திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.

    பொ – ரை : ‘பெரிய பிராட்டியாரும் அறியாதவாறு வாமனாதாரத்தைச் செய்து, ‘மாவலி, மூவடி நிலம்’ என்று இரந்து,  அசுர குருவாகிய சுக்கிரன் கூறிய சொற்களையும் மஹாபலி அறியாதவாறு அவனை வஞ்சித்தது போன்று, என்னுடைய உயிரில் வந்து கலந்து அறியாமையினை உண்டுபண்ணுகிற மிகக்கொடிய இப்பிறவியில் அகப்பட்டிருக்கும் என்னை, ஒன்றையும் அறியாத இளமைப்பருவத்திலேயே அடிமை செய்வதில் மிகப் பெரியது ஓர் அவாவை எனக்கு உண்டாக்கி வைத்தாய்,’ என்கிறார்.

    வி – கு : ‘மாவலியை வஞ்சித்தது போன்று, ‘எனது ஆவியுள் கலந்து, அறியா மாமாயத்து அடியேனை, அறியாக் காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்’ என்று கூட்டுக. ’கலந்து செய்வித்து வைத்தாய்’ என்க. அறியாமை – மையீற்று வினையெச்சம்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. ‘அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய இச்சரீரத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் 1இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார்கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவாநிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது; ஆன பின்னர், இங்ஙனேயாமித்தனை. ‘அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச்செய்தார். ‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்; அவற்றிலே நீர்மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்.

    1அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார்,‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும். அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்த வைத்தாயால்.

    தம்மை அறியாமை வஞ்சித்ததற்கு எடுத்துக்காட்டு ஒன்று அருளிச்செய்கிறார் மேல்: அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூ வடி என்று – நெஞ்சு அறியாதபடி காரியம் செய்வாரைப் போன்று, திருமார்வில் இருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாதவாறு வாமன வேடத்தை மேற்கொண்டு, 1‘கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே’ என்கிறபடியே, ‘நிலம் மாவலி மூவடி’ என்ற பொருத்தம்அற்ற வார்த்தைகளைக் கூறி; பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் அன்றோ பொருத்தம் உள்ள வார்த்தைகளைக் கூறுவது? அறியாமை வஞ்சித்தாய் –2சுக்கிரன் முதலியோர் ‘இவன் சர்வேஸ்வரன்; தேவ காரியம் செய்ய வந்தான்; உன் செல்வம் அனைத்தையும் அபகரிக்க வந்தான்,’ என்றால், அவர்கள் வார்த்தைகள் செவிப்படாதவாறு உன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தாய். அப்படியே, எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து, ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ என்பதாம்.

    ‘அறியாமையிற் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தது போன்று, எனது ஆவியுள் கலந்து, அறியா மா மாயத்து அடியேனை, அறியாக்காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்,’ என்க.

செய்தன -மொத்தமாக தான் அனுபவிக்க முடியும் என்றீரே
அத்தில்
ஒன்றாவது சொல்லு எம்பெருமான் கேட்டதை
ஞானம் இப்படி பட்ட சம்சாரத்தில் உபகரித்தாயே என்கிறார் .அறிவு நடையாடாத நிலத்தில் -இழவாலே சொல்கிறார் -திரு மலை ஆண்டான் ஆழ வந்தார் நிர்வாகம்  துக்கம்

எம்பெருமானார் -விட்டு இலங்கு செம் ஜோதி பாசுரம் -விஸ்வாமித்ரர் சிருஷ்டி செய்யாதீர் திரு மசாலை ஆண்டான் கோபிக்க
கால ஷேபம் நிற்க -ஆழ வந்தார் சொன்னதை நானும் கேட்டு இருக்கிறேன்
எது அருளி செய்தாலும் ஆழ வந்தார் சாதித்து தான் -சாந்தீபன்  இடம் கண்ணன் கேட்டது போலே -அவதார புருஷர் அவர்
திரு கோஷ்டியூர் நம்பி அறிந்து வந்து சொல்லி மீண்டும் தொடக்கி

அறியா காலத்தில் அடிமை கண் அன்பு செய்வித்து
அறியா  மா மாயம் பிரகிருதி சம்சாரத்தில் வைத்தாய்
அறியாமை குறளாய் -வஞ்சித்தாய்
ஆவியுள் கலந்தாய்
ஆல் -ஐயோ விஷாய சூசுகம் கதறுகிறார்
எம்பெருமானார் கலந்த ப்ரீதியால் அருளி-
உபகாரம் பரம்பரை சொல்லி வர கதருவாரா
மேலும் சந்தோஷம் -நடுவில் துக்கம் பிரக்ரனதுக்கு சேராதே –
என்னை ஏமாற்றி விட்டாயே நன்றாக இரு -வார்த்தைக்கு அர்த்தம் போலே
அறியா மா மாயத்தில் அடியேனை வைத்தாயால்
இங்கேயே -உழன்று இருந்தும் -அறியா காலத்தில் அன்பு செய்வித்தாய் ஆல் கொண்டாடுகிறார்
என்னையும் கரை ஏற்றி –
சம்பந்த ஞானம் பிறபித்து-இழவாலே சொல்கிறார் -திருமாலை ஆண்டான்
இத்தையும் உபகாரம் ஆக்கி -எம்பெருமானார்
அத்தா நீ செய்தன அடியேன் அறியேன் –
ஒன்றாவது சொல்லும் –
மயர்வற மதி நலம் அருளி -நித்ய சம்சாரியாக போந்த எனக்கு –
அறியா காலம் -பால்யத்திலே -பால்யா பிரவ்ருத்தி அர்த்தம் சைசவம்
தொட்டில் பருவத்தே பிடித்து இளைய பெருமாள் –
தொட்டில் மாற்றி -ஒரே தொட்டில் -போடா அழுகை குறைய
அடிமைக் கண் அன்பு செய்வித்து -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
அப்ஸ்ருஷ்ட சம்சார கந்தர் -சம்சார வாசனை படாத நித்யர் போலே கைங்கர்யம் செய்ய அருளினாய்
அன்பு செய்வித்து -கைங்கர்யத்தில் ப்ரீத்தி
வரில் புகடேன் கெடில் தேடேன் -இல்லாமல் ஈடு பாடு
பெறாவிடில் முடியும் படி -அன்பு செய்வித்து –
அறியா மா மாயத்து -பிள்ளாய் -உன்மத்தன்காய் – தின்று பிரமித்தால் போலே
சிறை பட்டாலும் நம் வஸ்து தானே என்று வைத்தாயே
மாணிக்கம் சாக்கடை விழுந்தாலும் கொள்வது போல்
சம்சாரத்தில் -ஹெயயமாய் இருந்தாலும் -நம் வஸ்து
சேஷத்வ அன்விருத்த வ்ருத்தி கொடுத்து –
அடியேனை -சப்தம் இங்கு -அஹம் சப்தம் பரியாயம்
நான் -என்னை -அறிவுக்கு சம்பாவம் இல்லாத பால்யத்தில்
இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவகாகித்து
தேச விஷயத்தில் பெற போக விஷயம் சாத்மிக்கவும்
தரிக்க training
பிராப்யத்தில் த்வரை விசுக்கைக்காவும் இறே
போக்யதை இருக்கிறபடி
அடியேனை -என்னை -மா மாயத்தில் சிக்கி -சேஷத்வம் தெரியாமல் இருந்த என்னை –
அடையாளம் சொல்கிறார் மேல்
அறியாமை குறளாய்
நெஞ்சு அறியாத படி கார்யம் செய்வது போல்
திரு மார்பில் இருக்கும் நாச்சியார் கூட அறியாமல்
தன நெஞ்சு அறிவது போய் -வள்ளுவர்
வாமன வேஷம் பரிகிரகித்து
நிலம் மா வலி மூவடி
கொள்வன்-
அனந்வித பாஷனம் –
குறளாய் -சேர் பால் போலே போக்யதை மிக்கு–திரட்டு பால் -போல் தாள விட்டு அர்த்தியாணன்
நிலம் என்றான்
புரிய வில்லை
முகம் பாராமையாலே -மாவலி இருக்க -முதல் பேர் சொல்வது இல்லாமையாலே
திரும்ப -மூவடி –
இத்தால் வசீகரிக்கை-
பண்டும் இரந்து பழக்கமில்லாமையால் -ஸ்தோத்ரம் செய்யாமல் –

சர்வேஸ்வரன் –
அறியாமை வஞ்சித்தாய்
‘சுக்ராதிகள் பாசுரம் செவிப்படாமல் –
தேவர் கார்யம் செய்ய வந்த சர்வேஸ்வரன் -சொல்லும் பொழுது –
வார்த்தை காதில் விழாமல் -மனசு அபகரிக்க பட்ட மா வலி
போர் வெந்த  மன்னை -மனம் கொள்ள வஞ்சித்து –திரு மங்கை –
அறிவு கெடுத்து வஞ்சித்தான் –
அது போல் என்னையும் மயக்கி என்னுள் கலந்தான்
இருக்கும் இடம் வந்து குண செஷ்டிதங்களாலே –
நான் இருக்கும் இடம் வந்து என் ஸ்வ தந்த்ர்யம் அபகரித்து
அந்ய பரனான என் ஆத்மாவில் கலந்து –
என்ன ஆசார்யம் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading