பகவத் விஷயம் காலஷேபம் -14-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

சதிர்தேன் க்ருதக்ருத்யன் ஆனேன் -சாமர்த்தியம் உடையவன் ஆனேன் -இன்று அடியேன் ஆனேன் –

ஐந்தாம் பாட்டில் –
உம்மை புன்மையாகவும்
உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர்
உம்முடைய புன்மையையும் –
உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும்
சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் –

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம் –
இவருடைய புன்மை -இருந்தபடி

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்
பிறர் நன் பொருள் என்றது -ஐக்ய ஸ்ருதிகளும் சொல்லச் செய்தே– பேதம் ஜீவிக்கைக்காக -பொருள் என்கிறது விரோதி வ்யாவ்ருத்தமான ஸ்வரூபம் –
நஞ்சீயர் வேதாந்தி -வேதாந்தம் பொருளே இந்த பாசுரம் சொல்லுகிறது -தத்வ த்ரயம் -ஷரம் பிரதானம் –போக்தா போக்யம் ப்ரேரிதா –
பிறர் நன் பொருள் -பொருள் அசேதனம் நன் பொருள் சேதனம் பிறர் ஈஸ்வரன் –
சரீராத்மா பாவனை -இயைந்து இருப்பதால் ஓன்று என்று இரண்டும்மூன்றும் என்றும் சொல்லலாமே -கடக ஸ்ருதி-
ஒன்றே என்னில் ஒன்றேயாம் –அன்றே -ஆம் -இன்றே -என்றும் -நன்றே நம் குடி வாழ்க்கை -கம்பர் -யுத்த காண்டம் கடவுள் வாழ்த்து பாசுரம் –
பேய் போல் –நாய் போலே தட்டி திரிந்தேன் -உண்டேன் சம்சார நோய் தீர்ந்தேன் திருவாய்மொழி சாரம் கொண்டே அருளிச் செய்கிறார் –

பிறர் நன் பொருள் நம்பினேன் –
பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை
நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை
1–த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் –
2–விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே -பிறர் -என்கிறது –3—உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இ றே
எண்ணக் கொண்ட விரல்கள் -உண்ணக் கொண்டவை அல்ல -அசேதன மூன்று வகை பத்த முக்த நித்ய வி லஷணன் -ஐந்து விரல்கள் –
எனக்கே பிறர் -என்று பர ப்ரஹ்மம்
பொருள் -என்று த்ரவ்யம்
நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இ றே
அத்தை இ றே நான் அபஹரித்தது
நம்புதல் –ஆசைப்படுதல்
பர த்ரவ்யதை ஆசைப்படுகை இ றே -அபஹாரம் -வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார்
அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –
பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ
ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது
ததீய சேஷமான வன்று இ றே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது
அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்
அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இ றே –
ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இ றே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்
த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இ றே
விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இ றே ரத்னம் களவு காண்பது
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்
உடையவன் சர்வேஸ்வரனாய் இ றே -இருப்பது-

பொருள் -வஸ்து
சத்யஞ்ச என்றும் — உள்ளது என்றும் சொல்லும்ன்படி உண்டாயே போருமது -அசித்தும் நித்யம் -மாறுவதே ஸ்வ பாவம் –
இல்லது -ஒருபடிப்பட இல்லாதது -விகாரம் -ஸ்வரூபம் உள்ளது -விகாரம் இல்லை -ஜீவன் ஸ்வ பாவ விகாரம் மட்டுமே –
பரமாத்மா -ஸ்வரூப ஸ்வ பாவ மாறுதல் எப்போதும் இல்லாமல் -நித்யர்களும் இப்படியே -நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கும் –
அஹம் அர்த்தமாய் என்றும் பிரகாசித்தே போரும் வஸ்து -அஹம் சப்த கோசரத்வம் ஜீவன் என்பர் -என்னுடைய ஜீவாத்மா சொல்லக் கூடாது-
நாபாவோ வித்யதே சத-என்கிறபடியே -தத்வ தர்சி இப்படி சாஷாத்கரித்து அருளிச் செய்வதாக ஸ்ரீ கீதையில் அருளிச் செய்கிறான் –
சத்துக்கு அபாவம் கிடையாது அசத்துக்கு பாவம் கிடையாது பாவம் ஒருபடபட்டு இருக்கை –

நன் பொருள்
விலஷண த்ரவ்யம் –ஒன்பது த்ரவ்யங்கள் -ஆத்மாவும் த்ரவ்யம் ஞானமும் த்ரவ்யம் பரமாத்மாவும் த்ரவ்யம் குணத்துக்கு ஆஸ்ரயம்
-கமன -யாத்ரை உண்டு த்ரவ்யதுக்கு –யாத்ரை -குணத்துக்கு இல்லை –
என் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் -நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள் என்கிறார்
நன்மையாவது –1—பஞ்ச பூதாத்மகம் வஸ்து -என்றும் -மேம்பொருள் -என்றும் சொல்லுகிறபடியே தேஹத்துக்கு வஸ்துதை உண்டே யாகிலும்
அது போலே அநித்யமாய் அநவரத விகாராஸ் பதமாய் அத்யந்த ஹேயமாய் அஜ்ஞ்ஞானமாய் அஸூகமாய் அபோக்யமாய் இருக்கை அன்றிக்கே
2–நித்தியமாய் –3–நிர்விகாரமாய் –3–அத்யந்த விலஷணமாய் –4–ஸ்வயம் பிரகாசமாய் –5–ஸூகமாய்
–6–ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –

பிறர் நன் பொருள் –
இங்குப் பிறர் எனபது சர்வேஸ்வரனை
பிறர் எனபது அந்யரை இ றே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத் மேத்யுதாஹ்ருத -என்றும் -வித்யாவித்யே ஈசாதே யஸ்து சோன்ய- என்றும் சொல்லுகிறபடியே
சேதன அசேதன விசஜாதீயனான சர்வேஸ்வரன் ஆய்த்து அந்யன் ஆகிறான்
உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும்
பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்
அந்யன் ஆகிறான்
கூடி இருக்கச் செய்தேயும் கார்யங்க ளிலே கூட்டுப் படாதவன் இ றே –
சந்தரன் நஷத்ரம் இல்லாவிடிலும் நஷத்ரங்களுக்கு தலைவர் -அனைத்துக்கு உள்ளும் பட்டுக் கொள்ளாமல் -அந்யன் –
அதில் சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில்
ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார்
சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இ றே அவன்
இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இ றே

அவன் என்னது என்று போரும் பதார்த்தமாய்த்து இவ்வாத்மவஸ்து –
நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று
ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் –ஸ்வச்மை ஸ்வ பிரகாசத்வம் -ஜீவன்-
-ஸ்வ த்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் — –சொத்தாலே -ஸ்வாமி இடம் வாசி உண்டே –
சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் –
போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்

பிறர் நன் பொருள்
உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்
இது தேஹ இந்த்ரிய மன ப்ராணா தீப்ய அந்யமாய் இருக்கும் –நெஞ்சால் நினைக்கிறேன் கருவி வேற கர்த்தா வேற
பிராணவாயு -சாஷி சொல்லும் -தீ -புத்தி -இத்தைக் கொண்டு உறுதி கொள்வார்
ஞானம் வேற நெஞ்சு வேற புத்தி வேற
அவன் பிரதான புருஷாவ்யக்த காலாநாம் பரமனாய் இருக்கும் –

நன் பொருள் தன்னையும்
இவ்வஸ்துவைக் கிடீர் நான் ஆசைப்பட்டுப் போந்தது -அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ
அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌச்துபத்தை அன்றோ நான் களவு கண்டது
ஆத்மான மஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம் -பிபர்த்தி கௌச்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்கிறபடியே
அறவனை யாழிப் படையானை -என்று சொல்லும் படியான ப்ரஹ்ம ஸ்வ த்தை யன்றோ நான் அபஹரித்தது
பரம தார்மிகனாய் பவித்ரா பாணியாய் இருப்பான் ஒரு சிஷ்டனுடைய த்ரவ்யத்தை யன்றோ நான் அபஹரித்தது
அகார்த்தாயைவ ஸ்வம் -என்று அபியுக்த பிரயோகம் உண்டாகையாலே -அ இதி ப்ரஹ்ம -என்று
அகார வாச்யன் பிரமம் ஆகையாலே ப்ரஹ்ம ஸ்வம் இ றே இது –

பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
ஸ்வம்மும் -விலஷணமாய் -ஸ்வாமி யும் விலஷணமுமாய் இருக்க வன்றோ நான் இவ்வாத்மவஸ்துவை அபஹரித்தது
இவ்வாதம அபஹாரம் ஸ்வ தந்த்ரனுக்கும் தேஹாத்மா அபிமாநிக்கும் உண்டாமதாகையாலே இத்தால் தேஹாத்மா அபிமானம் சொல்லிற்று
அப்போது நம்பினான் பிறர் நன் பொருள் தன்னையும் என்று தேஹ ரஷண சேஷமாக-பர த்ரவ்யேஷ் வபித்யானம் -என்கிறபடியே
அந்ய த்ரவ்யங்களையும் ஆசைப்பட்டுப் போனதேன் என்றுமாம்
அங்கு நன் பொருள் என்றது அவர்கள் நினைவாலே சொல்லுகிறது
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
அவ்விடம் தன்னிலும் மேல் எழுந் த்ரவ்யங்களை யாசைப்பட்ட வளவன்றிக்கே அவர்கள் சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும்
மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
ஆத்மாபஹாரத்தாலே பலித்த பலம் சொல்லுகிறார்
மஹா விசுவாச பூர்வகம் –என்று இருக்கும் இருப்பு எல்லாம் ஸ்திரீகள் பக்கலிலேயாய் ஆகிறது
விரைகுழல் மடவார் கலவியை விடு -என்றும் சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது -என்றும் அபியுக்தரான என்னாச்சார்யர்கள்
சொன்ன விஷயத்தைக் கிடீர் நான் அநாதி காலம் விஸ்வசித்துப் போந்தது -மடவார் சொல் உள்ள அருளிச் செயல் பாசுரங்கள்
மடவார் என்கிற பஹூ வசனத்தாலே ஒன்றில் பர்யாப்தம் ஆகாமையாலே கண்டவிடம் எங்கும் நுழையும் படி சொல்லுகிறது
பிராப்த விஷயம் கொள்ளவுமாம் விடவுமாம் பிறர் பிராவண்யம் விட்டே இருக்க வேண்டுமே -என்பர்

நம்பினேன் மடவாரையும் –
ஈஸ்வரனுக்கு அபிமதமான வஸ்துவை அபஹரித்த நான் –
தேஹாத்ம அபிமாநிகள் -என்னது -என்று அபிமானித வஸ்துவை அபஹரிக்க சொல்ல -வேணுமோ
ராஜ ரத்னம் அபஹாரம் பண்ண அஞ்சாத  நான் –
ஷூ த்ரர் உடைய விற்கும் வைக்கோலும் அபஹரிக்க அஞ்சுவேனோ
-இத்தால்
ஈஸ்வர அபிமான வஸ்துவை அபஹரித்தேன்
அந்யர் உடைய அபிமத வஸ்துவையும் அபஹரித்தேன் -என்றபடி –
மடவார் -என்கையாலே -அங்கும் அனந்யார்ஹங்களை அபஹரித்தேன் -என்கை-

முன் எலாம் –
இப்படி தேஹாத்ம -அபிமாநியாயும் –
விஷய -ப்ரவணனாயும் –
போந்த காலம் தான் சாவதியாகப் பெற்றதோ –
ஈச்வரனோபாதி ஆத்மாவும் நித்யம்
காலமும் அநாதி
அசித் சம்பந்தமும் அநாதி
ஆகையாலே -முன்புள்ள காலம் எல்லாம் இதுவே யாத்ரை -என்கை-

நம்பினேன் மடவாரையும்
தேஹமே ஆத்மா வென்று இருக்கையாலே ஆத்மஜ்ஞானம் பிறந்தால் பரமாத்மாவே புருஷார்த்தம் ஆமா போலே
உடம்புக்கு உடம்பே போக்யம் ஆகையாலே பர ஸ்திரீ சரீரங்களே போக்யங்கள் என்று ஆசைப்பட்டுப் போந்தேன்
மடவாரையும்
ஆத்மகுண பூர்ணைகளாய் பாதிவ்ரத்ய தர்ம நிரதைகளான சாத்விகளை யாய்த்து நான் ஆசைப்பட்டது
நம்பினேன் மடவாரையும்
அன்றிக்கே சாமான்யத்தில் ஸ்திரீகளையும் ஆசைப்பட்டுப் போனதேன்
மடவார் –
அவர்கள் புருஷ வசீகாரம் பண்ணுவது தந்தாமுடை மடப்பத்தைக் காட்டி யாய்த்து
சதிரிள மடவார் என்று ஆழ்வார் பாடே கேட்டு வைக்கையாலே மடவார் என்கிறார்
மடவார்
அதிலும் ஓன்று இரண்டை யாசைப்படுகை யன்றிக்கே பல விஷயங்களையும் ஆசைப்பட்டேன்
ஒன்றிலே துவக்கலாவது அதில் போக்யதை உண்டாகில் இ றே -அது இல்லாமையாலே பல விஷயங்களையும் ஆசைப்பட்டுப் போந்தார் யாய்த்து
அதுவும் அன்றிக்கே பூய ஏவாபி வர்த்ததே -என்று இக்காமம் தான் அபிவ்ருத்தம் ஆகையாலே தத் அனுரூபமான விஷய பஹூத்வமும் அபேஷிதம் இ றே
ஆகையாலே
அஸ்வதந்த்ரமான ஆத்மாவை ஸ்வதந்தரமாக நினைத்து இருந்தேன்
அநாத்மாவான தேஹத்திலே ஆத்மபுத்தி பண்ணினேன்
அபுருஷார்த்தங்களான அர்த்த காமங்களிலே புருஷார்த்த புத்தி பண்ணினேன் -என்றார் யாய்த்து
இவ்வபி ப்ரயோகங்களாலே –உம்மைத் தொகைகளால்–இவை ஒவ் ஒன்றே போரும் அநர்த்த ஜநகமாகைக்கு-ஆயிருக்க
இவை எல்லாவற்றையும் அனுஷ்டித்துப் போந்தேன் இவ்வனுஷ்டானம் உமக்கு எப்போது உண்டாய்த்து என்ன

முன் எலாம்
முற்காலம் அடைய
அநாதிர் பகவான் கால -என்று காலம் நித்யம் ஆகையாலும் அனுஷ்டாதாவான சேதனன் நித்யன் ஆகையாலும் தத் உபகரண
பூத கரண களேபரங்களும் பிரவாஹதயா நித்யங்கள் ஆகையாலும்
இவ்வநர்த்த புத்திக்கு அடியான அவித்யா கர்ம வாசனைகள் நித்யங்கள் ஆகையாலும் இதுவே எனக்கு யாத்ரையாய்ப் போந்தது
அக்ருத்யங்கள் ஓன்று இரண்டாகிலும் ஆஸ்வசிக்கலாம்-காலம் பரிமிதம் ஆகிலும் கண்டு தரிக்கலாம் –
அநாதி காலம் அபரிமிதமான அனர்த்தங்களை அனவரதம் அனுஷ்டித்துப் போந்தேன் என்று தாத்பர்யம் –

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று
ஆழ்வார் திருவவதரிக்கையாலே அங்குள்ளது அடங்க இவருக்கு ஸ்லாக்கியமாய் இருக்கிறபடி
இவ்வூரில் ஐஸ் வர்யத்துக்கு அடியான பூர்த்தியை யுடைய ஆழ்வார் நிர்ஹேதுக கடாஷத்தாலே தம் பக்கலிலே பக்தியை யுண்டாக்கின படியை
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்-என்கிறபடியே வந்த வழி அறிந்திலேன் -இங்கனே பலிக்கக் கண்ட அத்தனை
அபூர்ணமான பகவத் விஷயத்திலே அடியனாம் ஆகாதே பூரணரான ஆழ்வாருக்கு அடியேனே சதுரனானேன் என்கிறார்
ஸ்திரீகளை விஸ்வசித்து இளிம்பனான நான் ஆழ்வாரைப் பற்றி இன்று சதுரனானேன் என்றுமாம்

உம்முடைய புன்மை குறைவற்று -இருந்தது
ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்த அளவு ஏது என்ன –
அத்தைச் சொல்லுகிறார் மேல் –
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு –
என்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஆராயும் அத்தனை அபூர்ணரோ ஆழ்வார்
என்னை உபேஷித்த காலம் இவ்வளவு பாபம் இவ்வளவு என்று பார்க்கும் படி அன்றே
ஆழ்வார் உடைய பூர்த்தி
ஆத்ம அபஹாரம் பண்ணினான் நான் -விஷய பிரவணன் ஆனேன் என்று கை விடும்படி அன்றே
ஆழ்வார் திருவடிகளை நீர் தான் கிட்டின படி என் -என்ன
விஷயங்களுக்கு அர்த்தம் தேடி –
அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க –
அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் –
இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இ றே
ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே
திருநகரியைக் கவி பாடுகிறார் –

கீழ் தம்முடைய புன்மை சொன்னார் -மேல் தாம் ஆழ்வாராலே அங்கீ க்ருதரான பிரகாரம் சொல்கிறார்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று-
நான் அர்த்தாத்ஜ நேச்சுவாய் தேசாந்தர சஞ்சாரம் பண்ணா நிற்கச் செய்தே தைவாயத்தமாக திரு நகரியிலே
மாடங்கள் ஓங்கி இருந்து பொற்கென்று தோற்றிற்று
இங்கே போய் அர்த்த அபஹாரம் பண்ணலாம் -இது தான் நகரி யாகையாலே நாகரிகைகளான மடவாரையும்
இம்மாடங்களிலே காணலாம் என்று அறுதியிட்டு வழி விலங்கி உள் புக்கேன் –
அன்னகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே அவ்விடத்தில் தஸ்கரம் சஞ்சரணம் இல்லாமையாலே
ஓங்காரம் -திருட்டு போகும் -தஸ்கரம்
பஞ்சம் -எனக்கு தான் -நமஸ் அர்த்தம் அறிந்து போகுமே – ஸ்வ ரஷணே ச்வாம்யம்-தொலைய வேண்டும் – துர் பிஷம்
வியாதி -ஐஸ்வர்யம் கைவல்யம் -நாராயணாய சப்தார்த்தம்
திருக்குடந்தை நமஸ் -சப்தார்த்தம் -களைகண் மற்று இலேன்
ஸ்ரீ வில்லிபுத்தூர் -நாராயணாய -ஓங்கி -மழை
அஷ்டார்த்த சம்சித்தி மதீயதே தெரிந்தவர்கள் மதிப்பபர்கள் ஆகிருக்க வேண்டும்
ஒரு வைஷ்ணவ சகாசத்திலே ஷத்ர பந்துவுக்குப் பிறந்த அவஸ்தை போலே எனக்கும் ஆழ்வார் சகாசத்திலே
அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மைக் காண வேணும் என்று புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு
நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்

செம் பொன் மாடம்
ஆழ்வாருக்கு -களை கண் மற்றிலேன் -என்றும் -ஆராவன்பின் அடியேன் -என்றும் சொல்லுகிற பகவத் விஷயத்தில் அத்யுன்னதமான
அத்யவசாய அனுராகங்கள் போலே யாய்த்து மாடங்களின் ஒக்கமும் திண்மையும் பொற்கு எனவும் -ஔஜ்ஜ்வல்யமாய் இருக்கிற படி

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
ஆழ்வாருடைய மயர்வற மதி போலே யாய்த்து இத்தேசத்திலும்
இருள் அற்று ஒளியேயாய் இருக்கும் படி
அத்தேசிகரும் ஆழ்வாரோட்டை ஆசக்தியாலே பொலிந்து நிற்குமவர்கள் ஆய்த்து
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
மாற்று மினுங்கின பொன்னாலே சமைந்த மாடமாய் -அதுதான்
அத்யர்க்கா நலதீப்தம் தத்ச்தானம் விஷ்ணோர் மஹாத்மன-என்ற பரமபத தேஜஸ்ஸூ போலே பார்க்கவும் அணுகவும் ஒண்ணாத படி இருக்கை
அன்றிக்கே கண் படைத்தார்க்கு எல்லாம் காணலுமாய் கிட்டவுமாம் படி ஸ்ப்ருகணீயமான தேசம்
செம் பொன் மாடம்
துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் -என்று உகந்து அருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு
உபாதேயம் ஆனாப் போலே இவருக்கும் ஆழ்வார் உடைய மதி நலங்களோ பாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது யாய்த்து –
ஆகையாலே அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசமாய்த்து –

நம்பிக்கு அன்பனாய் –
அர்த்த காமாதிகளை நம்பிப் போந்த நான் ஆழ்வாருக்கு அன்பனாய் விட்டேன்
அர்த்த காமங்களின் போக்யதையும் ஆழ்வார் பாடே காங்கையாலே அவர்க்கே அன்பனாய் விட்டேன்
கீழ பாட்டிலே அன்னையாய் அத்தனையாய் எண்கையாலே மாதா பிதா என்னும் இடம் சொன்னார்
இதில் யுவதய விபூதி என்னும் இடம் சொல்லுகிறார் –

அடியேன்
ஸ்வ தந்த்ரனாய்ப் போந்த நான் நம்பிக்கு சேஷம் ஆனானேன்
ஆழ்வாருக்குப் பிறந்த மதி நலன்கள் போலே கிராமத்திலே வருகை அன்றிக்கே அன்பு முற்பட்டு அடிமையில் பட்டது
நம்பிக்கு அன்பனாய் அடியேன்
ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தராகையாலே இவருடைய கடாஷ லஷ்யன் ஆகையாலே அம்மாத்ரத்திலே பதத்ரயார்த்தத்திலும் முன்னாய் விட்டேன்
இனி வாசி அங்கு ததீய சஹமான தத் விஷயமாய் இருக்கும்
இங்கு ஆழ்வாருக்கேயாய் இருக்கும் –

சதிர்த்தேன் –
சதிரன் ஆனேன் -மோஷயிஷ்யாமி என்றவன் முழங்கைத் தண்ணீர் பார்த்து இராதே ஆழ்வாருடைய ப்ரபாவத்தையிட்டு வென்றேன் –
நம்பிக்கு ஆள் உரியனாய் சதிர்த்தேன்
மாற்பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு என்கிறபடியே ஆழ்வாருக்கு அன்பனாய் அந்ய விஷயங்களை வென்றேன்
நம்பிக்கு அன்பனாய் அடியேனே
ஆத்மாத்மீயங்கள் இரண்டும் ஆழ்வாராய்த்து –
அவர் தாமே யானே நீ என்னுடைமையும் நீயே என்று தத் விஷயத்திலே சமர்ப்பித்தால் போலே
மடவாரையும் நம்பினேன் சதிர்த்தேன்
அவர்கள் சதிர் இள மடவார் ஆகையாலே இளிம்பு பட்ட நான் ஆழ்வாரை யண்டை கொண்டு சதிரனாய் விட்டேன் –
பத த்ரய அந்வயம் -அடியேன் -சேஷத்வ ஞானம் பிரணவ
அன்பனாய் -நாராயணா யா சப்த்தார்த்தம்
நம்பி -மத்யம பதார்த்தம் -s பூரணன் -அனன்ய உபாயத்வம்

இன்றே –
ஈஸ்வரனை அண்டை கொண்டு ஆரப்த சரீரபாத சமயம் பார்த்து இருந்து பின்னையும் வாஸனா ருசிகள் ஆகிற
மண் பற்று விடாமல் விரஜை அளவும் போக வேண்டும்படி இருக்கை யன்றிக்கே இன்றே சவாசனமாக விட்டேன்
இன்றே
அன்று அப்படி யானேன்
இன்று இப்படி யானேன்
நடுவில் இதுக்கு என் கையில் கிடப்பதொரு ஹேதுவைக் கண்டிலேன்
இதுக்கு வரவாறு ஓன்று இன்றிக்கே இருக்க வாழ்வு இனிதாம் படி விழுந்தது என்று விஸ்மிதர் ஆகிறார்
இன்றே
அன்று ஈஸ்வரனும் கூட நிற்கச் செய்தே சம்சரித்துப் போனதேன்
இன்று ஆழ்வார் சந்நிதி மகாம்யத்தாலே இவ்வளவும் பிறந்தது என்று ப்ரீதர் ஆகிறார் –

இன்று அன்பனாம் –
இதுக்கு முன் எனக்கு ஒரு நினைவு இன்றிக்கே இருக்க அசிந்திதமாக ஆழ்வார் திருவடிகளிலே
ப்ரவணனாகக் கண்டேன் –
அநாதி காலம் ஆத்ம அபஹாரம் -பண்ணியும் விஷய ப்ரவணனாயும் போந்த இது
இழவுக்கு உடலாகை அன்றிக்கே –
சரண்யா ப்ரபாவத்தாலே
பேற்றுக்கு உடலாக கிருஷி பண்ணினாரைப் போலே பலித்துக் கொண்டு நிற்க கண்டேன் –
நான் -என்னது -என்று இருக்கை தவிர்ந்து
இதர விஷயங்களில் விரக்தராய்
பகவத் சேஷத்தளவு நில்லாதே அதின் எல்லையான ததீய சேஷத்தளவிலே நின்றார் ஆழ்வார்
இந்த க்ரம அபேஷை அன்றிக்கே
முதல் அடியிலே நான் ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணனாகப் பெற்றேன் –
படிக்கட்டு மேலே ஏறாமல் பெற்றேன் -வரவாறு அறியாமல் இன்று சதிர்தேன் -பேற்றைப் பாடுவேன் -எப்படி வந்தது என்பதை அறியேன்

அடியேன் –
ஆழ்வார் உடைய வைபவத்தை அனுசந்தித்து -அதுக்கு -தோற்று  அடியேன் -என்கிறார் –
குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே அதுக்குத் தோற்று அடியேன் என்கிறார் –
வைத்த மா நிதியை வைத்துக் கொண்டு இருந்தாரே -அந்த குணத்துக்கு தோற்று -என்றவாறு
ஆச்சார்யர்களை நம்பி என்னக் கற்பித்தார் போலே
ஆசார்யர்கள் அழைத்தால் -அடியேன் -என்கிறதும் ஸ்ரீ மதுரகவிகள் வாசனையாலே யாயிற்று-

-சதிர்த்தேன்
சதிரை உடையேன் ஆனேன்
ஈஸ்வர சேஷமான வஸ்துவை -என்னது -என்று இருக்கைக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் மேல் பட்ட சதிர் கேடு இல்லை இ றே
அவற்றை விட்டு –
பகவத் விஷயத் தளவில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படி சதிரை உடையேன் ஆனேன் –

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading