இனியார் ஞானங்களால் எடுக்கல்எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ்முதலே!! பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.
பொ – ரை : எத்தகைய பெரியோர்களுடைய ஞானங்களாலும் அளவிட்டு அறிய முடியாதபடி இருக்கின்ற என் நாயனே! பத்தி நிறைந்து அதனால் கனிந்த மனம் உடையவர்களுக்கு மோக்ஷ சுகமானவனே! எனக்குக் கடலில் உண்டாகாத அமிர்தம் போன்றவனே! யான் பெற்ற இப் பேற்றுக்கு மூல காரணம் ஆனவனே! உலகங்கள் ஏழனையும் ஒப்பற்ற வராக அவதாரமாகிக் கூர்மை மிக்க தந்தத்தில் வைத்துத் தூக்கி வந்தவனே! இப்பொழுது உன்னுடைய திருவடிகைளைச் சேர்ந்ததேனே அன்றோ?
வி-கு : இப்பாசுரம் பூட்டுவிற்பொருள்கோள். ‘இனி, சேர்ந்தேனே’ எனக் கூட்டுக. அன்றி, ‘இனியார்’ என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு, இனியார் – இனியர் அல்லாதார்; அதாவது, அன்பு இல்லாதார் என்று பொருள் கூறலுமாம். ஞானம் பல வகைப்படுதலின், ‘ஞானங்களால்’ என்கிறார். கனிவார் – வினையாலணையும் பெயர். முதல் – காரணம். சேர்ந்தேனே – ஏகாரம் தோற்றப்பொருளது.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 2‘ஞான லாபமே அமையுமோ? பேறு வேண்டாவோ?’ என்ன, ‘எனக்குப் 3பிரதம சுக்ருதமும் நீயேயாய், என்னைச் சமுசாரிகளில் வேறுபட்டவன்ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்.
1அதாவது துரியோதனனால் அளவிட்டு அறிதல், 2இராவணனாலே எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை. கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள்கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷசுகம் ஆனவனே! அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்று கோடலுமாம். ‘அப்படி எங்கே கண்டோம்?’ என்னில், யசோதைப்பிராட்டி, 3தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் அன்றோ? என் கடல் படா அமுதே – பகை, பத்தி என்ற இவ்விரண்டின் எல்லையிலே உள்ள இரு திறத்தாரிலும் எண்ண ஒண்ணாதபடி இருக்கிற எனக்கு, முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே தனியேன் வாழ் முதலே – தனியேனான என்னுடைய அனுபவத்துக்குப் பிரதம சுக்ருதம் ஆனவனே! பிராட்டி ஒற்றைக் கண்ணள், ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், 4‘தனியேன்’ என்கிறார். பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் – தனக்கு ஒத்தது வேறு ஒன்று இல்லாததான மஹாவராகத்தின் யார் ஞானங்களால் எடுக்கல் எழாது எந்தாய் – தன் முயற்சியால் அறியப் பார்க்குமன்று எத்துணை மேம்பட்டவர்களுடையவடிவை மேற்கொண்டு, பிரளயம்கொண்ட உலகங்கள் ஏழனையும் எடுத்து கூர்மை மிக்க கோட்டில் வைத்தைவனே! இதனால், தனிமையில் வந்து உதவினபடியையும், பாதுகாக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத பாதுகாக்கின்றவனுடைய பாரிப்பையும் அருளிச்செய்தபடி இனி நுன பாதம் சேர்ந்ததேனே – பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’ அன்றி, 1‘இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி, அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’ என்று பொருள் கோடலுமாம்.
3. ‘முழுதும் வெண்ணெய் அளைந்துதொட் டுண்ணும்
முகிழ்இ ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யும்அஞ்சி நோக்கும்அந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யும்இவை கண்டஅ சோதை
தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே.1
(பெருமாள் திருமொழி)
4. ‘பந்துக்கள் நடுவே இருக்கிறவர் ‘தனியேன்’ என்கிறாரிறே; வழிப்பறிக்காரர் நடுவே
நின்றால் அவர்கள் துணையாகாரிறே; எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கியிறே
இவர்க்குத் தனிமை. தம்மை அத்தலைக்கு ஆக்கிவைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’
என்பது இருபத்து நாலாயிரப்படி வியாக்கியானம்.
ஞான விசேடங்களாலும் பெயர்க்கப் பெயராது இருக்கின்ற என் நாயனே!
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply