திரு மந்த்ரத்தின் பரம சாரார்தமான ஆசார்ய நிஷ்டை அறிவிப்பது இந்த திவ்ய ப்ரபந்தம்
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை -ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற் பரியம் தேர்ந்து –
————————————————————————–
வேறு ஒன்றும் நான் அறியேன்
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லா
மற்று ஒன்றினைக் காணாவே
பாட்டுக் கேட்கும் இடமும் கூப்பீடு கேட்கும் இடமும் குதித்த இடமும் வளைத்த இடமும்
எல்லாம் வகுத்த இடமே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே போலே
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்
அவிதித விஷயாந்தரச் சடாரே-என்று ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் சொல்லி
அபிச குணவஸாத் ததேகசேஷீ -என்று குண க்ருத தாஸ்யம் சொல்லிற்று –
அதம புருஷார்த்தம் பிரகிருதி தத்வம் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களால்
மத்யம புருஷார்த்தம் ஆத்ம அனுபவம்
உத்தம புருஷார்த்தம் சர்வேஸ்வரன்
அதில் கரும்பு தின்பார் வேர்பற்றையும் நுனியையும் கழித்து நடுவைக் கொள்ளுமா போலே
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒழிய கிருஷ்ணாவதாரமே புருஷார்தமாகவும்
அதிலே -கம்ச வதத்துக்கு பின்பாகாக் கழித்து
முன்பு வெண்ணெய் களவு கண்டு -யசோதை பிராட்டியார் கையால் கட்டுண்டு
அவளுக்கு அஞ்சி நின்ற அவஸ்தையை உடைய கிருஷ்ணனே உபாயம் உபேயம் எல்லாம் என்றும்
என்று அவனுடைய சௌந்தர்ய சீலாதிகளிலே அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களே
இவ்வாத்மாவுக்கு நாதபூதரும் நிரதிசய புருஷார்த்த பூதரும் என்று ஆழ்வார் நிர்ணயித்தார்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அதை பூர்வ பஷமாக்கி
அனைத்தும் ஆழ்வார் திருவடிகளிலே ஆக்கி
அது ருசித்து-அத்தைப் பேசி அனுபவிக்கிறார் –
வேத மரியாதையில் நின்றார்கள் ரிஷிகள்
அவர்களைக் காட்டில் ஆழ்வார்களுக்கு நெடு வாசி உண்டு -பகவத் பிராப்தி ஏக நிஷ்டர்
இவ் விலஷண புருஷார்த்தின் உடைய காஷ்டையான ததீய சேஷத்தளவில் புகுர நின்றார் ஸ்ரீ மதுர கவிகள்
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே சாத்விகருக்கு பரிக்ராஹ்யம்
ஸ்ரீ சத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி -அவனை அல்லது அறியாத
ஸ்ரீ பரத ஆழ்வானை யல்லது வேறு ஓன்று அறியாதபடி யானான் -எம்பெருமானார் ஸ்ரீ ஸூகதி-
இவரின் ததீய பார தந்த்ர்யதுக்கு
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -திருவாய்மொழி வேத சாரமாய்
திருவாய்மொழியினுடைய சாரம் இப் பிரபந்தம்
ஈஸ்வரன் துராராதனாய் ஆசார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிகைக்காக திரு விருத்தம் துடக்கமான நாலு ப்ரபந்தம் வேண்டிற்று
ஆழ்வாரை ஆராதிகைக்கு இப்பத்து பாட்டுமே அமைந்தது –
ஆழ்வாரே சாஷாத் பகவதவதாரம் என்றும்
அவர் திருவடிகளே உபாயமாகவும்
அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும்
அவருடைய முகோல்லாசமே பரமா பிரயோஜனமாகவும்
அவர் எழுந்து அருளி இருக்கிற இடமே ப்ராப்ய பூமியாகவும்
அவருடைய விக்ரஹாதி அனுபவமே உண்ணும் சோற்றில் படியே தாரகாதிகள் ஆகவும்
பிரதிபத்தி பண்ணி விஸ்வசித்து இருக்கும் சரம அதிகாரி சேகரர் ஆய்த்து ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்-
————————————————————————–
கண்ணித் தாம்பு-
பல கண்ணிகளை உடைத்தாய் அநந்யமாய் இருப்பதொரு பாசத்துக்கு இ றே
இவன் கட்டுப் படுவான்
பொத்தை உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி -இஷ்ட விநியோக அர்ஹம் பொத்தை உரல் தானே –
நுண் தாம்பு –
சிறு தாம்பு –
ஜ்ஞான பக்தி வைராக்யங்களை கொண்டாடும் படி போலே மூன்று விசேஷணங்கள் இங்கும் -பல பிணைகளாய் -பறுத்து -அளவில்லாமையாலே திரு மேனி யிலே உறுத்தும் என்று அஞ்சுகிறார் –
பிரதமத்தில்
ருசி -சங்கம் -பக்தி -பர பக்தி -பர ஜ்ஞானம் -பரம பக்திகள் -அநேக கண்ணிகள் பக்திக்கு
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி –
எட்டு திருவஷ்டாஷரமாய்
இரண்டு வாக்ய த்வயமாய்
எட்டும் இரண்டும் அறியாதாருக்கு கட்டப் போகாதே
நுண் -பக்தி நுண் அறிவாக பகவத் ஸ்வரூப ரூபாதிகளை யாதாவாக சாஷாத் கரிக்க
சிறு -அநன்யார்ஹமாய் -வைராக்யம் இதர விஷயங்களில்-
ஆழ்வார் மோஹித்து கிடக்கும் துறையிலே இ றே இவர் இப்போது தெளிந்து வார்த்தை சொல்கிறது –
கட்டின கயிற்றை -தத் சம்பந்தியான ஒன்றை கொண்டாடுகிறார்-
பரத்வம் பாற் கடல் ஸ்தானம் -அமுத கலசம் போலே அவதார அவஸ்தை-
கிருஷ்ண அவதாரம் மற்ற அவதாரங்கள் பரத்வ ஸ்தானம் ஆக்கும்படி அத்யந்த போக்யமாய் இருக்குமே-
அதிலும் பக்வ கிருஷ்ணன் காட்டில்
முக்த கிருஷ்ண அபதானம் -உறிகளில் வெண்ணெய் உடன் அறைகளில்
பெண்களோடு வாசி அற -இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் போக்ய தமமாய் இருக்கும்-
தறி யார்ந்த கரும் களிறே போல் நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –
என்று ஆழம் கால் படுவார்களே-
உரலை நேரிதாக செதுக்கப் போகாது
அப்போதகக் கயிற்றை நெடுக விடப் போகாது
இவன் தன்னை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான்
காற்றில் கடியனாய் ஓடும்
இனி செய்வது என் -அவள் தடுமாற படியைக் கண்டான்
கட்டுண்ணப் பண்ணிய-
சதைக ரூப ரூபாய என்கிற இவன் உடம்பை நெருக்கி இடம் கொண்டு கட்டும் இத்தனை –
கண்ணியார் குறும் கயிற்றால் கட்டவி ட்டு என்று இருந்தான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடி –
பெரு மாயன்
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையும்
அவனுக்கு ஷூத்து நல்கையும்
நவ நீதத்திலே ஸ்ரத்தை உண்டாகையும்
அத்தை இடுவார் இல்லாத போது களவு காண்கையும்
அத்தை தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதுவாக அகப்படுகையும்
ஸ்ருஜ்யர் கையிலே கட்டுண்கையும்
சம்சார பந்தத்தை தவிர்க்க வல்லதான இத்தை விட்டுக் கொள்ள மாட்டாது ஒழிகையும்
இது என்ன ஆச்சர்யமோ என்கிறார்
அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய்
அது தன்னை எளியாரைப் போலே வழி அல்லா வழியே களவிலே ஒருப்பட்டு
அது தன்னையும் சர்வ சக்தியான தான் தலைக் கட்ட மாட்டாதே
வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டு
அடியுண்டு
அதுக்கு ஒரு ப்ரதிகிரியை பண்ண மாட்டாதே
பையவே நிலையும் -என்று உடம்பு வெளுத்து பேகணித்து நின்ற நிலை
அழுகையும் –தொழுகையும் –அந் நோக்கும் -இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-
பிறர் உடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது
தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்க போகாது என்கை-
ஆழ்வார் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது தூது விடுவதாம் படி
தனது சங்கல்ப பாசத்தாலே கட்ட –
இவரும் அத்தை அவிழ்க்க மாட்டாதே
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் -என்னும்படி
கட்டுண்ட இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார்
அவன் கட்டுண்டது
பற்றி யுரலிடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று பிறருக்கு-ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது
இவர் கட்டுண்டதோ நாட்டார் உடைய கட்டை அவிழ்க்கைக்கு உறுப்பாய்
பரம சாத்விகருக்கு போக்யமாய் ஆய்த்து–
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவுமவர் ஆகையாலே
இவரைக் கட்டி வைத்தான்
இவருக்கு தன் களவு வெளிப்பட்டு பிறர் களவு போம் ஆய்த்து-
நண்ணி
இப்படு குழியைத் தப்பினால் இ றே
பகவத் ப்ராப்திக்கு சப்தாதி விஷயங்கள் விரோதி யானாப் போலே
ஆழ்வாரைப் பற்றுகிற இவர்க்கு பகவத் விஷயம் விரோதி என்றபடி-
அவற்றுக்கு அல்ப அஸ்த்ரத்வாதி தோஷம் உண்டாகையாலே விடலாம்
இங்கு அங்கன் அன்றே -நிலை நின்ற ப்ரதி பந்தகம்
தென் குருகூர் நம்பி
சர்வேஸ்வரன் ப்ராப்தியில் பிரதம அவதி யாகையாலே அரை வயிறாகப் பேசி
ஆழ்வார் சரம அவதி யாகையாலே பூர்ணராகப் பேசுகிறார்-
குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது
அவனுக்கு பூர்த்தி ஞான சக்தி யாதிகளாலே
இவருக்கு பூர்த்தி ஞான பக்தி யாதிகளாலே
ஜகத்தை தனக்கு ஆம்படியான குணங்கள் அவனுக்கு
அவன் தன்னை தனக்கு ஆம்படியானகுனங்கள் இவரது-
ஆழ்வார் –உயர்வற உயர் நலம் உடையவன் -என்று அவன் குணத்தை வர்ணித்தார்
இவர் முதலடியிலே ஆழ்வாரை பற்றி –அவன் திரு மேனியிலே ஸ்பர்சித்த ஒரு தாம்பை வர்ணிக்கிறார்-அவருடைய உத்தேச்ய வஸ்து இவருக்கு வெளியதாய் கழிகிறது –
என் அப்பனில்
ஆழ்வார் இவருக்கு உத்தேச்யராய் நிற்க இங்கனே சொல்லுவான் என் என்னில்
பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில் ஆழ்வார் ஓட்டை சம்பந்தத்தை
அறுத்துக் கொண்டவர் அவர் –
அதவா
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே அவ்வருகே போவாரையும் துவக்க வல்ல-விஷயம் ஆகையாலே துவக்குண்டு சொல்லுகிறார்
என்றக்கால் –
உக்தி மாத்ரமே அமையும் இங்கு -அங்கு போலே மநோ வாக் காயங்கள் மூன்றாலும் அமைய வேண்டாம்
அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்கள் இட்ட பதார்த்தம் மாண்ட வாறே ரசம் மாளும்
இது ஒரு கால் இட்டால் உள்ளது அளவும் அமுது ஊற்று மாறாது என்கிறார்-
அமுதூரும்
அமுது தான் ஊற்று மாறாதே செல்லும்–நசபுநர் ஆவர்ததே போலே-
நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்துவாரா நின்றது
பகவத் விஷயம் நினைக்க நெஞ்சும் இல்லை
சொல்ல நாக்கும் இல்லை
அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா அன்றோ
என் நாவுக்கே –
இவ் வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை
அவர் தாம் என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்றாப் போலே
இவரும் என் நாவுக்கே -என்கிறார்-
————————————————————————–
நாவினால் நவிற்று -ஓர் உக்தியாலே இந்த சரீரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –
ஆழ்வார் -அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினேன் -இத்தையும் செய்து அடைந்ததை-இவர் நாவினால் நவிற்று எய்தினார் என்கிறார் –
காலாந்தர பாவி இன்றி எய்தி விட்டேன் என்கிறார் –
தேவு மற்று -அறியேன் விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு பாவோ நாந்யாத்ர கச்சதி போலே –
பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை
ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து
ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து
இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர் அன்று என்று கழித்து
அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து
அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-
தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் -தழை யாயினும் -தண் கொம்பாயினும் –
கீழ் வேராயினும் -நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினோ -இத்யாதிப் படியே
பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே -பாடித் திரிவனே
இது காணும் இவருக்கு தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது-
குருகூர் நம்பி பாவின்னிசை
குருகூர் நம்பி பா -கண்ணி நுண் சிறு தாம்பு என்னுதல் -திரு வாய் மொழி என்னுதல் –
மேவினேன் அவன் பொன்னடி
-இங்கு இருந்த நாள் அஞ்ஞாத ஞாபநத்தாலே உபகாரகர் ஆகவும்
பகவல் லாபத்துக்கு புருஷகாரமாகவும் –
நித்ய விபூதியில் யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே ப்ராப்யமாகவும் இவர் தம்மையே-பற்றினேன் -ஆளவந்தார் -அத்ர பரத்ர சாபி என்கைக்கடி இவர் இ றே-
இஹ லோக சுக ஜனகரும் -பர லோக சுகத்துக்கு சாதனமும் –
எனக்கு சுவாமியும் -கால ஷேப விஷயமும் -ஆழ்வாரே என்கிறார்-
அவன் பொன்னடி
அவனது போலே உலகம் அளந்த-ஊர் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்கும் பொன்னடி அன்று-நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன் –
வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டாமல் சத்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே போலே இன்றி-எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படி
அத்தோடு -வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி -பொருந்தி விட்டேன்
மெய்மையே
சத்தியமே -ஸ்ரீ சடகோபனை தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்வார் உண்டோ-கால ஷேப விஷயம் எனக்கு ஓன்று இரண்டா ஆயிரம் பிரகாரம் அல்லையோ
குருகூர் நம்பி
ஸ்துத்ய விஷயத்துக்கு பரத்வ சௌலப்ய பூர்த்தி
ஸ்தோத்ரு விஷயத்துக்கு ஞான பக்தி பூர்த்தி
————————————————————————–
திரி தந்தாகிலும் தேவ பிரானுடை கோலத் திரு உருக் காண்பன் நான் –
ஆழ்வார் உகந்த விஷயம் என்று உகக்கிறார் –
சேஷி உகந்ததை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலம்
தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் -என்று அத்தலையாலே வருமது
தவிர்த்து கொண்டு இலரே –
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய் வருமது எதேனுமாகிலும் அமையும் இவர்க்கு –
பெற்ற நன்மையே-அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவனோ-
திரி தந்தாகிலும்
போன வழி எல்லாம் மீண்டாலும் –
இன்னிசையை விட்டு-பாவை விட்டு -ஆழ்வாரை விட்டு -அவர் உகந்த விஷயம் என்று
பிரதம அவதியிலே வந்து -பரம யோகிகள் யோகம் கை புகுந்தால் ஊர்வசியினுடைய வடிவை வர்ணிக்குமா-போலே இவர் தேவ பிரானுடை கரிய கோலத் திரு உரு -என்கிறார்
நம்பிக்கு
ஆழ்வார் உடைய பூர்த்தி -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்தில் பகவத் விஷயமும்
அந்தர் பூதமாய் இருக்கை-
ஈஸ்வரன் தான் இவர் பக்கலில் மண்டின படியை சொல்லுகிறார் இங்கு
ஆழ்வார் பக்கல் பக்தி பூர்ணமான இவர் திரு உள்ளத்திலே நீர் வெள்ளத்திலே
நெய்தல் பாரித்தாப் போலே தன்னுடைய வடிவைக் கொடு வந்து பாரிக்க
இவர் இதுக்கு நிமித்தம் என் என்று ஆராய்ந்து –
பகவத் சேஷத்வ ஞானத்தால் வந்தது அன்று –
பாகவத சேஷத்வ மாத்ரத்தாலும் வந்தது அன்று -பகவத் ஆஸ்ரயணத்தாலும்
வந்தது அன்று –
ஆழ்வாருக்கு அநந்யார்ஹ சேஷபூதனாய் பெற்ற பேறு இ றே இது என்று ஸ்வகதமாக
ப்ரீதர் ஆகிறார்-ஆசார்ய விஷயத்தை பற்றினான் ஒருவனை பகவத் விஷயம் தானே மேல் விழும்-என்னும் இடத்துக்கு உதாஹரணம்
பிராட்டியைப் பற்றினால் அவன் கை பார்த்து இருக்க வேணும்
இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்கு கொடுக்கும்-
கரிய
கண்கள் சிவந்து -என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திரு உடம்பு -கறுத்தது இல்லையே அங்கு-இவர் அனுபவித்தவாறே தன்னிறம் இட்டதாயிற்று
கோலம் –
ஆனைக்கு உதவ வந்தாப் போலே -இருந்தபடியே வருகை அன்றிக்கே -இங்கு அனுபாவ்யனாய்-வருகிறவனாகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய் ஆய்த்து வந்தது -அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இ றே போவது –இத்திரு உரு –
கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
இவ்விருண்ட வடிவுக்கு மின் போலே பிரகாசிக்கும் இவளைக் கண்டால் ஆய்த்து
அவ்வடிவையும் காணல் ஆவது –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
ஸ்வரூபத்துக்கு ஸ்வரூபத்தாலும்
விக்ரஹத்துக்கு விக்ரஹத்தாலும் பிரகாசிகையாய் இருக்குமவள் –
காண்பன் –
ஸ்ரவண மாத்ரத்தால் ஆதல் -மனந மாத்ரத்தால் ஆதல் -நிதித்யாசந மாத்ரத்தாலே
ஆதல் -அன்றிகே ப்ரத்யஷ சாமாநாகாரமாம்படி அனுபவிக்கப் பெற்றேன்
காணாமைக்கு கண்களை திரிய வைத்த நான் கிடீர் -விமுகனான நான் -காணப் பெற்றேன் -பார்த்து விட்டேன் –
நவநீத சௌர்யத்தில் உட்பட நாக்கு நீட்டாதவர் பரத்வ தசையைக் கண்டால்
பார்த்து விட சொல்ல வேண்டாவே-
தேவர் அன்று அஞ்சி கடக்க நின்று கண்டேன்
ஆழ்வார் நிறம் போலே பொன்னிறம் அன்று -வகுள கந்தியாய் இல்லை துளசீ கந்தியாய்
நம்பிக்கு -பூர்ணர்
சர்வ ரஷகனானவனுக்கும் ஆளாகாத என்னையும் ரஷித்து ஆளாக்கிக் கொண்ட பூர்த்தி
இவர் உடைய பூர்த்திக்கு ஊற்றுவாய் இத் தேச வாஸம்
பெரிய வண் குருகூர் –
பரம பதம் சிறாங்கை என்னும்படி பெருமையை உடைத்த
புவியும் இரு விசும்பும் நின்னகத்தே நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் –
ஆழ்வாரை தன்னுள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்
நகர் –
விலஷண வஸ்துக்கள் வந்து சேரும் -அக்கரையார் அடங்கலும் -வந்து பாரிக்கும்படி –
சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் இ றே –
தேவகீ புத்ர ரத்னமும் வில் பிடி மாணிக்கமும் விலை செல்லும் தேசம்
அடியேன் பெற்ற நன்மையே
ஆள் உரியனாய் பின் நான் இருக்கும்படி -அடியேன்
பெற்ற-ஆழ்வாருக்கு பெற வேண்டியவை உண்டே இவர்பெற்றாரே
அவருக்கு மநோ ரதம் நடவா நிற்க இப்பெறு பெறும்படியான படி என்
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
————————————————————————–
நாலாம் பாட்டில் சடகோபன் என் நம்பியே
தன் குற்றத்தைப் போக்குமளவு அன்றியே என் குற்றத்தை போக்கும்படி நிரபேஷர்
என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்தாறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் –
சத்வ நிஷ்டருக்கு பஹிஷ்டனான என்னை தாம் அங்கீகரித்தும்
அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த என்னை பிரிய ஹிதங்களில்
மூட்டியும் -அனுபகாரகனான என்னை கைங்கர்யம் கொண்டும் வந்த பூர்த்தி
தன்மையான் -இஸ் ஸ்வபாவங்களை நிரூபகமாக உடையவர் -இவனுக்கு உபகரிதோம் என்று தாம் நினைத்தல் –
இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் செய்யாது ஒழிகை –
என்னை ஆண்டிடும் தன்மையான் –
திருவாய்மொழி அருளிய பொழுது என்னை பட்டோலை எழுதச் சொல்லி அருளி -உசிதமான
கைங்கர்யத்தைக் கொண்டார் -பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய்
வாரீர் என்று உபதேசித்து அருளினார் -நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவது
என்று ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணி அருளினார் -இது சஹஜ ஸ்வபாவம்
ஆழ்வார் அடியாக அடிமை கொள்ளுவதால் பகவத் விஷயத்துக்கு ஔபாதிகம் –
என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் –
என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடினவர்-
————————————————————————–
பொருள் -த்ரவ்யம்
நன் பொருள் -ஆத்மவஸ்துவை -விலஷண த்ரவ்யம் -எண் பெருக்கு அந் நலத் ஒண் பொருள் –
மேம்பொருள் போலே இன்றி நித்தியமாய் -நிர் விகாரமாய் -அத்யந்த விலஷணமாய் –
ஸ்வயம் பிரகாசமாய் -சுகமாய் -ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன் பொருள் என்கிறார்
பிறர் நன் பொருள் -பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்
பிறர் -சர்வேஸ்வரன் -அந்யர் இவருக்கு எல்லையில் அந் நலம்-
கூடி இருக்கச் செய்தேயும் அகப்படாதவன் அபஹத பாப்மா -அவையே அவை அல்லனுமாய் –
சர்வேஸ்வரன் உடைய கௌஸ்துப ஸ்தாநீயம்
த்ரவ்யதின் ஸ்லாக்யதை -உடையவனுடைய ஸ்லாக்யதை -பிராயச்சித்தம் கனக்கும் இ றே
நன் பொருள் –அசித் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது
பிறர் நன் பொருள் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
அர்த்த காமங்களிலே புருஷார்த்த புத்தி பண்ணி இருந்தேன் -இதுவே யாத்ரையாக போந்தது
வன் கள்வன் -கள்வனேன் ஆனேன் –
ஆத்ம அபிமானம் -விஷய ப்ராவண்யம் -முன்புள்ள காலம் எல்லாம் -நான்
இன்று அன்பனாய் -அடியேன் சதிர்தேன் –
இப்பொழுது அடியேன் -ஆழ்வார் அளவும் வருமவனாம்படியான சதிரை உடையவன்
விஷயங்களுக்கு அர்த்தம் தேடி -அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க –
அச் செம்பொன் மாடத்தை களவு காணப் புக்கேன்
நகரி ஆகையாலே நாகரிகைகளான மடவாரையும் இம் மடங்களிலே காணலாம் என்று
உள் புக்கேன்
அங்கே வைத்த மா நிதியைக் கண்டு அகப்பட்டேன் -இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இ றே
அந் நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு அஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே
ஒரு வைஷ்ணவ சகாசத்தில் ஷத்ர பந்துவுக்கு பிறந்த அவஸ்தை போலே எனக்கும்
ஆழ்வார் சகாசத்திலே அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மை காண வேணும் என்று-புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்
ஆழ்வார் உடைய மதி நலம் கோளோபாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது ஆய்த்து-மயர்வற்ற மதி போலே இத் தேசத்திலும் இருள் அற்றே ஒளியேயாய் இருக்கும்படி –
அத தேசிகரும் ஆழ்வார் ஓட்டை ஆசக்தியாலே பொலிந்து நிற்குமவர்கள் ஆய்த்து –
பரம பத தேஜஸ் போலே பார்க்கவும் அணுகவும் ஒண்ணாதபடி
அன்றிக்கே -கண் படைதார்க்கு எல்லாம் காணலாம் படி ஸ்ப்ருஹ்நீயமான தேசம் –
அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசம் ஆய்த்து-
நம்பிக்கு அன்பனாய்
அர்த்த காமாதிகளை நம்பிப் போந்த நான் ஆழ்வாருக்கு அன்பனாய் விட்டேன் -அவற்றின்-போக்யதையும் ஆழ்வார் பாடே காண்கையாலே –
கீழ்ப் பாட்டில் அன்னையாய் அத்தனாய் என்று மாதா பிதா என்னும் இடம் சொல்லி
இதில் யுவதய விபூதி என்னும் இடம் சொல்லுகிறார்
அடியேன் –
ஸ்வ தந்த்ரனாய் போன நான் நம்பிக்கு சேஷம் ஆனேன்
ஆழ்வார் போலே க்ரமத்திலே வருகை அன்றி அன்பு முற்பட்டு அடிமை பிற்பட்டது
ஆழ்வார் கடாஷ லஷ்யன் ஆகையாலே அம் மாத்ரத்திலே பத த்ரயத்திலும் உளனாய் விட்டேன்
ஆழ்வார் பிரபாவத்தை யிட்டு வென்றேன்
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -ஆழ்வாருக்கு அன்பனாய்
அந்ய விஷயங்களை வென்றேன்
சதிர் இள மடவார் இடம் இளிம்பு பட்ட நான் ஆழ்வாரை அண்டை கொண்டு சதிரனாய் விட்டேன்
இன்றே –
ஈஸ்வரனை அண்டை கொண்டு
ஆரப்த சரீரபாத சமயம் பார்த்து இருந்து
பின்னையும் வாசனை ருசிகள் ஆகிய மண் பற்று விடாமல் விரஜை அளவும்
போக வேண்டும்படி இருக்கை அன்றிகே -இன்றே –ச வாசனமாக விட்டேன் -அப்படியே ஆனேன் –
இதுக்கு வரவாறு ஓன்று இன்றிகே இருக்க வாழ்வு இனிதாம்படி விழுந்தது என்று
விஸ்மிதராகிறார் –
ஆழ்வார் சந்நிதி மகாத்ம்யத்தாலே இவ்வளவும் பிறந்தது என்று ப்ரீதர் ஆகிறார்-
————————————————————————–
ஆறாம் பாட்டு –
இன்று தொட்டும்
ருசி பிறந்த இன்று தொடங்கி எழுமையும் -கால விச்சேதம் இன்றி
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் ஆழ்வாருக்கு மனுஷ்யர் வ்யாவ்ர்த்த விஷயம்
இவருக்கு எம்பெருமான் வ்யாவ்ர்த்தம் -தோள் மாறும்படி அன்றிக்கே
ஆழ்வாருடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம்படி ஆழ்வார் அருளினார் –
அதனால் நின்று -என்கிறார்
பகவத் சமாஸ்ரயணத்தில் தானே ஆச்ரயிப்பது ஒரு காலம் பலிப்பது ஒரு காலம்
ஆழ்வார் பூர்த்தி எல்லை காண ஒண்ணாததுபோலே மாடங்களின் உயர்த்தியும் –
காண்மினே
ப்ரத்யஷிகலாவது -ஒன்றாய் இருக்க நான் சொல்லக் கேட்கை மிகை அன்றோ
கீழ் பாட்டில் ஆழ்வார் திருவடிகளில் தமக்கு பிறந்த ஞான பக்திகளை சொல்லி
இதில் தமக்கு பிறந்த வ்யவசாயம் சொல்லுகிறார்
எழுமையும் -தேச விசேஷம் போனாலும் ஆழ்வார் கீழே ஒதுங்குமவர் ஆய்த்து இவர் –
நித்ய சத்ருக்நர் -சர்வ காலமும் ஆழ்வாருக்கு ஸ்வம் –
எம்பிரான்
ஸ்வாமி ஸ்வத்தைக் கண்டு இகழுமோ
குன்றனைய குற்றத்தை குணமாக கொண்டு நோக்கி -அஹங்கார அர்த்த காம நசை அறுத்து -ஆத்ம ஞானாதிகளை -உபகரித்து
-பகவத் விஷயத்தில் காட்டிக் கொடாதே -தம்மைக்
கைக்கொண்ட மஹோ உபகாரகர்
அவர் உடைய புகழை -பத்தும் பத்துமாக -நிகரில் புகழை -ஏத்தும்படி அருளிய உபகாரம் -ஆழ்வார் உடைய குணங்களை புகழ்கையே புருஷார்த்தம்
அது சித்திப்பதும் அவருடைய அருளாலே
புருஷார்த்த பூதருமாய் -சாதன பூதருமாய் -அத்யாவசாய ப்ரதரும் ஆழ்வாரே
நின்று தன புகழ் ஏத்த –
மனஸ் சைதல்யம் பிறக்காமல் நின்று -நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்று ஏத்த அருளினான்
நம்பி
யாவதாத்மபாவி தம்முடைய புகழை ஏத்தா நின்றாலும் வரை யிடாத குணா பூர்த்தி யுடையவர் -மாடங்களுக்கு சலனம் உண்டாகிலும் ஆழ்வார் திரு உள்ளம் என்னளவில் சலியாது
————————————————————————–
ஏழாம் பாட்டு –
இருந்தான் கண்டு கொண்டு -எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தது போலே-அலாப்ய லாபமாய் தன் பேறாய் -நிதி எடுத்தாப் போலே
கிட்ட எதிர் சூழல் புக்கு திரிந்தவர் என்று தோற்றும் படி –
பண்டை வல்வினை
அடி காண முடியாதவை -அநாதி காலம் சஞ்சிதமான இதர விஷய ப்ராவண்ய
ஹேதுவான பாபம் -வழி அல்லா வழி பற்றுகைக்கு ஈடான ருசி –
கரிய கோலத் திரு உருவைக் காண்பன் என்னுமத்தையும் தவிர்த்து
என்னை –
நாட்டாரை காட்டில் ஆழ்வார் வாசி அறியாத என்னை
தம் நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு பிரதிபத்தி பண்ணவும் கூட மாட்டாத என்னை
பாற்றி அருளினான் –
உரு மாய்ந்து போம் படி -மோஷ யிஷ்யாமி பண்ணி விடுகை அன்றிக்கே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ அன்றிகே -தாமே ஸ்வீகரித்து பாப பந்தத்தையும் போக்கி அருளினார்
சடகோபன் அருளையே
மயர்வற மதி நலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் அங்கீகரித்த அருள் –
திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இ றே இவரை விஷயீ கரித்த அருள்
தோஷம் பட்டவாறே காற்கடை கொள்ளாமல்
எல்லாரும் கை விட்ட என்னைக் கை கைகொண்டார் –
விரோதிநிவ்ருதியும் பண்ணி அபிமத பிரதானமும் பண்ணி அருளினார்
தம்முடைய குண ஸ்துதியே யாத்ரையாம் படி -பண்ணி அருளினார்
காரி மாறப் பிரான்
அவனைப் போலே தான் தோன்றியான பிரான் அன்று -அபிஜாதரான ஆழ்வார்
தான பிறந்து என் பிறவியை அறுத்தவர் –
ஜாம்பவ மகாராஜர் திரிவிக்கிரம ப்ரசம்சயை சாற்றி கொண்டு திரிந்தாப் போலே
அங்கு ஈஸ்வரன் உடைய சக்தி பிரபாவம் -இங்கு ஆழ்வார் உடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் -வாழ்ந்தபடி இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்தபடி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
பத க்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு இத்தனை-
————————————————————————–
வேத அதிகாரிகள் உஜ்ஜீவிக்க -வேத ரகஸ்யம் வெளி இட்ட சர்வேஸ்வரன் கிருபையைக் காட்டில்-அநதிகாரிகளும் க்ருதார்த்தராம்படி திருவாய்மொழி அருளிச் செய்த ஆழ்வார் கிருபை மிக்கதே –
தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் அருளி –
அரு மறை -பிரசித பெறுவதற்கு அரிய வேத ரகஸ்யம் -உபநிஷத் –
தத்வ த்ரயங்களையும் கபளீகரித்து இருக்கும் –
ஈஸ்வரன் கைவிட்ட ஆத்மாக்களையும் -துர்கதி கண்டு திருத்த ஒருப்பட்டார் ஆகையாலே -அதனில் பெரிய என் அவா -அபிநிவேசத்து அளவும் போருமாய்த்து என்னளவில் கிருபையும் –
இவர் கிருபையால் பகவத் கிருபை உண்டாகி பிராப்யம் சித்திக்கும்
ப்ராப்தி ஞானத்தால் -அந்த ஞான சித்தி ஆழ்வாராலே –
இவர் அருளினதும் அம் மறையும் பொருள் -ப்ரமாண பிரசித்தம் உண்டே
அருள் கொண்டு -மயர்வற மதி நலம் அருள் பெற்ற -என்னாகியே தப்புதல் இன்றி தனைக்கவி தான் சொல்லி –
இன்புற -சாதனத்தில் அன்வயம் இன்றி -பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கை
அருள் கொண்டாடும்-
கிருபையே கொண்டாடும் -குணாந்தரங்கள் கார்ய கரம் ஆகாதே இது இன்றி –
பக்தனின் அனுஷ்டானம் பிரபன்னனின் ஆகிஞ்சன்யம் கண்டு பிறக்கிற கிருபை
அருள் கொண்டு ஆடும் அடியவர் –
ஊன்று கோலும் -விரோதி போக்கவும் -அருளே
அருள் என்னும் தண்டு -ப்ராஹ்மாண்யம் தோற்ற
அருள் என்னும் ஒள் வாள் -ஷூத்ரம் தோற்ற
கிருபை கொண்டே பல ப்ரதன் ஆகிறான்
பாழியான் ஆழியான் அருளே –
அருளினான் அப் பொருளை
கருணை சாதனம் கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப் பொருளை-
பாடினான் –
வேட்கையால் சொன்ன பாடல் -என்கிறபடியே தம்முடைய அனுபவ ஆநந்த
சாகரத்துக்கு பரிவாஹ சுப வசனங்களை பண்ணினார் –
ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என் நா முதல் வந்து புகுந்து நல் இன்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னை சொன்ன என் வாய் முதல் -அப்பன் –
இப்படி தெரியச் சொன்ன -ஆயிரம் -ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம் –
பாடினான் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
பாட்டும் -அன்று பாடினவரும் அன்று பாட்டுக்கு அடியான அருளும் அன்று -இவர் அருள் ஆய்த்து
வரை முறுகலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று –
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின விதத்திலும் அகப்பட்டாரம் அகப்படாதாருமாயிற்று –
இவர் அருளால் ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே
அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று -ஆயிற்று
தான் தோன்றியாய் தன்னுடைய ஞானம் கொண்டு உரைத்த ஸ்ரீ கீதை போல் அன்றிக்கே
அவனுடைய அருள் கொண்டு பாடின தன்னேற்றம் உண்டே இவ்வருளுக்கு –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல் -அங்கு இவர் பாட்டு மிக்காப் போலே
இங்கு இவர் அருள் மிக்கது -இங்கு
இங்கு அருள் மிக்கு -அங்கு போகம் மிக்கு-
கண்டீர்
அவன் அருள் சாஸ்திர கம்யம்
இவர் அருள் பிரத்யஷ சித்தம்
அருளையும் லோகத்தையும் சீர் தூக்கிப் பார்த்தல் அதிலும் விஞ்சி இருப்பது அருளே
கடல் மண் எல்லாம் விலையோ என மிளிரும்படி இ றே இவர் கண் உடைமை இருப்பது-
————————————————————————–
ஒன்பதாம் பாட்டு –
சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு -அடிமை-இரண்டு திருவாய்மொழிகளால் அருளிச் செய்து என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினார்
வேதத்துக்கு பிராணனான பிரமேயம் திருவாய்மொழி
திருவாய்மொழிக்கு பிரமேயம் இந்த இரண்டும்
பரமனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் -எம்மை யாளும் பரமர் -என்றும்
கல்லைக் குழித்து நீரை நிருத்துவாரைப் போலே பிரதிஷ்டிப்பித்தான் –
தக்க சீர் சடகோபன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன்
துயர் அடி தொழுது எழு என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கும் அவ்வருகே இ றே பேறாய்த்து –
இவ்விஷயத்தில் ருசி -பிறந்தால் -அத்தனை விளம்பம் -இன்றி
ஆள் புக்க -காதல் –அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி -ஆழ்வார் திருவடிகளிலே
இச் சரீரத்தோடே எல்லா அடிமைகளும் செய்யலாம்படி -பண்ணும் அடிமைப் பயன்
அன்றே -ஆம் –
பகவத் விஷயத்தில் சரீர விச்லேஷம் பிறந்து -அர்ச்சிராதி மார்க்கத்திலே -ஒரு
தேச விசேஷத்திலே சென்றால் பெறக் கடவத்தை -இங்கேயே இன்றே பெற்றேனே-
நாலாம் பாட்டில் ஆச்சார்ய விசுவாசம் -சொல்லி
மேல் இரண்டு பாட்டால் ஆசார்ய வைபவமும் -உபகார வைபவமும் சொல்லி –
இதில் தம் க்ருதஞதையை சொல்லுகிறார்
ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு கிருதஞதையே வேஷமாய் இருக்கும்
மிக்க வேதியர் –
மிக்கார் வேத விமலர் -அந்தணர் -மாடு
வேதத்தின் பொருள் -வேதத்தின் பொருளே என் வேம்கடவா -வேதாந்த விழுப் பொருள் -பகவத் ஸ்வரூபாதிகள்
உட்பொருள்
ஹ்ருதயமான ததீய வைபவம் –
நெஞ்சுள் -நிற்கப்பாடி நிறுத்தினான்
பாடும் பொழுதே -தங்கும்படி அந்தரங்கமாக உபதேசித்தான் -த்ருட அத்யாவசாயமாக –
பிரமாண -வைபவத்தையும் -ப்ரமேயமான தத் வைபவத்தையும் -ப்ரமாத்ரு வைபவத்தையும் –அபிமத வைபவத்தையும் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் செய்து அருளிய பூர்ணர்
அவர் பூர்த்தியிலே தோற்றி என் நம்பி என்கிறார்
தக்க சீர் குறுங்குடி நம்பி என் அளவில் வராததால் இவ்வளவு பூர்ணர் இல்லையே –
முற்பட அடிமை புக்கு -அநந்தரம் ஆதாரம் நடந்து பின்புஅடிமை செய்வது –
ஆசார்ய -பவ்யதையும் ப்ரேமமும் கிஞ்சித்காரமும் சிஷ்யனுக்கு அபேஷிதம்
அவர் புறப்பொருளை விட்டு உட் பொருளைக் கொடுத்தார்-இவர் உட் பொருளான பகவத் விஷயம் தன்னை புறப்பொருள-அதிலும் உட் பொருளான ஆழ்வார் திருவடிகளில் சேஷ பூதராய்-பிரேம பூர்வகமான கைங்கர்யத்தில் இழிகிறார்
————————————————————————–
குயில் நின்றார் பொழில் சூழ்
இவரை அவஹாகித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும்படி
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே –
திருவாய்மொழி பாடக் கற்று -பாடும் குயில்கள் -ஆனவை
தாம் மதுர வக்காகையாலே மதுர வாக்கான குயிலை இட்டு பொழிலை சிறப்பிக்கிறார் –
எம்பெருமானோடு நித்யரோடு முக்தரோடு வாசி அற ஹ்ருஷ்டராம்படி இ றே ஆழ்வார் உடைய பூர்த்தி-ஆசார்யர் உபகரித்தது -சர்வாதிகமாய் இருக்கும் -மிதுனம் -சர்வேஸ்வரனை என்பதால்
இன்னமும் ஒரு சர்வேஸ்வரன் உண்டாகில் இ றே பிரத்யுபகாரம் பண்ணினான் ஆகலாவது –
செயல் நன்றாகும்படி -அநுஷ்டான பர்யந்தமாக உபதேசித்து திருத்தினார்
தீர்ந்த அடியவர் -ப்ராப்யமும் பிராபகமும் அவனே என்று அத்யவசித்து இருக்கும் –
அடியவர்கள் தம்மை திருத்தி பணி கொள்ள வல்லவன் சர்வேஸ்வரன்
அவை ஒன்றும் இன்றிக்கே இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இவர்
இவர் கரும் தரையில் திருத்துமவர் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் ஆழ்வார் தடுமாறுவது போலே இவரும்
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும்
உபகார கௌரவம் பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும்
இவன் திருத்தித் தருகையாலே பகவத் விஷயத்துக்கு ஆத்மசமர்ப்பணம் பண்ணலாம்
இவன் தானே திருந்தினவற்றை இவனுக்கு கொடுக்கை சத்ருசம் அன்றே-
செயல் நன்றாக திருத்தி –
அத்யவசாய பர்யந்தமாய் –
சத் ஏக அநுஷ்டான சேஷமாய் –
இவற்றில் என்னைக் காட்டிக் கொடாதே தமது கையால் திருத்தி அருளி பணி கொள்வான்
ஸ்வரூபம் பகவத்கிஞ்சித்காரத்தில் மூட்டும்
பகவத் ப்ரீதி பாகவத கிஞ்சித்காரத்தில் மூட்டும்
பகவத ப்ரீதியும் -இவ்யக்தி த்வயத்தின் உடைய வைபவத்தை உபதேசித்த உபகார ஸ்ம்ருதியால்-வந்த இவன் தன்னுடைய ப்ரீதியும் ஆசார்ய கிஞ்சித்காரத்திலே மூட்டும் –
இதில் ஓன்று நிருபாதிக சம்பந்தம் -மற்றவை இரண்டும் சோபாதிக சம்பந்தம் –
உத்தேச்யதையும் உபகாரத்வமும் -உபாதி இவற்றுக்கு-
மொய் கழல் –போக்யதை இங்கே சொல்லி கீழே பொன்னடி -பாவநத்வம் சொன்னார்
மொய் கழலே ஏத்த முயல் -ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு போந்த வாசனை இவருக்கு –
வகுளாபிராமமாய் -ஸ்ரீ மத்தாய் இ றே ஆழ்வார் திருவடிகள்-போக்யதை அன்பைக் -கொடுக்க-அன்பு பிரத்யுபகாரத்தில் மூட்ட-இடம் காணாமல் அலமரா நின்றார் -இவ்வலமாப்பு யாவச் சைதந்யம் இ றே-
————————————————————————–
நிகமத்தில் பலனாக ஆழ்வார் ஆணை மட்டுமே பரிமாறும் ஸ்ரீ வைகுண்டமே தேசம் என்கிறார் –
அடியார் நிலாகின்ற வைகுந்தம் –வானவர் நாடு-
ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லும் திவ்ய தேசம் இ றே -இரு புரியாய் யாய்த்து செல்லும்
நம்புவார் இருந்த இடமே ஸ்ரீ வைகுண்டம் என்னவுமாம் -திரு நாடு லீலா விபூதி விபாகம் இன்றி
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகி யாய்த்து காண் -நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை
சர்வேஸ்வரன் இருந்ததே குடியாக அனைவருக்கும் அன்பன் -வாத்சல்யத்தை நிரூபகமாக உடையவன் –
தாம்தாம் சத்தையில் மற்றவர்கள் அன்பாய் இருப்பார்கள் -ஆழ்வார் -பரமனைப் பயிலும்
திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் எம்மை யாளும் பரமர் -என்று
தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம் அன்பன் -ஆழ்வார் அன்பு பொதுவாக இல்லையே –
பகவத் சம்பந்த -நிபந்தனம் -ஜாத்யாதி நியமம் பாராமல் தத் சம்பந்தமே ஹேதுவாக நல்லராய் இருக்குமவர் –
இங்கு நம்பி என்றது அடியார் அடியார் தம் அடியார் அடியார் என்று தத் சம்பந்திகள் அளவும்-பண்ணின பிரேமத்தாலே பூர்ணர்
மதுரகவி ஆழ்வார் -பகவத் விஷயத்தில் -அன்றிக்கே ததீயர் அளவிலும் அன்றிகே –
ஆசார்ய விஷயத்தில் சக்தராய் ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி அற எல்லார் உடைய உகப்பும் புருஷார்த்தம் என்று
ஆசார்யனைப் -பற்றி
ஸ்வரூப ஞானம் அளித்தும் -அனுஷ்டானத்தால் நல் வழி கொண்டு -போயும் -ப்ராப்ய
விஷயத்தில் சாத்திய வ்ருத்தியையும் பண்ணிக் -கொடுத்து பஹு முகத்தால் ஆசார்யனே-உத்தேச்யம் என்று இருப்பவர்
சௌஹார்த்த கார்யம் இ றே வாத்சல்யம்
சர்வ லோகைக வத்சல -நிகரில் புகழ்
உபக்ரமத்தில் சீல சௌலப்யம் -கண்ணி நுண் பெரு மாயன் என் -அப்பன்
இங்கு வாத்சல்யத்துடன் தலைக் கட்டுகிறார்
ஆழ்வாருக்கு பகவத் ப்ரேமம் ஸ்வரூப பிரயுக்தமாய் -ஆராத காதல் குருகூர் சடகோபன் -என்று நிரூபகம்
இவருக்கும் ஆழ்வாருக்கு நல்லவர் ஆனார் என்று நிரூபகம்
அவர் பிரணவ நமஸ் ஸு க்கள் இரண்டிலும் நிஷ்டர்
இவர் மத்யம பதத்தில் நிஷ்டர்
ஆழ்வார் பகவத் விஷயம் அருளி -என்னாவில் இன் கவி என்கிறார்
இவர் ஆழ்வாரைக் கவி பாடி தம்மை மதுர கவி என்கிறார்
நம்பிக்கு அன்பனாய் மதுர கவி
நெஞ்சுக்கு பணி ஆழ்வார் பக்கல் ஸ்நேஹம்
வாய்க்கு பணி அவருடைய குண ஸ்தோத்ரமே –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே .சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply