தால்,
‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலை பெற்ற எண்ணமுடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது?
ஸ்த்திதோஸ்மி கத ஸந்தேஹ:’ என்பது, ஸ்ரீகீதை, 18:73.
அது மாட்டுகின்றிலேன்.

இவள் தனக்கு முடிவு தெளிகிலேன் –
இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப் போமோ?

————————————————————————————–

‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

அநந்தரம் -ஈஸ்வர அபிமானிகளுக்கும் அந்தராத்மாவான சர்வேஸ்வரனானவன் இவளுடைய ஆர்த்தியை யறிந்து
தன் சீல அதிசயத்தாலும் உதார குணத்தாலும் தன் வடிவு அழகாலும் ஆந்திர சம்ச்லேஷத்தை விஸ்லேஷித்து பிரகாசிப்பிக்க
இவளுக்கு அத்தாலே பிறந்த விசுவாசத்தைக் கண்டு ஸ்வ கதமாகத் தாயார் சந்துஷ்டையாய்ச் சொல்லுகிறாள் –

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;–ப்ரத்யக்ஷ சித்த அவசாதத்தை யுடைய இவள் இப்படி அவசன்னையான
தன் படிக்கு முடிவு ஓன்று அறிகிறிலேன் என்னும்
‘மூவுல காளியே!’ என்னும்;–த்ரை லோக்ய ஈஸ்வரனான இந்திரனுக்கு அந்தராத்மாவாய்க் கொண்டு நிர்வஹித்தவனே-என்னும்
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;–பரிமள ப்ரவாஹியான கொன்றைத் தாரை யுடைத்தான ஜடையை யுடையனான
ருத்ரனை அதிஷ்டித்து நின்று அவனுடைய ஈச்வரத்வ உபாஸகாத்வங்களுக்கு உள்ளீடானவனே என்னும்
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;–இவர்களுக்கு சேஷியான சதுர்முகனான தைவத்துக்கு ஆத்மாவானவனே என்னும் ;–
இப்படி ஈஸ்வர அபிமானிகளான ப்ரயோஜனாந்தர பரர்க்கும் பிரகாரியான சீலத்துக்கும் மேலே

லீலா விபூதி சொல்லி மேலே
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;-
தன்னோடு லப்த சா ரூப்யரான நித்ய ஸூரிகளுக்கு சேஷியானவனே -என்னும்-நித்ய விபூதி சொல்லி -மேன்மையை சொல்லி

‘வண் திரு வரங்கனே!’ என்னும்;-அம்மேன்மையோடே ஆசைப்பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும்
உதார குணத்தை யுடையனாய்க் கொண்டு கோயிலுக்கு நிர்வாஹகனானவனே -என்னும்
இப்படி நீர்மையையும் மேன்மையையும் உதார குணத்தையும் அனுசந்தித்து ஈடுபட்டு -இனி
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–அவன் திருவடிகளை கிட்ட மாட்டாள் போலே என்னும்படி
இருந்த இவள் ஜல ஸ்த்தல விபாகமற உபகரிக்கும் காளமேகம் போலே இருக்கிற திரு வடிவை யுடையவனுடைய
உபகாரத்வ அதிசயத்தாலே அவன் திருவடிகளை கிட்டி பிராப்பித்தாளாய் இருந்தது –

அவன் உபகாரத்வ அதிசயம் ஒன்றே பிராபகம்-தான் சொத்தை தான் சேர்த்துக் கொண்டான்
பிராப்தாவும் பிராப்கனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -மார்பிலே கண் வைத்து உறங்குவதே பிராப்தி -உபாய அம்சத்தில்
கைங்கர்யத்தில் இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச்செய்து இருப்பதே ஈடே

‘இவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்கிறாள்; ‘மூன்று உலகங்களையும் ஆளுகின்ற இந்திரனுக்கு அந்தராத்துமாவாக
இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘வாசனை வீசுகின்ற கொன்றைப் பூமாலையைச் சடையிலே தரித்தவனான சிவபெருமானுக்கு
அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘நான்முகனான பிரமனுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்றகிறாள்;
‘தன்னோடு ஒத்த வடிவையுடைய நித்தியசூரிகளுக்குத் தலைவனே!’ என்கிறாள்; ‘வளப்பம் பொருந்திய திருவரங்கத்தில்
எழுந்தருளியிருக்கின்றவனே!’ என்கிறாள்; அவன் திருவடிகளை அடையாதவளைப் போலே இருந்த இவள்
முகில் வண்ணனாகிய அவன் திருவடிகளைக் கிட்டி அடைந்தாள்’ என்றவாறு.

‘இனிக் கிட்ட மாட்டாளோ!’ என்னும்படி துக்கத்தை அடைந்திருந்த இவள்,
பெரிய பெருமாள் திருவடிகளைக் கலக்கப் பெற்றாள் என்கிறாள்.

இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும் –
பெண் பிள்ளை வார்த்தையைத் திருத் தாயார் அநுபாஷிக்கையாலே,
‘இவள் – தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னா நின்றாள் என்கிறாள்.
‘இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல்
அன்றிக்கே, ‘
முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல்.

மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் –
இதனை
‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச் சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற,
வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று,
திருமலை யாண்டான் வையதி கரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர்.-
வானோர் வார்த்தை என்று-நிர்வஹிப்பர்‘–என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள்.
(வானவர்கள் -தேவர்கள் மூவரையும் கொண்டாடும் படி -இங்கு லீலா விபூதி மட்டுமே )

இதனை எம்பெருமானார் கேட்டருளி,
ஸாமாநாதி கரண்யாத்தாலே அருளிச் செய்தருளினார்:
‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்:
‘வாசனையை யுடைத்தான கொன்றையைச் சடையிலே யுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று
அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்;
‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற
எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.
வடிவுடை வானோர் தலைவனே என்னும்-
பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்திய ஸூரிகளுக்கு நாதனானவனே’ என்னும்.

‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு,
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு
வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு:-
புண்டரீகாக்ஷனே நால் தோள் அமுதே -போலே வேதாந்த வாசனை மாறாமல்
மயர்வற மதிநலம் பெறுகையாலே;
விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர்.

மூ உலகு ஆளியே -பாட்டுத் தோறும் சம்போதானம் -வர வேண்டுமே –
இந்திரன் என்று வானோர் சொல்வதாகக் கொண்டால் ரீதி பங்கம் வருமே –
என்னும் -தாயார் அனுபாஷணம் பண்ண வேண்டுமே –
திருமாலை ஆண்டான் நிர்வாகத்தில் லீலா விபூதி நாதத்வம் மட்டுமே வரும் -அதனால் எம்பருமானார் நிர்வாகம் ஸ்ரேஷ்டம்

வண் திருவரங்கனே என்னும் –
நித்திய ஸூரிகள் மாத்திரம் அனுபவித்துப் போகை அன்றிக்கே, நித்திய சம்சாரிகளும் இழவாமைக்கு அன்றோ
இங்கு வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது? ‘இங்குச் சாய்ந்தருளின தன் பலம் நான் பெற வேண்டாவோ?’ என்னும்.
வண்மையாவது,
ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் ஒளதர்யம்.

அடி அடையாதாள் போல இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே-
‘ஜீவிப்பாரைப் போல இருந்து கடுக முடிந்து கொடு நின்றாள்’ என்று நிர்வஹிப்பாருமுளர்;
‘அப்போது மேலே பிரபந்தம் நடவாதாகையாலே திருவடிகளைக் கிட்டாதாரைப் போலே இருந்து
கிரமத்திலே கிட்டிக் கொண்டு நின்றாள்’ என்று அருளிச் செய்யும்படி. -பிரத்யக்ஷமாக அடைய வில்லை –
இது தான், மானச அனுபவித்தில் ஒரு-வைசத்யம் -விசதமாக – தெளிவினைச் சொன்னபடி.

அடி அடையாதாள் போல –
இவள் இப்போதே திருவடிகளைச் சேர மாட்டாள்:
இன்னும் சில காலம் இருக்கும் என்று போலே இருந்தது, முடிந்து கொடு நின்றாள் என்னுதல்.
இனி, ‘கலக்கப் பெறாளோ?’ என்று தோற்றும்படி துக்கத்தை யடைந்தவளான இவள்,
கிட்டிக் கலந்து அனுபவிக்கப் பெற்றாள் காளமேகம் போன்ற நிறத்தை யுடைய பெரிய பெருமாள் திருவடிகளையே என்னுதல்.

———————————————————————————-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பரம பதத்தில் ஸூரீகள் நடுவே
ஆனந்த நிர்ப்பரராய் இருப்பர் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி-உதாரமான மேக ஸ்வ பாவரான பெரிய பெருமாளுடைய திருவடிகளையே
பிராபித்து அதுக்கு அடியான அவருடைய கிருபையை தலைக் கொண்டு
உய்ந்தவன் மொய் புனல் பொருநல்–உஜ்ஜீவித்தவராய் மிக்க புனலை யுடைத்தான திருப் பொருநலினுடைய
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்–துகிலின் நிறம் போலே பரிசுத்தமான ஜலத்தை யுடைத்தான
பர்யந்த பிரதேசத்தை யுடையராய் மது புஷ்ப ஸம்ருத்தியால் உள்ள வை லக்ஷண்யத்தை யுடைய பொழில்களாலே சூழப்பட்டு
வண் குரு கூர்ச் சட கோபன்–நிரதிசய சம்பத் விசிஷ்டமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை-காளமேகம் போலே நிரதிசய ஸுந்தர்ய யுக்தரான பெரிய பெருமாள்
திருவடிகள் விஷயமாக அருளிச் செய்த சப்தாத்மகமான மாலைகள்
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்–ஆயிரத்துள் இப் பத்தையும் பாவ விருத்தியோடே அப்யஸிக்க வல்லவர்கள்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–ஸ்ரீ வைகுண்ட நாதன் திருமேனியில் நிழலீட்டால்
மேக ஸ்யாமளமான நிறத்தை யுடைய பரம பதத்தில் நித்ய ஸூரிகள் பரிவேஷ்டிக்க நிரதிசய ஆனந்த சாகர மத்யத்திலே இருப்பர்கள்

வைகுந்தத்தில் மேகம் உண்டோ –வண்ணம் உண்டே -வர்ணம் கொண்ட அவன் உண்டே
அதனால் பரம பதம் நிழல் யீட்டால் -நிரதிசய ஆனந்த சாகரம் மதியத்தில் இருப்பர்

இது ஏழு சீர் ஆசிரிய விருத்தம் –

‘முகில் வண்ணரான பெரிய பெருமாள் திருவடிகளை அடைந்து திருவருளைப் பெற்று உய்ந்தவரும், துகிலின் வண்ணத்தைப் போன்ற
பரிசுத்தமான தெளிந்த தன்மையையுடைய மிகுந்த நீர் நிறைந்த தாமிரபரணித் துறைவரும், வளப்பம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த
வண்மையை யுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபருமான நம்மாழ்வார், முகில் வண்ணன் திருவடிகளின்மேலே
அருளிச் செய்த சொல்மாலை ஆயிரத்தில் இந்தப் பத்தையும் வல்லவர்கள், முகில் போன்ற நிறத்தையுடைய பரமபதத்திலே
நித்திய ஸூரிகள் சூழும்படி பேரின்ப வெள்ளத்தில் இருப்பர்,’ என்க.
‘துகில் வண்ணத் தூநீர் மொய்புனல் பொருநல் சேர்ப்பான்’ எனக் கூட்டுக.
அன்றிக்கே, ஆற்றொழுக்காகப் பொருள் கோடலுமாம். சேர்ப்பன் – இடத்தையுடையவன்.

‘இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல் திருநாட்டிலே
பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், நித்திய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –
பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தைத் திருவருளைப் பெற்றுத் தரித்தர்.
முன்னைய நிலையில் சத்தையும் அழியும்படியாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது .

மொய் புனல் பொருநல் துகில் வண்ணம் தூநீர்ச் சேர்ப்பன் –
வலியை யுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தை யுடைத்தான தூநீர்த் துறைவன்.
‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம்.
இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது.
சேர்ப்பன் – துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன். -திருச் சங்கணித் துறைவன்
‘மொய்ப் புனல்’ என்னா நிற்கவும், ‘தூநீர்’என்கிறது, பெரு வெள்ளமாய் இருக்கச் செய்தே தெளிந்திருக்கும் படியைப் பற்ற.
‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரை யுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.

‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’-என்பது, ஸ்ரீராமா. பால. 2:5.

‘சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார்’-என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9

வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் –
காண்பதற்கு இனியதான பொழிலை யுடைத்தாய் வண்மையை யுடைய திருநகரிக்கு நாதன்.

முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
காளமேகம் போன்று மிக்க பேரெழிலை யுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்த
சொற்களை யுடைய மாலை ஆயிரத்து இப்பத்தையும் கருத்தோடு கற்க வல்லவர்கள்.
‘பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று;
‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11-
‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று
பிரித்துக் கொடுத்த இத்தனை;
பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’
என்று பிள்ளை அருளிச் செய்வர்.

முகில் வண்ணம் வானத்து-
அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன் படியாய் இருக்கிற வானம் என்னுதல்;
முகில் வண்ணனுடைய வானம் என்னுதல்

இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே-
இவள் மோகித்துக் கிடக்கத் திருத் தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
நித்திய ஸூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்தத்தை யுடையவர்களாய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.

பத்து பத்துக்களின் அர்த்தம் இதில் உண்டே -பரத்வாதி தசகம்
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவனே என்னும்
காரணத்வம்-முன் செய்து இவ்வுலகம் படைத்து
வியாபகத்வம் -கட்கிலி
நியந்த்ருத்வம் -கால சக்கரத்தாய்
காருணிகத்வம் -இவள் திறத்து அருளாய்
சரண்யத்வம் -பற்றிலார் பற்ற நின்றானே
சக்தித்வம் -அலை கடல் கடைந்த ஆராவமுதே
சத்ய காமத்வம் -என் திருமகள் மார்பனே என்னும் என்னுடை ஆவியே என்னும்
ஆபத் ஸகத்வம்– உண்டு உமிழ்ந்து அளந்து
ஆர்த்தி ஹரத்வம் -அடி அடைந்து அருள் சூடி உய்ந்தவர்

பரத்வாதி பஞ்சகம்
பரத்வம் -வடிவுடை வானோர் தலைவனே
வ்யூஹம் -கடல் இடம்
விபவம் -காகுத்தா –கண்ணனே
அந்தர்யாமி -கட்கிலி
அர்ச்சை -வண் திருவரங்கா

——————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா ஹிதம் ஜனானாம்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் ப்ரசமார்த்த சிந்தாம்

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா-திருவாய் மொழி முடிக்க வேண்டுமே -ஆயிரம் சங்கல்பம் உண்டே
ஹிதம் ஜனானாம் –நம்மை வாழ்விக்க -ஆசைப்பட்டதை முடிக்கவும்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா -பிரார்த்தித்தை செய்யாததால்
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய-மிகவும் அதிகமான ஆற்றாமை அடைந்தார் இரண்டாம் திருவாய் மொழியில்
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் -ஆழ்வாரது வியஸனம் அவனுக்கும் தீர்க்க முடியாத படி
ப்ரசமார்த்த சிந்தாம் -என் சிந்தித்தாய் -பிரசமார்த்தம் -தீர்க்க -திருத் தாயார் கேட்டவை

வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் இங்கும் ஷீராப்தியிலும் -ஸுவ்ம்யமான திரு உள்ளம்
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் –யதிருச்சா ஸூஹ்ருதம்- விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபி முக்கியம் –
தொடர்ந்து ஆறு படிகள் -இத்தைக் காட்டவே மேலே கீழ் ஆறு படிகள்

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

தீ மான் சடாரி ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்
ஸூசித்வாத் விஸ்வத்வ அநிஷ்ட பாவாத் உரக சயனதயாத்
பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத் ஜலத தனு தயாத்
உபக்ரியா தத் பரத்வாத் ஸ்வாமி விகர் மாம் உப சமயதி

தீ மான் சடாரி
1-ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?

2–3–நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்—2/3-அவதாரம் -ஆதி சப்தத்தால்–முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?-என்றும்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-என்றும் –

4–ஸூசித்வாத் –சிஷ்டன் -ஸ்ரீ இஷ்டம் –-சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!–இவள் திறத் தென் சிந்தித்தாயே-

5–விஸ்வத்வ அநிஷ்ட பாவாத்–‘அந்திப்போதவுணன் உடலிடந்தானே!-அலைகடல் கடைந்த ஆர் அமுதே!

6–உரக சயன தயாத்–பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே

7–பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத்–‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! -பற்றிலார் பற்ற நின்றானே!

8–ஜலத தனு தயாத்–‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;–

9–உபக் ரியா தத் பரத்வாத்–கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;

ஸ்வாமி விகர் மாம் உப சமயதி -பிரிவாற்றாமை தவிர்த்து அருளி –முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்-

———————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 62-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க
அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி-மோஹித்து-இவர் கிடக்க-

பார்ஸ்வத்தரான பரிவர்
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை

ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-
திருத் தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க-

தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -ஸ்வீகாரமும் உபாயம் இல்லை
ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஆழ்வாரது அம் சொல்
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே

—————————————————–

வியாக்யானம்–

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-(ஸூந்தர 30-)-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதி லப்ய சைவ -(ஸூந்தர -26-)-என்றும்
ராமம் ரக்தாந் தனயநம பஸ்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்-இத்யாதிப்படியே-திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –இப்படி அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-

அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத் தசையைக் கண்டு –

ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற
அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –
(ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தின் குணம் )

இங்கு இவள் பால் –
இத் தசையில்-
இவள்-இடையாட்டமாக –

என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் –
ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து-
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ-ஒன்றும் தெரிகிறது இல்லை

எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-(பெரிய திருமொழி -2-7-) -என்கிறபடியே
அத் தலையில் நினைவே இறே உபாயம்
இத் தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
(இச்சை இரக்கம் இனிமை இவையே அதிகாரி ஸ்வரூபமும் உபாயமும் உபேயமும் ஆகும்

இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –

என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத் தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே திருத் தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-

அஞ்சொலுற –
அஞ்சொல் உற-அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –

நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் –

கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக ஓர் ஸ்ரீ அரங்கரைப் பார்த்து-ஒருகிற ஸ்ரீ அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
ஸ்ரீ திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
ஸ்ரீ அரங்கநகர் மேய அப்பனாய்-மந்தி பாய் -இத்யாதிப் படியே பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் – என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
ஆறு அலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-

தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-(ஒருகிற ஸ்ரீ அரங்கர்)

அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –

வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்

அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்

துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி –
துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
(இப் பாசுரம்-வேடு பறி உத்சவம் – திருவாலியில் சொல்லி பின்பே வாடினேன் வாடி தொடக்கம் ஆகும் )
ஐக்யமாக அருளிச் செய்தது

சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –

இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –

——————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -145- திருவாய்மொழி – -7-2-1….7-2-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 25, 2016

‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில்,
‘நம:’ என்ற சொல்லின் பொருள் பல வகையாலும்,
‘தொண்டர் தொண்டர் தொண்டன் தொண்டர் சடகோபன்’ என்று
ததீய சேஷத்துவ பரியந்தமாக உள்ளபடி அநுசந்தித்தாராயற்றது.

‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழியில்,
பெரியபிராட்டியார் முன்னிலையாகத் திருவேங்கமுடையான்
திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கார்;

இரண்டு சங்கதி
என் திருமகள் சேர் மார்பன் -ஸ்ரீ மத் பதார்த்தர்த்தம் ஸூசகம்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் -6-10 -பிரணவம் அர்த்தம்
7-1- விரோதி நிவர்த்தகம் -நமஸ்
7-2- நாராயண அர்த்தம்

அன்றிக்கே
6-10- பூர்வ வாக்கியம் அர்த்தம்
7-1- உத்தர வாக்கியம் -நமஸ்
7-2- ஸ்ரீ மத்நாராயண

அக்னி ஹோத்ரம் பண்ண கோதுமை சமைக்க -பின்பு சொல்லினாலும் அர்த்த க்ரமம் வலியது
ஆகவே முன்பு சமைத்து அக்னி ஹோத்ரம் செய்ய வேண்டுமே -அதே போல்
அர்த்தம் பலம் -விரோதி நிவர்த்தகம் பூர்வகமாக கைங்கர்யம் சித்திக்க வேண்டுகையால் –
நமஸ் -ததீய சேஷத்வம் -தொண்டர் தொண்டர் -சடகோபன் சாதித்தார் -என்பதால்
உத்தர வாக்கியம் நமஸ் சொல்லாதே
அதனால் திரு மந்த்ர நமஸ் மத்திய பதார்த்தம்
சதுர்த்யர்த்தம் கைங்கர்யம் -பிரார்த்தநாயாம் சதுர்த்தி -அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
பிராவண்யம்-இதிலே சொல்லுகையாலே திருத் தாயார் பாசுரம் –

‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே தன் பக்கலினின்றும்
நம்மை அகற்றப் பார்த்தானே அன்றோ?’ என்று கூப்பிட்டார் ‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழியில்.

பலத்தோடே கூடியுள்ளதாயும், கால தாமதம் இன்றிப் பலிக்கக் கூடியதாயும் இருக்கிற சாதனத்தைப் பற்றின பின்பும்
அது பலியாவிட்டால் அவன் தன்னையே இன்னாதாய்க் கொண்டு கூப்பிடுமத்தனை அன்றோ?
‘இப்படிக் கண்ணழிவற்றது பின்னையும் பலியாது ஒழிவான் என்?’ என்னில், அது பலியா நிற்க,
கிரமப் பிராப்தி பொறுக்கா மாட்டாமல் படுகிறார்;

ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும் அவ் வருகான இவருடைய மிருதுத் தன்மையின் ஸ்வரூபம் இருக்கிறபடி.
பிராட்டியைப் போலே ‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’ என்று இருக்க மாட்டார்,
ருசி அளவு இல்லாமையாலே‘தத் தஸ்ய ஸத்ரு ஸம்பவேத்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 39;30.. 4–
சம்சாரத்தினுடைய தோஷத்தையும் நினைத்து,
எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் நினைத்தால் ஆறி இருக்கப் போகாதே அன்றோ?
பகவத் விஷயம் அறியாத சம்சாரிகள் இவர்க்குக் கூட்டு அல்லர்;
பகவானுடைய பிரிவு அறிய வேண்டாத நித்திய ஸூரிகளும் இவரக்குக் கூட்டு அல்லர்;
பிரிவில் நோவு படுகைக்கு இவர் ஒருவருமே உள்ளார்.

பட்டர், இத்திருவாய்மொழி அருளிச் செய்யும் போதெல்லாம் ‘ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே
அவருடைய பாவ விருத்தியும் -உள்ளக் கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?’ என்று
திருமுடியிலே கையை வைத்துக் கொண்டிருப்பார்.
அவனும்,இவர் நமக்கே பரம் என்று அறிவித்தாராகில்,
நாமும் இவர் காரியம் செய்வதாக அற்ற பின்பு செய்து முடித்ததேயாமன்றோ?

இவர் அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் இங்கே இருந்தே குறை அற அனுபவியா நின்றாரகில்,
‘விரோதி போயிற்றில்லையே’ என்று இவர் கொள்ளுகின்ற ஐயமும் -அதிசங்கையும் -போக்குகிறோம்;
நான்கு நாள் முற்பாடு பிற்பாடன்றோ? இதில் காரியம் என்?’ என்று இருந்தான்.

‘பிற்பாடு பொறுக்க மாட்டாத இவரை வைக்கப் போருமோ?’ என்னில்,
குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும்
வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போல, ‘இவர் தாம் நான்கு நாள்கள் நோவு பட்டாராகில் படுகிறார்;
இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு உலகத்தை வாழ்விப்போம்,’என்றிருந்தான்.

இவர் ஒரு முகூர்த்த காலம் இருப்பதானது,
தன்னாலும் திருத்த ஒண்ணாத சம்சாரம் திருந்தி வாழும்படியாயிருந்தது என்றதற்காக வைத்தான் அவன்;

இவர், ‘நம்படி அறிந்தானாகில், தனக்குச் சத்தியில் குறை இல்லையாகில்,
இது பொருந்தாத நம்மை இட்டுக் காரியம் கொள்ள வேணுமோ?
இவ்விருப்பில் பொருந்துவார் ஒருவரைத் திருத்திக் காரியங் கொள்ளத் தட்டு என்?’ என்றிருந்தார்.

‘இவ்விருப்பில் பொருந்துவார்’என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-

அவனும், ‘அது பொருந்தாதாவரைக் கொண்டே காரியம் கொள்ள வேணும்’ என்றே அன்றே இருக்கிறது?
தேசிகரைக் கொண்டு காரியம் கொள்ள வேணுமே.

சம்சார தோஷமும் பகவத் வைலக்ஷண்யம் அறிந்தவர்கள் தேசிகர் –
பொருந்தி வாழ்வார் உபதேசம் செய்தால் தனக்கு என்று ஒன்றும் பிறர்க்கு ஒன்றும் சொல்வதால் விச்வாஸம் பிறக்காதே –
செய்த சரணாகதி சடக்கெனப் பலியாதொழிந்தது, பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்த மாத்திரம் அன்றோ?

இனித்தான் அவனும்,-பெருமாளும் — ஸ்ரீ பரதாழ்வான் மாதுல குலத்தினின்றும் வந்து தாயாரை வணங்க,
அவள், ‘ராஜந்’ என்ற வெம்மை பொறுக்க மாட்டாமல் பெருமாள் திருவடிகளிலே
தன் ஆற்றாமையோடே விழுந்து சரணம் புக்கு,‘தேவரீர் மீண்டருள வேணும்’ என்ன,

பெருமாளும், மீளாமைக்குக் காரணமாயிருப்பன பலவற்றை அவனுக்குச் சொல்லி,
‘பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவை யல்லை:
உன்னை ஸ்வதந்திரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே,-கைகேயி வஸிஷ்டர் போல்வார் முன்னே –
உன் ஸ்வரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரியத்தைப் பெற்று நீ போ,’ என்று சொன்னாற்போலே,

இவர் விரும்பியது ஒழிய ஏதேனும் ஒன்றனைக் கொடுத்துப் பொகட்டுப் போக வல்லான் ஒரு ஸ்வதந்திரன் அல்லனோ?
இவர் அபேக்ஷித்தது மோக்ஷம் -அவன் கொடுத்தது திருவேங்கடத்தான் திருவடிகளில் கைங்கர்யம் –
ஆகையாலே, தான் நினைத்த போது காரியம் செய்யக் கடவனுமாய் இருப்பன் அன்றோ?

முற்றறிவினனான சர்வேஸ்வரன் இவர்க்கு ஒடுகிற தசையை அறிந்து, தன்னுடைய வரம்பில் ஆற்றலைக் கொண்டு
இவர்க்கு ஒரு பரிகாரம் செய்ய ஒண்ணாதபடி இவருடைய நிலை விசேடம் இருக்கிறபடி.

இவர் தாமும்
‘விண்ணுளார் பெருமானேயோ’ என்றும்
‘முன் பரவை கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியோ!’(அஜிதன் அவதாரம்) என்றும்,
‘பல முதல் படைத்தாய்!’ என்றும் சொல்லுகிறபடியே,
பரத்துவம், அவதாரம், உலகத்திற்குக் காரணமாய் இருக்குந் தன்மை
இவற்றைச் சொல்லியன்றோ கூப்பிட்டது?

அவற்றுள், பரத்துவம் லோகாந்தரம்-வேறு உலகம் ஆகையாலே, ‘கிட்டப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
அவதாரம் காலாந்தரம் -வேறு காலமாகையாலே, ‘அக்காலத்தில் உதவப் பெற்றிலோம்’ என்று ஆறியிருக்கலாம்;
உலகத்திற்குக் காரணனாய் இருக்குந்தன்மை, தான் அறிந்து செய்யுமது ஆகையாலே,
அசித் அவிசேஷதான் போல் இருந்தோம் -‘நம்மால் செய்யாலாவது இல்லை’ என்று கொண்டு ஆறியிருக்கலாம்;

அந்த இழவுகள் எல்லாம் தீரும்படி எப்பொழுதும் அண்மையிலிருந்து கொண்டு கோயிலிலே –
மாத்ருஸ -ரக்ஷணம் -ஜனனி –பரம பதம் ஷீராப்தி மறந்து ஆசைப்பட்டு –
நமக்கு என்று ரதிங்க -ஹரி இரண்டு திருமணத் தூண்கள் -நடுவில்
திருக்கண் வளர்ந்தருளகிற பெரிய பெருமாள் திருவடிகளிலே விழுந்து தாம் விரும்பியவை பெறாவிட்டால் தரிக்க ஒண்ணாதே அன்றோ?

விஷயம் அண்மையில் இல்லாமலிருத்தல்,
ஞானத்திலே கொத்தை உண்டாதல் செய்யிலன்றோ? தரித்திருக்கலாவது?
நீர்மையில் கண்ணழிவுண்டாயாதல்,
மேன்மையில் கண்ணழிவுண்டாயாதல் இழக்கின்றார் அன்றோ?

இப்படி இருக்கச் செய்தேயும் அவன் திருவடிகளிலே தமக்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே தாமான தன்மை போய்
ஒரு பிராட்டி நிலையை அடைந்தாராய் அவ்வளவிலும் தமக்கு ஓடுகிற நிலையைத் தாம் அறிந்து கூப்பிடப் பெறாமல்,
திருத் தாயார் கூப்பிடும் படியாய் விழுந்தது.

கலவியிலும் பிரிவிலும் பிறக்கும் லாப அலாபங்களாலே தாம் பிராட்டிமார் நிலையை யுடையராகிறார்;
‘திருத் தாயாரான நிலை விளைந்தபடி எங்ஙனே?
விளைந்ததாகில் இவருடைய காதலுக்குக் குறைவு வாரோதோ?’ என்ன,
கிண்ணகம் (வெள்ளம் )பெருகி ஓடா நின்றால் இரு கரையும் ஆறுகளாகப் பெருகிப் போகா நிற்கச் செய்தேயும்
கடலிற்புகும் பாகம், குறையாமல் போய்ப் புகுமாறு போலே ஆயிற்று,
இவருடைய ‘அதனிற்பெரிய என் அவா’ என்கிற பேரவாக் குறையாது இருக்கிறபடி.
ஆகையாலே, இவரக்கு எல்லார் பேச்சும் பேசக் குறை இல்லை.

‘ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு,’ தேறும் கலங்கி என்றும் தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.’
‘பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமா போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகு காதல் கடல் இடங்கொண்ட
கடலை பஹூமுகமாக அவகாஹிக்கும்’ என்றும் ஸ்ரீ ஸூக்திகள் இங்கு அநுசந்தேயம். (ஆசார்ய ஹ்ருதயம், துவிதிய பிரகரணம்,சூ.32,33,45.)

இப்பெண் பிள்ளை மோகித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவு முறையார் அடங்கலும் மோகித்துக் கிடக்க;
பெருமாளைக் காட்டிலும் இளைய பெருமாளுக்குத் தளர்த்தி உண்டாயிருக்கச் செய்தே,
பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே,

திருத் தாயாரும் இவளுடைய இரட்சணத்துக்காக உணர்ந்திருந்து,
எந்த நிலையிலும் அவனையே பரிகாரம் கேட்டு தங்கள் காரியம் தலைக்கட்டும் குடியாகையாலே,
பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை இட்டு வைத்துக் கொண்டிருந்து,
‘இவள் அழுவது, தொழுவது. மோகிப்பது, பிரலாபிப்பது, அடைவு கெடப் பேசுவது, நெடுமூச்சு எறிவது,
அது தானும் மாட்டாது ஒழிவது, தன்னை மறந்திருப்பது, இப்படி அரதி விஞ்சிச் செல்ல நின்றது;
இவள் திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?’ என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது,
எல்லா அளவிலும் அவனையே பரிகாரம் கேட்கும் குடியே அன்றோ?

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ்விடையாட்டம் ஒன்றும் ஆராயாதிருக்கிறது என்?’ என்ன,
‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள,அங்கே வரக் காட்டு, என்ன,

பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திருவுள்ளமாக,
‘இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள்’ என்று விண்ணப்பம் செய்ய,
‘எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அகளங்க பிரஹ்ம ராயர் அடைய வளைந்தான் செய்யா நிற்கச் செய்தே மதிள் போக்குகைக்காக
இளையாழ்வான் அகத்தை வாங்கப் புக,
பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்ளீர்;
இங்குக் கிடக்கும் நான்கு குடிகளுங்காணும் பெருமாளுக்குக் காவல்;
ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது;
இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே, பெருமாள் செய்விக்கிறார் என்று இரீர்;
உமக்கு நல்வழி போக உடலாங்காணும்’ என்று அருளிச் செய்தார்.

இத் திருத் தாயாரும் எல்லாப் பாரங்களையும் அவன் தலையிலே பொகட்டுப் பெண் பிள்ளையைத் திருமணத் தூணுக்குள்ளே
பொகட்டுப் பற்றிலார் பற்ற நிற்றல் முதலாகிய அவனுடைய குணங்களை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு,
ஒரு கால நியதியாதல், ஒருதேச நியதியாதல், அதிகாரி நியதியாதல் இன்றிக்கே
எல்லாரும் சென்று பற்றலாம்படி இருக்கிறபடியை நினைத்து,
தன் பெண் பிள்ளையினுடைய நிலையைத் திருவுள்ளத்திலே படுத்துகிறாள் இத்திருவாய்மொழியாலே.

வேர் பற்று -திருவரங்கம் -அடியார்கள் வாழ -அனைத்து உலகும் வாழ –மணவாள மா முனி நூறாண்டு வாழ வேண்டும் –
பத்துப் பத்து கல்யாண குணங்களும் -பரத்வம் காரணத்வம் –ஆர்த்தி ஹரத்வம் -இவை பத்தையும்
கங்குலும் பகலில் வைத்து அருளுகிறார்
ஸ்ரீ ராம ராம ராமேதி -போலே –
32 அர்ச்சைகளுக்கு-திவ்ய தேசங்களுக்கு பல்லாண்டு -அற்ற பற்றர் சுற்றி வாழும் அரங்கனூர்
தென் அரங்கம் –இருப்பாக பெற்றோம் -சடகோபர் திருவாய் மொழி உணவாக கொண்டு மதுரகவி நிலையைப் பெறுவோம்
தெற்கு திக்கு நோக்கி கை கூப்புவோம் நம்மாழ்வார் நினைத்து -நிகம பாசுரங்கள் தோறும் –
6-10-ஆணாக ஆனந்தம் – தொடங்கி –அடுத்து -7-1-ஆணாக துக்கம் –7-2–பெண்ணாக துக்கம்–7-3- பெண்ணாக ஆனந்தம் –
திருமங்கை ஆழ்வார் 2-7- இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -இவரும் 7-2- இங்கு
இரக்கம் உபாயம் / முக விலாசம் பிராப்தம்

——————————————————————————————–

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

அனுபாவ்யமான அசாதாரணமான சின்னங்களை சொல்லி -கடல் ஞாலம் (5-6 ) -அனுவாதம் அங்கு -இங்கு திருத் தாயார் விஷயம் சொல்லி –
இங்கும் சில இடங்களில் -சங்கு சக்கரங்கள் சொல்லி மீதம் சொல்லி முடிக்காமல் கை கூப்புகிறாள் என்கிறார்
தாமரைக் கண் என்று சொல்லி யுக்தி மாத்ரத்தாலே தளர்கிறாள் –
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -அவள் வார்த்தை அனுவாதம்
மூன்று வகை -இவள் வார்த்தை -அவள் செயல் -அனுவாதம் –
இவர் ஆரத்தி ஆகா நின்றாள் -இவள் அளவில் என் செய்யுமாறு திரு உள்ளம்
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-நாட்டார் தூங்கும் இரவும் -காமினிகள் உறங்கும் பகலும் -இரண்டும் அறியாமல் –
துயில வேண்டும் என்ற வஸ்து ஞானமே அறியாள் -கொள்ளாள் இல்லை –
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;-இவள் கண் வட்டத்தில் -உறக்கம் வாராத படி -கண்ணை நீரை மாற்றுவதாக
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-இதற்கு இரங்கி வரக் கூடும் -சங்கு சக்கரம் என்று சொல்லி கை கூப்பினாள்-
நம்பெருமாள் -பொறுக்க மாட்டான் -சங்கு சக்கரம் உடன் வருவான் என்று நினைத்து கை கூப்புவதில் தெளிவு
அடியோம் அடிச்சியோம்-மாயோன் திறத்தனளே இத்திரு
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வரக் கூடும் -இவள் அபேக்ஷித்த படியே -6-9- பிரார்த்தனை –
கிரமம் மாறி -சங்கம் குளிர்ந்து -பர கத சுவீகாரம்
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;வரும் பொழுது தூது -கடாக்ஷம் -சொன்னதுக்கு மேலே பேச முடியாமல்
பெறாமையாலே தளரும் -என்று சொல்லியே தளரும் -அங்கு கை கூப்பினாள்
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;-ஆயுத அவயவ சோபை உடைய உன்னை விட்டு
இரு நிலம் கைதுழா இருக்கும்;-துழாவுதல்-அவன் திருவடி பட்ட இடம் என்று கைகளால்
இருக்கும் -கையால் செய்த கார்யம் -அதற்கும் சக்தி இல்லாமல் -மயங்கி இருக்கும் –
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-இளமையால் சிவந்த மீன்கள் உகளித்து பாயும் -சந்நிஹிதனாக இருக்க
இவள் திறந்து என் செய்கின்றாயே?—அதிசய விகாரம் கொண்ட இவளை –நீரைப் பிரிந்த மீன் போலே
இவள் ஆர்த்தியை அதிகரிப்பாயோ தீர்ப்பாயோ

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;–நாட்டார் உறங்கும் கங்குலும் -பிரணயிநிகள் உறங்கும் பகலும்
கண்கள் துயில வேணும் என்று அறிவும் நடை பாடுகிறிலள் –இவள் கண் வட்டத்தில் உறக்கம் வாராத படி சோகாஸ்ரு
வெள்ளம் கொள்ளுகையாலே -கடலைக் கை இட்டு இறைப்பாரைப் போலே கண்ணநீரை மாற்றுவதாக கைகளாலே இறையா நிற்கும் –
இக்கண்ண நீர்க்கு இரங்கி வரும் என்று நினைத்து அபேக்ஷைக்கு ஈடாகக் -கூராழி வெண் சங்கு ஏந்தி வரக் கூடுமாகையாலே –
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;–சங்கு சக்கரங்கள் என்று அவற்றைச் சொல்லி -வந்தால் பண்ணும் அஞ்சலியைப் பண்ணா நிற்கும் –
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;–வந்தால் குளிர நோக்கும் திருக் கண்களை நினைத்து
தாமரை போன்ற திருக் கண் என்றே சொல்லி -அது பெறாமையாலே தளரா நிற்கும் –
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;–இந்த திவ்ய ஆயுத சோபையையும் திவ்ய அவயவ சோபையையும் யுடைய உன்னை
விட்டு எங்கனே தரிக்கக் கடவேன் -என்னும்
இரு நிலம் கைதுழா இருக்கும்;–தன் ஆர்த்தி அதிசயத்தாலே பூமிப் பரப்பு அடங்க -அவன் திருவடியால் துழாவினாவோ பாதி
தான் கையாலே துழாவி–அதுக்கும் சக்தை இன்றியே நிர்வியாபாரையாய் இருக்கும்
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–இளமையாலே சிவந்த புகரை யுடைத்தான கோயிலிலே
ஸந்நிஹிதனானவனே இப்படி அதிசயித்தமான விகாரத்தை யுடையளாய் அந்த நீரைப் பிரிந்த கயல் போலே
உன்னைப் பிரிந்து தரியாத இவள் அளவிலே எது செய்கிறாய் –
இவ்வார்த்தியைத் தீர்க்க நினைக்கிறாயோ –
அதிசயிப்பிக்க நினைக்கிறாயோ -என்று கருத்து –

இரவும் பகலும் தூங்கி அறியாள்; கண்களினின்றும் பெருகுகிற நீரைக் கைகளால் இறைப்பாள்; ‘சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லிக்
கை கூப்பி வணங்குவாள்; ‘தாமரை போன்ற திருக்கண்கள்!’ என்றே தளர்வாள்; ‘உன்னைப் பிரிந்து எப்படித் தரித்திருப்பேன்!’ என்பாள்’
பெரிய நிலத்தைக் கையால் துழாவிப் பின் அதுவும் செய்யமாட்டாது இருப்பாள்; சிறந்த கயல்மீன்கள் பாய்ந்து செல்லுகின்ற
தண்ணீர் நிறைந்த திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவனே! இவள் சம்பந்தமாக என்ன காரியத்தைச் செய்யப் போகின்றாய்?
‘இறைக்கும், கைகூப்பும், தளரும், என்னும், இருக்கும்’ என்பன, செய்யும் என் முற்றுகள்.
இத்திருவாய்மொழி. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

பேச்சுக்கு நிலம் அன்றிக்கே இருக்கிற இந்தப் பிராட்டியுடைய நிலையைப் பெரிய பெருமாளுக்கு அறிவித்து,
‘இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்-
இவளை எப்போது கண் துயிலப் பண்ண இருக்கிறீர்?

விரஹிணிகளுக்கு ஓடுகிற வியசனம் மாற்றுகைக்காக
‘இரவு, பகல்’ என்று ஒரு வரம்பு கட்டின இத்தனை அன்றோ?
அது இவளுக்குக் காரியமாகிறது இல்லை;
இரவில் விஷய லாபத்தாலே போது போக்கவும்,
பகலில் இந்திரியங்களானவை வேறு விஷயங்களிலே கொடுபுக்கு மூட்டி,
‘அப்போது ஆயிற்று, இப்போது ஆயிற்று’ என்று
காலத்தைக் கழிப்பதற்கு உடலாயிருக்கவும் ஆமன்றோ?

‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்று சொல்லுகையாகலே,
இவளுக்கு அங்ஙன் ஒன்று சொல்லித் தரிக்க ஒண்ணாதே.
ஆகையாலே, தனக்கு ஆறியிருத்தற்குக் காரணமாகச் செய்து வைத்த
இரவு பகல் என்ற வேறுபாடும் அறிகின்றிலள்.

பகலும் இரவோடு ஒக்க உறங்கக் கண்டது அன்றோ? ‘யாங்ஙனம்?’ எனின்,
‘யௌவனம் குடி புகுந்தால் இரவில் நாயகனுக்கு அலை கொடுக்கையாலே உறக்கம் இல்லை;
அந்த இழவுக்கும் எற்றி உறங்குவது பகல் அன்றோ! அதுவும் பெறுகிறது இல்லை’ என்றபடி.

‘பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்,
’‘அநித்ர: ஸததம் ராம:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 36:44. என்கிறபடியே,
இவளையும் தன் படி ஆக்கினான். என்றது,
மேலான ஒப்புமையை அடைகிறான்’
‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம்.-என்கிறபடியே,
தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி.

கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது;
ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல்,
‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.

‘இவள் கலந்த அன்று உறங்கினாலும், இவள் இப்போது படுகிற நோயினை அனுபவித்த
திருத் தாயார்க்கு அது ஒன்றாகத் தோற்றாதே!’ என்றது,
‘இந்த நோய்க்குப் பூர்வாங்கமாய் வந்தது ஒன்றாகையாலே அதனை ஒன்றாக நினைக்கின்றிலள்’ என்றபடி.
பூர்வ ரெங்கம் -ஒத்திகை போலே -பாவி நர்த்தன ஸூசக பூர்வ பாவி – பொம்மலாட்டம் போலே –
என்றும் சிறைக் கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே
பிரிந்த நாள்களில் இழவே காணும் இவள் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது.

அறியாள் –
உறக்கம் ஒக்க இருக்கச் செய்தே‘கைங்கரிய விரோதி’ என்று கை விட்டவரைக் காட்டிலும் இவளுக்கு உண்டான
வாசியைத் தெரிவிப்பாள், ‘அறியாள்’என்கிறாள்.
முன்பு இல்லை யாகிலும் இப் பிறவியில் மெய்ப்பாட்டால் பற்றி விட வேண்டிற்று.
ஆதி சேஷன் நித்ய ஸூரிகளில் தலைவர் –
அநிமிஷர் அதனால் முன்பு நித்திரை இல்லை யாகிலும் –
இந்த லஷ்மண ஜென்மத்தில்
மெய்ப்பாடு -மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்து 24 வருஷம் தூங்க வேண்டும் –
மனுஷ்ய கிங்கரர் என்று காட்ட -என்ற படி

கண்ண நீர் கைகளால் இறைக்கும்-
தன் கையாலே கண் நீரை இறைக்கப் பாரா நின்றாள்.
இவளுக்கு இந்த அறியாமை எங்கும் ஒக்கத் அனுவர்த்திக்கப் (தொடரப் )பெற்றதில்லை!
‘இந்த ஆற்றாமையில் எப்படியும் நாயகன் வாராது இரான்’ என்று பார்த்து,
அப்போதாகப் பகை (கோபம்) கொண்டாட ஒண்ணாது;
முதல் நடை தொடங்கிக் காண வேணும்’ என்று கண்ண நீரை மாற்றப் பாரா நின்றாள்.
‘இது என்ன சாகஸந்தான்! இது, தன்னால் இயலும் என்று தொடங்கினாளோ.
கடல் கொண்ட கண்ணீர் அன்றோ?திருவிருத்தம், 18.

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

கடல் கொண்ட-கடலோடு ஒத்த.-
கோகுள் இலையைக் கொண்டு கடலை வற்ற இறைப்பதாக நினைப்பாளே!
‘தேவரீர் கண்களிலிருந்து சோகத்தால் உண்டான நீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்னும்படி காணும் இருக்கிறது.
‘கிமர்த்தம் தவ நேத்ராப்யாம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 4. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.-

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்-
கண்ண நீரை மாற்றினால் கண்களாலே காண வந்து தோற்றும் படியை நினையா நின்றாள்.
சொல்லா நின்றாள் என்ன வில்லை –விலக்கின பின்பு சேவை சாதிப்பானே -அத்வேஷம் மாத்திரம் போதுமே –
‘தவள ஒண் சங்கு சக்கரம்’ திருவாய்மொழி, 6. 5:1.-என்று
திவ்விய ஆயுதங்களோடு காண அன்றோ இவள் தான் ஆசைப்பட்டிருப்பது!
‘தேநைவ ரூபேண சதுர்ப் புஜேந’ என்பது, ஸ்ரீகீதை, 11.46.

‘கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடி எம்
ஐயனார் அணியரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.’–என்பது, அநுசந்தேயம். ( அமலனாதிபிரான்.7.)

உகவாத கம்ஸன் முதலாயினோர்களுக்கு அன்றோ இரு தோளனாக வேண்டுவது’
‘நான்கு தோள்களை யுடைய அந்த உருவமாகவே ஆகக் கடவீர்’ என்றான் அன்றோ காண ஆசைப்பட்ட அருச்சுனன்?
‘கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து,திருவாய். 6. 9:1. கணிசித்து-விரும்பி.-
வலி இல்லாமையாலே தலைக் கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே,
குறையும் அஞ்சலியாலே தலைக் கட்டா நின்றாள்.சங்கு சக்கரங்கள் ஏந்தி வாராய் முடிக்க முடியாமல் –
சங்கு சக்கரம் சொல்லி தாமரைக் கண் -திரு மேனி முழுவதும் திருக் கண்கள் அகப்படுத்த -அர்ச்சை அன்றோ —

தாமரைக் கண் என்றே தளரும் –
அவ் வாழ்வார்கள் அளவு வந்து அலை எறிகிற கண்களின் அழகினைச் சொல்லப் புக்கு, நடுவே தளரா நின்றாள். என்றது,
‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’திருவாய். 9.2.1. என்று சொல்லப் புக்கு,
நடுவே தளரா நின்றாள் என்றபடி.

‘கடையில் செந்நிறம் பொருந்திய கண்களை யுடைய ஸ்ரீராம பிரானைப் பாராதவளான காரணத்தால்
மிக்க துக்கமுடையவளானேன்’ என்னுமாறு போலே.
‘ராமம் ரக்தாந்த நயநம் அபஸ்யந்தீ ஸூதுக்கிதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 26:37.

‘தளருகிறது என்? வேறு ஒன்றாலே போது போக்கினாலோ?’ என்பார்களே!
உன்னை விட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்-
பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றில் ஆசைப்பட்டேனாய் ஆறி இருக்கிறேனோ?
உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.
‘உம்முடைய வைலக்ஷண்ய நீர் அறிந்தால், நம்மைப் பிரிந்தார் தரிக்க மாட்டார்கள்’ என்னுமிடம் நீரே அறிய வேண்டாவோ?
உன்னைக் கண்ணாடிப் புறத்திலேயும் கண்டு அறியாயோ? கண்டாயாகில் பிரியாய்;
பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி. ‘எங்ஙனே தரிக்கேன்?’ என்ற உடனே வரக் காணாமையாலே,

இரு நிலம் கை துழா இருக்கும் –
பெரிய நிலமானது ஒரு பீங்கானுக்கு உட்பட்ட சந்தனக் குழம்பு பட்டது படா நின்றது.
கண்ணை நீர் மணலில் விழுந்து -சந்தனம் போலே ஆனதே –
மகா பிருத்வி திரிவிக்ரமன் திருவடிகளில் பட்டது போலே –

செங்கயல் –
அவ்வூரில் வசிக்கிற திரியக்குகளின் தன்மை இவளுக்கு அரிதாவதே!
அவை தம் நிறம் பெற்று வாழ்கின்றன; இவள் நிறம் இழந்தாள்.
நாரத்தைப் பற்றினது களித்து வாழா நின்றது. நாராயணனைப் பற்றிய இவள் துக்கிப்பதே?
ஆபோ நார-நாரங்களில் ஒன்றே தண்ணீர் –

செங்கயல் –
அழகிய கயல். அக்கயல் தண்ணீரைப் பிரிந்து தரிக்கில் அன்றோ இவள் உன்னை விட்டுத் தரிக்க வல்லது?
‘தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன்கள் போன்று கண நேரமே பிழைத்திருப்போம்’ என்னக் கடவதன்றோ
‘ஜலாத் மத்ஸ்யா விவோத்த்ருதௌ’–என்பது, ஸ்ரீராமா, அயோத். 53:31.
இது பெருமாளை நோக்கி இளைய பெருமாள் கூறியது.

இவளையும்? இவள் திறத்து –
‘சரீரங்களைப் பார்க்க வேண்டும் எழுந்தருள வேண்டும்’ ‘ஏஹி பஸ்ய ஸரீராணி’என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 6:16.
என்னுமாறு போலே,இவள்படி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே காட்டுகிறாள். என்றது,
பின்னை கொல் திருமா மகள் கொல் -உனக்கு அநந்யார்ஹ சேஷ பூதை-இவள் –
‘இராக்கதர்கள் தின்ற உடம்பைக் காட்டினாற்போலே, விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள்’ என்றபடி.

என் செய்கின்றாயே –
இவள் திறம் செய்யப் பார்த்தது என்?
உம்முடைய ஊரில் இருக்கும் பொருள்கள் பெற்றதும் பெற வேண்டாவோ, உம்மை ஆசைப்பட்ட இவள்?

———————————————————————————————–

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில் வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

சர்வ பிரகார ரக்ஷகன் நீ இவள் பிரகாரம் விஷயத்தில் என்ன வாய்ப் போகும்
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!-பிரதமத்தில் அநந்யார்ஹம் ஆக்கி ருசி விளைத்து பரம போக்யன்
அனுபவம் கொடுக்கப் பார்க்கிறாயா –
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்-அதுக்கு மறு மாற்றம் கிடைக்கை யாமையாலே கண் நீர் சுவரி துளும்பும் படி
சஞ்சார க்ஷமை இல்லாமல் இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!-கோயிலில் சன்னிஹிதன் -சக்தம் சுலபம் நீ -அசக்தை அஞ்ஞன் நான் எத்தை செய்வேன் என்று கூறும்
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்-பல காலம் பரிதபித்து உருகா நிற்கும் -கண் நீர் மூச்சு காற்று உஷ்ணத்தால்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்-கர்மம் சேர்த்து வைத்த நான் -வினைகளே முன்னால்-கிலேச மிக்கு சேதன சமாதியால் சொல்லுகிறாள்
அதுவும் அவன் இட்ட வழக்கு தெளிவு பிறந்த பின்பு
முகில் வண்ணா! தகுவதோ என்னும்-மேக ஸ்வ பாவன்-தக்காதே -உபகாரகத்வம் பலமாம் படி
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!-பிரதமத்தில் ஸ்ருஷ்டித்து உண்டு அந்நிய அபிமானம் போகும் படி அளந்து
என் கொலோ முடிகின்றது இவட்கே-உன்னை விட்டு தரியாத இவளுக்கு
ரஷ்ய வர்க்கத்தில் அந்தர் பாவிப்பாளா -வ்யாபியமாய் முடியும் படி இவனை அடையாமல் வெளியே இருப்பாளோ

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!-என்னும்-பிரதமத்திலே என்னை அநன்யார்ஹை யாக்கி ஆசையை விளைக்கும் படி
அதிசயித போக்யமான திருக் கண்களை யுடையவனே -அனுபவ பர்யந்தமாகப் பார்க்க நினைக்கிறாயோ –
அவ்வளவில் ஓடி எறிந்திட்டு வைக்க நினைக்கிறாயோ -என்ன செய்ய நினைக்கிறாய் -என்னும்
கண்ணீர் மல்க இருக்கும்-அதுக்கு ஒரு மாற்றம் காணாமையாலே அந்தஸ் தாபத்தாலே அகவாயில் கண் நீர்
சுவறித் துளும்பும் அளவாம் படி-சஞ்சார ஷமை யான்றியே இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!-என்னும் –அலை எறிகிற நீரை யுடைத்தான கோயிலிலே ஸந்நிஹிதனானவனே –
உன்னைக் கிட்டுகைக்கு சக்தனாய் ஸூலபனான நீ ஒன்றும் செய்யாது இருக்க
அசக்தையாய் ஆர்த்தையான நான் எத்தைச் செய்வேன் -என்னும் –
வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்-இந்த ஆகிஞ்சன்யத்துக்கும் முகம் காட்டாமையாலே அந்தஸ் தாபத்தாலே வெவ்விதாம்படி
பலகாலும் மூச்சு விட்டு அப்பரிதாபத்தாலே யுருகா நிற்கும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்–இப்படி கிலேசிக்கைக்கு அடியாக முன்பு நான் பண்ணி வைத்த கர்மமே
முகம் தோற்ற நில்லாய் என்று கிலேச கரமாகையாலே சேதன சமாதியாலே சொல்லா நிற்கும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்-அதுவும் அவன் இட்ட வழக்கு என்கிற தெளிவு பிறந்தவாறே ஜல ஸ்தல விபாகமற
உபகரிக்கும் மேக ஸ்வ பாவனானவனே -நீ முகம் காட்டாது இருக்குமது அந்த யுபகாரத்துக்குத் தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!–அந்த யுபகாரகத்வம் பலமாம்படி இந்த லோகத்தை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்து –
பிரளயத்தில் உண்டு -உமிழ்ந்து -அந்நிய அபிமானம் போம்படி அளந்து கொண்டவனே
என் கொலோ முடிகின்றது இவட்கே?–உன்னை ஒழியச் செல்லாத படியான இவளுக்கு என்னாய் முடிய புகுகிறதோ
இந்த ஆர்த்திக்கு எல்லை யுண்டாம்படி உன்னுடைய ரஷ்ய வர்க்கத்தில் இவளுக்கும் அந்தர் பாவம் யுண்டாகிறதோ
யாப்யமாம் விடும்படி இவற்றின் புறத்தாளாம் படி யாகிறதோ -என்று கருத்து

‘என் தாமரைக் கண்ணா! என்ன செய்ய நினைக்கிறாய்?’ என்பாள்; கண்களில் நீர் நிறையும்படி இருப்பாள்; ‘அலைகள் வீசுகின்ற நீர்
சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனே! என்ன செய்வேன்?’ என்பாள்; வெம்மை தோன்றப் பலகாலும் மூச்சு விட்டு உருகுவாள்;
‘முன்னே செய்த பாவமே முகம் தோற்ற நில்லாய்’ என்பாள்; முகில் வண்ணா! தக்கதாமோ?’ என்பாள்; ‘இந்த உலகங்களை எல்லாம்
முன்னே படைத்துப் பின்பு உண்டு உமிழ்ந்து அளந்தவனே! இவளுக்கு முடிகின்றது என் கொலோ?’ என்கிறாள்.

‘இப் பெண் பிள்ளையினுடைய நிலை என்னாய் விளையக் கடவது?’ என்கிறாள்.

என் செய்கின்றாய் –
ஆற்றாமை மிக மிக அவனைக் கேட்குமித்தனை அன்றோ?

என் தாமரைக் கண்ணா என்னும் –
‘ஒரு நீர்ச் சாவியான பயிருக்கு ஒரு பாட்டம் மழை பெய்யக் கடவதன்றோ?’ என்கிறாள்.
‘தேவனே! அடைந்தவர்க்கு அருள் செய்பவனே! கேசவனே! அருள் புரிவாய்; அச்சுதனே!
பார்வையாலே மறுபடியும் என்னைக் காப்பாயாக,’ என்னக் கடவதன்றோ’
‘அவலோகந தாநேந பூயோமாம் பரி பாலய’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1.20:16.

என் தாமரைக் கண்ணா என்னும் –
‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது;
உணருகிற போது (அவனது திருக் )கண்களை வாய் வெருவிக் கொண்டாயிற்று உணர்ந்ததும்.

தளர்வதற்குக் காரணமும், தளர்ச்சி நீங்கித் தெளிவதற்குக் காரணமும்
இக் கண்களே என்று கொண்டு அருளிச் செய்கிறார்,
‘தாமரைக் கண் என்றே தளரும் என்றது’என்று தொடங்கி. என்றது,
மேல் திருப் பாசுரத்தில் ‘தளரும்’ என்று மோஹத்தைச் சொல்லி,
இத் திருப் பாசுரத்தில் ‘என் தாமரைக் கண்ணா என்கையாலே,
இது உணர்த்தியில் வார்த்தை என்றபடி.
“தாமரைக் கண் என்றே தளரும்’ என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாய்ச் சொல்லுகிறது.

‘நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வஸிப்பிக்குமா போலே, எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என்
ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ, இல்லையோ? கண்களாலே பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ?

ஸதார்சனத்தையும் பண்ணி வேண்டாவோ?’ என்பது –இருபத்து நாலாயிரப்படி.

கிட்டின காலத்தில் ‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கன்றோ?’ என்றது கண்களாலே அன்றோ?
அக் கண்களிலே அன்றோ இவள் எழுதிக் கொடுத்தது?
கண்களாலே நோக்கி அணைக்கும் படியை நினைத்து,
அந்த பாவனையின் மிகுதியாலே கலந்து பிரிந்தாற்போலே கண்ணீர் மல்க இருக்கும்.

என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் –
‘என் தாபம் ஆறும்படி அவ்வலை ஏற்றிலே கொண்ட போய்ப் பொகட வல்லீர்கோளே’என்னும்.
‘திருப்பொருநலில் தண்ணீர், பிரிந்தார்க்கு நிலாப் போலே சுடுகின்ற நீராய் இரா நின்றது போலே காணும்.
உன்னைக் கிட்டுகைக்கு நான் செய்வது என்?’ என்பாள், ‘என் செய்கேன்’ என்கிறாள்.
அப்போதே கிட்டப் பெறாமையாலே, ‘ஆசைப்பட்ட நாம் அழகியதாகப் பெற்றோம்’ என்று

நெடு மூச்சு எறியா நிற்கும்
‘தளிர்களைத் தரித்திருக்கின்ற மரங்களைத் தன் மூச்சுக் காற்றினால் எரிக்கின்றவளைப் போல இருக்கிறவளை’
பெரு மூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள். பல்லவங்களைத் தரித்தனவாயிருத்தல் இப்போது இவளுக்குப் பகை அன்றோ?
ஒரு படிப்பட நின்று நலிகிறபடி அன்றோ அவை? அரக்கியர்கள் உறங்கும் போதும் உண்டே அன்றோ!
உருவ இப்படியே நிற்கிற இத்தனை அவை,
‘தஹந் தீமிவ நிஸ்வானஸ: வ்ருக்ஷாந் பல்லவ தாரிகை;’-என்பது, ஸ்ரீராமா. சுந். 17:29

உருகும் –
உருகுகிறபடியே நிற்குமத்தனை.
நெடு மூச்சு எறிகைக்குத் தர்மியும் இல்லையோ என்னும்படி உருகும்.
வெவ்விதாகப் பலகால் நெடுமூச்சு எறிந்து, அந்த வெப்பத்தாலே உருகா நிற்கும்.

முன் செய்த வினையே முகப்படாய் என்னும் –
வலிக்கைக்கு விரகு பார்க்கிறபடி.
‘நான் முன்பு செய்த பாவமே, என் முன்னே வந்து நிற்க வல்லையே?’ என்னும்.
நீ முகங்காட்டினாயாகில். ‘தாமரைக் கண்ணா, என் செய்கின்றாய்?’ என்று அவனைக் கேளாது ஒழியலாயிற்றே. என்றது,
‘நான் செய்த வினையின் பயன் இதுவான பின்பு நாம் யாரை வெறுப்பது?’ என்று இருக்கலாயிற்றே என்றபடி.

ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் இவர்க்கும் உள்ளது ஒன்றாயிற்று;
‘நன்மை அவனாலே’ என்றும்,‘தீமை தந்தம்மாலே’ என்றுமாயிற்று இருப்பது.
‘என்னுடைய பாவம் அதிகமாய் இருக்கிறது; சந்தேகம் இல்லை,’ என்றாள் அன்றோ?
‘மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்ஸய:’-என்பது, ஸ்ரீராமா. சுந். 38:48.
யுகபத்யம் அனுகிரக கார்யம் ஸ்ருஷ்டித்ததே நன்மைக்காத் தானே-
கொடுத்த கரண களேபரங்களை நாம் தான் தப்பாக பயன்படுத்துகிறோம் –

முகில் வண்ணா தகுவதோ என்னும் –
நான் செய்த பாவம் கிடக்கட்டும், கர்மங்கட்குத் தகுதியாகவோ நீர் காரியம் செய்யுமது?
தண்ணீர் என்றும் தரை என்றும் வேறுபாடு பாராமல் மழை பெய்வது போன்று,
திருவருள் செய்யும் உம்முடைய ஒளதார்ய குணத்துக்குப் போருமோ?’ என்னும்.
‘ஒரு வினைக்கு இத்தனை உயிர் உண்டோ? நான் காண் இது விளைத்தேன்,’ என்று
அவ் வடிவைக் கொண்டு வந்து காட்ட வல்லையே’ என்னும்.
இது பத்தியின் காரியமே யாகிலும், பகவானுடைய அனுபவத்திற்கு விரோதி ஆகையாலே பாவம் என்கிறது.
விருப்பம் இல்லாததனைக் கொடுப்பது பாவம் இத்தனை அன்றோ?
சரணம் அடைந்த பின்பு சம்பத்தும் ஆபத்தும் அவன் தலையில் -ரஷா பரம் அவன் ஏற்றுக் கொள்வான் –

‘தகவிதோ’ என்ற பாடத்திற்கு,-தகவு – தயை
‘நான் செய்த பாவம் நானே அனுபவிக்க வேணுமாகில்
உம்முடைய திருவருளுக்கு விஷயம் இன்னது என்று அருளிச் செய்ய வேண்டும்,’ என்னும்.

‘முன் செய்த வினையே முகப்படாய்’ என்கிற இடம்,
‘கிரியை அத்ருஷ்ட ரூபத்தாலே நின்று பலத்தைக் கொடுக்கும்’ என்பார் வார்த்தை.-மீமாம்சகன் வார்த்தை

‘முகில் வண்ணா’ என்கிற இடம்,
‘ஒரு பரம சேதனனுடைய திருவருளே பலத்தைக் கொடுப்பது’ என்றிருக்கும் வேதாந்திகள் வார்த்தை.

‘குற்றவாளர் இராம கோஷ்டிக்கு ஆள் அல்லர்’என்கிற மஹாராஜர் தொடக்கமானார் வார்த்தை போன்றது மேலே சொன்னது:

‘அவர்கள் குற்றவாளரேயாகிலும்’ என்ற இராம சித்தாந்தம் போலே ‘தகவிதோ’ என்கிறது
.‘தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத்’ என்பது, ஸ்ரீராமா:யுத். 18:3

‘என்னை நமஸ்காரம் செய்’ என்றாற்போலே மேலே சொன்னது‘மாம் நமஸ்குரு’ என்பது ஸ்ரீகீதை, 9:34.;5‘

துக்கப்படாதே’ என்றாற்போலே ‘தகவிதோ’ என்கிறது.

‘முகில் வண்ணா’ என்கைக்கு, நம் ஒளதார்யம் எங்கே பலிக்கக் கண்டு சொல்லுகிறது?’ என்ன,
‘இவ்வுலகம் முன் செய்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்-
காரணம் ஒன்றும் இல்லாமலே முன்பு உலகத்தைப் படைத்தல் முதலானவைகளைச் செய்து ‘தகவிதோ’ என்கைக்கு
‘உபகரணம் இல்லாத அன்று இதனை உண்டாக்கி நோக்கினாய் நீ அன்றோ?’ என்றது,
‘கரண களேபரங்கள் இல்லாமல் கிடந்த இதனை வெறும் உன் கிருபையாலே உண்டாக்கினாய் இத்தனை அன்றோ?
உண்டாக்கிவிட்ட அளவையோ? பிரளய ஆபத்து வயிற்றிலே வைத்துப் பாதுகாத்து, உள்ளே கிடந்து நோவு படாதபடி புறப்பட விட்டு,
எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, எல்லாவிதமான பாதுகாத்தலையும் செய்தாய் அல்லையோ!’ என்றபடி.

என் கொலோ முடிகின்றது இவட்கே –
‘இவள் அளவில் தர்மி லோபமேயோ பலிக்கப் புகுகிறது?
நீர் பாதுகாக்கும் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசி உண்டாக நினைத்திருக்கின்றிலீரோ!
இவளுடைய பாபமோ, உம்முடைய திருவருளோ பலிக்கப் போகிறது?
இவள் இடை யாட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே?’ என்னுதல்.
‘இவளுடைய நிலை என்னாய் விளையக் கடவது?’ என்னுதல்.

என் செய்கின்றாய் –
திருத் தாயார் வார்த்தை -ஆற்றாமை வளர மேல் மேல் கேள்வி கேட்க்கிறாள்
(கீழேயும் கேட்டு இங்கும் கேட்பது புனர் யுக்தி தோஷம் ஆகாதோ என்ன
ஆற்றாமை மிக மிக அவனைக் கேட்பதே வழி என்றாரே கீழேயே )

தலை மகள் வார்த்தை -என்றுமாம்

————————————————————————————

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்கும் மையாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;-வட்கு -லஜ்ஜை -தாய் முன்னாலே அவன் அழகையும் பெயரையும் சொல்லி
நீல ரத்ன ஸ்வ பாவனாய் -முடித்து ஆளலாம் படி பவ்யன் ஆனவனே
வானமே நோக்கும் மையாக்கும்-ஆர்த்த த்வனிக்கு வருவான் என்று பார்க்கும் -காணாமையாலே மயங்கி -பிரதிபந்தகங்கள் போக்கி –
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட-மிடுக்கு உடைய அசுரர் பிராணங்களை கிரஸித்த
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;-அத்விதீயன் -உள்ளே உடையா நிற்கும் -ஆஸ்ரித நிரசன சீலத்தை நினைத்து
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்-ஸூ பிரயத்னத்தால் காண்பதற்கு அரிய நீ உன்னை உன் அனுக்கிரகத்தால் காணுமாறு
உன்னை இல்லாமல் தரிக்காத எனக்கு
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;-சக்ரவர்த்தி திருமகன் -பும்ஸாம் திருஷ்ட்டி சித்த அபஹாரினாம்-ரிஷிகள் –
மான் தோல் அலங்காரம் கண்டு ஆச்சர்யப்பட –
தாஸாம் ஆவீர் பூத –ஸவ்ரி ஸ்வயமானம் பீதாம்பர ஸ்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-காலாந்தரம் அவை பிற்பாடாரும் இழவாத படி
இவள் திறத் தென் செய்திட்டாயே–இப்படி ஆரத்தை யாகி இவளுக்கு
வடிவு அழகு இப்படி மதி மயங்கப் பண்ணுமோ

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;-ஏக தேசமும் தனக்கு நிரூபகமான லஜ்ஜையை யுடையவளாய் இருக்கிறிலள்-
அத்தாலே என் முன்பு என்று பாராதே -முடிந்து ஆளலாம் படியான நீல ரத்ன ஸ்வ பாவனாய்க் கொண்டு எனக்கு பவ்யனானவனே-என்னும் –
வட்குதல்-வெட்கு தலாய்-லஜ்ஜை
வானமே நோக்குமை யாக்கும்–இவ்வார்த்த த்வனிக்கு வருவுதி என்று ஆகாசத்தைப் பார்க்கும் -காணாமையாலே மயங்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;–பிரதி பந்தகத்தாலே விளம்பித்து என்னாமைக்கு
மிடுக்கை யுடையரான அசுர பிரக்ருதியினுடைய பிராணங்களை நிரவ சேஷமாக கிரஸித்த ஏக வீரனே என்னும் –
அந்த விரோதி நிரசன சாமர்த்தியத்தை நினைத்து உள் உடையா நிற்கும் / உட்கு -மிடுக்கு
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;–கண்ணுக்கு காண அரிய நீ
கண்டு அல்லது தரிக்க ஒண்ணாத உன்னைக் காணும்படி கிருபை பண்ணி அருள வேணும் –
நீ காட்ட நினைத்த போது நாட்டோடு காட்டோடு வாசியற தர்சிப்பித்த சக்கரவர்த்தி திருமகனாயும் –
இடைச்சிகளுக்கும் திரு வடிவைக் காட்டின ஸ்ரீ கிருஷ்ணனாயும் திரு அவதரித்தவர் இல்லையோ -என்னும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–அதுக்குப் பிற்பட்டாரும் இழவாத படி திண்ணியதாய்
கொடியை யுடைத்தான மதிள் சூழ்ந்த கோயிலிலே ஸந்நிஹிதனானவனே
இவள் இப்படி ஆர்த்தி யாகைக்கு நீ செய்தது ஏது-
வடிவு அழகு இப்படி மதி மயக்குமோ -என்று கருத்து

‘சிறிதும் நாணம் இல்லாதவளாய் இருக்கின்றாள்; ‘மணி வண்ணா!’ என்கிறாள்; ஆகாசத்தையே நோக்குவாள்; மயங்குவாள்;
‘அச்சத்தை உண்டாக்குகிற அசுரர்களுடைய உயிர்களை உண்ட ஒருவனே!’ என்பாள்; மனம் உருகுவாள்;
‘கண்களால் காண்பதற்கு அரிய நீ, நான் பார்ப்பதற்குத் திருவருள் புரிய வேண்டும்,’என்பாள்; ‘ஸ்ரீராமபிரானே! கண்ணபிரானே!’ என்பாள்;
‘திண்ணிய கொடிகள் கட்டிய மதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தாய்! இவள் விஷயத்தில் என்ன செய்தாய்?’ என்கிறாள்.
வட்கு – நாணம். இறை – சிறிது. உட்கு – அச்சம்; ‘உருவுட் காகும் புரையுயர் பாகும்,’ என்பது தொல்காப்பியம்.’
திண்’ என்பதனை, மதிட்கு அடைமொழியாக்கலுமாம்.

‘இவள் இந்த நிலையை அடைந்தவளாதற்கு இவள் இடையாட்டத்தில் – விஷயத்தில் நீர் செய்தது என்?’ என்கிறாள்.

வட்கு இலள் இறையும் –
இதற்குச் சீயர் அருளிச் செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று.
நாணத்தைக் கொண்டே அன்றோ பெண்மையை அறிவது?
ஸ்வரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் ஸ்வரூபமும் போயிற்றாமத்தனை அன்றோ?
நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே!
இவள் நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில்,

மணி வண்ணா என்னும் –
கணவனுடைய திருப் பெயரைச் சொல்லா நின்றாள்.
பெற்ற தாய் முன்னே வடிவழகினைச் சொல்லா நின்றாள்.
நான் கேட்டாலும் மறைக்குமதனைத் தான் வெளியிடா நின்றாள்.
காதலி ஆசைப்படுவது வடிவழகினை அன்றோ? தான் அகப்பட்ட துறையினைச் சொல்லா நின்றாள்.

மெய்யே நினைத்து,
மெய்யே சொல்லி,
மெய்யே அனுபவிக்கை இவர்க்குத் தன்மையாய் -ப்ரக்ருதியாய் -விட்டதே!-
மெய் -சாடு- திருமேனி -உண்மை –
‘உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு,- திருவாய். 7.1:8.’ என்று
அவன் பாடு இவள் வேண்டிக் கொள்வதும் இதுவே அன்றோ?

மணி வண்ணா என்னும் –
வடிவழகினைச் சொல்லுதல்,
சௌலப்பியத்தினைச் சொல்லுதலாகா நின்றாள்.

‘இதற்கு முன் அறியாத துக்கத்தை யுடையவளும் மென்மைக் குணமுடையவளும் ஆழ்ந்த மனமுடையவளுமான பிராட்டி,
அந்தத் துக்கத்தாலே அழுது கொண்டு என்னைப் பார்த்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை,’ என்கிறபடியே,
‘அத்ருஷ்ட பூர்வ வ்யஸநா ம்ருது ஸீலா மநஸ்விநீ
தேந துக்கேந ருததீ நைவமாம் கிஞ்சித் அப்ரவீத்’-என்பது, ஸ்ரீராமா. ஸூந்தர . 58:35
எல்லா நிலைகளிலும் வாய் விடக் கூடியதன்றிக்கே இருப்பது ஒன்றே அன்றோ இது?

வானமே நோக்கும் –
‘மணி வண்ணா’ என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன்,-
ஸப்த ஸஹ-சஹஸ்ரநாமம் -(ஆர்த்த த்வனி கேட்டு வந்து தோன்றுவான் )
ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா நிற்கும்.
‘மிகப் பெரிய ஆபத்தை யடைந்தவன்’ என்கிற அதற்கும் அவ்வருகே அன்றோ இவளுடைய நிலை?
‘பரமாபதம் ஆபந்ந;’ என்பது, விஷ்ணு தர்மம், 68.-
அங்கு வந்து தோன்றக் காணாமையாலே,
அங்கே சரீர நாசம்
இவளுக்கு ஸ்வரூப நாசம் –

மையாக்கும் –
மயங்கா நின்றாள்; அறிவு கெடா நின்றாள்.-

‘மயங்கத் தீருமோ?
விரோதி கனத்திருக்கில்?’ என்ன,

உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனை என்னும் –
‘நான் வரப் பார்த்தால் அதற்குத் தடை உண்டு அத்தனை யல்லது,
நீயே வரப் பார்த்தால் தடை செய்வார் உளரோ?
எதிரிகள் மிடுக்கருமாய்ப்
பலருமாமத்தனை அன்றோ வேண்டுவது அழியச் செய்கைக்கு?’
உட்கு -மிடுக்கு.
‘பிறகு அவனுடைய உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கிற பகவான், கோபமுடையவராய்,
அதி சோஷணம் என்ற அந்தக் காற்றினை விழுங்கி விட்டார்; அந்தக் காற்று நாசமடைந்தது’ என்னுமாறு போன்று,
‘உண்ட’ என்கிறது.

‘ஹ்ருதயஸ்த: தத: தஸ்ய தம் வாயும் அதி ஸோஷணம்
பபௌ ஜநார்த்ததா: க்ருத்த: ஸ யயௌ பவந: க்ஷயம்’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1.19:24.

ஒருவனே’
வடிவழகிற்கு ஒப்பு உண்டாகிலும் (மணி வண்ணா சொல்லலாம் இதுக்கு )
வீரத்துக்கு ஒப்புச் சொல்லலாவதில்லை யாதலின் ‘ஒருவனே’ என்கிறது.
தான் வீர பத்நி என்னுமிடம் தோன்றச் சொல்லுகிறாள் ‘உட்குடை அசுரர் உயிர் எலாம் உண்ட’ என்று.
‘பெருமாள் யானைப் போல எண்ணப்படுகிறார்; நீ அற்ப முயலைப் போல எண்ணப் படுகிறாய்’ என்னுமவள் அன்றோ?
‘த்வம் நீசஸஸவத்’-என்பது, ஸ்ரீராமா. சுந்.22:16, இது பிராட்டி கூற்று.

உள் உருகும், –
‘இப்படித் தடைகளை யெல்லாம் போக்குமவன் வரக் காணாமையாலே,
என்ன குறை உண்டாய் இழக்கிறேன்?’
என்று மனம் உருகுவாள். என்றது,

‘காலம் நீட்டித்தலுக்குக் காரணம் இன்றிக்கே இருக்க, பலியாது ஒழிந்தாவாறே நீர்ப்பண்டம் போலே உருகுவாள்’ என்றபடி.
‘உருகின மாத்திரத்தில் கண்களால் காண முடியாத பொருள் கண்களுக்கு இலக்கு ஆமோ?’ என்பார்களே;
‘அருளாலே பெறுவார்க்கு அங்ஙன் ஒரு நியதி உண்டோ?’ என்னமாயிற்று இவள்.
‘கண்ணால் காண்கிறான் இல்லை’ என்கிறது, தாம் தாமே காண இழிவார்க்கு;
‘ந சக்ஷூஷாபஸ்யதி’ என்பது, தைத். நாரா.

‘தனது அருளுக்கு இலக்கானவனுக்கு இந்தப் பரமாத்மா தனது வடிவை நன்கு காட்டுகிறான்,’ என்கிறபடியே
‘தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே ததும் ஸ்வாம்’ என்பது, உபநிடதம்.

அவன் தானே காட்டுமன்று அருமை இல்லை.
அருச்சுனன் முதலோர்க்கு ஞானக் கண்ணைக் கொடுத்துக் காட்டிற்றிலையோ?

கட்கிலீ –
‘கண்ணுக்கு இலீ!’ என்றபடி.

உன்னைக் காணுமாறு அருளாய் –
‘உன்னைக் காண அரிது தம் முயற்சியாலே பெற இருப்பாற்கே அன்றோ? –
அருளாய் -உபாயம் –
காணுமாறு -பிராப்யம்
உன் அருள் அடியாகக் காண்பார்க்கும் அரிதோ?’ நன்று; அருளாலே நாம் யார்க்குக் காட்டினோம்?’ என்ன,

காகுத்தா –
‘வடிவு உதாரத் தன்மை சீலம் ஆகியவற்றால் அனைவருடைய கண்களையும் மனத்தையுங் கவரக் கூடியவனை’ என்கிறபடியே,
நகரத்திலுள்ளவர்களுக்கும்,‘பெருமாளுடைய உருவத்தின் அமைப்பையும் அழகினையும் சுகுமாரத் தன்மையையும்
அழகிய அலங்காரத்தையும் வனத்தில் வசிக்கின்ற முனிவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்,’ என்கிறபடியே

‘சந்த்ர காந்தாநநம் ராம மதீவ ப்ரிய தர்ஸநம்
ரூப ஒளதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்’-என்பது, ஸ்ரீராமா, அயோத். 3:29.

‘ரூபம் ஸம்ஹநநம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸூவேஷதாம்
தத்ரஸூ: விஸ்மித ஆகாரா ராமஸ்ய வந வாஹிந;-என்பது, ஸ்ரீராமா. ஆரண், 1 : 1.

காட்டில் வசிப்பவர்களுக்கும் காட்டிக் கொடுத்திரிந்திலையோ?
‘ஒருகால் செய்தது கொண்டோ?’ என்ன,

கண்ணனே –
ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ?
‘தாஸாம் ஆவிரபூத் – ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே இருக்கை.
‘தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’-என்பது, பாகவதம், 10. 32:2.

ஸ்மயமாநமுகாம்புஜ:-அவர்கள் முன்னே தோன்றின பின்பு வடிவில் பிறந்த செவ்வி.
பீதாம்பரதர: ஸ்ரக்வீ -பெண்கள் மனத்தில் மறத்தை மாற்றுவது, பரிவட்ட வாய்ப்பையும்
தோள்களில் மாலையையும் காட்டியாயிற்று.
ஸாக்ஷாத் மந்மத மந்மத :-
கீழை வீடு காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வல
வா ராகவா உன் வடிவு கண்டால் மன் மதனும் மட
வாராக ஆதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணமெங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே?’-என்பது, திருவரங்கத்தந்தாதி.

காமன் கையிலே உலகம் படுமதனைக் காமன் தான் படும்படி இருக்கை.

திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் –
‘அவதார காலத்தில் உதவிற்றிலீரே!’ என்ன,

அவதார காலத்தில் உதவப் பெறாதார் இழவு தீர்க்க அன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று?
உகந்தார்க்குக் காட்சி கொடுக்கக் கொடி கட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது?

திண்ணிய மதிள் என்னுதல் –
திண்ணிய கொடி என்னுதல்;
அவிழித்துக் கட்டாத கொடி என்கை.
வருவார் எல்லாரும் வாருங்கோள்’ என்று கட்டின கொடி.

இவள் திறத்து என் செய்திட்டாயே-
இவள் இப்படிப் பிச்சு ஏற என்ன மருந்திட்டாய்?
அவன் இவள் அறியாதபடி ஒரு முகத்தாலே மருந்து இடுமே?’ –முகத்தாலே-அம்மான் பொடி –

மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரந் தான் கொலோ!’நாய்ச்சியார் திருமொழி, 2:4.- என்கிறபடியே,
தன் முகத்தைக் காட்டுகை அன்றோ அவன் மருந்து இடுகையாவது?

இவள் கேட்கிறது என்?’ என்னில்,
அதுவாகில் அதற்கு மாற்றுச் செயலாக, மூன்று உலக இராஜ்யமும் உலக சப்தத்திற்குப் பொருளாக வுள்ள
எம்பெருமானும் சீதா பிராட்டியினுடைய ஒரு அம்சத்திற்கும் ஒப்பாக மாட்டார்கள்,’

‘த்ரை லோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத் கலாம்’-என்பது, ஸ்ரீராமா. சுந்.16:14.
என்று சொல்லப்படுகிற இவளை
அவன் முன்னே நிறுத்தி,
இவள் பட்டன எல்லாம் அவனைப் படுத்துவாளாக நினைக்கிறாள்.

————————————————————-

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;–ஆர்த்தியின் அதிசயத்தாலே பரவசையாய் இட்டு வைத்த இடத்தே கிடக்கும்படியான
காலையையும் கையையும் யுடையளாய் இருக்கும்
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;–ஆர்த்தி முதிர்ந்த படியால் ஸந்நிபதிதரைப் போலே பாரவஸ்யம் குலைந்து எழுந்து இருந்து
உலவா நிற்கும் -அநந்தரத்திலே மோஹிக்கும் -காலம் உணர்த்த மோஹம் தெளிந்த அளவில் வரக்கூடும் என்று அஞ்சலி பண்ணும்
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;–வரக் காணாமையாலே காதல் கட்டமாய் இருந்ததீ என்று வெறுத்து மூர்ச்சிக்கும் –
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;–தனக்குள்ளே எல்லாவற்றையும் ஒதுக்கி ரஷிக்கும் அபரிச்சின்னமான
கடலின்படியே யுடையவனே -எனக்குக் கடியையாய் இரா நின்றாய் காண் -என்னும்
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்–ஆஸ்ரித ரக்ஷணத்தில் சர்வதோ முகமான திருவாழியை வலக்கையில் யுடையவனே என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;–நடுவே இளைப்பாறி கையும் திருவாழியுமாய்க் கொண்டு வந்திடாய் -என்று
பல காலும் ஆவர்த்தித்து அபேக்ஷித்து -அபேக்ஷையில் ஆவ்ருத்தியாலே ஸ்வரூபம் இழந்தோம்
அவன் வரக் காணாமையாலே அபிமதம் இழந்தோம் -என்று அறிவு அழியா நிற்கும்
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!–இப்படி இவளை கிலேசிப்பித்து-சிட்டபாவனை பண்ணி -அழகிய நீர்க் கரையிலே கிடக்கிறவனே
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–வியதிரேகத்தில் மோஹிக்கும் படியான இவள் திறத்து என் நினைத்து இருக்கிறாயோ –
மோஹிப்பிக்கவே நினைத்து இருக்கிறாயோ
தேற்றம் கொடுக்க நினைத்து இருக்கிறாயோ -என்று கருத்து –

அபரிச்சின்ன மஹிமை -தீர்த்தம் ஸ்ரேஷ்டன் -இவளை பற்றி என்ன திரு உள்ளம்
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;-பெண்ணால் அசையக் கூட முடியாமல்-பரன் வசப்பட்டு –
இட்டு வைத்த இடத்தே கிடைக்கும் கைகள் கைகள் ஆர்த்தி முதிர்ந்த படியால் –
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;-தானே எழுந்து -பாரவஸ்யம் குலைந்து -உலாவா நிற்கும் -மோஹிக்கும்
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;-காலம் உணர்த்த மோஹம் தெளிந்து வருவான் என்று –
கை கூப்பும் அஞ்சலி பண்ணும் -வரக் காணாமையாலே காதல் கஷ்டம் -தாயார் வார்த்தையே பெண் சொல்வதே -வெறுத்து மூர்ச்சிக்கும்
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;-ரக்ஷிக்கும் அபரிச்சின்ன ஆகாரம்
ரத்னம் பவளம் மீன் திமிங்கிலம் பெரியது சிறிது நலியாமல் -வண்ணம் தான் கடல் ஸ்வ பாவம் இல்லையே —
எனக்கு கடியவனாய் கொடுமை செய்பவனாய் இருக்கும்
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்-சர்வதோ முகமாய் வட்டம் கூர்மை -இளைப்பாறி
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;கையும் திரு வாழியுமாக வா என்று என்று ஆவர்த்தித்து -வந்திடாய் –
சொல்லி சொல்லி தளர்ந்து மயங்கி -மீண்டும் மீண்டும் அபேக்ஷை ஸ்வரூபம் இழந்தாள்-ஸக்ருத் தானே –
ஆவர்த்தி பண்ணக் கூடாதே -அவன் வாராமையாலே அபிமதமும் இழந்தாள் -அறிவு அழிந்து –
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!-கிலேசிப்பித்து -சிஷ்ட பாவனை -மங்கள வாரம் போலே விபரீத லக்ஷணை
மித்ர பாவனை -சொன்னாய் சிஷ்ட பாவனை உடன் நீ இருப்பாயோ-நீர்க் கரையில் கிடந்து -அம்மா மண்டபம் கொள்ளிடம் –
இவள் திறத் தென் சிந்தித்தாயே-சிந்தனை இதில் -மோஹிப்பிக்கவே நினைத்து இருக்கிறாயா– தேற்ற நினைத்து இருக்கிறாயா

‘இட்டு வைத்த இடத்தே கிடக்கும்படியான கைகளையும் கால்களையுமுடையவளாய் இருப்பாள்; எழுந்து உலாவுவாள்; மயங்குவாள்;
கைகூப்பித் தொழுவாள்; ‘அன்பு துன்பத்தையே உண்டாக்குகின்றது,’ என்று மூர்ச்சிப்பாள்; ‘கடல்வண்ணா! நீ கொடியவன் காண்,’ என்பாள்;
‘வட்டமான கூர்மை பொருந்திய சக்கரத்தை வலக்கையிலுடையவனே!’ என்பாள்; ‘வந்திடாய்’ என்று என்றே மயங்குவாள்;
‘சிஷ்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் விஷயமாக நீ சிந்தித்தது யாது?’ என்கிறாள்.
கட்டம்-கஷ்டம். உலாய் மயங்கும்-உலாவி மயங்குவாள் எனலுமாம். சிட்டன்-சிஷ்டன்.

உம்மை ஒழியப் பிழைக்க மாட்டாத இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் –
இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா;
இவள் அவயவங்கள் இவள் அதீனமாகச் செய்ய அமையும்.

‘தோழிகளால் பொகடப் பட்டுப் பரந்து
‘ஸகீபி: ந்யஸ்த ப்ரகீர்ண பரதந்த்ர விபாண்டுர அங்கீ’ என்பது.( விபாண்டு-விசேஷமான வெளுப்பு )
இருப்பனவும் ஸ்வாதீனம் அற்றனவும் மிக வெளுத்தனவுமான அவயங்களை யுடையவள்’ என்கிறபடியே,
தோழிமார் பொகட்ட இடத்தே கிடக்குமித்தனை.
ஸ்வாதீனம் இல்லாமையாலே தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும்.

எழுந்து உலாய் மயங்கும்-
அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே
அடி அற்ற எழுச்சியும்
அடி அற்ற உலாவுகையுமாய் இரா நின்றது;
அது கிளர்ந்து எழுந்தவுடனே அவியுமாறு போலே மயங்கா நின்றாள்.

கை கூப்பும்-
உணர்த்தியில் தொழுமவள் அல்லள்;
மயங்கினால் தொழாதிருக்க வல்லள் அல்லள்;
சாதன புத்தியில் தொழுமது இல்லை;
ஆற்றாமையாலே வருமது தவிர மாட்டாள்.

கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்-
சாதன புத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடாதன்றோ?
பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே ப்ரேமம் – அன்பு- தண்ணிது என்கிறாள்.

கடல் வண்ணா கடியை காண் என்னும்-
‘கடல் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே,
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்ற நீ அருள் இல்லாதவன் ஆனாய்’ என்னும்.
அன்றிக்கே,
‘பிரிந்தார்க்குத் தரிக்க ஒண்ணாத படியான வடிவு படைத்த நீ காதுகனாய் -கொலைஞன்- ஆகா நின்றாய்’ என்னும் என்னுதல்.
(கடல் வண்ணா-ரக்ஷகத்வமும் வடிவு அழகும் சொன்ன படி )

வட்டம் வாய் நேமி வலங்கையா என்னும் –
‘சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லும் நிலையும் போயிற்று,
இப்போது கண்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தேயும், அவற்றினுடைய அமைப்பு, புத்தியிற்படிந்ததாய் இருக்கிறபடி.
பிடித்த இடம் எங்கும் வாயாக இருத்தலின், ‘வட்டவாய்’ என்கிறது.
இதனால், ‘விரோதியைப் போக்கப் பரிகரம் இன்றிக்கே இருக்கிறாய் அன்றே?’ என்கிறாள் என்றபடி.

வந்திடாய் என்று என்றே மயங்கும் –
ஒருகால் ‘வந்திடாய்’ என்றால் ஆறி இருக்க வல்லள் அல்லளே.
விடாய்த்தவன் தாகம் தீருநதனையும் ‘தண்ணீர்’ என்னும் இத்தனையன்றோ?
அப்படியே, ‘வந்திடாய், வந்திடாய்’ என்று உருவ அதனையே சொல்லும்;
மற்று ஒன்று அறியாள்.
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லுமத்தனை.
வெண்கலத்தின் ஒலி போலே சொல்லுக்குச் சொல் ஓய்ந்து வருகின்றதாதலின், ‘என்றென்றே’ என்கிறது.

சிட்டன்-திருமால். என்றது,
‘பிராட்டி விஷயத்தில் வியாமோகத்தை யுடையவன்’ என்றபடி.
ஸ்ரீக்கு இஷ்டன் திருமால் -இஷ்டப்பட வைக்கிறான் -வ்யாமோஹம் இருவருக்கும் –
அன்றிக்கே,
‘பிராட்டியைத் தன் பக்கலிலே பித்தாக்கித் துடிக்கப் பண்ணுமவன்’ என்னுதல்.

அன்றிக்கே,
உம்முடைய படி சால அழகிதாய் இருந்தது;
உம்மைப் போலே சிஷ்டர்கள் சிலர் அமைந்தார்களே அன்றோ அபலைகள் குடி கெடுக்கைக்கு?
அழகிதாகத் திருவருளையே மிகுதியாக வுடையவராய் இருந்தீர்’ என்னுதல். என்றது,
‘பிரஹ்ம ஹத்தியைகளைச் செய்து பூணூலை வெளுக்க விட்டுக் கையிலே பவித்திரத்தையுமிட்டு
ஓத்துச் சொல்லித் திரிவாரைப் போலே இருந்ததே உம்முடைய படி’ என்றபடி.

செழுநீர்த் திருவரங்கத்தாய் –
சிரமத்தைப் போக்கும் படியான நீரை யுடைய கோயில்.
தண்ணீர்ப் பந்தலிலே காதுகன் -கொலைஞர்- தங்கினதைப் போன்றதே யன்றோ நீர் இவ்வூரில் சாய்ந்ததும்?

இவள் திறத்து என் சிந்தித்தாயே –
முற்றறிவினனுக்கும், இவளுக்கு ஓடுகிற நிலைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணும் என்றிருக்கிறாள்;
திருத் தாயார் தெளிவு இருக்கிறபடி.

‘அவன் நினைவே காரியமாய்த் தலைக் கட்டுவது’ என்று அவனைக் காலைக் காட்டிக் கேட்கிறாள்.
‘கேசவன் அநுகூலர் விஷயத்தில் மேன்மையைச் சிந்திக்கிறான்,’ என்கிறபடியே,
அனுகூல விஷயத்தில் சிந்திப்பானும் அவனே அன்றோ?
இங்ஙனே மநோ ரதமாயே -சிந்தித்தலாயே போமித்தனையோ,
அறுதியிடல் முடிவாகக் கடவதன்றோ?
ஆகட்டும் பார்க்கலாம் -சிந்தித்தே பதில் -அது மட்டும் போதாது -இரண்டு அர்த்தங்கள் –

————————————————————————————

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் செய்யும் படி பவ்யனாய்-இவள் பிரதி க்ஷணம் அவஸ்தா பேதம் நடக்கும் படி அரத்தியாய் –
ரதியினால் ஆசையால் அலற்றும் படி சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்–அவஸ்தா பேதங்கள்
பூர்வ சம்ஸ்லேஷம் சிந்திக்கும் -அறிவு அழியா நிற்கும் -நினைத்தே பார்க்காமல் தெளிந்து
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-சன்னிஹிதன் ஆனாயே என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க-கை கூப்பும் -தலைக்கு மேலே சிரஸா நமஸ்காரம் சாஷ்டாங்க நமஸ்காரம்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;-வரக் காணாமையாலே
யுக்தி பல வியாப்தி ஆகாமையாலே மோஹிக்கும்
காமாதி விகாரங்கள் அனைத்தும் உண்டே இவளுக்கு -அஷ்டாக்ஷரீ -அஷ்ட அவஸ்தைகள் இதில் -இல்லாதது இல்லை
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!-அலைகடல் கடைந்த ஆர் அமுதே!-கால நியதியும் அன்றிக்கே பிரபல விரோதியும் இன்றியே
அரும் தொழில் செய்ய வேண்டாத படி
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த-உன்னை -உன் திருவடிகளில் சேர்வதே இவளுக்கு அபேக்ஷிதம் -சந்திப்பே அமையும் -சம்ஸ்லேஷம் அபேக்ஷிதம் –
சரணம் திருவடி சேர காத்து -முடிய காத்து இருக்கிறாள் –
தையலை மையல் செய்தானே-ஆந்திர அனுபவம் மாத்திரம் அன்றிக்கே
சிந்திப்பு மானஸ அனுபவம் -சந்திப்பு பாஹ்ய அனுபவம் –
வலித்த -உறுதியான முடிவு -சிக்கென –அனுபவிக்க -மதி கெடுத்தாயே -மையல்
அஷ்ட அவஸ்தைகள் காமினி படும் பாடு படுகிறாள்

அநந்தரம் ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் செய்யும்படியான பவ்யதையை யுடையையாய் இருக்க இவள்
பிரதி க்ஷணம் அவஸ்தா பேதம் பிறக்கும்படியான அரதியை யுடையாளாகா நின்றாள் என்கிறாள் –

அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!–ஸந்த்யை என்ற ஒரு கால விசேஷத்திலே அஸூ ரனான ஹிரண்யனுடைய சரீரத்தை பிளந்தவனாய்
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!–அலையை யுடைத்தான கடலைக் கடைந்து நிரதிசய போக்யனாய் வைத்து –
அப்படி கால நியதியும் இன்றியே பிரபல விரோதியும் இன்றியே யரும் தொழில் செய்வித்துத் கொள்ளவும் வேண்டாதபடி –
ஆந்திர அனுபவம் மாத்திரம் இன்றியே
சந்தித்துஉன் சரணம் சார்வதே வலித்த — பாஹ்யமான சம்ச்லேஷத்தைப் பண்ணி உன் திருவடிகளையே சேர்ந்து அனுபவிக்க வேணும்
என்கிற சிக்கெனவையை யுடையளாய் இருக்கிற
தையலை மையல் செய் தானே!–இப்பெண்பிள்ளையை மதி கெடுத்தவனே –
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்–இவள் பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தைச் சிந்தியா நிற்கும் –
அது அப்போதே சித்தியாமையாலே அறிவு அழியா நிற்கும் -அசங்கிதமாகத் தேறா நிற்கும் –
அவ்வளவில் வந்தாயாகக் கருதி கை கூப்பா நிற்கும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;-ஆசன்னமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே என்று கூப்பிடா நிற்கும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க–‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்அவ் வடிவு அழகை நினைத்துத் தலையால் வணங்கும் –
அவ்வளவிலும் வரக் காணாமையாலே அவ்விடம் தன்னிலே இருந்து குளிர்ந்த கண்ணீர் மல்கும்படி வந்து கொள்ளாய் என்று
பலகாலும் சொல்லி யுக்தி பல வியாப்தை யாகக் காணாமையாலே மோஹிக்கும்
காமாதுரைகள் விகாரத்தில் இவளுக்கு இல்லாதது இல்லை என்று கருத்து

‘அந்தி நேரத்தில் இரணியனது சரீரத்தைப் பிளந்தவனே! அலைகளையுடைய கடலைக் கடைந்த அரிய அமுதே! சேர்ந்து உனது திருவடிகளை
அடைவதற்கே உறுதிகொண்ட இந்தப் பெண்ணை மயங்கும்படி செய்தவனே! சிந்திப்பாள்; அறிவு கெடுவாள்; தெளிவாள்; கைகூப்பித் தொழுவாள்;
‘திருவரங்கத்தில் உள்ளவனே!; என்பாள்; தலையாலே வணங்குவாள்; அவ்விடத்திலேயே மழை போன்று தண்ணீர் பெருகும்படி
‘வந்திடாய்’ என்று என்று கூவிக் கொண்டே மயங்குவாள்,’ என்கிறாள்.

இவளுக்கு ஒவ்வொரு கணத்திலும் மாறபட்டு ஒன்றோடு ஒன்று சேராதே வருகிற நிலை வேறுபாடுகளை அறிவித்து,
‘இவளை இப்படிப் படுத்துதல் உம்முடைய நீர்மைக்குப் போருமோ?’ என்கிறாள்.

சிந்திக்கும் –
உம்முடைய அழகு முதலானவற்றையும் உம்முடைய கலவியையும் நினைக்கும்.
முன்பு இந்த நினைவும் இன்றிக்கே யாயிற்றிருந்தது;
மோகத்தைப் போன்று இதுவும் ஒரு வேறுபாடாய் இருக்கிறபடி.

திசைக்கும்-
அப்போதே காணப் பெறாமையாலே மோஹிக்கும்,
முன்பு மோஹம் சித்தம் இப்பொழுது சிந்திக்கும் –
திசைக்கும் -அறிவு கலங்கி மோகிக்கும் -மோஹம் சிந்தனை மோகம் மாறி மாறி -இருக்கும் –

தேறும் –
ஒரு காரணம் இன்றிக்கே இருக்கத் தெளிகின்றாள்.
இதுதானும் அச்சத்தைத் தருமதாய் இருக்கிறதாயிற்று; மோஹம் செல்லா நிற்க, விரும்பினதைப் பெற்றாரைப் போலே
தெளிதல் அச்சங்கொடுக்கும் அன்றோ? முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்கும் அஞ்ச வேணுமே?

உய்ந்த பிள்ளை பாடும் போது,
‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று சீயர் அருளிச் செய்வராம்.

கை கூப்பும்-
இது இவளுக்கு இயல்பு. மேலே ‘மயங்கும் கை கூப்பும்’ என்றது;
இங்கே ‘தேறும் கை கூப்பும்’ என்றது:
அல்லாதவை சஞ்சாரியாய் -திரிதலாய்ச் செல்லா நிற்க, இது-கை கூப்பும்- ஒன்றும் நிலையாய்ச் செல்லா நிற்கும்;
ஸ்வரூபத்தோடு சேர்ந்தது ஆகையாலே.
நித்ய அஞ்சலி புடா ‘எப்பொழுதும் கை கூப்பிக் கொண்டே இருப்பவர்கள்’ என்னக் கடவதன்றோ?

மோஹத்திலும் உணர்த்தியிலும் சத்தை உண்டே; -சத்தை -ஆத்மா இருக்கு -சேஷத்வம் உள்ளது அஞ்சலி உண்டே –
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்பதன்றோ நிலை நின்ற ஸ்வரூபம்?
தொடர்ந்திருப்பது ஆனதன்றோ உண்மையானது? –
அனுவர்த்தம் ஆவது அபரமார்த்தம் -நித்யம் -ஆத்ம தாஸ்யம் ஹ்ரீம் ஸ்வாம்யம் நித்யம் –

திருவரங்கத்துள்ளாய் என்னும்-
‘பெருமாளே என்னும்’ என்று சீயர் பணிப்பர்.
அவ்வூரில் சம்பந்தம் கொண்டு போலே காணும் அவரையும் விரும்பிற்று.

வந்திக்கும் –
‘திருவரங்கத்துள்ளாய்’ என்றது, நெஞ்சிலே வடிம்பிட்டு, ‘
ஒரு முகமே, ஒரு முறுவலே, ஒரு வளையமே’ என்று துதிக்கின்றாள் என்னுதல்;
அன்றிக்கே,
அபிமானம் நீங்கினவளாய்த் திருவடிகளிலே விழுந்து கிடக்கும்’என்னுதல்.

ஆங்கே-
அந்த நிலையிலேயே

மழைக்கண் நீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும் –
குளிர்ந்த கண்ணீர் மல்க, வந்திடாய் என்று சொல்லி, அச் சொல்லோடே அறிவு கெடும்.

‘நினைத்த போதாக வரப் போமோ?’ என்ன,
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –
அவன் வரத்துக்கு மாறுபட்டதாய் இருப்பது ஒரு காலத்திலே, அசுரத் தன்மை வாய்ந்த இரணியனுடைய
சரீரத்தைப் பிளந்து பொகட்டிலையோ?
‘எல்லாப் பொருள்களும் என்னிடமிருந்தே உண்டாயின; எல்லாப் பொருள்களும் நானே’ என்று தெளிந்திருப்பார்க்கோ உதவலாவது?
மத்த: ஸர்வம் அஹம் ஸர்வம்’ என்பது,-விஷ்ணு புரா. 1. 19:85.அறிவு கெடுவார்க்கு உதவலாகாதோ?
தமப்பன் பகையானாலோ உதவலாவது? நீர் பகையானால் உதவலாகாதோ?
இவ்வளவில் உதவாமைக்கு மேற்படப் பகை இல்லை அன்றோ?
அது ஒரு கால் சிறுக்கனுக்கு உதவின்மை உண்டு; அது தப்பியதே அன்றோ?’ என்ன, பின்போ நீ உதவாதது?

அலை கடல் கடைந்த –
வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்றவர்களுக்கும் அகப்படக் கடலைக் கடைந்து கொடுத்திலையோ?
உன்னைக் கொண்டு ஒரு பிரயோஜனம் கொள்வார்க்கோ உதவலாவது?
உன்னையே ‘பிரயோஜனம்’ என்றிருப்பார்க்கு உதவலாகாதோ?

ஆர் அமுதே ‑
இவருடைய அமுதத்தைக் கொண்டாயிற்று அவர்கள் கடல் கடைந்து.

சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே –
‘உன்னைக் கிட்டித் திருவடிகளைச் சார வேணும் என்று அறுதி யிட்டவளாயிருக்கிற இவளை இப்படி அறிவு கெடுப்பதே!
அன்றிக்கே,
உன்னைக் கிட்டிச் சந்நிதியிலே முடியுமித்தனை என்று உயிரைத் தரித்திருக்கிறவளை இப்படி அறிவு கெடுப்பதே!’ என்னுதல்.

‘என்னை அழைத்துக் கொண்டு போவதற்குறிய முயற்சியை எத்துணைக் காலத்திற்குள் கேட்பேனோ
அத்துணைக் காலம் வரை பிழைத்திருப்பேன்’ என்று காணும் இருக்கிறது.
‘உம்மை ஆசைப் பட்டவளுக்கும் மயக்கமேயோ பலித்து விட்டது?’ என்பாள், ‘மையல் செய்தானே’ என்கிறாள்.

‘தாவத் த்யஹம் தூத ஜிஜீ விஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய’-என்பது, ஸ்ரீராமா. சுந். 36:30.

‘திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர்நீர்க்
கங்கை யாற்றங் கரை அடி யேற்குந்தன்
செங்கை யாற் கடன் செய்கென்று செப்புவாய்.’-என்பது கம்பராமாயணம்.

தையலை மையல் செய்தானே –
இவள் திறத்து அருளாய் என்ற அடுத்த பாசுரத்துடன் அந்வயம்

——————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -144- திருவாய்மொழி – -7-1-6….7-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 25, 2016

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-

அநிஷ்டமே கண்ணில் படாமல் -ஆண்டாள் -பாடி அருளுகிறாள் -உன்னை ஆர்த்தித்து வந்தோம் -வருத்தமும் தீர்ந்து –
விஞ்சி நிற்கும் தன்மை -ஜென்ம சித்த ஸ்த்ரீத்வம் உண்டே
மணி வல்லிப் பேச்சு வந்தேறி என்று காட்ட வேண்டும் படி அன்றோ மற்றவர்களுக்கு
சர்வ பிரகாரத்தாலும் ரக்ஷகன் -அருகில் நின்றால் இவை பயந்து ஓடும் -அளவுடையாரையும் நலியும்
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை-சர்வாதிகன் -பரம பதத்தில் கைங்கர்யம் செய்யும்
வைனதேயாதிகள் நலியும் -அங்கே வேற்று நிலம்
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?-இங்கே –தங்கள் நிலம் இவற்றுக்கு – என்னை
யானை நிலம் தன்னிலம் -முதலை நீர் தன்னிலம் -நித்ய ஸூரிகள் போலே பலவானும் இல்லை நான் -மேலே மூன்றாவது நீயும் கை விட்டால் –
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்-ஈடுபட்டுக் கூப்பிடும் என்னுடைய
ஆர்த்த ஸ்வரம் இங்கே பண் -சொல்லிலும் உள்ளாய் -சப்த சந்தர்ப்பம் -பெண்ணுக்கு ஆஸ்ரயமான சொல் -பிரதி பாத்யனாய்
அதுக்கு மேலே பிராவண்யம் விஷய புதன் -பக்தி -முதலில் சொல்லாமல் தலை கீழே —
பாவின் இன்னிசை குருகூர் நம்பி பா -கவி -இன்னிசை வரிசையாக அங்கே –
இசையில் உலகம் முதலில் ஈடுபட்டு -அதுக்கு மேலே கவி பின்பு தானே ஆழ்வார் பக்தி –
இவற்றை உனக்கு விதேயமாக வைத்த பின்பு -நியாமனான பின்பு இந்த்ரியங்களைக் கண்டு -என்னை நலியாவோ
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே-கண் நெஞ்சு வாக் இந்த்ரியங்களுக்குள் சந்நிஹிதன்
வந்து தளர்த்தி நீங்க வந்து சொல்ல வில்லையே -பிரார்த்தனை இல்லை -கூவுகிறார்
விட்ட படியை உபபாதிக்கிறார் -கை விட்ட படியை -மற்று நீ விட்டால் -என்றாரே
அராஜகம் உள்ள நாட்டில் குறும்பரை போலே அழித்து விடும் -இவை –

பண்ணில் இருக்கிறவனே! கவியில் இருக்கிறவனே! பக்தியில் இருக்கிறவனே! மேலான ஈசனே! எனது கண்ணில் இருக்கிறவனே!
நெஞ்சில் இருக்கிறவனே! சொல்லில் இருக்கிறவனே! நித்திய ஸூரிகளுக்குப் பெருமானான சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்கின்ற
வைந்தேயன் முதலாயினோரையும் இந்த உலகத்திலே வருத்துகின்ற ஐம்புலன்களாகின்ற இவை என்னைப் பெற்றால் என்ன காரியத்தைச் செய்யாமாட்டா?
அதற்குமேல் நீரும் கைவிட்டால் அவை என்ன செய்யமாட்டா? ஆதலால், என் தளர்த்தி தீரும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.

‘செய்வாரையும்’ என்பதிலுள்ள உம்மை, உயர்வு சிறப்பு. ‘செய்வாரையும் மண்ணுள் செறும் ஐம்புலன்’ என்க.
அன்றிக்கே, ‘செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா?’ என
ஆற்றொழுக்காக்கொண்டு பொருள் கூறலுமாம். ‘வந்து ஒன்று சொல்லாய்’ என்று கூட்டுக.

‘அறிவிற் சிறந்தாரையும் வருத்துகின்ற ஐம்பொறிகள், நீயும் கைவிட்டால் பலமற்றவனான என்னை என்படுத்தா?’ என்கிறார்.

விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்-
அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அடிமை செய்வாரையும் செறும். என்றது,
‘அயர்வறும் அமரர்கள் அதிபதியாயிருக்கிற சர்வேஸ்வரனுக்குச் சம்சாரத்திலே முமுக்ஷூக்களாய்க் கைங்கரியத்திலே மூழ்கி
இருக்கக் கடவரானவர்களையும் செறும்’ என்றபடி.

‘ஒரு விசுவாமித்திரன் சுக்கிரீவன் முதலாயினோர்களைக் கண்டோம் அன்றோ? என்றது,
ஞானத்தால் மேம்பட்டவனான விசுவாமித்திரன் அகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே கிடந்தான் அன்றோ?
பெருமாளுக்குப் பரிவரன மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக நான்கு மாதங்கள்
விட்டுவைத்து இந்திரியங்களுக்குப் பரவசப்பட்டவராய் அல்வழி என்று நினைத்திலர் அன்றோ? இவற்றைத் தெரிவித்தபடி.

அன்றிக்கே,
‘விண்ணுளாராய்ப் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்’ என்னுதல்.
ஒக்கப் பிறந்து இளைய பெருமாளைப் போலே அடிமை செய்து திரிவார் உளர் அன்றோ?
கோபத்துடன் ஸூக்ரீவன் காலம் தாழ்த்த வந்தவற்றை இங்கே சொல்ல வில்லை –
பெரிய திருவடியையும் அகப்பட ‘எனக்கு’ என்னப் பண்ணிற்றே அன்றோ? என்றது, இச்சரிதப் பகுதியை.
‘நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
வெருவி வந்துநின் சரணெனச் சரணா
நெஞ்சில் கொண்டுநின் அஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள் செய்த தறிந்தும்’-என்னும் திருப்பாச்சுரத்தால் உணர்தல் தகும். பெரிய திருமொழி, 5. 8:4.

சுமுகன் என்கிற பாம்பு திருவடிகளிலே சென்று கிட்ட, பெரிய திருவடி ஓடிச் சென்று,
‘எனக்கு உணவாக இருக்கிற இதனைக் கைக்கொண்டு நோக்குவதே!’ என்று வெறுத்து,
‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் தாங்கிக் கொண்டு திரிந்தேன்: நான் ஏன் பெற்றேன்?’ என்றதனைத் தெரிவித்தபடி.
இதுவன்றோ சம்சாரத்தின் தன்மை இருக்கிறபடி?
அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று இவர்களும்.

மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா-
இவர்தாம் விண்ணுளாரில் ஒருவரே அன்றோ?
இவற்றுக்குத் தந்நிலமாவது, நான் இவை இருந்த இடம் தேடிச் சென்று கழுத்திலே கயிறு இட்டுக் கொடு நிற்கவல்லேன் ஒருவனாவது;
இங்ஙனே இருக்கிற என்னைப் பெற்றால் இவை என் செய்யா?

மற்று நீயும் விட்டால்.
விழுந்து தரிக்கும் பூமியான நீயும் விட்டால் -காகாசுரன் -ரக்ஷித்தாயே –
இரட்சகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாற்போலே நானும் இந்திரியங்களை வெல்லேனோ?’
நாமி பலம் அங்கு நாம பலம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்கு –
‘அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத
காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ? என்றது,
‘தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்’-என்பது, ஸ்ரீகீதை, 6:34.
‘காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’ என்றபடி.

அன்றிக்கே,
‘இந்திரியங்களை அடக்குதல் அரிது’ என்று சொல்லுகிறாயாகில் நம் பக்கலிலே மனத்தினை வை’ என்று
அருளிச் செய்த நீயும் விட்டால்’ என்னலுமாம். –
மத் பர -என்று அர்ஜுனனுக்கு சொல்லி அருளினாய் –
‘நான் விட்டிலேனே! உம்மைக் கைவிடுகையாவது என்?’ என்றான்.
‘ஆகில்,நீ அண்மையில் இல்லாமையினாலேயோ,
உனக்குச் சக்தி இல்லாமையினாலேயோ நான் இழக்கிறது?’ என்கிறாய் மேல்.

பண்ணுளாய் –
என் துன்ப ஒலியைக் கேளாதிருக்கிறாய் அல்லையே.

கவி தன்னுளாய்-
என்னுடைய ஆர்த்தியை உட்கொண்ட சொற்களைக் கேளாதிருக்கிறாய் அல்லையே?

பத்தியினுள்ளாய்
இப்படிச் சொல்லுவிக்கிற ஆற்றாமையை அறியாதிருக்கிறாய் அல்லையே?

பரம் ஈசனே-
உனக்கு முடியாதது ஒன்று உண்டாக அதனைச் செய்யாமாட்டாது இருக்கிறாய் அல்லையே?
உன் சேஷித்துவம் ஏறிப் பாயாத இடம் உண்டோ?

‘இது கிடக்கிடு; நீதான் முன்பே செய்யாதது ஒன்று உண்டோ?’ என்கிறார்.
‘போன படைத்தலை வீரர்த மக்கிரை போதாவிச்
சேனை கிடக்கிடு தேவர் வரிற்சிலை மாமேகம்’-என்பர் கம்பநாட்டாழ்வார் (குகப்படலம்.20)

‘ஆனால், இனிச் செய்ய வேண்டுவது இல்லையே’ என்றான்;
‘நானும் செய்த காரியத்தில் குறை உண்டு என்கிறேன் அல்லேன்;
நீ செய்யாத காரியத்தை அன்றோ சொல்லுகிறது’ என்கிறார்:

என் கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்-
புறங்கரணகட்கும் அகக்கரணத்துக்கும் உன்னை ஒழிய விஷயம் உண்டோ?
நெடியானே என்று கிடப்பது,
உன்னை மெய் கொள்ளக் காண விரும்புவது,
வஞ்சனே என்பதாயன்றோ அவை இருக்கின்றன?

‘‘கவி தன்னுளாய்’ என்று பாசுரத்தைச் சொல்லிற்று;
‘சொல்லுளாய்’ என்று வாக்கு இந்திரியத்தைச் சொல்லுகிறது.

பரமீசன்-சக்தன் -பரமமான சேஷித்வம் -உன் சேஷித்துவம் ஏறிட்டு -முடியானே காண விரும்பும் என் கண்கள்
சந்நிஹிதன் -கண் உளாய்-செய்த அம்சங்கள்

வந்து ஒன்று சொல்லாயே -செய்யாத அம்சம்
‘ஆனால், நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன.

வந்து ஒன்று சொல்லாயே-
எனக்காக நாலடி நடந்து வந்து, ‘நீ அஞ்சாதே கொள்’ என்று, என்னை,
மாஸூச:- துக்கப்படாதே என்ன வேணும்.

அன்றிக்கே,
‘உன் இருப்பில் எனக்கு ஐயம் உண்டோ?
என் கண் காண வந்து ஒன்று சொல்லுகை அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறார் என்னுதல்.

——————————————————————————————-

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-

ஆஸ்ரிதற்கு அரும் தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டி -கிருபை -அடியேன் இடம் இல்லையாகில்
பிரபலமான இந்திரியங்கள் எப்படி வெல்லுவேன்
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்-நித்யத்வ ஸ்ரத்தையாலே உன்னை சரணம் புகுந்த அன்று
வாசுகி பாம்பை -மந்த்ரபர்வம் -தன்னிகர் அற்ற -உபகாரத்வம் காட்டி அருளி
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ–
பெரும் உபகாரத்வம் காட்டி எனக்கு ஸ்வாமி யானவனே தேவர்கள் உப்புச் சாறு -அடியேன் உன்னையே அமுதமாக கொள்வேன்
இந்த நிர்பந்தத்தால் தானே இந்த பாடு படுகிறேன்
அந்த அம்ருதத்தில் பர்யவாசியாதே –நித்ய போக்யமாக இருக்கும் -கிருபை இல்லா விடில்
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை-ஒவ் ஒன்றும் ஒன்றினில் நில்லாமல் -ஓர் அனுபவம் பெற்று
திருப்தி அடையாமல் -சேராச் சேர்த்தியாய் தனித்த தனியே ஸ்வ தந்திரமாக -பரத நாட்டியம் கண்ணுக்கு செவிக்கு மனசுக்கு
வேலை உண்டே அதனால் ஆள் குறைவு -சொல்லார் தமிழ் மூன்றும் இயல் இசை நாட்டியம் அனுபவம் முத்திரை –
பொழுது போக்கும் அருளிச் செயலில் நம் பிள்ளை போல்வார் கான ரூபம் சொல் அர்த்தம் -நினைத்து உருகி –
பிரபல -பழகியும் முகம் அறியாத கயவர் –
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?-ஸ்வயம் அசக்தன் என்று -முன்பு மாட்டாதவோபாதி- வெல்ல முடியாதே

அக்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பின் வாங்க, அலைகளையுடைய கடலிலே வாசுகி என்னும் பாம்பினைச் சுற்றி ஒப்பற்ற மந்தரம் என்னும்
மலையை வைத்த எந்தையே! கொடியேனாகிய அடியேன் பருகுவதற்குரிய அமுதாய் இருப்பவனே! ஒரு விஷயத்தைச் சொல்லி அந்த
ஒருமைப்பாட்டிலேயே நில்லாத ஒப்பற்ற ஐம்பொறிகளாகிய வலிய கயவர்களை, உன் திருவருள் இல்லையேல் என்றைக்கு யான் வெல்வேன்?
‘அளாவி வைத்த எந்தாய்’ என்க. ஒருத்து-ஒருமைப்பாடு. கயவர்-கீழ்மக்கள்.

‘நீ பாராமுகம் செய்தால், மிகுந்த கயமையையுடைய இந்திரியங்களை என்னாலே வெல்ல உபாயம் உண்டோ?’ என்கிறார்.

ஒன்று சொல்லி-
‘இராமன் இரண்டு பேசமாட்டான்,’ என்பாரைப் பற்றிப் பயம் கெட்டு இருக்கிறேனோ?
‘ராமோ த்வி: நாபிபாஷதே’ என்பது, ஸ்ரீராமா. அயோத். 18:30.
அங்ஙனேயாகில், ‘இது எனக்கு விரதம்’ என்றதும் தப்பாதே அன்றோ?
‘ஏதத் விரதம் மம’ என்பது, ஸ்ரீராமா. யுத். 18:33.

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத-
ஒரு வார்த்தையைச் சொல்லி அதற்கு ஈடாக ஓர் அர்த்தத்திலே நிற்கக் கடவதல்லாத. என்றது,
அன்றிக்கே,
‘ஒரு விஷயத்தைச் சொல்லி, அது அனுபவிக்குந்தனையும் ஓர் இடத்திலே நில்லாத’ என்றபடி.

ஒருத்து –
ஒருமைப்பாடு.

ஓர் ஐவர்-
இப்படி இருப்பார் பலர்.

வன் கயவரை-
பழகப்பழக அன்பு இல்லாதவர்களாய் இருப்பவர்களை.

என்று யான் வெல்கிற்பன்-
என்று-‘இன்று இல்லையாகில் நாளை வெல்லுகிறான்,-என்றிருக்கிறாயோ?
யான்-தானே வென்று வருகின்றான்,’ என்றிருக்கிறாயோ?

உன் திருவருள் இல்லையேல்-
அவன் திருவருள் உண்டாகில் வெல்லுதலுமாம் அன்றோ?
‘அருள் என்னும் ஒள்வாள் உருவி எறிந்தேன் ஐம்புலன்கள்’பெரிய திருமொழி, 6. 2:4.- என்னக் கடவதன்றோ?
உன்னை அண்டைகொள்ளாதே பாண்டவர்கள் துரியோதனனை வெல்லுமன்றன்றோ, நான் இந்திரியங்களை வெல்லுவது?
கிருஷ்ணனை அடைந்து அருச்சுனன் பகைவர்களை வென்றான் அன்றோ?
‘க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ண நாதாஸ்ச பாண்டவா;’–என்பது, பாரதம், ஆரண். பர். 18. 3:24.
‘பாண்டவர்கள் கிருஷ்ணனை அடைந்தவர்கள்;கிருஷ்ணனையே பலமாகக் கொண்டவர்கள்;
கிருஷ்ணனையே நாதனாகவுமுடையவர்கள்,’ என்கிறபடியே.

அன்று தேவர் அசுரர் வாங்க-
‘நம் அருள் பெற்று வென்றார் உளரோ?’ என்ன,
துர்வாச முனிவருடைய சாபத்தின் அன்று உன் திருவருளைப் பெற்றன்றோ தேவர்கள் கடலைக் கடைந்தது?
தேவர்களும் அசுரர்களும் கைவாங்கக் கடைந்தான் என்னுதல்.-
கை வாங்க –
ஒருவருக்கு ஒருவர் உதவியாக -ஓய்ந்து இவனே கடைய என்றுமாம் –
அன்றிக்கே,
வாங்குதல்-வலித்தலாய்,
அவர்கள் தங்களுக்கே கடையலாம்படி செய்து கொடுத்தான் என்னுதல்.

அலைகடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்-
பெரிய அலையையுடையத்தான கடலிலே, ஒரு சித்துப் பொருளான வாசுகியைக் கயிறாகக் கொண்டு,
சலிப்பிக்க ஒண்ணாதது ஒரு மலையை மத்தாக் கொண்டு,
அதனை வாசுகியை இட்டுச் சுற்றி வைத்த நொய்ப்பம் எல்லார்க்கும் கடையலாம் இருக்கை:
நமக்கும் கடையப் போம்படியாயிருக்கை. தாமும் ஒரு பிரயோஜனம் பெறப் பார்க்கிறராகையாலே
அது தம் பேறாய் இருக்கிறபடியைத் தெரிவிக்கிறார், ‘எந்தாய்’ என்று.

கொடியேன் பருகு இன்னமுதே-
கடைந்தனையே ஆசைப்படப் பெற்றிலேன்.
அன்றிக்கே,
நீ செய்தது கொண்டு திருப்தனாக வேண்டி இருக்க, ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்று
உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னுதலுமாம்.

நீ உபேஷித்தால் அதி பலமான இந்த்ரியங்களை என்னால் வெல்ல முடியுமோ என்கிறார் –

————————————————————————————————

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-

விஷய இந்திரியங்களை வென்று -அசாதாரண சின்னங்களை அனுபவிக்கும் படி -கிருபை பண்ண வேண்டும் –
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த-அத்விதீயமான -மோஹிப்பிக்க நீ செய்து
விஷம் அமுதம் போலே -பித்தளை ஹாடாகம் பித்தலாட்டம் -சர்வ சக்தன் நீ
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்-மாயா சப்த வாஸ்யம் சப்தாதிகள் ஸ்பர்ச ரூப கந்தம் –
அஜ்ஞ்ஞானம் கிளப்பி விடும் -வேர் உடன் கல்லி எரிந்து சம்சார பீதனான என்னை –
எண்ணிக்கையிலும் மாயம் முழுமையான மாயம் -பிரகிருதி என்றுமாம் -பிரகிருதி கார்யம் தானே சப்த ஸ்பர்ச ரூப கந்தம்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு-நெஞ்சால் நினைத்து வாக்காலே ஸ்துதித்து கையாலே தொழும் படி
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே-அம்மே ஆகாரம் சேர்ந்தே அம்மா -நிருபாதிக ஸ்வாமி -அந்த சம்பந்தம் அடியாக
ஸுலப்யம் பிரகாசிப்பித்து கண்ணா -நித்ய ஸூரிகள் சங்கத்துக்கு சத்தாதி ஹேது பூதன் -பகவத் நித்ய சங்கல்பத்தால் நித்யர்கள் –

என் அம்மா! என் கண்ணா! நித்தியசூரிகள் கூட்டத்துக்கு முதல்வா! ஒப்பற்ற ஐவராலே இனிய அமுதத்தைப் போன்று தோன்ற, அதனாலே
யாவரையும் மயக்க நீ வைத்த அநாதியான எல்லா மாயத்தையும் அடியோடு வேரை அரிந்து, நான் உன்னடைய சின்னங்களையும் அழகிய
மூர்த்தியையும் சிந்தித்து ஏத்திக் கையால் தொழும்படியாகவே எனக்குத் திருவருள் செய்யவேண்டும்.
‘தோன்றி மயக்க நீ வைத்த மாயம்’ என்க. தோன்றி-தோன்ற. ‘அரிந்து சிந்தித்து ஏத்திக் கைதொழ எனக்கு அருள்’ என்க.
இனி, அரிந்து-அரிய என்னலுமாம். ‘சிந்தித்து ஏத்திக் கைதொழ’ என்ற இடத்தில் முக்கரணங்களில் செயல் கூறப்பட்டது.

‘எனது பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து, நான் மனம் வாக்குக் காயம் இவற்றாலே உன்னை
எப்பொழுதும் அனுபவிக்கும்படி செய்தருள வேணும்’ என்கிறார்.

இன் அமுது எனத்தோன்றி-
முடிவில் பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கைவிடலாங்காண்.
‘விஷயேந்திரிய ஸம்யோகாத் யத்தத் அக்ரே அம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸூகம் ராஜஸம் ஸ்ம்ருதம்’-என்பது, ஸ்ரீகீதை, 18:38.
‘பொறிகள், புலன்களோடு பொருந்தி யுண்ணும் இன்பமானது தொடக்கித்தில் அமிர்தம் போலாம்;
பரிணாம நிலையில் விஷத்தைப் போலாம் என்பது ‘இராஜச சுகம் என்று சொல்லப்படும்,’ என்கிறபடியே,
பரிணாமத்தில் விஷமேயன்றோ?
முடிவில் உண்டாமது முதலிலே தோன்றிற்றாகில் மேல் விழாது ஒழியலாயிற்று.
பழியும் தருமத்திற்குக் கேடுமாய், மேல் நரகமானாலுப் விடப்போகாதிருத்தலின், இன்னமுது’ என்கிறது.
சரீரத்துக்கும் சரீரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களுக்கும் இங்ஙனே ஒரு தன்மை உண்டு;
திருதராஷ்டிரனோடு ஒக்கும். ‘எங்ஙனே?’ என்னில், அகவாயில் தரும ருசி இன்றிக்கே இருக்கச் செய்தே,
வாயாலே அனுகூலம் போலே இருக்குமவற்றைச் சொல்லாநிற்பான் அவனும்.

ஓர் ஐவர்-
தனித்தனியே பிரபலமாய் ஒப்பற்றவையாய் இருக்கிற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்கள் ஐந்தும்.

யாவரையும் மயக்க-
அற்பரான மனிதர்களோடு, அளவுடையரான பிரமன் முதலான தேவர்களோடு வாசி அற அறிவு கெடுக்கும்படிக்கு ஈடாக.

நீ வைத்த-
சர்வசத்தியான நீ வைத்த.
தன்னாலே படைக்கப்பட்டது என்று அறியாமல், ‘அதிலே ஓர் இனிமை உண்டு’ என்று
விருப்பத்தைச் செய்கிறான் அன்றோ பிரமனும்?
சரஸ்வதி -பெண்ணாக இருக்கச் செய்தே—தானே தான் ஸ்ருஷ்ட்டித்தான் -விரும்பினான் சதுர்முகன் –

முன்னம் மாயம் எல்லாம்-
அநாதியான சம்சாரத்தை எல்லாம்.

முழு வேர் அரிந்து-
வாசனையோடே போக்கி. என்னை-சம்சார பயத்தாலே பயந்திருக்கின்ற என்னை.
செய்த அமிசத்தே திருப்தனாய் இருக்குமன்றோ அவன்?
‘ஞானலாபம் பண்ணிக் கொடுத்தோம்,’ என்றே அன்றோ அவன் இருக்கிறது?
அது போராதே அன்றோ? சம்சாரத்தை வாசனையோடே போக்க வேண்டி இருக்குமன்றோ இவர்க்கு?

உன் சின்னமும் திருமூர்த்தியும்-
‘தவள ஒண்சங்கு சக்கரம் என்றும்,
‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்’ என்றும்,
‘அரவிந்தலோசனன்’ என்றும் சொல்லுகிறபடியே,
திவ்விய ஆயுதங்களையும் அவற்றுக்கு ஒப்பாயிருக்கிற திருமேனியையும்.

சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு-
இவற்றை நெஞ்சாலே நினைத்து’ உள்ளடங்காமல் வாய் விட்டுத் துதி செய்து,
பின்னைத் திருவடிகளில் விழுகைக்குத் தகுதியாக எனக்கு அருளவேணும். என்றது,
‘வாயாலே ஒன்று சொல்லா நிற்க, நெஞ்சு வேறே ஒன்று நினைத்தல்;
‘உனக்கு அடிமை’ என்று வேறே ஓர் இடத்தில் தொழில் செய்தல் செய்கை அன்றிக்கே.
மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் உன் பக்கல் ஈடுபடும்படி செய்தருள வேணும்’ என்றபடி.
தொழவே -ஏகாரத்துக்கு-முக்கரணங்கள் ஒற்றுமையாக -என்றபடி –

என் அம்மா-
எனக்குத் தாய் போல் பரிவன் ஆனவனே!
அழைக்கும் பெயராகையாலும்
சேதநனைச் சொல்லுகையாலும்
‘அம்மே’ என்பது ஆகாரம் ஏற்று விளியாய் ‘அம்மா’ என்று கிடக்கிறது.

என் கண்ணா-
அந்தப் பரிவை அநுஷ்டான பரியந்தமாக்கினவனே!

இமையோர்தம் குலமுதலே-
ஒரு நாட்டுக்காக உன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்குமவனல்லையோ?
பலருடைய ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்காலாகாதோ? –
அஸ்மாத் துல்யோ பவது -சுக்ரீவன்

என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குல முதலே-
எனக்குச் சுவாமியாய், ‘சொத்தை நசிக்கக் கொடுக்க ஒண்ணாது’ என்று கிருஷ்ணனாய் வந்து அவதரித்து என்னை நோக்கினவனே!
அவதாரம் எல்லார்க்கும் பொதுவாக இருக்கச் செய்தே, அவர் தமக்காகச் செய்தது என்று இருப்பரே?
மனம் வாக்குக் காயம் என்னும் இம்மூன்றும் ஒருங்கி உன் பக்கலிலே பிரவணமாம்படி
ஒரு நாட்டுக்குச் செய்து கொடுத்த நீ, அதனை என் ஒருவனுக்கும் செய்யத் தட்டு என்?

————————————————————————————-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

சகல ஜகத் உத்பாதகன் -எனக்கு பவ்யனாய் போக்யனாய் -விஷயங்களில் தள்ளும் இந்திரியங்களை வேர் உடன் சாய்த்து அருள வேணும்
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை-மூல புருஷன் உடன் அழிக்கும்-வம்சத்தை அதிபதிக்கும் படி
பாபம் தூண்டும் இந்திரியங்கள் -வலிய கரை என்ற ஒண்ணாத பல குழி
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்-பிரசாத பலம் -தந்து அருளி -அனுகிரக ரூப பலம் -வலம் பிரபலம்
லக்ஷணையால் பிரசாதம் -ஆனுகூல்யம் பிரசாதம் என்றுமாம்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்-பிரதமத்தில் ஸ்தாவர ஜங்கமங்கள் உடன் படைத்து
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!-கண்ணன் -ஸுலப்யம் எனக்கு பிரகாசிப்பித்து -அனுபாவ்யன் -நிரதிசய தேஜஸ்

பூமி முதலாக மற்றும் எல்லா உலகங்கட்கும் தாவரம் ஜங்கமம் என்று சொல்லப்படுகின்ற பல பொருள்களையும் ஆதியில் படைத்தவனே!
என் கண்ணனே! என் பரஞ்சுடரே! குலத்தை அடியோடு கெடுக்கின்ற தீவினைகளாகிய கொடிய வலிய குழியிலே தள்ளுகின்ற
ஐந்து இந்திரியங்களினுடைய வலிமையை அடியோடு அழிப்பதற்குத் தக்க சிறப்பை எனக்குக் கொடுத்தருள்வாய்.
நிற்பன – சஞ்சரிக்காத பொருள்கள்; மரம் முதலியன. செல்வன -சஞ்சரிக்கின்ற பொருள். ‘ஐவரைக் கெடுக்கும் வரம்’ என்க. வரம் – பலமுமாம்.

‘விஷங்களிலே ஆத்துமாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாதபடி செய்யவேணும்,’ என்கிறார்.

குலம் முதல் அடும் தீவினைக் கொடுவன் குழியினில் வீழ்க்கும் ஐவரை-
ஒருவன் செய்த பாவம் அவன்றன்னளவிலே போகை அன்றிக்கே, குலமாக முதலற முடிக்கவற்றான பாவங்களை
விளைக்கக் கடவனவாய், கொடியனவாய்,அனுபவித்து முடிய ஒண்ணாதபடியாய், வலியனவாந்,
கால்வாங்க ஒண்ணாதபடியான ஐம்புலன்களாகிற குழிகளிலே தள்ளுகின்றனவான இந்திரியங்களை.
‘செய்யக்கூடியன அல்லாதனவாய், சொல்லுகிற பலத்தின் அளவல்லாத அபாயங்களையுடையனவாய், குலத்தை முதலற
முடிக்கக் கூடியனவான செயல்களிலே, உன் போல்வராயுள்ள அறிஞர்கள்
செல்லார்கள் காண்!’ என்றான் அன்றோ மால்யவான், இராவணனுக்கு?
‘நஹி தர்மவிருத்தேஷூ பஹ்வபாயேஷூ கர்மஸூ
மூலகா திஷூ ஸஜ்ஜந்தே புத்திமந்தோ பவத்விதா:’–என்பது, ஸ்ரீராமா. யுத்.

வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்-
இவற்றினுடைய வலிமையை முதலிலே வாராதபடி முடிக்கக் கூடியதான உன்னுடைய திருவருளைச் செய்தருள வேணும்.
‘நம்மாலே தனியே இங்ஙனே செய்யலாயிருக்குமோ?’ என்ன,
நிலம் முதல் எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள் பல முதல் படைத்தாய்-
‘நீ, உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்கிற போது உனக்கு ஆர் துணைப்படச் செய்தாய்?’ என்கிறார்.
அன்றிக்கே,
‘படைத்தலுக்குப் பயன் மோக்ஷம் அன்றோ? அது பெற வேண்டாவோ?’ என்னலுமாம்.
பூமி முதலாக மற்றும் இப்படி உண்டான எல்லா உலகங்களிலும் தாவர ஜங்கமங்களாகிற பல பொருள்களையும் முன்பே உண்டாக்கினாய்.

என் கண்ணா என் பரஞ்சுடரே-
அப்படிப் பொதுவான காத்தல் ஒழிய, கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு பவ்யனாய், வடிவழகினை எனக்கு உபகரித்தவனே!
ஒரு நாடாக அனுபவிக்கும் வடிவழகினை என்னை ஒருவனையும் அனுபவித்தவனே!
அழிந்த உலகத்தை உண்டாக்கின உனக்கு, உள்ளதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?

நில முதல் –
குல முதல் அழிக்கும் இந்த்ரியங்கள் ஒருவன் பண்ணின பாபம் குலம் குலமாக முடிக்கும் கொடியது அனுபவித்து முடிக்க ஒண்ணாது

வலிய குழியாய் –
சப்தாதி விஷயங்கள் -இந்த்ரியங்களை
மால்யவான் உபதேசம் செய்கிறான் ராவணனுக்கு
புத்திமான் இறங்க மாட்டார்கள் -செய்யக்கடவது அல்லாத தர்ம வ்ருத்தம்
ஹனுமான் வார்த்தையாக ஸ்ரீ ராமாயணத்தில் இருக்கிறது காஞ்சி ஸ்வாமிகள்-ஓலைசுவடியில் தப்பாக பிசகி இருக்கலாம்
இவற்றின் பலத்தை முடிக்க கடவதான உனது பிரசாதம் அருள வேணும் –
எம்பெருமான் -ஜகத் சிருஷ்டி செய்ய யார் துணை கொண்டு செய்து அருளினாய்
பொருள் பல முதல் படைத்தாய் சிருஷ்டி பிரயோஜனம் மோஷம் சோம்பாது படைக்கும் வித்தா

————————————————————————-

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–

சாரமான அமிர்தம் -கொடுத்தாய் -அத்தை விட நிரதிசய சாரம் நீ -சார தமம் -இருக்க -சும்மாடு போன்ற சரீரம் –
விஷய பாரங்கள் -சும்மாடு பாரம் -இந்திரியங்கள் நலியும் படி -சரீரம் தந்தாயே
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு-நிரதிசய போக்யம் -என் -ஓவ்ஜ்வல்யம்
பிராவண்யம் அக்ரமாக கூப்பிட்டு பரஸ்பர சத்ருசமான திருவடிகளுக்கு உனக்கும் சாத்ருசம்
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் -த்ரவீபயமாகி -ஆகாரம் -நிரதிசய சாரம் -அன்புருகி நிற்கும் அது –
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்-பிரபல விஷய பாருங்கள் -இந்திரியங்கள் தங்கள் அபிமத
திசைகளில் வலித்து -ஓ இது என்ன அநர்த்தம்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ-தேவாதிகளுக்கு கொடுத்து அமுதில் வரும் பெண்ணமுது கொண்ட உண்டாய் –

‘என் பரஞ்சுடரே! முற்காலத்தில் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதங்கொண்ட மூர்த்தியே!’ என்பதாக உன்னையே அலற்றி உனது இரண்டு
திருவடிகட்கு அன்போடு உருகி நிற்குமது ஒழிய, சரீரமாகிய சும்மாட்டைக் கொடுத்தாய்; ஐவர், வலிய விஷயங்களாகிய பாரங்களைச் சுமத்தித்
திக்குகள் தோறும் இழுத்துத் தாக்குகின்றனர்; அந்தோ!
சுமடு-சும்மாடு, ஐவர் – ஐம்பொறிகள், வலித்து – இழுத்து, ‘ஓ’ என்பது, துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தது.

‘அடிமைக்கு விரோதியாய் விஷய அனுபவத்திற்குப் பாங்கான உடம்பைத் தந்தாய்;
அதுவே காரணமாக ஐந்து இந்திரியங்களும் நலியா நின்றன;
அவற்றைப் போக்கி யருள வேண்டும்!’ எனத் துயரத்தோடு கூப்பிடுகிறார்.

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி –
‘எனக்கு உன் வடிவழகினைக் காட்டி உபகரிக்குமவனே!’ என்று உன்னைக் குறித்து அடைவுகெடக் கூப்பிட்டு.

உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்குமது நிற்க –
ஒன்றுக்கு ஒன்று ஒப்பாய் இருப்பன இரண்டு செவ்விப்பூப் போலே இருக்கிற உன் திருவடிகளில் இனிமையை நினைத்து
அன்பு வசப்பட்டவனாய் நெகிழ்ந்து நீராய் நிற்கை இவ்வாத்துமாவுக்குச் ஸ்வரூபமாகக் கடவது. ஸ்வரூபம் இதுவாக இருக்க,

சுமடு தந்தாய் –
உன் பக்கலினின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக் கூடியதான சரீரத்தைத் தந்தாய்;
என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாகச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ;
அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று.
இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால்,
அடி அறியாதார் சுமை எடுத்துக் கொண்டு போமாறு போலேயாயிற்று,
பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய் விட்டது.
சுமடு – சும்மாடு. சரீரமாகிற சும்மாட்டைத் தந்தாய்.

வன் பரங்கள் எடுத்து –
‘தகுதி இல்லாத விஷயத்திலே போனேன்’ என்றோ நான் இப்போது அஞ்சுகிறது?
பொறுக்கலாமளவு சுமை எடுத்ததாகில் நான் சுமவேனோ?
வலிய பாரத்தைச் சுமத்தி-கனத்த சுமையைச் சுமத்தி.

ஐவர்-
அவர்கள்தாம் ஒருவர் இருவராகில் நான் ஆற்றேனோ?

திசை திசை வலித்து-
இவர்கள் அனைவரும் ஒரு திக்கிலே போக இழுத்தார்களாகில்தான் மெள்ளப் போகேனோ?

எற்றுகின்றனர்-
உடையவனாகிலன்றோ போக்குவிட்டு நலிவது?
வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே
இழுத்துக்கொண்டுபோகத் தேடுமாறு போலேகாணும் இவையும்.

முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி-
கடலை நெருக்கி அதில் அமுதத்தை வாங்கி, வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்குங்கூடக் கொடுக்கக்கூடிய
பெரிய தோள்களையுடையவனே! (மூர்த்தி -தோள்களைச் சொன்னவாறு )
என்னுடைய இந்திரியங்களைப் பாற அடித்துப் பொகட்டு, கடல் கடைந்த போதை ஒப்பனையோடே கூடின வடிவினைக் காட்ட வல்லையே!

——————————————————————————————-

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-

அர்த்தத்துடன் ப்ரீதி உக்தராக பாடுவார்களுக்கு சர்வ பாபங்களும் போகும்
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப-அவர் அவர் குணங்களுக்கு தக்க மூர்த்தி -அத்விதீயாரான மூவர் –
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றே முதல் மூவர்க்கும் என்பர் -ப்ரஹ்மாந்தர்யாமியாய் படைத்து –
ஸூஅவதார விஷ்ணு ரூபமாய் காத்து ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் சம்ஹரித்து
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-மூலம் பிராமண சித்தம் -அ அந்த நாபி கமலம் –
தண்ணீர் -காரண ஜலத்தில் பிரளய -பெரிய நீர் படைத்து-அப்பனுக்கே -உபகாரகனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -சம்பந்தி சம்பந்தித்தாருக்கு சம்பந்தி —
சொல்லா யிரத்துள் இப்பத்தும் கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே-ஆழ்வார் படும் விசனம் கண்டும் பாட வல்லார்
இரவு பகல் என்னால் இந்திரியங்கள் வசம் போகும்
அர்த்தம் உடன் பாட வல்லார் -சர்வ காலத்திலும் -பகவத் அனுபவ விரோதி பந்தகங்கள் போகும்

குணங்களைக் கொண்ட மூர்த்தி மூவராய்ப் படைத்துக் காப்பாற்றி அழிக்கின்ற, அந்தத் திருவுந்தித் தாமரையையுடைய, தண்ணீரிலே
திருக்கண் வளர்கின்ற அப்பனுக்குத் தொண்டு பட்டவர்களுக்குத் தொண்டு பட்டவரான ஸ்ரீ சடகோபராலே சொல்லப்பட்ட ஆயிரத்துன்
இந்தப் பத்தையும் பொருளைக் கொண்டு பாட வல்லவர்களுடைய வினைகள் எப்பொழுதும் நீங்கா நிற்கும்.
‘குணங்கள் கொண்ட மூர்த்தி மூவர்’ என்க. கெடுத்தல்-அழித்தல். புண்டரிகம்-தாமரை. ‘கங்குலும் பகலும் வினைபோம்’ என்க.

‘இத் திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இந்திரியங்களால் ஆத்துமாவுக்கு வரும் நலிவு போம்,’ என்கிறார்.

குணங்கள் கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்-
சத்துவம் முதலான குணங்களுக்குத் தகுதியான வடிவையுடைய மூவராய்.
குணங்கட்குத் தகுதியான படைத்தல் முதலிய தொழில்கள் அந்த அந்த உருவந்தோறும் நிறைந்திருக்குமன்றோ?
பிரமன் சிவன் என்னும் இரண்டு உருவங்களிலும் சீவனுக்குள் அந்தர்யாமியாய் நின்று, விஷ்ணு உருவத்தில் தானே நின்றபடி.
ஜெகதாதிஜா -விஷ்ணு -இணைவனாம் –

படைத்து அளித்துக் கெடுக்கும் –
ரஜோ குணத்தையுடையனாய்க் கொண்டு படைத்து,
தமோ குணத்தை யுடையனாய்க் கொண்டு அழித்து,
சத்துவ குணத்தையுடையனாய்க்கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி.

அப்புண்டரிகக் கொப்புழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கு-
இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே திருக்கண் வளர்ந்தருளின படியைச் சொல்லுகிறது.
உலகம் தோன்றுவதற்குக் காரணாமாயிருத்தலின், பிரசித்தமான திருநாபிக் கமலத்தை யுடையனாய்க் கொண்டு,
படைத்தலின் நோக்குள்ளவனாய் ஏகார்ணவத்திலே திருக்கண் வளர்ந்தருளின உபகாரகனானவனுக்கே.
‘அப்புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே,
பிரமன் சிவன் முதலாயினோர் காரியம் என்னுமிடமும்,
அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று. –
கொப்பூழ் அப்பன் -சாமா நாதி கரண்யம்-கார்ய காரண நிபந்தம் –
ஒருவனுடைய பிறப்பை அன்றோ சொல்ல வேண்டவது? ‘பிரமனுடைய ஜ்யேஷ்ட புத்திரனுக்கு, சிறந்தவனுக்கு’ என்கிறபடியே,
மற்றையோனான சிவனுடைய பிறப்பு, தன்னடையே வரும் அன்றோ? –
அஜஸ்ய ஜென்மாதி –அற்ற நாபி– ஏகம் கமலம் ஆவிர்பூதம் யஸ்மின் –அஜ நிஷ்டா –
‘நான்முகனை நாராயணன் படைத்தான்’ என்றால், மற்றையவன் பிறப்பும் உடனே சொல்லப்படும் அன்றோ?

‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனை’–என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

‘இருபது மந்தரத் தோளும் இலங்கைக் கிறைவனசென்னி
ஒருபது மந்தரத் தேஅறுத் தோன்அப்பன் உந்திமுன்னான்
தருபது மம்தர வந்தன நான்முகன் தான்முதலா
வருபது மம்தரம் ஒத்தபல் சீவனும் வையமுமே.’–என்பது திருவேங்கடத்தந்தாதி.

‘ஒருநாலு முகத்தவனோடு உலகீன்றாய் என்பாஅதுன்
திருநாபி மலர்ந்ததல்லால் திருவுளத்தில் உணராயால்.’–என்பது, திருவரங்கக் கலம்பகம்.

‘நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ்நான்முக ஒருவன் பயந்த பல்லிதழ்த்தாமரைப் பொகுட்டின்’
என்பது, பெரும்பாணாற்றுப்படை, அடி 402-404.

‘ப்ரஹ்மண: புத்ராயஜயேஷ்டாய ஸ்ரேஷ்டாய’ என்பது சுருதி.

‘’நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும்தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்’–என்பது நான்முகன் திருவந்தாதி.

இப்படி வேத வைதிகங்கள் சொல்லா நின்றன அன்றோ?

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்;
தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.

கண்டு பாட வல்லார் –
இவருடைய நிலையை நினைத்தால் பாடப் போகாதே அன்றோ?
கண்டு –
நமக்குத் தஞ்சம் என்று நினைத்து.

வினை போம் கங்குலுப் பகலே –
இரவு பகலில் வினை போம்.
‘இராப்பகல் மோதுவித்திட்டு’ என்ற துயரம் போம்.-திவா ராத்திரி இந்திரிய வச ஹேதுவான பாபங்கள் போகும் –
நம்மை அறியாமலே இரவிலே பாபங்கள் போகுமே -கனவில் படும் சுகம் துக்கம் புண்ய பாப பயன் என்பர் –

படைத்ததே காரணம் -உறவின் நெருக்கத்தால் -தனது குழவி-கிணற்றில் -தாய் குற்றம் சொல்வது போலே –
மூன்று -தூமேன -நெருப்பு புகை -உள்ளே உள்ளது தெரியாத
காம க்ரோதம் போக்கினாலும் -காமம் தீ போலே கொண்டா -என்றே சொல்லுமே -கோபம் வந்தால்
குருவையும் கொல்ல பண்ணுமே -ஒரே தாய் வயிற்றில் பிறந்த விரோதிகள் இவை இரண்டும் –
கண்ணாடி மேல் அழுக்கு -கர்ப்பம் பனிக்குடம்- அல்பம் தாய் உந்தி தானே வெளி வரும்- பெருமாள் திருவடி கொண்டே வெளியே வர முடியும் –
இந்திரியங்கள்விட — மனஸ் பிரபலம் -அதுக்கு மேலே புத்தி தானே முடிவு எடுக்கும் -மனஸ் சிந்திக்கும் சபல புத்தி உண்டே
உறுதியான முடிவு புத்தி -வலப்பக்கம் மூளை இடப்பக்கம் மூளை —நியாய சாஸ்திரம்- சாகுந்தலம் -கலை பொறி இயல் –
அதுக்கே -மேலே ஆத்மா -அது தான் புத்தியை வசப்படுத்த –
ஸாமக்ரியை -இந்திரியங்களுக்கு -வெளிச்சம் கண்ணுக்கு -வேறே எண்ணம் வராமல் இருக்க -வேண்டும் –
மனஸ் ஸாமக்ரியை வஸ்து வை லக்ஷண்யம் -புத்திக்கு -ஆத்மாவுக்கு அனுரூபமான பகவத் அனுபவம் உத்தேச்யம் இதர த்யாஜ்யம்
சத்வ குணம் -ரஜஸ் தமஸ் விலக்கி-
உன்னை பார்க்க ஒத்துழைக்காத இவற்றை எதற்கு கொடுத்தாய் என்னப் பண்ணுமே –
சாத்விக மனஸ் இந்திரியங்கள் ஆக்க நீ அருகில் இருந்தாலே போதுமே -ஆழ்வார் இத்தையே கேட்க்கிறார்
கரண-இந்திரியங்கள் மனஸ் – களேபரம் -சரீரம் கொடுத்ததும் அவனே

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சப்தசமஸ்ய சாதகஸ்ய ஸ்வ பீஈ விஷ்யேந்திரேப்பிய
தஸ்மை தஸ்மிந் அபி பிரபதனே
வி பலே விஷண்ணா ஈசேன பாதிதம் இவ-
கர்ப்பே பாதயித்ருத்வம்- ஆத்யே முனி

அவதத்-இப்படி பேசினார்
சப்தசமஸ்ய சாதகஸ்ய -முதலில் கூறினார்
ஸ்வ பீஈ -தன்னுடைய பயத்தை
விஷ்யேந்திரேப்பிய-இந்திரியங்கள் விஷயங்களால்
தஸ்மை -தான் பயப்பட்டு இருக்கும் தன்மையை
தஸ்மிந் அபி பிரபதனே -கீழே திருவேங்கடத்தில் சரணாகதி பண்ணியும்
வி பலே விஷண்ணா-பலிக்காமல் துக்க வசப்பட்டு
ஈசேன பாதிதம் இவ-அவனாலே தள்ளி விடப்பட்டவரைப் போல்
கர்ப்பே பாதயித்ருத்வம்-இந்த்ரியர்த்த -வன் சேற்று அள்ளலில் தள்ளும் தன்மையை நினைத்து வருந்து
ஆத்யே முனி-

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத் அதி மதுர தயா ஜகத் காரணத்த்வாத்
நியூக்ரோகாத்வ பூம்நா த்ரி தசர்கள் பதித்தாயா வாக் மனஸ் சந்நிதாயாத்
பூயூஷம் ஸ்பர்ச நாத் அகில பதிதயா லோக சம்ரக்ஷகத்த்வாத்
ஸாத்யா சங்க்யாம் ச ஹேத த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி

1–நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத்–எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!

2-அதி மதுர தயா–கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!

3-ஜகத் காரணத்த்வாத் –ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே

4-நியூக்ரோகாத்வ பூம்நா–யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!

5-த்ரி தசர்கள் பதித்தாயா –ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!

6-வாக் மனஸ் சந்நிதாயாத்–பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.

7-பூயூஷம் ஸ்பர்ச நாத்-குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ

8–அகில பதிதயா–என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!

9–லோக சம்ரக்ஷகத்த்வாத்–நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!

10-ஸாத்யா சங்க்யாம் ச ஹேத–த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி–
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–என்றும்
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-என்றும் –

புளிய மரத்தடியில்–

———————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 61-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-இந்த்ரிய பயாக்ரோசத்தை அருளிச் செய்த ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்-
பூர்ண பிரபத்தி பண்ணினவர்
தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும்
நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு
சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு
இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து
நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு
ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய ஸூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து
தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-
ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும்
அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு
கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற
உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————–

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்—61-

இருத்தி-இருக்க வைத்து
பவக் கங்குல்-சம்சாரமாகிய காள ராத்திரி –

——————————————————-

வியாக்யானம்–

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் –
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-
இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி –
ஐம் புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் -என்றத்தைப் பின் சென்ற படி –

எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் –
எண்ணிலா மாயன்-இவ்வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-எனை நலிய -எண்ணுகின்றான் –
அசங்க்யாதமான ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமான இவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-

அதாவது
1-உண்ணிலாவிய வைவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றும்
2-ஓர் ஐந்து இவை பெய்தி இராப்பகல் மோதிவித்திட்டு -என்றும்
3-ஐவரால் வினையேனை மோதுவித்து -என்றும்
4-ஓர் ஐவரைக் காட்டி -என்றும்
5-ஐவரை நேர் மருங்கு உடைத்தா அடைத்து -என்றும்
6-ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -என்றும்
7-சுமடு தந்தாய் -என்றும்
அவன் இப்படி ஐவரைக் கொண்டு செய்வித்தான் என்று–அவன் மேலே பழி இட்ட படி -என்கை

எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து –
சர்வஞ்ஞனாய்-சர்வசக்தியாய் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரன்
அஜ்ஞனாய்-அசக்தனாய்-சரணம் புகுந்த என்னை
நலிந்தது போராமல் இன்னும் நலிய எண்ணுகின்றான் என்று எண்ணி
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றத்தைக் காட்டுகிறது-

நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து ஓலமிட்ட –
ஸ்ரீ பரம தயாளு வானவன் -நிர்த்த்தயரைப் போலே தமிப்பிக்க யத்னம் பண்ணா நின்றான் என்று எண்ணி ஓலமிட்ட –
1-எண்ணிலா பெரு மாயனே -என்றும்
2-கார் முகில் வண்ணனே -என்றும்
3-சோதி நீண் முடியாய் -என்றும்
4-வினையேன் வினை தீர் மருந்தே -என்றும்
5-விண்ணுளார் பெருமானேயோ -என்றும்
6-பத்தியின் உள்ளாய் பரமீசனே -என்றும்
7-கொடியேன் பருகு இன்னமுதே -என்றும்
8-என் அம்மா என் கண்ணா -என்றும்
9-முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்றும்
இப்படி இந்த்ரிய பயத்தாலே ரஷகத்வாதி குணங்களுக்கு வாசகமான அவன் திரு நாமங்களைச் சொல்லி –

சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா -என்றும்
ஹா ராம சத்ய வ்ரத தீர்க்க பாஹோ ஹா பூர்ண சந்திர ப்ரதிமா ந்வக்த்ர-(ஸூ ந்தர -28-11)-என்றும்
சாகா மிருகங்களைப் போலே இவரும் கண் வாளிக்குடைந்தடைந்தும்-கண் என்னும் வாளி -அம்புக்கு உடைந்து அடைந்து
ம்ருகீ சிம்ஹைரி வாவ்ருதா -என்னும்படி ம்ருகசாபாஷி யானவள் ராஷசிகள் மத்யம் அசஹ்யமாய்
அவர் குளிர்ந்த முகத்திலே விழிக்க ஆசைப் பட்டு கூப்பிட்டால் போலேயும் கூப்பிட்டபடி-

இன் புகழ் சேர் –
நாடடைய இந்த்ரிய கிங்கராய்-தத் அலாபத்தாலே கூப்பிட
இவர் இந்த்ரிய பய குரோசம் பண்ணுகை யாயிற்று-இவருக்கு இன் புகழ் சேர்ந்தது
காமாத்மத கல்வபி ந ப்ரசஸ்தா -என்னக் கடவது இறே –
(காம ரூபமாய் இருந்தாலும் கொண்டாடும் படி என்றபடி )

பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று
சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது

இன் புகழ் சேர் மாறன் என –
கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸ்ஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

குன்றி விடுமே பவக் கங்குல் –
இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்
இது நிச்சயம் –

குன்றுதல் -குறைதல்
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -143- திருவாய்மொழி – -7-1-1….7-1-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 24, 2016

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அர்த்த பஞ்சக பரமாக அருளிச் செய்வார் முன்பே பார்த்தோம்

பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –

சர்வ சக்தித்வம் அருளிச் செய்கிறார் ஏழாம் பத்தில்

முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால். அந்தக் கைங்கரியத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத்கைங்கரியம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கரியத்திற்கு விரோதிகள் ஜஸ்வரிய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
ஆறாம் பத்தால், விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார்;

இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புக்க விடத்திலும்,
தக்தப் பட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவுபடுகிறார் இந்த ஏழாம் பத்தால்.

தக்தபடம் – எரிந்து போன வஸ்திரம். ‘மடிப் புடைவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்:
காற்று அடித்தவாறே பறந்துபோம்’என்பது, ஸ்ரீ வசனபூஷணம்,2-ஆம் பிரகரணம், சூ. 191.

‘அமர்ந்து புகுந்தேன்’ என்று தம்மால் ஆன அளவும் புகுர நின்றார்.
பின்பு அவனைப் புகுர நிற்கக் கண்டிலர்.
‘இனிக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்.
விளம்பத்திற்குக் காரணம் இல்லாத சாதனத்தைப் பற்றி நின்றவன்,
அது பலத்தைக் கொடுக்குந்தனையும் கிடந்து கூப்பிடுவானத்தனை அன்றோ?

இவர்தாம் மேலே செய்ததாயிற்றது, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய
ஆகிஞ்சந்யத்தை விண்ணப்பஞ்செய்து கொண்டு சரணம் புக்காராயன்றோ இருக்கிறது?
அது, ‘மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.
‘என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையினைத்தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே,
கடுகப் பலித்துக் கொடு நிற்கக் கண்டிலர்.
இனி, ‘நம்மைக் கைவிடப் பார்த்தான் ஆகாதே’ என்று இன்னாதாகிறார்.

பக்தி-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
பிரபத்தி -ஸ்வ தந்த்ர பிரபத்தி -ஆர்த்தன் திருப்தன் இரண்டு வகை –
ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி –பாப சப்தம் கீதைப்படி –வேற ரகஸ்ய த்ரயப்படி வேறே –
இங்கு மோக்ஷ விரோதி பாபங்கள் விவஷிதம்

—–

கீழே சுருக்கமான பிரவேசம்
இனி அத்தையே விரித்து அருளிச் செய்கிறார்

‘சர்வேஸ்வரன் திருவருள் செய்வதற்கு வேண்டுவன,
1-சம்சாரத்தினுடைய தண்ணிமை நெஞ்சிலே படுதல்
2-சர்வேஸ்வரனுடைய வைலக்ஷண்யத்தை நினைத்தல்,
3-சரணாகதி செய்தல் என்னும் இவற்றிற்கு மேற்பட இல்லை அன்றோ?’ என்று

சம்சாரத்தின் ஸ்வபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்;
புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே,
சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும்
அருளற்றவரைப் போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய்,

இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, -இந்திரியங்கள்-வேல் என்றபடி –
‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய் மடிந்தது காண்! என்று கூப்பிடுகிறார்.

‘இனித்தான், ஷிபாமி -‘தள்ளுகிறேன்’ என்பதும். -தாதாமி ‘கொடுக்கிறேன்’ என்பதும். இரண்டே யன்றோ?-
அவற்றுள், ‘தள்ளுகிறேன்’ என்னுமளவிலே யன்றோ நாம்’ என்றிருந்தார்.
‘அது என்? இவர்க்குக் ‘கொடுக்கிறேன்’ என்ற புத்தி யோகத்தைச் செய்து கொடுத்தானே?’ என்னில்,
‘அதுவும் நோவு படுகைக்கு உடலாகத் தந்தான்’ என்றிருக்கிறார்.

தம்முடைய சத்தி கொண்டு பெற இருந்தார் அல்லர்;
அவனுக்குச் சத்தி இல்லாமல் இழக்கிறார் அல்லர்; பேற்றுக்கு வேண்டுவது முன்பே செய்து நின்றார்;
‘ஆன பின்பு,இவர்க்கு இப்போது இழக்க வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயின், பலியாது ஒழிவான் என்?’ என்னில்,
‘இவர் குறையால் வைத்தாலன்றோ பலித்தது இல்லையாவது?
நமக்காக இருக்கிற பின்பு இவர் இங்கே இருந்தால் நல்லது,’ என்றிருந்தான்.

அவனும் இவரைக் கொண்டு ஒரு காரியம் கொள்ள அன்றோ எண்ணி இருக்கிறது?
அதுவும் ஒழிய, இவருடைய திருமேனி இறுதியானதாகையாலே, இவர் சரணாகதி செய்த இடத்திலும்,
இவர் திருமேனியில் தனக்குப் பிராவண்யத்தாலே காரியம் செய்திலன்.
இவர் திருமேனியில் அவனுக்கு உண்டான பிராவண்யத்தைக் கண்டே அன்றோ
‘மங்க ஒட்டு’10. 7 : 10. என்று அவனைக் காற்கட்டிற்றும்?
மெய்யான பிரேமம் உண்டானால் இங்ஙன் அல்லது இராதே. -மெய் சரீரம் உண்மை -சாடு

இது பிரகிருதி ஆயிற்றே அவனுக்கு. -சாடு– ஸ்வபாவம் -மூல பிரகிருதி

அவன் தம்மைக் கொண்டு கொள்ள இருக்கிற காரியத்தை இதில் பொருந்துவாரைக் கொண்டு
கொண்டால் ஆகாதோ என்றாயிற்று இவர் நினைத்திருக்கிறது.
இதில் பொருந்துவாரை’ என்றது, திருமழிசைப் பிரான் போல்வாரை.-
‘செய்து கொடுத்த ஞான லாபம் இவர் தரித்திருப்பதற்குக் காரணமாம்,’ என்றிருந்தான் அவன்;
அதுதானே விரைவதற்குக் காரணமாயிற்று இவர்க்கு. ‘கிரமத்திலே காரியம் செய்கிறோம்’ என்றிருந்தான் அவன்;
அதுத ன்னையே கொண்டு ‘நம்மைக் கைவிட நினைத்தான்’ என்றிருக்கிறார் இவர்.

நித்திய விபூதியையும் திவ்விய மங்கள விக்கிரஹத்தையும் கண்ணாற்கண்டு,
‘அங்கே போய் அப்படியே அநுபவிக்க வேணும்’ என்னும் பதற்றத்தை யுடைய இவர்க்கு.
சம்சாரம் ததீயமாயிருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு’ என்னும் ஞான மாத்திரத்தாலே தரித்திருக்கப் போகாதே.
‘யானும் நீ தானாய்த் தெளிதோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்’திருவாய்மொழி. 8. 1 : 9.–
என்றே அன்றோ இவர் இருப்பது?

1-இப்படி இருக்கிற தம்மையும்,
2-‘அவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் குறைவற்று இருக்கிறபடியையும்,
3-காக்கும் தன்மை ஸ்வரூபமாயிருக்கிறபடியையும்,
4-காத்தற்குத் தொடர்பு இருக்கிறபடியையும்,
5-தமக்கு இவற்றில் தொடர்பு அற்று இருக்கிறபடியையும்,

1-ஆர்த்தி உடன் பிரபத்தி பண்ணிய தம்மையும்
2-உலகம் மூன்று உடையாய்
3-கடல் ஞாலம் காக்கின்ற
4-அண்ணலே
5-வல முதல் கெடுக்கும் வரமே தந்து –

சத்துவம் முதலான குணங்கள் அவற்றிற்கு அடியான
கர்ம தேஹ இந்திரியங்கள் இவற்றிற்கு அடியான மூலப்பகுதி மஹான் அஹங்காரம் அதன் காரியமான விஷயங்கள்
அவித்யை கருமம் வாசனை ருசி ஆகிய இவை எல்லாம் அவனுக்கு வசப்பட்டவைகளாய் இருக்கிறபடியையும் நினைத்து,
‘விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற சம்சாரத்தே வைத்த போதே
இவற்றுக்கு நம்மை இரையாக்கிப் போகட நினைத்தானித்தனை:
‘தள்ளுகிறேன்’ என்கிற கூட்டத்திலே புக்கோம்.

‘இனித்தான், இவன் பரிகரங்கள் கண்டதும் நம்மை அகற்றுகைக்கு உறுப்பாக.
அவற்றுள், நித்திய விபூதியில் ஓலக்கம் இருக்கிறது, நாம் படுகிற நலிவு கண்டு அங்குள்ளாருடனே கூடச் சிரித்திருக்கைக்கு;
லீலாவிபூதி கண்டது நமக்குச் சிறைக் கூடமாக.
மயர்வற மதிநலம் அருளிற்றும், அல்லாதாரைப் போன்று சுகமே இராமல் துடித்து நோவு படுகைக்காக’ என்று அறுதியிட்டு,
அவன் திருவடிகளிலே தலையை மடுத்து, கேட்டார் அடங்கலும் நீராம்படி கிடந்து கூப்பிடுகிறார்.

‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியில், ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தாராய்ப் பிரணய ரோஷம்
தலை எடுத்துச் சொன்னவை எல்லாம் பிறர் வாயாலே சொன்னாற்போலே இருக்கையாலே,
ஆழ்வாரான தன்மையிலே நின்று இன்னாதாம்படியான நிலை விளைந்தது இவர்க்கு.
இவர். எல்லா அளவிலும் ஸ்ரீஜனகராஜன் திருமகளாரோடு ஒப்பார் ஒருவராயிற்று. என்றது,
அத்தலையில் குறை இடுவார் ஒருவர் அன்றிக்கே ‘இவற்றுக்கெல்லாம் அடி நம்முடைய பாபம்’ என்றிருப்பார் ஒருவர் என்றபடி.

இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே?
‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில்,
சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ?

குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னக கடவாதாயிருக்கும். என்றது.
‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ?
இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி.

உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே,
பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப் போமோ?’ என்றாற்போலே
வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி,
‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லை காண் என்ன,
‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?

பல நீ காட்டிப் படுப்பாயோ?’,
‘கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?’ திருவாய். 6. 9. 9. ஷ 6 9 : 8.-என்று சொல்லுகிறபடியே
அவற்றின் அண்மையும் சகிக்க முடியாதபடியாய், இனி, தாம் அறியாதிருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்தில் பிரவணமான ‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறப்பட்ட உறுப்புகளையுடைய
இவர்க்கு இந்திரியங்கட்கு வசப்படுதல் உண்டு என்னுமிடம் மேலே கூறியதோடு முரணாகாதோ?’ என்னில்,
பக்கத்து வீடு நெருப்புப் பற்றி வேவா நின்றால், தமது தமது வீடுகளைப் பாதுகாத்துக் கொள்ளாமல் இருப்பவர் இலர் அன்றோ?
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் ‘பாம்பு’ என்று நினைத்து மயங்கக் கூடியதாய் இருக்கும் அன்றே?
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடே இருக்கிறபடியைக் கண்டார்:
உலகத்தார் முழுதும் இந்திரியங்களுக்கு வசப்பட்டவராய்க் கிடந்து நோவுபடுகிற படியையும் கண்டார்:
‘இது நம்மளவும் வரின் செய்வது என்?’ என்று அஞ்சிக் கூப்பிடுகிறார்.

ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,

திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.
‘பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும்
நாய்க் கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே,
ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.

‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’-என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.

ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.
பிள்ளை திருநறையூர் அரையர் ‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை
தாய் முகத்திலே விழித்துக் கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று பணிப்பர்.
‘தாவத் ஆர்த்தி:’ என்ற ஸ்லோகத்திற்படியே, சரணம் புக்கால் தம்மை இன்னாதாகச் சம்பந்தம் இல்லையே:
அவனை இன்னாதாமித்தனை அன்றோ?
திருமலையிலே புகுந்து கிட்டி நின்றதுவும் இவர்க்குப் பேற்றுக்குக் காரணமாதல் தவிர்ந்து
கூப்பிடுகைக்குக் காரணமாயிற்றித்தனை அன்றோ?

பரமாத்மா ஸ்வரூபம் முதல் இரண்டும் –
சேதன ஸ்வரூபம் ஸ்வ அடுத்த இரண்டிலும்
உபாயம் ஸ்வரூபம் அடுத்த இரண்டிலும் –
அநிஷ்ட ஹானி விரோதி ஸ்வரூபம் 7/8 பதிகம்
இந்திரியங்கள் படுத்தும் பாடு இதில் அருளுகிறார் –
மேல் 9/10 பதிகம் இஷ்ட பிராப்தி –

—————————————————————————————————

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

விரோதி நிரசனத்துக்கு ஏகாந்தமான சம்பந்தம் -இந்திரியங்கள்
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்-பிராப்தன் போக்யன் -ஆந்திர சத்ருக்கள் நலியும் படி –
பந்தம் -சேதனர் போலே உயர் திணை-ப்ரவர்த்தக -செயலில் தூண்டுவதால் –
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்-பல நீ காட்டிப் படுப்பாய் என்ற ஆர்த்தி பிறந்த பின்பும்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை-அனந்தன் -அசங்கயேய அபரிச்சின்ன – -ஆச்சர்ய -குணங்கள்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் -ஸ்துதிக்கும் -த்ரி வித சேதனர்
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே-போக்யம்-உத்பத்தி தொடங்கி உபகாரகன் நிர்வகித்துக் கொண்டு போன பின்பு

எண்ணிறந்த காரியங்களையெல்லாம் உண்டாக்குகின்ற பெரிய மூலப்பகுதியைச் சரீரமாக வுடையவனே! நித்திய ஸூரிகளால் துதிக்கப்படுகின்ற
மூன்று உலகங்களையுமுடைய அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்கின்றவனே! உள்ளே வசிக்கின்ற ஐந்து இந்திரியங்களால் நலிவுப்படுத்தி,
உன் திருவடித் தாமரைகளை நான் சேராதபடியே என்னை நலிவதற்கு இன்னம் எண்ணுகின்றாய்.
குமை தீற்றுதல் – துன்பத்தை நுகரச்செய்தல்.’ குமை தீற்றி’ நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்,’ என்க. நலிவான் – வினையெச்சம்.
‘உன் பாத பங்கயம் நண்ணிலாவகையே எண்ணுகின்றாய்,’ என்க. மாயன் -மூலப்பகுதியை யுடையவன்.
இத்திருவாய்மொழி, ஆசிரியத்துறை.

‘உன்னால் அல்லது செல்லாதபடியாய் உன் திருவடிகளிலே சரணம் புகுந்த என்னை
இந்திரியங்களாலே நலியப் பாரா நின்றாய்,’ என்கிறார்.

உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –
இரட்சகன் அண்மையில் இருத்தல் தவிர்ந்து கொலைஞர் அண்மையில் இருத்தலாயிற்றுக் காண்.
தேவா எனக்குப் பகை புறம்பிட்டு வருகிறது என்றோ இருக்கிறது?
உள்ளானாலும், போக்கு வரத்து உண்டாமாகில் படை போது அறிந்து இறாய்க்கலாம் அன்றோ?
நிலாவிய – இருக்கிற.
ஆக, பாதகர் கூட்டம் அந்தரங்கமாய் நின்று நலிகிறபடியைத் தெரிவித்தபடி.

‘தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஓர் ஆத்தும வஸ்து உண்டு,’ என்று அறிகிலர்;
இவையே உள்ளே இருக்கின்றன என்றிருக்கிறார்.
‘இப்படி நலியா நின்றாலும், ஒருவர் இருவராகில் அறிந்து விலக்கலாமன்றோ?’என்பார், ‘ஐவரால்’ என்கிறார்.
இவர்களிலே நால்வர் ஒரு முகமாய் நின்று நலிய,
ஒருவர் உடலாந்தரமாய் -த்வக் இந்திரியம் உடல் முழுவதும் -இருந்து நலிகிறபடி.
நான்கும் முகத்தில் -சாடு -ஒன்று சேர்ந்து நலிய
இரட்சகன் ஒருவனாய் இருக்க, பாதகர் ஐவராய் இருக்கிறபடி.
இவை அறிவில் பொருள்களாய் இருக்கச் செய்தே, தீங்கு செய்வதில் ஊற்றங்கொண்டு
உயர்திணைப் பொருளைப் போன்று சொல்லுகிறார் ‘ஐவரால்’ என்று. என்றது,

‘ஆத்துமா என்று ஒன்று உண்டாய். அதனுடைய ஞானம் சொல்லுவதற்கு வழி மாத்திரம் மனமாய்.
அதற்கு இவை அடிமைப் பட்டவை என்று அறிகின்றிலர், என்றபடி.
குமை தீற்றி – நலிவு படுத்தி.
விடுநகம் கட்டுவாரை ‘நெகிழக் கட்டினாய்’ என்று உறுக்கிக் கட்டுவிப்பாரைப் போலே,
‘இந்திரியங்கள் தண்ணளி செய்யாமே ஒக்க இருந்து நலிவிக்கிறான்’ என்றிருக்கிறார்.
நலிகிற நலிவைக் கொண்டு, உயர் திணையைப் போலே சொன்னோமாகில், இவற்றின் பக்கல் குறை உண்டோ?
இவை நலிகிற போதும் இவன் இல்லாமை இலன் அன்றோ?
இவை தாம் இவனுக்கு அடங்காமல் இருப்பவையும் அன்றே? இருடீகேசன் அல்லனோ!
ஜாமாதா பத்தாவது கிரகம் ஒன்பதுக்கு மேலே அழகிய மணவாளன் என்பர் –

என்னை –
‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’. ‘இன்னங் கொடுப்பாயோ?’திருவாய்மொழி. 6. 9 : 9. என்று
அவற்றின் காட்சியாலே முடியும்படியான என்னை.

உன் பாதம் பங்கயம் –
‘தாவி வையங்கொண்ட தடந்தாமரைகள்’ திருவாம்மொழி, 6. 9 : 9.என்றும்,
‘பூவார் கழல்கள்’ திருவாய்மொழி. 6. 10 : 4. என்றும் சொல்லுகிற திருவடிகளை.
‘என் ஆற்றாமை அன்றோ உனக்குச் சொல்ல வேண்டுவது?

சுக அனுபவத்திற்கு உரியனவான திருவடிகளையுடைய உன்னை நீ அறிதி அன்றோ?’ என்பார், ‘உன் பாத பங்கயம்’ என்கிறார்.
என்றது, ‘அடி அறியாமல் தான் அகற்றுகிறாய் அன்றே?
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் அன்றோ?’ பெரியாழ்வார் திருமொழி, 1. 2 : 1.என்பதனைத் தெரிவித்தபடி.
சம்சாரத்தில் அருசி பிறவாதார்க்கும் விட ஒண்ணாதபடி போக்கியமான திருவடிகளை.
தேனே மலரும் திருப்பாதம் அன்றோ?திருவாய்மொழி, 1. 5 : 5.

நண்ணிலா வகையே –
காதாசித்கமாகக் கிட்டாது ஒழிகை அன்றிக்கே, கிட்டாது ஒழிதலே ஸ்வபாவமாக. என்றது,
‘இனி நண்ணப் புகா நின்றேமோ?’ என்றிருக்கிறார் என்றபடி.

நலிவான் –
நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு;
திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ் வாத்துமாவுக்கு நலிவு. -தொழுகையே எழுகை போலே
இந்தக் கொடுமையான வகையே நலிவான்.

இன்னம் –
‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற பின்பும்.

எண்ணுகின்றாய்.
‘ஈஸ்வரனுக்கு வேறு வேலை இல்லை என்றிருக்கிறார்.
‘எந்தத் தரும புத்திரனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜநார்த்தனனுமான கண்ணபிரான்,
மந்திரியாயும் காக்கின்றவனாயும் ஸ்நேகிதனாயும் இருக்கிறான்?’ என்கிறபடியே,
‘யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸூஹ்ருஸ்சைவ ஜநார்த்தந:
ஹரி: த்ரைலோக்ய நாத: ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்’என்பது, பாரதம், ராஜ ஸூயம்.

பாண்டவர்கள் காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லா நிற்கச் செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.
‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.

எண் இலாப் பெருமாயனே –
‘ஈஸ்வரன் இந்த மூலப் பிரகிருதியினின்றும் இந்த உலகத்தைப் படைக்கிறான்,’ என்றும்,
‘என்னுடைய மாயை தாண்ட முடியாதது,’ என்றும் சொல்லுகிறபடியே,
‘அஸ்மாந்மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்’-என்பது, உபநிடதம்.
‘மம மாயா துரத்யயா’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.

எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதான
பிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே!
அன்றிக்கே,
‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களை யுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி.
‘இப்படிக் குணவானாயிருக்கிற உனக்கு என்னை நலிகைக்கு என்ன சேர்த்தி உண்டு?’
விடுநகங்கட்டி நலியாநிற்கச் செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப்போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி.

இமையோர்கள் ஏத்தும் –
‘தன்னால் அல்லது செல்லாதாரை ஒருவன் பொகட வல்லபடியே என்று’ கொண்டாட ஒரு விபூதி உண்டாவதே!
அவர்கள் முகங்கொடுக்கையாலன்றோ அவன் இங்கு வாராதிருக்கிறது?’ என்றிருக்கிறார்.
திரிசங்குவினுடைய ஓலக்கம் கிளர்ந்தாற் போலே கிளர்ந்ததாகில், அவனுக்கு என்னை விட்டிருக்கப் போமோ?

உலகம் மூன்றுடை அண்ணலே –
‘தான் நினைத்த போது காரியம் செய்கிறான்,’ என்று இவர் இருப்பதற்காகத் தன்னுடைய சேஷித்துவத்தைக் காட்டினான் அவன்;
‘இப்படி இரட்சிக்கறவன் நம்மை நலியுமோ?’ என்றிருக்கும்படி செய்து பின்னை நலிகைக்குக் காட்டினான் என்றிருக்கிறார் இவர்.

அமுதே –
அவன் தன்னுடைய இனிமையைக் காட்டிற்றும் தம்மை அனுபவிப்பிக்கைக்கு அன்று;
புறம்பு ஒன்று பொருந்தாதே நோவு பட என்றிருக்கிறார்.

அப்பனே –
‘இப்படி உபகாரகனானவன் நலியா நின்றானோ?’ என்று நம்பும்படி செய்து பின்பு
அபகரித்தற்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.

என்னை ஆள்வானே –
பிராங்நியாயம் பலிக்கும் என்றிருக்கைக்காகக் காட்டினான் என்றிருக்கிறார்.
‘இதற்கு முன்பெல்லாம் நம்மை நிர்வஹித்துக் கொண்டு போந்தது நாமும் சில செய்தோ?
அப்படியே மேலும் நம் காரியம் அவன் செய்யும்,’ என்றிருக்கைக்காகச் செய்தானத்தனை;
நினைவு வேறே என்றிருக்கிறார். ‘என்னை ஆள்வானே! நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என்கிறார்.

————————————————————————————–

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-

அங்கம் -அங்கி பாவம் -17 வகை -மா முனிகள் -காட்டி அருளினார் -நாயகி பாவம் -தூது விடல்
மடல் -எடுத்தல் அநுகாரம் இந்திரியங்களுக்கு பயப்பட்டு –
கடிவாளம் -முக்குணம் கொண்டு ஈஸ்வரன் -த்ருதீயே கர்ம கார்யம் -ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் –
சர்வ பிரகார போக்யனான நீ-பிரபல இந்த்ரியங்களைக் கொண்டு எலி எலும்பினை
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்-இந்திரிய வசப்படுத்தி -ஏவிற்றுச் செய்யும் படிக்கு
காரணத்தயா பரதந்தர்யமாக இருந்தும் அவை இட்ட -ஒன்றுக்கு ஒன்று அத்விதீயம் ஐந்தும் -கொடுமைக்கு ஒப்பு இல்லாமல்
சம பிரதான –பாதகமாக -இராப்பகல் ஓயாமல் -ஸ்வப்னத்திலும் –
வித்திட்டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்-பிரப்யனாய் போக்ய பூதன் -உன் வாசி அறிந்த என்னை -விட்டு அகன்றாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற–சர்வதோ முக போக்யம் -சத்தா தாரகம் –
இருப்புக்கே ஆதாரம் -ரஷகம்-சத்தா தாரக சாரஸ்யன்
காள மேகம் போல தல ஸ்தல விபாகம் பார்க்காமல் அபகரித்த

மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே-கடல் சூழ்ந்த ஞாலம் ரக்ஷிக்கும் -கிட்ட முடியாத பாபிஷ்டன் –
வேதைக சமைதி கம்யன் -பாபம் செய்தவனும் அறியும் முடி பிரபல -கிங்கரனான என்னை
கரும்புக்கட்டியே! அமுதே! கரியமுகில் வண்ணனே! கடலாற்சூழப்பட்ட உலகத்தை எல்லாம் காக்கின்ற மின்னுகின்ற சக்கரத்தையுடையவனே!
வினையேனுடைய வேதியனே! என்னை அடிமை கொண்டு ஆளுகின்ற வலிய சுவதந்தர புத்தியோடு கூடின ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களாகிற
இவற்றை என் சரீரத்திலே வைத்து இரவும் பகலும் இவற்றால் தாக்குவித்து உன்னை நான் வந்து கிட்டாதபடி செய்து முகம் தோற்றாதபடியே போகாநின்றாய்.
‘என்னை ஆளும் ஐந்து இவை,’ என்க. ‘பெய்து மோதுவித்திட்டுப் போதி’ என்க. ‘வேதியனே! அணுகா வகை செய்து போக,’ என்க.
கண்டாய் – முன்னிலையசை. கன்னல் – கரும்பு. ‘காக்கின்ற நேமி’ என்க.
அன்றிக்கே, ‘காக்கின்ற’ என்பதனை நேமியினானுக்கு அடையாக்கலுமாம். வேதியன் – வேதங்களால் பேசப்படுகிறவன்.

வலி இல்லாதவனான என்னை இந்திரியங்காளாலே காலமெல்லாம் நலிவித்து,
இந்த நோவை அறிவிக்க ஒண்ணாதபடி ‘போதி’ என்கிறார்.

என்னை ஆளும் வன் கோ –
என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே!
அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண்.
ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய்,
அவனுக்கு ஆத்துமா சேஷமாய்,
அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய்,
அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து
கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே!

வன்கோ –
பிரபலருமாய் வந்தேறிகளானவர்களுக்குப் பணி செய்து வெறுத்தேன்.
‘கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் ‘கூறை சோறு இவை தா,’ என்று குமைத்துப் போகார்’ பெரிய திருமொழி, 7. 7 : 9.-என்கிறபடியே.
அன்றிக்கே,
‘ஒரு நீர்மை யுடையவன் சேஷியாகை தவிருவதே’ என்னுதல். என்றது,
‘எல்லா நற்குணங்களையுமுடைய சர்வேஸ்வரன் சேஷியாகை தவிர்ந்து,
குணம் இல்லாதவர்கள் சேஷிகள் ஆவதே?’ என்கிறார் என்றபடி.

ஓர் ஐந்து –
குணப் பிரதாந பாவத்தால் அன்றிக்கே, சமப் பிரதாநமாய் நலிகிறபடி.
கடவான் ஒருவனாய், பணி செய்வதும் அவனுக்கான நிலை குலைந்தது. என்றது,
‘பதிம் விஸ்வஸ்ய’ – ‘உலகத்திற்குத் தலைவன்’ என்றும்.
‘அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனன்’ என்றும்
சொல்லுகிறபடியே ஒருவன் சேஷியாதல் தவிர்ந்ததன்றோ என்றபடி.
‘ஒருவனுக்குச் சேஷமாதல் தவிர்ந்தது’ என்பார், ‘ஐந்து’ என்கிறார்.

இவை பெய்து –
அவற்றின் பக்கல் குறை உண்டோ? அவற்றை இட்டு நலிவிக்கிறாய் நீ அல்லையோ?
ஸ்ரீபிரஹ்லாதனை பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறது காணும்,
இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது.

இராப் பகல் மோதுவித்திட்டு –
காலத்துக்கு உபயோகம் இதுவே ஆவதே!
‘ஒழிவில் காலமெல்லாம்’ திருவாய்மொழி, 3. 3 : 1.-என்று அழகிதாக அடிமை செய்ய ஆசைப்பட்டேன்.
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ!’ திருவாய்மொழி, 2. 3 : 9.-என்று ஆசைப்பட்ட எனக்கு
இவற்றினுடனே கூடும்படி ஆவதே!’
உன்னை நான் – பெற்றல்லது தரிக்க ஒண்ணாதபடியிருக்கிற உன்னைக்
கிட்டி அல்லது பிழைக்க மாட்டாத நான். என்றது,
‘நிரதிசய போக்கியனான உன்னை,
புசித்து அல்லது பிழைக்கமாட்டாத நான்’ என்றபடி.

அணுகா வகை செய்து –
கிட்டாதபடி செய்து.

போதி கண்டாய் –
உன்னை அனுபவிக்க வேணும் என்று போந்த பிராட்டியை மாய மானைக் காட்டிப் பிரித்து,
ஒற்றைக் கண்ணன், ஒற்றைக் காதள் இவர்களை கைகளிலே காட்டிக் கொடுத்து
உன்னைக் கொண்டு அகன்றாற்போலே காண் இதுவும்!

கன்னலே அமுதே –
ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ஸாவகந்த: ஸர்வரச’ என்கிறபடியே,
எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்ப வெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

கார்முகில் வண்ணனே –
அந்த இனிமையைத் தன் பேறாகத் தருமவன்; பரமோதாரன் என்றபடி.
அன்றிக்கே,
‘கார் காலத்தில் மேகம் போலே காண்பதற்கு இனியதான வடிவையுடையவனே!’ என்னுதல்.

கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் –
‘போதி கண்டாய்’ என்று யார் கால் கட்ட நீ அன்று நோக்கிற்று!
‘இந்திரியங்களாலே நோவுபட்டோம்’ என்று இவர்கள் அபேக்ஷித்த போதோ நீ நோக்கிற்று!
நீ இனியன் என்று அறியாதரையுங்கூட நோக்குமவன் அல்லையோ?
கடலோடு கூடின பூமியைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்கும் தன்மையன் அல்லையோ?
‘காத்தல் தான் காதாசித்கமோ உனக்கு?’ என்பார், ‘காக்கின்ற’ என்று நிகழ்காலத்தாற் கூறுகின்றார்.

மின்னு நேமியனாய் –
‘இயற்றி-யத்னம்- உண்டு என்னா, சங்கற்பத்தால் நோக்குமவனோ?
ஆசிலே வைத்த கையும் நீயுமாயன்றோ நோக்குவது? -ஆசு -பிடி -ஆயுதம்
‘அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்,’ திருவிருத்தம், 33.– என்னக் கடவதன்றோ?
உருவின வாள் உறையில் இடாதே அன்றோ நோக்குவது? விளங்கா நின்றுள்ள திருவாழி. –
கிருபையால் மிக்கு இருக்கும் திரு ஆழி

வினையேனுடை வேதியனே –
‘தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்’ என்றும்,
‘பொது நின்ற பொன்னங்கழல்’ என்றும் சொல்லுகிறபடியே,
‘தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்’-என்பது,
ஜிதந்தா. 1 : 2. ‘பொதுநின்ற பொன்னங்குழல்’ என்பது, மூன்றாந்திருவந். 88.
ஊர்ப் பொதுவாயிருக்கிற நீ. என்னளவிலே வந்தவாறே வேதங்களாலேயே அறியப்படுகின்றவனானாய்.
இன்று இருந்து ஓலைப்புறத்திலே கேட்கும்படியான பாபத்தைச் செய்வதே நான்!-
சிசுபாலனுக்கு சஷூவுக்கு விஷயம் ஆனாயே

———————————————————————————————-

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

திரு நாம சங்கீர்த்தனம் சேர்த்து -சர்வ பிரகார ரக்ஷணம் பிரகாரமாக உள்ள நீ -இந்திரியங்களை வைத்து என்னை விலக்க வேண்டுமோ
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச் -உஊடுருவ நலியா நிற்க்க கடவ -ஐந்து இந்திரியங்கள்
உனது ரக்ஷணம் இலக்காதபடி பாபம் பண்ணி
சாதியா வகை நீ தடுத்து என் பெருத்த அந்தோ -திருவடி அடையாத படி -ரக்ஷகன் பாதித்தால் யாரை நாடுவேன்
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட -காரணமாக -இருந்து சர்வ பிரகார ரக்ஷணம் –
அந்நிய அபிமானம் அறும் படி அளந்து -வராஹ ரூபியாய் இடந்து
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –ரக்ஷித்ததால் -ஒஜ்வல்யம் -உன்னை அனுபவிக்க சபல புத்தி -பிரதிபந்தகங்கள் அழித்து-

‘வினையேனை ஐவரால் மோதுவித்துச் சாதியா வகை தடுத்து என் பெறுதி?’ என்க.

‘உலகத்திற்கு எல்லா வகையாலும் இரட்சகனாயிருந்து வைத்து, என்னை உன் திருவடிகளிலே கிட்டாதபடி
இந்திரியங்களாலே நலிவித்தால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

வேதியா நிற்கும் –
அழகிதாக எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன்.
‘உடனாய் மன்னி’ திருவாய்மொழி, 3. 3 : 1.-என்று பாரித்த எல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்கு ஆவதே!

வேதியா நிற்கும் –
வேதனையே செய்யா நிற்கும்.
‘தான் உயிருடன் வாழும் வகையிலும் அக்நி ஹோத்திரம் செய்ய வேண்டும்’ என்றால்,
‘யாவஜ்ஜீவம் அக்நி ஹோத்ரம் ஜூஹூயாத்’என்பது, யஜூர் வேதம்.-
‘ஸாயம் ப்ராத: – மாலை காலை’ என்று ஒரு காலத்திலே ஒதுக்கா நின்றதன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்ன எல்லாம்
இவற்றின் பக்கலிலே ஆனபடியைத் தெரிவித்தபடி.

வினையேனை –
போகத்துக்குப் பாரித்த எல்லாம் கிலேசப் படுகைக்குக் காரணம் ஆவதே!

உன் திருவடிச் சாதியா வகை நீ தடுத்து –
என்ன உறவின் கனந்தான்! தம்முடைய குற்றத்துக்கும் அவனை வெறுக்கும்படி காணும் சம்பந்தம் இருக்கிறபடி.
சாதநாநுஷ்டானம் செய்து பலத்துக்குத் தடை செய்வாரைச் சொல்லுமாறு போலே சொன்னபடி பாரீர்.
உன் திருவடிகளைச் சாராதபடி தகைந்து,

என் பெறுதி –
என் சொரூபம் அழியுமித்தனையோ வேண்டுவது?
நான் படுகிற வியசனத்தால் உனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாகில் எனக்கு அதுவே அமையும்;
உனக்காக இருக்குமதன்றோ எனக்கு வேண்டுவது?
தண்ணீரின்றும் மேலே எடுக்கப்பட்ட மீனைப் போன்றவர்’ என்கிற இளையபெருமாள்,
‘ஜலாந் மத்ஸ்யாவி வோத்த்ருதௌ’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 53 : 31.
‘நீருள வெனின்உள மீனும் நீலமும்
பாருள வெனின்உள யாவும் பார்ப்புறின்
நாருள தனுவுளாய் நானும் சீதையும்
யாருள ரெனின்உளேம்? அருளு வாய்என்றான்’–என்பது, கம்பராமாயணம்.
துர்வாசர் வர, ‘பெருமாளுக்கு ஒரு துன்பம் வர ஒண்ணாது’ என்று தம் நோவு பாராதே விடை கொண்டார் அன்றோ?

என் பெறுதி –
நீ, சொன்ன சொல் தவறாதவன் ஆகைக்காக ஸ்ரீபரதாழ்வானைப் பிரித்து வைத்தாய்,
என் இருப்புக்கு உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?

அந்தோ –
தனக்கு ஒரு பிரயோஜனம் இன்றியிலே பிறர் கேடே பிரயோஜனமாக நலியும்படி பிறந்தேனே!
பாதுகாத்தலே பிரயோஜனமாக இருக்கிறவன், அருள் அற்றாரைப் போலே ஆவதே!

ஆதியாகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள் முடியாய் –
உனக்கு ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் பாதுகாப்பவன் அல்லையோ நீ!
ஆன பின்பு உனக்கு இது போருமோ?’
திருமுடி தொடக்கமான திவ்விய ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு நித்திய ஸூரிகள் நடுவே இருக்கக்கடவ நீ,
உலகத்திற்கு எல்லாம் காரணனாய்ப் பரப்பை யுடைத்தான பூமியைப் படைத்து,
பின் பிரளய ஆபத்து வர வயிற்றிலே எடுத்து வைத்து,
பின் வெளி நாடு காணப் புறப்பட விட்டு,
பின் மஹாபலி கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொண்டு,
பின் நைமித்திகப் பிரளயத்திலே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி,
இப்படிகளாலே
எல்லா இரட்சணங்களையும் செய்யுமவன் அல்லையோ?

தொண்டனேன் மதுசூதனனே –
இவன் இரட்சகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ?
மதுவைப் போக்கினாற்போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே அன்றோ குறை?

————————————————————————–

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-

அகடி கடநா சமர்த்தன் -இந்த்ரியங்களால் கலக்கி பரம போக்யமான உன்னை அணுகாமல் செய்தாயே
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்-இந்த்ரியங்களைக் காட்டி
பரம புருஷார்த்த கைங்கர்ய ருசி அறிந்த நான் -சூது -பிராப்தம் இங்கும் விபரீத லக்ஷணை -உறுவது அறியாத படி விஷயங்களில் பிரமிக்கும் படி
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்-அதி போக்யமான உன் திருவடிகளை -அநந்யார்ஹன் அணுகா படி கடக்க நின்றாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை-சகல சேதன அசேதனங்களை ஏக தேசத்தில் ஒடுக்கி
ஆலமரம் -நீள் இலை விபரீத லக்ஷணை-மீது சேர் குழவி!
வினையேன் வினை தீர் மருந்தே-அன்ன வசம் செய்த இடம் இலையாய் ஆனதே -பாபிஷ்டன்

அஃறிணைப் பொருள்களும் உயர்திணைப் பொருள்களும் ஒன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் உன் வயிற்றிலே ஒடுக்கிக்கொண்டு,
ஒப்பற்றதான ஆலினது முகிழ் விரிந்து நீளும்படியான இலையின் மேலே சேர்ந்து திருக்கண் வளர்ந்த குழவியே!
வினையேனுடைய வினைகளைத் தீர்க்கின்ற மருந்தே! ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களையும் காட்டி, உறுவதனை நான் அறியாத வகையாகச் சுழலச்செய்து,
உனது அழகிய திருவடித் தாமரைகளை நான் சேராதபடி செய்து கண்கள் காணாதபடி கடக்க நிற்கின்றாய்காண்.

‘ஒடுக்கிச் சேர் குழவி’ என்க. ஐவரைக் காட்டி அறியா’ வகை சுழற்றி அணுகா வகை செய்து போதி’ என்க. சூது – உறுவது.

‘நீயே இவ்வாத்துமாவுக்குத் தனக்கு மேல் ஒன்றில்லாததான புருஷார்த்தம் என்னமதை யான் அறியாதபடி
ஐம்புலன்களைக் காட்டி என்னை மயக்குவிக்கின்றாய்,’ என்கிறார்.

சூது –
‘இந்த ஆத்துமாவுக்கு விஷயத்தில் ஈடுபட்டிருத்தல் நாசத்திற்குக் காரணம்;
பகவானுடைய அனுபவம் உய்வதற்குக் காரணம்’ என்னும் உபாயத்தை.

சூது – உறுவது.
நான் அறியாவகை – இது நான் அறியாதபடி.

ஓர் ஐவரைக் காட்டி சுழற்றி-
நான் உறுவது அறியாதபடி –சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களைக் காட்டி மயங்கச் செய்து. என்றது,
‘உன்மத்தங்காய் தின்னப்பண்ணி’ என்றபடி.

உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து –
உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது,
‘மயிர் கழுவி இருக்கிறவனைச் செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’ என்றபடி.-மயிர் கழுவி -பிரபத்தி செய்த பின்பு

போதி கண்டாய் –
கூட நிற்கில் இவை எல்லாம் பட வல்லேன் காண்!
‘கூடநிற்கில் கண்ணோட்டம் கிருபை -பிறக்கும்’ என்று கடக்கப் போவாரைப் போலே போனாள்.
‘நீர் சொல்லுகிறவை எல்லாம் நமக்குச் செய்ய அரிது காணும்’ என்ன,
‘ஓம்; நீ அரியவை செய்யமாட்டாய் அன்றோ?’ என்கிறார் மேல்.

யாது யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை மீது சேர் குழவி –
அறிவில் பொருள் அறிவுடைப்பொருள் என்னும் இவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப் படாத படி உன் வயிற்றிலே வைத்து,
ஒரு பவனாய் முகிழ் விரியாதது ஓர் ஆலந்தளிரின் மேலே,
உனக்கு இரட்சகர் வேண்டுவது ஒரு நிலையை அடைந்து திருக்கண் வளர்ந்தருளுவான் ஒருத்தன் அல்லையோ?
அரியவை செய்ய வல்லை என்னுமிடத்துக்கு ஒரு பழங்கதை சொல்ல வேணுமோ?

வினையேன் வினைதீர் மருந்தே –
பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே!
என்னுடைய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் ஈடுபாட்டினைப் போக்கி என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?

செப்பு -தாமோதரனை செப்பினாலே போதும் -வாயினால் பாடி தூ மலர் தூவித் தொழுது -மனத்தினால் சிந்திக்க வேண்டாம்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் நில்லா –
அபுக்தம் கர்ம ந ஷீயதே -விரோதிக்குமே -நெருப்பு எரிக்கும் -நீர் அணைக்கும் இரண்டு வாக்கியங்கள் (ப்ரஹ்ம ஸூத்ரம் –4-1-6-)
பொருந்துமோ என்பதால் போலே -நெருப்புக்கு சக்தி உண்டு -கர்மத்துக்கு பாப புண்யம் பலம் கொடுத்தே தீரும்
தண்ணீர் நெருப்பை அணைப்பது போலே அவன் கருணை கர்மங்களை போக்கும் சரண் அடைந்தால் -என்றபடி –
பூர்வாகம் -உத்பத்தி சக்திகளை வெட்டி உத்தராகம் அவற்றின் பாதகம் விலக்கி-என்றபடி –
வினையேன் வினை தீர் மருந்தே என்கிறார்

—————————————————————————————-

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

பிரதிகூல நிரசன ஸ்வ பாவன் விஷய இந்த்ரியங்களைக் கொண்டு அகலப் பற்றினாய்
தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை-எனக்கு சாந்தி ஹேதுவான பிரதி ஒவ்ஷதம்-இல்லாத படி
இந்த்ரம் -சரீரம் -ஆத்மாவை ஏற்றி சுழற்றி -பிரமிப்பியா நிற்கும்
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-
ஒரு முகமாக வைத்து -தொக்கு இந்திரியம் உடல் முழுவதும் நிறுத்தி நாலா புறமும் -நேரும் பக்க வாட்டிலும் பின் புறத்திலும்
நிறுத்தி நெகிழ சிதிலம் ஆக்குகிறாய்
நிவர்த்தகன் நீயே பிரவர்த்தகன் ஆனபின்பு இதுக்கு யார் மருந்து ஆவார்
நோயான விஷயங்கள் மருந்து ஆகுமோ
நோய் படும் நான் மருந்து ஆகுமோ
புலன்களும் மருந்து ஆகமுடியாதே
நிர்வாணம் பேஷஜம் பிஜக் நீ
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்-ஆஸ்ரிதர் விரோதி நிராசன -ஆழி
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ-பக்க வேர் உடன் அறுத்து -பரமபத வாசிகளுக்கு -அதிபதி –
ஓ நித்ய ஸூரிகள் உடன் ஓக்க அனுபவிக்க பிராப்தமாக இருக்க நலிவு படுவதே

கொல்லுகின்ற சக்கரத்தை ஏந்தி வலிய அசுரர்களுடைய குலத்தைப் பக்கவேரோடு அறுத்தவனே! நித்தியஸூரிகளுக்குப் பெருமானே!
வேறு பரிகாரம் இல்லாதபடி ஐம்புலன்களாகிய நோய்கள் வருத்துகின்ற சரீரமாகிற செக்கிலே இட்டு மயங்கச்செய்கின்ற ஐந்து இந்திரியங்களையும்
எதிரும் பக்கங்களுமாக அடைத்து நிறுத்தி நெகிழ விடுகின்றவரைப் போலே இராநின்றாய்;
இரட்சகனான நீ பாராமுகம் செய்தால் இனி உபகாரர் ஆவார் யாவர்?
‘இன்றி அடும் செக்கு’ என்க. இன்றி – இல்லாதபடி. ‘இட்டுத் திரிக்கும் ஐவரை அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்’ என்க.
நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் – ‘கைவிடுமாறு போலே இருக்கின்றாய்’ என்னுதலுமாம்.

‘மாற்றுச் செய்கை இல்லாதபடி விஷயங்களாலும் இந்திரியங்களாலும் நலிந்து என்னை நீ
கைவிட்டால் வேறு இரட்சகர் உளரோ?’ என்கிறார்.

தீர் மருந்து இன்றி-
வேறு பிரகாரம் உண்டாகிலும் ஆற்றலாம் அன்றோ?
சர்வ சக்தியாலும் போக்கப் போகாதன்றோ?

ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு-
ஐம்புலன்களாகிற நோயாலே இவ் வாத்துமாவை முடிக்கும் சரீரமாகிற செக்கிலே இட்டு.

திரிக்கும் ஐவரை-
வருத்துகின்ற ஐம்பொறிகளை. என்றது,
‘சரீரத்திலே புகுவித்து ஓசை முதலிய புலன்களைக் காட்டி நெருக்குகிற செவி முதலிய பொறிகளை’ என்றபடி.

நேர்மருங்கு உடைத்தா அடைத்து-
எதிரும் பக்கங்களுமாக அடைத்து. என்றது,
‘அபிமந்யு என்ற ஓர் இளைஞனை நலிகைக்கு அதிரதர் மஹாரதர் என்னுமவர்கள் அடங்கலும்
சூழப் போந்து அடைத்தாற்போலே,
இந்திரியங்களுக்குக் கை யடைப்பாக்கி’ என்றபடி.

நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-
இதுவோ தான் எனக்கு நிலை நிற்கப் புகுகிறது?
‘இங்ஙனே தான் செல்லுகிறதோ?’ என்று இருக்க ஒண்ணாதபடி உன் பக்கல் செய்த நம்பிக்கையையும் குலையா நின்றாய்.
இந்திரியங்கள் பாதகம் ஞானம் கொடுத்தேன் -இத்துடன் காலம் போனால் -என் செய்கேன் -திருவடி கிடைக்காமல் –
‘ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொண்டாலோ?’ என்றான்;

ஆர்மருந்து இனி ஆகுவார்-
என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன்.
நீ கை வாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ?
நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு?
‘ஆனால் நீரோ?’ என்றான்;
நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?
மருந்தாம் போதும் ஒரு சேதநன் வேணுமன்றோ? -ஏது-சொல்லவில்லையே அசேதனம் கூடாதே –
மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந்திருவந்தாதி, 4.-
அநிஷ்டம் -சம்சாரம் -தொலைக்கும் -இஷ்டமான மோக்ஷம் கொடுக்கும் பொருளும் –போக்யமான அனுபவமும் நீயே

அடல் ஆழி ஏந்தி அசுரர் வன்குலம் மருங்கு வேர் அறுத்தாய் –
போரிலே முயற்சியை யுடைய திருவாழியை ஏந்தி அசுரருடைய வலிதான குலத்தைப் பக்கவேரோடு வாங்கினவனே!
‘அந்த வாசனையௌ உம்மை நலிகிறது? பின்னையும் நலிகிறது உண்டோ?’ என்ன,

விண்ணுளார் பெருமானேயோ-
ஒருவன் சிறை இருக்க, தாயும் தந்தையும் உடன் பிறந்தார்களுமாய்க் கலியாணம் செய்யக் கண்டு
தான் கூடப் பெறாதே நோவுபடுமாறு போலே நித்திய ஸூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரம பதத்திலே இருக்கிறபடியே நினைத்து
அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். -பகல் ஓலக்கம் -சாம கானம் கேட்டு ரசிக்கவோ –
‘ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே,
பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.
‘ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸூமித்ரே
ஹா ராமமாத: ஸஹமே ஜநந்யா’-என்பது, ஸ்ரீராம. சுந். 28:8.-வேணி கொண்டு -முடிக்கப் பார்த்து பிராட்டி கூப்பிட்டால் போலே

‘நிருதாதியர் வேரற நீண் முகில்போல்
சர தாரைகள் வீசினர் சார்கிலிரோ?
வரதா! இளை யோய்! மறு வேதுமிலாப்
பரதா! இளை யோய்! பழி பூணுதிரோ?’-என்பது, கம்ப, சடாயு உயிர் நீத்த பட. 79.

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -142- திருவாய்மொழி – -6-10-6…6-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 23, 2016

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அதிசயித ஞானிகள் நித்ய ஸூரிகளும் -ஸூரி சேவ்யத்வம் குணம் -நான் என்று கிட்டுவேன் -ஸூரி ஸேவ்யத்வம் இதில் காட்டும் குணம்
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று-லோகங்களையும் -சம்ஸ்லேஷித்த சீலஅதிசயம் உடைய தாமரைகள்
முற்றுவமை -பரத்வ அனுபவம் செய்து கொண்டே இருக்கும் நித்ய ஸூரிகள் –
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்-கூட்டமாக -நின்று -கதா புனா -ஸுலப்யம் காண ஆசைப்படுவார்கள்
நம்மாழ்வார் போலே அங்கும் – காலமே இல்லாத தேசத்தில் -திரள் திரளாக எந்நாள் எந்நாள் என்று கேட்க நானும் அத்தையே கேட்க்கிறேன்-
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!-சரீரம் நா மனம் முக் கரணங்களால் அடிமை செய்யும்
மெய்ந்நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே-அநந்யார்ஹ சேஷத்வம் உணர்ந்த அபி நிவேசம் உடைய நான்
மெய்யே கண்டு ஸ்வப்னம் போலே மானஸ அனுபவம் போதாதே -என்று காண்பேன் –
ஆகவே அடியேன் நான் இரண்டு சப்த பிரயோகங்கள் –

உலகத்தை அளந்த இரண்டு திருவடிகளைக் காண்பதற்கு எந்த நாளையுடையோம் நாம் என்று தேவர்கள் கூட்டம் கூட்டமாக எப்பொழுதும் நின்றுகொண்டு
துதித்து வணங்கிச் சரீரத்தாலும் நாக்காலும் மனத்தாலும் வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!
அடியேனாகிய நான் உண்மையாகவே உன்னை அடைந்து உன் திருவடிகளை அடைவது எந்த நாள்? என்கிறார்.
இமையோர்கள், மண் அளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி
மெய்ந் நா மனத்தால் வழிபாடுசெய்யும் திருவேங்கடம் என்க. “மெய்ந் நா மனத்தால்” என்றதனால், மனம் வாக்குக் காயங்களைக் கூறியவாறு.
அடியேன் நான் மெய் எய்தி உன்னடிகள் மேவுவது எந்நாள்? என்க.

“எந்நாள்” என்று ஐயுறுகிறது என்? அது ஒரு தேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்றோ? என்ன,
அங்குள்ளாரும் இங்கே வந்து அன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கிறது என்கிறார்.
அங்ஙன் அன்றிக்கே,
வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்ற தேவர்களும் கூட வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரைப் போன்று
வந்து அடையும்படி நிற்கிற இடத்தே நான் இழந்து போவதே! என்கிறாராகவுமாம்.

மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று –
“எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே” திருவாய். 3. 2 : 1.– என்று இங்குள்ளார்
அங்கே சென்று அடிமை செய்ய ஆசைப்படுமாறு போலே காணும்,
அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு
அநுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி.
எல்லாருக்கும் சுலபமான திருவடிகளை நாம் காணப் பெறுவது என்றோ?
பூமியை யடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொள்ளக் கண்ட காட்சியிலே தலை மேலே
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் படியான இனிமையை யுடைய திருவடிகளை.
மற்றொரு போது வேறு ஒன்றனைப் பற்றிப் போகிறவர்கள் அல்லராதலின் ‘எந் நாளும்’ என்கிறார்.

இமையோர்கள் இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி –
நித்திய ஸூரிகள் காலமெல்லாம் நின்று துதி செய்து பின்னைத் திருவடிகளிலே விழுந்து,
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள் திரளாய்.

மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தான் –
மனம் வாக்குக் காயங்களாலே அடைந்து அடிமை செய்யா நிற்பர்கள்.
அன்றியே,
மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்கள் என்றுமாம்.
வழிபடுதலாவது,
வேறு பிரயோஜனங்களுக்கு உறுப்பாகாத கரணங்களைக் கொண்டு அடைந்து வணங்குதல்.
நித்திய ஸூரிகளான போது, கைங்கரியமாகக் கொள்க.
பிரமன் முதலான தேவர்களான போது, உபாசனமாகக் கொள்க.

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே –
குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;
நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப்
பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.

ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.

——————————————————————————————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

சர்வ சாதாரணமான -என்னுடன் –நித்ய ஸூரிகளும் -ரசம் அனுபவிப்பித்து -உன்னை அனுபவிக்க சாதனம் அனுஷ்டியாமல் –
அனுஷ்ட்டித்தார் பலம் தாழ்ந்து -கேட்பது போலே கேட்க்கிறேன் -க்ஷணம் காலமும் பொறுக்க மாட்டேன் -சர்வ ஸாதாரண மானவன் இதில் குணம் –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!-தேவர் அமுதம் இல்லை -நிருபாதிக சேஷத்வம் -நித்ய அனுபவம் போக்யம்-
அனுபவிப்பித்து -நிர்வகித்து
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!-ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் -போக்யதா -அமுதம்
அனுபவிக்க -போக்யதையை வர்த்திக்க – ஸுந்தரியாதி பக்குவ பலம் போலே சிவந்த அதர சோபை -எல்லை காண ஒண்ணாத பெருமை
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!-போக பிரதி பந்தகங்கள் அடர்ந்த -பாபங்கள் அவை அடியாக வரும் துக்கங்கள்
அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுக்க -அமிர்தமே மருந்தும் விருந்தும் -சந்நிஹிதன்
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே-உனது திருவடிகளைக் காண நோற்றாமல்-சாதன அனுஷ்டானம்
பண்ணாமல் நோற்றாரைப் போலே ஆற்றுவேன் தவித்தேன் –க்ஷணம் மாத்ரமும் ஆற்ற மாட்டு கிறிலேன் –

அடியேன் அடைந்து அநுபவிக்கின்ற அமுதே! நித்திய ஸூரிகளுக்குத் தலைவனே! பகைவர்களைக் கொல்லுகின்ற கருடனைக் கொடியில் உடையவனே!
அழகிய கோவைக்கனி போன்ற திருவாயினையுடைய பெருமானே! தூறுமண்டிக் கிடக்கின்ற தீவினைகளைத் தீர்க்கின்ற மருந்தே!
திருவேங்கடத்து எம்பெருமானே! ஒரு சாதன அநுஷ்டானத்தைச் செய்யாதிருந்துங்கூட, உனது திருவடிகளைக் காண்பதற்குக் கணநேரமும் ஆற்றமாட்டேன்.
அடுபுள் கொடியா உடையானே! என மாற்றுக. நோலாது உன பாதம் காண்கைக்கு நொடியார் பொழுதும் ஆற்றேன் என்க.
நோற்றல்-அவனைக் காண்டற்குரிய சாதனங்களைச் செய்தல். நொடித்தல் – இரண்டு விரல் நுனிகளைச் சேர்த்துத் தெறித்தல்.

“மெய்ந் நான் எய்தி” என்ற இந்த ஞான லாபம் உமக்கு உண்டாயிற்று அன்றோ;
அது பலத்தோடே கூடி யல்லது நில்லாதே அன்றோ;
ஆனபின்பு, அவ்வளவும் நீர் ஆறி இருந்தாலோ? என்ன,
‘உன்னுடைய இனிமை, அத் துணை கிரமப் பிராப்தி பார்த்திருக்கப் போகிறது இல்லை’ என்கிறார்.
உன்தனை ஆறி இருக்க நான் மாட்டுகிறிலேன்.
இங்கே திருவேங்கடமுடையனாக சந்நிஹிதனாக இருந்து வைத்தும் என்னை அங்கீ கரிக்காமல் ஆறி இருப்பதோ –

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! –
தேவஜாதிகளுடைய உப்புச் சாறு போலன்று;
ஒரு திரளாய் அநுபவிக்குமது அன்று;
வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்கள் அநுபவிக்கும் அமிருதமாயிற்று.

அநந்ய ப்ரயோஜனமாய் -நித்தியமாய் -அத்விதீயமாய் இருக்கை
அமர்கின்ற -அர்ச்சை
மேவி -மற்றவற்றை த்யஜித்து

இமையோர் அதிபதியே –
இதனை உண்பதற்குக் கூட்டாவது ஒரு திரள் அங்கே உண்டாயிருக்கிறபடி.

அடு புள் கொடியா உடையானே-
விரோதிகளை அழித்தலையே இயல்பாகவுடைய பெரிய திருவடியைக் கொடியாக உடையவனே!

கோலம் கனி வாய்ப் பெருமானே –
அழகியதாய்க் கனிந்துள்ள திருவதரத்தின் சிவப்பைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே!
வாய்க்கரையிலே தோற்றார் காணும்.
அடியார்கட்கு இவ் வழகை அநுபவிப்பிக்கைக்குக் கொடி கட்டிக் கொண்டிருக்கிறபடி.

செடியார் வினைகள் தீர் மருந்தே-
பாபத்தோடே பொருந்தின தீய வினைகளாலுண்டான துக்கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே!
செடி – பாவம்.
ஆர்-பூரணமான
வினை-துக்கங்கள்
ஆர் செடி வினை –பூரணமான பாபத்தால் உண்டான துக்கங்கள்
அது உண்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி.
அன்றிக்கே,
தூறு மண்டின பாவங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே என்னுதல்.

அந்த அமுதந்தானே காணும் மருந்தாகிறது.. –
“மருந்தும் பொருளும் அமுதமும் தானே”–மூன்றாந்திருவந். 4- என்றும்,-
சம்சாரம் போக்கும் மருந்தும் -மோக்ஷம் கொடுக்கும் பொருள் -ஸ்வத போக்யமும்
“மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு”-திருவாய். 9. 3 : 4– என்றும் கூறுகிறபடியே
அவன் தன்னை ஒழிய வேறு மருந்தும் இல்லையே.
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் அன்றோ.பெரியாழ்வார் திரு. 5. 3 : 6.–

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி.

1-இமையோர் அதிபதியாய், 2-கொடியா அடு புள் உடையானாய், 3-செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
4-திருவேங்கடத்து எம்பெருமானாய், 5-கோலக் கனிவாய்ப் பெருமானாய்,
6-அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.

1-பரத்வம் -சொல்லி -2-விரோதி நிரசன பரிகரம் சொல்லி -3-விரோதி நிரசனத்தை சொல்லி –
4–ஸுலப்யம் சொல்லி –5-அழகை சொல்லி
6–போக்யனாய் இருப்பத்தைச் சொல்லுவதே அறு சுவை அமுது

பட்டர், “நித்தியத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கின்றதே,
என்ன தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன, “
‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே
இருக்கும் திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

நொடியார் பொழுதும் –
நொடி நிறையும் அளவும்.

உன பாதம் காண நோலாது ஆற்றேன்-
உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு சாதன அநுஷ்டானம் செய்யாதிருக்க, கண நேரமும் ஆற்ற மாட்டுகிறிலேன். என்றது,
சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைப் போலே படா நின்றேன் என்றபடி.
அது இல்லாமை அன்றோ இவர் இங்ஙனே கிடந்து படுகிறது. தனியே ஒரு சாதனம் செய்யுமவனுக்கு,
‘அது முடிவு பெற்றவாறே பெறுகிறோம்’ என்றாதல்,
‘அதிலே சில குறைவுகள் உண்டானமையால் அன்றோ பலம் தாழ்த்தது’ என்றாதல் ஆறி இருக்கலாம்;
அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால் ‘அவன் திருவருளும் ஏறிப் பாயாத படியானேனோ?’
என்னும் அச்சம் அன்றோ தொடர்வது.

——————————————————————————————————

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

சம்பந்த ஞானம் வந்து -புருஷார்த்தம் அதுக்கு அனுரூபமாய்த் தெளிந்து -பிரதிபந்தகங்களைப் போக்கவும்
ஸ்வாமியுடைய க்ருத்யம் என்று உணர்ந்து -இந்த புத்தியே சரணாகதி –
சேஷி -உபாயம் -உபேயம் -இருந்தாலும் ஸ்வா தந்திரம் அவன் இடமும் தோஷ பூயிஷ்டமாயும் நாம் இருக்க-சேர விட பிராட்டி வேண்டுமே
லஷ்மியை புருஷகாரமாக பிரதிஷ்டை செய்து உள்ளேன் -அவனே சொல்லி -உகாரம் -நடுவில் உண்டே –
சேஷி ப்ராப்யம் இரண்டுக்கும் மிதுனம் -உபாயம் அவன் ஒருவனே -ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாக இருக்க முடியும்
ஒவ் ஒரு பாசுரத்தில் அவன் உள்ள குணங்களைப் பட்டியல் இட்டு குணாபிராமனை அலர் மேல் மங்கை பிராட்டியை முன்னிட்டு பற்றுகிறார் –

சாவரோதரனான ஈஸ்வர அபிமானிகளும் -வேத அபஹார குரு பாதக -தைத்ய பீடாதி -சாதர ஆஸ்ரயம் பண்ணும் படி
ஸூலபனாக நிற்கும் நீ கிருஷ்ணனாக வந்த படி என்னிடம் வர வேண்டும்
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்–சர்வஞ்ஞன் ஸூஷ்ம தர்சியாய் -ஆரோக்யம் -பாஸ்கரன் -சங்கர -ஞானம்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்-விஷ கண்டன் -ஜகத் பிரதானன ருத்ரன் -தஜ் ஜனகன் ஸ்ருஷ்டுத்வாதி
ஞான பூர்த்தி நான் முகனும் இந்திரனும் -த்ரை லோக்யாதிபதிபதி
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!-சேல் மீன் வகை கண்ணை உடைய உமா சரஸ்வதி சசி
காந்தஸ்ய –த்வத் தாசீ தாசீ கண -பரிசார வர்த்திகள் -மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே-
கரிய நிறம் உடையவன் -சர்வரையும் மயக்கி -வந்தால் போலே உன்னை ஒழிய செல்லாத படி -அடியேன் இடம் வர வேண்டும் –

உனது திருவடிகளைக் காண்கைக்குரிய சாதனம் ஒன்றையும் செய்யாமலே வைத்தும் ஆற்ற மாட்டுகின்றிலேன் என்று, நுண்ணிய அறிவினையும்
விஷம்பொருந்திய கழுத்தினையுமுடைய சிவபெருமானும் குணங்கள் நிறைந்த பிரமனும் இந்திரனும் ஆகிய தேவர்கள்,
சேல்போன்ற கண்களையுடைய பெண்கள் பலரும் தங்களைச் சூழ்ந்து நிற்க வழிபாடு செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!
எல்லாரையும் மயக்கிக் கிருஷ்ணனாய் வந்தாற்போலே அடியேன் பக்கலிலும் வரவேண்டும்.
நோலாது ஆற்றேன் உன பாதம் காண” என்பது, “நீலார் கண்டத்தம்மான்” முதலாயினோர்கட்கு அடைமொழி.
அம்மானும் நான் முகனும் இந்திரனும் பலர்சூழ விரும்பும் திருவேங்கடம் என்க. மால் – கருமை; ஈண்டு,
கரிய நிறத்தை யுடைய கிருஷ்ணனுக்காயிற்று. மாலாய் வந்தாய் போலே அடியேன் பால் வாராய் என்க. வாராய்; விதிவினை.

‘உன்னைச் சேர்தற்கு என் தலையில் ஒரு சாதனம் இல்லை’ என்னா நின்றீர்;
‘இது ஒரு வார்த்தையோ! சாதனத்தைச் செய்தார்க்கு அன்றிப் பலம் உண்டோ?’ என்ன,
‘அவர் அவர்களுடைய விருப்பங்களைப் பெறுதல், சாதன அநுஷ்டானத்தாலே என்றிருக்கும் பிரமன் முதலாயினோர்களுக்கும்,
கிட்டினால் பாசுரம் இதுவே அன்றோ?’ என்கிறார்.
தந்தாமுடைய ஆகிஞ்சந்யத்தை முன்னிடுமத்தனை போக்கி, ஒரு சாதனத்தைச் செய்து பெறலாம்படியோ நீ இருக்கிறது?

நோலாது ஆற்றேன் உனபாதம் காண என்று நுண் உணர்வின் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் விரும்பும் திருவேங்கடத்தானே –
உன் திருவடிகளைக் காண்கைக்கு, சாதன அநுஷ்டானம் பண்ணாதே இருந்து வைத்து உன்னை ஒழிய ஆற்றமாட்டேன் என்றாயிற்று,
அவர்கள் தனித்தனியே சொல்வது. ஒரு வாணாசுரனுடைய போரிலே தோற்றுப் போக்கடி அற்றவாறே இங்ஙனே வந்து விழுவர்கள்.
இராஐஸ தமஸ குணங்கள் தலை எடுத்தபோது ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்கள்;
முட்டினவாறே “கிருஷ்ண! கிருஷ்ண! உன்னைப் பிறப்பில்லாதவனாகவும் எல்லார்க்கும் மேலானவனாகவும்
புருடோத்தமனாகவும் அறிவேன்” என்று ஸ்துதி செய்யத் தொடங்குவர்கள்

க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம் அநாதி நிதனம் பரம்.-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.

போதகத் தானும் வெண் போதகத் தானும் புராந்தகனும்
தீதகத் தானது நீர் தரும் காலைத் திருவரை சேர்
பீதகத் தாய் அழகா அரு ளாய் என்பர் பின்னை என்ன
பாதகத் தான் மறந்தோ தனி நாயகம் பாலிப்பரே.– என்பது, அழகரந்தாறு, 90.

“ஓ நாதனே! அசுர சேனைகளால் வெல்லப்பட்ட எல்லாத் தேவர்களும் நமஸ்காரத்தைச் செய்கின்றவர்களாய் வந்து
உன்னைச் சரண் அடைந்தார்கள்” என்கிறபடியே
ப்ரணாம ப்ரவணா நாத தைத்ய ஸைந்ய பராஜிதா:
ஸரணம் த்வாம் அநுப்ராப்தா: ஸமஸ்தா தேவதா கணா:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 65
விஷத்தைக் கண்டத்திலே தரித்த ஆற்றலுடையவனாய் அதனாலே உலகத்திற்குப் பிரதானனாக அபிமானித்திருக்கும் சிவனும்,
அவனுக்கும் தந்தையாய் அவனிலும் ஞானத்திலும் சக்தியிலும் நிறைந்தவனான பிரமனும்,
மூன்று உலகங்கட்கும் அரசனான இந்திரனும்;
“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்பது நாராயண அநுவாகம்.
“ஸ பிரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்ர:” என்பது, நாராயணாநுவாகம், 11.
இங்ஙனே இருக்கச் செய்தேயும், அஹிர்ப்புத்ந்ய ஸம்ஹிதையிலே இவர்களுடைய வாக்கியங்களைப்
பிரமாணங்களாகக் கொண்டு போரா நின்றோமே? என்னில்‘இவர்களுடைய வாக்கியங்களை’ என்றது,
“அஹமஸ்மி அபராதாநாம் ஆலய:” என்பது போன்றவைகளை.
“சத்துவம் தலை எடுத்தபோது சொல்லுமவை எல்லாம் கொள்ளக் கடவமோம்; இவை கைக் கொண்டோம் என்னா,
இவர்கள் தாம் உத்தேஸ்யர் ஆகார்கள்;

விலையான திலை என்று நீ தந்த முத்தம்
வேய் தந்த முத்தாகில் வெற்பா வியப்பால்
இலையார் புனற்பள்ளி நாராயணன் பால்
எந்தாய்! அரங்கா! இரங்காய் எனப் போய்த்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும்
தன் தாதை அவர் தாமரைத் தாள் விளக்கும்
அலையாறு சூடும் புராணங்கள் பாடும்
ஆடும் பொடிப் பூசி ஆனந்த மாயே.–என்பது, திருவரங்கக்கலம்பகம், 61.

‘காக்கை வாயிலும் கட்டுரை கொளவர்’-பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 1.-
என்று உண்டே” என்று பட்டர் அருளிச் செய்வர்.

ஓர் ஆழ்வார்,
பிதிரு மனமில்லேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் – அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில்.-என்பது, நான்முகன் திருவந்தாதி. 84.

‘பிதிரும் மனம் இலேன் – பேதிக்கப்பட்ட நெஞ்சினையுடையேன் அல்லேன்;
பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் – சிவன் எனக்கு ஒத்தவன்;
அவன் எனக்கு நேரான் – அவனும் எனக்கு ஒத்தவன் அல்லன்; அது என்? என்னில்,
அதிரும் கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில் –
பகவத் விஷயத்தில் நெஞ்சை வைத்து அநுபவிக்கையே யாத்திரையான எனக்கு, அந்ய பரனானவன் ஒப்பாகப் போருமோ?’
‘குறை கொண்டு – தன் வெறுமையைக் கை தொடுமானமாகக் — சகாயமாகக் -.கொண்டு,-
இவர்களும் வெறுமையைக் கொண்டு — ஆகிஞ்சன்யம் –

நான்முகன் குண்டிகை நீர் பெய்து – நினைவறத் திருவடி சென்று கிட்டிற்று, உபகரணம் பெற்றிலன்,
தர்ம தேவதையானது தண்ணீராய் வந்து தங்கிற்று, அதனைக் கொண்டு,
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி – வேதாந்தங்களில் பகவானுடைய பரத்துவத்தைச் சொல்லுகின்ற
நாராயண அநுவாகம் புருஷ ஸூக்தம் -மந்திரங்களைக் கொண்டு ஸ்துதி செய்து.
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் – நான்முகன் திருவந். 9.

அடக்கமில்லாமல் செருக்குக் கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்டு தெளிப்பாரைப் போலே’.
நுண் உணர்வில்-சத்துவம் தலையெடுத்த போது சொல்லுவது இதுவே.
சத்துவ குணத்தினால் ஞானம் நன்கு உதிக்கின்றது என்பதே அன்றோ பிரமாணம்.

நீலார் கண்டத்து அம்மானும் –
விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே ஈஸ்வரனாகத் தன்னை மதித்துக் கொண்டிருக்கின்ற சிவனும்.

நிறை நான்முகனும் –
அவனுக்குந் தமப்பனாய் நிறைந்த ஞானத்தையுடையனான பிரமனும்.

இந்திரனும்-
இவர்களோடு ஒக்கப் படைத்தல் அழித்தல்களில் ஓர் இயைப் இன்றிக்கே இருக்கச் செய்தே
“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்று கொண்டு ஒக்க எண்ணலாம்படியான இந்திரனும்.

சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே –
தந்தாமுக்கு ஓர் உயர்த்தி உள்ளபோது பெண்கள் முன்னிலையில் ஓர் எளிமை தோற்ற இரார்களே அன்றோ;
ஆபத்து வந்தவாறே, மணாட்டியார் கழுத்திலும் தங்கள் கழுத்திலும் கப்படம் கட்டிக் கொண்டு வந்து விழத் தொடங்குவர்கள்.
“சிவபெருமான் இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு விஷ்ணுவைப் பார்த்து
விஷ்ணுவின் பெருமையைப் பார்வதியோடு கூடச் சொல்லுதற்கு விரும்பினான்” என்றும்,
“அஞ்சலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணு முக்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தம் ஈஸாநோ மாகாத்ம்யம் வக்துமைஹத”-என்பது, ஹரிவம்சம், 279 : 15 1/2.

“ஜகந்நாத! நாசம் அடைகின்ற எனக்குக் கிருபை செய்யும்; இந்தக் காளியன் உயிரை விடுகிறான்;
எங்களுக்குக் கணவனுடைய பிச்சையானது கொடு பட வேண்டும்” என்றும்,
“தத: குரு ஐகத்ஸ்வாமிந் ப்ரஸாதம் அவஸீதத:
பிராணாந் த்யஜதி நாகோயம் பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 7 : 57.

“நதிகளுக்குப் பதியாகிய சமுத்திரராஜன் தன்னைக் காண்பித்தான்” என்றும்,
தர்ஸயாமாஸ ச ஆத்மாநம் ஸமுத்ர: ஸரிதாம்பதி:”-என்பது, சங்க்ஷேப ராமா. 79.

“சக்கரவர்த்தியின் குமாரனே! கோபத்துக்குக் காரணம் என்ன?” என்றும் சொல்லுகிறபடியே
கிம் கோபமூலம் மநுஜேந்த்ரபுத்ர” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 40,

நீலார் கண்டத்து அம்மானும் –
விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே ஈஸ்வரனாகத் தன்னை மதித்துக் கொண்டிருக்கின்ற சிவனும்.

நிறை நான்முகனும் –
அவனுக்குந் தமப்பனாய் நிறைந்த ஞானத்தை யுடையனான பிரமனும்.

இந்திரனும்-
இவர்களோடு ஒக்கப் படைத்தல் அழித்தல்களில் ஓர் இயைப் இன்றிக்கே இருக்கச் செய்தே
“அவன் பிரமன், அவன் சிவன், அவன் இந்திரன்” என்று கொண்டு ஒக்க எண்ணலாம் படியான இந்திரனும்.
வந்து விழுவர்களே அன்றோ. அவர்களுக்கு அடையலாம்படி சுலபனாய் வந்து நிற்கிறானாதலின்,
‘திருவேங்கடத்தானே’ என்கிறார்.

மாலாய் மயக்கி –
“மயங்கல் கூடலும் கலவியும்”. ‘மாலாய்-நான் மயங்கும்படிக்குத் தகுதியாக வரவேணும் என்கிறார் என்றும்,
அன்றிக்கே,
மாலாம்படி மயக்கிக் கொண்டு வர வேணும் என்கிறார்’ என்றும் சொல்லுவர்கள்;
ஸம்ஸலேஷிக்கும் படி வர வேண்டும் -நீ வ்யாமோகத்துடன் வர வேண்டும் –
வ்யாமோஹம் என்னிடம் உண்டாக்கிக் கொண்டு வர வேண்டும் –
அவை அல்ல பொருள். மால் என்று கருமையாய், அதனால் நினைக்கிறது கிருஷ்ணனை என்கையாய்,
கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குணங்களாலும் செயல்களாலும் அந்த அவதாரத்தில் உள்ளாரைப் பிச்சு ஏற்றிக் கொண்டு
வந்தாற் போலே எனக்காகவும் ஒரு வரத்து வர வேணும் என்கிறார்;
“மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்று சொல்லுகிறபடியே.-நாய்ச்சியார் திருமொழி, 14 : 3.
மாலே செய்யும் மணாளனை – தன் வியாமோகத்தைக் காட்டி இத் தலைக்கு-வியாமோகத்தை விளைக்குமவனை.
மாலாய் – கிருஷ்ணனாய்.-
பித்தே வடிவாக உள்ள குண பூர்ணன் -மாலாக்கி சாம்யா பத்தி அளிப்பான்-

———————————————————————————————

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-

அதிசயத போக்யமான திவ்ய அவயவ சோபை -க்ஷணமும் பிரிய மாட்டேன்
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய்போல் வருவானே!-
வைகுண்டம் நுழைந்து சேவிக்க போகிறோம் -சேவை கிடைப்பது அவன் திரு உள்ளப்படியே தானே –
அனாசரிதற்கு கை புகாமல் -ஆஸ்ரித விஷயத்தில் ஆகிஞ்சன்யம் காட்டி அதற்காகவே வந்து -இஷ்ட விநியோக அர்ஹமாம் படி –
மாலாகாரர்-கையாளாக இருக்கும் குறும்பு அறுத்த நம்பி –
இப்படி தான் நடப்பான் என்று கணிக்க முடியாத வியக்தி –
செந்தாமரைக்கட் செங்கனிவாய் நாற்றோ ளமுதே! எனதுயிரே!-சிவந்த தாமரை -ஜிதம் என்னும் படி பண்ணும்
கனி போன்ற மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சொல்லும் திரு ஆதாரம்
ஆஸ்ரிதரை எடுத்து அணைக்கும் திருவடி அக்ரூரர் விதுரர் அணைத்த
நித்ய போக்யமான இருப்பை பிரகாசிப்பித்து தாரகன்
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திரு வேங்கடத்தானே!-ரத்னம் ஒளிகள்-இரவைப் பகல் ஆக்கி -இன்றும் காணலாம் –
அல்லும் இரவை -சந்நிஹிதன் ஆனவன்
அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே-நிரதிசய போக்யன் -அநந்ய ரக்ஷன் நான் அத்யந்த பரதந்த்ரன்
இறையும் அகல ஷமன் அல்லேன் ஆர்த்திக்கு மேலே அபேக்ஷிக்கவும் வேண்டுமோ -அந்தோ
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -இஷ்டம் கொடுப்பது என்றும் சித்தம் -அநிஷ்டம் தடையாய் இருந்ததே —

வந்தவனைப் போன்றிருந்து வாராமல் இருப்பவனே! வாராதவனைப் போன்றிருந்து வருகின்றவனே! செய்தாமரைமலர் போன்ற திருக்கண்களையும்
சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயினையும் நான்கு திருத்தோள்களையுமுடைய அமுதம் போன்றவனே! என் உயிரானவனே!
சிந்தாமணி என்னும் இரத்தினங்களின் ஒளியானது இருட்டினை நீக்கிப் பகலாகச் செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!
ஐயோ! அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சிறிது பொழுதும் நீங்கமாட்டுகின்றிலேன்.
சிந்தாமணி – ஒருவகை இரத்தினம். பகர் – ஒளி. அல் – இருள். இறையும் அகலகில்லேன் என்க. இறை – சிறிதுபொழுது.

தாம் விரும்பிய போதே காணப் பெறாமையாலே இப்போதே
உன்னைக் காணா விடில் தரிக்க மாட்டேன் என்கிறார்.

வந்தாய் போலே வாராதாய் –
மானச அநுபவத்தில் உண்டான கரை புரட்சி தான் ‘புறத்திலே கலவியும் பெற்றோம்’ என்று கொண்டு
மன நிறைவு பிறக்கும்படியாய்,
அதனை ‘மெய்’ என்று அணைக்கக் கணிசித்தால் கைக்கு எட்டாதபடியாயிருக்கை.

வாராதாய் போல் வருவானே –
ஒரு நாளும் கிட்ட மாட்டோம் என்று இருக்கச் செய்தே கடுகக் கைப் புகுந்து கொடு நிற்கும் என்கை.
அன்றிக்கே,
அடியர் அல்லாதார் திறத்தில் ‘கைப் புகுந்தான்’ என்று தோற்றி இருக்கச் செய்தே புறம்பாய்,
அடியார்கட்கு ‘இவன் கிட்ட அரியன்’ என்று இருக்கச் செய்தே உட் புகுந்து இருக்கும் படியைச் சொல்லிற்றாகவுமாம்.

செந்தாமரைக் கண் செம்கனி வாய் நால் தோள். அமுதே –
தாபங்கள் எல்லாம் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களை யுடையவனுமாய்,
சிவந்த கனிந்திருந்துள்ள திருவதரத்தை யுடையனுமாய்,
கல்பக தரு பணைத்தாற்போலே இருக்கிற நான்கு திருத் தோள்களை யுடையனுமாய்
இனியனு மானவனே!

எனது உயிரே –
இந்த வடிவழகை என்னை அநுபவிப்பித்து, பிரிந்த நிலையில் நான் உளன் ஆகாதபடி செய்தவனே!

சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே –
விலக்ஷணமான இரத்தினங்களினுடைய ஒளியானது அல்லைப் பகல் செய்யா நின்றதாயிற்று; என்றது,
இரவு பகல் என்ற வேறுபாட்டினை அறுத்துக் கொண்டிருக்கையைத் தெரிவித்தபடி.
“மணிகளின் ஒளியால் விடி பகல் இரவு என்றறிவரிதாய” – பெரியதிருமொழி, 4. 10 : 8.-என்னக் கடவதன்றோ.
இதனால் நினைக்கிறது, “அந்த விண்ணுலகில் காலமானது ஆட்சி புரிவதாய் இல்லை”
“ந கால: தத்ரவை ப்ரபு:”-எனகிற தேசத்தே சென்று அநுபவிக்கும் அநுபவத்தை இங்கே அநுபவிக்கக் காணும் நினைவு.

அந்தோ –
போக்கியமும் குறைவற்று, அவன் தானும் அண்மையனாய், எனக்கு ஆசையும் மிகுத்திருக்க,
கிட்டி அநுபவிக்கப் பெறாது ஒழிவதே என்கிறார்.

அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே –
என் ஸ்வரூபத்தைப் பார்த்து என் நிலையைப் புத்தி பண்ணாய்.
காணா நிற்கச் செய்தே, அது வளர்வதற்குக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன்.

———————————————————————————————

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

த்வயம் -குறைகளும் இல்லா சீர்மை -இரண்டு பதிகம் -இரண்டு பாசுரம் ஆண்டாள் -திருமாலை ஒரே பாசுரம் –
ஏகாந்தம் புருஷகார யோகம் -குண யோகம் -ஆஸ்ரய ணீயத்துக்கு -இவை இரண்டும் வேண்டும்
அநந்ய கதி முன்னிட்டு -ச க்ரமமாக சரணாகதி அனுஷ்டிக்கிறார்
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!-பிரபா -பிரபாவான் -பிரியாதா போலே ஸ்வரூப சம்பந்தம்
போக்யதையாலும் -க்ஷணம் மாத்ரமும்-விஸ்லேஷிக்க -மணம் அழகு மார்த்தவ போக்யத்வம் உடைய பருவம் -மங்கை -வாலப்யாதி சாயம் -ஹரி வல்லபா –
தான் ஆபி ஜாதியமும் -சிறந்த ஆத்ம குணம் -ஆபி ரூப்யம் கிடக்கச் செய்தேயும் -ஸ்ரீ பீடம் ருக் வேதம் -ஏக தேசம் –
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!-இவளோட்டை சேர்த்தி அடியாக உதிக்கக் காட்டுவதாய் -ஸ்வாதந்தர்யம் விலக்கி
நிரவதிக வாத்சல்ய பிரபையை-ஆஸ்ரித தோஷம் பார்க்காமல் -குணாந்தரங்களில் சேர்க்க முடியாத புகழாய்-
சப்தமே இல்லாமல் -தப்பாக பாடினாலும் குணமாக்க கொள்ளும் ஸ்வ பாவந் என்று காட்ட –
ஸ்வாமி சொத்தை காக்க -பிராமண பிரசித்தமான த்ரிவித சேதன அசேதனங்கள் உலகம் மூன்று உடையாய்
மேன்மை மட்டும் இல்லாமல் அத்யந்த நீசனான -ஹேயனான என்னையும் ஸுசீல்யம் -அங்கீ கரித்து-சீலத்துடன் காணும் படி ஸுலப்யம் –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!-ஞானம் பிரேமம்-இவற்றுக்கு நிகர் இல்லாத கைங்கர்ய நிஷ்டர்
குண நிஷ்டர் -மனன சீலர் -அபிநிவேசம் -வாத்சல்யாதி குணங்களை அனுபவிக்கும் விருப்பம்
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.-உபாயாந்தரங்கள் -ரக்ஷகாந்தரங்கள் -ஒன்றும் இல்லா –
அநந்ய சரண்யன் பரதந்தர்யன் -கீழ் யுக்தமான புருஷகார குண யோகங்கள் உடன் உடைய உன்னுடைய திருவடிகளின் கீழே
ரேகாவத் -பாத ரேகை போலே அந்தர் கதையாய் -அடிக்கீழ் -அநந்ய பிரயோஜனத்வ விவசாய விசிஷ்டானாய் ஆஸ்ரயித்து விட்டேன் –

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி:
தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்
திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள்,
சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று,
அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

அகலகில்லேன் -இறையும்– ஸ்ரீ சப்தம் -சேவாகரண -நித்ய அநபாயத்வம்
சேவ்யத்தைக்கு யோக்யதையான மார்த்தவாதி யோகம் -அலர் மேல் மங்கை
மங்கை -சேவாகரண அடியான வாலப்யம்
உறை மார்பா -மதுவின் அர்த்தம் நித்ய யோகம்
நிகரில் புகழாய் தொடங்கி –மாதா பிதா –நிவாஸா நாராயண சப்தார்த்தம் ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் -நாரா சப்தார்த்தம்
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் ஸுலப்யம் ஸுசீல்யம்
புகல் ஒன்று இல்லா -அதிகாரி விசேஷணம் ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் –
அடியேன் -பிரபத்யே -கிரியா பதம் உத்தமன் -பற்றுகிறேன்-அஹம் நான் அடியேன் ஆனேன் என்பதே சரணாகதன்
அடிமைத்தனம் அறிந்து புகுந்தேன் –

உன் அடிக்கீழ் -த்வயத்தில் இல்லையே -தவ -இதம் அஷ்ட பதம் -ஸ்ரீ மன் நாராயண -பிரித்து பார்த்து 8 பதங்கள் –
முன் வைத்து சம்போதானம் -தவ சப்தம் சேர்த்து
இங்கே சம்போதானம் சம்புத்யர்த்த யோஜனம் –
அடிக்கீழ் என்கையால் சரண சப்தார்த்தம் –
அமர்ந்து -கிரியா பதத்தில் உபாய உபேய அத்யாவசிய -உறுதி -உபசர்க்கம் பதயே -நிரம்ப பிடித்தேன் பிரபத்யே
புகுந்தேன் கிரியா ரூபம் பதயே -ஆச்ரயணம்
இறந்த காலம் -பூதார்த்த நிர்தேசம் -பிரபத்யே நிகழ் காலம்
ஸக்ருத் உச்சாரண பவத்
சம்சார பயத்தால் பூர்வ பிரபத்யே நினைக்க வேண்டும் என்று அர்த்தம் இழுத்து சொல்ல வேண்டாமே
பரம போக்கியத்துக்காக சொல்வேன் அனுஷ்டானாமாக இல்லை –

பூர்ண சரணாகதி -உத்தர வாக்யார்த்தம்
லஷ்மீ சம்பந்தம் குண யோகம் பிராப்ய அன்வயமாய் இருக்கையாலும் –
ஸ்ரீ மதே நாராயண -சப்தார்த்தம் -கைங்கர்யம் ஏற்றுக் கொள்ளவும் -ஆஸ்ரித கார்ய ஆபாதகம் குணங்கள்
அடியேன் -அநந்யார்ஹன் -சேஷன் அநந்ய சரண்யன் அநந்ய போக்யன் -சித்திக்கும் -ஆய அர்த்தம்
அமர்ந்து பிரயோஜன நாந்தரம் இல்லாமை —நிராசம் ஸூசிதம்
புகுந்தேன் -கதி வசனம் -பிராப்தி -அடைந்தேன் -மன விருப்பம் அடைந்தேன் -கதி -புருஷார்த்தமாக அடைந்தேன் -பிராப்திக்கும் ஸூசகம்
பிராதான உபாய வாக்யம் – வாக்ய சேஷ உத்தர வாக்கியமும் அந்தரகதம்
வாக்ய த்வயார்த்தம் பூர்ண சரணாகதி -ச பிரகாரமாக லஷ்மீ குண விசிஷ்டமாக ஸ்வீகரித்து அருளுகிறார் –

சிறிது நேரமும் விட்டுப் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவனே! ஒப்பில்லாத புகழையுடையவனே!
மூன்று உலகங்களையுமுடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்தியசூரிகளும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! வேறுகதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன் என்கிறார்.
அலர்மேல் மங்கை இறையும் அகலகில்லேன் என்று உறை மார்பா என்க.
அலர்மேல் மங்கை – தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியார். அமரர் – தேவர்களுமாம்.

தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப் பாசுரங்களாலும் சரண்யனான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தைச் சொன்னார்.
இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லிச் சரண் புகுகிறார்.
மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். -அசரண்ய சரண்யன் என்பதால் சொல்லி-
இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார். -புனருக்தி தோஷம் இல்லை –
பேற்றுக்கு உடல் -வெறுமை ஸ்வரூபம் -இரண்டும் பிரபத்திக்கு பரிகரம்–
வெறுமையும் ஸ்வரூபமும் -ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் – பிரபதிக்கு பரிகாரம் அன்றோ

இத் திருப்பாசுரத்தை, துவயத்தில் பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக் கட்டக் கடவது.

இத் திருப்பாசுரத்திற் சொல்லப்படுகிற சரணாகதியினுடைய சீர்மையை அருளிச் செய்கிறார்
‘இத்திருப்பாசுரத்தை’ என்று தொடங்கி. என்றது,
“அலர்மேல்மங்கை” என்கையாலே, “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும்,
(போக்யத்வம் மார்த்வம் வாலப்யம் மூன்றும் கீழே பார்த்தோம் இதுக்கு )
“அகலகில்லேன்” என்கையாலே, “மத்” என்ற சொல்லின் பொருளும்,(பிரிய மாட்டாள்)
“உறை மார்பா” என்கையாலே, நித்திய யோகமும்,
(பிரியாமல் இருப்பதும் நித்ய யோகமும் கொஞ்சம் வாசி –
கோயிலே கதி என்றால் -கோயில் சாத்தின பின்பு -இருக்க முடியாதே –
சரணாகதி பலித்தே தீரும் -பிராட்டி இருந்தால் தான் பலிக்கும் –
எப்பொழுதும் பண்ணலாம் என்றால் நித்ய யோகம் இருக்க வேண்டுமே )

“நிகரில் புகழாய்”என்றது முதல் “திருவேங்கடத்தானே” என்றது முடிய “நாராயண”என்ற சொல்லின் பொருளும்,
(வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஸுசீல்யம் ஸுலப்யம் )
“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
“உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,
“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.
இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.

இனி த்வயத்தை விட இங்கு ஏற்றம்
அதில் அர்த்தத்தால் போதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின் பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.-
பிரபத்யே -ஆர்த்தமாக அங்கு –
அடியேன் -த்வயத்துக்கு அடையாளம் சொல்லும் ஸ்லோகத்தில் உண்டே -லக்ஷணம் ஸ்லோகம் –
அஹம் அஸ்மி அபராத ஆலய அகிஞ்சனன் அகதி த்வயமேய உபாய பூத பிரார்த்தனா மதி சரணாகதி –
(த்வயத்துக்கு லக்ஷணம் சொல்லும் இந்த வாக்கியத்தில் இருப்பதால் இது இங்கு தானாகேவே சொல்லவில்லை -)

அகலகில்லேன் இறையும் என்று –
இது, அகன்று இருந்து சொல்லுகிற பாசுரமும் அன்று; எப்பொழுதும் கூடியிருக்கச் செய்தே யாயிற்று
‘இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்’ என்று உரைப்பது.
நித்தியாநுபவம் பண்ணுவார்க்கு எல்லாம் பாசுரம் இதுவே. ‘நித்தியாநுபவம் பண்ணுவார்க்கெல்லாம்’ என்றது,
“நச அஹம்அபி ராகவ – இராகவனே!உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
நாட்டாருடைய அகலகில்லேன் போல் அன்று, இவளுடைய அகலகில்லேன்; அது கர்மங் காரணமாக வருவது;
இது விஷயங் காரணமாக விளையுமது.

அலர்மேல்மங்கை –
அவனை, “பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்க மாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள்
“ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.-ஸ்ரீராமபிரான் கூறியது.
பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை.

உறை மார்பா –
இதனால், நித்திய யோகம் சொல்லுகிறது.
எனக்கு ஒருகாலம் பார்த்துச் சரணம் புக வேண்டும் படியாயோ இருக்கிறது? என்றது,
இத் தலையில் குற்றங்களையும் ஈஸ்வரனுடைய ஸ்வாதந்திரியத்தையும் நினைத்துப் பிற்காலிக்க
வேண்டாதபடி யாயிருக்கையைத் தெரிவித்தபடி.

“ஒருநாள் பட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச் செய்கைக்காக ‘எல்லாரும் செல்லுங்கோள்’ என்ன,
அஷட் கரணமாக சொல்ல வேண்டுமே -மூன்றாம் ஆள் கேட்க்க கூடாதே —
நஞ்சீயரும் எழுந்து சென்றுபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச்செய்திலர்’ என்று வெறுத்திருக்க,
அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து
துவயத்தை அருளிச் செய்கையில் அருளிச் செய்த வார்த்தை” என்று சீயர் அருளிச் செய்வர்.

“இந்த ஆத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி சம்பந்தத்தால் செய்கிறது என்?” என்று கேட்க
“அது இருக்கிறபடி கேளீர், இராவணனுக்கும் காகத்துக்கும் சம்பந்தமும் செயலும் ஒத்திருக்க,
இனி, இராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே இருப்பது ஒன்று உண்டே அன்றோ;
அங்ஙன் அன்றிக்கே, தாய் பக்கல் குற்றத்தில் கைதொடனாயிருக்கத் தலை கொண்டு தப்பினான் அன்றோ, அவள் சந்நிதி உண்டாகையாலே.
அவள் கடக்க இருக்கையாலே இராவணன் தலை அறுப்புண்டான்.”
போக்கு அற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை அவனுக்கும் ஒக்கும் அன்றோ;
(கையில் வில் நழுவி போக்கற்று நின்ற நிலையே சரணாகதி தானே )
இங்ஙனே இருக்கச் செய்தேயும் காரியகரமாயிற்றது இல்லை அன்றோ, அவனுக்குப் பிராட்டி சந்நிதி இல்லாமையாலே.
இனித்தான், தாயும் தந்தையுமானால் தந்தையைப்போல் அன்றே, மக்கள் பக்கல் தாய் இருக்கும்படி;
இவன் செய்த குறைகளைத் தான் காணாக் கண் இட்டிருக்கை அன்றிக்கே,
தந்தையிடத்தும் மறைத்துக் காட்டுவாள் ஒருத்தி அன்றோ.

ஆகையால் அன்றோ துவயத்தில் பின்பகுதியில் அவனோடு ஒப்புச் சொல்லி,
முன்பகுதியில், புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றம் சொல்லுகிறது.
தொட்டாரைத்தொட்டு “குற்றம் செய்யாதார் யாவர்” என்னக் கடவ இவள்,
“நகஸ்சிந் ந அபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44.-‘நம்மை ஒரு காரியத்தில் ஏவுவது காண்’ என்று
காலத்தை எதிர்நோக்கி இருக்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ. தன் வார்த்தை கேளாதார்க்கும் கூட
“ஆடவர்களுள் ஏறு போன்றவரான இந்த இராமபிரான், இராச்சியத்தை விரும்புகிறவனாயிருக்கிற உன்னால்
சிநேகிதராகச் செய்து கோடற்குத் தக்கவர்” என்னக்கடவ இவள்,
தன் முகம் பார்த்து வார்த்தை கேட்குமவனைப் பெற்றால் விடாளே அன்றோ

“மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்ராம: ஸ்தாநம் பரீப்ஸதா
வதம்ச அநிச்சதா கோரம் த்வயாஅஸௌ புருஷர்ஷப:”என்பது, ராமா. சுந். 21 : 19.3
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ.
என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித் தர வேணும்’ என்ன,
‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி.
ஈண்டு, “தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.
“துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில்,
திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

நிகரில் புகழாய்-
அதற்கு அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது.
தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் ‘என்னடியார் அது செய்யார்’ பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2.
என்னும் குணாதிக்கியம் சொல்லுகிறது.

உலகம் மூன்றுடையாய் –
தான் குணங்கள் இல்லாதவனேயானாலும் விட ஒண்ணாத -பிராப்தி -சம்பந்தம் -ஸ்வாமித்வம் – சொல்லுகிறது.

என்னை ஆள்வானே –
சம்பந்தத்தைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும்படி.
மோக்ஷத்தளவும் செல்ல நடத்திக்கொடு போந்து நடுவுள்ள அபேக்ஷிதத்தைக் கொடுக்கின்றவனாதல் அன்றோ ஆளுகின்றவனாவது.
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி / ஸ்ரீ ரெங்க நாத மம நாத –

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே –
அப்பதத்தில் முடிகிற சௌலப்யம் சொல்லுகிறது.
நிகரில் புகழாய் வாத்சல்யம் – -உலகம் மூன்று உடையாய் சௌசீல்யம் -என்னை ஆள்வானே -சௌலப்யம்
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – என்றவாறு
சௌலப்யம் சொல்லுகிறது.

புகல் ஒன்று இல்லா அடியேன் –
ஆகிஞ்சந்யமும் ஸ்வரூபமும் சரணாகதிக்குப் பரிகரங்களே அன்றோ.-
ஸ்வரூபம் சேஷி சேஷி பாவ ஞானம் அடியாக வரும் அநந்ய கதித்வம்
உன்னடிக்கீழ் – “சரணௌ” என்ற பதத்தின் பொருள்.
அமர்ந்து – நடு ஓர் இடையீடு இன்றிக்கே இருக்கை.-
இடைச்சுவர் பற்றுதல் உபாயம் ஸ்வீகாரம் உபாயம் என்ற புத்தி தவிர வேண்டுமே –

புகுந்தேனே –
இந்த உறுதியும் — உபாய பாவத்தில் சேராமையாலும்,– செய்ந்நன்றி யறிதல் ஸ்வரூபமாகையாலும்,
பற்றுதலும் அறிவினைப் பற்றிய செயலாகையாலும்,–
இவை எல்லாம் அதிகாரிக்கு விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன அன்றோ. –
இவையெல்லாம் துவயத்தில் முடிகிற பதத்தோடே சேரக் கடவனவாம்.

இனி வியாக்யானம் அருளிச் செய்கிறார் இவற்றுக்கே –
அகலகில்லேன். . . . . . .புகுந்தேன் – இதில் உபாயத் தன்மை சொல்லச் செய்தே,
உபேய விஷயமும் ஸூசகமுமாயிருக்கிறது.
அதாகிறபடி எங்ஙனே? என்னில்,
இருவருமான சேர்த்தியிலே அன்றோ ஒருவன் அடிமை செய்வது;
அச் சேர்த்தி தன்னையே அன்றோ உபாயமாகப் பற்றுகிறதும். இத்தால் சொல்லிற்றாகிறது, நித்தியப் பிராப்யத்வம் அன்றோ.
நித்யாபூர்வ விஷயமன்றோ நித்தியப் பிராப்யமாக வல்லது.
அகலகில்லேன் இறையும் என்று-இது அகன்று இருந்து சொல்லுகிற வார்த்தை அன்று.
தனக்கு அகலுகைக்குக் காரணம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும், அங்குத்தை இனிமையை நினைத்து,
கணநேரமும் நான் அகலுகைக்குச் சக்தியுடையவள் ஆகிறிலேன் என்னும்.
“வேறாகாதவள்” என்றும், “பிரியாதவள்” என்றும் சொல்லா நிற்கச் செய்தே சொல்லுகிற வார்த்தை அன்றோ இது;
“அநந்யா” என்பது ஸ்ரீராமா. சுந். 21 : 15. “அநபாயிநீ”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 8 : 17.

கணநேரமும் பிரியச் சக்தியுடையயேனல்லேன் என்று.
அலர்மேல் மங்கை – இங்ஙன் சொல்லுகிறவள் ஆர்? என்னில்,
தன் வடிவழகாலும் பருவத்தாலும் அவன் தனக்குங்கூட உத்தேசியமாயிருக்கிறவள். என்றது,
அவனை, “பிரிவில் கணநேரமும் பிழைத்திருக்கமாட்டேன்”
“ந ஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.என்னப் பண்ணுமவள் என்றபடி.
உலகத்தார் அகலகில்லேன் என்பது போன்றதன்றே இவளுடைய அகலகில்லேன்;
அது கர்மங் காரணமாக வரும் அகலுதலேயன்றோ,
இவளுக்கு அது இல்லாமையாலும், அவன்தான் மேல்விழும் சுபாவன் ஆகையாலும்,
அவனால் வரும் பிரிவும் இல்லை; தன்னால் வரும் பிரிவும் இல்லை;
ஆனால், இந்த வார்த்தை சொல்லுவதற்குக் காரணம் என்? என்னில்,
அவனாகையாலே வந்தது; உலகத்தாருடைய பிரார்த்தனை கர்மம் அடியாக வருமது;
இவளுடைய பிரார்த்தனை விஷயத்திற்குக் கட்டுப்பட்டதாக விளையுமது.

உறை மார்பா –
முதற்பதத்தில் மதுப்பால் சொல்லுகிற நித்திய யோகத்தைச் சொல்லுகின்றது;
இதுவும் இங்ஙனே பலிக்கக் கண்டோமித்தனை. இச் சேர்த்திக்குப் பயன், அவனுடைய ஸ்வாதந்திரியத்தை யாதல்,
தான் பிறவிப்பெருங்கடலில் பிறந்து உழன்று திரிந்து வருதலையாதல் நினைத்துக் கைவாங்க வேண்டாத படியாயிருக்கை. என்றது,
அவனுடைய முற்றறிவினையும் தன்னுடைய குற்றமுடைமையையும் நினைத்து அஞ்ச வேண்டாத படியாயிருக்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, இவனுடைய அபாரதகாலம் பார்த்து இருந்து எண்ணுவதற்கு அவனுக்குக் காலம் இல்லை, அவள் கூட இருக்கையாலே என்றபடி.

பிராட்டி பக்கல் அபராதம், காகத்துக்கும் இராவணனுக்கும் ஒத்திருக்கச் செய்தேயும், இவள் சந்நிதியாலே தலைபெற்றது காகம்;
அத்தனை அபராதம் இன்றியிலே இருக்க, இராவணன் தலை அறுப்புண்டான் அன்றோ இவள் சந்நிதி இல்லாமையாலே.
இத்தனை உண்டே அன்றோ இவள் அருஇல் இருப்பதற்கும் அருகில் இராமைக்கும் வாசி.
தமப்பன் பகையாக, தாய் அருகில் குழந்தையை அழியச் செய்ய மாட்டாமையும் ஒன்று உண்டே.
அவன் செய்த குற்றத்திற்குப் பிரஹ்மாஸ்திரத்தை விட்டு, அது தொடர்ந்து கெரண்டு திரிந்தவாறே புகல் அற்று விழ,
இவளை நோக்கி, பிரஹ்மாஸ்திரத்திற்கு ஒரு கண்ணழிவு சொல்லிவிட்டான் அத்தனை அன்றோ.

“அந்தக் காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும் நன்றாகத் திரிந்து
அந்தப் பெருமாளையே சரணமாக அடைந்தான்” என்றதுவும்,
“நான் வணங்கேன்” என்றதுவும் இரண்டும் பயன் அற்றவை. அது என்? என்னில்,
காகத்துக்கும் போகிற போது மனத்தில் நினைவு அதுவே அன்றோ. அங்ஙன் அன்றாகில்,
“காகோ ஜகாம ஸ்வகமாலயம்”என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 32.
“தன் இருப்பிடத்தை அடைந்தான்” என்கிறபடியே, போகப் பாரானே;
செயல் மாட்சியாலே விழுந்ததித்தனை அன்றோ இது இராவணனுக்கும் உண்டாயிருக்கச் செய்தே காரியமாயிற்றது இல்லை அன்றோ,
இவள் அருகில் இராமையாலே. மேலே கூறிய அர்த்த விசேடங்கள் எல்லாம் துவயத்தில் முதற்பதத்தோடே அற்றது.

“ஸபித்ரா ச பரித்யக்த: ஸுரைஸ்ச ஸமஹர்ஷிபி:த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம்கத:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 33.
“த்விதா பஜ்யேயம் அபி ஏவம் நநமேயம்து கஸ்யசித்ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:”என்பது, ஸ்ரீராமா. யுத். 36 : 11

இனி, ‘நிகரில்’ என்று தொடங்கி ‘திருவேங்கடத்தானே” என்னுமளவும் வர, துவயத்தின் அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது.
நிகரில் புகழாய் – இப்படி இருக்கிறவள் தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது,
‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப் பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி.
‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக் கண்டேன்’ என்று காட்டிக் கொடுத்தாலும்,
‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ?
தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை.
இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்;
அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது.
இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.

இத்தால் சொல்லிற்றாயிற்று, இவள் அவனுடைய ஸ்வாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும்,
அவன் இவளுடைய மிருதுத் தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

உலகம் மூன்றுடையாய் –
தான் குணங்கள் இல்லாதவனாயினும் விட ஒண்ணாத சம்பந்தத்தைச் சொல்லுகிறது.-பிராப்தி
“சிதகு உரைக்கு மேல்” என்ற இடத்தில், அவளுக்குச் ஸ்வரூபத்திற்குத் தகுதியான குணங்கள்
இல்லாத காலத்திலே அன்றோ அவள் அது சொல்லுவது;
ஸ்வரூப அனுரூப குணம் கிருபா -அப்படியே இவனுக்கும் இக் குணங்கள் இன்றிக்கே இருந்தாலும்
விட ஒண்ணாத குடல் தொடக்கைச் சொல்லுகிறது.
அசம்பாவிதம் ஆரோபித்து சொல்லுதல் -நடக்காததை-
அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரை கட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது.
இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விட ஒண்ணாது என்கிறார்

‘அவன் அல்லேன்’ என்று தொடங்கி. ‘செற்கற்சீரை கட்டி வளைக்கலாம்படி’ என்றது,
காஷாய வஸ்த்திரத்தை உடுத்து இரப்பதற்குப் புகுகிறேன் என்று கூறி வளைக்கலாம்படி என்றபடி.

இனி, இவன் தான் யாதாயினும் ஒரு காலத்து வணங்குதலைச் செய்து, பின்பு கைகழியப் போகப் பார்க்கிலும்,
காலிலே விலங்கைத் தைத்துக் காரியம் கொள்ளலாம்படியான உரிமை சொல்லுகிறது மேல்;

என்னை ஆள்வானே –
அடிமையைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும்படி. என்றது,
‘அடிமையின் பொதுமையைப் பற்றிச் சொல்லுகிறீராகில் அவ்வளவே அன்றோ உமக்கும்’ என்ன ஒண்ணாதபடி,
என்னை மயர்வற மதிநலம் அருளி, இவ்வளவும் வர நிறுத்திப் பொகடப் போமோ? என்கிறார் என்றபடி.

மண்ணோர் விண்ணோர் வைப்பில் ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் –

நிகர் இல் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே –
அங்குள்ளாரும் விரும்பி வந்து அடிமை செய்கிறதும் இங்கே அன்றோ.
“வைகுந்தத்தமரரும் முனிவரும்” திருவாய். 10. 9 : 9.என்று இரண்டு கோடியாயன்றோ இருப்பது;
குண நிஷ்டரும் கைங்கரிய நிஷடரும்.

திருவேங்கடத்தானே –
அதற்கு முடிந்த பொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குண யோகமும், சேஷித்வமும், விசேஷ கடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும் இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலை பெற்றிருக்கின்றான்
என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. –
அந்தர்யாமித்வ ஸுலப்யம் -சதா சன்னிஹித ஆகாரம் அர்ச்சையிலும் உண்டே
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.

இந்தச் சௌலப்யம் உபாயமாகிறபடி எங்ஙனே? என்னில், “மாமேகம் – என்னையே” என்ற இடத்தில்,
சாரதியாயிருக்கும் வேடத்தை அன்றோ காட்டுகிறது. இன்னமும் அவ்வளவு அன்றே இங்கு.
அதற்கு முன்பும் பின்பும் இல்லை அன்றோ அந்தச் சௌலப்யந்தான்.
எப்பொழுதும் நிலைபெற்று இருக்கிற இடம் அன்றோ இவ்விடம்.
(முன்பும் பின்னும் -வாயுள் வையகம் கண்டா பரத்வம் –
பின்பு யாதவர் அனைவரையும் அழித்த இடத்தில் ஸுலப்யம் இல்லையே -என்றும் உண்டே )

அங்குத்தானும்
“பார்த்தனே! என்னிடத்தில் வைத்த மனத்தினை யுடையையாய்” என்று ஒரு தேவை இட்டன்றோ சொல்லிற்று.
அதுவும் இல்லை அன்றோ இங்கு.

இனித் தம் படி சொல்லுகிறார்:
புகல் ஒன்று இல்லா அடியேன் – மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய
சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச் சொல்லிக் கொடு போந்தார்.
இனித்தான், வெறுமையும், ஸ்வரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின்,
அவற்றை இங்கேயும் அருளிச் செய்கிறார்; அவற்றைச் சரணாகதிக்கு அங்கமாகச் சொல்ல வேணுமன்றோ.
அவற்றை இங்கே சொல்ல வேண்டுகிறது என்? என்னில்,
அவனுக்கு உபாயத் தன்மை ஸ்வரூபமானதைப் போன்று.
இவனுக்கும் இந்த நினைவு ஸ்வரூபமாகையாலே.
இவனுக்கு இது இல்லாதபோது சர்வ முக்தி பிரசங்கமாமே.

அடியேன் – துவயத்தில் “பிரபத்யே” என்ற சொல்லில் பொருளாலே கிடைத்த ‘அஹம்’ என்னும் சொல்லை,
இங்கு ‘அடியேன்’ என்ற சொல்லாலே சொன்னதுவே வாசி.
உன்னடிக் கீழ் – “சரணௌ” என்றது தன்னையே சொல்லுகிறது.
அவர், “தமையனாருடைய திருவடிகளை” என்றாற்போலே சொல்லக் கடவதன்றோ.

அமர்ந்து புகுந்தேனே –
“முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே.
அவனுக்கு ஒரு -ஸஹ காரி -துணை வேண்டுதல்,
தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ
நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார்,
(இடையூறும் கால விளம்பமும் இல்லையே -பக்தி யோகம் இல்லையே )

புகுந்தேன் –
போன எல்லை அளவு மன்றோ புகுருவதும்; முன்பும் அர்த்தத்தில் இழவு இல்லை அன்றோ.
இவனுடைய மாறான உணர்வு அன்றோ உள்ளது; அது போமித்தனை அன்றோ வேண்டுவது. அறுதியிட்டேன் என்கிறார்.
(சர்வ சரீரீ அன்றோ -வெட்டி போகவே இல்லையே -பிரிந்து மீளவும் கூடுகை அசம்பாவிதம்
நினைவு -விபரீத பிரதிபத்தி போய் யதார்த்த பிரதிபத்தி வந்தால் சொல்லலாமே )

துவயத்தில் உள்ள “பிரபத்யே” என்ற நிகழ்காலம், நினைவின் தொடர்ச்சி போல் அன்று;
துவயத்தில் “பிரபத்யே – அடைகிறேன்” என்று நிகழ் காலமாக இருக்க,
இங்கு, “புகுந்தேன்” என்று இறந்த காலமாகச் சொல்லுவான் என்? என்ன,
அது போக்கிய புத்தியாய்ச் சொல்லுகிறதித்தனை;
உபாயத்துக்கு ஒரு முறையே அமையும் என்று அதற்கு விடை அருளிச் செய்கிறார்‘துவயத்தில்’ என்று தொடங்கி.
என்றது, நினைவின் தொடர்ச்சி போன்று, சாதனமாகச் சொல்லப்பட்டதன்று;
இனிமையாலே நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது அங்கு என்றபடி.
இவர் “ஸக்ருத்கர்த்த: ஸாஸ்த்தார்த்த: –
ஒருவன் பிரபத்தியை ஒரு முறையே செய்ய வேண்டும்” என்கையாலே,இறந்த காலமாகச் சொன்னார் என்றபடி.
‘சாஸ்திரார்த்தம்’ என்றது,பிரபத்தியை.

முமுஷு சரணம் ப்ரபத்யே
வதம் பண்ணுவானாய் இருந்தாலும் ப்ரபன்னனை ரஷித்தே விட வேண்டும்
தேவா த்வஷ்டா பிரார்த்திக்க -கொல்லாமல் விட்டார்கள்
ஓம் இது ஆத்மாநாம் யூஞ்சீத
தியாகத்தால் முக்தி அம்ருதம்
நியாசமே –12 தபசுக்களிலே அதி ரிக்தம்
ஸக்ருத் ஏவ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
பிராணாயாமம் பண்ணவே விருப்பம் -அதுவே சரணாகதி
கோவிந்தம் புண்டரீகாக்ஷம் ரக்ஷமாம் சரணம் கதாம்
புருஷ ரிஷபன் -சரணம்-செய்ய உபதேசிக்க -நமஸ்காரம்
பஃதாஞ்சலி ஸ்புடம் தீனம்
கடவல்லியிலும் உண்டே

அதிகார சங்க்ரஹத்தில் –தூப்புல் பிள்ளை -ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ரகஸ்ய த்ரய சாரம் -தொடக்கத்தில் –
ஆகர்ணித்தோ-க்ருதக்ருத்யர்த்தர் ஆக்கும் கேட்டவர்களை-ஆம்ரேடிதம் -திரும்ப சொல்லி போக்யதா புத்தி
பிரத்யூஷா விடியல் காலைக்கு தள்ளி -பத்மா ஸஹாய சரணாய மந்த்ரம் –
தர்க்கம் அப்ரதிஷ்டா -ஸ்ருதியோ வி பின்னம் –தர்மஸ்ய தத்வம் விகிதம் குஹாயம் -மகா ஜனோ –
வேத வித்துக்கள் அனுஷ்டானம் போதுமே -ஆழ்வார்

ருசி காரியமாய் வருகையாலே பேற்றினை அடையுமளவும் நிற்பது ஒன்றாம் எல்லாச் சாஸ்த்திரங்களிலும் பரந்திருப்பது ஒன்றாய்,
இஸ் சாஸ்த்திரங்களுக்கெல்லாம் அடியான வேதாந்தங்களுக்குக் கிழங்காய்,கிழங்காய் – சாரமாய்.
நம் ஆசாரியர்கள் எல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவது ஓர் அர்த்த விசேடத்தை இப் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்.
ஆசாரியர்களுக்கெல்லாம் முதல்வருமாய், “மயர்வற மதிநலம் அருளினன்” என்கிறபடியே,
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தின் தெளிவை யுடையவருமான இவர்
ஏற்றுக் கொண்டமையாலே வந்தது ஓர் ஏற்றமும் உண்டு இதற்கு.
இந்த உபாயத்தைப்பற்றி வேறு பிரயோஜனங்களைக் கொள்வாரும்,
வேறு சாதனங்களைப் பற்றி இவனையே பிரயோஜனமாகப் பற்றுவாருமாய் இருப்பர்கள் புறம்புள்ளார்.
அங்ஙன் அன்றிக்கே, இவனையே பிராப்பியமும் பிராபகமுமாக அறுதியிட்டு இருக்கிற ஏற்றம் உண்டு இவர்க்கு.

பிராப்பியம் இவனேயாகில், வேறு சாதனங்களை மேற்கொண்டால் வரும் குற்றம் என்? என்னில்,
அவை சாத்தியமுமாய்ப் பலவுமாய்ச் செய்ய முடியாதனவுமாய்ச் ஸ்வரூபத்துக்குத் தக்கன அல்லாதனவுமாய் இருப்பனவாம்.
இப்படி இருக்கும் சாதனங்கள் பல. அவை யாவை? என்னில், கர்மயோக ஞானயோக பக்தியோகங்கள்.
கர்மயோகமாவது, ஆத்மாவை உள்ளபடி அறிகின்ற ஞானம் முன்னாகத் தன் சாதிக்கும் தன் ஆஸ்ரமத்துக்கும் தக்கதாய்
விதிக்கப்பட்ட கர்மத்தைப் பலத்தில் விருப்பமில்லாதவனாகியும் நாம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாதவனாயும்
பற்றையும் விட்டவனாகிப் பகவானுக்குச் செய்யப்படும் ஆராதனம் என்ற எண்ணத்தோடு செய்தல் வேண்டும்;
அவ்வாறு செய்யவே விரோதியான பாபம் அழியும்; அது அழியவே மனம் மலம் அறும்;
அது அறவே ஸ்வரூப பிரகாசமும் உண்டாம்;
அது உண்டாகவே பகவானை அறிகின்ற ஞானமும், அவனிடத்தில் பிரேமமும் பிறக்கும்;
பின்னர், பரபக்தி பரஞான பரமபக்தியாய்ப் பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம்.

ஞானயோகமாவது, இந்திரியங்களை நியமித்துக்கொண்டு ஸ்வரூபத்தை விஷயமாக்கினால் பகவானை அறிகிற ஞானமும்
அவன் விஷயமான பிரேமமும் பிறக்கும்; அவை பிறக்கவே பரபக்தி பரஞான பரமபக்திகளும் பிறக்க,
பின்பு பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம்.
அங்ஙன் அன்றிக்கே, மேலே கூறிய கர்மஞானங்கள் இரண்டனையும் பகவத் விஷயத்திலே யாக்குவது;
அங்ஙனமாக்கினால் “என்னிடத்தில் மனத்தை வைத்தவனாயும் என்னிடத்தில் பக்தியையுடையவனாயும்
என்னை ஆராதிக்கிறவனாயும்“
மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”-என்பது, ஸ்ரீகீதை, 9 : 34.
ஆகக்கடவாய்; என்னை நமஸ்காரம் செய்வாய்” என்கிறபடியே, செய்ய, பரபக்தி பரஞான பரமபக்திகள் பிறக்கும்;
பின்பு, பெற்றோடே தலைக்கட்டுவது பக்தியோகம் எனப்படும்.

இவை போல் செய்தற்கு அருமையுடையன அன்றிக்கே, திருநாமத்தை எளிதான உபாயமாக விதித்தது; எங்கே? என்னில்,
வீடுமர் தரும புத்திரனுக்குப் பல தருமங்களையும் சொல்ல,
“தருமங்கள் பலவற்றிலும் எந்தத் தருமம் உம்மால் மேலான தருமமாகக் கொள்ளப் பட்டிருக்கிறது;
பிறவி எடுத்தவன் எதனை ஜபித்தால் பிறவியினின்றும் சம்சாரம் என்னும் தளையினின்றும் விடுபடுவான்” என்கிறபடியே,
உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்ல வேணும் என்ன,
“இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின்,
தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அருச்சனை செய்தல்” என்று
மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ.
“கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சாரபந்தநாத்”-என்பது மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
“ஏஷமே ஸர்வதர்மாணாம் தர்ம: அதிகதமோ மத:யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர: ஸதா”என்பது,
மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
‘திருநாமம்’ என்றது, திருநாமசங்கீர்த்தனத்தினை.

நன்று, திருநாமம் சாதனத்திற்கு அங்கம் அன்றோ? அது, தானே சாதனமாமோ? என்னில்,
“பிறவியினின்றும் சம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்” என்று, விரோதி நீங்குதலையும்,
“நித்தியமான பரம்பொருளை அடைகிறான்” என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக்கட்டுகையாலே,
விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப்படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே சாதனமாம்.
“வாஸு தேவ ஆஸ்ரய: மர்த்ய: வாஸுதேவ பராயண:
ஸர்வபாப விஸு த்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்”என்பது, மஹாபாரதம் சஹஸ்ரநாம அத்.
இந்தத் தேசம் பரிசுத்தமானது, மிக உயர்ந்தது, புண்ணிய கரமானது, விரும்பியவையனைத்தையும் கொடுக்கின்றது” என்று,
விரும்பினவற்றை எல்லாம் பெறுதற்குச் சாதனமாகத் தேச வாசத்தைச் சொல்லிற்று.
“எல்லா ஆராதனங்களுக்குள்” என்று தொடங்கிப் “பாகவதர்களை ஆராதிக்கின்ற ஆராதனமானது
மிகச் சிறந்தது என்று யாவராலும் கூறப் பட்டது” என்று முடிக்கையாலே,
விரும்பியவை அனைத்தும் பாகவதர்களை ஆராதிக்கவே கிடைக்கும் என்று சொல்லிற்று.
“பத்ரம் பத்ரப்ரதம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது:
பவித்ரம் பரமம் புண்யம் தேஸ: அயம் ஸர்வகாமதுக்”-என்பது காருடம்.

“ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம்”-என்பது, பிரமாணம்.

அப்படிச் சொன்ன செய்தற்கு அரியனவான உபாயங்கள் எல்லாம் அகங்காரத்தின் சம்பந்தம் உடையனவாகையாலே
தியாச்சியமாகச் சொல்லப்பட்டன. ஒன்றாய் எப்பொழுதும் இருப்பதாய் செய்தற்கு எளியதாய்த் தக்கதாய்த்,
தனக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே, “ஆதலால், மேலே கூறிய தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை
மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்” என்கிறபடியே, சொல்லப்படுகிற பிரபத்தி உபாயத்தைச் சொல்லுகிறது இப் பாசுரத்தால்.
“தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:”என்பது, தைத். உப.

மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரன் சொரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையும் சொல்லி
சரணாகதியின் பிரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால்.
சரண்யன் ஸ்வரூபமாவது,
நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.
அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே
பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும்.
வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை.
ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில்
உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும்.

அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்திய ஸூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன்
முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க் கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே
ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத ஸ்வபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக் காரணங்களான ஞானம் சக்தி முதலான
எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

அதிகாரி ஸ்வரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பிய ருசியும் ஸ்வரூபப் பிரகாசமும் என்கிற இவையே யன்றோ.
திர்யக்குகளுக்கு இப்படி அடைதல் கூடுமோ? என்னில், ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவானை ஆராதனை செய்தானாகத்
துறைச் சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே;
இங்கும், “வைப்பன் மணி விளக்காம் மாமதியை மாலுக்கென்று, எப்பொழுதும் கை நீட்டும் யானையை”-நான்முகன் -46 என்றும்,
“புகு மதத்தால் வாய் பூசிக் கீழ் தாழ்ந் தருவி, உகுமதத்தால் கால் கழுவிக் கையால், மிகு மதத் தேன்,
விண்ட மலர் கொண்டு விறல் வேங் கடவனையே, கண்டு வணங்கும் களிறு”-மூன்றாம் -70- என்றும்,
போது அறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது -திவ்ய தேசத்தில் அனைவரும் சாத்விகர்கள் –
வேறு இடத்திலே “புனத்தினைக் கிள்ளிப் புதுஅவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று,
இனக் குறவர் புதியது உண்ணும் எழில் மாலிருஞ்சோலை எந்தாய்” பெரியாழ்வார் திருமொழி, 5. 3 : 3.-என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்து வைத்தார்கள்.

இனி,அதைப் போலவாகிலும் இவற்றையும் நம்ப வேண்டாவோ நமக்கு?
இனி சரண்ய விஷயத்தில் செய்யப்படும் சரணாகதி பலத்தோடு கூடியிருக்கும் என்பது போன்று,
ஆநுகூல்யம் முதலான குணங்களோடு கூடின அதிகாரி சரணம் புக்கால் பலத்தோடே கூடி இருக்கும் என்கிற அர்த்தத்தையும் சொல்லுகிறது.
‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்கிற இதனாலே தம்முடைய
வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக,
சர்வ ஸூலபனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார்.

இது வரை அவதாரிகை -கீழே த்வயார்த்தம் -பாசுரம் கொண்டு அருளிச் செய்தார் -மேல் பாசுர வியாக்யானம் –

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா-
நிரபேக்ஷமுமாய் சாபேக்ஷமுமாய் இருக்கும் இவ்வுபாயம்; தன்மை வேறுபாடுகளாலே.
ஸஹாயந்தர நிரபேஷம்-உபாயத்தை எதிர்பார்க்க மாட்டார் என்பதே
புருஷகார சாபேஷமாயும் -அதிகாரி சாபேஷமாயும் இருக்கும் –
நிரபேக்ஷமாகிறபடி எங்ஙனே? என்னில்,
ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற
இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;
துணை வேண்டா. இனி, சாபேக்ஷமானபடி எங்ஙனே? என்னில்,
அதிகாரி வேண்டப்படுவதாயும் புருஷகாரம் வேண்டப்படுவதாயும் இருக்கையாலே.
இவ்வுபாயம் ஆர்க்கு? என்றால், அதிகாரிக்கு என்கையாலே, அதிகாரி வேண்டப்படுகிறது;

அதிகாரி வேண்டப்படுவது போன்று புருஷகாரமும் வேண்டப்படுவதாம்; எங்ஙனே? என்னில், இந்த அதிகாரி,
முன் செய்த குற்றங்களையும் பார்த்து,
அவனுடைய ஸ்வாதந்திரியம் முற்றறிவுடைமை முதலியவைகளைப் பார்த்துப் பிற்காலிக்க,
‘அஞ்சாதே’ என்று புருஷகாரமானவள் சொல்ல வேண்டுகையாலே,
அதிகாரி வேண்டப்படுவதுமாய்ப் புருஷகாரம் வேண்டப்படுவதுமாய் இருக்கும்.

அகலகில்லேன் இறையும் –
ஒரு கண நேரமும் பிரிய ஆற்றலுடையவள் அல்லேன்.
இப்படிச் சொல்லுகிறவள் தான் யார்? என்னில், மூன்றுவித சேதனர்கட்கும் தலைவியுமாய்,
உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவளுமாய் இருக்குமவள் கண்டீர்.
மூன்று வித சேதனர்கட்கும் தலைவி என்னுமதற்குப் பிரமாணம்,
“எல்லா ஆத்மாக்களுக்கும் ஈஸ்வரியாய் இருப்பவளை” என்னக் கடவதன்றோ.

உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம்,
“பும் ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்று, பிரதான புருஷர்களுக்கு ஈசுவரன் அவன்,
அவனுக்கு இவள் ஈஸ்வரி என்று சொல்லுகையாலே.
“ஈஸ்வரீம் சர்வபூதாநாம்” என்றது, ஸ்ரீ ஸூக்தம்.
“பும்ப்ரதாந ஈஸ்வர ஈஸ்வரீம்” என்பது.
ஆக, எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.

இவள் நியமிக்கும் பிரகாரம் என்? என்னில், மூன்றுவித சேதநர்களையும் தாயாந்தன்மையாலே நியமிக்கும்,
ஈஸ்வரனைக் காதல் குணம் காரணமாக நியமிக்கும்.
தாயாந்தன்மை ஸ்வரூபத்தோடு கட்டுப்பட்டது;
காதல் குணம் ஒவ்வொரு காலத்தில் உண்டாமது ஆகையாலே வந்தேறி ஆகாதோ? என்னில்,
ஆகாது. எங்ஙனே? என்னில், உபாதி நித்தியமாகையாலே அதுவும் நித்தியம்.
ஈஸ்வரன் படைத்தல் முதலாயினவற்றைச் செய்யும் போதும் இவள் நியமிக்கின்றவள் ஆவள்;
‘எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்” என்கிறபடியே,
அவள் கடாக்ஷம் அடியாகப் புருவ நெரிப்பிற்குட் பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும். அது என்?
“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தேகிலம்”-என்பது, ஸ்ரீஸ்தவம்.

“கரண களேபரை: கடயிதும் தயமாநமநா:”-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்.

“சரீர இந்திரியங்களோடு சேர்ப்பதற்குக் கருணையுள்ள மனத்தை யுடையவன்” என்கிறபடியே,
தன் திருவருள் அடியாக அன்றோ படைப்பது என்னில்? அவற்றின் செல்லாமை பார்த்துப் படைக்கில் அன்றோ திருவருள் காரணமாவது;
தன் செல்லாமையாலே அவள் கடாக்ஷிம் காரணமாகத் தன் சத்தை உண்டாக, அவள் பிரேரிக்க அருள் பிறந்து,
அந்த அருள் காரணமாக அன்றோ அவன் படைப்பது.

நியமிக்குமிடத்தில்
அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”-என்பது, நீளா ஸூக்தம்.
“விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 8 : 17.
“இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும்,
“விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் ஸ்வரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது.
எங்ஙனே? என்னில்,
ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும்,
வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும்,
ஈஸ்வரன், ஸ்வாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ,
இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி.

பிரிவிற்குக் காரணம் கர்மம் அன்றோ? கர்ம சம்பந்தம் இன்றிக்கே இருக்க, இவள் ‘அகலகில்லேன்’ என்னப் போமோ? என்னில்,
கர்மத்தைப் போன்று, அவனுடைய வைலக்ஷண்யம் காரணமாகச் சொல்லுகிறாள்.
நன்று; வைலக்ஷண்யம் போக்கியமாமத்தனை அன்றோ? அது மேலும் மேலும் அநுபவிக்கும் இச்சையை விளைக்குமே ஒழிய
“இறையும் அகலகில்லேன்” என்னப் பண்ணுமோ? என்ன, விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால்
‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே
‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறாள்.
புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது,
அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத
மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி.

அவன் மார்விலே இருந்து அவன் முகத்தை நோக்கி,
‘உன்னைவிட்டு அகலச்சக்தியுடையவள் ஆகிறிலேன் என்று அவன் வைலக்ஷண்யத்தை அவனுக்குச் சொல்லுகிறாள்.
தனக்குத் தானே முற்றறிவினனாயிருக்கிறவனுடைய வைலக்ஷண்யம் அவனுடைய ஞானத்துக்கு விஷயமாமே;
இவள் சொல்ல அவன் அறியுமிடம் அவனுடைய ஞானத்துக்குக் குறைவு அன்றோ? என்னில்,
இவள் சொல்ல அறிந்திலனாகில் அவன் காதல் குணத்திற்குக் கொத்தையாமே.
அன்றிக்கே, “தனக்கும் தன் தன்மை அறிவரியான்” திருவாய். 8. 4 : 6.என்றும் சொல்லாநின்றது அன்றோ என்னுதலுமாம்.
உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் அல்லவோ ஞானத்துக்கு விஷயம்;
“ஞானமஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்” திருவாய். 3. 10 : 8.என்றதே அன்றோ.
‘அகலகில்லேன் இறையும்’ என்றசொல்லும் சொல்ல மாட்டாத நிலை அன்றோ அவன் நிலை.
அவன் வைலக்ஷண்யங் கண்ட இவளிலும் அவனுக்கு உண்டான ஏற்றம், பிரிந்திருக்கும் நிலையில்
அவனுடைய சொற்களில் காணுமத்தனை அன்றோ. “ஒருமாதத்துக்கு மேல் பிழைத்திருக்கமாட்டேன்” என்றாள் இவள்;
“மாஸாத் ஊர்த்வம்ந ஜீவிஷ்யே” என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 10. பிராட்டி கூறியது.
“நஜீவேயம் க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா, சுந். 66 : 10. ஸ்ரீராமபிரான்கூறியது,

“ஒருகண நேரமும் பிழைத்திருக்கமாட்டேன்” என்றான் அவன்.
பரதந்திராயிருப்பார்க்கு உடையவன் வருந்தனையும் பொறுக்க வேணு மன்றோ; ஸ்வதந்திரனுக்கு அது வேண்டாமே.
இப்படி இரண்டு இடமும் விலக்ஷணமாயிருக்கிற இருவரையும் உத்தேசியமாகக் கொண்டிருக்கிற முமுக்ஷுக்களுக்கு ஒருகுறை உண்டோ?
இவர்களைத் தனித் தனியே பற்றினார்க்கு ஸ்வரூபத்தின் அழிவே அன்றோ.
‘மிதுனமே உத்தேசியம்’ என்று இருப்பார்க்கு ஆத்ம உஜ்ஜீவனமன்றோ.
இராவணாதிகள் பக்கல் இவ்வர்த்தம் காணவுமாம்.

அலர்மேல்மங்கை –
மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும்,
எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள்.
அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள், ‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ.
அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. என்றது,
ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை நினையாதவாறு போலவும்,
முக்தன் “சனங்களின் சமீபத்திலுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்கிறபடியே,
சம்சாரத்தை நினையாதவாறு போலவும், அவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு பூவினை நினைத்திலள் என்றபடி.
சுருக்கமற்ற ஞானத்தினையுடையராயிருக்கச் செய்தே சம்சாரத்தைக் காணாத இடம் ஞானக் குறை அன்றே, இனிமையின் மிகுதி அன்றோ.
இவளும் இனிமையாலே அன்றோ காணாது ஒழிகிறது.
இவள் பூவினைக் காணாதவாறு போன்று திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது.
மற்றுள்ள அவயவங்கள் குமர்கிடந்து போமத்தனை. இவ்வளவால் என் சொல்லியவாறோ? எனின்,
ஸ்ரீ என்ற சொல்லின் பொருளும் மதுப்பின் பொருளும் சொல்லியபடி.
ஸ்ரீ சப்தம், புருஷகாரம் வேண்டுகையாலே சொல்லிற்று; மதுப்பில் எப்பொழுதும் சேர்ந்திருப்பதற்குப் பிரயோஜனம் என்? என்னில்,
பற்றுகிற அடியார்கட்குக் காலம் பார்க்க்வேண்டாதபடி எப்பொழுதும் அண்மையில் இருத்தல் பயன்.

நிகர்இல் புகழாய் – நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது.
உபயவிபூதிகளோடு கூடி இருத்தலும்,
“தத்துவங்கள் நரனிடமிருந்து உண்டாயின; ஆதலால், இவற்றை நாரங்கள் என்று அறிகிறார்கள்;
அவையே அவனுக்கும் இருப்பிடம்; ஆதலால், அவன் நாராயணன் என்று சொல்லப்படுகிறான்”
“நராத் ஜாதாநி தத்வாநி நாராணீதி ததோவிது:
தாந்யேவச அயநம் தஸ்ய தேந நாராயண: ஸ்மிருத:”-என்பது, பாத்மபுராணம்.
என்கிறபடியே,உலகத்திற்குக் காரணமாயிருத்தலும் இச் சொல்லுக்குப் பொருளாம்.

இங்ஙனமிருக்கச் செய்தே,
நம் ஆசாரியர்கள் பற்றுவதற்கு அவசியமான சௌலப்யம் முதலான நான்கு குணங்களையும்
அர்த்தமாகச் சொல்லிப் போருவர்கள்;
அக் குணங்களுக்கு முறை அருளிச் செய்கிறார் இவர்.
அக் குணங்களைச் சொல்லுகிற இடத்தில், வாத்சல்யம் முன்னாகச் சொல்லுவான் என்? என்னில்,
இவன் குற்றங்களோடு கூடியவனாகையாலே, இக் குற்றங்களைப் பொறுக்கைக்கு உறுப்பாகப் புருஷகாரம் வேண்டினால்,
உடனே இக் குற்றங்களைப் போக்கியமாகக் கொள்ளத் தக்கது ஒரு குணம் முன்னாக வேண்டுகையாலே. நன்று;
‘நிகரில் புகழாய்’ என்றால், வாத்சல்யத்தைக் காட்டுமோ? என்னில், இதற்குப் பொருள், சத்தியத்திலே
“எல்லை இல்லாத காருண்யம் சௌசீல்யம் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமானவனே!” என்று
குணங்களோடு ஒரு சேர எடுத்து, “தன்னைச் சார்ந்தவனிடத்தில் வாத்சல்யத்திற்கு முக்கியமான சமுத்திரம் போன்றவனே!” என்று
“அபார காருண்ய சௌஸீல்ய வாத்ஸல்ய”என்பது, கத்யம்.
“ஆஸ்ரீத வாத்ஸல்யைக ஜலதே”என்பது, கத்யம்.-இந்தக் குணத்தை விசேடிக்கையாலே சொல்லிற்று.

உலகம் மூன்றுடையாய் –
மேலே கூறிய வாத்சல்யத்துக்கு அடியான குடல் துடக்கைச் சொல்லுகிறது.
தன் வயிற்றிற் பிறந்த காரணத்தாலே அன்றோ தாய் வத்சலை ஆகிறாள்.

என்னை ஆள்வானே –
இதனால் சௌசீல்யத்தைச் சொல்லுகிறது. வெறுமை முன்னாக அடைகிறவர்
‘என்னை ஆள்வானே’ என்று கைங்கரிய தசைபோலே, உபகாரம் தோற்றச் சொல்லப் பெறுவரோ? என்னில்,
புருஷகாரத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார் முதல் பதத்தில்;
பின்னர், உபாயத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார்;
இதில், உலகத்தைப் பார்த்துச் சொல்லுகிறார். என்றது,
உலக விஷயங்களினுடைய லாபா லாபமே பேறு இழவாக இருக்கிறவர்களிலே வேறுபட்டவராயிருக்கிற தம்மை,
‘கர்மம் முதலான உபாயங்கள் ஸ்வரூப விரோதிகள்’ என்று அறியும் தனையும் வர நிறுத்தி,
பிராட்டி புருஷகாரமாகத் தானே உபாயமும் தானே உபேயமும் என்னும்படி செய்த உபகாரத்தைச் சொல்லுகிறார் என்றபடி.

இது சௌசீல்யமானபடி எங்ஙனே? என்னில்,
“சீலமென்பது, பெரியவனுக்குச் சிறியவர்களோடு கூட (உண்டான) நெருங்கிய கூட்டுறவு” என்கிறபடியே,
தன் மேன்மையையும் இவர் சிறுமையையும் பாராமல் ஒரு நீராகக் கலந்தான் ஆகையாலே என்க
“சீலம்ஹி நாம மஹதோ மந்தை: ஸஹநீரந்த்ரேண ஸம்ஸ்லேஷ:”

‘நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்றதனால், சௌலப்யம் சொல்லுகிறது.
“வைகுந்தத் தமரரும் முனிவரும்” 10. 9 : 9.என்றும்,
“பக்தர்களோடும் பாகவதர்களோடும் கூட” என்றும் சொல்லப்படுகையாலே இருவகையாக ‘அமரர் முனிக்கணங்கள்’ என்கிறது.

‘நிகர் இல்’ என்பான் என்? என்னில், இவர்களுக்கு ஒருவரும் ஒப்பு அல்லர்;
பிரகிருதி சம்பந்தத்தாலே சம்சாரிகள் ஒப்பு அல்லர்; பிரகிருதி சம்பந்தத்தினின்றும் விடுபட்டவர்களாகையாலே பக்தர்கள் ஒப்பு அல்லர்;
உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈஸ்வரன் ஒப்பு அல்லன்.
“உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க” என்று விலக்கி,
“போக மாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத்தாலும்” என்கிறபடியே.
“ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத்வாத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 17.

“போக மாத்ர ஸாம்ய லிங்காத்ச”–என்பது, ப்ரஹ்ம ஸூத்திரம் உத்தர மீமாம்சை, 4. 4 : 21.

விரும்பும் திருவேங்கடத்தானே
பகவானுடைய அனுபவத்தில் மாத்திரம் சம்பந்தம் சொல்லுகையாலே. இருட்டு அறையிலே விளக்குப்போலே,
பரமபதத்திற் காட்டிலும்
“கானமும் வானரமும்” -நான்முகன் திருவந். 47.என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற
சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே,
‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது,
சௌலப்யமாவது, உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசி அறச் சர்வசுலபமான அர்ச்சக பராதீனத்வம்.

புகல் ஒன்று இல்லா அடியேன் –
“பிரபத்யே” என்கிற இடத்தில், தன்மை இடத்தால் வந்த அதிகாரி ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது.
அநந்யகதித்வமும், ஸ்வரூபப் பிரகாசமான அநந்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது.
‘புகல் ஒன்று இல்லா’ என்றும், ‘அடியேன்’ என்றும் இரண்டும் சொல்ல வேணுமோ?என்னில்,
பிரகிருதி சம்பந்தத்தில் பாரமார்த்தியத்தாலேயும்,
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஞான வைபவத்தாலேயும் அருளிச் செய்கிறார்.

பிரபத்தி அதிகாரிகள் மூவர் -களைவாய் துன்பம் களையாது ஒளிவாய் களை கண் மற்று இலேன் –
ஆகிஞ்சன்யம் மூன்று வகை -அஜ்ஞ்ஞானம் ஞானாதிக்யம் பக்தி பரவஸ்யம்
புகல் ஒன்று இல்லா அஜ்ஞ்ஞானம் -அடியேன் -ஞானாதிக்யமும் பக்தி பாரவஸ்யமும் காட்டுமே –
‘புகல் ஒன்று இல்லா’-பிரகிருதி சம்பந்தத்தில் பாரமார்த்தியத்தாலேயும், -அஜ்ஞ்ஞானம்
அடியேன்-ஞானாதிக்யம் பக்தி பரவஸ்யம் -மதிநலம்-

உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது
விக்கிரஹம் ஆகையாலே என்க.

முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
“அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

அமர்ந்து –
அமருகையாவது, வேறு உபாயங்களை விட்டதைப் போன்று வேறு பலன்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில்,
அது இங்குச் சொல்லப்பட வேண்டியது இல்லாமையாலே பொருள் அன்று.
இதற்குப் பொருள்,
“எல்லாத் தர்மங்களையும் விட்டு” என்றும், “பற்றுக்கோடாகப் பற்று” என்றும் சொல்லச் செய்தே
“ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும்
கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.

புகுந்தேனே –
பிரிந்து நிற்றல் முதலானவைகள் இல்லாதபடி சரீரத்தைப் போன்று சேஷமான தமக்கு
அந்தர்யாமியாய் நிற்கிறபடியை அறிந்திருக்கிற இவர்,
‘புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று;
அவனுடைய சர்வ ஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம பாவத்தையும் ஸர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து,
‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.
“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்” என்கிறபடியே.
புகுந்தேன் – “பிரபத்யே-பற்றுகிறேன்”என்னும் நிகழ்காலம் முக்கியம் அன்று;
அடைந்தேன் என்பது போன்று ‘புகுந்தேன்’ என்கிற இதுவே முக்கியம்.

பிராட்டியாலே பேறு சொல்லும் த்வயம் –
சரீரத்தால் பேறு வேதம் —
ஆத்மாவால் பேறு திருமந்திரம் –
ஈஸ்வரனால் பேறு சரம ஸ்லோகம் சொல்லும்
பாபாநாம் வா – பிராட்டியினுடைய அபயப்பிரதானம் இந்த ஸ்லோகம்.

‘இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியோடு கூடியவரானார்’ என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத்
திருவடி விண்ணப்பம் செய்ய,
பிராட்டியும் பிரீதியின் மிகுதியாலே விம்மல் பொருமலாய்ச் செயலற்றவளாயிருக்க,
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம்போலே
“ஏ தேவி! எண்ணுவது யாது? தேவரீர் என்னோடு ஏன் பேசவில்லை” என்கிறபடியே,
“கிம்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 15.-

பெரிய பிரியத்தை வந்து விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாமல் தேவரீர்
எழுந்தருளியிருக்கிற இருப்பு என்தான்? என்று திருவடி விண்ணப்பம் செய்ய,
பிராட்டியும் “உனக்கு ஒத்ததாகத் தரலாவது ஒன்று இல்லாமை காண் நான் பேசாதிருந்தது” என்ன,
இவனும் “இவ்வளவிலே நம் விருப்பத்தை விண்ணப்பம் செய்துகொள்ள வேணும்” என்று பார்த்து,
“தேவரைச் சுற்றும் முற்றும் நலிந்த அரக்கியர்களாகிறார் கொடுமையுடையவர்களாய் அதற்குத் தக்க காரியங்களைச் செய்கிறவர்களாயிற்று;
இராவணனுக்கு முன்னரே கொல்லப்பட வேண்டியவர்கள் இப் பெண்பிள்ளைகளாயிற்று;
அவனும் இவர்களைப் போன்ற கேடன் அல்லன்; இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினாற்போலே இருக்கிறார்களித்தனையாயிற்று;
இவர்களைப் பலவகையாக வருந்துவதற்கு எண்ணங்கொண்டுள்ளேன்.
“கைகளாலே குத்தியும் கால்களாலே துகைத்தும் நகங்களாலே பிளந்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும்”
“சிந்நபிந்நம்” என்கிறபடியே,“முஷ்டிபி: பாணிபி: சைவ சரணை: சஏவ ஸோபநே
இச்சாமி விவிதை: காதை: ஹந்தும் ஏதா: ஸுதாருணா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 33.
“சிந்நம் பிந்நம்” ஸ்ரீராமா. யுத். 94 : 22.

பெருமாள் திருச் சரங்கள் செய்தவை எல்லாம் நானே செய்ய எண்ணுகிறேன்;
பகவானுக்கு அபசாரம் செய்தவர்களையும் பாகவதர்களுக்கு அபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் முறையிலே
தண்டிப்பதற்குக் கோலா நின்றேன்; முன்பு வந்தபோது இடம் இல்லாமை விட்டுப்போனேன் இத்தனை,
இப்போது எனக்கு எல்லாக் கைம்மாறுகளையும் பண்ணியருளிற்று ஆகலாம்;
இவை இத்தனையும் திருவுள்ளமாக வேணும் என்தான்? என்ன, “பாபாநாம் வா” என்று அருளிச்செய்கிறாள்.

பாபாநாம் வா ஸுபாநாம் வா-
இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம்.
நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;
“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.
“தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.

இன்று வந்தான் என்றுண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தானென் றுண்டோ புகலது கூறுகின்றான்
தொன்றுவந்தன்பு பேணும் துணைவனு மவனே பின்னைப்
பின்றுமென் றாலும் நம்பாற் புகழன்றிப் பிறிதுண் டாமோ.-என்றார் கம்பநாட்டாழ்வார்.

அழுக்குடையவன் அன்றோ குளிக்கத் தகுதியுடையவன்; அவர்கள் பாபத்தைச் செய்தவர்களாகில் அன்றோ
நாம் முகம் கொடுக்கவேண்டுவது.
நல்வினையராகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்ணியங்களே அவர்களுக்குக் கை கொடுக்குமே;
கோ தானம் பசுவின் வாலைப் பிடித்து தாங்களே தாண்டுவார்களே –
கைம் முதல் இல்லாதார்க்கு அன்றோ நாம் கைம்முதல் ஆகவேண்டுவது’ என்றாள்.

வதார்ஹாணாம் –
தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்
தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,
‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்
உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.
“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும்
“நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.

பிலவங்கம-
பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.
அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;
யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;
நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.

கார்யம் கருணம் –
இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்.

ஆர்யேண –
இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.
அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.
“நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.

ந கஸ்சித் ந அபராத்யதி-
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்!
திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ?
நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ?
நீ தான் குற்றவாளன் அல்லையோ?

பெருமாள் குற்றவாளரானபடி எங்ஙனே? என்னில், தாம் காடேறப் போந்தார்:
அவர் பின்னே மடல் ஊர்வாரைப் போலே இளையபெருமாளும் போந்தார்;
தம்மோடே ஏகாந்தமாக இன்பம் அநுபவிக்க வேண்டுமென்று இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்;
என்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தார்;
தாம் வாராவிட்டால் தம்மது ஓர் அம்பு இசங்க மாட்டாமை இல்லை அன்றோ இவ்வழி;
இத்தனை நாள் பிரிந்திருக்க வல்லவரான போதே பெருமாள் பக்கலிலே யன்றோ குற்றம்?

பாரதந்திரியத்திற்குத் தகுதியாகப் பேசாது இராமல், அது தன்னைச் சொன்ன என் பக்கல் தன்றோ குற்றம்?
இனி, நாயகன் சொன்ன காரியம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்த அன்று,
பெருமாள் அருளிச் செய்த காரியம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ

இராவணன் சொன்ன காரியங்களைச் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்!

‘எல்லாப்படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி போக வேண்டி இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்;
நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப் புகு வாசல் உண்டோ?’ என்கிறாள்.

—————————————-

ஒன்பது பாட்டாலும் சரண்யன் ஸ்வரூபம் சொல்லி-இதில் தம்முடைய ஸ்வரூபம் சொல்லி சரணம் புகுகிறார்-

அகல கில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

த்வயம் விவரிக்கும் -இதற்கு விஸ்தரனமான வியாக்யானம்
திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –
தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மேலே ஒன்பது திருப்பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரனுடைய சொரூபத்தைச் சொன்னார்.
சரண்யன் சொரூபமாவது, நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய்
விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.

அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம்.
பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும்.
வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை. ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம்.
அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில் உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே
காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும். அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி,
“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.-என்கிறபடியே, நித்தியசூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன் முதலானோர்களோடு,
இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க்கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே ஆனார்களோடு வாசி அற
எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே.
விடாத சுபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக்காரணங்களான ஞானம் சக்தி முதலான எட்டுக் குணங்களையுமுடையன்;
ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.

இதில் தம்முடைய சொரூபம் சொல்லிச் சரண்புகுகிறார்.

அதிகாரி சொரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பியருசியும் சொரூபப்பிரகாசமும் என்கிற இவையேயன்றோ-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்கிற இதனாலே
தம்முடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக,
சர்வசுலபனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார்.

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா-
நிரபேக்ஷமுமாய் சாபேக்ஷமுமாய் இருக்கும் இவ்வுபாயம்; தன்மை வேறுபாடுகளாலே.
நிரபேக்ஷமாகிறபடி எங்ஙனே? என்னில், ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும்,
ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்;
துணைவேண்டா.
இனி, சாபேக்ஷமானபடி எங்ஙனே? என்னில், அதிகாரி வேண்டப்படுவதாயும் புருஷகாரம் வேண்டப்படுவதாயும் இருக்கையாலே

மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும்,
அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார்-

எல்லாச் சாத்திரங்களிலும் பரந்திருப்பது ஒன்றாய், இச்சாத்திரங்களுக்கெல்லாம் அடியான வேதாந்தங்களுக்குக் கிழங்காய்,கிழங்காய் – சாரமாய்.
நம் ஆசாரியர்கள் எல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவது ஓர் அர்த்த விசேடத்தை இப் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்.
ஆசாரியர்களுக்கெல்லாம் முதல்வருமாய், “மயர்வற மதிநலம் அருளினன்” என்கிறபடியே,
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தின் தெளிவையுடையவருமான இவர் ஏற்றுக் கொண்டமையாலே வந்தது ஓர் ஏற்றமும் உண்டு இதற்கு.

உபாயங்கள் எல்லாம் அகங்காரத்தின் சம்பந்தம் உடையனவாகையாலே தியாச்சியமாகச் சொல்லப்பட்டன.
ஒன்றாய் எப்பொழுதும் இருப்பதாய் செய்தற்கு எளியதாய்த் தக்கதாய்த், தனக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே,
“ஆதலால், மேலே கூறிய தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்” என்கிறபடியே,
சொல்லப்படுகிற பிரபத்தி உபாயத்தைச் சொல்லுகிறது இப் பாசுரத்தால்.

இத் திருப்பாசுரத்தை, துவயத்தில்பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக்கட்டக்கடவது.
அதில் அர்த்தத்தால் பொதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின்பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.

அகலகில்லேன் இறையும் என்று – இது, அகன்று இருந்து சொல்லுகிற பாசுரமும் அன்று; எப்பொழுதும் கூடியிருக்கச்செய்தேயாயிற்று
‘இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்’ என்று உரைப்பது. நித்தியாநுபவம் பண்ணுவார்க்கு எல்லாம் பாசுரம் இதுவே. ‘

உலகத்தார் அகலகில்லேன் என்பது போன்றதன்றே இவளுடைய அகலகில்லேன்; அது கர்மங் காரணமாக வரும் அகலுதலேயன்றோ,
இவளுக்கு அது இல்லாமையாலும், அவன்தான் மேல்விழும் சுபாவன் ஆகையாலும், அவனால் வரும் பிரிவும் இல்லை; தன்னால் வரும் பிரிவும் இல்லை

இச் சேர்த்திக்குப் பயன், அவனுடைய சுவாதந்திரியத்தை யாதல், தான் பிறவிப்பெருங்கடலில் பிறந்து உழன்று திரிந்து வருதலையாதல்
நினைத்துக் கைவாங்க வேண்டாத படியாயிருக்கை. என்றது, அவனுடைய முற்றறிவினையும் தன்னுடைய குற்றமுடைமையையும் நினைத்து அஞ்சவேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, இவனுடைய அபாரதகாலம் பார்த்து இருந்து எண்ணுவதற்கு அவனுக்குக் காலம் இல்லை, அவள் கூட இருக்கையாலே என்றபடி

பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை. உறைமார்பா – இதனால், நித்தியயோகம் சொல்லுகிறது.

கணநேரமும் பிரியச் சக்தியுடையயேனல்லேன் என்று.இப்படிச் சொல்லுகிறவள் தான் யார்? என்னில்,
மூன்றுவித சேதனர்கட்கும் தலைவியுமாய், உபயவிபூதிநாதனையும் நியமிக்கின்றவளுமாய் இருக்குமவள் கண்டீர்

இவள் நியமிக்கும் பிரகாரம் என்? என்னில், மூன்றுவித சேதநர்களையும் தாயாந்தன்மையாலே நியமிக்கும்,
ஈசுவரனைக் காதல்குணம் காரணமாக நியமிக்கும்.

இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், “விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே,
தன் சொரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது. எங்ஙனே? என்னில், ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே
அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும், வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும்,
ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ,
இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி.
அவனுடைய வைலக்ஷண்யம் காரணமாகச் சொல்லுகிறாள்.

விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால் ‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே
‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று அஸ்தாநேபயசங்கை பண்ணுகிறாள்.
புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது,
அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி.
அவன் மார்விலே இருந்து அவன் முகத்தை நோக்கி, ‘உன்னைவிட்டு அகலச்சக்தியுடையவள் ஆகிறிலேன் என்று
அவன் வைலக்ஷண்யத்தை அவனுக்குச் சொல்லுகிறாள்.
தனக்குத் தானே முற்றறிவினனாயிருக்கிறவனுடைய வைலக்ஷண்யம் அவனுடைய ஞானத்துக்கு விஷயமாமே;

அலர்மேல் மங்கை – இங்ஙன் சொல்லுகிறவள் ஆர்? என்னில், தன் வடிவழகாலும் பருவத்தாலும் அவன்தனக்குங்கூட உத்தேசியமாயிருக்கிறவள்

அலர்மேல்மங்கை – மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும்,
எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள். அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள்,
‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ. அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின்

உறைமார்பா’ என்கிறது. என்றது, ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை
நினையாதவாறு போலவும்,முக்தன் “சனங்களின் சமீபத்திலுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்கிறபடியே,
சம்சாரத்தை நினையாதவாறு போலவும், அவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு பூவினை நினைத்திலள் என்றபடி.
சுருக்கமற்ற ஞானத்தினையுடையராயிருக்கச் செய்தே சம்சாரத்தைக் காணாத இடம் ஞானக் குறை அன்றே,
இனிமையின் மிகுதி அன்றோ. இவளும் இனிமையாலே அன்றோ காணாது ஒழிகிறது.
இவள் பூவினைக் காணாதவாறு போன்று திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது.
மற்றுள்ள அவயவங்கள் குமர்கிடந்து போமத்தனை.

நிகர்இல் புகழாய் – நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது. உபயவிபூதிகளோடு கூடி இருத்தலும்,
உலகத்திற்குக் காரணமாயிருத்தலும் இச் சொல்லுக்குப் பொருளாம். இங்ஙனமிருக்கச்செய்தே, நம் ஆசாரியர்கள் பற்றுவதற்கு
அவசியமான சௌலப்யம் முதலான நான்கு குணங்களையும் அர்த்தமாகச் சொல்லிப் போருவர்கள்;
அக் குணங்களுக்கு முறை அருளிச்செய்கிறார் இவர். அக் குணங்களைச் சொல்லுகிற இடத்தில்,
வாத்சல்யம் முன்னாகச் சொல்லுவான் என்? என்னில், இவன் குற்றங்களோடு கூடியவனாகையாலே,
இக் குற்றங்களைப் பொறுக்கைக்கு உறுப்பாகப் புருஷகாரம் வேண்டினால், உடனே இக் குற்றங்களைப் போக்கியமாகக் கொள்ளத் தக்கது
ஒரு குணம் முன்னாக வேண்டுகையாலே. நன்று; ‘நிகரில் புகழாய்’ என்றால், வாத்சல்யத்தைக் காட்டுமோ? என்னில்,
இதற்குப் பொருள், சத்தியத்திலே “எல்லை இல்லாத காருண்யம் சௌசீல்யம் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமானவனே!” என்று
குணங்களோடு ஒரு சேர எடுத்து, “தன்னைச் சார்ந்தவனிடத்தில் வாத்சல்யத்திற்கு முக்கியமான சமுத்திரம் போன்றவனே!” என்று
“அபார காருண்ய சௌஸீல்ய வாத்ஸல்ய”என்பது, கத்யம்.
“ஆஸ்ரீத வாத்ஸல்யைக ஜலதே”என்பது, கத்யம்.-இந்தக் குணத்தை விசேடிக்கையாலே சொல்லிற்று.

நிகரில் புகழாய்-அதற்கு அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது. தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல்
‘என்னடி யார் அது செய்யார்’ பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2. என்னும் குணாதிக்கியம் சொல்லுகிறது.

நிகரில் புகழாய் – இப்படி இருக்கிறவள்தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது,
‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப்பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி.
‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக்கண்டேன்’ என்று காட்டிக்கொடுத்தாலும்,
‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ?
தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை.
இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்;
அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது.
இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.இத்தால் சொல்லிற்றாயிற்று, இவள் அவனுடைய சுவாதந்திரியத்தை நினைத்து
‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும், அவன் இவளுடைய மிருதுத்தன்மையையும் இளமையையும் நினைத்து
‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும்.
ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.

உலகம் மூன்றுடையாய் -மேலே கூறிய வாத்சல்யத்துக்கு அடியான குடல் துடக்கைச் சொல்லுகிறது.
தன் வயிற்றிற் பிறந்த காரணத்தாலே அன்றோ தாய் வத்சலை ஆகிறாள்.
தான் குணங்கள் இல்லாதவனேயானாலும் விட ஒண்ணாத சம்பந்தம் சொல்லுகிறது.

உலகம் மூன்றுடையாய் – தான் குணங்கள் இல்லாதவனாயினும் விடஒண்ணாத சம்பந்தத்தைச் சொல்லுகிறது.
“சிதகு உரைக்குமேல்” என்ற இடத்தில், அவளுக்குச் சொரூபத்திற்குத் தகுதியான குணங்கள் இல்லாதகாலத்திலே அன்றோ
அவள் அது சொல்லுவது; அப்படியே இவனுக்கும் இக் குணங்கள் இன்றிக்கே இருந்தாலும் விட ஒண்ணாத குடல்தொடக்கைச் சொல்லுகிறது.
அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரைகட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது.
இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விடஒண்ணாது என்கிறார்

என்னை ஆள்வானே – சம்பந்தத்தைக் கிரயம் செலுத்திக்கொடுக்கும்படி.
மோக்ஷத்தளவும்செல்ல நடத்திக்கொடு போந்து நடுவுள்ள அபேக்ஷிதத்தைக் கொடுக்கின்றவனாதல் அன்றோ ஆளுகின்றவனாவது.
அடிமையைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும்படி. என்றது,
‘அடிமையின் பொதுமையைப் பற்றிச் சொல்லுகிறீராகில் அவ்வளவே அன்றோ உமக்கும்’ என்ன ஒண்ணாதபடி,
என்னை மயர்வற மதிநலம் அருளி, இவ்வளவும் வர நிறுத்திப் பொகடப் போமோ? என்கிறார் என்றபடி.

என்னை ஆள்வானே – இதனால் சௌசீல்யத்தைச் சொல்லுகிறது. வெறுமை முன்னாக அடைகிறவர் ‘என்னை ஆள்வானே’ என்று
கைங்கரிய தசைபோலே, உபகாரம் தோற்றச்சொல்லப் பெறுவரோ? என்னில்,புருஷகாரத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார் முதல் பதத்தில்;
பின்னர், உபாயத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார்; இதில், உலகத்தைப்பார்த்துச் சொல்லுகிறார். என்றது,
உலக விஷயங்களினுடைய லாபா லாபமே பேறு இழவாக இருக்கிறவர்களிலே வேறுபட்டவராயிருக்கிற தம்மை,
‘கர்மம் முதலான உபாயங்கள் சொரூப விரோதிகள்’ என்று அறியும்தனையும் வர நிறுத்தி, பிராட்டி புருஷகாரமாகத் தானே
உபாயமும் தானே உபேயமும் என்னும்படி செய்த உபகாரத்தைச் சொல்லுகிறார் என்றபடி.

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – அப்பதத்தில் முடிகிற சௌலப்யம் சொல்லுகிறது.
அங்குள்ளாரும் விரும்பி வந்து அடிமைசெய்கிறதும் இங்கே அன்றோ.
“வைகுந்தத்தமரரும் முனிவரும்” திருவாய். 10. 9 : 9.என்று இரண்டு கோடியாயன்றோ இருப்பது; குணநிஷ்டரும் கைங்கரிய நிஷடரும்.
திருவேங்கடத்தானே – அதற்கு முடிந்தபொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ.
குணயோகமும், சேஷித்வமும், விசேஷகடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு.
இவன் விரும்பியவை அனைத்தையும்இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலைபெற்றிருக்கின்றான் என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது.
அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ.
இந்தச் சௌலப்யம் உபாயமாகிறபடி எங்ஙனே? என்னில்,
“மாமேகம் – என்னையே” என்ற இடத்தில், சாரதியாயிருக்கும் வேடத்தை அன்றோ காட்டுகிறது.
இன்னமும் அவ்வளவு அன்றே இங்கு. அதற்கு முன்பும் பின்பும் இல்லை அன்றோ அந்தச் சௌலப்யந்தான்.
எப்பொழுதும் நிலைபெற்று இருக்கிற இடம் அன்றோ இவ்விடம். அங்குத்தானும்
“பார்த்தனே! என்னிடத்தில் வைத்த மனத்தினையுடையையாய்” என்று ஒரு தேவை இட்டன்றோ சொல்லிற்று. அதுவும் இல்லை அன்றோ இங்கு.

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்றதனால், சௌலப்யம் சொல்லுகிறது.
“வைகுந்தத் தமரரும் முனிவரும்” 10. 9 : 9.என்றும், “பக்தர்களோடும் பாகவதர்களோடும் கூட” என்றும் சொல்லப்படுகையாலே இருவகையாக
‘அமரர் முனிக்கணங்கள்’ என்கிறது. ‘நிகர் இல்’ என்பான் என்? என்னில்,
இவர்களுக்கு ஒருவரும் ஒப்பு அல்லர்; பிரகிருதி சம்பந்தத்தாலே சம்சாரிகள் ஒப்பு அல்லர்;
பிரகிருதி சம்பந்தத்தினின்றும் விடுபட்டவர்களாகையாலே பக்தர்கள்ஒப்பு அல்லர்;
உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈசுவரன் ஒப்பு அல்லன்.

இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் “கானமும் வானரமும்” -நான்முகன் திருவந். 47.என்கிறபடியே,
எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே,
அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது

புகல் ஒன்று இல்லா அடியேன் – ஆகிஞ்சந்யமும் சொரூபமும் சரணாகதிக்குப் பரிகரங்களே அன்றோ. உன்னடிக்கீழ் – “சரணௌ” என்ற பதத்தின் பொருள்.

மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச்சொல்லிக் கொடு போந்தார்.
இனித்தான், வெறுமையும், சொரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின்,
அவற்றை இங்கேயும் அருளிச்செய்கிறார்; அவற்றைச் சரணாகதிக்கு அங்கமாகச் சொல்லவேணுமன்றோ.
அவற்றை இங்கே சொல்ல வேண்டுகிறது என்? என்னில், அவனுக்கு உபாயத் தன்மை சொரூபமானதைப் போன்று.
இவனுக்கும் இந்த நினைவு சொரூபமாகையாலே. இவனுக்கு இது இல்லாதபோது சர்வமுக்தி பிரசங்கமாமே.
அடியேன் – துவயத்தில் “பிரபத்யே” என்ற சொல்லில் பொருளாலே கிடைத்த ‘அஹம்’ என்னும் சொல்லை,
இங்கு ‘அடியேன்’ என்ற சொல்லாலே சொன்னதுவே வாசி

உன்னடிக் கீழ் – “சரணௌ” என்றது தன்னையே சொல்லுகிறது. அவர், “தமையனாருடைய திருவடிகளை” என்றாற்போலே சொல்லக்கடவதன்றோ

உன் அடிக் கீழ் – “சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
எளிதில் பற்றக்கூடியதாய், உலக விஷயங்களிலே அருசிமுன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
பிறந்த உருசியையும் வளர்த்து, பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து, ஒருதேச விசேடத்திலே போனால்
நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த்தொடர்புள்ளதுமாய், எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு
விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க.
முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து,
தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

அமர்ந்து – நடு ஓர் இடையீடு இன்றிக்கே இருக்கை.
அவனுக்கு ஒரு துணைவேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ நடுவே
ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார்
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது

புகுந்தேனே – இந்த உறுதியும் உபாயபாவத்தில் சேராமையாலும், செய்ந்நன்றியறிதல் சொரூபமாகையாலும்,
பற்றுதலும் அறிவினைப் பற்றிய செயலாகையாலும்,

புகுந்தேன் – போன எல்லை அளவு மன்றோ புகுருவதும்; முன்பும் அர்த்தத்தில் இழவு இல்லை அன்றோ.
இவனுடைய மாறான உணர்வு அன்றோ உள்ளது; அது போமித்தனை அன்றோ வேண்டுவது. அறுதியிட்டேன் என்கிறார்.
துவயத்தில் உள்ள “பிரபத்யே” என்ற நிகழ்காலம், நினைவின் தொடர்ச்சிபோல் அன்று
புகுந்தேனே – பிரிந்துநிற்றல் முதலானவைகள் இல்லாதபடி சரீரத்தைப் போன்று சேஷமான
தமக்கு அந்தர்யாமியாய் நிற்கிறபடியை அறிந்திருக்கிற இவர், ‘புகுந்தேன்’ என்கிற இது,
ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று;
அவனுடைய சர்வஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம்பாவத்தையும் ஸர்வரக்ஷகத்வத்தையும் அறிந்து,
‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.
“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்” என்கிறபடியே.
புகுந்தேன் – “பிரபத்யே-பற்றுகிறேன்”என்னும் நிகழ்காலம் முக்கியம் அன்று;
அடைந்தேன் என்பது போன்று ‘புகுந்தேன்’ என்கிற இதுவே முக்கியம்.

இவை எல்லாம் அதிகாரிக்கு விசேஷணங்களாகச் சொல்லப் பட்டன அன்றோ.
இவை யெல்லாம் துவயத்தில் முடிகிற பதத்தோடே சேரக் கடவனவாம்.

அஷ்ட ஸ்லோகி -பத்து அர்த்தங்கள்
1-நேத்ருத்வம்– புருஷகாரத்வம் –ஸ்ரீ
2-நித்ய யோகம் -மதுப்பு பிரத்யயம் -மதுப்பு
3-சமுச்சித குண ஜாதம் -நாரா -ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக குணங்கள் -உபயோகி
4-தனு க்யாபாநஞ்ச — திருவடித் தாமரைகளை -சரணவ்
5-உபாயம் -சரணம்
6-கர்தவ்ய பாவம் -ப்ரபத்யே -மதி சரணாகதி -உணர்தல் -மாநஸம் முக்கியம் –

மிதுன பிராப்யாம் ஏவ -பிரசித்தம் –ஸ்ரீ மதே நாராயணாயா -நான்காம் வேற்றுமை உருபு இரண்டிலும்
7-மிதுன பரம் -ஸ்ரீ மதே-
8-ஸ்வாமித்வம் -நாராயணாயா-கீழே ஸ்வாமி விட மாட்டார் கிட்டலாம் -கார்யம் செய்யும் என்று துணிக்கைக்கு அங்கு
இங்கே ஸ்வாமித்வம்-கைங்கர்யம் பண்ண –
9-பிராரத்த நாஞ்ச -ஆய -மிதுனத்தில் கைங்கர்யம்
நாராயணாயா -பிரார்த்தநாயாம் சதுர்த்தி திரு மந்திரத்தில்
லுப்த சதுர்த்தி -தாதார்த்தயே சதுர்த்தி அவனுக்காகவே
10-பிரபல தர விரோதி -அவன் ஆனந்தத்துக்காக -சேஷத்வ பாரதந்தர்யம் அனுரூபம்
ஸூ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ ஞானம் அறிந்த பலன்
ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பாரதந்தர்ய ஞானம் அறிந்த பின்பு

ஓம் நம ஸ்வரூப சிஷை
நம நம உபாய சிஷை
நாராயணாயா நம -பிராப்தி சிஷை
வேய் மறு தோளிணை உம் தம் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் –
பரம பாத சோபனம் –8 அணா–திருப்பாவை 1 ரூபாய்
99 கட்டம் பெரிய பாம்பு -98 இரட்டை விழாமல் -இரண்டு நம -ஒன்று ம –
ஷேம கரம் இரு வார்த்தை சொல்லி -மந்த்ர ரத்னம் -இரு விலங்கை அறுப்போம் –
ஸ்தந்தய பிரஜைக்கு முலைப்பால் போலே -சாய்காரம் போலே எளிமை -ஆச்சார்ய பரிக்ரஹம்

திருவடிக்கீழ் அமர்ந்தே
கொக்கு வாயும் படு கண்ணியும் போலே பாத ரேகை போலே அமர்ந்தார்
இங்கு இருந்து நகராமலே -தென் திருவரங்கம் கோயில் கொண்டானே –
பாத ரேகை போல் அமர்ந்து புகுந்தார்
மந்த்ர ராஜா திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -சாம்யாபத்தி கொடுக்கும் –
கிழிச் சீரை போல் தனம் –
உதடு துடித்துக் கொண்டே இருக்குமே
ராஜ குமாரர் கற்பூர நிகரம் போல் த்வயம் நமது பூர்வர்களுக்கு
கூரத்தாழ்வானனுக்கு சரம விமல திருமேனியில் த்வயம் ஓத உடையவர் கட்டளை –

——————————————————————–

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-

பரம பதத்தில் வியா வ்ருத்தமாக வேறு பாடு தோன்ற -நித்ய வாஸம் செய்வார்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்-திருவடிக்கு கீழ் வாழலாம் –
அடியீர் அடிக்கீழ் வாழ்மின் -மூன்று பதங்கள் இங்கும் -அநந்ய சாதனராய் அநந்ய பிரயோஜனராய் -என்று என்று –
உபாயாந்தர சம்பந்தம் அறுத்து -என்றும் உபேயாந்த்ர சம்பந்தம் அறுத்து என்றும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்-ஒப்பில்லா -சர்வாதிகன் -நீர் நிலங்கள் சிரமஹரமான
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்-கார்ய கரமாம் படி
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.-சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் இரண்டு பிடித்தார்
நிரதிசய மஹத்தை -பரமாகாசம் -மாக வைகுந்தம் –
இது திருவாய் மொழி சம்பந்தம் அடியாக வியாவ்ருத்தி தோன்ற இருப்பர் –
நிலாவுவர் –நிலை நிற்க நடத்தல் -காம ரூபன் சஞ்சரன்-பெருமாள் பின்பே தொடர்ந்து கைங்கர்யம் செய்யப் பெறுவர்
பிடித்தாரை பிடித்தார் என்றுமாம் -பக்த பக்தர் -தொண்டர் தொண்டர் -தொட்டாரைத் தொட்டார்

அடியீர்! திருவடிகளிலே பொருந்தி புகுந்து வாழுங்கோள் என்று திருவருள் செய்கின்ற, இப்படிக்கு ஒப்பு இல்லாத திருவேங்கடமுடையானை,
வயல்கள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் முடிப்பதாக அருளிச் செய்த, ஆயிரத்திலே திருவேங்கடத்தைப் பற்றிய இப்பத்துத்
திருப்பாசுரங்களையும் கற்றவர்களைப் பற்றியவர்கள் அந்தமில் பேரின்பத் தழிவில் விட்டிலே சென்று பேரின்பத்தை அடைவார்கள்.
அடியீர் புகுந்து அமர்ந்து வாழ்மின் என்று அருள் கொடுக்கும் பெருமான் என்க. முடிப்பான்: வினையெச்சம்.

முடிவில், இத் திருவாய்மொழி கற்றார், பரம பதத்திலே சென்று அடிமையிலே முடி சூடினவராய்
அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று-
சேஷபூதர்கள் -உங்கள் உத்தேஸ்யம் கண்டீர்கோளே,
இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக் கிருத்தியராய்ப் போங்கோள் என்று,

அருள் கொடுக்கும் படிக் கேழ் இல்லாப் பெருமானை –
அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.
“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.

(கொடுத்த -என்னாமல் -கொடுக்கும் வர்த்தமானம் -இப்பாசுரம் அநுஸந்திக்கும்
நமக்கும் இப்பேறு உண்டு என்று காட்டி அருளவே
முடிப்பான் சொன்ன -நமது பிறவியையும் முடிக்க அருளிச் செய்த என்றபடி – )

பழனம் குருகூர்ச் சடகோபன் –
நல்ல நீர் நிலங்களை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் –
“பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற சம்சார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே உத்சாஹம் கொண்டு
அருளிச் செய்த ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தும் திருமலைக்குச் சொல்லிற்றின.
“ஸ்வாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்;
இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;
கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.
தர்ம சாஸ்த்திரப்படி இரத்தினத்தைக் கொள்ளுகிறவன் அரசன்” என்கிறபடியே.

பிடித்தார் பிடித்தார் –
பிடித்தவர்களைப் பிடித்தவர்கள்; பற்றினாரைப் பற்றினார்.

வீற்றிருந்து –
“அந்த முக்தன் ஸ்வதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்” என்கிறபடியே,
“ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25.-இருவர்க்கும் ஒக்குமன்றோ வீற்றிக்கை.
தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் சேஷமாகவுடையனாகையாலே
வந்த ஆனந்தத்தையுடையனா யிருப்பான் அவன்;
“இவனேயன்றோ ஆனந்திப்பிக்கப்படுகிறான்” என்கிறபடியே,
அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தத்தையடைகின்றவனாக இருப்பான் இவன்.

பெரிய வானுள் நிலாவுவரே –
“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம் புக
வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.

நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து
இப்பத்துங் கற்றார்பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
‘இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.

பஞ்ச ஸம்ஸ்காரமும் ஞான அனுஷ்டானங்கள் வேண்டாவோ -இப்பத்தில் அந்வயமே போதுமோ -என்னில் –
வேணும் –இவை அந்தர் பூதங்கள்-ஆழ்வார் சம்பந்தம் என்று சொல்லும் பொழுதே

—————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆவேத்யா ஸ்வயம் ஆகிஞ்சன்யம்
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம்
முனி ஆர்த்தே -ஸ்தாதாதய கதா
அப்ஜவாசாம் சங்கடந கர்ம ஜாத ரூபாம்

அப்ஜவாசாம் -தாமரையாள்- பிராட்டி
சங்கடந கர்ம ஜாத ரூபாம் -புருஷகார கர்த்தவ்யத்தில் ஆழ்ந்து –

————————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்

1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-

2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!

3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-

5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!

6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!

7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி

8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!

9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!

10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–

சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-

———

இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகடித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்
த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-

ஷஷ்ட்யயே–ஆறாவது சதகத்தில்
1-இத்தம் சத்வார கம்யம் –அபிகம்யன் -ஆச்சார்ய புருஷகாரமாக – -பக்ஷிகள் -மூலம் –-பொன்னுலகு ஆளீரோ பதிகம்

2-ஸ்வயம் இதம் -தானே ஆஸ்ரிதர் மேல் விழுந்து மின்னிடை மடவார் –

3-அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்–விருத்தங்கள் வஸ்துக்கள் கடிப்பித்து சேர்ப்பித்து–சேராதார்களை சேர்ப்பித்து-

4-ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை –ஸ்வ கீய சரித்திரம் சர்வ சித்த ஆகர்ஷந்தம்-குரவை கோத்து உட்பட மற்றும் பல

5–விகடித விஜநம் –சோபாதிக-கர்மம் அடியாக வந்த – பந்து ஜனம் பிரித்து –

6–ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்–ஆஸ்ரித அகங்கார மம கார மோசகம் -மாலுக்கு -இழந்தது -இவை தானே அகங்கார மமகார ஹேதுக்கள்

7-த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் — -விஸ் லேஷ சமயத்திலும் நடக்க தைர்யம் அருளி -உண்டாக்கி –

கடக வச மஹாபுதி யுகமம் –பொன் உலகு ஆளீரோ –

சடாரி வைகத்யஸ்யாப்யன் அர்ஹம் –விஸ்லேஷத்துக்கு அர்ஹம் இல்லாமல் -நீராய் நிலனாய் —

பிரபதன சுலபம் –திருவேங்கடத்தான் -சர்வ லோக சரண்யன்-

பிராஹா சரணம்

———–

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்

———————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 60-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புக்க பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு
ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு
கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு
சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு
சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு
பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெரு வாயனில் அர்த்தத்தை
உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

——————————————————-

வியாக்யானம்–

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே –
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-

அலர் மகளை முன்னிட்டு –
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-

அவன் தன் -மலரடியே –
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே –
அதாவது –
1-குலதொல் அடியேன் உனபாதம் -என்றும்
2-ஆறாவன்பில் அடியேன் உட் அடி சேர் வண்ணம் -என்றும்
3-அண்ணலே உன் அடி சேர -என்றும்
4-பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு -என்றும்
5-திண் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் -என்றும்
6-எந் நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே -என்றும்
7-உன பாதம் காண -என்றும்
8-நோலாதாற்றே னுன பாதம் -என்றும்
9-அந்தோ அடியேனுன பாதம் அகலகில்லேன் -என்றும்
10-உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த –
ஸ்ரீ திரு வேம்கடத்தனான-அவன் மலரடியே
இத்தால்
நிகரில் புகழாய் -என்று தொடங்கி அனுசந்திக்கிற வாத்சல்யாதிகளும் ஸூசிதம்

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –

அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
ச க்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –

சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே-(2-6-11-)
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்

நெஞ்சே
வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -141- திருவாய்மொழி – -6-10-1….6-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 22, 2016

மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்;
இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார்.
மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது;
இத் திருவாய்மொழியில் உபேயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக் கடவது.
மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரம ஸ்லோகம் போலே –
இரண்டும் ஒன்றிலே உண்டே? என்னில், அது சக்தி யோகத்தாலே வருமது அன்றோ;
வெவ்வேறு நிலைகளைப் பற்றி வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக் கடவன.

கோல திரு மா மகள் -தடம் தாமரைகட்கே -பிராப்ய வேஷம் –
பிராபக வேஷம் -அகலகில்லேன் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
சரணாகதனுக்கு பிராப்ய பிராபகங்கள் அவனே -பக்தனுக்கு பக்தி உபாயம் –
காப்பானே -கீழில்–பிராபகத்வம் -இங்கு நால் தோள் அமுது -பிரபாயத்வம் -இரண்டிலும் இரண்டு உண்டே -பிரதானம் –
பிரதான குணங்கள் திவ்ய தேசம் காட்டி நாயனார் அருளிச் செய்தது போலே -வாத்சல்யம் திருவேங்கடத்தில் –

பிராப்ய பிரதானம் திரு மந்த்ரம் –பிராபக பிரதானம் சரம ஸ்லோகம் –
பாலே மருந்துமாகவும் விருந்தாகவும் -உபாயம் உபேயம் -தன்மை மாற்றாதே -பிரதானம் சொல்வது எங்கனே –
சக்தி யோகம் -பாலுக்கு மருந்தாகும் சக்தி உண்டு –மருந்து பால் ஆகாதே -அவன் எப்போதும் அனுபவிக்க தக்க பிராப்யம் தான்
வேற வழி இல்லாமல் அவனை உபாயம் -கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
நம்முடைய -வரண தசை –பிராப்தி தசை -இரண்டும் -அவஸ்தா பேதம் -ஒன்று முடிந்து அடுத்து ஒன்று வருமே –
அதனால் இரண்டும் இரண்டாகவே இருக்கக் கடவது -என்றவாறு

கீழே ஸங்க்ரஹ சங்கதி
இனி விஸ்தார சங்கதி அருளிச் செய்கிறார்

மிகப் பெரிய துன்பத்தோடே பரம பதத்திலே கேட்கும்படி கூப்பிடச் செய்தேயும் சர்வ ரக்ஷகனானவன் வந்து
முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள் கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய்
உபய விபூதிகளோடு கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் –
ஸ்ரீ யபதி — அவாப்த ஸமஸ்த காமன்– உபய உக்தன் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
“நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தை யுடைய உலக நாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும்
பக்தர்கள் பாகவதர்களோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்”
‘வைகுண்டே து பரேலோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”–லிங்க புராண ஸ்லோகம் -என்கிறபடியே,
நித்திய ஸூரிகட்குக் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய சர்வேஸ்வரன், பலரும் நம்மை இழக்க
நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து
அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்;

அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும் இழக்க வேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து
திருமலையிலே நாய்ச்சியாருடனே கூட நின்றருளினான்;
அதிகாரி நியதி, கால நியதி, அங்க நியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே
அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே,
பெரிய பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறு கதி இல்லாமையை விண்ணப்பம் செய்து
சரணம் புக்குத் தம்முடைய-அத்யாவசாயத்தை – எண்ணத்தை அறிவிக்கிறார்.

மேலேயும், பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே
‘தர்மி புக்க இடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்;
இங்கு அது தன்னையே வாய் விடுகிறார்.
மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம் போலே.
திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச் செய்தேயும், –
அகாரம் உகாரம் நார சப்தங்கள் ஸ்ரீ சம்பந்தம் சொல்லும் சப்தங்கள்
வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அது போலே இத் திருவாய்மொழி.

“தாவத் ஆர்த்தி:-“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம் அஸேஷாக நாஸநம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பகவானைப் பார்த்துப் பிரமன் கூறியது

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”–என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம். 7 : 16.

1-‘இழந்தது பெற வேணும்’ என்னுமதுவும் அவ்வளவே.
2-ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும் அவ்வளவே.
3-தாவந்மோஹ: – சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்தி பண்ணுகை என்னும் அதுவும் அவ்வளவே.
4-ததாஸுகம் – “ஏஷஹ்யேவாநந்தயாதி – இவனே யன்றோ ( ஜீவனுக்கு ) ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு
விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே.
யாவந்நயாதிஸரணம் த்வாம் அஸேஷாகநாஸனம் – செல்வம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி விரோதி இவை எல்லாம்
உன்னைக் கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது.-சர்வ பல சாதகம் பிரபத்தி –
(இவை எல்லாம்-ஆர்த்தி – ஆசை -மோகம்- இதரவிஷய ஸூகங்கள்-இந்த நால்வருக்கும் )

அவனை ஆஸ்ரயிக்கும் அளவே -இழந்தது பெறுவதும் –
ஆர்த்தன்-வாஞ்சா -ஐஸ்வர்ய காமன் ஆசை -அர்த்தாத்தி -அபிராப்தி விஷய சாபல்யம் —
மோஹம்-அஜ்ஞ்ஞானம் -ததா சுகம் இஹ லோக சுகம் -விரோதிகள் -தொலைந்து -அபேக்ஷிதங்கள் பெறுவர் –
அனைத்துக்கும் தம் இடம் வரச் சொல்லி -திட்டம் -அழகு குணம் பார்த்து என்றாவது ஒரு நாள் வைராக்யம் பெற்று
பகவல் லாபார்த்தி ஆவார்கள் -கதி த்ரயத்வ மூலத்வாத்

இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும் போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று,
எப்பொழுதும் அண்மையில் இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

இனித் தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும் வேணும்;
தான் அதிகாரியாகவும் வேணும்.
நற் குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அது தானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணா நின்றோம் அன்றோ.
இங்ஙனே இருக்கச் செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம்
கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம்.

இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –

“மயர்வற மதிநலம் அருளினன்” என்னா,உடனே மடல் எடுத்துக் கொண்டு புறப்படுவார் வேணும்.
(எப்படியாவது கார்யம் செய்விக்கத் தேடுவார்களே -அச்சம் கொடுத்து ஆகிலும் காரியமே மடல் எடுப்பது )
செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடி யுடையார்க்குக் கார்ய கரம் ஆகாதே அன்றோ.
பெருமாள் போல்வார் இடம் இல்லாமல் ஆழ்வார் போல்வார் இடமே சரணாகதிக்கு பலம் கிட்டும் -என்றபடி
வேறே இடம் போகாமல் அவன் இடமே கார்யம் நிர்பந்தித்தாகிலும் அச்சம் கொடுத்தாவது கார்யம் கொள்வார் வேணும் –
ஸூ பிரவ்ருத்தியில் ஈடு படாமல் பர ப்ரவ்ருத்தி எதிர்பார்த்து -நான் பண்ண மாட்டேன் -உன்னை பண்ண வைப்பேன் என்றாரே

“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –

கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

ஒன்பது பாசுரங்களாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாசுரத்தில் சரணம் புகுகிறார்.

அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆராவமுதே -அரங்கமேய அந்தணன் –
ஸ்வாமி புஷ்கரணி தடே -மந்தி பாய் –வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –அரங்கத்து அரவிந் அணையான்
விண்ணவர் கோன்-விரையார் பொழில் வேங்கடவன் -நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஆகாதோ மதுராம் புரிம்
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு இடம் இருக்க -இப்படி மூன்று ஸ்தானங்கள்
இரட்டைக் குழந்தை தாய் -விண்ணோர் மண்ணோர்-அனுபவிக்க திருமலை
ரிக்வேதம் -பத்து புராணங்கள் பேசும் -ரிஷபாசசலம்-
வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி -சேஷாசலம் வேங்கடாசலம் -நான்கு யுகங்களாக காத்து இருந்த திருமலை
வேங்கடேச சம ஸ்தானம் நாஸ்தி கிஞ்சித் – ந பூதோ ந பவிஷ்யதி -வேங்கடேச இதிஹாச மாலை அனந்தாழ்வான் பணித்தது –
கரவீர புரம்-ப்ரஹ்மா பசு ருத்ரன் கன்று –
வேங்கடேசன்-மாட்டை அடித்ததால் சபிக்க -பிசாசாக -அடுத்த பிறவி ஆகாச ராஜன் -மகள் பத்மாவதி -தம்பி தொண்டைமான் சக்கரவர்த்தி
வேகவதி தானே பத்மாவதி தேவி -நாராயண புரம் -ஆகாச ராஜன் பிரார்தித்த படி -புரட்டாசி ஸ்ரவணம்-ஏகாந்தமாக சேவை –
கல்லும் கனை கடலும் -விண் மேல் இருப்பாய் மலர் சேர்ப்பாய் –திருச் சுகவனூர் -திருச்சானூர் மருவி -சுகாச்சார்யார்
ஓன்று அத்விதீயம் இரண்டு வாக்கியம் மூன்று கண்டங்கள்-
நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்த பஞ்சகம் -ஆறு பாதங்கள் -ஏழு சமுத்திரம் போலே –
அஷ்டாஷர விவரணம்- நவ ரசம் சாந்தி கொடுக்கும் த்வயம் –
பாட்டுத் தோறும் திருவடி பிரஸ்தாபம் பதிகத்தில் –
கைங்கர்ய பிரார்த்தனை ஒழி வில் காலம் எல்லாம்
இதில் சரணாகதி
த்வயம் இரண்டு வாக்யத்துக்கும் இவை இரண்டும் –
குரு பரம்பரா பூர்வகமாக த்வயம் ஸதா அனுசந்தேயம் –சந்ததஸ் ஸ்புரிதா சதம் -நம் பூர்வர்களுக்கு

———————————————————————–

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

குண பூர்த்தி -உள்ளவன் இதன் சரணாகதி -முதலில் குணங்களை சொல்லி பின்பு அகலகில்லேன் -சரணம் அடைகிறார் –
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் முன்பே வெளியிட்டு அருளினார்-
நாலு தூதிலும் பிராட்டி சம்பந்தம் வியக்தம் -முதல் நோற்ற நாலிலும் பிராட்டி சம்பந்தம் வியக்தமாக இல்லையே –
ஸ்பஷ்டம் -அடையாளம் -வாக்ய த்வயத்தில் -குண பிரஸ்தாபமும் திருவடி பிரஸ்தாபமும்
அகில ஜகத் ரக்ஷணம் ஸ்வ பாவன்-ஸ்வத சித்த சேஷ பூதன் -உன்னை அடைந்து கைங்கர்யம் செய்வது என்றோ –
ரக்ஷகத்வம் குணம் -அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுப்பது –
உபாயம் -பலத்துக்கு அருகில் சேர்த்து -பல பிரதன்-பிராப்யம் புருஷார்த்தம் — திருமலையில் ஸந்நிஹிதன் –

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் -பெரு -ரக்ஷணம் பாரிப்பு மிக்கு -ரஷ்யத்து அளவு அன்றிக்கே-
சிம்ஹிகை திருவடி வாய்க்குள் சென்று மீண்டது -உபகரணம் திருப்பவளம்
ரக்ஷணம் -ஞான சக்தி ஸமஸ்த கல்யாண குணங்கள் சேர்ந்து -ரக்ஷணத்துக்கு உபயுக்த குணங்கள்
நிருபாதிக சேஷித்வம் -ஸ்வரூபம் அம்மான் –

நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!-அசாதாரண பரிகரம்-ஸ்வ பாவிக ஸுந்தர்ய லாவண்ய அகில குண ஒஜ்வல்ய
ரூப குணங்கள் -தேஜோ மயம் திரு மேனி உடன் வந்து ரக்ஷிக்கிறான் திரு வேங்கடத்து எம்பெருமான் அன்றோ
அபரிச்சேதம் -அளவுக்கு உட்படாத பெருமை -பஞ்ச பிரகார விசிஷ்டன் –
1-ரக்ஷணம் -2- ஞானம் சக்தி 3-சேஷித்வம் -4-திவ்ய மங்கள விக்ரகம் -5-அபரிச்சேத்யம்-பரி பூரணமான பிராண பூதன்

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!-முகம் தோன்றும் படி -சர்வ லோகத்துக்கும் சிரசாவாஹ்யம்
ஸூ ஸ்திரமாக கண்ணுக்கு இலக்காக -அருளுவதில் உறுதி -பாபிஷ்டன் ஆனாலும் –

குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே-சேஷித்வம் பிரகாசிப்பித்து நின்று -சேஷத்வம் அறிந்த ஏழு ஆள் காலம் பழிப்பு இலோம்
பழைய அடியேன் -சேஷி ரக்ஷகன் போக்ய பூதன் -உன் திருவடிகளை பிறப்பிக்கும் வழியை கூற வேண்டும்

1-பிரளய ஆபத்தில் -விரஹ ஆபத்து -லோகமாக -ஒருவனை -ஆர்த்தி அறியாதார் -ஆர்த்தி அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ
2-அர்த்தித்தவம் இல்லா உலகம் -ஆசைப் பட்டாரை-ரஷிக்கலாகாதோ -அர்த்தித்தவம் ஆசா கார்யம்
3-வயிற்றில் வைத்து -வடிவு காட்டி ரஷிக்கலாகாதோ
4-அபி நிவேசத்தால் ரக்ஷித்தாய்- நான் அபி நிவேசித்தால் ரஷிக்கலாகாதோ
5-வாயாலேயே ரக்ஷிக்க வேண்டுமோ -வார்த்தையால் ரஷிக்கலாகாதோ
6-அபரியந்த குணங்களை அழிய மாறியோ ரஷிக்க வேண்டும் -அவற்றை அனுபவிப்பித்து ரஷிக்கலாகாதோ
7-உறவு அறியா லோகம் -உறவு அறிந்த என்னை -ரஷிக்கலாகாதோ
8-வடிவில் வாசி அறியாத உலகம் -அறிந்த என்னை ரஷிக்கலாகாதோ -பெருமை உணராத லோகம்
9-வியதி ரேகத்தால் தரிக்கும் லோகம் -வாழ மாட்டேன் என்று இருக்கும் என்னை ரஷிக்கலாகாதோ
10–ஸுலப்ய ஞானம் இல்லா லோகம் -அன்ய சேஷம் -அன்ய கதி ரஷிக்கலாகாதோ -பிரயோஜனாந்தர பரர்களை ரக்ஷித்தாயே
11-பிரிய நினைப்பார் -எழுவார் -வைகல் தொழுவார் வழுவா வகை நினைந்து -கூட இருப்பாரை ரஷிக்கலாகாதோ
12–மகா வியாபாரம் செய்து ரஷிக்க -மாஸூச சொல்லி ரஷிக்கலாகாதோ
13-ஏக பிரளயம் -பஹு நாம் அனுக்ரகம் நியாயம் -என் பிரளயம் மோசம் –
14-அசேதனம் -உலகம் -உண்டது முக்கியமா உலகத்தாரை ரக்ஷித்தார்-அசேதனம் போலே அன்றோ கிடந்தார்கள்

பிரளயகாலத்தில் உலகத்தை எல்லாம் புசித்த பெரிய திருவாயினையுடையவனே! அழிதல் இல்லாத கீர்த்தியையுடைய அம்மானே!
எப்பொழுதும் நிலைபெற்றிருக்கின்ற சுடர்கள் சூழ்ந்திருக்கின்ற ஒளியையுடைய மூர்த்தியே! நெடியோனே! அடியேனுக்கு அரிய உயிராக இருப்பவனே!
உலகத்திற்கெல்லாம் திலதம் போன்று நிற்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே!
தொன்று தொட்டே வருகின்ற தொண்டக்குலத்திலே பிறந்த அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சேரும்வகை கூறியருள வேண்டும்.
உலகுக்குத் திலதமாய் என் மாற்றுக.
இத் திருவாய்மொழி அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

உன்னை ஒழிய வேறுகதி இன்றிக்கே இருக்கிற என்னை உன் திருவடிகளிலே
சேரும்படி செய்தருள வேண்டும் என்கிறார்.

உலகம் உண்ட பெரு வாயா –
தேவர் திருவடிகளைக் கிட்டாத அன்று எனக்கு உண்டான தளர்த்தி,
பத்துப் பிரளய ஆபத்தைப் போன்றதேயா மன்றோ? –ஸ்வரூப நாசம் அன்றோ –
பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவன்றிக்கே இருக்கும் பாரிப்பை யுடையவனே! -பாரிப்பின் அதிசயம் -சம்போதானம் –
உன் பாரிப்புக்கும் என் துயரத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
நீ, அறிந்த சம்பந்தமும் ஆபத்துமே கைமுதலாகக் காப்பாற்றுமவன் அன்றோ! –குழந்தைக்கு தெரியா விடிலும் தாய் காப்பாள் –
ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ?
பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ?
அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ?
( உலகத்தார் உலகம் போல் அசேதனமாக இருந்தார்களே )
சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
ஜலப் பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ?
பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ?
‘சரணம் புகாதாரை ரக்ஷிக்க வேண்டும் என்கிற நியதி உண்டோ! சரணம் புக்காரை ரக்ஷிக்கலாகாதோ?

ரக்ஷித்துச் சமைந்து பின்னையும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று இருக்கக் கடவ உனக்கு
என்னுடைய ரக்ஷணத்தில் கலவாமல் கை வாங்கி இருத்தல் போருமோ?
பிரளயாபத்தை ரக்ஷித்துப் பின்பும் ‘நாம் இவற்றுக்குச் செய்தது ஒன்று உண்டோ’ என்று உடன் கிடந்தாரை மடி தடவி,
பின்னர் ‘என் செய்தோமானோம்’ என்று தபிக்கின்றவர்களைப் போலே இழவு பட்டிருப்பான் ஒருவன் அன்றோ நீ!

பெரு வாயா –
பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது,
அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும்,
தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி.

பெரு வாயா –
திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க,
சபையில் துச்சாதனன் உண்டாக்கின மான பங்கத்தையும் நீக்கி,
துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து,
தரும புத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும்
“வட்டிக்கு வட்டி ஏறின கடனைப்போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை” என்று
கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”- என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.
குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிற போதும்
“நாதிஸ்வஸ்த்தமநா: – நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில்
புண்ணோடே யன்றோ எழுந்தருளினான்.

உலப்பு இல் கீர்த்தி அம்மானே –
இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையது கொண்டு வளைப்பிடுகிறேன் அல்லேன்;
இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஆர்ஜித்த -ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது.
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழே அன்றோ. திருநெடுந்தாண்டகம்,
இப் படிகளால் வந்த குணங்களுடைமையால் வந்த பிரசித்தியை யுடைய சர்வேஸ்வரனே!

“அந்தப் பரமாத்மாவின் கீர்த்தி பெரியது” என்றும்,
“கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்”
“யஸஸ: ச ஏக பாஜனம்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19.என்றும் உபதேசத்தால் அறிய வேண்டும்படி அன்றிக்கே,
“எல்லாராலும் அறியப்பட்டவர்”
“விதித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.சுந். 21 : 20.என்று பகைவர்கள் கூட்டத்திலும்
இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது.
‘பாதகத்தின் சந்நிதியிலே பாதிக்கப்படும் பொருளும் ஜீவிக்கும்படி அன்றோ உன்னுடைய ஆணை இருப்பது.
அவன் நினைத்த அன்று பாதகந்தானே பாதிக்கப்படுகிற பொருளுக்குப் பால் ஊட்டி வளர்த்தா நிற்குமன்றோ.-
பெரிய திருவடி சுமுகன் –

உலப்பு இல் கீர்த்தி அம்மானே –
“குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.“குணங்களுக்கெல்லாம் நிலையமாக இருப்பவன்” என்றும்,
“அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்” “ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸ புராணம்.என்றும்,
“ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய கல்யாண குணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள்
கூறினாலும் முடிவு பெறுவன அல்ல” என்று
வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”-என்பது, மஹாபாரதம் கர்ண பர்வம்.

“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீ ராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன”
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.
என்றும் சொல்லுகிற குணங்களும் முடிவு இன்றிக்கே இருக்கை.
இவற்றை எல்லை காண நினைத்தால் கரை கண்டு மீள ஒண்ணாது. மதிக் குறைவாலே மீளுமத்தனை.

ஸ்வரூபம் ஒழிய குணங்களுக்கு அன்றோ இவர் தோற்றது –

நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி –
பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி.
நிலவும்-
ஒரு கருமம் காரணமாக வந்து அது வற்ற வற்றுவது அன்று ஆதலின் ‘நிலவும்’ என்கிறது.
சுடர் சூழ்-
உள்ளு மண் பற்றாய்ப் புறம்பு ஒளி ஊட்டியிருத்தல் அன்றிக்கே, “ஒளிகளின் திரள்” திருவாய். 1. 7 : 4.என்கிறபடியே,
ஒளிப் பொருள்களைத் திரட்டிப் பிடித்தாற்போலே இருத்தலின் ‘சுடர் சூழ்’ என்கிறது.
இராசத தாமதங்களால் கலந்தது அன்றிக்கே, சுத்த சுத்துவமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய்,
நெய் திணுங்கினாற்போலே உள்ளும் புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.

“உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றை” -முதல் திருவந்தாதி -என்னக் கடவதன்றோ.
திருமேனி தன்னைப் “பஞ்ச சக்தி மயம்” என்றும் சொல்லா நின்றார்கள்;
“ஷாட் குண்ய விக்ரஹம்” என்றும் சொல்லா நின்றார்கள்;
ஆராய்ந்து பார்த்தால் பொருளின் நிலைமை தான் “பஞ்சசக்தி மயம்” என்றே இருக்கும்;
‘ஷாட்குண்ய விக்ரஹம்’ என்றது, திருமேனி தான் குணங்களுக்குத் திரோதாயகம் அன்றிக்கே பிரகாசகமாய் இருக்கையாலே.
“மன்மதன் போன்ற சுந்தரமான உருவமுடையவர்; கவர்ச்சிகரமான காந்தி யுடையவர்”
“ரூபவாந் ஸுபக: ஸ்ரீமாந் தந்தர்ப்ப இவ மூர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 30.-என்றும்
“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ண பிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்”
“தாஸாம் ஆவிரபூத் சௌரி:. . . ..ஸாக்ஷாத் மந்மதமந்மத:”-என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.-என்றும்
சொல்லுகிறபடியே யன்றோ இருப்பது.
மன்மதனும் மடல் எடுக்கும் படியான அழகன் அன்றோ –

நெடியாய் –
மேலே கூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம்
முதலானவற்றிற்கு எல்லை காண ஒண்ணாதபடி யாயிருக்கை.

நெடியாய்
“குணானாம் ஆகரோ மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரை காண ஒண்ணாதிருக்கிறபடி.

அடியேன் ஆருயிரே–
வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னை விட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே!
“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க
இதனைக் -அடியேன் ஆருயிரே-கூட்டக் கடவது.

திலதம் உலகுக்கு ஆய் நின்ற –
பெண்களுக்கு நிறைந்திருக்கின்ற ஆபரணம் போலே ஆயிற்று பூமிக்குத் திருமலை.

திருவேங்கடத்து எம்பெருமானே அடியேன் ஆர் உயிரே –
திருமலையில் நின்று என்னுடைய சேஷத்வ முறையை அறிவித்து, உன்னால் அல்லது செல்லாதபடி செய்தவனே!-
அடியேன் –
சேஷத்வம் அறிவித்து
ஆர் உயிரே –
உன்னால் அல்லது செல்லாதபடி செய்தவனே–என்கிறார் –
எங்கும் திருவேங்கடத்தான் சந்நிதிகள் உண்டே –

இவ்வளவும் வர, அவனுடைய ஸ்வரூபம் சொன்னார்;
இனி, தம் ஸ்வரூபம் சொல்லுகிறார்:

குல தொல் அடியேன் –
குலமாகப் பழையதான அடியேன்.-எந்தை தந்தை –முன்பே அருளி –
இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் –
ஒருவர்க்கேயாய் இருப்பாரை வேறு சிலர் நோக்குதல் இல்லை அன்றோ.

உன பாதம் கூடுமாறு கூறாய் –
ஸ்வரூபம் இதுவான பின்பு, ஸ்வரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய்.

அடியேன் உன பாதம் கூடுமாறு –
அடியவன் உன்னைக் கூட என்னுமது ‘உன பாதம் கூட’ என்பதே அன்றோ.

உன பாதம் கூடுமாறு –
இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி.
பெறுமாறு சொல்லாமல் கூடுவதை -சா யுஜ்யம் -யுஜ் -தாது -சேர்ந்து குண அனுபவம் –

கூறாய் –
உனக்கு ஒரு சொல்;
எனக்கு ஸ்வரூப லாபம் கண்டாய்.
அவன் ஒரு வார்த்தை அருளிச் செய்ய, தளப்பம்-அலைச்சல் – தீரும் அன்றோ
இவர்க்கு. “மாஸூச: – துக்கப்படாதே” என்ன வேணும்.

————————————————————————————————————————–

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-

அசேஷ விரோதி நிவர்த்த -ரக்ஷகத்வம் முதலில் சொல்லி -திவ்ய ஆயுத சேர்க்கை இங்கே -தொண்டைமான் சக்கரவர்த்திக்கு
சங்கு சக்கரம் கொடுத்து -ராமானுஜர் -அறிவோம் முன்பு ஆழ்வார் தீர்த்தம் சுரங்கம் இவன் சென்று அவன் இடம் பேசி வர -பிரார்த்தித்து பெற்றான் –
வில்வ புஷப அர்ச்சனை நாக பூஷணம் -தாழ் சடையும் பாசுரம் -நமாமி வில்வ நிலையாம் -லஷ்மிக்கு அர்ச்சனை
மாமனார் கொடுத்த ஆபரணம் -குமார தீர்த்தம் -ஸ்கந்த புராணம் -சிவன் சொல்லி தபஸ் பண்ணி அதனால் பெற்ற பெயர்
எம்பெருமானார் கொடுத்த பின்பு கழற்ற வில்லையே -அனந்தாழ்வான் தங்க கவசம் -இதையும் கழற்ற மாட்டார்கள் -அதுக்கும் மேலே கவசம் –
திருவடிக்கு கீழே பீறிட்டு தீர்த்தம் -ஸம்ப்ரோக்ஷணம் போது பார்த்தார்கள் -உயர் அழுத்த தீர்த்தம் –
ஆயுத ஒஜ்வல்யம் -அத்யந்த அபி நிவேசத்துடன் உன் திருவடி சேர வேண்டும்

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்-நாநா வாக சின்னமாய் –பஸ்மம் பொடி பொடி யாகி -நிலத்துடன் சேர்ந்து அழிந்து
தரைப்பட்டு-போகி-போகும் படி சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
ஜ்வலியா நிற்கும் -விரோதி வர்க்கம் நிரசனம் பாரிப்பு -வீர ஸ்ரீ உடைய -அழகான -அடக்கி ஆள வல்ல சர்வ சக்தன்
வலப்பக்கம் கொண்டவன் என்றுமாம் –
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!-தாமரை பங்கஜம் நிமித்தம் சேற்றில் பிறந்த செந்தாமரை -ஆறாத கயம்-
பங்காரு பாவி –பூல பாவி தோமாலை சேவை -மாலை ஜீயர் ஸ்வாமி மட்டும் -ஏகாந்த சேவை -பாபா நாசினி -ஆகாச கங்கை தீர்த்தம்
தண்ணீர் அமுது திருத்தும் உத்சவம் இன்றும் உண்டு -தீ போன்ற சிவந்த தாமரை
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.-ஒரு காலும் அளவு படாத அன்பு -ப்ரேமம் -இல்லமாகக் கொண்ட உடைய
சேஷ பூதன்-திருவடி சேரும் படி அருள வேணும் -அன்பில்-அன்பு இல் இல்லமாக உடையவன் –

கொடிய வலிய அசுரர் கூட்ட முழுதும் கூறு கூறு ஆகிச் சாம்பலாகி மண்ணோடு மண்ணாகும்படியாகச் சீறி, ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற அழகிய
சக்கரத்தை வலக்கையில் தரித்திருப்பவனே! நித்திய சூரிகளுக்குத் தலைவனே! சேறு பொருந்திய சுனைகளிலே தாமரை மலர்கள் சிவந்த நெருப்பினைப்போன்று
மலர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! குறைவுபடாத அன்பினையுடைய அடியேன் உனது திருவடிகளைச் சேரும்படி திருவருள் புரியவேண்டும்.
அசுரர் குலம் எல்லாம் கூறு ஆய் நீறு ஆய் நிலனாகிச் சீறா எரியும் திரு நேமி என்க. ‘ஆகி’ என்பதனை ‘ஆக’ எனத் திரிக்க.
ஆகச் சீறி எரியும் என்க. அன்பில் – அன்பினையுடைய.

‘கூடக்கடவீர்; அதற்கு ஒரு குறை இல்லை; ஆனாலும், தடைகள் கனத்து இரா நின்றனவே’ என்ன,
உன் கையில் திருவாழி இருக்க, நீ இங்ஙன் சொல்லலாமோ? என்கிறார்.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா –
நீ கை கழலா நேமியானாய் இருக்கிறதற்கும் என் தீ வினைகள் கிடக்கைக்கும் என்ன சேர்த்தி உண்டு?
தடை இல்லதா சக்தியை யுடைய திவ்விய ஆயுதங்களானவை இவனுடைய பாபங்கள் எல்லாவற்றையும்
போக்கிக் காப்பாற்றக் கூடியனவாயிருக்கும்.
அவனாலே வருமவற்றையும் போக்கக் கூடியனவாயிருக்கும்.
“எல்லா ஆபத்துக்களினின்றும் காப்பாற்றுகின்றன” என்னப்படுவன அன்றோ.
“ஸகல” என்ற சொல்லுக்குள்ளே இவனும் உண்டே.
அவ்வியாகத்தானி ரஷந்தி சகல ஆபத்யாக -சகல சப்தத்தில் இவனும் -பரமாத்மாவும் உண்டே –
நம்மால் வரும் ஆபத்துக்களையும் என்றுமாம் –

இனித் தான், பாவங்கள், “ஸம்ஸாரங்களில் பாபிகளான மனிதர்களைத் தள்ளுகிறேன்” என்கிறபடியே,
“ஸம்ஸாரேஷு நராதமாந். . .க்ஷிபாமி”-என்பது ஸ்ரீ கீதை, 16 : 19.
இவன் பக்கல் குற்றங்களைக் கண்ட அவனுடைய நிக்கிரஹத்தாலே வருமவை அன்றோ,
அங்ஙனே வருமவற்றையும் போக்கக் கூடியனவாயிருக்கும் இவை.
அதற்கு அடி, அவன் அடியில் செய்த அநுக்கிரஹதையே நினைத்திருக்கையாலே.

இனித் தான், ‘இவற்றின் தோஷங்களைக் கண்டு நாம் ஒரு காரணம் பற்றிச் சீறின போதும் நீங்கள் கைவிடாமல்,
நாம் அடியிற்செய்த நம்முடைய இயல்பான அருளைப் பார்த்து நீங்கள் காப்பாற்றுங்கோள்’ என்று
அவன் பக்கல் பெற்றுடையர்களாய் இருப்பர்கள் அன்றோ. (ரஹஸ்ய உத்தரவு பிறப்பித்து அருளி இருப்பானே இவர்களுக்கு )
அருளார் திருச் சக்கரம் அன்றோ-திருவிருத்தம், 33.-
அருளால் ஸ்ருஷ்டித்து அருளுவதற்காகவே ஸ்ருஷ்டித்த பின்பு –அனுக்ரகம் ஸ்வாபாவிகம் -நிக்ரகம் காரணம் பற்றி வருமதே –
பண்டே அவனைக் கை கண்டிருப்பவர்கள் அன்றோ. –
வரம் ததாதி வரத–அவன் அருள் மறுத்த போதும் இங்குத்தை அருள் மாறாதே அன்றோ இருப்பது.
ஆகையாலே, அவன் திருவருளைப் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையை அன்றோ
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது.

கூறாய் நீறாய் நிலனாகி-
திருச் சரம் போலே “சிந்நம் பிந்நம்”“சிந்நம்பிந்நம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
என்கிற பரும்பணிக்கு விட்டுக் கொடாத திருவாழி.
திருச்சரத்துக்கு, இதனை நோக்க ஒரு குணத்தின் சேர்க்கை உண்டு என்கிறார், –
நாண் ஸ்பர்சம் -குணம் சாடு-
முற்பட, இரு துண்டமாக்கிப் பின்னை நீறாக்கிப் பின்னை அது காண ஒண்ணாதபடி
வெறும் தறையாக்கும்.
ஆகி – ஆக்கி. அல்லது, ஆகும்படி என்றுமாம்.

கொடு வல் அசுரர் –
சீறுகைக்குக் காரணம் இருக்கிறபடி. கொடிய செய்லகளைச் செய்யக் கடவராய்,
ஒருவரால் வெல்ல ஒண்ணாதபடி வலியை யுடையரான அசுரர்.

குலம் எல்லாம் –
ஒருவன் செய்த குற்றமே ஜாதியாக முடிக்க வேண்டும்படி இருக்கையாலே,
ஒருவரும் தப்பாமல் கோலி முடித்தபடி.
அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற இவன் வளைவில் அகப்படாதார் இல்லை.
திரு நேமி -அழகு அனுகூலர்களுக்காக -கூர்மை பிரதி கூலர்களுக்கு –
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் –
“வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார்” இது, திருவிருத்தம், 70.-என்று,
அவன் வளைவிலே அகப்பட்டுப் பின்பே யன்றோ மேல் போயிற்று.

கூறாய் நீறாய் நிலனாகைக்குச் செய்த செயல் ஏது?என்ன,
‘சீறா எறியும்’ என்கிறார். என்றது.
இவை முடிந்து போகச் செய்தேயும் கொண்ட குதை( உத்யோகம் ) மாறாமல்,
இரை பெறாத பாம்பு போலே ஒளி விடா நிற்கும்.

திரு நேமி வலவா –
நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் துக்கத்தைத் தரித்திருப்பதே!

தெய்வக் கோமானே –
இப்படி அடியார்களுக்காக வந்து படுகிறவன் ஆள் இல்லாதவன் அல்லன் கண்டீர்!
அயர்வறும் அமர்கள் அதிபதி கண்டீர்.
அங்குக் கையும் திருவாழியுமான அழகை அநுபவிப்பாரே அன்றோ உள்ளது;
இரு துண்டமாக விடுவதற்கு ஆள் உள்ளது இங்கே அன்றோ.
இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே.
‘அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்’ திருவிருத்தம், 33.
என்கிறபடியே, அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும்.
அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும்.
அங்குள்ளார்க்குக் கை மேலே ஜீவனமாயிருக்கும்;
இங்குள்ளார்க்கு விரோதியைப் போக்கிப் பின்னையாயிற்று ஜீவனம் இடுவது.
அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே;இவர்களுக்கு அது இல்லையே.-ஸூய பிரயத்தனம் இங்கு –
என்? நாம் இப்போது சேய்மையில் உள்ளோம் அல்லோமோ? என்னில், அதற்கு விடை அருளிச் செய்கிறார் மேல் :

சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே –
சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப் போலே மலரா நிற்கும்.
எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது;
நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது.

ஆறா அன்பில் அடியேன் –
இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி.
சுனைகளில் நீர்வற்றில் ஆயிற்று இவருடைய அன்பு வற்றுவது.
மயர்வற மதி நலம் அருள அது அடியாக வந்த அன்பு அன்றோ. ஊற்றுடைத்தே.
கிரமப் பிராப்தி பற்றாதபடியான பிரேமம் அன்றோ.

உன் அடி சேர் வண்ணம் அருளாயே –
உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்.
நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பிரயோஜனம் பெறப் பாராய்! என் அன்புக்கு இரை இடப் பாராய்-

————————————————————————————————————

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-

ரூபம் குணம் இனிமை -கீழே ரக்ஷகத்வம் திவ்ய ஆயுத சேர்க்கை சொல்லி -ஸூரிகளுக்கு உத்துங்க-அனுபாவ்யம் –
அபேஷா நிரபேஷமாக -நீரே பிரார்த்தித்து கீழே வந்து –
கௌண்டின்யபூர் குண்டினபுரம் ருக்மிணி -சந்நிதி -கோலாப்பூர் -பத்மாவதி தாயார் சந்நிதி –
ஆஸ்ரயநீயனாக வந்தவோபாதி அடியேற்கு அருள வேண்டும்
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!-ரூபம் -பிச்சேறும் படி அழகு –வர்ணம் -நிறம் -ஸ்வ பாவம்
ஆச்சர்யமான திருக் கல்யாண குணங்கள் சர்வாதிகன்
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!புஜிக்க ஒட்டாத படி -வாயில் புகும் அமுதம் இல்லை –
விக்ரக குண சாரஸ்யங்களை நித்ய ஸூரிகளுக்கு அனுபவிப்பிக்கும் மேன்மை
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!-தெளிந்த அழகிய –
பொன் முத்தும் –அரி உகிரும்- -திரு நறையூர் –காவேரி சீராகக் கொண்டு வருமே -சந்நிஹிதன்
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.-ஆ ஆ என்று ஆராய்ந்து அருளாயே -அசாதாரண சேஷி –
பிரகாசிப்பித்துக் கொண்டு நிற்கிறவனே -தனித் தன்மை -திருவடி -சேர அடியோர்க்கு -பாட பேதம் –சேஷ பூதர்களுக்கு இரங்கி அருள வேண்டும்
வண்ணம் அருள் -ஸ்வ பாவம் யதார்த்தம் -அருளையே வண்ணமாக ஸ்வ பாவமாக உடையவன் –பிரகாரம் -அருள் கொண்டு தர்ச நீயமான
மேகம் போன்ற வடிவு –வண்ணம் வடிவு கண்டார் நெஞ்சை இருளப் பண்ணுகை–மேகத்தின் அகவாய் கல் என்னும் படி இவரது அருள் -மூன்றும்

கண்டார் மனம் மயக்கத்தைக் கொள்ளுதற்குக் காரணமான வடிவையுடைய அழகிய மேக வண்ணா! ஆச்சரியத்தை யுடைய அம்மானே!
மனத்திலே புகுந்து இனிக்கின்ற அமுதே! நித்திய ஸூரிகளுக்குத் தலைவனே! தெளிந்த நல்ல அருவிகளானவை மணிகளையும்
பொன்னையும் முத்துக்களையும் கொழித்துக் கொண்டு வருகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! அண்ணலே!
உன் திருவடிகளைச் சேர்வதற்கு, உனக்கு அடிமைப்பட்ட எனக்கு ஐயோ! ஐயோ!! என்று திருவுள்ளம் இரங்கி யருள்வாய்.
மருள் கொள் வண்ணம் என்க. “ஆஆ” என்பது, இரக்கக் குறிப்பு. என்னாய் என்பது, விதிவினை; இரங்கி யருள வேண்டும்.

“அருளாய்” என்றீர்; இங்ஙனே நினைத்த போதாக அருளப் போமோ? என்ன :
வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடியான ஞான லாபத்தைப் பண்ணித் தந்த உனக்கு,
பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? என்கிறார்.
என்றது, என்னால் வந்த குறை அறுத்த உனக்கு, உன்னால் வரும் குறை அறுத்தல் பெரிய பணியோ என்றபடி.

வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா –
வண்ணமானது –
பிரகாரமானது, அருள் கொண்டிருப்பதாய், காண்பதற்கு இனிய மேகம் போன்ற வடிவை யுடையவனே!
அன்றிக்கே,
வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம்.
“மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. –மருள்
மேகத்துக்கும் எம்பெருமானுக்கும் விசேஷணம்
அங்ஙனம் அன்றிக்கே,
மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான
திருவருளின் மிகுதி இருக்கிறபடி என்னலுமாம்.
(மேக வண்ணம் அருள் கொள் வண்ணா -மேகம் கறுப்புக்கு மட்டும் -அருள் இதுக்கு விசேஷணம் இல்லை )

மாய அம்மானே –
வெறும் வடிவழகே அன்றிக்கே, ஆச்சரியமான குணங்களாலும் செயல்களாலும் பெரியன் ஆனவனே!

எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே –
தெய்வப் பிறவியிலே பிறந்து ஒரு சாதனத்தைச் செய்து அதனாலே பெற்றுப் புஜிக்கும் போது இனிதாகை அன்றிக்கே,
இன்னார்க்கு என்று அன்றிக்கே நினைத்த மாத்திரத்தாலே தானே வந்து புகுந்து இனிதாகை.
உள்ளுந்தொறும் தித்திக்கும் அமுது அன்றோ.
பிரகலாதன் விபீஷணன் போல்வாருக்கும் – நினைக்கும் தோறும் தித்திப்பவன்
(எண்ணும் பொழுதே தித்திக்கும் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய -இத்யாதிக்குப் போக வேண்டாம்
தேவன் அசுரர் -சாமான்ய அதி தைவதம் )

இமையோர் அதிபதியே –
மது விரதம் போலே, இந்த அமிருதமே ஜீவனமாக இருக்குமவர்கள்.

தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே –
தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும்
கொழித்து ஏறட்டுகிற திருமலையிலே நின்றருளுகிற சர்வேஸ்வரனே!

அண்ணலே –
திருமலையிலே வந்து நின்று எனக்கு உன் சேஷித்வத்தை உதறிப்படுத்தவனே! –
ஸ்த்ரீகரணம் ஸ்தாபித்து நிஸ் சங்கையாக –

இமையோர் அதிபதியாயிருந்து
வைத்து வண்ணமருள் கொள் அணி மேக வண்ணனாய்
மாய அம்மானாய்த்
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானாய்
அண்ணலாய்க் கொண்டு,
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்கிறார்.

உன் அடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாய் –
கிட்டி நின்று முறையை அறிவித்த நீ, பேற்றினையும் செய்து தாராய்!
உன் திருவடிகளை அடையும்படி வேறு கதி இல்லாத எனக்கு
ஐயோ ஐயோ என்று திருவருளைச் செய்தருள வேண்டும்.
உன்னடி அன்றோ?
உபாயமுமாய் உபேயமுமாய்ப் போக்கியமுமான திருவடிகளைச் சேரும்படி கிருபை செய்தருளாய்.

————————————————————————————————–

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

ஜகத்துக்கு விரோதி நிரசன சாமர்த்தியம் -இதில் -ரஷகத்வம் -திவ்ய ஆயுத சேர்த்தி பரிகரம் சொல்லி -அழகு போக்யம் சொல்லி –
விரோதி நிரசனம் செய்யும் ஸ்ரீ உடைய -போக்யமான திருவடிகளை சேருமாறு அருள வேண்டும்
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்–இரக்கம் இல்லாமல் -சம்சார துக்கத்துக்கு மேலே -நலிந்து
அசுரர் ஆயுஸ்-பிராணன் -அழித்து
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!-அக்னி முகம் -அம்பு -உறுக்கிட வாளி பொழிந்த
விரோதி நிரசனத்தால் மகிழும் பிராட்டி -வீர பத்னி -அனுரூப நாயகன் -துல்ய சீல வயோ வ்ருத்தம்
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-அத்தாலே உஜ்ஜ்வலம் -அடைந்த -இவன் காந்தி அவளாலே
ஸ்ரத்தாயா தேவதா தேவத்வம் அஸ்னுதே –
இதனால் ரிஷிகள் மகிழ -சுரர்கள் முனிக் கணங்கள் இட்ட புஷ்பங்கள் -வானோர் வானவர் கோமான் சிந்து பூ மகிழும்
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே-பூலங்கி சேவை சாயங்காலம் -திருவடி சேவை -நிஜ பாத சேவை –பூக்களால் ஆர்ந்த திருவடி –
அந்த புஷ்பங்கள் பெற்ற பேற்றை நான் பெற வேண்டாமோ -அனுபவ யோக்யனாய் இருந்தும் இழக்கும் படி துஸ் தரண மாம் படி பாபங்கள்
கிட்டும் பிரகாரம் கல்பித்து அருள வேண்டும் -கிட்டுமாறு அருள வேண்டும் என்றுமாம் –

ஐயோ! ஐயோ! என்று இரங்காமல் உலகத்திலுள்ளாரை வருத்துகின்ற அசுரர்களுடைய வாழ் நாளின் மேலே,
நெருப்பினை வாயிலே யுடைய பாணங்களை மழையைப் போன்று பொழிந்த வில்லை யுடையவனே! திருமகள் கேள்வனே!
தேவனே! தேவர்களும் முனிவர் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளி யிருக்கின்ற எம்பெருமானே!
போக்கற்கு அரிய வினைகளை யுடைய அடியேன், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பொருந்துமாறு கற்பிக்க வேண்டும்.
“வாணாள் மேல் தீவாய் வாளி பொழிந்த” என்றது, அவர்களைக் கொன்றமையைக் குறித்தபடி.
பூவார் கழல்கள் – பூக்கள் நிறைந்திருக்கின்ற திருவடிகள் என்னலுமாம்.

உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை;
ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்.

நஞ்சீயரை, நம்பிள்ளை ஒரு நாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,
“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும்
அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச் செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப் போலே’ என்றது,
“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி,
“தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று
சொல்லுவாரைப் போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச் செய்யும் போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்’ என்று
அருளிச் செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனே காண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார் காண்” என்று அருளிச் செய்தார்.

தகராகாசம் -நாராயணனுக்கு உள்ளே இருப்பதை உபாசிப்பாய் வியோம அதீத -தாண்டி -தஸ்மிந் அந்தஸ்த உபாஸித்வயம்
குணங்களை உபாசிக்கச் சொல்லிற்று -பசுபதி மதத்தார் உள்ளே உள்ள சிவன் என்பர் –
ஸூவ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய விரகு இல்லை-இதுவே உத்தாரகம் –
வ்யூஹம் -வாசுதேவன் -அந்தர்பூதம் ஆக்கி த்ரி வியூகம் சொல்வது போலே ஆச்சார்ய அபிமானம் ஸ்வ தந்த்ர உபாயம் ஆகிலும்
காலைப் பிடித்து கார்யம் கொள்ளுவது போலே அந்தர்பூதம்-ஐஞ்சாம் உபாயம் என்கிறது அமோக பழுது ஆகாத பலன் என்பதால் –
உபாயாந்தர குற்றம் வராதே -ஆச்சார்யன் ஈஸ்வரனே -காருண்யத்தால் சஸ்த்ர பாணி -மோக்ஷ ஏக ஹேது-பரதந்த்ரன் -ஆச்சார்யர் –
பிராட்டி உபாயம் ஆக்க கூடாதோ -ஸ்வ தந்திரம் வருமே -அதனால் வாராது -ஆச்சர்யராக வருவதற்கு அவன் சங்கல்பித்தான் —
ஸ்வதந்த்ர உபாயம் இல்லை -தானே பரதந்த்ரம் -ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம் –

“ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி
நான் மான பங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக் கூடியவனாய் இருக்கச் செய்தே நான் நோவு படுவதே என்றாளன்றோ.

“ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம்
பாண்டு புத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.

கற்றைத் துகில் பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன் பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே.-என்பது, வில்லிபாரதம்.

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,
‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன,
செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து
ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை,
இதன் சீர்மை அறியாத உனக்கு மஹா பாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு–
திருப்பள்ளி யறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —

திவ்விய மங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம ஸ்வரூப குணங்களும்
நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச்
சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.
பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் –விருப்பம் உள்ளவன் என்று காட்ட -ஓடத்தில் ஏறி அமர்ந்தது போலே –
விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்

ஆ ஆ என்னாது –
ஈஸ்வரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;
நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கை வாங்க அமையும்” என்று அருளிச் செய்தார்.
பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர்.

ஆனால், பிரதிகூலர் பக்கலிலும் கிருபையைச் செய்யவோ? என்னில், அப்படியே யன்றோ இவர்களுக்கு மதம்.
‘கெட்ட வாசனை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்’ என்று இருக்க அன்றோ அடுப்பது.
அவன் “இராவணனே யானாலும்” என்றால்,
“விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”=என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 35.

அவன் உலகத்திலே யுள்ள இவனுக்கு இத்தனையும் வேண்டாவோ? ஆனால்,
“நண்ணா அசுரர் நலிவெய்த” திருவாய். 10. 7 : 5. என்ற இடத்தில், அது எங்ஙனே பொருந்தும்படி? என்னில்,
அதற்கு என்? நண்ணாமை நிலை நின்ற அன்று கொல்லத் தக்கவனாகிறான்.
யாக காரியங்களில் செய்கிற கொலையைப் போன்று அதுதானே நன்மை ஆகக் கடவது அன்றோ.
இவனுடைய தண்ணிய சரீரத்தைப் போக்கி நல் வழியே போக்குகின்றான் அன்றோ.

ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் –
ஐயோ, ஐயோ, என்னவேண்டியிருக்க, அதற்குமேலே நலியா நிற்பார்கள்.
ஒருவனோடே பகைத்திறம் கொண்டானாகில்,
‘பொருளை இச்சித்த காரணத்தால் அன்றோ இது வந்தது, இருவரும் சபலர்’ என்றே அன்றோ இருக்கலாவது;
அங்ஙன் அன்றிக்கே, உலகத்தை அலைப்பர்களாயிற்று.
தம்மோடு ஒக்க உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலியா நிற்பர்களாயிற்று.

அசுரர் –
அதற்குக் காரணம் அவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாகையாலே.

வாணாள்மேல் –
இவர்கள் வீரக் கோலத்தால் வந்த ஒப்பனை குறி அழியாதே இருக்க, உயிரிலே நலிகை. என்றது,
இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை என்றபடி.

தீ வாய் வாளி –
பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது;
படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை.
ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்து கொண்டு செல்லா நிற்கும்.
குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. -குணம் -நாண்- சாடு -குண ஹீனம் -கிருபா ஹீனம் –
“தீப்த பாவக ஸங்காஸை: – படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.

“தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.
காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.
“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே,
அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.
நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க,
எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன்.
நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது;
அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே,
தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”
“ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.
என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

திருமாமகள் கேள்வா –
விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்து அணைக்குமவளைச் சொல்லுகிறது.
“கணவனைத் தழுவிக் கொண்டாள்” என்னுமவள்.
“தம் ஸதருஹந்தாரம் த்ருஷ்டவா – வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகினை யுடையவரை,
எதிரிகளை வென்ற வீரக் கோலத்தோடே கண்டாள்.
ஸத்ருஹந்தாரம்-தம் திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதும் செய்யாதே,
துண்டித்து அடுக்கினவரை.
“தம் த்ருஷ்ட்வா ஸத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.

முன்பு திருவயோத்யையில் இருந்த நாள், ‘இவர் வேட்டைக்குச் சென்ற விடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார்,
இன்ன புலியைக் குத்தினார், இன்ன சிங்கத்தைக் குத்தினார்’ என்றாற்போலே உறவினர்கள் சொல்லக் கேட்கு மத்தனை அன்றோ;
இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள செயல்கள் அடங்கலும் கண்டாள்.
மஹர்ஷீணாம் ஸு காவஹம் –
இருடிகளுடைய விரோதிகளைப் போக்கி அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை.
தங்கள் தவத்தின் வலிமையால் வெல்லலாயிருக்க, தங்கள் பாரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு
முறை உணர்ந்து கொண்டிருக்கு மவர்களுக்கு.
கர்ப்ப பூதா: தபோதநா:-
தந்தாம் கைம்முதல் அழியமாறாதே இருக்குமவர்கள்
தபோதனராய் இருக்கச்செய்தே கர்ப்ப பூதராயிருப்பர்கள். என்றது,
தந்தாமுக்கென்ன இயற்றி-யத்னம் – உண்டாயிருக்கச் செய்தே, கர்ப்பாவஸ்தையில் தாய் அறிந்து ரக்ஷிக்குமத்தனை அன்றோ;
அப்படியே அவனே அறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள் என்றபடி-

வேண்டின வேண்டினர்க் களிக்கு மெய்த்தவம்
பூண்டுள ராயினும் பொறையி னாற்றலால்
மூண்டெழு வெகுளியை முதலில் நீக்கினார்
ஆண்டுறை அரக்கரால் அலைப்புண் டாரரோ.-என்பது, கம்பராமா. அகத்தியப்பட. 8.

அநுகூலர்களை ரக்ஷித்தலும் பிரதிகூலர்களை அழித்தலும் இவளுக்குப் பிரியமாகச் செய்யுமவை அன்றோ.
பபூவ –
பதினாலாயிரம் முருட்டு இராக்கதர்களோடே தனியே நின்று பொருகிற இதனைக் கண்டு
அஞ்சி ‘இது என்னாய் விளையுமோ?’ என்று சத்தை அழிந்து கிடந்தாள்; இப்போது உளள் ஆனாள்.
பூ – ஸத்தாயாம். ஹ்ருஷ்டா –
சத்தை உண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று.
வைதேஹீ –
உபாத்தியாயர்கள் பெண் பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே,
வீரவாசி அறியும் குடியிலே பிறந்தவள் அன்றோ.
அன்றிக்கே,
ஒரு வில்லு முறித்த இதற்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர்,
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று பொருது முடித்த இதனைக் கண்டால் என்படுகிறார் தான் என்னுதல்!
பர்த்தாரம் –
முன்பு, இவர் சுகுமாரர் ஆகையாலே ‘குழைசரசகு’ என்றும்,
‘ஐயர் நம்மை இவர்க்கு நீர்வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்குச் சேஷம்’ என்றும் அணைத்தாளத்தனை;
‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது இப்போது.
பரிஷஸ்வஜே –
இராவணனுக்கு ஒத்தவர்களாய், அவன் மதித்த வீரத்தையுடையவர்களாயிருப்பார் பதினாலாயிரம் பேரும்
விட்ட அம்புகள் முழுதும் இவர் மேலே பட்டு, கண்ட இடமெல்லாம் யுத்த வடுவாய் அன்றோ திருமேனி கிடக்கிறது;
அவ்வவ் விடங்கள் தோறும் திருமுலைத்தடத்தாலே வேது கொண்டாள்.

திருமாமகள் கேள்வா –
உன்னுடைய சக்திக்குக் குறைவு உண்டாய் இழக்கின்றேனோ?
புருஷகாரம் இல்லாமல் இழக்கின்றேனோ?

தேவா –
இவள் அணைத்த பின்பு திருமேனியிற் பிறந்த புகர்.
அன்றியே,
விரோதிகளைப் போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியைச் சொல்லவுமாம்.

சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே –
அநுகூலர் அடையத் திரண்டு படுகாடு கிடக்கும் தேசம்.

பூவார் கழல்கள் –
பூவால் அல்லது செல்லாத திருவடிகள் என்னுதல்.
பூவோடு ஒத்த திருவடிகள் என்னுதல்.

அருவினையேன் –
அவன் தடைகளைப் போக்க வல்லனாயிருப்பது,
எனக்கு ஆசை கரை புரண்டு இருப்பது,
திருவடிகள் எல்லை இல்லாத இனிய பொருளாக இருப்பது;
இங்ஙனே இருக்கச் செய்தே,
கிட்டி அநுபவிக்கப் பெறாத பாவத்தைப் பண்ணினேன்.

பொருந்துமாறு புணராயே –
அசோக வனத்திலே இருந்த பிராட்டியைப் போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது;

புணராய் –
உன்னைக் கிட்டும் வழி கல்பிக்க வேணும் என்னுதல்;
நான் கிட்டும்படி செய்ய வேணும் என்னுதல்.

——————————————————————————————————

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-

ஆஸ்ரித ரக்ஷணம் அர்த்தமாக அநாயாசேன-வியாபாரங்கள் உடைய உன் திருவடிகள் என்றோ
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!-திரளாக நின்ற மரங்கள் -அதி சங்கை பண்ணின அன்று விச்வாஸம் பிறக்க –
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!-நளகுபேரன் -சாபத்தால் -மரங்கள் -சிரிப்பு மாறாத உதடுகள்
உட்கார்ந்த தொடைகள் -ஜகத்துக்கு காரண பூதன்
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!-செறிந்த மேகங்கள் -யானை போலே
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே-கை முழுவதும் நிறைந்த கோதண்டம் -சேர்ந்த உன் திருவடிகள் என்று சேர்வேன்

சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மராமரங்ள் ஏழனையும் சுக்கிரீவன் நிமித்தமாக அம்பு எய்த ஒப்பற் வில்வலவனே! சேர்ந்து பொருந்தி இருந்த இரண்டு
மரங்களின் நடுவே சென்ற முதல்வனே! திண்மை பொருந்திய மேகமோ என்று ஐயப்படும்படியாக யானைகள் வந்து சேர்கின்ற திருவேங்கடத்தில்
எழுந்தருளியிருக்கின்றவனே! திண்மை பொருந்திய கோதண்டத்தையுடைய உனது திருவடிகளை அடியேன் சேர்வது எந்த நாளோ?
வலவன் – வல்லவன்; எய்தவன் என்க. திணர் – திண்ணம். சார்ங்கம் – வில்.
ஓகாரங்கள் சேரப் பெறாததால் உண்டான துக்கத்தின் மிகுதியைக் காட்டுகின்றன.

நீர் இங்ஙனம் விரைகிறது என்? உம்முடைய அபேக்ஷிதம் செய்கிறோம் என்ன, அது என்று? என்கிறார்.

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ –
க்ஷத்திரியர் விற்பிடிக்கிறது துயர ஒலி கேளாமைக்கு அன்றோ?
“வருந்துகிறார்கள் என்ற சப்தம் உண்டாகக்கூடாது என்று க்ஷத்திரியர்களால் வில் தரிக்கப்படுகின்றது” என்கிறபடியே.
“கிம்நு வக்ஷ்யாமி அஹம் தேவி த்வயைவ உக்தம் இதம் வச:க்ஷத்ரியை:
தார்யதே சாபம் ந ஆர்த்தஸப்த: பவேத்இதி”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 3.

இலக்குக் குறிக்கப் போகாதபடி திரண்டு நின்ற ஏழு மராமரங்களை முஷ்டியாலும் நிலையாலும்
நேர் நிற்கச் செய்து எய்த தனி வீரனே!
ஓ என்பது துக்கத்தின் மிகுதியைக் காட்டும் இடைச்சொல்.
ரக்ஷணத்தில் ஐயப்பட்டாரையும் நம்பும்படி செய்து காரியம் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவ வாராது ஒழிவதே!
“மஹாராஜர் பெருமாள் விஷயத்தில் எப்பொழுதும் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார்”
“ஸு க்ரீவ: ஸங்கிதஸ்ச ஆஸீத் நித்யம் வீர்யேண ராகவே”-என்பது, சங்க்ஷேபராமா. 63.
என்கிறபடியே, பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும் முடிய ஐயமுற்றே இருந்தார்.
அந்த ஐயத்தைப் போக்கிக் காப்பாற்றிய நீ, ஐயம் இல்லாமலே பற்றின என்னைக் காக்க வேண்டாவோ?

புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ –
ஒரு நிரையாகச் சேர்ந்து நின்ற மருத மரங்களை ஊடு அறுத்து, ஒன்றிலே வெளி கண்டு போவாரைப் போலே போய்,
உலகத்திற்கு வேர்ப் பற்றான உன்னைத் தந்தவனே! பிரளய காலத்தில் அன்று உலகத்தை உண்டாக்கியது இன்றாயிற்று.
அற்றைக்கு இவன் தான் உளனாகையாலே உண்டாக்கலாம்;
இங்கு நிரந்வய விநாசம் அன்றோ பிறக்கப் புக்கது.

முதல்வாவோ –
உலகத்தை உண்டாக்கினவனே! உலகத்திற்கு வேர்ப்பற்றான தன்னை யன்றோ நோக்கித் தந்தது;
“படைப்புக்கு முன் சத் என்று சொல்லக்கூடிய இதுவே இருந்தது; வேறு பொருள் ஒன்றும் இல்லை” என்கிறபடியே.
“ஸதேவ ஸோம்ய இதமக்ரஆஸீத் ஏகமேவாத்விதீயம்”-என்பது, சாந்தோக்யம். 6. 2 : 1.
தான் உளனாகவே உண்டாகுமது அன்றோ உலகம்.
இப்படி இருக்கிற தன்னளவிலே வந்த ஆபத்தையோ நீக்கலாவது.

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே –
திண்மை மிக்கிருந்துள்ள மேகம் என்னும்படி யானைகளானவை சேரா நின்றுள்ள திருமலையிலே நின்றருளினவனே!
மேகங்களோடே எல்லாவகையானும் ஒப்புமை உண்டாகையாலே மேகங்களைக் கண்ட போது யானை என்னலாம்;
யானைகளைக் கண்ட போது மேகம் என்னலாயிருக்கும்.
“மதயானை போல் எழுந்த மா முகில்காள்” நாய்ச்சியார்திருமொழி, 8 : 9.-என்னக் கடவது அன்றோ.
சமான தர்மத்தால் வந்த ஐயம் இரண்டிடத்திலும் உள்ளது அன்றோ.
விஷயங்களால் வரும் அந்யதா ஞானத்தைக் கழித்து, அந்தத் தேசத்தே பிறக்கும் அந்யதா ஞானத்தை அன்றோ இவர் கணிசிக்கிறது.
அங்குள்ளவை எல்லாம் இனிய பொருள்களாகத் தோற்றுகிறபடி.
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு -உங்களுக்கு அந்யதா ஞானம் விபரீத ஞானம்
உங்கள் முக ஒளி பிரதிபட்டு –கீழ் வானம் வெள்ளென்று அந்யதா ஞானம் – இருள் விளக்க எருமை என்கிறீர்கள் -விபரீத ஞானம் இது
திவ்ய தேசப் பிரபாவத்தால் வரும் அந்யதா ஞானம் விபரீத ஞானம் உத்தேச்யமே த்யாஜ்யம் இல்லை –

திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் –
திண்மை மிக்கிருந்துள்ள ஸ்ரீ சார்ங்கத்தை யுடைய உன்னுடைய திருவடிகளை.
“ரக்ஷகராய், சக்கரவர்த்தித் திருமகனான பெருமாளை ரக்ஷகமாக அடைந்தன” என்கிறபடியே,
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.
ரக்ஷகமான திருவடிகளை.
சக்கரவர்த்திப் பிள்ளைகள் எடுக்குமத்தனை காணும் வில்லு.

திணர் ஆர் சார்ங்கம் –
தன் வளைவிலே-மிடுக்கிலே – விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை.

உன பாதம் –
அந்த வளைவுக்கு -மிடுக்கிலே -அகப்படாதாரை முதல் அடியிலே அகப்படுத்திக் கொள்ளுவது.
சார்ங்கத்தில் அகப்படுவார் பிரதி கூலர் அடியில் அகப்படுவார் அநு கூலர் –
ஏழு ரிஷிகள் கன்னிகைகள் குல பர்வதங்கள் சமுத்திரங்கள் நடுங்கினவே

சேர்வது அடியேன் எந்நாளே –
கையில் வில் இருக்க இழக்க வேண்டா விரோதி உண்டு என்று;
இனி உன்னைப் பெறும் நாளையாகிலும் சொல்ல வேணும்.
கையில் வில் இருக்க விரோதி கண்டு என்ன பயம்
where there is will there is way

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -140- திருவாய்மொழி – -6-9-6….6-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 21, 2016

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-

யோக்ய அயோக்ய விபாகம் இல்லாமல் அசேஷ -கலந்த உன்னை காண அக்னி சாஹசம் மெழுகு போல
பாயோர் அடிவைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்-அடி பாய வைத்து -கடல் உடன் சேர்ந்த
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த-பூமியை தாண்டி -ஊர்த்த லோகம் தடவிய
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்-ஆச்சார்ய புதன் -எல்லா காலத்திலும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?—முடியவும் பெறாமல் காணவும் பெறாமல் ஆழமானது
தடவந்த -மேலே தடவிய -உள்ளே வளைத்து கொள்ளும் -என்றுமாம் –

ஒரு திருவடியைப் பரப்பிக் கடலால் சூழப்பட்ட உலகங்கள் எல்லாம் அத் திருவடியின் கீழே ஆம் படி தாவி அளந்து,
மற்றொரு திருவடியால் மேல் உலகங்கள் எல்லாவற்றையும் தடவின மாயோனே! உன்னைக் காணும் பொருட்டு வருந்தி
எல்லாக் காலத்திலும் தீயின் அருகில் சேர்ந்த மெழுகைப் போன்று உலகத்தில் திரியக் கடவேனோ?
ஓர் அடி பாய் வைத்து என்க. பாய் – பரப்பி. பாய், தாய் என்பன : வினையெச்சங்கள். தீயோடு – தீயின் ; வேற்றுமை மயக்கம்.

‘உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவோம்; அதில் ஒரு குறை இல்லை;
ஆனாலும், பிரயோஜனம் உம்மதான பின்பு நீரும் சில முயற்சிகளைச் செய்ய வேணும் காணும்’ என்ன,
இந்த மரியாதை என்று தொடங்கிக் கட்டிற்று என்கிறார்.
அன்றியே,
காண்கைக்குத் தாம் தக்க வரல்லர் என்று உபேக்ஷித்தானாக நினைத்து,
தகுதி தகுதி இன்மைகளைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த உன்னாலே
இழக்கப் படுவோர் உளரோ? என்கிறார் ஆகவுமாம்.

ஓர் அடி பாய் வைத்து –
சேதனர் தலைகளிலே திருவடியை வைக்கிற போது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? –
சாதனம் பண்ணவில்லையே
வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன் கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ.
ஓர் அடியைப் பரப்பி வைத்து.

அதன் கீழ் –
அத் திருவடியின் கீழே.

பரவை நிலம் எல்லாம் தாய் –
கடல் சூழ்ந்த பூமிப் பரப்படங்கலும் அளந்து.
சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்து கொண்டது.
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன் அன்றோ-திருச்சந்தவிருத். 32.-.

ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த –
மற்றைத் திருவடியால் பிரம லோகத்தளவும் சென்று தீண்டிய.

‘எல்லா உலகும்’ என்றது,
நடுவே உள்ள உலகங்களை.

தடவந்த
தென்றல் உலாவினாற் போலே இருத்தலின் ‘தடவந்த’ என்கிறார்.

மாயோன் –
தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான் வியாமோகம் செய்யுமவன்.

உன்னைக் காண்பான் வருந்தி –
என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ?
அத்தலை இத்தலை ஆயிற்றோ?

எனை நாளும் –
அநேக காலம்.

மயர்வற மதி நலம் அருளிய பின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும்,
அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி.
அல்ப காலம் -தென்றல் தடவியது போலே தடவ -தனது ஆர்த்தி சொல்லி –
எனை நாளும் -மயர்வற மதி நலம் அருளி –
பிராப்தி 32 வருஷம் தானே -சஹஜ பக்தி -இடையில் உள்ள நாலு நாள் –
எதிர் சூழல் புக்கு திரிந்த நாள்கள் போல் பரப்பு தோற்றும்
கழிந்த போன துக்கம் முன்பு இல்லையே -இப்பொழுது நாள் போவது யுகம் போலே தோன்றுமே ஞானம் வந்த பின்பு

தீயோடு உடன் சேர் மெழுகாய்-
நெருப்பிலே பட்டுக் கரிந்து போகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே,
உருகுவது வலிப்பது ஆகிறபடி.
மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே
உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி.
நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப் பண்ணச் சொல்லுகிறபடி.
நசை -கிடைக்குமோ கிடைக்காதோ சபல புத்தி —
ஆசை –அனுபவ அலாபத்தில் தரியாமையை விளைவிக்கும் அபி நிவேசம்

உலகில் திரிவேனோ –
ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப் பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே
யாதநா சரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!

—————————————————————————————–

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7-

கர்த்ரு கிரியா ரூபமான -கர்மம் கார்யம் -உலகமாய் -கர்த்தா -இரண்டும் பகவத் அதீனம்-நிர்வாகன்-அந்தர்யாமியாய் –
லௌகிக ஸமஸ்த வஸ்துக்களும் -பிராபிக்க விரகு அறியாத எனக்கு அருள வேணும் –
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்-கார்ய ரூப உபாயங்களை நியமித்து– சாதகர் கர்த்தாக்களும் நீயே –
வேதாந்த கால ஷேபம் இல்லை -எனக்கு பிரயத்தனம் எதற்கு -என்றார் கீழ் -இங்கு பிரயத்தனம் உண்டு அது உனக்கு என்கிறார் –
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து-ஏக ஆத்மாவாக நீ –
அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ!-அலகிலா விளையாட்டுடை -எண்ணிக்கை இல்லாத –
ஞான கர்மத்தாலே -வியாப்தமான முக்தாத்மாக்கள் அருவம் -ரூபம் இல்லா முக்தர்களை சரீரமாக –
அண்டத்துக்கு புறமாய் இருப்பார்கள் -பக்தர் தானே அண்டத்துக்கு உள்ளே –
அண்டத்துக்கு புறம் பரம பதம் என்றுமாம் -ஸமஸ்த காரண காரிய ஜாதம் அதீத்ய-தாண்டி -சப்த ஆவரணம் தாண்டி –
ஆத்மா விபு இல்லையே எப்படி வியாப்யம் ஆகும் – -அவன் சூஷ்மம் விபு -சரீரம் ஸ்தூலம் -பெரியதாகவும் இருக்கும்
தர்ம பூத ஞானத்தால் வியாப்தி உண்டே -பக்தாத்மா உடைய ஞானம் சரீரம் முழுவதும் வியாபிக்கும் –
முக்தாத்மா -பத்து திசைகளும் வியாபிக்கும் –அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.-உன்னைப் பெற விரகு
அறியாத எனக்கு நீயே உபாயம் உபேயம் ஓ ஆர்த்தி கூப்பாட்டு

உலகத்திலே சஞ்சரிக்கின்ற கருமங்களாகிற உபாயங்களாய், அந்த உபாயங்களைச் செய்கின்றவர்களுமாய்,
உலகத்திலேயுள்ள எல்லாப்பொருள்கட்கும் ஓர் உயிர் ஆனவனே! அண்டத்துக்கு மேலே உள்ள கணக்கு இல்லாதவர்களாய்
விளங்குகின்ற பத்துத் திக்குக்களிலும் பரந்திருக்கின்ற முக்தர்களைப் பிரகாரமாக வுடையவனே! எண்ணிறந்து விளங்குகின்ற
அறிவில்லாத எனக்குத் திருவருள் புரிய வேண்டும்,
கதி – உபாயம்; கருமமாகிய உபாயம். உலகம்-உயர்ந்தோர். உலகு – சராசரங்கள். அரு – முக்தாத்மாக்கள்.

“உலகில் திரிவேனோ?” என்ற உறைப்பால் உண்டான ஸ்வாதந்திரியம்-ஆற்றாமையால் உண்டான பதற்றம் –
உம்முடைய தலையிலே கிடந்ததே!’ என்ன,
‘சாதனங்களும் அவற்றைச் செய்கின்றவர்களும் உனக்கு அதீனமான பின்பு,
இவ் ஆற்றாமை எனக்கு ஸ்வரூபமாய்ச் சேருமித்தனை அன்றோ?’ என்கிறார்.
அன்றியே,
‘பேறு உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சி செய்ய வேணும் காணும்’ என்ன,
‘எல்லாமும் உனக்கு அதீனமாயிருக்க, அவற்றிற்குப் புறம்போ நான் என் காரியம் செய்கைக்கு?’
என்கிறார் என்னலுமாம்.

(உன் கிருபை பார்த்தால் சாதன அனுஷ்டானம் பண்ண வேண்டாம் என்றார் கீழ்
சாதனம் பண்ண வேண்டி இருந்தாலும் அதற்கும் நீயே கடவை என்கிறார் இதில் )

உலகில் திரியும் கரும கதியாய் –
உலகத்தில் பரிமாறுகிற கர்மமாகிற சாதனமாய்.
உன்னை ஒழியப் பலத்தைக் கொடுக்கக் கூடியது ஒன்று உண்டோ?

உலகமாய் –
அவற்றைச் செய்கின்றவர்கள் தாம் ஸ்வதந்திரர்களாய் இருக்கிறார்கள்?
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு அன்றோ; உலகத்திலுள்ளார்க்கு என்றும் வரும் அன்றோ.

உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் –
ஒரு தேகத்தை ஒரு சேதனன் ஆத்மாவாய் அபிமானித்திருக்குமாறு போலே, எல்லாப் பொருள்களுக்கும் ஒரே ஆத்மா ஆனவனே!
“சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் இரா நின்றான்” என்பது உபநிடதம்.
அந்த: பிரவிஷ்ட: ஸாஸ்தா”என்பது உபநிடதம்.-பலமாக இருக்கிற தானே கர்த்தாவும் கர்மமும் உபகரணங்களுமாயிருக்கை.
இரண்டும் உன் தலையிலே கிடந்தால் உன்னை ஒழிய எங்ஙனே நான் ஜீவிக்கும்படி.

புற அண்டத்து –
அண்டத்துக்கு வெளியிலே என்றபடி.

அலகு இல் பொலிந்த திசை பத்தாய அருவேயோ –
கணக்கு இல்லாதவர்களாய், எம்பெருமான் ஸ்வரூபத்தாலே வியாபிக்குமாறு போலே
தர்ம பூத ஞானத்தாலே பத்துத் திக்குக்களிலும் வியாபித்திருப்பாராய்,
உருவப் பொருள் போன்று கண்களுக்கு விஷயம் அன்றிக்கே
அருவாக இருக்கிற ஆத்மாக்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே!
இதனால், முக்தரோ தாம் ஸ்வதந்திரராய் இருக்கிறார்கள் என்றபடி.

பரம பதத்திலும் பத்துத் திக்குக்களாய் இருக்குமோ? என்னில்,
இங்கே இருந்து நினைக்கிற இவர்க்குச் சொல்லத் தட்டில்லையே.
பரமபத நாதன் எந்த திக்கை நோக்கி வீற்று இருப்பார் -திக்குகள் இல்லையே அங்கு –
அங்ஙன் அன்றிக்கே,
முக்தர் லீலா விபூதியை நினைக்கும் போது இங்குள்ளபடியே நினைப்பார்கள் அன்றோ.

அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு –
பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அளவிடினும் தம் அறிவு கேடு எண்ணப் போகாது என்கிறார்.
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ.-
ஆகிஞ்சன்ய புத்தியை அறிவில்லை என்கிறார் –

அருளாயே –
பரிகரம் உண்டானபின் அருளக் குறை என்?
“பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது
இப்போது உனக்குக் கிடைத்தது” என்னுமாறு போலே.
“பகவந் இதாநீம் அனுத்தமம் பாத்ரம் இதம் தயாயா:”-என்பது, ஸ்தோத்திர ரத்நம். 24.
ஆகிஞ்சன்யம் இல்லை என்ற உடன் -அருளத் தட்டு என் -தயைக்கு உத்தம பாத்திரம் நான் தான்

——————————————————————————————————-

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

தேஜோ மய விக்ரகம் உடைய நீ அவ்வடிவை அனுபவிப்பியாமல் –
அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!-தாரகன் -ஞானி ஆத்மை மே மதம்
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!-மனம் சர்வ கந்தம் தேஜோ மயம் -உனக்கு அநந்யார்ஹன்
சபலன் ஆகும் படி பண்ணி வ்யாமோஹம் செய்து அருளி -விளித்து -அறிவிலேனுக்கு அருள வேண்டும் –
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?-வெளியில் புறத்து இட்டு இன்னம் கெடுக்காமல் -விரகால் ருசியை ஜெநிப்பித்து
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே-உன்னைத் தவிர ஒன்றும் அறியாமல் -கத்யந்தரம் அறியாமல்

ஞானிகளுக்கு உயிராக இருப்பவனே! வாசனையைக் கொண்டிருக்கிற ஒளி பொருந்திய விக்கிரஹத்தை யுடையவனே!
அடியேனுடைய நெடிய மாலே! விரகு அறியாத எனக்குக் கிருபை செய்தருள்வாய்; வேறு ஒன்றனையும் அறியாத அடியேனுடைய
உயிரானது திகைக்கும் படியாக வேறு உபாயங்களைச் செய்து என்னைப் புறத்திலே தள்ளி இன்னம் கெடுப்பாயோ? என்கிறார்.
வெறி – வாசனை. கிறி – விரகு. ஆவி திகைக்கக் கெடுப்பாயோ என்க.

“அருளாய்” என்ற வாயோடே வந்து அருளக் கண்டிலர்;
தன் பக்கல் நின்றும் பிரித்து என்னைக் கை விடப் பார்த்தானாகாதே என்கிறார்.
இத்தனை நாள் பட்டது கர்மாதீனம்
இனி மேல் கிருபாதீனம்
அறிவித்த பின்பு தள்ளி வைக்கவோ –

அறிவிலேனுக்கு அருளாய் –
“நின்னருளே புரிந்திருந்தேன்” –பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 1.-என்னுமாறு போலே
உன்னருள் ஒழிய வேறு ஒன்றை அறியாத எனக்கு அருள வேணும்.
“அவ்வருள் அல்லன அருளும் அல்ல” –முதல் திருவந். 15.-என்றேயன்றோ இவர் இருப்பது.
வையகத்துப் பல்லார் அருளும் பழுதே அன்றோ.
பொய் நின்ற ஞானம் எனக்கு ஞானப் பிரான் நீ -நீ தானே அருள வேண்டும்

அறிவார் உயிரானாய் –
அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்;
அறிவாரை உயிராக வுடையவனே என்னுதல்.
“ஞானியானவன் எனக்கு உயிர் போன்றவன் என்பது என்னுடைய மதம்” என்கிறபடியே;
“என்னுடைய இரண்டாவது ஆத்மாவாக இருக்கிற உன்னை” என்கிறபடியே
.“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” என்பது ஸ்ரீ கீதை, 5 : 18.
“த்விதீயம் மே அந்தராத்மாநம் த்வாம் இயம்ஸ்ரீ: உபஸ்திதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 43.
இளைய பெருமாளே தனக்கு இரண்டாவது அந்தராத்மா என்கிறார் பெருமாள் –
என்னது உன்னதாவியில் அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும்

வெறி கொள் சோதி மூர்த்தி –
அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வ கந்த:” என்னுமதன்றோ.
பரிமளத்தை யுடைத்தாய், எல்லையற்ற தேஜசை யுடைத்தான வடிவழகை யுடையவனே!

அடியேன் நெடுமாலே –
எனக்கு இப்போது எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ;
வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல்.

கிறி செய்து –
நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவை யெல்லாம் விரகு அடித்தாய் என்று தோற்றா நின்றது காண்?
விரகு அடித்தாய் -வீண் -கிறி செய்து -சம்சாரத்தில் பொருந்தாமல் நீயும் கிடைக்காமல் துடிக்கும் படி செய்தாய் –

என்னைப் புறத்திட்டு –
பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற் போலே,பகவத் குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள்
நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ?
“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத் குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ?

“நினைவு கெடுவதனால் புத்தி கெடுகிறது, புத்தி கெடுவதனால் நாசத்தை அடைகிறான்” என்பது ஸ்ரீகீதை.
“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் க்ரோத: அபிஜாயதே”
“ஸ்மிருதி ப்ரம்சாத் புத்திநாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி”-என்பன, ஸ்ரீ கீதை. 2. 62 : 63.
(சங்கம் -காமம் க்ரோதம் -இத்யாதி படிக்கட்டுகள் )

பிறிது ஒன்று அறியா அடியேன் –
வேறு கதியில்லாதவனாய் வேறு ஒருவர்க்கு உரியன் அல்லாதவனாய் இருக்கிற என்னுடைய,

ஆவி திகைக்க –
மனம் கலங்கும்படி.

கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே?
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே? என்று ஒன்று உண்டோ என்கிறார்.
என்னை இங்கே வைத்த போதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.
“என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான்
பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்” என்னும்படியே
.“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19.

—————————————————————————————-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

பலவாறும் நாயகி பாவனைகள் -ஆற்றாமை விஞ்சி -இந்த பதிகம் -சிதிலம் அதிகம் -இங்கே இருந்தே கூப்பிடுகிறார் –
அவனுக்கு அங்கே இருப்பு திரியாமல் –
குழல் ஓசையில் கோபிகள் பாடு இவர் குரல் ஓசையில் அவன் படும்படி -மேலே த்வயார்த்த பிரகிருதி
சரணாகதி தான் வழி என்று உணர்ந்து பூர்ண சரணாகதிக்கு -அடி வைக்கும் பண்ணும் பதிகம் இது
பக்ஷிகள் -காலில் முதலில் விழுந்து பரம பாகவதர்கள் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் –
பிராட்டி மூலமாக நாயகன் திருவடி போற்றுகிறார் –
சாரம் கட்டினது இது வரை -இதில் கலசம் ஏற்றுவதற்கு -பெருமானே என்னை தள்ளி விட்டு விடாதே என்கிறார் –
அனைவருக்கும் அந்தராத்மா உபநிஷத் சித்தாந்தம் -ஓரமாக வைத்து -தேசிகன் -வேதாந்தாச்சார்யர் –
இது ஸ்ரீ கிருஷ்ணர் சித்தாந்தம் ஞானி தான் எனக்கு ஆத்மா -என்கிறான் –
10 மாதம் சீதைக்கு -14 ஆண்டுகள் பரதனுக்கு -10 ஆண்டு தேவகி –கோபிகள் ஒரு பகல் -சொல்லிப் போனாயே
அயன காலம் வந்ததும் கூத்தாடி இடைச் சுவரில் ஒரு அயன காலம் கழிந்ததே என்று ஆனந்தம் பட்டார் எம்பெருமானார்
உனக்கு விதேயமான விஷயாந்தரங்கள் நடை யாடும் -வலை பின்னி -கண்ணி-வைத்து விஷய இந்திரியங்கள் –
சப்த ஆதி -என்னை முடிக்க தேடுகிறாயோ -உன் திருவடிகளில் அணித்தாகும் காலம் குறுகாதோ
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்–மூச்சு விட முடியாமல் நசிப்பிக்கும் -நெய்க்குடம் -மொய்த்து –
தா தா என்று ஐவர் குமைக்கும் விஷய சாரஸ்யம் அல்ப அஸ்திரம் இது -அனந்த ஸ்திரம் பேரின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?-பஹு முகமாக காட்டி கெடுக்கப் பார்க்கிறாயா -விசித்திரமான பல பிரகாசிப்பித்து
பலவற்றை நீ காட்டி நீ கெடுப்பாயோ -நீ குத்தி காட்டுகிறார் -தடுக்க வல்ல சக்தனாகவும் இருந்து
இப்படி பண்ணலாமா -நிரதிசய ஆனந்த உக்தன் -நிரதிசய துக்க தேசத்தில் உழன்று
தாவி வையம் கொண்ட தடந் தாமரை கட்கே-பூமியை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட நிரதிசய போக்யமான திருவடிகளில்
நான் அந்வயிக்கும் படி -முற்று உவமை பொருத்தமான -காமரு மானேய் நோக்கியார்க்கு பார்த்தோம்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.-விஷயாந்தர ஸ்பர்சம் விநாச ஹேது என்று அறிந்த பின்பும் –
இன்னம் -ஞானம் வந்த பின்பும் –

மனம் கலங்கும் படியாக ஐந்து இந்திரியங்களும் வருத்துகின்ற பலவகையான சிற்றின்பத்தை எனக்கு
நீ காட்டிப் பாவியேனை அழிக்க நினைக்கின்றாயோ?
பூலோகத்தை அளந்து கொண்ட தாமரை போன்ற திருவடிகட்கு அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்கிறார்.
ஐவர் ஆவி திகைக்கக் குமைக்கும் சிற்றின்பம் என்க. ஐவர்: இகழ்ச்சிக் குறிப்பு. ஆவி – மனம். சிற்றின்பம் பல நீ காட்டி என்க.
வையம் தாவிக் கொண்ட தாமரை என்க. தாமரை – உருவகம்.

உம்மை இங்குக் கெடுத்தது என்? என்ன, கண்ட காட்சியிலே இழுத்துக் கொள்ளக் கடவனவான விஷயங்கள்
பரிமாறுகிற இடத்தே வைத்தாயாகில், இனி, கெடுக்கை என்று ஒன்று உண்டோ என்கிறார்.
என்னை இங்கே வைத்த போதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.
“என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான்
பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்” என்னும்படியே.
“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19
பாவியேனை -பரமாத்மாவுக்கு விஷம புத்தி இல்லை -கர்மாதீனம் என்றவாறு-சாமர்த்திய ஸப்த பிரயோகம் –

ஆவி திகைக்க –
இந்திரியங்களுக்கு மூலமான மனம் கலங்க.

ஐவர் குமைக்கும் –
‘ஐவர்’ என்று உயர் திணையாகச் சொல்லுகிறார் நலிவின் மிகுதியாலே.
பல மில்லாத ஒருவனைப் பற்றி ஐந்து படர் நலியுமாறு போலே ‘என் விஷயத்தைக் காட்டு காட்டு’
என்று தனித்தனியே நலிகிறபடி.
இப்படி நலிந்தாலும் சுவை உண்டாகில் ஆம் அன்றோ.

சிற்றின்பம் –
முள்ளிப்பூவில் தேன் போலே. அற்பசாரங்கள் அன்றோ.

சிற்றின்பம் –
முள்ளிப்பூவில் தேன் போலே.
அற்ப சாரங்கள் அன்றோ.- திருவாய். 3. 2 : 6.-என்றது,
தேவரை அகற்ற வேண்டுவதுண்டாய்,அநுபவிக்கலாவது ஒன்று இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.

பாவியேனை –
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த நான் சிற்றின்பத்தில் சேரும்படி யாவதே!
“வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்”-திருவாய். 4. 5 : 3.- என்றவரன்றோ இங்ஙனே சொல்லுகிறார்.

பல –
ஒன்றிலே கால் தாழப் பண்ண வல்ல விஷயமில்லையே.

நீ காட்டிப் படுப்பாயோ –
ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ?

காட்டிப் படுப்பாயோ-
நாட்டார் ‘காணா விடில் பிழையோம்’ என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே
மோஹிக்கும் படியாக இருக்கிறதன்றோ; ஆகையால், ‘காட்டிப் படுப்பாயோ’ என்கிறார்.

அசுணமா என்று சில பறவைகள் உள்ளன; அவை பிடி கொடா ஒன்றுக்கும்;
அவற்றைப் பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அது கேட்டு நெஞ்சு நெகிழும்;
பின்பு பறையை அடிப்பார்கள்; இதன் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம்.
அது போலே, இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி.
இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்-
(அசுணமா முடியுமா போலே -ஸ்ரீ வசன பூஷண ஸூ த்ரம் உண்டே )

“மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போலைவ ராற்கெடும் பாதகரே”-என்பது, திருவேங்கடத்தந்தாதி, 28.

நெடு நாள் அநுபவித்துப் போந்தாலும் கடக்க இருந்த அன்று ‘நாம் இன்னது அநுபவித்தோம்’ என்று
நினைப்பதற்கு ஒன்று இன்றிக்கே இருக்கும் அன்றோ;
பாவியேனை –
இங்ஙனே இருக்கச் செய்தேயும் அவற்றில் ஆசை செலுத்துவது பாவத்தின் மிகுதி அன்றோ.

தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
அந்நிய பர உக்தியில் -வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.
கால அவதி -கேட்க்கும் பிரகரணத்தில் பிராப்ய நிஷ்கரஷம் பண்ணுகிறார் –

‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன்
என்னும் சத்தி யோகம் கூறியபடி.

பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி.
இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.
இதனால் பிராப்யம் சொல்லுகிறது.

‘கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது.

‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.

இதர விஷயங்களின் காட்சி முடியும்படியாய்,
உன் திருவடிகளின் இனிமை அறிந்து விட மாட்டாத அளவு பிறந்து பின்பு –
இன்னம் தாழ்க்குமத்தனையோ?

பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,
‘கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,
இதனைக் கேட்டுச் சீயர் அழ,
‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?
அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

————————————————————————————————————

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-

அல்பம் -ஸ்திரம் -கைவல்யம் –விலக்ஷணம் ஆத்ம அனுபவ லாபமும் அதிசயித்த உனக்கு
சேஷத்வ கைங்கர்யத்துக்கு லவ லேசத்துக்கு ஒப்போ
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி-சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்–கைவல்யம் சேர்ந்தாலும்
சிற்றின்பம் ஒப்பிட்டால் இது பெரிய இன்பம் -இது சேர்ந்தாலும் -கீழே ஐஸ்வர்யம் சிற்றின்பம் -இங்கு கைவல்யம் இன்பம்
ஸ்வரூப சங்கோசம் -குறுகுதல்-விகாசம் இல்லாமல் -முடிவும் இல்லாமல் -நித்தியமாக சர்வ காலத்திலும் –
க்ஷய வ்ருத்திகளும் இல்லாமல் –பரிச்சேத ரஹித இன்பம் -அளவிட்டு சொல்ல முடியாதே ஐஸ்வர்ய இன்பம் பார்த்தால் –
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே–பகவத் அனுபவ ப்ரீதி காரித
கைங்கர்யத்தில் சிறு காலத்துக்கும் ஒப்பு ஆகாதே -மேலே கிடைக்கா விடிலும் -மறுகால் இன்றி -என்கிறார் –
ஒப்புமைக்காக இப்படி எடுத்து சொல்கிறார் -அல்ப காலம் -அனுபவமும் அதிசயத்தை விலக்ஷணமாம் படி மாயவனின் குணம் –
அடியேனாகக் கொண்டு சேஷத்வ ரசத்தை -அல்ப காலத்துக்கு ஓவ்வாதே-அந்தோ -ஒவ்வாது என்று சொல்ல வேண்டி இருக்கிறதே
புளிய மரத்தடியில் காரி மாறன் உபதேச முத்திரை வைத்து சொல்ல வேணுமோ –
ஜெகதாச்சார்யர் யார் -சத்யம் யதி ராஜோ ஜகத் குரோ -கூரத் ஆழ்வான் –
மண்டப யானையை தேடித் கண்டு பிடிக்க வேண்டுமோ அந்தோ விஷாதம்

மாயோனே! இயல்பாகக் குறைவதும் பெருகுவதும் இல்லாததும், முடிவு இல்லாததும், எத்துணைக் கற்பங்கள் சென்றாலும் கால வேறுபாட்டினால்
குறைவதும் பெருகுவதும் இல்லாததும் அளவு இல்லாததுமான சிற்றின்பமாகிய ஆத்ம அநுபவம் சேர்ந்தாலும், தெளிந்து பார்க்குமிடத்து
மறுபடியும் ஒரு காலம் இல்லாமல் உனக்கே கைங்கரியத்தைச் செய்கின்ற சிறிய காலத்தை அது ஒக்குமோ?
முதல் இரண்டு அடிகளில் கைவல்யம் கூறப்படுகிறது. குறுகா, நீளா, கூடா, சிறுகா என்பன; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்;
குறுகா இன்பம் எனத் தனித்தனியே கூட்டுக. அந்தோ: இரக்கத்தின்கண் வந்த இடைச்சொல்

‘செல்வம் முதலானவை அல்பமானவை, நிலை அற்றவை’ என்று ‘வேண்டா’ என்றீராகில், அவ்வளவினது அன்றே;
முடிவில்லாததுமாய் நிலைத்திருப்பதுமாய் இருக்குமன்றோ ஆத்மாநுபவம்; அதனை அநுபவித்தாலோ? என்ன,
‘நீ சொன்னது பொருத்த முள்ளதாயின் செய்யலாயிற்று; ‘அவை அல்பம், நிலையற்றவை’
என்ற இடம் ஸ்வரூபத்தைச் சொன்னேனத்தனை:
உன்னுடைய இனிமையைச் சொன்னதும் ஸ்வாபம் இருந்தபடி சொன்னேனத்தனை;
‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்;
உன்னைப் பற்றிற்றும் நீ -பிராப்த சேஷி யாகையாலே ,
அவற்றை விட்டதும் நீ அல்லாமையாலே-பிராப்த சேஷி – அல்லாமையாலே’ என்கிறார்.
பிராப்த-வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.-
இருப்பதற்காகப் பற்ற வில்லை -என்றபடி

குறுகா நீளா –
தன் இயல்பிலே குறுகுதலும் நீளுதலும் இன்றிக்கே இருக்கை.

இறுதி கூடா –
முற்றும் அழிவு இன்றிக்கே இருக்கை.
சரீர அன்வயம் இருக்கவே பால்யம் நாசம் -சான்வய நாசம் -குறுகா நீளா-
நிரன்வய நாசம் -உயிர் போன பின்பு -இறுதி கூடா –
சான்வய நாசம்-சரீரம் அன்வயம் இருக்கவே பால பருவம் போனதும் அடுத்த பருவம் உண்டே

எனை ஊழி சிறுகா பெறுகா –
கால வேறுபாடு பற்றிக் குறைதலும் விரிதலும் இன்றிக்கே இருக்கை.

அளவில் இன்பம் சேர்ந்தாலும் –
இங்ஙனே இருக்கையாலே முடிவின்றிக்கே இருக்கிற ஆத்ம அநுபவ சுகத்தை அடைந்தாலும்.

மறுகால் இன்றி –
பகவானுடைய அநுபவமானது ஒரு கால் அநுபவித்தால் மற்றைப் போது இன்றிக்கே இருப்பது.
(அபூத உவமை – ஒப்பிட்டுச் சொல்லவே )

மாயோன் –
மீண்டு இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத கல்யாண குண யோகம் சொல்லுகிது.
உனக்கே ஆள் ஆகும் சிறு காலத்தை உறுமோ –
‘உன் திருவடிகளில் அடிமையே புருஷார்த்தம்’ என்று இருக்குமது,
மறுத்து இன்றியிலே இருப்பது, அது தான் கண நேரமாவது;
திரும்பி வராமல் ஒரு க்ஷணமே இருந்தாலும் – அளவில் இன்பம் சேருகை உறுமோ? இதனைப் பார்க்க.

அந்தோ –
பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே!

தெரியிலே –
தோற்றிற்றுச் சொல்லின் செய்யலாவது இல்லை;
ஆராய்ந்து சொல்லுமன்று இங்ஙன் அல்லது இல்லை.
இந்தப் பொருளை உபதேசிக்க வேண்டுவது ஆவதே!

பிராப்த சேஷி -நீ -அபிராப்தங்கள் அவை -இதுவே ஸ்வீகார தியாக ஹேது –
மாயோன் என்று சொல்லுவான் என்னில்
ப்ராப்தனான உன்னிடம் -என் அதிர்ஷ்டம் குணம் அழகும் இருந்ததே ‘
ஸ்வத –என்கையால் சம்சார தசையில் பாலாதி அவஸ்தைகளில் -ஞான சங்கோசம் -உண்டாகும் –
இயற்கையில் ஆத்மாவில் இல்லையே சான்வய விநாசம் இல்லை –
குறுகா நீளா-சரீரத்துடன் அன்வயப்பட்டு இருந்தாலும் அவஸ்தா -பேதங்கள் –
நிரன்வய நாசம் இறுதி கூடா
இவ் வுபயமும் இல்லா விட்டால் காலாந்தரத்தில் உண்டோ என்றால் எனை ஊழி-என்று சங்கதி –

——————————————————————————————————

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

சர்வ ரக்ஷகனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதர் ஆவார் -உலகம் உண்டான் சர்வ ரக்ஷகன் –
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு-த்ரஷ்டவ்யோ -ஸ்ரோதவ்ய மந்த்வயா நிதித்யாசிதித்வய –
நாதயாத்மா–பிரவசனேன லப்த-ப்ரீதி ரஹிதமான ஞானம் -கொண்டு நினைத்தால் எண்ணி அறிய முடியாதே
ஸ்ரவணம் தெளிந்து மனனத்தால் பிரதிடமாம் படி நித்யாஸனம் துருவ ஸ்ம்ரிதி தடை இல்லாமல்
அவிச்சின்ன ஸ்னேஹ பூர்வம் அனுதியானம் தைல தாராவத் -அன்பு இல்லாமல் வசப்படான் ஸ்ரீ யபதி
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்-அடியார் அடியார் சரமாவதி தாசன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்-பகவத் வைலக்ஷண்யம் மற்றவை வேறுபாடு அறிந்து அருளிச் செய்த
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.-மாயோன் -சொல்லி -பதில் சொல்ல வேண்டாம் உரிமை உடன் ஸ்வரூபம் பார்த்து
ஸ்வரூப க்ருத தாஸ்யம் கிட்டும் –அநந்யார்ஹ சேஷ பூதர் ஆக்கும் -இது கலித்துறை

தெளிதல் நினைத்தல் தியானித்தல் ஆகிய இவற்றால் அறிய முடியாத திருமாலுக்கு உரிமைப்பட்ட தொண்டர்களுக்குத் தொண்டரான
ஸ்ரீ சடகோபராலே தெளியும்படியாகச் சொல்லப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும்
உலகத்தையெல்லாம் உண்டவனான சர்வேசுவரனுக்கு உரிமைப்பட்ட தொண்டராகச் செய்யும்.

முடிவில் –இப்பத்தும் கற்றவர்கள் சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான தொண்டராவர் என்கிறார்.

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு-
கேள்வி விமரிசம் பாவனை இவைகளால் அளவிட முடியாத திருமகள் கேள்வனுக்கு.
“இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன் அல்லன்” என்கிறபடியே

“ந அயம் ஆத்மா ப்ரவசநேந லப்ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந லப்ய: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”-என்பது, முண்டகோபநிடதம்.

கேவலம் கேள்வி முதலானவைகட்கு அப்பாற்பட்டவனாயிருப்பான்;
அல்லாதபோது இவை தாம் அநுபவமாய்ச் சேருமன்றோ.
இதற்கு அடி, திருமகள் கேள்வனாயிருத்தலாதலின் ‘திருமாலுக்கு’ என்கிறார்.
அதுவன்றோ சர்வாதிக வஸ்துக்கு அடையாளம்.

திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
திருமகள் கேள்வனான சர்வேஸ்வரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார்,
சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,
பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,
பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘
தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.

தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;
‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;
தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;
‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.

ததீய சேஷ பூதன் – ஆத்ம -அஹமர்த்தம்
“பயிலும் சுடர் ஒளி” என்ற திருவாய்மொழிக்குப் பின்பு அடியார்கட்கு அடிமையாக இருத்தல் அளவாக ஆயிற்று,
இவருடைய அஹம் என்ற சொல்லுக்குப் பொருள் இருப்பது. -இவ்வளவு வருகை அன்றோ அநந்யார்ஹ சேஷத்வமாவது.

மற்றுமோர் தெய்வம் உளதென் றிருப்பாரோடு
உற்றிலேன்; உற்றதும் உன்னடியார்க் கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்று, நான் கண்ண புரத்துறை யம்மானே!-என்ற பெரிய திருமொழி திருப் பாசுரம் நினைவு கூர்க. .

தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் –
பகவானுடைய வைலக்ஷண்யத்தையும் சம்சாரத்தினுடைய தோஷத்தையும் தெளிவாகச் சொன்ன இப்பத்தும்

உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-
சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.

“குண க்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான
தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,

————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம்
ச விபக்னரூபே ஹரே சகல லோகே
மயம் நிராசா அப்ராக்ருத வபுஷி
லோக மனனா பிரலாபம் –

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம் ச விபக்ன- விஷயம் பார்க்க முடியாதபடி நெஞ்சு அழியும் படி
ரூபே ஹரே சகல லோகே மயம் நிராசா – ஜகதாகரத்தில் ஆசை அற்று
அப்ராக்ருத வபுஷி லோக மனனா-அசாதாரண திவ்ய மங்கள ஆசையால்
பிரலாபம் உச்ச சுரத்தால்

——————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சர்வாத்மாத்வாத் ஜகத்யாத் க்ரமனாத் சம்ரக்ஷணாத்
சத்ரு த்வம்சாத் பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்
நிர்வாகத் அண்ட கோடி யாத் புத தய்யி தத்தாயா
சர்வ ஷீஷ்ண மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்

1-சர்வாத்மாத்வாத் —-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச்
சிவனாய் அயனானாய்-சர்வ பூத அந்தர் பாவம்-

2-ஜகத்யாத் க்ரமனாத் –மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே

3-சம்ரக்ஷணாத் –ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!

4–சத்ரு த்வம்சாத் –தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!

5-6-பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்–விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!–என்றும்
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-என்றும்

7-நிர்வாகத் அண்ட கோடி யாத் –உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்!

8-புத தய்யி தத்தாயா–அறிவார் உயிரானாய்! வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!

9-சர்வ ஷீஷ்ண –தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-

10-மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்–குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ!

கைவல்யம் அற்று மோக்ஷம் ஒன்றிலே இதர புருஷார்த்த வைராக்யாத் பூர்வக
விஸ்லேஷ அநர்ஹஹத்வம் -கல்யாண குணம் -இப்பதிகத்தில்

——————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 59-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————–

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—59-

—————————————–

வியாக்யானம்–

நீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-
கேட்டவர்கள் நீராய் -நெஞ்சு அழியும்படி யாகவும்
அசேதனங்களோடு –
சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –

பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்
ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –

மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும்
விண் மீது இருப்பு அரிதாம் படி –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-
க்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி-சமியாத அபி நிவேசத்துடன் ஆக்ரோசம் பண்ணின –
அதாவது –
1-வாராய் -என்றும்
2-நடவாய் -என்றும்
3-ஒரு நாள் காண வாராய் -என்றும்
4-ஒளிப்பாயோ -என்றும்
5-அருளாயே -என்றும்
6-இன்னம் கெடுப்பாயோ -என்றும்
7-தளர்வேனோ -என்றும்
8-திரிவேனோ -என்றும்
9-குறுகாதோ -என்றும்
10-சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்-ஆர்த்தியுடன் கூப்பிட்டவை என்கை –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –
அத்யபி நிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-

ஒதிடவே யுய்யும் யுலகு –
இத்தை அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும்
ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -139- திருவாய்மொழி – -6-9-1….6-9-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 21, 2016

யஸ்ய ஆத்மா சரீரம் -ஜெகதாகாரம் -வேதார்த்தமான அவனை ப்ரேமம் உடன் -பக்தி பாரவஸ்யத்தால்
ஞானம் மிகுந்து கூப்பிட்டு -தவித்து -ஆறி இருக்காமல் கூப்பிடுகிறார்
ஆறாம் பத்து தொடக்கத்திலும் கீழும் தூது-ஜெகதாகாரம் அறிந்தவராலும் –
அவனை அவனாகவே காண ஆசைப்பட்டுக் -கூப்பிடுகிறார் –
கிடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழும் குலசேகரப் பெருமாள்
நடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழ இவர் இதில் –

பிரவேசம் –

எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூது போகச் சொன்னார்;
அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்;
“மரங்களும் இரங்கும் வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்கா நின்றால்,
சிறிது அறிவை யுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே,
“ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.6. 8 : 11.-என்றது,
தூதரை ஒழிய அல்லவே.
ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே.
“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்ல வேணுமோ?” என்று பார்த்து,
தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.

தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போக வேண்டும்படியாய் இருந்ததோ?
கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி,
கால் குலைந்து வரும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இனித் தான், தூது போவார்க்குக் காலாலே யாதல் சிறகாலே யாதல் போக வேண்டுகையாலே தடை உண்டு;
இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ.

இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப் போகாது,
பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப் போகாதவாறு போலே.
அவள் இருப்பு பிறர் மேல் வைத்த திருவருளாலே ஆனாற் போலே,
இவருடைய வியசனமும் பிறர் மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி.

கர்மம் ஹேது வானாலோ என்னில் ஆகாது -ஹேது சொல்லப் போகாது –
காரணம் -கார்யம் பூர்வ வ்ருத்தி இருக்க வேண்டுமே –
அதுக்கு த்ருஷ்டாந்தம் பிராட்டி -சிறை இருந்தவள் ஏற்றம் –
ஆழ்வாரை இங்கு வைத்து வியசனம் செய்ய வைத்தது -பிறர் உஜ்ஜீவனத்துக்காகவே -அவன் ஸங்கல்பமே ஹேது –

அவள் சிறையிருந்த படியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே,
அன்று இவர் தாம் வியசனப் பட்டாரே யாகிலும்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப் பந்தலாயிற்றது.

திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத்
தம் மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்?
நாம் உம்மை விட்டுத் தூரப் போனோமோ? –
ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி
இருக்கிற உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக;
அதில் குறை என்?
நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ?
இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காண வேணும்” என்னப் பண்ணுகிறது;
ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார்.

அதுவும் உன் ஐஸ்வரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்;
அதனால் -ஜகதாகாரம் அறிந்து பாடியதால் -வந்தது –
உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது.
அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;
பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”
“கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.
என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும்,
உன்னுடைய விபூதி அழியாமல் நோக்க வேணுமாகில் வா என்கிறார் என்றுமாம்.
இவருடைய துயர ஒலி தான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க் காணும் இருக்கிறது.-

ஞானமும் பிரேமமும் கலந்து அருளிச் செய்த பதிகம் -அசாதாரணமான மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் –
அசாதாராணமான திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசைப்பட்டு அருளிச் செய்கிறார்

——————————————————————————————————-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

அகில ஜகத் ஆகாரனாய் இருக்கும் நீ உன்னுடைய அசாதாராண சின்னங்களுடன் திவ்ய மங்கள விக்ரகம் காணுமாறு அருள வேண்டும்
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-அப ஏவ -தண்ணீர் -நீரின் கார்யம் பிருத்வி -உபய காரணமாய் அக்னி –
ஆராதனம் -பண்ணி கம் ஆகாசம் சுகம் -அளவிட அறிய சுகம்
தத் காரணமான வாயுவும் -பூத சதுஷ்தடயா பிரதானம் -மகா -ஆகாசம் -அவகாசம் -இடை வெளி -சமஷ்டி கொண்டு
வியஷ்டி சிருஷ்டி சங்கல்பித்து -பகுஸ்யாம்-அனுஷ்டானம் போது சமஷ்டி சிருஷ்டிக்கு அப்புறம் -வியஷ்டி சிருஷ்டி
அந்தராத்மா -அனுப்ரேவிசித்து-தாது தாது ஆத்மாவாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்-சூர்ய சந்திர -அண்டாந்த வர்த்திக்களில் பிரதானம் -அழிந்ததே படைக்கப்படும் –
124/24/வ்யூஹம் -சங்கர்ஷண-ஞானம் பலம் சம்ஹாரம் தொடங்கி -அங்கும் -அது தானே ஜாக்ரதையாகப் பண்ண வேண்டும் –
கர்மங்களை மாறாமல் வைக்க -அதனால் சிவன் முதலில் -பொதுவான ஆகாரம் -அப்புறம் தான் ஸ்ருஷ்டிக்க அநிருத்தன் –
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன் பால்-ஆஸ்ரிதர் அனுபாவ்யமான -ஒருவர் ஒருவருக்கு உபகரிக்க -நாட்டியம் பாட்டு -ஓளியும் ஒலியும்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.-மண் -லீலா விபூதி விண் நித்ய விபூதியும் -மகிழவே -பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம்
ஆளீரோ-குருவி கையில் ந சாஸ்திர ந கிராமம் ஆழ்வாருக்கு -உம்மை நிர்பந்திக்கும் கொடியேன் -பால் வாராய்
நடை அழகை காண வேணும் -ஒரு நாள் ஆகிலும் -தீர்த்த தாகம் பஞ்சில் நனைத்து தீர்த்தம் கேட்பது போலே

தண்ணீராகிப் பூமியாகி நெருப்பாகிக் காற்றாகி நீண்ட ஆகாசமாகிச் சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாகிச் சிவனாகிப் பிரமன் ஆனாய்;
மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும் படியாகக் கொடியேனாகிய அடியேனிடத்து, கூர்மை பொருந்திய சக்கரத்தையும்
வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக் கொண்டு ஒரு நாள் வர வேண்டும்.
உலகமே உருவமாக இருக்கும் தன்மை, முதல் இரண்டு அடிகளில் கூறப்பட்டது. மகிழ ஏந்தி வாராய் என்க.
வாராய் – வர வேண்டும்; விதிவினை. இத் திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

“உலகமே உருவமாயிருக்கும் தன்மையைக் காட்டித் தந்தோம் அன்றோ” என்ன, அது போராது;
அசாதாரணமான வடிவைக் காண வேண்டும் என்கிறார்.

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீர் ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய் –
“இது அறியாமல் அவ் வருகே ஆசைப்படுகிறார் என்று கொள்ள ஒண்ணாதபடி,
தாம் அறிந்தமை தோற்ற விண்ணப்பம் செய்கிறார்.
யாவையும் யாவரும் தானே நின்ற மாயன் என்றாரே கீழே-திரளச் சொல்லி -கணக்கு சொல்லி
ஞானம் உண்டு என்று காட்டி அருளுகிறார்

நீராய் –
நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார்.
“நீர் தோறும் பரந்துளன்” –திருவாய். 1. 1 : 10.-என்றாரே யன்றோ மேல்.
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா:, நீர்கள் நாரம் என்று சொல்லப்பட்டன” என்பது ஈண்டு அநுசந்தேயம்.
“அந்தப் பரமாத்மா முதலில் தண்ணீரையே படைத்தார்” என்கிறபடியே,-பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து –
முதல் முதல் தண்ணீரைப் படைத்துப் பின்னர் மண் முதலான பூதங்களை உண்டாக்கி,
இவற்றைக் கொண்டு காரியம் கொள்ளுமிடத்தில் ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டி இருக்குமன்றோ;

பஞ்சீகரணம் பண்ணி -அண்ட ரூபமான கார்யம் -பாதி -நாலாக்கி நாலில் கலந்து -தன் தன் அம்சம் பிரதானமாக இருக்கும்
விபக்த அம்சம் – அப்ரதானம் –அவிபக்த அம்சம் -பிரதானம் என்றவாறு
இப்படி பஞ்சீ கரணம் பண்ணினால் தானே கார்ய கரம் ஆகும் -நாநா வீர்யம் -உள்ள இவை –
“ஐம் பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ
படைக்கும் முறை தான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்

‘ஐம் பெரும் பூதங்களும்’ என்று தொடங்கி.-
“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”- என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.
இந்தஸ் ஸ்லோகத்தில் “பரஸ்பர ஸமாஸ்ரய:” என்றதனால்,
ஆஸ்ரய ஆஸ்ரயி பாவத்தாலும், ஆதார ஆதேய பாவத்தாலும் ஒன்றில் ஒன்று அதிகமாக இருக்கவேண்டும் என்பது போதரும்.

இவை தாம் ஒரு பொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ள வேணும் அன்றோ:
அது செய்யும் போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க் கொண்டு
தோற்றுவிக்குமாறு போலே, தண்ணீரை உண்டாக்கி, அது நீர்ப் பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி,
பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப் பொருளை உண்டாக்கி,
அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி,
அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக் கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி.
இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்ட சிருஷ்டியைப் பண்ணி நின்றது.

இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டு வைக்க ஒண்ணாதே அன்றோ;
அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற் போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி.
நீர்க் களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கின படி.

அண்டங்களுக்குள்ளே வாழ்கின்றவர்களாய்க் கொண்டு நின்று, ஒருவன் மனைந்து கொண்டு வர
ஒருவன் அழித்துக் கொடு வரும்படி பிரம ருத்திரர்களை உண்டாக்கி.
ஆயின், சிவனை முறை படச் சொல்லுவான் என்? என்னில்,
அழித்தலை முன்னாகக் கொண்டே யன்றோ படைத்தல் தான் இருப்பது.

‘நீராய் நிலனாய்’ என்றதனோடு ஒக்க, சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்கையாலே,
“யாதொருவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ, யாதொருவனுக்கு மண் முதலியவை சரீரமோ” என்கிறபடியே,
சேதன அசேதனங்கள் இரண்டும் அவனுக்குச் சரீரத்தைப் போன்று பரதந்திரப்பட்டவை என்னுமிடம் சொல்லுகிறது.

‘சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்றும், ‘சிவனாய் அயனானாய்’ என்றும் ஒற்றுமைப் படுத்திச் சொல்லுகையாலே,
நியமிக்கப்படுகின்ற பொருளோடு நியமிக்கின்றவர்களாக அபிமானித்திருக்கிறவர்களோடு வாசி அற
அவனுக்குப் பரதந்திரப்பட்டவர்கள் என்னுமிடம் சொல்லிற்று.

உலகத்தைப் படைத்தது உன்னை அடைவதற்காக அன்றோ?
உன்னை அடைதலைப் பண்ணித் தந்தால் அன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது?
படைப்புக்குப் பிரயோஜனமாவது, எப்பொழுதும் துக்கத்தை அடைந்து கொண்டிருக்கிற ஒருவனை
அந்தமில் பேரின்பத்தே கொடு போய் வைக்கை அன்றோ.

அது கிடக்க,
இதனை உண்டாக்கியதற்குப் பிரயோஜனத்தை நீ பெற வேண்டாவோ?

‘நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று,
இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி –
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மை போன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக் கவர்ச்சி யாயிருக்கிறபடி
பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற் போலே கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர் ஆர் ஆழி’ என்கிறது.
அசாதாரண விக்கிரஹத்துக்கு லக்ஷணமோ தான் கையும் திருவாழி யுமாயிருக்கை.

கொடியேன் பால் –
எனக்கு இங்ஙனே ஒரு நிர்ப்பந்தம் உண்டாவதே! என் ஸ்வரூபத்திற்கு விரோதங்காண் நான் பண்ணுகிறது.
ஸ்ரீ பரதாழ்வானைப் போலே பொகட்ட இடத்தே கிடக்க வல்ல தன்மையனாகப் பெற்றிலேன்;
இளைய பெருமாளைப் போலே, ‘நில்’ என்ன, “என்னை அடியவனாகக் கொள்”
“குருஷ்வமாம்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 22.– என்று நிர்பந்திக்கும் தன்மை யனாவதே!

வாராய் –
ஆசைப் பட்டாலும் நடக்க வல்லார் வருமித்தனை அன்றோ.
இளைய பெருமாள் போலே உன் பின்னால் என்னால் நடக்க முடியாதே -சாதனா புத்தி இல்லையே –
பரகத ஸ்வீகார நிஷ்டன் -வாராய் என்கிறார் –
‘வாராய்’ என்ற அளவிலே வந்து கொடு திரியப் போமோ? என்னில்,
ஒரு நாள் நான் உளன் ஆகைக்காக –

ஒரு நாள்-
விடாயர் ‘ஒரு கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒரு நாள்’ என்கிறார்.

மண்ணும் விண்ணும் மகிழவே –
மண்ணும்
எனக்காக வந்திலை யாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார்.
‘மானாவிச் சோலை போலே ஆவது-மானாவிச் சோலை – நவராத்ரியில் மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.-
அழிவதான இது போனால் என் செய்ய வேணும்?’ என்று இருக்கிறாயாகில்,

விண்ணும்-
அவ் விபூதியும் அழியுங்காண்;
இது அழியவே அதுவும் அழிந்ததாமன்றோ.
அதுவும் இருக்கச் செய்தே அன்றோ, இது அழிய
“அந்தப் பரமாத்மா தனித்து இருக்கும் போது சந்தோஷத்தை அடைய இல்லை” என்றது.
இனித் தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில்,
ஆழ்வாரின் ஆர்த்திக்கு துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே!

மகிழவே –
அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக–ஒரு நாள் வாராய் –
தேசிகன் -நான் போனதும் தயா தேவி உனக்கு ஆகாரம் இருக்காதே –
ஆர்த்திக்கு அழியும் -காதல் இருந்தால் தானே உனக்கு பெருமை –
மண்ணும் விண்ணும் மகிழவே ஒரு நாள் வாராய் –

—————————————————————————-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2-

மகா பலிக்கு உன் அழகைக் காட்டி -ஆச்சர்ய சக்தன் -ஆனந்யார்ஹத்வம் காட்டி- நான் கண்டு உகக்கும் படி நடக்க வேண்டும் ஞானத்தில்
நடந்து ஞாலம் அளக்க வேண்டாம் இரண்டு திருவடி நடந்து காட்டினால் போதும்
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி-அர்த்தித்த அநந்தரம் கையில் நீர் பட்டு சிலிர்த்து வளர்ந்து சர்வ சக்தி யோகம் பிரகாசித்து
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே-ஆச்சார்ய -ஸ்வாமி
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட-அடியேன் அடைந்து -பிரயோஜநாந்தர பரர்களுக்கு காட்டிய நீ –
நான் கண்டு அல்லது தரிக்காத சபலன் நான் உன் வடிவு அழகை கண்ணாலே கண்டு -மானச அனுபவம் போதாதே
யஜ்ஞ்ஞாவாடம் வந்தால் போலே நீர் வந்து கிட்டி -நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே -நடந்து அருள வேணும்

மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாக வாமனாவதாரமாகி வலியைக் காட்டி மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
அளந்து கொண்ட ஆச்சரியத்தை யுடைய அம்மானே! நான் உன்னை அடைந்து கண்டு மகிழ்ந்து கூத்தாடும்படியாக
நீ தானே வந்து கிட்டி இந்தப் பூமியிலே ஒருநாள் நடந்து வரல் வேண்டும்.
மகிழக் குறளாய்க் காட்டிக் கொண்ட அம்மான் என்க. நான் கூத்தாட நடவாய் என்க,
நடவாய்: விதிவினை; நடக்கவேண்டும் என்பது பொருள்.

“வாராய் என்று நிர்ப்பந்தித்து அன்று காணும் நம்மைக் காண்பது;
உம்மை ஒரு தேச விசேடத்தே அழைத்துக் காணும் காட்டுவது” என்ன,
அவ்வடிவு தன்னையே இங்கே கொடு வந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ? என்கிறார்.

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் –
இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே.
அனைவருக்கும் நியந்தா ஸ்வாமி குணம் போகுமே -அதனால் அனைத்து விபூதியும் அழியுமே –
ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே.
(செவ்வி பெறுமாறு–தரித்தல் -வளர்த்தல் -உகப்புடன் இருத்தல் )
அன்றிக்கே,
உகவாதாரும் மகிழும்படி யன்றோ வந்து தோற்றிற்று என்னுதல்.

வலம் காட்டி –
கொடை என்ற குணம் சிறிது கிடக்கையாலே
இராவணன் முதலியோர்களைப் போலே அம்பாலே அழிக்கப் போகாதே;
அழகாகிற பலத்தைக் காட்டி வாய் மாளப் பண்ணின படி.
சுக்கிரன் முதலானோருடைய தடை உண்டாயிருக்கச் செய்தே அன்றோ,
அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக் கொண்டு நின்றபடி.

குறளாய் –
கோடியைக் காணி ஆக்கினாற் போலே முகந்து கொள்ளலாயிருக்கை.

கண்ட திறத்திது கை தவம் ஐய! கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்
அண்ட முற்றும் அகண்டமு மேனாள் உண்டவனா மிதுணர்ந்து கொள் என்றான்.- என்பது, கம்பராமாயணம், வேள்விப் பட. 26.

மண்ணும் விண்ணும் கொண்ட –
பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக் கொண்ட.
இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது,
அவன் அசுரத் தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்ட படியும்,
தன்னை யடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும்-அ விபாக ரசம் – என்க.
என்னையே உபாசிப்பாய் -என்றான் இந்த்ரனும் ரிஷிகள் இடம் -அவிபாக ரசம் -அந்தராத்மா என்பதால் —

மாய அம்மானே –
திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும்,
வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும்,
“கொள்வன் நான் மாவலி மூவடி ” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும்,
சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது.

அம்மானே
“தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்” –“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதி தைவதம்”
என்பது, ஜிதந்தா. -என்கிற ஸ்வாமித்வமன்றோ அங்ஙன் செய்ய வேண்டிற்று என்பார் ‘அம்மானே’ என்கிறார்.

நான் உனை நண்ணி உகந்து கூத்தாட
இந்திரன் முதலானோர்களைப் போன்று எனக்கு இராஜ்ய அபேக்ஷை இல்லை காண்;
நீ செய்து தந்த ஞானத்தாலே நிறைவு பெற்றவன் ஆகிறிலேன்.
நான் உன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வர வேணும்.

வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது;
வந்தால் உகக்கை தான் இவரது செயல்.
நான் உகக்க வேண்டும் –சாதனம் அந்வயம் இல்லை–கண்டு உகக்க வேண்டும் –

நான் கண்டு உகந்து கூத்தாட –
மஹாபலியைப் போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்;
இந்திரனைப் போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்;
‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக் கொண்டு பரிமாறுவது?
உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ?

நான் கண்டு உகந்து கூத்தாட –
கேட்டால் மட்டும் போதாதே-நான் கண்டு உகக்க வேண்டும் -நான்-அநந்ய பிரயோஜனன்

“கிருஷ்ணா!எங்களுடைய பரபரப்பினால் மாத்திரம் சந்தோஷமடையும்; இது தான் எங்களுக்குப்
பெரிய செல்வம்” என்கிற இதிலே அன்றோ இவர்க்குச் சம்பந்தம்.-
விதுரனின் பரபரப்பே -பீஷ்மர் -துரோணர் -துரியோதனன் -மூவரையும் விட்டு -துராபிமானர்கள்

நண்ணி-
நான் இருந்த இடத்தே நீ வந்து கிட்டி.

ஒரு நாள் –
பின்பு ஒரு நாள் அச் செயல் செய்யலாகாதோ?
மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ?
வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்கள் முன்பு நடக்கலாகாதோ?

ஞாலத்தூடே நடவாய்-
நடை அழகில் வாசி கண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும்
அவன் முன்னேயோ நடக்கலாவது?
நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என் முன்னே நடக்கலாகாதோ?

———————————————————————

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ -5-9-10–அங்கு திருக் குடந்தை –
அகில பிரகாரத்தாலும் ஆஸ்ரித சம்ரஷணம் அர்த்தமாக வியாபாரம்
சக தர்ம சாரிணி ஸ்ரீ லஷ்மி உடன் அனுபவியாமல் தளர்வேனோ
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-அவதரித்து -நடந்து -நின்றும் வில்லைக் கோத்து-பிரதிச்சிச்யே –
கடல் முன்னே குணக் கடல் போலே கிடந்தும் -இருவருமாக சித்ர கூடம் ச ராகவ சீதா சஹ –
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!-சர்வ ரஷகன் -யுகம் தோறும் -சதா வர்ஷ சகஸ்ராணி 11000 வருஷம்
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே-விஷ்ணோ தேக அனுரூபம் -ஆபி ரூப்யை-வடிவு அழகு கோல வராஹம் -பொருந்திய அழகுடன்
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?-அநாதி காலம் இழந்தால் போலே உறவு அறிந்த பின் இன்னும் கிட்டி அனுபவிக்காமல் –
சம்பந்தம் அறிந்த பின்பு விஷயாந்தர ருசி விட்டு உங்கள் மேல் ருசி வந்த பின்பு கிலேசத்தால் துடித்து இருக்கவோ

யுகங்கள் தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே!
அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?
ஞாலத்தூடு – பூமியிலே. அடியேன் உன்னைக் கூடாதே இன்னும் தளர்வேனோ? என்க, சால : மிகுதியைக் காட்டும் உரிச்சொல்.

உலகமே உருவமாக இருக்கிற வடிவு காட்டினது போராது;
அசாதாரணமான விக்கிரஹத்தைக் கொடு வந்து காட்ட வேணும் என்றார் முதற் பாசுரத்தில்;
அது உமக்குக் காட்டுவது ஒரு தேச விசேடத்தே கொடு போய்க் காணும் என்ன,
அது தன்னை இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார் இரண்டாம் பாசுரத்தில்;
அது ஒரு நாள் சற்றுப் போது காட்டாறு பெருகினாற் போலே செய்தோம் என்ன,
‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து
காப்பாற்றுதல் உன்னுடைய ஸ்வபாவமாக இருக்க, நான் நோவு படக் கடவேனோ என்கிறார்.

ஞாலத்தூடே நடந்தும் –
எப்பொழுதும் காணக் கூடியவர்கள் முன்னே நடக்கக் கடவ நடையை,
யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது;
குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே.

“ஸ்ரீ ராம பிரான் முன்னே நடந்து சென்றார்”
“அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூ மத்யம ” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.-என்றும்,
“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற
பிரசித்தியு டையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும்.
( பொய்யோ இடையாளொடும் இளையானொடும் நடந்தான் -கம்பர் )

வட தேசத்தினின்றும் போரப் பாட வல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடி தொழ வேணும்’ என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து,
பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கை வசப் படுத்துமாறு போலே ஏத்தி-ஸ்தோத்ரம்-வசமாக்கிக் கணிசம்-சபதம் -கொண்டு,
“நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடி தொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது;
இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை பண்ணி யருள வேணும்” என்ன,
அவரைப் பெருமாள் அருளப் பாடிட்டு, திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தே திருக் கைத்தலத்தே எழுந்தருளி,
விண்ணப்பஞ்செய்வார்களை அருளப் பாடிட்டு,
“வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்;
அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தே பட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

நின்றும் –
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச் செய்தீரே’ என்கை யன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலை கீழதாக விழுந்து
சாவாரைப் போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-
மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படி யன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.

கிடந்தும் –
“பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலைக்கு அணையாகக் கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள்
கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு சமுத்திரத்திற்கு நேர் முகமாகப் படுத்தார்” என்கிறபடியே,
கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.
“பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று,
கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று,
அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;

“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.-கம்பர் பாசுரம்
ஈட்டிலே உள்ளதே -பிரமாணமாக காட்டி -நாத முனிகள் காலம் கம்பர் என்பர்

இருந்தும் –
அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.
“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.-16 : 8.-என்றும்,
“பர்ண சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை.

“திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில் ஓலக்கம் இருந்தபடி.
உடஜே ராம மாஸீநம் ஜடாமண்டல தாரிணம் க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும்-பரதனுக்கும் – கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி:
“சுற்றிலும் நெருப்புப் போல் இருக்கிறவரை” என்கிறபடியே,
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு

சாலப் பல நாள் –
உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ?
அன்றிக்கே,
நூறு ஆண்டு
பதினோராயிரம் ஆண்டு என்றுமாம்.

உகந் தோறும் –
“யுகங்கள் தோறும் பிறக்கிறேன்” என்னுமாறு போலே.
(கல்பம் தோறும் -ஸம்பவாமி யுகே யுகே )

உயிர்கள் –
ஒரு திருவடி, திருவனந்தாழ்வான், பிராட்டி இவர்களுக்காக அன்று கண்டீர்,
எல்லா ஆத்மாக்களையும் ரக்ஷிப்பது அன்றோ உன்னது.

காப்பானே –
இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற் போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி.
நான் கை வாங்கினேன், (ஸ்வ ரக்ஷணம் தவிர்ந்தேன் )
இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக் கொள்.

“இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”
“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.

கடற்கரையிலே விட்ட போது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள்
உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து,
நிதி நோக்குவாரைப் போலே பெருமாளை நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனை பேரும் கண் சோர்ந்த அளவிலே,
பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.
அவன் நோக்குகைக்கு இத்தலை கண் செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது.
நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது மயக்கம். அன்றோ;
உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ.
(ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்யவம் இல்லாத போது தானே அவன் ரக்ஷித்து அருளுவான் –
முதலிகள் பரிவாலே நோக்கிக் கொண்டு இருந்தார்கள் -பக்தி பாரவஸ்யத்தால் பரிந்து –
பொங்கும் பரிவாலே -தட்டு மாறிக் கிடந்ததே )

கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே –
தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து
துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.
“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.

இன்னும் தளர்வேனோ –
முன்னம் அநாதி காலம் இழந்த நான் இன்னம் – அநந்த -பல காலம் இழக்கவோ?

அடியேன் –
அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கை விடலாம் என்று இருக்கிறாயோ?

இன்னும் தளர்வேனோ –
“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ?
‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,
‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;
ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது.
ரக்ஷிக்குமிடத்தில்,
எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;
அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்;
அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;

இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில்,
“குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும்,
“என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;
ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.

“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;
‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.

அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.

ஏவம் அஷர ரூபம் காரணத்வம் -ரக்ஷணம் தாது சேஷித்வம் பத ரூபம் –
ஸ்ரீ வாஸ்ய சக்தி -மூலம் -உஜ்யதே பரமாத்மா

(நமஸ் -சேர்த்து உபாயம் -அகண்ட நமஸ்
பிரித்து விரோதி -அஷ்ட ஸ்லோகி பார்த்தோம் )

————————————————————————————

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4-

பிரபல சகடாசுரனை நிரசித்த நீ -பிரதிபந்தகங்கள் போக்கி வந்து அருள வேணும் -திருவடியால் விரோதி நிரசனம்
பண்ணி நடந்து வந்து அருள வேணும் -திருக் காலாண்ட பெருமான் –
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்-கோப்புக் குலைந்து சின்ன பின்னமாகும் படி
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!-திருவடியால் கார்யம் செய்த –
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ-சூழ்ந்து சேவிக்க
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே-ஔஜ்வல்யம் தோற்றும் படி கஜேந்த்ரனுக்கு வந்தால் போலே வந்து அறுக்க வேணும்

சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம் கொண்ட பெருமானே!
பிரமன் சிவன் இந்திரன் மற்றைத் தேவர்கள் இவர்கள் கிளர்ந்து சூழ்ந்து சேவிக்க, உன் முதன்மை தோன்றும்படி நான் காண விண்மீதே ஒரு நாள் வாராய் என்க.
அசுரர்: இகழ்ச்சியின் கண் வந்தது. வீய ஆண்ட பெருமான் என்க. வீய – இறக்க. கிளர்ந்து சூழ விளங்க விண் மீதே காண ஒருநாள் வாராய் என்க.
வாராய்: விதிவினை; வரவேண்டும் என்பது பொருள்.

தளரக் கடவீர் அல்லீர்; உம்முடைய தளர்த்தியை நீக்கக் கடவோம்; ஆனாலும், தடைகள் கனத்திரா நின்றன காணும்’ என்ன,
‘ஓம், அப்படியே; சகடாசுரனைக் காட்டிலும் வலிய தன்றோ என்னுடைய விரோதி?’ என்கிறார்.
‘உன் கால் கண்ட போதே போகாதோ?’ என்கிறார்.
‘அடிபடின் செய்வது என்?’ என்று சும்மெனாதே கைவிட்டோடும் – பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 3.-அன்றோ.

சகட அசுரர் உடல் தளர்ந்தும் முறிந்தும் வேறா பிளந்து வீய –
சகடாசுரன் கட்டுக் குலையா, முறியா, உடல் வேறாகப் பிளந்து வீய;
“ஸ்ரீராமபிரானால், அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-
சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-
கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்” என்கிறபடியே,
பின்பு, துகளும் காண ஒண்ணாத படியாகை. சகடாசுரனைக் கொன்றான் என்று திரளச் சொல்ல அமைந்திருக்க,
‘தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ,
பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே.

திருக் கால் ஆண்ட –
அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ
இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார்.
“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலை வரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்;
அவ்வளவிலே பொடி பட்டானித்தனை;
“உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்” –பெரிய திரு.-10. 8 : 3.-என்று இவனும் அறிந்து செய்தானல்லன்.
தன்னை உணர்ந்து பரிமாறும் போது திவ்விய ஆயுதமும், அவை உதவாத போது கையும்,
அதுவும் உதவாத போது திருவடிகளுமாய் இருக்கிறபடி.
நம்முடைய ஆபத்துக்களுக்கே அன்றிக்கே, அவனுடைய ஆபத்துக்கும் திருவடிகளே காணும் உதவுவன;
திருமேனி தான் அடியார்களுக்காக ஆகையாலே,
அவர்கள் விரோதி போகைக்கும் அதுதானே உறுப்பாயிருக்கை.

பெருமானே –
அன்று சேஷியை உண்டாக்கின உனக்கு, இன்று சேஷ வஸ்துவை உண்டாக்குகை பெரிய பணியோ?
அவன் பிரகாரியானால், பிரகாரமாயுண்டாவது அன்றோ இது.

பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் கிளர்ந்து சூழ விளங்க ஒரு நாள் காண விண் மீதே வாராய் –
“கும்பிடு நட்டமிட்டாடி” –திருவாய். 3. 5 : 4.-என்கிறபடியே, வேறு பிரயோஜனத்தைக் கருதாதவரைப் போலே,
தம் வசம் அற்றவர்களாய்க் கொண்டு பிரமன் சிவன் முதலானோர்களால்,
பிரதாநரோடு பிரதான மில்லாதாரோடு வாசியறக் கிண்ணகம் சுழித்தாற்போலே சூழச் சூழப்பட்டு,
இருட்டில் விளக்குப் போலே “ஒளிகளின் திரள்” “தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா 1. 9 : 67.-என்கிறபடியே
தேஜஸ்ஸே வடிவான திருமேனியைக் கொண்டு, ஒருநாள் யானைக்கு வந்து தோற்றினாற்போலே,
ஆகாச மடங்கலும் இடம் அடைக்கும்படி வந்து தோற்ற வேணும் என்கிறார்.

விளங்க-
இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார்.

ஒரு நாள்
‘நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார்.

காண வாராய்
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காண வாராய்’ என்கிறார்.

விண் மீதே
இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண் மீதே’ என்கிறார்.

———————————————————————————————-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

பகல் ஓலக்கம் இருந்து கறுப்பு உடுத்துச் சோதித்து காரியம் மந்தரித்து வேட்டையாடி
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி
ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் முடிக்கு உரிய இளவரசுக்கு
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் -சூர்ணிகை –157

அடியார்க்கு இன்ப மாரி — பின் சொல்லியவை -பரத்வாதி அவஸ்தா பஞ்சகம் –
நெஞ்சிலே பிரகாசிப்பித்தது உன் வடிவைக் காட்டாதே -மறைக்கலாமோ –
அந்தர்யாமி இரண்டு நிலை ஸ்வரூப வியாப்தி -வஸ்துவுக்கு சத்தைக்கு-ரூப வியாப்தி –
லஷ்மி விசிஷ்டனாக -தேஜஸ் விக்ரகம் உடன் -யோகி ஹ்ருத் த்யான கம்யம் –
மறைந்து உறைவாய் -மானச பிரத்யஷம் பெற்றார் பாஹ்ய இந்த்ரிய விஷயம் அணைத்து குலாவி
ஐந்து புலன்களுக்கும் அவன் இந்த விபூதியில் -ஆகவேண்டும் என்கிறார் –
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!-நித்ய ஆஸ்ரிதற்கு அனுபாவ்யம் –
நித்ய சம்சாரிகளுக்கு அனுபாவ்யம் அர்ச்சா ரூபத்தில் -அர்ச்சா அடுத்து -நீசர்களான நமக்கும் -பின்பு நடுவில் உள்ளோருக்கு
ப்ரஹ்மாதிகளுக்கு-ஆபத்து போக்க -வ்யூஹ -அநிருத்தாதி-வ்யூஹாதி –
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!-ராம கிருஷ்ண -சஜாதீயன் -அளவில்லாதவர் கண் கூட தர்சிக்க
பாக்கியம் உள்ளவர்கள் -அழகாலே வசீகரித்து -உழல்வாய் -தாழ்ந்த செயல் –
கஷ்ட நஷ்டங்கள் நம் போல் அனுபவித்து -சஜாதீயன் சஞ்சரித்து -மனிசரும் படாதன பட்டு –
இஜ் ஜகத்தில் சமஸ்த பதார்த்தங்களிலும் இந்த்ரிய கோசரம் ஆகாதபடி வர்த்திப்பானாய்
எண் மீதி யன்ற புற அண்டத்தாய்! எனதாவி-எண்ணிக்கையில் அடங்காத -அண்டங்களுக்கு புறத்தாய் –
என்னுடைய ஆவியுள் பிராண ஆஸ்ரமான நெஞ்சுக்குள்
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ-நடை யாடி விட்டு இப்போது மறைக்கலாமா –

பரமபதத்தில் வீற்றிருக்கின்றவனே! திருமலைமேல் நிற்கின்றவனே! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கின்றவனே!
பூவுலகத்தில் பல அவதாரங்களைச் செய்கின்றவனே! இந்தப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் மறைந்து வசிக்கின்றவனே!
எண்ணுக்கும் அப்பாற்பட்ட புறத்தேயுள்ள அண்டங்களிலும் இருக்கின்றவனே!
என்னுடைய உயிருக்குள் அதிகமாக நடையாடிவிட்டு கண்களுக்கு இலக்கு ஆகாமல் மறையக் கடவையோ?
முதல் இரண்டு அடிகளில் இறைவனுடைய ஐவகை வடிவுகள் கூறப்பட்டுள்ளமை காண்க.

ஸர்வத்ர ஸந்நிஹிதனாய் -எல்லாவிடங்களிலும் அண்மையிலிருப்பவனாய்
என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து,
என் கண்களுக்கு விஷயமாகாது ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.

விண் மீது இருப்பாய் –
எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்படி.
இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரம பதத்தில் இருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது.

மலை மேல் நிற்பாய் –
நித்திய ஸூரிகளையும் நித்திய சம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடு கூத்தன் அல்லனோ–பெரிய திருமொழி, 2. 1 : 9.-

கடல் சேர்ப்பாய்-
கால் நடை தந்து போக வல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தபடி.

‘விண் மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலை மேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப் பெற்றது-பர்யவசியம்
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் –
ஆறு கடலில் சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு

மண் மீது உழல்வாய்-
அவ்வளவு போக மாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண் வட்டத்தில் திரியுமவனே!
“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும் –பெரிய திருவந். 18.– என்கிறபடியே,
அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதி கூலராய்க் கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.
அனுகூலை யசோதை பிரதி கூலன் காளியன் பாடாற்றல் துக்கம் -இளக-இரட்டிப்பாக –

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!
சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால்,
தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் -இரா மடம் ஊட்டும் -தாயைப் போலே.
“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகு முறுகு -பொறாமை -என்றால்,
அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.

எண் மீது இயன்ற புற அண்டத்தாய் –
எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!
“இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்
அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.

எனது ஆவியுள் மீது ஆடி –
என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.
அன்றிக்கே,
என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.

உருக் காட்டாதே ஒளிப்பாயோ –
வடிவு காணப் பெறா விட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.
குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 138- திருவாய்மொழி – -6-8-6….6-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 20, 2016

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

சர்வ பிரகார பவ்யன் -திருத் துழாய் நமக்கு அன்றி தாரான் -நான் உங்களுக்கு கற்பித்த வார்த்தைகளை பூவை இடம் சொல்லி அனுப்புகிறாள் –
என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்-ஒப்பனை அழகன் -திரு மேனி அழகன் -சௌலப்யன்-மூன்றும்
திருமேனிக்கு பரபாக-மின்னு நூல் -என்னை அனுபவிப்பித்தவன் -என் மார்பன் – சமுதாயமான சியாமள விக்ரகம் -கொண்டவன்
என்னை அனுபவிப்பித்து அடிமை கொண்ட ஸ்வாமி-எனக்கு சர்வ பிரகாரத்தாலும் அடிமை கொள்ளலாம் படி -நியமிக்கலாம் படி -ஆஸ்ரித பவ்யன் –
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்-கண்டிப்பாக கொடுத்து -தன் அனுபவம் கொடாமல் போக மாட்டான் -அனுபவிப்பான் –
ஆஸ்ரிதர் உள்ள இடம் அளவும் செல்லும் -திருக் கமல பாதம் வந்து -என் கண்ணினுள் உள்ளனவே –
தன் நீள் கழல் மேல் மன்னு திருத் துழாய் -என்று அந்வயம்-
ஸ்ரமஹரமான -நாராயணனே நமக்கே பறை தருவான் -பெண் பேச்சு -நமக்கு அன்றி நல்கான் –
புண் படும் படி வார்த்தை -செயலை விஞ்சி இருக்கும் தன்மை
நமக்கு அன்றி -நமக்கே -இதில் நம்மையும் சேர்த்து இருவரும் அருளிச் செய்கிறார்கள்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்-சொல்லிக் கொடுத்து வைத்த -முதல் இரண்டு வார்த்தைகளை
தான் முன்னால் கற்றுக் கொடுத்து வைத்து இருக்கிறார் –
கற்றுக் கொள்ளும் -என்று முக்தமாக செருக்கு அடித்து பராக்கு பார்த்து இருக்கும் உங்களை -நிர்பந்தித்து –
உங்களைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டிய நிலையில் –
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே-நான் உங்கள் கார்யம் செய்ய வேண்டி இருக்க –
உங்கள் இடம் கார்யம் கொள்ள வேண்டிய பாவம்

தீ வினையேன் வளர்த்த சிறிய பூவைகளே! என் மின்னு நூல் மார்பன், என் கரும்பெருமான், என்கண்ணன், தன்னுடைய நீண்ட
திருவடிகளின் மேலே பொருந்தி யிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயினை நமக்கு அன்றிக் கொடான்; கற்றுங் கொள்ளுங்கோள் என்று
உங்களை யான் கற்பித்து வைத்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்.
மின்னுநூல் – பூணுநூல். நமக்கு : தனித் தன்மைப் பன்மை. உளப்பாட்டுப் பன்மையுமாம். கட்மின்கள், சென்மின்கள் என்பனவற்றில்
‘கள்’ அசைநிலை. சிறு பூவைகளே சொல்லிச் சென்மின்கள் என்க.

அடியார்களோடு ஏக ரசன் ஆகையாலே நம் விருப்பத்தை முடித்து வைக்குமவன் பாடே சென்று இதுவோ தக்கவாறு
என்னுங்கோள் என்று சில பூவைகளைக் குறித்துச் சொல்லுகிறாள்.

என் மின்னு நூல் மார்வன் –
என் மின்னு நூல் –
என் மார்வன் –
தன் திருமேனியிலே சாத்தச் செய்தே என் மனத்திலே இட்டாற் போலே பிரகாசிக்கிற பூணு நூலைக் காட்டி-
நெஞ்சிலே -அனுபவம் மானசம் என்றவாறு –
என்னைத் தனக்கே உரியவளாக்கினவன்.

என் மார்வன் –
என் சரக்கானவன் கடக்க இருக்குங்காட்டில் என் சரக்கைப் பிறர்க்கு ஆக்குமோ?

என் மின்னு நூல் மார்வன் –
என் நூல் மார்வன் –பூணுநூலின் அழகினை நினைவூட்டி-மின்னி- என் நெஞ்சில் இருளை அறுத்தவன்.
தன் திருமேனியில் சாத்தின நூலைக் காட்டி என்னை நூலிலே-( வேத ஸாஸ்த்ர ) வரச் செய்தான்.

என் கரும் பெருமான் –
மேகத்திலே மின்னினாற் போலே அந்தப் பூணுநூலுக்குப் பரபாகமான வடிவை
எனக்கு ஆக்கி என்னை அடிமை கொண்டவன்.

என் கண்ணன் –
இப் படிகளாலே-( ஒப்பனை அழகாலும் வடிவு அழகாலும் சௌலப்யத்தாலும் ) என்னைச் சேர்த்துத்
தன்னை எனக்கு ஆக்கினவன்.

என், என், என் என்று பதங்கள் தோறும் சொல்லுகையாலே,
ஒப்பனை அழகிலும் வடிவழகிலும், சௌலப்யத்திலும் தனித்தனியே ஈடுபட்டபடி.

தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் –
எல்லாம் செய்தாலும் “அவன் திரு மேனியும் பக்தர்களுக்காகவே இருக்கிறது”
என்று இருக்கிற திருமேனியைப் பிறர்க்கு ஆக்கான்.

“நதே ரூபம் நச ஆகார: ந ஆயுதாநி நசாஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே”-என்பது, ஜிதந்தா. 5.

இத் திருவாய்மொழிக்கு, நிதானமான பாட்டு அன்றோ இது.
அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாகையாலே, ‘அடியார்கட்குச் செல்வமான பின்பு அறிவிக்க வரும்’ என்று
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூது விடுகிறாள்.

தன் நீள் கழல் மேல் மன்னு தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்-
இனிமை அளவிறந்த திருவடிகளிலே பொருந்திச் சிரமத்தைப் போக்கக்கூடிய திருத்துழாயை எவ்வகையிலும் பிறர்க்கு ஆக்கான்.

“ஓ நீண்ட கையையுடைய அநுமாரே! மஹாத்மாவாகிய ஸ்ரீராமனுக்கும் அவருடைய தம்பிமார்கட்கும்
அந்த அரச குலத்திற்கும் பிராணனானது என் அதீனமாக இருக்கிறது”
“மயி ஜீவிதம் ஆயத்தம் ராகவஸ்ய மஹாத்மந:
ப்ராத்ரூணாஞ்ச மஹாபாஹோ தஸ்ய ராஜகுலஸ்ய ச”-என்பது, ஸ்ரீராமா. சுந். 37 : 57.என்றாள். என்றது,
என் சொல்லியவாறோ? எனின், தம்மையும் தம்முடைமையையும் எனக்கு ஆக்கினவர் என்பதனைக் கூறியபடி.
இதுதான் தன் ஸ்வபாவம் கொண்டு சொல்லுகிறாள் அல்லள்;
அவருடைய ஸ்வபாவ அநுசந்தானத்தாலே சொல்லுகிறாள்.
“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத்
தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும்
என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

என்ற இடத்தில் சொல்லுவது ஒரு வார்த்தை உண்டு.
அது, அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,
‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.
இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:
‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி
கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –
மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் –
சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –

நமக்கு அன்றி நல்கான் –
தனித்து, இனியது அடியார்களை ஒழிய அநுபவிக்க மாட்டான்.

கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் –
நெஞ்சு ஒழிந்த போது -ஸ்வஸ்தமாக இருந்த பொழுது -தனக்குத் தாரகமான வற்றைக் கற்பித்து வைக்கும்;
நம் முதலிகள் ஒரோ சந்தானங்களாகச் ‘சிறியார், பெரியார்’ என்னாதே துவயத்தைக் கற்பித்து வைக்குமாறு போலே.
பாதுகாக்கப்படுகின்ற பொருள்களான உங்களைப் பாதுகாக்கின்ற நான் கற்பித்து வைத்த மாற்றம்.

மாற்றமாவது,
‘நமக்கு அன்றி நல்கான்’ என்று எல்லா நிலைகளிலும் உங்களுக்கு நான் சொல்லி வைத்ததாதல்;
‘இதுவோ தக்கவாறு என்று சொல்லுங்கோள்’ என்றதாதல்.

சொல்லிச் சென்மின்கள்-
அது வழிக்குப் பாதேயம் காணும். அங்கே போனால் சொல்லப் பார்த்திராமல் போகிற போதே சொல்லிக் கொடு போங்கோள்.
அவனுடைய வை லஷண்யம் கண்டால் வாய் எழாமல் போனாலும் போகுமே -சொல்லிக் கொண்டே போமின்
அவனுக்கு மறு பேச்சு சொல்ல அவகாசம் கொடுக்காமல் -என்றுமாம்

தீ வினையேன்
அவை கிடக்கிடுங்கோள்; என்னுடைய பாபம் இருந்தபடி பாருங்கோள்;
புத்திரனை விற்கின்றவர்களைப் போன்றவர்கள் ஆனேன்.
அவனும் நானும் கூட இருந்து உங்களைக் கொண்டாடுகை அன்றிக்கே,
உங்களைக் கொண்டு காரியம் கொள்ளும்படியான பாவத்தைச் செய்துள்ளேன்.
வயிற்றிற் பிறந்தாரை இடுவித்துக் காதலனை அழைத்துக் கொள்ளுதலைப் போன்ற புன்மை இல்லையே.

——————————————————————————————————————–

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

அபி ரூபனாய் அழகன் -அகிலாத்மா பூதனாய்-ஆஸ்ரித விரோதி நிரசன–ஆர்த்தி அதிசயத்தால் தனது பொம்மைகள் -அசித்தை பிரார்த்திக்கிறாள்
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்-காயம் பூ போல நிறத்தன்-பரபாகம் புண்டரீகாஷன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்-சகல அசேதனங்கள் சேதனங்களாய் நின்ற -சாமா நாதி கரண்யம் –
தத் கத தோஷ ரஹிதமாய் நின்ற -ஆச்சர்ய சக்தி உக்தன் -கலந்து கழன்று நிற்கிறானே -இத்தையே என்னிடமும் பண்ணிக் காட்டி அகன்று இருக்கிறான்
கையும் திரு ஆழியுமான வடிவு அழகைக் காட்டி மகோ உபகாரகன் -அடியிலே காட்டி அருளி
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்-விரோதி நிரசனம் இயற்க்கை -கற்ப்பியா வைத்த
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.-தீர்த்து கொடுமின் –பறந்து போய் அவர் கோஷ்டியில் சேரும் –
இதுவாவது கேட்டு என்னிடமே இருக்குமே -நீ படும் துக்கம் காண பேச முடியவில்லையே -என்று வாளா இருப்பதாக நினைக்கிறாள்
உங்களைக் கொண்டு கார்யம் செய்ய வேண்டிய பாபம் -நிறத்தின் பசுமை அழிந்ததே தீர்க்க வல்லீரோ

பாவைகளே! காயாம்பூவைப் போன்ற திருநிறத்தை யுடையவன், செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடையவன், அஃறிணைப் பொருளும்
உயர்திணைப்பொருளுமாகி நின்ற மாயவன், என் ஆழிப்பிரான், குதிரைவடிவம்கொண்டு வந்த கேசியினது வலிய வாயினைப் பிளந்த
மதுசூதனன் ஆன எம்பெருமானுக்கு நான்சொல்லிய வார்த்தையைச் சொல்லி வினையாட்டியேனுடைய துக்கத்தைத் தீர்க்கின்றீர்களா? என்கிறாள்.
பூவை – காயாம்பூ பாவைகள் : அண்மை விளி. பாசறவு-நிறத்தின் பசுமை அழிதல்; துக்கம்.

‘பரம சேதனன் பொகட்டுப் போனான்; சிறிது அறிவுள்ள பறவைகள் பறந்து போவனவும்
அந்நிய பரமாய்–வேறு ஒன்றிலே நோக்குள்ளனவுமாயின;
(அந்நிய பரமாய் -அவன் உடனே சேர்ந்து சில போனதே)
இதற்குக் காரணம், அறிவுள்ளவைகள் ஆகையோ’? என்று பார்த்து, அறிவு இல்லாததான பாவையை இரக்கிறாள்.
அறிவில்லாத பொருளும் கூட எழுந்திருந்து காரியம் செய்யவேண்டும்படி காணும் இவள் நிலை.

பூவைகள் போல் நிறத்தன்-
ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன்.
“பார்க்கின்ற ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தையும் கவர்கின்றவன்” –
ராம கமல பத்ராஷ சர்வ சத்துவ மநோ ஹரன் -அன்றோ -என்னும்படியே.
பேற்றுக்குப் பாவையின் காலிலே விழும்படியான வடிவு படைத்தவன்.
பூவைப் பூ போன்ற வடிவை யுடையவன்.

புண்டரீகங்கள் போலும் கண்ணன் –
ஒரு பூ ஒரு பூவினைப் பூத்தாற் போலே காணும் வடிவும் கண்ணும் இருக்கும்படி;
காயாம் பூ தாமரை பூத்தாற் போலே இரா நின்றது.
அறிவுடைப் பொருள் அறிவில்லாப் பொருள் என்ற வேறுபாடு அறக் காற் கீழே விழும்படியான திருக்கண் படைத்தவன்.

யாவையும் யாவருமாய் நின்ற மாயன் –
சிலரோடு கலக்கும் போது அவர்கள் தாங்களாய்க் கலக்குமவன்.
சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாய் நின்றவன்.
“அவற்றை அநுப் பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்”
–“தத் அநுப்ரவிஸ்ய ஸச்ச த்யச்ச அபவத்” என்பது, தைத்திரீய ஆனந். .-என்கிறபடியே.
புணர்ச்சிக் காலத்தில் ஒரே பொருள் என்னலாம்படி கலக்க வல்லவன்.

மாயன் –
அவர்களாய்க் கலவா நிற்கச் செய்தே, தனக்கு அங்கு ஒரு தொற்று அற்றுப் போருமவன்.
சர்வாந்தர்யாமியாய் இருக்கச் செய்தே, “கர்ம பலத்தை அநுபவிக்காமல் வேறுபட்டு நிற்கிற
ஈஸ்வரன் விளங்கிக் கொண்டிருக்கிறான்” என்கிறபடியே,
இவற்றின் குற்றங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கை.
உலகமே உருவமாய்க் கொண்டு இவர்களோடு பிரித்து எண்ண ஒண்ணாதபடி நிற்கச் செய்தே,
அசித்தினுடைய பரிணாமமாதல், சித்தினுடைய இன்ப துன்பங்களாதல் தட்டாதபடி நிற்கை.
என்னோடே பரிமாறு போலே கண்டீர் எல்லாரோடும் கலந்து நின்றே ஒட்டு அற்று இருக்கும்படி
என்கைக்காக ‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்கிறாள்;
இல்லையாகில், இப்போது இவ் விடத்திற்கு இது தேட்டம் அன்றே.
(கலந்தும் கழன்றும் இருக்கும் சாமர்த்தியம் -ஆழ்வார் இடமும் காட்டி அருளு கிறானே )

அழுக்குப் பதித்த உடம்பைக் காட்டில் பரஞ்சுடர் உடம்புக்கு உண்டான வாசி சொல்லுகிறது மேல் :

என் ஆழிப் பிரான் –
தன்னுடைய அசாதாரணமான விக்கிரஹத்தை எனக்கு ஆக்கினவன்.
‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்று உலகமே உருவமாய்க் கொண்டு நின்ற நிலையைச் சொல்லி வைத்து,
‘என் ஆழிப் பிரான்’ என்கிறார் அன்றோ, அசாதாரணமான வடிவுக்குத் தாம் ஈடுபட்டபடி.
“நிராய் நிலனாய்” என்று வைத்து, “கூராராழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால் வாராய்” என்றாரே அன்றோ.
அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒன்று இல்லை என்று சொல்லுவதற்காக,
ஜகச் சரீரன் என்ற அளவிலே அதனைப் போன்று இது உத்தேசியமாமோ?
“பரஞ்சுடர் உடம்பாய்” திருவாய். 6. 3 : 7.-என்றும்,
“அழுக்குப் பதித்த உடம்பாய்” என்றும் ஒன்றைக் குற்றங்கட்கெல்லாம் எதிர்த் தட்டானதாகவும்,
ஒன்றைக் குற்றம் கலந்ததாகவும் சொல்லிற்று அன்றோ.

மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு.
இவ் வடிவழகை அநுபவிப்பிக்கைக்கு விரோதிகளை அழியச் செய்தலானது இவனுக்கு எப்பொழுதும் உள்ளது ஒன்று கண்டீர்.
புழுக் குறித்தது எழுத்தாகுமாப் போல் அன்றிக்கே, விரோதிகளை அழித்தல் நித்தியமாயிருத்தலின் ‘மதுசூதற்கு’ என்கிறது.

என் மாற்றம் சொல்லி-
‘கன்மின்கள்’ என்று உங்களுக்குச் சொன்னதைச் சொல்லி.

பாவைகள் தீர்க்கிற்றிரே –
பரம சேதநன் பொகட்டுப் போனான், சிறிது அறிவை யுடைய இவை போகிறன இல்லை;
இனி, நீங்கள் என் துக்கத்தைப் போக்க வல்லீர்கோளோ?
விலக்குதல் இல்லாத மாத்திரத்தைக் கொண்டு இவற்றைக் காரியம் கொள்ளப் பார்க்கிறாள்.
(அசேதனம் கார்யம் பண்ண மாட்டேன் என்று மறுக்காதே
இவற்றையும் கூடக் கார்யம் செய்யச் சொல்லும் படியான தசை )

வினையாட்டியேன் –
உங்களைக் கொண்டாடுகை தவிர்ந்து, காரியம் கொள்ளும் படியான துக்கத்தை அடைந்தவளானேன்.
“மாசுச:” என்று சொன்னவன் விளைத்த சோகத்தை, அசேதனங்கொண்டு தீர்க்க இருக்கிற மஹா பாபியானேன்.

பாசறவு –
துக்கம்.

பாவை
பொம்மை தூது -அசேதனங்களை தூது விடுகிறாள்-

—————————————————————————————————————–

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-

ஸூரி சேவ்யன் சர்வாதிகன் -உம்மை ஒழிய வேறு ஒரு பதார்த்தத்தில் கண் வைக்க மாட்டாள் -ஒரு நாள் கிருபை பண்ணி –
அருள வேண்டும் -குருகை -ஆச்சார்யாராய் அபேஷிக்கிறாள்-அருள் செய்து -இப்படி சொல் என்றுமாம்
பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?பசுமை நிறம் இழந்து
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்-உள்ளும் புறமும் வெளுத்து உள்ள உன்னை
வைத்து உள்ளும் வெளியும் கறுப்பாக உள்ள அவன் இடம்
கமனத்தில் குறை வற்ற சிறகு -அகவாயில் சுத்திக்கும் பிரகாசகம் -விரஹம் முடிவு காணாத வினையேன்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக் கண்டு-நீலச் சுடர் முடி சர்வாதிகன் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே-பழிப்பு அற்ற -வேறு ஒன்றையும் பார்க்காமல் -ஏசுக்கு அப்பால் என்றுமாம்

குற்றம் நீங்கிய சிறகுகளையுடைய வெண்மை நிறம் பொருந்திய குருகே! உறவினர்கள் பக்கல் பற்று அற்று, இப்படியே எத்தனை ஊழிக்காலம்
வருந்துவேன் வினையேன்? குற்றம் நீங்கிய நீலச் சுடரை யுடைய முடியைத் தரித்த நித்திய ஸூரிகளுக்குத் தலைவனான
எம்பெருமானைக் கண்டு, குற்றம் நீங்கிய நும்மை அல்லாமல் பின்னர் வேறு ஒரு பொருளை மறித்துப் பார்ப்பது
இல்லாதவளானாள் என்று என் மாட்டு அருள்செய்து ஒருநாள் கூற வேண்டும் என்கிறாள்.
குருகே! வானவர்கோனைக் கண்டு நும்மை அல்லால் பேர்த்து மற்று மறு நோக்கு இலள் என்று ஒருநாள் அருள் செய்து கூறுக என்று
‘கூறுக’ என்னும் வினையைக் கொணர்ந்து கூட்டிப்பொருள் முடிவு காண்க.

முன்பே நின்ற குருகினைக் குறித்து, நித்திய ஸூரிகளைப்போலே உம்மால் அல்லது செல்லாதே,
உம்மைப் பிரிந்து நோவுபடுகிறாள் என்று சொல் என்கிறாள்.

பாசறவு எய்தி இன்னே எனை ஊழி வினையேன் நைவேன் –
‘இன்னம் சிலகாலம் கழிந்த பின்னர் அறிவிக்கிறோம்’ என்னும் அளவாக இருந்ததோ என் நிலை?
பாசறவு எய்தி –
பாசு என்று பசுமையாய், அதனால் நினைக்கிறது நீர்மையாய்,
அது அறுகையாவது, பசலை நிறத்தோடே முடிந்து நிற்றல்.

இன்னே –
‘எப்படி பசலை நிறத்தை அடைந்தது?’ என்னில், என்னைக் கண்ட உனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ,
விஷயத்திற்கு முடிவு இருந்தால் அன்றோ இது அளவுபட்டிருப்பது? இதற்கு ஒரு பாசுரமிட்டுச் சொல்லப் போகாது;
உடம்பைக் காட்டுமித்தனை. பாசுரமிட்டுச் சொல்லப் போகாமையாலே படி எடுத்துக் காட்டுகிறாள்,

வினையேன் –
பிரிவும் கலவியைப் போன்றதாகப் பெற்றிலேன். என்றது, கலவி ஒவ்வொரு காலத்தில் நிகழ்ந்து கழிவதாக இருக்க,
இது எப்பொழுதும் நீடித்து நிற்கிறதே என்றபடி.
அன்றிக்கே,
வினையேன்-கலக்கப் பெறாவிட்டால் மீண்டு கை வாங்க ஒண்ணாத படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னலுமாம்.

எனை ஊழி நைவேன் –
வருத்தத்தோடே எத்தனை கல்பம் சென்றது? முன்பு பிரிந்தார், பதினாலாண்டு ஆதல், பத்துமாதம் ஆதல்.

ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே –
பழிப்பு அற்ற சிறகை யுடைத்தாய், பிறருடைய துக்கத்தைப் பொறாமைக்கு
உறுப்பான மனத்திலே குற்றமற்ற தன்மை யுடைத்தாயிருக்கிறபடி.
அவன் பிரிகைக்கு, புறத்தைப் போலே உள்ளும் கரியன் ஆனாற் போலே அன்றோ,
நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும் புறம்பும் நிர்மலமாயிருக்கிறபடி என்பாள் ‘வெள்ளைக் குருகே’ என்கிறாள்.

அருள் செய்து ஒரு நாள் –
ஒரு போது கிருபை செய்து.
இவ்வளவில் முகம்காட்டுகை யாகிற இதுக்கு மேற்பட அருள் இல்லை யன்றோ;
வெறும் உங்கள் கிருபையாலே செய்தீர்கோள் இத்தனை அன்றோ.

மாசு அறு நீலம் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு –
பழிப்பு அற்று நெய்த்திருந்துள்ள மயிர் முடியை யுடையனாய்,
அம் மயிர் முடியை நித்தியஸூரிகள் பேண இருக்கிறவனைக் கண்டு.
ஒரு நீர்ச் சாவி கிடக்கக் கடலிலே மழை பெய்கிறவனைக் கண்டு.

ஏசறும் –
கிலேசப்படா நின்றாள் என்னுதல்;
நாட்டார் ஏசும் நிலையைக் கடந்தாள் என்னுதல்.
அன்றிக்கே,
ஏசறு வாய்-வடிவைக் காட்டுவாய் என்னலுமாம். என்றது,
என்னுடைய பசலை நிறத்தை நீ உன்னுடைய உடம்பிலே ஏறிட்டுக் காட்டுவாய் என்றபடி.

நும்மை அல்லால் மறு நோக்கு இலள் –
உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை. நடந்ததைச் சொல்லிக் கொள்ளுவதற்கும்,
உம்மை ஒழிய வேறு ஒருவரை யுடையள் அல்லள். “தோழிமாருடன் சுகமாக விருப்பாய்” என்னும் நிலையும் குலைந்தது.
அன்றிக்கே,
நும்மை அல்லால் – ‘வாரா நின்றோம்’ என்று, ஸ்ரீ பரதாழ்வானைப் போலே ஆள் வர விடத் தரியாது என்னுதல்.
அன்றிக்கே,
ஸ்வரூப குணங்களை நினைத்துத் தரித்திருக்கும் அளவல்லள் என்னுதல்;
அன்றிக்கே,
உம்மை ஒழிய, பந்துக்களை நோக்கும் நிலை கழிந்தது என்னுதல்.

இப் பாசுரத்திற்கு முடிபு
சென்ற பாசுரத்திலே யாதல், மேல் வரும் பாசுரத்திலே யாதல் கொள்க.
தமிழர், வினை, எச்சமாய்க் கிடக்கிறது என்று சொல்லுவர்கள். என்றது,
‘மறு நோக்கிலள், பேர்த்து மற்று, என்று சொல்லுவாய்’ என்னுமித்தனையும் இட்டுச் சொல்ல வேண்டும் என்றபடி.

————————————————————————————————————

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

பரத்வம் -ஆஸ்ரித சௌலப்யன் -கண்டு வார்த்தை கேட்டு வந்து சொல்ல வேண்டும் -பெரு நாரைகள் –
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்-உதவ பிராப்தனானவன் உதவாத படி பாபம் செய்த –
உங்களைத் தவிர ரஷக வஸ்து வேறே இல்லையே
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!–நீரின் அலைகள் மேலிடா வண்ணம் -நாரைகள் போலே புதா-குட்டிக்களுக்கு இரை தேடும் –
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு-கார் கால மேகம் போலே -அபி ரூபனாய் -அத்யந்த பவ்யனாய்
அவதார முகத்தாலே –பரமபத வாசிகளுக்கு இந்த கண்ணன் அழகை அனுபவிப்பிக்கும் -சர்வாதிகன்
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே-அவன் அருளிச் செய்யும் வார்த்தைகளை -கொண்டு வந்து
போத யந்த பரஸ்பரம் -செய்வோம் புதா போதா -பாட பேதம்

தீவினையேனாகிய நான் உங்களை ஒழிய வேறே ஒப்பற்ற பற்றுக்கோடு ஒன்றனை உடையேன் அல்லேன்; தண்ணீரின் அலைகளின் மேலே
சஞ்சரித்து இரையைத் தேடுகின்ற பெரு நாரைக் கூட்டங்களே! கார் காலத்தில் எழுந்த திரண்ட பெரிய மேகம் போன்ற நிறத்தையுடைய
கண்ணனாகிய விண்ணவர்கோனைக் கண்டு, அவன் கூறுகின்ற வார்த்தைகளைக் கேட்டு, என் பக்கல் கிருபை செய்து இங்கே
வந்திருந்து எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருங்கோள்.
வினையாட்டியேன் நான் பேர்த்து மற்று ஓர் களைகண் ஒன்று இல்லேன் என்க. புதா – பெருநாரை. அருளி வந்திருந்து வைகல் உரையீர் என்க.

சில புதா இனங்களைக் குறித்து நீங்கள் சென்றால் அவன் வந்திலனாகிலும்
அங்குத்தை வார்த்தையைக் கொண்டு வந்து
என்னை எப்பொழுதும் பிழைப்பிக்க வேண்டும் என்கிறாள்.

பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் –
தன் பரிகரங்களிலே ஒன்றைக் கொண்டு போது போக்குகிறாள் என்னும் நிலையும் குலைந்தது.
வெறுமையை முன்னிடுமத்தனை அன்றோ ததீயர் பக்கலிலும்.
உங்களை ஒழிய வேறு ஒரு ரக்ஷகரை யுடையேன் அல்லேன்.
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -வெறுமை முன்னிட்டே -ஆச்சார்ய அபிமானத்துக்கு –
ஸ்வ அபிமானம் குலைத்த நமக்கு -பரதந்த்ரன் அபிமானமே உத்தாரகம் –
ஆச்சார்ய உபதேசம் எதிர் பார்த்து அவன் கார்யம் செய்ய இவர் அதுவும் இல்லாமல் அருளுவாரே –

மற்றிலேன் என்னாமல் மற்று ஓன்று இலேன் என்பதற்குத் தாத்பர்யம் மேலே –
பிராட்டிக்கு இலங்கைக்குள்ளே ஒரு திரிசடையாகிலும் இருந்தாள்;
காட்டிலே விட்டுப் போந்த தனிமையிலே ஒரு வால்மீகி பகவானாகிலும் இருந்தான்;
கணவன் பொகட்டால் ஒரு தந்தையாகிலும் உண்டாக வேணுமன்றோ?
அங்ஙனம் ஒருவரும் இலர் என்பாள் ‘ஓர் களை கண்’ என்கிறாள்.

வினையாட்டியேன் –
நாயகன் தானே ரக்ஷகனாயிருக்குமன்றோ; அப்படிப்பட்டவன் கைவிட்டுப் போம்படியான பாபத்தைச் செய்தேன்.

நீர்த் திரை மேல் உலவி –
ஆவரணஜலம், விரஜை இவற்றை எல்லாம் கடந்து ஏறவற்றாயிருக்கை.
நிலத்திலே சஞ்சரிப்பதைப் போன்று நீரிலே சஞ்சரிக்கின்றனவாதலின் ‘திரைமேல் உலவி’ என்கிறது.

இரை தேரும் –
இவற்றின் நடையோடு ஒக்க இதுவும் ஒரு பௌஷ்கல்யமன்றோ இவளுக்கு.
நான் உபவாசத்தினால் இளைத்திருக்க உங்களுக்கு மிடற்றுக்குக் கீழ் இழியாதன்றோ;
என்னையும் உங்களைப் போலே ஆக்கினாலே அன்றோ ஜீவித்ததாவது. புதா – பெருநாரை.

கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் –
எல்லா விடாயும் ஆறுங்கண்டீர் அவ் வடிவைக் காணப் பெறில். இவள் கண்களுக்குக் கருப்பா யிருக்கிறதன்றோ.
கருமை யெல்லாம் திரண்டாற் போலே இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை யுடையவன்.
கார் காலத்தில் திரண்ட மஹா மேகம் என்றுமாம்.
அன்றிக்கே,
மாமுகில்-
மாறாதே கொடுக்க வல்ல முகில் என்றுமாம்.

கண்ணன் –
அவ் வடிவு போல் அன்று கண்டீர் அகவாயில் தண்ணளி இருக்கும்படி.

விண்ணவர் கோனைக் கண்டு
விடாய்த்தார் இருக்க, மீனுக்குத் தண்ணீர் வார்த்து இருக்கிறவனை.
பிரிவதற்குச் சம்பாவனை இல்லாதார்க்குத் தன்னைக் கொடுத்துக் கொடு நிற்கிறவனைக் கண்டு.

வார்த்தைகள் கொண்டு –
வந்திலனாகிலும் சில வார்த்தைகள் சொல்லக் கடவன் அன்றோ.
காட்சிக்கு மேலே வார்த்தையும் கேட்க அன்றோ நீங்கள் புகுகிறது;
“பாவி நீ என்று ஒன்று சொல்லாய்” –திருவாய். 4. 7 : 3.-என்னுமவரன்றோ.
இப்போது இவர்க்கு ‘மாட்டேன்’ என்னும் வார்த்தையும் அமையும்.
வார்த்தை கேட்கைக்கும் முடியப் போய்த் திரியவோ? என்னில்,

வார்த்தைகள் கொண்டருளி வந்திருந்து வைகலும் உரையீர் –
ஒரு கால் போய் அவன் வார்த்தையைக் கேட்டு, என் பக்கலிலே கிருபையைச்
செய்து வந்திருந்து,
அதனை எனக்கு எப்போதும் சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்.
அன்றிக்கே,
விண்ணவர் கோமானான கண்ணனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு-
“மாசுக:” என்று பலத்தோடே முடிவு பெற்றிருக்கிற வார்த்தைகளைக் கொண்டு,
என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து வைகலும் உரையீர் என்றுமாம்.
வாரான் என்றோ பல வ்யாப்த வார்த்தை யாகவோ –மாட்டேன் என்கிற வார்த்தை -தனது சத்தை தரிக்க அவன் பக்கலில்
இருந்து ஏதேனும் -தாராயினும் –போலே -வேண்டும் –
ஜீவிஷ்ய பேஷஜம் போலே சீதை வார்த்தை சொல்லு அத்தைக் கொண்டு ஜீவிப்பேன் -என்றாரே பெருமாள் திருவடி இடம் –

———————————————————————————————————–

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10-

பரத்வ சௌலப்ய பிரகாசகம் -ஸ்ரீ யபதி -புருஷகார பூதையும் உண்டே -இருவருமான ஏகாந்தத்தில் இவள் படி இது என்று ஒரு
வார்த்தை சொல்லி மறு மாற்றம் சொல்ல வேண்டும் –
வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்-அபேஷா நிரபேஷமாக-அந்ய பரதை இன்றிக்கே ஆபி முக்கியம் பண்ணி
பெண் அன்னம் -உடன் பேசி -ஸ்லாக்கியமான ஆண் அன்னம் -மற்றும் உள்ள பந்து வர்க்கங்கள்
எல்லாம் -சப்தம் -புத்ராதி குடும்பம் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு –
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!-சம்ஸ்லேஷ ரசத்துக்கு இடையூறு இல்லாமல் –புஷ்பங்கள் மேல் உலாவும்
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று-நாரீணாம் உத்தமி -திரு மார்பில் கொண்டவனுக்கு
இப்படி இவள் என்று நிலைமை சொல்லி
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.-அவர்கள் ஏகாந்தமான தசையிலே –
பேசி கார்யம் செய்ய -அவன் அருளிச் செய்யும் மறு மாற்றம் உரைமின்

உம்முடைய அழகிய சேவலும் பெண்ணாகிய நீரும் உம்முடைய உறவு முறையினரும் எல்லாரும்கூட இடையூறு சிறிதும் இல்லாமல் பூவின்மேலே
தங்கியிருக்கின்ற அன்னங்காள்! இங்கே வந்திருந்து என்னுடைய திருவை மார்பிலேயுடைய எம்பெருமானுக்கு என்னை இவள் இன்னவாறு ஆனாள்
என்று தனி இடத்தில் ஒருவார்த்தை அறிவித்து அவர் கூறும் மறுமாற்றங்களை எனக்குச் சொல்லுங்கோள்.
வந்திருந்து அலர்மேல் அசையும் அன்னங்காள் என்க. அன்றிக்கே, வந்திருந்து மறுமாற்றங்கள் உரையீர் என்றுமாம்.
அந்தரம் – வேறுபாடுமாம். மந்திரம் – இரகசியம்.

ஆணும் பெண்ணும் கூடியிருக்கிற அன்னங்கள் சிலவற்றைக் குறித்து, பிராட்டியும் அவனுமான ஏகாந்தத்திலே
என் நிலையை விண்ணப்பம் செய்து மறுமாற்றம் வந்து சொல்ல வேணும் என்கிறாள்.

வந்து இருந்து –
இது என்ன ஆபத்திற்குத் துணையாகும் தன்மை தான்! உங்களுடைய நல்லெண்ணம் இருந்தபடி என் தான்!
இளைய பெருமாளை இடுவித்து வெதுப்பி அழைப்பிக்க வேண்டாதிருக்கை.

வந்திருந்து-
மஹாராஜருடைய இடரைப் பெருமாள் வினவிக் கொண்டு சென்று தீர்த்தாற் போலே
என் துன்பத்துக் கெல்லாம் உடன் கேடராயிருந்து.

உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம் –
பரமபதத்தில் ஆண்களும் பெண்களுமாக இருந்தாலும் அடிமைக்கு உறுப்பாக இருக்குமாறு போலே,
இவற்றினுடைய இந்தப் பேதமும் தன்னுடைய காரியத்துக்குக் காரணம் என்றிருக்கிறாள்.

மணிச் சேவல் –
இதுவும் ஒரு சேவலே தான்!
தன்னுடைய மணிச் சேவல் கடக்க இருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான்
குறி யழியாதே யன்றோ இருக்கிறது.

எல்லாம் –
“புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு”
“ஸபுத்ர பௌத்ரஸ் ஸ கண:”என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 99.-என்னுமாறு போலே.
மனைவி புத்திரர்கள் முதலாயினார்களோடே கூடப் பிறர் காரியம் செய்ய ஒருப்பட்டிருப்பாரைப் போலே.

அந்தரம் ஒன்றும் இன்றி –
என்னைப் போலே பிரிவோடே கூடி இருக்கிற கலவி இன்றிக்கே இருக்கப் பெறுவதே.
கலவியை வளர்க்கக் கூடியதான பிரிவும் இன்றிக்கே.

அலர் மேல் அசையும் அன்னங்காள் –
ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்திருப்பார்க்குப் பூவிலும் கால் வைக்கலாமன்றோ.
பூவிலே கால் பொருந்தும் படியான செருக்கு அன்றோ உங்களது?
குறைவு அற்றார் இருக்கும்படி இதுவன்றோ.

என் திருமார்வற்கு –
எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?
“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”
“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-என்கிறபடியே, சொன்ன வார்த்தை
விலை போமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.

என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று –
பேச்சுக்கு நிலமன்று போலே காணும்.

என்னை –
அச்சேர்த்தியிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டிருக்கிற என்னை.
‘இப்படி சீர்கேட்டினை அடைந்தாள் இவள் என்று,
இவள் பசலை நிறத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
அன்றிக்கே,
உம்முடைய தேவாரமோ! இவள் அந்தப்புர பரிகரம் அன்றோ என்னுங்கோள் என்னுதல்.
தேவாரம் -க்ருஹார்ச்சை -அர்ச்சை – அர்ச்சகர்கட்கு வசப்பட்டதன்றோ.

மந்திரத்து ஒன்று உணர்த்தி-
ஓலக்கத்திற் சொல்லாதே கொள்ளுங்கோள்;
“கொல்லத் தக்கவன்” என்பார் இருக்கவும் கூடும்.
கொல்லத்தக்கவன்’ என்று கூறியவன், சுக்ரீவன். ஸ்ரீராமா. யுத். 17 : 27.
அன்றிக்கே,
அவள் சொல்லே கேட்குமிடத்தே சொல்லுங்கோள் என்னுதல்.-போக தசையில் அர்த்தாந்தரம்-
கேவலம் ஏகாந்தம் ஆனால் மறுக்கவும் கூடும் –
வில்லை வைக்க சொன்ன வார்த்தை கேட்காமல் ரிஷிகளை ரஷித்தார் பெருமாள்
போக தசையில் தானே அர்த்திக்கும்- கர்ப்ப காலத்தில் ரிஷிகளுக்கு மத்யத்தில் இருக்க வேண்டும் என்றாளே
வண்ணான் நிமித்தமாக -செய்து அருளினார் பெருமாள் –

உரையீர் மறு மாற்றங்களே –
அவன் கிரமப் பிராப்தி தோற்ற வார்த்தை சொல்லவும்,
அதுதான் ஒண்ணாது என்று “குற்றம் செய்யாதார் எவர்தாம்”
“நகஸ்சித்ந அபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44.-என்று விரைவுபடுத்துமவர் முன்னே சொல்லுங்கோள்.

மந்திரம் – பிரணவம். ஒன்று – அதில் நடுப்பதம்.
அதிற் சொல்லுகிறபடியே அநந்யார்ஹதையை விண்ணப்பம் செய்து.

உரையீர் மறுமாற்றங்களே –
முன்பு செய்துபோந்த குற்றங்களைப் பார்த்து அவன் சொல்லுகிற வார்த்தைகளையும்,
சம்பந்தத்தையும் நம் நிலையையும் பார்த்து
அவள் சொல்லும் வார்த்தைகளையும் கேட்டு வந்து சொல்லுங்கோள்.

————————————————————————————

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11-

அர்த்தத்தில் பிரேம பரவச்யத்தால் த்ரவ்ய ஸ்வபாவர் ஆவார்கள் –
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடிமேல்-விலஷண சப்தங்கள் ஆராய்ந்து கொண்டு –
ஞான ஹேது வேதம் அபஹரித்த -மது சூதன் -உபகாரகன்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன-பரிமளம் மிக்க –பாஹ்ய குத்ருஷ்டி நிரசன சீலரான –
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-வேத ஆவிர் பாவம் -பகவத் ஆவிர்பாவம் போலே இந்த பத்தும் –
பதிகங்கள் -அத்விதீயமான -பாவ சுத்தி உடன் அப்யசிக்க வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே-நீர் வசப்பட்டு உருகுமா போலே -ஆர்த்த்ரீ பவர் ஆவார்
இது கலித்துறை –

வாசனையைக் கொண்டுள்ள அழகிய சோலைகள் சூழ்ந்த திருக் குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர்,
சிறந்த வார்த்தைகளை ஆராய்ந்து கொண்டு மதுசூத பிரானுடைய திருவடிகள் மேல் அருளிச் செய்த
தாமே தோன்றிய ஆயிரம் திருப் பாசுரங்களுள் ஒப்பற்ற பத்துப் பாசுரங்களாகிற இவற்றையும்
வல்லவர்கள் நீர் ஊறுகின்ற ஊற்றிலே யுள்ள நுண்ணிய மணல் போன்று நீராக உருகா நிற்பர்.
நாற்றம் – வாசனை; “பொன் மலர் நாற்றமுடைத்து” என்றார் பிறரும்.
சடகோபன் பிரான் அடிமேல் சொன்ன ஆயிரம் என்க. வல்லார் நீராய் உருகா நிற்பர் என்க.

முடிவில், இத் திருவாய்மொழியில் ஆழ்வாருடைய துன்பத்தை நினைத்தவர்கள் தாமும் உருகுவர் என்கிறார்.

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு –
சுரம் ஏறுவாரைப் போலே, பக்தி பரவசராயிருப்பார்க்கு அடைவு படப் பாசுரமிட்டுச் சொல்லப் போகாதன்றோ;
இவ்வளவிலும் அவன் நினைவு மாறாமையாலே, சொற்கள் நேர்பட்ட படி; அவிஸ்தரம் ஸூகம்பீரம் –
நல்ல சொற்களைத் தெரிந்து கொண்டு.

மதுசூத பிரான் அடி மேல் –
விரோதிகளை அழித்தலையே நிரூபகமாக வுடையவன் திருவடிகளிலே.

நாற்றம் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
‘தனி இடத்திலே ஆள் விடுகையினாலே வரவு தப்பாது’ என்று இவர் தரித்தவாறே,
சோலைகளும் நித்திய வசந்தமான படி.
வாசனையை மிகுதியாகக் கொண்ட பூவை யுடைத்தான பொழில்கள் சூழ்ந்த திருநகரி.

தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் –
“மனம் முன்னே வார்த்தை பின்னே” என்கிற அடைவால் சொன்னவை யல்ல. என்றது,
இவர் கலங்கிச் சொல்லச் செய்தேயும்,
பகவானுடைய அவதாரம் போலே தோன்றின என்றபடி. தோற்றம் – தோன்றுதல்.
மந்திரங்களை இருடிகள் காணுமாறு போலே. -பல அதி பலா மந்த்ரம் விஸ்வாமித்ரர் -காயத்ரி -வசிஷ்டர் த்ருஷ்டா ருஷி –
“சொல் பணி செய் ஆயிரம்” திருவாய். 1. 10 : 11.-என்று ஆழ்வாருடைய திருவாக்கிலே புக்கு
‘அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்ய வேணும்’ என்று அச் சொற்கள் தாம்
‘என்னைக் கொள், என்னைக் கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி.
வைதிகர் அல்லாதாருடைய வாக்கில் புக்க தோஷம் தீர்ந்தது இப்போதே யன்றோ சொற்களுக்கு.
“போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” திருப்பாவை, 5.-என்கிறபடியே,
ஆழ்வார் திருவாக்கிலே பிறக்கையாலே முன்புள்ள தோஷமும் பின்புள்ள தோஷமும் தீர்ந்தது காணும் சொற்களுக்கு.

ஊற்றின் கண் நுண் மணல் போல் நீராய் உருகா நிற்பர் –
இவை கற்கப்படாதன என்கிறார். அதாவது,
என் துயர ஒலியைக் காட்டி நாட்டினை அடைய அழித்தேன் என்கிறார்.
இவர் கிலேசம் அவன் முகம் காட்டத் தீரும்;
இப் பாசுரம் நித்தியமாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;
ஊற்றிடத்து உண்டான நுண்ணிய மணல் போலே உருகுகின்ற மனத்தை யுடையராய் நீராய் உருகா நிற்பர்.

இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில்,
பகவானுடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள்
பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்ததாகையாலே இது தானே பலம் என்கிறது.
உருகிண்டே இருப்பதே பிராப்ய அந்தர் பூதம் –

————————————————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம்
வந்தம் சௌரிம் எத்ரச் ச குத்ர
சாபி ஆலோக்ய ஆவேத்ய மத ஸ்திதிம்
அதீன விபூதி உக்மம் ஆயாசத முனி

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம் வந்தம் –தன்னைக் கொடுப்பதில் நாள் கடத்தி இருக்கும்
சௌரிம் எத்ரச் ச குத்ர சாபி ஆலோக்ய -எங்குச் சென்றாகிலும் கண்டு –
ஆவேத்ய-இப்படி என்று சொல்லி
மத ஸ்திதிம் அதீன விபூதி உக்மம் -உபய விபூதியையும் தருவதாக
ஆயாசத முனி-

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா ஆயுத ஸூப தய கதா
ஜிஷ்ணு சாரத்திய யோகாத் ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்
கருட ரத தயாத் ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத் காந்த்யா
சாம்ராஜ்ய யோகாத் அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச ஸ்வ கீய

1-லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா–முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான்

2-ஆயுத ஸூப தய கதா–கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்!

3–ஜிஷ்ணு சாரத்திய யோகாத்–ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.

4-ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்–மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே

5–கருட ரத தயாத்–வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கட் கரு முகிலை

6-ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத்–என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்

7-காந்த்யா–பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்-யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்

8-சாம்ராஜ்ய யோகாத்–மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு-

9-அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச–கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே-
ச காரம் – ஸ்ரீ யபதித்தவம்-என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே

ஸ்வ கீய கடக ஜனங்கள் இட்ட வழக்காம் படி விபூதி த்வயம் உடையவன்
ஸ்வீய ஆய்த விபூதி த்வயமத்வம் -கடகருக்கு இஷ்ட விநியோக உபய விபூதி கொடுக்கும் குணமே இதில் —

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 58-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஆர்த்தி பாரவச்யத்தாலே தூது விட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு
ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும்
என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல்
எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை
அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை
தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை
பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

——————————————————–

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

—————————————————

வியாக்யானம்–

பொன்னுலகு பூமி எல்லாம்- புள்ளினங்கட்கே வழங்கி
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி –

பொன்னுலகு பூமி எல்லாம்-
கச்ச லோகன் -என்னும்படி-நித்ய விபூதி லீலா விபூதி எல்லாவற்றையும் –

புள்ளினங்கட்கே வழங்கி –
பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-

வழங்கி -என்னிடரை மாலுக்கு இயம்பும் என –
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று

என் இடரை –
என்னுடைய துக்கத்தை -அதாவது –
என்நிலைமை -என்றும்
மெய்யமர் காதல் -என்றும்
பாசறவெய்தி -என்றும்
பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றும் இலேன் -என்றும்
இன்னவாறு இவள் காண்மின் -என்றும்-சொன்ன இவை -என்கை –

என்னிடரை மாலுக்கு இயம்பும் என-
அதாவது –
எந் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்து -என்றும் –
மெய்யமர் காதல் சொல்லி -என்றும் –
யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்றும் –
எனக்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -என்றும்
கற்பியா வைத்த மாற்றம் சொல்லி சென்மின்கள் -என்றும்
மது சூதற்கு என் மாற்றம் சொல்லி -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனை கண்டு ஏசறு நும்மை அல்லால் மறு நோக்கிலள் என்று சொல் -என்றும்
விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் -என்றும்
மந்திரத்து ஓன்று உணர்த்தி உரையீர் -என்றும்-அருளிச் செய்தவை -என்கை –

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் –
ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் –
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு -என்றும்
எனக்குச் சென்றிலும் கண்டு -என்றும்
ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

தூது நல்கி விடுகை யாவது –
விருப்பத்தோடு விடுகை – தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -என்றபடி-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் -மாறனையே –
நித்யமான ஸ்ரீ திரு நாடு முதலான ஸ்தலங்களிலே ஆதாரத்தோடு தூது விடும் ஸ்ரீ ஆழ்வாரையே –

நீடுலகீர் போய் வணங்கும் நீர் –
பிரவாஹ ரூபேண-நித்யமான சகத்திலே வர்த்திகிறவர்களே நீங்கள் தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே
நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –

ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே
ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -137- திருவாய்மொழி – -6-8–1….6-8-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 20, 2016

மேல் திருவாய்மொழிகள் இரண்டும், மோஹமும் உணர்த்தியுமாய்,
இதில் தூது விடுகிறதாக அன்றோ இருக்கிறது;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்க்கு “மரணத்தில் பாதி அவஸ்த்தை” என்னும் மோஹம் இல்லையே;

உலகத்திலே, ஒவ்வொருவருக்கும் நனவு கனவு சுஷுப்தி மூர்ச்சை மரணம் என்று சொல்லப்படுகின்ற
ஐந்து அவஸ்த்தைகள் உண்டு;

அவற்றுள்,நனவாவது,-ஜாக்ரத் தசை – புறக்கரணங்களும் அந்தத்கரணமும்
தனது தனது விஷயங்களை அறிந்து பற்றுகிற நிலை.

கனவாவது, புறக் கரணங்கள் எல்லாம் அடங்க மனம் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க
இந்தச்சரீரத்தோடு ஒத்த வேறு சரீரங்களையும் பகலில் காண்கிற விஷயங்களோடு ஒத்த விஷயங்களையும்
ஈசுவரன் உண்டாக்க அது காரணமாக, முடி சூடுதல் முதல், தலை அறுப்புண்ணல் இறுதியாகக் காண்டல்.

ஸூஷுப்தியாவது, புறக் கரணங்களும் மனமும் அடங்க, உஸ்வாச நிஸ்வாசங்களாலே பிராணன் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க,
நனவிலே தன் தன் விஷயங்களிலே இந்திரியங்கள் பரந்திருந்த காரணத்தால் வந்த இளைப்பெல்லாம் மாறும்படி, புரீதத் என்கிற
நாடியிலே பரமாத்மாவின் ஸ்வரூபத்திலே சேர்ந்து சிரமம் எல்லாம் நீங்கி இருத்தல்.

மூர்ச்சையாவது, ஸூஷ்ம பிராணனோடும் ஸூதூல சரீரத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கும் நிலை.

மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேக சம்பந்தத்தினின்றும் நீங்குதல்.
இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே
சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம் பற்றி
‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். சாரீரகமீமாம்சை, அத். 3. பாதம். 2. சூத். 10.காண்க.

இனி இவர்க்கு மோஹமாவது,
புறத்திலேயுள்ள பொருள்களை நினைத்தற்கும் இயலாதவராய் விஷயங்களினின்றும்
அந்தக் கரணம் விடுபட்டதாய், மனத்திற்கு அவனே விஷயமாய், அவன் குணங்களையே அநுபவித்தல்.
அதாவது,
ஆத்மாவாய் இருப்பவனே ஞானத்திற்கு விஷயமாய்த் தன்னை மறக்கை.
மேல் திருவாய்மொழியில் நிலை “நான் மநு ஆகின்றேன்” என்றும்,
“அனந்தன் என்னும் திருநாமமுள்ள அப் பரம்பொருள் எங்கும் இருப்பதால் நான்
அப் பரம்பொருளாகவே இருக்கிறேன்” என்றும் சொல்லுகிற நிலைபோலே.

உணர்த்தியாவது,
“அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத்
தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்” என்கிற பிரஹ்லாதனைப் போலே
“மாலுக்கு” என்ற திருவாய்மொழியிலும், “உண்ணுஞ் சோறும்” என்ற திருவாய்மொழியிலும் உண்டான மோஹத்தையும்,
உணர்ச்சியையும் திருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார் ‘மேல்’ என்று தொடங்கி.
‘மேல் திருவாய்மொழியில்’ என்றது, “மாலுக்கு” என்ற திருவாய்மொழியில் என்றபடி.

“அஹம் மனுரபவம்” என்பது, பிருகதாரண்யகம், 4-வது பிராஹ்மணம்.
“சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.
‘உணர்த்தியாவது’ என்றது, “உண்ணும் சோறும்” என்ற திருவாய்மொழியில் உண்டான உணர்த்தியாவது என்றபடி.
“த்ருஷ்ட்வாஸச ஜகத் பூயோ ககநாத் யுபலக்ஷணம்
ப்ரஹ்லாத: அஸ்மீதி ஸஸ்மார புந: ஆத்மாநம் ஆத்மநா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா, 1. 20 : 7.
தம்மையும் உணரக் கூடியவராய் உலக விருத்தாந்தத்தையும் நினைக்கக் கூடியவராதல்.
நிர்க் குணமான விஷயத்திலே அன்றே இவர் மூழ்கியது, குணாதிக விஷயத்திலே யன்றோ.
சேஷி பக்கலிலே நினைவுண்டானால் சேஷ பூதனான தன்னையும் காணும் அன்றோ.
மேல், நெடும் போது அவன் குணங்களை நினைக்கையாலே தரித்து வலிமை குறைவும் நீங்கிப் புறத்திலே யுள்ள
பொருள்களையும் நினைக்கக் கூடிய நிலையை அடைந்தார்;
அவ்வளவிலே, இவர் தரித்தவாறே பழைய அலாபமே தலையெடுத்து
ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தவராய் அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

மேல் திருவாய்மொழியில், திருத்தாயார் “எங்ஙனே புகுங்கொல்?” என்று நொந்ததுவே பலித்து,
தன் சாபலத்தாலே புறப்பட்டாள்,
முடியப் போய்ப் புக மாட்டாமல் தன்னுடைய நகரத்தை அடுத்த உபவனத்திலே விழுந்து கிடந்து,
அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே, கண்ட பறவைகளையெல்லாம் தூது விடுகிறாள்.
தனி வழியே புறப்பட்டுப் போம்படியாய் விழுந்த இவளுக்குத் தூது போவார் இலரே;
உண்டானாலும் இவள் தனக்கு முன்னே ஈடுபட்டுக் கிடப்பர்களே;
இனித் தன் பக்கத்தில் வசிக்கிற பறவைகளுக்கு மேற்படக் கால் நடை தந்து போக வல்லார் இலரே;
இவ்வளவிலே நீங்கள் என் நிலையை அறிவிக்க வேணும் என்று அவற்றின் காலிலே விழுகிறாள்.

“அஞ்சிறைய மடநாராய்” என்ற திருவாய்மொழியில் என்னை நினைத்தானத்தனை, தன்னை மறந்தான் என்றாள்;
இத் தலையில் அபராதம் பாராதே, அத் தலையில் அபராதத்தைச் சகித்துக் கோடல் பற்றாசாக,
அபராதத்தைச் சகித்துக் கொள்ளும் தன்மையைப் பார்த்து வருவது என்று ஆள் விட்டாள்.
“வைகல் பூங்கழி” என்ற திருவாய்மொழியில், மேலே, இருமுறை தூது விட்டாளே? அவற்றிற்கும் இதற்கும் வாசி யாது? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘அஞ்சிறைய’ என்று தொடங்கி
என்னை-பாபம்செய்த என்னை. தன்னை-அபராதங்களைப் பொறுக்கின்ற தன்னை.

“வைகல் பூங்கழிவாய்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில், ‘அவ்விடங்களிலே துன்புறுவார் பலர்
உளராகையாலே அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத்தலையை மறந்தானித்தனை’ என்றார்;
இங்கு,‘இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப் பண்ணிற்று என்றாள்’
என்கிறார்; இதுவும் ஒரு நிர்வாகம் என்று கண்டுகொள்வது.
‘இருவரையும்’ என்றது,பிரிந்தால் தரித்திருக்கப் போகாத வைலக்ஷண்யத்தையுடைய அவனையும்,
பிரிந்தால் தரித்திருக்க ஒண்ணாத துன்பத்தையுடைய தன்னையும் என்றபடி.
‘விசேஷஜ்ஞனாகையாலே’ என்றது, தன் வைலக்ஷண்யத்தையும் இவளுடைய துன்பத்தையும் அறியுமவனாகையாலே என்றபடி.

இருவரையும் அவ்வூரில் உள்ள இனிமை மறக்கப் பண்ணிற்று என்றாள்;
விசேஷஜ்ஞனாகையாலே துன்பத்தை அறிவிக்க வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூதுவிட்டாள்.
இத் திருவாய்மொழியில், வாராமைக்கு அடி பரப்பனாகையாலே என்று பார்த்தாள்;
‘பரப்பனாகையாலே’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகிற“முன்னுலகங்கள் எல்லாம் படைத்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்”-திருவாய். 6. 8 : 6.– என்கிறபடியே,
அசாதாரணமானது அன்றே வடிவு; அடியார்களோடு ஏக ரசன் ஆகை யன்றோ என்று பார்த்து
ஐகரஸ்யம் பற்றாசாகத் தூது விடுகிறாள் என்று பட்டர் அருளிச் செய்வர்.
“பல பாசுரங்களிலும் ‘இதுவோ தக்கவாறு’ என்கையாலே,
உயிர்கள் மாட்டு அருளுடைமை பற்றாசாகத் தூது விடுகிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.

“இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவ போகங்களை
நுகர்ந்தவளான நான்”
“ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18.
என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே,
அங்கே புக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

‘புறப்பட்டவள் முடியப் போக மாட்டாதே நகரத்தை அடுத்த வனத்திலே கிடந்து தூது விடுகிறாள்’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி.

“கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே
உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது” என்கிறபடியே,தலைவனுடைய பேர் அருளையே பற்றாசாகக் கொண்டு தூதுவிட்ட பேர்
உளரோ? என்ன, ‘உளர்’ என்று, அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்‘கீர்த்தியை யுடைய’ என்று தொடங்கி.
இது, பிள்ளான் நிர்வாஹத்தைப் பற்றியது.

“ஜீவந்தீம் மாம் யதா ராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 10.
பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம் புகழை நோக்கிக் கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

“தினைத்தனையும் விடாள்” என்ற திருத் தாயாருடைய விருப்பமே பலித்தது;
அங்கே புக்கு அநுபவித்தாள் என்பது, பிள்ளான் நிர்வாஹத்திற்குக் கருத்து.
பட்டர் திருவுள்ளம், இத்திருவாய்மொழியின் முடிவிலே கலவி உண்டானால்,
“ஆடி ஆடி” என்ற திருவாய்மொழியின் ஈற்றிலே கலவி தோன்ற அருளிச் செய்து,
“அந்தாமத்து” என்ற திருவாய் மொழியிலே அதனை விரித்து அருளிச் செய்தாற் போன்று,
மேல் திருவாய்மொழியிலே கலவியை விளக்கி அருளிச் செய்வர்;
அங்ஙனம் அருளிச் செய்யாமையாலே கலவி இல்லை என்பது. பட்டர் நிர்வாஹம்
“எங்ஙனே புகுங்கொல்” என்றதனை நோக்காகக் கொண்டு எழுகின்றது.
“செல்ல வைத்தனள்” என்பதற்குச் செல்ல ஒருப்பட்டாள் என்பது பொருள்.

6-3/6-4 -மட்டும் தானான நிலை -இந்த பதிகத்தில் இது வரை –
அபராத சஹத்வம் /படைத்த பரப்பு முதல் இரண்டுக்கும் தூது
ஷமா -தீஷா -தம் பிழையை மறப்பித்தது ஷமா உணர்த்த வ்யூஹத்தில் தூது முதலில்
சிறந்த செல்வம் -மறக்கப் பண்ணிற்று -தீஷா உணர்த்த விபவத்தில் தூது இரண்டாவதில்
இதில் -படைத்த பரப்பு மறக்கப் பண்ண சாரஸ்யம் உணர்த்தி பரத்வ த்வயத்தில் தூது –
பரத்வ த்வயத்தில் தூது -வைகுண்ட நாதனைக் கண்டு பரத்வம் -எனக்குச் சென்றாகிலும் என்று அந்தர்யாமித்வம்
அடுத்து தமரோட்டை சஹ வாசம் மறக்கப் பண்ண சௌந்தர்யம் உணர்த்தி அர்ச்சையில் தூது

———————————————————————————————————-

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

தன்னுடைய காரணத்வாதி குணங்களைக் காட்டி என்னை வசீகரித்த -என்னுடைய அவச்யதையை சொல்லி –
பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?-நீங்களே கொள்ள வேண்டும் -கொடுத்தால் ஆகாதே ஆச்சார்யர்களுக்கு
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்-கார்யம் செய்ய அடியான விலஷணம்-பிரிந்து தூது விடும் படி -பாபம் செய்த –
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்-பிரதமத்தில் உலகம் படைத்து காத்த -ஜகத் காரணத்வன் -ஔதார்யன் –
ஆஸ்ரிதர்க்கு சுலபன் என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
இவற்றால் என்னை ஸ்வ அதீனம் ஆக்கி -என்னிடம் நலன்களை கொண்ட உபகாரகன் -அவஸ்தையை சொல்லி –
பரிசிலாக -பங்குனி உத்தரம் சேர்த்திக்கு-ஸ்ப்ருஹ நீயம் -பரம பதம் -லீலா விபூதியையும் -நீங்கள் இட்ட வழக்கு
சங்க பாஹூள்யம் -கார்ய உபயுக்தம் -புள்ளினங்காள்

சிறந்த குணங்களையுடைய பறவைக் கூட்டங்களே! தீவினையேனாகிய நான் உங்களை இரக்கின்றேன்; ஆதி காலத்தில் எல்லா உலகங்களையும்
படைத்த முகில் வண்ணனும் கண்ணபிரானும் என்னுடைய நலத்தை எல்லாம் கொண்ட உபகாரகனுமான எம்பெருமானுக்கு,
என்னுடைய நிலையைச் சொல்லுங்கோள்; அவ்வாறு சொல்லி, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பரம பதத்தையும்
மற்றுமுள்ள எல்லா உலகங்களையும் நான் கொடுக்க நீங்கள் ஆளுங்கோள் என்கிறாள்.
புள்ளினங்காள்! இரந்தேன்; என் நிலைமை உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ! புவனிமுழுது ஆளீரோ! என்க.

சில புள்ளினங்களைக் குறித்து, எம்பெருமானுக்கு என் நிலையை அறிவித்து
இரண்டு உலகங்களையும் நான் தர நீங்கள் ஆள வேணும் என்று இரக்கிறாள்.

பொன் உலகு ஆளீரோ –
1-ஈஸ்வரனுடைய விபூதியானது பிரிவு நிலையில் அவனையும் தன்னையும் சேர்த்தார்க்குப்
பரிசிலாகக் கண்டது என்று இருக்கிறாள்.

2-இரண்டு விபூதிகளும் ஒரு மிதுனத்துக்கு அடிமை அன்றோ.
அந்த நிலை பிறந்தால் சொல்லலாம் அன்றோ.

3-சர்வேஸ்வரன் இருக்க இவ்விடம் அராஜகமாய்க் கிடக்கிறது என்றிருக்கிறாள்.

4-பிரகிருதி சம்பந்தம் அற்று ஒரு தேச விசேடத்திலே போய் அநுபவிக்குமதனை இங்கே இருந்தே கொடுக்கிறாள்.
இப்படி இவள் கொடுத்தது போன்று, பெருமாளும் பெரியவுடையார்க்குக் கொடுத்தார் என்று கொண்டு,
அவரைக் காட்டிலும் இவளுக்கு வாசி அருளிச் செய்கிறார் ‘பிரகிருதியோடே’ என்று தொடங்கி.
‘பிரகிருதியோடே கொடுப்பார்” என்றது, ஆழ்வாரை. ‘அறுத்துக் கொடுப்பார்’ என்றது,பெருமாளை.
பிரகிருதியோடே கொடுப்பாரும் பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துக் கொடுப்பாருமாய் இருக்கிறபடி.

5-ஒருவரை ஒருவர் பிரிந்து துழாவுகிற சமயத்திலே கொடுக்கை இருவர்க்கும் ஒக்கும்.
சேர்க்கைக்காக உடம்பு இழப்பாரும் உடம்போடே கூடி நின்று சேர விடுவாருமாய் அன்றோ
இவர்கள் -ஜடாயு பஷிகள் -இருப்பது.

உங்கள் உலகமும் நான் பட்டது பட வேணுமோ? என்பாள் ஆளீரோ என்கிறாள். –
ஈஸ்வர விபூதி தான் வீணாக கிடக்க உங்கள் விபூதிகளும் வீணாக வேண்டுமோ

காதலனைப் பிரிந்து சேர்ப்பாரைத் தேடித் திரிகிற இவள், சேர்ப்பிப்பார்க்கு இரண்டு உலகங்களையும் கொடுக்கிறாள் அன்றோ,
அவனை நினைத்திருந்த கனம். கலந்த போது தன்னுடைமையையும் தன்னையும் இவளுக்கு ஆக்கிப் பிரிந்த போது
மாறுவான் ஒரு புல்லியனோடு அன்றே இவள் கலந்தது.
தான் இல்லாத சமயத்திலும் இவள் தான் இப்படி
இரண்டு உலகங்களையும் இஷ்ட விநியோகார்ஹமாக்கும்படி அன்றோ,
அவன் தன்னையும் தன்னுடைமையையும் இவளுக்கு ஆக்கி வைத்தபடி.

‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நோவிலே, பிள்ளை யுறங்கா வில்லி தாசரைக் கொண்டு ஆழ்வான் புக,
ஆழ்வான் செய்த நெஞ்சாறல் ஆறுவது
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்து ஏறப் போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது.

பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
எம்பெருமானார் இங்கேயே இருக்க -ஆளவந்தார் திருவடி என்கிறார் –
பரமபதம் போக ஆழ்வான் வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்றவாறு
ஒரு வில் எருதுகளைப் போன்று இரண்டு உலகங்களும் தன்னைச் சேர்ப்பார்க்கு என்று இருக்கிறாள்.
வில்லும் எருதுகளும் சீதா பிராட்டிக்கும் நப்பின்னைப் பிராட்டிக்கும் கன்யா சுல்கமானாற்போலே,
இரண்டு உலகங்களும் சேர்ப்பார்க்குச் சுல்கம்
என்று இருக்கிறாள் என்றபடி.
சுல்கம் – பணமுடிப்பு.

ஆளீரோ –
தன்னுடைமை ஒருவர் பண்ணிக் கொடுக்க வேண்டாதிருக்கிறபடி.
“என்னாலே இவனுக்கு அபயம் கொடுக்கப் பட்டது” என்றாரே அன்றோ பெருமாள்.
“தத்தம் அஸ்ய அபயம் மயா” என்பது,ஸ்ரீ ராமா. யுத். 18 : 34. என்றது,
“மற்றொரு பொருள் உளதென்னின்,மாறிலாக் கொற்றவ! சரண்” என்ற போதே
பெருமாளால் கொடுக்கப்பட்டது என்றபடி.

அப்படியே அவற்றுக்கும் ‘தூது போக’ என்று முகங்காட்டின போதே கொடுத்தற்றது.
அவன் காரியம் செய்கிற இவற்றுக்கு அவனை அறிவித்துக் கொடுக்க வேண்டாவே அன்றோ.
இவள் தானும் அவன் காரியம் அன்றோ செய்கிறது.
இவை போகவே தான் உளளாம்;
தான் உளளாகவே உலகத்தோடு கூடிய எம்பெருமான் உளனாம்.
இனி, இவள் தன் படுக்கைப் பற்றை அன்றோ கொடுக்கிறதும்.
இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே” (திருவாய்.1. 9 : 4.) என்றதனைத் திருவுள்ளம் பற்றிப்
‘படுக்கைப் பற்று’ என்கிறார்.
படுக்கைப் பற்று – சீதனம்.

ஆளீரோ-
உங்கள் காரியமே செய்ய ஒண்ணாது: என் காரியமும் செய்ய வேணும்.
இவள் காரியம் செய்கையாவது, இவற்றை ஆளுகை அன்றோ.
‘இவள் தான் உபய விபூதியையும் கொடா நின்றாளாகில்,
அவன் வந்தால் தானும் அவனும் எங்கே இருப்பது?’ என்ன,
‘இக் குருவி காட்டின இடத்தே’ என்று அனந்தாழ்வான் அருளிச் செய்வர்.

பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
1-கைப்பட்டதனைக் கொடுத்தன்றோ மற்றொன்று தேடிக் கொடுப்பது.

2-தனக்கு ஆக்கின அடைவிலே கொடுக்கிறாள்.
நித்திய விபூதியைக் கொடுத்தே அன்றோ, லீலா விபூதியைக் கொடுத்தது;
“அயர்வறும் அமரர்கள் அதிபதி” என்ற பின்பே யன்றோ,
“இலன் அது உடையன் இது” என்று லீலா விபூதி யோகம் சொல்லிற்று.
இங்கே இருந்தாலும் ஞானம் பிறந்தால் அணித்தாகத் தோற்றுவது அவ்விடம் அன்றோ:
“அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக் கரை ஏறி இளைத்து”-பெரியாழ்வார் திரு.5. 3 : 7.
அது – பரமபதம்.- என்று
அது இக்கரையாகவும்,இது அக்கரையாகவும் சொல்லா நின்றார்கள் அன்றோ.

3-“மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்” – திருவாய். 9. 3 : 7.-என்றே அன்றோ இருப்பது.
பிராப்தி தசையிலும் முற்பட்டிருப்பது அவ்விடமே அன்றோ.

4-அவன் உடைமை என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாவது அன்றோ இவ் விடம்.
“முக்தன் ஜனங்களின் மத்தியில் இருந்த இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” –
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3.-என்னா நிற்கச் செய்தேயும்,
அவனுடைய செல்வத்தில் குறை அநுபவிக்க ஒண்ணாது என்று அவன் உடைமை என்னும் தன்மையாலே
ஒரு கால் பற்றத் தக்கது என்ற எண்ணம் உண்டு இத்தனை அன்றோ.
இல்லையாகில், வேறு ஒரு வகையில் எண்ணம் உண்டாகில் ‘புவனி முழு தாளீரோ!’ என்று,
கட்டடங்க உத்தேஸ்யமாய்த் தோற்றாதே அன்றோ.

பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
5-அடிமைக்கு அடைத்து ஏற்றலாயன்றோ இவ்விடந்தான் இருப்பது;
அவ்விடம் அடிமையால் அல்லது செல்லாத இடமாய் அன்றோ இருப்பது.

6- அன்றிக்கே, தூது போனாரது பரம பதம், அது உடையாரது லீலா விபூதி என்னுதலுமாம்.

புவனி முழுது ஆளீரோ –
7- உத்தேஸ்யமான நித்திய விபூதியைக் கொடுத்தவள், தியாச்சியமான லீலா விபூதியைக் கொடுப்பான் என்?
என்னில், இவை செய்கிற உபகாரத்தை நினைத்து, ‘இன்னது கொடுப்போம்’ என்று அறியாமல் கலங்கி.
பண்டு கலங்கினாரும் இப்படியே செய்தார்கள்;
“திரும்புதலில்லாதவர்களுக்கும் பூமி தானஞ் செய்தவர்களுக்கும் எந்த எந்த கதிகளுண்டோ அந்த அந்த
மேலான வுலகங்களை என்னால் நீவிர் அநுமதிக்கப் பட்டவராய் அடைவீராக” என்று சொன்னார்கள்.
“யாகதி: யஜ்ஞ ஸீலாநாம் ஆஹிதாக்நே: ச யா கதி:அபராவர்த்திநாம் யாச யாச பூமி ப்ரதாயிநாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்”- என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 68. 29, 30.
பெரிய உடையாரைக் குறித்துப் பெருமாள் அருளிச் செய்தது.

பிரீதி அளவு பட்டிருக்கிலன்றோ தெளிந்திருப்பது.
“வெள்ளி என்ன, தங்கம் என்ன, பலவிதமான இரத்தினங்கள் என்ன, மூன்று உலகங்களின் இராச்சியம் என்ன,
ஆகிய இவைகள் எல்லாம், நீ பேசிய இனிய வார்த்தைகளுக்குத் தக்கவையல்ல” என்று கலங்கினாள் அன்றோ.
“ஹிரண்யம் வா ஸுவர்ணம் வா ரத்நாநி விவிதானி வா . .அர்ஹதி பாஷிதம்” என்பது,ஸ்ரீராமா. யுத். 116 : 20.
இது, இராவணனைக் கொன்றபடி வந்து வெற்றியைக் கூறிய திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
இஸ் ஸ்லோகத்தில்,
“திரிஷு லோகேஷு ராஜ்யம்” என்றதிலே, வெள்ளி முதலானவை அடங்கியிருக்கவும்,
பிரித்துச் சொன்னது கலக்கத்தின் காரியம் என்றபடி.

இருவரும் கொடுக்கலாம் படி ஒரு மிதுனத்துக்கு அடிமையாக அன்றோ உபய விபூதியும் இருப்பது.

நலம்
கிருபை -உதாரம் குண சமூகம் ஸ்நேஹம் -நாலுக்கும் ஆச்சார்யருக்கு ஸ்ரேஷ்டம்
நன் நலம்
நலம் கிருபை -நல்ல உதாரம் -நல்ல குண ஸமூஹம் -நல்ல ஸ்நேஹம்

இவ்வளவில் இட்டு அழைக்கும்படி கடக்க இராதே நீங்கள் முன்னம் கிட்ட நின்று முகங்காட்டப் பெறுவதே!
உங்கள்படி -ஔதார்யம் -இருந்தபடி கண்டேனுக்கு எல்லாச் செல்வங்களையும் எனக்குத் தந்து தூது போம்படியாய் இருந்ததே!
‘அவனுக்குக் குணங்களில் ஏற்றம் ஆஸ்ரயத்தாலே’ என்று இருந்தோம்; அது உங்கள் பக்கலிலே அன்றோ என்கிறாள்.

ஸூக்ரீவனை இளைய பெருமாளை விட்டு அன்றோ அழைக்க வேண்டிற்று
அவனையே கொடுக்கும் ஔதார்யம்
குணங்களுக்கு பெருமாள் இடம் இருப்பதால் ஏற்றம் –
அவற்றை-குண கூட்டங்கள் – ஆஸ்ரிதற்கு கொடுக்க வைத்த ஏற்றம் உங்களது அன்றோ –

“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும்,
மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில் தான் விளங்குகின்றன; இதில் ஐயமில்லை” என்னப்படுமவனும்
புறம்பானான், உங்களைப் பார்க்க
தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயி ஏவ ஸோபநா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 28.
இராவணனைக் கொன்ற பின் வந்து சேர்ந்த திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. என்னப்படுமவன் – திருவடி.

அறிவு மீதே உருவீதே ஆற்ற லீதே அரும் புலத்தின்
செறிவுமீதே செயலீதே தேற்ற மீதே தேற்றத்தின்
நெறியு மீதே நினைவீதே நீதி யீதே நினக்கென்றால்
வெறிய ரன்றோ குணங்களால் விரிஞ்சன் முதலா மேலானோர்.-என்பது, கம்பராமாயணம், உருக்காட்டுப்பட. 111.

“பிரதாபம் என்ன, பொறுமை என்ன, ஒளி என்ன, ஒரு நிலை என்ன, வணக்கம் என்ன, ஆகிய இவைகளும்,
மற்றும் பலவான குணங்களும் உன்னிடத்தில் தான் விளங்குகின்றன; இதில் ஐயமில்லை” என்னப்படுமவனும் –
புறம்பானான், உங்களைப் பார்க்க.
த்வயிஏவ-என் பர்த்தாவை விட உன்னிடமே -திருவடியைச் சொல்லி -அவன் விட -தடங்கள் தாண்ட வேண்டாம்
வந்தவன் ஒருவனை தூது -இங்கு ஊராக திருத்தி -அங்கு தனிக்கட்டை -இங்கு புள்ளினங்காள் -பிரிவின் வருத்தம் அறியுமே –

உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!
உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப் பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளை யமுதனார்.

உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.
பாண்டவர்களுக்குத் தூது போன கிருஷ்ணன் படியும்,
ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!

நன்னலம் புள்ளினங்காள் –
அழகிய நீர்மையை யுடைய புள்ளினங்காள் என்னுதல்,
மிக்க சிநேகத்தையுடைய புள்ளினங்காள் என்னுதல்.
இருவருமான சேர்த்தி ஒழிய வேறும் ஒன்றைத் தரவோ? என்று சிரித்திருந்தன.
“பகைவர்களைக் கொன்றவரும் வெற்றியோடு கூடியவரும் இப்படி இருப்பவருமான ஸ்ரீ ராம பிரானைப் பார்க்கிறேன்
என்பது யாது ஒன்று உண்டோ, பார்க்கிற அந்தப் பிரயோஜனத்தினால் தேவ ராஜ்யம் முதலான மேன்மைகள்
என்னால் அடையப்பட்டன” என்றான் திருவடி
“அர்த்ததஸ்ச மயா ப்ராப்தா தேவராஜ்யாதய: குணா:
ஹத சத்ரும் விஜயிநம் ராமம் பஸ்யாமி ஸுஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 24.
பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.

நல் நலம் –
அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,
ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,
மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,
வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக,
தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?
வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”
‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி
(உழைக்கும்படி – தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.

“அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.

தீவினை யாம் பல செய்யத் தீர்விலா
வீவினை முறை முறை விளைய மெய்ம்மையாய்!
நீஇவை துடைத்து நின் றளிக்க நேர்ந்ததால்
ஆயினும் அன்பினாய் யான் செய் மாதவம்.-என்பது, கம்பராமாயணம், மீட்சிப்பட, 330.

கிருபா -ஔதார்யம் -குணக் கூட்டம்- ஸ்நேஹம் நான்கும் நலன்கள்
நல் -நன்மை -அவனைக் காட்டிலும் மிக்கு இந்த நான்கிலும் -ஆச்சார்யர் ஏற்றம் சொன்னபடி –

புள் –
இந் நீர்மையில் ஏற்றமுடைய உங்களுக்கே பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதம் உண்டாகப் பெறுவதே!
பிரிந்தாரைச் சேர்க்கை திர்யக்குக்களின் காரியம் என்று இருக்கிறாள், இராமாவதாரத்தில் வாசனையாலே.
“குற்றம் செய்யாதார் யாவர்” –நகஸ்சித் நாபராத்யதி” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 44.-என்பாரும் கூட
உண்டாயிருக்கிறபடியைத் தெரிவிப்பாள் ‘இனங்காள்’ என்கிறாள்.
அன்றிக்கே,
உடலும் உயிரும் கூடக் கிடக்கப் பெறுவதே! என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள் என்னுதல்.

“ஓ இராகவனே, செல்ல அரிதான காட்டிற்கு உமக்கு முன்பு செல்வேன்”
“அக்ரத:தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸ கண்டகாந்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 9.
இது, பெருமாளைப் பார்த்துப் பிராட்டி கூறியது. என்று முன் நடப்பாரும் கூட இருக்கிறபடி.
அன்றிக்கே,
“எல்லாத் திக்குக்களிலும் தேடுகிறார்கள்”
“திக்ஷு ஸர்வாஸு மார்கந் தே ஸேய மாஸாதிதா மயா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 30 : 3.
என்கிறபடியே, எல்லாத் திக்குக்களிலும் போகவிடலாம்படி திரள் இருக்கிறபடி என்றுமாம்.

வினையாட்டியேன் –
கைப் புகுந்தவனைக் கை கழிய விட்டு உங்கள் காலிலே விழும்படியான பாவத்தைச் செய்துள்ளேன்.
உங்களுக்குக் குணங்கள் ஸ்வரூபமானாற் போலே யன்றோ எனக்குப் பாவம் ஸ்வரூபமான படி.

நான் –
“தர்மத்தால் காப்பாற்றப் பட்டோம்” என்று இருப்பான் அவன் கண்டீர்!

நான் இரந்தேன் –
அத் தலை இத்தலையானபடி.
ஸ்ரீஜனகராஜன் திருமகளான வேண்டற்பாட்டோடே அன்றோ தான் தூது விடுகிறது இவள்!

இரந்தேன் –
மேலே, அவன் திருவடிகளிலே நான்கு முறை சரணம் புக்கார்;
இப்போது அவன் அடியார்கள் பக்கலிலே சரணம் புகுகிறார்:
அது தப்பிலும் இது தப்பாதே அன்றோ. இதற்கு வேறு விலக்கடி இல்லையே.
பிரார்த்தனா மதி -பிரார்த்தித்தலாகிற புத்தியன்றோ சரணாகதி ஆகிறது.
தப்புதல் இல்லாத உபாயத்தைப் பற்றுகிறாள்.

இனங்காள் இரந்தேன் –
மிதுனமாயிருப்பார்க்கு இரந்தார் வாசி தெரியுமன்றோ.
சரணாகதி செய்தவர்கட்குத் தன் உயிரைக் கொடுக்குமவையே. -கபோத உபோத்யானம் -சாஸ்திரம் புறா கதை –
நல் நலம் புள் இனங்களுக்கு அன்றியே படு கொலைக் காரர்க்கும் இரங்க வேண்டும்படி அன்றோ -என்னுடைய நிலை

நல் நலம் புள்ளினங்காள் இரந்தேன் –
சரணாகதி அடைதற்கு உரிய குணங்கள் உங்களிடம் குறைவற்றிருந்தபடி என் தான்!
நான் இரந்தேன் ‘சரணாகதி அடைதற்குரிய குணங்கள்’ என்றது,
“நலம்” என்ற சொல், வாத்சல்யம் முதலிய குணங்களையும்,
“புள்” என்ற சொல்,(இரு சிறகு) ஞான அநுஷ்டானங்களையும்,
“இனம்” என்ற சொல்,புருஷகாரத்தையும்
இரந்தேன் -ப்ரபத்யே அர்த்தமும் கூறுகின்றன என்றபடி.

அவன் அன்றோ “சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்” என்று குரங்கின் காலில் முற்பட விழுந்தான்;
மேலே, ‘அத்தலை இத்தலையானபடி’ என்று கூறிய வாக்கியத்தை
விவரணம் செய்கிறார் ‘அவன் அன்றோ’ என்று தொடங்கி.

“பிதாயஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய: தர்ம வத்ஸல:
தஸ்யபுத்ர: ஸரண்யஸ்ய ஸுக்ரீவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 19.

பின்பே அன்றோ இவள் “என்னிடத்தில் அப்படி அருளைச் செய்யும்”
“ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.-என்றது.

வினையாட்டியேன் நான் இரந்தேன் –
எல்லாம் கொடுத்தாலும் அவற்றுக்கு ஒன்றும் செய்ததாகத் தோற்றாதே பல் காட்டுகிறாள்.
அவர்கள் செய்கிற உபகாரம் அளவு பட்டிருக்கில் அன்றோ ஒப்பாக ஒன்று தேடிக் கொடுக்கலாவது.
எல்லாம் கொடுத்தாலும் “பணிவிடை செய்யக் கடவன், உலக முழுதினையும் கைம் மாறாகக் கொடுத்தாலும்
ஆசாரியன் செய்த உபகாரத்திற்குக் கொஞ்சமும் ஒப்பாக மாட்டாது”

“யோ தத்யாத் பகவத் ஜ்ஞானம் குர்யாத் தர்மோபஸேசனம் க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத்
ந தத்துல்யம் கதஞ்சந” என்பது, பாரதம். என்று, செய்தது போராது என்னும் இதுவே அன்றோ நெஞ்சில் பட்டுக் கிடப்பது.
‘அவருக்குத் துரோகம் செய்யக் கூடாது” என்னுமளவில் நிற்குமதன்றே;
“யஸ்மாத் தர்மாந் ஆசிநோதி ஸ ஆசார்யா: தஸ்மை ந த்ருஹ்யேத் கதாசந”- என்பது, ஆபஸ்தம்ப தர்ம சூத்.
“இவனுடைய உபகாரத்தை அறிந்தவனாய்” இருக்க வேண்டும்.
“க்ருதம் அஸ்ய ஜாநந்”என்பது, பாரதம் உத்யோகபர். திருதராஷ்டிரனைப் பார்த்துச் சனத் சுஜாதர் கூறியது.

அங்கு நின்றும் மீண்டாலன்றோ அதுதான் வேண்டுவது. என்றது, அவன் செய்த உபகாரத்தினின்றும் மீண்டாலன்றோ
துரோகம் கூடாது என்று சொல்ல வேண்டும் என்றபடி. இவை எல்லாம் சொல்ல வேணுமோ?
அவன் தான் வரும் ஸ்வபாவனாகில் அன்றோ நாங்கள் அறிவிப்பது? என்னில்,
என் பாவத்தாலே இழந்தேனத்தனை போக்கி,
அவன் படியைப் பார்த்தால் இழக்க வேணுமோ என்கிறாள்.

முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் –
அழிந்தனவற்றை அடியே பிடித்து உண்டாக்குமவன் கண்டீர்! இத்தலையும் அழிந்தன்றோ கிடக்கிறது.
யார் பிரிவுக்குச் சளைத்துத் தளர்ந்து தூது விட இவற்றை உண்டாக்கிற்று?
வெறும் தன் கிருபையாலே செய்தானித்தனை அன்றோ!
பண்டு இவனுக்கு ஆர்த்த ரக்ஷணம் செய்வதற்குத் தூது விட வேண்டா கண்டீர்!
தண்ணீர், தறை என்ற வேறுபாடு பாராதே “பல பொருள்களாக ஆகக் கடவேன்” “பஹுஸ்யாம்” என்பது, சுருதி.
என்கிற சங்கல்பத்தாலே ஏற்கெனவே இவற்றை உண்டாக்கினவன்.
தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு என்பாள் ‘முகில் வண்ணன்’ என்கிறாள்.
அன்றிக்கே,
தன் பேறாகக் கொடுக்குமவன் என்னலுமாம்.

முகில் வண்ணன் கண்ணன் –
உலகத்திற்குக் காரணமாயிருக்குந் தன்மைக்கும் அவதாரத்துக்கும் அடியான ஒளதார்யம் முதலான குணங்களைச் சொல்லுகிறது.
அன்றிக்கே,
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே வந்து அவதரித்த படியைச் சொல்லிற்றாகவுமாம்.

என் நலம் கொண்ட பிரான் –
இது ஒரு பழங்கிணறு கண் வாங்குகிறது-தூறு எடுப்பது- என்? என்னுடைய எல்லாச் செல்வங்களையும் கவர்ந்த உபகாரகன்;
உங்கள் காலிலே விழும்படி செய்தவன். இப்போது அகல இருந்தது ஒழியப் பண்டு செய்தவை எல்லாம் சால நன்று கண்டீர்!
எங்களோடு கலப்பதற்கு முன்பு போர நீர்மை யுடையான்; இப்போது வடிவழகே கண்டீர் உள்ளது.

என் நலம் கொண்ட முகில் வண்ணன் –
அம் மேகம் பெய்யும் இடமாகாமல், முகக்கும் இடமானேன்.
நலம் கொண்ட படியாலே தான் முகில் வண்ணன் ஆனேன் என்கிறான் –

தனக்கு என் நிலைமை –
அவன் வருவானானாலும், நாங்கள் சொல்லுவது ஏது? என்னில்,
‘என் நிலைமை’ என்று தன் வடிவைக் காட்டுகிறாள்.
“இந்த எங்களுடைய சரீரத்தைப் பார்த்தருள வேண்டும்” “ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவி தாத்மநாம்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். ஸ்ரீராமனைப் பார்த்து முனிவர்கள் கூறியது.-என்னுமாறு போலே.
என்னைக் கண்ட நீங்களே பாசுரமிட்டுச் சொல்லுமத்தனை.
உலகத்திற்குக் காரணனாயிருத்தல், அவதாரம், தன் பக்கல் செய்த விசேஷ கடாக்ஷம், இவை எல்லாம்
கண்ணழிவறச் சொன்னாள்;
அவனுடைய குணங்களிலே மூழ்கின தன் படிகள் தன்னாலும் பேசப் போகிறதில்லை;
தனக்கும் தன் தன்மை அறிவரியானைப் போலே.

உரைத்து –
தனக்குங்கூட நிலமல்லாத தன் படியை இவை பாசுரமிட்டுச் சொல்ல வற்றாகக் கொண்டிருக்கிறாள்.
கரை மேலே நிற்கையாலே அவற்றுக்குச் சொல்லலாமன்றோ.

‘உரைத்துக் கொண்டு வாருங்கோள்’ என்னாது ஒழிவான் என்? என்னில்,
‘ஈஸ்வரன் செயல் நமக்குப் பரமோ’ என்று இருக்கையாலே;
இவனுக்குப் பணி குறையை அறிவிக்கையே அன்றோ,
மேல் உள்ளன எல்லாம் அவன் பணி அன்றோ.

என் நிலைமை உரைத்துப் பொன்னுலகு ஆளீரோ –
துயர ஒலி கேளாமல் ஜீவிக்கப் பாருங்கோள்! சக்கரவர்த்தி பெருமாளை முடி சூட்டப் பாரித்த போது,
இருடிகள் இராக்கதர்களாலே நோவு படுகையாலே, இராச்சியம் திரு வுள்ளத்தில் பொருந்தாமை புறப்பட்டுப் போனார் அன்றோ;
அப்படியே, பெண் கொலையும் துயர ஒலியும் கேட்டால் இவை உபய விபூதியையும் ஆள மாட்டா என்று இருக்கிறாள்.

———————————————————————————————————

மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

சாமான்ய விழி கீழே -இங்கு கிளிகாள்-அனுபாவ்ய சிஹ்ன யுக்தன் -யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசாக –
சம்பாவனை பெற வேண்டும் –
என் ஆற்றாமை அறிவித்து -என் தோழிமார் முன் நான் உங்களுக்கு செய்யும் ஆதாரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெரு மானைக் கண்டு–கையும் திரு ஆழியுமான சேர்த்தி -பக்வ பலமான -அனுபவ -அதர சோபை
அடிமை கொண்ட ஸ்வாமி -முற்படக் கண்டு -குணம் பாடி ஆவி காத்து இருக்கும் அன்றிக்கே
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.-என் உடம்போடு சஹஜ காதல் -அவன் திருமேனி உடன் அணைக்கும்
அபி நிவேசம் -மெய்க் காதல் -உண்மையான அபிநிவேசம் என்றுமாம்
குணம் பாடி திருப்தி கொள்ளாமல் -பிரமாணம் மூலம் சரீரம் பாதுகாக்காமல் -அவன் ஆதரித்தான் என்று அவன் உடன் கூட வராமல் முன்னே வந்து –
சடக்கென வந்து -அவன் வந்தால் அவனுக்கு தான் பூர்ண கும்பம் நமஸ்காரம் -ஆச்சார்யர் தனியாக சேவிக்க வேண்டுமே –
உங்கள் வார்த்தைக்கு அனந்தரம் -அவன் வரவு நிச்சயம்
மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து-வடிவு அழகாலும் இரு தலைக்கும் -தோழிகள் அலங்கரித்து –
விரைந்து ஓடு வருவதை பார்த்த பின்பு தோழிகள் அலங்காரம்
த்ருஷ்ட்வா சீதா -சொன்னதும் பட்டினி கிடந்த முதலிகள் மது வனம் உண்டு ஆனந்தப் பட்டது போலே -சுக்ரீவன் மகிழ்ந்து –
இளைய பெருமாள் பெருமாள் -ராஜ கம்பீர நடை பார்த்து என்னுடைய களிப்பு கண்டு ஒப்பித்து இருப்பார் -பருவம் ஒத்த தோழிமார் –
அவர்கள் தாங்கள் ஆதரிக்க இருக்காமல் என் கையை -பெருமாள் தொட்ட கையில் உனக்கு ஆசை இருக்குமே
பிடித்தாரை பிடித்தார் கை -தோழிமார் -வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவாரே-
உங்களுக்கு பாத பீடம் -அவனுக்கு சிரசுக்கு அலங்காரமான எனது கை –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?-மதுரமான அடிசில் -ஆச்சார்யர் சம்பாவனை –

கிளிகாள்! திருக்கையிலே பொருந்தியிருக்கின்ற சக்கரத்தையும் கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய என் பெருமானைக் கண்டு,
திருமேனியிலே அணைய வேண்டும்படியான காதலைச் சொல்லி விரைந்து ஓடி வந்து, மைபொருந்தி யிருக்கிற வாள் போன்ற நீண்ட கண்களையுடைய
பெண்களுக்கு முன்னே என் கையிலே தங்கியிருந்து, நெய்யோடு கூடிய இனிய உணவினைப் பாலோடுகூட நாள்தோறும் இருந்து உண்ண வேண்டும்.
கிளிகாள்! பெருமானைக் கண்டு காதலைச் சொல்லி ஓடி வந்து என்கை இருந்து அடிசிலைப் பாலோடு மேவீர் என்க.
‘மேவீரோ’ என்பதிலுள்ள ஓகாரம் அசைநிலை.

சில கிளிகளைக் குறித்து என் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும்
கொண்டாட அதனை அங்கீகரிக்கவேணும் என்கிறாள்.

முதற் பாசுரத்தில் ‘அவன் பதம் கொடுத்தாள்; அதற்கு மேலே ஒரு பதம் தேடிக் கொடுக்கிறாள் இப் பாசுரத்தில்.
அவன் பதமாகிறது, உபய விபூதியையும் கொடுக்கை அன்றோ,
அதற்கு மேலான பதமாகிறது, அவனாலே விரும்பப்படும் தன்னைக் கொடுக்கை.
தன்னைக் கொடுக்குமிடத்திலும், ‘பின்னை முன்னே’ என்னாதே, எல்லாரும் காணக் கை மேலே அன்றோ கொடுக்கப் புகுகிறது.

மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து-
அவன் பாடு தரம் பெற்றாரைக் கொண்டாடுவாரைப் போலேயோ, என் பாடு தரம் பெற்றாரைக் கொண்டாடுவார் இருப்பது!
அந்தப்புரத்தில் வசிப்பவர் எல்லாரும் ஒருபடிப் பட்டிருக்கிறபடி; ஒரு கண் பார்வையாய் இருக்கிறபடி.

வானரர்கள் -கண் அழகு இருக்காதே -அவர்கள் திருவடியைக் கொண்டாட –
இவள் தோழிகள் அஸி தேஷினை -கண் பார்வை இருக்கும் படி –
“தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர்” –பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்கிறபடியே,
இவளும் தன்னோடு எல்லா வகையாலும் ஒப்புமை கொடுத்து வைத்தபடி.

மை அமர் –
“கறுத்த கண்களை யுடையவள்”-“அஸி தேக்ஷணா” என்பது, ஸ்ரீராமா. சுந். 6. 5 : 4.-,
“கருந்தடங்கண்ணி”-திருவாய். 6. 5 : 8.– என்று சொல்லுகிற ஏற்றமெல்லாம் இவளுக்கும் உண்டே அன்றோ.
தன்னைப் போலே கண்ணில் இயல்பாகவே அமைந்த கறுப்பைச் சொல்லிற்றாதல்;
அன்றிக்கே,
மங்களத்தின் பொருட்டு இடும் மையைச் சொல்லிற்றாதல்.
இவள், கணவனைப் பிரிந்திருக்கிற காலத்தில் இவர்கள் மை எழுதி இருக்கக் கூடாதே அன்றோ;
நீங்கள் வந்தால் இவர்கள் கண்களில் இருக்கும்படி பாரீர்கோள்!
வாள் – ஒளி. அதுவும் அழிந்தன்றோ கிடக்கிறது.
இவள் வடிவு புகர் அழிந்து கிடக்க, இவர்கள் கண்களில் ஒளி உண்டாகக் கூடாதே.

நெடும் கண் –
கண்ணில் பரப்பு அடங்கலும் பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அப்போதே அன்றோ.
இல்லையாகில், தலைச் சுமையைப் போன்றதே யாம் அன்றோ.
“காணாதார் கண் என்றும் கண்ணல்ல” – பெரிய திரு. 11. 7 : 1.-என்கிறபடியே.

மை அமர் வாள் நெடும் கண் –
உங்கள் வரவால் வந்த பிரீதியாலே ‘அவன் வரவு தப்பாது’ என்று நான் அலங்கரிக்க,
அத்தாலே அலங்கரித்து ஒளியை யுடைத்தாய்ப் பெருத்திருந்துள்ள கண்களை யுடையவர்கள் என்னுதல்.

மங்கைமார் –
அவனுக்குத் தன்னேராயிரம் பிள்ளைகளைப் போலே இவளுக்குத் தன் பருவத்தில் தோழிமார் உண்டாயிருக்கிறபடி.
முக்தர் இருபத்தைந்து வயதினர்களாய் இருக்குமாறு போலே இவர்களும் எப்பொழுதும்
மங்கைப் பருவத்தினராய் இருத்தலைத் தெரிவித்தபடி.

மங்கைமார் முன்பு –
பின்பு இருக்க ஒட்டார்களே! ஒருவர் இருவர் அன்றே.
எல்லாரும் தனித் தனியே ‘என் முன்பே, என்முன்பே’ என்பர்களே.
“மஹாத்மாவான அநுமாரை மற்றை வாநரோத்தமர்கள் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்”
“தத: தே ப்ரீ தமநஸ: ஸர்வே வாநர புங்கவா:
ஹனூமந்தம் மஹாத்மாநம் பரிவார்ய உபதஸ்திரே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 3
என்கிறபடியே, ஓலக்கமாக இருந்து திருவடியைக் கொண்டாடினாற் போலே.

மஹாத்மாநம் – நான்கு பேர் சூழ இருந்து கொண்டாடினார்கள் என்கிற இது தான் தரமோ இவனுக்கு?
உபாயநாநி உபாதாய மூலாநிச பலாநிச-என்று கனி கிழங்கு முதலானவற்றைக் கொடுத்துப்
பெருமைப் படுத்தினார்கள் அல்லவோ முதலிகள்.

“உபாயநாநி உபாதாய மூலாநி ச பலாநி ச
ப்ரத்யர்சயந் ஹரி ஸ்ரேஷ்டம் ஹரயோ மாருதாத்மஜம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 33.
அப்படியே, நெய்யமர் இன்னடிசில் என்று இங்கும் எல்லாம் உண்டாயிருக்கிறபடி.

“பேஜிரே விபுலாநநா – பருத்த முக முள்ளவர் களானார்கள்” உண்டே அன்றோ அங்கு;
“தத: அங்கதம் ஹனூமந்தம் ஜாம்பவந்தம் ச வாநரா:
பரிவார்ய ப்ரமுதிதா பேஜிரே விபுலாநநா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 47.
இங்கும் மை அமர் வாள் நெடும் கண் எல்லார்க்கும் உண்டாயிருக்கிறபடி.

என் கை இருந்து-
“சுக துக்கங்கள் நம் இருவர்க்கும் ஒன்றே” என்று,
“ஏகம் துக்கம் சுகம்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 5 : 18.

என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி
உன்றனக் குரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்னாள்
சென்றன போக்கி மேல் வந்துறுவன தீர்ப்பல் அன்ன
நின்றன எனக்கு நிற்கு நேரென மொழியும் நேரா.- என்பது, கம்பராமாயணம், மராமரப்படலம், 64.

ஒத்த சுக துக்கங்களை யுடையவர்களாய் இருந்தார்களே யாகிலும் பசித்தாரே உண்ண வேணும் அன்றோ!
அப்படியே, அவர்கள் ஓலக்கமிருக்குமத்தனை; இருப்பிடம் என் கையாக வேணும்.
அவன் திருமுடிக்கு ஆபரணமான என்னுடைய கையை உங்களுக்குப் பாத பீடம் ஆக்குகிறேன்.
“கிருஷ்ணனுடைய தோளில் கொடி போன்ற தனது கையைக் கொடுத்தாள்” என்னுமாறு போலே,
அவனுக்கு எல்லாப் பொருள்களையும் கொடுக்கும் கை
“ததௌ பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மதுநிகாதிந:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13. 54. என்றது,
வைத்தால் என்னாமல், “ததௌ” என்கையாலே, பலகாலம் ஆசைப்பட்டவனுக்கு
எல்லாச் சொத்துக்களையும் தானம் செய்தாள் என்பது போதரும்.

பரியங்க வித்யையிற் சொல்லும் படுக்கையிலே இருப்புப் போலும் அன்றே, இவள் கையில் இருப்பு.
இவள் “அணி மிகு தாமரைக் கை” என்னுமது அவனுக்கும் உண்டே அன்றோ.

மெய் அமர் காதல் சொல்லி, கிளிகாள்! விரைந்து ஓடிவந்து, என்கை இருந்து நெய்யமர் இன்னடிசில்
நிச்சல் பாலொடு மேவீரோ! என்கிறாள்.
அது என்? போகிறபோதே லாலநம் பண்ணி விட்டாலோ? என்னில்,
அதற்குக் கைம் முதல் உண்டாக வேணுமே? “துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்கள்”
“யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: சோகாபிகர்சிதை:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.
என்றும், “இட்டகால் இட்டகையளாயிருக்கும்” – திருவாய். 7. 2 : 4.-என்றும் அன்றோ இவள் கிடக்கிறது.
இனித் தான் கொண்டாடுகைக்கு ஓலக்கம் இருப்பாரும் வேணுமே!
“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” –திருவாய். 9. 9 : 5. அவர்களும் – தோழிமார்களும்.-
என்றே அன்றோ அவர்களும் கிடக்கிறது.

நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ –
“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்” என்று கொடுக்கைக்கு உடல் இல்லையே இவளுக்கு.-உடல் இவளது இல்லையே
“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6. என்றது, அவன் ஸ்வதந்திரனாகையாலே கொடுத்தான்;
இவள் பரதந்திரப்பட்டவள் ஆகையாலே நாயகனுக்கு ஒழியப் பிறர்க்குச் சரீரத்தைக் கொடுக்கப் போகாதே அன்றோ என்றபடி.

நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள் தோறும் பாலோடே கூட நான் தர, அதனை உண்டு
நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்க வேணும்.
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள்,
இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பகவத் விஷயத்தில் உபகார பரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒரு கை பகுந்திட்டோமாகில்
செய்யலாவது உண்டோ?’ என்று கைவாங்குமதன்று;
அவர்கள் விரும்பினவற்றையே தேடி இட வேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி.

“எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையே
அன்னமாக வுடைத்தா யிருக்கிறது”
“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம்
யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30.
என்னலாவது அவன் பக்கல்.

நிச்சல் –
சேர்ப்பது ஒருநாளே, இவர்களுக்குப் பின்பு அநுபவம் நித்தியமாயிருக்கிறபடி.
“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும்
எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”
“நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2.என்னுமாறு போலே.

கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு –
உண்டாரை உண்ணுவிக்கத் தேடுகிறாள் அன்றோ. இதனால் என் சொல்லியவாறோ? எனின்,
இவர்க்கு முன்னே இவர் விரும்பிய பொருள், இவரைப் பற்றினார்க்கு முற்பட்டிருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
“வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்.- நான்முகன் திருவந். 18.-”
எப்போதும் கை கழலா நேமியானாய் இருத்தலின் ‘கையமர் சக்கரம்’ என்கிறது.

என் சக்கரத்து கனி வாய்-
கையும் திருவாழியுமான அழகினைக் காட்டுவது முறுவலைக் காட்டுவதாய்
என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன்.
பிரிந்து போகிற போது ‘இவள் சத்தை கிடக்க வேணும்’ என்று நினைத்துச் செய்த
புன்முறுவலுக் காயிற்று இவள் தோற்றது.

என் கனி வாய் –
திருவாழிக்கு முற்றூட்டு ஆயிற்றுத் திருக் கை;
தமக்கு முற்றூட்டு திருப் பவளம்.
அவன் ஜீவனத்தை நித்யமாக்கினான்,
என் ஜீவனத்தைக் காதா சித்கமாக்கினான்.
அவனுக்கே கை யடைப்பு ஆயிற்றே. கை மேலே இடுமே.

கண்டு –
எனக்குப் போலே நினைப்பிற்கு விஷயமாமளவு அன்றே உங்களுக்கு.
அன்றிக்கே,
இவற்றைக் கண்களாலே காணுதல் என்னுதல்.
அன்றிக்கே,
இவற்றைக் காணுதல் அன்றோ இவளுக்கு என்னுதல்;
தொட்டாரைத் தொடுதல், கண்டாரைக் காணுதல் அன்றோ இவளுக்கு.
“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ
த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 9. என்றது, பிராட்டியினுடைய ஸ்பரிசம் காற்று-சந்திரன் -மூலமாக
ஸத்வாரகமானாற் போலே, காட்சியும் ஸத்வாரகம் என்றபடி.

மெய் அமர் காதல் சொல்லி-
அவன் திருமேனியிலே நான் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்;
என்னுடம்போடே அவன் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்.
“துக்கத்தால் அதிகமாக இளைத்திருக்கிற அவயங்களால் நன்றாகத் தொடும்படி” என்னக் கடவதன்றோ.
‘நம் சத்தை கிடக்கக் கிடக்கும் அன்றோ’ என்றாதல்,
‘குண ஞானத்தாலே தரித்திருக்கிறாள்’ என்றாதல் நினைத்திருக்குமது அல்ல என்று சொல்லுங்கோள்.
அங்ஙனேயும் தரித்திருந்தார் உண்டே யன்றோ;

மாயா சிரசைக் காட்டின அன்றும், பிராட்டி, உலகத்தாரோடு ஒக்கக் கண்ணநீர் விழவிட்டு,
‘அதுவேயானாலும் அவர் உளராகில் அல்லது நம்சத்தை கிடவாது’ என்று தன்னைக் கொண்டு
அறுதியிட்டுத் தரித்திருந்தாள் அன்றோ.
“சூரியனிடத்துள்ள ஒளியைப் போன்று, நான் இராகவனை விட்டு நீங்கேன்” என்றாள் அன்றோ.
“ஸக்யா லோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம் பாஸ்கரேண ப்ரபா யதா”-என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15
சூரியன் உண்டாகில் அல்லது ஒளியும் இல்லை அன்றோ.
இங்ஙனே இருக்கச் செய்தே சில காரணங்களாலே வரும் கூடுதல் பிரிதல்களே அல்லவோ உள்ளன.
திரிவியமாயிருக்கச் செய்தேயும் பிரகாரமாகின்ற தன்மை உண்டே;அப்படி அன்றே இங்கு;
ஜீவாத்மா அப்ருதக் சித்த விசேஷணம் பரமாத்மாவுக்கு -த்ரவ்யமாக இருந்தாலும் – –
உடம்பிலே அணைந்து பிரிந்தார்க்கு உடம்பை அணைத்து அல்லது நிற்க ஒண்ணாதே அன்றோ.
ஸ்வரூபத்தில் அணைந்து பிரிந்து இருப்பது சீதா பிராட்டி இவளோ ரூபத்தில் அணைந்து பிரிந்தவள் அன்றோ

மெய் அமர் காதல் –
‘தம்மைப் போலே பொய்யுமாய் நிலை நில்லாததுமான காதல் அன்று எங்களது என்று
சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச் செய்வர்.
சத்தியமான காதல் என்றபடி.
அன்றிக்கே,
ஆத்மாவோடே ஒன்றுபட்டிருக்கின்ற காதல் என்றுமாம்.
மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி.
“மெய்ம்மையே மிக உணர்ந்து” –திருமாலை, 38-என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று.

சொல்லி –
தந்தாமுக்கு இல்லாதவை பிறர் வாயிலே கேட்டறிய வேணுமித்தனை அன்றோ.
தமக்கு உண்டாகில் இப்படித் தூது விடப் பார்த்து இராரே. காட்சிக்கு மேலே ஓர் ஏற்றம் போலே
காணும் தன் நிலையை அவனுக்கு அறிவித்தல்.

கிளிகாள் விரைந்து ஓடி வந்து –
பிராட்டியைக் கண்டு மீண்ட பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற் போலேயும்,
பெருமாள் மீண்டு எழுந்தருளுகிற போது திருவடி முன்னே வந்து ஸ்ரீபரதாழ்வானை உகப்பித்தாற் போலேயும்,
நீங்கள் முன்னே வர வேணும்.

கிளிகாள் விரைந்து ஓடி வந்து –
அறிவித்துக் கூட வர இராதே கொள்ளுங்கோள்.
திருவடி பிராட்டியைத் தேடிப் போகிற போது மஹாராஜரோடே செய்த காலவரை யறையை இக் கரையிலே கழித்துப் பின்பு
இலங்கையிலே போய்ப் புக்கு எங்கும் தேடி, அவளைக் கண்டு, பின்னர்
‘இக் காட்சியால் பிரயோஜனம் உள்ளது அவ் வுடம்பு உள்ள போதே சென்று அறிவிக்கில் அன்றோ’ என்று ஒரு நாளே வந்தான் அன்றோ.
அதற்குக் காரணம், போகிற போது இவர் ஆற்றாமையைக் காண்கையாலே, ‘நாம் வருமளவும் இவர் உயிர் தரித்திருத்தல் அரிது’ என்று இருந்தான்;
பெருமாள் தாமும், ‘பிள்ளாய்! நீ இருக்கிற போதைத் தரிப்புக் கொண்டு நீ போனாலும் இப்படி இருப்பன் என்று இராதே காண்;
என் அளவு அறிந்து காரியம் செய்’ என்றார் அன்றோ.

அன்றிக்கே,
விரைந்து ஓடி வந்து என்பதற்கு,
நீங்கள் முற்பட வந்த பிரீதி-சாத்மித்தால் – பொறுத்தால், பின்பு அவன் வரவாக வேணும் என்னுதல்.
அன்றிக்கே,
அவனுடனே கூட வரில் வாய் புகு நீராய் உங்களைக் கொண்டாட ஒண்ணாது;
ஆன பின்பு நான் முறை கெடாமல் அநுபவிக்கும்படி வாருங்கோள் என்னுதல்.
உபகாரகரான உங்கள் காலிலே முற்பட விழுந்த பின்பு அவன் காலிலே விழும்படி பண்ணுங்கோள்.
ஆகையால் அன்றோ, நம் முதலிகள் குரு பரம்பை முன்னாகத் துவயத்தை அநுசந்தானம் செய்கிறது
இனித் தான், சிஷ்யனானவன் ஆசாரியனுக்குத் தொண்டு செய்யலாவது, அவன் சரீரத்தோடு இருக்கிற நாள்களிலே அன்றோ;
பின்பு உள்ளன எல்லாம் பகவானுடைய அனுபவத்திலே சேருமே அன்றோ இருவருக்கும்.
அவன் ‘எனக்கு’ என்னும் நாளிலே அன்றோ, இவன் ‘உனக்கு’ என்று கொடுக்கலாவது?

இவள் பரதந்த்ரன் ஆகையால் நாயகனைத் தவிர வேறு எவருக்கும் உடம்பு கொடுக்கப் போகாதே
அவன் நிலை அப்படி இல்லையே -என் கை இருந்து -என் குழல் மேல் –ஊதீரே-என்றும் சொல்வது பொருந்துமோ என்னில்
தலை யல்லால் கைம்மாறு இல்லை -அவனை வணங்கும் தலையால் -தலையில் வணங்குமாம் கொலோ -போலே
நமஸ்கரித்ததையும் தலையால் வணங்கியதும் -சந்தேசம் கொடுத்த பிராமணருக்கு ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -நநாப -வணங்கியது -போலே –
அன்யாபதேசத்துக்கு இதனால் விரோதம் இல்லை –

ஸ்வா பதேசத்தில் -ஆச்சார்யருக்கு ஜீவன் உடம்பு கொடுக்கக் கூடாதா என்னில் –
சேதன ஈஸ்வரர்களுக்கு –ஆச்சார்யர்–ஈஸ்வரர் -இருவருக்கும் -ஆழ்வார்-நாயகி -கைங்கர்யம் -போக்யதை -தானே
சாஸ்திரம் சஸ்த்ரம் கொண்ட இருவருக்கும் கைங்கர்யம் பண்ணக் குறை இல்லையே

————————————————————————————————–

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3-

என் பக்கல் நின்றும் போகும் நீங்கள் -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் கிருஷ்ணன் -சிரசா வஹித்த -சூடிய தண் துளபம்-
நான் அலங்கரித்து இருக்கும் பூவில் மதுவை குடிமின்
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?-தேனைப் பருக வேணும் -திரும்பி வந்ததும் அவன் வருவான் விஸ்வாசம்-தேனும் பெருகும்
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்-வண்டினங்களும் கூட்டம் கூட்டமாய் -கிருஷ்ண அபிப்ராயத்தால் பாண்டவர்களே மன்னர்கள்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்-வெள்ளைப் புரவி -ஆடிய-தர்ச நீய கதி -ஓடி -இல்லாமல் -ஆடி-
சித்திரை தேர் போலே கோ ரதம் சித்திரை தேர் -தை தேரில் தான் மிதுனம் –
குதிரைகள் ஆடும் குதிரை -போலே -ஓடுகிற ஓட்டம் ஆடுவது போலேவே இருக்கும் -சேனையை தூளி சேஷமாம் படி அழித்த பிரான் –மகோபகாரன்
சூடிய தண் துளபம் உண்ட தூமது வாய்கள் கொண்டே-அவன் திருத் துழாய் தேன் பருகிய வாய் மாறாமல் வந்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?-தேனைப் பருக வேணும் -திரும்பி வந்ததும் அவன் வருவான் விஸ்வாசம்-தேனும் பெருகும்
அவனுக்கு சர்வ போக்யமான என் குழலில் மது பான உத்தியோகம் போலே ஊத வேண்டும்

சேர்ந்திருக்கின்ற வண்டுக் கூட்டங்களே! குருநாட்டினை யுடைய பாண்டவர்களுக்காக, வெற்றி பொருந்திய குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினாலே
சேனைகள் சாம்பலாகும்படி அழித்த கண்ணபிரான் அணிந்து கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயிலே யுள்ள தேனைப் புசித்த பரிசுத்தமான
தேன் பொருந்திய வாய்களைக் கொண்டு, ஓடிவந்து என் கூந்தலின் மேல் உள்ள ஒளி பொருந்திய சிறந்த பூக்களில் ஊதுவீர்களாக.
வண்டு இனங்காள்! ஐவர்கட்காய்ப் படை நீறு எழச் செற்ற பிரான் துளபம் உண்ட மது வாய்கள் கொண்டு ஓடி வந்து சூழல் மேல் மா மலர் ஊதீர் என்க,
வாய்கள் கொண்டு-வாய்களால்.

சில வண்டுகளைக் குறித்து அவனுக்கு என் நிலையை அறிவித்து என் தலை மேலே பொருந்தி வாழுங்கோள் என்கிறாள்.

ஓடி வந்து-
கடுக வரவேணும்.
என் அளவு கண்டு போகிற நீங்கள், நான் உள்ள போதே வந்து உதவ வேணும்.

என் குழல் மேல் –
பேரளவுடையார்-(பெருமாளே-) படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறு தான் அறிந்திருக்குமே.
‘சூடிய தண் துளபம் உண்ட தூ மதுவாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ என்பான் என்?
காரியம் செய்து சமைந்தால் கைக் கூலி கொடுப்பாரைப் போலே? என்னில்,
இவற்றுக்கு இவள் குழலிலே விஷயம் உண்டாக வேணுமே. இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது.

என் குழல் மேல் –
அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
அங்கு மஹாராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது; இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ. தலையான பரிசில் அன்றோ இது தான். -தலைக் குழல் என்னும் காடு -தலையான பரிசு
ததிமுகன் முதலாயினோர்களுடைய விலக்குகையும் இல்லை அன்றோ இங்கு.
சாந்தனான திருவடி அன்றோ “நான் உங்களுடைய பகைவர்களைத் தடுக்கிறேன்” என்றான்
“அவ்யக்ர மநஸோ யூயம் மது ஸேவத வாநரா:
அஹம் ஆவார யிஷ்யாமி யுஷ்மாகம் பரிபந்திந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 62 : 2.

பிராட்டியைக் கண்டு வந்தமை அறியாதிருக்கச் செய்தேயும் மதுவனம் அழிந்தமையைக் கண்டு, மஹாராஜருடைய வால்
ருசியமூக மலையிலே அறைந்ததே அன்றோ. ‘நம்மோடு செய்து போன காலம் கடந்திருக்கச் செய்தேயும்
மது வனம் அழிக்கும்போது பிராட்டியைக் கண்டார்களாக வேணும்’ அன்றோ.
‘பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில்
இராஜ புத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ –
என்றும் இவள் குழலில் மதுபானம் செய்வன வண்டுகளே அல்லவோ.
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல்-திருவாய்.-9. 9 : 4.– இவை யாதல்.
அவனேயோ ஒத்த தரத்தைத் தரவல்லான், நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது,
“ஸோஸ்நுதே – அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே, உங்களையும் அவனையும்
ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி.
தலையான ஊண் அன்றோ.

என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ –
உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியை யுடைத்தாய் சிலாக்கியமான
மலரில் மதுவைப் பானம் செய்யீரோ?

ஊதிரோ
மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழிய மாட்டாமல் நின்று
பறக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள்.
உங்கள் காரியமும்
பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை,

கூடிய வண்டினங்காள் –
மஹாராஜரைப் போலே படை திரட்ட வேண்டா அன்றோ உங்களுக்கு என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு
முன்பே திரண்டிருக்கப் பெற்றது அன்றோ.
இளைய பெருமாள் கிஷ்கிந்தா நகரத்தின் கோட்டை வாசலிலே சென்று குண கீர்த்தனம் செய்த பின்பன்றோ படை திரட்டிற்று.

குரு நாடுடை ஐவர்கட்காய் –
பாண்டவருடைய மனைவி குழல் பேணாமையைக் கண்டு வருந்துமவன் கண்டீர்.
“மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே
மன்னராக்கி” –பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 6.-என்கிறபடியே,
இராச்சிய முடையார் பாண்டவர்களே; நாம் அவர்களுக்கு ஏவல் தேவை செய்து நிற்கிறோம்
என்றாயிற்று அவன் நினைத்திருப்பது.

குரு நாடுடை ஐவர் –
துரியோதனாதியர்கள் கிடந்தானை கண்டு ஏறினதைப் போன்றது அன்றோ.
“நாடுடை மன்னர்”-திருவாய். 6. 6 : 4.-என்கிறபடியே, இராச்சியம் அவர்களுடையதே,
‘துரியோதனாதியர்கள் இராச்சியம் பண்ணுகை வல்லடி’ என்றிருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்திலே சொல்லுகிறார்.
அவன் நினைவே யன்றோ இவர்க்கு நினைவு.

நாடுடையவர் -அவர்களோ -கிருஷ்ணன் அன்றோ -ராஜ்ஜியம் உடையார் பாண்டவர்களே –
குரு நாடு உடையவர்கள் துரியோத நாதிகள்-கிடந்த யானை மேல் ஏறி -ஓய்வு எடுக்க –
அதின் மேல் ஏறி -அரசர் நான் என்று சொல்வது போலே –
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -ஆழ்வார் அபிப்பிராயமும் கிருஷ்ணன் அபிப்பிராயமே –
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –

ஆடிய மா நெடும் தேர்-
மனோகரமாம்படி சஞ்சரிக்கின்ற குதிரை பூண்ட பெரும் தேரினை உபகரணமாகக் கொண்டு. என்றது,
“பெரியதான தேரில் இருந்தார்கள்” “ததை: ஸ்வேதை: ஹயை: யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ”-என்பது, ஸ்ரீ கீதை, 1 : 14.
என்னும்படி இருக்கிற தேரைக் கொண்டு என்றபடி.
மாயப் போர் தேர்ப் பாகன் அன்றோ -போர் பாகு தான் செய்து ஐவரை வெல்வித்தானே -சித்திர தேர் வலவன் அன்றோ –

படை நீறு எழச் செற்ற பிரான்-
ஆயுதம் எடாமைக்கு அநுமதி பண்ணுகையாலே, தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான்.
தன்னை அழிய மாறியும் பரோபகாரம் செய்தலையே ஸ்வபாவமாக வுடையவன் ஆதலின் ‘செற்ற பிரான்’ என்கிறாள்.
இதனால், தாழ்த்தது ஒளபாதிகம் என்று இருக்கிறாள் என்றபடி.
அருச்சுனன் முதலாயினோர்களும் சஸ்திரங்களைப் போன்றவர்களே யாவர்
“ஏ அருச்சுனா! இவர்கள் முன்பே என்னாலேயே கொல்லப்பட்டு விட்டார்கள்; நீ எனக்கு ஓர் ஆயுதம் போலே நிமித்தமாக இரு”

“தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஸோலபஸ்வ ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வராஜ்யம் ஸம்ருத்தம
மயைவ ஏதே நிஹதா: பூர்வமேவ நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசிந்”- என்பது, ஸ்ரீ கீதை, 11 : 33.–
என்று தானே அருளிச் செய்தான் அன்றோ.

சூடிய தண் துளபம் உண்ட –
சாரதியாய் நின்று தேரினை ஓட்டுகிற போது வைத்த வளையத்திலே மதுவைக் குடிக்கிற வண்டுகள்,
அவதாரங்களில் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும்,
அந்த நிலையை அடைந்து அநுகூலிக்கிறது திருத் துழாயாகக் கடவது,

தூ மது வாய்கள் கொண்டே –
அவ் வளையத்தில் மதுவைக் குடித்துச் சுத்தமாய் இனிதான வாய்களைக் கொண்டு.
அன்றிக்கே,
வாய்கள் கொண்டே என்பதற்கு, இனிதான பேச்சினைக் கொண்டு என்னலுமாம்.

தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ –
பரிசுத்தமான -உண்ட உண்கையாலே-முதல் அர்த்தம் –மது இனிதான –
இனிதான பேச்சு -வந்து கொண்டே இருக்கிறார் -அனுகூல -ஐயன் வந்தனன் ஆர்யன் வந்தனன் –
வாய்கள் -வார்த்தை லஷனை-
“வாஹி வாத யத: காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச:
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 5 : 6.

“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?
த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.
நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” -அற்றது பொருந்தும்படி
வார்த்தை சொல்ல வல்ல வாயைக் கொண்டு.
த்ரௌபதி வார்த்தையால் இற்று விழுந்த மாம்பழம் கொம்பிலே ஒட்டிக் கொண்டதே போலே –
“காணப்பட்டாள் சீதை” “த்ருஷ்டா ஸீதா” என்பது, ஸ்ரீராமா. சுந். 65 : 10.
என்றாற்போலே. என்னையும் மதுபானம் பண்ணுவித்து நீங்களும் மதுபானம் பண்ணுங்கோள்.
நிர்பயம் -காற்று காண முடியாதே -வாயு பகவான் போலே இல்லை -உன் மூலம் சீதையை அணைக்கப் பெற்றேனே
சந்த்ரனை -உன்னைக் கண்டால் போலே -சொல்ல வேண்டுமே -காற்றை பார்த்து கண்டாரை கண்டால் போலே –
சந்தரன் தாரகம் போலே உன் ஸ்பர்சம் தாரகம் -ஸ்பர்சம் போலே தர்சனம் –வாயுவைத் திருஷ்டாந்தம் ஆக்கி -என்றுமாம் –

———————————————————————————————–

தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

ஸூரி போக்யமான -வைகுண்ட நாதன் கண்டு -உம்முடைய தகவுடைமை கிருபை உடைமை இதுவோ
தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!வண்டுகள் -அவாந்தர பேதம் -தேனைக் கொண்டு நீயே பருகி
தேன் வாயில் ஒட்டிக் கொண்டு இருக்கும் தும்பி நிரூபகம் –
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற-விஸ்லேஷ ஹேது வான பாபங்கள்
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு-வைகுண்ட நாதன் -அடுத்த பாசுரம் எனக்குச் சென்றாகிலும் கண்டு அந்தர்யாமி
பெரிய வெள்ளமான தேனை சொரியும் –
தாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே-யாம் -தாம்-பாட பேதம் -செய்வது தக்கவாறு தயை ஆன்ரு சம்சயம் –
இந்த அவஸ்தை கண்ட நீங்கள் -அவன் மேன்மைக்கு தக்கபடி -உபசரித்து -தர்ம சாஸ்த்ரம் -படி நடக்க -யாம் -உசத்தி பேச வேண்டுமே
அப்பொழுது தான் இந்த முல்லையும் நானும் புதுக் கணிப்பு பெறுவோம் –

நான் வளர்க்கிற முல்லைகளின் மேலே தங்கியிருக்கின்ற தும்பிகளே! பூக்களிலேயுள்ள மதுவினை உண்ணுவதற்குச் சென்றால்,
பரிசுத்தமான இனிய வார்த்தைகளோடு சென்று, தீயவினைகளையுடைய என்னிடத்தில் பொய்யான கலவிகளைச் செய்து நீங்கிய,
சிறந்த மதுவானது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய நித்திய சூரிகளுக்குத் தலைவனான
எம்பெருமானை நீங்கள் கண்டு, உமக்கு இதுவோ தக்கவாறு என்று கூற வேண்டும்.
தும்பிகாள்! நுங்கட்குச் செல்லில், வாய்கள் கொண்டு சென்று கண்டு நாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் என்க.
மது – இனிமை. வாய்கள் – வார்த்தைகள். வந்து, என்பது, இடவழுவமைதி; சென்று என்பது பொருள்.
நாம் : ஈண்டு, முன்னிலைக்கண் வந்தது, நுங்கட்கு என்பதற்கு, நீங்கள் என்பது பொருள். கண்டீர்: முன்னிலையசைச்சொல்.

என்னை நோவு படுத்திச் சென்று எட்டா நிலத்திலே ஓலக்கம் இருக்கை தக்கோர்மையோ-தயையோ –
என்று திரு நாட்டிலே சென்று சொல்லுங்கோள் என்று சில தும்பிகளைக் குறித்துச் சொல்லுகிறாள்.

தூமது வாய்கள் கொண்டு வந்து –
பரிசுத்தமாய் இனிதான பேச்சையுடைய வாயைக் கொண்டு சென்று.
வந்து என்றது, சென்று என்றபடி.
அன்றிக்கே,
துக்கத்தை யுடையவர்களுக்கு உஜ்ஜீவனத்திற்குக் காரணமாய் இனிதுமான பேச்சினைக் கொண்டு என்னுதல்.

என் முல்லைகள் மேல் தும்பிகாள் –
உடன் கேடராய் ஒக்கப் பட்டினி விட்டுக் கிடப்பாரைப் போலே அன்றோ நீங்கள் கிடக்கிறது.
இவள் குழலில் பூவைப் போன்று, உத்தியானத்திலுள்ள பூக்களும் சருகா யன்றோ கிடப்பது;
“மரங்கள் எல்லாம் உலர்ந்து கிடந்தன” அபிவ்ருக்ஷா! பரிம்லாநா:” என்பது, ஸ்ரீராமா.அயோத். 59 : 4.-என்னுமாறுபோலே.

பூ மது உண்ணச் செல்லில் –
மதுவையே உண்பவைகள் ஆகையாலே பூக்கள் உள்ள இடம் தேடி மது பானம் செய்யப்போகக் கடவீர்கோள் அன்றோ.
இவள் பக்கத்தில் உள்ளவை அன்றோ உறாவிக் கிடப்பன; அங்கு உள்ளவை எல்லாம் செவ்வி பெற்றிருக்குமன்றோ;

மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோன் அன்றோ.
அவர்களில் இவனுக்கு வேற்றுமை,-
வானவர்களில் கோனுக்கு -வாசி -கவித்த முடி -ஆதி ராஜ்ய சூசகம் –கவித்த முடியும் இட்ட மாலையுமே அன்றோ.
இங்கு உள்ள வண்டுகள் போலே பட்டினி கிடக்க வேண்டா அன்றோ அங்கு உள்ளார்க்கு

மதுவார் தண் துழாய் –
விரஹத்திலும் ஊற்று மாறாத இடம் காணும் அவ்விடம்.

பூ மது உண்ணச் செல்லில் –
இவள், தன் குழலிற் பூவும் வாடி மதுவும் வற்றின பின்பு இனி இந்த உலகில் உண்டாக மாட்டாது என்றிருக்கிறாள்;
இனி உலகத்தை யுடைய சர்வேஸ்வரன் பக்கலிலே உண்டாகில் உண்டாமத்தனை என்று இருக்கிறாள்.

வினையேனை –
அவன் என்பக்கல் பேசின பேச்சுக்களையும் வியாமோகத்தையும் ‘மெய்’ என்று இருக்கும்படியான
பாவத்தைச் செய்த என்னை.

வினையேனைப் பொய் செய்து –
‘கடுகப் பிரியில் இடி விழுந்தாற் போலே இவள் முடியும்’ என்று பார்த்து,
‘நின்னைப் பிரியேன், பிரியிலும் ஆற்றேன்’ என்றாற் போலே இருக்க,
அவன் பிரிவினை உணர்த்தினான் -தாத்பர்யம் அறியாமல் இருந்தேன் –

பொய் செய்து –
கலவிக் காலத்தில் குறைவு இருக்கிறபடி.
பல காலம் ஜீவிக்கச் செய்தேயும் ‘ஒரு கனவாய்ப் போயிற்று’ என்பர்களே அன்றோ,
பிரிவோடே முடிவு பெறுகையாலே. கனவு என்றும், இந்திர ஜாலம் என்றும், பொய் என்றும்
முடிவு பெறாத போகத்தைச் சொல்லக் கடவது.
சிர காலம் கலந்து பிரிந்தான் -பிள்ளான் -எத்தனை வருஷம் கலந்தாலும் அபர்யார்த்தி பிறக்குமே

பொய் செய்து அகன்ற –
அகன்று போவதற்கு இட்ட வழி இருக்கிறபடி. என்றது, ‘கலவி’ என்று பெயரை இட்டு,-
முடிவு போகக் கலவாதே வஞ்சித்து அகன்றான் என்றபடி.

மா மதுவார் தண் துழாய் முடி –
இங்கு உள்ளதும் அங்கே ஆகையாலே மது இரட்டித்திருக்கும் அன்றோ. தலையான மதுவுமே அது தான்.
கலவியிலும் பிரிவிலும் ஒரு படிப்பட்டிருக்கு மவனைக் கண்டு. -வானவர் கோனைக் கண்டு –
ராக த்வேஷம் தாண்டி அன்றோ இருக்கின்றான் -சுக துக்கம் சமே க்ருத்வா -அவிகாராய –சதைக ரூபாயா —
தந்தாமைப் பேணுவார்க்கு உடம்பு கொடுத்திருக்குமவனைக் கண்டு. என்றது,
“த்வயி கிஞ்சித் ஸ்மாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4
“நீ சிறிது ஆபத்தை அடைந்தாயாயின் சீதையால் தான் எனக்குப் பயன் யாது?” என்றமை தவிர்ந்து
பழைய உறவு கொண்டாடி இருக்குமவனைக் கண்டு என்றபடி.
யத்ர பூர்வே சந்தி தேவாயா நித்ய ஸூரிகளைக் கொண்டாடி அன்றோ இருக்கிறான் –

நாம்-
குற்றத்தை யுடையவனாகையாலே தன் குற்றத்தை நினைத்து, ஓலக்கம் இருக்கிறானாகப் பராக்கடித்து
நெருங்குவதற்கு அரியவனாயிருப்பான்; முதன்மை கண்டு கூசாதே நின்று,
நம்மைக் காணும் என்பது-
உம்மைக் காணும் என்பது-
இப்படி விளித்தவாறே முகம் பார்க்க வேண்டி வரும்; அவன் பார்த்த முகம் மாறுதற்கு முன்னே,
‘இதுவோ தக்கவாறு’ என்பது.
“பிறர் துக்கத்தைப் பொறாமையாகிற மிக உயர்ந்த தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப் பட்டது”
“ஸ குருஷ்வ மஹோத்ஸாஹ க்ருபாம் மயிநரர்ஷப
ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம: த்வத்த ஏவ மயாஸ்ருத:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 41.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.-என்னும்படி சிலர்க்குச் சொல்லி வைத்தீரே.
“காட்டு ஈக்களையும், கொசுக்களையும், பாம்புகளையும் சரீரத்திலிருந்து ஓட்ட மாட்டார்”,
“நைவ தம்ஸாந் – ந கீடாந் ந ஸரீஸ்ருபாந்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42.3“
ந மாம்சம் இத்யாதி -மாம்சத்தையும் புசிப்பது இல்லை, மதுவையும் குடிப்பது இல்லை”
என்றவை எல்லாம் வடிவிலே கண்டோம் அன்றோ.
‘வடிவிலே கண்டோம் அன்றோ’ என்றது,
மா மதுவார் தண் துழாய் முடியனாயிருக்கையைத் திருவுள்ளம் பற்றி.

“அருந்து மெல்லட காரிட அருந்துமென் றழுங்கும்
விருந்து கண்ட போதென்னுறுமோ என்று விம்மும்”- என்பது, கம்ப ராமாயணம்.

இதுவோ தக்கவாறு –
பெண் கொலை புரிந்து வளையம் வைத்து ஓலக்கங் கொடுத்திருக்கையோ தக்கோர்மையாவது.
என்ன வேண்டும் கண்டீர் –
இந்த ஓலக்கத்தையும் இவன் மேன்மையையும் கண்டு ‘இதனை எங்ஙனே அழிக்கும்படி?’ என்று
நீங்கள் கிருபை கொள்ளலாகாது;
அவ்வளவில் என்னைப் பார்த்துச் சொல்லுங்கோள்.

நுங்கட்கே –
அவன் அல்லாத உங்களுக்கு இத்தனையும் செய்ய வேணும். இல்லையாகில்,
இவ்வளவிலே முகங்காட்டின உங்களுக்கும் அவனுக்கும் வாசி இல்லை.

நுங்கட்கே –
என் முல்லைகள் மேல் தும்பிகள் அன்றோ! உங்கள் ஜீவனம் நீங்களே நோக்கிக் கொள்ள வேணும்.
அவன் பெண் கொலை புரிந்து ஸ்வரூப ஹாநி பாராமல் ஓலக்கம் கொடுத்திருந்தான்;
நான் பாடோடிக் கிடந்தேன்;
இனி உங்கள் ஸ்வரூப ஹாநி நீங்களே போக்கிக் கொள்ளுங்கோள்.
(கடக புருஷகார ஸ்வரூபம் )

————————————————————————————————-

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

பரத்வ த்வயம் -எங்குச் சென்றாகிலும் கண்டு -உதார ஸ்வ பாவன் -இதுவோ தகவு -அவன் பரிகரம் போலே செருக்கு அடிக்காமல்
செங்கட் கரு முகிலைச் -வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!-அதி பரிச்சயத்தால் பராக்கு அடிக்காமல்
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!–உங்களால் பயன் -எனக்கு –
செங்கட் கருமுகிலைச் வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த-நானும் அறியாமல் சித்தம் கவர்ந்தான் -அபராத ஹேதுவான அந்த
செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங்கற்பகத்தை-அழல விழிக்கும் -அழகைக் காட்டி அபஹரித்தான் –பரபாகம் -காள மேக
பொன் மலை கருடன் -கார் முகில் அவன் -நினைத்தது முடித்த ப்ரீதியால் சிவந்த அதரம் –
தன் பேறாக கொண்டதால் -செழும் கற்பகம் -தன்னையே கொடுப்பானே
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி எங்கு சென்றாகிலும் –

யான் வளர்த்த கிளிகாள்! உங்களுக்கு யான் ஒன்று சொல்லுகிறேன் வாருங்கோள்; கொடிய கண்களையுடைய பெரிய திருவடியை ஊர்ந்து வந்து,
தீவினையேனாகிய என்னுடைய நெஞ்சினைக் கவர்ந்த சிவந்த திருக்கண்களையுடைய கரிய மேகம் போன்றவனை, சிவந்த திருவாயினையுடைய
செழுமை பொருந்திய கற்பகம் போன்றவனை எங்கே சென்றாகிலும் கண்டு, தகுதி இதுவோதான் என்று சொல்லுங்கோள்.
வெங்கண் – தறுகண்மையுமாம். ஊர்ந்து வந்து கவர்ந்த கருமுகில் என்க.

தன்னுடைய கிளிகளைக் குறித்து, எங்கேனும் சென்றாலும் அவனைக் கண்டு
இதுவோ உம்முடைய தக்கோர்மை இருக்கும்படி என்னுங்கோள் என்கிறாள்.

நுங்கட்கு யான் உரைக்கேன் –
யாருக்குச் சொல்லும் வார்த்தையை யாருக்குச் சொல்லுகிறது?
தனக்கு முன்னே ஆற்றாமையோடே அன்றோ அவை தாம் இருக்கின்றன;
ஆற்றாமை சொல்லுவியாதது இல்லை யன்றோ.

நுங்கட்கு யான் உரைக்கேன் –
உங்களுக்குச் சொல்லுமது அன்று;
நான் சொல்லுமது அன்று.
வியசனத்துக்கு உரியவர்கள் இருக்க, வேறே சிலர் வார்த்தை சொல்லுமாறு போலே

வம்மின் –
‘இவளைப் பிழைப்பித்தோமாம் விரகு ஏதோ?’ என்று சிந்திக்கிற உங்களுக்கு ஒரு விரகு சொல்ல வாருங்கோள்.

யான் வளர்த்த கிளிகாள் –
என் வயிற்றிலே பிறந்த உங்களுக்கு அவன் பரிகரம் போலே செருக்கு அடித்திருக்கக் காலம் உண்டோ?
செருக்கு அடித்திருக்கப் பிறந்தீர் கோளோ!

நுங்கட்கு –
“சுகமும் துக்கமும் நமக்குச் சமம்” ஏகம் துக்கம் சுகஞ்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5 : 18.-என்றிருக்கிற உங்களுக்கு.

யான் –
உங்கள் மேலே என்னுடைய எல்லாப் பாரங்களையும் வைத்திருக்கிற நான்.

உரைக்கேன் –
நீங்கள் அறியாதது உண்டாய்ச் சொல்லுகிறேன் அல்லேன்; ஆற்றாமையாலே சொல்லுகிறேன்.

வம்மின் –
முன்கை மூன்று காதமாய் இருக்கிறபடி. -வருக என்று கை கூப்பி வணங்கி -கிளி மிகவும் கிட்ட வர கேட்டது போலே –

யான் வளர்த்த –
நெய்யமர் இன் அடிசில் நிச்சல் பாலொடும் ஊட்டி வளர்த்த.

கிளிகாள் –
“வளர்த்ததனால் பயன் பெற்றேன்”திருநெடுந்தாண்டகம், 14.– என்கிறபடியே,
அவன் திருநாமங்களை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கவும் அமையும் அன்றோ;
அது தானே “கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்” திருவாய். 9. 5 : 8-என்கிறபடியே,
ஆற்றாமைக்குக் காரணமாகை யாலன்றோ உங்களை அவன் பக்கல் போக விடத் தேடுகிறது.

வெம் கண் புள் ஊர்ந்து வந்து –
வெவ்வியவான கண்களை யுடைத்தான புள்ளை நடத்திக் கொண்டு வந்து.
வருகிற போதே வழியில் விரோதிகளைப் போக்குகையிலே சினத்த கண்களை யுடையவனாதலின் ‘வெம்கண்’ என்கிறது.
அன்றிக்கே,
பிரித்துக் கொண்டு போகிற போது கண் பாராதே பிரித்துக் கொண்டு போனவனாதலின் ‘வெம்கண்’என்கிறது என்னுதல்.
“அங்குரூரன் கொடிய மனமுடையவன்” என்னுமாறு போலே. “அக்ரூர: க்ரூர ஹ்ருதய:” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 30.

வெம் கண் புள் ஊர்ந்து வந்து –
பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜ புத்திரனைப் போலே,
“அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” திருவாய். 1. 4 : 6.-என்றே அன்றோ அடியிலே தூது விட்டது,
அப்படியே வந்தபடி.

வினையேனை –
அவனைப் போலே இரண்டு மனம் படைக்கப் பெறாத பாவத்தைச் செய்தேன்;
புணர்ச்சிக் காலத்தில் அழிதற்கும், பிரிவு காலத்தில் தரித்திருக்கைக்குமாக இரண்டு மனம் உண்டாகப் பெற்றிலேன்.

நெஞ்சம் கவர்ந்த –
நாட்டார்க்கு மனம் மலர்தற்குக் காரணமான விஷயம் என் மனத்தை அழிக்கும்படி ஆவதே!
சாரத்தை எடுத்துக் கொண்டானாய்க் கோதை இட்டு வைத்துப் போனான்;
பூக் கொண்டு புட்டில் பொகடுவாரைப் போலே.
அறமணத் தன்றோ இவர் மனம் இருப்பது; “பூசும் சாந்து என் நெஞ்சம்” திருவாய். 4. 3 : 2.-என்னும்படி.

செம் கண் கரு முகில் –
கண்களாலே குளிர நோக்கி, வடிவினை முற்றூட்டு ஆக்கி நின்ற நிலை.
அன்றிக்கே,
இத் தலையோடே வந்து கலந்த பின்பு, அத் தலைக்கு வந்த நிறைவினைச் சொல்லவுமாம்.
அன்றிக்கே
பிரிவினைப் பற்றிப் பேசிக் கண்களாலே குளிர நோக்கி, அவன் விளைநீர் அடைத்துக் கொண்டு நின்றபடி.

செய்ய வாய்-
நூற்றுக் கணக்கில் புனைந்துரைகளைச் சொல்லப் புக்குப் புன் சிரிப்பினைச் செய்கிற திருவாய்.

செழும் கற்பகத்தை –
விலக்ஷணமான கற்பகத்தை;
வைலக்ஷண்யமாவது, தானே விரும்பித் தன்னைக் கொடுக்கை.
கற்பகம், தன்னைக் கொடுக்கவும் மாட்டாது விரும்பவும் மாட்டாதே;
இவன், தன்னைக் கொடுக்க வல்லவன் அன்றோ
அன்றிக்கே,
தான் கடக்க இருந்தாலும் தன் இரண்டு உலகத்தின் செல்வங்களையும் நான் நினைத்தார்க்குக் கொடுக்கும்படி
எனக்குத் தந்தவனை என்னுதல்.

எங்குச் சென்றாகிலும் கண்டு –
வானவர் கோனைக் கண்டு என்றாரே
‘ஆள் வாரா நின்றது’ என்று கேட்டு ஓலக்கத்தைக் கிளப்பாக் கடக்கப் போய்த் திரை வளைத்துக் கொண்டிருப்பர்.
அன்றிக்கே,
புகை புக்க இடம்-ஈஸ்வர கந்தம் -காரார் திரு மேனி காணும் அளவும் போய்-என்றவாறே
எங்கும் புக்கு – எங்கும் புகுங்கோள் என்னுதலுமாம். என்றது,
பரத்துவம் வியூகம் விபவம் அர்ச்சாவதாரம் ஆகிய இவற்றைக் குறித்தபடி.
அந்தர்யாமி – “அந்தப் பரமாத்வை ஆத்மா அறிகிறான் இல்லை” என்கிறபடியே, ஒளித்திருக்கும் இடம் எங்கும் புக்கு.
“இலங்கையில் அந்த ஜானகியைக் கண்டிலேனாகில் இந்த வேகத்தோடு கூடவே சுவர்க்க லோகத்திற்குச் செல்லுவேன்”
“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம்
அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40.
என்கிறபடியே, ‘பரம பதத்தில் கண்டிலோம்’ என்று மீள ஒண்ணாதே.

இதுவோ தக்கவாறு. என்மின் –
இட பேதம் உண்டானாலும் பாசுரம் இதுவே.பிறர் மனத்தினையும் கவர்ந்து தன் மனத்தினையும் கொண்டு
கடக்க இருக்கையோ தக்கோர்மையாவது?
அவனுக்கு அருள் இல்லை என்கையாவது, -தர்மியை இல்லை என்கை அன்றோ.
தர்மியைச் சேர்ந்துள்ளதான கிருபையும் எங்கள் பக்கல் காணாமையாலே –
அருள் அனைவர் இடமும்- கிருபை அடியவர்கள் இடம் -தமக்கு அதுவும் இல்லை என்று சொல்லுங்கோள்.
நீர்மை கொண்டாடி இருப்பார்க்கு இது அல்லது மர்மம் இல்லை; இதனையே சொல்லுங் கோள்.

——————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-