திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-
திரிதந்தேன் ஆகிலும் -பகவத் விஷயத்தில் -ஆழ்வார் விஷயாந்தரத்தில் விழுவார் திரிதந்தார் ஆகில் –
தேவபிரானுடைக்-கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
தேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில்
இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்
பகவத் விஷய ப்ரீணநமாக ஆச்சார்யா விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ஆச்சார்ய ப்ரீணநமாக பகவத் விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் ச ச மம ப்ரிய-என்கிறபடியே ஒருவருக்கு ஒருவர் ப்ரிய விஷயமாய் இருக்கும் இ றே
ஒருவனை ஒருவன் உகந்தானாவது அவன் உகந்தாரையும் உகக்கை யாய்த்து –
இவர் கீழ் தேவு மற்று அறியேன் என்று நம்மையும் மறந்து ஆழ்வார் பக்கல் ப்ரவணர் ஆனாரே
எல்லாம் கூட நம்மை அறிவித்தவர் என்று இ றே ஆழ்வார் பக்கல் இவர்க்கு ஆதாரம்
இப்படி நம்மை யுகந்தாருக்கு இவர் ப்ரீதராம் இடத்தில் -மம மத்பக்தபக்தேஷூ ப்ரீதிரப்யதிகா பவேத் -அன்றோ
ஆகையாலே நாம் கொடுக்கும் பாரிஸில் எது என்று பார்த்து ஆழ்வார் பக்கல் பக்தி பூரணமான இவர் திரு உள்ளத்திலே
நீர் வெள்ளத்திலே நெய்தல் பாரித்தாப் போலே தன்னுடைய வடிவைக் கொடுவந்து பாரிக்க
இதைக் கண்டு ப்ரீதரான இவர் இதுக்கு நிமித்தம் என் என்று ஆராய்ந்து பார்த்து அது பகவச் சேஷத்வ ஜ்ஞானத்தாலும் வந்தது அன்று
-பாகவத சேஷத்வ மாத்ரத்தாலும் வந்தது அல்ல -பகவத் ஆஸ்ரயணத்தாலும் வந்தது அல்ல
எல்லாம் கூட நான் ஆழ்வாருக்கு அனன்யார்ஹ சேஷ பூதனாய் பெற்ற பேறு இ றே இது என்று ஸ்வ கதமாக ப்ரீதர் ஆகிறார்
ஆச்சார்ய விஷயத்தைப் பற்றி இருப்பான் ஒருவனை பகவத் விஷயம் தானே மேல் விழும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் இது வி றே
பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்
-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –
மூன்றாம் பாட்டில் -தேவு மற்று அறியேன் -என்று -புருஷார்தங்களோடே கூட பகவத்
விஷயத்தையும் காற் கடைக் கொள்ளக் கடவீரோ -என்ன –
எனக்கு அபுருஷார்த்தம் என்னும் அளவாயிற்று காற் கடைக் கொண்டது –
ஆழ்வார் உகந்த விஷயம் -என்னும் இவ்வழியாலே -தேவு மற்று அறியிலும் அறிவன் என்கிறார் –
1–சூர்ப்பணகையைப் போலே கிடந்தானை கண்டு ஏறும் அது இ றே தவிர்த்துக் கொண்டது –
2–விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று
பெரியாழ்வாரை முன்னாகப் பற்றும் ஆண்டாளைப் போலே ஆழ்வார் முன்னாகப் பற்றும் பற்றுத் தவிர்ந்திலரே –
ஆழ்வார் முன்னாக வரும் உத்தேச்யத்தை தவிர்ந்திலர் இ றே
பவத பரமோ மத -என்று கேட்க -தர்மோதிகதாமோ மக என்று ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதமாய் வருமது ஆதரணீயம் இ றே இவர்க்கு –
3–திரிபுரா தேவியார் வட கீழ் மூலையில் தத்வத்தையும் ஆஸ்ரயணீயாம் என்று உடையவர்
அருளிச் செய்தார் ஆகில் -எனக்கும் அதுவாம் அத்தனை அன்றோ -என்றாள் –
4–குணமலைப் பாடி உடையார் காங்கேயர் தெற்கே எடுத்து விட்ட போது
பிள்ளை ஆத்தான்–கோயில் ஆச்சான் -என்பர் நம்பிள்ளை -இருவரும் ஒருவராக இருக்கலாம் –
அங்கே குறைவறுப்புச் சமைக்க -அவர் -உமக்கு வேண்டுவது என் –
என்று கேட்க -இவர் உம்மைக் கொண்டு பண்டே உபகாரம் கொண்டோம் காணும் -என்ன
ஆவது என் என்னை அறியாதே வருவதோர் உபகாரம் உண்டோ -என்ன-
எங்கள் ஆச்சார்யர் நான் கோயிலில் மண் பெற்றது-திருவரங்கத்தில் குடிசை கட்டி வாழ்ந்தது – அவ் வேளானாலே -என்று
அருளிச் செய்ய கேட்டு இருந்தோம் -இதுக்கு மேற்பட்டதோர் உபகாரம் உண்டோ -நமக்கு -என்றார் –
5–உடையவர் வெள்ளை சாத்தி எழுந்து அருளின காலத்தில் அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையாரை
பெருமாளை திருவடி தொழ வேண்டா -என்று விலக்க
ஆழ்வானை -நீர் ஆர் எனக்கு விரோதிகளோ நீர் புக்குத் திருவடி தொழல் ஆகாதோ -என்ன
ஆத்ம குணம் மோஷ ஹேது என்று இருந்தோம் -அது பந்த ஹேதுவான பின்பு
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யறுத்துக் கொள்ளவோ -என்று மீண்டு போந்தார்-
திரி தந்தாகிலும்
ந ச புநா வர்த்ததே -என்கிறது பகவத் விஷயத்தை இ றே
அத்தை முதல் அடியாகக் கொண்டு முடிந்த நிலத்தளவே போனால்
போன வழி எல்லாம் மீள வேண்டும் படி இ றே ஆழ்வார் திருவடிகளில் தமக்கு உண்டான பாரதந்த்ர்யம் இருக்கும் படி
திரி தந்தாகிலும் –
திரி தருகை -யாவது மீளுகை –மீண்டாகிலும்
திரிதல் -என்றது கடைக் குறையான சொல்லாய் -திரி தந்தாகிலும் -போன வழி எல்லாம் மீண்டாகிலும் –
-அதாவது –
திருவாய்மொழிப் பாவை விட்டு –
இசைகளை விட்டு –
ஆழ்வாரை விட்டு –
அவர் உகந்த விஷயம் என்று பிரதம அவதியில் வந்து –
தேவபிரானுடைக்கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
நித்ய ஸூ ரிகளுக்குப் படி விடும் வடிவு காணும் இவர் வேண்டா என்கிற விஷயம் இருக்கும் படி
இவ்வளவும்–பெருமாள் வார்த்தை – இவர்க்கு உத்தேச்யராகப் பெற்றிலோம் ஆகிலும் உத்தேச்யருக்கு உத்தேச்யராய்ப் பெற்றோம் இ றே
பானௌ க்ருஹீத்வா விதுரம் சாத்திய கிஞ்ச மஹாயசா-ஜ்யோதீம்ஷ் யதித்யவத் ராஜன் குருன் ப்ரச்சாதயன் க்ரியா -என்கிறபடியே
நெஞ்சால் பொருந்தாமை அன்றிக்கே கண்ணால் காண்கையும் மிகையாய் இருக்கிற படி -அங்கே கண் பொருந்திற்றெ அனைவருக்கும் மனஸ் பொருந்தா விடிலும் –
த்ருனௌ ரூப சம்பன்னௌ என்று இ றே முறைப்படுவார் வார்த்தையும் -விஷயம் இருந்தபடி பேச வேணும் இ றே
அவளுக்கு ஆசை பெருமாள் இடம் -இவருக்கு ஆச்சார்யர் உத்தேச்யர் என்று ஈடுபடுகிறார் –
கரிய –
இவ்வளவு நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கிற போதும் கண்கள் சிவந்து என்று தொடங்கி அடியேன் உள்ளான் என்று
ஆழ்வார் தாம் அனுபவிக்கிற போதும் வெளிறாய் இருந்தது –
இம்லி தளா புளிய மரம் -பிருந்தாவனம் -கண்ணன் கோபிமாரை பிரிந்து வெளுத்து இருப்பானாம்
இவர் அனுபவித்தவாறே தன்னிறம் இட்டதாயிற்று
என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திருவுடம்பு என்று ஆழ்வார் அநுபவித்தபோதும் பொன் என்ற அளவத்தனை போக்கிக் கறுத்தது இல்லையே –
கோலத்
ஆனைக்கு உதவ வந்தாப் போலே இருந்தபடியே வருகை அன்றிக்கே இங்கு அனுபாவ்யனாய்
வருகிறவன் ஆகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய்த்து வந்தது
அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இ றே போவது –
திரு உருக் –
கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
-திருவே ஹாராமாக உள்ள திருவார மார்பு -திருவும் ஹாரமும் உள்ள மார்பு
நாச்சியார் திருமொழி சேவா காலம் திருமலையில் திரு மஞ்சனம் கண்டு அருளும் பொழுது –
அவ்விருண்ட வடிவுக்கு மின் போலே ப்ரகாசிகையாய் இருக்குமவள் யாய்த்து-
இவளைக் கண்டாலாய்த்து அவ்வடிவையும் காணலாவது-புருஷகார பூதையாக இருக்க அடைவன்
திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்கிறபடியே ஸ்வரூபத்தாலே ஸ்வரூபத்துக்கு பிரகாசிகையாய் இருக்கும்
கரிய திரு உரு தான் பிராட்டி செய்யாள் பட்டு பொன் மேனி அங்கே –
விக்ரஹத்தாலே விக்ரஹத்துக்கு பிரகாசிகையாய் இருக்கும் அவள் தான் –
ஸ்வரூபம் ஸ்வ பாவம் திரு மேனி மூன்றுக்கும் திருவே அடையாளம் நிரூபகம் –
மீன் உடம்பு தோறும் நீர் போலே இவள் அவன் திரு மேனியில்
பெருமாள் ஸ்வரூபம் இவள் ஸ்வரூபத்தால் பிரகாசப் படுத்துவாள்
உபாயத்வம் அவன் ஸ்வரூபம் புருஷகாரத்வம் அவள் ஸ்வரூபம்
அப்ரமேயம் -மாரீசன் -ஸ்ரத்தாயா தேவத்வம் அஸ்நுதே
காண்பன் நான்
இவ்வடிவை ஸ்ரவண மாத்ரத்திலே யாதல் -மனன மாத்ரத்தாலே யாதல் -நிதித்யாசன மாத்ரத்திலே யாதல் அன்றிக்கே
ப்ரத்யஷ சமாநாகாரமாம் படி அனுபவிக்கப் பெற்றேன் –
அவை வேண்டுவது இவன் காண ஆசைப்படும் போது இ றே -கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் -ஆழ்வார் –
இங்கு அப்படி அன்றிக்கே அவன் தானே ஆதரித்து மேல் விழுகையாலே எனக்குக் கண்ணாலே காணுமா போலே காணலாய்த்து-
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு
ஒழிவிலன் என்னோடுடனே என்று ஆழ்வாரை அனுபவிப்பித்தால் போலே என்னையும் அனுபவிப்பித்தான்
நான் காண்பன்
தேவு மற்று அறியேன் என்று காணாமைக்கு கண்களைத் தெரிய வைத்த நான் கிடீர் கண்டேன்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
பிராட்டிக்கு நித்ய அனுபாவ்யமாய் ஸூ ரிகளுக்கு சதா தர்சநீயமுமான விக்ரஹத்தைக் கிடீர் விமுகனான நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
அவன் நேருவது எல்லாம் நேரந்தான்
நானும் ஒரு பார்வை விசேஷம் பார்ப்பாரைப் போலே பார்த்தேன் என்னவுமாம்
நவநீத சௌர்யத்தில் உட்பட நாக்கு நீட்டாதவர் பர தசையைக் கண்டால் பார்த்து விடச் சொல்ல வேண்டாவே-
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் –
தேவபிரான் –
நித்ய ஸூ ரிகளுக்கு தன்னை முற்றூட்டாக அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும் உபகாரகன் –
திரும்ப வராத இடத்தில் நாம் சேவிக்கும் தேவ பிரானை திரும்பி வந்தேன் ஆகில் காண்பேன் என்று தைர்யமாக அருளிச் செய்கிறார் –
இவர் நின்ற நிலை குலைந்து –
பகவத் விஷயத்திலே நிற்கும் போதும் -அதின் எல்லையான நித்ய ஸூ ரிகள் யாத்ரையாய்
ஆயிற்று இருப்பது –
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு-கரிய உரு கோல உரு திரு உரு –
நித்ய ஸூ ரிகளுக்கு படிவிடும் வடிவு -காளமேக நிபஸ்யாமமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இ றே இருப்பது –
கோலமே தாமரைக் கண்ண தோர் அஞ்சன நீலமே -3-8-8–என்று ஆழ்வார் வாய் புலத்து
கேட்டிருக்குமவர் ஆகையாலே பேசுகிறார் –
திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்-கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பார்த்தேனே யாகிலும் ஆழ்வார் திரு நிறம் போலே பொன்னிறமாய் இருக்கிறது அன்றே
அது வேற்று நிறம் ஆகையாலே கண்டு விட்டேன் இத்தனை
இது போலே வகுள கந்தியாய் இராதே துளசி கந்தியாய் இருக்கையாலே வேற்று மணம் உண்டாய் இருக்குமே
தெய்வம் என்று அறிந்து -அவரை நாம் தேவர் என்று அஞ்சினம் போலே -ஒதுங்கினோம் –
அடைவன் அல்லன் காண்பன் மட்டுமே
கீழே மூன்று படிகள் இல்லாமல் காண்பன் -பெருமையில் அர்த்தம் –
தேவபிரானுடைக்
இவர் திரு உள்ளத்திலே ஈஸ்வரன் கொடு வந்து பாரித்துக் காட்டின வடிவு நித்ய ஸூ ரிகளுக்குப் படிவிடும் வடிவாய்த்து –
அவர்களையும் இவரையும் பார்த்தால் அவர்கள் நமக்கே நல்லவர்கள் -இவர் ஆழ்வாருக்கே நல்லவர்
இவருக்கு அன்றோ இவ்வடிவை நாம் பிரகாசிப்பது என்று இவருக்குக் கொடு வந்து அனுபவிப்பித்தான் –
பக்தாநாம் த்வம் பிரகாசசே -என்கிற இடத்தில் பக்தர் ஆகிறார் இவர் ஆய்த்து-
காண வாராய் என்று ஆழ்வார் துடிக்க இவர் காண்பன் என்கிறார் -பக்தர் -என்றால் பக்த பக்தர் என்றதாயிற்று
பரம யோகிகள் யோகம் கை புகுந்தால் -ஊர்வசி உடைய வடிவை வர்ணிக்குமா போலே
இவரும் இவ் விஷயத்தை வர்ணிக்கிறார்
கரிய கோலம் என்று ஸ்ப்ருஹை பண்ணும்படி ஆழ்வார் வர்ணிக்க கேட்டு இருந்த படியாலே
காண்பன் –
சாஷாத் கரித்து அனுபவிக்கிற இவரை விட்டால் -பரம பத நிலையனை யாயிற்று சாஷாத் கரிப்பது –
இவருக்கு எட்டும் தூரம் தேவ பிரான் -வைகுந்தம் இவர் இருக்கும் இடம் தானே-
நான் –
தேவு மற்று அறியேன் -என்று
பகவத் விஷயத்தை சந்யசித்த நான் – அஹம் வேதமி -அஹம் அர்த்தம் பல அங்கே அருளினாரே அது போலே
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
சர்வ நிரபேஷரான ஆழ்வாருக்கு –
ஆழ்வார் ஒருவருக்கும் இ றே ஈஸ்வரன் மயர்வற மதி நலம் அருளிற்று
இவர் ஜகத்துக்காக மயர்வற மதி நலம் அருளினார் இ றே
இவரையும் கட்டித் தருமூர் ஆகையாலே வண்மையின் மிகுதி-பெரிய வண் குருகூர்- சொல்லுகிறது
விசேஷஜ்ஞர் அடங்கத் திரண்டவூர் இ றே
அங்குத்தைக்கு நிர்வாஹகரான பூர்த்தியும் உண்டு இ றே இவர்க்கு –
தாம் சொல்லும் போதும் பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-1-11–என்று இ றே சொல்லுவது
இவருடைய நாராயணத்வம் இருக்கிறபடி –
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
மஹா உதாரராய்க் கொண்டு -திரு நகரியிலே திரு வவதரித்த ஆழ்வாருக்கு –
சர்வேஸ்வரன் உடைய ஔதார்யம் ஜீவியாத காலத்திலே தன் வாசி யறிவித்த ஔதார்யம் இ றே
பகவான் ஔதார்யம் -வண்மை-இவர் திருவடிகள் காட்டி உபகரித்தது பெரிய வண்மை –
குருகூர் நகர் -என்று –
வைகுந்த மா நகரை வ்யாவர்த்திக்கிறது
பரம பதம் –எனபது -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்பதாய் ஆழ்வார் படுமது எல்லாம்
இவரும் -திரு நகரி -என்றாலும் -ஆழ்வார் -என்றாலும் அப்படியே யாயிற்று அனுபவிப்பது-
வண் குருகூர் –
வண்மையை யுதைத்தான திரு நகரி
ஆழ்வார் என்னைத் தந்தாப் போலே ஆழ்வார் தம்மைத் தந்த திரு நகரி -சர்வ காம துக்கான தேசம் –
பெரிய வண் குருகூர் –
பரமபதம் ஒரு சிறாங்கை என்னும்படி உபய விபூதியும் ஒதுங்கலாம் படி பெருமையை உடைத்தான வூர்
அன்றிக்கே
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -என்கிறபடியே
விபூதிமானையையும் விபூதியையும் தமக்குள்ளே அடக்கி இருக்கிற ஆழ்வாரைத் தனக்குள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்
மாறனில் மால் தனில் மிக்க தேவு உளதோ
நம்பிக்கு –
நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய பூர்த்தி இருப்பது –
அதாவது -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை
நம்பி -குருகூர் நம்பி பற்றினால் குறுங்குடி நம்பியையும் பற்றினதாகுமே
இருப்பிடம் வைகுந்தம் இத்யாதி -தனக்குள் அடக்கிக் கொண்டு இருக்கும் பூர்ணர்
அடியேன் பெற்ற நன்மையே
இங்கு அடியேன் என்கிறது நான் என்றபடி
ஆள் உரியனான பின்பு நான் இருக்கும் படி இது இ றே -அடியேன் ஆனேன் -சேஷத்வ ஜ்ஞானம் பெற்றேன்
ஆள்-உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே-
அடியேன் என்கையாலே இவருடைய சதுர்த்தியில் அர்த்தத்தைக் காட்டுகிறது -லுப்த சதுர்த்தி-
நம்மாழ்வாருக்கு மதுரகவி ஆழ்வார் அனன்யார்ஹன் என்றபடி –
அதாவது சேஷி உகந்தத்தை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலமாகிறது -எனக்குபிடிக்கா விடிலும் காண்பன் -என்கிறாரே
ஆள் உரியனாய் –
உரிய அடியனாய்
உரிய அடியாருக்கு -தம்தாமுக்கு -என்ற ஒரு பிரிய அப்ரியங்கள் இன்றிக்கே
ஸ்வாமி உகந்ததையே பற்றி
அவன் கை விட்டதை விட்டு இருக்கும் அது இ றே ஸ்வரூபம்
அடியேன் –
ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இ றே
பெற்ற நன்மை –
பெற்ற பகவத் லாபம் –
ஆழ்வாருக்கு உரிய அடியேனாய் பெற்ற பேறு இது இ றே
ப்ராப்த அப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மை அன்று -என்கை-
பகவத் விஷயம் பிராப்தம் என்று அறிந்து பற்ற வில்லை
ஆள் உரியேனாக இருந்ததே காரணமாக அடியேன் பெற்ற நன்மை
பெற்ற நன்மையே
ஆழ்வார் தமக்கு இன்னும் பெற வேண்டுவன நன்மை யுண்டே யாகிலும் நமக்கு இனிப் பெற வேண்டும் நன்மை ஒன்றும் இல்லை
ஆழ்வார் தாம் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்றும்
மல்கு நீலச் சுடர் தலைப்ப -என்று தொடங்கி என் திரு மார்வனை வந்து எய்தும் ஆறு அறியேன் என்றும் மநோரதம் நடவா நிற்க
இன்று நான் இப்பேறு பெரும்படியானபடி என்
பற்றினாரை பற்றினால் பெற்ற நன்மை -பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
நம்பிக்கு ஆள் உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே
அவனுக்கு சேஷபூதராய் இருந்து வைத்தே அவர் அலமாரா நிற்க
நான் ஆழ்வார் தமக்கே சேஷபூதனாய் இருந்து வைத்து இன்னன்மையைப் பெறுவதே
வைஷ்ணவ சம்ஸ்ரயரானால் பராஸ்யந்தி என்று போய்ப் பெற வேண்டாதே இருந்த இடத்திலே வந்து திருக் குதிப்பதே
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் என்ற வார்த்தை என்னளவிலே பலித்தது என்று
ஸ்வ அனுசந்தானத்தாலே சந்துஷ்டராகிறார்
———————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply