ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
வேத ரஹஸ்யத்தை வெளியிட்ட சர்வேஸ்வரன் கிருபையைக் காட்டில் -திருவாய்மொழியை அருளிச் செய்த-ஆழ்வாருடைய கிருபை ஜகத்துக்கு மிக்கது -என்கிறார் –
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற-
சேஷ பூதனுக்கு ஆனந்திக்கையே ஸ்வரூபம்-சேஷ பூதராகையும் ஹ்ருஷ்டராகையும் வேறு இல்லை காணும்-இவன் அருளை அனுசந்தித்து ஹ்ருஷ்டா என்கிறபடியே ஹ்ருஷ்டராம் இத்தனை –
வருளினான் அவ் வருமறையின் பொருள்-
பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு அருளிச் செய்தானே )
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-
ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் / விருத்திக்காரர் -கீதாச்சார்யன் / ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே )
இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-
எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் -ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்-
பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இ றே சொல்லிற்று –
——————————————————————–
ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –
எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி -ஆழ்வாருடைய அருள் கொண்டாடும் அருள்-சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்களையும் கபளீகரித்து இருக்கையாலே -என்கிறார் –
அருள் கொண்டாடும் அடியவர் –
இவ்வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் -அதுவும் அவனது இன்னருள் -என்றும்
-அருள் பெறுவார் அடியார் -என்றும் இங்கனே இ றே இவர் தாமும் அருளிச் செய்வது -அப்படி இருக்குமவர்கள்-
இன்புற-
எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலைச் சிறப்ப -என்கிறபடியே ஆனந்த நிர்ப்பரராக –
வருளினான் அவ் வருமறையின் பொருள்-
பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறது-அருமறை
அவன் தன்னைப் பெறிலும் பெறுதற்கு அரிதாய் இருக்கை –
சா ஹி ஸ்ரீ ரப்ருதா சதாம் -என்கிறபடியே வேதார்த்தத்தை அருளிச் செய்தார்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-
இவர் தாம் கை வந்தபடி பாடினார் அல்லர்
மயர்வற மதிநலம் அருளினன் என்கிறபடியே பகவத் பிரசாதத்தை முதலாகக் கொண்டு யாய்த்து இவர் கவி பாடிற்று
இவர் தாம் கவி பாடா நிற்கச் செய்தே -என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி -என்கிறபடியே
பிறரோபாதி தாமும் விஸ்மயப்படும்படி நிரவத்யமாக இ றே கவி பாடுவித்துக் கொண்டபடி
ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான்
சதுர்விம்சாஸ் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்தவான் ருஷி -என்றாப் போலே ஆயிரமாக வாயிற்றுப் பாடிற்று
இன் தமிழ்ப் பாடினான்
பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே இனிதாய் துரவகாஹமான அர்த்தத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும்-சப்தம் அதிக்ருதாதிகாரம் இன்றிக்கே சர்வாதிகாரமாம் படியும் பாடினார்
பாடினான் அருள் கண்டீர்-
மயர்வற மதிநலம் அறிலின வருள் போல் அன்றிக்கே அது தன்னை விளாக்குலை கொண்டு யாய்த்து இருப்பது
இவ் உலகினில் மிக்கதே-
சித் அசித் ஈஸ்வர தத்வத்ரயங்களையும் கபளீகரித்து இருக்கை –
————————————————————————-
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
ஆழ்வாருடைய கிருபையை கீழில் பாட்டிலே -எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளை -என்று
இவர் சொல்லக் கேட்டிருக்குமவர்கள் பகவத் கிருபை யன்றோ நாட்டார் அடையக் கொண்டாடுவது -நீர் ஆழ்வாருடைய கிருபையை-எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு அடி என் என்ன-
பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையும் ஆனால் ப்ராப்தி சித்திக்கும் அன்று அன்றோ பகவத் கிருபை வேண்டுவது -அந்த ப்ராப்தி யுன்டாவது ஜ்ஞானத்தாலே அன்றோ -அந்த ஜ்ஞான சித்தி ஆழ்வாராலே யன்றோ -ஆகையாலே-ஆழ்வார் கிருபை யன்றோ லோகத்தில் விஞ்சி இருப்பது என்கிறார்-
பிராப்தி ஜ்ஞான சாபேஷமாய் இருக்கும் (ஆத்ம ஞானமும் -சேஷத்வ பாரதந்ரய ஞானம் இருந்து அதன் பலனாக -அப்ரதிஷேதம் விலக்காமை யும் வேண்டும் )-ஜ்ஞானம் ப்ராப்தி சாபேஷமாய் இராது-
கீழே நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் -என்று தம்முடைய புன்மையைச் சொல்ல அந்தப் புன்மை ஏது என்ன-
-அத்தை நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன் எலாம் -என்று இரண்டு வகையாகப் பேசி-
அநந்தரம் –பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்று அத்தை போக்கின படியைச் சொல்லி போக்கின பிரகாரத்தை இப்பாட்டிலே சொல்லுகிறார் –
அநாத்மன் யாத்ம புத்தியையும் அபோக்யங்களில் போக்ய புத்தியையும் அத்யாத்ம ஜ்ஞானத்தாலே போக்க வேணும்-
ஆச்சார்யன் ஜ்ஞான பிரதானம் பண்ணின வாறே -அந்த ஜ்ஞானம் மேல் உண்டான கர்மார்ஜனத்தை மாற்றும் –
முன்பு உண்டான அவித்யையாலே ஆர்ஜித்து வைத்த கர்மங்களை ஈஸ்வரன் போக்கும்படி பண்ணுவதுமது-
சங்கல்பஜத்தை இவன் போக்கும் -(மனசால் நினைத்த பாபத்தை அறிந்து -ஆச்சார்யர் சர்வஞ்ஞன் ஆகையால் போக்கும் என்றபடி )-கர்மஜத்தை அவன் போக்கும் -அவன் போக்குகைக்கு அடி இவன்-ஜ்ஞான சித்தியைப் பண்ணிக் கொடுக்கையாலே இ றே-
அத்தைப் பற்ற இறே- அம்ருதச்ய ஹி தாதானம் தமாசா பாரம் தர்சயதி சனத்குமார -என்றும் ஆச்சார்யனைச் சொல்லுகிறது –
எனக்கு அத்யாத்ம ஜ்ஞானத்தைப் பிறப்பிக்கக் கடவதாக வேதார்த்தங்களைத் திருவாய் மொழி முகத்தாலே வெளியிட்டு-அருளினார் என்னப் பார்த்து -அத் திருவாய்மொழி பாடினதற்கு வேறேயும் ஒரு பிரயோஜனம் சொல்லுகிறார் –
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற-
திருவாய் மொழி பாடிற்றும் பகவத் ப்ரிணநார்த்தமாக வன்றிக்கே சாத்விக அக்ரேசருடைய முக மலர்த்திக்கு உறுப்பாக வாய்த்து –
அடியவர் -அருள் கொண்டாடும் அடியவர் -ஜ்ஞான விஷய பூதனான ஈஸ்வரனுடைய பிரியத்துக்கு அன்றிக்கே
ஜ்ஞான நிஷ்டரான சாத்விகர் உகக்கைக்காக வாயிற்று திருவாய் மொழி பாடினது
அடியவர்
சேஷவ்ருத்தி புருஷார்த்தம் என்னும்படி ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவர்கள் -சேஷத்வ ஜ்ஞானம் சேஷவ்ருத்தி சேஷம் இ றே
அருள் கொண்டாடும் அடியவர்
அப்புருஷார்த்ததுக்கு சாதனமும் அவனுடைய கிருபை என்று இருக்கும் அவர்கள்
ஆகையாலே கைங்கர்யம் புருஷார்த்தம் -கருணை சாதனம் என்று இருக்குமவர்கள்
அருள் கொண்டாடும்
அல்லாத குணாந்தரங்களில் காட்டில் கிருபையைக் கொண்டாடுமவர்கள்
ஈஸ்வரனையும் கொண்டாடுகிறது தான் உண்டான போது ஜகத் உண்டாய் -இல்லாத போது இல்லையாம் என்று இட்டு இ றே
அப்படியே க்ருபா குணம் இல்லாத போது குணாந்தரங்களும் அகார்யகரமாய் -இது கூடினவாறே கார்யகரமாய் இருக்கையாலே-இத்தையே கொண்டாடா நிற்பவர்கள்
அப்படியே தேவ தாந்தரங்களில் காட்டில் ஈஸ்வரன் கொண்டாடத்துக்கு விஷயம் ஆனாப் போலே யாய்த்து-குணாந்தரங்களில் காட்டில் இது கொண்டாடத்துக்கு விஷயமான படி –
மனஸ் தத்வம் இந்த்ரிய அந்தர்பூதமாய் இருக்கச் செய்தேயும் இது சஹகாரி யாகாத போது இந்த்ரிய வியாபாரம் கூடக் காணாமை-லோகத்திலே கண்டு போகிறாப் போலே இந்த கிருபையும் குணாந்தரப்பூதம் ஆகிலும் இது சஹ கரியாத போது-சேதனர் அளவில் குணாந்தரங்கள் ஜீவிக்கை யாகாது
ஸ்வரூபமும் நித்யம் குணங்களும் நித்யங்களாய் இருக்கச் செய்தே இவனுடைய சம்சார சம்பந்தம் ஒழுக்கு அறாமல் நடக்கையாலே-அத்தை மாற்றி இவனை உத்தரிப்பித்தது க்ருபா குணம் ஆகையாலே அத்தை யாய்த்து முமுஷுக்கள் கொண்டாடுவது –
சக்தனுக்கும் கிருபை வேணும் -அசக்தனுக்கும் கிருபை வேணும் –
சக்தனுக்கு நம்மைப் பெறுகைக்கு இப்படி வருத்தப்பட்டு சாதன அனுஷ்டானம் பண்ணுவதே என்னுமவன் நெஞ்சில் ஈரப் படாய்த்து பல சேஷம் ஆவது
அந்த ஈரப் பாடாய்த்து அவனை ப்ரீதனாக்குவதும் –
அசக்தனுக்கு நார்ச்ச நாதௌ ச்துதௌ ந ச -என்றால் க்ருபா மாத்திர மநோ வ்ருத்தி ப்ரசீத -என்னும்படி இருக்கும்-
அங்கு அவனுடைய அனுஷ்டானம் கண்டு பிறக்கிற கிருபை
இங்கு ஆகிஞ்சன்யம் கண்டு பிறக்கிற கிருபை
ஸ்வகதமான தொன்று சாதனம் ஆக வேண்டாவோ -பரகதமான குணம் சாதனம் ஆம்படி என் என்ன பாதகமே யாகிலும்-அருள் பெறுவார் அடியார்- என்கிறபடியே ஆஸ்ரயம் அவனாய் விஷயம் இவனாய் இருக்கும் -(இலக்கு அடியார் -அருள் அவன் இடம் -திருவட்டாறு சேவிக்கும் பொழுது இத்தை நினைத்து சேவிக்க வேண்டுமே -கடல் போன்ற அருள் இருக்க விலக்காமல் கொள்ள வேண்டுமே நாம் அவன் அடியாராக இருந்து)
அருள் கொண்டாடும்–அருள் கொண்டு ஆடும் — அடியவர்-
அன்றிக்கே அருளைத் தங்களுக்கு அவஷ்டம்பமாகக் கொண்டு நடையாடுமவர்கள் –
இவனுக்கு ஊன்று கோலானதும் விரோதிகளைச் சேதித்துத் தருவதும் அருளே யாய்த்து
அருள் என்னும் தண்டு -என்றும் -அருள் என்னும் ஒள் வாள் என்றும் -சொல்லுகிறபடியே அவர் தம்முடைய ப்ராஹ்மண்யம் தோற்றத் தண்டு என்கிறார்
இவர் தம்முடைய ஷாத்ரம் தோற்ற ஒள் வாள் என்கிறார்-(ப்ராம்மணரும் இல்லை க்ஷத்ரியர் இல்லை -குணத்தால் -உப சாந்தர் ஆழ்வார் -பரம சாந்தர் -இவருக்கு கோபம் உண்டே)ஆகையால் இவர்கள் பக்த்யாதிகள் அவஷ்டம்பமாக்குதல் -அசங்க சஸ்த்ரத்தைக்-(அசங்க சஸ்த்ரேன -சம்சாரம் மரம் கோடரி -திடேன சித்வா பற்று அற்ற தன்மை-திடமான வைராக்யம் கொண்டே -கீதை )-விரக்தி யாகிற வாள் – கொண்டு திரிதல் செய்யுமவர்கள் அல்லர்
அவனும் தனக்கு- பலாதி குணங்கள் உண்டே யாகிலும் –உபகரண பூர்த்தி -(திவ்யாயுதங்கள் -)உண்டே யாகிலும் இக்கிருபை கொண்டாய்த்து பல ப்ரதன் ஆவது-ஆகையாலே யாய்த்து பாழியான் ஆழியான் அருளே நன்று என்ன வேண்டிற்று –
இன்புற-
அவர்கள் பரிதியைப் பெற அவர்கள் பண்டே அருள் கொண்டாடும் அடியவரே யாகிலும் இவ்வர்த்தம் ஆப்தரான-ஆழ்வார் அருளிச் செய்யப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள் –ராக சித்தம் விதி சித்தமாகப் பெற்றோமே என்று ப்ரீதர் ஆனவர்கள் –
வருளினான் அவ் வருமறையின் பொருள்
மறையின் அந்த அரும் பொருளை அருளினான்
அப்பொருளை-
கருணை சாதனம் -கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப்பொருளை-வழுவிலா வடிமை செய்ய வேண்டும் -எனபது -அடியை யடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்பதே இவற்றை உபதேசிக்ககை
பொருளை அருளினான்
தாம் வாக்ய உச்சாரணம் பண்ண மாட்டாமையாலே பொருளை அருளினார் (மூன்று எழுத்து -ஓம் நாலாயிரத்திலும் இல்லை உபதேச ரத்ன மாலையில் மட்டும் உண்டு -நாலாயிரம் அனைவருக்கும் -இது பரம பிரபன்னர்களுக்கு மட்டும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருப்பவர்களுக்கு மட்டுமே )
அ -அரும் பொருளை -அருளினான் –
ப்ரவ்ருத்தி சீலர்க்கு பட அரிதான வர்த்தத்தை நிர்த்தோஷரான சத்துக்களுக்கு அருளினார்-(உய்யக் கொண்டார் -ராமா நுஜர் காலத்தில் இருந்தவர் -சாதன நிஷ்டர் -வாதம் பண்ணி -சரணம் பண்ண விருப்பம் இல்லை -வித்வான் ஆனதால் இசைந்தீர் -பகவத் கிருபை இல்லாமல் இழந்தீர் -அவர் போல்வார் பிரபத்தி சீலர் )-அது தான் ஸ்வார்த்தத்தை போதிப்பியா நிற்க இவர் வெளியிட வேண்டிற்று என் என்ன-மறை-ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கு ஸ்வார்த்தத்தை மறைத்து சத்வ பிரசுரர்க்கு போதிக்கும் படி-மறையாய நால் வேதம் ஆகையாலே அவ்வர்த்தத்தை வெளியிட்டார் -(விருப்பம் உள்ளாருக்கு வேதம் சொல்லும் -ஆழ்வார் சொல்லி விருப்பம் உண்டாக்குவார் )
இவர் இவ்வர்த்தத்தை வெளியிடுகிற விடத்தில் என்ன சப்த முகத்தால் வெளியிட்டது என்ன-அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-ஆயிரம் -இனிய -தமிழ் -மூன்று பெருமைகள் –அந்த சஹச்ர சாகா பிரதி பாதிதமான அர்த்தத்தை சஹச்ர காதா முகத்தாலே வெளியிட்டார்-
தமிழ் பாடினான்
துர்ப்போதா வைதிகாச்சப்தா -என்று துர்ப்போதமான வேத சப்தம் போல் அன்றிக்கே திராவிட பாஷையாலே வெளியிட்டார்
ஆயிரம் இன் தமிழ் பாடினான்
பிரணவம் போல் அதி சங்க்ரஹம் ஆதல் மஹா பாரதம் போலே அதி விச்த்ருதமாதல் அன்றிக்கே ஆயிரம் இன் தமிழாகப் பாடினார்
இன் தமிழ் பாடினான்
அவன் சொன்னதும் அறியலாய் இருக்கச் செய்தே அது வரை முறுகலாய் இருக்கும்
இது செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்கும்-கீதா -வேதம் -மகா பாரதம் -பிரணவம் இவற்றில் வேறுபாடு –
பாடினான்
வேட்கையால் சொன்ன பாடல் -என்கிறபடியே தம்முடைய அனுபவ ஆனந்த சாகரத்துக்கு பரிவாஹ சுப வசனங்களைப் பண்ணினார்-(கிருஷ்ண அனுபவ ப்ரீதி சாகரம் –பராங்குச பயோதி -கடல் -பூமா ) ஆனால் ஒரு புருஷ புத்தி மூலமாக வந்த இது பிரமாணமாம் படி என் என்ன -தாம் சொன்னாராகில் அன்றோ அது சொல்ல வேண்டுவது-அவனுடைய அருள் மூலமாகச் சொன்னவர் ஆகையாலே அது சொல்லப் போகாது-மோஹ சாஸ்த்ராணிகாரய -என்கிற அந்த நிக்ரஹம் அடியாக வந்தது அன்றே இது-தெரியச் சொன்ன ஆயிரம் ஆகையாலே அருள் அடியாக வந்தாயிற்று
ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன-என் வாய் முதல் அப்பனை -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே-
தன் புகழ் ஏத்த அருளினான் என்று ஆழ்வார் அருள் கொண்டு அவருடைய புகழை ஏத்தினாப் போலே யாயிற்று-ஆழ்வாரும் அவனுடைய அருள் கொண்டு ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்தைப் பாடிற்று -இவர் தாம் நெடியான் அருள் சூடும் படியான் ஆகையாலே அருள் ஒழிய இவர்க்குக் கைம்முதல் இல்லையே-
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
அவருடைய அருள் அன்றோ இந்த லோகத்தில் அதிசயம் ஆயிற்று
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
பாட்டும் அன்று
பாடினவரும் அன்று
பாட்டுக்கு அடியான அருளும் அன்று
இவர் அருள் யாய்த்து-இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று
இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி
நெறி யுள்ளி யுரைத்த அம் பகவன் என்று
தான் தோன்றியான தன்னுடைய ஜ்ஞானம் கொண்டு சொன்னது அன்றிக்கே அவனுடைய அருள் கொண்டு பாடின-தன்னேற்றமும் உண்டே இவர் அருளுக்கு-(தான் தோன்றி பாட்டு கீதை அருள் தூண்ட பாடியது அன்றோ திருவாய்மொழி )
இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இ றே லோக ஸ்பாவங்கள் இருப்பது –
இவ்வுலகினில் மிக்கதே
அவனுடைய அருள் ஆழ்வார் அளவில் சுவரி விட்டது
இவருடைய அருள் சாம்ராஜ்யம் பண்ணா நின்றது
அவனுடைய அருளைக் கொண்டாடுமவர்கள் அடியவர்களாய்
இவர் அருள் லோகம் அடங்கக் கொண்டாடும் படி தேஜிஷ்டமாயிற்று
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
ஸ்ரீ கீதை சொன்ன கிருஷ்ணன் என்றால் கை எடுப்பார் ( கூப்புவார் -)-இல்லை
திருவாய்மொழி பாடின ஆழ்வார் உடைய பேரைக் கேட்க இருந்ததே குடியாகக் கை எடா நின்றது-திருவாய் மொழி கேட்டால் ஈஸ்வர அபிமானிகளைக் கை எடார்கள் இ றே
கண்டீர்
இவ்வம்சம் நான் சொல்ல வேண்டி இருந்ததோ-ப்ரத்யஷம் அன்றோ
கண்டீர்
அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்
இவ்வுலகினில் –கண்டீர்
இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே-அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் (அவன் அருளை காண அங்கே போக வேண்டுமே -இங்கே கேடக்த் தானே முடியும் -என்றவாறு -இவர் அருள் இங்கேயே காணலாமே -மதுர கவி ஆழ்வார் சாக்ஷி அன்றோ -அங்கு ஆழ்வார் -ஓர் அரசு மட்டுமே -அதனால் தான் நம்புவார் பதி -வைகுந்தம் என்றார் )
இவ்வுலகினில் மிக்கது
இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ-
கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இறே இவருடைய கண்ணுடைமை இருப்பது-(அருள் பாலிப்பது திருக் கண்கள் தானே )
————-
நம்பி திரு வழுதி நாடு தாசர் -அருள் கொண்டாடும் -என்கிற பாட்டிலே
ஸ்ரீ கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்திலே ஒரு சபைக்குச் சென்றால்-
பலருமாக நாழி அரிசியைக் கொடுத்து நம்ப மாட்டமையாலே-புறத் திண்ணையிலே கிட -என்பார்கள்
திருவாய் மொழியைக் கற்றான் ஒரு விண்ணப்பம் செய்வான் என்றால் சர்வேஸ்வரன் அகப்பட புறப்பட்டு-
எதிர் கொண்டு அகம் ஒழித்துக் கொடுத்து-அமுதுபடியும் எடுத்து விட்டு உபசரிப்பார்கள் -என்றாராம் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply