நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-
முதல் -பாட்டில் ஆழ்வார் -என்றால் தமக்கு ரசிக்கிற படியை சொன்னார் –
-இப்பாட்டில் அவருடைய பாசுரமே –திருவாய் மொழியும் கண்ணி நுண் சிறுத் தாம்பும் —தேக யாத்ரையாம் படி-தாரகமான படியை சொல்லுகிறார் –
தாம்தாம் பற்றின விஷயத்தை விட்டுப் புறம்பு சில போக வேண்டுவது அவ்விஷயம்
-1- இஹ லோக ஸூக ஜனகம் அல்லவாயாதல் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
2–பர லோக ஸூ கத்துக்கு சாதனமன்றாயாதல் -மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
-3-பற்றினவர்கள் இவ்விஷயத்தை ஒழிய வேறே ஒரு ஸ்வாமி யுண்டாக நினைத்து இருத்தல் -தேவு மற்று அறியேன்
4-கால ஷேப விஷயம் அல்லாமையாலே யாதல் அன்றோ – குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே
அதில் எனக்கு இஹ லோக ஸூ க ஜனகரும் ஆழ்வாரே -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே
-எனக்கு ஸ்வாமி யும் ஆழ்வாரே -கால ஷேப விஷயமும் ஆழ்வாரே -ஆனபின்பு பகவத் விஷயத்திலே அன்வயிக்க வேண்டுகிறது என் என்கிறார் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
இறந்த காலத்தில் வினைச் சொல் இங்கு –
என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார் -அதில்
உண்டான ஆதார அதிசயத்தாலே –
மனஸ் -சஹ காரம் இல்லாத வுக்தி மாத்ரம் அடியாக -நிரதிசய சுகம் பிரயோஜனம்
ஆனால் பின்னாட்டுகை தவிராது இ றே-
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
இப்படியே அன்றிக்கே பகவத் விஷயத்தில் புறம்புள்ள இந்த்ரியங்களை மனசிலே அடக்கி மனசைக் கொண்டு போய்
ஸூபாஸ்ரயத்திலே வைத்து பின்பு அநவரத பாவனை யுண்டாய் அது தானே சமாதி பர்யந்தம் ஆனால் இ றே
ந விவேதாத்மநோ காத்ரம் தத்ஸ்ம்ருத்யாஹ்லாத சம்ஸ்தித -என்று ஆனந்தம் சித்திப்பது
ஆழ்வார் தமக்கு அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினேன் என்று இத்தனை செய்ய வேண்டிற்று –
நாவினால் நவிற்று –
மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –
பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு
அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்
ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-
இன்பம் எய்தினேன்
இன்னவகைப்பட்ட இன்பம் என்னாமையாலே பஹூ விதமான ஆனந்தத்தை எய்தினேன் –
எய்தப் பெற்றேன் –
எனக்கு லப்த்வா நந்தி பவதி என்ன வேண்டிற்று இல்லை
நவிற்று இன்பம் எய்தினேன் -எய்தினேன் -நவிலும் போதே இன்பம் எய்தினேன் -இடை வெளி ஒன்றுமே இல்லையே
பகவத் விஷயத்தைப் பற்றினார்க்கு ஆனந்தம் காலாந்தரபாவி -அங்கு லப்த்வா -அடைந்து –
இங்கு அப்படி அன்றிக்கே எய்தி விட்டேன்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
அநவரத பாவனையாலும் ஆனந்தம் வேண்டிற்று இல்லை
அனுபவத்தாலும் ஆனந்தம் உண்டாக வேண்டிற்று இல்லை-
இன்பம் எய்தினேன் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற
பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை
பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் –
மேவினேன் அவன் பொன்னடி –
ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் –
ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய
விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் –
பரம காருணிகர் ஆகையாலும் -அச்சம் உருத்தினான் -என்று கருத்தால் உபேஷித்த தசை என்கிறார் –
மாதா நாக்கில் குறியிட்டு பயப்படுத்துமா போலே ஷிபாமி என்கிறான் -அஹ்ருதய உக்தி –
நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உண்மையாகவே பற்றினேன்
2–உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே –
ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
3–இங்கு இருந்தநாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்
நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
ஆளவந்தார் அத்ரபத்ர -என்கைக்கு அடி இவர் இ றே-
ஆனால் இப்போது அன்றோ இந்த இன்பத்தை விரும்பினீர் -சரீர விநியோக சமாந்தரம் பிறக்கும் ஆனந்த சித்திக்கு
ஒரு சாதனத்தைப் பற்ற வேணும் -அதுக்கு சாதனமாக லோக விக்ராந்த சரணங்களை ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்ன
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
அதுவாகில் அதுக்கும் ஆழ்வார் தம்முடைய திருவடிகளையே உபாயமாகப் பற்றினேன்
அவன் பொன்னடி
யாதொரு விஷயத்தை நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -அவனுடைய திருவடிகளை
பிராப்யம் ஆனது தானே ப்ராபகமும் ஆய்த்து –
சரண் அடைந்து ஆனந்தம் இல்லை இங்கு ஆனந்தம் அடைந்து மேவினேன் அவன் பொன்னடி -முறை ஆழ்வார் இடம் வேண்டாம் -முதலிலே கொடுத்து அருளி
பிராப்யம் புருஷார்த்தம் முதலில் அதுவே பிராபகம் ஆயிற்று
அவன் பொன்னடி
அது போலே உலகம் அளந்த பொன்னடியாய்- ஊர்ப் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்குமதன்றிக்கே
இத்திருவடிகள் த்ரைவித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணமாய் இருக்கும்
வ்ருத்த ஜனங்கள் ஆகிறார் உத்தரபாக நிஷ்டரானவர்கள்
பொன்னடி
நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன்
பகவத் விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் என்று
வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டிற்று
இங்கு அப்படி அன்றிக்கே சக்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
அவன் பொன்னடி மேவினேன்
பகவத் விஷயத்தில் போலே
த்வமேவோபாய பூதோ மே பவ -த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று
அபரோஷித்து ஆஸ்ரயிக்க வேண்டாத படி எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படியான அவனுடைய திருவடிகளை –
முன் நின்று தொழுதாலும் அவன் மறுக்கலாம் இங்கே அவன் பொன்னடி -நின் பொன்னடி இல்லையே –
அவன் பொன்னடி மேவினேன்
ஒரு புருஷகார புரச்சரமாக வன்றிக்கே தந் நிரபேஷமாக ஆஸ்ரயித்தேன்-இங்கே நஞ்சீயர் பட்டர் நம்மைத் தேடி வந்து கைக் கொண்டாரே
ஆஸ்ரம ச்வீகாரம் பண்ணின அனந்தரம் -அனந்தாழ்வான் -வேர்த்த போது குளித்து பசித்த போது உண்டு பட்டர் திருவடிகளே சரணம் என்று எங்கே இருந்தாலும்
ப்ராப்திக்குக் கண் அழிவு உண்டோ -ஆயிருக்க கைங்கர்யத்துக்கு விரோதியாய் இருப்பதொரு வேஷத்தைக் கொண்டு என் செய்தீரானீர் -என்று
அருளிச் செய்த வார்த்தையை அனுசந்திப்பது
மேவினேன்
அத்தோடு பொருந்தி விட்டேன்
இனி வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி பொருந்தி விட்டேன்
நாவினால் நவிற்றி இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி
இத்தைப் பின் சென்று இ றே ஆளவந்தாரும் ஆச்சார்ய விஷயத்தில்
அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ சரணம் மதஈயம் என்றது
இவர் பெற்ற லாபம் என் என்னில்
மேவினேன் அவன் பொன்னடி
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழல் -என்றும்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலேவே -என்றும் சொல்லுகிற படியே எல்லாம் இவர்க்கு இங்கே யாகிறது
மெய்ம்மையே
இது எத்தனை குளிக்கு நிற்கும் என்னில் -விஜ்ஞாபநமிதம் சத்யம் –
இமையோர் தலைவா மெய் நின்று என்றார் ஆழ்வார் –மெய் -உண்மை /உடல் இரண்டு பொருளில் -உடம்புக்குள்ளே உள்ளாயே
குருகூர் நம்பி பொன்னடி மேவினேன் மெய்ம்மையே -என்கிறார் இவர் –
அநந்ய தைவத்வமியம் சாமா ச -என்று அநந்ய தைவதத்தை யுடைய பிராட்டி பெருமாளுக்கு எடுத்துக் கை நீட்ட
பெரிய பெருமாள் பாடு புகுமா போலே இவ்வர்த்தம் நாங்கள் விச்வசிக்கும் படி என் என்ன
மெய்ம்மையே
இது சத்தியமே
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்
ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ –
தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று
வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக –
மற்று அறியேன் -என்று
புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இ றே
அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே
சாஸ்திர வாசனையாலே யாதல் –
ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –
தேவு மற்று அறியேன் –
வேண்டா என்கிறேன் அன்று
வ்யுத்பத்தி இல்லாமை -கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் போலே –
பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்
விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு
குருகூர் நம்பி-
இவரையும் பற்றி வேறு ஒரு விஷயத்தையும் பற்ற வேண்டும்படியோ இவருடைய
பூர்த்தி இருப்பது
குருகூர் நம்பி
ஆழ்வாரையும் உகந்து அவருக்கு ஆஸ்ரயணீய வஸ்துவையும் உகக்கும்படி அன்று இ றே ஆழ்வாருடைய பூர்த்தி இருக்கும் படி
குருகூர் நம்பி பா -என்கிறது -ஆழ்வார் திருவாயாலே அருளிச் செய்தது என்றது ஆயிற்று
திருவாய்மொழி தன்னையும் ஆதரிப்பது -அதிலே குருகூர் சடகோபன் -என்று அருளிச் செய்தார் இ றே –
அவ்வழியால் யாயிற்று திருவாய் மொழியில் ஆதாரம் –
ஆழ்வார் ப்ரதிபாத்யர் ஆகையாலே -குருகூர் நம்பி பா -என்றது கண்ணி நுண் சிறுத் தாம்பை –
சொல்லுகிறது என்னவுமாம் –
ஆழ்வார் சொல்லா -தானாய்த் தன்னைத் தான் பாடி -அவன் சொல் அன்றோ
– குருகூர் நம்பி பா -பற்றிய பா -பாடிய பா இல்லை கண்ணி நுண் சிறுத் தாம்பு இத்தை பாடித் திரிவேனே -என்றுமாம்
குருகூர் நம்பி -நியம பாசுரம் உண்டே என்றுமாம் –
பாவின் இன்னிசை –
பாவோடே கூடப் புணர்ப்புண்ட இனிய இசை –
பாடித் திரிவனே-
உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –
ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –
உண்டு திரிவன் -என்னுமா போலே -பாடித் திரிவன் -என்கிறார்
நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு உழி தருகின்றோம் -என்னுமா போலே இதுவே
யாத்ரையாய் இருக்கிற என்னுடைய கதி நிவ்ருத்தியை பண்ண வல்லார் உண்டோ -என்றுமாம் –
ப்ராக்ருத கர்ம பலத்தை யநுபவிக்கும் யமன் -கதி பங்கம் பண்ணவோ
அதுக்கடியான விஷயாந்தரங்கள் கதி பங்கம் பண்ணவோ –
பாவின் இன்னிசை –
பாவிலே பூண்ட இனிய இசை –
ஐஸ்வர் யத்தை அல்ப அஸ்தரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்ம பிராப்தியை அபுருஷார்த்தம் என்று கழித்து
ஸ்திரமுமாய் பரம போக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து
அவரோடு சம்பந்தித்த விஷயத்தையும்-திருவாய்மொழி- ரசாச்ராயம் அன்று கழித்து
அத்தோடு சம்பந்தித்த இசையே எனக்கு உத்தேச்யம் என்கிறார் –
தெய்வத் தண்ணம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும்
கொண்டு வீசுமினே -இத்யாதியில் படியே பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி -பகவத் சம்பந்தம் என்றே மயங்குவோம்-
பாடித் திரிவனே –
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே இது காணும் இவருக்குத் தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது –
திரிவனே
அங்குப் போனால் அன்றோ ஏதத் சாம காயன் நாஸ்தே என்றிருக்க வேண்டுவது -இங்கு அப்படி அன்றிக்கே விஸ்ருங்கலாமாகத் திரியா நிற்பன்
திரிவேனே
இது எனக்கு கால யாத்ரை –
ஆகையால்
ஸூக பூதரும் –சாதனா பூதரும் –ஸ்வாமி யும் -காலஷேப விஷயமும் -ஆழ்வாரே என்று -நான்கு வரிகளுக்கும் –
பகவத் விஷயத்தோடு அந்வயிக்கத் தேடினவர்களுக்கு உத்தரம் சொன்னாராய் நின்றது –
———————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply