பகவத் விஷயம் காலஷேபம் –52– திருவாய்மொழி – -2-2-1…2-2-5—-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் இவர்க்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே
கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை -என்னுமா போலே ஆற்றாமையோடு முடிந்து போம் அத்தனை என்று இருந்தார் -அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்கவிடம் கண்டிலர் -இதுக்கு அடி என் என்று பார்த்து ஆராய்ந்த வாறே
-இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவில்லாத விஷய வைலஷண்யமாய் இருந்தது -பிரிந்த போது தன்னை ஒழிய வேறு ஓன்று
தோன்றாத படியாய் -கலந்த போதும் தன்னை ஒழிய மற்று ஓன்று தோற்றாத படியான விஷய வைலஷண்யமாய் இருந்தது –
யத்ய அந்யது பஸ்யதி –யத்ய நான்யத்ர பஸ்யதி –பூமா -பூமாதிகரணம் -விஷய வை லஷண்யம் -இழவிலும் பேற்றிலும் இவனே
இதுக்கு அடி என் என்று பார்த்தார் -சமஸ்த கல்யாண குணாத் மகனாகையாலேயாய் இருந்தது –
இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே சர்வேஸ்வரன் ஆகையாலேயே இருந்தது –
உயர்வற உயர்நலம் உடையவன் என்றால் அயர்வறும் அமரரர்கள் அதிபதி என்று இறே தோற்றுவது-
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த கல்யாண குனாத்மகன் -சர்வேஸ்வரனாய் –முதலிலே பார்த்தோமே –
ஆக இங்கனே -1-பிராசங்கிகமாக பிரச்துதமான ஈஸ்வரத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –
2–கீழே —மூவா முதல்வா -2-1-10-என்று காரணத்வம் ப்ரஸ்துதம் ஆகையாலே அந்த காரணத்வத்தை
உபபாதிக்கிறார் என்று பணிக்கும் பிள்ளான் -இரண்டாம் பத்துக்கு சேர்ந்த அவதாரிகை –
4-10 அடுத்து -5-2- நேரான சங்கதி -5-1- பிராசங்கிகமாக வந்த திருவாய்மொழி –

குழந்தை சொல்வதும் –பிரசம்சாயாம் -பிரதிஜ்ஞ்ஞை-பிரலாபே -தர்சனே -பயப்படுத்த -பயசே -விச்மயேச -ஆச்சர்யத்தால் -சொல்வது
–புநர் வ்ருத்தி அலங்காரம் இங்கே பரத்வ பிரதிஜ்ஞை என்னும் தசை –பகவத் பரத்வம் –
பகவத் விஷயத்தில் தோஷம் இல்லை என்றுமாம் –

முதல் திருவாய்மொழியிலும் சொல்லிற்று இல்லையோ ஈஸ்வரத்வம்-என்னில்
ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்
ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாய யாகாது -ஒரு குணத்தையே எல்லா காலமும் அனுபவிக்க வல்லார் ஒருவர் இவர்
ஒரு குணம் தன்னையே இதுக்கு முன்பு அனுபவிப்பத்தது இக்குணம் என்று தோற்றாதபடி ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து
அனுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன் –
கால ஷேபம் -அர்த்தம் நினைந்து நினைத்து போது போக்குவதே
பயிலா நிற்கச் செய்தே– பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால் —பெரிய திருமொழி -8-1-9-எனபது
ரொம்ப நாளாக இவர் என்றுமே புதியவர் என்றே அறிந்தேன் -ஆகை இறே ஏக விஷயமே நித்ய ப்ராப்யம் ஆகிறது
இவர் தாமும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதம் –2-5-4-என்னா நின்றார்
இவரோ ஆராத காதல் -அவனும் ஆரா வமுதம் –ஒத்து போகுமே-
1-உபதேஷ்ரு ஸ்வபாவத்தாலும் -ஆராத காதல் -2–உபதேச்ய வஸ்து ஸ்வபாவத்தாலும்—3-அனுபாவ்ய ஸ்வ பாவத்தாலும்-பாலே போல் சீர்
4-அனுபவித்ரு ஸ்வபாவத்தாலும் -ஏற்கும் புகழ் சடகோபன் –5–அனுபவாயித்ரு ஸ்வபாவத்தாலும்- 6-அனுபவிக்கப் பண்ணுமவன் ஸ்வபாவத்தாலும் -கூடுமே

ஆனாலும் இதுக்கு வாசி உண்டு-
முதல் திருவாய் மொழியிலே பரத்வம் சொல்லா நிற்கச் செய்தே -அது ஸ்வ அனுபவமாய் இருக்கும்
அந்தப் பரத்வம் தன்னை எல்லார்க்கும் அனுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பர உபதேசத்தாலே பரத்வ அனுபவம் பண்ணுகிறார் –
அங்கு அந்வய முகத்தாலே பரத்வம் சொன்னார் –அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் பரத்வம் சொல்லுகிறார் –
இங்கு —நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே–
அங்கு ஸ்ருதி சாயையாலே சொன்னார் -இங்கு இதிஹாச புராண பிரக்ரியையாலே சொல்லுகிறார்
அங்கு பரத்வத்திலே பரத்வம் -இங்கு அவதாரத்திலே பரத்வம் –

———————————————-

அவதாரிகை –

இந்தத் திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

கண்ணனே சர்வ ரஷகன் -நிர்வாககன் –
திண்ணன் வீடு – -மணக்கள் மாறி -திண்ணம் -உறுதி –திண் நல் வீடு -உறுதியான விலஷணமான மோஷம்
திண்ணம் -நிச்சயம் -என்றுமாம்
முதல் முழுதுமாய் -அனைத்தும் -அல்பமாக -நிர்வகிப்பவன்
எண்ணின் மீதியன் எம்பெருமான்-எண்ண அப்பால் உள்ள என் ஸ்வாமி
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட -ஏக உத்தியோகத்தில் -தார தம்யம் இல்லாமல்
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –
முதல் ஆழ்வார்கள் அந்வய /திரு மழிசை ஆழ்வார் -வியதிரேகம் -அருளிச் செய்ததை சேர்த்து பிடித்து நம்மாழ்வார் –
இவனே ரஷகன் -மற்றவர்கள் அல்லர் -வந்தது உங்கள் தெய்வமோ -நெருக்கிக் புக -விழுங்காமல் விட்டார் உண்டோ-
நமக்கே தன்னைத் தந்த சுலபனே ஜகத் நிர்வாகன் -வேறு யாரும் இல்லை –இது திண்மை-இறுதியில் வைத்து அன்வயம்  –

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
திண்ணன் -என்றது திண்ணம் -என்றபடி -அதாவது -த்ருடம் -என்றபடி
த்ருடமான வீடு என்று நித்ய விபூதிக்கு விசேஷணமாய்-தார்ட்யமாவது-ஆவிர்ப்பாவ திரோபாவ ஜன்ம நாச விகல்பங்கள்
-என்னுமவை இல்லாமையாலே கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை -என்கை
ஆவிர்பாவம் -சமஷ்டி சிருஷ்டி -/திரோபவ -சமஷ்டி சம்ஹாரம் /ஜன்ம -நாச -வர்த்தமான உத்பத்தி நாசம்
அஷயம் அமிருதம் சாஸ்வதம் நித்யம் ஆனந்தம் பரமம் பதம் சுத்த சத்யம் திவ்யம்-
விமான கோபுர மண்டப பரிமாணங்கள் -கர்ம நிபந்தனமாக வரும் அழிவு  இல்லை என்று இவற்றைக் காட்டுகிறார்
இச்சமாக வரும் விகாரங்கள் உண்டு -ஆனால் தோஷாயவும் அன்று -அது அழிவாயும் தோற்றாது இ றே
ஏதேனுமாக சம்சார விபூதியில் போலே கர்ம நிபந்தமாக வருமவை இல்லை -என்கை
1-திண்ணன் வீடு -நித்ய விபூதி –முழுதும் -லீலா விபூதி —ஆய்-நிர்வாஹகன் -நிர்வாஹ்ய சம்பந்தம் –
திண்ணிதான நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் உடையனாய்
அன்றியே
2-திண்ணம் என்கிற இத்தை விட்டு வைத்து –வீடு முதல் முழுதுமாய் -மோஷ ப்ரப்ருத் யசேஷ புருஷார்த்த ப்ரதனாய் -என்னவுமாம் –
ஐஸ்வர்ய கைவல்யம் –சகல பல பிரதன் -ஆய் -உபகார -கொடுப்பவர் அவரே என்பதால் அனைத்தும் அவரே –
ஔதார்ய குணம் சொல்லப் பட்டு -லஷணமாகக் கொண்டு சமஸ்த கல்யாண குணாத்மகன் –என்கிறது –
உபய விபூதி நாதத்வம் -சமஸ்த கல்யாண குணாத்மகம் இரண்டுமே பரத்வ ஸூசகம் –
3-மோஷ பரதத்வம் மட்டும் என்றுமாம் -வீடு பலவகை –வீடு முழுதுக்கும் முதலாய் –இது சப்தார்த்தம் -இவ்வாறு மூன்று நிர்வாகங்கள் –
கைவல்ய -சாலோக்யம் -சாமீப்யம் –சாரூப்யம் -சாம்யா பத்தி -சாயுஜ்யம் –அனைத்தையும் அருளுபவன் –

எண்ணின் மீதியன்
அசங்க்யேயமான கல்யாண குணத்தை உடையவன்
கீழ் விபூதி பரமான போதுஎண்ணின் மீதியன் -என்றது –குணபரமாகிறது
கீழ் குண பரமான போது –எண்ணின் மீதியன் -என்றது –விபூதி பரமாகிறது
வீடு முதல் முழுதுமாய் -என்ற போது மோஷ பிரதத்வத்தையே -நினைத்ததாகில் –எண்ணின் மீதியன் -என்றவிடம்
அனுக்தமான குணங்களைச் சொல்லுகிறது
எண்ணின் மீதியன் என்றவிடம் எண்ணுக்கு மேலாய் உள்ளான் என்றபடி
குணங்களாலே யாதல் விபூதியாலே யாதல் வந்த அபரிச்சேத்ய ஸ்வபாவதயைச் சொல்லுகிறது

எம்பெருமான்
குண விபூதிகளை யுடையனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன்
மண்ணும் விண்ணும் எல்லாம்
இப்படி இவற்றை உடையனாய் உடைமை நோவுபட விட்டு இருக்கை யன்றிக்கே பிரளய ஆபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் -என்கிறார்
பூம் யந்தரிஷாதிகளை வெள்ளம் கொள்ளப் புக எடுத்து வயிற்றிலே வைக்கிற விடத்திலே ஒன்றும் பிரிகதிர்படாமே-ஏக காலத்திலே
வைத்து ரஷித்த நம் கண்ணன்
உடன் உண்ட –
ரஷணம் அவனுக்கு தாரகம் ஆகையாலே –உண்ட -என்கிறது -இல்லை யாகில் -காக்கும் என்ன அமையும் –
உண்ட -அவாந்தர பிரளயம் -நைமித்திக பிரளயம் -அனைத்தையும் கொள்ளலாம் –
கிருஷ்ணனோ பின்னை ஜகத்தை விழுங்கினான் -என்னில் -ஆம் கிருஷ்ணனே –
அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் இறே யசோதை -ஆகையாலே சர்வ ரஷகனான கிருஷ்ணனே ஜகத்துக்கு திருஷ்டி
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய கிருஷ்ணச்ய ஹி க்ருதே–பீஷ்ம பர்வ ராஜ ஸூயையாகம் என்கிற பிரமாண பிரசித்தி இருக்கிறபடி –
நீர் குமுழி நீரில் உண்டாகி அதிலே லயிப்பது போலே –
கிருஷ்ணனே நாராயணன் -ஏஷ நாராயண ஸ்ரீ மான் —ஆகாதாம் மதுராம் புரிம் —
அல்லது இல்லை ஓர் கண்ணே –
இவ்வர்த்தத்தை –கண் -ரஷணம் என்னும் அர்த்தத்தை -ஒழிய- சப்தத்தைக் கொண்டு போய்
-பீலிக்கண் -என்று வ்யவஹரியா நின்றது இறே -அதுக்கும் கூச வேண்டும் படி இருக்கும் –
மாலைக் கண் என்று இருப்பார்க்கு அல்லாதது எல்லாம் மாலைக் கண்ணாய்த் தோற்றும் இறே-

-தர்சன விஷய பூத ரூப க்ராஹத்வ அபாவயேவி-அவயவ விசேஷூ —நேத்ர-நிர்வாகத்வ அபாவயேவி -நாம மாத்ரேன -மயூர பிஞ்சா  –
சஷூர் இந்த்ரிய கோளகத்வம் கண் -பீலிக் கண் கொஞ்சம் ஆகாரம் உண்டே -பிரமிக்கவாவது பிரசக்தம் உண்டே
கிஞ்சித் ஆகார சாத்ருச்யம் உண்டே -கிஞ்சித் ரஷகத்வ சாத்ருசம் கூட இல்லையே
-அத்யந்த வைசாருத்யத்தாலே -கிஞ்சித் நிர்வாககத்வமும் தத் அதீனம் என்றவாறு -அப்படிச் சொல்வாரும் உண்டே என்னில்
-அப்படி தோற்றும் -மாலைக் கண் -என்று இருப்பார்க்கு -அல்லாதது எல்லாம் மாலைக் கண்ணாய்த் தோற்றும் இறே-

இது திண்ணம் த்ருடம் -சத்யம் சத்யம் என்னுமா போலே –
நம் கண்ணன் கண் -என்கையாலே அன்வயத்தாலே பரத்வம் சொன்னார்
அல்லது இல்லை -என்கையாலே வ்யதிரேகத்தாலே பரத்வம் சொன்னார்

———————————————————————————

அவதாரிகை –

அல்லது இல்லை என்று நீர் சொல்லுவான் என் -ப்ரஹ்ம ருத்ரர்கள் ஈச்வரர்களாக அவர்களுக்கும் சில பிரமாணங்கள் உண்டாய் அன்றோ
போருகிறது என்னில் -அவர்கள் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தலை யறுப்பார் சிலரும் அறுப்புண்டு நிற்பார் சிலருமாகா நின்றார்கள்
அவர்கள் ஆபத்தைப் போக்கி ரஷியா நின்றான் இவன் -அவர்களோ இவனோ ஈஸ்வரன் -என்கிறார் –

திக் பாலர்கள் காக்கட்டும் என்று சீதா பிராட்டியே சொன்ன பிரமாணம் உண்டே -சிவா ஏக கேவல -ஹிரண்ய கர்ப்ப -ஏக ஏவ ருத்ர –
-சர்வ சிவ-சம்பு பிரஜாபதி அந்தராத்மா -இவனே -மங்களானாம் மங்களம் -சாம் -சுகம் பவது சம்பு-பரமார்த்தாவையே குறிக்கும் -அந்தராத்மாவாக இருக்கும் அவனையே குறிக்கும் என்றவாறு –

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-

சொல் அந்தாதி -இங்கே -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் —ஈ பாவம் செய்து இஷ்ட பிராப்தத்துக்கும்– அருளால் அளிப்பாரார்– கிருஷ்ணனே
ஏ பாவம் பரமே யேழுலகும்–ஏழ் உலகுக்கும் ஈதே -ஜகத் பிரசித்தம்
இது தெரியாமல் சொல்ல வேண்டு உள்ளதே –ஏ பாவம் பரமே -இவன் சர்வாதிகத்வம் சொல்வது
ராஜ்யம் பாரமாக சுமந்ததால் பரதன் -பெயர்
-வெறுப்பு -துக்கம் என்றுமாம்
யானை நிறுத்தி எங்கே கண்ணில் பட வில்லை காட்டும் என்பதே போலே
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்-பாபம் போகும் படி கிருபையால் செய்பவர் -இஷ்ட பிராப்தி -அபிமதங்களைக் கொடுப்பவர்
வீ பாவம் –உயிர் எழுத்து வீயும் பாவம் –
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் -அறப் பெரியதான பெரு பாவம் -பிஷா பிரதானம் செய்து
கோபால கோளரி -பசுபதிக்கு- பசு பாலன் மேய்க்கும் சிறு கண்ணன் போக்கி –
யேறன்றியே-சிம்ஹ ஸ்ரேஷ்டமான -யாதவ சிம்ஹம் -இவனைத் தவிர –

ஏ பாவம்-
-என்றது என்றபடி -விஷதாதிசய -துக்கம் -அதிகப்படி -ஸூசகம் இருக்கிற படி (துக்கம் இங்கு -வெறுப்பில் -பன்னீராயிரப்படி மட்டும் )
ஏ பாவம்
ரத்ன கரீஷங்களுக்கு –ரத்னத்துக்கும் காய்ந்த விராட்டிக்களுக்கும் -வைஷம்யம் சொல்ல வேண்டுவதே
சேதனர் மந்த மதிகளாய்-பகவத் பரத்வம் உபபாதிக்க வேண்டுவதே என்னும் இன்னாப்பாலே -என்னே பாவம் -என்கிறார்
பரமே
பகவத் குண அனுபவம் பண்ணுகை ஒழிய இது நமக்கு பரமாவதே –
இது நமக்கு சாத்தியமாய் விழுவதே -சித்த வஸ்துவை சாத்யமாக்கச் சொல்வதே –
யேழுலகும்
ஏழ் உலகங்களிலும் உண்டான சேதனர் -காரண ஆகு பெயர் -மஞ்சா க்ரோசந்தி போலே -இருந்ததே குடியாக பாபங்களைக் கூடு பூரிக்க
ஈ பாவம் செய்து –மெய் முதல் கெட்டு ஈ -வீ என்பது
பாபமானது ஈயும்படியாகச் செய்து -அழியும்படியாகப் பண்ணி
இது தான் சேதனர் அர்த்திக்கச் செய்கை அன்றிக்கே
1-அருளால் ஈ பாவம் செய்து /2-அருளால் அளிப்பார்/கிருபையால் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -/அருளால் –நிர்ஹேதுக கிருபையாலே

அளிப்பாரார்
இவர்களை ஈரக் கையாலே தடவி ரஷிப்பார் ஆர்
இவர்கள் பண்ணின பாபம்-அவன் அருளாலே போக்கில் போம் எத்தனை யல்லது
தாங்கள் பிராயச் சித்தம் பண்ணிப் போக்குகையாவது அவற்றை வர்த்திப்பிக்கை இறே
அளிப்பான்- இவன் -என்னாதே-ஆர் என்கிறது -அவர்களுக்கும் சத்வம் தலை எடுத்த போது -நீர் சொல்லுகிறவனே -என்று
இசைய வேண்டும் பிரசித்தியாலே –பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும் -உத்தர காண்டம் –அகஸ்த்யர் -நீயே –பதித பாவன சீதா ராம்
நஹி பாலான சாமர்த்தியம் ருதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் –ருதே -இவனைத் தவிர மற்றவர் காப்பார் இல்லையே -என்றும் சொல்லக் கடவது இறே
அவன் சர்வ விஷயமாகப் பண்ணின ரஷணம் கிடக்கிடீர் -தந்தாம் கால் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும்-(பரிமித சக்தி உடையவர்கள் என்றபடி    )-ஓரோர் அளவிலே ஆபன்னரானால் அவற்றைப் போக்கி ரஷிக்கும் படியை பார்க்கலாகாதோ என்கிறார் –
சிருஷ்டி சம்ஹாரங்கள் செய்வதும் காலை நீட்டி முடக்குவதும் –அவன் அதீனம் என்றபடி –பரிமத சக்தி உள்ளவர்கள் என்றபடி

மா பாவம் விட
ஆனைக்கும் தனக்குத் தக்க வாதம் இறே
அல்லாதாரில் ஞான சக்த்யாதிகளாலே ஓர் ஆதிக்யம் உண்டு இறே அவர்களுக்கு
அவற்றைக் கொண்டு லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் –
வாமாங்குஷ்ட னகாக்ரேண சின்னம் தஸ்ய சிரோ மயா–மத்ஸ்ய புராணம் என்கிறபடியே மஹா பாபமானது விடும் படியாக
இடது கை கட்டை விரலால் கிள்ளிக் களைந்தானே –
பார்வதி தேவி முதுகைத் தொட்டு தடவி ருத்ரனே சொல்லுவது –தஸ்மாத் சாபம் -கபாலித்வம் பவிஷ்யதி
ப்ரஹ்மஹத்தி தோஷம் –
ஹிமவந்தம் -தத்ர -பத்ரிகாஸ்ரம நாராயண ஸ்ரீ மான் மயம் பிஷா -ஸ்வயம் பார்சிசம் –தாரா -நகாக்ரா -ரத்தம் ஸ்வதம் இரண்டும் -சொல்வார்
விஷ்ணு பிரசாதத்தால் வெடித்த இடம் ப்ரஹ்ம கபாலம் –அங்கு பிண்ட பிரதானம் -அது சாஸ்திர உக்தம் இல்லை-
-கயாவிலே என்றே சொல்வார் -ஆனால் சிஷ்டாசாரம் -உண்டே அதனால் செய்ய வேண்டும்
திருக்கரம்பனூர் -அன்ன பூரணி தாயார் -இதே சரித்ரம் -திருக் கண்டியூர் -பெருமாள் -இதே சரித்ரம்
முடை யடர்த்த –இடர் கெடுத்த திருவாளன் -அடை நெஞ்சே -ஸ்வப்னம் போலே கபாலம் போனதே-(தத்ர நாராயண ஸ்ரீ மான் -தமிழ் படுத்தி )

அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி யேறு-
அவன் தான் சம்ஹர்த்தாவான வேஷத்தோடு அதிகாரம் குலையாதே நின்று பாபத்தை விளைத்துக் கொள்ள இவன் அவனுக்கு
துக்க நிவர்த்தகன் ஆயிற்று –அங்கே இங்கே ஆவிர்பவித்து திரிகிற இடத்திலே யாயிற்று -(திரு அயோத்யையிலும் திரு வடமதுரையிலும் )
இவர்கள் எத்தனையேனும் உயர நின்றாலும் அனர்த்தத்தையே சூழ்த்துக் கொள்ளும் இத்தனை -அவன் எத்தனையேனும்
தன்னைத் தாழ விட்டாலும் ரஷகனாம் என்பதையும் சொல்லுகிறது
கோபாலருடைய மிடுக்கை உடைத்தான சிம்ஹ புங்கவம் -என்றபடி
கோபால கோளரி யேறு-
கோள் என்று மிடுக்காதல்
பிரதிபஷத்தைக் கொல்லும் என்னுதல்
நித்ய ஸூரிகளுக்கு நியந்தாவான இடையருக்கு நியாம்யனாய் பெற்ற மேணானிப்பு
போர் ஏற்று நாயனார் -திருப்புட் குழி –சமர புங்கவ பெருமாள் –கோளரி மாதவன் கோவிந்தன் –ஆண்டாள்-
சிங்கம் செருக்கு ஏற்றின் மிடுக்கு -மிடுக்கை அபஹரிப்பவன் என்றுமாம் -பிரதிபஷம் அழிக்கும்
கர்ம வச்யராய் ஆபன்னரான இவர்களை -ஈஸ்வரர்கள் என்போமா
ஆபத்துக்களைப் போக்கி ரஷிக்கிற இவன் ஈஸ்வரன் என்போமா
ஏறு அன்றி அருளால் அளிப்பாரார் -என்று அந்வயம்-

——————————————————————————

அவதாரிகை –

சௌசீல்யத்தாலும் – த்ரிவிக்ரம க்ரமணம் ஆகிற அதி மானுஷ சேஷ்டிதத்தாலும் இவனே ஈஸ்வரன் என்கிறார்

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3-

த்ரிவிக்ரமனாய் -சர்வ ஸ்மாத் பரன்
ஏறனைப் -ரிஷப வாஹனன்
பூவனைப் -நாபி கமலத்தில்
பூ மகள் தன்னை -தன்னை -மற்றவர் ஒரு தட்டு -இவள் ஒரு தட்டு -அவர்களில் அநாதரவு தோன்ற
வேறின்றி-திரு மார்பில் –ஏறாளும் இறையோனும் –கூறாளும் தனி உடம்பன் -வாசி இல்லாமல் -சௌசீல்யத்தாலும்-
விண் தொழத் தன்னுள் வைத்து -திரு மேனியில் ஒன்றாக வைக்க -சீலம் அறிந்த பரம பத வாசிகள் தன்னைத் தொழும் படி வைக்க –
மேறன்னை-மேல் தன்னை -மேல் லோகத்தை
மீதிட -திருவடிக்கு கீழே செல்லும் படி
நிமிர்ந்து மண் கொண்ட -அளந்து கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே-மால் தனில் -மிக்கும் ஓர் தெய்வம் உண்டோ -மாறன் -நம்மாழ்வார் –
பிரிநிலை ஏகாரம் -இல்லை என்றபடி
விநா-உள்ளதோ -இதுக்கு கூட ஆழ்வார் சொல்ல வேண்டுமோ –ஜகத் பிரசித்தம் அன்றோ –

ஏறனைப் –
சர்வேஸ்வரன் கருட வாஹனன் என்று இறுமாந்து இருக்குமா போலே ஒரு எருத்தைத் தேடி
கைக்கொள்ளாண்டிகளைப் போலே-அம்மையார் மாட்டுக்காரன்- இறுமாந்து இருக்கும் -ஈ ஆடுவதோ —
பூவனைப்
திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தவன் அன்றோ என்று இறுமாந்து இருக்கும் சதுர்முகனை –
அதாவது பத்ம யோ நித்வத்தாலே அஜந என்று அபிமானித்து இருக்கை-
அஜன் என்ற பெயர் வைத்த குற்றம் -பிறப்பில்லை -சாம்யம் -பூவில் பிறந்தோம் என்பதை மறந்து இறுமாந்து –
நரசிம்ஹ அவதாரம் -11- திரு நாமம் 200-210-அஜக -பிறப்பிலி -ஸ்தம்ப சம்வத்தேன –
பூ மகள் தன்னை
தாமரைப் பூவில் பரிமளம் உபாதாநமாக பிறந்தவளாய் -போக்யதைக வேஷையாய்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை –10-10-6-
என்னும்படியான பிரதாந்யம் தோற்ற இருக்கிறவளை
தன்னை -என்று
அவர்களில் இவளுக்கு உண்டான பிரதாந்யம் இருக்கிறபடி –
ஏறனை -பூவனை -என்கிற அநாதார உக்தியாலும் இவள் பிரதாந்யம் தோற்றுகிறது-
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து –
விண் தொழ -வேறின்றி -தன்னுள் வைத்து -அந்ய பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் -அனந்யயையான – பெரிய பிராட்டியாருக்கும்
ஒக்க முகம் கொடுத்து வைக்கிற சீலத்தை அனுசந்தித்து விண்ணினுள்ளார் தொழா நிற்பார்கள்
ப்ரஹ்மாதிகள் எப்போதும் திருமேனியை பற்றி இருப்பார்களோ -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஒரோ ஆபத்துக்களில் திரு மேனியிலே இடம் கொடுக்கிறான் -அந்நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அத்தையே
புலற்றுகிரார்கள் அத்தனை இறே-என்று அருளிச் செய்தார்
வேறின்றி –
கூறாளும் தனியுடம்பன் -4-8-1–என்கிறபடியே வியவஸ்திதமாக உடம்பைக் கொடுக்கை
விண் தொழ –
மஞ்சா க்ரோசந்தி இதிவத் –
இங்குள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள் -அங்குள்ளார் சீலம் என்று தோற்றிருப்பார்கள்
மண்ணும் விண்ணும் என்னாதே விண் தொழ -சௌசீல்யம் -காட்டுவதை விண்ணுளார் தொழ-என்றவாறே -நாம் ஐஸ்வர்யம் கொண்டு போக தொழுவோம்
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மேல் தன்னை -உபரிதந லோகங்களை –
அப்பால் மிக்கு -திரு நெடும் தாண்டகம் -5–என்கிறபடியே -விஞ்ச வளர்ந்த பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே
மாறனில்-இவ்வதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய சர்வேஸ்வரனில் காட்டில் –
மிக்குமோர் தேவுமுளதே-ஒக்கப் பரிமாறா நிற்க -கட்டக்குடி -தாழ்ந்த குடி -சல்லிக் காசு இல்லாத -அதி நிர்த்தனம் -குடி-
-என்று கழிக்கலாம் தெய்வம் தான் உண்டோ
-எல்லார் தலையிலும் காலை வைத்தவனை ஈஸ்வரன் என்னவோ -இவன் காலில் துகையுண்டவர்களை யீச்வரர்கள் என்னவோ –
தன் நிர்மிதா -ஜடாதா -நீயே சிருஷ்டித்து ரஷித்து உள்ளவற்றை பிஷை எடுத்தா -கொள்ள வேண்டும்
-வேதம் வாய் மெல்ல விஷயம் -நாங்கள் மோஷம் போக -ஜன்ம கர்ம மே திவ்யம் -நினைத்து மோஷம் -நாடக வேஷம் –
யஜ்ஞம் செய்ய வருபவனுக்கு -தானம் இவன் கொடுக்க மாட்டான் -என்று எடுத்துக் கழிக்கவும் ஆள் இல்லையே இவர்கள் –
சிலப்பதிகாரம்திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் இரண்டு அடியால் மூ உலகும் இருள் தீர நடந்தனையே
மற்றவர் இருள் மூட்ட -ரஜோ தமோ குணத்தால் –
கம்பர் –அரன் அதிகன் -உலகு அளந்த அரி அதிகன் -விசேஷணம் சொல்லிக் காட்டி –
அவரும் இவரும் ஓன்று அறியாதவர் வாயில் மண் -சொல்பவர்களே அறிவிலிகள்

————————————————————————————————-

அவதாரிகை –

சௌகுமார்யத்தாலும்-முதன்மையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார்

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

ஆராத்யதைக்கு ஈடான ஆதிக்யம் அவனுக்கே
பூவில் நான்முகனைப் படைத்த தேவன்-தச வித சிருஷ்டி –
தேவும் எப்பொருளும் படைக்க -தேவ ஜாதி மற்றும் அனைத்தையும் -வியஷ்டி சிருஷ்டிக்கு –
யோ ப்ரஹ்மானாம் –ஸ்ருதி -வேதம் தமிழ் செய்த மாறன்
எம்பெருமானுக்கு அல்லால் பொல்லாத தேவரைதிருவில்லதா தேவரை தேறேல் மின் தேவு
பூவும் பூசனையும் தகுமே
உள்ளங்கை கொணர்ந்த நாயனாரை எம்பார் ஆக்கிய பாசுரம் இதுவே -தகாது -என்று வந்து ஆஸ்ரயித்தார்
புஷ்பாத் உபகாரங்கள் -ஆராதனையும் தகாதே –பிரிநிலை ஏகாரம்

தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த
தேவ ஜாதியையும் சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக ஒரு பூவிலே நாலு பூ பூத்தால் போலே சதுர்முகனை உண்டாக்கினவன் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தேவன்
1-க்ரீடா-2- த்யுதி–3- ஸ்துதி-4- மோத-5- மத-6- ஸ்வப்ன-7- காந்தி-8- கதிஷூ –பொருள்கள் உண்டே
சதுர்முக ஸ்ரஷ்டா வாகையாலே வந்த த்யுதியைச் சொல்லுதல் -விளையாட்டாக படைத்து -அதனால் ஒளி தேஜஸ் பெற்ற –அகில ஜன்ம –லீலே –
இது தன்னை லீலையாக உடையவன் -என்னுதல்-சௌந்தர்யாதிகளால் வந்த விளக்கம் -என்னுதல்
எம்பெருமானுக்கு அல்லால் –
ஸ்ருஷ்ட் யாத்யுபகாரத்தாலும்-சிருஷ்டிக்கு உறுப்பான குணங்களாலும் என்னை எழுதிக் கொண்டவனுக்கு அல்லது –
சிருஷ்டியே உபகாரம் -ப்ரஹ்மா பலரை பிறப்பிக்க -காரி பிறந்து -காரி சிருஷ்டிக்க தான் பிறந்ததால்
பூவும் பூசனையும் தகுமே —
சிக்குத் தலையனுக்கு பூத்தது ஆகாது -ஈண்டு சடையாயினவே -ஜடை
பிச்சை யுண்ணிக்கு பூசனை தகாது
ஓன்று பிரம்மாவுக்கும் ஓன்று ருத்ரனுக்கும் -இரண்டுமே ருத்ரனுக்கு என்றுமாம் –
பூத்தகுவது ஸூகுமாரனுக்கே
பூசனை தகுவது முதன்மை உடையவனுக்கே
இவனை ஒழிந்தவர்க்குத் தகாது -என்கிறார் –
ச ஏஷ ப்ருது தீர்க்காஷஸ் சம்பந்தீ தே ஜனார்த்தனா -என்று ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது அவன் பரத்வத்தை உபபாதித்துக் கொண்டு போந்து
ஸ்ருதி சித்தமான கண் அழகை உடையவன் காண் உங்களுக்கு மைத்துனனாய்ப் புகுந்து இருக்கிறான் -என்று பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார்
அர்ச்சமர்ச்சிதும் இச்சாமஸ் சர்வே சம்மந்துமர்ஹத -என்ற சஹதேவன் தலையிலே புஷ்ப வ்ருஷ்டியைப் பண்ணினார்கள் இறே
இத்தால் -பீஷ்மர் உடைய -ஜ்ஞானத்தில் காட்டில் -சஹதேவனுடைய -வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது

ஸ்ருதி சித்தமான பரத்வம் தானே –நீண்ட அப்பெரியவாய கண்கள் கொண்ட இவனே -உங்கள் சம்பந்தி –
மார்கண்டேயர் தர்மருக்கு உபதேசித்ததாக இப்பொழுது உள்ளது -இங்கே பீஷ்மர் சொன்னது -முந்திய பாரதம் –
இடது காலால் உதைப்பேன் -மற்றவர்க்களுக்கு அர்க்க பூஜை கொடுக்க வேண்டும் என்று சொன்னால் என்றான் சஹதேவன்-
ஞான வான்களுக்கு விட வைராக்ய சீலர்களுக்கு ஸ்ரேஷ்டம் -இதர விஷய சம்பந்தம் அறுகையே வேண்டுவது –

———————————————————————————-

அவதாரிகை –

புண்டரீகாஷன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன் -என்கிறார் –
புண்டரீகாஷன் –தஸ்ய உதித நாம -உதுஏஷ சர்வ பாபேப்யோ உதிதஉகாரத்தில் ஆரம்பித்து– தகாரத்தில் -முடிந்ததே திருவாய்மொழி சாந்தோக்ய சமம்

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

புண்டரீகாஷத்வம் -சர்வேஸ்வரத்வம்-பரத்வ ஸூ சகம்
மிகும் தேவும் -ப்ரஹ்மா ருத்ராதிகள் -ஈஸ்வரன் என்று சங்கிக்கும் படி
எப்பொருளும் படைக்க -மனுஷ்யாதிகள் அனைத்தையும் படைக்க
தகும் சீர்த் -சிருஷ்டி யாதிகளுக்கு தகுந்த -ஞான சக்த்யாதிகள் உடைய
தனி முதலினுள்ளே-ஜகத்துக்கு மூலம் தன் சங்கல்பம் /-மூல பிரகிருதி -என்றுமாம் -பிரகிருதி மாறுவதும் இவன் சங்கல்பம் தானே/
தகும் கோலத் தாமரைக் கண்ணன் -தகுந்த கோலம் -சிருஷ்டி உன்முகனான புண்டரீகாஷன் –
தகும் சீர் -குணங்கள்
தகும் கோலம் -திவ்ய விக்ரகம்
எம்மான் -என் ஸ்வாமி
மிகும் சோதி மேலறிவார் யவரே –பரஞ்சோதிக்கு மேலே தத்வம் உண்டோ -இவனை விட மேல் யார் –
உண்டு என்பார் அவைதிகர் -என்று கருத்து

தகும் சீர்த்-
ஸ்ரஷ்ட்ருத்வத்துக்கு உபயோகியான ஜ்ஞான சக்தியாதிகளை யுடையனான
தன் தனி முதலினுள்ளே-
கார்ய வர்க்கத்துக்கு அடைய காரணமான மூல பிரக்ருதியைச் சொல்லுதல்
பஹூச்யாம்–அநேன ஜீவேன அனுபிரவேச்ய -நாம ரூப வியாகரவாணி – என்கிற அதுக்கும் அடியான சங்கல்ப ஜ்ஞானத்தைச் சொல்லுதல்
தனி முதல்
ஏக காரணம் என்று பரமாணு காரண வாதிகள் வ்யாவர்த்திக்கிறது –

மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தன்னோடு மசக்குப் பரலிடலாம் படியான தேவ ஜாதியையும்
மசக்குப் பரல் -புளியங்கொட்டை வைத்து கட்ட விளையாட்டு
மசக்கின விரை -வெளியில் போனவற்றை கண்ணைக் கட்டி உள்ளே வைத்து அவற்றை எடுக்கச் சொல்லி –
மிகும் தேவு -கட்டத்துக்கு வெளியில் போன புளியங்கொட்டை போலே இவர்கள்
வில்லை வளைத்த போதாக –அதிகம் மே நிரே விஷ்ணும் -என்னும் படி இறே இவர்கள் மிகை-
ஹூங்காரத்தாலே சிவன் வில் முறிய ரிஷிகள் தேவர்கள் -விஷ்ணு பராக்கிரமம் -இவனே சர்வாதிகாரன் -என்றார்கள்
எப்பொருளும்
மற்றும் உண்டான சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான் ஒருவன் –என்னும் இடத்தை தெரிவிப்பதாய்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
ரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்
அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்
திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே
ராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை –ராமயதீ ராமயா
கமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது
அக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற
என் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ -கைமுதிக நியாயம் –
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்
ஜனகாத்மஜே –அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக
-ஜனகாத்மஜே –சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு
இப்படிப்பட்ட அவர் அழகை நீர் ஒருத்தியே சொல்லலாம் -நீர் அவனுக்கு ஏற்ற அழகு என்றுமாம் –
மிகும் சோதி மேலறிவார் யவரே-
மிகும் சோதி
பரஞ்சோதி ரூப சம்பாத்ய-நாராயண பரோ ஜ்யோதி –என்று நாராயண அநு வாகாதிகளிலே இவனே பரஞ்சோதிஸ்ஸூ -என்று ஓதப்படுகிறான்
நாராயணனே -விசர்க்கம் இல்லாமல் -சாந்தோக்யம் –ஆத்மா நாராயணனே பர ப்ரஹ்மம் மேலே உண்டே
மேலறிவார் யவரே
இவனை ஒழிய நாராயண அநுவாக சித்தமாய் இருப்பதொரு வஸ்து உண்டு என்று அறிவார் ஆரேனும் உண்டோ
யவரே –
வைதிக க -ஸ்தோத்ர ரத்னம் -11-என்னுமா போலே -அநந்ய பரமான நாராயண அநுவாகாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட
வைபவத்தை உடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டாடி இருப்பான் ஒரு வைதிகன் உண்டோ –
உண்டாகில் அவன் அவைதிகனாம் இத்தனை –தச்யோத் பத்திர் நிரூப்யதாம் –பத்மபுராணம் –
அவன் மகிமை -கடல் திவலைக்கு கூட ப்ரஹ்மாதிகள் ஒப்பு அன்றே –

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading